ஆதி நெடுமாலை விவரிக்கிறது –
அப்பிள்ளை உரை அவதாரிகை
இப்படி ஆஸ்ரித நெஞ்சில் புகுவதற்கு அவசர பிரதீஷானாய் இருப்பது விஸ்மயநீயம் ஆகுமோ
முதலிலே சகல பதார்த்தங்களையும் சங்கல்பத்தினாலே ஸ்ருஷ்டித்தவனுக்கு –
(நெடுமையான ஆதி -நெடுமையான மால்
தெள்ளிய மாலுக்கு )
வானுலாவு தீவளி மா கடல் மா பொருப்பு
தானுலவு வெங்கதிரும் தண் மதியும் -மேனிலவு
கொண்டல் பெயரும் திசை எட்டும் சூழ்ச்சியும்
அண்டம் திருமால் அகைப்பு –37
பதவுரை
வான்–ஆகாசமும்
தீ–அக்நியும்
உலவு வளி–உலாவுகின்ற வாயுவும்
மா கடல்–பெரிய கடலும்
மா பொருப்பு–பெரிய குல பர்வதங்களும்
உலவு–திரிகின்ற
வெம் கதிர்தானும்–உஷ்ண கிரணனான ஸூர்யனும்
தண்மதியும்–குளிர்ந்த சந்திரனும்
மேல் நிலவு–மேலே நிலாவுகின்ற
கொண்டல்–மேகங்களும்
பெயரும்–சேதந வர்க்கமும்-உபலஷிக்கிறது
திசை எட்டும்–எட்டுத் திசைகளும்
சூழ்ச்சியும்–ஆவரணங்களும்
அண்டம்–ஆகிய இவை யெல்லாவற்றோடுங் கூடின அண்டமும்
திருமால்–ஸர்வேஸ்வரனுடைய
அகைப்பு–ஸங்கல்பத்தினாலாயது.
ஆகாசமும் சலிக்கிற அக்னியும் காற்றும் பெரிய சமுத்திரமும் பெரிய மலைகளும் ஸஞ்சரிக்கிற
உஷ்ண கிரணங்களை யுடைய ஸூர்யனும்
சீத கிரணங்களை யுடைய சந்திரனும்
மேலே சஞ்சரிக்கிற மேகங்களும்
சேதனர்களும்
எட்டுத் திக்குகளும்
ஆவரணமும்
ப்ரஹ்மாண்டமும்
ஸ்ரீ யபதியினுடைய சங்கல்பத்தினால் உண்டானவை –
சூழ்ச்சியும் ஆவரணமும்
இவை எல்லாம் திருமால் அகைப்பு –
எழுச்சி
ஸ்ரீயபதியினுடைய பிரயத்னம் – சங்கல்பம் -என்கை
(திருமால் அகைப்பு என்றதால்
சர்வேஸ்வரன் ஜகத் ஸ்ருஷ்ட்டி செய்வது பிராட்டியின் முக்கோலாசத்திற்காகவே என்பதுவும்
ஜகத் ஸ்ருஷ்டியில் ப்ரேரகத்வ ரூபமான அப்ரதான அந்வய மே பிராட்டிக்கு உள்ளது என்பதும் உணர்த்தப்பட்டன–)
அப்பிள்ளை உரை –
ஆகாசமும்
அதிலே உலாவுகிற அக்னியும்
பெரிய காற்றும்
பெரிய கடலும்
பெரிய குல பர்வதங்களும்
அதிலே தங்கள் சஞ்சரிக்கக்கடவ உஷ்ண கிரணனான ஆதித்யனும் குளிர்ந்த சந்திரனும்
மேலே வர்த்திக்கக் கடவ மேகம் என்று பேர் பெற்றவையும்
(மேகங்களும் சேதன வர்க்கங்களும் என்று பதவுரையில் பார்த்தோம் )
திக்குகள் எட்டும்
ஆவரணங்களும் (சூழ்ச்சி- சூழ்ந்து இருப்பதால் )
இவை எல்லாம் சேர்ந்த அண்டம்
இவை போன்ற பல கோடி அண்டங்கள் எல்லாம் ஸ்ரீயப்பதியான சர்வேஸ்வரன் திரு உள்ளத்தில்
உத்யோக ரூபமான -முயற்சி தானே – சங்கல்பத்தால்
அகைப்பு –எழுச்சி யாய் -சங்கல்ப ஞான ஏக தேசத்தாலே –
(வித்து விட வேணும் கொலோ பாசுரம் தொடங்கி பல முயற்சிகளைப் பார்த்து வருகிறோம் )
————————————————————————-
(அவனே ஆதி யாவான் -என்றார் கீழ்
ப்ரஹ்மாதிகள் செய்யுமவையும் இவன் அந்தர்யாத்மதயா செய்விப்பவையே என்கிறார் இதில்
ஆவாஹயாமி என்றும் ஸ்வாஹா என்றும் சொல்லும் பொழுது அஹம் ஈஸ்வரோஹம் என்று
இவர்கள் வருவதும் இவன் அந்தர்யாமியாக இருப்பதால் தானே
நீர் வண்ணன் –ஒரு காலும் உதாஸீனம் பண்ண மாட்டான்
அகைப்பு -சங்கல்பம் கீழ் பார்த்தோம் )
அப்பிள்ளை உரை அவதாரிகை
சேதனருக்கு கர்ம அனுகுணமாக பாஹ்ய சமயங்களில் ருசியைப் பிறப்பித்து
மதி கெடுக்கக் கடவ ஸர்வேஸ்வரன்
அல்பம் உபேக்ஷிக்குமாகில் -உதாசீனத் தன்மை
(உள்ளே இருப்பது சத்தைக்காக மட்டும் )
இவை எல்லாம் அதரோத்தரம் -(கீழ் மேல் -தலை கீழாகப் )போகும் –
அகைப்பில் மனிசரை ஆறு சமயம்
புகைத்தான் பொரு கடல் நீர் வண்ணன் -உகைக்குமே
எத் தேவர் வாலாட்டும் எவ்வாறு செய்கையும்
அப்போது ஒழியும் அழைப்பு-38–
பதவுரை
அகைப்பு இல் மனிசரை–உஜ்ஜீவிக்க மாட்டாத-ஞான செறிப்பு இல்லாத – மனிசர்களை
ஆறு சமயம்–(நீசங்களான) ஆறு மதங்களில்(சாக்கியம் கற்றோம்– பாக்யத்தால் செங்கண் மால் சேர்ந்தோம் என்றவரே )
புகைத்தான்–புகும்படி செய்தவனும்
பொரு கடல் நீர் வண்ணன்–அலை யெறிகின்ற கடல் நீர் போன்ற திரு நிறத்தை யுடையவனுமான ஸர்வேஸ்வரன்
உகைக்கும் ஏல்–உதாஸீநனா யிருந்து விடும் பக்ஷத்தில்
அப்போது–அப்போதே
எத் தேவர் வாலாட்டும்–எந்த தேவர்களுடையவும் அஹங்காரமும்
எவ்வாறு செய்கையும்–எவ்விதமான (யஜ்ஞம் முதலிய) காரியங்களும்
அழைப்பு–(தேவதைகளின்) ஆஹ்வாநமும்
ஒழியும்–ஒழிந்து போய்விடும்
மதிப்பில்லாத மநுஷ்யர்களை ஆறு விதமான நாஸ்திக மாதங்களிலே பிரவேசிப்பித்தவனும்
அலை யடிக்கிற சமுத்திரத்தின் ஜாலம் போன்ற காந்தியை யுடையவனுமான
சர்வேஸ்வரன் உபேக்ஷித்தால்
ஸமஸ்த தேவதைகள் வாலாட்டுகிறதும்
ஸகல விதமான யாகாதி கிரியைகளும்
அத்தேவதைகளின் ஆஹ்வானமும்
அப்போது நடக்க மாட்டாது –
அகைப்பில் மனிசரை –
எழுச்சி (ஞானம்) இல்லாத மனிசரை –
அளவில்லாதவர்களை -என்கை
ஆறு சமயம் புகைத்தான் பொரு கடல் நீர் வண்ணன்
சூத்திர பதார்த்தங்களை அகப் படுத்த புகைக்குமா போலே
பாஹ்ய சமயங்களைக் காட்டி-அகப்படுத்தினான் சர்வேஸ்வரன் –
(புத்த வைசேஷிக நையாயிக அக்ஷபாதர் நியாய ஜைனர் கபில சாங்க்ய பதஞ்சலி யோக மதங்கள்
சாருவாக பாசுபத மதங்கள் என்றுமாம் )
உகைக்குமேல் எத் தேவர் வாலாட்டும் எவ்வாறு செய்கையும் அப்போது ஒழியும் அழைப்பு –
நெகிழ நிற்குமாகில் தேவதாந்தரங்கள்-
ஈஸ்வரோஹம் -என்று சூத்திர ஜந்துக்கள் வாலாட்டுமா போலே
பண்ணும் அபிமானமும்
அத் தேவதைகளை ஆஸ்ரயிக்கைக்காப் பண்ணும்-வ்யாபாரமாகிற (ஆஹாவனமும் யாகமும் முகம்) காட்டழைபபும்
அவன் நெகிழ்ந்த போது ஒழியும் -முடியும் –
(அழைப்பு -முகம் காட்டுகைக்காக
ஆஹ்வானம் பண்ணி அழைக்கிற மந்த்ரங்கள் என்றபடி )
(புகைத்தான் –
காட்டில் வேடர்கள் பிராணிகளை பிடிக்க கூளங்களை இட்டுப் புகை மூட்டி பிடிப்பது போல்
சம்சார வலையில் சிக்க வைத்தான்
புகையில் அகப்பட்டாருக்கு வழி தெரிய வழி உண்டோ
ஆகவே தேவதாந்தர சங்கத்தராய் இருந்து மாள்கிறீர்கள்
பொரு கடல் நீர் வண்ணன் உகைக்குமேல்
உபேக்ஷிக்க ப்ரஸக்தி இல்லையே
ஒருகால் நீர் நெருப்பானால்
எத்தேவர் வாலாட்டும் –
ஈஸ்வரோஹம்-அபிமானத்தை வாலாட்டும் என்கிறார்
அவர்கள் அபிமானமும்
திரிபுர தகநாதி காரியங்களும்
அவர்களை ஆஸ்ரயிக்க உங்கள் அழைப்பு போன்ற காரியங்களும்
அவர்கள் சத்தையோடு உங்கள் சத்தையோடு வாசியற அழியும்
காலாந்தரத்தில் இல்லாமல் அப்போதே அழியும்
ந ததஸ்தி விநா யத் ஸ்யான் மயா பூதம் -என்று கீதையில்
அப்ரஹ்மாத்மகமான சேதன அசேதனங்கள் இல்லை என்றானே -)
அப்பிள்ளை உரை
அளவில்லாத ஞானம் குறைவான மனுஷ்யரை கர்ம அனுகுணமாக
சாருவாக -(கண்டதே காட்சி கொண்டதே கோலம் சாரு வாக்கு அழகிய பேச்சு
பூ பூத்தால் போல் இருக்குமே ஒழிய காயோ கனியோ இல்லாமல் )
ஆர்த்த புத்த சாங்க்ய -இரண்டு தத்வங்கள்
வைசேஷிக பாசுபத -நையாயிக யோக பதில் இந்த இரண்டும்
பாஹ்ய ஷட் சமயங்களில் மூட்டி
திரை பொறா நின்ற கடலில்
ஸ்ரமஹராமான வடிவை யுடைய ஸர்வேஸ்வரன் உபேக்ஷித்து
எழ வாங்கி நிற்குமாகில் -பயப்படுத்த
எத்தனையேனும் தங்களை ப் போர பொலிய நினைக்கும் ப்ரஹ்மாதிகள்
முசு முசுத்தால் போல் -குவால் எடுத்தால் போல் உண்டான கர்வமும்
அவர்களைக் குறித்து இங்குள்ளார் பஹு விதமான யாகாதி சாதனங்களும்
(நான் தான் கொடுக்கவும் வைக்கிறேன் அர்ஜுனா என்றானே மிட்டாய் கொடுப்பது போல் கொஞ்சமாக கூட்டி வர )
அவ்வவ கர்மங்களை அனுஷ்ட்டிக்கும் பொழுது ப்ரஹ்மாணம் ஆவாஹயாமி என்றால் போல் உண்டான அழைப்புகளும்
(தத் தத் தேவதை அவ்வவ கர்மங்கள்-இரண்டு சப்தங்கள் சமஸ்க்ருதம் தமிழ் மூலம் நமக்கு தெரிவிக்கவே )
தத் தத் தேவதை ஆஹ்வானங்களும் அவன் எழ வாங்கின அந்த க்ஷணத்தில் இன்றிக்கே போய்விடும்
அகைப்பில் மனிதரை என்றது –
எழுச்சி இல்லா -அளவில்லா மனிதர்கள் -என்றபடி
————————————————————————–
(மீண்டும் பர உபதேசத்தில் இருந்தும் கை வாங்கி
திருவேங்கட மலையையும் அப்பனையும் அனுபவிக்கிறார் இது முதல் அடுத்த பத்து பாசுரங்களில்
இப்படி பர உபதேசமும் ஸ்வ அனுபவமும் மாறி மாறிச் செல்லுமே -)
அப்பிள்ளை உரை அவதாரிகை
லௌகிகர் பட்டது படட்டும்
நான் முந்துற முன்னம் திருவேங்கடத்தானைக் கண்டு அனுபவிக்க வேண்டும் என்றும்
திருமலை ஆழ்வாரைக் கிட்டிச் சென்று திருவடி தொழா நிற்க வேண்டும் என்றும்
ஆசைப் படா நின்றேன் என்கிறார்
அழைப்பன் திருவேங்கடத்தானைக் காண
இழைப்பன் திருக் கூடல் கூட -மழைப் பேர்
அருவி மணி வரண்டி வந்திழிய ஆனை
வெருவி அரவு ஒடுங்கும் வெற்பு –39–
பதவுரை
திருவேங்கடத்தானை–திருவேங்கடமுடையானை
காண–கண்ணால் ஸேவிக்க
அழைப்பன்–வாய் விட்டுக் கூப்பிடா நின்றேன்-(உள்ளம் நினைவு இன்றிக்கே வெறும் வாயாலே சொன்னேன் )
வரண்டி வந்து இழிய–திரட்டிக் கொண்டு வந்து இழிய
(அந்த ரத்னங்களின் ஒளியைக் கண்டு அக்நி ஜ்வாலைகளாக ப்ரமித்து)
யானை–யானைகளானவை
வெருவி–பயப்பட்டு நிற்கவும்
அரவு–மலைப் பாம்புகளானவை
மழை–மழை போல் சொரிகின்ற
பேர் அருவி–பெரிய அருவிகளானவை
மணி–(அங்குமிங்குங் கிடக்கிற) ரத்னங்களை
ஒடுங்கும்–(அந்த ரத்னங்களை மின்னலாக மயங்கி) புற்றிலே சென்று மறையவும் பெற்ற
வெற்பு–திருமலையை
கூட–சென்று கூடவேணு மென்று
திருக் கூடல் இழைப்பன்–கூடலிழைக்கின்றேன்
(யானை வெறுவவும் -அரவு ஒடுங்கவும் -என்று தனித் தனியாகவும்
அன்றிக்கே யானை வெறுவி அரவிக்குள்ளே ஒடுங்கும்
இப்படி இரண்டு நிர்வாகங்கள் )
திருவேங்கடமுடையானை சேவிக்கக் கூப்பிடா நின்றேன்
அதிக மழையினால் பிரவஹிக்கிற மலை யருவிகள் ரத்னங்களைத் திரட்டிக் கொண்டு வந்து கீழே விழும் போது
யானை பயந்து பெரும் பாம்பின் வாயில் விழுகிற திருமலையை
அடைய வேணும் என்று திருக்கூடல் இழையா நின்றேன்
மணல்களிலே சத்ரா காரமாக எழுதிப் பாரா நின்றேன் –
அழைப்பன் திருவேங்கடத்தானைக் காண
போக மோஷத்துக்கோ என்னில் –
காண –
(அழைப்பது சாதனம் என்று கொண்டால்
காணுதல் சாத்தியமா திருவேங்கடத்தான் சாத்தியமா என்னில்
உபாயந்தர சம்பந்தம் இல்லையே
அவனே சாதனம் ஸாத்யம் –
போகத்துக்கும் கூப்பிட வில்லை
மோக்ஷத்துக்கும் கூப்பிட வில்லை
இந்த தேசத்தில் இந்த தேகத்தோடே இந்தக் காலத்தில் காணவே )
இழைப்பன் திருக் கூடல் கூட -மழைப்பேர் அருவி மணி வரண்டி வந்திழிய ஆனை வெருவி அரவு ஒடுங்கும் வெற்பு
மலையிலே பெரிய அருவிகள்
ரத்னங்களைக் கொண்டு வந்து இழிய-
ரத்ன தீப்தியை
ஆனை அக்நி என்றும்
சர்ப்பம் மின் என்றும் பயப்பட்டு
ஒதுங்கும் திருமலை–
அன்றிக்கே
நெருப்புக்கு பயப்பட்டு
யானை-
மலைப் பாம்பின் வாயிலே புக்கு ஒடுங்கும் -என்றுமாம் –
(அரவு சர்ப்பம் என்றும் மலைப் பாம்பு என்றும் கொண்டு இரண்டு நிர்வாகங்கள் )
இப்படிக்கு ஒத்த திருமலையைக் கூட-இழைப்பன் திருக் கூடல்
என்று அந்வயம்
(இங்கும் திருவேங்கடத்தானை என்னாமல் திருமலையையே என்கிறார்
திவ்ய தேசமே உபாயமும் உபேயமும் என்றவாறு
அழைப்பது திருவேங்கடத்தானை -என்று அவனை சாதனம் என்றும்
திருமலையை கூட -இதுவே சாத்தியம்
அவனது அனுக்ரஹத்தாலேயே திவ்ய தேச பிராப்தி என்றவாறு )
(கோவிந்தற்கு ஓர் குற்றேவல் இம்மைப் பிறவி செய்யலாமே இனிப்போய்ச் செய்யும் தவம் தான் என்
மோக்ஷமே அபேக்ஷை இன்றி இப்பாட்டு என்றால் போகத்துக்கு இடம் ஏது
யானைகள் மலைப்பாம்பின் வாயிலை மலைக்குகையாக எண்ணி விழுமாம்
கரிய மா முகில் படலங்கள் கிடந்து அவை முழங்கிடக்
களிறு என்று பெரிய மாசுணம் வரை எனப் பெயர் தரு பிரிதி -பெரிய திருமொழி -1-3-10-போலவே இங்கும் – )
(நாச்சியார் திருமொழி -கூடல் இளைக்க-(4-4)-அரும் பதத்தில்
இரட்டைப் படை வந்தால் கூடுவோம் என்றும் ஒற்றைப் படை வந்தால் கூட மாட்டோம்
இங்கும் ஆழ்வாருக்கு நாயகா பாவமோ
முதல் நான்கு ஆழ்வார்களுக்கும் நாயகி பாவம் இல்லை என்பதே பெரியவாச்சான் பிள்ளைக்கு திரு உள்ளம்
முன்னும் பின்னும் இல்லை -பிரகரண விருத்தம்-ஆகுமே – )
அப்பிள்ளை உரை
நமக்கு முகம் தருவதற்காகவே திரு வேங்கடத்தான் வந்து ஸூலபனாய் நித்ய வாசம் செய்யும் திருமலையில் –
போக மோக்ஷங்கள் ப்ரயோஜனங்கள் தவிர்ந்து -அன்றிக்கே
கண்டு அனுபவிக்க ஆற்றாமையோடே கூப்பிடா நின்றேன்
நிரந்தர வர்ஷத்தால் வெள்ளம் இட்டுப் பெருகிற திரு அருவிகள் பெரிய வேகத்தோடு குதிக்க
அங்கும் இங்கும் உள்ள ரத்னங்களைத் திரட்டி விழ
ஒழுக்கு அறாமல் அந்த ரத்ன ஒளியை
நெருப்பு என்று யானை பிரமித்தும்
மின்னல் என்று பாம்பு பிரமித்தும்
அது (நெருப்பு என்றும் அரவம் என்றும் )தன்னைக் கதுவத் தேடுகிறதோ என்று
போக்கிடம் இல்லாமல் நின்று தடுமாறி யானை வெறுவவும்
தனக்கு இருப்பிடமான புற்றிலே பாம்பு ஒதுங்கும் படி
இப்படி உள்ள திருமலையில் சென்று சேர கூடல் இழையா நிற்பேன்
அன்றிக்கே
நெருப்புக்குப் பயந்து மலைப் பாம்பின் வாயில் யானை ஒடுங்கும் என்றுமாம்
————————————————————————–
செய்த கார்யமோ மிகச் சிறியது
பெற்ற பலனோ மிகப் பெரியது என்கிறார் இதில்
(திருமாலிருஞ்சோலை என்றேன் என்ன திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
சாஸ்திரமும் அறியாதே பிறரும் அறியாதே நாமும் அறியாமல் ஈஸ்வர சங்கல்பம் –
ஸூஹ்ருத தேவர் -வேறே யாரும் இல்லையே
திருமலை கூட சொல்லாமல் வெறும் வெற்பு மட்டுமே சொன்னேன்
மலை என்றாலே திருமலையைத் தான் குறிக்கும்
வரவாறு ஓன்றும் இல்லை- வாழ்வு இனிதால் -விதி வாய்க்கின்றது காப்பார் யார்
நூல் வலையும் கால் வலையும் -பிரசித்த உபன்யாச தலைப்பு )
அப்பிள்ளை உரை -அவதாரிகை –
திருமலையை யாதிருச்சிகமாக சொன்ன மாத்திரத்தாலே க்ருதக்ருத்யனாய் விட்டது
ஸ்ரீயபதியின் திருவடிகளில் மற்ற ஒன்றுக்கு ஆளாகாதபடி அகப்பட்டேன்
என் நெஞ்சே நீயும் அவனை அனுபவி
(காண் -என்றதன் அர்த்தம் இதில் ஸ்பஷ்டமாக அருளிச் செய்கிறார் -)
வெற்பு என்று வேங்கடம் பாடினேன் வீடாக்கி
நிற்கின்றேன் நின்று நினைக்கின்றேன் -கற்கின்ற
நூல் வலையில் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார்
கால் வலையில் பட்டிருந்தேன் காண்-40–
பதவுரை
வெற்பு என்று–பல மலைகளையும் சொல்லி வருகிற அடைவிலே
வேங்கடம் பாடினேன்–திருமலையையும் சொன்னவானானேன்; (இந்த உக்தி மாத்திரத்திலே)
வீடு ஆக்கி நிற்கின்றேன்–‘மோஷம் நமக்கு ஸித்தம்‘ என்னும் படியாக அமைந்தேன்
நின்று நினைக்கின்றேன்–‘நாம் சொன்ன ஒரு சிறிய சொல்லுக்குப பெரிய பேறு கிடைத்த பாக்கியம் என்னோ!‘
என்று நினைத்து ஸ்தப்தனாயிருக்கின்றேன்,
கற்கின்ற–ஓதப்படுகிற
நூல்–வேதங்களாகிற சாஸ்த்ரங்களில்
வலையில் பட்டிருந்த–வலையினுள் அகப்பட்டிருப்பது போல் நிலை பேராமல் நிற்கின்ற
பட்டிருந்த-பட்டு இருந்த பிரித்தே அர்த்தம்
நூலாட்டி கேள்வனார்–லக்ஷ்மீநாதனான எம்பெருமானுடைய
கால் வலையில் பட்டிருந்தேன்–திருவடிகளாகிற வலையிலகப்பட்டுத் தரித்து நிற்கின்றேன்.
பட்டிருந்த-பட்டு இருந்த பிரித்தே அர்த்தம்
காண் – முன்னிலையசை
மலை என்று சொல்லும் போது திருமலையைப் பாடா நின்றேன்
அதனால் மோக்ஷத்தை யுண்டாக்கிக் கொண்டு இரா நின்றேன்
ஸ்திரமாக இருந்து பலம் பெற்ற படியை தியானியா நின்றேன்
அத்யயனம் செய்யப்பட ஸாஸ்த்ரம் ஆகிற வலையில் -அகப்பட்ட -ப்ரதிபாதிக்கப் பட்ட –
ஸ்ரீ தேவியின் வல்லபனான ஸர்வேஸ்வரனுடைய திருவடிகள் ஆகிற வலையில் அகப்பட்டுக் கொண்டேன் பாருங்கோள் –
வெற்பு என்று வேங்கடம் பாடினேன் –
விசேஷித்து ஓன்று செய்தது இல்லை –
அல்லாத மலைகளைச் சொல்லுகிறவோபாதி
இத்தைச் சொல்ல -திருமலை -ஆயிற்று –
வீடாக்கி நிற்கின்றேன் –
அநேக யத்னத்தால் பெரும் மோஷத்தை-
இச் சொல்லாலே உண்டாக்கிக் கொண்டு
நின்று ஒழிந்தேன்
நின்று நினைக்கின்றேன் –
எது சொல்லிற்று
எது பற்றிற்று என்று-
விசாரியா நின்றேன்
கற்கின்ற நூல் வலையில் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார் கால் வலையில் பட்டிருந்தேன் காண்
ஒதப்படுகிற வேதத்தாலே பிரதிபாதிக்கப் படுகிற-
பெரிய பிராட்டிக்கு வல்லபன் ஆனவன்
திருவடிகள் ஆகிற வலையிலே-அகப்பட்டு இருந்தேன்
(யாதிருச்சிகமாக கொல்லி மலை குடமலை இமயமலை போலே
மலைத் தொடர்கள் பேர்களை சொல்லுமா போல்
என்னை அறியாமல் திருவேங்கட மலை என்றும் சொல்லி வைத்தேன்
பெற்ற பலமோ பரம புருஷார்த்தமாக இருந்ததே -)
(மாதவன் பேர் சொல்லுவதே வேதத்தின் சுருக்கு
யந் ந தேவா ந முனயோ ந ச அஹம் ந ச சங்கர
ஜா நந்தி பரமே சஸ்யே தத் விஷ்ணோ பரமம் பரம் -ஸ்ரீ விஷ்ணு புராணம்
அத்யர்க்க அநல தீப்தம் தத் ஸ்தானம் விஷ்ணோர் மஹாத்மந
ஸ்வயைவ ப்ரபயா டாஜன் துஷ் ப்ரேஷம் தேவதா ந வைவ –பாரதம்
வரவாறு ஓன்று இல்லையால் வாழ்வு இனிதால் -பெரிய திருவந்தாதி –59-
இந்த ஆச்சர்யம் நினைத்து ஸ்தப்த்தனானேன் -நிலை நின்றேன்
நூல் வலை -வேத ஸாஸ்த்ர வலை -அதில் சிக்கிய எம்பெருமானும் பிராட்டியும்
வேதைஸ் ச ஸர்வைர அஹம் ஏவ வேத்ய –15-15-வேத ப்ரதிபாத்யன்
அவனைச் சொன்ன இடங்கள் எல்லாம் பிராட்டியையும் சொல்லிற்று ஆகவுமாம் அன்றோ –
ஓதுவார் ஒத்து எல்லாம் எவ்வுலகத்து எவ்வெவையும்
சாதுவாய் நின் புகழின் தகையல்லால் பிரிதில்லை
பூவின் மேல் மாது வாழ் மார்பினாய்
நான் முந்தி நான் முந்தி என்று ரக்ஷிக்கும் மிதுனம் அன்றோ –
அந்தரங்க விசேஷணம் ஸ்வரூப நிரூபக தர்மம்
எங்கு அவனைச் சொன்னாலும் அஹம் ஏவ வேத்ய -என்றாலும் -அப்ருத்க் ஸித்த -அவளையும் குறிக்கும்
அஹந்தாவே அவள்
ஸ்ரீ யபதி -விஷ்ணு பத்னி -இருவருக்கும் ஒவ்வொருவரை வைத்து திரு நாமங்கள் –
சாதனமாக இருந்தால் சிக்க மாட்டேன்
சிக்கி வைத்தவனும் அவனே -)
அப்பிள்ளை உரை
அல்லாத மலைகளை சொல்லுகிறோ பாதி
சாமான்யேன பொதுவாக -பிரபாவம் அறியாமல் -இதுவும் ஒரு மலை என்று
கோல் விழுக்காட்டாலே
வெற்பு -சொன்னாலும் -பாட்டாக ஆக்கிக் கொண்டான்
மோக்ஷமே தருமவன்
ப்ரீதிக்குப் போக்கு வீடாக -பாடினேன் -ஆகக் கொண்டான் அவன்
என்னளவு அன்றிக்கே -என்னுடன் சேர்ந்தார்க்கும் பெரு வருத்தத்துடன் பெறக் கடவ
மோக்ஷத்தை உண்டாக்கிக் கொண்டு -நிச்சயமாக -உறுதியாக க்ருதக்ருத்யனாகா நின்றேன்
வீடாக்கி நிற்கின்றேன் -வீடாக்கினேன் என்று சொல்லாமல்
எது சொல்லிற்று எது பற்றிற்று
சாதன லாகவத்தையும்
சாத்ய கௌரவம்
ஒரு படிப் பட அனுசந்தித்து -சிந்தித்து
வித்தனாகா நின்றேன்
(சஞ்சலம் ஹி மனஸ்ஸூ -இருக்க இதுவும் ஒரு ஆச்சர்யம் தானே )
ச கிரமமாக ஓதப்படுகிற -கற்கின்ற வேத சாஸ்த்ரத்தால்
பாஹ்ய குத்ருஷ்டிகளால் அவி சால்யமாக
கல் வெட்டு போல்
விஷ்ணு பத்னி என்கிற அலர்மேல் மங்கைக்கு வல்லபனான
திரு வேங்கடமுடையான் அடிக்கீழ் அமர்ந்து புகுந்து –அடியார் வாழ்மின் -திருவடியில் வாழ்ச்சி –
என்று அருள் கொடுக்கும்
திருவடிகளாகிற வலையில் அகப்பட்டு -மற்ற ஒன்றுக்கு உரித்தாக்காமல்
நல் தரிக்கப் பெற்றேன் —
நெஞ்சே நீயும் அவனைக் கண்டு அனுபவிக்கப் பார் -என்கிறார்
முடிப்பான் சொன்ன ஆயிரம்
கிடைக்கும் உறுதி அறிந்தால் போதுமே
விஷ்ணு பத்னிக்கு பார்த்தா என்றே அடையாளம்
அஸ்ய ஈஸா நா ஜகத் விஷ்ணு பத்னி
ஒவ்வொருவரும் மற்ற ஒருவருக்கு நிரூபகம்
————————————————————————–
(அந்தர்யாமியாய் இருக்கும் நிலையை விட திருமலையில் இருக்கும் இருப்பு அதி விலக்ஷணமாய் இருப்பதால்
அங்கு சென்று காண ஆசைப்படுகிறார்
திரு உள்ளம் பாபங்கள் உத்பத்தி ஸ்தானம்
வேங்கடங்கள் மெய் மேல் வினை முற்றவும் -அன்றோ
அஸூ யா ப்ரஸவபூ -நெஞ்சு
இரும்பு போல் வலிய நெஞ்சம்
அங்கு கல்லும் உருகி முத்து உதிர்க்கும்
பூகத ஜலமும் போல் அந்தர்யாமி
அதிலே தேங்கின மடி அது
வாத்சல்ய குணம் மட்டும் இங்கு
பரத்வ ஸுசீல்ய ஸுலப்ய ஸ்வாமித்வ ஸமஸ்த கல்யாண குணங்களும் பிரகாசிப்பது அங்கு
வேடும் வானரமும் வானோர் வானவர் கோனுடன் வந்து ஆஸ்ரயிக்கும் தேசம் அன்றோ
தன்னை அயோக்கியன் என்று இவர் அனுசந்திக்கையாலே அங்கே காண விரும்புகிறார் –
அவன் அவற்றை விட்டு இவர் திரு உள்ளத்தில் இருக்கும் இருப்பை ஆசைப்படுவதை போல –
சேதன லாபம் ஈஸ்வரனாலே ஈஸ்வரனுக்கு –
உடையவன் உடைமையை தன் கிருபையால் தானே உபாயமாக தனக்கே லாபமாகக் கொள்கிறான் -)
அப்பிள்ளை உரை அவதாரிகை
நெஞ்சே நீயும் கண்டு அனுபவிக்கப் பார் என்றவாறே
திருவேங்கடமுடையானும் தான் முற்பாடானாய் வந்து புகுந்தான்
நான் திருமலையைக் காண ஆசைப்படா நிக்க
என் மநோ ரதத்துக்கு விக்நம் பண்ண நின்றாய் என்கிறார்
(அவனை விக்நம் பண்ணுகிறாயே என்று சொல்லாமல் நெஞ்சையே நீ விக்நம் பண்ணுகிறாய் என்கிறார் )
காணல் உறுகின்றேன் கல்லருவி முத்துதிர
ஒண விழவில் ஒலி அதிர -பேணி
வரு வேங்கடவா வென்னுள்ளம் புகுந்தாய்
திருவேங்கடம் அதனைச் சென்று -41–
பதவுரை
கல் அருவி–ஒலிக்கின்ற அருவிகளின் மூலமாக-மலையில் அருவி என்றுமாம்
முத்து உதிர–முத்துக்கள் உதிரப் பெற்றதாய்,-கீழே ரத்னம் இங்கு முத்துக்கள்
ஒணம் விழவில்–திருவோணத் திருநாளில்
ஒலி அதிர–(திருப் பல்லாண்டு பாடுகை வேத பாராயணம் செய்கை ஆடுகை பாடுகை முதலானவற்றாலுண்டான) த்வநி அதிரப் பெற்றதாய்
பேணி வரு–(பக்தர்கள்) விரும்பி வந்து சேரப் பெற்றதான
வேங்கடவா–திருவேங்கட மலையை இருப்பிடமாக வுடையவனே!
என் உள்ளம் புகுந்தாய்–நீ என் நெஞ்சிலே புகுந்து விட்டாய் (நீ திருமலையை விட்டு என்னுள்ளத்திலே வந்து விட்டாலும்)
திருவேங்கடம் அதனை சென்று காணல் உறுகின்றேன்–நான் அத்திருமலையிற் சென்று ஸேவிக்க விருப்பங்கொண்டிருக்கிறேன்.
இரைச்சலை யுடைய மலை யருவி முத்துக்களை உதிர்க்க
திருவோணம் நக்ஷத்ரம் ஆகிற மஹா உத்ஸவத்திலே
மங்களா ஸாஸன த்வனி அதிரும்படி ஆதரித்து வந்து ஆஸ்ரயிக்கிற திருமலையிலே எழுந்து அருளி இருக்கிறவனே
நீ என் ஹிருதயத்தில் ப்ரவேசித்தாய்
நான் திருமலைக்குப் போய் உன்னை ஸேவிக்க ஆசைப்படா நின்றேன் –
ஒலியை உடைய அருவிகளாலே முத்து உதிர –
திருவோண நஷத்ரம் ஆகிற மகா திவசத்திலே
அனுகூலர் உடைய மங்களா சாசனத்தாலே வந்த த்வனி மிக
பிராப்தயா வந்து ஆஸ்ரயிக்க படும் திருமலையை உடைய
நீ என்னுடைய ஹிருதயத்திலே வந்து புகுந்தாய் –
நான் திருமலையை அடைந்து காணல் உறுகின்றேன்
(மக்களுக்கு திருமலையை அடைவைத்து ஸாத்யம்
நீயோ அத்தை சாதனமாகக் கொண்டு எனது உள்ளத்தை சாத்யமாகக் கொள்கிறாயே )
(திருமலையில் கல் என்று சப்திக்கும் ஒலியும் இவருக்கு உத்தேச்யம்
ஒண விழாவில் ஒலி -பல்லாண்டு -கல் அருவி முத்து உதிர -கல்லையும் உருக்கி
கண்ணீரை வரவழைப்பது போல் இருப்பதால்
பேணி -பரம பிராப்யம் என்று உகந்து எழுந்து அருளுகிறார் –)
அப்பிள்ளை உரை
கல்லும் கனை கடலும் விட்டு விட்டு அன்றோ இங்கு வந்தீர்
திரு அருவிகள் உடன் சேர்ந்து வரும் ரத்ன பாஷாணமும்-ரத்னங்களும் -(கீழ்ப்பாசுரத்தில் -உண்டே)
முத்துக்களும் பார்த்த இடம் எங்கும் சிதறி விழ
திருவோணம் ஆகிற திவ்ய உத்சவத்தில்
திருப் பல்லாண்டு பாடுவார்
வேத பாராயணம் பண்ணுவார்
பாடுவார் ஆடுவார்
த்வனி கடல் இரைத்தால் போல் கண்ட இடங்கள் எங்கும் முழங்க
இந்த நிரவதிக சம்பத்து கிடக்க- -என்னை ஆசைப்பட்டடு நான் இருந்த இடம் தேடி
வருகிற அப்பனே
என்னுடைய ஹ்ருதயத்தில் பெறாப் பேறு பெற்றதாக வந்து புகுந்தாய்
நான் அந்த நிரவதிக சம்பத்தை யுடையதான திருமலையைச் சென்று கிட்டி கண்டு அனுபவிக்க வேணும்
என்று ஆசைப்படா நின்றேன்
பேணி வரும் வேங்கடவா என்று
அனுகூலர் அடங்கலும் யாவரும் பரம ப்ராப்யமாக பேணி-ஆதரித்து – வரும் திருவேங்கடம் யுடைய நீர் என்றும்
தேவரீர் அடியேன் உள்ளத்தைப் பேணி வரும் என்றுமாம்
கல் அருவி வேங்கடம் முத்து அதிர என்று ஒலியை ஒளியை -இரண்டும் யுடைத்தான
திரு அருவிகளில் முத்துக்கள் சிதற விழ–என்றுமாம்
கல்லே உருகி தண்ணீர் முத்துக்கள் என்றுமாம்
உள்ளமோ இரும்பு போல் வலிய நெஞ்சம்
அத்தை மாற்றி திருவேங்கடம் புகவே ஆசைப்படா நிற்கிறேன் என்கிறார்
————————————————————————–
(இஷ்ட பிராப்திக்கும் அநிஷ்ட நிவ்ருத்திக்கும் மலை ஏறி அப்பனை சேவிக்க வேண்டியது இல்லை
அருகே சென்று திருமலையை வணங்கினாலே போதுமே )
அப்பிள்ளை உரை அவதாரிகை
ப்ரயோஜனாந்தர பரரான ப்ரஹ்மாதிகளும் தங்கள் பிரயோஜனம் பெறுவதற்காக சென்று ஆஸ்ரயிக்கும் திருமலையை
நீங்களும் உங்கள் அபேக்ஷிதங்கள் பெறுவதற்காகவாது -சித்தி அர்த்தமாக ஆஸ்ரியுங்கள்
(அநந்ய ப்ரயோஜனராக ஆஸ்ரயித்தால் சாலவும் நன்று அன்றோ )
சென்று வணங்குமினோ சேணுயர் வேங்கடத்தை
நின்று வினை கெடுக்கும் நீர்மை யால் -என்றும்
கடிக்கமல நான்முகனும் கண் மூன்றத்தானும்
அடிக்கமலம் இட்டு ஏத்தும் அங்கு-42
பதவுரை
சேண் உயர் வேங்கடத்தை–மிகவும் ஓங்கின அளவிலும் பெருமையிலும் (சிகரத்தையுடைய) திருமலையை
சென்று வணங்குமின்–சென்று வணங்குங்கோள் (அத் திருமலை யானது)
நீர்மையால்–தன் ஸுலப்யமாகிற ஸ்வபாவத்தினால்
நின்று வினை கெடுக்கும்–பாவங்களைப் போக்குவதில் நிலை நின்றிருக்கும்
அங்கு–அத் திருமலையில்,
கடி கமலம் நான்முகனும்–பரிமளம் மிக்க தாமரையிற் பிறந்தவனான பிரமனும்
கண் மூன்றத்தானும்–முக் கண்ணனான சிவபிரானும்
என்றும்–எக் காலத்தும்
அடி–(எம்பெருமானது) திருவடிகளிலே
கமலம்–தாமரைப் புஷ்பங்களை
இட்டு–ஸமர்ப்பித்து
ஏத்தும்–ஸ்துதித்துக் கொண்டிருப்பார்கள்.
பரிமளம் கமழ்கிற திரு நாபி கமலத்தில் பிறந்த ப்ரஹ்மாவும்
முக்கண்ணனும்
திருவடிகளில் தாமரைப்பூவை ஸமர்ப்பித்து
எப்போதும் ஸ்தோத்ரம் செய்கிற அத்திருமலைக்குப் போய் நிலையாய் நின்று
ஸ்வ பாவத்தினால் பாபங்களைப் போக்குகிற
மிக உயர்ந்த திருமலையை ஆஸ்ரயியுங்கோள் –
சென்று வணங்குமினோ சேணுயர் வேங்கடத்தை-
சென்னி யோங்கு தண் திரு வேங்கடம் -என்னும்படியே-
புறப்பட்டவாறே கண்டு கிலேசம் தீரும் படியாக ஆகாச அவகாசம் அடங்க விழுங்கும்படி
உயர்ந்த சிகரங்களை உடைய திருமலையை சென்று வணங்குங்கோள்
நீர்மையால் நின்று வினை கெடுக்கும்–
விரோதியான பாபத்தை திருமலை-தன் ஸ்வபாவத்தாலே நசிப்பிக்கும்
கடிக் கமல நான்முகனும் கண் மூன்றத்தானும் அடிக்கமலம் இட்டு ஏத்தும் அங்கு
பிரயோஜனாந்த பரரும் தங்கள் அதிகாரம் பெறுவது-
இத் திருமலையிலே அவனை ஆஸ்ரயித்து-
திரு நாபி கமலத்திலே அவயவ தானேன பிறந்த சதுர் முகனும்
லலாட நேத்ரனும்-
அவன் திருவடிகளை
புஷ்ப்யாதி உபகரணங்களைக் கொண்டு ஆஸ்ரயித்தது-
அப்பிள்ளை உரை
அபேக்ஷித சித்யர்த்தமாக சர்வ காலமும் பரிமள பிரசுரமான
திரு நாபி கமலத்திலே பிறப்பிடமாக யுடைய சதுர்முகனும்
(சர்வ கந்த சர்வ ரஸா )
த்ரி நேத்ரனான ருத்ரனும்
திருவடிகளில் செவ்வித் தாமரைப் பூக்கள் பணிமாறி
துர்மானத்தைத் துறந்து
(அபிமான பங்கமாய் )
வாய் விட்டு ஸ்தோத்ரம் பண்ணி -(வெட்கப்படாமல் -அப்பா தாத்தா பேரைச் சொல்ல என்ன வெட்கம் -)
ஆஸ்ரயிக்கும் அந்தத் திருமலையில் சென்று
பரபரப்பு அற்று -நின்று -(திவ்ய தேசத்தில் அனைத்தும் உத்தேச்யம் )
பிரதிஷ்டராய் இருந்து
தன் ஸ்வபாவத்தால் ஆஸ்ரிதருடைய சகல ஸமஸ்த பாபங்களையும் நசிப்பிக்குமதாய்
(வேங்கடம் அன்றோ )
புறப்பட்டு வழிப்பட்ட போதே கண்டு வாழலாம் படி சிகரங்களை யுடைய
மிக்க ஓக்கத்தை யுடைய திருமலையை நீங்களும் ஆஸ்ரயியுங்கோள் என்கிறார் –
————————————————————-
சதுர் முகனும்-லலாட நேத்ரனும்-திருமலையில் ஒரு கால் ஆஸ்ரயித்து போம் அளவு அன்று –
சமாராதான காலங்கள் தோறும் (தோமாலை சேவையே இங்கு பிரதானம் )
சமாராதான-உபகரணங்களைக் கொண்டு வந்து ஆஸ்ரயிப்பார்-என்கிறது –
(ப்ரஹ்மாதிகள் ஒரு கால் ஆஸ்ரயித்து போகார்கள்
திரு ஆராதன காலங்கள் தோறும் உபகரணங்களைத் தரித்துக் கொண்டு
வந்து வணங்குவார்கள் -என்கிறார் -)
அப்பிள்ளை உரை -அவதாரிகை
ப்ரஹ்மாதிகள் ஒரு கால் ஆஸ்ரயித்துப் போம் அளவு அன்றிக்கே
சமாரதன காலம் தோறும்
ஆராதன உபகரணங்களைக் கொண்டு வந்து ஆஸ்ரயிக்கிறார்கள் என்கிறார்
மங்குல் தோய் சென்னி வட வேங்கடத்தானை
கங்குல் புகுந்தார்கள் காப்பணிவான் -திங்கள்
சடை ஏற வைத்தானும் தாமரை மேலானும்
குடை ஏறத் தாங்குவித்துக் கொண்டு-43-
பதவுரை
மங்குல் தோய் சென்னி–மேக மண்டலத்தளவுஞ் சென்று கிட்டியிருக்கிற சிகரத்தை யுடைத்தான
வடவேங் கடத்தானை–வட திருவேங்கடமலையில் எழுந்தருளி யிருக்கும் பெருமானுக்கு
காப்பு அணிவான்–திருவந்திக் காப்பிடுவதற்காக
திங்கள் சடை ஏற வைத்தானும்–சந்திரனைச் சடையிலே ஏற வைத்துக் கொண்டுள்ள சிவனும்-சந்திரசேகரன்
தாமரை மேலானும்–தாமரைப் பூவிற் பிறந்த பிரமனும்
தாம்–ஆகிய இவர்கள்
குடை ஏற குவித்துக் கொண்டு–திரு முத்துக் குடை முதலான உபகரணங்களைச் சேகரித்துக் கொண்டு
தாங்குவித்துக் கொண்டு என்றுமாம்
கங்குல்–ஸந்த்யா காலந்தோறும்
புகுந்தார்கள்–திருமலைக்குச் செல்லுவர்கள்
சந்த்ரனைத் தலையில் தரித்த ருத்ரனும்
கமலப்பூ மேல் வஸிக்கிற ப்ரஹ்மாவும்
தாங்கள் குடை முதலிய உபகரணங்களைப் பூர்ணமாக சம்பாதித்திக் கொண்டு
மேக மண்டலத்தை அடைந்து இருக்கிற சிகரங்களை யுடைய
திருமலையில் எழுந்து அருளி இருக்கிறவனுக்குத்
திரு வந்திக்காப்பு ஸமர்ப்பிக்கைக்காக ஸந்த்யா காலத்தில் பிரவேசித்தார்கள் –
மங்குல் தோய் சென்னி வட வேங்கடத்தானை-
மேக பதத்திலே செல்ல உயர்ந்த சிகரங்களை-உடைய திருமலையை உடையவனை –
காப்பணிவான் கங்குல் புகுந்தார்கள்–
திருவந்திக் காப்பெடுப்பான்-சமாராதான காலம் தோறும் புகுந்தார்கள் –
திங்கள் சடை ஏற வைத்தானும் தாமரை மேலானும் குடை ஏறத் தாங்குவித்துக் கொண்டு –
சந்த்ரனை சடையிலே தரித்த ருத்ரனும்-
தாமரைப் பூவை ஜென்மமாக உடைய ப்ரஹ்மாவும்-(கர்ம வஸ்யன் )
திரு முத்துக் கொடை முதலானவற்றைத் தரித்துக் கொண்டு(சாமரம் போல்வனவும் ) கங்குல் புகுந்தார்கள் –
(நிலத்தில் கால் பாயவும் பெறாத தேவர்களுக்கு என்றே சென்னி ஓங்கி திருவேங்கடம் இருப்பது –
சந்திரனை தலையிலே ஏற வைத்தவனோடு தாமரையில் ஏறி இருப்பவனோடு வாசியற இவனைத் தொழப் புகுவர்
தாமே சேகரித்துக் கொண்டு புகுவர்
புகுந்தார்கள் இறந்த காலமாக சொல்லப்பட்டு இருந்தாலும்
நித்யமாகவே புகுந்து கொண்டே இருக்கிறார்கள் என்றவாறு -)
அப்பிள்ளை உரை –
சந்திரனை (யும் கங்கையும் )ஜடையில் எப்போதும் தரித்துக் கொண்டு இருக்கும் ருத்ரனும்
திரு நாபி கமலத்தை ஜென்ம பூமியாகக் கொண்ட ப்ரஹ்மாவும்
பிரேம பரவசராய்க் கொண்டு திருவாராதனம் கண்டு அருளுவதற்கு உபகாரணாதிகள் –
திரு முத்தின் குடை -போல்வன -(திரு முத்துக் குடை என்று சொல்ல மாட்டார்கள் )
பின்னே தாங்களும் கண்டு களிக்கும் படிக்கு ஈடாக
உயர எடுத்துக் கொண்டு
மேக பதத்தில் கிட்டும் படி உயர்ந்த சிகரம் கொண்ட
வட திக்கில் உள்ள திருமலையில்
திருவந்திக்காப்பு எடுத்து சேவிக்கைக்காக
(பூத காலச் சொல் -புகுந்தார்கள் பாசுரத்தில்
அர்த்த பலம் கொண்டு நிகழ் காலம் )எப்பொழுதும் புகுகிறார்கள்
(விரைவினும் மிகுவினும் தெளிவினும் சொல்ல இப் பொருள் நன்னூல் )
தர்ம வீர் யேன யதாவத் ஸம்ப்ரவஸ்யதி -என்று ப்ரஹ்மாவின் அனுக்ரஹத்தால் வால்மீகி அருளிச் செய்தது போல்
இவர் மயர்வற மதி நலம் அருளப் பெற்றதால்
சத்ராதிகளைக் கொண்டு வருவதும் பின்னே நின்று கண்டு அனுபவிப்பதையும்
கூட நின்று கண்டால் போல் சாஷாத் கரித்து அருளிச் செய்கிறார்
சந்திரன் போல் குளிர்ந்த ஞானம் அவன் அனுக்ரஹத்தால் இவருக்கு
—————————————————————-
(குமரருள்ளீர்-பாலர் ஆகையாலே கால் நடை தருமே –
கால் நடை ஆடும் போதே ஆஸ்ரயித்து போருங்கோள்-)
அறிவுடையாரும் அறிவு கெடும் தசையில்-
ஹிதைஷியாய் ரஷிக்குமவன் நிற்கிற திருமலையிலே-
படு கரணரான போதே சென்று ஆஸ்ரயிங்கோள் என்கிறார் –
(குமரர் உள்ளீர் பாசுரம் -அப்பொழுது தான் கரணங்கள் நன்றாக இருக்கும்
சீமாலிகன் -மல்லிகை மா மலர் கொண்டு ஆர்த்ததும் -இதுவும் –
போகத்தில் வழுவாத ஆழ்வார்கள் மட்டும் கண்டு அருளிச் செய்தவை
புராணங்களில் இல்லை )
அப்பிள்ளை உரை அவதாரிகை
அறிவுடையாரும் மேல் வரும் அநர்த்தம் அறிந்து பரிகரிக்க மாட்டாமல் கலங்கி
(தபஸ்ஸூ பண்ணினான் என்று வரம் கொடுத்து )
அநர்த்தம் வந்து கலங்கிய அப்படிப்பட்ட தசையிலும் ஹிதைஷியாய் ரஷிக்கும் சர்வேஸ்வரன் –
திரு வேங்கடத்தானை -கரணங்கள் நல்ல தசையில் இருக்கும் போதே
சென்று ஆஸ்ரயியுங்கோள் என்கிறார்
கொண்டு குடங்கால் மேல் வைத்த குழவியாய்
தண்ட வரக்கன் தலை தாளால் -பண்டு எண்ணி
போங்குமரன் நிற்கும் பொழில் வேங்கட மலைக்கே
போங்குமரர் உள்ளீர் புரிந்து-44-
பதவுரை
குமரர் உள்ளீர்–கிளரொளியிளமை கெடாமலிருப்பவர்களே!
பண்டு–முன்பொருகால்
குடங்கால் மேல்–மடியிலே
கொண்டு வைத்த குழவி ஆய்–எடுத்து வைக்கும் சிறு குழந்தையாய்க் கொண்டு
போம்–அந்தர்த்தான மடைந்தவனான
குமரன்–நித்ய யுவாவான எம்பெருமான்
நிற்கும்–நிற்குமிடமான
தண்டம் அரக்கன்–தண்டிக்கத் தகுந்தவனான இராவணனுடைய
தலை–பத்துத் தலைகளையும்
தாளால்–திருவடியாலே
எண்ணி–கீறி எண்ணிக் காட்டி விட்டு
பொழில் வேங்கடம் மலைக்கே–சோலைகள் சூழ்ந்த திருமலைக்கே
புரிந்து போம்–ஆசை கொண்டு செல்லுங்கோள்-
புரிந்து — ஆஸ்ரயித்து
(விஷய ஞானம் உள்ளாரை வரச் சொல்வார் )
ப்ரஹ்மாவினால் எடுத்துக் கொண்டு மடியில் வைத்துக் கொள்ளப் பட்ட சிறு பிள்ளையாய்
தண்ட்யனான ராவணாசூரனுடைய தலைகளை முன்பு
திருவடிகளால் எண்ணி
அந்தர் தானமான நித்ய யுவாவான ஸர்வேஸ்வரன் எழுந்து அருளி இருக்கிற
தோப்புக்களை யுடைய திருமலையை நல்ல வயஸ்ஸை யுடையவர்களே ஆஸ்ரயித்துப் போருங்கோள் –
எடுத்து மடியில் வைக்கும் பிள்ளையாய்-
தண்ட்யனான ராஷசன் தலை பத்தும் அறுக்கப்படும் என்று-
திருவடிகளாலே கீறிக் காட்டி
அந்தர்த் தானம் பண்ணின முக்தன் நிற்கும்-திருமலைக்கே
கால்நடை யாடும் போதே
ஆஸ்ரயித்துப் போருங்கோள்-
ஆமே யமரர்க்கு அறிய வது நிற்க
நாமே யறிகிற்போம் நன்னெஞ்சே பூமேய
மாதவத்தோன் தாள் பணிந்த வாளரக்கன் நீண் முடியை
பாதமத்தால் எண்ணினான் பண்பு -ஸ்ரீ முதல் திருவந்தாதி- –45-
ஆய்ந்த வரு மறையோன் நான்முகத்தோன் நன் குறங்கில்
வாய்ந்த குழவியாய் வாளரக்கன் -ஏய்ந்த
முடிப்போது மூன்று ஏழு என்று எண்ணினான் ஆர்ந்த
அடிப்போது நங்கட்கு அரண் —–ஸ்ரீ மூன்றாம் திருவந்தாதி –77-
(குமரர் உள்ளீர்
பால்யேந திஷ்டா சேத் -ப்ரஹ்ம ஞானி குழந்தையைப் போல் இருக்கக் கடவன்
பரமாத்ம ஞானி குழந்தை யுள்ளம் படைத்தராய் இருப்பார் )
அப்பிள்ளை உரை
ப்ரஹ்மா தன்னை ஆஸ்ரயித்த ராவணனுக்கு வரம் கொடுக்கும் தசையில்
(மா மதலைப்பெருமாள் திருச்சேறை )
எடுத்து மடியில் வைத்துக் கொள்ளும்படி முக்த சிசுவாக வடிவைக் கொண்டு
அநீதியை செய்து போகும்-கை வளருகையாலே –
சித்ரவதம் பண்ணி தண்டிக்க யோக்யனான ராவணன்
இவை அறுபடப் போகும் தலைகளை ஒரு நாளிலே
அவனுக்கும் தெரியாதபடி திருவடிகளால் கீறி எண்ணிக் காட்டி
ஆஸ்ரித விஷயத்தில் ஹித காமனான முக்தன்
(திருமலை அப்பனுக்கு பிள்ளைத்தனம்
குழந்தையாக சேவித்துக் காட்டி அருளி-தப்பே தெரியாத படி அனுக்ரஹம் –
ஸர்வஞ்ஞனுக்கு ஒன்றும் தெரியாமல் இருக்க குழந்தை தானே )
அவன் வர்த்திக்கும் திருச் சோலைகள் நிறைந்த திருமலைக்கே
படு கரணராய் -மனமும் ஒன்றி- இளமை குன்றாத நிலையிலேயே
அபிமுகராய்க் கொண்டு சடக்கென வந்து ஆஸ்ரயியுங்கோள் என்கிறார் –
——————————————————-
வெறும் சம்சாரிகளுக்கே அன்று –
நித்ய ஸூரிகளுக்கும் பிராப்யம் திருமலை -என்கிறார் –
அப்பிள்ளை உரை அவதாரிகை
உபய விபூதியில் உள்ளாருக்கும் திருமலையே ப்ராப்யம்
(இரட்டைக் குழந்தை பெற்ற தாய் இரண்டு முலையாலே பாலூட்டுமா போல்
பாலே போல் சீர் கொண்ட அப்பன் )
புரிந்து மலரிட்டுப் புண்டரீகப் பாதம்
பரிந்து படுகாடு நிற்ப -செரிந்து எங்கும்
தான் ஓங்கி நிற்கின்றான் தண்ணருவி வேங்கடமே
வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு-45-
பதவுரை
புண்டரீகம் பாதம்–திருவடித் தாமரைகளில்
புரிந்து–அன்பு பூண்டு
மலர் இட்டு–புஷ்பங்களைப் பணிமாறி
பரிந்து–மங்களாசாஸநம் பண்ணி
படுகாடு நிற்ப–வெட்டி வீழ்த்த மரங்கள் போலே கால் பேராமல் நிற்கும் படியாக வணங்கி நிற்கும்படியாக
எங்கும்–ஸகல ப்ரதேசங்களிலும்
தெரிந்து–விளங்கி(கீழேயே புறப்பட்ட போதே வழியிலே சேவை சாதிப்பார் பார்த்தோம்
பலருக்கும் பல வித குணங்களைக் காட்டி விளங்குகிறான் அன்றோ
நமக்கு பரத்வமும் அவர்களுக்கு ஸுலப்யமும் )
தான் ஓங்கி நிற்கின்றான்–குணங்களால் பெருமை பெற்று எழுந்தருளி யிருக்கும் பெருமானுடையதாய்
தண் அருவி வேங்கடமே–குளிர்ந்த அருவிகளை யுடைத்தான திருமலையே
வானோர்க்கும்–நித்ய ஸூரிகளுக்கும்
மண்ணோர்க்கும்–நிலத் தேவரான ஸ்ரீவைஷ்ணவர்களுக்கும்
வைப்பு–நிதியாயிருக்கும்.
ஆஸ்ரயண உன்முகர்களாய் ஸ்ரீ பாத பத்மத்தில் புஷ்பங்களை சமர்ப்பித்து ஆசையுடன் அங்கே
நித்ய வாஸம் பண்ணும் படி ஸர்வ தேசத்திலும் பிரகாசித்தது தான் சர்வாதிகனாய்
எழுந்து அருளி இருக்கிற ஸர்வேஸ்வரனுடைய குளிர்ந்த அருவிகள் பெருகுகிற
திருமலையே தேவர்களுக்கும் மநுஷ்யர்களுக்கும் நிதியாய் இருக்கும் —
நிரதிசய போக்யமான திருவடிகளிலே-ஆதரித்து புஷ்பாதிகளை இட்டு
ஸ்நேஹித்து படுகாடு கிடக்கும் படியாக-
(ஸ்தப்தோஸி -மரம் போல் நாமும் -அதைக் கண்டு அப்பனும் -இவைற்றைக் கண்டு நித்யரும் )
விசத தமமாக எங்கும் குறைவற்றவனுடைய
ஸ்ரமஹரமான திரு மலையே-
உபய விபூதிக்கும் பிராப்யம்-
(புண்டரீகப்பாதம்
விஷ்ணோ பதே பரமே மத்வ உத்ஸ-மதுத் தாரகைகள் ஒழுகா நிற்கும்
தேனே மலரும் திருப்பாதம் –திருவாய் –1-5-8-
தெரிந்து எங்கும் தான் ஓங்கி நிற்கின்றான்
கண்டவாற்றால் தனதே உலகு என்று நின்றான் தன்னை –திருவாய் -4-5-10-
வ்ருஷ இவ ஸ்தப்த –வணங்காத மரம் போல் பரம புருஷன் நிற்கிறான் -ஸ்ருதி -)
அப்பிள்ளை உரை
சாதரமாக ஆஸ்ரயண உந்முகராய்க் கொண்டு
தாமரைப் பூ போல் நிரவதிக போக்யமான
(அடிச் சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ )
பிரேம யுக்தராய் கொண்டு பர வச காத்ரராய்
கால் வாங்க மாட்டாதே மங்களா ஸாஸனம் பண்ணி
சர்வருக்கும் ஆஸ்ரயித்து நிற்கும் படியாக விசத தமமாக சர்வ பிரதேசங்களிலும் பிரகாசித்து
சீலாதி குணோத்தரராய்
(நிகரில் புகழாய் இத்யாதி –நான்கு குணங்கள் -ஸுசீல்யம் ஸ்வாமித்வம் ஸுலப்யம் வாத்சல்யம் )
சர்வேஸ்வரனுடைய குளிர்ந்த திருவடிகளை யுடைத்தான திருமலையே
பரமபத வாசிகளான நித்ய ஸூரிகளுக்கும் முக்தருக்கும்
பூ ஸூரரான ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கும் பரம ப்ராப்யம்
————————————————————————–
(அறிவற்ற விலங்குகளும்
அறிவில் குறைந்த குறவர்களும்
பகவத் பாகவதர்களுக்குப் பணி செய்யும்
பெருமை பெற்ற திருமலையை
நாடு எல்லாம் ஆஸ்ரயிக்க வேண்டாவோ என்கிறார் -)
அப்பிள்ளை உரை அவதாரிகை
திர்யக்குகளும் கிட்டி அடிமை செய்ய ஆசைப்படும் திருமலையை
நாட்டார் ப்ரதக்ஷிணம் முதலானவைகளைப் பண்ணி
(ப்ரதக்ஷிணம் ஸ்ரவணம் நமஸ்காரம் திரு நாம சங்கீர்த்தனம் போன்ற )-
அனுகூல வ்ருத்திகளைப் பண்ணி ஆஸ்ரயிப்பார்கள் ஆகில் மிகவும் நல்லது –
வைப்பன் மணி விளக்காம் மா மதியை மாலுக்கு என்று
எப்பொழுதும் கை நீட்டும் யானையை -எப்பாடும்
வேடு வளைக்கக் குறவர் வில் எடுக்கும் வேங்கடமே
நாடு வளைத்தாடுது மேல் நன்று -46-
பதவுரை
மா மதியை–‘சிறந்த (இந்த) சந்திரனை
மணி விளக்கு ஆ–மங்கள தீபமாக
வைப்பன் என்று–(திரு முன்பே) வைக்கக் கடவேன் என்றெண்ணி
(அந்த சந்திரனைப் பிடிப்பதற்காக)
கை நீட்டும்–உயரத் தூக்கின கை தூக்கின படியே யிருக்கிற
யானையை–ஒரு யானையை (பிடிப்பதற்காக)
எப் பாடும்–நாற் புறமும்-புறம்புள்ள வேடர்கள்
வேடு வளைக்க–வேடர் சூழ்ந்து கொள்ள
(எல்லா திசையில் இருந்து வந்த வேடர்கள்
திவ்ய தேச வேடர்களுக்கு இந்த எண்ணம் வராதே
வளைக்க என்று இருப்பதால் நான்கு புறமும் அர்த்தம் சித்தம்
எப்பாடும் -புறம்புள்ள வேடர்கள் என்றவாறு )
குறவர்–(அங்குள்ள) குறவர்கள்
வில் எடுக்கும்–(அவ் யானையின் மேல் பிரயோகிக்க) வில்லை எடுத்துக் கொண்டு போகுமிடமான
வேங்கடமே–திருமலையையே
நாடு–நாட்டிலுள்ளாரனைவரும்
வளைத்து–பிரதக்ஷிணம் பண்ணி
(திருமலையை வளைத்து உள்ள நாட்டார் எல்லாரும் என்றுமாம் )
ஆடுதும் ஏல்–(மகிழ்ச்சிக்குப் போக்கு வீடாக) நர்த்தனம் பண்ணப் பெற்றால்
நன்று–நல்லது
ஸ்லாக்யமான சந்திரனை ஸர்வேஸ்வரனுக்கு மங்கள தீபமாக வைப்பேன் என்று
எப்போதும் தும்பிக்கையை நீட்டிக் கொண்டு இருக்கிற யானையை
வேடர் எங்கும் போக ஒட்டாமல் சுற்றிக் கொள்ள
அத்தைக் கண்டு குறவர் வில்லை எடுக்கிற திருமலையையே
நாட்டார் எல்லாம் ப்ரதக்ஷிணம் பண்ணிக் கூத்தாடினால் நலமாய் இருக்கும் —
சந்தரன் அணியனாய் இருக்கையாலே-
சர்வேஸ்வரனுக்கு திரு நந்தா விளக்காக வைப்பன்-என்று
ஒரு கால் நீட்டிக் கிடைக்காது ஒழிந்தால் மீள அறியாதே –
எப்போதும் கை நீட்டின படியே-அந்ய பரமாய் நிற்கிற யானையை
புறம்புள்ள வேடர் சூழ-
திருமலையில் வர்த்திக்கும் குறவர்-வில் எடுத்தபடி எதிர்க்கும் திருமலையே
அறிவில்லாதாரோடு அறிவுடையாரோடு வாசியற-
எல்லாரும் ஆஸ்ரயிகப் பெறில்
அதுவே நன்று-
(ஆனை பிடிக்க வேடர்கள் பார்ஸ்வத்திலே சூழ
அங்கே வர்த்திக்கிற குறவர் இத்தைக் கண்டு வில்லுகளை எடுக்க -என்றபடி )
(எப்பாடும் வேடு –குரூரம் உள்ளவர்
குறவர் –விசேஷணம் இல்லாமல் திருமலை வாஸத்தால் வந்த நன்மை உள்ளவர் –
தங்கள் குரூரத்தை பாகவத விரோதிகளான வேடர்கள் இடம் காட்டுபவர் –
வேடு வளைக்க –குறவர் வில் எடுக்கும் வேங்கடம்
வன விலங்குக்கே ரக்ஷை உள்ள தேசம் )
(விலங்குகளே கைங்கர்யம் செய்யா நிற்க உலகோர்கள் செய்ய வேண்டும் கை முதிக நியாயம் )
அப்பிள்ளை உரை
ஸ்லாக்யமான பூர்ண சந்திரனை- மா மதி அன்றோ
ஆஸ்ரித வ்யாமுக்தனான திருவேங்கடமுடையானுக்கு
அழகிய திரு நந்தா விளக்காக வைப்பன் என்று கொண்டு
பிடிக்க சர்வ காலமும் துதிக்கையை நீட்டி கைங்கர்யத்தில் நோக்காய்
(அந்ய பரராய் வேடர் வருவதை அறியாமல் இதிலே நோக்காய் உள்ள யானைகள் )
எல்லா திக்குகளிலும் இருந்து வந்த வேடர் ஜாதிகள் பிறர்க்கு இடம் இல்லாமல் வளைத்துக் கொண்டு இருக்க
அங்கு வர்த்திக்கும் குறவர்கள் அவர்களை நலிவதற்க்காக கையில் வில்லை வாங்கிக் கொண்டு போவதாக ஒருப்படும்
(பகவத் தாஸர்களை ரக்ஷிப்பதே இவர்கள் நோக்கு )
அப்படிப்பட்ட ஞான அஞ்ஞான விபாகம் அற நாட்டில் உள்ள பிராணிகள் எல்லாம்
பிரதக்ஷிணம் பண்ணி
ப்ரீதி ப்ரகர்ஷத்தால் ச ச ப்ரம ந்ருத்யம் பண்ணி ஆஸ்ரயிக்குமாகில்
சால அழகியதாம்
————————————————————————–
(கீழே திருமலையில் உள்ள யானையின் பெருமை
இதில் அறிவு குறைந்த பல பொருள்கள்
நித்ய ஸூரிகளைப் போல் பகவத் கைங்கர்யம் செய்வதை அனுபவிக்கிறார் –
எம்பெருமான் மலை மேல் ஏதேனும் ஆவேனே
நித்ய ஸூரிகள் இவர்கள் என்றும்
இங்கு உள்ள திர்யக்குகளும் அவர்களுக்கு உண்டான ஸ்ரத்தை ஈடுபாடு உண்டு என்றுமாம் -)
அப்பிள்ளை உரை அவதாரிகை
சர்வேஸ்வரன் ப்ராப்யனானோ பாதி
அவன் உகந்து அருளி நித்ய வாஸம் செய்து அருளும் திவ்ய தேசமான திருமலையில் உள்ள
சேதன அசேதனாத்மகமான-சகல பதார்த்தங்களும் நமக்கு உத்தேஸ்யமாகையாலே
துறுப்புக் கூடாக – முழுமையாக -திருமலையை மண்டி அனுபவிக்கிறார்
நன் மணி வண்ணனூர் ஆளியும் கோளரியும்
பொன் மணியும் முத்தமும் பூ மரமும் -பன் மணி நீர்
ஓடு பொருதுருளும் கானமும் வானரமும்
வேடுமுடை வேங்கடம் -47-
பதவுரை
ஆளியும்–யாளிகளும்
கோள் அரியும்–வலிமை தங்கிய சிங்கங்களும்
பொன்–பொன்களும்
மணியும்–மாணிக்கங்களும்
முத்தமும்–முத்துக்களும்
பூ மரமும்–பூத்த மரங்களும்
பல மணி நீரோடு பொருது உருளும் கானமும்–பலவகைப்பட்ட ரத்னங்கள் அருவிகளோடே
கலந்து உருண்டு விழப் பெற்ற காடுகளும்
வானரமும்–குரங்குகளும்
வேடும்–வேடச் சாதியுமாகிற
இவற்றை
உடை–உடையதான
வேங்கடம்–திருமலையானது
நல் மணி வண்ணன் ஊர்–நல்ல நீல ரத்னம் போன்ற வடிவை யுடையனான அப்பனுடைய வாஸஸ் ஸ்தானமாம்
வண்ணம் என்றது ஸ்வபாவம் என்றுமாம்
யாளிகளையும் -பலமுடைய ஸிம்ஹங்களையும் -ஸ்வர்ணங்களும் -ரத்னங்களும் –
முத்துக்களும் பூ மரங்களும் அநேக மணிகளும்
ப்ரவாஹத்தோடே கூட புரண்டு விழுகிற காடுகளையும் வானரங்களையும் வேடர்களையும் யுடைய திருமலை
நீல மாணிக்கம் போன்ற ஸ்லாக்யமான திருமேனியை யுடைய ஸர்வேஸ்வரனுடைய திவ்ய தேசம் —
ஸ்ரமஹரமான வடிவை உடையவனுக்கு-
ரஷணத்துக்கு உறுப்பாகையாலே
திருமலையை
ஊர் என்கிறது –
(மலை வனம் காடு தாழ்வரை இத்யாதிகள் சொல்லாமல் ஊர் என்கிறார் அன்றோ
ரக்ஷணத்துக்கு உறுப்பான இடத்தை ஊராக விரும்புவதற்கு பிரமாணம்
ஸூமித்ரையார் வார்த்தை
இதுக்கு இரண்டு நிர்வாகங்கள் அருளிச் செய்கிறார் )
ரஷணத்துக்கு உறுப்பாகையாலே திரு அயோத்யையிலும்-காட்டை விரும்பினார் இறே பெருமாள் –
அவர் விரும்பின காட்டை விரும்பிப் போகிற இளைய பெருமாள்-
அக்காட்டோபாதி இப்படை வீட்டையும் நினையும் கிடீர்-என்றார் இறே திருத் தாயார் –
ராமம் தசரதம் வித்தி-
வத்யதாம் பத்யதாம் -என்று அறுவராதே-
உங்கள் தமையனாரோபாதியாக உங்களையரையும் நினையும் கிடீர் –
(தசரதனை கொல்ல நினைக்காமல் அவரையும் ராமனாகவே எண்ணு என்கிறாள் )
மாம் வித்தி ஜனகாத்மஜம் -உங்கள் தமையனார் உகந்த பிராட்டியோபாதி என்னையும்
நினையும் கிடீர் என்கிறார் –
ஆளியும் இத்யாதி –
திருமலையில் வர்த்திக்கும் நித்ய ஸூரிகளைச் சொல்லுகிறது-
(இனி மேல் ஆத்மா நிரூபக சேஷத்வ அனுகூல ஜென்மமே உத்க்ருஷ்ட ஜென்மம்
என்னும் அத்தை அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரும் -முமுஷுக்களுமான மகாத்மாக்கள்
ஆதார முகேன பிரகாசிப்பிக்கிறார் ..
அணைய ஊர புனைய
அடியும் பொடியும் பட
பர்வத பவனங்களில்
ஏதேனுமாக ஜனிக்கப் பெறுகிற
திர்யக் ஸ்தாவர ஜன்மங்களை
பெருமக்களும் பெரியோரும்
பரிக்ரஹித்து பிரார்த்திப்பர்கள்-சூரணை -87-)
(ரக்ஷணத்துக்கு உறுப்பாகும் இடமே ஊர் என்று காட்ட ஸ்ரீ இராமாயண ஸ்லோகம்
எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனுமாக வேணும் என்று பிரார்த்திப்பார்கள் அன்றோ
நித்ய ஸூரிகளும் ஸுலப்யம் அனுபவிக்க பொன் மணி வடிவு கொள்வார்களே )
(நித்யர் முக்தர் முமுஷுக்கள் அனைவரும் மனுஷ்ய ஸ்தாவர ஜங்கம பிறவி ஏற்று
இங்கே கைங்கர்யம் செய்கிறார்கள்
அவர்களுக்கு நமஸ்காரங்கள்-
அஹ்ருத சஹஜ தாஸ்யா ஸூரயா ஸ்ரஸ்த பந்தா
விமல சரம தேஹா இதி அமீ ரங்க தாம
மஹித மனுஜ திர்யக் ஸ்த்தா வரத்வா சந்த
ஸூ நியதம் இதிஹ ஸ்ம ப்ராஹு ஏப்ய நமஸ்தாத் –ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம்–பூர்வ சதகம்––33-
அஹ்ருத சஹஜ தாஸ்யா –இயற்கையான சேஷத்வம் -கைங்கர்யம் -குன்றாத
ஸூரயா-நித்ய ஸூரிகளும்
ஸ்ரஸ்த பந்தா-சம்சார பந்தம் கழலப் பெற்ற முக்தரும்
விமல சரம தேஹா –பாபங்கள் எல்லாம் தொலைந்து இனி மேல் அடுத்த தேஹ பரிக்ரகம் இல்லை என்று
உறுதியாக இருக்கும் முமுஷுக்களும்
இதி அமீ–ஆகிய இவர்கள்
மஹித மனுஜ திர்யக் ஸ்த்தாவரத் வா சந்த–மானிடப் பிறவியையும் பசு பக்ஷி ஜங்கமப் பிறவியையும் ஸ்தாவரப் பிறவியையும்
விரும்பியவர்களாய்க் கொண்டு
ரங்க தாம–ஸ்ரீ திருவரங்கத்தை
ஸூ நியதம் ஸ் ரயந்தே –எப்போதும் பற்றி இருக்கிறார்கள்
இதிஹ ஸ்ம ப்ராஹு –என்று பவ்ராணிகர்கள் சொல்லி வைத்தார்கள்
ஏப்ய நம ஸ்தாத் –இப்படிப்பட்ட மனுஷ்ய ஜங்கம ஸ்தாவரங்களின் பொருட்டு நமஸ்காரம் ஆகுக –
இப்படி சொன்ன அவர்களுக்கு நமஸ்காரம் என்றுமாம் –
இதிஹ–ஐதிக்யம் என்ற சொல் இதனாலே பிறந்தது –)
அப்பிள்ளை உரை
யாளியும்
மிடுக்கை யுடைய ஸிம்ஹமும்
பொன்னும்
மாணிக்கங்களும்
முத்தும்
அருவிகளும்
கண்ட இடம் எங்கும் உருண்டு வந்து விழும் காடுகளும்
நீரைக் கண்டால் வெறுவி மரம் ஏறும் குரங்குகளும்
வேட ஜாதியும் ஆகிற
நிரதிசய ஐஸ்வர்யம் உடைத்தான திருமலையே
அங்குத்தை நிலமிதியாலே பழுப்பற்ற நீல ரத்னம் போல்
(அங்கு இருப்பதால் தான் திருவேங்கடமுடையான் ஆகிறான்-க்ஷேத்ர மஹாத்ம்யம் )
ரஷிக்க படுபவர்களை குறைவற ரஷிக்க பாங்கான தேசம் என்று
விரும்பி வர்த்திக்கும் திவ்ய தேசமாகும் –
————————————————————————–
(திருமலை மங்களா ஸாஸனம் -இத்துடன் சேர்ந்து 10 பாசுரங்கள்
பதிகம் போலவே வரிசையாக அருளிச் செய்கிறார்
நித்யருக்கும் அவனுக்கும் இதுவே ப்ராப்யம்
அநிஷ்ட நிவ்ருத்தியும் இஷ்ட பிராப்தியும் ப்ராபகமும் இதுவே)
அப்பிள்ளை உரை அவதாரிகை
நித்ய ஸூரிகளோடே
ஸர்வேஸ்வரனோடு வாசியற
சர்வருக்கும் திருமலையே ப்ராப்யம் என்கிறார்
வேங்கடமே விண்ணோர் தொழுவதுவும் மெய்ம்மையால்
வேங்கடமே மெய் வினை நோய் தீர்ப்பதுவும் -வேங்கடமே
தானவரை வீழத் தன்னாழி படை தொட்டு
வானவரைக் காப்பான் மலை-48–
பதவுரை
விண்ணோர்–நித்ய ஸூரிகளால்
மெய்ம்மையால்–உண்மையான பக்தியுடனே
தொழுவதுவும்—ஆஸ்ரயிக்கப்படுவதும்
வேங்கடமே–திருமலையே
(ப்ராப்ய பிராபகங்கள் திருமலையே என்று தொழுவதே மெய்ம்மை )
வினை–பாவங்களையும்
மெய் நோய்–உடம்பைப் பற்றின நோய்களையும்
(மெய்யான வினை -அனுபவித்தே தீர்க்க வேண்டிய வினைகள்
பாபங்களும் சரீரங்களும் சூழல் -மேலும் பாபங்கள் உண்டாகும் )
தீர்ப்பதுவும்–போக்கடிக்க வல்லதும்
வேங்கடமே–திருமலையே
தானவர் வீழ–அசுரர்கள் மாளும்படி
தன் ஆழி படை தொட்டு–தனது சக்ராயுதத்தைப் பிடித்து
வானவரை–தேவர்களை
காப்பான்–காத்தருளுமெம் பெருமானுடைய
மலை–திருமலை
வேங்கடமே–திருவேங்கடமேயாம்
நித்ய ஸூரிகள் ப்ராப்யமாக ஆஸ்ரயிக்கிறதும் திருமலையே
சரீரம் அடியாக வந்த பாபங்களையும் வியாதிகளையும் போக்குவதும் திருமலையே
ராக்ஷஸர்கள் படும்படி தன்னுடைய திருவாழி யாகிற ஆயுதத்தைத் தரித்துத்
தேவர்களை ரஷித்தவன் வஸிக்கிற மலையும் திருமலையே
வேங்கடமே விண்ணோர் தொழுவதுவும் மெய்ம்மையால்
திருமலை பிராபகமாக-
வேறு ஓன்று பிராப்யமாகை அன்றிக்கே
இது தானே ப்ராப்யமாக ஆஸ்ரயிப்பார்கள்
நித்ய ஸூரிகள்
(திருமலையும் ஸ்ரீ வைகுண்டமும் ப்ராப்யம் என்று இருந்தால்
பொய்மையாகத் தொழுமவர்கள் ஆவார்களே
திருவேங்கடமுடையான் ப்ராப்யம் என்று தொழுதாலும் பொய்மையே தொழுமவர்கள் ஆவார்கள்
திருமலையே ப்ராப்யம் என்று இருப்பதே மெய்மையாகத் தொழுமவர்கள் )
வேங்கடமே மெய் வினை நோய் தீர்ப்பதுவும் –
அவஸ்யம் அனு போக்யத்வம் -என்கிற-
பாபத்தைப் போக்குமதுவும் திருமலையே –
வேங்கடமே தானவரை வீழத் தன்னாழி படை தொட்டு வானவரைக் காப்பான் மலை –
அஸூர ஜாதி தரைப் படும்படிக்கு ஈடாக-
திரு ஆழியைப் பிடித்து
தேவ ஜாதிக்கு குடி இருப்பு கொடுத்தவனுக்கு ஊரும்
திருமலையே-
(தொழுவதில் மெய்ம்மை -நித்யர்
பொய்மை -ஈஸ்வரோஹம் என்று இருக்கும் தேவர்கள்
கடிக்கமல நான்முகனும் கண் மூன்றத்தானும் அடிக்கமலம் இட்டு ஏத்துவது தங்கள் பதவிக்காக
மெய் வினை -அனுபவித்தே போக்க வேண்டியவை
அவஸ்யம் அநு போக்தவ்யம் க்ருதம் கர்ம ஸூப அஸூபம்
நா புக்தம் ஷீயதே கர்ம கல்ப கோடி சதைரபி –நூறு கோடி கல்பமானாலும் அனுபவியாமல் கழியாதே
மெய் வினை நோய் என்று சரீர சம்பந்தம் அடியாக வரும் பாபங்களும் வியாதியும் என்றுமாம்
வேங்கடங்கள் மெய் மேல் வினை முற்றவும் -நம்மாழ்வார் )
அப்பிள்ளை உரை
அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தர்களான நித்ய ஸூரிகள்
சீலாதி குண அனுபவத்துக்கு ஏகாந்தமாகையால்
திருமலையையே மெய்யான ப்ராப்யமாக நினைத்து எப்பொழுதும் ஆஸ்ரயிப்பதும்
திருமலையே
சம்சாரிகளுக்கு அனுபவ ஏக விநாஸ்யமான- மெய்யான ப்ராபல்யமான வினை களையும் –
மெய்யான கர்மம் -சரீரம் பற்றி வரும் கர்மங்களையும் –
தத் கார்யமான வியாதிகளையும்
ச வாசனமாகப் போக்குவதும்
திருமலையே
பிரதிகூலரான அசுரர்கள் தரைப்படவும் தேவர்கள் வாழவும்
தனக்கு அசாதாரணமான திரு ஆழி –தன் ஆழி -தரித்து
அனுகூலரான தேவர்களை ரக்ஷிக்கும்
சர்வேஸ்வரன் விரும்பி வர்த்திக்கும்
திருமலையும் இதுவே –
————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply