இப் பாட்டையும் பட்டர் அருளிச் செய்தார்-
(சரம ஸ்லோக அர்த்தம் அருளிச் செய்தார் கீழ்
சரம ஸ்லோக நிஷ்டருக்குப் ப்ராப்யனான அவனது பெருமையையும்
அந்த ஸ்தானத்தின் பெருமையையும் சம்சாரிகள் மட்டும் இல்லாமல் ஞானாதிகர்களான
ப்ரஹ்மாதிகள் அறியவே மாட்டார் என்கிறார் இதில்
உபாய பாவம் வாழும் ஸ்தானம் பண்டைப் பதி சரம ஸ்லோகம் -இதன் பெருமை யார் அறிவார்
ஸ்ரீ வைகுண்ட பெருமை யார் அறிவார் என்றுமாம்
ஸ்ரீ வைகுண்டபத்தியின் பெருமையையும் யார் அறிவார் என்றுமாம்
சக்தி மிக்கும் ஞானம் மிக்கும் இருப்பதாக ஈஸ்வரோஹம் அபிமானம் மிக்க ப்ரஹ்மாதிகள் அறிவார்களா
அர்த்தம் அறிய அரியதான முன் பாசுரத்துக்கும் இப் பாசுரத்துக்கும்
பட்டர் அருளிச செய்ய நான் கேட்டேன் என்று
நம்பிள்ளை அருளிச் செய்ய நான் கேட்டேன் என்று பரம்பரையாக
பெரியவாச்சான் பிள்ளையும் நான் கேட்டேன் என்கிறார் )
அப்பிள்ளை உரை அவதாரிகை
சரம ஸ்லோகம் ப்ரஹ்மாதிகள் அறியாதார்
(உபாயாந்தரங்கள் பற்றி அன்றோ இவர்கள் தங்கள் பதவி பெற்றார்கள் )
ஆன பின்பு இவ்வருகு உள்ளார் ஒருகாலும் ஒருவரும் (கிம் புநர் கைமுதிக நியாயம் )-அறியாதவர்களே
அவனது நிரபேஷ உபாய பாவத்தின் உறுதி விஸ்வாசம் துர்லபம் என்றவாறு
ஆரே அறிவார் அனைத்துலகும் உண்டு உமிழ்ந்த
பேராழியான் தன் பெருமையை -கார் செறிந்த
கண்டத்தான் எண் கண்ணான் காணான் அவன் வைத்த
பண்டைத் தானத்தின் பதி–73—
பதவுரை
அனைத்து உலகும்–எல்லா வுலகங்களையும்
உண்டு உமிழ்ந்த–(பிரளயத்தில்) உண்பதும் (பிறகு) உமிழ்வதும் செய்தவனும்
பேர் ஆழியான் தன்–பெருமை தங்கிய திருவாழி யாழ்வானைத் திருக் கையிலுயைவனுமான எம்பெருமானுடைய
பேர் ஆழியான் கடல் போல் அப்ரமேயன் என்றுமாம்
பெருமையை–மஹிமையை
அறிவார் ஆரே–அறியக் கூடியவர் யார்? (ஒருவருமில்லை)
அவன் வைத்த–அப்பெருமான் (முன்பே) ஸாதித்து வைத்த
பண்டைத் தானத்தின் பதி–பரமபத மார்க்க மென்னத் தகுந்த சரம ச்லோகத்தை
கார் செறிந்த கண்டத்தான்–நீலகண்டனான சிவனும்
எண் கண்ணான்–நான் முகனும்
காணான்–அறியமாட்டார்கள்.
(அவர்களே அறிய மாட்டாத போது மற்ற பேர்கள் அறிய மாட்டார்களென்பது சொல்ல வேணுமோ?)
ஸகல லோகங்களையும் அமுது செய்து வெளிப் புறப்பட விட்டானாய்
பெரிய திருச் சக்கரத்தை யுடையனாய் ஸ்ரீ கிருஷ்ணனுடைய மஹிமையை அறியத் தக்கவர் யார்
ஒருவரும் அறியார்
அந்தக் கிருஷ்ணன் சாதித்து வைத்த அநாதியாய்
பரமபதத்துக்கு உபாயமான சரம ஸ்லோகத்தை
நிபிடமான கறுப்பைக் கண்டத்திலுடைய நீல கண்டனும் அறியான்
எட்டு நேத்ரங்களை யுடைய ப்ரஹ்மாவும் அறியான் –
ஆரே அறிவார் அனைத்துலகும் உண்டு உமிழ்ந்த பேராழியான் தன் பெருமையை –
சகல லோகத்தையும் வயிற்றிலே வைத்து-வெளிநாடு காண உமிழ்ந்த
பெரியவனுடைய
நைரபேஷ்யத்தை யார் அறிவர் –
இவனுடைய பெருமையை பரிச்சேதிக்க
வல்லார் யார் என்றுமாம் –
கார் செறிந்த கண்டத்தான் எண் கண்ணான் காணான் அவன் வைத்த பண்டைத் தானத்தின் பதி
அவன் என்றும் உண்டாக்கி வைத்த பரம பதத்தை-
நீல கண்டன்-
அஷ்ட நேத்திரன் ஆன ப்ரஹ்மா-
என்கிறவர்களால் காணப் போகாது
க்ருஷ்ணம் தர்மம் சனாதனம் -என்கிறவன்-
உபாய பாவம் இவர்களால் அறியப் போகாது என்றுமாம்-
(உபாய பாவம் சொல்லும் சரம ஸ்லோகம்
உபாய பாவம் இருக்கும் அவன் பெருமை –
ஸ்ரீ வைகுண்டம் –
பிராமண வைபவம் ப்ராப்ய ப்ராபக வைபவம் மூன்றுமே அறியார்கள் என்றபடி )
(பண்டைத் தானத்தின் பதி
என்றும் உண்டாய் இருக்கிற பரமபதம் ஆதல்
பதியாய் -பந்தா என்றாய்
வழி உபாயமாகையாலே சாதன உபாயம் என்னுதல் )
(அப்ரமேய கடல் போல் என்றும் -இது பெரியவாச்சான் பிள்ளை நிர்வாகம்
ரக்ஷண பரிகரமான திருவாழியைத் திருக்கையில் உடையவன் என்றும் -இது அப்பிள்ளையார் நிர்வாகம்
ஆழி -கடலும் சக்கரமும்
திவ்யம் ஸ்தானம் ச அப்ரமேயம் துர் விஜ்ஜேயம் ச ஆகமைர் கம்யம் ஆத்யம்
கச்ச பிரபு ரக்ஷ சாஸ்மான் ப்ரபந்நான் கல்பே கல்பே ஜாயமான ஸ்வ மூர்த்தியா -பாரதம்
ஒவ்வொரு கல்பத்திலும் திவ்ய மங்கள விக்ரஹத்தோடே அவதரித்து சரணாகதர்களை ரக்ஷித்து
பழைமையான ஸ்தானத்தை அடைவிக்கிறான் –
இதுவே பண்டைத் தனத்தின் பதியின் பெருமை )
(கண்டாய் நெஞ்சே கருமங்கள் வாய்க்கின்றோர்
எண் தானும் இன்றியே வந்தியலுமாறு
உண்டானை உலகேழுமோர் மூவடி
கொண்டானைக் கண்டு கொண்டனை நீயுமே –1-10-5-)
(கிருஷ்ணம் தர்மம் சனாதனம் –
ராமோ விக்ரஹவான் தர்ம –
பழையதான நிரபேஷ உபாயமான சரம ஸ்லோகம் அறிவார் யார்
உபாய உபேயத்வே ததிஹ தவ தத்வம் -ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம்
வீடாம் தெளி தரு நிலைமையது ஒழிவிலன் முழுவதும் இறையோன் -திருவாய் -1-3-2-
அந்த கிருஷ்ணன் நிதி வைக்குமா போலே முன்பே சேமித்து வைத்த சர்வருக்கும் விஸ்ரம ஸ்தானமான
தந் நிரபேஷ உபாய பாவத்துக்கு இருப்பிடமான சரம ஸ்லோகத்தைத் தரிசிக்க மாட்டார்கள் -அப்பிள்ளை உரை
பதி -ஸப்த விகாரமாகக் கொண்டு பரம பத மார்க்கம் என்னத் தகுந்த சரம ஸ்லோகம் என்றும் பொருள் சொல்வார்கள் -)
அப்பிள்ளை உரை
சர்வ லோகங்களையும் பிரளயத்தில் அழியாதபடி திரு வயிற்றிலே வைத்து ரக்ஷித்து நோக்கி பின்பு
வெளிநாடு காண புறப்பட விட்டு
ரக்ஷண பரிகரமாக பெரிய திருவாழியை சுதர்சனம் பற்றிய ஸ்ரீ கிருஷ்ணனுடைய
(பேர் ஆழியான் கடல் போன்ற பெரிய திருமேனி பார்த்தோம் )
நிரபேஷ உபாய பாவத்தை அறிவார் யார்
இவர்கள் அறியார்கள் சொல்ல வேண்டுமோ
கறுத்து -(விஷம் உண்ட கர்வம்) -கழுத்து உள்ள ருத்ரனும்
அஷ்ட கண்கள் நேத்ரனான பிரமனும் –
ஸ்வ ஸ்வ சக்திகளை கண்டு ஸ்வாதந்தர்யம் மிக்கு உள்ள இவர்கள் அறிவார்களா காண்பார்களோ
ஆத்யம் ஸ்தானம் பாரத ஸ்லோகம் பண்டைத் தானம் இதில்
நிதி வைக்குமா போல் முன்பே சேமித்து அவன் வைத்த பண்டத் தானம் –
சர்வருக்கும் விஸ்ரம ஸ்தானமான பரமபதமும் -சரம ஸ்லோகமும்
நித்ய சங்கல்பத்தால் நித்ய விபூதி
ஆத்ம ஞானம் தொடங்கி கொஞ்சமாக கூட்டி-நிதி வைப்பது போல் சேமித்து வைத்த பின்பு
அருளிச் செய்த சரம ஸ்லோகம் என்றுமாம்
ஸ்த்ரீ புருஷ விபாகம் இல்லாமல் வர்ண விபாகம் அற சர்வருக்கும் ஒய்வு எடுக்கும் ஸ்தானம்
தனது நிரபேஷ உபாய பாவத்துக்கு இருப்பிடமான
சரம ஸ்லோகத்தைத் தரிசிக்க மாட்டார்கள்
உண்டானை உலகேழுமோர் மூவடி கொண்டானைக் கண்டு கொண்டனை நீயுமே –1-10-5-ஆழ்வார்
காண வல்லார் அல்லர் இவர்கள்
அன்றிக்கே
தன்னை உபாயமாகப் பற்றினாருக்கு என்று
அந்த கிருஷ்ணன்
நித்ய சித்தமாக உண்டாக்கி வைத்த ப்ராப்ய பூமியான பரம பதத்தை
இவர்கள் தரிசிக்க மாட்டார்கள் என்றுமாம்
—————————————————————-
(சரம ஸ்லோக வைபவம் சொன்னார் கீழே
சரணாகத ரக்ஷணத்தை எவ் வகையிலும் செய்து முடிப்பவன் ஸர்வேஸ்வரன்
என்பதைக் காட்டி அருளுகிறார் இதில் –
திருவடி இடம் அபசாரம் பண்ணி காலைக் கட்டின ஸூ முகனை ரஷித்தது –
திருவடி மூலமாகவே ரஷித்ததால் விரோதம் இல்லாமல் செய்து அருளி )
ந ஷமாமி கதாசன-
ந நத்யஜேயம் கதஞ்சன –
ஆஸ்ரிதர் பக்கலில் அபகாரம் பண்ணினாரை ஒரு நாளும்-பொறேன் என்ற வார்த்தைக்கும் –
மித்ர பாவம் உடையாரை மகாராஜர் தொடக்கமானவர்-
விடவரிலும் விடேன் என்ற வார்த்தைக்கும்-
அவிருத்தமாக செய்து அருளின படி –
ஸூ முகன் என்கிற சர்ப்பத்தை ஆமிஷமாக திருவடி பாதாளத்தில் தேடிச் செல்லுகிற படியை அறிந்து –
அதுவும் -கண் வளர்ந்து அருளுகிற திருப் பள்ளிக் கட்டிலை கட்டிக் கொண்டு கிடக்க-
திருவடியும்
ஸ்ரீ பாதம் தாங்குவார் சொல்லும் வார்த்தைகளைச் சொல்ல –
இச் சர்ப்பத்தை திருவடி கையிலே காட்டிக் கொடுத்து
திருவடியை இட்டுப் பொறுப்பித்தது –
இவனை அவன் கைக் கொள்ள பெருகையாலே இரண்டு அர்த்தமும் ஜீவித்தது-
(கால் கட்டை விரலாலே இத்தை எடுத்து அவனுக்குக் கொடுத்து
பாரத வ்ருத்தாந்தம் சுருக்கமாக அருளிச் செய்கிறார்
விநதா ஸூதன் -கத்ரு -அம்ருதம் கொண்டு
விண்ணுளார் பெருமானுக்கு அடிமை செய்வாரையும் செரும் ஐம்புலன்
பெருமாள் சீதாப் பிராட்டியைத் தொலைத்து அழுதது போல்
இந்த சரித்திரங்கள் நமக்கு பாடம் சொல்லவே
அங்கு திருவடி
வைநதேயன் இத்யாதி திரு நாமங்கள் லீலா விபூதியில் )
அப்பிள்ளை உரை அவதாரிகை
சரம ஸ்லோகத்தில் அருளிச் செய்த படியே சரணாகதி பரித்ராணத்தை
தான் அனுஷ்டித்துக் காட்டிய படியை அருளிச் செய்கிறார் இதில்
பதிப்பகைஞற்கு ஆற்றாது பாய் திரை நீர்ப் பாழி
மதித்தடைந்த வாளரவம் தன்னை -மதித்தவன் தன்
வல்லாகத் தேற்றிய மா மேனி மாயவனை
அல்லாது ஓன்று ஏத்தாது என் நா-74-
பதவுரை
பதி பகைஞற்கு ஆற்றாது–ஸஹஜ சத்ருவான பெரிய திருவடிக்கு அஞ்சி,
பத் -பாதை வழி-பாதேயம் போல் -வழி வழியாக பிறவியில் இருந்தே ஸஹஜ சத்ரு
சத் பத் -சத்தான பாண்டவர்கள் சுவர்க்கம் சென்ற பாதை போல்
பாய் திரை நீர்பாழி–பரம்பின அலைகளோடே கூடின நீரை யுடைத்தான கடல் போலே குளிர்ந்த திருப் படுக்கையை
மதித்து–புகலிடமாக நம்பி
அடைந்த–வந்து பற்றின
வாள் அரவம் தன்னை–ஒளி பொருந்திய ஸர்ப்பமாகிய ஸுமுகனை
மதித்து–ஆதரித்து
அவன் தன்–அந்த (சத்ருவான) கருடனுடைய
வல் ஆகத்து ஏற்றிய–வலிமை தங்கிய சரீரத்திலே ஏற விட்டவனும்
மா மேனி மாயவனை அல்லாது–சிறந்த திவ்ய மங்கள விக்ரஹத்தை யுடையவனுமான ஸர்வேஸ்வரனை யன்றி
ஒன்று வேறொன்றை-வேறு ஒருவரை என்று கூட சொல்ல மாட்டாத அநாதரம்
என் நா–எனது நாவானது
ஏத்தாது–தோத்திரம் செய்யாது.
ஸஹஜ ஸத்ருவான பெரிய திருவடிக்கு எதிர் நிற்கையையும் ஸஹியாமல்
பரந்த அலைகளை யுடைய நீர் நிறைந்த சமுத்திரம் போலே குளிர்ந்த தனது படுக்கையை ரக்ஷகமாக நினைத்து
ஆஸ்ரயித்த தேஜஸ்ஸை யுடைய ஸூ முகன் என்கிற ஸர்ப்பத்தை ஆதரித்து
அப்பெரிய திருவடியினுடைய பலிஷ்டமான திருமேனியில் ஏறிட்டு ரஷித்தவனாய்
பெரிய திருமேனியை யுடையனாய் ஆச்சர்ய பூதனான ஸர்வேஸ்வரனை அல்லது
வேறே ஒரு தேவதையை என் நாக்கு ஸ்தோத்ரம் செய்யாது —
(பாரதம் -உத்யோக பர்வம்
இந்திரன் சாரதி மாதலி தனது புத்ரியான குணகேசிக்கு ஸூமுகன் -நாக குமரன் -ஆர்யகன் இவன் தந்தை
அல்ப ஆயுஸ்ஸூ இவனுக்கு என்று சொல்ல
ஆயூஸூ வரம் கொடுத்து இந்திரன் -நான் கொடுத்த வரத்தை நீயே காத்துத் தர வேண்டும்
மணம் புரிய உபேந்த்ரன் அருளிச் செய்த உபகாரம் )
பதிப்பகைஞற்கு ஆற்றாது –
சஹஜ சத்ருவான திருவடிக்கு அஞ்சி-அவர் பலம் பொறுக்க மாட்டாது
(பதிப்பகை -வழி வழியாக வருகிற சாத்ரவம்
பரபலம் போலே திருவடிக்கு விஹிதமான ஹிம்ஸை )
பாய் திரை நீர்ப் பாழி –
பரந்த திரையை உடைத்தான கடல் போலே-திருப் பள்ளிக் கட்டில் –
ஒரோ யுகத்தில் ஒரு இடங்களில் எல்லாம் பிறக்கக்-கூடுகையாலே
திருப் பாற் கடல் தன்னிலே ஆகவுமாம் –
மதித்தடைந்த-
சரணாகதர் ஒரு தலையானால்-
பிராட்டி திருவடி திரு அநந்த ஆழ்வான் ஆன அசாதாராண-பரிகரத்தை விட்டும்-
ரஷிப்பான் ஒருவன் என்றும் நிச்சயித்து அடைந்த
வாளரவம் -தன்னை –
சரண்யன் அங்கீ கரிப்பதுக்கு முன்னே-
அவனுடைய சீல வத்தையாலே தன் கார்யம் தலைக் கட்டிற்று-பிறந்த ஒளி – என்று-
அந்தரிஷிகதஸ் ஸ்ரீ மான் -என்னும் படியே
மதித்து –
நெஞ்சில் கொண்டு (ஸ்ரீ பெரிய திருமொழி–5-8-4-))என்னும்படியாக-
சரணாகதனாக நினைத்து
அவன் தன் வல்லாகத் தேற்றிய மா மேனி மாயவனை அல்லாது ஓன்று ஏத்தாது என் நா –
திருவடி தானே பிரசன்னனாய்-தன் தோளில் தரிக்கும்படி பண்ணி-
அத்தாலே நிறம் பெற்று க்ருத க்ருத்யனாய்-
ஆச்சர்ய யுக்தனான ஈஸ்வரனை ஒழிய-
வேறு ஒன்றை ஏத்தாது என் நா-
வேறு ஓன்று -என்றது –
தேவதாந்தரங்கள் பக்கல் அநாதரம்-
(த்ருணீ க்ருத விரிஞ்சாதி நிரங்குச விபூதய –
தேவதாந்த்ரங்களை ஒரு பொருளாக நினையாதவர் ஆகையால் ஓன்று என்கிறார் )
(இதே விருத்தாந்தம்
அடுத்த கடும் பகைஞற்கு ஆற்றேன் என்றோடி
படுத்த பெரும் பாழி சூழ்ந்த விடத் தரவை
வல்லாளன் கை கொடுத்த மா மேனி மாயவனுக்கு
அல்லாது மாவரோ ஆள் -ஸ்ரீ முதல் திருவந்தாதி–80-
நஞ்சு சோர்வதோர் வெஞ்சின வரவம் வெருவி வந்து நின் சரண் எனச் சரணாய்
நெஞ்சில் கொண்டு நின் அஞ்சிறைப் பறவைக்கு அடைக்கலம் கொடுத்து அருள் செய்தது அறிந்து
வெஞ்சொல் ஆளர்கள் நமன் தமர் கடியர் கொடிய செய்வன யுளவதற்கு அடியேன்
அஞ்சி வந்து நின்னடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே -ஸ்ரீ பெரிய திருமொழி–5-8-4-)
(மத்பக்தம் ஸ்வ பசம் வாபி நிந்தாம் குர்வந்தி யே நரா
பத்ம கோடி ஸதே நாபி ந ஷமாமி கதாசன –ஸ்ரீ வராஹ புராணம்
நாய் மாமிசம் தின்னும் சண்டாளனே ஆகிலும் என்னுடைய பக்தனுக்கு அபசாரம் செய்கிறவர்களை
நூறு கோடி பத்ம காலம் ஆனாலும் ஒருக்காலும் பொறுக்க மாட்டேன் – )
அப்பிள்ளை உரை
ஒக்கப் பிறந்த சத்ருவான பெரிய திருவடிக்கு எதிர் நிற்க மாட்டாமல் பயப்பட்டு பறந்து திரையை யுடைய
கடல் போல் படுக்கையைப்
விஸ்வசித்துப் பற்றினவனாய்
அவனை அண்டை கொள்ளுகையால் ஒளி விடுகிற வடிவை யுடைய ஸூ முகனாகிய பாம்பை
பாகவத விரோதம் பண்ணிவரை – ந க்ஷமாமி -என்கிற உக்திக்கும்
சரணம் புக்கவர்களை வருந்தி ஆகிலும் கை விடேன் -நத்யஜேயம்- என்கிற உக்திக்கும் விரோதம் வாராத படி
கடித்த வாயாலே துடைத்து திருவடியைக் கொண்டே பரிகரிக்கக் கடவோம் என்று அத்யவசித்து
(அடித்த கையாலே அணைக்கும் படி போல் )
சத்ருவானாலும் சரணம் என்றால் கணையத்துக்குள்ளே வர்த்திப்பாரைப் போல்
9எங்கும் ரஷிக்கை தான் நாம் உணர்ந்து ஒத்துக் கொள்ள வேண்டுமே )
ரஷிக்கை வட்டத்துக்குள்ளே இருக்க அபயம் -பயப்பட வேண்டாத படி
பிரபலமான திருவடி திரு மேனியில் ஏறி
அவன் தானே ஏறிட்டுக் கொள்ளும் படி
இப்படி ரக்ஷிக்கப் பெற்றதால் பூரித்து மா மேனி -திரு உடம்பு உடையவனாய் (முன்பு மேனி -இப்பொழுது மா மேனி )
இப்படி விரகு அறிந்து ஆஸ்ரித ரக்ஷணம் பண்ண வல்ல மாயன் இவனை ஒழிய
ஆபத்து வந்த போது ஆஸ்ரிதர்களுக்கு ஆபத்து வந்த திசையிலும்-(பாணாசூர வ்ருத்தாந்தம் )
கை கழிய விட்டுக் கடக்க நிற்கக் கடவ ஷூத்ர ருத்ராதிகளை –
வேறே ஒரு ஷூத்ர தேவதைகளை-என் நா ஒருகாலும் புகழாது
—————————————————————-
(ப்ரஹ்மாதிகளையே ஸ்துதிக்க மாட்டாத நான்
ஷூத்ர மநுஷ்யர்களைப் பாடுவேனோ என்கிறார்)
அப்பிள்ளை உரை அவதாரிகை
எம்பெருமானை ஏத்தக் கடவ நாவைக் கொண்டு
ஷூத்ரரான மநுஷ்யர்களை பாட மாட்டேன்
(நாவைக் கொடுத்ததே வகுத்த அவனை ஸ்துதிக்கவே தானே )
நாக் கொண்டு மானிடம் பாடேன் நலமாகத்
தீக் கொண்ட செஞ்சடையான் பின் சென்று -என்றும் பூக் கொண்டு
வல்லவாறு ஏத்த மகிழாத வைகுந்தச்
செல்வனார் சேவடி மேல் பாட்டு -75-
பதவுரை
தீக் கொண்ட செம் சடையான்–நெருப்புப் போலே சிவந்த சடையை யுடையனான ருத்ரன்
நலம் ஆக–தகுதியாக
என்றும்–எந்நாளும்
பூ கொண்டு–புஷ்பங்களைக் கையிற்கொண்டு
பின் சென்று–அநுஸித்து
வல்ல ஆறு–தன் சக்தியுள்ள வளவும்
ஏத்த–துதிக்க
மகிழாத–(இதைத் தனக்கொரு பெருமையாக நினைத்து) மேனாணிப்புக் கொள்ளாத
வைகுந்தம் செல்வனார்–ஸ்ரீவைகுண்ட நாதனுடைய
சே அடி மேல் பாட்டு–திருவடிகளுக்கு உரிய பாசுரங்களை (ச் சொல்ல வல்ல)
நாக் கொண்டு–நாவினால்
மானிடம்–மனிதர்களை
பாடேன்–பாட மாட்டேன்
நெருப்புப் போலே சிவந்த ஜடையை யுடைய ருத்ரன்
தன் யோக்யதா அனுகுணமாகப் புஷ்பங்களை சம்பாதித்திக் கொண்டு போய்
எப்போதும் தன் சக்திக்குப் படி ஸ்தோத்ரம் செய்ய
அதைத் தனக்கு ஒரு அதிசயமாக நினைத்து சந்தோஷியாத
ஸ்ரீ வைகுண்ட நாதனுடைய அழகிய திருவடிகளின் மேல் பாசுரங்களைச்
சொல்லத் தக்க நாவினால் மனுஷ்யனைப் பாட மாட்டேன் –
நாக் கொண்டு மானிடம் பாடேன்
அவனைப் பாடக் கடவ நாவைக் கொண்டு
ஷூத்ர மனுஷ்யரைப் பாடேன்
நலமாகத் தீக் கொண்ட செஞ்சடையான்
அக்னி போலே சிவந்த ஜடையை யுடையவன்
அன்றிக்கே
அனற்கு அங்கை ஏற்றான் –என்கிறபடியே
அக்னியையும் தரித்து
சிவந்த ஜடையையும் யுடையவன் என்றுமாம்
(பிடி சேர் களிறளித்த பேராளா உந்தன்
அடி சேர்ந்தருள் பெற்றாள் அன்றே பொடி சேர்
அனற்கு அங்கை ஏற்றான் அவிர் சடை மேல் பாய்ந்த
புனல் கங்கை என்னும் பேர்ப் பொன் -ஸ்ரீ முதல் திருவந்தாதி–97–)
பின் சென்று -என்றும் பூக் கொண்டு வல்லவாறு ஏத்த
தானே சென்று
புஷ்பாதி உபகரணங்களைக் கொண்டு
காலம் எல்லாம் ஸத்ருசமாகத் தன் சக்தி உள்ள அளவும் ஸ்துதிக்க
மகிழாத வைகுந்தச் செல்வனார் சேவடி மேல் பாட்டு
பரம பதத்தில் ஐஸ்வர்யத்தை யுடையனாகையாலே
ஷூத்ரரான இவர்கள் ஏத்த
அவிக்ருத்தனாய் இருக்கிறவனுடைய திருவடிகளில் பாட்டைக் கொண்டு
மனுஷ்யரைப் பாடேன் —
(அவாக்ய அநாதர
வ்ருஷ இவ ஸ்தப்த்தோ திவி திஷ்டத்யேக –தைத்ரியம்
மரம் போலே மாறுபாடு அற்றவனாய் ஒப்பற்றவனாய் பரம புருஷன் நிற்கிறான் )
(வர்ஷாயுதைர் யஸ்ய குணா ந சக வக்தும் சைமேதைரபி ஸர்வ லோகை -பாரதம் கர்ணன் பர்வம் -83-65-
யானுமேத்தி ஏழுலகும் முற்றுமேத்தி பின்னையும்
தானுமேத்திலும் தன்னை யேத்த வேத்த வெங்கு எய்தும்
தேனும் பாலும் கன்னலும் அமுதமாகித் தித்திப்ப
யானும் எம்பிரானையே ஏத்தினேன் யானுய்வானே –4-3-10-
வாழ்த்துவார் பலராக நின்னுள்ளே நான்முகனை
மூழ்த்த நீருல்லெல்லாம் படை என்று முதல் படைத்தாய்
கேழ்த்த சீரரன் முதலாக் கிளர் தெய்வமாய்க் கிளர்ந்து
சூழ்த்தமரர் துதித்தால் உன் தொல் புகழ் மாசூணாதே –3-1-7-
அப்பிள்ளை உரை
ஏறிட்டுப் பார்க்க ஒண்ணாதே நெருப்பு போல் ஜ்வலிக்கிற ஜடையை யுடைய ருத்ரனே
துர் மானத்தைப் பொகட்டு
தானே பெருமாள் எழுந்து அருளி உள்ள இடத்துக்குச் சென்று
அங்குத்தை ஸுகுமார்யத்துக்கு அனுரூபமான அவனுக்கு ஏற்ற செவ்விப் பூக்களை
சர்வ காலத்திலும்
தன்னுடைய (வல்லவா) – ஞான சக்திகளை எல்லாவற்றையும் கொண்டு இயன்ற வரை ஏத்த
அங்குத்தை வைபவத்துக்கு அவனுக்கு சத்ருசமாக ஸ்துதிக்க இத்தால்
திரு உள்ளத்தில் ஒரு உகப்பு இன்றிக்கே -மதியாதே
கலங்காப் பெரு நகரில் அயர்வறும் அமரர்கள் அதிபதி
(பரத்வத்திலே நோக்கு இவருக்கு -விகாரம் இல்லாத தேசமாயும் நித்ய முக்தரும்
எளியவன் என்றால் அவஜாநந்தி மாம் மூடர் )
பிரேம பரவசராய் புகழ –
(விகாரம் இல்லா திவ்ய தேசம் -அயர்வில்லா நித்யர் முக்தர்களின் அதிபதி )
அத்தை உகந்து கேட்டு வாழ்ந்து கொண்டு இருக்கும் ஐஸ்வர்யம் யுடையவருடைய -(செல்வனார் )
சிவந்த திருவடிகளை பாடக் கடவ நாக் கொண்டு
ஷூத்ர மனுஷர்களைப் பாடேன் –
————————————————————————–
(வேறே ஒருவரையும் கவி பாடேன் என்று சொல்ல என்ன காரணம் என்ன
உலகில் சொற்களோடு பொருள்களோடு வாசியற அவனுடைய சங்கல்பத்தாலே அன்றோ உண்டானவை
அவனே கவி பாடத் தக்க பெருமை யுடையவன் என்கிறார் –
எந்தச் சொல்லும் இவனையே சொன்னதாகுமே –
எல்லா சொற்களுக்கும் பொருளே இவனே தானே
படு கதையும் கேட்ட மனுவும் நாயனார் இப் பாசுரம் கொண்டே )
அப்பிள்ளை உரை அவதாரிகை
லோகத்தில் வாஸ்ய வாசக ஜாதம் அடங்கலும் அவனுடைய திவ்ய சங்கல்பத்தாலே உண்டானவை –
மாயவனுடைய மாயை -என்பதே திவ்ய ஸத்ய சங்கல்பம்
இத்தால் அவனையே கவி பாட வேண்டிய அவனுடைய வேண்டற்பாடு சொல்லிற்று
பாட்டும் முறையும் படு கதையும் பல் பொருளும்
ஈட்டிய தீயும் இரு விசும்பும் -கேட்ட
மனுவும் சுருதி மறை நான்கும் மாயன்
தன மாயையில் பட்ட தற்பு-76—
பதவுரை
பாட்டும் முறையும்–இயலும் இசையும்
படு கதையும்–பழைய சரிதங்களைக் கூற வந்த இதிஹாஸங்களும்
பல் பொருளும்–பல அர்த்தங்களை யறிவிக்கிற புராணங்களும்
ஈட்டிய தீயும்–(பஞ்சீகரணத்தாலே-ஐந்து பூதங்களும் – பல குணங்களும் தன்னிலே அமையும்படி) சேர்க்கப்பட்ட அக்நியும்
இரு விசும்பும்–பரந்த ஆகாசமும் (முதலான பஞ்ச பூதங்களும்-உப லக்ஷணம் )
கேட்ட மனுவும்–வேதத்திலும் ஓதப்பட்ட மநு மஹர்ஷியின் தர்ம சாஸ்த்ரமும்(மநு ஸ்ம்ருதி பேஷஜம் என்று ஸ்ருதி புகழும் )
ஸ்ருதி–அநாதியாக உச்சாரண அநூச்சாரண ஸ்ரமத்தாலே ஓதப்பட்டு வருகிற
மறை நான்கும்–நான்கு வேதங்களும் (ஆகிய இவை யெல்லாம்)
(எட்டு விஷயங்கள் வாசகமும் வாஸ்யமும் சொல்லும் பொருளும்
தீயும் இரு விசும்பும் இரண்டும் சொல்லுக்குப் பொருள் –
மற்ற ஆறும் வாசகம் )
மாயன் தன்–ஆச்சர்ய சக்தி யுத்தனான எம்பெருமானுடைய
மாயையில் பட்ட–ஸங்கல்பத்தினாலுண்டான
தற்பு–தத்துவங்களாம்.
பாசுரங்களும் ஸ்ரீ ராமாயணமும் முன் நடந்த இதிஹாசங்களைப் ப்ரதிபாதிக்கிற மஹா பாரதமும்
அவற்றிலே சொல்லப்பட்ட அநேக அர்த்தங்களும்
செறிந்த அக்னியும் விசாலமான ஆகாசமும்
ஆப்த தமம் என்று கேட்கப்பட்ட மனு ஸ்ம்ருதியும்
எழுதாமல் குரு முகமாகக் கேட்கப்பட்ட நான்கு வேதங்களும்
ஆச்சர்ய பூதனான ஸர்வேஸ்வரனுடைய ஸங்கல்பத்தினால் உண்டான தத்வங்கள் –
(பாட்டும் முறையும் படு கதையும் பல் பொருளும் )
இப்படி புராணங்களில் பரக்கச் சொல்லப்பட்ட அர்த்தங்கள்
(சர்க்கம் ப்ரதிஸர்க்கம் வம்ச கிளை கதைகள் பூ லோக வர்ணம் புராணங்களில் உண்டே )
காரணமான அக்நி -வியாபகமான ஆகாசம்-
யத்வை கிஞ்ச மநுரவதத் தத் பேஷஜம் -என்று
ஸ்ருத்யாதிகளில் ஆப்த தமமாகக் கேட்ட-மனுவும்
என்றும் ஒதுவித்துப் போகிற நாலு வேதமும்-
இவை எல்லாம்
ஆச்சர்ய பூதன் சங்கல்ப்பத்தால் உண்டான உண்மை உடைய –
பாட்டு -அருளிச் செயல்
முறை -ஸ்ரீ மத் ராமாயணம்
படு கதை -மகா பாரதாதி புராணங்கள்
பல் பொருள்கள் -இவற்றால் பிரதிபாதிக்கிற அர்த்த விசேஷங்கள்
தற்பு-சத்தையாய் -உண்மையை உடைத்தது என்றபடி –
(யத்வை கிஞ்ச மனுரவதத் தத் பேஷஜம்-மனு சொன்னது எல்லாம் மருந்தாகும்
தற்பு -தத்வம் உ ண்மை )
(சர்க்கச்ச ப்ரதி சர்க்கச்ச வம்ச மன்வந்தராணி ச
வம்ஸ அநு சரிதம் க்ருத்ஸ்னம் மயாத்ர தவ கீர்த்திதம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் –6-8-13-
இவையே பாட்டும் படு கதையும் முறையும்
மேலே பல் பொருளும் -பூகோள நிர்ணயம் வர்ணாஸ்ரம ஆசாரங்கள் போல்வன
அத்ர தேவாஸ் ததா தைத்யா கந்தர்வ நாக ராக்ஷஸா
யஷ வித்யாதராஸ் ஸித்தா கத்யந்தே அப்சரஸ் ததா
முனயோ பாவிதாத்மந கத்யந்தே தபஸான் விதா
சாதுர் வர்ண்யம் ததா பும்ஸாம் விஸிஷ்ட சரிதாந ச
புண்யா ப்ரதேஸா மேதிந்யா புண்யா நத்யோ அத ஸாகரா
பர்வதாச்ச மஹா புண்யாச் சரிதாநி ச தீமாம்
வர்ண தர்மா தயோ தர்மா வேத சாஸ்த்ராணி க்ருத்ஸ்ன
யேஷாம் ஸம் ஸ்மரணாத் ஸத்யஸ் ஸர்வ பாபை ப்ரமுச்யதே –ஸ்ரீ விஷ்ணு புராணம் –6-8-14/15/16/17
இதில் சொல்லப்பட்டவற்றை (இப்படி பல் பொருளில் ஒன்றை ) நினைத்த மாத்திரத்திலே
மனிதன் எல்லாப் பாபங்கள் நின்றும் விடுபடுறான் -)
(அப்பிள்ளை நிர்வாகம்
பாட்டும் முறையும் -இயலும் இயலைப் பாடும் முறையான இசையும்
படு கதையும் -பழைய வ்ருத்தாந்தங்களை இப்படி இப்படி என்று கூறும் இதிகாசங்களும்
பல் பொருளும் -சர்க்கச்ச ப்ரதி ஸர்க்கச்ச என்று தொடங்கிச் சொல்லப்படும்
பல பொருள்களை சொல்லும் புராணங்களும் புராணங்களும்
அப்பிள்ளை நிர்வாகத்தில்
ஈட்டிய தீயும் இரு விசும்பும் என்பது மட்டும் வாஸ்ய பரம்
முன்னும் பின்னும் வாசக பரம்
பெரியவாச்சான் பிள்ளை நிர்வாகத்தில் பின்பே வாசக பரம் )
அப்பிள்ளை உரை
இயலும் இசையும்
புரா வ்ருத்த ப்ரதிபாதகமான இதிஹாசங்களும் -(படுகதை )
நாநாவான அர்த்தங்களைச் சொல்லும் புராணங்கள்
ஒன்றிலேயே எல்லாம் உண்டாம்படி பஞ்சீ கரணத்தால் சேர்க்கப்பட்ட அக்னியும்
பரப்பை யுடைத்தான ஆகாசம் முதலான காரணமான பூத பஞ்சகமும்
தத் உப லஷிதமான தேவாதி -கார்ய வஸ்துக்களும்
ஆப்த தமமாக ஜகத் எல்லாம் ஸ்ருதியில் கேட்டுப் போகும் மன்வாதி தர்ம சாஸ்திரங்களும்
ஆச்சார்ய உச்சாரண அனு உச்சாரண கிரமத்திலே நிகமேன ஓதப்படும் ரிக்காதி சதுர் வேதங்களும் ஆகிற
இந்த வாஸ்ய வாசக வர்க்கம் அடங்கலும்
(அக்னி ஆகாசம் மட்டும் வாஸ்யம் -முன்பு பின்பு உள்ளவை வாசகம் )
ஆச்சர்ய சக்தி யுக்தனான -மாயவன்- தன் திவ்ய சங்கல்பத்தால் உண்டான தத்துவத்தை-உண்மையை- உடைத்தவை
இன்ன சப்தம் இன்ன பொருளைக் குறிக்கக் கடவ -வாஸ்ய வாசக சம்பந்த போதனா சக்தி -அவனது ஸங்கல்பத்தாலே –
(நையாயிகன் தார்க்கிகன் மீமாம்சகர் வாதம் இதில் -இந்த சக்தி நாம் ஊட்டணுமா அவற்றுக்கே சக்தி உண்டா-
அபூர்வ வாதம் உண்டே அவர்கள் இடம் )
வாசக சம்பந்தம் நியமம் -அவனுடைய திவ்ய சங்கல்ப ஆயத்தம்
தற்பு –தத்வம் -உண்மை -என்றபடி
ஆத்ம மாயையா ஸம்பவாமி -அவனே சொல்வான் அன்றோ
————————————————————————–
(வாஸ்ய வாசகங்கள் எல்லாம் அவனது சங்கல்பம் அடியாக என்பது ஒருபுறம் இருக்கட்டும்
குலங்களாய ஈரிரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன்
நலங்களாய நற் கலைகள் நாலிலும் நவின்றிலேன் –நாவிலும் என்றும் பட பேதம் -இங்கே
புலன்கள் ஐந்தும் வென்றிலேன் பொறியிலேன் புனித நின்
இலங்கு பாதம் அன்றி மற்றோர் பற்றிலேன் எம் ஈசனே -ஸ்ரீ திருச்சந்த விருத்தம்–90-
தோஷமே வடிவெடுத்த என் பக்கல் விசேஷ கடாக்ஷம் பண்ணின படியைக் கண்டால்
நான் நாக் கொண்டு மானிடம் பாடுவேனோ என்கிறார்-)
அப்பிள்ளை உரை -அவதாரிகை
என் தோஷ பூயசத்தை பார்த்து தோஷமே உருவாக்க கொண்ட இகழாமல்
(பக்தர்களின் பாபங்களைப் பார்க்காத தாமரைக் கண்ணன்
அன்று அதனை ஈன்று உகந்த ஆ -வழு காதலிப்பது போல் )
என்னுடைய ஸமஸ்த கர்மங்களும் உரு மாயும் படி பக்கம் நோக்கு அறியாத
(பைந் தாமரைக் கண்ணன் )தன் திரு உள்ளத்தை என்னிடத்தில் வைத்து அருளினான் என்கிறார் –
தற்பென்னைத் தான் அறியா னேலும் தடங்கடலைக்
கற் கொண்டு தூர்த்த கடல் வண்ணன் -எற் கொண்ட
வெவ் வினையும் நீங்கா விலங்கா மனம் வைத்தான்
எவ் வினையும் மாயுமால் கண்டு-77-
பதவுரை
தட கடலை–பரந்த தெற்கு சமுத்ரத்தை
கல் கொண்டு–மலைகளினால்
தூர்த்த–அணை செய்து அடைத்தவனும்
கடல் வண்ணன் தான்–கடல் போன்ற கருநிற முடையனுமான எம்பெருமான்
என்னை–(தோஷமே வடிவெடுத்தவனான) என்னை-இதுவே ஸ்வரூப நிரூபக தர்மம் எனக்கு
தற்பு–உள்ளபடியே
அறியான் ஏலும்–அறிந்திலனாயினும்,
எற் கொண்ட–என்னைக் கொள்ளை கொண்டிருக்கிற
வெம் வினையும்–கொடிய பாவங்கள் யாவும்
நீங்க–என்னை விட்டு நீங்கும்படியாக
கண்டு–அழகிய திருக் கண்களாலே குளிரக் கடாக்ஷித்து
மனம்–தனது திருவுள்ளத்தை
விலங்கா -வேறு எங்கும் விலகிப் போகாதபடி
வைத்தான்–(என் மீதே ஒரு மடைப் படுத்தி) வைத்தருளினன் (ஆகையாலே)
எங்கும் பக்க நோக்கசும் அறியான் என் பைந் தாமரைக் கண்ணன்
எவ் வினையும்–பாபமென்று பேர் பெற்றவை யடங்கலும்
மாயும்–உரு வழிந்து போம்-
ஆல் -ஆச்சர்யம்
விசாலமான ஸமுத்ரத்தைக் கற்களினால் அடைத்த சமுத்திரம் போன்ற திருமேனியை யுடைய
ஸர்வேஸ்வரனான தான் என்னை யதார்த்தமாக அறியானாகிலும்
என்னை கிரஹித்துக் கொண்ட ஸகல பாபங்களும் தொலையும்படி கடாக்ஷித்து
என் மனஸ்ஸை விஷயாந்தரங்களில் செல்லாத படி செய்து
என்னிடத்தில் திரு உள்ளத்தை வைத்தான்
ஆகையால் ஸகல பாபங்களும் நசிக்கும் —
ஆழக் கடவ கல்லைக் கொண்டு-நீரிலே அணை கட்டினவன் –
எற் கொண்ட வெவ் வினையும் நீங்கா விலங்கா மனம் வைத்தான் எவ் வினையும் மாய்மால் கண்டு –
நான் உரு மாயும்படி என்னை க்ரசித்த மகா பாபமும்-நசிக்கும்படி –
வேறு ஒரு இடத்திலும் போகாதபடி –
திரு உள்ளத்தாலே கொண்டு-என் பக்கலிலே மனஸை வைத்தான் –
ஆதலால் பாபம் என்று சொல்லப் படுகிறவை அடைய மாயும் –
தற்பு -உண்மை
என்னை -ஆபி முக்யாதிகளும் இன்றிக்கே தோஷ பூயிஷ்டனான என்னை
அறியனேலும் -அறியாதே இப்படி ஸர்வஞ்ஞனாய் இருக்கச் செய்தேயும் தோஷம் பாராமல் விஷயீ கரிப்பதே
இது என்ன அகடிகடநா சாமர்த்தியம் என்கிறார்
தடம் கடலை இத்யாதி –
என் கொண்ட -என்னை க்ரஸித்துக் கொண்ட
எவ்வினையும் நீங்கக் கண்டு விலங்கா மனம் வைத்தான்
ஆல் –ஆகையால்
எவ்வினையும் மாயும் என்றபடி –
(ஸஹஸ்ராம்ஸூ -பக்தர்களுடைய குணங்களை ஆயிரம் மடங்காக அறிபவன்
அவிஞ்ஞாதா ஹி பக்தாநாம் ஆகஸ்ஸூ கமலேக்ஷண –
பக்தர்களுடைய பாபங்கள் விஷயத்தில் தாமரைக் கண்ணன் அறியாதவனாக இருக்கிறான் )
அப்பிள்ளை உரை
சர்வஞ்ஞனான தான் தோஷமே வேஷமான என்னை உண்மையாக அறியானே யாகிலும்
(சர்வஞ்ஞன் சர்வவித் தான் -தோஷத்தை அறியாமல் இல்லாமல் என்னை அறியாமல்)
இடமுடைத்தான கடலைக் கல்லால் அடைத்த-நீரில் அழுந்தும் கல்லைக் கொண்டு அடைத்த –
கடல் வண்ணன்-கடல் போல் இருண்ட குளிர்ந்த வடிவு அன்றோ
(குரங்குகள் அணில்கள் கைங்கர்யங்களைப் பார்த்து பார்த்து கடல் வண்ணன் ஆனான் )
நான் உரு மாய்ந்து போகும் படியான ஸமஸ்த பாபங்களும்
(வெவ்வினை -மஹா பாபங்கள்
எவ்வினை அனைத்து பாபங்கள் )
போகும் படி
தனது அழகிய திருக் கண்களால் குளிரக் கடாக்ஷித்து
திரு உள்ளத்தை வேறே ஒரு விஷயத்தில் புகுந்து போகாதபடி ஒருமடைப்பட என்னிடம் வைத்தான் –
ஆகவே பாபங்கள் என்று பேர் பெற்ற அனைத்துமே மாய்ந்து போனதே
————————————————————————–
கண்டு இத்யாதி –
அபிமத விஷயத்தில் ப்ராவண்யத்தை விளைத்தவனை-அநங்கன் ஆக்கினவன் –
நெஞ்சும் கூட-ஸ்ரவண மாத்ரத்திலே பரவசமான படியைக் கண்டால் –
இவ் வஸ்துவை சாஷாத் கரித்து ப்ரணாமாதிகளைப்-பண்ணினார்க்கு
எத்தனை நன்மை பிறவாது -என்கிறார்
(முதல் பதத்துக்கு–அபிமத விஷய இத்யாதி – அர்த்தமாக்கி அவதாரிகை அருளிச் செய்கிறார்
ஹிமவத் பார்ஸ்வத்திலே ருத்ரன் தபஸ்ஸூ பண்ண பார்வதி பரிசர்யை பண்ணுகிற அளவிலே மன்மதன் வந்து
இருவருக்கும் சங்கத்தைப் பிறப்பிக்க -அவ்வளவில் தபஸ்ஸூ குலைகையாலே
நெற்றியிலே கண்ணைத் திறந்து தஹிக்க அப்போது அநங்கன் ஆனான் என்றபடி –
காம்ய வானம் காமா அயோத்தியை பக்கம் காமனை சாம்பல் ஆக்கின இடம் –
பிருந்தாவனம் உள்ள காம்ய வானம் வேறே
ராஜஸ தாமஸர் கேட்டதுக்கே இதுவானால் சாத்விகர் கண்டால் என்ன ஆகும் )
(அத்ருஷ்ட பலமான பாப நிவர்த்தகம் நிற்க
கண்டு வணங்கினவர்கள் த்ருஷ்டத்திலே அனுபவிக்கும் ஆனந்தம் தான் எத்தகையது என்கிறார் இதில் )
அப்பிள்ளை உரை -அவதாரிகை
யாதிருச்சிக்க பகவத் நாம ஸ்ரவணத்தாலே
தமஸ் ப்ரக்ருதியாய்
க்ரோத சீலனான ருத்ரனுக்கு உட்பட விக்ருதனாம் படி கண்டால்
நேர் நேர் கொடு நேர் சாஷாத்கரித்த வர்களுக்கு என்ன விக்ருதி ஆகுமோ என்கிறார் –
கண்டு வணங்கினார்க்கு என்னாம் கொல் காமன் உடல்
கொண்ட தவத்தால் குமை உணர்த்த -வண்டலம்பும்
தார் அலங்கல் நீண் முடியான் தன் பேரே கேட்டு இருந்து அங்கு
ஆர் அலங்கல் ஆனமையால் ஆய்ந்து-78-
பதவுரை
காமன்–மன்மதனுடைய
உடல்–சரீரத்தை
கொண்ட–நீறாக்கின
தவத்தாற்கு–தபஸ்வியான பரம சிவனுக்கு
உமை–(மனைவியான) பார்வதி யானவள்
உணர்த்த–தெரிவிக்க,
அங்கு–அப்போதே
ஆர் அலங்கல் ஆனமை–மிகவும் அசைந்து போனமையை-தன்னிலை இழந்து பரவசமானமை –
ஆய்ந்தால்–ஆராய்ந்து பார்க்கில்,
வண்டு அலம்பும் தார் அலங்கல் நீள் முடியான தன் பெயர் கேட்டிருந்தே–வண்டுகள் ஒலிக்கப் பெற்ற பூமாலயை
நீண்ட திருவபிஷேகத்திலுடையனான எம்பெருமானுடைய திருநாமங்களைக் கேட்ட மாத்திரத்திலேயே
பார்வதி தேவி சொல்ல ருத்ரன் கேட்டு -தவத்தாருக்கு சிஷ்யை உணர்த்தினால் போல்
கண்டு வணங்கினார்க்கு–நேரே கண்டு வணங்குமவர்கட்கு
என் ஆம் கொல்–எப்படிப்பட்ட விகாரமுண்டாகுமோ (என்பது சொல்ல முடியாது)
மன்மதனுடைய உடலை நீறாக்கின தபஸ்ஸை யுடைய ருத்ரனுக்குப் பார்வதி
உபதேசிக்க –ஞாபநம் பண்ண
வண்டுகள் ஸஞ்சரிக்கிற திருத்துழாய்க் கதிர்களினால் கட்டப்பட்ட மாலையினால் அலங்க்ருதமான
நீண்ட திரு அபிஷேகத்தை யுடைய ஸர்வேஸ்வரனுடைய திரு நாமங்களைக் கேட்டு
அதில் மக்நனாய் இருந்து அப்போது வாடின மாலை போலே பரவசனானன் ஆகையாலே விசாரித்து
ஸர்வேஸ்வரனை ஸேவித்து ஆஸ்ரயித்தவர்களுக்கு என்னவுமாம் —
தவத்தாற்கு –
தபச்சுக்கு பலம் ஒருத்தனுடைய ஹிம்சை யாம்படி-
நெஞ்சு திண்ணியன் ஆனவனுக்கு
உமை உணர்த்த –
ப்ராசங்கிகமாக பகவத் குணங்களைக் கேட்டு-
சிஷ்யாசார்ய க்ரமம் மாறாடி
அவள் வாயாலே தான் கேட்டு
(உணர்த்த
ருத்ரன் த்யான பரனாய் இருக்க அப்போது பார்வதி -நீர் எல்லாருக்கும் உபாஸ்யரராய் இருக்க
உமக்கு தியானத்துக்கு விஷயம் உண்டோ -என்று கேட்க
அவன் பகவத் குணங்களை அவளுக்குச் சொல்ல
நமக்கும் உண்டு காண் -என்று ஈடுபட்டான்
அவன் சொன்னான் ஆகிலும் இவள் உணர்த்தக் கேட்டு
நீண் முடியான் தன் பேரே கேட்டு இருந்து அங்கு ஆர் அலங்கல் ஆனமையால்
கண்டு வணங்கினார்க்கு என்னாம் கொல்
என்று அந்வயம் )
வண்டு இத்யாதி –
மது வெள்ளத்தில் வண்டுகள் அலையா நின்ற-திருத் துழாய் மாலையையும்
ஆதி ராஜ்ய ஸூசகமான முடியையும் உடைய-சர்வேஸ்வரன் திரு நாமங்களையே கேட்டு
நெஞ்சாலே அனுசந்தித்துக் கொண்டு இருந்து
(திருத்துழாய் -பூ தேன் ஊருவதால்-பத்ரம் புஷ்பம் இலையாக இருக்கும் போதே புஷ்பம் -அலங்கல்)
ஆர் அலங்கல் ஆனமையால் –
அலங்கல் என்று அசைவாய்-
பாரவச்யதையைச் சொன்ன படி
(கம் த்வம் அர்ச்சயஸே தேவ கிம் தைவதம் அதிகம் தவ
ஜப ஹோம நமஸ்காரை தம் வதஸ்த மஹேஸ்வர -என்று தொடங்கி ப்ரஸ்னம் பண்ண
பார்வதியை மேலும் பகத் நாமங்களை சொல்லக் கேட்டு மேனி மிகத் தளர்ந்து போனான் ருத்ரன்
ப்ராசங்கிக்கமாக குரு சிஷ்ய க்ரமம் மாறாடிக் கேட்டதற்கே இவ்வாறு ஆனான்
வண்டு அலம்பும் தார் அலங்கல் நீள் முடியான்
சுடர் முடி மேலும் புனைந்த தண்ணம் துழாயுடை எம்மான் -(1-9-7)
ஆதி ராஜ்யம் அதிகம் புவநாநாம் ஈஸ தே பிசு நயன் கில மௌலி -ஆழ்வான்
ஆர் அலங்கல் ஆனமை
அலங்கல் -அசைவு
மிகவும் அசைந்து போனமை
அன்றிக்கே
வாடின மாலை போல் துவண்டு விழுந்தான்
ஆய்ந்து -ஆராய்ந்து -கண்டு வணங்கினாருக்கு என்னாகும் கொல் )
அப்பிள்ளை உரை
அபிமத விஷயத்தை கடிப்பிக்க காமனுடைய சரீரத்தை தக்தமாக்கிய பஸ்மமாக்கிய தபஸ் க்ரூரரான ருத்ரனுக்கு
மஹிஷியான உமையானவள் முறை மாறாடி அஞ்ஞான ஞாபனம் பண்ண
வண்டுகள் ஆனவை தேன் வெள்ளத்திலே கிடந்து அலையும்படி இருக்கும் படியான திருத்துழாயால் அலங்க்ருதமான
ஆதிராஜ்ய ஸூசகமான திரு அபிஷேகம் உடைய
சர்வேஸ்வரனுடைய ஒப்பனை அழகு
அழகு முதலான ஸ்வ பாவத்துக்கு வாசகமான திரு நாமங்களை யாதிருச்சிகமாகக் கேட்டு
சொல் என்ன சொன்னாளே
நெஞ்சால் நாமங்களுக்கு உள்ளீடான குணங்களை நெஞ்சால் அனுசந்தித்து அந்த தசையில் முடிந்து
வாடின பூ மாமலை போல் பரவசனாயத் துவண்டு விகாரம் அடைந்து
விழுந்தபடி கண்டால்
உள் எலாம் உருகி உடம்பு எல்லாம் கண்ண நீர் சோர –
கேட்ட அளவன்றிக்கே பத்தும் பத்தாக இவ் வஸ்துவை சாஷாத்கரித்து நிர் மமராய்
திருவடியில் விழுந்தவருக்கு என்னாகுமோ 0எந்த விக்ருதி பிறக்குமோ –
————————————————————————–
(நேரே கண்டு வணங்கினவர்கள் ஆனந்தம் மிகப் பெரிது என்றார் கீழே
சரீரத்தில் ஈடுபாடு இதற்கு தடையாகாதோ என்ன
பகவத் அனுபவ த்வரை உள்ளவர்கள் -சரீரம் வ்ரணவத் பஸ்யேத் -புண்ணாகவே சரீரத்தைப் பார்க்கார்கள்
எனவே பகவத் அனுபவ ஜெனித ஆனந்தத்துக்கு சரீர ப்ராவண்யம் இடையூறாக நில்லாது என்கிறார் –
ப்ரஹ்மம் ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறிந்ததாகுமே
ஆழ்வார் திருப்புளிய மரத்தில் இருந்து ப்ரஹ்மத்தை அறிய
உலக இயல்புகளையும் அறிந்து அருளிச் செய்கிறார் அன்றோ
அதே போல் இவரும் அருளிச் செய்கிறார் )
ஆய்ந்து -இத்யாதி
பகவத் விஷயத்தில் ருசி உடையவர்கள்-
அவனை ஏகாந்தமாக அனுபவிக்கலாம் தேசம் பரமபதம்-என்று ஆசைப்பட்டு
அதுக்கு காற்கட்டாய் ஆயிற்று என்று-சொல்லலாம்படி அபிமானித்த சரீரத்தை –
சரீரம் வ்ரணவத் பஸ்யேத் -என்னும்படியாக
நோயாக விரும்புவர்கள் -என்கிறார்-
(புண்ணேர் ஆக்கை -உடம்பே நோய் என்று எண்ணுவார்கள்
சரீரமும் நாமும் ஓன்று அல்ல என்ற எண்ணம் வந்தால் கால் கட்டு ஆகாதே
பக்தி சரணாகதி பண்ண இது வேண்டுமே
ஸ்ரீ வை குந்தத்தில் ஆசை வை -சம்சாரம் குந்தம் என்று அறியலாம் )
அப்பிள்ளை உரை அவதாரிகை
பகவத் விஷயத்தில் ருசி உடையவர்கள் எம்பெருமானை அனுபவிக்கைக்கு ஏகாந்தமான
பரமபதத்தை அடைய-பிராபிக்க வேணும்-என்னும் த்வரை மிக்கு -அதிசயத்தாலே
தத் விரோதியான சரீரத்தையே நோயாகவே விரும்புவார்கள் -நினைப்பர்
ஆய்ந்து கொண்டு ஆதிப் பெருமானை அன்பினால்
வாய்ந்த மனத்திருத்த வல்லார்கள் -ஏய்ந்த தம்
மெய் குந்த மாக விரும்புவரே தாமுந்தம்
வைகுந்தம் காண்பார் விரைந்து-79-
பதவுரை
ஆதி–ஜகத் காரண பூதனான
பெருமானை–ஸர்வேச்வரனை
அன்பினால்–ப்ரேமத்துடன்
ஆய்ந்து கொண்டு–அநுஸந்தித்துக் கொண்டு
ஞானம் கனிந்த நலம் கொண்டு நைந்து
வாய்ந்த மனத்து–(தமது) பாங்கான நெஞ்சிலே
இருத்த வல்லார்கள் தாமும்–நிலை நிறுத்திக் கொள்ள சக்தரானவர்கள்
தம் வைகுந்தம்–தங்களுக்கென்று ஏற்பட்டுள்ள பரம பதத்தை
விரைந்து–சீக்கிரமாக
காண்பார்–காண விருப்பமுடையராய்
ப்ரஹ்மத்தை உள்ளத்தே இருத்தச் சொன்னால் மாட்டேன் என்று வைமுக்யம் இல்லாததே போதுமே
ஏய்ந்த–ஆத்மாவோடு செறிந்த
தம் மெய்–தங்களுடைய உடம்பை
குந்தம் ஆக–வியாதியாக
விரும்புவர்-எண்ணுவர்
ஜகத் காரணனான ஸர்வேஸ்வரனை ப்ரீதியுடன் அனுசந்தித்துக் கொண்டு தகுந்த
மனஸ்ஸில் ஸ்தாபிக்க வல்லவர்களான தங்கள் ஸ்ரீ வைகுண்டத்தை த்வரையாக சேவிப்பார்கள்
தம்முடன் சேர்ந்து இருக்கிற சரீரத்தை வியாதி போல் பரிஹரிக்கத் தக்கதாக ஆசைப்படுவார்கள் –
ஆய்ந்த இத்யாதி –
ஜகத் காரண பூதனான சர்வேஸ்வரனை பிரேமத்தாலே அனுசந்தித்திக் கொண்டு
இருத்துகைக்கு யோக்யமான நெஞ்சிலே வைக்க வல்லவர்கள்
(நில்லவா நில்லா நெஞ்சு- சஞ்சலமான மனஸ்ஸூ
தாழ்ந்த இதிலே உயர்ந்த ப்ராப்ய விஷயத்தை உள்ளத்திலே வைக்கும் தன்மை ஆற்றல் யுடையவர்கள் )
ஏய்ந்த தம் மெய் –
ஸ்தூலோஹம் க்ருசோஹம் என்று-
தானாக சொல்லலாம் படியான சரீரத்தை
குந்தமாக -நோயாக-நினைப்பார்கள்
(ஏய்ந்த -ஏய்கை -பொருந்துகையாய் –
பிரித்துக் காணப் போகாதே தானே என்னலாம் படி பொருந்தி இருக்கை )
(மனத்திருத்த வல்லார்கள்
தாம் தம் வைகுந்தம் -தமக்கு ஏகாந்த போக யோக்யமான பரம பதத்தை
விரைந்து காண்பாராக
மெய் குந்தமாக விரும்புவர்
என்று அந்வயம் )
(காரணந்து த்யேய
வாய்ந்த மனம்
முந்துற்ற நெஞ்சு
என்னை நெகிழ்க்கிலும் என்னுடைய நன்னெஞ்சம் தன்னை அகல்விக்கத் தானும் கில்லான் இனி -1-7-8-
முழு ஏழு உலகம் உண்டான் உவந்து வந்து அடியேனுள் புகுந்தான் அகல்வானும் அல்லன் இனி –2-6-7-
ஏய்ந்த தம் மெய்
ஸ்தூலோஹம் என்று தானாகவே வ்யவஹரிக்கலாம் படி பொருந்தி ஒன்றி நிற்கும் சரீரம்
குந்தமாகவே எண்ணுவர்
ஸூகத்துக்கோ ஸூக துக்க மிஸ்ரத்துக்கோ ஹேதுவாக இல்லாமல் துக்க ஹேதுவாகவே எண்ணுவார் -)
அப்பிள்ளை உரை
ஜகத் கரண பூதனான சர்வேஸ்வரனை பிரேமத்தாலே அனுசந்தித்துக் கொண்டு அவன் எழுந்து அருள பாங்கான நெஞ்சிலே
(இருப்பேன் என்று பேராமல் இருக்க அவன் வந்து இருக்கும் நேனு அன்றோ )
ஸூ ப்ரதிஷ்டித்தமாக வைக்க வல்லவர்கள்
ப்ராப்ய ருசி பரிபூர்ணராய் இருக்கும் தாங்களும்
ஆஸ்ரிதரான தங்களுக்காக என்று கூறப்பட்டு உள்ள ஸ்ரீ வைகுந்தத்தை
பெற்ற போது பெறுகிறோம் என்று ஆறி இருக்கை அன்றிக்கே
சத் த்வரராய் -(விரைந்து )
கெடுத்தவன் நிதி கண்டால் போல் -கண்டு கொண்டு அனுபவிப்பது போல்
அதுக்கு கால் கட்டாய் தேவோஹம் என்று சொல்லும்படி ஆத்மாவோடு -தங்களோடு -பொருந்தி உள்ள
சரீரத்தையே வியாதி போல் துக்காஹவம் என்று கருதி
(ஸ்ரீ வைகுந்தம் ஆசை உள்ளவன் தான் ஸூகத்தையும் துக்கமாகக் கொள்ளுவான்-
இங்கு உள்ள ஸூகங்கள் அல்பமாயும் அஸ்திரமாயும் இருக்கும் என்று உணர்ந்தவர்கள் –
அப்ராக்ருத திருமேனி அங்கே பெற்றால் தானே அளவில்லா பேர் இன்பம் நிலையாகப் பெறுவோம் )
இது விட்டு நீங்குவது எப்போதோ என்று மநோ ரதித்து இருப்பார்கள்
குந்தம் என்று வியாதி- தடங்கல்
———————————————————–
முன்பு பிரளயம் வருகிறது என்று லோகத்தைத் திரு வயிற்றிலே வைத்து
பிரளயம் தேடி வந்தாலும் அத்தனை போதும் தெரியாதபடி மறைத்துக் கொண்டு காத்து ரஷித்த
(ஆபத் சகனான )கிருஷ்ணனை விரைந்து அடையுங்கோள்-
(ஆக ஞானிகளுக்கு மட்டும் அல்ல
ரஷித்து அருளுவாய் என்று அபேக்ஷிக்கவும் அறியாத சம்சாரிகளுக்கும் அவனே ரக்ஷகன்
கண்ணன் உலகம் ஆடின -கதவை விரைந்து அடைமின் -யம கிங்கரர்களைப் பார்த்து
கண்ணனை விரைந்து அடைமின் -நம்மைப் பார்த்தும் )
அப்பிள்ளை உரை அவதாரிகை
சர்வ ஆபத் சகனான கிருஷ்ணனை
ஸம்ஸார ஆபத்தை யுடைய நீங்கள்
தந் நிவ்ருத்தி அர்த்தமாக ஈண்டென ஆஸ்ரயியுங்கோள் என்கிறார் –
விரைந்து அடைமின் மேலொரு நாள் வெள்ளம் பரக்க
கரந்து உலகம் காத்து அளித்த கண்ணன் -பரந்து உலகம்
பாடின வாடின கேட்டு படு நரகம்
வீடின வாசற் கதவு-80-
பதவுரை
உலகம்–சிறந்த பாகவதர்கள்
பரந்து–எங்குத் திரிந்து
பாடின–பாடின பாடல்களையும்
ஆடின–ஆடின ஆட்டங்களையும்
கேட்டு–கேட்டதனால்
படு நரகம் வாசல்–க்ரூரமான நரகங்களின் வாசல்களிலிருந்த
கதவு–கதவுகள்
வீடின–விட்டொழிந்தன (நரக வாசல்கள் பாழாய்ப் போயின)
மாதவன் பூதங்கள் மண் மேல் ஆடின நம்மாழ்வார் போல் இங்கும் பரந்து உலகம் பாடின வாடின
நமனும் முற்கலனும் பேச நரகில் நின்றார்கள் கேட்க நரகமே ஸ்வர்க்கமாகும் நாமங்கள் உடைய நம்பி
மேல் ஒரு நாள்–முன்னொரு காலத்தில்
வெள்ளம் பரக்க–பிரளய வெள்ளம் பரவின போது
உலகம்–உலகங்களை யெல்லாம்
கரந்து–(திருவயிற்றில்) மறைத்து வைத்து
காத்து அளித்த-துன்பங்களைப் போக்கி ரக்ஷித்த
கண்ணன்–கண்ண பிரானை
விரைந்து அடைமின்–சீக்கிரமாகச் சென்று பணியுங்கோள்
ஸஞ்சரித்து உத்க்ருஷ்டராய் சந்தோஷத்தினால் ந்ருத்யம் செய்தவர்கள் கானம் பண்ணின திரு நாமங்களைக் கேட்டு
சகலரும் உஜ்ஜீவித்தார்கள் ஆகையாலே
பாழான நரகத்தின் வாசலில் கதவு பிடுங்கிப் பொகட்டப் பட்டது –
முற்காலத்தில் பிரளய ஆர்ணவம் வியாபிக்க லோகங்களைத் தன் கர்ப்பத்தில் மறைத்து வைத்து
வியஸனங்களைப் போக்கி ரஷித்த
ஸ்ரீ கிருஷ்ணனை சீக்கிரமாக ஆஸ்ரயியுங்கோள்
உலகம் -என்று உத்க்ருஷ்டரைச் சொல்லுகிறது
(உலகம் உயர்ந்தோர் மாட்டே )
பரந்து உலகம் பாடின வாடின கேட்டு படு நரகம் வீடின வாசற் கதவு –
பரந்து உத்க்ருஷ்டராய் ஆடினவர்கள் பாடின-திரு நாமங்களைக் கேட்ட
நரகத்து வாசல்களில் கதவு வாங்கிப் பொகட்டன-
அன்றிக்கே
நரகத்து வாசல்களிலே பிடிங்கிப் பொகட்ட கதவுகளை நாட்டி –
முனியாது மூரித்தாள் கோமின் (ஸ்ரீ முதல் திருவந்தாதி—87)-என்னும்படி-
விரைந்து அடையுங்கோள் -என்றுமாம்
கண்ணன் -என்றது
கண்ணனை -என்றபடி
கண்ணனை விரைந்து அடைமின்
படு நரக வாசல் கதவு வீடின என்று பின்ன கிரியை யாதல்
கண்ணனைப் பாடின ஆடின கேட்டு நன்றாக வாசலில் வீடின கதவுகளை விரைந்து அடைமின் –
என்று ஏக கிரியை யாதல்
இத்தால்
நரகம் பாழ்த்தது என்னுதல்
போக்கு வரத்து இல்லாதபடி வாசலை அடையுங்கோள் என்னுதல்
இரண்டு தாத்பர்யம் –
(பரந்து ஆடின உலகம் பாடின கேட்டு
இடங்கொள் சமயத்தை எல்லாம் எடுத்துக் களைவன போலே
தடங்கடற் பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதங்களேயாய்க்
கிடந்தும் இருந்தும் எழுந்தும் கீதம் பல பல பாடி
நடந்தும் பறந்தும் குனித்தும் நாடகம் செய்கின்றனவே.–5-2-4-
கொன்று உயிர் உண்ணும் விசாதி பகை பசி தீயன எல்லாம்
நின்று இவ் வுலகில் கடிவான் நேமிப் பிரான் தமர் போந்தார்
நன்று இசை பாடியும் துள்ளி ஆடியும் ஞாலம் பரந்தார்
சென்று தொழுதுய்ம்மின் தொண்டீர்! சிந்தையைச் செந்நிறுத்தியே.–5-2-6-
பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்று மில்லை
கலியுங் கெடும் கண்டு கொண்மின் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
மலியப் புகுந்து இசை பாடி ஆடி உழி தரக் கண்டோம்.–5-2-1-
நமனும் முற் கலனும் பேச நரகில் நின்றார்கள் கேட்க நரகமே ஸ்வர்க்கமாகும் நாமங்களுடைய நம்பி
யம தூதர்களை நோக்கி ஆழ்வார் பேசுவது என்றுமாம்
இனியார் புகுவார் எழு நரக வாசல்
முனியாது மூரித் தாள் கோமின் கனி சாயக்
கன்று எறிந்த தோளான் கனை கழலே காண்பதற்கு
நன்கு அறிந்த நா வலம் சூழ் நாடு –ஸ்ரீ முதல் திருவந்தாதி—87–)
அப்பிள்ளை உரை
எங்கும் தீர்த்தகரராய் திரிந்தி என்னும்படி
(பரந்த உலகம் பாடி ஆடி முதல் ஆழ்வார்கள் )
சர்வ பிரதேசத்திலும் ச ரச சஞ்சாரம் பண்ணா நிற்பாராய் -சுவையாக -அருளிச் செய்து பாடி ஆடி -ஆனந்த நிர்ப்பரராய்
பகவத் அனுபவத்தால் வந்த உயர்த்தி யுடையவராய் -(உலகம் உயர்ந்தோர் மாட்டே இதுவே உயர்த்தி )
(பேயாழ்வாரால் திருத்தப்பட்டவர் தானே இவரும் )
அனுபவ ஜனித ஹர்ஷ ப்ரஹர்ஷத்தால் -ப்ரக்ருஷ்டமான ஆனந்தம் -மிகுதியான ஆனந்தம் -ப்ரக்ருஷ்டமான ஹர்ஷம் –
ச சப்ரம நர்த்தனம் பண்ணா நிற்கும் -ஸ்ரீ வைஷ்ணவர்கள்
ப்ரீதிக்கு போக்கு விட்டு அருளிச் செயல்களை-பாடின திருநாமங்களைக்
கேட்ட படியாலே நரக பிரவேசம் பண்ணுவார் ஒருவரும் இல்லாமல் நரகம் புகும் வாசல் கதவுகள் வீழ்ந்தன
ஆன பின்பு
முன்பு ஒரு காலத்தில் ப்ரளயமானது எங்கும் ஓக்க ஆக்ரமித்துக் கொண்டு வர
லோகத்தில் பிரளயம் வந்தாலும் தெரியாத படி திரு வயிற்றிலே வைத்து
அத்தாலே வந்த வியசனத்தைப் போக்கி பரிகரித்து யதா பூர்வம் ரஷித்த கிருஷ்ணனை ஆஸ்ரயியுங்கோள்
அன்றிக்கே
கண்ணனை யுடையவர்களாய் உத்க்ருஷ்டராய் – -(கண்ணன் உலகம் பரந்து ஆடி ) –
(கண்ணன் பிரதம விபக்தி பாசுரத்தில் இருந்தாலும் கண்ணனை நம்மைப் பார்த்து கண்ணனுடைய யமபடர்களைப் பார்த்து )
ஸ்ரீ வைஷ்ணவர்கள் – பாடி ஆடித் திரிவதால் திரு நாமங்களைக் கேட்டு
நாடாகக் கேட்டு க்ருதார்த்தராய் ஆனார்கள்
(உபதேசம் கேட்டு திருந்தி வந்தவர்களுக்கு பொலிக )
நரகத் துவாரத்தில் பிடிங்கிப் பொகட்ட கதவுகளை நாட்டி
விரைந்து அடைமின் என்கிறார்
————————————————————————–
(கீழே தீர்த்தகரராய் திரிந்தவர் வைபவம் சொல்லி
இதில் பேயாழ்வாரால் திருத்தப்பட்ட இவரைக் கண்டு கரிய கோலத் திரு வுருவுடன் அவன் வந்து கிட்டுவானே
மதுரகவி ஆழ்வார் நிஷ்டை அன்றோ
விரைந்து அடைமின் என்றவுடன் உலகம் எல்லாம் பகவத் பிரவணர் ஆனார்கள்
ஆழ்வாரது அரும் செயலைக் கண்டு திரு உள்ளம் உகந்த எம்பெருமான் –
ஆழ்வீர் உமக்கு செய்வதாவது என் என்ன
இதற்கு எல்லாம் அடியாக என் உள்ளத்தைத் திருத்திப் பயிர் செய்தவன் நீயேயாய் இருக்கும் போது
எனக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன இருக்கிறது -என்கிறார் – )
அப்பிள்ளை உரை -அவதாரிகை
நீ என்னைக் கொண்டு கவி பாடுவித்துக் கொண்டு அருளிய செயலாலேயே –
அதனாலேயே உன்னைக் காண முடியுமோ முடியாதோ என்னும் ஹிருதய தடுமாற்றத்தைப் போக்கிக் கொண்டேன்
நெஞ்சு என்னும் உள் கண்ணால் காணப் பெற்றேன்
கதவு மனம் என்றும் காணலாம் என்றும்
குதையும் வினையாவி தீர்ந்தேன் -விதையாக
நற்றமிழை வித்தி என்னுள்ளத்தை நீ விளைத்தாய்
கற்ற மொழியாகிக் கலந்து –81–
நீ–(ஞானம் சக்தி முதலியவற்றால் குறைவற்றவனான) நீ
கற்ற மொழி ஆகி–நான் கற்ற சொற்களுக்குப் பொருளாக இருந்து கொண்டு
கலந்து–என்னோடு ஒரு நீராகக் கலந்து
நல் தமிழை–சிறந்த தமிழ்ப் பாஷையினாலாகிய இப் பிரபந்தத்தை
விதை ஆக வித்தி–(பக்தியாகிற பயிர்க்கு) விதையாக விதைத்து
என் உள்ளத்தை–எனது ஹ்ருதயத்தை
விளைத்தாய்–விளையும்படி க்ருஷி பண்ணினாய்
மனம்–மனமானது
கதவு என்றும்–எம்பெருமானை யடைவதற்குப் பிரதிபந்தகம் என்று (சில சமயங்களில்) நினைத்தும்
(மனம்) காணல் ஆம் என்றும்–(மன மானது) எம்பெருமானைக் காண்பதற்கு உறுப்பாகும் என்று (சில சமயங்களில்) நினைத்தும்
குதையும் வினை ஆவி தீர்ந்தேன்–(ஆக விப்படி ஒரு நிலை நில்லாமல் மாறி மாறி) பிரமிப்பதையே
தொழிலாக வுடைத்தான நெஞ்சைத் தவிர்த்தேன்.
மனம் ஏவ மனுஷ்யானாம் பந்த மோக்ஷ ஏக ஹேது
ஆவி ப்ராணனுக்கு ஸ்தானமான நெஞ்சு -சஞ்சலம் ஹி மனஸ் -நிலை பெற்ற நெஞ்சம் பெற்றேன்
மனஸ்ஸூ பகவத் சாஷாத்கார பிரதிபந்தகம் என்றும் சாஷாத்கார ஹேது என்றும் அறிந்து
அலையப் பண்ணும் துஷ் கர்மங்களைத் தவிர்த்தேன்
நீ நான் அப்யஸித்த கவிக்கு வாஸ்யனாய் இருந்து என் உள்ளத்தில் கலந்து
ஸ்லாக்யமான தமிழை விதையாக விதைத்து என்னுடைய மனஸ்ஸைப் பலிக்கச் செய்தாய் –
கதவு இத்யாதி
மன ஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்த மோஷயோ-என்னும்படி
பகவத் விஷயம் கிட்டாமைக்கு கதவு மனஸ் என்றுமாம் –
காண்கைக்கும் பரிகரம் மனஸ் என்றுமாம் –
குதை இத்யாதி
(குதை அசைவு )தடுமாற்றமான தொழில் தவிர்ந்தேன்
விதை இத்யாதி
தடுமாற்றம் தீருகைக்கு சொல்லுகிறது
(பத்தி உழவன் நீ செய்த காரியத்தால் அன்றோ இந்த நிலை பெற்ற நெஞ்சு ஆனது )
(ஆத்மாவின் தடுமாற்றத்தைப் பண்ணக் கடவ கர்மங்களைத் தவிர்ந்தேன்
குதை -அசைவாய் -தடுமாற்றப் பண்ணுகிற வினை என்றபடி
கற்ற மொழியாகிக் கலந்து
விதையாக நல் தமிழை வித்தி
என் உள்ளத்தை நீ விளைத்தாய்
இது பாபம் போகைக்கு ஹேது
நீ தான் கவி ரூபமாய் நெஞ்சிலே கலந்து தமிழை விரைத்து உள்ளத்தை சபலமாக்கினாய் )
(மந ஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்த மோஷயோ
பந்தாய விஷயா சங்கி முக்த்யை நிர் விஷயம் மந -ஸ்ரீ விஷ்ணு புராணம் –6-7-28-
ஆத்மைவ ஹ்யாத் மநோ பந்துர் ஆத்மைவ ரிபு ராத்மந –ஸ்ரீ கீதை –6-5-
ஊனில் வாழ் உயிரே -2-3-1- -இத்யாதிகளில்
ஆத்மா உயிர் என்று நெஞ்சையே சொல்வது போல் இங்கும் ஆவி என்று நெஞ்சையே சொன்னவாறு -)
அப்பிள்ளை உரை
நினைப்பது தலைக்கட்ட வல்ல ஞான சக்திகளால் குறைவற்ற நீ
(அயோக்யனான எனது உள்ளத்தை -செவ்வையான நெஞ்சை ஆக்கி அருளினாய் -நெஞ்சப் பெரும் செய் )
பிறந்த வன்று தொடங்கி நான் அப்யஸித்துப் போந்த தமிழ் பாஷைக்கு வாஸ்யனாய்-பொருளாய்- வந்து புகுந்து
லஷ்ய லக்ஷணங்களில் பழுது இல்லாமல்
அழகிய தமிழை நெஞ்சம் என்னும் விளை நிலத்தில் விதைத்து குறைவற விளையும்படி நீயே கை தொட்டு கிருஷி பண்ணினாய்
அத்தாலே மனா ஏவ ஹி காரணம் மோக்ஷ பந்த ஹேது என்ற மனம் தவிர்ந்தேன்
விஷயாந்தர ப்ரவணமான போது அதுவே கதவாய் தடங்கலாய் இருக்கும்
அந்த விஷய சங்கம் அற்ற போது இதுவே உபகரணமாக பரிகரமாக உன்னைக் கண்டு அனுபவிக்கலாம்
ஒரு நிலை இல்லாமல் உத்தர உத்தரம் பிரமமே தொழில் ஆக இருந்த நெஞ்சை தவிர்ந்தேன்
என்றும் என்றது
என்னும் என்றபடி
மனம் என்னும் கதவு-மனமாகிய கதவு தவிர்ந்தேன்
குதைவு அசைவு
வினை தொழில்
ஆவி பிராண வாயு-லக்ஷணத்தால் ஆஸ்ரயமான நெஞ்சை சொன்னபடி
————————————————————————–
(மிகப் பெரியனான தான் மிகத் தாழ்ந்ததான எனது நெஞ்சிலே
கலந்துக்கு ஒப்பான நன்மை உலகில் உண்டோ
என்று உலகம் எல்லாம் அறியப் பறை சாற்றுகிறார் -)
அப்பிள்ளை உரை அவதாரிகை
அதி லோகமான அழகையும்
ப்ரஹ்மாதிகளுக்கும் கிட்டப் பெறாத மேம்பாட்டையும் உடைய அவன்
என் ஹிருதயத்திலே தானே வந்து ஒரு நீராகக் கலந்தான்
இத்தோடு ஒக்கும் புருஷார்த்தம் உண்டோ என்கிறார்
கலந்தான் என்னுளளத்துக் காம வேள் தாதை
நலந்தானும் ஈது ஒப்பது உண்டே -அலர்ந்து அலர்கள்
இட்டேத்தும் ஈசனும் நான்முகனும் என்று இவர்கள்
விட்டு ஏத்த மாட்டாத வேந்து –82–
பதவுரை
காம வேள் தாதை–மன்மதனுக்குத் தந்தையானவனும்-சாஷாத் மன்மத மன்மதன் அன்றோ -ப்ரத்யும்னன் மன்மதன் அம்சம்
அலர்ந்த அலர்கள் இட்டு ஏத்தும் ஈசனும்–மலர்ந்த பூக்களை ஸமர்ப்பித்துத் துதி செய்கின்ற சிவபிரானென்ன
நான்முகனும்–பிரமனென்ன
என்ற இவர்கள்–என்கிற (சிறந்த) தேவர்களும்
விட்டு ஏத்த மாட்டாத–நன்றாய்த் துதித்து முடிக்க முடியாதவனுமான-வாய் விட்டு ஸ்தோத்ரம் பண்ணி முடிக்க முடியாத
வேந்து–தேவாதி தேவன்
என் உள்ளத்து–எனது நெஞ்சிலே
கலந்தான்–சேர்ந்து கொண்டான்
ஈது ஒப்பது நலம் தானும் உண்டேர்–இந்த நன்மையோ டொத்த நன்மை வேறுண்டோ? (இல்லை)
இந்த பரம புருஷார்த்தம் பெற்றேனே
ஸூந்தரனான மன்மதனுக்குப் பிதாவாய் விகசித்த புஷ்பங்களை சமர்ப்பித்து ஸ்தோத்ரம்
பண்ணுகிற ருத்ரன் ப்ரஹ்மா என்று பிரசித்தரான இவர்கள் வாய் விட்டு ஸ்தோத்ரம் செய்யக்கூடாத மஹிமையை யுடைய
சர்வேஸ்வரனான ஸ்ரீ மன் நாராயணன் என் ஹ்ருதயத்தில் பிரவேசித்தான்
இதுக்கு சமானமான நன்மை வேறே ஓன்று உண்டோ -கிடையாது –
கலந்தான் என்னுளளத்துக் காம வேள் தாதை நலந்தானும் –
எல்லாரும் தன்னை ஆசைப் பட இருக்குமவன்-
என்னை ஆசைப் பட்டு ஹிருதயத்திலே கலந்தான்-
அழகாலே எல்லாரையும் அகப்படுத்தும் காமனுக்கும்-உத்பாதகன் ஆனான் –
ஈது ஒப்பது உண்டே –
அவன் தான் காட்டக் கண்ட இதுக்கு-
கதிர் பொறுக்கிக் கண்ட நலன்கள் சத்ருசமோ –
(உபாசனம் பண்ணி அன்றோ இவர்கள் பதவி பெற்றார்கள் )
அலர்ந்து அலர்கள் இட்டேத்தும் ஈசனும் நான்முகனும் என்றுஇவர்கள் விட்டு ஏத்த மாட்டாத வேந்து –
செவ்விப் பூக்களை கொண்டு (சாதன புத்தியோடு செய்யும் )ஏத்துகிற ருத்ரனும் சதுர்முகனும்-
வாய் விட்டு ஏத்த மாட்டாத சர்வாதிகன்
என் உள்ளத்தைக் கலந்தான் –
அவ் வழகையும் மேன்மையும் உடையவன் என்கை-
(அழகு காமனுக்கு தாதை
மேன்மை வெந்து
அம்தாமத்து அன்பு ஆவி சேர் அம்மான் -ஆழ்வார் )
சாதன புத்தியோடு செய்யும் அவர்கள் அனுபவங்கள்
என்னுள் தானே மேல் விழுந்து காட்டக் கண்ட அனுபவித்த அனுபவத்துக்கு ஈடாகுமா )
அப்பிள்ளை உரை
அழகால் நாட்டை பிச்சேற்றக் கடவ காமனுக்கும் உத்பாதகன் ஆகையால் –
அவனுக்கும் தந்தையாய் -(அவனும் மடல் எடுக்கும் படி -அழகன் )
செவ்விப் பூக்களைக் கையாரப் பறித்திட்டு
ஈஸ்வர அபிமானியான ருத்ரனும்
சதுர்முகனும்
லோக ப்ரசித்தரான இவர்கள்
முழு மிடறு செய்து பரி பூர்ணமாக வாய் விட்டுப் புகழ மாட்டாத
ராஜாவான கிருஷ்ணன்
அந்த அழகுடனும் பெருமையுடனும் கூட என்னுள்ளத்தில் தானே புகுந்தான்
இந்தப் பேற்றோடே ஒத்த சத்ருசமான புருஷார்த்தம் உண்டோ
நிர்ஹேதுக விஷயீ காரம் பெற்று அவனால் அனுபவிக்கப் பெற்றேனே
———————————————————————–
(நலம் தான் இது ஓப்பது உண்டோ என்றவர்
இது ஒன்றோ அவன் அடியாருக்குச் செய்யும் நன்மை
அடியார்கள் இங்கே இருக்கும் நாள் இன்னது என்ற வரம்பு இல்லாமல் ஸர்வவித ரஷைகளும் பண்ணி
சரீரம் விட்டால் ஸ்வர்க்கம் முதலான இன்பங்களையும்
அதுக்கும் மேலே விலக்ஷணமான பரமபத இன்பத்தையும் கொடுத்து
இவ்வளவும் செய்தாலும்
இவன் செய்ததுக்குத் தக்க ஒன்றுமே செய்யப் பெற்றிலோமே என்று நெஞ்சாறல் பட்டு இருப்பவன் அன்றோ என்று
கீழ் சொன்ன பாசுரார்த்தத்தை விவரித்து அருளிச் செய்கிறார் இதில் -)
(நலந்தானும் ஈது ஒப்பது உண்டே)
இத்தோடு ஒக்கும் அழகு உண்டோ என்று-அத்தை உபபாதித்துக் காட்டுகிறார் –
அப்பிள்ளை உரை அவதாரிகை
ஆஸ்ரித விஷயத்தில் இங்கு இருக்கும் நாள் சர்வ ரக்ஷணமும் பண்ணி
சரீரம் விட்டால் -(பின்னையும் )
பேச்சுக்கு நிலம் அல்லாத பேற்றையும் – (பிதிர்)- ஸ்ரீ வைகுண்டத்தையும் பண்ணிக் கொடுத்து
பின்னையும் ஒன்றும் செய்யாதானாய் நெஞ்சில் அறவோடே -(திருப்தி இல்லாமல் )-இருக்கும்
(நலந்தானும் ஈது ஒப்பது உண்டே) கீழ் சொன்னதை உபபாதிக்கிறார்
வேந்தராய் விண்ணவராய் விண்ணாகித் தண்ணளியாய்
மாந்தராய் மாதாய் மற்று எல்லாமாய் -சார்ந்தவர்க்குத்
தன்னாற்றான் நேமியான் மால் வண்ணன் தான் கொடுக்கும்
பின்னால் தான் செய்யும் பிதிர்–83–
பதவுரை
நேமியான்–திருவாழி யாழ்வானை யுடையவனும்
மால் வண்ணன்–வியாமோஹமே வடிவெடுத்தவனுமான எம்பெருமான்
சார்ந்தவர்க்கு–தன்னை யடைந்தவர்கள் விஷயத்தில்
வேந்தர் ஆய்–அரசர்கள் செய்யும் நன்மைகளைச் செய்யுமவனாய்
விண்ணவர் ஆய்–தேவர்கள் செய்யும் நன்மைகளைச் செய்யுமவனாய்
மாது ஆய்–தாய் செய்யும் நன்மைகளைச் செய்பவனாய்-அழகாய் என்றுமாம்
மற்று எல்லாம் ஆய்–மற்றுமுள்ள எல்லா வகை நன்மைகளையும் செய்பவனாய் (எவ்வளவு நன்மைகள் செய்தாலும்)
ஆற்றான்–ஆறுதல் இல்லாதவனாய்க் கொண்டு (திருப்தி பெறாதவனாய்)
விண் ஆகி–ஸ்வர்க்க போகத்தைக் கொடுக்குமவனாய்
தண்ணளி ஆய்–அருள் செய்பவனாய்
மாந்தர் ஆய்–மனிசர்களான உறவினர் செய்யும் நன்மைகளைச் செய்பவனாய்- -எல்லாவித அழகாயும் அவனே
பின்னால்–இவ்வளவுக்கு மேலும்
தன் கொடுக்கும்–தன்னை (முற்றூட்டாகக் கொடுத்தருள்வன்
தான் செய்யும் பிதிர்–(இவை) எம்பெருமான் செய்யும் அதிசயங்களாம்
பிதிர்–சேஷம் -மீதம் -உள்ள பரம பதத்தையும் கொடுத்து
சக்ர தரனாய் ஆஸ்ரித வ்யாமோஹமே வடிவு எடுத்து வந்தால் போலே இருக்கிற ஸர்வேஸ்வரன்
தன்னை ஆஸ்ரயித்த வர்க்கு ரக்ஷகனான ராஜாவாய்
பல பிரதமான தேவதையாய்
போக ஸ்தானமான ஸ்வர்க்கமாய்
அங்கு தேவர்கள் பண்ணும் கிருபையாய்
பந்துக்களாய்
தாயாய்
மற்றும் எல்லாமுமாயும் இருந்து
ஐஹிக ஆமுஷ்மிக ஸூகங்களைக் கொடுக்கும்
இவ்வளவிலும் தான் திருப்தி இல்லாதவனாய்
மறுபடியும் தான் மிகுந்த மோக்ஷத்தையும் கொடுக்கும் —
வேந்தராய் விண்ணவராய் விண்ணாகித் தண்ணளியாய் மாந்தராய் மாதாய் மற்று எல்லாமாய் –
சிறியது பெரியது தின்னாதபடி நோக்கும் ராஜாக்களாய்
பூமியில் உள்ளாருக்கு வர்ஷத்தால் உபகரிக்கும் தேவர்களாய்
பூமியில் உள்ளார் பண்ணின பலம் அனுபவிக்கும் ஸ்வர்க்கமாய்
அங்கு இவர்களுக்கு பண்ணும் தண்ணளியாய்
இவர்களுக்கு சஜாதீயரான மனுஷ்யராய்
அழகாய் -என்னவுமாம்
சஹஸ்ரம் ஹி பிதுர் மாதா -என்னவுமாம்
அனுக்தமான எல்லாவுமாய்
(போக்ய போக்ய உபகரணமாய் போக்ய ஸ்தானமாய் போக்ய பிரதானனுமாய் -ஸ்ரீ மத்தாய் )
சார்ந்தவர்க்குத் –
இப்படி எல்லாம் ஆவது-தன் பக்கல் ந்யஸ்த பரர் ஆனவர்களுக்கு
தன்னாற்றான் நேமியான் மால் வண்ணன் தான் கொடுக்கும் –
எல்லாம் செய்தும் ஒன்றும் செய்யானாகக் கொடுக்கும்
பின்னால் தான் செய்யும் பிதிர்
பின்னைச் செய்யுமது வ்யாவ்ருத்தம்
அவன் குமிழ் நீர் உண்டிட-இவன் குமிழ் நீர் உண்ண
காணும் அத்தனை
ஆற்றான் -த்ருப்தன் ஆகான்
பிதிர் -அதிசயம் -மிச்சம் என்றபடி-
(குமிழ் நீர் உண்ணுதல் ஆழ்ந்து அனுபவித்தல்
அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அந்நாத அஹம் அந்நாத காம் அந்நாத
பின்னைச் செய்யுமது வ்யாவ்ருத்தம்
சேஷமான மோக்ஷம் கொடுக்குமது -தனியாக சொல்வது இது ஒரு தட்டு -கீழ் சொன்னவை ஒரு தட்டு
பின்னால் -இவன் விலக்காமல் இருக்கும் அன்று
கீழ் கொடுத்தவைகளில் வெறுப்பு வந்த பின்பு –
மிட்டாய் கொடுத்து பிள்ளையை மெதுவாகத் திருத்துவது போல்
ஜடாயுவுக்கு கச்ச லோகான் அனுக்த்தமான் -எல்லா லோகங்களும் -லோகான் -பன்மை
சத்யான் லோகான் ஜயதி )
(ஸூ ஹ்ருத் கதிர் நாராயணா
ஸஹஸ்ரம் ஹி பிதுர் மாதா
பெற்ற தாய் நீ பிறப்பித்த தந்தை நீ
மாதா பிதா நாராயணா
ஸகல பல பிரதன் அன்றோ
கோவிந்தேதி யதா க்ரந்தத் கிருஷ்ணா மாம் தூர வாஸி நம்
ருணம் ப்ரவ்ருத்த மிவ மே ஹருதயான் நாப சர்ப்பதி -பாரதம்
யா கதிர் யஜ்ஜ ஸீலா நாம் ஆஹிதாக் நேச்ச யா கதி
அபரா வர்த்தி நாம் யா ச யா ச பூமிப்ரதாயி நாம்
மயா த்வம் சமநுஜ் ஞாதோ கச்ச லோகான் அநுத்தமான் –ஆரண்ய –68-30-)
அப்பிள்ளை உரை
ரக்ஷண பரிகரமாக திருவாழியை உடையவனாய்
ஆஸ்ரிதர் விஷயத்தில் இன்னது செய்தது இன்னது செய்ய வில்லை என்று விபாகம் பண்ண மாட்டாதே
விவேகிக்க மாட்டாமல் (பாத்திரம் அறிந்து பிச்சை போடத மால் வண்ணன் -பிச்சு)
பிச்சு தான் ஒரு வடிவு கொண்டால் போல் இருக்கக் கடவ சர்வேஸ்வரன்
(மால்-பிச்சு- சர்வேஸ்வரன் -இரண்டும் அர்த்தம் உண்டே )
ஆஸ்ரிதர்களுக்கு -(விலக்காமை மட்டுமே உள்ளாருக்கு )
சிறியது பெரியது தின்னாதபடி நோக்கும் ராஜாக்களாய்
பூமியில் உள்ளாருக்கு வர்ஷத்தால் உபகரிக்கும் தேவர்களாய்
பூமியில் உள்ளார் பண்ணின பலம் அனுபவிக்கும் ஸ்வர்க்கமாய்
அங்கு பல அனுபவம் பண்ணும் அளவும் இவர்களுக்கு பண்ணும் தண்ணளியாய்
இவர்களுக்கு சஜாதீயரான பந்துக்களான மனுஷ்யராய்
வத்ஸலையான தாயாய்
அநுக்தமான சர்வமுமாய் அனைத்துமாய்
பின்னையும் ஒன்றும் செய்திலாம் என்று தான் தரிக்க மாட்டாதானாய்
இங்கு இருக்கும் நாள் -இந்த பஹு விதமான போகத்தைக் கொடா நிற்கும்
சரீர விஸ்லேஷத்துக்குப் பிறகு
யுக்த ஸமஸ்த போக வியாவ்வ்ருத்தமாய்
அனுபவித்து குமிழ் நீர் உண்ணும் போமது ஒழிய
(விண்டவர் கண்டிலர் கண்டவர் விண்டிலர் )
பேசிற்றுத் தலைக் கட்ட ஒண்ணாத படி இருக்கிற ஸூவ அனுபவ ரூபமான போகத்தை
வ்யாமுக்தனான தான் கால தத்வம் உள்ளதனையும் செய்து கொடா – கொடுத்துக் கொண்டே இருக்கும்
(பேர் அன்பு- மால் வண்ணன்- வ்யாமோஹம் )
இத்தால் ஆஸ்ரித விஷயத்தில் இஹ லோக போகம்
பர லோகம் ஸ்வர்க்காதி போகமும்
தத் உபய விலக்ஷணமான பரம பத போகத்தையும் இவர்களுக்குள் கொடுத்து
ஒன்றும் செய்யாதானாக நெஞ்சாறல் பட்டு இருக்கும்
ஸ்ரீ சீதா கார்ய நிமித்தமாக தன்னை அழிய மாறிய பெரிய உடையாருக்கு செய்வது அறியாமல் –
பித்தாகி -மாலாகி பதறி –
அர்வாஹீனமான -தாழ்ந்த இவ்வுலக -போகத்தோடே
பரம போகத்தோடே -தம்மிடம் உள்ள
சர்வத்தையும் கொடுத்தார் இறே பெருமாள்
கச்ச லோகான் அநுக்தமா –
——————————————————————
அப்பிள்ளை உரை அதிகாரிகை
சர்வாதிகனான கிருஷ்ணன் திருவடிகளை ஆஸ்ரயித்து
அனுபவிக்கையே நித்ய யாத்திரையாக இருக்கும் எனக்கு
ஞானாதிகனான பிரசித்தமான ருத்ரனும் ஒப்பாக மாட்டார்
அவனோபாதி(சர்வேஸ்வரன் ) நானும் வ்யாவ்ருத்தன் என்கிறார் —
(அவன் உபகரிப்பதில் அதி விலக்ஷணனாய் இருப்பது போல்
எம்பெருமானுக்கு அன்பு செய்வதிலே நானும் ஒப்பற்றவன் என்கிறார்
பக்தி சாரார் இவர் தானே
இந்த பட்டம் பெற்ற வ்ருத்தாந்தம் இப் பாசுர அர்த்தம்
நாளும் தொழும் காதல் எனக்கு -காதாசித்கமாக அவனுக்கு
அத்யந்த மம ப்ரீதி -தான் அதிக ப்ரீதி காட்டினாலும்
இவர்கள் ப்ரீதி அளவு என்னது இல்லையே என்று சொல்லிக் கொள்ளுமவன் )
பிதிரும் மனம் இலேன் பிஞ்ஞகன் தன்னோடு
எதிர்வன் அவன் எனக்கு நேரான் -அதிரும்
கழற் கால மன்னனையே கண்ணனையே நாளும்
தொழும் காதல் பூண்டேன் தொழில் –84-
பதவுரை
அதிரும் கழல் கால–ஒலிக்கின்ற வீரக் கழலைத் திருவடிகளிலே அணிந்துள்ள
மன்னனை–ராஜாதிராஜனான
கண்ணனையே–கண்ண பிரானையே
நாளும்–எந்நாளும்
தொழ–தொழும் படியாக
காதல்–ஆசைப் படுவதையே
தொழில்–நித்ய கருமமாக
பூண்டேன்–ஏற்றுக் கொண்டிருக்கிற நான்
பிதிரும் மனம் இலேன்–(விஷயாந்தரங்களிற் புகுந்து) விகாரப்படும் நெஞ்சுடையேனல்லேன்
சஞ்சலம் இல்லா மனஸ் பெற்றேன் -கீழே சொன்ன அர்த்த விவரணம்
பிஞ்ஞகன் தன்னோடு எதிரவன்–(ஞானத்தில்) பரம சிவனோடு ஒத்திருப்பேன் (என்னலாமாயினும்)
அவன் எனக்கு நேரான்–அந்த ருத்ரன் (நித்ய தாஸனான) என்னோடு ஒவ்வான்.
சப்திக்கிற வீரத் தண்டையினால் அலங்க்ருதமான திருவடிகளை யுடைய ராஜாவான ஸ்ரீ கிருஷ்ணனையே
ப்ரதி தினம் ஆஸ்ரயிக்கை யாகிற வியாபாரத்திலே ஆசை யுடையேன் ஆனேன்
விஷயாந்தர ஸக்தமான மனஸ்ஸை யுடையேனாகாத நான் ருத்ரனோடு சமானம் ஆவேன்
ரஜஸ்ஸூ தமஸ்ஸூ ப்ரதானனான அந்த ருத்ரன் என்னோடே சமானம் ஆகமாட்டான் –
பிதிரும் மனம் இலேன்-
ஏக ரூபம் இன்றிக்கே இருக்கிற மனஸை உடையேன் அல்லேன்
பிஞ்ஞகன் தன்னோடு எதிர்வன் –
ஈஸ்வராத் ஜ்ஞானமன்விச்சேத்-(மத்ஸ்ய புராணம் -)என்கிற தேவனோடு ஒப்பான் –
அவன் எனக்கு நேரான்
சத்வம் தலை எடுத்த போது எம்பெருமான் ரஷகன் என்று இருக்கிறவன்
எனக்கு ஒப்போ-
அதிரும் கழற் கால மன்னனையே கண்ணனையே நாளும் தொழும் காதல் பூண்டேன் தொழில் –
த்வனியா நின்ற வீரக் கழலை திருவடிகளிலே உடைய சர்வாதிகனான கிருஷ்ணனை தொழுகையே-
தொழிலாக காதல் பூண்ட எனக்கு
ரஜஸ் தமஸ் தலை எடுத்த போது –
ஈஸ்வரோஹம் -என்று இருக்குமவன் ஒப்பு அன்று –
(ஸர்வதா ஸாம்யம் இல்லையே )
(சத்வம் தலை எடுத்த போது
தாஸ பூதாஸ் ஸ்வதஸ் ஸர்வே ஹ்யாத்ம ந பரமாத்ம ந
அதோ அஹம் அபி தே தாஸ இதி மத்வா நமாம் யஹம் –ஈஸ்வர ஸம்ஹிதை என்றும்
கிருஷ்ண கிருஷ்ண மஹா பாஹோ ஜாநே த்வாம் புருஷோத்தமன் -ஸ்ரீ விஷ்ணு புராணம் –5-33-41-
கண்ணனுக்கு நித்ய கைங்கர்யம் செய்யப் பாரிக்கும் எனக்கு பாணாசூர யுத்தத்தில் எதிர் அம்பு கோத்தவன் ஈடாகுமோ
அவனையே பக்தி ப்ரபாவத்தால் வென்று பக்திசாரர் என்ற பட்டம் பெற்றவர் அன்றோ —
சொல்லிக் கொண்டாலும் அநித்ய தாஸ பூதன் தானே -ஈஸ்வரோஹம் என்று பாணாசூர இத்யாதிகளில் உண்டே )
அப்பிள்ளை உரை
ஆஸ்ரித விரோதி நிரசன அர்த்தமாக இடப்பட்டதாய்
பிரதிகூலர் குடல் குளம்பும்படி படி முழங்கா நின்றுள்ள ஒலிக்கும்
வீரக் கழல் உடன் கூடிய திருவடிகள் -(அதிரும் கழல் -தீக்ஷை போல் )
இச் செயலால் ஆஸ்ரிதர்களுக்கு எல்லாம் ராஜாவான கிருஷ்ணனை
சர்வ காலமும் அனுபவிக்கைக்கு ஈடான அபிநிவேசமே நித்ய க்ருத்யமாக ஏறிட்டுக் கொண்டவனாய்
அத்தாலே ஒரு க்ஷணம் காலமும் விஷயாந்தரங்களில் புகுந்து போகும் மனம் உடையேன் அல்லேன்
பேர் அறிவாளனான ப்ரஸித்தமான ருத்ரன் –
சத்வம் தலை எடுத்த போது எம்பெருமான் ரக்ஷகன் என்றும்
ரஜஸ் தலை எடுக்கும் போது ஈஸ்வரோஹம் என்னுமவன்
சர்வ காலமும் பகவத் ஏக பரனாய் இருக்கும் என்னோடு ஒப்பாக மாட்டான்
————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply