ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் அருளிய ஸ்ரீ நான்முகன் திருவந்தாதி -13-24–ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் -/ஸ்ரீ அப்பிள்ளை உரை —

உபாசகரரைக் குறித்து உங்கள் உபாசனத்திலே பிரயோஜனம் இல்லை
அவனே உபாயம் என்கிறார்

(அவனை மதித்தார் பேறு பெறுகிறார்கள் என்று ஆழ்வார் அருளிச் செய்ய
யஜ்ஜேந தாநேந தபஸா அநாஸகேந ப்ராஹ்மணா விவிதி சக்தி –என்று ஸ்ருதி
அவனை அடைவது சிரம ஸாத்யமாய் இருக்க – நீர் எளிது போல் சொல்லலாமோ என்று கேட்க
அதற்குப்பதில் இப்பாசுரம் )

(அர்த்தம் சொல்லி நாராயண திரு நாமம் இதில்
முன்பும் பின்பும் ஆழ்வார் அருளிச் செயல்களில் உண்டே
நாரணன் முழு ஏழு உலகுக்கும் நாதன்
நாராயணன் நமக்கே பறை தருவான்
நான் உன்னை அன்றி இலேன் நாராயணா நீ என்னை அன்றி இல்லையே நடுவிலும் உண்டே )

அப்பிள்ளை உரை அவதாரிகை
மோக்ஷ சாதனத்தில் இழியாதே
சரீரத்தை பசையற உலர்த்தி தட்டித் திரிகிற நீங்கள்
ஸர்வேஸ்வரனே ப்ராப்யமும் பிராப்பகமும் என்று அனுசந்தித்து (உணர்ந்து) ஆஸ்ரயியுங்கோள் என்கிறார்

வீடாக்கும் பெற்றி யறியாது மெய் வருத்திக்
கூடாக்கி நின்று உண்டு கொண்டு உழல்வீர் -வீடாக்கும்
மெய்ப்பொருள் தான் வேத முதல் பொருள் தான் விண்ண
வர்க்கும் நற்பொருள் தான் நாராயணன்-13-

பதவுரை

வீடு ஆக்கும் பெற்றி அறியாது–மோக்ஷத்தைப் பெறுவிக்கும் வழியைத் தெரிந்து கொள்ளாமல்
மெய்–சரீரத்தை
வருத்தி–(உபவாஸாதிகளாலே) க்லேசப்படுத்தி
கூடு ஆக்கி–எலும்பே மிகுந்த கூடாக அஸாரமாக்கி
கூடாக்கி -சரீரத்தை வற்றப் பண்ணி
நின்று–இப்படி நெடுங்காலம் தவம் புரிந்தும்
உண்டு கொண்டு–(தேஹம் தரிக்க வேண்டுமளவு ஸ்வல்மாக) புஜித்தும்
உழல்வீர்–திரிகின்றவர்களே!
புருஷாந்தரங்களுக்கு வருந்தி ஸ்வல்பம் அனுபவித்து உழன்று என்றுமாம்
வீடு ஆக்கும்–மோக்ஷத்தைத் தரக்கூடிய
மெய் பொருள்தான்–மெய்யான உபாயமானயிருப்பவனும்
வேதம் முதல் பொருள் தான்–வேதங்களினால் முழு முதற் கடவுளாகப் பிரதிபாதிக்கப்படுபவனும்
விண்ணவர்க்கு–நித்ய ஸூரிகளுக்கு
நல் பொருள் தான்–போக்யமான வஸ்துவாயிருப்பவனும்
நாராயணன்–ஸ்ரீமந்நாராயணனே யாவன்.

மோக்ஷத்தை உண்டாக்கும் ஸாதனத்தை அறியாமல் சரீரத்தை
உபவாசாதிகளால் வருந்தப் பண்ணி குழையாக -அஸாரமாகச் செய்து
பட்டினியாய் இருந்து இதன் பலத்தை புஜிப்போம் என்று அத்யவசித்துத் திரிகிறவர்களே
வேதத்திலே பிரதானமாகச் சொல்லப்பட்ட வஸ்துவும்
நித்ய ஸூரிகளுக்கு விலக்ஷணமான புருஷார்த்தமும்
மோக்ஷத்தைத் தரும் பரம உபாயமும் ஸ்ரீ மன் நாராயணனாயே யாய் இருக்கும்-

வீடாக்கும் பெற்றி யறியாது–
மோஷத்தைப் தருவிக்கும் பிரகாரம் அறியாது

மெய் வருத்திக் கூடாக்கி நின்று உண்டு கொண்டு உழல்வீர்-
சிரகாலம் உண்ணாதே நின்று–
பின்பு ஜீவித்து-
இப்படி அனுஷ்டிப்போம் என்று நெஞ்சிலே-கொண்டு உழல்வீர் –

கொன்று உழல்வீர் -என்னில்
உங்களை ஹிம்சித்து உழல்வீர் என்றுமாம் –

வீடாக்கும் மெய்ப்பொருள் தான் –
மோஷத்தை உண்டாக்கும் அவயவஹீத சாதனம் –
(குறுக்கீடு இல்லாமல் நேராக
பக்தி யோகத்துக்கு சர்வேஸ்வரனை எதிர்பார்த்து இருக்க வேண்டுமே )

வேத முதல் பொருள் தான்-
மோஷ ப்ரதன் என்று வேதத்திலே பிரதிபாதிக்கப் படுமவன் –

(நாராயணம் –பாராயணம் –மேலான உபாயம் இவனே
உதாம்ருதத்வஸ்யா ஈஸாந -மோக்ஷத்துக்கு பிரபுவாய் இருப்பவன் இவனே
அம்ருதஸ்யைஷ சேது -இவனே மோக்ஷத்துக்குச் செல்லும் அணை
நார ஜீவ ஸமூஹம்
அயனம் உபாயமும் ப்ராப்யமும்
அடைவது அடைவிப்பது
அடைவது இதை
பாடவைத்து இதனால்
கதி -ஆலம்பனம் -)

விண்ணவர்க்கும் நற்பொருள் தான் –
நித்ய ஸூரிகளுக்கு பிராப்யன் ஆனவன் –

(தத் விஷ்ணோ பரமம் பதம் ஸதா பஸ்யந்தி ஸூரய -அவன் ஸ்வரூபத்தை எப்போதும் காண்கிறார்கள்
யோ தேவேப்ய ஆதபதி யோ தேவாநாம் புரோஹித -அநாதி காலமாக விண்ணவர்க்கு நற் பொருள் இவனே
அம்ருதத்ய ஏக சேது )

நாராயணன் –
சர்வேஸ்வரன் –

(எண் பெருக்கு அந்நலத்து ஒண் ஈறில வண் புகழ் நாரணன்
நாரணன் முழு ஏழு உலகுக்கும் நாதன்
காராயின காள நன் மேனியினன் நாராயணன்
நாராயணனே நமக்கே பறை தருவான்
நண்ணித் தொழுமவர் சிந்தை பிரியாத நாராயணா
நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் நாரணன் நீ என்னை அன்றி இல்லை
என்றே ஆழ்வார்கள் நாராயண சப்தார்த்தம் அருளிச் செய்வர் -)

அப்பிள்ளை உரை
மோக்ஷத்தை உண்டாக்கிக் தரும் சாதன பிரகாரத்தை உள்ளபடி அறிய மாட்டாதே
சரீரத்தை ஊண் வாட உண்ணாது -உபவாசாதிகளால்
ரத்தம் மாமிசம் இல்லாமல்
எலும்பு மட்டுமே பீர்க்கங்காய் போல்
உயிர் காவில் இட்டு பிராணன் இருக்க ஸ்வல்பம் உண்டு என்றபடி
உபாயாந்தரங்களை அனுஷ்டிப்போம் என்று நெஞ்சிலே கொண்டு
உங்களுக்கு மோக்ஷத்தை உண்டாக்கிக் தரும் வியவதான விளம்பம் இல்லாமல் நேராக பரமார்த்த உபாய பூதனாய்
ந்யாஸ இதி ப்ரஹ்மம்- வேதத்தால் ஸித்த உபாயம்
சர்வ உபாய ஸ்ரேஷிடம் ப்ரதிபாதிக்கப்பட்டு இருப்பவனாய்
ந்யாஸம் அதிரிக்தம் -என்று அவனே உயர்ந்த உபாயம் சொல்லி
மேலே ப்ராப்யம்
ஸதா பஸ்யந்தி ஸூர்ய –என்கிறபடியே பரமபத வாசிகளான ஸூரிகளுக்கு விலக்ஷண புருஷார்த்த பூதனாய்
நாராயண சப்த வாஸ்யமாய் இருக்கும்

இத்தால் சரணம் ஸூஹ்ருத் கதிர் நாராயண -ஸூபால உபநிஷத் அர்த்தம்
ஸ்ருத்யர்த்தம் சொல்லிற்று

நற்பொருள் ப்ராப்யம்
மெய்ப்பொருள் பிராப்பகம்
பெற்றி பிரகாரம்

————————————————————————–

(வீடாகும் மெய்ப்பொருள் தான் நாராயணன் என்று
இஷ்ட பிராப்தி கீழில் பாட்டில்
இதில் நாராயணன் என்னை ஆளி ஸம்ஸாரம் ஆகிற வெந்நரகம் சேராமல் காக்கும் திருமால்
என்று அநிஷ்ட நிவ்ருத்தி )

அப்பிள்ளை உரை அவதாரிகை
நாராயணனே ப்ராப்யம் பிராப்பகம் என்னில் உலகோர் பாக்ய ஹீனர்களாக
நீர் சொன்னவர்கள் நாட்டில் உளரோ
இருந்ததே குடியாக உபாயாந்தர பரராயும் தேவதாந்த்ர பரராயுமே அன்றோ
நாடு அடங்க கிடக்கிறார்கள் என்கிறார்

(கீழ் பாட்டில் அர்த்தம் சொல்லி நாராயணன்
இதில் நாராயணன் தொடங்கி அர்த்தம் )

நாராயணன் என்னை யாளி நரகத்துச்
சேராமல் காக்கும் திருமால் -தன் பேரான
பேசப் பெறாத பிணச் சமையர் பேசக் கேட்டு
ஆசைப்பட்டு ஆழ்வார் பலர்-14-

பதவுரை

நாராயணன்–நாராயணனென்றுந் திருநாம முடையவனும்
என்னை ஆளி–(விசேஷித்து) அடியேனை ஆட் கொள்பவனும்
நரகத்து சேராமல் காக்கும்–(அடியார்களை) நரகம் போக வொட்டாமல் காத்தருள்பவனுமான
திருமால் தன்–திருமாலினது
பேர் ஆன–திருநாமங்களாயுள்ளவற்றை
பேச பெறாத–ஸங்கீர்த்தநம் பண்ணும் பாக்கிய மற்றவர்களான
பிணம்–ஜீவச் சவமென்னலாம் படியுள்ள பாஹ்ய குத்தருஷ்டி மதஸ்தர்கள்
பேச–(அபார்த்தங்களைப்) பிதற்ற
கேட்டு-அவற்றைக் கேட்டு
பலர்–பல பேர்கள்
ஆசைப் பட்டு–தாங்களும் அப்படியே பாஹ்ய குத்ருஷ்டிகளாயொழிய விரும்பி
ஆழ்வார்–அகோ கதியை யடைந்தொழிவர்

ஸர்வ சேஷியாய்
என்னைப் பரி பாலநம் செய்பவனாய்
நரகத்தில் சேராத படி ரக்ஷிக்குமவனான ஸ்ரீ யபதி தன் திரு நாமங்களானவற்றை
அனுசந்திக்க பாக்யம் அல்லாத
பிணம் போன்ற மதத்தை யுடையவர்கள் சொல்லும் விபரீத அர்த்தங்களைக் கேட்டு
அதை ஆசைப்பட்டு அநேகர் முழுகிப் போவார்கள் –

நாராயணன் என்னை யாளி-
அகில ஜகத் ஸ்வாமின் அஸ்மின் ஸ்வாமின்

நரகத்துச் சேராமல் காக்கும் திருமால்
பிராட்டிக்கு பிரியமாக ஆஸ்ரிதரை சம்சாரத்தில்-ப்ரவேசியாமல் காக்குமவன்-

தன் பேரான பேசப் பெறாத
பிணச் சமையர் பேசக் கேட்டு  ஆசைப்பட்டு ஆழ்வார் பலர் –

இப்படி சர்வ ரக்ஷகனானவனுடைய  திரு நாமங்களைப் பேசப் பெறாதே –
ஜீவியா நிற்கச் செய்தே –
ம்ருதப் ப்ராயராய் இருக்கும் பாஹ்ய குத்ருஷ்டிகள்
வேறே ஓர் அர்த்தம் உண்டு என்று சூழக் கேட்டு-
(கர்மாதீனமாகப் பிறந்தோம் கிருபாதீனமாக உஜ்ஜீவிப்போம் என்பதை விட்டு
ப்ரயோஜனாந்தரங்களை நச்சி )
அனர்த்தப் படுவார் சிலர் உண்டு என்றும்-
பரம ப்ராப்யர் நாராயணன் என்றும்-உபபாதிக்கிறார்

(தேவோ நாம ஸஹஸ்ரவான்
பேர் ஆயிரம் கொண்டதோர் பீடு உடையன் நாராயணன்
பேரும் ஓர் ஆயிரம் பிற பல யுடைய எம்பெருமான் -என்று சொல்லப்படும்
திரு நாமங்களைப் பேசப் பெறாதே )

(யா வேத பாஹ்யா ஸ்ம்ருதயோ யாஸ் ச காஸ் ச குத்ருஷ்டய
ஸர்வாஸ்தா நிஷ் பலா ப்ரேத்ய தமோ நிஷ்டா ஹி தாஸ் ஸ்ம்ருதா –மநு –12-95–)

(ஆசைப் பட்டு –அவர்கள் சொன்னதைக் கேட்டு –
அவர்கள் உபாஸிக்கிற விஷயத்தை ஆசைப்பட்டு
ஆழ்வார் -அதிபதிப்பர் என்றபடி )

அப்பிள்ளை உரை
அனைத்து உலகும் உடையான் என்கிறபடியே
நார ஸப்த வாஸ்யரான ஸகல சேதனர்களுக்கும்
நிருபாதிக ஸ்வாமி யானவன்
என்னை யாளுடையான் என்கிறபடி
இவர்கள் எல்லாரும் ஒரு தட்டும் இவர் ஒரு தட்டும் என்னும்படி
விசேஷ கடாக்ஷம் பண்ணி
என்னை ஆண்டு கொண்டு போகும் ஸ்வாமியானவன்
ஆஸ்ரிதரான என் போல்வாரை ஸம்ஸார நிவ்ருத்தி பண்ணி அருளுவான்
ஆஸ்ரிதர் அல்லாதவர் கீழே தள்ளும் கீழே பார்த்தோம்
ஆஸ்ரித சம்ரக்ஷணம் பண்ணப் பெற்றால் உகக்கக் கடவ பெரிய பிராட்டியாருக்கு வல்லபனானவன்
தன்னுடைய ஸ்ரீ யபதித்தவம் முதலான ஸ்வ பாவங்களை அறிவிக்கும் வாசகமான
திரு நாமங்களை பேசப் பெறாத பாஹ்ய ஹீனராய்
வியபகத -இழந்த -பிராணராய்- சவம் போல் இருந்து விபரீத சமய நிஷ்டர் -புற சமயிகள்
ஸூ கபோல கல்பிதங்களாக கத்துகிற வேத விருத்தமான அர்த்தங்களை
சாதரமாக செவி மடுத்துக் கேட்டு
(கலையறக் கற்ற மாந்தர் காண்பாரோ கேட்பரோ தாம்
கூரத்தாழ்வார் ஆழ்வானுக்கு சொன்னது உண்டே )
அவ்வர்த்தம் நமக்குக் கை வர வேண்டும் என்று ஆசைப்பட்டு அதிபதித்துப் போவார்
சம்சாரத்தில் ஆழ்ந்து போவார் பலரும் உளர் -ஆழ்வார்கள்
அவற்றைக் கேட்டு கால் ஆளும் நெஞ்சு அழியும் என்று பகவத் விஷயத்தில்
ஈடுபாடுவார்கள் போல் இவற்றில் இவர்கள் ஈடுபடுவார்கள் -ஆழ்ந்து போவார்கள் -என்றுமாம்

————————————————————————–

வேறே ஆஸ்ரயணீயர் இல்லை என்று தோற்றி நின்றவன் திருவடிகளிலே
வேறே ஆஸ்ரயணீயராக நினைத்தவர்கள் செய்கிற தொழிலை
அவ்யஹிதமாகத்
தாங்கள் செய்ய வல்லார் சிலர் என்கிறார் –

(ஆரோக்யம் பாஸ்கரன் ஐஸ்வர்யம் அக்னி தேவன் -ஞானம் ருத்ரன் -மோக்ஷம் ஜனார்த்தனன்
ஸ்ரீ மன் நாராயணனே மோக்ஷ ப்ரதன் என்னும் ஞானம் கொடுப்பான் என்பதைக் கண்டார் மார்க்கண்டேயர்
உலகு அளந்த பொன்னடியே அடைந்து உய்ந்தேன்
நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான் -நம்மாழ்வார் )

அப்பிள்ளை உரை அவதாரிகை
ஈஸ ஈஸிதவ்ய விபாகம் இல்லாமல் வாசியற எல்லார் தலையிலும் திருவடிகளை வைத்து
தானே ஆஸ்ரயணீயன் என்னும் இடத்தை காட்டின சர்வேஸ்வரன் திருவடிகளை
நீங்கள் பற்றி இருக்கும் தேவதைகள் ஆஸ்ரயிக்கும் பிரகாரம் போல்
நீங்களும் ஆஸ்ரயணீயராக வல்லீர்கள் ஆகில்
தேவர் வழியாக மார்க்கண்டேயன் பெற்ற பேறு உங்களுக்கு
அவ்யவதானே தடங்கல் இல்லாமல் வந்து கிட்டும் என்கிறார்

பல தேவர் ஏத்தப் படி கடந்தான் பாதம்
மலர் ஏற விட்டு இறைஞ்சி வாழ்த்த -வலர் ஆகில்
மார்க்கண்டன் கண்ட வகையே வரும் கண்டீர்
நீர்க்கண்டன் கண்ட நிலை-15-

பதவுரை

பல தேவர்–பல தேவர்கள்
ஏத்த–துதிக்கும்படியாக
படி–பூமியை
கடந்தான்–அளந்தவனான ஸர்வேச்வரனுடைய
பாதம்–திருவடிகளிலே
மலர்–புஷ்பங்களை
ஏற விட்டு–ஸமர்ப்பித்து
இறைஞ்சி–வணங்கி
வாழ்த்த வலர் ஆகில்–மங்களாசாஸநம் பண்ண வல்லவர்களானால்,
நீர் கண்டன் கண்ட நிலை–நீலகண்டனாகிய ருத்ரனிடத்தில் காணத் தக்க நிலைமை
மார்க்கண்டன் கண்ட வகையே–மார்க்கண்டேயன் ப்ரத்யக்ஷமாகக் கண்ட விதமாகவே
வரும் கண்டீர்–ஸித்திக்குங்கிடீர்

பல தேவர் ஏத்தப் படி கடந்தான் பாதம்
என்கையாலே ஆஸ்ரயணீய வஸ்து இவன் என்று அறுதியிட்டு

(சங்கைஸ் ஸூராணாம் திவி பூதலஸ்தைஸ் ததா மனுஷ்யைர் ககநே ச கேஸரை
ஸ்துத க்ரமான் ய ப்ரஸகார ஸர்வதா மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி —
ஸ்ரீ விஷ்ணு தர்மம் மங்கள்ய ஸ்தவம் கோஷிக்குமே
குறை கொண்டு நான்முகன் குண்டிகை நீர் பெய்து மறை கொண்ட மந்திரத்தால் வாழ்த்தி
என்னும் போது பல தேவர் ஏத்தச் சொல்ல வேணுமோ
ஈஸ்வரோஹம் என்பவர்களும் ஸ்வரூபத்தை உணர்ந்து ஸ்துதிக்கிறார்கள் திருவடி ஸ்பர்சத்தாலே
அன்று இவ்வுலகு அளந்தான் அடி போற்றி )

மலர் ஏற இட்டு இறைஞ்சி வாழ்த்த -வலர் ஆகில்
என்கையாலே தாங்கள் ஆஸ்ரயணீயராக நினைத்தவர்கள் செய்கிற செயலைத்
தாங்களும் செய்ய வல்லராகில்

மார்க்கண்டன் கண்ட வகையே வரும் கண்டீர் நீர்க் கண்டன் கண்ட நிலை–
மார்க்கண்டேயன் தேவனை மோஷார்த்தமாக சென்று ஆஸ்ரயிக்க
மோக்ஷ ப்ரதன் ஈஸ்வரனே என்று ருத்ரன் காட்டக் கண்டு
இதுவே இவனுக்கு உள்ளது என்று மார்க்கண்டேயன் கண்ட வகையே அநுஸந்திக்கும்
அவ்யஹிதமாக ஸர்வேஸ்வரன் திருவடிகளை ஆஸ்ரயிக்க வல்லவர் ஆகில்
மார்க்கண்டேயன் கண்ட வகையே ஸித்திக்கும் –

(ஸ்ரீ மத் பாகவதம் 12 ஸ்கந்தத்திலும் -ஆராதயன் ஹ்ருஷீகேசம் ஜிஹ்யே ம்ருத்யும் ஸூ துர் ஜெயம் –

ஸ்ரீ மஹா பாரதம் ஆரண்ய பர்வதத்திலும்

புக்க அடிமையினால் தன்னைக் கண்ட மார்க்கண்டேயன் அவனும்
நக்க பிரானும் அன்று உய்யக்கொண்டது நாராயணன் அருளே -திருவாய் -4-10-8-

மார்கண்டேயனும் கரிய –திருவாய் -5-2-7-

கண்டு தெளிந்தும் கற்றார் கண்ணற்கு ஆளன்றி ஆவரோ?
வண்டுண் மலர்த் தொங்கல் மார்க்கண்டேயனுக்கு வாழு நாள்
இண்டைச் சடை முடி ஈசன் உடன்கொண்டு உசாச் செல்லக்
கொண்டங்குத் தன்னொடுங் கொண்டு உடன் சென்றது உணர்ந்துமே.–7-5-7-

மன்னு நான்மறை மா முனி பெற்ற மைந்தனை மதியாத வெங்கூற்றன்
தன்னை யஞ்சி நின் சரண் எனச் சரணாய் தகவில் காலனை யுக முனிந்து ஒழியாப்
பின்னை என்றும் நின் திருவடிப் பிரியா வண்ணம் எண்ணிய பேரருள் எனக்கும்
அன்னதாகும் என்று அடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே –ஸ்ரீ பெரிய திருமொழியில் –5-8-6-)

அப்பிள்ளை உரை
ப்ரஹ்மாதிகள் எல்லாரும் வாய் விட்டு புகழும்படி
பூம் யாதி லோகங்களை அநாயாசேன அளந்து கொண்ட சர்வேஸ்வரனுடைய திருவடிகளிலே
செவ்விப்பூக்களை சமர்ப்பித்து கைகளால் பரிமாறி
தலையால் வணங்கி
வாயாலே மங்களா சாசனம் பண்ணி
ஸ்துதிக்க வல்லார் ஆகில்
(இங்கு சிலரே கிட்டுவார்கள் -கீழே ஆழ்வார் பலர் -இது துர்லபம் தானே
வாழாட் பட்டு நின்றீர் உள்ளீரேல் போல் இங்கும்-கூழாட் பட்டு நின்றார் பலர் உண்டே அங்கும் )
விஷ ஜலத்தை கண்டத்தில் உடைய ருத்ரன் சர்வேஸ்வரனை ஆஸ்ரயித்து
தன்னிஷ்டனாய் நின்ற நிலையை
அவன் புருஷகாரமாக கண்டு
தத் ஸமாச்ரயணம் பண்ணிப் பெற்ற பிரகாரத்தில்
உங்களையும் அவ்யவதாநேன நேராக வந்து கிட்டும் கிடீர்

இத்தால்
தேவதாந்தரங்களை ஆஸ்ரயித்தாலும் அவர்கள்
அவன் கையிலே காட்டிக் கொடுத்து ரஷிப்பது ஒழிய தாங்களாக ரஷிக்க வல்லார்களால் அல்லர்
ஆன பின்பு அவர்களை விட்டு அவ்யவதாநேன நேராகப் பற்றிப் பிழைத்துப் போகலாம் என்கிறார்

———

(கீழே தன்னை ஆஸ்ரயித்த ருத்ரன் அவன் இடம் காட்டிக் கொடுத்தது
இதில் தன்னை ஆஸ்ரயித்தாரை தானே அழிய மாறியும் ரஷிப்பான் என்கிறார் )

ஸர்வேஸ்வரனை ஆஸ்ரித அர்த்தமாகக் கண்டது என்று அறிந்த படியால்
பறக்கிறது ஒன்றிலே பாரம் வைத்தால் போலே
சஞ்சலம் ஹி மனஸ் கிருஷ்ண ப்ரமாதி பலவத் த்ருடம்
தஸ்யாஹம் நிக்ரஹம் மன்யே வாயோரிவ ஸூ துஷ்கரம்– கீதை -6-34-என்று
சொல்லப்படுகிற நெஞ்சம் நிலை பெற்றது
பிராப்தி தசையிலே பிறக்குமது இங்கே இருக்கவே பிறந்தது

அப்பிள்ளை உரை அவதாரிகை
உமக்கு தரிப்பு எத்தாலே என்ன
அவனுடைய ஆஸ்ரித பக்ஷ பாதத்தையே நினைத்துத் தரித்தேன் என்கிறார்

நிலை மன்னும் என் நெஞ்சம் அந் நான்று தேவர்
தலை மன்னர் தாமே மாற்றாக -பல மன்னர்
போர் மாள வெம் கதிரோன் மாய பொழில் மறைய
தேர் ஆழியாள் மறைத்தாரால்-16-

பதவுரை

அந்நான்று–பாரத யுத்தம் நடந்த அக்காலத்து
தேவர் தலை மன்னர் தாமே–தேவாதி தேவனான தானே
மாற்று ஆக–எதிரியாயிருந்து கொண்டு
தானே நடத்து விஜயன் பெயர் அவர்களுக்கு கொடுத்தான் அன்றோ
பல மன்னர்–பல அரசர்கள்
போர்–யுத்தக் களத்தில்
மாள–மடிந்து
வெம் கதிரோன்–ஸூர்யன்
மாய–(அக் காலத்தில்) அஸ்தமிக்கும்படி யாகவும்
பொழில் மறைய–பூ மண்டலம் முழுதும் இருள் மூடும்படியாகவும்
பொழில் பூமி –
பொழில் மறைய-பூமி அடைய ஆதித்ய கிரணம் மறையவும்-என்றபடி
இங்கு இரவு அங்கு பகல் என்றும் சொல்ல முடியாமல் முழுவதுமே இருட்டாகும் படி
தேர் ஆழியால்–சக்கராயுதத்தினால்
மறைத்தாரால் (ஸூர்யனை) மறைத்த பெருமானாலே
என் நெஞ்சம்–எனது (சஞ்சலமான) மனமானது
நிலை மன்னும்–சலிப்பற்று நிலை நிற்கப் பெற்றது.

பாண்டவ சத்ருக்கள் தனக்கு சத்ருக்களாகவும்-பல மன்னர் முடியும்படி யாகவும்
பீஷோ தேதி சூர்யா -என்று தன் ஆஞ்ஞையாலே
ஒரு முகூர்த்தம் தப்பாமல் உதிப்பது அஸ்தமிப்பது-ஆகிற ஆதித்யன் மறையவும் –
எதிரிகளுக்கு இவ்விடத்தல் அஸ்தமித்தது இல்லை என்று
குறை சொல்லப் போகாதபடி பூமி அடைய மறையவும் –
ஆதித்யனை பிரகாசமான திரு ஆழியாலே மறைத்தார்-ஆனவராலே என்நெஞ்சம் ஸ்திதித்தது

நிலை மன்னும் என் நெஞ்சம்
ஸர்வேஸ்வரனை ஆஸ்ரித அர்த்தமாகக் கண்டது என்று அறிந்த படியால்
பறக்கிறது ஒன்றிலே பாரம் வைத்தால் போலே
சஞ்சலம் ஹி மனஸ் கிருஷ்ண ப்ரமாதி பலவத் த்ருடம்
தஸ்யாஹம் நிக்ரஹம் மன்யே வாயோரிவ ஸூ துஷ்கரம் –கீதை -6-34-என்று
சொல்லப்படுகிற நெஞ்சம் நிலை பெற்றது
பிராப்தி தசையிலே பிறக்குமது இங்கே இருக்கவே பிறந்தது
நான் ஹ்ருஷீகேசன் இந்திரியங்களை என்னிடம் வைத்து நிலை நிற்கப் பார் என்றானே

(ந தே ரூபம் ந ச ஆகாரோ ந ஆயுதாநி ந ச ஆஸ்பதம்
ததாபி புருஷாகாரோ பக்தாநாம் தவம் ப்ரகாஸசே -என்று
இப்படி பக்தப் பராதீனனாய் இருந்தும் பரம புருஷனாக பிரகாசிக்கிறாய்

பரிஜன பரி பர்ஹா பூஷணாநி ஆயுதாநி ப்ரவர குண கணாச்ச ஞான சக்த்யாதயஸ்தே
பரமபதம் அத அண்டானி ஆத்ம தேஹஸ் ததாத்மா வரத சகலமேதத் சம்ஸ்ரிதார்த்தம் சகர்த்த -ஸ்ரீ வரத ராஜ ஸ்தவம் -–63-

ஹே வரத
பரிஜன-சேஷ சேஷாசநாதி பரிஜனங்களும்
பரி பர்ஹா -சத்ர சாமராதி பரிச் சதங்களும்
பூஷணாநி –கிரீட குண்டலாதி பூஷணங்களும்
ஆயுதாநி –திரு ஆழி திருச்சங்கு முதலிய திவ்ய ஆயுதங்களும்
ஞான சக்த்யாதயஸ் தே ப்ரவர குண கணாச்ச –ஞான சக்தி முதலிய ப்ரசித்தங்களான
சிறந்த குண கணங்களும்
பரமபதம் –பரமபதமும்
அத அண்டானி -அண்டங்களும்
ஆத்ம தேஹஸ் -ஸ்வ அசாதாரண விக்ரஹமும்
ததாத்மா –திவ்ய ஆத்ம ஸ்வரூபமும்
சகலமேதத் –ஆகிய இவை எல்லாவற்றையும்
சம்ஸ்ரிதார்த்தம் சகர்த்த –ஆஸ்ரிதர்களுக்கு ஆக்கினாய்

அந் நான்று
பாரத ஸமரத்திலே

தேவர் தலை மன்னர்
ராஜாதி ராஜஸ் ஸர்வேஷாம் என்று சொல்லப்படுகிற
அயர்வறும் அமரர்கள் அதிபதி

(தமீஸ்வரணாம் பரமம் மஹேஸ்வரம் தம் தேவதா நாம் பரமஞ்ச தைவதம் -ஸ்வேதா –6-7-
ராஜாதி ராஜஸ் ஸர்வேஷாம் விஷ்ணுர் ப்ரஹ்ம மயோ மஹான்
ஈஸ்வரம் தம் விஜா நீமஸ் ஸ பிதா ஸ ப்ரஜாபதி –மஹா பாரதம் )

தாமே மாற்றாக இத்யாதி
த்விஷத் அன்னம் இத்யாதிப்படியே
(த்விஷத் அன்னம் ந போக்த்வயம் த்விஷந்தம் நைவ போஜயேத்
பாண்டவான் த்விஷ ஸே ராஜன் மம ப்ராணா ஹி பாண்டவ )
பாண்டவ சத்ருக்கள் தனக்கு சத்ருக்களாகவும்
மன்னர்கள் முடியும்படியாகவும்

பீஷோ தேதி ஸூர்ய–(தைத்ரியம் )என்று தன் ஆஜ்ஜையாலே
ஒரு முஹூர்த்தம் தப்பாமல் உதிப்பது அஸ்தமிப்பது ஆகிற ஆதித்யம் மறையவும்
எதிரிகளுக்கு இவ்விடத்திலே அஸ்தமித்தது இல்லை என்று குறை சொல்லப் போகாத படி பூமி யடைய மறையவும்
ஆதித்யனை பிரகாசகமான திருவாழியாலே மறைத்தவரானவராலே என் நெஞ்சம் ஸ்தித்தது
(ஸ்திதோஸ்மை கரிஷ்யே வசனம் தவ கடைசியில் அர்ஜுனனுக்கு )

நித்ய ஸூரிகளுக்கு அவ்வருகாய்-
சத்ய காமஸ் சத்ய சங்கல்ப (சாந்தோக்யம் அஷ்ட குணங்களை சொல்லுமே ) என்று ஒதப்படுகிற தாமே
தமக்குத் தகாதபடியான பொய்யாய்ச் செய்கையாலே-என் நெஞ்சு ஸ்திதித்தது-

ஈஸ்வரன் அசத்திய பிரதிஞ்ஞனாய்-ரஷிப்பான் ஆன பின்பு
நம்முடைய  சத்ய தபஸ் சமாதிகளைக் கொண்டு என் என்கை

(புல்லாணி எம்பெருமான் பொய் கேட்டு இருப்பேனே
பெருமாள் ஸத்ய வாக்கியமும் கண்ணபிரான் பொய்யும் நமக்குத் தஞ்சம் )

ந்யாசோ நாம பகவதி -(ந்யாஸமே ப்ரஹ்மம் ) -இஸ் ஸ்லோகத்தில் நினைத்த உரம்
இப் பாட்டால் சொல்லுகிறது-

அப் பிள்ளை உரை
பாரத சமரம் ப்ரவர்த்தமான அந்த நாளிலே
பக்தானாம் த்வம் பிரகாசதே
கூரத்தாழ்வான் -அடியார்களுக்காகவே சகலமும் சம் ஸ்ரிரார்த்தம்
நித்ய ஸூரிகளுக்குத் தலைவரான ராஜாதி ராஜாவான
த்வஷ் அன்னம் இத்யாதி
ஆஸ்ரித பாண்டவர் சத்ருக்களான துரியோதனாதிகள் நசிக்கும்படியாகவும்
பகவத் ஆஜ்ஜையாலே முப்பது வட்டத்தில் உதிப்பது அஸ்தமிக்கக் கடவ
உஷ்ண கிரண விசிஷ்டமான ஆதித்யன் அஸ்தமிக்கும் படி
இவ் விடத்தில் அஸ்தமிக்க வில்லை என்று குறை வராதபடி பூமி அடங்கலும் -பொழில் –
ஆதித்யனை விட தேஜஸ்ஸூ மிக்க திருவாழியாலே இரவாக்கி
ஆயுதம் எடேன் என்று சொல்லியும் எடுத்து
ஆஸ்ரித பஷபாதம் அறிந்து
நெஞ்சானது பரபரப்பு இல்லாமல் குளிர்ந்து தரித்து நிலை பெற்றது

———————————————————

ஞானாதிகனான ருத்ரனும் தன்னை-ஆஸ்ரயித்தவர்களுக்கு
இவ்வர்த்தத்தை இறே சொல்லிற்று-என்கிறார்

அப்பிள்ளை உரை அவதாரிகை
நானே அன்றிக்கே
ஞானாதிகனான ருத்ரனும் தன்னை ஆஸ்ரயித்து ஆப்தரான சிஷ்யர்களுக்கு
(சிஷ்யர்களுக்கு -ஆஸ்ரயித்தவர் -மேலும் ஆப்தர் -மூன்றும் இவர்களுக்கு-உண்மையான உபதேசம் )
இவ்வர்த்தத்தை இறே சொல்லிற்று என்கிறார் –

ஆல நிழல் கீழ் அற நெறியை நால்வர்க்கு
மேலை யுகத்து உரைத்தான் மெய்த்தவத்தோன் -ஞாலம்
அளந்தானை ஆழிக் கிடந்தானை ஆல் மேல்
வளர்ந்தானைத தான் வணங்குமாறு -17-

பதவுரை

மெய் தவத்தோன்–மெய்யான தவ நெறியை யுடையனான ருத்ரன்,
ஞாலம் அளந்தானை–உலகளந்தவனும்
ஆழிக் கிடந்தானை–க்ஷீராப்தி சாயியும்
ஆல் மேல் வளர்ந்தானை–ஆலிலே மேல் கண் வளர்ந்தவனை
தான் வணங்கும் ஆறு–தான் வழிபடும் மார்க்கமாகிய
அறம் நெறியை–நல் வழியை
மேலை யுகத்து–முன் யுகத்திலே
ஆல நிழல்கீழ்–ஓர் ஆல மரத்தின் நிழலிலே
நால்வர்க்கு–நான்கு மஹர்ஷிகளுக்கு
உரைத்தான் உபதேசித்தான்.

ஸத்யமான தபஸ்ஸை யுடைய ருத்ரன்
பூமியை அளந்தவனாய்
திருப்பாற் கடலிலே பள்ளி கொண்டவனாய்
ஆலந்தளிரிலே கண் வளர்ந்தவனான ஸர்வேஸ்வரனைத் தான் ஆஸ்ரயித்த விதமான
தர்ம மார்க்கத்தை முன் யுகத்திலே வட வ்ருக்ஷத்தின் சாயையிலே
அகஸ்த்ய புலஸ்த்ய தக்ஷ மார்க்கண்டேயர் களான நால்வருக்கும் உபதேசித்தான் –
(மார்க்கண்டேயர் இங்கு இல்லாமல் -கஸ்யபர் என்றும் சொல்வார் )

ஆல நிழல் கீழ் அற நெறியை நால்வர்க்கு மேலை யுகத்து உரைத்தான் மெய்த் தவத்தோன்-
பகவத் பஜனத்தில் அனுஷ்டிதமான
அனுஷ்டானத்தை உடைய ருத்ரன்-
ஆல நிழலிலே அகஸ்த்யாதிகளுக்கு
தர்ம மார்க்கத்தைப் பண்டு சொன்னான் –

சொன்ன படி எங்கனே என்னில் –
-ஞாலம் அளந்தானை ஆழிக் கிடந்தானை ஆல் மேல் வளர்ந்தானைத
தான் வணங்குமாறு
(அர்த்த க்ரமத்தால் பாடக் க்ரமத்தை மாற்றி ஆழிக் கிடந்தானை -முதலில் கொண்டு வியாக்யானம் )
அவதாரத்துக்கு அடியாக திருப் பாற் கடலிலே வந்து-கண் வளர்ந்து
சிறியார் பெரியார் என்ற வாசி வையாதே
எல்லார் தலைகளிலும் ஒக்கத் திருவடிகளை வரையாதே வைத்து
வரையாதே எல்லாரையும் தன் வயிற்றிலே வைத்து-
பவனாய்  இருப்பதொரு ஆலிலையிலே கண் வளர்ந்து
ரஷிக்குமவனை-
தான் வணங்கும் பிரகாரத்தைச் சொன்னான்-

(ஈஸ்வராத் ஞானம் அநந் விச்சேன் மோக்ஷம் இச்சேத் ஜனார்த்தநாத் -என்னும்
அர்த்தத்தை இம் மூன்று பாசுரங்களாலும் அனுபவித்தார் ஆயிற்று )

அப்பிள்ளை உரை
ரஜஸ் தமஸ் காலுஷ்யம் அற்று
ஸத்வ குணம் வளர்ந்து இருக்கும் அவஸ்தையில் -ஸத்வ சம்பன்னனாய்க் கொண்டு
பகவத் தத்வ யாதாத்மா ஞானம் சித்திக்க
அனுஷ்டித்த தபஸ்ஸூ -இதுவே மெய் தவம்
தபஸ் பலமாகப் பெற்ற யதார்த்த ஞானம் அடியாக
அவதாரத்துக்கு அடியாக திருப்பாற் கடலில் கண் வளர்ந்து
யோக்யம் அயோக்யம் வாசி இல்லாமல் வரையாதே திருவடிகளை வைத்து உலகு அளந்து
மேலும்
வரையாதே எல்லாவற்றையும் திரு வயிற்றிலே வைத்து
பாவனாய் இருக்கும் ஆலிலை தளிர் மேல் கண் வளர்ந்து இருக்கும் சர்வாதிகன்-ஸர்வேஸ்வரன் -ரக்ஷகனை
தான் ஆஸ்யித்த பிரகாரம் – உபாசன தர்ம மார்க்கத்தை
நான்கு சிஷ்யர்களுக்கு -அகஸ்தியர் புலஸ்தியர் தக்ஷர் மார்க்கண்டேயர் –
ஆகம பிரசித்தமான வட வ்ருஷ சாயையிலே ஆல மர நிழலிலே இருந்து பூர்வ யுகத்தில் உபதேசித்தான்

—————————————————————

(ஆல் மேல் வளர்ந்தானைத் தான் வணங்குமாறு –உரைத்தான் என்றதும்
எம்பெருமானை ஆஸ்ரயிப்பது தான் மேலான உபாயமோ என்று சிலர் கேட்க
அவன் அடியார்களைப் பற்றி இருப்பது அதிலும் சாலச் சிறந்தது என்கிறார் இதில் -)

குறி கொண்டு பகவானையே பஜிக்கும் அதிலும்-
ததீயரைப் (புருஷகாரமாகக் கொண்டு)
பற்றுகை சீரீயது என்கிறார்

(இப் பாட்டின் பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியான அவதாரிகையில்
“பகவனையே பஜிக்குமதிலும் ததீயரைப் புருஷகாரமாகக் கொண்டு பற்றுகை சீரியதென்கிறார்“ என்ற
(அச்சுப்பிரதி களிற் காணும்) வாக்கியம் பிழையுடையது,
“புருஷகாரமாகக் கொண்டு“ என்கிற வாக்கியம் ஏட்டுப் பிரதிகளில் காண்பரிது, சேரவும் மாட்டாது.
“பகவானையே பூஜிக்குமதிலும் ததீயரைப் பற்றுகை சீரியதென்கிறார்“ என்னுமளவே உள்ளது.
“ததீயரைப் புருஷகாரமாகப் பற்றுதல் சிறந்தது“ என்கிற அர்த்தமன்று இப் பாட்டுக்கு விஷயம்,
“ததீயரை உத்தேச்யராகப் பற்றுதல் சிறந்தது“ என்னுமர்த்தமே இப் பாட்டுக்குச் சீவன்.)–ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள்

அப்பிள்ளை உரை அவதாரிகை
ஆஸ்ரித வத்சலனான எம்பெருமானை ஆஸ்ரயிப்பதிலும்
அவனை ஆஸ்ரயித்து இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களை ஆஸ்ரயிப்பதே சாலச் சீரியது
ததீயரைப் பற்றுவதே சீரியது -என்கிறார் –

மாறாய தானவனை வள்ளுகிரால் மார்பிரண்டு
கூறாகக் கீறிய கோளரியை -வேறாக
ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்று அவரைச்
சாத்தி இருப்பார் தவம்–18-

பதவுரை

மாறு ஆய–எதிரிட்டு நின்ற
தானவனை–ஹிரண்யாஸுரனுடைய
மார்வு–மார்வை
வள் உகிரால்–கூர்மையான நகங்களினால்
இரண்டு கூறு ஆக கீறிய–இரு பிளவாகப் பிளந்த
கோள் அரியை–பெரு மிடுக்கனான நரசிங்க மூர்த்தியை
வேறு ஆக–விலக்ஷணமாக
ஏத்தி இருப்பாரை–துதித்து பகவத் விஷயத்தில் ஆழ்ந்திருக்குமவர்களை,
மற்று அவரை சாத்தி இருப்பார் தவம் வெல்லுமே–அந்த ஸ்ரீவைஷ்ணவர்களை ஆஸ்ரயித்திருக்கும்
சரம அதிகாரிகளின் நிஷ்டைவென்று விடும்

ஸத்ருவான ஹிரண்யாசூரனுடைய மார்பைக் கூரிய நகங்களினால்
இரண்டு பிளவாகப் பிளந்த பலத்தை யுடைய நரஸிம்ஹனை
விலக்ஷணமாக ஸ்தோத்ரம் பண்ணி இருப்பவர்களை
அப்படி ஸ்தோத்ரம் பண்ணுகிற விலக்ஷனரான ஸ்ரீ வைஷ்ணவர்களை
ஸ்தோத்ரம் பண்ணுகிற ஸ்ரீ வைஷ்ணவர்கள் தபஸ்ஸூ ஜெயிக்கும் –

மாறாய தானவனை வள்ளுகிரால் மார்பிரண்டு கூறாகக் கீறிய கோளரியை
ஈஸ்வரன் என்று பாராதே-தனக்கு எதிரியான ஹிரண்யனை-
கூரிய உகிராலே மார்விரண்டு பிளவாகக் கீண்ட-நரசிம்ஹத்தை

(ஸர்வேஸ்வரனான தனக்கும் எதிரியாய் தன்னையே சர்வேஸ்வரனாக நினைத்து வந்தவனை
கடைசி வரையில் எதிரியாகவே நினை நிற்ற ஹிரண்யாசூரனை
கைக் கொள்ள ஒரு கரணம் போதும்
கொல்ல முக்கரண வெறுப்பு உள்ளதா என்று பார்ப்பான்
கச்ச அநு ஜாமி -இன்று போய் நாளை வா -என்று முயன்று பார்த்து
கடைசி வரையிலே எதிரியாகவே நிலை நின்றவர்களைத் தானே இவன் நிரசிப்பது –
மநோ வாக் காயங்கள் மூன்றினாலும் நிலை நின்றவர்களை மட்டுமே இவன் நிரசிப்பது

உன்னைத் சிந்தையினால் இகழ்ந்த இரணியன் அகல் மார்பம் கீண்ட என் முன்னைக் கோளரியே –திருவாய் –2-8-6-
கைக்கொள்ளும் போது யுக்தி மாத்ரமே போதும்
கை விடும் போது நெஞ்சாலே த்வேஷித்தால் அல்லது விடான்

ஞானீ த்வாத்வை மே மதம் —மம ப்ராணா ஹி பாண்டவ -தன் உயிர் நிலையில் நலிந்த அசுரனை
தன் மேல் அம்பு பட்ட போது க்ரோதம் ஆஹாரயத் தீவ்ரம் -கோபத்தை வரவழைத்துக் கொள்ள வேண்டி இருக்க
திருவடியின் மேல் அம்பு பட்ட போது
அத ராமோ மஹா தேஜோ ராவணேந க்ருத வ்ரணம்
த்ருஷ்ட்வா ப்லகசார்தூலம் கோபஸ்ய வஸமே யிவான் –யுத்த –59-136–கோப வசப்பட்டாரே பெருமாள்
இவன் நெஞ்சிலாவது சிறிது ஆனுகூல்யம் உள்ளதோ என்று அன்றோ
உளம் தொட்டு இரணியன் ஒண் மார்பகலம் பிளந்திட்டான் )

வேறாக ஏத்தி இருப்பாரை –
வேறாக ஏத்தி இருப்பார் ஆகிறார் –
அந்தியம் போதில் அரி உருவாகி அரியை அழித்தவனைப் பல்லாண்டு -என்று-
ரஷகனுக்கு தீங்கு வருகிறது என்று திருப் பல்லாண்டு பாடும் பெரியாழ்வார் போல்வார்

வெல்லுமே மற்று அவரைச் சாத்தி இருப்பார் தவம்
சாத்தி இருப்பார் ஆகிறார் –
வல்ல பரிசு வரிவிப்பரேல் -என்று-
பெரியாழ்வார் பக்கலிலே ந்யஸ்த்த பரராய் இருக்கும்
ஆண்டாள் போல்வார்

தவம் -ஸூஹ்ருதம்-

(கையைப் பற்றி அபேக்ஷித்தால் மறுக்கலாம்
காலைப் பற்றி அபேக்ஷிக்க மறுக்க முடியாது அன்றோ
அடியார்கள் திருவடி ஸ்தானம் அன்றோ
சித்திர் பவதி வா நேதி சம்சயோ அச்யுத சேவிதாம்
ந சம்சயோ அஸ்தி தத் பக்த பரிசர்யார தாத்ம நாம் –பரமார்த்தம் இப் பாசுர தாத்பர்யம் )

அப்பிள்ளை உரை
சர்வேஸ்வரன் என்று பாராதே
ஆஸ்ரித எதிரியான
வர பலத்தால் பூண் கட்டி இருக்கும் ஹிரண்யனை தனக்கும் எதிரியாகவே கொண்டு
கூரிய நகத்தால் உலர்ந்த வாடின கோரைப்புல்லை கிழிக்குமா போலே மார்பகலம் பிளந்த நரஸிம்ஹ மூர்த்தியை
அந்தியம் போதில் அரியுருவாய் –பல்லாண்டு -என்று
பெரியாழ்வார் போல் மங்களா சாசன பரராய் -வேறாக வியாவ்ருத்தமாய் அநந்ய ப்ரயோஜனராய் ஏத்தி இருப்பாரை
வல்ல பரிசு தருவிப்பரேல் –என்ற
ஆழ்வார் திருமகளார் போல்
ஸ்ரீ வைஷ்ணவர்களை ஆபாஸ்ரயமாகப் பற்றும் – ந்யஸ்த பரராய் -சரம அதிகாரிகளுடைய தபஸ்ஸூ வெல்லும் –
சாத்தி இருப்பார் என்றது ந்யஸ்த பரராய் இருப்பவர்கள்-சரம அதிகாரிகள் -என்றபடி
இந்த பாகவத அபிமான நிஷ்டைக்கு அடியான
பகவத் விஷயீ காரமான தபஸ்ஸூ -ஸூஹ்ருதம் –

(பரகத ஸ்வீ காரம் ஆகிற பரம உபாயத்துக்கு பிரமாணங்கள் பலவற்றையும் –
தர்சிப்பித்து அருளுகிறார் –

1-நல்ல வென் தோழி –
2-மாறாய தானவனை – என்கிற பாட்டுக்களையும் –
3-ஸ்தோத்ர ரத்னத்தில்-முடிந்த ஸ்லோகத்தையும் –
4-பசுர் மனுஷ்ய -என்கிற ஸ்லோகத்தையும் –
இதுக்கு பிரமாணமாக அனுசந்திப்பது –ஸ்ரீ வசன பூஷணம்–சூரணை -460-)
( பர கத ஸ்வீகார ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் என்ற இதுக்கு )

(பிரேம பிரகர்ஷத்துக்கு அடியான -ஆத்ம யாதாத்ம்ய ஞானத்தை உடையராய் –
வித்தையாலும் -ஜன்மத்தாலும் -அடியேனுக்கு பிதா மகராய் இருக்கிற -நாத முனிகளைப் பார்த்து –
அடியேனுடைய விருத்தத்தைப் பாராதே -பிரசன்னராய் அருள வேணும் -என்று
பரம ஆசார்யான ஆளவந்தார் அருளிச் செய்த –
வேதாந்த தாத்பர்யமான -ஸ்தோத்ர ரத்னத்தில் -சரமமான ஸ்லோகத்தையும் )

(ததீய அபிமானமே உத்தாரகம் –
என்னும் இடத்தை ஸூஸ்பஷ்டமாக சொல்லுகிற -பசுர் மனுஷ்ய பஷீ வா ஏச வைஷ்ணவ சம்ஸ்ரயா
தேனை வதே பிரயாச்யந்தி தத் விஷ்ணோ பரமம் பதம் -என்கிற பௌராணிக ஸ்லோகத்தையும் )

பெரியாழ்வார் -ஆண்டாள்
நம்மாழ்வார் -மதுரகவி ஆழ்வார்
ராமானுஜர் -வடுக நம்பி
உண்ட போது வார்த்தை உண்ணாத போது ஒரு வார்த்தை -பேசுவாரை சிரித்து இருப்பாரே இவர்கள்

——————————————————————

பிரதானவர்களுக்கும் அறிவு கெடும் இடத்தில்-ரஷிக்கும் நீயே எனக்கு
எல்லா வித அபிமத சித்தியும் செய்வாய் -என்கிறார்-

(எனக்குப் பக்தர்களாய் ப்ரஹ்மாதிகளும் உத்தேச்யர் ஆகலாமே என்று
எம்பெருமான் இவரை சோதிப்பதாக கேட்க
ஈஸ்வரோஹம் -என்று அபிமானித்து ஹிரண்ய ராவணாதிகளுக்கு வரங்களைக் கொடுத்து
அவதி படுபவர்கள் உத்தேச்யர் ஆகாரே
அவர்களையும் ரக்ஷித்து அருளும் தேவரீரே ஸர்வவித ரக்ஷகர் என்கிறார்

இப் பாட்டு முதல் இருபத்தாறாம் பாட்டு வரை
ஈஸ்வர ஆழ்வார் சம்வாதற்காகவே சென்று
பகவத் ரூப குண அனுபவமாகவுமாகவே செல்கிறது )

அப்பிள்ளை உரை அவதாரிகை
அளவுடையாரான ப்ரஹ்மாதிகளும் அறிவு கெடும் இடத்தில் அவர்களையும் ரஷிக்கக் கடவ நீ
என்னுடைய எல்லா அபேக்ஷித்ங்களையும் கொடுத்து அருள்வாய் என்கிறார் –

தவம் செய்து நான்முகனால் பெற்ற வரத்தை
அவம் செய்த வாழியான் அன்றே -உவந்து எம்மை
காப்பாய் நீ காப்பதனை யாவாய் நீ வைகுந்த
மீப்பாயும் எவ் உயிர்க்கும் நீயே-19-

பதவுரை

தவம் செய்து–தபஸ்ஸை அநுஷ்டித்து
நான்முகனால்–பிரமனிடத்து
பெற்ற–(ஹிரண்யன் முதலானவர்கள்) பெற்றுக் கொண்ட
வரத்தை–வரங்களை
அவம் செய்த–பழுதாக்கின
ஆழியாய்–திருவாழிக் கையனான பெருமானே!
எம்மை–அடியோங்களை
உவந்து–திருவுள்ளமுகந்து
காப்பாய் நீ அன்றே–காத்தருள்பவன் நீயே யன்றோ,
காப்பதனை ஆவாய் நீ அன்றே–காக்க வேணு மென்கிற ஸங்கல்ப முடையவனும் நீ யன்றோ,
எவ் உயிர்க்கும்–(உன்னை ஆச்ரயித்த) ஸகலாத்மாக்களுக்கும்
வைகுந்தம்–பரம பதத்தை
ஈப்பாயும்–அளிப்பவனும்
நீ அன்றே–நீ யன்றோ.

ஹிரண்யன் தபஸ்ஸூ பண்ணி ப்ரஹ்மாவின் இடத்தில் இருந்து சம்பாதித்த வரத்தை அழியச் செய்த
திருவாழியை யுடையவன் அன்றோ ஸந்தோஷத்துடனே எங்களை ரக்ஷிக்கிறவனும் நீயே
ரக்ஷிக்க வேணும் என்கிற ஸங்கல்பத்தை யுடையவனும் நீயே
ஸகல பிராணிகளுக்கும் பரமபதம் அளிப்பவனும் நீயே –

தவம் செய்து நான்முகனால் பெற்ற வரத்தை அவம் செய்த வாழியான் அன்றே –
தபசைப் பண்ணி ப்ரஹ்மாவின் பக்கலிலே ஹிரண்யாதிகள்-பெற்ற வரத்தை அழித்து
வரம் கொடுத்தவர்களுக்கும் குடி இருப்புக் கொடுத்த நீயே

(ராவணாதிகளுக்கு வரம் கொடுத்து அவதி பட்டதாகவும் கொள்ளலாம்
அபி ஷிஸ்ய ச லங்காயாம் ராக்ஷஸேந்திரம் விபீஷணம்
க்ருதக்ருத்யஸ் ததா நாமோ விஜ்வர பிரமுமோத ஹா )

உவந்து எம்மை காப்பாய் நீ காப்பதனை யாவாய் நீ வைகுந்தமீப்பாயும் எவ் உயிர்க்கும் நீ
உன் பேறாக ரஷிப்பாய் நீ-
ரஷணம் தான் நீ-
புனராவ்ருத்தி இல்லாத மோஷத்தை
எவ் உயிர்க்கும் ஈப்பாய் நீ-

( ஸ தயா ஸ்ரத்தயா யுக்தஸ்தஸ்யாராதநமீஹதே
லபதே ச தத: காமாந் மயைவ விஹிதாந் ஹிதாந்-ஸ்ரீ பகவத்கீதை-7-22-

ஸ தயா ஸ்ரத்தயா யுக்த:-அவன் அந்த நம்பிக்கையுடன் கலந்து,
தஸ்ய ஆராதநம் ஈஹதே-அவ்வடிவத்தை ஆராதித்து வேண்டுகிறான்,
ச தத: காமாந் லபதே-மேலும் அதனின்றும் விரும்பியனவற்றை எய்துகிறான்,
ஹி தாந் விஹிதாந் மயா ஏவ-எனினும் அவை என்னாலேயே வகுத்துக் கொடுக்கப் பட்டது.)

(ந ஹி பாலன சாமர்த்தியம் ருதே சர்வேஸ்வரம் ஹரிம்
ஸ்தித்வ ஸ்திதம் மஹா பாக பவத் யன்யாஸ்ய கச்சித் –ஸ்ரீ விஷ்ணு உரணம் -1-22-23-
உதாம்ருதத் வஸ்ய ஈஸாநா –மோக்ஷத்துக்கும் பிரபு பரம புருஷனே
தமேவம் வித்வா நம்ருத இஹ பவதி நான்ய பந்தா அயனாய வித்யதே
அம்ருதஸ் யைஷ சேது
மோக்ஷம் இச்சேத் ஜநார்த்தனா -என்று சாஸ்திரங்கள் கோஷிக்குமே – )

அப்பிள்ளை உரை
ஹிரண்யன் நெடும் காலம் தபஸ்ஸூ பண்ணி சதுர்முகன் இடம் பெற்ற எல்லா வரங்களையும்
நிஷ் பிரயோஜனமாம் படி பண்ணின
ஆஸ்ரித பக்ஷபாதி உன்னைப் பற்றுவேனோ
வரம் கொடுத்து அவதி பட்ட அவர்களை பற்றுவேனோ
வரம் கொடுத்த ப்ரஹ்மாதிகளை ரக்ஷிக்க பரிகரமாக திருவாழி யுடையவன் அல்லவோ
ஆன பின்பு ஆஸ்ரிதரான எங்களை உனது பேறாக உகந்து ரக்ஷிக்கிறாய்
சம்சார துரிதம் தட்டாத படி ரக்ஷித்து அருள வேணும்
ரக்ஷிக்க வேண்டும் அபிசந்தியை சங்கல்பம் உடையவனும் நீயே
காப்பு என்கிற ரக்ஷணமும் நீயே
உன்னை ஆஸ்ரயித்த சகல ஆத்மாக்களுக்கு
சதா பஸ்ய பண்ணி அனுபவிக்க ஏகாந்தமான ஸ்ரீ வைகுண்டம் கொடுத்து அருளுவானும் நீயே
பாலன சாமர்த்தியம் உன்னைத் தவிர வேறே யார் இடமும் இல்லையே -ஸ்ரீ விஷ்ணு புராண ஸ்லோகம்

————————————————————————–

(ஆழ்வார் அருளிச் செயல்களைக் கேட்டு மிகவும் உகந்து
கிம் ம்ருஷ்டும் ஸூத வசனம்
குழல் இனிது யாழ் இனிது என்பர் தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர்
இளைய புன் கவிதையேலும் எம்பிரார்க்கு இனியவாறே
மேலே பாசுரம் பாடி அருள்வீர் என்ன
ஸர்வேஸ்வரனுடைய ஸர்வாத்ம பாவத்தை தேன் போன்ற தம் சொற்களிலே குழைத்து அருளிச் செய்கிறார் )

அப்பிள்ளை உரை அவதாரிகை
ஆஸ்ரிதரை ரஷிக்கும் அளவு அன்றிக்கே
ஆஸ்ரித அநாஸ்ரித விபாகம் அற ஸமஸ்த சத்தாதிகள்
சத்தை ஸ்திதி ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகள் எல்லாம்
நீ இட்ட வழக்காம் படி நோக்குமவன் நீயே அன்றோ

நீயே யுலகெல்லாம் நின்னருளே நிற்பனவும்
நீயே தவத் தேவ தேவனும் -நீயே
எரி சுடரும் மால் வரையும் எண் திசையும் அண்டத்து
இரு சுடரும் ஆய இவை –20-

பதவுரை

உலகு எல்லாம் நீயே–உலகங்கட்கெல்லாம் நிர்வாஹகன் நீயே,
நிற்பனவும்–உலகங்கள் ஸத்தை பெற்று நிற்பதும்
நின் அருளே–உனது கிருபையினாலேயாம்,
தவம் தேர் தேவனும் நீயே–தவத்தினால் தேவர்களான பிரமன் முதலியோருக்குத் தலைவனும் நீயே,
எரி சுடரும்–ஜ்வலிக்கின்ற அக்நியும்
மால் வரையும்–பெரிய குல பர்வதங்களும்
எண் திசையும்–எட்டுத் திசைகளிலுமுள்ள ஸகல பதார்த்தங்களும்
அண்டத்து–ஆகாசத்திலுள்ள
இரு சுடரும்–சந்த்ர ஸூர்யர்களும்
ஆய இவை–ஆகிய இவை யெல்லாம்
நீயே–நீயே காண்.

லோகங்களுக்கு எல்லாம் காரணமானவன் நீயே
அவ்வஸ்துக்கள் இருப்பதும் உன்னுடைய கிருபையினாலேயே
தபஸ்ஸூ பண்ணி தேவர்களான ப்ரஹ்மாதி களுக்கும் தேவன் நீயே
ஜ்வலிக்கிற அக்னியும் -பெரிய பர்வதங்களும் -எட்டுத் திக்குகளும்
அண்டத்துக்குள் இருக்கிற இரண்டு தேஜஸ்ஸூக்களான சந்த்ர ஸூர்யர்களும்
ஆகிய இவை எல்லா வற்றுக்கும் அந்தர்யாமி யானவன் நீயே –

நீயே யுலகெல்லாம்
உன்னை ஒழிய ஜகத்துக்கு-ப்ருதுக் ஸ்திதியும்
ப்ருதுக் உபலம்பமும் இல்லை
(தனித்து இருப்பும் -வேறே பற்றுக் கொம்பும் இல்லை
விட்டுப் பிரிந்தும் இல்லை அவனை சார்ந்து இல்லாமலும் இருக்காதே )

(சர்வாத்ம பாவத்தை அருளிச் செய்கிறார்
விஸ்வம் நாராயணம் ஹரி -சர்வம் சவாப்நோதி -எங்கும் வியாபித்து அனைத்தும் நீயே
சர்வம் கலு ப்ரஹ்மம்
அனைத்துக்கும் அந்தர்யாமி -சரீர சரிரீ பிரகாரம் பிரகாரி பாவம் –
ஏக ஏவ -ஸ்வரூபத்தால் வேறே வேறே இருந்தாலும் )

(நான் மனிதன் என்பதுக்கும் ப்ரஹ்மமே ஜகத் இரண்டுக்கும் நெடு வாசி உண்டு
கர்மாதீனம் இது– ஸ்வா பாவிகம் அது
அவர் விஷயத்தில் தேஹாத்ம பிரமித்தது போல் இல்லையே )

(விஸ்வம் நாராயணம் ஹரிம்
ஸர்வம் ஸமாப்நோஷி ததோ அஸி ஸர்வ -கீதை
தத்ஸ் தத்வாதநு பஸ்யந்தி ஹ்யேக ஏவேதி ஸாதவ-பாரதம்
அவஸ்தி தேரிதி காஸ க்ருத்ஸ்ந –ப்ரஹ்ம ஸூத்ரம் )

நின்னருளே நிற்பனவும் –
உன் பிரசாதம் அடியாக-பெரும் பேறு நிலை நிற்பது –
(ஆத்மா நித்யம் என்று சொல்லவில்லை –
நிலை நின்ற பரம புருஷார்த்தத்தைச் சொன்னவாறு
நிற்பன என்று பரமபத அனுபவங்கள் பல என்பதால் பன்மை )

நீயே தவத் தேவ தேவனும் –
சாதன அனுஷ்டானம் பண்ணி-அதிகாரம் பெற்றவர்களுக்கும்
உன்னை ஒழிய ஸ்திதி இல்லை –

நீயே எரி சுடரும் மால்வரையும் எண் திசையும் அண்டத்து இரு சுடரும் ஆய இவை –
பிரித்து சொல்லுகிறது என்-
அக்நியும்
குல பர்வதங்களும்
எட்டுத் திக்கும்
அண்டாந்தர வர்த்திகளான சந்திர ஆதித்யர்களுமான-
இப் பதார்த்தங்களும் எல்லாம் உன் ஆதீனம்-

(தம் தேவதா நாம் பரமஞ்ச தைவதம் -ஸ்வேதாஸ்வர
யுக கோடி ஸஹஸ்ராணி விஷ்ணும் ஆராத்ய பத்ம பூ
புனஸ் த்ரை லோக்ய தாத்ருத்வம் ப்ராப்த வாநிதி ஸூஸ் ரும –சபா பர்வம்
ப்ரஹ்மாதயஸ் ஸூ ரஸ் ஸர்வே விஷ்ணும் ஆராத்ய தே புரா
ஸ்வம் ஸ்வம் பதம் அநு ப்ராப்தா கேசவஸ்ய ப்ரஸாதத -ஸ்ரீ நரஸிம்ஹ புராணம்
மஹா தேவஸ் ஸர்வமேத மஹாத்மா ஹூத்வா ஆத்மாநம் தேவ தேவோ பபூவ -பாரதம்
ஜ்யோதீம்ஷி விஷ்ணுர் புவநாநி விஷ்ணுர் வநாநி விஷ்ணுர் கிராயோ திஸஸ் ச -ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-12-38-)

அப்பிள்ளை உரை –
நீ என்கிற சொல்லுக்குள்ளே பிரகாரமாய் அந்வயிக்கும்
(ஸூஷ்ம சேதன அசேதன விஸிஷ்ட ப்ரஹ்மம்
உலகு எல்லாம் -நாம ரூப விபாகம் வரும் காரியம் நீ காரணம் தத் த்வம் அஸி
பஹுஸ்யாம் -சங்கல்பிப்பான்
ஸ்தூல சேதன அசேதன விசிஷ்டா ப்ரஹ்மம் ஆவேன் –
உபாதான காரணமாக் கொண்டு )
பூமி யாதி லோகங்கள் அனைத்தையும் உண்டாக்கினாய் நீயே-ஸூஷ்ம சேதன அசேதன விஸிஷ்ட ப்ரஹ்மமான நீயே
இப்படி ஸ்ருஷ்டமான வஸ்துக்கள் எல்லாம் குறைவற ரக்ஷிக்கப் பட்டதும் உன்னாலே தானே
தபஸ்ஸை நெடும் காலம் குறைவற நின்று அனுஷ்ட்டித்து
பிரஜாபதி பசு பதி ப்ரஹ்மாதி தேவர்களுக்கு
அதிகாரமும் கொடுத்து அந்தர்யாமியாய் நிர்வகித்து அவர்களும் ஆஸ்ரயிக்கும் படி இருப்பவனும் நீயே
இப்படி பிரித்து சொல்வது என்
மேல் நோக்கி எரியும் அக்னியும்
பூமிக்கு ஆதாரமான குல பர்வதங்களும்
எட்டுத் திக்கிலும் உள்ள ஸமஸ்த வஸ்துக்களும்
அண்டாந்தர வர்த்திகளான ஸூர்ய சந்த்ராதிகளும்
ஆகிய இந்த ஸமஸ்த வஸ்துக்களும் அந்தர்யாமியாக இருந்து
அனைத்துக்கும் சத்தை ஸ்திதி பிரவிருத்தி நிவ்ருத்தி எல்லாம் உனது அதீனமே
யுக கோடி காலம் ஆராத்தித்து பிரம்மா பட்டம் பெற்றான்
கேசவன் பிரசாதத்தால் விஷ்ணுவை ஆராதித்து தேவர்கள் தங்கள் பதம் பெற்றார்கள்
சர்வமேதம் யோகத்தால் தன்னையே ஆஹுதியாக கொடுத்து ருத்ரன் பதவி பெற்றான்
புவநாநி விஷ்ணு வநாநி விஷ்ணுவே ஸ்ரீ விஷ்ணு புராணமும் சொல்லுமே

———————————————————

இப்படி பூரணன் ஆனவனுக்கு (நீயே உலகு எல்லாம் கீழே பார்த்தோமே அதனால் பூர்ணன் )
ஆஸ்ரித அர்த்தமாக வரும் சீற்றத்தைச் சொல்லுகிறது –
நரசிம்ஹத்தை தத் காலத்தில்-அனுபவித்தாற் போலே பேசுகிறார் –

(வால்மீகி பகவான் நான்முகன் அருளால் பவிஷ்ய காலத்தில் நடக்கப் போவதையும் கண்டு அனுபவித்து பாடினார்
இங்கு ஆழ்வார் இவன் ப்ரஸாதத்தால் கண்டு அனுபவித்து பாட என்ன குறை )

(ஆழ்வாரது செவிக்கு இனிய செஞ்சொற்களைக் கேட்டு
அவிகாராய தத்வம் விகாரம் அடைந்து
திருக் கண்களும் திரு மேனியும் விகஸிகிக்கக் கண்டு விஸ்மதீயராய்
இதே போல் முன்பு அடியானான ப்ரஹ்லாத ஆழ்வானை ஹிரண்யன் நலிந்த உடன்
விகாரம் அடைந்த திருக் கண்களும் திரு வாயும் திரு மேனியும் ஸ்ம்ருதிக்கு விஷயமாக
ஸ்ரீ நரஸிம்ஹ திரு உருவத்தை ஈடுபட்டு அருளிச் செய்கிறார்
கண்கள் சிவந்து பெரியவாய வாயும் கனிந்து –இத்யாதி நம்மாழ்வார்
ஆனந்தத்தால் கோபத்தால் விகாரம் அடைவான் )

இவையா பிலவாய் திறந்து எரி கான்ற
இவையா வெரிவட்டக் கண்கள் -இவையா
வெரி பொங்கிக் காட்டும் இமையோர் பெருமான்
அரி பொங்கிக் காட்டும் அழகு–21-

பதவுரை

திறந்து–விரிந்து
எரி கான்ற–நெருப்பை உமிழ்ந்த
பிலம் வாய்–பாழி போன்ற பெரியவாய்
இவையா–இதுவோ!
எரி வட்டம்–கொள்ளி வட்டம் போலே உருண்டு சிவந்து ஜ்வலிக்கிற
கண்கள்–திருக் கண்கள்
இவையா–இவையோ!
எரி–அக்நி போலே
பொங்கி–கிளர்ந்து
காட்டும்–தோன்றின திருமேனியை யுடையனாய்
இமையோர் பெருமான்–நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹகனான ஸர்வேஸ்வரன்
அரி–நரசிங்க மூர்த்தியாய்
பொங்கி–கிளர்ந்து
காட்டும்–காட்டின
அழகு-அழகு
இவையா–என்ன விஷயம்!

பிலம் போன்ற திருப்பவளத்தைத் திறந்து அதிலே எரிகிற இந்த அக்னிகள் ஆச்சர்யங்களாகக் காண்கின்றன
கொள்ளி வட்டம் போன்ற இந்தத் திருக் கண்கள் ஆச்சர்யமாகக் காண்கின்றன
அக்னி போல் கிளர்ந்து தோன்றுபவனாய்
நித்ய ஸூரிகளுக்கு அதிபதியானவன்
நரஸிம்ஹமாய் கிளர்ந்து தோற்றும் இவ்வழகுகள் ஆச்சர்யங்கள் –

இவையா பிலவாய் திறந்து எரி கான்ற
அவாக்ய அநாதர -என்று தத்வம் இருக்கிற படி –
(அவாக்ய அநாதர-சாந்தோக்யம் -3-6-
வ்ருஷ இவோ ஸ்தப்தோ திவி திஷ்டதி -முண்டக -1-1-7-)
பிலம் போலே இருக்கிற வாயைத் திறந்து-
அக்நியை உமிழா நின்ற இவை –
அக்னியை உமிழா நின்று-பிலம் போலே இருக்கிற வாய் இவை –

(மாயனார் செய்ய வாய் அந்தோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே -அமலனாதி -7-)

(வாலிய தோர் கனி கொல்?வினையாட்டியேன் வல் வினை கொல்?
கோலம் திரள் பவளக் கொழுந்துண்டங் கொலோ அறியேன்
நீல நெடு முகில் போல் திருமேனி யம்மான் தொண்டை வாய்
ஏலும் திசையுள் எல்லாம் வந்து தோன்றும் என் இன் உயிர்க்கே.–7-7-3-)

இவையா வெரி வட்டக் கண்கள் –
உயிர்க்கு எல்லாம் தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணன் -என்கிற கண்கள் –
கொள்ளி வட்டம் போலே இருக்கிற கண்கள் ஆயினவே

(சுடர் மா மதி போல் உயிர்க்கு எல்லாம் தாயாய் அளிக்கின்ற
தண் தாமரைக் கண்ணா –பெரிய திருமொழி –7-1-9-)

(சூழவும் தாமரை நாண் மலர் போல் வந்து தோன்றும் கண்டீர்–7-7- )

(கரியவாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்ட அப்பெரியவாய கண்கள்
என்னைப் பேதமை செய்தனவே –அமலன் –8- )

இவையா வெரி பொங்கிக் காட்டும் இமையோர் பெருமான்-
அக்நி போலே உஜ்வலமான திருமேனியை உடையனாய்-
நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹன் ஆனவன்

(ந தத்ர ஸூர்யோ பாதி ந சந்த்ர தாரகம் நேமா வித்யுதோ பாந்தி குதோ அயம் அக்னி –முண்டக -2-2-11-)

அன்றிக்கே
அக்நி கொடுக்கும் ஹவிஸ்சை உடைய இந்த்ராதிகளுக்கு நிர்வாஹகன் –

அரி பொங்கிக் காட்டும் அழகு –
நித்ய ஸூரிகள் பரிய இருக்குமவன்-
ஆஸ்ரித அர்த்தமாக நரசிம்ஹமாய்ச்
சீறிக் காட்டின அழகு-

(பரமபத நாதனாய் இருந்த இருப்பிலும் நரஸிம்ஹமாய் சீறி அருளும் இடத்தில்
அழகு விஞ்சி இருந்ததை அனுபவித்தார் )

அப்பிள்ளை உரை அவதாரிகை
ஆஸ்ரிதனான ப்ரஹ்லாத ஆழ்வானை தண்ணளி அற்று நலிந்த ஹிரண்யனை அழியச் செய்த
நரசிம்ஹருடைய அழகை அனுபவிக்கிறார்
சிறுக்கனை நலிந்தது பொறுக்க மாட்டாமல் கிளர்ந்த சீற்றத்தாலே
பிலத் த்வாரம் போல் இருக்கிற பெரிய திருப் பவளத்தைத் திறந்து
கொள்ளி வட்டம் போல் உருண்டு சிவந்து இடைவிடாமல்
ஜ்வலிக்கிற அக்னி போல் கிளர்ந்து தோற்றுகிற திருக்கண்கள் அழகு என் தான்
நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹகனாய் இருந்து ஆஸ்ரித அர்த்தமாக நரஸிம்ஹமாய்க் கொண்டு சீறிக் காட்டி அருளிய
அழகுகள் இருக்கும் படி என் தான் என்று வித்தராய் அனுபவிக்கிறார்
இதற்கு என்று ஒரு திருமொழி நேரே வேண்டும் படி அன்றோ நரஸிம்ஹத்தினுடைய அழகு இருக்கும் படி -1-7 –
அஹோபிலம் பிலத் துவாராம் அஹோ பலம்
இமையோர் தலைவன்
ஹோம காலத்தில் வைதிகர்கள் கொடுத்த
ஹவிஸ்ஸை அக்னி ஸ்வீகரித்து தேவர்களுக்கு கிளர்த்தி யுடன் அக்னி சமர்ப்பிக்கும் -எரி பொங்கிக் காட்டும்
கர்ம ஆதித்யரான இந்த்ராதிகள் -இவர்களுக்கு நிர்வாஹகன் என்றுமாம் –

———————————————————–

ஸ்ரீ  நரசிம்ஹ வ்ருத்தம் ப்ரஸ்துதமானது-பின்னாட்டுகிறது –

(அரி பொங்கிக் காட்டும் அழகை அனுபவித்தவர் -இத்தை சிலர் இழப்பதே என்று நினைத்து
இந்த ஸுந்தர்ய மூர்த்தியை அடி பணிந்து உய்யுங்கோள் என்று பிறரை நோக்கி உபதேசிக்கிறார்
தாள் பணிய பல ஹேதுக்களை அருளிச் செய்கிறார்
1-அழகியான் தானே
2-அரி உருவன் தானே
3-பழகியான்
4-ஏழு உலகுக்கும் தன்மைக்கும் தன்மையன்
5-உயிர் அளிக்கும் வித்து )

அப்பிள்ளை உரை அவதாரிகை
அடியிலே ஜகத்தை தானே காரணமாக ஸ்ருஷ்டித்து (வேர் முதல் வித்து )
ஸ்ருஷ்டமான ஜகத்தை அவாந்தர பிரளயத்திலும் –(1000-சதுர்யுகம் )- மன்வந்த்ர பிரளயத்திலும் –(71 சதுர்யுகம் )
வடதளி சாயியாயும் மத்ஸ்ய ரூபியாயும் அழியாத படி ரக்ஷித்து
ப்ரஹ்லாதனை ரஷிக்கைக்காக தூணிலே ஸ்ரீ நரஸிம்ஹ மூர்த்தியாயத் தோன்றி
தத் விரோதியான ஹிரண்யனை கிழித்துப் பொகட்டு
இப்படி
சகல ஆத்மாக்களையும் சர்வ அவஸ்தையிலும் தத் தத் அவஸ்தா அனுரூபமாக பழையதாக ரக்ஷிக்கும்
(ஆபத் சகனாயும் அழகனாகவும் )
இவனை ஆஸ்ரயியுங்கோள் என்கிறார் –

அழகியான் தானே அரி உருவன் தானே
பழகியான் தாளே பணிமின் -குழவியாய்த்
தான் ஏழுலகுக்கும் தன்மைக்கும் தன்மையனே
மீனாய் உயிர் அளிக்கும் வித்து-22-

பதவுரை

தான் ஏழ் உலகுக்கும் வித்து–தானே ஏழுலகங்களுக்கும் உபாதாந காரணமாய்
தன்மையவன்–ஆச்சரய பூதனாய்
மஹான் அஹங்காரம் பூதங்கள் தன்மாத்திரைகள் இத்யாதி ஏழும் என்றும்
ஏழு உலகுக்கு அங்கு வாழும் மக்கள் தன்மைகள் என்றுமாம்
குழவி ஆய்–(பிரளய காலத்தில்) சிறு குழந்தையாய்க் கொண்டும்
மீன் ஆய்–(பின்பொருகால்) மத்ஸ்ய ரூபியாய்க் கொண்டும்
அவாந்தர பிரளயம் –1000 சதுர்யுகங்களுக்கு ஒரு தடவை
மன்வந்த்ர பிரளயம் –71 சதுர்யுகங்களுக்கு ஒரு தடவை இப்பொழுது தான் மத்ஸ்ய அவதாரம்
உயிர் அளிக்கும்–ஆத்மாக்களை ரக்ஷிக்கின்றவனான
தானே–எம்பெருமான் தானே
தன்மைக்கும்–(ரூபம் ரஸம் கந்தம் முதலிய) குணங்களுக்கும்
அரி உருவன்–நரசிங்க வுருக் கொண்டவன்
தானே அழகியான்–அழகுக்கு எல்லை நிலமாயிருப்பவனும் அவன்றானே
பழகியான்–புராண புருஷனாகிய அப் பெருமானுடைய
தாளே–திருவடிகளையே
பணிமின்–ஆஸ்ரயியுங்கோள்
அழகியான் தானே அரி உருவன் தானே
ஆபத் சகனானவனே அழகியான் –
பழகியான் தாளே பணிமின் –

தான் பிரளய காலத்தில் முக்த சிசுவாய் இருந்து
ஏழு உலகங்களுக்கும் காரணமாய்
மத்ஸ்ய அவதாரம் எடுத்து பிராணிகளை ரக்ஷிக்குமவனாய்
நரஸிம்ஹ ரூபியாய்க் கொண்டு தானே ஸூந்தரனாய்
தானே சிரகால ஸஹ வாஸத்தினால் பழகி இருக்கிறவனான ஸர்வேஸ்வரனுடைய
திருவடிகளை ஆஸ்ரியியுங்கோள்

ஆபத் சகனானவனே அழகியானாய் உள்ளான்
த்யஜிக்கிற சரீரத்திலும்-வர்த்திக்கிற சரீரத்திலும்-புதுயிகோளாய் இருந்துள்ள நீங்கள் –
உங்கள் கையில் உங்களைக் காட்டிக் கொடாதே-
கால த்ரயத்திலும் சரீரங்களில் பிரவேசிகைக்கு நிதானத்தையும்-
(கர்மம் தானே நிதானம் காரணம் )
அதுக்கு பரிகாரத்தையும் அறியுமவனை
ஆஸ்ரயிக்க பாருங்கோள்-

பிரகிருதி வாசி அறிந்து பழையனாய் பரிகரிக்கும் வைத்தியனை
வ்யாதி க்ரஸ்தர் பற்றுமா போலே

(அழகை யுடையவன் இவன் ஒருவனே
பரமபதத்தில் அழகு பகல் விளக்கு போன்றது
தன்னை ஒத்த சர்வஞ்ஞர்க்குக் காட்டும் அழகு அது
அஞ்ஞருக்குக் காட்டும் அழகு இது
அது கேட்டே கிடைக்கும் அழகு
இரணியன் ஆகம் பிளந்த அரியாய் உதிரம் அளைந்த கையோடு இருந்தவனை
உள்ளவா கண்டார் உளர் -பெரியாழ்வார் -4-1-1- நேரே கண்டவர்கள் உண்டே
நாரஸிம்ஹ வபுஸ் ஸ்ரீ மான்
வெறும் அழகியோ -ஆண்மை உள்ள அரி யுருவன்
ஆபத் சகனும் இவனே
வைத்யோ நாராயணோ ஹரி
எருத்துக் கொடி உடையானும் பிரமனும் இந்திரனும் மற்றும்
ஒருத்தரும் இப் பிறவி என்னும் நோய்க்கு மருந்து அறிவாரும் இல்லை
மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணா மறு பிறவி தவிரத்
திருத்தி உன் கோயில் கடை புக பெய் திருமால் இரும் சோலை எந்தாய் 5-3- 6-)

குழவியாய்த் தான் ஏழுலகுக்கும் தன்மைக்கும் தன்மையனே
கார்ய ஆகாரமான ஜகத்துக்கும்-
தன் மாத்ரையான ஜகத்துக்கும்
தானே ஏழு உலகுக்கும் தன்மைக்கும் தன்மையனே
(தன்மை என்றது -தன் வயிற்றிலே வைக்கும் ஸ்வ பாவத்தை யுடைய குழவி -என்றவாறு
ஏழு உலகு என்றது காரியப் பொருள்களான மஹான் அஹங்காரம் பஞ்ச பூதங்கள் என்றுமாம் )

எல்லா சேதன அசேதனங்களுக்கும்-இவற்றின் குணத்துக்கும் குணி
(பிரகார பிரகாரி சம்பந்தம் என்றுமாம் )

தன்மைக்கும்-
தன் பக்கலிலே வைக்கும்-
ச தேவ -என்று சொல்லப் படுகிறவனே
(தன் வைக்கும் பாட பேதம்
தன்மைக்கும் குணத்துக்கும் )

தன்னை அழிய மாறி சேதனரை ரஷிக்கும் த்ரிவித காரணமும் –

மீனாய் உயிர் அளிக்கும் வித்து-

அப்பிள்ளை உரை
சர்வாதிகனான தான்
பூமி முதலான ஸமஸ்த லோகங்களுக்கும் உபாதான காரணமாய்
அது மாத்திரம் அன்றிக்கே
தத் ஸ்வரூபமான பூத தன்மாத்திரைகள் இத்யாதி
கார்ய ஜாதத்துக்கும் -மஹான் அஹங்காரம் பஞ்சபூதங்கள் தன்மாத்திரை அனைத்துக்கும்
தத் ஆகார விசிஷ்டமாய்க் கொண்டு
உபாதான காரணமானவனாய்
அவாந்தர பிரளயத்தில் இவற்றை திரு வயிற்றிலே வைத்து
ஆலந்தளிரிலே கண் வளர்ந்த முக்த சிசுவாய்
மன்வந்தர பிரளயத்தில் மீனாய்
சராசராத் ஆத்மகமான ஆத்ம வர்க்கத்தையும்
தன் நிர்வாஹகனான மனுவையும்
மரக் கலத்தில் வைத்து ரக்ஷித்து
இப்படி சாமான்யேன ரக்ஷணம் மாத்ரம் அன்றிக்கே
விசேஷமாக
ஆஸ்ரித ப்ரஹ்லாதன் ப்ரதிஜ்ஜை சமயத்திலே அங்கே அப்பொழுதே அவன் வீயத் தோன்றி
தத் விரோதியான ஹிரண்யனை பிளந்து
இப்படி பரஸ்பர விருத்தமான’சேராதவற்றை சேர்த்து வைரூபம் தோற்றாமல்
சேர்ப்பாலும் கண்ட சக்கரை போல் அத்யந்த ரஸாவஹமாய்க் கொண்டு
இப்படி சர்வ காலத்திலும் சர்வ அவஸ்தைகளிலும் சர்வாத்மாக்களோடும் பழகி –
தத் தத் சரீர ப்ரவேச நிதானத்தையும் அறிந்து ரஷித்துக் கொண்டு போகும்
சர்வேஸ்வரனுடைய திருவடிகளையே
வியாதியையும் தத் நிதானமும் பரிகாரமும் அறியும் வைத்தியரைப் பற்றும் வியாதி க்ரஸ்தர் போல்
சம்சார வியாதி க்ரஸ்தர் (சம்சாரமே பெரிய வியாதி தானே )
நீங்களும் ஆஸ்ரயித்து உஜ்ஜீவியுங்கோள் என்கிறார் –

—————————————————————

அறிந்த தசையிலும் அறியாத தசையிலும்-சர்வேஸ்வரனே ரஷகனாக அறுதி இட்ட பின்பு-
தன் அபிமத சித்திக்கு இவன் செய்ய வேண்டும்-ஸூஹ்ருதம் உண்டோ –
சத்தா பிரயுக்தையான இச்சை இவனுக்கு உண்டாகில்-
மேல் உள்ளத்துக்கு அவன் கடவன் ஆகில்-
இவன் செய்யும் அம்சம் என் என்கிறார் –

(ப்ராப்தாவும் ப்ராபகனும் ப்ராப்திக்கு உகப்பானும் இவன் ஆன பின்பு
இச்சைக்கு மேற்பட்ட வேண்டியது இல்லையே
உம்மிடம் கைம் முதல் ஒன்றும் வேண்டாம் அவன் கால் முதல் இருக்க
ருசி ஒன்றே வேண்டுவது
போலி கண்டு அவனுக்கு உள்ள நிறம் வண்ணம் காட்டும் கார் கண்டு
தரித்து இருக்கலாம் கால ஷேபத்துக்கு
வித்து என்று ருசி-இத்தையும் அவனே விளைக்கும்
வித்து -புண்யம் ஸூ ஹ்ருதம் – ருசி இரண்டும் )

வித்தும் இட வேண்டும் கொலோ விடை யடர்த்த
பத்தி யுழவன் பழம் புனத்து -மொய்த்து எழுந்த
கார் மேகம் அன்ன கருமால் திருமேனி
நீர் வானம் காட்டும் நிகழ்ந்து –23-

பதவுரை

விடை அடர்த்த–(நப்பின்னைப் பிராட்டிக்கா) ரிஷபங்களை வலி யடக்கினவனும்(இதை வித்தே வித்திட்டார் நமக்காக )
பத்தி உழவன்–(தன் விஷயத்தில் சேதநர்கட்கு) பக்தி யுண்டாவதற்குத் தானே முயற்சி செய்பவனுமான எம்பெருமானுடைய
பழம் புனத்து–(ஸம்ஸாரமென்கிற) அநாதியான ஷேத்ரத்திலே
வித்தும் இட வேண்டும் கொலோ–(ஸ்வ ப்ரயத்நமாகிற) விதையை நாம் விதைக்க வேண்டுமோ? (வேண்டா)
(நம் முயற்சியின்றியே தானே பகவத் விஷயத்தில் ருசி விளைந்தால் திரு நாட்டுக்குச் செல்லுமளவும் நாம் எப்படி தரித்திருப்ப தென்றால்)
மொய்த்து எழுந்த–திரண்டு கிளர்ந்த
கார் மேகம் அன்ன–காள மேகம் போன்ற
கரு மால்–கரிய திருமாலினது
திரு மேனி–திருமேனியை
நீர் வானம்–நீர் கொண்டெழுந்த மேகமானது
நிகழ்ந்து–எதிரே நின்று நிகழ்ந்து -வர்த்தியா நின்று கொண்டு
காட்டும்–காண்பிக்கும்
(போலி கண்டு நாம் தரித்திருக்கலாமென்றபடி.
போலி கண்டு ஏமாறாதீர் போல் அல்ல இது நினைவூட்டும் மேகம் )
காட்டும் -பிரகாசித்துக் காட்டவுமாம்

ஏழு வ்ருஷபங்களைக் கொன்றவனாய்
பக்திக்கு கிருஷி பண்ணினவனான ஸர்வேஸ்வரனுடைய அநாதியான ஸம்ஸாரம் ஆகிற பூமியிலே
ஸூஹ்ருதமாகிற விதையும் விதைக்க வேணுமோ
திரண்டு கிளர்ந்த கரு மேகம் போன்ற நீல வர்ணனான
சர்வேஸ்வரனுடைய திரு மேனியை நீர் கொண்ட மேகம் எதிரே நின்று காட்டா நின்றது –

(ஊரவர் கவ்வை எரு இட்டு அன்னை சொல் நீர் மடுத்து
ஈர நெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெரும் செய்யுள்
பேரமர் ளாதல் கடல் புரைய விளைவித்த
காரமார் மேனி நம் கண்ணன் )

வித்தும் இட வேண்டும் கொலோ –
வித்து என்று சொல்லுகிறது ஸூஹ்ருதத்தை –
(பரமாத்மாவுடன் விவாதம் இல்லையாகில் கங்காதி புண்ய தீர்த்தங்களுக்கும்
குருஷேத்ராதி திவ்ய ஷேத்ரங்களுக்கும் யாத்திரை செல்ல வேண்டாம் -மனு
சாதனா புத்தியுடன் செய்ய வேண்டாம் )

விடை யடர்த்த பத்தி யுழவன்
நப்பின்னை பிராட்டிக்கு உதவிற்று என்ற வ்யாஜமாய்-
ஆஸ்ரிதர் உடைய பக்திக்கு கர்ஷகன் ஆனவனுடைய

பழம் புனத்து
பழம் புனங்களில் விதைக்க வேண்டாதே-உதறி முளைக்குமா போலே
யாத்ருச்சிக ஸூஹ்ருதங்கள் தன்னடையே பிறக்கும் படி இறே
ஈஸ்வரன் ஜகத் சிருஷ்டியைப் பண்ணுவது –

(பழையதாக உழுவது -நடுவது -விளைவதாய்- போரும் ஷேத்ரத்திலே –
உதிரி முளைத்து -பல பர்யந்தமாம் போலே –
இவை தான் தன்னடையே விளையும் படியாயிற்று –ஸ்ரீ வசன பூஷணம் ––சூரணை -389-

பக்தி உழவன் பழம் புனத்தை சிருஷ்டித்த கட்டளை –
ஈஸ்வர ஸ்ருஷ்டியால் இவனுக்கு விளையும் அங்கீகார பற்றாசைகள்-யாத்ருச்சிகதிகள் -மாத்ரமே அன்று -இன்னம் சில உண்டு என்று –
தர்சிப்பிக்கைகாக வாதல் -கீழ் சொன்ன இவைதான் உண்டாம் பிரகாரத்தை உபபாதிக்கைக்காக வாதல் -அருளிச் செய்கிறார் மேல் –

அதாவது –
புதியதாக தரிசு திருத்தினது அன்றிக்கே பழையதாக உழுவது -நடுவது -விளைவதாய்க் கொண்டு –
செய்காலாய்ப் போரும் ஷேத்ரத்திலே -கர்ஷகன் அதுக்கு என்று ஒரு க்ருஷியும் பண்ணாது இருக்க –
உதிரியானது முளைத்து விளைந்து தலைக் கட்டுமா போலே –
மேல் சொல்லப் படுகிற நிரூபண விசேஷங்கள் ஆதல் – கீழ் சொன்ன யாத்ருச்சிகாதிகள் ஆதல் –
இதுக்கு என்ன ஒரு கிருஷி செய்ய வேண்டாதே -இச் சேதனர் பக்கல்
தன்னடையே விளையும் படி ஆயிற்று -பக்திக்கு கர்ஷகனான ஈஸ்வரன்
பிரவாஹ ரூபேண நடக்கிற சம்சாரம் ஆகிற பழம் புனத்தை சிருஷ்டித்து திருத்தும் -என்றபடி –

உதிரி போலே அஞ்ஞான ஸூ ஹ்ருதங்கள் –உண்டாக்க வல்ல சர்வ சக்தன் அன்றோ -அனுக்ரஹம் காடு மேடும் பாயும் -தாதாமி புத்தி யோகம் —
பழையதாக உழுவது -உதிரி விளையும் யோக்கியதையும் இல்லாமல் கூடாதே – நடுவது -சாவி போகாமல் விளைவது -விளைச்சல் பூமி –
அநாதி அவிச்சின்னம் -ஸூ க்ஷேத்ரம் -வியாபாரம் இல்லாமல் இருந்தால் ஜலம் ஒன்றே இருந்தால் -சர்வ அங்குரித்த சஹகாரி தண்ணீர் அன்றோ –
தன்னடையே முளை விட்டு பிரவாஹ ரூபேண -சம்சாரி சேதனன் -அநாதி பகவத் சங்கல்ப வைச்சித்ர சக்தி மாத்திரம் கொண்டே -தண்ணீர் போலே –
பற்றாசாகக் கொண்டு -மற்று ஒரு ஹேது வேண்டாத படி -பலம்-பகவத் அங்கீ காரம் வரை -பழம் புனம்- அநாதி கால சம்சாரம் –
நியமமாய் வரும் கட்டளை -ஆக யாதிருச்சாதிகளும் அவன் சங்கல்பம் அடியாகவே என்றதாயிற்று)

மொய்த்து எழுந்த கார்மேகம் அன்ன கருமால் திருமேனி நீர் வானம் காட்டும் நிகழ்ந்து –
ருசி பிறந்த பின்பு பிராப்தி அளவும் நாம் தரிக்கைக்கு-
அவன் திருமேனிக்கு போலி உண்டு -என்கை

செறிந்து எழுந்த கார் காலத்தில் மேகம் போலே ஸ்யாமமான-திருமேனியை உடைய
சர்வேஸ்வரனுடைய நிறத்தை-
நீர் கொண்டு எழுந்த கார் மேகம் காட்டும் –

(நீர் வானம் ஒப்பான பல பொருள்களுக்கும் உப லக்ஷணம்

கொண்டல் தான் மால் வரை தான் ம கடல் தான் கூர் இருள் தான்
வண்டு அறாப் பூவை தான் மற்றுத் தான் கண்ட நாள்
கார் உருவம் காண் தோறும் நெஞ்சு ஓம் கண்ணனார்
பேருரு என்று எம்மைப் பிரிந்து

பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற
காவி மலர் என்றும் காண் தோறும் பாவியேன்
மெல்லாவி மெய் மிகவே பூரிக்கும் அவ்வவை
எல்லாம் பிரான் உருவே என்று )

அப்பிள்ளை உரை அவதாரிகை
(உதறி அங்கு உதிரி இங்கு )
யாதிருச்சிகாதி ஸூஹ்ருதங்களையும் கல்பித்து
(வித்து என்று ருசி-இத்தையும் அவனே விளைக்கும்
வளர்ப்பதும் மேகம் அவனே )
ஸ்ருஷ்ட்டி அவதாரிகளாலே சர்வேஸ்வரன் தான் கை தொட்டு கிருஷி பண்ணி போரா நிற்க
அபிமத சித்திக்கு ஒன்றுமே செய்ய வேண்டாமே
நப்பின்னை பிராட்டி ஸம்ஸ்லேஷத்துக்கு -பிரதிபந்தங்கங்களை தானே போக்கி அருளியது போல்
கை தொட்டு பக்திக்கு கிருஷி பண்ணிப் போரும் கிருஷ்ணனுடையதாய்
ப்ரவாஹ ரூபமாக அனாதையான விளை நலம்
எப்போதும் விதைப்பது உழுவது அறுவது போய்க்கொண்டு இருக்கும் புவனத்திலே
தன்னடையே உதிரி முளைக்குமா போலே
தன்னடையே விளையக் கடவ யாதிருச்சிகம் ப்ராசங்கிகம் ஆனு ஷங்கதம் – இத்யாதி இருக்க
ஏற்படும்படியாகவே ஸ்ருஷ்டிக்கிறான்
இவன் விதைக்க வேண்டாமே
யாதிருச்சிக்க ஸூ ஹ்ருதம் தளமாக அவன் கிருஷி பலமாக ருசி பிறந்த பின்பு
ஸ்ரீ வசன பூஷணம் -389 சூர்ணிகை -இப்பாசுரம் கொண்டே வந்தது –
மா முனிகளும் வியாக்யானத்தில் உதிரி தானே முளைத்து தலைக் கட்டுமா போல்
உதிரி முளைக்குமா போலே பாடமே மிகப் பொருந்தும்
திரண்டு கிளர்ந்த காளமேகம் போல் நீர் கொண்டு எழுந்த காளமேகம் முன்னே நின்று காட்டா நிற்கும்
அவன் வடிவுக்கு போலி யான தன் வடிவைக் காட்டி ருசியை வளர்த்து பிராப்தி அளவும் தரித்து நிற்க உதவும்
ஸ்ரீ பாத தீர்த்தம் நம்புவார்களும் நம்பாதவர்களும் குளிக்க வேண்டாம்
பரமாத்மா இடம் விரோதம் இல்லாமல் தானே சாதனம் ஆவான் மனு ஸ்ம்ருதி சொல்லுமே
ஸூ ஹ்ருதம் வரும்படியே ஸ்ருஷ்டிக்கிறான்
உண்மையை அறிந்தாலே போதும் உஜ்ஜீவிப்போம்
அன்றிக்கே
கீழ் விதை -ஸூ ஹ்ருதம்
விதை என்று கொண்டு ருசி
சம்சாரம் பழம் புனத்தில் ஈர நெல் வித்தி இடவும் வேண்டுமோ –
அவன் வடிவைக் காட்டும் மேகமே ருசியை விளையா நிற்குமே
அவன் வடிவுக்கு போலியாகக் காட்டி நினைவு படுத்தும் அன்றோ –
பெரிய திருவந்தாதி பாசுரம் கார் உரு காட்டும்
பூவையும் –காணும் தோறும் அவ்வவை எல்லாம் பிரான் உருவே என்ற பாசுரங்கள் உண்டே –

————————————————————————–

(பக்தி உழவன் படும் பாடுகளை இப் பாட்டிலும் அடுத்த பாட்டிலும் அருளிச் செய்கிறார்
அதில் இப் பாட்டில் அடியார்களுக்காக தன்னை அழிய மாறியும் உதவுவதைக் கண்டு உருகுகிறார்
பக்தியை விளைத்து வளர்ப்பது திருமேனியே யாகையாலே அதன் இயற்கை நிறத்தையும்
இவர்களுக்காக மாற்றி அமைக்கும் மஹா குணத்திலே ஈடுபடுகிறார் -)

அப்பிள்ளை உரை அவதாரிகை
நீர் சொன்னபடியே பக்தியைப் பிறப்பித்து நாம் ரஷியா நின்றோமோ
பகவத் அபிப்ராயமாக -ஆழ்வார் சொல்லக் கேட்டு உகப்பானே
யுகம் தோறும் சத்வாதி குண யுக்தராக இருப்பதால்
சேதனருடைய ருசிக்கு அனுரூபமான விக்ரஹத்தைப் பரிக்ரஹித்து
அவர்களுக்கு உன் விஷயத்தில் ருசி வரும்படி செய்தாய் அன்றோ –
பக்தி விளையும் படி கிருஷி பண்ணி ரக்ஷித்தாய் அன்றோ –

நிகழ்ந்தாய் பால் பொன் பசுப்புக் கார் வண்ணம் நான்கும்
இகழ்ந்தாய் இருவரையும் வீயப் புகழ்ந்தாய்
சினப் போர் சுவேதனைச் சேனாபதியாய்
மனப் போர் முடிக்கும் வகை-24-

பொருளின் வண்ணம் சொல்லாமல் பொருளையே அருளிச் செய்கிறார் பால் இத்யாதியால்
பால் -வெளுப்பு மட்டும் அல்ல ரஸம் –ரஸோ வை ஸஹ
பொன் சிகப்பு மட்டும் அல்ல ஸ்ப்ருஹனீயம் –
பாசி -மாந்தளிர் பச்சை மட்டும் அல்ல பார்த்தாலே குளிர்ச்சி –
கார் வண்ணம் -கறுப்பு மட்டும் அல்ல வண்மை -இயற்கை வர்ணம்
இருவரையும் மது கைடபரையும் -கௌரவ பாண்டவர் என்றுமாம்
ஸ்வேதன் -வெள்ளை புரவி தேர் ஆடை உள்ளம் -ஸ்வேத வாஹனன்
சினப்போர் -சீறிக்கொண்டு இருக்கும் அர்ஜுனன்
சேனாபதி -விஸ்வபதி லோகபதி லோக பர்த்தா -இவனால் போர் என்பதால் இங்கு சேனாபதி -இவனே ரக்ஷகன்
நிகழ்ந்தாய் -நான்கு யுகங்களிலும் பிரகாசித்தாய்
பிரகாச முகப்பின் கார்யம் ஆகையால் உகந்தாய் என்கிறது
புகழ்ந்தாய் -அர்ஜுனனைக் கொண்டாடினாய்
மனப்போர்– மநோ ரதம் படி திரௌபதி குழல் முடிக்கவே எல்லாம்

வெண்மை சிவப்பு பச்சை கறுப்பு ஆகிற நான்கு வர்ணங்களை யுடையனாய் நாலு யுகங்களிலும் அவதரித்தாய்
பாண்டவ கௌரவர்கள் இருவருடைய சைனிகர்களையும் நசிக்கும்படி உபேக்ஷித்தாய்
ஸேனாபதியாய்க் கொண்டு தான் ஸங்கல்பித்த யுத்தத்தைத் தலைக் கட்டும்படி சீறிக் கொண்டு
யுத்தத்தில் அர்ஜுனனைக் கொண்டாடினாய் –

நிகழ்ந்தாய் பால் பொன் பசுப்புக் கார் வண்ணம் நான்கும்
அவ்வோ யுகங்களில் சேதனர்க்கு பிரியமான-
வெண்மை தொடக்கமான நிறங்களை உகந்தாய் –

(வளை உருவாயத் திகழ்ந்தான் என்றும் சங்கம் வண்ணம் அன்ன மேனி என்று சொல்லாமல் பால் போல் என்பதால்
வெளுத்ததோடு அல்லாமல் ரஸ்யத்தையிலும் உயர்ந்தவன்
க்ருதமிவ பயசி நிகூடம் -பாலினுள் நிறைந்து இருக்கும் நெய் போன்றவன் என்றும்
ஸர்வ ரஸ
ரஸோ வை ஸ
தேனே பாலே கன்னலே அமுதே
கனியைக் கரும்பின் சாற்றைக் கட்டியைத் தேனை அமுதை
கறந்த பாலுள் நெய்யே போல் -என்றும் உண்டே
வண்ணம் -ஸ்வ பாவம் தன்மையையும் சொல்லும் )

(பொன் போலே விலை உயர்ந்தவன்
ஹிரண்மய புருஷ
ருக்மாபம்
ஹேம ஸமான வர்ணம்
சுட்டு உரைத்த நன் பொன் உன் திருமேனி )

(பசுப்பு -பாசியின் பசும் புறம் -கண்டார் கண்களைக் குளிரச் செய்யும் திருமேனி –
புருஷம் கிருஷ்ண பிங்களம்-பச்சை மா மலை போல் மேனி அன்றோ )

(முழுதும் நிலை நின்ற பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம் -பெரிய திருமொழி -4-9-8 –
நீல மேக ஸ்யாமளன் அன்றோ
கார் வண்ணம் -ப்ரயோஜன நிரபேஷமாயும் -வரையாமலும் -கொடுத்தோம் என்னும் நினைவு இல்லாமையாலும்
நீல தோயதா மத்யஸ்தா வித்யுல்லேகேவ பாஸ்வரா
மேக ஸ்யாமம் )

இகழ்ந்தாய் இருவரையும் வீயப் -மது கைடபர்கள் முடிய
அன்றிக்கே
எல்லா சேனையும் இரு நிலத்து அவித்த -என்னுமா போலே-
பஷ த்வ்யத்தையும் முடித்த என்றுமாம் –
(அஸ்வத்தாமா
கிருபாச்சார்யர்
க்ருதவர்மா
பஞ்ச பாண்டவர் ஆகிய எண்மர் மட்டுமே இருந்தனர் என்பர் )

புகழ்ந்தாய் சினப் போர் சுவேதனைச் சேனாபதியாய் மனப் போர் முடிக்கும் வகை –
சினப் போரை உடைய ஸ்வேத வாஹனான-அர்ஜுனன் சேனைக்கு நிர்வாஹகனாய்-
தர்ம புத்திரன் முடி சூடவும்-
த்ரௌபதி குழல் முடிக்கவும்-
துர்யோனாதிகள் முடியும்படியும்-
நினைத்த போரை முடிக்க வல்லனாய்ப்-புகழ்ந்தாய்-

(வெள்ளைப் புரவிக் குரக்கு வெல் கொடித் தேர் மிசை முன்பு நின்று -பெரியாழ்வார்
ஆகவே ஸ்வேதன் -ஸ்வேத வாஹநன் -என்றவாறு )

நிகழ்ந்தாய் -பிரகாசித்தாய்
பிரகாசம் உகப்பின் கார்யம் ஆகையால் உகந்தாய் என்கிறது
புகழ்ந்தாய் -அர்ஜுனனைக் கொண்டாடினாய்-

அப்பிள்ளை உரை
கிருதாதி யுகங்களில் சேதனருடைய ஸத்வாதி குணங்களுக்கு அனுகுணமாக
காதல் கடல் புரைய விளைவித்த கார் முகில் -கறுப்பு நிறம் கொண்டே காதலை வளர்க்கிறான்
பால் வண்ணம் -வளை உருவாய் -சங்க வண்ணம் -சர்வ ரஸ
தேனை பாலை கன்னலே அமுதை
அச்சுவை அமுதன் தன்மை
நிகழ்ந்தாய் பொன் வண்ணம்
பொன் போல் சிவந்து ரஜோ குணம் உடன் கலந்த சத்வ குணம்
பொன் போல் விலை உயர்ந்து -ஹிரண்மயன் -ருக்மாபம் ஸ்வப்ன தீ கம்யம் -ஹேமா ஸமான வர்ணம்
சுட்டு உரைத்த நன் பொன் –ஒவ்வாதெ
நிகழ்ந்தாய் பாசியின் பசும் புறம் போல் மாந்தளிர் பச்சை
ரஜோ குணம் தமோ குணம் சத்வ குணம் கலந்து
பச்சை மா மலை போல் மேனி அன்றோ
மேகம் போல் கறுத்தும்
முழுதும் நிலை நின்ற கொண்டல் வண்ணம் -தன்நிறம் –
அபேக்ஷிக்காமல் பொழியும் -வண்மை -கார் மேனி
இப்படி வந்து அவதரித்தீர்
எல்லா சேனையும் இரு நிலத்து வைத்தாய்
இரண்டு பக்கமும் உள்ள அசுர ப்ரக்ருதிகளை உபேக்ஷித்தாய்
அர்ஜுனன் சேனைக்கு ரக்ஷகனாய்க் கொண்டு
அடி யார்கள் கார்யம் முடித்து
ஹே அநக பாண்டவ கௌந்தேய பரந்தப இவன் அவனைக் கொண்டாடி
ஸ்த்வயன் ஸ்த்வ பிரியன் இவன் அவனைக் கொண்டாடுகிறார்
வெள்ளைக் குதிரை தேர் மிசை முன் நின்று
நாம ஏக தேச கிரஹணம் -ரெங்கநாதமுனி சத்யபாமா போல் இங்கும்
கிருஷ்ணாச்ரய -இவனே பலம் தலைவன் சேனாபதி -தத்ர ஸ்ரீ விஜயோ –
தர்மபுத்ரன் தலையில் முடியை வைத்து
திரௌபதி குழல் முடித்து
சங்கல்பம் படி போர் நடக்க புகழ்ந்தாய்
ருணம் ப்ரவ்ருத்த –கடன் பெற்றார் உள்ளம் போல் கலங்கி அன்றோ போனான்
திரு உள்ளம் மநோ ரதித்த படி
யுத்தம் என்று பிற்காலித்த
சீறிக் கொண்டு வரும் படி ஆண் பிள்ளை
மதுகைடபர் அழித்தாய் என்றுமாம் –
இவ்வாறு பக்தியை வளர்க்க என்ன வெல்லாம் செய்தாய் என்கிறார் –

—————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading