Archive for the ‘நாச்சியார் திருமொழி’ Category

ஸ்ரீ நாச்சியார் திரு மொழி – பதிமூன்றாவது திரு மொழி – -ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை -ஸ்ரீ உ. வே. P.B.A.. ஸ்வாமிகள்–

September 10, 2014

பிரவேசம் –

கீழ்த் திரு மொழியிலே
என்னை இப்போதே கண்ணபிரான் உள்ள ஏதாவது ஒரு இடத்திலே கொண்டு போய்ச் சேர்த்து விடுங்கோள் என்று
உறவினரை வேண்டினாள் –
இவள் படுகிற அவஸ்தைக் கண்ணால் கண்டவர்களும் கால் நடை தந்து போகக் கூடியவர்களோ –
அவர்கள் போக மாட்டாதபடி தளர்ந்து இருந்தார்கள்

தவிரவும் -அம்மா நீ இப்படி பதற்றமாகச் சொல்லல் ஆகாது –
பெண் பிறந்தார்க்கு இத்தனை பதற்றம் தகாது -என்றால் போலே
பழம் பாட்டுக்களையும் பாடிக் கொண்டு இருந்தார்கள்

அவர்களை நோக்கிச் சொல்லுகிறாள்
நீங்கள் என்னுடைய தசைக்குத் தகாதபடி பிரயோஜனம் அற்ற வார்த்தைகளைச் சொல்ல வேண்டா
என்னை அவன் பக்கல் கொண்டு போக மாட்டீர்கள் ஆகில்
அவன் இடம் இருநதாவது ஏதாவது ஒரு பிரசாரத்தை கொணர்ந்து எனக்குத் தந்து
அவ் வழியிலாவது என்னை வாழ்விக்கப் பாருங்கோள்-
என்கிறாள் இத் திரு மொழியிலே –

————————————————————————————————

கண்ணன் என்னும் கரும் தெய்வம் காட்சிப் பழகிக் கிடப்பேனை
புண்ணில் புளிப் பெய்தால் போலப் புறநின்று அழகு பேசாதே
பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் அரையில் பீதக
வண்ண வாடை கொண்டு என்னை வாட்டம் தணிய வீசீரே –13-1-

பதவுரை

கண்ணன் என்னும்–ஸ்ரீக்ருஷ்ணனென்கிற
கரு தெய்வம்–கரியதொரு பரதேவதையினுடைய
காட்சி–காட்சியிலே
பழகி கிடப்பேனே–பழகிக் கிடக்கிற என்னைக் குறித்து (ஓ! தாய்மார்களே! நீங்கள்)
புறம் நின்று–அசலாக இருந்து கொண்டு
புண்ணில் புளி பெய்தால் போல–புண்ணிலே புளி ரஸத்தைச் சொரிந்தாற்போல்
அழகுபேசாதே–பணிக்கை சொல்வதைத் தவிர்ந்து,
பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் அரையில்–பெண் பிறந்தாருடைய வருத்தத்தை அறியாதவனான கண்ணபெருமானுடைய திருவரையில் சாத்திய
பீதக வண்ணம் ஆடை கொண்டு–பீதாம்பரத்தைக் கொண்டுவந்து
வாட்டம் தணிய–(என்னுடைய) விரஹ தாபம் தீரும்படி
என்னை வீசீரே–என்மேல் வீசுங்கள்.

கண்ணபிரானுடைய காட்சியிலேயே பழகிக்கிடக்கிற என்னை நோக்கி நீங்கள் ஹிதோபதேஸம் செய்வதானது
புண்ணிலே புளிரஸத்தைச் சொரியுமா போலேயிராநின்றது,
‘பெண்ணே! நீ அப்படியிருந்தால் அழகாயிருக்கும், இப்படியிருந்தால் அழகாயிருக்கும்‘ என்று நீங்கள்
எனக்குச் சொல்லுகிற வார்த்தைகள் போதும், எனக்கு நீங்கள் ஒன்றும் அழகு பேச வேண்டா, உண்மையாக
எனக்கு ஏதாவது நன்மைபெறுவிக்க வேணுமென்ற கருத்து உங்களுக்குண்டாகில், பெண்பிறந்தார் படும் பாட்டை
அறியாதவனான கண்ணபிரானுடைய திருவரையிற் பீதாம்பரத்தைக் கொணர்ந்து அத்தாலேவீசி
என்னுடைய தாபத்தைத் தணிக்கப் பாருங்கள் என்கிறாள்.

கண்ணனென்றால் எல்லார்க்கும் மிகவும் எளியவன் என்று ப்ரஸித்தமாயிருந்தது, அந்த ப்ரஸித்தியானது இப்போது மாறிப்போய்
அவன் பரதேவதையாய்விட்டான் – ஸௌல பயம்மாறிப் பரத்வம் பொலியநின்றானென்றுங் கருத்துத் தோன்றக்
கண்ணனென்னங் கருந்தெய்வம் என்கிறாள். காட்சி – தர்ஸநம்,

அது பழகிக்கிடக்கையாவது -இப்போது அவன் ஸேவைஸாதிக்காவிட்டாலும் முன்பு ஸேவைஸரத்தித்தபடியை
ஸமரித்துக்கொண்டாகிலும் தரித்திருப்போமென்றால் அதுவும் முடியாதபடி முன்புகண்டகாட்சி நினைவுக்குவாராமல் அவ்வழி புல்முடிப்போகை.
அவனைஸேவித்து நெடுநாளாயிற்றுப்போலும். ஒரு பகலாயிரமுழியாய்த் தோற்றமிறே இனி,
“கண்ணனென்னுங்கருந்தெய்வங் காட்சிபழகிக்கிடப்பேனே“ என்பதற்கு
‘கண்ணபிரானைக்காணவேணு மென்பதையே அநளரதம் உருப்போட்டுக் கொண்டிருக்கிற என்னைக்றித்து‘ என்றும் பொருள்கொள்ளலாம்.

பழகுதலாவது -அப்யாஸம்பண்ணுதல், ஒன்றையே பலகால் ஆவ்ருத்திபண்ணுதல்.
புண்ணில் புளிப்பெய்தாலொக்குந் தீமை“ என்றார் பெரியாழ்வாரும். புண்ணிலே புளிரஸத்தைச் சொரிந்தால் பாதை பொறுக்கமுடியாது.
புறநின்று – எனக்கு நீங்கள் அந்தரங்கர்களாக இருந்து வார்த்தை சொல்லவேண்டியது தவிர்த்து அசலாகநின்று
வார்த்தை சொல்லுவது என்னே! என்கிறாள். புறம் நிற்கையாவது – அசலாரென்று தோற்றும்படியாக நிற்கை.
அழகுபேசுகையாவது – பணிக்கைசொல்லுகை. எனக்கு நீங்கள் பணிக்கை சொல்லவேண்டாமென்றாள்.

“பெண்ணின் வருத்தமளியாத பெருமான்“ என்றவிடத்திலே வியாக்கியான ஸ்ரீஸூக்தி –
“முலையெழுந்தார்படி மோவாயெழுந்தார்க்குத் தெரியாதிறேஎன்று பட்டரருளிச்செய்தாராக ப்ரஸித்தமிறே“ –
(மோவாயெழுகை யாவது – மீசைமுளைக்கை.)

“அரையில் பீதகவண்ண வாடைகொண்டு – என்கிறாளே, திருவரையில் சாத்தின பீதாம்பரமாகவேயிருக்க
வேணுமென்று என்ன நிர்ப்பந்தம்? மேலிட்ட உத்தரீயமானாலாகாதோ? என்று நஞ்சீயர் பட்டரைக்கேட்க.
“ஆண்டாள் கண்ணபிரானுடைய ஸ்வேதபரிமளத்திலே மிகவும் ஆசை கொண்டவள் காணும்,
மேலிட்ட உத்தரீயத்தில் அது ஆசைதீரக்கிடைக்குமென்று ‘அரையிற் பீதகவண்ணவாடைகொண்டு‘ என்கிறாள்“ என்றருளிச்செய்தாராம்.

பீதகவண்ணவாடை – பீதமென்ற வடசொல் சுப்ரத்யயமேற்றுப் பீதகமென்றாயிற்று,
பீதகவண்ணம் – பொன்வர்ணமான, ஆடை – அதாவது பீதாம்பரம். ஆண்டாளுடைய தாபத்தின்மிகுதியைக் கண்ட
தாய்மார்கள் விசிறியைக் கொணர்ந்து அதனால் விசிறத் தொடங்க, நீங்கள் இதனால் என்னுடைய தாபத்தைத் தணிக்கமுடியாது,
அவனுடைய பீதாம்பரத்தைக் கொணர்ந்து அத்தால் விசிறினால்தான் வாட்டந்தணியுமென்கிறாள் – என்று
ஒருகால் அழகிய மணவாளச்சீயர் உபந்யஸித்தருளினபடி.

கண்ணன் என்னும் கரும் தெய்வம் காட்சிப் பழகிக் கிடப்பேனை
கண்ணபிரான் உடைய காட்சியிலே பழகிக் கிடக்கிற என்னை நோக்கி நீங்கள் –
கண்ணன் என்றால் எளியவன் -சௌலப்யம் –
அது மாறி பரத்வமே மிக்கு பொலிய நின்றான்-
கண்ணன் என்னும் கரும் தெய்வம் –

காட்சி -தர்சனம்
அது பழகிக் கிடக்கையாவது
இப்போது சேவை சாதிக்கா விட்டாலும்
முன்பு அளித்த சேவை ஸ்மரித்து கொண்டாகிலும் தரிக்கப் பார்த்தால்
அதுவும் முடியாதபடி காட்சி நினைவுக்கு வாராமல் அவ்வழி புல் மூடிப் போகை-
சேவை நெடு நாள் முன்பு போலே
ஒரு பகல் ஆயிரம் ஊழியாய் தோற்றும் இ றே-
அன்றிக்கே
கண்ணன் என்னும் கரும் தெய்வம் காட்சி பழகிக் கிடப்பேனை -என்றது
காண வேணும் என்று அநவரதம் உருப் போட்டு கொண்டு இருக்கிற என்னைக் குறித்து ‘
பழகுதல் -அப்யாசம் -பலகால் ஆவ்ருத்தி பண்ணுதல்

புண்ணில் புளிப் பெய்தால் போலப் புறநின்று அழகு பேசாதே –
ஹிதோபதேசம் செய்வதாவது
புண்ணிலே புளி ரசத்தை சொரியுமா போலே இரா நின்றது
பெண்ணே நீ அப்படி இருந்தால் அழகாக இருக்கும்
இப்படி இருந்தால் அழகாக இருக்கும் என்று சொல்லுகிற வார்த்தைகள் போதும்
நீங்கள் எனக்கு அழகு பேச வேண்டா –

புண்ணில் புளி பெய்தால் போலே –
ஷதேஷாரமிவ –
புண்ணில் புளி பெய்தால் ஒக்கும் தீமை -பெரியாழ்வார் –

புற நின்று –
அந்தரங்கர்களாக நின்று வார்த்தை சொல்ல இருக்க
அசலார் என்று தோற்றும்படி நிற்கை

உண்மையாக நீங்கள் எனக்கு நன்மை பெறுவிக்க கருத்து பட்டீர்கள் ஆனால்
பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் அரையில் பீதக வண்ண வாடை கொண்டு என்னை வாட்டம் தணிய வீசீரே
பெண் பிறந்தார் படும் பாட்டை அறியாதவனான கண்ணபிரான்
திருவரையில் பீதாம்பரத்தைக் கொணர்ந்து
அத்தாலே வீசி
என்னுடைய தாபத்தை தணிக்கப் பாருங்கோள்

பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் –
முலை எழுந்தார் படி
மோவாய் எழுந்தார்க்குத் தெரியாது இ றே
என்று பட்டர் அருளிச் செய்ததாக பிரசித்தம் -இ றே
மோவாய் -மீசை –

அரையில் பீதக வண்ண வாடை கொண்டு -என்கிறாளே
திருவரையில் சாத்தின பீதாம்பரமாகவே இருக்க வேணும் என்று என்ன நிர்பந்தம்
மேலிட்ட உத்தரீயம் ஆனால் ஆகாதோ -என்று நஞ்சீயர் பட்டரைக் கேட்க
ஆண்டாள் கண்ணபிரான் உடைய ஸ்வேத பரிமளத்தில் மிகவும் ஆசை கொண்டவள் காணும்
மேலிட்ட உத்தரீயத்தில் அது விசேஷமாகக் கிடைக்காது
திருவரையில் பீதாம்பரத்தில் தான் அது ஆசை தீரக் கிடைக்கும் என்று
அரையில் பீதக வண்ண வாடை கொண்டு -என்கிறாள் -என்று அருளிச் செய்தாராம்

பீதக வண்ணவாடை
பீதம் என்ற வடசொல் பரத்யயம் ஏற்று –பீதகம் -என்றாயிற்று –
பொன் வர்ணமான பீதாம்பரம்

ஆண்டாள் உடைய தாபத்தைக் கண்ட தாய்மார்கள் விசிறி கொண்டு விசறத் தொடங்க
நீங்கள் இதனால் என்னுடைய தாபத்தை தணிக்க முடியாது
அவனுடைய பீதாம்பரத்தைக் கொணர்ந்து
அத்தால் வீசினால் தான் வாட்டம் தணியும் -என்கிறாள்
என்று ஒரு கால் அழகிய மணவாள சீயர் உபன்யசித்து அருளின படி –

—————————————————————————————————-

பாலாலிலையில் துயில் கொண்ட பரமன் வலைப்பட்டு இருந்தேனை
வேலால் துன்பம் பெய்தால் போல் வேண்டிற்றெல்லாம் பேசாதே
கோலால் நிரை மேய்ந்தானாய்க் குடந்தைக் கிடந்த குடமாடி
நீலார் தண்ணம் துழாய் கொண்டு என் நெறி மென் குழல் மேல் சூட்டீரே–13-2-

பதவுரை

பால் ஆலிலையில்–பால் பாயும் பருவத்தை யுடைய ஆலந்தளிரிலே
துயில் கொண்ட–கண் வளர்ந்தருளின
பரமன்–பெருமானுடைய
வலை–வலையிலே
பட்டிருந்தேனை–அகப்பட்டுக் கொண்டிருக்கிற என்னைக் குறித்து
வேலால் துன்னம் பெய்தால் போல்–வேலாயுதத்தை யிட்டுத் துளைத்தாற்போல் (கொடுமையாக)
வேண்டிற்று எல்லாம் பேசாதே–உங்களுக்குத் தோன்றின படி யெல்லாம் சொல்வதைத் தவிர்ந்து
ஆயன் ஆய்–இடைப் பிள்ளையாய்
கோலால்–(இடைச் சாதிக்கு உரிய) கோலைக் கொண்டு
நிரை மேய்த்து–பசுக் கூட்டங்களை மேய்த்தவனாய்
குடந்தை கிடந்த–திருக் குடந்தையில் திருக் கண்வளர்ந்தருளுமவனாய்
குடம் ஆடி–குடக் கூடத்தாடினவனுமான கண்ணபிரானுடைய
நீல்ஆர் தண்அம் துழாய் கொண்டு–பசுமை பொருந்திக் குளிர்ந்து அழகிய திருத் துழாயைக் கொண்டு வந்து
நெறி மென்–நெறிப்புக் கொண்டதாயும் மிருதுவாயு மிருந்துள்ள
என் குழல்மேல்–என் கூந்தலிலே
சூட்டீர்–சூட்டுங்கள்

தாய்மார்களே! நீங்கள் எனக்கு ஹிதஞ்சொல்வதாக நினைத்துப் பல பேச்சுக்களைப் பேசுகிறீர்கள்,
எப்படியாவது என்நெஞ்சைக் கண்ணபிரானிடத்தில் நின்றும் மீட்கவேணுமென்று பார்க்கிறீர்கள்,
நான் அவ்விஷயத்தில் அவகாஹிப்பதற்குமுன்பு நீங்கள் ஹிதஞ்சொல்லியிருந்தால் ஒரு கால் ப்ரயோஜநப்பட்டிருக்கலாம்,
வெள்ளம் கடந்தபின்பு அணை கட்டுவாரைப்போலே, அவ்விஷயத்திலே நான் அற்றுத் தீர்ந்தபின்பு
என்னை நீங்கள் மீட்கப்பார்த்துப் பயனென்? நானோ, “பாலகனென்று பரிபவஞ்செய்யேல் பண்டொருநாள்,
ஆலினிலை வளர்ந்த சிறுக்கனவனிவன்“ என்னும் படியான கண்ணபிரானாகிற வலையிலே சிக்கிக் கொண்டேன்,
அதில் தப்பநீங்க என்னாலும் முடியாது, உங்களாலும் தப்புவிக்கமுடியாது,
இப்படிப்பட்ட நிலைமையில் சொல்வதானது வெறும் பேச்சாயில்லை, வேலாயுதத்தையிட்டுத் துளைக்கிறாப்போல்
அத்தனை பாதகமாயிரா நின்றது. இப்போது எனக்கு நீங்கள் உண்மையாக ஏதாவது நன்மைசெய்ய விரும்புதிரேல்,
ஸௌஸீல்ப ஸௌலப்யாதி குணங்கள் விளங்கநின்ற அக்கண்ணபிரானுடைய ஸம்பந்தம் பெற்றதொரு திருத்துழாய்மலரைக்
கொணர்ந்து என் குழலிலே சூட்டுங்கள் அதுவே எனக்குற்ற நன்மையாகும் என்கிறாள்.

பாலாலிலே என்றது பால்பாயும் பருவமான ஆலிலே என்றபடியாய் மிகவும் இளைசான இலையைச் சொன்னபடி.
கல்பத்தின் முடிவில் உலகங்களையெல்லாம் எம்பெருமான் தன்திருவயிற்றில் வைத்து
ஓர் ஆலந்தளிரிலே கண்வளர்ந்தருள்வதாக நூறுகொள்கை.

“வலைப்பட்டிருந்தேனே“ என்றவிடத்து வியாக்கியான ஸ்ரீஸூக்தி “பெரியாழ்வார் மகளிறே,
பரிவரில்லாதவிடத்திலே சாய்ந்தானென்று அதிலே நெஞ்சை வைத்திருக்கையாலே கால்வாங்கிப் போகமாட்டாதே சிறைப்பட்டிருந்தாள்காணும்“

தாய்மார்களே ஹிதம் சொல்வதாக பல பேசி மீட்கப் பார்க்கிறீர்கள் அவனிடம் அற்றுத் தீர்ந்த பின்பு-
வெள்ளம் கடந்த பின்பு -அணை கட்டுவாரைப் போலே -நானோ –
பாலாலிலையில் துயில் கொண்ட பரமன் வலைப்பட்டு இருந்தேனை
பாலகன் என்று பரிபவம் செய்யேல் பண்டொரு நாள் ஆலினிலை வளர்ந்த சிறுக்கன் அவன் இவன் -என்னும்படியாகிற
கண்ணபிரான் உடைய வலையிலே சிக்கிக் கொண்டேன்
அதில் தப்பி நீங்க என்னாலும் முடியாது
உங்களாலும் தப்புவிக்க முடியாது –

வேலால் துன்பம் பெய்தால் போல் வேண்டிற்றெல்லாம் பேசாதே –
இந்த நிலைமையிலே நீங்கள் சொல்லும் ஹிதம் வெறும் பேச்சாய் இல்லை –
வேலாயுதத்தை இட்டுத் துளைக்கிறாப் போலே அத்தனை பாதகமாய் இரா நின்றது
இப்போது நன்மை செய்ய விரும்புதீரேல் ஆனால் –

கோலால் நிரை மேய்ந்தானாய்க் குடந்தைக் கிடந்த குடமாடி-
சௌசீல்ய
சௌலப்யாதி
குணங்கள் -விளங்க நின்ற அக் கண்ணபிரான் உடன் சம்பந்தம் பெற்ற

நீலார் தண்ணம் துழாய் கொண்டு என் நெறி மென் குழல் மேல் சூட்டீரே
ஒரு திருத் துழாய் மலரைக் கொணர்ந்து
என் குழலிலே சூட்டுங்கோள் –

பாலாலிலை -பால் பாயும் பருவமான ஆலிலை –
மிகவும் இளசான இலை-
கல்பத்தின் முடிவில் உலகங்களை திரு வயிற்றிலே வைத்து ஆலந்தளிரிலே கண் வளர்ந்து அருளினான் –

வலைப்பட்டு இருந்தேனை –
பெரியாழ்வார் மகள் இ றே
பரிவர் இல்லாத இடத்திலே சாய்ந்தான் என்று
அதிலே நெஞ்சை வைத்து இருக்கையாலே
கால் வாங்கிப் போக மாட்டாதே
சிறைப் பட்டு இருந்தாள்-காணும் –

——————————————————————————————————

கஞ்சைக் காய்ந்த கரு வில்லி கடைக் கண்ணி என்னும் சிறைக் கோலால்
நெஞ்சூடுருவ வேவுண்டு நிலையும் தளர்ந்து நைவேனை
அஞ்சேல் என்னான் அவன் ஒருவன் அவன் மார்வணிந்த வனமாலை
வஞ்சியாதே தருமாகில் மார்வில் கொணர்ந்து புரட்டீரே —13-3-

பதவுரை

கஞ்சை–கம்ஸனை
காய்ந்த–தொலைத்தவனாயும்
கரு வில்லி–பெரியவில் போன்ற புருவத்தை யுடைனாயு மிருக்கிற கண்ண பிரானுடைய
கடைக்கண் என்னும்–கடைக் கண்ணாகிற
சிறை கோலால்–சிறகையுடைய அம்பாலே
நெஞ்சு ஊடுருவ–நெஞ்சமுழுதும்
வேவுண்டு–வெந்து போம்படியாகப் பெற்று
நிலையும் தளர்ந்து–நிலைமை குலைந்து
நைவேனை–வருந்துகின்ற என்னை நோக்கி
அஞசேல் என்னானவன் ஒருவன்–“பயப்படாதே“ என்றொரு வார்த்தையும் சொல்லாதவனாய் விஜாதீயனான
அவன் -அப்பெருமான்
மார்வு அணிந்த–(தனது) திருமார்பில் சாத்தி யருளின
வன மாலை–வன மாலையை
வஞ்சியாதே–மோசம் பண்ணாமல்
தரும் ஆகில்–கொடுத்தருள்வனாகில்
கொணர்ந்து–(அம் மாலையைக்) கொண்டு வந்து
மார்வில்–(என்னுடைய) மார்பிலே
புரட்டீர்–(நெஞ்சினுள் வெப்பம் தீருமாறு) புரட்டுங்கள்

கம்ஸனைக் கொண்றொழித்தவனும் சார்ங்கவில்போன்ற திருப்புருவங்களையுடையனுமான கண்ணபிரானுடைய
கடாக்ஷங்களிலே நான் மிகவும் ஈடுபட்டு ஆற்றமாட்டாமல் நிலை தளரந்துபோக நின்றேன்,
இப்படிப்பட்ட நிலைமையில் வேறு உதவியொன்றுஞ் செய்யாமற்போனாலும் “நானிருக்கிறேன், பயப்படாதே“ என்றொரு
வாய்ச்சொல்லாவது சொல்லலாமே அவன், அதுவும் சொல்லக் காணோம் நீங்களாவது அவனிடஞ்சென்று
என் பரிதாப நிலைமையை விண்ணப்பஞ்செய்து அவனையே ஸகாக்ஷாத்தாக இங்கு அழைத்துவர முடியாமற் போனாலும்
அவன் திருமார்பிலே சாத்திய வனமாலையையாவது கொடுக்குமாறு கேளுங்கள்
அவனும் அதனை வஞசியாமல் கொடுத்தருளினானாகில் கொணர்ந்து நெஞ்சூடுருவ வேவுண்ட எனது நெஞ்சில்
தாபம் ஆறும்படி மார்பிலே புரட்டுங்கள் என்கிறாள்.

கஞ்சன் என்றசொல் இங்கே கஞ்சு எனச் சிதைந்து கடக்கிறது. காய்ந்த – காய்தல் – கோபித்தலாய்,
அதன்காரியமான முடித்தலைச்சொல்லுகிறது, கம்ஸனைமுடித்த -என்றதாயிற்று.
கருவில்லி “வில் போன்ற புருவத்தை யுடையவன்“ சொல்லியிருப்பது – முற்றுமை.
இதனை வடநூலார் அலங்கார ஸாஸ்தரத்தில் ரூபகாதிசயோக்தி என்பர்.

கடைக்கணென்னும் சிறைக்கோலால் –
“ஏழையராவி புண்ணும் இணைக்கூற்றாங் கொலோவறியேன், ஆழியங்கண்ணபிரான் திருக்கண்கள்கொலோ“ என்றும்,
பாவியேன்றன்னையடுகின்ற கமலக்கண்ணதோர்“ என்றுமு சொல்லுகிறபடியே
எம்பெருமானுடைய திருக்கணோக்கம் விஸ்லேஷதஸையிலே, மிகவும் துன்பப்படுத்தவற்றாதல் பற்றி
“கடைக்கணென்னுஞ் சிறைக்கோலால் நெஞ்சூடுருவ்வேவுண்டு“ என்கிறாள்.
“ஆஸ்ரிதரோடு வாசியற எல்லாரையும் கோலாலே கொல்லுவன் எம்பெருமான்“ என்று
அழகிய மணவாளச்சீயர் ரஸோக்தியாக அருளிச்செய்யும்படி. அதாவது –
“கொல்லாமாக்கோல் கொலைசெய்து பாரதப்போர் எல்லாச்சேனையும் இரு நிலத்தவித்த வெந்தாய்“ (திருவாய்மொழி ) என்கையாலே
அநாஸ்ரிதரைக் கொல்லுகைக்கு ஒரு யாலே ஆஸ்ரிதலைக் கொல்லுகைக்கும் ஒருகோல் பரிகரமாயிற்று என்க.
சிறைக்கோல் – கோல் என்று அம்புக்குப் பெயர், சிறைக்கோலென்றது – இறகுகளையுடைய அம்பு என்றபடி
அல்லது, சிறைச்சாலையில் உபயோகிக்கப்படும் அடிகோல் என்றும் பொருள்கொள்ளலாம்
ஹிம்ஸிப்பதில் வல்லமைவாய்ந்தகோல் என்பது தேர்ந்தகருத்து.
ஸாதாரணமான அம்புகளைப்போல் தோல்புரையைபட்டு நில்லாமல் நெஞசிலேபட்டு மர்மஸ்பர்ஸியாய்ப்
பெறுக்கவொண்ணாத துன்பத்தைத் தருகின்றமை தோன்ற “நெஞ்சூடுவ்வேவுண்டு“ என்கிறாள்.
அம்புபட்டால் நாலடி நடந்துசென்று பிறகு தளர்த்தியுண்டாகும்,
அவனுடைய நோக்கிற அம்புபட்டால் “நிலையுந்தளர்ந்து நைவேனே“ என்கிறாள்
நைவேனை – ஸந்திபந்தங்கள் குலைந்து ஸைதில்பத்தை படைத்த என்னை என்றபடி.

வனமாலை -(ஆபதபத்மம் யாமாலா வநமோலேதி ஸ மதா, எனபர் வடநூலார்,
வனம் என்பதற்கு பல்பொருள்களில் அழகு என்னும் பொருளையும், துளஸி என்னும் பெர்ருளையும் இங்கே விவக்ஷித்து,
அழகியமாலை, அல்லது – திருத்துழாய்மாலை என்றுபொருள் கொள்வதம் நன்றே.
வஞசியாதே தருமாகில் – நீங்கள் அப்பெருமானிடத்துச் சென்று
“ஆண்டாளுக்காக உன் மார்வணிந்த வனமாலையைக் கொடுத்தருள்“ என்று கேட்டால்“
அவன் * வஞ்சக் கள்வன் மாமாயனாகையாலே தன்னுடைய புன் முறுவலைக் காட்டி கடாக் ஷவிக்ஷண சாதுரியத்தைக் காட்டியும்
உங்களைமயக்கி நீங்கள் வந்தகாரியத்தை மறந்தொழியும்படி செய்து மோசப் பண்ணிவிட்டாலும் விடுவன்.
அப்படி வஞசனை பண்ணாமல் திருமார்வுமாலையைத் தந்தருளினானாகில்அதனைக் கொணர்ந்து
என் தலையில் சூட்டப் பாராமல் புண்பட்டவிடத்தில் பரிஹரிக்க வேண்டுமாதல்பற்றி மார்பிலே புரட்டி
* நெஞ்சூடுருவ்வேவுண்ட தாபமெல்லாம் தணியும்படி செய்யுங்கள் என்கிறாள்.
அவன்றன்னையே முடிந்தது. அணையவேணுமென்று பட்டஆசை மாலையிலே சென்று முடிந்தது.

கஞ்சைக் காய்ந்த கரு வில்லி கடைக் கண்ணி என்னும் சிறைக் கோலால்
கம்சனை கொன்று ஒழித்தவனும்
சாரங்க வில் போன்ற திருப் புருவங்களை யுடையவனுமான
கண்ணபிரான் உடைய கடாஷங்களிலே
சிறகை யுடைய அம்பால் –

நெஞ்சூடுருவ வேவுண்டு நிலையும் தளர்ந்து நைவேனை –
நான் மிகவும் ஈடுபட்டு
ஆற்ற மாட்டாமல்
நிலை தளர்ந்து நைந்து போகா நின்றேன் –

அஞ்சேல் என்னான் அவன் ஒருவன் அவன் மார்வணிந்த வனமாலை
இப்படிப் பட்ட நிலையிலும்
வேறு உதவி ஒன்றும் செய்யாமல் போனாலும்
மா சுச -என்று ஒரு வாய்ச் சொல்லாவாது சொல்லலாமே –
அதுவும் சொல்லக் காணோம்
நீங்களாவது அவனிடம் சென்று
என் பரிதாப நிலைமையை விண்ணப்பம் செய்து
அவனையே சாஷாத்தாக இங்கு அழைத்து வர முடியாமல் போனாலும்
அவன் திரு மார்பிலே சாத்திய வனமாலை யாவது கொடுக்குமாறு கேளுங்கோள் –

வஞ்சியாதே தருமாகில் மார்வில் கொணர்ந்து புரட்டீரே –
அவனும் அதனை வஞ்சியாது கொடுத்து அருளினான் ஆகில் கொணர்ந்து
நெஞ்சுடுருவ வேவுண்ட-எனது நெஞ்சிலே தாபம் ஆறும்படி
மார்பிலே புரட்டுங்கோள் –

கஞ்சன் -சிதைந்து கஞ்சு –
காய்ந்த கோபித்தலாய் –அதன் கார்யமான -முடித்தலை சொல்லிற்று
கருவில்லி -முற்றுவமை -ரூபக அதிசய உக்தி –

கடைக் கண் என்னும் சிறைக் கோலால் –
ஏழையர் ஆவி யுண்ணும் இணைக் கூற்றம் கொலோ அறியேன் –
ஆழி யம் கண்ணபிரான் திருக் கண்கள் கொலோ -என்றும்
பாவியேன் தன்னை யடுகின்ற கமலக் கண்ணதோர் -என்றும்
சொல்லுகிறபடியே எம்பெருமான் உடைய திருக் கண் நோக்கம் விஸ்லேஷ தசையில்
துன்பப் படுத்துவதால் –
கடைக் கண் என்னும் சிறைக் கோலால் -நெஞ்சூடுருவ வேவுண்டு என்கிறாள் –
ஆஸ்ரிதரோடு அநாஸ்ரிதரோடு வாசி அற எல்லாரையும் கோலாலே கொல்லுவான் எம்பெருமான்
என்று ரசோக்தியாக அருளிச் செய்வர் அழகிய மணவாள சீயர்
அதாவது
கொல்லா மாக்கோல் கொலை செய்து பாரதப் போர் எல்லாச் சேனையும் இரு நிலத்தவித்த எந்தாய் -திருவாய் -3-2-3-
அநாஸ்ரிதரை கொல்லுகைக்கு ஒரு கோல் பரிகரம் ஆயிற்று
இங்கே ஆஸ்ரிதரை கொல்லுகைக்கு
கடைக் கண் என்னும் சிறைக் கோலால் -என்று ஒரு கோல் பரிகரம் ஆயிற்று
கோல் -என்று அம்புக்கு பெயர்
சிறைக் கோல் -சிறகுகளை யுடைய அம்பு
அன்றிக்கே சிறைச் சாலையில் உபயோகிக்கும் அடிக்கோல்
தோல் புரையே பட்டு நில்லாமல்
மர்ம ஸ்பர்சியாய் பொறுக்க ஒண்ணாத துன்பம் என்பதால்
நெஞ்சூடுருவ வேவுண்டு என்கிறாள் –
அம்பு பட்டால் நாலடி நடந்து சென்ற பின்பு தளர்ச்சி அடைவோம்
இங்கே நின்ற நிலையிலே துடித்து விழும்படி யாகும் -என்கிறாள்
நிலையும் தளர்ந்து நைவேனை -சந்தி பந்தங்கள் குலைந்து
சைதில்யத்தை யடைந்த என்னை –

வனமாலை –
ஆபாத பத்மம் யாமாலா வனமாலேதி சா மதா
வனம் -அழகு துளசி
அழகிய மாலை –திருத் துழாய் மாலை –

வஞ்சியாதே தருமாகில்
அவன்
வஞ்சக் கள்வன் மா மாயன் ஆகையாலே
தன புன்முறுவலைக் காட்டி
கடாஷ வீஷண சாதுர்யத்தைக் காட்டி
உங்களை மயக்கி
நீங்கள் வந்த கார்யத்தையும் மறக்கப் பண்ணி மோசம் செய்ய வல்லவன்
அப்படி பண்ணாமல்
திரு மார்பு மாலையைத் தந்து அருளுவான் ஆகில்
அதனைக் கொணர்ந்து என் தலையிலே சூட்டப் பாராமல்
புண்பட்ட இடத்திலே பரிஹரிக்க வேண்டும் ஆதலால்
மார்பிலே புரட்டி நெஞ்சூடுருவ வேவுண்ட தாபம் எல்லாம்
தணியும் படி செய்யுங்கோள் –

அவன் தன்னையே நேராக மார்பிலே அனைய வேணும் என்று ஆசை
அந்தோ மாலையிலே சென்று முடிந்தது –

——————————————————————————————–

ஆரே யுலகத் தாற்றுவார் ஆயர் பாடி கவர்ந்துண்ணும்
காரேறு உழக்க உழக்குண்டு தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை
ஆராவமுதம் அனையான் தன் அமுத வாயிலூறிய
நீர் தான் கொணர்ந்து புலராமே பருக்கி இளைப்பை நீக்கீரே–13-4-

பதவுரை

ஆயர்பாடி–திருவாய்ப்பாடி முழுவதையும்
கவர்ந்து உண்ணும்–கொள்ளை கொண்டு அநுபவிக்கிற
கார் ஏறு–ஒரு கறுத்த காளை போன்ற கண்ணன்
உழக்க–ஹிம்ஸிக்க
உழக்குண்டு–(அதனால்) துன்பப்பட்டு
தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை–பலவகையான் சைதில்யங்களை யடைந்து நொந்து கிடக்கிற என்னை
உலகத்து–இவ் வுலகத்திலே
ஆற்றுவர்–தேறுதல் சொல்லி ஆறச் செய்பவர்
ஆரே–ஆருண்டு (யாருமில்லை)

(“நாங்களிருக்கிறோமே, அம்மா! உனக்கு என்ன செய்யவேணும் என்று தாய்மார் கேட்க
இராமபிரானிடத்து ஆசைப்பட்டோமாகில் (பஹவோ! கல்யாணகுணா, புதுரஸ்ய ஸந்திதே) என்படி
அவன் குணங்கடலாகையாலே அந்க் குணங்களை நம்பியநுஸந்தாநஞ்செய்து கொண்டு ஒருவாறு தத்தத்திருங்கள்
(பிராட்டி தரித்திரதார்போல்) க்ருஷ்ணலனுடைய தீம்பில் புண் பட்டவர்கள் அப்படித் தரித்திருதாற்போல்
க்ருஷ்ணனுடைய தீம்பீலே புண்பட்டவர்கள் அப்படித் தரித்திருக்க முடியமோ?
திருவாய்ப்பாடியிலுள்ள அஞசுலக்ஷங்குடிற் பெண்களளவிலே செய்யவேண்டிய தீபுகளையெல்லாம் அவன் ஒருமடைசெய்து.
“ என்னொருத்தியளவிலே செய்யா நின்றான் நான் எப்படி பிழைக்கமுடியும்?
அம்புபட்ட புண்வாயை மருந்திட்டு ஆற்றலாம் அவனது தீம்புகட்கு விஷயமாகித் தளர்ந்தும் முறிந்துவிடக்கிடக்கின்ற என்னை
இவ்வுலகத்தில் ஆறுவாருண்டா? என்று சொல்லிக்கொண்டே இளைத்து வீழ்த்து நெடும்போது ஷம்ஜஞையிற்க்கிடந்தாள் ஆண்டாள்.
அவ்வளவிலே நிதானமறிந்த, சிலர், அம்ருதத்தையிட்டு இவளுடைய மயக்கத்தைத் தீர்க்கலாமென்றெனண்ணி
ஆராமுவது இத்யாதீகளான பசுவந்நாமங்களைச் செவிப்பட வுரைக்க அதுகேட்டவாறே தெளிந்தெழுந்து பின்னடிகளருளிச் செய்கின்றாள்.

அமுதத்திலேயுண்டான ஓரமுதத்தைக் கொணர்ந்து நான் சருகாய் உலர்ந்துபோவதற்குமுன்னே
என்னைப் பானம் பண்ணுவித்து என்னுடைய இளைப்பை நீக்கப்பாருங்களென்கிறாள்.

ஆயர் பாடி கவர்ந்துண்ணும்
திருவாய்ப்பாடி முழுவதையும் கொள்ளை கொண்டு அனுபவிக்கிற –

காரேறு உழக்க உழக்குண்டு தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை –
ஒரு கறுத்த காளை போன்ற கண்ணன்
ஹிம்சிக்க
அதனால் துன்பப் பட்டு
பலவகையான சைதில்யங்களை அடைந்து
நொந்து கிடக்கிற என்னை

ஆரே யுலகத் தாற்றுவார்
இந்த உலகத்தில் தேறுதல் சொல்லி ஆரச் செய்பவர் யாரும் இல்லை

ஆராவமுதம் அனையான் தன் அமுத வாயிலூறிய
எவ்வளவு அனுபவித்தாலும் திருப்தி பிறவாத
அம்ருதம் போன்ற கண்ணபிரான் உடைய
அம்ருதம் சுரக்கிற திரு வாயிலே ஊறிக் கிடக்கிற

நீர் தான் கொணர்ந்து புலராமே பருக்கி இளைப்பை நீக்கீரே
ரசத்தை யாவது
உலராமல் பசையோடு கொண்டு வந்து
அதை நான் பருகும்படி பண்ணி
எனது ஆயாசத்தை பரிஹரிக்கப் பாருங்கோள்

இராம பிரான் இடத்தில் ஆசைப் பட்டோம் ஆகில்
பஹவோ ந்ருப கல்யாண குணா புத்ரச்ய சந்திதே-என்றபடி
அவன் கல்யாண குணக் கடல் ஆகையாலே
அந்த குணங்களை நம்பி அனுசந்தானம் செய்து கொண்டு ஒருவாறு
தரித்து இருக்கலாம் -பிராட்டி தரித்து இருந்தால் போலே –
கிருஷ்ணன் உடைய தீம்பிலே புண் பட்டவர்கள் அப்படி தரித்து இருக்க முடியுமோ
திருவாய்ப் பாடியில் உள்ள அஞ்சு லஷம் பெண்கள் அளவிலே செய்ய வேண்டிய தீம்புகளை எல்லாம்
அவன் ஒரு மடை செய்து என் ஒருத்தி அளவிலே
செய்யா நின்றால் நான் எப்படி பிழைக்க முடியும் –
அம்புற்ற புண் வாயை மருந்திட்டு ஆற்றலாம்
அவனது தீம்புகட்கு விஷயமாகி
தளர்ந்தும் முறிந்தும் கிடக்கின்ற என்னை
இவ்வுலகத்தில் ஆற்றுவார் யுண்டோ -என்று சொலிக் கொண்டே
இளைத்து வீழ்ந்து நெடும் போது சம்ஞ்ஞை அற்றுக் கிடந்தாள் ஆண்டாள்
அவ்வளவிலே நிதானம் அறிந்த சிலர் அம்ருதத்தை இட்டு
இவளுடைய மயக்கத்தை தீர்க்கலாம் என்று எண்ணி
ஆராவமுது -இத்யாதிகளால் பகவத் நாமங்களை செவிப்பட யுரைக்க
அது கேட்ட வாறே தெளிந்து எழுந்து
பின்னடிகளை அருளிச் செய்கிறாள்

அமுதத்திலே யுண்டான
ஓர் அம்ருதத்தை கொணர்ந்து நான் சருகாய் உலர்ந்து போவதற்கு முன்னே
என்னைப் பானம் பண்ணுவித்து
என்னுடைய இளைப்பை நீக்கப் பாருங்கோள் -என்கிறாள் –
——————————————————————————————–

அழிலும் தொழிலும் உருக்காட்டான் அஞ்சேல் என்னான் அவன் ஒருவன்
தழுவி முழுகிப் புகுந்து என்னைச் சுற்றுச் சுழன்று போகானால்
தழையின் பொழில் வாய் நிரைப்பின்னே நெடுமாலூதி வருகின்ற
குழலின் துளை வாய் நீர் கொண்டு குளிர முகத்துத் தடவீரே –13-5-

பதவுரை

அழிலும்–அழுதாலும்
தொழிலும்–தொழுதாலும்
உருக்காட்டான்–தன் வடிவைக் காட்டாதவனாயும்
அஞ்சேல் என்னானவன்–(உருவைக் காட்டாவிடினும் “அஞ்சேல்“ என்ற சொல்லும் சொல்லாதவனாயுமுன்ள
ஒருவன்–ஒரு மஹாநுபாவன் (கண்ணன்
புகுந்து–இங்கே வந்து
என்னை தழுவி முழுசி–என்னை நெருக்கி யணைத்து
சுற்றி சுழன்று–முன்னும் பின்னும் சூழ்ந்து கொண்டிருந்து
போகான்–போகாமலிருக்கான்
ஆல்!–இது உண்மையான அநுபவமல்லாமல் மாநஸாநுபவ மாத்ரமான உரு வெளிப்பாடாகையாலே துக்கம்
தழையின் பொழில் வாய்–பீலிக் குடைகளாகிற சோலையின் கீழே
நிரை பின்னே–பசுக் கூட்டங்களின் பின் புறத்திலே
நெடு மால்–வ்யாமுத்தனான கண்ண பிரான்
ஊதி வருகின்ற–ஊதிக் கொண்டு வரப் பெற்ற
குழலின் துளைவாய்–புல்லாங்குழலின் த்வாரங்களிலுண்டாகிற
நீர் கொண்டு–நீரைக் கொணர்ந்து
முகத்து–என்னுடைய முகத்திலே
குளிர தடவீர்–குளிர்த்தியாகத் தடவுங்கள்

அப்பெருமானை ஸாக்ஷாத்கரிக்க வேணுமென்றும் அவன் சோதி வாயாலே அபய ப்ரதாநம் அருளப்பெறவேணுமென்றும்
ஆசை கரைபுரண்டு அதற்காகச் சிறுபயல்கள் செய்யும் உபாயத்தையுஞ் செய்வேன், மேலையார் செய்யுமுபாயத்தையும் செய்வேன்,
(அதாவது -கண்ணீரைப் பெருகவிட்டு அழுவேன், ப்ரஹ் நேரிலே வந்து திருவுருவைக் காட்டுவதுமில்லை,
ஆகாஸ வாணிசொல்லுமாபோலே அஸரீரியாகவாகிலும் நின்று “அஞ்சேல்“ (பயப்படாதே, நானிருக்கிறேன்)
என்றொரு வார்த்தை சொல்வதுமில்லை, இப்படி ஸர்வாத்மநா உபேக்ஷைபண்ணிக் கிடக்கிற அவனை மறந்தாகிலும்
ஒருவாறு ஆறியிருப்போமென்று பார்த்தாலோ, அப்படியுமிருக்க வொண்ணாதபடி உருவெளிப்பாட்டாலே ஹிம்ஸிக்கின்றானே!,

(உருவெளிப்பாடாவது -மெய்யாகவந்து ஸம்ஸ்லே ஷம்கொடாமல் மாநஸாநுபவ மார்ரத்துக்கு விஷயமாம்படி தனது
எல்லா அவயவங்களையும் அருகே உலவச் செய்தல், இத்தகைய அநுபவம் நம்மாழ்வாருடைய திருவாய்மொழியில்,
எங்ஙனேயே வன்னைமீர்காள்!“ -“ஏழையராவியுண்ணும்“ என்ற இரண்டு திருவாய்மொழிகளில் நிகழ்ந்தமை அறியத்தக்கது.

இந்தஹிம்ஸைக்குப் பரிஹாரமுறைவுறுவன பின்னடிகள். பெரியாழ்வார் திருமொழியில்
“தழைகளுந் தொங்கலுந் ததும்பியெங்கும் தண்ணுமையெக்கம் மத்தளிதாழ்பீலிக், குழல்களுங் கீதமுமாகி யெங்குங்
கோவிந்தன் வருகின்ற கூட்டங்கண்டு“ என்றுதொடங்கிப் பத்துப்பாட்டாலும் விஸ்த்ர்ரரமாக அருளிச்செய்தபடியே)
பசுக்களின் பின்னே பரமபோக்யமாக எழுந்தருளாநின்ற கண்ணபிரான் குழலூதிக்கொண்டே வருவனே,
அக் குழலின் துளைகளிலே அவனது துசோதிவாயின் அழுதப்புனல் நிரம்பிக் கிடக்குமே அந்த நீரைக் கொண்டு வந்து,
குளிர்த்தி யுண்டாம்படி என்முகத்திலே தடவுங்களென்கிறாள்.

“குழலிருண்டு சுருண்டேறியகுஞ்சிக் கோவிந்தனுடைய கோமளவாயில், குழல் முழைஞ்சுகளினூடு குமிழ்த்துக்
கொழித்திழிந்த வமுதப்புனல் தன்னை“ விரும்புகிறாளாய்த்து வேய்ங்குழலை வாயில்வைத்து ஊதும்போது
வாயைக்கொப்பளித்தால், உமிழ்நீர் குழலின் துளைவழியாக வெளிவருமென்க.

அழிலுந்தொழிலும் என்றவிடத்து வியாக்கியானத்திலே -“பக்திப்ரபத்திகளிரண்டுக்கும் வாசியறுத்தான்“ என்றருளிச்செய்வர்.
பெரியவாச்சான் பிள்ளை. அழுகையாவது காயக்லேஸரூபமாகையாலே தாத்ருஸமானபக்தியைச் சொன்னபடி,
தொழுகையென்று ப்ரபத்தியைச் சொன்னபடி
(த்ரௌபத்யா ஸஹிதாஸ்ஸர்வே நமஸ்சக்ருர்ஜநார்த்தநம்) என்றவிடத்து நமஸ்காரமாவது ப்ரபத்தி -என்றதிறே.

அவனொருவன் என்கிறாள் – பேரையிட்டுச் சொல்லவும் வெறுப்புமிக்கது போலும்
ஹிம்ஸையின் கொடுமை தோற்றும் இதனால்.

அழிலும் தொழிலும் உருக்காட்டான் அஞ்சேல் என்னான் அவன் ஒருவன் –
அவனை சாஷாத் கரிக்கவும்
அவன் சோதி வாயால் அபயப்ரதானம் அருளப் பெற வேணும் என்றும் ஆசை கரை புரண்டு
சிறு பயல்கள் செய்யும் உபாயத்தையும் செய்வேன்
மேலையார் செய்யும் உபாயத்தையும் செய்வேன்
அதாவது
கண்ணீரை பெருக விட்டு அழுதாலும்
ப்ரஹ்மாஸ்த்ர பிரயோஹம் பண்ணினால் போலே தொழுதாலும்
எது செய்தாலும்
தன் வடிவைக் காட்டாதவனாய் –
பக்தி பிரபத்தி கள் இரண்டுக்கும் வாசி அறுத்தான்
அழுகை காய கிலேச ரூபம் ஆதலால்தாத்ருசமான பக்தி
தொழுகை -பிரபத்தி
த்ரௌபத்யா சஹிதாஸ் சர்வே நமஸ் சக்ரூர் ஜனார்த்தனம் -நமஸ்காரம் -பிரபத்தி
காட்டாவிடிலும்
அசரீரியாக மாசுச –
அஞ்சேல் என்று சொல்லும் சொல்லாதவனாய்
உள்ள ஒரு மகானுபாவன்
உபேஷை பண்ணிக் கிடக்கிற அவனை மறந்தும் ஆறி இருக்க ஒட்டாமல்
உரு வெளிப்பாட்டாலே ஹிம்சிக்கிறான் –

அவன் ஒருவன் –
பேரை இட்டுச் சொல்லவும் வெறுப்பு மிக்கது போலும்
ஹிம்சையின் கொடுமை இதனால் தோற்றும் –

தழுவி முழுகிப் புகுந்து என்னைச் சுற்றுச் சுழன்று போகானால்
இங்கே வந்து என்னை நெருக்கி அணைத்து
முன்னும் பின்னும் சூழ்ந்து கொண்டு இருந்தும்
போகாமல் இருக்கிறான் –
எங்கனயோ அன்னைமீர்காள்
ஏழையர் ஆவி யுண்ணும் –
திருவாய் மொழிகளில் போன்ற அனுபவம்

ஆல் –
அந்தோ இது மானச அனுபவம் மாத்ரமே
அதானாலே துக்கப் பட்டு –

தழையின் பொழில் வாய் நிரைப்பின்னே நெடுமாலூதி வருகின்ற –
பீலிக் குடைகள் ஆகிற சோலையின் கீழே
பசுக் கூட்டங்களின் பின் புறத்திலே
வ்யாமுக்தனான கண்ணபிரான்
ஊதிக் கொண்டு வரப் பெற்ற –

குழலின் துளை வாய் நீர் கொண்டு குளிர முகத்துத் தடவீரே
புல்லாங்குழலின்
த்வாரங்களில் உண்டான
நீரைக் கொணர்ந்து என்னுடைய முகத்திலே
குளிர்த்தியாகத் தடவுங்கோள்

தழைகளும் தொங்கலும் ததும்பி எங்கும் தண்ணுமை எக்கமத்தளி தாழ் பீலிக்
குழல்களும் கீதமுமாகி எங்கும் கோவிந்தன் வருகிற கூட்டம் கண்டு –
தொடங்கி பத்து பாட்டுக்களில் விஸ்தாரமாக பெரியாழ்வார் அருளிச் செய்தபடியே
பசுக்களின் பின்னே பரம போக்யமாக எழுந்து அருளா நின்ற கண்ணபிரான் குழலூதிக் கொண்டே வருவானே
அந்த குழலின் துளிகளிலே அவனது சோதிவாயின் அமுதப் புனல் நிரம்பிக் கிடக்குமே
அந்த நீரைக் கொணர்ந்து குளிர்த்தி யுண்டாம்படி என் முகத்திலே தடவுங்கோள்

குழல் இருண்டு சுருண்டு ஏறிய குஞ்சிக் கோவிந்தன் உடைய கோமள வாயில்
குழல் முழைஞ்சு களினூடு குமிழ்த்துக் கொழித்து இழிந்த வமுதப் புனல் தன்னை –
விரும்புகிறாள் –

————————————————————————————————–

நடை யொன்றில்லா வுலகத்து நந்த கோபன் மகன் என்னும்
கொடிய கடிய திருமாலால் குளப்புக் கூறு கொளப்பட்டு
புடையும் பெயரகில்லேன் நான் போட்கன் மிதித்த வடிப்பாட்டில்
பொடித்தான் கொணர்ந்து பூசீர்கள் போகா யுயிர் என்னுடம்பையே –13-6-

பதவுரை

நடை ஒன்று இல்லா உலகத்து–(ஏற்கனவே) மரியாதைகளெல்லாம் குலைந்து கிடக்கிற இவ் வுலகத்தில்
நந்தகோபன் மகன் என்னும்–ஸ்ரீநந்த கோபர் மகன் என்று ப்ரஸித்தனாய்
குளப்புக்கூறு கொளப்பட்டு–மிகவும் துன்பப் படுத்தப் பட்டு
புடை பெயரவும் கில்லேன்–அப்படி இப்படி அசைவதற்கும் அசக்தை யாயிரா நின்றேன் (ஆன பின்பு,)
போட்கன்–சுணை கேடனான அக் கண்ண பிரான்
கொடி–இரக்க மற்றவனாய்
கடிய–ஸ்வார்த்த பரனான
திருமாலால்–ச்ரிய, பதியாலே (கண்ணனாலே)
நான்–அபலையான நான்
மிதித்த அடிப்பாட்டில்–திருவடி பட்டு மிதித்த இடத்திலுண்டான
பொடி தான்–ஸ்ரீபாத தூளியை யாவது
கொணர்ந்து-கொண்டு வந்து
போகா உயிர் என் உடம்பை பூசீர்கள்–வீட்டுப் பிரியாத வுயிரை யுடைய என் உடம்பிலே பூசுங்கள்.

ஏற்கனவே உலகத்தல் மரியாதையெல்லாம் சீர்குலைந்து கிடக்கின்றன. அதுக்கு மேல் ஒன்று பத்தாய்ச் சீர்குலையும்படி
நந்த கோபன் மகனென்கிற ஒரு மஹாநுபாவன் வந்து தோன்றினான். பரமஸாதுவான நந்தகோபனுக்கு
இந்தக் கொடியவன் எங்ஙனே பிள்ளையாகப் பிறந்தானோ அறியேன், அவனால் மிகவும் துன்பப்படுத்தப்பட்ட நான்
புடைபெயரவும் ஒண்ணாதபடி துவண்டுபோனேன், இந்ததுவட்சி தீருவதற்கு மருந்துயாதெனில்,
அந்தச் சுணை கேடன் நடந்து சென்ற நிலத்திலுள்ள பொடியைக் கொணர்ந்து என்னுடம்பிலே பூசப் பாருங்கள்
அதுவே உற்ற மருந்தாகும் என்கிறாள்.

கொடியகடிய திருமால் -கொடுமையாவது பிறரை வருந்தச் செய்கையாகிற க்ரூரத்தனம்,
கடுமையாவது தன் காரியத்தை மாத்திரம் விரைந்து முடித்துக் கொள்ளுகையாகிற ஸ்வ கார்ய பரத்வம்,
(“கடியன் கொடியன் நெடியமால்“ அநுஸந்திப்பது – இக் கொடுமை கடுமைளெல்லாம் இவனால் அவளிடத்திலிருந்து
தான் கற்றுக் கொள்ளப் பட்டன வென்று அவளையும் சேர்த்து வெறுக்கின்றமையைக் கொட்டுமென்ப,

“இழவேயாய்ப் போருகிற ப்ரகரண மாகையாலே பேற்றுக்குப் பரிகரமாகச் சொல்ல்லாமவற்றை யெல்லாம்
இழவுக்குப் பரிகரமாகச் சொல்லுகிறாள்“ என்ற பெரியவாச்சான்பிள்ளை ஸ்ரீஸூக்திகாண்க.

குளப்புக்கூறுகொளப்பட்டு – அடிப்பட்ட இடத்திலே மேன்மேலும் அடிபடுதல் குளப்புக்கூறுகொள்ளுகலாம்,
(குளம்புகூறு, குளப்புக்கூறு) கால் நடைகளின் குளம்புகள் எப்போதும் அடிப்பட்டுக் கொண்டேயிருத்தலால் அதுபோல்
மேன்மேலும் அடிப்பட்டுக் கொண்டேயிருத்தலைக் குளப்புக்கூறு கொள்ளுதலாகக் கூறுவர், கூறு என்னுஞ் சொல்லுக்குள்ள
பல பொருள்களில் “தன்மை“ என்ற பொருள் இங்கே கொள்ளத்தக்கது,
“குளம்பின் தன்மையை உடையேனாகி“ என்று ஸப்தார்த்தமாய்,
“துகையுண்டவிடத்திலேயே மேன்மேலும் துகையுண்டு“ என்று தாத்பர்யாத்தமாகக் கடவது.

புடைபெயர்தல் – பக்கங்களில் அசைதல், நோவின் கனத்தினால் அசையவும் மாட்டாதிருக்கின்றே னென்கிறாள்
“படையும் பெயரகில்லேன்“ என்று அடிப்பாட்டில் பொடி – திருவடிபட்ட விடத்திலுண்டான துகள் என்றபடி அடிப்பாடு எனறு வழிக்குப்பெயர்.
அவனுடைய திருமேனியில் ஸாக்ஷாத் ஸம்பந்தம் அடிபற்ற வஸ்துவே வேணுமென்றகிற நீர்ப்பந்தமல்லை,
பரம்பரா ஸம்பந்தம் டிபற்ற வஸ்துவாயிருந்தாலும் உத்தேஸ்யமேயாம் என்று இதனால் தெரிவித்தவாறு.

போகாவுயிரென்னுடம்பு – எத்தனை விஷங்களை வாங்கித் தின்றாலும், எத்தனை கத்திகளை யெடுத்துக் குத்திக் கொண்டாலும்
இந்தப்பாழும் உயிர் என் உடம்பையிட்டுப் போகமாட்டேனென்கிறதேயென்று மிக்க வருத்தந் தோற்றங் கூறுகின்றபடி பாரீர்.
போகாவுயீர் – போகாதவுயிரையுடைய, என்று பொருள் படுதலால் அன்மொழித் தொகை வடமொழிநடை.

நடை யொன்றில்லா வுலகத்து –
ஏற்கனவே மரியாதைகள் எல்லாம் குலைந்து
கிடக்கிற இவ்வுலகத்திலே –

நந்த கோபன் மகன் என்னும் –
அதுக்கு மேலே ஓன்று பத்தாய் சீர் குலையும்படி
ஸ்ரீ நந்தகோபன் குமரன் என்று பிரசித்தனாய் -மகானுபாவன்

கொடிய கடிய திருமாலால் –
இரக்கமற்ற -கொடுமை யாவது பிறரை வருந்த செய்கிற க்ரூர தனம்
ஸ்வார்த்த பரனான-கடுமை யாவது தனது கார்யத்தை மாதரம் விரைந்து செய்கிற ஸ்வ கார்யபரத்வம்
ஸ்ரீ யபதியான
கண்ணனாலே
இக் கொடுமைகள் எல்லாம் இவனால் அவள் இடத்தில் இருந்து கற்றுக் கொள்ளப் பட்டன
அவளையும் சேர்த்து வெறுக்கின்ற இழவு பிரகரணம்
இழவேயாய் போருகிற பிரகரணம் ஆகையாலே
பேற்றுக்கு பரிகரமாக சொல்லலாம் அவற்றை எல்லாம்
இழவுக்கு பரிகரமாகச் சொல்லுகிறாள் –

குளப்புக் கூறு கொளப்பட்டு –
மிகவும் துன்பப் படுத்தப் பட்டு
அடி பட்ட இடத்திலே மேல் மேலும் அடி படுதல்
குளம்பு கூறு குளப்பு கூறு -கால்நடைகளின் குளம்புகள் எப்போதும் அடி பட்டுக் கொண்டே இருக்குமே
கூறு -தன்மை
குளம்பின் தன்மையை உடையேனாகி
துகை யுண்ட இடத்திலேயே மேன்மேலும் துகை யுண்டு –

புடையும் பெயரகில்லேன்-
அப்படி இப்படி அசையவும் அசக்தையாய் இரா நின்றேன்

நான்-
அபலையான நான் –

போட்கன்-
சுணை கேடனான அக் கண்ணபிரான்

மிதித்த வடிப்பாட்டில் –
திருவடி பட்டு மிதித்த இடத்தில் உண்டான
அடிப்பாடு -வழி

பொடித்தான் கொணர்ந்து-
ஸ்ரீ பாத தூளியை யாவது கொண்டு வந்து –

பூசீர்கள் போகா யுயிர் என்னுடம்பையே –
விட்டுப் பிரியாத உயிரை உடைய என் உடம்பிலே பூசுங்கோள் –
போகா உயிர் –
விஷம் தின்றாலும் கத்தி குத்துப் பட்டாலும்
பாலும் உயிர் உடம்பை விட்டுப் போக மாட்டாது என்று
வருத்தம் தோன்ற அருளிச் செய்கிறாள்
போகாத உயிரை உடைய -அன்மொழித் தொகை –

இதுவே உற்ற மருந்து ஆகும்
அவனுடைய திரு மேனியிலே சாஷாத் சம்பந்தம் பெற்ற வஸ்துவே வேணும் என்ற நிர்பந்தம் இல்லை
பரம்பரா சம்பந்தம் பெற்ற வஸ்துவாய் இருந்தாலும் உத்தேச்யமாம் –

————————————————————————————————

வெற்றிக் கருளக் கொடியான் தன் மீ மீ தாடா வுலகத்து
வெற்ற வெறிதே பெற்றதாய் வேம்பேயாக வளர்த்தாளே
குற்றமற்ற முலைதன்னைக் குமரன் கோலப் பணைத் தோளோடு
அற்ற குற்றமவை தீர அணைய வமுக்கிக் கட்டீரே –13-7-

பதவுரை

கருளன் வெற்றி கொடியான் தன் மீது ஆடா உலகத்து–பெரிய திருவடியை வெற்றிக் கொடியாக வுடைய
எம்பெருமானுடைய ஆணையை மீறிச் செல்லக் கடவதல்லாத இவ்வுலகத்தில்
(எம்பெருமானுடைய ஆணைக்கு உட்பட்டதான இவ்வுலகத்தில்)
பெற்ற தாய்–அவனைப் பெற்ற தாயாகிய யசோதையானவள் (தனது புத்திரனை)
வெற்ற வெறிதே–ஒருவர்க்கும் பயனின்றியே,
(பயனில்லை யென்கிற மாத்திரமேயோ?)
வேம்பு ஆகவே–வேப்பங்காய் போல் வைக்கும் படியாகவே
வளர்த்தான்–வளர்த்து வாரா நின்றான்.
குற்றம் அற்ற–(அவனைத் தவிர்த்து வேறொருவன் விரும்புகையாகிற) குற்றம் இல்லாத
முலை தன்னை–(என்னுடைய) ஸ்தநங்களை
குமரன்–யௌவனத்தோடு தோள் தீண்டியான அப் பெருமானுடைய
கோலம் பணைதோளோடு–அழகியதாயும் கற்பகக்கிளை போன்ற தாயுமுள்ள திருத் தோள்களோடே,
அற்ற குற்றம் அவை தீர–(என்னைக் கை விட்டு) அவற்றுக்கே அற்றுத் தீர்ந்த குற்றம் தீரும்படி
அணைய அமுக்கி கட்டீர்–அமுக்கி யணைத்துக் கட்டி விடுங்கள்

கீழ்ப்பாட்டில், “நந்தகோபன் மகனென்னுங் கொடிய கடிய திருமாலால்“ என்று -பெற்ற தகப்பனை, வெறுத்துக் கூறினாள்,
இப்பாட்டில் பெற்ற தாயை வெறுத்துக் கூறுகின்றாள். கண்ணபிரான் இவ்வளவு தீம்பனாயிருப்பதற்குக் காரணம் –
யசோதை அவனை வளர்த்த பொல்லாங்கு என்றிருக்கிறாள். அவள் செவ்வையாக நியமித்து பயபக்திகளுண்டாம்படி
ஸக்ஷித்து வளர்த்திருப்பளாகில் இவன் இப்படித் தீம்பனாயிருக்க மாட்டான்,
“அஞ்சவுரப்பாளசோதை ஆணாடவிட்டிட்டிருக்கும்“ என்னவேண்டும்படி அவள் இவளைத்தான் தோன்றியாக விட்டு
வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததனால் இவன் தலை விரித்தாடும் தீம்பனாகப் பெற்றான் என்றிருக்கிறாள்.
“பெற்றதாய் வெற்றவேறிதேவேம் பேயாக வளர்த்தாள் என்ற அந்வயக்ரமம் ஒரு பலனை விரும்பிப் பிறர்க்கு
அநர்த்தத்தை விளைப்பாருண்டு, அங்ஙனன்றியே யஸோதை நிஷ்ப்ரயோஜநமாகவே பராநர்த்தத்தை விளைக்க
இவனை வளர்த்தாளே! என்கிறாள். வேம்பேயாக என்றவிடத்திலே வியாக்கியான ஸ்ரீஸூக்தி –
“வேம்பும் கரும்புமாக வளர்க்கை யன்றிக்கே வெறும் வேம்பேயாக வளர்த்தாள், அவன் வேம்பானது வளர்த்த
பொல்லாங்கு என்றிருக்கிறாள்“ என்பதாம். வெற்ற வேறிதே – சிறிதும் பலனில்லாதபடி என்கை.
ஒருவகைக் குறிப்பிடைச்சொல். “செக்கஞ்செகவென்று“ “கன்னங்கரேலென்று“ என்னுமா போலே
வெற்ற வேறிதே என்பதும் ஒருவகை வழக்கச்சொல் “வேம்புபோலே வளர்த்தாள்“ என்னாமல்,
“வேம்பேயாக வளர்த்தாள்“ என்றது – தீம்பின் மிகுதியாலே யுண்டான வைரஸ்யாதிஸயத்தைக் காட்டும்.

அவன் அப்படி வேம்பாயிருந்தாலும் “வேம்பின்புழு வேம்பன்றியுண்ணாது“ என்னுங்கணக்கிலே என் முலைகளானவை
அந்த வேம்பிலே பணைத்தகிளைகளோடே அணையத்தான் ஆசைப்படா நின்றன,
ஆகையாலே அவன் தோளையும் என் முலையையும் ஒன்றுசேர்த்து விலங்கிட்டு வையுங்களென்கிறாள் பின்னடிகளில்.

அவன் இத்தனை தீப்பனாய் உபக்ஷேத்திருக்கச் செய்தேயும்
“அவரைப் பிராய்ந் தொடங்கி யென்று மாதரித் தெழுந்த வென் தடமுலைகள், துவரைப் பிரானுக்கே சங்கற்பித்து“ என்றும்
“கொங்கைத் தலமிவை நோக்கிக்காணீர் கோவிந்தனுக்கல்லால் வாயில்போகா“ என்றும் அவனை யொழிய வேறொரு
முகம் நோக்காதிருக்கும் முலைகளைக் “குற்றமற்றமுலை“ என்கிறாள்.

அற்றகுற்றமவைதீர என்பதற்கு – இம்முலைகள் இதுவரையில் அவனைப் பிரிந்திருந்த குறை தீரும்படி என்று சிலர் பொருள் கூறுவரேனும்,
அது வியாக்கியான ஸ்ரீஸூக்தியோடு பொருந்தாது.
“அத்தோளோடே அற்ற தாய்த்து இம் முலைகள், இங்கே குடியிருப்பாய் அங்கே க்ருத ஸங்கேதமாயாய்த் திருக்கிறது இவை.
என்னைக் கூடாதே அங்கே அற்றகுறை தீரும்படி.“ என்றிறே பெரியவாச்சான்பிள்ளை யருளிச் செய்துள்ளது.

“இவ்வுலகத்து வெற்ற வெறிதே பெற்றதாய் வேம்பேயாக வளர்த்தாள்“ என்று இவ்வளவே சொல்லப் போதுமாயிருக்க,
“வெற்றிக் கருளக் கொடியான்றன் மீமீதாட வுலகத்து“ என்று கருளக் கொடி யுடையனான பகவானுடைய
ஆணையை மீறிச் செல்லக் கடவதல்லாத இவ்வுலகத்திலே என்று சொல்லுகைக்குக் கருத்தென் என்னில்,
எம்பெருமான் தன் ஆஜ்ஞையாலே எல்லாரையும் கீழ்ப்படுத்தி எதுவும் எல்லை கடந்து நடவாமல் ஒரு மரியாதையாய் நடந்து
வரும்படி விஜயத்வஜமெடுத்துச் செங்கோல் செலுத்தா நின்ற வுலகத்திலே எல்லா மரியாதைகளும் கெட்டு
மனம் போன போக்கே செய்யுமவனான ஒரு பிள்ளையைப் பெற்றாள் யசோதை – என்கிறாளெனக் கொள்க.

வெற்றிக் கருளக் கொடியான்-
பெரிய திருவடியை வெற்றிக் கொடியாக யுடைய எம்பெருமான்

தன் மீ மீ தாடா வுலகத்து
உடைய ஆணையை
மீறிச் செல்ல கடவதல்லா இந்த உலகத்தில்

வெற்ற வெறிதே-
ஒருவருக்கும் பயன் இல்லாமல்
அது மாத்ரமேயோ –
செக்கச் செக -கன்னங்கரேல் போலே

பெற்றதாய் –
அவனைப் பெற்ற தாயான
யசோதை யானவள் –
கீழே நந்தகோபன் மகன் என்னும் கொடிய கடிய திருமால் -என்று
பெற்ற தமப்பனை வெறுத்துக் கூறினாள்
இதில் பெற்ற தாயை வெறுத்துக் கூறுகிறாள்

வேம்பேயாக வளர்த்தாளே-
வேப்பங்காய் போலே கைக்கும் படியாக வளர்த்து வாரா நின்றாள் –
யசோதை அவனை வளர்த்த பொல்லாங்கு -என்கிறாள்
சிஷித்து பயபக்திகள் உண்டாம்படி வளர்ந்து இருந்தால் இங்கனம் தீம்பனாய் இருக்க மாட்டான் -என்றபடி –
அஞ்ச உரைப்பாள் அசோதை ஆணாட விட்டிட்டு இருப்பாள்
பெற்ற தாய் வெற்றே வெறிதே வேம்பேயாக வளர்த்தாள்-என்று அந்வயம் –

வேம்பேயாக –
வேம்பும் கரும்புமாக வளர்க்கி அன்றிக்கே
வெறும் வேம்பேயாக வளர்த்தாள்
அவன் வேம்பானது வளர்த்த பொல்லாங்கு -என்று இருக்கிறாள்
நிஷ்பிரயோஜனமாக பர அனர்த்தத்தை விளைக்க வளர்த்தாள் –

வேம்பே யாய் இருந்தாலும்
வேம்பின் புழு வேம்பு அன்றி உண்ணாது போலே
அந்த வேம்பிலே பணைத்த கிளைகளோடு
அணைய
என் முலைகள் ஆசைப்படா நின்றன
குற்றமற்ற முலைதன்னைக் –
அவனைத் தவிர வேறு ஒருவனை விரும்புகை யாகிற
குற்றம் இல்லாத
என்னுடைய ஸ்தனங்களை –
அவரைப் பிராயம் தொடங்கி என்றும் ஆதரித்து எழுந்த என் தட முலைகள்
துவரைப் பிரானுக்கே சங்கற்ப்பித்து-என்றும்
கொங்கைத் தலமிவை நோக்கிக் காணீர் கோவிந்தனுக்கு அல்லால் வாயில் போகா -என்றும் –
அவனுக்கேயாக இருக்கும் முலைகள்
குமரன் கோலப் பணைத் தோளோடு
யௌவனத்தோடு தோள் தீண்டியான அப் பெருமான் உடைய
அழகியதாயும்
கற்பகக் கிளை போன்றதாயும்
உள்ள திருத் தோள்களோடு

அற்ற குற்றமவை தீர –
என்னைக் கை விட்டு
அவற்றுக்கே அற்றுத் தீர்ந்த குற்றம் தீரும் படி –
அத்தோளோடே அற்றதாய்த்து இம்முலைகள்-
இங்கே குடி இருப்பாய்
அங்கே கருத சங்கேதமாயாய்த்து இருக்கிறது இவை
என்னை கூடாதே அங்கே அற்ற குறை தீரும்படி –

அவனைப் பிரிந்து இருந்த குறை தீரும்படி என்ற பொருள்
இத்தால் வ்யாக்யானத்துக்கு சேராது
அணைய வமுக்கிக் கட்டீரே –
அமுக்கி அணைத்து கட்டி விடுங்கோள் –

எம்பெருமான் தன் ஆஞ்ஞையாலே எல்லாரையும் கீழ்ப் படுத்தி செங்கோல் செலுத்தா நின்றுள்ள
இந்த வுலகத்திலே
எல்லா மரியாதைகளையும் கெட்டு
மனம் போன போக்கே செய்யுமவனான
ஒரு பிள்ளையைப் பெற்றால் யசோதை -என்கிறாள்-

———————————————————————————————-

உள்ளே உருகி நைவேனை உளளோ இலளோ என்னாத
கொள்ளை கொள்ளிக் குறும்பனை கோவர்த்த நனைக் கண்டக்கால்
கொள்ளும் பயன் ஓன்று இல்லாத கொங்கை தன்னைக் கிழங்கோடும்
அள்ளிப் பறித்திட்டு அவன் மார்பில் எறிந்து என்னழலைத் தீர்வேனே–13-8-

பதவுரை

உள்ளே உருகி நைவேனை–உள்ளுக்குள்ளேயே கரைந்து நைந்து போகிற என்னைப் பற்றி
உளளோ இலளோ என்னாத–“இருக்கிறாளா? செத்தாளா?“ என்றும் கேளாதவனாய்
கொள்ளை கொள்ளி–என் ஸர்வஸ்வத்தையும் அபஹரித்துக் கொண்டவனாய்
குறும்பனை–(பெண்கள் திறத்திலே) பொல்லாங்கு செய்யுமவனான
கோவர்த்தனனை–கண்ணபிரானை
கண்டக்கால்–(ஒருகால்) நான் காணப் பெற்றேனாகில்
கொள்ளும் பயன் ஒன்று இல்லாத–(ஆட்டுக் கழுத்தல் முலை போலே) உபயோக மற்றதான்
கொங்கை தன்னை–(என்னுடைய இந்த) முலையை
கிழங்கோடும் அள்ளி பறித்திட்டு–வேர் முதலோடே பற்றிப் பிடுங்கி
அவன் மார்வில் எறிந்து–அந்த க்ருஷ்ணனுடைய மார்பிலே எறிந்து விட்டு
என் அழலை–என் துக்கத்தை
தீர்வேன்–போக்கிக் கொள்ளப் பெறுவேன்

உள்ளுக்குள்ளே உருகி நைந்துகொண்டிரா நின்ற என் விஷயத்திலே சிறிது ஆராய்ச்சியுமில்லாதவனும்,
என்னை வெறுத்தரை யாக்கினவனும், குறும்பு செய்யவதற்கென்றே பிறந்தவனுமான கோபாலக்ருஷ்ணனை
ஒருகால் நான் காணப் பெற்றேனாகில், ஆட்டின் கழுத்தில் முலை போலே என் மார்பில் வ்யர்த்தமாக முளைத்துக் கிடக்கிற
இப் பாழும் முலைகளை வேர் பறியாகப் பறித்து அவனுடைய மார்விலே விட்டெறிந்து என்துக்கம் தீரப்பெறுவேனென்கிறாள்.

உள்ளோ இலளோ என்னாத – இங்கேற வந்து முகங்காட்டாவிட்டாலும் “அவள் பிழைத்திருக்கிறாளா ஒழிந்தாளா?“ என்று
ஸாமாந்யமாகப் பிறரை விசாரிக்கலாமே, என்னைப்பற்றி அவனுக்கு எள்ளவாவது கவலையிருந்தாலன்றோ விசாரிக்கப்போகிறான்,
தன்பெருமையும் தன்போகமுமே தனக்குப் பெருஞ்செல்வமாயிருப்பதால் நானொரு சரக்கு இருப்பதாகவும் அவனுக்கு எண்ணமில்லை என்றவாறு.

கொள்ளை கொள்ளி – கொள்ளை கொள்பவன், ஸர்வ ஸ்வாபஹாரம் செய்பவன். இ-பெயர்விகுதி.
“கோவர்த்தன்னை“ என்றவிடத்து “பெண்களை வெறுந்தரையாக்கும், பசுக்களை ஒன்று நூறாயிரமாக்கும்” என்ற
வியாக்கியான ஸ்ரீஸூக்தியின் அழகு காண்க.
(கா-வர்த்தயதீதி கோவர்த்கந) என்ற வ்யுத் பத்தியில் நோக்கு. “கண்டக்கால்“ என்ற சொல்லாற்றலால்,
அவன் பசுக்களின் பின்னே போமவனாகையாலே அவனைக் காண்பது அருமை என்பது விளங்கும்,
வருந்தி ஒரு கால் காணப் பெற்றேனாகில் என்க.

“கொள்ளும் பயன்னென்றில்லாத“ என்றவிடத்து, –
“கன்னவிலுங் காட்ட கத்தோர் வல்லிக் கடிமலரின், நன்னறுவாசம் மற்றாரானுமெய்தாமே,
மன்னும் வநுறிலத்துவாளாங்கு உகுத்ததுபோல், என்னுடைய பெண்மையும் என்னலனு மென்முலையும்,
மன்னுமலர்மங்கை மைந்தன் – கண்புரத்துப் பொன் மாலைபோல் நின்றவன்றன் பொன்னகலம் தோயாவேல்,
எல்னிவைதான் வாளா எனக்கே பொறையாகி, முன்னிருந்து மூக்கின்று மூவாமைக்காப்பதோர், மன்னுமருந்தறிவீரில்லைபே“ என்ற
பெரியதிருமடல் அநுஸந்திக்கத்தக்கது.

எம்பெருமானை அணைத்து கொள்வதற்கு, உறுப்பல்லாத என்றபடி “கிழங்கோடும் அள்ளிப் பறித்திட்டு “ என்றதனால்
அளவிறந்த (ஆற்றாமை புலப்படும் சத்துருவை நோக்கி “உன்னை வேரோடு களைத்து ஒழித்து விடுகிறேன் கிடாய்“
என்பாரைப்போலே உள்ளுள்ள கோபமும் துக்கமும் தோன்றச் சொல்லுகிறபடி.
இங்குக் கிழங்கு என்றது ஆத்ம வஸ்துவை என்றருளிச்செய்வர்
“தடம்புனலசடைமுடியன் தனியொரு கூறமர்ந்துறையும் உடம்புடையான் கவராத உயிரினால் குறைவிலமே.“ என்றபடி
பகவதநுபவத்துக்கு உபயுக்தமாகாத ஆத்மாத்மீயங்களெல்லாம் உபேக்ஷிக்கப்படுமிறே ஆழ்ந்த பக்தியையுடையவர்களுக்கு
(நதேஹம்நப்ராணாந்நசஸுகமசேஷாபிலஷிதம் நாசாத்மாநம நாந்யத் கிம்பி தவ சேஷத்வ விபவாத். பஹிர்பூதம் நாத!
க்ஷணமபி ஸஹே யாதுஸததா விநாஸம்தத், ஸத்யம் மதுமதந! விஜ்ஞாபநமிதம்.) என்ற ஆளவந்தார் ஸ்ரீஸூக்தி அறியத்தக்கது.

“கொங்கை தன்னைக் கிழங்கோடும் அள்ளிப் பறித்திட்டு எறிந்து என்னழலைத் தீர்வேனே“ என்றால் போராதோ?
“அவன்மார்வில் எறிந்து“ என்பானேன்? என்னில், இம் முலைகளால் தான் படும் பாட்டை,
* பெண்ணின் வருத்த மறியாகத பெருமானான அவனும் படவேணுமென்ற கருத்தினாலென்க.
இம்முலைகள் அவன் மார்வில் ஏறி அவனைக் கும்மிக் குமைக்க வேணும் என்று நினைக்கிறாளாய்த்து.
இக் கஷ்டத்தை அவனும் பட்டானாகில் அதுவே இவள் அழல் தீர்ந்தபடிபோலே. அழல் – தாபம்.

உள்ளே உருகி நைவேனை –
உள்ளுக்கு உள்ளே
கரைந்து நைந்து போகிற என்னைப் பற்றி –

உளளோ இலளோ என்னாத –
இருக்கிறாளோ செத்தாளோ
என்றும் கேளாதவனாய்-
இங்கு ஏற வந்து முகம் காட்டா விட்டாலும்
இப்படி சாமான்யமாக விசாரிக்காமல்
தன போகமும் பெருமையுமே நினைத்து என்னை ஒரு சரக்காக எண்ணாமல்

கொள்ளை கொள்ளிக் –
என் சர்வத்தையும் அபஹரித்துக் கொண்ட வனாய்

குறும்பனை –
பெண்கள் திறத்தில் பொல்லாங்கு செய்யுமவனான –

கோவர்த்த நனைக் கண்டக்கால் –
கண்ணபிரானை ஒரு நாள் காணப் பெற்றேன் ஆகில் –
பெண்களை வெறும் தரையாக்கும்
பசுக்களை ஓன்று நூறு ஆயிரம் ஆக்கும்
வர்த்தயதீதி கோவர்த்தன -என்கிற வ்யுத்பத்தியிலே நோக்கு
கண்டக்கால்
காண்பதில் அருமை
பசுக்கள் இன்னே போகிறவன் ஆதலால்
வருந்தி ஒரு கால் பெற்றேன் ஆகில்

கொள்ளும் பயன் ஓன்று இல்லாத கொங்கை தன்னைக் –
ஆட்டுக் கழுத்தில் உபயோகம் இல்லாமல் தொங்கும் முலைகள் போலே –

கிழங்கோடும் அள்ளிப் பறித்திட்டு –
வேர் முதலோடு பற்றிப் பிடுங்கி

அவன் மார்பில் எறிந்து என்னழலைத் தீர்வேனே-
அந்த கிருஷ்ணன் உடைய
மார்பில்
எறிந்து விட்டு
என் துக்கத்தை போக்கிக் கொள்ளப் பெறுவேன் –

கொள்ளும் பயன் ஒன்றில்லாத -என்றவிடத்து
கன்னவிலும் காட்டகத்தோர் வல்லிக் கடிமலரின்
நன்னறு வாசம் மற்றாரானும் எய்தாமே மன்னும்
வறு நிலத்து வாளாங்கு உகுத்தது போல்
என்னுடைய பெண்மையும் என் நலனும் மென்முலையும்
மன்னு மலர் மங்கை மைந்தன் கண புரத்து பொன்மலை போல்
நின்றவன்தன் பொன்னகலம் தோயாவேல் என்னிவைதான்
வாளா எனக்கே பொறையாகி முன்னிருந்து மூக்கின்று மூவாமை காப்பதோர்
மன்னு மருந்து அறிவீர் இல்லையே -பெரிய திருமடல் பாசுரம் அனுசந்தேயம் –

கிழங்கோடும் அள்ளிப் பறித்திட்டு -என்பதால் ஆற்றாமை தோன்றும்
சத்ருவை நோக்கி உன்னை வேரோடு அழித்து விடுவேன் -என்னுமா போலே -துக்கம் கோபம் மிக்கு –
இங்கே கிழங்கு -ஆத்மவஸ்துவை -என்று அருளிச் செய்வர் –
தடம் புனல் சடை முடியன் தனியொரு கூறு அமர்ந்து உறையும்
உடம்புடையான் கவராத உயிரினால் குறைவிலமே -என்றபடி
பகவத் அனுபவத்துக்கு உபயுக்தமாகாத ஆத்மாத்மீயங்கள் எல்லாம் உபேஷிக்கப் படும் இ றே ஆழ்ந்த பக்தி உடையவர்களுக்கு
ந தேஹம் ந பிராணான் நச சுகம் அசேஷாபிலஷிதம்
நாச ஆத்மாநாம் நாந்யத் கிமபி தவ சேஷத்வ விபவாத் பஹிர்ப்பூதம் நாத ஷணம் அபி சஹே யாதுசததா விநாசம் தத்
சத்யம் மதுமதன விஜ்ஞ்ஞாப நமிதம் –ஆளவந்தார் ஸ்ரீ சூ க்தி

அள்ளிப் பறித்து எறிந்து என் அழலை தீர்வேனே என்று சொன்னால் மட்டும் போதாதோ
அவன் மார்வில் எறிந்து -என்றது
இம் முலைகளால் தான் பட்ட பாட்டை
பெண்ணின் வருத்தம் அறியாத பெருமானான அவனும் பட வேண்டும்
அவனை இவை கும்மிக் குமைக்க வேணும்
இக்கஷ்டத்தை அவனும் பட்டானாகில்
அதுவே இவள் அழல் தீர்ந்த படி போலே
அழல் -தாபம் –

———————————————————————————————

கொம்மை முலைகள் இடர் தீரக் கோவிந்தற்கோர் குற்றேவல்
இம்மைப் பிறவி செய்யாதே யினிப் போய் செய்யும் தவம் தான் என்
செம்மையுடைய திருமார்வில் சேர்த்தான் ஏலும் ஒரு நான்று
மெய்ம்மை சொல்லி முகம் நோக்கி விடை தான் தருமேல் மிக நன்றே–13-9-

பதவுரை

கொம்மை முலைகள்–(எனது) கிளர்ந்த பருத்த முலைகளினுடைய
இடர் தீர கோவிந்தற்கு ஓர குற்றவேல்–குமைச்சல் தீரும்படி கண்ணபிரானுக்கு அந்தரங்கமான கைங்கரியத்தை
செம்மை உடைய திருமார்விலே–(அன்பர்கள் அணைவதற்கென்றே ஏற்பட்டிருக்கையாகிற) செவ்வையை யுடைத்தான் (தனது) திருமார்பிலே
சேர்த்தானேலும்–(என்னை அவன்) சேர்த்துக் கொண்டானாகில்
நன்று–(நல்லது)
ஒரு நான்று–ஒரு நாள்
இம்மைப் பிறவி செய்யாதே இனி போய்–இந்த ஜன்மத்திலே செய்யப் பெறாமல் இந்தப் பிறவி கழிந்த பின்பு வேறொரு தேச விசேஷத்திலே போய்
செய்யும்–செய்யக் கூடியதான
தவந்தான் ஏன்?–தபஸ்ஸு ஏதுக்கு?
முகம் நோக்கி–என் முகத்தைப் பார்த்து
மெய்ம்மை சொல்லி–மெய்யே சொல்லி
விடை தான் தருமேல்–“நீ எனக்கு வேண்டாம்போ“ எனறு தள்ளி விட்டமை தோன்ற விடை கொடுப்பானாகில்
மிக நன்று–அது உத்தமோத்தமம்.

கொங்கை தன்னைக் கிழங்கோடு மள்ளிப் பறித்திடுவானேன்? விழங்கு என்றி ஆத்ம வஸ்து வுண்டாகில் அவ்வாத்ம வங்து தான்
நித்யமாகையாலே ஒரு கால விசேஷத்திலே ஒரு தேச விசேஷத்திலே போய் நித்யாநுபவம் பண்ணப் பெறலாமே,
அவ் வநுபவத்தைப் பெறுவதற்குப் பாரித்துக் கொண்டு இங்கே ஒருவாறு ஆறியிருக்கலாமே“ என்று சிலர் சொல்ல,
பெற்ற இவ்வுடம்போடே இங்கே அநுபவிக்க ஆவல் கொண்டிரா நின்ற நான் தேஹாந்தரத்திலும் தேசாந்தரத்திலும்
நேருவதொரு பேற்றைத் துப்புவேனோ வென்கிறாள்.

க்ஷாம காலத்திலே சோறு சோறு என்று கதறும் ப்ரஜைகளைப் போலே
“எமக்கு வகுத்த விஷயத்தைக் காட்டு, எமக்கு வகுத்த விஷயத்தைக் காட்டு“ என்று நெருக்குகின்ற இம் முலைகளின் பசி தீரும்படி
இந்தப் பிறவியிலே இந்த ஸரீரத்தோடே கோபால க்ருஷ்ணனுக்குக் கைங்கர்யம் பண்ணாமல் வேறொரு பர புருஷனுக்கு
பண்ணுவதொரு கைங்கரியமுண்டோ? என்கிறாள் முன்னடிகளில்.

‘அம்மா! இப்படிஞ் சொல்ல்லாமோ? கண்ணபிரானுடைய அநுபவம் உனக்கு எளிதாயிருந்ததோ?
அவன் தான் மிறுக்குப் பண்ணுகிறானே, துர்லபத்தில் ஆசைவைத்துக் தளர்வதனால் பயனென்? என்று உற்றார் சொல்ல,
அதன்மேல் தன்னுடைய அத்யவஸாயத்தின் உறுதியை உரைக்கின்றாள் பின்னடிகளில்.

கண்ணபிரான் தனது திருமார்பிலே எனது கொங்கைகளை அணைத்துக்கொள்ள வேணுமென்று விரும்பியிருக்கிற
என் விருப்பத்தின்படி அவன் அணைத்துக் கொள்வனேல் நன்று, அப்படி அணைத்து கொள்ளத் திருவுள்ளமில்லையாகில்,
உன்னைக் கைவிட்டேன், நீ போ“ என்று வாய்திறந்தொன்று சொல்லி விடட்டும், அஃது எனக்கு மிகவும் ப்ரியம் -என்கிறாள்.
அவனுடைய ஸம்ஸ்லேஷத்தையே அல்லும் பகலம் வாய் வெருவிக் கொண்டு கிடக்கின்ற விவள்
“விடைதான் திருமேல் மிகநன்றே“ என்று சொல்லுகைக்கு கருத்து யாதெனில்,
உன்னைக் கை விட்டேனெறு சொல்லுகிற வார்த்தையாவது அவன், முகம் நோக்கிச் சொல்லுவனாகில்,
அப்போதைய ஸேவையாவது கிடைக்குமே என்றும், கண்ணிலே தென்பட்டானாகில் பிறகு அவனை உபாயங்களால்
கவர்ந்து கொள்ளலாமென்று நினைத்துச் சொல்லுகிறபடி.
“பாவிநீயென்றொன்று சொல்லாய் பாவியேன் காணவந்தே“ (திருவாய்மொழி சஎந) என்றதோடு ஒக்குமிது.
எம்பெருமான் சொல்லுகிற வார்த்தை எதுவாயிருந்தாலும் அதில் நிர்ப்பந்தமில்லை, கண் முன்னே வந்து தோற்றிச் சொல்ல
வேணு மென்பதொன்றிலேயாய்த்து நிர்ப்பந்தமுள்ளது ஆழ்வார், “பாவியேன் காணவந்தே -சொல்லாய்“ என்றார்,
இவளும் “முகம்நோக்கி” என்கிறாள்.

“இப்பாட்டில் சேர்த்தானேலும் என்ற பதத்திற்குப் பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியமானமருளிச்செய்யுமிடத்து,
சேர்த்தானேலும் – அம்மார்வோடேசேர்த்து அணைக்கையாத்துப் பேறாவது, அதுசெய்திலனேயாகிலும்“ என்றருளிச்
செய்திருப்பதுகொண்டு சிலர் “சேர்க்கானேலும்“ என்று திருத்துவர்கள்,
வியாக்கியானத்தில் எதிர்மறைப்பொருள் கூறப்பட்டிருத்தலால் அது சேர்த்தானேலும் என்ற பாடத்திற்கு பொருந்தாதென்று
அவர்களுடைய கருத்துப்போலும். அத்திருத்தம் பொருத்தமுடைத்தன்று, வியாக்கியான விரோதம் யாதுமில்லை காண்மின்
“அம்மார்வோடே சேர்த்தணைக்கை யாய்த்துப் பேறாவது“ என்றவளவே சேர்த்தானேலு மென்பதற்கான தாத்பர்யாத்தம்.
“அது செய்திலனேயாகிலும்“ என்ற வியாக்கியான ஸ்ரீஸூக்தி மேலுக்கு அவதாரிகை போன்றதாம்.
இப்பாட்டில் பின்னடிகள் ஒரே வாக்யார்த்தம்போல் தோற்றுமாறு இருந்தாலும் இரண்டு வாக்யார்த்தமாகப் பிரித்து
வ்யக்தமாக வ்யாக்யானித்து அருளியிருக்கிறார் பெரியவாச்சான்பிள்ளை, “சேர்த்தானேல் நன்றி. விடைதான் தருமேல் மிகநன்று“ என்று
யோஜனையைக் காட்டி “தன் மார்வென்று அணையும்படி ஸம்ஸ்லேஷதிப்பித்தானாகில் அழகிது, நீ வேண்டா வென்று
முகத்தைப்பார்த்து அநுமதிபண்ணிவிடுமாகில் நன்றி.“ என்று பொருளையும் விளங்கக் காட்டியருளினர்.

மெய்மை சொல்லி விடை தருகையாவது – இவளுடைய பாவபந்தத்தைப் பரீக்ஷிப்பதற்காக வெறுமன் விடைதருகை யன்றிக்கே,
ஸத்யமாகவே இவளை கைவிடவேணுமென்று நெஞ்சார நிஷ்கர்ஷித்துக் கைவிடுதலாம்.
(முன்னடியில்) “முலைகளிடர்தீர“ என்ற சொல்நலத்தால் விளங்கும். ஸ்வாபதேஸத்தில் முலை என்பது பக்தியையிறே. தவம் – தவஸ்

கிழங்கு -என்கிற ஆத்மவஸ்து ஒரு கால விசேஷத்திலே
ஒரு தேச விசேஷத்திலே நித்ய அனுபவம் பண்ணப் பெறலாமே
அதற்குப் பாரித்து கொண்டு இங்கே ஒருவாறு ஆறி இருக்கலாமே -என்ன
பெற்ற இந்த உடம்போடு அனுபவிக்க பாரித்து இருக்கிற நான்
தேஹாந்தரத்தில் தேசாந்தரத்தில் நேரும் பேற்றை மதிப்பேனோ-

ஷாம காலத்தில் சோறு சோறு என்று கதறும் பிரஜைகளை போல
எமக்கு வகுத்த விஷயத்தைக் காட்டு -என்று நெருக்கும் இம் முலைகள் பசி தீரும்படி
இந்த சரீரத்துடன் கைங்கர்யம் பண்ணாமல்
வேறு ஒரு தேசத்தில்
வேறு ஒரு தேஹத்தை பரிஹரித்து
வேறு ஒரு பர புருஷனுக்கு
கைங்கர்யம் உண்டோ –
கொம்மை முலைகள் இடர் தீரக் –
எனது கிளர்ந்து பருத்த முலைகளின் உடைய
குமைச்சல் தீரும்படி –

கோவிந்தற்கோர் குற்றேவல் –
கண்ணபிரானுக்கு அந்தரங்கமான
கைங்கர்யத்தை

இம்மைப் பிறவி செய்யாதே யினிப் போய் –
இந்த ஜன்மத்திலே செய்யப் பெறாமல்
இந்த பிறவி கழிந்த பின்பு
வேறு ஒரு தேச விசேஷத்திலே போய்

செய்யும் தவம் தான் என் –
செய்யக் கூடிய தபஸ் ஸூ தான் ஏதுக்கு-

கண்ணபிரான் அனைத்துக் கொண்டால் நன்று
உன்னைக் கை விட்டேன் என்று சொல்லினும் அது எனக்கு மிகவும் பிரியம்
செம்மையுடைய திருமார்வில் –
அன்பர்கள் அணைவதற்கு என்றே ஏற்பட்டு இருக்கை யாகிற
செவ்வையை யுடைத்தான தனது திரு மார்விலே –

சேர்த்தான் ஏலும் நன்றே-
என்னை அவன் சேர்த்துக் கொண்டான் ஆகில்
நல்லது –
சேர்த்தான் ஏலும் –
அம்மார்வோடே சேர்த்து அணைக்கை யாவது பேறு ஆவது
தன மார்வோடே அணையும் படி சம்ச்லேஷிப்பித்தான் ஆகில் அழகிது
நீ வேண்டா என்று முகத்தைப் பார்த்து அனுமதி பண்ணி விடுமாகில் மிகவும் நன்று –

ஒரு நான்று –
ஒரு நாள் –

மெய்ம்மை சொல்லி முகம் நோக்கி –
மெய்யே சொல்லி என் முகம் பார்த்து

விடை தான் தருமேல் மிக நன்றே –
நீ எனக்குவேண்டாம் போ என்று தள்ளி விட்டமை தோன்ற
விடை கொடுப்பான் ஆகில்
அதுவே உத்தமோத்தமம் –
இந்த வார்த்தையாவது ஆண்டாள் முகம் பார்த்து சொல்லுவான் ஆகில்
அப்போதை சேவை யாவது கிடைக்குமே
அப்போது கண் பட்டான் ஆகில் வேறு உபாயங்களால் கவர்ந்து கொள்ளலாமே –
பாவி நீ என்று ஓன்று சொல்லாய் பாவியேன் காண வந்தே -திருவாய் மொழி -போல
இவளும் முகம் நோக்கி -என்கிறாள் –

மெய்ம்மை சொல்லி விடை தருகையாவது
இவளுடைய பாவ பந்தத்தை பரிஷிப்பதற்காக வெறுமனே விடை தருகை அன்றிக்கே
சத்தியமாகவே கை விட வேணும் என்று நெஞ்சார நிஷ்கர்ஷித்து கை விடுதலாம்

முலைகள் இடர் தீர குற்றேவல் என்பதால் இவள் கைவல்யம் வேண்டாம் என்கிறாள்
முலை -ஸ்வாபதேசத்தில் -பக்தி
தவம் -தபஸ்-

——————————————————————————————

அல்லல் விளைத்த பெருமானை ஆயர்பாடிக்கு அணி விளக்கை
வில்லி புதுவை நகர் நம்பி விட்டுசித்தன் வியன் கோதை
வில்லைத் தொலைத்த புருவத்தாள் வேட்கை யுற்று மிக விரும்பும்
சொல்லைத் துதிக்க வல்லார்கள் துன்பக் கடலுள் துவளாரே–13-10-

பதவுரை

வில்லை துலைத்த–வில்லைத் தோற்கடித்த
புருவத்தாள்–புருவங்களை யுடையளாய்
வில்லி புதுவை நக் நம்பி விட்டு சித்தன் வியன் கோதை–ஸ்ரீவில்லி புத்தூர்க்குத் தலைவரான
பெரியாழ்வாருடைய மகளாய் ஆச்சர்ய குணசாலிநியான ஆண்டாள்,
அல்லல் விளைத்த பெருமானை-(திருவாய்ப் பாடி முழுதும்) தீங்கு விளைத்து அதனால் பெருமை பெற்றவனும்
ஆயர் பாடிக்கு அணி விளக்கை–திருவாய்ப் பாடிக்கு மங்கள தீபம் போன்று ப்ரகாசகனுமான கண்ண பிரானை
வேட்கை உற்று–ஆசைப் பட்டு
மிக விரும்பும் சொல்லை–மிக்க அபிநிவேசம் தோற்ற அருளிச் செய்த இப் பாசுரங்களை
துதிக்க வல்லார்கள்–புகழ்ந்து ஓத வல்லவர்கள்
துன்பம் கடலுள் -ஸம்ஸார ஸமுத்ரத்தில்
துவளார்–துவண்டு நோவு படமாட்டார்கள்.

இத்திருவாய்மொழிகற்றார்க்குப் பலன் சொல்லி முடிக்கிறாள் இதில்
* நிச்சலும் தீமைகள் செய்யும் பெருமானாகிய கண்ணபிரான் விஷயமாகப் பெரியாழ்வார் திருமகளார் அருளிச் செய்த
இச் சொன் மாலைகளைப் புகழ்ந்து பாட வல்லவர்கள் ஸம்ஸாரமாகிற பெருங்கடலிலே விழுந்து நோவுபட மாட்டார்கள் என்கிறாள்.
(பஹவோ ந்ருப! கல்யாணகுணா புத்ரஸ்யஸந்திதே) என்னுபடியாக “குணசாலி“ என்று இராமபிரான் புகழ்பெற்றாற் போலக்
கண்ணபிரான் “அல்லல் விளைத்த பெருமான்“ என்று புகழ்பெற்றிருப்பனாய்த்து.
இவன் செய்யும் தீம்புகள் திருவாய்ப்பாடிக்கு விளக்கிடாற்போலிருக்கு மென்பது தோன்ற
“அல்லல் விளைத்த பெருமானை ஆயர்பாடிக்கணி விளக்கை“ என்கிறாள்.
“இவன் தீம்புக்கு இலக்காகாதபோது ஊராக இருண்டு கிடக்குமாய்த்து“ என்ற வியாக்கியான ஸ்ரீஸூக்தி காண்க.

வில்லைத் துலைத்த புருவத்தாள் – “துலைத்த“ என்னுஞ்சொல் “துலா“ எனற வடசொல்லடியாகப் பிறந்ததென்று கொண்டால்,
வில்லை ஒத்திருக்கின்ற புருவத்தையுடையவள் என்று பொருளாகும். (துலா-ஒப்பு)
பெரியவாச்சான் பிள்ளை இவ்வர்த்தத்தைத் திருவுள்ளம் பற்றவில்லை.
“தன்னோடு ஸாம்யங் கொண்டாடியிருக்கு மவற்றையெல்லாம் அழிக்கும்படியாயாய்த்து அவயவ ஸோபையிருக்கும்படி.
வில் தான் ஒப்பாகப் போராதபடியான புருவத்தை யுடையவள்“ என்றிறே வியாக்கியான ஸ்ரீஸூக்தி.
ஆகவே துலைத்த என்பதற்கு, ‘திரஸ்கரித்த‘ என்ற பொருள் கொள்ளத் தகும்.

நிகமத்தில்
இத்திருமொழி கற்றார்க்கு பலன் சொல்லித்
தலைக் கட்டுகிறாள்
அல்லல் விளைத்த பெருமானை ஆயர்பாடிக்கு அணி விளக்கை
திரு ஆய்ப்பாடி முழுவதும் நிச்சலும் தீமைகள் செய்து
அதனால் பெருமை பெற்ற கண்ணபிரான்
திருவாய்ப்பாடிக்கு மங்கள தீபம் போன்ற பிரகாசமான
கண்ணபிரான் -விஷயமாக –
பஹவோ ந்ருப கல்யாண குண புத்ரச்ய சந்திதே -குணசாலி இராம பிரான் புகழ் பெற்றால் போலே
கண்ணபிரான் அல்லல் விளைத்த பெருமான் -ஏற்ற புகழ் பெற்று விளங்கினான்
இவன் செய்யும் தீம்புகள் திரு வாய்ப்பாடிக்கு விளக்கு இட்டால் போலே இருக்க
இவன் தீம்புக்கு இலக்காகாத போது ஊராக இருண்டு கிடக்கும் ஆயத்து –

வில்லி புதுவை நகர் நம்பி விட்டுசித்தன் வியன் கோதை
ஸ்ரீ வில்லி புத்தூருக்கு தலைவரான
பெரியாழ்வார் திரு மகளாராய்
ஆச்சர்யமான குணசாலியான ஆண்டாள்

வில்லைத் தொலைத்த புருவத்தாள் வேட்கை யுற்று மிக விரும்பும்
வில்லைத் தோற்கடித்த புருவங்களை உடையாளாய
துலா -ஒப்பு
தன்னோடு சாம்யம் கொண்டாடி இருக்கும் அவற்றை எல்லாம்
அழிக்கும் படி யாய்த்து அவயவ சோபை இருக்கும் படி –
வில் தான் ஒப்பாக போராதபடியான புருவத்தை உடையவள் –
து-தொலைத்த -திரஸ்கரித்த -என்ற பொருள் வ்யாக்யானத்தோடே சேரும்
தொலைத்த -என்ற பாடமும் இத்தால் ஏற்கும்
மிக்க அபி நிவேசம் தோற்ற
அருளிச் செய்த இப்பாசுரங்களை

துதிக்க வல்லார்கள் துன்பக் கடலுள் துவளாரே
புகழ்ந்து ஓத வல்லவர்கள்
சம்சார ஆகிற பெரும் கடலிலே துவண்டு நோவு பட மாட்டார்கள் –

——————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே -அண்ணங்கராச்சார்யர்  ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ நாச்சியார் திரு மொழி – பன்னிரண்டாவது திரு மொழி – -ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை -ஸ்ரீ உ. வே. P.B.A.. ஸ்வாமிகள்–

September 9, 2014

பிரவேசம் –

கீழ்த் திரு மொழியில்
இவள் பட்ட ஆர்த்தியை எம்பெருமான் உடனே வந்து
பரிஹரித்து அருள வில்லை –
அந்த ஆர்த்தியோ இவளால் ஆற்ற முடிய வில்லை –
அவன் திரு உள்ளமான போது வந்து நம்மை திரு உள்ளம் பற்றுகிறான் -என்று
ஆறி இருக்கும் தன்மை இவளுக்கு இல்லை
அவிசம்பிதமாக அவனோடு சம்ச்லேஷித்து தீர வேண்டும்படி த்வரை மிக்கது –

தானே காலால் நடந்து அவன் உள்ள விடத்தே போகப் பார்த்தும்
அசக்தியாலே கால் நடை தாராமையாலே
தன்னிடத்திலே பரிவுள்ளவர்களை நோக்கி
நீங்கள் என்னை இப்போதே அக் கண்ணபிரான் எழுந்து அருளி இருக்கும் இடத்திலே
கொண்டு போய் போடுங்கோள்-என்கிறாள்
ஒவ் ஒரு பாட்டிலும் ஒவ் ஒரு உத்தேச்ய பூமியில் இட அருளிச் செய்கிறாள்-

———————————————————————————-

மற்று இருந்தீர்கட்கு அறியலாகா மாதவன் என்பதோர் அன்பு தன்னை
உற்று இருந்தேனுக்கு உரைப்பது எல்லாம் ஊமையரோடு செவிடர் வார்த்தை
பெற்றிருந்தாளை ஒழியவே போய்ப் பேர்த்தொரு தாயில் வளர்ந்த நம்பி
மல் பொருந்தா மற்களம் அடைந்த மதுரைப் புறத்து என்னை யுய்த்திடுமின்–12-1-

பதவுரை

மற்று இருந்தீர்கட்கு–(என்னுடைய துணிவுக்கு மாறுபாடாக இருக்கின்ற உங்களுக்கு
அறியல் ஆகா–அறிய முடியாததாய்
மாதவன் என்பது ஓர் அன்பு தன்னை–மாதவன் விஷயமான அபிநிவேசத்தை
உற்றிருந்தேனுக்கு–அடைந்திருக்கிற எனக்கு
உரைப்பது எல்லாம்–நீங்கள் சொல்லுவதெல்லாம்
ஊமையரோடு செவிடர் வார்த்தை–ஊமையும் செவிடனுங் கூடி வார்த்தை சொல்லிக் கொள்வது போல் வீண்
(இப்போது எனக்குச் செய்யத்தக்கது எதுவென்றால்)
புறத்து–ஸமீப ப்ரதேசத்திலே
என்னை–என்னை
பெற்றிருந்தாளை ஒழிய போய்–மெய் நொந்து பெற்ற தாயான தேவகியை விட்டொழிந்து
பேர்த்து ஒரு தாய் இல்–வேறொரு தாயாகிய யசோதையின் க்ருஹத்திலே
வளர்ந்த–வளர்ந்தவனும்
மல் பொருந்தாமல் களம் அடைந்த–மல்ல யுத்த பூமியிலே மல்லர்கள் வந்து சேர்வதற்கு முன்னே
தான் முற்பாடனாய்ப் போய்ச் சேர்த்திருப்பவனுமான
நம்பி–கண்ண பிரானுடைய (நகரமாகிய)
மதுரை–மதுராபுரி யினுடைய
உய்த்திடுமின்–கொண்டு சேர்ந்து விடுங்கள்.

எம்பெருமானை இப்போதே பெறவேணுமென்று வருந்திக்கிடக்கின்ற ஆண்டாளை நோக்கித் தோழியரும் அன்னையரும்
‘அம்மா! நம் தலையால் ஆவதொன்றுமில்லை, பேறு அவன் தலையாலே ஆகவேணும் என்பது ஸித்தாந்தமான பின்பு
நீ இப்படிப்பதறுவதில் பயனொன்றுமில்லையே, அடைவிலேபேறு பெறலரகுமென்று ஆறியிருப்பதன்றோ முறைமை,
அஸோக வநிகையிற் பிராட்டியின் அத்யவஸாயம் உனக்குத் தெரியாததன்றோ,
அவளைப்போலே நீயும் ஆறியிருக்கவேணுங்காண், நீ இப்படிப் பதறலாகாது‘ என்றாற்போலே சிலஹிதவசநங்களைச் சொல்லப்புக,
அவர்களைக்குறித்துக் கூறுகின்றாள் –

‘எனக்கு இப்போது நிகழ்கிற அவஸ்தை இப்படிப்பட்டதென்று சிறிதும் அறிபகில்லாத நீங்கள்,
பகவத் விஷய காமத்தின் மேலெல்லையிலே நிற்கிற எனக்குச் சொல்லுகிற வார்த்தைகள் வீண்,
உங்கள் பேச்சு என்காதில் புகவும் மாட்டா, புகுந்தாலும் அவற்றுக்கு மறுமொழி வுறுமளவிலே நான் நிற்கின்றிலேன்,
ஆகையாலே நீங்கள் எனக்குஹிதஞ் சொல்லப்பார்ப்பதை நிறுத்திவிட்டு
* ஒருத்திமகனாப் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர்த்து சாணுர முஷ்டிகாதிமல்லர்களோடே போர்புரிந்து,
வெற்றி பெற்ற கண்ணபிரானெழுந்தருளி யிருக்கிற மதுராபுரியின் ப்ராந்தத்திலே என்னைக் கொண்டுபோய்ப் போடுங்கள்‘ என்கிறாள்.

ஊமையரோடு செவிடர்வார்த்தை – செவிடரோடு ஊமையர் வார்த்தை சொல்லுமா போலேராநின்றதென்றபடி
ஊமை வார்த்தை சொல்வதற்கு அநர்ஹன், செவிடன் வார்த்தைகேட்பதற்கு அநரஹன்,
அதுபோல நீங்கள் என்னைப் பற்றிப் பேசுவதற்கு யோக்யதை யற்றவர்கள்,
மர்யாதைமீறி நீங்கள் பேசினாலும் அப்பேச்சைக் கொள்வதற்கு எனக்குச செவியில்துளையில்லை,
ஆகையாலே நீங்கள் எனக்கு சொல்லதெல்லாம் வீண் என்றவாறு.

‘இப்படி நீ வெட்டொன்று துண்டிரண்டாகச் சொல்லலாமா? நான் உன்னைப்பெற்ற தாய் அல்லேனோ?
என்னைக் கைவிடப்பார்க்கலாமோ? என்று தாய்சொல்ல,
‘அம்மா! நான் என்செய்வேன்? பெற்ற தாயை உதறித் தள்ளிவிட்டு வேறிடந்தேடியோடுமவன் எனக்குத் தன்னோடு
ஸாம்யாபத்தி கொடுத்தான் காண்‘ என்பாள்போலக் கூறுகின்றாள் மூன்றாபடி.
கண்ணபிரான் வஸுதேவ பத்நியான தேவகிக்குப் பிள்ளையாகப்பிறந்து
நந்தகோப பத்நியான யசோதையின் மகனாக வளர்ந்தருளினவரலாறு அறியத்தக்கது.

மற்பொருந்தா மற்களமடைந்தநம்பி – ‘தன்னுடம்போடே அணையவேணு மென்னுமாசையுடைய நானிருக்க,
இத்தனைபோது புறப்பட்டு முரட்டுமல்லரோடே அணைகைக்குப் போகா நிற்கும். மல்லரானவர்கள் மற்பொருகைக்கு
யுத்த பூமியிலே சென்று கிட்டுங்காட்டில் தான் யுத்தபூமியிலே சென்று கிட்டுமாய்த்து. அவன் மல்லருடம்போடே
அணைவதற்குமுன்னே இடையிலே நான் சென்றுகிட்டிக் கொள்ளும்படி என்னை மதுரையின் பரிஸரத்திலே
கொடுபோய்ப் பொகடுங்கோள்“ என்ற வியாக்கியான ஸ்ரீஸூக்தியின் யோக்யதை அநுபவிக்கத் தக்கது.

மற்களமடைந்த வரலாறு. – கம்ஸனால் வலிய அழைக்கப்பட்டு ஸ்ரீக்ருஷ்ண பலராமர்கள் அவனது ஸபையிற் செல்லுகையில்
அவர்களை எதிர்த்துப் பொருது சொல்லும்படி கம்ஸனால் ஏவப்பட்ட சாணூரன் முஷ்டிகள் முதலிய பெருமல்லர்கள் சிலர்
வந்து எதிர்த்து உக்ரமாகப் பெரும்போர்செய்ய, அவர்களையெல்லாம் அவயாதவ்வீரர் இருவரும்
மற்போரினாலேயே கொன்று வென்றிட்டனர் என்பது மல்லவதஞசெய்த கதை.

“மதுரையின் பரிஸரத்திலே“ என்று வியாக்கியானத்தி அருளிச்செய்யப்பட்டிருத்தலால் “மதுரைப்புறத்து“ என்றபாடமே ஏற்கும்.
“புரத்து“ என்னக்கூடாது. இடையினரசுமல்ல, வல்லினறகரம்.

உய்த்திடுதல் – கொண்டு சேர்க்கையும். உஜ்ஸீவிக்கச்செய்கையும்.

மற்று இருந்தீர்கட்கு அறியலாகா மாதவன் என்பதோர் அன்பு தன்னை உற்று இருந்தேனுக்கு-
எம்பெருமானை இப்போதே பெற வேணும் என்று
வருந்திக் கிடக்கிற ஆண்டாளை நோக்கி தோழிமாறும் அன்னையரும்
அம்மா நம் தலையால் ஆவது ஒன்றும் இல்லை
பேறு அவன் தலையாலே தான் ஆக வேணும் எனபது சிந்தாந்தம்
ஆனபின்பு நீ இப்படி பதறுவதில் பயன் ஒன்றும் இல்லையே
அடைவிலே பேறு பெறலாம் என்று இருப்பது அன்றோ முறை –

அசோகவனையில் பிராட்டியின் அத்யாவசாயம் உனக்குத் தெரியாதாது அன்றே -போன்ற
சில ஹித வசனங்களைச் சொல்லப் புக
அவர்களை குறித்து -அருளிச் செய்கிறாள் –
உரைப்பது எல்லாம் ஊமையரோடு செவிடர் வார்த்தை –
செவிடரோடு ஊமையர் வார்த்தை சொல்லுமா போலே இரா நின்றது
ஊமை வார்த்தை சொல்வதற்கு அனர்ஹன்
செவிடன் வார்த்தை கேட்பதற்கு அனர்ஹன்
ஆகையால் நீங்கள் சொல்வது எல்லாம் வீண் –
எனக்கு இப்பொழுது நிகழ்கிற அவஸ்தை இப்படிப் பட்டது என்று சிறிதும் அறியகில்லாத நீங்கள்
பகவத் விஷயத்தின் காமத்தில் மேல் எல்லையில் நிற்கிற
எனக்குச் சொல்லுகிற வார்த்தைகள் வீண்
உங்கள் பேச்சு என் காதில் புகமாட்டா
புகுந்தாலும் மறுமொழி கூறும் நிலையில் நான் நிற்கின்றேன் அல்லேன்
ஆகையால் ஹிதம் சொல்லப் பார்ப்பதை நிறுத்தி விட்டு
இப்படி நீ வெட்டு இரண்டு துண்டு ஒன்றாக சொல்லலாமா
நான் பெற்ற தாய் அல்லவா -என்ன என்ன
அம்மா
பெற்ற தாயை உதறித் தள்ளி விட்டு வேறு இடம் தேடி ஒடுமவன் எனக்கு சாம்யாபத்தி கொடுத்தான் காண்

பெற்றிருந்தாளை ஒழியவே போய்ப் பேர்த்தொரு தாயில் வளர்ந்த நம்பி –
ஒருத்தி மகனாய் பிறந்து ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளிந்து வளர்ந்து –

மல் பொருந்தா மற்களம் அடைந்த மதுரைப் புறத்து என்னை யுய்த்திடுமின் –
சாணூர முஷ்டிகாதி மல்லர்களோடு போர் புரிந்து
வெற்றி பெற்ற கண்ணபிரான்
எழுந்து அருளி இருக்கிற மதுராபுரியின் ப்ராந்தத்திலே
என்னைக் கொண்டு போய் போடுங்கோள்
அவன் உடம்போடு அனைய ஆசை கொண்டு நான் இருக்க
இத்தனை போது புறப்பட்டு
முரட்டு மல்லரோடு அணைக்கப் போகா நிற்கும்
மல்லர்கள் யுத்த பூமியில் கிட்டும் காட்டி தானே யுத்த பூமியிலே சென்று கிட்டும் ஆய்த்து
அவன் மல்லர்களோடு அணைவதற்கு முன்னே இடையிலே நான் சென்று
கிட்டிக் கொள்ளும்படி என்னை மதுரையின் பரிசரத்தில் கொடு போய் பொகடுங்கோள்
பரிசாரம் -என்பதால் மதுரைப் புறத்து -என்பதே சரியான பாடம்
புரத்து-என்னக் கூடாது –
உய்த்திடுதல் -கொண்டு சேர்க்கையும் உஜ்ஜீவிக்கச் செய்கையும்-

————————————————————————————————

நாணி யினியோர் கருமம் இல்லை நால் அயலாரும் அறிந்து ஒழிந்தார்
பாணியாது என்னை மருந்து செய்து பண்டு பண்டு ஆக்க யுறுதிர் ஆகில்
மாணியுருவாய் யுலகளந்த மாயனைக் காணில் தலை மறியும்
ஆணையால் நீர் என்னைக் காக்க வேண்டில் ஆய்ப்பாடிக்கே என்னை யுய்த்திடுமின்–12-2-

பதவுரை

இனி–இனி மேல்
நாணி–வெட்கப்பட்டு
ஓர் கரும்ம இல்லை–ஒரு பயனுமில்லை (ஏனெனில்)
நால் அயலாரும்–ஊரிலுள்ளாரெல்லாரும்
அறிந்தொழிந்தார்–(எனது செய்தியை) அறிந்து கொண்டார்கள்
பாணியாது–காலதாமத மின்றி
மருந்து செய்து–வேண்டும் பரிஹாரங்களைச் செய்து
என்னை–என்னை
பண்டு பண்டு ஆக்க உறுதிர் ஆகில்–இப்போதைய விரஹாவஸ்தைக்கு முற்பட்டதான ஸம்ச்லேஷ தசைக்கும்
முற்பட்டதான பகவத் விஷய வாஸனையையே அறியாத தசையிலிருந்த நிறத்தைப் பெற்றவளாகச் செய்ய நினைப்பீர்களாகில்,
நீர்–நீங்கள்
என்னை–என்னை
ஆணையால்–ஸத்யமாக
காக்க வேண்டில்–காப்பாற்ற விரும்புகிறீர்களாகில்
என்னை–என்னை
ஆய்ப்பாடிக்கே–திருவாய்ப்பாடியிலே
உய்த்திடுமின்–கொண்டு சேர்த்து விடுங்கள்

மாணி உரு ஆய் உலகு அளந்த மாயனை காணில்
(மாவலியினிடத்தில்) வாமகரூபியாய்ச் சென்று (த்ரிவிக்ரமனாகி) உலகங்களை யெல்லாம் அளந்து கொண்ட பெருமானை ஸேவிக்கப்பெற்றால்

தலை மறியும்
(இந்த நோயானது) தலை மடங்கும்.

பெண்ணே! நீ ஆயிரந்தான் சொல்லு, உன்னுடைய துணிவு உகக்கத் தக்கதாகமாட்டாது.
நீ படிதாண்டாப் பத்தினியாயிருக்க வேண்டியவள், படி கடந்து நீ செல்லுமளவில் அவ்வெம்பெருமானுக்கு
அது பெருத்த அவத்யமாய் முடியும். ப்ரபந்நஸந்தானத்திலே இப்படியுமொருத்தி கிளம்பினாளே‘ என்று ஊராரும் பழிக்கநேரிடும்,
இதெல்லாம் உனது பெண்மை நிறைவுக்குப் பாங்கல்ல, உன்ஸ்வரூபத்தை நீ காத்துக்கொள்ள வேண்டாவா?“ என்று தாய்மார் சொல்ல,
அவர்களை நோக்கிக் கூறுகின்றாள் –

நான் முறை கெட்டபடியை இனிமேலா ஊரார் அறியப்போகிறார்கள்? என்றைக்கோ அறிந்த விட்டார்கள்!
இனிமேல் அறிய வேண்டும்படி இங்கு ஒன்றும் ரஹஸ்யமாயிருக்கவில்லை,
ஏழூர்ப்புல்லையும் மேய்த்து எட்டூர்த் தண்ணீரையுங் குடித்து வருகிற கொண்டிப் பசுவின் நிலை போன்றதன்றோ எனது நிலை,
இனி நாம் ஆர்க்கு லஜ்ஜைப்பட வேணும், லஜ்ஜைப்பட்டுத்தான் பெறவேண்டியது என்ன இருக்கிறது.

இங்ஙனே கூறின ஆண்டாளை நோக்கிப் பின்னையும் அவர்கள் “நீ இப்படித் துணிச்சலாகச் சொல்லி விட்டாலும்
உன்னை நாங்கள் இவ்வளவிலே விட்டுப்போவோமா? உனக்கு நன்மை தேடுகை எங்கள் காரியமன்றோ?
யானை தன்தலையில் தான்மண்னை வாரியிட்டுக்கொண்டாலும் பாகன் அதனை ஸோதிக்கக் கடவானன்றோ?
அப்படியே நீயும் அறியாமையாலே உன் தலைக்குத் தீங்குவிளைத்துக் கொண்டாலும் அத்தீங்கைத் துடைத்து
நன்மைபெறுத்த வேண்டியது எமது கடமையாதலால் உன் துணிச்சலை நாங்கள் நிறைவேறவொட்டுவோமோ? என்றார்கள்,

அவர்களை நோக்கிக் கூறுகின்றாள், “அன்னைமீர் எனக்கு நன்மை விளைக்கவேணுமென்ற விருப்பம் உங்களுக்கு
உண்மையாக உண்டாகில், இப்போதே என்னைத் திருவாய்ப்பாயிலே கொண்டு சேர்க்கப்பாருங்கள்,
இதுவே எனக்குற்ற நன்மையாம், மற்றைப்படி நீங்கள் செய்யுமதெல்லாம் எனக்குத் தீமையேகிடீர்! என்கிறாள்.

“என்னை மெய்யே நோக்கப் பார்க்கிறிகோளாகில் தன்னுடையமை பெறுகைக்காகத் தன்னை இரப்பாளனாக்கினவனை
என் கண்ணுக்கு இலக்காகப் பாருங்கோள்“ என்ற வியாக்கியான ஸ்ரீஸூக்தி அநுஸந்திக்கத் தக்கது.

பாணியாது – கால தாமஸம் செய்யாமல் என்றபடி, பாணித்தல் என்னும் பதத்தை ஆழ்வார்களுள் பெரியாழ்வாரும் இவளுமே பிரியோகித்தனர்.
“பாணிக்கவேண்டா நடமின்“ என்றாரிறே பெரியாழ்வார்திருமொழியில்.

பண்டுபண்டாக்க – “பண்டாக்க“ என்றால் போராதோ? “பண்டுகண்டாக்க“ என்றதற்குக் கருத்தென்? எனில், கேண்மின்.
இப்போதைய என் அவஸ்த்தைக்கு முற்பட்டதான யாதொரு அவஸ்த்தையுண்டோ, அதற்கும் முற்பட்டதான் யாதொரு அவஸ்தையுண்டோ
அல்வவஸ்தையில் நான் எப்படி யிருந்தேனோ அப்படி என்னை இப்போது ஆக்கவிரும்புவீர்களாகில் என்றபடி இதனை விவரிப்போம். –
இப்போதைய அவஸ்தையாவது விரஹாவஸ்தை, இதற்கு முந்திய அவஸ்தையாவது ஸம்ஸலேஷா வஸ்தை,
அதற்கும் முந்திய அவஸ்தையாவது – பகவத்விஷயவாஸனையே தியாமல்அந்யபரமாகப் போது போக்கினகாலம்.
உண்டியே உடையே உகந்திருந்த காலம். அப்போது ஸரீரம வாடாமல் வதங்காமல் மாமைகுன்றாமல் பசுகுபசுகென்றிருக்குமிறே,
நிர்விசாரமாக உண்டுடுத்துத் திரயுங்காலத்திலே மேனி நித்யபுஷ்டமாயிருக்கும்.
பகவத் விஷயத்தில் வாஸனை பண்ணிப் போந்தது முதலாக “ஸம்யோகா விப்ரயோ காந்தா“ என்றபடி
க்ஷணகாலம் ஸம்ஸ்லேஷமும் சிரகாலவிஸ்லேஷமுமாய் வ்யஸநமே மீதூர்ந்து செல்லுகையாலே –
இப்போதைய விரஹாவஸ்தைக்கு முந்தியதான ஸம்ஸ்லேஷா வஸ்தையிலுள்ள நிறத்தை விரும்புவதில் ரஸமில்லையென்று,
அதற்கும் முந்தியதான அந்யபரத்வாவஸ்தையிலிருந்த நிறத்தை விரும்புகிறாளாய்த்து இவ்வளவு அர்த்தங்களையும்

இரண்டு வாக்கியத்திலே அடக்கி அருளிச்செய்தார் பெரியவாச்சான் பிள்ளை,
ஸம்ஸ்லேஷிப்பதற்கு முன்புத்தைப் பூர்த்தி எனக்குண்டாகப் பார்த்திகோளாகில், -கலக்கப்புக்கவன்று தொடங்கி
மெலிவுக்கேயிறே க்ருஷிபண்ணிற்று“ என்று –

என்னிறம் பண்டு பண்டுபோலொக்கும்“ (பெரியதிருமொழி கக.க.கூ) என்ற விடத்தில் வியாக்கி அறப் பண்டுபோலேயாம்,
கலக்கையாகிறது பிரிவுக்கு அங்குரமிறே,
கலந்து பிரிந்து லாபாலாபங்களறியாதே பூர்ணையாயிருந்த போதை நிறம்போலேயாம்“ என்பது அவ்விடத்து அருளிச்செயல்.

தலைமறியும் என்ற வினைமுற்றுக்கும் எழுவாய் வருவித்துக் கொள்ளவேணும்,
உலகளந்தமாயனை ஸேவிக்கப்பெற்றால் என்னுடைய ஆற்றாமை தலைமடங்கு மென்கை.

நாணி யினியோர் கருமம் இல்லை நால் அயலாரும் அறிந்து ஒழிந்தார்-
தாய்மார்கள் இது உனக்கு பழி ஆகுமே -பெண்மை நிறைவுக்கு பாங்கு அல்ல
இனி நாணி ஒரு கருமம் இல்லை -இனி வெட்கப்பட்டு ஒரு பயனும் இல்லை
எல்லாரும் என் செய்தியை அறிந்து கொண்டார்கள்
ஏழூர் புல்லையும் மேய்த்து எட்டூர் தண்ணீரையும் குடித்து வருகிற கொண்டிப் பசுவின் நிலை போன்றது அன்றோ எந்நிலை

பாணியாது என்னை மருந்து செய்து பண்டு பண்டு ஆக்க யுறுதிர் ஆகில்
பாணியாது -கால தாமதம் இன்றி –
பாணிக்க வேண்டா நடமின் -பெரியாழ்வாரும் இந்த பதத்தை அருளிச் செய்கிறார்
மருந்து செய்து -வேண்டிய பரிகாரங்களை செய்து
பண்டு பண்டு -இப்போது விரஹ அவஸ்தைக்கு முற்பட்ட
சம்ச்லேஷ அவஸ்தை முற்பட்ட
பகவத் விஷய வாசனையே அறியாத தசையில்
ஆக்க யுறுதிர் ஆகில் –இருந்த நிறத்தைப் பெற்றவளாக செய்ய நினைப்பீர்கள் ஆகில் –
பண்டு பண்டு –
இப்பொழுது விரஹ அவஸ்தை
பண்டு அவஸ்தை -சம்ச்லேஷ அவஸ்தை –
பண்டு பண்டு -அந்ய பரமாக -பகவத் விஷய வாசனையே தெரியாமல் -போது போக்கின அவஸ்தை
உண்டியே உடையே உகந்து இருந்த காலம்
சம்ச்லேஷைக்கு முன்புத்தை பூர்த்தி எனக்கு உண்டாகப் பார்த்தி கோளாகில் –
கலக்க பண்ண அன்று தொடக்கி மெலிவுக்கே இறே றே பண்ணிற்று –
எந்நிறம் பண்டு பண்டு போல் ஒக்கும் -பெரிய திருமொழி –
அதில் வியாக்யானம் –
அவன் வாய் புலற்றும் நிறம் அறப் பண்டு போலே யாம்
கலக்கை யாகிறது பிரிவுக்கு அங்குரம் இறே
கலந்து பிரிந்து லாபாபலாபங்கள் அறியாதே
பூர்ணையாய் இருந்த போதை நிறம் போலே யாம் -என்று
பண்டு பண்டு அவஸ்தையிலே தானே
சரீரம் வாடாமல் வதங்காமல் மாமை குன்றாமல் பசகு பசகு என்று இருக்குமே
மேனி நித்ய புஷ்டமாய் இருக்குமே

மாணியுருவாய் யுலகளந்த மாயனைக் காணில் தலை மறியும்
பெருமானை சேவிக்கப் பெற்றால்
தலை மறியும் -இந்த நோயானது -தலை மடங்கும் –
என்னை மெய்யே நோக்கப் பார்க்கிறீகோள் ஆகில்
தன்னுடைமையை பெறுகைக்காக
தன்னை இரப்பாளான் ஆக்கிக் கொண்டவனை
என் கண்ணுக்கு இலக்காக பாருங்கோள்
ஆணையால் நீர் என்னைக் காக்க வேண்டில் ஆய்ப்பாடிக்கே என்னை யுய்த்திடுமின்
சத்தியமாக -காப்பாற்ற விரும்புகிறீர்கள் ஆகில்
திருவாய்ப்பாடியிலே கொண்டு சேர்த்து விடுங்கோள்-

—————————————————————————————–

தந்தையும் தாயும் உற்றாரும் நிற்கத் தனி வழி  போயினாள் என்னும் சொல்லு
வந்த பின்னைப் பழி காப்பரிது மாயவன் வந்து உருக்காட்டுகின்றான்
கொந்தளமாக்கிப் பரக்கழித்துக் குறும்பு செய்வானோர் மகனைப் பெற்ற
நந்த கோபாலன் கடைத் தலைக்கே நள்ளிருட்கண் என்னை யுய்த்திடுமின்–12-3-

பதவுரை

தந்தையும்–“தகப்பனாரும்
தாயும்–தாய்மாரும்
உற்றாரும்–மற்றுமுள்ள உறவினரும்
நிற்க–இருக்கும் போது
தனி வழி–(இவள்) தான் தோன்றியாகத் தெருவிலே புறப்பட்டாள்“ என்கிற வார்த்தையானது
வந்த பின்னை–உலகில் பரவின பிறகு
பழிகாப்பு அரிது–அப் பழியைத் தடுப்பது முடியாது (நான் தனி வழி போகாதிருக்கவும் முடியவில்லை, ஏனென்றால்)
நந்த கோபாலன்–நந்த கோபருடைய
கடைத் தலைக்கே–திரு மாளிகை வாசலிலே
மாயவன்–ஆச்சர்ய சேஷ்டிதங்களை யுடையனான கண்ண பிரான்
வந்து–எதிரே வந்து
உரு காட்டுகின்றான்–தன் வடிவைக் காட்டி இழுக்கின்றானே (இப்போது நீங்கள் செய்ய வேண்டிய தென்ன வென்றால்)
கொந்தளம் ஆக்கி பரக்கழித்து குறும்பு செய்வான் ஓர் மகனை பெற்ற–(பெண்களைக்) குடிகெடுத்துக் குறும்பு செய்யும் பிள்ளையைப் பெற்றவனான
நள்ளிருட் கண்–நடு நிசியிலே
என்னை உய்த்திடுமின்–என்னைக் கொண்டு போய்ச் சேர்த்து விடுங்கள்

தாய் தகப்பன்மார் சுற்றத்தார் முதலானோர் இருக்கும்போது, அவர்களைக்கொண்டு தனக்குற்ற நன்மைகளைத்
தேடிக் கொள்ள வேண்டியது தகுதியாயிருக்க, ஒருபெண்பிள்ளை அவர்களையெல்லாம் திரஸ்கரித்துவிட்டுத்
தான் றோன்றியாகத் தானே புறப்பட்டாள் என்று சிலர் பழிக்கத் தலைப்படுவர்க் அப்பழியானது என்னளவிலே நில்லாமல்
இக் குடிக்கே பெருத்த பழிப்பாய்த்தலைக்கட்டும். அப்போது இப்பழியைப் பரிஹரிக்க நீங்கள் முயலாதிருக்கப்போகிறதில்லை.
ஆனால் அப்போது உங்களுடைய முயற்சி பயன்படமாட்டாது. பழிவிளைவதற்கு முன்னே
அதனைப் பரிஹ்ஹரிக்கப் பார்க்கவேணுமேயல்லது பழிவிளைந்து பரவினபின்பு அது பரிஹரிக்கப்போமோ?
பழிவிளைவதற்கு ப்ரஸக்தியில்லாமல் அடங்கியிருக்க என்னால் முடியிவில்லை,
இப்படிப்பட்ட நிலைமையில் நீங்கள் செய்யத்தக்கது யாதெனில், தான்தோன்றியாய் நானாகப்படி கடந்து புறப்பட்டுப்
போனேனென்கிற வார்த்தைக்கு அவகாஸமில்லாதபடி என்னை நீங்களாகவே விரும்பி அழைத்துக்கொண்டுபோய்க்
கண்ணபிரானருகில் சேர்த்துவிடுங்கள், அப்படிச் செய்யுமளவில் என் மநோரதமும் நிறைவேறி நானும் வாழ்ந்தேனாகிறேன்,
நீங்களும் புகழ்பெற்றுப் போகிறீர்கள். பழிக்க நினைப்பார்க்கும் அவகாஸமில்லாமே போகிறது.
இந்த ஔசித்யத்தை நீங்கள் நன்று கண்டறிந்து இப்படிச் செய்து முடிப்பீர்களென்று நம்பியே நான் விரைந்து புறப்படாதே நிற்கின்றேன் என்கிறாள்.

தாய் தகப்பனார் முதலானவர்களைத் திரஸ்கரித்தாகிலும் தான் புறப்பட்டுப்போயே தீரவேணுமென்கைக்குக்
காரணஞ்சொல்லுகிறாள் மாயன்வந்து உருக்காட்டுகின்றான் என்று, என்னைக் கண்ணபிரானுடைய திருவுருவம்
கொள்ளைகொள்ள நிற்கும்போது உங்களைப்பார்த்து நான் எங்ஙனே ஆறியிருப்பேன் என்கிறாள்போலும்.
கண்ணபிரானுடைய வேணுகானம் செவிப்பட்ட போது
“கோவலர் சிறுமியரிளங்கொங்கை குதுகலிப்ப உடலுளவிழ்தெங்கும் காவலுங்கடந்து கயிறாமாலையாகி வந்து கவிழ்ந்து நின்றனரே“ என்றபடி
பெண்களெல்லாரும் பதறி ஓடினபடி உங்களுக்கு தெரியாதா, நானும் அப்படிக்காவல்கடந்து ஓடவேணுமென்று உங்களுக்கு ஆசையா? என்கிறாள்போலும்.

தன்னைக் கொண்டுபோய் விட வேண்டுமிடத்தைக் கூறுகின்றாள் பின்னடிகளில்.
* மச்சொடு மாளிகையேறி மாதர்கள் தம்மிடம்புக்குக், கச்சொடு பட்டைக்கிழித்துக் காம்புதுகிலவை கீறி,
நிச்சலுந்தீமைகள் செய்பவனாய்,
* ஆற்றிலிருந்து விளையாடுவோர்களைச் சேற்றாலெறிந்து வளை துகில் கைக்கொண்டு,
காற்றில் கடியனாய் ஓடி நந்தகோபாலனுடைய திருமாளிகை வாசலிலே என்னைக் கொண்டுபோய்ப் படுக்கவையுங்களென்கிறாள்.
நந்தகோபாலன் கடைத்தலையென்றால் வைத்யர்களின் வீட்டுவாசல்களில் நோயாளிகள் படுகாடுகிடக்குமாயோலே
கண்ணபிரானால் புண்பட்ட பெண்கள் படுகாடு கிடக்குமிடமென்று ப்ரஸித்தமாயிருக்கும்“ என்று பட்டரருளிச்செய்வராம்.

“கொந்தளம் – சிலுகிடுகை, பரக்கழிகை – பழிவிளைக்கை“ என்பது வியாக்கியான ஸ்ரீஸூக்தி அதாவது –
“கண்ணன் பெண்களைப் புண்படுத்தினவாறு என்னே!“ “நோவுபடுத்தினவாறு என்னே“ என்று அனைவரும்
மனம் நொந்து பழிக்கும்படிக்கீடான குறும்புகளைச் செய்யுமவனென்கை.

நள்ளிருட்கணென்னையும்த்திடுமின் – நாலுபேர் கண்ணிலே தென்படும் படியான மையத்திலே நீங்கள் என்னை அங்கே
கொண்டுபோனால் அவன் தாய் தங்கையர்க்கு வெட்கப்பட்டு முகம்நோக்காதேயிருப்பன்,
ஆதலால் ஒருவர்க்கும் வெள்காமல் உடனே அவன் எனை அணைக்கும்படி நடுநிசியிலே கொண்டு போங்கள் என்கிறாள்.

தந்தையும் தாயும் உற்றாரும் நிற்கத் தனி வழி போயினாள் என்னும் சொல்லு
தாய் தகப்பனார் சுற்றத்தார் முதலானோர் இருக்கும் போது
அவர்களைக் கொண்டு நன்மைகளை தேடாமல்
தான் தோன்றியாக புறப்பட்ட பழி
இக்குடிக்கே பெரும் பழியாய் விடும்

வந்த பின்னைப் பழி காப்பரிது-
அந்த சொல் வந்த பின் காப்பது அரிது
பழி விளைய பிரசக்தி இல்லாமல் அடங்கி இருக்க என்னால் முடிய வில்லை
நீங்களே விரும்பி என்னை அழைத்துக் கொண்டு போய் கண்ணபிரான் இடம் சேர்த்து விடுங்கோள்
நானும் வாழ்ந்தேன் ஆவேன்
நீங்களும் புகழ் பெற்றீர்கள் ஆவீர் –

பழி வந்தாலும் தான் புறப்பட்டு போக காரணம் அருளுகிறாள் மேல்
மாயவன் வந்து உருக்காட்டுகின்றான் கொந்தளமாக்கிப் பரக்கழித்துக் குறும்பு செய்வானோர் மகனைப் –
மச்சொடு மாளிகை ஏறி மாதர்கள் தம்மிடம் புக்கு
கச்சோடு பட்டைக் கிழித்து காம்புதுகிலவை கீறி
நிச்சலும் தீமைகள் செய்பவனாய்-
ஆற்றிலிருந்து விளையோடுவோர்களை சேற்றால் எறிந்து
வளை துகில் கைக் கொண்டு
காற்றில் கடியனாய் ஓடி அகம் புகுவானாய்
இப்படி தீமைகள் செய்து திரிபவனாய் உள்ள மகனை –

பெற்ற நந்த கோபாலன் கடைத் தலைக்கே நள்ளிருட்கண் என்னை யுய்த்திடுமின்
பெற்ற நந்த கோபாலனுடைய திரு மாளிகை வாசலிலே
என்னைக் கொண்டு போய் படுக்க வையுங்கோள் –

கடைத்தலை –
வைத்தியர்கள் வாசலில் நோயாளிகள் படுகாடு கிடக்குமா போலே
கண்ணபிரானால் புண்பட்ட பெண்கள் படுகாடு கிடக்கும் இடம் பிரசித்தம் இறே -என்று பட்டர் அருளிச் செய்வர் –

கொந்தளம் -சிலுசிடுகை
பரக்கழிக்கை -பழி விளைக்கை -அதாவது
கண்ணன் பெண்களை புண் படுத்தினவாறு என்னே
நோவு படுத்தினவாறு என்னே -என்று
அனைவரும் மனம் நொந்து பழிக்கும் படிக்கு ஈடான
குறும்புகளை செய்யுமவன் -என்கை –

நள்ளிருட்கண் என்னை யுய்த்திடுமின் –
நாலு பேர் கண்ணிலே தென் படும் சமயத்திலே அங்கெ கொண்டு போனால்
அவன் தாய் தந்தையருக்கு வெட்கப் பட்டு
முகம் நோக்காதே இருப்பன்
ஒருவருக்கும் வெள்காமல் உடனே என்னை அணைக்கும் படி நடு நிசியிலே கொண்டு போங்கள் -என்கிறாள் –

—————————————————————————————————–

அங்கைத் தலத்திடை யாழி கொண்டானவன் முகத்தன்றி விழியேன் என்று
செங்கச்சுக் கொண்டு கண்ணாடை யார்த்துச் சிறு மானிடவரைக் காணில் நாணும்
கொங்கைத் தலமிவை நோக்கிக் காணீர் கோவிந்தனுக்கு அல்லால் வாயில் போகா
இங்குத்தை வாழ்வை ஒழியவே போய் யமுனைக் கரைக்கு என்னை யுய்த்திடுமின்–12-4-

பதவுரை

அம் கைத்தலத்திடை–அழகிய திருக்கைத் தலத்திலே
ஆழி கொண்டானவன்–திரு வாழியை ஏந்தி யிருப்பவனான பிரானுடைய
முகத்து அன்றி விழியேன் என்று–முகத்தில் தவிர (மற்ற பேருடைய முகத்தில்) விழிக்க மாட்டேனென்று
செம் கச்சு ஆடை கொண்டு–நல்ல கஞ்சுகமாகிற ஆடையினாலே
கண் ஆர்த்து–கண்களை மூடிக் கொண்டு
சிறு மானிட வரை காணில் நானும்–க்ஷுத்ர மநுஷ்யர்களைக் கண்டால் வெட்கப்படா நின்ற
கொங்கைத் தலம் இவை–இக் கொங்கைகளை
நோக்கி காணீர்–(தாய்மார்களே!) நீங்கள் உற்று நோக்குங்கள் (இக் கொங்கைகளானவை)
கோவிந்தனுக்கு அல்லால்–கண்ண பிரானைத் தவிர்த்து
வாயில் போகா–மற்றொருவடைய வீட்டு வாசலை நோக்க மாட்டா, (ஆகையாலே)
இங்குத்தை வாழ்வை ஒழிய போய்–நான் இவ்விடத்திலே வாழ்வதை யொழித்து
என்னை எமுனை கரைக்கு உய்த்திடுமின்–என்னை யமுநா நதிக் கரையிலே கொண்டு போட்டு விடுங்கள்.

‘இப்படிப்பட்ட பதற்றம் உனக்கு ஆகாது, சிறிது அடக்கம்வேண்டும்‘ என்று சொன்ன தாய்மார்களை நோக்கிக் கூறுகின்றாள் –
என் கொங்கைகள் படுகிறபாட்டைப் பாருங்கள், ‘கையுந்திருவாழியுமான அழகுபொலிந்து, நின்ற கண்ணபிரானுடைய
முகத்தை நோக்குவோமேயன்றி மற்று எவரையும் நோக்கமாட்டோம்‘ என்று திண்ணிதாக
ஸங்கல்பஞ செய்துகொண்டு சிவந்த கச்சினால் கண்ணை மறைத்துக்கொண்டு க்ஷுத்ர மநுஷ்யர்களைக் கண்டால்
நாணிக்கிடக்கின்ற இம்முலைகளைக் கொண்டு நான் எங்ஙனே ஆற்றுவேன்?
கோவிந்தனுடைய வீட்டுவாசலிலே புகுந்தாலன்றித் தரிக்கமுடியாது இவற்றுக்கு,
“விழிக்குங் கண்ணிலேன் நிண்கண் மற்றல்லால் வேறொருவரோடு என்மனம் பற்றாது“ என்றும்
“மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்“ என்றும் ஸங்கல்பித்துக்கொண்டிருக்கிற இவற்றுக்கு நான் என்ன ஸமாதாநம் கூறுவேன்?
ஆகையாலே இங்கு நின்றும் என்னைக் கொண்டுபோய் யமுனைக்கரையிலே எறியுங்களென்கிறாள்.
* தூயபெருநீர்யமுனைத் துறைவனோடே ஜலக்ரீடைபண்ணி விளையாட மநோரத்திக்கிறாளாய்த்து.

“கோவிந்தனுக்கல்லால் வாயில் போகா“ என்றவிடத்திற்கு வியாக்கியானம் –
“பசுக்களின் பின்னே போய்த் தீம்பிலே கைவளரும் க்ருஷணனுக்கல்லது,
வழியே போய் வழிவந்து ஏகதார விரதனாயிருக்ம் சக்ரவர்த்தி திருமகனுக்கு வழிபோகாது.“ என்று.

இப்படிப் பட்ட பதற்றம் உனக்கு ஆகாது
அடக்கம் வேணும் -என்ற தாய்மார்களைப் பார்த்து
என் கொங்கைகள் படும் பாட்டைப் பாரீர் -என்கிறாள்
அங்கைத் தலத்திடை யாழி கொண்டானவன் முகத்தன்றி விழியேன் என்று
கையும் திரு ஆழி யுமான அழகு பொலிந்து நின்ற கண்ணபிரான் உடைய
திரு முகத்தை நோக்குவோமே அன்றி
மற்று எவரையும் நோக்க மாட்டோம் -என்ற திண்ணிய சங்கல்பம் கொண்டு

செங்கச்சுக் கொண்டு கண்ணாடை யார்த்துச் சிறு மானிடவரைக் காணில் நாணும்
சிவந்த கச்சினால்
கண்ணை மறைத்துக் கொண்டு
சூத்திர மனுஷ்யர்களைக் கண்டால் நாணிக் கிடக்கின்ற

கொங்கைத் தலமிவை நோக்கிக் காணீர் கோவிந்தனுக்கு அல்லால் வாயில் போகா
இம் முலைகளைக் கொண்டு நான் எங்கனம் ஆற்றுவேன்
கோவிந்தன் உடைய வீட்டு வாசலில் புகுந்தால் அன்றி
தரிக்க முடியாது இவற்றுக்கு
விழிக்கும் கண்ணிலேன் நின் கண் மற்றல்லால் வேறு ஒருவரோடு என் மனம் பற்றாது -என்றும்
மானிடவர்க்கு என்று பேச்சுப்படில் வாழகில்லேன் -என்றும்
சங்கல்ப்பித்துக் கொண்டு இருக்கிற இவற்றுக்கு
நான் என்ன சமாதானம் கூறுவேன் –

கோவிந்தனுக்கு அல்லால் வாயில் போகா –
பசுக்களின் பின்னேபோய்
தீம்பிலே கை வளரும் கிருஷ்ணனுக்கு அல்லது
வழியே போய் வழி வந்து
ஏக தார வரதனாய் இருக்கும்
சக்கரவர்த்தி திருமகனுக்கு வழி போகாது –

இங்குத்தை வாழ்வை ஒழியவே போய் யமுனைக் கரைக்கு என்னை யுய்த்திடுமின் –
ஆகையால்
இங்கு நின்றும் என்னைக் கொண்டு போய்
யமுனைக் கரையிலே எறியுங்கோள் -என்கிறாள்
தூய பெருநீர் யமுனைத் துறைவனோடு ஜலக்க்ரீடை பண்ணி விளையாட மநோ ரதிக்கிறாள்-

————————————————————————————————

ஆர்க்கும் என் நோய் இது அறியல் ஆகாது அம்மனைமீர் துழிதிப் படாதே
கார்க்கடல் வண்ணன் என்பான் ஒருவன் கைக் கண்ட யோகம் தடவத் தீரும்
நீர்க்கரை நின்ற கடம்பை ஏறிக் காளியன் உச்சியில் நட்டம் பாய்ந்து
போர்க்களமாக நிருத்தம் செய்த பொய்கைக் கரைக்கு என்னை யுய்த்திடுமின்–12-5-

பதவுரை

அம்மனைமீர்–தாய்மார்களே!
என்–என்னுடைய
இது நோய்–இந்த வியாதியானது
ஆர்க்கும்–எப்படிப்பட்ட ஞானிகளுக்கும்
அறியல் ஆகாது–அறிய முடியாத்து, (ஆனால்)
துழதிப்படாதே–(இது அப்படிப்பட்ட நோயா! என்று) நீங்கள் துக்கப்படாமல்,
நீர் கரை நின்ற–காளிங்க மடுவின் கரையிலிருந்த
கடம்பை ஏறி–கடம்ப மரத்தின் மேல் ஏறி (அங்கிருந்து)
காளியன் உச்சியில்–காளிய நாகத்தின் படத்தின் மேலே
நட்டம் பாய்ந்து–ஒரு நர்த்தன வகையாகப் பாய்ந்து
போர் களம் ஆக–அப்பொய்கை தானே யுத்தக் களமாம்படியாக
நிருத்தம் செய்த–நர்த்தனம் செய்யப் பெற்ற
பொய்கை கரைக்கு–மடுவின் கரையிலே
என்னை உய்த்திடுமின்–என்னைக் கொண்டு போய்ப் போடுங்கள்.
கார் கடல் வண்ணன் என்பான் ஒருவன்–நீலக் கடல் போன்ற திரு நிறத்தனான கண்ணபிரான்
தடவ–(தனது திருக் கைகளால் என்னைத்) தடவுவானாகில்
தீரும்–(இந் நோய்) தீர்ந்து விடும்
கை கண்ட யோகம்–(இது தான்) கை மேலே பலிக்கக் கூடிய உபாயம்.

‘நோவு இன்ன தென்றுணர்ந்து அதுக்குத் தகுதியாகவன்றோ பரஹாரம் பண்ண வேணும்,
யமுனைக்கரையிலே கொண்டு போட்டுவிட்டால் என்ன பரிஹாரம் செய்யப்பட்டதாகும்?
இவளோ பித்தம் பிடித்தவள் போலவாய் வந்தபடி சொல்லுகிறாளே,
இவளுடைய உண்மையான நோய் இன்னதென்று நமக்கு விளங்கவில்லையே!‘ என்று
வருத்தப்படத் தொடங்கின தாய் மார்களை நோக்கிக் கூறுகின்றாள் –

அம்மணைமீர்! நீங்கள் என்னுடைய நோயை அறிந்து பரிஹரிக்கவா பார்க்கிறீர்கள்?, என்நோய் உங்களால் அறியக்கூடிய தன்று,
இந்நோயை விளைத்தவனுக்கும் இது இவ்வளவென்று பரிசோதிக்கமுடியாது, ஆதலால் இந்தநோய்க்காக நீங்கள் துக்கப்படவேண்டா,
நான் சொல்லுகிறபடியே பரிஹரிக்கப்பார்ப்பதே உங்களுக்கு நன்றாம், நான் சொல்லு முபாயம் வயபிசரித்துப்போகக்கூடியதன்று,
கைகண்டவுபாயமாய்த்து நான் சொல்லுவது,

அஃது என்னவுபாயமென்றால்,
கடல் வண்ண்ணான கண்ணபிரான் தனது திருக்கையாலே என்னைத் தடவிக்கொடுக்கு மத்தனையே வேண்டுவது,
அவ்வளவிலே எனது நோய் தீர்ந்துவிடுங்காண்மின், ஆகையாலே என்னை இங்கு நின்றுங்கொண்டுபோய்,
அக்கண்ணபிரான் காளியனுச்சியிலே நடனஞ்செய்யப்பெற்ற இடமாகிய பெய்கையின் கரையிலே என்னைச் சேர்த்துவிடுங்களென்றாள்.
காளியனுச்சியிலே கூத்தாடின இளைப்பு ஆறும்படி அவனை முலைத்தடங்களாலே அணைத்து விடாயாற்றவேணுமென்று மநோரதிக்கிறாள்போலும்.

துழதிப்படுதல் – துக்கப்படுதல். “கார்க்கடல்வண்ண னென்பானொருவன் தடவத்தீரும், (இது) கைகண்டயோகம்“ என்று அந்வயம்,
யோகமாவது உபாயம். நட்டம் – ‘நாட்பம்‘ என்றவடசொல் நட்டமெனத்திரிந்தது, ‘ந்ருத்தம்‘ என்றவடசொல்லின் திரிபாகவுமாம்.
ந்ருத்தமென்பது நிருத்தமென்றும் நட்டமென்றும் திரியக்கூடும். பொய்கை – யமுனையாற்றில் ஓர் பகுதி.

நோவு இன்னது என்று உணர்ந்து தகுதியாக பரிஹாரம் பண்ண வேண்டுமே
இவளுடைய உண்மையான நோய் இன்னது என்று விளங்க வில்லையே -என்று வருத்தப் படத் தொடங்கின
தாய்மார்களை நோக்கி
ஆர்க்கும் என் நோய் இது அறியல் ஆகாது அம்மனைமீர் துழிதிப் படாதே
அம்மனைமீர்
என் நோய் உங்களால் அறியக் கூடியது அன்று
இந் நோயை விளைத்தவனுக்கும்
இது இவ்வளவு என்று பரிச்சேதிக்கப் போகாது
ஆனால் இந்த நோய்க்காக நீங்கள் துக்கப் பட வேண்டா –

துழதிப் படுதல்
துக்கப் படுதல்

நான் சொல்லுகிற உபாயம் உங்களுக்கு நன்றாம் -கை கண்ட யுபாயம்
கார்க்கடல் வண்ணன் என்பான் ஒருவன் கைக் கண்ட யோகம் தடவத் தீரும்
கடல் வண்ணனான கண்ணபிரான் தனது திருக்கையால்
என்னைத் தடவிக் கொடுக்கும் இத்தனையே
வேண்டுவது
அவ்வளவிலே எனது நோய் தீர்ந்து விடும் காண் –

நீர்க்கரை நின்ற கடம்பை ஏறிக் காளியன் உச்சியில் நட்டம் பாய்ந்து போர்க்களமாக

நிருத்தம் செய்த பொய்கைக் கரைக்கு என்னை யுய்த்திடுமின் –
ஆகையால் என்னை இங்கு நின்றும் கொண்டு போய்
அக் கண்ணபிரானால் காளியன் உச்சியில் நடனம் செய்யப்
பெற்ற இடமாகிய
பொய்கையின் கரையிலே என்னைச் சேர்த்து விடுங்கோள்-
கூத்தாடின இளைப்பு ஆறும்படி
முலைத் தடங்களால் அணைத்து
விடாய் ஆற்ற வேணும் -என்று மநோ ரதிக்கிறாள்

கார்க்கடல் வண்ணன் என்பான் ஒருவன் தடவத் தீரும்
இது கை கண்ட யோகம் -என்று அந்வயம்
யோகம் -உபாயம்
பொய்கை -யமுனை ஆற்றில் ஒரு பகுதி-

————————————————————————————————

கார்த் தண் முகிலும் கருவிளையும் காயா மலரும் கமலப்பூவும்
ஈர்த்திடுகின்றன வென்னை வந்திட்டு இருடீகேசன் பக்கல் போகே யென்று
வேர்த்துப் பசித்து வயிறு அசைந்து வேண்டடிசில் உண்ணும் போது ஈதென்று
பார்த்திருந்து நெடு நோக்குக் கொள்ளும் பத்த விலோசனத்து உய்த்திடுமின் –12-6-

பதவுரை

கார்–வர்ஷா காலத்தி லுண்டான
தண்–குளிர்ந்த
முகிலும்–மேகமும்
கருவிளையும்–கருவிளைப் பூவும்
காயா மலரும்–காயம் பூவும்
கமலம் பூவும்–தாமரைப் பூவுமாகிற இவைகள்
வந்திட்டு–எதிரே வந்து நின்று
இருடீகேசன் பக்கல் போகு என்று என்னை ஈர்த்திடுகின்றன–“கண்ணபிரான் பக்கலில் நீயும்போ“ என்று
என்னை வலிக்கின்றன. (ஆகையாலே)
பத்தவிலோசனத்து–பக்தவிலோச்நமென்கிற ஸ்தானத்திலே
வேர்த்து–“பசுமேயக்கிற ச்ரமத்தாலே வேர்வை யடைந்து
பசித்து–பசியினால் வருந்தி
வயிறு அசைந்து–வயிறு தளர்ந்து
வேண்டு அடிசில் உண்ணும் போது ஈது என்று–வேண்டிய ப்ரஸாதம் உண்ண வேண்டிய காலம் இது என்று
பார்த்திருந்து–(ரிஷி பத்னிகளின் வரவை) எதிர்பார்த்திருந்து
நெடு நோக்குக் கொள்ளும்–நெடுங்காலம் கடாக்ஷித்துக் கொண்டிருக்குமிடமான
உய்த்திடுமின்–(என்னைக்) கொண்டு சேர்த்து விடுங்கள்.

கறுத்துக் குளிர்ந்த மேகங்களும் கருவிளைப் பூவும் காயாம் பூவும் கண்ணபிரானுடைய திருமேனிக்குப்
போலியாயிருக்கின்றமையாலும் தாமரைப்பூக்கள் அப்பிரானுடைய திவ்யாவயவங்களுக்குப் போலியாயிருக்கின்றமையாலும்
அந்த மேகம் முதலியவற்றைக் காணும்போதே கண்ணபிரானுடைய ஸ்மரணம் அவர்ஜநீயமாகி அப்போதே
அவனைச்சென்று சேரவேணுமென்கிற குதூஹலம்கிளர்கின்றபடியை ஒரு சமத்காரமாகப் பேசுகிறாள் முன்னடிகளில்.

“ஒக்குமம் மானுருவமென்று உள்ளம் குழைத்து நாணாளும், தொக்க மேகப் பல்குழாங்கள்
காணுந்தோறும் தொலைவன் நான்“ என்ற திருவாய்மொழியும்,
“பூவையு“ காயாவும் நீலமும் பூக்கின்ற காவிமலரென்றுங் காண்டோறும் -பாவியேன், மெல்லாவி மெய்ம்மிகவே பூரிக்கும்,
காவிமலர் என்றுங்காண்டோறும் -பாவியேன், மெல்லாவி மெய்ம்மிகவே பூரிக்கும், அவ்வவையெல்லாம் பிரானுருவேயென்று.“
என்ற பெரியதிருவந்தாதியும் இங்கு அநுஸந்திக்கத்தான்.

பக்தவிலோசந மென்கிற புண்யதேஸத்திலே தன்னைக்கொண்டுபோய்விட வேணுமென்கிறாள் பின்னடிகளில்
ஒருநாள் கண்ணபிரானும் பலராமனும் பசுகளுடன் இடையர்களுடன் யமுனையாற்றின் கரையிலே சென்று நெடும்போது
பசுக்களை மேய்த்துக் களைத்து ஆற்றங்கரையில் ஓரிடத்திலே உட்கார்ந்தவளவில், இடைப்பிள்ளைகள் எல்லாரும்
க்ருஷ்ண பலராமர்களை நோக்கி தங்களுடைய பசியின் கொடுமையைக் கூறி
‘இப்போதே நீங்கள் இப்பசியைப் போக்கியருள வேணும்‘ என்று மிக்க ஆர்த்தியுடன் பிரார்த்திக்க,
அவர்களுடைய பரிதாபத்தையறிந்த கண்ணபிரான்‘ ‘ஓ பிள்ளைகளே! ஸமீபத்தில் சிலமஹர்ஷிகள் ஆங்கிரஸ மென்னும் வேள்வியை
அநுஷ்டித்துக்கொண்டிருக்கிறார்கள், நீங்கள் அவர்களிடம் போய் என்பெயரையும் என்தமையனார் பெயரையும் சொல்லி,
இன்னாரால் நாங்கள் அனுப்பப்பட்டிருக்கின்றோமென்று கூறி அன்னம் விரும்புங்கள், பசிதீரும்‘ என்று கட்டளையிட்டனுப்பினான்,

அவர்களும் அங்ஙனமே அவ்விடஞ்சென்று விநயகத்துடன் இவ்வண்ணம் விண்ணப்பஞ்செய்து அடிசில்வேண்ட,
அவ்வந்தணர்கள் இவ்வாயர்களின் பேச்சை செவிகொடுத்துங்கேளாதொழியவே ஆய்ப்பிள்ளைகள் க்ருஷ்ண பலராமர்களிடம்
மீண்டுவந்து செய்தியைச் சொல்ல, அது கேட்ட கண்ணபிரான் புன்முறுவல் செய்து
‘பிள்ளைகாள்! அந்த மஹர்ஷிகளுடைய தர்மபத்னிகள் இருக்கிறார்களே, அவர்களிடஞ்சென்று நானும் பலராமனும்
இங்கே இருப்பதாகச் சொல்லி ப்ரஸாதம்கேளுங்கள், அப்பெண்டிர் தவறாதுதந்திடுவர்கள் என்று சொல்லி
அவர்களை ரிஷிபத்தினிகளிடமனுப்ப, உடனே அவர்கள் அவ்விடஞ்சென்று அந்தரிஷிபத்னிகளை நமஸ்கரித்து,
அம்மனைமீர்! இதோ ஸமீபத்தில் கண்ணபிரானும் நம்பி மூத்தபிரானும் பசுக்களை மேய்த்துக் களைத்திருக்கின்றனர்,
அவர்களோடு அநுசரர்களாக வந்த அஸ்மதாதிகளும் களைத்திருக்கின்றோம்,
எல்லாரும் பசிதீர்ந்து மகிழும்படி ப்ரஸாதம் தரவேணும் எனவேண்ட,

அப்பெண்டிர்கள் ஸ்ரீக்ருஷ்ணநாமஸ்ரவண மாத்ரத்திலே பரமாநந்தடைந்து உடம்புமயிர்க்கூச்செறிந்து உடனே
பக்ஷ்யம், போஜ்யம், லேஹ்யம், சோஷ்யம் -என நான்கு வகைப்பட்ட அன்னவர்கங்களையும் நல்ல நல்ல பாத்திரங்களில்
எடுத்துக்கொண்டு ஸ்ரீக்ருஷ்ண பலராமர்களிருக்குமிடத்தை நோக்கிப் புறப்படுக்கையில் தந்தையார் தாய்மார் மக்கள் உடன்பிறந்தார்
பார்த்தாக்கள் முதலானோர் எவ்வளவுதடுத்தும் அவர்களுடைய தடைக்கு உடன்படாதாராய் நிலைநின்ற
பக்தி நிஷ்டையையுடையவர்களாய் விரைந்து வந்து யமுனையாற்றங்கரைச்சோலையிலே
நம்பி மூத்தபிரானையும் கண்ணபிரானையும்ஸேவித்து, கொணர்ந்த அந்நவர்க்கங்களை ஸமர்ப்பித்துவிட்டுப்
பரமாநந்த பூரிதர்களாய் மீண்டுசென்றனர்.
அவ்வடிசிலைக் கண்ணபிரான் அவ்வாயர் பிள்ளைகளுக்குத் தந்து தானும் அமுதுசெய்தான் – என்ற வரலாறு
ஸ்ரீபாகவதத்தில் தஸமஸ்கந்தத்தில் இருபத்து மூன்றாமத்யாயத்தில் விரிவாகக் காணத்தக்கது.

ரிஷபத்தின் இவ்வண்ணமாக அடிசில் கொணந்துகொடுத்தது ஒருநாளேயல்ல, நாடோறும் கண்ணபிரான்
யமுனையாற்றங்கரைச் சோலைகளிலே வந்து ஆநிரைமேய்த்துக் களைத்துப்போகிறளென்றுணர்ந்த
அப்பெண்டிர் நெடுநாள்வரையில் நாடோறும் பகலில் உச்சிவேளையில் கொணர்ந்து கொடுத்துக்கொண்டிருந்தார்களென்றும்,
ஒவ்வொருநாளும் அவர்கள் அடிசில் கொணரும் மையத்துக் குச்சரியாகக் கண்ணபிரானும் களைப்புடன் அவ்வடிசிலை எதிர்பார்த்து
அத்திக்கையை நோக்கியிருப்பனென்றும் இப்பாட்டின் ப்ரஸங்கத்திலே அழகிய மணவாளச்சீயர் உபந்யஸித்தருளும்படி.

“வேண்ட்டிசிலுண்ணும்போது ஈதென்று பார்த்திருப்பது நெடுநோக்குக் கொள்ளும் பத்தவிலோசனம்“ –
‘நமக்கு ரிஷிபத்நிகள் ப்ரஸாதம் கொண்டு கொடுக்கும்வேளை அணுகிற்று‘ என்று அத்திசையை நோக்கி
நெடிதாகக் சூர்ணிகையின் வியாக்கியானம் காண்க.

பத்தவிலோசனம் – “***“ பக்தமென்ற வடசொல்லுக்கு அன்னமென்றுபொருள்,
விலோசனமென்பதற்குப் பார்வையென்று பொருள், சோறு பார்த்திருக்குமிடமென்றதாயிற்று.

கார்த் தண் முகிலும் கருவிளையும் காயா மலரும் கமலப்பூவும்
கார் காலத்திலே குளிர்ந்த முகிலும்
கருவிளைப்பூவும்
காயா மலரும் –
மேகத்தை திருஷ்டாந்தமாகச் சொல்லப் புக்கவள் -ஒன்றும் போராமையாலே பலவற்றிலேயும் கதிர் பொறுக்குகிறாள் –
அவயவ சோபைக்கு-கமலப் பூவையும் சொல்கிறாள் –

ஈர்த்திடுகின்றன வென்னை வந்திட்டு –
பற்றி இழா நின்றன –
ஏன் சொல்லி என்னில் –

இருடீகேசன் பக்கல் போகே யென்று
லஷ்மணே ந கதாம் கதிம் -என்கிறபடியே –
கரணங்கள் உடையவன் பக்கலிலே போனால் அவற்றின் பின்னே போகை இ றே உள்ளது
யச்யாத்மா சரீரம் -அன்றோ -கரணாதி பாதிப -எண்ணக் கடவது இ றே
பரம சேஷியைக் கண்டால் பின்னை த்வார சேஷிகள்-
ஹ்ருஷீகம் -இந்த்ரியங்கள் -அவற்றுக்குத் தலைவன் ஹ்ருஷீ கேசன் என்றபடி அளவில் நில்லாது இ றே அவை –

வேர்த்துப் பசித்து வயிறு அசைந்து வேண்டடிசில் உண்ணும் போது ஈதென்று பார்த்திருந்து-
நானே சென்று முறை கெடப் பற்றினேன் ஆகாமே பாருங்கோள்
என் செல்லாமை பரிஹரிக்கைக்கா அன்றிக்கே அவன் செல்லாமை பரிஹரிக்க போனேனாம் படி பண்ணப் பாருங்கோள் –
வேர்த்து –
பசுக்களைக் கொண்டு போனால் காதம் இரு காதம் அவ்வருகே கை கழிய விட்டு
அங்கே ரிஷிகளுடைய ஆஸ்ரமங்க ளிலே சேமம் -தளிகை -வேண்டிவிட்டு -அவர்கள் க்ரியா பிரதானராய் இருந்த வாறே
பத்நீ சாலைகளிலே வேண்டிப் போக விடும்
அவர்கள் சேமம் கொடுத்து விட்டால் அதின் வடிவு பார்த்து திருமேனி எங்கும் வேர்த்துப் பசித்து தடுமாறி -இதனால் வேண்டி அடிசில் ஆய்த்து
விரும்பி இட்ட சோறு –
பிரயோஜ நாந்தரர் இடும் அவற்றை குழியிலே கால் கழுவினாரோ பாதி யாகவாய்த்து கொள்வது –
பித்ருக்கள் நிமித்தமாக வரிக்கப் பட்டது போலே இல்லாமல் -தானும் விதி ப்ரேரிதனாகக் கொள்ளும் என்றபடி
பெரியாழ்வார் பெண் பிள்ளை இடுமது போலே -இன்று வந்து இத்தனையும் அமுது செய்திடப் பெறில்-நான் ஓன்று நூறாயிரமாகக்
கொடுத்து பின்னும் ஆளும் செய்வன் -9-7–என்னுமா போலே
பெரியாழ்வார் மகளாய் இழந்து இராதே ஒரு பட்டை சோற்றை கொண்டு போயாகிலும் கிட்டுவோம் -என்கிறாள்-

நெடு நோக்குக் கொள்ளும் பத்த விலோசனத்து உய்த்திடுமின் –
பத்தாம் -சமைத்த சோறு –விலோசனம் -பார்வை
சோறு பார்த்து இருந்த இடமாய்த்து
சோறு பார்த்து இருக்கும் இடத்திலே -என்றபடி –

—————————————————————————-

வண்ணம் திரிவும் மனம் குழைவும் மானமிலாமையும் வாய் வெளுப்பும்
உண்ணல உறாமையும் உள் மெலிவும் ஓத வண்ணன் என்பான் ஒருவன்
தண்ணம் துழாய் எனும் மாலை கொண்டு சூட்டத் தணியும் பிலம்பன் தன்னை
பண்ணழியப் பலதேவன் வென்ற பாண்டி வடத்து என்னை யுய்த்திடுமின்–12-7-

பதவுரை

வண்ணம் திரிவும்–(என்னுடைய) மேனி நிறத்தின் மாறுபாடும்
மனம் குழைவும்–மனத் தளர்ச்சியும்
உண்ணல் உறாமையும்–ஆஹாரம் வேண்டியிராமையுமும்
உள் மெலிவும்–அறிவு சுருங்கிப் போனதுமாகிய இவை யெல்லாம் (எப்போது தணியுமென்றால்)
ஓதம் நீர் வண்ணன் என்பான் ஒருவன்–கடல் வண்ண னென்று ப்ரஸித்தனாய் விலக்ஷணனான கண்ண பிரானுடைய
தண் அம்துழாய் என்னும் மாலை கொண்டு சூட்ட–குளிர்ந்து அழகிய திருத்துழாய் மாலையைக் கொண்டு வந்து சூட்டுமளவில்
தணியும்–நீங்கும்,
(அத்திருத்துழாய் மாலை உங்களால் இங்கே கொண்டு வந்து கொடுக்க முடியாதாகில்)
மானம் இலாமையும்–மானம் கெட்டுப் போனபடியும்
வாய் வெளுப்பும்–வாய் வெளுத்துப் போனபடியும்
பலதேவன்–பலராமன்
பிலம்பன் தன்னை–ப்ரலம்பாஸுரனை
பண் அழிய–ஸந்தி பந்தங்கள் உருக் குலையும்படி,
வென்ற–கொன்று முடித்த இடமாகிய பாண்டி வடத்து
பாண்டீரமென்னும் –ஆலமரத்தினருகில்
என்னை உய்த்துடுமின்–என்னைக் கொண்டு போய்ச் சேர்த்திடுங்கள்.

புதிதாகவந்த சிலபெண்பிள்ளைகள் ஆண்டாளுடைய அதிமாத்ரமான வைவர்ணியம் முதலியவற்றை உற்று நோக்கி
‘அம்மா! உனக்கு இந்தவிகாரங்களெல்லாம் என்றைக்குத்தீரும்? என்னசெய்தால் தீரும்? பலவகைப்பட்ட விகாரங்களை அடைந்திட்டாமே,
என்ன செய்தாலும் இந்தவிகாரங்கள் தீரமாட்டாதவை போலிருக்கின்றனவே!,
உனக்கேற்ப ஏதாகிலுமுபாயம் தெரிந்தால் சொல்லிகாண்‘ என்ன,

‘கண்ணபிரானுடைய திருத்துழாய்மாலையைக் கொண்டுவந்து சூட்டினால் இவ்விகாரங்களெல்லாம் தணிந்துவிடும் என்று இவள் சொல்ல,
அவனுடைய திருத்துழாய்மாலை எங்கள் கையில் எளிதாகக் கிடைக்குமோ? அதனை நாங்கள் எங்ஙனே கொண்டு வரக்கடவோம்? என்று
அப்பெண்கள் திகைத்து நிற்க, அஃது அரிதாகில் என்னை அப்பெருமானது திருவடிவாரத்திலேகொண்டு போய்ச் சேர்த்துவிடுங்கள்‘ என்கிறாள்.

பலராமனாற்செய்யப்பட்ட ப்ரலம்பாஸுரவத்தைக் கண்ணபிரான்றானே செய்தருளியதாகக் கூறுதலுமுண்டு,
தேனுகன் பிலம்பன் காளியனென்றும் “கருளுடைய பொழில்மருதுங் கதக்களிறும் பிலம்பனையுங் கடியமாவும்“ என்ற
பெரியாழ்வார் திருமொழிகாண்க.
உண்மையில் பலராமன் செய்த இச்செய்தியைக் கண்ணபிரான் செய்ததாகக் கூறுதல் ஒற்றுமை நயம் பற்றியாம்.
ஸ்ரீராமாவதாரத்தில் இளையபெருமாள் செய்த சூர்ப்பணகா பங்கத்தை ஸ்ரீராமபிரான்தானே செய்ததாக
ஆழ்வார்கள் அநுஸந்திப்பதும் இங்ஙனமேயாம்.
“சூர்ப்பணகாவைச் செவியொடுமூக்கு அவளார்க்க வரிந்தானைப்பாடிப்பற அயோத்திக்கரசனைப்பாடிப்பற“ இத்யாதிகள் காண்க.

“இளைய பெருமாள் இந்த்ரஜித் வதம் பண்ண, அந்தவெற்றி பெருமாளுடைய தானாப்போலேயாய்த்து இங்கும்,
நம்பிமூத்தபிரானுடைய வெற்றியும் க்ருஷ்ணனதாயிருந்ததிறே. அவன் வீராபிஷேகமும் விஜயாபிஷேகமும் பண்ணி
மாலையிடும் போது அவன் தனியேநில்லாமே நானும் ஒக்கநின்று மாலையிடும்படியாக
என்னை அங்கே கொடுபோய்ப் பொகடுங்கோள்“ என்றவியாக்கியான ஸ்ரீஸூக்திநோக்கத்தக்கது.

ப்ரலம்ப என்ற வடசொல் பிலம்பன் எனத்திரிந்தது, பாண்டீரவடிமென்ற வடசொல் பாண்டிவடமெனத்திரிந்தது.
யமுனையாற்றின் ஸமீபத்தில் பெரிய ஆலமரமொன்று உள்ளவிடத்திற்குப் பாண்டிவடமென்று பெயர் ப்ரலம்பவதம் நடந்த இடமிது.

வண்ணம் திரிவும்
மேனி நிறத்தின் வேறுபாடும்

மனம் குழைவும் –
மனத் தளர்ச்சியும் –

மானமிலாமையும் –
மானம் கேட்டுப் போனபடியும் –

வாய் வெளுப்பும் –
வாய் வெளுத்த படியும் –

உண்ணல உறாமையும்-
ஆகாரம் வேண்டி இராமல் இருக்கும் படியும்

உள் மெலிவும் –
அறிவு சுருங்கிப் போனமையும் –

இவை எல்லாம் எப்போது தணியும் என்றால் –

ஓத வண்ணன் என்பான் ஒருவன் தண்ணம் துழாய் எனும் மாலை கொண்டு சூட்டத் தணியும் –
குளிர்ந்து அழகிய
கண்ணபிரான் உடைய திருத் துழாய் மாலையை
கொண்டு வந்து சூட்டும் அளவில்
இந்த விகாரங்கள் தணிந்து விடும் –
என்று அண்டல் அருள –

அது அரிதாகில்
பிலம்பன் தன்னை பண்ணழியப் பலதேவன் வென்ற பாண்டி வடத்து என்னை யுய்த்திடுமின் –
பிலம்பாசுரன்
சந்தி பந்தங்கள் உருக் குலையும்படி
பலராமன் கொன்று முடித்த இடமாகிய
பாண்டீரம் என்ற ஆலமரத்தின் அருகிலே என்னைக் கொண்டு போய் சேர்த்து விடுங்கோள் –

தேனுகன் பிலம்பன் காளியன் என்னும் –
கருளுடைய பொழில் மருதும் கதக் களிறும் பிலம்பனையும் கடியவுமாம் -பெரியாழ்வார் திருமொழி
ஒற்றுமை நயம் பற்றி கண்ணபிரான் செய்ததாக அருளி –
சூர்பணாகாவை செவியோடு மூக்கு அவளார்க்க அரிந்தானைப் பாடிப் பற
அயோத்திக்கு அரசனைப் பாடிப் பற -போலே –

இளைய பெருமாள் இந்த்ரஜித் வதம் பண்ண
அந்த வெற்றி பெருமாள் யுடையதானால் போலே யாய்த்து இங்கும்
நம்பி மூத்த பிரான் உடைய வெற்றியும் கிருஷ்ணன் உடையதாய்த்து
அவன் வீராபிஷேகமும்
விஜயாபிஷேகமும்
பண்ணி மாலையிடும் போது
அவன் தனியே நில்லாமல்
நாணும் ஒக்க நின்று மாலையிடும்படியாக
என்னை அங்கே கொடு போய் பொகடுங்கோள் –

ப்ரலம்பன்-என்ற வடசொல் பிலம்பன் -ஆயிற்று
பாண்டீரவடம் வடசொல் பாண்டிவடம் திரிந்து
யமுனை ஆற்றின் சமீபத்தில் உள்ள பெரிய ஆலமரம் பாண்டீர வடம்
ப்ரலம்ப வதம் நடந்த ஸ்தானம்-

————————————————————————————————-

கற்றினம் மேய்க்கலும் மேக்கப் பெற்றான் காடு வாழ் சாதியுமாகப் பெற்றான்
பற்றி உரலிடை ஆப்புமுண்டான் பாவிகாள் உங்களுக்கு ஏச்சுக் கோலோ
கற்றன பேசி வசவு உணாதே காலிகளுய்ய மழை தடுத்த
கொற்றக் குடையாக வேந்தி நின்ற கோவர்த்தனத்து என்னை யுய்த்திடுமின்–12-8-

பதவுரை

கன்று இனம்–கன்றுகளின் திரள்கைள
மேய்க்கலும் மேய்க்கப் பெற்றான்–மேய்ப்பதையே தொழிலாகப் பெற்றவனுமானான்.
காடு வாழ் சாதியும் ஆக பெற்றான்–(வீட்டை விட்டுக் கழிந்து) காட்டிலேயே தங்கி வாழும்படியான சாதிபிலும் பிறக்கப் பெற்றான்
பற்றி–வெண்ணெய் களவில் பிடிபட்டு
உரலிடை–உரலிலே
ஆப்பும் உண்டான்–கட்டுப்படவும் பெற்றான் (ஸௌலப்ய காஷ்டையான இச் செயல்கள்)
பாலிகாள்–குணத்தையும் குற்றமாகக் கொள்ளும் பாவிகளே!
உங்களுக்கு–உங்களுக்கு
ஏச்சுக் கொலோ–தூஷணத்துக்கோ உடலாயிற்று? (இதுவரையில் நீங்கள் இழிவாகச் சொன்னவை நிற்க இனியாகிலும்)
கற்றன பேசி வசவு உணாதே–நீங்கள் கற்ற கல்விகளைப் பேசி (என்னிடத்தில்) வசவு கேட்டுக் கொள்ளாமல்,
காலிகள் உய்ய மழை தடுத்து–பசுக்கள் பிழைக்கும்படி பெரு மழையைத் தடை செய்து
கொற்றம் குடை ஆக–வெற்றிக் குடையாக
ஏந்தி நின்ற–(கண்ண பிரனால்) தரிக்கப்பட்ட
கோவர்தனத்து–கோவர்த்தன மலையினருகே
என்னை உய்த்திடுமின்–என்னைக் கொண்டு போய்ச் சேர்த்து விடுங்கள்

மற்றுஞ்சிலபெண்கள் ஆண்டாளை நோக்கி, ‘அம்மா! நீ இராமபிரானை ஆசைப்பட்டாலுங் குற்றமில்லை,
மாடுமேய்க்கப் பிறந்த கண்ணனைப்போய் நீ ஆசைப்படாநின்றாய், அவனோ கன்றுகளை மேய்ப்பதற்காக
அவற்றின் பின்னே திரிவானொருசிறுவன், ஒரூரிலே தங்குவதுமில்லாமல் பசுக்களுக்கு நீரும்புல்லுமுள்ளவிடத்தே தங்குவானொருத்தன்,
வெண்ணையைக்களவாடுவதும் நெய்யைக் களவாடுவதுஞ்செய்து உரலிலே பிணிப்புண்டு திண்டாடுமவன்,
அன்னவனைப் பெறுகைக்கோ நீ இப்படிக்கிடந்து துடிக்கிறது? என்று ஏளனமாகச்சொல்ல,

அவர்களைநோக்கிச் சொல்லுகிறாள் அவன் கன்றுகளை மேய்க்கப் பெற்றதும் காடுவாழ்சாதியாகப் பெற்றதும்
உரலிடை ஆப்புண்டதும் குணமாகத்தோற்றவேண்டியிருக்க, உங்களுக்கு இவையெல்லாம் குற்றமாகத் தோற்றுவதற்குக்
காரணம் உங்களுடைய பாவமேயாம், சிறந்தகுணமே உங்களுக்குக் குற்றமாகத் தோற்ற நீங்கள்
சிசுபாலன் பிறந்த முஹூர்த்தத்திலேயோ பிறந்தது? “எத்திற முரலினோடு இணைந்திருந்தேங்கிய எளிவே!“ என்று
ஈடுபடவேண்டிய விஷயம் உங்களுக்கு தூஷணார்ஹமாயிற்றே! இனி நீங்கள் இப்படிப்பட்ட அஸந்தர்ப்பமான
நீசவார்த்தைகளை என் காதில் விழச் சொல்லுவீர்களாகில், நான் வாயில் வந்தபடி உங்களை நிந்தித்துவிடுவேன்.
அப்படி நிந்தனைகளுக்கு நீங்கள் ஆளாகாமல், அன்றொருகால் இந்திரன் ஏழுநாள் விடாமழை பெய்வித்தபோது
அந்த மழையைத்தடுத்து அனைவரையுங்காத்த கோவர்த்தன மலையினருகே என்னைக்கொண்டு போட்டுவிடுங்களென்கிறான்.

மற்றும் சில பெண்கள் ஆண்டாளை நோக்கி
நீ இராமபிரானை ஆசைப் பட்டாலும் குற்றம் இல்லை –
மாடு மேய்க்கப் போன கண்ணனை அன்றோ ஆசைப்பட்டாய்
கன்றின் பின்னே திரியும் சிறுவன்
பசுக்களுக்கு நீரும் புல்லும் இடுவான்
வெண்ணெய் நெய் களவாடி உரலோடு கட்டுப்பட்டு
இப்படிகளிலே ஏளனமாக பேச –
கற்றினம்சில மேய்க்கலும் மேக்கப் பெற்றான் காடு வாழ் சாதியுமாகப் பெற்றான் –
அவன் கன்றுகளை மேய்க்கப் பெற்றதும்
காடு வாழ் சாதி யாகப் பெற்றதும்

பற்றி உரலிடை ஆப்புமுண்டான் பாவிகாள் உங்களுக்கு ஏச்சுக் கோலோ
உரலிடை ஆப்புண்டதும்
குணமாக தோற்ற வேண்டி இருக்க
உங்களுக்கு இவை எல்லாம் குற்றமாகத் தோற்றக் காரணம்
உங்களுடைய பாவமே யாம் –
நீங்களும் சிசுபாலன் பிறந்த முஹூர்த்தத்திலே யோ பிறந்தது
எத்திறம் உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே -என்று ஈடுபட வேண்டிய விஷயம்
உங்களுக்கு தூஷண அர்ஹமாயிற்றே

கற்றன பேசி வசவு உணாதே காலிகளுய்ய மழை தடுத்த
கொற்றக் குடையாக வேந்தி நின்ற கோவர்த்தனத்து என்னை யுய்த்திடுமின்
இனி நீங்கள் இப்படிபட்ட அசந்தர்ப்பமான நீச வார்த்தைகளை
என் காதில் விழச் சொல்லுவீர்கள் ஆகில்
நான் வாயில் வந்தபடி உங்களை நிந்தித்து விடுவேன்
அதற்க்கு ஆளாகாமல்
அன்று இந்த்ரன் ஏழு நாள் விடா மழை பெய்வித்த போது
அந்த மழையைத் தடுத்து
அனைவரையும் காத்து அருளிய
கோவர்த்தன மலையின் அருகே என்னைக் கொண்டு போய்
போட்டு விடுங்கோள்

————————————————————————————————

கூட்டில் இருந்து கிளி எப்போதும் கோவிந்தா கோவிந்தா என்று அழைக்கும்
ஊட்டுக் கொடாது செறுப்பனாகில் உலகளந்தான் என்று உயரக் கூவும்
நாட்டில் தலைப் பழி எய்தி உங்கள் நமனை இழந்து தலையிடாதே
சூட்டுயர் மாடங்கள் தோன்றும் துவாராபதிக்கு என்னை யுய்த்திடுமின்–12-9-

பதவுரை

கிளி–(நான் வளர்த்த) கிளியானது
கூட்டில் இருந்து–கூட்டில் இருந்து கொண்டு
எப்போதும்–ஸதா காலமும்
கோவிந்தா கோவிந்தா என்று அழைக்கும்–கோவிந்தா கோவிந்தா வென்று கூவா நின்றது,
ஊட்டு கொடாது–உணவு கெடாமல் (பட்டினி கிடக்கும்படி)
செறுப்பன் ஆகில்–துன்பப் படுத்தினேனாகில்
உலகு அளந்தான் என்று–உலகளந்த பெருமானே! என்று
உயர கூவும்–உரக்கக் கூவா நின்றது!
(இந்தத் திருநாமங்கள் என் காதில் விழும் போதே என் சரீரம் புறப்படக் கிளம்புகின்றது ஆகையால்)
நாட்டில்–இவ் வுலகில்
தலை பழி எய்தி–பெருத்த அபவாதத்தை ஸம்பாதித்து
உங்கள் நன்மை இழந்து–உங்களுடைய நல்ல பேரைக் கெடுத்துக் கொண்டு
தலை இடாதே–(பிறகு ஒருவரையுமு முகம் நோக்க மாட்டாமல்) தலை கவிழ்ந்து நிற்க வேண்டாதபடி,
சூடு உயர் மாடங்கள் சூழ்ந்து தோன்றும்–தலை யுயர்ந்த மாடங்களால் சூழப்பட்டு விளங்குகின்ற
துவராபதிக்கு என்னை உய்த்திடுமின்–என்னைக் கொண்டு போய்ச் சேர்த்து விடுங்கள்

இவள் விரஹத்தாலே நோவுபட்டிருக்கிற இச்சமயத்தில் இவன் வளர்க்குங் கிளிப்பிள்ளையொன்று இவள் முன்பு
கற்பித்துவைத்த திருநாமத்தைச் சொல்லிகொண்டு இங்குமங்கும் திரியத்தொடங்கிற்று,
‘இதை நாம்யதேச்சமாய்த் திரியும்படியாக விடவேயன்றோ இது கண்ணன் நாம்மேகுழறிக் கொல்லுகின்றது,
இதைப்பிடித்து அடைத்திடுவோம்‘ என்று பார்த்துக்கூட்டிலே யடைத்தாள், அது அங்கேயிருந்து “கோவிந்தா! கோவிந்தா!“ என்று
கூவத்தொடங்கிற்று, அதைக்கேட்ட ஆண்டாள் ‘இது சோற்றுச்செருக்காலேயன்றோ இப்படி சொல்லுகிறது,
சோற்றைக் குறைத்தோமாகில் தன்னடையே தவிருகிறது‘ என்று நினைத்துப் பட்டினியாகவிட்டுவைத்தாள்,
‘ஊணடங்க வீணடங்கும்‘ என்று இவளுடைய நினைவுபோலும். ஆனால் அந்தப்பட்டினியானது. இவளுக்கு விபரீதபலப்ரதமாயிற்று,
அரையர்கள் மிடற்றுக்கு எண்ணெயிட்டுப் பட்டினி கிடந்து மிடற்றில் கனத்தை ஆற்றிப்பாடுவதுபோல
இக்கிளியும் பட்டினிவிட்டதே காரணமாக உயரப்பாடத்தொடங்கிற்று, உலகளந்தான்!“ என்று அதுகூவும் போதை த்வநியைக்கேட்டால்
அவன் அன்றிவ்வுலகமளக்கத் திருவடிகளைப் பரப்பினவிடமெங்கும் இதுவும் தன்மிடேற்றோசையைப் பரவவிடா நின்றதுபோலும்,
அந்தக்கூவுதலைக் கேட்டவாறே நாமே பதறிஓடியாகிலும் அவனைச்சென்று கிட்டுவோமென்கிறகாதல் கிளர்கின்றது.
அப்படி நான் பதறி ஓடுவது நமது குடிக்குப் பெருத்தபழியாய் முடியும், தடிதடியாகத் தாய்மார்களிருந்தும்
ஒரு பெண்பிள்ளைக்கு நன்மைசெய்யாமல் தெருவிலேபுறப்படப் பார்த்திருந்தார்களே!‘ என்று நாளைக்கே நாடெங்கும் பழிபரவும்,
அப்போது நீங்கள் தலைகவிழ்ந்து தலையைக்கீறி நிற்கத்தான் நேரிடும், அப்படிப்பட்ட பரிபவத்துக்கு நீங்கள் ஆளாகாமல்
இப்போதே என்னை நீங்களாகவே த்வாரகையிலே கொண்டுசேர்த்து விடுங்களென்கிறாள்.

“உலகளந்தானென்றுயரக்கூவும்“ என்றவிடத்து வியாக்கியான ஸ்ரீஸூக்தி –
“க்ருஷ்ணாவதாரத்தைவிட்டு அவ்வருகே போந்ததாகில் அத்தோடு போலியான ஸ்ரீவாமநாவதாரத்தைச் சொல்லியாய்த்து நலிவது.“

கிளியானது கோவிந்தா கோவிந்தாவென்றும் உலகளந்தானென்றும் கூவினால் அந்தநாமஸ்ரவணமே தாரமாக இருக்கலாகாதா?
அது திருநாமத்தைச் சொல்லக்கூடாடிதன்று இவள் தடைசெய்வதற்குக் காரணமென்? எனில்
“உயிர்க்கதுகாலனென்றும்மை யானிரந்தேற்கு, நீர் குயிற்பைதல்காள்! கண்ணன் நாமமே குழறிக்கொன்றீர்,
தயிர்பழஞ்சோற்றொடு பாலடிசிலுந்தந்து சொல் பயிற்றியநல்வளமூட்டினீர் பண்புடையீரே“ என்ற திருவாய்மொழியை நோக்குக.
ஸம்ஸ்லேஷகாலத்தில் போகமாயிருப்பவை விஸ்லேஷகாலத்தில் வெறுக்கக் கூடியனையாமென்க. –
ஸ்ரீவசநபூசணத்தில் -“இந்த ஸ்வபாவ விசேஷங்கள் கல்யாணகுணங்களிலும் திருச்சரங்களிலும்
திருநாமங்களிலும் திருக்குழலோசையிலுங் காணலாம்,“ (க-கந.) என்ற ஸூத்ரத்தின் வியாக்கியானத்தையும் ஸேவிக்க.

துவராபதியின் வரலாறு – ‘காலயவநன்‘ என்பானொருவன் செருக்கித்திரிந்து கொண்டிருக்கையில் ஒருகால் நாரதரைப்பார்த்து
‘இவ்வுலகில் யாராவது சூரர்களுண்டா? என்றுகேட்க, அதற்கு நாரதர் ‘மதுரையில் யாதவர்களிருக்கிறார்கள்,
அவர்கள் மிக்க பராக்ரமசாலிகள்‘ என்றார், அக்காலயவநன் அதைக்கேட்டவுடனே அங்கிருந்து புறப்பட்டு மதுரைக்குவந்து
யாதவர்களுடன் போர்செய்யத்தொடங்கினான், அப்பொழுது கண்ணபிரான் இதையறிந்து மேற்கடலுக்குச்சென்று
அங்கு ஸமுத்ர ராஜனையாசித்துப் பன்னிரண்டு யோஜனைவிஸ்தீர்ணமுள்ள இடத்தை வாங்கி
அங்கு த்வாரகை என்றொரு பட்டணம் அமைத்து மதுரையிலுள்ள யாதவர்களை அங்கு அழைத்துக்கொண்டு
போய்ச்சேர்ந்து அச்சங்கெடுத்தான் (பிறகு தான் மதுரைக்குவந்து காலயவநனையும் முடித்தான்)

விரஹத்தாலே நோவு பட்டு இருக்கிற இச் சமயத்தில்
இவள் வளர்க்கும் கிளிப் பிள்ளை ஓன்று
இவள் முன்பு கற்பித்து வைத்த திரு நாமத்தைச் சொல்லிக் கொண்டு
இங்கும் அங்கும் திரிய
இதை நாம் யதேச்யமாய் திரியும்படியாக விடவே அன்றோ
இது கண்ணன் நாமமே குழறிக் கொல்லுகின்றது
இதைப் பிடித்து அடைத்து விடுவோம் -என்று
கூட்டிலே அடைத்தாள் –
கூட்டில் இருந்து கிளி எப்போதும் கோவிந்தா கோவிந்தா என்று அழைக்கும் –
அது அங்கேயே இருந்து கோவிந்தா கோவிந்தா என்று கூவத் தொடங்கிற்று –

ஊட்டுக் கொடாது செறுப்பனாகில் உலகளந்தான் என்று உயரக் கூவும் –
அதைக் கேட்ட ஆண்டாள்
இது சோற்றுச் செருக்காலே அன்றோ இப்படி சொல்கிறது
சோற்றைக் குறைத்தோம் ஆகில் தன்னடையே தவிரும் என்று நினைத்து பட்டினியாக விட்டாள்-
ஊண் அடங்க வீண் அடங்கும் -என்ற நினைவு போலும்
அந்த பட்டினி விபரீத பலமாயிற்று
அரையர்கள் மிடற்றுக்கு எண்ணெய் இட்டு பட்டினி கிடந்து
மிடற்றில் கனத்தை ஆற்றிப் பாடுவாரைப் போலே
இக்கிளியும் பட்டினி கிடந்ததே காரணமாக உயரப் பாடத் தொடங்கிற்று
உலகளந்தான் -என்று அது கூவும் த்வநியைக் கேட்டால்
அவன் திருவடி பரம்பிய இடம் எங்கும் இதன் மிடற்று ஓசை பரவும் படி உயரப் பாட
அந்த கூவுதளைக் கேட்டவாறே
அவன் வரா விட்டாலும் நாமே பதறி அவனை அடைய காதல் கிளர்கின்றது –
உலகளந்தான் என்று உயரக் கூவும்
கிருஷ்ணாவதாரத்தை விட்டு
அவ்வருகே போந்ததாகில்
அத்தோடு போலியான
ஸ்ரீ வாமனாவதாரத்தைச் சொல்லி யாய்த்து நலிவது –

நாட்டில் தலைப் பழி எய்தி உங்கள் நமனை இழந்து தலையிடாதே
அப்படி ஓடுவது நாட்டில் பழியாய் முடியும்
நீங்கள் தலை கவிழ்ந்து தரையைக் கீறி நிற்கத் தான் நேரிடும்
அந்த பரிபவத்துக்கு ஆளாகாமல் என்னை நீங்களே த்வாரகையிலே கொண்டு சேர்த்து விடுங்கோள்-
சூட்டுயர் மாடங்கள் தோன்றும் துவாராபதிக்கு என்னை யுய்த்திடுமின்-

கிளியானது கோவிந்தா கோவிந்தா என்றும் உலகளந்தான் என்றும் கூவினால்
அந்த திரு நாம சங்கீர்த்தனமே தாரகமாக இருக்கலாகாதோ
அதை தடை செய்யக் காரணம் என் –
உயிர்க்கு அது காலன் என்று உம்மை யாம் இரந்தேற்கு நீர் குயில் பைதல்காள்
கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர் தயிர்ப் பழம் சோற்றோடு
பால் அடிசிலும் தந்து சொல் பயிற்றிய நல வளமூட்ட்னீர்
பண்புடையீரே -திருவாய் மொழி
சம்ச்லேஷ காலத்தில் போகமாய் இருப்பவை விஸ்லேஷ காலத்தில் வெறுக்கத் தக்கவை ஆகுமே
ஸ்ரீ வசன பூஷணம் -1-13- ஸ்ரீ ஸூ கதிகள்
இந்த ஸ்வபாவ விசேஷங்கள்
கல்யாண குணங்களிலும்
திரு நாமங்களிலும்
திருக் குழல் ஓசையிலும்
காணலாம் –

–12 யோஜனை விஸ்தீரணம் த்வாரகை நிர்மாணம் –
பின்பு வடமதுரை வந்து காலயவணனை முடித்தான் –

—————————————————————————–

நிகமத்தில் இத் திருமொழி கற்றாருக்கு பலன் சொல்லித் தலை கட்டுகிறாள் –

மன்னு மதுரை தொடக்கமாக வண் துவாராபதி தன்னளவும்
தன்னைத் தமருய்த்துப் பெய்ய வேண்டித் தாழ் குழலாள் துணிந்த துணிவை
பொன்னியல் மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர் கோன் விட்டுச்சிதன் கோதை
இன்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை ஏத்த வல்லார்க்கு இடம் வைகுந்தமே –12-10-

பதவுரை

தாழ் குழலாள்–தாழ்ந்த கூந்தலை யுடையளாய்
பொன் இயல்மாடம் பொலிந்துதோன்றும் புதுவையாகோன் விட்டு சித்தன் கோதை–பொன் மயமான மாடங்களினால்
விளங்கித் தோன்றுகின்ற ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ளார்க்குத் தலைவராகிய பெரியாழ்வாருடைய (திருமகளான) ஆண்டாள்.
மன்னு மதுரை தொடக்கம் ஆக வண் துவராபதி தன் அளவும் தன்னை–ஸ்ரீமதுரை முதற்கொண்டு ஸ்ரீத்வாரகை வரைக்கும்
(சொல்லப்பட்ட சில திவ்யதேசங்களில்) தன்னை (ஆண்டாளை)
தமர்–தன் உறவினர்
உய்த்து பெய்ய வேண்டி–கொண்டு போய்ச் சேர்க்க வேண்டி
துணிந்த துணிவை–கொண்ட அத்யவஸாயம் விஷயமாக,
இன் இசையால் சொன்ன–இனிய இசையுடன் அருளிச் செய்த
செம் சொல் மாலை–அழகிய சொல்மாலை யாகிய இத்திருமொழியை
ஏத்த வல்லார்க்கு–ஓத வல்லவர்களுக்கு
இடம்–வாழுமிடம்
வைகுந்தம்–பரமபதமேயாம்

இத்திருமொழிகற்றார்க்குப் பலன்கூறித் தலைக்கட்டுகிறாள். வடமதுரை தொடங்கி த்வாரகாபுரியளவாகப்
பத்தெட்டுஸ்தாநங்களைச் சொல்லி அவ்விடங்களிலே தன்னைக்கொண்டுபோய்ச் சேர்க்கவேணுமென்பதாகத்
தனது பந்து வர்க்கத்திலுள்ளாரை நோக்கி ஆண்டாளருளிச் செய்த இத்திருமொழியை ஓதவல்லவர்கள்
ஸ்ரீவைகுண்டத்திலேபோய் நித்யாநுபவம் பண்ணப்பெறுபவர்கள் என்ற தாயிற்று.

மன்னு மதுரை தொடக்கமாக வண் துவாராபதி தன்னளவும்
வடமதுரை தொடங்கி
த்வாரகா புரி அளவாக
பத்து எட்டு ஸ்தலங்களை சொல்லி

தன்னைத் தமருய்த்துப் பெய்ய வேண்டித் தாழ் குழலாள் துணிந்த துணிவை
அவ்விடங்களிலே தன்னைக் கொண்டு போய்ச் சேர்க்க
வேணும் என்பதாக
தனது பந்து வர்க்கத்தில் உள்ளாரை நோக்கி

பொன்னியல் மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர் கோன் விட்டுச்சிதன் கோதை
ஆண்டாள் அருளிச் செய்த

இன்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை ஏத்த வல்லார்க்கு இடம் வைகுந்தமே
இத் திரு மொழியை ஓத வல்லவர்கள்
ஸ்ரீ வைகுண்டத்திலே போய்
நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார்கள்-

————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே -அண்ணங்கராச்சார்யர்  ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ நாச்சியார் திரு மொழி – பதினொன்றாவது திரு மொழி – -ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை -ஸ்ரீ உ. வே. P.B.A.. ஸ்வாமிகள்–

September 9, 2014

பிரவேசம் –

ஒன்றே உரைப்பான் ஒரு சொல்லே சொல்லுவான் -என்ற
புகழ் பெற்ற பெருமான்
ஒரு கால் பொய்யனாய் விட்டாலும்
அப்பொய்மை அடியாக அவனால் நாம் உபேஷிக்கப் பட்டோமே யாயினும்
பெரியாழ்வார் சம்பந்தம் நமக்கு உண்டாதலாலும்
அது பலனைத் தந்தே தீருமதலாலும்
அவ வழியாலே நாம் உஜ்ஜீவிக்கக் குறை இல்லை என்று
அத்யாவசாயம் கொண்ட ஆண்டாள்

பகவத் விச்லேஷத்தால் மிகவும் நோவு பட்டு இருக்கிற படியைக் கண்ட தாய்மார் தோழி மார்
மற்றும் உள்ள ஊர்ப் பெண்டுகள் அடங்கலும்
இவளுடைய நிலைமை இன்னது என்று அறிய வேணும் என்று அருகே வந்து திரண்டு கிடக்க
அவர்களை நோக்கி

தன்னுடைய அவஸ்தை இருக்கும் படியையும்
எம்பெருமான் தன்னை உபேஷித்து இருக்கு படியையும்
விரிவாகச் சொல்லி
வருத்தப் பட்டுக் கொண்டு போய்

என்னைப் போன்ற ஒரு ருக்மிணி பிராட்டிக்கு
குறை தீர்த்த பெருமான்
என் குறையையும் தீராமல் போக மாட்டான் என்று ஒருவாறு தைர்யம் கொண்டு
தேறி இருப்பதாகச் சொல்லி முடிக்கிறாள் இத் திரு மொழியில்-

——————————————————————————————————–

தாமுகக்கும் தங்கையில் சங்கமே போலாவோ
யாமுகக்கும் என் கையில் சங்கமும் ஏந்திழையீர்
தீ முகத்து நாகணை மேல் சேரும் திருவரங்கர்
ஆ முகத்தை நோக்காரால் அம்மனே அம்மனே–11-1-

பதவுரை

ஏந்து இழையீர்!-ஆபரணங்களை யணிந்துள்ள மாதர்களே!
யாம் உமக்கு என் கையில் சங்கமும்–நான் உகந்து தரித்துக் கொண்டிருக்கிற என் கையில் வளைகள்
தாம் உகக்கும் தம் கையில் சங்தம் போலாவோ–தான் உகந்து தரித்துக் கொண்டிருக்கிற தன்கையில் சங்கோடு ஒவ்வாதோ?
தீ முகத்து–க்ரூரமான முகங்களை யுடைய
நாக அணை மேல்–திருவனந்தாழ்வானாகிற படுகையின் மேலே
சேரும்–பள்ளி கொண்டருளா நின்ற
திரு அரங்கர்–ஸ்ரீரங்கநாதன்
முகத்தை–(என்னுடைய) முகத்தை
நோக்கார்–நோக்குகின்றாரில்லை
ஆ!–ஐயோ!
அம்மனே! அம்மனே!–அந்தோ! அந்தோ!

எம்பெருமானுடைய விஸ்லேஷம் நெடுகிச் செல்லவே, அதனால் உடல் ஈர்க்குப் போல் கைவளைகளெல்லாம்
கழன்றொழிந்தமையையும், இவ்வளவிலும் வந்து முகங்காட்டாத எம்பெருமானுடைய கொடுமையுங் கூறி வருந்துகின்றாள்.
எந்திழையீர்! என்று அருகே வந்து நிற்கும் பெண்களை விளிக்கிறபடி. “பெண்காள்! – தோழிகாள்!“ என்னாதே எந்திழையீர் என்றது –
என்னைப் போலே வளையிழந்து வருந்தாதே, ப்ரளயத்துக்குத் தப்பிப் பிழைப்பாரைப் போலே நீங்கள் மாத்திரம்
அவனுடைய விரஹத்துக்கு எப்படித் தப்பிப்பிழைத்தீர்கள்? என வியந்து கேட்கிறபடிபோலும்.

“ஏந்திழையீர்!, யாமுகக்கு மென்கையிற் சங்கமும் தாமுகக்கும் தம்கையிற் சங்கமே போலாவோ? என்று
அப்பெருமாளைக் கேளுங்கள்“ என்று வாக்யசேஷம் பூரித்துக் கொள்ள வேணும்.

‘நம் கையிலுள்ள சங்கு எப்போதும் நம்கையிலேயே இருக்க வேணும்‘ என்று அவர் ஆசைப்படுவது போல்,
நானும் ‘நம்கையிலுள சங்கு நம்கையிலேயே இருக்கவேணும்‘ என்று ஆசைப்பட ப்ராப்தி இல்லையா?
அவருடைய ஆசை மாத்திரம் வழுவாமல் பலித்துவிட வேணும் என்னுடைய ஆசை மாத்திரம் பாழ்த்துப் போக வேணுமென்று
இஃது என்ன விபரீதஸங்கல்பம்? என்று அவரையே போய்க் கேளுங்கள் என்கிறாள்.
இரண்டடியிலும் சங்கம் என்றது ஸப்தஸ்லேஷம். பாஞ்சஜந்யத்துக்கும் கைவளைக்கும் பெயர்.

தான் சங்கிழந்தமைக்குக் காரணம் சொல்லுகிறாள் பின்னடிகளில்,
திருவனந்தாழ்வான் ஒருத்தனாகவே பகவதநுபவத்தைக்கொள்ளை கொள்கிறானென்ற வயிற்றெரிச்சலினால்
தீமுகத்துநாகணை என்கிறாள் – எரிமூஞ்சித்தெய்வம் சுடுமூஞ்சிப்பாம்பு – என்கிறாப்போலே.
* ஆங்கு ஆரவாரமதுகேட்டு அழலுமிழும் பூங்காரரவாகையாலே அஸ்தாநே பயஸங்கையினால் எப்போதும்
தீயைக் சுக்கிக்கொண்டேயிருப்பனிறே திருவனந்தாழ்வான்.
“வாய்ந்த மதுகைடபரும் வயிறுருகி மாண்டார்“ இத்யாதிப்படியே உகவாதார் வந்துகிட்ட வொண்ணாதபடி யிருக்குமவனான
திருவனந்தாழ்வான் என்கிறாளாகவுமாம். இருவராய்ப் படுக்கவேண்டிய படுக்கையிலே ஒருவராய்ப்படுத்தாரே,
அவருடைய நெஞ்சு என்ன நெஞ்சு! என்ற பரிதாபம் தோற்றக் கூறுகின்றாள் அணை மேல் சேரும் திருவரங்கள் என்று.
ஆர்த்தர்களை ரக்ஷிப்பதையே தொழிலாகக்கொண்டவர் நல்ல வாய்ப்பாகப் படுக்கை கிடைத்ததென்று சாய்ந்துகிடந்து தூங்குகிறார் – என்கிறாளாகவுமாம்.
திருவரங்கத்தில் வந்தும் என்னைப்பேணாதே உறங்கிக்கிடந்தாராகில் இதைவிடப் பரமபதத்திலேயே சுகமாக வீற்றிருக்கலாமே,
இவ்வளவு தூரம் ஏன் ஓடி வரவேணும்? என்றுங் கருதுகின்றாள்.
தன்னைக் கைப்பிடித்தால்தான் திருவரங்கத்தில் வரவு பயன்படைத்தாம் என்றிருக்கிறாளிறே.

முகத்தை நோக்கார் – உடம்போடே அணைய வராவிடினும் கண்வட்டத்திலே ஸேவைஸாதிப்பதும் தவிரவேணுமோ?
என்முகத்தை நோக்குவதற்கும். அவர் கூசும்படி. நான் என்னபாவம் செய்தேனோ அறியேன்.
ஆ, ஆல்- ஐயோ! ஐயோ!! என்றவாறு. அம்மனே! அம்மனே!! – இப்படிப்பட்ட அவரை இப்போது நினைப்பதும் –
புலி, சிங்கம் முதலியவற்றை நினைப்பதுபோல் பயங்கரமாயிற்றே என்கிறாள் போலும்.

எம்பெருமான் உடைய விச்லேஷம் நெடுகச் செல்லவே
அதனாலே உடல் ஈர்க்குப் போலே மெலிந்து
கை வளைகள் எல்லாம் கழன்று ஒழிந்தமையும்
இவ்வளவிலும் வந்து முகம் காட்டாத
எம்பெருமான் உடைய கொடுமையையும் கூறி வருந்துகின்றாள் –
ஏந்திழையீர்-
அருகே வந்து நிற்கும் பெண்களை விளிக்கிறபடி –
பெண்காள்-தோழி காள்-என்னாதே-எந்திழையீர் -என்றது
என்னைப் போலே வளை இழந்து வருந்தாதே
பிரளயத்துக்குத் தப்பிப் பிழைப்பாரைப் போலே
அவனுடைய விரஹத்துக்குத் தப்பி எப்படி பிழைத்தீர்கள் –

ஏந்திழையீர்
யாமுகக்கும் என் கையில் சங்கமும் –
தாமுகக்கும் தங்கையில் சங்கமே போலாவோ -என்று
அப் பெருமானைக் கேளுங்கோள்
நம் கையில் உள்ள சங்கு எபோழுதும் இருக்க வேணும் என்று அவர் ஆசைப் படுவது போலே
நாமும் நம் கையில் உள்ள சங்கு நம் கையிலே இருக்க வேணும் என்று ஆசைப் பட பிராப்தி இல்லையோ –
அவர் ஆசை வழுவாமல் பலிக்கவும் என்னுடைய ஆசை பாழ்த்துப் போகவும்
இது என்ன விபரீத சங்கல்பம் –
சங்கம் -ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்துக்கும் கை வளைக்கும் பெயர் –
தீ முகத்து நாகணை மேல் சேரும் திருவரங்கர் –
திரு வநந்த ஆழ்வான் ஒருத்தனாகவே பகவத் அனுபவத்தை கொள்ளை கொள்கிறானே –
வயிறு எரிந்து -தீ முகத்து நாகணையான் –
எரி மூஞ்சித் தெய்வம் -சுடு மூஞ்சிப் பாம்பு -என்னுமா போலே –
ஆங்கு ஆரவாரம் அது கேட்டு அழல் உமிழும் பூங்கார அரவு ஆகையாலே –
அஸ்தானே பய சங்கையினால் எப்போதும் தீயைக் கக்கிக் கொண்டு
இருப்பான் இ றே திரு வநந்த ஆழ்வான்
வாய்த்த மது கைடபரும் வயறு உறுகி மீண்டார் -இத்யாதிப்படியே
உகவாதார் வந்து கிட்ட ஒண்ணாத படி இருக்குமவனான திரு வநந்த ஆழ்வான் -என்கிறாள் ஆகவுமாம்

இருவராய் படுக்க வேண்டிய படுக்கையிலே ஒருவராய் படுத்தாரே
அவருடைய நெஞ்சு என்ன நெஞ்சு -என்ற பரிதாபம் தோற்ற
நாகணை மேல் சேரும் திருவரங்கர் –என்கிறாள்
அன்றிக்கே
ஆர்த்தர்களை ரஷிப்பதையே தொழிலாகக் கொண்டவர்
நல்ல வாய்ப்பாக படுக்கை கிடைத்தது என்று
சாய்ந்து கிடந்தது தூங்குகிறார் -என்கிறாள் ஆகவுமாம் –

ஆ முகத்தை நோக்காரால் அம்மனே அம்மனே –
திரு வரங்கத்தில் வந்தும்
என்னை பேணாதே உறங்கிக் கிடந்தார் ஆகில்
இதை விட பரம பதத்திலேயே சுகமாக வீற்று இருக்கலாமே
இவ்வளவு தூரம் என் ஓடி வர வேணும்
தன்னைக் கைப் பிடித்தால் தான்
திருவரங்கத்தில் வரவு பயன் படைத்ததாம் -என்று கருதுகிறாள்

முகத்தை நோக்கார்
உடம்போடு அணைய வரா விடினும்
கண் வட்டத்திலே சேவை சாதிப்பதும் தவிர வேண்டுமோ
என் முகத்தை நோக்குவதற்கும் அவர் கூசும்படி நான் என்ன பாவம் செய்தேனோ அறியேன்
ஆ ஆல் -ஐயோ ஐயோ -என்றபடி –
அம்மனே அம்மனே –
இப்படிப்பட்ட அவரை இப்போது நினைப்பதும்
புலி சிங்கம் போலே பயங்கரமாய் இருக்கிறதே -என்கிறாள் போலும் –

————————————————————————————————-

எழில் உடைய அம்மனை மீர் என்னரங்கத்து இன்னமுதர்
குழல் அழகர் வாய் அழகர் கண் அழகர் கொப்பூழில்
எழு கமலப் பூ அழகர் எம்மானார் என்னுடைய
கழல் வளையைத் தாமும் கழல் வளையே ஆக்கினரே–11-2-

பதவுரை

எழில் உடைய–அழகை யுடைய
அம்மனைமீர்–தாய்மார்களே!
அரங்கத்து–திருவரங்கத்திலெழுந்தருளி யிருக்கிற
என் இன் அமுதர்–என்னுடைய இனிய அமுதம் போன்றவராய்
குழல் அழகர்–அழகிய திருக் குழற் கற்றையை யுடையவராய்
வாய் அழகர்–அழகிய திரு வதரத்தை யுடையவராய்
கண் அழகர்–அழகிய திருக் கண்களை யுடையவராய்
கொப்பூமிழ் எழு கமலம் பூ அழகர்–திருநாபியி லுண்டான தாமரைப் பூவாலே அழகு பெற்றவராய்
எம்மானார்–எனக்கு ஸ்வாமியான அழகிய மணவாளர்
என்னுடைய–என்னுடைய
கழல் வளையை–“கழல்வளை“ என்று இடு குறிப் பெயர் பெற்ற கை வளையை
தாமும்–அவர் தாம்
கழல் வளையை ஆக்கினர்–“கழன்றொழிகிறவளை“ என்று காரணப் பெயர் பெற்ற வளையாக ஆக்கினார்.

“சங்கஞ்சரிந்தன சாயிழந்தேன் தடமுலை பொன்னிறமாய்த் தளர்ந்தேன்“ என்னும்படி நான் அழகழிந்து கிடக்கச் செய்தே
நீங்கள் அழகு பொலிந்து நிற்பதும் உங்கள் பாக்கியமே – என்பாள் போல எழிலுடையவம்மனைமீர் என விளிக்கின்றாளென்க.

திருவரங்கத்திலே எனக்கு போக்யமான அமுதம்போன்று எழுந்தருளியிருப்பவராய், திருக்குழலழகும் திருவதரத்தினழகும்
திருக்கண்ணழகுமு திநாபிக்கமலத்தழகும் பொலிய நின்று இவ்வழகையெல்லாங் காட்டி என்னை ஆட்படுத்திக்கொண்டவரான
பெரியபெருமாள் தப்பாக ஒன்றுஞ்செய்யவில்லை யுத்தமாகவே செய்தார்.
நான் கழலாத வளையை இட்டுக்கொண்டிருந்தேனாகில் அவரும் அதனைக் கழலாத வளையாகவே அமைத்து வைப்பர்,
நான் கழல்வளையையிட்டுக்கொண்டேனாகையாலே அவர் அதை அந்வர்த்தமாக்கினார்,
என்மேல் குற்றமேயன்றி அவர்மேல் என்ன குற்றமிருக்கிறது? உள்ளத்தை உள்ளபடி செய்பவரன்றோ அவர்.
நான் கழலாதவளையே இட்டுக்கொண்டிருந்து அவர் அதைக் கழல்வளையாக ஆக்கினாராகில் அப்போது ஒருவாறு அவர்மேல் குற்றஞ்சாட்டலாம்,
நானே கழல்வளையிட்டுக் கொண்டேனான அருளிச்செய்கிறாள். இது நர்மோக்தி எனவும்படும்.
கைவளைக்குக் கழல்வளையென்று இடுகுறிப்பெயர். அதனைக் காரணப்பெயர்போலக்கொண்டு
“தாமுங் கழல்வளையேயாக்கினரே“ என்றாள். கழன்றொழியும் வளையாதலால் கழல்வளை எனப்பெயர்வந்த்து என்கிறாளாய்த்து.

(யுக்தோ வாரணலாபோயம் ஸ்யால! தேவாரணார்த்திந) என்ற வடமொழி ஸ்லோகத்தை இதனோடு ஒருபுடை ஒப்பிடலாம்.
வடமொழியில் வாரணம் என்றால் யானைக்கும் பெயர். கழுத்தைப்பிடித்துத் துள்ளுதலுக்கும் பெயர்
ஒருவன் தனக்கு ஒருயானை கொடுக்கவேணும் என்று நாடோறும் ஒரு அரசனிடத்துச் சென்றுகொண்டிருந்தான்,
இப்படி நீ யானை கேட்பது தகுதியல்லவென்று சேவகர் நெடுநாள் அவனுக்கு ஹிதமாகச் சொல்லியும் அவன் கோளாதொழியவே,
ஒருநாள் சேவகர் அவனைக் கழுத்தைப்பிடித்து நெட்டித்தள்ளிவிட்டனர். அதைக்கண்ட ஒருவன் அவனை நோக்கிக் கூறுகின்றான்
வாரணம் விரும்பிய நீ வாரணம் பெற்றது தகுதியே என்கிறான்.
அதுபோல ஆண்டாளும் “என்னுடைய கழல்வளையைத் தாமுங் கழல்வளையே யாக்கினரே“ என்கிறாள்.

எழில் உடைய அம்மனை மீர் –
சங்கம் சரிந்தன சாய் இழந்தேன் தடமுலை பொன்னிறமாய் தளர்ந்தேன் -என்னும்படி
நான் அழகு அழிந்து கிடக்கச் செய்தே
நீங்கள் அழகு பொலிந்து நிற்பதும் உங்கள் பாக்கியமே என்பாள் போல்
எழில் உடைய அம்மனை மீர் -என்று விளிக்கிறாள் –

என்னரங்கத்து இன்னமுதர் –
திரு வரங்கத்திலே எனக்கு போக்யமான அமுதம் போன்று எழுந்து அருளி இருப்பவராய்-

குழல் அழகர் வாய் அழகர் கண் அழகர் கொப்பூழில் எழு கமலப் பூ அழகர் –
திருக் குழல் அழகும்
திரு அதரத்தின் அழகும்
திருக் கண் அழகும்
திரு நாபிக் கமலத்து அழகும்
பொலிய நின்று இவ் வழகு எல்லாம் காட்டி

எம்மானார் –
என்னை ஆட்படுத்திக் கொண்டவரான பெரிய பெருமாள்
தப்பாக ஒன்றும் செய்ய வில்லை
யுக்தமாகவே செய்தார் –

என்னுடைய கழல் வளையைத் தாமும் கழல் வளையே ஆக்கினரே –
நான் கழலாத வளையை இட்டுக் கொண்டு இருந்தேன் ஆகில்
அவரும் அதனை கழலாத வளை யாக ஆக்கி வைத்திருப்பார்
நான் கழல் வளையை இட்டுக் கொண்டு இருந்தேன் ஆகையாலே
அவர் அத்தை அன்வர்த்தம் ஆக்கினார்
என் மேல் குற்றம் அன்றி அவர் மேல் குற்றம் இல்லையே
உள்ளத்தை உள்ளபடி செய்பவர் அன்றோ அவர்
நான் கழலாத வளையை இட்டுக் கொண்டு இருந்து
அவர் அத்தை கழல் வளை யாக ஆக்கினார் ஆகில்
அப்போது அவர் மேல் குற்றம் சாற்றலாம்
ரசோக்தியாக அருளிச் செய்கிறார்
இது நர்மோக்தி-என்பர் –
யுக்தோ வாரண லாபோயம் ஸ் யால தே வாரணார்த்தி ந-ஸ்லோகத்தில்
வாரணம் -யானைக்கும் கழுத்தைப் பிடித்து தள்ளுதலுக்கும்-போலே –

—————————————————————————————-

பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும்
அங்காதும் சோராமே ஆள்கின்ற வெம்பெருமான்
செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார்
எங்கோல் வளையால் இடர் தீர்வர் ஆகாதே –11-3-

பதவுரை

பொங்கு–அலை யெறியா நின்றுள்ள
ஓதம்–கடலாலே
சூழ்ந்த–சூழப்பட்ட
புவனியும்–இப் பூ மண்டலமும்
விண் உலகும்–பரம பதமும்
ஆதும் சோராமே–சிறிதும் குறைவு படாதபடி
ஆள்கின்ற–நிர்வஹித்துக் கொண்டு போருகிற
எம் பெருமான்–ஸ்வாமியாய்
செங்கோல் உடைய–செங்கோல் செலுத்த வல்லவராய்
திரு அரங்கம் செல்வனார்–கோயிலிலே பள்ளி கொண்டிருப்பவரான மஹாநுபாவர்
என்–என்னுடைய
கோல் வளையால்–கை வளையாலே
இடர் தீர்வர் ஆகாதே–தம் குறைகளெல்லாம் தீர்ந்து நிறைவு பெறுவரன்றோ
(அப்படியே என் வளையைக் கொள்ளை கொண்டு அவர் நிறைவு பெற்று போகட்டும் என்றபடி.)

கடல்சூழ்ந்தமண்ணுலகும் விண்ணுலகுமாகிய உபயவிபூதியையும் அபாயலேஸமுமின்றி ரக்ஷித்தருளுமவனாய்,
என்னை ஒரு மூன்றாம் விபூதியாக ஆளுவனாய், திருவரங்கத்திலே பள்ளி கொண்டருளினபடியே
செங்கோல்செலுத்துமவனான எம்பெருமான் இப்படி அவாப்தஸமஸ்தகாமனாயிருந்து வைத்தும் குறைவாளன் போன்று
என்னுடைய கைவளையைக் கொள்ளை கொண்டுபோனான், போயிடுக,
இவ்வளையினால் அவனுடைய தாரித்ரிய மெல்லாம் ஹதமாகட்டும் என்கிறாள்.

இரண்டாமடியின் முதலிலுள்ள அங்கு என்பது ஓர் அசைச்சொல், அதற்கு இவ்விடத்தில் பொருள் இல்லை.
எம்பெருமான் என்றவிடத்துவியாக்கியான ஸ்ரீஸூக்தி, ‘ஸப்தாதிகளாலே களிக்கும்படி பண்ணிவைத்தான் அவ்விபூதியை,
இங்குள்ளார்க்கும் கூட்டன்றிக்கே அங்குள்ளார்க்குங்கூட்டன்றிக்கே நடுவே நோவுபடும்படி பண்ணிவைத்தான் என்னை யொருத்தியையும்.“

பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும்
கடல் சூழ்ந்த மண்ணுலகும்
விண்ணுல்குமாகிய
உபய விபூதியையும்

அங்காதும் சோராமே ஆள்கின்ற வெம்பெருமான் –
அபாய லேசமும் இன்றி
ரஷித்து அருளுபவனாய் –
அங்கு -அசைச் சொல் -இவ்விடத்தில் பொருள் இல்லை

வெம்பெருமான் —
என்னை மூன்றாம் விபூதியாக ஆளுபவனாய் –
சப்தாதிகளில் களிக்கும் படி பண்ணி வைத்தான் இவ் விபூதியை –
தன்னை அனுபவிப்பித்து களிக்கும் படி பண்ணி வைத்தான் அவ விபூதியை
இங்கு உள்ளாருக்கும் கூட்டு அன்றிக்கே
அங்கு உள்ளாருக்கும் கூட்டு அன்றிக்கே
நடுவே நோவு படும் படி பண்ணி வைத்தான் என்னை ஒருத்தியையுமே –

செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார் –
திருவரங்கத்தில் பள்ளி கொண்டு அருளின படியே
செங்கோல் செலுத்துபவனான
எம்பெருமான் –

எங்கோல் வளையால் இடர் தீர்வர் ஆகாதே –
இப்படி அவாப்த சமஸ்த காமனாய் இருந்து வைத்தும்
குறைவாளன் போலே
என்னுடைய கை வளையைக் கொண்டு போனான் –
போயிடுக
இவ் வளை யினால் அவனுடைய தார்த்ர்யம் எல்லாம் ஹதம் ஆகட்டும் –

——————————————————————————————–

மச்சணி மாட மதிள் அரங்கர் வாமனனார்
பச்சைப் பசும் தேவர் தாம் பண்டு நீர் ஏற்ற
பிச்சைக் குறையாகி என்னுடைய பெய் வளை மேல்
இச்சை யுடையரேல் இத்தெருவே போதாரே—11-4-

பதவுரை

மச்சு–மேல் தளங்களாலே
அணி–அலங்கரிக்கப் பட்ட
மாடம்–மாடங்களையும்
மதிள்–மதிள்களையுமுடைய
அரங்கர்–திருவரங்கத்திலே எழுந்தருளி யிருப்பவராய்
வாமனனார்–(முன்பு) வாமநாவதாரம் செய்தருளினவராய்
பச்சைப் பசுந்தேவர்–பசுமை தங்கிய தேவரான பெரிய பெருமான்
தாம்–தாம்
பண்டு–முன்பு (மஹாபலி யிடத்தில்)
நீர் ஏற்ற பிச்சை குறை ஆகி–உதக தாரா பூர்வகமாகப் பெற்ற பிச்சையிலே குறை யுண்டாகி (அக்குறையைத் தீர்ப்பதற்காக)
என்னுடைய–என்னுடைய
பெய் வளை மேல்–(கையில்) இடப்பட்டுள்ள வளை மேல்
இச்சை உடையர் ஏல்–விருப்பமுடையவராகில்
இத் தெருவே–இத் தெரு வழியாக
போதாரே–எழுந்தருள மாட்டாரோ?

மற்றபேருடைய கைகளில் வளைஇருக்க உன்கை வளைகளை மாத்திரம் எம்பெருமான் கொள்ளை கொண்டது
உன்னிடத்துள்ள அன்பு மிகுதியாலன்றோ ஆகவே, அதற்கு நீ மகிழவேண்டியிருக்க ஸோகிக்கலாமோ? என்று
சிலபெண்கள் ஆண்டாளை நோக்கிக் கூற, அவர்களை நோக்கிக் கூறுகின்றாள்.

மச்சுக்களாலே அலங்கரிக்கப்பட்ட மாடங்களையும் மதிள்களையுமுடைத்தான திருவரங்கம் பெரியகோயிலிலே வந்து
நம் உடைமையைப் பெறுகைக்குத் தாம் அர்த்தியாய்க் கண்வளர்ந் தருள்பவராய்ப் பசுகுபசுகென்று ஆகர்ஷகமான
திவ்யமங்கள விக்ரஹத்தையுடையரான பெரியபெருமாள் முன்பு தாம் மஹா பலியிடத்திலே யாசகராக எழுந்தருளி
அவனிடத்தில் உதகதாரா பூர்வகமாக பிக்ஷை வாங்கிக் கொண்ட பிச்சையில் குறையுண்டாகி அக்குறையை
என் கையாலே தீர்த்துக்கொள்வேணுமென்ற ஆவலுடையவராய் என் கைவளையிலே ஆசையுடையவராகில்
அஸுரனுடைய யஜ்ஞபூமியிலே நடந்தநடையை இத்தெருவை என்கண்வட்டத்திலே நடந்துகாட்டலாகாதோ? என்கிறாள்.

பச்சைப்பசுந்தேவர் – “மேகஸ்யாமம்“ என்றபடி பசுமைநிறம்மிக்க பெருமாள் என்றவாறு.
அன்றியே, “பச்சைப்பசும்பொய்“ என்றால் மெய்கலசாதபெய் என்று பொருளாகிறப்போலே
‘கீழ்மைகலசாத மேன்மையுடையவர்‘ என்றும்பொருளாம். கலப்பற்ற பரதேவதை.

மற்ற பேர்கள் உடைய கைகளிலே வளை இருக்க
உன் வளை மாதரம் எம்பெருமான் கொள்ளை கொண்டது
உன் இடத்தில் உள்ள அன்பின் மிகுதியால் அன்றோ
ஆகவே நீ மகிழ வேண்டி இருக்க
சோகிக்க காரணம் என்ன -என்று தோழிகள் கேட்க
ஆண்டாள் அருளிச் செய்கிறார் –
மச்சணி மாட மதிள் அரங்கர் வாமனனார்
மச்சுக்களால் அலங்கரிக்கப் பட்ட மாடங்களையும்
மதிள்களையும் யுடைத்தான
திரு வரங்கம் பெரிய கோயிலிலே வந்து
தம் உடைமையைப் பெறுகைக்காக
தாம் அர்த்தியாய்
கண் வளர்ந்து அருளுபவராய் –

பச்சைப் பசும் தேவர் தாம் பண்டு நீர் ஏற்ற பிச்சைக் குறையாகி –
பசுகு புசுகு என்று ஆகர்ஷகமான திவ்ய மங்கள விக்ரஹத்தை யுடையரான பெரிய பெருமாள்
முன்பு தாம் மகா பலி இடத்திலே யாசகராய் எழுந்து அருளி இருந்து
உதக தார பூர்வகமாக பிஷை வாங்கிக் கொண்டு
பிச்சையிலே குறை யுண்டாக்கி –

என்னுடைய பெய் வளை மேல் இச்சை யுடையரேல் இத்தெருவே போதாரே –
அக்குறையை என் கையாலே தீர்த்துக் கொள்ள வேணும் என்று
ஆவல் யுடையவராய்
என் கை வளையில் ஆசை யுடையவர் ஆகில்
அசுரன் உடைய யஞ்ஞாவாடத்தில் நடந்த நடையை
இத் தெருவே
என் கண் வட்டத்திலே
நடந்து காட்டலாகாதோ –

பச்சைப் பசும் தேவர் -மேகஸ்யாமம் -என்கிறபடி
பசுமை நிறம் மிக்க பெருமாள்
அன்றியே
பச்சைப் பசும் பொய்-என்றால்
மெய்யகலாத பொய் -என்று பொருள் ஆகிறாப் போலே
கீழ்மை கலசாத மேன்மை யுடையவர் -என்ற பொருளுமாம்
கலப்பற்ற மேன்மை -என்ற படி-

————————————————————————————————

பொல்லாக் குறள் உருவாய் பொற் கையால்நீர் ஏற்று
எல்லா வுலகும் அளந்து கொண்ட வெம்பெருமான்
நல்லார்கள் வாழும் நளிரரங்க நாகணையான்
இல்லாதோம் கைப்பொருளும் எய்துவான் ஒத்து உளனே–11-5-

பதவுரை

பொல்லா குறள் உரு ஆய்–விலக்ஷண வாமந ருபியாய்
பொன் கையில்–அழகிய கையாலே
நீர் ஏற்று–பிக்ஷை பெற்று
எல்லா உலகும்–ஸகல லோகங்களையும்
அளந்து கொண்ட–தன் வசப் படுத்திக் கொண்ட
எம் பெருமான்–ஸ்வாமியாய்
நல்லார்கள் வாழும்–நன்மை மிக்க மஹான்கள் வாழ்கிற
நளிர் அரங்கம்–ஸர்வ தாப ஹரமான திருவரங்கத்தில்
நாக அணையான்–திருவனந்தாழ்வானைப் படுக்கையாக வுடையரான பெரிய பெருமாள்
இல்லாதோம்–அகிஞ்சநையான என்னுடைய
கைப் பொருளும்–கைம் முதலான வஸ்துவையும் (சரீரத்தையும்)
எய்துவான் ஒத்து உளன்–கொள்ளை கொள்வான் போலிரா நின்றான்

விலக்ஷணமான வாமநரூபத்தைப் பரிக்ரஹித்து அழகிய கையிலே நீரேற்றுப் பிச்சைவாங்கி, பிச்சையிட்டவன் குடி வாழ்வதற்கும்
ஒரடி மண் மிகாதபடி கைலலோகங்களையும் அளந்து ஸ்வாதீதப்படுத்திக் கொண்ட மஹாநுபாவராய்,
ஸிஷ்டர்கள் வாழ்கிற திருவரங்கத்திலே அநந்தஸாயியாய் எழுந்தருளியிருக்கிற பெரியவர்
தரித்ர்ரான நம்முடைய கைப் பொருளையும் (அதாவது – இந்தவுடம்பையும்) கொள்ளை கொள்வார்போலே இராநின்றார் என்கிறாள்.

பொல்லாக்குறள் – ‘நல்லகுள்ளுருவாய்‘ என்னவேண்டியிருக்க, ‘பொல்லாக்குறளுருவாய்‘ என்றது என்னென்னில்,
நல்லதென்றால் கண்ணெச்சில் படுமென்று நினைத்து, நல்ல வஸ்துக்கள்மேலே கரிபூசுவாரைப்போலே பொல்லாக்குறள் என்கிறாளென்பர்.
அன்றியே, அழகிய குறளுருவாய் என்றால் நாட்டிலுள்ள அழகோடு ஸமமாக நினைக்கக்கூடுமென்று விஜாதீயத்வம் தோற்றப்
பொல்லாக்குறள் என்கிறாளென்றும் கூறுவர்.

நல்லார்கள் வாழும் நளிரரங்கம் என்றவிடத்து, “மறைப்பெருந்தீ வளர்த்திருப்பார் வருவிந்தை யளித்திருப்பார்,
சிறப்புடைய மறையவர் வாழ் திருவரங்கமென்பதுவே“ என்ற பெரியாழ்வார் திருமொழி நினைக்கத்தக்கது.

இல்லாதோம் – ‘இல்லாதார்‘ என்பதன் தன்மைப்பன்மை. அந்த நாகணையில் ஏற பாக்யமில்லாத என்னுடைய, –
மஹாபலியைப் போலேதம் அபேக்ஷிதம் பூர்ணமாகக் கொடுக்கஸக்தியில்லாத வென்னுடைய, –
அவரைத் தவிர வேறொரு துணையில்லாத வென்னுடைய – என்றிப்படி மூன்றுவிதமாகப் பொருள் அருளிச்செய்வர்.
அகிஞ்சநையாயிருக்கிற என்னுடைய என்றபடி. கைப்பொருளாவது இங்கேஸரீரம் மிகுந்திருப்பது ஸரீரமேயிறே.

நளிரரங்கம் என்றவிடத்தில், திவ்யதேஸத்தின், போக்யதையிலே ஈடுபட்டு இரண்டு ஐதிஹங்களருளிச் செய்வர் –
“பட்டர் முதுகில் புண்ணலே நொந்திருக்கச்செய்தே பெருமாள் அருள்பாடிட்டு “வராய்! அஞ்சினாயோ?
இங்கேயிருக்கச் செய்தேயும் பரமபதம் என்சிறுமுறிப்படி செல்லும்படி பண்ணியருளிற்று, அதிலொரு குறையுமில்லை.
இங்கே குளிர்ந்த முகத்தையும் திருநாமத் தழும்பையும் முறுவலையும் இழக்கவென்றால் அடியேன் அஞ்சமாட்டேனோ“ என்றாராம்.

ஆளவந்தார்மகனார் சொட்டைநம்பி ஓரளவிலே திருக்கோட்டியூர் நம்பியை நெகிழ ஒருவார்த்தை சொன்னாய்
‘நீ கடக்க வர்த்தி‘ (என்கண்வட்டத்தில்) நில்லாத தூரஸ்த்தனாய் ஒழிந்துபோ) என்று ஆளவந்தார் அருளிச்செய்ய,
அவருடம் படைவீட்டிலே ராஜஸேவை பண்ணித் திரிந்தாய்,
பின்பு இவருடைய சரமஸமயத்திலே இவருடைய நீ நினைத்துக்கிடக்கிறதென்?’ என்று கேட்டார்களாய்,
‘ஆளவந்தார் ஸ்ரீபாதத்தின் ஸம்பந்தம் பரமபத ப்ராப்தி பண்ணித் தந்தல்லது விடாது, அங்கே போனால்
ஸ்ரீவைகுண்டநாதன் முகம் நம்பெருமாள் திருமுகமண்டலம் போலே குளிர்ந்திருந்த்தில்லைபாகில் முறிச்சுக்கொண்டு
வருவதாக நினைத்திருந்தேன்‘ என்றாராம்.
இவ்விரண்டு ஐதிஹயங்களும் நளிர் என்ற விஸேஷணத்தினால் ஏற்படுகிற போக்யதா ப்ரகர்ஷத்தை விளக்குவன.

பொல்லாக் குறள் உருவாய் பொற் கையால்நீர் ஏற்று
விலஷணமான வாமன ரூபத்தை
பரிஹரித்து
அழகிய கையாலே நீர் ஏற்று
பிச்சை வாங்கி
பிச்சை இட்டவன் குடி வாழ்வதற்கும் –
நல்ல குறள் உருவாய் -என்ன வேண்டி இருக்க பொல்லாக் குறள் உருவாய் -என்றது
கண் எச்சில் படும் என்று நினைத்து கரி பூசுவாரைப் போலே
அன்றியே
அழகிய குறள் உருவாய் என்றால் நாட்டில் உள்ள அழகோடு சஜாதீயமாக -சமமாக -நினைப்பார்
என்று விஜாதீயத்வம் –

எல்லா வுலகும் அளந்து கொண்ட வெம்பெருமான்
ஓர் அடி மண் மிகாதபடி சகல லோகங்களையும் அளந்து –
ஸ்வா தீனப் படுத்திக் கொண்ட
மகானுபாவராய் தோற்றப் பொல்லாக் குறள் உருவாய் -என்கிறாள் –

நல்லார்கள் வாழும் நளிரரங்க நாகணையான்
சிஷ்டர்கள் வாழ்கிற திருவரங்கத்தில்
அநந்த சாயியாய் எழுந்து அருளி இருக்கிற பெரியவர் –
மறைப் பெரும் தீ வளர்த்து இருப்பார் வருவிருந்தை யளித்திருப்பார்
சிறப்புடைய மறையவர் வாழ் திருவரங்கம் என்பதுவே -பெரியாழ்வார் திரு மொழி –

இல்லாதோம் கைப்பொருளும் எய்துவான் ஒத்து உளனே
தரித்தரான நம்முடைய கைப் பொருளையும்
அதாவது இந்த யுடம்பையும் -கொள்ளை கொள்வாரைப் போலே இரா நின்றார் –
இல்லாதோம் -இல்லாதார் -என்பதன் தன்மைப் பன்மை
அந்த நாகணையில் ஏற பாக்யமில்லாத என்னுடைய
மகா பலியைப் போலே தம் அபேஷிதம் பூரணமாக கொடுக்க சக்தி இல்லாத என்னுடைய
அவரைத் தவிர வேறு ஒரு துணை இல்லாத என்னுடைய

கைப் பொருளாவது -இங்கே சரீரம் -மிகுந்து இருப்பது சரீரமே இ றே –

நளிர் அரங்கம் -திவ்ய தேச போக்யதையில் ஈடு பட்டு இரண்டு ஐதிகங்கள்-

பட்டர் முதுகில் புண்ணாலே நொந்து இருக்கச் செய்தேயும்
பெருமாள் அருள் பாடிட்டு
வாராய் அஞ்சினாயோ -என்று கேட்டு அருள
நாயந்தே எனக்கு செய்து தந்து அருளாத தரம் இல்லை
இங்கே இருக்கச் செய்தேயும் பரம பதம் என் சிறு முறிப்படி செல்லும் படி பண்ணி அருளிற்று
அதிலே ஒரு குறையும் இல்லை
இங்கே குளிர்ந்த முகத்தையும்
திரு நாமத் தழும்பையும்
முறுவலையும் இழக்க வென்றால் அடியேன் அஞ்ச மாட்டேனோ -என்றாராம் –

ஆளவந்தார் திரு மகனார் சொட்டை நம்பி ஓர் அளவிலே திருக் கோட்டியூர் நம்பியை
நெகிழ ஒரு வார்த்தை சொன்னாராய்
நீ கடக்க வர்த்தி -என் கண் வட்டத்திலே நில்லாதே தூரச்தனாய் ஒழிந்து போ -என்று ஆளவந்தார் அருளிச் செய்ய
அவரும் படை வீட்டிலே ராஜ சேவை பண்ணித் திரிந்தாராய்
பின்பு இவருடைய சரம சமயத்திலே இவருடைய அத்யாவசயம் அறிய வேணும் என்று
நீ நினைத்து கிடக்கிறது என் என்று கேட்டார்களாய்
ஆளவந்தார் ஸ்ரீ பாதத்தின் சம்பந்தம் பரமபத பிராப்தி பண்ணித் தந்து அல்லது விடாது
அங்கே போனால் ஸ்ரீ வைகுண்ட நாதன் திரு முகம்
நம் பெருமாள் திரு முக மண்டலம் போலே குளிர்ந்து இருந்து இல்லையாகில்
முறிச்சுக் கொண்டு வருவதாக நினைத்து இருந்தேன் -என்றாராம்

இவ்விரண்டும் திருவரங்கத்தின் போக்யதா பிரகர்ஷத்தை
விளக்கும் –
நளிர் -விசேஷணம் இத்தையே குறிக்கும் —

—————————————————————————————————–

கைப்பொருள்கள் முன்னமே கைக் கொண்டார் காவிரிநீர்
செய் புரள வோடும் திருவரங்கச் செல்வனார்
எப்பொருட்கும் நின்றார்க்கும் எய்தாது நான்மறையின்
சொற்பொருளாய் நின்றார் என் மெய்ப் பொருளும் கொண்டாரே–11-6-

பதவுரை

காவிரி நீர்–காவேரியின் தீர்த்தமானது
செய் புரள ஓடும்–பயிர் நிலங்களிலெலாம் ஓடிப் புரளும் படியான நீர் வளம் மிகுந்த
திரு அரங்கம்–திருவரங்கத்தில் எழுந்தருளி யிருக்கிற
செல்வனார்–ஸ்ரீமானாயும்,
எப் பொருட்கும் நின்று–எல்லாப் பொருள்களிலும் அந்தராத்மாவாய் நின்று
ஆர்க்கும் எய்தாது–ஒருவர்க்கும் கைப் படாமல்
நால் மறையின் சொல் பொருள் ஆய் நின்றார்–நான்கு வேதங்களிலுள்ள சொற்களுக்கும் பொருளாய் நிற்பவருமான பெரிய பெருமாள்
முன்னமே–ஏற்கனவே
கைப் பொருள்கள்–கையிலுள்ள பொருள்களை யெல்லாம்
கைக் கொண்டார்–கொள்ளை கொண்டவராயிருந்து வைத்து (இப்போது)
என் மெய் பொருளும்–எனது சரீரமாகிற வஸ்துவையும்
கொண்டார்–கொள்ளை கொண்டார்

எல்லாப்பொருள்களிலும் அந்தர்யாமியா யிருந்துகொண்டு ஒருவர்க்கும். கைப்படாமல் வேதவேத்யராயிருக்கும்
பெரியபெருமாள் என்கையிலுள்ள பொருள்களை முன்னமே கைக்கொண்டார், கடைசியாக ஸரீரமென்கிற ஒருவஸ்து மிகுந்திருந்தது,
அதையும் கொள்ளைகொண்டாரென்கிறாள்.

“கைப்பொருள்கள் முன்னமே கைக்கொண்டார்“ என்றவிடத்து வியாக்கியான ஸ்ரீஸூத்தி பரமபோக்யமானது –
“இவளுக்கு முலைப் பாலோடே கூடப் புகுந்த்திறே பகவத்ஸம்பந்தம்,
* ஸ்ருஷ்ட ஸ்த்வம் வநவாஸாப போலே பிறக்கிறபோதே வளையிழந்து கொண்டுபோலே காணும் பிறந்தது.“

காவிரிநீர்செயப்புரளவோடும் திருவரங்கம் – அசேதநமான தீர்த்தமுங்கூட ரக்ஷ்யவாக்கம் வாடாமல் நோக்கும் தேஸம் என்றபடி.
அசேதநமர்ன வஸ்துக்களும் தங்கள் தங்கள் ரக்ஷ்யவர்க்கங்களை நோக்குமிடமான திருவரங்கத்திலே வாழப்பெற்ற
பரமசேதநன் ரக்ஷ்யகோடியிலே ஒருத்தியான என்னை நோக்காதிருப்பது தகுதியன்று என்று குறிப்பித்தபடி.

எப்பொருட்கும் நின்று – வேடுவிச்சி, குரங்கு, தயிர்க்கான் முதலிய ஸாமாநயமான பிராணிகட்கும் ஸுலபனாய் நிற்கச் செய்தேயும்,
ஆர்க்கும் எய்தாது – எவ்வளவு ஜஞாநாதிகராயிருந்தாலும் ஸ்வயத்நத்தாலே கிட்ட நினைப்பார்க்குக் கிட்டக்கூடாதவனாய் என்றும் பொருள் கொள்ளலாம்.

மெய்பொருளும் கொண்டார் – மெய் என்று ஆத்மாவையும் சொல்ல கடவதாகையாலே,
ஆத்மீயங்களை ஏற்கனவே கொள்ளைகொண்டவர் இப்போது ஆத்மாவையும் கொள்ளைகொண்டார் என்பதாகவும் உரைக்கலாம்

காவிரிநீர் செய் புரள வோடும் திருவரங்கச் செல்வனார் –
அசேதனமான தீர்த்தங்களும் கூட
ரஷ்ய வர்க்கம் வாடாமல் நோக்கும் தேசம் என்றபடி –
அசேதனமான வஸ்துக்களும் தங்கள் தங்கள் ரஷ்ய வர்க்கங்களை நோக்கும் இடமான
திருவரங்கத்திலே வாழப் பெற்ற
பரம சேதனன்
ரஷ்ய கோடியிலே ஒருத்தி யான என்னை நோக்காது இருப்பது
தகுதி அன்று -என்று குறிப்பித்த படி

எப்பொருட்கும் நின்று –
எல்லா பொருள்களுக்கும் அந்தர்யாமியாய் நின்று கொண்டு -வேடுவச்சி குரங்கு தயிர்க்காரன் முதலிய
சாமான்ய மான பிராணிகட்கும் சுலபனாய் நிற்கச் செய்தேயும்

ஆர்க்கும் எய்தாது-
ஒருவருக்கும் கைப்படாமல் –
எவ்வளவு ஞானாதிகாராய் இருந்தாலும்
ஸ்வ யத்னத்தாலே கிட்ட நினைப்பார்கட்கு
கிட்டக் கூடாதவனாய் இருப்பவன்

நான்மறையின் சொற்பொருளாய் நின்றார் –
வேத வேத்யராய் இருக்கும் பெரிய பெருமாள் —

கைப்பொருள்கள் முன்னமே கைக் கொண்டார்-
என் கையில் உள்ள பொருள்களை
முன்னமே கைக் கொண்டார் –
இவளுக்கு முலைப் பாலோடு கூடப் புகுந்தது இ றே பகவத் சம்பந்தம்
ஸ்ருஷ்டஸ்த்வம் வனவாசாயா போலே
பிறக்கிற போதே வளை இழந்து கொண்டு போலே காணும் பிறந்தது –

என் மெய்ப் பொருளும் கொண்டாரே –
கடைசியாக சரீரம் என்ற வஸ்து மீதம் இருந்தது
அத்தையும் கொள்ளை கொண்டார் –

மெய் என்று ஆத்மாவையும் சொல்லக் கடவதாகையாலே
ஆத்மீயங்களை ஏற்கனவே கொள்ளை கொண்டவர்
இப்போது ஆத்மாவையும் கொள்ளை கொண்டார் என்னவுமாம் —

—————————————————————————————————-

உண்ணாது உறங்காது ஒலி கடலை யூடறுத்து
பெண்ணாக்கை யாப்புண்டு தாமுற்றபேதெல்லாம்
திண்ணார் மதிள் சூழ் திருவரங்கச் செல்வனார்
எண்ணாதே நம்முடைய நன்மைகளே எண்ணுவரே–11-7-

பதவுரை

திண் ஆர் மதிள் சூழ்–(மஹா ப்ரளயத்துக்கும் அழியாதபடி) திண்மை பொருந்திய மதிள்களாலே சூழப்பட்ட
திரு அரங்கம்–கோயிலிலே எழுந்தருளியிருக்கிற
செல்வனார்–ச்ரிய யதியான பெருமாள் (ஸ்ரீராமனாய்த் திருவவதரித்த போது)
பெண் ஆக்கை–(சீதையென்சிற வொரு பெண்ணின் சரீரத்தில் ஆசைக்குக் கட்டுப்பட்டு
உண்ணாது–உண்ணாமலும்
உறங்காது–உறங்காமலும் (வருந்தி)
ஒலி கடலை–(திரைக் கிளப்பத்தாலே) கோஷிக்கின்ற கடலை
ஊடு அறுத்து–இடையறும்படி பண்ணி (அணை கட்டி)
தாம் உற்ற–(இப்படி) தாம் அடைந்த
பேது எல்லாம்–பைத்தியத்தை யெல்லாம்
எண்ணாது–மறந்து போய் (இப்போது)
தம்முடைய–தம்முடைய
நன்மைகளே–பெருமைகளையே
எண்ணுவர்–எண்ணா நின்றார்

தமக்கு மேற்பட்டாரொருவருமில்லாதபடி பரமபுருஷராயிருக்கும்வரை ஒருமானிடப் பெண்ணாகிய நீ
இப்படியெல்லாஞ் சொல்லுவது தகுதியோ? அவருடைய மேன்மை எங்கே? உன்னுடைய கீழ்மை எங்கே?
இதை ஆராயாமல் நீ அப்பெரியவரைப் பழிப்பது சிறிதும் பொருந்தாது என்று சிலமாதர்கள் ஆண்டாளைநோக்கிக் கூற,
அதற்கு மறுமாற்றா முரைக்கின்றாள். அப்பெரியவர் ராமாவதாரத்தில் பட்டபாடுகள் தெரியாதா?
ஒரு பெண்பெண்ட்டியின் உடம்பிலே ஆசைகொண்டு அந்த ஆஸாபாஸ பாரவஸ்யத்தாலே ஊணுமின்றி உறக்கமுமின்றி
அவளுடைய பிரிவுக்கு ஆற்றாமல் நோவுபட்டு வானரப்படைகளைத் துணைகொண்டு கடலிலே அணை கட்டுகையாகிற
அருந்தொழிலைச் செய்து இப்படிகளாலே தாம் வெளிப்படுத்திய பைத்தியத்தை ஸ்ரீராமாயணம் நடையாடுந் தேஸத்திலே அறியாதாருண்டோ?

(அநித்ரஸ்ஸததம்ராம) என்றுமு, “***“ (ந மாம்ஸம் ராகவோபுங்க்தே நசாபி மது ஸேவதே) என்றும்
ஸ்ரீ ராமாயணத்தில் சொல்லப்பட்டிருக்கவில்லையா? பரமபுருஷராயிருப்பவர் ஒரு பெண்ணுக்காக அப்பாடுபடலாமோ?
அது அவருடைய மேன்மைக்குத் தகுமோ? அது தகுமாகில், எனக்காகவும் அவர் அப்பாடுபட்டிருக்க வேண்டாவோ?
என்னிடத்தில் மாத்திரமேயோ அவர் மேன்மை பாராட்டி யிருக்கவேணும்? என்கிறாள்.

தாமுற்ற பேதெல்லாம் என்றவிடத்தில், ஸுக்ரீவனைச் சரணமடைந்தது ஸமுத்ரராஜனைச் சரணமடைந்தது
முதலிய மற்றுள்ள இழிவான செயல்களும் அநுஸந்திக்கத்தக்கவை. பெண்ணாக்கையாப்புண்டு என்றவிடத்து,
“ஒருபெண் கொடியாலே கண்டுண்டு“ என்ற வியாக்கியான ஸூக்தி நோக்கத்தக்கது.

தமக்கு மேற்பட்டார் ஒருவர் இல்லாதபடி
பரம புருஷராய் இருக்கும்வரை
ஒரு மானிடப் பெண்ணான நீ இப்படி எல்லாம்
சொல்வது தகுதியோ –
அவருடைய மேன்மை எங்கே
உன்னுடைய கீழ்மை எங்கே
இதை ஆராயாமல் நீ அப் பெரியவரைப் பழிப்பது சிறிதும் பொருந்தாது
என்று சிலர் கூற
அதுக்கு மறுமாற்றம் அருளுகிறாள்
அப்பெரியவர் ராமாவதாரத்தில் பட்ட பாடுகள் தெரியாதா
உண்ணாது உறங்காது ஒலி கடலை யூடறுத்துபெண்ணாக்கை யாப்புண்டு –
ஒரு பெண் பெண்டாட்டியின் உடம்பிலே ஆசை கொண்டு
அந்த ஆசாபாச பாரவச்யத்தாலே
ஊணும் இன்றி உறக்கமும் இன்றி
அவளுடைய பிரிவுக்கு நோவு பட்டு
வானரப் படைகளைத் துணை கொண்டு கடலிலே அணை கட்டுகை யாகிற
அரும் தொழிலைச் செய்து இப்படிகளாலே —

தாமுற்றபேதெல்லாம்-
தாம் வெளிப்படுத்திய பைத்தியத்தை -பேது -பைத்தியம் –
சுக்ரீவனை சரணம் அடைந்து
சமுத்திர ராஜனை சரணம் அடைந்தது -போன்ற செயல்கள் உண்டே
ஸ்ரீ ராமாயணம் நடையாடும் தேசத்திலே அறியாதார் உண்டோ
அநித்ரைஸ் சத்தம் ராம -என்றும்
ந மாம்சம் ராகவோ புங்க்தே ந சாபி மது சேவதே-என்றும் சொல்லப் பட்டது இ றே
பரம புருஷராய் இருப்பவர் ஒரு பெண்ணுக்காக அப்பாடு படலாமா
அது அவருடைய மேன்மைக்குத் தகுமா
அது தகும் ஆகில் –

பெண் ஆக்கை ஆப்புண்டு
ஒரு பெண் கொடியாலே கட்டுண்டு –

திண்ணார் மதிள் சூழ் திருவரங்கச் செல்வனார்
எண்ணாதே நம்முடைய நன்மைகளே எண்ணுவரே –
எனக்காகவும் அவர் அப்பாடு பட்டிருக்க வேண்டாவோ
என் இடத்தில் மாத்ரமேயோ அவர் மேன்மை காட்டி இருக்க வேணும் –
நன்மை -மேன்மை-

————————————————————————————————–

பாசி தூரத்துக் கிடந்த பார் மகட்குப் பண்டு ஒரு நாள்
மாசுடம்பில் நீர் வாரா மானமிலாப் பன்றியாம்
தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார்
பேசியிருப்பனகள் பேர்க்கவும் பேராதே–11-8-

பதவுரை

பண்டு ஒரு நாள்–முன்னொரு காலத்தில்
பாசி தூர்த்து கிடந்த–பாசி படர்ந்து கிடந்த
பார் மகட்டு–ஸ்ரீ பூமிப் பிராட்டிக்காக
மாசு உடம்பில் நீர் வாரா மானம் இலா பன்றி ஆம்–அழுக்கேறின சரீரத்தில் ஜலம் ஒழுகா நிற்கும்
ஹேயமான தொரு வராஹ வடிவு கொண்ட
தேசு உடைய தேவர்–தேஜஸ்ஸை யுடைய கடவுளாகிய
திரு அரங்கம் செல்வனார்–ஸ்ரீரங்கநாதன்
பேசி இருப்பனகள்–(முன்பு)சொல்லி யிருக்கும் பேச்சுக்களானவை
பேர்க்கவும் பேரா–(நெஞ்சில்நின்றும்) பேர்க்கப் பார்த்தாலும் பேர மாட்டாதவை.

ஸ்ரீதேவிக்காகப்பட்ட பாட்டைச் சொன்னாள் கீழ்ப்பாட்டில், பூமிப் பிராட்டிக்காகப் பட்டபாட்டைச் சொல்லுகிறாள் இப்பாட்டில்.

ஹிரண்யக்சிபுவின் உடன்பிறந்தவனான ஹிரண்யாக்ஷனென்னும் கொடிய அசுரராஜன் தன்வலிமையாற்
பூமியைப் பாயாகச் சுருட்டி யெடுத்துக்கொண்டு கடலில் மூழ்கிச்சென்றபோது, தேவர் முனிவர் முதலியேரது
வேண்டுகோளினால் திருமால் நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத மஹாவராஹரூபமாகத் திருவவதரித்துக் கடலினுட்புக்கு
அவ்வசுரனை நாடிக்கண்டுபொருது கோட்டினாற்குத்திக்கொன்று, பாதாளலோகத்தைச் சார்ந்திருந்த பூமியைக்
கோட்டினாற்குத்தி அங்குநின்று எடுத்துக்கொண்டுவந்து பழையபடி விரித்தருளினன் என்ற வரலாறு அறியத்தக்கது.

இப்பொழுது நடக்கிற ஸ்வேதவராஹகல்பத்துக்கு முந்தின பாத். மகல்பத்தைப்பற்றிய பிரளத்தின் இறுதியில்
ஸ்ரீமந்நாராயணன் ஏகார்ணவமான பிரளயஜலத்தில் முழுகியிருந்த பூமியை மேலேயெடுக்க நினைத்து
ஸ்ரீவராஹாவதாரத்தைச் செய்தருளிக் கோட்டுநுனியாற் பூமியை எடுத்துவந்தன்னென்ற வரலாறும் உண்டு.

பூமிப்பிராட்டியானவள் வெகுகாலம் ஜலத்துக்குள்ளே முழுகிக்கிடந்தபடியால் பாசிபடர்நது கிடந்தமைபற்றிப்
“பாசிதூர்த்துக்கிடந்த“ என்று பூமிப்பிராட்டிபக்கலிலே அமர்ந்த ஆசையினால் ஒருஸரீரத்தைப் பரிக்ரஹித்தவன்,
அழுக்குடம்பினரான நாமெல்லாருங்கூட அருவருக்கும்படியாய் அத்யந்தஹேயமான பன்றிவடிவத்தையோ பரிக்ரஹிக்கவேணும்?
‘உடம்பு அழுக்கேறிற்று‘ என்று லஜ்ஜிக்கவுமறியாத ஜன்மத்தையன்றோ ஏறிட்டுக்கொண்டது

நீர்வாருதல் – நீர்பெருகுதல் மானமிலா என்றவிடத்து வியாக்கியானம்.
“மாயாமருகத்தைக் கண்டு அல்லாதம்ருகங்கள் மோந்துபார்த்து வெருவியோடினவிறே அப்படியன்றிக்கே
ஸஜாதீயங்கள் மோந்துபார்த்து ‘நம்இனம்‘ என்று மருவும்படியாயாய்த்து, ஈஸ்வராபிமாநம் வாஸனையோடே போனபடி.“

பன்றியாந்தேசுடையதேவர் – அஸ்மாத்திகளுக்குப்போலே கர்மமடியாக நேர்ந்த ஜன்மமன்றே,
ஸ்வேச்சையாலே ஏறிட்டுக்கொண்ட ஜன்மமாகையாலே தேஜஸ்ஸு பொலியநிற்குமென்கிறது.
“நிலைவரம்பில பலபிறப்பாய் ஒளிவருமுழுநலம்“ என்ற திருவாய்மொழியையுங் காண்க.

ஆண்டாள் தன்னுடையப்ர பணரோஷத்தின்மிகுதியினால் “மானமிலாப் பன்றி“ என்னச் செய்தேயும்,
ஆஸுரப்ரக்ருதிகளாய்ப் பழிக்குமவர்கட்கு இடமறும்படி தேசுடையதேவர் என்று உடனே சொல்லிவைக்கிறாள்.

(பேசியிருப்பனகள் இத்யாதி) ஸ்ரீவராஹநாயனார் பேசியிருக்கும்பேச்சுக் களாவன –
(ஸ்திதே மநஸி ஸுஸ்வஸ்தே சரீரேஸதி யோநர -தாது ஸாம்யேஸ்திதே ஸ்மர்த்தா விச்வரூபஞ்ச மாமஜம்,
ததஸ்தம் ம்ரியமாணம்து காஷ்ட பாஷாணஸந்நிபம், அஹம ஸ்மராமி மத்பக்தம்நயாமிபரமாம் கதிம்.)
என்றவை வராஹசரமச்லோகமிறே இவை. ஸரீரம் மனம்முதலியவை பாங்காயிருக்கும்போது என்னை ஒருவன்
ஸமரிப்பானாகில் பின்பு அவன் மூச்சடங்கி முடியுமளவானபோது அவனை நான் ஸ்மரித்திருந்து
நற்கதியை நண்ணுவிப்பேன் – என்றிறே சொல்லிவைத்திருக்கிறார். அப்பேச்சுக்கள் தன்னளவில் பலிக்கக் காணாமையாலே வருத்தம்.

பேசியிருப்பனகள் என்றவிடத்திற்கு வியாக்கியானத்தில் அருளிச்செய்யும் பொருள் வேறாபும் சீரியதாயுமிருக்கும்.

(செல்வனார்பேசியிருப்பனகள்.) ‘செல்வர் சொல்லுக்கஞசாரே‘ விபூதி விஷயமாகவும் ஆச்ரிதர் விஷயமாகவும்
சொல்லியிருக்குமவை ணெணுதல்,
அன்றிக்கே, நின்னைப்பிரியேன், பிரியிலுமாற்றேன்‘ என்றாற்போலே கூடியிருந்தபோது சொன்னவையென்னுதல்

(போர்க்கவும் பேராவே) இவற்றைமறந்து பிழைக்க வென்றுபார்த்தால் எண்ணாதே தம்முடைய நன்மைகளேயெண்ணி
அவர் நம்மை மறந்தாலும் ‘கொடியவென்னெஞ்சமவனென்றே) கிடக்கும், என்னும்படியே
நம்மால் மறந்து பிழைக்கப் போகிறதில்லை யென்கிறாள்.“ என்பது வியாக்கியானஸூக்தி.

தேசு – தேஜஸ் என்றவடசொற்சிதைவு.

ஸ்ரீ தேவிக்காக பட்ட பாட்டைச் சொன்னாள் கீழ்ப் பாட்டில்
பூமிப் பிராட்டிக்காக பட்ட பாட்டைச் சொல்லுகிறாள் இதில்
இப்பொழுது நடக்கிற ஸ்வேத வராஹ கல்பத்துக்கு முன்பு
பாத்ம கல்பத்தைப் பற்றிய பிரளயத்தின் இறுதியில்
ஸ்ரீ வராஹ அவதாரம் செய்து அருளினான் –
பாசி தூரத்துக் கிடந்த பார் மகட்குப் பண்டு ஒரு நாள்
பூமிப் பிராட்டியானவள் வெகு காலத்துக்கு
ஜலத்துக்கு உள்ளே முழுகிக் கிடந்த படியால்
பாசி தூரத்து கிடந்த பார்மகள் -என்கிறாள்

மாசுடம்பில் நீர் வாரா மானமிலாப் பன்றியாம் –
ஒரு பூமிப் பிராட்டி பக்கலில் அமைந்த ஆசையினால்
ஒரு சரீரத்தை பரிஹரித்தவன்
அழுக்கு உடம்பினரான நாம் எல்லாம் கூட அருவருக்கும் படியாய்
அத்யந்த ஹேயமான பன்றி வடிவத்தையோ பரிக்ரஹிக்க வேணும்
உடம்பு அழுக்கு ஏறிற்று என்று லஜ்ஜிக்கவும் அறியாத
ஜென்மத்தை அன்றோ ஏறிட்டுக் கொண்டது

நீர் வாருதல் -நீர் பெருகுதல்

மானமிலா –
மாயா மிருகத்தைக் கண்டு அல்லாத மிருகங்கள் மோந்து பார்த்து
வெருவி ஓடின வி றே -அப்படி அன்றிக்கே
சஜாதீயங்கள் மோந்து பார்த்தாலும் நம் இனம் என்று
மருவும் படி யாய்த்து
ஈஸ்வர அபிமானம் வாசனையோடு போந்த படி —
உபமானம் இல்லை
அபிமானம் இல்லை –

தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார் –
ஆண்டாள் தன்னுடைய ப்ரணய ரோஷ மிகுதியினால்
மானமிலா பன்றியாய் என்று அருளிச் செய்தேயும்
அசூர பிரக்ருதிகள் பழிக்குமவர்களுக்கு இடம் அறும் படி
தேசுடைய தேவர் -என்கிறாள் –

பேசியிருப்பனகள் பேர்க்கவும் பேராதே-
ஸ்ரீ வராஹ நாயனார் அருளிய சரம ச்லோஹம்
ஸ்திதே மனசே ஸூஸ்வச்தே–அஹம் ச்மாராமி மத பக்தம் நயாமி பரமாம் கதம் –
அப்பேச்சுக்கள் தன்னளவில் பலிக்கக் காணாமையாலே வருத்தம்

செல்வனார் பேசி இருப்பனகள்
செல்வர் சொல்லுக்கு அஞ்சாரே
விபூதி விஷயமாகவும்
ஆஸ்ரிதர் விஷயமாகவும்
சொல்லி இருக்குமாவை -என்னுதல்
அன்றிக்கே
நின்னைப் பிரியேன் -பிரியிலும் ஆற்றேன் -என்றால் போலே கூடி இருந்த போது சொன்னவை என்னுதல்-

பேர்க்கவும் பேராவே –
இவற்றை மறந்து பிழைக்க என்று பார்த்தால் நெஞ்சில் நின்று பேர்க்கவும் பேருகிறது இல்லை –
தாமுற்ற பேது எல்லாம் எண்ணாதே
தம்முடைய நன்மைகளையே எண்ணி
அவர் நம்மை மறந்தாலும்
கொடிய என் நெஞ்சம் அவன் என்றே கிடக்குமே -என்னும்படி
நம்மால் மறந்து பிழைக்கப் போகிறது இல்லை –

தேசு -தேஜஸ் —

————————————————————————————————–

கண்ணாலம் கோடித்து கன்னி தன்னைக் கைபிடிப்பான்
திண்ணார்ந்து இருந்த சிசுபாலன் தேசு அழிந்து
அண்ணாந்து இருக்கவே ஆங்கு அவளைக் கை பிடித்து
பெண்ணாளன் பேணுமூர் பேரும் அரங்கமே–11-9-

பதவுரை

கண்ணாலம் கோடித்து–கல்யாண ஸந்நாஹங்களை யெல்லாம் பரிஷ்காரமாகச் செய்து முடித்து
கன்னி தன்னை–கல்யாணப் பெண்ணான ருக்மிணிப் பிராட்டியை
கை பிடிப்பான்–பாணி க்ரஹணம் செய்து கொள்ளப் போவதாக
திண் ஆர்ந்து இருந்த–ஸம்சயமில்லாமல் நிச்சயமாக நினைத்திருந்த
சிசுபாலன்–சிசுபாலனானவன்
தேசு அழிந்து–அவமானப்பட்டு
அண்ணாந்திருக்க ஆங்கு–ஆகாசத்தை நோக்கிக் கிடக்கும் படியாக நேர்ந்த அச் சமயத்திலே
அவளை–அந்த ருக்மிணிப் பிராட்டியை
கை பிடித்த–பாணி க்ரஹணம் செய்தருளினவனாய்
பெண்ணாளன்–பெண்பிறந்தார்க் கெல்லாம் துணைவன் என்று ப்ரஹித்தனான பெருமான்
பேணும்–விரும்பி எழுந்தருளி யிருக்கிற
ஊர்–திவ்ய தேசத்தினுடைய
பேரும்–திரு நாமமும்
அரங்கம்–திருவரங்கமாம்.

ருக்மிணிப்பிராட்டியின் ப்ரதிபந்தகங்களைப்போக்கி அவளுக்கு உதவினபடியை அநுஸந்தித்து,
‘அவளொருத்திக்கு உதவினதானது பெண்பிறந்தாரெல்லார்க்கும் உதவினபடியன்றோ‘ என்று அவ்வழியாலே தரிக்கிறாள்.
அர்ஜுநனொருவனை நோக்கிக் கண்ணபிரானருளிச்செய்த வார்த்தையை நாமெல்லாரும் விஸவஸித்திருக்கிறோமிறே, அதுபோல்.

ருக்மிணியைக் கைப்பிடித்த வரலாறு -விதர்ப்பதேஸத்தில் குண்டினமென்கிறபட்டணத்தில் பீஷ்மகனென்கிற அரசனுக்கு
ருக்மி என்கிற பிள்ளையும், ருக்மிணி என்கிற பெண்ணுமிருந்தனர். அந்த ருக்மிணியானவள் ஸாக்ஷாத் ஸ்ரீமஹாலக்ஷ்மியின் அவதாரம்.
அவளுக்கு யுக்த வயது வந்தவுடன் க்ருஷ்ணன் சென்று இப்பெண்ணை எனக்கு விவாஹஞ் செய்துகொடுக்கவேணுமென்று கேட்க,
ருக்மியென்பவன் அவனைச் சேதிதேசத்தரசனான ஸிஸுபாலனுக்குக் கொடுக்க விரும்பியவனாதலால்
கிருஷ்ணனுடைய விருப்பத்திற்கு உடன்படாதொழிந்தான். சிலநாள் கழிந்தபின் அந்த ருக்மிணியின் கல்யாணத்துக்காக
ஸ்வயம்வரம் கோடித்து ஸகலதேஸத்து அரசர்களையும் ருக்மி வரவழைத்தான். அவர்கள் வந்து சேர்ந்தவுடனே
க்ருஷ்ணனும் பலராமாதிகளைக்கூட்டிக்கொண்டு அப்பட்டணத்துக்குப்போய்க் கல்யாணத்துக்கு முதல்நாள்
அந்தருக்மிணியை மாயமாய் அபஹரித்துக்கொண்டு வந்துவிட்டான். பின்பு அங்குள்ள ‘தந்தவக்த்ரன்‘ முதலிய
பல அரசர்கள் போர் செய்ய எதிர்த்துவர, அவர்களைப்பலராமனும் கண்ணபிரானும் முதுகுகாட்டியோடும்படி செய்துவிட்டனர்.
பிறகு ருக்மிணிப்பிராட்டியின் தமையனான ருக்மியானவன் “இஃது என்ன அநியாயமான காரியமாயிருக்கிறதே“ என்று
எதிர்பொருது மீட்பதாக நினைத்துவந்து கண்ணனைத்தகைய, அப்போது ஸ்ரீக்ருஷ்ணன், இவனைக்கொன்றால் ருக்மிணி மனம்
வருந்துவாள் என்று அவனைப்பிடித்துத் தனது தேர்க்காலிலேகட்டி அம்பாலே அவனது துதலையைச் சிரைத்திட்டு மானபங்கஞ்செய்துவிட்டுப்
பின்பு ருக்மிணியை விதிபூர்வகமாகக் கல்யாணஞ் செய்து கொண்டான் – என்பதாம். இவ்வரலாற்றி இன்னுஞ்சில விஸ்தாரங்களுமுண்டு.

ருக்மிணிப்பிராட்டியொருத்திக்கு உதவினதைப் பெண்பிறந்தார்க்கெலாமுதவினதுபோல் நினைத்துப் பெண்ணாளன் என்கிறாளென்ப.

பேரும்அரங்கமே – பேரும் என்கிற உம்மைக்குக் கருத்தென் எனில், அவனும் பெண்ணாளன், அவனுடைய ஊரின் பேரும் அரங்கம் -,
அதாவது -அரங்கமென்றால் கூத்தாடுமிடத்துக்குப் பெயர், ஸ்ரீரங்கமென்றும் திருவரங்கமென்றுமுள்ள ப்ரஸித்தியால்,
பிராட்டி கூத்தாடுமிடம் அரங்கம் என்று கூறப்படுதலால், அவனும் பெண்களை வாழவிப்பவன்,
அவனிருக்குமூரும் பெண்கள் களித்து வாழுமிடமாய்த்து, இனி நமக்கு என்ன குறையென்கை.

ருக்மிணி தேவியின் பிரதி பந்தங்களைப் போக்கி
அவளுக்கு உதவின படியை அனுசந்தித்து
அவள் ஒருத்திக்கு உதவியதானது
பெண் பிறந்தார் எல்லாருக்கும் உதவின படி அன்றோ
என்று அவ வழியாலே தரிக்கிறாள் –
இதனால் பெண்ணாளன் -என்கிறாள்
அர்ஜுனன் ஒருவனை நோக்கி கண்ணபிரான் அருளிச் செய்த வார்த்தை யை
நாம் எல்லாரும் விச்வசித்து இருக்கிறோம் இ றே -அது போலே –
பேரும் -உம்மைத் தொகைக்கு
அவனும் பெண்ணாளன்
அவனுடைய ஊரின் பேரும் அரங்கம் -கூத்தாடும் இடம்
பிராட்டி கூத்தாடும் இடம் ஸ்ரீ ரெங்கம்
அவனும் பெண்களை வாழ்விப்பான்
அவன் இருக்கும் ஊரும் பெண்கள் களித்து வாழும் இடம்
இனி நமக்கு என்ன குறை -என்கை —

————————————————————————————————-
செம்மை யுடைய திருவரங்கர் தாம் பணித்த
மெய்ம்மைப் பெரு வார்த்தை விட்டு சித்தர் கேட்டிருப்பார்
தம்மை யுகப்பாரைத் தாம் உகப்பர் என்னும் சொல்
தம்மிடையே பொய்யானால் சாதிப்பார் ஆர் இனியே —11-10-

பதவுரை

செம்மை உடைய–(மன மொழி மெய்கள் மூன்றும் ஒருபடிப் பட்டிருக்கை யாகிற) செம்மைக் குணமுடைய
திரு அரங்கர்–ஸ்ரீரஙகநாதர்
தாம் பணித்த–(முன்பு) தம் வாயாலே அருளிச் செய்த
மெய்ம்மை–ஸத்யமானதும்
பெரு–பெருமை பொருந்தியதுமான
வார்த்தை–சரம ச்லோக ரூபமான வார்த்தையை
விட்டு சித்தர்–(என் திருத் தகப்பனாரான) பெரியாழ்வார்
கேட்டு இருப்பர்–(குரு முகமாகக்) கேட்டுற (அதில் சொல்லி யிருக்கிறபடி) நிர்ப் பரராயிப்பர்
தம்மை உகப்பாரை தாம் உகப்பர் என்னும் சொல்–“தம்மை விரும்பினவர்களைத் தாமும் விரும்புவர்“ என்ற பழமொழியனது
தம் இடையே–தம்மிடத்திலேயே
பொய் ஆனால்–பொய்யாய்ப் போய் விட்டால்
இனி–அதற்கு மேல்
சாதிப்பார் ஆர்–(அவர் தம்தை) நியமிப்பார் ஆர்? (யாருமில்லை)

நெஞ்சில் நினைப்பது ஒன்றாய் வாயாற் சொல்வது வேறொன்றாய், பின்பு அநுஷ்டிப்பது மற்றொன்றாயிருக்கும்
செவ்வைக்கேடர்களை ஒருங்கவிடுக்கை மநோவாக்காயங்கள் மூன்றும் ஒருபடிப்பட்டிருக்குமவராய் அக்குணம் விளங்குமாறு
கோயிலிலே கண்வளர்ந்தருளுமவரான பெருமான், முன்பு அர்ஜுநனை வ்யாஜீகரித்து அவனுடைய தேர்த்தட்டிலே நின்றுகொண்டு,
யதார்த்தமுமாய் ஸ்லாக்யமுமான ஒருவார்த்தையை அருளிச்செய்தார்,
அதாவது -“உன்காரியங்களை யெல்லாம் குறையறத் தலைக்கட்டிவைக்க நானிருக்கிறேன்,
நீ ஒன்றுக்கும் கவலைப்பட வேண்டியத்தில்லை, உனது ஸகலபாரங்களையும் என்பக்கல் ஸமர்ப்பித்து நிர்ப்பரனாய் இரு“
என்று உரைத்த சரமஸ்லோகம். அவ்வார்த்தையைக்கேட்டு அதன்படியே நிஷ்டையுடையராயிருப்பர் பெரியாழ்வார் என்கிறாள் முன்னடிகளில்,
அவருடைய மகளான தனக்கும் அந்த அத்யவஸாயமே புகல் என்று காட்டியவாறு.

(தம்மையுகப்பாரை இத்யாதி) நாட்டில் ஒருவன் ஒருவனைநோக்கி “நீ ஆர்க்கு நல்லவன்?“ என்றால்,
அதற்கு அவன் “நான் நல்லார்க்கு நல்லன்“ என்று மறுமொழி கூறுவது ஸார்வலௌகிகம்.
“நல்லார்க்குத் நீயாருண்டோ?“ என்றும் ஒரு உலகநீதியுண்டு. இந்த உலகவழக்குச்சொல் அவ்வெம்பெருமானிடத்துப் பொய்யாகப் போய்விட்டால்
“ஏன் நீர் இப்படி அநியாயம் பண்ணுகிறீர்?“ என்று அவரைக் கேட்பதற்கும் “இனிநீர் இன்னபடி வர்த்திக்கவேணும்“ போலே,
* நெறியெல்லாம் எடுத்துரைத்தவனே நன்னெறிக்கு மாறுபாடாக நடக்காகில் நாமோ அவனுக்கு நெறியுரைப்பது.?
“மாமேகம் ஸரணம் வ்ரஜ“ என்று அவர் நமக்கு விதித்த காரியத்தை நாம் குறையறச்செய்து தலைக்கட்டினோம்.
“மோக்ஷயிஷ்யாமி“ என்றும் “மாஸுச“ என்றும் ஸவக்ருத்யமாக அவர்சொல்லிற்றை அவர் நிறைவேற்றாதொழியில் நாம் என்செய்வது? என்கிறாள் போலும்.

தமிழ்நெறிக்கிணங்கச் “சாதிப்பார்“ என்று கிடக்கிறது. நியமித்தல். இங்கே வியாக்கியான ஸ்ரீஸூக்தி-
“உம்மையுகந்தவனை நீரும் உகக்கவேணும் என்று கஸையெடுத்துக் கற்பிக்கவோ.“
(இவ்விடத்தில் அச்சுப்பிரதிகளில் “கஸையெடுத்து உகப்பிக்கவோ“ என்றிருப்பது பிழையோயம்.
“கஸையடித்துக் கற்பிக்கவோ?“ என்றும் பாடமுண்டு. கஜையாவது – மாடுகுதிரை முதலியவற்றைத் துரத்துங் கருவியான சாட்டை.
தாடநதர்ஜநாதிகள் பண்ணி மாணாக்கர்களுக்குக் கற்பிக்குமாபோலே எம்பெருமானுக்குக் கற்பிக்க யாரால் முடியும் என்றவாறு.

கண்ணபிரான் எந்தத்தேரில் இருந்து கொண்டு கீதை அருளிச்செய்தன்னோ அந்தத்தேர் பெரியதிருவடியின் அபராவதாரமென்பது ஸம்ப்ரதாயம்,
விட்டுசித்தரும் பெரியதிருவடியின் அபராவதாரபூதர், ஆகவே விட்டுசித்தர் அப்போது தேராக இருந்துகொண்டு
கீதையைக் கேட்டிருப்பர் என்கிற கருத்துப்பட இப்பாசுரத்தில் இரண்டாமடி அமைந்திருக்கிற அழகு காண்மின்.

செம்மை யுடைய திருவரங்கர் தாம் பணித்த –
நெஞ்சில் நினைப்பது ஒன்றாய்
வாயால் சொல்வது வேறு ஒன்றாய்
பிறகு அனுஷ்டிப்பது மற்று ஒன்றாய் இருக்கும்
செவ்வைக் கேடர்களை ஒருங்க விடுகைக்காக
மநோ வாக் காயங்கள் மூன்றும் ஒரு படிப் பட்டு இருக்குமவராய்
அக்குணம் விளங்குமாறு கோயிலிலே கண் வளர்ந்து அருளுமவரான பெருமாள் –

மெய்ம்மைப் பெரு வார்த்தை-
முன்பு அர்ஜுனனை வ்யாஜீகரித்து
அவனுடைய தேர் தட்டிலே நின்று கொண்டு
யதார்த்தமாய் ஸ்லாக்கியமான ஒரு வார்த்தையை அருளிச் செய்தார்
ஸ்ரீ கிருஷ்ண சரம ச்லோஹம்
சர்வ தரமான் பரித்யஜ்ய –மோஷயிஷ்யாமி –

விட்டு சித்தர் கேட்டிருப்பார் –
அவார்த்தையை கேட்டு
அதன் படியே நிஷ்டை யுடையராய் -இருப்பார் பெரியாழ்வார்

அவருடைய மகளான தனக்கும் அந்த அத்யாவசமே புகல் என்று காட்டியவாறு –

தம்மை யுகப்பாரைத் தாம் உகப்பர் என்னும் சொல் -தம்மிடையே பொய்யானால் சாதிப்பார் ஆர் இனியே –
நாட்டில் நல்லாருக்கு நல்லன் உண்டு
நல்லாருக்கு தீயர் உண்டோ -உலக நீதி
இந்த சொல் அவன் இடத்தில் பொய்யாகப் போய் விட்டால் கேட்பார் உண்டோ
வேலியே பயிரை மேய்ந்தால் —
நெறி எல்லாம் எடுத்து உரைத்தவனே —
நன்னெறிக்கு மாறுபட்டு நடக்குமாகில் -நாமோ அவனுக்கு நெறி உரைப்பது –
மாம் ஏகம் சரணம் வ்ரஜ –என்று அவன் விதித்ததை நாம்
குறைய செய்து தலைக் கட்டினோம்
மோஷயிஷ்யாமி என்றும்
மாசுச -என்றும்
ஸ்வ க்ருத்யமாக அவர் சொல்லிற்றை நிறைவேற்றாது ஒழியில் நாம் செய்வது ஏது
சாசிப்பார் -தமிழ் நெறிக்கு இணங்க சாதிப்பார்
சாசித்தல் நியமித்தல்
உம்மை உகந்தவனை நீரும் உகக்க வேணும் -என்று கசை எடுத்துக் கற்ப்பிக்கவோ
கசை எடுத்து உகப்பிக்கவோ -பிழை
கசை சாட்டை
கண்ணபிரான் எந்தத் தேரில் இருந்து கொண்டு ஸ்ரீ கீதை அருளிச் செய்தனனோ
அந்த தேவர் பெரிய திருவடியின் அபர அவதாரம் எனபது சம்ப்ரதாயம்
விட்டு சித்தரும் பெரிய திருவடியின் அபராவதார பூதர்
ஆகவே விட்டு சித்தர் அப்போதே தேராக இருந்து கொண்டு
ஸ்ரீ கீதையை கேட்டு இருப்பார்-

———————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே -அண்ணங்கராச்சார்யர்  ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ நாச்சியார் திரு மொழி – பத்தாவது திரு மொழி – -ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை -ஸ்ரீ உ. வே. P.B.A.. ஸ்வாமிகள்–

September 9, 2014

பிரவேசம் –

இத் திருமொழியும்
கீழ்த் திருமொழியின் சைலியோடு ஒத்து இருக்கும்

வர்ஷா காலத்திலேயே எம்பெருமான் உடைய திரு யுருவை
நினைப்பூட்டிக் கொண்டு
வந்து தோன்றின சில புஷ்ப விசேஷங்களைக் கண்டு
ஆற்றாதாளாய்
சில பாசுரங்கள் அருளிச் செய்கிறாள்

அப்படி அருளிச் செய்யும் பொழுது
இனி நாம் எவ் வழியாலே உயிர் தரிக்கப் பெறுவது
பண்டு நமக்கு அனுகூலமாய் இருந்த வஸ்துக்களும்
இப்போது பிரதிகூலங்கலளாய் விட்டனவே –

நத்யஜேயம் கதஞ்சன -என்று
எப்போதும் கை விடுவது இல்லை என்று பிரதிஞ்ஞை பண்ணித் தந்த
பெருமானும் கை விட்டு ஒழிந்தானே

இனி நாம் ஜீவிப்பது எங்கனம் -என்று சிந்திக்கையில்
நமக்கு
பெரியாழ்வார் வயிற்று பிறப்பு கிடைத்து இருக்கையாலே
அது கொண்டு நாம் ஜீவிக்க பிராப்தமாய் இருக்க
இப்படி சிந்திப்பது என் -என்று

ஒருவாறு சிந்தை நீங்கித் தரிக்கும் உபாயம் அறிந்து
அது தன்னைச் சொல்லி முடிக்கிறாள்
இந்த திருமொழியை-

———————————————————————————

கார்க்கோடல் பூக்காள் கார்க்கடல் வண்ணன் எம்மேல் உம்மைப்
போர்க் கோலம் செய்து போர விடுத்து அவன் எங்குற்றான்
ஆர்க்கோ வினி நாம் பூசல் இடுவது அணி துழாய்த்
தார்க்கோடும் நெஞ்சம் தன்னைப் படைக்க வல்லேன் அந்தோ–10-1-

பதவுரை

கார் கோடல் பூங்காள்!–கறுத்த காந்தள் பூக்களே!
உம்மை–உங்களை
போர் கோலம் செய்து–யுத்தத்திற்கு உசிதமாக அலங்கரித்து
எம் மேல்–என் மேலே
போர விடுத்தவன்–அனுப்பினவானான
கார் கடல் வண்ணன்–கறுத்த கடல் போன்ற வடிவை யுடையனான கண்ணபிரான்
எங்குற்றான்–எங்கே யிருக்கிறான்?
நாம்–(உங்களால் மிகவும் நலிவுபட்ட) நான்
இனி–இனி மேல்
ஆர்க்கு–யாரிடத்தில் போய்
பூசல் இடுவதோ–முறை யிட்டுக் கொள்வதோ (அறியேன்)
அணி–அழகிய
துழாய் தார்க்கு–திருத் துழாய் மாலையை ஆசைப்பட்டு
ஓடும் நெஞ்சம் தன்னை படைக்க வல்லேன் அந்தோ!–ஓடுகின்ற நெஞ்சை யுடையவளா யிரா நின்றேனே! ஐயோ!

கோடல்பூக்கள் என்று ஒரு புஷ்பஜாதி உண்டு, அது காந்தள்பூ என்றுஞ் சொல்லப்படும்.
அப்புஷ்வங்கள் கார்காலத்திலே மிகுதியாக மலரும். அவை விரஹகாலத்திலே காமுகர்கட்கு மிகவும் உத்தீபகங்களாயிருக்கும்;
பலகைப்பட்ட நிறங்களையுடைய அப்புஷ்பஜாதியில் கரியநிறமுள்ள பூக்களும் உண்டு.
அவை எம்பெருமானுடைய திருநிறத்துக்கு ஸ்மாரகங்களாய்க்கொண்டு ஆண்டாளை விஸேஷமாக வருத்துகின்றமையால்
‘இம்மலர்களை எம்பெருமான் படைத்தது நம்மைக் கொலைசெய்வதற்காகவே போலும்‘ என்ற அறுதியிட்டு
அம்மலர்களையே நோக்கி கூறுகின்றாள்; “ஓ கோடல்பூக்களே! என்னைக் கொலை செய்வதற்கென்று
உங்களை அழகாகக் கோடித்து அனுப்பின மஹாநுபாவன் எங்கிருக்கிறான்?“ என வினவுகின்றாள் முன்னடிகளில்.

உண்மையில் அப்புஷ்பங்கள் அசேதநங்களாகையாலே மறுமொழி ஒன்றும் சொல்லாதிருக்கவே,
‘அந்தோ‘ நம்மை இந்தப்பூக்களும் லக்ஷியம்பண்ணுகின்றன வில்லையே; அந்த எம்பெருமானோ வரமாட்டேனென்கிறான்,
இவையோ நம்மோடு பேசுகின்றனவில்லை; உசாத்துணை ஆகக்கூடியவர்களும் யாருமில்லை,
இனி நாம் ஆர்வீட்டுவாசலிலேபோய் நம் துயரை முறையிட்டு ஆறுவது!‘ என்கிறாள் மூன்றாமடியில்.

எம்பெருமானுடைய விபூதியடங்கலும் நம்மைநலிவதற்கு அவனுக்குத் துணையாயிருப்பதுபோல
நம்மைச் சேர்ந்த வஸ்துக்களாவது நமக்குத் துணைநிற்குமோவென்று பார்த்தாலோ அதுவுமில்லை;
நமக்கு விதேயமாயிருக்கக் கடவதான நெஞ்சும் நம்மை உதறித்தள்ளிவிட்டு அவனுடைய திருத்துழாய் மாலையை நாடி ஓடாநின்றது,
இப்படி எல்லாம் பகையாகப் பெற்றோயே! இஃது என்ன கஷ்டகாலம்! என்கிறாள் ஈற்றடியில்.
இதனால், எம்பெருமானுடைய விஸ்லேஷம் தனக்கு அஸஹ்யமாயிருக்கிறப்படியும்,
அவ்வளவிலும் தனது திருவுள்ளம் பகவத்விஷயத்திலேயே ஈடுபட்டுச் செல்லுகிறபடியையும் அருளிச் செய்தாளாய்ந்தது.

“கார்க்கோடல்பூக்காள்“ என்பதற்கு – கார்காலத்திலே வந்து தோன்றுகின்ற கோடல்பூக்களே! என்றும் கறுத்த கோடல்பூக்களே! என்றும்,
பெருத்த கோடல்பூக்களே! என்றும் மூன்றுவகையாகப் பொருள் கூறுவர்.
உம்மைப் போர்க்கோலஞ்செய்து என்மேல் போரவிடுத்த கார்க்கடல்வண்ணன் எங்குற்றான்? என்று அந்வயித்துக்கொள்க.
ஒவ்வொரு பதார்த்தங்களுக்கும் ரூபநாமங்களை ஏற்படுத்தினவன் எம்பெருமான் என்ற நூற்கொள்கைப்படி இம்மலர்கட்கு
நிறங்கொடுத்தவன் எம்பெருமானாதலாலும், அந்த நிறம் இப்போது இவளுடைய ஹிம்ஸைக்கு உறுப்பாயிருப்பதால்
யுத்தஞ்செய்வதற்கு ஏற்ற கோலஞ்செய்துவிட்டது போன்றிருப்பதாலும் “உம்மைப் போர்க்கோலஞ்செய்து போரவிடுத்தவன்“ என்றாள்.
இந்திரஜித்தைக் கொல்வதற்கு இராமபிரான் இளையபெருமானை அலங்கரித்து அனுப்பினதுபோலத் தன்மை முடிப்பதற்காக
இவற்றை நிறமூட்டியனுப்பினான் என்றிருக்கிறான் போலும். “போதா“ என்பது போர என மருவிற்று போரவிடுத்தல் – அனுப்புதல்.

உங்களை அனுப்பினவன் எங்கே இருக்கிறான்? என்று கேட்பதற்குக் கருத்து யாதெனில்;
ஸுக்ரீவன் இராமபிரானைப் பின்னேஒளித்து நிறுத்திவைத்துவிட்டு வாலியைச்சண்டைக்கு அழைக்க வந்தது போல
நீங்களும் எம்பெருமானை ரஹஸ்யமாகத் துணைகொண்டு என்னைச் சண்டைக்க ழைக்க வந்திருக்க வேணுமேயன்றி,
நீங்கள் மாத்திரம் தனிப்பட்ட வந்திருக்கமாட்டீர்கள்; ஆதலால் அவன் எங்கே பதுங்கிநிற்கிறான்? சொல்லுங்கள் என்கிறாள் என்க.

பூசலிடுவது – பேரொலிசெய்து முறையிடுவது

கார்க்கோடல் பூக்காள் கார்க்கடல் வண்ணன்-
கோடல் பூக்கள் என்று ஒரு புஷ்ப ஜாதி -காந்தள் பூ என்றும் சொல்வர்
அது கார் காலத்தில் மிகுதியாக மலரும்
விரஹ காலத்தில் காமுகர்களுக்கு உத்தீபங்களாய் இருக்கும்
பலவகை நிறம் உள்ள அந்த புஷ்ப ஜாதியில் கரிய நிறமும் உண்டு
அவை எம்பெருமான் திரு நிறத்துக்கு ஸ்மாரகங்களாய் கொண்டு
ஆண்டாளை விசேஷமாக வருத்துவதால் –

கார்க்கோடல் பூக்காள் –
கார் காலத்திலேயே வந்து தோன்றுகிற கோடல் பூக்காள் என்றும்
கறுத்த கோடல் பூக்களே -என்றும்
பெருத்த கோடல் பூக்களே -என்றும் மூன்று வகை பொருள்
எம்மேல் உம்மைப் போர்க் கோலம் செய்து போர விடுத்து –
இம்மலர்களை
எம்பெருமான் படைத்தது நம்மை கொலை செய்வதற்காகவே போலும் –
என்று அறுதி இட்டு
அவைகளை நோக்கி –
ஒவ் ஒரு பதார்த்தங்களுக்கும் ரூப நாமங்களை ஏற்படுத்தினவன் எம்பெருமான் தானே –
இவள் ஹிம்சைக்கு உறுப்பாய் இருப்பதால் இப்படி அருளிச் செய்கிறாள்
இந்த்ரஜித்தை முடிக்க இராமபிரான் இளையபெருமாளை அலங்கரித்து அனுப்பினது போலே –
போர விடுத்தல் -அனுப்புதல்

அவன் எங்குற்றான் –
உங்களை அழகாக கோடித்து அனுப்பின அந்த மகாநுபாவன் எங்கு இருக்கிறான் –
சுக்ரீவன் இராம பிரானை பின்னே ஒளித்து நிறுத்தி வைத்து
வாலியை சண்டைக்கு அழைக்க வந்தது போலே
நீங்களும் எம்பெருமானை ரஹச்யமாக துணை கொண்டு
என்னை சண்டைக்கு அழைக்க வந்து இருக்க வேணும் –
அவன் எங்கே பதுங்கி இருக்கிறான் சொல்லுங்கோள்

ஆர்க்கோ வினி நாம் பூசல் இடுவது –
அவைகள் அசேதனங்கள் தானே
மறுமாற்றம் சொல்ல வில்லை
அந்தோ இவையும் நம்மை லஷியம் பண்ண வில்லை
அவன் வர மாட்டேன் என்கிறான்
உசாத் துணை ஆகக் கூடியவர்களும் யாரும் இல்லை
இனி யார் வீட்டு வாசலிலு போய் நாம் துயரை முறை இட்டு ஆறுவது –
பூசல் இடுவது -பேரொலி செய்து முறை இடுவது

அணி துழாய்த்தார்க்கோடும் நெஞ்சம் தன்னைப் படைக்க வல்லேன் அந்தோ
எம்பெருமான் உடைய விபூதி அடங்கலும் நம்மை நலிவதற்கு அவனுக்கு துணையாய் இருப்பது போலே
நம்மைச் சேர்ந்த வஸ்துக்களாவது நமக்கு துணை ஆகுமோ என்று பார்த்த அளவில்
அதுவும் இல்லை –
நமக்கு விதேயமாக கடவதான நெஞ்சும் நம்மை உதறித் தள்ளி விட்டு
அவனுடைய திருத் துழாய் மாலையை நாடி ஓடா நின்றது –
இதனால் விச்லேஷம் தனக்கு அசஹ்யமாய் இருக்கும் படியையும்
தனது திரு உள்ளம் பகவத் விஷயத்தில் ஈடுபட்டு செல்லுகிறபடியையும்
அருளிச் செய்கிறார் –

——————————————————————————————-

மேல் தோன்றி பூக்காள் மேல் உலகங்களின் மீது போய்
மேல் தோன்றும் சோதி வேத முதல்வர் வலம் கையின்
மேல் தோன்றும் ஆழியின் வெஞ்சுடர் போலச் சுடாது எம்மை
மாற்றோலைப் பட்டவர் கூட்டத்து வைத்துக் கொள்கிற்றீரே –10-2-

பதவுரை

மேல் தோன்றி பூக்காள்–உயரப் பூத்திருக்கிற காந்தள் பூக்களே!
மேல் உலகங்களின் மீது போய் மேல் தோன்றும் சோதி–மேலுள்ள உலகங்களெல்லாவற்றையுங் கடந்து
அவற்றுக்கு மேற்பட்டு விளங்குகின்ற ‘தன்னுடைச் சோதி‘ என்கிற பரம பதத்தில் எழுந்தருளி இருக்கிற
வேதம் முதல்வர்–வேத ப்ரதிபாத்யனான பரம புருஷனுடைய
வலம் கையின் மேல் தோன்றும்–வலத் திருக் கையிலே விளங்கா நின்ற
ஆழியின் வெம் சுடர் போல்–திருவாழி யாழ்வானுடைய வெவ்விய தேஜஸ்ஸு போல
சுடாது–தஹியாமல்
எம்மை–என்னை
மாற்றோலைப் பட்டவர் கூட்டத்து–இந்த பிரக்ருதி மண்டலத்தை விட்டு நீங்கினவர்களுடைய திரளில்
வைத்துக் கொள்கிற்றீரே–கொண்டு சேர்க்கவல்லீர்களோ?

கீழ், கோடல்பூக்கள் பண்ணின ஹிம்ஸையைப் பொறுக்கமாட்டாமல் அவற்றில் நின்றும் கண்ணை மீட்டு
மேலொருபக்கத்திலே வைத்தாள், அங்கே மேல் தோன்றிப்பூக்கள் மலர்நதுதோன்றின.
அவை எம்பெருமானுடைய சிரிப்பைக் கோட்சொல்லிக்கொண்டு நலியவே, அவற்றைநோக்கிக் கூறுகின்றாள்.
தோன்றிப்பூ என்றாலும், காந்தட்பூ என்றாலும், கோடல்பூ என்றாலும் புஷ்பஜாதி ஒன்றேயாம்,
மேல்தோன்றிப்பூ என்றமையால் கீழ்ப்பாட்டிற்சொன்ன கோடல்பூக்கள் கீழேபடர் கின்றனவையென்றும்,
இவை மேலே படர்கின்றவையென்றும் அவாந்தரபேதம் அறியத்தக்கது, நிலஸம்பங்கி, கொடிஸம்பங்கி என்கிறாப்போலே.

“த்ருஷ்டி விஷம்போலே கோடல்பூக்கள் பாதகமாகப் புக்கவாறே அவற்றுக்கு இறாய்த்துக் கண்ணை மேலேவைத்தாள்,
அங்கே மேல்தோன்றிப்பூக்களாய் கிடந்தது, அவற்றைநோக்கி ‘மேல்தோன்றிப்பூக்கள்! என்கிறாள்,
அதுக்குத் தப்பினாரையும் அழிக்கக் கடவோமென்று அதுக்கு ஒரு பேரும் பெற்று நீங்கள் மேலே புக்குநிற்பதே!“ என்ற
வியாக்கியான ஸ்ரீஸூக்தி காண்க.

மேலுலகங்களின்மீது போய் மேல்தோன்றஞ்சோதி என்றது – பரமபதமாகிற சோதிமிக்க இடத்தையாம்.
அவ்விடத்திலே எழுந்தருளியிருக்கின்ற வேத வேத்யனான பரமபுருஷனுடைய வலத்திருக்கையின் மேல் விளங்குகின்ற
திருவாழியாழ்வானுடைய வெவ்வியசுடர் ஆச்ரித ஸத்ருக்களை தஹிப்பதுபோல என்னை நீங்கள்
தஹிக்கவேண்டாவென்று வேண்டிக்கொள்ளுகிறாள்.
இதனால் மேல்தோன்றிப்பூக்களின் தாபம் அஸஹயமாயிருத்தல் சொல்லிற்றாயிற்று.

எம்மை மாற்றோலைப்பட்டவர் கூட்டத்து வைத்துக்கோள்கிற்றிரே –
கைவல்ய மோக்ஷாநுபவம் பண்ணுகிறவர்களுடைய கோஷ்டியிலாவது என்னைக் கொண்டுபோய் வைப்பீர்களாவென
இரக்கிறாளென்று திருமலை நம்பி அருளிச்செய்வராம்.
இவள் விஸலேஷத்தாலே மிகவும் நொந்துபோனபடியாலே ‘நமக்கு பகவதநுபம் கிடைக்காமற்போனாலும் போகிறது,
இந்த ஸரீரம் கழிந்தால் போதும், அதுவே பரமஸுகம், என்று நினைத்து இங்ஙனே கூறுகின்றாள் போலும்.
“மாற்றோலைப்பட்டவர்“ என்றால் கைவல்ய மோக்ஷ நிஷ்டர்களை எப்படிச் சொல்லுமென்னில்,
பகவதநுபவத்துக்கு மாறானவர்கள் என்று ஓலைப்பட்டவர்கள் – கேவலர் எனக்கொள்க.
(ஓலைப்பட்டவர்கள் – ஓலையில் எழுதப்பட்டவர்கள்)

கேவலர்கள் தனித்தனியாக ஆத்மாநுபவம் பண்ணு மவர்களே யன்றி, ஒரு கூட்டமாக இருந்து அநுபவம் பண்ண
மாட்டாதவர்களாகையாலும், இங்கு “கூட்டத்து“ என்று அளிச்செய்திருப்பதாலும்
அந்த அர்த்தம் அவ்வளவு ஸ்வரஸமல்லவென்று எம்பார் வேறுவகையாக அருளிச்செய்வராம் –
மாற்றோலைப் பட்டவர் கூட்டமாவது அடியார்கள் குழாங்களாம், என்னை நித்ய முக்தர்களின் திரளின் நடுவே கொண்டு போய்
வைப்பீர்களா வென்கிறாள் என்று அருளிச் செய்வராம்.
இப்போது, மாற்றோலைப்பட்டவர் என்கிறது – ஸம்ஸாரத்திலிருந்து ஓலைமாற்றப்பட்டவர் என்றபடி.

அன்றியே, “மாற்றோலைப்பட்டு – அவர்கூட்டத்து“ என்றும் பிரித்து உரைப்பர் சில ஆசிரியர்.
யமன் தனது தூதர்களை நோக்கி ‘இன்னானைப் பிடித்து என்னிடம் கொண்டு வாருங்கள்‘ என்று சொல்லி
ஓலைச் சாசனம் எழுதித்தந்தனுப்பினால், சில ஸமயங்களில் அத் தூதர்கள் மாறுபாடாக வேறோருவனைப்
பிடித்துக் கொண்டுபோய் விடுவதுண்டு, அப்படியே இப்போது இவ்வாண்டாளை ஹிம்ஸக்கும்படியாக
இப் புஷ்பங்கள் எம்பெருமானால் நியமித்தனுப்பப் பட்டிருப்பதாலும் அந்த நியமநத்தை மாறாடி இவளைக்
கொண்டு போய் அவ் வெம்பெருமானுடைய கோஷ்டியிலே நிறுத்திவிடக் கூடுமென்கிற எண்ணத்தினால்,
ஓ! மேல்தோன்றிப் பூக்களே! என்னை ஹிம்ஸிக்கவேணுமென்கிற பகவாதாஜ்ஞையை மாறாடி அவ் வெம்பெருமானுடைய
கோஷ்டியிலே என்னைக் கொண்டு போய் நிறுத்துங்கள் என்கிறாளென்க. இப்பக்ஷத்தில் மாற்றோலைப் பட்டு – ஓலைமாற்றப்பட்டு –
அவருடைய ஆஜ்ஞையைமாறாடி என்கை. இன்னும் பலபடியாகவும் பொருள் கொள்கள இடமுண்டு.

மேல் தோன்றி பூக்காள்-
கீழ் கோடல் பூக்கள் பண்ணின ஹிம்சையை பொறுக்க மாட்டாமல்
அவற்றின் நின்றும் கண்ணை மீட்டு மேல் ஒரு பக்கத்திலே வைக்க –
அங்கு மேல் தோன்றிப் பூக்கள் மலர்ந்து இருக்க
அவை எம்பெருமான் உடைய சிரிப்பை கோள் சொல்லிக் கொண்டு நலியவே
அவற்றை நோக்கி கூறுகின்றாகள்
தோன்றிப் பூ -காந்தள் பூ -கோடல் பூ -ஒரே புஷ்ப ஜாதி
கீழே படர்ந்தவை கீழே சொல்லி
மேலே படரும் இவை -அவாந்தர பேதம்
நிலா சம்பங்கி கொடி சம்பங்கி போலே
திருஷ்டி விஷம் போலே கோடல் பூக்கள் பாதகமாய் புக்கவாறே
அவற்றை இறாய்த்து கண்ணை மேலே வைத்தாள்
அங்கெ மேல் தோன்றி பூக்களாய்க் கிடந்தது
அவற்றை நோக்கி -மேல் தோன்றி பூக்காள் -என்கிறாள்
அதுக்குத் தப்பினாரையும் அழிக்கக் கடவோம் -என்று
அதுக்கு ஒரு பேரும் பெற்று
நீங்கள் மேலே புக்கு நிற்பதே -என்கிறாள்

மேல் உலகங்களின் மீது போய் மேல் தோன்றும் சோதி
பரமபதம் ஆகிற சோதி மிக்க இடத்தை –

வேத முதல்வர் வலம் கையின் மேல் தோன்றும் ஆழியின் வெஞ்சுடர் போலச் சுடாது -எம்மை-
அவ்விடத்திலே எழுந்து அருளி இருக்கிற வேத வேத்யனான பரம புருஷன் உடைய
வலது திருக் கையிலே மேல் விளங்குகின்ற திரு வாழி வாழ்வான் உடைய
வெவ்விய சுடர் ஆஸ்ரித சத்ருக்களைத் தஹிப்பது போலே
என்னை நீங்கள் தஹிக்க வேண்டா

எம்மை மாற்றோலைப் பட்டவர் கூட்டத்து வைத்துக் கொள்கிற்றீரே –
கைவல்ய மோஷ அனுபவம் பண்ணுகிறவர்கள் கோஷ்டியிலாவது
என்னைக் கொண்டு போய் வைப்பீர்களா என்று இரக்கிறாள்
என்று திருமலை நம்பி அருளிச் செய்வாராம்
இவள் விச்லேஷத்தால் மிகவும் நொந்து போன படியால்
மாற்றோலைப் பட்டவர் -பகவத் அனுபவத்துக்கு மாறானவர்கள் -என்று ஒலைப்பட்டவர் -கேவலர் –

ஆனால் இங்கே கூட்டத்து -என்று இருப்பதால்
-கேவலர் தனி அனுபவம் செய்வதால்
எம்பார் -சம்சாரத்தில் இருந்து ஓலை மாற்றப் பட்டவர் –
அடியார்கள் குழாம்-நித்ய முக்தர்களின் நடுவே வைப்பீர்களோ -என்கிறார்

அன்றியே –
மாற்றோலைப் பட்டு -அவர் கூட்டத்து -என்று பிரித்து சிலர்
யமன் தனது தூதர்களை ஓலை சாசனம் எழுதி இன்னானை கூட்டி வர சொல்ல
அத தூதர்கள் மாறாக வேறு ஒருவனைக் கூட்டிப் போவது போலே
புஷ்பங்களை ஆண்டாளை ஹிம்சிக்க நியமித்து இருந்தாலும்
அந்த நியமனத்தை மாறாடி இவளைக் கொண்டு போய்
அந்த எம்பெருமான் கோஷ்டியிலே நிறுத்தி விடக் கூடும் –
என்று
ஓலை மாற்றப் பட்டு -அவர் உடைய ஆஞ்ஞையை மாறாடி -என்கை–

————————————————————————————————————————————————————–

கோவை மணாட்டி நீ யுன் கொழுங்கனி கொண்டு எம்மை
ஆவி தொலைவியேல் வாய் அழகர் தம்மை அஞ்சுதும்
பாவியேன் தோன்றிப் பாம்பணையார்க்கும் தம் பாம்பு போல்
நாவும் இரண்டுள வாய்த்து நாணியிலேனுக்கே–10-3-

பதவுரை

கோவை மானாட்டி–அம்மா! கோவைக் கொடியே!
நீ–நீ
உன்–உன்னுடைய
கொழுங்கனி கொண்டு–அழகிய பழங்களாலே
எம்மை–என்னுடைய
ஆவி–உயிரை
தொலைவியேல்–போக்கலாகாது.
வாய் அழகர் தம்மை–அழகிய வாய் படைத்த பெருமான் விஷயத்திலே
அஞ்சுதும்–பயப்படா நின்றேன்!
பாவியேன்–பாவியானா நான்
தோன்றி–பிறந்த பின்பு
நாணிலியேனுக்கு–லஜ்ஜை யற்றவளான என் விஷயத்திலே
பாம்பு அணையார்க்கும்–சேஷ சாயியான பெருமாளுக்கும்
தம் பாம்பு போல்–தமது படுக்கையான திருவனந்தாழ்வானுக்குப் போல
நாவும் இரண்டு உள ஆயிற்று–இரண்டு நாக்குகள் உண்டாயின.

மேற்புறங்களில் நின்றும் கண்ணைமீட்டுப் பக்கங்களில் நோக்கினாள்
அங்கே ஒரு செடியிலே கோவைக்கொடி படர்ந்து பழுத்துக்கிடந்தன; அவற்றை நோக்கிப் பேசுகின்றாள்.
கோவைக்கனிகள் எம்பெருமானுடைய திருவதரத்திற்கு ஸ்மாரகங்களாய் இருப்பவையாதலால்
அவ்வழியாலே அவை தன்னை நலியவே அந்த நலிவுபொறுக்கமாட்டாமற் சொல்லுகிறாளென்க.

கீழ்பாட்டுக்களில் “கார்க்கோடல்பூக்காள்!“ என்றும் “மேல்தோன்றிப்பூக்காள்!“ என்றும் சொன்னது போல்
இப் பாட்டிலும் ‘கோவைக்கொடிகாள்!‘ என்றாவது, ‘கோவைக்கனிகாள்!‘ என்றாவது சொல்லாமல்
கோவை மணாட்டி! என்றதென்னென்னில்; ‘கொடியாகையாலே ஸாபத்ந்யத்தாலே நலிந்தாப் போலே யிராநின்றது“
என்றருளிச்செய்வர் பெரியவாச்சான்பிள்ளை, வடமொழியில் கொடிக்கு வாசகமாகிய லதா, வல்லீ முதலிய
ஸப்தங்கள் ஸ்திரீலிங்கமாதல் அறிக. ஸத்ரீகளைக் கொடிகளாகவே கூறுதலும் வழக்கம்.
இனி மாணாட்டி என்று மணமுனைடமை சொல்லிற்றாகவுமாம். அதாவது பரிமளத்தை உடைத்தாகை.

ஓ! கோவைக்கொடியே நீ உனது சிறந்த கனிகளைக் காட்டி என் உயிரைச் சிதைக்க வேண்டா;
உன் கனிகளைக் காணும் போதே திருமாலிருஞ்சோலை யழகருடைய திருவதாரம் நினைவுக்கு வந்து மிகவும் தளர்ந்தொழிவேன்;
அதுபற்றி எனக்கு மிகவும் அச்சமாயிருக்கிறது என்கிறாள் முன்னடிகளில்.

(அபயம் ஸர்வபூதுப்யோ ததாமி) என்று அபயப்ரதாநம் பண்ணியருளினவன் விஷயத்தில் பயப்பட ப்ரஸக்தி ஏது?
என்று அவை கேட்கக் கூடுமென்று கொண்டு, அவ் வெம்பெருமானுடைய வாக்கு என்னளவில் பொய்யாய் விட்டதென்கிறாள் பின்னடிகளில்.
பாவியான நான் பிறப்பதற்கு முன் அவன் “ஒன்றேயுரைப்பான் ஒருசொல்லை சொல்லுவான்“ என்னும்
ஸத்ய வாக்காயிருந்தானாகிலும், நான் தோன்றினபிறகு என்னுடைய பாவத்தினால் அவன் அஸத் வாக்காய் விட்டான்.
சொல்வதொன்றும் செய்வதொன்றுமாய்விட்டான். நாக்கு ஒன்றாயிருந்தாலன்றோ சொல்லும் செய்கையும்
ஒன்றாயிருக்கும் இரட்டை நாக்குப் படைத்தவனான திருவனந்தாழ்வானோடு இடைவிடாத சேர்த்தியாலே
இவனும் அவனைப்போலே இரண்டுகாக்குப் பெற்றானாயினான், (அபயம் ததாமி) என்ற நாக்கு இப்போது இல்லை என்கிறாள்.

தம்பாம்புபோல் – ‘தவிஜிஹ்வ‘ என்றுமு ‘த்விரஸந‘ என்றும்சொல்லப்படுமிறே பாம்பு.
(நாவும் இரண்டுளவாயிற்று) நாக்கு ஒன்றாயிருந்தால் வாக்கும் ஒன்றாயிருக்கும்;
வாக்கு இரண்டுபட்டபடியால் நாக்கும் இரண்டாய் விட்டதென்றிருக்கிறாள்.

நாணிலியேனுக்கே – நான் தவிர மற்றபேர்கள் விஷயத்தில் அவன் ஸத்யவாக்கவே இருக்கக்கூடும்.
வெட்கங்கெட்ட என்விஷயத்தில் மாத்திரமே அவன் த்விஜிஹ்வனாய் விட்டானென்கிறாள்,
இப்படி அவன் பொய்யனாயிருக்கச் செய்தேயும் நான் அவனையே வாய்வெருவா நின்றமைப்பற்றித்
தன்மை வெட்கமற்றவளாகக்ச் சொல்லிக்கொள்ளுகிறாள்.

கோவை மணாட்டி நீ யுன் கொழுங்கனி கொண்டு –
மேல் புறங்களில் நின்றும் கண்ணை மீட்டு பக்கங்களிலே நோக்க
கோவைக் கனிகள் அவன் திரு அதரத்துக்கு ஸ்மாரகங்களாய் இருப்பவை யாதலால்
நலிவு பொறுக்க மாட்டாமல் சொல்லுகிறாள் –
இங்கே கோவைக் கநிகாள் கோவைக் கொடிகாள்-எண்ணாமல்
கோவை மணாட்டி -என்றது என் என்னில்
கொடி யாகையாலே ஸா பத்ன்யத்தாலே நலிந்தால் போலே இரா நின்றது –
கொடி -லதா -வல்லி-போலே மணாட்டி
மணம் உடைமை சொல்லிற்று ஆகவுமாம்-பரிமளத்தை யுடைத்தாகை –

எம்மை ஆவி தொலைவியேல் வாய் அழகர் தம்மை அஞ்சுதும்
ஒ கோவைக் கோடியே
நீ சிறந்த கனிகளைக் காட்டி என் உயிரைச் சிதைக்க வேண்டா –
உன் கனிகளைக் காணும் போதே அழகர் திருவதரம் நினைவுக்கு வந்து நலியா நிற்கிறது –
தளர்ந்து அஞ்சுகிறேன் –
பாவியேன் தோன்றிப் பாம்பணையார்க்கும் தம் பாம்புபோல்
நாவும் இரண்டுள வாய்த்து நாணியிலேனுக்கே
அபயம் சர்வ பூதாப்யோ ததாமி -என்று அபய பிரதானம் பண்ணி அருளினவன்
விஷயத்திலே பயப்பட ப்ரசக்தி எது என்று அவை கேட்க
பாவியான நாண் பிறப்பதற்கு முன்பு
ஒன்றே உரைப்பான் ஒரு சொல்லே சொல்லுவான் -என்று சத்ய வாக்யனாய் இருந்தாலும்
நான் தோன்றின பிறகு என்னுடைய பாவத்தினால்
அவன் அசத்திய வாக்யனாய் ஆகி விட்டான்
சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றும் ஆக இருக்க –
நாக்கு ஒன்றாய் இருந்தால் சொல்லும் செய்கையும் ஒன்றாய் இருக்கும்
இரட்டை நாக்கு படைத்தவனான திரு வநந்த வாழ்வான் உடன் இடைவிடாத சேர்த்தியால்
இவனும் அவனைப் போலே இரண்டு நாக்கு பெற்றவனாய் ஆயினான்
ஆகையால் -அபயம் ததாமி என்ற நாக்கு இப்போது இல்லை –

தம்பாம்பு போல்
தவி ஜிஹ்வ -தவி ரசன

நாணியிலேனுக்கே
வெட்கம் கேட்ட என் விஷயத்தில் மட்டுமே அவன் தவி ஜிஹ்வானாய் ஆகி விட்டான்
இப்படி அவன் பொய்யனாய் இருக்கச் செய்தேயும்
தான் அவனையே வாய் வெருவா நின்றமை பற்றி
தன்னை வெட்கம் அற்றவளாக சொல்லிக் கொள்கிறாள்-

——————————————————————————

முல்லைப் பிராட்டி நீ யுன் முறுவல்கள் கொண்டு எம்மை
அல்லல் விளைவியேல் ஆழி நங்காய் உன் அடைக்கலம்
கொல்லை அரக்கியை மூக்கரிந்திட்ட குமரனார்
சொல்லும் பொய்யானால் நானும் பிறந்தமை பொய்யன்றே —10-4-

பதவுரை

முல்லைப் பிராட்டி!–அம்மா! முல்லைக் கொடியே!
ஆழி நங்காய்!–கம்பீரமான இயல்வை யுடையாய்!
நீ–நீ
உன் முறுவல்கள் கொண்டு–(எம்பெருமானது முறுவல் போன்ற) உனது விகாஸத்தாலே
எம்மை–என் விஷயத்திலே
அல்லல் விளைவியேல்–வருத்தத்தை உண்டாக்க வேண்டா,
உன் அடைக்கலம்-(இதற்காக) உன்னைச் சரணமடைகிறேன்.
கொல்லை அரக்கியை–வரம்பு கடந்தவளான சூர்ப்பணகையை
மூக்கு அரிந்திட்ட–மூக்கறுத்துத் துரத்தின
குமரனார்–சக்ரவர்த்தி திருமகனாருடைய
சொல்லும்–வார்த்தையே
பொய் ஆனால்–பொய்யாய் விட்டால்
நான் பிறந்தமையும் பொய் அன்று–நான் பெரியாழ்வார் வயிற்றில் பிறந்ததும் பொய்யாகக் கடவதன்றோ.

கோவைக்கொடியில் நின்றும் கண்ணைத் திருப்பி வேறோரிடத்தே வைத்தாள்,
அங்கே முல்லையானது நன்றாகப் பூத்துக்கிடந்தது, அதைக்கட்டவாறே எம்பெருமானுடைய முறுவல் நினைவுக்கு
வரவே ஆற்றமாட்டாதாளாய் அதின் காலிலே விழுகிறாள்.

வழிபறிக்க வந்த கள்ளனைக் கண்டால் ‘பிரானே! நாயனே! அப்பனே! என்னுமாபோலே முல்லைப்பிராட்டி என்கிறாள்
அம்மா முல்லைக்கொடியே கோடல்பூக்களுக்கும் மேல்தோன்றிப் பூக்களுக்கும் கோவைக்கொடிக்கும்
ஒரு வாறு தப்பிப் பிழைத்தோமென்று நான் மகிழ்ந்திருக்கையில், நீ உன் விகாஸத்தைக் காட்டி என்னை துன்பப்படுத்துவது தகுதியோ?
இனி இப்படி என்னைத் துன்பப்படுத்தாதே, உன்காலிலேவிழுந்து உன்னை வேண்டிக்கொள்ளுகிறேன், என்னை ஹமஸிக்கவேண்டாமம்மா! என்கிறாள்.

ஆழி நங்காய்! – ஆழியென்றதனால் – காம்பீர்யமுடைமை சொல்லப்படுகிறது, நங்காய் என்றதனால் – பரிபூர்த்தி சொல்லப்படுகிறது.
உலகில் துதிப்பவர்கள் இப்படிப்பட்ட குணங்களையிட்டுத் துதிப்பது வழிக்கமாதலால்
ஆண்டாளும் இம்முல்லைக்கொடியை அங்ஙனே துதிக்கின்றாளென்க.
இனி, ஆழி என்றதனால் – வட்டமாயிருக்குந்தன்மை சொல்லிற்றாகவுமாம்.
முல்லைச்செடியை முட்டாக்கிட்டாற்போல் புஷ்பங்கள் வட்டமாகப் பூத்திருக்குமிறே.

இவள் பெரியாழ்வார் திருமகளாயிருந்துவைத்து எம்பெருமானையும் தன்காற்கீழே வீழ்த்தவேண்டியிருக்க
இவள்போய் அசேதங்களின் காலிலே விழும்படி என்னை! என்று சிலர் நினைக்கக்கூடும் என்றெண்ணி,
“எனக்குப் பெரியாழ்வார் திருவயிற்றிற் பிறப்பு அசிஞசித்கரம்“ என்கிறாள் பின்னடிகளில்.

கொல்லையரக்கியை மூக்கரிந்திட்ட குமரனார் – இராமபிரான், அவருடைய சொல்லாவது –
(மித்ரபாவேந ஸம்ப்ராப்தம் நத்யஜேயம் கதஞ்சந) அதாவது – ஒருவன் மெய்யான் அன்போடு என்னை வந்து
பற்றா விட்டாலும் அன்பன்போல் பாவனை செய்துகொண்டு வந்து சேர்ந்தானேலும் அவனையும் நான் ஒருவிதத்திலும்
கைவிடமாட்டேன் என்ற வார்த்தை. இரவுபகல் மாறாடினாலும் என்னுடைய வார்த்தையானது
எந்த க்ஷணத்திலும் எள்ளளவும் மாறாடமாட்டாது என்ற அவருடைய வார்த்தையை என்னளவில் பொய்யாய் விட்டபோது,
பெரியாழ்வார் வயிற்றிற் பிறப்பா எனக்குக் கார்யகரமாகப் போகிறது? என்று அதிலும் அதிசங்கிக்கிறாள்.

கொல்லையரக்கி என்றது – வரம்பு அழிந்தசெயலையுடையவள், அதாவது – மரியாதையைத் தப்பி நடந்தவள் என்றபடி.
பிராட்டியைப் புருஷகாரமாகக் கொண்டு பெருமாளைப்பற்றி உய்ந்து போகலாமாயிருக்க அங்ஙன் செய்யாதே
பிராட்டியின்மீது விபரீதமான எண்ணங்கொண்டு அவளை விழுங்கப் போனாளிறே.

சூர்பணகை மூக்கறுப்புண்டு பொறுக்கமுடியாத துக்கத்தோடும் பரிபவத்தோடும் கதறிக்கொண்டு போகிறவள்.
பெருமானை மனம்போனபடியே நிந்திக்கவேண்டி யிருக்கச்செய்தேயும் “தருணௌ ரூபஸம்பந்நௌ“ என்று
பருவத்துக்கும் அழகுக்கும் தோற்றுப்போனமை தோற்றப் பேசினாளாகையாலே “அரக்கியை முக்கரிந்திட்ட குமரனார்“ என்கிறாள்.

“குமரனார் சொல்லும் பொய்யானால் நானும் பிறந்தமை பொய்யன்றே என்றதற்கு-
“அப்பெருமானுடைய வார்த்தை பொய்யாய்விட்டாலும் என்பிறப்பு பொய்யாய்விடாதிறே“ என்று
பொருள் சொல்லலாமாயினும் வியாக்கியானத்திற்குச் சேராது –
“பொய்யன்றே என்றது பொய்யாமிறே என்கை“ என்றிறே பெரியவாச்சான்பிள்ளை அருளிச் செய்த்து. அன்றே – அன்றோ என்றபடி.

முல்லைப் பிராட்டி நீ யுன் முறுவல்கள் கொண்டு எம்மை
கோவைக் கோடியில் இருந்து கண்ணை திரும்பி வேறு ஒரு இடத்திலே வைக்க
அங்கு முல்லை நன்றாக பூத்துக் கிடக்க
அவன் முறுவல் நினைவுக்கு வர
ஆற்ற மாட்டாதவளாய் அதன் காலிலே விழுகிறாள் –
வழி பறிக்க வந்த கள்ளனைக் கண்டால்
பிரானே நாயனே அப்பனே -என்னுமா போலே -முல்லைப் பிராட்டி -என்கிறாள்
அம்மா முல்லைக் கோடியே
கோவைப் பூக்களுக்கும் மேல் தோன்றி பூக்களுக்கும் கோவைக் கோடிக்கும் ஒருவாறு தப்பி
பிழைத்தோம் என்று மகிழ்ந்து இருக்கையில்

அல்லல் விளைவியேல்
நீ உன் விகாசத்தைக் காட்டி துன்பப் படுத்துவது தகுதியோ –

உன் காலில் விழுந்து வேண்டிக் கொள்கிறேன் -என்னை ஹிம்சிக்க வேண்டா –

ஆழி நங்காய் –
காம்பீர்யம் உடைமை
பரிபூர்தியும்
குணங்களை இட்டு துதிப்பது வழக்கம் என்பதால்
முல்லைக் கொடியையும் அங்கனே துதிக்கிறாள்
ஆழி -வட்டம்
முல்லைச் செடியை முட்டாக்கி இட்டால் போலே
புஷ்பங்கள் வட்டமாய் பூத்து இருக்குமே –

உன் அடைக்கலம் —
இவள் பெரியாழ்வார் திரு மகளாய் இருந்து வைத்து
எம்பெருமானையும் தன கால் கீழே விழ வைக்க கடவையாய் இருக்க
அசேதனங்களின் காலிலே விழும்படி என்னே –

கொல்லை அரக்கியை மூக்கரிந்திட்ட குமரனார்
இராமபிரானார் –
தருனௌ ரூப சம்பன்னௌ-பருவத்துக்கும் அழகுக்கும் தோற்றமை -குமரனார் -என்கிறாள்

சொல்லும் –
அவர் சொல்லாவது
மித்ர பாவேன சம்ப்ராப்தம் நத்யஜேயம் கதஞ்சன –
பாவனையாக வந்தாலும் கை விட மாட்டேன்
இரவு பகல் மாறாடினாலும் என் வார்த்தை எந்த ஷணத்திலும் மாறாடாது
என்ற வார்த்தையும்

பொய்யானால் நானும் பிறந்தமை பொய்யன்றே –
என் அளவில் பொய்யானால்
பெரியாழ்வார் வயிற்றில் பிறப்பா எனக்கு கார்யகரமாகப் போகிறது
என்று அதிலும் அதிசங்கை படுகிறாள் –
அப்பெருமான் உடைய வார்த்தை பொய்யாய் விட்டாலும்
என் பிறப்பு பொய்யாய் விடாது இ றே-என்ற பொருள்
வ்யாக்யானதுக்கு சேராது
பொய்யன்றே என்றது பொய்யாம் இ றே -என்கை -வியாக்யான ஸ்ரீ ஸூ கதி
அன்றே -அன்றோ -என்றபடி-

—————————————————————————————–

பாடும் குயில்காள் ஈதென்ன பாடல் நல்வேங்கட
நாடர் நமக்கு ஒரு வாழ்வு தந்தால் வந்து பாடுமின்
ஆடும் கருளக் கொடி யுடையார் வந்து அருள் செய்து
கூடுவர் ஆயிடில் கூவி நும் பாட்டுக்கள் கேட்டுமே –10-5-

பதவுரை

பாடும்–பாடுகின்ற
குயில்காள்!–குயில்களே!
ஈடு-(கர்ண கடோரமான) இக் கூசல்
என்ன பாடல்?–என்ன பாட்டு
நல் வேங்கடம் நாடர்–விலக்ஷணமான திருவேங்கட மலையை இருப்பிடமாக வுடைய பெருமான்
நமக்கு–என் விஷயத்திலே
ஒரு வாழ்வு தந்தால்–ஒரு வாழ்ச்சியைப் பண்ணிக் கொடுப்பனாகில் (அப்போது)
வந்து பாடுமின்–(நீங்கள் இங்கே) வந்து பாடுங்கள்
ஆடும்–ஆநந்தத்தாலே) ஆடுகின்ற
கருளன்–பெரிய திருவடியை
கொடி உடையார்–த்வஜமாகக் கொண்டிருக்கிற அப் பெருமான்
அருள் செய்து–க்ருபை பண்ணி
வந்து கூடுவர் ஆயிடில்–(இங்கே) வந்து சேர்வனாகில்
கூவி–(அப்போது உங்களை) வரவழைத்து
நும் பாட்டுக்கள்–உங்களது பாட்டுக்களை
கேட்டுமே–கேட்போம்.

எந்தப் பக்கம் நோக்கினாலும் ஒவ்வொரு புஷ்பம் கண்ணிலே தோற்றி ஹம்ஸகமாயிருந்தபடியாலே
‘கண்ணை மூடிக் கொண்டோமாகில்‘ சுகப்படலாம் என்று நினைத்துக் கண்ணை மூடிகொண்டாள்.
உடனே குயில்களின் பாட்டுக்கள் செவிப்பட்டன. அவற்றைக்கேட்டுத் தரிக்க மாட்டாதாளாய் அக்குயில்களே நோக்கி
‘நீங்கள் ஏன் இப்படி கர்ணகடோரமாகக் கத்துகின்றீர்கள்? போரும் போரும்; உங்கள் பாட்டை நிறுத்துங்கள்‘ என்கிறாள்.

இரண்டருகும் நெருப்புப் பற்றி யெரியா நிற்கச் செய்தே நடுவேயிருந்து சந்தனம் பூசுவாரைப்போலே யிருந்ததீ!,
உங்கள் பாட்டைக் கேட்கும்படியாகவோ இப்போது என்னுடைய தஸையிருப்பது; ஐயோ! என்ன பாட்டுப் பாடுகிறீர்கள்.
ஸம்ஸ்லேஷரஸாநுபவம் செல்லும்போது பாடத்தக்க பாட்டுக்களை நீங்கள் விஸ்லேஷத்தில் பாடாநின்றீர்களே!;
பாவிகள்! பாடினது போரும்; எம்பெருமான் இங்கேயெழுந்தருளி என்னை வாழ்விக்குங்காலம் வாய்க்குமாகில்
அப்போது நீங்கள் இங்குவந்து ஆசைதீரப் பாடுங்கள் என்கிறாள் முன்னடிகளில்.

“எம்பெருமான்“ என்று பொதுப்படையாகச் சொல்லாமல் “நல்வேங்கடநாடர்“ என்று சிறப்பித்து அருளிச்செய்துள்ளமையால்,
அந்தஸ்வாரஸ்யத்துக்கு இணங்கப் பெரியவாச்சான்பிள்ளை அருளிச்செய்கிறார் –
“ஆற்றுப்பெருக்கில் முன்னே சினையாறுபடுமா போலே அவன் வரவுக் குறுப்பான நற்குறிகள் உண்டாயிராநின்றன;
அது பலித்தால் வந்து பாடப்பாரிகோள். ஆச்ரிதர்க்கு அருமைப்படவேண்டாதபடி வந்து நிற்கிறவராய்த்து
பரமபதம் கலவிருக்கை யாயிருக்க, அத்தைவிட்டுத் திருமலையிலே வந்து முகங்காட்டினார்.
ஸ்ரீவில்லிபுத்தூரிலேபோலேயிருந்து பயணம்“.

நமக்கொருவாழ்வுதந்தால் என்றது – உங்கள்பாட்டைக் கேட்கும்படியான காதை எனக்குத் தந்தால் என்றபடி;
இப்போது ஸர்வேந்த்ரியங்களும் அவனாலே அபஹரிக்கப்பட்டு அழிந்துகிடக்கின்றமை அறிக.
வந்துபாடுமின் – இப்போது உங்களுடைய காட்சி எனக்கு அஸஹ்யமாயிருக்கையாலே ஒழிந்துபோங்கள் என்றபடி.

வேங்கடநாடர்வந்து உனக்கு வாழ்வுகொடுக்கும் மையம் எங்களுக்கு எப்படித்தெரியும்?
தெரிந்தாலன்றோ அந்த ஸமயத்தில் நாங்கள்வந்து பாடக்கூடும் என்று அக்குயில்கள் கேட்பனவாகக்கொண்டு கூறுகின்றாள்

(ஆடுங்கருளக்கொடியுடையார் இத்யாதி) அவருடைய வரவுக்கு ஸூசகமாகப் பெரிய திருவடி நாயனார்
சிறகை விரித்துக் கூத்தாடிக்கொண்டு வருவர்; அந்த அடையாளத்தைக் கொண்டே நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
அப்படி நீங்கள் தெரிந்து கொள்ளா விட்டாலும் அப்போது நானே உங்களை வரவழைத்து உங்கள் பாட்டைக்கேட்பேன் போங்கள் என்கிறாள்.

பாடும் குயில்காள் ஈதென்ன பாடல்
எந்தப் பக்கம்நோக்கினாலும் ஒவ் ஒரு புஷ்பம் கண்ணிலே தோற்றி
ஹிம்சகமாய் இருந்தபடியாலே
கண்ணை மூடி சுகிகலாம் என்று மூடிக் கொள்ள
குயில்கள் பாட்டுக்கள் செவிப்பட்டன
அவற்றிக் கேட்டு தரிக்க மாட்டாமல் –
இரண்டு அருகும் நெருப்பு பற்றி எரியா நிற்கச் செய்தே
நடுவே இருந்து சந்தனம் பூசுவாரைப் போலே -என்னுடைய தசை –
விஸ்லேஷ தசையிலா சம்ச்லேஷ ரச அனுபவம் செல்லும் போது பாடத் தக்க பாட்டுக்களை பாடா நின்றீர்களே பாவிகாள்

நல்வேங்கட நாடர் நமக்கு ஒரு வாழ்வு தந்தால் வந்து பாடுமின் –
எம்பெருமான் என்று பொதுப் படையாக சொல்லாமல்
நல் வேங்கட நாடர் என்று சிறப்பித்து அருளியது –
ஆற்றுப் பெருக்கில் முன்னே சினை யாறு படுமா போலே
அவன் வரவுக்கு உறுப்பான நற் குறிகள் உண்டாய் இரா நின்றன
அது பலித்தால் வந்து பாடப் பாரி கோள்
ஆஸ்ரிதர்க்கு அருமைப் பட வேண்டாதபடி வந்து நிற்கிறவர் ஆய்த்து-
பரமபதம் கலவிருக்கையாய் இருக்க
அத்தை விட்டு திருமலையிலே வந்து முகம் காட்டினார்
ஸ்ரீ வில்லி புத்தூரிலே போலே இருந்தது பயணம் —

நமக்கு ஒரு வாழ்வு தந்தால் வந்து பாடுமின் –
உங்கள் பாட்டை கேட்கும்படியான காதை எனக்குத் தந்தால் -என்றபடி
இப்போது சர்வ இந்த்ரியங்களும் அவனாலே அபஹரிக்கப்பட்டு அழிந்து கிடக்கின்றமை அறிக –

வந்து பாடுமின் —
இப்போது உங்கள் உடைய காட்சி அசஹ்யமாய் இருக்கையாலே ஒழிந்து போமின்

வேங்கட நாடர் வந்து வாழ்வு கொடுக்கும் சமயம் நாங்கள் எப்படி அறிவோம் -என்ன –
ஆடும் கருளக் கொடி யுடையார் வந்து அருள் செய்து கூடுவர்
அவருடைய வரவுக்கு ஸூ சகமாக
பெரிய திருவடி நாயனார் சிறகை விரித்து கூத்தாடிக் கொண்டு வருவர்
அந்த அடையாளத்தைக் கொண்டே நீங்கள் தெரிந்து கொள்ளலாம் –

ஆயிடில் கூவி நும் பாட்டுக்கள் கேட்டுமே –
அப்படி நீங்கள் தெரிந்து கொள்ளா விடிலும்
அப்போது நான் உங்களை வரவழைத்து -கூவி –
உங்கள் பாட்டைக் கேட்பேன் போங்கள் -என்கிறார்-

———————————————————————————————

கண மா மயில்காள் கண்ணபிரான் திருக் கோலம் போன்று
அணி மா நடம் பயின்று ஆடுகின்றீர்கு அடி வீழ்கின்றேன்
பண மாடரவணைப் பற்பல காலமும் பள்ளி கொள்
மண வாளர் நம்மை வைத்த பரிசிது காண்மினே–10-6

பதவுரை

கணம்–கூட்டமாயிருக்கிற
மா மயில்காள்!–சிறந்த மயில்களே!
கண்ணபிரான்–கண்ணபிரானுடைய
திருக்கோலம் போன்று–அழகிய வடிவு போன்ற வடிவை யுடையீராய்க் கொண்டு
அணி மா நடம் பயின்று–அழகிய சிறந்த நாட்டியத்திலே பழகி
ஆடுகின்றீர்க்கு–ஆடுகின்ற உங்களுடைய
ஆடி–திருவடிகளிலே
வீழ்கின்றேன்–ஸேவிக்கின்றேன். (இந்த ஆட்டத்தை நிறுத்துங்கள்)
பணம் ஆடு அரவு அணை–படமெடுத்து ஆடுகின்ற திருவனந்தாழ்வானாகிற படுக்கையிலே
பல்பல காலமும்–காலமுள்ளதனையும்
பள்ளி கொள்–பள்ளி கொண்டருளா நின்ற
மணவாளர்–அழகிய மணவாளப் பெருமாள்
நம்மை வைத்த பரிசு–எனக்கு உண்டாக்கித்தந்த லக்ஷணம்
இது காண்மின்–இப்படி உங்கள் காலிலே விழும்படியான தாயிற்று.

சிலமயில்கள் கூட்டங்கூட்டமாக இருந்துகொண்டு கூத்தாடுவதைக்கண்டு தரிக்கமாட்டாதாளாய்
‘இக்கூட்டத்தாடுதலை நிறுத்துங்கள், உங்கள்காலிலே விழுகிறேன்‘ என்கிறாள்.

“நின்றாடு கண மயில் போல் நிறமுடைய நெடுமால்“ (பெரியாழ்வார் திருமொழி) என்னப்பட்ட எம்பெருமானுக்கு
இவை ஸ்மாரகங்களாய்க்கொண்டு நலிகிறபடியால் “கண்ணபிரான் திருக்கோலம்போன்று“ என்கிறாள்.
அடிவீழ்கின்றேன் – இக்கூத்து ஒழியவேணுமென்று ப்ரபத்திபண்ணுகிறேனென்றபடி.

இப்படி இவள்சொன்னவாறே, அந்தோ! பெரியாழ்வார் திருமகளாகப் பெற்ற பெருமைவாய்ந்த நீ இப்படிச் சொல்லத்தகுமோ?
உன் காலிலேயன்றோ நாங்கள் விழக்கடவோம்“ என்று அம்மயில்கள் சொல்வனவாகக் கொண்டு, கூறுகின்றாள்.
(பணமாடரவணையித்பாதி) “சென்றால்குடையாம் இருந்தால் சிங்காசன்மாம்“ என்றபடி –
திருவனந்தாழ்வானை ஸர்வ ப்ரகாரங்களாலும் அடிமை கொண்டு சிறப்பிக்குமவர் என்னை உங்கள் காலிலே
விழும்படி செய்த பின்பு நான் செய்யலாவதுண்டோ? என்கிறாள்.

“பணவாளரவணை“ என்றும்பாடமுண்டு,
அப்பாடத்தில், படங்களையும் ஒளியையுமுடைய அரவு என்க. வாள் – ஒளி.

கண மா மயில்காள் கண்ணபிரான் திருக் கோலம் போன்று
சில மயில்கள் கூட்டம் கூட்டமாக இருந்து கொண்டு
கூத்தாடுவதைக் கண்டு
தரிக்க மாட்டாமல்

அணி மா நடம் பயின்று ஆடுகின்றீர்கு அடி வீழ்கின்றேன் –
கூத்தாட்டம் நிருத்துங்கோள்
உங்கள் காலில் விழுகின்றேன் -என்கிறாள் –

நின்றாடு கணமயில் போல் நிறமுடைய நெடுமால் -பெரியாழ்வார் திருமொழி -என்றபடி –
எம்பெருமானுக்கு இவை ஸ்மராககங்களாய் கொண்டு நலிகிற படியால்
கண்ணபிரான் திருக் கோலம் போன்று-என்கிறாள் –

அடி வீழ்கின்றேன் —
இக் கூத்து ஒழிய வேணும் என்று பிரபத்தி பண்ணுகிறேன் -என்றபடி –

இவள் வார்த்தை கேட்டதும் -அந்தோ
பெரியாழ்வார் திருமகளாராய் பெருமை வாய்ந்த உன் காலில் அன்றோ நாங்கள் விழ வேண்டும் -என்று சொல்லக் கேட்டு –
பண மாடரவணைப் பற்பல காலமும் பள்ளி கொள்மண வாளர் நம்மை வைத்த பரிசிது காண்மினே –
சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம் -என்றபடி
திரு வநந்த ஆழ்வானை சர்வ பிரகாரங்களாலும் அடிமை கொண்டு
சிறப்பிக்குமவர் என்னை உங்கள் காலிலே விழும்படி செய்த பின்பு நான் செய்யலாவது உண்டோ -என்கிறாள்

பண வாளரவணை -என்றும் பாடம் உண்டு –
படங்களையும்
ஒளியையும் உள்ள அரவு -என்றபடி

————————————————————————————————–

நடமாடித் தோகை விரிக்கின்ற மா மயில்காள் உம்மை
நடமாட்டம் காணப் பாவியேன் நானோர் முதலிலேன்
குடமாடு கூத்தன் கோவிந்தன் கோமிறை செய்து எம்மை
யுடைமாடு கொண்டான் உங்களுக்கு இனி ஓன்று போதுமே–10-7-

பதவுரை

நடம் ஆடி–கூத்தாடிக் கொண்டு
தோகை விரிக்கின்ற–தோகைகளை விரிக்கிற
மா மயில்காள்–சிறந்த மயில்களே!
உம்மை–உங்களுடைய
நடம் ஆட்டம் காண–கூத்தைப் பார்ப்பதற்கு
பாவியேன் நான்–பாவியேன நான்
ஓர் முதல் இலேன்
குடம் ஆடு கூத்தன்–குடக்கூத்தாடினவனான
கோவிந்தன்–கோபாலக்ருஷ்ணன்
கோமிறை செய்து–கேட்பாரற்ற மிறுக்குக்களைப் பண்ணி
எம்மை–என்னை
உடை மாடு கொண்டான்–ஸர்வ ஸ்வாபஹாரம் பண்ணினான்
இனி–இப்படி யிருக்க
ஒன்று–(என் முன்னே கூத்தாடி என்னை ஹிம்ஸிக்கையாகிற) ஒரு காரியம்
உங்களுக்கு–உங்களுக்கு
போதுமே–தகுமோ?

‘உங்கள் கூத்தை நிறுத்துங்கள்‘ என்று மயில்களின் காலிலே இவள் விழுந்து வேண்டிக் கொள்ளவே,
அம் மயில்கள் இவளுடைய எளிமையை நன்று தெரிந்து கொண்டு ‘இவளுக்கு நாம் அநிஷ்டமானதைச் செய்தால்
நம்மை இவள் தண்டிப்பளோவென்று நாம் அஞ்சவேண்டா; இவள் புகலற்றுக் கிடக்கின்றான்;
இவளை நாம் எப்படி ஹிம்ஸித்தாலும் கேட்பாரில்லை என்று எண்ணி முன்னிலும் அதிகமாகத் தோகைகளை
விரித்துக் கூத்தாடத்தொடங்கின; அவற்றை நோக்கி மீண்டும் தன் அவஸ்தையை முறையிட்டுக் கொள்கிறாள்.

நடமாடித் தோகை விரிக்கின்ற மாமயில்காள் – தோகைவிரித்து நடமாடுகின்ற மாமயில்காள்! என்க.
உள்ள படியே அந்வயிப்பதும் ஒக்கும்.
(உம்மை இத்யாதி) கண்ணுடையவர்கள் உங்கள் கூத்தைக் கண்டால் பரமாநந்தம் பெறுவர்கள் என்பதில் தட்டில்லை;
கண் இழந்திருக்கிற நான் உங்கள் கூத்தை எங்ஙனே காணவல்லேன்? முதல் இலேன் என்றது –
காண்பதற்கு முக்ய ஸாதநமான கண்ணை யுடையேனல்லேன் என்றபடி.
“என்ஐம்புலனும் எழிலுங்கொண்டு“ என்றபடி எல்லா இந்திரியங்களையுங் கொள்ளை கொண்டானிறே எம்பெருமான்.

“பாவியேன் நானோர்முதலிலேன்“ என்று சொன்னதை விரித்துரைக்கின்றனா பின்னடிகளில்
நாற்சந்தியிலே குடக்கூத்தாடி அக்கூத்திலே எல்லாரை ஈடுபடுத்திக்கொண்டவனாய், பசுக்களுக்கும் இடையர்க்குங்கூட பண்ணி
என்னுடைய ஸர்வஸ்பத்தையும் கொள்ளைகொண்டான், இப்படிப்பட்ட தஜையிலே நீங்களும் என்னைவந்து ஹிம்ஸிப்பது தகுதியோ? என்கிறாள்.

கோமிறை -கோ- அரசர்கள், மிறை – மிறுக்கு; அரசர்கள் செய்யும்படியான மிறுக்காவது ஈரநெஞ்ச இளநெஞ்சு இல்லாமல்
புரியங் கொடுமைகள் கொடுமைகள். கோக்கள் மிறுக்கு செய்யுமாபோலே செய்து என்படி. அரசர்கள் எதுசெய்தாலும் கேட்பாரில்லையே.

(எம்மையுடை மாடு கொண்டான்) எம்மை – எங்களுடைய உடை – ஆடையையும், மாடு – செல்வத்தையும், கொண்டான் என்றும்;
எம்மையுடை- எங்களுடைய , மாடு – ஸர்வஸ்வத்தையும் என்றும் பொருள்கொள்ளலாம்.
‘மாடு பொன் பக்கஞ் செல்வம்‘ என்ற நிகண்டு அறியத்தக்கது.
திருவாய்மொழியில் “மாலுக்கு வையமளந்த மணாளற்கு“ என்ற திருவாய்மொழியிற் கூறியபடி
எல்லாவற்றையும் இழந்துகிடக்கிற என்னை நீங்களும் நலிகை ப்ராப்தமன்று என்கிறாள்.

நடமாடித் தோகை விரிக்கின்ற மா மயில்காள்
காலில் விழுந்து வேண்டிக் கொண்டதும்
இவள் எளிமையை புரிந்து கொண்டு
நன்றாக தோகை விரித்து ஆட
அவற்றை நோக்கி மீண்டும் முறையிட்டுக் கொள்கிறாள்
தோகை விரித்து நடமாடுகின்ற மா மயில்காள்
உள்ளபடியே அன்வயிக்கவும் அமையும் –

உம்மை நடமாட்டம் காணப் பாவியேன் நானோர் முதலிலேன் –
கண் உடையவர்கள் உங்கள் கூத்தை கண்டால் பரமானந்தம் பெறுவார்கள்
கண் இழந்த நான் உங்கள் கூத்தை காண எங்கனம் வல்லேன் –

முதல் இலேன் -என்றது
காண்பதற்கு முக்ய சாதனமான கண்ணை யுடையேன் அல்லேன் -என்றபடி –
என் ஐம்புலனும் எழிலும் கொண்டு -என்றபடி
எல்லா இந்த்ரியங்களையும் கொல்லை கொண்டான் இ றே எம்பெருமான் –

குடமாடு கூத்தன் கோவிந்தன் கோமிறை செய்து எம்மை
யுடைமாடு கொண்டான்-
நால் சந்தியிலே குடக் கூத்தாடி
அக்கூத்திலே எல்லாரையும் ஈடுபடுத்திக் கொண்டு
பசுக்களுக்கும் இடையருக்கும் சுலபனான அவன்
ஸ்வதந்த்ரர் பண்ணும்படியான மிறுக்குகளை என் விஷயத்திலே பண்ணி
என்னுடைய சர்வஸ்வத்தையும் கொள்ளை கொண்டான்
இப்படிப் பட்ட தசையிலே நீங்களும் என்னை வந்து ஹிம்சிப்பது தகுதியோ
கோ ஸ்வாமி
மிறை -மிறுக்கு
ஈர நெஞ்சு இள நெஞ்சு இல்லாமல் புரியும் கொடுமைகள்
கேட்பார் இல்லையே அரசர் எது செய்தாலும் —

எம்மை யுடைமாடு கொண்டான்-
எம்மை -எங்களுடைய
உடை -ஆடையையும்
மாடு -செல்வத்தையும் கொண்டான்
எம்மையுடை -எங்களுடைய
மாடு -சர்வ்ஸ்வத்தையும் கொண்டான்
மாடு -பொன் பக்கல் செல்வம் -நிகண்டு
மாலுக்கு வையம் அளந்த மணாளர் க்கு -திருவாய் மொழியில் அருளின படி
எல்லா வற்றையும் இழந்து கிடக்கிற என்னை –

உங்களுக்கு இனி ஓன்று போதுமே –
நீங்களும் நலிகை பிராப்தம் அன்று-

—————————————————————————————————–

மழையே மழையே மண் புறம் பேசி உள்ளாய் நின்ற
மெழுகூற்றினால் போல் ஊற்று நல் வேங்கடத்துள் நின்ற
அழகப பிரானார் தம்மை யென்னெஞ்சகத்து அகப்பட
தழுவ நின்று என்னைத் ததைத்துக் கொண்டு ஊற்றவும் வல்லையே–10-8-

பதவுரை

மழையே மழையே!–ஓ மேகமே!
புறம்–மேற் புறத்திலே
ஊற்றும்–என்னை அணைந்து அந்தஸ் ஸாரமான ஆத்மாவை உருக்கி யழிப்பவராய்.
நல் வேங்கடத்துள் நின்ற அழகப் பிரானார் தம்மை–விலக்ஷணமான திருவேங்கடமலையிலே நிற்குமவரான அழகிய பெருமாளை
மண் பூசி–மண்ணைப் பூசி விட்டு
உள்ளாய் நின்ற மெழுகு ஊற்றினால் போல்–உள்ளே யிருக்கும் மெழுகை உருக்கி வெளியில் தள்ளுமா போலே
என் நெஞ்சந்து அகப்பட தழுவ நின்று–என் நெஞ்சிலே ஸேவை ஸாதிக்கிறபடியே நான் அணைக்கும்படி பண்ணி
என்னை–என்னை
ததைத்துக் கொண்டு–அவரோடே நெருக்கி வைத்து (பிறகு)
ஊற்றவும் வல்லையே–வர்ஷிக்க வல்லையோ?

விண்ணீல மேலாப்பிலே கண்ட மேகங்கள் வர்ஷித்த பிறகு விகாஸத்தோடும் விலாஸத்தோடும் கூடிக் கிளர்ந்த
பதார்த்தங்களை நோக்கி வார்த்தை சொல்லிக் கொண்டு வந்து ஆண்டாள் இப்போது பழையபடியே மேகங்களைவிளித்துக் கூறுகின்றாள் – ;
மேகங்களானவை சிலபதார்த்தங்களை உத்தீபங்களாகக் கிளப்பி அவற்றின் வழியாலே நலிந்தது போதாமல்
பின்னையும் விடாதே நின்று வர்ஷித்து ஸாக்ஷாத்தாகவும் நலியத் தொடங்கினபடியாலே அவற்றை நோக்கிக் கூறுகின்றன்ளென்க.
மழை பொழிதலும் விரஹிகளுக்கு உத்தீபகமிறே.

இப்பாட்டில் அந்த பரம்பரையாக மூன்று எழுத்துப் பிழைகள் நெடுநாளாகவே நேர்ந்திருக்கின்றன.
முதலடியின் முடிவில் “உள்ளாய்நின்று“ எனவும் இரண்டாமடியின்முடிவில் “வேங்கடத்துள்நின்று“ எனவும்
ஈற்றடியின் முதலில் “தழுவிநின்று“ எனவும் பெரும்பாலும் பண்டிதபாமா விபாகமற அளைவராலும் ஓதப்பட்டுவருகின்றது.
மூலப்பதிப்புகள் எல்லாவற்றிலும் இப்பிழைகள் உள்ளன. அடைவே, “உள்ளாய்நின்ற“ எனவும்,
“வேங்கடத்துள் நின்ற“ எனவும்; “தழுவநின்று“ எனவும் திருத்திக்கொள்க.
கோயில் பத்தராவிஸ்வாமி இப்பிழைகளைக் குறிப்பாக எடுத்துக்காட்டினர்.

மழையேயென்று ஒருகாற்சொல்லாமல் இருகாற்சொல்லிவிளித்தது –
மேகங்கள் எத்தனைதூரஞசென்றாலும் அவற்றின்செவியிலே இந்த்க் கூக்குரல் உறைப்பதற்காகவென்ப.

(மண்புறம்பூசி இத்யாதி) வெண்கலப்பதாத்திரம் முதலியன நிருமிப்பவர்கள், முதலில், பாத்திரத்தின் வடிவத்துக்கு ஒப்ப
மண்ணைக்கட்டி அதன்மேல் சுற்றிலும் மெழுகைவளைத்து, பின்னையும் அம்மெழுகின்மேலே மண்ணைப் பூசி,
மர்மமாக ஓரிடத்திலே த்வாரமாக்கி, உள்ளிருக்கும்மெழுகை வெதுப்பி அவ்வழியாலே வெளியே ஊற்றுவர்கள்.
அவ்வாறாக ஊற்றுகின்றார் வேங்கடத்துள் நின்ற அழகப்பிரானார் என்கிறவிதனால் தேறுங்கருத்து யாதெனில்,
மேலே மண்ணை இணைத்து உள்ளிருக்கும் மெழுகைத் தள்ளிவிடுவதுபோல, அப்பெருமானும் உடம்பின் மேலே
அணைந்து உள்ளிருக்கும் ஸந்து உருகிக் கழிந்து போம்படி செய்யவல்லவன் என்றதாகிறது. –
“உடம்பிலே அணைந்து அகவாய் குடிபோம்படி பண்ணுமவராய்ந்து“ என்றருளிச்செய்தார் பெரியவாச்சான் பிள்ளையும்.

ஊற்றும் என்ற விஸேஷணம் அழகப்பிரானாரிடத்து அந்வயிக்கும். என்னை இப்பாடுபத்துகைக்கு
அப்பெருமானிடத்துள்ள முக்கியஸாமக்ரி அழகுதான் என்றகருத்துத் தோன்ற அழகப்பிரானார் தம்மை என்கிறாள்.
(என்னெஞ்சத்தகப்பட இத்யாதி.) அப்பெருமான் என்நெஞ்சில் ப்ரகாஸிக்கிறாப் போலிருக்கிறானத்தனைபொழிய,
அவனைநான் அணைக்கவிரும்பிக் கையை நீட்டப் புகுந்தால் அகப்படுவதில்லை. இப்படிநான் நோவுபடவொண்ணாமல்
அப்பெருமான் எனது நெஞ்சில் ப்ரதிபாஸிக்கும்படியே அவனை நான் அணைக்கும்படி பண்ணிவைத்து
(அதாவது, உஷையையும் அநிருத்தனையும் கூடவிலங்கிட்டு வைத்தாப்போலே அவனையும் என்னையும் ஒரு வ்யக்தியாக நெருக்கி)
ஓமேகமே! பிறகு நீ வர்ஷிப்பாயாகில் அப்போதன்றோ உன்னுடைய வர்ஷம் ஆநந்தகரமாயிருக்கு மென்கிறாளென்க.
விஸ்லேஷ காலத்தில் வேண்டாத வர்ஷந்தானே ஸம்ஸ்லேஷஸமயத்தில் உத்தேஸ்யமாயிருக்குமிறே.

இப்பாட்டையும் மேற்பாட்டையும் திருமலை நம்பி அநுஸந்திக்கும்போதெல்லாம் நெடும்போது
கண்ணுங் கண்ணநீருமாயிருந்து உருகிப்போவராம்;
அதுபற்றி இவ்விரண்டுபாட்டையும் நம்பூருவாசாரியர்கள் மிகவும் ஆதரித்துப் போருவர்களாம்.

மழையே மழையே –
விண்ணீல மேலாப்பில் கண்ட மேகங்கள் வர்ஷித்த பிறகு
விகாசத்தொடும் விலாசத்தொடும் கிளர்ந்த பதார்த்தங்களை நோக்கி
வார்த்தை சொல்லிக் கொண்டு வந்த ஆண்டாள்
பழையபடி மேகங்களை விளித்து கூறுகிறாள் –
மேகங்கள் சில பதார்த்தங்களை உத்தீபகங்களாக கிளப்பி
அவற்றின் வழியாக நலிந்தது போதாமல்
விடாதே நின்று வர்ஷித்து சாஷாத்தாகவும் நலியத் தொடங்க -அவற்றைப் பார்த்து கூறுகிறாள்
மலை பொழிதலும் விரஹி களுக்கு உத்தீபகம் இ றே –
இருகால் உரைத்தது மேகங்கள் எத்தனை தூரம் சென்றாலும் இக் கூக்குரல் உறைப்பதற்காக

மண் புறம் பேசி உள்ளாய் நின்ற -மெழுகூற்றினால் போல்
உள்ளாய் நின்று -பிழையான பாடம்
வேங்கடத்துள் நின்று -என்பதுவும் பிழையான பாடம்
மேலே மண்ணை இணைத்து உள்ளிருக்கும் மெழுகைத் தள்ளி விடுவது போலே
உடம்பின் மேலே அணைந்து
உள்ளிருக்கும் சத்து உருகி அழிந்து போம்படி செய்ய வல்லவன்

ஊற்று நல் வேங்கடத்துள் நின்ற அழகப பிரானார் தம்மை யென்னெஞ்சகத்து அகப்பட
தழுவ நின்று என்னைத் ததைத்துக் கொண்டு ஊற்றவும் வல்லையே
உடம்பிலே அணைந்து
அகவாய் குடிபோம்படி
பண்ணுமவர் ஆய்த்து அழகப பிரானார்
தழுவி நின்று -பிழையான பாடம்

ஊற்றும் -விசேஷணம் அழகப பிரான் இடமும் அன்வயிக்கும்
இப்பாடு படுத்துவது அவர் அழகாலே -என்று காட்டி அருள
அழகப பிரானார் தம்மை -என்கிறாள்
அழகு தான் முக்கிய சாமக்கிரி –
அப்பெருமான் என் நெஞ்சில் பிரகாசிக்கிறாப் போலே இருக்கிறான் அத்தனை ஒழிய
அவனை அணைக்க விரும்பி கையை நீட்டப் புகுந்தால் அகப்படுவது இல்லை –
இப்படி நான் நோவு பட ஒண்ணாமல்
அப்பெருமான் நெஞ்சில் பிரகாசிக்கும்படியே
அவனை நான் அணைக்கும்படி பண்ணி வைத்து
உஷையையும் அநிருத்தனையும் கூட விலங்கிட்டு வைத்தால் போலே
எங்கள் இருவரையும் ஒரு வ்யக்தியாக நெருக்கி
நீ வர்ஷிப்பாய் ஆகில் ஆனந்தகரமாய் இருக்கும்

இப்பாட்டையும்
மேல் பாட்டையும்
அனுசந்திக்கும் பொழுது எல்லாம்
திருமலை நம்பி
கண்ணும் கண்ணநீருமாய் இருந்து உருகிப் போவாராம்
அது பற்றி இரண்டு பாட்டையும் நம் பூர்வர்கள் மிகவும் ஆதரித்துப் போவார்கள் –

—————————————————————————————————-

கடலே கடலே யுன்னைக் கடைந்து கலக்குறுத்து
உடலுள் புகுந்து நின்று ஊறல் அறுத்தவற்கு என்னையும்
உடலுள் புகுந்து நின்று ஊறல் அறுக்கின்ற மாயற்கு என்
நடலைகளை எல்லாம் நாகணைக்கே சென்று உரைத்தியே–10-9-

பதவுரை

கடலே கடலே!–ஓ கடலே!
உன்னை–(தனக்குப் படுக்கை யிடமாக வாய்ந்த) உன்னை
கடைந்து–(மலையை யிட்டுக்) கடைந்து
கலக்குறுத்து–கலக்கி
உடலுள் புகுந்து நின்று–(உனது) சரீரத்திலே புகுந்திருந்து
ஊறல் அறுத்தவற்கு–ஸாரமான அமுதத்தை அபஹரித்தவராய் (அவ்வாறாகவே)
என்னையும் உடலுள் புகுந்து நின்று–என் உடலிலும் புகுந்திருந்து
ஊறல் அறுக்கின்ற–என் உயிரை அறுக்குமவரான
மாயற்கு–எம்பெருமானுக்கு (விண்ணப்பம் பண்ணும்படி)
என் நடலைகள் எல்லாம்–என் துக்கங்களை யெல்லாம்
நாக அணைக்கே–அவர் படுக்கையான திருவனந்தாழ்வானிடத்தில்
சென்று–நீ போய்
உரைத்தியே–சொல்லுவாயா? (சொல்ல வேணும் என்கை)

அநந்தரம், கடலின் ஓதம் காதில்விழத் தொடங்கின்று, கடலே! என்று ஒருகால் அதனைநோக்கிச் சொன்ன வளவிலும்
அது தன் கோஷத்தையே பெருக்கக் கிளப்பிக் கொண்டிருக்க, அந்தக் கோஷத்தையே பெருக்கக் கிளப்பிக் கொண்டிருக்க,
அந்தக் கோஷத்தைக் கீழ்ப்படுத்தித் தன்னுடைய த்வநியே ஓங்கும்படி கடலேகடலே! எனவிளித்து ஒருவார்த்தை சொல்லுகின்றாள்.

“மாலுங் கருங்கடலே! என்நோற்றாய்! வையகமுண்டாலினிலைத் துயின்ற வாழியான்
கோலக் கருமேனிச் செங்கண்மாற் கண்படையுளென்றும், திருமேனி நீதீண்டப்பெற்று“ (முதல்திருவந்தாதி) என்றபடி
எம்பெருமானுக்கும் கடலுக்கும் நெருங்கின ஸம்பந்தம் இருக்கின்றமையால் அந்தஸம்பந்தத்தையே பற்றாசாகக்கொண்டு
கடலைப் பிரார்த்திக்கின்றாள் –
நான்படும் பாட்டை * அரவணை மேற்பள்ளிகொண்ட முகில்வண்ணன் பக்கலிலே நீதெரிவிக்க வேணுமென்கிறாள்.

தனக்கு உபகாரம் செய்யுமவர்களை வேண்டியமட்டும் ஹிம்ஸித்து அவர்களிடத்துள்ள ஸாரத்தையும் கொள்ளை கொள்பவன் எம்பெருமான் –
என்னுமிடம் விளங்கக் கூறுவன முன்னடிகள். கடலானது நமக்குப் படுக்குமிடமாயிற்றேயென்று சிறிதும் நோக்காமல்
மலைகளையெல்லாங் கொணர்ந்து உன்னுள்ளே போட்டு உன்குடல் குழம்பும்படி உன்னைக் கடைந்து
கலக்கினதுமல்லாமல் உன்னோடே அன்புடன் அணைந்து கிடக்கிறாப் போற்கிடந்து உன்பக்கல் ஸாரமாயிருந்த
அம்ருதத்தைக் கொள்ளை கொள்வித்தவனன்றோ அவன் என்கிறாள்.

“நீதான் என்செய்தாய்? தூசித்தலையிலே படையறுப்பாரைப்போலே உன்னையன்றோ நெருக்கிக் கடைந்து கலங்கப்பண்ணிற்று,
படுக்கையென்றும் பாராதேயன்றோ நெருக்கிற்று; இடங்கொடுத்தார் நெஞ்சிலே கல்லையிட்டு நெருக்கிச் சாறு பெறுத்துமவரன்றோ“
என்ற வியாக்கியான ஸ்ரீஸூக்தி ஸேவிக்கத்தக்கது.

உன்னை இப்பாடுபடுத்தியதுபோலவே என்னையும்படுத்தா நின்றானெகிறாள் மூன்றாமடியில்.
மேலோடே அணைந்து உள்ளே பசையறுத்தபெருமான் என்கிறாள். மாயற்கு என்றது அவன் இப்பாடுபடுத்தச் செய்தேயும்
“ஆகிலுங்கொடிய வென்னெஞ்சமவனென்றே கிடக்குமெல்லே!“ என்றபடி அவனையே பற்றி நிற்கும்படியான மாயமுடையவன் என்றபடி.
நடலை- துக்கம். நாகணைக்கே சென்று உரைத்தி – சென்றால் குடையாமிருந்தால் சிங்காசனமாம்“ என்றபடி
ஸர்வ்வித கைங்கரியங்களும் திருவனந்தாழ்வானொருவன் இடத்தில் தானோ கொள்ள வேணும்,
அத்தகைய கைங்கரியங்களுக்கு அடியோம் உரிமைப்பட்டோமல்லோமோ? என்று சொல்ல வேணுமென்பது உள்ளுறை.
அன்றியே திருவனந்தாழ்வானைப் புருஷகாரமாகக் கொண்டு சொல்ல வேணுமென்பதாகவுமாம்.

கடலே கடலே –
அனந்தரம் கடலின் ஓதம் காதில் விழத் தொடங்கிற்று
ஒரு கால் கடலே -என்று அதனை நோக்கிச் சொன்ன அளவிலும் கோஷத்தைக் கிளப்பிக் கொண்டு இருக்க
அந்த கோஷத்தை கீழ்படுத்தி தன்னுடைய த்வனியே ஓங்கும்படி-
கடலே கடலே -என்று
விளித்து ஒரு வார்த்தை சொல்கிறாள் –
மாலும் கருங்கடலே என் நோற்றாய் வையகம் யுண்டான்
ஆலினிலைத் துயின்ற ஆழியான்
கோலக் கருமேனி செங்கண் மால் கண் படையுள் என்றும்
திரு மேனி நீ தீண்டப் பெற்று -முதல் திருவந்தாதி
கடலுக்கும் எம்பெருமானுக்கும் நெருங்கின சம்பந்தம்
இருக்கின்றமையால்
அந்த சம்பந்தமே பற்றாசாக கடலை பிரார்திக்கின்றாள்

யுன்னைக் கடைந்து கலக்குறுத்து உடலுள் புகுந்து நின்று ஊறல் அறுத்தவற்கு –
தனக்கு உபகாரம் செய்தவர்களை வேண்டியமட்டும் ஹிம்சித்து
சாரம் கொள்பவன்
கடலானது நமக்குப் படுக்கும் இடம் ஆயிற்றே என்று சிறிதும் நோக்காமல்
மலைகளை எல்லாம் கொணர்ந்து
உன் உள்ளே போட்டு
உன் குடல் குழம்பும்படி
உன்னைக் கடைந்து கலக்கினது அல்லாமல்
உன்னோடு அன்புடன் அணைந்து கிடக்கிறார் போலே கிடந்தது
உன் பக்கல் சாரமாய் இருந்த அம்ர்தத்தை கொள்ளை கொள்வித்தவன் அன்றோ –
நீ தான் என் செய்தாய்
தூசித் தலையிலே படை அறுப்பாரைப் போலே உன்னை அன்றோ
நெருக்கிக் கடைந்து கலங்கப் பண்ணிற்று
இடம் கொடுத்தார் நெஞ்சிலே
கல்லை இட்டு
நெருக்கிச்
சாறு பெருத்துமவர் -அன்றோ —

என்னையும் உடலுள் புகுந்து நின்று ஊறல் அறுக்கின்ற மாயற்கு-
அது போலே என்னையும்
மேலோடு அணைந்து
உள்ளே பசை அறுத்த பெருமான் –

மாயற்கு -என்றது
அவன் இப்பாடு படுத்தச் செய்தேயும்
ஆகிலும் கொடிய என்நெஞ்சம் அவன் என்றே கிடக்கும் எல்லே -என்றபடி
அவனையே பற்றி நிற்கும்படியான மாயம் யுடையவன் -என்றபடி –

என் நடலைகளை எல்லாம்
நடலை -துக்கம்

நாகணைக்கே சென்று உரைத்தியே –
சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம் -என்றபடி
சர்வவித கைங்கர்யங்களையும்
திரு வநந்த ஆழ்வான் ஒருவன் இடமே கொள்ள வேணுமோ
அத்தகைய கைங்கர்யங்களுக்கு அடியோம் உரிமைப் பட்டோம் அல்லையோ
அன்றியே
திரு வநந்த ஆழ்வானை புருஷாகாரமாகக் கொண்டு சொல்ல வேணும் –

————————————————————————————————–

நல்ல வென் தோழீ நாகணை மிசை நம்பரர்
செல்வர் பெரியர் சிறு மானிடவர் நாம் செய்வது என்
வில்லி புதுவை விட்டு சித்தர் தங்கள் தேவரை
வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே–10-10-

பதவுரை

என் நல்ல தோழி!–எனது உயிர்த் தோழியே,
நாக அணைமிசை–திருவனந்தாழ்வானாகிற படுக்கையிலே சயனித்திருக்கிற
நம் பரர்–நம் பெருமாள்
சிறு மானிடவர்–க்ஷுத்ர மநுஷ்யரா யிரா நின்றோம் (இப்படிப்பட்ட நாம்)
என் செய்வது–என்ன செய்யலாம்?
வில்லி புதுவை விட்டுசித்தர்–ஸ்ரீவில்லிபுத்தூர்க்கு நிர்ஹகரான பெரியாழ்வார்
செல்வர்–பெருஞ்செல்வம் படைத்தவர்
பெரியர்–எல்லாரினும் மேற்பட்டவர்
நாம்–நாமோ வென்றால்
தங்கள் தேவரை–தமக்கு விதேயரா யிருக்கிற அப் பெருமானை
வல்ல பரிசு–தம்மால் கூடின வகைகளாலே
வருவிப்பரேல்–அழைப்பராகில்
அது காண்டும்–அப்போது (அவனை) நாம் ஸேவிக்கப் பெறுவோம்

ஆண்டாள் இப்படி பகவத்விரஹத்தாலே ஆற்றமாட்டாதாளாய்ப்படுகிற அலமாப்பைக் கண்ட உயிர்த்தோழியானவள்.
‘ஐயோ! இவள் இப்பாடுபடுகின்றாளே! இவளை நாம் எப்படித் தேற்றுவிப்பது! ஒருவழியும் தெரியவில்லையே! என்று
சிந்தித்து வ்யஸநித்திருக்கையில், ஆண்டாள் அவ்வுயிர்த்தோழியைநோக்கி
‘நீ அஞ்சவேண்டா; ஜீவிப்பதற்கு ஒருவழி கண்டேன்காண்‘ என்கிறாள்.

திருவனந்தாழ்வான்மேல் ஸயனித்தருளுமவராய் ஸ்ரிய பதியாய்ப் பரம புருஷராயிருக்கிறவரை அதிக்ஷுத்ரராயிருக்கிற
நாம் எங்ஙனே அணுகமுடியும்? “அம்மானாழிப்பிரானவன் எவ்விடத்தான்யானார்?“ என்னுமாபோலே அவருடைய
பெருமைக்கும் நம்முடைய சிறுமைக்கும் எவ்வளவோ வாசியுண்டாயிருக்க அவரை நாம் வளைப்பிடமுடியுமோ? முடியாது.
ஆகில் நாம் இழந்தே போகவேண்டியதேர்வென்னில், இழவாமைக்கு ஒருவழியுண்டு;
அப் பெரியவர் நமக்கு வசப்பட மாட்டாராயினும் நம் அண்ணலான் பெரியாழ்வார்க்கு வசப்படாதிருக்க அவரால் முடியாது.
அந்த நாகணைமிசைநம்பரர் தாமே பெரியாழ்வாரிடத்தில் கோற்கீழ்க்கன்றாயிருப்பர்.
“பூச்சூட்டவாராய்“ என்றும் “நீராடவாராய்“ என்றும் “காப்பிடவாராய்“ என்றும் அவர் அழைத்தவாறே
அப் பெரியவர் பதறி ஓடி வருவர்; அப்போது நாம் எளிதாக அவரை ஸேவிக்கப் பெறுவோமென்கிறாள்.

வல்லபரிசுவருவிப்பரேல் – ஒருபூவையிட்டு வரப்பண்ணவுமாம், ஒரு இசையைச்சொல்லி இசைவிக்கவுமாம்;
கிரியையறுத்து வரப்பண்ணவுமாம், திருமஞசனத்தைச் சேர்த்து அழைக்கவுமாம்; திருக்குழல் பணியைச் சேர்த்துவைத்து அழைக்கவுமாம் ;
திருவந்திக் காப்பிட்டு அழைக்கவுமாம்;
அன்றிக்கே, அவர் தம்மை முன்னிட்டாப்போலே அவர் தமக்குப்புருஷகாரமாவாரை முன்னிட்டு வரப் பண்ணவுமாம்
அவ்வழியாலே பெறக்கடவோம்“ என்ற வியாக்கியமான ஸூக்தியின் போக்யதை அநுபவிக்கத்தக்கது.

இத்திருமொழிக்குப் பலஸ்ருதி அருளிச்செய்யாமல் இப்பாட்டே அதன் ஸ்தாநத்தில் நின்றது.
பாகவத ஸம்பந்தத்தைக் கொண்டு உஜ்ஜீவிக்கப் பெறுவர்கள் என்பதே இத் திருமொழிக்கும் பல ஸ்ருதியாகக் கொள்ளத்தக்கது.

ஆண்டாள் இப்படி பகவத் விரஹத்தாலே
ஆற்ற மாட்டாளாய் படுகிற அலமாப்பைக் கண்ட உயிர் தோழி
இவளை எப்படி தேற்றுவிப்பது வழி தெரிய வில்லையே என்று சிந்தித்து வ்யசநித்து இருக்கையில்
ஆண்டாள்
நீ அஞ்ச வேண்டா
ஜீவிப்பதற்கு ஒரு வழி கண்டேன் நான் -என்று அருளிச் செய்கிறாள் –
நல்ல வென் தோழீ நாகணை மிசை நம்பரர்-செல்வர் பெரியர்-
திரு வநந்த ஆழ்வான் மேல் சயனித்து அருளுமவராய்
ஸ்ரீ யபதியாய் –
பரம புருஷராய் இருக்கிறவரை

சிறு மானிடவர் நாம் செய்வது என் –
ஷூத்ரராய் இருக்கிற நாம்
எங்கனே அணுக முடியும்
அம்மான் ஆழிப் பிரான் அவன் எவ்விடத்தான் யான் யார்-என்னுமா போலே
அவருடைய பெருமைக்கும் நம்முடைய சிறுமைக்கும்
எவ்வளவோ வாசி உண்டாய் இருக்க
அவரை நாம் வளைப்பிட முடியுமோ -முடியாது
ஆகில் நாம் இழந்தே போம் இத்தனையோ
இழவாமைக்கு ஒரு வழி உண்டு –

வில்லி புதுவை விட்டு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே –
அப்பெரியவர் நமக்கு வசப்படார் ஆயினும்
நம் அண்ணலான பெரிய ஆழ்வாருக்கு வசப்படாது இருக்க அவரால் முடியாதே
அந்த நாகணை மிசை நம்பரர் தாமே
பெரியாழ்வார் இடத்தே
கோற்கீழ்க் கன்றாய் இருப்பார்
பூச் சூட வாராய் -என்றும்
நீராட வாராய் -என்றும்
காப்பிட வாராய் -என்றும்
அவர் அழைத்தவாறே அப்பெரியவர் பதறி ஓடி வருவர்
அப்போது நாம் அவரை எளிதாக சேவிக்கப் பெறுவோம் –

வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே –
ஒரு பூவை இட்டு வரப் பண்ணவுமாம்-
ஒரு இசையைச் சொல்லை இசைவிக்க்கவுமாம் –
கிரியை அறுத்து வரப் பண்ணவுமாம் –
திரு மஞ்சனத்தைச் சேர்த்து அழைக்கவுமாம் –
திருக் குழல் பணியைச் சேர்த்து வைத்து அழைக்க்கவுமாம் –
திருவந்திக் காப்பிட்டு அழைக்க்கவுமாம் –
அன்றிக்கே
நான் அவர் தம்மை முன்னிட்டாப் போலே
அவர் தமக்கு புருஷகாரமாமவரை முன்னிட்டு வரப் பண்ணவுமாம்
அவ வழியாலே பெறக் கடவோம்

இத்திருமொழிக்கு பல ஸ்ருதி அருளிச் செய்யாமல்
இப்பாட்டே அதன் ஸ்தானத்தில் நின்றது
பாகவத சம்பந்தத்தைக் கொண்டு உஜ்ஜீவிக்கப் பெறுவார்கள் என்பதே
இத் திரு மொழிக்கும் பல ஸ்ருதி யாகக் கொள்ளக் கடவது-

————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே -அண்ணங்கராச்சார்யர்  ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ நாச்சியார் திரு மொழி – ஒன்பதாவது திரு மொழி – -ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை -ஸ்ரீ உ. வே. P.B.A.. ஸ்வாமிகள்–

September 8, 2014

பிரவேசம் –

கண் எதிரே வந்து தோன்றின கார் முகில்களை நோக்கி
நீங்கள் எம்பெருமான் இடம் சென்று
எனது நிலைமையை அவனுக்கு யுணர்த்தி
என்னையும் அவனையும் கூட்ட வேணும் -என்று பலவாறாக
பிரார்த்தித்தாள்
கீழ்த் திரு மொழியில்

இவள் வேண்டின படி கார்யம் செய்ய வல்ல ஆற்றல் அம் மேகங்களுக்கு இல்லையே
அவர்கள் தாங்கள் வந்த காரித்தைச் செய்தனர்
அதாவது நன்றாக மழை பொழிந்தன

உடனே வர்ஷா காலத்தில் புஷ்பிக்கக் கூடிய புஷ்பங்கள் எல்லாம் புஷ்பிக்கத் தொடங்கி
சில மலர்கள் நன்றாக மலர்வதும்
சில பாதி பாகம் மலர்வதும்
சில மலர உபக்ரமிப்பதுமான நிலைமை யாய்த்து
மழை காலத்தில் களித்துத் திரியுமவை யான சில பிராணிகளும்
சம்ப்ரமத்தோடு வந்து உலாவப் புக்கன-

ஆக
இப்படிப் பட்ட பதார்ந்தங்கள் எல்லாம் இவளுடைய இந்த விரஹ தசையிலே
வந்து தோற்றவே
இவளுடைய ஆற்றாமை மீதூர்ந்து உயிர் கொண்டு
தப்பிப் பிழைக்க முடியாத அவஸ்தை யாயிற்று

அதனால் மிகவும் துவண்டு பேசுகிற  பாசுரமாய் இருக்கிறது
இத் திருமொழியும்-
மேல் திரு மொழியும்

——————————————————————————————–

சிந்துரச் செம்பொடிப் போல் திரு மால் இருஞ்சோலை எங்கும்
இந்திர கோபங்களே எழுந்தும் பரந்திட்டனவால்
மந்திரம் நாட்டி யன்று மதுரக் கொழுஞ்சாறு கொண்ட
சுந்தரத் தோளுடையான் சுழலையில் நின்றுய்தும் கொலோ–9-1-

பதவுரை

திரு மாலிருஞ்சோலை எங்கும்–திருமாலிருஞ்சோலையில் பார்த்த பார்த்த விடமெங்கும்
இந்திர கோபங்கள்–பட்டுப் பூச்சிகளானவை
செம்–சிவந்த
சிந்துரம் பொடி போல்–ஸிந்தூரப் பொடி போல
எழுந்து-மேலெழுந்து
பரந்திட்டன–பரவிக் கிடக்கின்றன
ஆல்–அந்தோ!
அன்று–(கடலைக் கடைந்து அமுதமளிக்கவேணுமென்று தேவர்கள் சரணம் புகுந்து வேண்டின) அக் காலத்திலே
மந்தரம்–மந்தர மலை
நாட்டி–(பாற் கடலில் மத்தாத) நாட்டி
(கடல் கடைந்து)
கொழு மதுரம்–மிகவும் மதுரமான
சாறு–அம்ருத ரஸத்தை
கொண்ட–எடுத்துக் கொண்ட
சுந்தரம் தோள் உடையான்–ஸ்ரீ ஸுந்தர பாஹு நாதனுடைய
சுழலையில் நின்று–சூழ் வலையில் நின்றும்
உய்தும் கொல்–பிழைப்போமோ?

மழைக்காலத்திலே பட்டுப்பூச்சிகள் விசேஷமாகப் பறக்கும், அவை காதலனுடைய அதரத்தின் பழுப்புக்கு
ஸ்மாரகங்களாய் இருக்குமாதலால் தலைவிக்கு உத்தீபகமாயிருக்கும்.
ஐயோ! திருமாலிருஞ்சோலைப் புறமெங்கும் பட்டுப்பூச்சி மயமாய்விட்டதே,
விச்லேஷகாலத்திலே இவை வந்து தோற்றினால் இனி உயர்தரிக்க வழியுண்டேவென்று வருந்துகின்றாள்.
“இந்திரகோபங்கள் எம்பெருமான் கனிவாயொப்பான், சிந்தும்புறபில் தென் திருமாலிருஞ்சோலையே“ என்று
பெரியாழ்வார் திருமொழி இங்கே நினைக்கத்தக்கது.

எம்பெருமானுடைய வடிவுக்குப் போலியான திருமலைக் கண்ணாலே ஸேவித்துக் கொண்டிருந்தாகிலும்
ஒருவாறு தரித்திருப்போமென்று பார்த்தால் அதற்கும் ஆசையில்லாதபடி பாழும் பட்டுப்பூச்சிகள்
அம்மலைச் சூழ்ந்து கொண்டு மறைக்கின்றனவே! என்று கருத்தாகவுங் கொள்ளலாம்.

மந்தரம்நாட்டி மதுரக்கொழுஞ்சோறு கொண்ட வரலாறு கீழ் விவரிக்கப்பட்டுள்ளது.
அந்தச் சரித்திரத்தை ஆண்டாள் இங்கெடுத்து அநுஸந்தித்ததற்க்கு கருத்து யாதெனில்,
ஒருவரிடத்தில் ஒன்றுகொள்ள நினைத்தால் பின்னை அவர்கட்கு ஒன்றும் மிகாதபடி ஸாரமானவற்றைக்
கொள்ளை கொள்பவனன்றோ அவன்!; மந்தரமலையைக் கடலின் நடுநெஞ்சிலே நட்டு நெருங்கிக் கடையுமவன்னறோ அவன்!
ஒருவரால் கலக்க வொண்ணாத பெரிய தத்வங்களையுங் கலக்கி ஸாராம்ஸத்தைக் கொள்ளை கொள்ள வல்லவனன்றோ அவன்!;
அப்படிப்பட்டவன் அபலையான வென்னை அழியச் செய்கிறானென்றால் இஃது என்ன அற்புதம்? என்றவாறு.

மதுரச்சாறு என்று அம்ருதரஸத்தைச் சொல்லிற்றாய், மதுரக்கொழுஞ்சாறு என்று அதிற்காட்டிலும் போக்யதை விஞ்சிய
பெரியவிராட்டியாரைச் சொல்லிற்றாகலாம். தேவர்கட்கு அமுதமெடுத்துக்கொடுக்கிற வியாஜத்தினால்
லோகோத்தரமான அமுதமென்னலாம்படியான் பிராட்டியை ஸம்பாதித்துக் கொண்டானிறே;
“விண்ணவரமுதுண அமுதில்வரும் பெண்ணமுதுண்ட வெம்பெருமானே! என்ற திருமங்கையாழ்வார் ஸ்ரீஸூக்தியை நோக்குக.
கூரத்தாழ்வான அருளிய ஸுந்தரபாஹுஸ்தவத்தில் (உத்திகமந்தராத்ரி) என்கிற நான்காவது ச்லோகத்தின்
முற்பாதியில் இவ்விசேஷார்த்தம் நன்கு விளங்கக் காண்க.

சுழலை – சூழ்ச்சி, அதாவது – வஞ்சகர்செய்யும் தந்திரம்.
இங்கு திருமாலிருஞ்சோலையழகர்செய்த தந்திரமாவது – தாம் நேராக எழுந்தருளாமல்
தமது வடிவுக்கு ஸமாரகங்களான மேகங்களை வரக்காட்டுதல், இந்திரகோபங்களைப் பரவச்செய்தல் முதலிய காரியங்களினால்
ஆண்டாளுக்கு உத்தீபநஞ்செய்தல். சுழலையில் நின்று உயதுங்கொலோ? என்றது – இந்த ஆபத்தைத் தப்பிப் பிழைக்க
நம்மாலாகாது என்றபடி. ஒரு பெரியகைகாரன் நம்மை அகப்படுத்துதனையேயுள்ளது என்கிறாள்.

சிந்தூரம், இந்திரகோபம், மந்தரம், மதுரம், சுந்தரம்= வடசொல் விகாரங்கள்.
உய்து= உய் என்னும் வினைப்பகுதியடியாப் பிறந்த தன்மைப்பன்மை வினைமுற்று

சிந்துரச் செம்பொடிப் போல் திரு மால் இருஞ்சோலை எங்கும்
இந்திர கோபங்களே எழுந்தும் பரந்திட்டனவால்
மழைக் காலத்திலே பட்டுப் பூச்சிகள் விசேஷமாகப் பறக்கும்
அவை நாயகன் அதரத்தின் பழுப்புக்கு
ஸ்மாரகங்களாய் இருக்கும் ஆதலால்
நாயகிக்கு உத்தீபகமாய் இருக்கும்
ஐயோ திரு மால் இருஞ்சோலை புறம் எங்கும் பட்டுப் பூச்சி மயமாய் விட்டதே
விஸ்லேஷ காலத்தில் இவை வந்து தோற்றினால் இனி உயிர் தரிக்க வழி யுண்டோ
என்று வருந்துகின்றாள்
இந்திர கோபங்கள் எம்பெருமான் கனிவாய் ஒப்பான் சிந்தும் புறவில் தென் திரு மால் இரும் சோலையே -பெரியாழ்வார் -4-2-9-

எம்பெருமான் வடிவுக்கு போலியான திருமலையை கண்ணாலே சேவித்துக் கொண்டு இருந்தாகிலும்
தரிப்போம் என்று பார்த்தால்
பாழும் பட்டுப் பூச்சிகள் திருமலையைச் சூழ்ந்து கொண்டு மறைக்கின்றனவே -என்றுமாம்

மந்திரம் நாட்டி யன்று மதுரக் கொழுஞ்சாறு கொண்ட சுந்தரத் தோளுடையான் –
ஒருவர் இடத்தில் ஓன்று கொள்ள நினைத்தால்
பின்னை அவர்கட்கு ஒன்றும் மிகாதபடி
சாரமானவற்றைக் கொள்ளை கொள்பவன் அன்றோ அவன் –

மந்தர மலையை கடலின் நடு நெஞ்சிலே நட்டு நெருக்கிக் கடையுமவன் அன்றோ அவன்
ஒருவரால் கலக்க ஒண்ணாத பெரிய தத்துவங்களையும்
கலக்கி
சார அம்சத்தை கொள்ளை கொள்ள வல்லவன் அன்றோ அவன்
அப்படிப்பட்டவன் அபலையான என்னை அழியச் செய்கின்றான் என்றால் இதில் என்ன அற்புதம் –

மதுரச் சாறு -என்று
அம்ருத இரசத்தைச் சொல்லிற்றாய்
மதுரக் கொழுஞ்சாறு -என்று அதில் காட்டிலும் போக்யதை விஞ்சின
பெரிய பிராட்டியாரை சொல்லிற்று ஆகலாம்
விண்ணவர் அமுதுண்ண அமுதில் வரும் பெண்ணமுதம் உண்ட எம் பெருமானே–பெரிய திருமொழி -6-1-2–
உத்திக மந்த்ராத்ரி -கூரத் ஆழ்வான் ஸூ ந்தர பாஹூ ஸ்தவம் -நான்காவது ஸ்லோகம் –
லோகோத்தரமான பிராட்டியை கொண்டு உகந்தான் இ றே –

சுழலையில் நின்றுய்தும் கொலோ –
சுழலை -சூழ்ச்சி -அதாவது வஞ்சகர் செய்யும் தந்திரம்
இங்கு திருமால் இரும் சோலை அழகர் செய்யும் தந்த்ரம் ஆவது
தாம் நேராக எழுந்து அருளாமல்
தமது வடிவுக்கு ஸ்மாரகங்களான மேகங்களை வரக் காட்டுதல்
இந்திர கோபங்களைப் பரவச் செய்தல்
முதலிய கார்யங்களால் ஆண்டாளுக்கு உத்தீபனம் செய்தல்
சுழலையில் நின்றும் உய்தும் கொலோ -என்றது
இந்த ஆபத்தைத் தப்பிப் பிழைக்க நம்மால் ஆகாது என்றபடி –
ஒரு பெரிய கைகாரன் நம்மை அகப்படுதுகைக்கு வைத்த
வலையைத் தப்பி நாம் பிழைக்க முடியுமோ
இனி முடிந்து போம் இத்தனையே உள்ளது -என்கிறாள்
சிந்துரம்
இந்திர கோபம்
மந்தரம்
மதுரம்
சுந்தரம் –
இவை -வடசொல்லின் விகாரங்கள்
உய்தும் -வினைப் பகுதி அடியாய் பிறந்த தன்மை பன்மை -வினை முற்று –

———————————————————————————-

போர்க் களிறு பொரும் மாலிரும் சோலை யம்பூம் புறவில்
தார்க் கொடி முல்லைகளும் தவள நகை காட்டுகின்ற
கார்க்கொள் படாக்கள் நின்று கழறிச் சிரிக்கத் தரியேன்
ஆர்க்கிடுகோ தோழீ அவன் தார் செய்த பூசலையே–9-2-

பதவுரை

போர் களிறு–போர் செய்வதையே தொழிலாக வுடைய யானைகள்
பொரும்–பொருது விளையாடுமிடமான
மாலிருஞ் சோலை–திருமாலிருஞ் சோலை மலையினுடைய
அம்பூம் புறவில்–மிகவுமழகிய தாழ்வரைகளிலே
தார் கொடி முல்லைகளும்–அரும்புகளை யுடைய கொடி முல்லைகளும்
தவளம் நகை–(அழகருடைய) வெளுத்த புன்சிரிப்பை
காட்டுகின்ற–நினைப்பூட்டா நின்றன, (அன்றியும்)
கார் கொள்–சினை கொண்ட
படாக்கள்–படா என்னுங் கொடிகள்
நின்று–பூத்து நின்று
கழறி சிரிக்க–‘எமக்கு நீ தப்பிப் பிழைக்க முடியாது‘ என்று சொல்லிக் கொண்டே சிரிப்பது போல விகஸிக்க
தரியேன்–(அது கண்டு) தரிக்க மாட்டுகின்றிலேன்
தோழீ–எனது உயிர்த் தோழியே!
அவன் தார்–(நாம் ஆசைப்பட்ட) அவனுடைய தோள் மாலையானது
செய்த–உண்டு பண்ணின
பூசலை–பரிபவத்தை
ஆர்க்கு இடுகோ–யாரிடத்து முறையிட்டுக் கொள்வது?

யானைகள் கரைபொருது விளையாடா நிற்கப்பெற்ற திருமாலிருஞ்சோலை மலைச்சாரல்களில்
அரும்பு கொண்டு விளங்குகின்ற கொடி முல்லைகளானவை, அவ்வெம்பெருமான் ஸம்போக ஆரம்ப ஸமயத்திற் பண்ணும்
புன் முறுவலை நினைப்பூட்டிக்கொண்டு என்னைத் துன்பப்படுத்தாநின்றன.
அதற்குமேலே, படாக்களானவை புஷ்பித்து, ஸம்ஸ்லேஷம் நடந்தேறின பின்பு ஒரு தலையில் வெற்றிக்கு ஈடாகப் பண்ணும்
பெருஞ்சிரிப்பை நினைப்பூட்டா நின்று கொண்டு என்னை உருவழிக்கின்றன.
தோழீ! அவ்வெம்பெருமான் திருத்தோளில் சாத்திக் கொண்டிராநின்ற மாலையை ஆசைப்பட்டமையாலன்றோ
நான் இப்படிப்பரிபவப்பட நேர்ந்தது! இந்தபரிபவத்தை நான் யாரிடத்திற்சென்று முறையிட்டு ஆறுவேன் என்கிறாள்.

புறவு – சோலைகள் நிரம்பிய ஆராமம். தவளம் – யவனா என்றவடசொல் விகாரம்.
காட்டுகின்ற – வினைமுற்று. படாக்கள் – பெருங்கொடிகள் கார்க்கொள்ளுகை – அழகுகொண்டிருக்கையுமாம்.

போர்க் களிறு பொரும் மாலிரும் சோலை யம்பூம் புறவில்
யானைகள் கரை பொருது
விளையாடா நிற்கப் பெற்ற
திருமால் இரும் சோலை மலைச் சாரல்களில்

தார்க் கொடி முல்லைகளும் தவள நகை காட்டுகின்ற –
அரும்பு கொண்ட விளங்குகின்ற கொடி முல்லைகளானவை
அவ வெம்பெருமான் சம்போக ஆரம்ப சமயத்தில் பண்ணும்
புன்முறுவலை நினைப்பூட்டுக் கொண்டு
என்னைத் துன்பப் படா நின்றன –

கார்க்கொள் படாக்கள் நின்று கழறிச் சிரிக்கத் தரியேன் –
அதற்கு மேலே
படாக்கள் என்னும் கொடிகள் புஷ்பித்து
சம்ச்லேஷம் நடந்து ஏறின பின்பு
ஒரு தலையில் வெற்றிக்கு ஈடாக பண்ணும் பெறும் சிரிப்பை
நினைப்பூட்டா நின்று கொண்டு
என்னை உருவழிக்கின்றன –

ஆர்க்கிடுகோ தோழீ அவன் தார் செய்த பூசலையே
தோழீ அவ வெம்பெருமான்
திருத் தோளில்சாத்திக் கொண்டு நின்று இரா நின்ற மாலையை
ஆசைப் பட்டமையால் அன்றோ
நாண் இப்படி பரிபவப்பட நேர்ந்தது
இந்த பரிபவத்தை நான் யார் இடம் சென்று முறை இட்டு ஆறுவேன்
புறவு -சோலைகள் நிரம்பிய ஆராமம்
படாக்கள் -பெறும் கொடிகள்
கார்க் கொள்ளுகை -அழகு கொண்டு இருக்கையும்-

————————————————————————————-

கருவிளை யொண் மலர்காள் காயா மலர்காள் திருமால்
உரு வொளி காட்டுகின்றீர் யெனக்குய் வழக்கொன்று உரையீர்
திரு விளையாடு திண் தோள் திருமால் இரும் சோலை நம்பி
வரி வளையில் புகுந்து வந்தி பற்றும் வழக்குளதே –9-3-

பதவுரை

ஒண்–அழகிய
கருவிளை மலர்காள்–காக்கணம் பூக்களே!
காயா மலர்காள்–காயாம் பூக்களே! (நீங்கள்)
திருமால்–எம்பெருமானுடைய
உரு ஒளி–திருமேனியின் நிறத்தை
காட்டுகின்றீர்–நீனைப்பூட்டாநின்றீர்கள்
எனக்கு–(அதனை நீனைத்து வருந்துகின்ற) எனக்கு
உய் வழக்கு ஒன்று–பிழைக்கும் வகை யொன்றை
உரையீர்–சொல்லுங்கள்
திரு விளையாடு–பெரிய பிராட்டியார் விளையாடுமிடமான
திண் தோள்–திண்ணிய திருத் தோளை யுடையரான
திருமாலிருஞ் சோலை நம்பி–அழகர்
இல் புகுந்து–(எனது) வீட்டினுள் புகுந்து
வரி வளை–(எனது) அழகிய வளைகளை
வந்தி பற்றுமு வழக்கு உளதே–பலாத்காரமாகக் கொள்ளைகொண்டு போவதும் நியாயமோ?

மழைகாலத்தில், கருவிளைப்பூக்களென்கிற காக்கணம் பூக்களும் காயாம் பூக்களும் விசேஷமாகப் புஷ்பிக்குமாதலாலும்,
அவை எம்பெருமானுடைய திருமேனிநிறத்தோடொத்த நிறத்தையுடையனவாயிருக்கு மாதலாலும்
அவற்றின்காட்சி தனக்கு விரஹதசையில் உத்தீபகமாயிருப்பது பற்றி உண்டாகும் வருத்தத்தை அம் மலர்களை விளித்தே உரைக்கின்றாள்.

எம்பெருமானுடைய திருநிறத்தை நினைப்பூட்டா நின்று கருவிளைப்பூக்களை! காயாம்பூக்களே!
நீங்கள் என்னை முடிக்கும் வகை ஒன்றுமோ தான் கற்றது?
நான் பிழைக்கும் வகையை அறிவீர்களாகிற் சொல்லுங்கள் என்கிறாள் முன்னடிகளில்.

இங்ஙனம் யாசிக்கப்பட்ட அம்மலர்கள் ஆண்டாளை நோக்கி, ‘நாங்கள் உமக்கு ஜீவநோபாயம் சொல்லவேண்டும்படி
இப்போது உமக்கு நேர்ந்த அநர்த்தம் என்ன?‘ என்று கேட்டனவாகக் கொண்டு, அவ்வநர்த்தத்தை முறையிடுகின்றாள் பின்னடிகளில்;

திருமாலிருஞ் சோலையில் அவாப்தஸமஸ்தகாமரா யெழுந்தருளியிருக்கிற பெரியவர்,
நானொருத்தி இருப்பதாகவும் நினையாமல் தமது திருத்தோளைப் பெரியபிராட்டியார்க்கு நித்யாநுபவயோக்யமாகக் கொடுத்து
அவளும் தாமும் பரமரஸபுஞ்ஜமாய் அநுபவம் நடத்தா நிற்பதைப்பற்றி நான் ஒன்றும் விசாரப்படாமல்,
‘அவர் முன்பு விரும்பிப் போந்த வளைகள் நம்கையில் இருக்கின்றனவே. அவற்றைக் கண்டு கொண்டாவது தரித்திருப்போம்‘
என்றெண்ணி நான் என்வீட்டுக்குள்ளே கதவடைத்துக்கொண்டு கிடந்தால், அப்பெரியவர் அதனையும் பொறாமல் சடக்கென
ஓடி வந்து என் வீட்டினுள் புகுந்து பலாத்காரமாக அவ்வளைகளைப் பறித்துக் கொண்டு ஓடினரே, இஃது எந்த நீதியிற்சேரும்?
இதற்குமேற்பட எனக்கு வேறோர் அநர்த்தம் விளையவேண்டுமோ என்கிறாள்.

காட்டுகின்றீர் – வினைமுற்றாகக்கொள்ளாமல் ஸம்போதநமாகக் கொள்ளுதலுமாம்.
உரையீர் – சொல்லுங்கள் என்றபடியுமாம், சொல்லமாட்டீர்களோ என்றபடியுமாம்.
உய்வழக்கு உரைத்தலாவது – அம்மலர்கள் தங்களை வெளிகாட்டிக்கொள்ளாமல் அடங்கிப்போதலாம்.
“நீ அஞ்சாதேகோள், நாங்கள் மறையநின்றோம்; என்று ஒரு வார்த்தை சொன்னாலாகாதே?
பூப்போலே வந்து புலியானினோளீ!“ என்ற வியாக்கியான ஸ்ரீஸூக்தி நோக்கத்தக்கது.

திருமாலிருஞ்சோலை நம்பி இல்புகுந்து வரி வளைகளை வந்து பற்றினதாகச் சொல்லுகிற விதற்குக் கருத்து யாதெனில்;
எம்பெருமான் தானாகவே வந்து ஸம்ஸ்லேஷித்துத் தானாகவே பிரிந்து போனான் என்கை.
வந்து பற்றுகை பிறர் இசையாதிருக்க நிர்ப்பந்தப்படுத்திப் பிடுங்கிக்கொள்ளுதல்

கருவிளை யொண் மலர்காள் காயா மலர்காள் திருமால் உரு வொளி காட்டுகின்றீர் –
மழைக் காலத்தில்
கருவிளைப் பூக்கள் என்கிற காக்கணம் பூக்களும்
காயம் பூக்களும் விசேஷமாக புஷ்பிக்கும் ஆதலாலும்
அவை எம்பெருமான் உடைய திரு மேனியோடு ஒத்த நிறத்தை யுடையவனே
இருக்கும் ஆதலாலும்
அவற்றின் காட்சி
தனக்கு விரஹ தசையிலே உத்தீபகமாய் இருப்பது பற்றி
உண்டாகும் வருத்தத்தை அம் மலர்கள் இடமே
விளித்து உரைக்கின்றாள் –

நீங்கள் என்னை முடிக்கும் முறை ஒன்றுமே தான் கற்றீரா
நான் பிழைக்கும் வகையை அறிவீர்களாக சொல்லுங்கோள் –
யெனக்குய் வழக்கொன்று உரையீர்

தனக்கு ஏற்பட்ட அநர்த்தம் முறை இடுகிறாள்
திரு விளையாடு திண் தோள் திருமால் இரும் சோலை நம்பி
திரு மால் இரும் சோலையில் அவாப்த சமஸ்த காமனாய்
எழுந்து அருளி இருக்கிற பெரியவர்
நான் ஒருத்தி இருப்பதாகவும் நினையாமல்
தமது திருத் தோளை பெரிய பிராட்டியாருக்கு
நித்ய அனுபவ யோக்யமாய் கொடுத்து
அவளும் தாமும் பரம ரச புஞ்ஜமாய் அனுபவம் நடத்தா நிற்பதைப் பற்றி
நான் ஒன்றும் விசாரப் படாமல் –

வரி வளையில் புகுந்து வந்தி பற்றும் வழக்குளதே
அவர் முன்பு விரும்பிப் போந்த வளைகள் நம் கையில் இருக்கின்றன
அவற்றைக் கண்டு கொண்டாவது தரித்து இருப்போம் என்று எண்ணி
நான் வீட்டுக்கு உள்ளே கதவடைத்து கொண்டு கிடந்தால்
அப்பெரியவர் அதனையும் பொறாமல்
சடக்கென ஓடி வந்து
என் வீட்டின் உள்ளே புகுந்து
பலாத்காரமாக அவ வளை களைப் பறித்துக் கொண்டு ஓடினரே
இஃது எந்த ரீதியில் சேரும்
காட்டுகின்றீர்
வினை முற்று
சம்போதமாகவும் கொள்ளலாம்
உரையீர் -சொல்லுங்கோள் சொல்ல மாட்டீர்களோ என்றுமாம்
உய வழக்கு உணர்த்தல் ஆவது –
அம் மலர்கள் வெளிக் காட்டாமல் அடங்கிப் போதலாம்
நீ அஞ்சாதே கொள் நாங்கள் மறைய நின்றோம் -என்று ஒரு வார்த்தை சொன்னால் ஆகாதோ –

பூ போலே வந்து
புலி யானி கோளே

எம்பெருமான் தானாகவே வந்து சம்ச்லேஷித்து
தானாகவே பிரிந்து போனான்
என்பதையே இல் புகுந்து வரி வளைகள் பற்றினதாக அருளிச் செய்கிறாள்
வந்தி பற்றிகை
பிறர் இசையாது இருக்க
நிர்பந்தப் படுத்தி பிடுங்கிக் கொள்ளுதல்-

——————————————————————————————-

பைம் பொழில் வாழ் குயில்காள் மயில்காள் ஒண் கரு விளைகாள்
வம்பக் களங்கனிகாள் வண்ணப்பூவை நறும் மலர்காள்
ஐம் பெரும் பாதகர்காள் அணி மால் இரும் சோலை நின்ற
எம்பெருமான் உடைய நிறம் உங்களுக்கு என் செய்வதே —9-4-

பதவுரை

பைம் பொழில் வாழ்–பரந்த சோலையில் வாழ்கின்ற
குயில்காள்–குயில்களே!
மயில்காள்–மயில்களே!
ஒண் கருவிளைகாள்–அழகிய காக்கணம் பூக்களே!
வம்பக் களங்கனிகாள்–புதிய களாப்பழங்களே!
வண்ணம் நறு பூவை மலர்காள்–பரிமளத்தையுமுடைய காயாம் பூக்களே!
ஐபெரு பாதகர்காள்–(ஆகிய) பஞ்ச மஹா பாதகர்களே!
உங்களுக்கு–உங்களுக்கு
அணி மாலிருஞ்சோலை நின்ற எம்பெருமானுடைய நிறம் என் செய்வது–திருமாலிருஞ் சோலையிலுள்ள
அழகருடைய திருமேனி நிறமானது எதுக்காக?
(அந்த நிறத்தை நீங்கள் ஏற்றுக் கொண்டது என்னை ஹிம்ஸிப்பதற்காகவே என்கை)

குயில், மயில், கருவிளை, களங்கனி, காயாம்பூ என்னும் இவ்வைந்து வஸ்துக்களையும் பஞ்சமஹாபாதகிகள் என்கிறாள்.
பொற்களவு, கள்குடித்தல் முதலிய மஹத்தான ஐந்துபாதகஞ் செய்தவர்களைப் பஞ்சமஹாபாத்திகள் என்கிறாய்த்து.
இவை தனக்குப் பொறுக்க வொண்ணாத ஹிம்ஸையைப் பண்ணுவது பற்றி இங்ஙனம் கூறினளென்க.
“பெரும் பாதகர் – பெரிய பாதகத்தைச் செய்பவர், பாதகம் – பாவம்.
(பொறுக்கமுடியாத வேதனையை உண்டு பண்ணுமவர்கள் என்கை.) இங்கு இரட்டுறமொழிதலாகக் கொள்க.

பரமசோதனை எம்பெருமானோடு, அற்பசேதநங்களான குயில்மயில்களோடு, அசேதநங்களான கருவிளை முதலியவற்றோடு
வாசியற எல்லா வஸ்துக்களும் எனக்குத் தீங்கு விளைக்க ஒருப் பட்டால் நான் எங்ஙனே பிழைக்கும்படி?;
அவன் பிரிந்து போன மையத்தில் முகங்காட்டி என்னைத் தேற்ற வேண்டியவைகளும் பாதகங்களானால் நான் எங்ஙனம் பிழைக்கவல்லேன்?;
பிரிந்தவன் ஒருவனாய், பாதகங்கள் பலவானால் பிழைக்கமுடியுமோ? என்கிறாள் போலும்.

எம்பெருமானுடைய நிறம் உங்களுக்கு என் செய்வதே? என்னை உயிர்க் கொலை செய்கின்ற அவனுடைய நிறத்தை
நீங்கள் எதுக்காக ஏறிட்டுக்
கொண்டீர்கள்? என்னை ஹிம்ஸிக்கவேணுமென்றே நீங்கள் அவனது நிறத்தை ஏறிட்டுக் கொண்டீர்கள் போலும் என்கை.

“பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற, காவிமலரென்றுங் காண்டோறும் – பாவியேன்,
மெல்லாவி மெய்மிகவே பூரிக்கும் அவ்வவை, யெல்லாம் பிரானுருவேயென்று“
“கொண்டல்தான் மால்வரைதான மாகடல்தான் கூரிருள்தான், வண்டறாப் பூவைதான் மற்றுத்தான் –
கண்டநாள், காருருவங் காண்டோறும் நெஞ்சோடுங் கண்ணனார், பேருரு வென்றெம்மைப் பிரிந்து“ என்ற
பெரிய திருவந்தாதிப் பாசுரங்கள் இங்கே அநுஸந்திக்கத் தக்கன.
களங்களியை எம்பெருமானது திருநிறத்தோடொத்ததாகக் கூறுதல் “ஊழிகளாயுலகேழு முண்டானென்றிலம்“ என்ற
திருவிருத்தப் பாசுரத்திலுங் காணத்தக்கது
“களங்கன்னி வண்ணாகண்ணனே!“ என்றார் கலியனும்.

பைம் பொழில் வாழ் குயில்காள் மயில்காள் ஒண் கரு விளைகாள்
வம்பக் களங்கனிகாள் வண்ணப்பூவை நறும் மலர்காள்
குயில்
மயில்
கருவிளை
களங்கனி
காயாம்பூ
இந்த ஐந்து வஸ்துக்களையும் –

ஐம் பெரும் பாதகர்காள் –
பஞ்ச மகா பாதகிகள் -என்கிறாள்
பொற் களவு -கள் குடித்தல் போன்றவை சாஸ்த்ரங்களில் சொல்வது போலே
அதிலும் மேல் பட்ட பாதகங்களை இவை செய்வனவாக கொண்டு பஞ்ச மகா பாதகிகள் என்கிறாள்
பெரும் பாதகர் -பொறுக்க ஒண்ணாத ஹிம்சை செய்பவர்
பரம சேதனான எம்பெருமான் உடன்
அல்ப சேதனங்களான குயில் மயில்
அசேதனங்களான கருவிளை போன்றவன
எல்லாம் ஒருப்பட்டு தீங்கு விளைக்க
நான் எங்கனம் பிழைக்க –
அவன் பிரிந்து போன சமயத்தில் முகம் காட்டி
என்னை தேற்ற வேண்டியவைகளும்
பாதகங்கள் ஆனால் நான் எங்கனம் பிழைக்க
பிரிந்தவன் ஒருவன் ஆனால்
பாதகங்கள் பல வானால்
பிழைக்க முடியுமோ –

அணி மால் இரும் சோலை நின்ற எம்பெருமான் உடைய நிறம் உங்களுக்கு என் செய்வதே –
என்னை உயிர் கொலை செய்கின்ற அவனுடைய நிறத்தை
நீங்கள் ஏதுக்காக ஏறிட்டுக் கொண்டீர்கள்
என்னை ஹிம்சிக்கத் தானா –

பூவையும் காயாவும் நீளமும் பூக்கின்ற காவி மலர் என்றும் காண்டொறும்
பாவியேன் மெல்லாவி மெய் மிகவே பூரிக்கும் அவ்வவை எல்லாம் பிரான் உருவே -என்றும்
கொண்டல் தான் மால் வரை தான் மா கடல் தான் கூர் இருள் தான்
வண்டாறாப் பூவை தான் மற்றுத்தான்
கண்ட நாள் கார் உருவம் காண் தோறும் நெஞ்சோடும் கண்ணனார் பேர் உரு என்று எம்மைப் பிரிந்து -என்றும்
பெரிய திருவந்தாதி பாசுரங்கள் இங்கே அனுசந்தேயம்
களங்கனி யை எம்பெருமான் உடைய திரு நிறத்தோடு ஒத்ததாகக் கூறுதல்

ஊழி களாய் உலகு எழும் உண்டான் என்றிலம் -என்ற திரு விருத்த பாசுரத்திலும்
கனங்கனி வண்ணா கண்ணா -திரு மங்கை ஆழ்வார் ஸ்ரீ ஸூக்தியிலும் காணலாம்-

—————————————————————————————-

துங்க மலர்ப் பொழில் சூழ் திருமால் இருஞ்சோலை நின்ற
செங்கட் கருமுகிலின் திருவுருப் போல் மலர் மேல்
தொங்கிய வண்டினங்காள் தொகு பூஞ்சுனைகாள் சுனையில்
தங்கு செந்தாமரைகாள் எனக்கோர் சரண் சாற்றுமினே–9-5-

பதவுரை

துங்கம் மலர் பொழில் சூழ்–ஓங்கின மலர்களை யுடைய சோலைகள் சூழ்ந்த
திருமாலிருஞ் சோலை–திருமாலிருஞ்சோலையில்
நின்ற–நின்ற திருக் கோலமாய் எழுந்தருளியிருக்கிற
செம் கண் கருமுகிலின்–செந்தாமரை போன்ற திருக் கண்களையும் காள மேகம் போன்ற வடிவையுமுடைய எம்பெருமானுடைய
திருவுருப் போல்–அழகிய வடிவம் போலே
மலர் மேல் தொங்கிய வண்டு இனங்காள்–மலர் மேல் தங்கி யிருக்கிற வண்டுக் கூட்டங்களே!
தொகு–நெருங்கி யிருக்கின்ற
பூஞ்சுனைகாள்–அழகிய சுனைகளே!
சுனையில் தங்கு–அச் சுனைகளில் உள்ள
செம் தாமரைகாள்–செந்தாமரை மலர்களே!
எனக்கு–(உங்கள் யம தூதர்களாக நினைக்கிற) எனக்கு
ஓர் சரண் சாற்றுமின்–ஒரு பற்றுக்கோடு சொல்லுங்கள்

திருமாலிருஞ்சோலைமலைப் பொழில்களில் மலர்ந்துள்ள பூக்களில் தங்குகின்ற வண்டுகளும் சுனைகளும்
அழகருடைய திருவுருவை நினைப்பூட்டி நலிவதனாலும், சுனைகளில் அலர்ந்த செந்தாமரை மலர்கள்
அவருடைய திவ்யாவயவங்களுக்கு ஸ்மாரகங்களாய்க்கொண்டு ஹிம்ஸிப்பதனாலும்
அந்த ஹிம்ஸையைப் பொறுக்க மாட்டாத ஆண்டாள் அவற்றை நோக்கி
‘அந்தோ! நான் உங்களுக்குத் தப்பிப் பிழைப்பதொரு உபாயம்சொல்ல வல்லீர்களோ?‘ என்கிறாள்.

துங்கம் – வடசொல். கருமுகில் – முற்றுவமை,
“தாவிவையங்கொண்ட தடந்தாமரைகட்கே“ என்றாற்போல. சுனை – நீர்நிலை. சரண் – ஸரணம்.

துங்க மலர்ப் பொழில் சூழ் திருமால் இருஞ்சோலை நின்ற
ஓங்கிய மலர்களை உடைய சோலைகள் சூழ்ந்த
திருமால் இரும் சோலையிலே நின்ற திருக் கோலமாய்
எழுந்து அருளி இருக்கிற –

செங்கட் கருமுகிலின் திருவுருப் போல்
செந்தாமரை போன்ற திரு கண்களையும்
காள மேகம் போன்ற வடிவையும் யுடைய
எம்பெருமான் உடைய அலகிட வடிவு போலே
கார்முகில் -முற்று வுவமை
தாவி வையம் கொண்ட தடம் தாமரைகட்கு போலே

மலர் மேல் தொங்கிய வண்டினங்காள் –
மலர் மேல் தங்கி இருக்கிற வண்டு கூட்டங்களே

தொகு பூஞ்சுனைகாள்-
நெருங்கி இருக்கும் அழகிய சுனைகளே –
வண்டுகளும் சுனைகளும் திரு உருவை நினைப்பூட்டி ஹிம்சிக்க
சுனை -நீர் நிலை

சுனையில் தங்கு செந்தாமரைகாள் –
சுனையில் தங்கும் செந்தாமரை மலர்களே
இவை அவன் திவ்ய அவயவங்களுக்கு ஸ்மாரகங்களாய் ஹிம்சிக்க

எனக்கோர் சரண் சாற்றுமினே –
உங்களை யம தூதர்களாக நினைக்கிற எனக்கு
உங்கள் இடம் இருந்து தப்பி பிழைக்க
ஒரு உபாயம் -பற்றுக் கோடு
சொல்ல வல்லீர்களோ –
சரண் -சரணம் —

——————————————————————————

நாறு நறும் பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்
நூறு தடாவில் வெண்ணெய் வாய் நேர்ந்து பராவி வைத்தேன்
நூறு தடா நிறைந்த அக்கார வடிசில் சொன்னேன்
ஏறு திருவுடையான் இன்று வந்து இவை கொள்ளும் கொலோ–9-6-

பதவுரை

நறு பொழில் நாறும்–பரிமளம் மிகுந்த பொழில்கள் மணங்கமழா நிற்கப் பெற்ற
மாலிருஞ் சோலை–திருமாலிருஞ்சோலையில் (எழுந்தருளி யிருக்கிற)
நம்பிக்கு–எம்பெருமானுக்கு
நான்–அடியேன்
நூறு தடாவில்–நூறு தடாக்களில் நிறைந்த
வெண்ணெய்–வெண்ணெயை
வாய் நேர்ந்து–வாயாலே சொல்லி
பராவி வைத்தேன்–ஸமர்ப்பித்தேன் (இன்னமும்)
நூறு தடா நிறைந்த–நூறு தடாக்களில் நிறைந்த
அக்கார அடிசில்–அக்கார வடிசிலும்
சொன்னேன்–வாசிகமாக ஸமர்ப்பித்தேன்
இவை–இந்த வெண்ணெயையும் அக்கார வடிசிலையும்
ஏறு திரு உடையான்–(நாட்செல்ல நாட்செல்ல) ஏறி வருகிற ஸம்பத்தை யுடையரான அழகர்
இன்று வந்து–இன்று எழுந்தருளி
கொள்ளும் கொல்–திருவுள்ளம் பற்றுவரோ?

இப்பாட்டும் மேற்பாட்டும் இத்திருமொழியில் விலக்ஷணமாக அமைந்த பாசுரங்கள்.
கீழ்ச்சென்ற பாசுரங்களின் ஸைலியும் மேல்வரும் பாசுரங்களின் தீயமான அமைந்திருக்கிறபடியைக் காண்மின்.
கீழ்பாட்டில் “எனக்கோர் சரண் சாற்றுமினே“ என்றவாறே தளர்ந்து த்வயாநுஸந்தானம் பண்ணினாள்,
உத்தரகண்டத்தை நன்றாக அநுஸந்தித்தாள், அதற்கு அர்த்தாதகிய கைங்கரிய ப்ரார்த்தனையிலே ஊன்றினாள்,
காயிகமான கைங்கரிய மென்றும் செய்யமுடியாதபடி தளர்ந்திருக்கும் தஸையாகையாலே
வாசிகமான கைங்கரியம் செய்ய விரும்பினாள். அது செய்தபடியைச் சொல்லுகிறாள் இப்பாட்டில்,
இப்பாட்டுக்கு ஸேஷபூதம் மேற்பாட்டு.

மணங்கமழாநின்ற சோலைகளாலே சூழப்பட்ட திருமாலிருஞ்சோலை மலையில் அவாப்த ஸமஸ்தகாமனாய்
எழுந்தருளியிருக்கும் எம்பிரானுக்கு அடியேன் நூறுதடா நிறைந்த வெண்ணெயும்
நூறுதடா நிறைந்த அக்காரவடிசிலும் வாசிகவுள்ளம் பற்றுவனா? என்கிறாள்.

எம்பெருமானார், நாய்ச்சியார் திருமொழி காலக்ஷேபம் ப்ரஸாதித்தருளும்போது இப்பாட்டளவிலே வந்தவாறே
“ஆண்டாளுடைய மநோ ரதம் வாசிக மாத்ரமாகப் போச்சுதே யொழிய, கார்ய பர்யவஸாயியாகவில்லை,
அதனை நாம் தலைக்கட்டவேணும்“ என்று அப்போதே புறப்பட்டுத் திருமாலிருஞ்சோலைமலைக்கு எழுந்தருளி
* நூறுதடா நிறைந்த வெண்ணெயும் நூறு தடா நிறைந்த அக்காரவடிசிலும் அழகருக்கு அமுது செய்வித்தருளி
அப்படியே ஸ்ரீவில்லிபுதுதூரேற வெழுந்தருளி ஆண்டாளை அடி வணங்கி நிற்க,
தன் நினைவறிந்து இவர்செய்த காரியத்துக்கு மனமுகந்து “நம் அண்ணரே!“ என்று சொல்லி
இதுபற்றியே “பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள்வழியே“ என்று ஆண்டாள் வாழ்த்தப்படுவதும்.

“அந்யத் பூர்ணாதபாம் கும்பாத் அந்யத் பதாவ்நேஜநாத் – அந்யத் குஸலஸம் ப்ரஸ்நாத் நசேச்சதி ஜநார்தந்“ என்கிறபடியே
ஒரு பூர்ண கும்பத்துக்கு மேற்பட் அதிகப்படியானவற்றை விரும்பாத எம்பெருமான விஷயத்திலே
நூறு தடாநிறைந்த வெண்ணெயும் நூறுதடா நிறைந்த அக்காரவடிசிலும் ஸமர்ப்பிக்க வேண்டுவானேன்? -என்று
நஞ்ஜீயர் ஸந்நிதியிலே நம்பிள்ளை கேட்க; “திரு வாய்ப்பாடியிற் செல்வத்துக்கு இதெல்லாம் கூடினாலும்
ஒரு பூர்ண கும்பத்துக்குப் போராதுகாணும்“ என்று ஜீயர் அருளிச்செய்தாராம்.

தடா – பானை, பராவுதல் – வணங்குதல், துதித்துல் பரப்புதல்,
ஏறுதிருவுடையான் – என்று மொழிபெயர்த்தார் கூரத்தாழ்வான் ஸ்ரீ ஸுந்தரபாஹுஸ்தவத்தில்.

இன்றுவந்து இவை கொள்ளுங் கொலோ? –
“இது ஒரு வாங்மாத்ரமேயாய்ப் போகாமே இத்தை அநுஷ்டான பர்யந்தமாக்கி ஸ்வீகரிக்கவல்லானோ?;
அத்ரி பகவானாஸரமத்திலே ஸாயம் ஸமத்திலே சென்று ‘நான் ராமன், இவள் மைதிலி இவன் லக்ஷ்மணன்.‘ என்று
நின்றாப்போலே வந்து நின்று இவற்றை ஸ்வீகரிக்க வல்லனோ?“ என்ற வியாக்கியான ஸ்ரீஸூக்தி அநுஸந்திக்கத்தக்கது.

இந்த பாசுரமும்
அடுத்ததும் -வி லஷணமாயும் விஜாதீயமாயும் இருக்கும் பாசுரங்கள்
கீழ்ப் பாட்டில்
எனக்கோர் சரண் சாற்றுமினே என்று தளர்ந்து த்வய அனுசந்தானம் செய்து அருளினாள்
உத்தர கண்டத்தை நன்றாக அனுசந்தித்தாள்
அதற்கு அர்த்தமாகிய கைங்கர்ய பிரார்த்தனையில் ஊன்றி
காகியமான கைங்கர்யம் ஒன்றும் செய்ய முடியாதாபடி தளர்ந்த தசையிலே
வாசிகமான கைங்கர்யம் செய்ய விரும்பினாள்-
அது செய்த படி இதில் அருளுகிறாள்
அடுத்த பாசுரம் இதற்கு சேஷ பூதம்
நாறு நறும் பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு –
மணம் கமழா நின்ற சோலைகளாலே சூழப் பட்ட
திருமால் இரும் சோலையிலே
அவாப்த சமஸ்த காமனாய் எழுந்து அருளி இருக்கும் எம்பெருமானுக்கு

நான்
அடியேன் –

நூறு தடாவில் வெண்ணெய் வாய் நேர்ந்து பராவி வைத்தேன்
நூறு தடா நிறைந்த அக்கார வடிசில் சொன்னேன்
நூறு தடா நிறைந்த வெண்ணெயும்
நூறு தடா நிறைந்த அக்காரா வடிசிலும்
வாசிக கைங்கர்ய ரூபமாக சமர்ப்பிக்கிறேன் –

ஏறு திருவுடையான் இன்று வந்து இவை கொள்ளும் கொலோ
இவற்றை அவ வெம்பெருமான் திரு உள்ளம் பற்றுவானா –

எம்பெருமானார் -கால ஷேபம் பிரசாதித்து அருளும் போது
இப்பாசுரம் அளவிலே வந்தவாறே
ஆண்டாள் உடைய மநோ ரதம் வாசிக மாத்ரமாய் போச்சுதே ஒழிய
கார்ய பர்யவசி யாகவில்லை
அதனை நாம் தலைக் கட்ட வேணும் -என்று
அப்பொழுதே திரு மாலிரும் சோலைக்கு எழுந்து அருளி
அழகருக்கு நூறு தடா வெண்ணெயும் நூறு தடா அக்கார வடிசிலும் அமுது செய்வித்து அருளி
அப்படியே ஸ்ரீ வில்லிபுத்தூர் ஏற எழுந்து அருளி ஆண்டாளை அடி வணங்கி நிற்க
திரு உள்ளம் உவந்து நம் அண்ணரே –என்று
அர்ச்சாவதார சமாதியைக் கடந்து தழுவிக் கொண்டாள்-
பெரும் பூதூர் மா முனிக்குப் பின்னானாள் வாழியே–
அந்யத் பூர்ணா தபாம் கும்பாத்
அந்யத் பாதாவ்கேஜ நாத்
அந்யத் குசல சாம்ப்ரஸ் நாத்
நச்செதி ஜனார்த்தன -என்கிறபடியே
ஒரு பூர்ண கும்பத்துக்கு மேற்பட அதிகப் படியானவற்றை விரும்பாத எம்பெருமான்
விஷயத்திலே நூறு தடா நிறைந்த வெண்ணெயும்
நூறு தடா நிறைந்த அக்கார வடிசிலும் சமர்ப்பிக்க வேண்டுவான் ஏன்
என்று நம்பிள்ளை நஞ்சீயரைக் கேட்க
திருவாய்ப்பாடியில் செல்வத்துக்கு இது எல்லாம் கூடினாலும்
ஒரு பூர்ண கும்பத்துக்கு போறாது காணும் -என்று அருளிச் செய்தாராம்
தடா -பானை
பராவுதல் -வணங்குதல் -துதித்தல் -பரப்புதல்

இன்று வந்து இவை கொள்ளும் கொலோ –
இது ஒரு வாங் மாத்ரமேயாய் போகாமே
இத்தை அனுஷ்டான பர்யந்தம் ஆக்கி
சுவீகரிக்க வல்லனோ
அத்ரி பகவான் ஆஸ்ரமத்திலே சாயம் சமயத்திலே சென்று
நான் ராமன் இவள் மைதிலி இவன் லஷ்மணன் -என்று
நின்றால் போலே வந்து நின்று சுவீகரிக்க வல்லனோ -என்கிறாள் —

———————————————————————————————-

இன்று வந்து இத்தனையும் அமுது செய்திடப் பெறில் நான்
ஓன்று நூராயிரமாகக் கொடுத்து பின்னும் ஆளும் செய்வன்
தென்றல் மணம் கமழும் திரு மால் இருஞ்சோலை தன்னுள்
நின்ற பிரான் அடியேன் மனத்தே வந்து நேர் படிலே –9-7-

பதவுரை

தென்றல்–தென்றல் காற்றானது
மணம் கமழும்–மணத்தைக் கொண்டு வீசுகின்ற
திரு மாலிருஞ் சோலை தன்னுள்–திருமாலிருஞ்சோலை மலையிலே
நின்ற–எழுந்தருளி யிருக்கிற
பிரான்–ஸ்வாமியான அழகர்
இன்று–இன்றைக்கு
வந்து–இவ்விட மெழுந்தருளி
இத்தனையும்–நூறு தடா நிறைந்த வெண்ணெயையும் அக்கார வடிசிலையும்
அமுது செய் திட பெறில்–அமுது செய்தருளப் பெற்றால் (அவ்வளவுமன்றி)
அடியேன் மனத்தே வந்து நேர் படில்–அடியேனுடைய ஹ்ருதயத்திலே நித்ய வாஸம் பண்ணப் பெற்றால்
நான்–அடியேன்
ஒன்று–ஒரு தடாவுக்கு
நூறு ஆயிரம் ஆ கொடுத்து–நூறாயிரம் தடாக்களாக ஸமர்ப்பித்து
பின்னும்–அதற்கு மேலும்
ஆளும் செய்வன்–ஸகல வித கைங்கரியங்களும் பண்ணுவேன்

“இன்று வந்து இவை கொள்ளுங் கொலோ?“ என்று
(கீழ்ப்பாட்டில் மநோரதித்தபடியே திருமாலிருஞ்சோலை யெம்பெருமான் இன்று இவ்விடமெழுந்தருளி,
அடியேன் (வாவா) வாசா ஸமர்ப்பித்த நூறு தடா நிறைந்த வெண்ணெயையும் அக்கார வடிசிலையும் அமுது செய்தருள்வனாகில்
இந்த மஹோபகாரத்துக்குக் கைம்மாறாக அடியேன் இன்னும் நூறாயிரம் தடாநிறைந்த வெண்ணெயும் அக்காரவடிசிலும் ஸமர்ப்பிப்பேன்;
அவ்வெம்பெருமான் இங்கெழுந்தருளி இவற்றை அமுது செய்துவிட்டு மீண்டு போய்விடாமல் என் ஹ்ருதயத்திலேயே
ஸ்தாவர ப்ரதிஷ்டையாக இருந்துவிடும் பக்ஷத்தில் “ஒழிவில் காலமெல்லாமுடனாய் மன்னி வழுவிலாவடிமை செய்யவேண்டும் நாம்“ என்று
பெரியார் மநோரதித்த கைங்கரியங்கள் எல்லாவற்றையும் குறையறச் செய்திடுவேன் என்கிறாள்.

“தென்றல் மணங்கமழும் திருமாலிருஞ்சோலை தன்னுள் நின்றபிரான் இன்று வந்து இத்தனையும் அமுது செய்திடப்பெறில்
நான் ஒன்று நூறாயிரமாக கொடுப்பேன், அடியேன் மனத்தே வந்து நேர்படில் பின்னுமாளுஞ் செய்வேன்“ என்று யோஜிப்பது.

ஒன்றுநூறாயிரமாகக் கொடுத்தலாவது – தான் ஸமர்ப்பித்த தடாக்களில் ஒரு தடாவை அமுது செய்தால்
அதற்குக் கைம்மறாறாகப் பின்னும் நூறாயிரம் (லக்ஷம்) தடா ஸமர்ப்பித்தல். இப்படியே பார்த்துக்கொள்க.
இதனால், ஆண்டாள் தனது பாரிப்பின் மிகுதியை வெளியிட்டபடி.

“இன்று உவந்து“ என்றும் பிரிக்கலாமென்ப.

இன்று வந்து இவை கொள்ளும் கொலோ -என்று
இவள் மநோ ரதித்த படியே திரு மால் இருஞ்சோலை எம்பெருமான் இவ்விடம் எழுந்து அருளி
இன்று வந்து இத்தனையும் அமுது செய்திடப் பெறில் –
அடியேன் வாசா சமர்ப்பித்த நூறு தடா வெண்ணெயும் அக்கார வடிசிலையும்
அமுது செய்து அருளுவான் ஆகில்

நான் ஓன்று நூராயிரமாகக் கொடுத்து பின்னும் ஆளும் செய்வன்
இந்த மகா உபாகாரத்துக்கு கைம்மாறாக
அடியேன் இன்னும் நூறு ஆயிரம் தடா நிறைந்த
வெண்ணெயும் அக்கார வடிசிலையும் சமர்ப்பிப்பேன் –

தென்றல் மணம் கமழும் திரு மால் இருஞ்சோலை தன்னுள் நின்ற பிரான் அடியேன் மனத்தே வந்து நேர் படிலே
அவ்வெம்பெருமான் இங்கே எழுந்து அருளி இவற்றை அமுது செய்து விட்டு
மீண்டு போய் விடாமல்
என் ஹிருதயத்திலே ஸ்தாவர பிரதிஷ்டையாக இருந்து விடும் பஷத்தில்
ஒழிவில் காலம் எல்லாம் உடனே மன்னி வழு விலா அடிமை செய்ய வேண்டும் நாம் -என்று
பெரியோர் மநோ ரதித்த கைகர்யங்கள் எல்லா வற்றையும்
குறையறச் செய்திடுவேன் –

தென்றல் மணம் கமழும் திரு மால் இருஞ்சோலை தன்னுள் நின்ற பிரான்
இன்று வந்து இத்தனையும் அமுது செய்திடப் பெறில்
நான் ஓன்று நூராயிரமாகக் கொடுப்பேன்
அடியேன் மனத்தே வந்து நேர் படிலே
பின்னும் ஆளும் செய்வன் -என்று யோஜிப்பது

ஓன்று நூறு ஆயிரமாக கொடுத்தல் ஆவது
தான் சமரித்த தடாக்களை ஒரு தடவை அமுது செய்தால்
அதற்கு கைம்மாறாக பின்னும் நூறு ஆயிரம் -ஒரு லஷம் -சமர்ப்பித்தல்
ஆண்டாள் தனது பாரிப்பை வெளி இட்ட படி

இன்று வுவந்துஎன்றும் பிரிக்கலாம்-

——————————————————————————————————–

காலை எழுந்து கரிய குருவிக் கணங்கள்
மாலின் வரவு சொல்லிக் மருள் பாடுதல் மெய்ம்மை கொலோ
சோலை மலைப் பெருமான் துவராபதி எம்பெருமான்
ஆலினிலைப் பெருமான் அவன் வார்த்தை வுரைக்கின்றவே –9-8-

பதவுரை

கரிய குருவி கணங்கள்–கரிய குருவிக் கூட்டங்கள்
காலை–விடியற்காலத்திலே
எழுந்திருந்து–எழுந்து,
சோலைமலை பெருமான்–திருமாலிருஞ்சோலை மலைக்குத் தலைவனாயும்
துவராவதி எம்பெருமான்–துவராபுரிக்குத் தலைவனாயும்
ஆலின் இலை பெருமான் அவன்–ஆலிலையில் வளர்ந்த பெருமானுயுமுள்ள அந்த ஸர்வேச்வரனுடைய
வார்த்தை–வார்த்தைகளை
உரைக்கின்ற–சொல்லா நின்றன. (இப்படி)
மாலின்–எம்பெருமானுடைய
வரவு–வருகையை
சொல்லி–சொல்லிக் கொண்டு
மருள் பாடுதல்–மருளென்கிற பண்ணைப் பாடுவதானது
மெய்ம்மை கொல்–மெய்யாகத் தலைக் கட்டுமா

ஆண்டாள் பிறந்தவூரில் திர்யக்குக்களுங் கூட எம்பெருமானைப்பற்றின சிந்தனையே மிக்கிருக்கு மாதலால்
சில கருங்குருவிகள் காலை யெழுந்திருந்து கூட்டங் கூட்டமாக இருந்து எம்பெருமானுடைய வரவை
ஸூசிப்பித்துச் சொல்லுவதுமா யிருக்கவே, அதுகண்ட ஆண்டாள்
இது மெய்யாய்த் தலைக்கட்டுமோ பொய்யாய்விடுமோவென்று சிந்திக்கிறாளாய்த்து.

மெய்ம்மை கொலோ? என்றதற்கு இரண்டு வகையாகக் கருத்தாகலாம்.
நம்முடைய சித்தவிப்ரமத்தால் இவை பாடுகின்றனவாகத் தோற்றுகின்றதா? அல்லது மெய்கவே பாடுகின்றனவா? என்பது ஒரு கருத்து;
இக்கரிய குருவிக்கணங்கள் இதற்கு முந்தியும் பலகால், மாலின் வரவுசொல்லி மருள்பாடியும்
அவ்வெம்பெருமான் வரக்காணாமையினாலே இதுவரையில் இவற்றின் பாட்டு பொய்யாயொழிந்தது,
இப்போதாவது அங்ஙனன்றி மெய்யாகத் தலைக்கட்டுமா; என்பது மற்றொரு கருத்து.

பாட்டின் இறுதியிலுள்ள உரைக்கின்ற என்பதை வினைமுற்றாகக் கொள்ளாமல் பெயரெச்சமாகக் கொண்டு,
“அவன் வார்த்தை யுரைக்கின்ற கரிய குருவிக்கணங்கள் கலையெழுந்திருந்து மாலின் வரவுசொல்லி
மருள்பாடுதல் மெய்ம்மைகொலோ? என்று ஏகவாக்யமாக யோஜிப்பதும் ஒருவாறு பொருந்தும்.

துவராவதி – ‘தவாரவதீ‘ என்ற வடசொல் விகாரம். வார்த்தை – ஸமாசாரம்.

ஆண்டாள் திரு வவதரித்த ஊரிலே
திர்யக்குகளும் கூட எம்பெருமான் பற்றிய சிந்தனையே மிக்கு இருக்குமாதலால்
காலை எழுந்து கரிய குருவிக் கணங்கள் –
சில கரும் குருவிகள் காலை எழுந்து இருந்து
கூட்டம் கூட்டமாக இருந்து

மாலின் வரவு சொல்லிக் மருள் பாடுதல் மெய்ம்மைகொலோ
எம்பெருமான் உடைய வரவை
ஸூ சிப்பித்து கொண்டு
மருள் போன்ற பண்களைப் பாடுவதும் –

சோலை மலைப் பெருமான் துவராபதி எம்பெருமான்
ஆலினிலைப் பெருமான் அவன் வார்த்தை வுரைக்கின்றவே
அவ வெம்பெருமான் விஷயமான வார்த்தைகளை சொல்லுவதுமாக இருக்கவே –

அத்தைக் கண்ட ஆண்டாள்
இது மெய்யாக தலைக் கட்டுமோ
பொய்யாய் விடுமோ -என்று சிந்திக்கிறாள் –

மெய்ம்மை கொலோ –
நம்முடைய சித்த பிரமையினால் இவை பாடுகின்றனவாக தோற்றுகின்றனவா
அல்லது மெய்யாக பாடுகின்றனவா
அன்றிக்கே
முன்பே பல தடவை இக் குருவிக் கணங்கள் இப்படி பாடியும் அவன் வாராது ஒழிந்தான்
பொய்யாகவே ஒழிந்தது
இப்பொழுதாவது மெய்யாகத் தலைக் கட்டுமா -என்கிறாள்

உரைக்கின்ற -வினை முற்றாகக் கொள்ளாம பெயர் எச்சமாகக் கொண்டு
அவன் வார்த்தை உரைக்கின்ற கரிய குருவிக் கணங்கள் காலை எழுந்து இருந்து
மாலின் வரவு சொல்லி மருள் பாடுதல் மெய்ம்மை கொலோ –என்று
ஏக வாக்யமாக யோஜிக்க்கவுமாம்
வார்த்தை -சமாசாரம் –

—————————————————————————————————–

கோங்கலரும் பொழில் மாலிரும் சோலையில் கொன்றைகள் மேல்
தூங்கு பொன் மலைகளோடு உடனே நின்று தூங்குகின்றேன்
பூங்கொள் திரு முகத்து மடுத்தூதிய சங்கொலியும்
சாரங்க வில் நாண் ஒலியும் தலைப் பெய்வது எஞ்ஞான்று கொலோ –9-9-

பதவுரை

கோங்கு அலரும் பொழில்–கோங்கு மரங்கள் மலரப் பெற்ற சோலைகளை யுடைய
மாலிருஞ் சோலையில்–திருமாலிருஞ் சோலை மலையில்
கொன்றைகள் மேல்–கொன்றை மரங்களின் மேல்
தூங்கு–தொங்குகின்ற
பொன் மாலைகளோடு உடனாய் நின்று–பொன் நிறமான பூமாலை களோடு ஸமமாக
தூங்குகின்றேன்–வாளா கிடக்கின்றேன்
பூ கொள்–அழகு பொருந்திய
திரு முகத்து–திருப் பவளத்திலே
மடுத்து–வைத்து
ஊதிய–ஊதப் படுகிற
சங்கு–ஸ்ரீபாஞ்சஜந்யத்தினுடைய
ஒலியும்–த்வநியும்
சார்ங்கம் வில்நாண் ஒலியும்–சார்ங்கமென்னும் வில்லின் நாணோசையும்
தலைப் பெய்வது–ஸமீபிப்பது
எஞ்ஞான்று கொல்–என்றைக்கோ?

இப்பாசுரத்தின் கருத்து மிகவும் ஆழ்ந்தது. திருமாலிருஞ் சோலைமலையிற் கொன்றை மரங்களின் மீது தொங்குகின்ற
கொன்றைப்பூ மாலைகளோ டொப்ப நானும் தூங்குகின்றேன் என்று கூறுகின்ற ஆண்டாளுடைய கருத்து யாதெனில்; – கேண்மின்;
திருமாலிருஞ்சோலைமலையில் ஸாத்விக புருஷர்கள் ஏறிப்போவர்களேயன்றி ராஜஸ தாமஸ புருஷர்கள் ஏறிப்போகமாட்டார்கள்.
கொன்றைமலர்கள் சிவன் முதலிய தேவதாந்தரங்களின் ஆராதனைக்கு உபயோகப்படக்கூடியவை யாதலால்
அம்மலர்கள் ராஜஸ தாமஸ புருஷர்கட்கு உபயுக்தமாகுமேயன்றி ஸாத்வித புருஷர்கட்கு அவைகொண்டு பயனில்லை.
இனி ஸாத்விகமாத்ரப்ராப்யமான திருமாலிருஞ் சோலைமலையில் மலர்கின்ற கொன்றை மலர்கட்கு
ஏதாவது உபயோகமுண்டோவென்று சிந்தித்தால், அவை அங்கே மலர்ந்து அங்கே வீழ்வதொழிய வேறொருபயோகமும்
அவற்றுக்கு இல்லையென்றே சொல்லவேண்டும்.
ஆகவே, அம்மலர்களின் ஜன்மம் எப்படி விணோ அப்படியே என் ஜன்மமும் வீணாயிற்றே! என்கிறாள்.

“தாமஸ புருஷர்கள் புகுரும் தேஸமன்று, ஸாத்விகர் இதுகொண்டு காரியங்கொள்ளார்கள்,
பெரியாழ்வார் வயிற்றிலே பிறந்து பகவதரஹமான வஸ்து இங்ஙனே இழந்திருந்து க்லேஸப்படுவதே!“ என்ற
விடாக்கியான ஸ்ரீஸூக்தியின் போக்யதையை நோக்குமின்.

“கன்னவிலுங் காட்டகத்தோர் வல்லிக்கடிமலரின், நன்னறுவாசம் மற்றாரானு மெய்தாமே,
மன்னும் வறுநிலத்து வாளாங்கு உகுத்தலுபோல், என்னுடைய பெண்மையு மென்னலனு மென்முலையும்,
மன்னுமலர் மங்கைமைந்தன் கணபுரத்துப் பொன்மலைபோல் நின்றவன்றன் பொன்னகலம் தோயாவேல்
என்னிவைதான் வாளா எனக்கே பொறையாகி, முன்னிருந்து மூக்கின்று மூவாமைக் காப்பதோர்,
மன்னமருந்தறிவீரில்லையே!“ என்ற பெரிய திருமடற் பாசுரங்கள் இங்கு நினைக்கத்தக்கண்.

(பூங்கொள் திருமுகத்து இத்யாதி) கண்ணபிரானை யன்றி மற்று எவனையும் கனவிலுங் கருதாதிருக்க
ருக்மிணிப் பிராட்டிக்கு ஸிஸுபாலனோடு விவாஹம் நடப்பதாகக் கோடித்து ஸித்தமாயிருந்த ஸமயத்தில்
கண்ணபிரானது வரவை எதிர்பார்த்திருந்த அப்பிராட்டியின் நெஞ்சு முறிந்துபோய் இனி நாம் உயிர்துறப்பதே நல்லுபாயம்
என்று தீர்மானித்திருந்த க்ஷணத்தில் கண்ணபிரான் பதறி ஓடிவந்து புறச்சோலையிலே நின்று தனது
ஸ்ரீபாஞ்சஜந்யத்தை ஊத, அவ்வோசையானது அந்த ருக்மணிப்பிராட்டியின் செவிபுகுந்து எப்படிப்பட்ட ஆநந்தத்தை உண்டாக்கிற்றோ
அப்படிப்பட்ட ஆநந்தம் எனக்கு என்றைக்கு உண்டாகும்!; இராவணனானவன் ஸீதையிடம் வந்து இராமபிரான் இறந்தானாக
ஒரு பொய்க்கூற்றுக் கூறி மாயஸிரஸ்ஸைக் காட்டினபோது அப்பிராட்டி வருந்திக்கிடக்கும் க்ஷணத்தில்
இராமபிரான் கடற்கரையிலே நின்று தனது சார்ங்கவில்லை ஒலிப்பிக்க, அவ்வொலியானது ஸீதையின் செவியிற்புகுந்து
எப்படிப்பட்ட ஆநந்தத்தை உண்டாக்கிற்றோ அப்படிப்பட்ட ஆநந்தம் எனக்கு என்றைக்கு உண்டாகும்! என்கிறாள்.

“இரண்டாவதாரத்தில் இரண்டு பிராட்டிக்கு உதவினது தனக்கொருத்திக்குமே வேண்டும்படியாயாய்த்து இவள் தஸை,
சிசுபாலன் ஸவயம் வாரார்த்தமாக ஒருப்பட்ட மையத்திலே, புறச்சோலையிலே ஸ்ரீபாஞ்ச ஜந்யகோஷமானது வந்து
செவிப்பட்டு தரிப்பித்தது ருக்மிணிபிராட்டியை, ராவணன் மாயாஸிரஸ்ஸைக் காட்டினபோது
ஸ்ரீ சார்ங்கத்தின் ஜ்யாகோஷமானது வந்து செவிப்பட்டு தரிப்பித்து ஸ்ரீஜநக்ராஜன் திருமகளை,
இரண்டாவதாரத்திலுள்ளவையும் மடுத்தொலிக்க வேண்டும்படியாயாய்த்து இவள்விடாய், அ
வர்களளவல்ல வாய்த்து இவளாற்றாமை“ என்ற வியாக்கியான ஸ்ரீ ஸூக்தியை அநுஸந்திப்பது.

கோங்கலரும் பொழில் மாலிரும் சோலையில் கொன்றைகள் மேல்
திரு மால் இரும் சோலை கொன்றை மலர்கள் மீது

தூங்கு பொன் மலைகளோடு உடனே நின்று தூங்குகின்றேன்
தொங்குகின்ற கொன்றைப் பூ மாலைகளோடு ஒப்ப
நானும் வாளா கிடக்கிறேன் –
திரு மால் இரும் சோலை மளியிலே சாத்விக புருஷர்கள் ஏறிப் போவார்களே
ஒழிய ராஷச தாமஸ புருஷர்கள் ஏறிப் போக மாட்டார்கள்
கொன்றை மலர்கள் சவான் உதலிய தேவ தாந்த்ரங்களின் ஆராதனைக்கு
உபயோகப் படக் கூடியவை ஆதலால் சாத்விக புருஷர்களுக்கு அதை கொண்டு பயன் இல்லை –
அவை அங்கேயே மலர்ந்து வீழ்ந்து வேறு உபயோகம் இல்லாமல் இருப்பது போலே என் ஜன்மமும் வீணாயிற்றே என்கிறாள்
தாமஸ புருஷர்கள் புகும் தேசமும் அன்று
சாத்விகர் இது கொண்டு கார்ய்சம் கொள்ளார்
பெரியாழ்வார் வயிற்றில் பிறந்து பகவத் அர்ஹமான வஸ்து இங்கனே இழந்து கிலேசப் படுவதே –

கன்னவிலும் காட்டகத்தோர் வல்லிக் கடிமலரின்
நன்னறு வாசம் மற்றாரானும் எய்தாமே மன்னும் வறு நிலத்து வாளாங்கு உகுத்தது போல்
என்னுடைய பெண்மையும் என்னலனும் மென் முலையும்
மன்னு மலர் மங்கை மைந்தன் கணபுரத்து பொன்மலை போல் நின்றான் தன
பொன்னாகம் தோயாவேல் என்னிவை தான் எனக்கே பொறையாகி
முன்னிருந்து மூக்கின்று மூவாமை காப்பதோர் மன்னு மருந்து அறிவீர் இல்லையே -பெரிய திருமடல்-

பூங்கொள் திரு முகத்து மடுத்தூதிய சங்கொலியும்சாரங்க வில் நாண் ஒலியும் தலைப் பெய்வது எஞ்ஞான்று கொலோ
கண்ண பிரானை அன்றி மற்று எவனையும் கனவிலும் கருதாது இருந்த ருக்மிணி பிராட்டிக்கு
சிசுபாலன் உடன் விவாஹம் நடப்பதாக கோடித்து சித்தமாய் இருக்கும் சமயத்தில்
கண்ணபிரான் புறச் சோலையில் நின்று ஸ்ரீ பாஞ்சஜன்ய ஆழ்வான் ஓசை ருக்மிணி செவியில் புகுந்து பெற்ற ஆனந்தம்
எனக்கு என்றைக்கு யுண்டாகும்
இராவணன் மாயா சிரஸ் சீதை இடம் காட்டிய சமயத்தில்
கடல் கரையில் ருந்து ஸ்ரீ ராம பிரானின் சாரங்க வில் ஓசை
சீதையின் செவியில் புகுந்து
உண்டான ஆனந்தம் எனக்கு எற்றைக்கு யுண்டாகும் –

இரண்டு அவதாரத்தில் இரண்டு பிராட்டிக்கு யுதவினது
தனக்கு ஒருத்திக்கு மட்டுமே வேண்டும்படி யாய்த்து இவள் தசை
சிசுபாலன் ஸ்வயம்வர அர்த்தமாக ஒருப்பட்ட சமயத்திலே
புறச் சோலையிலே ஸ்ரீ பாஞ்ச ஜன்ய கோஷமானது வந்து செவிப்பட்டு தரிப்பித்தது ஸ்ரீ ருக்மிணி பிராட்டியை
ராவணன் மாயா சிரசை காட்டின போது ஸ்ரீ சார்ங்கத்தின் ஜெய கோஷமானது
வந்து செவிப்பட்டு தரிப்பித்தது ஸ்ரீ ஜனக ராஜன் திருமகளை
இரண்டு அவதாரத்தில் உள்ளவையும்
மடுத்து ஒலிக்க வேண்டும்படி யாய்த்து இவள் விடாய்
அவர்கள் அளவல்ல ஆயத்து இவள் ஆற்றாமை-

—————————————————————————————————

சந்தொடு கார் அகிலும் சுமந்து தடங்கள் பொருது
வந்திழியும் சிலம்பாறுடை மாலிருஞ்சோலை நின்ற
சுந்தரனை சுரும்பார் குழல் கோதை தொகுத்து உரைத்த
செந்தமிழ் பத்தும் வல்லார் திருமாலடி சேர்வர்களே –9-10-

பதவுரை

சந்தொடு–சந்தனக் கட்டைகளையம்
கார் அகிலும்–காரகிற் கட்டைகளையும்
சுமந்து–அடித்துக் கொண்டு
தடங்கள் பொருது வந்து–பல பல குளங்களையும் அழித்துக் கொண்டு ஓடி வந்து
இழியும்–பெருகுகின்ற
சிலம்பாறு உடை–நூபுர கங்கையையுடைத்தான
மாலிருஞ் சோலை நின்ற சுந்தரனை–திருமாலிருஞ்சோலை மலையில் எழுந்தருளி யிருக்கிற அழகரைக் குறித்து
சுரும்பு ஆர் குழல் கோதை–வண்டுகள் படித்த கூந்தல் முடியை யுடைய ஆண்டாள்
தொகுத்து உரைத்த–அழகாக அருளிச் செய்த
செம் தமிழ் பத்தும் வல்லார்–செந்தமிழிலாகிய இப்பத்துப் பாசுரங்களையும் ஓத வல்லவர்கள்
திருமால் அடி–ஸ்ரீமந்நாராயணனுடைய திருவடிகளை
சேர்வர்கள்–அடையப் பெறுவர்கள்

இத்திருமொழி கற்றார்க்குப் பலன் சொல்லித் தலைகட்டுகிறாள் பிறந்தகத்தில் நின்றும் புக்கத்துக்குப் போம் பெண்கள்
வேண்டிய தனங்களைக் கொண்டுபோமாபோலே சந்தனமரங்களையும் காரகில் மரங்களையும் வேரோடே பறித்து இழுத்துக்கொண்டு,
வழியிடையே உள்ள பலபல தடாகங்களையும் அழித்துக்கொண்டு பெருவேகமாக வந்து ப்ரவஹியா நின்ற சிலம்பாற்றையுடைய
திருமாலிருஞ்சோலைமலைக்குத் தலைவரான அழகர் விஷயமாகச் சுரும்பார் குழற்கோதை யருளிச்செய்த இப்பத்துப் பாட்டையும்
ஓத வல்லவர்கள் தன்னைப் போலே வருந்தாமல் ஸுகமாகத் திருமாலின் திருவடித்தாமரைகளை யணுகி
நித்ய கைங்கரிய ஸம்பத்துடனே வாழப்பெறுவர்கள் – என்றாளாய்ந்து.

சந்து – ‘சந்தனம்‘ என்ற வடசொற் சிதைவு. தடங்கள்பொருது – தடம் என்று கரைக்கும் பெயராகையாலே,
இருகரையையும் அழித்துக்கொண்டு என்று பொருள் கொள்ளுதலும் ஒன்று.
“ஒருமத்த கஜம் கரைபொருதுவருமா போலே“ என்றார் பெரியவாச்சான்பிள்ளையும்.

சிலம்பாறு – நூபுரகங்கையென்று வடமொழிப்பெயர்பெறும், திருமால் உலகமளந்தகாலத்தில் மேலே ஸத்யலோகத்திற் சென்ற
அப்பெருமானது திருவடியைப் பிரமான் தன் கைக்கமண்டலதீர்த்தத்தாற் கழுவிவிளக்க, அத்திருவடிச் சிலம்பில் நின்று
தோன்றியதனால் சிலம்பாறு என்று பெயராயிற்று, நூபுரகங்கை என்ற வடமொழித்திருநாம்மும் இதுபற்றியதே.
நூபுரம் – சிலம்பு; ஒருவகைக் காலணி.

இனி இதற்கு ரஸோக்தியாக ஒரு பொருள்கூறலாம்; அதாவது – ஆழ்வான், ஸுந்தரபாஹுஸ்தவத்தில்,
“வகுள தரஸரஸ்வதீ விஷக்தஸ்வரரஸபாவயுதாஸு கிந்நரீஷு – த்ரவதி த்ருஷதபி ப்ரஸக்தகாநாஸ்விஹ
வநஸைதழுஷு ஸுந்தரஸ்ய“ என்ற ருசிசெய்தபடி
* மரங்களாமிரங்கும் வகை மணிவண்ணவோ வென்றுகூவின ஆழ்வார் பாசுரங்களைக் கின்னரிகள் பாட,
அப்பாடலைக் கேட்ட குன்றுகள் உருகிப் பெருகா நின்றமையால் சிலம்பாறென்று பெயராயிற்று,
சிலம்பு – குன்றுக்கும் பெயர்;
“சிலம்பொலிஞெகிழி குன்றாம்“ என்பது சூளாமணி நிகண்டு இப்பொருளை ரஸோக்திபாகவே கொள்க.

சுரும்பார்குழற்கோதை – தேன்நிறைந்த மலர்களையணிந்த குழல்முடியையுடைய ஆண்டாள் என்றபடி.
ஒருகுழற்கற்றையாலே எம்பெருமானை மயக்கவல்ல வீறுடையளான இவள் தான் இப்படி மயங்கிவருந்தின்னே! என்று
நாம் ஈடுபடுவதற்காகச் “சுரும்பார்குழல்“ என்ற அடைமொழி இட்டுக்கொண்டாளென்க. கோதை – ஸ்ரீஸூக்திகளைத் தந்தவள்.

தொகுத்து உரைத்த – தொகுத்தல் – ஒழுங்குபடுத்துதல், திரட்டுதலுமாம்.
அப்பொருளில் எம்பெருமானுடைய கல்யாண குணங்களைத் திரட்டிப் பாசுரமாக்கி அருளிச்செய்த என்கை.
இத்திருமொழியில் எம்பெருமானுடைய கல்யாணகுணம் விளங்கும்வகை என்?
அவன் இவளை இப்படித் துடிக்கவிட்டான் என்கிற பழிப்பு இத்திருமொழியில் விளங்குமேயன்றி
அவனது கல்யாணகும் விளங்குமோவெனில், ஸம்ஸாரத் தொல்லைகளில் ஈடுபடுத்தி வருந்தச் செய்யாமல்
தன்திறத்தில் ஈடுபடுத்தி வருந்தச் செய்வதைக் கல்யாணகுணங்களிற் சிறந்ததாகக் கொள்ள வேண்டாவோ?
“வேதாக்ஷராணி யாவந்தி – படிதாநி த்விஜாதிபி – தாவந்தி ஹரி நாமாநி கீர்த்திதாதி நஸம்ஸய“ என்றபடி
வேதத்தில் ஒவ்வோரெழுத்தும் பகவந்நாமமாவதுபோல, அருளிச் செயலில் ஒவ்வோரெழுத்தும் பகவத் குணகர்ப்பிதம் எனக் கொள்க.

நிகமத்தில்
இத் திருமொழி கற்றாருக்கு பலன் சொல்லித் தலைக்கட்டுகிறார்

சந்தொடு கார் அகிலும் சுமந்து தடங்கள் பொருது வந்திழியும் சிலம்பாறுடை –
பிறந்தகத்தில் நின்றும் புக்ககத்துக்கு போம் பெண்கள்
வேண்டிய தனங்களைக் கொண்டு போவது போலே
சந்தன மரங்களையும்
காரகில் மரங்களையும்
வேரோடு பறித்து இழுத்துக் கொண்டு
வழியடையே உள்ள பல பல தடாகங்களையும் அழித்துக் கொண்டு
பெரு வேகமாக வந்து பிரவஹியா நின்ற சிலம்பாற்றை யுடைய –
தடங்கள் பொருது -தடம் என்று கரைக்கும் பெயர் ஆகையாலே
இரு கரையும் அழித்துக் கொண்டு -என்றுமாம்
ஒரு மத்த கஜம் கரை பொருது வருமா போலே –

சிலம்பாறு
நூபுர கங்கை
உலகு அளந்த பெருமாள் திருவடி சிலம்பில் இருந்து தோன்றி
நூபுரம் -ஒருவகை காலணி

வகுள தர சரஸ்வதீ விஷக் தஸ்வர ரசபாவ யுதா ஸூ
கின்னரீ ஷூ த்ரவதி த்ருஷதபி பராசக்த காகா ஸ் விஹ
வனை சைல தடி ஷூ ஸூ ந்த்ரஸ்ய-என்று
கூரத் ஆழ்வான் அருளிச் செய்த படி
மரங்களும் இரங்கும் வகை மணி வண்ணாவோ என்று கூவின
ஆழ்வார் பாசுரங்களை கின்னர்கள் பாட
அப்பாடலைக் கேட்ட குன்றுகள் உருகிப் பெருகா நின்டீமையால் சிலம்பாறு
சிலம்பு -குன்றுக்கும் பெயர்

மாலிருஞ்சோலை நின்ற சுந்தரனை-
திரு மால் இருஞ்சோலை மாமலைக்கு தலைவரான
அழகர் விஷயமாக –

சுரும்பார் குழல் கோதை தொகுத்து உரைத்த செந்தமிழ் பத்தும் வல்லார் –
தேன் நிறைந்த மலர்களை அணிந்த குழல் முடியை உடைய
ஆண்டாள் அருளிச் செய்த இந்த திரு மொழியை ஓத வல்லவர்கள் –
ஒரு குழல் கற்றையாலே எம்பெருமானை மயக்க வல்ல வீறு உடையளான இவள்
தான் இப்படி மயங்கி வருந்தினளே –

தொகுத்து உரைத்த -ஒழுங்கு படுத்துதல் திரட்டுதல் –
எம்பெருமான் உடைய கல்யாண குணங்களைத் திரட்டி பாசுரம் ஆக்கி அருளிச் செய்தமை
அவன் இவளை இப்படி துடிக்க விட்டதில் கல்யாண குணங்கள் விளங்குமோ என்னில்
சம்சார தொல்லைகளில் ஈடுபடுத்து வருந்தச் செய்யாமல்
தன திறத்தில் ஈடுபடுத்தி வருந்தச் செய்தமை -என்க
வேத அஷராணி யாவந்தி படிதானி த்விஜாதிபி தாவந்தி
ஹரி நாமானி கீர்த்திதானி ந சம்சய -என்றபடி
அருளிச் செயல்களில் ஒவ் ஒரு எழுத்தும் பகவத் குண கர்ப்பிதம்

திருமாலடி சேர்வர்களே
தன்னைப் போலே வருந்தாதே
சுகமாக
திருமாலின் திருவடித் தாமரைகளை அணுகி
நித்ய கைங்கர்ய சம்பத்துடன் வாழப் பெறுவார்கள்-

——————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே -அண்ணங்கராச்சார்யர்  ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ நாச்சியார் திரு மொழி – எட்டாவது திரு மொழி – -ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை -ஸ்ரீ உ. வே. P.B.A.. ஸ்வாமிகள்–

September 8, 2014

பிரவேசம் –

கீழ்த் திரு மொழியிலே
ஸ்ரீ சங்கத் தாழ்வான் உடன் வார்த்தையாடி
ஒருவாறு போது போக்கினாள் –

இவள் எவ்வளவு பேசிலும்
அச் சங்கு ஆழ்வான் மறு மாற்றம் சொல்லாது ஒழியவே
போத யந்த பரஸ்பரம் -என்றபடியிலே தரிக்க பெற்றிலள்-
ஆற்றாமை மீதூர்ந்து செல்லத் தொடங்கிற்று

காலமோ கார் காலமாய் இருந்தது
மேகங்கள் மின்னி முழங்கிக் கொண்டு வந்து தோற்றின
பண்டு எம்பெருமான் கலந்து பிரிந்து போம் போது
மீண்டு வரும் காலத்தைப் பற்றி பிரஸ்தாபிக்கும் கால்
கார்காலத்திலே தவறாது வருவேன் என்று கூறிப் போனது நினைவுக்கு வந்தது

அப்படியே அவனும் அந்த மேகங்களோடு கூட வந்து இருக்கக் கூடும் என்று நினைத்தாள்
மேகங்களே எம்பெருமானும் வந்தானோ என்று கேட்டாள்-
அவை மறு மாற்றமும் சொல்ல வில்லை
அவ வெம்பெருமானும் தென்படவில்லை

ஆகவே
மேகங்களை நோக்கி நீங்கள் என் தசையை
அங்குச் சென்று அறிவிக்க வேணும் என்று இரக்கிறாள்
இங்கனம் மேகத்தை தூது விடுவதாகச் செல்கிறது இத் திருமொழி-

————————————————————————————-

விண்ணீல மேலாப்பு விரித்தால் போல் மேகங்காள்
தெண்ணீர் பாய் வேங்கடத்து என் திரு மாலும் போந்தானே
கண்ணீர்கள் முலைக் குவட்டில் துளி சோரச் சோர்வேனை
பெண்ணீர்மை ஈடழிக்குமிது தமக்கோர் பெருமையே –8-1-

பதவுரை

விண்–ஆகாசம் முழுவதிலும்
நீலம் மேலாப்பு விரித்தால் போல்–நீல நிறமான மேற் கட்டியை விரித்துக் கட்டினாற் போலிரா நின்ற
மேகங்காள்!–மேகங்களே!
தெள் நீர் பாய்–தெளிந்த தீர்த்தங்கள் பாயுமிடமான
வேங்கடத்து–திருவேங்கடமலையி லெழுந்தருளி யிரா நின்ற
என் திருமாலும்–திருமாலாகிய எம்பெருமானும்
போந்தானே–(உங்களோடுகூட) எழுந்தருளினானோ?
முலை குவட்டில்–முலை நுனியிலே
கண் நீர்கள் துளி சோர–கண்ணீர் அரும்ப
சோர்வேனை–வருந்துகிற என்னுடைய
பெண் நீர்மை ஈடு அழிக்கு மிது–பெண்மையை உருவழிக்கிறவிது
தமக்கு–அவர் தமக்கு
ஓர் பெருமையே–ஒரு பெருமையர யிரா நின்றதோ?

ஆசாசப் பரப்பு முழுவதும் இடமடையம்படி நீலநிறமாயிருப்பதொரு மேற்கட்டி கட்டினாற்போன்ற மேகங்களே!
என் திருவேங்கடமுடையானும் உங்களோடு இவ்விட்ட மெழுந்தருளிளானோ? என்று ஆண்டாள் மேகங்களை நோக்கிக் கேட்க,
அதற்கு அவை மறுமொழி யொன்றுஞ் சொல்லாதொழியவே, ‘அவன் வராமையாலன்றோ இவை பேசாதிருக்கின்றன‘ என்று
கண்ணீர் வெள்ளமிடத்தொடங்க, ‘மேகங்களே! இப்படி நான் கண்ணீர்விட்டு அழும்படி அவன் என்னைப்
பரிதாபப்படுத்துவது அவனுடைய பெருமைக்கு ஏற்குமோ? நீங்களே சொல்லுங்கள் என்கிறாள்.

திருவேங்கடமுடையானும் தானுமாக ஒரு படுக்கையிற் கிடந்து லீலா ரஸம் அநுபவிக்கும் போதைக்கு
ஆகாசத்தில் காளமேகங்களின் பரப்பானது மேற்கட்டி கட்டினாற்போலத் தோற்ற
விண்ணீலமேலாப்பு விரிந்தாற்போல் மேகங்காள்! என்கிறாள். திருவேங்கடவன் முன்பு இவளோடு புணர வந்த போது
பிராட்டியுந் தானுமாக வந்தமை தோன்றுமாம் என் திருமாலும் என்றதனால்.

பெண்ணீர்மையீடழிக்குமிது – ஈடழித்தலாவது – சீர்கெடும்படி செய்தல். பெண்ணீர்மையாவது பெண்களுக்கு உரிய தன்மை,
அதனைச் சீர்கெடுத்தலாவது எதுவும் நாயகனுடைய மனக்கருத்தின்படி நடக்கக்கடவது, அவன் வந்தபோது வருக,
‘அவனது வரவைப்பற்றி நாம் சிறிதும் விசாரப்படத்தகாது, நாம் ஒருவகை முயற்சியும் செய்யலாகாது‘ என்று
ஸ்வரூபாநுரூபமாக இராமல் ‘என் திருமாலும் பேர்ந்தானே? என்று கேட்கும்படியாகவும் கண்ணீர்கள்
முலைக்குவட்டில் துளிசோரச் சோரும்படியாகவும் பதற்றமான தசையிலே கொண்டு நிறுத்துகை.

தமக்கு ஓர் பெருமையே? – என்று நாடெங்கும் புகழப்பெற்றவர், அந்த ஸ்ரீ மஹாலக்ஷ்மிக்குக்
கரசரணாதி அவயவஸ்தாநீயாயையா யிருக்கிற என்னையும் அவளைப் போலே மகிழ்வித்தல் பெருமையாகுமே யன்றி,
இப்படி முகங்கொடாதே நோவுபடுத்துவது பெருமையாகமாட்டாது, பழியாகவே தலைக்கட்டுமென்கை.
திருவேங்கடமுடையானைப் பெரியாழ்வார் திருமகள் ஆசைப் பட்டுப் பெறாதொழிந்தாளென்றால்
அவனுடைய பெருமை என்னாகும்? என்றபடியுமாம்.

விண்ணீல மேலாப்பு விரித்தால் போல் மேகங்காள்
ஆகாசப் பரப்பு முழுவதும் இடமடையும்படி
நீல நிறமாய் இருப்பதொரு
மேற்கட்டி கட்டினால் போன்ற மேகங்களே –
திரு வேங்கடமுடையானும் தானுமாக ஒரு படுக்கையிலே கிடந்தது
லீலா ரசம் அனுபவிக்கும் போதைக்கு
ஆகாசத்தில் காள மேகங்களின் பரப்பானது மேல் கட்டி கட்டினால் போல் தோற்ற
விண்ணீல மேலாப்பு விரித்தால் போல் மேகங்காள் -என்கிறாள்

தெண்ணீர் பாய் வேங்கடத்து என் திரு மாலும் போந்தானே –
என் திருவேங்கடமுடையானும்
உங்களோடு கூட இவ்விடம் எழுந்து அருளினானோ-என்று ஆண்டாள் கேட்க
அதுக்கு மேகங்கள் மறு மொழி ஒன்றும் சொல்லாது ஒழியவே –
திருவேங்கடமுடையான் முன்பு இவளோடு புணர வந்த போது
பிராட்டியும் தானுமாக வந்தமை தோற்ற -திருமால் -என்கிறாள்

கண்ணீர்கள் முலைக் குவட்டில் துளி சோரச் சோர்வேனை
அவன் வாராமையால் அன்றோ இவை பேசாது இருக்கின்றன
என்று கண்ணீர் வெள்ளம் இடத் தொடங்க-

பெண்ணீர்மை ஈடழிக்குமிது தமக்கோர் பெருமையே –
மேகங்களே
இப்படி னான் கண்ணநீர் விட்டு அழும்படி அவன் என்னை
பரிதாபப் படுத்துவது
அவன் பெருமைக்கு ஏற்குமோ
நீங்களே சொல்லுங்கோள்
பெண்ணீர்மை -பெண்களுக்கு உரிய தன்மை
ஈடு அழித்தல் -சீர் கெடும்படி செய்தல்
பெண்ணீர்மை ஈடு அழித்தல் ஆவது
நாயகன் உடைய மனக் கருத்தின் பட நடக்கக் கடவது
அவன் வந்த போது வருக
அவன் வரவைப் பற்றி நாம் சிறிதும் விசாரப் படத் தகாது
நாமும் ஒரு வகை முயர்ச்சியும் செய்யல் ஆகாது
என்று ஸ்வரூப அனுரூபமாக இராமல்
என் திருமாலும் போந்தானே -என்று கேட்கும் படியாகவும்
கண்ணீர்கள் முலைக் குவட்டில் துளி சோரச் சோரும்படியாகவும்
பதற்றமான தசையிலேகொண்டு நிறுத்துகை-

தமக்கு ஒரு பெருமையே
ஸ்ரீ யபதி என்று நாடு எங்கும் புகழப் பெற்றவர்
அந்த மகா லஷ்மிக்கு
கர சரணாதி அவயவ ஸ்தாநீயையாய் இருக்கிற என்னையும்
அவளைப் போலே மகிழ்வித்தல் பெருமை யாகுமே அன்றி
இப்படி முகம் கொடாதே நோவு படுத்துவது பெருமை யாக மாட்டாது
பழியாகவே தலைக் கட்டும் -என்க-
திருவேங்கடமுடையானை பெரியாழ்வார் திரு மகளார் ஆசைப் பட்டு
பெறாது ஒழிந்தாள் என்றால்
அவனுடைய பெருமை என்னாகும் -என்றபடி –

————————————————————————————

மா முத்த நிதி சொரியும் மா முகில்காள் வேங்கடத்துச்
சாமத் திண் நிறம் கொண்ட தாளாளன் வார்த்தை என்னே
காமத் தீயுள் புகுந்து கதுவப் பட்டிடைக் கங்குல்
ஏமத்தோர் தென்றலுக்கு இங்கு இலக்காய் நான் இருப்பேனே—8-2-

பதவுரை

மா முத்தம் நிதி சொரியும்–சிறந்த முத்துக்களையும் பொன்களையும் கொண்டு பொழிகிற
மா முகில்காள்–காள மேகங்களே!
வேங்கடத்து–திருமலையிலெழுந்தருளியிரா நின்ற
உள் புகுந்து–உள்ளே புகுந்து
கதுவப்பட்டு–கவ்வ, அதனால் பாதைப்பட்டு
கங்குல்-இரவில்
இடை ஏமத்து–நடு யாமத்திலே
சாமத்தின் நிறம் கொண்ட–நீலநிற முடையனான
தாளாளன்–எம்பெருமானுடைய
வார்த்தை என்னே–ஸமாசாரம் ஏதாகிலுமுண்டோ?
காமம் தீ–காமாக்நியானது
ஓர் தென்றலுக்கு–ஒரு தென்றற் காற்றுக்கு
நான் இலக்கு ஆய்–நான் இலக்காகி
இங்கு இருப்பேன்–இங்கு இருப்பனோ? (இது தகுதியோ?)

ஓ காளமேகங்களே! நீங்கள் எனக்காக ஔதாரியத்தில் இன்று புதிதாகப் பரிசயம் பண்ண வேணுமோ?
வள்ளல் தனமே இயல்பாக இருப்பவர்களன்றோ நீங்கள், விலையுயர்ந்த முத்துக்களையும் பொன்களையும்
ஒருவரும் வேண்டாமலிருக்கத்தானே நீங்களே பொழிகின்றீர்களன்றோ.
இப்படிப்பட்ட நீங்கள், அடிவீழ்ந்து வேண்டுகிற எனக்காக ஒருவாய்ச்சொல் நல்கலாகாதோ?
திருவேங்கடமுடையானுடைய ஸமாசாரம் உங்களுக்குத் தெரியாமலிராதே ஏதாவது சொல்லலாகாதா?
பிறர்க்குப் பொன்னையும் முத்தையும் பொழிகின்ற நீங்கள் எனக்கு ஒருவாய்ச்சொல் பொழிய அருமையோ? என்கிறாள் முன்னடிகளில்.

இவள் அப்படிக் கேட்டவளவிலும் அம்முகில்கள் இன்னஸமாசாரமுண்டென்று மறுமாற்றம் சொல்லப் பெறாமையாலே
தனது ஆற்றமையின் கனத்தைச் சொல்லி வருந்துகின்றாள் பின்னடிகளில் –
அவ்வெம்பெருமானிடத்து வைத்த காம்மாகிற தீயானது வெளியிலுள்ள அவயவங்களை நிஸ்ஸேஷமாக தஹித்துவிட்டு
இரை காணாமல் உள்ளே புகுந்து தஹிக்க, தென்றற் காற்றானது அதற்குத் துணையாயிருந்துகொண்டு
நோயை அதிகப்படுத்த இப்படி இரண்டின்கையிலும் அகப்பட்டுக்கொண்டு எத்தனைநாள் நான் தடுமாறிக்கிடப்பேனென்கிறாள்.

சாமம் – ‘ஸ்பாமம்‘ என்ற வடசொல்விகாரம். தாளாளன் – பெருமை பாராட்டி நிற்பவன்.
இங்கே வியாக்யான ஸ்ரீஸூக்தி. – “பிறர்க் கண்ட வுடம்பைத் தனக்கென்றிருக்கு மவனாய்த்து,
(பக்தாநாம்) என்றிருக்கிற வுடம்பைத் தனக்கென்றிருக்கிறவன், ‘இவ்வடிவு படைத்த நாமோ சென்றணைவோம்?
இதில் அபேக்ஷையுடையார் வேணுமாகில் தாங்களோ வருகிறார்கள்‘ என்று எழ வாங்கி யிருக்குமவன்‘ – என்று.
இதனால் பரத்வம் கொண்டாடி நிற்பவன் என்ற தாயிற்று. தாள் என்று திருவடிக்குப்போய் அதனால் திருமேனியை உபலக்ஷித்ததாக்கி,
திருமேனியை அடியார்க்கு போக்யமாக்காதே தனக்கே போக்யமாக ஆளுமவன் என்று ஒருவர் பொருள் விவரித்தார். இதனை ஆராய்வது.

வார்த்தை என்னே? – அவர்தாம் இங்குவந்திலராகிலும் ஒரு வார்த்தையாகிலும் சொல்லியனுப்ப வமையுமே,
அதுவுமில்லையோ என்கை. கங்குலிடை – இரவிலே, ஏமத்து – கட்டுங்காவலுமாயுள்ள விடத்தில் என்றும் பொருள் கொள்ளலாம்.

மா முத்த நிதி சொரியும் மா முகில்காள் –
ஒ காள மேகங்களே
நீங்கள் ஔதார்யத்தில் எனக்காக புதிதாக பரிசயம் பண்ண வேணுமோ
வள்ளல் தனமே இயல்வாக இருப்பவர்கள் அன்றோ நீங்கள்
விலை உயர்ந்த முத்துக்களையும் பொன்களையும்
ஒருவருமே வேண்டாமல் இருக்க
தானே நீங்கள் பொழிகின்றீர்கள் -அன்றோ
இப்படிப் பட்ட நீங்கள்
அடி வீழ்ந்து வேண்டுகின்ற எனக்காக ஒரு வாய்ச் சொல் தரல் ஆகாதோ

வேங்கடத்துச் சாமத் திண் நிறம் கொண்ட தாளாளன் வார்த்தை என்னே –
திரு வேங்கடமுடையான் உடைய சமாசாரம் உங்களுக்குத் தெரியாமல் இராதே
ஏதாவது சொல்லல் ஆகாதோ
பிறருக்கு பொன்னையும் முத்தையும் பொழிகின்ற நீங்கள்
எனக்கு ஒரு வாய்ச் சொல் பொழிய அருமையோ –
சாமம் -ச்யாமம்
தாளாளன் -பெருமை பாராட்டி நிற்பவன்
பிறருக்காக கண்ட வுடம்பைத் தனக்கு என்று இருக்குமவன் ஆய்த்து
பக்தா நாம் -என்று இருக்கிற உடம்பை தனக்கு என்று இருக்கிறவன்
இவ்வடிவு படைத்த நாமோ சென்று அணைவோம்
இதில் அபேஷை யுடையார் வேணுமாகில் தாங்களே வருகிறார்கள் –என்று எழ வாங்கி இருக்குமவன்
இத்தால் பரத்வம் கொண்டாடி நிற்பவன் -என்றதாயிற்று –
தாள் -என்று திருவடிக்குப் பேராய்
அதனால் திரு மேனியை உபலஷித்ததாக்கி
திருமேனியை அடியார்க்கு போக்யமாக்காதே
தனக்கு போக்யமாக ஆளுமவன் –

வார்த்தை என்னே –
அவர்தாம் இங்கு வந்திலர் ஆகிலும்
ஒரு வார்த்தை யாகிலும் சொல்லி அனுப்ப அமையுமே
அதுவும் இல்லையோ -என்கை

இவள் அப்படிக் கேட்ட அளவிலும்
அம் முகில்கள் மறுமாற்றம் சொல்லப் பெறாமையாலே
தனது ஆற்றாமையின் கனத்தை அருளுகிறாள் –
காமத் தீயுள் புகுந்து கதுவப் பட்டிடைக் கங்குல் ஏமத்தோர் தென்றலுக்கு –
அவ வெம்பிரான் இடத்து வைத்த காமமான தீயானது
வெளியில் உள்ள அவயவங்களை நிஸ் சேஷமாக தஹித்து விட்டு
இரை காணாமல் உள்ளே புகுந்து தக்கக
தென்றல் காற்றானது அதற்குத் துணையாக இருந்து கொண்டு –

கங்குலிடை -இரவிலே
ஏமத்து-யாமத்தில்
இடை ஏமத்து -நாடு யாமத்தில்
ஏமத்து -கட்டும் காவலுமாய் உள்ள இடத்தில் என்றுமாம் –

இங்கு இலக்காய் நான் இருப்பேனே
நோயை அதிகப் படுத்த இப்படி இரண்டின் கையிலும் அகப்பட்டு கொண்டுஎத்தனை நாள்
தடுமாறிக் கிடப்பேன் -என்கிறாள் –

———————————————————————————————-

ஒளி வண்ணம் வளை சிந்தை உறக்கத்தோடு இவை எல்லாம்
எளிமையால் விட்டு என்னை ஈடு அழியப் போயினவால்
குளிர் அருவி வேங்கடத்து என் கோவிந்தன் குணம் பாடி
அளியத்த மேகங்காள் ஆவி காத்து இருப்பேனே—-8-3-

பதவுரை

அளியத்த மேகங்காள்–அருள் புரியக் கடவ மேகங்களே!
ஒளி–தேஹத்தின் காந்தியும்
வண்ணம் –நிறமும்
வளை–வளைகளும்
சிந்தை–நெஞ்சும்
உறக்கத்தோடு–உறக்கமும் ஆகிய இவையெல்லாம்
எளிமையால்–என்னுடைய தைந்யமே காரணமாக
என்னை இட்டு–என்னை உபேக்ஷித்து விட்டு
ஈடு அழிய–என் சீர் குலையும்படி
போயின–நீங்கப் போய் விட்டன.
ஆல்–அந்தோ!
குளிர் அருவி–குளிர்ந்த அருவிகளை யுடைய
வேங்கடத்து–திருமலையி லெழுந்தருளி யிருக்கிற
என் கோவிந்தன்–எனது கண்ண பிரானுடைய
குணம்–திருக் கல்யாண குணங்களை
பாடி–வாயாரப் பாடிக் கொண்டு (அந்தப் பாட்டே தாரகமாக)
ஆவி–பிராணனை
காத்திருப்பேனே–ரக்ஷித்திருக்க என்னால் முடியுமோ?

எம்பெருமானைப் பிரிந்து விட்ட துக்கத்தினால் சரீர சோபைமாறி நிறமழிந்து வளைகழன்று நெஞ்சு தளர்ந்து
உறக்கமொழிந்து இப்படியெல்லாம் நான் சீர் குலைந்து தடுமாறியிருக்குமிருப்பை என்சொல்ல வல்லேனென்கிறாள் முன்னடிகளால்.
ஒளிவண்ணம் – ஒளிபொருந்திய வர்ணம் என்றுமாம். எம்பெருமானோடு ஸ்பஸ் லேஷிக்கப் பெறுங்காலத்தில்
மேனி புகர்ந்திருப்பதும் பிரிந்து படுங்காலத்தில் “என் மங்கை யிழந்தது மாமை நிறமே“ என்னும்படி
வைவர்ணியப்பட்டிருப்பதும் மெய்யன்பர்களின் இலக்கணமாமென்க.
மேனி மெலியவே வளைகளும் கழன்றொழியும், நெஞ்சும் உருக்குலையும்.

எளிமையால் – நான் பிராண நாதனால் உபேக்ஷிக்கப்பட்டுத் தனிமையாயத் தளர்ந்து கிடக்கிறேனென்பது காரணமாக
ஒளி வண்ணம் வளை சிந்தை யுறக்கங்கள் என்னைவிட்டு நீங்கின என்றபடி எளிபாரை எல்லாரும் கைவிடுவது ஸஹஜமே யன்றோ.
ஆகவே, எளிமையால் என்றது – என்னிடத்துள்ள தைந்யம் காரணமாக என்றபடியாயிற்று.
அன்றிக்கே, ஒளிவண்ணம் முதலியவை என்னை உபேக்ஷித்து விட்டுநீங்கினதற்கு காரணம் தங்களுடைய புன்மையேயாம்,
ஆபத்தை யடைந்தவர்களை விட்டுநீங்குமவர்கள் நீசர்களேயிறே – என்றதாகவும் கொள்ளலாம்.
இப்பக்ஷத்தில், எளிமையால் என்றது – தங்களுடைய நீசத்தன்மையினால் என்றபடியாம்.

விஸலேஷகாலங்களில் நாயகனுடைய திருக்கல்யாண குணங்களைக் கீர்த்தனை பண்ணிக் கொண்டு
ஆவிகாத்திருப்போமென்று பார்த்தாலும், ஒளிவண்ணம் விளைசிந்தையொழியும்படி நேர்ந்த இந்த தஸையில்
குண கீர்த்தநம்பண்ணித் தரித்திருக்க என்னாலாகுமோ வென்கிறாள் பின்னடிகளில்.
நாயகனைப் பிரிந்து தளர்ந்திருக்குங் காலத்தில் மேகங்கள் வந்து முகங்காட்டின படியாலே
அந்த உபகாரத்தைக் கொண்டாடி “அளிபத்த மேகங்காள்“ என்கிறாள்.
ஆவிகாத்திருப்பேனே – பிராணநாதன் அவனான பின்பு பிரரணன்களைக் காக்கவேண்டிய கடமை
அவன் தலைப்பட்டதேயன்றி எனக்குப் பணியாமோ? என்கை.

ஒளி வண்ணம் வளை சிந்தை உறக்கத்தோடு இவை எல்லாம்
எம்பெருமானை பிரிந்து பட்ட துக்கத்தினால்
சரீர சோபை மாறி
நிறம் அழிந்து
வளை கழன்று
நெஞ்சு தளர்ந்து
உறக்கம் ஒழிந்து
இப்படி எல்லாம் நான் சீர் குலைந்து
தடுமாறி இருக்கும் இருப்பை
என் சொல்ல வல்லேன் –

ஒளி வண்ணம் -ஒளி பொருந்திய வண்ணம் -என்றுமாம்
எம்பெருமான் உடன் சம்ச்லேஷிக்க பெறும் காலத்தில்
மேனி புகர்த்து இருப்பதுவும்
பிரிந்து படும் காலத்தில்
என்மங்கை இழந்தது மாமை நிறமே –
மேனி மெலியவே வளைகளும் கழன்று ஒழியும்
நெஞ்சும் உருக்குலையும் –

எளிமையால் விட்டு என்னை ஈடு அழியப் போயினவால் –
நான் பிராண நாதனால் உபேஷிக்கப் பட்டு
தனிமையாய்த் தளர்ந்து கிடக்கிறேன் எனபது காரணமாக
இவை எல்லாம் என்னை விட்டு நீங்கின என்றபடி
எளியாரை எல்லாரும் கை விடுவது சஹஜமே அன்றோ –
ஆகவே
எளிமையால் -என்றது என்னிடத்தில் உள்ள தைந்யம் காரணமாக என்றபடி
அன்றிக்கே
இவை என்னை விட்டு நீங்க காரணம் தங்கள் உடைய புன்மையே யாம்
ஆபத்தை அடைந்தவர்களை விட்டு நீங்குகிறவர்கள் நீசர்களே இ றே என்றுமாம் –
தங்களுடைய நீசத் தன்மையால் நீங்கின —

குளிர் அருவி வேங்கடத்து என் கோவிந்தன் குணம் பாடி –
விஸ்லேஷ காலங்களிலே நாயகன் உடைய
திருக் கல்யாண குணங்களை கீர்த்தனை பண்ணிக் கொண்டு
ஆவி காத்து இருப்போம் என்று பார்த்தாலும்
இவை எல்லாம் நீங்கிய இத்தசையிலும்
என்னால் குணகீர்த்தனம் பண்ணித் தரித்து இருக்க ஆகுமோ -என்கிறாள் –

அளியத்த மேகங்காள்
நாயகனைப் பிரிந்து தளர்ந்து இருந்த காலத்தில்
மேகங்கள் வந்து முகம் காட்டின படியால்
அந்த உபகாரத்தை கொண்டாடி -அளியத்த மேகங்காள் -என்கிறாள் –

ஆவி காத்து இருப்பேனே –
பிராண நாதன் அவன் ஆனபின்பு
பிராணன்களைக் காக்க வேண்டிய கடமை
அவன் தலைப் பட்டதே அன்றி எனக்குப் பணியாமோ –

———————————————————————————

மின்னாகத் தெழுகின்ற மேகங்காள் வேங்கடத்துத்
தன்னாகத் திருமங்கை தங்கிய சீர் மார்வற்கு
என்னகத் திளம் கொங்கை விரும்பித் தாம் நாடோறும்
பொன்னகம் புல்குதற்கு என்புரிவுடைமை செப்புமினே –8-4-

பதவுரை

ஆகத்து மின் எழுகின்ற மேகங்காள்–சரீரத்திலே மின்னல் தோன்றப் பெற்ற மேகங்களே!
என் ஆகத்து–என் மார்விலுண்டான
இள கொங்கை–இள முலைகளை
தாம் விரும்பி–அவ் வெம்பெருமான் விரும்பி
பொன் ஆகம் புல்குதற்கு–அழகிய தம் மார்வோடே அணைய வேணு மென்னும் விஷயத்தில்
நாள் தோறும்–நித்யமும்
என் புரிவடைமை-திருமலையிலே
தன் ஆகம்–தனது திருமேனியில்
திருமங்கை தஙகிய சீர் மார்வற்கு–பிராட்டி எழுந்தருளி யிருக்கப் பெற்ற திரு மார்பு படைத்த பெருமானுக்கு சொல்லுங்கள்

எம்பெருமானுடைய கரிய திருமேனியில் மின்னற்கொடி போன்ற பிராட்டி விளங்கும்படியை நினைப்பூட்டிக்கொண்டு
மின்னயெழுகின்ற பேகங்களை! நீங்கள் திருவேங்கடமுடையான் பக்கலிலே சென்று ஒருவார்த்தை சொல்லவேணும்,
அதாவது – எம்மார்பிலுள்ள இளமுலைகளை அவ்வெம்பெருமான் விரும்பி அணைந்துகொண்டே
இடைவிடாது கிடக்கவேணுமென்று நான் ஆசைப்பட்டிராநின்றே னென்பதை நீங்கள் போய்ச் சொல்லவேணுமென்கிறாள்.

ஆகம் என்று உடம்புக்கும் மார்வுக்கும் பெயர் முதலடியில் ஆகத்து என்றது – உடம்பிலே என்றபடி,
மின்னலாலே பரபாகஸோபை பெற்றிருக்கிற உடம்பையுடைய மேகங்களை! என்றவாறு.
மேகங்காள்! என்றவிடத்து “நடுவே பெரியவுடையார் (ஜடாயுபக்ஷி) வந்து தோற்றினாற் போலேயிருந்த தீ!
அவனைப் பிரிந்து நோவுபடுகிற ஸமயத்திலே நீங்கள் வந்து தோற்றினபடியும்.“ என்றருளிச் செய்வர் பெரியவாச்சான் பிள்ளை.
இரண்டாமடியில், தன்னாகம் – தன்னிடத்திலே என்றபடி. “சீர்மார்வற்குச் செப்புமினே“ என்று அந்வயம்.

மற்றையோருடைய முலைபோலல்ல என்னுடைய முலை, அவை ஆறியிருக்கும்,
இவை “என் விஷயத்தைக் காட்டு, என் விஷயத்தைக் காட்டு“ என்று எப்போதும் பதறினபடியே யிருக்கும்
என்பது தோன்ற என்னாகத்திளங்கொங்கை என்கிறாள் காணும்.
இளங்கோங்கை – ஒரு வஸ்துவிலே விருப்பமுள்ள இளம்பிள்ளைகளைத் தாய்தந்தையர் எவ்வளவு ஸமாதானப் படுத்தினாலும்
ஸமாதாநமடையாமல் விரும்பின வஸ்துவைப் பெற்றல்லது விடாத பிடிவாதங் கொள்வதுபோல்
என் முலைகளும் அவ்வெம்பெருமானது திருமார்வோடே அணைந்தே தீரவேணுமென்ற பிடிவாதமுடையன் என்கிறாள் –
“சொற்கேளாத பரஜைகளைப் போலேயத்து முலைகளின்படி“ என்பது வியாக்யான ஸ்ரீஸூக்தி
கொங்கை. என்றவிடத்து இரண்டாம் வேற்றுமை தொக்கிக் கிடக்கிறது,
என்னாகைத்து இளங்கொங்கையை அவர் தாம் நாடோறும் விரும்பித் தமது பொன்னாகத்தாலே புலகுதற்கு
என் புரிவுடைமை செப்புமின் என்பதாகக் கொள்க. பொன் ஆகம் – விரும்பத்தக்க திருமார்பு புரிவுமைமை – அன்புடமை, ஆசையுடைமை.

மின்னாகத் தெழுகின்ற மேகங்காள் வேங்கடத்துத் தன்னாகத் திருமங்கை தங்கிய சீர் மார்வற்கு
எம்பெருமான் உடைய கரிய திரும் மேனியிலே
மின்னல் கொடி போன்ற பிராட்டி விளன்கும்படியை
நினைப்பூட்டிக் கொண்டு மின்னி எழுகின்ற மேகங்களே
நீங்கள் திருவேங்கடமுடையான் பக்கலிலே சென்று
ஒரு வார்த்தை சொல்ல வேணும் -அதாவது –

என்னகத் திளம் கொங்கை விரும்பித் தாம் நாடோறும் பொன்னகம் புல்குதற்கு என்புரிவுடைமை செப்புமினே
என் மார்பில் உள்ள இள முலைகள்
அவ வெம்பெருமான் விரும்பி அணைந்து கொண்டே
இடைவிடாது கிடக்க வேணும் என்று
நான் ஆசைப்பட்டு இரா நின்றேன் -என்பதை
நீங்கள் போய்ச் சொல்ல வேணும்

ஆகம் -உடம்புக்கும் மார்வுக்கும் பெயர்
மின்னலாலே பரபாக சோபை பெற்று இருக்கிற உடம்பை யுடைய மேகங்கள்
மேகங்காள் -என்றது நடுவே பெரிய வுடையார் -ஜடாயு -வந்து தோற்றினால் போலே இருந்ததீ
அவனைப் பிரிந்து நோவு படுகிற சமயத்திலே நீங்கள் வந்து தோன்றின படியும் –

தன்னாகம் -தன்னிடத்திலே சீர் மார்வற்குச் செப்புமினே -என்று அந்வயம்
மற்றயோர் உடைய முலை போல் அல்ல என்னுடைய முலை
அவை ஆறி இருக்கும்
இவை என் விஷயத்தைக் காட்டு என் விஷயத்தைக் காட்டு -என்று எப்போதும் பதறின படியே இருக்கும் –
என் ஆகத்து இளம் கொங்கை –
ஒரு வஸ்துவிலே விருப்பம் உள்ள இளம் பிள்ளைகளை
தாய் தந்தையர் எவ்வளவு சமாதானப் படுத்தினாலும்
சமாதானம் அடையாமல் விரும்பிய வஸ்துவை பெற்று அல்லது விடாமல் பிடிவாதம் கொள்வது போலே
என் முலைகளும் எம்பெருமான் உடைய திரு மார்புடன்
அணைந்து தீர வேணும் என்ற பிடிவாதம் யுடையவன
சொல் கேளாத பிரஜைகளை போலே யாய்த்து முலைகளின் படி –
என் ஆகத்து இளம் கொங்கையை
அவர் தாம் நாடோறும் விரும்பி
தமது பொன்னாகத்தாலே புல்குவதற்கு
என் புரிவுடைமை செப்புமின் -என்ற அந்வயம்
பொன்னாகம் -விரும்பத் தக்க திரு மார்பு
புரிவுடைமை -அன்புடைமை -ஆசை வுடைமை —

———————————————————————————-

வான் கொண்டு கிளர்ந்து எழுந்த மா முகில்காள் வேங்கடத்துத்
தேன் கொண்ட மலர் சிதறத் திரண்டு ஏறிப் பொழிவீர் காள்
ஊன் கொண்ட வள்ளுகிரால் இரணியனை யுடலிடந்தான்
தான் கொண்ட சரி வளைகள் தருமாகில் சாற்றுமினே–8-5-

பதவுரை

வேங்கடத்து–திருமலையிலே
தேன் கொண்ட மலர் சிதற–தேன் நிறைந்துள்ள புஷ்பங்கள் சிதறும்படி
திரண்டு ஏறி பொழிலீர்காள்–திரள் திரளாக ஆகாயத்திலேறி மழையைப் பொழிகின்றவையாயும்
வான் கொண்டு கிளர்ந்து எழுந்த–ஆகாயத்தைக் கபளீகரித்துக் கொண்டு ஒங்கிக் கிளம்புகின்றவையாயுமுள்ள
மா முகில்காள்!–காள மேகங்களை!
ஊன் கொண்டவள் உகிரால்–வலியள்ளவையாய் கூர்மை யுடையவையான நகங்களாலே
இரணியனை உடல் இடந்தான் தான்–ஹிரண்யாஸுரனுடைய உடலைப் பிளந்தெறிந்த பெருமான்
கொண்ட–என்னிடத்துக் கொள்ளை கொண்டு போன
சரி வளைகள்–கை வளைகளை
தரும் ஆகில்–திருப்பிக் கொடுப்பதாக விருந்தால்
சாற்றுமின்–எனது அவஸ்த்தையை அவர்க்குத் தெரிவியுங்கள்-

முன்னடிகளிரண்டும் மேகவிளி. ஆகாசத்தை விளாக்குலைகொண்டு – எங்குப் பார்த்தாலும்
நீங்களே யாய்ப் பரந்து கிடக்கின்ற மேகங்களை! தேன் நிறைந்த நல்ல புஷ்பங்கள் சிதறி விழும்படி
அவற்றுக்குக் கெடுதியை விளைத்துக் கொண்டு நீங்கள் மழைபொழிவதனால் என்ன பயன்?
பிறர்க்குத் தீங்கை விளைப்பதோ உங்களுக்குப் புருஷார்த்தம்,
இடர்ப் பட்டாரை இன்பக் கடலில் ஆழ்த்த வேண்டாவோ நீங்கள்? முன்னடிகளில் உட்கருத்து.

விஸ்லேஷ காலத்திலே எனக்கு உத்தீபங்களாய்க் கொண்டு தோற்றுகின்ற மலர்களை நீங்கள் சிதறவடிப்பது எனக்குச் சந்தோஷந்தான்,
ஆகிலும் அவ்வளவு செய்தமாத்திரத்தால் பயனில்லை, திருவேங்கடமுடையானோடே நான் ஸம்ஸிலேஷம் பெற்று
இம் மலர்களைப் போகோபகரணமாகக் கொண்டு களிக்கும்படியாகச் செய்துவைக்க வேணும் என்பதாகவும் கருத்துக் கொள்வர்.
அநிஷ்டத்தைத் தவிர்ப்பதோடு இஷ்டத்தைக் கொடுப்பதுஞ செய்யவேண்டியதாதலால்,
இப்போது எனக்கு அநிஷ்டங்களான மலர்களைச் சிதறவடிப்பது மாத்திரம் போதாது,
பகவத் ஸம்ஸ்லேஷமாகிற இஷ்டப்ராப்தியையும் பண்ணித்தரவேஞ மென்கை.

தான்கொண்ட சரிவளைகள் தருமாகில் சாற்றுமின் – எம்பெருமான் ஆண்டாளிடமிருந்து சரிவளைகள் கொண்டானோவென்னில்,
அவன் இவளைவிட்டுப் பிரிந்த்தனால் இவள் மேனிமெலிந்து வளைகள் கழன்று போகப் பெற்றாளாதலால்
இவ்வளை நீங்குதலுக்கு அவனே காரணமாகின்றமைபற்றித் தருகையாவதென்னென்னில்,
மறுபடியும் ஸம்ஸ்லேஷித்து வளைகள் தங்கும்படி செய்தல்.
ஆகவே சரிவளைகள் தருமாகில் என்றது – அவ் வெம்பெருமான் என்னோடு வந்து புணரத் திருவுள்ளம்
பற்றியிருக்கிறானாகில் என்றபடி.
சரி என்பதே கைவளைக்குப் பெயராயிருக்க, சரிவளை என்றது “கர்ணகுண்டலம், – கரிகலபம்“ என்பனபோலவாம்.
சாற்றுமின் – அவனுடைய ஆபிமுக்யத்தை அறிந்துகொண்டு என் நிலைமையை அவனுக்குச் சொல்லுங்கள் என்கை.
இங்கே வியாக்யான ஸ்ரீஸூக்தி – (சாற்றுமினே) அவன் தரிலும் தருகிறான். தவிரிலும் தவிருக்கிறான்.
நீங்கள் அறிவித்துப் போருங்கோள்“.
அன்றியே,
அவனுடைய திருவுள்ளத்தை நீங்கள் அறிந்துகொண்டு அதனை என்னிடம்வந்து சொல்லுங்கள் என்றுமாம்.

வான் கொண்டு கிளர்ந்து எழுந்த மா முகில்காள் –
ஆகாசத்தை விளாக்குலை கொண்டு
எங்குப் பார்த்தாலும் நீங்களே யாகப்
பரந்து கிடக்கின்ற மேகங்காள் –

வேங்கடத்துத் தேன் கொண்ட மலர் சிதறத் திரண்டு ஏறப் பொழிவீர் காள்-
தேன் நிறைந்த நல்ல புஷ்பங்கள் சிதறி
விழும்படி அவற்றுக்குக் கெடுதியை விளைத்துக் கொண்டு
நீங்கள் மழை பொழிவதனால் என்ன பயன்
பிறர்க்குத் தீங்கை விளைவிப்பதோ உங்கள் புருஷார்த்தம்
இடர்ப்பட்டாரை இன்பக் கடலில் ஆழ்த்த வேண்டாவோ நீங்கள் –
விஸ்லேஷ காலத்திலே
எனக்கு உத்தீபகங்களாய் கொண்டு தோற்றுகின்ற
மலர்களை நீங்கள் சிதற அடிப்பது எனக்கு சந்தோஷம் தான்
ஆகிலும் அவ்வளவு செய்த மாதரத்தில் பலன் இல்லை
திரு வேங்கடமுடையான் உடன் நாம் சம்ச்லேஷம் பெற்று
இம் மலர்களை போக உபகரணங்களாக கொண்டு
களிக்கும் படி செய்து வைக்க வேண்டும் –
அநிஷ்டத்தை தவிர்ப்பதோடு
இஷ்டத்தையும் கொடுப்பதும் செய்ய வேண்டும் ஆதலால்
இப்போது எனக்கு அநிஷ்டமான மலர்களை சிதற அடிப்பதும் மட்டும் போதாது
பகவத் சம்ச்லேஷம் ஆகிற இஷ்ட பிராப்தியையும் பண்ணித் தர வேணும் என்கை —

ஊன் கொண்ட வள்ளுகிரால் இரணியனை யுடலிடந்தான்
தான் கொண்ட சரி வளைகள் தருமாகில் சாற்றுமினே
எம்பெருமான் ஆண்டாள் இடம் சரி வளைகள் கொண்டானோ என்னில்
அவன் இவளை விட்டுப் பிரிந்ததனால் இவள் மேனி மெலிந்து
வளைகள் கழன்று போகப் பெற்றாள் ஆதலால்
இவ்வளை நீங்குதலுக்கு அவனே காரணம் என்றதைப் பற்றி
தான் கொண்ட சரி வளைகள் -எனப்பட்டது -என்க

தருமாகில் -என்று
வளையைத் தருகை யாவது என் என்னில்
மறுபடியும் சம்ச்லேஷித்து வளைகள் தங்கும்படி செய்தல் –
ஆகவே
சரி வளைகள் தருமாகில் -என்றது
அவ வெம்பெருமான் தன்னோடு வந்து புணரத் திரு உள்ளம் பற்றி இருக்கிறான் ஆகில் -என்றபடி
சரி -என்பதே கை வளைக்கு பெயராய் இருக்க
சரி வளை -என்றது -கர்ண குண்டலம் – கரி கல்பம் போலே யாம்

சாற்றுமின்
அவனுடைய ஆபி முக்யத்தை அறிந்து கொண்டு என் நிலைமையை அவனுக்கு சொல்லுங்கோள் –
அவன் தரிலும் தருகிறான்
தவிரிலும் தவிருகிறான்
நீங்கள் அறிவித்துப் போருங்கோள் –

அன்றியே
அவன் திரு உள்ளத்தை நீங்கள் அறிந்து கொண்டு
அதனை என்னிடம் வந்து சொல்லுங்கோள் என்றுமாம்-

————————————————————————————-

சலம் கொண்டு கிளர்ந்து எழுந்த தண் முகில்காள் மாவலியை
நிலம் கொண்டான் வேங்கடத்தே நிரந்து ஏறிப் பொழிவீர் காள்
உலங்கு உண்ட விளங்கனி போல் உள் மெலியப் புகுந்து என்னை
நலம் கொண்ட நாரணற்கு என் நடலை நோய் செப்புமினே–8-6-

பதவுரை

சலம் கொண்டு–ஸமுத்ர ஜலத்தை முகந்து கொண்டு
கிளர்ந்து எழுந்த–மேற் கிளம்பி விளங்குகின்ற
தண் முகில் காள்–குளிர்ந்த மேகங்களே!
மா வலியை–மஹா பலியிடமிருந்து
நிலம் கொண்டான் வேங்கடத்து–பூமியை ஸ்வாதீநப் படுத்திக் கொண்டவனான எம்பெருமான் எழுந்தருளியிருக்கிற திருமலையிலே
நிரந்து–பரவி
ஏறி–உயர விருந்து
பொழிவீர் காள்!–பொழிகின்ற மேகங்களே!
உலங்கு உண்ட–பெருங்கொசுக்கள் புஜித்த
விளங்கனி போல் உள் மெலிய–விளாம்பழம் போல நான் உள் மெலியும் படி
புகுந்து–என்னுள்ளே பிரவேசித்து
என்னை–என்னுடைய
நலம் கொண்ட–நிறைவுகளை அபஹரித்த
நாரணற்கு–நாராயணனுக்கு
என் நடலை நோய்–எனது கஷ்ட வ்யாதியை
செப்புமின்–தெரிவியுங்கள்-

இதிலும் முன்னடிகளிரண்டும் மேகவிளி. ‘கடலில்நீரை முகந்துகொண்டு கிளம்பின குளிர்ந்த மேகங்களே! என்றது –
உங்களுடைய வடி வழகும் குளிரிச்சியுமெல்லாம் போக்யமாகத்தானிருக்கிறது, அதில் ஒரு குறையில்லை என்றபடி
பின்னை எந்த அம்ஸத்தில் குறையுள்ளதென்றால், அது தோன்றச் சொல்லுகிறாள்
“மாவலியை நிலங்கொண்டான் வேங்கடத்தே நிரந்தேறிப் பொழிவீர்காள்!“ என்று.
ப்ரயோஜநாந்தரபரரான தேவர்களுக்காத் தன்னை யாசகனாக்கிக் காரியம் செய்த பெருமான் எழுந்தருளியிருக்கிற தேஸத்திலே
வர்த்திக்கிற நீங்கள் அநந்யப்ரயோஜநையான் எனக்காகக் காரியஞ்செய்ய வேண்டாவா?
எம்பெருமான் அஸுரன் பக்கலிலேபோய்க் காரியம் செய்ததுபோல் நீங்களும் ஒரு அஸுரன் பக்கலிலே
போய்க் காரியஞ் செய்ய வேணுமென்று நான் சொல்லுகிறேனோ? உடையவன் பக்கலிலேயன்றோ
உங்களைப் போகச்சொல்லுகிறேன். என் காரியத்தைச் செய்யாதது உங்களுக்குக் குறையன்றோ என்கை.

“(ஏறிப் பொழிவீர்காள்!) சாய்கரத்தை உயர வைத்துத் தண்ணீர் வார்ப் பாரைப்போலே, காணவே விடாய்கெடுப்படி
உயரவேறி வர்ஷிக்கிறிகோளிறே, அவன் வர்த்திக்கிற தேஸித்திலே வர்த்தித்து அவனோடே உங்களுக்கு
ஒரு ஸம்பந்தமுண்டானால் அவன் ஸ்வபாமுண்டாக வேண்டாவோ?“ என்பது வியாக்கியன் ஸ்ரீஸூக்தி.

உனக்காக யாம் செய்யத்தக்கது என்னவென்று அந்த மேகங்கள் கேட்க
அவற்றுக்குச் செய்யத்தக்கது சொல்லுகிறாள் பின்னடிகளில்
உலங்கு என்பது பெருநுளும்பு, (விளாம்பழத்தை மொய்க்கிற கொசுக்கள்,) அவை விளாம்பழத்திலே மொய்த்தவாறே
அதின் ரஸமெல்லாம் சுவறிப்போம், அதுபோல என்னுடம்போடே அணைந்து என் ஸர்வ ஸ்வத்தையும் அபஹரித்த
பெருமானுக்கு நான் இப்படி நோவுபட்டுக் கிடக்கிறே னென்பதைத் தெரிவியுங்கள் என்கிறாள்.

சலம் – ஜலம், நலம் – பெண்மைக்கு உரிய நரண், மடம், அச்சம் முதலிய குணங்கள்.
நடலை நோய் – நிற்பது இருப்பது விழுவது எழுவதாய்ப் படுகிற நோய்.

சலம் கொண்டு கிளர்ந்து எழுந்த தண் முகில்காள்-
கடல் நீரை முகந்து கொண்டு
கிளம்பின குளிர்ந்த மேகங்களே -என்றது –
உங்களுடைய வடிவு அழகும் குளிர்ச்சியும்
எல்லாம் போக்யமாகத் தான் இருக்கிறது
அதில் குறை இல்லை
பின்னை எந்த அம்சத்தில் குறை என்றால் –
சலம் -ஜலம்

மாவலியை நிலம் கொண்டான் வேங்கடத்தே நிரந்து ஏறிப் பொழிவீர் காள்
பிரயோஜனாந்தர பரர்களுக்காக
தன்னை யாசகனாக்கி கார்யம் செய்து அருளிய எம்பெருமான்
எழுந்து அருளி இருக்கிற தேசத்திலே வர்த்திக்கிற நீங்கள்
அநந்ய பிரயோஜனனை யான எனக்காக கார்யம் செய்ய வேண்டாவா –
எம்பெருமான் அசுரன் பக்கலிலே போய் கார்யம் செய்தது போலே
உங்களையும் ஒரு அசுரன் பக்கலிலே போய் கார்யம் செய்யச் சொல்லுகிறேனோ
உடையவன் பக்கலிலே அன்றோ உங்களைப் போகச் சொல்லுகிறேன்
என் காரித்தைச் செய்யாதது உங்களுக்கு குறை அன்றோ -என்கை –

ஏறிப் பொழிவீர் காள் –
சாய் கரத்தை உயர வைத்து
தண்ணீர் வார்ப்பாரைப் போலே
காணவே விடாய் கெடும்படி உயர ஏறி வர்ஷிக்கும் மேகங்களே
அவன் வர்த்திக்கிற தேசத்திலே வர்த்தித்து
அவனோடு உங்களுக்கு ஒரு சம்பந்தம் உண்டானால்
அவன் ஸ்வ பாவம் யுண்டாக வேண்டாவோ –

உனக்காக யாம் செய்யத் தக்கது என் என்று
அந்த மேகங்கள் கேட்க
அவற்றுக்கு செய்யத் தக்கது சொல்லி அருளுகிறாள் மேல் –
உலங்கு உண்ட விளங்கனி போல் உள் மெலியப் புகுந்து என்னை
நலம் கொண்ட நாரணற்கு என் நடலை நோய் செப்புமினே
உலங்கு –பெரு துளும்பு -விளாம் பழத்தை மொய்க்கிற கொசுக்கள்
அவை விளாம் பழத்தை மொய்த்தவாறே அதின் ரசம் எல்லாம் சுவறிப் போம்
அது போலே என் உடம்போடு அணைந்து
என் சர்வ ஸ்வத்தையும் அபஹரித்த பெருமானுக்கு
நான் இப்படி நோவு பட்டுக் கிடக்கிறேன்
என்பதை அறிவியுங்கோள்
நலம் -பெண்மைக்கு உரிய நாண் மடம் அச்சம் முதலிய குணங்கள்
நடலை நோய் -நிற்பது இருப்பது விழுவது எழுவதாய்ப் படுகிற நோய்-

————————————————————————————–

சங்க மா கடல் கடைந்தான் த்ண் முகில்காள் வேங்கடத்துச்
செங்கண் மால் சேவடிக் கீழ் அடி வீழ்ச்சி விண்ணப்பம்
கொங்கை மேல் குங்குமத்தின் குழம்பு அழியப் புகுந்து ஒரு நாள்
தங்கு மேல் என்னாவி தங்கும் என்றும் உரையீரே–8-7-

பதவுரை

சங்கம்–சங்குகளை யுடைத்தாயும் பெருமை வாய்ந்தது
மா-பெருமை வாய்ந்ததாயுமான
கடல்–கடலை
கடைந்தான்–கடைந்தருளின பெருமான் எழுந்தருளி யிருக்கிற
வேங்கடத்து–திருமலையில் திரிகிற
விண்ணப்பம்–விஜ்ஞாபம் யாதெனில்
கொங்கை மேல்–எனது முலைகளின் மேல் (பூசப் பட்டுள்ள)
குங்குமத்தின் குழம்பு–குங்குமக் குழம்பானது
அழிய–நன்றாக அவிந்து போம்படி
தண் முகில் காள்–குளிர்ந்த மேகங்களே!
செம் கண் மால்–புண்டரீகாக்ஷனான அவ் வெம்பெருமானுடைய
சே அடி கீழ்–செவ்விய திருவடிகளின் கீழ்
அடி வீழ்ச்சி-அடியேனுடைய
ஒரு நாள்–ஒரு நாளாகிலும்
புகுந்து தங்கும் ஏல்–அவன் வந்து ஸம்ஸ்லேஷிப்பானாகில்
(அப்போது தான்)
என் ஆவி–என் பிராணன் நிலை நிற்கும் என்பதாம்
உரையீரே–(இவ் விண்ணப்பத்தை அப் பெருமானிடத்துச்) சொல்லுங்கள்-

தன்னை ஸ்ரம்ப்படுத்திப் பிறர் காரியமே கருத்தாகச் செய்து போருகிற எம்பெருமான் எழுந்தருளியிருக்கிற
தேஸத்தில் வாழ்கிறவுங்களுக்கு அவனுடைய குணம் படிய வேண்டாவா? என்கை
ஸம்போதனத்தின் உட்கருத்து நீங்கள் திருவேங்கடமுடையானது திருவடிவாரத்திலே அடியேனுடைய ஒரு விண்ணப்பத்தைச் சொல்ல வேணும்,
விண்ணப்பம் செய்யும் பாசுரமென்னென்னில்,
“கொங்கைமேற் குங்குமத்தின் குழம்பழியப் புகுந்து ஒருநாள் தங்கு மேல் என்னாவிதங்கும்“ என்று சொல்லுங்கோள்.
அவர் என்னோடு கலவி செய்ய வருவாரென்று நம்பி முலைத்தடங்களிலே குங்குமக்குழம்பு பூசி அலங்கரித்து வைத்திருக்கிறேன்,
அது ப்ரயோஜநமுடையதாம்படி பண்ணுவாராகில் தரிக்கலாம் என்று சொல்லுங்கோள் என்கிறாள்,
அணையவமுக்கிக் கட்டுகையாகிற கடாஸ்லேஷத்தில் உள்ள விருப்பத்தை உணர்த்துகிறபடி.
குங்குமத்தின் குழம்பு – குங்குமப்பூவை மர்த்தித்துக் குழம்பாக்கிப் பூசின் பூச்சு.

இவளுடைய பாரிப்புக்கெல்லாம் ஒருநாள் அணைத்தால் போருமோ? ஊழியெல்லா மணைத்துக்கிடந்தாலும்
த்ருப்தி பெறமாட்டாத அபிநிவெஸமன்றோ இவளது, அப்படிப்பட்ட அபிநிவேஸம்
ஒருநாள் வந்து தங்கினவளவாலே த்ருப்திபெறுமோ வென்னில், என் ஆவி தங்கும் என்ற சொல் நலத்தை நோக்குமின்,
ஒருநாள் அணைந்தவளவால் போகத்துக்குப் போராது ப்ராண ரக்ஷணத்துக்குப் போரும் என்கிறாளாய்த்து.

“(ஒருநாள் தங்குமேல் என்னாவி தங்கும்.)
குண ஜ்ஞானத்தாலே தரியாளோ என்றிருக்கவொண்ணாது, அணையுமாகில் தரிக்கலாம்.“ என்பது வியாக்யான ஸ்ரீஸூக்தி.

சங்க மா கடல் கடைந்தான் த்ண் முகில்காள் –
தன்னை ஸ்ரமப் படுத்தி
பிறர் கார்யமே கருத்தாகச் செய்து பொறுக்கிற எம்பெருமான்
எழுந்து அருளி இருக்கிற தேசத்தில்
வாழ்கிற உங்களுக்கும் அவனுடைய குணம் படிய வேண்டாவோ –

வேங்கடத்துச் செங்கண் மால் சேவடிக் கீழ் அடி வீழ்ச்சி விண்ணப்பம்
நீங்கள் திரு வேங்கடமுடையான் திருவடி வாரத்தில்
அடியேனுடைய விண்ணப்பத்தை சொல்ல வேணும்
விண்ணப்பம் செய்ய வேண்டிய பாசுரம் என்ன என்றால் –

கொங்கை மேல் குங்குமத்தின் குழம்பு அழியப் புகுந்து ஒரு நாள் தங்கு மேல் என்னாவி தங்கும் –
அவர் என்னோடு கலவி செய்ய வருவார் என்று நம்பி
முலைத் தடங்களிலே குங்குமப் பூ குழம்பு பூசி
அலங்கரித்து வைத்து இருக்கிறேன் –
அது பிரயோஜனமுடையாதாம் பண்ணுவார் ஆகில் தரிக்கலாம்

என்றும் உரையீரே
என்று சொல்லுங்கோள்
அனைய அமுக்கிக் கட்டுகை யாகிற
காடா ச்லேஷத்திலே உள்ள விருப்பத்தை உணர்த்துகிற படி

குங்குமத்தின் குழம்பு –
குங்குமப் பூவை மர்த்தித்து குழம்பாக்கி பூசின பூச்சு

இவளுடைய பாரிப்புக்கு எல்லாம் ஒரு நாள் அணைத்தால் போருமா
ஊழி எல்லாம் அணைத்துக் கிடந்தாலும்
திருப்தி பெற மாட்டாத அபி நிவேசம் அன்றோ இவனது
அப்படிப் பட்ட அபி நிவேசம் ஒரு நாள் வந்து தங்கின அளவாலே திருப்தி பெறுமோ
என்னில்

என் ஆவி தங்குமே –
ஒரு நாள் அணைத்த அணைவால் போகத்துக்குப் போராது
பிராண ரஷணத்துக்கு போரும்
குண ஜ்ஞானத்தாலே தரியாளோ என்று இருக்க ஒண்ணாது
அணையும் ஆகில் தரிக்கலாம் –
அடி வீழ்ச்சி -அடியாள் -பெயர்ச் சொல் –

—————————————————————————————–

கார் காலத்து எழுகின்ற கார் முகில் காள் வேங்கடத்துப்
போர் காலத்து எழுந்து அருளிப் பொருதவனார் பேர் சொல்லி
நீர் காலத் தெருக்கில் அம்பழ விலை போல் வீழ்வேனை
வார் காலத்தொரு நாள் தம் வாசகம் தந்து அருளாரே –8-8-

பதவுரை

கார் காலத்து–வர்ஷ காலத்திலே
வேங்கடத்து எழுகின்ற–திருமலையிலே வந்து தோற்றா நின்ற
கார் முகில்காள்–காள மேகங்களே!,
போர் காலத்து–யுத்த ஸமயத்திலே
எழுந்தருளி–(போர் களத்தில்) எழுந்தருளி
பொருதவனார்–போர் செய்து வெற்றி பெற்ற இராம பிரானுடைய
பேர்–திரு நாமங்களை
சொல்லி–ஸங்கீர்த்தநம் பண்ணி
நீர் காலத்து எருக்கில் அம் பழ இலை போல் வீழ்வேனை–மழைகாலத்தில் எருக்கம் பழுப்புக்கள் அற்று
விழுவது போல் ஒசிந்து விழுகின்ற எனக்கு
வார் காலத்து ஒரு நாள்–நெடுகிச் செல்லுகிற காலத்திலே ஒரு நாளாகிலும்
தம் வாசகம் தந்தருளாரே–தம்முடைய ஒரு வார்த்தையை அருளா தொழிவரோ?

வர்ஷாகாலத்திலே தவறாமல் வந்துசேருகிறேன் என்று சொல்லிப் போன பெருமான் வாராதொழிந்தாலும்
அவனுடைய வடிவுக்குப் போலியான நீங்களாவது வந்துதோன்ற நின்றீர்களே! என்ற உகவை தோன்றக்
கார்காலத்தெழுதாலும் நாம் திருநாம ஸங்கீர்த்தநம் பண்ணிக்கொண்டாவது ஒருவாறு தரித்திருப்போமென்று பார்த்து
அடியார்கட்காகக் காரியம் செய்வதையே தொழிலாகக் கொண்டு விரோதி நிரஸநத்தில் உத்ஸாஹங்கொண்டு கிளருமவனான
சக்ரவர்த்தி திருமகனுடைய திருநாமங்களை ஸங்கீர்த்தநம் பண்ண ஆரம்பித்தேன்;
அதுவே காரணமாக உடனே ஸைதில்யமடைந்தேன்; மழைகாலத்தில் எருக்கம பழுப்புகள் அற்றற்று விழுவதுபோல்
ஒசித்து தளர்ந்து தளர்ந்து விழும்படியான நிலைமையில் நின்றேன், இவ்வளவிலும் அப்பெருமான் எனக்கு அருள்செய்ய நினைத்திலன்,
என் வாழ்நாளெல்லாம் இப்படி துக்கமயமாகவேயோ கழியப்போகிறது?
ஒருநாளாகிலும் ஒருவாய்ச்சொல் சொல்லி யனுப்பவும் மாட்டாரோ? என்கிறாள்.

கார் காலத்து எழுகின்ற கார் முகில் காள்
வர்ஷா காலத்திலே தவறாமல் வந்து சேருகிறேன் என்று சொல்லிப் போந்த
பெருமான் வாராது ஒழிந்தாலும்
அவனது வடிவுக்கு போலியான நீங்களாவது வந்து தோன்றா
நின்றீர்களே
என உகந்து -கார் காலத்து எழுகின்ற கார் முகில் காள் -என்கிறாள் –

வேங்கடத்துப் போர் காலத்து எழுந்து அருளிப் பொருதவனார் பேர் சொல்லி
அவ வெம்பெருமான் வாராது ஒழிந்தாலும்
நாம் திரு நாம சங்கீர்த்தனம் பண்ணிக் கொண்டாவது ஒருவாறு தரித்து இருப்போம் என்று பார்த்து
அடியார்கட்காக கார்யம் செய்வதையே தொழிலாகக் கொண்டு
விரோதி நிரசனத்தில் உத்சாஹம் கொண்டு
கிளருமவனான சக்கரவர்த்தி திருமகன் உடைய
திரு நாமங்களை சங்கீர்த்தனம் பண்ண ஆரம்பித்தேன் –

நீர் காலத் தெருக்கில் அம்பழ விலை போல் வீழ்வேனை –
அதுவே காரணமாக சைதில்யம் அடைந்தேன்
மழை காலத்தில் எருக்கம் பழுப்புக்கள் அற்று அற்று
விழுவது போலே
ஒசிந்து
தளர்ந்து
தளர்ந்து
விழும்படியான நிலையிலே நின்றேன்
இவ்வளவிலும் அவ வெம்பெருமான் எனக்கு அருள் செய்ய நினைத்திலன் –
என் வாழ் நாள் எல்லாம் இப்படி துக்க மயமாகவேயோ கழியப் போகிறது
வார் காலத்தொரு நாள் தம் வாசகம் தந்து அருளாரே –
நெடுகிச் செல்லுகிற காலத்திலே ஒரு நாள் ஆகிலும்
ஒரு வாய்ச் சொல்
சொல்லி அனுப்பவும் மாட்டாரோ

—————————————————————————————–

மத யானை போல் எழுந்த மா முகில்காள் வேங்கடத்தைப்
பதியாக வாழ்வீர்காள் பாம்பணையான் வார்த்தை என்னே
கதி என்றும் தானாவான் கருதாது ஓர் பெண் கொடியை
வதை செய்தான் என்னும் சொல் வையகத்தார் மதியாரே–8-9-

பதவுரை

வேங்கடத்தை–திருமலையை
பதி ஆக–இருப்பிடமாகக் கொண்டு
வாழ்வீர்கள்–வாழ்கின்றவையாயும்
மதம் யானை போல் எழுந்த–மத்த கஜம் போலே செருக்கிக் கிளர்ந்தவை யாயுமுள்ள
மா முகில்காள்–காள மேகங்களே!
பாம்பு அணையான்–சேஷ சாயியான எம்பெருமானுடைய
வார்த்தை–வார்த்தை யானது
என்னே–இப்படி பொய்யாய் விட்டதே,
தான்–“அவ் வெம்பெருமான் தான்
என்றும்–எப்போதைக்கும்
கதி ஆவான்–(ஆச்ரிதரகட்கு) ரக்ஷகனா யிருந்து வைத்து
கருதாது–அத் தன்மையை நினையாமல்
ஓர் பெண் கொடியை–ஒரு பெண் பிள்ளையை
வதை செய்தான்–கொலை பண்ணினான்“
என்னும் சொல்–என்கிற சொல்லை
வையகத்தார்–இப் பூமியிலுள்ளவர்கள்
மதியாரே–மதிக்க மாட்டார்களே-

மேகங்களைக் கொண்டாடி இருகால் ஸம்போதிக்கிறாள்; திருவேங்கடமுடையானை நீங்கள் இடைவிடாது
ஸேவித்துக் கொண்டு அத்தாலே மத்தகஜம் போலச் செருக்கி யிருக்கிறீர்களன்றோ என்பது முதல் விளியின் கருத்து.

குக்ராம்மே குடியிருப்பானவர்கள் வந்தேறிகளாய்த் திருநாள் ஸேவித்து விட்டுப் போவது போலன்றியே
திவ்யதேஸித்திலேயே நித்யவாஸம் பண்ணப் பெற்றீர்களே! என்னபாக்கியம்!! – என்ற கொண்டாட்டம் இரண்டாம் விளியின் கருத்து.

பாம்பணையான் வார்த்தை என்னே! – திருவநந்தாழ்வானிடத்து ஸகலவித கைங்கரியங்களையுங் கொள்வது போல
என்னிடத்தும் கொள்வன் என்றிருந்தேன், “நாகபர்யங்க முத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம்“ என்றபடி
ஸேஷ ஸயநத்தை விட்டுத் திருமதுரையிலே வந்துபிறந்த கண்ணபிரான் தேர்த்தட்டில் நின்று சொன்ன வார்த்தையை
(சரமஸலோகத்தை) மெய்யென்று நீம்பியிருந்தேன்; பாம்போடே அணைந்து பாம்பின் தன்மையே தனக்குமுண்டாகப் பெற்றான்;
அதற்கு நாக்கு இரணடாயிருப்பது போல இன்னும் இரண்டு நாக்குப் பெற்றான், – அதாவது பொய்யனாய்விட்டான் – என்ற கருத்துக்காண்க.

பலபேர்களுக்கு மெய்யானகப் பரிமாறின அவன் உன்னளவிலே பொய்யனான மாத்திரத்தால் அவனுக்கு யாதொரு
அப கீர்த்தியும் விளையமாட்டாதென்று மேகங்கள் சொன்னதாகக் கொண்டு மறுமொழி கூறுகின்றாள் பின்னடிகளில்.
“ரக்ஷிதா ஜீவலோகஸ்ய ஸ்வஜநஸ்யச ரக்ஷிதா“ என்று ஸாமாந்ய ரக்ஷகனன்றிக்கே ஸ்வ ஜநங்களுக்கு
விஸேஷித்து ரக்ஷகனாகப் புகழ் பெற்றிருக்குமவன் பின்னை அவனைத் துப்புவாருண்டோ? என்கிறாள்.

சுதி – கருதாது – தன்னுடைய ரக்ஷகத்வத்தை மறந்து என்றபடி அன்றியே,
‘ஒரு பெண்கொடியை வதைசெய்வதால் நமக்கு ஸ்வரூப ஹாநி விளையப்போகிறதே!‘ என்று கருதாமல் என்றதாகவுமாம்.
பெண் கொடியை வதைசெய்தானோ வென்னில், ஓர்கொள் கொம்பிலே சேர்க்க வேண்டும் கொடியைத் தரையிலே இட்டு வைப்பது
அதனைக் கொலை செய்வ தொக்குமிறேவதை –
“பெண்ணீர்மை யீடழிக்குமிது தமக்கோர் பெருமையே“ என்று முதற் பாட்டில் மெழுகினாற்போற் சொன்னதை
இப் பாட்டில் விளங்கச்சொன்னாளென்க.

மத யானை போல் எழுந்த மா முகில்காள் வேங்கடத்தைப் பதியாக வாழ்வீர்காள்
திரு வேங்கடமுடையானை நீங்கள் இடை விடாது சேவித்துக் கொண்டு
அத்தாலே மத்த கஜம் போலே செருக்கி
இருக்கிறீர்கள் அன்றோ –
குக்ராமமே குடி இருப்பானவர்கள் வந்தேறிகளாய்
திரு நாள் சேவித்து விட்டு
போவது போல் அன்றியே
திவ்ய வாசத்திலே நித்ய வாசம் பண்ணப் பெற்றீர்களே
என்ன பாக்கியம் –

பாம்பணையான் வார்த்தை என்னே –
திரு வநந்த வாழ்வான் இடத்து சகல வித கைங்கர்யங்களையும்
கொள்வது போலே என்னிடமும் கொள்வான் என்று இருந்தேன் –
நாக பர்யங்க முத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம் -என்றபடி
சேஷ சயனத்தை விட்டு
திருமதுரையிலே வந்து பிறந்த கண்ணபிரான்
தேர்த் தட்டிலே சொன்ன வார்த்தையை
சரம ஸ்லோகத்தை –
மெய் என்று நம்பி இருந்தேன்
பாம்போடு அணைந்து
பாம்பின் தன்மையே தனக்கும் உண்டாகப் பெற்றான்
அதற்கு நாக்கு இரண்டாய் இருப்பது போலே
இவனும் இரண்டு நாக்குப் பெற்றான் -பொய்யனே விட்டான் –
பல பேர்களுக்கு மெய்யனாகப் பரிமாறின அவன்
உன் அளவில் பொய்யனான மாதரத்தில்
அவனுக்கு ஒரு அபகீர்த்தியும் விளைய மாட்டாது -என்று மேகங்கள்
சொன்னதாக கொண்டு மறுமாற்றம் மேலே அருளுகிறாள்
கதி என்றும் தானாவான் கருதாது ஓர் பெண் கொடியை
வதை செய்தான் என்னும் சொல் வையகத்தார் மதியாரே –
ரஷிதா ஜீவா லோகஸ்ய ஸ்வ ஜனச்யச ரஷிதா -என்று
சாமான்ய ரஷகன் அன்றிக்கே
ஸ்வ ஜனங்களுக்கு விசேஷித்து ரஷகனாய் புகழ் பெற்று இருக்குமவன்
ஒரு பெண் பிள்ளையைக் கொலை செய்தான் என்ற சொல் உலகினில் பரவுமானால்
பின்னை அவனை துப்புவார் உண்டோ

கதி கருதாது -தன்னுடைய ரஷகத்வத்தை மறந்து -என்றபடி
அன்றியே
ஒரு பெண் கொடியை வதை செய்தால்
நமக்கு ஸ்வரூப ஹானி விளையப் போகிறதே -என்று கருதாமல் -என்னவுமாம்
பெண் கொடியை வதை செய்தானோ என்னில்
ஒரு கொள் கொம்பிலே சேர்க்க வேண்டிய கொடியை
தரையிலே இட்டு வைப்பது
அதனை கொலை செய்ததுக்கு ஒக்கும் இ றே
பெண்ணீர்மை ஈடு அழிக்கும் இது தமக்கு ஓர் பெருமையே –
என்று முதல் பாட்டில் மெழுகினால் போல் சொன்னதை
இப்பாட்டில் விளங்கச் சொன்னாள் -என்கை-

———————————————————————————————

நாகத்தின் அணையானை நன்னுதலாள் நயந்து உரை செய்
மேகத்தை வேங்கடக் கோன் விடு தூதில் விண்ணப்பம்
போகத்தில் வழுவாத புதுவையர் கோன் கோதை தமிழ்
ஆகத்து வைத்துரைப்பார் அவர் அடியார் ஆகுவரே–8-10-

பதவுரை

நல் நுதுலாள்–விலக்ஷணமான முகத்தை யுடையளாய்
போகத்தில் வழுவாத புதுவையர் கோன் கோதை–பகவத நுபவத்தில் குறையாதவரான பெரியாழ்வாருடைய மகளான ஆண்டாள்
நாகத்தின் அணையான் வேங்கடக் கோனை–திருவனந்தாழ்வானைப் படுக்கையாக வுடையனான திருவேங்கட முடையானை
நயந்து–ஆசைப்பட்டு
உரை செய்–அருளிச் செய்ததாய்.
மேகத்தை விட்டு அதில் விண்ணப்பம்–மேகத்தை தூது விடுவதாக அமைந்த லிண்ணப்பமாகிய
தமிழ்–இத் தமிழ்ப் பாசுரங்களை
ஆகத்து வைத்து–ஹ்ருதயத்திலே வைத்துக் கொண்டு
உரைப்பாரவர்–ஓத வல்லவர்கள்
அடியார் ஆகுவர்–எம்பெருமானுக்கு நித்ய கைங்கரியம் பண்ணப் பெறுவர்கள்.

இத்திருமொழி கற்றார்க்குப் பலன்சொல்லித் தலைக்கட்டுகிறாள் இப்பாட்டில்.
வேண்டினபடி யெல்லாம் பகவதநுபவத்தைப் பெற்று மகிழ்ந்தவரான பெரியாழ்வார்க்குத் திருமகளாகப் பிறக்கப் பெற்றதுவே
ஹேதுவாகத் தான் எம்பெருமானை விரும்பப்பெற்றாள் என்னுமிடம் தோற்றப் போகத்தில் வழுவாத புதுவையர் கோன் கோதை என்கிறாள்.
நன்னுதலாள் – முகத்தைப் பார்க்கும் போதே ‘இவள் பகவதநுபவத்தில் விலக்ஷண‘ என்னத் தக்க வீறுடையவள் என்றபடி.
“நயந்து உரை செய் விண்ணப்பம்“ என்று அந்வயம்.
“மேகத்தை வேங்கடக்கோன் இல் தூதுவிடு விண்ணப்பம்“ என்று அந்வயிக்கலாமென்பர் அழகிய மணவாளச்சீயர் இல் – இடம்.

ஆகத்துவைத்து உரைக்கையாவது – ‘ஒருத்தி பகவத்விஷயத்திலே ஆசை வைத்து என்ன பாடுபட்டாள்!‘ என்று
உருக்கத்தோடே அநுஸந்திக்கையாம் அடியாராகுவரே – ஆண்டாள் மேகத்தைத் தூதுவிட்டு வருந்தினதுபோல அவாகள் வருந்தவேண்டா,
இவள் தூதுவிட்டதுவே ஹேதுவாக இவள்பெற்ற பேற்றை அவர்களும் எளிதிற்பெறுவார்,
தமது திருமொழியில் தாம் விரும்பினபடியெல்லாம் குறையற அநுபவிக்கப் பெற்றாகையில் “போகத்தில் வழுவாத புதுவையர்கோன்“ எனப்பட்டார்.

நிகமத்தில்
இத் திரு மொழி கற்றார்க்கு
பலன் அருளி தலைக் கட்டுகிறார் –
நாகத்தின் அணையானை நன்னுதலாள் –
திரு முகத்தைப் பார்க்கும் பொழுதே
இவள் பகவத் அனுபவத்தில் விலஷணை-எண்ணத் தக்க வீறு யுடையவள் –

நயந்து உரை செய் விண்ணப்பம் -என்று அந்வயம்

மேகத்தை வேங்கடக் கோன் விடு தூதில் விண்ணப்பம்
மேகத்தை வேங்கடக் கோன் இல் தூது விடு விண்ணப்பம் –என்று அன்வயிக்கலாம் என்பர்
அழகிய மணவாள சீயர்
இல் -இடம் –

போகத்தில் வழுவாத புதுவையர் கோன் கோதை தமிழ்
வேண்டினபடி எல்லாம் பகவத் அனுபவத்தை பெற்று மகிழ்ந்தவரான
பெரியாழ்வாருக்கு திரு மகளாராய் பிறக்கப் பெற்றதுவே ஹேதுவாக
தாம் எம்பெருமானை விரும்பப் பெற்றாள் -என்னும் இடம் தோற்ற
போகத்தில் வழுவாத புதுவையர் கோன் -என்கிறாள்
பெரியாழ்வார் தமது திரு மொழியிலே
தாம் விரும்பின படி எல்லாம் குறை அற அனுபவிக்கப் பெற்றார் ஆகையாலே
போகத்தில் வழுவாத புதுவையர் கோன் -எனப் பட்டார்-
ஆகத்து வைத்துரைப்பார்
ஆகத்து வைத்து உரைக்கை யாவது
ஒருத்தி பகவத் விஷயத்திலே ஆசை வைத்து
என்ன பாடு பட்டாள் என்று உருக்கத்தோடு
அனுசந்திக்கை –

அவர் அடியார் ஆகுவரே-
ஆண்டாள் மேகத்தைத் தூது விட்டு வருந்தினது போல் அவர்கள் வருந்த வேண்டா
இவள் தூது விட்டதே ஹேதுவாக
இவள் பெற்ற பேற்றை அவர்களும் எளிதில் பெறுவார்கள் -என்கை-

————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே -அண்ணங்கராச்சார்யர்  ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ நாச்சியார் திரு மொழி – ஏழாம் திரு மொழி – -ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை -ஸ்ரீ உ. வே. P.B.A.. ஸ்வாமிகள்–

September 7, 2014

பிரவேசம் –

கீழ்த் திருமொழியில் மண நீர் மஞ்சனமாட்டும் அளவும்
கனாக் கண்டதாகச் சொல்லப் பட்டு இருந்தாலும்
அதுக்கு அடுத்தபடியாக சம்ச்லேஷமும்
ஸ்வப்ன அனுபவகமாகத் தானே நடந்து ஏறியதாகக் கொள்ள வேணும்

அவ்வனுபவத்திலே கண்ணபிரான் உடைய திருவவதரத்தின் அமுதத்தைப் பருகப் பெற்ற ஆண்டாள்
கண் விழித்துக் கொண்டவாறே
அந்தோ இத்தகைய அனுபவம் கனவாகக் கழிந்ததே
மெய்யே அனுபவிக்கப் பெற்றதாக நினைத்துக் களித்து இருந்தேனே
தெய்வம் இப்படியா நம்மை வஞ்சித்தது
என வருந்தினாள் –

கண் உறக்கம் கொள்ளாமல்
போது போக்க உபாயமும் தோன்றாமல்
சிறிது நாழிகை அலை பாய்ந்தாள்
அவளவில் கண்ணபிரான் உடைய திருவாய் அமுதத்தை
நம்மைப் போல் அன்றியே
நித்ய அனுபவம் பண்ணப் பெற்றவர்கள் யாரேனும் உண்டா
அன்றி அவன் நம்மை வஞ்சித்தது போலே எல்லாரையும் வஞ்சிப்பவன் தானா –
என்று சிந்திக்கத் தொடங்கினாள்-

அப்போது இடது திருக் கையிலே நித்ய வாசம் செய்கிற
திருச் சங்கு ஆழ்வான்
அத திரு வாய் அமுதத்தை இடைவிடாது அனுபவிக்கும் பாக்யத்தை யுடையவன் என்று உணர்ந்தாள்-
ஹா ஹா அவனுடைய பாக்கியம் என்ன பாக்கியம் என்று கொண்டாடி
ஒரு பக்கத்தில் பிரீதி பிரகர்ஷமும்
மற்றொரு பக்கலிலே அஸூ யாதிசயமுமாய்
அப் பாஞ்ச ஜன்யத்தையே நெஞ்சிலே இடைவிடாதே அனுசந்தித்தாள்

அந்த பாவன பிரகர்ஷமானது
அத திரு சங்கு ஆழ்வானை கண் முன்னே தோற்றுவிக்க
ஆண்டாள் அவனை முன்னிலையாக விளித்து
ஒ பாஞ்ச ஜன்யமே கண்ணபிரானது திருப்பவளத்தின்
இன்னமுதத்தை நீ இடைவிடாது அனுபவியா நின்றாயே
அத்திருவாயின் பரிமளமும்
அவ்வமுதத்தின் ரசமும்
எப்படி இரா நின்றது -சிறிது சொல்லாய் –
காதினில் ஆவது கேட்டு மகிழ்கிறேன் -என வினவுவதும்
அச் சங்கு ஆழ்வான் உடைய பாக்ய விசேஷத்தை கொண்டாடி சொல்லுவதுமாக
செல்லுகிறது இத் திருமொழி –

பெருமாளைக் காட்டிலும் ஆண்டாள் உடைய பாக்கியம் வீறு பெற்றது என்ன வேணும்
ஏன் எனில்
பெருமாள் பிராட்டியைப் பிரிந்து நொந்து இருந்த காலத்தில்
அப் பிராட்டியைக் கண்டு வந்த ஒரு குரங்கை பார்த்து
கதம் உரூ கதம் பாஹூ-என்று அவள் உடைய துடை அழகு எப்படி இருக்கிறது
தோள் அழகு எப்படி இருக்கிறது
சொல்லிக் காண் -என்று வினவப் பெற்றார் –

இவ் வாண்டாள் அப்படி தோற்றிற்று ஒரு குரங்கைப் பார்த்து
வினவ வேண்டாதே
எம்பெருமானது திருக் கையை ஒரு நொடிப் பொழுதும் விட்டு நீங்காத
நித்ய அனுபவம் பண்ணும் பாக்கியம் உடைய ஸ்ரீ பாஞ்ச ஜன்ய ஆழ்வானை நோக்கி
கேட்கப் பெற்றது சிறந்த பாக்கியம் இறே
உசாத் துணைக்கும் உரியார் கிடைப்பது அரிது அன்றோ –

————————————————————————————————

கருப்பூரம் நாறுமோ கமலப் பூ நாறுமோ
திருப் பவளச் செவ்வாய் தான் தித்தித்து இருக்குமோ
மருப்பொசித்த மாதவன் தன் வாய்ச் சுவையும் நாற்றமும்
விருப்புற்று கேட்கின்றேன் சொல் ஆழி வெண் சங்கே –7-1-

பதவுரை

ஆழி வெண் சங்கே–கம்பீரமாய் வெளுத்திரா நின்ற ஸ்ரீபாஞ்ச ஜந்யாழ்வானே!
மருப்பு ஓசித்த மாதவன் தன்–(குவயாபீட யானையன்) கொம்பை முறித்த கண்ண பிரானுடைய
வாய்–திரு அதரத்தினுடைய
சுவையும்–ரஸத்தையும்
நாற்றமும்–பரிமளத்தையும்
விரும்புற்று–ஆசையோடே
கேட்கின்றேன்–(உன்னைக்) கேட்கிறேன்.
திருப் பவளச் செவ்வாய் தான்–(அப்பெருமானுடைய) அழகிய பவளம் போன்ற சிவந்த திருவதரமானது
கருப்பூரம்–பச்சைக் கற்பூரம் போல்
நாறுமோ?–பரிமளிக்குமோ? (அல்லது)
கமலப் பூ–தாமரைப் பூப் போலே
நாறுமோ?–பரிமளிக்குமோ?
தித்தித்திருக்குமோ–மதுரமான ரஸத்தை உடைத்தாயிருக்குமோ?
சொல்–இன்னபடி யிருக்குமென்று எனக்குச் சொல்

கம்பீரமான ஹ்ருதயத்தையும் பரம சுத்த ஸ்வபாவத்தை யுமுடைய சங்கே! உன்னை ஆசையோடு ஒருவிஷயம் கேட்கிறேன்,
சொல்லவேணும்; உனக்குத் தெரியாத அம்ஸத்தைப் பற்றி நான் கேட்கப் போகிறதாக நினைக்க வேண்டா,
கண்ண பிரானது திருவதரத்தில் ஊறுகின்ற அமுதத்தின் ரஸபரிமங்களைக் குறித்துக் கேட்கிறேனித்தனையல்லது வேறிலை;
அவ்வமுதமானது பரிமளத்திலே பச்சைக் கருட்பூரத்தை ஒத்திருக்குமோ, அல்லது தாமரைப்பூவை ஒத்திருக்குமோ?
ரஸத்தில் த்ருஷ்டாந்தமாக எடுத்துக் குறிப்பிடக்கூடிய வஸ்து யாதென்றும் எனக்கு ஸ்புரிக்கவில்லை;
விலக்ஷணமான தித்திப்பை உடையதாயிருக்குமோ? எனக்குத் தெரியச் சொல்லவேணும் என்கிறாள்.

“கருப்பூரம் நாறுமோ“, “கமலப்பூநாறுமோ“ என்ற இரண்டிடத்திலும் உபமவுருபு தொக்கிக்கிடக்கிறது;
கரும்பூரம்போல் நாறுமோ கமலப்பூப்போல் நாறுமோ என விரிக்க.

சுவையும் நாற்றமும் – வாயினுடைய பரிமளத்தையும் வாயமுதத்தினுடைய ரஸத்தையும் என்க.
ஆழிவெண்சங்கே = ஆழி என்று கடலுக்கும் பேராதலால், கடலில் நின்று தோன்றிய வெண்சங்கே! என்றுரைத்தலுமாம்.
(“வெண்சங்கே!.) கைவிடாதே அநுபவியாநிற்கச் செய்தேயும் உடம்பு வெளுக்கும்படியிறே இவனுடைய ஆற்றாமை“ என்ற
வியாக்யான ஸ்ரீஸூக்தியின் அழகு காண்மின்,
சங்குக்கு வெண்மை இயற்கைக் குணமன்று போலும்,

ஆழி வெண் சங்கே
கம்பீரமான ஹிருதயத்தையும்
பரம சுத்த ஸ்வபாவத்தையும் உடைய சங்கே
உன்னை

ஆழி வெண் சங்கே
ஆழி -என்று கடலுக்கு பேராய்
கடலில் தோன்றிய சங்கே -என்றுமாம்

வெண் சங்கே –
கை விடாதே அனுபவியா நிற்கச் செய்தேயும்
உடம்பு வெளுக்கும் படி இ றே
இவனுடைய ஆற்றாமை
சங்குக்கு வெண்மை இயற்க்கை குணம் அன்று போலும் –

விருப்புற்று கேட்கின்றேன்
ஆசையோடு ஒரு விஷயம் கேட்கிறேன்

சொல்-
சொல்ல வேணும்

உனக்குத் தெரியாத அம்சத்தைப் பற்றி நான் கேட்பதாக நினைக்க வேண்டா
மருப்பொசித்த மாதவன்-கண்ண பிரான் உடைய திரு அதரத்தில் ஊருகின்ற
அமுதத்தின் ரச பரிமளங்களைக் குறித்து கேட்கிறேன்
அத்தனை அல்லது வேறு இல்லை
கருப்பூரம் நாறுமோ கமலப் பூ நாறுமோ-
அவ்வமுதமானது பரிமளத்தில் பச்சைக் கற்பூரத்தை ஒத்து இருக்குமோ
அல்லது தாமரையை ஒத்து இருக்குமோ
ரசத்தில் திருஷ்டாந்தமாக எடுத்துக் குறிப்பிடக் கூடிய வஸ்து யாதொன்றும் எனக்கு ஸ்புரிக்க வில்லை
வி லஷணமான தித்திப்பை யுடைத்தாய் இருக்குமோ
எனக்குத் தெரியச் சொல்ல வேணும் -என்கிறாள்
கருப்பூரம் நாறுமோ கமலப் பூ நாறுமோ இரண்டு இடத்திலும்
உவம உருபு தொங்கிக் கிடக்கிறது
கற்பூரம் போலே நாறுமோ
கமலப் பூ போலே நாறுமோ -என்றபடி –

சுவையும் நாற்றமும்-
வாயினுடைய பரிமளத்தையும்
வாய் அமுதத்தின் உடைய ரசத்தையும்-

————————————————————————————————

கடலில் பிறந்து கருதாது பஞ்ச சனன்
உடலில் வளர்ந்து போய் ஊழியான் கைத்தலத்
திடரில் குடியேறித் தீய வசுரர்
நடலைப் பட முழங்கும் தோற்றத்தாய் நற் சங்கே – –7-2-

பதவுரை

நல் சங்கே–அழகிய சங்கே!
கடலில்–ஸமுத்திரத்திலே
பிறந்து–பிறந்து (அங்கு நின்றும்)
பஞ்சசனன் உடலில் போய் வளர்ந்து–பஞசஜனனென்ற அஸுரனுடைய சரீரத்திற் போய் வளர்ந்து,
கருதாது–(இப்படி பிறந்த விடத்தையும் வளர்ந்த விடத்தையும்) நினையாமல்
ஊழியான்–எம்பெருமானுடைய
கை தலம் திடரில்–கைத்தமாகிற உந்நத ஸ்தானத்திலே
குடி ஏறி–குடி புகுந்து
தீய அசுரர்–கொடியவர்களான அசுரர்கள்
நடலைப் பட–துன்பப்படும்படி
முழங்கும் தோற்றத்தாய்–ஒலி செய்யும்படியான மேன்மை யுடையையா யிரா நின்றாய். (உன்பெருமையே பெருமை)

சங்கே! நீ பிறந்ததெங்கே? போய்வளர்ந்ததெங்கே?, உப்புக்கடலிலே பிறந்து அசுரனுடைய உடலுக்குள்ளே போய் வளர்ந்தாய்,
இப்படி மட்டமான குலத்திலே பிறந்து வளர்ந்தவுனக்கு எம்பெருமானுடைய திருக்கைத் தலத்திலே நித்யவாஸம் பண்ணப்பெறுதலும்,
அவனுடைய திருவாயிலேயிருந்து கொண்டு அஸுரராக்ஷஸாதிகள் குடல் குழம்பும்படி கோஷம் செய்யப் பெறுதலும்
வாய்ந்தது என்ன பாக்கியம்!, உன் வைலக்ஷண்யத்தை என் சொல்வேன்? என்கிறாள்.

கருதாது என்ற எதிர்மறை வினையெச்சம், குடியேறி என்றதில் அந்வயித்து,
பிறந்த விடத்தையும் வளர்ந்த விடத்தையும் சிறிதும் ஸ்மரியாமல் அடியோடு மறந்து எப்போதும்
எம்பெருமானது திருக்கைத் தலத்திலேயே குடிவாழ்ந்து என்று பொருள் தரும்.
இனி, “கருதாது பஞ்சசன னுடலில் வளர்ந்து“ என உள்ளபடியே அந்வயித்தலுமாம்.
பஞசசன்னுடைய அஸுரத்தன்மையை (எம்பெருமானிடத்துப் பகைமை பூண்டவன் என்னுமிடத்தை) ப்பாராமல்
அவனது உடலில் வளர்ந்து என்றபடி. ஊழியான் – என்றும் அழிவின்றி நெடுங்காலம் வாழ்பவன்,
யுகம் முடிந்த காலத்தும் தான்நின்று அனைவரையும் நோக்குமவன்,
காலத்துக்கு நிர்வாஹன் – எனப் பலபொருள்களுண்டு, எம்பெருமானுக்கு வாசகம்.
“கைத்தலத்திடர்“ – திடர் – உயர்ந்த ஸ்தானம்.
நடலைப்படுதல் – துன்பமடைதலும் நடுக்கமடைதலும்,
“ஸகோஷோ தார்த்தராஷ்ட்ராணாம் ஹ்ருதயாநிவ்யதாரயத்“ என்ற கீதை இங்கு நினைக்கத்தக்கது தோற்றம் – மேன்மை.

“முழங்குந்தோற்றத்தவனான நற்சங்கே! மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விரும்புற்றுக் கேட்கிறேன் சொல்“ என்று கீழ்ப்பாட்டோடே கூட்டி அந்வயித்தலுமாம்.

ஓரிடத்திற் பிறந்து ஓரிடத்தில் வளர்ந்து ஓரிடத்திற் குடியேறினதாகச் சொல்லப்பட்டுள்ள இவ்விடத்தில்
கண்ணபிரானுடைய நிலைமை நினைவுக்கு வரும். சங்கு கடலிற் பிறந்ததுபோல அவன் யதுகுலத்துப் பிறந்தான்,
சங்கு அரசனுடைய உடலில் வளர்ந்ததுபோல அவன் அசுரத்தன்மை பூண்டவனான் கம்ஸனுக்குள்ளாய்
இறையிறுத்திருக்கிற திருவாய்பாடியிலே வளர்ந்தான்,
சங்கு கைத்தலத்திடரிற் குடியேறியதுபோல அவன் காலயவந ஜராஸ்ந்தாதி களுக்காப்போய்
ஸ்ரீவத்வாரகையைப் படைவீடாகச் செய்து அங்கே குடியேறினான்.
சங்கு தீயவசுரரை நடலைப் படுத்துவது போல அவன் துர்யோதனாதிகளை மண்ணுண்ணும்படி செய்தான்.
இப்படிகளாலே திருச்சங்கானது எம்பெருமானோடு பரம ஸாம்யம் பெற்றிருக்கின்றதென்பதும் ஆண்டாளது கொண்டாட்டத்தில் உள்ளுரை.

நற் சங்கே – –
சங்கே

கடலில் பிறந்து கருதாது பஞ்ச சனன் உடலில் வளர்ந்து
நீ பிறந்தது எங்கே
போய் வளர்ந்தது எங்கே
உப்புக் கடலிலே பிறந்து
அசுரனுடைய உடலுக்கு உள்ளே போய் வளர்ந்தாய் –
இப்படி மட்டமான குலத்திலே பிறந்து
வளர்ந்த யுனக்கு –

போய் ஊழியான் கைத்தலத் திடரில் குடியேறித் –
எம்பெருமான் உடைய திருக் கைத் தலத்திலே
நித்ய வாசம் பண்ணப் பெறுதலும்
திடர் -உச்ச ஸ்தானம் –
ஊழியான் –
என்றும் அழிவின்றி நெடும் காலம் வாழ்பவன்
யுகம் முடிந்த காலத்தும் தான் நின்று அனைத்தையும் நோக்குபவன்
காலத்துக்கு நிர்வாஹகன்
கருதாது -என்ற எதிர் மறை வினை எச்சம்
குடியேறி என்ற இடத்தில் அந்வயித்து
பிறந்த இடத்தையும்
வளர்ந்த இடத்தையும் சிறிதும் ஸ்மரியாமல் அடியோடு மறந்து
எப்போதும் எம்பெருமான் உடைய திருக் கைத்தலதிலேயே
குடி வாழ்ந்து

அன்றிக்கே
கருதாது பஞ்ச சன்யன் உடலிலே வளர்ந்து -என்று
பஞ்ச சந்யனுடைய அசூரத் தன்மையை பாராமல்
அவன் உடலில் வளர்ந்தபடி -என்றுமாம்

தீய வசுரர் நடலைப் பட முழங்கும் தோற்றத்தாய்
அவனுடைய திரு வாயிலே இருந்து கொண்டு
அசூர ராஷசாதிகள் குடல் குழம்பும் படி கோஷம் செய்யப் பெறுதலும் –
நடலைப் படுத்தல் –
துன்பம் அடைதலும் நடுக்கம் அடைதலும்
சகோஷா த்ருஷ்ட்ராணாம் ஹ்ருதயாநி வ்யதாரயத் -ஸ்ரீ கீதை
வாய்த்தது என்ன பாக்கியம்
உன் வை லஷண்யத்தை என் சொல்வேன்
தோற்றம் -மேனகை

முழங்கு தோற்றத்தவனான நற் சங்கே
மாதவன் தன் வாய்ச் சுவையும் நாற்றமும் விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்
என்று கீழ்ப் பாட்டாடு அந்வயம்

ஓர் இடத்தில் பிறந்து
ஓர் இடத்தில் வளர்ந்து -இங்கு கண்ணபிரான் நிலைமையும் நினைவுக்கு வரும்
சங்கு கடலில் பிறந்தது போலே அவன் யது குலத்துக்குப் பிறந்தான்
சங்கு அசுரனின் உள்ளத்தில் வளர்ந்தது போலே
அவனும் அசுரத் தன்மை பூண்ட கம்சனுக்கு இறை இறுத்து இருக்கிற
திருவாய்ப்பாடியிலே வளர்ந்தான்
சங்கு கைத்தலத்தில் குடியேறினது போலே
அவன் காலயவன ஜராசந்தாதிகளுக்காக போய்
ஸ்ரீ த்வாரகையைப் படைவீடாகச் செய்து அங்கெ குடியேறினான்
சங்கு தீய அசுரரை நடலைப் படுத்துவது போலே அவனும் துரியோத நாதிகளை மண் உண்ணும்படி செய்தான்

இப்படிகளால் எம்பெருமான் உடன் ஸ்ரீ பாஞ்ச ஜன்ய ஆழ்வான்
பரம சாம்யம் பெற்று இருக்கின்றது என்பதும் ஆண்டாள் கொண்டாட்டத்தில் உள்ளுறை-

——————————————————————————————————-

தட வரையின் மீத சரற் கால சந்திரன்
இடை உவாவில் வந்து எழுந்தால் போலே நீயும்
வடமதுரையார் மன்னன் வாசுதேவன் கையில்
குடியேறி வீற்று இருந்தாய் கோலப் பெரும் சங்கே —7-3-

பதவுரை

கோலம் பெரு சங்கே–அழகிய பெரிய சங்கே!
சாற்காலம் சந்திரன்–சரத் கால சந்திரன்
உவா இடையில்–பௌர்ணமியினன்று
தட வரையின் மீது வந்து எழுந்தால் போல–பெரிய உதய கிரியிலே வந்து உதித்தாற்போல
நீயும்–நீயும்
வடமதுரையார் மன்னன் வாசு தேவன் கையில்–வடமதுரையிலுள்ளார்க்கு அரசானான கண்ண பிரானுடையத் திருக் கையில்
குடி ஏறி–குடி புகுந்து
வீற்றிருந்தாய்–உன் மேன்மையெல்லாம் தோற்ற இரா நின்றாய்

சரத் காலத்தில் எல்லாக் கலைகளும் நிரம்பின பூரண சந்திரன் உதய கிரியின் மேல் வந்து தோற்றினாற்போலே,
ஸ்ரீபாஞ்சஜந்யமே! நீயும் கண்ணபிரானது, திருக்கையின் மேலே அழகாக வீற்றிருந்து தோற்றா நின்றாய்,
உனது பெருமையே பெருமையென்று கொண்டாடுகிறாள்.

எம்பெருமானுடைய திருக்கை தடவரையாகவும், திருச்சங்காழ்வான் சரத்கால சந்திர மண்டலமாகவும்
உருவகப் படுத்தப்பட்டிருக்கின்றமை அறிக.
உவா என்று – அமாவாஸ்யைக்கும் பௌர்ணமிக்கும் பெயர், இங்கு பௌர்ணமி விவக்ஷிதம்,
இடை உவாவில் – உவாவிடையில் – பௌர்ணமியிலே என்கை.
இனி, உவர் என்று கடலுக்கும் பெயருண்டாதலால்,
‘கடலிலையில் நின்றும் தடவரையின்மீது எழுந்தாற்போல‘ என்றுமுரைக்கலாமாயினும் சுவை குன்றும்.
சரற்கால சந்திரன் – வடசொல்தொடர்.
வாசுதேவன் என்றது – வஸுதேவருடைய புத்திரன் என்றும் எங்கும் நிறைந்துறையுங் கடவுள் என்றும் பொருள்படும்.

தட வரையின் மீத சரற் கால சந்திரன் -இடை உவாவில் வந்து எழுந்தால் போலே
சரத் காலத்தில் எல்லா கலைகளும் நிரம்பின பூர்ண சந்தரன்
உதய கிரியின் மேல் வந்து
தோற்றினால் போலே
இடை உவா -உவா இடையில் பௌர்னமி அன்று
உவா என்று அம்மாவாசைக்கும் பௌர்ணமிக்கும் பெயர்
உவா -என்று கடலுக்கும் பெயர்
கடல் இடையில் நின்றும் தட வரையின் மீது எழுந்தால் போல் –என்றும் சொல்லலாம் -ஆனால் இந்த அர்த்தம் சுவை குன்றும்

நீயும் வடமதுரையார் மன்னன் வாசுதேவன் கையில்
குடியேறி வீற்று இருந்தாய் –
நீயும் கண்ணபிரானது திருக் கையின் மேலே
அழகாக வீற்று இருந்து தோற்றா நின்றாய் –
உனது பெருமையே பெருமை –
வாசுதேவன் –
வாசு தேவன் புத்திரன்
எங்கும் நிறைந்து உறைபவன்

கோலப் பெரும் சங்கே
அழகிய ஸ்ரீ பாஞ்ச ஜன்யமே

எம்பெருமான் உடைய திருக் கையை -தடவரையாகவும்
திருச் சக்கரத் தாழ்வான் -சரத் கால சந்தரன் ஆகவும்
உருவகப் படுத்தி அருளிச் செய்கிறாள் –

———————————————————————————————–

சந்தர மண்டலம் போல் தாமோதரன் கையில்
அந்தரம் ஓன்று இன்றி ஏறி அவன் செவியில்
மந்திரம் கொள்வாயே போலும் வலம் புரியே
இந்திரனும் உன்னோடு செல்வத்துக்கு ஏலானே–7-4-

பதவுரை

வலம்புரியே!–வலம்புரிச் சங்கே!
தமோதரன் கையில்–கண்ண பிரானது திருக்கையில்
சந்திர மண்டலம் போல்–சந்திர மண்டலம் போலே
அந்தரம் ஒன்று இன்றி ஏறி–இடைவிடாது இருந்து கொண்டு
அவன் செவியில்–அவனுடைய காதில்
மந்திரம் கொள்வாய் போலும்–ஏதோ ரஹஸ்யம் பேசுகிறாய் போலிரா நின்றாய்,
இந்திரனும்–(செல்வத்தில் மிக்கவனாகப் புகழ் பெற்ற) இந்திரனும்
செல்வத்துக்கு-ஐச்வர்ய விஷயத்தில்
உன்னோடு ஏலான்–உனக்கு இணையாக மாட்டான்

கண்ண பிரானுடைய திருக் கையிலே சந்திரமண்டலம் போலே விளங்கா நின்று கொண்டு ஒரு நொடிப் பொழுதும்
அத்திருக் கையை விட்டுப் பிரியாமல் அங்கே யிருந்து கொண்டு அவனுடைய திருச்செவியோடே அணைந்தாற்போலிருப்பதனால்
அவனது திருக் காதில் ஏதோ ரஹஸ்யம் ஓதுவான் போலே யிரா நின்றாய், சிறந்த செல்வம் பெற்றவனாகப் புகழப் படுகின்ற
இந்திரனுக்கும் உன்னளவு செல்வமில்லாமையாலே நீ ஒப்பற்ற ஐச்வர்யம் அடைந்தவனாயிரா நின்றாய் என்கிறாள்.

“அவன் செவியில் மந்திரன் கொள்வாயேபோலும்“ என்றவிடத்து வியாக்கியான் ஸ்ரீஸூக்தி –
“உம்மைப்பிரிந்து ஆற்றமாட்டாதார் பலருமுண்டு என்று திருச்செவியிலே சொல்லுகிறாய் போலிருக்கிறது
அவன் செவியிலே ரஹஸ்யத் திருச்செவியிலே சொல்லுவான் போல விருக்கை. கொள்கை – கொடுக்கை“ – என்று.

இந்திரனும் என்ற உம்மையால், இந்திரன் செல்வத்தல் சிறந்தவனென்று விளங்கும்,
அவனினும் விஞ்சிய செல்வமுடையார் பலரிருக்க க்ஷுத்ரனான அவ்விந்திரனை உம்மை கொடுத்தெடுத்தது எங்ஙனேயெனில்,
இதற்குப் பெரியவாச்சான்பிள்ளை இரண்டு வகையாக அருளிச் செய்வர்,
இந்திரன் தான் நினைத்தபோது மழை பெய்வித்தும் அல்லாதபோது தவிர்ந்தும்போருகையாலே ஐச்வர்யமுள்ளது
அவ்விந்திரனுக்கே என்றிருப்பர்கள் இடையருமிடைச்சிகளும்,
ஆனது பற்றியே யன்றோ அவர்கள் அவ்விந்திரனுக்கே ஆராதனை செய்துவந்தார்கள்.
இப்போது ஆண்டாள் இடைப்பெண் ஸமாதியில் இருக்கின்றாளாதலால்
அவ்விடைப் பெண்களின் கருத்தின்படி அருளிச்செய்கிறாள் என்பது முதல் ஸமாதாநம்.
இரண்டாவது ஸமாதாநம், – இங்கு இந்திரன் என்றது ஸாக்ஷாத் பரமாத்மாவையே சொல்லிறிறாகவுமாம்,
வேத வேதாந்ததாத்பரியங்களை நிஷ்கல்மஷமாகத் தேர்ந்துணர்ந்துள்ள பெரியாழ்வாரது திருமகளாதலால்,
இந்த்ராதி ஸப்தங்கள் பரமாத்ம வாசகங்களென்று வேதாந்த சாஸ்த்ர ஸித்தாந்மாகையாலே அதனையடியொற்றிக் கூடினபடி.
ஸ்ரீபாஷ்யத்தில் முதல் அத்யாயத்தின் முதற்பாதத்தின் முடிவு அதிகரணமாகிய இந்த்ரப்ராணாகிகரணத்தில்
இவ் விஷயம் விசதமாகக் காணத் தகும். பரமாத்மாவும் உன்னோடு செல்வத்துக்கு எலான் என்றது –
அவனுடைய ஸ்வாதந்திரியச் செல்வமானது உன்னுடைய பாரதந்திரியச் செல்வத்திற்குத் தோற்றுப் போய்விடுமென்கை.
பாரதந்திரியத்தின் எல்லை நிலத்தில் நிற்பவர்களை யன்றோ லக்ஷ்மீ ஸம்பந்நராகச் சொல்லிப்போருவது.
“அரசமர்ந்தானடி சூடுமாசை யல்லால் அரசாக வெண்ணேன் மற்றரசு தானே

சந்தர மண்டலம் போல் தாமோதரன் கையில்
கண்ணபிரான் உடைய திருக்கையிலே
சந்திர மண்டலம் போலே விளங்கா நின்று கொண்டு –

அந்தரம் ஓன்று இன்றி ஏறி-
ஒரு நொடிப் பொழுதும் அத திருக் கையை விட்டுப் பிரியாமல்
அங்கேயே இருந்து கொண்டு –

அவன் செவியில் மந்திரம் கொள்வாயே போலும் –
அவன் உடைய திருச் செவியோடு அணைந்தால் போல்
இருப்பதானால்
அபனது திருக் காதில் ஏதோ ரஹச்யம் ஒதுவான் போலே இரா நின்றாய் –
உம்மைப் பிரிந்து ஆற்ற மாற்றார் பலர் உண்டு என்று
திருச் செவியிலே ரஹச்யம் சொல்லுவான் போல் இருக்கிறாய்
கொள்கை -கொடுக்கை -என்று

வலம் புரியே இந்திரனும் உன்னோடு செல்வத்துக்கு ஏலானே-
சிறந்த செல்வம் பெற்றவனாய்
வஞ்சப் புகழப் படுகின்ற இந்த்ரனுக்கும்
உன்னளவு செல்வம் இல்லாமையினாலே
நீ ஒப்பற்ற ஐஸ்வர்யம் அடைந்தவனாய் இரா நின்றாய் –
இந்த்ரனும் -உம்மை -இந்த்ரன் செல்வத்தினில் சிறந்தவன்
அவனிலும் விஞ்சிய செல்வம் யுடையார் பலர் இருக்க
ஷூத்ரனான இந்த்ரனை உம்மை தொகை கொடுத்து எடுத்தது எங்கனே என்னில் –
இந்த்ரன் தான் நினைத்த போது மழை பெய்வித்தும்
அல்லாத போது தவிர்ந்தும் போருகையாலே ஐஸ்வர்யம் உள்ளது
அவனுக்கே என்று இருப்பார்கள் இடையரும் இடைச்சிகளும்
ஆனது பற்றி அன்றோ இந்த்ரனுக்கே அவர்கள் ஆராதனை
செய்து வந்தார்கள்
ஆண்டாள் ஆய்ச்சி பாவத்தில் அருளிச் செய்வதால் -இந்த்ரனும் -என்கிறாள்
மேலும்
இந்த்ரன் சாஷாத் பரமாத்மாவையே சொல்லிற்றாகவுமாம்
வேத வேதாந்த தாத்பர்யங்களை
நிஷ் கல்மஷமாக தேர்ந்து உணர்ந்து உள்ள பெரியாழ்வார் திரு மகளார் ஆதலால்
இந்த்ராதி சப்தங்கள் பரமாத்மா வாசகங்கள் என்று வேதாந்த சாஸ்திர சித்தம் ஆகையாலே
அதனை அடி ஒற்றிக் கூறின படி
ஸ்ரீ பாஷ்யம் முதல் அத்யாயம் முதல் பாதம் முடிவு அதிகரணம் இந்திர ப்ராணாதிகரணத்தில்
இவ்விஷயம் விசதமாக அருளிச் செய்து இருக்கிறது இ றே
பரமாத்மாவும் உன்னோடு செல்வத்துக்கு ஏலான் -என்றது
அவனுடைய ஸ்வா தந்திர செல்வமானது
உன்னுடிய பார தந்த்ர்ய செல்வத்துக்கு தோற்றுப் போய் விடும் என்கை-
பாரதந்த்ர்யத்தின் எல்லை நிலத்திலே நிற்பவர்களை அன்றோ லஷ்மீ சம்பன்னராகச் சொல்லிப் போந்தது
அரசமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால் அரசாக எண்ணேன் மற்றரசு தானே-

—————————————————————————————————

உன்னோடு உடனே ஒரு கடலில் வாழ்வாரை
இன்னார் இனையார் என்று எண்ணுவார் இல்லை காண்
மன்னாகி நின்ற மதுசூதன் வாய் அமுதம்
பன்னாளும் உண்கின்றாய் பாஞ்ச சன்னியமே—7-5-

பதவுரை

பாஞ்சசன்னியமே!–சங்கே!
ஒரு கடலில்–ஒரே கடலில்
உன்னோடு உடனே–உன்னோடு கூடவே
வாழ்வாரை–வாழப் பிறந்தவர்களான மற்றும் பலரை
இன்னார் இனையார் என்று எண்ணுவார் இல்லை காண்–ஒரு பதார்த்தமாகவும் மதிப்பாரில்லை காண்,
(நீ ஒருவன் மாத்திரம்)
மன் ஆகி நின்ற–ஸர்வ ஸ்வாமியா யிரா நின்ற
மதுசூதன்–கண்ணபிரானுடைய
வாய் அமுதம்–திருவாயினமுதத்தை
பல் நாளும்–பல காலமாக
உண்கின்றாய்–பருகா நின்றாய்.
(ஆகையால் நீயே பாக்யசாலி)

ஓ பாஞ்சசன்னியமே! நீ பிறந்தவிடத்தில் உன்னைப் போலப் பிறந்தவர்கள் எத்தனையோ பேர்கள் இருக்கிறார்களன்றே,
அவர்களை யாராவது நெஞ்சிலும் நினைப்பாருண்டா? அவர்களுடைய ஸ்வரூபம் இப்படிப்பட்டது,
ஸ்வபாவம் இப்படிப் பட்டதென்று யாராவது அறிய விரும்பினாருண்டா? இல்லை, அப்படியிருக்க,
உனக்கொருத்தனுக்கு மாத்திரம் வந்த வாழ்ச்சி என்னே!,
கண்ணபிரானுடைய திருவாயிலமுதத்தை அல்லும் பகலும் அருந்துகின்றாயே!
உன்னுடைய பாக்கியமே பாக்கியம் என்று கொண்டாடுகின்றாள்.

இன்னார் இனையார் – இன்ன உருவத்தை யுடையவர்கள், இன்ன இயற்கையையுடையவர்கள்.
“இன்னாரினியாரென்று“ என்ற பாடமும் ஒருவாறு என்று பொருளாய்,
உன்னோடுடனே ஒருகடலில் வாழ்வாருடை நன்மைதீமைகளைப்பற்றிச் சிந்திப்பாராருமில்லை என்று கருத்தாகலாம்.

பாஞ்சசன்னியமே! – நான் பெரியாழ்வார்பாடே வளர்ந்தும் பயனற்றிராநின்றேன்,
நீ பஞ்சஜநாஸுரன்பாடே வளர்ந்தும் ஒப்பற்ற பயன்பெற்றிராநின்றாய்,
பிறப்பிலும் வளர்பிலும் என்ன இருக்கிறது? அத்ருஷ்டம் செவ்வனேயிருத்தல் வேண்டும்,
அஃது உனக்கு நன்கு அமைந்ததுகாண் – என்கிறாள் போலும்.

உன்னோடு உடனே ஒரு கடலில் வாழ்வாரை -இன்னார் இனையார் என்று எண்ணுவார் இல்லை காண் –
நீ பிறந்த இடத்திலே
உன்னைப் போலே பிறந்தவர்கள்
எத்தனையோ பேர்கள் இருக்கிறார்கள் அன்றோ
அவர்களை யாராவது நெஞ்சாலும் நினைப்பார் உண்டோ –
அவர்கள் உடைய ஸ்வரூபம் இப்படிப் பட்டது
ஸ்வ பாவம் இப்படிப் பட்டது என்று
யாராவது அறிய விரும்பினார் உண்டோ -இல்லை
அப்படி இருக்க
உனக்கு ஒருத்தனுக்கும் வந்த வாழ்ச்சி என்ன –என்னே –
இன்னார் இனையார் –
இன்ன உருவத்தை யுடையவர்கள்
இன்ன இயற்கையை யுடையவர்கள்

இன்னார் இனியார் -பாட பேதம்
அயோக்யர்கள் யோக்யர்கள் -உன்னோடு உடனே ஒரு கடலிலே
வாழ்வார் உடைய நன்மை தீமைகளைப் பற்றி சிந்திப்பார் யாரும் இல்லை

மன்னாகி நின்ற மதுசூதன் வாய் அமுதம் பன்னாளும் உண்கின்றாய் –
கண்ணபிரான் உடைய
திருவாயில் அமுதத்தை அல்லும் பகலும் அருந்துகின்றாயே
உன்னுடைய பாக்யமே பாக்கியம்
என்று கொண்டாடுகிறாள் –

பாஞ்ச சன்னியமே-
நான் பெரியாழ்வார் பாடே வளர்ந்தும்
பயன் அற்று இரா நின்றேன்
நீ பஞ்ச ஜன அசுரன் பாடே வளர்ந்தும் ஒப்பற்ற பயன் பெற்று இரா நின்றாய்
பிறப்பிலும் வளர்ப்பிலும் என்ன இருக்கிறது
அத்ருஷ்டம் செவ்வனே இருத்தல் வேண்டும்
அஃது உனக்கு நன்கு அமைந்தது காண் -என்கிறாள் போலும் –

—————————————————————————————————-

போய்த் தீர்த்தமாடாதே நின்ற புணர் மருதம்
சாய்த்தீர்த்தான் கைத்தலத்தே ஏறிக் குடி கொண்டு
சேய்த்தீர்த்தமாய் நின்ற செங்கண் மால் தன்னுடைய
வாய்த் தீர்த்தம் பாய்ந்த்தாட வல்லாய் வலம் புரியே —7-6-

பதவுரை

வலம் புரியே!–வலம்புரிச் சங்கே!,
போய்–வெகு தூரம் வழி நடந்து போய்
தீர்த்தம்–கங்கை முதலிய தீர்த்தங்களிலே
ஆடாதே–நீராடுகையாகிற கஷ்டங்கள் பட வேண்டாமல்
நின்ற–(நாரத சாபத்தாலே மரமாய் நின்ற)
புணர் மருதம்–இரட்டை மருத மரத்தை
சாய்த்து ஈர்த்தான்–முறித்துத் தள்ளின கண்ண பிரானுடைய
கைத்தலத்து ஏறி–திருக் கைத்தலத்தின் மீதேறி

இந்நில வுலகத்தின் புண்ய தீர்த்தங்களிற் படித்து குடைந்தாட வேணு மென்னும் விருப்பமில்லாதாரில்லை;
அங்ஙன் விருப்புற்றாரெல்லாரும் ஆயிரக்காதம் ஐங்நூறுகாதம் வழிநடந்து போய் ஒரு குளத்திலும் குட்டையிலும் முழுக்கிட்டு வருவர்கள்;
ஒரு தடவை புண்யதீர்த்தத்திற் பாய்ந்தாடுவதற்கு எல்லாரும் படாப்பாடுகள் படாநிற்க;
பாஞ்சசன்னியமே! நீ அப்படிப்பட்ட வருத்தமொன்றும் படாமல் எம்பெருமானுடைய திருக் கைத்தலத்திலேயே
எளிதாகக் குடியிருந்து கொண்டு அவனுடைய வாயமுதமாகிற லோகோத்தரமான புண்ய தீர்த்தத்திலே
ஸர்வ காலமும் அவகாஹித்திருக்கின்றாயே!, உனது அத்ருஷ்டமே அத்ருஷ்டம் – என்று கொண்டாடுகின்றாள்.

“வலம்புரியே! (நீ மற்றவர்களைப்போல்) போய் தீர்த்த மாடாதே –
செங்கண்மால் தன்னுடைய வாய்த்தீர்த்தம் பாய்ந்தாடவல்லாய்“ என்று அந்வய க்ரமம்.
சேய்த் தீர்த்தமாய் நின்ற என்ற அட்மொழி செங்கண்மாலுக்கு மாகலாம்,
செங்கண்மால் தன்னுடைய வாய்த்தீர்த்தத்துக்குமாகலாம்.
சேய்த் தீர்த்தம் என்றது – நெடுந்தூரத்திலுள்ள தீர்த்தமென்றபடியாய்,
அதனால் அருமை காட்டப்பட்டதாய், அதனால் மிக்க சிறப்பு காட்டப்பட்டதாமென்க.

போய்த் தீர்த்தமாடாதே நின்ற புணர் மருதம் -சாய்த்தீர்த்தான் கைத்தலத்தே ஏறிக் குடி கொண்டு –
இந் நில உலகத்தில் புண்ய தீர்த்தங்களில் படிந்து குடைந்தாட
வேணும் என்னும்
விருப்பம் இல்லாதார் இல்லை –
அங்கன் விருப்புற்றார் எல்லாரும்
ஆயிரம் காதம்
ஐநூறு காதம்
வழி நடந்து போய் குளத்திலும் குட்டையிலும் முழுக்கிட்டு வருவார்கள்
ஒரு தடவை புண்ய தீர்த்தத்தில் பாய்ந்தாடுவதற்கு
எல்லாரும் படாப் பாடுகள் படா நிற்க
பாஞ்ச சன்னியமே
நீ அப்படிப்பட்ட வருத்தம் ஒன்றுமே படாமல்
எம்பெருமான் உடைய திருக் கைத் தலத்திலேயே
எளிதாகக் குடி இருந்து கொண்டு

சேய்த்தீர்த்தமாய் நின்ற செங்கண் மால் தன்னுடைய வாய்த் தீர்த்தம் பாய்ந்த்தாட வல்லாய் வலம் புரியே –
அவனுடைய வாய் அமுதம் ஆகிற
லோகோத்தரமான புண்ய தீர்த்தத்திலே சர்வ காலமும்
அவகாஹித்து இருக்கின்றாயே
உனது அத்ருஷ்டமே அத்ருஷ்டம் -என்று கொண்டாடுகிறாள்

வலம் புரியே
நீ மற்றவர்களைப் போலே
போய்த் தீர்த்தமாடாதே
செங்கண் மால் தன்னுடைய
வாய்த்தீர்த்தம் பாய்ந்தாட வல்லாய் -என்று அந்வய க்ரமம்

சேய்த் தீர்த்தமாய் நின்ற –
இந்த அடை மொழி செங்கண் மாலுக்கும் ஆகலாம்
செங்கண் மால் தன்னுடைய வாய்த் தீர்த்தத்துக்கும் ஆகலாம்

சேய்த் தீர்த்தம் -என்றது
நெடும் தூரத்தில் உள்ள தீர்த்தம் என்றபடியாய்
அதனாலே அருமை காட்டப் பட்டதாய்
அதனால் மிக்க காட்டப் பட்டதாம் -என்கை-

—————————————————————————————————

செங்கமல நாண் மலர் மேல் தேன் நுகரும் அன்னம் போல்
செங்கண் கரு மேனி வாசுதேவன் உடைய
அங்கைத் தலமேறி அன்ன வசம் செய்யும்
சங்கரையா உன் செல்வம் சால அழகியதே–7-7-

பதவுரை

நாள்–அப்போதலர்ந்த
செம் கமலம் மலர் மேல்–செந்தாமரைப் பூவில் (படிந்து)
தேன்–தேனை
நுகரும்–பருகுகின்ற
அன்னம் போல்–அன்னப் பறவை போன்று
செம் கண் கருமேனி வாசு தேவனுடைய–சிவந்த திருக் கண்களையும் கறுத்த திருமேனியை யுமுடைய கண்ண பிரானது
அம் கைத்தலம் ஏறி–அழகிய கைத் தலத்தின் மீதேறி
அன்ன வசம் செய்யும்–கண் வளர்கின்ற
சங்கு அரையா!–சங்குகளிற் சிறந்த பாஞ்ச ஜந்யமே!
உன் செல்வம்–உன்னுடைய செல்வமானது
சால–மிகவும்
அழகியது–சிறந்தது காண்

அப்போதலர்ந்த செந்தாமரை மலரின் மேலே அன்னம் படிந்து மதுபாநம் பண்ணுமா போலே
கண்ணபிரானுடைய அழகிய திருக்கையின் மேலேறி மதுபாநம் பண்ணி உணவுக்கீடாக உறக்கங்கொள்ளுகிற திருச்சங்கே!
உன் போகத்தின் பெருமையை நான் என்ன சொல்வேன் என்கிறாள். வெண்மை நிறத்தில் ஸாம்யத்தைக் கொண்டு
சங்கை அன்னத்தோடு ஒப்பிட்டாள். அங்கைத்தலமானது செங்கமல நாண்மலரோடு ஒப்பிடப்பட்டது.

செங்கமல நாண்மலரில் மது உள்ளமையால் அதனை அன்னம் பருகுவதுண்டு, இங்குச் செங்கமலமலராகச் சொல்லப்பட்ட
திருக் கையில் மது இல்லையே, திருவாயில் தானே மது உண்டு. “அங்கைத்தலமேலி“ என்றிருக்கையாலே
இந்த உபமாநோபமேயபாவம் எங்ஙனேபொருந்தும்? என்று சிலர் சங்கிப்பர்கள், –
அன்னமானது செங்கமல நாண்மலரின்மேல் இருந்துகொண்டு தேனேநுகர்வது போல் – என்று
விவக்ஷிதமாகக் கொண்டால் இந்தஸிங்கைக்குப் பரிஹாரமாகும்.
செங்கமலநாண்மலரிமேல் அன்னத்தின் இருப்புக்கும் வாசுதேவனுடைய அங்கைத்தலத்தில் சங்கின் இருப்புக்கும்
உபமாநோபமேயபாவம் விவக்ஷிதமென்க.

அன்னவசஞ்செய்தல் – உண்ட உணவுக்கீடாக இடம்வலங்கொள்ளுதல், உறங்குதல்.
சங்கரையா! அரையன் – அரசன், சங்குகளிற்சிறந்தது.

ஆழ்வானருளிச்செய்த, ஸுந்தரபாஹுஸ்தவத்தில் –
“ஸ்ரீமத்வாந்ரிபதி பாணிதரலாப்ஜயுக்மம் ஆரூடயோர் விமலசங்கரதாங்கயோஸ்து –
ஏகோப்ஜமாச்ரித இவோத்தமராஜ ஹம்ஸ், பத்மப்ரியோர்க்க இவ தத்ஸ்மிதோ த்விதீய“ என்ற ஸ்லோகத்தில்
திருச் சங்கைப் பற்றி வருணித்திருப்பதில் இப்பாட்டின் கருத்து அமைக்கப்பட்டிருக்கின்றமை அறியத்தக்கது.

செங்கமல நாண் மலர் மேல் தேன் நுகரும் அன்னம் போல்
நாள் -அப்போது அலர்ந்த
அப்போது அலர்ந்த செந்தாமரை மலரின் மேல்
அன்னம் படிந்து மது பானம் பண்ணுமா போலே

செங்கண் கரு மேனி வாசுதேவன் உடைய -அங்கைத் தலமேறி அன்ன வசம் செய்யும் சங்கரையா-
கண்ணபிரான் உடைய அழகிய திருக் கையின் மேல் ஏறி
மது பணம் பண்ணி
உணவுக்கு ஈடாக
உறக்கம் கொள்ளுகிற திருச் சங்கே

உன் செல்வம் சால அழகியதே –
உன் போகத்தின் பெருமையை னான் என்ன சொல்வேன்

வெண்மை நிறத்தில் சாம்யம் கொண்டு சங்கை அன்னத்தோடு ஒப்பிட்டாள்
அங்கைத் தலமானது செங்கமல நாள் மலரோடு ஒப்பிடப்பட்டது –

செங்கமல நாள் மலரில் மது உள்ளமையால் அன்னம் அதனை பருகுவது உண்டு
இங்குச் செங்கமலமாகச் சொல்லப் பட்ட திருக் கையில் மது இல்லையே
திரு வாயிலே தானே மது உண்டு
அங்கைத் தலம் ஏறி -என்று இருக்கையாலே
உபமான உபமேய பாவம் எங்கனே பொருந்தும் -என்ற சங்கைக்கு
அன்னமானது செங்கமல நாள் மலரின் மேல் இருந்து கொண்டு
தேனை நுகர்வது போலே -என்று விவஷிதமாகக் கொண்டு சங்கைக்கு பிரகாரம் ஆகும்
செங்கமல நாள் மலர் மேல் அன்னத்தின் இருப்புக்கும்
அங்கைத் தலத்தில் சங்கின் இருப்புக்கும்
உபமான உபமேய பாவம் விவஷிதம்

அன்ன வசம் செய்தல்
உண்ட உணவுக்கு ஈடாக இடம் வலம் கொள்ளுதல் –உறங்குதல்

சங்கரையா -அரையன் -அரசன் -சங்கு களிலே சிறந்த -என்றபடி

கூரத் ஆழ்வான் ஸ்ரீ ஸூ ந்தர பாஹூ ஸ்தவம் -இதே கருத்தை
ஸ்ரீ மத்வ நாதரி பதி பாணி தரலாப்ஜயுக்மம் ஆரூடயோர் விமல சங்கா தாங்க யோஸ்து
ஏகோப்ஜ மாச்ரித இவோத்தமராஜ ஹம்ச பத்ம பிரியோர்க்க இவ தத்சமிதோ த்விதீய –
என்று அருளிச் செய்கிறார் –

————————————————————————————————–

உண்பது சொல்லில் உலகு அளந்தான் வாய் அமுதம்
கண் படை கொள்ளில் கடல் வண்ணன் கைத் தலத்தே
பெண் படையார் உன் மேல் பெரும் பூசல் சாத்துகின்றார்
பண் பல செய்கின்றாய் பாஞ்ச சன்னியமே—7-8-

பதவுரை

பாஞ்சசன்னியமே–சங்கே!,
உண்பது சொல்லில்–நீ உண்பது என்ன வென்றால்
உலகு அளந்தான் வாய் அமுதம்–உலகங்களை அளந்தவனான் எம்பெருமானுடைய திருவாயிலுள்ள அம்ருதம்,
கண் படை கொள்ளில்–நீ படுத்துக் கொள்வது எங்கே யென்றால்
கடல் வண்ணன் கை தலத்தே–கடல் போன்ற நிறத்தை யுடையனான அவ் வெம்பெருமானுடைய திருக் கையிலே,
(இப்படி உனக்கு ஊணுமுறக்கமும் அங்கேயா யிருப்பதனால்)
பெண் படையார்–பெண்குலத்தவர்கள் அனைவரும்
உன் மேல்–உன் விஷயமாக
பெரு பூசல்–பெரிய கோஷம் போடுகிறார்கள்,
(எங்கள் ஜீவனத்தை இவனே கொள்ளை கொள்ளுகிறானென்று கூச்சலிடுகிறார்கள்)
பண்பு அல செய்கின்றாய்–(இப்படி அவர்கள் வருந்தும்படி) அநியாயமான காரியத்தைச் செய்கிறாய்.
(இஃது உனக்குத் தகுதி யல்ல என்கை.)

ஓபாஞ்சசன்னியமே! நீ செய்வது சிறிதும் நியாயமாயில்லே, பெண்ணாய்ப் பிறந்தவர்களெல்லாரும் உன்மேல்
வசைகூறும்படியான காரியம் நீ செய்கிறாய், அது என்னவென்றால், நீ கண்ணபிரானுடைய வாயமுதத்தை உண்பதும்
அவனுடைய கைத்தலத்தில் உறங்குவதுமாயிருக்கிறாய், கோவில் சோற்றைத் தின்று குளத்தில் நீரைக் குடித்துக்
கோபுர வாசலிற் கிடந்துறங்குவார்க்குப்போலே உனக்கும் பகவத் ஸம்பந்தம் ஒரு நொடிப் பொழுதும் இடையறாதிருக்கின்றது,
இப்படி எம்பெருமானோடேயே ஸதாபோது போக்கவேணுமென்று ஆசைப்பட்டிருக்கிற பல்லாயிரம் பெண்களை
வயிறெரிந்து நிற்க விட்டு நீ யொருவனே இப்படிப் போதுபோக்குவதானது நியாயமேயல்ல,
‘இப்பாவி இப்படி அநியாயம்செய்கிறானே‘ யென்று முறை யிடாதாரில்லை காண் என்கிறாள்.

கண்படை – உறக்கம், பெண்படையார் – திரள்திரளாயுள்ள பெண்கள் என்றபடி,
திருவாய்ப்பாடியிலுள்ளாரும் ஸ்ரீமதுரையிலுள்ளாரும். பூசல் – பேரொலிசெய்தல்.
பண்பல – பண்பு அல-, பண்பு – நியாயம், அல-அல்ல – அல்லாத்து, நியாயமல்லாதது அநியாயம்.
பகவத் விஷயத்தில் அவகாஹித்தவர்கள் (ஏகஃஸ்வாதுநபுஞஜீத) (இன்னிகனிதனியருந்தான்) என்றபடி
மற்றும் ருசியுடையாரையுங் கூட்டிக்கொண்டு திரளாக விருந்து அநுபவிக்கவேண்டியிருக்க, நீ ஏகாகியாய் அநுபவித்து அநீதியென்க.

உண்பது சொல்லில் உலகு அளந்தான் வாய் அமுதம் -கண் படை கொள்ளில் கடல் வண்ணன் கைத் தலத்தே
ஒ பாஞ்ச சன்னியமே
நீ செய்வது சிறிதும் நியாயம் இல்லை
நீ கண்ணபிரான் உடைய வாய் அமுதத்தை உண்பதும்
அவனுடைய கைத் தளத்தில் உறங்குவதுமாய் இருகிறாய்
கோயில் சோற்றைத் தின்று
குளத்திலே நீரைக் குடித்து
கோபுர வாசலிலே கிடந்தது உறங்குவாரைப் போலே
உனக்கும் பகவத் சம்பந்தம்
ஒரு நொடிப் பொழுதும் இடையறாது இருக்கின்றது
இப்படி எம்பெருமான் உடன் சதா போது போக்க வேணும் என்று ஆசைப் பட்டு இருக்கிற
பல்லாயிரம் பெண்கள் வயிறு எரிந்து நிற்க விட்டு
நீ ஒருவனே இப்படி போது போக்குவது நியாயம் இல்லை

கண்படை -உறக்கம்

பெண் படையார் உன் மேல் பெரும் பூசல் சாத்துகின்றார்
பெண்ணாய் பிறந்தவர்கள் எல்லாரும் உன் மேல் வசை கூறும்படியான கார்யம் நீ செய்கிறாய்
இப்பாவி இப்படி அநியாயம் செய்கிறானே என்று
முறை இடாதார் இல்லை காண்

பெண் படையார் -திரள் திரளாக உள்ள பெண்கள் என்றபடி
திரு வாய்ப்பாடியில் உள்ளாறும்
ஸ்ரீ மதுரையில் உள்ளாறும்
பூசல் -பேர் ஒலி செய்தல்

பண் பல செய்கின்றாய்
பண்பல பண்பு அல பண்பு அல்ல நியாயம் இல்லை
பகவத் விஷயத்தில் அவஹாகித்தவர்கள்
ஏக ஸ்வாது ந புஞ்சீத
இனி கனி தனி அருந்தான்
ருசி யுடையார் எல்லாரையும் கூட்டிக் கொண்டு அனுபவிக்காமல்
நீ ஏகாகயாய் அனுபவிப்பது அநீதி –

பாஞ்ச சன்னியமே
நீ நல்ல குடியில் பிறந்து வளர்ந்து இருப்பாயாகில்
வாழாட் பட்டு நின்றீர் உள்ளீரேல் வந்து மண்ணும் மனமும் கொண்மின் -என்றும்
நீராடப் போதுவீர் போதுமினோ -என்றும்
எங்களைப் போலே பர சம்ருத்திக்கு ஆசைப்படுவாய்
உப்புக் குழியிலே பிறந்து
அசுரன் வயிற்றிலே வளர்ந்தவன் ஆகையாலே
பிறரைத் துன்பப் படுத்துவதிலேயே ருசி ய்டையராய் இரா நின்றாய் என்ற கருத்து
தோன்ற பாஞ்ச சன்னியமே என்று அருளிச் செய்கிறாள் –

————————————————————————————————-

பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பார்த்திருப்ப
மது வாயில் கொண்டால் போலே மாதவன் தன் வாயமுதம்
பொதுவாக உண்பதனைப் புக்கு நீ யுண்டக்கால்
சிதையாரோ வுன்னோடு செல்வப் பெரும் சங்கே–7-9-

பதவுரை

பெரு செல்வம் சங்கே–பெரிய செல்வம் படைத்த சங்கமே!
பதினாறாம் ஆயிரவர் தேவிமார்–பதினாறாயிரம் தேவிமார்கள்
பார்த்து இருப்ப–கண்ண பிரானுடைய வாயமுதத்தை நாம் பருக வேணுமென விரும்பி) எதிர்பார்த்திருக்கையில்
பொது ஆக உண்பது மாதவன் தன் வாய் அமுதத்தை–பகவத் ஸம்பந்திகளெல்லாரும் பொதுவாக
உண்ண வேண்டியதான அவ்வெம்பெருமானது வாயமுதத்தை
நீ புக்கு–நீ யொருவனே ஆக்ரமித்து
மது வாயில் கொண்டால் போல் உண்டக்கால்–தேனை உண்கிறாப் போல் உண்டால்
உன்னோடு சிதையாரோ–(மற்றபேர்கள்) உன்னோடு விவாதப் பட மாட்டாரோ

பெருஞ்செல்வம் படைத்த சங்கே! நீ அல்லும்பகலும் உண்கிற கண்ணபிரான் தன் வாயமுதமானது
உனக்கொருவனுக்கே உரிமைப்பட்டதன்று, அக்கண்ணபிரானுக்கு வாழ்க்கைப்பட்ட பதினாறாயிரம் பெண்கள்
இவ்வமுதத்தைப் பருகுவதற்குப் பங்குடையவர்கள். அன்னவர் இதனை அநுபவிக்க அவஸரம் பார்த்திருக்க
நீ ஒருவனே மேல்விழுந்து புஜித்தால் அவர்கள் உன்னோடு பிணங்காதிருக்கமுடியுமோ?
அவர்களுடைய மனவருத்தத்திற்கு நீ ஆளானாயாகில் உன்னை ஸாது கோஷ்டியில் மதிப்பாருண்டோ? என்கிறாள்.

நரகாசுரன் தான் மணஞ்செய்து கொள்ளவேணுமென்று அங்கங்கிருந்து தெரிந்து பொறுக்கிக்கொண்டு வந்து
திரட்டிவைத்திருந்த கன்னிகைகள் பதினாறாயிரம் பேரையும் கண்ணபிரான்
அவ்வசுரனைக் கொன்றொழித்துத் தானே மணஞ்செய்துகொண்டான் னென்பது அறியத்தக்கது.

பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பார்த்திருப்ப
மது வாயில் கொண்டால் போலே மாதவன் தன் வாயமுதம்
பொதுவாக உண்பதனைப் புக்கு நீ யுண்டக்கால்
சிதையாரோ வுன்னோடு
செல்வப் பெரும் சங்கே
பெரும் செல்வம் படைத்த சங்கே
நீ அல்லும் பகலும் உண்கிற கண்ணபிரான் வாய் அமுதமானது
உனக்கு ஒருவனுக்கே உரிமைப் பட்டது அன்று
அக்கண்ண பிரானுக்கு வாழ்க்கைப் பட்ட பதினாறாயிரம் பெண்கள்
இவ்வமுதத்தை பருகுவதற்கு பங்கு உடையவர்கள்
அன்னவர் இதனை அனுபவிக்க அவசரம் பார்த்து இருக்க
நீ ஒருவனே மேல் விழுந்து புஜித்தால்
அவர்கள் உன்னோடு பிணங்காது இருக்க முடியுமோ
அவர்கள் உடைய மநோ வர்த்தத்துக்கு நீ ஆளாயானால்
உன்னை சாது கோஷ்டியில் மதிப்பார் உண்டோ -என்கிறாள்
கண்ணபிரான் நரகாசுரனை அளித்து
அவன் கொண்டு வந்து வைத்து இருந்த பதினாறாயிரம் கன்னிகைகளையும் கண்ண பிரான் திரு மணம் செய்து அருளினானே-

——————————————————————————————————–

பாஞ்ச சன்னியத்தைப் பற்ப நாபனொடும்
வாய்த்த பெரும் சுற்றம் ஆக்கிய வண் புதுவை
ஏய்ந்த புகழ்ப் பட்டர்பிரான் கோதை தமிழ் ஈரைந்தும்
ஆய்ந்து ஏத்த வல்லார் அவரும் அணுக்கரே—7-10-

பதவுரை

பாஞ்சசன்னியத்தை–சங்கை
பற்பநாபனோடும்–எம்பெருமானோடே
வாய்ந்த பெரு சுற்றம் ஆக்கிய–கிட்டின பேருறவை யுடையதாக வார்த்தை சொன்ன
வண் புதுவை–அழகிய ஸ்ரீ வில்லிபுத்தூரில் திருவவதரித்தவளும்
ஏய்ந்த புகழ்–நிறைந்த புகழை யுடையவளும்
பட்டர் பிரான் கோதை–பெரியாழ்வாருடைய ஆண்டாள் (அருளிச் செய்த)
தமிழ் ஈர் ஐந்தும்–இத் தமிழ்ப் பாசுரங்கள் பத்தையும்
ஆய்ந்து–அநுஸந்தித்து
எந்த வல்லார் அவரும்–(இது கொண்டு எம்பெருமானைத்) துதிக்க வல்லவர்களும்
அணுக்கர்–(பாஞ்சஜந்யம் போல் அந்தரங்கராகப் பெறுவர்கள்-

இத்திருமொழி கற்றார்க்குப் பலஞ்சொல்லி முடிக்கிறாள் இதில், ஸ்ரீ பாஞ்ச ஜந்யத்தை நோக்கி
“மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும் விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்“ என்றமையால்
இச்சங்கு தான் எம்பெருமானுக்குக் கிட்டின வுறவுடையது என்று ஆண்டாளுடைய கருத்தாயிருந்தது,
அதுதோன்ற அருளிச்செய்கிறாள் – “பாஞ்சசன்னியத்தைப் பற்பநாபனொடும் வாய்ந்தபெருஞ்சுற்றமாக்கிய“ என்று
நெருங்கின பந்துத்வ முடையதாகக் கொண்டு சொன்ன என்றபடி.
ஆக்கிய என்ற அடைமொழி கோதைக்குமாகலாம். கோதை தமிழ்க்குமாகலாம்.
“ஏய்ந்தபுகழ்“ என்ற அடைமொழி பட்டர்பிரானிடத்து அந்வயிக்கத்தகுமாயினும்
கோதையிடத்து அந்வயித்தருளினர் பெரியவாச்சான்பிள்ளை. தமிழ் – தமிழாலாகிய பாசுரங்கட்டு ஆகுபெயர்.

ஆய்ந்து ஏத்தவல்லா ரவரும் – இத்திருவாய்மொழி முழுவதும் பாஞ்சஜந்யத்தைப் பற்றிச் சொல்லிற்றேயன்றி
எம்பெருமானைப்பற்றி இதில் ஒன்றுமில்லையேயென்று கருதிவிடாமல் இதுவும் எம்பெருமானுடைய
பெருமையில் தான் சென்று முடிகின்றதென்று ஆராய்ந்து அநுஸ்திக்கவல்லவர்கள் என்றபடி.
எம்பெருமானுடைய திருவாயமுகத்தின் இனிமையும் அவனுடைய ஆச்ரித பக்ஷபாதமும் இத்திருமொழியில் விளங்கக்காண்க.
அணுக்கர் – அன்புடையார், அந்தரங்கர்

பாஞ்ச சன்னியத்தைப் பற்ப நாபனொடும்
வாய்த்த பெரும் சுற்றம் ஆக்கிய வண் புதுவை
ஏய்ந்த புகழ்ப் பட்டர்பிரான் கோதை தமிழ் ஈரைந்தும்
ஆய்ந்து ஏத்த வல்லார் அவரும் அணுக்கரே
நிகமத்தில்
இத் திரு மொழி கற்றார்க்குப் பலன் சொல்லி அருளித் தலைக் கட்டுகிறார்
மாதவன் தன் வாய்ச்சுவையும் நாற்றமும் விருப்புற்றுக் கேட்கிறேன் சொல்
என்றமையால்
இச் சங்கு ஆழ்வான் தான் எம்பெருமானுக்கு கிட்டின உறவு யுடையது என்று ஆண்டாள் கருதி இருந்தாள்
அது தோன்ற –
பாஞ்ச சன்னியத்தைப் பற்ப நாபனொடும்
வாய்த்த பெரும் சுற்றம் ஆக்கிய-
என்று அருளிச் செய்கிறார்
நெருங்கின பந்துத்வம் யுடையதாகக் கொண்டு அருளின படி

ஆக்கிய என்ற அடை மொழி
கோதைக்கும் ஆக்குவமுமாம்
கோதை தமிழுக்கும் -ஆக்குவமுமாம்

ஏய்ந்த புகழ் -பட்டர் பிரான் இடத்து அந்வயிக்கத் தகும் ஆயினும்
பெரிய வாச்சான் பிள்ளை கோதை இடத்து அந்வயித்து அருளிச் செய்கிறார்

தமிழ் -தமிழால் ஆகிய பாடலுக்கு ஆகு பெயர்

ஆய்ந்து ஏத்த வல்லார் அவரும்
இத் திரு மொழி முழுவதும்
ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தைப் பற்றியே சொல்லிற்றே அன்றி
எம்பெருமானைப் பற்றி இதில் ஒன்றும் இல்லை
என்று கருதி விடாமல்
இதுவும் எம்பெருமான் உடைய பெருமையில் தான் சென்று முடிகிறது என்று
ஆராய்ந்து அனுசந்திக்க வல்லார்கள் -என்றபடி
எம்பெருமான் உடைய திருவாய் அமுதத்தின் இனிமையையும்
அவனுடைய ஆஸ்ரித பஷபாதமும்
இத் திருமொழியில் விளங்கக் காணலாம்

அணுக்கர் -அந்தரங்கர் -அன்புடையார்-

—————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே -அண்ணங்கராச்சார்யர்  ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ நாச்சியார் திரு மொழி – ஆறாம் திரு மொழி – -ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை -ஸ்ரீ உ. வே. P.B.A.. ஸ்வாமிகள்–

September 7, 2014

பிரவேசம் –

கீழ்த் திருமொழி யிலே குயிலை நோக்கி என் காதலனை அழைத்துத் தர வேணும் என்று
பலவாறாக வேண்டியும்
அக்குயில் அங்கனம் செய்ய வில்லை
கால விளம்பம் இன்றி எம்பெருமானைக் காண வேண்டும்படியான அவஸ்தை அதிகமாய் விட்டது இவளுக்கு
ஆனால் அந்த விருப்பத்தின் படியே அவனைக் காண்கைக்கு
சௌகர்யம் ஏற்படாமல் போயிற்று

இவளுடைய ஆசையை இன்னும் பெருக்க வேணும் என்று எம்பெருமான் உடைய கருத்தாலால்
அதற்காக அவனும் விரைவாக வந்து முகம் காட்டாது ஒழிந்தான்
இவளுக்கு நாம் அடியோடு முகம் காட்டாவிடில் இவள் தரித்து இருக்க மாட்டாள் என்று கருதிய
கண்ணபிரான் கனவிலே யாவது இவட்கு நாம் காட்சி தந்து
ஒருவாறு தரிக்கும்படி செய்தல் நன்று என்று துணிந்து

விவாஹ உத்சவத்தின் சன்னாஹா சமயம் முதலாக
பாணி க்ரஹண பர்யந்தமான வ்ருத்தாந்தங்களை கனவிலே
அனுபவிப்பிக்க
அப்படியே ஆண்டாள் அனுபவித்துத்
தனது உயிர் தோழிக்குச் சொல்லுகிறதாய்ச் செல்கிறது
இத் திருமொழி —

——————————————————————————————

வாரண மாயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான் என்று எதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புரம் எங்கும்
தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்–6-1-

பதவுரை

தோழீ–என் உயிர்த் தோழியே!
நம்பி–ஸகல குண பரிபூர்ணனான
நாரணன்–ஸ்ரீமந் நாராயணன்
ஆயிரம் வாரணம் சூழ–ஆயிரம் யானைகள் சூழ்ந்து வர
வலம் செய்து நடக்கின்றான் என்று–பிரதக்ஷிணமாக எழுந்தருளாகிற னென்று (வாத்ய கோஷதிகளால் நிச்சயித்து)
பொன் பூரண குடம் வைத்து–பொன் மயமான பூர்ண கும்பங்களை வைத்து
புரம் எங்கும்–பட்டணம் முழுதும்
தோரணம் நாட்ட–தோரண ஸ்தம்பங்கள் நாட்ட (இந்த நிலையையை)
நான் கனாக் கண்டேன்–நான் ஸ்வப்நத்தில் அநுபவித்தேன்.

ஸ்ரீமந்நாராயணன் என்னை மணம் புணருவதாக நிச்சயித்து ஆயிரக்கணக்கான யானைகளைப் புறப்பட விட்டுக் கொண்டு
மிக்க ஸம்ப்ரமங்களுடன் திருவீதிப் பிரதக்ஷிணமாக எழுந்தருளுகிற செய்தியை அறிந்த நகரத்திலுள்ளார் யாவரும்
“பெரியவர்கள் எழுந்தருளும்போது பூர்ணகும்பம் வைக்க வேணும்“ என்ற சாஸ்த்ர விதிப்படியும் சிஷ்டாசார முறைப்படியும்
தங்கள் தங்கள் திருமாளிகைக்கெதிரில் பூர்ணகும் பங்களை வைத்தும் தோரணங்கள் நாட்டியும்
இப்படிப் பலவகையாக மங்களாலங்காரங்கள் செய்வதாகக் கனாக்கண்டேன் தோழீ! என்று
தோழியுடன் வருத்த கீர்த்தநம் பண்ணித் தரிக்கிறாள்.

வாரணம் – தற்சமவடசொல்.
‘ஆயிரம்யானை‘ என்று அருளிச் செய்தமைக்குக் கருத்து –
“தன்னோராயிரம் பிள்ளைகளோடு தளர்நடையிட்டு வருவான்“ (பெரியாழ்வார் திருமொழி 3-1-1.) என்று
கண்ணபிரானுக்கு ஆயிரம் பேர்த் தோழன்மார்கள் உண்டானையாலும் அவர்களெல்லாரும் விட்டுப் பிரியாமல் கூடவே
வருவார்களாகையாலும், கண்ணபிரான் வேறுபடுத்த மாட்டானாகையாலும்,
* தம்மையேநாளும் அத்தோழன்மார்களையும் யானைமீதேற்றி உகப்பனாகையாலும் “வாரணமாயிரஞ சூழ“ எனப்பட்டதென்க.

ஆநிரை மேய்க்கப் பிறந்த கண்ணபிரானுக்கு
* வாரணமாயிரஞ் சூழவருதல் எங்ஙனே? என்னில்,
“உந்துமதகளிற்றன் ஓடாத்தோள்வலியன, நந்தகோபாலன்“ (திருப்பாவை) என்ற பாட்டின் ஆறாயிரப்படி வியாக்கியானத்தில்
“உந்து மதகளிற்றன் – மத்த கஜங்களையுடையவர் என்றுமாம், ஆனை யுண்டோ இவர்க்கென்னில்,
ஸ்ரீவஸுதேவரும் தாமும் ஒருமிடறாயிருக்கையாலே அங்குள்ளது இங்கேயாய் இங்குள்ளது
அங்கேயாய் ஒன்றாய்ப் போருகையாலும் தத்த புத்ரனுக்கு இரண்டிடத்திலும் ப்ராப்தி யுண்டாகையாலும் ஆனையுண்டாகத் தட்டில்லை,
‘வாரணமாயிரஞ் சூழ‘ என்றதிறே, திருவாய்ப்பாடியில் ஆனைகளும் பசுக்களுங் கலந்து திரியுமத்தனையிறே“ என்றருளிச்செய்துள்ளமை காண்க.

புரமெங்கும் – புரம் – வடசொல், பட்டணம் என்று பொருள், அதாவது – ஸ்ரீவில்லிபுத்தூர்.
“புறமெங்கும்“ என வல்லின றகரப்பாடங் கொவ்வாரு முளர், எல்லாவிடங்களிலுமென்றபடி. தோரணம் – வடசொல்.

வாரண மாயிரம் சூழ வலம் செய்து நாரண நம்பி நடக்கின்றான் என்று எதிர் –
ஸ்ரீ மன் நாராயணன் என்னை மனம் புணருவதாக நிச்சயித்து
ஆயிரக் கணக்கான யானைகளைப் புறப்பட விட்டுக் கொண்டு
மிக்க சம்ப்ரமங்கள் உடன்
திரு வீதிப் பிரதஷிணமாக எழுந்து அருளும் போது-
தன்னேராயிரம் பிள்ளைகளோடு தளர்நடை இட்டு வருவான் -பெரியாழ்வார் திருமொழி -8-1-1-
கண்ணபிரானுக்கு ஆயிரம் பேர் தோழன்மார்கள் உண்டாகையாலும்
அவர்கள் எல்லாரும் விட்டுப் பிரியாமல் உடன் கூட வருவார்கள் ஆகையாலும்
தம்மையே நாளும் வணங்கித் தொழுவார்க்கு தம்மையே ஒக்க அருள் செய்யும் –
அவர்களையும் யானை மீது ஏற்றி உகப்பான் ஆகையாலும் -வாரணம் ஆயிரம் சூழ -என்கிறாள்
ஆநிரை மேக்கப் பிறந்த கண்ணபிரானுக்கு
வாரணம் ஆயிரம் சூழ வருவது எங்கனே என்னில்
உந்து மத களிற்றன் ஓடாத தோல் வலியன் நந்த கோபாலன் –
மத்த கஜங்களை உடையவன் –
ஸ்ரீ வசூதேவரும் தாமும் ஒரு மிடறாய் இருக்கையாலே
அங்கு உள்ளது இங்கேயாய் இங்கு உள்ளது அங்கேயாய் ஒன்றாய்ப் போருகையாலும்
தகத புத்ரனுக்கு இரண்டு இடத்திலும் ப்ராப்தி யுண்டாகையாலும்
ஆனை யுண்டாகத் தட்டில்லை –
திருவாய்ப்பாடியிலே ஆனைகளும் பசுக்களும் கலந்து திரியும் அத்தனை இ றே-

பூரண பொற்குடம் வைத்துப் புரம் எங்கும் தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்
பூர்ண கும்பம் வைக்க வேணும்
-என்ற
சாஸ்திர விதிப்படியும்
சிஷ்டாசார முறைப்படியும்
தங்கள் தங்கள் திரு மாளிகைக்கு எதிரில்
பூர்ண கும்பங்களை வைத்தும்
தோரணங்களை நாட்டியும்
இப்படிப் பலவகையாக மங்கள அலங்காரங்கள் செய்வதாக
கனாக் கண்டேன் தோழீ -என்று
தோழியுடன் வ்ருத்த கீர்த்தனம் பண்ணித் தரிக்கிறாள்-

புரம் -பட்டணம் -ஸ்ரீ வில்லிபுத்தூர்
புரமெங்கும் -எல்லா இடங்களிலும் என்றுமாம் —

——————————————————————————————-

நாளை வதுவை மணம் என்று நாளிட்டு
பாளை கமுகு பரிசிடைப் பந்தல் கீழ்
கோளரி மாதவன் கோவிந்தன் என்பானோர்
காளை புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான்—6-2-

பதவுரை

நாளை–நாளைக்கு
வதுவை மணம் என்று நாள் இட்டு–விவாஹ மஹோத்ஸவ மென்று முஹூர்த்தம் நிர்ணயித்து
பாளை கமுகு பரிசு உடை பந்தல் கீழ்–பாளைகளோடு கூடின பாக்கு மரங்களாகிற அலங்காரங்களை யுடைத்தான மணப் பந்தலின் கீழே
கோளரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர் காளை–நரஸிம்ஹனென்றும் மாதவனென்றும் கோவிந்தனென்றும் திருநாமங்கள் பூண்ட ஒரு யுவாவானவன்
புகுத–பிரவேசிக்க-

“நாளையதினம் கண்ணாபிரானுக்கும் ஆண்டாளுக்கும் கல்யாண மஹோத்ஸவம்“ என்பதாக முஹூர்த்த நிர்ணயம்
பண்ணின பின்பு, விவாஹத்தின். முன்னாளிற் செய்யவேண்டுஞ சடங்குகள் செய்தற்காகக் கண்ணபிரான்
அலங்காரப் பந்தலின்கீழ் எழுந்தருளக் கனாக் கண்டேனென்கிறாள்.

‘பத்துநாள் கழிந்தபின் முஹூர்த்தம்‘ என்று நாளிட்டால் அத்தனை விளம்பம் ஹிக்க முடியாதாகையாலும்,
‘இன்றைக்கே முஹூர்த்தம்‘ என்று நாளிட்டால் அதிக ஸந்தோஷமும் தாங்க வொண்ணாமற் கேடு விளையுமாதலாலும்
* நாளை வதுவை மணமென்று நாளிட்டபடி. துக்கம் அஸஹ்மாயிருக்குமென்பது இதிஹாஸ ஸித்தம்.
வதுவை – கலியாணம், மணம் – உத்ஸவம்.

கல்யாணப்பந்தல்களில் பாளைகளோடு கூடின பாக்கு மாரங்களைக் கொண்டு வந்து நாட்டி அலங்காரம் செய்தல் முறைமையென்க.
பரிசு என்று அலங்காரத்துக்கும் பெருமைக்கும் ஸம்மானத்துக்கும் பேர்.
பாளைகள் நிறைந்த கமுகளாகிய அலங்காரம் அணிந்த பந்தலின்கீழ் என்கை.
“பந்தற்கீழ்“ என்றும் “பந்தர்க்கீழ்“ என்றும் பாடபேதங்கள். பந்தல், பந்தர் – கடைப்போலி.
கோளரி – மிடுக்கையுடைத்தான சிங்கம், “கோளரி மாதவன் கோவிந்தம்“ என்று அடுக்கி யருப்பதற்கிணங்கப்
பெரியவாச்சான்பிள்ளை அருளிச் செய்துள்ள ரஸமயமான அர்த்த விசேஷம் ரஸிகர்களின் நெஞ்சையுருக்கும்,
கோளரி – கண்ணபிரான் கல்யாணப் பந்தலுக்கு நடந்துவரும் போது நாட்டுப் புறத்துப் பையல்களைப் போலல்லாமல்
தன் பெருமையெல்லாம் தோற்ற மிடுக்கோடே நடந்தபடியைச் சொல்லுகிறது.
“அப்ரமேயம்ஹிதத்தேஜ,“ என்னும்படியான மிடுக்கு நடையிலே தோன்றுமே.
மாதவன் – பரம ரஸிகன் என்று தோன்றுமாறு நடந்து வந்தபடியைச் சொல்லுகிறது.
மா – பிராட்டிக்கு, தவன் – கொழுநன், என்றால் பரம ரஸிகன் என்று தானே பொருள்படும்.
(கோவிந்தன்) (ச்ரேயர்மஸிபஹுவிக்நாநி) என்ற படி நற்காரியங்களுக்கு இடையூறுகள் மிடை தருமாதலால்
இந்தவிவாஹ மஹோத்ஸவத்துக்கு யாரால் என்ற இடையூறு நேர்ந்துபிடுமோ என்று அஞ்சி
ஒருவரையும் விரோதித்துக்கொள்ளாமல் எல்லாரும் கையாளாய் முகங்கொடுத்துக்கொண்டு வந்தபடியைச் சொல்லுகிறது.
கோவிந்தனென்றாலும் ஸர்வஸுலபனென்றாலும் பாயாயமென்று கொண்மின்.
காளை – நல்ல இளைமைப்பருவம் வாய்ந்தவனென்கை,
காளையே எருது பாலைக்கதிபன் நல்லினையோன் பேராம“ என்பது நிகண்டு.

நாளை வதுவை மணம் என்று நாளிட்டு -நாளைய தினம் கண்ண பிரானுக்கும் ஆண்டாளுக்கும்
திருக் கல்யாண மகோத்சவம் என்பதாக நிர்ணயம் பண்ணின பின்பு

பாளை கமுகு பரிசிடைப் பந்தல் கீழ் கோளரி மாதவன் கோவிந்தன் என்பானோர்
காளை புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான்
விவாஹத்தின் முன்னாளில் செய்ய வேண்டும் சடங்குகள் செய்வதற்காக
கண்ணபிரான் அலங்காரப் பந்தலின் கீழ்
எழுந்து அருளக் கனாக் கண்டேன் -என்கிறாள்
பத்துநாள் என்றால் -அத்தனை நாள் விளம்பம் சஹிக்க முடியாது ஆகையாலும்
இன்றைக்கே முஹூர்த்தம் என்று நாள் இட்டால் அதிக சந்தோஷம் தாங்க ஒண்ணாமல் கேடு விளையும் ஆதலாலும்
கை மேல் வருகிற பரமானந்தமும் அசஹ்யம் இதிஹாச சித்தம்
பாளைகள் உடன் கூடிய பாக்கு மரங்கள் கொண்டு வந்து நாட்டி அலங்காரம் செய்வது முறைமை
பரிசு -அலங்காரத்துக்கும் பெருமைக்கும்

கோளரி -மிடுக்கை யுதைத்தான சிங்கம்
கண்ணபிரான் கல்யாணப் பந்தலுக்கு நடந்து வரும் போது நாட்டுப் புரத்துப் பையல்களைப் போல் அல்லாமல்
தன பெருமை எல்லாம் தோற்ற மிடுக்கோடு நடந்த படியைச் சொல்கிறது
அப்ரமேயம் ஹிதத்தேஜ-என்னும் படியான மிடுக்கு நடையிலே தோன்றுமே
மாதவன் –
பரம ரசிகன் என்று தோற்றுமாறு நடந்து வந்த படியைச் சொல்கிறது
பிராட்டிக்கு கொழுநன்
கோவிந்தன்
ஸ்ரேயர்ம்சிப ஹூ விக் நாநி -என்றபடி
நல்ல கார்யங்களுக்கு இடையூறுகள் மிடை தரும் ஆதலால்
ஒருவரையும் விரோதித்திக் கொள்ளாமல் எல்லாருக்கும் கையாளாய் முகம் கொடுத்துக் கொண்டு
வந்தபடியைச் சொல்லுகிறது
கோவிந்தன் -சர்வ ஸூ லபன்
காளை -இளைமைப் பருவம் வாய்ந்தவன்-

———————————————————————————————

இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம்
வந்து இருந்து என்னை மகள் பேசி மந்திரத்து
மந்திரக் கோடி யுடுத்தி மண மாலை
அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்–6-3-

பதவுரை

இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம்–இந்திரன் முதலான தேவ ஸமூஹங்களெல்லாம்
வந்து இருந்து–(இந்திலத்திலே) வந்திருந்து
என்னை மகள் பேசி–என்னைக் கல்யாணப் பெண்ணாக வார்த்தை சொல்லி
மந்திரித்து–அதற்குமேல் ஸம் பந்திகள் ஒருவர்க்கொருவர் செய்து கொள்ள வேண்டிய ஏற்பாடுகள்
விஷயமாக யோசித்து முடிவுசெய்து கொண்டு, (பிறகு)
அந்தரி–‘துர்க்கை‘ என்கிற நாத்தனார்
மந்திரம் கோடி உடுத்தி–கல்யாண புடைவையை எனக்கு உடுத்தி
மணம் மாலை சூட்ட–பரிமளம் மிக்க புஷ்பங்களையும் சூட்ட

இந்திரன் முதலிய வானவர்களெல்லாரும் ‘நம்முடைய பெருமானுக்கு நடக்கப் போகிற கல்யாண மஹோக்ஸவத்தை
நாமெல்லாருமாய்க் கூடியிருந்து காரியங்கள் செய்து நிறைவேற்றிவரவேணும்; என்று குதூஹலித்துத்
தலையிலே கால் பாவிவந்து ‘இக்காரியம் முடிந்தாலன்றி நாங்கள் எழுந்திருப்பதில்லை‘ என்று பிடிவாதமாயிரந்து
‘எங்கள் பெருமானுக்கு உங்கள் பெண்ணை மணவாட்டியாக்கித் தரவேணும்‘ என்று பெரிய திரளிலே பிரார்த்தித்து,
பிறகு உபவர்க்கத்தாரும் ரஹஸ்யமாகவிருந்து பூஷண பீதாம்பரங்கள் விஷயமாகவும் மற்றுமுள்ள ஸம்விதாநங்கள் விஷயமாகவும்
ஒருவர்க்கொருவர் பேசிக்கொள்ள வேண்டியவற்றைக் காதோடு காதாகப் பேசி முடித்து, இனிக் கால விளம்பம் செய்தால்
ஏதாவது இடையூறு நேரிடக்கூடுமென்றெண்ணி அப்போதே, மணமகளுக்கு நாத்தனாரைக் கொண்டு புடவையுடுத்திகிற க்ரமத்திலே
எனக்கு நாத்தனாரான துர்க்கையைக் கொண்டு புடவை யுடுத்தி நன்மாலைகளையும் சூட்டுவித்து
இப்படிப்பட்ட சில பாணிக்ரஹண பூர்வாங்கங்கள் நடைபெறக் கனாக் கண்டேனென்கிறாள்.

சக்ரவர்த்தி திருமகன் பண்டு வனவாஸ காலத்தில் சரபங்கபகவானுடைய ஆச்ரமத்திற்று எழுந்தருளினபோது
அங்கு தேவேந்திரன் வந்திருந்தும் பெருமாளை ஸேவியாமலே தன்னுலகம் நோக்கிச் சென்றான்,
பெருமாள் தம்முடைய பரத்வத்தை வெளிப்படுத்திக் கொள்ளாமல் “ஆத்மாநம்மந்யே“ என்று ஸாமாந்யமான
மானிடத் தன்மையையே ஏறிட்டுக் கொண்டிருந்த படியால் இப்போது இவரைக் காண வேண்டா,
ராவண ஸம்ஹாரம் தலைக்கட்டின பின்பு ஸேவித்துக் கொள்வோம் என்று போய் விட்டான்,
கிருஷ்ணாவதாரம் அப்படியல்லாமல் ஈசவரத்வமும் கூடவே கலந்து பரிமாறு மவதாரமாகையாலே
இந்திரன் முதலியோர் வந்து குறுக்கும் நெடுக்கும் குலாவித்திருந்து அதிக ப்ராஜாபத்யம் பண்ணுவர்களாம்.

மகள்பேசுதல் – ‘இவளை மணமகளாகத் தாரைவார்த்துக் கொடுக்கவேணும்‘ என வேண்டிப் பேசுதல்
மந்திரித்து – (மந்தர்) என்றவடசொல்லடியாகப் பிறந்த அவ்யயம். மந்த்ரமாவது ஆலோசனை, ஆலோசித்து என்றபடி.
மகள் பேசின பிறகு ஆலோசிப்பது பூஷ்ண பீதாம்பராதி விஷயமென்க.
மந்திரக்கோடி – (மந்த்ரவாஸஸ்) என்பர் வடநூலார்.
“கோடியுடுத்து“ என்று சிலர் ஒதுவர். “உடுத்தி“ என்ற பாடமே ஏற்கும்: ‘உடுத்து‘ என்றால், தான் அணிந்து கொண்டு என்று பொருள்,
உடுத்தி என்றால் பிறர்க்குச் சாத்தி என்று பொருள், இங்குப் பிறவினைப்பொருள் படவேண்டி நிற்றலால் ‘உடுத்தி‘ என்றபாடமே ஏற்குமென்ப.

அந்தரி – ‘துர்க்கைக்குப் பெயர், இவள் கண்ணாபிரானுக்கு உடன் பிறந்தாளாதலால் ஆண்டாளுக்கு நாத்தனாரானாள்.
அந்தரத்திலே (ஆகாயத்திலே) அந்தரத்தாநமாய்ப் போனமையால் அவளுக்கு அந்தரி என்று பேராயிற்றென்க.

இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம்
இந்திரன் முதலிய வானவர்கள் எல்லாரும்
நம்முடைய பெருமானுக்கு நடக்கப் போகிற கல்யாண மகோத்சவத்தை
நாம் எல்லாரும் கூடி நிறைவேற்றி வர வேணும்
என்று குதூஹலித்துத்

வந்து இருந்து என்னை மகள் பேசி மந்திரத்து
தரையிலே கால் பாவி வந்து
இந்த மகாத்ச்வம் முடிந்தால் அல்லது நாங்கள் எழுந்து இருப்பது இல்லை என்று பிடிவாதமாக இருந்து
எங்கள் பெருமானுக்கு உங்கள் பெண்ணை மணவாட்டியாகத் தர வேணும்
என்று பெரிய திரளிலே பிரார்த்தித்து

மந்திரக் கோடி யுடுத்தி மண மாலை அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்
உபய வர்க்கத்தாரும் ரஹச்யமாக பூஷண பீதாம்பர விஷயமாகவும்
மற்றுள்ள சம்விதானங்கள் விஷயமாகவும் காதோடு காதாக பேசி
கால விளம்பம் இல்லாமல் மண மகளுக்கு நாத்தனாரைக் கொண்டு புடவை யுடுத்தி
உடுத்து -பாடம் தப்பு –
அந்தரத்திலே ஆகாசத்திலே போனமையால் துர்க்கைக்கு அந்தரி என்ற பெயர் உடுத்தி என்பதே பிறர்க்கு உடுத்தி விடுவது
நன்மாலைகளையும் சூட்டுவித்து
இப்படிப் பட்ட பாணி க்ரஹண பூர்வாகங்கள் நடை பெறக் கனாக் கண்டேன் -என்கிறாள்

சக்கரவர்த்தி திருமகன் வனவாச காலத்தில் சரபங்க ஆஸ்ரமம் எழுந்து அருளின போது
அங்கு தேவேந்தரன் வந்திருந்தும் பெருமாளை சேவியாமலே தன்னுலகம் நோக்கிச் சென்றான்
ஆத்மா நம் மாநுஷம் மன்யே -என்று மானிடத் தன்மையை ஏறிட்டுக் கொண்டு இருந்தபடியாலே
இப்பொழுது இவரைக் காண வேண்டா
ராவண சம்ஹாரம் தலைக்கட்டின பின்பு சேவித்துக் கொள்ளலாம் -என்று போய் விட்டான் –

கிருஷ்ணாவதாரம் அப்படி இல்லாமல் ஈச்வரத்வமும் கூடவே வந்து பரிமாறும் அவதாரம் ஆகையாலே
இந்திரன் முதலானோர் வந்து குறுக்கும் நெடுக்கும் குலாவித் திரிந்து அதிக பிராஜாபத்யம் பண்ணுவார்களாம்-

—————————————————————————————————-

நால் திசைத் தீர்த்தம் கொணர்ந்து நனி நல்கி
பாப்பனச் சிட்டர்கள் பல்லார் எடுத்து ஏத்தி
பூப்புனை கண்ணிப் புனிதனோடு என்தன்னை
காப்பு நாண் கட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்—6-4-

பதவுரை

பாப்பனர் சிட்டாகள் பல்லார்–சிஷ்டர்களான பல ப்ராஹ்மணர்கள்
நால் திசை–நான்கு திசைகளிலுமிருந்து
தீர்த்தம்–தீர்த்தங்களை
கொணர்ந்து–கொண்டு வந்து
நனி நல்கி–நன்றாகத் தெளிந்து
எடுத்து ஏத்தி–உச்ச ஸ்வரமாக வெடுத்து மங்களா சாஸநம் பண்ணி
பூப்புனை கண்ணிப் புனிதனோடு–(பலவகைப்) புஷ்பங்கள் புனைந்த மாலையை
யுடையவனாய்ப் பரம பாவநனான கண்ண பிரானோடு
என்றன்னை–என்னை (இணைத்து)
காப்பு நாண் கட்ட–கங்கணங்கட்ட

சக்ரவர்த்தித் திருமகனாருடைய திருவபிஷேக மஹோத்ஸவத்திற்காக ஸ்ரீவாநர வீரர்கள் நாலு ஸமுத்ரத்திலுமுள்ள
தீர்த்தங்களையுங்கொணர்ந்தாப் போல என்னுடைய கல்யாண மஹோத்ஸவத்திற்காக வைதிக ஸார்வபௌமர்களான
பல அந்தணர்கள் நாற்றிசைகளினின்றும் நாநாவகைப் புண்ய தீர்த்தங்களைக் கொண்டு வந்து
ஆயுஸ்ஸு முதலான நன்மைகளெல்லாமுண்டாவதற்காக அந்தத் தீர்த்தங்களாலே தம்பதிகளாகிய எங்களைப் பலகாலும் ப்ரோக்ஷித்து,
(ஆயுரரசாஸ்தே, ஸுப்ரஜாஸ்த்வமாசாஸ்தே) இத்யாதி வேத வாக்கியங்களை உச்சைஸ்ஸ்வரமாக எடுத்து ஓதி ஆ
ஸீர்வாதங்கள் பண்ணிக் கண்ணாபிரானோடு என்னை இணைத்துக் கங்கண நூல் கட்டும் நிலைமையைக் கனவில் கண்டேனென்கிறாள்.

நனி – மிகுதியை உணர்த்தும் உரிச்சொல், மிகவும் என்றபடி நல்கு நல் – கொடுத்தல்,
இங்கு, ப்ரோக்ஷணம்செய்தல் ப்ராஹ்மண, என்ற வடசொல் பாப்பனன் எனத் திரிந்தது,
பாப்பனர் – சிட்டர், பாப்பனச்சிட்டர், ப்ராஹ்மணயோநியிற் பிறப்பு மாத்திரமின்றியே வேதங்களை நன்றாக ஓதி
ஆசார வ்யஹாரங்களில் ஒன்றுங்குறையாதிப்பவர்கள். “பல்லரண் டெடுத்தேத்தி“ என்பது அதுநிகர்களின் பாடம்,
வியாக்கியானத்தில் “ மங்களாசாஸநம் பண்ணி“ என்றருளிச் செய்திருப்பதைக்கண்டு பல்லாண்டு என்ற பாடத்தைக் கற்பித்தனர்போலும்,
“பல்லார் எடுத்து ஏத்தி“ என்ற பாடத்திற்கே வியாக்கியானம் நன்கு பொருந்தியிருக்குமாற்றைக் காண்மின்.

பூப்புனைகண்ணி – கல்யாணப்பெண்ணுக்கு உயர்ந்த சேலையாலும் சிறந்த பூஷ்ணங்களாலும் அலங்காரம் பண்ணினால்,
கல்யாணப் பிள்ளைக்கு அவையெல்லாம் வேண்டாதே ஒரு புஷ்ப ஸரத்தாலே அலங்காரம் அமைந்தபடி புனிதன் – பரிசுத்தன் என்றபடி,
ஸ்நாநம்பண்ணிக் கையும் பவித்திரமுமாய் வைதிக வேஷம் பூண்டு ஒருவர் மேலும் படாமல்
மிக்க ஆசாரசீலனாயிருக்கு மிருப்புத் தோற்றப் புனிதம் என்கிறாள். ஆசாரம் சிறிது குறைந்தாலும் பெரியாழ்வார்
பெண்பிள்ளையைக் கொடுக்கமாட்டார்களென்று கண்ணபிரான் மிக்க ஆசாரங்கொண்டாடுகிறபடி.
புனிதனோடு என்றன்னை – புனிதனுக்கும் எனக்கும் என்றபடி.
காப்பு நாண் – மங்களார்த்தமான கங்கண ஸூத்ரம். காப்பு நாண் கட்டுகை புரோஹிதருடைய காரியமென்ப.

நால் திசைத் தீர்த்தம் கொணர்ந்து நனி நல்கி -பாப்பனச் சிட்டர்கள் பல்லார் எடுத்து ஏத்தி
சக்கரவர்த்தி திரு மகன் உடைய திருக் கல்யாண மகோத்சவத்துக்கு
ஸ்ரீ வானர வீரர்கள் நாலு சமுத்ரத்திலும் உள்ள தீர்த்தங்களையும் கொணர்ந்தால் போல்
விதிக்க சார்வ பௌ மர்களான பல அந்தணர்கள்
-வேதங்களை ஓதி ஆச்சார வ்யவஹாரங்களில் குறை அற்று இருப்பவர்கள்
நான்கு திசைகளில் இருந்தும் நாநா வகைப் புண்ய தீர்த்தங்களையும் கொண்டு வந்து
ஆயுஸ் ஸூ முதலான நன்மைகள் எல்லாம் யுண்டாவதற்க்காக
தம்பதிகளை பரோஷித்து
ஆயுரா சாஸ்தே ஸூ ப்ரஜாஸ்த்வமா சாஸ்தே -இத்யாதி வேத வாக்கியங்களை
உச்சி ஸ்வரமாக எடுத்து ஓதி
நனி -மிகுதியை உணர்த்தும் சொல் -மிகவும் என்றபடி
நல்குதல் -கொடுத்தல் இங்கு ப்ரோஷணம் செய்தல்
பல்லாண்டு எடுத்து ஏத்தி தப்பான பாடம்
மங்களா சாசனம் பண்ணி -வியாக்யானம் பார்த்து கற்பித்த பாடம்
பல்லார் எடுத்து ஏத்தி –

பூப்புனை கண்ணிப் புனிதனோடு எனதன்னை காப்பு நாண் கட்டக் –
ஆசீர்வாதங்களைக் பண்ணிக் கண்ணபிரான் உடன் என்னை
இணைத்துக் கங்கண நூல் கட்டும் நிலைமையை
கல்யாண பெண்ணுக்கு உயர்ந்த செளையாலும்
சிறந்த பூஷணங்களாலும் அலங்காரம் பண்ணி
கல்யாண பிள்ளைக்கு ஒரு புஷ்ப சரத்தாலே அலங்காரம் -என்றபடி
புனிதன் -ஸ்நானம் பண்ணி கையும் பவித்ரமுமாய்
விதிக்க வேஷம் பூண்டு
ஒருவர் மேலும் படாமல் மிக்க ஆசார சீலனாய் இருக்கும் இருப்பு -புனிதன்
ஆசாரம் சிறிது கிரைந்து இருந்தாலும்
பெரியாழ்வார் பெண் பிள்ளையைக் கொடுக்க மாட்டார்கள் -என்று
கண்ணபிரான் மிக்க ஆசாரம் கொண்டாடுகிறபடி
காப்பு நாண்-மங்கள அர்த்தமான கங்கண ஸூ த்த்ரம் –

கனாக் கண்டேன் தோழீ நான்

———————————————————————————————–

கதிரொளி தீபம் கலசமுடன் ஏந்தி
சதிரள மங்கையர் தாம் வந்து எதிர் கொள்ள
மதுரையார் மன்னன் அடிநிலை தொட்டெங்கும்
அதிரப் புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான்—-6-5-

பதவுரை

சதிர் இள மங்கையர் தாம்–அழகிய இளம் பெண்கள்
கதிர் ஒளி தீபம்–ஸூர்யனுடைய ஒளி போன்ற ஒளியை யுடைய மங்கள தீபத்தையும்
கலசம்–பொற் கலசங்களையும்
உடன் ஏந்தி–கையில் ஏந்திக் கொண்டு
வந்து எதிர் கொள்ள–எதிர் கொண்டு வர,
மதுரையார் மன்னன்–மதுரையிலுள்ளார்க்கு அரசனான கண்ண பிரான்
அடி நிலை தொட்டு,–பாதுகைகளைச் சாத்திக் கொண்டு
எங்கும் அதிர–பூமி யெங்கும் அதிரும் படியாக.
புகுத–எழுந்தருள்

பருவத்தாலும் வடிவழகாலும் தங்களையே எல்லாரும் நோக்கிக் கொண்டிருக்கும்படி மிக்க அழகுவாய்ந்த மாதர்கள்
மங்கள ஸம்ருத்திக்காகத் தீபங்களையுமு பூர்ண கும்பங்களையும் ஏந்திக் கொண்டு எதிர் கொண்டுவர,
கண்ண பிரான் பாதுகை சாத்திக் கொண்டு பூமி அதிரும்படி ஸந்தோஷமாக நடநது வரும்படியைக் கனவில் கண்டேனென்கிறாள்.

கதிர் என்று கிரணத்திற்குப் பேராயினும் இங்கு இலக்கணையால் ஸூர்யனுக்குப்பேராகிறது.
இடையில் விளக்கு அணைந்தால் மங்களத்துக்கு குறையாமென்று ஸூர்யப்ரபை போலே மிக்கவொளியை யுடைய
விளக்குக்களைக் கொண்டுவருவர்களென்க. தீபம், கலசம் – வட சொற்கள்.

மதுரையார் மன்னர் – மற்ற திருநாமங்களிற்காட்டில் இத்திருநாமத்தில் கண்ணபிரானுக்கு உகப்பு
விஞ்சியிருக்குமென்பதற்கு ஒருஐதிஹ்யமிருளிச் செய்வர் பெரியவாச்சான்பிள்ளை –
ஒரு பக்தன் ஒருக்ருஸ்ண விக்ரஹத்தை ஏறியருளப்பண்ணி ‘இவர்க்கு என்ன திருநாமம்சரத்துவோம்‘ என்று சிந்தியா நிற்க,
பெருமாள் அவனுடையகனவிலே வந்து தோன்றி ‘அப்பா! எனக்கு கன்னாபின்னா வென்று சிலநாமங்களை இடாமல்
மதுரைமன்னன் என்றுபெயரிடு‘ என்று நியமித்தாராம்.

அடிநிலைதொட்டு என்பதற்கு “தன் திருவடிநிலைகளை அருகிருப்பார் கையில் கொடுத்து விட்டு“ என்பதாகச் சிலர் பொருள்வரைந்து,
பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானந்தையும் “(அடிநிலையித்யாதி) திருவடி நிலைகளைக் கொடுத்து“ என்று அச்சிடுவித்தார்கள்.
தொடுத்து என்றதைக் கொடுத்து என மயங்கி கொண்டு என்கை.
பாதுகையணிந்து நடந்தாலன்றோ பூமியதிரும். கோத்து என்றிருந்தது கொடுத்து என்றாயிற்று என்பாருமுளர்.

“எங்கும் அதிரப்புகுத“ என்றவிடத்திற்கு ஸம்வாதமாக ஒருஐதிஹ்ய மருளிச்செய்வர் –
முன்பு மஹாபலி யஜ்ஞபூமியிலே ஸ்ரீவரமநன் நடந்த போது பூமி நெளிந்த்தென்று ஒருக்ரந்தத்திலே, கிடக்கக்கண்டு
‘இதற்கு என்னபொருள்?‘ என்று சில முதலிகள் சர்ச்சைப் பண்ணுகையில்
“ஸர்வேச்வரனன்றோ அவன்நடந்தால் பூமிநெளியச் சொல்ல வேணுமா?“ என்று ஒருஸ்வாமிசொல்ல,
பட்டரருளிச் செய்யுமது கேட்கவேணுமென்று நஞ்சியர் பட்டரைக் கேட்க,
“யாசக வ்ருத்தியில் பதற்றத்தாலே அடியிட்டபடியால் பூமி நெளிந்ததுகாணும்“ என்று பட்டர் அருளிச்செய்தாராம்.
ஒரு பூமிக்காக அப்படி பதறிவந்தவன், பெரியாழ்வார் திருமகளைப் பெறுகைக்கு எங்ஙனே பதறமாட்டான்.

பருவத்தாலும் வடிவு அழகாலும் தங்களையே எல்லாரும்
நோக்கிக் கொண்டு இருக்கும் படி
மிக்க அழகு வாய்ந்த மாதர்கள் மங்கள சம்ருத்திக்காக
தீபங்களையும் பூர்ண கும்பங்களையும் ஏந்திக் கொண்டு எதிர் கொண்டு வர
கண்ணபிரான் பாதுகை சாத்திக் கொண்டு பூமி அதிரும்படி
சந்தோஷமாக நடந்து வரும்படியைக் கனவில் கண்டேன் –
கதிர் -இலக்கணையால் சூர்யன் ஸூ ரய பரப்பை போலே மிக்க ஒளியை யுடைய விளக்குகளை கொண்டு வருவார்கள்

மதுரையார்மன்னன் -கண்ணபிரான் உகப்பு விஞ்சி இருக்கும் திரு நாமம்-
ஒரு பக்தன் கிருஷ்ண விக்ரஹம் எழுந்து அருள பண்ணி
என்ன திரு நாமம் சாத்துவோம் என்று சிந்தியா நிற்க
பெருமாள் கனவிலே
கன்னா பின்னா திரு நாமங்கள் சாத்தாமல் மதுரையார் மன்னன் -என்று பெயர் இடுநியமித்த ஐதிகம்
அடிநிலை தொடுத்து -சரியான பாடம் பாதுகைகளை சாத்திக் கொண்டு
அடிநிலை கொடுத்து -அருகில் இருப்பார் இடம் கொடுத்து -தப்பான பாடம்

எங்கும் அதிரப் புக்கு -ஐதிகம்
முன்பு மகா பலி யஞ்ஞ பூமியிலே ஸ்ரீ வாமனன் நடந்த போது பூமி நெளிந்தது என்று
சில கிரந்தங்களில் இருக்க
யஸ்மின் பிரயாதே அஸூ ரபூப் ருதோத்வரம் நநாம கேதாதவ நிஸ் ஸ சாகார
ஸ்வா மனஸ் சர்வ ஜகன் மயச் சதா மமாஸ்து மாங்கல்ய விவ்ருத்தையே ஹரி -ஸ்லோகம் –
சர்வேஸ்வரன் அன்றோ அவன் நடந்தால் பூமி நெளியச் சொல்ல வேணுமோ என்று ஒரு சுவாமி சொல்ல
பட்டர் அருளிச் செய்யுமது கேட்க நஞ்சீயர்
யாசக வ்ருத்தியிலே பதற்றத்தாலே அடி இட்ட படியாலே
பூமி நெளிந்தது காணும்
என்று பட்டர் அருளிச் செய்தாராம்
ஒரு பூமிக்காகா அப்படி பதறி வந்தவன்
பெரியாழ்வார் திரு மகளை பெறுகைக்கு எங்கனே பதற மாட்டான் –

—————————————————————————————————–

மத்தளம் கொட்ட வரி சங்கம் நின்றூத
முத்துடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தல் கீழ்
மைத்துனன் நம்பி மது சூதனன் வந்து என்னை
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான்–6-6-

பதவுரை

மத்தளம் கொட்ட–மத்தளங்கள் அடிக்கவும்
வரி சங்கம் நின்று ஊத–ரேகைகளை யுடைய சங்குகளை ஊதவும்
மைத்துனன் நம்பி மதுசூதனன்–மைத்துனமை முறையை யுடையனாய் பூர்ணனான கண்ண பிரான்
முத்து உடை தாமம் நிரை தாழ்ந்த பந்தல் கீழ் வந்து–முத்துக்களை யுடைய மாலைத் திரள்கள்
தொங்க விடப் பெற்று பந்தலின் கீழே வந்து
என்னை கைத் தலம் பற்ற–என்னைப் பாணி க்ரஹணம் செய்தருள

மிருதங்கம் முதலிய பலவகைவாத்தியங்கள் அடிக்கவும் சங்குகளூதவும் இப்படி மங்களவாத்ய கோஷம் முழங்கா நிற்க,
கண்ணபிரான் முத்துப்பந்தலின் கீழே எழுந்தருளிப் பாணி க்ரஹணம் பண்ணியருளக் கனாக்கண்டேனென்கிறாள்.

“நின்றூத“ என்றவிடத்து நின்று என்றது வார்த்தைப்பாடு.
மைத்துனன் – அத்தைமைந்தன். மாமன் மகளை மணக்கும் முறையைபற்றி நப்பின்னைப் பிராட்டிக்குக் கண்ணபிரான்
மைத்துன்னாதலால் ஆண்டாளும் அந்தஸம்பந்தத்தை ஆசைப்பட்டு “மைத்துனன் நம்பி“ என்கிறாளென்ப
மதுசூதன் – மது என்ற அசுரனைக் கொன்றவன், விரோதி நிரஸநத்தில் வல்லவன் என்றபடி.
இங்கே வயாக்யாநஸ்ரீஸூக்தி – (மதுசூதன்) மற்றுமு மைத்துனமைமுறையுண்டென்று ஆரேனும் வந்து கைப் பிடிக்கப்பார்க்கில்
அவர்களையழியச்செய்து தானே ஸ்வீகரிக்கவல்லவனாய்த்து,
தன்னுடைமையைப் பிறர் ‘என்னது‘ என்னும் போது அவர்களை யழியச்செய்து கைக் கொள்ளவல்லனாய்த்து.

மிருதங்கம் முதலிய பலவகை வாத்தியங்கள் அடிக்கவும்
சங்குகள் ஊதவும்
இப்படி மங்கள வாத்திய கோஷம் முழங்கா நிற்க
கண்ணபிரான் முத்துப் பந்தலின் கீழே எழுந்து அருளப்
பாணி க்ரஹணம் பண்ணி அருளக் கனாக் கண்டேன் –
நின்றூத -நிற்ற வார்த்தைப் பாடு
மைத்துனன் -அத்தை மகன்
நப்பின்னை பிராட்டிக்கு கண்ணபிரான் மைத்துனன் முறை ஆதலால்
அந்த சம்பந்தம் இட்டு அருளிச் செய்கிறாள்
மது சூதன் -விரோதி நிரசன சீலன்
மற்றும் மைத்துனமை முறை யுண்டு என்று
ஆரேனும் வந்து கைப்பிடிகிகப் பார்க்கில்
அவர்களை அழியச் செய்து தானே
சுவீகரிக்க வல்லவன் ஆய்த்து
தன்னுடைமையை பிறர் -என்னது என்னும் போது
அவர்களை அழியச் செய்து கைக் கொள்ள வல்லவன் ஆய்த்து

———————————————————————————————

வாய் நல்லார் நல்ல மறை ஓதி மந்திரத்தால்
பாசிலை நாணல் படுத்துப் பரிது வைத்து
காய்சின வாய் களிறு அன்னன் என் கை பற்றி
தீ வலம் செய்யக் கனாக் கண்டேன் தோழீ நான் —6-7-

பதவுரை

வாய் நல்லார்–நன்றாக ஓதின வைதிகர்கள்
நல்ல மறை ஓதி–சிறந்த வேத வாக்கியங்களை உச்சரிக்க,
மந்திரத்தால்–(அந்தந்த க்ரியைகளுக்கு இசைந்த) மந்த்ரங்களைக் கொண்டு
பாசு இலை நாணல் படுத்து–பசுமை தங்கிய இலைகளை யுடைத்தான நாணற் புல்லைப் பரிஸ்தரணமாக அமைத்து
பரிதி வைத்து–ஸமித்துக்களை இட்டு,
காய்சின வாய் களிறு அன்னன்–மிக்க சினத்தை யுடைய மத்த கஜம் போல் செருக்கனான கண்ண பிரான்
என் கை பற்றி–என் கையைப் பிடித்துக் கொண்டு
தீ வலம் செய்ய–அக்நியைச் சுற்றி வர

வாயில் நல்வேதமோதும் வேதியர்கள் கர்மகாண்டங்களைச் சொல்லுகை யன்றிக்கே பர ப்ஹ்ம ஸ்வரூப பரங்களான
புருஷ ஸூக்தம் உபநிஷத்து முதலான வேதங்களை ஓத, அதிகம்பீரநடையை யுடையனான கண்ணபிரான்
மைந்தரகமாக அக்நி காரியங்களை நடத்தி, என்கையைப் பிடித்துக்கொண்டு ஹோமாக்நியை
ப்ரத க்ஷிணமாக்ச் சுற்றிவரக் கனாக் கண்டேனென்கிறாள்.

முதலடியில், ஓதிஎன்றது எச்சத்திரிபு, ஓத என்றபடி
வாய் நல்லார் நல்ல மறையோத, காய்சின மாகளிறன்னான் மந்திரத்தால் பாசிலை நாணற்படுத்துப் பரிதிவைத்து,
என்கைபற்றித் தீவலஞ்செய்யக் கணாக்கண்டேன்.

வேதராசியில் தேவதாந்தரப்ரசம்ஸாபரங்களான பாகங்களும் உள்ளமையால்
“நஸ்மர்த்தவ்யோ விஸேஷேண வேதமந்த்ரோப்யவைஷ்ணவ“ என்றபடி அவற்றை உபேக்ஷித்து
வைஷ்ணவங்களான வேத பாகங்களை ஓதினார்களென்கைக்காக “நல்ல மறையோதி“ என்னப்பட்டது.
வடசொல் மந்திரமெனத் திரிந்தது. பரிதி – வடசொல், நாணற்படுத்துவதும் பரிதி வைப்பதும் அக்நி காரியங்கள்.
ஆண்டாளைக் கைப்பிழக்கப் பெற்றமையாலுண்டான செருக்குக்குக் காய்சின மா களிற்றின் செருக்கு ஒக்கும்.
என்கைபற்றித் தீவலஞ்செய்ய – திருமங்கலிய தாரணத்திற்குப் பிறகு தீவலஞ்செய்தல் முறைமை யென்ப.
தம்பதிகள் தங்களுடைய அன்பை அக்நி ஸாக்ஷிகமாக்குகிறபடி. இந்தத் தீவலஞ்செய்தல் ஸப்தபதீ எனவும்படும்.

வாய் நல்லார் நல்ல மறை ஓதி மந்திரத்தால்
கர்ம காண்டங்களை சொல்லுகை அன்றிக்கே பர ப்ரஹ்ம ஸ்வரூப பாகங்களான
புருஷ ஸூகதம் உபநிஷத் முதலான வேதங்களை ஓத –
ந ஸ்மர்த்தவ்யோ விசேஷண வேத மந்த்ரோப்ய வைஷ்ணவ -என்றபடி
அவற்றை உபேஷித்து வைஷ்ணவங்களான வேத பாகங்களை ஒதுவதால் நல்ல மறையோர்கள் –

பாசிலை நாணல் படுத்துப் பரிது வைத்து –
பரிதி வடசொல்
சமித்துக்களை இட்டு
பசுமை தங்கிய இலைகளை உடைத்தான நாணல் புல்லை
பரிஸ்தரணமாக அமைத்து –

காய்சின வாய் களிறு அன்னன் ஏன் கை பற்றி
அதி கம்பீர நடையை யுடைய கண்ணபிரான் –
ஆண்டாளைக் கை பிடிக்கையால் உண்டான செருக்கு

தீ வலம் செய்யக் கனாக் கண்டேன் தோழீ நான் –
சமந்தாகமாக அக்னி கார்யன்களை நடத்தில்
என் கையைப் பிடித்துக் கொண்டு
ஹோம அக்னியை பிரதஷினமாக சுற்றி வர
கனாக் கண்டேன் -என்கிறாள்
தங்கள் அன்பை அக்னி சாஷிகம் ஆக்குகிறபடி -சப்த பதீ-எனப்படும் அக்னி கார்யம் –

—————————————————————————————————-

இம்மைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் பற்றாவான்
நம்மை யுடையவன் நாராயணன் நம்பி
செம்மை யுடைய திருக்கையால் தாள் பற்றி
அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் தோழீ நான் —6-8-

பதவுரை

இம்மைக்கு–இப் பிறவிக்கும்
ஏழ் ஏழ் பிறவிக்கும்–மேலுள்ள பிறவிகள் எல்லாவற்றிற்கும்
பற்று ஆவான்–சரண்யனா யிருப்பவனாய்
நம்மை உடையவன்–நமக்கு சேஷியாய்
நம்பி–ஸகல கல்யாண குண பரிபூர்ணனாய்
நாராயணன்–நாராயணனான கண்ண பிரான்
செம்மை உடைய திரு கையால்–செவ்விய (தனது) திருக் கையினால்
தாள் பற்றி–(எனது) காலைப் பிடித்து
அம்மி மிதிக்க–அம்மியின் மேல் எடுத்து வைக்க

“உன்றன்னோடுற்றோமேயாவோ முனக்கே நாமாட்செய்வோம்“ என்றபடி காலத்தவமுள்ளதனையும் நம்முடைய
பணி விடைகளை ஏற்றுக்கொண்டு நம்மை நோக்குமவனான கண்ணபிரான்
தனது செந்தாமரை மலர்போன்ற திருக்கையாலே என் காலைப் பிடித்து அம்மி மிதிப்பிக்கக் கனாக்கண்டேனென்கிறாள்.
இது அச்மாரோஹணம் எனப்படும். மணவாளப்பிள்ளை மணவாட்டியின் காலைப்பிடித்துக் கொண்டு போய்
அம்மியை மிதிக்கச் செய்வது முறைமையோ?பெண் பிள்ளையின் காலை ஆண்பிள்ளை வந்து பிடிப்பது பொருந்துமோ?
இது ஸாஸ்த்ர மதியாதைக்குச் சேருமா? அப்படி ப்ரமாணந்தானுண்டோ வென்று பல பேருக்கு இதிலே விசிகித்ஸை பிறக்கும்,
திருக் கையால் தாள்பற்றுகை யென்பது அஸாஸ்த்ரீயமான காரியமென்று சிலர் க்ரந்தமும் எழுதியிருக்கிறார்கள்.
ஆனால் அவர்கள், பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியான வைகரியின் ஸ்வாரஸ்யத்தை ஆராயப் பெற்றிலர் போலும்,
வியாக்கியமான ஸ்ரீஸூக்தி வருமாறு “(செம்மை யுடைய திருக்கையால் தாள்பற்றி) பிள்ளை யுறவு முறையார் வேண்டா வென்பர்கள்,
பெண் பிள்ளை யுறவு முறையார் வேணுமென்னாநிற்பர்கள், இப்படி இரண்டு தலையிலுள்ளாரும் வார்த்தை சொல்லா நிற்கச் செய்தே
தானேவந்து காலைப் பிடிக்கக் கணிசியாநிற்குமாய்த்து அதாவது
ஆச்ரிதர் கால் பிடிக்கவென்றால் இறாயாத கையாய்த்து உபதேஸ காலத்திற் போலன்றிறே பரிமாற்றத்திலிருப்பது,
உபதேசிப்பது அவன் காலைப் பிடிக்கக் கடவதாக,
பரிமாற்றத்திலிருப்பது, அவன்றான் கால் பிடிக்கும்படியாக வாய்த்திருப்பது . . .
(தோழீ! நான்) … அவன் ஸவபாவம் நீ சொல்லக் கேட்டபடியே அநுபவிக்கப் பெற்றேன்.

இம்மைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் பற்றாவான் -நம்மை யுடையவன் நாராயணன் நம்பி-
உன்தன்னோடும் உற்றோமே ஆவோம்
உனக்கே நாம் ஆட்செய்வோம் -என்றபடி
கால தத்வம் உள்ளது அனையும்
நம்முடைய பணி விடைகளை ஏற்றுக் கொண்டு நம்மை நோக்குமவன்

செம்மை யுடைய திருக்கையால் தாள் பற்றி அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் –
தனது செந்தாமரை மலர் போன்ற திருக்கையாலே
என் காலைப் பிடித்து
அம்மி மிதிப்பிக்க கனாக் கண்டேன் –
அச்மாரோஹணம் –
பிள்ளை யுறவு முறையார் வேண்டாம் என்பார்கள்
பெண் பிள்ளை உறவு முறையார் வேணும் வேணும் என்னா நிற்பார்கள்
இப்படி இரண்டு தலையில் உள்ளாறும் வார்த்தை சொல்லா நிற்கச் செய்தே
தானே வந்து காலைப் பிடிக்க கணிசியா நிற்கும் ஆய்த்து
அதாவது -ஆஸ்ரிதர் காலைப் பிடிக்க என்றால் இறாயாத கை யாய்த்து
உபதேச காலத்தில் போலே போல் அன்று இ றே பரிமாற்றத்தில் இருப்பது
உபதேசிப்பது அவன் காலைப் பிடிக்கக் கடவதாக
பரிமாற்றத்தில் வந்தால் அவன் தான் கால் பிடிக்கும் படியாக வாய்த்து இருப்பது –

தோழீ நான் –
அவன் ஸ்வ பாவம் நீ சொல்லக் கேட்டபடியே
அனுபவிக்கப் பெற்றேன்-

—————————————————————————————-

வரிசிலை வாண் முகத்து என் ஐமார் தாம் வந்திட்டு
எரி முகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி
அரிமுகன் அச்சுதன் கை மேல் என் கை வைத்து
பொரி முகந்து அட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்–6-9-

பதவுரை

வரி சிலை வான் முகம்–அழகிய வில் போன்ற புருவத்தையும் ஒளி பொருந்திய முகத்தை யுடையவர்களான
என் ஐமார் தாம்–எனது தமையன்மார்கள்
வந்திட்டு–வந்து
எரிமுகம் பாரித்து–அக்னியை நன்றாக ஜ்வலிக்கச் செய்து
முன்னே என்னை நிறுத்தி–அந்த அக்னியின் முன்னே என்னை நிறுத்தி
அரி முகன்–(ஹிரண்ய வதத்திற்காக) ஸிம்ஹ முகத்தை யுடைனாய் அவதரித்த
அச்சுதன்–கண்ண பிரானுடைய
கை மேல்–திருக் கையின் மேல்
என் கை வைத்து–என்னுடைய கையை வைத்து
பொரி–பொரிகளை
முகந்து அட்ட–அள்ளிப் பரிமாற-

அம்மிமிதித்தபிறகு ‘லாஜஹோமம்‘ செய்வது முறைமை, அதாவது பொரியையிட்டு ஆஹுதிசெய்தல்,
அது நடந்தபடியைச் சொல்லுகிறாள் இப்பாட்டில். ப்ரயோக சந்த்ரிகை என்னும் க்ரந்த்ததில் விவாஹ ப்ரகரணத்தில்
லாஜஹோம முறைவரையுமிடத்து (பத்ந்யாஸ்ஸோ தர்யோ லாஜாநாவபதீத்யேகே) அதாவது –
மணவாட்டியின் கூடப் பிறந்தவன் பொரிகளை எடுத்திடுவதாகச் சிலர் கொள்கை என்று சொல்லப் பட்டிருந்த்தலாலும்
அநுஷ்டானமும் அப்படியேயிருப்பதாலும் “என்னைமார் தாம் வந்திட்டுப் பொரி முகந்தட்ட“ என்கிறாள்.
என்னைமார் – என் ஐமார்- தமையன்மார்,
இப் பதம் திருவாய்மொழியிலும் (ஆறாம்பத்தில் இரண்டாந்திருவாய்மொழியில் ஏழாம் பாட்டில்) பிரயோகப்பட்டுள்ளமை காண்க.
“என்னைமார் தன்மபாவமென்னார் ஒருநான்று தடிபிணக்கே“

சிலைபோன்ற புருவமென்னவேண்டுமிடத்துச் சிலை என்றது – முற்றுவமை.
“தாவி வையங்கொண்ட தடந்தாமரைகட்கே“ என்றதுபோல, “கஞ்சை காய்ந்த கருவல்லி“ என்று மேலும் வரும்.
ப்ராதாக்களுடைய முகத்தை வர்ணிப்பதற்குக் கருத்துத் தோன்றப் பெரியவாச்சன்பிள்ளை வியாக்கியானிக்கிறார் –
“என்னுடைய ப்ராதாக்களானவர்களே இதுக்கெல்லாம் அபிமாநிகள் என்னுமிடம் தங்கள் முகத்திலொளியிலே காணும்படியாக
வந்து அந்நி முகத்தைப் பாரித்து, நான் வ்ரீளையாலே இறாய்க்க என்னை யெடுத்து முன்னே நிறுத்தி.“

மைத்துனமை முறையுடையார் கல்யாணப் பிள்ளையை இளிம்பு படுத்திச் சிரிக்க வேணுமென்று சில சேஷ்டைகள் செய்வது வழக்கம்.
அப்படியே கண்ணபிரான் விஷயத்தில் சிலர் செய்யப் பார்த்தபோது அவற்றை அவன் லக்ஷியஞ செய்யாமல்
அவற்றுக்கு ஏமாந்து போகாமல் பெரு மிடுக்கனாகவே யிருந்த படியைக் காட்டும்- அரிமுகன் என்ற அடைமொழி.

முகந்து அட்டுதல் – எடுத்து ப்ரக்ஷேபித்தல்.

வரிசிலை வாண் முகத்து என் ஐமார் தாம் வந்திட்டு -எரி முகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி
அம்மி மிதித்த பிறகு
லாஜ ஹோமம் -பொறியை ஆஹூதி செய்தல் -முறைமை –
பிரயோக சந்த்ரிகை -விவாஹ பிரகரணம்
பத்ன்யாஸ் சோதர்யோ லாஜா நாவ பதீதயேக-என்று
மணவாட்டியின் கூடப் பிறந்தவன் பொரிகளை எடுத்து இடுவதாக சொல்லி உள்ளதே
என் ஐமார் -தமையன்மார்
என்னைமார் தன்மபாவம் என்னார் ஒரு நான்று தடி பிணக்கே -திருவாய்மொழி -6-2-7- இந்த பதம் போலே உண்டே –
சிலை -சிலை போன்ற புருவம் -முற்று உவமை
தாவி வையம் கொண்ட தடம் தாமரைகட்கே -போலே
கஞ்சைக் காய்ந்த கருவில்லி -என்று மேலும் வரும்
என்னுடைய பிரதாக்கள் ஆனவர்களே இது எல்லாம் அபிமாநிகன் என்னும் இடம்
தங்கள் முகத்தில் ஒளியாலே காணும்படியாக வந்து
அக்னி முகத்தைப் பாரித்து
நான் வ்ரீளையாலே இறாய்க்க
என்னை எடுத்து முன்னே நிறுத்தி
அரிமுகன் அச்சுதன் கை மேல் என் கை வைத்து பொரி முகந்து அட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்
மைத்துனமை முறை யுடையார்
கல்யாணப் பிள்ளையை இளிம்பு படுத்தி சிரிக்க வேணும் என்று சில சேஷ்டைகள் செய்வது வழக்கம்
அப்படியே கண்ணபிரான் விஷயத்தில் சிலர் செய்யப் பார்த்த பொழுது
அவற்றை அவன் லஷியம் செய்யாமல்
அவற்றுக்கு ஏமாந்து போகாமல்
பெரு மிடுக்கனாய் இருந்தபடியை
காட்ட -அரி முகன் -அடைமொழி
முகந்து அட்ட -எடுத்து ப்ரேஷிக்க–அள்ளிப் பரிமாற

————————————————————————————————–

குங்குமம் அப்பிக் குளிர் சாந்தம் மட்டித்து
மங்கல வீதி வலம் செய்து மண நீர்
அங்கு அவனோடும் உடன் சென்று அங்கு ஆனைமேல்
மஞ்சனமாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்–6-10-

பதவுரை

குங்குமம்–குங்குமக் குழம்பை
அப்பி–உடம்பெல்லாம் பூசி
குளிர் சாந்தம்–குளிர்ந்த சந்தனத்தை
மட்டித்து–கனக்கத் தடவி
ஆனை மேல்–மத்த கஜத்தின் மேலே
அவனோடும் உடன் சென்று–அக் கண்ண பிரானோடு கூடியிருந்து
மங்கலம் வீதி–(விவாஹ நிமித்தமான) அலங்காரங்கள் விளங்குகின்ற வீதிகளிலே
வலம் செய்து–ஊர்வலம் வந்து
மணம் நீர்–வஸந்த ஜலத்தினால்
மஞ்சனம் ஆட்ட–(எங்க ளிருவரையும்) திருமஞசனம் பண்ணுவதாக

கண்ணபிரானும் தானுமாக அக்நி ஸமீபத்திலே சில நாழிகை இருக்க நேர்ந்தமையால் அப்போதுண்டான வெப்பம்
பொறுக்க முடியாததாக, அதற்குப் பரிஹாரமாகக் குளிர்ந்த குங்குமக் குழம்பையும் சந்தனச் சேற்றையும் திருமேனியெங்கும்
அப்பி இந்தத் திருவீதிவலம் வந்து, பிறகு வஸந்தஜலத்திலே மஞ்சனமாட்டப் பெற்றதாகக் கனாக்கண்டேனென்கிறாள்.
பச்சைக் கல்யாணத்தன்றிரவு நடைபெறும் வஸந்த ஸ்நாநம் இப்பாட்டிற் கூறப்பட்டதென்க.

குங்குமம் அப்பிக் குளிர் சாந்தம் மட்டித்து மங்கல வீதி வலம் செய்து மண நீர் –
கண்ணபிரானும் தானுமாக அக்னி சமீபத்திலே
சில நாழிகை இருக்க நேர்ந்தமையாலே
அப்போது உண்டான வெப்பம் பொறுக்க முடியாததாக
அதற்குப் பரிகாரமாக குழிந்த குங்குமக் குழம்பையும்
சந்தனச் சேற்றையும்
திரு மேனி எங்கும் அப்பி
இந்தத் திருக் கோலத்தோடு
மட்டித்து -மணக்கத் தடவி
மங்கல வீதி -திருக் கல்யாண நிமித்தமாக அலங்கரிக்கப் பட்டு விளங்கும் திரு வீதி களிலே

அங்கு அவனோடும் உடன் சென்று அங்கு ஆனைமேல் மஞ்சனமாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான் –
இருவருமான சேர்த்தி யாய்
ஆனையின் மீது ஏறி திரு வீதி வலம் வந்து
பிறகு வசந்த ஜலத்திலே மஞ்சனமாட்டப் பெற்றதாக
கனாக் கண்டேன்
பச்சைக் கல்யாணத்தன்று இரவு நடை பெரும் வசந்த ஸ்நானம்-

————————————————————————————————-

ஆயனுக்காக தான் கண்ட கனாவினை
வேயர் புகழ் வில்லிபுத்தூர்க் கோன் கோதை சொல்
தூய தமிழ் மாலை ஈரைந்தும் வல்லவர்
வாயு நன் மக்களைப் பெற்று மகிழ்வரே—6-11-

பதவுரை

வேயர் புகழ்–வேயர் குலத்தவரால் புகழப் பட்டவராய்
வில்லிபுத்தூர் கோன்–ஸ்ரீவில்லிபுத்தூர்க்குத் தலைவரான பெரியாழ்வாருடைய (திருமகளான)
கோதை–ஆண்டாள்
தான் ஆயனுக்கு ஆக கண்ட கனாவினை–தான் கோபால க்ருஷ்ணனுக்கு வாழ்க்கைப் பட்டதாகக் கனாக் கண்ட படியைக் குறித்து
சொல்–அருளிச் செய்த
தூய–பரிசுத்தமான
தமிழ் மாலை ஈர் ஐந்தும்–தமிழ் தொடையான இப் பத்துப் பாட்டுக்களையும்
வல்லவர்–ஓத வல்லவர்கள்
வாயும்–நற்குணகளமைந்த
நல்ல மக்களைப் பெற்று–விலக்ஷணரான புத்திரர்களைப் பெற்று
மகிழ்வர்–ஆநந்திக்கப் பெறுவர்கள்

ஆயர்புத்திரனாகிய கண்ணபிரானுக்கு வாழ்க்கைப் பட்டதாக ஆண்டாள் கனாக்கண்ட படியை வெளியிட்ட
இத்திருமொழியை ஓதவல்லவர்கள் பகவத் விஷயத்திலே ப்ராவண்யமுடைய விலக்ஷண புத்திரர்களைப் பெற்றுப்
பரமானந்தமடைவர்களென்று – இத்திருமொழி கற்றார்க்குப் பலஞ்சொல்லித் தலைக்கட்டினபடி.

தமிழ்மாலைக்குத் தூய்மையாவது – அநுபவத்தின் பரீவாஹ ரூபமாகப் புறப்பட்டதாயிருக்கை.
கவந சாதுரியத்தைக் காட்டுவதற்கென்றே கவி பண்ணு வாரைப்போலன்றே ஆண்டாள்.

வாயும் நன்மக்களை – “மாயன் மணிவண்ணன் தாள்பணியும் மக்களைப் பெறுவர்களே“ என்றார் பெரியாழ்வாரும்.

இக்காலத்தில் கல்யாணம் நடக்குமிடத்து, பச்சைக் கல்யாண தினத்தினன்று அத்யாபகர்கள் இத் திருமொழியை ஓதிச்
சீர்பாடல் பாடும்போது, “சீர்பாடி களிமண் பாடப் போமே“ என்று நீட்டுவதைப் பெரும்பாலும் அனைவரும் கேட்டிருப்பார்கள்.
அந்தவாக்கியத்தின் உண்மையான ஆநுபூர்வி எப்பட்டதென்று பலர் விமர்சிப்பர்கள்,
“தளிர்பண்படுப்போமே“ என்றிருக்கவேணுமென்று சிலர் திருத்துவர்,
“தளுவம் பிடிப்போமே“ என்றிருக்கவேணுமென்று சிலர் திருத்துவர்கள்;
(ஒவ்வொரு சீர் பாடலுக்கும் அத்யாபகர்கள் தளுவம் பிடித்துத் தாம்பூலம் பெறுதுல் சிலவூர்களில் வழக்கமாம்.)
“சீர்பாடிக் களிமின் களிப்போமே“ என்பது தான் உண்மையான வாக்கியமென்று
அழகிய மணவாளச்சீயர் அருளிச்செய்யக் கேடடிருக்கை.
சீர்பாடல்பாடி நீங்கள் சந்தோஷியுங்கள், நாங்களும் சநதோஷிக்கிறோம் என்றபடி.
இந்த வாக்கியத்தை இசையிலே நீட்டி சொல்லும்போது “களிமின் களிப்போமே“ என்று சொல்லிக் கொண்டு வந்தார்கள் முன்னோர்;
நாளடைவில் ‘களிமண்பா‘ வாகவும் ‘டப்போமே‘ யாகவும் விகாரத்தைப் பெற்றொழிந்தது.

நிகமத்தில்
இத் திருமொழி அப்யசிக்க வல்லவர்களுக்கு
பலன் சொல்லித் தலைக் கட்டுகிறார் –

ஆயனுக்காக தான் கண்ட கனாவினை வேயர் புகழ் வில்லிபுத்தூர்க் கோன் கோதை சொல் –
தான் கோபால கிருஷ்ணனுக்கு வாழ்க்கைப் பட்டதாக
கனாக் கண்டபடியைக் குறித்து –
வேயர் குலத்தவரால் புகழப் பட்ட வராய்
ஸ்ரீ வில்லி புத்தூருக்குத் தலைவரான பெரியாழ்வார் உடைய
திரு மகளான ஆண்டாள்
அருளிச் செய்த

தூய தமிழ் மாலை ஈரைந்தும் வல்லவர்
வாயு நன் மக்களைப் பெற்று மகிழ்வரே
பகவத் விஷயத்திலே
பிராவண்யம் உடைய
விலஷண புத்ரர்களை பெற்று
பரம ஆனந்தத்தை அடைவார்கள் –

தமிழ் மாலைக்குத் தூய்மை யாவது
அனுபவ பரிவாஹ ரூபமாய் புறப்பட்டதே இருக்கை  –
கவன சாதுர்யத்தைக் காட்டுவதற்கு என்ற கவி பண்ணு வாரைப் போலே அன்றே ஆண்டாள் –

வாயும் நன் மக்களை பெற்று மகிழ்வரே –
மாயன் மணி வண்ணன் தாள் பணியும் மக்களைப் பெறுவார்களே -என்றாரே பெரியாழ்வாரும் –

சீர் பாடி களி மண் பாடப் போமே-சீர்பாடல்
தளிர் மண் படுப்போமே
தளுவம் பிடிப்போமே
தளுவம் பிடித்து தாம்பூலம்  பெறுதல் -என்பர்
உண்மையில்
சீர்பாடி களிமின் களிப்போமே-என்று அழகிய மணவாள சீயர் அருளிச் செய்வர்
சீர்பாடல் பாடி நீங்கள் சந்தோஷியுங்கோள்
நாங்களும் சந்தோஷிக்கிறோம் -என்றபடி
இத்தை நீட்டிச் சொல்லும் பொழுது
களிமின் களிப்போமே என்று முன்னோர் சொல்லிக் கொண்டு வர
நாளடைவில்
களிமண்பா -வாகவும்
டப்போமே-யாகவும்
விகாரத்தைப் பெற்று ஒழிந்தது –

————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே -அண்ணங்கராச்சார்யர்  ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ நாச்சியார் திரு மொழி – ஐந்தாம் திரு மொழி – -ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை -ஸ்ரீ உ. வே. P.B.A.. ஸ்வாமிகள்–

September 6, 2014

பிரவேசம்

கீழ்த் திருமொழியில்
நீ கூடிடு கூடலே நீ கூடிடு கூடலே -என்று பலகால் சொன்ன அளவிலும்
கூடுவேன் என்றாவது கூடேன் என்றாவது ஒரு விதமான மறு மொழியும் அது சொல்ல வில்லை

இது அசேதனம் ஆகையாலே சொல்ல மாட்டாது என்று அறிந்தாள்
பிறகு அருகே இருந்த ஒரு குயிலை நோக்கினாள்

அக் கண்ணபிரானும் தானுமாய் கூடி இருக்கும் காலங்களில்
அக் குயில் அணுகி இருந்து வார்த்தை சொல்லி கொண்டு இருந்த பழக்கத்தால்

ஒ குயிலே என்னையும் அவனையும் நீ கூட்டக் கடவையோ
எப்படியாவது அவன் என்னிடம் வந்து கூடும்படி கூவாய் பார்ப்போம்
என்று பல காலுமாக சொல்லி
அக் குயிலின் காலிலே விழுந்து வேண்டுகிறாள் ஆய்த்து -இத் திரு மொழியில் –

—————————————————————————————–

மன்னு பெரும் புகழ் மாதவன் மா மணி வண்ணன் மணி முடி மைந்தன்
தன்னை உகந்தது காரணமாக என் சங்கு இழக்கும் வழக்குண்டே
புன்னை குருக்கத்தி நாழல் செருந்திப் பொதும்பினில் வாழும் குயிலே
பன்னி எப்போதும் இருந்து விரைந்து என் பவளவாயன் வரக் கூவாய்–5-1-

பதவுரை

புன்னை–புன்னை மரங்களும்
குருக்கத்தி–குருக்கத்தி மரங்களும்
நாழல்–கோங்கு மரங்களும்
செருந்தி–சுர புன்னை மரங்களும் (இவை முதலிய பல மரங்கள் நிறைந்த)
பொதும்பினில்–சோலையிலே
வாழும்–வாழுகின்ற
குயிலே! -கோகிலமே!
மன்னு பெரும் புகழ்–நித்யமாய் அளவில்லாத புகழை யுடையவனாய்
மாதவன்–ச்ரிய: பதியாய்
மா மணி வண்ணன்–நீல மணி போன்ற நிறத்தை யுடையனாய்
மணி முடி–நவ மணிகள் அழுத்திச் சமைத்த திரு வபிஷேத்தை யுடையனாய்
மைந்தன் தன்னை–மிடுக்கை யுடையவனான எம்பெருமானை
உகந்தது காரணம் ஆக–ஆசைப் பட்டதுவே ஹேதுவாக
என் சங்கு இழக்கும் வழக்கு–என்னுடைய கைவளைகள் கழன்றொழியும்படியான நியாயம்
உண்டே?–(உலகத்தில்) உண்டோ’ (இது வெகு அநியாயமாயிருக்கிறது)
(இதற்கு நான் என் செய்வேன் என்கிறாயோ)
என் பவளம் வாயன்–பவளம் போற் பழுத்த திருவதரத்தை யுடையனான எனது துணைவன்
வர (என்னிடம்) வந்து சேரும்படி
எப்போதும்–இரவும் பகலும்
பன்னி இருந்து–(அவனது திருநாமங்களைக்) கத்திக் கொண்டிருந்து
விரைந்து கூவாய்–சீக்கிரமாகக் கூவ வேணும்.

உலகத்தில் அனைவராலும் பழிக்கப்பட்டவனாயும் பிச்சைக்காரனாயும் கண் கொண்டு காண வொண்ணாத
விகாரமான ரூபத்தை யுடையவனாயும் அனைவர்க்கும் கீழ்ப்பட்டவனாயுமுள்ள ஒரு கா புருஷனை
நான் ஆசைப்பட்டடேனாகில் எக்கேடு கெட்டாலும் பாதகமில்லை’
நான்கு திசைகளிலும் பரவிய நித்ய கீர்த்தியை யுடையவனாய் ஸாக்ஷாத் திருமாமகள் கொழுநனாய்
கண்டார் கண்களைக் கவரும்படியான நீலமணி போன்ற நிறத்தை யுடையனாய்
‘அனைவரையும் ரக்ஷித்தருளக் கடவேன்’ என்று முடி கவித்துக் கொண்டிருப்பவனாய் நினைத்தபடி செய்து முடிக்க வல்ல
வலிவு படைத்தவனான எம்பெருமானை நான் ஆசைப்பட்டு இக்கேடு கெடுகிறேனே! இது நியாயந்தானா?
இங்ஙனேயோ உலகநீதியிருக்கும்படி! என்கிறாள் முன்னடிகளில்.

(என்சங்கு இழக்கும் வழக்கு உண்டே?) சங்கு இழத்தலாவது – கைவளை கழன்றொழிகை’
தலைமகனைப் பிரிந்து வருந்துவதனால் உடம்பானது ஈர்க்குப்போல க்ருசமாய்ப் போக
‘கைகளிற் பொருத்தமாக அணியப்பட்ட வளைகளும் அவலீலையாகக் கழன்றுவிழும்: –

யாமி நயாமீதி தவே வததி புரஸ்தாத்‘ணேந தந்வங்க்யா:- களிதாநி – புரோவலயாநி அவராணி புநஸ்ததைவ தளிதாநி.”)
என்ற ச்லோகத்தின் தாற்பாரியம் இங்கே நினைக்கத்தகும். அதாவது
தலைமகன் தலைமகளை நோக்கி, ‘என்கண்மணி! நான் உன்னைப் பிரிந்து ஓர் ஊர்க்குச் செல்கின்றேன்’ என்று
சொன்ன நொடிப் பொழுதிலேயே அவளுடைய கையில் அணியப்பட்டுள்ள வளைகளில்
முன்னேயிருந்த வளைகள் கழன்று கீழே வீழ்ந்தன’
அதனைக் கண்ட தலைமகன் ‘இவள் நமது விரஹத்தைப் பொறுத்திருக்க வல்லளல்லளாகையாலே
இவளைப் பிரிந்து நாம் வெளியேறலாகாது’ என்று நினைத்து உடனே ‘நான் போகவில்லை’ என்று சொல்லவே
அச்சொல் செவிப் பட்ட நொடிப் பொழுதிலேயே கையில் நின்றும் கழன்றவை போக நின்ற வளைகள்
படீல் என்று வெடித்துத் துகளாய் விழுந்தன – என்பது மேற்காட்டிய ச்லோகத்தின் கருத்து.

நாயகனுடைய விரஹம் ப்ரஸ்தாவத்தில் வந்தமாத்திரத்திலேயே நாயகியனது உடல் மிகவும் மெலிந்து போம் என்பதும்,
அந்த விச்லேஷ வார்த்தை மாறினவாறே உடம்பு பூரித்துக்கிடக்க ப்ராப்தமாயிருக்க,
இப்படி பிரிந்து மெலிந்து வருந்துகை தகுதிதானா? என்றவாறு.

அவன் என்னை ஆசைப்பட்டு இப்பாடுகள் படவேண்டியிருக்க,
நான் அவனை யாசைப்பட்டு வருந்த வேண்டும்படி விதிவகை விபாரிதமாயிற்றே! என்று வருந்துகிறாள் எனினுமாம்.
அவனது திருவடித் தாமரைகளிலே தலைசாய்த்த பின்பு அவ்வடியார்க்கு நேரும் துயரங்களை
அவ்வெம்பெருமான்றானே அநுபவிக்கக் கடவனாயிருக்க அதுவிபாரிதமாய் நானோ துயர்பபடக்கடவேன் என்கிறாள் என்றலுமாம்.

பாரதயுத்தத்தில் அர்ஜுநன் மேலே விழவந்த அம்பைக் கண்ணபிரான் அவனைத் தள்ளித் தான்
ஏற்றுக்கொண்டான் என்று ப்ரஸித்தமிறே. – பார்த்தம் ஸஞ்சாத்ய மாதவ:- உரஸா ப்ரதிஜக்ராஹ” என்றதிறே.

வழக்குண்டே? ஸ்ரீ வழக்காவது-நியாயம்
“அறிவினால் குறைவில்லா அதன் ஞாலத்தவரறிய, நெறி யெல்லாமெடுத்துரைத்த நிறை ஞானத்தொருமூர்த்தி” என்றபடி
நியாயங்களை யெல்லாம் ஓதிவைத்த அவனே இப்படி அநியாயஞ்செய்யத் தலைப்படுவது தகுதி தானோ?
‘தன்னை யாசைப் பட்டவர்களுக்கு வளையிழந்து நிற்கை தான் பலன்’ என்று இப்படி ஒரு நியாயம்
அவன் தந்த சாஸ்திரங்களிலே உண்டோ? என்கிறாள்.
(‘நவாஸுதேவ பக்தாநாம் அசுபம் விதயதே க்வசித்’) என்றும்,
“கௌந்தேயு! ப்ரதிஜாநீஹி நமே பக்த: ப்ரணச்யதி’) என்றும்
அவன் தந்த சாஸ்திரங்களிலே கேட்டுப் போருகிறேமத்தனை யொழிய,
“வைகுந்த னடிபணிந்தார் வளையிழந்து வருந்துவரே” என்பதாக ஓரிடத்திலும் கேட்டதில்லையே
இன்றளவும் – என்கிறாள் போலும்.

இனி மூன்றாமடி கோகில ஸம்போதநம். குயிலே! நான் இப்பாடு பட்டுக் கிடக்க என்னைப் போலே
நீயும் வருந்துவதோ அல்லது என் வருத்தத்தைப் பாரிஹரிப்பதோ செய்ய வேண்டியிருக்க,
புன்னையும் குருக்கத்தியும் நாழலும் செருந்தியுமாய் அமைந்த படுக்கையிலே இனிதாக வாழ்கின்றாயே! இதுதகுதி தானோ?
மென்மலர்ப் பள்ளி வெம்பள்ளி யாலோ என்றிருக்கிற என் முன்னேயோ நீ இப்படி களித்து வாழ்வது! என்ற
உபாலம்பம் தோற்ற ஸம்போதிக்கிறாள்.
நாழல் ஞாழல்’ (போலி.) இது வடமொழியில் (பலிநீ )என்று வ்யவஹாரிக்கப்படும்:
(கோங்குமரம்,) பொதும்பு – பொந்து.

அக்குயில் செய்ய வேண்டியதை நியமிக்கிறாள் ஈற்றடியில் ஒரு கால் சொல்லி ஓய்ந்து விடாமல்
அவன் திருவுள்ளத்திலே படும்படி பலகாலும் சொல்லி, ஆனை யிடர்ப்பட்ட மடுவின் கரையிலே
அரை குலையத் தலை குலைய வந்துவிழுந்தாப் போலே விரைந்தோடி வந்து என்னோடே ஸம்ச்லேஷிக்கும் படியாக
அவனைக் கூவவேணு மென்று வேண்டுகிறாள்.

“என் பற்நாபன் வரக் கூவாய்’ என்றாவது
“என் பரம் புருடன் வரக்கூவாய்” என்றாவது மற்றுமுள்ள திருநாமங்களை யிட்டாவது சொல்லாமல்
‘என் பவளவாயன்” என்ற ஸ்வாரஸ்யத்தை நோக்கிப் பெரியவாச்சான்பிள்ளை யருளிச் செய்கிறார்
என்னோடே கலந்து போகிற ஸமயத்தில் அணைத்து ஸ்மிதம்பண்ணி,
வருமளவும் ஜீவித்திருக்கும்படி விளை நீரடைத்துப் போன போதைச் செவ்வியோடும் அதரத்தில் பழுப்போடும்
வந்தணைக்கும் படியாகக் கூவப் பாரா யென்கிறாள்” என்று. …

மன்னு பெரும் புகழ் மாதவன் மா மணி வண்ணன் மணி முடி மைந்தன் தன்னை உகந்தது காரணமாக
நான்கு திசைகளிலும் பரவிய நித்ய கீர்த்தியை யுடையவனாய்
சாஷாத் திரு மா மகள் கொழுநனாய்
கண்டார் கண்களைக் கவரும்படியான
நீல மணி போன்ற நிறத்தை யுடையவனாய்
அனைவரையும் ரஷித்து அருளக் கடவேன் -என்று
முடி கவித்துக் கொண்டு இருப்பவனாய்
நினைத்த படி செய்ய வல்ல எம்பெருமானை அன்றோ
நான் ஆசைப்பட்டு இக்கேடு கெடுக்கிறேன்
இது நியாயம் தானா
இங்கனேயோ உலக நீதி இருக்கும் படி-
என் சங்கு இழக்கும் வழக்குண்டே
சங்கு இழத்தல்
கை வளை கழன்று ஒழிகை
பிரிந்து வருந்தி –
யாமி நயாமீதி தவே வத்தி பரஸ்தாத் ஷனேன தன்வங்க்யா
களிதானி புரோவலயாணி அபராணி புனச்ததைவ தளிதானி-என்கிறபடியே
உன்னை பிரீந்து செல்கின்றேன் -சொன்ன நொடிப் பொழுதிலே கைகளில் வளையல்கள் கழன்று விழ
நான் போக வில்லை என்று சொல்லிய அச் சொல் செவிப் பட்ட பொழுதிலேயே வளையல்கள் படீர் கழன்று
நித்யமாக சம்ச்லேஷித்து உடம்பு பூரித்து இருக்கக் கடவ
இப்படி மெலிந்து வருந்துகை தகுதி தானோ

அவன் என்னை ஆசைப்பட்டு இப்பாடுகள் பட வேண்டி இருக்க
நான் அவனை ஆசைப்பட்டு வருந்துகை
விதி வகை விபரீதம் -என்று வருந்துகிறாள் எனினுமாம்
அவனது திருவடித் தாமரைகளிலே தலை சாய்ந்த பின்பு அவ்வடியார்க்கு நேரும் துயரங்களை
அந்த எம்பெருமான் தானே அனுபவிக்க கடவ்னாய் இருக்க
விபரீதமாய் நானோ துயர் படக் கடவேன் –
பாரத யுத்தத்தில் அர்ஜுனன் மேலே விழுந்த அம்பைத் தள்ளித் தானே ஏற்றுக் கொண்டான்
பார்த்தம் சஞ்சாத்ய மாதவ உறசா பிரதிஜக்ராஹா -என்றது இ றே –
வழக்குண்டே
வழக்கு -நியாயம்
அறிவினால் குறைவில்லா அகல் ஞாலத்தவர் அறிய நெறி எல்லாம் எடுத்துரைத்த நிறை ஞானத் தொரு மூர்த்தி -என்றபடி
நியாயங்களை எடுத்து உரைத்த அவனே இப்படி அநியாயம் செய்ய தலைப் படுவது தகுதியா
தன்னை ஆசைப் பட்டவர்களுக்கு வளை இழந்து நிற்கை தான் பலன் -இந்த நியாயம் அவன் தந்த சாஸ்த்ரங்களில் உண்டா
நவாசூதேவம் பக்தாநாம் அசுபம் வித்யதே க்வசித் -என்றும்
கௌந்ததேயபிரதீஜா நீஹி நேம் பக்த ப்ரணச்யதி -என்றும்
அவன் தந்த சாஸ்த்ரங்களில் கேட்டுப் போகிறோம் அத்தனை ஒழிய
வைகுந்தன் அடி பணிந்தார் வளை இழந்து வருந்துவரே -என்பதாக ஓர் இடத்திலும் கேட்டது இல்லையே –

புன்னை குருக்கத்தி நாழல் செருந்திப் பொதும்பினில் வாழும் குயிலே
புன்னை மரங்களும்
குருக்கத்தி மரங்களும்
கொங்கு மரங்களும்
சுர புன்னை மரங்களும்
இவை போன்ற பல மரங்கள் நிறைந்த சோலையிலே வாழுகின்ற கோகிலமே
என்னைப் போலே நீயும் வருந்துவதோ அல்லது என் வருத்தத்தை பரிஹரிப்பதோ
செய்ய வேண்டி இருக்க
படுக்கையிலே இனிதாக வாழ்கின்றாயே
இது தகுதி தானோ
மென்மலர்ப்பள்ளி வெம்பள்ளியாலோ என்று இருக்கிற என் முன்னேயோ
நீ இப்படி களித்து வாழ்வது-
பன்னி எப்போதும் இருந்து விரைந்து என் பவளவாயன் வரக் கூவாய்
ஒரு கால் சொல்லி ஓய்ந்து விடாமல்
அவன் திரு உள்ளத்தில் படும்படி பல காலும் சொல்லி
ஆனை இடர்ப்பட்ட மடுவின் கரையிலே அரை குலைய தலை குலைய வந்து விழுந்தால் போலே விரைந்தோடி வந்து
என்னுடன் சம்ச்லேஷிக்கும் படியாக அவனைக் கூவ வேணும் -என்று வேண்டுகிறாள்
என் பற்பநாபன் வரக் கூவாய் -என்றாவது
என் பரம் புருடன் வரக் கூவாய் -என்றாவது
மற்றும் உள்ள திரு நாமங்களை இட்டு சொல்லாமல்
என் பவள வாயன் -என்றது
என்னோடு கலந்து போகிற சமயத்தில் அணைத்து
ஸ்மிதம் பண்ணி
வரும் அளவும் ஜீவித்து இருக்கும்படி விளை நீர் அடைத்துப் போன போதை
செவ்வியோடும்
அதரத்தில் பழுப்போடும்
வந்து அணைக்கும் படியாக கூவப் பாராய் -என்கிறாள் –

—————————————————————————————————-

வெள்ளை விளி சங்கு இடம் கையில் கொண்ட விமலன் எனக்கு உருக் காட்டான்
உள்ளம் புகுந்து என்னை நைவித்து நாளும் உயிர்ப்பெய்து கூத்தாட்டுக் காணும்
கள்ள விழ் செண்பகப் பூ மலர்க் கோதிக் களித்து இசை பாடும் குயிலே
மெள்ள இருந்து மிழற்றி மிழற்றாது என் வேங்கடவன் வரக் கூவாய்–5-2-

பதவுரை

கள் அவிழ்–தேன் பெருகா நின்றுள்ள
செண்பகம் பூ–செண்பகப் பூவிலே
மலர் கோதி–(அஸாரமான அம்சத்தைத் தள்ளி) ஸாரமான அம்சத்தை அநுபவித்து
களித்து–(அதனால்) ஆநந்தமடைந்து
இசை பாடும் குயிலே–(அந்த ஆநந்தத்திற்குப் போக்கு வீடாக) இசைகளைப் பாடா நின்றுள்ள கோகிலமே!’
வெள்ளை விளி சங்கு இடங்கையில் கொண்ட–சுத்த ஸ்வபாவமாய் (கைங்கர்ய ருசி யுடையாரை) அழைக்கு மதான
ஸ்ரீ பாஞ்ச ஜந்யத்தை இடக் கையிலே ஏந்திக் கொண்டிருக்கிற
விமலன்–பவித்ரனான பரம புருஷன்
உரு–தனது திவ்யமங்கள விக்ரஹத்தை
எனக்கு காட்டான்- எனக்கு ஸேவை ஸாதிப்பிக்க மாட்டே னென்கிறான் (அதுவுமல்லாமல்)
உள்ளம் –என்னுடைய ஹருதயத்தினுள்ளே
புகுந்து–வந்து புகுந்து
என்னை நைவித்து–என்னை நைந்து போம் படி பண்ணி
(அவ்வளவிலே நான் முடிந்து போவதாயிருந்தால் இன்னமும் என்னை ஹிம்ஸிப் பதற்காக முடிய வொட்டாமல்)
நாளும் உயிர் பெய்து–நாள் தோறும் பிராணனைப் பெருக்கடித்து
கூத்தாட்டு காணும்–என்னைத் தத்தளிக்கச் செய்து வேடிக்கை பாரா நின்றான்’
(நீசெய்ய வேண்டிய தென்னவென்றால்)
இருந்து–என் அருகில் இருந்துகொண்டு’
மெள்ளமிழற்றி மிழற்றது-உன் மழலைச் சொற்களைச் சொல்லி விலாஸ சேஷ்டிதங்களைப் பண்ணாமல்
என் வேங்கடவன் வர–எனக்காகத் திருவேங்கடமலையிலே வந்து நிற்கிற எம்பெருமான் (இங்கே) வரும்படியாக
கூவாய்–கூப்பிடவேணும்-

தன்னை எம்பெருமான் நோவு படுத்துகிறபடியை முன்னடிகளில் அருளிச் செய்கிறாள்.
கார்முகில் போன்ற கரிய திருமேனிக்குப் பரபாகமான வெண்மையை யுடைத்தாய்,
‘என்னைப் போலே நீங்களும் கைங்கர்யம் பண்ண வாருங்கள்’ என்று அழைப்பது போன்ற
முழக்கத்தை யுடைத்தான ஸ்ரீ பாஞ்சஜந்யத்தை இடத் திருக்கையிலே ஏந்தியிரா நின்றுள்ள எம்பெருமான்
தன்னைக் காண்கையிலே மிக்க ஆசையுள்ள எனக்குத் தன் திருவுருவத்தைக் காட்டாதே மறைத்திடா நின்றான்.

அவன் இப்படி உபேக்ஷிக்கையாலே அவ்வுருவத்தை மறந்து பிழைப்போம் என்று பார்த்தாலோ, அது செய்யுவும் ஒட்டுகிறிலன்’
என்னுடைய ஹ்ருதயத்தினுள்ளே வந்துபுகுந்து நினைதொறும் சொல்லுந்தோறும் நெஞ்சிடிந்துகும்” என்கிறபடியே
சைதில்யத்தை யுண்டாக்கி அந்தத் தளர்த்தியாலே உயிர்மாயுமளவான நிலைமை நேர்ந்தவாறே
“இவ்வளவோடு இவளை முடிந்து பிழைக்க வொட்டலாமா? இன்னும் நெடுநாளைக்குத் துன்பம் படுத்தவேண்டாவா?”
என்றெண்ணி மறுபடியும் உயிரைச் சிறிது தலையெடுக்கச் செய்து பழையபடியே ஹிம்ஸிப்பதாய்
இப்படி துடிக்கவிட்டு இதுவே போதுபோக்காயிரா நின்றான்

’ ஓ குயிலே! நான் இப்படி நோவுபடா நிற்க,
நீ ஆநந்தமயமாக இசைபாடிக்கொண்டு போது போக்குவது நியாயந்தானா?
தேன் பெருகா நின்றுள்ள செண்பகப்பூவில் அஸாரமான அம்சத்தைக்கழித்து ஸாரமான பாகத்தை அநுபவித்து
அவ்வநுபவத்தாலுண்டான களிப்பு உள்ளடங்காமல் அதற்குப் போக்குவிட்டு இசைபாடிக் கொண்டிருக்கிறாயே,
இதுவோ நன்மை? நான்படும் துயரத்தைப் பாரிஹரித்த பின்பன்றோ நீ களிக்க வேணும்
உனக்காக நான் செய்யத்தக்கது என்ன?” என்று கேட்கிறாயோ, எப்போதும் என்னருகே யிருந்து கொண்டு
அவ்யக்த மதுரமாக மென்சொற்களைச் சொல்லுவதும் விலாஸ சேஷ்டி தங்களைப் பண்ணுவதுமா யிருக்கிறாயே
இந்த இருப்பைத் தவிர்ந்து, பிராட்டியைக் கைப்பிடிப்பதற்காக ஸ்ரீமிதிலையில் புறச்சோலையிலே வந்து
தங்கியிருந்தாப்போலே எனக்காகத் திருமலையிலே வந்திராநின்ற பெருமானை
இங்ஙனே நாலடி வரும்படியாக நீ கூவவேணும் என்று வேண்டுகிறாள்.

முதலடியில், விமலன் என்றது
(‘நதேரூபம் நசாகாரோ நாயுதாநி நசாஸ்பதம், ததாபி புருஷாகாரோ பக்தா நாம் த்வம் ப்ரகாசஸே’) என்றபடி
திவ்யாயுதங்கள் முதலியவற்றை அடியார் கட்காகவே ஏந்தியிராநின்றோம் என்று நினைத்திருக்கையாகிற
ஹருதயசுத்தியை யுடையவன் என்கை. “எனக்கு உருக்காட்டான்” என்கையாலே,
மீனுக்குத் தண்ணீர் வார்ப்பாரைப் போலே நித்யஸூரிகளுக்குக் காட்டுவான் என்ற உபாலம்பம் தோற்றும்.
வடிவின் வாசி யறியாத ஸம்ஸாரிகளுக்குக் காட்ட விருக்கிறானோ? என்றுமாம்.

உள்ளம் புகுந்து நைவிக்கிறபடி எங்ஙனேயென்னில்’ இங்கே பெரியவாச்சான்பிள்ளை அருளிச்செய்கிறபடி பாரிர்-
“நெஞ்சிலே புகந்து மறக்கவொண்ணாதபடி பண்ணும்’ ஸந்நிஹிதரைப்போலே ப்ரகாசித்தவாறே அணைக்கக் கைநீட்டி,
கைக்குள் அகப் படாமையாலே நோவு பட்டு, பின்னையும் முடிந்து பிழைக்கவும் பெறாதே
‘க்ஷணிக பதார்த்தம் போலே முடிவது ஜீவிப்பதாய்க் கொண்டு உருவ நோவுபட்டுச் செல்லா நிற்குமாய்த்து’
இப்படி துடிக்கவிட்டு இதுதானே போது போக்காயிரா நின்றான்.” என்று.

நாளும் உயிர் பெய்து
முக்கோணங்கட்டிக் குற்றவாளிகளை யடிக்கும்போது உயிர் போகும் தருணமானவாறே சேவகர்கள்
அவனுக்குத் தண்ணீர் வார்த்துத் தேறுதலை யுண்டாக்கிக் கொஞ்சம் ஸுதாரித்தவாறே பழையபடியே
தண்ணீரைக் கொடுத்துத் தேற்றுவித்து அடிப்பார்கள்’ அதுபோல முடியப்போகிற உயிரை மறுபடியும் உண்டாக்கி
வருத்துகிறான் என்று அழகிய மணவாளச்சீயர் அருளிச் செய்யும்படி.

செண்பகப்பூ மலர்கோதி ஸ்ரீ இங்கு, பூ என்றது ஸாமாநய சப்தம்’
ஸாரமும் அஸாரமுமான ஸமுதாயம் அதிலே மலர்என்றது ஸாராம்சம்.
கோதுதல் கொந்துதல்.

வெள்ளை விளி சங்கு இடம் கையில் கொண்ட விமலன் எனக்கு உருக் காட்டான்
தன்னை எம்பெருமான் நோவு படுத்துகிற படியை அருளிச் செய்கிறாள்
கார்முகில் போல் கரிய திரு மேனிக்கு பரபாக
வெண்மையை யுடைத்தாய்
என்னைப் போல் நீங்களும் கைங்கர்யம் பண்ண வாருங்கோள்-என்று
அழைப்பது போன்ற முழக்கத்தை யுடைத்தான ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை இடத் திருக்கையிலே
ஏந்தி இரா நின்றுள்ள எம்பெருமான் தன்னைக் காண்கையிலே மிக்க ஆசை உள்ள
எனக்குத் தன் திரு உருவத்தைக் காட்டாதே மறைத்து நின்றான்

உள்ளம் புகுந்து என்னை நைவித்து நாளும் உயிர்ப்பெய்து கூத்தாட்டுக் காணும்
அவன் இப்படி உபேஷிக்கையிலே அவ உருவத்தை மறந்து பிழைப்போம் என்று பார்த்தாலோ
அது செய்யவும் ஒட்டுகிறிலன்
என்னுடைய ஹிருதயத்தின் உள்ளே வந்து புகுந்து
நினை தொறும் சொல்லும் தொறும் நெஞ்சு இடிந்து உகும் -என்கிறபடியே சைதில்யத்தை யுண்டாக்கி
அந்த தளர்த்தியாலே உயிர் மாயும் அளவான நிலைமை நேர்ந்தவாறே
இவ்வளவோடு இவளை முடிந்து பிழைக்க ஓட்டலாமோ
இன்னும் நெடு நாளைக்கு துன்பம் படுத்த வேண்டாவா -என்று எண்ணி
மறுபடியும் உயிரை சிறிது தலை எடுக்கச் செய்து
பழையபடி ஹிம்சிப்பதாய் இப்படி துடிக்க விட்டு
இதுவே போது போக்காய் இரா நின்றாள் –
ஒ குயிலே
நான் இப்படி நோவு படா நிற்க
நீ ஆனந்தமயமாக இசை பாடிக் கொண்டு போது போக்குவது நியாயம் தானா

கள்ள விழ் செண்பகப் பூ மலர்க் கோதிக் களித்து இசை பாடும் குயிலே –
தேன் பெருகா நின்றுள்ள செண்பகப் பூவிலே
அசாரமான அம்சத்தைக் கழித்து
சாரமான பாகத்தை அனுபவித்து
அவ வனுபவத்தால் உண்டான களிப்பு உள் அடங்காமல்
அதற்குப் போக்கு விட்டு இசை பாடிக் கொண்டு இருக்கிறாயே
இதுவோ நன்மை

நான் படும் துயரத்தை பரிஹரித்த பின்பு அன்றோ நீ களிக்க வேண்மும்
உனக்காக நான் செய்யத் தக்கது என்ன -என்று கேட்கிறாயா –
மெள்ள இருந்து மிழற்றி மிழற்றாது என் வேங்கடவன் வரக் கூவாய் –
எப்போதும் என் அருகே இருந்து கொண்டு
அவ்யக்த மதுரமாக
மென் சொற்களை சொல்லுவதும்
விலாச சேஷ்டிதங்களைப் பண்ணுவதுமாய் இருக்கிறாயே
இந்த இருப்பைத் தவிர்ந்து
பிராட்டியைக் கைப்பிடிப்பதற்க்காக ஸ்ரீ மிதிலையிலே புறச் சோலையிலே வந்து தங்கி இருந்தால் போலே
திரு மலையிலே வந்து இரா நின்ற பெருமானை இங்கனே நாலடி நடந்து வரும்படியாக
நீ கூவ வேணும் -என்று வேண்டுகிறாள்

முதல் அடியில் -விமலன் -என்றது
நதேரூபம் நசாகாரோ நாயுதானி நசாச்பதம் ததாபி புருஷாகாரோ பக்தா நாம் தவம் பிரகாசசே -என்றபடி
அடியார்கட்காகவே திவயாயுதங்கள் முதலானவற்றை ஏந்தி
இரா நின்றோம் என்று நினைத்து இருக்கை ஆகிற ஹ்ருதய சுத்தியை யுடையவன் -என்கை-

எனக்கு உருக்காட்டான் -என்கையாலே
மீனுக்குத் தண்ணீர் வார்ப்பாரைப் போலே நித்ய சூரிகளுக்கு காட்டுவான் என்ற உபாலம்பம் தோற்றும்
வடிவின் வாசி அறியாத சம்சாரிகளுக்குக் காட்ட இருக்கிறானோ -என்றுமாம்
உள்ளம் புகுந்து நைவிக்கிற படி எங்கனே என்னில்
நெஞ்சிலே புகுந்து மறக்க பிரகாசித்த வாறே அணைக்கக் கை நீட்டி
கைக்குள்ளே அகப்படாமையாலே நோவு பட்டு
பின்னையும் முடிந்து பிழைக்கவும்பேராதே
ஷணிக பதார்த்தம் போலே முடிவது ஜீவிப்பதாகக் கொண்டு
உருவு நோவுபட செல்லா நிற்கும் ஆய்த்து
இப்படி துடிக்க விட்டு இது தானே போது போக்காய் இரா நின்றான் –

நாளும் உயிர்ப்பெய்து –
முக்கோணம் கட்டி குற்றவாளிகளை அடிக்கும் போது
உயிர் போகும் தருணம் ஆனவாறே சேவகர்கள் அவனுக்குத் தண்ணீர் வார்த்து
தேறுதலை யுண்டாக்கிக் கொஞ்சம் சூதாரித்த வாறே மறுபடியும் கட்டி அடிப்பார்கள்
மீண்டும் உயிர் போரும் தருணம் ஆனவாறே பழையபடி தண்ணீரை கொடுத்து தேற்றுவித்து அடிப்பார்கள்
அது போலே முடியப் போகிற உயிரை மறுபடியும் உண்டாக்கி வருத்துகிறாள்

செண்பகப் பூ மலர் கோதி
இங்கு பூ சாமான்ய சப்தம்
அதிலே மலர் என்றது சாராம்சம்
கோதுதல் கொந்துதல்-

———————————————————————————————-

மாதலி தேர் முன்பு கோல் கொள்ள மாயன் இராவணன் மேல் சரமாரி
தாய் தலை யற்று யற்று வீழத் தொடுத்த தலைவன் வர எங்கும் காணேன்
போதலர் காவில் புதுமணம் நாறப் பொறி வண்டின் காமரம் கேட்டு உன்
காதலியோடு உடன் வாழ் குயிலே என் கரு மாணிக்கம் வரக் கூவாய் —5-3-

பதவுரை

போது அவர் காலில்–சிறந்த பூக்கள் அலர்கின்ற சோலையிலே
புது மணம்–புதிதான பரிமளமானது
நாற–வீச
பொறி வண்டின்–அழகிய வண்டினுடைய
காமரம்–காமரம் என்கிற பண்ணை
கேட்டு–கேட்டுக் கொண்டு
உன் காதலியோடு உடன் வாழ் குயிலே–உன் பேடையோடு கூட வாழ்கிற குயிலே!
மாதலி –மாதலியானவன்
தேர் முன்பு (இராவணனுடைய) தேரின் முன்னே-
கோல் கொள்ள–கோலைக் கொண்டு தன் தேரை நடத்த
மாயன் இராவணன் மேல்–மாயாவியான ராவணன் மேலே
சரம் மாரி–பாண வர்ஷத்தை
தாய் தலை அற்று அற்று வீழ தொடுத்த–(அவ்விராவணனுடைய ப்ரதானமான தலை (பலகால்) அற்று அற்று விழும்படி ப்ரயோகித்த
தலைவன்–எம்பெருமானுடைய
வரவு -வரவை
எங்கும்–ஒரு திக்கிலும்
காணேன்–காண்கிறேனில்லை’
(ஆதலால்,)-
என்–என்னுடைய அநுபவத்துக்கு யோக்யனாய்
கரு மாணிக்கம்–நீல ரத்நம் போன்ற திருமேனியை யுடையனான அவ் வெம்பெருமான்
வர–இங்கே வரும்படியாக
கூவாய்–நீ கூவ வேணும்.

மாதலி யென்பவன் தேவேந்திரனுடைய தேர்ப்பாகன்’ எப்போதும் யுத்தக் களத்திலே இந்திரன்
முதுகு காட்டியோடுவது தவிர ஒருநாளும் நிலைத்துநின்று போர் செய்தறியானாகையாலே
அவனுடைய ஸாரதியான இந்த மாதலி ஒருநாளும் போர்க்களத்திலே தேர்முன்னே நின்று பாகுசெய்தறியான்’
அப்படிப்பட்டவன் இராமபிரானுடைய தேர்ப் பாகனாக அமைந்த போது தான் முன்னின்று கோல் கொள்ளும்படியான பாக்கியம் பெற்றான்.
அப்படி அவன் தேர்முன் நின்று கோல் கொள்ள, க்ருதிரிம யுத்தத்திலேயே கை தேர்ந்தவனான இராவணன் மேலே
அம்புகளை மழைபொழிந்தாற் போலே பொழிந்து அவனுடைய தலைகளை யெல்லாம் அறுத்தறுத்துத் தள்ளின
இராமபிரான் திடீரென்று எந்தத் திசையிலாவது வந்து தோன்றுவனா? என்று நான் சுற்றுங்காணாநின்றாலும்
அவன் ஒருதிக்கிலும் வந்து தோன்றுகின்றானில்லையே!

குயிலே நீயோ என்துயரை நோக்குகின்றாயில்லை’ மலர்ந்த புஷ்பங்கள் நிறைந்த சோலையானது
நமக்கு வாய்ப்பாகக் கிடைத்து விட்டதென்று இந்தச் சோலையிலே இருந்துகொண்டு
சிறந்த புஷ்ப வாஸனையை அநுபவித்துக் கொண்டும், ‘காமரம்’ என்னும் பண்ணைப் பாடித் திரிகிற வண்டுகளின்
ஸங்கீத ஸாரஸ்யத்தை அநுபவித்துக் கொண்டும் பேடையைவிட்டு ஒரு க்ஷணகாலமும் பிரியாமல் நித்ய ஸம்ச்லேஷமாய்
இதுவே ஆநந்தமாக என்னைப்பற்றிச் சிறிதும் கவலையின்றியே கிடக்கிறாயே! இதுவா தகுதி?
அவ்வெம்பெருமான் இங்கே வரும்படி ஒருவிசை கூவினால் உன் வாய்முத்து உதிருமோ? என்செல்வமே!
அப்படி ஒருகால் கூவிக்கான் என்று வேண்டுகிறாளாய்த்து.

மாதலி – வடசொல். கோல்-குதிரைகளை நடத்துங் கருவி.
மாயனிராவணன்= ஸ்ரீ மாயாமிருகத்தை (மாரிசனை)ப் போகவிட்டுப் பிரிப்பதும், தான் கபடஸந்நியாசி வேஷம் பூண்டு போய்ப்
பிராட்டியைக் கவர்வதுமான பல வஞ்சகக் செயல்களிலே வல்லவன்.
சரம் – பாணம்’ தற்சமவடசொல்.
“தாய் தலை” என்பதற்கு “ப்ரதானமான தலை” என்று பெரிவாச்சான் பிள்ளை கூறியிருத்தலால்,
“தாய்த்தலை” என்று தகரம் மிகாதொழிந்தது எதுகையின்பம் நோக்கியா மென்று கொள்க.
அற்றற்றுலீழ = “திருச்சரங்கள் பண்ணின பாக்யத்தாலே (கலை) அறுக்கவறுக்க முளைத்தாய்த்த’ பின்னை
அதுதானே போது போக்காக நின்று கொன்றானாய்த்து. அப்படி முளைத்ததில்லையாகில், திருச்சரங்களின் வரவு
இவனால் அடக்கப் போகாதே.” என்பது வியாக்கியான ஸூக்தி.
“வரவெங்கும்” என்றவிடத்து வர என்றும் பதம்பிரிக்கலாம் – எங்கும் வரக் காணேன் .

மாதலி தேர் முன்பு கோல் கொள்ள-
தேவேந்தரன் தேர் பாகன் மாதலி
இந்த்ரன் புற முதுகு காட்டி ஓடுவது தவிர நிலைத்து நின்று போர் புரியாததால்
தேர் முன்னே நின்று பாகு செய்து அறியான்
இராம பிரானுடைய தேர்ப்பாகனாக அமைந்த போது தானே முன்னிற்று கோல் கொள்ள பாக்கியம் பெற்றான் –

மாயன் இராவணன் மேல் சரமாரி தாய் தலை யற்று யற்று வீழத் தொடுத்த தலைவன்-
க்ருத்ரிம யுத்தத்திலே கை தேர்ந்தவனான இராவணன் மேலே –
மாயாமிருகம் மாரீசனை போக விட்டு பிரிப்பதும்
கபட சந்நியாசி வேடம் கொண்டு பிராட்டியை கவர்வதுமான
பல வஞ்சகச் செயல்களில் வல்லவன்
அம்புகளை மழை பொழிந்தால் போலே பொழிய
அவனுடைய தலைகளை எல்லாம் அறுத்து அறுத்து தள்ளின
இராமபிரான் திடீர் என்று எந்த திசையிலாவது வந்து தோன்றுவானா என்று –
தாய் தலை-பிரதானமான தலை
அற்று அற்று வீழ
திருச் சரங்கள் பண்ணின பாக்யத்தாலே தலை அறுக்க அறுக்க முளைத்தது ஆய்த்து
அது தானே போது போக்காக நின்று நின்றான் ஆய்த்து
அப்படி முளைத்தது இல்லை யாகில் திருச் சரங்களின் வரவு இதனால் அடக்கப் போகாதே –

வர எங்கும் காணேன் –
நான் சுற்றும் காணா நின்றாலும்
அவன் ஒரு திக்கிலும் வந்து தோன்றுகிறான் இல்லையே –
எங்கும் வரக் காணேன் –

போதலர் காவில் புதுமணம் நாறப் பொறி வண்டின் காமரம் கேட்டு உன் காதலியோடு உடன் வாழ் குயிலே
குயிலே நீயோ
என் துயரை நோக்குகின்றே இல்லை
மலர்ந்த புஷ்பங்கள் நிறைந்த சோலையானது
நமக்கு வாய்ப்பாக கிடைத்து விட்டது என்று இந்த சோலையிலே இருந்து கொண்டு
சிறந்த புஷ்ப வாசனையை அனுபவித்துக் கொண்டும்
காமரம் -என்னும் பண்ணை பாடித் திரிகிற வண்டுகளின் சங்கீத சாரச்யத்தை அனுபவித்துக் கொண்டும்
பேடியை விட்டு ஒரு ஷண காலமும் பிரியாமல் நித்ய சம்ச்லேஷமாய்
இதுவே ஆனந்தமாக
என்னைப் பற்றி சிறிதும் கவலை இன்றியே கிடக்கிறாயே
இதுவோ தகுதி –
அவ்வெம்பெருமான் இங்கே வரும்படி ஒரு விசை கூவினால் உன் வாய் முத்து உதிருமோ
என் செல்வமே
அப்படி ஒரு கால் கூவிக்  காண் என்று வேண்டுகிறாள் ஆய்த்து –

குயிலே தொண்டர் அடிப் பொடி ஆழ்வார்
வண்டு -திருப் பாண் ஆழ்வார்
திரு வேங்கடத்தை பாட மன்றாடுகிறாள் ஆண்டாள் தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் இடம் –
என் கரு மாணிக்கம் வரக் கூவாய் –

———————————————————————————————–

என்புருகி இனவேல் நெடும் கண்கள் இமை பொருந்தா பல நாளும்
துன்பக் கடல் புக்கு வைகுந்தன் என்பதோர் தோணி பெறாது உழல்கின்றேன்
அன்புடையாரைப் பிரிவுறு நோயது நீயுமறிதி குயிலே
பொன்புரை மேனிக் கருளக் கொடி யுடைப் புண்ணியனை வரக் கூவாய்–5-4-

பதவுரை

குயிலே!–ஓ குயிலே!
என்பு உருகி–எலும்புகள் உருகிப் போனதுமல்லாமல்
இனம் வேல் நெடு கண்கள் இமை பொருந்தா–சிறந்த வேல் போன்ற விசாலமான கண்களும் மூடிக் கிடக்கின்றன வில்லை’
பல நாளும்–நெடுங்காலமாக
துன்பம் கடல் புக்கு–விச்லேஷ வ்யஸநமாகிற கடலிலே அழுந்தி
வைகுந்தன் என்பது ஓர் தோணி பெறாது–ஸ்ரீவைகுண்டநாதன் என்கிற ஒரு தோணியை அடையப் பெறாமல்
உழல்கின்றேன்–அக்கடலுக்குள்ளேயே தட்டித் தடுமாறிக் கொண்டிராநின்றேன்:
அன்பு உடையாரை பிரிவுறும் நோய் அது–அன்பர்களைப் பிரிவதனாலுண்டாகும் துக்கத்தை
நீயும் அறிதி நீயும் அறிவாயன்றோ?–பொன் போன்ற மேனியை யுடையனாய்
பொன் புரை மேனி–கருடனைக் கொடியாக வுடையவனான
கருளன் கொடி உடை–“தர்மமே வடிவெடுத்தவன்” என்னப் படுகிற கண்ண பிரானை
புண்ணியனை
வர கூவாய்–இங்கே வரும்படி கூவு

குயிலே! எம்பெருமானைப் பிரிந்தனாலே எனக்குண்டான க்லேஸம் மேலெழத் தோல் புரையே போமதன்று’
எலும்புங் கூட உருகும்படியாயிரா நின்றது’ அவ்வளவேயா, ஒருநொடிப் பொழுதும் கண் உறங்குவதுமில்லை.
(‘அநித்ரஸ் ஸததம்ராம:’) என்றும்
“உண்ணாதுறங்காது” என்றும்- என்னைப் பிரிந்து அவன் பட வேண்டிய பாட்டை நானன்றோ இப்போது படர நின்றேன்.
இப்படி கழிவது ஒருநாளா இரண்டு நாளா? பலநாளாகவே பிரிவாற்றாமையிகிற துக்க சாகரத்திலே யழுந்தி
அந்த ஸாகரத்தைக் கடத்தவல்ல “விஷ்ணு போதம்” என்று ப்ரஸித்தமானதொரு தோணியைப் பெறாது வருந்திக் கிடக்கின்றேன் காண்.

‘என்ன தான் விச்லேஷம் நேர்ந்தாலும் இப்படிகூட நோவுபடலாமோ?’ என்று நினைக்கிறயோ,
அப்படி நினையாதே கொள்’ ஏதோ பாக்யத்தாலே இன்று நீ ழூ தூரிவிரியமலருழக்கித் துணையோடும் பிரியாதேயிருந்தாயாகிலும்
‘ஸம்ச்லேஷா: விச்லேஷாந்தா: விச்லேஷா: ஸம்ச்லேஷாந்தா:” என்ற கணக்கிலே
இதற்கு முன்பு நீயும் பிரிந்து துன்பப்பட்டேயிருப்பாய்’
இனிமேலும் என்றைக்காவது உனக்குப் பிரிவு நேராதிருக்கப் போகிறதில்லை’
அப்போது நீ துன்பப்படாதிருக்கப் போகிறதில்லை’ ஆகையாலே அன்பர்களைப் பிரிந்தால்
துயரம் பொறுக்க முடியாதது தான் என்னும் விஷயத்திலே உனக்கு ஏற்கனவே வயத்பத்தி யிருப்பதனாலே
இப்போது நான் துன்பப்படுவதைப் பற்றி நீ அவஹேளநமாக ஒன்றும் நினைக்கலாகாது’
இத் துன்பத்தைத் தீர்க்குமுயாயமமே நீ செய்ய வேண்டும்’ அதாவது-
பெரியதிருவடியை த்வஜமாக வுடையனான அப்பெருமான் இங்கே எழுந்தருளும்படி கூவக்கடவை என்கிறாள்.

“பொன்புரை மேனி” என்றதைக் கருடனுக்கு விமோஷணமாக்கத் தகுமாயினும்
புண்ணியனுக்கே விமோஷணமாக்குவதில் ஸ்வாரஸ்யம் மிகும்.
“தன்னோடு கலந்தபோது பொன்போலே திகழ்கிறவடிவும் தானுமாக நின்ற நிலை’
பிரிந்தபோதும் வடிவு அப்படியேயிருக்கு மென்றிருக்கிறாள்’ பிரிந்தபோது அவனிருக்கும்படி தான் அறியாளே’
பிரிவாற்றாமையாலே நொந்து விவர்ணனாயிருந்தானாகில் குயிலின் காலிலே விழப்பார்த்திருக்குமோ?
வாரானோ என்றிருக்கிறாள். என்ற வியாக்கிமான ஸ்ரீஸூக்தியின் இனிமையைக் காண்மின்.

“கண்ணனென்பதோர் தோணிபெறாது என்னாமல் “வைகுந்தனென்பதோர் தோணிபெறாது” என்றதற்குக் கருத்தென்னென்னில்:
உகந்தருளின நிலங்களாகிய அர்ச்சாவதார ஸ்தலங்களிலேபோய் அநுபவிக்கப் பாரித்தேன்’
அங்கு, அணைத்தல் வார்த்தை சொல்லுதல் ஒன்றுங் கிடையாமையாலே
அப்படி பாரிமாறின விபவாவதாரங்களிலே நெஞ்சைச் செலுத்தினேன்’
அவை தீர்த்தம் ப்ரஸாதித்துவிட்டுக் கழிந்துபோனபடியாலே பரமயதநாதனளவிலே சென்றேன்-
அவனாகிலும் கிடைக்கக் கூடுமோவென்றுபார்த்தேன்’ அவனும் கிடைக்கப்பெற்றிலேன் என்கிறாள்.
(“நோய் அது.”) அது – முதல்வேற்றுமைச் சொல்லுருபு க்ருளன் + கொடி’ கருளக்கொடி.

புண்ணியனை
(‘ராமோ விக்ரஹவாந் தர்ம.’) என்றும்
(‘க்ருஷணம்தர்மம் ஸ்நாதநம்’) என்றும்,
‘அனந்தன் மேற்கிடந்த வெம்புண்ணியா!” என்றும் எம்பெருமானை ஸாக்ஷாத் யுண்ணியமாகச் சொல்லப்பட்டிருப்பது காண்க.

புண்ணியனை வர கூவாய்
“நான் பிறர்நோவுபடப் பொறுத்திருக்கமாட்டேன்’ இதுவே காண் நான் ஸாரமாகக் கொண்டிருக்கிற தர்மம்”
என்று சொன்னவராய்த்து அவர்’ அப்படி சொல்லியிருப்பதற்கும் இப்போது இப்படி செய்து போருவதற்கும்
சிறிதும் பொருத்த மில்லையே யென்று சொல்லிக் கூவாய் என்பதாகக் கருத்துரைப்பர்

என்புருகி இனவேல் நெடும் கண்கள் இமை பொருந்தா பல நாளும் துன்பக் கடல் புக்கு
குயிலே எம்பெருமானைப் பிரிந்ததனாலே எனக்கு உண்டான கிலேசம்
மேல் எழத் தோல் புரையே போமது அன்று
எலும்பும் கூட உருகும்படி இரா நின்றது
அவ்வளவேயோ
ஒரு நொடிப் பொழுதும் கண் உறங்குவதும் இல்லை
அநித்ரஸ் சததம் ராம –என்றும்
உண்ணாது உறங்காது -என்றும்
என்னைப் பிரிந்து அவன் பட வேண்டிய பாட்டை நான் அன்றோ இப்போது படா நின்றேன்
இப்படி கழிவது ஒரு நாளா இரண்டு நாளா
பல நாளாகவே துக்க சாகரத்திலே அழுந்தி –

வைகுந்தன் என்பதோர் தோணி பெறாது உழல்கின்றேன் –
அந்த சாகரத்தைக் கடக்க வல்ல
விஷ்ணு போதம் -என்று பிரசித்தமான தொரு தோணியைப் பெறாது வருந்திக் கிடக்கின்றேன் காண் –
என்னதான் விச்லேஷம் நேர்ந்தாலும் இப்படி கூட நோவு படலாமோ -என்று நினைக்கிறாயோ –

அன்புடையாரைப் பிரிவுறு நோயது நீயுமறிதி குயிலே
அப்படி நினையாதே கொள்-
ஏதோ பாக்யத்தால் இன்று நீ
தூ விரிய மலர் உழுக்கித் துணை யோடும் பிரியாதே இருந்தா யாகிலும்
சம்ச்லேஷ விச்லேஷாந்தர விச்லேஷ சம்ச்லேஷாந்தர -என்ற கணக்கிலே
இதற்கு முன்பு நீயும் பிரிந்து துன்பப் பட்டே இருப்பாய்
இனி மேலும் என்றைக்காவது உனக்கு பிரிவு நேராது இருக்கப் போகிறது இல்லை
ஆகையாலே அன்பர்களைப் பிரிந்தால் துயரம் பொறுக்க முடியாதது தான்
என்னும் விஷயத்தில் உனக்கு ஏற்கவே வ்யுத்புத்தி இருப்பதினாலே
இப்போது நான் துன்பப் படுவது பற்றி நீ அவஹேளநமாக ஒன்றும் நினைக்கலாகாது
இத்துன்பத்தை தீர்க்கும் உபாயமே நீ செய்ய வேண்டும்

பொன்புரை மேனிக் கருளக் கொடி யுடைப் புண்ணியனை வரக் கூவாய் –
அதாவது –
பெரிய திருவடியை த்வஜமாக யுடையனான அப்பெருமான் இங்கே
எழுந்து அருளும் படி கூவக் கடவை –
பொன்புரை மேனி -என்றதைக்
கருடனுக்கு விசேஷணம் ஆக்கத் தகுமாயினும்
புண்ணியனுக்கே விசேஷணம் ஆக்குவதில் சுவாரஸ்யம் மிகும்
தன்னோடு கலந்த போது பொன் போலே திகழ்கிற வடிவும் தானுமாக நின்ற நிலை
பிரிந்த போதும் வடிவு அப்படியே இருக்கும் என்று இருக்கிறாள்
பிரிந்த போது அவன் இருக்கும் படி தான் அறியாளே
பிரிவாற்றாமையாலே நொந்து விவர்ணனாய் இருந்தான் ஆகில் குயிலின் காலிலே விழப் பார்த்து இருக்குமோ
வாரானோ -என்று இருக்கிறாள் –

கண்ணன் என்பதோர் தோணி பெறாது -என்னாமல்
வைகுந்தன் என்பதோர் தோணி பெறாது -என்றதற்கு கருத்து
உகந்து அருளின நிலங்களில் -அர்ச்சாவதார ஸ்தலங்களில் போய் அனுபவிக்கப் பாரித்தேன்
அங்கு அணைத்தல் வார்த்தை சொல்லுதல் ஒன்றும் கிடையாமையாலே
அப்படி பரிமாறின விபவ வவதாரந்களிலே நெஞ்சை செலுத்தினேன்
அவை தீர்த்தம் பிரசாதித்து விட்டு கழிந்து போன படியாலே
பரம பத நாதன் அளவில் சென்றே
அவனாகிலும் கிடைக்கக் கூடுமோ என்று பார்த்தேன்
அவனும் கிடைக்கப் பெற்றிலேன் –

புண்ணியனை
ராமோ விக்ரஹவான் தர்ம
க்ருஷ்ணம் தர்மம் சனாதனம்
அனந்தன் மேல் கிடந்த எம் புண்ணியா -என்றும்
எம்பெருமானை சாஷாத் புண்ணியமாக சொல்லப் பட்டு இருப்பது காண்க

புண்ணியனை வரக் கூவாய் –
நான் பிறர் நோவு படப் பொறுத்து இருக்க மாட்டேன்
இதுவே காண் நான் சாரமாகக் கொண்டு இருக்கிற தர்மம் -என்று சொன்னவர் ஆய்த்து அவர் –
அப்படி சொல்லி இருப்பதற்கும்
இப்போது இப்படி செய்து போருவதற்க்கும்
சிறிதும் பொருத்தம் இல்லை என்று சொல்லிக் கூவாய்-

———————————————————————————————–

மென்னடை அன்னம் பரந்து விளையாடும் வில்லி புத்தூர் உறைவான் தன்
பொன்னடி காண்பதோர் ஆசையினால் என் பொரு கயல் கண் இணை துஞ்சா
இன்னடிசிலொடு பாலமுதூட்டி எடுத்த வென் கோலக் கிளியை
உன்னோடு தோழமைக் கொள்ளுவன் குயிலே உலகளந்தான் வரக் கூவாய்–5-5-

பதவுரை

மெல்நடை அன்னம்-மந்தகதி யுடைய அன்னப் பறவைகள்
பரந்து –எங்கும் பரவி
விளையாடும்–விளையாடுவதற்கு இருப்பிடமான
வில்லிபுத்தூர்–ஸ்ரீவில்லிபுத்தூரிலே
உறைவான் தன்–எழுந்தருளி யிருக்கிற எம்பெருமானுடைய
பொன் அடி–அழகிய திருவடிகளை
காண்பது ஓர் ஆசையினால்–காண வேணுமென்றுண்டான ஆசையினாலே
பொரு கயல் என் கண் இணை–சண்டையிடும் இரண்டு கெண்டைகள் போன்ற எனது கண்கள்
துஞ்சா –உறங்குகின்றனவில்லை
குயிலே–ஓ குயிலே!’
உலகு அளந்தான்–(த்ரிவிக்ரமனாய்) உலகங்களை அளந்த பெருமான்
வர — இங்கே வரும்படி
கூவாய் கூவு’
(அப்படி கூவுவாயாகில்)
இன் அடிசிலொடு பால் அமுது ஊட்டி எடுத்த என் கோலம் கிளியை–கன்ன லமுதையும் பாலமுதையும்
ஊட்டி வளர்க்கப் பெற்ற எனது அழகிய கிளியை
உன்னோடு–உன்னோடே
தோழமை கொள்ளுவன்–ஸ்நேஹப் படுத்தி வைப்பேன்.

பரமபதத்திலே நித்யஸூரிகளுக்கு காட்சிகொடுத்துக் கொண்டு இருக்கக் கடவனான எம்பெருமான்
அவ்விருப்பை விட்டு என்னைப் போன்ற வஸ்துக்களைப் பார்த்துப்கொண்டு போது போக்துவதற்காகவன்றோ
ஸ்ரீவில்லிபுத்தூரிரிலே எழுந்தருளினான்’ என்னுடைய நடைபோன்ற நடை படைத்த அன்னப்பறவைகள்
நாற்புறமும் நிறைந்து விளையாடப்பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூரிரில் அவன் எழுந்தருளியிருந்து
தன் கண்களின் பட்டினியை ஒருவாறு தீர்த்துக்கொண்டான்; அது போல என் கண்களின் பட்டினியும் தீரவேண்டாவோ?
அவனுடைய கண்களானவை என்னை ஸாக்ஷாத்தாகப் பாராமல் என்னோடு ஸஜாதீயங்களான வஸ்துக்களைப்
பார்த்தாலுங்கூட பட்டினி தீரும்படியா யிருக்கின்றன; என்னுடைய கண்களோ வென்றால் அப்படிக்கன்றி
அவனுடைய திருவடிகளையே ஸாக்ஷாத்தாக ஸேவிக்கவேணு மென்று ஆவல் கொண்டு அந்த ஆவல்
நிறைவேறப் பெறாமையினாலே ஒரு க்ஷணமும் துஞ்சுகின்றனவில்லை யென்கிறாள்- முன்னடிகளில்.

இவ்விடத்திலே நம்பிள்ளைக்கும் நஞ்சீயர்க்கும் ஒருஸம்வாதமுண்டு’
“கீழ்ப்பாட்டில் ‘வைகுந்தனென்யதோர் தோணிபெறாதுழல்கின்றேன்’ என்று சொன்னது பொருந்தும்’
ஸ்ரீவைகுண்டம் ஆண்டாளுக்கு எட்டாத நிலமாகையாலே அவ்வைகுந்தனைப் பெறுவதற்கு இயலாமல் வருந்துவது தகும்’
இப்பாட்டிலோ வென்றால் ‘வில்லிபுத்தூரிருன்றவான்றன் பொன்னடி காண்யதோ ராசையினால்” என்கிறாள்’
அவ்வூரிலேயே பிறந்து வளருமாவளான இவளுக்கு அவ்வெம்பெருமானுடைய
பொன்னடியைக் காண்பதில் என்ன அருமை? காதமா இருகாதமா?’
நாலடியளவிலேயிருக்கின்ற கோயிலுனுள்ளே நினைத்தபோதெல்லாம் போய்ப்புகுந்து யதேஷ்டமாகப் பறிமாறலாமன்றோ!

ஆயிருக்க, ஸ்ரீவில்லிபுத்தூரிரெம்பெருமானுடைய திருவடிகளை ஸேவிக்கப்பெறாமல் என்கண்கள்
விடாய்த்துப் போயினவென்று இவள் சொல்லுவது எப்படி பொருந்தும்?” என்று நஞ்சீயர் ஸந்நிதியிலே
நம்பிள்ளை விண்ணப்பஞ்செய்ய அதற்கு நஞ்சீயர் உத்தரம் அருளிச்செய்ததென்னனில்’
“நீர்கேட்டது அழகியதே’ ஆண்டாள் ஸ்ரீவில்லிபுத்தூரிரிலேயே பிறந்து வளருமவளாயினும் வில்லிபுத்தூரிருறைவானுடைய
ஸந்நிதியிலே சென்று புகுவது அவளுக்கு எளிதாகக் கைகூடுமதன்று’
நாமெல்லாம் கோவிலுக்குப் போய்வந்தால் சித்தவிகாரமென்பது சிறிதுமில்லாமல் கல்போலவே போய்க் கல் போலவே திரும்பிவருகிறோம்’
குறிபழியமாட்டோம்’ ஆண்டாளுடைய ப்ரக்ருதி அப்படிப்பட்டதல்ல காணும்’
உள்ளே புகுந்தவாறே அவ்வெம்பெருமானுடைய சீலகுணத்தை அநுஸந்தித்து அதிலே ஆழங்காற்பட்டு
பரதாழ்வானைப்போலே மோஹிப்பவளாய்த்து

இப்படிப்பட்ட ப்ரக்ருதியைத் தெரிந்துகொண்டிருக்கும் இவளது உறவினர் இவளைக் கோவில் வழி நாடவொட்டார்கள்.
‘குழையும் வாண்முகத்தேழையைத் துலைவில்லிமங்கலங்கொண்டுபுக்கு,
இழைகொள்சோதிச் செந்தாமரைக் கட்பிரானிருந்தமைக்காட்டினீர்;’ என்ற பாசுரம் உமக்குத் தெரியாததன்றோ’
இவளைக் கோவிலுக்கு அழைத்துக் கொண்டு போய்ப் பெருமாளை ஸேவிக்கச் செய்து அதனால் சித்த விகாரத்தை யுண்டாக்கி
‘அநியாயமாகக் குழந்தையைக் கோவிலுக்கு அழைத்துக் கொண்டு போய் வலையிலகப்படுத்தி இழந்தீர்களே!” என்று
நாலு பேர் வசை கூறும்படி யாவதிற் காட்டில் இவளைக் கோவில் வழி நோக்கவொட்டாமற்செய்வதே க்ஷேமவென்று நினைத்துத்
தாய்தந்தையர் இவளை அகத்தினுள்ளேயே அடக்கி வைத்திருப்பார்களாகையாலே
‘வில்லிபுத்தூரிருறைவான்றன் பொன்னடிகாண்பதோராசையினால் என்பொருகயற் கண்ணிணை துஞ்சா’ என்று
சொன்னது பொருத்தமுடையதுதான்” என்று அருளிச் செய்தாராம்.

வில்லிபுத்தூரிருறைவான்றன் பொன்னடி-
பரமபதநாதனுடைய பொன்னடிகளை ஸேவிக்கப் பெறாமைபற்றி இவளுக்கு வருத்தமில்லை.
அது தூரஸ்தமாகையாலே கிடைக்கப் பெற்றதில்லையென்று ஆறியிருக்கலாம்’
மீனுக்குத் தண்ணீர் வார்ப்பதுபோலல்லாமல் விடாய்த்தவர்கட்கெல்லாம் தண்ணீர் வார்ப்பது போல,
காண வாசைப்பட்டவர்கட்கெல்லாம் காட்சி தருவதற்கென்றே வந்தருளினவிடத்தில்
காணப்பெறாதொழிந்தால் பாரிதாபம் பேச்சுக்குநிலமாகுமோ?.

இவள் இப்படிபாரிதாபம்தோற்றச் சொன்னதைக்கேட்ட குயில்
‘அம்மா! நீ பாரிதபிப்பது உண்மைதான்’ இதற்கு நான் என்னசெய்யக்கூடும்?
உன்னை நான் கோவிலுக்கு அழைத்துக்கொண்டு போகக்கூடுமோ?
என்னால் செய்யக்கூடியது ஏதேனுமுண்டாகில் சொல்லிக்காண்” என்ன’
அவ்வெம்பெருமான் இங்கே எழுந்தருளும்படியாகக் கூவாய் என்றாள்’

அதற்குக் குயில் சொல்லிற்று.
‘அம்மா! நீ இப்படியும் ஒரு ஆசை கொள்ளலாமா? அவ் வெம்பெருமான் இங்கே வருவதென்றால் அது லகுவான காரியமோ?
‘பெண்ணுலாஞ்சடையினானும் பிரமனுமுன்னைக் காண்பான், எண்ணிலாவூழியூத் தவஞ்செய்தார் வெள்கிநிற்ப’ என்றும்
(ஸமாஹிதைஸ்ஸாது ஸநந்தநாதிபிஸ் ஸுதுர்லபம் – வரதராஜஸ்தவம்) என்றும் உள்ள ப்ரமாணங்கள்
உனக்குத் தெரியாமையில்லையே’ பெருகப் பெருத்தவர்களெல்லாம் அவன் வரவை விரும்பிப் பெறாமல்
வெள்கியொழிந்தனர் என்னா நிற்க, உன்பக்கலிலேயோ அவன் வரப் போகிறான்?” என்றது’

அதற்குமேல் அவள் “உலகளந்தான் வரக்கூவாய்” என்கிறாள்.
வஸிஸ்ட சண்டான விபாகம் பண்ணாமலும் குணாகுணா நிரூபணம் பண்ணாமலும் எல்லாருடைய இருப்பிடத்திற்கும்
ஸங்கோசமின்றிச் சென்றவனாய்த்து அவன்’ உலகளந்தவன்றோ? தவம் செய்தார் வெள்கிநிற்கச் செய்தேயும்
விண்ணுளார் வியப்ப வந்து ஆனைக்கு அருளை யீந்தவனன்றோ; ஆகையாலே தவறாமல் வந்திடுவன்’ கூவு என்கிறாள்.

குயிலே! நெஞ்சு உலரும்படி கூவுகைக்கு ப்ரயோஜநம் ஒன்றுமில்லையோ? என்று கேட்பாயாகில்,
ப்ரயோஜநமும் செய்துவைக்கிறேன், பெறுவாய் என்கிறாள் – இன்னடிசிலோடு இத்யாதியால்.

குஹப்பெருமாள் சக்ரவர்த்தித்திரு மகனார்க்குச் செய்த பெருநன்றிக்கு அவர் இளையபெருமாளுடைய
தோழமையைக் கைம்மாறகச் செய்து தந்தாரென்று ப்ரஸ்ஸித்தம்,
“தஸ்மை ஸேளமித்ரிமை த்ரிமயமுபக்ருதவா நாதரம் நாவிகாய” என்றான் முராரியும்.
அப்படிபோல் ஆண்டாளும் தான் மிக்க அன்புடன் பாராட்டி வளர்த்த பைங்கிளியை
அக்குயிலோடு தோழமைகொள்விப்பதையே பெருத்த கைம்மாறாகக் கூறுகின்றன ளென்க.
கொள்ளுவன் ஸ்ரீ கொள்விப்பவன்.

மென்னடை அன்னம் பரந்து விளையாடும் வில்லி புத்தூர் உறைவான் தன்
பரம பதத்திலே நித்ய சூரிகளுக்கு காட்சி கொடுத்துக் கொண்டு இருக்கக் கடவனான எம்பெருமான்
அவ்விருப்பை விட்டு என்னைப் போன்ற வஸ்துக்களை பார்த்துக் கொண்டு
போது போக்குவதற்காக வன்றோ
ஸ்ரீ வில்லிபுத்தூரிலே எழுந்து அருளினான்
என்னுடைய நடை போன்ற நடை படைத்த அன்னப் பறவைகள்
நாற்புறமும் நிறைந்து விளையாடப் பெற்ற ஸ்ரீ வில்லி புத்தூரிலே அவன் எழுந்து அருளி இருந்து
தன் கண்களின் பட்டினியை ஒருவாறு தீர்த்துக் கொண்டான்
அது போலே என் கண்களின் பட்டினியும் தீர வேண்டாவோ –

பொன்னடி காண்பதோர் ஆசையினால் என் பொரு கயல் கண் இணை துஞ்சா
அவனுடைய கண்களானவை என்னை சாஷாத்தாகப் பாராமல்
என்னோடு சஜாதீயங்களான வஸ்துக்களைப் பார்த்தாலும் கூட
பட்டினி தீரும்படியாய் இருக்கின்றன
என்னுடைய கண்களோ என்றால் அப்படிக்கன்றி அவனுடைய திருவடிகளையே சாஷாத்தாக சேவிக்க வேணும் என்ற ஆவல் கொண்டு
அந்த ஆவல் நிறை வேறப் பெறாமை யினாலே
ஒரு ஷணமும் துஞ்சு கின்றனவில்லை –

இவ்விடத்தில் நம் பிள்ளைக்கும் நஞ்சீயருக்கும் ஒரு சம்வாதம் உண்டு
கீழ் பாட்டில் வைகுந்தம் என்பதோர் தோணி பெறாது உழல்கின்றேன் என்று சொன்னது பொருந்தும்
ஸ்ரீ வைகுண்டம் ஆண்டாளுக்கு எட்டாத நிலம் ஆகையாலே அவ வைகுந்தனைப் பெறுவதற்கு இயலாமல் வருந்துவது தகும் –
இப்பாட்டிலோ என்றால் வில்லி புத்தூர் உறைவான் தன் பொன்னடி காண்பதோர் ஆசையினால் -என்கிறாள்
அங்கேயே பிறந்து வளருமவளான இவளுக்கு அவ வெம்பெருமான் உடைய பொன்னடியைக் காண்பதில் என்ன அருமை –
காதமா இரு காதமா
நாலடி அளவில் இருக்கின்ற கோயிலின் உள்ளே நினைத்த போது எல்லாம் போய்ப் புகுந்து எதேஷ்டமாக பரிமாறலாம் அன்றோ
இப்படி இருக்க ஸ்ரீ வில்லிபுத்தூர் எம்பெருமான் உடைய திருவடிகளை சேவிக்கப் பெறாமல் என் கண்கள் விடாய்த்துப் போயின வென்று
இவள் சொல்லுவது எப்படி பொருந்தும் -என்று
நஞ்சீயர் சந்நிதியிலே நம்பிள்ளை விண்ணப்பம் செய்ய
அதற்கு நஞ்சீயர் உத்தரம் அருளிச் செய்தது யறேன் என்னில்
நீர் கேட்டது அழகியதே
ஆண்டாள் ஸ்ரீ வில்லி புத்தூரிலேயே பிறந்து வளருமவளாய்
இருந்தும் வில்லி புத்தூர் உறைவான் உடைய
சந்நிதியிலே சென்று புகுவது அவளுக்கு எளிதாகக் கை கூடுமதன்று
நாம் எல்லாம் கோயிலுக்கு போய் வந்தால் சித்த விகாரம் எனபது சிறிதும் இல்லாமல்
கல் போல போய் கல் போல திரும்பி வருகிறோம்
குறி அழிய மாட்டோம்
ஆண்டாள் உடைய பிரகிருதி அப்படிப் பட்டது அல்ல காணும்
உள்ளே புகுந்த வாறே அவ வெம்பெருமான் உடைய சீல குணத்தை
அனுசந்தித்து அதிலே ஆழம் கால் பட்டு
பாரத ஆழ்வானைப் போலே மோஹிப்பவள் ஆய்த்து –
இப்படிப் பட்ட பிரக்ருதியைத் தெரிந்து கொண்டு இருக்கும் இவள் உறவினர்
இவளை கோயில் வழி நாட ஒட்டார்கள் –
குழையும் வாண் முகத்தேழையைத் துலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு
இழை கொள் சோதிச் செந்தாமரைக் கண் பிரான் இருந்தமை காட்டினீர் -என்ற
பாசுரம் உமக்குத் தெரியாமை அன்றே
இவளைக் கோயிலுக்கு அழைத்துக் கொண்டு போய் பெருமாளை சேவிக்கச் செய்து
அதனால் சித்த விகாரத்தை உண்டாக்கி
அநியாயமாக குழந்தையைக் கோவிலுக்கு அழைத்துக் கொண்டு போய் வலையில் அகப்படுத்தி
இழந்தீர்களே என்று நாலு பேர் வசை கூறும்படி ஆவதில் காட்டில்
இவளை கோயில் வழி நோக்க ஒட்டாமலேயே செய்வதே ஷேமம் என்று நினைத்து தாய் தந்தையர்
இவளை அகத்தினுள்ளே அடக்கி வைத்து இருப்பார்கள் ஆகையாலே
வில்லி புத்தூர் உறைவான் தன் பொன்னடி காண்பதோர் ஆசையினால்
என் பொரு கயல் கண்ணினை துஞ்சா என்று சொன்னது பொருத்தமுடையது தான் -என்று அருளிச் செய்தாராம்-

வில்லிபுத்தூர் உறைவான் தன் பொன்னடி –
பரம பத நாதன் உடைய பொன்னடிகளை சேவிக்கப் பெறாமை பற்றி இவளுக்கு வருத்தம் இல்லை
அது தூரச்தம் ஆகையாலே கிடைக்கப் பெற்றது இல்லை என்று ஆறி இருக்கலாம்
மீனுக்குத் தண்ணீர் வார்ப்பது போலே அல்லாமல்
விடாய்த்தவர்க்கு எல்லாம் தண்ணீர் வார்ப்பது போலே
காண ஆசைப் பட்டவர்கட்கு எல்லாம் காட்சி
தருவதற்கு என்றே வந்து அருளின இடத்தில் காணப் பெறாது ஒழிந்தால்
பரிதாபம் பேச்சுக்கு நிலம் ஆகுமோ

இவள் இப்படி பரிதாபம் தோற்றச் சொன்னதைக் கேட்ட குயில்
அம்மா நீ பரிதபிப்பது உண்மை தான்
இதற்கு நான் என்ன செய்யக் கூடும்
உன்னை நான் கோயிலுக்கு அழைத்துக் கொண்டு போகக் கூடுமோ
என்னால் செய்யக் கூடியது ஏதேனும் உண்டாகில் சொல்லிக் காண் -என்ன
அவ்வெம்பெருமான் இங்கே எழுந்து அருளிம்படியாக கூவாய் -என்றால்
அதற்கு குயில் சொலிற்று
அம்மா நீ இப்படியும் ஆசை கொள்ளலாமா
அவ்வெம்பெருமான் இங்கே வருவது என்றால் அது இலகுவான கார்யமோ
பெண்ணுலாம் சடையினானும் பிரமனும் உன்னைக் காண்பான்
எண்ணிலா ஊழி ஊழித் தவம் செய்தார் வெள்கி நிற்ப -என்றும்
சமாஹிதைஸ் சாநு ச நந்த நாதிபிஸ் ஸூ துர்லபம் -வரதராஜ ஸ்தவம்-என்றும்
உள்ள பிரமாணங்கள் உனக்குத் தெரியாமை இல்லையே
பெருப் பெருத்தவர்கள் எல்லாம் அவன் வரவை விரும்பிப் பெறாமல் வெள்கி ஒழிந்தார்-ஏன்னா நிற்க
உன் பக்கலிலேயோ அவன் வரப் போகிறான் -என்றது
அதற்கு மேல் அவன் -உலகு அளந்தான் வரக் கூவாய் -என்கிறாள்
வசிசிஷ்ட சண்டாள விபாகம் பண்ணாமலும்
குணாகுண நிரூபணம் பண்ணாமலும் எல்லார் உடைய இருப்பிடத்திற்கும் சங்கோசம் இன்றிச் சென்றவன் ஆய்த்து அவன் உலகு அளந்தவன் அன்றோ
தவம் செய்தார் வெள்கி நிகச் செய்தேயும் விண்ணுளார் வியப்ப வந்து ஆனைக்கு அருளை ஈந்தவன் அன்றோ
தவறாமல் வந்திடுவன்
கூவு என்கிறாள் –
குயிலே நெஞ்சூலரும்படி கூவுகைக்கு பிரயோஜனம் ஒன்றும் இல்லையோ என்று கேட்பாய் ஆகில்
பிரயோஜனமும் செய்து வைக்கிறேன் -பெறுவாய் -என்கிறாள் –
இன்னடிசிலொடு பாலமுதூட்டி எடுத்த வென் கோலக் கிளியை
உன்னோடு தோழமைக் கொள்ளுவன் குயிலே உலகளந்தான் வரக் கூவாய் –
குஹப் பெருமாள் சக்கரவர்த்தி திரு மகனாற்க்குச் செய்த பெரு நன்றிக்கு
அவர் இளைய பெருமாள் உடைய தோழைமை யை
கைமாறாகச் செய்து தந்தார் என்று பிரசித்தம்
தஸ்மை சௌ மித்ரிமை த்ரீ மயமுபக்ருதவா நாதரம் நாவிகாய -என்றான் முராரியும்
அப்படி போலே ஆண்டாளும் தான் மிக்க அன்புடன் பாராட்டி வளர்த்த
பைங்கிளியை அக் குயிலோடு தோழமை கொள்விப்பதையே பெருத்த கைம்மாறாக கூறு கின்றனள் என்கை
கொள்ளுவன் -கொள்விப்பன்-

——————————————————————————————————-

எத்திசையும் அமரர் பணிந்து ஏத்தும் இருடீகேசன் வலி செய்ய
முத்தன்ன வெண் முறுவல் செய்ய வாயும் முலையும் அழகு அழிந்தேன் நான்
கொத்தலர் காவில் மணித் தடம் கண் படை கொள்ளும் இளங்குயிலே
என் தத்துவனை வரக் கூவிற்றி யாகிற்றிலை யல்லால் கைம்மாறு இலேனே –5-6-

பதவுரை

கொத்து–பூங்கொத்தானவை
அலர்–மலருமிடமான
காவில்–சோலையிலே
மணி தடம்–அழகானவொரு இடத்திலே
கண் படை கொள்ளும்–உறங்குகின்ற
இளங்குயிலே!
எத் திசையும் — எல்லா திக்குகளிலும்
சிறுகுயிலே!’
அமரர் பணிந்து ஏத்தும்–தேவர்கள் வணங்கித் துதிக்கும்படியான பெருமை வாய்ந்த
செய்ய வாயும்–சிவந்த அதரமும்
முலையும்–முலைகளும் (ஆகிய இவை
அழகு அழிந்தேன்–அழகு அழிந்ததாம்படி விகாரப்பட்டேன்’
என் தத்துவனை–நான் உயிர்தரித்திருப்பதற்கு மூல காரணமான அவ் வெம்பெருமானை
இருடீகேசன்–கண்டாருடைய இந்திரியங்களை யெல்லாம் கொள்ளை கொள்ளுமவனான எம்பெருமான்
வலி செய்ய -(தன்னை எனக்குக் காட்டாமல்) மிறுக்குக்களைப் பண்ண, (அதனாலே)
நான்–நான்
முத்து அன்ன வெண் முறுவல்–முத்துப் போல் வெளுத்த முறுவலும்
வர கூகிற்றி ஆகில்–இங்கே வரும்படி கூவ வல்லையே யானால்
தலை அல்லால்–என் வாழ் நாள் உள்ளவளவும் என் தலையை உன் காலிலே வைத்திருப்பது தவிர
கைம்மாறு இலேன்–வேறொரு ப்ரத்யுபகாரம் செய்ய அறியேன்.

எந்தத் திசை நோக்கினாலும் ஒவ்வொரு திசைக்கும் நிர்வாஹகர்களான இந்திரன் வருணன் குபேரன் என்னும்படியான
தேவர்கள் மார்பை நெறித்துக்கொண்டு ‘எனக்குமேற்பட்ட தெய்வமில்லை, எனக்குமேற்பட்ட தெய்வமில்லை என்றிருப்பார்கள்;
அவர்கள் எம்பெருமானைக் கண்டவாறே “போற்றி – பல்லாண்டு ஜிகந்தே” என்று பணிந்தேத்துவார்கள்.
அப்படிப்பட்ட துர்மாநிகளும் அஹங்காரத்தை விட்டொழித்துப் பணிகைக்குக் காரணமென்னென்னில்’
இருடீகேசனன்றோ இவன்’ “இந்த்ரியாணாம் நியந்த்ருத்வாத் ஹ்ருஷீகேச: ட்ரகீர்த்தி: என்றன்றோ யிருப்பது.
எல்லாருடைய இந்திரியங்களையும் அடக்கி ஆளுமவன் இவனாகையாலே அவர்களுடைய துர்மாநத்தைத் துலைத்து
அவர்களால் புகழப்பெற்றான்’ அப்படி அவன் எல்லார்க்கும் ஸமாச்ரயணீயனா யிருந்து வைத்துத் தன்னை
எனக்குக் காட்டாமல் மிறுக்குகளைப் பண்ணுகிறானாகையாலே என்முறுவலும் நிறம்மாறி
அதரமும் அழகழிந்து முலைகளும் வேறுபடும்படி சீர்குலைந்தேன்நான், என்கிறாள் முன்னடிகளில்.

இருடீகேசன்வலிசெய்ய
என் இந்திரியங்களெல்லாவற்றையும் கொள்ளை கொண்டு என்னை எளிமைப்படுத்தி இவ்வளவிலே தனது
ஸௌசீல்ய குணத்தையும் மறைத்திட்டு சத்ருக்களுடைய கோஷ்டியிலே காட்ட வேண்டிய மிறுக்கைக் காட்டுகிறானென்னவுமாம்.
முறுவல் – பல்லுக்கும் சிரிப்புக்கும் பெயர்.

“என்னை மிறுக்குக்கள் பண்ணுகைக்காகத் தன்ஜீவநத்தையும் அழியாநின்றான்;-
(ஈஷதுந்நம்ய பரஸ்யாமி) என்பாள் இவளன்றே” என்ற வியாக்யாநஸ்ரீஸூக்தியின் அழகைக்காண்மின்.
ஆண்டாளுடைய முறுவலும் செய்யவாயும் முலையும் அவனுக்கு ஜீவனமாகையாலே
தன் ஜீவநத்தைக் கெடுத்துக் கொண்டும் தன் வலியைக் காட்டுவார் உலகிலுண்டோ என்கை.
ஒரு கோபாவேசத்தாலே தீர்த்தகலசத்தை உடைத்து எறிந்துவிட்டால் பின்பு தாஹம் மேலிட்டவாறே அவனேயன்றோ வருந்தவேண்டும்’
அதுபோல, இப்போது ஏதோகோபத்தாலே அவ்வெம்பெருமான் தனக்குஜீவாதுவாகிய என் அவயங்களை
ஈடழித்தானாகில் நாளைக்கே “ஈஷதுந்நம்ய பரஸ்யாமி” என்று சொல்லிக் கொண்டு ஓடிவருவனே’
அப்போது துடிக்கப்போகிறானே! என்கிறாள் போலும்.

இப்படி எம்பெருமானுடைய செல்வம் அழிந்து போகா நிற்க, நீ ஸ்வஸ்தமாய்க் கிடந்து உறங்குகிறாயே குயிலே’
உன் செருக்கை நான் என்சொல்வேன்? என்கிறாள் கொத்தலர்காவில் இத்யாதியால்.
கண்பாடு, கண்படுதல், கண்படை இவையெல்லாம் நித்திரைக்குப் பாரியாயம்.

என்தத்துவன் என்பதற்கு
‘என்னுடைய ஸத்தைக்கு ஹேதுவானவன்’ என்று பொருள் அருளிச்செய்யப்பட்டுள்ளது;
தத்துவமென்று ஸ்வரூபமாய், ஸ்வரூபமாகிறது ஆத்மாவாய்,
ஆத்மாவாகிறான் ஸத்தா ஹேது பூதனாகையாலே அங்ஙன் அருளிச்செய்யப்பட்டதென்ப.

“இக்குயில் கூவியழைக்கவேண்டும்படி அவன் வரத் தாழ்க்கச் செய்தேயும் தன் ஸத்தை அவனென்றிருக்கிறான்காணும்”
என்பது வியாக்கியாநஸ்ரீஸூக்தி. இவ்விடத்தில் நஞ்சீயர்க்கும் நம்பிள்ளைக்கும் ஒருஸம்வாதமுண்டு’
அதாவது மாயாவியான ராவணன் ‘இராமன் தலையறுப்புண்டு தொலைந்தான்’ என்று தோற்றும்படி
ஒருமாய சிரஸ்ஸைக் கொண்டு வந்து பிராட்டிக்குக் காட்டி
‘இதோபார் ஸீதே! உன் கணவன் தலையறுப்புண்டு ஒழிந்தான்’ என்று சொன்ன போது,
இக் காலத்துப் பெண்டிர்கள் தமது பர்த்தாக்களுடைய மரணத்தில் சற்றுக் கண்ணீரைப் பெருக்கி விட்டுக் கிடப்பது போல்
அவளும் துக்கப் படுவது போலச் சிறிது துக்கப்பட்டு உயிர் தரித்திருந்தாளே யொழிய,
பிராணன் படுக்கென்று பட்டுப்போகப் பெற்றிலளே!’
மெய்யான அன்பு இருக்குமாகில் அந்தஸமயத்திலுங் கூடவா பிராணன் போகாமலிருக்கும்?
ப்ராணநாதன் உயிரொழிந்தான் என்று மாயா சிரஸ்ஸைக் கண்டு நம்பின பிறகும் அவள் தரித்திருந்து
பலாக்கணம் பாடியழுதாளென்று ஸ்ரீராமாயணத்தில் சொல்லப்பட்டிருக்கிறதே!,
அவள் இராமபிரான் மீது வைத்திருந்த ப்ரணயத்துக்கும் இப்படி யிருந்ததற்கும் சேர்த்தி யில்லை போலிருக்கிறதே’ என்று
நஞ்சீயர் ஸந்நிதியிலே நம்பிள்ளை விண்ணப்பஞ்செய்ய, அதற்கு நஞ்சீயர் அருளிச்செய்த உத்தரமென் னெனில்’-
“வாரிர்! நீர்கேட்டது அழகியதே’ ‘நாயகன் உயிரோடிருக்கிறான்’ என்று நினைத்துக் கொண்டால்
உத்தம நாயகி உயிர் தரித்திருப்பாளென்றும், ‘நாயகன் இறந்துபோனான்’ என்று நினைத்துக் கொண்டால்
அவள் உயிர்விட வேணுமென்றும் நீர் நினைத்திருக்கிறாப் போலிருக்கிறது;
நாயகி உயிர் தரித்திருப்பதற்கும் உயிரை விடுவதற்கும் நாயகனுடைய ஜீவந, மரணங்களைத் தெரிந்து கொள்வது
காரணமென்று காணும்; தேசாந்தரம்போன நாயகன் வழிநடுவே இறந்து போனானாகில் இந்தச் செய்தியை
ஊரிலுள்ள ப்ராண நாயகி தெரிந்து கொள்ள முடியாதாகையால் ‘நமது நாயகன் ஜீவித்திருக்கிறான்’ என்று
ப்ரமித்திருக்குங்காலத்தில் அவள் ஸுகமாக ஜீவித்திருப்பதும்,- தேசாந்தரத்தில் நாயகன் ஸௌக்கியமாக
வாழ்ந்திருக்கச் செய்தேயும் அவன் இறந்தானென்று வம்புகூறுமவர்களின் வாய்மொழியை நம்பி
உயிரை விடுவதும் உத்தமநாயகியின் காரியமென்று நினைக்கவேண்டா;

பின்னையெங்ஙனேயென்னில்’ நாயகன் தேசாந்தரஸ்தனாயிருந்தாலும் உண்மையில் அவன் ஜீவித்திருப்பானாகில்
அது தானே காரணமாக நாயகியின் உயிர் நிலைத்திருக்கும்’ இறந்தானென்று பிறர் பொய்சொன்னாலும்
அச் சொல் காதில் விழும்போது ஏதோ சிறிது வருத்தம் தோற்றுமேயன்றி உண்மையில்
நாயகனுடைய ஸத்தைக்குக் குறைவில்லாமையினால்
(ஆக்க்யாதி ஹ்ருதயம் ஹ்ருதா – (அவன் மநஸ்ஸும் இவள் மநஸ்ஸும் ஒன்றோடொன்று பேசிக்கொள்ளும்) என்றபடி
மநஸ்ஸுக்கு மநஸ்ஸே ஸ்ரேஷ்டமாக வாஸ்தவமான ஸங்கதி நெஞ்சிற் பதிந்துகிடக்குமாதலால்
பிறர்பொய்யாகக் கூறுங் கூற்றானது பயன்படமாட்டாது. ப்ராண நாயகன் இறந்தானென்று ஒருவரும் தெரிவிக்கவேண்டா;
பிறர் தெரிவியாதிருந்தாலும் அல்லது மாறுபாடாக ‘உன்காதலன் ஸுகமாக வாழ்கிறான்;’ என்று
எவ்வளவு நம்பிக்கை தோன்றச் சொன்னாலும் இவளுடைய நெஞ்சுக்கும் ஒரு விலக்ஷணமான தங்கிப்
போக்குவரத்து உண்டாகையாலே அந்தத் தந்தியைக் கொண்டே நாயகியின் உயிர் அந்தக்ஷணத்திலேயே திடீரென்று மாய்ந்துபோம்.

இப்படியே, தேசாந்தத்தில் நாயகன் ஒருகுறையுமின்றி உயிர் வாழ்ந்திருக்கச் செய்தேயும்
மாறுபாடாக யார் என்ன சொன்னாலும் எவ்வளவு க்ருத்ரிமங்கள் காட்டினாலும் கீழ்ச்சொன்ன மாநஸதந்தியானது
உண்மையான ஸங்கதியை மநஸ்ஸுக்கு எட்டவைத்துக் கொண்டிருப்பதனால் அதுகொண்டு உயிர் மாயாமல் தரித்துநிற்கும்.
சிறந்த மெய்யன்பு பூண்டிருக்கும் நாயகநாயகிகளின் ரிதி இப்படிப்பட்டதேயாம்.
பிராட்டியும் அத்தகைய உத்தமநாயகி யாதலால், ராவணன் மாயாசிரஸ்ஸைக் காட்டி எவ்வளவு வஞ்சித்த போதிலும்
உண்மையில் இராமபிரானுடைய ஸத்தைக்கு ஹாநியில்லாமலிருந்தமையால் அந்த அரக்கக் கள்ளனுடைய மாயச்செயல்
பயன்படாமல் அவளது மநஸ்ஸுயமே வீறுபெற உயிர்தரித்து நின்றது’
ஆகையாலே பிராட்டியினுடைய ஸத்தைக்குப் பெருமாளுடைய ஸத்தை ஹேது என்று கொள்ளீர்- என்று உத்தரமருளிச்செய்தார்.

திருவாய்மொழியில் “ஏறு சேவகனார்க்கு என்னையு முளளென்மின்கள்” என்றவிடத்திற்கு
எம்பெருமானார் பொருள் அருளிச் செய்யும் போது கீழ்விவரித்த அர்த்தத்தை எடுத்து
விளக்கி யருளினரென்பதை ஈடுமுப்பத்தாறாயிரப்படியில் காண்க.

இந்த ஸம்வதமானது “என்தத்துவனை” என்ற இவ்விடத்திற்குப் பொருத்தமாக எடுத்துக்காட்டப்பட்டிருக்கின்றது.
அதற்குமிதற்கும் என்ன ஸம்பந்தமென்றால், கேண்மின்’-
குயிலானது ஆண்டாளை நோக்கி, ‘மாதர் கொழுந்தே! இருடீகேசனை வரும்படி கூவச்சொல்லுகிறாய் நீ’
அவன் உன்னோடு புணர்ந்த காலத்தில் ‘உன்னைவிட்டுப் பிரியேன்’ பிரிந்தால் தரியேன்’
(அதாவது-உயிர்தரித்து ஜீவிக்கமாட்டேன்) என்று சொன்னதை நான் கேட்டிருக்கிறேன்’
உனக்கும் அது ஞாபமிருக்குமே’ ஆகையாலே உன்னைப் பிரிந்துபோய் இன்னும் வந்து சேராதிருக்கிற அவன்
ஜீவித்திருப்பனென்று எனக்குத் தோன்றவில்லை’ அவன் ஆற்றாமையினால் காலஞ்சென்றிருப்பன் என்றே நினைக்கிறேன்’
ஆகையாலே நான் கூவுவது வீணாகும்’ என்னை வீணாகக் கஷ்டப்படுத்தாதே போ’ என்று சொல்லிற்று’
அதைக்கேட்ட ஆண்டாள், ‘பேதாய்! அங்ஙனன்றுகாண்’ நான் ஸத்தை கெடாமல் இருக்கின்றமையால்
அவனும் ஸத்தை கெடாமல் இருப்பனென்றே நினை’ அவனுடைய ஸத்தைக்கு ஹாநி விளைந்திருக்குமே யானால்
அந்த க்ஷணத்திலேயே என்னுடைய ஸத்தையும் குலைந்திருக்குமன்றோ? அவன் என்னுடைய தத்துவன் காண்’
ஆகையால் அவனுடைய ஸத்தை குறையற்றதென நிச்சயித்துக்கொள் என்கிறாள் என்க.

கூகிற்று = கூவகிற்றி’ ‘கீற்றி’ என்பது – கில் என்னும் வினைப்பகுதியடியாப் பிறந்த
நிகழ்காலமுன்னிலையொருமை வினைமுற்று’ கூவக்கடவையாகில் என்கை.

தலையல்லால் கைம்மாறிலேன்
நீ எம்பெருமானை வரக்கூவினாயாகில் அதற்கு மேலான மஹோபகாரம் ஒன்றில்லாமையால்
அதற்குத் தக்க ப்ரத்யுபகாரம் என்னாற்செய்யலாவதில்லை’ என் வாழ்நாளுள்ளவளவும் உன்காலின் கீழே
என் தலையைச் சாய்த்திருப்பதே என்னாற் செய்யத்தக்க ப்ரத்யுபகாரம் என்கிறாள்.

நஞ்சியர் திருவடிகளில் ஆச்ரயித்து திவ்ய ப்ரபந்தங்களின் விசேஷார்த்தங்களைக் கேட்ட முதலிகளில்
பெற்றி என்று ஒரு ஸ்வாமியுண்டு’ அவர் திருவாய்மொழியின் விசேஷார்த்தங்களைப் பல தடவைகளில்
கேட்டிருந்தாலும் நாச்சியார் திருமொழிக்கு மாத்திரம் நஞ்சீயர் ஸந்நிதியிலே அர்த்தங்கேட்க அவகாசம் பெற்றிலர்.
அந்த ஸ்வாமி ஒரு ஸமயம் திருவாணை யாத்திரையாகக் கிழக்கே எழுந்தருளின போது
சில ஆஸ்திகர்கள் அவரிடம் வந்து “ஸ்வாமிந்! தலையல்லாற் கைம்மாறிலேனே” என்ற விடத்திற்குக் கருத்து விளங்கவில்லை’
ஸ்வாமி ஸாதிக்கவேணும்!; என்று வேண்டினர்;

‘குயிலே! எம்பெருமான் இங்குவரும்படி நீ கூவ வல்லையாகில் அதற்கு ப்ரத்யுபகாரமாக என் தலையை (அறுத்து)
உனக்குத் தந்திடுவேன் என்கிறாள்; என்பதாக அவர்கட்குப் பொருள் சொல்லிவிட்டார்.
ஆனாலும் ‘இதற்கு அர்த்தம் இவ்வளவேயாயிராது’ நஞ்சீயர் ஸாதிப்பது என்னென்று தெரிந்து கொள்ள வேணும்’
என்று அவர்க்கு ஆவல் இருந்தது. யாத்திரை முடிந்து கோயிலுக்கு எழுந்தருளின பிறகு நம்பிள்ளையைச் சந்தித்த போது
‘ஸ்வாமிந்! அடியேன் ஜீயர் ஸந்நிதியிலே பதினோருரு திருவாய்மொழிக்குப் பொருள் கேட்டேன்’
“நீ பண்ணுமுபகாரத்துக்கு இத்தலையால்; செய்வதொன்றுண்டோவென்று என் தலையை உனக்காக்கி,
காலமெல்லாம் உன் காலிலே வணங்கி இருப்பேன் என்கிறாள் என்று ஜீயரருளிச் செய்யும்படி” என்று
நம்பிள்ளை அருளிச் செய்யக்கேட்டு, பெற்றி ஸ்வாமி இதற்கு மிகவும் கொண்டாடி
‘ஸ்வாமிந்! அடியேனுக்கு அடிக்கடி யாத்திரை போக நேருமாகையாலே ஸ்வாமி ஸந்நிதியில்
இடை விடாது காத்துக் கொண்டிருந்தது. அருளிச் செயல்களின் ஸகலார்த்தங்களையும் கேட்க
பாக்யமில்லாமையால் பல விசேஷார்த்தங்களை இழந்துபோகவேண்டி யிருக்கிறது’
அடியேன் வெளியே போனால் ‘இதற்கென்ன பொருள்? இதற்கென்ன பொருள்?’ என்று பலர் என்னைக் கேட்கவருவர்கள்’
அப்போது ஸ்வாமி அருளிச் செய்யும் அர்த்த விசேஷமே என் நெஞ்சில் தோற்றும்படி அநுக்ரஹிக்க வேணுமென்று
முன்னமே ஜீயர் ஸந்நிதியில் அடியேன் ப்ரார்த்தித்தேன்’
அவரும் ‘அப்படியே தோற்றுக’ என்று அநுக்ரஹித்தருளினார்’
ஆயினும் அடியேனுக்கு அந்த அநுக்ரஹம் பலிக்கக் காண்கிறிலேன்’
ஜீயர் அருளிச் செய்யும் அர்த்தம் எனக்குத் தோற்றுகிறதில்லை;
அருளிச் செயலின் அர்த்தங்கள் குருகுல வாஸம் பண்ணிக் குட்டுப்பட்டுக் கேட்டுத் தெரிந்துகொள்ளத் தக்கவையேயன்றி,
வரம்பெற்று அறியப்போமோ? ஆகையால் தான் ஜீயர் அளித்த வரம்பாவியேனுக்குப் பலிக்கவில்லை’ என்று
சொல்லிப்போனார். (இந்த ஸம்வாதம் பெற்றிக்கும் நம்பிள்ளைக்கும் நிகழ்ந்தது.)

எத்திசையும் அமரர் பணிந்து ஏத்தும் இருடீகேசன் வலி செய்ய
எந்தத் திசை நோக்கினாலும் ஒவ்வொரு திசைக்கும் நிர்வாஹகர்களான
இந்த்ரன் வருணன் குபேரன் என்னும்படியான தேவர்கள்
மார்பை நெரித்துக் கொண்டு எனக்கு மேற்படத் தெய்வமில்லை என்று இருப்பார்கள்
அவர்கள் எம்பெருமானைக் கண்டவாறே
போற்றி -பல்லாண்டு -ஜிதந்தே -என்று பணிந்து ஏத்துவர்கள்
அப்படிப் பட்ட துர்மாநிகளும் அஹங்காரத்தை விட்டு ஒழித்து
பணிகைக்கு காரணம் என் என்னில்
இருடீகேசன் அன்றோ இவன்
இந்த்ரியாணாம் நியந்த்ருத்வாத் ஹ்ருஷீகேச ப்ரகீர்த்தித -என்று அன்றோ நிறுத்தி இருப்பது
எல்லாருடைய இந்த்ரியங்களையும் அடக்கி ஆளுமவன் இவன் ஆகையால்
அவர்கள் உடைய துர்மானத்தை துலைத்து அவர்களால் புகழப் பெற்றான்

முத்தன்ன வெண் முறுவல் செய்ய வாயும் முலையும் அழகு அழிந்தேன் நான் –
அப்படி அவன் எல்லார்க்கும் சமாஸ்ரயணீயனாய் இருந்து வைத்து
தன்னை எனக்குக் காட்டாமல்
மிறுக்குகளைப் பண்ணுகிறான் ஆகையாலே
என் முறுவலும் நிறம் மாறி
அதரமும் அழகு அழிந்து
முலைகளும் வேறு படும்படி சீர் குலைந்தேன் நான் —
இருடீகேசன் வலி செய்ய –
என் இந்த்ரியங்கள் எல்லாவற்றையும் கொள்ளை கொண்டு என்னை எளிமைப் படுத்தி
இவ்வளவிலே தனது சௌசீல்ய குணத்தை யும் மறைத்திட்டு
சத்ருக்கள் உடைய கோஷ்டியிலே காட்ட வேண்டிய மிறுக்கைக் காட்டுகிறான் என்னவுமாம்
முறுவல் -பல்லுக்கும் சிரிப்பிக்கும் பெயர்
என்னை மிறுக்குகள் பண்ணுகைக்காக
தன் ஜீவனத்தையும்
அழியா நின்றான் –
ஈஷதுன் நம்ய பாஸ்யாமி -என்பாள் இவள் அன்றே –
ஆண்டாள் உடைய முறுவலும் செய்ய வாயும் முலையும்
அவனுக்கு ஜீவனம் ஆகையாலே
தன் ஜீவனத்தைக் கெடுத்துக் கொண்டும்
தன் வலியைக் காட்டுவார் உலகில் உண்டோ –
ஒரு கோபாவேசத்தாலே தீர்த்த கலசத்தை உடைத்து எரிந்து விட்டால்
பின்பு தாஹம் மேலிட்ட வாறே அவனே அன்றோ வருந்த வேண்டும்
அது போலே இப்போது ஏதோ கோபத்தாலே அவ்வெம்பெருமான் தனக்கு ஜீவனம் ஆகிய என் அவயவங்களை ஈடு அழித்தான் ஆகில்
நாளைக்கே ஈஷதுன் நம்ய பாஸ்யாமி -என்று சொல்லிக் கொண்டு ஓடி வருவானே
அப்போது துடிக்கப் போகிறானே -என்கிறாள்
இப்படி எம்பெருமானுடைய செல்வம் அழிந்து போகா நிற்க
நீ ச்வச்தமாய்க் கிடந்தது உறங்கு கிறாயே குயிலே
உன் செருக்கை நான் என் சொல்வேன் –
கொத்தலர் காவில் மணித் தடம் கண் படை கொள்ளும் இளங்குயிலே
கண்பாடு -கண்படுதல் -கண்படை -இவை எல்லாம் நித்ரைக்கு பரியாயம்

என் தத்துவனை வரக் கூகிற்றி யாகிற்றிலை யல்லால் கைம்மாறு இலேனே
என் தத்துவன் -என்னுடைய சத்தைக்கு ஹேதுவானவன்
தத்வம் என்று ஸ்வரூபமாய்
ஸ்வரூபம் ஆகிறது ஆத்மாவே
ஆத்மாவாகிறான் சத்தா ஹேது பூதன் ஆகையாலே அங்கன் அருளிச் செய்யப் பட்டது
இக் குயில் கூவி அழைக்க வேண்டும்படி அவன் வரத் தாழ்க்கச் செய்தேயும்
தன் சத்தை அவனே என்று இருக்கிறாள் காணும்
நம்பிள்ளை நஞ்சீயர் சம்வாதம் –
மாயா சிரஸ் கொண்டு வந்து பிராட்டிக்குக் காட்டி
உன் கணவன் அறுப்புண்டு ஒழிந்தான் என்றதும் இக்காலத்து பெண்கள் போலே
சீதா பிராட்டியும் சிறிது துக்கப் பட்டு உயிர் தரித்து இருந்தாளே
பிரணயத்துக்கும் இந்த இருப்புக்கும் சேர்த்தி இல்லை போல் இருக்கிறதே
என்று நம்பிள்ளை விண்ணப்பம் செய்ய
நஞ்சீயர் -நீர் கேட்டது அழகியதே
நாயகன் உயிர் உடன் இருக்கிறான் என்று நினைத்துக் கொண்டால் உத்தம நாயகி உயிர் தரித்து இருப்பாள் என்றும்
நாயகன் இறந்து போனான் என்று நினைத்துக் கொண்டால் அவள் உயிர் விட வேணும் என்றும் நீர் நினைத்து இருக்கிறாப் போலே இருக்கிறது
நாயகி உயிர் தரித்து இருப்பதற்கும் உயிர் விடுவதற்கும்
நாயகன் உடைய ஜீவன மரணங்களை தெரிந்து கொள்வது காரணம் அன்று காணும்
தேசாந்தரம் போன நாயகன் வழி நடுவே இறந்து போனான் ஆகில் இந்தச் செய்தியை பிராண நாயகி தெரிந்து கொள்ள
முடியாது ஆகையாலே
நாயகன் ஜீவித்து இருக்கிறான் என்று பிரமித்து இருக்கும் காலத்தில்
சுகமாக ஜீவித்து இருப்பதும்
அவன் இறந்தான் என்று வம்பு கூருமவர்களின் வாய் மொழியை நம்பி உயிர் விடுவதும்
உத்தம நாயகியின் கார்யம் என்று நினைக்க வேண்டா
பின்னை எங்கனே என்னில்
நாயகன் தேசாந்தரச்தனாய் இருந்தாலும் உண்மையில் அவன் ஜீவித்து இருப்பானாகில் அது தானே காரணமாக
நாயகியின் உயிர் நிலைத்து இருக்கும்
இறந்தான் என்று பிறர் பொய் சொன்னாலும் அச்சொல் காதில் விழும்போது
ஏதோ சிறிது வருத்தம் தோற்றுமே அன்றி
உண்மையில் நாயகனுடைய சத்தைக்குக் குறை இல்லாமையினால் ஆக்க்யாதி ஹ்ருதயம் ஹ்ருதா -மனசுக்கள் பேசிக் கொள்ளும் –
பிராண நாயகன் கடலிடத் தீவிலே கிடந்தாலும் அவன் எந்த ஷணத்தில் உயிர் விடுகிறானோ
அந்த ஷணத்திலே காதலியின் உயிரும் தன்னடையே விட்டு நீங்கும்
இருவர் நெஞ்சுக்கும் விலஷணமான போக்குவரத்து உண்டு
மாயா சிரசை காட்டி மயக்கப் பார்த்தாலும்
மனசே சாஷியாக வீறு பெற உயிர் தரித்து நின்றது
பிராட்டி உடைய சத்தைக்கு பெருமாள் உடைய சத்தை ஹேது -என்று கொள்ளீர் என்று உத்தரம் அருளிச் செய்தார் –
ஏறு சேவகனார்க்கு என்னையும் உளேன் என்மின்கள் -என்கிற திருவாய் மொழி பாசுரத்துக்கு
எம்பெருமானார் இந்த அர்த்தம் எடுத்து விளக்கி அருளினார் –

என் தத்துவனை -என்ற இவ்விடத்துக்கு பொருத்தமாக எடுத்துக்காட்டப் பட்டு இருக்கிறது
குயில் ஆண்டாளை நோக்கி -மாதர் கொழுந்தே இருடீ கேசனை வரும்படி கூவச் சொல்லுகிறாய் நீ
அவன் உன்னோடு புணர்ந்த காலத்தில் உன்னை விட்டுப் பிரியேன் பிரிந்தால் தரியேன் -என்று சொன்னதை நான் கேட்டு இருக்கிறேன்
உனக்கும் அது நினைவு இருக்குமே

ஆகையால் நான் கூவுவது வீணாகும் -என்ன
அத்தைக் கேட்ட ஆண்டாளும்
நான் சத்தை கெடாமல் இருக்கின்றேன் என்றால் அவனும் சத்தை கெடாமல் இருப்பன்
அவனுடைய சத்தைக்கு ஹானி விளைந்து இருந்தால் அந்த ஷ்ணமே என்னுடைய சத்தையும் குலைந்து இருக்கும் அன்றோ

தலை அல்லால் கைம்மாறு இலேன்
நீ வரக் கூவியானாய் ஆனால் அதற்குத் தக்க பிரத்யுபகாரம் என்னிடம் இல்லை
ஏன் வாழ் நாள் முழுவதும் உன் கால் மேல் என் தலையைச் சாய்த்து இருப்பதே
என்னால் செய்யத் தக்க பிரத்யுபகாரம் –
நஞ்சீயர் திருவடிகளில் பெற்றி -என்பவர்
திருவாய்மொழி அர்த்த விசேஷங்களை பல காலும் கேட்டு இருந்தாலும்
நாச்சியார் திருமொழி அர்த்தம் கேட்க அவகாசம் பெற்றிலர்
அந்த சுவாமி திருவாணை யாத்ரையாக கிழக்கே எழுந்து அருளின போது
சில ஆஸ்திகர் -தலையல்லால் கைம்மாறு இலேன் -என்ற
இடத்துக்கு கருத்து விளங்க வில்லை
சுவாமி சாதிக்க வேணும் என்று வேண்டினர்
பிரத்யுபகாரமாக தலையை அறுத்து தந்திடுவேன் என்று சாதித்து விட்டார்
ஆயினும் அர்த்தம் இப்படி இருக்காது
நம்பிள்ளை இடம் நஞ்சீயர் சாதிக்கும் அர்த்தம் இன்னது என்று அறிந்து கொள்ள ஆசை கொண்டு
கேட்க -அவரும்
நீ பண்ணும் உபகாரத்துக்கு இத்தலையால் செய்வது ஓன்று உண்டோ என்று
என் தலையை உனக்காக்கி காலம் எல்லாம் உன் காலிலே வணங்கி இருப்பேன் -என்று
ஜீயர் அருளிச் செய்யும்படி என்று நம்பிள்ளை அருளிச் செய்யக் கேட்டு
பெற்றி கொண்டாடி
அடியேனுக்கு யாத்ரை பல தடவை செல்ல வேண்டி இருந்ததால் பல அர்த்த விசேஷங்களை ஜீயர் இடம் கேட்க முடியாமல் இழந்து போனேன்
ஆஸ்திகர்கள் கேட்கும் சங்கைகளுக்கு ஜீயர் அருளிச் செய்யும் அர்த்த விசேஷங்கள்
நெஞ்சில் தோன்றும்படி அனுக்ரஹிக்க வேண்டும் என்று பிரார்த்திக்க
அவரும் அப்படியே அனுஹ்ரஹித்து அருளினார்
ஆயினும் பலிக்க காண வில்லை
அருளிச் செயல்களின் அர்த்த விசேஷங்கள் குருகுல வாசம் பண்ணி
குட்டுப்பட்டு
கேட்டு தெரிந்து கொள்ளத் தக்கவையே அன்றி
வரம் பெற்று அறியப் போமோ
ஆகையால் தான் ஜீயர் இடம் பெற்ற வரம் அடியேனுக்கு பலிக்க வில்லை என்று சொல்லிப் போந்தார்
இந்த சம்வாதம் பெற்றிக்கும் நம்பிள்ளைக்கும் நடந்தது

—————————————————————————————————-

பொங்கிய பாற்கடல் பள்ளி கொள்வானைப் புணர்வதோர் ஆசையினால் என்
கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதுகலித்து ஆவியை ஆகுலம் செய்யும்
அங்குயிலே உனக்கு என்ன மறைந்து உறைவு ஆழியும் சங்கும் ஒண் தண்டும்
தங்கிய கையவனை வரக் கூவில் நீ சாலத் தருமம் பெறுதி–5-7-

பதவுரை

அம் குயிலே!–அழகிய குயிலே!
பொங்கிய பால் கடல்–அலை யெறிவை யுடைய திருப் பாற்கடலில்
பள்ளி கொள்வானை–பள்ளி கொண்டருளும் எம்பெருமானோடே
புணர்வது ஓர் ஆசையினால்– ஸம்ச்லேஷிக்க வேணுமென்று உண்டான ஆசையினால்
என் கொங்கை- எனது முலைகள்
கிளர்ந்து — பருத்து
குதுகலித்து–மிக்க உத்ஸாஹங் கொண்டு
ஆவியை–எனது உயிரை
குமைத்து ஆகுலம் செய்யும்–உருக்கி வியாகுலப் படுத்தா நின்றன’
மறைந்து உறைவு – என் கண்ணுக்குப் புலப்படாமல் நீ மறைந்திருப்பதனால்
உனக்கு என்ன–உனக்கு என்ன புருஷார்த்தம்?
ஒண் ஆழியும் சங்கும் தண்டும் தங்கிய கையவனை வர–திருவாழி திருச்சங்கும் ஸ்ரீ கதையும்
பொருந்திய திருக் கைகளுடைய பெருமாள் இங்கே வரும்படி
நீ கூவில்–நீ கூவுவாயாகில்
சால–மிகவும்
தருமம் பெறுதி -தர்மம் செய்தாயாவாய்.

பரமபதத்தைவிட்டுத் திருப்பாற்கடலிலே வந்து பள்ளி கொண்டிரா நின்ற பெருமானைப் புணரவேணுமென்ற
அபிநிவேசத்தினால் என் கொங்கை களானவை காலவிளம்பம் பொறுத்திருக்கமாட்டாத தன்மையினால் விம்மிவளர்ந்து,
அவ்வளவிலும் அவன் ஓடிவந்து அணைக்காணாமையினாலே
‘யாம் உன்மார்விலேவந்து முளைத்தபடியாலன்றோ எமக்கு இந்தக்கஷ்டம் விளைந்தது’

உன்னுடைய தெளர்ப்பாக்யமானது எங்கள் மேலும் ஏறிப்பாய்ந்து எம்பெருமான் எங்களையும் உபேஷிக்கும்படியாயிற்று’
என்று சொல்லிக் கொண்டு அவை என்னைப்புடைக்கிற புடையை என்சொல்வேன்? என்று
ஆண்டாள் கூக்குரலிட்டுக் கூறியதைக் கேட்ட அச்சோலைக் குயிலானது
‘இப்போது நாம் இவளுக்கு முகங்கொடுத்தால் நம்மை இவள் வெறுமனே விடமாட்டாள்;.
“என்செய்யதாமரைக்கட் பெருமானார்க்கென்தூரிதாய், என் செய்யுமுரைத்தக்கால் இனக்குயில்காள்!” (திருவாய்மொழி க-ச-உ)
என்றால் போல இவளும் நம்மைத் தூது போக வேண்டிக் காலையொடிக்கக் கருதுவள்’
இந்த வெய்யிலிலும் கானலிலும் ஓடுவதற்கு நம்மாலாகாது’
அது தன்னிலும் திருப்பாற்கடலெம்பெருமான் மீது இவளுக்கு ஆசையாம்’ அங்கே ஓட ஆராலாகும்?
ஆகையாலே இவளுக்கு நாம் முகங்காட்டாமல் தலைமறைந்திருப்பதே தகுதி’ என்று நினைத்து
முகத்தையுங்காட்டாமல் குரலையும் தெரிவியாமல் பதுங்கிக் கிடந்தது’

அங்ஙனமிருந்த அக்குயிலின் கருத்தைத் தெரிந்து கொண்ட ஆண்டாள் “அம் குயிலே!” என்று விளித்தான்’
(அழகிய குயிலே! என்றபடி) நீ மற்றகுயில்களைப் போலேயிருந்தாயாகில் உன்னை ச்ரமப்படுத்த நினைத்தாலும் நினைப்பேன்’
அழகியகுயிலன்றோநீ’ உன் அழகைக் கண்டிருக்கிறநான் அவ்வழகுக்கு ஒருவாட்டம் பிறக்கும்படி
உன்னை ச்ரமப்படுத்த நினைப்பேனா? நீ எங்கும் தூரிது செல்லவேண்டா’ நீ இருந்த விடத்திலிருந்து கொண்டே,
அப்பெருமான் இங்கேவரும்படி கூவினாயாகில் இதுவே மஹோபகாரமாம்’ எனக்கு மாத்திரம் நன்மையன்று’

நீயும் ஒருவாய்ச்சொல்லாலே பெரிய தருமம் நடத்தினாயாவாய்;
‘நாம் கூவினால் அவ்வெம்பெருமான் ஓடிவரக் காத்திருக்கிறானோ; என்று நினையாதே;
“நம்மேல்வினைகடிவான் எப்போதும் கைகழலாநேமியான்” என்றும்
“(பாது ப்ரணத ரக்ஷாயாம் விளம்பமஸஹந்நிவ, ஸதா பஞ்சாயுதீம் பிப்ரத் ஸந: ஸ்ரீரங்கநாயக: ஸ்ரீ ஸ்ரீரங்கராஜஸ்தவனம்.)” என்றும்
சொல்லியிருக்கிறபடி என்னைப் போன்ற ஆர்த்தர்கட்க விரைவாகவந்து காரியஞ் செய்வதற்காக
அவன் திவ்யாயுதங்களை க்ஷணகாலமும் கைவிடாமல் ஏந்திக் கொண்டிருப்பது உனக்குத் தெரியாதா?
ஏற்கனவே இங்கு வந்து காரியஞ்செய்வதில் ஆதரமுடையவனான அப்பெருமான் உன் கூவுதல் கேட்டபின்பும் வாராதே நிற்பனோ?
அரை குலையத் தலை குலைய ஆனைக்கு வந்து உதவினாற் போலே எனக்கும் உதவ ஓடிவருவன் காண்; ஆகையாலே நீ கூவு என்கிறாள்.

பொங்கிய பாற்கடல் ஸ்ரீ பாற்கடலின் பொங்குதலுக்கு
இரண்டு ஹேதுக்களை ரஸோக்தியாக அருளிச்செய்வர் பெரியவாச்சான்பிள்ளை;
(1) ஸாமாந்யனான ஒருசந்திரனைக் கண்டாலே கடல் பொங்கக் காண்கிறோம்;
சிறந்த சந்திரர்கள் பதின்மரைக் கண்டால் பொங்குதலுக்கு அளவுண்டோ?
திருப்பாற்கடல் பத்து சந்திரர்களைக் கண்டதோ வென்னில்; ஆம்;
(த்வத்பாதாப்ஜே ப்ரியமக! நகச்சத்மநாச்ரித்ய நித்யம் ஸத்வ்ருத்தோபூத் ஸசதகுண: புஷ்கலோ நிஷ்கலங்க :- வரதராஜஸ்தவம்) என்று –
‘எம்பெருமானுடைய திருவடிகளிலுள்ள பத்துத் திருவிரல்களிலும் உருண்டை வடிவமாய் நகம் போல விளங்குகின்றவை நகங்களல்ல’
சில குற்றங்குறைகளோடு கூடியிருந்த சந்திரன் பெருமாள் திருவடியை ஆச்ரயித்து அக்குற்றங்குறைகள் தீர்ந்து
பத்து வடிவம் பெற்று அத்திருவடிகளை விடாதே கிடக்கிறான்; அவையே நகங்களாகத் தோற்றுகின்றன; என்று
அருளிச்செய்திருக்கையாலே அந்தப் பத்து சந்திரர்களையும் பாற்கடல் கண்டால் பொங்காதிருக்குமோ?

(2) பொங்குதலுக்கு மற்றொரு ஹேது என்னென்னில்,
(சந்த்ரமா மநஸோஜாத :- புருஷஸூக்தம்) என்றபடி சந்திரனானவன் எம்பெருமானுடைய மநஸ்ஸில் நின்றும் தோன்றியவன்;
அச்சந்திரனுக்கு எம்பெருமான் தனது திருவுள்ளத்திலுள்ள தண்ணளியிலே ஸ்வல்ப பாகத்தை ஊட்டின மாத்திரமே யுள்ளது;
அப்படிப்பட்ட சந்திரனைக் கண்டே கடல் பொங்கிற்றாகில்,
ஸாக்ஷாத் அவ்வெம்பெருமான் தானே வந்துபடுகாடு கிடக்கக்கண்டால் பொங்குதலுக்கு அளவுண்டோ?

என்கொங்கை கிளர்ந்து –
ஆசை அளவற்றிருக்கச்செய்தேயும் நமது பெண்மைக்குக் குறைபாடு நேரவொண்ணாதென்று
நான் அடங்கியிருந்தாலும் என்கொய்கைக்கு அத்தகைய அடக்கம் இல்லையே! என்கிறாள் போலும்.

கொங்கை குதுகலித்துக் கிளர்ந்து
‘நம்முடைய கஷ்டதசையைக் கண்டறிந்து எம்பெருமான் பதறிவருகிறான்’ என்றெண்ணின
கொங்கைகளானவை மஹாப்ரபுக்களை எதிர்கொள்ளப் புறப்படுவாரைப்போலே
குதூஹலமாய்க் கிளர்கின்றமை காணீரென்கிறாள். போலும்.
குதுகலித்து “குதூஹலம்” என்ற வடசொல்லை ஒரு வினைப்பகுதியாகக் கொண்டு
அதன் மேல் வினையெச்சவிகுதியையேற்றிக் கிடக்கிறதென்க.
ஆகுலம் ஸ்ரீ வடசொல். ஆகுலஞ்செய்கையாவது – கலங்கப் பண்ணுகை, ஹிம்ஸிக்கை.

அம் குயிலே!
நான் இப்படி கஷ்டப்படாநிற்கவும் நீ மென்மலர்ப் பள்ளியிலே நிழலாடக் கண்படை கொண்டு
மறைந்து கிடப்பது வெளியில் தலைகாட்டினால் நம் அழகுக்குக் குறை நேர்ந்து விடுமென்ற கருத்தினாலன்றோ!
என் கஷ்ட நிவாரணத்தை முக்கியமாகக் கொள்ளாமல் உன் அழகையே முக்கியமாகக் கொண்டு கிடக்கிறாயே!
இதுவோ தகவு? என்ற உபாலம்பம் தோற்ற அழகிய குயிலே! என விளிக்கின்றாள் போலும்.

சாலத் தருமம் பெறுதி
பிராட்டி, திருவடியை நோக்கி (வாசா தர்மமவாப்நுஹி) என்று அருளிச் செய்ததை
ஆண்டாளும் அடியொற்றிக் கூறினளென்க

பொங்கிய பாற்கடல் பள்ளி கொள்வானைப் புணர்வதோர் ஆசையினால் –
பரமபதத்தை விட்டு
திருப் பாற்கடலிலே வந்து பள்ளி கொண்டிரா நின்ற பெருமானைப்
புணர வேணும் என்கிற அபி நிவேசத்தினால்

என்கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதுகலித்து ஆவியை ஆகுலம் செய்யும்-
என் கொங்கைகள் ஆனவை கால விளம்பம் பொறுத்து இருக்க மாட்டாத தன்மையினால்
விம்மி வளர்ந்து
அவ்வளவிலும் அவன் ஓடி வந்து அணைக்கக் காணமையினாலே யாம் உன் மார்விலே வந்து முளைத்த படியால் அன்றோ
எமக்கு இந்தக் கஷ்டம் விளைந்தது
உன்னுடைய தௌர்ப்பாக்யமானது எங்கள் மேலும் ஏறிப் பாய்ந்து
எம்பெருமான் எங்களையும் உபேஷிக்கும் படி யாயிற்று என்று சொல்லிக் கொண்டு
அவை என்னைப் புடிக்கிற புடையை என் சொல்வேன் -என்று
ஆண்டாள் கூக்குரலிட்டு கூறியதைக் கேட்ட
அச் சோலைக் குயில் ஆனது

அங்குயிலே உனக்கு என்ன மறைந்து –
இப்போது நாம் இவளுக்கு முகம் கொடுத்தால் நம்மை இவன் வெறுமனே விட மாட்டாள்
என் செய்ய தாமரைக் கண் பெருமானார்க்கு என் தூதாய்
என் செய்யும் உரைத்தக்கால் இனக் குயில்காள் -திருவாய் மொழி -1-4-2-
என்றால் போலே இவளும் நம்மைத் தூது போக வேண்டிக் காலை யொடிக்கக் கருதுவாள் –
இந்த வெய்யிலிலும் கானலிலும் ஓடுவதற்கு நம்மால் ஆகாது
அது தன்னிலும் திருப் பாற்கடல் எம்பெருமான் மீது இவளுக்கு ஆசையாம்
அங்கே ஓட யாராலாகும்
ஆகையாலே இவளுக்கு நாம் முகம் காட்டாமல் தலை மறைந்து இருப்பதே தகுதி -என்று நினைத்து
முகத்தையும் காட்டாமல் குரலையும் தெரிவியாமல்
பதுங்கிக் கிடந்தது
அங்கனம் இருந்த அக்குயிலின் கருத்தைத் தெரிந்து கொண்ட ஆண்டாள் -அம குயிலே -என்று விளித்தாள்-
அழகிய குயிலே -என்றபடி
நீ மற்ற குயில்களைப் போலே இருந்தாய் ஆகில் உன்னை
சரமம் படுத்த நினைத்தாலும் நினைப்பேன்
அழகிய குயில் அன்றோ நீ
உன் அழகைக் கண்டு இருக்கிற நான் அவவழகுக்கு ஒரு வாட்டம் வரும்படி உன்னை சரமம் படுத்த நினைப்பேனோ
நீ எங்கும் தூது செல்ல வேண்டா
நீ இருந்த இடத்திலே இருந்து கொண்டு அப் பெருமான் இங்கே வரும்படி கூவினே ஆகில்
இதுவே மகோபகாரமாம்
எனக்கு மாதரம் நன்மை அன்று
நீயும் ஒரு வாய்ச் சொல்லாலே பெரிய தர்மம் நடத்தினாயாவாய்

உறவு ஆழியும் சங்கும் ஒண் தண்டும்தங்கியகையவனை வரக் கூவில் நீ சாலத் தருமம் பெறுதி
நாம் கூவினால் அவ வெம்பெருமான் ஓடி வரக் காத்து இருக்கிறானோ என்று நினையாதே
நம் மேல் வினை கடிவான் -எப்போதும் கை கழலா நேமியான் -என்றும்
பாது ப்ரணத ரஷாயாம் விளம்பம் அசஹந்நிவ சதா பஞ்சாயுதம் பிப்ரத் சன ஸ்ரீ ரெங்க நாயக -ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் -என்றும்
சொல்லுகிறபடியே என்னைப் போன்ற ஆர்த்தர்கட்கு விரைவாக வந்து கார்யம் செய்வதற்காக

அவன் திவ்ய ஆயுதங்களை ஷண காலமும் கை விடாமல் ஏந்திக் கொண்டு இருப்பது உனக்குத் தெரியாதா
ஏற்கனவே இங்கு வந்து கார்யம் செய்வதில் ஆதாரம் உடையவனான அப் பெருமான் உன் கூவுதல் கேட்ட பின்பும் வாராதே நிற்பானோ
அரை குலைய தலை குலைய ஆனைக்கு வந்து உதவினால் போலே எனக்கும் உதவ ஓடி வருவான் காண்-
ஆகையால் நீ கூவு -என்கிறாள்

பொங்கிய பாற்கடல் -இரண்டு ஹேதுக்கள் பொங்குவதற்கு
சாமான்யமான கடல் சந்த்ரனைக் கண்டால் பொங்கும்
சிறந்த பதின்மர் சந்த்ரர்கள் –
த்வத் பதாப்சே பிரியமாக நகச்சாத்மா நாச்ரித்ய நித்யம் சத்வ்ருத்தொபூத் சசதசகுன புஷ்ககலோ நிஷ்கலங்க-ஸ்ரீவரத ராஜ ஸ்தவம்
என்று எம்பெருமான் உடைய திருவடிகளில் உள்ள பத்துத் திரு விரல்களும் உருண்டை வடிவமாய் நகம் போலே விளங்குகின்றவை நகங்கள் அல்ல
சில குற்றம் குறைகளோடு கூடி இருந்த சந்தரன் பெருமாள் திருவடியை ஆச்ரயித்து அக் குற்றம் குறைகள் தீர்ந்து
பத்து வடிவம் பெற்று அத திருவடிகளை விடாதே கிடக்கிறான்
அவையே நகங்களாக தோற்றுகின்றன –
அந்த பத்து சந்த்ரர்களையும் கண்டு பொங்காமல் இருக்குமோ
மற்றறொரு ஹேது
சந்த்ரமா மனசோ ஜாத -என்றபடி
சந்த்ரனுக்கு எம்பெருமான் தன திரு உள்ளத்தில் உள்ள தண்ணளியிலே ஸ்வல்ப பாகத்தை ஊட்டின மாத்ரமே உள்ளது
அப்படிப் பட்ட சந்த்ரனைக் கண்டால் பொங்கும் கடல்
சாஷாத் அவ வெம்பெருமான் தானே வந்து படுகாடு கிடக்கக் கண்டால் பொங்குதலுக்கு அளவுண்டோ-

என் கொங்கை கிளர்ந்து
ஆசை அளவற்று இருக்கச் செய்தேயும்
நமது பெண்மைக்கு குறைபாடு நேர ஒண்ணாது என்று நான் அடங்கி இருந்தாலும்
என் கொங்கைக்கு அத்தகைய அடக்கம் இல்லையே -என்கிறாள்

கொங்கை குதூகலித்துக் கிளர்ந்து
நம்முடைய கஷ்ட தசையைக் கண்டு அறிந்த எம்பெருமான் பதறி வருகிறான் -என்று எண்ணின
கொங்கைகள் மஜ்கா பரப்புகளை எதிர் கொள்ளப் புறப்படுவாரைப் போலே
குதூஹலமாய் கிளர்கின்றமை காணீர் -என்கிறாள்
ஆகுலம் -செய்கை -களங்கப் பண்ணுகி -ஹிம்சிக்கை

அம் குயிலே
நான் இப்படி கஷ்டப் படா நிற்கவும் நீ மென் மலர்ப் பள்ளியிலே
நிழலாடக் கண்படை கொண்டு மறைந்து கிடப்பது
வெளியில் தலை காட்டினால் நம் அழகுக்கு குறை நேர்ந்து விடும் என்ற கருத்தினால் அன்றோ
என் கஷ்ட நிவாரணத்தை முக்கியமாக கொள்ளாமல்
உன் அழகையே முக்கியமாகக் கொண்டு கிடக்கிறாயே
இதுவோ தகவு -என்ற உபாலம்பம் தோற்ற அழகிய குயிலே -என விழிக்கின்றாள்

சால தருமம் பெறுதி
பிராட்டி திருவடியை நோக்கி
வாசா தர்ம மவாப் நுஹி -என்று அருளிச் செய்ததை அடி ஒற்றி ஆண்டாள் அருளிச் செய்கிறார்-

—————————————————————————————————-

சார்ங்கம் வளைய வலிக்கும் தடக்கைச் சதுரன் பொருத்தமுடையன்
நாங்கள் எம்மில் இருந்தொட்டிய கச் சங்கம் நானும் அவனும் அறிதும்
தேன்கனி மாம் பொழில் செந்தளிர் கோதும் சிறு குயிலே திருமாலை
ஆங்கு விரைந்து ஒல்லைக் கூகிற்று யாகில் அவனை நான் செய்வன காணே–5-8-

பதவுரை

தேம் கனி–இனிமையான பழங்களை யுடைய
மாபொழில்- மாந்தோப்பிலே
செம் தளிர் கோதும்–சிவந்த துளிர்களை வாயலகால் கொந்துகிற
சிறு குயிலே!–இளங்குயிலே!
சார்ங்கம்–தனது வில்லை
வளைய வலிக்கும்–வளைத்து வலிக்கும் சக்தியை யுடைய
தட கை–பெரிய திருக் கைகளை யுடையனாய்
சதுரன்–ஸகலவித ஸாமர்த்தியமுடையனான எம்பெருமான்
பொருத்தம் உடையன்–ப்ரணயாதியிலும் வல்லமை பெற்றவன்;
நாங்கள்–அவனும் நானும் ஆக இருவரும்
இருந்து–சேர்ந்திருந்து
எம்மில் ஒட்டிய–எங்களுக்குள் ரஹஸ்யமாகச் செய்து கொண்ட
கச்சங்கம்–ஸங்கேதத்தை
நானும் அவனும் அறிதும்–நாங்களிருவருமே அறிவோமேயன்றி வேறொருவரும் அறியார்;
ஆங்கு திருமாலை–தூரஸ்தனாயிருக்கிற ச்ரிய; பதியை
ஒல்லை விரைந்து–மிகவும் சீக்கிரமாக
கூ கிற்றி ஆகில்
நீ
அவனை(பிறகு அவன் இங்கு வந்த பிற்பாடு) அவன் விஷயத்தில்
நான் செய்வன–நான் செய்யப் போகிற மிறுக்குக்களை
காண்–காணக் கடவை

முதலடியிலுள்ள இரண்டு விசேஷணங்களும் எம்பெருமானுடைய வீரத்தன்மையையும்,
அந்தரங்கர்பக்கல் அன்புடைமையையும் விளக்குவன.
கண்டகாட்சியில் தானே எதிரிகள் வில்லைப் பொகட்டுவிட்டு முதுகுகாட்டி ஓடும்படி தனது
ஸ்ரீசார்ங்கத்தை வளைக்க வல்ல வீரத்தனம் மிக்கவன் என்கிறது முதல் விசேஷணம்.
அந்தப்புரத்தில் ச்ருங்கார ரஸங்கொண்டாடுகைக்குப் பாங்கான் ப்ரணயித்வமு முடையவன் என்கிறது.- பொருத்தமுடையன் என்று.

இவ்விரண்டாலும் சொல்லிற்றாவது என்னென்னில்;
அவ்வெம்பெருமான் என்னிடம் வரநினைத்தால் அதற்கு இடையூறாக எவ்வளவு விரோதங்கள் நேர்ந்தாலும்
அவற்றைத் தொலைத்தருள்வதற்குத்தக்க வலிவுபடைத்தவன் என்பதும்,
ப்ரணயிநிகளுடன் கலக்குங் காலத்தில் ‘வாத்ஸ்யாயநத்தில் கைதேர்ந்தவன் என்னும் படியிருப்பன் என்பதும் கூறப்பட்டன.

அவ்வெம்பெருமானுடைய சித்தவ்ருத்தியும் என்னுடைய சித்தவ்ருத்தியும் எங்களிருவர்க்கும் தெரியுமே யொழிய
வேறொருவர்க்கும் தெரியாதென்கிறாள் இரண்டாமடியில்.
இருவருமாய்க் கலக்கும்போது “நான் உன்னையொழிய ஜீவிக்கமாட்டேன்’ நான் உன்னையொழிய ஜீவிக்கமாட்டேன்” என்றே
இருவரும் சொல்லிக் கொள்வார்களாம். இது வாய்த்து இருவரும் தம்மிலிருந்து ஒட்டிய கச்சங்கம்.
இந்தசங்கேதமானது கேவலம் வாய்ச்சொல்லாகப் போய்விடாமல் காரியத்திலும் பர்யவஸிக்கும்படி
செய்யவேண்டியது (குயிலே!) உன்கடமைகாண் என்கை உள்ளுறை.

மூன்றாமடி கோகிலஸம்போதநம்’
என் துயரைக் கண்டிருக்கிற நீ உடனே எம்பெருமானும் நானும் கூடும்படி முயற்சி பண்ண வேண்டியது உன் காரியமாயிருக்க,
அதில் நோக்கம் வைக்காமல் தன்வயிற்றை நிறைத்துக் கொள்வதையே ப்ரயோஜநமாகக்கருதிக் கிடக்கிறாயே!;
இனிமையான கனிகள் நிறைந்த மாஞ்சோலையிலே செவ்விய தளிர்களை வாயலகால் கொந்திக் கொண்டு
அதுவே தொழிலாகக்கிடக்கிறாயே!- என்று அக்குயிலின் காதில் கடுமையாகப் படும்படி சொல்லவே,

அதைக்கேட்ட குயில், ‘அம்மம்ம! உனக்கு வேண்டியதைச் செய்வதற்கு நான்’ ஸித்தனாயிருக்கிறேன்;
நான் என்னசெய்ய வேணும்! சொல்’ என்று கேட்க ‘கை கழிந்து போன எம்பெருமான் மீண்டு.
இங்கே விரைந்து ஓடிவரும்படி கூவினாயாகில் இதுவே எனக்கு நீ செய்யும் மஹோபகாரம்’ என்று இவள் சொல்ல;
அதற்கு அக் குயில் ‘அம்ம? எம்பெருமானோடு உனக்கு ஸமாகமம் பண்ணி வைக்கும்படி நியமித்தாய்’
இது லகுவானகாரிய மன்று’ இத்தனை பெரிய காரியத்தை நான் ஸாதித்துத் தந்தால் எனக்கு என்ன
ப்ரதி பலன் தருவதாக நீநினைத்திருக்கிறாய்? என்று கேட்க;

அதற்கு மறுமொழியாக “அவனைநான் செய்வன தானே” என்கிறாள்.
அதாவது – நீ கூவ, அவன் இவ்விடம் வந்து சேர்ந்தவாறே
இத்தனை நாள் அவன் என்னைப் படுத்தினபாடெல்லாம்
ஒரு க்ஷணத்திலே அவன் என்கண் வட்டத்திலே படும்படி செய்யப்போகிறேனே’
அந்த விநோதத்தைக் காண்கை உனக்கு லகுவான லாபமோ? ப்ரமப்ரயோஜநமன்றோ? அதுபோராதே? என்கிறாள்.

“அவனைநான் செய்வன” என்கிறவிவள்
அவனை என்செய்வதாக நினைத்திருக்கிறாள்?
காலாலும் கையாலும் துகைப்பதாக நினைத்திருக்கிறாளோ?
நாயே பேயே என்று வைய நினைத்திருக்கிறாளோ?
கம்பத்தில் கட்டிப் புடைக்க நினைத்திருக்கிறாளோ? என்னில்; இவையொன்றும் செய்யநினைத்திலள்;

அவன் வந்து நிற்க, அவனுக்கு முகங்கொடாதே முகத்தைத் திருப்பிக் கொண்டிருக்க வாய்த்து நினைத்திருக்கிறாள்.
நெடுநாள் பட்டினி கிடந்தவன் முன்னே சோற்றை இட்டு வைத்து அதனை அவன் புஜிக்க வொட்டாமல் தகைந்தால்
அந்தப் பசியன் எப்பாடு படுவானோ அப்பாடுபடுவனிறே இச்செயலுக்கு எம்பெருமான்.

“பொய்யச்சங் காட்டி நீ போதியேலும் இன்னமென்கையகத்து ஈங்கொருநாள் வருதியேல்
என்சினம் தீர்வன்நானே” (பெருமாள் திருமொழி கூ – அ) என்றவிடத்துள்ள விசேஷார்த்தம் இங்கு அது ஸந்திக்கத் தக்கது.
“வண்டார் பூ மாமலர்மங்கை மணநோக்கமுண்டானே.” என்றபடி
நாயகியின் கடாக்ஷ வீக்ஷணத்தையே ஊணாகக் கொண்டிருக்கிற எம் பெருமானுக்கு அந்த ஊண் தடைப்பட்டால்
அதற்கு மேற்பட்ட துடிப்பு இல்லையாம். மற்றபடி காலாலுதைப்பதும் கையால் குத்துவதுமெல்லாம்
(மமசிரஸிமண்டநம் கோபிகர்தாடநம்) என்றிருக்கிற எம்பெருமானுக்குப் பரம யோக்யமேயேதலால்
அவையெல்லாம் தண்டனையாக மாட்டாது; முகத்தை மாறவைப்பதே பெருத்தத் தண்டனையாம் என்க.
இப்படிப்பட்ட தண்டனையை அவனுக்கு நான் செய்யும் போது அதை நீ காணப் போகிறாயன்றோ?
அந்தக்காட்சி எளிதில் கிடைக்கக்கூடியதோ? அந்த ப்ரமப்ரயோஜநத்திற்காகக் கூவாய் என்கிறாளாய்த்து
சார்ங்கம் வளைய வலிக்கும் தடக்கைச் சதுரன் பொருத்தமுடையன்

எம்பெருமான் உடைய வீரத் தன்மையையும்
அந்தரங்கர் பக்கல் அன்புடைமையும் விளக்குவன இந்த விசேஷணங்கள்
கண்ட காட்சியிலே தானே எதிரிகள் வில்லைப் பொகட்டி விட்டு முது காட்டி ஓடும்படி
ஸ்ரீ சார்ங்கத்தை வளைக்க வல்ல வீரத் தனம் –
அந்தப்புரத்தில் ஸ்ருங்கார ரசம் கொண்டாடுகைக்கு பாங்கான பிரணயித்வம் உடையவன் -பொருத்தம் உடையன்
இத்தால்
அவன் வர நினைத்தால்
விரோதங்கள் அனைத்தையும் தொலைக்க வலிவு படைத்தவன் என்றும்
பிரணயி களிடம் கலக்கும் காலத்தில் வாத்ச்யாயனத்தில் கை தேர்ந்தவன் -என்னும் படி இருப்பவன்-

நாங்கள் எம்மில் இருந்தொட்டிய கச் சங்கம் நானும் அவனும் அறிதும்
அவ வெம்பெருமான் உடைய சித்த வருத்தியும்
என்னுடைய சித்த வருத்தியும் எங்கள் இருவருக்குமே தெரியும் ஒழிய
வேறு ஒருவருக்கும் தெரியாது-என்கிறாள்
இருவருமாய் கலக்கும் பொது
நான் உன்னை ஒழிய ஜீவிக்க மாட்டேன் -என்று இருவரும் சொல்லிக் கொள்வார்களாம்
இதுவாய்த்து இருவரும் தம்மில் இருந்து ஒட்டிய ச்சங்கம்
இந்த சங்கேதம் ஆனது கேவலம் வாய்ச் சொல்லாய் போய் விடாமல்
கார்யத்திலும் பர்யசிக்கும்படி செய்ய வேண்டியது
குயிலே உன் கடமை -எனபது உள்ளுறை–

தேன்கனி மாம் பொழில் செந்தளிர் கோதும் சிறு குயிலே
எனது துயரை கண்டு இருக்கிற நீ உடனே எம்பெருமானும் நானும் கூடும்படி முயற்சி பண்ண வேண்டியது உன் கார்யமாய் இருக்க
அதிலே நோக்கம் வையாமல்
தன வயிற்றை நிறைத்து கொள்வதையே பிரயோஜனமாக கருதிக் கிடக்கிறாயே
இனிமையான கனிகள் நிறைந்த மாஞ்சோலையில்
செவ்விய தளிர்களை வாய் அலகாலே கொத்திக் கொண்டு
அதுவே தொழிலாக கிடக்கிறாயே
என்று காதில் கடுமையாக படும்படி சொல்ல
குயில்
அம்மா உனக்கு வேண்டியதை செய்வதற்கு சித்தமாய் இருக்கிறேன்
என்ன செய்ய வேணும் -சொல் என்று கேட்க –

திருமாலை ஆங்கு விரைந்து ஒல்லைக் கூகிற்று யாகில் அவனை நான் செய்வான காணே
கை கழிந்து போன எம்பெருமான் மீண்டு இங்கே விரைந்து ஓடி வரும்படி கூவினே ஆகில்
இதுவே எனக்குச் செய்யும் மகோபகாரம்-என்று இவள் சொல்ல
அதற்கு அக்குயில்
அம்மா இத்தனை பெரிய கார்யத்தை நான் சாதித்துத் தந்தால் எனக்கு என்ன பிரதிபலன் தருவதாக நீ நினைத்துஇருக்கிறாய்
அதற்கு -அவனை நான் செய்வான காணே -என்கிறாள்
அதாவது நீ கூவ
அவன் இவ்விடம் வந்து சேர்ந்தவாறே
இத்தனை நாள் அவன் என்னைப் படுத்தின பாடு எல்லாம் ஒரு ஷணத்தில்
அவன் என் கண் வட்டத்தில் படும்படி செய்யப் போகிறேன்
அந்த விநோதத்தை காண்கை உனக்கு இலகுவான லாபமோ
பரம பிரயோஜனம் அன்றோ
அது போராதோ-என்கிறாள்
அவன் வந்து நிற்க -காலாலும் கையாலும் துகைத்து வாயாலே வைவது இல்லை
முகம் கொடாதே முகத்தை திருப்பி வைத்து
நெடு நாள் பட்டினி கிடந்தவன் முன்னே சோற்றை இட்டு வைத்து
அதனை அவனை புஜிக்க ஒட்டாமல் தகைந்தால்
அந்தப் பசியன் படும் பாடு
இச் செயலுக்கு எம்பெருமான்
பொய்யச்சம் காட்டி நீ போதியேலும் இன்னம் என்கையகத்து ஈங்கு ஒரு நாள் வருதியேல் என் சினம் தீர்வன் நானே -பெருமாள் திருமொழி –
விசேஷ அர்த்தம் இங்கே அனுசந்திக்கத் தக்கது
வண்டார் பூ மா மலர் மங்கை மண நோக்கம் உண்டானே -என்றபடி
நாயகியின் கடாஷ வீஷணத்தையே உணவாகக் கொண்டு இருக்கிற எம்பெருமானுக்கு
அந்த ஊண் தடைப் பட்டால் அதற்கு மேற்பட்ட துடிப்பு இல்லையே
காலால் உதைப்பது போல்வன அவனுக்கு பரம போக்யதையாம்
மமசிரசி மண்டனம் கோபிகா தாடனம் -என்று இருப்பவன் அன்றோ
இப்படிப் பட்ட சிஷையை நான் அவனுக்கு செய்யும் போது நீ காணப் போகிறாய் அன்றோ
அந்த பரம பிரயோஜனதுக்காக கூவாய் -என்கிறாள்-

————————————————————————————————–

பைங்கிளி வண்ணன்  சிரீதரன் என்பதோர் பாசத்தகப் பட்டிருந்தேன்
பொங்கொளி வண்டிரைக்கும் பொழில் வாழ் குயிலே குறிக் கொண்டிது நீ கேள்
சங்கோடு சக்கரத்தான் வரக் கூவுதல் பொன்வளை கொண்டு தருதல்
இங்குள்ள காவினில் வாழக் கருத்தில் இரண்டைத் தொன்றேல் திண்ணம் வேண்டும்–5-9-

பதவுரை

பொங்கு ஒளி வண்டு–மிக்க வொளியை யுடைய வண்டுகளானவை
இரைக்கும் பொழில்–(மது பாந மயக்கத்தாலே) இசை பாடாநின்ற சோலையிலே
வாழ்- களித்து விளையாடுகிற
குயிலே!–கோகிலமே!,
இது–நான் சொல்லுகிற இதனை
நீ குறிக்கொண்டு கேள்–நீ பராக்கில்லாமல் ஸாவதாநமாய்க் கேள்’
நான்–நான்
பைங்கிளி வண்ணன் சிரி தரன் என்பது ஓர் பாசத்து–பசுங்கிளி போன்ற நிறத்தை யுடையனான ச்ரிய பதி யென்கிற ஒரு வலையிலே
அகப்பட்டு இருந்தேன்–சிக்கிக் கொண்டு கிடக்கிறேன்;
இங்கு உள்ள காவினில்–இந்தச் சோலையிலே
வாழ கருதில்–நீ வாழ நினைக்கிறாயாகில்
சங்கோடு சக்கரத்தான் வரக் கூவுதல்–திருவாழி திருச்சங்குடையனான எம்பெருமான் (இங்கே) வரும்படி கூவுவதென்ன
பொன் வளை கொண்டுதருதல்–(நான் இழந்த) பொன் வளைகளைக் கொண்டு வந்து கொடுப்பதென்ன
இரண்டத்து–இவையிரண்டுள் எதாவதொரு காரியம்
திண்ணம் வேண்டும்–நீ கட்டாயம் செய்து தீரவேண்டும்.

ஓ குயிலே! என்னுடைய கூக்குரல் உன் காதில் விழமுடியாதபடி, வண்டுகளின் இசைகள் நிறைந்த சோலையிலே
அவ் விசைகளைக் கேட்டுக் கொண்டு அதுவே போது போக்காக நீ திரிந்தாயாகிலும் உன்னை நான்விடுவேனல்லேன்’
எனது கூக்குரலையும் உனது காதில் வீழ்த்துகின்றேன் கேளாய்; ஏனோதானா என்று கேளாதே;
வண்டுகளின் இசையில் நின்றும் காதை மீட்டுக்கொண்டு என்வாய்ச் சொல்லையே குறிப்பாகக்கேள்;
என்ன சொல்லுகிறேனென்னில்;

இப்போது எனக்கு உண்டாயிருக்கும் நோய் என்னால் பாரிஹரித்துக் கொள்ள முடியாதது;
எம்பெருமானுடைய வடிவழகு முதலியவற்றில் தோற்றுப்போய்க் கால் நடையாடாமல் இருந்தவிடத்தே
யிருக்கும்படியான அவஸ்தையில் கிடக்கிறேன்; அதாவது –
“முன்னையமார் முதல்வன வண்டுவராபதிமன்னன், மணிவண்ணன் வாசுதேவன் வலையுளே – அகப்பட்டேன்” என்றும்
“கற்கின்ற நூல் வலையிற் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார் கால்வலையில் பட்டிருந்தேன்காண்” என்றும்
சொல்லுமாபோலே மாதவனாகிற வலையிலே நான் அகப்பட்டுக்கொண்டேன் – என்றாள்.

இது கேட்ட குயிலானது “அம்ம! இந்த க்ஷேம ஸமாசாரத்தைச் சொல்லவதற்காகவோ என்னை யழைத்து?
நீ வலைப்பட்டிருந்தால் நான் என்செய் வல்லேன்?; என்று சொல்லிவிட்டு
மீண்டும் வண்டுகளின் இசையைக் கேட்பதாகப் பாரங்முகமாயிருக்க,
பின்னடிகளில் கடுமையாகச் சொல்லுகிறாள்;

குயிலே! நீ இச் சோலையிலிருந்து ஜீவிக்க வேணுமே; என்னை அலக்ஷியம் பண்ணிக் கிடந்தாயாகில் இதிலே உனக்கு வாழ முடியுமோ?
நான் முடிந்து போனால் இச் சோலையை உனக்கு நோக்கித் தருவார் ஆர்? பிறகு இருக்க இடமில்லாமல் வருந்துவாய்;
சுகமாக இங்கே வாழ்ந்திருக்கவேணுமென்று விரும்புவாயாகில், உனக்கு இரண்டு காரியம் சொல்லுகிறேன்,
இரண்டில் ஏதாவது ஒன்றை நீ செய்து தீரவேணும்; அவை எவை என்னில்;
வலங்கையாழி யிடங்கைச்சங்கமுடையானான எம்பெருமான் இங்கே வரும்படிகூவுதல் ஒன்று;
என்கையில் வளைகளைக் கொண்டு வந்து கொடுத்தல் ஒன்று;
இவையிரண்டினுள் ஒன்றை நீ செய்தேயாக வேணுமென்கிறாள்.

இந்த விகல்பத்தின் கருத்து என்னென்று ஆராய்வோம்;
கைவளைகளைக் கொணர்ந்து கொடுப்பதென்பது எப்படி? (கைவளை போனவிதம் இத்திருமொழியின் முதற்பாட்டினுரையில் விரியும்.)
எம்பெருமானுடைய பிரிவினாலே கைகழிந்து போனவளைகள் மீண்டுவரவேணுமென்றால்
கழன்றுபோனவளைகள் கையில் தங்கும்படி செய்யவேணுமென்கை.
இது எம்பெருமானுடைய ஸம்ச்லேஷத்தாலன்றி மற்றொருவழியாலும் நேருவதன்று.
அந்த ஸம்ச்லேஷந்தானும் அவ்வெம்பெருமான் வந்தாலன்றி நேரிடாது :

இப்படியிருக்க, சங்கொடு சக்கரத்தான் வரக் கூவுதல் என்பது ஒரு பக்ஷமாகவும்,
பொன் வளை கொண்டு தருதல் என்பது மற்றொரு பக்ஷமாகவும் வேறுபாடு தோற்ற அருளிச்செய்திருக்கிறபடி என்?
“மாம்பழமாவது வேணும், மாங்கனியாவது வேணும்” என்கிறாப்போலே வ்யாஹதமாயிருந்ததே இதுவும் –
என்று நினைக்கம்படியாயிராநின்றது. ஆயினும் இஃதொரு சமத்காரவார்த்தையென்று கொள்ளவேணும்;

பதிவ்ரதாசிரோமணியான ஸாவித்ரியானவள் தன் காதலனாகிய ஸத்யவானுடைய உயிரைக் கவர்ந்து சென்ற
யமனை வணங்கி அவ்வுயிரை மீட்டுக் கொடுக்கும்படி பலவாறு வேண்டியும் அவன் அதற்கு இசையாமற்போக,
உபாயமறிந்த அவள் பலபல தர்மஸம்பந்தமான வார்த்தைகளை இனிமையாகச் சொல்லிக் கொண்டுபோய்
அந்த யமனை மதிமயக்கி “ஸத்யவா னிடத்தில் எனக்குப் பலபிள்ளைகள் பிறக்கும்படி அருள்புரியவேணும்” என வேண்ட,
அவனும் அப்படியே அருளினான் என்றொரு இதிஹாஸமுண்டு;

அதில், நாயகனுடைய பிராணனைப் பிரார்த்தித்து அதனைப் பெறாதவள் ஸந்ததியின் அபிவிருத்தியை வேண்டினது
வ்யாஹதமாயிருக்கச் செய்தேயும், எப்படியாவது தன் மநோரதத்தை நிறைவேற்றிக்கொள்ள நினைத்த
ஸாவித்ரியின் சதுரமான உக்தியாகையாலே ஒழுங்குபெற்றது போல,
இங்கும் சங்கொடு சக்கரத்தான் வாக்கூவுதலும், பொன் வளைக் கொண்டு தருதலும் பர்யாயமாயிருந்தாலும்
இதொரு சமத்காரமான உக்தியாகையாலே ஒழுங்கு பெறுமென்க.
“ஒரு கார்யத்தாலே இரண்டும் தலைக்கட்டுமிறே” என்று ஒரு சொல்லாலே முடித்தருளினார் பெரியவாச்சான்பிள்ளை.

நாராயணாதி நாமங்களைக் குறிப்பிடாதே “சங்கொடு சக்கரத்தான்” என்கையாலே,
அவனுடைய ஆபரணத்தையாவது இங்கே கொண்டுசேர்’ அல்லது
என்னுடைய ஆபரணத்தையாவது கொண்டு கொடு – என்கிற ரஸோக்தி வெளி வரும்.

முதலடியில், பாசம் என்றது தற்சம வடசொல்லாய், கயிறு என்னும் பொருளைத்தந்து வலையைக் குறிக்கும்.
“கார்த்தண் கமலக்கண்ணென்னும் நெடுங்கயிறு” என்று-வலையைக் கயிறாகவே சொல்வதுமுண்டிறே.
இனி, பாசம் என்பதற்கு ஸ்நேஹமென்ற பொருளுமுண்டாகையாலே
“ஸ்ரீதரவிஷயமாகிற ஸ்நேஹத்திலே யென்னுதல்” என்று இரண்டாவது பொருளும் வியாக்கியானத்தில்
அருளிச் செய்யப்பட்டிருக்கிறது.
(ப்ராசீந தாளகோசங்களில் இந்தப் பங்க்தி இல்லை. “ஸ்ரீதரனாகிற வலையிலே” என்னுமளவே உள்ளது.

பொங்கொளி வண்டிரைக்கும் பொழில் வாழ் குயிலே குறிக் கொண்டிது நீ கேள் –
ஒ குயிலே
என்னுடைய கூக்குரல் உன் காதில் விழாத படி வண்டுகளின் இசைகள் நிரந்த சோலையிலே
அவ விசைகளைக் கேட்டுக் கொண்டு அதுவே போது போக்காக நீ
திரிந்தாய் ஆகிலும் நான் உன்னை விடுவேன் அல்லேன்
ஏனோ தானோ என்று கேளாதே
வண்டுகளை இசையில் நின்றும் காதுகளை மீட்டுக் கொண்டு
என் வாய்ச் சொல்லை குறிப்பாக கேள் –

-பைங்கிளி வண்ணன் சிரீதரன் என்பதோர் பாசத்தகப் பட்டிருந்தேன்
இப்போது எனக்கு உண்டாயிருக்கும் நோய் என்னால் பரிஹரித்து கொள்ள முடியாதது
அவன் வடிவழகு முதலியவற்றில் தோற்றுப் போய்
கால் நடையாடாமல்
இருந்த இடத்தே இருக்கும்படியான அவஸ்தையிலே கிடக்கிறேன்
அதாவது
முன்னை அமரர் முதல்வன் வண் துவாபதி மன்னன் மணி வண்ணன் வாசுதேவன் வலையுலே அகப்பட்டேன் -என்றும்
கற்கின்ற நூல் வலையில் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார் கால் வலையில் பட்டிருந்தேன் காண் -என்றும்
சொல்லுகிறபடியே மாதவன் ஆகிற வலையிலே நான் அகப்பட்டுக் கொண்டேன் –
இத்தைக் கேட்ட குயில் நீ வலைப் பட்டு இருந்தால் நான் என்ன செய்ய வல்லேன் -என்று சொல்லி விட்டு
மீண்டும் வண்டுகளின் இசையைக் கேட்பதாகப் பராங்முகமாய் இருக்க –
கடுமையாக சொல்கிறாள் –

சங்கோடு சக்கரத்தான் வரக் கூவுதல் பொன்வளை கொண்டு தருதல்
இங்குள்ள காவினில் வாழக் கருத்தில் இரண்டைத் தொன்றேல் திண்ணம் வேண்டும்
குயிலே நீ இச் சோலையில் இருந்து ஜீவிகிக்க வேணுமே
என்னை அலட்ஷியம் செய்தால் இதிலே உனக்கு வாழ முடியுமோ
நான் முடிந்து போனால் இச் சோலையை உனக்கு நோக்கித் தருவார் யார்
வலங்கை ஆழி இடக்கை சங்கம் உடையானான எம்பெருமான் இங்கே வரும்படி கூவுதல் ஓன்று
என் கையில் வளைகளைக் கொண்டு வந்து கொடுத்தல் ஓன்று
இவை இரண்டினுள் ஒன்றை நீ செய்தாக வேணும் என்கிறாள்-
கை வளை தங்குவது எம்பெருமான் சம்ச்லேஷத்தால் மட்டுமே ஆகும்
அதுவும் அவன் வந்தால் அன்றி ஆகாதே
இரண்டு பஷமாக அருளிச் செய்வான் என் என்னில்
சத்யவான் உயிர் மீட்ச சாவித்திரி யமன் இடம்
பல பிள்ளைகள் பிறக்கும்படி அருள வேணும் என்றால் போலே
இதுவும் ஒரு சமத்காரமான உக்தி
ஒரு கார்யத்தாலே இரண்டும் தலைக் கட்டும் இறே

நாராயணாதி நாமங்களை குறிப்பிடாதே சங்கோடு சக்கரத்தான் -என்கையாலே
அவனுடைய ஆபரணத்தை யாவது இங்கே கொண்டு சேர்
அல்லது
என்னுடைய ஆபரணத்தை யாவது கொண்டு கொடு -என்கிற ரசோக்தி

பாசம் -கயிறு -வலை
கார்த் தண் கமலக் கண் என்னும் நெடும் கயிறு -என்று வலையைக் கயிறாக சொல்லுவதும் உண்டு இ றே

பாசம் -ச்நேஹம் -ஸ்ரீ தர விஷய ச்நேஹம் -ஸ்ரீ தரன் ஆகிற வலையிலே-

—————————————————————————————————–

அன்று உலகம் அளந்தானை யுகந்து அடிமைக் கண் அவன் வலி செய்ய
தென்றலும் திங்களும் ஊடறுத்து என்னை நலியும் முறைமை அறியேன்
என்றும் இக்காவில் இருந்து இருந்து என்னைத் ததைத்தாதே நீயும் குயிலே
இன்று நாராயணனை வரக் கூவாயேல் இங்குத்தை நின்றும் துரப்பன்——5-10-

பதவுரை

அன்று–மஹாபலி கொழுத்திருந்த அக் காலத்தில்
உலகம் அளந்தானை–மூவுலகங்களையும் அளந்து கொண்டவனான எம்பெருமான் விஷயத்திலே
உகந்து–நான் கைங்கர்யத்தை ஆசைப்பட,
அவன்–அவ் வெம்பெருமான்
அடிமைக் கண்–(அந்த) கைங்கரியத்திலே
வலி செய்ய–வஞ்சனை பண்ண
(அதற்கு நான் நோவு பட்டிருக்கிற சமயத்திலே)
தென்றலும்–தென்றல் காற்றும்
திங்களும்–பூர்ண சந்திரனும்
என்னை–என்னை
ஊடு அறுத்து நலியும் முறைமை–உள்ளே பிளந்து கொண்டு புகுந்து ஹிம்ஸிக்கும் நியாயத்தை
அறியேன்–அறிகின்றிலேன்
குயிலே!–ஓ குயிலே!
நீயும்–(என்னுடைய க்ஷேமத்தை விரும்புமனான) நீயும்
என்றும்–எந்நாளும்
இக் காவில்–இந்தக் சோலையிலே
இருந்து இருந்து–இடைவிடாமலிருந்துகொண்டு
என்னை–(ஏற்கனவே மெலிந்திருக்கிற) என்னை
ததைத்தாதே–ஹிம்ஸியாமலிரு,
இன்று–இன்றைக்கு
நாராயணனை வர கூவாயேல்–ஸ்ரீமந்நாராயணன் இங்கே வரும்படி அவனை நீ கூவாமற் போனாயாகில்
இங்குத்தை நின்றும்–இந்தச் சோலையிலிருந்து
துரப்பன்–உன்னைத் துரத்தி விடுவேன்.

எம்பெருமானுடைய பரத்வமொன்றே என்நெஞசிற்பட்டிருந்தால் அவனை நான் ஆசைப்பட மாட்டேன்,
முன்பொருகால், த்ரிவிக்ரமாவதார வ்யா ஜத்தாலே வஸிஷ்ட சண்டாள விபாகம் பாராமல்
எல்லார் தலையிலும் திருவடியைக் கொண்டு வைத்தானென்று கேள்விப்பட்டேனாகையால் அவன் மிக்க
ஸௌசீல்யகுணம் பொருந்தியவனனென்றுணர்ந்து, தன்னை ஆசைப்படாத வுலகங்கட்கே அவன்
அவ்வளவு காரியம் தன் பேறாகச் செய்த போது ஆசைப்பட்ட நம்மை உபேக்ஷிப்பனா என்று நினைத்து
அவ் வுலகளந்த பெருமான் திருவடிகளில் நான் கைங்கரியம் பண்ணிரும்பினேன்,
அக்கைங்கரியம் அடியேனுக்கு ப்ராப்தமாக வொண்ணாதபடி அப்பெருமான் சில மிறுக்குக்களைப் பண்ணவே,
தென்றல் திங்கள் முதலிய பாதகபதார்த்தங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்துகொண்டு
‘நாம் இவளை ஹிம்ஸிப்பதற்கு இதுவே வாய்த்த ஸமயம், எம்பெருமான் இவளை இகழ்ந்திருக்கும்
இச் சமயமே நாம் தாராளமாக இவளை வருத்தக் கூடிய சமயமாகும்‘ என்று துணிந்து
அவை என்னைப் படுத்தும்பாடுகளை நான் வாய்கொண்டு சொல்ல வல்லேனல்லேன்
அவை என்னை பரிதபித்துக்கொண்டு கத்றாநிற்கையில் அச்சோலையிற் குயிலானது தன் களிப்புக்குப் போக்குவீடாக
இனிய பாட்டுகளைப் பாடத் தொடங்கவே அது இவளுக்கு மிகவும் பாதகமாகி,
‘ஓ குயிலே! தென்றலும் திங்களும் என்னை ஹிம்ஸிப்பது ஸ்வல்பமாய், உன்னுடைய ஹிம்ஸையே அளவற்றதாயிருக்கிறது,
அல்லும்பகலும் இடைவிடாதே யிருந்து நீ என்னை ஹிம்ஸிக்கிறாய், இதற்காகவா உன்னை நான் இச்சோலையிலே
இடங்கொடுத்து வாழ்விப்பது? நன்று செய்கின்றாய்!, இதுவரை போனது போகட்டும், இந்தக்ஷணத்தில்
திருமால் இங்கே எழுந்தருளும்படி கூவ்வல்லையாகில் கூவி அவனை இங்கு வரவழை,
இல்லையாகில் தடியெடுத்துரைத்து உன்னை இச்சோலையிலிருந்து துரத்திவிடுவென் – என்கிறார்.

“(அன்றுலக மளந்தானை யுகந்து) உறங்குகிற ப்ரஜைக்கு முலை கொடுக்கும் தாயைப்போல்
இவை யறியாதிருக்கத் தானே இவற்றின் தலையிலே திருவடிகளை வைத்தவனையுகந்து.“ என்ற
வியாக்கியமான ஸ்ரீஸூக்தி காண்க. உகந்து என்றது உகக்க என்றபடி, எச்சத்திரிபு,
(“மழைபெய்து நெல்விளைந்தது“ எனபதுபோல.)
“சொல்திரியினும் பொருள்திரியா வினைக்குறை“ என்ற நன்னூசூத்திர மறியத்தக்கது.

அடிமைக்கண் – கண் – ஏழாம்வேற்றுமையுருபு, அடிமையிலே என்றபடி.
வலி செய்தலாவது – இளைத்தவர்கள் விஷயத்தில் பலிஷ்டர் செய்யும் செயலைச் செய்தல்,
(அலக்ஷியஞ்செய்தல், – மாட்டேனென்னுதல்.)

(தென்றலு மித்யாதி) தென்றலும் திங்களும் என்னை வந்து ஹிம்ஸிப்பதற்கு என் நியாயமுண்டு,
நானாசைப்பட்ட விஷயத்தின் ரஸம் இவ்வற்றுக்குச் சிறிதாகிலும் தெரியுமாகில் இவை ஹிம்ஸிப்பதையும்
ஒருவாறு போக்யமாகக்கொள்ளலாம்,? அவ்விஷயத்தின் வாசியை அறியமாட்டாத இவை என்னை வந்து
ஹிம்ஸிப்பதற்கு என்னநியாயமிருக்கிறது?.
“ராவணன் நடுவே பஜகுந்து நலிந்தாப்போலே தென்றலும் சந்த்ரனும் நடுவே வந்து என்னை நலிகைக்கீடாயிருப்பதொரு
முறையுண்டாக அறிகிறிலேன்“ என்பது வியாக்கியான ஸ்ரீஸூக்தி.
“நலியும்முறைமையறியேன்“ என்றசொல் நலத்தால் – தம்பதிகளைக் கூட்டிவைப்பது இவற்றுக்கு நியாயமேயொழிய
இப்படி வருத்தப்படுத்துவது நியாயமாகமாட்டாது என்ற கருத்து வெளிவருமென்ப.
தன்மகனான சிறிய திருவடிக்கிருந்த விவேகத்தில் காற்கூறும் இக்காற்றுக்கு இல்லையே.

(குயிலே! நீயும் இக்காலில் இருந்திருந்து என்னைத்ததைத்தாதே.)
சோலையில் குயிலினுடைய இருப்பே இவளுக்கு ஹிம்ஸைக்கு உடலாயிருக்கிறபடி.
“பைம்பொழில்வாழ் குயில்காள்! … எம்பெருமானுடைய நிறம் உங்களுக்கு என்செய்வதே? என்று
இவ்வாண்டாள் தானே மேல் அருளிச் செய்கிறாளாகையாலே குயிலானது விரஹ் தசையிலே
எம்பெருமானது திருமேனி நிறத்தை நினைப்பூட்டி இடைவிடாது வருத்துமென்க.

அன்று உலகம் அளந்தானை யுகந்து அடிமைக் கண் அவன் வலி செய்ய
எம்பெருமான் உடைய பரத்வம் ஒன்றே என் நெஞ்சில் பட்டு இருந்தால் நான் ஆசைப் பட மாட்டேன்
முன்பு ஒரு நாள் த்ரிவிக்ரமாவதார வ்யாஜத்தாலே வசிஷ்ட சண்டாள விபாகம் பாராமல்
அபேஷியாமல்
தனது பேறாக
எல்லார் தலையிலும் திருவடியை வைத்தான் என்று —
உறங்குகிற பிரஜைக்கு முலை கொடுக்கும் தாயைப் போலே
இவை அறியாது இருக்க தானே இவற்றின் தலையிலே திருவடிகளை வைத்து
உகந்து –
உகந்து -என்றது உகக்க -எச்ச திரிபு
அவன் மிக்க சௌசீல்ய குணம் பொருந்தியவன் என்று உணர்ந்து
அவன் திருவடிகளிலே கைங்கர்யம் பண்ண விரும்பினேன்
அக் கைங்கர்யம் பிராப்தம் ஆகாதபடி அவன் சில மிறுக்குகளைப் பண்ண
அடிமைக் கண் -அடிமையிலே -ஏழாம் வேற்றுமை உறுப்பு
வலி செய்தல் -இளைத்தவர்கள் விஷயத்தில் பளிஷ்டர் செய்யும் செயலை செய்தல் –

தென்றலும் திங்களும் ஊடறுத்து என்னை நலியும் முறைமை அறியேன்
தென்றல்
திங்கள்
முதலிய பாதக பதார்த்தங்கள் எல்லாம் ஓன்று சேர்ந்து கொண்டு
எம்பெருமான் இவளை இகழ்ந்து இருக்கும் இச் சமயமே நாம் ஹிம்சிக்க வாய்த்த சமயம் என்று துணிந்து
அவை படுத்தும் பாடுகளை நான் வாய் கொண்டு சொல்ல வல்லேன் அல்லேன்
இப்படி பரிதபித்துக் கொண்டு கதறா நிற்கையில்
நான் ஆசைப் படும் விஷயம் வாசியை அறியாத இவை
ராவணன் நடுவே வந்து புகுந்து நலிந்தால் போலே
தென்றலும் சந்திரனும் நடுவே வந்து
என்னை நலிக்கைக்கு ஈடாய் இருப்பதொரு முறை யுண்டாக அறிகிலேன்
தம்பதிகளைக் கூட்டி வைப்பது இவற்றுக்கு நியாயமே ஒழிய இப்படி வருத்தப் படுத்துவது நியாயம் இல்லையே
சிறிய திருவடிக்கு இருந்த விவேகத்தில் கால் கூறும் இக் காற்றுக்கு இல்லையே

என்றும் இக்காவில் இருந்து இருந்து என்னைத் ததைத்தாதே நீயும் குயிலே
அந்த சோலையில் குயிலானது
தன களிப்பிக்கு போக்குவீடாக இனிய பாட்டுக்களை பாடத் தொடங்கவே
அது இவளுக்கு மிகவும் பாதகமாகி
தென்றலும் திங்களும் ஹிம்சிப்பது ஸ்வல்பம்
நீ ஹிம்சிப்பது அளவற்றதாக இருக்கிறது
இதற்காகவா உன்னை நான் இச் சோலையில் இடம் கொடுத்து வாழ்விப்பது –
சோலையில் குயிலினுடைய இருப்பே ஹிம்சைக்கு உடலாய் இருக்கிறபடி
பைம்பொழில் வாழ் குயில்காள் –எம்பெருமான் உடைய நிறம் உங்களுக்கு என்செய்வதே -என்று
இவள் தானே மேலே அருளிச் செய்கையாலே
அவன் திருமேனி நிறத்தை நினைப்பூட்டி இடைவிடாது வருத்தும்

இன்று நாராயணனை வரக் கூவாயேல் இங்குத்தை நின்றும் துரப்பன் –
நன்று செய்கின்றாய்
இதுவரை போனது போகட்டும்
இந்த ஷணத்தில் திருமால் இங்கே எழுந்து அருளும்படி கூவ வல்லையாகில் கூவி அவனை இங்கே வரவழை
இல்லையாகில் தடி எடுத்து உதைத்து உன்னை இச் சோலையில் இருந்து துரத்தி விடுவேன்
நான் உன்னை துரத்தி விடுவேன் என்ற பொருளாயினும்
நான் உயிர் துறந்து விடுவேன் -எனபது கருத்தாம்
நீ வரக் கூவா விடில்
நான் முடிந்து போவேன்
இந்த சோலையை உனக்கு நோக்கித் தருவார் இல்லாமையினாலே நீ இருப்பிடம் இழந்து
வேறிடம் தேடி ஓட வேண்டியது தான் -என்றபடி
மங்கல வழக்கு சொல் என்பர்-

—————————————————————————————————–

விண்ணுற நீண்டடி தாவிய மைந்தனை வேல் கண் மடந்தை விரும்பி
கண்ணுற வென் கடல் வண்ணனைக் கூவு கரும் குயிலே என்ற மாற்றம்
பண்ணு நான் மறையோர் புதுவை மன்னன் பட்டர் பிரான் கோதை சொன்ன
நண்ணுற வாசக மாலை வல்லார் நமோ நாராயணாய என்பாரே——-5-11-

பதவுரை

வேல் கண்–வேல் போன்ற கண்களை யுடையளாய்
மடந்தை–பெண்மைக்கு உரிய குணங்கள் நிறைந்தவளாய்
கண் உறு நால்மறையோர் புதுவை மன்னன் பட்டர் பிரான் கோதை–ஸ்வரூப தனமான நான்கு வேதங்களையும்
ஒதின ஸ்ரீவில்லிபுத்தூர்க்குத் தலைவரான பெரியாழ்வாருடைய மகளான ஆண்டாள்,
அடி விண் உற நீண்டுதாவிய மைந்தனை–திருவடியானது பரமாகாசத்தளவும் போய்ப் பொருந்தும் படியாக
நெடுக வளர்ந்து (உலகங்களை) வியாபித்தமிடுக்கை யுடையனான எம்பெருமானை
விரும்பி–ஆசைப் பட்டு
கருங் குயிலே! என் கடல் வண்ணனை கண் உறகூவு என்ற மாற்றம்–‘ஓகரியகுயிலே! கடல் போன்ற
திரு நிறத்தை யுடையனான என் காதலனை நான் ஸேவிக்கும்படி நீ கூவு என்று நியமித்த பாசுரமாக
சொன்ன–அருளிச் செய்த
நண்ணுறு வாசகம் மாலை–போக்யமான (இந்த) ஸ்ரீ ஸூக்தி மாலையை
வல்லார்–ஓத வல்லவர்கள்
‘நமோநாராயணாய்‘ என்பர்–எம்பெருமானுக்கு அந்தரங்க கிங்கரராகப் பெறுவர்கள்

இத்திருமொழியை ஓதவல்லவர்கள் ஸ்வரூபமான புருஷார்த்தத்தை பெறுவர்களென்று
பலஞ்சொல்லி முடிக்கிறது இப்பாட்டு.

“வேங்கடவனைவிரும்பி“ என்றாவது
“சங்கொடுசக்கரத்தானை விரும்பி“ என்றாவது
“பவளவாயனைவிரும்பி“ என்றாவது அருளிச் செய்யாமல்
“விண்ணுற நீண்ட்டிதாவிய மைந்தனை விரும்பி“ என்றதற்குக் கருத்து – ஒருவரிடத்தில் ஒன்றைக் கொள்ள நினைத்தால்
பின்பு அவர்களுக்கு ஒன்றும் மிகுந்திருக்க வொண்ணாதபடி ஸர்வாங்கசுத்தி பண்ணுகிறவனை யாயிற்று நான் விரும்பியது!
*இரக்க மண் நொடுத்தவற்கு இருக்க வொன்று மின்றியே பரக்கவைத்தளந்து கொண்ட
பற்பபாதனை நான் விரும்புகையாலே ஸர்வத்தையுமிழந்து சந்தியில் நின்று சங்கடப்படவேண்டிற்று என்கை.

“வேற்கண்மடந்தை… பட்டர்பிரான்கோதை, விண்ணுற – நீண்டடி தாவிய மைந்தனைக் கண்ணுற விரும்பி,
‘கருங்குயிலே! என்கடல்வண்ணனைக்கூவு‘ என்ற மாற்றஞசொன்ன நண்ணுற வாசக மாலை வல்லார்
நமோநாராயணாய வென்பார்“ என்றும் அந்வயமாகலாம்.

“வேற்கண் மடந்தை கண்ணுறவிரும்பி“ என்றஸ்வாரஸ்யத்தால் –
“அவன்றன்னை வேலுக்கு இரையாக்கத் தேடுகிறான்“ என்றருளிச்செய்வர் பெரியவாச்சான்பிள்ளை.

நண்ணுறு – நண்ணுவதற்கு உற்ற அனைவரும் ஆசைப்படத்தக்க – போக்யமானஎன்றபடி.
‘எம்பெருமானை நண்ணுவதற்கு உற்ற வாசக மாலை‘ என்றும் பெருள் கொள்ளலாம்.
எம்பெருமானுடைய குணங்களைப் பேசப்புகுந்த வேதம்
(யதோவாசோ நிவர்த்தந்தே, அப்ராப்ய மநஸா ஸஹ) என்னும்படி கையொழிந்து போனது போலல்லாமல்
அவனுடைய குணம் முதலியவற்றை நன்றா நண்ணுவதற்கு (ப்ரதிபாதிப்பதற்று) உற்றவாசகமாலை என்று கருத்து.

நமோநாராயணாய வென்பாரே –
“பல்லாண்டென்று பவித்திரனை நல்லாண்டென்று நவின்றுரைப்பார் நமோநாராயணாயவென்று
பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்திருந்து பல்லாண்டேத்துவர்“ என்று இவளுடைய திருதமப்பனார் அருளிச்செய்ததில் நோக்கு,
பல்லாண்டுபாடப்பெறுவரென்கை திருமந்திரத்தின் பொருளிலே நிஷ்டையுடையராகப் பெறுவர் என்னவுமாம்.
திருவஷ்டாக்ஷரத்தை யநுஸந்திப்பவர்களுக்கு என்னபலனே அதுவே இப்பதிகம் கற்றார்க்கும்பலன் என்றவாறு.
இம்மாலை வல்லாரும் நமோநாராயணாய வென்பாரும் துல்யர் என்க.

நிகமத்தில்
இத் திரு மொழியை ஓத வல்லவர்கள்
ஸ்வரூப அனுரூபமான புருஷார்த்தத்தை பெறுவார்கள் என்று
பலம் சொல்லி தலைக் கட்டுகிறார்

விண்ணுற நீண்டடி
வேங்கடவனை விரும்பி
சங்கோடு சக்கரத்தானை விரும்பி
பவளவாயனை விரும்பி
என்றாவது அருளிச் செய்யாமல்
விண்ணுற நீடு அடி தாவிய மைந்தனை விரும்பி -என்றதுக்கு கருத்து
ஒருவர் இடத்தில் ஒன்றைக் கொள்ள நினைத்தால் பின்பு அவர்களுக்கு ஒன்றும் மிகுந்து இருக்க ஒண்ணாத படி
சர்வாங்க சுத்தி பண்ணுகிறவனை யாயிற்று நான் விரும்பியது
இரக்க மண் கொடுத்தவருக்கு இருக்க ஒன்றும் இன்றியே பரக்க வைத்து அளந்து கொண்ட பற்ப நாதனை
நான் விரும்புகையாலே
சர்வ ஸ்வத்தையும் இழந்து சந்தியில் நின்று சங்கடப் பட வேண்டிற்று -என்க-

வேல் கண் மடந்தை-பட்டர் பிரான் கோதை-
விண்ணுற நீண்டடி தாவிய மைந்தனை
கண்ணுற விரும்பி
கரும் குயிலே
வென் கடல் வண்ணனைக் கூவு
என்ற மாற்றம் சொன்ன
நண்ணுற வாசக மாலை வல்லார் நமோ நாராயணாய என்பாரே
என்றும் அந்வயம் ஆம்
வேல் கண் மடந்தை கண்ணுற விரும்பி -என்ற ஸ்வாரச்யத்தால்
அவன் தன்னை வேலுக்கு இரையாக்கத் தேடுகிறாள் –
நண்ணுற
நண்ணுவதற்கு
உற்ற அனைவரும் ஆசைப் படத் தக்க போக்யமான -என்றபடி
எம்பெருமானை நண்ணுவதற்கு உற்ற வாசகமாலை -என்னவுமாம்
எம்பெருமான் உடைய குணங்களைப் பேசப் புகுந்த வேதம்
யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனசா சஹ -என்னும்படி
கை ஒழிந்தது போனது போல் இல்லாமல்
அவனுடைய குணம் முதலியவற்றை நன்றாக நண்ணுவதற்கு
பிரதிபாதிப்பதற்கு உற்ற வாசக மாலை

நமோ நாராயணா என்பாரே
பல்லாண்டு என்று பவித்ரனை –நல்லாண்டு என்று நவின்று உரைப்பார்
நமோ நாராயணா வென்று பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்து இருந்து பல்லாண்டு ஏத்துவர் -என்று
இவளுடைய திருத் தகப்பனார் அருளிச் செய்வதில் நோக்கு
பல்லாண்டு பாடப் பெறுவார் -என்கை
திரு மந்த்ரத்தின் பொருளிலே நிஷ்டை யுடையராகப் பெறுவார்
திரு அஷ்டாஷரத்தை அனுசந்திப்பவர்களுக்கு என்ன பலனே
அதுவே இப்பதிகம் கற்றார்க்கும் பலன் -என்றவாறு
இம்மாலை வல்லாரும் நமோ நாராயணாய என்பாரும் துல்யர் -என்க-

—————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே -அண்ணங்கராச்சார்யர்  ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ நாச்சியார் திரு மொழி -நான்காம் திரு மொழி – -ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை -ஸ்ரீ உ. வே. P.B.A.. ஸ்வாமிகள்–

September 5, 2014

பிரவேசம் –

கீழ்த் திருமொழி யிலே
தங்களுடைய பரியட்டங்களை எல்லாம் வாரிக் கொண்டு போய்க் குறுந்த மரத்தின் மேலேறிக்
குறும்பு செய்யா நின்ற கண்ணபிரானை நோக்கி
ஆயர்மாதர் பலவகையான வார்த்தைகளைச் சொல்லி
கூறை தாராய்
துகிலைப் பணித்து அருளாய் -என்று
ஒரு காலுக்கு ஒன்பதின் காலாகப் பிரார்த்தித்துக்

கடைசியாக
நெஞ்சு துக்கம் செய்யப் போந்தாய் நின்ற இக் கன்னியரோமை -என்று சாலவும்
நெஞ்சு நொந்து சொன்னவாறே

ஆபன் நார்த்தி ப்ரசம நவி தௌபத்த தீஷச்ய விஷ்ணோ -என்றபடி
அடியவர் துயரை அறுக்குமவனான கண்ணபிரான் திரு உள்ளம் இரங்கி
திருப் பரியட்டங்களைத் தந்து அருள
இவர்களும் அவற்றைப் பெற்றார்களாய் சம்ச்லேஷமும் நடந்தேறியதாக கொள்க –

சம்ச்லேஷம் நடைபெற்றாலும்
சம்யோகரா விப்ரயோகாந்தா -கலவி உண்டானால் அது
மீண்டும் பிரிவோடு தலைக் கட்டி அல்லது நில்லாது
எனபது முறைமை யாகையாலே
உடனே விச்லேஷம் உண்டாக

மீண்டும் கூடுவதற்காக
கூடல் இழைத்தல்-என்று ஒரு சகுன நிரீஷண பிரவ்ருத்தியை
அவ்வயார் மாதர் செய்த படியை அருளிச் செய்வதாய்த்து
இத் திருமொழி-

கூடல் இழைத்தல் ஆவது
வட்டமாகக் கோடு கீறி அதற்குள்ளே
சுழி சுழியாக சுற்றும் சுழித்து
இரண்டு இரண்டு சுழியாக கூட்டிப் பார்க்கும் போது
இரட்டைக் கணக்காக முடிவு பெற்றால் கூடுகை
ஒற்றைக் கணக்காக முடிவு பெற்றால் கூடாமை
என்று ஒரு சங்கேதம் ஏற்படுத்திக் கொண்டு
குறி பார்க்கை

இந்த சகுன அவலோகனம்-கூடல் -கூடல் இழைத்தல்- கூடல் வளைத்தல்- கூடல் குறி
இத்யாதி நாமங்களால் வழங்கப் பெரும்

திரு மழிசைப் பிரான் நான் முகன் திருவந்தாதியில்
அழைப்பன் திரு வேங்கடத்தானைக் காண
இழைப்பன் திருக் கூடல் கூட -என்று அருளிச் செய்து இருப்பதும் காண்க

பகவத் சம்ச்லேஷத்தில் ஆவல் உள்ளபடியைக் கூறும் முறைகளிலே
இதுவும் ஒரு வித முறை என்னும் இவ்வளவே இங்கு உணரத் தக்கது-

———————————————————————————–

தெள்ளியார் பலர் கைந்தொழும் தேவனார்
வள்ளல் மாலிரும் சோலை மணாளனார்
பள்ளி கொள்ளும் இடத்து அடி கொட்டிட
கொள்ளுமாகில் நீ கூடிடு கூடிலே–4-1-

பதவுரை

கூடலே–கூடல் தெய்வமே!
தெள்ளியார் பலர்–தெளிவுடைய பக்தர்கள் பலர்
கை தொழும்–கைகளார வணங்கப் பெற்ற
தேவனார்–ஸ்வாமியாய்
வள்ளல்–பரமோதாரனாய்
மாலிருஞ்சோலை மணாளனார்–திருமாலிருஞ் சோலையிலே எழுந்தருளி யிருக்கிற மணவாளப் பிள்ளையாகிய பரம புருஷன்
பள்ளி கொள்ளும் இடத்து-பள்ளி கொண்டருளுமிடத்திலே
அடி கொட்டிட–(அவனுடைய) திருவடிகளை நான் பிடிக்கும்படியாக
கொள்ளும் ஆகில்–(அவன்) திருவுள்ளம் பற்றுவனாகில்
நீ கூடிடு–நீ கூட வேணும்

க்ஷணகாலமும் பிரியமாட்டாமல் நிக்தியாநுபவம் பண்ணிக் கொண்டு
மங்களாசரஸநபரராயிருக்கும் பலபல நித்யஸூரிகள் கைதொழப் பெற்றவனாய்,
அந்த நித்யஸூரிகள் அநுபவிக்கும் அந்த அநுபவத்தை ஸம்ஸாரிகட்கும் அருள்புரியத் திருவுள்ளம் பற்றித்
திருமாலிருஞ்சோலைமலையிலே வந்து ஸந்நிஹிகனாய் எழுந்தருளியிருக்கிற எம்பெருமான்

குடதிசை முடியை வைத்துக் குணதிசை பாதம் நீட்டி வடதிசை பின்பு காட்டித் தென்திசை இலங்கை நோக்கித்
துயிலுமிடமாகிய திருவரங்கம் பெரிய கோயிலிலே சென்று புக்கு
அப் பெருமானுக்குத் திருவடி வருடும் படியான பாக்கியம் இன்று நமக்கு வாய்க்குமாகில்,
கூடல் தெய்வமே! நீ கூடங்கடவை என்கிறாள்.

எம்பெருமானுடைய ஸந்நிதியிலே போய் அத்தாணிச் சேவகம் பண்ணும்படியாக விதி வாய்க்க வேணுமென்கிற
ப்ரார்த்தனையைக் கூடிடு கூடலே!” என்னும் வாய்ப் பாட்டினால் அருளிச் செய்வதாகக் கொள்க.
“கூடிடு கூடலே!” என்றவிடத்துக்குச் சொல்லவேண்டுமவற்றை அவதாரிகையிலே சொன்னோமாகையாலே அங்குக் காண்க.

(தெள்ளியார் பலர்) தெள்ளியாரென்றது – தெளிவுள்ளவர்களென்றபடி
தெளிவாவது ‘உபாயோபேயங்களிரண்டும் அப்பெருமானே’ என்ற அத்யவஸாயம்,
அஃது உடையவர்கள் “கலக்கமில்லா நல் தவ முனிவர் கரை கண்டோர், துளக்கமில்லா வானவர்” என்றபடி
ஆத்ம ஸ்வரூபம் கை வந்திருக்கும் ஸநகாதி மஹர்ஷிகளும், முக்தரும், நித்யஸூரிகளும்.

(தேவனார்.) தேவ: என்கிற வடசொல் (திவு) என்னும் தாதுவினடியாகப் பிறந்ததாதலால்
அந்தத் தாதுவுக்குள்ள பத்துப் பொருள்களும் தேவ பதத்திற்கு உண்டு. இங்கு ‘உஜ்வலன்’ என்ற பொருள் கொள்ளத்தகும்.
நித்ய முக்தர்கள் தாங்கள் எம்பெருமானைத் தொழுது தங்கள் ஸ்வரூபத்தை நிறம் பெறுவித்துக் கொள்ள
எம்பெருமான் அவர்களைத் தொழுவித்துக் கொண்டு உஜ்வலனாகிறான் என்க.

வள்ளல் :- மிக்க ஔதார்யகுணமுள்ளவன்.
“வள்ளல்” என்றவுடனே ‘மாலிருஞ்சோலைமணாளனார்’ என்கையாலே,
நித்திய விபூதியிலே நித்தியானுபவம் பண்ணுவார் அநந்த கோடி நித்யஸூரிகள் உண்டாயிருக்கச் செய்தேயும்
அவர்களுடன் கூடி வாழ்ந்திருக்குமிருப்பு உண்டதுருக்காட்டாதே இங்குள்ள ஸம்ஸாரிகளின் இழவை அநுஸந்தித்து
உடம்பு வெளுத்து, அங்குள்ள நித்யாநுபவத்தை இங்குள்ளார்க்கும் தந்தருளவேணுமென்னும் நசையாலே
திருமாலிருஞ்சோலை மலையளவும் வந்து கன்னை அநுபவிப்பிக்கைக்கு ஸமயம் எதிர்பார்த்துக் கொண்டு
நிற்கும்படியைச் சொல்லிற்றாகிறது.
“வள்ளல்” என்ற உதா ரகுணத்தைத் திருமாலிருஞ்சோலை மலையிலே விளங்கக் காட்டுகிறபடி.

மணாளனார் :- ‘மணவாளனார்’ என்பது மருவிற்று.
மணாளன் – மணக்கோலத்தோடு வந்து நிற்பவன்.
ஆச்ரிதர்களை அடிமை கொள்வதற்குக் குதூரிஹலமாக நிற்கும் நிலையைச் சொல்லுகிறது.
அப்படிப்பட்ட எம்பெருமான் பள்ளிகொள்ளுமிடத்திலே யென்றது – திருவரங்கம் பெரியகோயிலிலே யென்றபடி,
“பள்ளிகொள்ளுமிடமாகிறது – கோயில்” என்று பட்டரருளிச் செய்ய நான் கேட்டேன் என்று
பிள்ளை யழகிய மணவாள வரையர் பணிப்பர்- என்ற வயாகயாந ஸ்ரீஸூக்தியை அநுஸந்திக்க.

அடிகொட்டிடக் கொள்ளுமாகில்:-
“அன்றிவ்வுலகமளந்த வசவேகொல்” என்றும்,
“நடந்தகால்கள், நொந்தவோ” என்றும்,
“அடியாரல்லல் தவிர்த்த அசவோ அன்றேலிப்படிதான் நீண்டு தாவியவசவோ” என்றுமித்யாதி பாசுரங்களைப்
பகர்ந்து கொண்டு திருவடி பிடிக்கும் படியாக அவ்வெம்பெருமான் என்னைத் திருவுள்ளம் பற்றுவானாகில் என்கை.

ஆண்டாள், பெண்பிள்ளையான வாசிக்கு “முலையாலணைக்கப்பெறுவேனாகில்” என்று சொல்லவேண்டுமிடத்தும்
“அடிகொட்டிடக்கொள்ளுமாகில்” என்கையாலே ஸ்வரூபாநுரூபமான வ்ருத்தியிலே அந்வயிக்க ஆசைப்பட்டமைதோற்றும்.
கைங்கர்யமேயிற்றே ப்ராப்திபலம்.

கொள்ளுமாகில் என்று
அவ்வெம்பெருமானுடைய திருவருளை எதிர்பார்க்கின்றனை தோற்ற அருளிச் செய்கையாலே
“ப்ராப்திக்கு உபாயம் அவன் நினைவு” என்ற ஸத்ஸம்ப்ரதாயார்த்தம் விளங்கும்.
நாம் எத்தனை ப்ரவ்ருத்திகள் செய்த போதிலும் அவை சைதந்ய கார்ய மாத்ரமேயாய்
“உன்மனத்தால் என்னினைந்திருந்தாய்” என்றபடி அவனுடைய நினைவே உபாயமென்று திண்ணிதாகக் கொள்க.

கூடிடுகூடலே:- “அவனாலே பேறு’ என்றிருக்கச் செய்தேயும் அசேதகமான கூடலின் காலிலே விழும்படியிருக்கிறதிறே
ப்ராப்பக்வரை” என்ற வ்யாக்யாந ஸ்ரீஸூக்தி காண்க.

ஸ்ரீவசநபூஷணம் முதல் ப்ரகரணத்தில் -“அப்ராப்த விஷயங்களிலே ஸக்தனானவன் அது லபிக்கவேணுமென்றிரா நின்றால்
ப்ராப்த விஷயங்களிலே ஸக்தனானவன் அது லபிக்க வேணுமென்றிரா நின்றால்
ப்ராப்த விஷய ப்ரவணனுக்குச் சொல்லவேண்டாவிறே,
அநுஷ்டாநமும் அநநுஷ்டாநமும் உபாயகோடியில் அந்வயியாது.
அநந்யோபாயத்வமும் அநந்யோபே யத்வமும் அந்நயதைவத்வமும் குலையும்படியான ப்ரவ்ருத்திகாணா நின்றோமிறே.
ஜஞாந் விபாத்காரியமான அஜஞாநக்காலே வருமவையெல்லாம் அடிக்கழஞ்சு பெறும்.
உபாயபலமாய் உபேயாந்தர்ப்பூதமாயிருக்குமது உபாயப்ரதிபந்தக மாகாது. என்றருளிச் செய்க ஸ்ரீஸூக்திகளும்
அவற்றின் வியாக்கியான ஸ்ரீஸூக்திகளும் இங்கே நோக்கக் தகும்.

தெள்ளியார் பலர் கைந்தொழும் தேவனார்
ஷண காலமும் பிரிய மாட்டாமல் நித்ய அனுபவம் பண்ணிக் கொண்டு
மங்களா சாசன பரராய் இருக்கும் பல பல நித்ய சூரிகள்
கை தொழப் பெற்றவனாய் –

வள்ளல் மாலிரும் சோலை மணாளனார் –
அந்த நித்ய சூரிகள் அனுபவிக்கும் அந்த அனுபவத்தை
சம்சாரிகட்கும் அருள் புரிய திரு உள்ளம் பற்றி
திரு மால் இரும் சோலையிலே வந்து சந்நிஹிதனாய் எழுந்து அருளி இருக்கிற
எம்பெருமான் –

பள்ளி கொள்ளும் இடத்து அடி கொட்டிட –
குடதிசை முடியை வைத்து குணதிசை பாதம் நீட்டி
வடதிசை பின்பு காட்டித் தென்திசை இலங்கை நோக்கித்
துயிலிடமாகிய திருவரங்கம் பெரிய கோயிலிலே சென்று புக்கு
அப்பெருமானுக்குத்
திருவடி வருடும்படியான பாக்கியம்-

கொள்ளுமாகில் கூடிடு கூடிலே –
இன்று வாய்க்கும் ஆகில்
கூடல் தெய்வமே -நீ கூடக் கடவை -என்கிறாள்

எம்பெருமான் உடைய சந்நிதியிலே போய் அத்தாணிச் சேவகம்
பண்ணும்படியாக விதி வாய்க்க வேணும் என்கிற பிரார்த்தனை யைக் கூடிடு கூடலே
என்னும் வாய்ப்பாட்டினால் அருளிச் செய்வதாக கொள்க-

தெள்ளியார் பலர் –
தெள்ளியார் என்றது -தெளிவுற்றவர்கள் என்றபடி
தெளிவாவது உபாய உபேயங்கள் இரண்டும் அப் பெருமானே என்ற அத்யாவசாயம் -அது உடையவர்கள்
கலக்கமில்லா நல்தவ முனிவர்
கரை கண்டோர்
துளக்கமில்லா வானவர் -என்றபடி
ஆத்மஸ்வரூபம் கை வந்து இருக்கும்
சனகாதி முனிவர்களும்
முக்தரும்
நித்ய சூரிகளும்

தேவனார் –
தேவ -திவு தாது -பத்துப் பொருளும் உண்டு
அதில் உஜ்வலன் என்ற பொருள் கொள்ளத் தகும் இங்கு
நித்ய முக்தர்கள் தாங்கள் எம்பெருமானைத் தொழுது
தங்கள் ஸ்வரூபத்தை நிறம் பெருவித்துக் கொள்ள
எம்பெருமான் அவர்களைத் தொழுவித்துக் கொண்டு உஜ்வலன் ஆகிறான் -என்க

வள்ளல்
மிக்க ஔ தார்யம் குணம் உள்ளவன்
வள்ளல் என்ற உடனே மால் இரும் சோலை மணாளனார் என்கையாலே
நித்ய விபூதியிலே நித்ய அனுபவம் பண்ணுவார்
அநந்த கோடி நித்ய சூரிகள் உண்டாய் இருக்கச் செய்தேயும்
அவர்களுடன் கூடி வாழ்ந்து இருக்கும் இருப்பு
உண்டது உருக்காட்டாதே இங்கு உள்ள சம்சாரிகளின் இழவை அனுசந்தித்து
உடம்பு வெளுத்து
அங்கு உள்ள நித்ய அனுபவத்தை இங்கு உள்ளார்க்கும் தந்து அருள வேணும் என்னும் நசையாலே
திருமால் இரும் சோலை மலை அளவும் வந்து
தன்னை அனுபவிப்பிக்கைக்கு சமயம் பார்த்துக் கொண்டு
நிற்கும்படியைச் சொல்லிற்று ஆகிறது –
வள்ளல் -என்கிற உதார திருக் கல்யாண குணத்தை
திரு மால் இரும் சோலை மலையிலே விளங்கக் காட்டுகிற படி-

மணாளனார் –
மணவாளனார்-எனபது மருவிற்று
மணாளன் -மணக் கோலத்தோடு வந்து நிற்பவன்
ஆஸ்ரிதர்களை அடிமை கொள்ளுவதற்காக
குதூஹலமாக நிற்கும் நிலையைச் சொல்லுகிறது
அப்படிப் பட்ட எம்பெருமான் பள்ளி கொள்ளும் இடத்திலே என்றது
திருவரங்கம் பெரிய கோயிலிலே -என்றபடி
பள்ளி கொள்ளும் இடம் ஆகிறது கோயில் என்று பட்டர் அருளிச் செய்யக் கேட்டேன்
என்று பிள்ளை அழகிய மணவாள அரையர் பணிப்பர்-
கொட்டிடக் கொள்ளுமாகில்
அன்று இவ்வுலகம் அளந்த அசவே கொல்-என்றும்
நடந்த கால்கள் நொந்தவோ என்றும்
அடியார் அல்லல் தீர்த்த அசைவோ அன்றேல் இப்படிதான் நீண்டு தாவிய அசைவோ -என்றும்
இத்யாதி பாசுரங்களைப் பகர்ந்து கொண்டு
திருவடி பிடிக்கும் படியாக அவ்வெம்பெருமான் என்னைத் திரு உள்ளம் பற்றுவான் ஆகில் -என்கை –
ஆண்டாள் பெண் பிள்ளையான வாசிக்கு
முலையாள் அணைக்கப் பெறு வேனாகில் -என்று சொல்ல வேண்டும் இடத்து
அடி கொட்டிடக் கொள்ளுமாகில் -என்கையாலே
ஸ்வரூப அனுரூபமான வ்ருத்தியிலே அன்வயிக்க ஆசைப் பட்டமை தோற்றும்
கைங்கர்யம் இ றே பிராப்தி பலம்
கொள்ளுமாகில் என்று அவ்வெம்பெருமான் உடைய திருவருளை எதிர் பார்க்கின்றமை தோற்ற அருளிச் செய்கையாலே
பிராப்திக்கு உபாயம் அவன் நினைவு என்ற சத் சம்ப்ரதாயார்த்தம் விளங்கும்
நாம் எத்தனை பிரவருத்ததிகள் செய்த போதிலும்
அவை சைதன்ய கார்யம் மாத்ரமே யாய்
உன் மனத்தால் என்நினைந்து இருந்தாய் -என்றபடி
அவனுடைய நினைவே உபாயம் என்று திண்ணிதாகக் கொள்க-

கூடிடு கூடலே
அவனாலே பேறு -என்று இருக்கச் செய்தேயும்
அசேதனமான கூடலின் காலிலே விழும்படி இருக்கிறது இ றே ப்ராப்யத் த்வரை-
ஸ்ரீ வசன பூஷணம் முதல் பிரகரணத்தில்
அப்ராப்த விஷயங்களில் சக்தனானவன் அது லபிக்க வேணும் என்று இரா நின்றால்
ப்ராப்த விஷய பிரவணனுக்கு சொல்ல வேண்டா இ றே
அனுஷ்டானமும் அனனுஷ்டானமும் உபாய கோடியிலே அன்வயியாது
அநந்ய உபாயத்வமும் அநந்ய உபேயத்வமும் அநந்ய தைவத்மமும்
குலையும்படி யான பிரவ்ருத்தி காணா நின்றோம் இ றே
ஞான விபாக கார்யமான அஞானத்தாலே வருமவை எல்லாம் அடிக் கழஞ்சு பெரும்
உபாய பலமாய் உபேய அந்தர்பூதமாய் இருக்குமது உபாய பிரதிபந்தகம் ஆகாது -என்று
அருளிச் செய்த ஸ்ரீ ஸூ கதிகளும்
அவற்றின் வியாக்யான ஸ்ரீ ஸூ கதிகளும் நோக்குக –

——————————————————————————————

காட்டில் வேங்கடம் கண்ணபுரநகர்
வாட்டமின்றி மகிழ்ந்துறை வாமனன்
ஓட்டரா வந்து என் கைப்பற்றி தன்னோடும்
கூட்டுமாகில் நீ கூடிடு கூடலே—4-2-

பதவுரை

கூடலே!-’-
காட்டில் வேங்கடம்–காட்டிலுள்ள திருவேங்கடமலையில
நகர் கண்ணபுரம்– நகரமாகிய திருக்கண்ண புரத்திலும்
வாட்டம் இன்றி–மனக் குறை யில்லாமல்
மகிழ்ந்து–திருவுள்ளமுகந்து
உறை–நித்ய வாஸம் செய்தருளுகிற
வாமனன்–வாமநாவதாரம் செய்தருளிய எம்பெருமான்
ஒட்டரா வந்து–ஓடி வந்து
என் கை பற்றி–என்னுடைய கையைப் பிடித்து
தன்னொடும்–தன்னொடு
கூட்டும் ஆகில்–அணைத்துக் கொள்வனாகில்
நீ கூடிடு–நீ கூடவேணும்

எம்பெருமான் என்னோட ஸம்ச்லேஷிக்க வேணுமென்று
திருவேங்கடமலை, திருக்கண்ணபுரம் முதலிய திருப்பதிகளிலே வந்துநிற்கிறான்’
எனக்கு இசைவு உண்டோ இல்லையாவென்று சங்கித்துத் தாமஸித்து நிற்கின்றான்போலும்’
அப்பெருமான் என்னுடைய ஆதுரதையை நன்கறிந்து சடக்கென ஓடி வந்து
என்னைத் தன்னோட அணைத்துக் கொள்ளுமாறு விதி வாய்க்கவேணுமென்று மநோரதிக்கிறாள்.

காட்டில் வேங்கடம் :- ஸ்ரீதண்டகாரண்யத்தில் ரிஷிகளோடே கூடியிருந்து வந வாஸ ரஸம்
அநுபவித்தபடிக்கு ஒப்பாகும்-திருமலையில் வாழ்ச்சி.

கண்ணப்புரநகர்-பிரகு திருவயோத்தியிலே அனைவருடனுங் கூடியிருந்து நகர வாஸ ரஸம்
அநுபவித்தபடிக்கு ஒப்பாகும்-
திருக்கண்ணபுரத்தில் வாழ்ச்சி. திருமலையை விருந்தாவனத்தோ டொத்தாகவும்
திருக்கண்ண புரத்தைத் திருவாய்ப் பாடியோடொத்ததாகவும் நிர்வஹிக்கவுமாம்.
நகர வாஸத்தோடு வந வாஸத்தோடு வாசியற இரண்டையும் இனிதாகக் கொள்ளும் மன மாண்பு
விபவாவதாரத்தில் இருந்தது போலவே அர்ச்சாவதாரத்திலும் உள்ளபடியை இத்தால காட்டிற்றாகிறது.

வாட்டமின்றி மகிழ்ந்துஉறை:- ‘குழுமித்தேவர் குழாங்கள் கைதொழச் சோதி வெள்ளத்தினுள்ளே எழுவதோருரு” என்னும்படி
நித்திய ஸூரிகளுடைய பாரிஷத்தின் நடுவே அத்யுஜ்வலனாய் எழுந்தருளியிருக்குப்பு தவிர்ந்து
மநுஷ்ய நாற்றம் நாறுகிற இந்த ஸம்ஸார நிலத்திலே வந்து கானமும் வானரமும் வேடுமானவற்றுக்கு
முகங்கொடுத்துக் கொண்டு நிற்கவேண்டிற்றே! என்று திருவுள்ளத்தில் வெறுப்பு இல்லாமல்,
இருட்டறையில் விளக்குப் போலே நம்முடைய கல்யாண குணங்களெல்லாம் நன்கு விளங்குமாறு
இங்கு வரப்பெற்றோமே! என்ற அளவற்ற மகிழ்ச்சியோடே எழுந்தருளியிருக்கிறபடி,

உறை- ராம க்ருஷ்ணாத் யவதாரங்கள் ஒருகாலத்தளவிலேயாய்ப் பின்னானார் வணங்குஞ்சோதி யாகாமல்,
தீர்த்தம்ப்ரஸாதித்துவிட்டுத் தன்னுடையச் சோதிக்கெழுந்தருளினாப் போலன்றிக்கே
நித்திய வாஸம் செய்தருளுகிறவிடமாய்த்து அர்ச்சாவதாரத் திருப்பதிகள்.

எம்பெருமாளை அடி பணிந்து வேறுபெற வேண்டிய தன்மை சேதார்களுடையதாகையாலே
அவ் வெம்பெருமான் எழுந்தருளியிருக்குமிடத்தைத் தேடிக்கொண்டு செல்ல வேண்டியவர்கள் சேதநர்களாயிருக்க’
இவர்களிடத்தை நோக்கி அவ் வெம்பெருமான் புறப்பட்டு வரும்படியான ஸந்தர்ப்பமென்? என்று
சங்கை பிறக்கக்கூடுமாதலால் அந்த சங்கைக்குப் பாரிஹரமாக வாமனன் என்கிறாள்’
தன் உடைமையைப் பெறுகைக்குத் தான் இரப்பாளனாய் அவதரித்தபடியிறே வாமநாவதாரம்.
இதனால் சேதநலாபம் ஈச்வரனுக்குப் புருஷார்த்தமேயன்றி
ஈச்வர லாபம் சேதனனுக்குப் புருஷார்த்தமன்று என்னும் ஸத்ஸம்ப்ர தாயார்த்ம் விளங்கும்.

ஓட்டராவந்து:- ஓடிவந்து என்றபடி. ‘ஓட்டம் தரா’ என்ற விரண்டு பதங்கள் ‘ஒட்டரா’ எனச் சிதைந்து புணர்ந்தன.

“வாமனன் ஒட்டரா வந்து” என்று வாக்ய ஸந்தர்ப்ப ஸ்வாரஸ்யத்தால்
பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்கிறார் காண்மின் –
“ஓரடி மண்ணுக்குப் பதறுமவன் இவளைப் பெறும் போதைக்கு ஆறியிரானிறே’
ஆஸுர ப்ரக்ருதியான மஹாபவி முன்னே கழஞ்சு மண்ணுக்குப் பதறி நடக்குமவன்,
இவனொரு தலையானால் ஆறியிரானிறே! காற்றில் முன்னங்கடுகி ஓடிவரக்கடவனிறே.”

“ஒட்டரா வந்து என்கை பற்றுவானாகில்” என்றாவது,
“ஒட்டரா வந்து என்னைத் தன்னொடுங் கூட்டுமாகில்” என்றதற்குக் கருத்து:-
“அங்கண்ணனுண்ட வென்னாருயிர்க் கோதிது” என்னுமாபோலே
பிடித்த பிடியிலே (அநந்யார்ஹை யாம்படி பிடிக்கவேணும்’ அந்த ஹஸ்த ஸ்பர்சத்தாலே)
நான் துவண்டுபோய் ஸ்தப்தையாய் நிற்கையில் என்னை இழுத்தணைத்துத் தன் திருமார்பிலே ஏறிட்டுக் கொள்ளவேணும் என்கை.

கூட்டுமாகில் நீகூடிடு கூடலே!” என்றது-
“அவன் எழுந்தருளி என்னைக் கூட்டிக் கொள்ளும் படியாக நீ அநுகூலிக்கவேணும்” என்றபடி

எம்பெருமான் என்னுடன் சம்ச்லேஷிக்க வேண்டும் என்று
திருவேங்கடமலை திருக்கண்ணபுரம் முதலிய திருப்பதிகளிலே வந்து நிற்கிறான்
எனக்கு இசைவு உண்டோ இல்லையோ என்று சங்கித்து
தாமசித்து நிற்கின்றான் போலும்
அப்பெருமான் என்னுடைய ஆனுரதையை நன்கு அறிந்து
சடக்கென ஓடி வந்து
என்னைத் தன்னோடு அனைத்துக் கொள்ளுமாறு
விதி வாய்க்க வேணும் என்று
மநோ ரதிக்கிறாள் –

காட்டில் வேங்கடம் கண்ணபுரநகர்-
ஸ்ரீ தண்டகாரண்யத்தில் ரிஷிகள் உடன் கூட இருந்து
வனவாச ரசம் அனுபவித்ததற்கு ஒப்பாகும்
திருமலையில் வாழ்ச்சி –

கண்ணபுரநகர் –
பிறகு திரு அயோத்தியில் அனைவருடன் கூடி இருந்து
நகரவாச ரசம் அனுபவித்ததற்கு ஒப்பாகும்
திருக் கண்ணபுரத்தில் வாழ்ச்சி

திருமலையை விருந்தாவனத்தோடு ஒத்ததாகவும்
திருக்கண்ணபுரத்தை திருவாய்ப்பாடியோடு ஒத்ததாகவும்
நிர்வஹிகிக்கவுமாம் –
நகர வாசத்தோடு
வனவாசத்தோடு வாசி அற
இரண்டையும் இனிதாகக் கொள்ளும் மனமாண்பு
விபவ அவதாரத்தில் இருந்தது போலே
அர்ச்சாவதாரத்திலும் இருந்தபடியை இத்தால் காட்டிற்று ஆயிற்று-
வாட்டமின்றி மகிழ்ந்துறை –
குழுமித் தேவர் குழாங்கள் கை தொழச் சோதி வெள்ளத்தின் உள்ளே எழுவதோர் உரு -என்னும்படி
நித்ய சூரிகளின் பரிஷத்தின் நடுவே அத்யுஜ்வலனாய் எழுந்து அருளி இருக்கும்
இருப்பு தவிர்ந்து மனுஷ்ய நாற்றம் நாறுகிற
இந்த சம்சாரத்திலே வந்து
கானமும் வானரமும் வேடும் ஆனவற்றுக்கு முகம் கொடுத்துக் கொண்டு நிற்க வேண்டிற்று இ றே
என்று திரு உள்ளத்தில் வெறுப்பு இல்லாமல்
இருட்டறையிலே விளக்கு போலே
நம்முடைய கல்யாண குணங்கள் எல்லாம் நன்கு விளங்குமாறு இங்கு வரப் பெற்றோமே
என்ற அளவற்ற மகிழ்ச்சியோடு
எழுந்து அருளி இருக்கிறபடி –

உறை-
ராம கிருஷ்ணாதி அவதாரங்கள் ஒரு காலத்திலேயாய்
பின்னானார் வணங்கும் சோதி ஆகாமல்
தீர்த்தம் பிரசாதித்து விட்டு
தன்னுடைச் சோதிக்கு எழுந்து அருளினால் போல் அன்றிக்கே
நித்ய வாசம் சாய்த்து அருளுகிற இடமாய்த்து அர்ச்சாவதார திருப்பதிகள் =

வாமனன் –
எம்பெருமானை அடி பணிந்து
பேறு பெற வேண்டிய தன்மை
சேதனர்கள் உடையது ஆகையாலே
அவ வெம்பெருமான் எழுந்து அருளி இருக்கும் இடத்தைத் தேடிக் கொண்டு
செல்ல வேண்டியவர்கள் சேதனர்களாய் இருக்க
இவர்கள் இடத்தை நோக்கி அவ்வெம்பெருமான்
புறப்பட்டு வரும்படியான சந்தர்ப்பம் என்
என்கிற சங்கை பிறக்கக் கூடும் ஆதலால்
வாமனன் –
என்கிறாள் –
தன உடைமையைப் பெறுகைக்கு தான் இரப்பாளனாய் அவதரித்த படி இ றே வாமனாவதாரம் –
இதனால் சேதன லாபம் ஈஸ்வரனுக்குப் புருஷார்த்தமே அன்றி
ஈஸ்வர லாபம் சேதனனுக்கு புருஷார்த்தம் அன்று என்னும் சத் சம்ப்ரதாய அர்த்தம் விளங்கும்

ஓட்டரா வந்து –
ஓடி வந்து -என்றபடி
ஓட்டம் தரா -என்ற இரண்டு பதங்கள் – ஓட்டரா என சிதைந்து புணர்ந்தன –

வாமனன் ஓட்டரா வந்து –
என்ற வாக்ய சந்தர்ப்ப ஸ்வாரச்யதையால்
ஓரடி மண்ணுக்கு பதறுமவன்
இவனைப் பெறும் போதைக்கு ஆறி இரான் இ றே
ஆசூர பிரக்ருதையான மகா முன்னே கழஞ்சு மண்ணுக்கு
பதறி நடக்குமவன்
இவள் ஒரு தலையானால் ஆறி இரான் இ றே
காற்றிலே முன்னம் கடுகி ஓடி வரக் கடவன் இ றே –

ஓட்டரா வந்து என் கைப்பற்றி பற்றுவான் ஆகில்
என்னாது
ஓட்டரா வந்து என்னைத் தன்னொடும் கூட்டுமாகில்
என்றாவது அருளிச் செய்யாதே
என் கைப் பற்றி தன்னொடும் கூட்டுமாகில் -என்றது
அம கண்ணன் உண்ட என்னுய்ர் கோது இது -என்னுமா போலே
பிடித்த பிடியிலே
அனன்யார்ஹை ஆகும்படி பிடிக்க வேணும்
அந்த ஹஸ்த ஸ்பர்சத்தாலே
நான் துவண்டு போய் ச்ப்தையாய் நிற்கையில்
என்னை இழுத்து அணைத்து தன திரு மார்பிலே எரித்துக் கொள்ள வேணும் என்கை-

கூட்டுமாகில்- நீ கூடிடு கூடலே -என்றது
அவன் எழுந்து அருளி என்னைக் கூட்டிக் கொள்ளும்படியாக
நீ அனுகூலிக்க வேணும் -என்றபடி –

——————————————————————————————

பூ மகன் புகழ் வானவர் போற்றுதற்கு
ஆமகன் அணி வாணுதல் தேவகி
மாமகன் மிகு  சீர் வசுதேவர் தம்
கோமகன் வரில் கூடிடு கூடலே–4-3-

பதவுரை

பூ மகன்–பூலிற் பிறந்த பிரமனும்
வானவர்–நித்யஸூரிகளும்
புகழ் போற்றுதற்கு–கீர்த்தியைப் பாடித் துதிப்பதற்கு
ஆம்–தகுந்த
மகன்–புருஷோத்தமனாய்,
அணி வாள் நுதல் தேவகி–மிகவும் அழகிய நெற்றியையுடைய தேவகியினுடைய
மா மகன்–சிறந்த புத்திரனாய்,
மிகு சீர் வசுதேவர் தம்–மிகுந்த, நற் குணங்களை யுடையரான வசுதேவருடைய
கோ மகன்–மாட்சிமை தங்கிய புத்திரனான கண்ணபிரான்
வரில்–(என்னை அணைக்க) வருவானாகில்
கூடலே! கூடிடு-

நான்முகனும் நித்ய ஸூரிகளும் போற்றும்படியாக அங்கே எழுந்தருளியிருந்து,
பின்பு தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி மண்ணின் பாரம் நீக்குவதற்கே வட மதுரையிலே வந்து
தேவகிக்கும் வஸுதேவர்க்கும் புதல்வனாய்த் திருவவதரித்தருளின எம்பெருமான்
இன்று என் துயர் தீர இங்கே எழுந்தருளக் கூடுமா என்று மநோரத்திக்கிறாள்.

“பூமகன் வானவர் (இவர்களெல்லாரும்) புகழ்போற்றுதற்கு ஆம் மகன்” என இயைத்து உரைக்கப்பட்டது.
அன்றியே, புகழ் என்பதை வானவர்க்கு விசேஷணமாக்கி,
‘(தத் விப்ராஸோ விபந்பவோ ஜாக்ருவாம்ஸஸ் ஸமிந்ததே’) என்றும்,
(‘யத்ரர்ஷய: ப்ரதமஜா யே புராணா:’) என்று மித்யாதி ச்ருதி வாக்யங்களாலே புகழப்பட்ட வானவர்கள் – என்று பொருள் கொள்ளுமாம்:

பூமகன் என்றது உபலக்ஷணமாகி இந்தவிபூதியைச் சொல்லிற்றாய்,
வானவர் என்றது அந்த விபூதியைச் சொல்லிற்றாய்க் கொண்டு, ஓர் ஆற்றின் நடுவே போகிற வோடத்தை
இருகரையிலுள்ளாரும் அழைக்குமா போலே இரண்டு விபூதியி லுள்ளாராலும் போற்றப் பட்டவன் என்க.
(‘நாவேவ யாந்தமுபயே ஹவந்தே’) என்ற வேதவாக்கியம் இங்கே ஸ்மரிக்கத்தகும்.
“போற்றதற்கா மவன்” என்று ப்ராசீநபாடமென்பர். ஆமவன்-தகுதியானவன் என்கை.
இவ்விடத்தில் வியாக்யானத்தால் பாட் நிர்த்தாரணம அசக்யம்’
அரும்பதவுரைகாரர் மாத்திரம் “ஆம் மகன்” என்று கொண்டு விவரிக்கிறார் ஆயினும்
“ஆமவன்” என்ற பாடமே சிறக்குமென்று அஸ்மதாசார்யர் அருளிச் செய்யும்படி. இப்பாடத்தில் எதுகைநயமும் குன்றாது.

அணிவாள் நுதல் தேவகி-ஸாக்ஷாத் பரமபுருஷன் வந்து பிள்ளையாகப் பிறந்தமையாலுண்டான
ஸந்தோஷமிகுதியால் தேவகியின் முகம் மிக்கவொளி பெற்று விளங்கியவாறு.
“தேவகிமகன்” என்னாதே “தேவகி மா மகன்” என்கையாலே- கண்ணபிரானுடைய திருவளர்த்தியைக் கண்டவர்கள்
‘இவன் தேவகியின் புத்திரனல்லன், உடன் பிறந்தவனாக இருக்கக்கூடும்’ என்று சங்கிக்கும் படி யிருந்தமையால்
அப்படிப்பட்ட திருவளர்த்தியுண்டாகும்படி அவளால் வளர்க்கப்பெற்றவன் என்ற கருத்துத் தோற்று மென்ப.

மிகுசீர் வசுதேவர்தம் கோமகன்- இங்கேவ்யாக்யாநஸ்ரீஸூக்தி:- (
“கோமகன்) கோவான் மகன்’ சக்ரவர்த்திக்குப் போலே நியாம்யனல்லன்’ இவர் தம்மையும் நியமிக்கும் மகன்.
ஆவரை நியமிக்கையாவது-கம்ஸபயத்தாலே ‘இவனுக்கு என்வருகிறதோ’ என்று அவர் வயிறுபிடித்தால்
‘அப்பரே! நீர் ஏன் பயப்படுகிறீர்? அஞ்சாதே நான் சொல்வதைக்கேட்டு ஸுகமேயிரும்’ என்றாப்போலே
நியமிக்கை.” கோ-ஸ்வாமி’ நியாமகன்.

கோமகன் வரில் கூடிடு கூடலே!- அப்படிப்பட்ட கண்ணபிரான் என்னிடம் வரும்படியான பாக்கியம்
வாய்க்கவேணுமென்ற மநோத தம் உள்ளுறைவால் என்கையாலே வரும்போதை நடையழகு காண்கையிலே
அபிநிவேச முற்றதென்ப. (“கூடிடு கூடலே!.) நீ கூடி என்னையுமவனைங்கூட்டு” என்பது வ்யாக்யாநஸ்ரீஸூக்தி

நான்முகனும்
நித்ய சூரிகளும் போற்றும்படியாக அங்கே எழுந்து அருளி இருந்து
பின்பு தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி
மண்ணின் பாரம் நீங்குதற்கே
வடமதுரையிலே வந்து வசுதேவற்கும் தேவகிக்கும் புதல்வனாய்
திருவவதரித்து அருளின எம்பெருமான்
இன்று என் துயர் தீர
இங்கே எழுந்து அருளக் கூடுமோ -என்று மநோ ரதிக்கிறாள்-

பூ மகன் வானவர்-இவர்கள் எல்லாம் புகழ் போற்றுதற்கு ஆமகன் -என்று இயைத்து உரைக்கப் பட்டது
அன்றியே
புகழ் என்றதை வானவர்க்கு விசேஷணம் ஆக்கி
தத் விப்ராசோ விபன்யவோ ஜாக்ருவாம்சஸ் சமிந்ததே -என்றும்
யத்ரர்ஷய பிரதமஜா யே புராணா -என்றும் இத்யாதி
சுருதி வாக்யங்களாலே புகழப் பட்ட வானவர்கள்

பூ மகன் என்றது உப லஷணம் ஆக்கி இந்த விபூதியையும்
வானவர் -அந்த விபூதியையும் சொல்வதாகக் கொண்டு
ஒரு ஆற்றின் நடுவே போகிற ஓடத்தை இரு கரையில் உள்ளாறும் அழைக்குமா போலே
இரண்டு விபூதியில் உள்ளாராலும் போற்றப்படுமவன் -என்கை –
நாவேவ யாந்தமுபயே ஹவந்தே -என்ற வேத வாக்கியம் போலே –
போற்றுதர்கா மவன் -பிராசீன பாடம் ஆமவன் -தகுதியானவன்
அரும்பத உரைக்காரர் ஆம் மகன் -என்று விவரித்தாலும் பொருந்தாது
எதுகை நயமும் குன்றாது

அணி வாணுதல் தேவகி -மாமகன்
சாஷாத் பரம புருஷன் வந்து பிள்ளையாய் வந்து பிறந்தமையால் உண்டான
சந்தோஷ மிகுதியால் தேவகியின் முகம் மிக்க ஒளி பெற்று விளங்கிய வாறு –

தேவகி மகன் -என்னாது
தேவகி மா மகன் -என்கையாலே
கண்ணபிரான் உடைய திரு வளர்த்தியைக் கண்டவர்கள்
இவன் தேவகியின் புத்திரன் அல்லன்
உடன் பிறந்தவனாக இருக்கக் கூடும் என்று சங்கிக்கும்படி இருந்தமையால்
அப்படிப் பட்ட திரு வளர்த்தியை
யுண்டாகும்படி அவளால் வளர்க்கப் பட்டவன் என்னும் கருத்து தோன்ற

மிகு சீர் வசுதேவர் தம் கோமகன் –
கோமகன்
கோவாகிய மகன்
சக்கரவர்த்திக்குப் போலே நியாம்யன் அல்லன்
இவர் தம்மையும் நியமிக்கும் மகன்
அவரை நியமிக்கை யாவது
கம்ச பயத்தாலே இவனுக்கு என் வருகிறதோ என்று அவர் வயிறு பிடித்தால்
அப்பரே நீர் என் பயப்படுகிறீர்
அஞ்சாதே நான் சொன்னதைக் கேட்டு சுகமே இரும் என்றால் போலே நியமிக்கை
கோ ஸ்வாமி-நியாமகன்

கோமகன் வரில் கூடிடு கூடலே –
அப்படிப் பட்ட கண்ணபிரான்
என்னிடம் வரும்படியான பாக்கியம்
வாய்க்க வேணும் என்கிற மநோ ரதம் உள்ளுறை –

வரில்
என்கையாலே
வரும் போதை நடை அழகு காண்கையிலே அபி நிவேசம் உற்றது என்ப
கூடிடு கூடலே
கீ கூடி
என்னையும் அவனோடு கூட்டு –

————————————————————————————————–

ஆய்ச்சிமார்களும் ஆயரும் அஞ்சிட
பூத்த நீள் கடம்பேறிப் புகப் பாய்ந்து
வாய்த்த காளியன் மேல் நடமாடிய
கூத்தனார் வரில் கூடிடு கூடலே–4-4-

பதவுரை

ஆய்ச்சிமார்களும்–இடைச்சிகளும்
ஆயரும்–இடையரும்
அஞ்சிட–பயப்படும்படியாக,
பூத்த நீள் கடம்பு ஏறி–புஷ்பித்ததாய் உயர்ந்திருந்த கடப்ப மரத்தின் மேல் ஏறி
புக பாய்ந்து–(அங்கு நின்றும் எழும்பிக் குதித்து)
வாய்த்த காளியன் மேல் நடம் ஆடிய–நர்த்தனஞ் செய்த
கூத்தனார் வரில் கண்ணபிரான் வரக்கூடுமாகில்–பாக்கியசாலியான காளியநாகத்தின் மேல் நாட்ய சாஸ்த்ர நிபுணனான
கூடலே! கூடிடு-

காளியநாகத்தின் கொழுப்பையடக்கின அபதாநத்திலே ஈடுபட்டுப் பேசுகிறாள்.
ஒரு நாள் க்ருஷ்ணன் கன்றுகளை ஒட்டிக்கொண்டு ஒருவரும் ஸஞ்சாரியாக வழியே போகத்தொடங்க,
மற்ற இடைப் பிள்ளைகள் அழைத்து ‘க்ருஷ்ணா! அவ்வழி நோக்க வேண்டா’ அவ்வழியிற் சென்றால்
யமுநா நதியில் ஒர் மடுவில் இருந்து கொண்டு அம்மடு முழுவதையும் தன் விஷாக்நியினாற் கொதிப்படைந்த
நீருள்ள காய்ப் பாநத்துக்கு அநர்ஹமாம்படி செய்த காளிய னென்னும் கொடிய ஐந்தலை நாகம் குடும்பத்தோடு
வாஸஞ்செய்து கொண்டு அணுகினவர்களனைவரையும் பிணமாக்கிவிடுவதால் நாங்கள் அஞ்சுகின்றோம்’ என்ன’
அதைக்கேட்ட கண்ணபிரான் உடனே அக்காளிநாகத்தைத் தண்டிக்கவேண்டுமென்ற திருவுள்ளங் கொண்டு
அம்மடுவிற்குச் சமீபத்திலுள்ளதொரு கடம்பமரத்தின் மேலேறி அம்மடுவிற் குதித்து,
அந்நாகத்தின் படங்களின் மேல் ஏறித் துவைத்து நாக்கநஞ் செய்து நசுக்கி வலியடக்குகையில்,
மாங்கலிய பிக்ஷையிட்டருள வேண்டுமென்று தன்னை வணங்கிப் பிரார்த்தித்த நாக கன்னிகைகளின் விண்ணப்பத்தின்படி
அந்தக் காளியனை உயிரோடு கடலிற்சென்று வாழும்படி விட்டருளினன் என்ற வரலாறு இங்கு அறியத்தக்கது.

“ஆய்ச்சிமார்களு மாயருமஞ்சிட நடமாடிய” என இயையும்.
“அஞ்சிடக் கடம்பேறிப்புகப்பாய்ந்து” என்று இயைக்கவுமாம்.
வாய்த்தவகாளியன் ஸ்ரீ கண்ணபிரான் தன்முலையிலே நடமாட வேணுமென்று இவள் விரும்புமதை
அக்காளியன் தலையிலே பெற்றமைக்கு உகந்து, வாய்த்த என்கிறாள்’
பெண்ணாய்ப் பிறவாதே காளியனாய்ப் பிறந்தேனாகில் இந்த பாக்கியம் பெறலாமே’
அம்ருதம் பொதிந்த முலைகள் பெறாத பாக்கியத்தை விஷம் பொதிந்தவன் தலை பெற்றதே!
இதென்ன பாக்கியம்! என்று உள்குழைகின்றமை “வாய்த்த” என்ற சொல் நயத்திலே தெரியும்.
‘காளியஸ்ய பணமாம் சிரஸ்து மே ஸத்கதம்ப கிகாத்வ மேவவா-வஷ்டி ஜுஷ்ட வநசைல ஸுந்தா’.
த்வத் பதாப்ஜயுக மர்ப்பிதம் யயோ:’ என்று ஸுந்தரபாஹு ஸ்தவத்திலே ஆழ்வா னருளிச் செய்த ச்லோகம் இங்கே ஸ்மரிக்கத்தக்கது. (
கண்ணபிரானுடைய திருவடியின் ஸ்பர்சம் பெறும்படியான பாக்கியம் பெற்ற காளியன் தலையாகாது,
கடம்பமரத்தின் உச்சியாகவாவது என்தலை ஜந்மமெடுக்க விரும்புகின்ற தென்பது
இந்த ச்லோகத்தின் தாத்பர்ய ஸங்க்ரஹம்.) நடம்-நடநம் என்ற வடசொல்லின் கடைக்குறை.

கூத்தனார் வரில் ஸ்ரீ அக்காளியன் தலையிலே நடமாடின ச்ரமத்தோடே தன் பக்கல்
வந்தணைய வேணுமென்று விருப்பம் போலும் .

ஆய்ச்சிமார்களும் ஆயரும் அஞ்சிட நடமாடிய
என்று இயையும்
அஞ்சிடபூத்த நீள் கடம்பேறிப் புகப் பாய்ந்து –
என்றும் இயையும்

வாய்த்த காளியன்-
கண்ணபிரான் தன முலையிலே நடமாட வேணும்
என்று இவள் விரும்புவதை
அக்காளியன் தலையிலே
பெற்றமைக்கு உகந்து
வாய்த்த என்கிறாள் –
பெண்ணாய் பிறவாதே
காளியனாய் பிறந்தேன் ஆகில்
இந்த பாக்கியம் பெறலாமே
அமிர்தம் பொதிந்த முலைகள் பெறாத பாக்யத்தை
விஷம் பொதிந்தவன் தலை பெற்றதே –
இது என்ன பாக்கியம் -என்று
உள்ளம் குழைந்து-வாய்த்த -என்று அருளிச் செய்கிறாள்
காளியச்த பணதாம் சிரச்துமே சத்கம்ப சிகரத்வ மேவவா
வஷ்டி ஜூஷ்ட வனசைல சுந்தர த்வத் பதாப்ஜயுக மர்ப்பிதம் யதோ-கூரத் ஆழ்வான்
காளியன் தலையாகவாவது
கதம்ப மர உச்சியாகவாவது
இல்லாமல் போனதே –

கூத்தனார் வரில் –
அக்காளியன் தலையில் நடமாடிய ஸ்ரமத்தோடே
தன பக்கல் வந்து அணைய வேணும்
என்று மநோ ரதிக்கிறாள்
கூடிடு கூடலே-

——————————————————————————————–

மாட மாளிகை சூழ் மதுரைப் பதி
நாடி நந்தெருவின் நடுவே வந்திட்டு
ஓடை மா மதயானை யுதைத்தவன்
கூடுமாகில் நீ கூடிடு கூடலே—4-5

பதவுரை

ஓடை–நெற்றிப் பட்டத்தை யுடைத்தாய்
மா மதம்–மிக்க மதத்தை யுடைத்தான
யானை–(குவலயா பீடமென்னும்) யானையை
உதைத்தவன்–உதைத்து முடித்த கண்ண பிரான்
மாடம் மாளிகை சூழ் மதுரை பதி–மாடங்களுடைய மாளிகைகளாலே சூழப்பட்ட மதுரை மாநகரிலே
நாடி–(நம் வீட்டைத்) தேடிக் கொண்டு
நம் தெருவின் நடுவே வந்திட்டு–நம்முடைய வீதியின் நடுவிலே வந்து
கூடும் ஆகில் -(நம்மோடு) கட்டுவானாகில்
கூடலே! நீ கூடிடு

குவாலயாபீடமென்னும் மதயானையை முடித்தருளின அபதாநத்திலே ஈடுபட்டுப் பேசுகிறாள்.-
வில்விழாவென்ற வ்யாஜம் வைத்துக் கம்ஸனால் வரவழைக்கப்பட்டு ஸ்ரீக்ருஷ்ய பலராமர்கள் கம்ஸனுடைய
அரண்மனையை நோக்கிச் செல்லுகையில், அவ்வரண்மனைவாசல் வழியில் தம்மைக் கொல்லும்படி
அவனால் ஏவி நிறுத்தப்பட்ட குவலயாபீட மென்னும் மதயானை கோபித்துவர, அவ்யாதவ வீரர் அதனை எதிர்த்து
அதன் தந்தங்களிடையும் சேற்றிலிருந்து கொடியை யெடுப்பதுபோல எளிதிற் பறித்து அவற்றையே ஆயுதமாகக் கொண்டு
அடித்து அவ்யானையை உயிர் தொலைத்து விட்டு உள்ளே போயினர் என்ற வரலாறு இங்குணரத்தக்கது.

இரண்டாமடியின் இறுதியிலுள்ள வந்திட்டு என்ற வினையெச்சம்-உதைத்தவன் என்பதிலே அந்வயிப்பதல்ல’
கூடுமாகில் என்பதிலே அந்வயிக்கக்கடவது.
இப்போது, கண்ணபிரான் திருவாய்ப்பாடியில் இருப்பதாகவும்,
இவ்வாண்டாள் தான். வடமதுரையிலே யிருப்பதாகவும் பாவநப்ரகர்ஷம் செல்லுகிறபடி.
மதுரைப்பதிக்கு “மாடமாளிகைசூழ்” என்று விசேஷணமிட்ட ஸ்வாரஸ்யத்தைக் கண்டறிந்த பெரியவாச்சான்பிள்ளை
ரஸோக்தியாக அருளிச் செய்கிற ஸ்ரீஸூக்திகளைக் காணீர்-
“அவன் வில்விழவுக்கென்று கோடித்தான்’ இவள் இவன் வரவுக்கென்றிருக்கிறாள்”.

“மதுரைப் பதியிலே நந்தெருவின் நடுவே வந்திட்டு” என்னுமளவே போதுமாயிருக்க,
நாடி என்று விசேஷித்து அருளிச்செய்கையாலே, கண்ணபிரான் நேரேவந்து என் வீட்டில் புகுரலாகாது
’ நாச்சியார் திருமாளிகை எது? நாச்சியார் திருமாளிகை எது?” என்று ஊரெங்கும் விசாரித்துக்கொண்டு
தேடி வரவேணுமென்னும் ஆவல் தோற்றும்.

“நம் தெருவின் நடுவே” என்றவிடத்திற்குப் பெரியவாச்சான்பிள்ளை அருளிச்செய்கிறார்-
“திருவாய்ப்பாடியடையத் தன்னதானாப்போலே இங்கும் ஒருதிருமாளிகை யுண்டு’
உகந்தருளின் விடமெங்கும் ‘தேவத்வே தேவதேஹேயம் மநுஷ்யத்வேச மாநுஷீ என்கிறபடியே
ஒரோ திருமாளிகை யுண்டு” என்று,- மதுரைப் பதியிலே ஆண்டாளுக்கென்று ஒரு தெருவும் திருமாளிகையுமுண்டோ?
என்று பிறக்கும் சங்கைக்குப் பதிஹரமாக இஃது அருளிச்செய்தபடி,
ஆனால், பலச்ருதி சொல்லும் ஈற்றுப்பாட்டில் “ஆய்ச்சியர் கூடலைக் குழற்கோதை முன்கூறிய”
என்றருளிச்செய்திருத்தலால் இத்திருமொழி முழுதும் ஆய்ச்சியர் பாசுரமேயொழிய ஆண்டாள் பாசுரமன்றென்றும்,
அநுகாரமாத்ரமே என்றும், ஆகவே நம்தெரு என்றவிடத்து நம் என்றது ஆய்ச்சியரையே யன்றி
ஆண்டாளை யன்று என்றும் கொள்ளவேண்டுகையாலே
பெரியவாச்சான் பிள்ளை அங்ஙனே அருளிச்செய்கைக்கு ப்ரஸக்தி? என்று சிலர் சங்கீக்கக்கூடும்’
வஸ்துத: ஆய்ச்சியர் கூடலைக் குழற்கோதை அநுகரித்துக் கூறினளாயினும்’
கோதையாயிருக்குந் தன்மையும் கூடவே அநுஸந்தேயம்.
அப்படியில்லாவிடில் ஆண்டாளுக்குக் கவனசாதுரியம் மாத்திரம் ஏற்பட்டதாகுமே யொழிய
பாவவ்ருத்தியில் பாரிபாகமென்பது சிறிதும் ஏற்படாமற்போகும்.
பாவநாப்ரகர்ஷத்தாலே அநுகாரம் முற்றிற்றென்னா தானான தன்மைலோபிக்க மாட்டாதென்க.
இனி நம் என்பதற்கு ஆய்ச்சியரையே பொருளாகக்கொண்டாலும் அவர்கட்குத்தான் மதுரைப் பதியில் வீதியுண்டோவென்று ஆராய்க.

ஓடை என்று யானையின் நெற்றிப்பட்டத்துக்குப் பெயர்

ஓடை மா மதயானை யுதைத்தவன்
ஓடை என்று யானையின் நெற்றிப் பட்டத்துக்கு பெயர் –
நெற்றிப் பட்டத்தை உடைத்தாய்
மிக்க மதத்தை உடைத்தான
குவலயா பீடம் என்னும் யானையை எதிர்த்து
அந்தந தந்தங்கள் இரண்டையும் சேற்றில் இருந்து கொடியைப் எடுப்பது போலே
எளிதில் பறித்து
அவற்றையே ஆயுதமாகக் கொண்டு அடித்து
அவ யானையை முடித்த –

மாட மாளிகை சூழ் மதுரைப் பதி நாடி நந்தெருவின் நடுவே வந்திட்டு
வந்திட்டு எனபது உதைத்தவன் என்பதில் அந்வயம் இல்லை
கூடுமாகில் -என்பதிலே அந்வயம்
இப்போது கண்ணபிரான் திருவாய்ப்பாடியில் இருப்பதாகவும் இவ்வாண்டாள்
தான் வடமதுரையில் இருப்பதாகவும்
பாவனா பிரகர்ஷம்

மாட மாளிகை சூழ் -விசேஷணம்
அவன் வில் விழாவுக்கு என்று கோடித்தான்
இவள் இவன் வரவுக்கு என்று இருக்கிறாள்

மதுரைப் பதியிலே நந்தெருவில் நடுவே வந்திட்டு என்னும் அளவே போதுமே இருக்க
நாடி -என்று விசேஷித்து அருளிச் செய்கையாலே
கண்ணபிரான் நேரே வந்து என் வீட்டில் புகுரலாகாது
நாச்சியார் திரு மாளிகை எது
நாச்சியார் திரு மாளிகை எது
என்று ஊர் எங்கும் விசாரித்துக் கொண்டு
தேடி வர வேணும் என்னும் மநோ ரதத்தால் அருளிச் செய்கிறாள்-

நம் தெருவின் நடுவே –
திருவாய்ப்பாடி அடையத் தன்னதானாப் போலே
இங்கும் ஒரு திரு மாளிகை உண்டு
உகந்து அருளின இடம் எங்கும்
தேவத்வே தேவதே ஹேயம் மனுஷ்யத்வேச மானுஷீ -என்கிறபடியே ஒரோ திரு மாளிகை உண்டு -என்று
மதுரைப் பதியிலே ஆண்டாளுக்கு ஒரு தெருவும் திரு மாளிகையும் உண்டோ -என்று பிறக்கும் சங்கைக்கு பரிஹாரம்
ஆனால்
பல சுருதி சொல்லும் ஈ ற்றுப் பாட்டில்
ஆய்ச்சியர் கூடலைக் குழல் கோதை முன் கூறிய -என்று அருளிச் செய்து இருத்தலால்
இத்திரு மொழி முழுவதும் ஆய்ச்சியர் பாசுரமே ஒழிய ஆண்டாள் பாசுரம் அன்று என்றும்
அணுகார மாத்ரமே என்றும்
ஆகவே நம் தெரு -என்ற இடத்து நம் -என்று ஆய்ச்சியரையே அன்றி
ஆண்டாளை அன்று என்று கொள்ள வேண்டுமே -என்ற சங்கைக்கு
வஸ்துத ஆய்ச்சியர் கூடலைக் குழல் கோதை அனுகரித்துக் கூறினாள் ஆயினும்
கோதையாய் இருக்கும் தன்மையும் கூடவே அனுசந்தேயம்
அப்படி இல்லாவிடில்
ஆண்டாளுக்கு கவன சாதுர்யம் மாத்ரமே எற்பட்டதாகுமே ஒழிய
பாவ வ்ருத்தியில் பரிபாகம் எனபது சிறிதும் ஏற்படாமல் போகும்
பாவன பிரகர்ஷத்தாலே அநுகாரம் முற்றிற்று என்னா
தானான தன்மை லோபிக்க மாட்டாது என்க
இனி நம் என்பதற்கு ஆய்ச்சியரையே பொருளாகக் கொண்டாலும்
அவர்கட்குத் தான் மதுரைப் பதியில் வீதி உண்டோ என்று ஆராயக-

—————————————————————————————————

அற்றவன் மருத முறிய நடை
கற்றவன் கஞ்சனை வஞ்சனையில்
செற்றவன் திகழும் மதுரைப்பதி
கொற்றவன் வரில் கூடிடு கூடலே–4-6-

பதவுரை

அற்றவன்–(ஏற்கனவே எனக்கு) அற்றத் தீர்ந்தவனாய்
மருதம் முறிய–யமளார்ஜுந மென்னும்) மருத மாங்களானவை முறிந்து விழும்படியாக
நடை கற்றவன்–தவழ் நடை நடக்கக் கற்றவனாய்
கஞ்சனை–கம்சனை
வஞ்சனையில்–வஞ்சனையிலே
செற்றவன்–கொன்று முடித்தவனாய்
திகழும் மதுரை பதி கொற்றவன்–விளங்குகின்ற மதுதைமா நகர்க்கு அரசனான கண்ணபிரான்
வரில்–வந்திடுவானாகில்
கூடலே! கூடிடு-.-

கண்ண பிரான் இரட்டை மருதமரங்களிடையே தவழ்ந்து சென்றதோர் அபதாநத்தையும்
கஞ்சனைக் கொன்றவாற்றையும் நினைத்து அவற்றிலே ஈடுபட்டுப் பேசுகிறாள்.

மருத முறிய நடைகற்ற வரலாறு வருமாறு-
கண்ணன் குழந்தையாயிருக்குங்காலத்தில் துன்பப்படுகின்ற பல விலையாடல்களைச் செய்யக்கண்டு
கோபித்த யசோதை க்ருஷ்ணனைத் திருவயிற்றிற் கயிற்றினாற்கட்டி ஒருரலிலே பிணித்துவிட,
கண்ணன் அவ்வுரலை யிழுத்துக்கொண்டு தவழ்ந்து அங்கிருந்த இரட்டை மருத மரத்தின் நடுவே
எழுந்தருளிய பொழுது அவ்வுரல் குறுக்காய் நின்று இழுக்கப்பட்டபடியினாலே அம்மரங்களிரண்டும் முறிந்து விழுந்தவளவில்
முன் நாரதர் சாபத்தால் அம்மரங்களாய் கிடந்த நளகூபரன் மணிக்ரிவன் என்னும் குபேரபுத்திரர் இருவரும் சாபந்தீர்ந்து சென்றனர்.
இந்த குபேர புத்திரர்கள் முன்பு ஒரு காலத்தில் பல அப்ஸரஸ் ஸ்த்ரிகளுடனே ஆடையில்லாமல் ஜலக்ரிடை செய்து
கொண்டிருக்கையில் நாரதமா முனிவர் அங்கு எழுந்தருள மங்கையர் அனைவரும் நாணங்கொண்டு ஆடையெடுத்து உடுத்து நீங்க,.
இந்த மைந்தர் மாத்திரம் மதுபாநமயக்கத்தினால் வஸ்த்ரமில்லாமலேயிருக்க நாரதர் கண்டுகோபங்கொண்டு
‘மரங்கள் போலிருக்கிற நீங்கள் மரங்களாவீர்’ என்று சபிக்க உடனே அவர்கள் வேண்டிக்கொண்டதற்கு இரங்கி
‘நெடுங்காலஞ்சென்றபின்பு திருமால் உங்களருகே நெருங்குஞ் சமயத்தில் இவ்வடிவமொழிந்து முன்னையவடிவம் பெற்றுமீள்வர்’
என்று சாப விடை கூறிப்போயினார். இப்படி சாபத்தினால் மரங்களான இவற்றில், கம்ஸனால் ஏவப்பட்ட
இரண்டு அஸுரர்களும் ஆவேசித்துக் கிடந்தனர் என்று கொள்ளல் வேண்டும்’
“ஒருங்கொத்தவிணை மருதம் உன்னியவந்தவரை” என்றும்
“பொய்ம்மாயமருதான வசுரரை” என்றும் பெரியாழ்வார் அருளிச் செய்திருத்தலால்.

அற்றவன் – ஏற்கனவே “ஆண்டாளுக்கானவன் இவன்” என்னும்படி அற்றுத் தீர்ந்தவன்.
“பாரித்ராணாய ஸாதூரிநாம்-ஸம்பவாமியுகே” என்றிறே திருமுகப்பாசுரம்.

“அற்ற வல் மருதம் முறிய”- தன்னைக் கொல்லுவதாக நிக்சயித்து வந்த வலிய மருதமரங்கள் முறியும்படியாக
என்று பொருள் கொள்ளக்கூடுமாயினும் ஸ்வரஸமன்று’ வியாக்கியமானத்திலுமில்லை.

கஞ்சனை வஞ்சனையிற் செற்ற வரலாறு-
தன்னைக் கொல்லப்பிறந்த தேவகி புத்திரன் யசோதையிடம் ஒளித்து வளர்தல் முதலிய வரலாறுகளை
நாரதர் சொல்லக் கேட்டுக் கம்ஸன் அதிக கோபங்கொண்டு க்ருஷ்ணனைக் கொல்ல நிச்சயித்து
வில்விழாவென்கிற வியாஜவைத்துக் கண்ணனை மதுரைக்கு வரவழைத்துப் பலவகையில் வதைக்க வழி தேடுகையில்
கம்ஸ ஸபையிலே கண்ணபிரான் வேகமாக எழும்பிக் கஞ்சனது மஞ்சத்தின் மேலேறி அவனது கிரிடம் கழன்று கீழேவிழும்படி
அவனைத் தலைமயிர் பிடித்துத் தரையில் தள்ளி அவன் மேல் தான் விழுந்து அவனைக் கொன்றிட்டனன் என்பதாம்.

வஞ்சனையில் என்ற விடத்துக்குப் பெரியவாச்சான்பிள்ளை அருளிச்செய்கிறார்-
“தர்மயுத்தமே வேணுமென்று பெருமாளைப் போலே யிருந்தானாகில் அவன் வஞ்சநமே தலைக்கட்டுமே’
அவன் நினைத்த வஞ்சநத்தை அவன்றன்னோட போக்கின்படி.”

கண்ணபிரான் கம்ஸனைக் கொன்றபின்பு, மகனிழந்தவனும் தன் மாதாமஹனுமாகிய உக்ரஸேந மஹாராஜனைத்
தளையினின்றும் விடுவித்து வடமதுரையிற் பட்டாபிஷேகம் செய்துவைத்தானாகையாலே திகழும்
மதுரைப்பதிங் கொற்றவன் உக்ரஸேநனேயாகிலும் கண்ணபிரானே ராஜா என்பது ஆண்டாளுடைய பக்ஷமாம்.
“நஹி பாலந ஸாமா;த்ய மருதே ஸர்வேச்வரம் ஹாரிம்) என்றிறே ப்ரமாண ப்ரஸித்தியும்.
“வாசுதேவன் மதுரை மன்னன்” என்றார் பெரியாழ்வாரும்

நாரதர் சாபத்தால்
நளகூபுரன் மணிக்ரீவன் -இரண்டு குபேர புத்ரர் மருத மரங்கள் ஆக
கண்ணன் திருவடியால் சாபம் தீர்ந்து சென்றனர்
ஒருங்கொத்த இணை மருதம் உன்னிய வந்தவரை -என்றும்
பொய்ம்மாய மருதான வசுரரை-என்றும்
பெரியாழ்வார் அருளிச் செய்தபடி
கம்சனால் ஏவப் பட்ட அசுரர்கள் இந்த மரங்களில் ஆவேசித்து கிடந்தனர் –
அற்றவன் -ஏற்கனவே ஆண்டாளுக்கு ஆனவன் இவன் -என்னும் படி அற்றுத் தீர்ந்தவன்
பரித்ராணாயா சாது நாம் –சம்பவாமி யுகே யுகே -என்று இ றே திருமுகப் பாசுரம்

அற்ற வல் மருதம் முறிய –
தன்னைக் கொள்ளுவதாக நிச்சயைத்டு வந்த வழிய மருத மரங்கள்
முறியும்படி -பொருள்
கொள்ளலாம் -ஆயினும் ஸ்வரசம் அன்று -வ்யாக்யானத்திலும் இல்லை

வஞ்சனையில்
தர்ம யுத்தமே வேணும் என்று
பெருமாளைப் போலே இருந்தான் ஆகில்
அவன் வஞ்சமே தலைக் கட்டுமே
அவன் நினைத்த வஞ்சகத்தை அவன் தன்னோடு போக்கின்படி –

தனது மாதாமஹனான உக்ரசேனனைதலையினின்று விடுவித்து வடமதுரையில்
பட்டாபிஷேகம் செய்து வைத்து
திகழும் மதுரைப் பதிக கொற்றவன் உக்ரசேனனேஆகிலும்
கண்ணபிரானே ராஜா எனபது ஆண்டாள் உடைய பஷமாம் –
நஹி பாலான சாமர்த்திய மருதே சர்வேச்வரம் ஹரிம் -என்று இ றே பரமான பிரசித்து
வாசுதேவன் மதுரை மன்னன் -என்றார் பெரியாழ்வாரும்-

————————————————————————————————-

அன்று இன்னாதான செய் சிசுபாலனும்
நின்ற நீள் மருதும் எருதும் புள்ளும்
வென்றி வேல் விறல் கஞ்சனும் வீழ முன்
கொன்றவன் வரில் கூடிடு கூடலே–4-7

பதவுரை

அன்று–முற் காலத்தில்
இன்னாதன செய் சிசுபாலனும்–வெறுக்கக் கூடிய கெட்ட காரியங்களையே செய்து வந்த சிசுபாலனும்
நின்ற நீள் மருதும்–வழியிடையே நின்ற பெரிய இரட்டை மருத மரங்களும்
எருதும்–ஏழு ரிஷபங்களும்
புள்ளும்–பகாஸுரனும்
வென்றி வேல் விறல் கஞ்சனும்–வெற்றியை விளைவிக்க வல்ல வேலாயுத மென்ன
(அதைப் பிடிக்கத்தக்க) மிடுக்ககென்ன இவற்றை யுடையவனான் கம்சனும்
வீழ–முடிந்து விழும்படியாக
முன்–எல்லார் கண்ணெதிரிலும்
கொன்றவன்–கொன்றொழித்த கண்ண பிரான்
வரில்–வரக்கூடுமாகில்
கூடலே! கூடிடு;

சிசுபாலவதம் முதலிய ஐந்தாறு சாரித்திரங்களிலே ஈடுபட்டுப் பேசுகிறாள். சிசுபாலன் வரலாறு :-
விகர்ப்பததேசத்தில் குண்டினமென்கிற பட்டணத்தில் பீஷ்மகனென்கிற அரசனுக்கு
ருக்மி என்கிற பிள்ளையும் ருக்மணி என்கிற பெண்ணுமிருந்தனர்.
அந்த ருக்மிணியானவள் ஸாக்ஷாத் ஸ்ரீமஹாலக்ஷிமியின் அவதாரம்.
அவளுக்கு யுக்தவயது வந்தவுடன் க்ருஷ்ணன் சென்று இப்பெண்ணை எனக்கு விவாஹம்செய்து கொடுக்கவேணுமென்று கேட்க,
ருக்மி என்பவன் அவளைச் சோதிதேசத்ரசனான சிசுபாலனுக்குக் கொடுக்க விரும்பிய வனாதலால்
க்ருஷ்ணனுடைய விருப்பத்திற்கு உடன்படாதொழிந்தான்.

சில நாள் கழித்தபின் அந்த ருக்மிணியின் கல்யாணத்துக்காக ஸ்வயம்வரம் கோடித்து
ஸகல தேசத்து அரசர்களையும் ருக்மி வரவழைத்தான்.
அவர்கள் வந்து சேர்ந்தவுடனே க்ருஷ்ணனும் பல ராமாதிகளைக் கூட்டிக்கொண்டு அப்பட்டணத்துக்குப் போய்
கல்யாணத்துக்கு முதல்நாள் அந்த ருக்மிணியை மாயமாய் அபஹரித்துக்கொண்டு வந்துவிட்டான்.
பின்பு அங்குள்ள தந்தவக்த்ரன் முதலிய பல அரசர்கள் போர் செய்ய எதிர்த்துவர,
அவர்களைப் பலராமனும் கண்ணபிரானும் முதுகுகாட்டி ஓடும்படி செய்துவிட்டனர்.
பிறகு ருக்மிணிப் பிராட்டியின் தமையனான ருக்மியானவன் ‘இப்படி செய்கையாவது ஏன்?’ என்று
எதிர் பொருது மீட்பதாக நினைத்துவந்து கண்ணனைத் தகைய, அப்போது ஸ்ரீ க்ருஷ்ணன்
‘இவனைக் கொன்றால் ருக்மிணி மனம் வருந்துவாள்’ என்று அவனைப் பிடித்துத் தனது தேர்க்காலிலே கட்டி
அப்பாலே அவனது தலையைச் சிரைத்திட்டு மாநபங்கஞ் செய்துவிட்டுப் பின்பு
ருக்மிணியை விதி பூர்வகமாகக் கல்யாணஞ் செய்துகொண்டான். இஃது இப்படி நிற்க:-

சிசுபாலன் பிறந்தபொழுது, நான்கு கைகளையும் மூன்று கண்களையு முடையனாயிருந்தான்.
அப்பொழுது அனைவரும் இது என்னவென்று வியக்கும்போது ஆகாயவாணியார் இவனைத் தொடுகையில்
இவனது கைகளிரண்டும் மூன்றாம் விழியும் மறையுமோ, அவனால் இவனுக்கு மரணம் என்று கூறிற்று:
அவ்வாறே பலரும் தொடுகையில் மறைபடாத கைகளும் கண்ணும் கண்ணபிரான் தொட்டவளவிலே மறைபட்டன,
அதனால் ‘இவனைக்கொல்பவன் கண்ணனே’ என்றறிந்த சிசு பாலன்தாய் யாதுசெய்யினும் என்மகனைக் கொல்லலாகாது’
என்று கண்ணனை வேண்ட, அந்த அத்தையின் நன்மொழிக்கு ஒருசார் இணங்கிய கண்ணன்
‘இவன் எனக்கு நூறுபிழைசெய்யுமளவும் இவன் பிழையை நான் பொறுப்பேன் என்று கூறியருளினன்.
பின்பு சிசுபாலன், தனக்குக் கண்ணன் சத்ருவென்பதை இளமையிலேயே அறிந்து அதனாலும்
பூர்வஜந்ம வாஸனையாலும் வளர்ந்த மிக்க பகைமையைப் பாராட்டி, எப்பொழும் அப்பெருமானுடைய
குணங்களையும் திவ்யசேஷ்டிதங்களையும் நிந்திப்பதே தொழிலாக இருந்தான்.
இவனுக்கு மணஞ்செய்து கொடுப்பதென்று நிச்சயித்துவைத்திருந்த ருக்மிணியைக் கண்ணன் வலியக் கவர்ந்து
மணஞ்செய்துகொண்டதுமுதல் இவன் கண்ணனிடத்து மிக்க வைரங்கொண்டனன்.
பின்பு இந்த்ரப்ரஸ்த நகரத்தில் நடந்த ராஜஸூயயாகத்தில் தர்மபுத்ரனாற் கண்ணபிரானுக்கு அக்ர பூஜை செய்யப்பட்டதைக் கண்டு
அளவிறந்த வசைச்சொற்களைப் பிதற்றி அதுபற்றிக் கண்ணபிரானுடைய திருவாழியினால் தலை துணிக்கப்பட்டு இறந்து
தேஜோமயமான திவ்யசாரிரம் பெற்று எம்பெருமானது திருவடியை அடைந்தனன்.

இன்னாதன்-இனியவையல்லாதவை’ அனைவராலும் இகழத்தக்கவை என்றபடி.
“பலபலநாழஞ் சொல்லிப் பழித்த சிசுபாலன்” என்றும்,
“கேட்பார் செவிசுடு கீழ்மைவசவுகளே வையும், சேட்பால் பழம்பகைவன் சிசுபாலன்” என்றும் அருளிச் செய்துள்ளமை காண்க.

எருதும் என்றது
ஸ்ரீ கும்பனென்னும் இடையர் தலைவனது மகளாயும் நீளாதேவியின் அம்சமாகப் பிறந்ததனால்
நீளா என்ற பெயரால் வழங்கப்பட்டு வருபவளுமான நப்பின்னைப் பிராட்டியை மணஞ்செய்து கொள்ளுதற்காக
அவளது தந்தை கந்யாசுலைகமாகக் குறித்தபடி. யாவர்க்கும் அடங்காத அஸுராவேசம் பெற்ற ஏழு எருதுகளையும்
கண்ணபிரான் ஏழுதிருவுருக் கொண்டு சென்று வலியடக்கி அப்பிராட்டியை மணஞ்செய்து கொண்ட வரலாறு அறிக.

அன்றியே,
இங்கு எருதும் என்றது அரிஷ்டாஸுரனைச் சொல்லிற்றாகவுமாம்,
கம்ஸனாலேவப்பட்ட அசுரர்களில் அரிஷ்டணென்பவன் எருதுவடிவங்கொண்டு பசுக்களை யெல்லாம் முட்டி
இடைச் சேரியைப் பயப்படுத்திக் கொண்டு ஸ்ரீக்ருஷ்ணனது திருவயிற்றின் மேல் கண் வைத்துக் கொம்புகளிற் பிடித்து
அசைய வொட்டாமற் செய்து தன் காலினால் அவன் வயிற்றில் ஓரிடி இடித்து அவன் கழுத்தைப் பிடித்துக் கசக்கி
அவனுடைய கொம்புகளில் ஒன்றைப் பறித்து அதனாலேயே அவனை யடித்துக் கொன்றனன் என்ற கதை அறியத் தக்கது.

புள்ளும் ஸ்ரீ பகன் என்னும் ஓரஸுரன் கொக்குவடிவங்கொண்டு கண்ண பிரானைக் கொல்வதாக நெருங்கி வர,
அப்பொழுது கண்ணன் அப்பறவையின் வாயலகுகளை இரு கையாலும் பிடித்துக் கிழித்து அதனை அழித்தனன் என்றுணர்க.

அன்று இன்னாதான செய் சிசுபாலனும்
நின்ற நீள் மருதும் எருதும் புள்ளும்
வென்றி வேல் விறல் கஞ்சனும் வீழ முன்
கொன்றவன் வரில் கூடிடு கூடலே
நான்கு கைகள் மூன்று கண்கள் உடன் பிறந்தானாம் சிசுபாலன்
தன அத்தையின் வேண்டு கோளுக்கு இணங்க எத்தனை பிழை செய்தாலும் பொறுத்து தேஜோ மயமான
திவ்ய சரீரம் கொடுத்து தன திருவடி சேர்த்து அருளினான் – கண்ணபிரான்

இன்னாதான –
இனியவை அல்லாதவை -இகழத் தக்கவை
பலபல நாழம் சொல்லிப் பலித்த சிசுபாலன் -என்றும்
கேட்பார் செவி சுடு கீழ்மை வசவுகளே வையும் சேட்பால் பலம் பகைவன் சிசுபாலன் -என்றும் அருளினார்கள் இ றே

எருதும்
கும்பன் -நீளா -நப்பின்னை -ஏழு எருதுகளை அடிக்கி
அன்றியே அரிஷ்டாசுரன்-எருது வடிவம் கொண்டு -அவனை நிரசித்தவன்-

புள்ளும் –
பகாசுரன் கொக்கு வாய் அலகுகளை பிடித்து இழித்து அழித்த வ்ருத்தாந்தம்

——————————————————————————————————-

ஆவலன்புடையார் தம் மனத்தன்றி
மேவலன் விரை சூழ் துவராபதிக்
காவலன் கன்று மேய்த்துவிளையாடும்
கோவலன் வரில் கூடிடு கூடலே–2-8-

பதவுரை

ஆவல் அன்பு உடையார் தம்–ஆவலையும் அன்பையும் உடையவர்களுடைய
மனத்து அன்றி மேவலன்–நெஞ்சு தவிர மற்றோரிடத்திலும் பொருந்தாதவனும்
விரை சூழ் துவராபதி காவலன்–நல்ல வாஸனை சூழ்ந்த த்வாரகாபுரிக்கு நிர்வாஹகனும்
கன்று மேய்த்து விளையாடும் கோவலன்–கன்றுகளை மேய்த்து விளையாடும் கோபாலனுமாகிய கண்ண பிரான்
வரில் – வரக் கூடுமாகில்
கூடலே! கூடிடு.

ஆவல் அன்புடையயார் தம்
ஆவல் என்றாலும் அன்பு என்றாலும் பொதுப்படையாக ப்ரேமத்தைச் சொல்லுமாகிலும்,
கோபம் ரோஷம் இத்தியாதிபதங்களின் அர்த்தத்திலே நுட்பமான பேசும் இருக்கிறாப்போலே இங்கும் சிறிது பேதம் உண்டு’
‘எம்பெருமானே உபாயோபேயங்கள்’ என்கிற ‘அத்யவஸாயம் கிடக்கச் செய்தேயும்
நோன்பு நோற்பது, காமன் காலிலே விழுவது, சிற்றிவிழைப்பது பனிநீராடுவது, கூடலிழைப்பது
இவை போல்வன அதி ப்ரவருத்திகளில் துணிவைப் பிறப்பிக்கும் ப்ரேமம் ஆவலெனப்படும்.

“மல்லாண்ட திண்டோள் மணி வண்ணா!” என்று எம்பெருமானுடைய மிடுக்கின் மிகுதியை அறிந்திருக்கச் செய்தேயும்
அவனை ரக்ஷ்யனாகவும் தன்னை ரக்ஷகனாகவும் நினைத்துப் பல்லாண்டு பாடுகையிலே ஒருப்படுத்தும்
ப்ரேமம் அன்பு எனப்படும் என்று கொள்க.
ஆவல்- ஆண்டாளுடையபடி;
அன்பு-இவளுடைய திருத்தகப்பனாரான பெரியாழ்வாருடையபடி,
ஆக இவ்விரண்டையும் சொன்னவித்தால் தங்கள் குடியிலுள்ளார் மனத்தோடல்லது
வேறொருவர் மனத்தோடு பொருந்த மாட்டான் எம்பெருமான் என்றாளாய்த்து.
மேவலன் -விரும்பாதவன் என்றபடி “நம்பும் மேவும் நசையாகுமே.” என்பது தொல்காப்பியம்.

துவராபதிக்காவலன் ‘காலயவநன்’ என்பானொருவன் செருக்கித் திரிந்து கொண்டிருக்கையில்
ஒருநாள் நாரதரைப் பார்த்து ‘இவ்வுலகினில் சூரரானவர் யாராவது உண்டோ? என்று கேட்க;
மதுரையில் யாதவர்கள் இருக்கிறார்கள், அவர்கள் மிக்க பராக்ரமசாலிகள்’ என்று நாரதர் சொல்ல,
அதைக் கேட்டவுடனே அவன் அங்கிருந்து புறப்பட்டு மதுரைக்கு வந்து யாதவர்களுடன் போர் செய்யத் தொடங்க,
அப்பொழுது கண்ணபிரான் இதையறிந்து மேற்கடலுக்குச் சென்று அங்கு ஸமுத்ரராஜனை யாசித்துப்
பன்னிரண்டு யோஜனை விஸ்தீர்ணமுள்ள இடத்தை வாங்கி அங்கு அழைத்துக் கொண்டு போய் வைத்துக்
காலயவநனுடைய பயத்தில் நின்றும் விடுவித்த வரலாறு அறிக.

துவராவதிஸ்ரீ (த்வாரவதி) என்ற வடசொல் திரிபு. விரைசூழ் என்று த்வாரகைக்கு விசேஷணமிட்டது-
“மட்டேறுகற்பகத்தை மாதர்க்காய் வண்துவரை நட்டானை” என்ற அருளிச் செயலில்
அமைந்த கதையைத் திருவுள்ளம்பற்றி என்னலாம்.
கண்ண பிரான் ஸத்யபாமையினுடைய வேண்டுகோளுக் கிணங்கி இந்திரன் காவினிலிருந்த பாரிஜாத தருவை
த்வாரகையிலே கொணர்ந்து நாட்டினனாதலலால் விரை சூழப் பெற்றதென்க.

(காவலன் கோவலன்) பரத்வம் ஒருபக்கத்திலே, ஸௌலப்யம் ஒருபக்கத்திலே,
(‘ஸர்வஸ்யஜகத: பாலௌ வத்ஸபரலௌ பபூவது:’) என்ற ரிஷியைப் போலே அதிசயப்படுகிறாளாய்த்து.

ஆவலன்புடையார் தம் மனத்தன்றி
ஆவல் என்றாலும்
அன்பு என்றாலும்
பொதுப்படையாக பிரேமத்தைச் சொல்லும் ஆகிலும்
நுட்பமான பேதம் -கோபம் ரோஷம் இத்யாதி போலே
எம்பெருமானே உபாய உபேயங்கள்-என்கிற அத்யாவசாயம் கிடக்கச் செய்தேயும்
நோன்பு நோற்பது
காமன் காலிலே விழுவது
சிற்றில் இளைப்பது
பனி நீராடுவது
கூடல் இளைப்பது
இவை போல்வன அதி பிரவ்ருத்திகளில்
துணிவைப் பிறப்பிக்கும் ப்ரேமம் மணி வண்ணா -என்று எம்பெருமான் உடைய மிடுக்கின் மிகுதியை
அறிந்து இருக்கச் செய்தேயும்
அவனை ரஷ்யனாகவும் தன்னை ரஷகனாகவும் நினைத்து
பல்லாண்டு பாடுகையிலே ஒருப்படுத்தும் ப்ரேமம் அன்பு -எனப்படும்

ஆவல் -ஆண்டாள் உடைய படி
அன்பு—-இவள் திருத் தகப்பனார் பெரியாழ்வார் உடைய படி

ஆக இவ்விரண்டையும் சொன்னதால்
தங்கள் குடியில் உள்ளார் மனத்தோடு அல்லாது
வேறு ஒருவர் மனத்தோடு பொருந்த மாட்டான் எம்பெருமான் -என்றாள் ஆய்த்து-

மேவலன் -விரும்பாதவன் -என்றபடி
நம்பும் மேவும் நசை யாகுமே -தொல்காப்பியம்
விரை சூழ் துவராபதிக் காவலன்-
பன்னிரண்டு யோஜனை விஸ்தீரணம் உள்ள
த்வாரகை பட்டணம் அமைத்து
யாதவர்களை காலயவன் உடைய பயத்தில் நின்றும் விடுவித்து அருளினானே-

விரை சூழ் -த்வாரகைக்கு விசேஷணம்
மாட்டேறு கற்பகத்தை மாதர்க்கே வண் துவரை நட்டானை-என்றபடி
சத்யபாமைக்காக பாரிஜாத தருவை நாட்டினான் ஆதலால்
விரை சூழப் பெற்றது

காவலன் கோவலன் வரில் கூடிடு கூடலே
பரத்வம் ஒரு பக்கத்திலே இருக்க
சௌலப்யம் ஒரு பக்கத்தில் இருக்க
சர்வச்ய ஜகத பாலௌவத்ச பாலௌ பபூவது -என்ற
ரிஷியைப் போலே அதிசயப் படுகிறாள் ஆய்த்து-

—————————————————————————————————

கொண்ட கோலக் குறள் உருவாய்ச் சென்று
பண்டு மா வலி தன் -பெரு வேள்வியில்
அண்டமும் நிலனும் அடி யொன்றினால்
கொண்டவன் வரில் கூடிடு கூடலே–4-9-

பண்டு–முற் காலத்திலே
கோலம் கொண்ட குறள் உரு ஆய்–(முப்புரி நூலும் க்ருஷ்ணாஜிநமும் முஞ்ஜியும் பவித்ரமும் தண்டுமான)
கோலம் பூண்ட வாமந ரூபியாய்
மாவலி தன்–பெரு வேள்வியில் சென்று
அண்டமும்–மேலுலகங்களையும்
நிலனும்–கீழுலகங்களையும்
அடி ஒன்றினால்–ஒவ்வோரடியாலே
கொண்டவன்–அளந்து கொண்ட த்ரிவிக்ரமன்
வரில்–வருவானாகில்
கூடலே!–கூடிடு

வாமநாவதாரத்திலும் த்ரிவிக்ரமாவதாரத்திலும் ஈடுபட்டுப் பேசுகிறாள்.
இவ்வவதார சாரித்திரம் ப்ரஸித்தம்.
இயற்கையான அழகுக்கு மேலே யஜ்ஞோபவீத’ க்ருஷ்ணாஜிந, பவித்ர, கண்ட, மௌஞ்ஜீ
முதலியவற்றை யணிந்து கொண்டதனாலே யுண்டான செயற்கை யழகு வீறு பெற்றிருந்தமையினால்
கொண்ட கோலம் எனப்பட்டது.

(பெரு வேள்வியில்.) எம்பெருமானைக் காண்பதற்கு நான் இப்பாடுபடுகிறேன்’
பகவத் விபூதிதஸ்கரர்களில் தலைவனான மஹாபலி ஒரு ச்ரமமுமில்லாமல் அப்பெருமானை
யஜ்ஞவாடத்திலே கையிலங்கு நெல்லிக் கனியாகக் காணப் பெற்றானே!, அவ் வேள்வியின் பெருமை என்னோ!
என்று கொண்டாடுகின்றமை தோன்ற “வேள்வியில்” என்னாதே “பெரு வேள்வியில்” என்கிறாள்.

“அடி யொன்றினால்” என்றது “அடி ஒவ் வொன்றினால்” என்றபடி

இயற்கையான அழகுக்கு மேலே
யஜ்ஞ்ஞோ பவீத
க்ருஷ்ணாஜின
பவித்ர
தண்ட
மௌஞ்ஜீ
முதலியவற்றை அணிந்து கொண்டதனாலே உண்டான
அழகு வீறு பெற்று இருந்தமையினால்
கொண்ட கோலம் -என்கிறாள்

-பெரு வேள்வியில்
எம்பெருமானைக் காண்பதற்கு நான் இப்பாடு படுகிறேன்
பகவத் விபூதி தச்கரர்களில் தலைவனான மகாபலி
ஒரு ஸ்ரமமும் இல்லாமல்
அப்பெருமானை யஜ்ஞ் வாடத்திலே கை இலங்கு நெல்லிக் கனியாகக்
காணப் பெற்றானே
அவ்வேள்வியின் பெருமை என்னோ -என்று கொண்டாடுகிறாள்
இதனால் வேள்வியில் என்னாமல்-பெரு வேள்வியில் -என்று அருளிச் செய்கிறாள்

அடி ஒன்றினால் -என்றது
அடி ஒவ் ஒன்றினால் -என்றபடி-

————————————————————————————————-

பழகு நான் மறையின் பொருளாய் மத
மொழுகு வாரணம் உய்ய வளித்த எம்
அழகனார் அணி ஆய்ச்சியர் சிந்தையுள்
குழகனார் வரில் கூடிடு கூடலே –4-10-

பதவுரை

பழகு நால்மறையின் பொருள் ஆய–அநாதியான சதுர் வேதங்களின் உட்பொருளாயிருக்கு மவனாய்
மதம் ஒழுகுவாரணம் உய்ய அளித்த–மத ஜலம் பெருகா நின்ற கஜேந்த்ராழ்வான் (துயர் நீங்கி) வாழும்படி க்ருபை செய்தருளினவனாய்
எம் அழகனார்–எம்மை ஈடுபடுத்த வல்ல அழகை யுடையனாய்
அணி ஆய்ச்சியர் சிந்தையுள் குழகனார்–அழகிய கோபிமார்களின் நெஞ்சினுள்ளே குழைந்திருக்கு மவனான கண்ண பிரான்
வரில்–வரக் கூடுமாகில்
கூடலே! கூடலே

முதலை கோள்விடுத்து கஜேந்திராழ்வானைக் காத்தருளிய அபதாநத்திலே’ ஈடுபட்டுப் பேசுகின்றாள்.
(வேதைச்ச ஸர்வை ரஹமேவ வேத்ய:) இத்யாதி ப்ரமாணங்களையுட்கொண்டு
“பழகு நான் மறையின் பொருளாய்” என்றன்.
அக்நி, இந்திரன், வாயு முதலிய தேவதைகளைப் பற்றியும் வேதங்களில் கர்ம காண்டங்களிலே
பரக்கப் புகழ்ந்து பேசப்பட்டிருப்பினும் ‘(அங்காந்யந்யா தேவதா:’) என்று அந்த வேதந்தானே
அந்த தேவதைகளை எம்பெருமானுக்கு அவயவபூதங்களாகச் சொல்லிக் கிடக்கையாலே
அவயங்களைப் புகழ்ந்து சொல்வதும் அவயவிக்கே அதிசயமாக முடிகையாலே
தேவதாந்தர ப்ரசம்ஸாபரமான கர்மகாண்டமும் பகவத்பரமேயாகத் தட்டில்லை யென்க.

வாரணம்-தற்சமவடசொல். “வாரணமுய்ய வளித்த வெம்மழகனார்” என்ற சேர்க்கையின்பம் நோக்கி ஒரு கருத்துக் கூறலாம்’
அதாவது-கஜேந்த்ராழ்வானுடைய கூக்குரலைக் கேட்டவுடனே எம்பெருமான் அரைகுலையத் தலைகுலைய விரைந்தோடுங்கால்
(ஸ்ரக்பூஷாம் பரமயதாயதம் ததாந:- ஸ்ரீரங்கராஜஸ் தவம் உத்தரசதகம்) என்றபடி
ஆடையாபரணம் அலங்கல் முதலியவற்றை ஜல்லாரிபில்லாரியாக அணிந்து கொண்டு புறப்பட்ட அழகு
ஆண்டாள் நெஞ்சிலே ஊற்றிருந்து ஈடுபடுத்துகிறபடி.

அணியாய்ச்சியர் சிந்தையுள் குழகனார்-“கொங்கைமேற் குங்குமத்தின் குழம்பழியப் புகுந்து ஒருநாள் தங்குமேல் என்னாவிதங்கும்”
என்னும்படியான காதல் கிளர்ந்துள்ளவர்களுக்கு இவன் அப்போதே சென்று முகங்காட்டாவிடில் அவர்கள் மிகவும் மனம் நொந்து
ப்ரணயரோஷம் தலை யெடுக்கப் பெற்று “அந்த க்ருஷ்ணன் இனி என்றைக்கும் நம்மருகே வாராமலேயா போகப் போகிறான்!
என்றைக்காவது ஒருநாள் அநந்யகதியாய் வந்து நிற்பனன்றோ’ அப்போது நாம் அவனுக்கு முகங்கொடுக்கக் கடவோமல்லோம்” என்று
திண்ணிதாக ஸங்கல்பம் செய்து கொண்டவர்களுங்கூட மறம் தீர்ந்து மேல்விழுந் தணையும்படி
அவர்களைப் பிச்சேற்றவல்ல நல்விரகுகள் அறியுமவன் கண்ணபிரான் என்க.

வரில் கூடிடு கூடலே;- ‘அடியேன நுனியேன்’ என்றாற்போலே தாழ்வுகளுஞ் சொல்லி
அவர்களை ஊடல் தீர்த்து அவர்களோடே ஒருநீராகக் கலந்து அவர்களுடைய மனநோயைத் தீர்ப்பதுபோல
எனது மனநோயையும் தீர்க்க என்னோடும் ஒருநாள் வந்து கூடவேண்டாவா?.

பழகு நான் மறையின் பொருளாய்
வேதைச்ச சர்வை ரஹமேவ வேத்ய -இத்யாதி
பிரமாணங்களைக் உட் கொண்டு
பழகு நான் மறையின் பொருளாய் -என்கிறாள்
அக்னி இந்த்ரன் வாயு முதலிய தேவதைகளைப் பற்றியும்
வேதங்களில் கர்ம காண்டங்களில் பரக்கப் புகழ்ந்து பேசப் பட்டு இருப்பினும்
அங்கான் யன்யா தேவதா -என்று
அந்த வேதம் தானே அந்த தேவதைகளை எம்பெருமானுக்கு அவயவ பூதங்களாகச் சொல்லிக் கிடக்கையாலே
அவயவங்களைப் புகழ்ந்து சொல்வதும்
அவயவிக்கே அதிசயமாக முடிகையாலே
தேவதாந்திர பிரசம்சா பரமான கர்மகாண்டமும் பகவத் ப்ரமேயாகத் தட்டில்லை –
வேத தாத்பர்ய சர்வஸ்வம் —

மத மொழுகு வாரணம் உய்ய வளித்த எம் அழகனார் –
கஜேந்திர ஆழ்வான் உடைய கூக்குரலைக் கேட்டவுடனே
எம்பெருமான் அரை குலையத் தலை குலைய விரைந்து ஒடுங்கால்
ஸ்ரக்பூஷாம் பரம யதாயதம் ததான -ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் உத்தர சதகம் -என்றபடி
ஆடை ஆபரணம் அலங்கல் முதலியவற்றை ஜல்லாரி பில்லாரியாக அணிந்து கொண்டு
புறப்பட்ட அழகு ஆண்டாள் நெஞ்சிலே ஊற்றிருந்து ஈடுபடுகிறாள்-
அணி ஆய்ச்சியர் சிந்தையுள் குழகனார்-
கொங்கை மேல் குங்குமத்தின் குழம்பு அழியப் புகுந்து
ஒரு நாள் தனக்குமேல் என்னாவி தங்கும் -என்னும்படியான
காதல் கிளர்ந்து உள்ளவர்களுக்கு
இவன் அப்போதே சென்று முகம் காட்டா விடில்
அவர்கள் மனம் நொந்து
ப்ரணய ரோஷம் தலை எடுக்கப் பெற்று
அவன் என்றாவது ஒரு நாள் அநந்ய கதியாய் நம்மிடம் வருவான்
அப்போது முகம் காட்டக் கடவோம் அல்லோம் -சான்று
திண்ணியதாக சங்கல்பம் செய்து கொண்டவர்களும் கூட
மறம் தீர்ந்து
மேல் விழுந்து அணையும் படி
பிச்சேற்ற வல்ல நல்ல விரகு அறியுமவன் கண்ணபிரான்

குழகன் வரில் கூடிடு கூடலே
அடியேன் துணியேன் என்றால்போலே தாழ்வுகளும் சொல்லி
ஊடல் தீர்த்து
அவர்கள் உடன் ஒரு நீராகக் கலந்து
அவர்கள் உடைய மன நோயைத் தீர்ப்பது போலே
எனது மன நோயையும் தீர்க்க என்னோடும் ஒரு நாள் வந்து கூட வேண்டாவோ

————————————————————————————————–

ஊடல் கூடல் உணர்தல் புணர்தலை
நீடு நின்ற நிறை புகழ் ஆய்ச்சியர்
கூடலைக் குழல் கோதை முன் கூறிய
பாடல் பத்தும் வல்லார்க்கு இல்லை பாவமே–4-11-

பதவுரை

ஊடல் கூடல்–ஊடலோடே கூடியிருக்கை யென்ன, (அதாவது ப்ரணய ரோஷஸஹிதைகளா யிருக்கை யென்ன)
உணர்தல்–குறைகளை உணர்த்துகை யென்ன
புணர்தல்–(பிறகு) ஸம்ச்லேஷிக்கை யென்ன (இப்படிப் பட்ட காரியங்களிலே)
முன்–அநாதி காலமாக
நீடு நின்ற–நீடித்துப் பொருந்தி நின்ற
நிறை புகழ் ஆய்ச்சியர் கூடலை–நிறைந்த புகழையுடைய ஆய்ப் பெண்கள் (இழைத்த) கூடலைப் பற்றி
குழல் கோதை–அழகிய மயிர் முடியை யுடையனான ஆண்டாள்
கூறிய–அருளிச் செய்த
பாடல் பத்தும்–பத்துப் பாட்டுக்களையும்
வல்லார்க்கு –ஓத வல்லவர்களுக்கு
பாவம் இல்லை-(எம்பெருமானைப் பிரிந்து துக்கிக்கும்படியான) பாவம் இல்லையாம்

இத்திருமொழி கற்றார்க்குப் பலன் சொல்லி முடிக்கிறது இப்பாட்டு.
“ஊடல்கூடல்” என்றது-ஊடலென்ன கூடலென்ன என்று இரண்டாகச் சொல்வதல்ல’
ஊடலோடு கூடுகை யென்றாய் ஊடுகையை மாத்திரம் சொல்லிற்றாகக்கொள்க.
ஊடலாவது ப்ரணய கலஹம்’ ஊடல்கூடலாவது அதை உடைத்தாயிருக்கை’
ப்ரணயரோஷவிசிஷ்டத்வம்.
“போதுமறித்துப் புறமே வந்து நின்றீர், ஏதுக்கிதுவென இதுவென்இது வென்னா?” என்றும்
“என்னுக்கு அவளை விட்டிங்குவந்தாய் இன்ன மங்கே நட நம்பி! நீயே” என்றும்,
“உன்னுடைய சுண்டாயம் நானறிவன் இனியது கொண்டு செய்வதென், என்னுடைய பந்துங்கழலும் தந்து போகு நம்பீ!” என்றும்
இப்புடைகளிலே சொல்லி எம்பெருமானைக் கிட்டவர வொட்டாமல் கதவடைத்துத் தள்ளுகை ஊடல் எனப்படும்.

உணர்தல் “உணர்த்தல்” என்று பிறவினையாயிருக்க வேண்டுவது ஓசையின்பம் நோக்கி
‘உணர்தல்’ என்று பிரயோகிக்கப் பட்டிருக்கிறதென்று ஒருபெருங்கல்வியாளர் சொல்லுவர்.
ஸம்ச்லேஷம் பெறாமல் தாங்கள் துடிக்கிறபடியை எம்பெருமானுக்கு நேரிலும் தூதுவர் மூலமாகவும் தெரிவித்தல்.
உணர்தல் என்றதற்கு இங்கு இதுவே பொருள் என்பர்.

இனி, புணர்தலாவது இவர்களுடைய துடிப்பை எம்பெருமான் நன்கு அறிந்து
“உங்களை விட்டால் எனக்கு வேறு புகலுண்டா? என்னை வேறாநினைக்கலாமா? அடியேனல்லேனோ? தாஸனல் லேனோ?”
என்றாற்போலே ஆற்றாமை மீதூரிர்ந்தமை தோற்றப் பலபாசுரங்களைச் சொல்லிக் கொண்டு
சுவரார் கதவின் புறமே வந்து நிற்பது முற்றம் புகுந்து முறுவல் செய்து நிற்பதாய் நெருங்கினவாறே
இவர்களும் பரவசைகளாய் அவனோடு கலந்து பாரிமாறுகை.

ஆக, ப்ரண்ய ரோஷந் தோற்றப் பேசுகையென்ன,
தங்கள் வருத்தம் அவன் திருவுள்ளத்திலே படும்படி உணர்த்துவதென்ன,
பின்பு இஷ்டப்படி ஸம்ச்லேஷிக்கையென்ன ஆகிய
இப்படிப்பட்ட காரியங்களே யாத்திரையாயிருப்பவர்கள் ஆய்ச்சிகள் என்றவாறு.

இப்பாட்டின் பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானத்தில் “உணர்தல் புணர்தலே” என்றவிடத்திற்கு
“இவன்றன் குறைகளை அவர்கள் உணர்த்தும் படியும்
அவன் பின்பு ‘க்ஷாமணம் பண்ணிப் புணரும்” என்ற வாக்கியம் அச்சுப் பிரதிகள் எல்லாவற்றிலுங் காணப்படுகிறது.
இது அநந்வித வாக்யம்’ (அச்சுப்பிழை.) தாளகோசங்களில் சுத்தப்பாடம் காணத்தக்கது.

திருவாய்மொழியில் “உணர்த்தலூட லுணர்ந்து” என்ற பாட்டின் ஈட்டிலே’
போக ப்ரகாரந்தான் மூன்று வகைப்பட்டறாயிற்றிருப்பது’
அவையாவன:- ‘ஊடலுணர்தல் புணர்தலிவை மூன்றும் – காமத்தாற் பெற்றபயன்’ (திருவள்ளுவர் குறள்.)
என்று மூன்றையும் ப்ரயோஜநமாகச் சொன்னார்கள் தமிழா;
’ இதிலே ஊடலாவது – எதிர்த்தலையோடே கூடினால் அஹேதுகமாக விளைவதென்று:
அதுதான் -‘என்னையொழியக் குளித்தாய், என்னையொழியப் பூவைப்பார்த்தாய்,
உன் உடம்பு பூநாறிற்று’ என்றாற்போலே வருமவை.
உணர்த்தலாவது – ‘உனக்கென்று குளித்தேன்’ என்கையும் உனக்கு ஆம்’ என்று பார்த்தேனென்கையும்,
‘உனக்கென்று குளித்தேன்’ என்கையும் உனக்கு ஆம் என்று பார்த்தே னென்கையும்,
‘உன்வரவுக்கு ஒப்பித்தேன்’ என்றாற்போலே சொல்லுமிவை’
இவையிரண்டின் அநந்தரத்தே வருவது கலவி.” என்றருளிச் செய்யப்பட்டிருப்பது நோக்கத்தக்கது.
மேல் உதாஹரிக்கப்பட்ட குறளின் உரையும் காணத்தக்கது.
“ஊடலுணர்தல் புணர்தலிவை காமங் கூடியார் பெற்ற பயன்” என்று குறளின் பாடங் காண்கிறது.
(புணர்ச்சிமகிழ்தல் என்ற அதிகாரத்தில் ஒன்பதாவது குறள் இது.)
உணர்தல் என்பதற்கு -‘தலைமகன் தன்னுடைய தவறில்லாமையைச் சொல்லி
நாயகியினுடைய ஊடலை நீக்குதல் என்று பொருளுரைக்கப் பட்டிருக்கின்றது.

“புணர்தலை” என்ற விடத்துள்ள ஐகாரம் சாரியை. நீடுநின்ற கண்ணபிரானோடே
சில காலம் ப்ரணயகலஹமாய்ப் போதுபோக்குவதும், சிலகாலம் ஸம்ச்லேஷ ரஸமாய்ப் போது போக்குவதுமாகிய
இக் காரியங்களையே அநாதி காலமாய்த் தொழிலாகக் கொண்டவர்கள் ஆய்ச்சிகள் என்க.

நிறை புகழ் ஆய்ச்சியர் – நம்மைப் போலே உண்டியே உடையே உகந்தோடித் திரிந்து பழுதே பல பகலும் போக்காமல்
முச்சந்தியும் பகவத்விஷய சிந்தனையேயாய்ப் போது போக்குகிறார்கள் ஆய்ச்சிகள் என்ற காரணத்தினால்
அவர்கட்குப் புகழ் நிறைந்திருக்குமென்று ஸாமாந்யமாகச் சிலர் அர்த்தம் கொள்ளக்கூடும்.
இவ்விடத்திற்கு எம்பார் ஒரு விஷோர்தம் அருளிச் செய்வராம்’ (அதாவது)
“ஆய்ச்சியர்க்கு நிறைபுகழாவது க்ருஷ்ணனை இன்னாள் நாலுபட்டினி கொண்டாள்
இன்னாள் பத்துப்பட்டினி கொண்டாள் என்னும் புகழ்காணும்” என்பராம்.

இதன் கருத்தென்னென்னில்’ “கூர்மழைபோல் பனிக்கூதலெய்திக் கூசிநடுங்கி யமுனையாற்றில்,
வார்மணற்குன்றில் புலா நின்றேன் வாசுதேவா! உன்வரவுபார்த்தே” இத்யாதிப்படியே
கண்ணபிரானுடைய வரவை எதிர்பார்த்திருப்பவர்கள் பல மாதர்’
இவன் இப்படி பலபேர்களை எதிர்பார்த்திருக்கும்படி செய்துவிட்டுத்
தன் மனத்துக்கியாளான் ஒருத்தியோடே கலந்திருந்து போதுபோக்கும்’
அப்போது, எதிர்பார்த்திருந்த மாதர்கள் “இன்னமென் கையகத்து ஈங்கொருநாள் வருதியேல் என்சினம் தீர்வன்நானே” என்ற படி
“இனி அந்தக் கண்ணபிரான் இங்கேற வருவானாகில் முகங்கொடுத்து ஒரு வார்த்தையும் சொல்லக் கடவோமல்லோம்” என்று
ஸங்கல்பம் செய்து கொண்டு அளவற்ற ரோஷத்துடனிருப்பர்கள், பிறகு தனக்கு ஒழிந்தபோது ஒருநாள்
கண்ணபிரான் அளவிறந்த அன்பு பூண்டவன் போல ஆடிப்பாடிக்கொண்டு அவர்கள் முன்னே வந்துநிற்பன்’
அப்போது அவர்கள் தாங்கள் முன்பு செய்து கொண்ட ஸங்கல்பத்தின்படியே முகங்கொடாமலே யிருப்பார்கள்.
அப்போது இவன் கண்ணீர்விட்டழுவதும் காலில் கும்பிடுவதுமாய் ஊணுமுறக்கமுமில்லாமல் பல நாட்களளவும்
அவர்கள் வீட்டைவிட்டுப் பேராதே இடைசுழித் திண்ணையிலே கிடந்துபடுவன்.
இப்படி நாலுநாள் பட்டினிகிடந்தபிறகு ஒருத்தி மனமிரங்கி முகங்கொடுப்பள்’
மற்றொருத்தி அவ்வளவிலும் மறம்மாறாதே இவன் எட்டுநாள் பட்டினி கிடந்தபின்பு முகங்கொடுப்பள்,
மற்றுமொருத்தி அவ்வளவிலும் ஊடல்தீராதே இவன் பத்துநாள் பட்டினி கிடந்தபின்பு முகங்கொடுப்பள்.
இப்படி பலபலநாள் பட்டினிகிடந்தாகிலும் அவ்வாய்ச்சிகள் பக்கலிலே இவன் முகம்பெற நினைப்பது
அவர்களிடத்துள்ள தேஹகுணம் ஆத்மகுணம் முதலியவற்றாலான வைலக்ஷ்ண்யத்தைப் பற்றியிறே.
இதனால் அவர்களுடைய புகழ்வீறுபெறு மாய்த்து.

“கோதை கூறிய” என்னாதே “குழற் கோதை கூறிய” என்கையாலே
‘இவள் தன் மயிர் முடியாலே அவனைக் கூடலிழைப்பிக்க வலலன்” என்று ரஸோக்தியாக
அருளிச் செய்வர் பெரியவாச்சான்பிள்ளை.

இப்பத்துப் பாட்டையும் ஓதவல்லவர்களுக்குப் பாவம் இல்லை என்றது பகவத் ஸம்ச்லேஷத்துக்காகக் கூடலிழைத்து
வருந்த வேண்டும்படியான பாவமில்லை யென்றபடி.
இவ்வருளிச் செயலை ஓதவே அநாயாஸமாக பகவத் ஸம்ச்லேஷம் வாய்க்கு மென்று கருத்து.

நிகமத்தில் பலன் சொல்லித் தலைக் கட்டுகிறார்
ஊடல் கூடல் என்றது
ஊடல் என்ன
கூடல் என்ன
என்று இரண்டாக சொல்லுவது அல்ல
ஊடலோடு கூடுகை என்றாய் ஊடுகையே மாதரம் சொல்லிற்றாய் கொள்க
ஊடல் -ப்ரணய கலஹம்
ஊடல் கூடல் ஆவது -அத்தை உடைத்தாய் இருக்கை –
ப்ரணய ரோஷ விசிஷ்டத்வம்
போது மறித்துப் புறமே வந்து நின்றீர் ஏதுக்கு இது என் இது என் இது என்னோ -என்றும்
என்னுக்கு அவளை விட்டு இங்கு வந்தாய் இன்னம் அங்கே நட நம்பீ நீயே -என்றும்
உன்னுடைய சுண்டாயம் நான் அறிவன் இனி யது கொண்டு செய்வது என்
என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பீ-என்றும்
இப்புடைகளிலே சொல்லி கதவு அடைத்து தள்ளுகை-ஊடல்-

உணர்தல்
உணர்த்தல் -ஓசை இன்பம் நோக்கி உணர்தல் பிரயோகம்
சம்ச்லேஷம் பெறாமல் தாங்கள் துடிக்கிறபடியே
எம்பெருமானுக்கு நேரிலும்
தூது மூலமாகவும் தெரிவித்தல் உணர்தல்

புணர்தல் –
இவர்கள் துடிப்பை நன்கு அறிந்து
எம்பெருமான்
உங்களை விட்டால் எனக்கு வேறு ஒரு புகல் உண்டோ
என்னை வேறாக நினைக்கலாமா
அடியேன் அல்லேனோ
தாசன் அல்லனோ
என்றால் போலே ஆற்றாமை மீதூர்ந்து பல பாசுரங்களைச் சொல்லி கொண்டு
சுவரார் கதவின் புறமே வந்து நிற்பது
முற்றம் புகுந்து முறுவல் செய்து நிற்பதாய்
நெருங்கின வாறே இவர்களும் பரவசைகளாய் அவனோடு கலந்து பரிமாறுகை-

ஆக
பிரணய ரோஷம் தோற்றப் பேசுகை என்ன
தங்கள் வருத்தம் அவன் திரு உள்ளத்தில் படும்படி உணர்த்துவது என்ன
பின்பு இஷ்டப்படி சம்ச்லேஷிக்கை என்ன
ஆகிய இப்படிப் பட்ட கார்யங்களே யாத்ரையாய் இருப்பவர்கள் ஆய்ச்சிகள் –

இப்பாட்டின் பெரிய வாச்சான் பிள்ளை வ்யாக்யானத்தில்
உணர்தல் புணர்தலை -என்ற இடத்துக்கு
இவன் தன் குறைகளை அவன் உணர்த்தும்படியும்
அவன் பின்பு ஷாமணம் பண்ணிப் புணரும் -என்ற வாக்கியம் அச்சுப் பிரதிகளில் காணப் படுகிறது
இது அனந்வித வாக்கியம் -அச்சுப்பிழை
சுத்த பாடம் தாள கோசங்ளிலே காணத் தக்கது
திருவாய்மொழி –6-1-5- உணர்த்தல் ஊடல் உணர்ந்து உடன் மேயும் அன்னங்காள் -ஈட்டில்
போக பிரகாரம் தான் மூன்று வகைப் பட்டாயிற்று இருப்பது
அவை யாவன
ஊடல் உணர்தல் புணர்தல் இவை மூன்றும் காமத்தால் பெற்ற பயன் -திருக் குறள்
ஊடல் ஆவது -எதிர்த்தலையோடு கூடினால் அஹேதுகமாக விளைவது ஓன்று
அது தான் என்னை ஒளியக் குளித்தாய்
என்னை ஒழிய பூவைப் பார்த்தாய்
உன் உடம்பு பூ நாறிற்று -என்றால் போலே வருமவை
உணர்த்தல் ஆவது
உனக்கு என்று குளித்தேன் யென்கையும்
உனக்கு ஆம் என்று பார்த்தேன் யென்கையும்
உன் வரவுக்கு ஒப்புவித்தேன் -என்றால் போலே சொல்லுமவை
இவை இரண்டின் அனந்தரத்தே வருவது கலவி
என்று அருளிச் செய்யப் பட்டுள்ளது
உணர்தல் -தலைமகன் தன்னுடைய தவறு இல்லாமையைச் சொல்லி
நாயகனுடைய ஊடலை நீக்குதல்-

நீடு நின்ற
கண்ணபிரானோடு சிலகாலம் ப்ரணய கலஹமாய் போது போக்குவதும்
சிலகாலம் சம்ச்லேஷ ரசமாய் போது போக்குவதும்
ஆகிய இக்காரியங்களையே
அநாதி காலமாய் தொழிலாகக் கொண்டவர்கள் –

நிறை புகழ் ஆய்ச்சியர்
நம்மைப் போலே உண்டியே உடையே உகந்தோடித் திரிந்து
பழுதே பலகாலம் போக்காமல்
முச்சந்தியும் பகவத் விஷய சிந்தனையாய் -இது சாமான்ய அர்த்தம்
எம்பார் -விசேஷ அர்த்தம் அருளிச் செய்வாராம்
ஆய்ச்சியருக்கு நிறை புகழாவது
கிருஷ்ணனை இன்னாள் நாலு பட்டினி கொண்டாள்
இன்னாள் பத்து பட்டினி கொண்டாள் -என்னும் புகல் காணும் -என்பாராம்
இதன் கருத்து எது என்னில்
கூர் மழை போல் பனிக் கூதல் எய்திக் கூசி நடுங்கி யமுனை யாற்றில்
வார் மணல் குன்றில் புலர நின்றேன் வாசுதேவா உன் வரவு பார்த்தே -இத்யாதிப் படியே
கண்ணபிரான் உடைய வரவை எதிர் பார்த்து இருப்பவர்கள் பல மாதர்
இவன் தன் மனத்துக்கு இனியாள் உடன் பொழுது போக்கும்
அப்பொழுது எதிர் பார்த்து இருந்த மாதர்கள் –
இன்னம் என் கையகத்து ஈங்கு ஒரு நாள் வருதியேல் என் சினம் தீர்வன் நானே -என்றபடி
இனி வருவான் ஆகில் முகம் கொடுத்து ஒரு வார்த்தையும்
சொல்லக் கடவோம் அல்லோம் -என்று சங்கல்பம் செய்து கொண்டு
அளவற்ற ரோஷத்துடன் இருப்பார்கள்
பிறகு தனக்கு ஒழிந்த போது
அன்பு பூண்டவன் போலே ஆடிப் பாடிக் கொண்டு அவர்கள் முன்னே வந்து நிற்பன்
சங்கல்பத்தின் படியே முகம் கொடாது இருப்பார்கள்
இவன் கண்ணநீர் விட்டு அழுவதும்
காலில் விழுவதும்
ஊண் உறக்கம் இல்லாமல் பல நாள்கள் வீட்டை விட்டு பேராதே
இடைகழித் திண்ணையிலேயே கிடந்தது படுவன்
இப்படி நாலு நாள் பட்டினி கிடந்த வாறே ஒருத்தி மனம் இரங்கி முகம் கொடுப்பாள்
மற்று ஒருத்து அவ்வளவிலும் மனம் மாறாதே எட்டு நாள் பட்டினி கிடந்த பின்பு முகம் கொடுப்பாள்
இப்படி பல பல நாள் பட்டினி கிடந்தாலும்
அவ வாய்ச்சிகள் பக்கலிலே இவன் முகம் பெற நினைப்பது
அவர்கள் உடைய தேக குணம் ஆத்மகுணம் முதலிய
வை லஷண்யம் பற்றியே —

கோதை கூறிய என்னாதே
குழல் கோதை கூறிய -என்கையாலே
இவள் தன் மயிர் முடியாலே
அவனைக் கூடல் இழைப்பிக்க வல்லவள் –

பத்துப் பாட்டையும் ஓத வல்லவர்களுக்கு பாவம் இல்லை -என்றது
பகவத் சம்ச்லேஷத்துக்காக
கூடல் இழைத்து வருந்த வேண்டும்படியான
பாவம் இல்லை -என்றபடி
இந்த அருளிச் செயலை ஓதவே
அநாயாசாமாக பகவத் சம்ச்லேஷம் வாய்க்கும்-

———————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே -அண்ணங்கராச்சார்யர்  ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .