Archive for the ‘நான் முகன் திரு அந்தாதி’ Category

ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் அருளிய ஸ்ரீ நான்முகன் திருவந்தாதி -25-36–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை சாரம் –ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் –

November 22, 2016

அவன் செய்து அருளும் கார்யங்கள் எல்லாம் ஆஸ்ரிதற்காகவே -ஸ்வயம் பிரயோஜனத்துக்கு அன்று -என்கிறார்

வகையால் மதியாது மண் கொண்டாய் மற்றும்
வகையால் வருவது ஓன்று உண்டே -வகையால்
வயிரம் குழைத்து உண்ணும் மாவலி தான் என்னும்
வயிர வழக்கு ஒழித்தாய் மற்று —25-

பதவுரை

மதியாது–உன் மேன்மையைச் சிறிதும் நினையாமல்
வகையால்–நல்ல உபாயங்களாலே
மண் கொண்டாய்–(மாவலியிடத்தில் இரந்து) பூமியை ஸ்வாதீனப்படுத்திக் கொண்டாய்
மற்றும்-அதற்கு மேலும்,
வயிரம்–வயிரமாகிற ரத்னத்தை
வகையால்–ஔஷதாதி உபாயங்களாலே
குழைத்து–இளகச் செய்து
உண்ணும்–உண்பவனும்
தான் என்னும்–தனக்கு மேற்பட்ட பலிஷ்டா ஆருமில்லையென்று அஹங்காரங் கொண்டிருப்பவனுமான
மாவலி–மஹாபலியினுடைய
வயிரம் வழக்கு–சத்ருத்வமுறையை
ஒழித்தாய்–போக்கினாய்
வகையால்–இப்படிப்பட்ட உனது காரியங்களினால்
வருவது ஒன்று உண்டே–உனக்கு ஸித்திப்பதொருபலன் உண்டோ? (எல்லாம் ஆச்ரிதர்க்காகச் செய்கிறாயித்தனை.

எம்பெருமான் செய்தருளுங் காரியங்களெல்லாம் அடியார்களுடைய பிரயோஜனத்திற்காகவே யன்றி
ஸ்வப்ரயோஜநத்திற்காக ஒரு காரியமும் செய்வதில்லை யென்பதை வெளியிடும் பாசுரம்.

மதியாது வகையால் மண்கொண்டாய் – “உபய விபூதிநாதனாயிருக்கிற நாம் யாசகனாகப் போகலாமோ“ என்று
தன் மேன்மையைச் சிறிதும் பாராமல் “ஆச்ரிதனான இந்திரனுக்குக் காரியம் தலைக்கட்டுமளவே வேண்டியது“ என்று
அதனையே பார்த்து யாசகனாயச் செல்லுகையாகிற உபாயத்தினால் பூமியையெல்லாம் ஸ்வாதீநப்படுத்திக் கொண்டாய்.

இரண்டாமடியை முடிவில் அந்வயித்துக் கொள்க.

(வகையால் வயிரங்குழைத்துண்ணும் இத்யாதி) நவரத்னங்களுள் ஒன்றான வஜ்ர்தை இளகுவித்து உண்பர்களாம் உடல் புஷ்டியடைவதற்காக,
மாவலியும் அப்படியே உண்ட ஊன்மல்கிமோடு பருத்திருந்தானும், அப்படிப்பட்ட அவனுடைய அஹங்கார ப்ரயுக்தமான
வயிரவழக்கைப் போக்கினாய். ஈற்றடியிலுள்ள “வயிரம்“ என்ற சொல் “***“ என்ற வடசொல் விகாரம்.

மற்றும் வகையால் வருவதோன்றுண்டே? இவற்றால் உனக்கு வரும் ப்ரயோஜனம் ஏதேனுமுண்டோ?
ஒன்றுமில்லை, பரார்த்தமாகச் செய்தாயித்தனை.

எல்லாம் ஆஸ்ரிதனான இந்திரனுக்காக் செய்தது அன்றோ -அனைத்தும் பரார்த்தமே –

————————————————————————-

அநந்ய பக்த்த்ய நிஷ்டையை அருளிச் செய்து -அடியேனுக்கு இந்நிலைமை நீடித்து இருக்கும் படி
கிருபை பண்ணி அருளிச் செய்ய வேணும் என்கிறார்

மற்றுத் தொழுவார் ஒருவரையும் யானின்மை
கற்றைச் சடையான் கரிக்கண்டாய் -எற்றைக்கும்
கண்டு கொள் கண்டாய் கடல் வண்ணா நான் உன்னை
கண்டுகொள் கிற்குமாறு–26-

பதவுரை

கடல் வண்ணா-கடல் போன்ற திருநிறமுடைய பெருமானை!
யான் தொழுவார் மற்று ஒருவரையும் இன்மை–அடியேனால் ஆச்ரயிக்கப்படும் தெய்வம் (நீதவிர) வேறு எதுவுமில்லையென்னும் விஷயத்தில்
கற்றை சடையான்–சேர்த்துக் கட்டின ஜடையை யுடையனான ருத்ரன்
கரி கண்டாய்–ஸாக்ஷிகாண்
யான்–இப்படி அநந்ய பக்தனை அடியேன்
உன்னை–உன்னை
எற்றைக்கும்–எந்நாளும்
கண்டு கொள்கிற்கும் ஆறு–ஸேவித்துக் கொண்டேயிருக்க வல்லேனாம்படி
கண்டு கொள்–கடாக்ஷித்தருள வேணும்.

பெண்ணுலாம் சடையினானும் பிரமனும் உன்னைக் காண்பான் எண்ணிலா வூழி வூழி த்வம் செய்தார் என்கிறபடியே
-சாதன அனுஷ்டான நிஷ்டன் – ஜடாதரனே சாக்ஷி –அவனே சடை புனைந்து உன்னை உபாசியா நிற்க
-நான் உன்னை ஒழிய ஒரு ஷூத்ர தேவதையைப் பணிவேனோ என்கை
–ஊசியின் பின் நூல் வரும் படி செய்ய -ஐதிக்யம் -வலது திருவடி பெரு விரலில் கண்ணில் -பெரும் ஊழி கனல் —
பக்தி சாரார் -என்றானே ருத்ரன் –இவையெல்லாம் திரு உள்ளம் பற்றி ருத்ரனே சாக்ஷி என்கிறார் –
சாக்கியம் கற்றோம் சமண் கற்றோம் சங்கரன் ஆக்கிய ஆகம நூல் ஆராய்ந்தோம் —விட்டு ஒழிந்து-
அநந்ய பிரயோஜன ஸ்ரீ வைஷ்ணவ நிஷ்டை பெற்று -அத்தை நிலையாக கொள்ள கடாக்ஷித்து அருள பிரார்த்திக்கிறார் –

இவ்வாழ்வார் திருமழிசையில் யோகநிலையில் நின்று திருமகள் கொழுநனை த்யானித்துக் கொண்டிருக்கையில்,
ஒருநாள் ஆகாச மார்க்கத்தில் எருதின்மீது ஏறிக்கொண்டு பார்வதீ பரமேச்வரர் செல்லுகையில்,
பார்வதியானவள் இவரது தவவொழுக்கத்தைக் கண்டு கொண்டாடித் தன் கணவனை நோக்கி “இவன் ஆரோ?“ என வினவ,
“இம்மஹாநுபாவன் நம்மைவிட்டு நாராயணனுக்கு அடிமைப்பட்டவன்“ என்று ருத்ரன் சொன்னவளவிலே அம்பிகை,
“இப்பெரியவனுக்கு நாமும் தரிசனம் தந்து ஏதேனும் வரமளித்துப்போவோம்“ என்றுகூற,
அவளது விருப்பத்தின்படிசெய்ய ஸம்மதித்துச் சிவபிரான் இவரெதிரேவந்து தோன்றினன்,

இவர் அச்சிவனைப் பார்த்தும் பாராதவர்போல உபேக்ஷித்து ஒரு கந்தைத் துணியைத் தைத்துக்கொண்டு கார்யாந்தர பர்ராய் விமுகராயிருக்க,
அதுகண்ட சங்கரன் “உனக்கு அருள்செய்ய வந்த நம்மை நீ அநாதரஞ்செய்தல் தகுதியா?“ என்ன,
ஆழ்வார் “உன்னால் ஆக வேண்டிய எனக்கு ஒன்றுமில்லை, ஆதலின் நான் உதாஸீநனாயிருந்தேன்“
உனக்கு அபீஷ்டமான வரம்வேண்டிப் பெற்றுப்போவாய்“ என்று நிர்ப்பந்திக்க,
அநந்தரம் ஆழ்வார் “பரமபதம் அருளவல்லீராயின் அருள்வீர்“ என வேண்டினார்.
அதற்கு அக்கடவுள் “அது நம்மால் தரத்தக்கதன்று, அது தருதற்கு உரியதேவன் ஸ்ரீமந்நாராயணனே,
ஆதலின் வேறுவரம் வேண்டுதி“ என்ன ஆழ்வார் புன்முறுவல் செய்து “அம்முக்தியைப் பெறும் பொருட்டுப் பலகாலம்
இவ்வுலகில் உயிர்த்திருந்து பெருந்தவம் புரிதற்கு உபயோகமாக நீண்ட ஆயுளையேனும் அடியேற்கு அளித்தருள்“ என்று பிரார்த்தித்தார்.

அதுகேட்டுக் கைலாஸபதி “அது கருமா நுஸாரமாக நடப்பதேயன்றி வளர்த்தத்தக்கதன்று, வேறு வேண்டுவதை விளம்புவாய்“ எனலும்,
திருமழிசைப்பிரான் குறுமறுவலோடு இகழ்ச்சியாய் “இவ்வூசியின் பின்னே நூல் வரும்படி வரம் தந்தருளீர்“ என்று விநோதமாகச் சொல்ல,
அப்பரிஹாஸ வார்த்தை செவிப்பட்டவுடனே கடுஞ்சினங்கொண்ட நெற்றிக்கண்ணன் “இச்செருக்குடையானை இப்பொழுதே
அநங்களைப் போலாக்கிடுவிடுகிறேன்“ என்று தனது நெற்றியிலுள்ள நெருப்புக் கண்ணைத்திறந்து விட்டார்,
அதில் நின்றும் புகையும் பொறியுமாகக் கிளர்ந்தெழுந்த காலக்நியைக்கண்டு திருமழிசைப் பிரான் சிறிதும் கலங்காமல்
“இந்திரன்போல உடம்பு முழுதும் கண்காட்டினாலும் அஞ்சுவேனல்லேன்“ என்று சொல்லித் தம்மு வலத்திருவடியின் பெருவிரலிலுள்ளதொரு
கண்ணைத்திறந்துவிட, அதில் நின்றும் ஒரு பெருந்தீ எழுந்து ஊழித்தீயினும் பன்மடங்கு மேலிட்டு அவ்வனலை அடக்கத்தொடங்கிற்று.
அவ்வளவில் அரன் அக்கடுநெருப்பை அவிக்கும்படி தனது சடையிலுள்ள பல மேகங்களை ஏவிவிட,
அவையும் அங்ஙனமே கல்பரந்த காலத்திற்போலச் சோனைமழை பொழிந்து பெருவெள்ளங்கோக்கவும் ஆழ்வார் சிறிதும் சலியாமல்
பகவத் பத்தியிலே ஊன்றியிருந்தார், அதுகண்டு முக்கணமூர்த்தி மிக வியந்து இவர்க்கு “பக்திஸாரர்“ என்று திருநாமஞ்சாத்தி
இவரது வைபவத்தைக் கொண்டாடித் தன்னிடத்திற்குத் திரும்பிப்போயினன் என்ற வரலாறு
இவ்விடத்தில் ஸ்மரிக்கத்தக்கது இவ்வளவையும் திருவுள்ளம் பற்றியே ஆழ்வார் இங்கு
“கற்றைச்சடையான் கரிக்கண்டாய்“ என்கிறார் என்று கொள்ளலாம். கரி – ஸாக்ஷி, நேரில் கண்ணால் பார்த்தவன் என்கை.

இவ்வாழ்வார் “சாக்கியங்கற்றோம் சங்கரனாராக்கிய ஆகமநூ லாராய்ந்தோம்“ என்றபடியே பல மதங்களினுள்ளும் புகுந்து
அந்தந்த மதஸ்தராகவே இருந்தவராதலால், இப்படி பல மதங்களிலும் புகுந்து அவையெல்லாம் அஸாரமென்று விட்டொழிந்து
ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்திற்கு வந்து சேர்ந்ததுபோல், இந்த ஸத்ஸம்ப்ரதாயத்தையும் விட்டு வேறொரு தீயமதத்தில் போய்ச்
சேரும்படியான தௌர்ப்பாக்கியம் இவ்விருள் தருமாஞாலத்தின் காரியமாக நமக்கு நேர்ந்துவிடுமோ என்னவோ! அஞ்சி,
இந்த நிஷ்டையே நிலைத்திருக்குமாறு கடாக்ஷித்தருள வேணுமென்று பின்னடிகளால் எம்பெருமான் தன்னையே பிரார்த்தித்தாராயிற்று.

————————————————————————

தம்முடைய அத்யாவச்யத்தையும் -அதுக்கு அடியையும் அருளிச் செய்கிறார் –

மாறான் புகுந்த மட நெஞ்சம் மற்றதுவும்
பேறாககே கொள்வேனோ பேதைகாள் -நீறாடி
தான் காண மாட்டாத தாரகல சேவடியை
யான் காண வல்லேற்கு இது-27-

பதவுரை

பேதை காள்–மூடர்களை!,
மால்–எம்பெருமான்
தான் புகுந்த–தானே மேல் விழுந்து வந்து புகுந்திருக்கப் பெற்ற
மட நெஞ்சம்–(எனது) விதேயமான நெஞ்சிலே
மற்றதுவும்–வேறொன்றை
பேறு ஆக–புருஷார்த்தமாக
கொள்வனோ–நான் கொள்வனோ? (கொள்ள மாட்டேன்)
நீறாடி தான்–நீறு பூசின உடம்பை யுடையனான ருத்ரனும்
காண மாட்டாத–ஸேவிக்க முடியாததும்
தார்–புஷ்பங்களினால் அர்ச்சிக்கப்பட்டதும்
அகலம்–போக்யதையில் அளவிறந்ததுமான
சே அடியை–திருவடியை
யான் காண வல்லேற்கு–ஸேவிக்கும்படியான பாக்கியம் பெற்ற எனக்கு
இது–இப்படிப்பட்ட அத்யவஸாய முண்டாயிற்று.

தம்முடைய அத்யவாஸாயத்தையும் அதன் அடியையும் அருளிச் செய்கிறார்.
உலகத்தில் ஒவ்வொருவர் ஒவ்வொன்றைப் புருஷார்த்தமாகப் பேணுவர்,
ஐச்வர்யத்தை நச்சுவர் சிலர், ஸ்வரைக்கலோக போகங்களை அபேக்ஷிப்பர் சிலர், கைவல்யத்தைக் காதலிப்பர் சிலர்.
இப்படி ஒவ்வொருவர்க்கு ஒவ்வொன்று பேறாக இருக்கும், எனக்கோவென்னில், இவையொன்றும் விருப்பமல்ல.
எம்பெருமான்றானே “இவ்வாழ்வாருடைய நெஞ்சகம் நமக்கு இருப்பிடமாகக் கிடைக்குமா!“ என்று காதலித்துத் தன்பேறாக வந்து
சேரப்பெற்ற எனது நெஞ்சில் அப்பெருமானுடைய நித்ய வாஸமொன்று தவிர மற்றெதுவும் புருஷார்த்தமாகக் கருதப்பட மாட்டாது,
என்று தமது அத்யவாஸாயம் தமக்கு உண்டானபடியைப் பேசுகிறார் பின்னடிகளில்,

நீறாடிதான் இத்யாதியால். 1. “பெண்ணுலாஞ்சடையினாலும் பிரமனு முன்னைக்காண்பான்,
எண்ணிலாவூழியூழி தவஞ்செய்தார் வெள்கிநிற்ப“ என்கிறபடியே சடையன் தானும் நெடுங்காலம் தவம்புரிந்தும்
எந்தத் திருவடிகளை ஸேவிக்கப் பெற்றிலனோ அந்தத் திருவடிகள் என்க்கு ஸ்வயமாகவே வந்து ஸேவை ஸாதிக்கப் பெற்றதனால்
“இத்திருவடி தவிர வேறொன்றும் நமக்கு ப்ராப்யமல்ல“ என்கிற இந்த அத்யவஸாயம் உண்டாயிற்று என்றவாறு.

“காணவல்ல எனக்கு“ எனப் பிரயோகிக்க வேண்டுமிடத்து “யான் காண வல்லேற்கு“ எனப் பிரயோகிக்கப்பட்டது.

——————————————————————————–

இராமபிரானுடைய வீரச் செயல்களை அனுபவிக்கிறார் -உகப்பு -லீலையான வியாபாரம் –

இது இலங்கை ஈடழியக் கட்டிய சேது
இது விலங்கு வாலியை வீழ்த்ததுவும் -இது விலங்கை
தான் ஒடுங்க வில் நுடங்கத் தண்டார் இராவணனை
ஊன் ஒடுங்க எய்தான் உகப்பு –28-

பதவுரை

இலங்கை–லங்காபுரியானது
ஈடு அழிய–சீர்குலையும் படியாக
கட்டிய–(வானர சேனையைத் துணை கொண்டு) கட்டின
சேது–திருவணை
இது–இது காண்மின்,
விலங்கு–திர்யக் யோநியிற் பிறந்தவனான
வாலியை–வாலியை
வீழ்த்தது–முடித்தது
எய்தான்–அம்புகளைச் செலுத்தின இராமபிரானுடைய
இது–இப்போது நடந்த செயல் காண்மின்,
இலங்கை தான்–லங்காபுரியானது
ஒடுங்க–அழியும்படியாகவும்
வில் நுடங்க–சார்ங்கலில் வளையும் படியாகவும்,
தண் தார் இராவணனை ஊன் ஒடுங்க–(அலங்காரமாகக்) குளிர்ந்த பூமாலையணிந்து கொண்டிருந்த
இராவணனுடைய உடல் ஒழியும்படியாகவும்
உகப்பு–விலையான வியாபாரம்
இது–இது காண்மின்

ஆழ்வார் அகக் கண்களுக்கு ஸ்பஷ்டமாக தோற்றி விளங்குவதால் –கட்டிய சேது இது -என்று
கண் முன்னால் கண்டது போலே பேசுகிறார் –
அதே போலே ஸூ க்ரீவன் இடம் பஷபத்தித்துச் செய்து அருளின காரியமும் இப்போதே செய்து அருளியது போலே ஆழ்வாருக்குத் தோன்றுகிறது
வீழ்த்ததுவும் -பாட பேதம் -வெண் தளை பிறழும்
திரு சேது அணை காட்டியதும் வாலியை வதைத்ததும் இராவணனைக் கொன்றதுவும் அவலீலையாயச் செய்தவை என்கிறார் –

இராமபிரானுடைய சில வீரச்செயல்களைப் பேசியநுபவிக்கிறார்.

இலங்கை ஈடழியக்கட்டிய சேது இது-விபீஷணாழ்வான் இராமபிரான் பக்கல் வந்து சேர்ந்து உயந்தபின் பெருமாளைப் பார்த்து
“ஸ்வாமிந்! இந்த நம்முடைய ஸேனைகள் கடலைக்கடந்து அப்பாற் செல்ல வேண்டுமாதலால்
அதற்காகக் கடலாசனை நீர் சரணம்புகவேணும்“ என்ன,
இராமபிரான் “கடலைக் கடக்க உபாயம் சொல்லவேண்டும்“ என்று கடலரசனாகிய வருணைனைப் பிரார்த்தித்துத் த
ர்ப்பசயனத்தில் படுத்து மூன்று நாளளவும் ப்ராயோபவேசமாகக் கிடக்க, ஸமுத்ரராஜன் அப்பெருமானது மஹிமையைக் கருதாமல்
உபேகைஷயாயிருந்து விடவே ஸ்ரீராமன் அதுகண்டு கோபங்கொண்டு “அனைவரும் நடந்தே செல்லும்படி கடலை வற்றசெய்வேன்“ என்று
ஆக்நேயாஸ்த்ரத்தைத் தொடுக்கத்தொடங்கிய வளவிலே வருணன் அஞ்சி நடுங்கி ஓடிவந்து இராமபிரானைச் சரணமடைந்து
கடல்வடிவமான தன்மேல் அணைகட்டுதற்கு உடன்பட்டு, நளன் கையினால் நீரில்போட்ட கற்களும் மிதக்குமென்று
அவனுக்கு அவன் தகப்பனால் வரமளித்திருக்கிறாரார்,
ஆகையால் அவனைக் கொண்டு ஸேது கட்டவேணுமென்று சொல்லிவிட்டு மறைந்துவிட்டான்,
இராகவனும் அப்படியே மற்ற வானரங்கள் சுற்றுமுள்ள மலைகளைப் பிடுங்கிக்கொண்டு வந்து நளன் கையில் கொடுக்கச் செய்து
நளன் கையினால் அம்மலைகளை நீரில் போகவிடுத்து ஸேதுகட்டுவித்தான் – என்பது திருவணைகட்டின வரலாறு.
இது என்றைக்கோ நிகழ்ந்ததாயினும் மயர்வற மதிநலதோற்றி விளங்குதலால் “கட்டிய சேது இது“ என்று கண் முன்னே கண்டது போலப் பேசுகிறார்.

இது விலங்கு வாலியை வீழ்த்தது – ஸுக்ரீவன் இராமபிரானோடு ஸ்நேஹஞ்செய்துகொண்டு அவனது நியமனத்தினால்
கிஷ்கிந்தைக்குச் சென்று வீரநாதஞ்செய்ய, அதைகேட்டு வாலி பொறுக்க மாட்டாதவனாய் வெளிக் கிளம்பிவந்து
ஸுக்ரீவனோடு யுத்தஞசெய்யத்தொடங்க, அப்போது இராமன் அவ்விருவரில் இன்னான் ஸுக்ரீவன் இன்னான் வாலியென்று வாசி
கண்டறியாமையால் அம்பு எய்யாதொழியவே, ஸுக்ரீவன் வாலியிடத்துப் பராஜயப்பட்டு வேதனை பொறுக்கமாட்டாமல்
ரிச்யமூகபர்வத்ததுக்கே மீண்டு ஓடிவந்து சேர, இராமன் அம்பு எய்யாத காரணங்கூறி “இப்போது உனக்கு ஒர் அடையாளம் இடுகிறேன்,
மறுபடியும் வாலியை யுத்தத்துக்கு அழை“ என்று சொல்லி அவன் கழுத்தில் ஒரு பூமாலையைச் சுற்றிக் கிஷ்கிந்தைக்குப் போகவிட,
ஸுக்ரீவன் சென்று முன்போலவே வீரநாதஞ்செய்ய, அதைக்கேட்டு வாலி போருக்குப்புறப்பட,
அப்போது அவன் மனைவியாகிய தாரை “ஓ பிராணநாதா! சற்று முன்பு அடிபட்டு ஓடினவன் திரும்பி இப்போதே
சண்டைக்கு அழைக்கின்றமையால் இது வெறுமனன்று, ஏதோ ஒரு பெருத்த ஸஹாயத்தை அண்டைகொண்டு வந்திருக்கவேணும்,
நீ இப்போது திடீரென்று போர்க்குப் புறப்படுவது தகுதியன்று“ என்று சொல்லித் தடுத்தவளவிலும் அவள் வார்த்தையைச் செவியிலும்
கொள்ளாமல் சடக்கெனப் புறப்பட்டுந்து ஸுக்ரீவனுடன் பிணங்கினான், அந்த வாலி ஸுக்ரீவரிருவரும் ஒருவர்க்கொருவர்
கீழே தள்ளுவது மேலே பாய்வது கட்டிக்கொண்டு நெருக்குவது கடிப்பது குத்துவது அடிப்பதாய் வலிதான யுத்தஞ் செய்யுங்காலத்தில்
இராகவன் ஒரு மரத்தடியில் மறைந்திருந்து வாலியைப் பாணத்தினாலடித்தார்,
அந்த பாணத்தினால் வாலி மார்பு பிளந்து கீழே விழுந்துவிட்டான், இதைத் தாரை கேள்விப்பட்டு அங்கதனென்னும் புத்திரனுடன் கூட
ஓடிவந்து வாலியைத் தழுவிக்கொண்டு பலவாறு புலம்பி, பிறகு எதிரில் நின்ற இராமனைப் பார்த்து,
அவருடைய மஹா புருஷலக்ஷணங்களைக் கண்டு இவர் ஸாக்ஷாத் பரமாத்மாவென்று நிச்சயித்துத் துகித்தனள்.
இராமனும் வாலியோடு வாதாடிப் பல ஸமாதானங்கள் சொல்லக் கேட்டு நன்மதிபெற்றுக் கைகூப்பி இராகவனைத் தொழுது
“ஸுக்ரீவனைப்போல் அங்கதனையும் நோக்கிக் கொள்ளவேணும்“ என்று பிரார்த்தித்துவிட்டு ப்ராணனையும் விட்டான் – என்ற வரலாறு அறிக.
ஆச்ரிதனான ஸுக்ரீவனிடத்தில் பக்ஷபாதத்தால் எம்பெருமான் செய்தருளின காரியம் இப்போதுதான் நடந்ததுபோல் ஆழ்வார்க்குத் தோற்றிற்றென்க.

“வீழ்த்ததுவும்“ என்று சிலர்க்குப் பாடமாம், அப்பாடத்தில் வெண்டளை பிறழும்.

திருவணை கட்டினதும் வாலியை வதைத்ததும் இராவணனைக் கொன்றதும் எம்பிரான்
அவலீலையாகச் செய்த செயல்கள் என்றதாயிற்று இப்பாட்டால்.

———————————————————————-

உகப்புருவம் தானே யொளியுருவம் தானே
மகப்புருவம் தானே மதிக்கில் –மிகப்புருவம்
ஒன்றுக்கு ஒன்றோ ஒசணையான் வீழ ஒரு கணையால்
அன்றிக் கொண்டு எய்தான் அவன் –29-

பதவுரை

மிக–மிகவும்
புருவம் ஒன்றுக் கொன்று ஓசனையான்–ஒரு புருவத்துக்கு ஒரு புருவம் காதவழி நீளமிருக்கப் பெற்ற கும்பகாணன்
வீழ–ஒழியும்படியாக
அன்றிக் கொண்டு–சீறிக் கொண்டு
ஒரு கணையால்–ஒரு பாணத்தினால்
எய்தானவன்–அடித்து முடித்தவனான இராமபிரானை
மதிக்கில்–சிந்தித்தால்
உகப்பு உருவன் தானே–மநோஹரமான திருமேனியை யுடையவன் அவனே
ஒளி உருவன் தானே–தேஜோ மயமான திருமேனியை யுடையவனும் அவனே,
மகப்பு உருவன் தானே–மிகவும் ஆச்சரியமான வடிவையுடையவனும் அவனே.

எம்பெருமானுடைய திவ்யமங்கள விக்ரஹத்தின் வைலக்ஷண்யத்தைப் பேசி அநுபவிக்கிறார்.
உகப்புருவன்தானே கண்டவர்கள் எல்லாரும் உகக்கும்படியான திருவுருவத்தை உடையவன் என்கை.
“தோள்கண்டார் தோளே கண்டார் தொடுகழற்கமலமன்ன
தாள்கண்டார் தாளேகண்டார் தடக்கை கண்டாரு மஃதே“ (கம்பராமாயணம்.) என்றது காண்க.
அன்றியே, நம்மைப்போல் கருமங்காரமாக சரீரங்களைப் பரிக்ரஹிக்கையன்றியே
தானே திருவுற்றமுகந்து பரிக்ரஹித்துக் கொள்ளப்பட்ட வடிவையுடையவன் என்றுமாம்.

ஒளியுருவன் தானே – “குழுமித்தேவர் குழாங்கள் கை தொழச் சோதி வெள்ளத்தினுள்ளே எழுவதோருரு“ என்கிற படியே
தேஜஸ்புஞஜமே வடிவெடுத்த தென்னலாம்படியான உருவையுடையவன்.

மகப்புருவன் –(மஹாத்புதம்) என்ற வடசொல் “மகப்பு“ எனச் சிதைந்தது, மிகவும் அற்புதமான உருவத்தை யுடையவன் என்றபடி.
இப்படிப்பட்டவன் யாவனென்னில், இராமபிரானென்கிறது பின்னடிகளால்.
கும்பகர்ணனுடைய புருவங்களின் இடைவெளி ஒரு காதவழி யுள்ளதுபற்றி “புருவ மொன்றுக்கொண்றோசனையான்“ என்று
அவனுக்குப் பெயரிடப்பட்டது. “யோஜநா“ என்னும் வடசொல் ஓசனை எனத் திரிந்தது.

——————————————————————————————————

அவன் என்னை யாளி யரங்கத் தரங்கில்
அவன் என்னை எய்தாமல் காப்பான் -அவன் என்ன
துள்ளத்து நின்றான் இருந்தான் கிடக்குமே
வெள்ளத்து அரவணையின் மேல்—30-

பதவுரை

என்னை ஆளி–என்னை ஆட்கொண்டருள்பவனான
அரங்கத்து அவன்–ஸ்ரீரங்கநாதன்
என்னை–என்னை
அரங்கில்–ஸம்ஸாரமாகிற நாடகசாலையில்
எய்தாமல்–பிரவேசிக்க வொட்டாமல்
காப்பான்–காத்தருள்வன்,
அவன்–அப்பெருமான்
என்னது–என்னுடைய
உள்ளத்து–நெஞ்சிலே
நின்றான் இருந்தான்–நிற்பதும் இருப்பதும் செய்கிறான்,
(ஆன பின்பு இனி)
அவன்–அப்பெருமான்
வெள்ளத்து–திருப்பாற்கடலில்
அரவு–அப்பெருமான்
வெள்ளத்து–திருப்பாற்கடலில்
அரவு அணையின் மேல்–சேக்ஷ சயனத்திலே
கிடக்குமே–பொருந்துவனோ? (பொருந்தமாட்டான்.)

அவன் என்னை எய்தாமல் காப்பான்–சம்சாரம் ஆகிற நாடக சாலையில் பிரவேசிக்க ஒட்டாமல் காத்து அருள்வான் –
திருப் பாற் கடல் போன்ற உகந்து அருளின ஸ்தலங்களை விட்டு என் நெஞ்சில் நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் ஆகா நின்றான்
குட திசை முடியை வைத்து குண திசை பாதம் நீட்டி வடதிசை பின்பு காட்டி தென் திசை இலங்கை நோக்கி துயில் கொள்ளும் அழகைக் காட்டி
என்னை ஆட்படுத்திக் கொண்ட எம்பெருமான் இங்கனம் செய்து அருளி வேறு எங்கும் பொருந்தப்படி இருக்கிறான்
நாடக சாலையில் பல வேஷம் பூண்டு கொண்டு வருவது போலே அநேக சரீரங்களை ஆத்மா பரிஹரித்து வருவதால்
சம்சாரத்தை அரங்கு என்கிறார் -பிறவி மா மாயக் கூத்து -திருவாய் மொழி -8-4-1-

——————————————————————————–

மேல் நான்முகன் அரனை இட்ட விடு சாபம்
தான் நாரணன் ஒழித்தான் தாரகையுள் -வானோர்
பெருமானை ஏத்தாத பேய்காள் பிறக்கும்
கரு மாயம் பேசில் கதை –31-

பதவுரை

மேல்–முன்பொருகால்
நான்முகன்–பிரமன்
அரனை–ருத்ரனைக் குறித்து
இட்ட–கொடுத்த
விடு சாபம்–சாபத்தை
தாரகையுள்–இந் நிலவுலகத்தில் (உள்ளாரெல்லாரு மறிய)
நாராயணன் தான்–எம்பெருமானே
ஒழித்தான்–போக்கி யருளினன், (அப்படிப்பட்ட)
வானோர் பெருமானை–நித்ய ஸூரி நாதனான ஸ்ரீமந்நாராயணனை
ஏத்தாத–வாய் கொண்டு வாழ்த்த மாட்டாத
பேய்காள்–அறிவு கேடர்களே!
பிறக்கும் கரு–பிறப்பதற்கு அடியான கர்ப்ப ஸ்தானத்தில் (நீங்கள் அநுபவிக்கக்கூடிய)
மாயம்–ஆச்சரியமான துக்கங்களை
பேசில்–சொல்லப் புகுந்தால்
கதை–ஒரு மஹாபாரதம் போலே பரந்திருக்கும்.

எம்பெருமானுடைய பெருமை நாடு நகரமும் நன்கு அறிந்ததாயிருந்தும் அவனை ஏத்தமாட்டாத பாவிகள்
எவ்வளவோ கஷ்டங்களை அநுபவிக்க வுரியவர்கள் என்கிறார்.

ஒரு காலத்தில் பரமசிவன் தன்னைப் போலவே பிரமனும் ஐந்து தலையுடையனாயிருப்பது பலரும் பார்த்து மயங்குதற்கு
இடமாயிருக்கின்றதென்று கருதி அவனது சிரமொன்றைக் கிள்ளி யொடுத்துவிட, அக் கபாலம் அப்படியே சிவன் கையில் ஒட்டிக் கொள்ளுதலும்,
அவன் “இதற்கு என் செய்வது?“ என்று கவலைப்பட, தேவர்களும் முனிவர்களும்
“இப்பாவந் தொலையப் பிச்சை யெடுக்கவேண்டும், என்றைக்குக் கபாலம் நிறையுமோ அன்றைக்கே இது கையைவிட்டு அகலும்“ என்று உரைக்க,
சிவபிரான் பலகாலம் பல தலங்களிலுஞ்சென்று பிச்சையேற்றுக் கொண்டே வருந்தித் திரிந்தும் அக்கபாலம் நிறையாது நீங்காதாக பின்பு
ஒருநாள் பதரிகாச்ரம்தை யடைந்து அங்கு எழுந்தருளியுள்ள நாராயணமூர்த்தியை வணங்கி இரந்தபோது
அப்பெருமான் “அக்ஷயம்“ என்று பிகைஷயிட, உடனே அது நிறைந்து கையைவிட்டு அகன்றது – என்பதே
நான் முகனரனையிட்ட விடு சாபம் நாரணணொழித்த வரலாறு.
குரு பாதகத்தைப் போக்கிச் சிவனையும் உய்யக்கொள்ளவல்ல பரதேவதை ஸ்ரீமந்நாராயணன் என்பதை
அறிகின்றிலவே இப்பேய்கள் என்று வருந்துகிறார்.

பிறக்குங் கருமாயம் பேசில் கதை – எம்பெருமானுடைய பெருமையறிந்து அவனை ஏத்தினீர்களாகில் உஜ்ஜீவித்துப் போவீர்கள்,
இல்லையேல், மாறிமாறிப் பல பிறப்பும் பிறந்து கர்ப்பப்பைகளில் நீங்கள் படநேரும் துன்பங்கள் மஹாபாரதம்போலே
பெரிய கதைப்புத்தகமாக எழுதிவைக்கத் தக்கதாகும் என்றவாறு.

முதலடியில், விடுசாபம் என்றது முழுச்சொல், “விடு“ என்பதற்குத் தனியே பொருளில்லை,
அதை ஒரு உபஸர்க்கம் பொலுக் கொள்க. சாபம் – அநுபவித்தே தீரவேண்டிய பாவம்.

தாரகையுள்–இந்நிலை உலகில் உள்ளார் எல்லாரும் அறிய –
எம்பெருமான் பெருமை நாடு நாற்றமும் நன்கு அறிந்ததாய் இருந்தும் –
அவனை ஏத்த மாட்டாத பாவிகள் எவ்வளவோ கஷ்டங்களை அனுபவிக்க உரியவர்கள் -என்கிறார்
அவன் பெருமை அறிந்து ஏத்தினால் உஜ்ஜீவனம்-இல்லையேல் மாறி மாறி பல பிறப்பும் அடைந்து கர்ப்பப் பைகளில்
அடையும் துன்பங்களை பேசப் புக்கால் மஹா பாரதம் ஆகுமே
தாராணியும் -பாட பேதம் –
விடு சாபம் -விடு -உபசர்க்கம் -சாபத்தை -என்றவாறு –

———————————————————————————-

எம்பெருமானுடைய பெருமை நாடு நகரமும் நன்கு அறிந்ததாயிருந்தும் அவனை ஏத்தமாட்டாத பாவிகள்
எவ்வளவோ கஷ்டங்களை அநுபவிக்க வுரியவர்கள் என்கிறார்.

தன்னுடைய ஸங்கல்ப மாத்ரத்தினால் ஸகல பதார்த்தங்களுக்கும் ஸத்தையை விளைக்கின்ற எம்பெருமானுடைய
குணங்களில் ஈடுபட மாட்டாதவர்கள் அஸத்துக்களாவர்,
அங்ஙனாகாமே நீங்கள் அக்குணநிதியின் திருவடிகளைச் சார்ந்து வாழ்மின் என்று சிலரை நோக்கி உபதேசிக்கும் பாசுரம் இது.

கதைப் பொருள் தான் கண்ணன் திரு வயிற்றின் உள்ள
உதைப்பளவு போது போக்கின்றி -வதைப் பொருள் தான்
வாய்ந்த குணத்துப் படாதது அடைமினோ
ஆய்ந்த குணத்தான் அடி-32-

பதவுரை

கதை பொருள்தான்–(உலகத்தில்) உயவஹரிக்கப்டுகின்ற பொருள்கள் யாவும்
உதைப்பு அளவு போது போக்கு இன்றி–ஒரு நிமிஷ காலமும் ஓயாமல் (எப்போதும்)
கண்ணன்–எம்பெருமானுடைய
திரு வயிற்றின் உள்ள–ஸங்கல்பத்தில் ஸத்தை பெற்றிருக்கின்றன,
(அப்படிப்பட்ட எம்பெருமானுடைய)
வாய்ந்த குணத்து–திருக்கல்யாண குணங்களில்
படாதது–ஈடுபடாத வஸ்து
வதை பொருள் தான்–அபதார்த்தமே யாகும்,
(ஆகையாலே)
ஆய்ந்த குணத்தான்–சிறந்த திருக் குணங்களை யுடையவனான அப்பெருமானுடைய
அடி–திருவடிகளை
அடைமின்–ஆச்ரயியுங்கோள்

கதைப் பொருள் தான் கண்ணன் திரு வயிற்றின் உள்ள-நம்மால் வியவஹிக்கப்படுகின்ற
பதார்த்தங்கள் எல்லாம் அவன் சங்கல்ப அதீனம்
திரு வயிற்றின் உள்ள-சங்கல்பத்தில் சத்தை பெற்று இருக்கின்றன
உதைப்பளவு போது போக்கின்றி-ஒரு நிமிஷ காலமும் ஓயாமல் -எப்போதும் -கண் அமைப்பதும் கை நொடிப்பதும் உதைத்து என்றபடி
அடைமினோ -ஒரு நிமிஷ காலமும் தாமதியாமல் விரைந்தோடி சேர்மினோ என்றபடி
வதைப் பொருள்-தானே – அபார்த்தம் ஆகும்
சங்கல்ப மாத்திரத்தாலே சத்தையை விளைக்கும் எம்பருமான் குணங்களில் ஈடுபடாதவர்கள் அசத்துக்கள் ஆவார்
-குணத்துப் படாதவர் என்னாமல் படாதது -என்றது வெறுப்பினால் குட்டிச் சுவர் என்னுமா போலே
நீயும் அசத்தாகாமல் ஆய்ந்த குணத்தான் -சிறந்த திருக் கல்யாண குணங்களை யுடைய எம்பெருமான் -திருவடிகளை
ஆஸ்ரயிங்கோள் என்று அருளிச் செய்து தலைக் கட்டுகிறார் –

—————————————————————————————–

எம்பெருமானுக்கு ஏற்கனவே ஈச்வரத்வம் இருந்தாலும் அவதரித்துப் பண்ணின சில ஆனைத் தொழில்களால்
அந்த ஈச்வரத்வம் நன்னர் நிலைநிறுத்திக் கொள்ளப்பட்டதென்று சில சேஷ்டிதங்களைப் பேசியநுபவிக்கிறார்.

அடிச் சகடம் சாடி அரவாட்டி ஆணை
பிடுத்து ஒசிதுப் பேய் முலை நஞ்சுண்டு -வடிப்பவள
வாய்பின்னைத் தோளிக்கா வல்லேற்று எருத்து இருத்து
கோப்பின்னும் ஆனான் குறிப்பு-33-

பதவுரை

(எம்பெருமான்)
குறிப்பு–(அடியாரைக் காத்தருள வேணுமென்கிற) திருவுள்ளத்தினால்
அடி–திருவடியாலே
சகடம்–சகடாஸுரனை
சாடி–ஒழித்தும்
அரவு-காளிய நாகத்தை
ஆட்டி–வாலைப் பிடித்து ஆட்டிக் கொழுப்படக்கியும்
யானை–குவலயாபீட மென்னும் யானையை
பிடித்து–பற்றிக்கொண்டு
பின்னைக்கா–நப்பின்னைப் பிராட்டிக்காக
வல் ஏறு–கொடிய ரிஷபங்களினுடைய
எருத்து–முசுப்பை
ஒசித்து–கொம்பை முறித்தொழித்தும்
பேய்–பூதனையென்னும் பேய்ச்சியினுடைய
முலை–முலையில் தடவியிருந்த
நஞ்சு–விஷத்தை
உண்டு–அமுது செய்து அவளாயிரை மாய்த்தும்
வடி பவளம் வாய் தோளி–அழகிய பவளம் போன்ற வாயையும் தோளையும் வுடையளான
இறுத்து–முறித்தொழித்தும்
பின்னும் கோ ஆனான்–தன்னுடைய சேக்ஷித்வத்தை நிலைநிறுத்திக் கொண்டான்.

அடிச்சகடம்சாடி – நந்தகோபர் திருமாளிகையில் ஸ்ரீ கிருஷ்ணசிசுவை ஒரு வண்டியின் கீழ்ப்புறத்திலே தொட்டிலிலிட்டு
கண் வளர்த்திய சோதை யமுனை நீராடப் போயிருந்த காலத்து, கம்ஷனாலேவப்பட்ட அஸுரனொருவன் அச்சகடத்தில் வந்து
ஆவேசித்துத் தன்மேல் விழுந்து தன்னைக் கொல்ல முயன்றதையறிந்த திருவடிகளை மேலே தூக்கி யுதைத்து
அச்சகடத்தைச் சிந்நபிந்த மாக்கினனென்க.

அரவாட்டி – ஒருநாள் கிருஷ்ணன் கன்றுகளை ஒட்டிக்கொண்டு ஒருவரும் ஸஞ்சரியாத வழியே போகத் தொடங்க,
மற்றுள்ள இடைப்பிள்ளைகள் அழைத்து “க்ருஷ்ணா! அவ்வழி நோக்க வேண்டா, அவ்வழியிற் சென்றால் யமுநாநதியில்
ஓர் மடுவில் இருந்துகொண்டு அம்மடு முழுவதையும் தன் விஷாக்நியினாற் கொதிப்படைந்த நீருள்ளதாய்ப் பானத்துக்கு
அநர்ஹமாம்படி செய்த காளியனென்னுங் கொடிய ஐந்தலை நாகம் குடும்பத்தோடு வாஸஞ்செய்துகொண்டு
அணுகினவர்களனைவரையும் பிணமாக்கி விடுவதால் நாங்கள் அஞ்சுகின்றோம்“ என்ன,
அதைக்கேட்ட கண்ணபிரான் உடனே அக்காளிய நாகத்தைத் தண்டிக்க வேண்டுமென்று திருவுள்ளங்கொண்டு
அம்மடுவிற்குச் சமீபத்திலுள்ளதொரு கடம்பமரத்தின்மேலேறித் துவைத்து நர்த்தனஞ் செய்து நசுக்கி வலியடக்குகையில்,
மாங்கலிய பிக்ஷையிட்டருள வேண்டுமென்று தன்னை வணங்கி பிரார்த்தித்த நாக கன்னிகைகளின் விண்ணப்பத்தின்படி
அந்தக் காளியனை உயிரோடு கடலிற்சென்று வாழும்படி விட்டருளினன் என்க.

அரவு ஆட்டி எனப் பதம் பிரித்ததுபோல “அர வாட்டி“ எனவும் பிரிக்கலாம்,
“குறியதன்கீழ் ஆக்குறுகலும் அதனோடு, உகரமேற்றலும் இயல்வுமாம் தூக்கின்“ என்ற நன்னூற் சூத்திரமுணர்க.)
அர-காளியநாகத்தை, வாட்டி – வலியடக்கி, என்கை.

யானை பிடித்தொசித்து – வில்விழவுக்கென்று கம்ஸனால் அழைக்கப்பட்டு மதுரைக்கு எழுந்தருளின கண்ணபிரான்
கம்ஸன் அரண்மனையை நோக்கிச் செல்லுகையில் அவ்வரண்மனை வாயில் வழியில் தன்னைக் கொல்லும்படி
அவனால் ஏவி நிறுத்தப்பட்டிருந்த குவலயாபீடமென்னும் மதயானை சீறிவர, கண்ணபிரான் அதனை யெதிர்த்து
அதன் தந்தங்களிரண்டையும் சேற்றிலிருந்து கொடியை எடுப்பதுபோல எளிதிற்பறித்து அவற்றையே ஆயுதமாகக்கொண்டு
அடித்து அவ்யானையையும் யானைப்பாகனையும் உயிர் தொலைத்திட்டன்னென்க.

பேய்முலை நஞசுண்டு – பூதனை யென்னும் ராக்ஷஸி கம்ஸனேவுதலால் நல்ல “பெண்ணுருவத்தோடு இரவிலே
திருவாய்ப்பாடிக்கு வந்து அங்குத் தூங்கிக்கொண்டிருந்த கிருஷ்ண சிசுவையெடுத்துத் தனது நஞ்சு தீற்றிய முலையை
உண்ணக் கொடுத்துக் கொல்லமுயல, பகவானான குழந்தை அவ்வரக்கியின் தனங்களைக் கைகளால் இறுகப்பிடித்துப்
பாலுண்ணுகிற பாவனையிலே அவளுயிரையும் உறிஞ்சி அவள் பேரிரைச்சலிட்டுக் கதறி உடம்பு நரம்புகளின்
கட்டெல்லாம் நீங்கி விழுந்து இறக்கும்படி செய்தன்னென்க.

வல்லேற்றெருத்திறுத்து – நப்பின்னைப் பிராட்டியை மணம் புணர்வதற்காக அவள் தந்தை கந்யாசுல்கமாகக் குறித்தபடி
யார்க்கும் அடங்காத அஸுராவேசம்பெற்ற ஏழு எருதுகளையும் கண்ணபிரான் ஏழு திருவுருக்கொண்டு சென்று
வலியடக்கி அப்பிராட்டியை மணஞ்செய்து கொண்டன்னென்க.

ஆக இப்படிப்பட்ட விரோதி நிரஸநத் தொழில்கள் செய்து தன்னுடைய ஈச்வரத்வத்தை
ஸ்திரப்படுத்திக்கொண்டா னெம் பெருமான் என்றாராயிற்று.

கோப்பின்னும் ஆனான்-பின்னும் கோ வானான் -தன்னுடைய சேஷித்வத்தை நிலை நிறுத்திக் கொண்டான் –
குறிப்பு-–அடியாரைக் காத்து அருள வேணும் என்கிற திரு உள்ளத்தினால் –
ஈஸ்வரன் பண்ணி அருளிய ஆனைத் தொழில்கள் எல்லாம் தன்னுடைய சேஷித்வம் நிலை பெறவே -என்கிறார்
அரவு ஆட்டி -அரவாட்டி -காளியனை கடலில் விட்டு வாழும் படி -என்றும் வாட்டி -வலி அடக்கி என்றுமாம்

——————————————————————————————-

குறிப்பு எனக்குக் கோட்டியூர் மேயானை ஏத்த
குறிப்பு எனக்கு நன்மை பயக்க -வெறுப்பனோ
வேங்கடத்து மேயானை மெய்வினை நோய் எய்தாமல்
தான் கடத்தும் தன்மையான் தாள்-34-

பதவுரை

கோட்டியூர் மேயானை–திருக்கோட்டியூரில் நித்யவாஸம் பண்ணுமவனும்
வேங்கடத்து மேயானை–திருமலையில் நித்ய வாஸம்பண்ணுமவனுமான பெருமானை
ஏத்த–துதிப்பதற்கு
எனக்கு குறிப்பு–எனக்கு ஆசை
நன்மை பயக்க–(எம்பெருமானை இடைவிடாது அநுபவிப்பதனாலுண்டாகும்) பெருமையை உண்டாக்கிக் கொள்வதற்கு
எனக்கு குறிப்பு–எனக்கு குதூஹலம்,
மெய் வினை–சரீர ஸம்பந்தத்துக்கு அடியான கருமங்களும்
நோய்–வியாதிகளும்
எய்தாமல்–வந்து சேராதபடி
தான் கடத்தும் தன்மையான்–தானே அவற்றைப் போக்கியருளும் ஸ்வபாவத்தை யுடையனான அப்பெருமானுடைய
தாள்–திருவடிகளை
வெறுப்பனோ–மறந்திருப்பனோ.

ஏத்த-குறிப்பு எனக்கு -ஸ்திதிக்க எனக்கு ஆசை / நன்மை பயக்க -குறிப்பு எனக்கு -இடைவிடாமல்
நித்ய அனுபவம் செய்வதால் உண்டாகும் பெருமை உண்டாக்கிக் கொள்ள எனக்கு குதூஹலம்
உகந்து அருளின ஸ்தலங்களில் வந்து எழுத்து அருளி என்ன அடிமைக் கொள்ள ஸூ லபனாய் இருக்கும்
எம்பருமான் திருவடிகளை மறந்திருக்க என்னால் முடியுமோ
உகந்து அருளின தேசங்களில் சென்று மங்களா சாசனம் பண்ணி இடைவிடாமல் அனுபவித்து ஆத்மாவுக்கு
நன்மை விளைவித்துக் கொள்ள ஆசை கொண்டு இருக்கிறேன்
எவ்வித கருமங்களும் துக்கங்களும் அணுகாத படி ரக்ஷித்து அருளும் எம்பெருமானுடைய திருவடிகளை
எவ்வாறு உபேக்ஷித்து இருக்கும் இருக்க முடியும் என்கிறார்
வெவ்வினை நோய் –பாட பேதம் –

———————————————————————————————

தாளால் உலகம் அளந்த அசைவே கொல்
வாளா கிடந்தருளும் வாய் திறவான் -நீளோதம்
வந்தலைக்கும் மா மயிலை மா வல்லிக் கேணியான்
ஐந்தலை வாய் நாகத்தணை-35-

பதவுரை

நீளோதம்–பெரிய அலைகள்
வந்து அலைக்கும்–கரையிலே வந்து வீசப் பெற்ற
மா மயிலை–மயிலாபுரிக்கு அடுத்த
மா வல்லிக் கேணியான்–திருவல்லிக்கேணியில் நித்யவாஸம் பண்ணுகிற ஸர்வேச்வரன்
ஐ தலை வாய் நாகத்து அணை–ஐந்து தலைகளையும் ஐந்து வாய்களையும்டையானான திருவனந்தாழ்வானாகிற படுக்கையிலே
வாளா–வெறுமனே
கிடந்தருளும்–சயனித்திரா நின்றான்
வாய் திறவான்–வாய்திறந்து ஒன்று மருளிச்செய்வதில்லை
(இப்படியிருப்பதற்குக் காரணம்)
தாளால்–திருவடியாலே
உலகம் அளந்த அசவே கொல்–உலகங்களை அளந்ததனுலுண்டான ஆயாஸமோ?

அர்ச்சாவதாரத்தில் ஒருபடிப்பட -நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் -செய்து ஒரு நாளும் சோதி வாய் திறந்து பேசாமல்
இருப்பான் என்று அறிந்து வைத்தும் -பிரேமத்தின் கனத்தால் -அர்ச்சாவதார சமாதியையும்
குலைத்து பரிமாறப் பாரிப்பார்களே ஆழ்வார்கள் –
கொடியார் மடக் கோளூரகத்தும் புளிங்குடியும் மடியாது இன்னே நீ துயில் மேவி மகிழ்ந்தது தான்
அடியால் அல்லல் தவிர்த்த அசைவோ -அன்றேல் இப்படி தான் நீண்டு தாவிய அசைவோ பணியாயே–திருவாய் -8-3-5-என்றும்
கிடந்த நாள் கிடந்தாய் எத்தனை காலம் கிடத்தி உன் திரு உடம்பு அசையத் தொடர்ந்து குற்றேவல் செய்து
தொல்லடிமை வழி வரும் தொண்டர்க்கு அருளித் தடம் கொள் தாமரைக் கண் விழித்து நீ எழுந்து உன் தாமரை மங்கையும் நீயும்
இடம் கொள் மூ உலகும் தொழ இருந்து அருளாய் திருப் புளிங்குடி கிடந்தானே–9 -2-3-
இவரே -நடந்த கால்கள் நொந்தவோ –காவிரிக் கரைக் குடைந்தையுள் கிடந்தவாறு எழுந்து இருந்து பேசி வாழி கேசனே-என்கிறார்
அசைவு -அசவு -அயர்வு -பர்யாயம் /-

திருவல்லிகேணி யென்பது, தொண்டைமான் சக்ரவர்த்தியின் பிரார்த்தனையின்படியே திருவேங்கடமுடையான் கண்ணனாகத்
தனது குடும்பத்தோடு ஸேவைஸாதித்த தலம். இத்தலத்துப் புஷ்கரிணி அல்லிப்பூக்கள் நிறையப் பெற்றதனால்
கைரவிணியென்று வடமொழியிலும் திருவல்லிக்கேணி யென்று தென்மொழியிலும் பெயர்பெறும்.
இந்தப் புண்ணிய தீர்த்தத்தின் பெயரை இத்தலத்திற்குப் பெயராயிற்றென்றுணர்க.
இது மயிலையை அடுத்திருக்கிறபடியால் “மாமயிலை மாவல்லிக்கேணி“ எனப்பட்டது.
மா மயிலை மா வல்லிக்கேணியான் -என்றே ஆழ்வார்கள் ஈடுபடுவார்கள்

————————————————————————————

நாகத்தணைக் குடந்தை வெக்கா திரு எவ்வுள்
நாகத்தணை யரங்கம் பேரன்பில் –நாகத்
தணைப் பாற் கடல் கிடக்கும் ஆதி நெடுமால்
அணைப்பார் கருத்தானாவான்–36-

பதவுரை

நாகத்து அணை–திருவனந்தாழ்வானாகிற படுக்கையின் மேலே
குடந்தை–திருக்குடந்தையிலும்
வெஃகா–திருவெஃகாவிலும்
திரு எவ்வுள்–திருவெவ்வுளுரிலும் (அப்படியே)
நாகத்து அணை–சேஷசயனத்தின் மீது
பால் கடல்–திருப்பாற்கடலிலும்
ஆதி நெடுமால்–ஜகத் காரண பூதனான ஸர்வேச்வரன்
நாகத்து அணை–திருவனந்தாழ்வானாகிற படுக்கையின் மேல்
அரங்கம்–திருவரங்கத்திலும்
பேர்–திருப்பேர் நகரிலும்
அன்பில்–அன்பில் என்னுந் திருப்பதியிலும்
கிடக்கும்–பள்ளி கொண்டிருக்கின்றான்
(எதுக்காக வென்னில்)
அணைப்பார் கருத்தன் ஆவான்–அன்பருடைய நெஞ்சில் புகுந்தவனாக ஆவதற்காக.

கீழ்பாட்டில் “ஐந்தலைவாய் நாகத்தணை – கிடந்தருளும்“ என்று சேஷசயநம் ப்ரஸ்துதமாகையாலே
இங்ஙனே திருவனந்தாழ்வான்மீது பள்ளிகொண்டு ஸேவைஸாதிக்கப் பெற்ற திருப்பதிகளுள் சிலவற்றைப் பேசியநுபவிக்கிறார்.
அன்பருடைய அந்தரங்கத்திலே புகுவதற்கு ஸமயம் எதிர்பார்த்துக் கொண்டு
திவ்யதேசங்களிலே தங்கியிருக்கிறானென்பதும் இதில் அநுஸந்திக்கப்படுகிறது.

திருக்குடந்தைத் திருவெஃகா, திருவெவ்வுளுர், தென்திருவரங்கம், திருப்பேர்நகர், அன்பில், திருப்பாற்கடல் ஆகிய ஏழு தலங்களில்
நாகத்தணையிலே கிடந்தருள்வது அன்பருடைய ஹ்ருதயத்திலே புகுருகைக்கு அவஸர ப்ரதீக்ஷையாலே யென்கை.

வெஃகா – கச்சித்திருப்பதியில் ஸ்ரீயதோக்தகாரிஸந்நிதி.
திரு எவ்வுள் – எம்பெருமான் சாலிஹோத்ர மாமுனிவனுக்குப் பிரத்ய க்ஷமாகி ‘வஸிப்பதற்கு உரிய உள் எவ்வுள்?‘ என
வினாவியதனால் இத்தலத்திற்குத் திருவெவ்வுளூர் என்று திருநாம்மாயிற்றென்பர்.
“கிம்க்ருஹம்“ என்பது ஸம்ஸ்க்ருதவ்யவஹாரம்.
பேர் – அப்பக்குடத்தான் ஸந்நிதி.
அடிதோறும் ‘நாகத்தணை‘ என்றது போக்யதாசிசயம் தோற்ற.

அணைப்பார் கருத்தனாவான் – நித்ய யுக்த கீதையிற் சொல்லுகிறபடியே எப்போதும் எம்பெருமானோடு
அணைந்தே யிருக்கவேணு மென்று ஆசையுடையார் ‘அணைப்பார்‘ என்ப்படுவர்,
அவர்களுடைய, கருத்தன் – கருத்திலே (திருவுள்ளத்தில) பொருந்தினவானாக, ஆவான் – ஆவதற்காக என்றபடி.

எம்பெருமானுக்கு, பரமபதம் திருப்பாற்கடல் கோயில் திருமலை பெருமாள்கோயில் முதலான உகந்தருளின விடங்களில்
இருப்பத்திற்காட்டிலும் மெய்யடியாருடைய ஹ்ருதயகமலத்திலே வாழ்வதே பரமோத்தேச்யமென்றும்,
ஸமயம் பார்த்து அன்பருடைய நெஞ்சிலே வந்து சேர்வதற்காகவே மற்ற விடங்களில் எம்பெருமான் தங்குகிறான் என்றும்,
ஆகவே திவ்யதேசங்களில் வாஸம் உபாயமாய் பக்தருடைய ஹ்ருதயத்தில்வாஸமே புருஷார்த்னுக்கு திவ்யதேசவாஸத்தில்
ஆதரம் மட்டமாய்விடு மென்றும் ஸ்ரீவசநபூசணத்தில் பிள்ளையுலகாசிரியர் பரமரஸமாக அருளிச் செய்ததெல்லாம்
இப்பாசுரத்தையும் மூலமாகக் கொண்டதாகும்.
“கல்லுங்கனைகடலும் வைகுந்தவானாடும், புல்லென்றொழிந்தனகொல் ஏபாவம்! –
வெல்ல, நெடியான் நிறங்கரியான் உள்புகுந்து நீங்கான், அடியேனதுள்ளத்தகம்“ என்று நம்மாழ்வார்
பெரிய திருவந்தாதியில் அருளிச்செய்த பாசுரமும் இங்கு ஸ்மரிக்கத்தகும்.

——————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருமழிசை ஆழ்வார் அருளிய நான்முகன் திருவந்தாதி -1-12–-திவ்யார்த்த தீபிகை சாரம் –ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் –

November 22, 2016

திருமழிசைப் பிரான் திருவாய் மலர்ந்து அருளிய நான்முகன் திருவந்தாதி –
-மூன்றாவது ஆயிரம் இயற்பாவில் நான்காவது பிரபந்தம்
நாலாம் நான்காம் திருவந்தாதி என்னாமல் நான்முகன் திருவந்தாதி -என்றது
-அமலனாதி பிரான் கண்ணி நுண் சிறுத் தாம்பு போலே —முதல் குறிப்பு இலக்கண வகை –

எம்பெருமானுடைய அனுக்ரஹ விசேஷத்தாலே -மயர்வற மதி நலம் அருள பெற்று -திவ்யாத்மா ஸ்வரூபத்தையும் –
திருக் கல்யாண குணங்களையும் -திவ்ய மங்கள விக்ரஹத்தையும்-இவற்றை இடைவிடாமல் அனுபவிக்கும் பிராட்டிமார்களையும்
-இவர்கள் சேர்த்தியில் கிஞ்சித்க்கரிக்கும் ஸூ ரிகளையும் -இவற்றுக்கு ஏகாந்தமான பரமபதத்தையும் -லீலா விபூதி யோகத்தையும்
உள்ளபடியே சாஷாத்கரித்து அனுபவித்து மார்க்கண்டேயாதிகளைப் போலே நெடும் காலம் சம்சார மண்டலத்தில்
காலம் சென்றது அறியாதே எழுந்து அருளி இருந்து சேதனர் பலரும் ரஜஸ் தமஸ் குணங்களுக்கு வசப்பட்டு
-வசன ஆபாசங்களைக் கொண்டும் தேவதாந்த்ர வழிபாட்டால் வைதிக மார்க்கத்தில் நின்றும் விலகி குத்ருஷ்ட்டி மார்க்கம்
பேணி சம்சாரத்தையே வளர்த்திக் கொண்டு அநர்த்தப் படுகிற படியைக் கண்டு
பொறுக்க மாட்டாத பரம கிருபையினால் தேவதாந்த்ர பரத்வத்தை நிராகரித்து -ஸ்ரீ மன் நாராயண பாராம்யத்தை ஸ்தாபித்து
அனைவரும் பகவத் பிரவணராம் படி திருத்தி அருளுகிறார் இப்பிரபந்தத்தால் –

—————————————–

நாராயணன் படைத்தான் நான்முகனை நான்முகனுக்கு
ஏரார் சிவன் பிறந்தான் என்னும் சொல் -சீரார் மொழி
செப்பி வாழலாம் நெஞ்சமே மொய்பூ
மழிசைப் பிரான் அடியே வாழ்த்து –ஸ்ரீ ராமபிள்ளை அருளிச் செய்த தனியன் –

—————————————

ஸ்ரீ மன் நாராயண பரத்வத்தை அழுத்தமாக அருளிச் செய்கிறார் -இப்பிரபந்தம் தலைக் கட்டும் இடத்தும்
-இனி அறிந்தேன் ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம் இனி அறிந்தேன் எம்பெருமான் உன்னை -என்று தலைக் கட்டி
நடுவில் பல பாசுரங்களால் தேவதாந்த அபூர்த்தியையும் ஸ்ரீ மன் நாராயணனின் பூர்த்தியையும் அருளிச் செய்வதால்
பரத்வ ஸ்தாபனத்தில் நோக்காய் இருக்கும் –

நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும்
தான்முகமாய் சங்கரனைத தான் படைத்தான்– யான்முகமாய்
அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ் பொருளைச்
சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து–1-

பதவுரை

நாராயணன்–பரமபுருஷனானவன்
நான்முகனை–பிரமனை
படைத்தான்–ஸ்ருஷ்டித்தான்
நான்முகனும்–அந்தப் பரமனும்
தான்–தானே
முகம் ஆய்–முக்கியனாயிருந்து
சங்கரனை–சிவனை
படைத்தான்–ஸ்ருஷ்டித்தான்
ஆழ் பொருளை–(ஆகவே, முழு முதற் கடவுள் ஸ்ரீமந் நாராயணனே யென்கிற) ஆழ்ந்த அர்த்தத்தை
யான்–அடியேன்
முகம் ஆய்–முக்கியமாக
அந்தாதி மேல் இட்டு–இத்திருவந்தாதி மூலமாக
அறிவித்தேன்–உங்கட்கு அறிவிக்கத் தொடங்குகின்றேன்
நீர்–நீங்கள்
தேர்ந்து–ஆராய்ந்து
சிந்தாமல் கொள்மின்–(இவ்வர்த்தத்தைக் குறையற நெஞ்சில் தேக்கிக் கொள்ளுங்கள்.

தான்முகமாய் -தானே முக்கியமாய் இருந்து –
ஆழ்பொருளை-(ஆகவே, முழுமுதற் கடவுள் ஸ்ரீமந்நாராயணனே யென்கிற) ஆழ்ந்த அர்த்தத்தை

இவ்வாழ்வாருடைய காலத்தில் தேவதாந்தர பரத்துவம் கொள்ளும் மாதாந்தரஸ்தர்கள் மலிந்திருந்ததனால்
அவர்களைத் திருத்தி வழிப்படுத்த வேண்டுவது அவசியமாயமைந்தது,
ஆகவே, தொடங்கும்போதே ஸ்ரீமந்நாராயண பரத்வத்தை அழுத்தமாகப் பேசுகின்றார்,
இப்பிரபந்தம் தலைக்கட்டுமிடத்தும் “இனியறிந்தேன் ஈசற்கும் நான்முகற்குந் தெய்வம், இனியறிந்தேனெம் பெருமானுன்னை” என்று
தலைக்கட்டுவராதலாலும், இடையிலும் பலபல பாசுரங்களினால் தேவதாந்தரங்களின் அபூர்த்தியையும் பரமபுருஷனுடைய பூர்த்தியையுமே
பேசுவராதலாலும் இப்பிரபந்தம் பெரும்பாலும் பரதத்வஸ்தாபநத்தில் நோக்குடைத்தாயிருக்கும்.

நான்முகனை நாராயணன் படைத்தான்-
நாம ரூப அர்ஹம் இன்றி காரிய பொருள்கள் யாவும் தன்னிடமே லயம் அடைந்து -சதேவ சோம்ய ஏக மேவ அத்விதீயம் -என்று இருக்க
தன் சங்கல்பத்தாலே பஹுஸ்யாம் ப்ரஜாயேய -சமஷ்டி பதார்த்தங்களை ஸ்ருஷ்டித்து -நான்முகனைக் கொண்டு வ்யஷ்டி பதார்த்தங்களை ஸ்ருஷ்டிக்க வேண்டி-
உய்ய உலகு படைக்க வேண்டி உந்தியில் தோற்றினாய் நான்முகனை -என்கிறபடி திரு நாபீ கமலத்தில் நான்முகனை படைத்து அருளினான் –
பிரமன் வேதங்கள் கொண்டே ஸ்ருஷ்டி செய்ய வேண்டி இருப்பதாலும் -அந்த வேதங்கள் நான்கு வகைப் பட்டு இருப்பதாலும்
அவற்றை உச்சரிக்க நான்கு முகங்கள் கொண்டவன் என்பதாலும் நான்முகனை –என்கிறார் -பிரமனை -என்னாதே –
நான்முகனும் தான்முகமாய் சங்கரனைத் தான் படைத்தான்

தானே தலைவனாய் நின்று சம்ஹாரக் கடவுள் சங்கரனைப் படைத்தான் –
புத்ரன் விநயம் அற்று வழி கெட நடந்தால் தந்தை அவனை விலங்கிட்டு வைப்பது போலே உலகோர் வழி கெட நடந்து
அநர்த்தம் விளைவித்துக் கொண்டால் கரண களேபரங்களை விநாசம் செய்து தீர வேண்டுவதால் சங்கரனைப் படைத்தான் –
சங்கரன் என்றசொல் (‘***.’ என்னும் ஸம்ஸ்க்ருத வ்யுத்பத்தியால்) நன்மை செய்பவன் எனப் பொருள்படும்,
மேன்மேலும் கேடுகளை விளைத்துக்கொள்ள வொண்ணாதபடி கரணகளே பரங்களை ஒடித்துவைப்பதாகிற
ஸம்ஹாரம் நன்மையேயாதலால் இதுதோன்ற இங்கு ‘உருத்திரனை’ என்னாது ‘சங்கரனை’ என்றார்.
யான்முகமாய்-அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ் பொருளைச்-சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து-சர்வ சேஷியான ஸ்ரீ மன் நாராயணனே உத்பாதகன்
-இவனைத்தவிர பிறிது ஒன்றும் பர தெய்வமாக கொண்டாட வழி இல்லை என்ற ஆழ்ந்த பொருளை
கல் வெட்டும் செப்பு வெட்டுமா போலே பிரபந்ததீ கரித்து அறிவிக்கிறேன்
சம்சாரத்தின் பொல்லாங்கையும் நான் சொல்லுகிற அர்த்தத்தை அருமை பெருமைகளையும் ஆராய்ந்து
நெஞ்சில் நின்றும் நழுவி மங்கிப் போகாத படி உள்ளத்தே தேக்கிக் கொள்ளுங்கோள்-என்று துடை தட்டி உணர்த்துகிறார்
தொடங்கும் பொழுதே அறிவித்தேன் -என்று இறந்த காலத்தில் அருளிச் செய்தது –எம்பெருமான் -ஸத்ய சங்கல்பனாகையாலும் தன்னுடைய உறுதியாலும்
இப்பிரபந்தம் தலைக் கட்டி விட்டதாக நினைத்து அருளிச் செய்கிறார் -கால வழுவமைதி -என்பர் –
ப்ரஹ்மாதிகள் சம்சாரத்தைப் பிரவர்த்திப்பிக்க பிரதானர் ஆனார் போலே-தந் நிவ்ருத்திக்கு ப்ரதானன் ஆனேன் நான் என்கிறார் —
அவர்கள் சம்சாரத்தை வளர்ச்சி செய்து வைக்க நான் அன்றோ வேர் அறும் படியாக ஆழ் பொருளை அறிவிக்க முற்படுகிறேன் -காண்மின் -என்கிறார் –

————————————————————————————

தேருங்கால் தேவன் ஒருவனே என்று உரைப்பர்
ஆரும் அறியார் அவன் பெருமை -ஒரும்
பொருள் முடிவும் இத்தனையே எத்தவம் செய்தார்க்கும்
அருள் முடிவது ஆழியான் பால் –2–

பதவுரை

தேருங்கால்–“ஆராயுமிடத்து.
தேவன் ஒருவனே என்று–பரதெய்வமாக வுள்ளவன் ஸ்ரீமந்நாராயணனொருவனே“ என்று
உரைப்பர்–(வியாஸர் முதலிய மஹர்ஷிகள்) சொல்லுவர்,
அவன் பெருமை–அந்த ஸ்ரீமந்நாராயணனுடைய பெருமையை
ஆரும் அறியார்–ஒருவரும் அறியமாட்டார்
ஒரும் பொருள் முடிவும் இத்தனையே–(வேத வேதாங்கங்களில்) ஆராயப்படும் பொருளின் நிர்ணயமும் இவ்வளவேயாம்
எத் தவம் செய்தார்க்கும் –(எப்படிப்பட்ட ஸாதநாநுஷ்டா நாங்களைப் பண்ணினவர்கட்கும்
முடிவது–முடிவில் பலனையளிப்பது
ஆழியான் பால் அருள்–எம்பெருமானிடத்து உண்டாகும் கிருபையேயாம்.

தேருங்கால் தேவன் ஒருவனே என்று -ஆராயும் இடத்து பர தெய்வமாக உள்ளவன் ஸ்ரீ மன் நாராயணன் ஒருவனே என்று
உரைப்பர்–வியாஸாதி மஹரிஷிகள் சொல்லுவார்
தத்வம் ஜிஜ்ஞாஸமாநாநாம் ஹேதுபிஸ் ஸ்ர்வதோமுகை – தத்வமேகோ மஹாயோகீ ஹரிர் நாராயணஸ் ஸ்ம்ருத“ என்ற
பிரமாணத்தைத் திருவுள்ளம் பற்றித் “தேருங்கால் வேனொருவனே யென்றுரைப்பர்“ என்கிறார்.
ஒரும்-பொருள் முடிவும் இத்தனையே –வேத வேதாந்தங்களில் ஆராயப்படும் பொருளின் நிர்ணயமும் இவ்வளவேயாம் –
எத்தவம் செய்தார்க்கும்-எப்படிப்பட்ட சாதன அனுஷ்டானங்களை பண்ணினவர்க்கும்
முடிவது ஆழியான் பால் அருள் –முடிவில் பலனை அளிப்பது எம்பெருமான் இடத்து உண்டாகும் கிருபையேயாம் –

மற்றவர்கள் அவனுக்கு அங்க பூதங்களே–அவனது பரத்வம் -ஸுலப்யம் -ஸுசீல்யம் வாத்சல்யம் -ஸ்வாமித்வம் -இவற்றால்
அவன் பெருமையை அளவிட வல்லார் யாரும் இல்லை-தாமும் தம் பெருமை அறியார் -பெரிய திரு -5-2-1–என்பர் கலியனும்-
அவனே பெருமையில் சிறந்த பராத் பரன் -அவனது நிர்ஹேதுக கிருபையினாலேயே அவன் ப்ராப்யன் -என்றதாயிற்று –

இப்படிப்பட்ட எம்பெருமானை யடைவதற்கு, கருமம் ஞானம் பக்தி முதலிய உபாயங்கள் சாஸ்த்ரங்களிற் சொல்லப்பட்டிருந்தாலும்
அப்பெருமானுடைய திருவருளின்றி எந்த ஸாதநாநுஷ்டானமும் கார்யகா மல்லாமையாலே
அவனது நிர்ஹேதுக க்ருபைக் கொண்டே அவன் பெறத்தகுந்தவன் என்கிற ஸகலசாஸ்த்ர ஸாரப்பொருளைப் பின்னடிகளில் வெளியிடுகிறார்.
பகவானைப் பெறுகைக்கு உபாயமாக எப்படிப்பட்ட தபஸ்ஸை அநுஷ்டித்தாலும் அது ஸாகஷாத்தாகப் பலன் பெறுவிக்க மாட்டாது,
அப்பகவானுடைய திருவருளே பலனளிக்கவல்லது என்றவாறு.
எந்த சாஸ்த்ரத்தை அவிழ்த்துப் பார்த்தாலும் ஸாரார்த்தம் இதுவே விளங்குமென்கிறார் ஓரும் பொருள்முடிவு மித்தனையே என்பதனால்,
கூரத்தாழ்வா னருளிய வரதராஜஸ்வத்தில் – இவ்வர்த்தம் வெளியிடப்பட்டதென்க.

ஆக இப்பாட்டால் – ஸ்ரீமந்நாராயணனே பெருமையிற்சிறந்த பரதேவதை, அவனுடைய நிர்யேதுக க்ருபையினாலேயே
அவன் ப்ராப்யன் என்கிற இரண்டு அர்த்த விசேஷங்கள் வெளியிடப்பட்டன வாயின.

—————————————————————————————-

பாலில் கிடந்ததுவும் பண்டு அரங்கம் எய்ததுவும்
ஆலில் துயின்றதுவும் ஆர் அறிவார் -ஞாலத்
தொரு பொருளை வானவர் தம் மெய்ப் பொருளை அப்பில்
அரு பொருளை யான் அறிந்தவாறு –3-

பதவுரை

(எம்பெருமான்)
பாலில்–திருப்பாற்கடலில்
கிடந்ததுவும்–சயனித்தருளு மழகையும்
அரங்கம்–திருவரங்கம் பெரிய கோயிலில்
மேயதுவும்–பொருந்தி வாழ்வதையும்
பண்டு–முன்பொருகால்
ஆலில்–ஆலந்தளிரில்
துயின்றதுவும்–பள்ளி கொண்ட விதத்தையும்
ஆர் அறிவார்–யார் அறிய வல்லார்?
ஞாலத்து ஒரு பொருளை–இப் பூமியில் வந்தவதரித்த விலக்ஷண புருஷனாயும்
வானவர் தம் மெய் பொருளை–நித்ய ஸூரிகளுக்குப் பிரத்யக்ஷமாக அநுபவிக்கத் தகுந்த வஸ்து வாயும்
அப்பில் அரு பொருளை– (ஸலகலத்துக்கும் காரணமாக முதலில் ஸ்ருஷ்டிக்கப்பட்ட) ஜலதத்வத்தினுள்
கண் வளரும் அரும்பொருளாயுமிருக்கின்ற எம்பெருமானை
யான் அறிந்த ஆறு–அடியேன் அறிந்த விதம் என்ன!

ஞாலத்-தொரு பொருளை -பூமியில் திருவவதரித்த விலக்ஷண புருஷன் –துணையற்ற காரண வஸ்து -என்றுமாம்
வானவர் தம் மெய்ப் பொருளை-நித்ய ஸூ ரிகளுக்கு பிரத்யக்ஷமாக அனுபவிக்காத தகுந்த வஸ்து வாயும்
அப்பில்-அரு பொருளை -சகலத்துக்கும் காரணமான முதலில் ஸ்ருஷ்டிக்கப்பட்ட ஜல தத்துவத்தில்
கண் வளரும் அறும் பொருளாய் இருக்கும் எம்பெருமானை -நன்மைப் புனல் பண்ணி-திருவாய் -7-5-4-

கீழே ஆரும் அறியார் அவன் பெருமை என்றார் –
தன் தாளும் தோளும் முடிகளும் சமன் இல்லாத பல பரப்பி திருப் பாற் கடலிலே சயனித்து இருக்கும் அழகிலே
நான் ஈடுபட்டு இருக்கும் வண்ணம் யார் ஈடுபடுவார் –
பாலாழி நீ கிடக்கும் பண்பை யாம் கேட்டேயும் காலாழும் நெஞ்சு அழியும் கண் சுழலும் -என்கிறபடி அக்கிடை அழகில்
வியாமோஹித்து இருப்பவன் நான் ஒருவனே –
திருவரங்கம் பெரிய கோயிலிலே உபய காவேரீ மத்யத்திலே என் அமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே -என்கிற படி
பரம போக்யமாயும் அத்யந்த ஸூலபமாயும் சந்நிதி பன்னி சேவை சாதிக்கும் அருளின் போக்யத்தையும் ஸுலப்யத்தையும் நான் ஒருவனே வாய் வெருவுவேன்
ஆலிலைத் தளிரில் அக்கடிகடனா சாமர்த்தியத்தை மெச்சுகிறவன் நான் ஒருவனே அன்றி வேறு ஒருவர் உண்டோ
நான் அறிந்த வாறு — விதம் ஆச்சர்யம் —ஆர் அறிவார் -என்று கீழோடே சேர்த்து ஏக வாக்யமாகவுமாம் –

——————————————————————————-

ஆறு சடைக் கரந்தான் அண்டர்கோன் தன்னோடும்
கூறுடையன் என்பதுவும் கொள்கைத்தே -வேறொருவர்
இல்லாமை நின்றானை எம்மானை எப்பொருட்கும்
சொல்லானைச் சொன்னேன் தொகுத்து–4-

பதவுரை

ஆறு–கங்கா நதியை
சடை–தனது ஜடா மண்டலத்திலே
கரந்தான்–மறையச் செய்து தாங்கிக் கொண்டிருக்கின்ற ருத்ரன்
அண்டர் கோன் தன்னோடும்–தேவாதி தேவனான ஸர்வேச்வரனோடு
கூறு உடையன் என்பதுவும்–ஸாம்யமுடையவன் என்று (பாமரர்) சொல்லுஞ் சொல்
கொள்கைத்தே–அங்கீகரிக்கத் தகுந்த்தோ? (அல்ல)
வேறு ஒருவர் இல்லாமை நின்றானை–வேறொரு தெய்வமும் தனக்கு ஒப்பாக இல்லாமல் வீறு பெற்றிருப்பவனும்
எப்பொருட்கும் சொல்லானை–எந்தப் பொருளைச் சொல்லுகிற சப்தமும் தனக்கு வாசகமாம்படி (ஸாவ சப்த வாச்யனாய்) உள்ளவனுமான
எம்மானை–எம்பெருமானை
தொகுத்து சொன்னேன்–சுருங்கப் பேசினேனித்தனை.

“ருத்ரனும் ஸ்ரீமந்நாராயணனைப் போலவே பரதேவதை“ என்று சிலர் மயங்கிக்கிடக்கிறார்களே,
இப்படியும் ஒரு ப்ரமம் இருக்குமோ? தேவாதி தேவனான எம்பெருமான் எங்கே?
அவனுடைய ஸ்ரீபாத தீர்த்தத்தை சிரஸாவஹித்துத் தூய்மை பெற்ற சிவன் எங்கே?
இவ்விருவரையும் ஸமமாகச் சில அவிவேகிகள் சொன்னால் இதனை அறிவுடையார் அங்கீகரிக்கக் கூடுமோ வென்கிறார் முன்னடிகளில்.

கங்கை சிவனுடைய சடையில் மறைந்திருப்பதுபற்றி அவனுக்கு ஆறுசடைக் கரந்தான் என்று பெயரிடப்பட்டது.
கரத்தல் – மறைத்தல். சிவனுக்குப் பல பெயர்களிருக்க இங்கு இந்தப் பெயரையிட்டுச் சொன்னது – கருத்துடன் கூடியது,
எந்த ஸ்ரீமந்நாராயணனுடைய ஸ்ரீபாததீர்த்தத்தை ருத்ரன் சிரஸாவஹித்துப் புனிதனாயின்னோ,
அந்த ருத்ரனை ஸமனாகச் சொல்வது பொருந்தாதென்பதைக் காட்டினபடி “

கூறுடையன் என்பதுவும் கொள்கைத்தே–சாம்யம் உடையவன் என்று பாமரர் என்றும் சொல்லும் சொல் அங்கீகரிக்கத் தக்கதோ -அல்லவே –
ஸ்ரீ மானுடைய ஸ்ரீ பாத தீர்த்தத்தை ருத்ரன் சிரஸா வஹித்து புனிதனாயினவனை சமமாகச் சொல்வதோ –
அண்டர்கோன் -தேவர்க்கும் இடையாருக்கும் தலைவன் -தேவாதி தேவன் கோபால கிருஷ்ணன் என்றுமாம்
அஹம் க்ருத்ஸ் நஸ்ய -ஜகதா பிரபவ ப்ரளயஸ் ததா –மத்த பரதரம் நான்யத் கிஞ்சி தஸ்தி தனஞ்சய –ஸ்ரீ கீதை -7-7-
அபாயவச நவ்ருத்தி -சர்வ சப்தங்களுக்கு -சர்வ அந்தர்யாமி -சர்வ சரீரி -பரமாத்மா வரையில் பர்யவசிக்குமே –

எப்பொருட்கும் சொல்லுவதொன்றுண்டு, அதாவது – உலகத்தில் பிரயோகிக்கப்படும் ஸகல சப்தங்களும்
ஸர்வாந்தர்யாமித்வேந ஸர்வசரீரியாயிருக்கின்ற பரமாத்மாவரையில் வாசகங்களாகும் என்பது,
அந்த சக்தியாலே எப்பொருமாளுக்கு வாசகமான சொல்லும் எம்பெருமானைத் தொட்டுத் தீருமாதலால்
‘எப்பொருட்கும் சொல்லானை‘ என்கிறார்.

———————————————————————————

தொகுத்த வரத்தனாய் தோலாதான் மார்வம்
வகிர்த்த வளை உகிர் தோள் மாலே -உகத்தில்
ஒரு நான்று நீ உயர்த்தி யுள் வாங்கி நீயே
அரு நான்கும் ஆனாய் அறி–5-

பதவுரை

தொகுத்த வரத்தன் ஆய்–(தவஞ்செய்து) ஸம்பாதிக்கப் பட்ட வரங்களை யுடையனாய்
தோலாதான்–ஒருவரிடத்திலும் தோல்வி யடையாதவனாயிருந்த இரணியனுடைய
மார்வம்–மார்பை
வகிர்த்த–இரு பிளவாகப் பிளந்தொழித்த
வளை உகிர்–வளைந்த நகங்களைக் கொண்ட
தோள்–திருக் கைகளை யுடைய
மாலே-ஸர்வேச்வரனே!,
நீ–நீ,
உகத்தில்–பிரளய காலத்தில்
உள் வாங்கி–(உலகங்களை யெல்லாம்) உபஸம்ஹரித்து உள்ளே யிட்டு வைத்து
ஒரு நான்று–(மீண்டும் ஸ்ருஷ்டி காலமாகிற) ஒரு மையத்தில்
உயர்த்தி–(அவ்வுலகங்களை யெல்லாம்) வெளியிட்டு வளரச்செய்து
நீயே–இப்படிப்பட்ட நீயே
நான்கும்–(தேவ மநுஷ்ய திர்யக் ஸ்தாவர ரூபங்களான நால்வகைப் பொருள்களிலும்
அரு ஆனாய்–அந்தராத்மாவானாய்
அறி–இதனை அறிவாயாக.

வேறொருவர்-இல்லாமை நின்றானை எம்மானை எப்பொருட்கும்-சொல்லானைச்-என்றத்தை விவரிக்கிறது -இப்பாட்டு –
அனைத்து உலகும் அனைத்து உயிரும் அமைத்து அளித்துத் துடைப்பது -நீ நினைத்த விளையாட்டு –
கருத்தரிய உயரிக்கு உயிராய் கரந்து எங்கும் பரந்து உறையும் தனி நாயகன் நீ
வர பலம் -ஸுராஸுரர் நரர் கையில் -பாரில் சுடர் வானில் -பகல் இரவில் -உள் புறம்பில் -பெரு படையில் தான் சாகா இரணியன் தன்னை
பிரகலாதன் தர்க்கித்து உண்டு என்ற தூணில் நரஹரியாய் பொழுது புகு நேரம் தன்னில் நாடி உதித்து -உயர் வாசல் படி மீதேறி
-இரணியனைத் தொடை மிசைவைத் துகிரினாலே இரு பிளவாக்கினை யரியே எம்பிரானே-
யுகத்தில் -உகந்த காலத்திலே –
உயர்த்தி -என்பதனால் -ஸ்ருஷ்டி கர்த்ருத்வமும் –
உள் வாங்கி -சம்ஹார கர்த்ருத்வமும் –
நான்கும் அருவானாய் -ஸ்திதி கர்த்ருத்வமும் -கூறப்பட்டன –அரூபி -வடசொல் அரு –வானது
இரா மடமூட்டுவாரைப் போலே உள்ளேயே பதி கிடந்தது சத்தையே பிடித்து நோக்கிக் கொண்டு போரும் -என்கிறபடியே
தேவாதி நான்கிலும் அந்தர்யாமியாய் இருந்து நிர்வாஹகானாய் இருக்கிறார் என்கிறதாயிற்று –

கீழ்ப்பாட்டில் “வேறொருவரில்லாமை நின்றானை“ என்றும் “எப்பொருட்கும் சொல்லானை“ என்றும் சொன்னதை விவரிக்கிறது இப்பாட்டு.
அனைத்துலகும் அனைத்துயிரும் அமைத்தளித்துத் துடைப்பது நீ நினைத்த விளையாட்டு, கருதரிய வுயிர்க் குயிராய்க்
கரந்தெங்கும் பரந்துறையும் ஒரு தனி நாயகம் நீ, ஆகவே உனக்குச் சொல்லும் ஏற்றமெல்லாம் பொருந்தும் பிரானே! என்றாராயிற்று.

தொகுத்தவரத்தனாய்த் தோலாதான் –
தேவன் மனிதர் முதலிய எவ்வுயிர்களாலும் பகலிலும் இரவிலும் வானத்திலும் பூமியிலும் வீட்டின் அகத்திலும் புறத்திலும்
அஸ்த்ர சாஸ்த்ரங்களொன்றினாலும் ஈரமுள்ளதனாலும் ஈரமில்லாததினாலும் தனக்கு மரண முண்டாகாதபடி
இரணியன் பல வரங்கள் பெற்று ஆங்காங்கு வெற்றியே பெற்றுவந்தானென்க.
ப்ரஹ்ம ஸ்ருஷ்டிக்கு உட்பட்ட எந்த பிராணியினாலும் சாகாதபடி அவன் பெற்ற வரம் பழுது படாமைக்காக நரங்கலந்த சிங்கமாய்
ப்ரஹ்ம ஸ்ருஷ்டியினுட்படாமல் தன்னைத் தானே தோற்றுவித்துக் கொண்டு தோன்றின்னென்பதும் –
அஸ்தர சஸ்த்ரங்களொன்றினாலும் சாகாதபடியும் பெற்றவரம் வீண் போகாமே நகங்களினால் கீண்டு கொன்றன்னென்பதும்,
பகலிலும் இரவிலும் சாகாதபடி. பெற்ற வரம் பொய்படாதபடி அப்பகலிரவுகளின் ஸந்தியாகிய மாலைப்பொழுதிலே கொன்றனனென்பதும்,
பூமியிலும் வானத்திலும் சாகாதபடி பெற்ற வரம். மெய்யாம்படி தன் மடிமீது வைத்துக் கொன்றன னென்பதும்,
வீட்டின் அகத்திலும் புறத்திலும் இறவாதிருக்கும்படி பெற்ற வரத்திற்கு விரோதமின்றி வாசற்படிமீது வைத்துக் கொண்டு கொன்றன னென்பதும்
இவை போல்வன பல விசேஷங்களாம்.
“சுரரசுரர் முனிவர் நரர் கையில் பாரில் சுடர்வானில் பகலிரவில் உள்புறம்பில்,
பெருபடையில் தான் சாகா விரண்யன்றன்னைப் பிரகலாதன் தர்க்கித்துண்டென்ற தூணில்,
நர ஹரியாய்ப் பொழுதுபுகுநேரந்தன்னில் நாடியுதித்துயர் வாசற்படி மீதேறி,
இரணியனைத் தொடைமிசைவைத் துகிரினாலே இருபிளவாக்கினை யரியே எம்பிரானே!“ என்றார் பின்னோரும்.

உகத்தில் – யுகர்ந்த காலத்தில் என்றபடி. ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரங்களுக்கு நீயே கடவனாயிருக்கின்றாய் என்பது
பின்னடி களிற் சொல்லப்படுகின்றது. “உயர்த்தி“ என்பதனால் ஸ்ருஷ்டி கர்த்ருத்வமும்,
“உள்வாங்கி“ என்பதனால் ஸம்ஹார கர்த்ருத்வமும்
“நான்கும் அரு ஆனாய்“ என்பதனால் ஸ்திதிகர்த்ருத்வமும் வுறப்பட்டனவாயின.
“அரூபி“ என்னும் வடசொல் “அரு“ என்று கிடக்கிறது.
இராமடமூட்டுவாரைப்போலே உள்ளே பதிகிடந்து ஸத்தையே பிடித்து நோக்கிக்கொண்டு போரும்“ என்கிறபடியே,
தேவ மநுஷ்ய திர்யக் ஸ்தாவர ரூபங்களான நால்வகைப் பொருள்களிலும் பதிந்திருந்து
அவற்றின் ஸத்தைக்கு நிர்வாஹகளாயிருக்கின்றாய் என்றவாறு.

——————————————————————————————-

தற்கச் சமணரும் சாக்கியப் பேய்களும் தாழ் சடையோன் சொல் கற்ற சோம்பரும்-என்கிறபடியே
மாதாந்தஸ்தரர்கள் பாழாக போனார்கள் என்று திரு உள்ளம் நொந்து வயிறு எரிந்து பேசும் பாசுரம் இது –

அறியார் சமணர் அயர்த்தார் பவுத்தர்
சிறியார் சிவப் பட்டார் செப்பில் -வெறியாய
மாயவனை மாலவனை மாதவனை ஏத்தாதார்
ஈனவரே யாதலால் இன்று –6–

பதவுரை

சமணர்–ஜைநர்கள்
அறியார்–உண்மையை அறிய மாட்டார்கள்
பவுத்தர்–பௌத்தர்கள்
அயர்த்தார்–பிரமித்தார்கள்
சிவப்பட்டார்–சைவ மதஸ்தர்கள்
சிறியார்–மிகவும் நீசராகி யொழிந்தனர்
செப்பில்–இவர்களுடைய தன்மைகளைச் சொல்லப் புகுந்தால்,
வெறி ஆய–பரிமளமே வடி வெடுத்தது போன்றுள்ளவனும்
மாயவனை–ஆச்சரியமான குண சேஷ்டிதங்ளை யுடையவனும்
மால் அவனை–(அடியார் திறத்தில்) வியாமோஹ முள்ளவனும்
மாதவனை–திருமகள் கொழுநனுமான எம்பெருமானை
ஏத்தாதார்–(இவர்கள்) துதிக்க மாட்டாதவர்களா யிரா நின்றார்கள்,
ஆதலால்–ஆகையினாலே
இன்று–இப்போது
ஈனவரே–(இவர்கள்) நீசர்களே யாவர்.

சப்த பங்கியை அங்கீ கரித்து -சத் -அஸத் -ஏகம் -அநேகம் -அநேகாந்தம் -ஒன்றுக்கு ஓன்று பொருந்தாமல்
தோற்றினத்தையே சொல்லும் ஜைனர் -அவிவிகேகிகளாய் ஒழிய
ஞாதா ஜேயம்-எல்லாம் க்ஷணிகம் -ஸ்திரனாய் இருப்பான் ஆத்மா இல்லை என்றும் -க்ஷணிக ஞான சந்ததியே ஆத்மா
-என்று பேய்க்கத்து-கத்தும் புத்தர்கள் பிராமண கதியை மறந்து ஒழிந்தனர்
படைக்கப்படும் பொருளில் ஒன்றான -அநீஸ்வரனான ருத்ரனை பர தெய்வம் உபபாதிக்கும் சைவ மத நிஷ்டர்கள் நீசர்கள்
ஆன் விடை ஏழு அன்று அடர்த்தார்க்கு ஆளானார் அல்லாதார் மானிடர் அல்லர் என்று என் மனத்தே வைத்தேனே -பெரிய திருமொழி-11-7-9-
-விமுகராய் ஒழிந்தவர்கள் எல்லாம் மண்ணின் பாரமே
வெறியாய் -சர்வ கந்த -பரிமளம் வடிவெடுத்தவன் –

இப்படி தனித்தனியே பிரித்துச் சொல்லுவானேன்? இவர்களெல்லாரும் திருமாலை ஏத்தமாட்டாத பாவிகளாதலால்
அனைவருமே நீசர் என்று கொள்ளவேணு மென்கிறார் பின்னடிகளில்.

———————————————————————————————–

இன்றாக நாளையேயாக இனிச் சிறிதும்
நின்றாக நின்னருள் என்பாலதே -நன்றாக
நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் -நாரணனே
நீ என்னை அன்றி இலை -7-

பதவுரை

நாரணனே–நாராயணனே!,
இன்று ஆக–இன்றைக்காகவுமாம்
நாளையே ஆக–நாளைக்காகவுமாம்
இனி சிறிது நின்று ஆக–இன்னம் சிறிது காலம் கழிந்தாகவுமாம் (என்றைக்கானாலும்)
நின் அருள்–உன்னுடைய கிருபை
என் பாலதே–என்னையே விஷயமாக வுடையதாகும்
நன்று ஆக–நிச்சயமாக
நான் உன்னை அன்றி இலேன் கண்டாய்–நான் உன்னை யொழியப் புகலில்லாதவன் காண்
நீ–நீயும்
என்னை அன்றி இலை–என்னை யொழிய வேறொரு ரஷ்யனை உடையை யல்லை காண்.

ஆழ்வீர்! மதாந்தரஸ்தர்களை யெல்லாம் ஈனவரேயென்று இழித்துச் சொன்னீர், உமக்குண்டான ஏற்றம் யாது? என்று
எம்பெருமான் கேட்க, என்னுடைய ஏற்றம் உனக்குத் தெரியாதோ பிரானே! “உன்னை யொழிய எனக்குச் செல்லாது,
என்னை யொழிய உனக்குச் செல்லாது“ என்னும்படியான உறவை யுணர்ந்து ஸர்வ காலமும் உன்னுடைய திருவருளுக்குப்
பரிபூர்ண பாத்ரமாயிருக்கப்பெற்ற வென்னுடைய ஏற்றம் அறியாயோ? என்கிறார் போலும்.

பெருமானே! உன்னுடைய திருவருள் என்மேல் ஏறிப்பாய வேண்டியதேயன்றி வேறொருவயும் விஷயமாக வுடையதன்று,
உன்னுடைய அருளுக்கு நானே இலக்கு, என்னுடைய வேண்டுகோளுக்கு உன்னருளே இலக்கு. இன்றைக்கோ நாளைக்கோ,
அன்றி இன்னமும் சிலகாலம் கடந்தபின்போ என்றைக்கானாலும் உன்னருள் என்மேல் ஏறிப்பாய்ந்தே தீரக்கடவது
என்கிற அத்யவஸாயன் எனக்குத் திடமாகவுள்ளது.

இங்ஙனே நான் சொல்லுவதற்கு யாதுகாரணமென்கிறாயோ? சொல்லுகேன் கேளாய், நான் உன்னை யன்றியிலேன் நீ யென்னை யன்றியிலே –
“நம்முடைய அருளை யாரிடத்து உபயோகிக்கலாம்!“ என்று நீ தயநீயரைத் தேடியிராநின்றாய்,
“நமக்கு எம்பெருமான் அருள்புரிவானோ? என்று நான் உன் தயையைத் தேடியிரா நின்றேன்,
உன்னையொழிய எனக்குப் புகலில்லை, என்னையொழிய உனக்குப் புகலிலே. ஆகவே, நின்னருள் என்பாலதே

நன்றாக–நிச்சயமாக – அத்யாவசாயம் திடமாக உள்ளதே –சம்பந்தம் உணர்ந்து -நானும் உனக்கு பழ வடியேன்-
உனது திரு அருளுக்கு பரிபூர்ண பாத்ரனான பின்பு -என்னுடைய ஏற்றம் அறியாயோ
உன் அருளுக்கு நானே இலக்கு -என் பிரார்த்தனைக்கு நீயே இலக்கு -நீ தயநீயரைத் தேடி இரா நின்றாய்
-உன் தயையைத் தேடி நான் இரா நின்றேன் –
நிகரின்றி நின்ற என் நீசதைக்கு நின் அருளின் கண் அன்றிப் புகல் ஒன்றும் இல்லை அருட்க்கும்
அஃதே புகல் -அமுதனார் -இத்தை ஒட்டியே அருளுகிறார்

பின்னடிகட்கு வேறொரு வகையாகவும் பொருள் கொள்ளலாம்;
நாராயணனே! உன்னை நிரூபிக்கவேண்டில் என்னையிட்டு நிரூபிக்கவேண்டும், என்னை நிருபிக்க வேண்டும், எ
ன்னை நிரூபிக்கவேண்டில் உன்னையிட்டு நிரூபிக்கவேண்டும், (அதாவது) “நாராயணன்“ என்றால் நாரங்களுக்கு அயநம் என்றபடி,
நாரபதார்த்தங்களில் தாம் சேர்ந்தவராகையாலே தம்மையிட்டு நாராயணனை நிரூபிக்க வேண்டியதாகிறது.
தம்மை நிரூபிக்கவேண்டுமானால் பகவச் சேஷத்வத்தையிட்டே அடியானென்று நிரூபிக்கவேண்டியிருப்பதால்
நாராயணனையிட்டுத் தம்மை நிரூபிக்க வேண்டியதாகிறது. சேஷசேஷிகளுடைய நிரூபணம் பரஸ்பர ஸாபேக்ஷமாகவே யிருக்குமன்றோ.
ஆகவே, சேஷியான உன்னையொழிய எனக்கு ஸத்தையில்லை,
சேஷபூதனான என்னையொழிய உனக்கு ஸத்தையில்லை என்றதாயிற்று என்று கொள்ளலாம்.

————————————————————————————————-

விரோதி நிரசனமே ஸ்வாபாவிகமாக உள்ள எம்பெருமானை தவிர்த்து மற்று யாரும் துணை இல்லை என்று
திரு உள்ளத்துக்கு அருளிச் செய்கிறார் –

இலை துணை மற்று என்நெஞ்சே ஈசனை வென்ற
சிலை கொண்ட செங்கண் மால் சேரா -கொலை கொண்ட
ஈரந் தலையான் இலங்கையை ஈடழித்த
கூரம்பன் அல்லால் குறை--8-

பதவுரை

என் நெஞ்சே-எனது மனமே!
ஈசனை வென்ற–ருத்ரனை ஜயித்த
சிலை கொண்ட–வில்லை (பரசுராமனிடத்தில் நின்றும்) வாங்கிக் கொண்ட
செம் கண் மால்–புண்டரீ காக்ஷனாகிய தன்னை
சேரா–பணிந்து உய்வு பெற மாட்டா தொழிந்த
குலை கொண்ட ஈரைந் தலையான்–கொத்துப் போலே நெருங்கிக் கிடந்த பத்துத் தலைகளை யுடையவனான இராவணனுடைய
இலங்கையை–லங்காபுரியை
ஈடு அழித்த–சீர் கெடுத்த
கூர் அம்பன் அல்லால்–கூர்மை தாங்கிய அம்புகளை யுடையவனான இராம பிரானைத் தவிர்த்து
குறை–விரும்பத் தகுந்த
மற்ற துணை–வேறொரு துணைவன்
இலை–நமக்கு இல்லை.

விரோதி நிரஸநமே இயற்கையாகவுள்ள எம்பெருமானைத் தவிர்த்து வேறொருவரும்
துணையாக வல்லாரில்லை யென்று தம் திரு வுள்ளத்துக்கு உபதேசிக்கிறாரிதில்.

ஈசனைவென்ற சிலைகொண்ட செங்கண்மால் –
ஒரு ஸமயத்தில் ஸ்ரீ மஹாவிஷ்ணு ருத்ரனை ஒரு சிலையால் வென்றான், அந்த வில் பரசுராமனிடத்தில் வந்து சேர்ந்திருந்தது;
அதனை ஸ்ரீராமவதாரத்தில் மிதிலையில் நின்று மீண்டெழுந்தருளும்போது அப்பரசுராமனிடத்திற் கொண்டான்,
(இவ்வரலாற்றை விரித்துரைப்போம்) முன்னொரு காலத்தில் தேவசில்பியான விச்வகர்மாவினால் நிருமிக்கப்பட்ட
சிறந்த இரண்டு விற்களும் ஒன்றைச் சிவபிரானும் மற்றொன்றைத் திருமாலும் எடுத்துக் கொண்டார்கள்.
பின்பு ஒரு காலத்தில் அவ்விற்களுள் சிறந்தது இன்னதென்பதை அறிய விரும்பிய தேவர்களின் வேண்டுகோளால்
பிரமன் அரனுக்கும் அரிக்கும் போரை மூட்டிவிட, அங்ஙனமே அவர்கள் அவ்விற்களைக்கொண்டு போர்புரிகையில்
சிவபிரானது வில் சிறிது முறிபட்டது, அவ்வாறு இற்றவில்லைச் சிவபிரான் ஜநககுலத்துத் தேவராதனென்னும் அரசனிடம் கொடுத்திட,
அது வம்ச பரம்பரையாம் ஜநகமஹாராஜனளவும் வந்தது, இது நிற்க, இறாத வலிய வில்லை விஷ்ணு ரிசீகமுனிவனிடம் கொடுத்துச்செல்ல,
அது அவன் குமாரனான ஜமதக்நியினிடத்தும் அவன் குமாரனான பரசுராமனிடத்தும் பரம்பரையாய் வந்தது.
முற்கூறிய சிவதநுஸ்ஸை ஸீதைக்குக் கந்யாசுல்கமாக ஜநகன் வைத்திருந்தான், இராமபிரான் அந்த வில்லை முறித்துத்
தன் பேராற்றலை விளங்கச்செய்து பிராட்டியை மணந்துகொண்டு மிதிலாபுரியினின்றும் புறப்பட்டு அயோத்திக்கு வரும்போது
வழியிடையே செருக்கிவந்த பரசுராமனது கையிலிருந்த விஷ்ணுதநுஸ்ஸை வாங்கி எளிதில் வளைத்து நாணேற்றிக் கணைதொடுத்து
“இவ்வம்புக்கு இலக்குஎன்?“ என்று வினாவ, பரசுராமன் அதற்கு இலக்காகத் தனத்து தபோபலம் முழுவதையுங் கொடுக்க,
அவன் க்ஷத்ரியை வம்சத்தைக் கருவறுத்தவனாயிருந்தாலும் வேதவித்தும் தவவிரதம் பூண்டவனுமாயிருத்தல் பற்றி
அவனைக் கொல்லாமல் அவனது தவத்தைக் கவர்ந்த மாத்திரத்தோடு ஸ்ரீராமன் விட்டருளினன் என்ற வரலாறுகள் இதிஹாஸப்ரஸித்தம்.
ஆகவே, இப்பாட்டில் “ஈசனை வென்ற சிலை“ என்றது பரசுராமன் கையிலிருந்த விஷ்ணுதநுஸ்ஸை. அதனைக் கொண்ட செங்கண்மால் – ஸ்ரீராமபிரான்.
அப்படிப்பட்ட தன்னை யடிபணிந்து வாழமாட்டாத இராவணனைக் குடும்பத்தோடு கொன்றொழித்த எம்பெருமானைத் தவிர்த்து
நமக்குத் துணையாகவல்லார் ஆருமில்லை என்றாராயிற்று.

ஈசனை வென்ற செங்கண் மால் -பாணாசுரன் -விருத்தாந்தம் -என்று விசேஷணம் சிலைக்கு கொள்ளாமல்
செங்கண் மாலுக்கு
என்னவுமாம் –

ஸ்ரீ வைஷ்ணவர்கள் பேற்றுக்கு அவன் கையையே பார்த்து இருப்பார்கள் -சாதன அனுஷ்டானங்களை அல்ல –
இப்பாட்டில் “கூரம்பனல்லால்“ என்றவிடத்துப் பெரிய வாச்சான்பிள்ளை வியாக்கியானத்தில் –
“எம்பெருமானார் ஸ்ரீபாதத்தை ஆச்ரயித்தவர்கள் அசேதநமான க்ரியா கலாபத்தினுடைய கூர்மையை விச்வஸித்திருப்பர்கள்,
இவர்கள் சக்ரவர்த்தித் திரு மகன் அம்பின் கூர்மையைத் தஞ்சமாக நினைத்திருப்பர்கள்“ என்று அச்சுப் பிரதிகளிற் காணப்படும் வாக்கியம் பிழை.
ஓலை ஸ்ரீ கொசங்களை ஆராய்ந்ததில் “எம்பெருமானார் ஸ்ரீபாத்ததை ஆச்ரயித்தவர்கள் அசேதநமான
க்ரியா கலாபத்தினுடைய கூர்மையை விச்வஸித்திரர்கள், சக்ரவர்த்தித் திருமகன் அம்பின் கூர்மையே
யாயிற்றுத் தஞ்சமாக நினைத்திருப்பது.“ என்று காண்கிறது. இதுவே பொருத்தமுடைத்து.
ஸ்ரீ வைஷ்ணவர்கள் பெற்றுக்கு எம்பெருமான் கைபார்த்திருக்கு மத்தனையொழிய
மூக்கைப்பிடித்தல் முதலிய ஸாதநாநுஷ்டாநங்களினால் பேறுபெற நினையார்களென்கை.

———————————————————————————————

ப்ரஹ்மாதிகளும் தாங்கள் வெறுமையை முன்னிட்டு ஸ்ரீ மன் நாராயணனை ஆஸ்ரயித்து அபிமதம் பெறுவார்கள் –
துணையாகும் தெய்வம் இன்னது என்பதை நீங்களே அறிந்து கொள்ளலாமே -என்கிறார் –

குறை கொண்டு நான்முகன் குண்டிகை நீர் பெய்து
மறை கொண்ட மந்திரத்தால் வாழ்த்தி -கறை கொண்ட
கண்டத்தான் சென்னி மேல் ஏறக் கழுவினான்
அண்டத்தான் சேவடியை ஆங்கு–9-

பதவுரை

பிரமதேவன்
குறை கொண்டு–நைச்யாநுஸந்தானம் செய்து கொண்டு
குண்டிகை நீர்–கமண்டல தீர்த்தத்தை
பெய்து–வார்த்து
மறை கொண்ட–வேதங்களிலுள்ள
மந்திரத்தால்–புருஷ ஸூக்தம் முதலிய மந்த்ரங்களினால்
வாழ்த்தி–மங்களாசாஸநம் பண்ணி
ஆங்கு–(எம்பெருமான் உலகளந்தருளின) அக் காலத்தில்
அண்டத்தான் சே அடியை–அந்த ஸர்வேச்வானுடைய திருவடிகளை
கறை கொண்ட கண்டத்தான் சென்னி மேல் ஏற–விஷ கண்டனான ருத்ரனுடைய தலையில் (ஸ்ரீபாத தீர்த்தம்) விழும்டியாக
கழுவினான்–விளக்கினான்.

குறை கொண்டு –-நைச்ய அனுஸந்தானம் பண்ணிக் கொண்டு
மறை கொண்ட மந்திரத்தால் -புருஷ ஸூ க்தாதிகளால்
வாழ்த்தி -மங்களா சாசனம் பண்ணி

கீழ்ப்பாட்டில் “இலங்கையையீடழித்த கூரம்பனல்லால் – இலை துணைமற்று“ என்றார். அப்படி சொல்லலாமோ?
பிரமன் சிவன் முதலானவர்களையும் துணையாகப் பற்றுகிறவர்கள் இவ்வுலகில் பலருண்டே! என்ன,
அவர்களும் தங்கள் வெறுமையை முன்னிட்டு ஸ்ரீமந்த நாராயணனையே ஆச்ரயித்து அபிமதம் பெற்றார்கள் காண்மின்
என்று சொல்லவேண்டி, உலகளந்த காலத்துத் திருவடிவிளக்கின இதிஹாலத்தை யெடுத்துரைக்கிறார் இப்பாட்டில்.

உலகளந்த பெருமானுடைய திருவடியைப் பிரமன் தனது கைக்கமண்டல தீர்த்தத்தினால் விளக்கினான்,
அது கங்கையாகப் பெருக அதனை சிரஸாவஹித்துப் பரிசுத்தியடைந்தது காரணமாகச் சிவனென்று பேர்பெற்றானொருவன்,
இனி, துணையாகுந்தெய்வம் இன்னதென்பதை நீங்களே அறிந்து கொள்மின் என்றவாறு.

குறைகொண்டு – “நீசனேன் நிறையொன்றுமிலேன்“ என்னுமாபோலே தன்னுடைய குறையை – நைச்சியத்தை அநுஸந்தித்துக்கொண்டு என்றபடி.
குண்டிகை – வடசொல் விகாரம். அமரர்க்கு அமுதமளிக்கக் கடல்கடைந்த காலத்து அக்கடலினின்று தோன்றின காலகூட விஷத்தைச்
சிவபிரான் உட்கொண்டு கழுத்தளவிலே அடக்கிக் கொண்டது பற்றிக் கறை கொண்ட கண்டத்தான் என்று பெயர் பெற்றனன்.

————————————————————————————-

ஆங்கு ஆரவாரமது கேட்டு அழல் உமிழும்
பூங்கார் அரவணையான் பொன்மேனி யாம் காண
வல்லமே யல்லமே மா மலரான் வார் சடையான்
வல்லரே அல்லரே வாழ்த்து–10-

பதவுரை

ஆங்கு–பரமபதத்திலே
ஆரவாரம் அது கேட்டு–(நித்ய முக்தர்களுடைய) ஸாம கான கோஷத்தைக் கேட்டு
(அஸுரர்கள் இங்கும் வந்து ஆரவாரம் செய்வதாக ப்ரமித்து)
அழல் உமிழும்–விஷாக்நியைக் கக்குகின்ற
காண–ஸேவிப்பதற்கு
வல்லம் அல்லமே–ஸாமர்த்திய முடையோ மல்லோமோ?
(நாம் ஸமர்த்தரேயாவோம்)
மா மலரான்–சிறந்த பூவிற் பிறந்த பிரமனும்
பூகார் அரவு அணையான்–அழகிய சீற்றத்தை யுடைய திருவனந்தாழ்வானைப் படுக்கையாக வுடைய எம்பெருமானது
பொன் மேனி–அழகிய திருமேனியை
யாம்–அநந்ய பக்தரான நாம்
வார் சடையான்–நீண்ட ஜடையை யுடைய ருத்ரனும்
வாழ்த்து–(எம்பெருமானை) வாழ்த்துவதில்
வல்லர் அல்லரே–அஸமர்த்தர்களே.

ஆங்கு–இரண்டு நிர்வாகங்கள்
1-பரமபதத்தில் -ஏதத் சாம கானம் -என்று அறியாமல் ப்ரேமம் அடியாக கலங்கி –
அஸ்தானே பயசங்கை-
அங்கும் நம்மால் சேவிக்க முடியாதோ -என்று
அவனுடைய நிர்ஹேதுக விஷயீகாரம்பெற்ற நமக்கு அப்பரமனுடைய திருமேனி ஸேவை எளிதேயாம்;
பின்னையார்க்கு அரிதென்னில்; இறுமாப்புக் கொண்டிருக்கின்ற தேவதாந்தரங்கட்கே அஃது அரிது.

அன்றிக்கே —
2–கீழ் பாட்டில் உலகு அளந்த வ்ருத்தாந்தம் அருளிச் செய்ததால் –அவ்வவதார சமயத்திலே
திசை வாழி எழ -மங்களா சாசன கோலாஹலத்தை சொல்லி அஸ்தானே பயசங்கை என்னவுமாம் –
திசைகள்தோறு முண்டான மங்களாசாஸந கோலா ஹலத்தைக் கேட்டுத் திருவனந்தாழ்வான் தானும் தன்னாலான
ரகைஷ யிட வேண்டி அழலை உமழ்ந்தபடியைச் சொல்லிற்றாகவும் நிர்வஹிப்பதுண்டு.
ஆகவே முதலடியில் மாத்திரம் இரண்டு வகையான யோஜநாபேதம்.

—————————————————————————————

வாழ்த்துக வாய் காண்க கண் கேட்க செவி மகுடம்
தாழ்த்தி வணங்குமின்கள் தண் மலரால் -சூழ்த்த
துழாய் மன்னு நீண் முடி என் தொல்லை மால் தன்னை
வழா வண் கை கூப்பி மதித்து–11–

பதவுரை

சூழ்ந்த–நிறையச் சாத்திக் கொள்ளப்பட்ட
துழாய்–திருத்துழாய் மாலை
மன்னு–பொருந்தி யிருக்கப் பெற்ற
நீள் முடி–நீண்ட திருவபிஷேகத்தை யுடையனும்
என் தொல்லை மால் தன்னை–என்னிடத்தில் நெடு நாளாக வியா மோஹ முடையவனுமான ஸர்வேச்வரனை
வழா–ஒரு நொடிப் பொழுதும் விடாமல்
வண் கை கூப்பி மதித்து–அழகிய கைகளைக் கூப்பி த்யானம் பண்ணி
மகுடம் தாழ்த்தி–தலையை வணக்கி
தண் மலரால்–குளிர்ந்த புஷ்பங்களைக் கொண்டு
வணங்கு மின்கள்–ஆச்ரயியுங்கள்,
வாய்–(உங்களுடைய) வாய்
வாழ்த்துக–(அவனைத்) துதிக்கட்டும்,
கண்–கண்கள்
காண்க–(அவனையே) ஸேவிக்கட்டும்
செவி–காதுகள்
கேட்க–(அவனது சரிதங்களையே) கேட்கட்டும்.

வழா–ஒரு நொடிப் பொழுதும் விடாமல்

செவி வாய் கண் முதலிய உறுப்புகள்யாவும் பகவத் விஷயத்தில் உபயோகப்படுவதற்கென்றே படைக்கப்பட்டன வாதலால்
அவற்றை அவ்விஷயத்திலேயே உபயோகப்படுத்துங்கோள் என்று பரோபதேசம் பண்ணும் பாசுரம் இது.
உங்களுடைய வாயை அவனுக்குப் பல்லாண்டு பாடுவதில் ஊன்ற வையுங்கள்,
கண்களை அவனுடைய திவ்யமங்க விக்ரஹஸேவையில் ஊன்றவையுங்கள்,
செவிகளை அவனுடைய புண்ய கீர்த்திகளைக் கேட்பதில் ஊன்றவையுங்கள்,
தலையை அவனது திருவடிகளில் வணக்குங்கள்,
கைகளை அஞ்ஜலி செய்வதிலும் புஷ்பம் முதலிய உபகரணங்களைக் கொண்டு ஸமர்ப்பிப்பதிலும் உபயோகப்படுத்துங்கள்,

அவன் எப்படிப்பட்டவனென்றால், “எல்லாரையும் ரகஷிக்கக் கடவேன்“ என்று முடி கவித்துத் தனிமாலை யிட்டிருக்குமவன்,
என் போல்வாரிடத்தில் நெடுங்காலமாகவே வியாமோஹம் வைத்து ஆட்படுத்திக் கொள்ள அவஸரம் பார்த்திருக்குமவன்.
இப்படிப்பட்ட எம்பெருமான் விஷயத்திலே உங்களுடைய ஸகல கரணங்களையும் உபயோகப்படுத்தி உய்வு பெறுங்கோள் – என்றாராயிற்று.

மகுடம் – தலைக்கும் கிரீடத்திற்கும் பெயர்.

—————————————————————————————-

ஆழ்வார்கள் போது போக்கு பலவகை –பரோபதேசமாகவும் -தம் திரு உள்ளத்துக்கும் -எம்பெருமானையே நோக்கி
அருளிச் செய்யும் பாசுரங்களாய் இருக்குமே -இது அவனை நோக்கி அருளிச் செய்யும் பாசுரம் –

மதித்தாய் போய் நான்கின் மதியார் போய் வீழ
மதித்தாய் மதி கோள் விடுத்தாய் -மதித்தாய்
மடுக்கிடந்த மா முதலை கோள் விடுப்பான் ஆழி
விடற்கிரண்டும் போய் இரண்டின் வீடு –12-

பதவுரை

மதியார்–உன்னைச் சிந்தியாதவர்கள்
நான்கில்–நால்வகைப்பட்ட யோனிகளில்
போய் போய் வீழ–சென்று சென்று பலகாலும் விழும்படியாக
மதித்தாய்–ஸங்கல்பித்தாய்,
மதி–சந்திரனுடைய
கோள்–துன்பத்தை
விடுத்தாய்–போக்கி யருளினாய்
மடு–ஒரு மடுவிலே
கிடந்த–(சாபத்தினால்) வந்து சேர்ந்திருந்த
மா முதலை–பெரிய முதலையினாலுண்டான
கோள்–(கஜேந்திராழ்வானது) துயரத்தை
விடுப்பான்–நீக்குவதற்காக
ஆழி–திருவாழியை
விடற்கு–(அந்த முதலையின் மேல்) பிரயோகிப்பதற்கு
மதித்தாய்–நினைத்தருளினாய்
இரண்டும்–முதலையும் கஜேந்திராழ்வானு மாகிற இரண்டும்
போய்–ஒன்றையொன்று விட்டுப்போய்
இரண்டின்–அவ்விரண்டு ஜந்துக்களுக்கும்
வீடு-சாப மோக்ஷமும் மோக்ஷஸாம் ராஜ்யமும் உண்டாம்படி
மதித்தாய்–ஸங்கல்பித்தாய்.

மதித்தாய் போய் நான்கின் மதியார் போய் வீழ–
மதியார்–நான்கின்–போய் – போய் வீழ-மதித்தாய் -உன்னைச் சிந்தியாதவர்கள் -வீடு பெறாமல் –தேவாதி நான்கு
யோனிகளிலே சென்று பல காலும் விழும்படியாக சங்கல்பித்தாய்
அன்றிக்கே —
நான்கின் மதியார் போய் வீழ–மதித்தாய்
-என்று கொண்டு –நான்கு வேதங்களைக் கொண்டு
உன்னைச் சிந்தியாதார் ஆஸூர யோனிகளில் விழும்படியாக சங்கல்பித்தாய் -என்றுமாம்

இரண்டும் போய் இரண்டின் வீடு -மதித்தாய் –ஒன்றை விட்டு ஓன்று போய்-முதலைக்கு சாப மோக்ஷமும்
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு மோக்ஷ சாம்ராஜ்யமும் -சங்கல்பித்தாய்
இந்த்ரத்யுத்மன்-அரசன் விஷ்ணு பூஜையில் ஆழ்ந்து அகஸ்தியர் வருவதை லக்ஷணம் பண்ணாமல் சாபம் பெற்று ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான்
ஹூ ஹூ கந்தர்வன் தேவலாம் என்னும் முனிவர் நீரில் இருக்க காலைப் பற்றி இழுத்த சாபத்தால் முதலை ஆனான் –

இரண்டும்போய் இரண்டின் வீடு மதித்தாய் – முதலையும் சாபங்கொண்டிருந்தது, கஜேந்திரனும் சாபங்கொண்டிருந்தான்,
எங்ஙனேயென்னில், மஹாவிஷ்ணுபக்தனான இந்த்ரத்யும்நனென்னும் அரசன் வழக்கப்படி ஒருநாள் ஏகாக்ரசித்தனாய்
விஷ்ணு பூஜை செய்துகொண்டிருந்தபோது அகஸ்த்ய மஹாமுனிவன் அவனிடம் எழுந்தருள,
அப்பொழுது அவ்வரசன் தன் கருத்து முழுவதையும் திருமாலைப் பூஜிப்பதில் செலுத்தி யிருந்த்தனால்
அம்முனிவனது வருகையை அறியாதவனாய் அவனுக்கு உபசாரமொன்றும் செய்யாதிருக்க,
அம்முனிவன் இப்பழ நம்மை அரசன் அலகஷியஞ் செய்தானென்று மாறாகக் கருதிக் கோபித்து
“நீயானை போலச் செருக்குற்றிருந்ததனால் யானையாகக் கடவை“ என்ற சபித்தான்.
(அங்ஙனமே அவன் ஒரு காட்டில் யானையாகத் தோன்றின்னாயினும் முன்செய்த விஷ்ணுபக்தியின் மஹிமையினால்
அப்பொழுதும் விடாமல் நாடோறும் ஆயிரந்தாமலை மலர்களைக் கொண்டு திருமாலை அர்ச்சித்துப் பூஜித்து வருகையில்
ஒரு நாள் பெரியதொரு தாமரைத் தடாகத்தில் அர்ச்சனைக்காகப் பூப்பறிப்பதற்குப் போய் இறங்கி முதலையின் வாயில் அகப்பட்டுக் கொண்டது.)

முன்பொருகால், தேவலன் என்னும் முனிவன் ஒரு நீர்நிலையில் நின்று தவஞ்செய்து கொண்டிருந்தபோது
ஹூஹூ என்னுங் கந்தர்வன் அம்முனிவனது காலைப்பற்றி யிழுத்தான், அதனால் கோபங்கொண்ட அம்முனிவன்
“நீ ஜலஜந்துபோல் மறைந்து வந்து அபசாரப்பட்டதானல் முதலையாகக் கடவை“ என்று சவித்தான்.
முதலைக்கு சாபமோக்ஷம் உண்டாயிற்று, கஜேந்திரனுக்கு சாபமோக்ஷமும் ஸாகஷாந்மோக்ஷமும் உண்டாயின.

————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ ராம பிள்ளை திருவடிகளே சரணம்
திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருமழிசை ஆழ்வார் அருளிய நான்முகன் திருவந்தாதி -13-24–-திவ்யார்த்த தீபிகை சாரம் –ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் –

November 22, 2016

வீடாக்கும் பெற்றி யறியாது மெய் வருத்திக்
கூடாக்கி நின்று உண்டு கொண்டு உழல்வீர் -வீடாக்கும்
மெய்ப்பொருள் தான் வேத முதல் பொருள் தான் விண்ண
வர்க்கும் நற்பொருள் தான் நாராயணன்-13-

பதவுரை

வீடு ஆக்கும் பெற்றி அறியாது–மோக்ஷத்தைப் பெறுவிக்கும் வழியைத் தெரிந்து கொள்ளாமல்
மெய்–சரீரத்தை
வருத்தி–(உபவாஸாதிகளாலே) க்லேசப்படுத்தி
கூடு ஆக்கி–எலும்பே மிகுந்த கூடாக அஸாரமாக்கி
நின்று–இப்படி நெடுங்காலம் தவம் புரிந்தும்
உண்டு கொண்டு–(தேஹம் தரிக்க வேண்டுமளவு ஸ்வல்மாக) புஜித்தும்
உழல்வீர்–திரிகின்றவர்களே!
வீடு ஆக்கும்–மோக்ஷத்தைத் தரக்கூடிய
மெய் பொருள்தான்–மெய்யான உபாயமானயிருப்பவனும்
வேதம் முதல் பொருள் தான்–வேதங்களினால் முழு முதற் கடவுளாகப் பிரதிபாதிக்கப்படுபவனும்
விண்ணவர்க்கு–நித்ய ஸூரிகளுக்கு
நல் பொருள் தான்–போக்யமான வஸ்துவாயிருப்பவனும்
நாராயணன்–ஸ்ரீமந்நாராயணனே யாவன்.

கூடாக்கி நின்று-எலும்பே மிக்கு இருந்த கூடாக்கி -கூடு கொம்பு சுள்ளிகள் போலே -அஸாரமாக்கி நெடும் காலம் -த்வம் புரிந்து
உண்டு கொண்டு உழல்வீர் -தேகம் தரிக்க வேண்டும் அளவு மட்டும் –ஸ்வல்பம் புஜித்தும் திரிகின்றவர்களே

பிராமணர்கள் யாகஞ்செய்தும் தானஞ் செய்தும் தவம் புரிந்தும் பட்டினி கிடந்தும் பேறுபெறப் பார்க்கிறார்கள் – என்று ஓதப்பட்டுள்ளது)
சரீரத்தை வருத்தப்படுத்திச் செய்யவேண்டியவையாயும், அப்படி செய்தாலும் “அது தப்பிற்று, இது தப்பிற்று“ என்று
சொல்லிப் பெரும்பாலும் பலனை இழக்க வேண்டியவையாயுமுள்ள அக்கருமங்களில் கைவைத்து அநர்த்தப்பட்டுப் போவதிற்காட்டிலும்,
ஸ்ரீமந்நாராயணனையே ஸாகஷாத்தாக எளிதில் வழிபட்டு வாழ்ந்துபோகலாமே என்னுங் கருத்துடன் அருளிச்செய்யும் பாசுரம் இது.

அருந்தவம் புரிந்து கஷ்டப்படுகின்றவர்களை விளிக்கிறார் முன்னடிகளால். அந்தோ! மோக்ஷமடையவேண்டிய வழி
எளிதாயிருக்கச் செய்தேயும் அந்த மார்க்கத்தைத் தெரிந்து கொள்ளாமல் அபாயங்கள் மிக்க கொடுவழியில் செல்லுகின்றீர்களே!
என்கிற இரக்கந்தோன்ற “வீடாக்கும் பெற்றி அறியாது“ என்கிறார்.

பெற்றி-உபாயம். கூடு ஆக்கி-பறவைகளின் கூடு கொம்புகளாலும் கள்ளிகளாலுமே அடர்ந்திருப்பதுபோல,
உடம்பை எலும்பு தவிர வேறொன்றுமில்லையாம்படி உலர்த்தி என்றவாறு. உண்டு-

காயோடு நீடு கனி யுண்டு வீடு கடுங்கால் நுகர்ந்து -பெரிய திரு -3-2-2-என்றும்
வீழ் கனியும் ஊழ் இலையும் என்னும் இவை நுகர்ந்து உடலம் தாம் வருந்தி -பெரிய திரு மடல் –
அந்தோ மோக்ஷம் அடைய எளிய வழி இருக்கச் செய் தேயும் அபாயங்கள் மிக்க கொடு வழியிலே செல்லு கின்றீர்களே
ஸ்ரீ மன் நாராயண சரனவ் சரணம் பிரபத்யே –என்று இருங்கள் என்றவாறு –

காயிலை தின்றும் கானில் உறைந்தும் -கதி தேடித் தீயிடை நின்றும் பூவலம் வந்தும் திரிவீர்காள்
தாயிலும் அன்பன் பூ மகள் நண்பன் தட நாகப் பயன் முகுந்தன் கோயில் அரங்கம் பணிவீரே –திரு வரங்க கலம்பகம் –

—————————————————————————————

தேவதாந்தர பக்தர்களும் உபாயாந்தர நிஷ்டர்களுமே மலிந்து உள்ளார்களே என்று வயிறு எரிந்து பேசுகிறார் –

நாராயணன் என்னை யாளி நரகத்துச்
சேராமல் காக்கும் திருமால் -தன் பேரான
பேசப் பெறாத பிணச் சமையர் பேசக் கேட்டு
ஆசைப்பட்டு ஆழ்வார் பலர்-14–

பதவுரை

நாராயணன்–நாராயணனென்றுந் திருநாம முடையவனும்
என்னை ஆளி–(விசேஷித்து) அடியேனை ஆட் கொள்பவனும்
நரகத்து சேராமல் காக்கும்–(அடியார்களை) நாகம்போக வொட்டாமல் காத்தருள்பவனுமான
திருமால் தன்–திருமாலினது
பேர் ஆன–திருநாமங்களாயுள்ளவற்றை
பேச பெறாத–ஸங்கீர்த்தநம் பண்ணும் பாக்கியமற்றவர்களான
பிணம்–ஜீவச் சவமென்னலாம் படியுள்ள பாஹ்ய குத்தருஷ்டி மதஸ்தர்கள்
பேச–(அபார்த்தங்களைப்) பிதற்ற
கேட்டு-அவற்றைக் கேட்டு
பலர்–பல பேர்கள்
ஆசைப் பட்டு–தாங்களும் அப்படியே பாஹ்ய குத்ருஷ்டிகளாயொழிய விரும்பி
ஆழ்வார்–அகோ கதியை யடைந்தொழிவர்

பிணச் சமையர் பேசக் -ஜீவ சவம் என்னலாம் படியான பாஹ்ய குத்ருஷ்டிகள் அபார்த்தங்களைப் பிதற்ற –
கேட்டு– ஆசைப்பட்டு ஆழ்வார் பலர்—அவற்றைக் கேட்டு பலரும் -தாங்களும் அப்படியே பாஹ்ய குத்ருஷ்டிகளாக
ஒழிய விரும்பி அதோ கதியை அடைந்து ஒழிவர்

இவ்வுலகில் தேவதாந்தா பக்தர்களும் உபாயாந்தர நிஷ்டர்களுமே மலிந்து கிடக்கிறார்களே! என்று வயிறெரிந்து பேசுகிறார்.
கைல லோகஸம்ரக்ஷகனாய் நரகநாசனான ஸ்ரீமந்நாராயணனுடைய திருநாமங்களை ஸங்கீர்த்தநம் பண்ணி வாழலாமாயிருக்க,
அப்படி வாழ்வதற்குப் பாக்கியமற்றவர்களாய் “ஜீவச்சவங்கள்“ என்று இகழ்வதற்குத் தகுந்தவர்களாயுள்ள மதாந்தரஸ்தர்கள்
தேவதாந்தரங்களுக்குச் சிறப்பாகவும் உபாயாந்தரங்களுக்கு புகழ்ச்சியாகவும் எதையாவது வாய்வந்தபடி பிதற்றிக் கொண்டிருக்கின்றனர்,
பல பாவிகள் அப்பிதற்றல்களைக் கேட்டு “நாமும் இவர்களைப்போலவே தேவதாந்தர பக்தர்களாயும் உபாயாந்தர நிஷ்டர்களாயும் இருக்கலாமே“ என்று
அவர்களுடைய நிலைமையிலே ஆசைகொண்டு இவ்வழியாலே அதோகதியை அடைந்தொழிகின்றதே இவ்வுலகம்!,
நல்ல பேச்சுப் பேசினால் செவிமடுத்துக் கேட்டுகப்பார் ஆரூமில்லையே, ஆத்மநாசத்தை விளைக்கவல்லை பேச்சுக்களே
பொலிவு பெறுகின்றனவே! என்று பரிதபித்துப் பேசினாராயிற்று.

———————————————————————————————–

பல தேவர் ஏத்தப் படி கடந்தான் பாதம்
மலர் ஏற இட்டு இறைஞ்சி வாழ்த்த -வலர் ஆகில்
மார்க்கண்டன் கண்ட வகையே வரும் கண்டீர்
நீர்க்கண்டன் கண்ட நிலை-15-

பதவுரை

பல தேவர்–பல தேவர்கள்
ஏத்த–துதிக்கும்படியாக
படி–பூமியை
கடந்தான்–அளந்தவனான ஸர்வேச்வரனுடைய
பாதம்–திருவடிகளிலே
மலர்–புஷ்பங்களை
ஏற இட்டு–ஸமர்ப்பித்து
இறைஞ்சி–வணங்கி
வாழ்த்த வலர் ஆகில்–மங்களாசாஸநம் பண்ண வல்லவர்களானால்,
நீர் கண்டன் கண்ட நிலை–நீலகண்டனாகிய ருத்ரனிடத்தில் காணத்தக்க நிலைமை
மார்க்கண்டன் கண்ட வகையே–மார்க்கண்டேயன் ப்ரத்யக்ஷமாகக் கண்டவிதமாகவே
வரும் கண்டீர்–ஸித்திக்குங்கிடீர்

பல தேவர் ஏத்தப் படி கடந்தான் பாதம்–ப்ரஹ்மாதிகள் ஸ்துதிக்கும் படி -பூமியை அளந்த திரு உலகு அளந்து
அருளியவனுடைய திருப்பாதங்களில்
மலர் ஏற இட்டு இறைஞ்சி வாழ்த்த -வலர் ஆகில்-மங்களா சாசனம் பண்ண வல்லவர்கள் ஆனால்
நீர்க்கண்டன் கண்ட நிலை-ருத்ரன் இடம் காணாத தக்க நிலைமை
மார்க்கண்டன் கண்ட வகையே வரும் கண்டீர்-மார்க்கண்டேயன் பிரத்யக்ஷமாக கண்ட விதமாக சித்திக்கும் கிடீர்
மிருகண்டு மகரிஷி புத்ரன் மார்க்கண்டேயர் –
புக்கடிமையினால் தன்னைக் கண்ட மார்கண்டேயனவனை நக்க பிரான் அன்று உய்யக் கொண்டது
மார்க்கண்டேயன் சிரஞ்சீவியாக இருக்க விரும்பி -அத்தை நீல கண்டன் -ஸ்ரீ மன் நாராயணன் இடம் சென்று பெற்றுக் கொடுத்தார் என்றபடி
நீலார் கண்டத்து அம்மானை -விஷ ஜலத்தை கழுத்தில் கொண்டவன் -என்றபடி –

ம்ருகண்டு மஹர்ஷியன் புத்திரனான மார்க்கண்டேயன் குமாரப்பருவத்தில் வீதியில் விளையாட நிற்கையில்
அவ்விளையாட்டைக் கண்டுகொண்டு மாதா பிதாக்களும் மகிழ்ந்திருக்கும் போது “இப்பிள்ளைக்கு மரணகாலம் குறுகிவிட்டது“ என்று
அசரீரி வாக்கியம் ஒன்று திடீரென்று செவியில் விழப்பெற்ற அத்தாய்தந்தையர் மிகவும் பரிதாபங்கொண்டு நிற்க,
அதைக்கண்ட மார்க்கண்டேயன் “நீங்கள் சிறிதும் வருந்த வேண்டா, ம்ருத்யுவை நானே பரிஹரித்துக் கொள்ளக்கடவேன்“ என்று சொல்லி
அன்று முதலாகப் பரமசிவனை யடிபணிந்து வருகையில், சிவபிரான் “இவனோ நம்மை ரக்ஷகனாக நினைத்து நம்மைத் தொழுது கொண்டு
நம் கை பார்த்திருக்கின்றான், ஸ்ரீமந்நாராயணனே ஸரர்வரக்ஷகன் என்கிற பரமார்த்தம் இவனுக்குத் தெரியவில்லை போலும்,
அதனை இவனுக்கு நாம் தெரிவிப்பது நன்று, தெரிவியா தொழிந்தோமாகில் அநியாயமாய் இவன் மோசம் போய்விடுவான்,
மருத்யுவைத் தப்பவேணுமென்று நம்மை வழிபடுகின்ற இவனுக்கு நாமே ஒரு புகலிடம் காட்டிக் கொடுத்தோமாக வேணும்“ என்றெண்ணி
“மார்க்கண்டேயா! என்னை நீ ரக்ஷகனாக நினைத்துத் தொழுகின்றாய், நானும் நீயும் ஷமந்நாராயணனுடைய ரகஷ்யவர்க்கத்தில்
சேர்ந்தவர்களேயன்றி உனக்கு நான் ரக்ஷகனாக ப்ராப்தனல்லேன், ஸர்வரக்ஷகன் அந்த ஸ்ரீமந்நாராயணனொருவனே,
ஆனபின்பு அவனையே அழ பணிந்து நீ அபிமதம் பெறக்கடவாய்“ என்று சொல்லி அவனை எம்பெருமான் திருவடிகளிலே கொண்டு நிறுத்தி
“இவனை அநுக்ரஹித்தருளவேணும்“ என்று பிரார்த்தித்து, பகவத்கிருபையாலே நீண்ட ஆயுளைப்பெறுவித்தான் பரமசிவன் –
என்பது மார்க்கண்டேயனுடைய வரலாற்றின் சுருக்கம்.

1. “புக்கடிமையினால் தன்னைக் கண்ட மார்க்கண்டேயனவனை, என்றும்
2. “மார்க்கண்டேயனும் கரியே“ என்றும்,
3. “கண்டுந்தெளிந்துங் கற்றார் கண்ணற்களான்றி யாவரோ, வண்டுண் மலர்த்தொங்கல் மார்க்கண்டேயனுக்கு வாழுநாள்,
இண்டைச்சடைமுடி யீசனுடன் கொண்டு உசாச்செல்லக், கொண்டங்குத் தன்னொடுங் கொண்டுடன்
சென்றதுணர்ந்துமே“ என்றும் திருவாய்மொழியில் நம்மாழ்வாரும்,
4. “மன்னு நான் மறை மாமுனி பெற்றமைந்தனை மதியாத வெங்கூற்றந் தன்னையஞசி, நின்சரணெனச் சரணாய்த்
தகவில் காலைனையுக முனிந்தொழியாப், பின்னையென்றும் நின் திருவடி பிரியாவண்ண மெண்ணிய பொருள்“ என்று
பெரிய திருமொழியில் திருமங்கையாழ்வாரும் அருளிச்செய்தவை காண்க.

சில புராணங்களில் மேலெழுந்த வாரியாகப் பார்க்கும்போது பரமசிவனே மார்க்கண்டேயனுக்கு அபயமளித்த்தாகக் காணப்படினும்
மஹாபாரத்தில் ஆரண்யபர்வத்தில் நூற்றுத் தொண்ணூற்றிரண்டா மத்யாயத்தில் மார்க்கண்டேயன் தானே தருமபுத்திரரை நோக்கிச்
சொல்லுமளவில் ஸ்ரீமந்நாராயணனுடைய வார்த்தைகளை அநுவதிக்குமிடத்து
இவன் ஸ்ரீமந்நாராயணனைச் சரணம் புகுந்தவனென்பது நன்கு விளங்கும்.
ஸ்ரீபாகவதத்திலும் பன்னிரண்டாம் ஸ்கந்தத்தில் எட்டாமத்யாயத்தில் – காண்க.

மார்க்கண்டேயனுடைய வரலாறு இப்படிப்பட்டதென்று தெரிந்தபின் இனி இப்பாசுரத்தின் கருத்தை ஆராய்மின் –
“உலகளந்த பெருமானுடைய திருவடிகளில் புஷ்பங்களைப் பணிமாறிப் பல்லாண்டு பாட வல்லரானால்
நீற்கண்டன் கண்டநிலை மாற்கண்டன் கண்ட வகையே வருங்கண்டீர்“ என்றால் இதற்குக் கருத்து யாதெனில், கேண்மின்.
மார்க்கண்டேயன் பரமசிவனிடத்தில் (ஸ்ரீவைகுண்ட ப்ராப்தியாகிற) மோக்ஷத்தை விரும்பிப் பணிந்தானல்லன்,
வாழ்நாளையே விரும்பிப்பணிந்தான், அந்தப் பலனையும் அளிக்க யோக்யதையற்றவனாய் அந்த ருத்ரன் ஸ்ரீமந்நாராயணன்
பக்கலில் அவனை ஆச்ரயிப்பது அப்பெருமான் மூலமாக ரக்ஷணம் செய்வித்தான்,
ஆகவே, “தேவதாந்தரங்கள் பரம்பரயாக ஒருகால் ரக்ஷகங்களாகுமேயன்றி ஸாக்ஷத்தாக ரக்ஷகங்களாக மாட்டா,
ஸ்ரீமந்நாராயணனொருவனே ஸாகஷாத் ரக்ஷகனாவான்“ என்று மார்க்கண்டேயன் கைகண்டறிந்த பரமார்த்தம் தேறினதாகும் என்கை.
நேராக எம்பெருமானையே நீங்கள் ஆராதிக்கும் பக்ஷத்தில் மார்கண்டேயன் ச்ரம்பட்டுத் தெரிந்துவிட்டதாகத் தேறும் என்றவாறு
நீண்டகண்டனாகிய சிவனிடத்துக் காணக் கூடிய நிலைமை (அதாவது-இவன் ஒன்றுக்கும் உதவாதவன் என்று
தெரிந்துகொள்ளக்கூடிய ஸ்திதி), அதை மார்க்கண்டேயன் பண்டு தெரிந்துகொண்டான்,
நீங்களும் அதை இப்போது தெரிந்து கொண்டீர்களென்னலாம் – ஸாகஷாத்தாக் நீங்கள் எம்பெருமானையே ஆராதிப்பீர்களாகில், என விரிக்க.

இப்பாட்டின் பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானத்தில் “மார்க்கண்டேயன் மஹாதேவனை மோகஷார்த்தமாகச் சென்று ஆச்ரயிக்க,
மோக்ஷப்ரதன் ஈச்வரனேயென்று காட்டுமிதுவே உள்ளதென்று ருத்ரன் காட்டக்கண்டு இதுவே இவனுக்குள்ள தென்று
மார்க்கண்டேயன் கண்டவகையே ஸித்திக்கும், அவ்யவ ஹிதமாக ஸர்வேச்வரன் திருவடிகளை ஆச்ரயிக்க வல்லராகில்
மார்க்கண்டேயன் கண்டவகையே ஸித்திக்கும்,“ என்றிருக்கும் ஸ்ரீஸூக்திகளில் உள்ள மோக்ஷ சப்தம்
பரமபதாநாநுபரூபமான மோக்ஷத்தைக் குறிப்பதன்று–ஒரு தேசவிசேஷத்தைக் குறிக்கொண்டு கீதையிற் சொன்ன கட்டளையிலே,
இந்த தேசத்திலேயே ம்ருத்யு இல்லாமையாகிற மோக்ஷத்தைச் சொல்லுகிறதென்று கொள்க.
மார்க்கண்டேயன் தான் சிரஞ்ஜீவியா யிருக்கவேணுமென்று உபாஸித்தவனாக இதிஹாஸபுராணங்களிற் வுறப்படுகிறானேயன்றி,
புரமபுருஷார்த்த லக்ஷண மோக்ஷத்தை விரும்பின்னாகக் வுறப்பட்டிலன்.
பெரிய திருமொழியில் (5-8-6) “மன்னு நான் மறை மாமுனி பெற்ற மைந்தனை….. பின்னையென்றும்
நின் திருவடி பிரியா வண்ண மெண்ணிய பொருள்“ என்றவிடத்து வியாக்கியானத்திலும் இது ஸ்பஷ்டம்.
அந்த வியாக்கியானமருளிய பெரியவாச்சான் பிள்ளை தாமே இவ்விடத்தில்
“மார்க்கண்டேயன் மஹாதேவனை மோக்ஷார்த்தமாகச் சென்று ஆச்ரியிக்க“ என்றது ருத்ரனைப் பற்றின பரிஹாஸோக்தியாக விடுக்கும்.
“ இவன் ஒரு மஹா தேவனாம், இவனிடத்தில் ஒரு பெரிய மோக்ஷத்தை விரும்பி ஒருவன் வந்து பணிந்தானாம், அப்பப்ப!
இந்த மோக்ஷம் நம்மாலாகாது என்று வேற்றுவாசல் காட்டினானாம்“ என்று பரிஹஸித்துச் சொன்னவாறு.

நீற்கண்டன் – “நீலம்“ என்ற வடசொல் “நீல்“ என்று சிதைந்து நீற்கண்டனென்றாயிற்று.
“நீலார் கண்டத்தம்மான்“ என்ற திருவாய்மொழி காண்க. அன்றியே,
“நீர்க்கண்டன்“ என இடையின ரகரப்படாங்கொள்ளில், விஷஜலத்தைக் கழுத்திலே கொண்டவனென்றதாகும்.
மார்க்கண்டன் – “மார்க்கண்டேயன்“ என்ற வடசொற்சிதைவு.

இப்பாட்டின் பின்னடிகட்கு மற்றும் பலவகையாகக் கருத்துக்கூற இடமுண்டு. வல்லார் வாய்க் கேட்டுணர்க.

——————————————————————————-

நிலை மன்னும் என் நெஞ்சம் அந் நான்று தேவர்
தலை மன்னர் தாமே மற்றாக -பல மன்னர்
போர் மாள வெம் கதிரோன் மாய பொழில் மறைய
தேர் ஆழியாள் மறைத்தாரால்-16-

பதவுரை

அந்நான்று–பாரத யுத்தம் நடந்த அக்காலத்து
தேவர் தலை மன்னர் தாமே–தேவாதி தேவனான தானே
மாற்று ஆக–எதிரியாயிருந்து கொண்டு
பல மன்னர்–பல அரசர்கள்
போர்–யுத்தக்களத்தில்
மாள–மடிந்து
வெம் கதிரோன்–ஸூர்யன்
மாய–(அகாலத்தில்) அஸ்தமிக்கும்படி யாகவும்
பொழில் மறைய–பூமண்டலம் முழுதும் இருள் மூடும்படியாகவும்
தேர் ஆழியால்–சக்கராயுதத்தினால்
மறைத்தாரால் (ஸூர்யனை) மறைத்த பெருமானாலே
என் நெஞ்சம்–எனது (சஞ்சமான) மனமானது
நிலை மன்னும்–சலிப்பற்று நிலை நிற்கப் பெற்றது.

அலைபாய்ந்து கொண்டிருந்த என் மனமானது எம்பெருமான் ஆச்ரிதர்க்காக உழைக்குந் தன்மைகளைக் கேட்டறிந்தவாறே
“இப்படிப்பட்ட எம்பெருமானுக்கு அடிமைப் பட்டவர்களாக நாம் அமைந்துவிட்டோமான பின்பு இனி நமக்கு யாது கவலை?
என்று தேறி நிலைபெற்று விட்டதென்கிறார்.
“அந்நான்று…தேராழியால் மறைத்தாரால் என்னெஞ்சம் நிலைமன்னும்“ என்று அந்வயம்.

“தேவர் தலைமன்னர்“ என்றது எம்பெருமானை, “***“ என்றும்
“அயர்வறும்மரர்களதிபதி“ என்றும் சொல்லுகிறபடியே.

தாமே மாற்றாக – துர்யோதநாதிகளை எம்பெருமான் பாண்டவர்களின் சத்துருக்களென்று நினைத்திலன்,
தன்னுடைய சத்துருக்களென்றே நினைத்தான், இது எங்ஙனே தெரிகின்றதென்னில்,
தூ து எழுந்தருளினபோது விதுரர் திருமாளிகையிலே அமுது செய்துபோக, அஃதறிந்த துர்யோதனன்
(பிஷ்மாசார்யரையும் த்ரோணாசார்யரையும் என்னையும் விட்டுப் பள்ளிச்சோற்றை ஏன் உண்டாய்?) என்று கண்ணபிரானைக் கேட்க,
அதற்கு உத்தரமருளிச் செய்வது காண்மின் –
(சத்ருவின் சோற்றையும் உண்ணலாகாது, சத்ருவுக்குச் சோறும் இடலாகாது, எனது உயிர்நிலையாகிய பாண்டவர்களை
“நீ த்வேஷிப்பதனால் எனக்கு சத்துருவே, ஆனதுபற்றியே உன்னிடம் நான் உண்ணவரவில்லை) என்றான்.
ஆகவே, ஆச்ரிதர்களுடைய பகைவர்களைத் தன்னுடைய பகைவர்களாகவே கொள்ளும் எம்பெருனுடைய அபிஸந்தியை அறிந்து
இங்கு “தாமே மாற்றாக“ என்றருளிச் செய்தாரென்க.
* மலைபுரைதோள் மன்னவரும் மாரதரும் மற்றம் பலர் குலைய நூற்றுவரும் பட்டழியப் பார்த்ததன்
சிலைவளையத் திண்டோமேல் முன்னின்றதுபற்றிப் “பலமன்னர் போர்மாள“ என்றருளிச் செய்யப்பட்டது.

வெங்கதிரோன்மாயப் பொழில்மறையத் தேராழியால் மறைத்த வரலாறு வருமாறு –
அர்ஜுநன் பதின்மூன்றாநாட் போரில் தன் மகனான அபிமந்யுவைக் கொன்ற ஜயத்ரதனை மறுநாள் ஸூர்யன்
அஸ்தமிப்பதற்கு முன்னே கொல்வதாகப் பல பிரதிஜ்ஞைகள் செய்ய, அது நிறைவேறக் கூடாதென்று
அந்த ஜயத்ரதனை எதிரிகளால் உட்புக முடியாதபடியாக வ்யூஹத்திலே நிறுத்திக் காப்பாற்றிக் கொண்டிருந்த ராஜாக்கள் முன்னே,
ஸ்ரீகிருஷ்ணன் பகல் நாழிகை முப்பதும் சென்றதாகத் தோன்றும்படி, நினைவறிந்து காரியஞ்செய்யும் தனது சக்கராயுதத்தைக் கொண்டு
ஸூர்யனை மறைக்க, “ஆதித்யன் அஸ்தமித்தான், இனிநமக்குப் பிராணபயமில்லை, அர்ஜுநன் பிரதிஜ்ஞை செய்திருக்கிறபடியே
அக்நி ப்ரவேசம் செய்யப்போவதைக் கண்டு களிப்போம்“ என்றெண்ணி ஜயத்ரதன் வெளிப்பட்டு நின்றவளவிலே
கண்ணபிரான் ஸுதர்ச நாழ்வானை மீட்டுக்கொள்ள, ஸூர்யன் இன்னும் அஸ்தமிக்கவில்லை யென்று உணர்ந்து கொண்ட
அர்ஜுநன் உடனே தனது அம்பைக் கொண்டு அந்த ஜயத்ரதனைத் தலையறுத்துவிட்டனன் என்பதாம்.

கோடிஸூர்ய ப்ரகாசான திருவாழியைக் கொண்டு ஸூர்யனை மறைத்தல் எங்ஙனம் கூடுமெனின்,
ஸூர்யனுடைய ஒளி கண்ணாலே காணலாம்படி அளவுபட்டிருத்தலால் இருட்டைப் போக்கும், அப்படியல்லாமல்
திருச் சக்கரத்தினொளி நேராகக் கண்கொண்டு பார்க்கமுடியாதபடி அளவுபடாத மிக்க பேரொளியைக் கொண்டுள்ளதனால்
பளபளத்துக் கண்களை இருளப் பண்ணுமெனச் சமாதானங் கூறுவர் பெரியார், மற்றுஞ் சில வகையான ஸமாதானங்களும் கூறுவாருளர்.

13 நாள் போரில் தன் மகன் அபிமன்யுவைக் கொன்ற ஜெயத்ரனை ஆழி  கொண்டு ஸூர்யனை மறைத்து அர்ஜுனன் கொன்றானே
கண்ணாலே காண முடியாத பேர் ஒளி கொண்டு பளபளத்து கண்களை இருள பண்ணினான் என்றவாறு-

———————————————————————————-

ஆல நிழல் கீழ் அற நெறியை நால்வர்க்கு
மேலை யுகத்து உரைத்தான் மெய்த்தவத்தோன் -ஞாலம்
அளந்தானை ஆழிக் கிடந்தானை ஆல் மேல்
வளர்ந்தானைத தான் வணங்குமாறு -17-

பதவுரை

மெய் தவத்தோன்–மெய்யான தவநெறியை யுடையனான ருத்ரன்,
ஞாலம் அளந்தானை–உலகளந்தவனும்
ஆழிக் கிடந்தானை–க்ஷீராப்திசாயியும்
ஆல் மேல் வளர்ந்தானை–ஆலிலே மேல் கண் வளர்ந்தவனை
தான் வணங்கும் ஆறு–தான் வழிபடும் மார்க்கமாகிய
அறம் நெறியை–நல் வழியை
மேலை யுகத்து–முன் யுகத்திலே
ஆல நிழல்கீழ்–ஓர் ஆல மரத்தின் நிழலிலே
நால்வர்க்கு–நான்கு மஹர்ஷிகளுக்கு
உரைத்தான் உபதேசித்தான்.

எம்பெருமானுடைய பரத்துவம் இன்று நான் சொல்ல வேணுமா? ஸர்வஜ்னான சிவபிரான் தானே ஸ்வ சிஷ்யர்களுக்கு
உபதேசித்த விஷயமன்றோ விது என்கிறார். சிவன் ஒரு காலத்திலே அகஸ்தியர் புலஸ்தியர் தக்ஷர் மார்க்கண்டேயர் என்கிற
நான்கு முனிவர்களைச் சிஷ்யர்களாக அமைத்துக்கொண்டு ஒரு ஆலமரத்தின் அடியிலே ஸ்ரீமந்நாராயண தத்வோபதேசம்
செய்தானென்று நூல்கள் கூறும்.
“ஆலமர நீழல் அறம்நால்வர்க் கன்றுரைத்த ஆலம்மர் கண்டத்தரன்“ என்ற பொய்கையாழ்வார் பாசுரமுங் காண்க.

தாமஸ ப்ரக்ருதியாய் அஹங்காரிகளில் தலைவனான ருத்ரன் எம்பெருமானுடைய உண்மை நிலையைத் தான் எங்ஙனே அறிதான்?
அறிந்தாலும் பிறர்க்கு அதை உபதேசிக்கும்படியான ஹ்ருதய பரிபாகத்தை எங்ஙனே பெற்றான்? என்று கேள்வி கேட்பார்க்கு ஸமாதாநமாகும்படி
“மெய்த்தவத்தோன்“ என்ற பெயரால் ருத்ரனைக் குறிப்பிடுகின்றார். எம்பெருமானைப் பற்றின தத்துவ்வுணர்ச்சி தனக்கு
ஸித்திக்கவேணுமென்று மெய்யே தவம்புரிந்து அத்தவப்பயனாக பகவத் தத்வஜ்ஞாநம் பெற்றவன் என்றபடி.
அவன் நால்வர்க்கு உரைத்த அர்த்தம் யாதெனில், (தான் வணங்குமாறு.)
“நானும் தலைசாய்க்கப் பெற்ற திருவடித் தாமரைகளையுடையவன் காண்மின் ஸ்ரீமந்நாராயணன்,
அவன் உலகங்களையெல்லாம் தன் திருவடிக்கீழ் அகப்படுத்திக் கொண்டவன், திருப்பாற்கடலிலே உறங்குவான்போல்
யோகு செய்து கொண்டிருந்து ஆர்த்தரக்ஷணம் செய்தருள்பவன், பிரளய வெள்ளத்திலே நானுமுட்பட ஸகல பதார்த்தங்களும்
அழிந்து போவதா யிருக்கையில் எல்லாவற்றையும் வாரிவிழுங்கி ஆலந்தளிரிலே திருக்கண்வளர்ந்த அற்புத சக்திவாய்ந்த்வன்“ என்று
உபதேசிப்பனாம் என்பது பின்னடிகளில் தேறுங்கருத்து.

மெய்த்தவத்தோன் –ப்ரஹ்ம ஞானம் பெற மெய்யே த்வம் புரிந்து அதன் பயனாக தத்வ ஞானம் பெற்றவன் –
மேலை யுகத்து -முந்திய யுகத்தில் –

—————————————————————————————————–

மாறாய தானவனை வள்ளுகிரால் மார்பிரண்டு
கூறாகக் கீறிய கோளரியை -வேறாக
ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்று அவரைச்
சாத்தி இருப்பார் தவம்–18-

பதவுரை

மாறு ஆய–எதிரிட்டு நின்ற
தானவனை–ஹிரண்யாஸுரனுடைய
மார்வு–மார்வை
வள் உகிரால்–கூர்மையான நகங்களினால்
இரண்டு கூறு ஆக சீறிய–இரு பிளவாகப் பிளந்த
கோள் அரியை–பெரு மிடுக்கனான நரசிங்க மூர்த்தியை
வேறு ஆக–விலக்ஷணமாக
ஏத்தி இருப்பாரை–துதித்து பகவத் விஷயத்தில் ஆழ்ந்திருக்குமவர்களை,
மற்று அவரை சாத்தி இருப்பார் தவம் வெல்லுமே–அந்த ஸ்ரீவைஷ்ணவர்களை ஆச்ரயிதிருக்கும் சரமாதிகாரிகளின் நிஷ்டைவென்று விடும்.

பாகவத சேஷத்வ நிஷ்டை சிறந்தது என்பதை அருளிச் செய்கிறார் -பந்த மோக்ஷம் இரண்டுக்கும் இல்லாமல்
மோக்ஷ ஏக ஹேதுவாகவே இருக்குமே –
சங்கை இல்லாமல் மார்பிலே கை வைத்து உறங்கலாம் –
ஏத்தி இருப்பாரை -அந்தியம் போதில் அரியுருவாகி அரியை அழித்தவனைப் பந்தனை தீரப் பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பாடுதுமே-என்று
மங்களா சாசனம் பண்ணி இருக்கும் பகவத் பக்தர்களை –
மற்று அவரைச்-சாத்தி இருப்பார் தவம் வெல்லும் -பாகவத பக்தர் நிஷ்டை வெல்லும் –
ததீயரை புருஷகாரமாக மாத்திரமே இல்லாமல் அவர்களையே உத்தேசியராக பற்றுதல் சிறந்தது என்றவாறு –

எம்பெருமானிடத்தில் நிஷ்டை யுடையராயிருப்பதற்காட்டிலும் பாகவதர்கள் பக்கலில் நிஷ்டை யுடையராயிருப்பதே சிறந்தது
என்று ஸகல சாஸ்த்ர ஸாரப்பொருள் ஒன்றுண்டு, அதனை வெளியிடும் பாசுரம் இது.
கருமங்களுக்கிணங்க ஸம்ஸாரியாக்கவும் அருளுக்கிணங்க ஸம்ஸார நிவ்ருத்தியைப் பண்ணித்
திருவடிகளிலே சேர்த்துக் கொள்ளவுமு வல்ல ஸ்வதந்த்ரனான ஈச்வரனைப் பற்றுகை ஸம்ஸாரபந்தத்திற்கும் மோக்ஷப்ராதிக்கும் பொதுவாயிருக்கும்.
அங்ஙனன்றியே பாகவதரைப் பற்றுகை ஸம்ஸாரபந்தத்திற்கு ஒருகாலும் ஹேதுவாகாதே மோக்ஷப்ராப்திக்கே உறுப்பா யிருக்குமென்பது
(எம்பெருமானைப் பற்றினவர்களுக்குப் பேற்றில் ஸந்தேஹமுண்டு, பாகவதர்களைப் பற்றினவர்கள் ஸந்தேஹப் படாமல்
மார்வில் கைவைத்து உறங்கலாம்) இத்யாதி ப்ரமாண ஸித்தம்.
சத்ருக்நாழ்வான், ஸ்ரீமதுரகவிகள், வடுகநம்பி போல்வார் இவ்வர்த்தத்திற்கு உதாஹரண பூதர்கள்.

“மாறாயதானவனை“ என்று தொடங்கி “ஏத்தியிருப்பாரை“ என்கிறவரையில் பகவத் பக்தர்களைச் சொன்னபடி.
தனக்கு உயிர்நிலையான ப்ரஹ்லாதாழ்வானுக்குப் பகைவனான இரணியனைத் தன் பகைவனாகப் பாவித்து அவனது மார்பைக்
கூர்மையான நகங்களாலே இருபிளவாகப் பிளந்த நரசிங்கமூர்த்தியை
“அந்தியம்போதி லரியுருவாகி யரியை யழித்தவனைப் பந்தனை தீரப் பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்று பாடுதும்“ என்றுகொண்டு
வாழ்த்தியிருக்கும் பகவத் பக்தர்களை, –
மற்றவரைச் சாத்தி யிருப்பார் தவம் வெல்லும் – பகவத் பக்தர்களின் நிஷ்டையை பாகவத பக்தர்களின் நிஷ்டை தோற்கடித்துவிடும்.
எனவே, பகவத் பக்தியிற் காட்டிலும் பாகவத பக்தியே சிறந்தது என்றதாயிற்று. இங்கு விரித்துரைக்க வேண்டுமவற்றை யெல்லாம்
ஸ்ரீவசநபூஷணஸாரத்தில் சரமப்ரகரணத்திற் பரக்கச் சொன்னோம். அங்கே கண்டு கொள்க.

இப்பாட்டின் பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியான அவதாரிகையில்
“பகவனையே பஜிக்குமதிலும் ததீயரைப் புருஷகாரமாகக் கொண்டு பற்றுகை சீரியதென்கிறார்“ என்ற
(அச்சுப்பிரதி களிற் காணும்) வாக்கியம் பிழையுடையது,
“புருஷகாரமாகக் கொண்டு“ என்கிற வாக்கியம் ஏட்டுப் பிரதிகளில் காண்பரிது, சேரவும் மாட்டாது.
“பகவானையே பூஜிக்குமதிலும் ததீயரைப் பற்றுகை சீரியதென்கிறார்“ என்னுமளவே உள்ளது.
“ததீயரைப் புருஷகாரமாகப் பற்றுதல் சிறந்தது“ என்கிற அர்த்தமன்று இப்பாட்டுக்கு விஷயம்,
“ததீயரை உத்தேச்யராகப் பற்றுதல் சிறந்தது“ என்னுமர்த்தமே இப்பாட்டுக்குச் சீவன்.

————————————————————————————–

தவம் செய்து நான்முகனால் பெற்ற வரத்தை
அவம் செய்த வாழியான் அன்றே -உவந்து எம்மை
காப்பாய் நீ காப்பதனை யாவாய் நீ வைகுந்த
மீப்பாயும் எவ் உயிர்க்கும் நீயே-19-

பதவுரை

தவம் செய்து–தபஸ்ஸை அநுஷ்டித்து
நான்முகனால்–பிரமனிடத்து
பெற்ற–(ஹிரண்யன் முதலானவர்கள்) பெற்றுக் கொண்ட
வரத்தை–வரங்களை
அவம் செய்த–பழுதாக்கின
ஆழியாய்–திருவாழிக் கையனான பெருமானே!
எம்மை–அடியோங்களை
உவந்து–திருவுள்ளமுகந்து
காப்பாய் நீ அன்றே–காத்தருள்பவன் நீயே யன்றோ,
காப்பதனை ஆவாய் நீ அன்றே–காக்க வேணு மென்கிற ஸங்கல்ப முடையவனும் நீ யன்றோ,
எவ் உயிர்க்கும்–(உன்னை ஆச்ரயித்த) ஸகலாத்மாக்களுக்கும்
வைகுந்தம்–பரம பதத்தை
ஈப்பாயும்–அளிப்பவனும்
நீ அன்றே–நீ யன்றோ.

ஹிரண்யாதிகளுக்கு பிரமன் கொடுத்த வரங்களினால் கொடுமை செய்யும் அஸூர பிரக்ருதிகளை -களைந்து ஒழித்து
வரம் கொடுத்த இவர்கள் குடி இருப்பையும் அளித்து ரக்ஷித்து அருள்பவன் ஸ்ரீ மன் நாராயணனே –
இதற்கு ஸாமக்ரி திரு வாழி ஆழ்வான் -என்கிறார்
திரு உள்ளம் உகந்து ரஷிப்பவன்- -ரக்ஷிக்க சங்கல்பம் யுடையவனும் நீயே –
ஆஸ்ரயித்த சகல ஆத்மாக்களுக்கு பரமபதத்தை அளிப்பவனும் நீயே அன்றோ –

இரணியன் முதலிய ஆஸுரப்க்ருதிகள் பிரமன் முதலிய தேவர்களைக் குறித்து ஸ்வல்பம் ஸ்தோத்ரம் பண்ணிவிட்டால்
தலைகால் தெரியாமல் உவந்து எல்லையில்லாதபடி வரங்களை அளித்துவிட்டுப் பிறகு தங்களுக்கே நேரும் அநர்த்தங்களைப்
பரிஹரித்துக் கொள்ளமாட்டாமல் கண்ணீர் விழவிட்டுக் கையைப் பிசைந்துக்கொண்டு நிற்பர்கள் அந்த ப்ரஹ்மாதி தேவர்கள்.
அன்னவர்களது ஆபத்தை அகற்றியருள்வான் எம்பெரான் – என்பதை முன்னடிகளில் அருளிச்செய்து,
இப்படிப்பட்ட நீயே எனக்கு எல்லாவபேக்ஷிதங்களையும் தலைக்காட்டித் தந்தருளவேணுமென்கிறார் பின்னடிகளில்.

“தவஞ்செய்து நான்முகனால் பெற்றவரத்தை“ என்றவிடத்து “இன்னார் பெற்ற வரம்“ என்பது சொல்லப் படவில்லையாயினும்,
இரணியன் முதலானோர் பெற்ற வரம் எனக்கொள்க.
அவர்கள் பெற்ற வரத்தை அவம் செய்கையாவது – நல்ல உபாயங்களினால் அவ்வஸுரர்களைக் களைந்தொழித்தல்.
வரங்கொடுத்த தாங்களே குடியிருப்பை யிழந்து வருந்தின வளவிலே வரம்பெற்றவர்களையுங் கொன்று
வரமளித்தவர்களையும் காத்தருள்பவனிறே ஸ்ரீமந்நாராயணன். இதற்கு ஸாமக்ரி திருவாழியாழ்வானென்க.

——————————————————————————-

சகலமும் எம்பெருமானாகவே இருக்கும் படியை அருளிச் செய்கிறார் —

நீயே யுலகெல்லாம் நின்னருளே நிற்பனவும்
நீயே தேவத் தேவ தேவனும் -நீயே
எரி சுடரும் மால்வரையும் எண் திசையும் அண்டத்து
இரு சுடரும் ஆய இவை –20-

பதவுரை

உலகு எல்லாம் நீயே–உலகங்கட்கெல்லாம் நிர்வாஹகன் நீயே,
நிற்பனவும்–உலகங்கள் ஸத்தை பெற்று நிற்பதும்
நின் அருளே–உனது கிருபையினாலேயாம்,
தவம் தேர் தேவனும் நீயே–தவத்தினால் தேவர்களான பிரமன் முதலியோருக்குத் தலைவனும் நீயே,
எரி சுடரும்–ஜவுலிக்கின்ற அக்நியும்
மால் வரையும்–பெரிய குல பர்வதங்களும்
எண் திசையும்–எட்டுத் திசைகளிலுமுள்ள ஸகல பதார்த்தங்களும்
அண்டத்து–ஆகாசத்திலுள்ள
இரு சுடரும்–சந்த்ர ஸூர்யர்களும்
ஆய இவை–ஆகிய இவை யெல்லாம்
நீயே–நீயே காண்.

ஸகலமும் எம்பெருமானாகவே யிருக்கும்படியை யருளிச் செய்கிறாரிதில்.
“உலகெல்லாம் நீயே“ என்றது – உலகமெல்லாம் உன்னுடைய ஆளுகையில் அடங்கியுள்ளது என்றபடி.
நிற்பனவும் நின்னருளே – அவ்வப்பொருள்கள் அழியாதே ஸத்தை பெற்றிருப்பதும் நித்யமாயிருப்பதும் உன்னருளாலே.
தவத் தேவ தேவனும் நீயே – எவ்வளவோ தவங்கள் செய்து ப்ரஜாபதி யென்றும் பசுபதியென்றும் பேர்பெற்றிருக்கும் தேவர்கட்கும் தேவன் நீ;
யாம் கடவுளென்றிருக்கு மெவ்வுலகிற் கடவுளர்க்கும் ஆங்கடவுள் நீ என்றவாறு.

———————————————————————————

இவையா பிலவாய் திறந்து எரி கான்ற
இவையா வெரிவட்டக் கண்கள் -இவையா
வெரி பொங்கிக் காட்டும் இமையோர் பெருமான்
அரி பொங்கிக் காட்டும் அழகு–21-

பதவுரை

திறந்து–விரிந்து
எரி கான்ற–நெருப்பை உமிழ்ந்த
பிலம் வாய்–பாழி போன்ற பெரியவாய்
இவையா–இதுவோ!
எரி வட்டம்–கொள்ளி வட்டம் போலே உருண்டு சிவந்து ஜ்வலிக்கிற
கண்கள்–திருக் கண்கள்
இவையா–இவையோ!
எரி–அக்நி போலே
பொங்கி–கிளர்ந்து
காட்டும்–தோன்றின திருமேனியை யுடையனாய்
இமையோர் பெருமான்–நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹகனான ஸர்வேச்வரன்
அரி–நரசிங்க மூர்த்தியாய்
பொங்கி–கிளர்ந்து
காட்டும்–காட்டின
அழகு-அழகு
இவையா–என்ன விஷயம்!

திறந்து எரி கான்ற–பிலவாய் -இவையா -அளவுகடந்த சீற்றத்தால் திருவாய் விரிந்து அழலை உமிழ்ந்ததை பேசுகிறார் –காலுதல் -வீசுதல் –
எரிவட்டக் கண்கள் -இவையா–தூயாய் சுடர் மா மதி போல் உயிர்க்கு எல்லாம் தாயாய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணா -என்பது
ஆஸ்ரித அன்பர்களைக் காணும் பொழுது -ஆஸ்ரித விரோதிகளை கண்டால் கொள்ளி வட்டம் போலே உருண்டு சிவந்து ஜ்வலிக்குமே -‘
இன்றைக்கும் சீற்றம் மாறாமல் இருக்கிறானே என்கிறார் –
எரி பொங்கிக் காட்டும் இமையோர் பெருமான்-அக்னி போல் கிளர்ந்து தோன்றின திருமேனியை யுடையனாய்
நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹகன் ஆன சர்வேஸ்வரன்
இமையோர்க்கும் விசேஷணம் ஆக்கவுமாம்-அப்பொழுது ஹோம ஹவிஸ்ஸை வாங்கிக் கொள்ள வரும் இந்த்ராதிகளுக்கு நிர்வாஹகன் என்றவாறு –
அரி பொங்கிக் காட்டும் அழகு-சத்ருக்களுக்கு தான் பயங்கரம் –ஆஸ்ரித அன்பர்களுக்கு பரம போக்யம் -என்றவாறு –

நரஸிம்ஹாவதாரம் என்றைக்கோ நடந்த்தாயினும் பாவநாப்ரகர்ஷத்தாலே அது ப்ரத்யக்ஷம்போல் தோற்றுமே ஆழ்வார்க்கு,
அப்படியே தோற்ற, ஆச்ரிதர்களுக்கு விரோதம் செய்பவர்மேல் எம்பெருமானுக்கு உண்டாகும் சீற்றம் என்ன அற்புதமானது! என்று அநுஸந்தித்து,
“எம்பெருமானுடைய தெளிவைக் காட்டிலும் சீற்றமே பக்தர்கட்குச் சரணம்“ என்னுமர்த்தம் விளங்கும்படியாகப் பேசுகிற பாசுரம் இது.

திறந்து எரிகான்ற பிலவாய் இவையா! – தூணில் நின்றும் தோன்றினவாறே இரணியன் மேலுண்டான அளவுகடந்த சீற்றத்தினால்
திருவாயானது விரிந்து அழலை உமிழ்ந்ததே, அதனைப் பேசுகிறார், நெருப்பைக் கக்கீன திருவாய் இதுதானோ என்கிறார்.
“கான்ற“ என்ற பெயரெச்சத்தில், கால் – வினைப்பகுதி. காலுதல் வீசுதல்.

எரிவட்டக்கண்கள் இவையா – 1. “தூயாய் சுடர் மாமதி போல் உயிர்க்கெல்லாம், தாயாயளிக்கின்ற தண்டாமரைக் கண்ணா!“
என்னும் படி திருக்கண்கள் குளிர்ந்திருப்பது அன்பர்களைக் காணும்போது, அன்பர்க்குத் துன்பம் செய்யுமவர்களைக் காணும்போது
கொள்ளிவட்டம்போல் உருண்டு சிவந்து ஜ்வலிக்குமே, அப்படி ஜ்வலித்த திருக்கண்களோ இவை!,
இத்திருக்கண்களில் இன்றைக்கும் சீற்றம் மாறவில்லையே யென்கிறார்போலும்.

ஆக முன்னடிகளால், திருவாயும் திருக்கண்களாமாகிற அவயவங்களுக்கு உண்டான விக்ருதியைப் பேசினார்.
இனி பின்னடிகளால், அவயவியான நரஸிம்ஹமூர்த்தியின் கிளர்ச்சியைப் பேசுகிறார்.
எரிபொங்கிக் காட்டு மிமையோர் பெருமான் – “எரிபொங்கிக்காட்டும்“ என்பதை பெருமானுக்கு விசேஷணமாக்கிப் பதவுரை வரையப்பட்டது.
அன்றியே, இமையோர்க்கு விசேஷண மாக்கியும் உரைக்கலாம். ஹோமகாலத்திலே வைதிகர் கொடுத்த ஹவிஸ்ஸை அக்நியானது
ஸ்வீகரித்துக்கொண்டு பெரிய கிளர்த்தியோடே போய் ஸமர்ப்பிக்கும்படி யிருக்கிற
இந்திரன் முதலிய தேவர்களுக்கு நிர்வாஹகன் என்று பொருளாகும்.
(எரி – அக்நி தேவதையானது, பொங்கி – கிளர்ந்து, காட்டும் – ஹவிஸ்ஸைக் கொண்டு கொடுக்கப் பெறுகின்ற, இமையோர் என்கை.)

நரஸிம்ஹமூர்த்தி இவ்வளவு பயங்கரமான வடிவு பெற்றிருந்தாலும் இது சத்துருக்களுக்குப் பயங்கரமேயன்றி
அன்பர்கட்குப் பரம போக்யமேயாதலால் “அரிபொங்கிக் காட்டும் அழகு“ என்று அழகிலே முடிக்கப்பட்டதென்க.

——————————————————————————————

அழகியான் தானே அரி உருவன் தானே
பழகியான் தாளே பணிமின் -குழவியாய்த்
தான் ஏழுலக்குக்கும் தன்மைக்கும் தன்மையனே
மீனாய் உயிர் அளிக்கும் வித்து-22-

பதவுரை

தான் ஏழ் உலகுக்கும் வித்து–தானே ஏழுலகங்களுக்கும் உபாதாந காரணமாய்
தன்மையவன்–ஆச்ரயபூதனாய்
குழவி ஆய்–(பிரளய காலத்தில்) சிறு குழந்தையாய்க் கொண்டும்
மீன் ஆய்–(பின்பொருகால்) மத்ஸ்ய ரூபியாய்க் கொண்டும்
உயிர் அளிக்கும்–ஆத்மாக்களை ரக்ஷிக்கின்றவனான
தானே–எம்பெருமான் தானே
தன்மைக்கும்–(ரூபம் ரஸம் கந்தம் முதலிய) குணங்களுக்கும்
அரி உருவன்–நரசிங்கவுருக் கொண்டவன்
தானே அழகியான்–அழகுக்கு எல்லை நிலமாயிருப்பவனும் அவன்றானே
பழகியான்–புராண புருஷனாகிய அப்பெருமானுடைய
தாளே–திருவடிகளையே
பணிமின்–ஆச்ரயியுங்கோள்

தானே காரணமாய் -எல்லா அவஸ்தைகளிலும் அநாதி காலமாக ரக்ஷித்து —
ஸ்ருஷ்டி -அவாந்தர பிரளயத்தில் திரு வயிற்றில்
வைத்து ரக்ஷித்து – ஆலிலை துயின்று -மன்வந்த்ர பிரளயத்தில் மத்ஸ்ய ரூபியாய் தோன்றி ரக்ஷித்து
சிறுக்கனை ரக்ஷிக்க அவன் வீயத் தோன்றி -அருளும் சர்வேஸ்வரன் திருவடிகளை ஆஸ்ரயிக்க பரோபதேசம்  பண்ணுகிறார்
அவன் திரு அழகை மீண்டும் வாய் வெருவுகிறார்“அழகியான் தானே அரியுருவன் தானே“ என்று.

நம்முடைய புத்திக்கு எட்டாத அநாதிகாலந் தொடங்கிப் பலவகைகளால் ரக்ஷணம் செய்துகொண்டு வருதல் பற்றி
எம் பெருமானுக்குப் “பழகியான்“ என்று திருநாமமிட்டனர்.

ஒரு த்ரவ்யத்தைப் பற்றியிருக்கும் குணத்திற்குத் “தன்மை“ என்று பெயர்,
அக்குணத்திற்கு ஆச்ரயமான குணிக்குத் தன்மையன் என்று பெயர். புஷ்பம் என்கிற த்ரவ்யத்திற்கு மணம் குணமாயிருக்கின்றது.
அந்த மணத்திற்குப் புஷ்பம் ஆச்ரயமாகையாலே புஷ்பம் குணியெனப்படும். இப்படியே எங்குங் கண்டுகொள்க.
இங்கு “தன்மைக்கு தன்மையன்“ என்றது – நிலம் நீர் தீ கால் முதலிய பூதங்களின் குணங்களாகீய மணம் சுவை
முதலியவற்றுக்கெல்லாம் தானே ஆச்ரயமாயிருப்பவனென்கை.
1. “நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய்“ என்கிறபடியே பஞ்சபூதாதிகளும் தானேயாயிருப்பவன் என்றவாறு.

இவ்விடத்துப் பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானத்தில் “தன் பக்கலிலே வைக்கும்“ என்று ஒரு வாக்கியம் காண்கிறது.
அதனால் “தன் வைக்குந்தன்மையனே“ என்றும் பாடமிருந்ததாகத் தெரிகின்றது.

ஏழு உலகுக்கும் தான் வித்தாய் -அவ் உலகங்களை தன்னுள்ளே -வைக்கும் தன்மையனாய் –
பிரளயத்தில் அழியாத படி அடக்கி வைக்கும் குணம் யுடையவன் -என்றபடி

——————————————————————————————

நாம் அறிந்த நிலையிலும் -அறியாத நிலையிலும் எம்பெருமான் தானே நம் உஜ்ஜீவனத்துக்கு கிருஷி பண்ணுமவனுமாய் இருக்க
நாமும் சாதன அனுஷ்டானம் பண்ண வேணுமோ -என்கிறார்

வித்தும் இட வேண்டும் கொலோ விடை யடர்த்த
பத்தி யுழவன் பழம் புனத்து -மொய்த்து எழுந்த
கார்மேகம் அன்ன கருமால் திருமேனி
நீர் வானம் காட்டும் நிகழ்ந்து –23-

பதவுரை

விடை அடர்த்த–(நப்பின்னைப் பிராட்டிக்கா) ரிஷபங்களை வலியடக்கினவனும்
பத்தி உழவன்–(தன் விஷயத்தில் சேதநர்கட்கு) பக்தியுண்டாவதற்குத் தானே முயற்சி செய்பவனுமான எம்பெருமானுடைய
பழம் புனத்து–(ஸம்ஸாரமென்கிற) அநாதியான கேஷத்ரத்திலே
வித்தும் இட வேண்டும் கொலோ–(ஸ்வப்ரயத்நமாகிற) விதையை நாம் விதைக்க வேண்டுமோ? (வேண்டா)
(நம் முயற்சியின்றியே தானே பகவத் விஷயத்தில் ருசி விளைந்தால் திருநாட்டுக்குச் செல்லுமாளவும் நாம் எப்படி தரித்திருப்ப தென்றால்)
மொய்த்து எழுந்த–திரண்டு கிளர்ந்த
கார் மேகம் அன்ன–காளமேகம் போன்ற
கரு மால்–கரிய திருமாலினது
திரு மேனி–திருமேனியை
நீர் வானம்–நீர்கொண்டெழுந்த மேகமானது
நிகழ்ந்து–எதிரே நின்று
காட்டும்–காண்பிக்கும்
(போலி கண்டு நாம் தரித்திருக்கலாமென்றபடி.)

நாம் அறிந்த நிலைமையிலும் அறியாத நிலைமையிலும் எம்பெருமான் தானே நம்முடைய உஜ்ஜீவநத்திற்கு
க்ருஷிபண்ணு மவனாயிருக்க, நாமும் ஸாதநாநுஷ்டாநம் பண்ணவேணுமா, வேண்டா என்கிறார்.

ஸ்ரீவைகுண்டத்திலே எம்பெருமான் நித்யர்களோடும் முக்தர்களோடுங் கூடிப் பரிபூர்ணாநுபவம் பெறாநிற்கச் செய்தேயும்
அதனால் அப்பெருமான் சிறிதும் மகிழாது, பல பிள்ளைகளைப் பெற்ற ஒரு தகப்பானார், தனது ஒருமகன் மாத்திரம்
தேசாந்தரத்திலிருக்க மற்ற எல்லாப் புத்திரர்களோடுங் கூடி வாழா நின்றாலும் அதனால் மகிழ்ச்சியடையாமல்
தேசந்தரத்திலுள்ள புத்திரனது பிரிவையே நினைத்துப் பரிதபிக்குமாபோலே எம்பெருமானும் ஸம்ஸாரிகளான
அஸ்மதாதிகளின் பிரிவையே நினைத்துப் பரிதாபமுற்று நம்மோடே கலந்து பரிமாறுவதறகாகக் கரண களே பரங்களை
நமக்குத் தந்தருளி அவற்றைக்கொண்டு நாம் காரியஞ் செய்யும்படியான சக்தி விசேஷங்களையும் நமக்குக் கொடுத்து,
மிகவும் அஹங்காரிகளான நம்மெதிரில் தான் ப்ரத்யக்ஷமாகவந்து நின்றால் நாம் பொறாமைகொண்டு ஆணையிட்டாகிலும்
தன்னைத் துரத்திவிடுவோமென்றெண்ணி ஒருவர் கண்ணுக்குந் தோற்றாதபடி, உறங்குகிற குழந்தையைத் தாயானவள் முதுகிலே
அணைத்துக்கொண்டு கிடக்குமாபோலே எம்பெருமான்றானும் தானறிந்த ஸம்பந்தமே காரணமாக நம்மை விடமாட்டாமல்
அந்தர்யாமியாயிருந்து தொடர்ந்துகொண்டு நம்பை பொருகாலும் கைவிடாமல் ஸத்தையை நோக்கிக் கொண்டு
நமக்குத் துணையாய்ப் போருமளவில், நாம் கெட்ட காரியங்களிலே கை வைத்தோமாகில் நம்மைத்திருப்ப மாட்டாமல்
அநுமதிபண்ணி உதாஸீநரைப்போலேயிருந்து திருப்புகைக்கு இடம் பார்த்துக்கொண்டேயிருந்து,

நாம் செய்கிற தீமைகளில் ஏதேனுமொரு தீமையாவது – விஷயப்ரணனாய் வேசிகளைப் பின்தொடர்ந்து அடிக்கடி
கோவில்களிலே நுழைந்து புறப்படுகை, வயலில் பட்டிமேய்ந்த பசுவை அடிப்பதாகத் துரத்திக்கொண்டு போம்போது
அது ஒரு கோவிலைப்ரதக்ஷிணம் பண்ணிக்கொண்டு ஓடுகிறவளவிலே அதைவிடமாட்டாத ஆக்ரஹத்தாலே தானும் அக்கோவிலை வலஞ்செய்க; (
சிசுபாலாதிகளைப்போலே) நிந்தை செய்வதற்காகத் திருநாமங்களைச் சொல்லுகை முதலியன. –
நன்மையென்று பேரிடக்கூடியதா யிருக்குமோவென்று பார்த்துவந்து அப்படிப்பட்ட தீமைகளைக் கண்டுபிடித்து
“என் ஊரைச் சொன்னாய், என்பேரைச் சொன்னாய், என்னடியாரை ரக்ஷித்தாய், அவர்கள் விடையைத் தீர்த்தாய்,
அவர்களுக்கு ஒதுங்க நிழலைக் கொடுத்தாய்“ என்றப்படி சில ஸுக்ருதங்களை ஏறிட்டு மடிமாங்காயிட்டு
யாத்ருச்சிகம், ப்ராஸங்கிகம், ஆநுஷங்கிகம் என்கிற ஸுக்ருத விசேஷங்களைத் தானே கல்வித்தும்
அப்படி கல்வித்தவற்றை ஒன்றை அனேகமாக்கியும் நடத்திக்கொண்டு பொருவன் – என்பது சாஸ்த்ரமுகத்தால் நாம் கண்டறிந்த விஷயம்.

யாத்ருச்சிகம், ப்ராஸங்கிகம், ஆநுஷங்கிகம் என்னப்படுகிற ஸுக்ருதங்கள் எவையென்னில்,
அவ்வூர் இவ்வூர் என்று நாம் பல ஊர்களையும் வம்புக்காகச் சொல்லுமாளவிலே
“குருவிமலே, பரங்கிமலை, திருவேங்கடமலை“ என்று வாயில் வந்துவிட்டால்
இவ்வளவே பற்றாசாக “என் ஊரைச் சொன்னான்“ என்று எம்பெருமான் எழுதிக்கொள்வன்,

அவன் இவன் என்று பல பேர்களையும் சொல்லிக்கொண்டு வருமடைவிலே சில பகவந் நாமங்களும் கலந்து வந்துவிட்டால்
“என் பேரைச் சொன்னான்“ என்று கணக்கிடுவன், சில பாகவதர்கள் காட்டிலே வழிபோகா நிற்கையில் அவர்களை
ஹிம்ஸித்துக் கொள்ளையடிக்க வேணுமென்று சில கள்ளர் முயன்றிருக்குமளவிலே, ஏதோ தன் காரியமாக வழிபோகிற ஒரு சேவகன்
அவர்கள் பின்னே தென்பட, அவனை அந்த பாகவதர்களின் ரக்ஷணத்திற்காக வந்தவனாக நினைத்து அக்கள்ளர் அஞ்சி
அப்பால் போய்விட அதுவே பற்றாசாக அந்த சேவனை “என்னடி யாரை நோக்கினவன் இவன்“ என்று எழுதிக்கொள்வன்,
ஒருவன் வேனிற் காலத்திலே தன் வயல் தீய்ந்து போகாநிற்கையில் நீருள்ள விடத்தில் நின்றும் வயலிலே பாய
நெடுந்தூரத்திலே ஏற்றமிட்டு இறையாநிற்க, பாலை நிலத்தில் நடந்து விடாய்த்து இளைத்துவருகிற சில பாகவதர்கள்
அவனறியாமல் அந்த நீரிலே இளைப்பாறிப் போனால் அது காரணமாக “என்னடியாருடைய விடாயைத் தீர்த்தானிவன்“ என்று கணக்கிடுவன்.
ஒருவன் தனக்குச் சூது சதுரங்கமாடுவதற்கும் காறு வேண்டினபோது வந்து உலாவுகைக்கும் புறந்திண்ணை கட்டிவைக்க,
மழையிலோ வெய்யிலிலோ வருந்தின சில பாகவதர்கள் அத்திண்ணையிலே வந்து ஒதுங்கியிருந்து போக,
அதுகொண்டு “என்னடியார்க்கு ஒதுங்க நிழலைக் கொடுத்தான்“ என்று கணக்கிடுவன்,
இப்படியாக நாமறியாமல் எம்பெருமானே ஏறிடும் ஸுக்ருதங்களே யாத்ருச்சிகம், ப்ராஸங்கிகம், ஆநுஷங்கிகம் எனப்படும்.

இப்படி அஜ்ஞாத ஸுக்ருதங்களையாகிலும் ஹேதுவாகக் கொண்டு எம்பெருமான் கடாக்ஷிப்பனாகில்
அந்த கடாக்ஷம் ஸஹேதுகமாகாதோவென்னில், ஆகாது, இந்த யாத்ருச்சிகம் முதலிய ஸுக்ருதங்களுமுட்பட நமக்குண்டாம்படி
ஆதியிலே கரணகளே பாங்களைக் கொடுத்து ஸ்ருஷ்டித்தவன் எம்பெருமானாகையாலே, கடாக்ஷஹேதுவாகச் சொன்ன
அஜ்ஞா தஸுக்ருதங்களும் அவனுடைய க்ருஷிபலமேயாம்.

(ஸ்ருஷ்டிப்பது சேதநருடைய கருமங்களுக்குத் தகுதியாகவன்றோவென்னில், ஸ்ருஷ்டிப்பது கருமத்தைக் கடாக்ஷதித்தேயாகிலும்
அவரவர்களுடைய கருமபரிபாகத்துக்குத் தகுந்தபடி வெவ்வேறு காலங்களிலே ஸ்ருஷ்டிக்கவேண்டியிருக்க,
ஏக காலத்திலே ஸ்ருஷ்டித்தது அநுக்ரஹ காரியமென்பர்.)

அசித்தோடு வாசியற்றுக் கிடக்கிற நிலைமையிலே உஜ்ஜீவநத் துக்கு கருவியான கரணகளேபரங்களைப் பேரருளாலே
அவன் தந்தபடியே அநுஸந்தித்தால், நம் உஜ்ஜீவனத்தில் அவன் செய்தபடி பார்த்துக்கொண்டிருப்பது தவிர நாம்
ஒரு முயற்சியும் பண்ணவேண்டாதபடியா யிருக்கும். புதிசாகத் தரிசு திருத்தின தல்லாமல் பழையதாக உழுவது நடுவது
விளைவதாய்க்கொண்டு போருகிற ஒரு கேஷத்ரத்திலே உழவனானவன் அதுக்கென்று ஒரு க்ருஷியும் பண்ணாதிருந்தாலும்
உதிர்ந்த்தானியமே முளைத்து விளைந்து தலைக்கட்டுமா போலே, அஜ்ஞாத ஸுக்ருதங்கள் நம்மிடத்திலே தன்னடையே
விளையும்படியாகவன்றோ பத்தியுழவனென்று சொல்லப்படுகிற ஈச்வரன் அநாதிஸம்ஸாரத்தை ஸ்ருஷ்டித்துத் திருத்தி நட்த்திப் போருவது.

இப்படிப்பட பத்தியுழவன் பழம்புனத்தில் நாமும் வித்து இடவேண்டுமோ? நாமும் உபாயாநுஷ்டாநம் பண்ணவேணுமோ?
எம்பெருமானுடைய ப்ரவ்ருத்திக்கு விரோதியான நம்முடைய ப்ரவ்ருத்தியை நாம் நிறுத்திக் கொள்வதன்றோ நமக்கு நன்மை என்றவாறு.

விடையடர்த்த வரலாறு – கும்பனென்னும் இடையர் தலைவனது மகளும், நீளாதேவியின் அம்சமாகப் பிறந்த்தனால்
நீளா என்ற பெயரால் வழங்கப்பட்டு வருபவளுமான நப்பின்னைப் பிராட்டியை மணஞ்செய்து கொள்ளுதற்காக அவள் தந்தை
கந்யாசுல்கமாகக் குறித்தபடி யார்க்கும் அடங்காத அஸுராவேசம் பெற்ற ஏழு எருதுகளையும் கண்ணபிரான்
ஏழு திருவுருக்கொண்டு சென்று வலியடக்கி அப்பிராட்டியை மணஞ்செய்து கொண்டான்.

ஆழ்வார் எம்பெருமானுக்குப் பத்தியுழவன் என்று திருநாமமிட்ட அழகை என்சொல்வோம்!.
தன் விஷயத்தில் நமக்கு பக்தி யுண்டாவதற்குத் தானே க்ருஷி பண்ணுகிறானாம் எம்பெருமான்.
அந்த க்ருஷியாவது ஸ்ருஷ்டியவதாராதிகள் என்க.

இனி முன்னடிகட்கும் பின்னடிகட்கும் ஸங்கதி (சேர்த்தி) யாதென்னில், –
பத்தியுழவன் பழம்புனத்தில் நாம் வித்து இட வேண்டாவாகில் அப்படியே ஆகுக, எம்பெருமானே க்ருஷி பண்ணட்டும்,
அந்த க்ருஷி பலித்து நாம் பரமபதஞ்சென்று நித்யாநு பவம் பண்ணுவதென்பது விரைவில் நடைபெறக் கூடியதன்றே,
சிறிது காலவிளம்பமாகுமே, அதுவரையில் நமக்குப் போது போக்கு யாதென்ன,
1. பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற, காவி மலரென்றுங் காண்டோறும் – பாவியேன் மெல்லாவி மெய்மிகவே பூரிக்கும்,
அவ்வவையெல்லாம் பிரானுருவேயென்று“ என்றும்
2. “மேகங்களோ வுரையீர், திருமால் திருமேனியொக்கும் யோகங்கள் உங்களுக்கெவ்வாறு பெற்றீர்?“ என்றும்,
3. “ஒக்கு மம்மானுருவமென்று உள்ளங்குழைந்து நாணாளும், தொக்க மேகப் பல்குழாங்கள் காணுந்தோறும்“ என்றும்
சொல்லுகிறபடியே போலிகண்டு போதுபோக்க ஸாமக்ரி உண்டு என்கிறார்.

“ருசி பிறந்தபின்பு ப்ராப்தியளவும் நாம் தரிக்கைக்கு அவன் திருமேனிக்குப் போலியுண்டென்கை“ என்ற
வியாக்கியான ஸ்ரீ ஸூக்தியும் நோக்கத்தக்கது.

இப்பாட்டின் முதலடியின் மூன்று சீர்களாகிய “வித்துமிட வேண்டுங்கொல்லோ“ என்றவளவு திருக்குறளில் எடுத்தாளப்பட்டுள்ளது,
விருந்தோம்பல் என்னும் அதிகாரத்தில் “வித்துமிட வேண்டுங்கொல்லோ விருந்தோம்பி, மிச்சின் மிசையான் புனம்“ என்ற குறள் காண்க.

———————————————————————————

நிகழ்ந்தாய் பால் பொன் பசுப்புக் கார் வண்ணம் நான்கும்
இகழ்ந்தாய் இருவரையும் வீயப் புகழ்ந்தாய்
சினப் போர் சுவேதனைச் சேனாபதியாய்
மனப் போர் முடிக்கும் வகை-24-

பதவுரை

பால் பொன் பசுப்பு கார் நான்கு வண்ணமும்–வெண்மை சிவப்பு பசுமை கறுப்பு ஆகிய நான்கு வர்ணங்களையும் உடையனாய்க் கொண்டு
நிகழ்ந்தாய்–(நான்கு யுகங்களிலும்) அவதரித்தாய்
இருவரையும்–மதுகைடபர்களாகிற இரண்டு அசுரர்கள்
வீய–தொலையும்படி
இகழ்ந்தாய்–வெறுத்தாய்
சேனாபதி ஆய்–அர்ஜுநனுடைய ஸேனைக்கு ரக்ஷகனாய்க் கொண்டு
மனம்–த்ரௌபதியின் கூந்தலை முடிப்பிக்க வேணுமென்று) மநோரதங் கொண்டிருந்த படியே
போர்–பாரதயுத்தம்
முடிக்கும் வகை–தலைக்கட்டும்படி
சினம் போர் சுவேதனை–சீறிக்கொண்டு யுத்தத்தில் இழியும் ஆண்புலியான அர்ஜுன்னை
புகழ்ந்தாய்–கொண்டாடினாய்

கிருத யுகம் -சத்வ குணம் மிக்கோர் -வெளுத்த பால் நிறம் /
த்ரேதா யுகம் -சிவந்த / த்வாபர -பசுமை / கலி யுகம் -கறுத்த -இயற்கையான நீல நிறம் என்றவாறே
கிருதயுகத்திலுள்ளவர்கள் ஸத்வகுணம் நிறைந்தவர்களாய் சுத்தமான நிறத்தை உகக்குமவர்களாகையாலே அவர்கட்காக
எம்பெருமான் பால்போன்ற நிறத்தைக் கொள்வன், த்ரேதா யுகத்திலே சிவந்த திருநிறத்தைக் கொள்வன்,
த்வாபரயுகத்தில் பசுமை நிறத்தைக் கொள்வன்,
கலியுத்தில் எந்த நிறத்தைக் கொண்டாலும் ஈடுபடுவாரில்லாமையாலே இயற்கையான நீல நிறத்தைக் கொள்வன் என்க
பாலிநீர்மை செம்பொன் நீர்மை பாசியின் பசும் புறம் போலும் நீர்மை -பொற்புடைத் தடுத்து வண்டு விண்டுலாம் நீல நீர்மை என்றி

இருவரையும் வீய இகழ்ந்தாய்–மது கைடவர் -இருவர் -அன்றிக்கே -கொல்லா மாக்கோல் கொலை செய்து பாரதப் போர்
எல்லா சேனையும் இரு நிலத்து அவித்த வெந்தாய்-திருவாய் -3-2-3-என்றபடி இரு வகுப்பில் உள்ள சேனைகள் –
பாரத சமரத்தில் துர்வர்க்கம் அடைய திரண்டது இ றே இரண்டு சேனையிலும் -இங்கே நாலு ஐந்து பேரும் அங்கே
ஓன்று இரண்டு பேரும் ஒழிய முடித்து பொகட்டான் ஆயிற்று –பஞ்ச பாண்டவர் -அஸ்வத்தாமா -க்ருபாச்சார்ய -க்ருத வர்மாக்களையும்
தவிர மற்றவர்களையும் ஒழித்து மண்ணின் பாரம் நீக்கினான் –

உற்றாரை எல்லாம் உடன் கொன்று அரசாள பெற்றாலும் வேண்டேன் பெரும் செல்வம் -என்று சொல்லி போர் ஒழிந்த அர்ஜுனனுக்கு
ஸ்ரீ கீதை அருளி போர் செய்ய உடன்படுத்தி-புகழ்ந்தாய்-சினப் போர் சுவேதனைச் —ஸ்வேத வாஹனன் -வெள்ளைக் குதிரைப் பூண்ட தேர் –
வெள்ளைப் புரவிக் குரக்கு வெல் கொடித் தேர் மிசை முன்பு நின்று -பெரியாழ்வார் திருமொழி –

————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ ராம பிள்ளை திருவடிகளே சரணம்
திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் -திருமழிசை ஆழ்வார் அருளிய நான்முகன் திருவந்தாதி -85-96—–

February 1, 2015

சர்வ காலமும் ராம வ்ருத்தாந்தத்தை அனுசந்திக்கிமிது எனக்குத் தொழில்  -என்கிறார் –
என் நெஞ்சிலே எழுந்து அருளி இருக்கிற சர்வேஸ்வரன் திரு நாமம் ஏத்தப் போரும் போது என்கிறார் ஆகவுமாம்-

தொழில் எனக்கு தொல்லை மால் தன் நாமம் ஏத்த
பொழுது எனக்கு மற்றதுவே போதும் -கழி சினத்த
வல்லாளன் வானவர் கோன் வாலி மதன் அழித்த
வில்லாளன் நெஞ்சத்து உளன் –85-

பதவுரை

கழி சினத்த–மிகக் கோபத்தை யுடையவனும்
வல்லாளன்–மிக்க வலிமை யுடையவனும்
வானார் கோன்–குரங்குகட்கு அரசனுமாகிய
வாலி–வாலியினுடைய
மதன்–மதத்தை (கொழுப்பை
அழித்த–தொலைத்த
வில் ஆளன்–சார்ங்க வில்லை ஆள்பவனான இராமபிரான்
நெஞ்சத்து–எனது நெஞசிடத்து
உளன்–எழுந்தருளி யிருக்கின்றான்
எனக்கு–(அந்த இராம பிரானுடைய திருக் குணங்களில் அகப்பட்ட) எனக்கு
தொழில்–நித்ய கருமம்
தொல்லை மால் தன் நாமம் ஏத்த–புராணனான அந்த ஸர்வேச்வரனுடைய திருநாமங்களை வாயாரப் புகழ்வதாம்
எனக்கு–(உலகத்தாரில் வேறு பட்டவனான) எனக்கு
மற்றதுவே–கீழ்ச் சொன்ன ஸ்ரீராமநாம ஸங்கீர்த்தனத்தினாலேயே
பொழுது போதும்–போது போகும்.

தொழில் இத்யாதி –
எனக்குத் தொழில் -பழையனாய் சர்வாதிகனான சர்வேஸ்வரனுடைய திரு நாமங்களை ஏத்துகை-
அதுக்கே எனக்குக் காலம் போரும் இத்தனை
கழி சினத்த இத்யாதி –
எப்போதும் ஒக்க ஆகர்ஷகமாய் இருப்பது ஒரு விஷயம் உண்டோ என்னில்
மிக்க சினத்தை உடையனாய் -பெரு மிடுக்கனாய்  -வாநராதிபனுமாய் -இருந்த வாலியுடைய கர்வத்தை யழித்த-
வில்லை யுடை யவன் என்னுடைய ஹிருதயத்தே யுளன் –

————————————————————————–

நெஞ்சே நமக்கு ஒருவன் உளன் என்னும் இடத்தை அனுசந்தி -என்கிறார்-

உளன் கண்டாய் நல்  நெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
தன்னொப்பான் தானாய் உளன் காண் தமியேற்கு
என்னொப்பார்க்கு ஈசன் இமை-86-

பதவுரை

நல் நெஞ்சை–எனக்குப் பாங்கான மனமே!
உத்தமன்–புருஷோத்தமனான எம்பெருமான்
உளன் கண்டாய்–(நம்மை ரக்ஷிப்பதனாலே) ஸத்தை பெற்றிருப்பவன் காண்
தன் ஒப்பான்–(தனக்குப் பிறரொருவரும் ஒப்பில்லாமையாலே) தனக்குத்தானே ஒத்திருப்பவனான அந்த எம்பெருமான்
தமியேற்கு–ஒரு கைம்முதலுமற்றவனான எனக்கும்
என்றும் உளன் கண்டாய்–எக்காலத்திலும் (நம்மை ரக்ஷிப்பதிலே தீக்ஷை கொண்டு) இருக்கிறான் காண்க.
உள்ளுவார் உள்ளத்து–ஆஸ்திகர்களுடைய மனத்திலே
உளன் கண்டாய்–நித்யவாஸம் பண்ணுமவன் காண்
என் ஒப்பார்க்கு–என்னைப் போலே உபாய சூந்யராயிருப்பவர்கட்கும்
தான் ஈசன் ஆய் உளன் காண்–தானே நிர்வாகனாயிருக்கிறான் காண்
இமை–இதனை அறி.

உளன் இத்யாதி
எம்பெருமான் என்றால் அபி நிவேசித்து இருக்கிற நெஞ்சே
அவன் நமக்கு உளன்  கிடாய் –
இத்தலையில் உள்ள போகம் தன் பேறாக கொண்டே என்றும் உளன் கிடாய்
தன் ஒப்பான் இத்யாதி
ஈஸ்வரன் சமாதி க தரித்ரனாய்க் கொண்டே உளன் –
அகிஞ்சனான படிக்கு வேறு ஒப்பில்லை
எனக்கும் மற்றும் என்னைப் போலே வெறு வியராய் இருப்பாருக்கும் அவன் நிர்வாஹகன்
இமை -அனுசந்தி -புத்தி பண்ணு என்றபடி –

————————————————————————–

நம் அளவிலே அன்று-ஈஸ்வரத்வேன அபிமானிகளான ப்ரஹ்ம ருத்ராதிகளோடே கூடின
ஜகத்துக்கு எல்லாம் ரஷகன் அவனே -என்கிறார்

தம்மை ஒக்கும் அகிஞ்சனருக்கு அவன் நிர்வாஹகனாம் படி காட்டுகிறார் ஆகவுமாம் –

இமயப் பெரு மலை போல் இந்திரனார்க்கு இட்ட
சமய விருந்துண்டார் காப்பான் -சமயங்கள்
கண்டான் அவை காப்பான் கார்கண்டன் நான்முகனோடு
உண்டான் உலகோடு உயிர்-87-

பதவுரை

இமயம் பெரு மலை போல்-பெரிய இமயமலை போன்றிருக்கும்படி
இந்திரனார்க்கு இட்ட–இந்திரனுக்காகச் சமைத்து வைத்த
சமயம் விருந்து–வழக்கமான ஆராதனையை
உண்டு–உட் கொண்ட போது (நேர்ந்த கல்மழையாலாகிய ஆபத்தில் நின்றும்)
கார்க்கண்டன் நான்முகனோடு காப்பான் ஆர்–சிவனையும் பிரமனையும் (பெரிய ஆபத்துக்களில் நின்றும்) ரக்ஷிப்பவன் யார்?
ஆர் காப்பார்–காப்பாற்றினது யார்?
சமயங்கள்–வைதிக மதங்களை
கண்டான்–பிரவர்த்திப்பித்தவன்
ஆர்–யார்?
அவை காப்பான்–அவற்றை (நிலை குலையாதபடி) ரக்ஷிப்பவன்
ஆர்–யார்?
உலகோடு உயிர் உண்டான் ஆர்–
உலகங்களையும் (உலகங்களிலுள்ள ஜீவராசிகளையும் (பிரளயத்தில்) உண்டு ரக்ஷித்தவன் யார்? (எல்லாம் எம்பெருமானே யன்றோ)

இமை இத்யாதி –
ஹிமவான் ஆகிற பெரிய மலை போலே இந்தரனுக்கு என்று இட்டுச் சொரிந்த வத்சரம் தோறும்
வ்யவஸ்திதமான சோற்றைத் தான் அமுது செய்து அவனால் வந்த நலிவை எம்பெருமான் அன்றோ காத்தான் –
இடையர் தாங்களோ ப்ரஹ்மாதிகளோ தேவாதி சமயங்களைக் கண்டான்
அவற்றை ரஷிக்கைக்காக ப்ரஹ்மாவோடு கூடின ருத்ரனையும் லோகத்தோடே கூடின சகல ஆத்மாக்களையும் திரு வயிற்றிலே வைத்து பரிஹரித்தான்
சமயங்கள் கண்டான் –
வைதிக சமயங்களைக் கண்டான் -என்றுமாம் –
வர்ஷ ஆபத்தோடு பிரளய ஆபத்தோடு வாசி அற ரஷித்தவன் சர்வேஸ்வரனே இத்தனை போக்கி-இடையராதல் –
ப்ரஹ்மாதிகள் ரஷித்தார்களாக பிரசங்கம்   உண்டோ என்கை-
சமயங்கள் கண்டானவை காப்பான் என்று வைதிக சமயங்களைப் ப்ரவர்த்திப்பித்து ரஷித்தமை சொல்லுகையாலே-
சம்சாரத்தைப் பரிஹரிப்பானும் இவனை ஒழிய வேறு ஒருவர் உண்டோ என்று சொன்னபடி –

————————————————————————–

தன்னை ஆஸ்ரயித்தவர்களுக்கு சரீர விஸ்லேஷ தசையில் யம வச்யதை தொடக்கமான துக்கங்களைப் போக்கும்
பெருமானை ஆஸ்ரயிக்கும் அவர்கள் க்ருதார்த்தராவர் –
ஷூத்ர சமயவாதிகள் உடைய வாழ்வு வ்யர்த்தம் என்கிறார் –

உயிர் கொண்டு உடல் ஒழிய ஓடும் போது ஓடி
அயர்வு என்று தீர்ப்பான் பெயர் பாடி -செயல் தீரச்
சிந்தித்து வாழ்வாரே வாழ்வார் சிறு சமயப்
பந்தனையார் வாழ்வேல் பழுது-88-

பதவுரை

உடல் ஒழிய–சரீரத்தைப் போட்டு விட்டு
உயிர் கொண்டு–ஆத்மாவைப் பிடித்துக் கொண்டு
ஓடும்போது–(யமபடர்கள்) ஓடும்போது
ஓடி–(எம்பெருமானாகிய தானே) ஓடிச் சென்று
செயல் தீர–பேற்றுக்காக நாம் செய்ய வேண்டிய செயல் (ப்ரவ்ருத்தி) ஒன்றுமில்லை யென்று
சிந்தித்து–ஸ்வரூபத்தை யுணர்ந்து
வாழ்வாரே–வாழ நினைப்பவர்களே
வாழ்வார்–வாழ்ச்சி பெறுவர்
அயர்வு என்ற–கஷ்ட மென்று சொல்லப் படுகிற எல்லாவற்றையும்
தீர்ப்பான்–தீர்க்குமவனான எம்பெருமானுடைய
பேர்–திருநாமங்களை
பாடி–வாய்விட்டுப் பாடி
சிறு சமயம் பந்தனையார்–அற்பங்களாய் பல நியமங்களோடு கூடினவையாய் ஸம்ஸார பந்தத்திற்கே
காரணமாக வுள்ளவையான உபாயங்களைப் பற்றினவர்களுடைய
வாழ்வு ஏல்–வாழ்ச்சியோ வென்றால்
பழுது–உபயோகமற்றது.

உயிர்-இத்யாதி –
ஆத்மா சரீரங்களை விட்டு பிராணன்களைக் கொண்டு யமபடராலே ப்ரேரிதனாய் போம் போது-
ஆளிட்டு அந்தி தொழ ஒண்ணா தாப் போலே ஆஸ்ரிதரை ஆளிட்டு அழைத்துக் கொள்ளாதே-
தானே ஓடி வந்து இவர்கள் தர்சனத்தாலே வந்த அறிவு கேடு முதலான துரிதங்களை எல்லாம் போக்குமவன்
திரு நாமத்தை ப்ரீதியோடு சொல்லித் தனக்கு ஒரு சாத்யம் இல்லாத படி  அனுசந்தித்து வாழ்வாரே வாழ்வார்
செயல் என்று கர்மா ஆகவுமாம்
இவ்வாத்மா தான் செய்யக் கடவ ஷூத்ர சமயம் ஆகிற பந்தத்தை யுடையார் வாழ்வு வ்யர்த்தம்
துக்க ஹேதுவான அஹங்கார மமகார கர்ப்பமாகையாலே பந்தகமாய்
ஷூத்ர மான கர்மாத் யுபாய பேதங்களைப் பற்றினார்க்கு ஒரு பிரயோஜனமும் இல்லை –
அந்வய வ்யதி ரேகங்களாலே இவற்றுக்கு உபாயத்வம் முதலிலே இல்லை என்று உள்ளபடி யுணர்ந்து இருக்கும்-ஞானி நாமக் ரேசரர் ஆகையாலே
பந்தனையார் வாழ்வேல் பழுதென்று அவற்றில் ஒரு சரக்கற அருளிச் செய்கிறார் –

————————————————————————–

எல்லாப் புருஷார்த்தங்களிலும் பாகவத சமாஸ்ரயணமே உத்க்ருஷ்டம் -என்கிறார் –
இப்படி கர்மாத் யுபாயங்கள் போலே பழுதாகை அன்றிக்கே பழுதற்ற உபாயம் தான் ஏது என்ன
பகவத் சமாஸ்ரயணமும் பாகவத சமாஸ்ரயணமும் பழுதற்ற வுபாயங்கள் –
இவை இரண்டு வுபாயங்களிலும்  உத்க்ருஷ்டமான வுபாயம் பாகவத சமாஸ்ரயணம் என்கிறார் ஆகவுமாம் –

பழுதாகது ஓன்று அறிந்தேன் பாற் கடலான் பாதம்
வழுவா வகை நினைந்து வைகல் தொழுவாரை
கண்டு இறைஞ்சி வாழ்வார் கலந்த வினை கெடுத்து
விண்டிருந்து வீற்று இருப்பார் மிக்கு –89-

பதவுரை

பழுது ஆகாது ஒன்று–பழுதுபடாத (சிறந்த) ஒரு உபாயத்தை
அறிந்தேன்–தெரிந்து கொண்டேன் (அது என்னவென்றால் கேண்மின்)
பால் கடலான் பாதம்–க்ஷீராப்தி நாதனுடைய திருவடிகளை
வாழுவா வகை நினைத்து–தப்பாதபடி அநுஸந்தித்து
வைகல் தொழுவாரை–எப்போதும் வணங்குமவர்களை
கண்டு இறைஞ்சி–கண்டு வணங்கி
வாழ்வார்–வாழ்பவர்கள் (பாகவத பக்தர்கள்)
கலந்த வினைகெடுத்து–ஆத்மாவோடு சேர்ந்த தீவினைகளைத் தொலைத்து
விண் திறந்து–பரமபத வாசலைத் திறந்து
மிக்கு–சிறப்புடனே
வீற்றிருப்பார்–எழுந்தருளி யிருக்கப் பெறுவர்

பழுது இத்யாதி -பழுது அன்றியே இருப்பது ஓன்று அறிந்தேன்
பழுத் போகாத உபாயங்களிலே அத்விதீயமானதொரு உபாயம் பாகவத சமாஸ்ரயணம் என்று அறிந்தேன் –
அது எங்கனே என்னில்
போக பூமியான பரமபதத்தை விட்டு-ஆஸ்ரயிப்பாருக்கு சமாஸ்ரயணீயனாய்க் கொண்டு   திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிறவனுடைய
திருவடிகளைத் தப்பாத பிரகாரத்தை நினைத்து நாள் தோறும் தொழுமவர்களைக் கண்டு ஆஸ்ரயித்து
வாழுமவர்கள் தம்தாமுடைய சஹஜமான கர்மங்களைக் கெடுத்து
பரமபதத்திலே விச்மிதராய்க் கொண்டு ஞானப் பிரேமங்களாலே பரி பூரணராய் ததீய கைங்கர்ய லாபத்தால் வந்த
தங்கள் வேறுபாடு தோற்ற இருப்பார்கள் –
விண்டிறந்து
பரமபதத்தில் திரு வாசல் திறந்து -என்றுமாம் –

————————————————————————–

பகவத் சமாஸ்ரயண பூர்வகம் அல்லது ஒருவருக்கும் பகவத் ப்ராப்தி இல்லை -என்கிறார்
பாகவதராலே அங்கீ க்ருதரானவர்கள் எல்லாரிலும் மேற்பட்டார் -என்கிறார் ஆகவுமாம்-

வீற்று இருந்து விண்ணாள வேண்டுவார் வேங்கடத்தான்
பால் திறந்து வைத்தாரே பன் மலர்கள் -மேல் திருந்து
வாழ்வார் வருமதி பார்த்து அன்பினராய் மற்று அவர்க்கே
தாழ்வாய் இருப்பார் தமர்-90-

பதவுரை

விண்–பரமபதத்தில்
வீற்றிருந்து–பெருமை பொலிய இருந்து
ஆள வேண்டுவார்–ஆட்சி செய்ய விரும்பி அப்படியே பேறு பெற்றவர்கள்
வேங்கடத்தான் பால்–திருவேங்கட முடையான் பக்கலில்
பல் மலர்கள்–பலவகைப்பட்ட மலர்களை
திருந்த–நன்றாக
வைத்தாரே–ஸமர்ப்பித்தவர்களே யாவர் (பகவானை ஆராதித்தவர்களே விண் ஆள்வர் என்கை)
வரும் மதி பார்த்து–(எம்பெருமானுடைய திருவுள்ளத்தில்) ஓடுகின்ற கருத்தை யறிந்து
அன்பினர் ஆய்–பக்தியை யுடையவர்களாய்
மற்றவற்கே–அந்த எம்பெருமானுக்கே
தாழ்வு ஆய் இருப்பார்–அடிமைப்பட்டிருப்பவர்களுக்கு
தமர்–அடிமைப்பட்டவர்கள்
மேல் திருந்த வாழ்வார்–முன்னடிகளிற் சொல்லப்பட்டவர்களிற் காட்டிலும் விலக்ஷணராக வாழ்பவராம்.

வீற்று இருந்து இத்யாதி –
தங்கள் வேறுபாடு தோற்ற இருந்து ஸ்வர்காதி களை யனுபவிக்க வேண்டுவார் சர்வ ஸூ லபனான திருவேங்கடமுடையான்
திருவடிகளிலே புஷ்பாதிகளைக் கொண்டு ஆஸ்ரயித்தாரே மேற்பட்டு நன்றாக வாழ்வார்
அன்றிக்கே
பகவத் கைங்கர்ய சாம்ராஜ்யத்த்லே மூர்த்த அபிஷிக்தர் ஆகையாலே வந்த வேறுபாடு தோற்ற இருந்து
பரம பதத்தில் கைங்கர்ய நித்ய நிரதரான நித்யஸூரிகளை ஸ்வா தீனமாக நிர்வஹிக்கை யாகிற இப் புருஷார்த்தத்தை பெற வேணும் என்று
மநோ ரதித்து யதா மநோ ரதம் பெற்றவர்கள் -என்றுமாம் –
வருமதி இத்யாதி
அறிவுடையராய் ச்நேஹிகளாய் எம்பெருமான் எண்ணத் தாழ்ந்து இருக்குமவர்களை ஆஸ்ரயித்தார்-
வருமதி இத்யாதி
எம்பெருமான் திரு உள்ளத்தில் கோலின அளவறிந்து அதுக்கீடான அடிமைகளில் ச்நேஹித்து
யேந யே ந தாத்தா கச்சதி தேந தே ந சஹ கச்சதி -என்கிறபடியே அவன் பக்கலிலே ப்ரவண ரானவர்களாலே விஷயீ க்ருதரானவர்கள் –
தத் சமாஸ்ரயணம் பண்ணினவர்கள் தத் கைங்கர்யத்தைப் பெறுவார்கள்
ததீய சமாஸ்ரயணம் பண்ணினவர்கள் ததீய கைங்கர்யத்தைப் பெற்று வாழப் பெறுவார்கள் -என்றபடி
யதோபாசனம் பலம்   -என்கை-எல்லாருக்கும் ஒக்கும் இறே-

————————————————————————–

தன் திருவடிகளை ஆஸ்ரயித்தார் ப்ரஹ்மா தொடக்கமானவர் எல்லாருக்கும் நிர்வாஹகர் -என்கிறார் –
எம்பெருமான் திருவடிகளே உபாய உபேயம் என்று இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர் உபய விபூதியில்
உள்ளாருக்கும் நிர்வாஹகராம் படியான பெருமையை யுடையவர்கள் என்கிறார் -என்றாகவுமாம்-

தமராவர் யாவர்க்கும் தாமரை மேலார்க்கும்
அமரர்க்கும் ஆடு அரவத் தார்க்கும் -அமரர்கள்
தாள் தாமரை மலர்கள் இட்டு இறைஞ்சி மால் வண்ணன்
தாள் தாமரை அடைவோம் என்று-91-

பதவுரை

மால் வண்ணன்–கரியமேனியனான எம்பெருமானுடைய
தாள் தாமரை–திருவடித் தாமரைகளில்
மலர்கள் இட்டு–புஷ்பங்களை ஸமர்ப்பித்து
இறைஞ்சி–வணங்கி
தாள் தாமரை அடைவோம் என்று–அத்திருவடித் தாமரைகளை யடைவோமென்று
தமர் ஆவார்–பக்தராயிருக்குமவர்கள்
தாமரை மேலாற்கும்–திருநாபிக் கமலத்திற் பிறந்த பிரமனுக்கும்
ஆடு அரவு ஆர்த்தாற்கும்–ஆடுகின்ற ஸர்ப்பங்களை (ஆபரணமாக உடம்பிலே) கட்டிக் கொண்டிருக்கும் சிவனுக்கும்
அமரர்க்கும்–நித்ய ஸூரிகளுக்கும்
யாவர்க்கும்–மற்றுமெல்லார்க்கும்
அமரர்கள்–மேற்பட்டவராவர்

தமராவார் -இத்யாதி
ஆஸ்ரிதர் ஆனவர்கள் ப்ரஹ்மாவிற்கும் மற்றுள்ள தேவருக்கும் ஆடுகிற பாம்பைப் பூண்ட ருத்ரனுக்கும்-மற்றுள்ள எல்லாருக்கும் நிர்வாஹகர் ஆவர் –
தாள் தாமரை இத்யாதி
தாளையுடைய தாமரைப் பூக்களை திருவடிகளிலே இட்டு வணங்கி சர்வேஸ்வரனுடைய திருவடித் தாமரைகளை அடைவோம் என்று
தாள் தாமரை அடைவோம் என்று தமராவார் தாமரை மேலாற்கும்  அமரர்க்கும் ஆடரவத்தாற்கும்-
அச்ப்ருஷ்ட சம்சார கந்தரான நித்ய ஸூ ரிகளுக்கும் மற்றும் எல்லாருக்கும் நிர்வாஹகரான தேவர்களாம் படி யான பெருமையை யுடையவர்கள் என்றுமாம்
அன்றிக்கே
மால் வண்ணன் -இத்யாதி
மாமேகம் சரணம் வ்ரஜ -என்கிறபடியே கறுத்த  நிறத்தை யுடையனான கிருஷ்ணனுடைய திருவடித் தாமரைகளிலே
செவ்விப் பூக்களைப் பணி மாறித் தங்கள் தலைச் சுமையை அங்கே வைத்து ஆஸ்ரயித்து
அவன் திருவடிகளை அடைவோம் என்னுமவர்கள் என்றுமாம்
தாள் தாமரை அடைவோம் -என்று தமராவார் தாமரை மேலாற்கும் ஆடரவத்தாற்கும் அமரர்க்கும் இத் யந்வய

————————————————————————–

கர்ப்பாவஸ்தையே தொடங்கிசர்வ காலத்திலும் ரஷித்துக் கொண்டு போருகையாலே
சர்வேஸ்வரனை-நான் ஒரு நாளும் மறந்து அறியேன் -என்கிறார் –

என்றும் மறந்தறியேன் என்நெஞ்சத்தே வைத்து
நின்றும் இருந்தும் நெடுமாலை -என்றும்
திரு இருந்த மார்பன் சிரீதரனுக்கு ஆளாய்
கருவிருந்த நாள் முதலாக் காப்பு-92-

பதவுரை

கரு இருந்த நாள் முதலா–(நான்) கர்ப்பத்திலிருந்த நாள் தொடங்கி
காப்பு–(எம்பெருமானாலே) ரக்ஷை பெற்றவனாகையாலே
திரு என்றும் இருந்த மார்வன் சிரீதரனுக்கு–பிராட்டி நித்யவாஸம் பண்ணப்பெற்ற திருமார்வை யுடைய அந்தத்திருமாலுக்கு
ஆள் ஆய்–ஆட்பட்டவனாய்
நெடு மாலை–(அந்த) ஸர்வேச்வரனை
என் நெஞ்சத்து–என்னுடைய ஹ்ருதயத்திலே
வைத்து–ஸ்தாபித்து
நின்றும் இருந்தும் என்றும்–நிற்றல் இருத்தல் முதலிய எல்லா நிலைமைகளிலும்
மறந்தறியேன்–மறவாமல் (அவனையே) சிந்திப்பவனா யிருக்கின்றேன்.

என்றும் மறந்து அறியேன் -இத்யாதி
ஒரு நாளும் மறந்து அறியேன் -என்னுடைய ஹிருதயத்திலே வைத்து நின்ற போதும் இருந்த போதும் சர்வேஸ்வரனை –
என்றும் இத்யாதி
என்றும் பெரிய பிராட்டியார் நிரந்தர வாசம் பண்ணுகிற திரு மார்வை யுடையவன் ஆகையாலே-ஸ்ரீ தரன் என்று திரு நாமத்தை யுடையவனுக்கு அடிமையாய்
கர்ப்பத்திலே இருந்த நாள் தொடக்கமாக அவனுடைய ரஷை –
கருவிருந்த நாள் முதலாக் காப்பு -அவனாகையாலே என்றும்
திருவிருந்த மார்பன் சிரீதனுக்கு ஆளாகவும் பெற்று-வ்யாமுக்தனானவனை என் நெஞ்சிலே வைத்தேன்
என்றும் ஒக்க நின்ற போதொடு இருந்த போதொடு வாசி இன்றிக்கே மறந்து அறியேன் -என்கிறார்-

————————————————————————–

சேதனராய் இருப்பார் -சர்வ சேஷியாய்-குணாதிகனான உன்னை விடத் துணியார் -என்கிறார்  –

காப்பு மறந்தறியேன் கண்ணனே என்று இருப்பன்
ஆப்பு ஆங்கு ஒழியவும் பல் உயிர் க்கும் –ஆக்கை
கொடுத்தளித்த கோனே குணப்பரனே உன்னை
விடத் துணியார் மெய் தெளிந்தார் தாம்-93-

பதவுரை

அங்கு–அந்தப் பிரளய காலத்தில்
பல் உயிர்க்கும்–எல்லா ஆத்மாக்களுக்கும்
ஆப்பு ஒழியவும்–சரீரங்கள் அழிந்து போயிருந்தாலும் (மறுபடியும்)
ஆக்கை கொடுத்து–சரீரங்களைக் கொடுத்து
அளித்த–அருள்செய்த
கோனே–ஸ்வாமிந்!
காப்பு–(நீ செய்தருளும்) ரக்ஷைணை
மறந்தறியேன்–ஒருநாளும் மறக்கமாட்டேன்
கண்ணனே என்று இருப்பன்–எல்லாம் கண்ணனே என்று உறுதிகொண்டிருப்பேன்
குணம்–திருக்குணங்களினால்
பரனே–சிறந்த பெருமானே!
மெய் தெளிந்தார் தாம்–உள்ளபடி (ஸ்வரூபத்தைத்) தெளிவாக அறிந்தவர்கள்
உன்னைவிட துணியார்–உன்னை விட மாட்டார்கள்.

காப்பு -இத்யாதி –
கண்ணனே காப்பு மறந்து அறியேன் –
இவ்வாத்மாவுக்கு என்றும் உன்னுடைய ரஷையை மறந்து அறியேன் –
கிருஷ்ணனே ப்ராப்ய ப்ராபகன் என்று இருப்பேன் -என்றுமாம் –
ஆப்பங்கு ஒழியவும் –
சரீரம் அழிந்து போகவும்
பல்லுயிர் -இத்யாதி –
சகல ஆத்மாக்களுக்கும் உன்னை அறிகைக்கு ஈடான சரீரங்களைக் கொடுத்து ரஷித்த சர்வேஸ்வரனே-குணங்களால் மிக்கு உள்ளவனே –
இத்தேக ஸ்வ பாவத்தை அறிந்தார்கள் உன்னை விட அத்யவசியார்
இப்படி ரஷிக்கைக்கு உறுப்பான ஸ்வா பாவிகமான சேஷ சேஷி பாவ சம்பந்தத்தை உடையவன் -என்று-
இஸ் சம்பந்தத்தை மெய்யாக அறிந்தார் உன்னை விடத் துணியார் -என்றுமாம் –

————————————————————————–

அத்யந்த ஹேயனே யாகிலும் என்னை விஷயீ கரித்து அருள வேணும் –
என்னில் தண்ணியாரையும் -யதி வா ராவணஸ் வயம் -யுத்த -18-33-என்னும்படியாலே
வஸ்து ஸ்தியையை அழகிதாக அறியுமவர்கள்   விஷயீ கரிப்பர் -என்கிறார்-

மெய் தெளிந்தார் என் செய்யார் வேறானார் நீறாக
கை தெளிந்து காட்டிக் களப்படுத்து -பை தெளித்த
பாம்பின் அணையாய் அருளாய் அடியேற்கு
வேம்பும் கறியாகும் என்று-94-

பதவுரை

வேறு ஆனார்–வேறுபட்டவர்களான (பகைவர்களான) துரியோதநாதிகள்
நீறு ஆக–சாம்பலாய் ஒழிந்து போம்படியாக
தெளிந்து–(ஆச்ரித விரோதிகளைக் கொல்லுதல் தருமமே என்று) தேறி
தெளிந்த பை பாம்பு இன்அணையாய்–விளங்குகின்ற படங்களை யுடைய ஆதிசேஷனாகிற இனிமையான படுக்கையைச் சென்று சேர்ந்த பிரானே!
அடியேற்கு–அடியேனுக்கு
அருளாய்–அருள் புரிய வேணும்
என்று–வேணுமென்று விரும்பினால்
கைகாட்டி–(பாண்டவர்களுக்கு) வேண்டிய உதவிகளைச் செய்து
களம படுத்து–(அந்த எதிரிகளைப் போர்களத்தில் கொன்றொழித்து) (இவ்வகையாலே மண்ணின் பாரம் நீக்கி)
வேம்பும் கறி ஆகும்–வேப்பிலையும் கறியாகச் சமைத்துக் கொள்ள கூடியதே
மெய் தெளிந்தார்–உள்ளதை உள்ளபடியறியுமவர்கள்
என் செய்யார்–எதுதான் செய்யமுடியாதவர்கள் (எது நினைத்தாலும் செய்யக்கூடியவர்களே)

மெய் இத்யாதி –
மெய்யாக அறிந்தவர்கள் என் செய்வார் –
பாரத சமரத்தில் அனுகூலர் அல்லாதார் துளியாய் போம்படி கையும் அணியும் வகுத்து எதிரிகள் மர்மங்களைக் காட்டி
யுத்த பூமியிலே கொன்று விழ விட்டுப் பின்னைப் படுக்கையிலே சாய்ந்தவனே –
பர ஹிம்சை என்று கலங்காதே ஆஸ்ரயித்தவர்களுக்கு விரோதிகள் ஆகையாலே திரு உள்ளம் தெளிந்து
அணி வகுத்து-ஆஸ்ரித விரோதிகளை அழியச் செய்து கை ஒழிகையாலே-
ஸ்வ ஸ்பர்சத்தாலே குளிர்ந்த பணங்களை யுடைய-திரு வநந்த ஆழ்வான் ஆகிற படுக்கையில் கரைச்சல் அற்றுக் கண் வளர்ந்து அருளுகிறவனே
அத்யந்த ஹேயனாய் அநந்ய கதியான   எனக்கு கிருபை பண்ணி அருள வேண்டும் –
அருளாய் அடியேற்கு –
அவர்கள் தக்க ஐவர் -நீர் ஹேயர் அன்றோ -என்னில்
ஹேயரையும் ஏறிட்டுக் கொண்டால் ரஷிக்கலாம்-கறியாக கொள்ள வேணும்  என்று அபிமானிக்க விரசமான வேம்பும் கறியானாப் போலே
வஸ்து ஸ்திதி அறிவார் எவ்வளவு செய்யார்கள் –
கிமத்ர சித்ரம் தர்மஜ்ஞ-யுத்த -18-36-இதிவத்
பை தெளிந்த என்கிற இடத்தில் தெளிவால் குளிர்த்தியை நினைக்கிறது  –

————————————————————————–

எம்பெருமானை ஆஸ்ரயித்துத் தமக்குப் பிறந்த பௌஷ்கலயத்தை யருளிச் செய்கிறார்-

ஏன்றேன் அடிமை இழிந்தேன் பிறப்பு இடும்பை
ஆன்றேன் அமரர்க்கு அமராமை –ஆன்றேன்
கடனாடும் மண்ணாடும் கை விட்டு மேலை
இடநாடு காண வினி–95-

பதவுரை

அடிமை–அடிமையை
என்றேன்–ஏற்றுக் கொண்டேன்
பிறப்பு இடும்பை–ஸம்ஸார துக்கங்களில் நின்றும்
இழிந்தேன்–நீங்கினேன்
அமரர்க்கு–பிரமன் முதலிய தேவர்களுக்கும்
அமராமை–என் அருகு நாடாவெண்ணாதபடி
ஆன்றேன்–(ஞானம் பக்தி முதலிய வற்றால்) நிரம்பினேன்
கடன்நாடும்–ஸ்வர்க்கம் முதலிய லோகங்களையும்
மண் நாடும்–இப் பூலோகத்தையும்
கை விட்டு–உபேக்ஷித்து
மேலே–எல்லாவற்றுக்கும் மேற்பட்டுள்ளதாய்
இடம்–(அடியார்கள் குழாங்களுக்குத் தகுதியாக) இட முடைத்தான்
நாடு–திருநாட்டை
காண–கண்டு அநுபவிக்கலாம்படி
இனி–இப்போது
ஆன்றேன்–(பரம பக்தி) நிரம்பப் பெற்றேன்

ஏன்றேன் -இத்யாதி
அடிமை என்றால் மருந்து போலே இராதே அதிலே பொருந்தினேன் –
இழிந்தேன் பிறப்பு இடும்பை –
அடிமைக்கு விரோதியாய் சாம்சாரிகமான அஹங்கார மமகாரங்கள் ஆகிற துக்கரூப பர்வதத்தில் நின்றும் இழிந்தேன் –
அமரர்க்கு அமராமை –
ப்ரஹ்மாதிகளுக்கும் என்னைக் கண்டால் கலங்க வேண்டும்படி ஞான பக்திகளால் பரிபூர்ணன் ஆனேன்
ஆன்றேன் -இத்யாதி
அதுக்கு மேலே புண்ய பலங்களை பூசிக்கும் ஸ்வர்க்காதி லோகங்களையும்
புண்யார் ஜனம்   பண்ணும் விபூதியையும் உபேஷித்து
விஸ்வதே ப்ருஷ்டேஷூ சர்வத ப்ருஷ்டேஷூ என்னும்படி
இடமுடைத்தான ஸ்ரீ வைகுண்டம் காணலாம்படி இப்போது பரபக்தி யுக்தன் ஆனேன்-

————————————————————————–

சர்வேஸ்வரன் என்னும் இடம் இப்போது அறிந்தேன் -என்கிறார் –
சர்வ ஸ்மாத் பரன் எம்பெருமானே என்று பத்ராலம்பனம் பண்ணத் தொடங்கினாப் போலே  முடிக்கிறார்-

இனி அறிந்தேன் ஈசற்க்கும் நான்முகற்கும் தெய்வம்
இனி அறிந்தேன் எம்பெருமான் உன்னை -இனி அறிந்தேன்
காரணன் நீ கற்றவை நீ கற்பவை நீ நற்கிரிசை
நாரணன் நீ நன்கு அறிந்தேன் நான் –96-

பதவுரை

எம்பெருமான்–எம்பெருமானே!
உன்னை–உன்னை
ஈசற்கும்–ருத்ரனுக்கும்
நான் முகற்கும்–பிரமனுக்கும்
தெய்வம்–தெய்வமாக
இனி அறிந்தேன் இனி அறிந்தேன்–இப்போது திடமாகத் தெரிந்து கொண்டேன்
காரணன் நீ–ஸகல ஜகத்துக்கும் காரண பூதன் நீ
கற்றவை நீ–இதற்கு முன்பு அறியப்பட்ட பொருள்களெல்லாம் நீ
கற்பவை நீ–இனிமேலறியப்படும் பொருள்களும் நீ (என்கிற இதனையும்)
நல் கிரிசை–நிர்ஹேதுகரக்ஷண மாகிற நல்ல வ்யாபாரத்தை யுடையனான
நாரணன் நீ–நாராயணன் நீ
நான் நன்கு அறிந்தேன்–நான் நன்றாகத் தெரிந்து கொண்டேன்

இனி -இத்யாதி
ப்ரஹ்ம ருத்ராதிகளுக்குத் தெய்வம் நீயே என்னும் இடம் இப்போது அறிந்தேன்
இனி -இத்யாதி
என்னுடைய நாதனான யுன்னை –
அவர்களுக்கு நிர்வாஹகனான மாத்ரம் அன்றிக்கே உன்னுடைய அளவெல்லாம் இப்போது அறிந்தேன்
இனி இத்யாதி
இப்போது அறிந்தேன்
சர்வ காரணமும் நீயே
பிறர் வாழ்வும்-வாழ்வாகிற நல்ல கிரியையும் உடையையாய்
சகல பதார்த்தங்களை யுடையையாய் -இருக்கிறாயும் நீயே –
நன்கு அறிந்தேன் நான் -நான் அழகிதாக அறிந்தேன் –

ஏன்றேன் இத்யாதி –
இத்தால் –
1-ப்ராப்யமான  கைங்கர்யத்தில் தமக்கு அளவிறந்த  சாரஸ்யம் விளைந்த படியையும்
2-அதுக்கு  விரோதியான  அஹங்கார மமகார ரூப துக்க சம்பந்தம் விட்டு நீங்கின படியையும்
3-அடிமைக்கு அடைவில்லாத சம்சாரத்தில் தமக்கு யுண்டான விரக்தியையும்
4-அடிமைக்கு ஏகாந்தமான பரமபதத்தில் புக்கு அல்லது தரிப்பது அரிதாம்படிபரமபக்தி பிறந்தபடியையும்
5-இப்படி இருக்கிற நம் அதிகார பரிதியைக் கண்டு ப்ரஹ்மாதிகள் தொடை   நடுங்கித்
தம்  கண் வட்டத்தில் வந்து கிட்ட மாட்டாமல் கிடக்கப் போம்படியான தம்முடைய வேண்டற்பாட்டையும்
அருளிச் செய்தார் ஆய்த்து-

இனி அறிந்தேன் இத்யாதி –
மஹா உபநிஷத் பிரக்ரியையாலே-ப்ரஹ்ம ருத்ராதிகள் தொடக்கமான சகல பிரபஞ்சத்துக்கும்
காரண பூதனான நாராயணனே  சர்வ ஸ்மாத் பரன் என்று
பிரதமத்தில் பிரதிஜ்ஞை பண்ணி ஸ்ருதி ஸ்ம்ருதி யுப ப்ரஹ்மணங்களாலும்
அனந்யதா சித்தமான ஸ்ரீ யபதித்வாதி சின்னங்களாலும் நெடுக உபபாதித்துக் கொண்டு போந்து-
அடியில் பண்ணின பிரதிஜ்ஞ அநு குணமாக அவனுடைய பரத்வத்தை தலைக் கட்டுகிறார் –
இனி யறிந்தேன் -இத்யாதி -யால்-

———————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் -திருமழிசை ஆழ்வார் அருளிய நான்முகன் திருவந்தாதி -73-84—-

February 1, 2015

அவன் அருளிச் செய்த அர்த்தம் ப்ரஹ்மாதிகளுக்கும் நிலம் அன்று –
வேறே சிலர் அறிகைக்கு உபாயம் உண்டோ -என்கிறார்-

ஆரே அறிவார் அனைத்துலகும் உண்டு உமிழ்ந்த
பேராழியான் தன் பெருமையை -கார் செறிந்த
கண்டத்தான் எண் கண்ணான் காணான் அவன் வைத்த
பண்டைத் தானத்தின் பதி–73-

பதவுரை

அனைத்து உலகும்–எல்லா வுலகங்களையும்
உண்டு உமிழ்ந்த–(பிரளயத்தில்) உண்பதும் (பிறகு) உமிழ்வதும் செய்தவனும்
பேர் ஆழியான் தன்–பெருமை தங்கிய திருவாழி யாழ்வானைத் திருக்கையிலுயைவனுமான எம்பெருமானுடைய
பெருமையை–மஹிமையை
அறிவார் ஆரே–அறியக் கூடியவர் யார்? (ஒருவருமில்லை)
அவன் வைத்த–அப்பெருமான் (முன்பே) ஸாதித்து வைத்த
பண்டைத் தானத்தின் பதி–பரமபத மார்க்க மென்னத் தகுந்த சரம ச்லோகத்தை
கார் செறிந்த கண்டத்தான்–நீலகண்டனான சிவனும்
எண் கண்ணான்–நான் முகனும்
காணான்–அறியமாட்டார்கள்.
(அவர்களே அறிய மாட்டாத போது மற்ற பேர்கள் அறிய மாட்டார்களென்பது சொல்ல வேணுமோ?)

சர்வ லோகத்தையும் யுண்பது உமிழ்வதாய் பிரதிகூல  நிரசனத்துக்கு உறுப்பான திரு வாழியை யுடையவன் –
உபாயாந்தரங்களை யருளிச் செய்யாதே தன்னையே யுபாயமாகச் சொன்ன மஹா குணத்தை யறிய வல்லார் யார் –
கறுத்த கண்டத்தை யுடைய ரூத்ரனோடு கூடின எட்டுக் கண்களை யுடைய ப்ரஹ்மாவும் அறிய மாட்டான் –
அவன் இத்யாதி –
பண்டு ஸ்ரீ கீதையில் அருளிச் செய்தபடி தான் எழுந்து அருளி இருக்கும் தேசத்தையும் கூட -அதாகிறது –திரு நாடு -என்றுமாம்
பேராழியான்-
கையும் திரு ஆழியுமான ஸ்ரீ கிருஷ்ணன்
அவன் வைத்த பண்டைத் தானத்தின் பதி –
அவன் பழையதாக வைத்த பிரதிஷ்டை இருக்கும் இடம் –அதாவது உத்தம -சரம -ஸ்லோகம் –

————————————————————————–

தன்னையே யுபாயமாகப் பற்றினாரை ரஷிக்கும் என்னும் இடத்தை  ஸ நிதர்சனமாக அருளிச் செய்கிறார் –
தான் உத்தம ஸ்லோகத்தை அனுஷ்டிக் காட்டின படியை அருளிச் செய்கிறார் -என்கிறார் ஆகவுமாம்-

பதிப்பகைஞற்கு ஆற்றாது பாய் திரை நீர்ப் பாழி
மதித்தடைந்த வாளரவம் தன்னை -மதித்தவன் தன்
வல்லாகத் தேற்றிய மா மேனி மாயவனை
அல்லாது ஓன்று ஏத்தாது என் நா-74-

பதவுரை

பதி பகைஞற்கு ஆற்றாது–ஸஹஜ சத்ருவான பெரிய திருவடிக்கு அஞ்சி,
பாய் திரை நீர்பாழி–பாம்பின அலைகளோடே கூடின நீரை யுடைத்தான கடல் போலே குளிர்ந்த திருப் படுக்கையை
மதித்து–புகலிடமாக நம்பி
அடைந்த–வந்து பற்றின
வாள் அரவம் தன்னை–ஒளி பொருந்திய ஸர்ப்பமாகிய ஸுமுகனை
மதித்து–ஆதரித்து
அவன் தன்–அந்த (சத்ருவான) கருடனுடைய
வல் ஆகத்து ஏற்றிய–வலிமை தங்கிய சரீரத்திலே ஏற விட்டவனும்
மாமேனி மாயவனை அல்லாது–சிறந்த திவ்ய மங்கள விக்ரஹத்தை யுடையவனுமான ஸர்வேச்சரனை யன்றி
ஒன்று வேறொன்றை
என் நா–எனது நாவானது
ஏத்தாது–தோத்திரம் செய்யாது.

குல சத்ருவாய் இருக்கிற பெரிய திருவடிக்கு ஆற்றாதே –
குளிர்ந்து இருந்துள்ள திருப்படுக்கையிலே எழுந்து அருளி இருக்கிற எம்பெருமான் தன்னையே இத்தசைக்கு அபாஸ்ரயம் என்று நினைத்து அடைந்து
அவனை அபாஸ்ரயமாகப் பெற்ற ப்ரீதியாலே ஒளியை யுடைத்தான ஸூமுகனான பாம்பை அங்கீ கரித்து-திரு மார்விற்கு ஆபரணமாக கொடுப்பதும் செய்து
ஸ்லாக்கியமான திரு நிறத்தை யுடையனாய் ஆச்சர்ய பூதனான அவனை அல்லது வேறு ஒருத்தரை என் நாவானது ஏத்தாது

பதிப் பகைஞற்கு
ஜ்ஞாதியாய்ப் பகைவன் ஆனவனுக்கு
பாய்திரை நீர்ப்பாழி
கடல் போலே பரந்த படுக்கை -என்றுமாம்
மதித்து
பெரிய திருவடி பக்கலிலே காட்டிக் கொடுக்கையே கார்யம் என்று அத்யவசித்து -என்றுமாம்
வல்லாகம் –
சத்ருவே யாகிலும் சரணம் என்றாற்கு நிர் பயமாய் இருக்கலான திரு யுடம்பிலே ஏற்றிய
வத்யதாம் -யுத்த -17-29-என்ற  மஹா ராஜரைக் கொண்டே ஸ்ரீ விபீஷண ஆழ்வானை ரஷித்தால் போலே –
மா மேனி மாயவனை –
இவனை ரஷிக்கப் பெற்றோம் என்று பூரித்த திருவுடம்பை உடையனாய் –
ரஷண யுபாயத்தை யுணர்ந்த ஆச்சர்ய பூதனானவனை ஒழிய ஆஸ்ரிதர் ஆனவர்களைக் கை கழிய விட்டுக்-கடக்க நிற்கக் கடவ
ருத்ராதிகளான வேறு ஒரு சூத்திர தேவதையை -என்னுடைய நாவானது புகழாது-

————————————————————————–

ஏவம்விதமான எம்பெருமானை அல்லது என் நாவால் ஏத்தேன் -என்கிறார்-

நாக்கொண்டு மானிடம் பாடேன் நலமாகத்
தீக்கொண்ட செஞ்சடையான் பின் சென்று -என்றும் பூக் கொண்டு
வல்லவாறு ஏத்த மகிழாத வைகுந்தச்
செல்வனார் சேவடி மேல் பாட்டு -75-

பதவுரை

தீக் கொண்ட செம் சடையான்–நெருப்புப் போலே சிவந்த சடையை யுடையனான ருத்ரன்
நலம் ஆக–தகுதியாக
என்றும்–எந்நாளும்
பூ கொண்டு–புஷ்பங்களைக் கையிற்கொண்டு
பின் சென்று–அநுஸித்து
வல்ல ஆறு–தன் சக்தியுள்ள வளவும்
ஏத்த–துதிக்க
மகிழாத–(இதைத் தனக்கொரு பெருமையாக நினைத்து) மேனாணிப்புக் கொள்ளாத
வைகுந்தம் செல்வனார்–ஸ்ரீவைகுண்ட நாதனுடைய
சே அடி மேல் பாட்டு–திருவடிகளுக்கு உரிய பாசுரங்களை (ச் சொல்ல வல்ல)
நாக் கொண்டு–நாவினால்
மானிடம்–மனிதர்களை
பாடேன்–பாட மாட்டேன்

நா இத்யாதி
என்னுடைய நாவாலே மனுஷ்யரைப் பாடேன்
நலமாக இத்யாதி –
நெருப்புப் போலே சிவந்த ஜடையை யுடைய ருத்ரன்-
துர்மானத்தைப் பொகட்டு தானே எழு ந்து அருளி இருக்கிற விடத்திலே சென்று
அங்குத்தை சௌகுமார்யத்துக்கு அனுரூபமான செவ்விய பூக்களை
என்றும் தன்னுடைய சர்வ சக்தியையும் கொண்டு அழகிதாக வைத்த திருவடிகளிலே பணி மாறிக் கொண்டு  –
மகிழாத -இத்யாதி
இத்தால் முன்புத்தையில் காட்டில் ஒரு வாசி பிறவாத பொலிவுடையனான ஸ்ரீ வைகுண்ட நாதனுக்குத் தகுதியான பாட்டை
பாடக் கடவனாகக் கொண்டு மானிடம் பாடேன் -இத் அந்வய-

————————————————————————–

லோகத்தில் வாச்ய வாசக கோடிகள் அடைய அவனுடைய சங்கல்பத்தாலே யுண்டாய்த்து என்று-
அவனையே தாம் கவி பாடுகைக்கு அடியான  அவனுடைய வேண்டற்பாடு சொல்லுகிறார் –

பாட்டும் முறையும் படுகதையும் பல் பொருளும்
ஈட்டிய தீயும் இரு விசும்பும் -கேட்ட
மனுவும் சுருதி மறை நான்கும் மாயன்
தனமாயையில் பட்டதற்பு-76-

பதவுரை

பாட்டும் முறையும்–இயலும் இசையும்
படு கதையும்–பழைய சரிதங்களைக் கூறவந்த இதிஹாஸங்களும்
பல் பொருளும்–பல அர்த்தங்களை யறிவிக்கிற புராணங்களும்
ஈட்டிய தீயும்–(பஞ்சீகரணத்தாலே பலகுணங்களும் தன்னிலே அமையும்படி) சேர்க்கப்பட்ட அக்நியும்
இரு விசும்பும்–பரந்த ஆகாசமும் (முதலான பஞ்ச பூதங்களும்)
கேட்ட மனுவும்–வேதத்திலும் ஓதப்பட்ட மநு மஹர்ஷியின் தர்ம சாஸ்த்ரமும்
கருதி–அநாதியாக உச்சாரண அநூச்சாரண ச்ரமத்தாலே ஓதப்பட்டு வருகிற
மறை நான்கும்–நான்கு வேதங்களும் (ஆகிய இவை யெல்லாம்)
மாயன் தன்–ஆச்சர்ய சக்தியுத்தனான எம்பெருமானுடைய
மாயையில் பட்ட–ஸங்கல்பத்தினாலுண்டான
தற்பு–தத்துவங்களாம்.

பாட்டு -இத்யாதி –
பாட்டுக்களும் அவற்றுக்கு வ்யக்தமான ரூபமானவையும் –
இசையும் இயலும் என்னவுமாம் –
படுகதை இத்யாதி
உத் க்ரந்தமாகச் சொல்லும் கதைகளும் -அவற்றின் யுடைய பஹூ விதமான பொருள்களும்
பாட்டும் –
கீர்த்தனமான இதிஹாசங்கள்-
பல்பொருளும்-
அவற்றுக்கு வ்யாக்யனாமான நாநாவான அவ்வர்த்தங்களைச் சொல்லுகிற புராணங்கள் என்றுமாம் –
ஈட்டிய தீயும் இரு விசும்பும்
ஒன்றிலே எல்லாம் யுண்டாம்படி பஞ்சீ கரணத்தாலே  சேர்க்கப் பட்ட அக்னியும்
பரப்பை யுடைத்தான ஆகாசமும்-இவை அண்ட காரணமான பூத பஞ்சகங்களுக்கும் உபலஷிதையான தேவாதி கார்ய லஷணங்களுக்கும் உப லஷணம்-
கேட்ட மனுவும் –
ஆப்த தமமாக ஜகத்து எல்லாம் கேட்டுப் போருகிற மனுவும்
சுருதி மறை நான்கும் –
ஓதி வருகிற நாலு வேதங்களும்
மாயன் –
ஆச்சர்ய பூதனானவனுடைய
தன மாயையில் பட்ட தற்பு-
தன்னுடைய சங்கல்ப்பத்திலே யுண்டான தத்தவத்தை யுடைத்து
தற்பு –
தத்த்வார்த்தம் –

————————————————————————–

என்னுடைய தோஷத்தையும் பாராதே எம்பெருமான் என் பக்கலிலே திரு உள்ளத்தை வைத்து அருளின பின்பு-
என்னுடைய சமஸ்த துக்கங்களும் போயிற்று -என்கிறார் –

தற்பென்னைத் தான் அறியா னேலும் தடங்கடலைக்
கற்கொண்டு தூர்த்த கடல் வண்ணன் -எற் கொண்ட
வெவ்வினையும் நீங்கா விலங்கா மனம் வைத்தான்
எவ்வினையும் மாய்மால் கண்டு-77-

தற்பு என்னை -இத்யாதி –
என்னுடைய தோஷத்தை உள்ளபடி நான் அறியேன் ஆகிலும்-பிராட்டி பக்கல் யுண்டான வ்யாமோஹ அதிசயத்தாலே
பெரிதான கடலைக் கல்லைக் கொண்டு தூர்ப்பதும் செய்து
ஸ்ரமஹரமான வடிவை யுடையவன் –
எற்கொண்ட-இத்யாதி
என்னை விஷயீ கரித்து சமஸ்த துக்கங்களும் போம்படி என் பக்கலிலே திரு உள்ளத்தை வைத்தான்-
ஏற்கொண்டு-என்ற பாடமான போது என்னைப் பற்றி நிற்கிற பாபங்கள் -என்றுமாம் –
எவ்வினையும் மாயுமால் கண்டு –
அவன் விஷயீ காரத்தைக் கண்டே பாபங்கள் எல்லாம் நசித்தன –
எவ்வினையும் மாயுமால் கண்டு இதி பாடம்
என்னுடைய உக்திகளை எல்லா சேஷ வ்ருத்திக்களுமாக அனுசந்தித்து –

————————————————————————–

உமை ஸ்மரிப்பித்த திரு நாமங்களை அனுசந்தித்து ருத்ரன் ஈடுபட்ட படி கண்டால்
அநந்ய பரராய் அவனை சாஷாத் கரித்தவர்கள் என் படுவார்களோ -என்கிறார் –
திரு நாமத்தைக் கேட்டால் இத்தனை விக்ருதி பிறக்கக் கடவதாய் இருக்க
நேரே சாஷாத்கரித்தால் எங்கனே விக்ருதி பிறக்குமோ -என்கிறார் ஆகவுமாம் –

கண்டு வணங்கினார்க்கு என்னாம் கொல் காமன் உடல்
கொண்ட தவத்தால் குமை உணர்த்த -வண்டலம்பும்
தார் அலங்கல் நீண் முடியான் தன் பேரே கேட்டு இருந்து அங்கு
ஆர் அலங்கல் ஆனமையால் ஆய்ந்து-78-

பதவுரை

காமன்–மன்மதனுடைய
உடல்–சரீரத்தை
கொண்ட–நீறாக்கின
தவத்தாற்கு–தபஸ்வியான பரம சிவனுக்கு
உமை–(மனைவியான) பார்வதி யானவள்
உணர்த்த–தெரிவிக்க,
அங்கு–அப்போதே
ஆர் அலங்கல் ஆனமை–மிகவும் அசைந்து போனமையை
ஆய்ந்தால்–ஆராய்ந்து பார்க்கில்,
வண்டு அலம்பும் தார் அலங்கல் நீள்முடியான தன் பெயர்கேட்டிருந்தே–வண்டுகள் ஒலிக்கப் பெற்ற பூமாலயை
நீண்ட திருவபிஷேகத்திலுடையனான எம்பெருமானுடைய திருநாமங்களைக் கேட்ட மாத்திரத்திலேயே
கண்டு வணங்கினார்க்கு–நேரே கண்டு வணங்குமவர்கட்கு
என் ஆம் கொல்–எப்படிப்பட்ட விகாரமுண்டாகுமோ (என்பது சொல்ல முடியாது)

கண்டு இத்யாதி –
அவனை சாஷாத் கரித்துத் திருவடிகளிலே வணங்கினவர்களுக்கு என்னாமோ
அபிமத விஷயத்தை கடிப்பித்த காம சரீரத்தை தஹித்துப் பொகட்ட தபஸ்வியான ருத்ரனுக்கு-மஹிஷியான உமா தேவி முறை மாறாடி யுணர்த்த –
வண்டலம்பும் -இத்யாதி
வண்டுகளானவை  தேன் வெள்ளத்திலே  கிடந்து அலையும்படி இருக்கிற பூந்தாரை உடைத்தான-திருத் துழாய் மாலையாலே
அலங்க்ருதமான-ஆதி ராஜ்ய ஸூ சகமான திரு அபிஷேகத்தை யுடைய எம்பெருமான் திரு நாமங்களைக்
கேட்டிருந்து -அவற்றுக்கு உள்ளீடான குணங்களை அனுசந்தித்து அத்தாலே புஷ்கலான படியால்-முடிந்து வாடின பூ மாலை போலே
பரவசனாய்த் துவண்டபடி கண்டான் -என்றுமாம் –

————————————————————————–

எம்பெருமானை ஹிருதயத்திலே வைத்தவர்கள் வ்யதிரிக்தங்களை எல்லாம் உபேஷித்து-
பரமபதத்தை காண்கையிலே அபி நிவேசியாய் நிற்பார்கள் -என்கிறார் 

ஆய்ந்து கொண்டு ஆதிப் பெருமானை அன்பினால்
வாய்ந்த மனத்திருத்த வல்லார்கள் -ஏய்ந்த தம்
மெய்குந்த மாக விரும்புவரே தாமுந்தம்
வைகுந்தம் காண்பார் விரைந்து-79-

பதவுரை

ஆதி–ஜகத் காரண பூதனான
பெருமானை–ஸர்வேச்வரனை
அன்பினால்–ப்ரேமத்துடன்
ஆய்ந்து கொண்டு–அநுஸந்தித்துக் கொண்டு
வாய்ந்த மனத்து–(தமது) பாங்கான நெஞ்சிலே
இருத்த வல்லார்கள் தாமும்–நிலை நிறுத்திக்கொள்ள சக்தரானவர்கள்
தம் வைகுந்தம்–தங்களுக்கென்று ஏற்பட்டுள்ள பரமபத்ததை
விரைந்து–சீக்கிரமாக
காண்பார்–காண விரும்பமுடையராய்
ஏய்ந்த–ஆத்மாவோடு செறிந்த
தம் மெய்–தங்களுடைய உடம்பை
குந்தம் ஆக–வியாதியாக
விரும்புவர்-எண்ணுவர்

ஆய்ந்து இத்யாதி –
சர்வேஸ்வரனை அனுசந்தித்து ச்நேஹத்தாலே பாங்கான ஹிருதயத்திலே இருத்த வல்லவர்கள் –
ஆதிப் பெருமானை –
உத்பாதகனான சர்வேஸ்வரனை –
ஏய்ந்த இத்யாதி –
இப்படி பிராப்ய ருசி பரிபூர்ணராய் இருக்கிற தாங்களும் ஆஸ்ரிதரான தங்களுக்கு என்றே கூறுபட்டு-
அவனை அனுபவிக்கைக்கு ஏகாந்தமான ஸ்ரீ வைகுண்டம் காண்கையில் யுண்டான விரைத்தலாலே பண்டு-
தேவோஹம் என்னும் படி தங்களோடு பிறிவற ச்நேஹித்து விட மாட்டாத உடம்பையும் வியாதியாக நினைப்பார் -என்கிறார்
குந்தமாக விரும்புவரே -நன்றாக நினையார் –
ஏய்ந்த -கூடி இருந்த
குந்தம் -வடுக பாஷையாலே வியாதி-
தம் வைகுந்தம் என்றது திருவடிகளிலே ஆஸ்ரயித்தவர்களேதாய்  இருக்கை என்று கருத்து –

————————————————————————–

லோகம் அடைய ஸ்ரீ வைஷ்ணவர்களேயாய் பாடி ஆடுவதும் செய்து -நரகத்தில் கதவுகளும் பிடுங்கிப் பொகட்டது  –
இனி எல்லாரும் அவனை ஆஸ்ரயியுங்கோள்-என்கிறார் –

விரைந்து அடைமின் மேலொருநாள் வெள்ளம் பரக்க
கரந்து உலகம் காத்து அளித்த கண்ணன் -பரந்து உலகம்
பாடின வாடின கேட்டு படு நரகம்
வீடின வாசற் கதவு-80-

பதவுரை

உலகம்–சிறந்த பாகவதர்கள்
பரந்து–எங்குத் திரிந்து
பாடின–பாடின பாடல்களையும்
ஆடின–ஆடின ஆட்டங்களையும்
கேட்டு–கேட்டதனால்
படு நரகம் வாசல்–க்ரூரமான நரகங்களின் வாசல்களிலிருந்த
கதவு–கதவுகள்
வீடின–விட்டொழிந்தன (நரக வாசல்கள் பாழாய்ப் போயின)
மேல் ஒருநாள்–முன்னொரு காலத்தில்
வெள்ளம் பரக்க–பிரளய வெள்ளம் பரவின போது
உலகம்–உலகங்களை யெல்லாம்
கரந்து–(திருவயிற்றில்) மறைத்து வைத்து
காத்து அளித்த-துன்பங்களைப் போக்கி ரக்ஷித்த
கண்ணன்–கண்ண பிரானை
விரைந்து அடைமின்–சீக்கிரமாகச் சென்று பணியுங்கோள்

விரைந்து இத்யாதி
ஈண்டென ஆஸ்ரயியுங்கோள் -என்கிறார் –
பண்டு ஒரு நாள் பிரளயமாகத் திரு வயிற்றிலே வைத்து லோகத்தைக் காத்து ரஷித்த கிருஷ்ணன் யுடைய லோகங்கள் ஆனவை பரந்து
திரு நாமங்களை பாடி யாடிற்றன –
பிறர் சொல்லக் கேட்டு பாதகமான நரகத்தில் வாசல் கதவுகள் பாதிர் இல்லாமையால் திறக்கவும் அடைக்கவும் தவிர்ந்தன –

————————————————————————–

நீ இப்படி என்னைக் கொண்டு கவி பாடுவித்துக் கொள்ளுகையாலே உன்னைக் காண முடியுமோ முடியாதோ-
என்னும் சந்தேஹம் தீர்ந்தேன் -என்கிறார் –

கதவு மனம் என்றும் காணலாம் என்றும்
குதையும் வினையாவி தீர்ந்தேன் -விதையாக
நற்றமிழை வித்தி என்னுள்ளத்தை நீ விளைத்தாய்
கற்ற மொழியாகிக் கலந்து –81-

நீ–(ஞானம் சக்தி முதலியவற்றால் குறைவற்றவனான) நீ
கற்ற மொழி ஆகி–நான் கற்ற சொற்களுக்குப் பொருளாக இருந்து கொண்டு
கலந்து–என்னோடு ஒரு நீராகக் கலந்து
நல் தமிழை–சிறந்த தமிழ்ப் பாஷையினாலாகிய இப்பிரபந்தத்தை
விதை ஆக வித்தி–(பக்தியாகிற பயிர்க்கு) விதையாக விதைத்து
என் உள்ளத்தை–எனது ஹ்ருதயத்தை
விளைத்தாய்–விளையும்படி க்ருஷி பண்ணினாய்
மனம்–மனமானது
கதவு என்றும்–எம்பெருமானை யடைவதற்குப் பிரதிபந்தகம் என்று (சில மையங்களில்) நினைத்தும்
(மனம்) காணல் ஆம் என்றும்–(மனமானது) எம்பெருமானைக் காண்பதற்கு உறுப்பாகும் என்று (சில சமயங்களில்) நினைத்தும்
குதையும் வினை ஆவி தீர்ந்தேன்–(ஆக விப்படி ஒரு நிலை நில்லாமல் மாறி மாறி) பிரமிப்பதையே தொழிலாக வுடைத்தான நெஞ்சைத் தவிர்த்தேன்.

கதவு இத்யாதி
மன ஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்த மோஷயோ -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-7-28-என்கிறபடியே-விஷயாந்தர பிரவணமான போது அவனை-
காண்கைக்கு கதவு போலே தகைவாய் பிரதிபந்தகமாய் இருக்கும்
மனஸ் என்றும்-காண்கை எளிதோ என்றும் துக்கப் படுகிற பொல்லாத சிந்தையைத் தவிர்ந்தேன்
விதையாக இத்யாதி
வித்தாக நல்ல தமிழை வித்தி என்னுடைய ஹ்ருதயத்தை-நினைத்தது தலைக் கட்ட வல்ல ஞான சக்தியாதிகள் குறைவற்ற நீ விளையப் பண்ணினாய்
அப்யசித்த சொல்லாய்க் கொண்டு வந்து -நான் அறிந்த தமிழ் பாஷைக்கு வாச்யனாய்க் கொண்டு வந்து புகுந்து-
நல்ல தமிழ் பாஷைக்கு வாச்யனாய்க் கொண்டு வந்து புகுந்து
நல்ல தமிழ் வித்தை யுண்டாக்கி என் ஹிருதயத்தை அழகிய கவி பாடுகைக்குப் பாங்காம் படி பண்ணினாய் –
எம்பெருமானைப் பெறுகைக்கு மனஸ் அவிரோதி என்றும் இதுவே பரிகரமாகக் காணலாமோ என்றும்-ஹ்ருதய துக்கம் எல்லாம் தீர்ந்தேன் -என்கிறார் –
குதை -அசைகை-
வினை -தொழில் –
ஆவி -என்று பிராண வாசி சப்தத்தாலே தத் ஆஸ்ரயமான மனசை லஷிக்கிறது
விதி -வித்து-

————————————————————————–

ப்ரஹ்மாதிகளும் அறிய ஒண்ணாத படி இருக்கிற சர்வேஸ்வரன் என்னுடைய ஹிருதயத்திலே வந்து புகுந்தான் –
இது போலே இருக்கும் நன்மை யுண்டோ -என்கிறார்-

கலந்தான் என்னுளளத்துக் காம வேள் தாதை
நலந்தானும் ஈது ஒப்பது உண்டே -அலர்ந்து அலர்கள்
இட்டேத்தும் ஈசனும் நான்முகனும் என்று இவர்கள்
விட்டு ஏத்த மாட்டாத வேந்து –82-

பதவுரை

காம வேள் தாதை–மன்மதனுக்குத் தந்தையானவனும்
அலர்ந்த அலர்கள் இட்டு ஏத்தும் ஈசனும்–மலர்ந்த பூக்களை ஸமர்ப்பித்துத் துதி செய்கின்ற சிவபிரானென்ன
வேந்து–தேவாதிதேவன்
என் உள்ளத்து–எனது நெஞ்சிலே
கலந்தான்–சேர்ந்து கொண்டான்
நான்முகனும்–பிரமனென்ன
என்ற இவர்கள்–என்கிற (சிறந்த) தேவர்களும்
விட்டு ஏத்த மாட்டாத–நன்றாய்த் துதித்து முடிக்க முடியாதவனுமான
ஈது ஒப்பது நலம் தானும் உண்டேர்–இந்த நன்மையோ டொத்த நன்மை வேறுண்டோ? (இல்லை)

கலந்தான் -இத்யாதி –
காமனுக்கும் கூட வழகுக்கு உத்பாதகனான எம்பெருமான் என்னுடைய ஹ்ருதயத்திலே கலந்தான் -இத்தோடு ஒக்கும் நன்மை யுண்டோ –
எனக்கு இத்தோடு ஒத்த நன்மை யுண்டோ -என்றுமாம் –
அலர்ந்த அலர்கள் -இத்யாதி
செவ்விப் பூக்களைக் கொண்டு ஆஸ்ரயித்து-வாயாலே ஸ்தோத்ரம் பண்ணக் கடவ ஈஸ்வர அபிமானிகளான சதுர்முகனும் ருத்ரனும் என்று 
இவர்கள் வாய் விட்டு ஏத்த மாட்டாத –
வேந்து-
லோகப் பிரசித்தரான இவர்கள் முழு மிடறு செய்து பரி பூரணமாய் புகழ மாட்டாத படியான ராஜாவானவன் –

————————————————————————–

ஆஸ்ரிதற்கு த்ருஷ்டத்தில்  சர்வ ரஷையும் பண்ணிப் பின்னையும் அதி வ்யாமுக்தனாய் ஒன்றும் செய்யப் பெற்றிலோம் என்று –
தரிக்க மாட்டாதே இருக்கும் -சரீரம் போனால் இவ்வாத்ம விஷயத்தில் இவன் என்றும் அளிக்கும் போகம் பேச்சுக்கு நிலம் அன்று என்கிறார்-

வேந்தராய் விண்ணவராய் விண்ணாகித் த்ண்ணளியாய்
மாந்தராய் மாதாய் மற்று எல்லாமாய் -சார்ந்தவர்க்குத்
தன்னாற்றான் நேமியான் மால் வண்ணன் தான் கொடுக்கும்
பின்னால் தான் செய்யும் பிதிர்–83-

பதவுரை

நேமியான்–திருவாழி யாழ்வானை யுடையவனும்
மால் வண்ணன்–வியாமோஹமே வடிவெடுத்தவனுமான எம்பெருமான்
சார்ந்தவர்க்கு–தன்னை யடைந்தவர்கள் விஷயத்தில்
வேந்தர் ஆய்–அரசர்கள் செய்யும் நன்மைகளைச் செய்யுமவனாய்
விண்ணவர் ஆய்–தேவர்கள் செய்யும் நன்மைகளைச் செய்யுமவனாய்
மாது ஆய்–தாய் செய்யும் நன்மைகளைச் செய்பவனாய்
மற்று எல்லாம் ஆய்–மற்றுமுள்ள எல்லா வகை நன்மைகளையும் செய்பவனாய் (எவ்வளவு நன்மைகள் செய்தாலும்)
ஆற்றான்–ஆறுதல் இல்லாதவனாய்க் கொண்டு (திருப்தி பெறாதவனாய்)
விண் ஆகி–ஸ்வர்க்க போகத்தைக் கொடுக்குமவனாய்
தண்ணளி ஆய்–அருள் செய்பவனாய்
மாந்தர் ஆய்–மனிசர்களான உறவினர் செய்யும் நன்மைகளைச் செய்பவனாய்
பின்னால்–இவ்வளவுக்கு மேலும்
தன் கொடுக்கும்–தன்னை (முற்றூட்டாகக் கொடுத்தருள்வன்
தான் செய்யும் பிதிர்–(இவை) எம்பெருமான் செய்யும் அதிசயங்களாம்

வேந்தராய் -இத்யாதி –
ராஜாக்களாய்-தேவர்களாய் -ஸ்வர்க்காதிகளாய்-அனுக்ரஹமாய்-
தண்ணளியாய் –
அங்குள்ள ஸூகமுமாய் -என்றுமாம்
பந்துவான மனுஷ்யராய் மாதாவாய் ஸ்த்ரியாதி களான மற்றும் எல்லாமாய்
சார்ந்தவர் -இத்யாதி –
பிரபன்னராய்க்   கொண்டு தன்னை ஆஸ்ரயித்தவர்களுக்கு-ருணம் ப்ரவ்ருத்தம் இவமே -பார உத்தியோக -58-21-என்னும்படி
எல்லாமானாலும் பின்னையும் ஒன்றும் செய்யப் பெறாதானாய் தரிக்க பெறாதவனாய்
பிரதிகூல நிரசன  ஸ்வ பாவமான திரு வாழியை யுடைய சர்வேஸ்வரன்
சரீர அவசநத்திலே வாசா மகோசரமான போகத்தை புஜிக்கக் கொடுக்கும்
ஆஸ்ரித விஷயத்தில் இன்னது செய்தது இன்னது செய்யாதது என்று விவேகிக்க மாட்டாத படி-
பிச்சுத்தான் ஒரு வடிவு கொண்டால் போலே நெஞ்சாறல் பட்டு இருக்கும் படி சொல்லுகிறது
யா கதிர் யஜ்ஞ  சீலா நாம்  -ஆரண்ய -68-30-என்றபடி கார்யார்த்தமாக தம்மை அழிய மாறின பெரிய யுடையாருக்குச் செய்வது அறியாமல்
அர்வாசீ ந போகத்தோடே பரம பத போகத்தோடே சர்வத்தையும் கொடுத்தார் இறே பெருமாள் –

————————————————————————–

ருத்ரனும் எம்பெருமானை ஆஸ்ரயிக்கும் இதுவே தொழிலாகப் பூண்ட என்னோடு ஒவ்வான் -என்கிறார்-

பிதிரும் மனம் இலேன் பிஞ்ஞகன் தன்னோடு
எதிர்வன் அவன் எனக்கு நேரான் -அதிரும்
கழற் கால மன்னனையே கண்ணனையே நாளும்
தொழும் காதல் பூண்டேன் தொழில் –84-

பதவுரை

அதிரும் கழல் கால–ஒலிக்கின்ற வீரக்கழலைத் திருவடிகளிலே அணிந்துள்ள
மன்னனை–ராஜாதிராஜனான
கண்ணனையே–கண்ண பிரானையே
நாளும்–எந்நாளும்
தொழ–தொழும் படியாக
காதல்–ஆசைப்படுவதையே
தொழில்–நித்ய கருமமாக
பூண்டேன்–ஏற்றுக் கொண்டிருக்கிற நான்
பிதிரும் மனம் இலேன்–(விஷயாந்தரங்களிற் புகுந்து) விகாரப்படும் நெஞ்சுடையேனல்லேன்
பிஞ்ஞகன் தன்னோடு எதிரவன்–(ஞானத்தில்) பரமசிவனோடு ஒத்திருப்பேன் (என்னலாமாயினும்)
அவன் எனக்கு நேரான்–அந்த ருத்ரன் (நித்ய தாஸனான) என்னோடு ஒவ்வான்.

பிதிரும் மனம் இலேன் –
இரண்டு பட்ட மனசை யுடையேன் அல்லேன் –
பிரயோஜனாந்தரம் கொண்டு விடும் மனசை யுடையேன் அல்லேன் -என்றபடி –
பிஜ்ஞகன் இத்யாதி
ஞானத்தில் ருத்ரன் தன்னோடு ஒப்பான்
அவ்வளவே அன்று -ஆசையில் அவன் என்னோடு ஒவ்வான் –
ஆஸ்ரித விரோதி நிரசன த்துக்கு வீரக் கழல் இடுவதும் செய்து அச் செயலாலே என்னை அடிமை கொண்ட
ஸ்ரீ கிருஷ்ணனை-என்றும் தொழுகைக்கு ஈடான காதலே தொழிலாக ஏறிட்டுக் கொண்டேன் –

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் -திருமழிசை ஆழ்வார் அருளிய நான்முகன் திருவந்தாதி -61-72—

February 1, 2015

எம்பெருமான் தானே வந்து விஷயீ கரிக்கும் ஐஸ்வர்யம் எனக்கே யுள்ளது என்கிறார்-

மனக்கேதம் சாரா மதுசூதன் தன்னை
தனக்கே தான் தஞ்சமாகக் கொள்ளில் -எனக்கே தான்
நின்று ஒன்றி நின்று உலகை ஏழ் ஆணைஓட்டினான்
சென்று ஒன்றி நின்ற திரு -61-

பதவுரை

மதுசூதன் தன்னை–மதுவென்னும் அசுரனைக் கொன்றொழித்த பெருமானை
மனம் கேதம்–மன வருத்தங்கள்
சாரா–வந்து சேராவாம்
ஒன்றி நின்று–பொருந்தி நின்று
ஏழ் உலகை–ஸப்த லோகங்களிலும்
ஆணை ஒட்டினான்–(தன்னுடைய) செங்கோலைச் செலுத்துமவனான) எம்பெருமான்
இன்று–இப்போது
தனக்கே தஞ்சம் ஆ தான் கொள்ளில்–தனக்கே ரக்ஷகனென்று ஒருவன் கொண்டால்
சென்று–(நிர்ஹேதுகமாக என்னிடம்) வந்து
ஒன்றி நின்ற திரு–(என்னிடத்தில்) பொருந்தி நிற்பதாகிய செல்வமானது
எனக்கே தான்–என்னொருவனுக்கொழிய வேறொருவற்குமில்லை.

மனக்கு இத்யாதி –
மனசுக்கு ஏதங்கள் சாரா -பிரதிகூல நிரசன  ஸ்வ பாவனான எம்பெருமானையே தனக்குத் தஞ்சமாக இச் சேதனன் இசையில்-
நிர்ஹேதுகமாக  தானே வந்து விஷயீ கரிக்கும்  –
எம்பெருமானை பொதுவாக நினையாதே எனக்குத் தஞ்சம் என்று தான் இசையில் அவனுக்கு மநோ துக்கங்கள் வாராது -என்றுமாம் –
இங்கனே இருக்க எனக்கே என்று லபித்தது –
சகல லோகங்களையும் தன சாசனத்திலே நடத்துகிற எம்பெருமான் தானே வந்து மேல் விழுந்து விஷயீ கரித்த ஐஸ்வர்யம் எனக்கே தான் –
எனக்கே தான் இன்று ஒன்றி –
மநோ வ்ருத்திக்கு அடியாக  ஏகாஸ்ரயனாக நின்று லோகங்கள் ஏழையும் சாசனத்திலே நடத்துகிற சர்வேஸ்வரன் –

——————————————————————

எம்பெருமானே  ரஷகனாக வல்லான்  என்று உணராதே தங்களோடு ஒத்த சம்சாரிகளை
ஈச்வரர்களாக பிறருக்கு-உபதேசியா நிற்பர்கள் -என்கிறார்-

திரு நின்ற பக்கம் திறவிது என்று ஓரார்
கரு நின்ற கல்லார்க்கு உரைப்பர் -திருவிருந்த
மார்பில் சிரீதரன் தன் வண்டுலவு தண்டுழாய்
தார் தன்னைச் சூடித் தரித்து–62-

பதவுரை

திரு இருந்த மார்வன்–பெரிய பிராட்டியார் எழுந்தருளியிருக்கப்பெற்ற திருமார்வை யுடையனாய் (அதனாலே)
சிரீதரன் தன்–‘ஸ்ரீதரன்‘ என்று திருநாமம் பெற்றவானான எம்பெருமானுடைய
வண்டு உலவு தண் துழாய் தார் தன்னை–வண்டுகளுலாவப் பெற்ற குளிர்ந்த திருத்துழாய் மாலையை
சூடி–தலைக்கு அலங்காரமாக அணிந்து
தரித்து–அதனால் ஸத்தை பெற்று,
திரு நின்ற பக்கம் திறவிது என்று ஓரார்–‘பிராட்டி பொருந்தி யிருக்கப் பெற்ற வலப் பக்கத்தை யுடைய
வஸ்துவே பரதத்துவம்!‘ என்று துணிந்தறிய மாட்டாதவர்கள்.
கரு நின்ற–(தங்களைப் போலே) கர்ப்ப வாஸம் பண்ணிப் பிறக்கின்ற சிலரை
கல்லாக்கு உரைப்பர்–(பரதெய்வமாக) மூடர்களுக்கு உபதேசிப்பர்கள்.

திரு நின்ற -இத்யாதி
பெரிய பிராட்டியார் நின்ற பஷம் வலிது என்று அனுசந்தியார்-நஷ்ட ஸ்ரீ கரான தங்களோடு ஒக்க -கர்ம வச்யராய் -கர்ம வாசம் பண்ணி –
சம்சரிக்கிற வற்றை உத்க்ருஷ்டமாக அறிவு கேடரைப் பார்த்து உபதேசியா நிற்பர்கள்
திரு விருந்த -இத்யாதி –
பெரிய பிராட்டியார் எழுந்து அருளித் திரு மார்விலே இருக்கையாலே ஸ்ரீ தரனனானவன் யுடையதாய்-வண்டுகள் இதஸ்தத சஞ்சரியா நின்றுள்ள
ஸ்ரமஹரமான திருத் துழாய் மாலையைச் சூடித் தரித்து –

————————————————————————–

நான் எம்பெருமானை ஆஸ்ரயித்து தத் ஏக தாரகனாய்க் கொண்டு போது போக்கினேன் -என்கிறார் –

தரித்து இருந்தேனாகவே தாரா கணப் போர்
விரித்துரைத்த வென்னாகத்துன்னை-தெரித்து எழுதி
வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும்
பூசித்தும் போக்கினேன் போது-63-

பதவுரை

தாராகணம்–நக்ஷத்ரகணங்களினுடைய
போர்–(சுபாசுப நிமித்தமான) ஸஞசாரத்தை
விரித்து உரைத்த–(ஜ்யோதிச்சாஸ்தர முகத்தாலே) விஸ்தாரமாக வெளியிட்டவனும்
வெம் நாகத்து உன்னை–(பிரதிகூலர்க்குத் தீக்ஷ்ணனுமான திருவனந் தாழ்வாரனுக்கு அந்தராத்மாவாகிய உன்னை
தெரித்து–அநுஸந்தித்தும்
எழுதி–எழுதியும்
வாசித்தும்–(எழுதினவற்றைப் படித்தும்)
கேட்டும்–(ஆங் காங்கு) ச்ரவணம் பண்ணியும்
வணங்கி–நமஸ்காரம்பண்ணியும்
வழிபட்டும்–உபசாரங்களைச் செய்தும்
பூசித்தும்–பூஜித்தும்
போது போக்கினேன்–காலத்தைக் கழத்துக் கொண்டிருக்கிறேன் (இப்படி செய்வது எதுக்காக வென்னில்)
தரித்திருந்தேன் ஆகவே–ஸத்தை பெறுவதற்காக

தரித்து இருந்தேன் ஆகவே –
ஆகையாலே நான் தரித்து இருந்தேன் –
நஷத்த்ரங்களின் யுடைய ஸூப அஸூ ப நிமித்தமான பரஸ்பர சஞ்சாரத்தை  ஆஸ்ரிதர் பக்கல் யுண்டான-
அனுக்ரஹ அதிசயத்தாலே ஜ்யோதிஸ் சாஸ்திர முகத்தாலே பரக்க அருளிச் செய்த-திரு வநந்த ஆழ்வானுக்கு அந்தராத்மாவான யுன்னை
போதாத் சங்கர்ஷண-அவன் மேல் கண் வளர்ந்து அருளுகிற உன்னை -என்றுமாம் –வென் நாகத்து   யுன்னை –
ஆஸ்ரித விரோதி நிரசன ஸ்வ பாவனை ஆஸ்ரித பஷபாதியான உன்னை –
தெரித்து -இத்யாதி –
அர்த்தத்தை நிர்ணயியா -அத்தை எழுதி வாசித்தும்-பிறர் சொல்லக் கேட்டும் திருவடிகளிலே நிர்மமனாய் வணங்கியும்-அதுவே ஸ்வ பாவமாம்படியும்
தத்தத் காலங்களிலே சமாராதானம் பண்ணியும் போது போக்கினேன்
தெரித்து -அனுசந்தித்து -என்றுமாம் –

————————————————————————–

அவர்களுக்கும் தம்மைப் போலே இனிதாகிறதாகக் கொண்டு அவனுடைய திரு நாமங்களைச் சொல்லுகை-
உறுவதான பின்பு எல்லாரும் அவனை ஆஸ்ரயியுங்கோள் என்கிறார்

போதான விட்டு இறைஞ்சி ஏத்துமினோ பொன் மகரக்
காதானை ஆதிப் பெருமானை –நாதானை
நல்லானை நாரணனை நம் ஏழ் பிறப்பு அறுக்கும்
சொல்லானை சொல்லுவதே சூது –64-

பதவுரை

பொன் மகரம் காதானை–அழகிய மகர குண்டலங்களைத் திருக்காதுகளில் அணிந்துள்ளவனும்
ஆதி–ஜகத் காரண பூதனும்
பெருமானை–பெருமை பொருந்தியவனும்
நாதனை–(அனைவர்க்கும்) நாதனாயிருப்பனும்
நல்லானை–(ஆச்ரிதர் பக்கல்) வாத்ஸல்ய முடையவனும்
நாரணனை–நாராயணனென்று ப்ரஸித்தி பெற்றவனும்
நம் ஏழ்பிறப்பு அறுக்கும் சொல்லானை–நம்முடைய ஜன்ம பரம்பரைகளை அறுக்க வல்ல திருநாமங்களை யுடையவனுமான ஸர்வேச்வரனைக் குறித்து
போது ஆன இட்டு இறைஞ்சி ஏத்துமின்–புஷ்பமென்று பேர் பெற்றவற்றை ஸமர்ப்பித்து வணங்கித் துதி செய்யுங்கள்
சொல்லுவதே–(அவனுடைய திருநாமங்களை வாயாரச்) சொல்லித் துதிப்பதே
சூது–நல்ல வாய்ப்பு

புஷ்பங்களை திருவடிகளிலே இட்டு ஏத்துங்கோள் –
கைக்கு எட்டிய பூக்களானவைகள் எல்லாவற்றையும் பணிமாறி நிர்மமரேத் திருவடிகளிலே விழுந்து புகழுங்கள் –
ஆஸ்ரயிப்பார்க்கு மேன்மேலே அபி நிவேசத்தைப் பிறப்பிக்கும் அழகை யுடையவனுமாய்  –
சர்வ காரணணுமாய்-எனக்கு நாதனுமாய் -ச்நேஹியுமாய் -ஆஸ்ரித வத்சலனுமாய் –
நம்முடைய சம்சாரத்தைப் போக்கித் தரும் நாமங்களை யுடையனானவனைச் சொல்லுமதுவே உறுவது –
சொன்ன குணங்கள் திரு நாமத்தினுடைய அர்த்தம் என்கிறார் –
சொல்லானை -சப்த மாதரம் –

————————————————————————–

ஸ்மர்தவ்யனான எம்பெருமானுடைய நீர்மையாலே பரமபத பிராப்திக்கு ஸ்மரண மாத்ரத்துக்கு அவ்வருகு வேண்டா என்கிறார்
அன்றிக்கே
பகவத் சமாஸ்ரயணம் நன்று என்று உபதேசிக்க வேண்டும்படியான சம்சாரத்தை ஒழிய
ஸ்ரீ வைகுண்டத்தில் எனக்கு இடம் இல்லையோ -என்கிறார் ஆகவுமாம்-

சூதாவது என்னெஞ்சத்து எண்ணினேன் சொன்மாலை
மாதாய மாலவனை மாதவனை –யாதானும்
வல்லவா சிந்தித்து இருப்பேற்கு வைகுந்தத்து
இல்லையோ சொல்லீர் இடம்–65-

பதவுரை

மாது ஆய–அழகுதான் ஒரு வடிவகொண்டாற்போலே யிருப்பனும்
மாலவனை–(ஆச்ரிதர் பக்கல்) வ்யாமோஹமுடையவனுமான
மாதவனை–திருமாலைக் குறித்து
சொல் மாலை–இச்சொல் தொடைகளை (சொல்லி)
யாதானும் வல்ல ஆ சிந்தித்து இருப்பேற்கு–ஏதோ சக்தியுள்ள வளவு அநுஸந்தித்திருக்கிற எனக்கு
வைகுந்தத்து இடம் இல்லையோ சொல்லீர்–ஸ்ரீவைகுண்டத்தில் இடம் இல்லையோ?
சொல்லீர்–சொல்லுங்கள்
சூது ஆவது–இதுவே நமக்கு நல்லவாய்ப்பு என்று
என் நெஞ்சத்து எண்ணினேன்–என்மனத்தில் உறுதி கொண்டேன்.

சூது இத்யாதி –
உறுவது என்னுடைய ஹ்ருதயத்திலே ஆராய்ந்தேன் –
சொல்மாலை இத்யாதி -அழகியனாய் ஸ்ரீ யபதியாய் ஆஸ்ரிதர் பக்கல்  வ்யாமுக்தனானவனை
ஏதேனும் சொல் மாலைகளை வல்ல வாசித்து இருக்கிற
எனக்கு பரமபதத்தில்  இடம் இல்லையோ -சொல்லிக் கொள் –
மாதென்று அழகாய் –மாதாய என்றது அழகு என்றும் -அழகுக்கு ஆஸ்ரயம் என்றும்
இரண்டு இன்றிக்கே அழகு தானே ஒரு வடிவு கொண்டால் போலே இருக்குமவன் -என்கை-
அன்றிக்கே
மாதாய மாதவனை என்றது -தாயைப் போலே பரிவான ஸ்ரீ யபதியை பக்த்யா
விவசனாய்ப் பேச ஷமன் அன்றிக்கே-சொல் மாலையாலே ஏதேனும் வல்ல பரிசு சிந்தித்து இருக்கிற எனக்கு-
அதுக்கு ஏகாந்தமான ஸ்ரீ வைகுண்டத்திலே இடம் இல்லையோ -சொல்லிக் கொள் –
இதுவே வாய்ப்பு என்று நெஞ்சிலே அத்யவசித்தேன் என்கிறார் -என்றுமாம் –
சொன்மாலை –
தம்முடைய திருவந்தாதி
மாதாய –
மாதாவாய்
மாயவனை என்று பாடமாய்
ஆச்சர்ய குண  சேஷ்டிதங்களை உடையவன் -என்றுமாம்-

————————————————————————–

நான் எம்பெருமானை ஒழிய வேறு ஒன்றை ஒரு சரக்காக மதியேன்
அவனும் என்னை யல்லது அறியான் -என்கிறார்-

இடமாவது என்நெஞ்சம் இன்றெல்லாம் பண்டு
பட நாகணை நெடிய மாற்கு -திடமாக
வையேன் மதி சூடி தன்னோடு அயனை நான்
வையேன் ஆட்செய்யேன் வலம்–66-

பதவுரை

பண்டு–என்னைத் திருத்திப் பணி கொள்வதற்கு முன்பு
படம் நாக அணை நெடிய மாற்கு–படங்களை யுடைய சேஷ சயனத்தில் பள்ளி கொண்டருள்பவனாயிருந்த ஸர்வேஸ்வரனுக்கு
இன்று–இப்போது முதலாக
எல்லாம்–மேலுள்ள காலமெல்லாம்
இடம் ஆவது–வாஸ ஸ்தானமாவது
என் நெஞ்சம்–எனது நெஞ்சமாகும்
மதி சூடி தன்னோடு–பிறைச் சந்திரனத் தலையிலே சூடியிருக்கிற ருத்ரனையும்
அயனை–பிரமனையும்
திடம் ஆக–பரம் பொருளாக
வையேன்–மனத்திற்கொள்ள மாட்டேன்
வையேன் நான்–(தத்துவமின்னதென்று கண்டறியத்தக்க) ஸூக்ஷ்ம புத்தியுடையேனான நான்
ஆள் செய்யேன்–(அந்த தேவதாந்தரங்களுக்குத்) தொண்டு செய்யவும் மாட்டேன்
(இப்படி நான் சொல்லுவதற்குக் காரணமென்னவெனில்)
வலம்–(திருமாலின் பரிக்ஹமாயிருக்கப் பெற்ற) மிடுக்கேயாம்.

இடம் இத்யாதி –
இப்போது எல்லாம் இடமாவது என்னுடைய ஹிருதயம்
தன்னோட்டை ஸ்பர்ச  ஸூகத்தாலே விகசிதமான பணங்களை யுடைய திரு வநந்த ஆழ்வானைப்
படுக்கையாக யுடைய சர்வாதிகனான சர்வேஸ்வரனுக்கு-
திடம் இத்யாதி –
கலா மாத்ரமான சந்த்ரனைத் தலையிலே  யுடையனான ருத்ரனோடே கூட ப்ரஹ்மாவை ஒரு சரக்காக மதியேன்  –
வையேன் ஆட்செய்யேன் –
வையேன் என்று கூரியேன் என்றுமாம்
செய்யேன் வலம் –
அனுகூல வ்ருத்திகளும் செய்யேன்-

————————————————————————–

நன்மை யாகிலுமாம் தீமை யாகிலுமாம் -இவற்றில் எனக்கு ஒரு நிர்பந்தம் இல்லை –
பஹூ குணனான எம்பெருமானுடைய திரு நாமங்களை ஏத்துகையே உத்தேச்யம் -என்கிறார் –

நான் வாக்காலே செய்கிற அடிமை குற்றமாய் முடிகிறது இ றே என்கிறார் ஆகவுமாம் –
இங்கனே  என்றது நன்மையே பண்ணும் என்று கருத்து-

வலமாக மாட்டாமை தானாக வைகல்
குலமாக குற்றம் தானாக -நலமாக
நாரணனை நா பதியை ஞானப் பெருமானைச்
சீரணனை ஏத்தும் திறம்-67-

பதவுரை

நாரணைனை–ஸ்ரீமந் நாராயணனாய்
நாபதியை–(என்னுடைய) நாவுக்கு ப்ரவர்த்தகனாய்
ஞானம் பெருமானை–அறிவிற்பெயரியவனாய்
வைகல் நலம் ஆக ஏத்தும் திறம்–எப்போதும் நன்றாகத் துதி செய்கையாகிற இந்த
வலம் ஆக–நன்மை தருவதாகிலுமாகுக
சீர்அணனை–நற் குணங்களை பொருந்தி யிருக்கப் பெற்றவனான ஸர்வேச்வரனை
மாட்டாமை தான் ஆக–நன்மை தர மாட்டாதாகிலுமாகுக,
குலம் ஆக–நற் குலத்தைத் தருவதாகிலுமாகுக
குற்றம் தான் ஆக–கெடுதலை யுண்டாக்குவதாகிலுமாகுக (எத்துவதை நான் தவிரமாட்டேன்)

வலம் இத்யாதி –
வலமாகிலும் ஆகிறது -பல ஹாநி யாகிலும் ஆகிறது
நாள் தோறும் ஆபிஜாத்யம் உண்டாகிலும் உண்டாகிறது –
அன்றியே குற்றமாயிடுக –
நலமாக நாரணனை -இத்யாதி –
சர்வேஸ்வரனாய் நாக்குக்குப் பதியாய் ஞான ஸ்வ ரூபனாய் குணங்களுக்கு ஆச்ரயமாய் இருக்கிறவனை ஏத்தும் பிரகாரம் –
அன்றிக்கே நாரணனை இத்யாதிக்கு
சர்வேஸ்வரனாய் என்னுடைய நாவுக்கு ப்ரவர்த்தகனாய் என்னை ரஷிக்கைக்கு உறுப்பான அறிவால்
மிக்கு இருக்கிற ஸ்ரீ தரனை என்று பொருளாகவுமாம் –

————————————————————————–

யமனும் கூட அஞ்ச வேண்டும்படியான திரு நாமத்தைச் சொன்ன ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய ராஜ குலத்தை அருளிச் செய்கிறார்

திறம்பேல்மின் கண்டீர் திருவடி தன நாமம்
மறந்தும் புறம் தொழா மாந்தரை -இறைஞ்சியும்
சாதுவராய் போதுமின்கள் என்றான் நமனும் தன்
தூதுவரைக் கூவிச் செவிக்கு–68-

பதவுரை

நமனும்–யமனும்
தன் தூதுவரை–தனது சேவகர்களை
கூவி–அழைத்து
செவிக்கு–(அவர்களுடைய) காதில் (என்ன சொன்னானென்றால்)
திருவடி தன்–ஸர்வேச்வரனுடைய
நாமம்–திருநாமத்தை
மறந்தும்–மறந்தொழிந்தாலும்
புறம் தொழாமாந்தர்–தேவதாந்தர பஜநம் பண்ணாத மனிசர்களைக் (கண்டால்)
திறம்பேல் மின் கண்டீர்–(ஓ சேவகர்களே!) (இப்போது நான் உங்களுக்கு இடும் ஆணையைத்) தவறவேண்டா
இறைஞ்சி–வணங்கி
சாதுவர் ஆய் போதுமின்கள் என்றான்–(கொடுமை தவிர்ந்து) ஸாதுக்களாய் வர்த்திக்களாய் வர்த்திக்க கடவீர்கள் என்று சொன்னான்.

திறம்பேல்- இத்யாதி –
சொல்லுகிற வார்த்தையைத் தப்பாதே கொள்ளுங்கோள்  –
ஸ்வாமி யுடைய திரு நாமத்தை ஒருகால் கற்றுப் பின்னை மறந்தார்களே யாகிலும்
இதர தேவதைகளை தொழாத மனுஷ்யர்களை பாபம் பண்ணினாரை தமிக்கக் கடவ யமன்
தன்னுடைய தூதரை அழைத்துச் செவியிலே  -வைஷ்ணவர்களைக் கண்டால் வணங்கி சாதுக்களாய் போருங்கள்-என்கிறான் –
செவியிலே சொல்லுகிறது தன் கோஷ்டியிலும் அகப்பட அவர்களிடையாட்டம் ராஜ தார ப்ராவண்ய நிஷேதம்  போலே சொல்லக் கடவன் அல்லாமையாலே
ஸ்வ புருஷம் அபிவீஷ்ய பாச ஹஸ்தம் வத்தி யம  தஸ்ய கர்ணமூலே பரிஹர மது ஸூ தன பிரபன்னான் 
ப்ரபுரஹம் அந்ய ந்ருணாம்  ந வைஷ்ணவா நா
ம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -3-7-15-என்றத்தைத் தன் தூதுவரை என்கிறார் –
கூவி என்கையாலே அபி வீஷ்ய-என்கிறவையின் கருத்தை வ்யக்தம் ஆக்கின படி
சாதுவராய் -என்று பாச ஹஸ்தம் -என்றதுக்கு எதிர் தட்டு இருக்கிற படி என்றான்
வத்தி -இருக்கிறபடி –
நமனும் – யம பதத்தில் அர்த்தம் சொன்னபடி
புறம்  தொழா மாந்தர் -என்று –மது ஸூ தான பிரபன்னான் -என்கிற பதத்தில் அர்த்தம் சொன்னபடி
பிரபன்னான் -என்கையாவது தேவதாந்திர பஜனம் பண்ணாது ஒழிகை
பர்த்தாவின் பக்கல் ஆனுகூல்யம் க்ரமத்திலே  மறக்க்கவுமாம் –
பர்த்ரந்தர பரிக்ரஹம் அற்று இருக்கை பாதிவ்ரத்யத்துக்கு வேண்டுவது –

————————————————————————–

செவிக்கு இனிதாய் இருப்பதும் திரு நாமம் சொன்னார் பக்கல் உள்ள வாத்சல்யத்தாலே
சிவந்த திருக் கண்களை யுடையனாய்-வ்யாமுக்தனாய் இருக்கிறவனுடைய திரு நாமம்

பூமியில் உள்ளாருக்கும் நிலமதுவே  கிடிகோள்-

செவிக்கு இன்பம் ஆவதுவும் செங்கண் மால் நாமம்
புவிக்கும் புவி யதுவே கண்டீர் -கவிக்கும்
நிறை பொருளாய் நின்றானை நேர் பட்டேன் பார்க்கில்
மறைப் பொருளும் அத்தனையே தான் -69-

பதவுரை

செவிக்கு இன்பம் ஆவதுவும்–கர்ணாமிருதமாயிருப்பதும்
செம் கண்மால் நாமம்–புண்டரீகாக்ஷனான எம்பெருமானுடைய திருநாமமே
புவிக்கு–பூமியிலுள்ள ரெல்லார்க்கும்
புவியும் அதுவே–(நிழல்பெற ஒதுங்குவதற்கு) இடமாவதும் அத் திருநாமமே
கவிக்கு நிறை பொருள் ஆய் நின்றானே–பாசுரத்திற்கு நிறைந்த பொருளாயிருக்குமெம் பெருமானை
நேர் பட்டேன்–தெய்வாதீனமாக அடையப் பெற்றேன்,
பார்க்கில்–ஆராய்ந்து பார்த்தால்
மறை பொருளும் அத்தனையே தான்–வேதங்களில் தேர்ந்த பொருளும் அவ்வளவே.

இல்லாதன இட்டுச் சொல்ல வேண்டாதே பூரணமாக என் கவிக்குப் பிரதிபாத்யனானவனைப் பெற்றேன்-
ஆராயில் வேதார்த்தமும் அத்தனையே-

————————————————————————–

இஜ் ஜகத்துக்கு எம்பெருமான் ரஷகன் என்னும் இடம் சகல லோகங்களும் அறியும் என்கிறார்-
கவிக்கு நிறைபொருளாய் நின்றபடியைச் சொல்லுகிறார் ஆகவுமாம்-

தான் ஒருவனாகித் தரணி இடந்து எடுத்து
ஏனொருவனாய் எயிற்றில் தாங்கியதும் –யானொருவன்
இன்றா வறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தைச்
சென்று ஆங்கு அடிப்படுத்த சேய்-70-

பதவுரை

தான் ஒருவன் ஆகி–(விஷ்ணுவாகிய) தான் ஒப்பற்ற ஸர்வேச்வரனாயிருந்து
சென்று–(மஹாபலியி னிடத்தில் யாசகனாய்ச்) சென்று
ஆங்கு–அந்த மாவலியின் யாக பூமியிலே
இரு நிலத்தை–விசாலமான இந்நிலத்தை
அடிப்படுத்த–திருவடியினளவாக ஆக்கிக் கொண்ட (அளந்து கொண்ட)
சேய்–சிறு பிள்ளையானவன்
ஏன் ஒருவன் ஆய்–விலக்ஷண வராஹ ரூபியாய்
தரணி–பூமியை
இடந்து அடுத்து–(அண்டபித்தியில் நின்றும்) ஒட்டுவிடுவித்தெடுத்து
எயிற்றில்–(தனது) கோரைப் பல்லின்மீது
தாங்கியது–தரித்தமையை
யான் ஒருவன்–நானொருவன் மாத்திரம்
இன்றா–இன்றாக
அறிகின்றேன் அல்லேன்–அறிகிறேனில்லை. (நெடுநாளாகவே அனைவருமறிவர்)
லோக பிரசித்தம் அன்றோ –

தான் இத்யாதி –
சர்வேஸ்வரனாய் இருந்து வைத்து இரு நிலத்தைச் சென்று ஆங்கு அடிப்படுத்த பிள்ளை யானவன்-பிரளயம்  கொண்ட பூமியை இடந்து  எடுக்கைக்காக
நீருக்கும் சே ற்றுக்கும் இறாயாத-அத்விதீயமான ஸ்ரீ வராஹமாய் பூமியைத் திரு எயிற்றிலே தரித்தது-நான் ஒருவனும் இன்றாக அறிகிறேன் அல்லேன்
இது சர்வ லோக பிரசித்தமாய் இருப்பது ஓன்று-

————————————————————————–

எம்பெருமான் தன்னை ஆஸ்ரயிக்கைக்கு உபாயமாக அருளிச் செய்த ஸ்ரீ கீதையை
அறிவு  கேட்டாலே அப்யசிப்பார் இல்லை -என்கிறார்-

சேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன்
ஆயன் துவரைக் கோனாய் நின்ற -மாயன் அன்று
ஓதிய வாக்கதனை கல்லார் உலகத்தில்
ஏதிலாராய் மெய்ஞ்ஞானம் இல்-71-

பதவுரை

சிறியன்–(ஸ்ரீகிருஷ்ணனென்கிற) சிறு பிள்ளையாய்க் கொண்டு
அணியன்–ஸுலபனாயும்
மிக பெரியன்–(அந்நிலையிலேயே) மிகவும் பெரியவனாய்க் கொண்டு
சேயன்–எட்டாதவனாயும் (இவ்விரண்டு படிகளுக்கும் உதாரணமாக)
ஆயன் ஆய் நின்ற–இடைப்பிள்ளையாய்ப் பிறந்த சிறுமையை யுடையனாயும்
துவரை கோன் ஆய் நின்ற–த்வாரகாபுரிக்குத் தலைவனாய் நின்ற பெரு மேன்மையை யுடையவனாயு மிருந்த
மாயன்–எம்பெருமான்
அன்று–(பாரத யுத்தம் நடந்த) அக் காலத்தில்
ஓதிய–(திருத் தேர்த் தட்டில் அர்ஜுநனைக் குறித்து) அருளிச் செய்த
வாக்கு அதனை–(சரம ச்லோகமாகிய) அந்தத் திரு வாக்கை
கல்லார்–அதிகரிக்கப் பெறாதவர்கள்
மெய் ஞானம் இல்–தத்துவ வுணர்ச்சி யற்ற
ஏதிலர் ஆம்–பகவத் விரோதிகளாவர்.

சேயன் இத்யாதி –
எம்பெருமான் தன்னை ஆஸ்ரயிக்கைக்கு –
ஆஸ்ரிதர்க்கு பவ்யனாய் அணியனாயும்-
அநாஸ்ரிதர் எட்ட ஒண்ணாத படி மிகவும் பெரியனாய்க் கொண்டு
சேயனாய் -அதி தூரஸ்தனாயும் இருக்கும்
ஆயன் துவரைக்கோன் –
நின்ற இரண்டு படியையும் காட்டுகிறது –
கிருஷ்ணனுமாய் ஸ்ரீ மத் த்வாரகைக்கு அதிபதியுமாய் நிற்கும் பெருமையை யுடையானவன் –
மாயன் –
ஒரு ஷூத்ரனுக்குத் தோற்று
அவ்விரவிலே கடலைச் செறுத்து படை வீடு பண்ணினான் –
மதுரையில் கட்டளையிலே யங்கே குடியேற்றி
அதுக்கு மேலே நரவதம் பண்ணிக் கொண்டு வந்த கந்யகைகள் பதினாறாயிரத்து ஒரு நூற்றுவரையும் ஒரு முஹூர்த்தத்திலே
அத்தனை வடிவு கொண்டு அவர்களோடு புஜித்த படி தொடக்கமான ஆச்சர்யங்கள்
அன்று -இத்யாதி
அன்று அருளிச் செய்த ஸ்ரீ கீதையை அப்யசியார்-உலகத்திலேதிலராய்
லோகத்தில் அந்யராய் ஒரு நன்மைகளை யுடையார் அன்றிக்கே என்றுமாம்
மெய் ஞானமில் –
மெய்யான ஞானம் இல்லை –

————————————————————————–

ஸ்ரீ கீதையில் அருளிச் செய்த படி அவனே பிராப்யமும் ப்ராபகமும் –
இவ்வர்த்தத்தை அன்று என்ன வல்லார் ஆர் என்கிறார் –

இல்லறம் இல்லேல் துறவறம் இல் என்னும்
சொல்லறம் அல்லனவும் சொல்லல்ல -நல்லறம்
ஆவனவும் நால் வேத மாத்தவமும் நாரணனே
ஆவது ஈதன்று என்பார் ஆர்-72-

பதவுரை

(முக்திமார்க்கம் தெரியாமல் ஸம்ஸாரத்தில் உழல்கின்ற ஆத்மாக்களுக்கு)
இல்லறம் என்னும் சொல்லும்–க்ருஹஸ்த தர்மமாக சாஸ்த்ரஜித்தமான கர்ம யோகம் தஞ்சமென்று சொல்லுகிற பிரமாணங்களும்
சொல் அல்ல–பிரமாணமல்ல
இல்லேல்–அங்ஙனன்றிக்கே,
துறவறம் என்னும் சொல்லும்–ஜ்ஞாந யோகம் தஞ்சமென்று சொல்லுகிற பிரமாணங்களும்
சொல் அல்ல–பிரமாணமல்ல
இல்லேல்–அங்ஙனுமன்றிக்கே
அல்லன அறம் என்னும் சொல்–(பக்தி யோகம் தேச வாஸம் திருநாம ஸங்கீர்த்தனம் முதலான) மற்ற உபாயங்கள்
தஞ்சமென்று சொல்லுகிற பிரமாணங்களும்
சொல் அல்ல–பிரமாணமல்ல
நல் அறம் ஆவனவும்–நல்ல தருமங்களாகிய திருநாம ஸங்கீர்த்தநாதிகளும்
நால் வேதம் மா தவமும்–நான்கு வேதங்களிலும் பிரதிபாதிக்கப்பட்ட பெரிய கருமங்களுமெல்லாம்
நாரணனே ஆவது–ஸ்ரீமந்நாராயணனுடைய அநுக்ரஹத்தாலே பயனளிப்பனவாகின்றன.
ஈது–இவ்வுண்மையை
அன்று என்பார் அது–மறுப்பாருண்டோ? (இவ்வுலகம் அனைராலும் அங்கீகரிக்கத்தக்கது.

இல்லறம் -இத்யாதி
இல்லறம் -கார்ஹச்த்ய தர்மம்
இது கர்ம யோகத்துக்கு உப லஷணம்-
அன்றாகில் ஞான யோகம் ஸ்தானம் என்கிற சொல்லும் மற்றும் உபாயமாகச் சொல்லுகிறவையும் சொல்ல வல்ல
நல்லறம் -இத்யாதி
கர்ம யோகாத் யுபாயங்கள் எல்லாம் சர்வேஸ்வரனே யாம் இத்தனை –
இத்தை அன்று என்ன வல்லார் ஆர் –
அல்லறம் அல்லனவும் சொல் அல்ல –
மற்றும் இதிஹாச புராணங்களாலும் பகவத் சாஸ்த்ராதிகளாலும் சொல்லுகிற உபாயங்களுமாய்த் தலைக் கட்ட மாட்டாது –
நல்லறம் இத்யாதி
நிவ்ருத்தி தர்மமும் -ருகாதி பேதமான நாலுவகைப்பட்ட வேதத்தில் சொல்லுகிற மகத்தான பிரவ்ருத்தி தர்மமும்
நாரணனே யாவது –
அதில் சொல்லுகிற உபாய பாவம் உள்ளதும் ஆஸ்ரயிப்பாருக்கு எளியனான நாராயணனுக்கே என்று கருத்து –
எத்தனையேனும் அளவுடைய ப்ரஹ்மாதிகளாலும் இப்பொருளை அன்று என்ன முடியாது
அன்றிக்கே
வேதங்களோடு வேத வேத்யனோடு வைதிக புருஷர்களோடு அல்லாத ஆழ்வார்களோடு
வாசி அற எல்லாருக்கும் இவ்வர்த்தத்தில் ஐக கண்ட்யம் சொன்னபடி –
யமைவேஷ வ்ருணுதே தேந லப்ய-கட -1-2-23-என்றும்
நயாச இதி ப்ரஹ்ம–நயாச ஏவாத்ய ரேசயத்  -தைத் -2-62-77-என்கிறது முதலானவை அன்றோ வேத புருஷன் வார்த்தை –
லோகா நாம் த்வம் பரமோ தர்ம -யுத்த -120-15-என்றும்
ராமோ விக்ரஹவான் தர்ம -ஆரண்ய -37-13- என்றும்
கிருஷ்ணம் தர்மம் சனாதனம் -பார வன -71-123-என்றும்
பாவ நஸ் சர்வ லோகா நாம் த்வமேவ -உத்தர -82-9- என்றும்
மாமேகம் சரணம் வ்ரஜ -ஸ்ரீ கீதை -18-66- என்றும்
மாம் ப்ரபத் யஸ்வ-என்றும்
அறம் தானாய்த் திரிவாய் – பெரிய திருமொழி -6-3-2-
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் -திருவாய் -5-10-11-என்றும்
களை கண் நீயே -திருவாய் -5-8-8-என்றும்
இவை இ றே அவர்கள் வார்த்தை –

———————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் -திருமழிசை ஆழ்வார் அருளிய நான்முகன் திருவந்தாதி -49-60–

February 1, 2015

பிரயோஜனாந்தர பரருடைய அபேஷிதம் செய்கைக்காக வந்து நிற்கிறவனுடைய    
நாமங்களைச்-சொல்லுகையே எல்லாருக்கும் ப்ராப்யம் -என்கிறார் –

மலையாமை மேல் வைத்து வாசுகியைச் சுற்றி
தலையாமை தானொரு கை பற்றி -அலையாமல்
பீறக்கடைந்த பெருமான் திரு நாமம்
கூறுவதே யாவர்க்கும் கூற்று —49-

பதவுரை

மலை–மந்தர பர்வதத்தை
ஆமை மேல் வைத்து–கூர்ம ரூபியான தன் மேல் வைத்து
வாசுகியை–வாஸுகி நாகத்தை
சுற்றி–(கடை கயிறாகச்) சுற்றி
அலையாமல்–நீர் வெளியில் புரளாமல்
பீற–(அமுதம்) புறப்படும்படியாக
கடைந்த–(கடலைக்) கடைந்தருளின
பெருமான்–எம்பெருமானுடைய
ஆமை–கூர்ம ரூபியாகத் திருவவதரித்த தானே
ஒரு கை பற்றி–(மலையினுச்சியை) ஒருகையாலே பிடித்தமுக்கி
திருநாமம்–திருநாமங்களை
கூறுவதே–வாய்விட்டுச் சொல்லுவதே
யாவர்க்கும்–அனைவர்க்கும்
கூற்று–வாய்ப் பேச்சாகக் கடவது

மலை இத்யாதி
மலையை ஆமையின் மேலே வைத்து வாசூகியைக் கயிறாகச் சுற்றி
அந்த மலையினுடைய தலையை ஆமையான தான் ஒரு கையாலே பற்றி
தளும்பாமே கடலை யடையக் கடைந்த சர்வேஸ்வரனுடைய திருநாமம் –
கூறுவதே -இத்யாதி
சொல்லுவதே எல்லாருக்கும் சொல்லு-கூறப் பட்டது தகுதி யாது என்றபடி
கூறுவதே எல்லாருக்கும் கொள்ளப் படுவது என்னவுமாம்
அலையாமல்  பீறக் கடைந்த
பிறிகதிர் படாமே பயன்படும்படி நெகிழக் கடைந்த –
அம்ருத மதனம் சொன்னது -கடல் கடைந்தும் அவர்கள் அபேஷிதம் செய்யும் என்கை-

————————————————————————–

சரம ஸ்லோகார்த்தம் என் நெஞ்சிலே இருக்க எனக்கு சர்வ விரோதங்களும் போகைக்கு ஒரு குறையில்லை -என்கிறார் –
எப்போதும் எம்பெருமானை அனுசந்திக்கையாலே எனக்கு ஒரு துக்கமும் வாராது என்கிறார் ஆகவுமாம்-

கூற்றமும் சாரா கொடு வினையும் சாரா தீ
மாற்றமும் சாரா வகை யறிந்தேன் -ஆற்றங்
கரைக் கிடக்கும் கண்ணன் கடல் கிடக்கும் மாயன்
உரைக் கிடக்கும் உள்ளத்து எனக்கு –50-

பதவுரை

கடல்–திருப்பாற் கடலிலே
கிடக்கும்–(பிரமன் முதலியோர்க்கு ஆச்ரயணீயனாய்க் கொண்டு) திருக்கண் வளர்ந்தருள்கிற
மாயன்–ஆச்சரியபூதனாய்
ஆறு கரை–திருக் காவேரிக் கரையான கபிஸ்தலத்திலே
கிடக்கும்–திருக்கண் வளர்ந்தருள்கிற
கண்ணன்–எம்பெருமானுடைய
உரை–ஸ்ரீஸூக்தியாகிய சரமச்லோகம்
எனக்கு–என்னுடைய
உள்ளத்து–நெஞ்சிலே
கிடக்கும்–பதிந்திருக்கின்றது
(ஆனபின்பு)
கூற்றமும் சாரா–மிருத்யு பயம் அணுகாமலும்
கொடு வினையும் சாரா–கொடிய பாவங்கள் அணுகாமலும்
தீ மாற்றமும் சாரா வகை–கெட்ட விஷயங்களொன்றும் அணுகாமலுமிருக்கத் தக்க உபாயத்தை
அறிந்தேன்–அறிந்தவனானேன்.

கூற்றம் இத்யாதி –
எனக்கு மிருத்யு பயம் இல்லாமைக்கும்
கொடிய பாபங்கள் என்னை விடுகைக்கும்
அனர்த்த பிரசங்கம் இல்லாமைக்கும்
காரணம் அறிந்தேன் –
தீ மாற்றம்
கொடிதான் சொற்கள் என்றுமாம் –
அது – காரணம்- ஏது என்னில் –
ஆற்றங்கரை -இத்யாதி
திருக் கபிஸ்தலத்திலே காவேரி தீரத்திலே கண் வளர்ந்து அருளுகிற அனுக்ரஹ சீலனான கிருஷ்ணன் யுடைய
உக்தியான உத்தம ஸ்லோகார்த்தம் என் ஹிருதயத்திலே கிடந்தது –
திருப்பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிற ஆச்சர்ய பூதனான அவனுடைய திருநாமங்கள் -என்றுமாம் –

————————————————————————–

அப்படி எம்பெருமான அறிந்த என்னோடு ஒப்பார் பரம பதத்திலும் இல்லை -என்கிறார் –
சரம ஸ்லோகார்த்தம் என் ஹிருதயத்திலே கிடக்க எனக்கு எதிர் யுண்டோ -என்கிறார் ஆகவுமாம்-

எனக்கு ஆவார் ஆர் ஒருவரே எம்பெருமான்
தனக்காவான் தானே மற்று அல்லால் -புனக்காயா
வண்ணனே யுன்னைப் பிறர் அறியார் என் மதிக்கு
விண்ணெல்லாம் உண்டோ விலை –51-

பதவுரை

புனம்–தன்னிலத்திலே வளர்கிற
காயா–காயாம்பூவினுடைய
வண்ணனே–நிறம் போன்ற நிறமுடைய பெருமானே!
எனக்கு–(உன்னுடைய நிர்ஹேதுக கடாக்ஷத்திற்குப் பாத்ர பூதனான) எனக்கு
ஆவார் ஆர் ஒருவரே–ஒப்பாகுபவர் எவரொருவரிருக்கின்றனர்? (எவருமில்லை)
எம்பெருமான்–ஸர்வேச்வரனாகிய நீயும்
தானே தனக்கு ஆவான் அல்லால்–தனக்குத் தானே ஒப்பாயிருப்பவனே யன்றி
மற்று–எனக்கு ஒப்பாக வல்லையோ?
உன்னை பிறர் அறியார்–நான் தவிர வேறொருவரும் உன்னை யறிய மாட்டார்கள்,
என் மதிக்கு–(உன்னை நன்றாக அறிந்திருக்கிற) என்னுடைய புத்திக்கு
விண் எல்லாம் விலை உண்டோ–மேலுலக மெல்லாம் கூடினாலும் ஒப்பாகப் போருமோ?

எனக்கு இத்யாதி
பகவத் ஏக போகனான என்னோடு ஒப்பார் ஒருவரும் இல்லை
எம்பெருமானும் தன் ஐச்வர்யத்துக்கு தானே ஒப்பாம் இத்தனை யல்லது
ஜ்ஞானத்துக்கு என்னோடு ஒவ்வான் –
புனக்காயா   -இத்யாதி
தன்னிலத்தில் நின்ற காயம் பூப் போல நிரதிசய போக்யமான திரு நிறத்தை யுடைய வுன்னை வேறு அறிவார் இல்லை –
என் மதி இத்யாதி
உன்னை அறிந்த என்னுடைய மதிக்குப் பரமபதமும் விலையாகாது –

————————————————————————–

எம்பெருமானை அறியாதார் ஹேயர் -என்கிறார்-

விலைக்காட்படுவர் விசாதி ஏற்று உண்பர்
தலைக்காட் பலி திரிவர் தக்கோர் -முலைக் கால்
விடமுண்ட வேந்தனையே வேறாக வேத்தாதார்
கடமுண்டார் கல்லாதவர்–52-

பதவுரை

தக்கோர்–அறிவு முதலியவற்றால் பெருமை பெருந்தியவராகத் தங்களை அபிமானித்திருக்கும் நீசர்கள்
விலைக்கு ஆள்படுவர்–ஜீவனத்திற்காகப் பிறர்க்கு அடிமைப் பட்டிருப்பர்கள்
விசாதி ஏற்று உண்பர்–(மிகுதி தானங்கள் வாங்கும் முகத்தால் பிறருடைய) வியாதிகளைத் தாம் வாங்கி அநுபவிப்பர்கள்
தலைக்கு ஆள்பலி திரிவர்–ஒருவன் தலைக்காகத் தம் தலைமை அறுப்பதாகச் சொல்லி நரபலியாகத் திரிவர்கள்
முலைக்கால்விடம் உண்ட வேந்தனையே–(பூதனையின்) முலையிடத் துண்டான விஷத்தை உட்கொண்ட பெருமானையே
வேறுஆ எத்தாதார்–விலக்ஷணமாகத் துதிக்கமாட்டாதவர்களாய்
கல்லாதவர்–அறிவு கெட்டவர்களாய்க் கொண்டு
கடம் உண்டார்–பாபங்களை யநுபவிப்பவர்களாயிரா நின்றார்கள்.

விலை இத்யாதி
ஒரு வயிறு சோற்றுக்காக அடிமை புகுவர்
வியாதிகளை நீர் வார்ப்பித்துக் கொண்டு ஜீவித்துத் திரிவர்
தலை யறுத்துக் கொடுக்கக் கடவதாக ஆள்பட்டு தேவதைக்கு பலியாத் திரிவர்
தலை அறுப்புண்கைக்கு ஆளாய்  -அவர்கள் இட்டது வயிற்றுக்குப் போறாமை இரந்து திரிவர் என்றுமாம் –
பகவத் அனுபவத்துக்கு தக்கவர் இ றே இவர்கள் என்று உபாலம்ப உக்தி –
முலைக்கால் இத்யாதி
முலை வழியே விஷ பானத்தை பண்ணுவித்த பூதனையை முடித்த செயலாலே ஜகத்தை அடிமை கொண்டு
இப்படி உபகாரகனான ராஜாவை விசேஷித்து ஏத்தாதார்
கடமுண்டார் கல்லாதவர் –
இப்படி அவிசேஷ ஜ்ஞாரானவர்கள் தன்னை ஆஸ்ரயிக்க தந்த வுடம்பைக் கொண்டு அந்ய பரராகையாலே
பாப புக்குகள்-இருக்க மாட்டாதே இருந்து வைத்துத் தனிசு கொண்டு –கடன் பட்டு -உண்பாரோடு ஒப்பர் -என்றுமாம் –

————————————————————————–

ஏதத் வ்ரதம் மம -என்று பிரதிகஜ்ஞை பண்ணின தசரதாத் மஜனை ஒழியவே சிலரைத் தஞ்சமாக நினைத்திரேன்-
நீங்களும் நிச்ரீகரான தேவதைகளை விஸ்வசியாதே கொள்ளுங்கோள் -என்று பரரைக் குறித்து அருளிச் செய்கிறார் –

கல்லாதவர் இலங்கை கட்டழித்த காகுத்த
னல்லால் ஒரு தெய்வம் நான் இலேன் –பொல்லாத
தேவரைத் தேவர் அல்லாரைத் திரு இல்லாத்
தேவரைத் தேறேல்மின் தேவு-53

பதவுரை

கல்லாதவர் இலங்கை–அறிவு கெட்ட ராக்ஷஸருடையதான இலங்கா புரியை
கட்டு அழித்த–அரணழித்த
காகுத்தன் அல்லால்–இராமபிரானை யல்லது
ஒரு தெய்வம்–வேறொரு தெய்வத்தை
யான் இலேன்–நான் தெய்வமாகக் கொள்வேனல்லேன்
பொல்லாத தேவரை–கண் கொண்டு காணக் கூடாத தேவதைகளையும்
தேவர் அல்லாரை–(உண்மையில்) தெய்வத் தன்மை யற்றவர்களாயும்
திரு இல்லா தேவரை–பிராட்டியின் ஸம்பந்த மல்லாமலே தேவரென்று பேர் சுமப்பவர்களாயும் வுள்ள சிலரை
தேவு–தெய்வங்களாக
தேறேல்மின்–நீங்கள் நினைக்க வேண்டா.

கல்லாதவர் இத்யாதி
தயா சத்யம் சௌசம் ச ராஷசானாம் ந வித்யதே -என்று அறிவு கேடர் எல்லாரும் திரண்ட இலங்கையைக் கட்டழித்த
காகுத்தனை ஒழிய வேறு ஒரு தேவதையைத் தஞ்சமாக யுடையேன் அல்லேன்
பொல்லாத தேவரை –
காணிலும் உருப்பொலார்-திருச்சந்த விருத்தம் -69-என்கிறபடியே விரூப தேவதைகளை –
தேவர் அல்லாரை
அல்லாத தேவதைகளை -தேவதைகள் என்ன ஒண்ணாதவர் என்றுமாம் –
திருவில்லா இத்யாதி
அஸ்ரீகரான தேவதைகளை தேவதைகளாகத் தேறாதே கொள்ளுங்கோள்-

————————————————————————–

சர்வரும் பகவத் சேஷம் என்று அறியாதார் கல்வி எல்லாம் வ்யர்த்தம் -என்கிறார்-

தேவராய் நிற்கும் அத்தேவும் அத தேவரில்
மூவராய் நிற்கும் முது புணர்ப்பும் –யவராய்
நிற்கின்றது எல்லாம் நெடுமால் என்று ஓராதார்
கற்கின்றது எல்லாம் கடை –54-

பதவுரை

தேவர் ஆய் நிற்கும் அத்தேவும்–(அக்நி இந்திரன் முதலிய) தேவதைகளாய்க் கொண்டு நிற்கிற தெய்வமும்,
முது புணர்ப்பும்–அநாதியான நிலைமையும்
யாவர் ஆய் நிற்கின்றது எல்லாம்– மற்றும் மனிதர் முதலியனவாய்க்கொண்டு நிற்கிற ஸகல பதார்த்தங்களும் (ஆகிய எல்லாம்)
அத் தேவரில்–அந்த தேவர்களுக்குள்ளே
மூவர் ஆய் நிற்கும்–த்ரிமூர்த்தியாய் நிற்பதாகிற
நெடுமால் என்று ஓராதார்–ஸர்வேச்வர ப்ரகாரமே என்று ஆராய்ந் துணர மாட்டாதவர்கள்
கற்கின்றது எல்லாம் கடை–பேசும் பேச்செல்லாம் உபயோகமற்றது.

தேவர் -இத்யாதி –
தேவர்களே நிற்கின்ற வேண்டற்பாடும்-
அத்தேவதைகளில் பிரதானரான ப்ரஹ்ம ருத்ராதிகளாய் நிற்கிற பழையதான செயலும்
யாவரித்யாதி -எல்லாருமாய்க் கொண்டு
மற்றும் மனுஷ்யாதிகளுமாகக் கொண்டு   -நிற்கிற இது எல்லாம் சர்வேஸ்வரனுக்கு சேஷம் என்று
அறியாதார் கற்கின்றது எல்லாம் வ்யர்த்தம் –

————————————————————————–

இப்படி அயோக்யர் யுண்டோ என்னில் ஷூத்ர தேவதைகளை யாஸ்ரயித்து –
ஷூத்ர பிரயோஜனங்களைக் கொண்டு விடுவர் -உன்னை அறிவார் ஒருவரும் இல்லை -என்கிறார்-

கடை நின்று அமரர் கழல் தொழுது நாளும்
இடை நின்ற வின்பத்தராவர் –புடை நின்ற
நீரோத மேனி நெடுமாலே நின்னடியை
யாரோத வல்லார் எவர் -55-

பதவுரை

அமரர் கடை நின்று–(இவ்வுலகத்தவர்கள்) தேவதாந்தரங்களின் வாசல்களைப் பற்றி நின்று
நாளும்-நெடுங்காலம் வரையில்
கழல் தொழுது–(அவர்களுடைய) காலில் விழுந்து (பரம புருஷார்த்தம் பெற மாட்டாமல்)
இடை நின்ற இன்பத்தர் ஆவர்–நடுவே கிடக்கிற (சுவர்க்கம் முதலிய) சுகத்தைப் பெற்றொழிவர்கள்
குடை நின்ற நீர் ஓதம் மேனி நெடுமாலே–(இவ் வுலகத்தைச்) சூழ்ந்து கிடக்கிற கடல் போன்ற திருமேனியை யுடைய ஸர்வேச்வரனே!
நின் அடியை–உனது திருவடிகளை
ஓத வல்லாரவர் ஆர்–அநுஸந்திக்க வல்லார் ஆரேனுமுண்டோ? (யாருமில்லையே!)

கடை நின்று இத்யாதி –
இதர தேவதைகள் வாசலிலே நின்று அந்த தேவதைகள் காலை நாள் தோறும் தொழுது பரிமித ஸூகங்களைப் பெறுவர் –
புடை இத்யாதி –
பூமியைச் சூழ்ந்து இருந்துள்ள நீரோதம் போலே இருக்கிற திருமேனியை யுடைய சர்வேஸ்வரனே -உன்னைப் பேச வல்லார்கள் யார் –
இடை நின்ற இன்பம் –
நடு முறியும் ஸூகத்தை யுடைராவர் –
இடமுடைத்தான கடல் போலே ஸ்ரமஹரமாய் இருக்கிற திரு மேனியையும்
அபரிச்சேத்யமான மஹிமாவையும் யுடைய சர்வேஸ்வரனே
சர்வாதிகனான உன்னுடைய திருவடிகளை சத்த கீர்த்தனம் பண்ணி ஆஸ்ரயிக்க வல்லார் ஒருவரும் இல்லை என்றுமாம் –
அவர் என்றது
சர்வ கந்த ரஹிதராய்-ரஜ பிரக்ருதிகளாயும் தம பிரக்ருதிகளாயும் உள்ளவரை –

————————————————————————–

இதர தேவதைகள் ஆஸ்ரயித்தாருக்குத் தஞ்சமாக மாட்டாமையை யருளிச் செய்கிறார் –

அவரிவர் என்று இல்லை யனங்க வேள் தாதைக்கு
எவரும் எதிரில்லை கண்டீர் –உவரிக்
கடல் நஞ்சம் உண்டான் கடன் என்று வாணற்கு
உடன் நின்று தோற்றான் ஒருங்கு-56

பதவுரை

அவர் இவர் என்று இல்லை–பெரியார் சிறியார் என்று ஒருவாசி யில்லை
அனங்கவேள் தாதைக்கு–காமனுக்குத் தந்தையான் கண்ண பிரானுக்கு
எவரும்–ஒருவரும்
எதிர் இல்லை கண்டீர்–எதிர் நிற்க வல்லாரில்லை காண்மின்
உவரிக் கடல் நஞ்சம் உண்டான்–கடலில் தோன்றின விஷத்தை உட் கொண்டவனான சிவன்
வாணற்கு–பாணாஸுரனுக்கு
கடன் என்று–‘உன்னை ரக்ஷிக்க நான் கடமைப் பட்டவன்‘ என்று சொல்லி
உடன் நின்று–அவனோடு கூடவே யிருந்து
ஒருங்கு தோற்றான்– குடும்பத்தோடே தோற்று ஓடிப்போனான்.

அவரிவர் இத்யாதி –
இன்னார் இனையார் என்று இல்லை -அழகுக்குக் காமனுக்கும் கூட உத்பாதகன் ஆனவனுக்கு ஒருவரும் எதிர் இல்லை -கண்டி கோளே-
உவர் இத்யாதி –
கடலில் விஷத்தை பஷித்த ருத்ரன் வாணனுக்கு பிரதிபஷத்தை வென்று தருகிறேன் என்று ஓரம் கொடுத்து-
அந்த வாணன் சாஷியாக வருகே நிற்கவே-சபரிகரனாகத் தோற்றான் -அதிகம் மே நிரே விஷ்ணும் -பால -74-19-இதிவத்-

————————————————————————–

அவனுடைய ச்வீகாரம் தான் புண்ய பலமாய்   அன்றோ இருப்பது என்னில் -அங்கன் அன்று –
அவனுடைய விஷயீ கார பஹிஷ்காரங்களே புண்ய பாபங்கள் ஆகிறன-
அங்கன் ஆகிறது சர்வமும் தத் அதீனமாய் ச்வதந்த்ரமாய் இருப்பது ஓன்று இல்லாமையாலே என்கிறார்-

ஒருங்கிருந்த நல்வினையும் தீவினையும் ஆவான்
பெரும் குருந்தம் சாய்த்தவனே பேசில் -மருங்கிருந்த
வானவர் தாம் தானவர் தாம் தாரகை தான் என்நெஞ்சம்
ஆனவர் தாம் அல்லாதது என் -57-

பதவுரை

பேசில்–உண்மை பேசப் புகுந்தால்
பெரு குருந்தம் சாய்த்தவனே–பெரிய குருந்தமரத்தை வேர் பறியத் தள்ளி முறித்த கண்ணபிரானே
ஒருங்கு இருந்த நல் நினையும் தீ வினையும் ஆவான்–உடன் நிற்கும் புண்ய பாபங்களுக்கு நிர்வாஹகன்,
மருங்கு இருந்த–ஸமீபத்திலுள்ள (அந்தரங்கரான)
வானவர் தாம்–தேவர்களும்
தானவர் தாம்–அசுரர்களும்
தாரகை தான்–இப் பூமியும் (ஆகிய இவையெல்லாம்)
என் நெஞ்சம் ஆனவர் தாம்–என் நெஞ்சினுள் உறைகின்ற ஸர்வேச்வரனேயாம்
அல்லாத்து என்–அந்த ஸர்வேச்வரனல்லாத வஸ்து என்ன இருக்கிறது

ஒருங்கு இத்யாதி –
சொல்லும் பஷத்தில் சேதனரோடு கூடி இருந்த புண்ய பாப ரூப கர்மங்கள் ஆவான் –பெரிய குருந்தத்தைச் சாய்த்தவனே .
ஒருங்கு இருக்கை யாவது பல வ்யாப்தமாய் இருக்கை -என்றுமாம் –
மருங்கு இருந்து இத்யாதி –
வேறு பட்டிருக்கிற தேவதைகள் -அசுரர்கள் -தாரகை தான் -நஷத்ரங்கள் தான் என் ஹ்ருதயம் தான் –
இது எல்லாம் அவன் இட்ட வழக்கு -ததீனம் இல்லாதது ஒன்றும் இல்லை –
நெஞ்சுக்கு எம்பெருமானோடு யுண்டான ப்ராவண்யத்தைக் கண்டு -என் நெஞ்சமானவர் -என்கிறார் –
பெரும் குருந்தம் சாய்த்தவன் என்கிறது சொன்ன பொருளுக்கு சாதனமாக திருஷ்டாந்த உக்தி –
மருங்கு இருந்த வானவர் –
அப்ரசித்தமான தேவதைகள் -தாரகை தான் -தரணிதான் -என்னவுமாம் –

————————————————————————–

அஜ்ஞான அந்தகாரம் எல்லாம் போம்படி தம் ஹ்ருதயத்திலே புகுந்த எம்பெருமான் பக்கலிலே-
தமக்குப் பிறந்த ச்நேஹத்தை அருளிச் செய்கிறார்-

என்நெஞ்சம் மேயான் இருள் நீக்கி எம்பிரான்
மன்னஞ்ச முன்னொரு நாள் மண்ணளந்தான் -என்நெஞ்சம்
மேயானை இல்லா விடை ஏற்றான் வெவ்வினை தீர்த்தாய்
ஆயானுக்கு ஆக்கினேன் அன்பு – 58-

பதவுரை

என் நெஞசம் மேயான்–என்னுடைய நெஞ்சிலே நித்ய வாஸம் செய்பவனும்
இருள் நீக்கி எம்பிரான்–(நெஞ்சிலுள்ள) அஜ்ஞான விருளைப் போக்குமவனான உபகாரகனும்
முன் ஒருநாள்–முன்பொரு காலத்தில்
மன் அஞ்ச–மஹாபலி சக்ரவர்த்தி பயப்படும் படியாக
மண் அளந்தான்–பூமியை அளந்து கொண்டவனும்
என் நெஞ்சம் மேயானை–(அந்த திருக் கோலத்துடனே) என்னெஞ்சை விடாமலிருப்பவனுமான எம்பெருமானை
இல்லா–நெஞ்சில் உடையனாகாத
விடை ஏற்றான்–ரிஷப வாஹநனான ருத்ரனுடைய
வெம் வினை–மஹா பாதகத்தை
தீர்த்து–தொலைத்து
ஆயானுக்கு–(அதனால்) ஸத்தை பெற்றவனான பெருமானுக்கு
அன்பு ஆக்கினேன்–என் அன்பைச் செலுத்தினேன்.

என் நெஞ்சம் -இத்யாதி –
என் ஹிருதயத்திலே மேவி என் அஜ்ஞானத்தைப் போக்கி எனக்கு உபகாரனானவன் .
ராஜாக்கள் பயப்படப் பண்டு ஒரு நாள் பூமியை அளந்து கொண்டான் –
என் நெஞ்சம் மேயான் -இத்யாதி
என் நெஞ்சம் இருப்பிடமாக மேவினவனைத் தனக்கு ரஷகனாக நினைத்து இராத
ரிஷப வாஹனனுடைய கொடிதான பாபத்தைப் போக்கி அத்தாலே தான் உளனானவனுக்கு -ச்நேஹத்தை பண்ணினேன் –
மன்னஞ்ச-
அசூரனான மகா பலி போல்வார் அஞ்சும்படிக்கு ஈடாக -என்றுமாம் –

————————————————————————–

தம்மளவில் இல்லாதபடி எம்பெருமான் பண்ணுகிற பஹூமானங்களைக் கண்டு
ஸ்ரீ யபதியான உனக்கு நான் அடிமை -என்கிறார்-

அன்பாவாய் ஆரமுதமாவாய் அடியேனுக்கு
இன்பாவாய் எல்லாமும் நீ யாவாய் -பொன் பாவை
கேள்வா கிளரொளி என் கேசவனே கேடின்றி
ஆள்வாய்க்கு அடியேன் நான் ஆள் -59-

பதவுரை

அன்பு ஆவாய்–(என் பக்கல்) ப்ரீதியே வடிவெடுத்தவன் போலிருப்பவனே!
ஆர் அமுதம் ஆவாய்–பரம போக்யனாயிருப்பவனே!
அடியேனுக்கு இன்பு ஆவாய்–(உன்னுடைய அநுபவமாகிய) ஸுகத்தை அடியேனுக்கு உண்டாக்கினவனே!
என் கேசவனே–எம்பெருமானே!
கேடு இன்றி–ஒரு குறையுமில்லாமல்
ஆள்வாய்க்கு–ரக்ஷிக்க வல்லவுனுக்கு
எல்லாமும் நீ ஆவாய்–மற்றுமுள்ள ஸுகங்களு மெல்லாம் எனக்கு நீயே யாயிருப்பவனே!
பொன் பாவை கேள்வா–திருமகள் நாதனே!
கிளர் ஒளி–(அத் திருமகளின் சேர்த்தியினால்) கொழுந்து விட்டு வளர்கின்ற காந்தியையுடைய
நான் அடியேன்–நான் அடிமைப் பட்டவனா யிருக்கிறேன்
ஆள்–(அடியேனைக் காத்தருள்)

அன்பு இத்யாதி –
எனக்கு ச்நேஹித்து எனக்குப் பரம போக்யனானவனே-
சேஷ பூதனான எனக்கு உன் அனுபவ ஸூ கத்தை விளைத்தவனே –
இவற்றால் எனக்கு வந்த ஸூ கமும் ஆனவனே –
மற்றும் எல்லா பந்தமும் நீ யானவனே
இவை எல்லா வற்றுக்கும் அடியாக ஸ்ரீ யபதி யானவனே –
கிளரொளி -இத்யாதி
மிக்கு இருந்துள்ள ஒளியை யுடையையாய் பிரசஸ்த கேசனானவனே –
அனர்த்தப் படாமே நிர்வஹிக்கிற உனக்கு நான் அடிமை –
இவருடைய ச்நேஹத்தை கண்டு இவரிலும் காட்டில் ச்நேஹித்து இவருக்கு நிரதிசய போக்யனாய்
இவருக்கு தன்னுடைய அனுபவ ஸூ கத்தையும் கொடுத்து
இன்னமும் எல்லா ஸூ கத்தையும் கொடுக்க வேணும் என்று பிச்சேறின ஸ்ரீ யபதி படியை அனுசந்தித்து
நீ அங்கனே அபி நிவேசித்தாய் ஆகிலும் எனக்கு அவை எல்லாம் வேண்டா
என்னுடைய ஸ்வரூப அநு குணமாக நான் அடிமை செய்ய வமையும் -என்கிறார் –

————————————————————————–

இவர் தன்னை விடில் செய்வது என் என்று எம்பெருமான் அதி சங்கிக்க
விட முடியாதபடி தம்முடைய திரு உள்ளம் அவன் பக்கலிலே ப்ரவணமாய் இருக்கிற படியை அருளிச் செய்கிறார்-

ஆட் பார்த்து உழி தருவாய் கண்டு கோள் என்றும் நின்
தாட் பார்த்து உழி தருவேன் தன்மையை -கேட்பார்க்கு
அரும் பொருளாய் நின்ற வரங்கனே உன்னை
விரும்புவதே விள்ளேன் மனம்–60-

பதவுரை

கேட்பார்க்கு–ஸ்வ யத்நத்தாலே கேட்டறிய விரும்புவர்களுக்கு
அரு பொருள் ஆய் நின்றி அரங்கனே–அறிய வொண்ணாத பரம் பொருளான அரங்க நாதனே!
ஆள் பார்த்து உழிதருவாய்–நமக்கு ஆட்படுமவன் யாரேனும் கிடைக்கக் கூடுமோ என்று தேடித் திரிகிறவனே!
நின் தாள் பார்த்து உழி தருவேன்–உனது திருவடிகளின் ஸேவைக்காக அலைந்து திரிகின்ற என்னுடைய
தன்மையை–இந்த ஸ்வபாவத்தை
என்றும்–என்றைக்கும் நிலைத்திருக்கும் படியாகக் கடாக்ஷித் தருள வேணும்
உன்னை விரும்புவதே–நான் உன்னையே ஆசைப்பட்டிருக்குந் தன்மையை
மனம்–நெஞ்சில்
விள்ளேன்–தவிராதவனா யிருக்கின்றேன்.

ஆள் -இத்யாதி
எனக்கு அடியார் ஆவார் யுண்டோ என்று இது வெள்ளாமை யாகத் தேடித் திரிகிறபடியை கண்டு உனக்கு அடியேனாக வேணும் என்று
உன் திருவடிகளையே பார்த்துத் திரிகிற என் ஸ்வ பாவத்தை திரு உள்ளம் பற்றி அருள வேணும் –
கேட்பார்க்கு -இத்யாதி
புக்கு அநு பவிக்கில் அநு பவிக்கும் இத்தனை போக்கி ஆராயப் புகில் அளவிட ஒண்ணாத
வைலஷண்யத்தை யுடையையாய்க் கொண்டு கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிறவனே-
உன்னை விரும்பும் அத்தனை மனசை உன் பக்கல் நின்றும் வாங்கேன் -த்வாம்ருதஸ் யந்தி நி -ஸ்தோத்ர ரத்னம் -27-இதிவத்
கேட்பார் இத்யாதி
நிரதிசய பக்திமான்கள் அல்லீரோ
குறைவாளராக சொல்லுவான் என் என்று எம்பெருமான் அருளிச் செய்தானாக கொண்டு-
துர்ஜ்ஞேயனாய் இருந்து வைத்து சர்வ ஸூலபனாய்க் கோயிலிலே கண் வளரா நிற்க-ப்ராக்ருத விஷயங்களில்  நின்றும் மனசை விடுகிறிலேன்
நான் உன்னை விரும்புகை என்று ஒரு பொருள் உண்டோ என்றும் சொல்லுவர் –

———————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் -திருமழிசை ஆழ்வார் அருளிய நான்முகன் திருவந்தாதி -37-48–

February 1, 2015

எம்பெருமான் இப்படி அபி நிவிஷ்டனாகைக்கு ஹேது
சகல பதார்த்தங்களும் தன்னாலே யுண்டாக்கப் படுகையாலே -என்கிறார் –

ஆஸ்ரிதர் நெஞ்சிலே புக்கு அங்கனே ரஷிக்கை விஸ்மயமோ-

முதலிலே சகல பதார்த்தமும்
அவனுடைய சங்கல்ப்பத்தாலே யுண்டாயுத்து என்கிறார் -ஆகவுமாம்-

வானுலாவு தீவளி மா கடல் மா பொருப்பு
தானுலவு வெங்கதிரும் தண் மதியும் -மேனிலவு
கொண்டல் பெயரும் திசை எட்டும் சூழ்ச்சியும்
அண்டம் திருமால் அகைப்பு –37-

பதவுரை

வான்–ஆகாசமும்
தீ–அக்நியும்
உலவு வளி–உலாவுகின்ற வாயுவும்
மா கடல்–பெரிய கடலும்
மா பொருப்பு–பெரிய குல பர்வதங்களும்
உலவு–திரிகின்ற
வெம் கதிர் தானும்–உஷ்ணகிரணனான ஸூர்யனும்
தண்மதியும்–குளிர்ந்த சந்திரனும்
மேல் நிலவு–மேலே நிலாவுகின்ற
கொண்டல்–மேகங்களும்
பெயரும்–சேதந வர்க்கமும்
திசை எட்டும்–எட்டுத் திசைகளும்
சூழ்ச்சியும்–ஆவரணங்களும்
அண்டம்–ஆகிய இவை யெல்லாவற்றோடுங் கூடின அண்டமும்
திருமால்–ஸர்வேஸ்வரனுடைய
அகைப்பு–ஸங்கல்பத்தினாலாயது.

வான் இத்யாதி –
ஆகாசமும் -சஞ்சரிக்கிற அக்னி -காற்று -பெரிய கடல் -மலைகள்
தாங்களே சஞ்சரியா நின்றுள்ள சந்திர  ஸூர்யர்களும் –
மேல் வர்த்தியா நின்றுள்ள மேகங்களும் -திக்கு எட்டும் –ஆவரணமும்-இப்படியான அண்டம்-
ஸ்ரீ யபதியானவன் சங்கல்ப்பத்தாலே யுண்டாய்த்து-

அகைப்பு -என்று வாழ்ச்சியாய்-அதாவது –
திரு வுள்ளத்திலே உத்தியோக ரூபமான சங்கல்பம் -என்றபடி –

————————————————————————–

மற்றுள்ள சமயவாதிகள் ஈஸ்வரத்தை இசையாது ஒழிவான் என் என்னில் –
அதுவும் பண்ணினான் அவன் தானே –
ரஷகனானவன் ரஷணத்தை நெகிழா நிற்குமாகில்
அந்த தேவதைகளோடு கூட வடைய நசிக்கும் -என்கிறார் –

அகைப்பில் மனிசரை ஆறு சமயம்
புகைத்தான் பொரு கடல் நீர் வண்ணன் -உகைக்குமே
எத்தேவர் வாலாட்டும் எவ்வாறு செய்கையும்
அப்போது ஒழியும் அழைப்பு-38-

பதவுரை

அகைப்பு இல் மனிசரை–உஜ்ஜீவிக்க மாட்டாத மனிசர்களை
ஆறு சமயம்–(நீசங்களான) ஆறு மதங்களில்
புகைத்தான்–புகும்படி செய்தவனும்
பொரு கடல் நீர் வண்ணன்–அலை யெறிகின்ற கடல் நீர் போன்ற திருநிறத்தை யுடையவனுமான ஸர்வேஸ்வரன்
உகைக்கும் ஏல்–உதாஸீநனா யிருந்து விடும் பக்ஷத்தில்
அப்போது–அப்போதே
எத் தேவர் வாலாட்டும்–எந்த தேவர்களுடையவும் அஹங்காரமும்
எவ்வாறு செய்கையும்–எவ்விதமான (யஜ்ஞம் முதலிய) காரியங்களும்
அழைப்பு–(தேவதைகளின்) ஆஹ்வாகமும்
ஒழியும்–ஒழிந்து போய் விடும்

அகைப்பில் -இத்யாதி
அளவில்லாத மனுஷ்யரை ஷட் சமயங்களைக் காட்டி
தப்ப ஒண்ணாத படி யகப்படுத்தினான் –
ஸ்ரமஹரமான வடிவை யுடையவன் –

உகைக்கும் இத்யாதி –
ரஷியாதே விடுமாகில் அங்கனே ஆஸ்ரயிக்கையும்-
மற்றுள்ள அழைப்புகளும் அப்போது முடியும் –

ஆறு சமயம் புகைத்தான்
ஆறு சமயத்தாலும் மதி கெடுத்தான் என்றுமாம் –

அழைப்பு -ஆஹ்வானம் –

————————————————————————–

லோக வ்ருத்தாந்தம் ஆனபடியாகிறது என்று கை வாங்கி-
தமக்குத் திருமலையையும்

அங்கு நின்று அருளுகிற திரு வேங்கடமுடையானையும்-காண்கையில் உள்ள
அபி நிவேசத்தை யருளிச் செய்கிறார்-

அழைப்பன் திருவேங்கடத்தானைக் காண
இழைப்பன் திருக் கூடல் கூட -மழைப்பேர்
அருவி மணி வரண்டி வந்திழிய ஆனை
வெருவி அரவு ஒடுங்கும் வெற்பு –39-

பதவுரை

திருவேங்கடத்தானை–திருவேங்கடமுடையானை
காண–கண்ணால் ஸேவிக்க
அழைப்பன்–வாய் விட்டுக் கூப்பிடா நின்றேன்
வரண்டி வந்து இழிய–திரட்டிக் கொண்டு வந்து இழிய (அச்சு ரத்னங்களின் ஒளியைக் கண்டு அக்நி ஜ்வாலைகளாக ப்ரமித்து)
யானை–யானைகளானவை
வெருவி–பயப்பட்டு நிற்கவும்
அரவு–மலைப் பாம்புகளானவை
மழை–மழை போல் சொரிகின்ற
பேர் அருவி–பெரிய அருவிகளானவை
மணி–அங்குமிங்குங் கிடக்கிற) ரத்னங்களை
ஒடுங்கும்–(அந்த ரத்னங்களை மின்னலாக மயங்கி) புற்றிலே சென்று மறையவும் பெற்ற
வெற்பு–திருமலையை
கூட–சென்று கூடவேணுமென்று
திருக்கூடல் இழைப்பன்–கூடலிழைக்கின்றேன்

அழைப்பன் திருவேங்கடத்தானைக் காண-
திருவேங்கடமுடையானைக் காண வேணும் என்று கூப்பிடா நிற்பன் –

இழைப்பன் திருக் கூடல் கூடமலைப்பேர் அருவி மணி வரண்டி வந்திழிய
ஆனை வெருவி அரவு ஒடுங்கும் வெற்பு

மலையிலே பெரிய அருவிகள் மாணிக்கங்களைக் கொண்டு இழிய-
மின்னித்து என்று ஆனைகள் பயப்பட்டு –
வரை எனப் பெயர் தருகிற பெரும் பாம்பின் வாயிலே புகும்படியான வெற்பைப்
பிராபிக்க வென்று கூடல் இழையா நிற்பன் –

மாணிக்கத்தின் ஒளியை நெருப்பு என்று கருதி யானை வெருவும் –
மின்னாகக் கருதிப் பாம்புகள் புற்றிலே ஒடுங்கும் -என்னவுமாம் –

மழைப் பேரருவி -என்று பாடமான போது
நிரந்தர வர்ஷத்தாலே வெள்ளம் இட்டுப் பெருகுகிற திரு அருவிகள் ஆனவை
என்று பொருளாகக் கடவது –

————————————————————————–

திருமலையைப் பெற்று மற்று ஒன்றுக்கு உரியேன் ஆகாதே க்ருதார்த்தன் ஆனேன் –
நெஞ்சே நீயும் அவனை அனுசந்தி -என்கிறார் –

வெற்பு என்று வேங்கடம் பாடினேன் வீடாக்கி
நிற்கின்றேன் நின்று நினைக்கின்றேன் -கற்கின்ற
நூல்வலையில் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார்
கால்வலையில் பட்டிருந்தேன் காண்-40-

பதவுரை

வெற்பு என்று–பலமலைகளையும் சொல்லி வருகிற அடைவிலே
வேங்கடம் பாடினேன்–திருமலையையும் சொன்னவானானேன்; (இந்த உக்தி மாத்திரத்திலே)
வீடு ஆக்கி நிற்கின்றேன்–‘மோஷம் நமக்கு ஸித்தம்‘ என்னும் படியாக அமைந்தேன்
நின்று நினைக்கின்றேன்–‘நாம் சொன்ன ஒரு சிறிய சொல்லுக்குப பெரிய பேறு கிடைத்த பாக்கியம் என்னோ!‘
என்று நினைத்து ஸ்தப்தனாயிருக்கின்றேன்,
கற்கின்ற–ஓதப்படுகிற
நூல்–வேதங்களாகிற சாஸ்த்ரங்களில்
வலையில் பட்டிருந்த–வலையினுள் அகப்பட்டிருப்பது போல் நிலை பேராமல் நிற்கின்ற
நூலாட்டி கேள்வனார்–லக்ஷ்மீநாதனான எம்பெருமானுடைய
கால் வலையில் பட்டிருந்தேன்–திருவடிகளாகிற வலையிலகப்பட்டுத் தரித்து நிற்கின்றேன்.
காண் – முன்னிலையசை

யாத்ருச்சிகமாகத் திருமலை என்னும் காட்டில்
ப்ரீதி பூர்வகமாகத் திருமலையை அனுசந்தித்தேனாய்க்
க்ருதக்ருத்யனாய்ப் பிறருக்கும் மோஷ பிரதனானேன்

இப்பேற்றை நின்று அனுசந்திப்பதும் செய்யா நின்றேன் –

பரோபதேசம் தவிர்ந்து சாஸ்ரைக சமதி கம்யனாய்-
ஸ்ரீ யபதி யுடைய  திருவடிகள் ஆகிற
வலையிலே அகப்பட்டு மற்று ஒன்றுக்கு உரித்தாய்த்திலேன் நான் –
நெஞ்சே நீயும் அவனை அனுசந்தி -என்கிறார்-

————————————————————————–

எம்பெருமான் தம்முடைய ஹ்ருதயத்திலே வந்து புகுர-
இங்கே வந்து புகுந்தானே யாகிலும்-
நான் திருமலையைக் காண வேண்டி இரா நின்றேன் -என்கிறார்-

காணல் உறுகின்றேன் கல்லருவி முத்துதிர
ஒண விழவில் ஒலி அதிர -பேணி
வரு வேங்கடவா வென்னுள்ளம் புகுந்தாய்
திருவேங்கடம் அதனைச் சென்று -41-

பதவுரை

கல் அருவி–ஒலிக்கின்ற அருவிகளின் மூலமாக
முத்து உதிர–முத்துக்கள் உதிரப் பெற்றதாய்,
ஒணம் விழவில்–திருவோணத் திருநாளில்
ஒலி அதிர–(திருப் பல்லாண்டு பாடுகை வேத பாராயணம் செய்கை
ஆடுகை பாடுகை முதலானவற்றாலுண்டான) த்வநி அதிரப் பெற்றதாய்
பேணி வரு–(பக்தர்கள்) விரும்பி வந்து சேரப் பெற்றதான
வேங்கடவா–திருவேங்கட மலையை இருப்பிடமாக வுடையவனே!
என் உள்ளம் புகுந்தாய்–நீ என் நெஞ்சிலே புகுந்துவிட்டாய்
(நீ திருமலையைவிட்டு என்னுள்ளத்திலே வந்து விட்டாலும்)
திருவேங்கடம் அதனை சென்று காணல் உறுகின்றேன்–நான் அத் திருமலையிற் சென்று ஸேவிக்க விருப்பங்கொண்டிருக்கிறேன்.

காணல் உறுகின்றேன் கல்லருவி –
காண வேண்டி இரா நின்றேன்-ஒலியை யுடைத்தான அருவிகளில் –

முத்துதிர
அருவிகளில் முத்துதிர என்றுமாம் –
கல்லிலே யருவி முத்துதிர -என்றுமாம்

ஒண விழவில் ஒலி அதிர -பேணி வரு வேங்கடவா வென்னுள்ளம் புகுந்தாய் திருவேங்கடம் அதனைச் சென்று –
திருவோணத் திரு நாளில் ஒலி முழங்க -எல்லாரும் ஆதரித்து உன்னைப் ப்ராபிக்கிற வேங்கடவனே –
நீ என் ஹிருதயத்திலே வந்து புகுந்தாய் –
திருமலையைச் சென்று பேணி வரு வேங்கடவா –
என் பக்கலிலே யாதரித்துக் கொண்டு வருகிறவனே-என்றுமாம் –

சென்று காணல் உறுகின்றேன் -என்று அந்வயம் –

இப்படி இவர் திரு மலையைக் காண ஆசைப் பட்டவாறே –
அவன் தான் திரு மலையில் சம்பத்துக் கிடக்க வந்து இவர் திரு உள்ளத்திலே புகுந்து அருளினான் –

திருமலையில் சம்பத்தைக் காண ஆசைப்படா நிற்க
என் மநோ ரதத்தை விசதம் ஆக்கினார் -என்கிறார் –

சம்பத்தாவது
திரு அருவிகளோடே கலந்து முத்துக்கள் சிதருகையும்-
திருவேங்கடமுடையானுக்கு திருப் பல்லாண்டு பாடுவாரும்
வேத பாராயணம் பண்ணுவாரும்- ஆடுவாரும் –

————————————————————————–

நான் அவன் கையிலே அகப்பட்டேன் –
ப்ரஹ்ம ருத்ராதிகளும் தங்கள் துக்க நிவ்ருத்தி அர்த்தமாக
திருமலையிலே சென்று நிரந்தரமாக ஆஸ்ரயியா நிற்பர்கள் –
நீங்களும் உங்கள் அபேஷித சித்யர்த்தமாக வாகிலும் ஆஸ்ரயியுங்கள்-என்கிறார் –

திருமலையில் போக்யதையை நினைத்துத் தாம் பல ஹீநராய்-
எல்லாரும் சென்று ஆஸ்ரயியுங்கோள் என்கிறார் ஆகவுமாம் –

சென்று வணங்குமினோ சேணுயர் வேங்கடத்தை
நின்று வினை கெடுக்கும் நீர்மையால் -என்றும்
கடிக்கமல நான்முகனும் கண் மூன்றத்தானும்
அடிக்கமலம் இட்டு ஏத்தும் அங்கு-42-

பதவுரை

சேண் உயர் வேங்கடத்தை–மிகவும் ஓங்கின (சிகரத்தையுடைய) திருமலையை
சென்று வணங்குமின்–சென்று வணங்குங்கோள் (அத் திருமலையானது)
நீர்மையால்–தன் ஸ்வபாவத்தினால்
நின்று வினை கெடுக்கும்–பாவங்களைப் போக்குவதில் நிலை நின்றிருக்கும்
அங்கு–அத் திருமலையில்,
கடி கமலம் நான்முகனும்–பரிமளம் மிக்க தாமரையிற் பிறந்தவனான பிரமனும்
கண் மூன்றத்தானும்–முக் கண்ணனான சிவ பிரானும்
என்றும்–எக் காலத்தும்
அடி–(எம்பெருமானது) திருவடிகளிலே
கமலம்–தாமரைப் புஷ்பங்களை
இட்டு–ஸமர்ப்பித்து
ஏத்தும்–ஸ்துதித்துக் கொண்டிருப்பார்கள்.

சென்று வணங்குமினோ சேணுயர் வேங்கடத்தை நின்று –
அற வுயர்ந்து இருக்கிற திருமலையைச் சென்று விடாதே ஆஸ்ரயியுங்கோள் –

திருமலையை உத்தேசித்து வழி போக்கையும் –
சென்றால் அடிமை செய்கையும் –
புருஷார்த்தம் -என்று கருத்து –

உயர்த்தி சொல்லிற்று –
புருஷார்த்த லாபத்துக்கு முட்டச் செல்ல வேண்டாதே
புறப்பட்ட வாறே தோற்றுகை-

திருமலையைக் கண்டு கொண்டு அதுவே பாதேயமாகப் போகலாம் -என்றுமாம் –

வினை கெடுக்கும் நீர்மையால்என்றும் கடிக்கமல நான்முகனும் கண் மூன்றத்தானும்-
அடிக்கமலம் இட்டு ஏத்தும் அங்கு-

சகல துக்கங்களையும் கெடுக்கும் ஸ்வ பாவத்தாலே
திரு நாபி கமலத்திலே பிறந்த சதுர்முகனும்
த்ரி நேத்ரனும்
திருவடிகளிலே-தாமரைப் பூவைக் கொண்டு நிரந்தரமாக ஆஸ்ரயியா நின்று
அவ்விடத்திலே கிஞ்சித் கரித்து ஸ்தோத்ரம் பண்ணுவர்கள் –

திருவேங்கடமுடையானை பிரயோஜனாந்தரபரும் ஆஸ்ரியா நிற்பார்கள் –
அநந்ய பிரயோஜனரான நீங்கள் திருமலையை ஆஸ்ரயியுங்கள் என்கிறார் ஆகவுமாம் –

————————————————————————–

பிரயோஜனாந்தர பரரான ப்ரஹ்மாதிகளும்
அங்கு நில மிதியாலே  அநந்ய ப்ரயோஜனராய்
சமாராதன உபகரணங்களைக் கொண்டு ஆஸ்ரயித்து
அங்குத்தைக்கு மங்களா சாசனம் பண்ணுவார்கள் -என்கிறார் –

மங்குல் தோய் சென்னி வட வேங்கடத்தானை
கங்குல் புகுந்தார்கள் காப்பணிவான் -திங்கள்
சடை ஏற வைத்தானும் தாமரை மேலானும்
குடை ஏறத் தாங்குவித்துக் கொண்டு-43-

பதவுரை

மங்குல் தோய் சென்னி–மேக மண்டலத்தளவுஞ் சென்று கிட்டியிருக்கிற சிகரத்தை யுடைத்தான
வடவேங் கடத்தானை–வட திருவேங்கடமலையில் எழுந்தருளியிருக்கும் பெருமானுக்கு
காப்பு அணிவான்–திரு வந்திக் காப்பிடுவதற்காக
திங்கள் சடை ஏற வைத்தானும்–சந்திரனைச் சடையிலே ஏற வைத்துக் கொண்டுள்ள சிவனும்
தாமரை மேலானும்–தாமரைப் பூவிற் பிறந்த பிரமனும்
தாம்–ஆகிய இவர்கள்
குடை ஏற குவித்துக் கொண்டு–திருமுத்துக் குடை முதலான உபகரணங்களைச் சேகரித்துக் கொண்டு
கங்குல்–ஸந்த்யா காலந்தோறும்
புகுந்தார்கள்–திருமலைக்குச் செல்லுவர்கள்

மங்குல் இத்யாதி –
மேக பதத்தளவும் உயர்ந்த சிகரங்களை யுடைத்தான-
வடக்கில் திருமலையிலே நின்று அருளினவனை-
ராத்ரியிலே காப்பிடுகைக்காக புகுந்தார்கள்
சந்த்ரனை ஜடையிலே வைத்த ருத்ரனும்-
திரு நாபி கமலத்திலே பிறந்த ப்ரஹ்மாவும்-

பக்தி பாரவச்யத்தாலே திரு முத்தின் குடை தொடக்கமான சமாராதன உபகரணங்களைக் கொண்டு
தத் சர்வம் தர்ம வீர்யேண  யதாவத் சப்ரச்பச்யாதி -பால -3-4-என்னும்படி
திருமலையிலே-வ்ருத்தாந்தத்தை அனுசந்தித்து
சந்த்யா காலத்திலே ப்ரஹ்மாதிகள் பணி கண்டு அருளுகைக்கு-
சத்ராத் யுபகரணங்களைக்  குடையாகப் பிடித்துக் கொண்டு
திரு வந்திக் காப்பு அணிகைக்குப்   புகா நிற்பார்கள் -என்கிறார் –

ஏறத் தாங்குவித்துக் கொண்டு –
ஏறத் தாங்குகிறது தாங்கள் கண்டு கொண்டு போகைக்காக-

————————————————————————–

ப்ரஹ்மாதிகள் தங்களுக்கு ஹிதம் அறியாத போது அறிவித்து-
பிரதிகூல நிரசன சீலனானவன் நிற்கிற
திருமலையிலே கரண பாடவம் யுள்ள போதே
எல்லாரும் போங்கள் என்கிறார் –

கொண்டு குடங்கால் மேல் வைத்த குழவியாய்
தண்ட வரக்கன் தலை தாளால் -பண்டு எண்ணி
போங்குமரன் நிற்கும் பொழில் வேங்கட மலைக்கே
போங்குமரர் உள்ளீர் புரிந்து-44-

பதவுரை

குமரர் உள்ளீர்–கிளரொளியிளமை கெடாமலிருப்பவர்களே!
பண்டு–முன்பொருகால்
குடங்கால் மேல்–மடியிலே
கொண்டு வைத்த குழவி ஆய்–எடுத்து வைக்கும் சிறு குழந்தையாய்க் கொண்டு
போம்–அந்தர்த்தான மடைந்தவனான
குமரன்–நித்ய யுவாவான எம்பெருமான்
நிற்கும்–நிற்குமிடமான
தண்டம் அரக்கன்–தண்டிக்கத் தகுந்தவனான இராவணனுடைய
தலை–பத்துத் தலைகளையும்
தாளால்–திருவடியாலே
எண்ணி–கீறி எண்ணிக் காட்டி விட்டு
பொழில் வேங்கடம் மலைக்கே–சோலைகள் சூழ்ந்த திருமலைக்கே
புரிந்துபோம்–ஆசை கொண்டு செல்லுங்கோள்

கொண்டு -இத்யாதி –
ப்ரஹ்மா தன்னை ஆஸ்ரயித்த ராவணனுக்கு வரம் கொடுக்க புக்கவாறே-
எடுத்து மடியிலே வைத்த பிள்ளை வடிவாய்-
இவன் -வத்யன்-வரம் கொடுக்கலாகாது என்று தோன்றும்படி
அவன் தலைகளைத் திருவடிகளாலே அவனுக்குத் தெரியாதபடி
விளையாடுவாரைப் போலே வத்யமாய்ப் போம் என்று பண்டே எண்ணிப் பின்பு
போன ஆஸ்ரிதருக்கு ஹித காமனான குமரன் நிற்கிற திருச் சோலைகளை யுடைத்தான திரு மலையிலே
கால் கடியார் எல்லாரும் விரைந்து போங்கோள்  என்கிறார் –

————————————————————————–

அயர்வறும் அமரர்களுக்கும்
சம்சாரிகளுக்கும் ஒக்க  பிராப்யம் திருமலை -என்கிறார் –

புரிந்து மலரிட்டுப் புண்டரீகப் பாதம்
பரிந்து படுகாடு நிற்ப -செரிந்து எங்கும்
தான் ஓங்கி நிற்கின்றான் தண்ணருவி வேங்கடமே
வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு-45-

பதவுரை

புண்டரீகம் பாதம்–திருவடித் தாமரைகளில்
புரிந்து–அன்பு பூண்டு
மலர் இட்டு–புஷ்பங்களைப் பணிமாறி
பரிந்து–மங்களாசாஸநம் பண்ணி
படுகாடு நிற்ப–வெட்டி வீழ்த்த மரங்கள் போலே கால் பேராமல் நிற்கும்படியாக
எங்கும்–ஸகல ப்ரதேசங்களிலும்
தெரிந்து–விளங்கி
தான் ஓங்கி நிற்கின்றான்–குணங்களால் பெருமை பெற்று எழுந்தருளியிருக்கும் பெருமானுடையதாய்
தண் அருவி வேங்கடமே–குளிர்ந்த அருவிகளை யுடைத்தான திருமலையே
வானோர்க்கும்–நித்ய ஸூரிகளுக்கும்
மண்ணோர்க்கும்–நிலத் தேவரான ஸ்ரீவைஷ்ணவர்களுக்கும்
வைப்பு–நிதியாயிருக்கும்.

புரிந்து இத்யாதி
மனசை வழிப்படுத்தி புஷ்பாத் யுபகரணங்களைக் கொண்டு –
அழகிய திருவடிகளை ஆஸ்ரயித்து விடாதே நிற்க-
வ்யக்தமாய் நின்றவனுடைய குளிர்ந்த திரு அருவிகளை யுடைய திருமலையே-
திரு நாட்டில் உள்ளாருக்கும் சம்சாரிகளுக்கும் வைப்பு -பரம ப்ராப்யம் –

————————————————————————–

திர்யக்குகளுக்கும் கூட சமாஸ்ரயணீயமாய் இருக்கிற திருமலையை
எல்லாரும் ஆஸ்ரயிக்க வல்லி  கோளாகில் உங்களுக்கு நன்று -என்கிறார்-

வைப்பன் மணி விளக்காம் மா மதியை மாலுக்கு என்று
எப்பொழுதும் கை நீட்டும் யானையை -எப்பாடும்
வேடு வளைக்கக் குறவர் வில் எடுக்கும் வேங்கடமே
நாடு வளைத்தாடுது மேல் நன்று -46-

பதவுரை

மா மதியை–‘சிறந்த (இந்த) சந்திரனை
மணி விளக்கு ஆ–மங்கள தீபமாக
வைப்பன் என்று–(திரு முன்பே) வைக்கப்படவேன் என்றெண்ணி (அந்த சந்திரனைப் பிடிப்பதற்காக)
கை நீட்டும்–உயரத் தூக்கின கை தூக்கினபடியே யிருக்கிற
யானையை–ஒரு யானையை (பிடிப்பதற்காக)
எப்பாடும்–நாற்புறமும்
வேடு வளைக்க–வேடர் சூழ்ந்து கொள்ள
குறவர்–(அங்குள்ள) குறவர்கள்
வில் எடுக்கும்–(அவ்யானையின் மேல் பிரயோகிக்க) வில்லை எடுத்துக் கொண்டு போகுமிடமான
வேங்கடமே–திரு மலையையே
நாடு–நாட்டிலுள்ளாரனைவரும்
வளைத்து–பிரதக்ஷிணம் பண்ணி
ஆடுதும் ஏல்–(மகிழ்ச்சிக்குப் போக்கு வீடாக) நர்த்தனம் பண்ணப் பெற்றால்
நன்று–நல்லது

வைப்பன் -இத்யாதி –
பெரிய சந்த்ரனை அழகிய விளக்காக வைப்ப திருவேங்கடமுடையானுக்கு என்றே
எப்போதும்-வாங்குகைக்குக் கை  நீட்டா நின்றுள்ள யானையை
எங்கும் வேடு சூழ்ந்து கொள்ள அவர்களோடு எதிர்த்துக் குறவர் வில்லெடுக்கும் திரு மலையை

நாடு வளைத்து ஆடுதிரேல் நன்று –
நாட்டில் உள்ளார் சூழ்ந்து ஆஸ்ரயிக்க வல்லி கோளாகில் நன்று –

————————————————————————–

திரு மலையை ஆஸ்ரயிக்க வேண்டுவான் என் என்னில்-
அவன் விரும்பி திருமலையை  அனுபவிக்கிறார் –

நன் மணி வண்ணனூர் ஆளியும் கோளரியும்
பொன் மணியும் முத்தமும் பூ மரமும் -பன் மணி நீர்
ஓடு பொருதுருளும் கானமும் வானரமும்
வேடுமுடை வேங்கடம் -47-

பதவுரை

ஆளியும்–யாளிகளும்
கோள் அரியும்–வலிமை தங்கிய சிங்கங்களும்
பொன்–பொன்களும்
மணியும்–மாணிக்கங்களும்
முத்தமும்–முத்துக்களும்
பூ மரமும்–பூத்த மரங்களும்
பல மணி நீரோடு பொருது உருளும் கானமும்–பலவகைப்பட்ட ரத்னங்கள் அருவிகளோடே கலந்து உருண்டு விழப்பெற்ற காடுகளும்
வானரமும்–குரங்குகளும்
வேடும்–வேடச் சாதியுமாகிற இவற்றை
உடை–உடையதான
வேங்கடம்–திரு மலையானது
நல் மணி வண்ணன் ஊர்–நல்ல நீல ரத்னம் போன்ற வடிவை யுடையனான அப்பனுடைய வாஸஸ் ஸ்தானமாம்

நன் மணி -இத்யாதி –
ஸ்ப்ருஹணீயமான நிறத்தை யுடையவனுடைய ஊர் -ஆளியும் -மிடுக்கை யுடைத்தான சிம்ஹமும் –

பொன் மணியும் முத்தமும் பூ மரமும் –
நாநா வர்ணமான மணி நீரோடு சஞ்சரித்து அருளுகிற காடும் வானரமும் வேடுமுடைய வேங்கடம்
திரு வருவிகள் பெருகப் புக்கால் இவை எல்லாவற்றையும் உடைத்தாய் இருக்கை-

நீருக்கு இறாய்த்து மரங்களிலே ஏறுகிற வானரமும் வேடரும் -என்றுமாம் –

————————————————————————–

ஆஸ்ரித விரோதி நிரசன ஸ்வ பாவனானவன் நின்று அருளுவதும் செய்து
பரம ப்ராப்யமான திருமலை நம்முடைய சகல துக்கங்களையும் போக்கும்-என்கிறார்-

வேங்கடமே விண்ணோர் தொழுவதுவும் மெய்ம்மையால்
வேங்கடமே மெய் வினை நோய் தீர்ப்பதுவும் -வேங்கடமே
தானவரை வீழத் தன்னாழி படை தொட்டு
வானவரைக் காப்பான் மலை-48-

பதவுரை

விண்ணோர்–நித்ய ஸூரிகளால்
மெய்ம்மையால்–உண்மையான பக்தியுடனே
தொழுவதுவும்—ஆஸ்ரயிக்கப்படுவதும்
வேங்கடமே–திருமலையே
வினை–பாவங்களையும்
மெய் நோய்–உடம்பைப் பற்றின நோய்களையும்
தீர்ப்பதுவும்–போக்கடிக்க வல்லதும்
வேங்கடமே–திருமலையே
தானவர் வீழ–அசுரர்கள் மாளும்படி
தன் ஆழிபடை தொட்டு–தனது சக்ராயுதத்தைப் பிடித்து
வானவரை–தேவர்களை
காப்பான்–காத்தருளுமெம் பெருமானுடைய
மலை–திருமலை
வேங்கடமே–திருவேங்கடமேயாம்

வேங்கடமே -இத்யாதி
திருமலையையே அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான நித்ய ஸூரிகள்
பரம ப்ராப்யமாகக் கொண்டு தொழுவதும்-
சம்சாரிகளுடைய சரீரத்தில் யுண்டான துக்கங்களையும்
துக்க ஹேதுவான பாபங்களையும் போக்குவதும் திருமலையே

வேங்கடமே -இத்யாதி
பிரதி கூலரான அசுரர்கள் படும்படியாகத் தன்னுடைய திருவாழி யாகிற ஆயுதத்தோடு
தேவர்களை ரஷிக்கும்-
அவனுடைய ஸ்தானம் திருமலை –

மெய்ம்மையால் –
பரம ப்ராப்யம் ஆகைக்காக –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் -ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் அருளிய ஸ்ரீ நான்முகன் திருவந்தாதி -25-36–

February 1, 2015

ஆஸ்ரித ரஷண உபாயஜ்ஞனாய்த் தன் மேன்மை பாராதே
அவர்கள் அபேஷிதங்களை முடித்துக் கொடுக்கும் படியை அருளிச் செய்கிறார் –

வகையால் மதியாது மண் கொண்டாய் மற்றும்
வகையால் வருவது ஓன்று உண்டே -வகையால்
வயிரம் குழைத்து உண்ணும் மாவலி தான் என்னும்
வயிர வழக்கு ஒழித்தாய் மற்று —25-

பதவுரை

மதியாது–உன் மேன்மையைச் சிறிதும் நினையாமல்
வகையால்–நல்ல உபாயங்களாலே
மண் கொண்டாய்–(மாவலியிடத்தில் இரந்து) பூமியை ஸ்வாதீனப் படுத்திக் கொண்டாய்
மற்றும்-அதற்கு மேலும்,
வயிரம்–வயிரமாகிற ரத்னத்தை
வகையால்–ஔஷதாதி உபாயங்களாலே
குழைத்து–இளகச் செய்து
உண்ணும்–உண்பவனும்
தான் என்னும்–தனக்கு மேற்பட்ட பலிஷ்டர் ஆருமில்லை யென்று அஹங்காரங் கொண்டிருப்பவனுமான
மாவலி–மஹாபலியினுடைய
வயிரம் வழக்கு–சத்ருத்வ முறையை
ஒழித்தாய்–போக்கினாய்
வகையால்–இப்படிப்பட்ட உனது காரியங்களினால்
வருவது ஒன்று உண்டே–உனக்கு ஸித்திப்பதொரு பலன் உண்டோ? (எல்லாம் ஆஸ்ரிதர்க்காகச் செய்கிறாயித்தனை.

வகையால் இத்யாதி –
நல்ல உபாயத்தாலே அவனை ஒரு சரக்காக மதியாதே பூமியை வாங்கிக் கொண்டாய்-

மற்று -இத்யாதி –
வெறும் இவ் வுபாயத்தாலே சித்திப்பது ஓன்று யுண்டோ –
அங்கன் அன்றிக்கே –
ஈச்வரனான எனக்கு ஏற்கப் போருமோ என்று நினையாதே அழகைக் காட்டி மஹாபலி மதியைக் கெடுத்து இருந்த
அவ்விரகாலே-மண்ணை அளந்து கொண்டு இந்த்ரனுக்குக் கொடுத்தாய் -என்றுமாம்

வகையால் -இத்யாதி –
உபாயத்தாலே வைர போஜனனான மகாபலி நான் என்று அபிமானித்து இந்த்ரனோடே
அவனுக்கு யுண்டான  சாத்ரவத்தை போக்கினாய் –
வயிரம் குழைத்து உண்கை என்று சாத்ரவமே ஜீவனமாய் இருக்கை-

மற்றும் வகையால் வருவது ஓன்று யுண்டோ என்று இறுதியில் அந்வயிப்பது –

————————————————————————–

இங்கனே கேட்டதுக்குக் கருத்து ஆஸ்ரித விஷயத்தில் ஓரம் செய்து நோக்கும் என்று
அவன் படியை வெளியிடுகிறார்-

மற்றுத் தொழுவார் ஒருவரையும் யானின்மை
கற்றைச் சடையான் கரிக்கண்டாய் -எற்றைக்கும்
கண்டு கொள் கண்டாய் கடல் வண்ணா நான் உன்னை
கண்டுகொள் கிற்கு மாறு–26-

பதவுரை

கடல் வண்ணா-கடல் போன்ற திருநிறமுடைய பெருமானை!
யான் தொழுவார் மற்று ஒருவரையும் இன்மை–அடியேனால் ஆஸ்ரயிக்கப்படும் தெய்வம்
(நீ தவிர) வேறு எதுவுமில்லையென்னும் விஷயத்தில்
கற்றை சடையான்–சேர்த்துக் கட்டின ஜடையை யுடையனான ருத்ரன்
கரி கண்டாய்–ஸாக்ஷி காண்
யான்–இப்படி அநந்ய பக்தனை அடியேன்
உன்னை–உன்னை
எற்றைக்கும்–எந்நாளும்
கண்டு கொள்கிற்கும் ஆறு–ஸேவித்துக் கொண்டேயிருக்க வல்லேனாம்படி
கண்டு கொள்–கடாக்ஷித்தருள வேணும்.

மற்று -இத்யாதி
இப்படி இருக்கிற உன்னை ஒழிய வேறு சிலரை ஆஸ்ரயணீயமாக யுடையேன் அல்லேன் –
என்னும் இடத்துக்கு ருத்ரன் சாஷி -என்கிறார்

எம்பெருமான் அழகிலே பிணிப்புண்ட ஆழ்வார் இப்படி யுன்னை யனுபவிக்க வல்லேனாம் படி
பார்த்து அருள வேணும் என்கிறார் ஆகவுமாம் –

மற்று -இத்யாதி –
உன்னை ஒழிய வேறு தொழப் படுவாரை நானுடையேன் அல்லேன் என்னும் இப் பாசுரத்துக்கு-
எல்லாரையும் கும்பீடு கொள்ளும் ருத்ரன் சாஷி –

எற்றைக்கும் -இத்யாதி
கடல் வண்ணா -கடல் போலே இருண்டு குளிர்ந்த வடிவை யுடையவனே

உன் அழகிலே பிணிப்பு யுண்டேன்-
நான் விடாதே யுன்னை அனுபவிக்க வல்லேனாம் படி பார்த்து அருள வேணும் –

கற்றைச் சடையான் –
அவனைத் தொழாமைக்கு நிபந்தனம் –
அவன் தானும் சாதகனாய் ஜடையைத் தரிக்கையாலே -என்று கருத்து-

————————————————————————–

எனக்கு அவனைக் காண வேணும் என்னும் அபேஷை பிறக்கை கூடின பின்பு
இவன் என்னுடைய ஹிருதயத்திலே புகுந்தான்
என்னுமத்தில் அருமை யுண்டோ -என்கிறார்-

மாறான் புகுந்த மட நெஞ்சம் மற்றதுவும்
பேறாககே கொள்வேனோ பேதைகாள் -நீறாடி
தான் காண மாட்டாத தாரகல சேவடியை
யான் காண வல்லேற்கு இது-27-

பதவுரை

பேதை காள்–மூடர்களை!,
மால்–எம்பெருமான்
தான் புகுந்த–தானே மேல் விழுந்து வந்து புகுந்திருக்கப் பெற்ற
மட நெஞ்சம்–(எனது) விதேயமான நெஞ்சிலே
மற்றதுவும்–வேறொன்றை
பேறு ஆக–புருஷார்த்தமாக
கொள்வனோ–நான் கொள்வனோ? (கொள்ள மாட்டேன்)
நீறாடி தான்–நீறு பூசின உடம்பை யுடையனான ருத்ரனும்
காண மாட்டாத–ஸேவிக்க முடியாததும்
தார்–புஷ்பங்களினால் அர்ச்சிக்கப் பட்டதும்
அகலம்–போக்யதையில் அளவிறந்ததுமான
சே அடியை–திருவடியை
யான் காண வல்லேற்கு–ஸேவிக்கும் படியான பாக்கியம் பெற்ற எனக்கு
இது–இப்படிப்பட்ட அத்யவஸாய முண்டாயிற்று.

மாறன் –
நீர்மையாலே மாறுபட்டவன் –
அறிவு கேடர்காள்-ஆஸ்ரித வ்யாமுக்தனானவன் புகுந்து
பவ்யமான நெஞ்சை யுடையவன் என்னும் இதுவும் ஒரு பேறாகக் கொள்வேனோ  –

-நீறாடி தான் காண மாட்டாத –
பேரளவு யுடையனான ருத்ரன் காண மாட்டாத –

தார் அகல சேவடியை யான் காண வல்லேற்கு –
தாரை யுடைத்தாய் அகன்று சிவந்து இருந்துள்ள திருவடியை
நான் காண வல்லேனான பின்பு

மால் தான் புகுந்த மட நெஞ்சம் –
அவன் தானே அபி நிவிஷ்டனாய்க் கொண்டு என் பக்கலிலே புகுரா நின்ற பின்பு

கடல் வண்ணா –
நான் அவன் திரு நிறத்திலே சிறிது அறிந்தேன் என்று இது பேறாகக் கொள்வேனோ –
ஒரு லாபமோ -என்கிறார்

இது மாறன் புகுந்த மட நெஞ்சம் –
மால் தான் புகுந்த மட நெஞ்சம் –

அதவா –
சர்வேஸ்வரன் தானே விரும்பிப் புகுந்த பவ்யமான நெஞ்சு –

ருத்ரன் காண மாட்டாத நிரதிசய போக்யமான திருவடிகளை
நான் காண வல்லேன் -என்கிறது –

பேறாகக் கொள்வனோ -என்றுமாம்
இது வது என்றத்தை மாறி வைப்பது –

பேதை காள் நீராடி தான் காண மாட்டாத தாரைகள சேவடியை காண வல்லேனான இதுக்கு-
மற்று மாறன் புகுந்த மட நெஞ்சம் ஆனதுவும் பேறாகக் கொள்வேனோ -இத் அந்வயம்-

————————————————————————–

பிராட்டியோட்டை சம்ஸ்லேஷ விரோதிகளைப் போக்குமாப் போலே
ஆஸ்ரித விரோதிகளை யுகந்து போக்கும் -என்கிறார்-

இது இலங்கை ஈடழியக் கட்டிய சேது
இது விலங்கு வாலியை வீழ்த்ததுவும் -இது விலங்கை
தான் ஒடுங்க வில் நுடங்கத் தண்டார் இராவணனை
ஊன் ஒடுங்க எய்தான் உகப்பு –28-

பதவுரை

இலங்கை–லங்கா புரியானது
ஈடு அழிய–சீர் குலையும் படியாக
கட்டிய–(வானர சேனையைத் துணை கொண்டு) கட்டின
சேது–திருவணை
இது–இது காண்மின்,
விலங்கு–திர்யக் யோநியிற் பிறந்தவனான
வாலியை–வாலியை
வீழ்த்தது–முடித்தது
எய்தான்–அம்புகளைச் செலுத்தின இராம பிரானுடைய
இது–இப்போது நடந்த செயல் காண்மின்,
இலங்கை தான்–லங்கா புரியானது
ஒடுங்க–அழியும் படியாகவும்
வில் நுடங்க–சார்ங்க லில் வளையும் படியாகவும்,
தண் தார் இராவணனை ஊன் ஒடுங்க–(அலங்காரமாகக்) குளிர்ந்த பூமாலை யணிந்து கொண்டிருந்த
இராவணனுடைய உடல் ஒழியும் படியாகவும்
உகப்பு–விலையான வியாபாரம்
இது–இது காண்மின்

இது-இத்யாதி-
இலங்கை கட்டுக் குலையும்படியாகக் கட்டின சேது இது –

திர்யக்கான வாலியை வீழ்த்தது இது –
இது என்று ப்ரத்யஷ சாமா நாகாரமான
ஸ்ரீ இராமாயண பிரசித்தியைச் சொல்லுகிறது –

இது -இத்யாதி –
வில் வளையும் காட்டில் இலங்கை அழியவும் குளிர்ந்த தாரை யுடையனான
ராவணன் படும்படியாகவும் எய்தவனுடைய ப்ரீதியிது-

தண் தார் இராவணன் –
தேவர்களுக்கு வைபரீத்யம் பண்ணுகைக்கு மாலை இட்டவன்

உகப்பு
ஆஸ்ரித அர்த்த பிரவ்ருத்திகளே யுகப்பது-என்கிறார் –

————————————————————————–

ஆஸ்ரித விரோதிகளைப் போக்கும் இடத்தில் அவர்கள் கார்யம் செய்தானாகை அன்றிக்கே-
தன்னுடைய சீற்றம் தீருகைக்காக அவர்களை முடிக்கும் -என்கிறார்

ஆஸ்ரித அர்த்தமாக கும்ப கர்ண வதம் பண்ணின சக்கரவர்த்தி திரு மகனுடைய
வடிவு தேஜோ ரூபமாய் பேர் அழகாய் இருக்கும் -என்கிறார் –

உகப் புருவம் தானே யொளி யுருவம் தானே
மகப் புருவம் தானே மதிக்கில் –மிகப் புருவம்
ஒன்றுக்கு ஒன்றோ ஒசணையான் வீழ ஒரு கணையால்
அன்றிக் கொண்டு எய்தான் அவன் –29-

பதவுரை

மிக–மிகவும்
புருவம் ஒன்றுக் கொன்று ஒசணையான்–ஒரு புருவத்துக்கு ஒரு புருவம் காத வழி நீளமிருக்கப் பெற்ற கும்ப கர்ணன்
வீழ–ஒழியும்படியாக
அன்றிக் கொண்டு–சீறிக் கொண்டு
ஒரு கணையால்–ஒரு பாணத்தினால்
எய்தானவன்–அடித்து முடித்தவனான இராம பிரானை
மதிக்கில்–சிந்தித்தால்
உகப்பு உருவன் தானே–மநோஹரமான திரு மேனியை யுடையவன் அவனே
ஒளி உருவன் தானே–தேஜோ மயமான திரு மேனியை யுடையவனும் அவனே,
மகப்பு உருவன் தானே–மிகவும் ஆச்சரியமான வடிவை யுடையவனும் அவனே.

உகப்புருவன் -இத்யாதி –
தர்சநீயமான ரூபத்தை யுடையவன் தானே –
எல்லாருக்கும் பிரியத்தைப் பண்ணுகிறவன் தானே -என்றுமாம் –
தீப்தேந ஸ்வேந தேஜஸா -என்கிறபடியே -அத்யுஜ்ஜ்வலமான வடிவை யுடையவன் தானே-ஆராயப் புகில்

பரிச்சேதிக்க ஒண்ணாத வடிவை யுடையவன் தானே –
பரம பதத்தில் ஸூ ரி போக்யமான வடிவை யுடையவன் தானே -என்றுமாம் –

மிக -இத்யாதி –
விக்ருத வேஷன் ஆகையாலே மிக்கு இருந்துள்ள புருவங்கள்
ஒன்றுக்கு ஓன்று யோஜனை அளவுடையனான-
கும்ப கர்ணன் விழும்படிக்கு ஈடாக ஓர் அம்பாலே சீறிக் கொண்டு எய்தானவன் –

————————————————————————–

அப் பேர் அழகோடு -கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிற பெரிய பெருமாள் தாமே –
என்னை யடிமை கொண்டவன் –
என்னை சம்சார ந்ருத்த ஸ்தலத்தில் புகாதபடி காப்பான் –
அவ்வளவு அன்றிக்கே

நெஞ்சிலே புகுந்து அபி நிவேசத்தாலே நிற்பது இருப்பதாக நின்றான்
இனி திருப் பாற் கடலில்
திரு அரவின் அணை மேல் கிடக்க சம்பாவனை இல்லை -என்கிறார்-

அவன் என்னை யாளி யரங்கத் தரங்கில்
அவன் என்னை எய்தாமல் காப்பான் -அவன் என்ன
துள்ளத்து நின்றான் இருந்தான் கிடக்குமே
வெள்ளத்து அரவணையின் மேல்—30-

பதவுரை

என்னை ஆளி–என்னை ஆட் கொண்டருள்பவனான
அரங்கத்து அவன்–ஸ்ரீரங்கநாதன்
என்னை–என்னை
அரங்கில்–ஸம்ஸாரமாகிற நாடக சாலையில்
எய்தாமல்–பிரவேசிக்க வொட்டாமல்
காப்பான்–காத்தருள்வன்,
அவன்–அப்பெருமான்
என்னது–என்னுடைய
உள்ளத்து–நெஞ்சிலே
நின்றான் இருந்தான்–நிற்பதும் இருப்பதும் செய்கிறான்,
(ஆன பின்பு இனி)
அவன்–அப் பெருமான்
வெள்ளத்து–திருப்பாற் கடலில்
அரவு–அப் பெருமான்
வெள்ளத்து–திருப்பாற் கடலில்
அரவு அணையின் மேல்–சேக்ஷ சயனத்திலே
கிடக்குமே–பொருந்துவனோ? (பொருந்த மாட்டான்.)

கோயிலிலே வந்து ஸூலபனானவன் என்னை அடிமை கொண்டான் –
இனி சம்சார ந்ருத்த ஸ்தலத்தில் புகாதபடி காப்பான் –
அவன் என் ஹிருதயத்திலே நின்றான் இருந்தான் .
திருப்பாற் கடலிலே திரு அரவணை மேலில் கண் வளர்ந்து அருளுமோ –

அரங்கு –
சம்சாரம் ஆகிற நாடக சாலை –

————————————————————————–

எத்தனையேனும் அளவுடையாருடைய துக்கங்களை போக்குவன்
எம்பெருமானே யான பின்பு-
அபரிமித துக்க பாக்குகளான பூமியில் உள்ளார் எல்லாரும்
எம்பெருமானை ஆஸ்ரயிங்கோள்-என்கிறார் –

மேல் நான்முகன் அரனை இட்ட விடு சாபம்
தான் நாரணன் ஒழித்தான் தாரகையுள் -வானோர்
பெருமானை ஏத்தாத பேய்காள் பிறக்கும்
கரு மாயம் பேசில் கதை –31-

பதவுரை

மேல்–முன்பொருகால்
நான்முகன்–பிரமன்
அரனை–ருத்ரனைக் குறித்து
இட்ட–கொடுத்த
விடு சாபம்–சாபத்தை
தாரகையுள்–இந் நிலவுலகத்தில் (உள்ளாரெல்லாரு மறிய)
நாராயணன் தான்–எம்பெருமானே
ஒழித்தான்–போக்கி யருளினன், (அப்படிப்பட்ட)
வானோர் பெருமானை–நித்ய ஸூரி நாதனான ஸ்ரீமந் நாராயணனை
ஏத்தாத–வாய் கொண்டு வாழ்த்த மாட்டாத
பேய்காள்–அறிவு கேடர்களே!
பிறக்கும் கரு–பிறப்பதற்கு அடியான கர்ப்ப ஸ்தானத்தில் (நீங்கள் அநுபவிக்கக் கூடிய)
மாயம்–ஆச்சரியமான துக்கங்களை
பேசில்–சொல்லப் புகுந்தால்
கதை–ஒரு மஹா பாரதம் போலே பரந்திருக்கும்.

மேல் -இத்யாதி –
பண்டு ப்ரஹ்மா ருத்ரன் இட்ட சாபத்தை அவன் மகன் தான் ஒருவன் இங்கனே படவாகாது என்று-
சர்வ சேஷியான தானே  இரங்கி துக்கத்தைப் போக்கினான் –

தரித்ரியிலே சர்வேஸ்வரன் ஏத்தாத ஹேயராய் யுள்ளீர்
ஜனிக்கும் கர்ப்பத்தினுடைய வாச்சர்யம் பேசில் பெரும் பரப்பு –

ப்ரஹ்மா தான் ருத்ரனை வழிய விட்ட சாபத்தை
பூமியிலே சர்வேஸ்வரனான நாராயணன் போக்கினான் –

அப்படி ருத்ராதிகளுக்கும் ரஷகனானவனை ஆஸ்ரயியாத பேய்காள்
உங்களுக்கு சம்சாரத்தில் பிறக்கும் ஆச்சர்யமான துரிதங்கள்
பேசி முடிக்க ஒண்ணாது -என்கிறார் -என்றுமாம் –

————————————————————————–

அவன் குணங்களில் அவகாஹியாதார் இதர விஷயங்களிலே
மண்டி நசித்துப் போருவார்கள் –
ஆன பின்பு -ஹேய ப்ரத்ய நீக கல்யாண குணகனான
எம்பெருமானை ஆஸ்ரயிங்கோள்-என்கிறார் –

கதைப் பொருள் தான் கண்ணன் திரு வயிற்றின் உள்ள
உதைப்பளவு போது போக்கின்றி -வதைப் பொருள் தான்
வாய்ந்த குணத்துப் படாதது அடைமினோ
ஆய்ந்த குணத்தான் அடி-32-

பதவுரை

கதை பொருள்தான்–(உலகத்தில்) உபஹரிக்கப் படுகின்ற பொருள்கள் யாவும்
உதைப்பு அளவு போது போக்கு இன்றி–ஒரு நிமிஷ காலமும் ஓயாமல் (எப்போதும்)
கண்ணன்–எம்பெருமானுடைய
திரு வயிற்றின் உள்ள–ஸங்கல்பத்தில் ஸத்தை பெற்றிருக்கின்றன,
(அப்படிப்பட்ட எம்பெருமானுடைய)
வாய்ந்த குணத்து–திருக் கல்யாண குணங்களில்
படாதது–ஈடுபடாத வஸ்து
வதை பொருள் தான்–அபதார்த்தமே யாகும்,
(ஆகையாலே)
ஆய்ந்த குணத்தான்–சிறந்த திருக் குணங்களை யுடையவனான அப்பெருமானுடைய
அடி–திருவடிகளை
அடைமின்–ஆஸ்ரயியுங்கோள்

கதை இத்யாதி –
சகல சப்தங்களின் யுடைய அர்த்தங்களும் அவன் சங்கல்பத்தாலே உண்டாய்த்தின –
லோகத்தில் சொல்லப் படுகிற பதார்த்தங்கள் -என்றுமாம் –

உதைப்பளவு -இத்யாதி –
அரை ஷணமும் இவனை ஒழியச் செல்லாத படியாய்

உதை -நொடி –

வதை -இத்யாதி –
அவனுடைய குண விஷயம் அல்லாதன நிஷித்தங்கள்-
சேதனர் பர ஹிம்சை பண்ணுகிற இதுக்கு ஹேது
அவனுடைய குண அனுசந்தானத்தைப் பண்ணாமை -என்றுமாம் –

அடைமினோ -இத்யாதி
ஹேய ப்ரத்ய நீக கல்யாண குணகனானவன் திருவைடிகளை அடையுங்கோள்   –

அன்றிக்கே –
சாஸ்த்ரங்களால் சொல்லப்பட்ட தேவ திர்யகாதிகளான ஆத்மாக்கள் எல்லாம்
ஒரு ஷண காலமும் ஒழியாமே-
எப்போதும் சத்தை பெற்றுச் செல்லுகிறது அவனுடைய சங்கல்ப்பத்தாலே –

இங்கனே இருக்கச் செய்தே விஷய ப்ரவணராய் நசிப்பான் என் என்னில் –
அவனுடைய ஆச்சர்ய குணங்களில் படாமை –
ஆன பின்பு -கல்யாண குணகனானவன் திருவடிகளை அழகிதாக அனுசந்தியுங்கோள் -என்கிறார் –

வதை பொருள் தான் –
நசித்துப் போகிற வஸ்துக்கள் தான் –

————————————————————————–

தாம் கிருஷ்ண  சேஷடிதங்களை அனுசந்தித்து இருக்கிறார் –

அடிச் சகடம் சாடி அரவாட்டி ஆணை
பிடுத்து ஒசிதுப் பேய் முலை நஞ்சுண்டு -வடிப்பவள
வாய்பின்னைத் தோளிக்கா வல்லேற்று எருத்து இருத்து
கோப்பின்னும் ஆனான் குறிப்பு-33-

பதவுரை

(எம்பெருமான்)
குறிப்பு–(அடியாரைக் காத்தருள வேணுமென்கிற) திருவுள்ளத்தினால்
அடி–திருவடியாலே
சகடம்–சகடாஸுரனை
சாடி–ஒழித்தும்
அரவு-காளிய நாகத்தை
ஆட்டி–வாலைப் பிடித்து ஆட்டிக் கொழுப்படக்கியும்
யானை–குவலயாபீட மென்னும் யானையை
பிடித்து–பற்றிக் கொண்டு
பின்னைக்கா–நப்பின்னைப் பிராட்டிக்காக
வல் ஏறு–கொடிய ரிஷபங்களினுடைய
எருத்து–முசுப்பை
ஒசித்து–கொம்பை முறித்தொழித்தும்
பேய்–பூதனை யென்னும் பேய்ச்சியினுடைய
முலை–முலையில் தடவி யிருந்த
நஞ்சு–விஷத்தை
உண்டு–அமுது செய்து அவளாயிரை மாய்த்தும்
வடி பவளம் வாய் தோளி–அழகிய பவளம் போன்ற வாயையும் தோளையும் வுடையளான
இறுத்து–முறித்தொழித்தும்
பின்னும் கோ ஆனான்–தன்னுடைய சேக்ஷித்வத்தை நிலை நிறுத்திக் கொண்டான்.

திருவடிகளாலே சகடத்தை நிரசித்து
காளிய மர்த்தனம் பண்ணி
குவலயா பீடத்தைப் பிடித்து அதினுடைய கொம்பை அநாயாசேன பிடுங்கி
பூதநா ஸ்தந பானம் பண்ணி
அழகிய பவளம் போலே இருக்கிற அதரத்தையும்
தோள்களையும் யுடைய நப்பின்னைப் பிராட்டிக்காக
வலிதான ஏறுகளின்   உடைய ககுத்தை  முறித்து
இச் செயல்களாலே ஜகத்துக்கு சேஷி யானவன்

குறிப்புக் கோப்பின்னும் ஆனான் –
ஸ்வா பாவிகமான ஸ்வாமித்வத்தையும் புதுக்கினான் -என்கிறார்-

————————————————————————–

என்னுடைய சகல துக்கங்களையும் போக்கினவனை
இனி ஒரு நாளும் மறவேன் -என்கிறார் –

குறிப்பு எனக்குக் கோட்டியூர் மேயானை ஏத்த
குறிப்பு எனக்கு நன்மை பயக்க -வெறுப்பனோ
வேங்கடத்து மேயானை மெய் வினை நோய் எய்தாமல்
தான் கடத்தும் தன்மையான் தாள்-34-

பதவுரை

கோட்டியூர் மேயானை–திருக் கோட்டியூரில் நித்ய வாஸம் பண்ணுமவனும்
வேங்கடத்து மேயானை–திரு மலையில் நித்ய வாஸம் பண்ணுமவனுமான பெருமானை
ஏத்த–ஸ்துதிப்பதற்கு
எனக்கு குறிப்பு–எனக்கு ஆசை
நன்மை பயக்க–(எம்பெருமானை இடைவிடாது அநுபவிப்பதனாலுண்டாகும்) பெருமையை உண்டாக்கிக் கொள்வதற்கு
எனக்கு குறிப்பு–எனக்கு குதூஹலம்,
மெய் வினை–சரீர ஸம்பந்தத்துக்கு அடியான கருமங்களும்
நோய்–வியாதிகளும்
எய்தாமல்–வந்து சேராதபடி
தான் கடத்தும் தன்மையான்–தானே அவற்றைப் போக்கி யருளும் ஸ்வபாவத்தை யுடையனான அப் பெருமானுடைய
தாள்–திருவடிகளை
வெறுப்பனோ–மறந்திருப்பனோ.

குறிப்பு -இத்யாதி –
சர்வ ஸூலபனாய்க் கொண்டு திருக் கோட்டியூரிலே மேவினவனை எனக்கு ஏத்த நினைவு –
எனக்கு நினைவும் மென்மேல் என உஸ்ராயங்களும் யுண்டாக –
எனக்கவை வேணும் -என்றுமாம் –

வெறுப்பனோ -இத்யாதி –
தானே வந்து திருமலையிலே நின்று அருளினவனை –
சரீரத்தில் வியாதிகளும் அதுக்கு ஹேதுவான பாபங்களும் வாராதபடி
தானே போக்கும் ஸ்வபாவனான அவனுடைய திருவடிகளை –
இப்படி ஸூலபனான அவன் திருவடிகளை விட்டு இருக்க வல்லேனோ -என்கிறார் –

அன்றிக்கே
குறிப்பு இத்யாதி –
என் நெஞ்சில் ஓடுகிறது எனக்கு இனிதாகத் திருக் கோட்டியூரிலே வந்து எழுந்து அருளி இருக்கிற நாயனாரையும்-
திருவேங்கடமுடையானையும்  ஏத்துகை-
ஒருக்கால் விட்டுப் பிடித்தாலோ என்ன –
வெவ்விய பாபங்களும் அதின் பலமான நோவுகளும் நலியாத படி
சம்சாரத்தைக் கடத்தக் கடவதான அவன் திருவடிகளை விடுவேனோ –

————————————————————————–

திருவல்லிக் கேணியிலே வாய் திறவாதே
ஏக ரூபமாகக் கண் வளர்ந்து அருளக் கண்டு

இது திரு யுலகு அளந்து அருளின ஆயாசத்தால் என்று இறே பயப்படுகிறார் –

தாளால் உலகம் அளந்த அசைவே கொல்
வாளா கிடந்தருளும் வாய் திறவான் -நீளோதம்
வந்தலைக்கும் மா மயிலை மா வல்லிக் கேணியான்
ஐந்தலை வாய் நாகத்தணை-35-

பதவுரை

நீளோதம்–பெரிய அலைகள்
வந்து அலைக்கும்–கரையிலே வந்து வீசப் பெற்ற
மா மயிலை–மயிலாபுரிக்கு அடுத்த
மா வல்லிக் கேணியான்–திருவல்லிக்கேணியில் நித்ய வாஸம் பண்ணுகிற ஸர்வேச்வரன்
ஐ தலை வாய் நாகத்து அணை–ஐந்து தலைகளையும் ஐந்து வாய்களையும் உடையானான திருவனந்தாழ்வானாகிற படுக்கையிலே
வாளா–வெறுமனே
கிடந்தருளும்–சயனித்திரா நின்றான்
வாய் திறவான்–வாய் திறந்து ஒன்று மருளிச் செய்வதில்லை
(இப்படி யிருப்பதற்குக் காரணம்)
தாளால்–திருவடியாலே
உலகம் அளந்த அசவே கொல்–உலகங்களை அளந்ததனுலுண்டான ஆயாஸமோ?

போக ப்ரதர்க்கு வர்த்திக்கலாம் படியான மயிலாப்பூரிலே
நீர் வாய்ப்பான திரு வல்லிக் கேணியிலே
திரு வநந்த வாழ்வான் ஆகிற குளிர்ந்த படுக்கையிலே
சேஷ்டியாதே -வாய் திறவாதே -கிடவா நின்றான் –
இதுக்குக் காரணம்
பிறந்த அன்றே ஸூகுமாரமான திருவடிகளாலே லோகத்தை  அளந்த  ஆயாசமோ -என்கிறார் –
வாய்ப்பான படுக்கையில் அலை எறிவாயிலே கண் வளருகிறது
வ்யசன அதிசயத்தால் -என்று கருதுகிறார்

நீளோதம்-பெரிய ஓதம் –

————————————————————————–

எம்பெருமான் சேதனரை நம் கருத்திலே சேர்த்துக் கொள்வோம் என்றால் முடிகிறது அன்றே –
அவர்கள் தங்கள் கருத்திலே ஒழுகிச் சேர்த்துக் கொள்வோம் என்று பார்த்துத்
திருக் குடந்தை தொடக்கமான-
திருப்பதிகளிலே வந்து அவசர ப்ரதீஷனாய்க் கண் வளருகிறபடியை அருளிச் செய்கிறார் –

நாகத்தணைக் குடந்தை வெக்கா திரு எவ்வுள்
நாகத்தணை யரங்கம் பேரன்பில் –நாகத்
தணைப் பாற் கடல் கிடக்கும் ஆதி நெடுமால்
அணைப்பார் கருத்தானாவான்–36-

பதவுரை

நாகத்து அணை–திருவனந்தாழ்வானாகிற படுக்கையின் மேலே
குடந்தை–திருக் குடந்தையிலும்
வெஃகா–திரு வெஃகாவிலும்
திரு எவ்வுள்–திரு வெவ்வுளுரிலும் (அப்படியே)
நாகத்து அணை–சேஷ சயனத்தின் மீது
பால் கடல்–திருப்பாற் கடலிலும்
ஆதி நெடுமால்–ஜகத் காரண பூதனான ஸர்வேச்வரன்
நாகத்து அணை–திருவனந்தாழ்வானாகிற படுக்கையின் மேல்
அரங்கம்–திருவரங்கத்திலும்
பேர்–திருப் பேர் நகரிலும்
அன்பில்–அன்பில் என்னுந் திருப்பதியிலும்
கிடக்கும்–பள்ளி கொண்டிருக்கின்றான்
(எதுக்காக வென்னில்)
அணைப்பார் கருத்தன் ஆவான்–அன்பருடைய நெஞ்சில் புகுந்தவனாக ஆவதற்காக.

நாகத்தணை -இத்யாதி –
திருக் குடந்தை -திரு வெக்கா-திரு வெவ்வுள் -கோயில் -திருப்பேர் -அன்பில் -திருப்பாற் கடல் –
முதலான இடங்களிலே திரு அரவணை மேல் கண் வளர்ந்து அருளுகிறான் –

ஆதி நெடுமால் –
சர்வ காரணமாய் ஆஸ்ரிதர் பக்கல் பெரும் பிச்சன்

அணைப்பார் கருத்தனாவான் –
ஆஸ்ரிதர் கருத்திலே ஒழுகைக்காக –
அவர்கள் ஹிருதயத்தில் புகுகைக்கு -என்றுமாம் –
இளைப்பாகில் ஓர் இடத்திலே கிடக்க அமையும்
பல இடங்களிலே திரு அநந்த ஆழ்வான் மேல் கண் வளர்ந்து அருளுகிறது -அவ்வவ தேசங்களிலே
ஆஸ்ரயிப்பார்  யுடைய நெஞ்சிலே புகுகைக்கு அவசரம் பார்த்து -என்கிறார் –

——————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் -ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் அருளிய ஸ்ரீ நான்முகன் திருவந்தாதி -13-24–

February 1, 2015

மோஷ யுபாயத்தை அறியாதே
சரீரத்தைப் பசை யறுத்துத் தடித்து இருக்கிற நீங்கள்

எம்பெருமானை உபாய உபேயங்களாகப் பற்றுங்கோள்-என்கிறார் –

வீடாக்கும் பெற்றி யறியாது மெய் வருத்திக்
கூடாக்கி நின்று உண்டு கொண்டு உழல்வீர் -வீடாக்கும்
மெய்ப்பொருள் தான் வேத முதல் பொருள் தான் விண்ண
வர்க்கும் நற்பொருள் தான் நாராயணன்-13-

பதவுரை

வீடு ஆக்கும் பெற்றி அறியாது–மோக்ஷத்தைப் பெறுவிக்கும் வழியைத் தெரிந்து கொள்ளாமல்
மெய்–சரீரத்தை
வருத்தி–(உபவாஸாதிகளாலே) க்லேசப் படுத்தி
கூடு ஆக்கி–எலும்பே மிகுந்த கூடாக அஸாரமாக்கி
நின்று–இப்படி நெடுங்காலம் தவம் புரிந்தும்
உண்டு கொண்டு–(தேஹம் தரிக்க வேண்டுமளவு ஸ்வல்பமாக) புஜித்தும்
உழல்வீர்–திரிகின்றவர்களே!
வீடு ஆக்கும்–மோக்ஷத்தைத் தரக் கூடிய
மெய் பொருள் தான்–மெய்யான உபாயமானயிருப்பவனும்
வேதம் முதல் பொருள் தான்–வேதங்களினால் முழு முதற் கடவுளாகப் பிரதிபாதிக்கப் படுபவனும்
விண்ணவர்க்கு–நித்ய ஸூரிகளுக்கு
நல் பொருள் தான்–போக்யமான வஸ்துவாயிருப்பவனும்
நாராயணன்–ஸ்ரீமந்நாராயணனே யாவன்.

வீடு இத்யாதி –
மோஷத்தை வருவிக்க வல்ல விரகு அறியாதே
உடம்பை வருத்தப் பண்ணி கூடாம்படி முடித்து துக்கப் படுகிற உங்களுக்கு
மோஷத்தை தருவிக்கும் மெய்யான உபாயமும்
வேதை க சமதி கம்யனுமாய்
அயர்வறும் அமரர்கள் அதிபதியாய்-
பிராப்யனுமாய் இருக்கிறானும் சர்வேஸ்வரன்-

————————————————————————–

இப்படி இராதார் உண்டோ என்னில்-
ஹேயரான சமய வாதிகள்  சொல்லுவதைக் கேட்டு

அனர்த்தப் படுவாரும் அநேகர் உண்டு -என்கிறார் –

நாராயணன் என்னை யாளி நரகத்துச்
சேராமல் காக்கும் திருமால் -தன் பேரான
பேசப் பெறாத பிணச் சமையர் பேசக் கேட்டு
ஆசைப்பட்டு ஆழ்வார் பலர்-14-

பதவுரை

நாராயணன்–நாராயணனென்றுந் திருநாம முடையவனும்
என்னை ஆளி–(விசேஷித்து) அடியேனை ஆட் கொள்பவனும்
நரகத்து சேராமல் காக்கும்–(அடியார்களை) நரகம் போக வொட்டாமல் காத்தருள்பவனுமான
திருமால் தன்–திருமாலினது
பேர் ஆன–திருநாமங்களாயுள்ளவற்றை
பேச பெறாத–ஸங்கீர்த்தநம் பண்ணும் பாக்கியமற்றவர்களான
பிணம்–ஜீவச் சவமென்னலாம் படியுள்ள பாஹ்ய குத்தருஷ்டி மதஸ்தர்கள்
பேச–(அபார்த்தங்களைப்) பிதற்ற
கேட்டு-அவற்றைக் கேட்டு
பலர்–பல பேர்கள்
ஆசைப் பட்டு–தாங்களும் அப்படியே பாஹ்ய குத்ருஷ்டிகளாயொழிய விரும்பி
ஆழ்வார்–அகோ கதியை யடைந்தொழிவர்

நாராயணன் -இத்யாதி –
சர்வ சேஷி –
என்னை ஆளுகிறவன்
சம்சாரத்தில் சேராதபடி என்னைக் காக்கும் ஸ்ரீ யபதி யானவன்
தன்-திருநாமங்களை
வாயாலே சொல்லுகைக்கு பாக்ய ஹீனராய்
அசந்நேவ-என்னும்படி
அசத் ப்ராயராய் ஹேயரான சமயாதிகள்
வேறே சிலவற்றைச் சொல்லக் கேட்டு அவற்றை ஆசைப் பட்டு
அத பதித்துப் போவார் அநேகர் –

ஆழ்வார்
அவற்றைக் கேட்டு-காலாழும் நெஞ்சழியும் என்று
பகவத் விஷயத்தினுள் புக்கவர்கள் ஆழங்கால் படுமாப் போலே -ஈடுபடுவர் -என்றுமாம்

திருமால் தன் பேரான பேசப் பெறாத என்று விசேஷிக்கையாலே
இவ்வர்த்தத்துக்கு இசையாத
ஏகா யனனை நினைத்து அருளுகிறார் என்று -பட்டர் –

பிணச் சமயர் என்கிறது –
தேவதாந்திர பரரையும்-
உபாயாந்தர பரரையும் –
அபூர்வம் பல ப்ரதம் என்கிற குத்ருஷ்டிகள் ஆகவுமாம் –

————————————————————————–

இப்படி அனர்த்தப் படாதே எம்பெருமானை ஆஸ்ரயிப்பார்கள் ஆகில்
ருத்ரன் கொடு போய் காட்டிக் கொடுக்க
மார்க்கண்டேயன் கண்டபடியே 
அவ்யவதாநேந காணலாம் -என்கிறார் –

பல தேவர் ஏத்தப் படி கடந்தான் பாதம்
மலர் ஏற இட்டு இறைஞ்சி வாழ்த்த -வலர் ஆகில்
மார்க்கண்டன் கண்ட வகையே வரும் கண்டீர்
நீர்க்கண்டன் கண்ட நிலை-15-

பதவுரை

பல தேவர்–பல தேவர்கள்
ஏத்த–ஸ் துதிக்கும்படியாக
படி–பூமியை
கடந்தான்–அளந்தவனான ஸர்வேஸ்வரனுடைய
பாதம்–திருவடிகளிலே
மலர்–புஷ்பங்களை
ஏற இட்டு–ஸமர்ப்பித்து
இறைஞ்சி–வணங்கி
வாழ்த்த வலர் ஆகில்–மங்களாசாஸநம் பண்ண வல்லவர்களானால்,
நீர் கண்டன் கண்ட நிலை–நீலகண்டனாகிய ருத்ரனிடத்தில் காணத்தக்க நிலைமை
மார்க்கண்டன் கண்ட வகையே–மார்க்கண்டேயன் ப்ரத்யக்ஷமாகக் கண்டவிதமாகவே
வரும் கண்டீர்–ஸித்திக்குங்கிடீர்

பல தேவர் இத்யாதி –
ப்ரஹ்மாதிகள் ஏத்த லோகத்தை அளந்து கொண்டவனுடைய திருவடிகளை  
புஷ்பாத் யுபகரணங்களைக் கொண்டு வணங்கி ஸ்துதிக்க வல்லராகில்
நீலகண்டனை புருஷகாரமாகக் கொண்டு
மார்க்கண்டேயன் கண்ட பிரகாரத்தை அவ்யவதாநேந காணலாம்

நீர்-
விஷ ஜலம் –
நீல கண்டன் -என்றபடி –

————————————————————————–

உமக்குத் தரிப்பு எத்தாலே பிறந்தது என்ன –
நான் எம்பெருமானுடைய ஆஸ்ரித பஷபாதத்தை அனுசந்தித்துத் தரித்தேன் -என்கிறார்-

நிலை மன்னும் என் நெஞ்சம் அந் நான்று தேவர்
தலை மன்னர் தாமே மற்றாக -பல மன்னர்
போர் மாள வெம் கதிரோன் மாய பொழில் மறைய
தேர் ஆழியாள் மறைத்தாரால்-16-

பதவுரை

அந்நான்று–பாரத யுத்தம் நடந்த அக் காலத்து
தேவர் தலை மன்னர் தாமே–தேவாதி தேவனான தானே
மாற்று ஆக–எதிரியாயிருந்து கொண்டு
பல மன்னர்–பல அரசர்கள்
போர்–யுத்தக் களத்தில்
மாள–மடிந்து
வெம் கதிரோன்–ஸூர்யன்
மாய–(அகாலத்தில்) அஸ்தமிக்கும்படி யாகவும்
பொழில் மறைய–பூ மண்டலம் முழுதும் இருள் மூடும்படியாகவும்
தேர் ஆழியால்–சக்கராயுதத்தினால்
மறைத்தாரால் (ஸூர்யனை) மறைத்த பெருமானாலே
என் நெஞ்சம்–எனது (சஞ்சமான) மனமானது
நிலை மன்னும்–சலிப்பற்று நிலை நிற்கப் பெற்றது.

நிலை -இத்யாதி –
தரித்து இருக்கும் என்னுடைய ஹ்ருதயம்
பாரத சமரத்தின் அன்று தேவர்களுக்குத் தலைவனாய்
ராஜாவாய் இருக்கிற தாமே எதிரி யாகவும்
பல ராஜாக்கள் யுத்தத்திலே படும்படி யாகவும்
ஆதித்யன் மறையும் படியாகவும்
பூமியடைய மறையும் படியாகவும்
ரதாங்கத்தாலே மறைத்தவராலே-

————————————————————————–

நம்மளவே அன்று –
எத்தனையேனும் பிரதானரான ருத்ராதிகளும் தம்தாமுடைய சிஷ்யர்களுக்கு உபதேசிப்பது-
எம்பெருமானை ஆச்ரயிக்கும்படியை -என்கிறார்-

ஆல நிழல் கீழ் அற நெறியை நால்வர்க்கு
மேலை யுகத்து உரைத்தான் மெய்த்தவத்தோன் -ஞாலம்
அளந்தானை ஆழிக் கிடந்தானை ஆல் மேல்
வளர்ந்தானைத தான் வணங்குமாறு -17-

பதவுரை

மெய் தவத்தோன்–மெய்யான தவநெறியை யுடையனான ருத்ரன்,
ஞாலம் அளந்தானை–உலகளந்தவனும்
ஆழிக் கிடந்தானை–க்ஷீராப்தி சாயியும்
ஆல் மேல் வளர்ந்தானை–ஆலிலே மேல் கண் வளர்ந்தவனை
தான் வணங்கும் ஆறு–தான் வழிபடும் மார்க்கமாகிய
அறம் நெறியை–நல் வழியை
மேலை யுகத்து–முன் யுகத்திலே
ஆல நிழல்கீழ்–ஓர் ஆல மரத்தின் நிழலிலே
நால்வர்க்கு–நான்கு மஹர்ஷிகளுக்கு
உரைத்தான் உபதேசித்தான்.

ஆல்-இத்யாதி
ஆகம பிரசித்தமான வட விருஷத்தின் கீழே இருந்து தர்ம மார்க்கத்தை
ஆப்தரான நாலு சிஷ்யர்களுக்குப் போன யுகத்தில் சொன்னான் –
பகவத் ஜ்ஞானம் அறிக்கைக்கு ஈடான தபஸ்சை யுடையவன் –

ஞாலம் -இத்யாதி –
ஆஸ்ரிதர் அபேஷிதங்களை முடித்துக் கொடுப்பதும் செய்து
அவர்கள் அபேஷிதங்களை அறிவிக்க அணித்தாக
திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுவதும் செய்து
பூமியைத் திரு வயிற்றிலே வைத்து
ஆலிலையிலே கண் வளர்ந்து அருளுவதும் செய்தவனைத் தான் ஆஸ்ரயிக்கும்படியை –

இத்தாலும் பகவத் பரத்வமே பிரசித்தம் -என்கிறார் –

நாலு சிஷ்யர்களுக்கு என்றது
அகஸ்த்யர் புலஸ்தியர் -தஷ -மார்க்கண்டேயர் களுக்கு -என்றபடி  –

மெய்த் தவத்தோன் -ருத்ரன் –

————————————————————————–

பகவத்  சமாஸ்ரயணத்திலும்
பாகவத சமாஸ்ரயணமே உத்க்ருஷ்டம் -என்கிறார்-

மாறாய தானவனை வள்ளுகிரால் மார்பிரண்டு
கூறாகக் கீறிய கோளரியை -வேறாக
ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்று அவரைச்
சாத்தி இருப்பார் தவம்–18-

பதவுரை

மாறு ஆய–எதிரிட்டு நின்ற
தானவனை–ஹிரண்யாஸுரனுடைய
மார்வு–மார்வை
வள் உகிரால்–கூர்மையான நகங்களினால்
இரண்டு கூறு ஆக சீறிய–இரு பிளவாகப் பிளந்த
கோள் அரியை–பெரு மிடுக்கனான நரசிங்க மூர்த்தியை
வேறு ஆக–விலக்ஷணமாக
ஏத்தி இருப்பாரை–ஸ்துதித்து பகவத் விஷயத்தில் ஆழ்ந்திருக்குமவர்களை,
மற்று அவரை சாத்தி இருப்பார் தவம் வெல்லுமே–அந்த ஸ்ரீவைஷ்ணவர்களை ஆஸ்ரயித்திருக்கும்
சரமாதிகாரிகளின் நிஷ்டைவென்று விடும்

மாறாய -இத்யாதி
எதிரியான ஹிரன்யனைச் செறிந்த யுகிராலே யவனுடைய மார்வை  
இரண்டு கூறாக அநாயாசேன பிளந்த-நரசிம்ஹத்தை
அநந்ய பிரயோஜனராய்க் கொண்டு ஆஸ்ரயித்தவர்களை வெல்லும்   
அவர்கள் தங்களை ஆஸ்ரயித்தவர்கள் யுடைய தபஸ்ஸூ –

————————————————————————–

எத்தனையேனும் பிரபல தேவதைகளுடைய வரபலத்தை யுடையவர்கள் ஆனார்களே யாகிலும்-
ஆஸ்ரிதரோடு விரோதிக்கில் அவர்களை நிரசிக்கும் -என்கிறார் –

ஆஸ்ரிதர் பக்கல் இத்தனை பஷபாதியோ நான் என்ன –
அவற்றை அருளிச் செய்கிறார் ஆகவுமாம்-

தவம் செய்து நான்முகனால் பெற்ற வரத்தை
அவம் செய்த வாழியான் அன்றே -உவந்து எம்மை
காப்பாய் நீ காப்பதனை யாவாய் நீ வைகுந்த
மீப்பாயும் எவ் உயிர்க்கும் நீயே-19-

பதவுரை

தவம் செய்து–தபஸ்ஸை அநுஷ்டித்து
நான்முகனால்–பிரமனிடத்து
பெற்ற–(ஹிரண்யன் முதலானவர்கள்) பெற்றுக் கொண்ட
வரத்தை–வரங்களை
அவம் செய்த–பழுதாக்கின
ஆழியாய்–திருவாழிக் கையனான பெருமானே!
எம்மை–அடியோங்களை
உவந்து–திருவுள்ளமுகந்து
காப்பாய் நீ அன்றே–காத்தருள்பவன் நீயே யன்றோ,
காப்பதனை ஆவாய் நீ அன்றே–காக்க வேணு மென்கிற ஸங்கல்ப முடையவனும் நீ யன்றோ,
எவ் உயிர்க்கும்–(உன்னை ஆஸ்ரயித்த) ஸகலாத்மாக்களுக்கும்
வைகுந்தம்–பரம பதத்தை
ஈப்பாயும்–அளிப்பவனும்
நீ அன்றே–நீ யன்றோ.

ஆஸ்ரிதர் பக்கல் பஷபாதத்தாலே ஹிரண்யன் தபஸ்சைப் பண்ணி
ப்ரஹ்மாவால் பெற்ற வரத்தை வ்யர்த்தம் ஆக்குவதும் செய்து
அவனுடைய ரஷண அர்த்தமாக திரு ஆழியைத் தரித்தவன் அல்லையோ  –

ஆன பின்பு ஆஸ்ரிதரான எங்களை யுகந்து சாம்சாரிக துரிதம் தட்டாமல் ரஷிப்பாயும் நீ –
காக்க வேணும் என்று நினைப்பாயும் நீ –
ரஷை தான் என்றுமாம் –
ஆஸ்ரயிப்பார் எல்லாருக்கும் ஸ்ரீ வைகுண்டத்தைக் கொடுப்பாயும் நீ-

————————————————————————–

இப்படி ரஷிக்க வேண்டுகிறது நிருபாதிக சேஷியான சர்வேஸ்வரன் ஆகையாலே -என்கிறார் –
நீ ஆஸ்ரித பஷபாதி என்னும் இடம் சொல்ல வேணுமோ –

ஆஸ்ரித நாஸ்ரித விபாகம் இன்றிக்கே
இருந்ததே குடியாக எல்லாருடைய சத்தாதிகளும்
உன்னாலே உண்டாக்கப் பட்டனவன்றோ -என்கிறார் என்றுமாம் –

நீயே யுலகெல்லாம் நின்னருளே நிற்பனவும்
நீயே தவத் தேவ தேவனும் -நீயே
எரி சுடரும் மால்வரையும் எண் திசையும் அண்டத்து
இரு சுடரும் ஆய இவை –20-

பதவுரை

உலகு எல்லாம் நீயே–உலகங்கட்கெல்லாம் நிர்வாஹகன் நீயே,
நிற்பனவும்–உலகங்கள் ஸத்தை பெற்று நிற்பதும்
நின் அருளே–உனது கிருபையினாலேயாம்,
தவம் தேர் தேவனும் நீயே–தவத்தினால் தேவர்களான பிரமன் முதலியோருக்குத் தலைவனும் நீயே,
எரி சுடரும்–ஜ்வலிக்கின்ற அக்நியும்
மால் வரையும்–பெரிய குல பர்வதங்களும்
எண் திசையும்–எட்டுத் திசைகளிலுமுள்ள ஸகல பதார்த்தங்களும்
அண்டத்து–ஆகாசத்திலுள்ள
இரு சுடரும்–சந்த்ர ஸூர்யர்களும்
ஆய இவை–ஆகிய இவை யெல்லாம்
நீயே–நீயே காண்.

நீயே இத்யாதி –
சகல லோகங்களும் உன்னாலே உண்டாக்கப் பட்டன –
அவற்றின் யுடைய ஸ்திதி உன்னாலே –
தபஸ்சாலே தேவர்கள் ஆனவர்களுக்கும் தேவனும் நீயே –
அத் யுஜ்ஜ்வலமான அக்னியும் குல பர்வதங்களும் திக்குகளும்
அண்டத்திலும் யுண்டான சந்திர ஸூர்யர்களும் ஆகிற இவையும் நீ இட்ட வழக்கு-

————————————————————————–

ஆஸ்ரித விரோதி நிரசனத்தில் அவர்கள் இல்லாதபடி ஆக்கின
எம்பெருமானுடைய சீற்றத்தையும்-
அத்தால் பிறந்த அழகையும் அருளிச் செய்கிறார் –

இவையா பிலவாய் திறந்து எரி கான்ற
இவையா வெரிவட்டக் கண்கள் -இவையா
வெரி பொங்கிக் காட்டும் இமையோர் பெருமான்
அரி பொங்கிக் காட்டும் அழகு--21-

பதவுரை

திறந்து–விரிந்து
எரி கான்ற–நெருப்பை உமிழ்ந்த
பிலம் வாய்–பாழி போன்ற பெரியவாய்
இவையா–இதுவோ!
எரி வட்டம்–கொள்ளி வட்டம் போலே உருண்டு சிவந்து ஜ்வலிக்கிற
கண்கள்–திருக் கண்கள்
இவையா–இவையோ!
எரி–அக்நி போலே
பொங்கி–கிளர்ந்து
காட்டும்–தோன்றின திருமேனியை யுடையனாய்
இமையோர் பெருமான்–நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹகனான ஸர்வேஸ்வரன்
அரி–நரசிங்க மூர்த்தியாய்
பொங்கி–கிளர்ந்து
காட்டும்–காட்டின
அழகு-அழகு
இவையா–என்ன விஷயம்!

இவை -இத்யாதி –
பெரிய வாயைத் திறந்து புறப்பட விட்ட எரி இவை –

பிலவாய்-பெரிய வாய் -என்றுமாம்

இவையா இத்யாதி –
வென்றது ஆச்சரியத்திலே
சீற்றத்தாலே எரிவட்டம் போலே இருக்கிற திருக் கண்கள் இவை –
மிகவும் ஜ்வலியா நிற்பதும் செய்து

அயர்வறும் அமரர்கள் அதிபதியான நரசிம்ஹத்தின் யுடைய மிக்க வழகியவை –
இவை இவை என்றது
நரசிம்ஹம் வளர்ந்து தோற்றின அழகுகள் பாரீர் -என்றவாறு

சாஷாத் காரமான ஸ்வ அனுபவத்தைப் பிறருக்குச் சொல்லுகிறார் –

நரசிம்ஹத்தின் யுடைய அருமை சொல்லிற்றாகவுமாம் –

————————————————————————–

ஆன பின்பு சர்வ காரணமான நரசிம்ஹத்தை ஆஸ்ரயியுங்கள்-என்கிறார்

அழகியான் தானே அரி உருவன் தானே
பழகியான் தாளே பணிமின் -குழவியாய்த்
தான் ஏழுலக்குக்கும் தன்மைக்கும் தன்மையனே
மீனாய் உயிர் அளிக்கும் வித்து-22-

பதவுரை

தான் ஏழ் உலகுக்கும் வித்து–தானே ஏழுலகங்களுக்கும் உபாதாந காரணமாய்
தன்மையவன்–ஆச்சர்ய பூதனாய்
குழவி ஆய்–(பிரளய காலத்தில்) சிறு குழந்தையாய்க் கொண்டும்
மீன் ஆய்–(பின்பொருகால்) மத்ஸ்ய ரூபியாய்க் கொண்டும்
உயிர் அளிக்கும்–ஆத்மாக்களை ரக்ஷிக்கின்றவனான
தானே–எம்பெருமான் தானே
தன்மைக்கும்–(ரூபம் ரஸம் கந்தம் முதலிய) குணங்களுக்கும்
அரி உருவன்–நரசிங்க வுருக் கொண்டவன்
தானே அழகியான்–அழகுக்கு எல்லை நிலமாயிருப்பவனும் அவன்றானே
பழகியான்–புராண புருஷனாகிய அப்பெருமானுடைய
தாளே–திருவடிகளையே
பணிமின்–ஆச்ரயியுங்கோள்

அழகியான் இத்யாதி-
அழகியான் அவனே –
ஆர் என்னில் நரசிம்ஹாம் ஆனவனே
இவ்வாத்மா தன்னிலும் காட்டில் பழையனாய்-
இதுக்கு ரஷண உபாயங்களை அறிந்து வைத்து இருக்கிறவனை ஆஸ்ரயிங்கள்-

குழவியாய் இத்யாதி –
சர்வேஸ்வரனாய் இருந்து வைத்து –
ஒரு சிறு பிள்ளையாய் ஜகத்தை வயிற்றிலே வைத்து ரஷித்து
எல்லா லோகங்களுக்கும் காரணம் ஆனவனே
பிரளயத்திலே மங்கிப் போகிற ஆத்மாக்களை மத்ஸ்யமாய் ரஷித்து
இதுக்குக் காரணம் ஆனவன் –

வடசய நாத்ய ஆச்சர்யங்களாலே காரணமாய் நின்றவனை
ஆஸ்ரயியுங்கோள்-என்கிறார் ஆகவுமாம்-

குழவி -இத்யாதி –
சர்வேஸ்வரனான தான்   வட தள  சாயியாய் பிரளயகாலத்திலே
இஜ் ஜகத்தை வயிற்றிலே வைத்து ரஷித்து –
எல்லா லோகங்களுக்கும் காரணமாய் –
அவாந்தர பிரளய காலத்திலே மத்ஸ்யமாய் வந்து திருவவதாரம் பண்ணி அருளி
சகல ஆத்மாக்களையும் ரஷிக்கைக்கு அடியாய்
அழகிய வடிவோடு நரசிம்ஹமமாய்   வந்து திருவவதாரம் பண்ணி அருளி –
ஆஸ்ரித விரோதியான ஹிரண்யனைப் பிளந்து அருளி
இப்படி சகல ஆத்மாக்களோடும் பழகி இருக்கிறவன் திருவடிகளிலே
ஆஸ்ரயிங்கோள் என்கிறார் ஆகவுமாம் –

————————————————————————–

அவனை ஆஸ்ரயிக்கைக்கு ஈடான யோக்யதை யுண்டோ என்னில்
அவை எல்லா வற்றையும் எம்பெருமான் தானே யுண்டாக்கும் -என்கிறார்–

வித்தும் இட வேண்டும் கொலோ விடை யடர்த்த
பத்தி யுழவன் பழம் புனத்து -மொய்த்து எழுந்த
கார்மேகம் அன்ன கருமால் திருமேனி
நீர் வானம் காட்டும் நிகழ்ந்து –23-

பதவுரை

விடை அடர்த்த–(நப்பின்னைப் பிராட்டிக்கா) ரிஷபங்களை வலியடக்கினவனும்
பத்தி உழவன்–(தன் விஷயத்தில் சேதநர்கட்கு) பக்தியுண்டாவதற்குத் தானே முயற்சி செய்பவனுமான எம்பெருமானுடைய
பழம் புனத்து–(ஸம்ஸாரமென்கிற) அநாதியான கேஷத்ரத்திலே
வித்தும் இட வேண்டும் கொலோ–(ஸ்வப்ரயத்நமாகிற) விதையை நாம் விதைக்க வேண்டுமோ? (வேண்டா)
(நம் முயற்சியின்றியே தானே பகவத் விஷயத்தில் ருசி விளைந்தால் திருநாட்டுக்குச் செல்லுமாளவும் நாம் எப்படி தரித்திருப்ப தென்றால்)
மொய்த்து எழுந்த–திரண்டு கிளர்ந்த
கார் மேகம் அன்ன–காளமேகம் போன்ற
கரு மால்–கரிய திருமாலினது
திரு மேனி–திருமேனியை
நீர் வானம்–நீர்கொண்டெழுந்த மேகமானது
நிகழ்ந்து–எதிரே நின்று
காட்டும்–காண்பிக்கும்
(போலி கண்டு நாம் தரித்திருக்கலாமென்றபடி.)

வித்தும் இட -இத்யாதி –
பகவத் விஷய பக்திக்கு இவன் செய்ய வேண்டுவது ஓன்று யுண்டோ –
பிரதிபந்தகங்களைத் தானே போக்கி –
ருசியைப் பிறப்பித்து –
பக்தியை விளைப்பானான -எம்பெருமானுமாய்ப்
பழையதான சம்சாரப் பரப்பில்

பழம் புனம் என்கிறது –
விளைந்து வருகிற நிலத்தில் உதிரியே முளைக்குமாபோலே
ஈஸ்வரன் சம்சார பிரவாஹத்தைப் பண்ணி வைத்த படியாலே
யாத்ருச்சிகமாக ஸூஹ்ருதங்கள் பிறக்கும் என்று கருத்து –

மொய்த்து -இத்யாதி –
அவன் வடிவைக் காண வேணும் என்கிற அபேஷை  பிறக்கிற பின்னோடே-
திரண்டு எழுந்த கார் காலத்தில் மேகம் போலே
கறுத்து இருக்கிற நிறத்தை யுடைய சர்வேஸ்வரன் திரு மேனியை
நீர் கொண்டு எழுந்த காளமேகமானது காட்டும்

அன்றிக்கே –
சம்சாரம் ஆகிற பழம் புனத்திலே ஈர நெல் வித்தி -என்கிறபடியே
விஷய ருசி யாகிற விதையைத் தான் தேடி இட வேணுமோ

அவன் வடிவோடு போலியான தன் வடிவைக் காட்டி
தத் விஷய ருசியை வர்ஷூ கவலாஹம் தானே
முன்னின்று பிறப்பியா நிற்கும் -என்றுமாம் –

————————————————————————–

ஆஸ்ரிதருடைய கார்யங்களை யாவர்களிலும் காட்டில் தான்
அதுக்கு அபிமானியாய் முடித்துக் கொடுக்கும் படியை யருளிச் செய்கிறார் –

நீர் சொன்னபடியே பக்தியைப் பிறப்பித்து ரஷியா நின்றோமே -என்ன

யுகம் தோறும் சத்வாதி குணங்களுடைய   சேதனருடைய ருசிக்கு அநு குணமாகப் பிறந்து-
அவர்கள் கார்யம் தலைக் கட்டிற்று இல்லையோ -என்கிறார் -என்றுமாம்-

நிகழ்ந்தாய் பால் பொன் பசுப்புக் கார் வண்ணம் நான்கும்
இகழ்ந்தாய் இருவரையும் வீயப் புகழ்ந்தாய்
சினப் போர் சுவேதனைச் சேனாபதியாய்
மனப் போர் முடிக்கும் வகை-24-

நிகழ்ந்தாய் -இத்யாதி
யுகம் தோறும் அவ்வோ காலங்களிலே சேதனர் உகந்த நாலு நிறத்தை உடையனாய்
இரண்டு பஷத்திலும் யுள்ள சேனையை முடியும்படி உபேஷித்தாய்-
மது கைடபர்களை இகழ்ந்தாய் -என்றுமாம் –

புகழ்ந்தாய்-இத்யாதி –
கொடிதான யுத்தத்திலே அர்ஜூனனை நீ தானே சேனாபதியாய்
உன் திரு உள்ளத்தில் படியே யுத்தத்தைப் பண்ணும்படியாகப் புகழ்ந்தாய்  –

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்