ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் அருளிய ஸ்ரீ நான்முகன் திருவந்தாதி -49-60–ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் -/ஸ்ரீ அப்பிள்ளை உரை —

(மலை மேல் நின்று முகம் கொடுக்கும் நீர்மை கீழே
மலையின் கீழே கிடந்து தாங்கிய நீர்மையைப் பேசி மகிழ்கிறார் இதில் -)

அப்பிள்ளை -உரை -அவதாரிகை
உடம்பு நோவக் கடல் கடைந்து –
(அழகு கண் பட்டு பிரேமத்தால் ஆழ்வார்கள் ஸர்வசக்தன் என்று பாரார்கள் அன்றோ )
ஆஸ்ரிதர் அபேக்ஷித ஸம் விதானம் பண்ணி அருளிய
நீர்மையின் ஏற்றத்தை அருளிச் செய்கிறார்

மலையாமை மேல் வைத்து வாசுகியைச் சுற்றி
தலையாமை தானொரு கை பற்றி -அலையாமல்
பீறக்கடைந்த பெருமான் திரு நாமம்
கூறுவதே யாவர்க்கும் கூற்று —49-

பதவுரை

மலை–மந்தர பர்வதத்தை
ஆமை மேல் வைத்து–கூர்ம ரூபியான தன் மேல் வைத்து
வாசுகியை–வாஸுகி நாகத்தை
சுற்றி–(கடை கயிறாகச்) சுற்றி
அலையாமல்–நீர் வெளியில் புரளாமல்
பீற–(அமுதம்) புறப்படும்படியாக
கடைந்த–(கடலைக்) கடைந்தருளின
பெருமான்–எம்பெருமானுடைய
ஆமை தான்–கூர்ம ரூபியாகத் திருவவதரித்த தானே
ஒரு கை பற்றி–(மலையினுச்சியை) ஒருகையாலே பிடித்தமுக்கி
திருநாமம்–திருநாமங்களை
கூறுவதே–வாய் விட்டுச் சொல்லுவதே
யாவர்க்கும்–அனைவர்க்கும்
கூற்று–வாய்ப் பேச்சாகக் கடவது-பேசுவதே பிராப்தி

மந்த்ர பர்வதத்தைக் கூர்மத்தின் மேல் வைத்து வாஸூகி என்னும் பாம்பைக் கயிறாகச் சுற்றி
ஆமையான தான் மலையின் உச்சியை ஒரு கையால் பிடித்து அமுக்கி நீர் வெளியில் புரளாமல்
அம்ருதம் பிறக்கும்படி கடைந்த ஸர்வேஸ்வரனுடைய திருநாமங்களை
அனுசந்திப்பதே எல்லாருக்கும் உசிதமானது –

மலையாமை மேல் வைத்து வாசுகியைச் சுற்றி
கூர்ம ரூபியான தன் மேலே-மலையை வைத்து-
வாசுகியைச் சுற்றி

தலையாமை தானொரு கை பற்றி –
ஆமையான தான்
மேலே-கொந்தளியாத படிக்கு ஈடாக-
மலையின் உச்சியை ஒரு கையாலே அமுக்கி –

அலையாமல் பீறக்கடைந்த பெருமான் திரு நாமம் கூறுவதே யாவர்க்கும் கூற்று –
நிரம்பின நீர் புறம் பொசியாமலும்-
அமிர்தம் படும்படி உள்ளுடையவும் கடைந்த
சர்வேஸ்வரனுடைய திரு நாமத்தை சொல்லுவதே-
எல்லார்க்கும் அடுப்பது-

(அஜிதன் என்றே இவன் திரு நாமம்
இந்த செயலால் தேவ ஜாதி முழுவதையும் எழுதிக் கொண்டவன்
தானே தேவாதிதேவன் என்று விளங்க நின்றவன்
ப்ரயோஜனாந்தர பரர்களுக்கும் தன்னை அழிய மாறி ரக்ஷிக்கும் அவன்
திரு நாமத்தைச் சொல்லுவதே அனைவருக்கும் தகுந்தது -)

அப்பிள்ளை உரை
மந்த்ர பர்வதத்தை கீழே ஆழ விடாமல் ஆதார கூர்மம்
(அண்டக் கடாகம் இங்கும் ஆதார கூர்மம் உண்டே
கூர்மாசனம் இன்றும் உண்டே )
தன் மேல் வைத்து
வாஸூகி யாகிற பாம்பைக் கடை கயிறாகச் சுற்றி
(மத்ஸ்ய அவதாரத்தில் மீனின் ஒற்றைக் கொம்பையும் படகையும் கட்டி – அங்கும் கைங்கர்யம் உண்டே )
மேல் கொந்தழியாத படி ப்ருஹத் கூர்ம ரூபியாய் அதனுடைய உச்சியை ஒரு கையாலே பிடித்து
அம்ருதம் உண்டாகும் படி நீரானது புறம்பு பொசிந்து வெளியே போகாதபடியும் –
(பொருளின் அளவு தண்ணீர் வெளியிலே போகுமே அது போகாதபடி )
அறைப்பட்ட பால் மீண்டும் மீண்டும் அறைப்படும் படி
ஒரு கையாலே அமுக்கி
கடலைக் கடைந்த சர்வேஸ்வரனுடைய உதார குணம் -போன்ற பல குணங்களுக்கு திரு நாமம் –
(வண்மைக்கு இந்த உதார நாமம் -அழகுக்கு ஸூந்தரன் -ஸீலத்துக்கு ஸுசீல்யன் -வாத்சல்யத்துக்கு -ஆஸ்ரித வத்சலன் )
இது போன்ற திரு நாமங்களை சொல்லுவதே -ஆஸ்ரிதர் அனைவருக்கும் அடுப்பது
கூற்று -கூறு பட்டது –தகுதியானது

————————————————————————–

(கீழே திருநாமம் சொல்ல பர உபதேசம்
இதில் திருநாமத்தை நெஞ்சில் கொண்ட எனக்கு ஒரு தீங்கும் இல்லை என்று
அனுசந்தித்து நிர்ப்பரர் ஆகிறார் –
ஆற்றங் கரைக் கிடக்கும் கண்ணன் -ஸுலப்யம் -மாம் என்று தொட்டுரைத்ததே பரத்வம் என்னலாம் படி
அன்றோ கபிஸ்தலத்தில் தீர்த்தம் ப்ரசாதியாதே சேவை –
ஆஸ்ரயர் வருவார் உண்டோ என்று ஆற்றங்கரை கிடக்கிறானே –
கடல் கிடக்கும் மாயன்-பரத்வம் -அஹம் -திருப்பாற் கடலில் கூப்பீடு கேட்க்கும் இடம் –
மாயனை (மன்னு வடமதுரை மைந்தனை)– தாமோதரனை –பரத்வம் ஸுலப்யம் அங்கும் உண்டே
ஆஸ்ரயண ஸுகர்ய ஆபாதக கல்யாண குணங்கள்
ஆஸ்ரய கார்ய ஆபாதக கல்யாண குணங்கள்
ஆழ் பொருளை அருளிய ஆழ்வார் மூலம் பெற்ற அர்த்தத்தால் -ஓராண் வழியாக வந்த அர்த்தம்
இது கபிஸ்தலத்துக்கு என்று பெரியவாச்சான் பிள்ளை பட்டோலை எழுதி அருளிச் செய்தார் )

அப்பிள்ளை உரை அவதாரிகை
ஸ்ரீ கிருஷ்ணன் அருளிச் செய்த செய்த சரம ஸ்லோகார்த்தம் என் உள்ளத்திலே இருக்க
ஸமஸ்த விரோதிகளும் போக குறை இல்லை என்கிறார்

கூற்றமும் சாரா கொடு வினையும் சாரா தீ
மாற்றமும் சாரா வகை யறிந்தேன் -ஆற்றங்
கரைக் கிடக்கும் கண்ணன் கடல் கிடக்கும் மாயன்
உரைக் கிடக்கும் உள்ளத்து எனக்கு –50-

பதவுரை

கடல்–திருப்பாற் கடலிலே
கிடக்கும்–(பிரமன் முதலியோர்க்கு ஆச்ரயணீயனாய்க் கொண்டு) திருக்கண் வளர்ந்தருள்கிற
மாயன்–ஆச்சரிய பூதனாய்
ஆறு கரை–திருக் காவேரிக் கரையான கபிஸ்தலத்திலே
கிடக்கும்–திருக் கண் வளர்ந்தருள்கிற
கண்ணன்–எம்பெருமானுடைய
உரை–ஸ்ரீஸூக்தியாகிய சரமச்லோகம்
எனக்கு–என்னுடைய
உள்ளத்து–நெஞ்சிலே
கிடக்கும்–பதிந்திருக்கின்றது
(ஆன பின்பு)
கூற்றமும் சாரா–மிருத்யு பயம் அணுகாமலும்
கொடு வினையும் சாரா–கொடிய பாவங்கள் அணுகாமலும்
தீ மாற்றமும் சாரா வகை–கெட்ட விஷயங்களொன்றும் அணுகாமலுமிருக்கத் தக்க உபாயத்தை
அறிந்தேன்–அறிந்தவனானேன்.

தீ மாற்றங்கள்
1-தேஹாத்ம அபிமானம்
2-ஸ்வ தந்த்ர ஆத்ம அபிமானம்
3-விஷயாந்தர பரத்வம்
4-தேவதாந்த்ர சம்பந்தம்
5-உபாயாந்தர பரத்வம்
6-ப்ரயோஜனாந்தர பரத்வம்
7-ஸூ வ கர்த்ருத்வ
8–ஸூவ போக்த்ருத்வ போல்வன

திருப்பாற் கடலிலே பள்ளி கொண்ட ஆச்சர்ய பூதனாய்
திருக் காவேரிக் கரையிலே சயனித்தவனான கண்ணபிரானுடைய
ஸ்ரீ ஸூ க்தியான சரம ஸ்லோகம் என்னுடைய ஹிருதயத்தில் இருக்கிறது
மிருத்யு கிட்டாமைக்கும் க்ரூர பாபங்கள் நெருங்காமைக்கும்
கெட்ட விஷயங்கள் ஒன்றும் சேராமைக்கும் உபாயம் அறிந்தேன் –

கூற்றமும் சாரா கொடு வினையும் சாரா தீ மாற்றமும் சாரா வகை யறிந்தேன் –
1-ம்ருத்யு அணையாமைக்கும் –
2-ம்ருத்யு அணைகைக்கு ஹேதுவான மகா பாபம் அணையாமைக்கும்-
3-அபவாதம் சேராமைக்கும்-
உபாயம் அறிந்தேன் – –

ஆற்றங்கரைக் கிடக்கும் கண்ணன் கடல் கிடக்கும் மாயன் உரைக் கிடக்கும் உள்ளத்து எனக்கு –
திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து ஆச்சர்ய பூதனை-
அனந்தரம்
திருக் கபிஸ்தலத்திலே கண் வளர்ந்து அருளுகிற கிருஷ்ணன் –
உன்னுடைய ரஷணததுக்கு நானே கடவன் -நீ சோகிக்க வேண்டா -என்று
அருளிச்  செய்த சரம ஸ்லோகார்த்தம் என் நெஞ்சிலே கிடக்கும்

கூற்றம் -வர்ணாஸ்ரம தர்ம நிஷ்டரில் வ்யாவ்ருத்தி
(ஆத்ம ஸ்வரூபம் பகவத் ஸ்வரூபம் உணர்ந்து அதன் படி நிஷ்டை
உபாயாந்தரங்கள் இல்லாமல் இருப்பது )
கொடு வினை -த்ருஷ்ட அத்ருஷ்ட காம்ய பரரில் வ்யாவ்ருத்தி –
(ப்ராப்யாந்தரங்கள் இல்லாமல் இருப்பது )
இவை இரண்டும் பிரபன்னனுக்கு இல்லை -என்றபடி

ஆயன் இத்யாதி –
அவனுடைய திருநாமங்கள் ஹிருதயத்தில்-கிடக்கும் எனக்கு
அதாவது –
தத் விஷய ஜ்ஞானம்-
அவன் வார்த்தை -(மாம் -அஹம் )
அவன் விஷயமான திரு நாமம் -இரண்டு அர்த்தங்களும் உண்டே-

(ஆற்றம் கரைக் கிடக்கும் கண்ணன் -மாமின் அர்த்தம்
கடல் கிடக்கும் மாயன் -அஹமின் அர்த்தம் )

(ஸ்வ புருஷம் அபி வீஷ்ய பாச ஹஸ்தம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் –3-7-14-

திறம்பேல்மின் கண்டீர் திருவடி தன் நாமம்
மறந்தும் புறம் தொழா மாந்தரை -இறைஞ்சியும்
சாதுவராய் போதுமின்கள் என்றான் நமனும் தன்
தூதுவரைக் கூவிச் செவிக்கு–-நான்முகன் திருவந்தாதி-68-

கெடும் இடராய வெல்லாம் கேசவா வென்ன நாளும்
கொடு வினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுக கில்லார்
விடமுடை யரவில் பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும்
தடமுடை வயல் அனந்த புரநகர் புகுதும் இன்றே—திருவாய் மொழி–10-2-1-

காவலில் புலனை வைத்து கலி தன்னைக் கடக்கப் பாய்ந்து
நாவலிட்டு உழி தருகின்றோம் நமன் தமர் தலைகள் மீதே
மூவுலகு உண்டு உமிழ்ந்த முதல்வ நின் நாமம் கற்ற
ஆவலிப்புடைமை கண்டாய் அரங்க மா நகர் உளானே –திரு மாலை–1-

வெள்ளை நீர் வெள்ளத்து அளைந்த அரவணை மேல்
துள்ளு நீர் மெள்ளத் துயின்ற பெருமானே
வள்ளலே யுன் தமர்க்கு என்றும் நமன் தமர்
கள்ளர் போல் கண்ண புரத்துறை யம்மானே—-ஸ்ரீ பெரிய திருமொழி–8-10-7-

அப்பிள்ளை உரை
திருப்பாற் கடலிலே ப்ரஹ்மாதிகளுக்கு ஆஸ்ரயணீயனாகக் கொண்டு
ஆச்சர்ய குண யுக்தனாய் கண் வளர்ந்து அருளும்
அவ்வளவு போக முடியாத- பின்பு உள்ளவருக்காக
திருக் காவேரிக் கரையிலே கபிஸ்தலத்தில் கண் வளர்ந்து அருளும் அனுக்ரஹ சீலனான கண்ணன்
திருத்தேர் தட்டிலே
அர்ஜுனனை வியாஜீ கரித்து
மாம் ஏகம் –அஹம்-நீ பற்றுவதும் உபாயம் இல்லை –சரம ஸ்லோகார்த்தம்
நிரந்தர அனுசந்தான விஷயமாகக் கொண்டு என் உள்ளத்தில் இருக்க
எனக்கு மிருத்யு வந்து கிட்டாமைக்கும்
அதுக்கு அடியாக கொடிய பாபங்கள் வந்து கிட்டாமைக்கும்
அநந்தரம்
அநர்த்தம் என்று பேர் பெற்றவை வாராமைக்கும்
அபவாதங்கள் வந்து கிட்டாமைக்கும் -உபாயம் அறிந்தேன்
தீ வினைகள் அனைத்தும் வாராமைக்கு உபாயம் அறிந்தேன் -என்றுமாம்

————————————————————————–

(எனக்கு ஒரு தீங்கும் இல்லை என்றார் கீழே
எனக்கு ஒப்பாவார் ஒருவரும் இல்லை என்கிறார் இதில்
எனக்கு ஒரு ரக்ஷகர் இல்லை என்று சொல்லிக் கொள்ளும் சர்வேஸ்வரனும் ஒப்பு இல்லை )

அப்பிள்ளை உரை அவதாரிகை
சரம ஸ்லோகத்தில் தேவரீர் அருளிச் செய்த படி
உபாயாந்தரங்களை பற்றற விட்டு (ஓட்டை ஓடமும் ஒழுகல் ஓடமுமாகவே இருக்குமே இவை )
தேவரீரையே நிரபேஷ உபாயமாகப் பற்றி நிர் பரராய் இருக்கும் எனக்கு
உபய விபூதியிலும் ஒப்பார் உண்டோ

(நித்யர் ப்ராப்யம் கை புகுந்தவர் தானே
உம்மை உபாயமாக பற்றாதார் எனக்கு ஒப்பாக மாட்டார்களே
எம்பெருமான் ரக்ஷகர் என்று இருக்கும் -உபாய அத்யாவசியம் உள்ள எனக்கு யார் ஒப்பு ஆவார்
இங்கு உள்ளாருக்கு திட அத்யவசாயம் இல்லை
அங்கு உள்ளாருக்கு அது தேவை இல்லை
மற்றைய ஆழ்வார்கள் அவனே ரக்ஷகன் என்று அந்வய மாகவே மிக்கு அருளிச் செய்ய
நானே உன்னை ஒழிந்த ரக்ஷகர் அல்லர் என்று வியதிரேக மாகவே மிகவும் அருளிச் செய்துள்ளேன்
ஆகவே அவர்களும் எனக்கு ஒப்பு இல்லை
உறையில் இடாத ஆழ்வார் இவர் ஒருவரே – )

எனக்கு ஆவார் ஆர் ஒருவரே எம்பெருமான்
தனக்காவான் தானே மற்று அல்லால் -புனக்காயா
வண்ணனே யுன்னைப் பிறர் அறியார் என் மதிக்கு
விண்ணெல்லாம் உண்டோ விலை –51-

பதவுரை

புனம்–தன்னிலத்திலே வளர்கிற
காயா–காயாம்பூவினுடைய
வண்ணனே–நிறம் போன்ற நிறமுடைய பெருமானே!
எனக்கு–(உன்னுடைய நிர்ஹேதுக கடாக்ஷத்திற்குப் பாத்ர பூதனான) எனக்கு
ஆவார் ஆர் ஒருவரே–ஒப்பாகுபவர் எவரொருவரிருக்கின்றனர்? (எவருமில்லை)
எம்பெருமான்–ஸர்வேச்வரனாகிய நீயும்
தானே தனக்கு ஆவான் அல்லால்–தனக்குத் தானே ஒப்பாயிருப்பவனே யன்றி
மற்று–எனக்கு ஒப்பாக வல்லையோ?
உன்னை பிறர் அறியார்–நான் தவிர வேறொருவரும் உன்னை யறிய மாட்டார்கள்,
என் மதிக்கு–(உன்னை நன்றாக அறிந்திருக்கிற) என்னுடைய புத்திக்கு
விண் எல்லாம் விலை உண்டோ–மேலுலக மெல்லாம் கூடினாலும் ஒப்பாகப் போருமோ?

எனக்கு ஒப்பார் ஒருவர் யார் உண்டு
மேலும் ஸர்வேஸ்வரனும் தான் தனக்கு ஒப்பாமது ஒழிய எனக்கு ஓப்பான் அல்லன்
என் புத்திக்கு பரமபதம் எல்லாம் கூடத் தான் விலை யாகுமோ
தன்னிலத்தில் நின்ற காயாம்பூ போன்ற திருமேனியை யுடையவன்
உன்னை வேறே ஒருவர் அறியார் –

எனக்கு ஆவார் ஆர் ஒருவரே-
எம்பெருமான் ரஷகன் என்று இருக்கிற எனக்கு-ஒருத்தர் எதிர் உண்டோ –

எம்பெருமான் தனக்காவான் தானே மற்று அல்லால் –
ஈஸ்வரன் தனக்கு ஒருவன் ரஷகன் உண்டு என்று-இராமையாலே
அவனும் எனக்கு ஒப்பு அன்று –

புனக் காயா வண்ணனே யுன்னைப் பிறர் அறியார்
ஸ்ரமஹரமான வடிவை உடைய நீ-ரஷகன் அல்லை யாகிலும் விரும்பப்படும் உன்னை
அசலார் அறியார் –

என் மதிக்கு விண்ணெல்லாம் உண்டோ விலை –
சம்சாரத்தில் எம்பெருமான் ரஷகன் என்று இருக்கிற-எனக்கு-
விரோதி இல்லாத தேசத்திலே இருக்கிறவர்கள்-என்னோடு ஒப்பரோ –

(ரக்ஷகத்வத்திலே உனக்கு ஒப்பார் இல்லையோ பாதி
ரஷ்யத்வத்தில் எனக்கு ஒப்பார் இல்லை
ரக்ஷகன் அல்லாமல் ஹிம்சிப்பாய் ஆகிலும் வடிவு அழகு அறிந்து அகல மாட்டாத என்னை ஒழிய
இவ்வுலகில் வேறே ஒருவரும் உன்னை அறியார்
இருள் தரும் மா ஞாலத்தில் இருந்து இப்படி உன்னை அறிந்த எனக்கு நித்ய முக்தர்களும் ஒப்பார் ஆவாரோ
சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியரே–திரு விருத்தம் –79-
இனி யாவர் நிகர் அகல் வானத்தே –திருவாய் –4-5-8-
நினைக்கும் நெஞ்சு உடையேன் எனக்கு இனி யார் நிகர் நீள் நிலத்தே –திருவாய் –6-4-7-
எனக்கு இவ்வுலகம் நிகரே –திருவாய் –6-4-2-
ஒருவர் நம் போல் வருங்கேழ்பவர் உளரே -திரு விருத்தம் —-44-
பகவத் சம்பந்தம் அடியாக வரும் அஹங்காரம் உபாதயமே -)

அப்பிள்ளை உரை
உன்னாலே உன்னைப் பெருமது ஒழிய
யதா பூத ஞானத்தை பரிபூர்ணமாக உடைய எனக்கு
சத்ருசமாய் இருப்பார் உபய விபூதியிலும் உண்டோ
விபூதிமானான ஸர்வேஸ்வரன் ரக்ஷகனான தன் பெருமைக்குத் தானே ஒப்பாவான் ஒழிய
நான் -ஒருவரையே ரக்ஷகனாக உடைய ரஷ்யன் -என்று சொல்லிக் கொள்ளும் -எனக்கு ஒப்பாக மாட்டான்
தன்னிலத்திலே காயாம்பூ போல் இருண்டு குளிர்ந்த நிறமும் வடிவும் கொண்ட உன்னை
வேறே ஒருவரும் அறிய மாட்டார்கள் (ப்ராப்யமும் பிராப்பகமும் நீயே என்று அறியாதவர்கள் )
தம் பேற்றுக்கு தம் கச்சம் கட்டி யத்னம் பண்ணும் சம்சாரிகள் அறிவிலிகள்
(தனக்குத் தானே செய்யும் நன்மையையும் தீமையே போல் விலக்காகுமே )
நீயே ரக்ஷகன் என்று நாடொறும் நாகணை மிசை நம்பிரானே சரண் என்று ஏக சிந்தனையாய்
இருக்கும் எனது ஞானத்துக்கு விரோதி பிரசங்கமே இல்லாத அங்குள்ளார் ஒப்பு இல்லையே
எல்லார் பக்கலிலும் எனக்கு நிகராக – ஸத்ருச மூல்யமாக-விலை மதிப்புள்ள -சொல்லத் தக்க உள்ள வஸ்து உண்டோ
ப்ராப்ய ஏக பரராய் இருக்கும் அவர்கள் இடம் ப்ராபக-உபாய – பாவம் விலை செல்லப் பெறாமல்
குமரி இருந்து போம் அத்தனையே –
விண்ணுளாரிலும் சீரியர் இத்யாதிகள்

———————————————————–

என்னோடு ஒப்பார் உண்டோ என்று சொல்லுவான் என் என்னில்-
இது அன்றோ நாடு அனர்த்தப் படுகிறபடி என்கிறார்-

அப்பிள்ளை உரை அவதாரிகை
என்னோடு ஒப்பார் உண்டோ என்று சொல்லுவான் என் என்னில்
இது வன்றோ நாடு அநர்த்தப் படுகிறபடி -என்கிறார்

விலைக்காட்படுவர் விசாதி ஏற்று உண்பர்
தலைக்காட் பலி திரிவர் தக்கோர் -முலைக் கால்
விடமுண்ட வேந்தனையே வேறாக வேத்தாதார்
கடமுண்டார் கல்லாதவர்–52-

பதவுரை

தக்கோர்–அறிவு முதலியவற்றால் பெருமை பெருந்தியவராகத் தங்களை அபிமானித்திருக்கும் நீசர்கள்-ஷேப யுக்தி –
விலைக்கு ஆள் படுவர்–ஜீவனத்திற்காகப் பிறர்க்கு அடிமைப் பட்டிருப்பர்கள்
விசாதி ஏற்று உண்பர்–(மிருத்யு தானங்கள் வாங்கும் முகத்தால் பிறருடைய) வியாதிகளைத் தாம் வாங்கி அநுபவிப்பர்கள்
தலைக்கு ஆள் பலி திரிவர்–ஒருவன் தலைக்காகத் தம் தலைமை அறுப்பதாகச் சொல்லி நர பலியாகத் திரிவர்கள்
முலைக்கால் விடம் உண்ட வேந்தனையே–(பூதனையின்) முலையிடத் துண்டான விஷத்தை உட்கொண்ட பெருமானையே
வேறுஆ எத்தாதார்–விலக்ஷணமாகத் துதிக்க மாட்டாதவர்களாய்
கல்லாதவர்–அறிவு கெட்டவர்களாய்க் கொண்டு
கடம் உண்டார்–பாபங்களை யநுபவிப்பவர்களாயிரா நின்றார்கள்.

புத்திமான்களாக அபிமானித்த துர் மானிகள் கிரயத்துக்கு அடிமைப்பட்டு இருப்பார்கள்
கால தானாதிகளை வாங்கி வியாதிகளை அனுபவிப்பார்கள்
ஒருவன் தலைக்காக –தலை அறுக்கிறேன் என்று -நரபலியாய்த் திரிவார்கள்
வித்ய அத்யயனம் பண்ணாத மூடர்கள்
ஸ்தனத்தில் இருந்த விஷத்தை அமுது செய்த ராஜாவாகிய ஸ்ரீ கிருஷ்ணனை
விலக்ஷணமாக ஸ்தோத்ரம் செய்யாதவர்களாய் பாப பலத்தையே அனுபவிப்பார்கள் –

விலைக்காட்படுவர் விசாதி ஏற்று உண்பர் தலைக்காட் பலி திரிவர் தக்கோர் –
1-ஈஸ்வர சேஷமாய்-அனன்யார்ஹமான வஸ்துவை வேறு சிலர்க்கு சேஷம் ஆக்கியும்
(வாழாட் படாமல் கூழாட் பட்டு உழன்றும் )
2-ஜீவனத்துக்காக பிறர் உடைய வியாதிகளை-நீர் வார்ப்பித்துக் கொண்டு
3-ஒருத்தன் பிழைத்தால் தலை யரிகிறேன் என்று-பிரார்த்தித்து பலி த்ரவ்யமாய்
திரிந்தும் அன்றோ படுகிறது

தக்கோர் -என்று ஷேபோக்தி

முலைக் கால் விடமுண்ட வேந்தனையே வேறாக வேத்தாதார்
இவர்கள் குறித்துச் செய்வது
ஸ்வ விரோதியைப் போக்குமவனை ஏத்தாமை
(அவனை ஸ்தோத்ரம் செய்வது மட்டும் குறிப்பாக விட்டு
இவனால் ரக்ஷிக்கப்படும் அவர்களையே ஸ்தோத்ரம் செய்து )

கடமுண்டார் கல்லாதவர் –
தேத் வகம் புஞ்சதே பாபா -கீதை -3-13-
என்னும்படியே பாபத்தை புஜிக்கிறார்கள் –

அன்றிக்கே
கொடுக்க உடல் இன்றிக்கே இருக்க-
தனிசு வாங்கி ஜீவிக்குமவர்கள் என்னவுமாம் –

கடமுண்டார்–
கடன் பாபமாய் -அத்தை அனுபவித்தல்-

(ந மாம் துஷ்க்ருதிநோ மூடா: ப்ரபத்யந்தே நராதமா:
மாய யாபஹ்ருத ஜ்ஞாநா ஆஸுரம் பாவமாஸ்ரிதா:-கீதை -7-15-

மாயயா அபஹ்ருத ஜ்ஞாநா-மாயையினால் ஞானம் அழிந்தோர்,
ஆஸுரம் பாவம் ஆஸ்ரிதா:-அசுரத் தன்மையை பற்றி நிற்போர்,
நராதமா: துஷ்க்ருதிந: மூடா:-மனிதரில் தாழ்ந்தவர்களும் இழிவான செயல்களை புரிகின்றவர்களுமான அறிவிலிகள்,
மாம் ந ப்ரபத்யந்தே-என்னைச் சரண் புகார்.

தீமை செய்யும் மூடர், மனிதரில் கடைப்பட்டார், மாயையால் ஞான மழிந்தோர்,
அசுரத் தன்மையைப் பற்றி நிற்போர்,(இனையோர்) என்னைச் சரண் புகார்.)

அப்பிள்ளை உரை
அறிவுடைமைக்குத் தங்களைப் போல் தகுதியானவர் இல்லை என்று அபிமானம் மிக்கு ஹேயரானவர்கள்
எம்பெருமானுக்கு அநந்யார்ஹ சேஷ பூதரான தங்களை
ஊதியங்களுக்கு சிலருக்கு எழுதிக் கொடுத்து அடிமைப்படுவார்கள்
பிறருடைய வியாதிகளை கால தான ப்ரதிஹ்ருத முகத்தாலே -நீர் வார்த்திக் கொண்டு வயிறு வளரா நிற்பார்கள்
ஒருவன் பிழைத்தால் தலை அறுத்துக் கொடுக்கக் கடவராய் தேவதாந்தரங்களுக்கு பலியாக
இப்படி தத்வ ஸ்தியை சாஸ்த்ர முகத்தால் கற்று அறிய மாட்டாத அவிசேஷஞ்ஞராய்
விடப்பால் கொடுத்த பூதனா சம்ஹாரம் செய்து அருளி -விரோதி நிரசன சாமர்த்தியம் உள்ள
ஜகத்துக்கு ராஜாதி ராஜனான தன்னை நோக்கித் தந்த உபகாரத்துக்காக -அவனையே
யாவ்ருத்தமாக -வேறாக- குறிப்பிட்டு -ஏத்த மாட்டாமல்
அவன் தன்னை வழி படக் கொடுத்த கரண களேபரங்களைக் கொண்டு அந்நிய பரராய் இருக்க
கொடுக்க முதல் அற்று இருக்க தனுசு -கடன்- வாங்கி ஜீவித்து இருப்பவர்களோடே ஒப்பார்கள் ஆவார்
கடன் உண்டார் என்றது
தேத் வகம் புஞ்சதே பாபா -கீதை -3-13-என்கிறபடியே
பாபத்தை புஜிப்பவர்கள் ஆவார்

————————————————————————–

(எனக்கு யார் நிகர் ஒருவர் என்னும் நிலையில் உள்ள நீர்
விலைக்கு ஆள் படும் சம்சாரிகளான நாங்களும் உஜ்ஜீவிக்க உபாயம் அருளிச் செய்ய வேண்டும்
என்று பிரார்த்திக்க
தேவதாந்த்ர சம்பந்தம் இல்லாமையே என் பெருமைக்கு ஹேது –
அதுவே உங்கள் சிறுமைக்கும் ஹேது –
அதை அறுத்துக் கொள்ளுங்கோள் என்று உபதேசிக்கிறார் இதில் -)

அப்பிள்ளை உரை -அவதாரிகை
ப்ரபந்ந ஜன ரக்ஷணம் ஆகிற மஹா தீக்ஷை -நித்ய தீஷிதனாக இருக்கும்
சக்ரவர்த்தி திருமகனை ஒழிய வேறே சிலரை ஆஸ்ரயணீயராக கொள்ளேன்
நீங்களும் சூத்ர தேவதையை சமாஸ்ரயணீயராக கொள்ளாமல்
உஜ்ஜீவித்து போருங்கோள் என்கிறார் –

கல்லாதவர் இலங்கை கட்டழித்த காகுத்த
னல்லால் ஒரு தெய்வம் நான் இலேன் –பொல்லாத
தேவரைத் தேவர் அல்லாரைத் திரு இல்லாத்
தேவரைத் தேறேல்மின் தேவு-53–

பதவுரை

கல்லாதவர் இலங்கை–அறிவு கெட்ட ராக்ஷஸருடையதான இலங்கா புரியை
கட்டு அழித்த–அரணழித்த
காகுத்தன் அல்லால்–இராமபிரானை யல்லது
(சரணாகத ரக்ஷண தீஷிதம் பிரதி ஸம்பன்னம் -ஏதத் விரதம் மம )
ஒரு தெய்வம்–வேறொரு தெய்வத்தை
யான் இலேன்–நான் தெய்வமாகக் கொள்வேனல்லேன்
பொல்லாத தேவரை–கண் கொண்டு காணக் கூடாத தேவதைகளையும்
தேவர் அல்லாரை–(உண்மையில்) தெய்வத் தன்மை யற்றவர்களாயும்
திரு இல்லா தேவரை–பிராட்டியின் ஸம்பந்த மல்லாமலே தேவரென்று பேர் சுமப்பவர்களாயும் வுள்ள சிலரை
தேவு–தெய்வங்களாக
தேறேல்மின்–நீங்கள் நினைக்க வேண்டா.

அஞ்ஞானிகளான ராக்ஷஸர் களுடைய இலங்கையை வரம்பு அழித்த சக்ரவர்த்தி திருமகனை ஒழிய
நான் வேறே ஒரு தேவதையை யுடையேன் அல்லேன்
க்ரூரர்களாய்த் தபஸ்ஸினால் தேவதைகளாயினும் ஸ்வதஸ் ஸித்தமான தேவத்வம் இல்லாதவர்களாய்
ஸ்ரீ லஷ்மீ சம்பந்தம் இல்லாதவர்களான ருத்ராதிகளைப் ப்ராப்யராக நினைக்க வேண்டாம் –

கல்லாதவர் இலங்கை கட்டழித்த காகுத்த னல்லால் ஒரு தெய்வம் நான் இலேன் –
கற்றான் ஒருத்தன் உளனாக-அவனைப் புறப்பட விட்ட ஜ்ஞான ஹீநருடையதான இலங்கையை
அரண் அழித்த சக்கரவர்த்தி திருமகனை ஒழிய
வேறு ஓன்று-சமாஸ்ரயணீயமாக நினைத்து இரேன் –
பாவோ நான்யத்ர கச்சதி -என்கிற திருவடியைப் போலே இவரும்

பொல்லாத தேவரைத்
ஸூபாஸ்ரயமாக விருபாஷன் தொடக்கமானவரை-
ஆஸ்ரயிக்கப் போமோ

தேவர் அல்லாரைத் –
அத்தை பொறுத்து ஆஸ்ரயித்தாலும்
கட்டக் குடியன் –
அப்ராப்த ஸ்தலம் –

திரு இல்லாத் தேவரைத்
மோஷ பிரதானவன் ஸ்ரீ ய பதியன்றோ –

தேறேல்மின் தேவு –
ப்ராப்த ஸ்தலம் அல்லாமையே யன்று-
ஆஸ்ரயித்தால் பிரயோஜனம் இல்லை என்கை –

தேறேல்மின் தேவு —
முகப்பிலே புத்திர பஸ்வாதிகளை தருமத்தைக் கண்டு-
ஆஸ்ரயணீயராக புத்தி பண்ணாதே கொள்ளுங்கோள்

(கட்டக் குடியன் -ஆபாத தயா குடி போலே-தோற்றி வரி இறுக்க மாட்டாதவன்
எடுத்துக் கழிக்கவும் யோக்யதை இல்லை-
கட்டம்–கஷ்டமாய் தரித்திரன் என்றபடி
குடி போலே இருக்கையாலே எடுக்கவுமாம்
தரித்திரன் ஆகையாலே கழிக்கவுமாய் இருக்கும் அங்கு
இங்கு அபராதம் ஆகையாலே எடுத்துக் கழிக்கவும் யோக்யதை இல்லை
தேவு -அல்ப அஸ்த்ர பல பரதன் என்றபடி)

(கல்லாதார் இலங்கை
இஹ சந்தோ ந வா சந்தி -என்று பிராட்டியும் இங்கு கற்றவர்கள் இல்லையோ என்று
அதிசங்கை பண்ணும் படியான தேசம்
இங்கு கல்வியாவது
சா வித்யா யா விமுக்தயே -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-19-41- என்று மோக்ஷத்துக்கு உபயோகப்படுவதே கல்வி யாகும்
அயன் முதலாத் தந்த நளிர் மா மலர் உந்தி வீட்டைப்பண்ணி விளையாடும் விமலன்
அவனுக்கு விளையாட்டுக்கு உபகாரணமாய் இருப்பார் தேவர் ஆவாரோ –திவு கிரீடா
திவு விஜிகிஷா -புறமுதுகு ஓடியும் ஹூங்காரத்தாலே ஸ்தம்பித்தும் உள்ளாரோ தேவர்
திவு -வியவஹார -கிளிப்பிள்ளை போல் அவன் ஒது விக்க உச்சரிப்பவரோ தேவர்
திவு -த்யுதி -தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி -ஒளியை இரவல் வாங்கி மினுங்கும் அவர்களோ தேவர்
திவு -ஸ்துதி -ஸ்துதிக்க தகாத ரூப குண சேஷ்டிதங்கள் உள்ளாரோ தேவர்
திவு மோத -பிண்டியார் மண்டை ஏந்தி துன்புற்றவரோ தேவர்
திவு மத -பாணாஸுர வருத்தன்காந்தத்தில் கர்வம் ஒடுங்க ஓடினவரோ தேவர் –
திவு காந்தி -உரு பொலாத வரோ தேவர்
திவு கதி -அசுரர்களால் அலைப்புண்டு கதி தேடி ஓடுபவரோ தேவர்
ஸ்ரத்தாயா தேவோ தேவத்வம் அஸ்நுதே
ஹ்ரீஸ் ச தே லஷ்மீஸ் ச பத்ன்யவ்
கள்ளி வ்ருக்ஷத்தை மஹா வ்ருக்ஷம் என்னுமா போலே மஹா தேவன் -என்று பெயர் சுமந்து திரிகின்றாரே
இவர்கள் அளிக்கும் அல்ப பலன்களும் மயைவ விஹிதான் ஹிதான் -என்கிறபடியே
அவற்றையும் சர்வேஸ்வரன் மூலமாகவே தருகிறார்கள் – )

அப்பிள்ளை உரை
முதலிலே கல்வியில் புதியது உண்டு அறியாத அறிவு கேடர் அடங்கலும்
குளவிக் கூடு போல் திரண்டு வர்த்திக்கும் இலங்கையை அரண் அழித்துப் பொகட்ட காகுத்த
ஆண் பிள்ளையைத் தவிர ஆஸ்ரயணீயராக கொள்ளேன்
ஆன பின்பு நீங்களும்
காணிலும் உருப்பிலா செவிக்கிலாத கீர்த்தியார்
தந்தை தலையைக் கிள்ளி
பத்மாசூரனை கண்டு புறமுதுகிட்டு
பாணாசூர யுத்தம் புறமுதுகு ஓடி
பத்ரம் புஷபம் தோயம் இவன்
ஸூபாஸ்ரயமும் இல்லை
ஏறிட்டு பார்க்க ஒண்ணாத படி
கட்டின தலையும் பூசின சாம்பலும் நெற்றிலே கண்ணும் உடையனாய்
தானே தலையை ஆஹுதி பண்ணி பெற்ற பதவி பெற்றவன்
ஸ்வா பாவிக தெய்வத்வம் ஒருவனுக்கு மட்டுமே
ஸ்ரத்தயா தேவத்வம் அஸ்னுதே -என்கிறபடியே
ஸ்வ சம்பந்தத்தால் தேவத்வம் பூண் கட்டிக் கடவ ஸ்ரீ சம்பந்தம் இன்றிக்கே இருக்கும்
இவர்களை கொள்ளாமல் உஜ்ஜீவியுங்கோள்
திரு இல்லாத் தேவர் பொல்லாத தேவராயுமாயும் தேவர் அல்லாதாராயுமே இருப்பார்கள் –

————————————————————————–

(பொல்லாத தேவர் கோஷ்ட்டியிலே அன்றோ உபேந்திரனும் விஷ்ணுவும் –
இவர்கள் உடன் ஸஹ படிப்பார்கள் என்ன
பிரகார பிரகாரி பாவம் அப்ருஹத் ஸித்த விசேஷணம் -பூ மணம் -ரத்னம் ஒளி போல்
ஸர்வ அந்தர்யாமியான நாராயணனே என்று அறியாத
நீங்கள் படித்த சாஸ்திரங்கள் எல்லாம் வீணாயின என்று அவர்களை நிந்திக்கிறார் இதில் )

அப்பிள்ளை உரை-அவதாரிகை
பிரம்மா ருத்ராதி ஸ்தாவர அந்தமாக ஸமஸ்த வஸ்துக்களும்
எம்பெருமானுக்கு பிரகார தயா சேஷம் என்று அறியாதவர்கள்
கற்றது அடங்கலும் காட்டுக் கத்தல் (கூச்சல்)போலே ஆகுமே-

தேவராய் நிற்கும் அத்தேவும் அத்தேவரில்
மூவராய் நிற்கும் முது புணர்ப்பும் –யவராய்
நிற்கின்றது எல்லாம் நெடுமால் என்று ஓராதார்
கற்கின்றது எல்லாம் கடை –54-

பதவுரை

தேவர் ஆய் நிற்கும் அத்தேவும்–(அக்நி இந்திரன் முதலிய) தேவதைகளாய்க் கொண்டு நிற்கிற தெய்வமும்,
முது புணர்ப்பும்–அநாதியான நிலைமையும்
யாவர் ஆய் நிற்கின்றது எல்லாம்– மற்றும் மனிதர் முதலியன வாய்க்கொண்டு நிற்கிற ஸகல பதார்த்தங்களும்
(ஆகிய எல்லா சேதன அசேதனங்களும் )
அத் தேவரில்–அந்த தேவர்களுக்குள்ளே
மூவர் ஆய் நிற்கும்–த்ரிமூர்த்தியாய் நிற்பதாகிற
நெடுமால் என்று ஓராதார்–ஸர்வேச்வர ப்ரகாரமே என்று ஆராய்ந் துணர மாட்டாதவர்கள்
கற்கின்றது எல்லாம் கடை–கற்ற கல்வி மிகவும் தாழ்ந்ததாகப் போகும் பேசும் பேச்செல்லாம் உபயோகமற்றது.

இந்திராதி தேவர்கள் நடுவே நிற்கும் அம் மேன்மையையும்
அந்த தேவர்களில் பிரதானரரான பிரம்மா விஷ்ணு ருத்ரர் என்ற மூவரில் நடுவே நின்ற பிரதம அவதாரமான விஷ்ணு ஸ்திதியையும்
ஸமஸ்த வஸ்துக்களும் நிர்வாஹகானாய் இருக்கும் தன்மை எல்லாவற்றையும்
ஸர்வேஸ்வரன் என்று அறியாதவர்கள் அப்யஸிக்கிற வித்யைகள் எல்லாம் வியர்த்தம் —

ஆதித்ய இந்த்ராதிகளுக்கு நடுவே நிற்கிற நிலையும்-
ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கு நடுவே
மத்யே விரிஞ்ச கிரிசம் பிரதம அவதார -என்கிற-பிரதம அவதாரத்தையும்
ஸ்வ வ்யதிரிக்த சமஸ்த வஸ்துக்களிலும்-சேதன த்வாரா ப்ரவேசித்து
அவற்றுக்கு வஸ்துத்வ நாம பாக்த்வம்-உண்டாம்படி நிற்கிற நிலையும்
சர்வாதிகனான ஈஸ்வரன் என்று அறியாதவர்கள்-
பரக்க கற்கிறது எல்லாம் சம்சார ப்ரவர்தகர் ஆகைக்கு –

(உபேந்திரா வாமன அமோக பிராம்ஸூ ஊர்ஜித அதீந்திரா -ஏழு திரு நாமங்கள் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாமத்தில் உண்டே
இந்த்ரனுக்குள் நடுவே இருந்தாலும் -இந்திரனையும் தாண்டி அதீந்திரா
ஸ்ருஷ்டி ஸ்திதி அந்த கரணீம் ப்ரஹ்ம விஷ்ணு சிவாத் மிகாம்
ஸ ஸம் ஞாம் யாதி பகவான் ஏக ஏவ ஜனார்தன-ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-2-66-
புணர்பு -சங்கல்பம் -இங்கு சங்கல்பம் அடியான அவதாரங்களை சொல்லுகிறது
த்ரிபாத் தூர்தவ உதைத் புருஷ பாதோ அஸ்யே ஹாபாவாத் புந -சங்கல்பித்து அநிருத்தன் விஷ்ணுவாக அவதாரம்
சம்பவாம் ஆத்ம மாயயா
விரிஞ்சு கிரிஞ்ச மத்யே -ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -ஒற்றுமையைக் காட்டி உனது ஸ்வரூபத்தை மறைத்து
அதே அவதாரத்தில் ஸத்வ குண வளர்த்து -திரிவிக்ரமனாக மேம்பட்டவனாக -தத்வ ப்ரவர்த்தகன் கிருபா பரிபாலனார்த்தே
அநிருத்தன் விஷ்ணுவாக அவதாரம் ஸ்ருதி
ஏக ஏவ ஜனார்த்தனன் படைக்க ப்ரஹ்மாவாகவும் -இப்படி அந்தர்யாமித்வம் -)

அப்பிள்ளை உரை
முப்பத்து மூவரான அக்னி இந்திராதி தேவர்களாய்க் கொண்டு ஆராத்யராய் நிற்கிற அந்த முதன்மையும்
அந்த தேவர்களில் வைத்துக் கொண்டு
பிரம்மா ருத்ரராக நிற்கிற அந்தராத்மதயா பழையதாக ஸ்ருஷ்டியாதிகளும்
மற்றும் மனுஷ்யாதிகளான சகல பதார்த்தங்களுக்கும் அந்தராத்மா தயா நிற்கும்
சர்வாதிகனான சர்வேஸ்வரனுக்கு பிரகாரமாக சேஷப்பட்டு இருப்பார்கள் என்று
அநுஸந்தியாதார்கள் பரக்க கற்ற வித்யைகள் எல்லாமே
சம்சாரத்தை வளர்க்கவே உறுப்பாகும் என்பதால் சாலத் தண்ணியதாக இருக்கும்
பகவத் விஷயம் தவிர மற்ற வித்யைகள் செருப்புக் குத்த கற்றவோபாதி பிரயோஜனம் இல்லாத கல்வியே யாகும்
(அனைத்திலும் என்னாலே வியாபிக்கப்பட்டுள்ளது -ஆத்ம தத்வம் அவிநாசி அழிவில்லாது -ஆத்மாவும் எனக்கு பிரகாரம் -கீதை
வாஸூ தேவனை இவ்வாறு பிரகாரம் என்ற உண்மை அறியாமல்
சதுர் வேதம் கற்ற விப்ரரும் குங்குமப்பூ சுமந்த கழுதை போலே ஆகும் )

————————————————————————–

(பர உபதேசம் செய்தும் திருத்துவார் இல்லாமையால் அவன் இடமே முறை இடுகின்றார்
விலைக்கு ஆள் படுவார் என்று சம்சாரிகளைக் கண்டு துன்புற்றார்
இதில் யாகாதிகளைப் பண்ணி ஸ்வர்க்காதி அல்ப பலன்களுக்காக
தேவதாந்த்ர பஜனம் பண்ணுவார்களைக் கண்டு துன்புறுகிறார் )

அப்பிள்ளை உரை -அவதாரிகை
சூத்ர தேவதா பஜனம் பண்ணி சூத்ர பலத்தைப் பெற்றுப் போவார் உண்டு
இத்தனை போக்கி
சர்வாதிகனான உன்னை அறிந்து ஆஸ்ரயிக்க வல்லார் ஒருவரும் இல்லையே என்கிறார் –

கடை நின்று அமரர் கழல் தொழுது நாளும்
இடை நின்ற வின்பத்தராவர் –புடை நின்ற
நீரோத மேனி நெடுமாலே நின்னடியை
யாரோத வல்லார் எவர் -55-

பதவுரை

அமரர் கடை நின்று–(இவ் வுலகத்தவர்கள்) தேவதாந்தரங்களின் வாசல்களைப் பற்றி நின்று
நாளும்-நெடுங்காலம் வரையில்
கழல் தொழுது–(அவர்களுடைய) காலில் விழுந்து (பரம புருஷார்த்தம் பெற மாட்டாமல்)
இடை நின்ற இன்பத்தர் ஆவர்–நடுவே கிடக்கிற (ஸ்வர்க்கம் முதலிய) சுகத்தைப் பெற்றொழிவர்கள்
குடை நின்ற நீர் ஓதம் மேனி நெடுமாலே–(இவ் வுலகத்தைச்) சூழ்ந்து கிடக்கிற கடல் போன்ற திருமேனியை யுடைய ஸர்வேஸ்வரனே!
நின் அடியை–உனது திருவடிகளை
ஓத வல்லாரவர் ஆர்–அநுஸந்திக்க வல்லார் ஆரேனுமுண்டோ? (யாருமில்லையே!)

தேவதாந்த்ரங்களின் வாசலில் நின்று பிரதி தினமும் அவர்கள் பாதங்களை ஆஸ்ரயித்து
மோக்ஷத்துக்கும் சம்சாரத்துக்கும் நடுவில் உள்ள ஸ்வர்க்காதி ஸூகமுடையவர்கள்
பூமியைச் சுற்றிக் கொண்டு இருக்கிற ஜலத்தை யுடைய சமுத்திரம் போன்ற திருமேனியை யுடைய சர்வாதிகனே
உன் திருவடிகளை அறிந்து ஸ்தோத்ரம் பண்ணத் தகுந்தவர்கள் யார்

தேவதாந்தரங்கள் வாசலிலே நின்று
சர்வேஸ்வரன் பக்கல் பண்ணும் ப்ரணாமாதிகளை
(ஆதி ப்ரதக்ஷிணம் நமஸ்காரம் திரு நாம சங்கீர்த்தனம் போல்வன)
யவர்கள் பக்கலிலே பண்ணும்
சம்சார சுகமும் இன்றிக்கே-
நிரதிசயமான மோஷ சுகமும் இன்றிக்கே இருக்க-
ஸ்வர்க்க சுகத்தை உடையர் ஆனவர் –
ஒரு பிரயோஜனம் பெறா விடிலும் ஸ்தோத்ரம் பண்ண வேண்டும் படி
ஸ்ரமஹரமான வடிவை உடையவன்-
திருவடிகளை ஏத்த வல்லார் ஆர் -(ஒருவரும் இல்லையே என்கிறார்)

ப்ரயோஜனாந்தரங்களைக் கொண்டு ஒழிகை ஒழிய
நின்னடியை ஏத்த வல்லார் ஒருவரும் இல்லை என்றபடி –

(இஷ்வாகு வம்ஸ திரிசங்கு வ்ருத்தாந்தம் அறிவோம் -மார்வில் இட்ட பூணல் வாராயே விட்டதே )

(புடை நின்ற நீரோத மேனி நெடுமாலே
அர்ச்சாவதார பர்யந்தமாக நின்று அருளி கடல் போல் சகல தாப ஹரமாய்
அத்யந்த ஸூகம் அளிக்கும் உனது திரு மேனியை
விலைக்கு ஆள் பட்டவர்களும்
இடை நின்ற இன்பத்தாரும் ஸ்துதிக்க வல்லார்களோ )

அப்பிள்ளை உரை
பிரம்மா ருத்ராதிகள் லோக வாசலிலே
அவர்கள் ஸந்துஷ்டராய் முகம் பார்க்கும் அளவும் நின்று துவண்டு
(இவனைப் போல் ஸூ ஆராதர் அல்லவே )
அவர்கள் கால் கீழே தலையை மடுத்து நாள் தோறும் ஆஸ்ரயித்து
ஷீனே புண்யே மனுஷ்ய லோகம் அடைய வேண்டும்
(இதுவே இடைப்பட்ட ஸ்வர்க்க ஸூ கம்
நடுவிலே சிக்கி
நெடுமாலே -விளிச் சொல் )
சுற்றி எங்கும் சூழ்ந்து இருக்கும் ஜலத்தை யுடைத்தான கடல் போல்
ஸ்ரமஹரமான வடிவை யுடைய சர்வாதிகனானவனே
(தாபத் த்ரயம் போக்கி அருளும் -மாலே அதிகன் -நெடுமால் -சர்வாதிகன் )
ரஜஸ் தமஸ் ப்ரக்ருதி மயமான அதிகாரிகள் பின்ன ருசி யுடையவர்களாகக் கொண்டு
ஸூத்த ஸத்வ மயமான சர்வாதிகனான உன்னுடைய திருவடிகளை
கீர்த்தனம் ஸ்தோத்ரம் பண்ணி ஆஸ்ரயிப்பார் யார் –
(வேண்டிற்று எல்லாம் தரும் கோதில் மணி வண்ணன் இவன் ஒருவனே )

————————————————————————–

(ஸர்வேஸ்வரனோடு ஒத்தவர் யாரும் இல்லை என்று
ருத்ரனை ஆஸ்ரயிப்பார்களைப் பார்த்து உபதேசிக்கிறார் )

அப்பிள்ளை உரை அவதாரிகை
சூத்ர பல ப்ரதரரான ருத்ராதிகள் தங்களை பற்றினாருக்கு ஆபத்து வந்தால்
கை கழிய விட்டு கடக்க நிற்பார்கள் என்னும் இடத்தை
பாணாசூர யுத்த முகத்தால் உபபாதிக்கிறார் தெளிய வைக்கிறார்

அவரிவர் என்று இல்லை யனங்க வேள் தாதைக்கு
எவரும் எதிரில்லை கண்டீர் –உவரிக்
கடல் நஞ்சம் உண்டான் கடன் என்று வாணற்கு
உடன் நின்று தோற்றான் ஒருங்கு-56-

பதவுரை

அவர் இவர் என்று இல்லை–பெரியார் சிறியார் என்று ஒருவாசி யில்லை
(அவர் இவர்-தூரமான தேவர்களும் கிட்ட உள்ள சம்சாரிகளும்
அறிவாளிகள் அறிவற்றவர் -புத்திக்கு எட்டாதவர் எட்டுபவர் என்றுமாம் )
அனங்க வேள் தாதைக்கு–(ப்ரத்யுமனுக்கு )காமனுக்குத் தந்தையான் கண்ண பிரானுக்கு
(ஸாஷாத் மன்மத மன்மதன் இவனே )
எவரும்–ஒருவரும்
எதிர் இல்லை கண்டீர்–எதிர் நிற்க வல்லாரில்லை காண்மின்
உவரிக் கடல் நஞ்சம் உண்டான்–கடலில் தோன்றின விஷத்தை உட் கொண்டவனான சிவன்
(உவரிக் கடல் என்றது –இவனைப் பார்க்க அம்ருதமும் உப்புச் சாறே தான் அன்றோ )
வாணற்கு–பாணாஸுரனுக்கு
கடன் என்று–‘உன்னை ரக்ஷிக்க நான் கடமைப் பட்டவன்‘ என்று சொல்லி
உடன் நின்று–அவனோடு கூடவே யிருந்து
ஒருங்கு தோற்றான்– குடும்பத்தோடே தோற்று ஓடிப் போனான்.

அவர் இவர் என்கிற பேதம் இல்லை
ஸூந்தரனான மன்மதனுக்குத் தகப்பனாரான ஸ்ரீ கிருஷ்ணனுக்கு ஒருவரும் சமானம் இல்லை
சமுத்திரத்தில் பிறந்த விஷத்தை விழுங்கின ருத்ரனும் பாணாசூரனுக்கு ரக்ஷகன் ஆவேன் என்று
ப்ரதிஜ்ஜை பண்ணி -கூடவே இருந்து -பாணாசூரனைப் போலவே தோற்றான் –

அவரிவர் இத்யாதி –
காமனுக்கு உத்பாதகனுக்கு ஒருத்தரும் உபமானம் இல்லாமைக்கு
விசேஷஞ்ஞரோடு
அவிசேஷஞ்ஞரோடு வாசி இல்லாமை கண்டிகோளே

உவரி -இத்யாதி
ஒருத்தரும் இல்லை என்கிறது என் -ஒரு தேவர் இல்லையோ என்னில் –
அவரும் செய்தபடி இது அன்றோ என்கிறார் –
அம்ருத மதன காலத்தில் உண்டான விஷத்தை-கண்டத்திலே தரித்தானான ருத்ரனும்
தன்னை ஆஸ்ரயித்த வாணனுக்கு ஒலக்கத்தில்-ரஷிக்கிறேன் என்று
பிரதிஞ்ஞை பண்ணி-அவன் தானே சாஷியாகத் தோற்றான் –

ஒருங்கு –
ஒருப்படிப்பட வாணனோடு தன்னோடு வாசி யற-

கடன் என்று
கடவன் நிர்வாஹகன் -என்று

மோடியோட இலச்சையாய சாபம் எய்தி முக்கண்ணான்
கூடு சேனை மக்களோடு கொண்டு மண்டி வெஞ்சமத்து
ஓட வாணன் ஆயிரம் கரம் கழித்த வாதிமால்
பீடு கோயில் கூடு நீர் அரங்கம் என்ற பேரதே –ஸ்ரீ திருச்சந்த விருத்தம்-–53-

வண்டுலாவு கோதை மாதர் காரணத்தினால் வெகுண்டு
இண்ட வாணன் ஈரைஞ்சு நூறு தோள்களை துணித்த நாள்
முண்டன் நீறன் மக்கள் வெப்பு மோடி அங்கி யோடிடக்
கண்டு நாணி வாணனுக்கு இரங்கினான் எம் மாயனே -71-

பரிவு இன்றி வாணனைக் காத்தும் என்று அன்று படையொடும் வந்து எதிர்ந்த
திரிபுரம் செற்றவனும் மகனும் பின்னும் அங்கியும் போர் தொலையப்
பொரு சிறைப் புள்ளைக் கடாவிய மாயனை ஆயனைப் பொன் சக்கரத்து
அரியினை அச்சுதனைப் பற்றி யான் இறையேனும் இடர் இலனே.–ஸ்ரீ திருவாய் மொழி–3-10-4-

கார்த்திகையானும் கரி முகத்தானும் முக்கண்
மூர்த்தியும் மோடியும் வெப்பும் முதிகிட்டு மூவுலகும்
பூத்தவனே என்று போற்றிட வாணன் பிழை பொறுத்த
தீர்த்தனை ஏத்தும் இராமானுசன் என் தன் சேம வைப்பே –ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி – 22- –

அப்பிள்ளை உரை
பெரியார் சிறியோர் என்று ஒரு வாசி இல்லை
அழகாலே நாட்டை வெறுத்துச் செய்யும் காமனுக்கும் உத்பாதகனான கண்ணனுக்கு யாரும் எதிர் இல்லை
எங்கனே என்னில்
அம்ருத மதன சமயத்தில் ஷீராப்பதியில் பிறந்த ஆலகால விஷத்தை உண்ட ருத்ரன்
தன்னை ஆஸ்ரயித்த பாணாசூரனை பூ வாடாமல் ரஷிக்கக் கடவன் என்று ஒலக்கத்திலே ப்ரதிஜ்ஜை பண்ணி
தன் கண்ணாலே தான் கண்டு ஸாக்ஷியாகத் தோற்றான்
கூட நின்று ஒருப் படிப்பட பசலும் குட்டியுமாய் நின்று
நேர் நிற்க மாட்டாதே முதுகு காட்டிப் போனான்
ஆகையால் அணங்க வேள் தாதைக்கு யாரும் எதிர் இல்லை
ஒருங்கு -ஒருப் படப்பட
கும்பிட்டவனோடும் கும்பீடு கொண்டவனோடு வாசி இல்லை
திருப்பாற் கடலை உவரிக் கடல் என்றது
சமுத்திர சாம்யத்தைப் பற்ற
(இவனைப் பார்க்க அம்ருதமும் உப்புச் சாறே தான் அன்றோ –

————————————————————————–

(கீழே தேவதாந்த்ர ஸாம்ய நிரஸனம்
இதில் தேவதாந்த்ர ஐக்ய நிரஸனம்
கடவுள் கல் -நாஸ்திகர்
கல்லும் கடவுளே நம் சம்ப்ரதாயம்
சரீர ஆத்ம பாவம் -பிரகாரி பிரகார பாவம் –
உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்
அடியேன் உள்ளான் உடல் உள்ளான் -)

(ப்ரஹ்மா நாராயணா சிவச்ச நாராயணா சேந்த்ர சக்ரச்ச நாராயணா காலச்ச நாராயணா
திசைச்ச நாராயணா விதிசச்ச நாராயணா ஊர்த்த்வஞ்ச நாராயணா அதச்ச நாராயணா
அந்தர் பஹிச்ச நாராயணா நாராயண ஏவேதம்
சர்வம் யத் பூதம் எச்ச பவ்யம் என்று அனைத்தும் ப்ரஹ்மாத்மகமே -என்றும்
ஏஷ ஏவ ஸாது கர்ம காரயதி ஏஷ ஏவ அஸாது கர்ம காரயதி -என்றும்
ததே வா அக்னிஸ் தத் வாயுஸ் தத் ஸூர்யஸ் தது சந்த்ரமா -என்றும்
நாராயண ஏவேதம் ஸர்வம் -என்றும்
ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம தஜ்ஜலாந் -என்றும்

ஆத்ம ஐக்யமும்
தேவதா ஐக்யமும்
த்ரிமூர்த்தி ஐக்யமும் -ஒருக்காலும் சித்தியாது என்கிற என்ற
ஸ்ருதி அர்த்தம் இதில் அருளிச் செய்கிறார் -)

அப்பிள்ளை உரை -அவதாரிகை
புண்ய பாப பிரமுகமான சகல பதார்த்தங்களும் அவனுக்கு பிரகாரமாயே இருக்கும்
தத் பிரகாரம் இன்றிக்கே இருக்கும் வஸ்து முதலிலே இல்லையே

ஒருங்கிருந்த நல்வினையும் தீவினையும் ஆவான்
பெரும் குருந்தம் சாய்த்தவனே பேசில் -மருங்கிருந்த
வானவர் தாம் தானவர் தாம் தாரகை தான் என்நெஞ்சம்
ஆனவர் தாம் அல்லாதது என் -57-

பதவுரை

பேசில்–உண்மை பேசப் புகுந்தால்
பெரு குருந்தம் சாய்த்தவனே–பெரிய குருந்தமரத்தை வேர் பறியத் தள்ளி முறித்த கண்ணபிரானே
ஒருங்கு இருந்த நல் நினையும் தீ வினையும் ஆவான்–உடன் நிற்கும் புண்ய பாபங்களுக்கு நிர்வாஹகன்,
மருங்கு இருந்த–ஸமீபத்திலுள்ள (அந்தரங்கரான)
வானவர் தாம்–தேவர்களும்
தானவர் தாம்–அசுரர்களும்
தாரகை தான்–இப் பூமியும் (தரிப்பதால் தாரகை என்று பூமியைச் சொன்னவாறு )
(ஆகிய இவை யெல்லாம்)
என் நெஞ்சம் ஆனவர் தாம்–என் நெஞ்சினுள் உறைகின்ற ஸர்வேஸ்வரனேயாம்
(மனஸ் ஸ நாராயணா -ஸ்ருதி -உள்ளே உறைந்து இருப்பதால் பூஜ்ய யுக்தி )
அல்லாத்து என்–அந்த ஸர்வேச்வரனல்லாத வஸ்து என்ன இருக்கிறது

பெரிய குருக்கத்தி மரத்தை விழத் தள்ளினவனே
உடன் நின்ற புண்ணியத்துக்கும் பாபத்துக்கும் நிர்வாஹகன்
வர்ணிக்கப் புகில்
அருகு இருக்கிற தேவர்களும் அஸூரர்களும் பூமியும் என் மனஸ்ஸூம் தானேயாய் இருக்கும்
அவனாகாத வஸ்து எது

அவஸ்யம் அனுபோக்யத்வம் -என்கிற-
புண்ய பாபங்களுக்கு நிர்வாஹகனானவனே –
(ஏஷ ஏவ ஸாது கர்ம காரயதி அஸாது கர்ம காரயதி )
குருந்தை அனாயாசேன ஒசித்தாற் போலே-
நம்முடைய வலிய பிரதிபந்தங்களைப் போக்குவான்-
ஆசன்னரான தேவ-
அசுர –
பூமி –
என் நெஞ்சகம் எல்லாம் அவனே –
ப்ரஹ்மாத்மகம் இல்லாதது ஒன்றுமே இல்லையே –

அப்பிள்ளை உரை
ஆத்மாவுக்கு உடன் வந்தியாய்க் கொண்டு அருகு விட்டு பேராதே (சார்ந்த இரு வல் வினைகள் )
ஸத் கர்மங்களும் அஸத் கர்மங்களும் ஆவான்
அவராலே நிர்வகிக்கப்படுகின்றன
பெரிய குருந்தத்தை வேர் புரியும்படி அநாயாசேன தள்ளிப் பொகட்ட கிருஷ்ணனே
இவ்வளவு அன்றிக்கே
தன்மை வர்த்திகளோடே பரிகணிக்கும் படி ப்ரசித்தரான தேவர்களும் அசுரர்களும் அவனே
தரணீ தானும் அவனே
தத் விஷயத்தில் ப்ரவணமான நெஞ்சமும் அவனே
பகவத் ப்ரஸாஸத்தியாலே -கௌரவம் இதனாலே தான் -நெஞ்சமானவர் –
தத் ஆதீனம் இன்றிக்கே இருக்கிற வஸ்து தான் எது
சொன்ன அர்த்தத்துக்கு பொருந்தாதார் குருந்து பட்டது படுவார் என்கிறார்

(ஆத்ய ப்ரவ்ருத்தி -முதல் முயற்சி ஜீவன்
பிரேரகத்வம் அவனது
புண்யம் செய்ய ஊக்குவித்து -பாபம் வழியில் செல்லும் பொழுது உதாசீனம் காட்டும் என்றும்
அதுக்கும் ஊக்குவிக்கிறான் என்றும்
ஏஷ ஏவ ஸாது கர்ம காரயதி அஸாது கர்ம காரயதி-பிரமாணம் –
ஆகவே நல்வினையும் தீ வினையும் ஆவான் என்கிறார்
இவற்றுக்குப் பலன் அளிப்பவனும் அவனே -நிர்வாஹகன் என்றுமாம் – )

—————————————————————–

(முன் பாட்டுடன் பர உபதேசங்கள் முடிந்தன
தனக்கு உபகரித்து அருளிய ஸர்வேஸ்வரனை அனுசந்தித்து ஆனந்திக்கிறார்
மேல் எல்லாம் ஸ்வ அனுபவமாகவும் –
இருக்கும் நாள் பிரவணராய் குண அனுபவமே போது போக்காகக் கொண்டு –
உபதேசத்தால் திருந்தினவர்களுக்கு கால ஷேப அர்த்தமாக உபதேசித்தும்
திருந்தாமல் இவ் வனுபவத்தை இழப்பதே என்று வெறுத்தும்
அருளிச் செய்கிறார்
நின் கண் வேட்க்கை எழுவிப்பேன் போல் அன்பு ஆக்கினேன் என்கிறார்
மண்ணளந்தான் -என்னெஞ்சு மேயான் -பெரியாழ்வாருக்கு அரவத்தமிளி போலும்
நம்மாழ்வாருக்கு புள்ளைக் கடாவுமாறும் போல்
இவருக்கு த்ரிவிக்ரமன் திருக்கோலம்
நெஞ்சமே நீள் நகராகக் கொண்ட தஞ்சன் அன்றோ –
திருவிக்ரமனைக் கொள்ளும்படியான நெஞ்சம் ஆயிற்றே )

அப்பிள்ளை உரை அவதாரிகை
நெஞ்சில் இருளை அறுத்துக் கொண்டு
அங்கேயே நிரந்தர வாசம் பண்ணி அருளிய ஆபத் சகன்-ரக்ஷகன் பக்கலிலே
தமக்கு ப்ரேமம் விளைந்த படியை அருளிச் செய்கிறார்
(அன்பு ஆக்கினேன்-தனக்கு ஆக்கினமையும் -என்றும்
உலகோருக்கு அவன் பக்கலிலே அன்பு ஆக்கினேன் என்றுமாம் )

என் நெஞ்ச மேயான் இருள் நீக்கி எம்பிரான்
மன்னஞ்ச முன்னொரு நாள் மண்ணளந்தான் -என்னெஞ்சு
மேயானை இல்லா விடையேற்றான் வெவ் வினை தீர்த்து
ஆயானுக்கு ஆக்கினேன் அன்பு –58 –

பதவுரை

என் நெஞசம் மேயான்–என்னுடைய நெஞ்சிலே நித்ய வாஸம் செய்பவனும்
இருள் நீக்கி எம்பிரான்–(நெஞ்சிலுள்ள) அஜ்ஞான விருளைப் போக்குமவனான உபகாரகனும்
முன் ஒருநாள்–முன்பொரு காலத்தில்
மன் அஞ்ச–மஹாபலி சக்ரவர்த்தி பயப்படும் படியாக
மண் அளந்தான்–பூமியை அளந்து கொண்டவனும்
என் நெஞ்சம் மேயானை–(அந்த திருக் கோலத்துடனே) என்னெஞ்சை விடாமலிருப்பவனுமான எம்பெருமானை
இல்லா–நெஞ்சில் உடையனாகாத
விடை ஏற்றான்–ரிஷப வாஹநனான ருத்ரனுடைய
வெம் வினை–மஹா பாதகத்தை
தீர்த்து–தொலைத்து
ஆயானுக்கு–(அதனால்) ஸத்தை பெற்றவனான பெருமானுக்கு
அன்பு ஆக்கினேன்–என் அன்பைச் செலுத்தினேன்.

என் மனஸ்ஸில் நித்ய வாஸம் பண்ணுகிறவனும்
அஞ்ஞானத்தைப் போக்கி எனக்கு ஸ்வாமி யானவனும்
பலி சக்ரவர்த்தி பயப்படும் படி முன்பு ஒரு காலத்தில் பூமியை அளந்தவனும்
என் ஹ்ருதயத்தில் மிக விருப்பத்தைப் பண்ணுமவனுமான ஸர்வேஸ்வரன்
ஹ்ருதயத்தில் இல்லாத வ்ருஷப வாஹனனுடைய மஹா பாபத்தைப் போக்கி
சர்வாதிகனான ஸர்வேஸ்வரன் விஷயத்தில் ப்ரீதியை யுண்டாக்கினேன் –

(இருள் நீக்கி -எம்பிரான் -என் நெஞ்சம் மேயான் -அவனே உபாயமாகக் கொண்டு இதில்
மண்ணளந்தான் -என் நெஞ்சம் மேயான் -அவனே உபேயமாகக் கொண்டு இதில் )

என்னுடைய ஹிருதயத்தை இருப்பிடமாகக் கொண்டு-
அஞ்ஞான அந்தகாரங்களைப் போக்கி-
அத்தாலே எனக்கு உபகாரகனாய்-
ஷத்ரிய ஜாதி எல்லாம் அஞ்சும்படிக்கு ஈடாக
பண்டு பூமியை அடைய தன் கால் கீழே இட்டுக் கொள்ளுவதும்-செய்து –
பின்னையும்
என் பக்கலிலே அபிநிவிஷ்டனாய் இருக்கிறவனை
தன் நெஞ்சிலே கொள்ளாத ருஷப வாகனனுடைய-மகா பாபத்தைப் போக்கி
அத்தாலே
தான் உளனான வனுக்கு-ஸ்நேஹத்தை உண்டாக்கினேன்-

(மஹா பலி -அசுரன் -ஷத்ரியன் இவன் என்றும்
இவனைக் கண்டு மனுஷ்ய ஷத்ரியர்கள் பயப்படும் படியாகவும் என்றுமாம்
இருள் நீக்கி
ஆழ்வார் திரு உள்ளத்தில் ஸ்தாவர பிரதிஷடையாய் இருந்து
இருள் நீக்கி -ஆழ்வார் உடைய அஞ்ஞானாதிகளையும்
ஆழ்வார் மூலம் உலகோராது அஞ்ஞானாதிகளையும் போக்கி அருளவே
நின் கண் வேட்கை எழுவிப்பேனே -திரு விருத்தம் -96-என்றார் போல்
இங்கு அவர் ஆக்கினேன் அன்பு என்கிறார்
இருள் நீக்கி -என்ற பட்டப் பெயர் பெறுவதற்காகவே
மண் அளந்தான் என் நெஞ்சம் மேயானை –
உலகு எல்லாம் ஒரு தட்டு ஆழ்வார் திரு உள்ளம் ஒரு தட்டு )

அப்பிள்ளை உரை
என்னுடைய ஹ்ருதயத்தில் நிரந்தர வாசம் பண்ணா நிற்பவனாய்
என் நெஞ்சில் பற்றி இருக்கும் அஞ்ஞானம் ஆகிற வல் இருளை
ஸூ சந்நிவேசத்தாலேயே -விசேஷத்தாலே -ஸ வாசனமாகப் போக்கி
அவ் வழியாலே ஸூவ ஸ்வரூபாதிகளை வெளிச் சிறப்பித்து அருளிய உபகாரகனாய்
(பகவத் ஸ்வரூப திரோதான கரி -பிரகிருதி -இருளை போக்கியவாறே – தானே இவை விளங்கும் அன்றோ )
அசுர ராஜனான மஹாபலி போல்வார் அஞ்சும் படிக்கு ஈடாக
பண்டு ஒரு நாளிலே -க்ருத யுகத்தில் பூமியை அநாயாசேந அளந்து கொண்டவனாய்
பின்னையும்
என் நெஞ்சிலே அத்யபி நிவிஷ்டானாய்க் கொண்டு அந்தத் திருக்கோலத்துடனே என் உள்ளத்தில் எழுந்து அருள
அப்படி பொருந்தி இருப்பவனை
ஈஸ்வரோஹம் என்று துர்மானத்தாலே (இல்லாத -நெஞ்சில் கொள்ளாத )தனது நெஞ்சிலே கொள்ளாத
ரிஷப வாஹனான ருத்ரனுடைய பிரம்மா சாபத்தைப் போக்கி
அத்தாலே தான் சத்தை பெற்றவனாய் உள்ள
சர்வேஸ்வரனுக்கு
எனக்கும் உலகோருக்கும் பிரேமத்தை பண்ணி வளர்த்தேன்

————————————————————————–

(ஆக்கினேன் அன்பு என்ற ஆழ்வாரைக் கண்டு அச்சுதன் –
இவர் காலைப் பிடித்து போல் தாழ பரிமாறத் தொடங்க
அவனுக்கு முறை உணர்த்துகிறார் இதில்
ஆள் கொள்வான் ஒத்து உயிர் உண்ட மாயன் -திருக்காட்கரை அப்பனுக்கு
நம் ஆழ்வார் முறை உரைத்தால் போல் இங்கும் )

அப்பிள்ளை உரை அவதாரிகை
பிராட்டிக்கு உகப்பாக எனக்கு ஸ்நிக்தனாய் -(அன்பாவாய் )
தன்னுடைய போய்க்யதையை அனுபவிப்பித்து -(ஆரமுதமாவாய் )
அனுபவ ஜனித ஆனந்தத்தையும் தந்து அருளி -(இன்பாவாய் )
அநர்த்த கந்தம் இல்லாமல் -தட்டாத படி (கேடின்றி ஆள்வாய்) ஆண்டு கொண்டு போகிற உனக்கு
நித்ய கிங்கரன் ஆனேன் என்கிறார்
நித்ய கைங்கர்யம்

அன்பாவாய் ஆரமுதமாவாய் அடியேனுக்கு
இன்பாவாய் எல்லாமும் நீ யாவாய் -பொன் பாவை
கேள்வா கிளரொளி என் கேசவனே கேடின்றி
ஆள்வாய்க்கு அடியேன் நான் ஆள் -59-

பதவுரை

அன்பு ஆவாய்–(என் பக்கல்) ப்ரீதியே வடிவெடுத்தவன் போலிருப்பவனே!
அன்பன் ஆவாய் -மற்றவர்கள் இடம் -கோல மலர்ப்பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ போல் இங்கும்
ஆர் அமுதம் ஆவாய்–பரம போக்யனாயிருப்பவனே!
அடியேனுக்கு இன்பு ஆவாய்–(உன்னுடைய அநுபவமாகிய) ஸுகத்தை அடியேனுக்கு உண்டாக்கினவனே!
பின்பு ப்ரஹ்மானந்தம்
என் கேசவனே–எம்பெருமானே!
கேடு இன்றி–ஒரு குறையுமில்லாமல்
ஆள்வாய்க்கு–ரக்ஷிக்க வல்லவுனுக்கு-அடிமை கொள்ளும் உனக்கு
எல்லாமும் நீ ஆவாய்–மற்றுமுள்ள ஸுகங்களு மெல்லாம் எனக்கு நீயே யாயிருப்பவனே!
தாரக போஷக போக்யங்கள் எல்லாமே நீயே யானாய்
பொன் பாவை கேள்வா–திருமகள் நாதனே!
கிளர் ஒளி–(அத் திருமகளின் சேர்த்தியினால்) கொழுந்து விட்டு வளர்கின்ற காந்தியை யுடைய
நான் அடியேன்–நான் அடிமைப் பட்டவனா யிருக்கிறேன்
ஆள்–(அடியேனைக் காத்தருள்)
அடியேனானாள் -அடியேனான நான் ஆள் என்றபடி
அடியேன் சேஷத்வ ஸ்வரூபம்
ஆள் -ஸ்வரூபம் அறிந்த பின்பு கைங்கர்யம் செய்து ஸித்தி பெற்றமை

என்னிடத்திலே ப்ரீதியை யுடையவனாய்
பரிபூர்ண அம்ருதம் போல் போக்ய பூதனாய் அடியேனுக்கு உன் அனுபவ ஸூகத்தைக் கொடுத்தவனாய்
மற்ற ஸூகங்களையும் கொடுக்குமவனாய்
ஸ்வர்ண வர்ணையான ஸ்ரீ தேவிக்கு வல்லபனாய்
விருத்தி அடைகிற தேஜஸ்ஸை யுடையனான
என் கேசவனே அழிவில்லா அடிமை கொண்ட உனக்கு அடியேனான நான் சேஷ பூதனானேன் –

(கீழ் பாசுரத்தில் ஆக்கினேன் அன்பு
இதில் அன்பாவாய்
இரண்டுக்கும் வாசி உண்டே
என்னை இலக்காக்கி உமது ப்ரேமம் கொடுத்தாய் -நான் முக்கியம்
இங்கு அன்பு முக்கியம்
கீழே எல்லாம் பரத்வம்
இதில் அன்பு அழகு வடிவு
மாலே -26 பாசுரம் ஆஸ்ரித வ்யாமோஹம் என்னே போல் இங்கும் )

என் பக்கல் பிரேமத்தை உண்டாக்கி-
நிரதிசய போக்யனுமாய்-
எனக்கு ஸ்வ அனுபவத்தையும் தந்து-
அனுக்த்தமான போக்யங்களையும் தந்து
இவை எல்லாம் செய்கைக்கு அடியான பிராட்டிக்கு வல்லபனாய்
இவளோட்டை சம்ஸ்லேஷத்தால்-நிரதிசய ஔஜ்வல்யனாய்
பிரசஸ்த கேசனாய்-
கைங்கர்ய அனுபவத்துக்கு விச்சேதம் இன்றிக்கே
என்னை அடிமை கொள்ளுகிற உனக்கு
நான் அடிமை –
சர்வஞ்ஞன் ஆனவனுக்கு நான் உனக்கு ஆள் என்று-சொல்ல வேண்டாது இருக்க
ஆள் என்று சொல்லிற்று-
அவன் தாழ பரிமாறுகிற படியைக் கண்டு-
முறை அறிந்து பரிமாற வேண்டும் என்று –
முறை உணர்த்த வேண்டுகிறது-அவன் விரும்பின படியை கொண்டு-

(அன்பாவாய் -பொன் பாவை கேள்வா ஆனபடியால்
இல்லாவிடில் ஷிபாமி ந க்ஷமாமி -இப்போது ததாமி
ஆரமுதமாவாய் -பொன் பாவை கேள்வா ஆனபடியால்
அமுதில் வரும் பெண்ணமுது கொண்டதால் ஆராவமுதமானான்
அடியேனுக்கு இன்பவாயாய் -பொன் பாவை கேள்வா ஆனபடியால்
அனுபவ வர்த்தகை இவளே தானே -தரும் அவ்வரும் பயனாய –
எல்லாமும் நீ ஆவாய் –பொன் பாவை கேள்வா ஆனபடியால்
நமக்கும் பூவின் மிசை மங்கைக்கும் இன்பா
எனக்கு என்றும் தேனும் பாலும் கன்னலும் அமுதுமாகிய திருமால் திரு நாமங்கள்
பொன் பாவை கேள்வா ஆனபடியாலே கிளர் ஒளி
அப்ரமேய ஜனகாத்மஜா
திகழ்கின்ற திரு மார்பில் திரு மங்கை தன்னோடும் -திரு இருப்பதால் )

(ந சாஸ்திரம் நைவ க்ரம -நீதி வானவர் கோமான் அநீதி பண்ணப் போவான்
குற்றேவல் எங்கள் மேல் கொள்ளாமல் போகாது -தடுத்தும் வளைத்தும்
கொண்டதுக்கு கூலி கொடுத்து -தான் கைங்கர்யம் பண்ணும் கோஷ்ட்டி அன்றோ -)

(நாராயணனே நமக்கே பறை தருவான் தொடங்கியவர்கள் அவனை அணுகி மாலே என்று அழைத்தது போல்
இவர் அன்பாவாய் -அன்பே வடிவாக -உள்ளாய் என்கிறார்
ஆக்கினேன் அன்பு என்றவர்
என்னுடைய அன்பாகவும் நீயே அன்றோ என்கிறார்

என் பக்கலில் பிரேமத்தை உண்டாக்கி -என்று பெரியவாச்சான் பிள்ளை
என் விஷயத்தில் உன் அன்பை உண்டாக்கி என்றும்
என்னிடம் உன் விஷயமான அன்பை உண்டாக்கி -என்றும்
பொருள் கொள்ளும் படி வியாக்கியான ஸ்ரீ ஸூக்திகள்

எல்லாமும் நீ ஆவாய்
வாஸூ தேவஸ் சர்வம்
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன்
அடியேனுக்கு இன்பாவாய் பொன் பாவை கேள்வா
தரும் அவ்வரும் பயனாய் திரு மகளார் தனிக்கேள்வன் –திருவாய் -1-6-9-
எனக்கு என்றும் தேனும் பாலும் அமுதமுமாகிய திருமால் -பெரிய திருமொழி -6-10-6-
ஸ்ரத்தயா தேவோ தேவம் அஸ்னுதே
அதீவ ராம ஸூ ஸூ பே அதி காமயா விபு ஸ்ரீ யா விஷ்ணு

அடியேன் நான் ஆள் –
அவனுக்கு உணர்த்துகிறார்
அடியேன் -என்று சேஷத்வ ஸ்வரூபம் சொல்லி
ஆள் அகிஞ்சித் கரஸ்ய சேஷத்வ அநு பபத்தி -கைங்கர்யத்துக்கு ஆஸ்ரயமாய் இருப்பவன்
ஆகவே புனர் யுக்தி இல்லை
அன்பே உருவான அவன் கலங்கி தாழ பரிமாற்ற உபக்ரமிக்க முறை உணர்த்துகிறார் சர்வஞ்ஞனுக்கும் )

அப்பிள்ளை உரை –
உன் பக்கல் எனக்கு உண்டான ப்ரேமம் அஸத் சமமாம் படி
என் பக்கல் நிரவதிகமான ப்ரேமத்தை பண்ணுபவனாய் -(அன்பாவாய் -)
நிரதிசய போக்ய பூதனாய் -(ஆராவமுதுமாய் )
சேஷ பூதனான எனக்கு (அடியேனுக்கு )
உன் அனுபவ ஸூகத்தை விளைப்பவனாய் (இன்பாவாய்)
எல்லாமுமாக அனுக்தமான -நீயே உண்டாக்குபவனே
இந்த பேற்றை எல்லாம் எனக்கு நீ செய்யும் படி உன்னைப் பிரேரிக்கும்
பொற்கென்ற – பொன்னே வடிவான -ஹிரண்ய வர்ணாம்
நாரீணாம் உத்தமையான பிராட்டிக்கு வல்லபனாய்
அவ்ளோட்டை கலவியாலே யுத்தர உத்தர கிளரும் -(கிளர்ந்து கொண்டே இருக்கும்) வடிவின் ஒளியை உடையவன்
என்னால் அனுபவிக்கத் தக்க அழகிய கேச பாசங்கள் உடையவனே
கைங்கர்ய விச்சேதம் இல்லாத -அநர்த்த சங்கை-கேடு இல்லாத படி
ஆள்வாய் -அடிமை கொள்ளும் உனக்கு
அடியேன் ஸ்வரூபம் அறிந்த சேஷபூதன்
சர்வஞ்ஞனான உனக்கு நான் ஆள் -சேஷபூதன் என்று சொல்ல வேண்டாது இருக்க –
அவன் தாழ நின்று பரிமாற உத்யோகிக்கிறதைக் கண்டு
முறை அறிந்து பரிமாற்ற வேண்டும் என்று முறை உணர்த்துகிறார்
அகிஞ்சித் கரத்வ சேஷத்வ அநுபபத்தி -கைங்கர்யம் செய்யா விடில் சேஷ பூதனின் இருப்பே போகுமே
அடியேன் ஆள் -இருமுறை அருளிச் செய்கிறார் –

————————————————————————–

(கிருஷி பண்ணி ஆள் பிடிக்கிறான் -யுகம் தோறும் -தேடிக் கொண்டே இருக்கிறான்
இப்படி உனக்கே ஆள் பட்டு அடிமை செய்து கொண்டே இருக்க
என்றுமே ஆகும்படி அருள வேணும் என்கிறார் இதில் )

அப்பிள்ளை உரை அவதாரிகை
என்னுடைய மனஸ்ஸானது உன்னுடைய குணங்களிலே ஈடுபட்டது
இனி இத்தைத் திரு உள்ளம் பற்றி பார்த்து அருள வேணும் என்கிறார் –

ஆட் பார்த்து உழி தருவாய் கண்டு கோள் என்றும் நின்
தாட் பார்த்து உழி தருவேன் தன்மையை -கேட்பார்க்கு
அரும் பொருளாய் நின்ற வரங்கனே உன்னை
விரும்புவதே விள்ளேன் மனம்–60-

பதவுரை

கேட்பார்க்கு–ஸ்வ யத்நத்தாலே கேட்டறிய விரும்புவர்களுக்கு
அரு பொருள் ஆய் நின்றி அரங்கனே–அறிய வொண்ணாத பரம் பொருளான அரங்க நாதனே!
ஆள் பார்த்து உழி தருவாய்–நமக்கு ஆட்படுமவன் யாரேனும் கிடைக்கக் கூடுமோ என்று தேடித் திரிகிறவனே!
நின் தாள் பார்த்து உழி தருவேன்–உனது திருவடிகளின் ஸேவைக்காக அலைந்து திரிகின்ற என்னுடைய
தன்மையை–இந்த ஸ்வபாவத்தை
என்றும்–என்றைக்கும் நிலைத்திருக்கும் படியாகக் கடாக்ஷித் தருள வேணும்
உன்னை விரும்புவதே–நான் உன்னையே ஆசைப்பட்டிருக்குந் தன்மையை
மனம்–நெஞ்சில்
விள்ளேன்–தவிராதவனா யிருக்கின்றேன்.

ஸ்வ யத்னத்தாலே கேட்க யத்நித்தவர்களுக்கு துர்லபனான ஸ்ரீ ரெங்கநாதனே
நமக்கு தாஸ பூதராராவது உண்டா என்று தேடித் திரிகிறவனே
உன் திருவடியை சேவிக்க வேண்டும் என்று திரிகிற என்னுடைய ஸ்வ பாவத்தை
எப்போதும் நடக்கும்படி கடாக்ஷித்து அருள வேணும்
உன்னை ஆசைப்படுவதே ஸ்வ பாவமான மனஸ்ஸை விட மாட்டேன் —

ஆட் பார்த்து உழி தருவாய் கண்டு கோள் என்றும் நின் தாட் பார்த்து உழி தருவேன் தன்மையை –
தேவர் திருவடிகளை காண்கையே ஸ்வ பாவமான என்னை-
ஆரோ நமக்கு அகப்படுவார் என்று பார்க்கும் அதுவே-
ஸ்வ பாவமாக இருக்கிற நீ-
காலம் எல்லாம் இப்படியேயாகப் பார்த்து அருள வேணும் –

கேட்பார்க்கு அரும் பொருளாய் நின்ற வரங்கனே-
நாயமாத்மா ப்ரவசநே நலப்ய நமேதே யான பஹூ நா ஸ்ருதேன் (கட உபநிஷத் )-என்னும்படியே
உன் பிரசாதம் ஒழிய ஸ்வ யத்னத்தாலே-
ஸ்ரவணாதிகள் பண்ணுவார்க்கு அரியையாய்
நீயே காணக் காட்டக் காண்பார்க்கு எளியை யாகைக்காக-
கோயிலிலே கண் வளருகிறவனே

உன்னை விரும்புவதே விள்ளேன் மனம் –
என்னுடைய மனசானது உன்னை விரும்புகைக்கு- –தவிராததாய் இருந்தது –
விரும்புகையை விடாது ஒழிகையை பார்த்து அருள வேணும் என்றுமாம் –

விள்ளேல் –
என் மனஸ் விடுகிறது இல்லை என்னுதல்
நீ விள்ளாத படி பண்ண வேணும் என்னுதல்

(கேட்ப்பாருக்கு–
ஸ்ரவணம் சொல்லி ஆதிகள் -மனனம் நிதித்யாஸனம் தியானம் —
இவற்றுக்கும் உப லக்ஷணம் )

அப்பிள்ளை உரை
ஸூவ யத்னத்தால் ஸ்ரவணாதிகளால்
அறிய அரிய வஸ்துவாய்க் கொண்டு நின்றவனாய்
நீயே காட்டக் காண்பாருக்கு
எளியவானாகைக்காக கோயிலிலே கண் வளர்ந்து அருளுபவனாய்
(ஆள் பார்த்து )ஸ்ருஷ்ட்டி அவதாராதிகளாலே உத்தரம் உத்தரம் கிருஷி பண்ணிக் கொண்டு திரிகிறவனே
(இதுக்கும் மேல் ஆழ்வார்களை -ஆச்சார்யர்களை பிறப்பித்து -சரணாகதி மார்க்கம்
தானே உபதேசித்தும் இவர்களையும் விவரித்துக் காட்டப் பண்ணியும் )
இப்படி உள்ள உன் திருவடிகளை எப்பொழுதும் சேவித்துக் கைங்கர்யம் பண்ணி அனுபவித்து வாழ வேணும்
என்ற மேல் மேல் என மநோ ரதம் கொண்டு இருக்கும் என்னுடைய ஸ்வபாவத்தை
சர்வ காலமும் -குலையாதே உருவச் செல்லும் படி கடாக்ஷித்து அருள வேணும்
இப்படி குணாதிகனான உன்னை நிரந்தரம் இடைவெளி இல்லாமல் ஆதரித்து மேல் விழுகையே
யாத்ரையாகும் படி அடியேன் மனஸ்ஸை உன் பக்கலில் நீக்காமல் இருக்கும் படி அருள வேண்டும் –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading