ஆஸ்ரித அர்த்தமான செயல் ஒழிய தனக்கு என்ன ஒரு செயல் இல்லை என்கிறார்-
அப்பிள்ளை உரை அவதாரிகை
ஆஸ்ரித ரக்ஷண அர்த்தமாக ப்ரவ்ருத்தி ஒழிய உனக்கு என்று
ஒரு ப்ரவ்ருத்தி உண்டோ என்கிறார் இதில்
வகையால் மதியாது மண் கொண்டாய் மற்றும்
வகையால் வருவது ஓன்று உண்டே -வகையால்
வயிரம் குழைத்து உண்ணும் மாவலி தான் என்னும்
வயிர வழக்கு ஒழித்தாய் மற்று —25-
பதவுரை
மதியாது–உன் மேன்மையைச் சிறிதும் நினையாமல்
வகையால்–நல்ல உபாயங்களாலே
மண் கொண்டாய்–(மாவலியிடத்தில் இரந்து) பூமியை ஸ்வாதீனப் படுத்திக் கொண்டாய்
மற்றும்-அதற்கு மேலும்,
வயிரம்–வயிரமாகிற ரத்னத்தை
வகையால்–ஔஷதாதி உபாயங்களாலே
குழைத்து–இளகச் செய்து
உண்ணும்–உண்பவனும்
தான் என்னும்–தனக்கு மேற்பட்ட பலிஷ்டர் ஆருமில்லை யென்று அஹங்காரங் கொண்டிருப்பவனுமான
மாவலி–மஹாபலியினுடைய
வயிரம் குழைத்து உண்ணும் மாவலி -இந்திரனோடு வைரத்தை யுண்டாக்கி லோகத்தைப் புஜிக்கிற மஹா பலி
தான் என்னும் -என்கையாலே அபிமானம் தோற்றுகிறது –
வயிரம் வழக்கு–சத்ருத்வ முறையை
ஒழித்தாய்–போக்கினாய்
வகையால்–இப்படிப்பட்ட உனது காரியங்களினால்
வருவது ஒன்று உண்டே–உனக்கு ஸித்திப்பதொரு பலன் உண்டோ? (எல்லாம் ஆஸ்ரிதர்க்காகச் செய்கிறாயித்தனை.
மஹா பலியை லஷ்யம் செய்யாமல் உபாயத்தினால் பூமியை வாங்கிக் கொண்டாய்
அதற்கு மேல் உபாயத்தினால் வச்சிரத்தை யுரைத்து புஜித்து துரபிமானியான
மஹாபலியோடே சாத்ரவ முறையைப் போக்கினாய்
இவ்வுபாயங்களினால் உனக்கு வருவது ஆஸ்ரித ரக்ஷணம் ஒழிய வேறே ஒரு பிரயோஜனம் உண்டோ –
வகையால் மதியாது மண் கொண்டாய்
மகா பலி உகக்கும் பிரகாரத்தாலே பூமியை அநாயாசேன கொண்டாய்-
(உவந்த உள்ளத்தனாய் -மஹாபலி இந்திரன் பகவான் ரிஷிகள் ஆழ்வார் அனைவருக்கும் உண்டே )
வகையால் வயிரம் குழைத்து உண்ணும் மாவலி தான் என்னும் வயிர வழக்கு ஒழித்தாய் மற்று –
ஒரு உபாயத்தாலே வைரத்தை புஜித்து
அத்தாலே மிடுக்கனாக அபிமானித்து இருக்கிற மகா பலி உடைய சாத்ரவ முறையைத் தவிர்த்து-
மகாபலி பக்கலில் நின்றும் ராஜ்ஜியம் மீட்டுக் கொடுத்து உபகரித்தாய்
(வயிரம் வைரம் -சத்ருத் தன்மை –
வயிர வழக்கு -எதிரியாய் இருக்கும் முறை
அஹங்காரமான தன்மை )
மற்றும் வகையால் வருவது ஓன்று உண்டே –
இவற்றால் உனக்கு பிரயோஜனம் ஆவது ஓன்று உண்டோ
(அவாப்த ஸமஸ்த காமன்
ந தே ரூபம் பக்தானாம்)
அப்பிள்ளை உரை
ஸ்ரீ யபதியான நமக்கு இரப்பிலே அதிகரிக்கப போருமோ
அநாயாசேன –
ஆஸூர பிரகிருதி உகந்து தரும் படியான வடிவு அழகு -இதுவே -வகையால்
முக்த ஜல்பிதம் முதலான பிரகாரங்களால்
ஆஸ்ரிதனான இந்திரனுக்காக அநாயாசேந பூமியை அளந்து கொண்டாய்
இப்படி இழந்த ராஜ்யத்தை கொடுத்ததோடு இல்லாமல் மேலே
இளக ஒண்ணாதபடி அதி கடினமான வயிரமான ரத்னத்தை
ஒஷதாதிகள் கொண்டு குழைத்து புஜித்துக் கொண்டு போய் அத்தாலே மிடுக்கனான ப்ரசித்தனான மஹா பலியுடைய
அவனது சாத்ருத்வம் போக்கி
இப்படி ஆஸ்ரித கார்யம் செய்தாய் ஒழிய இந்த உபாயங்களால் உனக்கு என்று ஏதாவது பிரயோஜனம் உண்டோ
மதியாது
ஒரு சரக்கு என்று எண்ணாமல் முடித்தாய்
————————————————————————–
(யானே இரந்து போக நீரும் தேவதாந்த்ரங்கள் பக்கம் வேறே பிரயோஜனம் கருதி
இரந்து போவீரோ என்ன
போக மாட்டேன் என்பதுக்கு ருத்ரனே சாக்ஷி
தமது வாழ்க்கையில் நடந்ததே -குரு பரம்பரையில் -இவருக்கு
பக்தி சாரர் பட்டம் ருத்ரன் கொடுத்தது உண்டே )
நான் தேவதாந்த்ர ஸமாச்ரயணம் பண்ண மாட்டேன் என்பதற்குத்
தன்னையே சமாஸ்ரயணம் பண்ண ஆள் பிடித்து திரியும் ருத்ரனே சாக்ஷி
அப்பிள்ளை உரை அவதாரிகை
உன் அழகிலே அகப்பட்ட நான் சர்வ காலத்திலும் உம்மையே அனுபவிக்கும் படி
பார்த்து அருள வேணும்
சதா பஸ்யந்தி ஸூரய போல் ஆக அருள வேண்டும்
மற்றுத் தொழுவார் ஒருவரையும் யானின்மை
கற்றைச் சடையான் கரிக் கண்டாய் -எற்றைக்கும்
கண்டு கொள் கண்டாய் கடல் வண்ணா யான் உன்னை
கண்டு கொள் கிற்குமாறு–26
பதவுரை
கடல் வண்ணா-கடல் போன்ற திருநிறமுடைய பெருமானை!
யான் தொழுவார் மற்று ஒருவரையும் இன்மை–அடியேனால் ஆஸ்ரயிக்கப்படும் தெய்வம்
(நீ தவிர) வேறு எதுவுமில்லை யென்னும் விஷயத்தில்
கற்றை சடையான்–சேர்த்துக் கட்டின ஜடையை யுடையனான ருத்ரன்
கரி கண்டாய்–ஸாக்ஷி காண்
யான்–இப்படி அநந்ய பக்தனை அடியேன்
உன்னை–உன்னை
எற்றைக்கும்–எந் நாளும்
கண்டு கொள்கிற்கும் ஆறு–ஸேவித்துக் கொண்டேயிருக்க வல்லேனாம்படி
கண்டு கொள்–கடாக்ஷித்தருள வேணும்.
நான் உன்னை ஒழிய வேறே ஒருவரையும் ஆஸ்ரயணீயராக உடையேன் அல்லேன்
இதற்கு நெருங்கின ஜடையையுடைய ருத்ரன் ஸாக்ஷி
சமுத்திரம் போன்ற திரு மேனியை யுடையவன்
நான் உன்னை எப்போதும் சேவிக்கும் படி கடாக்ஷித்து அருளாய் –
மற்றுத் தொழுவார் ஒருவரையும் யானின்மை கற்றைச் சடையான் கரிக் கண்டாய் –
நான் தேவதாந்திர சமாஸ்ரயணம் பண்ணேன்-என்னும் இடத்துக்கு
ஆள் பிடித்துத் தொழுவித்துக் கொள்ளும் ருத்ரன் சாஷி –
எற்றைக்கும் கண்டு கொள் கண்டாய் கடல் வண்ணா நான் உன்னை கண்டு கொள் கிற்குமாறு –
ஸ்ரமஹரமான வடிவை உடைய நீயே-
மேலும் இந்த நன்மை நிலை நிற்கும் படியாக பார்த்து அருள வேணும் –
(எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் மறந்தும் புறம் தொழா பக்தி இருக்குமாறு நீயே அருள வேண்டும்
துர்க்கதா வபி ஜாதாயாம் த்வத் கதோ மே மநோ ரத
யதி நாஸம் ந விந்தேத தாவதாஸ்மி க்ருதீ ஸதா –என்று இந்த
மநோ ரதம் அழியாமல் இருந்தாலே அடியேன் க்ருதக்ருத்யன் ஆவேன்
ஸதா பஸ்யந்தி பேறு இங்கேயே கிட்டில் அங்கே போகும் நிர்பந்தம் இல்லையே )
அப்பிள்ளை உரை
உன்னை ஒழிய வேறு ஆஸ்ரயிக்கப்படுவார் ஒரு ஷூத்ரரான ருத்ராதிகளை நான் உடையேன் அல்லேன்
அறிவு கேடரைக் கும்பீடு கொள்ளக் கடவனாய் அறிவுடையரானார் ஈஸ்வரன் என்று கை விடும்படி
அதுக்கு அடையாளமாக
சாதகன் என்பதைக் காட்டும் ஜடையும் தானுமாய் சாதன அனுஷ்டானம் பண்ணிப் போகும் ருத்ரனே சாக்ஷி
கடல் போல் குளிர்ந்த -கடல் வண்ணா -விளிச்சொல்
(அடியேன் தேவரீரையே கண்டு கொள்ளும் படி கண்டு கொள் கடாக்ஷிப்பாய் )
ஸ்ரமஹரமான இருண்டு குளிர்ந்த அதி லோகமான அழகு படைத்த தேவரீரை
அடியேன் இவ் வழகில் ஆழங்கால் பட்ட நான்
எப்பொழுதும் சேவித்துக் கொண்டே இருக்கும் படி -கண்ணாலே கண்டு அனுபவிக்கும் படி
சக்தனாம் படி கடாக்ஷித்து அருள வேண்டும்
(கட்டை விரலில் திருக்கண் இன்றும் சேவிக்கிறோமே திரு மழிசையில் பக்தி சாரார் பட்டம் பெற்றார்
ஜிதந்தே ஸ்தோத்ரம் இதே விஷயம்
மநோ ரதம் -துர்கதி வந்தாலும் மாறாமல் இருக்க வேண்டும்
க்ருதார்த்தன் ஆவேன்
ந காம கலுஷம் சித்தம் — காமயே வைஷ்ணவத்வம் -இப்பொழுது உம்மிடம் காமம் கொண்டது –
நிலை பெற்றது -வேறே காமம் கிட்டாது )
———————————————————
பார்த்து அருள வேணும் என்று-அபேஷித்தபடியே
அவன் பார்க்கப் பெற்ற படியைப் பேசுகிறார் –
(மோக்ஷம் -வேண்டாவோ என்ன
மோஷத்தில் சென்று அடையும் அவனே ஸ்ரீ வைகுண்ட விரக்தி அடைந்து அடியேன் நெஞ்சிலே புகுந்து இருக்க
இந்த நெஞ்சைக் காட்டிலும் வேறே ஒன்றை அபேக்ஷிக்க ப்ரசக்தி இல்லையே –
நெஞ்சிலே உள்ள இத் திருவடியை ஒழிய வேறே ஒன்றைப் பலனாக எண்ண மாட்டேன் என்றுமாம்
ஓன்று உண்டு செங்கண் மால் யான் உரைப்பது உன் அடியார்க்கு
என் செய்வன் என்றே இருத்தி நீ நின் புகழில்
வைகும் தம் சிந்தையிலும் மற்று இனிதோ நீ யவர்க்கு
வைகுந்தம் என்று அருளும் வான்–-ஸ்ரீ பெரிய திருவந்தாதி -53-
தட வரை வாய் மிளிர்ந்து மின்னும் தவள நெடும் கொடி போலே
சுடர் ஒளியாய் நெஞ்சின் உள்ளே தோன்றும் என் சோதி நம்பீ
வட தடமும் வைகுந்தமும் மதிள் த்வராவதியும்
இடவகைகள் இகழ்ந்திட்டு என்பால் இடவகை கொண்டனையே -ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி–5 -4-10 )
அப்பிள்ளை உரை அவதாரிகை
பார்த்து அருள வேண்டும் என்று இவர்
அபேக்ஷித்த படியே அவன் பார்த்து அருள –
தான் பெற்ற பிரகாரத்தைப் பேசுகிறார்
(கண்டு கொண்டே இருக்க வைஷ்ணவத்வமே போதுமோ என்ன
அறிவு கேடர்காள்
மாலை சாத்தின திருவடியுடன் இவர் திரு உள்ளத்திலே புகுந்தானே
இதுவே மிகப்பெரிய பேறு என்கிறார் )
அவனே தானாகவே வந்து புகுந்த நெஞ்சை யுடைய நான்
வேறே ஒன்றை புருஷார்த்தமாக நினைப்பேனோ என்கிறார்
மாறான் புகுந்த மட நெஞ்சம் மற்றதுவும்
பேறாகக் கொள்வேனோ பேதைகாள் -நீறாடி
தான் காண மாட்டாத தாரகல சேவடியை
யான் காண வல்லேற்கு இது-27-
பதவுரை
பேதை காள்–மூடர்களை!,
மால்–எம்பெருமான்
தான் புகுந்த–தானே மேல் விழுந்து வந்து புகுந்திருக்கப் பெற்ற
மட நெஞ்சம்–(எனது) விதேயமான நெஞ்சிலே
மற்றதுவும்–வேறொன்றை
பேறு ஆக–புருஷார்த்தமாக
கொள்வனோ–நான் கொள்வனோ? (கொள்ள மாட்டேன்)
நீறாடி தான்–நீறு பூசின உடம்பை யுடையனான ருத்ரனும்
காண மாட்டாத–ஸேவிக்க முடியாததும்
தார்–புஷ்பங்களினால் அர்ச்சிக்கப் பட்டதும்
அகலம்–போக்யதையில் அளவிறந்ததுமான
சே அடியை–திருவடியை
யான் காண வல்லேற்கு–ஸேவிக்கும் படியான பாக்கியம் பெற்ற எனக்கு
இது–இப்படிப்பட்ட அத்யவஸாய முண்டாயிற்று.
ஓ புத்தி சூன்யர்களே -பஸ்மோத் தூளிதனான ருத்ரனுக்கும் காண அரிதாய் -மாலையினால் அலங்கரிக்கப் பட்டதாய்
போக்யதை யினால் அபரிச்சின்னமாய் சிவந்து இருக்கிற அந்தத் திருவடிகளை சேவிக்கத் தக்க பாக்யமுடைய எனக்கு ஸர்வேஸ்வரன்
தானே வந்து ப்ரவேசித்த விதேயமான இந்த மனஸ்ஸை யுடையேனான நான்
அத்திருவடி ஒழிய வேறே ஒன்றைப் புருஷார்த்தமாகக் கொள்வேனோ –
மாறான் புகுந்த மட நெஞ்சம்-
ஈஸ்வரன் வ்யாமுக்தனாய் –
மால் தான் -மாறான்-
புகுரும்படி ருசியை உடைய நெஞ்சே –
(நெஞ்சம் -நெஞ்சம் யுடையனான )
நீறாடி-தான் காண மாட்டாத தாரகல சேவடியை –
ருத்ரன் காண மாட்டாத-தாரையும் அகலத்தையும் உடைத்தான-திருவடிகளை
(திருமால் நான்முகன் செஞ்சடையான் என்று இவர்கள் எம்
பெருமான் தன்மையை யார் அறிகிற்பார் பேசியென்
ஒரு மா முதல்வா ஊழிப் பிரான் என்னை யாளுடை
கருமா மேனியன் என்பன் காதல் கலக்கவே—ஸ்ரீ திருவாய் மொழி -8-3-9-)
மற்றதுவும் பேறாகக் கொள்வேனோ பேதைகாள் யான் காண வல்லேற்கு இது-
காண வல்லேனான எனக்கு-
இது ஒழிய வேறு ஒன்றை பேறாக கொள்வேனோ –
வேறு ஒன்றைப் பேறாக நினைத்து இருக்கும்-அறிவு கேடர்காள்
(உம்முடைய நிர்ஹேதுக கடாக்ஷத்தால் -மால் தானே புகுந்த மட நெஞ்சம் இது
அவன் திருவடிகளை விட வேறே ஒன்றை மதிப்பேனோ )
அப்பிள்ளை உரை
ஆஸ்ரித வியாமுக்தனான ஸர்வேஸ்வரன் தானே மேல் விழுந்து அதி அபி நிவிஷ்டனாய் புகுந்து
பவ்யமான நெஞ்சை யுடையவனாய்
(முக்தர் அவன் இடம் லயம் -அறிவு ஒன்றாலே -பக்தியால் -தடாகம் போல் ப்ரஹ்மம் சேர்ந்து ஆழ்ந்து நீராட
இங்கு நேரே மாறி ஆழ்வார் உள்ளத்தில் அவன் )
(என் அமுதினைக் கண்ட கண்கள் மற்ற ஒன்றைக் காண்பேனோ
அச்சுவை பெறினும் வேண்டேன்
பாவோ நான் யத்ர கச்சதி
தெள்ளியோர் குறிப்பே -திருவாசிரியம்
வைகும் தன் சிந்தையிலும் மற்று இனிதோ நீ கொடுக்கும் வான்
என் பால் இடவகை கொண்டனையே )
பேதைகாள் -வந்து அருளி என் நெஞ்சிடம் கொண்ட வானவர் கொழுந்து
அக்காரக்கனி -மற்று எக்காலத்திலும் யாது ஒன்றும் வேண்டேன்
நீறாடி தான் -காண மாட்டாத
ப்ரஹ்ம ருத்ர சம்வாதம் நீயும் நானும் பார்க்க முடியாதே -ஸ்வ யத்னத்தால்
அகலமான மாலையால் அலங்க்ருதமான போக்யதை மிக்க
தாளிணை மேலும் தண்ணம் துழாய் உடை அம்மான் அன்றோ
நிர்ஹேதுக கிருபைக்கு நானே நேரே கொள்கலன்
வருத்தம் அற பெற்றேன்
வேறே ஒன்றை பேறாக கைக் கொள்ளுவேனோ
நினைத்து இருப்பேனோ மற்ற வற்றை பேறாக நினைத்து இருக்கும் அறிவு கேடர்களே
நெஞ்சம் என்றது நெஞ்சு -உடையேன் என்றபடி
இத்தை விட்டு -என்று அவன் புகுந்த நெஞ்சைச் சொன்னபடி
அது என்று திருவடி
அவனே தானாகவே வந்து புகுந்த நெஞ்சை யுடைய நான்
வேறே ஒன்றை புருஷார்த்தமாக நினைப்பேனோ என்கிறார்
————————————————————————–
(அவன் திருவடியை மட்டுமா கண்டேன்
அவன் லீலா வியாபாரங்களை எல்லாம் இங்கேயே இப்பொழுதே
மால் தான் புகுந்த மட நெஞ்சிலே காண்கிறேன் என்கிறார் -)
அப்பிள்ளை உரை அவதாரிகை
ஆஸ்ரித அர்த்தமாக பிரவிருத்திகளை தான் இவன் உகப்பது -என்கிறார்
இது இலங்கை ஈடழியக் கட்டிய சேது
இது விலங்கு வாலியை வீழ்த்ததுவும் -இது விலங்கை
தான் ஒடுங்க வில் நுடங்கத் தண்டார் இராவணனை
ஊன் ஒடுங்க எய்தான் உகப்பு –28–
பதவுரை
இலங்கை–லங்காபுரியானது
ஈடு அழிய–சீர் குலையும் படியாக
கட்டிய–(வானர சேனையைத் துணை கொண்டு) கட்டின
சேது–திரு வணை
இது–இது காண்மின்,
விலங்கு–திர்யக் யோநியிற் பிறந்தவனான
வாலியை–வாலியை
வீழ்த்தது–முடித்தது
எய்தான்–அம்புகளைச் செலுத்தின இராம பிரானுடைய
இது–இப்போது நடந்த செயல் காண்மின்,
இலங்கை தான்–லங்கா புரியானது
ஒடுங்க–அழியும் படியாகவும்
வில் நுடங்க–சார்ங்கலில் வளையும் படியாகவும்,
தண் தார் இராவணனை ஊன் ஒடுங்க–(அலங்காரமாகக்) குளிர்ந்த பூமாலை யணிந்து கொண்டிருந்த
இராவணனுடைய உடல் ஒழியும் படியாகவும்
உகப்பு–விலையான வியாபாரம்
இது–இது காண்மின்
லங்காபுரியை அழிக்கைக்காகக் கட்டின இந்த சேதுவும்
ம்ருகமான வாலியை அழியச் செய்த இதுவும்
இந்த லங்காபுரி நசிக்கும் படியாகவும்
சாரங்கம் வளையும்படியாகவும்
குளிர்ந்த மாலையை யுடைய ராவணாஸூரனுடைய ப்ராணன் நசிக்கும்படி யாகவும்
அடித்தவனுடைய ஸந்தோஷ வியாபாரங்கள் –
இது இலங்கை ஈடழியக் கட்டிய சேது-
இலங்கைக்கு மூலையடியே வழி போம்படியாக-கட்டிய திரு வணை இது –
கடல் அடைபட்ட போதே-இலங்கை அழிந்தது என்று-நினைக்கும்படியாக –
(அடியைக் கண்டேன் என்றார்
அடி பட்ட அணையையும் கண்டேன் என்கிறார் )
இது விலங்கு வாலியை வீழ்த்ததுவும்
திர்யக்கான வாலியை முடித்ததுவும்
(மறைந்து கொன்றது குற்றம் இல்லை திர்யக் என்பதால்
வாலியே நிரசிக்கப்பட்டான் என்றதும் ராவணன் எம் மாத்திரம் )
விலங்கை தான் ஒடுங்க வில் நுடங்கத் தண்டார் இராவணனை ஊன் ஒடுங்க எய்தான்
இலங்கை நெருக்குண்ணவும்-
ஸ்ரீ சார்ங்கம் வளையவும்-
மதிப்பனான ராவணன் முதுகு கூனவும்
(தண் தார்-மாலை யுடையவன் என்கையாலே மதிப்பன் என்கிறது )
எய்தான் -இது அவன் உகப்பு –
அவன் லீலை-
வாலியைக் கொன்ற ஜயமும்-
ராவண வதமும்
புத்திஸ்தமான படியிலே இது என்கிறார் –
ஒரு முஷ்டியிலே நின்று எய்ய-
நெஞ்சு அழியும்படியாய் இறே இருப்பது
இது என்று
பிரத்யஷமாதல் –
ஈடுபாடு ஆதல்
(வெகு காலத்துக்கு முன் நடந்தவைகள் எல்லாம் நெஞ்சிலே இப்போது ஓடுகிறதே )
வில் பிடித்த படியில் -ஈடுபட்டு அருளுகிறார்-
அப்பிள்ளை உரை
இந்த்ராதிகள் கேட்கவே மண் உண்ணும் படியான இலங்கை கட்டுக் குலைந்து சிதிலம் ஆகும்படி
மலைகளைக் கொண்டு கடலை அடைத்த சேது
(பாவனார்த்தம் திருவடி பட்ட இடம் நமக்காகவே )
திர்யக் யோனியில் வாலியைக் கொன்று விழ விட்டு அருளிய இந்த ப்ரவ்ருத்தியும்
இலங்கை நெருக்கு உண்ணவும் (தேவர்களுக்காக )
ஸ்ரீ சாரங்க திரு வில்லும் வளையவும்
குளிர்ந்த மாலை அணிந்த ராவணன் -தப்பான கார்யம் செய்ய சங்கல்பம் -அக்ருத்யம் செய்யவே இட்ட மாலை
பெரு மதிப்பனான ராவணன்
மாம்ச அதிகமான சரீரம்
ந நமேயம் -வணங்கல் இல் அரக்கன் -நிலை குலைந்து
வளையும் படியாக
எல்லா ப்ரவ்ருத்திகளும் -(கீழ் பாட்டில் வாமன வ்ருத்தாந்ததும் ஆஸ்ரிதர்க்காகவே போல் )
ஆஸ்ரித விஷயம் செய்தோம் -உகப்புக்கு போக்கு வீடாகச் செய்தவை அனைத்துமே –
————————————————————————–
(அப்படியாகில் சர்வேஸ்வரன் திருமேனியை முற்றும் உணர்ந்தவரோ நீர் என்ன
ஒருவராலும் முற்றும் உணர முடியாதபடியான திருமேனியை யுடையவன் அன்றோ அவன் என்கிறார் )
அப்பிள்ளை உரை அவதாரிகை
ஆஸ்ரித விரோதியான கும்பகர்ணனை அழியச் செய்த சக்ரவர்த்தி திருமகனுடைய
சர்வ அபிமதமாய் தேஜோ ரூபமாய் அத்யாச்சர்யமான
(உகப்பு ஒளி மகப்புருவம் )
திவ்ய மங்கள விகிரஹத்தை அனுபவித்து வித்தாராகிறார்
உகப் புருவம் தானே யொளி யுருவம் தானே
மகப் புருவம் தானே மதிக்கில் –மிகப் புருவம்
ஒன்றுக்கு ஒன்றோ ஒசணையான் வீழ ஒரு கணையால்
அன்றிக் கொண்டு எய்தான் அவன் –29-
பதவுரை
மிக–மிகவும்
புருவம் ஒன்றுக் கொன்று ஒசணையான்–ஒரு புருவத்துக்கு ஒரு புருவம் காத வழி நீளமிருக்கப் பெற்ற கும்ப கர்ணன்
வீழ–ஒழியும்படியாக
மகப்புருவம்–பெரிய வடிவு
அன்றிக் கொண்டு–சீறிக் கொண்டு
ஒரு கணையால்–ஒரு பாணத்தினால்
எய்தானவன்–அடித்து முடித்தவனான இராம பிரானை
மதிக்கில்–சிந்தித்தால்-பரிச்சேதிக்கப் பார்த்தால் –
ஏதாத்ருசம் ஆகையாலே பரிச்சேதிக்கப் போகாது என்றபடி
உகப்பு உருவன் தானே–மநோ ஹரமான திருமேனியை யுடையவன் அவனே
ஒளி உருவன் தானே–தேஜோ மயமான திருமேனியை யுடையவனும் அவனே,
மகப்பு உருவன் தானே–மிகவும் ஆச்சரியமான வடிவை யுடையவனும் அவனே.
மிகவும் ஒரு புருவத்துக்கு ஒரு புருவம் யோஜனை நீளமுடைய கும்பகர்ணன் விழும்படி சீறிக் கொண்டு
ஒரு பாணத்தினால் அடித்த சக்ரவர்த்தித் திருமகனை தியானித்தால்
அவனே மநோ ஹரமான திருமேனியை யுடையனாய் இருப்பன்
அவனே உஜ்வலமான திருமேனியை யுடையனாய் இருப்பன்
அவனே ஆச்சர்ய கரமான திருமேனியை யுடையனாய் இருப்பன்
இச்சாக்ருஹீ தாபிமத -என்னும்படி-
ஸ்வ வ்யதிரிக்தர்க்கும் பிராப்யமாய்
தனக்கும் அபிமதமாய் –
ரஜஸ் தமஸ் மிஸ்ரம் இன்றிக்கே
நிஷ் க்ருஷ்ட சத்வம் ஆகையாலே-நிரவதிக தேஜோ ரூபமாய்
ரூபம் அந்யத் ஹரேர் மஹத்-என்னும்படியான
ஆச்சர்யமான வடிவை உடையவனுமான-சக்கரவர்த்தி திருமகன் தானே
ஒரு புருவத்துக்கு ஒரு புருவம் யோசனை நீளம் உடைய-கும்பகர்ணன் பட்டு விழும்படி
சங்கல்பத்தால் அன்றிக்கே
திருச் சரத்தாலே-தேவ கார்யம் செய்தானாகை அன்றிக்கே
தனக்கே வந்ததாக சீற்றத்தை ஏறிட்டுக் கொண்டு-எய்தான் –
(சங்கல்பத்தால் கொன்றான் ஆகில் நற் கொலையாய் இருக்குமே
ஷமையா பிருத்வி சமயா -அவஸ்தை மாறி
க்ரோதம் ஆஹாரயத் தீவ்ரம் -கோப வஸ்யமாகி–தேவர் கார்யம் செய்தானாகை இன்றிக்கே
தனது காரியமாக -ஏறிட்டுக் கொண்டு செய்த செயல் –
வெந்நரகம் சேரா வகையே சிலை குனித்தான் அன்றோ -)
மதிக்கில் இவனுடைய திரு மேனியை-
ஒன்றால் பரிச்சேதிக்கப் போகாது என்கை –
(மதிக்கில்–பரிச்சேதிக்கப் பார்த்தால் –
ஏதாத்ருசம் ஆகையாலே பரிச்சேதிக்கப் போகாது என்றபடி )
(உகப்பு உருவம் தானே
ஸமஸ்த கல்யாண குணாத் மஹோ அசவ் ஸ்வ ஸக்தி லேச உத்ருத பூத சர்க்க
இச்சா க்ருஹீத அபிமதோரு தேஹஸ் ஸம் ஸாதித அசேஷ ஜகத்தி ஹிதோ அசவ்–ஸ்ரீ விஷ்ணு புராணம் –6-5-84–
சாந்தா நந்த மஹா விபூதி பரமம் யத் ப்ரஹ்ம ரூபம் ஹரே
மூர்த்தம் ப்ரஹ்ம ததோபி தத் ப்ரிய தரம் ரூபம் யதத் யத்புதம் –ஆளவந்தார் –அவனுக்கும் பிரியம் அன்றோ
அடியார்கள் உகப்பு கண்டு தானும் உகந்து இருக்குமே
ஸ்வரூபமும் விக்ரஹமும் ஒரே த்ரவ்யம் என்னலாம் படி இருக்குமே
பரஞ்சோதி
நாராயண பரஞ்சோதி
ஆதித்ய வர்ணம்
வித்யுத் புருஷாத்
தேஜஸாம் ராஸி மூர்ஜிதாம்
பரஞ்சோதி நீ பரமாய் நின்னிகழ்ந்து பின் மற்றோர்
பரஞ்சோதி யின்மையின் படியோவி நிகழ்கின்ற
பரஞ்சோதி –நம்மாழ்வார்
மஹத் -மகப்பு
ஸமஸ்தா சக்தயச்சைதா ந்ரூப யத்ர பிரதிஷ்டதா
தத் விஸ்வ ரூப வைரூப்யம் ரூபமந்யத் ஹரேர் மஹத் –ஸ்ரீ விஷ்ணு புராணம் –6-7-70-
ஆத்மாநம் மானுஷம் மன்யே –மனிதனாக அவதரித்து
வெந்நரகாம் சேரா சிலை குனித்தான்
பும்ஸாம் த்ருஷ்டி சித்த அபஹாரிணாம் )
அப்பிள்ளை உரை
மிகவும் நீளமான ஒரு யோஜனை இடைவெளி கொண்ட புருவங்கள் விக்ருதமான கும்பகர்ணன்
மலை முறிந்தால் போல் – விழுந்தால் போல் பட்டு விழும்படி
சங்கல்பத்தால் இன்றிக்கே -கைக்கு எட்டின அம்பைக் கொண்டே
ஆஸ்ரித விரோதிகளை தனது விரோதியாக நினைத்து
இவனுக்கு என்று ஒரு கார்யம் இல்லையே
சீறிக் கொண்டு வந்த சக்ரவர்த்தி திருமகனின் திரு விக்ரஹம் சிந்தித்துப் பார்க்கில்
அதீவை பிரிய தர்சனம் சந்த்ரகாந்தநம் ராமம்
ஸ்வ பர விபாகம் அற அனைவருக்கும் உகப்பாயும்
தன்னுடைய தேஜஸ்ஸாலே தனக்கு ஒளி விட்டுக் கொண்டு
ஆதித்ய வர்ணம் -மின்னலை விஞ்சும் -தேஜஸாம் ராஸி மூர்ஜிதம் -ஒளிக் கற்றை குவியல்
பரஞ்சோதி நீ பரமாய் -ஆழ்வார்
நிரவதிக தேஜோ ரூபமாய் வடிவு யுடையவனாய் இருக்கும்
மகத்தான ரூபம்
சந்நி வேச வை லக்ஷண்யத்தாலே மிகவும் ஆச்சர்யமான உருவம்
அவ்வழகில் தான் ஆழங்கால் பட்டு அனுபவிக்கிறார்
ஒரே கணையால் எய்தான் அவன் உகப்பு உருவம் தானே
ஆத்மாநாம் மானுஷம் மன்யே என்று சொல்லிக் கொண்ட
இனி ராமன் உருவம் மூன்றும் உண்டே என்பதுக்கு பிரமாணங்கள்
உதிக்கும் சந்திரன் போல் அன்றோ என்று -ரிஷிகள் மகிழ
ஞான சூன்யமான ஸ்தாவரங்கள் அபி வ்ருஷா இத்யாதி -அகால பலீனோ வ்ருஷ -ஈடுபாடு இவற்றுக்கும் கூட உண்டே
அனைவருக்கும் உகப்பு
ஒளி உருவம் -ஸோபாயான் -தண்டகாரண்யம் தீப்தேந ஸ்வேந தேஜஸா- -பார்த்தே ரிஷிகள் பெருமாள் வந்ததை அறிந்தார்கள்
மஹத் -பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபகாரம் ஆடவரும் பெண் நிலை அவாவும் படி அன்றோ –
————————————————————————–
(உகப்பு உருவனாகவும் ஒளி உருவனாகவும் மஹப்பு உருவனாகவும் இருப்பவனாகில்
அவனை நீர் கண்டது எப்படி என்ன
திருப்பாற் கடலையும் இகழ்ந்து என்னை ரஷிப்பதற்காக என் நெஞ்சிலே
கோயில் கொண்டு இருக்கும் போது அவனை காண்பதில் அருமை என் என்கிறார்
த்ரேதா யுக ராமனை அனுபவிக்காதவர்களுக்காக
பின்னானார் வணங்கும் ஜோதி
ஆதாரம் பெறுக வைக்கவும் ஐயப்பாடு அறுக்கவும்
இங்கேயே வந்து படுகாடு கிடந்தது
காட்டவே கண்டு அனுபவிக்கலாம் )
அப்பிள்ளை உரை அவதாரிகை
அப் பேர் அழகோடு-(உகப்பு ஒளி மகப்பு உருவதுடன் ) கோயிலிலே வந்து
என்னை அடிமை கொண்டு சம்சாரத்தில் புகாதபடி என்னை ரக்ஷித்து
அவ்வளவு அன்றிக்கே
திருப்பாற் கடலை உபேக்ஷித்து
அத்யந்த அது அபிநிவேசத்துடன் நிற்பது இருப்பது கிடப்பதாக கிடப்பதாக
அலாப்ய லாபம் பெற்றவனாக உள்ளான் –
அவன் என்னை யாளி யரங்கத் தரங்கில்
அவன் என்னை எய்தாமல் காப்பான் -அவன் என்ன
துள்ளத்து நின்றான் இருந்தான் கிடக்குமே
வெள்ளத்து அரவணையின் மேல்—30-
பதவுரை
என்னை ஆளி–என்னை ஆட்கொண்டருள்பவனான
அரங்கத்து அவன்–ஸ்ரீரங்கநாதன்
என்னை–என்னை
அரங்கில்–ஸம்ஸாரமாகிற நாடக சாலையில்
எய்தாமல்–பிரவேசிக்க வொட்டாமல்
காப்பான்–காத்தருள்வன்,
அவன்–அப்பெருமான்
என்னது–என்னுடைய
உள்ளத்து–நெஞ்சிலே
நின்றான் இருந்தான்–நிற்பதும் இருப்பதும் செய்கிறான்,
(ஆன பின்பு இனி)
அவன்–அப்பெருமான்
வெள்ளத்து–திருப்பாற் கடலில்
அரவு–அப் பெருமான்
வெள்ளத்து–திருப்பாற் கடலில்
அரவு அணையின் மேல்–சேக்ஷ சயனத்திலே
கிடக்குமே–பொருந்துவனோ? (பொருந்த மாட்டான்.)
ஷீராப்தி பானு மண்டலம் ரிஷிகள் உள்ளம் விட்டு அரங்கத்தில் வந்தான் பிரமாணம் உண்டே
கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிறவன் என்னை ரக்ஷிக்கிறவன்
அவன் என்னை ஸம்ஸாரம் ஆகிற நாடக சாலையிலே பிரவேசியாதபடி ரஷிப்பன்
என் ஹ்ருதயத்தில் நின்றவனும்
வீற்று இருந்தவனுமான அவன்
ஷீராப்தியில் சேஷ சயனத்தில் கண் வளருமோ –
அரங்கத்தவன் என்னை ஆளி –
பிறவி மா மாயக் கூத்து (8-4-11)-என்று-
சம்சாரம் ஆகிய நாடக சாலையில் என்னை ப்ரவேசியாமல்-காப்பார் ஆர் -பெருமாளே –
என் ஹிருதயத்தில் புகுருகைக்கு-
அவசர ப்ரதீஷனாய்
கோயிலிலே கண் வளர்ந்து அருளி-
அவகாசம் பெற்று-
என் ஹிருதயத்தில் நிற்பது இருப்பது ஆகிறவனுக்கு
திருப் பாற் கடலிலே படுக்கையில் கண் உறங்குமோ –
(சம்சாரமாகிய நாடக சாலையிலே என்னை அடையாமல் காப்பவன் அவனே –
பிறவி மாயக்கூத்து -திருவாய்–8-4-11-
ரஷ்ய அபேக்ஷதாம் பிரதீ ஷதே -என்று படுகாடு கிடந்தது
கிடைத்த வுடன் பெறாப் பேறு பெற்றவனாய்
நின்று இருந்து கிடந்து செய்த பின்பு
ஸாத்யம் கை வந்த பின்பு சாதன அனுஷ்டானம் செய்வார் உண்டோ )
(தேனை நன் பாலைக் கன்னலை யமுதைத்
திருந்துலகுண்ட வம்மானை
வான நான்முகனை மலர்ந்த தண் கொப்பூழ்
மலர்மிசைப் படைத்த மாயோனை
கோனை வண் குருகூர் சடகோபன்
சொன்ன வாயிரத்துள் இப்பத்தும்
வானின் மீதேற்றி யருள் செய்து முடிக்கும்
பிறவி மா மாயக் கூத்தினையே–8-4-11-சம்சாரமே அரங்கம்-நாடகம் – கூத்து என்பதற்குப் பிரமாணம்
மாறி மாறி பல பிறப்பும் பிறந்து வேறே வேறே வேஷங்கள் உண்டே )
(நிற்பதும் ஓர் வெற்பகத்து இருப்பும் விண் கிடப்பதும்
நற் பெரும் திரைக் கடலுள் நான் இலாத முன்னெலாம்
அற்புதன் அனந்த சயனன் ஆதி பூதன் மாதவன்
நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் என் நெஞ்சுளே -ஸ்ரீ திருச்சந்த விருத்தம்-65-)
(கல்லும் கனை கடலும் வைகுந்த வானாடும்
புல்லென்று ஒழிந்தன கொல் ஏ பாவம் வெல்ல
நெடியான் நிறம் கரியான் உள் புகுந்து நீங்கான்
அடியேனது உள்ளத் தகம்–-ஸ்ரீ பெரிய திருவந்தாதி–ஸ்ரீ பெரிய திருவந்தாதி–68-)
பனிக்கடலில் பள்ளி கோளைப் பழக விட்டு ஓடி வந்து என்
மனக்கடலில் வாழ வல்ல மாய மணாளா நம்பீ
தனிக்கடலே தனிச் சுடரே தனி உலகே என்று என்று
உனக்கு இடமாய் இருக்க என்னை உனக்கு உரித்து ஆக்கினையே –ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி-5- 4-9 –
(வெள்ளத்து இளங்கோயில் கை விடேல் -இரண்டாம் திரு –54–
சேதனன் நெஞ்சில் இருப்பு விஸ்வஸ்ய ஆயதனம் மஹத் –
நெஞ்சமே நீள் நகராக -திருவாய் -3-8-2-
இது ஸாத்ய பிராப்தி தசை அன்றோ )
அப்பிள்ளை உரை –
அந்த சக்கரவர்த்தி திருமகன் என்று ப்ரத்யபிஜ்ஜா பண்ணலாம் படி
கோயிலிலே பேர் அழகுடனே பள்ளி கொண்டு அருளும் பெரிய பெருமாள்
(ராமன் நம்பெருமாள் -கண்ணன் பெரிய பெருமாள் என்று சொன்னாலும்
இங்கு ராமனின் அழகை பெரிய பெருமாள் இடம் கண்டார் போலும்
படி எடுத்துக் காட்டும் படி அன்றே அவன் படிவம் – )
என்னை அடிமை கொண்டு அருளிய என் ஸ்வாமி
அந்தப் பெரிய பெருமாள் தாமே சம்சாரம் ஆகிய நாடக சாலையில்
பிரவேசியாத வண்ணம் என்னை ரக்ஷித்து அருளினான்
அவ்வளவு அன்றிக்கே
அவர் தாமே என்னுடைய ஹ்ருதயத்திலே அத்யபி நிவிஷ்டனாய்க் கொண்டு
(பரந்த விரிந்த கால் பாவி தரித்து நின்றார் -உளர் ஆனார் )
அவ்வளவிலும் அபிநிவேசம் அகஞ்சுரிப் படாமையாலே
ஸ்தாவரப் பிரதிஷ்டையாய் இருந்தார்
அப்படி என் பக்கல் அத்யபி நிஷ்டனனான பின்பு
திருப்பாற் கடலில் திருவானந்தாழ்வான் மேலே கண் வளர்ந்து அருளுவாரோ
சம்பாவனையே இல்லையே
திருப்பாற் கடல் உப லக்ஷணமாய் எல்லா இடங்களிலும் அவனது உபேக்ஷை உண்டே –
———————————————————-
அப்பிள்ளை உரை அவதாரிகை
நீங்கள் ஆஸ்ரயணீயாராக நினைத்தவர்களுக்கும்
இடர் வந்த இடத்தில்
அவ்விடரைப் பரிகரிக்கும்-
அவனை அன்றோ பற்ற அடுப்பது -என்கிறார் –
(எனக்கு மட்டுமா துக்க நிவர்த்தகன்
நீங்கள் ஆஸ்ரயணீயராக நினைத்து இருக்கும் ப்ரஹ்மாதிகளுக்கும் அவனே துக்க நிவர்த்தகன்
ஆன பின்பு நீங்களும் அவனையே பற்றுங்கோள் -என்கிறார் இதில் –
பேய்த் தனம் -இருக்க வேண்டிய முறை மாறி கண்டவற்றை பற்றுவது )
மேல் நான்முகன் அரனை இட்ட விடு சாபம்
தான் நாரணன் ஒழித்தான் தாரகையுள் -வானோர்
பெருமானை ஏத்தாத பேய்காள் பிறக்கும்
கரு மாயம் பேசில் கதை –31-
பதவுரை
மேல்–முன்பொரு கால்(திரிபுர சம்ஹாரம் பண்ணி கர்வம் அடைந்து )
நான்முகன்–பிரமன்
அரனை–ருத்ரனைக் குறித்து
இட்ட–கொடுத்த
விடு சாபம்–சாபத்தை
தாரகையுள்–இந் நிலவுலகத்தில் (உள்ளாரெல்லாரு மறிய)
தாரகை என்றது தரணி என்றபடி -தரதீதி இதி – தாரகை- தாங்குவதால் இங்கு பூமியைச் சொன்னபடி
நாராயணன் தான்–எம்பெருமானே
ஒழித்தான்–போக்கி யருளினன், (அப்படிப்பட்ட)
வானோர் பெருமானை–நித்ய ஸூரி நாதனான ஸ்ரீமந் நாராயணனை
ஏத்தாத–வாய் கொண்டு வாழ்த்த மாட்டாத
பேய்காள்–அறிவு கேடர்களே!
பிறக்கும் கரு–பிறப்பதற்கு அடியான கர்ப்ப ஸ்தானத்தில் (நீங்கள் அநுபவிக்கக் கூடிய)
மாயம்–ஆச்சரியமான துக்கங்களை
பேசில்–சொல்லப் புகுந்தால்
கதை–ஒரு மஹா பாரதம் போலே பரந்திருக்கும்.
முற்காலத்தில் சதுர்முகன் ருத்ரனுக்குக் கொடுத்த -விடக்கூடிய சாபத்தை
நாராயணன் தானே பூ லோகத்திலே போக்கினான்
நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹகனான அந்த ஸ்ரீ மன் நாராயணனை ஸ்தோத்ரம் செய்யாத பிசாசங்களே
பிறக்கும் பொது கர்ப்பத்தில் படுகிற ஆச்சர்யமான துக்கத்தைச் சொல்லப் புகில் கதையாய் இருக்கும்
மேல் நான்முகன் அரனை இட்ட விடு சாபம் தான் நாரணன் ஒழித்தான் தாரகையுள் –
பண்டு சதுர்முகன் ருத்ரனை-கபாலீத்வம் பவிஷ்யசி -என்று சபித்த சாபத்தை
தரணியிலே எல்லாரும் அறிய சர்வேஸ்வரன் போக்கினான் –
வானோர் பெருமானை ஏத்தாத பேய்காள்-
ஒருத்தன் தலை அறுத்துப் பாதகியாக-
ஒருத்தன் சோச்யனாக-
இருவருடைய வியசனத்தையும் போக்குவதும் செய்து –
நித்ய ஸூரிகளுக்கு பிராப்யன் ஆனவனை ஏத்தாத
அறிவு கேடர்காள் –
பிறக்கும் கரு மாயம் பேசில் கதை –
இவ் வறிவு கேடு கிடக்கப் பிறவிக்கு-அடியான
கர்ப்ப ஸ்தானத்தில் உள்ள
ஆச்சர்யம் (துக்கம் )சொல்லப் புகில்-
மகா பாரதம்
(தேவீம் ப்ரதி ருத்ர
தத க்ரோத பரீதேந ஸம் ரக்த நயநேந ச
வாமாங்குஷ்ட நகாக்ரேண சின்னம் தஸ்ய ஸிரோ மயா
ப்ரஹ்மா
யஸ்மாதநபரா தஸ்ய ஸிரச்சின்னம் த்வயா மம
தஸ்மாச் சாப ஸமா விஷ்ட கபாலீத்வம் பவிஷ்யஸி
ருத்ர —
ப்ரஹ்மஹா குலிதோ பூத்வா சரன் தீர்த்தாநி பூதலே
ததோ அஹம் கதவான் தேவீ ஹிமவந்தம் சிலோச்சயம்
தத்ர நாராயண ஸ்ரீ மான் மயா பிஷாம் பிரயாசித
ததஸ் தேந ஸ்வகம் பார்ஸ்வம் நகாக்ரேண விதாரிதம்
மஹதீ ஸ்ரவதீ தாரா தஸ்ய ரக்தஸ்ய நிஸ்ஸ்ருதா
விஷ்ணு ப்ரஸாதாத் ஸூஸ்ரோணி கபாலம் தத் ஸஹஸ்ரதா
ஸ்புடிதம் பஹுதா யாதம் ஸ்வப்ன லப்தம் தனம் யதா –ஸ்ரீ மாத்ஸ்ய புராண வசனம் –
கபாலி பிஷாண்டர் ஹர சாப ஹரன் –லோக பிரசித்தம்
அதிகம் மே நிரே விஷ்ணும் தேவா –இவனே சர்வாதிகன் என்று அறுதியிட்டார்கள் -)
(ஸூகுமார தநுர் கர்ப்பே ஜந்தர் பஹு மவா வ்ருதே
உல்ப ஸம் வேஷ்டிதோ புக்ந ப்ருஷ்ட க்ரீ வாஸ்தி ஸம் ஹதி
அத்யம்ல கடு தீஷ்னோஷ்ண லவணைர் மாத்ரு போஜநை
அத்யந்த தாபை ரத்யர்த்தம் வர்த்தமாநாதி வேதன
பிரசாரணா குஞ்சு நாதவ் நாங்கா நாம் பிரபுராத்மந
ஸக்ருன் மூத்ர மஹா பங்க ஸாயீ ஸர்வத்ர பீடித
நிருச் ஸ்வாஸா ச சைதன்ய ஸ்மரன் ஜன்ம சதான்யத
ஆஸ்தே கர்ப்பே அதி துக்கேந நிஜ கர்ம நிபந்தந
ஜாயமாந புரீஷாஸ்ருங் மூத்ர ஸூக்லா விலாநந
ப்ரஜா பத்யேந வாதேந பீட்யமா நாஸ்தி பந்தந
அதோ முகோ வை க்ரியதே ப்ரபலைஸ் ஸூதி மாரூதை
கிலேசாந் நிஷ் க்ராந்தி மாப்நோதி ஜடராந் மாதுராதுர –ஸ்ரீ விஷ்ணு புராணம்
கரு மாயங்களைச் -கர்ப்ப க்லேசங்களைச் சொல்லும் -)
(பெடை யடர்த்த மட வன்னம் பிரியாது மலர்க்கமலம்
மடலெடுத்து மது நுகரும் வயலுடுத்த திரு நறையூர்
முடை யடர்த்த சிரமேந்தி மூவுலகும் பலி திரிவோன்
இடர் கெடுத்த திருவாளன் இணை யடியே யடை நெஞ்சே -ஸ்ரீ பெரிய திருமொழி —6-9-1-
திருவாளன் இங்கே ஸ்ரீ மான் ஸ்லோகத்தில் )
அப்பிள்ளை உரை-
முன்பே ப்ரமாவானவன் லோக குருவாயும் பிதாவுமான தன்னைத் தலை அறுத்த ருத்ரனை
கையும் கபாலமும் வலிய ஏறிட்ட சாபமானது
தரணியில் எல்லாரும் அறியும் படி சர்வ ரக்ஷகனான சர்வேஸ்வரன் போக்கினான்
ப்ரஹ்மாதிகளுக்கும் துக்க நிவர்த்தகன் தானே
நித்ய ஸூரிகளுக்கு ப்ராப்ய பூதனாய் சேஷியாய் இருப்பவனை
வாய் விட்டு ஸ்தோத்ரம் பண்ணாமல்
அறிவு கேடர்காள்
பிறக்கைக்கு ஈடான கர்ப்ப ஸ்தானத்தில் நீங்கள் படும் துக்க பரம்பரைகளைச் சொல்லப் புகில் மஹா பாரதம் ஆகுமே
————————————————————————–
(ஸத்வ ப்ரசுரரான நீர் பேய் என்றும் நாய் என்றும் நிஹீன வார்த்தைகளால் பர நிந்தை செய்யலாமோ –
பர பரிவாதத்தை பரிகரிக்க அன்றோ செய்ய வேண்டுவது என்ன
பர நிந்தையில் ருசியால் பேசினேன் அல்லேன்
வஸ்து ஸ்திதி இருந்தபடி சொன்னேன் அத்தனை
உண்மையில் பகவத் குணங்களில் ஈடுபடாதவர்கள் தங்களையும் அழித்துக்கொண்டு
பிறர் ஸ்வரூபத்தையும் அழிக்கும் பேய்கள் என்று உள்ளத்தைச் சொன்னால் வயிறு எரிய வேண்டுமோ
இவர்களே பின்பு அனுகூலரானால் இவர்களும் எனக்கு உத்தேச்யர் ஆவார் என்கிறார் –
யன் முஹூர்த்தம் க்ஷணம் வாபி வாஸூ தேவோ ந சிந்த்யதே
ஸா ஹானிஸ் தன் மஹச் சித்ரம் ஸா ப்ராந்திஸ் ஸா ச விக்ரியா –
அவனை நினைக்காமல் இருப்பதே விகாரம் மயக்கம் தாழ்வு -)
அப்பிள்ளை உரை அவதாரிகை
அவன் குணங்களில் அவகாஹியாதார்கள்
இதர விஷயங்களில் மண்டி நசித்துப் போவார்கள்
ஆன பின்பு ஸமஸ்த கல்யாண குணாத்மகனான அவன் திருவடிகளை ஆஸ்ரயியுங்கோள்
என்று உபதேசித்து அருளுகிறார் இதில்
கதைப் பொருள் தான் கண்ணன் திரு வயிற்றின் உள்ள
உதைப்பளவு போது போக்கின்றி -வதைப் பொருள் தான்
வாய்ந்த குணத்துப் படாதது அடைமினோ
ஆய்ந்த குணத்தான் அடி-32-
பதவுரை
கதை பொருள் தான்–(உலகத்தில்) உபஹரிக்கப் படுகின்ற பொருள்கள் யாவும்
உதைப்பு அளவு போது போக்கு இன்றி–ஒரு நிமிஷ காலமும் ஓயாமல் (எப்போதும்)
கண்ணன்–எம்பெருமானுடைய
திரு வயிற்றின் உள்ள–ஸங்கல்பத்தில் ஸத்தை பெற்றிருக்கின்றன,
ஸ்ம்ருதி இதிகாசம் -திருவயிறு -திரு உள்ளம் -சங்கல்பம் படி இருக்கும் என்றவாறு
(அப்படிப்பட்ட எம்பெருமானுடைய)
வாய்ந்த குணத்து–திருக்கல்யாண குணங்களில்
படாதது–ஈடுபடாத வஸ்து
வதை பொருள் தான்–அபதார்த்தமே யாகும்,
இவனால் அனைவருக்கும் ஹிம்சை தானே ஏற்படும்
பகவத் சிந்தனமே நிம்மதி சாந்திக்குக் காரணம்
ஈடுபட்டவன் ஆனந்தம் அனைவருக்கும் உண்டாவது போல்
இவர்களால் அனைவருக்கும் துக்கமே பலிக்குமே
(ஆகையாலே)
ஆய்ந்த குணத்தான்–சிறந்த திருக் குணங்களை யுடையவனான அப்பெருமானுடைய
அடி–திருவடிகளை
அடைமின்–ஆஸ்ரயியுங்கோள்
இதிஹாச புராணாதிகள் ஸ்ரீ கிருஷ்ணனுடைய சங்கல்பத்தினால் நிலை பெற்றன
ஒரு க்ஷணமும் வியர்த்தமாகப் போக்காமல் திருக் கல்யாண குணங்களில் அந்வயியாது நசிக்கிற வஸ்துவே
அதனால்
அகில ஹேய ப்ரத்ய நீகமான கல்யாண குணங்களை யுடையவனுடைய திருவடிகளைப் பற்றுங்கோள் –
கதைப் பொருள் தான் கண்ணன் திரு வயிற்றின் உள்ள
ஸ்ம்ருதி இதிஹாச புராணங்கள்-
சர்வேஸ்வரனுடைய சங்கல்பத்தில் உள்ளன –
உதைப்பளவு போது போக்கின்றி -வதைப் பொருள் தான் வாய்ந்த குணத்துப் படாதது அடைமினோ
ஒரு நொடி மாத்ரம் போது போக்கு இன்றி-
ஆச்சர்ய குணத்தில் (ஸத் குணத்தில் ) அகப்படாதது
பர ஹிம்சை விட்டு
அவனை ஆஸ்ரயிங்கோள்
(போக்கு இன்றி-போக்காமல் -சீக்கிரமாக
பர ஹிம்ஸை -ஆத்ம அபஹாரம் ஆகவுமாம் -)
ஆய்ந்த குணத்தான் அடி அடைமினோ
ஹேய ப்ரத்ய நீகமான குணத்தை உடையவன் திருவடிகளை ஆஸ்ரயியுங்கோள்
(வாய்ந்த குணம் சிறப்பான குணம் என்றும்
ஆய்ந்த குணம் குற்றம் அற்ற குணம் என்றும் )
(பேய்களே பின்பு அனுகூல்யம் உடையவர்கள் ஆனால்
கௌரவம் காட்ட வேண்டியவர்கள் என்பதையே அடைமினோ -பத பிரயோகம் காட்டும்)
(கதைப் பொருள்
கதையை முக்யமாகக் கொண்ட இதிஹாச புராணாதிகள்
பொருள் -தத்துவங்களை முக்யமாகக் கொண்ட ஸ்ம்ருதிகள்
திரு வயிற்றின் உள்ளே -என்பது -லக்ஷணையால் மனசைச் சொல்லி சங்கல்பத்தைச் சொல்லும்
அப்ராக்ருதமான -அரவிந்த லோசன மன காந்தா -மனத்துக்கு இனியவன் –
அஸ்ய தேவ்யா மனஸ் தஸ்மிந் தஸ்ய சாஸ்யாம் ப்ரதிஷ்டிதம் )
அப்பிள்ளை உரை
பகவத் குண சேஷ்டிதங்களைப் பரக்கச் சொல்லுகிற இதிஹாச புராணங்கள் ஸ்ம்ருதிகள்
அதனால் பிரதிபாதிக்கும் தேவாதி ஆத்ம வஸ்துக்கள் – ஸமஸ்த சேதனர்கள்
சர்வ காலத்திலும் சர்வேஸ்வரன் திரு உள்ளத்தில் திவ்ய சங்கல்பத்தால்
தானே ஒரு வினாடி கூட மிச்சம் இல்லாமல்
சத்தை பெற்று வர்த்திக்கின்றன
இப்படி இருக்க
இதர விஷய ப்ராவண்யத்தால் நசித்துப் போகும் ஆத்ம வஸ்துக்கள் தான்
அசந்நே வா ஸ்வரூப நாசம் உண்டாகும்
அவனது அழகியதான குணங்களில் அவகாஹியாதவையாய் இருக்கும்
ஆன பின்பு நீங்கள் அப்படி மண்டி நசித்துப் போகாமல்
ஹேய பிரதிபடமான கல்யாண குணங்களை யுடையவனான சர்வேஸ்வரன் திருவடிகளை ஆஸ்ரயியுங்கோள்
உதைப்பளவு – க்ஷணம் பொழுதில்
வதைப்பொருள் -நசித்துப் போகும் வஸ்துக்கள்
அரவிந்த லோசனை மனக் காந்த ப்ரஸாததாத் ஆளவந்தார்
உன் தன் திரு உள்ளம் இடர் கெடும் தோறும்
அஸ்யா மனஸ் ப்ரதிஷ்டிதம் ஸ்ரீ ராமாயணம்
அப்ராக்ருதமான திரு உள்ளத்துக்கு பிரமாணங்கள் இவை
மனம் கிடையாது பார்க்கிறார் கண்ணே இல்லை இதுவும் உண்டு
பிராக்ருதமானவை இல்லை என்றும்
கண்ணால் தான் பார்க்க வேண்டும் நிர்பந்தமும் இல்லை என்றுமாம்
————————————————————–
அசாதாரணையான நப்பின்னைப் பிராட்டிக்கும்-
அல்லாதாருக்கும்
ஒக்க விரோதியைப் போக்குமவன் என்கிறார் –
(அடைமினோ என்று சொல்லவே விரோதிகள் அடைய ஒட்டுமோ -என்ன
நப்பின்னைப் பிராட்டிக்கும் மாற்று உள்ளவருக்கும் விரோதிகளை நிரசித்துத் தரும் தன்மையன் அன்றோ
ஆகவே விரோதிகளுக்கு அஞ்ச வேண்டாம் என்கிறார் –
திருவடி -திருக்கை –திருப்பவளம் -திருமேனி–நான்காலும் நான்கு ரக்ஷணம்-
விரோதி நிரஸனம் – பண்ணி அருளியவற்றை அருளிச் செய்கிறார் )
அப்பிள்ளை உரை -அவதாரிகை
ஆஸ்ரித ரக்ஷிக்க வேணும் என்னும் திரு உள்ளக் கருத்தாலே
சகடாசூர நிரசனம் முதலான திவ்ய சேஷ்டிதங்களைப் பண்ணி
ஸ்வ ஸித்தமான தன்னுடைய சேஷித்வத்தை உதறிப்படுத்தினான் –
வெளிப்படுத்தி அருளினான் என்றவாறு –
அடிச் சகடம் சாடி அரவாட்டி ஆனை
பிடுத்து ஒசித்துப் பேய் முலை நஞ்சுண்டு -வடிப் பவள
வாய்பின்னைத் தோளிக்கா வல்லேற்று எருத்து இருத்து
கோப்பின்னும் ஆனான் குறிப்பு-33-
பதவுரை
(எம்பெருமான்)
குறிப்பு–(அடியாரைக் காத்தருள வேணுமென்கிற) திருவுள்ளத்தினால்
அடி–திருவடியாலே
சகடம்–சகடாஸுரனை
சாடி–ஒழித்தும்
அரவு-காளிய நாகத்தை
ஆட்டி–வாலைப் பிடித்து ஆட்டிக் கொழுப்படக்கியும்
யானை–குவலயாபீட மென்னும் யானையை
பிடித்து–பற்றிக் கொண்டு
பின்னைக்கா–நப்பின்னைப் பிராட்டிக்காக
வல் ஏறு–கொடிய ரிஷபங்களினுடைய
எருத்து–முசுப்பை
ஒசித்து–கொம்பை முறித்தொழித்தும்
பேய்–பூதனை யென்னும் பேய்ச்சியினுடைய
முலை–முலையில் தடவி யிருந்த
நஞ்சு–விஷத்தை
உண்டு–அமுது செய்து அவளாயிரை மாய்த்தும்
வடி பவளம் வாய் தோளி–அழகிய பவளம் போன்ற வாயையும் தோளையும் வுடையளான
இறுத்து–முறித்தொழித்தும்
பின்னும் கோ ஆனான்–தன்னுடைய ஸ்வாபாவிகமான சேக்ஷித்வத்தை நிலை நிறுத்திக் கொண்டான்.
திருவடிகளினால் சகடாசூரனை உதைத்துக்
காளியனை வாலைப் பிடித்து ஆட்டி
குவலயாபீடத்தைப் பிடித்து அதன் கொம்பை முறித்து
பூதனையின் முலையில் விஷத்தை அமுது செய்து
அழகிய பவளம் போன்ற அதரத்தையும் தோள்களையும் யுடைய நப்பின்னைப் பிராட்டிக்காக
பலிஷ்டமான விருஷபங்களின் முசிப்பை முறித்துப்
பின்னையும் ரஷிப்பதனால் ஸர்வ ஸ்வாமி யானான் –
திருவடிகளிலே சகடத்தை அழித்து-
காளியனைத் துரத்தி
குவலயா பீடத்தை பிடித்து அதன் கொம்பை அனாயேசேன முறித்து
பூதனையை முடித்து
அழகிய பவளம் போன்று இருக்கிற அதரத்தையும்
அழகிய தோளையும் உடைய நப்பின்னைப் பிராட்டிக்காக
தன்னை யொக்க வலிய-வ்ருஷபங்களின் உடைய ககுத்தைப் போக்கி
ஸ்வாபாவிகமான சேஷித்வத்தை
பின்னையும் உதறிப் படுத்தான் திரு உள்ளத்தாலே
(அந்தக் கரணத்தால் திரு உள்ளத்தால் விரோதி நிரசன பூர்வக ரக்ஷண
சிந்தனை பண்ணிக் கொண்டே சயனம் -கள்ள நித்திரை கொள்கிற மார்க்கம்
உறங்குவான் போல் யோகு செய்கிறான் )
(அரவோட்டி -பாட பேதம்
இங்கும் அடி என்பதைக் கூட்டிக் கொள்ள வேண்டும்
அடிச்சகடம் சாடி அரவோட்டி -திரு வடியால் செய்த விரோதி நிரசனங்கள்
ஆனை பிடித்து ஓசித்து –திருக் கையால் செய்த விரோதி நிரஸனம்
பேய் முலை நஞ்சுண்டு -திருப் பவளத்தால் செய்த விரோதி நிரஸனம்
வல் ஏற்று எருது இருத்து-திரு மேனி முழுவதால் செய்த நிரஸனம் -பிராட்டிக்கு என்பதால் –
பெறப்போகும் வஸ்து வின் வைலக்ஷண்யத்துக்கு ஏற்ற சாதன அனுஷ்டானம்
சாதனத்துக்கு கையேடு காலோடு வாயோடு வாசியற எதுவும் அமையும்
பின்பு குறிப்பு கோவானான் -அவதாரம் முடிந்தபின்பும் பாஹ்ய இந்த்ரியங்களால் அன்றி
அந்தர் இந்த்ரியமான திரு உள்ளத்தால் விரோதி நிரஸனம்
திருப்பாற் கடலிலே உறங்குவான் போல் யோகு செய்வானே
எல்லா அவஸ்தையிலும் ஸ்வாமித்வம் உண்டே -விரோதி நிரசனமே தொழிலாகக் கொண்டவன் என்றபடி –
அப்பிள்ளை உரை
ஆஸ்ரிதரை குறைவற நோக்க வேணும் என்னும் மநோ ரதத்தால்
தன்னை நலிவதாக வந்த சகடத்தை முலை வரவு தாழ்ந்தது என்று சீறி திருவடியால் உதைத்து
காளியனது பாம்பை தலை நொறுங்க வாலைப் பிடித்து ஆட்டி
குவலயா பீடம் அநாயாசேன பிடித்து அதன் கொம்பை பிடுங்கி எறிந்து
பூதனையினுடைய முலிகையில் விஷம் கலந்த பாலை பிராணனோடு பசையற உண்டு
அழகிய பவளம் போன்ற அதரத்தையும் தோள் அழகை யும் யுடைய
நப்பின்னைப் பிராட்டிக்காக பிரபலமான ஏழு ரிஷபங்கள்
கர்வ ஹேதுவாக ககுத்துக்களை முறித்து -திமிலில் தான் அதுக்கு திமிர்
இப்படி களை பிடுங்கி ஆஸ்ரிதர்களை ரக்ஷித்து அருளி இச் செயல்களால்
மீளவும் நிலை நின்ற சேஷித்வத்தை யுடையவன் ஆனான் –
சேஷித்வ அதிசங்கை அறுத்தான்
இப்படி அவன் அறுதியிட்டுக் கொண்டு அவன் இருக்க
நிர்பரோ நிர்பயமாக இருக்க அன்றோ அடுத்து
நெஞ்சே கவலைப் படாதே என்கிறார் –
—————————————————————–
(ப்ராப்திக்கு வேண்டுவது ஆத்ம ஞானமும் அப்ரதி ஷேதமும்
ஆத்ம ஞானம் -தன்னைப் பார்க்க விலக்காமை குறிப்பு வேண்டுமே
அவனைப் பார்க்க ஸ்தோத்ரம் பண்ண குறிப்பு
கர்மமும் கிருபையும் சம்சார மோக்ஷ ஹேதுக்கள்
ஆசைப் பட்டவன் இடம் தான் அவன் நன்மை பலிக்கும்
மெய் வினை நோய் -சரீரம்-அதனால் வரும் கர்மம்-சுழல் -அதனால் வரும் துக்கம் –
வெவ் வினை நோய்– பாட பேதம் )
உகந்து அருளின தேசங்களிலே எனக்காக அவன் வர்த்திக்க
வரில் பொகடேன்
கெடில் தேடேன் – என்று இருக்கவோ என்கிறார் –
(லௌகிக விஷயத்தில் போல் அல்லவே பகவத் விஷயத்தில் )
அப்பிள்ளை உரை அவதாரிகை
எனக்காகவே திருப்பதிகளில் வந்து ஸூ லபனானவன்
திருவடிகளை விட்டு இருக்க வல்லேனோ -என்கிறார் –
குறிப்பு எனக்குக் கோட்டியூர் மேயானை ஏத்த
குறிப்பு எனக்கு நன்மை பயக்க -வெறுப்பனோ
வேங்கடத்து மேயானை மெய் வினை நோய் எய்தாமல்
தான் கடத்தும் தன்மையான் தாள்-34-
பதவுரை
கோட்டியூர் மேயானை–திருக்கோட்டியூரில் நித்ய வாஸம் பண்ணுமவனும்
வேங்கடத்து மேயானை–திருமலையில் நித்ய வாஸம் பண்ணுமவனுமான பெருமானை
ஏத்த–ஸ்துதிப்பதற்கு
எனக்கு குறிப்பு–எனக்கு ஆசை
நன்மை பயக்க–(எம்பெருமானை இடை விடாது அநுபவிப்பதனாலுண்டாகும்) பெருமையை உண்டாக்கிக் கொள்வதற்கு
எனக்கு குறிப்பு–எனக்கு குதூஹலம்,
மெய் வினை–சரீர ஸம்பந்தத்துக்கு அடியான கருமங்களும்
நோய்–வியாதிகளும்
எய்தாமல்–வந்து சேராதபடி
தான் கடத்தும் தன்மையான்–தானே அவற்றைப் போக்கி யருளும் ஸ்வபாவத்தை யுடையனான அப்பெருமானுடைய
தாள்–திருவடிகளை
வெறுப்பனோ–மறந்திருப்பனோ.
திருக்கோட்டியூரில் நித்ய வாஸம் பண்ணு மவனையும்
திருமலையில் எழுந்து அருளி இருக்கிறவனையும்
ஸ்தோத்ரம் பண்ண எனக்கு அபிப்பிராயம்
நல்ல கார்யங்களை விருத்தி பண்ண எனக்கு அபிப்ராயம்
சரீர சம்பந்தங்களான கர்மங்களையும் வியாதிகளையும் அடையாமல் படி தானே நடத்தி வைக்கும்
ஸ்வ பாவத்தை யுடைய ஸர்வேஸ்வரனுடைய திருவடிகளை உபேக்ஷிப்பேனோ –
திருக் கோட்டியூரிலே எனக்காக சந்நிஹிதன் ஆனவனை
ஏத்தக் கருத்து-
சம்ஸ்லேஷத்தால் வந்த உத்கர்ஷம் பிறக்கக் கருத்து –
வந்த சம்பந்தத்தை வேண்டாம் என்று தள்ளுவேனோ
சரீரம் அடியாக வந்த வியாதியும்-
வ்யாதிக்கு ஹேதுமான கர்மமும்-
கிட்டாமல் மாற்றுமவன் திருவடிகளை மறப்பேனோ –
(மறப்பனோ அத்யாஹாரம் )
(மேவி யுறை கோயில் -என்றார் நம்மாழ்வாரும்
குறிப்பு எனக்கு நன்மை பயக்க –
ஸ்வ உஜ்ஜீவன இச்சா யதி தே ஸ்வ சத்தாயாம் ஸ்ப்ருஹா யதி
ஆத்ம தாஸ்யம் ஹரே ஸ்வாம்யம் ஸ்வ பாவஞ்ச ஸதா ஸ்மர–
இருப்புக்கும் உஜ்ஜீவனத்துக்கும் ஆசை இருக்குமானால் சேஷி சேஷ பாவம் உணர வேண்டுமே
வந்த சம்பந்தம் -இது நித்யம் அன்றோ -நினைவு மறந்து இருக்கிறோம் -உணர்த்தவே அவனே
ஸ்ரீ வைகுண்டத்தில் நேராக இறங்கி வந்த சம்பந்தம்
வெறுப்பனோ வேங்கடத்து மேயானை
எனக்காக அவன் இங்கு வந்து இருக்க தான் வரும் ஸ்ரீ தேவியைக் காலால் உதைப்பார் உண்டோ
வேங்கடவன் திரு நாமமே மெய் வினைகளை போக்கி அருளும் )
(வேங்கடங்கள் மெய் மேல் வினை முற்றவும்
தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார்
வேங்கடத்து உறைவாருக்கு நம என்னலாம்
கடைமை அது சுமந்தார்கட்கே -போல்
எனக்கு நன்மை பயக்க என்று – தங்கட்கு நல்லனவே செய்வார் -என்பதையே
மெய்வினை நோய் எய்தாமல் தான் கடத்தும் என்று – மெய் மேல் வினை முற்றவும் வேங்கடங்கள் -என்பதையே
வேம் கடங்கள்
கடன்கள் எரிக்கப்படும் -பாபங்கள் போக்கப்படும்
வெந்து போகும் கடன்கள் –
தமிழிலும் சமஸ்க்ருதத்தில் ஒரே அர்த்தம் )
அப்பிள்ளை உரை
என்னை அங்கீ கரித்து அடிமை கொள்ளவே
திருக் கோட்டியூரில் நித்ய வாஸம் செய்து அருளி
அப்படியே திருமலையில் நின்று நித்ய வாசம் செய்து அருளும்
(திருவேங்கடம் வந்து வடக்கு வாசல் வழியாக கோயிலே வந்தான் என்பர்
இங்கு திருக்கோட்டியூர் முதலில் இருப்பதால் இவ்வாறு வியாக்யானம் )
ஸ்வ பாவனானவன் குண சேஷ்டிதங்களை சொல்லி ஸ்துதிக்க
நிறைந்த அனுபவத்தால் வந்த உத்கர்ஷம் உத்தரோத்தரம் வளர வேண்டும்
சரீர சம்பந்தத்துக்கு அடியான கர்மங்களும்
தத் கார்யமான துக்கங்களும் -கிட்டாத படியாக -தானே கை தொடனாய்
அவற்றைக் கடத்தும் ஸ்வ பாவனான வனுடைய
(இது தன்மை வந்தேறி இல்லையே )
திருவடிகளை வரில் பொகடேன் கேடில் தேடேன் என்று உபேஷிப்பேனோ -வெறுப்பனோ
(வெறுத்தல் -உபேஷித்தல் -வந்தால் வா இல்லையால் தேடமாட்டேன் என்று இருப்பதே
கிடைத்தே ஆக த்வரை படுவது-பேர் ஆதரவு இயற்க்கை –
அது உயர்வு ப்ரபாவமே இல்லை என்பதே நம் ஆச்சார்யர்கள் திரு உள்ளம் )
வெவ் வினை நோய் பாட பேதம்
வெவ்விய குரூரமான பாபங்களும் தத் பலமான நோய்களும் கிட்டாத படி -என்றவாறு –
——————————————————————
லௌகிகர் படியைக் கண்டு வெறுப்பனோ -என்கிறார்-
(பேய்காள் (31)-என்றார்
மேல் யுக்தி பிரதி யுக்திகள்
வதைப் பொருள்- உதைப்பளவு அடியை அடைய உபதேசிக்க
விரோதிகளை அவனே போக்குவானாய் இருக்க
நான் அடியை அடையும்படி தானே என் மனம் புகுந்தான் என்றார்
இதில் அவனது ஸாஹஸச் செயல்களுக்கு பரிவதே போது போக்காய் இருக்கும் எனக்கு
பிறர் தன்மையைக் கண்டு வெறுப்பது ஆவது என் -என்கிறார் –
ஸ்தோத்ரம் பண்ணவும் நன்மை பயக்கவும் இரண்டு குறிப்புகள் கீழே
ஐந்தலை ஐந்து வாய் இதற்காகவே -தலைகளால் ரக்ஷித்து வாய்களால் ஸ்தோத்ரம் பண்ணவே –
என்னை ஆளுடை அப்பன்- மந் நாதப் பெருமாளுக்கு மங்களா ஸாஸனம்
ஸ்வ அனுபவம் -பர உபதேச கர்ப்பம்
மா நகர பெருமை மயிலைக்கு
மா அல்லிக்கேணி க்ஷேத்ர பெருமை
வாயும் பேசவில்லை அசையும் இல்லை
இங்கு ஒரே கேள்வி
திருக் குடந்தையில் இவரே இரண்டு கேள்விகள் ஞானமாய் இடந்த அசைவையும் சேர்த்து
மாற்றமும் தராமல் வாசலும் திறவாமல் -வாசலை செம்பளித்தால் வாயையும் செம்பளிக்க வேண்டுமோ -)
அப்பிள்ளை உரை அவதாரிகை
திரு வல்லிக்கேணியிலே வாய் திறவாதே ஏக ரூபமாய்
கண் வளரக் கண்டு
திரு உலகு அளந்த ஆயாசமோ என்று அஸ்தாநே பய சங்கை பண்ணுகிறார் –
தாளால் உலகம் அளந்த அசைவே கொல்
வாளா கிடந்தருளும் வாய் திறவான் -நீளோதம்
வந்தலைக்கும் மா மயிலை மா வல்லிக் கேணியான்
ஐந்தலை வாய் நாகத்தணை-35-
பதவுரை
நீளோதம்–பெரிய அலைகள்
வந்து அலைக்கும்–கரையிலே வந்து வீசப் பெற்ற
மா மயிலை–மயிலாபுரிக்கு அடுத்த
மா வல்லிக் கேணியான்–திருவல்லிக்கேணியில் நித்யவாஸம் பண்ணுகிற ஸர்வேச்வரன்
ஐ தலை வாய் நாகத்து அணை–ஐந்து தலைகளையும் ஐந்து வாய்களையும் யுடையனான திருவனந்தாழ்வானாகிற படுக்கையிலே
வாளா–வெறுமனே
கிடந்தருளும்–சயனித்திரா நின்றான்
வாய் திறவான்–வாய் திறந்து ஒன்று மருளிச் செய்வதில்லை
(இப்படியிருப்பதற்குக் காரணம்)
தாளால்–திருவடியாலே
உலகம் அளந்த அசவே கொல்–உலகங்களை அளந்ததனுலுண்டான ஆயாஸமோ?
பெரிய அலைகள் வந்து அடிக்கிற ஸ்லாக்யமான மயிலாப்பூருக்கு அடுத்த ஸ்லாக்யமான
திருவல்லிக்கேணியில் எழுந்து அருளி இருக்கிறவன்
ஐந்து சிரஸ்ஸூக்களையும் முகங்களையுமுடைய திரு வனந்த ஆழ்வான்
ஆகிற படுக்கை மேல் சலியாமல் கண் வளர்ந்து அருளுகிறான்
ஒரு வார்த்தையும் சொல்லான்
இது திருவடிகளினால் லோகங்களை அளந்த ஆயாசத்தினாலேயாய் இருக்கலாமோ –
தாளால் உலகம் அளந்த அசைவே கொல்-
வடிவிணை இல்லா மலர் மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடி -என்று
பிராட்டிக்கும் கூசித் தொட வேண்டும் திருவடிகளைக் கொண்டு-
காடும் மேடும் அளந்து திருமேனி அலற்றதோ-
(அசைவு -தளர்த்தி )
இல்லாததை உண்டாக்கும் சங்கல்பம் போராதோ –
உண்டானதை உஜ்ஜீவிப்பிக்க-
வாளா கிடந்தருளும் வாய் திறவான்-
ஏக ரூபமாய் கிடப்பதும் செய்து
வார்த்தையும் பேசுகிறிலன்-
(வாளா -வெறுமனே
ஓரு படியாய் -ஏக ரூபமாய் -என்றபடி )
(கள்வப் பணி மொழி கேட்க பார்க்கிறார்
மாஸூ ச
தாதாமி ஏதத் விரதம்
அஹம் ஸ்மாரமி நயாமி பரமாம் கதி
போன்ற இடங்கள் உண்டே
விரோதி நிரசனம் -தாதாமி புத்தி யோகம் -அஹம் வோ பாந்தவ ஜாத -இஷ்ட பிராப்தி
க்ஷமாமி என்றும் வாய் திறந்ததும் உண்டே
சீறியாவது அருளலாமே
வாய் திறந்து ஓன்று பணித்தது உண்டு
அஸ்துதே -சொன்ன இடமும் உண்டே )
நீளோதம் வந்தலைக்கும் மா மயிலை மா வல்லிக் கேணியான் ஐந்தலை வாய் நாகத்தணை-
நீர்க் கரையைப் பற்றி கண் வளருகிறதும்
ஸ்ரமத்தின் மிகுதி என்று இருக்கிறார்-
(பரியும் அத்தனை அன்றோ என்கிறார் இதில் -என்றபடி
முந்துற வந்து கைக்கொள்ளும் உன்னை அன்றோ இது வந்து அலைக்கிறதே )
(வடிவிணை இல்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடி கொண்டு
சம்பந்தம் மட்டும் பார்த்து தடவிக்கொடுத்து உஜ்ஜீவிக்கவும் பார்க்க வேண்டுமோ
பஹஸ்யாம் சங்கல்பம் மட்டுமே போதாதோ
அயர்வறும் அமரர்கள் அதிபதியான இவனுக்கும் அயர்வு உண்டு என்று பரிகிறார் -பொங்கும் பரிவாலே
அஸ்தானே பய சங்கை
கொடியார் மாடக் கோளூரகத்தும் புளிங்குடியும்
மடியாதின்னே நீ துயில் மேவி மகிழ்ந்தது தான்
அடியார் அல்லல் தவிர்த்த வஸைவோ அன்றேலிப்
படி தான் நீண்டு தாவிய வசவோ பணியாயே–திருவாய் –8-3-5-அடி யொற்றி இப் பாசுரம் )
அப்பிள்ளை உரை
பெரிய திரைகளானவை வந்து தொடை குத்த உறங்குவாரைப்போலே
தனது குளிர்ந்த திரைகளாலே சிஸீரோ உபசாரம் பண்ண
போக பிரதானருக்கு வர்த்திக்கலாம் படியான மயிலாப்பூரில்
ஸ்லாக்யமான திருவல்லிக்கேணியில் நித்ய வாசம் பண்ணுகிற சர்வேஸ்வரன்
காற்றும் வெய்யிலும் தாக்காத படி தனது வளைவான ஐந்து தலைகளாலும்
சைத்திய மார்த்தவ ஸூரபி கொள் கலமான
வாயாற் யீரைநூறு பரிவுடன் ஏத்துகைக்கு பரிவுடன் ஐந்து திருப்பவளாம் உடைய
இடம் வலம் கொள்ளாமல் பாடோட கண் வளர்ந்து
இளைப்பின் கனத்தால் திருப்பவளாம் தோன்ற அருளிச் செய்யவும் மாட்டுகிறிலன்
இதுக்கு அடி
மலர் மகள் முதலான பிராட்டிமார்கள் -கூசிப் பிடிக்கும் மெல்லடி – தாளால் அசைவு –
பலம் பொருந்தியதாய் இருந்தாலும் மென்மை
(ஸூ குமாரவ் மஹா பலவ்
உலகம் அளந்த -பலம்
தாளால் -ஸூ குமாரம் )
காடும் மோடையுமான லோகத்தை அளந்த அசைவோ
————————————————————
பல இடத்தில் கண் வளர்ந்து அருளுகிறதும்-ஆயாசத்தால் என்று இருக்கிறார் –
(கீழில் பாட்டுக்கு அனுகுணமாக அவதாரிகையில் அர்த்தம்
அவஸர பிரதீஷானாகை -பாட்டுக்குத் தாத்பர்யம்
ஆதி நெடு மால் -பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு –
நெடுமை ஆதி நெடுமை மால் – உபாதான நிமித்த சஹகாரி
உலகத் தாய் இல்லையே ஆகவே நெடு
சாதன பூமிகள் பலவும் சொல்லி -உள்ளத்தில் சேர -அதுவே சாத்தியம்
சொன்ன வண்ணம் செய்த இருவரையும் முதலில் அருளிச் செய்கிறார்
கிஷ்கிந்தா காண்டத்தில் யாததோத்தகாரி சப்த பிரயோகம் உண்டு
இவ்வளவு முயற்சி பண்ணியும் உள்ளத்தில் கொள்ளாமல் இருப்பதே ஆயாசம் இங்கு
நெஞ்சு கதவைத் திறக்காமல் உள்ளார்களே )
அப்பிள்ளை உரை அவதாரிகை
ஓர் இடம் மாத்ரம் அன்றிக்கே
திருக் குடந்தை தொடக்கமான பல திருப்பதிகளிலும் திருவானந்தாழ்வான் மேல் பள்ளி கொண்டு அருளுகிறது
(கண்ண நீர் பாய்ச்ச வேண்டாத தாய் தந்தை அன்றோ
லோக வத்து லீலா கைவல்யம் -நீ விட்டாலும் நான் கை விடேன் )
ஆஸ்ரித ஹ்ருதயம் திருந்த
அதில் புகுந்து அருளுகைக்காக -அவசர ப்ரதீஷனாய்-கிடக்கிறான் என்கிறார் –
(சோழ தேசம் தொண்டை நாடு இரண்டையும் இங்கு அருளிச் செய்தது
சேர பாண்டிய நாடு சயன திருப்பதிகளுக்கும் உப லக்ஷணம் )
நாகத்தணைக் குடந்தை வெக்கா திரு எவ்வுள்
நாகத்தணை யரங்கம் பேரன்பில் –நாகத்
தணைப் பாற் கடல் கிடக்கும் ஆதி நெடுமால்
அணைப்பார் கருத்தானாவான்–36-
பதவுரை
நாகத்து அணை–திருவனந்தாழ்வானாகிற படுக்கையின் மேலே
குடந்தை–திருக் குடந்தையிலும்
வெஃகா–திரு வெஃகாவிலும்
திரு எவ்வுள்–திரு வெவ்வுளுரிலும்
(அப்படியே)
நாகத்து அணை–சேஷ சயனத்தின் மீது
பால் கடல்–திருப்பாற் கடலிலும்
ஆதி நெடுமால்–ஜகத் காரண பூதனான ஸர்வேஸ்வரன்
நாகத்து அணை–திருவனந்தாழ்வானாகிற படுக்கையின் மேல்
அரங்கம்–திருவரங்கத்திலும்
பேர்–திருப்பேர் நகரிலும்
அன்பில்–அன்பில் என்னுந் திருப்பதியிலும்
கிடக்கும்–பள்ளி கொண்டிருக்கின்றான்
(எதுக்காக வென்னில்)
அணைப்பார் கருத்தன் ஆவான்–அன்பருடைய நெஞ்சில் புகுந்தவனாக ஆவதற்காக.
ஜகத் காரணனான ஸர்வேஸ்வரன் பக்த ஜனங்களுடைய ஹிருதயத்தில் ப்ரவேசிக்கைக்காக
திருவநந்தாழ்வான் ஆகிற படுக்கையின் மேலே
திருக் குடந்தையிலும்
திரு வெஃகாவிலும்
திரு எவ்வுள்ளூரிலும்
திருவநந்தாழ்வான் ஆகிற படுக்கையின் மேலே
கோயிலிலும்
திருப் பேரிலும்
திரு அன்பிலிலும்
திருவநந்தாழ்வான் ஆகிற படுக்கையின் மேலே
திருப் பாற் கடலிலும் சயனித்துக் கொண்டு இருக்கிறான் –
திருக் குடந்தையிலே திரு அநந்த ஆழ்வான் மேல்
கண் வளர்ந்து அருளுகிறதும்
கோயில் தொடக்கமான எல்லாத் திருப்பதிகளிலும்
திருப் பாற் கடலிலும்
ஜகத் காரண பூதனான சர்வேஸ்வரன்
தோள் தீண்டியாக (அருகிலே சந்நிஹிதனாக )
கண் வளர்ந்து அருளுகிறதும்
தான் புகுரப் புக்கால் ஆணை இடாதார் (த்வேஷிக்காமல் )ஹிருதயத்தில் புகுருகைகாக
இப்படி அவசர ப்ரதீஷனாக வேண்டுவான்- என் என்னில் –
தாய் ஆகையாலே-
(அவஸர பிரதீஷானாகை -பாட்டுக்குத் தாத்பர்யம்
காரணத்வமும் அன்பும் சொல்லப்பட்டது இந்த தாய் -சப்தத்தாலே )
(நெஞ்சிலே அணைப்போம் என்ற ஆசா லேசமுள்ளார் நெஞ்சிலே புகவே இப்படி படுகாடு கிடக்கிறான்
ஆதி நெடுமால்
உயிர்க்கு எல்லாம் தாய் -காரண பூதன் -திருவயிற்றிலே வைத்து ரக்ஷிப்பவன்
தாயைப் போலவே வாத்சல்யம் பேர் அன்பு கொண்டவன் )
அப்பிள்ளை உரை
திருவானந்தாழ்வான் ஆகிற படுக்கையின் மேலே
திருக் குடந்தையிலும்
திரு வெஃகாவிலும்
திரு எவ்வுள்ளிலும்
அதே போல்
திரு அரவணை மேலே
திருக்கோயிலும்
திருப் பேரிலும்
திரு அன்பிலிலும்
அப்படியே திருவந்தாழ்வான் படுக்கையின் மேலே
திருப்பாற் கடலிலும்
ஜகத் காரண பூதனான ஸர்வேஸ்வரன்
புகும் இடங்களில் விலக்காமல் புக்கிடுவானுக்கு என்று இருக்கும் ஆஸ்ரிதர்
திரு உள்ளம் புக அவசர பிரதீஷனயாய் கொண்டு கண் வளர்ந்து அருளா நிற்கும்
(ஆகவே விலக்காமல் சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும் என்று தாத்பர்யம் )
————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply