Archive for the ‘நாச்சியார் திருமொழி’ Category

ஸ்ரீ நாச்சியார் திரு மொழி – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் -எட்டாவது திருமொழி —

September 11, 2015

அவதாரிகை –

ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை வார்த்தை கேட்டாள் -மறு மாற்றம் ஒன்றும் சொல்லக் காணாது ஒழியவே ஆற்றாமை மீதூன்று செல்லத் தொடங்கிற்று
இவனை வார்த்தை கேட்டவாறே பாவனா பிரகர்ஷத்தாலே அவன் அளவும் செல்லும் இறே
நித்ய தத் ஆஸ்ரயத்வ தச் சேஷத்வங்கள் உண்டாகையாலே
தர்மியை ஒழிய தர்ம மாத்ரத்துக்கு பிரித்து ஸ்தித் யுப லம்பாதிகள் இல்லையே –
பிரகார மாத்ரமாய் -இருப்பு காட்சி பிரித்து இல்லை யன்றோ –

இவனை வார்த்தை கேட்டாள் —
மேகங்களானவை வாரா முழங்கிற்று

கார்க்கோடு பற்றியான் கை -முதல் திரு -27-என்று இங்கனேயும் ஒரு சேர்த்தி உண்டு இறே –
காரின் ஸ்வ பாவத்தை உடைத்தான சங்கம் –

(மலையால் குடை கவித்து மாவாய் பிளந்து
சிலையால் மராமரம் ஏழ் செற்று கொலையானைப்
போர்க்கோடு ஒசித்தனவும் பூங்குருந்தம் சாய்த்தனவும்
கார்க்கோடு பற்றியான் கை -27-

நம்முடைய விரோதிகளைத் தலை துணிப்பதற்கு அப்பெருமான் கையுந்திருவாழியுமாயிருப்பவன்;
நாம் இடர் பட்டால் நம்முடைய கூக்குரல் கேட்டவுடனே சடக்கென ஓடிவந்து நம்மைக் காப்பதற்குப் பாங்காகப்
பெரிய திருவடியை வாஹனமாக வுடையவன் என்கிறார் என்றும் படையாழி புள்ளுர்தி என்பதனால்)

கார்காலத்தில் வரவைக் குறித்துப் போனான்
அக் காலம் வந்தவாறே அவன் வடிவுக்கு போலியான மேகங்கள் வரத் தோன்றின
அவன் தானும் கூட வந்தானாகக் கொண்டு பிரமித்தாள்

அவையேயாய் -அவன் தன்னைக் கண்டிலள் –
அவற்றைப் பார்த்து வார்த்தை கேட்டு
அவை மறு மாற்றம் சொல்லக் காணாமையாலே நோவு பட்டு

மீளவும் –ஏக தேச வாசிச்வத்தாலே
உங்களுக்கும் அவனுக்கும் ஒரு சேர்த்தி உண்டு
இறே
ஆன பின்பு என் தசையை அங்கே சென்று அறிவிக்க வேணும் என்று
அவற்றைத் தூதாக விடுகிறாள்

ராமாவதாரத்தில் ஐந்தர வியாகரண பண்டிதனைத் தூதாக விட்டால் போலே
அர்ச்சாவதாரத்தில் இவை வார்த்தை சொல்ல மாட்டா என்று
அறிய மாட்டாதே கலங்கி —
காமார்த்தா ஹி பிரகிருதி கிருபணாஸ் சேதன அசேதன ஏஷூ-மேக தூதம்
-1-5-
இவற்றைத் தூதாக விடுகிறாள்-

அர்ச்சாவதாரத்தில் காட்சிக்கு மேற்பட வார்த்தை சொல்லுதல் பரிமாறுதல் செய்கை இல்லை
அவதாரத்தில் இது உள்ளது -என்னும் தெளிவும் இல்லை –

இனி காமமாவது தான் பக்தி
அதாவது
அந்வயத்தில் தரிக்கையும்
வ்யதிரேகத்தில் தரியாமையும் இறே

இவை இரண்டும் உள்ளது பிராட்டிமார்க்கு ஆகையாலே
ஆழ்வார்களும் பிராட்டிமார் பாசுரத்தாலே தங்கள் ஆசையைப் பேசக் கடவராய் இருப்பர்கள் –
அது இருக்கிறபடி யாய்த்து –

பள்ள மடையாய் இயல்பாகவே இருந்தது இங்கு –

(மேகத்தைப் பார்த்து மயில் ஆடும் –ஆச்சார்யரைப் பார்த்து சிஷ்யர்கள் மகிழ்ந்து ஆடிப் பாடி மகிழ்வார்கள்
பயிர் விளைய மேகம் மழை பொழியும் -களைகள் நீங்கும்- -அருள் மழையால் சரணாகதர் வாழ்வார் -விரோதிகள் நீங்கும்
நமக்காக தூது சென்று பெருமாள் இடம் சேர்ப்பிப்பார்கள்
எங்கும் மழை மொழியுமானாலும் சிப்பியின் வயிற்றில் தான் முத்து விளையும் -ஸச் சிஷ்யர்கள் நூல்கள் இயற்றுவார்கள்
விராட பர்வம் சொல்ல பொழியும் -ராமானுஜர் நம் கொண்டல் -குலக் கொழுந்தே
மாதம் மும்மாரி பெய்யும் -தத்வ த்ரயம் ரஹஸ்ய த்ரயம்-அக்ஷர த்ரயம்
கடலில் இருந்து முகந்துன் உப்பில்லா நீரை அருளும் மேகம் போல் வேதக்கடலில் இருந்து ஸாரமானவற்றை அருள்வார்
பிரதிபலன் எதிர்பார்க்காமல் மேகம் போல் அனைவருக்கும் அருள்வார்கள்)

(ராமாநுஜரையே தூது விடுகிறாள்
ஒன்பது அடைமொழிகள் ஒன்பது பாசுரங்களிலும்
1-விண்ணீல மேலாப்பு விரித்தால் போல் மேகங்காள்-சென்றால் குடையாம் இத்யாதி
2-மா முத்த நிதி சொரியும் மா முகில்காள்-நவ நிதிகள் அருளியவர் அன்றோ
3-அளியத்த மேகங்காள் ஆவி காத்து இருப்பேனே—காரேய் கருணை ராமானுசா
4-மின்னாகத் தெழுகின்ற மேகங்காள்-பற்பம் –முப்புரி நூலோடு -இலங்கிய முந்நூல் வாழி
5-வான் கொண்டு கிளர்ந்து எழுந்த மா முகில்காள்-விஷ்ணு லோக மணி மண்டப மார்க்கதாயீ
6-சலம் கொண்டு கிளர்ந்து எழுந்த தண் முகில்காள்-பேர் அருளாளனுக்கும் பெரிய பிராட்டியாருக்கும் நீர் கைங்கர்யம்
7-சங்க மா கடல் கடைந்தான் தண் முகில்காள்-வேதம் பாற் கடல் -திருவாய் மொழி -மாறன் அடி பணிந்து உய்ந்தவர்
8-கார் காலத்து எழுகின்ற கார் முகில் காள்-அருள் மழையைக் கொண்டு அருளும் ராமானுஜர்
9-மத யானை போல் எழுந்த மா முகில்காள்-ராமாநுஜ முனி வேழம்

திருவேங்கட மா மலையிலே பின்பு ராமானுஜர் –பாஷ்யகாரர் சந்நிதி இருக்கவே ஆண்டாள் தூது விடுகிறாள் இங்கு)

(திருப்பாவை -த்வய பூர்வார்த்தம் -திருப்பாவை ஜீயர் – நாச்சியார் திருமொழி -த்வய உத்தரார்த்தம் -கைங்கர்ய பரம் -கோயில் அண்ணன்-)

1-விண்ணீல மேலாப்பு விரித்தால் போல் மேகங்கள் –ஸ்வாமி திருவவதாரம் ஆனபின்பே பராத்பரன் நிழலில் நிம்மதியாக கண் வளர்ந்து அருளுவான்
2-மா முத்த நிதி சொரியும் மா முகில்காள் –நவ நிதி சொரிந்த ராமானுஜ முனி -முத்து போன்ற ஆசார்யர்களை ஸ்தாபித்தவர்-
சித்த சாத்விகர்கள் முத்தாக சொல்லப் படுவார்கள்
2-அளியத்த மேகங்காள் –தாய்க்கும் மானுக்கும் தம்பிக்கும் இவருக்கும் இவர் அடி பணிந்தார்க்குமே இவை உள்ளது
3-மின்னாகத்து எழுகின்ற மேகங்காள் -மின் போன்ற யஜ்ஞ சூத்ரம் விளங்கும் =-இலங்கிய மின்னூல் முன்னூல் வாழியே –
காஷாயம் காட்சி தருவதையும் மின் எழுகின்ற -என்னலாம்
4-வான் கொண்டு கிளர்ந்து எழுந்த  மா முகில்காள்-வான் –அத்தானம் கொடுப்பது தன் தகவு என்னும் சரண் கொடுத்தே
கூரத் ஆழ்வான் சம்பந்தத்தால் பரமபதம் கரச்தம் என்றவரே –
5-சலம் கொண்டு கிளர்ந்து எழுந்த  மா முகில்காள்-யாதவ பிரகாசர் -கபடம் தீர்த்து ஜலம் -தீர்த்த கைங்கர்யம் சாலக் கிணறு
6-சங்கமா கடல் கடைந்தான் தண் முகில்காள் –மறைப்பால் -மாறன் அடி பணிந்து உய்ந்தவன் பராங்குச பாத பக்தம்
7-மதயானை போல் எழுத  மா முகில்காள்–முனி வேழம்
8-கார் காலத்து எழுகின்ற கார் முகில்காள் –ஆழ்வார்கள் அனைவரும் –

A-முனி ஸ்துதி விஷயததா -இந்திர ஸ்துதி விஷயததா –
இருக்கொடு நீர் சங்கில் கொண்டிட்டு எழில் மறையோர் வந்து நின்றார்
வழு ஒன்றும் இல்லா செய்கை வானவர் கோன் வலிப்பட்டு முனிந்து விடுக்கப் பட்ட மழை வந்து ஏழு நாள் பெய்து -கோவிந்த பட்டாபிஷேகம்
லோக சாரங்க முனிவர் -முநீந்த்ரர் வந்து ஸ்துதி செய்த சாம்யம்
B-காளீந் தீர சீசாய -யமுனை கரையிலே வாசம் செய்வதில் ஆசை கொண்டவன் -விரஜா தீரம் சரயு தீரம் -காவேரி தீரத்தில் ஆழ்வார் குடில் உண்டே
C-ரங்க வாச உத்சாகத்வாத் -ரங்கம் கூத்தாடும் இடம் -கூத்தாட வல்ல எம் கோவே -அண்டர் கோன் அரங்கன் –மற்று ஒன்றினைக் காணாவே
D-அமல விமல வாக்தா நத-அத்யந்த நிர்மலன் -அமோக வாக்குகளை அருளினவர் அமலன் விமலன் நிமலன் நிர்மலன் -அருளினவர்
E-வாஹ்ய பாவாத் -வஹிக்கப் படுபவர்கள்- பறவை ஏறும் பரம் புருடன் –உரியில் உள்ள வெண்ணெய் கொள்ள பிள்ளைகளால் வஹிப்பப் பட்டவன் –
F-முனி ஏறித் தனி புகுந்து -பாட்டினால் கண்டு வாழும் பாணர்
G-கீதோ தஞ்சத் ப்ரதத்வாத் -கீதா சாஸ்திரம் -நம் பாடுவான் போலே இசையால் பாடி அருளி
H-வடதள சயன ப்ராஜ்ய கவ்யோப போக ப்ராவண்யாத் -பாலகன் என்று பரிபவம் செய்யேல் -வெண்ணெய் உண்ண அபி நிவேசம் கொண்டவன்
ஆல மா -கொண்டல் வண்ணன் -பாசுரங்கள் அருளி -இப்படி எட்டு சாம்யங்கள்-கார் முகில்களுக்கும் –ஆழ்வார்களும் உண்டே —
கார் காலத்து எழுகின்ற கார் முகில்காள் –ஆழ்வார்கள் அனைவரும் அருளிச் செய்தவை கொண்டே நம் ஸ்ரீ பாஷ்யகாரர் ஸூத்ரங்களை ஒருங்க விட்டு அருளுகிறார் –)

—————————————————————————————–

விண்ணீல மேலாப்பு விரித்தால் போல் மேகங்காள்
தெண்ணீர் பாய் வேங்கடத்து என் திரு மாலும் போந்தானே
கண்ணீர்கள் முலைக் குவட்டில் துளி சோரச் சோர்வேனை
பெண்ணீர்மை ஈடழிக்குமிது தமக்கோர் பெருமையே –8-1-

பதவுரை

விண்–ஆகாசம் முழுவதிலும்
நீலம் மேலாப்பு விரித்தால் போல்–நீல நிறமான மேற் கட்டியை விரித்துக் கட்டினாற் போலிரா நின்ற
மேகங்காள்!–மேகங்களே!
தெள் நீர் பாய்–தெளிந்த தீர்த்தங்கள் பாயுமிடமான
வேங்கடத்து–திருவேங்கடமலையி லெழுந்தருளி யிரா நின்ற
என் திருமாலும்–திருமாலாகிய எம்பெருமானும்
போந்தானே–(உங்களோடுகூட) எழுந்தருளினானோ?
முலை குவட்டில்–முலை நுனியிலே
கண் நீர்கள் துளி சோர–கண்ணீர் அரும்ப
சோர்வேனை–வருந்துகிற என்னுடைய
பெண் நீர்மை ஈடு அழிக்கு மிது–பெண்மையை உருவழிக்கிறவிது
தமக்கு–அவர் தமக்கு
ஓர் பெருமையே–ஒரு பெருமையர யிரா நின்றதோ?

விண்ணீல மேலாப்பு விரித்தால் போல் மேகங்காள்-
ஆகாச அவகாசம் அடங்கலும் வெளியடையும்படி நீலமாய் இருப்பதொரு
மேற்கட்டி
கட்டினால் போலே யாய்த்து இருக்கிறது –
மேகங்கள் வந்து பறம்பின போது

நாயகனும் தானுமாக வெளி ஓலக்கம் இருக்கைக்கு வெளியிலே
ஒரு ஈத்தொற்றி கட்டிற்றாக வாய்த்து நினைத்து இருக்கிறாள் –
உபய விபூதியும் இருவருக்கும் சேஷமாய் இறே இருப்பது
ஜகத் சிருஷ்டிக்கு பிரயோஜனம் இது வென்று இருந்தாள் யாய்த்து

(கோல விளக்கே கொடியே விதானமே -பிரார்த்தித்துப் பெற்றாள் திருப்பாவையில்)

மேகங்காள் –
திருவடி ஒருவனுக்கே வார்த்தை சொன்னால் போலே சொல்ல வேணும் என்னும் நிர்பந்தம் இல்லையே இவளுக்கு
சேயம் ஆசாதிதா மயா-சுந்தர -30-3–என்று
குறைப்பட்டு இருக்குமவையும் அன்றே இவை

(சேயம் ஆசாதிதா மயா–70 வெள்ளம் வானர முதலிகள் ஸீதையைக் காணாமல் குறைப்பட்டு இருக்க அவையே மேகங்களாக இங்கு வந்தன)

மயா
எல்லாரும் காண வேணும் என்று தேடுகிற விஷயம் நான் ஒருவனுமே காண்பதே -என்றான் இறே
யாம் கபீ நாம் சகஸ்ராணி இறே

ராஜாக்கள் வரும் இடத்துக்கு ஜலக்ரீடைக்கு பரிகரமான -மேகம் -என்கிற ஜாதி
முன்னே வரக் கடவதாய் இருக்கும் இறே –
அவனோடு ஜலக்ரீடை பண்ணி அவன் நனைக்க நனைந்த உடம்போடு வந்தன -என்று இருந்தாள்

தெண்ணீர் பாய் வேங்கடத்து –
தெளிந்த அருவிகள் ஒழுக்கு அறாதே பாய்கிற திருமலையிலே –
அவன் இருக்கிற தேசத்தில் உள்ளவை எல்லாம் தெளிந்து இருக்கும் இறே

உபதத் தோதகா நத்ய பலவலாநி சராம்சி ச -அயோத்யா -59-5-என்று
இறே இவ்விடம் கிடக்கிறது

என் திரு மாலும் போந்தானே-
அக்ர தஸ்தே கமிஷ்யாமி –அயோத்யா -27-6-என்று
அவள் முன் நடக்க காணும் வந்தது

என் திருமால் -என்று
தன்னோடு சேர்த்து சொல்லுகிறாள் இறே

போந்தானே -என்றால் –
ஓம் போந்தான் என்ன வல்லார்க்கு இறே வாய் உள்ளது
அவை பேசாதே இருந்தன

அசேதனம் ஆகையாலே வார்த்தை சொல்ல மாட்டா என்று அறிய மாட்டாதே
அவன் வாராமையால் இறே இவை இவை பேசாது இருக்கின்றன என்று

கண்ணீர்கள் முலைக் குவட்டில் துளி சோரச் சோர்வேனை
கண்ண நீர் வெள்ளம் இடத் தொடங்கிற்று
கிமர்த்தம் தவ நேத்ராப்யாம் -சுத்தர -33-4-என்று
வேறு சிலர் சொல்ல வேண்டாதே தானே சொல்லுகிறாள்

கிமர்த்தம்
ஆர் குடி வேர் பறியத் தான் இக் கண்கள் சோக ஸ்ரு  பிரவகிக்கிறது –
அன்றிக்கே
பிராட்டியைக் கண்ட பின்பு இங்கு படை யற்று ஆரைச் சேதனராகக் கொண்டு தான் என்னுதல்

முலைக் குவட்டில் துளி சோர
மேகங்கள் நித்ய வாஸம் பண்ணுகையாலே இறே அவன் திருமலையை விடாது ஒழிகிறது
திருமலையை தன் உடம்பில் படைத்துக் காட்டுகிறாள்
மேகங்கள் வர்ஷித்தவாறே அருவிகள் சிதறி வந்து சிகரங்களிலே விழுந்தால் போலே யாய்த்து
கண்ண நீர்கள் முலைக் குவட்டிலே விழுகிறபடி-

துளியும் சோர- நானும் சோருகிறேன்-என்கிறாள் அல்லள்-
அக்னி கணங்கள் பட்டால் போலே துளி சோர தானும் சோருகிறாள் அத்தனை
அதுவே ஹேதுவாக சோருகிற என்னை

பெண்ணீர்மை ஈடழிக்குமிது தமக்கோர் பெருமையே —
எல்லா அவஸ்தையிலும் –தத் தஸ்ய சத்ருசம் பவேத் -என்கிறபடியே
அத் தலையாலே பேறாக நினைத்து இருக்கும் அதுவே ஸ்த்ரீத்வம் ஆவது
அத்தை அழியா நின்றான் ஆய்த்து –
ந அநயோர் வித்யதே பரம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-8-85-என்னக் கடவது இறே

அன்றியே
ஸ்த்ரீத்வ பும்ஸ்வத்வங்கள் இரண்டும் தங்கள் பக்கலிலே பர்யவசிதம் என்று போலே காணும் இருப்பது

மானிடவர்க்கு என்று பேச்சுப்படில் வாழகில்லேன் -என்று இறே இவள் படி
வரத சகலமேதத் சம் ஸ்ரீ தார்த்தம் சகரத்த -ஸ்ரீ வரதராஜ சத்வம் -63-என்று இறே அவன் படி
இப்படி இருக்கை இறே ஸ்த்ரீத்வ பும்ஸ்த்வங்களுக்கு எல்லை யாவது

(பரிஜன பரி பர்ஹா பூஷணாநி ஆயுதாநி ப்ரவர குண கணாச்ச ஞான சக்த்யாதயஸ்தே பரமபதம் அத அண்டானி ஆத்ம தேஹஸ் ததாத்மா வரத சகலமேதத் சம்ஸ்ரிதார்த்தம் சகர்த்த –63-

ஹே வரத பரிஜன-சேஷ சேஷாசநாதி பரிஜனங்களும் பரி பர்ஹா -சத்ர சாமராதி பரிச் சதங்களும் பூஷணாநி –கிரீட குண்டலாதி பூஷணங்களும் ஆயுதாநி –திரு ஆழி திருச்சங்கு முதலிய திவ்ய ஆயுதங்களும் ஞான சக்த்யாதயஸ் தே ப்ரவர குண கணாச்ச –ஞான சக்தி முதலிய ப்ரசித்தங்களான சிறந்த குண கணங்களும் பரமபதம் –பரமபதமும் அத அண்டானி -அண்டங்களும் ஆத்ம தேஹஸ் -ஸ்வ அசாதாரண விக்ரஹமும் ததாத்மா –திவ்ய ஆத்ம ஸ்வரூபமும் சகலமேதத் –ஆகிய இவை எல்லாவற்றையும் சம்ஸ்ரிதார்த்தம் சகர்த்த –ஆஸ்ரிதர்களுக்கு ஆக்கினாய்

ஸ்ரீ த்வய விவரணமாகவே இந்த ஸ்தகம் முதல் ஸ்லோகம் ஸ்ரீ மத் சப்தார்த்தம் – மேல் முதல் சதகம் நார பதார்த்தவேந ஸ்ரீ திருமலையின் சிறப்பை அருளிச் செய்து நாராயண பதம் -குண பிரதான விவஷையாலே -திருக் கல்யாண குணங்களை த்வதீய சதகத்தில் அருளிச் செய்து திவ்ய மங்கள விக்ரஹ யோகமும் உண்டே -ஆகவே வடிவு அழகு அனுபவத்தில் இது வரை அனுபவம் இது ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ணாதி திரு மேனி அனுபவத்தில் கொண்டு மூட்டிற்று அதுக்கு முக உரை இந்த ஸ்லோகம்

ந தே ரூபம் ந சாகாரோ ந ஆயுதாநி ந சாஸ்பதம் -ததா அபி புருஷா காரோ பக்தா நாம் த்வம் ப்ரகாஸஸே -ஸ்ரீ ஜித்தாந்தா ஸ்லோக விவரணம் இது –

அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ –என்று வாய் வெருவுகையாலே பரிஜனம் ஆஸ்ரிதற்கு ப்ராப்யம் நித்ய அபி வாஞ்சித பரஸ்பர நீச பாவை மத் தைவதை பரிஜநைஸ் தவ சங்க ஸீய–ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் சத்ர சாமராதி -கைங்கர்ய உபகரணங்களும் ஆஸ்ரித அர்த்தமே எப்போதும் கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான் கூராழி வெண் சங்கு ஏந்திக் கொடியேன் பால் வாராய் திவ்ய ஆயுத பாரதந்தர்யத்தை ஜெயத்ர வத பிரகாரணத்திலே கண்டு தெளியலாம் ஞானம் அஞ்ஞர்க்கு –சக்தி அசக்தர்க்கு -க்ஷமை சாபராதற்கு -கிருபை துக்கிகளுக்கு -வாத்சல்யம் ச தோஷர்க்கு – சீலம் மந்தர்க்கு -ஆர்ஜவம் குடிலர்க்கு -ஸுவ்ஹார்த்தம் துஷ்ட ஹ்ருதயர்க்கு -மார்த்தவம் விஸ்லேஷ பீருக்களுக்கு – ஸுவ் லப்யம் காண ஆசைப்பட்டார்க்கு – ஆஸ்ரித விரோதி நிரசனார்த்த தயா க்ரோதாரபி கல்யாண குண சப்தேந ஸங்க்ரஹ — வானவர் நாட்டையும் நீ கண்டு கொள் என்று வீடும் தரும் நின்று நின்றே திவ்ய மங்கள விக்ரஹமும் ஆஸ்ரிதர்க்கே பரமபதத்தில் ஸூரி யோக்யம் – வ்யூஹத்தில் ஸ்வேதா தீப வாசிகளுக்கு போக போக்யம் -ப்ரஹ்மாதிகளுக்கு ஆஸ்ரயணீயம் விபவத்தில் -அதீந்த்ரிய விக்ரஹத்தை சாது பரித்ராண அர்த்தமாக இந்திரிய கோசரமாக்கி அனுபவிப்பிக்கும் பின்னானார் வணங்கும் சோதியே அர்ச்சை-அஸ்மதாதிகளுக்கே திவ்யாத்மா ஸ்வரூபமும் பரார்த்தமாய் -நிலாத் தென்றல் சந்த நாதிகள் போலவே –)

பெண்ணீர்மை ஈடழிக்கை யாவது என் என்றால் –
போந்தானே
-என்று இவள் வார்த்தை கேட்க இருக்கை-
தன் பேற்றுக்கு தான் பிரவர்த்திக்க வேண்டும் படி இருக்கை

தமக்கோர் பெருமையே –
ஸ்ரீ யபதித்வத்தால் வந்த உத்கர்ஷத்தை உடையராய் இருக்கிற தமக்கு
அவளோடு அனந்யராய் இருப்பார் நோவு பட முகம் கொடுத்திலர்-என்றால்
அத்தால் வரும் அவத்யம் தம்மது அன்றோ

அவள் அவயவ கோடியில் உள்ளார் நோவு பட விட்டு இருந்தான் என்றால்
அத்தால் வரும் ஸ்வரூப ஹானி தம்மதன்றோ

தமக்கு வரும் ஸ்வரூப ஹானி வேறு சிலரோ பரிஹரிப்பார்
தமக்கே பரிஹரிக்கை பரம் அன்றோ

அன்றிக்கே –
யஸ்ய சா ஜனகாத்மஜா அப்ரமேயம் ஹி தத் தேஜ
-என்கிறபடியே
தனக்கு ஏற்றமாம் படி இருக்கிற பெரியாழ்வார் திரு மகள் தம்மை ஆசைப் பட்டு
பேராதே நோவு படா நின்றாள் என்றால்

இது தமக்கு போருமோ –
நோவு படாத படி பரிஹரிக்க வேண்டாவோ
-என்னுதல் –

———————————————————————————————————

மா முத்த நிதி சொரியும் மா முகில்காள் வேங்கடத்துச்
சாமத்தின் நிறம் கொண்ட தாளாளன் வார்த்தை என்னே
காமத் தீயுள் புகுந்து கதுவப் பட்டிடைக் கங்குல்
ஏமத்தோர் தென்றலுக்கு இங்கு இலக்காய் நான் இருப்பேனே—8-2-

பதவுரை

மா முத்தம் நிதி சொரியும்–சிறந்த முத்துக்களையும் பொன்களையும் கொண்டு பொழிகிற
மா முகில்காள்–காள மேகங்களே!
வேங்கடத்து–திருமலையிலெழுந்தருளியிரா நின்ற
உள் புகுந்து–உள்ளே புகுந்து
கதுவப்பட்டு–கவ்வ, அதனால் பாதைப்பட்டு
கங்குல்-இரவில்
இடை ஏமத்து–நடு யாமத்திலே
சாமத்தின் நிறம் கொண்ட–நீலநிற முடையனான
தாளாளன்–எம்பெருமானுடைய
வார்த்தை என்னே–ஸமாசாரம் ஏதாகிலுமுண்டோ?
காமம் தீ–காமாக்நியானது
ஓர் தென்றலுக்கு–ஒரு தென்றற் காற்றுக்கு
நான் இலக்கு ஆய்–நான் இலக்காகி
இங்கு இருப்பேன்–இங்கு இருப்பனோ? (இது தகுதியோ?)

மா முத்த நிதி சொரியும் மா முகில்காள் –
என்னைத் தோற்றி ஒரு ஔதார்யம் படைக்க வேண்டாவோ உங்களுக்கு
பரானுக்ரஹமே சீலமாய் இருக்குமவர்கள் அன்றோ நீங்கள் –
பெரு விலையனான முத்துக்களையும் பொன்னையும் சொரியுமாய்த்து –

அதாவது
பிறர் இரக்க கொடுக்கை யன்றிக்கே
தன் ஆஸ்ரயம் கொண்டு தரிக்க மாட்டாமல் கொடுப்பாரைப் போலே யாய்த்து கொடுப்பது
முலைக் கடுப்பாலே தரையிலே பீச்சுவாரைப் போலே –

மா முகில்காள்
பிறர் இரக்க கொடுத்தல்
பிரத்யுபகாரம் கொள்ளக் கொடுத்தல் செய்கை அன்றிக்கே
தன் பேறாக கொடுக்குமவை என்கை-
இப்படிக் கொடுக்கப் பெறாத அன்று உடம்பு வெளுக்குமவர்கள் அன்றோ நீங்கள்

வேங்கடத்துச்-
ஏக தேச வாசித்வத்தால் உங்களுக்கு தெரியாமை இல்லை இறே

சாமத்தின் நிறம் கொண்ட-
அவ்வளவு இன்றிக்கே வடிவிலேயும் போலி யுண்டே இறே உங்களுக்கு

தாளாளன் –
இவற்றுக்கு இன்றிக்கே அவனுக்கு உண்டான ஏற்றம்
பிறருக்காக கண்ட உடம்பை தனக்கு என்று இருக்குமவன் ஆயத்து
பக்தாநாம் –என்று இருக்கிற உடம்பை தனக்கு என்று இருக்கிறவன் –

இவ்வடிவு படைத்த நாமோ சென்று அணைவோம்-
இதில் அபேஷை உடையார் வேணுமாகில் தாங்களே வருகிறார்கள் -என்று
எழ வாங்கி இருக்குமவன்

வார்த்தை என்னே –
இங்கே வாராராகிலும் -இழவு தமக்கு என்று இருந்தாராகில்
வார்த்தை சொல்லி விடாமை இல்லை இறே

என்னே
நாம் முற்பாடராய் உதவப் பெற்றிலோம் -என்ற லஜ்ஜையாலே
நீங்கள் அவள் செய்தது என் என்று அறிந்து வாருங்கோள் என்னுதல்
அன்றிக்கே –
நஜீ வேயம் ஷணம் அபி -என்னுதல்
அங்கன் இருப்பார் உண்டாவதாக நாம் அறிந்திலோமே என்னுதல்
துஷ்யந்தனுடையவும் சகுந்தலையுடையவும் கதையைச் சொல்லிக் கொள்வது -ஒன்றும் சொல்லாமை இறே

ஒரு வார்த்தை கொண்டு தரித்து இருக்கலாமோ இவளுக்கு -என்னில் –
ஒரு வார்த்தை கேட்கில்
ஸ்திதோச்மி-ஸ்ரீ கீதை -18-73-என்று இருக்கலாம் இறே
பாவி நீ என்று ஓன்று சொல்லாய் பாவியேன் காண வந்தே -திருவாய் –4-7-3–
என்றாவது கேட்க ஆசைப் பட்டார் அன்றோ-

வார்த்தை என்னே -என்ற இடத்தில்
இன்னது என்று சொல்லக் கேட்டிலள்

காமத் தீயுள் புகுந்து கதுவப் பட்டு
கேவல அக்னியோபாதி இது என்று நினைத்து இருக்கிறானோ
கேவல அக்னியில் காட்டில் நரக அக்னிக்கு எத்தனை வாசி உண்டு –
அவ்வோபாதியும் போராதே அந்தர அக்னிக்கு இது

உள் புகுந்து
புறம்பு உள்ளதடங்க தஹித்து தாஹ்ய பாவத்தாலே உள்ளே விழுந்ததாய்த்து
பாவ பந்தமடியாக வந்ததாகையாலே உள்ளேயாய் இருக்கும் இறே

கதுவப் பட்டு –
வெந்த இடமே விறகாக எரியா நின்றதாய்த்து

இடைக் கங்குல் ஏமத்தோர்
ராத்ரியில் நாடு யாமத்தில் -என்னுதல்
அன்றிக்கே –
ஏமத்தில்

ரஷை உள்ள இடத்தில் இருந்து அனுபவிக்க வேணும் என்று பாரித்து இருந்தாள்-அவன் வந்திலன்

ஏமம்
காவலும் சாபமும் —
கட்டழகும் வலியும்-புகுந்து ஆச்வசிப்பார் இல்லாத இடத்திலே அகப்பட்டாள்

ஓர் தென்றலுக்கு இங்கு இலக்காய் நான் இருப்பேனே–
இந்த பாதக பதார்த்தத்துக்கு தம்மோபாதி சக்தி போதாது என்று இருக்கிறாரோ

பம்போ பாவன மாருதம் -என்று தாமும் கால் வாசி அறியாரோ
அவன் கால் ஆசைப் பட்டு இருக்கும் நான் இக் காலாலே துகை உண்ணக் கடவேனோ

இங்கு –
இது வரும் என்று அறிந்து இருந்தால் என்னைத் தன் கால் கீழ் இட்டுக் கொள்ள வேண்டாவோ
தாமும் நானுமாக இருந்தால் அன்றோ இது வாய் மடிந்து போவது –
காற்று பலம் இழந்து போவது என்றபடி

நான் இலக்காய்-
சர்வ சாதாரணமான வஸ்துவுக்கு -காதலுக்கு -நான் ஒருத்தியும் இலக்காவதே
தம்முடைய கர ஸ்பர்சத்தாலே ஜீவித்து இருக்குமது தவிர்ந்து அதுக்கு போலியான இது வந்து ஸ்பர்சிக்க
இன்னம் நான் ஜீவிப்பேன் என்று இருக்கிறாரோ
தம் கை பார்த்து இருக்கிற நான் இக்காலாலே அமுக்குண்ணக் கடவேனோ

அணி மிகு தாமரைக் கையை அந்தோ அடிச்சியோம் தலை மிசை நீ யணியாய்-திருவாய் -10-3-5-
தான் இலக்காய் –
பெருமாள் இத் தென்றலுக்கு இலக்காக லாமே ஒழிய நான் இலக்காகவோ

பத்ம சௌகந்தி கவஹம் -கலம்பகம் சூடுவாரைப் போலே –
சிவம்
-இதின் தனை நன்மை யுடையவர் ஒருவரும் இல்லை
இதுக்கு நன்மை என் என்னில் –
சோக விநாசனம்
-நம்மைச் சித்ர வதம் பண்ணாது -அழித்தே விடும்
சோகம் மறுவதலிடாதபடி பண்ணும் போலே இரா நின்றது
தன்யா -தனம் உடையார் இருப்பார் ஷாமத்துக்கு அஞ்சார்கள் இறே
சேவந்தே -அஞ்சாமை அன்றிக்கே இத்தை அனுபவிக்கைக்கு ஏகாந்தமான ஸ்தலம் தேடா நிற்பார்கள்
பாம்போ பாவன மாருதம் -ஆகரத்தில் நெருப்பு என்னுமா போலே –
அக்னி குண்டத்தில் நெருப்பு போலே மிகவும் கொளுத்துவதாகும்
இலக்காய் -ஏக லஷ்யமாய்

நான்
என்னையும் தாமாக நினைத்து இருந்தாரோ
ஒரு கால் காணில் செய்வது என் என்று இருக்கிற நான்

இருப்பேனே -என்னை ஒழியவும் தமக்கு ஜீவிக்கலாம் என்று இருக்கிறாரோ –
இரேன் -இறே என்றபடி
கால் காணில் -சாடு –

———————————————————————————–

ஒளி வண்ணம் வளை சிந்தை உறக்கத்தோடு இவை எல்லாம்
எளிமையால் விட்டு என்னை ஈடு அழியப் போயினவால்
குளிர் அருவி வேங்கடத்து என் கோவிந்தன் குணம் பாடி
அளியத்த மேகங்காள் ஆவி காத்து இருப்பேனே—-8-3-

பதவுரை

அளியத்த மேகங்காள்–அருள் புரியக் கடவ மேகங்களே!
ஒளி–தேஹத்தின் காந்தியும்
வண்ணம் –நிறமும்
வளை–வளைகளும்
சிந்தை–நெஞ்சும்
உறக்கத்தோடு–உறக்கமும் ஆகிய இவையெல்லாம்
எளிமையால்–என்னுடைய தைந்யமே காரணமாக
என்னை இட்டு–என்னை உபேக்ஷித்து விட்டு
ஈடு அழிய–என் சீர் குலையும்படி
போயின–நீங்கப் போய் விட்டன.
ஆல்–அந்தோ!
குளிர் அருவி–குளிர்ந்த அருவிகளை யுடைய
வேங்கடத்து–திருமலையி லெழுந்தருளி யிருக்கிற
என் கோவிந்தன்–எனது கண்ண பிரானுடைய
குணம்–திருக் கல்யாண குணங்களை
பாடி–வாயாரப் பாடிக் கொண்டு (அந்தப் பாட்டே தாரகமாக)
ஆவி–பிராணனை
காத்திருப்பேனே–ரக்ஷித்திருக்க என்னால் முடியுமோ?

ஒளி வண்ணம் வளை சிந்தை உறக்கத்தோடு இவை எல்லாம்
ஒரு உபாதியாலே பெற்றவை –
ஸ்வா பாவிகமானவை எல்லாம் போய்த்தன
பாஹ்ய பரிகரங்களும் ஆந்திர பரிகரங்களும் போய்த்தன என்கிறாள்

புறம்புள்ள ஆபரணமும் –ஒளி வண்ணம் வளைகள்
உள்ளுள்ள ஆபரணமும் –சிந்தை உறக்கங்கள் -போய்த்தன என்கிறாள்

மெய்யில் ஆபரணமும்
மெய்யான ஆத்மாவில் உள்ள உறக்கமும் -சிந்தையும்
பொய்யில் ஆபரணமும்
சரீரத்தில் ஆபரணம் ஒளி வண்ணன் வளையல்கள் -இருக்கிறபடி
அவனோடு கலந்து பெற்ற புகர்-அதுக்கு ஆஸ்ரயமான நிறம்

கழற்றிப் பூணும் ஆபரணமும் -வளையல்கள் –
கழற்றாதே
கிடக்கும் ஆபரணமும் நித்ரையோடே கூட
இவை எல்லாம் –

மற்றும் பலவும் –
அவனுடைய உபய விபூதியில் பரப்போபாதியும் போரும் காணும் இவையும்

ஒளி வண்ணம் வளை
இவை மெய்யே விட்டுப் போய்த்தன
சரீரத்தில் இருந்து உண்மையாகவே விட்டு நீங்கின

உறக்கம் தானே கண்ணற்றுப் போய்த்தது-
கண்ணற்று -கருணை இல்லாமல்

இவை இப்படி போகைக்கு அடி என் என்னில் –

எளிமையால் –
நான் எளிமை பட்டு இருக்கையாலே போய்த்தன -என்னுதல் –
புல்லியார் இறே ஆபன்னரைக் கை விடுவார்

என் எளிமையாலே -என்னுதல்
தம்தாமுடைய புன்மையாலே என்னுதல்

இட்டு –
புரிந்து பாராதே சில அசேதனங்களை பொகடுமா போலே பொகட்டு
ஒளி வண்ணம் வளை என்கிற இவை
நாம் இவளுடனே கையும் மெய்யும் தீண்டிப் பரிமாறின -என்னுமது இன்றிக்கே போயின
உறக்கம் தானே -நாம் கண் கலந்து பரிமாறினோம் என்னுமது இன்றிக்கே பொகட்டுப் போய்த்து –
ஆகிலும் போகிறது கண்ணற்றுப் போய்த்து

ஈடழிய
அவன் பிரிகிற போது பிரிவை உணர்த்தி வரும் தனையும் தரிக்கும் படி ஸ்மிதம் பண்ணி
அணைத்து தன் செல்லாமை தோற்ற விறே போய்த்து

இவை அங்கன் இன்றிக்கே –
சைதில்யம் உபயாந்யாஸூ-
-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-18-29-என்கிறபடியே
சடக்கென பிரிந்து கொடு நின்றன –

குளிர் அருவி வேங்கடத்து என் கோவிந்தன் குணம் பாடி
இத் தசையில் குண ஜ்ஞானத்தாலே தரித்தல் –
குண கீர்த்தனத்தாலே தரித்தல் செய்யலாம் என்று இருக்கிறாரோ

குளிரருவி வேங்கடம்
இத் தாபம் அத் தேசத்தை நினைக்கத் தீரும் காணும் –
சகல தாபங்களையும் ஆற்ற வல்ல தேசமாய்த்து

என் –
இப்போது வந்திலன் ஆகிலும்
முன்பு தன்னை எனக்காக்கி வைத்தவற்றை முந்துற முன்னம் தவிர்க்க ஒண்ணாது இறே

கோவிந்தன்
சர்வ ஸூலபனான நிலையைத் தவிர்க்க ஒண்ணாது இறே

குணம் பாடி –
-சோஸ்நுதே சர்வான் காமான் சஹ ப்ரஹ்மணா -என்கிறபடியே
அன்வயத்திலும் குண அனுபவமாகில் பண்ணுவது
பிரிந்தாலும் குண ஜ்ஞானத்தாலே தரிக்கலாம் என்று இருக்கிறாரோ –
ஆசம்சேயம்–தச்மிம்ச பகவோ குணா –சுந்தர -27-14-சீதா பிராட்டி தரித்தால் போலே

அளியத்த மேகங்காள் –
நீங்கள் முன்னம் அவனைப் போலே யாகாது ஒழியப் பெற்றேன்
அவன் பொகட்டுப் போன சமயத்தில் முகம் காட்டுவதே நீங்கள் –

ஆவி காத்து இருப்பேனே—
பிராண நாதன் நானோ
தன்னை அனுபவிக்கும் அது ஒழிய பிராண ரஷணமும் எனக்குப் பணியோ
ஆனைப் பண்ணைக் குதிரை சுமக்க வற்றோ
ஆனைக்கு உரிய அலங்காரங்கள் கட்டுக்கள் இவற்றை குதிரை சுமக்குமா
ஒரு சர்வ சக்தி தொழிலை என்னாலே செய்யலாமோ –

———————————————————————————-

மின்னாகத் தெழுகின்ற மேகங்காள் வேங்கடத்துத்
தன்னாகத் திருமங்கை தங்கிய சீர் மார்வற்கு
என்னகத் திளம் கொங்கை விரும்பித் தாம் நாடோறும்
பொன்னகம் புல்குதற்கு என்புரிவுடைமை செப்புமினே –8-4-

பதவுரை

ஆகத்து மின் எழுகின்ற மேகங்காள்–சரீரத்திலே மின்னல் தோன்றப் பெற்ற மேகங்களே!
என் ஆகத்து–என் மார்விலுண்டான
இள கொங்கை–இள முலைகளை
தாம் விரும்பி–அவ் வெம்பெருமான் விரும்பி
பொன் ஆகம் புல்குதற்கு–அழகிய தம் மார்வோடே அணைய வேணு மென்னும் விஷயத்தில்
நாள் தோறும்–நித்யமும்
என் புரிவடைமை-திருமலையிலே
தன் ஆகம்–தனது திருமேனியில்
திருமங்கை தஙகிய சீர் மார்வற்கு–பிராட்டி எழுந்தருளி யிருக்கப் பெற்ற திரு மார்பு படைத்த பெருமானுக்கு சொல்லுங்கள்

மின்னாகத் தெழுகின்ற மேகங்காள் வேங்கடத்துத்
அவனைப் பிரிந்து இருக்கிற சமயத்தில் மறக்க ஒட்டாதே –
அவன் வடிவுக்கு போலியான உங்கள் வடிவைக் காட்டி
அவனை ஸ்மரிப்பிக்கிற நீங்கள் -வல்லி கோளாகில் நானும் அவனும் சேரும்படி காரியம் பாரிகோள்-

நீல தோயாத மத்யஸ்தா வித்யுல்லேகவ பாஸ்வரா-தைத் நா -11
நீலமுண்ட மின்னன்ன மேனிப் பெருமான் -திரு விருத்தம் -29

ஆகத்து எழுகின்ற -என்றுமாம் –
மின் நாகத்து எழுகின்ற
-என்றுமாம் –
நாகத்து
-ஆகாயத்தில் –ஆகாயம் -ஆகம் என்று கடைக்குறை

மேகங்களானவை தம்மில் உரசினவாறே நடுவே எழுவது ஓன்று இறே மின்னாவது
மின்னானது ஆகத்திலே எழுகிற மேகங்கள் என்னுதல்-
மின்னானது ஆகாசத்தில் தோற்றும்படி எழுகிற மேகங்கள் என்னுதல்
தன் வடிவில் இருட்சிக்கு கை விளக்கு பிடித்துக் காட்டுவாரைப் போலே
மின்னிக் கொண்டு சஞ்சரியா நின்றன வாய்த்து

மேகங்காள்
நடுவே பெரிய உடையார் வந்து தோற்றினால் போலே இருந்ததீ-
அவனைப் பிரிந்து நோவு படுகிற சமயத்தில் நீங்கள் வந்து தோற்றின படியும்
வேங்கடத்து
கடல் கடக்கவும் விரோதி போக்கவும் வேண்டாவே உங்களுக்கு
கலங்கா பெரு நகரத்து ஏறப் போக சொல்லுகிறேனும் அன்றே –

தன்னாகத் திருமங்கை தங்கிய சீர் மார்வற்கு
அணைந்து அல்லது தரிக்க ஒண்ணாத வடிவு படைத்தார்க்கு
பிராட்டி -அகலகில்லேன் இறையும் -என்று விரும்பி நித்ய வாசம் பண்ணும் வீறுடைய மார்வு படைத்தவர்க்கு
தான் உள்ளாகைக்கும்-
தன் சத்தை பெறுகைக்காகவும்-
பிராட்டி நித்ய வாசம் பண்ணும் மார்வு படைத்தவர்க்கு

அளவுடையார் இருப்பார் அணைந்து அல்லது தரியாத உடம்பை
புதியராய் ஆசைப் பட்டவர்களை போக விட்டால் ஆற்றப் போமோ -என்று சொல்லுங்கோள்

எனக்கு புருஷகாரம் இல்லாமல் இழக்கிறேன் அன்றே
பிரணயகதை இன்று இருந்து சிலர் ஓதுவிக்க வேண்டாவே தமக்கு

என்னகத் திளம் கொங்கை விரும்பித்
பிராட்டி முலை எழுந்தால் போலேயோ நான் முலை எழுந்த படி
தத் தஸ்ய சத்ருசம் பவேத் –என்று ஆறி இருக்கலாம் படியோ நான் முலை எழுந்த படி –

இளம் கொங்கை
சொற் கேளா பிரஜைகளைப் போலே யாய்த்து முலைகளின் படி
விஷயத்தை காட்டுகிறது -என்றால் ஆறி இருக்க மாட்டாதவை
என் கொங்கை கிளர்ந்து குமைத்து -5-7–என்னக் கடவது இறே

இளம் கொங்கை விரும்பித் தாம்
காத்ரைஸ் சோகாபி கர்சிதை சம்ஸ்ப்ருசேயம்-சுந்தர -40-3-என்னுமா போலே
ஒருவர் பட்டினி விட ஒருவர் ஜீவிக்குமா போலே ஆக ஒண்ணாது
விடாய்த்த இக் கரணங்களால் நான் அணையும் படி பண்ணு

நாடோறும்
காலம் தோறும் –
காலம் எல்லாம் –
ஆசைப் படுகிற போதே காலம் எல்லாம் அனுபவிக்க வேணும் என்று
ஆசைப்படும்படி இருக்கிறது காணும் விஷயம் தான்

தாம் விரும்பி
எம்பெருமான் விரும்பி என்றுமாம்

தன்னாகத் திரு மங்கை தங்கிய சீர் மார்வற்கு பொன்னகம்-உண்டு வீறுடைய ஆகம்-
என்னாகத் திளம் கொங்கை தாம் விரும்பி நாள் தோறும் பொன்னாகம் புல்குதற்கு என்புரிவுடைமை செப்புமினே-

நினைவாலே தரிக்க வல்லவள் அல்லள் ஆயத்து இவள் –

என் புரிவுடைமை –
தாமும் நானுமாய் கலந்து இருந்த போது-தம் புரிவுடைமை இறே கேட்டுப் போந்தது
ஒரு தலையில் ஆசையே யாய்த்து கேட்டுப் போந்தது
இப்போது மற்றைப் படியேயாய்-நான் விரும்புகிற படியைச் சொல்லுங்கோள்
ரஷ்ய ரஷக பாவம் மாறாடிற்று என்று சொல்லுங்கோள்
தம் ஸ்வரூபமும் என் ஸ்வரூபமும் அழிந்தது என்று சொல்லுங்கோள்
தான் நினைத்து பெறுமதுவும் ஸ்வரூப ஹானி -என்று போலே காணும் இவள் தான் நினைத்து இருப்பது

செப்புமினே
தம்தாமுக்கு இல்லாதவை கேட்டு அறிய வேணும் இறே
நந்தலையில் குறை தீர அறிவித்து போருங்கோள்
தேசிகாஸ் தத்ர தூதா –-தாத்பர்ய ரத்னாவளி -3-
புருஷகார பூதர்களான ஆசார்யர்களைக் குறிக்கும் –

———————————————————————————-

வான் கொண்டு கிளர்ந்து எழுந்த மா முகில்காள் வேங்கடத்துத்
தேன் கொண்ட மலர் சிதறத் திரண்டு ஏறிப் பொழிவீர் காள்
ஊன் கொண்ட வள்ளுகிரால் இரணியனை யுடலிடந்தான்
தான் கொண்ட சரி வளைகள் தருமாகில் சாற்றுமினே–8-5-

பதவுரை

வேங்கடத்து–திருமலையிலே
தேன் கொண்ட மலர் சிதற–தேன் நிறைந்துள்ள புஷ்பங்கள் சிதறும்படி
திரண்டு ஏறி பொழிலீர்காள்–திரள் திரளாக ஆகாயத்திலேறி மழையைப் பொழிகின்றவையாயும்
வான் கொண்டு கிளர்ந்து எழுந்த–ஆகாயத்தைக் கபளீகரித்துக் கொண்டு ஒங்கிக் கிளம்புகின்றவையாயுமுள்ள
மா முகில்காள்!–காள மேகங்களை!
ஊன் கொண்டவள் உகிரால்–வலியள்ளவையாய் கூர்மை யுடையவையான நகங்களாலே
இரணியனை உடல் இடந்தான் தான்–ஹிரண்யாஸுரனுடைய உடலைப் பிளந்தெறிந்த பெருமான்
கொண்ட–என்னிடத்துக் கொள்ளை கொண்டு போன
சரி வளைகள்–கை வளைகளை
தரும் ஆகில்–திருப்பிக் கொடுப்பதாக விருந்தால்
சாற்றுமின்–எனது அவஸ்த்தையை அவர்க்குத் தெரிவியுங்கள்

வான் கொண்டு கிளர்ந்து எழுந்த மா முகில்காள்
தங்களுக்கு வாசஸ் ஸ்தானம் அறும்படி வந்து தோற்றா நின்றன
நம் குடியிருக்கு என்று பரிஹரிக்க அறிகிறனவில்லை-
அபரிச்சின்னமாய் இருக்கும் ஆகாசம் -ஆகாசம் -என்று இறே பிரசித்தி –
அத்தை பிரதம பரிஸ்பந்தத்தாலே க்ரசித்துக் கொண்டு
பின்னையும் அதின் அளவு அல்லாத படியாக கிளரா நின்றது யாய்த்து –
இவற்றின் ஒருமைப் பாடு இருக்கிறபடி
இவ்வளவு அன்று என்று தோற்றா நின்றன வாய்த்து –

வேங்கடத்துத் தேன் கொண்ட மலர் சிதறத் திரண்டு ஏறப் பொழிவீர் காள்
நல்லத்தை அழிக்கிற இத்தால் என்ன பிரயோஜனம் உண்டு –
நானும் அவனும் சேரும்படி கார்யம் பாரிகோள் வல்லி கோளாகில் –
நீங்கள் எல்லாம் கூடித் திரண்டு பெரிய கிளர்த்தியோடே பூக்கள் அழிய கார்யம் பார்க்கிறிகோள் இத்தனை இறே
இத்தால் எனக்கு என்ன பிரயோஜனம் உண்டு

ஒரு மாலை -கோதை -அவனோடு சேரும் வழி உண்டாகில் பாரிகோள் –
விடாய்த்தார் நாக்கு நனைக்கப் போரும் என்னுமா போலே –
ஒரு மாலை
-என்கிறாள்

தேன் மிக்கு இருந்துள்ள மலர்களானவை சிதறும்படி திரண்டு ஏறி வர்ஷிக்கிற நீங்கள்
என் விரோதியை நீங்கள் போக்கின இத்தால் –
நான் அவனோடு சேர்ந்தேன் ஆனேனோ –

நேமான் புஷ்ப பலத்ருமான் -சுந்தர -16-25-என்று இறே இவளுக்கு இருக்கிறது
உனக்கு நாங்கள் செய்ய வேண்டுவது என் என்றால் போல் இருந்தன –

ஊன் கொண்ட வள்ளுகிரால் இரணியனை யுடலிடந்தான்
தசைந்து கூரிதான உகிராலே-
தமப்பன் பகையாக மகனுடைய –
எங்கும் உளன் கண்ணன்
-திருவாய் -2-2-9-
பிரதிஜ்ஞா சம காலத்திலேயே வந்து தோற்றி –
அவன் விரோதியைப் போக்கினவன் –

தமப்பனில் அண்ணியார் இல்லை இறே –
இப்படி இருக்க -அவனில் அண்ணி யனாய் உதவினவன் –
பிறர் பகையானாலும் உதவுமவன் தான் பகையானால் உதவ லாகாதோ -என்று சொல்லுகிறாள் என்று சொல்லுங்கோள் –

தன்னைப் பேணாதே வந்து விரோதியைப் போக்குமவன் –
தன்னைப் பேணாதே வரச் சொல்லுகிறேன் அன்றே
தன்னைப் பேண நான் பிழைப்பேனே-

என் பருவத்திலே ஒரு ஆணுக்கு உதவினவன் எனக்கு உதவலாகாதோ -என்று
சொன்னேன் என்று சொல்லுங்கோள்

ஊன் கொண்ட வள்ளுகிரால்-
ஆஸ்ரித விரோதிகளை தானே கை தொடானாய் போக்கு மவன்

இரணியனை -யுடலிடந்தான்-
விரோதியைப் போக்கவும்
தன்னை அழிய மாறவும் வேணும் என்று சொல்லுகிறேன் அல்லேன்
தன் உடைமை தான் பெறுவாள் என்று நினைக்க அமையும்

தான் கொண்ட சரி வளைகள்
கழலுகிற வளையல்கள்
சரி என்னும் ஆபரணமும் வளையல்கள் என்னும் ஆபரணமும் என்னுமாம்
அவன் வந்தாலும் தொங்காது போலே காணும்

தருமாகில் சாற்றுமினே–
தாராது ஒழிகையே-ஸ்வ பாவம் என்று இருக்கிறாள்
ஸ்வ தந்த்ரராய் இருப்பார் தாராது ஒழியிலும் ஒழிவர் இறே-
ஆனாலும் நமக்கு நசை அறாது இறே

சாற்றுமினே
அவன் தரிலும் தருகிறான்
தவிரிலும் தவிருகிறான்
நீங்கள் அறிவித்துப் போருங்கோள்-

————————————————————————————————————–

சலம் கொண்டு கிளர்ந்து எழுந்த தண் முகில்காள் மாவலியை
நிலம் கொண்டான் வேங்கடத்தே நிரந்து ஏறிப் பொழிவீர் காள்
உலங்கு உண்ட விளங்கனி போல் உள் மெலியப் புகுந்து என்னை
நலம் கொண்ட நாரணற்கு என் நடலை நோய் செப்புமினே–8-6-

பதவுரை

சலம் கொண்டு–ஸமுத்ர ஜலத்தை முகந்து கொண்டு
கிளர்ந்து எழுந்த–மேற் கிளம்பி விளங்குகின்ற
தண் முகில் காள்–குளிர்ந்த மேகங்களே!
மா வலியை–மஹா பலியிடமிருந்து
நிலம் கொண்டான் வேங்கடத்து–பூமியை ஸ்வாதீநப் படுத்திக் கொண்டவனான எம்பெருமான் எழுந்தருளியிருக்கிற திருமலையிலே
நிரந்து–பரவி
ஏறி–உயர விருந்து
பொழிவீர் காள்!–பொழிகின்ற மேகங்களே!
உலங்கு உண்ட–பெருங்கொசுக்கள் புஜித்த
விளங்கனி போல் உள் மெலிய–விளாம்பழம் போல நான் உள் மெலியும் படி
புகுந்து–என்னுள்ளே பிரவேசித்து
என்னை–என்னுடைய
நலம் கொண்ட–நிறைவுகளை அபஹரித்த
நாரணற்கு–நாராயணனுக்கு
என் நடலை நோய்–எனது கஷ்ட வ்யாதியை
செப்புமின்–தெரிவியுங்கள்

சலம் கொண்டு கிளர்ந்து எழுந்த தண் முகில்காள்
குளிர்ந்த தண்ணீரைச் சேர்த்து –
ஏலக் குழம்பு ஏலக் குழம்பு என்று திரிவாரைப் போலே திரியா நின்றன வாய்த்து

தண் முகில்காள் –
நீங்கள் வர்ஷிக்கிற ஜலம் வேணுமோ -உங்கள் வடிவே அமையாதோ –

மாவலியை நிலம் கொண்டான் வேங்கடத்தே –
பிறருக்காக தன்னை இரப்பாளன் ஆக்கினவன் வர்த்திக்கிற தேசத்திலே வர்த்திக்கிற உங்களுக்கு
என் இரப்புக்கு கார்யம் செய்ய வேண்டாவோ
அசுரன் பக்கலிலே உங்களைப் போகச் சொல்லுகிறேன் அன்றே
உடையவன் பக்கலிலே உங்களைப் போகச் சொல்லுகிறேன் அத்தனை அன்றோ –
நம்மை உடைய நாராயணன் அன்றோ

நிரந்து ஏறிப் பொழிவீர் காள்
பரந்து-சாய்கரத்தை உயர வைத்து தண்ணீர் வார்ப்பாரைப் போலே –
காணவே விடாய் கெடும்படி உயர ஏறி வர்ஷிக்கிறி கோள் இறே
அவன் வர்த்திக்கிற தேசத்தில் வர்த்தித்து அவனோடு உங்களுக்கு ஒரு சம்பந்தம் உண்டானால்
அவன் ஸ்வ பாவம் உண்டாக வேண்டாவோ

உலங்கு உண்ட விளங்கனி போல் உள் மெலியப் புகுந்து
உலங்கு -என்பது -பெரும் நுளம்பு –பெரும் கொசு
அவை விளாம் பழத்திலே மொய்த்தவாறே அதின் ரசம் எல்லாம் குடி போமாய்த்து
அப்படியே என் உடம்போடு அணைந்து அகவாயைக்குடி போக்கினான் யாய்த்து –

என்னை நலம் கொண்ட நாரணற்கு என் நடலை நோய் செப்புமினே–
என்னை சர்வஸ் வஹரணம் பண்ணின

நாரணற்கு –
தம் உடம்பில் அழுக்கு போக்யமாய் இருக்குமவர்க்கு –

என் நடலை நோய் செப்புமினே—
தம் வாத்சல்யத்துக்கும் என் ஆற்றாமைக்கும் என்ன சேர்த்தி யுண்டு என்று சொல்லுங்கோள்-

என் நடலை நோய்
தமக்கும் இந் நடலை நோய் யுண்டாகில் அறிவிக்க இரார் இறே
நிற்பது இருப்பது விழுவது எழுவதாய்ப் படுகிற என் ஆற்றாமையை அறிவியுங்கோள்
அறிவிக்க வேண்டியது ஒன்றே வேண்டுவது –
வாய் வார்த்தையால் தண்ணீர் பந்தல் வையுங்கோள் –

——————————————————————————————

சங்க மா கடல் கடைந்தான் தண் முகில்காள் வேங்கடத்துச்
செங்கண் மால் சேவடிக் கீழ் அடி வீழ்ச்சி விண்ணப்பம்
கொங்கை மேல் குங்குமத்தின் குழம்பு அழியப் புகுந்து ஒரு நாள்
தங்கு மேல் என்னாவி தங்கும் என்றும் உரையீரே–8-7-

பதவுரை

சங்கம்–சங்குகளை யுடைத்தாயும் பெருமை வாய்ந்தது
மா-பெருமை வாய்ந்ததாயுமான
கடல்–கடலை
கடைந்தான்–கடைந்தருளின பெருமான் எழுந்தருளி யிருக்கிற
வேங்கடத்து–திருமலையில் திரிகிற
விண்ணப்பம்–விஜ்ஞாபம் யாதெனில்
கொங்கை மேல்–எனது முலைகளின் மேல் (பூசப் பட்டுள்ள)
குங்குமத்தின் குழம்பு–குங்குமக் குழம்பானது
அழிய–நன்றாக அவிந்து போம்படி
தண் முகில் காள்–குளிர்ந்த மேகங்களே!
செம் கண் மால்–புண்டரீகாக்ஷனான அவ் வெம்பெருமானுடைய
சே அடி கீழ்–செவ்விய திருவடிகளின் கீழ்
அடி வீழ்ச்சி-அடியேனுடைய
ஒரு நாள்–ஒரு நாளாகிலும்
புகுந்து தங்கும் ஏல்–அவன் வந்து ஸம்ஸ்லேஷிப்பானாகில்
(அப்போது தான்)
என் ஆவி–என் பிராணன் நிலை நிற்கும் என்பதாம்
உரையீரே–(இவ் விண்ணப்பத்தை அப் பெருமானிடத்துச்) சொல்லுங்கள்

சங்க மா கடல் கடைந்தான் தண் முகில்காள் –
கீழ்க் கிடந்த சங்குகள் மேல் ஏறிக் கொழிக்கும் படி அபரிச்சின்னமான கடலைக் கடைந்தவன் –
தன்னை அர்த்தித்தாருக்கு தன்னை வருத்தி கடலைக் கடைந்து அவர்கள் பிரயோஜனத்தை கொடுக்குமவன்
வர்த்திக்கிற தேசத்தில் அன்றோ நீங்களும் வர்த்திக்கிறது –

தண் முகில்காள் –
கடல் கடைந்த போது உண்டான ஆயாசத்தால் வந்த ஸ்ரமம் ஆறும் படி
குளிர்ந்த வடிவைக் காட்டி வர்த்திக்கிறன வாய்த்து –
தன்னையே பிரயோஜனமாக வேணும் என்று இருப்பார்க்காக வந்து நிற்கிற தேசமாய்த்து –

-கடல் கடைந்து
அநந்தரம்–
வேங்கடத்து செங்கண் மால் ஆனவன்

அவன் தான் வாராது இருக்க இவள் இப்பாடு படுகிறது என்-என்று இருக்கிறிகோள் ஆகில் –

செங்கண் மால் –
அங்கே சென்றவாறே காண்கிறிகோள் இறே –
அநித்ரஸ் சத்தம் ராம –

சேவடிக் கீழ் அடி வீழ்ச்சி விண்ணப்பம்-
திருவடிகளிலே விழுந்து விண்ணப்பம் செய்யுங்கோள்
விண்ணப்பம் செய்யும் பாசுரம் என் என்னில்

கொங்கை மேல் குங்குமத்தின் குழம்பு அழியப் புகுந்து ஒரு நாள் தங்கு மேல் என்னாவி தங்கும் –
என்று சொல்லுங்கோள்
தம் வரவை விஸ்வசித்து உத்யோகித்துக் கொண்டு இருக்கிறேன் –
அது ச பிரயோஜனமாம் படி பண்ணுவாராகில் தரிக்கலாம் -என்று சொல்லுங்கோள்

முலை எழுந்தார் படி மோவாய் எழுந்தாருக்குத் தெரியாது இறே –
நாம் சென்றாலும் இனி ஜீவிக்க மாட்டாள் என்று இருக்கிலும் இருப்பார் இறே –
அக்குறை தீர அறிவித்துப் போங்கோள்-

கொங்கை மேல் குங்குமத்தின் குழம்பு அழியப் புகுந்து –
வெறும் புறத்திலே கொண்டு ஆற்ற ஒண்ணாத முலைகளை –
அதுக்கு மேலே கும்குமத்தாலும் அலங்கரித்தாள் ஆயத்து

குழம்பு –
இவை சென்று அறிவித்து நசை அற்றால் இறே அவை பொறி எழுவது –
செருக்கனாய் ஸ்வ தந்த்ரனாய் இருக்கையாலே
இன்ன போது வரும் என்று அறுதி இட ஒண்ணாதே
இப்போது வந்தான் இப்போது வந்தான் -என்று அலங்கரித்த படியே இருக்க வேணும் இறே
இத்தலை பர தந்திர வஸ்து வாகையாலே

குழம்பு அழியப் புகுந்து –
முன்னடி தோற்றாதே இறே வந்து புகுவது

ஒரு நாள் தங்கு மேல்
ஒரு நாள் தங்கு மாகில் போருமோ பின்னை இப்பாரிப்புக்கு எல்லாம் என்னில்

என்னாவி தங்கும்
போகத்துக்குப் போராது
பிராண ரஷணத்துக்கு போரும்

ஒருநாள் தங்கு மேல் என்னாவி தங்கும்
குண ஜ்ஞானத்தாலே தரியாலோ என்று இருக்க ஒண்ணாது –
அணையுமாகில் தரிக்கலாம்
கோவிந்தன் குணம் பாடி –ஆவி காத்து இருப்பேனே -8-3- நிலையையும் தாண்டி விட்டாள்-

—————————————————————————————————————-

கார் காலத்து எழுகின்ற கார் முகில் காள் வேங்கடத்துப்
போர் காலத்து எழுந்து அருளிப் பொருதவனார் பேர் சொல்லி
நீர் காலத் தெருக்கில் அம்பழ விலை போல் வீழ்வேனை
வார் காலத்தொரு நாள் தம் வாசகம் தந்து அருளாரே –8-8-

பதவுரை

கார் காலத்து–வர்ஷ காலத்திலே
வேங்கடத்து எழுகின்ற–திருமலையிலே வந்து தோற்றா நின்ற
கார் முகில்காள்–காள மேகங்களே!,
போர் காலத்து–யுத்த ஸமயத்திலே
எழுந்தருளி–(போர் களத்தில்) எழுந்தருளி
பொருதவனார்–போர் செய்து வெற்றி பெற்ற இராம பிரானுடைய
பேர்–திரு நாமங்களை
சொல்லி–ஸங்கீர்த்தநம் பண்ணி
நீர் காலத்து எருக்கில் அம் பழ இலை போல் வீழ்வேனை–மழைகாலத்தில் எருக்கம் பழுப்புக்கள் அற்று
விழுவது போல் ஒசிந்து விழுகின்ற எனக்கு
வார் காலத்து ஒரு நாள்–நெடுகிச் செல்லுகிற காலத்திலே ஒரு நாளாகிலும்
தம் வாசகம் தந்தருளாரே–தம்முடைய ஒரு வார்த்தையை அருளா தொழிவரோ?

கார் காலத்து எழுகின்ற கார் முகில் காள்
அவன் வரவு குறித்துப் போன காலத்திலே தோற்றினவர்கள் அன்றோ நீங்கள்
தனக்கு அடைத்த காலத்தில் தோற்றுகிறவை யாகையாலே தன் நிறம் பெற்று தோற்றி உதவுவுமா போலே யாய்த்து –
இவனும் முன்பு எல்லாம் தோற்றாதே –
ஆஸ்ரிதர் நலிவு படும் அளவு ஆனவாறே வந்து தோற்றி –

வேங்கடத்துப் போர் காலத்து எழுந்து அருளிப் பொருதவனார்
அவர்கள் விரோதிகளைப் போக்கி உதவி தான் நிறம் பெரும் படியும்

பேர் சொல்லி-
இந்த தசையில் திரு நாம சங்கீர்த்தனத்தாலே தரிக்கலாம் என்று இருந்தோம் –
அது தானே சைதில்ய ஹேதுவாக நின்றது –

நீர் காலத் தெருக்கில் அம்பழ விலை போல் வீழ்வேனை
கோடையிலே பாலற வுலர்ந்த எருக்கிலையிலே மழைத் துளி பட்டவாறே அற்று விழுமா போலே யாய்த்து –
விரஹத்தாலே நொந்து இருக்கிற சமயத்திலே திரு நாம சங்கீர்த்தனத்தைப் பண்ண
அது தானே சைதில்ய ஹேதுவாக இற்று இற்று விழுகிறபடி

வார் காலத்தொரு நாள் தம் வாசகம் தந்து அருளாரே —
ஓட ஒழுகிச் செல்லுகிற காலத்து –நீண்டு செல்லும் காலத்தில் –
என்றும் ஒருபடிப் பட்டு இருக்க வேணுமோ இதிலும் -வார்த்தை அருளுவதிலும் –
வாசா தர்ம மவாப் நுஹி -என்று ஒரு வார்த்தை சொன்னால் ஆகாதோ

அங்கு தூதர்க்குச் சொன்ன வார்த்தை இறே
இங்கும் இவற்றுக்கு இறே சொல்லுகிறது –

—————————————————————————————————————-

மத யானை போல் எழுந்த மா முகில்காள் வேங்கடத்தைப்
பதியாக வாழ்வீர்காள் பாம்பணையான் வார்த்தை என்னே
கதி என்றும் தானாவான் கருதாது ஓர் பெண் கொடியை
வதை செய்தான் என்னும் சொல் வையகத்தார் மதியாரே–8-9-

பதவுரை

வேங்கடத்தை–திருமலையை
பதி ஆக–இருப்பிடமாகக் கொண்டு
வாழ்வீர்கள்–வாழ்கின்றவையாயும்
மதம் யானை போல் எழுந்த–மத்த கஜம் போலே செருக்கிக் கிளர்ந்தவை யாயுமுள்ள
மா முகில்காள்–காள மேகங்களே!
பாம்பு அணையான்–சேஷ சாயியான எம்பெருமானுடைய
வார்த்தை–வார்த்தை யானது
என்னே–இப்படி பொய்யாய் விட்டதே,
தான்–“அவ் வெம்பெருமான் தான்
என்றும்–எப்போதைக்கும்
கதி ஆவான்–(ஆச்ரிதரகட்கு) ரக்ஷகனா யிருந்து வைத்து
கருதாது–அத் தன்மையை நினையாமல்
ஓர் பெண் கொடியை–ஒரு பெண் பிள்ளையை
வதை செய்தான்–கொலை பண்ணினான்“
என்னும் சொல்–என்கிற சொல்லை
வையகத்தார்–இப் பூமியிலுள்ளவர்கள்
மதியாரே–மதிக்க மாட்டார்களே

மத யானை போல் எழுந்த மா முகில்காள் வேங்கடத்தைப் பதியாக வாழ்வீர்காள் –
ஏஷ ஹ்யேவா நந்தயாதி -தைத் ஆனந்த -7-என்கிறபடியே
அவன் ஆனந்திப்பிக்க ஆனந்தித்து திரிகிறி கோள் அன்றோ நீங்கள்

மா முகில்காள்
ஒரு விபூதியாக அஹம் அன்னம் அஹம் அன்னம் என்று களிக்குமா போலே
நீங்களும் திரள் திரளாக வர்த்திக்கிறிகோள் அன்றோ

வேங்கடத்தைப் பதியாக வாழ்வீர்காள்
வந்தேறிகளாய் திருநாள் சேவித்து போவாரைப் போலே போராதே-
அங்கே நித்ய வாசம் பண்ணப் பெறுவதே நீங்கள் –

சேறு தோய்ந்து கழுவினவர்கள் அன்றிக்கே –
முக்தரைப் போலே அன்றிக்கே –
நித்ய சித்தரைப் போலே யாய்த்து –

அங்குத்தை வர்த்தநத்தை இறே வாழ்வாகச் சொல்லுகிறது

கீழே முமுஷுக்களில் வ்யாவ்ருத்தி சொல்லி
இங்கே முக்தர்களில் வ்யாவ்ருத்தி சொல்கிறது

இரண்டு ஆற்றுக்கும் நடுவில் வாசம் போலே –
நல்லார்கள் வாழும் நளிர் அரங்கம்
-11-5- என்னக் கடவது இறே
பல நீ காட்டிப் படுப்பாயோ –திருவாய் -6-9-9- என்றும் –
புறத்து இட்டு இன்னம் கெடுப்பாயோ
-6-9-8-என்றும்
இதர விஷய ப்ராவண்யம் விநாச ஹேதுவாய் இருக்கும் –
பகவத் ப்ராவண்யம் வாழ்வாய் இருக்கும்

பாம்பணையான் வார்த்தை என்னே-
படுக்கைத் தலையில் சொல்லும் வார்த்தைகள் –
வேங்கடத்தை பதியாக உடைய உங்களுக்கு -அந்தரங்கர்க்கு தெரியும் இறே

கதி என்றும் தானாவான் –
தேவாநாம் தானவாநாஞ்ச சாமான்ய மதிதைவதம் -சர்வதா சரணத்வந்த்வம்
வ்ரஜாமி சரணம் தவ
-ஜிதந்தே -2-என்கிறபடியே

அல்லேன் என்றும் ஆவேன் என்றும் சொல்லும் இவனைப் போல் -ஜீவனைப் போல் அன்றிக்கே
என்றும் ஒக்க ஒருபடிப் பட்டே இருக்குமவன் யாய்த்து அவன்
ஆள் பார்த்து உழி தருவாய் -நான்முகன் -60-என்கிறபடியே

கருதாது ஓர் பெண் கொடியை வதை செய்தான் என்னும் சொல்
தனக்கு வருகிற ஸ்வரூப ஹானியை புத்தி பண்ணாது
ஒரு கொள் கொம்பிலே சேர்க்க வேண்டும் கொடியை தரையில் இட்டு வைக்கையாவது -வதைக்கை இறே
ந ச சீதா த்வயா ஹீ நா —அயோத்யா -53-31–
பகவத் விச்லேஷமும் பர்யாயம் காணும் –

வையகத்தார் மதியாரே–
அத் தலையிலே சத் பாவத்தாலே இத் தலையில் சத்தை என்னுமது போய்த்தே
ஒரு கால் முடிந்தார்க்கு இரு கால் முடிய வேண்டாவே
இனி நாட்டார் தம்மை ரஷகர் என்று விரும்பார்கள் என்று சொல்லுங்கோள் –
தம் தாம் அழிந்தாலும் அத் தலைக்கு வரும் அவத்யம் பரிஹரிக்கும் குடி அன்றோ –

———————————————————————————————

நாகத்தின் அணையானை நன்னுதலாள் நயந்து உரை செய்
மேகத்தை வேங்கடக் கோன் விடு தூதில் விண்ணப்பம்
போகத்தில் வழுவாத புதுவையர் கோன் கோதை தமிழ்
ஆகத்து வைத்துரைப்பார் அவர் அடியார் ஆகுவரே–8-10-

பதவுரை

நல் நுதுலாள்–விலக்ஷணமான முகத்தை யுடையளாய்
போகத்தில் வழுவாத புதுவையர் கோன் கோதை–பகவத நுபவத்தில் குறையாதவரான பெரியாழ்வாருடைய மகளான ஆண்டாள்
நாகத்தின் அணையான் வேங்கடக் கோனை–திருவனந்தாழ்வானைப் படுக்கையாக வுடையனான திருவேங்கட முடையானை
நயந்து–ஆசைப்பட்டு
உரை செய்–அருளிச் செய்ததாய்.
மேகத்தை விட்டு அதில் விண்ணப்பம்–மேகத்தை தூது விடுவதாக அமைந்த லிண்ணப்பமாகிய
தமிழ்–இத் தமிழ்ப் பாசுரங்களை
ஆகத்து வைத்து–ஹ்ருதயத்திலே வைத்துக் கொண்டு
உரைப்பாரவர்–ஓத வல்லவர்கள்
அடியார் ஆகுவர்–எம்பெருமானுக்கு நித்ய கைங்கரியம் பண்ணப் பெறுவர்கள்.

நாகத்தின் அணையானை நன்னுதலாள்
நீங்கள் செய்து அறிவிக்கும் அத்தனையே வேண்டுவது –
அத் தலையில் ஒரு குறையும் இல்லை
நம் வரவுக்கு உறுப்பாக படுக்கை படுத்து சாய்ந்து கிடந்தான்-வேங்கடக் கோன் என்கையாலே

நன்னுதலாள்
அப் படுக்கையிலே துகைத்து ஏறத் தகும் அவயவ சோபை உடையவள்

நயந்து உரை செய்-
ஆசைப் பட்டுச் சொன்ன விண்ணப்பம்

மேகத்தை வேங்கடக் கோன் விடு தூதில் விண்ணப்பம்
ராமாவதாரத்தில் ஐந்தர வியாகரண பண்டிதனைத் தூதாக விட்டது
இங்கே திருமலையிலே மேகங்களை தூதாக விடா நின்றாள்
இதுவே வாசி
அங்கு நின்று வந்தாரையே விடுகை இரண்டு இடத்திலும் ஒக்கும்
அவ் வதாரத்தில் பிற்  பாடர்க்கு இழக்க வேண்டாத படி -திருமலையிலே வந்து தூது விடுவார் ஆரோ என்று
அவசரம் பார்த்து இரா நின்றான் யாய்த்து –

போகத்தில் வழுவாத புதுவையர் கோன் கோதை தமிழ்ஆகத்து வைத்துரைப்பார்
பகவத் போகத்தில் ஒன்றும் தப்பாத படி எல்லா வகையாலும் அனுபவித்த பெரியாழ்வார் வயிற்றில்
பிறப்பாய்த்து இவ் வாசைக்கு ஊற்று
விபவம் உண்டான வன்று தொடங்கி போகத்தில் அன்வயித்தவர் இறே பெரியாழ்வார்
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில் – என்று தொடங்கி அனுபவித்தவர் இறே

இது அப்யசிக்கைக்கு எவ்வளவு அதிகாரம் வேணும் எனில்
ஆகத்து வைத்து உரைப்பாரவர்-
ஒருத்தி ஒரு விஷயத்தை ஆசைப் பட்டு படும் பாடு என் என்று அனுசந்தித்து சொல்ல வல்லவர்கள் –

அவர் அடியார் ஆகுவரே–
மேகங்களை தூது விட வேண்டாதே –
இவள் தான் மேகங்களை தூது விட்டதுவே ஹேதுவாக
இவள் ஆசைப் பட்ட கைங்கர்யத்தைப் பெற்று வாழப் பெறுவார்

சேஷத்வம் த்யாஜ்யம் -என்று இறே புறம்பு உள்ளார் நினைத்து இருப்பது
சேஷத்வம் புருஷார்த்தம் என்று கேட்கலாவது இவ் வாழ்வார்கள் பக்கலிலே இறே
அபிமத விஷயத்தில் தாஸ்யம் போகமாய் இருக்கும் இறே
இதர விஷயங்களில் சேஷத்வம் இறே கழிகிறது
வகுத்த விஷயத்தில் சேஷத்வம் உத்தேச்யமாகக் கடவது

அந்ய சேஷத்வமாய்த்து தவிர்க்கிறது –

————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ நாச்சியார் திரு மொழி – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் -ஏழாம் திருமொழி —

September 10, 2015

(ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை -ஸ்ரீ உ. வே. P.B.A.. ஸ்வாமிகள் பிரவேசம் –

கீழ்த் திருமொழியில் மண நீர் மஞ்சனமாட்டும் அளவும்
கனாக் கண்டதாகச் சொல்லப் பட்டு இருந்தாலும்
அதுக்கு அடுத்தபடியாக சம்ச்லேஷமும்
ஸ்வப்ன அனுபவகமாகத் தானே நடந்து ஏறியதாகக் கொள்ள வேணும்

அவ்வனுபவத்திலே கண்ணபிரான் உடைய திருவவதரத்தின் அமுதத்தைப் பருகப் பெற்ற ஆண்டாள்
கண் விழித்துக் கொண்டவாறே
அந்தோ இத்தகைய அனுபவம் கனவாகக் கழிந்ததே
மெய்யே அனுபவிக்கப் பெற்றதாக நினைத்துக் களித்து இருந்தேனே
தெய்வம் இப்படியா நம்மை வஞ்சித்தது
என வருந்தினாள் –

கண் உறக்கம் கொள்ளாமல்
போது போக்க உபாயமும் தோன்றாமல்
சிறிது நாழிகை அலை பாய்ந்தாள்
அவளவில் கண்ணபிரான் உடைய திருவாய் அமுதத்தை
நம்மைப் போல் அன்றியே
நித்ய அனுபவம் பண்ணப் பெற்றவர்கள் யாரேனும் உண்டா
அன்றி அவன் நம்மை வஞ்சித்தது போலே எல்லாரையும் வஞ்சிப்பவன் தானா –
என்று சிந்திக்கத் தொடங்கினாள்-

அப்போது இடது திருக் கையிலே நித்ய வாசம் செய்கிற
திருச் சங்கு ஆழ்வான்
அத திரு வாய் அமுதத்தை இடைவிடாது அனுபவிக்கும் பாக்யத்தை யுடையவன் என்று உணர்ந்தாள்-
ஹா ஹா அவனுடைய பாக்கியம் என்ன பாக்கியம் என்று கொண்டாடி
ஒரு பக்கத்தில் பிரீதி பிரகர்ஷமும்
மற்றொரு பக்கலிலே அஸூ யாதிசயமுமாய்
அப் பாஞ்ச ஜன்யத்தையே நெஞ்சிலே இடைவிடாதே அனுசந்தித்தாள்

அந்த பாவன பிரகர்ஷமானது-(உரு வெளித்தோற்றமானது-)
அத் திரு சங்கு ஆழ்வானை கண் முன்னே தோற்றுவிக்க
ஆண்டாள் அவனை முன்னிலையாக விளித்து
ஒ பாஞ்ச ஜன்யமே கண்ணபிரானது திருப்பவளத்தின்
இன்னமுதத்தை நீ இடைவிடாது அனுபவியா நின்றாயே
அத்திருவாயின் பரிமளமும்
அவ்வமுதத்தின் ரசமும்
எப்படி இரா நின்றது -சிறிது சொல்லாய் –
காதினில் ஆவது கேட்டு மகிழ்கிறேன் -என வினவுவதும்
அச் சங்கு ஆழ்வான் உடைய பாக்ய விசேஷத்தை கொண்டாடி சொல்லுவதுமாக
செல்லுகிறது இத் திருமொழி –

பெருமாளைக் காட்டிலும் ஆண்டாள் உடைய பாக்கியம் வீறு பெற்றது என்ன வேணும்
ஏன் எனில்
பெருமாள் பிராட்டியைப் பிரிந்து நொந்து இருந்த காலத்தில்
அப் பிராட்டியைக் கண்டு வந்த ஒரு குரங்கை பார்த்து
கதம் உரூ கதம் பாஹூ-என்று அவள் உடைய துடை அழகு எப்படி இருக்கிறது
தோள் அழகு எப்படி இருக்கிறது
சொல்லிக் காண் -என்று வினவப் பெற்றார் –

இவ் வாண்டாள் அப்படி தோற்றிற்று ஒரு குரங்கைப் பார்த்து
வினவ வேண்டாதே
எம்பெருமானது திருக் கையை ஒரு நொடிப் பொழுதும் விட்டு நீங்காத
நித்ய அனுபவம் பண்ணும் பாக்கியம் உடைய ஸ்ரீ பாஞ்ச ஜன்ய ஆழ்வானை நோக்கி
கேட்கப் பெற்றது சிறந்த பாக்கியம் இறே
உசாத் துணைக்கும் உரியார் கிடைப்பது அரிது அன்றோ –)

அவதாரிகை –

ஆண்டாளுடைய பாக்யம் இருந்தபடி –
புதியதொரு குரங்கைப் பார்த்து –கதமூரூ கதம் பாஹூ-சுந்தர -35-4-என்னாதே
தேசிகரைக் கேட்கப் பெற்றாள் இறே-

ஒரு ஸ்வப்ன அனுபவத்தை சொன்ன அளவன்றிக்கே
சம்ஸ்லேஷமும் வ்ருத்தமாய்த்துப் போலே-

இல்லையாகில் –வாகம்ருதம் இருக்கும் படி என் -என்று கேட்கக் கூடாது இறே –

ஸ்வப்ன அனுபவம் ஆகையாலே
மின்மினி பறந்தால் போலே இருக்கும் அத்தனை அல்லது நெஞ்சில் பட்டிராது –
சம்ஸ்லேஷத்தில் உபக்ரமத்திலே தான் இழந்தாள்-
தனக்கு அமைத்த அம்சத்தை ஸ்ரீ பாஞ்சஜன்யத்தைக் கேட்கிறாள் –
அவனைக் கேட்பான் என் என்னில்

1-திரை வளைத்தால் அதுக்குள்ளே வர்த்திக்கும் கூனர் குறளரைப் போலே
அவனைக் கை விடாதே அந்தரங்கனாய் இருக்கையாலும்
2-தாங்கள் அனுபவிக்கும் துறையிலே இழிந்து அனுபவிக்கும் நிலயனாய் இருக்கையாலும்
3-தங்களைப் போலே காதாசித்கம் அன்றிக்கே நித்ய சம்ஸ்லேஷம் பண்ணி வர்த்திக்கும் ஒருவனாகையாலும்
4-இனி வினை யுண்டானால் திருவாழி யாழ்வான் திருக் கையை விட்டுப் போய் வியாபாரிக்கும்-கருதுமிடம் பொருது கைந்நின்ற சக்கரத்தன் -திருவாய் -10-6-8–
இவன் வினை முடுக முடுக திருப் பவளத்திலே அணையும் அத்தனை
5-இனி உகவாத கம்சாதிகள் காணாமைக்கு இறே –உப சம்ஹர -என்றது
6-உகந்த பெண்களுக்கு காட்சி கொடுப்பதும் இவற்றோடு கூடவே இருக்கும் இறே
வாய்க்கரையிலே போய் இருந்து ஆர்ப்பரவம் பண்ணி
அவார்ப்பரத்திலேயே எதிரிகள் கெடும்படி இருப்பானுமாய்-
இவனை உகவாத கம்சாதிகள் காணாத படி
உப சம்ஹர சர்வாத்மன் ரூபமே தச் சதுர் புஜம் ஜானாது மா அவதாரம் தி
கம்சோசயம் திதி ஜன்மஜ
-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-3-11-என்றால் அப்போதே கை கரந்து நிற்பானுமாய்  –
உகந்த பெண்களுக்கு காட்சி கொடுப்பதும் இவற்றோடு கூடவாய் இருக்கும் இறே(தாரை மண்டோதரி போல்வாருக்கும் காட்சி கொடுத்து அருளினானே)
7- இவர்கள் தான் ஸ்யாமமான திருமேனியை அனுபவித்தால்
அதுக்கு பரபாகமான வெண்மையை உடையவன்-
ஆகையாலே
சேர அனுசந்திக்க வேண்டி
இருக்கும் இறே
இவன் தான் அதிக வளனுமாய் இருக்கும் இறே –தாமுகக்கும் தம் கையில் சங்கமே போலாவோ -11-1–என்றும்
வெள்ளை விளி சங்கு இடங்கையில் கொண்ட விமலன் -5-2-என்றும் -வலம் புரி போல் நின்று அதிர்ந்து –திருப்பாவை-4-
பாலன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே போல்வன சங்கங்கள் -திருப்பாவை -26-என்றும்-
இவள் தான் பாவித்து இருப்பதும் இத்தை இறே
8- இனி இவன் வார்த்தை கேட்டால் அவன் வார்த்தை கேட்டால் போலே இனியதாயும் இருக்கும் இறே –

———————————————————————————————————

அத்தை நித்ய அனுபவம் பண்ணுகையாலே உனக்குத் தெரியும் இறே –
அவனுடைய வாக் அம்ருதம் இருக்கும் படி என் -நீ சொல்ல வல்லையே –
என்று அவனைக் கேட்கிறாள் ஆய்த்து –

கருப்பூரம் நாறுமோ கமலப் பூ நாறுமோ
திருப் பவளச் செவ்வாய் தான் தித்தித்து இருக்குமோ
மருப்பொசித்த மாதவன் தன் வாய்ச் சுவையும் நாற்றமும்
விருப்புற்று கேட்கின்றேன் சொல் ஆழி வெண் சங்கே –7-1-

பதவுரை

ஆழி வெண் சங்கே–கம்பீரமாய் வெளுத்திரா நின்ற ஸ்ரீபாஞ்ச ஜந்யாழ்வானே!
மருப்பு ஓசித்த மாதவன் தன்–(குவயாபீட யானையன்) கொம்பை முறித்த கண்ண பிரானுடைய
வாய்–திரு அதரத்தினுடைய
சுவையும்–ரஸத்தையும்
நாற்றமும்–பரிமளத்தையும்
விரும்புற்று–ஆசையோடே
கேட்கின்றேன்–(உன்னைக்) கேட்கிறேன்.
திருப் பவளச் செவ்வாய் தான்–(அப்பெருமானுடைய) அழகிய பவளம் போன்ற சிவந்த திரு வதரமானது
கருப்பூரம்–பச்சைக் கற்பூரம் போல்
நாறுமோ?–பரிமளிக்குமோ? (அல்லது)
கமலப் பூ–தாமரைப் பூப் போலே
நாறுமோ?–பரிமளிக்குமோ?
தித்தித்திருக்குமோ–மதுரமான ரஸத்தை உடைத்தாயிருக்குமோ?
சொல்–இன்னபடி யிருக்குமென்று எனக்குச் சொல்

கருப்பூரம் நாறுமோ கமலப் பூ நாறுமோ-
எறிச்சு வெட்டியதாய் இருக்கும் கற்பூர நாற்றம் -பிரகாசிக்கையும் உறைப்பும் உண்டே
ஆறிக் குளிர்ந்து நிலை நின்று இருக்கும் கமலப் பூவினுடைய நாற்றம்-இரண்டுமேயாய் இராது இறே
சர்வ கந்த -என்கிற வஸ்து வாகையாலே –
எல்லாம் அனுபவ விஷயமாய் இருக்கச் செய்தே- 
ஒன்றை இரண்டை-
கேட்கிறாள் அத்தனை -யாய்த்து

எல்லாம் –
நீச்சு நீரும் நிலை நீரும் போலே அனைத்தும் உண்டே
இதில் உனக்குத் தான் ஏதேனும் தெரிந்து இருக்குமாகில்
நீ தான் சொல்ல வல்லையே -என்கிறாள்

திருப் பவளச் செவ்வாய் தான் தித்தித்து இருக்குமோ-
அத்தைத் தப்பி உள்ளே இழிந்தால் அனுபவிக்கும் படி கேட்கிறாள் –

சர்வ கந்த -என்கிற இது போலே –
சர்வ ரச
-என்கிற இது
விகல்ப விஷயமாய் இருக்கிறது இல்லை போலே காணும்-

தேன் போலே கன்னல் போலே போலே இருக்குமோ என்று
விகல்ப்பித்து கேட்க மாட்டுகிறிலள்-ஆய்த்து –

வாய்ப்புக்கு நீராய் ஆழம் காலாய் இருக்கையாலே –
வாய்ச் சுவையாய் திகைக்க வைக்கையாலே

இரண்டாவதை கேட்க மாட்டாதவள் ஆனாள்

வாயிலே புகுகிற ரசம் -சாடு
திருப் பவளச் செவ்வாய் –

கண்ணுக்கு இலக்கான போதே பிடித்து
அவ் வருகு ஒன்றில் இழிய ஒட்டுகிறது இல்லை யாய்த்து –
சர்வ இந்த்ரியங்களுக்கும் விஷயம் உண்டாய் இருக்கிறபடி –

(மெய்யாலே தீண்டலாம்
வாயாலே சுவைக்கலாம்
கண்ணாலே சேவிக்கலாம்
மூக்காலே மோந்து பார்க்கலாம்
காதுக்கு கேட்கலாம் -திருவாய் -சர்வ இந்த்ரியங்களுக்கும்-ஐந்து புலன்களுக்கும் விஷயமாகும்)

மருப்பொசித்த மாதவன் தன் வாய்ச் சுவையும் நாற்றமும்-
அளவுடையார் இழிந்து ஆழம் கால் படும் துறை யாய்த்து
சப்த ஸ்பர்ச ரூப ரச கந்தங்கள் உண்டாய் இருக்கையாலே –
எல்லா இந்த்ரியங்களுக்கும் இரை போடுவது அன்றோ இது –

பர்த்தாரம் பரிஷஸ்வஜே -ஆரண்ய –30-40-என்கிறபடியே
குவலயா பீடத்தை தள்ளின அநந்தரம் அணைத்து அனுபவிக்கும் யாய்த்து

வாய்ச் சுவையும் நாற்றமும் –
அனுபவ சமயத்திலே நாற்றம் முற்பட்டதே யாகிலும்
அநு பாஷிக்கிற இடத்தில் ரசம் முற்பட்டு கந்தம் பிற்பட்டு இருக்கிறது காணும் –

விருப்புற்று கேட்கின்றேன் சொல் ஆழி வெண் சங்கே —
அந ஸூ யவே--ஸ்ரீ கீதை -9-1-என்னும் விளம்பமும் இல்லை
ந ச மாம் யோ அப்ய ஸூயதி -ஸ்ரீ கீதை -18-67-என்ன வேண்டா விறே இவளுக்கு
அடியானாகையாலே நியமித்து கேட்கலாமே
அவனுக்கு சேஷ பூதனாகையாலே இவளுக்கும் அடியானாய் இருக்கும் இறே –
பர்த்ரு பார்யைகள் இருவருக்கும் பொதுவாய் இறே தாச தாசிகள் இருப்பது

(ஸ்ரீ பகவான் உவாச — இதம் து தே குஹ்ய தமம் பிரவக்ஷ்யாமி அநஸூயவே ஞானம் விஞ்ஞான ஸஹிதம் யஞ் ஞாத்வ மோக்ஷயஸே அஸூபாத் –9-1-

ஸ்ரீ பகவான் உவாச — யஞ்ஞாத்வ -எதை அறிந்து மோக்ஷயஸே அஸூபாத் –என்னை அடைவதற்குத் தடையான புண்ய பாபங்கள் அனைத்திலும் இருந்து விடுபடுவாயோ இதம் குஹ்ய தமம் ஞானம்–இந்த அதி ரஹஸ்யமான உபாஸன ரூபமான அறிவை விஞ்ஞான ஸஹிதம் –அவ்வுபாஸனத்தின் வகைகளைப் பற்றிய அறிவோடு கூட அநஸூயவே தே –என் விஷயத்தில் பொறாமை அற்ற உனக்கு பிரவக்ஷ்யாமி –நன்கு கூறுகிறேன்

ஸ்ரீ பகவான் சொல்கிறான் -எதை அறிந்து என்னை அடைவதற்குத் தடையான புண்ய பாபங்கள் அனைத்தின் இருந்தும் விடுபடுவாயோ இந்த அதி ரஹஸ்யமான உபாசன ரூபமான அறிவை அவ்வுபாசனத்தின் வகைகளைப் பற்றிய அறிவோடு கூட என் விஷயத்தில் பொறாமை அற்ற உனக்கு நான் கூறுகிறேன் ஞான பக்தி அனுஷ்டான ரூபமான உபாசனம் மூலமே -அஸூபாத்–பிரதிபந்தகங்களை போக்கி அவனை அடையலாம் என்றவாறு –

இதம் தே நா தபஸ்காய நா பக்தாய கதாசந– ந சாஸூஷ்ரூஷவே வாச்யம் ந ச மாம் யோப்யஸூயதி–৷৷18.67৷৷

தே இதம் கதாசந-உனக்கு (சொல்லப் பட்ட) இதை எப்போதும், அதபஸ்காய-தவமிலாதோனுக்கும், அபக்தாய ச-பக்தியில்லாதோனுக்கும், அஸுஸ்ரூஷவே-கேட்க விரும்பாதோனுக்கும், ய: மாம் அப்யஸூயதி-என்பால் பொறாமையுடையோனுக்கும், ந வாச்யம்-சொல்லாதே.

பரம ரஹஸ்யமாக என்னால் சொல்லப்பட்ட இந்த சாஸ்திரம் உன்னாலே தவம் செய்யாதவனுக்குச் சொல்லப்படலாகாது என்னிடமும் உன்னிடமும் பக்தி இல்லாதவனுக்கு ஒரு போதும் சொல்லப்படலாகாது கேட்பதில் விருப்பம் இல்லாதவனுக்கு சொல்லப்படலாகாது எவன் ஒருவன் என்னை துவேஷிக்கிறானோ அவனுக்கும் சொல்லப்படலாகாது)

ஆழி
உன் அளவுடமை போலே இருக்க வேண்டாவோ பரிமாற்றம் –
கடல் போன்ற விசாலமான மனப் பரப்பைச் சொல்லுதல்
அன்றிக்கே
பிறப்பைச்
சொல்லுதல் -கடலிலே பிறந்தவன் என்றுமாம்

கடல் அனைத்துக்கும் தாரகமானால் போலே
என்னையும் நீ பதில் சொல்லி தரிக்கப் பண்ண வேணும்

வெண் சங்கே –
உன் நிறத்தில் வெண்மை நெஞ்சிலே பட்டால் போலே
உன் வார்த்தையும் நெஞ்சிலே படும்படி சொல்ல வேணும்

வெண் சங்கே
கை விடாதே அனுபவியா நிற்கச் செய்தே உடம்பு வெளுக்கும் படி இறே
இவனுடைய ஆற்றாமை

நீ எனது ஆற்றாமையையும் அறிவாயே
அதனால் பதில் சொல்ல வேணும் –

———————————————————————

உகவாதாரை அழியச் செய்யுமா போலே
உகப்பாரை வாழ்விக்க வேணும் -காண்-
நீ பிறந்து வளர்ந்தால் போலே இருக்க வேணும் காண் உன் கார்யங்களும்
பிறப்பும் வளர்ப்பும் பிறருக்காவே அன்றோ
கார்யங்களும் பரார்த்தமாக வேண்டுமே –

கடலில் பிறந்து கருதாது பஞ்ச சனன்
உடலில் வளர்ந்து போய் ஊழியான் கைத்தலத்
திடரில் குடியேறித் தீய வசுரர்
நடலைப் பட முழங்கும் தோற்றத்தாய் நற் சங்கே – –7-2-

பதவுரை

நல் சங்கே–அழகிய சங்கே!
கடலில்–ஸமுத்திரத்திலே
பிறந்து–பிறந்து (அங்கு நின்றும்)
பஞ்சசனன் உடலில் போய் வளர்ந்து–பஞசஜனனென்ற அஸுரனுடைய சரீரத்திற் போய் வளர்ந்து,
கருதாது–(இப்படி பிறந்த விடத்தையும் வளர்ந்த விடத்தையும்) நினையாமல்
ஊழியான்–எம்பெருமானுடைய
கை தலம் திடரில்–கைத்தமாகிற உந்நத ஸ்தானத்திலே
குடி ஏறி–குடி புகுந்து
தீய அசுரர்–கொடியவர்களான அசுரர்கள்
நடலைப் பட–துன்பப்படும்படி
முழங்கும் தோற்றத்தாய்–ஒலி செய்யும்படியான மேன்மை யுடையையா யிரா நின்றாய். (உன்பெருமையே பெருமை)

கடலிலே பிறந்தது
பிரளயத்தில் அனைத்து  ஜீவ ராசிகளுக்கும் தாரகம் ஆனது போலே உபகரிக்க வேணும்
அவன் தோஷம் காணாமல் வளர்ந்தால் போலே எங்கள் குற்றம் காணாமல் உபகரிக்க வேணும்

பகவானைக் கருதாத பாஞ்ச சன்னியன் உடலிலே வளர்ந்தாயே
கடலில் பிறந்து கருதாது பஞ்ச சனன் உடலில் வளர்ந்து –
கடலிலே பிறந்து அகவாயில் உள்ளது த்வேஷமேயாய்
அஸூரனுடைய உடலுக்கு உள்ளே வளர்ந்ததை நினையாதே

போய் ஊழியான் கைத்தலத் திடரில் குடியேறித் –
பின்னைப் போய்-
கால சேஷமான ஜகத்துக்கு நிர்வாஹகனாய் இருக்கிற
சர்வேஸ்வரனுடைய கைத்தலத்திலே குடியேறி

ஊழியான்
கால நிர்வாஹகன்-

தீய வசுரர் நடலைப் பட முழங்கும் தோற்றத்தாய் நற் சங்கே – –
அவன் படி அடங்க உண்டாய் இருந்ததீ உனக்கும் –

அவன் யது குலத்திலே பிறந்து
சத்ருவான கம்சனுக்கு உள்ளாய் இறை இறுத்து இருக்கிற திருவாய்ப்பாடியிலே வளர்ந்து
காலயவன ஜராசந்தாதிகளுக்காக போய்
ஸ்ரீ த்வாரகையை படை வீடாகச் செய்து அங்கே குடியேறி
பின்னை துரியோத நாதிகளை மண் உண்ணும் படி வந்து இப்படி செய்தான் இறே அவனும்

நீயும் –சகோஷாதாரத்த ராஷ்ட்ராணாம் ஹ்ருதயாணி வ்யதாரயத்-ஸ்ரீ கீதை -1-19-
யஸ்ய நாதேன தைத்யா நாம் பலஹாநி ரஜாயாத -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-21-29–

நல் சங்கே –
இரு கரையர்களாய் இருப்பார் உனக்கு ஒப்பாவார்களோ
குற்றத்தையும் குணத்தையும் கணக்கிட்டு செய்யுமவர்கள் உனக்கு ஒப்பாக மாட்டார்கள் இறே
கர்ம அநு குணமாக ஸ்ருஷ்டிக்குமவன் இறே அவன் –

நஞ்சீயர் சந்நியசித்து அருளின காலத்திலேயே
அனந்தாழ்வான் கண்டு முன்புத்தை ஐஸ்வர்யம் அறியுமவன் ஆகையாலே
ஒரு பூவைச் சூடி வெற்றிலையும் தின்று சந்தனத்தைப் பூசி போரா நிற்கச் செய்தே
எம்பெருமானே ரஷகன் என்று இருந்தால் பரம பதத்தில் நின்றும் இழியத் தள்ளுவர்களோ –
இங்கனே செய்யத் தகாது
-என்று போர வெறுத்தவாறே

கூட நின்றவர்களும் –
இங்கனே செய்வதே -என்று வெறுத்தார்களாய்-இவர் தாம் செய்வது என் -என்று விட்டு
திருமந்த்ரத்தில் பிறந்து -என்று முக்கால் சொல்லி –
மூன்று பதங்களின் பொருளையும் அறியும்படி -மூன்று முறை சொல்லி-
திரு மந்த்ரத்திலே பிறந்து –
த்வயத்திலே வளர்ந்து –
த்வயைக நிஷ்டனாம் படியாய் தலைக் கட்டுவது உன் கார்யம்
-என்று பிரசாதித்தான்

திரு மந்த்ரத்திலே சொல்லுகிறபடியே ஸ்வரூப ஜ்ஞானம் உண்டாய்
த்வயத்திலே சொல்லுகிறபடியே உபாய பரிக்ரஹம் உண்டாக வேணும் -என்று பிரசாதித்தான்

கிருஹஸ்தாஸ்ரமம் விட்டு சன்யாஸ்ரமம் கொள்வது புதிய பிறப்பு அல்ல
திரு மந்திர ஞானம் வந்து
ஸ்ரீ வைஷ்ணவனாய் பிறக்கும் பிறப்பே புதிய பிறப்பாகும்
என்றபடி –

——————————————————————————————————–

தட வரையின் மீத சரற் கால சந்திரன்
இடை உவாவில் வந்து எழுந்தால் போலே நீயும்
வடமதுரையார் மன்னன் வாசுதேவன் கையில்
குடியேறி வீற்று இருந்தாய் கோலப் பெரும் சங்கே —7-3-

பதவுரை

கோலம் பெரு சங்கே–அழகிய பெரிய சங்கே!
சாற்காலம் சந்திரன்–சரத் கால சந்திரன்
உவா இடையில்–பௌர்ணமியினன்று
தட வரையின் மீது வந்து எழுந்தால் போல–பெரிய உதய கிரியிலே வந்து உதித்தாற்போல
நீயும்–நீயும்
வடமதுரையார் மன்னன் வாசு தேவன் கையில்–வடமதுரையிலுள்ளார்க்கு அரசானான கண்ண பிரானுடையத் திருக் கையில்
குடி ஏறி–குடி புகுந்து
வீற்றிருந்தாய்–உன் மேன்மையெல்லாம் தோற்ற இரா நின்றாய்

தட வரையின் மீத சரற் கால சந்திரன்
உதய கிரியின் மேலே சரத் காலத்திலேயே எல்லா கலைகளும் நிரம்பின
பூர்ண சந்தரன் வந்து தோன்றினால் போலே
தட வரைத் தோள் -பெரியாழ்வார் -5-4-4-இறே-

இடை உவாவில் வந்து எழுந்தால் போலே நீயும் வடமதுரையார் மன்னன் –
வாசுதேவன் கையில் குடியேறி வீற்று இருந்தாய் கோலப் பெரும் சங்கே —

இடை உவாவில்-
உவா
-பௌர்ணமியில் –
இடை-
நடு-சதுர்தசிக்கும் பிரதமைக்கும் நடு என்றபடி-
உன் ஐஸ்வர்யம் இருந்த படி என் –

வடமதுரையார் மன்னன் -மேன்மை –
வஸூ தேவன் -நீர்மை –
கையில் -வடிவு அழகு —
பசும் கூட்டு

ஸ்ரீ மதுரையில் உள்ளாருக்கு நிர்வாஹகனாய் -ஸ்ரீ வஸூ தேவர் திருமகனாய் இருக்கிறவனுடைய திருக்கையிலே
ஒரு காலமும் பிரியாத படியாக குடியேறி
உன் ஐஸ்வர்ய வ்யாவ்ருத்தி எல்லாம் தோற்றும் படியாய் இருந்தாய்

கோலப் பெரும் சங்கே
உன் அழகுக்கு மேலே அவனுக்கும் உன்னாலே அழகாம் படி இருந்ததீ உன்னேற்றம்

எல்லா பாட்டுக்களுக்கும் கிரியை- சொல்லாழி வெண் சங்கே –என்னவுமாம்

பாட்டுத் தோறும் கொண்டாட்டம் ஆதல் -என்னவுமாம் –

——————————————————————————————————–

சந்தர மண்டலம் போல் தாமோதரன் கையில்
அந்தரம் ஓன்று இன்றி ஏறி அவன் செவியில்
மந்திரம் கொள்வாயே போலும் வலம் புரியே
இந்திரனும் உன்னோடு செல்வத்துக்கு ஏலானே–7-4-

பதவுரை

வலம்புரியே!–வலம்புரிச் சங்கே!
தமோதரன் கையில்–கண்ண பிரானது திருக்கையில்
சந்திர மண்டலம் போல்–சந்திர மண்டலம் போலே
அந்தரம் ஒன்று இன்றி ஏறி–இடைவிடாது இருந்து கொண்டு
அவன் செவியில்–அவனுடைய காதில்
மந்திரம் கொள்வாய் போலும்–ஏதோ ரஹஸ்யம் பேசுகிறாய் போலிரா நின்றாய்,
இந்திரனும்–(செல்வத்தில் மிக்கவனாகப் புகழ் பெற்ற) இந்திரனும்
செல்வத்துக்கு-ஐச்வர்ய விஷயத்தில்
உன்னோடு ஏலான்–உனக்கு இணையாக மாட்டான்

சந்தர மண்டலம் போல் தாமோதரன் கையில்
செருக்கராய் இருக்குமவர்கள் கையிலே குளிரிக் குடம் -பனி நீர்க் குப்பி –
பிடித்துக் கொண்டு இருக்குமா போலே

தாமோதரன் கையில் –
அவனைக் கண்டால் வயிற்றில் தழும்பாலே-
ஒரு தாயாருக்கு பவ்யனாய் வளர்ந்தான் -என்று தெரியுமா போலே
உன்னைக் கண்டால் இவனும் பவ்யன் என்று தோற்றும்படி இருக்க வேண்டாவோ –

அந்தரம் ஓன்று இன்றி ஏறி
அவன் விரும்பி இருப்பார் பலரும் உண்டு இறே -அவர்களைப் போலே –
கருதுமிடம் பொருது கைந்நின்ற சக்கரத்தன் -திருவாய்மொழி -10-6-8-ஒரு விச்சேதம் இன்றிக்கே
ஒருத்தருக்கு ஓர் ஆபத்து வந்தவாறே கை விட்டுப் போவாரைப் போல் அன்றிக்கே
அவன் செவியில் மந்திரம் கொள்வாயே போலும் –

உம்மைப் பிரிந்து ஆற்ற மாட்டார் பலருண்டு -என்று
திருச் செவியில் சொல்லுகிறாப் போலே இருக்கிறது
அவன் செவியிலே ரஹஸ்யத்தை சொல்லுவான் போலே இருக்கை

கொள்ளுகை -கொடுக்கை

வலம் புரியே
அல்லாதவை எல்லாம் இடத்திலே புரிந்து -நீ வலத்திலே புரிந்தால் போலே
கார்யத்திலும் வேறு பட்டு இருக்க வேணும் காணும்

இந்திரனும் உன்னோடு செல்வத்துக்கு ஏலானே–
தான் நினைத்த போது வர்ஷிப்பித்து –
அல்லாத போது தவிர்ந்து போருகையாலே
ஐஸ்வர்யம் உள்ளது இந்தரனுக்கு என்றாய்த்து இவர்கள் இருப்பது -இடைச்சிகள் ஆகையாலே

இந்தரனுக்கு என்று ஆயர்கள் எடுத்த எழில் விழவு –பெரியாழ்வார் -2-3-4-என்னக் கடவது இறே

அன்றிக்கே –
பெரியாழ்வார் பெண் பிள்ளை யாகையாலே –
வேதாந்த விழுப் பொருளின் மேல் இருந்த விளக்கை விட்டு சித்தன் விரித்தனனே-பெரியாழ்வார் -4-3-11-
இந்திர ப்ராணாதி சப்தங்களும்
பகவத் வாசகங்கள் என்னும் வாசனையாலே -சொல்லிற்றாதல் –

இந்திர பிரணாதிகரணம் -ஸ்ரீ ப்ரஹ்ம ஸூ த்ரம் -1-1-11-

அவனுடைய ஸ்வா தந்த்ர்ய லஷ்மி
உன்னுடைய பார தந்த்ர்ய லஷ்மிக்கு போறாதே இருந்ததீ

ஒருவன் அனுகூலித்த வாறே அழியும் அது -ஸ்வா தந்த்ர்யம் – இறே
லஷ்மணோ லஷ்மி சம்பன்ன -என்று நிலை நின்றதாய்த்து இது
சர்வாத்மநா பர்யநுநீயமாநோ யதா ந சௌமித்ரி ருபைதி யோகம் -யுத்த -131-93-என்று
ஒருபடியாலும் முடி சூடேன் என்றவரை இறே லஷ்மி சம்பன்னர் என்றது
பூர்வஜஸ் யா நுயாத்ரார்த்தே த்ரும சீரைரலங்குருத-சுந்தர -33-28-
பெருமாள் முடி தவிர்ந்தார் –
இளைய பெருமாள் வகுத்த முடி சூடினார் –

——————————————————————————————————–

உன்னோடு உடனே ஒரு கடலில் வாழ்வாரை
இன்னார் இனையார் என்று எண்ணுவார் இல்லை காண்
மன்னாகி நின்ற மதுசூதன் வாய் அமுதம்
பன்னாளும் உண்கின்றாய் பாஞ்ச சன்னியமே-–7-5-

பதவுரை

பாஞ்சசன்னியமே!–சங்கே!
ஒரு கடலில்–ஒரே கடலில்
உன்னோடு உடனே–உன்னோடு கூடவே
வாழ்வாரை–வாழப் பிறந்தவர்களான மற்றும் பலரை
இன்னார் இனையார் என்று எண்ணுவார் இல்லை காண்–ஒரு பதார்த்தமாகவும் மதிப்பாரில்லை காண்,
(நீ ஒருவன் மாத்திரம்)
மன் ஆகி நின்ற–ஸர்வ ஸ்வாமியா யிரா நின்ற
மதுசூதன்–கண்ணபிரானுடைய
வாய் அமுதம்–திருவாயினமுதத்தை
பல் நாளும்–பல காலமாக
உண்கின்றாய்–பருகா நின்றாய்.
(ஆகையால் நீயே பாக்யசாலி)

உன்னோடு உடனே ஒரு கடலில் வாழ்வாரை-
இனையார் என்று எண்ணுவார் இல்லை காண்

உன்னோடு சஜாதீய பதார்த்தங்களை இட்டு எண்ணுவார் இன்றிக்கே இருக்க நீ ஒருவன் வாழ்ந்த படி என் –
ஒரு தேசத்திலே உன்னோடு சேர வர்த்திக்கிறவர்களை
அவர்கள் ஸ்வரூபம் ஆதல் -பிரகாரம் ஆதல்-என்று எண்ணக் கடவார் இல்லை காண் –

மன்னாகி நின்ற –
ராஜாதி ராஜஸ் சர்வேஷாம் விஷ்ணுர் பார -ஆஸ்வ -43-13- -என்கிறபடியே
நிர்வாஹகனாய் நின்ற

மதுசூதன் –
இது தான் ஒரு நாமம் மாத்ரமாய் இராதே
ஆஸ்ரிதருக்கு களை யறுத்துக் கொடுக்குமவனாய்த்து

வாய் அமுதம்-
அவனுடைய வாக் அம்ருதத்தை

பன்னாளும் உண்கின்றாய் பாஞ்ச சன்னியமே-
நாங்கள் அனுபவிக்கும் அத்தை -எங்கள் அனுபவத்தை-
காதாசித்கமாக்கி நித்ய அனுபவம் பண்ணா நின்றாய்

பாஞ்ச சன்னியமே
பிறப்பு என்று ஓன்று இல்லை யாகாதே –
பெரியாழ்வார் வயிற்றிலே பிறந்து உன்னைக் கால் கட்டா நின்றேன்
நீயோ அசுரன் வயிற்றிலே பிறந்து நித்ய அனுபவம் பண்ணா நின்றாய் –

——————————————————————————————————–

போய்த் தீர்த்தமாடாதே நின்ற புணர் மருதம்
சாய்த்தீர்த்தான் கைத்தலத்தே ஏறிக் குடி கொண்டு
சேய்த்தீர்த்தமாய் நின்ற செங்கண் மால் தன்னுடைய
வாய்த் தீர்த்தம் பாய்ந்த்தாட வல்லாய் வலம் புரியே —7-6-

பதவுரை

வலம் புரியே!–வலம்புரிச் சங்கே!,
போய்–வெகு தூரம் வழி நடந்து போய்
தீர்த்தம்–கங்கை முதலிய தீர்த்தங்களிலே
ஆடாதே–நீராடுகையாகிற கஷ்டங்கள் பட வேண்டாமல்
நின்ற–(நாரத சாபத்தாலே மரமாய் நின்ற)
புணர் மருதம்–இரட்டை மருத மரத்தை
சாய்த்து ஈர்த்தான்–முறித்துத் தள்ளின கண்ண பிரானுடைய
கைத்தலத்து ஏறி–திருக் கைத்தலத்தின் மீதேறி

போய்த் தீர்த்தமாடாதே நின்ற புணர் மருதம் சாய்த்தீர்த்தான் கைத்தலத்தே
ஆயிரம் காதம் ஐந்நூற்று காதம் போய்
சரகூறலிலே முழுகித் திரியாதே
அஸூராவேசத்தாலே பேராதே நிர்விவரமாய் நின்ற மருதுகள் இரண்டின் நடுவே அவகாசம் கண்டு போய்
பின்னை அவை முறிந்து உரலோடு இழுப்புண்டு வர
அதன் த்வநியைக் கேட்டு புரிந்து பார்த்துக் கொண்டு இருந்த
மௌக்யத்தை உடையனாய் இருக்கிறவன் கையிலே

ஏறிக் குடி கொண்டு-
அவதாரத்தின் மெய்ப்பாட்டாலே-உபசம்ஹர -என்று சிலர் இரக்க-
நாம் மறைந்து நாலு நாள் நிற்கையால் இறே இப் பிரமாதம் புகுந்தது என்று
இனி ஒருநாளும் பிரிய ஒண்ணாது என்று திருக் கையை விடாதே வர்த்திக்கிறான் ஆய்த்து

சேய்த்தீர்த்தமாய் நின்ற செங்கண் மால் தன்னுடைய வாய்த் தீர்த்தம் பாய்ந்த்தாட வல்லாய் வலம் புரியே —
அறத் தூரமாய் -அதி பாவனமாய் நின்ற –
பாவநஸ் சர்வ லோகாநாம் த்வமேவ ரகு நந்தன –
உத்தர -82-9-என்றும்

சேய்த் தீர்த்தமாய் நின்ற என்றது
செங்கண் மாலுக்கும் வாய்த் தீர்த்தத்துக்கும் விசேஷணம்-பெரிய தீர்த்தம் -தூர தீர்த்தம்

புண்யா நாம் அபி புண்யோ அசௌ-வனபர்வ தீர்த்த யாத்ரை–88-26- -என்றும்
தீர்த்தன் உலகு அளந்த சேவடி -திருவாய் -2-8-6–என்றும் சொல்லுகிறபடியே நின்ற

செங்கண் மால் தன்னுடைய
புண்டரீ காஷனான சர்வேஸ்வரனுடைய

வாய்த் தீர்த்தம் பாய்ந்த்தாட வல்லாய் –
கடலில் அமுதம் படும் துறையில் இழியுமா போலே
முகப்பிலே -வாய்க் கரையிலே நின்று தீர்த்தமாடுகிறாய் இறே
முன்னதாக முகத்திலே –சாடு
வலம் புரியே –
அனுபவத்தில் ஏற்றம் போலே
சந்நிவேசமும் இப்படி இருக்க வேணுமோ —

—————————————————————————

செங்கமல நாண் மலர் மேல் தேன் நுகரும் அன்னம் போல்
செங்கண் கரு மேனி வாசுதேவன் உடைய
அங்கைத் தலமேறி அன்ன வசம் செய்யும்
சங்கரையா உன் செல்வம் சால அழகியதே–7-7-

பதவுரை

நாள்–அப்போதலர்ந்த
செம் கமலம் மலர் மேல்–செந்தாமரைப் பூவில் (படிந்து)
தேன்–தேனை
நுகரும்–பருகுகின்ற
அன்னம் போல்–அன்னப் பறவை போன்று
செம் கண் கருமேனி வாசு தேவனுடைய–சிவந்த திருக் கண்களையும் கறுத்த திருமேனியை யுமுடைய கண்ண பிரானது
அம் கைத்தலம் ஏறி–அழகிய கைத் தலத்தின் மீதேறி
அன்ன வசம் செய்யும்–கண் வளர்கின்ற
சங்கு அரையா!–சங்குகளிற் சிறந்த பாஞ்ச ஜந்யமே!
உன் செல்வம்–உன்னுடைய செல்வமானது
சால–மிகவும்
அழகியது–சிறந்தது காண்

செங்கமல நாண் மலர் மேல் தேன் நுகரும் அன்னம் போல் செங்கண் கரு மேனி வாசுதேவன் உடைய
செந்தாமரையில் அப்போது அலர்ந்த செவ்வி மலர் மேலே
அன்னம் படிந்து மது பானம் பண்ணுமா போலே

அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம்
அஹம் அந்நாத அஹம் அந்நாத அஹம் அந்நாத
-தை ப்ருகு -10-6-என்று கொண்டு

அன்னம் சப்தம் ஹம்சம் -என்றுமாம்
வாத்சல்ய பிரகாசகமான திருக் கண்களையும்-
தாபம் அடைய ஆறும்படி குளிர்ந்த வடிவையும் யுடைய ஸ்ரீ வஸூ தேவர் திருமகனுடைய

அங்கைத் தலமேறி அன்ன வசம் செய்யும் சங்கரையா உன் செல்வம் சால அழகியதே–
அழகிய திருக்கையிலே ஏறி –
உணவுக்கு ஈடாக இடம் வலம் கொள்ளும்
பரப்பு மாறத் தாமரை பூத்தால் போலே திவ்ய அவயவங்களும்
அக்கமலத்து இலை போலும் திருமேனி –திருவாய் -9-7-3-என்கிறபடியே
அதில் பச்சை இலை போலே திருமேனியும்
அங்கே மது பான அர்த்தமாக இழிந்த அன்னம் போலே திருமேனிக்கு பரபாகமான
வெண்மையை உடைத்தான ஸ்ரீ பாஞ்ச ஜன்யமுமாய் இருந்தபடி

சங்கரையா –
ததோ வானர ராஜேன-என்னுமா போலே
பெருமாள் மகா ராஜரை முடி சூட்டுவதற்கு முன்னே –
வானர ராஜேன
-என்றான் இறே ரிஷி ஜடாயுவையும் கழுகு அரசனாக –

க்ருத்ர ராஜ்யம் பரித்யஜ்ய -ஆரண்ய -68-23
விடலாம் ராஜ்யத்தையோ அவர் விட்டது –
பித்ருபைதாமஹம் மஹத்

இஷ்வாகு முதலான ராஜாக்கள் ஆண்டு போந்த ராஜ்யத்தை நாம் பொகட்டு போந்த அளவும் அன்று இறே
அவர் நமக்காக விட்ட கழுகு ராஜ்யம் என்கிறார் பெருமாள்

வானர ராஜர் கழுகு அரசர் போலே சங்கரையா என்று
அவனுடன் உள்ள நெருக்கத்தால் ஆண்டாள் விளிக்கிறாள் –

அரையன் –
அரசன்-

பகவத் பிரத்யாசத்தியத்தாலே சஜாதீயர் அடங்கலும் உன் காலிலே வந்து துவளும் படி
அன்றோ உன் ஐஸ்வர்யம் –

சஜாதீயர் -திருப் பவளத்தை அனுபவிக்கும் பெண்கள்

உன் செல்வம் சால அழகியதே –
இந்த்ரனும் உன்னோடு செல்வத்துக்கு ஏலானே -7-4-என்ற அளவன்றிக்கே
இருந்ததீ உன் ஐஸ்வர்யம் –

———

ஸ்ரீ மத் வநாத்ரி பதி பாணி தலாப்ஜ யுக்மம் ஆரூட யோர் விமல சங்க ரதாங்கயோஸ் து ஏகம் அப்ஜம் ஆஸ்ரித இவ உத்தம ராஜ ஹம்ஸ பத்ம பிரியோர்க்க இவ தத் சமிதோ த்விதீய –ஸ்ரீ ஸூந்தர பாஹு ஸ்தவம் -55-

ஸ்ரீ மத் வநாத்ரி பதி பாணி தலாப்ஜ யுக்மம் ஆரூட யோர் –அழகருடைய இரண்டு திருக்கைகளிலும் ஏறி இருக்கிற — ஊழியான் கைத்தலத் திடரில் குடியேறி என்றும் வடமதுரையார் மன்னன் வாசுதேவன் கையில் குடியேறி வீற்று இருந்தாய் கோலப் பெறும் சங்கே -என்றும் – இருப்பதை அடி ஒற்றி ஆரூட பத பிரயோகம் விமல சங்க ரதாங்கயோஸ் து –வெள்ளை விளி சங்கும் திருவாழி ஆழ்வானும் ஆகிற இருவருக்குள் ஏகம் அப்ஜம் ஆஸ்ரித இவ உத்தம ராஜ ஹம்ஸ –ஒருவரான ஸ்ரீ பாஞ்ச ஜன்ய ஆழ்வான் தாமரை மலரில் துயிலும் ராஜ ஹம்சம் போலே விளங்கா நின்றார் செங்கமல நாண் மலர் மேல் தேனுகரும் அன்னம் போல் செங்கண் கருமேனி வாசுதேவனுடைய அங்கைத் தலம் ஏறி அன்னவசம் செய்யும் சங்கரய்யா உன் செல்வம் சால அழகியதே –அடி ஒற்றி அருளிச் செய்தபடி த்விதீயஸ்து –தத் சமிதோ –பத்ம பிரியோர்க்க இவ –மற்று ஒருவரான திருவாழி ஆழ்வானோ என்னில் – தாமரை மலரில் வந்து வீற்று இருக்கும் சூர்யன் போலே விளங்கா நின்றார் – சூர்யன் தாமரை மலரில் வீற்று இருக்க ப்ரஸக்தி ஏது என்னில் – பத்ம பிரிய-இது ஹேது கர்ப்ப விசேஷணம் -கமல பாந்தவன் ஆகையால் கமலத்தில் வந்து கிடக்கலாம் இறே ஆக அழகருடைய இரண்டு திருக்கைகளும் இரண்டு தாமரை ஆகையால் – ஒரு தாமரையில் அன்னம் வந்து படிந்து சங்காக விளங்க – மற்று ஒன்றில் சூர்யன் வந்து படிந்து ஸூதர்சனமாக விளங்குகிறார் என்கிறார்

——————————————————————————————————–

உண்பது சொல்லில் உலகு அளந்தான் வாய் அமுதம்
கண் படை கொள்ளில் கடல் வண்ணன் கைத் தலத்தே
பெண் படையார் உன் மேல் பெரும் பூசல் சாத்துகின்றார்
பண் பல செய்கின்றாய் பாஞ்ச சன்னியமே—7-8-

பதவுரை

பாஞ்சசன்னியமே–சங்கே!,
உண்பது சொல்லில்–நீ உண்பது என்ன வென்றால்
உலகு அளந்தான் வாய் அமுதம்–உலகங்களை அளந்தவனான் எம்பெருமானுடைய திருவாயிலுள்ள அம்ருதம்,
கண் படை கொள்ளில்–நீ படுத்துக் கொள்வது எங்கே யென்றால்
கடல் வண்ணன் கை தலத்தே–கடல் போன்ற நிறத்தை யுடையனான அவ் வெம்பெருமானுடைய திருக் கையிலே,
(இப்படி உனக்கு ஊணுமுறக்கமும் அங்கேயா யிருப்பதனால்)
பெண் படையார்–பெண்குலத்தவர்கள் அனைவரும்
உன் மேல்–உன் விஷயமாக
பெரு பூசல்–பெரிய கோஷம் போடுகிறார்கள்,
(எங்கள் ஜீவனத்தை இவனே கொள்ளை கொள்ளுகிறானென்று கூச்சலிடுகிறார்கள்)
பண்பு அல செய்கின்றாய்–(இப்படி அவர்கள் வருந்தும்படி) அநியாயமான காரியத்தைச் செய்கிறாய்.
(இஃது உனக்குத் தகுதி யல்ல என்கை.)

உண்பது சொல்லில் உலகு அளந்தான் வாய் அமுதம்-கண் படை கொள்ளில் கடல் வண்ணன் கைத் தலத்தே
நீ உண்ணும் படி சொல்லவா
உறங்கும் படி சொல்லவா

வாயது கையதான ஐஸ்வர்யம் அன்றோ உன்னது
சேஷபூதர் ஆனார் எல்லாருக்கும் பொதுவானதன்றிக்கே-
அடி சூடும் அரசு அல்லவே
– வாக் அமிர்தத்தை யாய்த்து புஜிக்கிறது

வாயாலே ஊட்ட உண்டு –
ஸ்ரமஹரமான வடிவைக் கடைக் கணித்துக் கொண்டு கையிலே யாய்த்துச் சாய்வது
பிரசாதத்தைச் சூடி கைப்புடையிலே கிடப்பாரைப் போலே

பெண் படையார் உன் மேல் பெரும் பூசல் சாத்துகின்றார் -பண் பல செய்கின்றாய் பாஞ்ச சன்னியமே–
அவ்  வாக் அமிர்தமும் வடிவுமே ஜீவனமாய் இருக்கிற பெண் பிறந்தார் அடங்கலும்
கை எடுத்து கூப்பிடா நின்றார்கள் கிடாய்

திருவாய்ப் பாடியில் உள்ளாறும்
ஸ்ரீ மதுரையில் உள்ளாறும் திரண்டு கூப்பிடா நின்றார்கள் கிடாய் –

பண் பல செய்கின்றாய் பாஞ்ச சன்னியமே–
பகவத் விஷயத்திலே இழிந்து நீர்மை உடையராய் இருப்பார் செய்வது அல்ல நீ செய்கிறது
பகவத் பிரத்யாசத்தி உடையாரில்
நமக்கு
-என்று தனி அனுபவிப்பார் இல்லை காண்

பாஞ்சசன்னியமே
இது பிறப்புக்குச் சேரும் அத்தனை

வாழாட்பட்டு நின்றீர் உள்ளீரேல் -என்றும்
போதுவீர் போதுமினோ -என்றும் இறே தமப்பனார் படியும்
தம் படியும்–
கூடு அனுபவித்து குளிர்ந்த பேர்கள் அன்றோ நாம் –
இந்த பெருமை உனக்கு இல்லையே -என்கிறாள் –

993-சங்க ப்ருத்-
ஆளும் ஆளார் ஆழியும் சங்கும் சுமப்பார் தாம் -8-9-3-

பரம ஐஶ்வர்ய சிந்ஹ தி₃வ்யாயுத₄த்வாத்
சங்க ₂ப்₄ருத்;
ஸ்வாத₄ர வித்₃ரும ஸுத₄ யா பாஞ்ச ஜந்யம் புஷ்ணா தீதி ॥
பாஞ்ச ஜன்யம் ஹ்ருஷீகேச –சகோஷோதார்த் தராஷ்ட்ரானாம் ஹ்ருதயானி வயாதாரயத்-ஸ்ரீ கீதை
கூராழி வெண் சங்கேந்தி கொடியேன் பால் வாராய் -6-9-1-
தீயில் பொலிகின்ற செஞ்சுடர் ஆழி திகழ் திருச் சக்கரம் -பெரியாழ்வார்
உண்பது சொல்லில் உலகு அளந்தான் வாய் அமுதம் கண் படை கொள்ளில் கடல் வண்ணன் கைத் தலத்தே -நாச் திரு மொழி -7-8-
சங்கரையா உன் செல்வம் சால அழகியதே -நாச் திரு -7-7-

படை போர் புக்கு முழங்கும் அப்பாஞ்சஜன்யத்துக்கும் பல்லாண்டு -ரக்ஷணம்
ஏந்தும் -அழகு
திரு வண் வண்டூர் உறையும் பெருமானுக்கு -செரு ஒண் சக்கரம் சங்கு ஏந்தும் தடக்கையன் -அடையாளம்
தமஸ பரமோ தாதா ஸங்க ஸக்ர கதா தர-வியக்தம் -ராமனிடம் சங்கு சக்கரம் காட்டக் கண்டாள் –முதலில் சங்கு 
ஸ்ரீ வைஷ்ணவ லஷணம் சங்கு சக்கரப் பொறி ஒற்றிக் கொண்டு-

கையினார் சுரி சங்கு அனல் ஆழியார் இத்யாதி -திருப்பாணாழ்வாரும் காட்டவே கண்டார்-முதலில் சங்கு

தமக்கே சிறந்த அடையாளமான ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் என்னும் ஸ்ரீ சக்கரத் தாழ்வானை தம் திருப் பவளத்தின்
அமுதத்தினால் போஷிப்பவர் -ஸ்ரீ பராசர பட்டர் –

—————————————————————————————————-

பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பார்த்திருப்ப
மது வாயில் கொண்டால் போலே மாதவன் தன் வாயமுதம்
பொதுவாக உண்பதனைப் புக்கு நீ யுண்டக்கால்
சிதையாரோ வுன்னோடு செல்வப் பெரும் சங்கே–7-9-

பதவுரை

பெரு செல்வம் சங்கே–பெரிய செல்வம் படைத்த சங்கமே!
பதினாறாம் ஆயிரவர் தேவிமார்–பதினாறாயிரம் தேவிமார்கள்
பார்த்து இருப்ப–கண்ண பிரானுடைய வாயமுதத்தை நாம் பருக வேணுமென விரும்பி) எதிர்பார்த்திருக்கையில்
பொது ஆக உண்பது மாதவன் தன் வாய் அமுதத்தை–பகவத் ஸம்பந்திகளெல்லாரும் பொதுவாக
உண்ண வேண்டியதான அவ்வெம்பெருமானது வாயமுதத்தை
நீ புக்கு–நீ யொருவனே ஆக்ரமித்து
மது வாயில் கொண்டால் போல் உண்டக்கால்–தேனை உண்கிறாப் போல் உண்டால்
உன்னோடு சிதையாரோ–(மற்றபேர்கள்) உன்னோடு விவாதப் பட மாட்டாரோ

பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பார்த்திருப்ப மது வாயில் கொண்டால் போலே மாதவன் தன் வாயமுதம்
எத்தனை பேரை வாய்க்காவல் இட்டால் தான் உனக்கு வயிறு வளர்க்கலாவது
பதினாறாமாயிரம் பேர் இது அனுபவிப்பதாக அவசரம் பார்த்து இருக்க –

பொதுவாக உண்பதனைப் புக்கு நீ யுண்டக்கால்-
நீ ஒருவனுமே மேல் விழுந்து புஜித்தால்
சர்வ சாதாரணமான அமிர்தத்தை நீ ஒருவனுமே புஜித்தால்

சிதையாரோ வுன்னோடு செல்வப் பெரும் சங்கே–
இவன் நம் கோஷ்டிக்கு புறம்பு என்றால்
நீ மண்ணை மணலை மோக்கும் அத்தனை இறே –

கூழாட் பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதல் ஒட்டோம்–திருப் பல்லாண்டு -3-
என்றால் நீ செய்வது என்

சாது கோட்டியுள் கொள்ளப் படுவார் -பெரியாழ்வார் -3-6-11-என்னுமவர்கள் இறே

செல்வப் பெரும் சங்கே –
உன் ஐஸ்வர்ய செருக்கு இறே விளைவது அறியாதே ஒழிகிறது-
அவன் ஐஸ்வர்யத்துக்கும் அடியான
எங்கள் ஐஸ்வர்யத்துக்கும்
மேலாய் இருந்ததீ உன் நிலை

—————————————————————————————————-

பாஞ்ச சன்னியத்தைப் பற்ப நாபனொடும்
வாய்ந்த பெரும் சுற்றம் ஆக்கிய வண் (ஒண்)புதுவை
ஏய்ந்த புகழ்ப் பட்டர்பிரான் கோதை தமிழ் ஈரைந்தும்
ஆய்ந்து ஏத்த வல்லார் அவரும் அணுக்கரே-–7-10-

பதவுரை

பாஞ்சசன்னியத்தை–சங்கை
பற்பநாபனோடும்–எம்பெருமானோடே
வாய்ந்த பெரு சுற்றம் ஆக்கிய–கிட்டின பேருறவை யுடையதாக வார்த்தை சொன்ன
வண் (ஒண்)புதுவை–அழகிய ஸ்ரீ வில்லிபுத்தூரில் திருவவதரித்தவளும்
ஏய்ந்த புகழ்–நிறைந்த புகழை யுடையவளும்
பட்டர் பிரான் கோதை–பெரியாழ்வாருடைய ஆண்டாள் (அருளிச் செய்த)
தமிழ் ஈர் ஐந்தும்–இத் தமிழ்ப் பாசுரங்கள் பத்தையும்
ஆய்ந்து–அநுஸந்தித்து
எந்த வல்லார் அவரும்–(இது கொண்டு எம்பெருமானைத்) துதிக்க வல்லவர்களும்
அணுக்கர்–(பாஞ்சஜந்யம் போல் அந்தரங்கராகப் பெறுவர்கள்-

பாஞ்ச சன்னியத்தைப் பற்ப நாபனொடும் வாய்த்த பெரும் சுற்றம் ஆக்கிய வண் புதுவை
ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தைக் கேட்டாள்
தன்னோடு உண்டான உறவு அறுத்து அவனோடு சேர்த்து விடுகிறாள்

அநந்ய கதிகளான எங்கள் ஜீவனத்தை கைக் கொண்டாயாகில்
மற்றும் இத்துறையில் இழிந்தவர்களுடைய ஜீவனத்தையும் நீயே கொள்

ஏய்ந்த புகழ்ப் பட்டர்பிரான் கோதை தமிழ் ஈரைந்தும் ஆய்ந்து ஏத்த வல்லார் அவரும் அணுக்கரே—
ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தோடே சீறு பாறு என்றாள்-என்றால்-தகாதோ
பெரியாழ்வார் பெண் பிள்ளை அன்றோ -பெறும் -என்னும் புகழ் யாய்த்து
அனுசந்தித்துக் கொண்டு சொல்ல வல்லார்கள்

அவரும் அணுக்கரே—
அவர்களும் ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தோடே சீறு பாறு என்ன உரியர் ஆவார்
நாய்ச்சியாரைப் போலே அவரும் அண்ணியர் ஆவார்

ஒண் புதுவை ஏய்ந்த புகழ்
விசேஷணங்கள் பட்டர் பிரானுக்கும் கோதைக்கும் சேரும் –

வாய்ந்த பெறும் சுற்றம்
கிட்டின பேருறவு

ஆய்கை –
சோதிக்கை
மனசாலே ஆராய்கை-அனுசந்தித்து -என்றபடி-

—————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ நாச்சியார் திரு மொழி – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் -ஆறாம் திருமொழி —

September 9, 2015

அவதாரிகை –

குயிலைப் பார்த்து நீ அழைத்துத் தர வேணும் என்ற இடத்தில் அது அப்படி செய்யக் கண்டிலள் –
அவனைக் கடுகக் கிட்டிக் கொடு நிற்கக் கண்டிலள் –
கடுக கிட்ட வேண்டும்படி யாய்த்து -இவளுக்கு பிறந்த தசை —
அப்போதே கிட்டப் பெறாமையாலே மிகவும் அவசன்னையானாள் –

அவன் தான் இவள் தசைக்கு ஈடாக வந்து முகம் காட்டிற்று இலன் –
இத்தலையில் அவஸ்தை அறியாத ஒருவன் அல்லன் இறே-
இன்னமும் ஓர் அளவைப் பிறப்பித்து -பரம பக்தி பர்யந்தமாக ஆக்கி -முகம் காட்டுகிறோம் என்று இருந்தான் –

மயர்வற மதி நலம் அருளின போதே -முனியே நான்முகனாய் இராதே
மயர்வற்ற போதே பெற வேண்டும்படியான ஆற்றாமை உண்டாய் இருக்கச் செய்தேயும் –
பரம பக்தி பர்யந்தமாக

நடுவு உண்டான அவஸ்தைகளைப் பிறப்பித்து இறே கொடுத்தது ஆழ்வாருக்கு –

வெளுத்த புடவைக்கு வாசம் கொளுத்துவாரோபாதியாக இவ்வருகே
பரமபக்தி பர்யந்தமாக பிறந்தால் இறே
அங்குப் போய் அனுபவிக்கும் அனுபவம் சாத்மிப்பது –
முதல் அடியிலே இது உண்டானாலும் காலம் சென்றவாறே பிறப்பிப்பதும் ஒரு பாகம் உண்டு இறே –

பிராட்டிக்கு பெருமாளைப் பிரிந்த போதே கூட வேணும் என்னும் ஆசை உண்டாய் இருக்கச் செய்தே இறே
ஊர்த்வம் மாசன்ன ஜீவிஷ்யே -என்பது –
அவர் தாம் ந ஜீவேயம் ஷணம் அபி -என்பது யாய்த்து –

ஸ்வப்னே அபி யத்யஹம் வீரம் –ஸ்வப்னத்தில் கண்டாலும் துக்க நிவர்த்தகராக வல்லராய்த்து –
ராகவம் சஹ லஷ்மணம் -சுந்தர -34-21-
பிரிகிற போது இருவரும் கூடப் பிரிகையாலே
காணும் இடத்திலும் இருவரையும் கூடக் காண வேணும் என்று இறே ஆசைப் படுவது
அப்போது இருவரும் பிரிகையாலே -தங்களில் கூடினார்களோ இல்லையோ -என்றும் அதி சங்கை பண்ணி இருக்குமே –

பச்யேயம் யதி ஜீவேயம் ச்வப்னோ அபி மம மத்சரீ –என் அவஸ்தை அறிந்து
முகம் காட்டாமைக்கு அவரே அன்றிக்கே
இதுவும் என்னை நலிய வேணுமோ என்றாள் இறே –

தான் காணப் பெறாத போதும் பிறர் கண்டு சொல்லக் கேட்டு தரித்து இருந்தாள் இறே அவள் –
த்ரிஜடாதிகள் சொல்லக் கேட்டு தரித்து இருந்தால் போலே இருக்க வல்லவள் அல்லள் ஆயத்து இவள்
இவள் தன்னை உண்டாக்கி அனுபவிக்க வேணும் என்று இருக்குமே
ஸ்வப்னத்திலே யாகிலும் அனுபவிப்பித்து தரிப்போம் என்று பார்த்தான்
இஜ் ஜந்துக்கள் கிடந்தது உறங்கா நிற்கச் செய்தே
சர்வேஸ்வரன் தான் உணர்ந்து இருந்து கர்ம அனுகுணமாக சில பதார்த்தங்களை சிருஷ்டித்து
ஸ்வப்னத்திலே அனுபவிப்பிக்கும் என்று சொல்லா நின்றது இறே

ஏஷ ஸூ ப்தேஷூ ஜாகர்த்தி காமம் -காமம் புருஷோ நிர்மிமாண -கடக -2-5-8-
அப் பொதுவான நிலை அன்றிக்கே -தன்னை அனுபவிக்க வேணும் என்று இருக்கிறாள் ஆகையாலே
இவள் அனுபவிக்க வேணும் என்று பாரித்து இருந்த படிகளிலே ஒன்றும் குறையாதபடி
பாணிக்ரஹண பர்யந்தமாக ஸ்வப்னத்திலே அனுபவிப்பிக்க அனுபவித்து
தான் அனுபவித்த படியைத் தோழிக்கு சொல்லி தரிக்கிறாளாய் இருக்கிறது –

ஸ்வப்னே அபி கேசவத அநயம் ந பஸ்யதி மஹாமதி –
ஸ்வப்னே அபி தஸ்ய நாயாதி புருஷார்த்த விரோதி நீ
-இதிஹாச சமுச்சயம் -32-128-
சாமான்யர் விஷயத்தில் கர்ம அனுகுணமாகவும்
ஆஸ்ரிதர் விஷயத்தில் ருசி அனுகுணமாகவும் ஸ்வப்ன அனுபவம் பலிக்கிறது என்று அருளிச் செய்வர்

———————————————————————-

வந்து புகுந்தால் அனுபவிக்கை அன்றிக்கே –
வாரா நின்றான் -என்று ஊரிலே வார்த்தை யானவாறே தொடங்கி
அனுபவிக்க வேணும் என்றால் போலே காணும் இவள் தான் ஆசைப் பட்டு இருப்பது –
அவனுடைய கதி சிந்தனை பண்ணுகிறாள் யாய்த்து –

வாரண மாயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான் என்று எதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புரம் எங்கும்
தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்–6-1-

பதவுரை

தோழீ–என் உயிர்த் தோழியே!
நம்பி–ஸகல குண பரிபூர்ணனான
நாரணன்–ஸ்ரீமந் நாராயணன்
ஆயிரம் வாரணம் சூழ–ஆயிரம் யானைகள் சூழ்ந்து வர
வலம் செய்து நடக்கின்றான் என்று–பிரதக்ஷிணமாக எழுந்தருளாகிற னென்று (வாத்ய கோஷதிகளால் நிச்சயித்து)
பொன் பூரண குடம் வைத்து–பொன் மயமான பூர்ண கும்பங்களை வைத்து
புரம் எங்கும்–பட்டணம் முழுதும்
தோரணம் நாட்ட–தோரண ஸ்தம்பங்கள் நாட்ட (இந்த நிலையையை)
நான் கனாக் கண்டேன்–நான் ஸ்வப்நத்தில் அநுபவித்தேன்.

வாரண மாயிரம் சூழ வலம் செய்து
உந்து மத களிற்றன் பிள்ளை இறே
ஸ்ரீ நந்தகோபரும் ஆனை ஏறி இறே திரிவது
ஸ்ரீ வஸூ தேவரும் ஸ்ரீ நந்தகோபரும் தங்களில் மித்ரராய் –
ஏகம் துக்கம் ஸூ கஞ்ச நௌ-கிஷ்கிந்தா
-5-18-என்று இருக்கிறபடியால்-
இங்குத்தை கோ சம்ருத்தி அவரதாய்-
அங்குத்தை  யானை குதிரை இவரதாய் –
ஒன்றாய் பரிமாறி இறே போருவது-
இனி தத்த புத்ரர்களுக்கு இரண்டிடத்திலும் அம்சம் உண்டாய் இறே இருப்பது
ஆகையால் யானைக்கு குறை இல்லை இறே

ஆயிரம் –என்ற நிர்பந்தத்துக்கு கருத்து என் என்னில்
தன்னேராயிரம் பிள்ளைகளும் –தளர் நடை இட்டு வருவான் –பெரியாழ்வார் திருமொழி -3-1-1-
தானுமாக வரும் போது அவர்களைத் தன்னில் தாழ்வாக ஒட்டானே –ஆகையாலே ஆயிரம் -என்கிறது
தம்மையே நாளும் வணங்கித் தொழுவாருக்கு தம்மையே ஒக்க அருள் செய்து இறே வைப்பது –

நாரண நம்பி –
நாரண –
உபய விபூதி யுக்தன் வருமா போலே இருக்கும் போலே காணும்
ஸ்ரீ மதுரைக்கும் திருவாய்ப்பாடிக்கும் கடவராய் வரும் போது –

நம்பி –
உபய விபூதி யோகத்தால் வந்த குணங்கள் சொல்லக் கேட்டு போம் அத்தனை இறே
அக் குணங்கள் பூரணமாக அனுபவிக்கலாவது அவதாரங்களிலே இறே
குறைவாளருக்கு முகம் கொடுத்த இடத்தில் இறே சௌலப்யம் அனுபவிக்கலாவது
தாழ்ந்தாருக்கு முகம் கொடுத்த இடத்திலே இறே இக்குணங்கள் ஸ்புடமாவது
செவ்வைக் கேடர் பக்கலிலே இறே அவனுடைய ஆர்ஜ்வாதி குணங்கள் காணலாம்

நடக்கின்றான் என்று –
குசஸ்தலே நிவசதி ச ச ப்ராதரி ஹேஷ்யதி
இன்ன இடத்திலே வந்து விட்டான் -அணித்தாக வந்துவிட்டான் என்னும்
அது தானும் தரிப்புக்கு உடலாக இருக்கும் இறே –
சாபாத் அபி சராத் அபி -என்னும் விச்வாமித்ராதிகளை கொடு வரவும் வேண்டா விறே இங்கு –
இரண்டாலும் சம்ஹரிக்கிறேன் என்று ஸ்ரீ பரசுராம ஆழ்வான் வார்த்தை
கடகரும் வேண்டாவோ என்ன -சாபம் -விஸ்வாமித்ரர் -சரம் –பெருமாள்
அஸ்த்ர சிஷை பண்ணுவிப்பவர் என்பதால் இரண்டும் விச்வாமித்ரருக்கு என்னவுமாம் –

எதிர் பூரண பொற் குடம் வைத்து
எதிரே பூர்ண கும்பங்களை வைத்து

புரம் எங்கும் தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்-
தோரணம் நிறைந்து எங்கும் தொழுதனர் –திருவாய்மொழி -10-9-2-என்னக் கடவது இறே-
இங்குள்ளார் அங்குப் போம் போது-
அதுக்கும் அடியானவர்கள் வரவுக்கு உடலாக அலங்கரிக்கும் படி சொல்லுகிறது இங்கு –

புரம் -பட்டணம் –புறம்
ஊர்ப் புறம் -புறச் சோலைகள் என்றுமாம் –

கனாக் கண்டேன் தோழீ நான்–
கதிரில்லி போலே (-ஜன்னல்கள் போலே –இல்லியில் கதிர் -ஜால கரந்தரத்தில் கதிர் -ஸூஷ்ம த்வாரம் -) இருக்கிற
பாஹ்ய இந்த்ரியங்களாலே அனுபவிக்கிற ஜ்ஞானம் கொண்டு அனுபவிக்கை அன்றிக்கே
நேரே ஹிருதயத்தாலே ஒரு முகம் செய்து அனுபவிக்கப் பெற்றேன் காண்-

ஆனுகூல்யம் உடையார் சொல்லுதல் –
தாய்மார் போல்வார் -சொல்லுதல் –
நீ சொல்லுதல் செய்யக் கேட்கை –
அன்றிக்கே
-நான் உனக்குச் சொல்லலாம்படி அனுபவித்தேன் காண் –

——————————————————————————————-

நாளை வதுவை மணம் என்று நாளிட்டு
பாளை கமுகு பரிசிடைப் பந்தல் கீழ்
கோளரி மாதவன் கோவிந்தன் என்பானோர்
காளை புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான்—6-2-

பதவுரை

நாளை–நாளைக்கு
வதுவை மணம் என்று நாள் இட்டு–விவாஹ மஹோத்ஸவ மென்று முஹூர்த்தம் நிர்ணயித்து
பாளை கமுகு பரிசு உடை பந்தல் கீழ்–பாளைகளோடு கூடின பாக்கு மரங்களாகிற அலங்காரங்களை யுடைத்தான மணப் பந்தலின் கீழே
கோளரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர் காளை–நரஸிம்ஹனென்றும் மாதவனென்றும் கோவிந்தனென்றும் திருநாமங்கள் பூண்ட ஒரு யுவாவானவன்
புகுத–பிரவேசிக்க

நாளை வதுவை மணம் என்று நாளிட்டு-
நாள் நெடுக விட்டால் ஆற்ற மாட்டாள்
இன்று என்னில் வாய் புகு நீராய்த் தரிக்க மாட்டாள் –

பிரகர்ஷேணா வருத்தா சா வ்யாஜஹார நகிஞ்சன-யுத்த -116-15/16-என்று
திருவடி ராம விஜயத்தை விண்ணப்பம் செய்யக் கேட்ட போது
பிராட்டி ஹர்ஷத்தாலே விக்கி வார்த்தை சொல்ல மாட்டாதே இருந்தாள்-
அவளுக்கு ஓடுகிற பிரிதியிலே சிறிது அகஞ்சுரிப் படுத்த வேணும் என்று
கிம் த்வம் சிந்தயசே தேவி -கிந்நு மாம் நபி பாஷசே -என்றான்
நான் விண்ணப்பம் செய்த ராம விஷயம் இங்குத்தைக்கு அநபிமதமோ –
ஒரு மறு மாற்றம் அருளிச் செய்யாது இருந்ததீ-என்ன
ஓடின ப்ரீதி அரையாறு பட்டு -ஹர்ஷம் மிடறு அடைக்க வார்த்தை சொல்லாது இருந்தேன் அத்தனை காண் -என்றாள் இறே –

நாளை விவாஹ மங்களம் என்று நாளிட்டு –
நாள் பொருந்தினால் இறே அல்லாதவை கொண்டு கார்யம் உள்ளது
இருவர் நாளும் கேட்டு -இரண்டு தலைக்கும் பொருந்தும்படி நாளிட்டு

பாளை கமுகு பரிசிடைப் பந்தல் கீழ்-
பாளையுடனே கொடு வந்து நட்ட கமுகை உடைத்தான பந்தலின் கீழே

பரிசு
பெருமைக்கும் அழகுக்கும் பெயர்

வேறு ஓர் இடத்தின் நின்றும் கொடு வந்து நட்டால் போலே இராதே –
அவ்விடத்தே முளைத்து எழுந்த சோலை போலே அழகியதாய் இருக்கை-

கோளரி மாதவன் கோவிந்தன் என்பானோர்
கோளரி
யஸ்ய சா ஜனகாத்மஜா -அப்ரமேயம் ஹி தத் தேஜ-
-என்கிற பெருமை
எல்லாம் தோற்ற மேணானிப்போடே வந்தபடி

மாதவன்
பரம ரசிகன் என்று தோற்ற நடந்து வந்த படி –

கோவிந்தன்
விவாஹமாய் இரா நின்றது -ஆராலே என்ன விக்நம் வரும் -என்று அறியாமையாலே
எல்லாருக்கும் கையாளாய் முகம் கொடுத்துக் கொடு வந்தபடி

காளை புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான்—
காளை -இவை ஒன்றும் இல்லையானாலும் மேலே விழ வேண்டும்படி பருவம் இருந்த படி
தோழிமார் பந்துக்கள் மற்றும் உள்ளார் பருவம் இல்லை என்ன ஒண்ணாதே –

கனாக் கண்டேன் தோழீ நான்—-
அவன் பருவம் என் நெஞ்சில் படுத்த நீ படும் பாடு அறிதியே –
அத் தலை இத் தலையாய் நான் உனக்குச் சொல்ல வேண்டும்படி யாய்த்து காண் –

————————————————————————

இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம்
வந்து இருந்து என்னை மகள் பேசி மந்திரத்து
மந்திரக் கோடி யுடுத்தி மண மாலை
அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்–6-3-

பதவுரை

இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம்–இந்திரன் முதலான தேவ ஸமூஹங்களெல்லாம்
வந்து இருந்து–(இந்திலத்திலே) வந்திருந்து
என்னை மகள் பேசி–என்னைக் கல்யாணப் பெண்ணாக வார்த்தை சொல்லி
மந்திரித்து–அதற்குமேல் ஸம் பந்திகள் ஒருவர்க்கொருவர் செய்து கொள்ள வேண்டிய ஏற்பாடுகள்
விஷயமாக யோசித்து முடிவுசெய்து கொண்டு, (பிறகு)
அந்தரி–‘துர்க்கை‘ என்கிற நாத்தனார்
மந்திரம் கோடி உடுத்தி–கல்யாண புடைவையை எனக்கு உடுத்தி
மணம் மாலை சூட்ட–பரிமளம் மிக்க புஷ்பங்களையும் சூட்ட

இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம்
ஆத்மானம் மானுஷம் மன்யே -யுத்த -120-11-என்று சூழ்த்துக் கொடுக்கும்
அவதாரம் அல்லாமையாலே இந்திராதிகளும் வருவர்கள் இறே –
சரபங்க பகவான் ஆஸ்ரமத்திலே பெருமாளைக் கண்டவன் –
இவர் மனிச்சை ஏறிட்டுக் கொண்டு இருக்கச் செய்தே -நான்- முகம் காட்டுகிறது என் -என்று
தறை கால் பாவாதே போனான் இறே -ராவண வத அந்தரத்திலே முகம் காட்டுகிறோம் -என்று

அஹம் வோ பாந்தவ -என்றது உண்டானாலும் ஈஸ்வரத்வம் கலந்து பரிமாறும் அவதாரம் இறே
இந்த்ராதிகள் வந்து அங்கோடு இங்கோடாய் பிரஜாபத்தியம் பண்ணித் திரியா நின்றார்கள் யாய்த்து –

வந்து இருந்து
இந்த்ராதி தேவர்கள் திரள் திரளாக வந்து தறையிலே கால் பாவி நல் தரிக்க இருந்து
இக் கார்யம் தலைக் கட்டினால் அல்லது எழுந்து இருப்பது இல்லை என்று இருந்து

என்னை மகள் பேசி மந்திரத்து
ப்ரஹ்மா தொடங்கி பெரியாழ்வார் வரையில் –
இக் குலத்தில் உண்டான நன்மைகள் எல்லாம் பேசி –

மந்திரித்து
திரளில் நின்றும் எழுந்து இருந்து போய் ரஹஸ்யமாக இருந்து –
இத் தலைக்கும் அத் தலைக்கும் வேண்டுவன ஆராய்ந்து –
தங்களிலே அறுதியிட்டு –

மந்திரக் கோடி யுடுத்தி –
அறுதியிட்ட போதே ஒரு விக்நம் பிறப்பதற்கு முன்னே தலைக் கட்ட வேணும் என்று
எல்லாரும் குறை வறுத்துக் கொண்டு போலே காணும் வந்தது
மந்திர வாஸசை உடுத்தி –

மண மாலை அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்-
நாத்தனராய் -இதுக்கு எல்லாம் கடவாளாய் அபிமானித்த துர்க்கை யாய்த்து
மாலைகளும் மடியும் (கூறைப் புடைவையையும் ) சூட்டி ஒப்பித்தாள்-
இவளுடைய ஸ்பர்சம் தானே ஓன்று தங்கி
அவனோடு அணைந்தால்
போலே இருக்கிறது காணும் இவளுக்கு –

வேத மந்த்ரங்களால் பரிசுத்திக்கப் பட்ட கூறைப் புடைவையையும்
தேன் ஒழுகும் மண மாலையையும் சித்தப் படுத்திக் கொண்டு –
அவனோடு கூடப் பிறந்தவள் என்னைத் தொட்டு மண மாலை சூட்டப் பெற்றேன் காண் தோழி –

அந்தரி -ஆகாசத்தில் சஞ்சரிக்கும் துர்க்கை
அவனுடன் பிறந்தவள்  என்னை ஸ்பரசிக்கப் பெற்றேன் காண்
சதம் பண ஹச்தாஸ் தம் ப்ரஹ்ம அலங்காரேண அலங்குர்வந்தி -கௌஷீதகீ -1-34–இருக்கிறபடி –
மதிமுக மடந்தையர் -மாலை- மை -வாசனைப் பொடி- ஆடைகள்- ஆபரணங்கள்-
கொண்டு அலங்கரிப்பது போலே –

——————————————————————————————————

நால் திசைத் தீர்த்தம் கொணர்ந்து நனி நல்கி
பாப்பனச் சிட்டர்கள் பல்லார் எடுத்து ஏத்தி
பூப்புனை கண்ணிப் புனிதனோடு என்தன்னை
காப்பு நாண் கட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்—6-4-

பதவுரை

பாப்பனர் சிட்டாகள் பல்லார்–சிஷ்டர்களான பல ப்ராஹ்மணர்கள்
நால் திசை–நான்கு திசைகளிலுமிருந்து
தீர்த்தம்–தீர்த்தங்களை
கொணர்ந்து–கொண்டு வந்து
நனி நல்கி–நன்றாகத் தெளிந்து
எடுத்து ஏத்தி–உச்ச ஸ்வரமாக வெடுத்து மங்களா சாஸநம் பண்ணி
பூப்புனை கண்ணிப் புனிதனோடு–(பலவகைப்) புஷ்பங்கள் புனைந்த மாலையை
யுடையவனாய்ப் பரம பாவநனான கண்ண பிரானோடு
என்றன்னை–என்னை (இணைத்து)
காப்பு நாண் கட்ட–கங்கணங்கட்ட

நால் திசைத் தீர்த்தம் கொணர்ந்து நனி நல்கி
பெருமாளுடைய திரு அபிஷேகத்துக்கு ஸ்ரீ வானர வீரர்கள் நாலு சமுத்ரத்தில் உள்ள ஜலங்களையும்
கொண்டு வந்தால் போலே
நாலு திக்கிலும் உள்ள தீர்த்தங்களை கொடு வந்து –

நனி நல்கி –
மிகவும் நல்கி –
நனி
-மிகுதி
போர நீரைத் தெளிக்கவே ஆயுஸ்ஸூ தொடக்கமான நன்மைகள் எல்லாம் உண்டாம் என்று இருப்பார்களே இறே

பாப்பனச் சிட்டர்கள் பல்லார் எடுத்து ஏத்தி
ஜாதி மாத்ரமாய் இருக்கை அன்றிக்கே
ஒத்து அழகியதாய் போய் சிஷ்டர்கள் என்று வ்யாபதேசராய்
சடங்குகள் அழகிதாக கை வந்து இருக்கும் ப்ராஹ்மண அக்ரேசர் எல்லாரும் திரண்டு
உதாத்தமாக –எடுத்தேத்தி -இரண்டு தலைக்கும் மங்களா சாசனம் பண்ணி –

பூப்புனை கண்ணிப் புனிதனோடு-
விவாஹ சமயத்தில் அவள் பேர் ஒப்பனை போல் அன்றிக்கே ஒரு தனி மாலையை யிட்டு ஸ்நானம் பண்ணி
கையும் பவித்ரமுமாய் -தீண்டினார் உண்டாகில் முகத்தை பொல்லாதாகப் பண்ணி
குந்தி நடந்து -புடவை ஒதுக்கி -வினீத வேஷத்தோடு வந்தபடி
பெரியாழ்வார் பெண் பிள்ளையை ஆசார வைகல்யம் உண்டானால் கொடார்கள் இறே –

என் தன்னை காப்பு நாண் கட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்–
நான் தொடுமது ஒழிய -தொட்டாரை தொடும் அளவும் வாய்த்துக் காண் –
உபாத்யாயர் கட்டுகையாலே தொட்டாரை தொடும் அளவு என்றது –
பர புத்தியாலே கிட்டப் பெற்றேன் காண்
பேற்றில் இனி இதுக்கு அவ்வருகு இல்லை

இது பற்றாசாக தோழி பெறுவது காண் –காப்பு நூல் அடியாக -என்றபடி
அவன் நினைவைக் காட்டிலும் மேலான பேறு ஒன்றும் இல்லை –
அவன் நினைவு ஏற்பட்ட பின்பு பேறு சித்தம் அன்றோ –
பிராப்ய பிராபகங்கள் அவன் நினைவே என்றபடி –

———————————————————————-

கதிரொளி தீபம் கலசமுடன் ஏந்தி
சதிரள மங்கையர் தாம் வந்து எதிர் கொள்ள
மதுரையார் மன்னன் அடிநிலை தொட்டெங்கும்
அதிரப் புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான்—-6-5-

பதவுரை

சதிர் இள மங்கையர் தாம்–அழகிய இளம் பெண்கள்
கதிர் ஒளி தீபம்–ஸூர்யனுடைய ஒளி போன்ற ஒளியை யுடைய மங்கள தீபத்தையும்
கலசம்–பொற் கலசங்களையும்
உடன் ஏந்தி–கையில் ஏந்திக் கொண்டு
வந்து எதிர் கொள்ள–எதிர் கொண்டு வர,
மதுரையார் மன்னன்–மதுரையிலுள்ளார்க்கு அரசனான கண்ண பிரான்
அடி நிலை தொட்டு,–பாதுகைகளைச் சாத்திக் கொண்டு
எங்கும் அதிர–பூமி யெங்கும் அதிரும் படியாக.
புகுத–எழுந்தருள்

கதிரொளி தீபம் கலசமுடன் ஏந்தி
இதுக்கு ஒரு விச்சேதம் வரில் மங்களத்துக்கு குறையாம் என்று ஆதித்ய பிரபை போலே இருக்கிற தீபம்
அப்படியே இருக்கிற பொற் கலசங்கள் இவற்றைத் தரித்து –

சதிரள மங்கையர் தாம் வந்து எதிர் கொள்ள
நிறை குட விளக்கமும் மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே –திருவாய் மொழி -10-9-10-என்னக் கடவது இறே

தங்கள் பருவத்தாலும்
வடிவு அழகாலும்
தங்களையே எல்லாரும் கடாஷிக்கும் படி இருக்கிறவர்கள்
தாங்கள் கவிழ்ந்து முன்னடியைப் பார்த்து கொடு வந்து எதிர் கொள்ள –

மதுரையார் மன்னன் அடிநிலை தொட்டெங்கும்
பரம பதத்தை விட்டுப் போந்து விரும்பின ஊருக்கு நிர்வாஹகன் இறே –

பரம பதத்தில் இருப்புக்கு மேலே ஓர் ஏற்றம் போலே காணும்
அவ் ஊருக்கு கடவன் -என்னுமது

மன்னு வடமதுரை மைந்தனை -என்று இவள் தான் ஆதரிப்பதும் அங்கே இறே –
ஒருவன் ஒரு பிள்ளையை உகந்து அருளப் பண்ணி –
இவனுக்கு என்ன திரு நாமம் சாற்றுவோம் என்று இருக்கச் செய்தே-
அதுவே இதுவே என்று அழையாதே-என்னை மதுரை மன்னன் -என்று அழை-என்று
ஸ்வப்னத்திலே அருளிச் செய்தாராம் –

அடி நிலை தொட்டு எங்கும் அதிரப் புகுதக்
திருவடி நிலைகளைக் கோத்து
மஹா பலி யஜ்ஞ வாடத்திலே நடந்த போது பூமி நெளிந்தது என்று ஒரு கிரந்தத்திலே -கிடந்ததாய்-
இதுக்குப் பொருள் என் என்று கேட்டவாறே
யஸ்மின் பிரயாதே அஸூரப் பூப்ருதோஸ் த்வரம்-நநாம கேதா தவ நிஸ் ச சாகரா ச வாமனஸ்
சர்வ ஜகன் மயஸ் சதா
மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தையே ஹரி -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -43-31-
வருத்தத்தால் பூமி வளைந்ததே –
சர்வேஸ்வரன் அன்றோ சொல்ல வேணுமோ என்றார்களாய்

இத்தை ஜீயர் கேட்டருளி பட்டரைக் கேட்க
இரப்பில் பதற்றத்தாலே அடியிட்ட படி காணும் -என்று அருளிச் செய்தாராம்

ஒரு பூமிக்காக இப்படி பதறி வருமவன்
இவளைப் பெற்று விடுகிறானோ

கனாக் கண்டேன் தோழீ நான்–
தோழி -உகப்பாய் நீ இறே –

—————————————————————————————————-

மத்தளம் கொட்ட வரி சங்கம் நின்றூத
முத்துடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தல் கீழ்
மைத்துனன் நம்பி மது சூதனன் வந்து என்னை
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான்–6-6-

பதவுரை

மத்தளம் கொட்ட–மத்தளங்கள் அடிக்கவும்
வரி சங்கம் நின்று ஊத–ரேகைகளை யுடைய சங்குகளை ஊதவும்
மைத்துனன் நம்பி மதுசூதனன்–மைத்துனமை முறையை யுடையனாய் பூர்ணனான கண்ண பிரான்
முத்து உடை தாமம் நிரை தாழ்ந்த பந்தல் கீழ் வந்து–முத்துக்களை யுடைய மாலைத் திரள்கள்
தொங்க விடப் பெற்று பந்தலின் கீழே வந்து
என்னை கைத் தலம் பற்ற–என்னைப் பாணி க்ரஹணம் செய்தருள

மத்தளம் கொட்ட வரி சங்கம் நின்றூத
ராஜ குலம் உடையராய் இருக்குமவர்கள் விவாஹம் பண்ணப் புக்கால் செய்யுமா போலே
மங்கள வாத்யங்கள் மாறாதே நின்று முழங்க
சாந்திபிநீ யோடே ஓதுவதற்கு முன்னே போலே காணும் இவளை விவாஹம் பண்ணிற்று-

வேத மந்த்ரங்கள் சொல்லி கை பிடிக்காமல் மங்கள வாத்தியங்கள் முழங்க என்பதற்கு
வ்யாக்யாதாவின் சமாதான ஸ்ரீ ஸூக்திகள்
திருவாய்ப்பாடியிலே நெடும் காலம் வளர்ந்து பின்பு இறே அங்குப் போய்த்தது

முத்துடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தல் கீழ்
முத்து மாலை நிரைகளானவை தலையிலே வந்து தாழ்ந்த பந்தலின் கீழே
(இன்றும் யானை வாஹனம் பொழுது முத்துக் கொடை கொண்டே புறப்பாடு –
மற்ற நாள்களில் ஸ்வர்ணம் கொடை -யானை வாகனமும் ஆறாம் நாள் நடக்கும் )

மைத்துனன் நம்பி-
நப்பின்னை பிராட்டியோடு உண்டான சம்பந்தம் தன்னோடும் உண்டு என்று இருக்கிறாள் காணும் –

மது சூதனன் –
மற்றும் மைத்துனமை முறை உண்டு என்று ஆரேனும் வந்து கைப் பிடிக்கப் பார்க்கில்
அவர்களையும் அழியச் செய்து தானே ஸ்வீகரிக்க வல்லவனாய்த்து –
தனது உடமையை பிறர் -என்னது -என்னும் போது
அவர்களை அழியச் செய்து கைக் கொள்ள வல்லவனாய்த்து –

வந்து என்னை கைத்தலம் பற்றக் -கனாக் கண்டேன் தோழீ நான்–
அவன் தானே வந்து கைப்பிடிக்கை முறை -என்று இருப்பாள் ஒருத்தி இறே இவர்கள் தான்

கைத்தலம் பற்ற –
ந பிரமாணீ க்ருத பாணி பால்யே பாலேன பீடித
என்னை அறியா விட்டால் தம்மை அறியாது ஒழிய வேணுமோ
தாம் பருவம் நிரம்பாது இருக்க தாம் என்னைக் கையைப் பிடித்தது மறந்தாரோ

பாணி க்ரஹணம் -என்ற ஒரு பதத்தால் சொல்லாதே –
பீடித -என்பான் என் என்னில் என்று எம்பாரை சிலர் கேட்டார்கள் –
அங்கண்ணன் உண்ட என்னாருயிர்க் கோது இது -என்கிறபடியே
பிடித்த பிடியில் அனந்யார்ஹை யாம்படி பிடித்தது -என்றாராம்
கை அழுந்தப் பிடிக்கப் பட்டதே –வலியப் பிடிக்கை

இயம் சீதா மம ஸூ தா சஹ தர்ம சரீ தவ -ப்ரதீச்ச சை நாம் பத்ரம் தே பாணிம்
க்ருஹ்ணீஷ்வ பாணிநா
-பால -73-26-
இயம் சீதா -பிறந்த உமக்கு பிறவாமையால் வந்த ஏற்றம் உடையார் தேட்டமே –
மம ஸூதா -சஹ தர்ம சரீ தவ
நீர் ஆர்த்த ரஷணத்திலே தீஷித்தால் உமக்கு முன்னே போய்க் கைச் சிறையாய் இருக்க வல்லவள்
ப்ரதீச்ச சை நாம் —-கரும்பு தின்ன கூலி அன்றோ
இவளைக் கைக் கொள்ளும் என்று அன்றோ உம்மை நான் கால் பிடிக்கிறது
பத்ரம் தே —-வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு –என்கிறபடியே
ஐயரும் ஊரில் உள்ளாரும் வாராது இருக்க நான் கைக் கொள்ளுகை யாவது என் என்று
தன் வைதக்த்யம் தோற்ற இறாய்த்து நின்றார் -அது வேண்டா காணும்
உம்முடைய கையாலே இவள் கையைப் பிடியீர்
ப்ரதீச்ச -என்னச் செய்தே பாணிம் க்ருஹ்ணீஷ்வ -என்றான் இறே
இவளை அங்கீ கரிப்பீராக – என்ற பின்பும் கையைப் பிடியும் –
தந்தையார் அனைவரும் வந்து இருக்கும் இப்போது -முன்பு போலே மறுக்காமல் என்றான் இறே

—————————————————————————————————-

வாய் நல்லார் நல்ல மறை ஓதி மந்திரத்தால்
பாசிலை நாணல் படுத்துப் பரிது வைத்து
காய்சின வாய் களிறு அன்னன் என் கை பற்றி
தீ வலம் செய்யக் கனாக் கண்டேன் தோழீ நான் —6-7-

பதவுரை

வாய் நல்லார்–நன்றாக ஓதின வைதிகர்கள்
நல்ல மறை ஓதி–சிறந்த வேத வாக்கியங்களை உச்சரிக்க,
மந்திரத்தால்–(அந்தந்த க்ரியைகளுக்கு இசைந்த) மந்த்ரங்களைக் கொண்டு
பாசு இலை நாணல் படுத்து–பசுமை தங்கிய இலைகளை யுடைத்தான நாணற் புல்லைப் பரிஸ்தரணமாக அமைத்து
பரிதி வைத்து–ஸமித்துக்களை இட்டு,
காய்சின வாய் களிறு அன்னன்–மிக்க சினத்தை யுடைய மத்த கஜம் போல் செருக்கனான கண்ண பிரான்
என் கை பற்றி–என் கையைப் பிடித்துக் கொண்டு
தீ வலம் செய்ய–அக்நியைச் சுற்றி வர

வாய் நல்லார்-
அழகியதாக ஸ்வரத்திலே உச்சரிக்க வல்லவர்கள்

நல்ல மறை ஓதி மந்திரத்தால்-
ஆராதன விஷயமாக பரந்தவை அன்றிக்கே
ஆராத்யனுடைய ஸ்வரூபத்திலே பரந்தவற்றைச் சொல்லி —
ஸ்ரீ புருஷ ஸூக்தாதிகளைச் சொல்லி

மந்திரத்தால்-
அதுக்குள்ளே எல்லாம் உண்டாய் இருக்கச் செய்தே
அவ்வோ கிரியைக்கு அநு ரூபமான மந்த்ரத்தாலே

பாசிலை நாணல் படுத்துப் –
பசுத்த இலையை உடைத்தானை நாணலை –
அக்னியை சூழப் படுத்து -பரிஸ்தரித்து

பரிது வைத்து
பரிதிகளையிட்டு -சமித்துக்களை இட்டு

காய்சின வாய் களிறு அன்னன் என் கை பற்றி
ஒரு மத்த கஜம் போலே மேன்மையோடு வந்து

தீ வலம் செய்யக் கனாக் கண்டேன் தோழீ நான் —
அக்னியைச் சூழ வருகிற போது பிசுகி நடந்த படி

ஏகமிஷே விஷ்ணுஸ் த்வா அந்வேது த்வே ஊர்ஜே விஷ்ணுஸ் த்வா அந்வேது
சகா சப்தபதா அபூம
-யஜூர் அஷ்டகம்-3 பிரச்னம் -7-பஞ்ச -89-என்று
ஏகமிஷே -தொடங்கி-சகா
சப்தபதா பவ
-அளவும் நடந்தபடி –சப்தபதீ மந்த்ரம் –
வந்து கைப் பிடித்த போது ஒரு மத்த கஜம் சிறைப் பட்டால் போலே யாய்த்து

தீ வலம் செய்ய –
தான் நெகிழும் அன்றும் நெகிழ ஒண்ணாத படியாகவும்
நானும் நெகிழ ஒண்ணாத படியாகவும் பெற்றது காண்
அக்னி சாஷியாக கைப்பிடித்ததால்
இருவராலும் இருவர் கையையும் விட முடியாதே –

—————————————————————————————————-

இம்மைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் பற்றாவான்
நம்மை யுடையவன் நாராயணன் நம்பி
செம்மை யுடைய திருக்கையால் தாள் பற்றி
அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் தோழீ நான் —6-8-

பதவுரை

இம்மைக்கு–இப் பிறவிக்கும்
ஏழ் ஏழ் பிறவிக்கும்–மேலுள்ள பிறவிகள் எல்லாவற்றிற்கும்
பற்று ஆவான்–சரண்யனா யிருப்பவனாய்
நம்மை உடையவன்–நமக்கு சேஷியாய்
நம்பி–ஸகல கல்யாண குண பரிபூர்ணனாய்
நாராயணன்–நாராயணனான கண்ண பிரான்
செம்மை உடைய திரு கையால்–செவ்விய (தனது) திருக் கையினால்
தாள் பற்றி–(எனது) காலைப் பிடித்து
அம்மி மிதிக்க–அம்மியின் மேல் எடுத்து வைக்க

இம்மைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் பற்றாவான்
அக்னி தானே நெகிழப் பார்க்கும் அன்றும் நெகிழ விடானாய்த்து –
இவனுடைய அனுபவம் மாறாதே செல்லுமாகில்
என்றும் பிறந்தால் ஆகாதோ என்று இருக்கிறாள் –

ஏழ் ஏ ழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே ஆவோம் –என்று பிரார்த்திக்குமவள் இறே
வ்ருஷ்ட்யாதிகளுக்கு ஈடாக யத்தனித்தால் வர்ஷித்த அநந்தரம் மறுத்துப் போகா நிற்கும்
பகவத் விஷயத்தைப் பற்றினால் –
சக்ருதேவ பிரபன்னாய
-என்று ஒரே தடவை பற்றினாலும் –
கால தத்வம் உள்ளதனையும் அனுபவித்தே நிற்கும் இத்தனை யாய்த்து –
அத்தையே ஏழ் ஏழ் பிறவிக்கும் என்று காட்டி அருளுகிறாள்
குற்றமில் சீர் கற்று வைகல் வாழ்தல் கண்டீர் குணம் -திருவாய்மொழி -9-1-7-என்கிறபடியே –

நம்மை யுடையவன் –
பலம் இன்றிக்கே ஒழிந்தால் தான் புறம்பு எங்கே போவது —சர்வ ஸ்வாமி-
அவன் உடைமையை என்னது என்று இருக்குமதே இறே களவாவது –
சோரேண ஆத்ம அபஹாரிணா
–என்கிறபடியே

நாராயணன் நம்பி-
ஸ்வாமித்வத்துக்கும் குணங்களுக்கும் வாசகமான திரு நாமம் இறே

நம்பி
கல்யாண குணங்களால் பூரணன்

செம்மை யுடைய திருக்கையால் தாள் பற்றி-
பிள்ளை உறவு முறையார் வேண்டா என்பர்கள்-
பெண் பிள்ளை உறவு முறையார் வேணும் என்னா நிற்பர்கள் —
இப்படி இரண்டு தலையில் உள்ளாறும் வார்த்தை சொல்லா நிற்கச் செய்தே
தானே வந்து காலைப் பிடிக்க கணிசியா நிற்கும் யாய்த்து

அதாவது
ஆஸ்ரிதர் கால் பிடிக்க என்றால் இறாயாத கை யாய்த்து

உபதேச காலத்தில் போல் அன்று இறே பரிமாற்றத்தில் இருப்பது –
உபதேசிப்பது -அவன் கால் பிடிக்கக் கடவதாக
பரிமாற்றத்தால் வந்தால் அவன் தான் பிடிக்கும் படியாக வாய்த்து இருப்பது –

அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் தோழீ நான் –
அசமாரோஹணம் பண்ணக் கனாக் கண்டேன்
அவ் வம்மியில் ஓரடியிடில் செய்வது என் -என்று துணுக்  துணுக்  என்று இருந்தாள் காணும் –
அடியிட்டானாகில் அதுவும் ஒரு பெண்ணாகுமே-

அஸ்மேவ ஸ்வம் ஸ்திரா பவ –
அசித் வத் பாரதந்தர்யம் காட்டவே -வேத மந்த்ரம் சொல்லும் –
கல்லைப் போலவே இருப்பதைக் காட்டும்

தோழீ நான் —
நீ என் கால் பற்றி போரும்படி எல்லாம் அறிதியே
அவன் என் கால் பற்றும்படி யாய்த்துக் காண்
அவன் ஸ்வபாவம் நீ சொல்லக் கேட்ட படியே அனுபவிக்கப் பெற்றேன்
அச்மேவ த்வம் ஸ்திரா பவ – –
இந்த கல்லைப் போலே எனக்கு ஆட்பட்டு இருப்பதில் நிலையாய் இருப்பாய் –
அசித்வத் பாரதந்த்ர்யம் உபதேசிக்கும் வேத மந்த்ரம் –

—————————————————————————

வரிசிலை வாண் முகத்து என் ஐமார் தாம் வந்திட்டு
எரி முகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி
அரிமுகன் அச்சுதன் கை மேல் என் கை வைத்து
பொரி முகந்து அட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்–6-9-

பதவுரை

வரி சிலை வான் முகம்–அழகிய வில் போன்ற புருவத்தையும் ஒளி பொருந்திய முகத்தை யுடையவர்களான
என் ஐமார் தாம்–எனது தமையன்மார்கள்
வந்திட்டு–வந்து
எரிமுகம் பாரித்து–அக்னியை நன்றாக ஜ்வலிக்கச் செய்து
முன்னே என்னை நிறுத்தி–அந்த அக்னியின் முன்னே என்னை நிறுத்தி
அரி முகன்–(ஹிரண்ய வதத்திற்காக) ஸிம்ஹ முகத்தை யுடைனாய் அவதரித்த
அச்சுதன்–கண்ண பிரானுடைய
கை மேல்–திருக் கையின் மேல்
என் கை வைத்து–என்னுடைய கையை வைத்து
பொரி–பொரிகளை
முகந்து அட்ட–அள்ளிப் பரிமாற

என் ஐமார் தாம்-என் தமையன்மார்கள்-

வரிசிலை வாண் முகத்து என் ஐமார் தாம் வந்திட்டு எரி முகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி
வரி –அழகு -அழகிய வில்லு போன்ற இருக்கிற புருவத்தையும்
ஒளியை யுடைய முகத்தையும் உடையவர்கள் –

என்னுடைய ப்ராதாக்கள் ஆனவர்களே –
இதுக்கு எல்லாம் –லாஜ ஹோமம் –அபிமானிகள் -என்னும் இடம்
தங்கள் முகத்தில் ஒளியிலே காணும் படியாக வந்து
அக்னி முகத்தை பாரித்து -ஜ்வலிகச் செய்து —
நான் வ்ரீளையால் இறாய்க்க-என்னை எடுத்து முன்னே நிறுத்தி-

அரிமுகன் அச்சுதன் கை மேல் என் கை வைத்து பொரி முகந்து அட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்–
பொரி முகந்து -அட்ட
பொரியை அள்ளி அக்னியிலே பரிமாற-

மைத்துனமை முறையுடையார் இவனை இளிம்பு படுத்திச் சிரிக்க வேணும் என்று
சில விலாச சேஷ்டிதங்களை பண்ணக் கோலினால்
அவர்களுக்கு கணிசிக்க ஒண்ணாத படி அநபிபவனாய் இருந்த இருப்பு –

அச்சுதன்
அவர்கள் பொரியட்டி விட்டாலும் தான் கை விடாதவன் –

கைம்மேல் என் கை வைத்து
அடியார் ரஷணத்தில் பிராட்டி புருஷகாரம் அடியாக என்பதால்
இவள் கையே மேலே இருக்கும்

என் கை மென்மையை தோழி நீ அறிவாயே-
அவனும் அறியும் படி அவன் கை மேல் என் கை வைக்கப் பெற்றேன்

————————————————————————————————-

குங்குமம் அப்பிக் குளிர் சாந்தம் மட்டித்து
மங்கல வீதி வலம் செய்து மண நீர்
அங்கு அவனோடும் உடன் சென்று அங்கு ஆனைமேல்
மஞ்சனமாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்–6-10-

பதவுரை

குங்குமம்–குங்குமக் குழம்பை
அப்பி–உடம்பெல்லாம் பூசி
குளிர் சாந்தம்–குளிர்ந்த சந்தனத்தை
மட்டித்து–கனக்கத் தடவி
ஆனை மேல்–மத்த கஜத்தின் மேலே
அவனோடும் உடன் சென்று–அக் கண்ண பிரானோடு கூடியிருந்து
மங்கலம் வீதி–(விவாஹ நிமித்தமான) அலங்காரங்கள் விளங்குகின்ற வீதிகளிலே
வலம் செய்து–ஊர்வலம் வந்து
மணம் நீர்–வஸந்த ஜலத்தினால்
மஞ்சனம் ஆட்ட–(எங்க ளிருவரையும்) திருமஞசனம் பண்ணுவதாக

அங்கு
தோழீ
குங்குமம் அப்பிக் குளிர் சாந்தம் மட்டித்து
அங்கு ஆனைமேல்
அவனோடும் உடன் சென்று
மங்கல வீதி வலம் செய்து
மண நீர் மஞ்சனமாட்டக்
கனாக் கண்டேன் தோழீ நான்–என்று அந்வயம் –

குங்குமம் அப்பிக் குளிர் சாந்தம் மட்டித்து
மங்கல வீதி வலம் செய்து
மண நீர் காப்புக் கட்டுகைக்கு
தனிமாலையும் சாந்துமாக மட்டாக ஒப்பித்தான் -என்றது

அவ்வளவு அன்றிக்கே
விவாஹ சமயத்தில் மாலைகளும் அங்க ராகங்கங்களும் போரக் கொண்டு
பேர் ஒப்பனையாக விறே ஒப்பிப்பது
அவற்றை எல்லாம் கழித்து

மட்டித்து
பூப்புனை கண்ணி புனிதனோடு
-பேர் அலங்காரங்களை மட்டித்து என்றபடி –
அக்னி முகத்திலே இருந்தது பொறாது இறே சௌகுமார்யத்தாலே —
அதற்குப் பரிஹாரமாக குளிர்ந்த கும்குமத்தை திருமேனி எங்கும் அப்பி
பழகப் புதைத்து ஆறின சாந்தை மட்டித்து –
திருமஞ்சனத்துக்கு ஈடாக சமைந்தவற்றை கொண்டு ஊரை வலமாக வந்து

அங்கு அவனோடும் உடன் சென்று அங்கு ஆனைமேல் மஞ்சனமாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்–
அவற்றை வீதியிலே
தானும் தோழன்மாருமாக ஆனை ஏறி வந்தான் என்றது இறே
இப்போது
தானும் அவனுமாக அங்கே ஆனைக் கழுத்திலே புக்கு வலமாக வந்து

மஞ்சனமாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்-
இருவரையும் கூட வைத்து –
உடன் மண நீராட்டினார்கள் யாய்த்து

விவாஹத்தில் ஏற்பட்ட களைப்பு எல்லாம் தீரும்படி –
புடவையையும் வஸ்த்ரத்தையும் முடிந்து
ஒன்றாக்கி மண நீராட்டுகை –

தம்பதிகள் இருவரும் ஒரே புடவை உடுத்தி
மண நீராட்டுகை
-என்றவாறு –

————————————————————————————————

ஆயனுக்காக தான் கண்ட கனாவினை
வேயர் புகழ் வில்லிபுத்தூர்க் கோன் கோதை சொல்
தூய தமிழ் மாலை ஈரைந்தும் வல்லவர்
வாயு நன் மக்களைப் பெற்று மகிழ்வரே—6-11-

பதவுரை

வேயர் புகழ்–வேயர் குலத்தவரால் புகழப் பட்டவராய்
வில்லிபுத்தூர் கோன்–ஸ்ரீவில்லிபுத்தூர்க்குத் தலைவரான பெரியாழ்வாருடைய (திருமகளான)
கோதை–ஆண்டாள்
தான் ஆயனுக்கு ஆக கண்ட கனாவினை–தான் கோபால க்ருஷ்ணனுக்கு வாழ்க்கைப் பட்டதாகக் கனாக் கண்ட படியைக் குறித்து
சொல்–அருளிச் செய்த
தூய–பரிசுத்தமான
தமிழ் மாலை ஈர் ஐந்தும்–தமிழ் தொடையான இப் பத்துப் பாட்டுக்களையும்
வல்லவர்–ஓத வல்லவர்கள்
வாயும்–நற்குணகளமைந்த
நல்ல மக்களைப் பெற்று–விலக்ஷணரான புத்திரர்களைப் பெற்று
மகிழ்வர்–ஆநந்திக்கப் பெறுவர்கள்

வேயர் புகழ் வில்லிபுத்தூர்க் கோன்
கோதை
ஆயனுக்காக தான் கண்ட கனாவினை
சொல்
தூய தமிழ் மாலை ஈரைந்தும் வல்லவர்
வாயும் -நல் குணங்களைப் பெற்ற
நன் மக்களைப் -கைங்கர்ய ஸ்ரீ உள்ள மக்களைப்
பெற்று மகிழ்வரே—என்று அந்வயம் –

ஆயனுக்காக தான் கண்ட கனாவினை
அவனுக்கு அனந்யார்ஹையாக தான் கண்ட கனாவினை -என்னுதல்-

அவன் பேற்றுக்கு
உனக்கே நாம் ஆட்செய்வோம்
-என்ற
பேற்றுக்கு உறுப்பாக தான் கண்ட கனா என்னுதல்

ந ஜீவேயம் -என்பாரது இறே பேறு-
ஒரு ஷணமும் உயிர் வாழாத எம்பெருமான்
திங்கள் புக்கு இருப்பாரதன்றே —
மாசாதூர்த்த்வம்
-ஒரு மாசம் ஜீவிப்பேன் என்ற பிராட்டி யுடையது அல்லவே

வேயர் புகழ் வில்லிபுத்தூர்க் கோன் கோதை சொல்
ஆப்திக்கு ப்ராஹ்மணராலே ஸ்துதிக்கப் பட்டு இருக்கிற ஸ்ரீ வில்லிபுத்தூருக்கு நிர்வாஹகரான
பெரியாழ்வார் திருமகள் ஸ்ரீ ஸூக்தியான

தூய தமிழ் மாலை ஈரைந்தும் வல்லவர் வாயு நன் மக்களைப் பெற்று மகிழ்வரே—
அனுபவத்துக்கு பாசுரமிட்ட அத்தனை அல்லது நெஞ்சோடு கூட கவி பாடிற்று அல்லவாய்த்து –

இவளோடு ஒத்த தரத்திலே பெண்கள் இத்தை அப்யசித்தார்கள் ஆகில்
கிருஷ்ணனைப் போலே இருக்கும் வரனைப் பெறுவர்கள்

புருஷர்கள் அப்யசித்தார்கள் ஆகில் பெரியாழ்வாரைப் போலே
பகவத் பிரவணரான புத்ரர்களைப் பெற்று ஹ்ருஷ்டராவார்கள் –

ஆண்டாளுக்கும் உப லஷணம்
பகவத் பிரவணரான புத்ரர்கள் என்றது

மாயன் மணி வண்ணன் தாள் பணியும் மக்களைப் பெறுவார்களே –பெரியாழ்வார் -1-7-11-
என்றார் இறே தாம் கை கண்டவர் ஆகையாலே –

————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ நாச்சியார் திரு மொழி – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் -ஐந்தாம் திருமொழி —

September 8, 2015

அவதாரிகை –

நீ கூடிடு கூடலே -என்ற இடத்தில்
கூடேன் என்னுதல் கூடுவன் என்னுதல்-ஒரு மறுமாற்றம் சொல்லக் கேட்டிலள்-

முன்பு தானும் அவனுமாய் இருந்த போது வார்த்தை கேட்டால்
பிரதி வசனம் பண்ணிப் போந்த வாசனையாலும்-
சைதன்யத்தில் உறைப்பாலுமாக-
குயில் பொருந்த விடவற்று -என்று பார்த்து –
என்னையும் அவனையும் நீ சேர விட வல்லையே -என்று குயிலின் காலிலே விழுகிறாள்

சொன்ன வார்த்தைக்கு பிரதி வசனம் பண்ணும் என்னும் இதுவே யாய்த்து
அதன் பக்கல் பற்றாசாக நினைக்கிறது –

ராவணனைப் பார்த்து -நீ என்னையும் அவனையும் சேர்க்க வல்லையே -என்னுமவர்கள்
இத்தைப் பெற்றால் விடார்கள் இறே

மித்ர மௌபயிகம் கர்த்தும் ராம ஸ்தானம் பரீப்சதா-வதம் சா அநிச்சாதா கோரம்
த்வயா அசௌ புருஷர்ஷப
-சுந்தர -21-19-
விதிதஸ் ச ஹி தர்மஜ்ஞ சரணாகத வத்சல –
தேன மைத்ரீ பவது தே யதி ஜீவிதும் இச்சசி
-சுந்தர -21-20-

—————————————————

எல்லா பதார்த்தங்களையும் முறையிலே நிறுத்தக் கடவ அவன் –
மணி முடி மைந்தன் அன்றோ –

முறை செய்யாவிடில் பொருந்த விடுகை உனக்கு பரம் அன்றோ -என்கிறாள்

மன்னு பெரும் புகழ் மாதவன் மா மணி வண்ணன் மணி முடி மைந்தன்
தன்னை உகந்தது காரணமாக என் சங்கு இழக்கும் வழக்குண்டே
புன்னை குருக்கத்தி நாழல் செருந்திப் பொதும்பினில் வாழும் குயிலே
பன்னி எப்போதும் இருந்து விரைந்து என் பவளவாயன் வரக் கூவாய்–5-1-

பதவுரை

புன்னை–புன்னை மரங்களும்
குருக்கத்தி–குருக்கத்தி மரங்களும்
நாழல்–கோங்கு மரங்களும்
செருந்தி–சுர புன்னை மரங்களும் (இவை முதலிய பல மரங்கள் நிறைந்த)
பொதும்பினில்–சோலையிலே
வாழும்–வாழுகின்ற
குயிலே! -கோகிலமே!
மன்னு பெரும் புகழ்–நித்யமாய் அளவில்லாத புகழை யுடையவனாய்
மாதவன்–ச்ரிய: பதியாய்
மா மணி வண்ணன்–நீல மணி போன்ற நிறத்தை யுடையனாய்
மணி முடி–நவ மணிகள் அழுத்திச் சமைத்த திரு வபிஷேத்தை யுடையனாய்
மைந்தன் தன்னை–மிடுக்கை யுடையவனான எம்பெருமானை
உகந்தது காரணம் ஆக–ஆசைப் பட்டதுவே ஹேதுவாக
என் சங்கு இழக்கும் வழக்கு–என்னுடைய கைவளைகள் கழன்றொழியும்படியான நியாயம்
உண்டே?–(உலகத்தில்) உண்டோ’ (இது வெகு அநியாயமாயிருக்கிறது)
(இதற்கு நான் என் செய்வேன் என்கிறாயோ)
என் பவளம் வாயன்–பவளம் போற் பழுத்த திருவதரத்தை யுடையனான எனது துணைவன்
வர (என்னிடம்) வந்து சேரும்படி
எப்போதும்–இரவும் பகலும்
பன்னி இருந்து–(அவனது திருநாமங்களைக்) கத்திக் கொண்டிருந்து
விரைந்து கூவாய்–சீக்கிரமாகக் கூவ வேணும்.

மன்னு பெரும் புகழ் மாதவன் மா மணி வண்ணன் மணி முடி மைந்தன் தன்னை உகந்தது காரணமாக -என் சங்கு இழக்கும்-
இத்தலையிலே குறை உண்டாய் இழக்கிறேனோ –
தன் பக்கல் குறை உண்டாய் இழக்கிறேனோ

மன்னு
தர்மி உண்டாய் –
குணங்கள் -நடையாடாத ஒரு போது உண்டாய் -நான் இழக்கிறேனோ –

பெரும் புகழ் –
குணங்களுக்கு அவதி உண்டு என்றும் –
அது என் பக்கல் ஏறிப் பாயாது என்றும் நான் இழக்கிறேனோ –

புகழ் –
கல்யாண குணங்களே -கொண்டவன் அன்றோ –
ஹேய குணங்களும் கலசித்தான் நான் இழக்கிறேனோ

உயர்வற உயர் நலம் உடையவன்–
நிஸ் சீமம் – -நிஸ் சங்க்யம் -ஸ்லாக்யதை
மூன்றுமே உண்டே
ஸ்வ பாவிக அநவதிக அதிசய அசங்க்யேய கல்யாண குண கண-என்றால் போலே இருக்கிறது யாய்த்து –

மாதவன் –
இப்போது இக் குணங்கள் இன்றிக்கே ஒழிக –
அருகே இருந்து
ந கச்சின் ந அபராத்யதி
–யுத்த -116-44-என்று சேர்ப்பார் இல்லாமையால் தான் இழக்கிறேனோ

ஸ்ரீ வல்லப -என்றால் போலே இருக்கிறது
மாதவன் -மணி வண்ணன் –
தனக்காக வடிவு படைத்து இருப்பான் ஒருவனாய்த் தான் இழக்கிறேனோ

இழக்கலாம் வடிவாய்த் தான் இழக்கிறேனோ
ந தே ரூபம் ந சாகாரோ நாயுதா நி ந சாஸ்பதம்-ததா அபி புருஷாகாரோ பக்தா நாம்
த்வம் பிரகாசசே
-ஜிதந்தே -1-5-

மணி முடி மைந்தன் –
இத்தனையும் உண்டானாலும் என்னைப் போலே பிறர் கை பார்த்து இருப்பான் ஒருவனாய்த் தான் இழக்கிறேனோ –
ஸ்வ தந்த்ரனாவது -ரஷணத்திலே தீஷித்து இருப்பான் ஒருவனாய்த்து –

மைந்தன் –
ரஷணத்தை ஏறிட்டுக் கொண்டாலும் பிரயோஜனம் இல்லை இறே -அசக்தனாய் இருக்குமாகில்
மைந்து -என்று வலியாய்-வலியை உடையவன் -என்றபடி –

தன்னை உகந்தது காரணமாக –
அப்ராப்த விஷயத்தை ஆசைப்பட்டேனா -இழப்பேன் நானோ
தன் திருவடிகளிலே சிலர் சாய்ந்தால் அநு பாவ்யங்கள் பின்னை அவர்கள் அநு பவிப்பார்களோ –
தான் அநு பாவித்தல் பரிஹரித்தல் -செய்யும் அத்தனை அன்றோ —
சர்வ பாபேப்யோ மோஷயிஷ்யாமி-எ
ன்பவன் அன்றோ –
விஸ்ருஷ்டம் பகதத்தேன ததஸ்த்ரம் சர்வகாதுகம் -உறசா தாரயாமாசா பார்த்தம்
சஞ்சாத்ய மாதவ
-துரோண பர்வம் -29-18-

வழக்குண்டே
என் ஆர்த்தியைக் கண்டே ஓரம் பண்ணச் சொல்லுகிறேன் அல்லேன் –
மத்யஸ்த புத்தியாலே பார்க்கச் சொல்லுகிறேன் அத்தனை

ந வாஸூ தேவ பக்தா நாம ஸூ பம் வித்யதே கவசித் -என்றும்
ந மே பக்த ப்ரணச்யதி -ஸ்ரீ கீதை -9-31-என்றும் சொல்லக் கடவது இறே
கௌந்தேய பிரதீஜா நீஹி –அர்ஜுனா இவ்வர்த்தத்தில் நின்றும் நம்மை விச்வசித்து பிரதிஜ்ஞை பண்ணு
ந மே பக்த ப்ரணஸ்யதி
நம்மைப் பற்றினார்க்கு ஒரு காலும் அநர்த்தம் வாராது காண்-

புன்னை குருக்கத்தி நாழல் செருந்திப் பொதும்பினில் வாழும் குயிலே-
என்னுடைய சோகத்து அடியான அக் குணப் பரப்போபாதியும் போந்து இருந்ததீ
உன் களிப்புக்கு அடியான படுக்கை வாய்ப்பும்
நான் தரைக்கிடை கிடக்க நீ படுக்கையிலே பொருந்துவதே

எனக்கு மென்மலர்ப்பள்ளி வெம் பள்ளியாய் இருக்க நீ படுத்த படுக்கை பரப்பு இருந்த படியே-
இத்தை விட்டு உனக்கு செய்ய வேண்டுமத்தை சொல்லலாகாதோ என்ன –

பன்னி எப்போதும் இருந்து விரைந்து என் பவளவாயன் வரக் கூவாய்–
ஒரு கால் சொல்லி விடுகை அன்றிக்கே பலகாலும் இருந்து ஆனை இடர்பட்ட மடுவின் கரையிலே
அரை குலைய தலை குலைய வந்து விழுந்தால் போலே விரைந்து வந்து
என்னோடு கலந்து போகிற சமயத்தில்
அணைத்து
ஸ்மிதம் பண்ணி வரும் அளவும் ஜீவித்து இருக்கும்படி
விளை நீர் அடைத்து போன போதை செவ்வியோடும்
அதரத்தில் பழுப்போடும் வந்து அணைக்கும் படியாக கூவப் பாராய் -என்கிறாள்

————————————————————————————

கீழே நின்ற நிலையை அறிவிக்க வேணும் இறே-
மேல் அதுக்கு பரிஹாரம் பண்ணும் போது-
இது காண் என் நிலை இருக்கிறபடி
-என்கிறாள் –

வெள்ளை விளி சங்கு இடம் கையில் கொண்ட விமலன் எனக்கு உருக் காட்டான்
உள்ளம் புகுந்து என்னை நைவித்து நாளும் உயிர்ப் பெய்து கூத்தாட்டுக் காணும்
கள்ள விழ் செண்பகப் பூ மலர்க் கோதிக் களித்து இசை பாடும் குயிலே
மெள்ள இருந்து மிழற்றி மிழற்றாது என் வேங்கடவன் வரக் கூவாய்–5-2-

பதவுரை

கள் அவிழ்–தேன் பெருகா நின்றுள்ள
செண்பகம் பூ–செண்பகப் பூவிலே
மலர் கோதி–(அஸாரமான அம்சத்தைத் தள்ளி) ஸாரமான அம்சத்தை அநுபவித்து
களித்து–(அதனால்) ஆநந்தமடைந்து
இசை பாடும் குயிலே–(அந்த ஆநந்தத்திற்குப் போக்கு வீடாக) இசைகளைப் பாடா நின்றுள்ள கோகிலமே!’
வெள்ளை விளி சங்கு இடங்கையில் கொண்ட–சுத்த ஸ்வபாவமாய் (கைங்கர்ய ருசி யுடையாரை) அழைக்கு மதான
ஸ்ரீ பாஞ்ச ஜந்யத்தை இடக் கையிலே ஏந்திக் கொண்டிருக்கிற
விமலன்–பவித்ரனான பரம புருஷன்
உரு–தனது திவ்யமங்கள விக்ரஹத்தை
எனக்கு காட்டான்- எனக்கு ஸேவை ஸாதிப்பிக்க மாட்டே னென்கிறான் (அதுவுமல்லாமல்)
உள்ளம் –என்னுடைய ஹருதயத்தினுள்ளே
புகுந்து–வந்து புகுந்து
என்னை நைவித்து–என்னை நைந்து போம் படி பண்ணி
(அவ்வளவிலே நான் முடிந்து போவதாயிருந்தால் இன்னமும் என்னை ஹிம்ஸிப் பதற்காக முடிய வொட்டாமல்)
நாளும் உயிர் பெய்து–நாள் தோறும் பிராணனைப் பெருக்கடித்து
கூத்தாட்டு காணும்–என்னைத் தத்தளிக்கச் செய்து வேடிக்கை பாரா நின்றான்’
(நீசெய்ய வேண்டிய தென்னவென்றால்)
இருந்து–என் அருகில் இருந்துகொண்டு’
மெள்ளமிழற்றி மிழற்றது-உன் மழலைச் சொற்களைச் சொல்லி விலாஸ சேஷ்டிதங்களைப் பண்ணாமல்
என் வேங்கடவன் வர–எனக்காகத் திருவேங்கடமலையிலே வந்து நிற்கிற எம்பெருமான் (இங்கே) வரும்படியாக
கூவாய்–கூப்பிடவேணும்

வெள்ளை விளி சங்கு இடம் கையில் கொண்ட விமலன் எனக்கு உருக் காட்டான்
ஸ் யாமமான திரு மேனிக்கு பரபாகமான வெண்மையை உடைத்தாய் –
பிற்பாடரை அடிமை செய்ய வாருங்கோள்-என்று அழைப்பாரைப் போலே இருக்கிற
த்வனியை உடைத்தான ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை இடக்கையிலே தரித்த –

வலக்கையிலே யாகில் –வலக்கை யாழி இடக்கை சங்கம் -திருவாய் -6-4-9-என்பர்-
இல்லையாகில் –இடக்கை வலம்புரி நின்றார்ப்ப -எரி கான்று அடங்கார் ஒடுங்குவித்த தாழி –-என்பர்கள் –
ஏதேனுமாக இருந்தபடி ஆதரிக்குமவர்கள் இறே –

ராஜ புத்திரன் கையிலே அறுகாழிக்கு தோற்று இருப்பாரைப் போலே
கையும் ஸ்ரீ பாஞ்ச ஜன்யமுமான அழகுக்குப் போலே காணும் இவள் தோற்று இருப்பது –

விமலன் –
விக்ரஹங்களும் -திவ்ய ஆயுதங்களும் பிறர் காணக் கண்டது என்று இருக்குமவன்
ந சாகாரோ நாயுதா நி –பக்தா நாம் –என்று இறே இருப்பது
பிறருக்காக நம் வடிவு கண்டது என்று இருக்குமவன்

எனக்கு –
ஆசையின் எல்லையில் நிற்கிற எனக்கு –

உருக்காட்டான் –
எனக்குக் காட்டாதே யாருக்கு காட்ட இருக்கிறான்
மீனுக்கு தண்ணீர் வார்ப்பாரைப் போலே நித்ய ஸூரிகளுக்கு காட்ட இருக்கிறானா –

காசின் ஒளியில் திகழும் வண்ணம் காட்டீர் -பெரிய திருமொழி -4-9-4-
பொன் போலே திகழா நின்றுள்ள வடிவை எனக்கு காட்டுகிறிலீர்-

எம்பெருமான் வாசி வல்லீர்
உம்முடைய வடிவின் வீரரும் பெறுகிற எங்களின் சிறுமையும் நேராகக் கணக்கிட வல்லீர்
இந்தளூரீர் வாழ்ந்தே போம் நீரே
வாசி அறியாதே தரம் இடாதே தரவந்த இடத்தே வாசி பார்க்க பார்த்தீராகில்
உம்முடைய உடம்பை நீரே கட்டிக் கொண்டு கிடந்தது வாழ்ந்து போம்

உருக்காட்டான் –
விடாய்த்தாருக்கு தண்ணீர் வாராதாராதாரைப் போலே –

உள்ளம் புகுந்து என்னை நைவித்து நாளும் உயிர்ப் பெய்து கூத்தாட்டுக் காணும்
வடிவை மறந்து பிழைக்கவும் ஒட்டுகிறிலன்
என் ஹிருதயத்திலே வந்து புகுந்து
ஹிருதயத்தில் புகுந்தால் நைவோடே தலைக் கட்டி யல்லது நில்லாது இறே

நினைதொறும் -சொல்லும்தொரும் நெஞ்சு இடிந்து உகும் —திருவாய் -9-6-2- என்றும்
நினைந்து நைந்து -உள் கரைந்து உருகி –திருவாய் -1-5-2-என்றும் சொல்லுகிறபடியே
நெஞ்சிலே புகுந்து மறக்க ஒண்ணாத படி பண்ணும் –

பெய்கை
இடுகை-
நாள்தோறும் உண்டாக்குகை –

சந்நிஹிதரை போலே பிரகாசித்து இறே அணைக்கக் கை நீட்டி
கைக்குள் அகப்படாமையாலே நோவு பட்டு
பின்னையும் முடிந்து பிழைக்கவும் பெறாதே –
ஷணிக பதார்த்தம் போலே முடிந்தது ஜீவிப்பதாய்க் கொண்டு
உருவ நோவு பட்டு செல்லா நிற்குமாய்த்து
இப்படி துடிக்க விட்டு இது தானே போது போக்காக இரா நின்றான் –

கள்ள விழ் செண்கள்ளவிழ் செண்பகப் பூ மலர்க் கோதிக் களித்து இசை பாடும் குயிலே-
நான் இப்படி நோவு படா நிற்க உன் அவஸ்தை இருந்தபடி என்
மது விரியா நின்றுள்ள செண்பகப் பூவிலே ருஜீஷமான -கோதுவான -அம்சத்தைக் கழித்து -மலரைக் கோதி
நான் பூக்காண வெருவ – நீ களித்து-ஹர்ஷம் வழிந்தால் போலே இருக்க இசை பாடுகிற குயிலே –

மெள்ள இருந்து மிழற்றி மிழற்றாது என் வேங்கடவன் வரக் கூவாய்–
அருகே இருந்து நிரம்பா மென் சொற்களைச் சொல்லி விலாச சேஷ்டிதங்களைப் பண்ணாதே
ஸ்ரீ மிதிலையில் புறச் சோலையிலே பிராட்டியைக் கைப் பிடிக்கைக்காக வந்து விட்டுக் கொண்டு இருந்தால் போலே
எனக்காக திரு மலையிலே இருந்தான் –
நாலடியும் வரும்படியாக நீ கூவ வல்லையே

பரமபதத்தை விட்டு திருமலையிலே வந்து நிற்கிற நிலை
தன்னுடைய ஸ்வயம்வரத்துக்காக
-என்று இருக்கிறாள்

————————————————————————–

மாதலி தேர் முன்பு கோல் கொள்ள மாயன் இராவணன் மேல் சரமாரி
தாய் தலை யற்று யற்று வீழத் தொடுத்த தலைவன் வர எங்கும் காணேன்
போதலர் காவில் புதுமணம் நாறப் பொறி வண்டின் காமரம் கேட்டு உன்
காதலியோடு உடன் வாழ் குயிலே என் கரு மாணிக்கம் வரக் கூவாய் —5-3-

பதவுரை

போது அவர் காலில்–சிறந்த பூக்கள் அலர்கின்ற சோலையிலே
புது மணம்–புதிதான பரிமளமானது
நாற–வீச
பொறி வண்டின்–அழகிய வண்டினுடைய
காமரம்–காமரம் என்கிற பண்ணை
கேட்டு–கேட்டுக் கொண்டு
உன் காதலியோடு உடன் வாழ் குயிலே–உன் பேடையோடு கூட வாழ்கிற குயிலே!
மாதலி –மாதலியானவன்
தேர் முன்பு (இராவணனுடைய) தேரின் முன்னே-
கோல் கொள்ள–கோலைக் கொண்டு தன் தேரை நடத்த
மாயன் இராவணன் மேல்–மாயாவியான ராவணன் மேலே
சரம் மாரி–பாண வர்ஷத்தை
தாய் தலை அற்று அற்று வீழ தொடுத்த–(அவ்விராவணனுடைய ப்ரதானமான தலை (பலகால்) அற்று அற்று விழும்படி ப்ரயோகித்த
தலைவன்–எம்பெருமானுடைய
வரவு -வரவை
எங்கும்–ஒரு திக்கிலும்
காணேன்–காண்கிறேனில்லை’
(ஆதலால்,)-
என்–என்னுடைய அநுபவத்துக்கு யோக்யனாய்
கரு மாணிக்கம்–நீல ரத்நம் போன்ற திருமேனியை யுடையனான அவ் வெம்பெருமான்
வர–இங்கே வரும்படியாக
கூவாய்–நீ கூவ வேணும்.

மாதலி தேர் முன்பு கோல் கொள்ள மாயன் இராவணன் மேல் சரமாரி
இந்திரன் என்றும் ஒக்க முது காட்டிப் போருகையாலே ஒரு நாளும் முன் நின்று அறியான் யாய்த்து –
பெருமாளும் ராவணனுமாக பொருத அன்றாய்த்து
முன் நின்று சாரத்தியம்
பண்ணப் பெற்றது –

மாயன் ராவணன்
செவ்வை பூசல் பொர அறியாத -என்றும் ஒக்க வஞ்சனத்தால் பொருமவன் யாய்த்து –

த்வம் நீச சச வத் ஸ்ம்ருத-சுந்த -32-16-என்றாள் இறே பிராட்டியும் –
கோழையாய் ராஜ புத்ரர்களை மதித்து இருந்த படியாலே –
அவர்களை அகற்றி தனி இருப்பிலே கொடு போர்க் கடவ நீயே இவ்வார்த்தை சொல்லுகிறாய் -என்கிறாள்

யதந்தரம் சிம்ஹ ஸ்ருகாலயோர்வனே -ஆரண்ய -47-45-என்று –
சிம்ஹ ஸ்ருகாலயோ
-என்றவாறே
தன்னை சிம்ஹமாக சொன்னால் என்று பையல் பிரமிக்கக் கூடும் என்று –
த்வம் நீச சச வத் –
என்றாள் இறே -நீ முயல் போன்றவன் என்று
பிரித்துக் கொண்டு போந்து தனி இருப்பு இருத்தினவன் முன்னே இறே இவ்வார்த்தை சொல்லுகிறது –
அவனை மதியாத வீர பத்னி யாகையாலே

மாயன் ராவணன் மேல் -வஞ்சகனான ராவணன் மேலே-
சர மாரி-சர வர்ஷம் வவர்ஷ ஹ –என்கிறபடியே பாட்டம் பாட்டமாக –

தாய் தலை யற்று யற்று வீழத் தொடுத்த தலைவன் வர எங்கும் காணேன்
பிரதானமான தலை அற்று வீழ –
தாய் தலை
-மெய்யான தலை -என்றவாறு
திருச் சரங்கள் பண்ணின பாக்யத்தாலே அறுக்க அறுக்க முளைத்தது யாய்த்து
பின்னை அது தானே போது போக்காக நின்று கொன்றான் யாய்த்து
அப்படி முளைத்தது இல்லையாகில்
திருச் சரங்களின் வரவு இவனால் -பெருமாளால் -பானங்களை திருப்தி செய்து அடக்கப் போகாதே-

தலைவன் -தீரோத்தாத நாயகன்
வரவேங்கும் காணேன் -பிரதிபந்தகம்-என்று ஓன்று கிடைப்பதில்லை -என்று
வரும் வழியை -கண் மறையப் பார்த்து நின்றாள் போலே -காணும்-

போதலர் காவில் புதுமணம் நாறப் பொறி வண்டின் காமரம் கேட்டு –
பரப்பு மாறப் பூத்த -சோலையிலே -அப்போது அலர்ந்த செவ்வி அழியாத அபரிமிதமான பரிமளமானது கமழ
ரசாயன சேவை பண்ணினால் போலே -தர்ச நீயமான வண்டானது –
காமரம்
-என்ற பண்ணைப் பாட –
அதுக்கு செவி தாழ்த்து

உன் காதலியோடு உடன் வாழ் குயிலே
மேல் விளைவது அறிந்து விடாதே வர்த்திக்கிறாய் அன்றோ –
தன்னைப் பிரிந்து நான் கிடக்கும் படி பண்ணிப் போனவனைப் போல் அன்றிக்கே
உன் பேடையுடன் சேர வர்த்திக்கிற குயிலே

என் கரு மாணிக்கம் வரக் கூவாய்–
தன் வடிவைக் காட்டி
என்னை அனந்யார்ஹம் ஆக்கினவன் வரக் கூவாய் -என்கிறாள் –
நல்ல அங்கக் காரனாய் இருந்தான் –
அவன் வரும்படி கூவு -அழகிய அங்கங்களை உடைய சூரன் என்றபடி

———————————————————————–

என்புருகி இனவேல் நெடும் கண்கள் இமை பொருந்தா பல நாளும்
துன்பக் கடல் புக்கு வைகுந்தன் என்பதோர் தோணி பெறாது உழல்கின்றேன்
அன்புடையாரைப் பிரிவுறு நோயது நீயுமறிதி குயிலே
பொன்புரை மேனிக் கருளக் கொடி யுடைப் புண்ணியனை வரக் கூவாய்–5-4-

பதவுரை

குயிலே!–ஓ குயிலே!
என்பு உருகி–எலும்புகள் உருகிப் போனதுமல்லாமல்
இனம் வேல் நெடு கண்கள் இமை பொருந்தா–சிறந்த வேல் போன்ற விசாலமான கண்களும் மூடிக் கிடக்கின்றன வில்லை’
பல நாளும்–நெடுங்காலமாக
துன்பம் கடல் புக்கு–விச்லேஷ வ்யஸநமாகிற கடலிலே அழுந்தி
வைகுந்தன் என்பது ஓர் தோணி பெறாது–ஸ்ரீவைகுண்டநாதன் என்கிற ஒரு தோணியை அடையப் பெறாமல்
உழல்கின்றேன்–அக்கடலுக்குள்ளேயே தட்டித் தடுமாறிக் கொண்டிராநின்றேன்:
அன்பு உடையாரை பிரிவுறும் நோய் அது–அன்பர்களைப் பிரிவதனாலுண்டாகும் துக்கத்தை
நீயும் அறிதி நீயும் அறிவாயன்றோ?–பொன் போன்ற மேனியை யுடையனாய்
பொன் புரை மேனி–கருடனைக் கொடியாக வுடையவனான
கருளன் கொடி உடை–“தர்மமே வடிவெடுத்தவன்” என்னப் படுகிற கண்ண பிரானை
புண்ணியனை
வர கூவாய்–இங்கே வரும்படி கூவு

என்புருகி வேல் நெடும் கண்கள் இமை பொருந்தா பல நாளும் துன்பக் கடல் புக்கு-
தோல் புரையே போகை அன்றிக்கே -எலும்பானதும் உருகி

இன வேல் நெடும் கண்கள்
அநித்ரஸ் சத்தம் ராம -என்று அவன் படக் கடவ பாட்டைக் கிடீர் நான் படுகிறது
இக் கண்ணுக்கு இலக்கானார் படுமத்தை தான் படா நின்றாள் யாய்த்து
ராம அநித்ர
செல்வப் பிள்ளைகளாய் இருப்பார் பாதிப் போது நித்ரை யோடு யாய்த்து போது போக்குவது
இப்படி இருக்க நித்ரை இல்லை யாய்த்து

சிறிது போது உறங்கி சிறிது போது உணர்ந்து தான் இருப்பாரோ என்னில் –
சத்தம் அநித்ரஸ் ஸூ ப்தோஅபி ச –ஆனால் இது என்சொல்லிற்று ஆகிறது எனில் –
உணர்ந்து இருக்கச் செய்தே உணர்த்தி அற்று இருக்கும் படியைச் சொல்லிற்று யாயிற்று
பராகார்த்த அனுசந்தான பாவம் இருந்தபடி

நரோத்தம -அபிமத விஷயத்தை பிரிந்தால்
இப்படி அநித்ரையாலே நோவு படுக்கை காணும் புருஷோத்த மத்வம்-ஆவது

ந சே தேன விநா நித்ரம் லபதே புருஷோத்தமே -பால -19-29-

சீதேதி -இத்யாதி

அநேகம் வேல்களை ஒருமுகமாகச் சேர்த்து வைத்தால் போலே
ஓராளும் ஒரு நோக்கும் நேராய்
அவ்வளவு அல்லாத பரப்பை உடைத்தான கண்கள் இமையோடு இமை பொருந்துகிறன வில்லை
பிரிவாற்றாமையால் உண்டான துக்க சாகரத்திலே ஆழ்ந்து –

வைகுந்தன் என்பதோர் தோணி பெறாது உழல்கின்றேன்
உகந்து அருளின நிலங்களிலே புக்கு அனுபவிக்கக் கோலி
அங்கு அணைத்தல் வார்த்தை சொல்லுதல் செய்யக் காணாமையாலே
அப்படிப் பரிமாறின அவதாரங்களிலே போய்
அவை தீர்த்தம் பிரசாதித்து போகையாலே
பரத்வத்து அளவும் சென்று
அவ்விருப்புத் தானும் பெரும் கடலுக்கு ஒரு மரத் தோணி போலே யாம்படியாக அபி நிவேசம் கரை புரண்டு
அதனுடைய அலாபத்தாலே படுகிற அலமாப்பு இருக்கிறபடி –

அன்புடையாரைப் பிரிவுறு நோயது நீயுமறிதி குயிலே
பிரிவாற்றாமையாலே படுகிற வியசனம் நீ அறியாமை இல்லை இறே –

சேர இருக்கச் செய்தே நீயும் அறிதி என்னும் படி எங்கனே என்னில்
சம்ஸ்லேஷம் ஆகில் விஸ்லேஷாந்தமாக அல்லது இராது என்று இருக்குமவள் ஆகையாலே சொல்லுகிறாள் –
தனக்குத் துன்பக் கடலை விளைத்தான் இறே அவன்

பொன்புரை மேனிக் கருளக் கொடி யுடைப் புண்ணியனை வரக் கூவாய்-
தன்னோடு கலந்த போது பொன் போலே திகழ்கிற வடிவும் தானுமாக நின்ற நிலை
பிரிந்த போதும் அவன் இருக்கும் படி தான் அறியாளே

பிரி வாற்றாமையாலே நொந்து –
விவர்ணனாய் இருந்தான் ஆகில் குயிலின் காலில் விழப் பார்த்து இருக்குமோ -வாரானோ -என்று இருக்கிறாள் –

கருளக் கொடியுடைய –
ஆர்த்த ரஷணத்துக்கு த்வஜம் கட்டி இருக்கிறவன்

புண்ணியன்
ஆன்ரு சம்சயம் பரோ தர்ம -சுத்தர -38-21-

நீரும் நானுமாய் ஓடம் ஏற்றிக் கூலி கொள்ளும் அளவாய் இருக்கச் செய்தே –
சம்ஸ்லேஷ தசையிலே -தர்மங்களில்
நீர் விரும்பி இருப்பது என் என்று கேட்டேன் -பிறர் நோவு படப் பொறுக்க மாட்டேன் –
பிறர் நோவு படப் பொறுக்க மாட்டாத இதுவே காண் நாம் வெளிறு கழிந்த தமமாக நினைத்து இருப்பது என்று அருளிச் செய்தீர்

த்வத்த ஏவ மயா ஸ்ருத
இது தான் உம்முடைய ஆளான திருவடி வாயிலே இட்டு நீட்டுகை அன்றிக்கே
உம்முடைய வாயாலே அருளிச் செய்ய நான் செவியாலே கேட்டேன்
இது தான் பிறர் மேலே ஏறிட்டு நீர் நம்மைப் பிரிந்து நோவு பட விட்டீர் ஓம் காண் -என்று சொன்னார் ஆனார் அவர்
பிரிந்து நோவு பட விட்டு இருந்தான் என்னுமத்தைப் பற்ற அத்தைச் சொல்லுகிறாள் யாய்த்து இவள்

புண்ணியனை வரக் கூவாய்
பிறர் நோவு பட பொறுக்க மாட்டாதவன் நெஞ்சு திருத்த வேண்டா
நீ சென்று கிணுக்க அமையும் காண் அவன் வருகைக்கு -என்கிறாள் –
சிறிது உணர்த்தினாயாகில் -என்றபடி -அல்பம் ஸூசிப்பிக்க அமையும் –

——————————————————————–

மென்னடை அன்னம் பரந்து விளையாடும் வில்லி புத்தூர் உறைவான் தன்
பொன்னடி காண்பதோர் ஆசையினால் என் பொரு கயல் கண் இணை துஞ்சா
இன்னடிசிலொடு பாலமுதூட்டி எடுத்த வென் கோலக் கிளியை
உன்னோடு தோழமைக் கொள்ளுவன் குயிலே உலகளந்தான் வரக் கூவாய்–5-5-

பதவுரை

மெல்நடை அன்னம்-மந்தகதி யுடைய அன்னப் பறவைகள்
பரந்து –எங்கும் பரவி
விளையாடும்–விளையாடுவதற்கு இருப்பிடமான
வில்லிபுத்தூர்–ஸ்ரீவில்லிபுத்தூரிலே
உறைவான் தன்–எழுந்தருளி யிருக்கிற எம்பெருமானுடைய
பொன் அடி–அழகிய திருவடிகளை
காண்பது ஓர் ஆசையினால்–காண வேணுமென்றுண்டான ஆசையினாலே
பொரு கயல் என் கண் இணை–சண்டையிடும் இரண்டு கெண்டைகள் போன்ற எனது கண்கள்
துஞ்சா –உறங்குகின்றனவில்லை
குயிலே–ஓ குயிலே!’
உலகு அளந்தான்–(த்ரிவிக்ரமனாய்) உலகங்களை அளந்த பெருமான்
வர — இங்கே வரும்படி
கூவாய் கூவு’
(அப்படி கூவுவாயாகில்)
இன் அடிசிலொடு பால் அமுது ஊட்டி எடுத்த என் கோலம் கிளியை–கன்ன லமுதையும் பாலமுதையும்
ஊட்டி வளர்க்கப் பெற்ற எனது அழகிய கிளியை
உன்னோடு–உன்னோடே
தோழமை கொள்ளுவன்–ஸ்நேஹப் படுத்தி வைப்பேன்

மென்னடை அன்னம் பரந்து விளையாடும் வில்லி புத்தூர் உறைவான் தன் பொன்னடி காண்பதோர் ஆசையினால் என் பொரு கயல் கண் இணை துஞ்சா-
ஊராக தன் இனமே பெருத்து இருக்குமாய்த்து –
பரம பதத்திலே நித்ய ஸூரிகள் ஓலக்கம் கொடுக்க இருக்கிறவன் அத்தை விட்டு
என்னோடு சஜாதீய பதார்த்தங்கள் கண்டு போது போக்கைக்காக வன்றோ இங்கே வந்து நிற்கிறது –
இப்போது காணப் பெறாத வருத்தம் வெறுப்பு தோன்ற வந்து நிற்கிறது -என்கிறாள் –

வைகுந்தம் என்பதோர் தோணி பெறாது உழல்கின்றேன் -என்கை பிராப்தம்
அது தூரஸ்தம் ஆகையாலே –
தனக்காக வந்து நிற்கிற இடத்திலே காணப் பெறாதே
நோவு பட்டு கண் உறங்காதே இருந்தாள் என்றால் இது சேரும்படி எங்கனே என்று
நான்-நம்பிள்ளை – ஜீயரைக் கேட்டேன்

உள்ளுக்குப் புக்கால் குறி யாழியாமே நம்மைப் போலே போர வல்லவல்லள் இவள்
ஸ்ரீ பரத ஆழ்வானைப் போலே மோஹிப்பாள் ஒருத்தி யாய்த்து –
உள்ளே கொடு புகில் அந்த சீல குணத்தைக் கண்டவாறே இவள் மோஹித்துக் கிடக்கும்
பின்னை இவளை இழக்க ஒண்ணாது என்று கொண்டு –
புக்கார்கள் இல்லை போலே காணும் என்று அருளிச் செய்தார் -என்று அருளிச் செய்வர் –

குழையும் வானமுகத்து ஏழையை தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு இழை கொள் சோதி
செந்தாமரைக் கட்பிரான் இருந்தமை காட்டினீர் –திருவாய் மொழி -6-5-5-என்று
பரிஹாரம் சொல்லுகிறவர்கள் தாங்களே
படுகுலை யடுத்தி கோள் -என்னும் படி இறே இருப்பது

பொன் -அழகு –
பிறருக்கு காட்டுகைக்காக வந்து நிற்கிறவன் திருவடிகள் காண வேணும் என்னும் ஆசையினாலே

என் பொரு கயல் கண் இணை துஞ்சா –
இக் கண்ணுக்கு   இலக்கானவன் படுமத்தை தான் படா நின்றாள் யாய்த்து –
பொரா நின்றுள்ள கயல் போலேயே ஒன்றுக்கு ஓன்று ஒப்பான கண்களானவை உறங்கா –

இன்னடிசிலொடு பாலமுதூட்டி எடுத்த வென் கோலக் கிளியை-உன்னோடு தோழமைக் கொள்ளுவன் குயிலே –
பிறரோடு தோழமை கொள்ளுகைக்கு அவகாசம் இல்லாதபடி ஸ்லாகித்து கொண்டு போருகிற என் கிளியை
இங்கே ஒரு குறை உண்டாகில் அன்றோ பிறர் தோழைமை நாடுவது
இப்படி நான் உபாலாளநம் பண்ணிக் கொண்டு போருகிற கிளையை -உன்னோடு தோழமை கொள்ளுவிப்பன் –
அதுக்கு கடவள் தானே -நியமிப்பேன் -என்றவாறு

குயில் -ஆசார்யன் –
தானே ஆசார்யனுக்கு அடிமை யாகி என் உடைமைகளையும் அவனுக்கு அடிமை ஆக்குவேன் -அரும் பொருள் த்வனிக்கும் –
கொள்ளுவன்-என்னாதே கொள்விப்பன் -என்றது –
அந்த கிளியைப் போலே உன்னையும் உபலா ளிப்பன்-என்றபடி -சாதனத்வ சங்கா நிவ்ர்த்யர்த்தம்
கார்யம் -கூவுகை -அல்பம் -பேறு அதிகம் -சம்ஸ்லேஷம் நித்யமாய் நிரதிவகமாய் இருக்குமே –

உலகளந்தான் வரக் கூவாய்
இத்தோடு தோழமை கொள்ளுகையாகிற ஏற்றம் உனக்கு –
பேறு எனக்குக் கைப்படும் –
எல்லாரோடும் வரையாதே பொருந்துமவன் வரக் கூவுகை -உனக்குக் கார்யம் —
குணாகுணம் நிரூபணம் பண்ணாதே –
வசிஷ்ட சண்டாள விபாகம் அற எல்லாரோடும் பொருந்துமவன் வரும்படி கூவப் பாராய்

—————————————————————————

எத்திசையும் அமரர் பணிந்து ஏத்தும் இருடீகேசன் வலி செய்ய
முத்தன்ன வெண் முறுவல் செய்ய வாயும் முலையும் அழகு அழிந்தேன் நான்
கொத்தலர் காவில் மணித் தடம் கண் படை கொள்ளும் இளங்குயிலே
என் தத்துவனை வரக் கூவிற்றி யாகிற்றிலை யல்லால் கைம்மாறு இலேனே –5-6-

பதவுரை

கொத்து–பூங்கொத்தானவை
அலர்–மலருமிடமான
காவில்–சோலையிலே
மணி தடம்–அழகானவொரு இடத்திலே
கண் படை கொள்ளும்–உறங்குகின்ற
இளங்குயிலே!
எத் திசையும் — எல்லா திக்குகளிலும்
சிறுகுயிலே!’
அமரர் பணிந்து ஏத்தும்–தேவர்கள் வணங்கித் துதிக்கும்படியான பெருமை வாய்ந்த
செய்ய வாயும்–சிவந்த அதரமும்
முலையும்–முலைகளும் (ஆகிய இவை
அழகு அழிந்தேன்–அழகு அழிந்ததாம்படி விகாரப்பட்டேன்’
என் தத்துவனை–நான் உயிர்தரித்திருப்பதற்கு மூல காரணமான அவ் வெம்பெருமானை
இருடீகேசன்–கண்டாருடைய இந்திரியங்களை யெல்லாம் கொள்ளை கொள்ளுமவனான எம்பெருமான்
வலி செய்ய -(தன்னை எனக்குக் காட்டாமல்) மிறுக்குக்களைப் பண்ண, (அதனாலே)
நான்–நான்
முத்து அன்ன வெண் முறுவல்–முத்துப் போல் வெளுத்த முறுவலும்
வர கூகிற்றி ஆகில்–இங்கே வரும்படி கூவ வல்லையே யானால்
தலை அல்லால்–என் வாழ் நாள் உள்ளவளவும் என் தலையை உன் காலிலே வைத்திருப்பது தவிர
கைம்மாறு இலேன்–வேறொரு ப்ரத்யுபகாரம் செய்ய அறியேன்.

எத்திசையும் அமரர் பணிந்து ஏத்தும் இருடீகேசன் வலி செய்ய-
பார்த்த பார்த்த இடம் எங்கும் துர்மாநிகளாய் இருக்கக் கடவ ப்ரஹ்மாதிகள்
தம்தாமுடைய அபிமானங்கள் முறிந்து
திருவடிகளில் விழுந்து
ஜிதரானமாய் தோற்ற ஸ்தோத்ராதிகள் பண்ணா நிற்பார்கள் யாய்த்து –

இப்படி சர்வ ஸ்மாஸ்ரயணீயனாய் இருக்கிறவன் –
என் சர்வ இந்திரியங்களையும் அபஹரித்து
தன்னை எனக்குக் காட்டாதே மிறுக்குகளைப் பண்ண

முத்தன்ன வெண் முறுவல் செய்ய வாயும் முலையும் அழகு அழிந்தேன் நான்
முத்துப் போன்ற முறுவலும் –
சிவந்த அதரமும் –
ஓரிடு சிவப்பும் வேண்டாத முலையும்-அழகு அழிந்தேன் நான் –

என்னை மிறுக்குகள் பண்ணுகைக்காக-
தனது ஜீவனத்தையும் அழியா நின்றான்
ஈஷா துன் நம்ய பஸ்யாமி-என்பாள் இவள் அன்றே பெருமாள் அன்றோ –

கொத்தலர் காவில் மணித் தடம் கண் படை கொள்ளும் இளங்குயிலே
அவன் விபூதி அழியா நிற்க –
நோக்காதே நீ  கிடந்தது உறங்குமாய் அன்றோ உன் செருக்கு இருக்கிறது
நான் இப்படி நோவு படா நிற்க படுக்கையிலே பொருந்தும் படியாய் இருக்கிறதன்றோ உன் தசை

என் தத்துவனை வரக் கூகிற்றி யாகிற்றிலை யல்லால் கைம்மாறு இலேனே –
எனக்கு சத்தா ஹேது வானவன் வரும்படி கூவ வல்லையாகில் –
இது கூவி அழைக்க வேண்டும்படி அவன் வரவு தாழ்க்கச் செய்தேயும்
தன் சத்தை அவன் என்று இருக்கிறாள் காணும்

ராவணன் மாயா சிரசைக் காட்டின போது –
சார்வ பௌமனாய் இருப்பான் ஒருவன் கைபிடிக்கக் கடவன் என்றால் போலே
ஜ்யோதிர் வித்துக்கள் சொன்னவையும் பலிக்கக் கண்டிலேன் -என்ற இங்கனே சொலவற்றைச் சொல்லி
இக்காலத்தில் ஸ்திரீகள் பொய்யே கண்ண நீரை விழ விட்டு இருக்குமா போலே இவளும் தரித்து இருக்கைக்கு
அடி என் என் என்று நான் –நம்பிள்ளை -ஜீயரைக் கேட்க

ஜ்ஞானம் அன்று இவள் ஜீவனத்துக்கு ஹேது -பெருமாள் சத்தை யாய்த்து –
அவள் உளராகையாலே இருந்தாள் காணும்
-என்று அருளிச் செய்தார் –

தான் உளன் ஆகில் நான் உளேனாம்படியாய் இருக்கிறவன் வரும்படி கூவ வல்லையாகில் –
தலை யல்லால் கைம்மாறு இலேனே –
பெற்றி -கிழக்கு போன இடத்தில் இதுக்கு பொருள் என்ன என்று என்னை சிலர் கேட்டார்கள் –
நீ  இவன் வரும்படி கூவ வல்லையாகில் உனக்கு பிரத்யுபகாரமாக என் தலையைத் தரும் அத்தனை இறே –
என்று சொல்லுகிறாள் -என்று சொன்னேன்
இவ்வளவாக மாட்டாது இதுக்குப் பொருள் -என்று இருந்தேன்
இவ்விடத்துக்கு ஜீயர் அருளிச் செய்யும் படி என் -என்று கேட்டார் –

நீ  பண்ணின உபகாரத்துக்கு இத்தலையால் செய்வது ஓன்று உண்டோ -என்று என் தலையை உனக்காக்கி –
காலம் எல்லாம் உன் காலிலே வணங்கி வர்த்திக்கும் அத்தனை -என்கிறாள் -என்று அருளிச் செய்வர் -என்றேன்

போரக் கொண்டாடி அருளி -நான் பதினோரு உரு திருவாய்மொழி கேட்டேன்
திரு மொழி கேட்கப் பெற்றிலேன்
-போன இடங்களில்
என்னைச் சிலர் கேட்டால் அருளிச் செய்யுமதுவே எனக்குத் தோற்றி
நானும் சொல்லும்படி பிரசாதிக்க வேணும் என்று வேண்டிக் கொண்டேன்

அப்படியே நம்பிள்ளையும் பிரசாதித்து அருளினார் –
ஒரு வர லாபத்தாலே இவை அறியப் போகாது –
ஸ்ரவணம் கொண்டே அறிய வேணும்
-என்று அருளிச் செய்வர் –

——————————————————————————————————

பொங்கிய பாற்கடல் பள்ளி கொள்வானைப் புணர்வதோர் ஆசையினால் என்
கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதுகலித்து ஆவியை ஆகுலம் செய்யும்
அங்குயிலே உனக்கு என்ன மறைந்து உறைவு ஆழியும் சங்கும் ஒண் தண்டும்
தங்கிய கையவனை வரக் கூவில் நீ சாலத் தருமம் பெறுதி–5-7-

பதவுரை

அம் குயிலே!–அழகிய குயிலே!
பொங்கிய பால் கடல்–அலை யெறிவை யுடைய திருப் பாற்கடலில்
பள்ளி கொள்வானை–பள்ளி கொண்டருளும் எம்பெருமானோடே
புணர்வது ஓர் ஆசையினால்– ஸம்ச்லேஷிக்க வேணுமென்று உண்டான ஆசையினால்
என் கொங்கை- எனது முலைகள்
கிளர்ந்து — பருத்து
குதுகலித்து–மிக்க உத்ஸாஹங் கொண்டு
ஆவியை–எனது உயிரை
குமைத்து ஆகுலம் செய்யும்–உருக்கி வியாகுலப் படுத்தா நின்றன’
மறைந்து உறைவு – என் கண்ணுக்குப் புலப்படாமல் நீ மறைந்திருப்பதனால்
உனக்கு என்ன–உனக்கு என்ன புருஷார்த்தம்?
ஒண் ஆழியும் சங்கும் தண்டும் தங்கிய கையவனை வர–திருவாழி திருச்சங்கும் ஸ்ரீ கதையும்
பொருந்திய திருக் கைகளுடைய பெருமாள் இங்கே வரும்படி
நீ கூவில்–நீ கூவுவாயாகில்
சால–மிகவும்
தருமம் பெறுதி -தர்மம் செய்தாயாவாய்.

பொங்கிய பாற்கடல் பள்ளி கொள்வானைப் புணர்வதோர் ஆசையினால் என்-
பரம பதம் இருப்பிடமாய் இருக்க அத்தை விட்டு வந்து
ஸ்வ சந்நிதானத்தாலே திரைக் கிளப்பத்தை உடைத்தான திருப் பாற் கடலிலே பள்ளி கொண்டு அருளுகிறவனை
ஒரு சந்திர தர்சனத்தாலே கிளரக் கடவதான கடல் –

ந கச்சத்ம நா ஸ்ரீ தய நித்யம் சத் வ்ருத்தோ அபூத் ச து தச குண புஷ்கலோ
நிஷ்களங்க
-ஸ்ரீ வரதராஜ – ஸ்தவம் –60-என்கிறபடியே
நிஷ் களங்கரான சந்த்ரர்கள் ஒரு முஹூர்த்தத்திலே ஒருவன் அடியிலே தோற்றக் கண்டால் கிளரச் சொல்ல வேண்டா விறே
அது தானே அடியாக கிளரும் இது  –சாடு அடி காரணம் -திருவடிகளிலே

பத்து திரு நகங்களும் பத்து நிஷ்களங்க சந்த்ரர்கள் இறே –

சந்த்ரமா மனசோ ஜாதா -என்பதால்
சிறிய திவலை அதுக்கும் அளித்தான் -அவனைக் கண்டால் கிளரக் கடவதானால்
தானே வந்து படுகாடு கிடந்தால் சொல்ல வேண்டா விறே

புணர்வதோர் ஆசையினால்
அவனோடு கலக்க வேணும் என்கிற ஆசையினாலே –

கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதுகலித்து ஆவியை ஆகுலம் செய்யும்-
ஆசை உண்டாய் இருக்கச் செய்தேயும் ஸ்த்ரீத்வத்தை நோக்கிக் கிடக்க வேணும் என்கிற என்னைப் போல
இருக்கிறவன வன்றே முலைகள்

கிளர்ந்து –
அவனுக்கு வீங்கா நின்றன
என்னைப் போலே ஆறி இருக்கும் படியோ நான் முலை படைத்தது –
இவளுக்கு நெஞ்சடையாய் இருக்குமே அவை -நெஞ்சை நலிவதாய் -மார்வுக்கு சுமையாய் -சாடு –

குமைத்து
அங்கே இரை பேரா விட்டவாறே தன் முதுகிலே இடா நின்றதாய்த்து

குதுகலித்து
தன் தசையைப் பார்த்து வந்தான் என்று எதிர் கொள்ளப் புறப்படுவாரைப் போலே
கௌதூஹலம் பண்ணா நின்றதாய்த்து

ஆவியை ஆகுலம் செய்யும் –
ஹிருதயத்தை நலிகிறபடி -ஒரு மஹா பாரதத்துக்குப் போரும் –

அங்குயிலே உனக்கு என்ன மறைந்து உறவு ஆழியும் சங்கும் ஒண் தண்டும் தங்கிய கையவனை வரக் கூவில்
நான் இங்கனே கிலேசப் படா நிற்க
உனக்கு வெய்யில் காணாமல் இருக்கும் இடத்தில் இருக்கப் போமோ

எப்போதும் கை கழலா நேமியான் -பெரிய திருவந்தாதி -87- என்கிறபடியே
வினை உண்டான போதாக தேட ஒண்ணாத படி
ஆஸ்ரித ரஷணத்துக்காக எப்போதும் தரித்துக் கொண்டு இருக்கிறவன் வரும்படி கூவுதியாகில்

வாசா தர்ம மவாப் நுஹி -சுத்தர 39-10-
என் சத்தை பெறுகிற்று உனக்கு ஒரு உக்தியே நேர வேண்டுவது
ஒரு வாய்ச் சொல்லாலே தண்ணீர் -ஆறி இராதே இத்தனையும் செய் பந்தலாம் –

நீ சாலத் தருமம் பெறுதி-
சேஸ்வரமான ஜகத்தை ரஷித்தாய் என்னும் ஏற்றம் பெறுதி
பழையத்தை புதியது ஆக்கினாய் யாவுதி

பண்டும் ஒரு பஷி இறே தன்னை அழிய மாறி சரணாகதனை ரஷித்தது-கபோத உபாக்யானம்
இங்கு உன்னை அழிய மாற வேண்டா
ஓர் உக்தியே நேர வேண்டுவது

இவள் இல்லையாகவே அவன் இல்லையாம்
பின்னை உபய விபூதியும் இல்லையாம் அத்தனை இறே

தருமம் பெறுதி என்னாதே –நீ சாலத் தருமம் பெறுதி–என்கிறது
அங்கு நிஷாதன் ஒருவனும் -இங்கு உபய விபூதியும்
தர்மத பரி ரஷிதா–யுத்த 1-12-என்று
அருளிச் செய்தார் இறே பெருமாளும் திருவடியிடம்

——————————————————————————————————-

சார்ங்கம் வளைய வலிக்கும் தடக்கைச் சதுரன் பொருத்தமுடையன்
நாங்கள் எம்மில் இருந்தொட்டிய கச் சங்கம் நானும் அவனும் அறிதும்
தேன்கனி மாம் பொழில் செந்தளிர் கோதும் சிறு குயிலே திருமாலை
ஆங்கு விரைந்து ஒல்லைக் கூகிற்று யாகில் அவனை நான் செய்வன காணே–5-8-

பதவுரை

தேம் கனி–இனிமையான பழங்களை யுடைய
மாபொழில்- மாந்தோப்பிலே
செம் தளிர் கோதும்–சிவந்த துளிர்களை வாயலகால் கொந்துகிற
சிறு குயிலே!–இளங்குயிலே!
சார்ங்கம்–தனது வில்லை
வளைய வலிக்கும்–வளைத்து வலிக்கும் சக்தியை யுடைய
தட கை–பெரிய திருக் கைகளை யுடையனாய்
சதுரன்–ஸகலவித ஸாமர்த்தியமுடையனான எம்பெருமான்
பொருத்தம் உடையன்–ப்ரணயாதியிலும் வல்லமை பெற்றவன்;
நாங்கள்–அவனும் நானும் ஆக இருவரும்
இருந்து–சேர்ந்திருந்து
எம்மில் ஒட்டிய–எங்களுக்குள் ரஹஸ்யமாகச் செய்து கொண்ட
கச்சங்கம்–ஸங்கேதத்தை
நானும் அவனும் அறிதும்–நாங்களிருவருமே அறிவோமேயன்றி வேறொருவரும் அறியார்;
ஆங்கு திருமாலை–தூரஸ்தனாயிருக்கிற ச்ரிய; பதியை
ஒல்லை விரைந்து–மிகவும் சீக்கிரமாக
கூ கிற்றி ஆகில்
நீ
அவனை(பிறகு அவன் இங்கு வந்த பிற்பாடு) அவன் விஷயத்தில்
நான் செய்வன–நான் செய்யப் போகிற மிறுக்குக்களை
காண்–காணக் கடவை

சார்ங்கம் வளைய வலிக்கும் தடக்கைச் சதுரன் பொருத்தமுடையன்
ராம சாபாஸ்ரயாம் வநே –ஆரண்யம் -37-38-என்கிறபடியே
வில் பிடித்த பிடியிலும் -வில் வளைத்த படியிலும் தோற்று இருப்பாள்
ஒரு வீர பத்னி போலே காணும் இவள் தானும்

சதுரன் –
சசால சாபஞ்ச முமோச வீர -யுத்த 59-139-என்கிறபடியே
எதிரிகள் வில் பொகடும்படி வில் பிடிக்க வல்லவர்

பொருத்தமுடையன் –
வீர வாசியிலும் காட்டிலும் பிரணயித்வத்தில் கொத்தை இல்லை இறே –

நாங்கள் எம்மில் இருந்தொட்டிய கச் சங்கம் நானும் அவனும் அறிதும்
பிறருக்கு தெரிவது ஓன்று இல்லை காண் எங்கள் நிலை –
அதாகிறது -இன்றியமையாமை –
ஒருவரை ஒழிய ஒருவர் உளோம் ஆகிறோம் -என்று எங்களில் நாங்கள் பண்ணி வைக்கும் சமயம்
நானும் அவனும் அறியும் அத்தனை
அது நிர்வஹிக்கை உனக்கு பரமாய் இருக்கச் செய்தே ஆறி இரா நின்றாய்

கச்சங்கம் -பிரதிஜ்ஞ்ஞை -வ்யவஸ்தை

சமயம் பண்ணின இடம் இதுவோ என்னில் –
இருவருமான போது-நான் உன்னை ஒழிய ஜீவியேன்-
நான் உன்னை ஒழிய ஜீவியேன் -என்று இறே இருவருக்கும் வார்த்தை
தூதர்க்கு உட்படச் சொல்லக் கடவ –ந ஜீவேயம் ஷணம் அபி – ஊர்த்த்வம் மாசாந்த ஜீவிஷ்யே –
அவர்கள் சேர இருந்தால் சொல்லாது இருப்பாரோ –

தேன்கனி மாம் பொழில் செந்தளிர் கோதும் சிறு குயிலே
என் கார்யம் செய்து தலைக் கட்ட வேண்டும் படி அன்றோ உன்னளவு இருக்கிறது –
தேமாம் பழத்தை புஜித்து-அது தேக்கிட்டு -ரசாந்தரத்தை இட்டு மாற்ற வேணும் என்று
சூழ்ந்த பொழிலில் உண்டான
சிவந்த தளிர் கோதுகிறசிறு குயிலே –

திருமாலை ஆங்கு விரைந்து ஒல்லைக் கூகிற்று யாகில்
நீ அத் தலையிலே சென்று அறிவிக்கும் அத்தனையே வேண்டுவது –
நம் குற்றங்களைப் பொறுப்பித்து பதறி நடந்து வரப் பண்ணுவார் அருகே யுண்டு
அவன் பதறி நடந்து வரும்படி சடக்கென கூவ வல்லையாகில்

அவனை நான் செய்வன காணே–
இவள் படுகிற கிலேசத்துக்கு ஒரு ப்ரேயோஜனம் இல்லை என்று இறே நீ இருக்கிறது
அவன் வந்து கிட்டினவாறே
அவன் பிரிந்து நெடுநாள் என்னைப் படுத்தின பாட்டை எல்லாம்
உன் சந்நிதியிலே அவனை படுத்தும் படி பாராய் –
அது காண்கையே போரும் இ றே உனக்கு பலம்

இவள் தான் அவனை என் எனபது செய்வது -என் என்னில்
முகத்தை மாற வைக்கத் தீருமே அவன் கார்யம்
நெடு நாள் பட்டினி கிடந்தவன் முன்னே சோற்றை இட்டு வைத்து உண்ணாதபடி தகைந்தால் கிடந்தது கிலேசிக்குமா போலே
இவனும் கிடந்தது துடிக்கும் அத்தனை
இவள் முகத்தாலே இறே அவனுக்கு ஊண்–மூலமாகவே –முகத்தை காண்பதாலேயே -சாடு
வண்டார் பூ மலர் மங்கை மணம் நோக்கம் உண்டான்-பெரிய திருமொழி -8-10-1- இறே –

தடக்கை சதுரன் -வீர ஸ்ரீ
பொருத்தமுடையவன் -பிரணயித்வமும் உடையவன்

———————————————————————–

பைங்கிளி வண்ணன்  சிரீதரன் என்பதோர் பாசத்தகப் பட்டிருந்தேன்
பொங்கொளி வண்டிரைக்கும் பொழில் வாழ் குயிலே குறிக் கொண்டிது நீ கேள்
சங்கோடு சக்கரத்தான் வரக் கூவுதல் பொன்வளை கொண்டு தருதல்
இங்குள்ள காவினில் வாழக் கருத்தில் இரண்டைத் தொன்றேல் திண்ணம் வேண்டும்–5-9-

பதவுரை

பொங்கு ஒளி வண்டு–மிக்க வொளியை யுடைய வண்டுகளானவை
இரைக்கும் பொழில்–(மது பாந மயக்கத்தாலே) இசை பாடாநின்ற சோலையிலே
வாழ்- களித்து விளையாடுகிற
குயிலே!–கோகிலமே!,
இது–நான் சொல்லுகிற இதனை
நீ குறிக்கொண்டு கேள்–நீ பராக்கில்லாமல் ஸாவதாநமாய்க் கேள்’
நான்–நான்
பைங்கிளி வண்ணன் சிரி தரன் என்பது ஓர் பாசத்து–பசுங்கிளி போன்ற நிறத்தை யுடையனான ச்ரிய பதி யென்கிற ஒரு வலையிலே
அகப்பட்டு இருந்தேன்–சிக்கிக் கொண்டு கிடக்கிறேன்;
இங்கு உள்ள காவினில்–இந்தச் சோலையிலே
வாழ கருதில்–நீ வாழ நினைக்கிறாயாகில்
சங்கோடு சக்கரத்தான் வரக் கூவுதல்–திருவாழி திருச்சங்குடையனான எம்பெருமான் (இங்கே) வரும்படி கூவுவதென்ன
பொன் வளை கொண்டுதருதல்–(நான் இழந்த) பொன் வளைகளைக் கொண்டு வந்து கொடுப்பதென்ன
இரண்டத்து–இவையிரண்டுள் எதாவதொரு காரியம்
திண்ணம் வேண்டும்–நீ கட்டாயம் செய்து தீர வேண்டும்.

பை -அழகும் -பசுமையும்
பாசம் -நேசமும் கயிறும்

பொங்கொளி வண்டிரைக்கும் பொழில் வாழ் குயிலே குறிக் கொண்டிது நீ கேள் –ஒ குயிலே
என்னுடைய கூக்குரல் உன் காதில் விழாத படி வண்டுகளின் இசைகள் நிரந்த சோலையிலே
அவ விசைகளைக் கேட்டுக் கொண்டு அதுவே போது போக்காக
நீ-திரிந்தாய் ஆகிலும் நான் உன்னை விடுவேன் அல்லேன்

ஏனோ தானோ என்று கேளாதே–வண்டுகளை இசையில் நின்றும் காதுகளை மீட்டுக் கொண்டு
என் வாய்ச் சொல்லை குறிப்பாக கேள் –

-பைங்கிளி வண்ணன் சிரீதரன் என்பதோர் பாசத்தகப் பட்டிருந்தேன்
இப்போது எனக்கு உண்டாயிருக்கும் நோய் என்னால் பரிஹரித்து கொள்ள முடியாதது
அவன் வடிவழகு முதலியவற்றில் தோற்றுப் போய்–
கால் நடையாடாமல்-இருந்த இடத்தே இருக்கும்படியான அவஸ்தையிலே கிடக்கிறேன்
அதாவது

முன்னை அமரர் முதல்வன் வண் துவாபதி மன்னன் மணி வண்ணன் வாசுதேவன் வலையுலே அகப்பட்டேன் -என்றும்
கற்கின்ற நூல் வலையில் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார் கால் வலையில் பட்டிருந்தேன் காண் -என்றும்
சொல்லுகிறபடியே மாதவன் ஆகிற வலையிலே நான் அகப்பட்டுக் கொண்டேன் –

இத்தைக் கேட்ட குயில் நீ வலைப் பட்டு இருந்தால் நான் என்ன செய்ய வல்லேன் -என்று சொல்லி விட்டு
மீண்டும் வண்டுகளின் இசையைக் கேட்பதாகப் பராங்முகமாய் இருக்க –கடுமையாக சொல்கிறாள் –

சங்கோடு சக்கரத்தான் வரக் கூவுதல் பொன்வளை கொண்டு தருதல்
இங்குள்ள காவினில் வாழக் கருத்தில் இரண்டைத் தொன்றேல் திண்ணம் வேண்டும்
குயிலே நீ இச் சோலையில் இருந்து ஜீவிக்க வேணுமே-
என்னை அலட்ஷியம் செய்தால் இதிலே உனக்கு வாழ முடியுமோ
நான் முடிந்து போனால் இச் சோலையை உனக்கு நோக்கித் தருவார் யார்

வலங்கை ஆழி இடக்கை சங்கம் உடையானான எம்பெருமான் இங்கே வரும்படி கூவுதல் ஓன்று
என் கையில் வளைகளைக் கொண்டு வந்து கொடுத்தல் ஓன்று-
இவை இரண்டினுள் ஒன்றை நீ செய்தாக வேணும் என்கிறாள்-
கை வளை தங்குவது எம்பெருமான் சம்ஸ்லேஷத்தால் மட்டுமே ஆகும்-
அதுவும் அவன் வந்தால் அன்றி ஆகாதே

இரண்டு பஷமாக அருளிச் செய்வான் என் என்னில்
சத்யவான் உயிர் மீட்ச சாவித்திரி யமன் இடம்-பல பிள்ளைகள் பிறக்கும்படி அருள வேணும் என்றால் போலே
இதுவும் ஒரு சமத்காரமான உக்தி
ஒரு கார்யத்தாலே இரண்டும் தலைக் கட்டும் இறே

நாராயணாதி நாமங்களை குறிப்பிடாதே சங்கோடு சக்கரத்தான் -என்கையாலே
அவனுடைய ஆபரணத்தை யாவது இங்கே கொண்டு சேர்
அல்லது
என்னுடைய ஆபரணத்தை யாவது கொண்டு கொடு -என்கிற ரசோக்தி

பாசம் –கயிறு -வலை
கார்த் தண் கமலக் கண் என்னும் நெடும் கயிறு -என்று
வலையைக் கயிறாக சொல்லுவதும் உண்டு இறே
பாசம் –ஸ்நேஹம் -ஸ்ரீதர விஷய ஸ்நேஹம் –
ஸ்ரீ தரன் ஆகிற வலையிலே-

—————————————————————————————————–

அன்று உலகம் அளந்தானை யுகந்து அடிமைக் கண் அவன் வலி செய்ய
தென்றலும் திங்களும் ஊடறுத்து என்னை நலியும் முறைமை அறியேன்
என்றும் இக்காவில் இருந்து இருந்து என்னைத் ததைத்தாதே நீயும் குயிலே
இன்று நாராயணனை வரக் கூவாயேல் இங்குத்தை நின்றும் துரப்பன்–—-5-10-

பதவுரை

அன்று–மஹாபலி கொழுத்திருந்த அக் காலத்தில்
உலகம் அளந்தானை–மூவுலகங்களையும் அளந்து கொண்டவனான எம்பெருமான் விஷயத்திலே
உகந்து–நான் கைங்கர்யத்தை ஆசைப்பட,
அவன்–அவ் வெம்பெருமான்
அடிமைக் கண்–(அந்த) கைங்கரியத்திலே
வலி செய்ய–வஞ்சனை பண்ண
(அதற்கு நான் நோவு பட்டிருக்கிற சமயத்திலே)
தென்றலும்–தென்றல் காற்றும்
திங்களும்–பூர்ண சந்திரனும்
என்னை–என்னை
ஊடு அறுத்து நலியும் முறைமை–உள்ளே பிளந்து கொண்டு புகுந்து ஹிம்ஸிக்கும் நியாயத்தை
அறியேன்–அறிகின்றிலேன்
குயிலே!–ஓ குயிலே!
நீயும்–(என்னுடைய க்ஷேமத்தை விரும்புமனான) நீயும்
என்றும்–எந்நாளும்
இக் காவில்–இந்தக் சோலையிலே
இருந்து இருந்து–இடைவிடாமலிருந்துகொண்டு
என்னை–(ஏற்கனவே மெலிந்திருக்கிற) என்னை
ததைத்தாதே–ஹிம்ஸியாமலிரு,
இன்று–இன்றைக்கு
நாராயணனை வர கூவாயேல்–ஸ்ரீமந்நாராயணன் இங்கே வரும்படி அவனை நீ கூவாமற் போனாயாகில்
இங்குத்தை நின்றும்–இந்தச் சோலையிலிருந்து
துரப்பன்–உன்னைத் துரத்தி விடுவேன்.

அன்று உலகம் அளந்தானை யுகந்து அடிமைக் கண் அவன் வலி செய்ய
வசிஷ்ட சண்டாள விவாகம் அற வரையாதே –
எல்லார் தலையிலும் திருவடிகளை வைக்குமவனை ஆசைப் பட்டு
உறங்குகிற பிரஜைக்கு முலை கொடுக்கும் தாயைப் போலே
இவை அறியாது இருக்கச் செய்தே –
அவற்றின் தலைகளிலே தனது திருவடிகளை வைத்தவனை உகந்து –

அடிமைக் கண் அவன் வலி செய்ய-
பெறவுமாய் இழக்க்கவுமானத்தையோ நான் ஆசைப் பட்டது –
பெற்று அல்லது சத்தை இல்லாத ப்ராப்திபலமான கைங்கர்யத்தை நான் ஆசைப்பட
அவ்வடிமை இடையாட்டத்திலே அவன் மிறுக்கடிக்க-

தென்றலும் திங்களும் ஊடறுத்து என்னை நலியும் முறைமை அறியேன்-
அதில் வாசி அறியாதவர்கள் என்னை நலியும் முறைமை அறிகிறிலேன்-
அடிமையில் வாசி அவை அறியா விறே
அவன் அளந்த கால் வாசியும் கூட அறியாதவை இறே

ராவணன் நடுவே வந்து நலிந்தால் போலே
தென்றலும் சந்திரனும் நடுவே வந்து என்னை நலிகைக்கு ஈடாக இருப்பதொரு
முறை யுண்டாக அறிகிறிலேன்

தங்களுக்கு கடவார்க்கு -கடவாரைச் சேர்க்க முறை யுண்டு –
தங்களுக்கு கடவார் -அவன் –
அவனுக்கு கடவார் -அவள் —
அப்படி சேர்த்து செய்த திருவடிக்கு உண்டான ஆகாரம் இல்லை
அத்தனை அல்லது நலிகைக்கு முறை இல்லை இறே

புத்ரனுக்கு உண்டான பரிவிலே கால் கூறும் இல்லை காண் -இக்காற்றுக்கு –
அவனால் படைக்கப் பட்ட இவை புத்ர ஸ்தானம் இறே –

என்னை நலியும் முறைமை அறியேன்–
தன்யா லஷ்மண சேவந்தே பாம்போ பவன மாருதம் –கிஷ்கிந்தா -1-105-என்று
அவனும் கால் கண்ட மாத்ரத்திலே படுமது அறியானே –
கார் ஏறு உழக்க உழக்குண்டு தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை –13-4–
தான் கிடக்குமா போலே இறே அவன் காலால் துகை உண்ணும் படி

என்றும் இக்காவில் இருந்து இருந்து என்னைத் ததைத்தாதே
அவை நலிகிற நலிவு காதாசித்கம் இறே –
என்றும் ஒக்க இச் சோலையிலே இருந்து என்னை நோவு படுத்தாதே
ஏக தேச வாசித்வத்தால் வந்த பாந்த்வமே ஹேதுவாக நலிவு படுத்தாதே –

நீயும் குயிலே இன்று நாராயணனை வரக் கூவாயேல் –
இத்தை உடையவனாய் –
உடைமை தான் அசித் சம்ஸ்ருஷ்டமாய்த்து என்று கால் கடைக் கொள்ளாதே
அழுக்கு உகப்பாரைப் போலே அது தன்னோடு விரும்பும்படியாய் இருக்கிறவனை வரும்படி கூவாயாகில் –

இங்குத்தை நின்றும் துரப்பன்-
ஒட்டுவன் –
ஒட்டுவன ஒட்டி -இருத்துவன இருத்தி செய்கிறவள் அல்ல இறே இவள்
ஆனால் சொல்லுகிறது என் என்னில் -நான் முடிவன் –
பின்னை இங்கு நின்றும் புறப்பட்டுப் போம் அத்தனை கிடாய்

நான் உளேனாய்ச் சோலை நோக்கித் தர வேணுமே –
நான் முடிந்தால் பின்னை உனக்கு இருப்பு இல்லை கிடாய் -என்கிறாள் –

——————————————————————————————————

விண்ணுற நீண்டடி தாவிய மைந்தனை வேல் கண் மடந்தை விரும்பி
கண்ணுற வென் கடல் வண்ணனைக் கூவு கரும் குயிலே என்ற மாற்றம்
பண்ணு நான் மறையோர் புதுவை மன்னன் பட்டர் பிரான் கோதை சொன்ன
நண்ணுற வாசக மாலை வல்லார் நமோ நாராயணாய என்பாரே–——5-11-

பதவுரை

வேல் கண்–வேல் போன்ற கண்களை யுடையளாய்
மடந்தை–பெண்மைக்கு உரிய குணங்கள் நிறைந்தவளாய்
கண் உறு நால்மறையோர் புதுவை மன்னன் பட்டர் பிரான் கோதை–ஸ்வரூப தனமான நான்கு வேதங்களையும்
ஒதின ஸ்ரீவில்லிபுத்தூர்க்குத் தலைவரான பெரியாழ்வாருடைய மகளான ஆண்டாள்,
அடி விண் உற நீண்டுதாவிய மைந்தனை–திருவடியானது பரமாகாசத்தளவும் போய்ப் பொருந்தும் படியாக
நெடுக வளர்ந்து (உலகங்களை) வியாபித்தமிடுக்கை யுடையனான எம்பெருமானை
விரும்பி–ஆசைப் பட்டு
கருங் குயிலே! என் கடல் வண்ணனை கண் உறகூவு என்ற மாற்றம்–‘ஓகரியகுயிலே! கடல் போன்ற
திரு நிறத்தை யுடையனான என் காதலனை நான் ஸேவிக்கும்படி நீ கூவு என்று நியமித்த பாசுரமாக
சொன்ன–அருளிச் செய்த
நண்ணுறு வாசகம் மாலை–போக்யமான (இந்த) ஸ்ரீ ஸூக்தி மாலையை
வல்லார்–ஓத வல்லவர்கள்
‘நமோநாராயணாய்‘ என்பர்–எம்பெருமானுக்கு அந்தரங்க கிங்கரராகப் பெறுவர்கள்

நிகமத்தில்
இத் திருமொழியை அப்யசித்தவர்கள்
ஸ்வரூப அநு ரூபமான புருஷார்த்தத்தை பெறுவார் –
என்கிறாள்

-விண்ணுற நீண்டடி தாவிய மைந்தனை –
ஒருவர் பக்கலிலே ஒன்றைக் கொள்ள நினைத்தால்
அவர்களுக்கு பின்னை ஒன்றும் சேஷியாதபடி கொள்ளுகிறவனை-

வேல் கண் மடந்தை விரும்பி-
அவனை இப்பாடு படுத்தும் இப் பரிகரம் உடையவள் தான் ஆதரித்து –
வேல்கள் ஒரு முகம் -ஓன்று கூடி -ஒரு முகத்திலே அமைந்து –செய்து நிற்கச் செய்தே கிடீர்
தான் ஈடுபட்டது அவனுக்கு –

கண்ணுற வென் கடல் வண்ணனைக் கூவு கரும் குயிலே என்ற மாற்றம்-
கண்ணுற –
அவன் தன்னை வேலுக்கு இரையாக்கத் தேடுகிறாள் –
என் கண்ணுக்கு விஷயமாம்படி ஸ்ரமஹரமான வடிவை யுடையவன் வரும்படி –

கூவு கரும் குயிலே என்ற மாற்றம்–
உன் வடிவைக் காட்டி அவன் வடிவுக்கு ஸ்மாகரமான நீ
என்னையும் அவனையும் சேர்க்க வேணும் -என்று சொன்ன பாசுரமாய்த்து –

பண்ணு நான் மறையோர் புதுவை மன்னன் பட்டர் பிரான் கோதை சொன்ன-
ஸ்வர பிரதானமான நாலு வேதங்களும் வைத்து இருப்பவர்கள் –
ஸ்ரீ வில்லி புத்தூருக்கு நிர்வாஹகரான பெரியாழ்வார் திருமகள் சொன்ன –

நண்ணுற வாசக மாலை வல்லார் நமோ நாராயணாய என்பாரே——
யதோ வாசோ நிவர்த்தந்தே -என்று மீண்ட வேதம் போல் அன்றிக்கே
விஷயத்தை மாறுபாடுருவும் படி அருளிச் செய்த இத்தை அப்யசிக்க வல்லவர்கள்

நமோ நாராயணாய வென்று பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்து இருந்து
ஏத்துவார் பல்லாண்டே
-என்று இறே தமப்பனார் வார்த்தை
இக்குடிக்காக உள்ளதோர் ஆசை இறே இது –மங்களா சாசனம் -அதுவே பலமாகப் பெறுவர்-

நல்லாண்டு என்று நவின்று பல்லாண்டு என்று உரைப்பார் நமோ நாராயணா வென்று –
பல்லாண்டும் ஏத்துவர் இறே–தத் க்ரது நியாயத்தாலே பேறாகையாலே-

க்ரது -சங்கல்பம் –
இங்கே சங்கல்ப்பித்த பேற்றை அங்கே பெற்று அனுபவிக்கப் பெறுவர்
யதா க்ரதுரஸ்மின் லோகே புருஷோ பவதி ததேத ப்ரேத்ய பவதி -சாந்தோக்யம் -3-1-14-உபாசனம் போலே பேறு
காதாசித்கமாகை தவிருகையே உள்ளது
பிராப்ய பூமியிலே புக்கிருந்து இப் பாசுரம் சொல்லி அனுபவிக்கப் பெறுவர் –

——————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ நாச்சியார் திரு மொழி – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் -நான்காம் திருமொழி —

September 4, 2015

அவதாரிகை –

இவனும்
பெண்களுடைய பரியட்டங்கள் எல்லாம் வாரிக் கொண்டு போய் குருந்தின் மேலே ஏறி இருக்க
இவர்களும்
அநு வர்த்தித்தும் –
வைதும்-
இப்படி பஹூ பிரகாரங்களாலே
அவனுக்கு கொடுத்து அல்லது நிற்க ஒண்ணாத படி
சிலவற்றைச் செய்து –
அவனும் கொடுக்க –
இவர்களும் பெற்றார்களாய் நின்றது –

இவனும் இவை கொடுத்து அவர்களும் அவை பெற்று
சம்ஸ்லேஷம் வ்ருத்தமானாலும் அது தானும் விஸ்லேஷ அந்தமாய் அல்லாது இராது இறே

சம்யோகா விபர யோகாந்தா -அயோத்யா -105-16-
சம்சாரத்தில் போகங்கள் நிலை நில்லாதாகையாலே –
அவனும் பேர நிற்க –
இவர்களும் இன்னமும் ஒரு கால் பரியட்டம் உரிய வல்லேனே –
என்று அதுக்கு கூடல் இழைக்கிறார்கள் இத்தனை-

இங்குத்தைப் பரிமாற்றம் பேறும் இழவுமாய்ச் செல்லும் அத்தனை இறே
இது தான் இதர விஷய லாபத்தில் காட்டில் நன்றாய் இருக்கும் இறே
பேறு இழவுகள் இவ் விஷயத்தில் ஆகப் பெறுவதே –

பரம சேதனனை விட்டு அசேதன க்ரியா கலாபங்களைக் கொண்டு பெறப் பார்ப்பாரைப் போலே
சர்வேஸ்வரனைப் பெறுகைக்கு

அசேதனமான கூடலின் காலிலே விழுகிறாள்

வ்ருத்த ஹீனனான கிருஷ்ணனை -ஆசாரம் இல்லாத -கைம்முதல் எதிர்பாராத கிருஷ்ணனை –
வ்ருத்தவதியாய்ப் பெறப் பார்க்கிறாள்
காணும்

இத்தனை கலங்காத வன்று
பிரிந்த விஷய வைலஷண்யத்துக்கு நமஸ்காரமாம் இத்தனை இறே –

—————————————————————————–

தெள்ளியார் பலர் கைந்தொழும் தேவனார்
வள்ளல் மாலிரும் சோலை மணாளனார்
பள்ளி கொள்ளும் இடத்து அடி கொட்டிட
கொள்ளுமாகில் நீ கூடிடு கூடிலே–4-1-

பதவுரை

கூடலே–கூடல் தெய்வமே!
தெள்ளியார் பலர்–தெளிவுடைய பக்தர்கள் பலர்
கை தொழும்–கைகளார வணங்கப் பெற்ற
தேவனார்–ஸ்வாமியாய்
வள்ளல்–பரமோதாரனாய்
மாலிருஞ்சோலை மணாளனார்–திருமாலிருஞ் சோலையிலே எழுந்தருளி யிருக்கிற மணவாளப் பிள்ளையாகிய பரம புருஷன்
பள்ளி கொள்ளும் இடத்து-பள்ளி கொண்டருளுமிடத்திலே
அடி கொட்டிட–(அவனுடைய) திருவடிகளை நான் பிடிக்கும்படியாக
கொள்ளும் ஆகில்–(அவன்) திருவுள்ளம் பற்றுவனாகில்
நீ கூடிடு–நீ கூட வேணும்

காதாசித்க சம்ஸ்லேஷத்துக்கு தான் இன்று இருந்து கூடல் இழைக்கப் புக்க வாறே
நித்ய அனுபவம் பண்ணுகிறவர்களை நினைத்தாள்

தெள்ளியார் –
அவர்களும் சிலரே –
அலாபத்தோடே இருந்து கூடல் இழையாதே-லாபத்தோடு இருந்து -போது போக்குகிற வர்களும் சிலரே –
பிரியில் சர்வதா கூடல் இழைக்க வேணும் என்று அறிந்து-
பிரியாதே நித்ய அனுபவம் பண்ணும் அத்தனை -அளவுடையவர்கள் ஆயத்து –

(கலக்கமில்லா நல் தவ முனிவர் கரை கண்டோர்
துளக்கமில்லா வானவர் எல்லாம் தொழுவார்கள்
மலக்கமெய்த மா கடல் தன்னைக் கடைந்தானை
உலக்க நாம் புகழ் கிற்பது என் செய்வதுரையீரே–8-3-10-)

பலர் –
த்ரிபாத் விபூதியாக அனுபவத்தோடு காலம் செல்லுகிறது இறே
இங்கு தான் ஒருத்தியுமாய் -கூடல் இழையா நின்றாள்
இங்கு வ்ருத்த கீரத்த நத்துக்கும் ஆளில்லை –
அங்கு வ்ருத்த கீர்த்தனம் பண்ண வேண்டா –
பெற்ற அனுபவத்தை பேசிப் போது போக்காமல் நித்தியமாய் அனுபவம் செல்லுமே

கைந்தொழும்-
நித்ய அஞ்சலி புடா -என்கிறபடியே தொழுகையே யாத்ரையாய் இருக்குமவர்கள்

தேவனார்-
இவர்கள் தொழுது உளரானார் போலே
இவர்களைத் தொழுவித்துக் கொண்டு உஜ்ஜ்வலனாகா நிற்குமவன்

வள்ளல் -மாலிரும் சோலை-
லுப்தனாய் இருக்குமவன் –கையிலே குவாலாக உண்டாய் இருக்கச் செய்தேயும்
ஓன்று கழியிலும் அத்தைக் குறைவாக நினைத்து இருக்குமா போலே
நித்ய விபூதியும் -நித்ய அனுபவம் பண்ணுவாரும் உண்டாய் இருக்கச் செய்தேயும்
அவ்விருப்பு உண்டது உருக்காட்டாதே
சம்சாரிகள் இழவை அனுசந்தித்து
உடம்பு வெளுத்து அவ்விருப்பை இங்கு உள்ளாறும் பெற வேணும் என்னும் கிருபையாலே
திருமலை அளவும் வந்து –

தன்னை அனுபவிப்பைக்கு அவசர ப்ரதீஷனாய் நிற்கும் நிலையைச் சொல்கிறது

நித்ய விபூதியும் தானுமாய் இருக்கச் செய்தே இறே இவை அழிந்தது கொண்டு
ச ஏகாகி ந ரமேத – -என்கிறது
தன்னை சர்வ ஸ்வதானம் பண்ணி கொண்டாய்த்து நிற்கிறது –

(ந தே ரூபம் ந ச ஆகார -ந ச ஆஸ்பதம் பக்தாநாம் பரஸாததே)

மணாளனார்-
தன்னைக் கைக் கொள்ளுகைக்காக வந்து நிற்கும் இடமாய்த்து –

மணாளனார் –
ஸ்ரீ கோபீமாரைப் போலே யமுனா தீரங்களிலே பிருந்தா வனத்திலே
இரவும் இருட்டும் தேடி ஒளி களவிலே யாக ஒண்ணாதே
பெரியாழ்வார் பெண் பிள்ளையை –
வேதப் பயன் கொள்ள வல்ல விட்டுச்சித்தர் –
பெரியாழ்வார் -2-8-10-ஆகையாலே
ஒரு கோத்ர ஸூத்ரப்பட செய்ய வேணும் என்று வந்து நிற்கிறான் திருமலையிலே –
கோத்ரம் -சாடு பர்வதம் –

(ஸூத்ரம் -மலையின் உச்சி -மங்கள ஸூத்ரத்துடன் வந்து நிற்கிறான் அன்றோ -ஆகவே மணாளன் ஆவதற்கு யோக்யதை யுண்டே

ஐந்து கருட சேவை இன்றும் உண்டே -)

மணாளனார் பள்ளி கொள்ளும் இடத்து –
பிரணயிநி முகம் காட்டுவது ஓலக்கத்திலே அன்றே –படுக்கையிலே இறே –
அதாகிறது –கோயிலாய்த்து –

பள்ளி கொள்ளும் இடமாகிறது கோயில் என்று பட்டர் அருளிச் செய்ய நான் கேட்டேன் –
என்று பிள்ளை அழகிய மணவாள அரையர் பணிப்பர்
பள்ளி கொள்ளும் இடம் -ஏகாந்தம் –

அடி கொட்டிட
உணர்ந்து இருக்கும் போது அடிமை செய்து போகை அன்றிக்கே
பள்ளி கொள்ளும் போதும் அதுக்கு வர்த்தகமான அடிமை செய்து வர்த்திக்க வாய்த்து சொல்லுகிறது
ஸ்வரூப அநு ரூபமான வ்ருத்தியிலே அன்வயிக்க வாய்த்து கணிசிக்கிறது
இது வாய்த்து பிராப்தி பலம் –நிலமகள் பிடிக்கும் மெல்லடி -திருவாய் -9-2-10-

கொள்ளுமாகில் –
அதில் உபாய அம்சம் இருக்கும் படி-
அவன் நினைவாலே பேறாக வாய்த்து நினைத்து இருப்பது
முமுஷூக்களுடைய யாத்ரை இருக்கும் படி

நீ கூடிடு கூடிலே–
அவனாலே பேறு என்று இருக்கச் செய்தேயும்
அசேதனமான கூடலின் காலிலே விழும்படி இருக்கிறதே
பிராப்ய த்வரை-

—————————————————————————

அவன் என்னைப் பெறுகைக்கு சாதனானுஷ்டானம் பண்ணுகையிலே
உத்யுக்தரைப் போலே இருந்தான்
அதன் பலம் நான் பெறும்படி பண்ண வல்லையே -என்கிறாள் –

காட்டில் வேங்கடம் கண்ணபுரநகர்
வாட்டமின்றி மகிழ்ந்துறை வாமனன்
ஓட்டரா வந்து என் கைப்பற்றி தன்னோடும்
கூட்டுமாகில் நீ கூடிடு கூடலே-–4-2-

பதவுரை

கூடலே!-’-
காட்டில் வேங்கடம்–காட்டிலுள்ள திருவேங்கடமலையில
நகர் கண்ணபுரம்– நகரமாகிய திருக்கண்ண புரத்திலும்
வாட்டம் இன்றி–மனக் குறை யில்லாமல்
மகிழ்ந்து–திருவுள்ளமுகந்து
உறை–நித்ய வாஸம் செய்தருளுகிற
வாமனன்–வாமநாவதாரம் செய்தருளிய எம்பெருமான்
ஒட்டரா வந்து–ஓடி வந்து
என் கை பற்றி–என்னுடைய கையைப் பிடித்து
தன்னொடும்–தன்னொடு
கூட்டும் ஆகில்–அணைத்துக் கொள்வனாகில்
நீ கூடிடு–நீ கூடவேணும்

காட்டில் வேங்கடம் கண்ணபுரநகர்
காட்டிலே உண்டான வேங்கடம் -என்னுதல்
காட்டை இல்லாக உடைய வேங்கடம் -என்னுதல்

ஸ்ரீ தண்ட காரண்யத்தில் ரிஷிகளோடே இருந்து –
வனவாச ரசம் அனுபவித்தால் போலே யாய்த்து -திருமலையில் இருப்பு –
திரு அயோத்யையில் இருக்குமா போலே யாய்த்து
திருக் கண்ண புரத்திலே எழுந்து அருளி இருக்கும் இருப்பு

அன்றியே
ஸ்ரீ பிருந்தாவனம் திருவாய்ப்பாடியும் போலே யாதல்
பரம பதத்தில் நித்ய ஸூரிகளுக்கு தன்னை அனுபவிக்கக் கொடுத்து கொண்டு இருக்குமவன் இறே
கானமும் வானரமும் வேடுமான -நான்முகன் திரு -47-
இவர்களுக்கு காட்சி கொடுத்துக் கொண்டு திரு மலையிலே வந்து நிற்கிறான்

(நன் மணி வண்ணனூர் ஆளியும் கோளரியும்
பொன் மணியும் முத்தமும் பூ மரமும் -பன் மணி நீர்
ஓடு பொருதுருளும் கானமும் வானரமும்
வேடுமுடை வேங்கடம் -47-)

வாட்டமின்றி –
பரம பதத்தில் நித்ய ஸூரிகள் அனுபவிக்கக் கடவ நாம் –
அவ்விடத்தை விட்டு இவர்கள் நடுவே இரா நின்றோம் என்று திரு உள்ளத்திலே ஒரு வாட்டமும் இன்றிக்கே

மகிழ்ந்துறை வாமனன்
அவர்கள் நடுவே நிரதிசய ஆனந்த உக்தனாய் இருக்குமா போலே
நிரவதிக ப்ரீதி உக்தனாய் இருந்து
அவதாரங்கள் போல் தீர்த்தம் பிரசாதியாதே நித்ய வாசம் பண்ணுகிற
தன்னுடைமை பெறுகைக்கு தான் இரப்பாளனாமவன்-

ஓட்டரா வந்து என் கைப்பற்றி தன்னோடும்
ஓரடிக் கழஞ்சு மண்ணுக்கு பதறுமவன் இவளைப் பெற்றால் இரான் இறே
ஆசூரப் பிரக்ருதியான மகாபலி முன்னே கழஞ்சு மண்ணுக்கு பதறி நடக்குமவன்
இவள் ஒருதலையானால் ஆறி இரான் இறே

ந பிரமாணீ கருத பாணி பால்யே பாலேன பீடித -யுத்த – 119-16-என்கிறபடியே
அம் கண்ணன் உண்ட என்னாருயிர் கோது இது -திருவாய் -9-6-6-என்னுமா போலே
பிடித்த பிடியிலே அனன்யார்ஹமாம் படி பிடித்து –

(எம் கண்ணன் கள்வம் எனக்குச் செம்மாய் நிற்கும்
அம் கண்ணன் உண்ட என் ஆர் உயிர்க்கோது இது
புன் கண்மை எய்திப் புலம்பி இராப்பகல்
என் கண்ணன் என்று அவன் காட் கரை ஏத்துமே-9-6-6-)

தன்னோடும் கூட்டுமாகில்
நான் தன கர ஸ்பர்சத்தாலே துவண்டு ஸ்தப்தையாய் நிற்க –
அணைத்து ஏறிட்டுக் கொள்ளுமாகில்

நீ கூடிடு கூடலே—
அவன் பக்கல் குறையில்லை
உன் தலை துலுக்குகை கிடாய் வேண்டுவது

ஸ்வா பதேசத்தில் கூடல் மனஸ்சைக் குறிப்பதால் எம்பெருமான் எதிர் சூழல் புக்கு திரிந்தாலும்
பேற்றைப் பெறுகைக்கு இசைவு இச்சை வேணுமே –

தலை துலுக்கு -இசைவு -நீ கூடுகை -என்றபடி –

——————————————————————————–

பூ மகன் புகழ் வானவர் போற்றுதற்கு
ஆமகன் அணி வாணுதல் தேவகி
மாமகன் மிகு  சீர் வசுதேவர் தம்
கோமகன் வரில் கூடிடு கூடலே–4-3-

பதவுரை

பூ மகன்–பூலிற் பிறந்த பிரமனும்
வானவர்–நித்யஸூரிகளும்
புகழ் போற்றுதற்கு–கீர்த்தியைப் பாடித் துதிப்பதற்கு
ஆம்–தகுந்த
மகன்–புருஷோத்தமனாய்,
அணி வாள் நுதல் தேவகி–மிகவும் அழகிய நெற்றியையுடைய தேவகியினுடைய
மா மகன்–சிறந்த புத்திரனாய்,
மிகு சீர் வசுதேவர் தம்–மிகுந்த, நற் குணங்களை யுடையரான வசுதேவருடைய
கோ மகன்–மாட்சிமை தங்கிய புத்திரனான கண்ணபிரான்
வரில்–(என்னை அணைக்க) வருவானாகில்
கூடலே! கூடிடு-

பூ மகன்
இந்த விபூதி

புகழ் வானவர்
லஷ்மி சம்பன்ன -பால -18-28–போலே அங்குள்ளார்

போற்றுதற்கு ஆமகன் –
நாவேவ யாந்தம் உபயே ஹவந்தே
இரண்டு கரையில் உள்ளாறும் நடுவே போகிற ஓடத்தை அழைக்குமா போலே

அணி வாணுதல் தேவகி-
அழகிய ஒளியை உடைத்தாய்
வேறு ஒரு ஆபரணம் மிகையான நுதலை யுடைய தேவகிக்கு

மாமகன்
அவள் வளர்த்த செருக்காலே மகன் அல்ல -உடன் பிறந்தான் என்னலாம் படி –
மிக்க மகன்
தாய் வழியால் வந்த ஏற்றம் ஒன்றுமேயோ உள்ளது -என்ன –

மிகு  சீர் வசுதேவர் தம்- கோமகன்-
கோவான மகன் –
சக்கரவர்த்திக்கு போலே நியாம்யன் அல்லன்
இவர் தம்மையும் நியமிக்கும் மகன்

அவரை நியமிக்கையாவது -கம்ச பயத்தாலே இவனுக்கு என் வருகிறதோ என்று வயிறு பிடித்தால்
அப்பரே நீர் என் பயப்படுகிறீர்
அஞ்சாதே நான் சொல்வதைக்   கேட்டு சுகமாய் இரும் -என்றால் போலே நியமிக்கை

வரில் –
இரண்டு பிறப்பாலும் உள்ள -இருவர் சாயையும் தோற்ற -நடையிலே நடந்து வருமாகில்

கூடிடு கூடலே-
நீ கூடி என்னையும் அவனையும் கூட்டு –

—————————————————————————

ஆய்ச்சிமார்களும் ஆயரும் அஞ்சிட
பூத்த நீள் கடம்பேறிப் புகப் பாய்ந்து
வாய்த்த காளியன் மேல் நடமாடிய
கூத்தனார் வரில் கூடிடு கூடலே–4-4-

பதவுரை

ஆய்ச்சிமார்களும்–இடைச்சிகளும்
ஆயரும்–இடையரும்
அஞ்சிட–பயப்படும்படியாக,
பூத்த நீள் கடம்பு ஏறி–புஷ்பித்ததாய் உயர்ந்திருந்த கடப்ப மரத்தின் மேல் ஏறி
புக பாய்ந்து–(அங்கு நின்றும் எழும்பிக் குதித்து)
வாய்த்த காளியன் மேல் நடம் ஆடிய–நர்த்தனஞ் செய்த
கூத்தனார் வரில் கண்ணபிரான் வரக்கூடுமாகில்–பாக்கியசாலியான காளியநாகத்தின் மேல் நாட்ய சாஸ்த்ர நிபுணனான
கூடலே! கூடிடு-

ஆய்ச்சிமார்களும் ஆயரும் அஞ்சிட-
பயமே ஸ்வ பாவம் ஆனவர்களும் –
பயம் வ்யுத்பத்தி பண்ணி அறியாதவர்களும் –

உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன் நந்தகோபன்- போல்வாரும்
அதுவே போர்க்களமாக இறே ந்ருத்தம் செய்தது – –
போர்க்களமாக ந்ருத்தம் செய்த பொய்கைக் கரை
-12-7-

பூத்த நீள் கடம்பேறிப் புகப் பாய்ந்து
விஷ தக்தமான கடம்பு -திருவடிகள் பட்டவாறே பூத்தது
அங்கோல தைலத்துக்கு உள்ள சக்தியும் இங்கு இல்லை அன்றே –
கல்லு பெண்ணானால் கடம்பு பூக்கச் சொல்ல வேணுமோ

நீள் கடம்பு –
இலக்கு வாய்க்கைக்காக உயர ஏறிப் பாய்ந்தான்

புகப் பாய்ந்த –
கால் ஆழக் குதிக்க

வாய்த்த காளியன்
தன் முலைகளிலே -இவள் கணிசிக்கும் நடமடைய அவன் தலையிலே பெற்றான்
அமிர்தம் பொதிந்த முலைகள் பெறாது ஒழிவதே –

மேல் நடமாடிய-
ந்ருத்த சாஸ்தரத்துக்கு ஸூத்ரம் இறே –
ஸ்ரீ பாஷ்யத்துக்கு ஸூத்ரம் போலே –

கூத்தனார் வரில் –
ஆடின ஒசிவோடே வந்து அணைய வேணும்

கூடிடு கூடலே-
உன் இசைவு கொண்டு பெற இருக்கிறேன் நான் –

———————————————————————————–

மாட மாளிகை சூழ் மதுரைப் பதி
நாடி நந்தெருவின் நடுவே வந்திட்டு
ஓடை மா மதயானை யுதைத்தவன்
கூடுமாகில் நீ கூடிடு கூடலே—4-5-

பதவுரை

ஓடை–நெற்றிப் பட்டத்தை யுடைத்தாய்
மா மதம்–மிக்க மதத்தை யுடைத்தான
யானை–(குவலயா பீடமென்னும்) யானையை
உதைத்தவன்–உதைத்து முடித்த கண்ண பிரான்
மாடம் மாளிகை சூழ் மதுரை பதி–மாடங்களுடைய மாளிகைகளாலே சூழப்பட்ட மதுரை மாநகரிலே
நாடி–(நம் வீட்டைத்) தேடிக் கொண்டு
நம் தெருவின் நடுவே வந்திட்டு–நம்முடைய வீதியின் நடுவிலே வந்து
கூடும் ஆகில் -(நம்மோடு) கட்டுவானாகில்
கூடலே! நீ கூடிடு

ஓடை -நெற்றிப் பட்டத்தை உடையதாய்
நாடி -நம் வீட்டைத் தேடிக் கொண்டு –

மாட மாளிகை சூழ் மதுரைப் பதி-நாடி நந்தெருவின் நடுவே வந்திட்டு
அவன் விழ விழவுக்கு என்று கோடித்தான்-
இவள் இவன் வரவுக்கு என்று இருந்தாள் -மாட மாளிகைகள் சமைத்து அலங்கரித்தது –

நாடி
நேர வந்து புகுர ஒண்ணாது
இன்னாள் வீடு எது -இன்னாள் வீடு எது என்று ஊர் இரியலிடத் தேடி விட்டு –
ஆரவாரம் பண்ணித் தேடி விட்டு –விடாய் எல்லாம் தோற்ற –
முதா யுக்தௌ மாலாகாரா க்ருஹம் கதௌ-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-9-17-
மாலாகாரருக்கு முடுக்குத் தெருவிலே இறே அகம் –
பெரும் தெரு எல்லாம் தேடி முடுக்குத் தெருவிலே கண்டு கொண்டான் இறே

பிரசாத பரமௌ-பிரசாதமே விஞ்சி இருப்பது
நாதௌ-இது தர்மம் என்கைக்கு ஒரு தர்மி யுண்டித்தினை
மம கேஹம் உபாகதௌ-நாதத்வம் மிக்கு இருக்கில் அழைத்து அன்றோ காண்பது –
தன்யோஹம் -ஆரும் தேடித் பெறாத நதியை -இருந்த இடத்தே எடுத்துக் கொள்ளப் பெற்றேனே
அர்ச்சயிஷ்யாமி -ஸ்வரூப அநுகுணமாக பெற்ற நிதியை அழித்து புஜிப்பேன்-
தக்கவாறு மாற்றி அர்ச்சனம் வந்தனம் போன்றவற்றால் அனுபவிப்பேன் -என்றபடி
இதி -இப்பாசுரம் ஆர் சொன்னார் என்னில்
மால்யோபஜீவன -போக்யதை விற்று உண்கிறவன்-
பார்யையை விற்று உண்பாரைப் போலே –
முகத்தை திரிய வைத்து இறே மாலை கட்டுவது
இதிலே சாண் மாலை அழியாமைக்காக
ஆஹா -இவனை இவ்வரவு இப்படியாக்கி -சொல்லுவிப்பதும் செய்தது –என்கிறான்
இவள் தானும் ஒரு மாலாகாரர் மகள் இறே

நம் தெரு –
திருவாய்ப்பாடி அடைய தன்னது ஆனால் போலே இங்கும் –
வட மதுரை மா நகரிலும் -ஒரு திரு மாளிகை யுண்டு –
உகந்து அருளிய இடம் எங்கும்
தேவத்வேதேவ தே ஹேயம் மனுஷ்யத்வே ச மானுஷீ -ஒரோ திரு மாளிகை யுண்டு –
இன்னாள் அகத்துக்கு என்று முகம் தெரியாதபடி அகத்தளவும் தெருவின் நடுவே வர வேணும்

ஓடை மா மதயானை யுதைத்தவன்-கூடுமாகில் நீ கூடிடு கூடலே–
ஓடை -முக படமுமாம் -பட்டமுமாம் –

மா மத யானை -களிப்பித்தார்கள் மத த்ரவ்யங்களாலே
மதத்தாலே செருக்கித் திமிர்த்து நின்றது –
திருவடிகளாலே உதைத்தவன் –

கூடுமாகில் –
விரோதி போய்த்து -நீ கூட்டித் தரும் இத்தனை –

—————————————————————————

அற்றவன் மருத முறிய நடை
கற்றவன் கஞ்சனை வஞ்சனையில்
செற்றவன் திகழும் மதுரைப்பதி
கொற்றவன் வரில் கூடிடு கூடலே–4-6-

பதவுரை

அற்றவன்–(ஏற்கனவே எனக்கு) அற்றத் தீர்ந்தவனாய்
மருதம் முறிய–யமளார்ஜுந மென்னும்) மருத மாங்களானவை முறிந்து விழும்படியாக
நடை கற்றவன்–தவழ் நடை நடக்கக் கற்றவனாய்
கஞ்சனை–கம்சனை
வஞ்சனையில்–வஞ்சனையிலே
செற்றவன்–கொன்று முடித்தவனாய்
திகழும் மதுரை பதி கொற்றவன்–விளங்குகின்ற மதுதைமா நகர்க்கு அரசனான கண்ணபிரான்
வரில்–வந்திடுவானாகில்
கூடலே! கூடிடு-.-

அற்றவன் மருத முறிய நடை
முன்பே தனக்கு அற்றவன்
அற்றுத் தீர்ந்தவன் -இவளுக்காகக் காணும் பிறந்தது –
பரித்ராணாய சாதூனாம் -என்று தானே அருளிச் செய்தான் அன்றோ

(சாது பரித்ராணாய ஏவம் -மற்றவை சங்கல்ப மாத்ரம் -வந்த இடத்தில் தன்னடையே வருமவை )

(நரஸிம்ஹ அவதாரம் ப்ரஹ்லாதானுக்காகவே -ஹிரண்ய வதம் தன்னடையே வந்ததே)

மருத முறிய நடை-கற்றவன்-
தன்னை அறியாத பருவத்தே விரோதியைப் போக்கின படி –
யமளார்ஜூநௌ
-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-6-16-

கஞ்சனை வஞ்சனையில்  செற்றவன்
வஞ்சனையில் -தர்ம யுத்தமே வேணும் என்று பெருமாளைப் போலே இருந்தானாகில்
அவன் வஞ்சனமே தலைக் கட்டுமே –
அவன் நினைத்த வஞ்சனத்தை அவன் தன்னோடு போக்கின படி

திகழும் மதுரைப்பதி கொற்றவன் –
ராஜ்யத்துக்கு உக்ர சேனனை வைத்தானே யாகிலும்
இவனே ராஜா என்பதே இவள் பஷம் –

வரில் கூடிடு கூடலே-
ராஜாக்களுக்கு பிரேரகன் வேணுமோ –

பரித்ராணாய ஸாதூநாம் விநாஸாய ச துஷ்க்ருதாம்
தர்மஸம்ஸ்தாபநார்தாய ஸம்பவாமி யுகே யுகே৷৷4.8৷৷

பரித்ராணாயா -முதலில் சொல்வதால் பிரதானம்
தர்ம ஸம்ஸ்தாபனாய அர்த்தா -சப்தம் இங்கே இருப்பதால் இதுவே பிரதானம்
இப்படி உபய பிரதானம்
நடுவில் சொன்ன துஷ்க்ருதாம் விநாசாய -தன்னடையே ஸித்திக்கும்

மண்ணுலகில் கடவுளால் காப்பாற்றப்படுவது ஒன்று தானா நல்லார் அடையும் பயன்?
காக்கப்  படுவதிலும் மேலான பயன் ஒன்றுண்டு. அதாவது :

৷৷4.8৷৷ஸாதவ உக்த லக்ஷண தர்ம ஷீலா வைஷ்ண வாக்ரேஸரா மத் ஸமாஷ்ரயணே ப்ரவரித்தா மந்நாம கர்ம ஸ்வரூபாணாம் அவாங் மநஸகோசரதயா(நெஞ்சால் நினைப்பரிதால் வெண்ணெய் -ஈனச் சொல்லே
நானும் ஏத்தி ஏழு உலகும் முற்றும் ஏத்தி பின்னும் தானும் ஏத்தினாலும் எங்கு எய்தும் )

மத் தர்ஷநாத் றதே ஸ்வாத்ம தாரண போஷணாதிஸுகம் அலபமாநா அணு மாத்ர காலம் அபி கல்பஸஹஸ்ரஂ மந்வாநாஃ (ஒரு பகல் ஆயிரம் ஊழி யாலோ )

ப்ர ஷிதில ஸர்வகாத்ரா பவேயுஃ (கால் ஆளும் நெஞ்சு அழியும் கண் சுழலும் -உள்ளம் சோர –இட்ட கால் இட்ட கைகளாய் இருக்கும் )

இதி மத் ஸ்வரூப சேஷ்டிதாவலோகநாலாபாதி தாநேந (கோவிந்தற்கு ஓர் குற்றேவல் செய்யாமல் -அச்சுவை பெறினும் வேண்டேன் -பாவோ நான்யத்ர கச்சதி )

தேஷாஂ பரித்ராணாய தத் விபரீதாநாஂ விநாஷாய ச (பரித்ராணாயா -இஷ்ட பிராப்தி அநிஷ்ட நிவ்ருத்தி உட்பகை -விஸ்லேஷாதிகள் -இங்கே வெளிப்பகை -நெருப்பு என்று நின்ற திருமாலே -)

க்ஷீணஸ்ய வைதிக தர்மஸ்ய மதாராதந ரூபஸ்ய ஆராத்ய ஸ்வரூப ப்ரதர்ஷநேந தஸ்ய ஸ்தாபநாய ச (சாஷாத் தர்மம் -தன்னை நிலை நிறுத்த -சிந்தையந்தி மாலாகாரர் போல்வாருக்கக் காட்டி அருள )

தேவ மநுஷ்யாதி ரூபேண யுகே யுகே ஸஂபவாமி. (ஸம் -பிறந்து ஒளி விஞ்சி -பெருமை தேடி )க்ருத த்ரேதாதி யுக விஷேஷ நியமஃ அபி நாஸ்தி இத்யர்தஃ.

————————————————————-

அன்று இன்னாதான செய் சிசுபாலனும்
நின்ற நீள் மருதும் எருதும் புள்ளும்
வென்றி வேல் விறல் கஞ்சனும் வீழ முன்
கொன்றவன் வரில் கூடிடு கூடலே–4-7-

பதவுரை

அன்று–முற் காலத்தில்
இன்னாதன செய் சிசுபாலனும்–வெறுக்கக் கூடிய கெட்ட காரியங்களையே செய்து வந்த சிசுபாலனும்
நின்ற நீள் மருதும்–வழியிடையே நின்ற பெரிய இரட்டை மருத மரங்களும்
எருதும்–ஏழு ரிஷபங்களும்
புள்ளும்–பகாஸுரனும்
வென்றி வேல் விறல் கஞ்சனும்–வெற்றியை விளைவிக்க வல்ல வேலாயுத மென்ன
(அதைப் பிடிக்கத்தக்க) மிடுக்ககென்ன இவற்றை யுடையவனான் கம்சனும்
வீழ–முடிந்து விழும்படியாக
முன்–எல்லார் கண்ணெதிரிலும்
கொன்றவன்–கொன்றொழித்த கண்ண பிரான்
வரில்–வரக்கூடுமாகில்
கூடலே! கூடிடு;

அன்று இன்னாதான செய் சிசுபாலனும்
கூடல் கூடாத இன்று போலே ஸ்வயம் வரத்துக்கு பிரதிபந்தகமான –
அன்றும் இக்கூட்டரவுக்கு இன்னாதான செய் சிசுபாலனும்

(செய் -செய்த செய்யும் செய்யப் போகும்
செய் நன்றி கொன்றவன்-க்ரியமானக்நன் -க்ருதக்நன்- கரிஷ்யமானக்நன்)

நின்ற நீள் மருதும் எருதும் புள்ளும்
அவன் தனக்கே தனியே இன்னாதான செய்த இடங்கள் போராதே-
இவனை -இருவரைக் கண்டு நின்றது

நீள் மருதும் –
சாய்ந்தால் பிழைக்க விடாது –
பொய்ம் மாய மருதான அசுரரை
-பெரியாழ்வார் -3-1-3-

கும்மாயத்தொடு வெண்ணெய் விழுங்கி குடத் தயிர் சாய்த்துப் பருகி
பொய் மாய மருதான அசுரரை பொன்று வித்து இன்று நீ வந்தாய்
இம் மாயம் வல்ல பிள்ளை நம்பீ உன்னை என் மகனே என்பர் நின்றார்
அம்மா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே 3-1-3- –

எருதும் –
இவனை நலிய நின்ற ஏழு எருதும்

புள்ளும் –
பகாசூரனும்-

வென்றி வேல் விறல் கஞ்சனும் வீழ முன் கொன்றவன் வரில் கூடிடு கூடலே–
வென்றியை தருவதான வேலை யுடையனாய் -அதுவும் மிகையாம் படியான மிடுக்கை யுடையனான கம்சன் –

கஞ்சனும்
கீழ்ச் சொன்னவற்றுக்கு அடியான அவன் தன்னையும்

கொன்றவன்
ஏக பிரயோகத்தே விரோதிகளை அடையப் போக்கி அவசரப் பிரதீஷனாய்-
என்னை அடைய -சித்தமாய் – நின்றான்

இனி நீ கூடும் இத்தனை –

——————————————————————————————–

ஆவலன்புடையார் தம் மனத்தன்றி
மேவலன் விரை சூழ் துவராபதிக்
காவலன் கன்று மேய்த்து விளையாடும்
கோவலன் வரில் கூடிடு கூடலே–2-8-

பதவுரை

ஆவல் அன்பு உடையார் தம்–ஆவலையும் அன்பையும் உடையவர்களுடைய
மனத்து அன்றி மேவலன்–நெஞ்சு தவிர மற்றோரிடத்திலும் பொருந்தாதவனும்
விரை சூழ் துவராபதி காவலன்–நல்ல வாஸனை சூழ்ந்த த்வாரகாபுரிக்கு நிர்வாஹகனும்
கன்று மேய்த்து விளையாடும் கோவலன்–கன்றுகளை மேய்த்து விளையாடும் கோபாலனுமாகிய கண்ண பிரான்
வரில் – வரக் கூடுமாகில்
கூடலே! கூடிடு.

ஆவலன்புடையார் தம் மனத்தன்றி மேவலன்
ஆவல் –
ஆவலுடையார் தான் -குணாத்வசாயமும் கிடக்கச் செய்தே –
நோன்பு நோற்பது –
காமனை ஆராதிப்பது –
சிற்றில் இழைப்பது-
பனி நீராடுவது –
கூடல் இழைப்பதான -இவை ஆவலாவது

அன்பு –
மல்லாண்ட திண் தோள் மணி வண்ணா உன் செவ்வடி செவ்வி திருக் காப்பு -என்பது
உறகல் உறகல் -என்பதான தமப்பனாருடைய அன்பு –

தங்கள் குடியில் உள்ளார் மனத்தோடு அல்லது மேவான் -என்கிறாள்
விரை சூழ் துவராபதிக் காவலன் –
ஆவல் இல்லாதாரோடும் பொருந்து மவன் கிடீர் –

ஷோடச ஸ்திரீ சஹஸ்ராணி-ஸ்ரீ விஷ்ணு புராணம் -31-17-18-
அவ்வூரில் உள்ள மணம் போராமே ஸ்வர்க்கத்தில் உள்ள மணமும் கூட்டிக் கொடுத்தான் இறே –
அதனாலே விரை சூழ் -விசேஷணம் –
மட்டேறு கற்பகத்தை மாதர்க்காய் வண்டுவரை நட்டான் -பெரிய திருமொழி –6-8-7-என்னக் கடவது இறே

கட்டேறு நீள் சோலைக் காண்டவத்தைத் தீ மூட்டி
விட்டானை மெய்யமர்ந்த பெருமானை
மட்டேறு கற்பகத்தை மாதர்க்காய் வண்டு வரை
நட்டானை நாடி நறையூரில் கண்டேனே  –6-8-7-

காவலன் –
ஜகத் வியாபார லீலை பண்ணி –

கன்று மேய்த்து விளையாடும் கோவலன் வரில்
சர்வச்ய ஜகத பாலௌ வத்ஸ பாலௌ பபூவது -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-6-35-
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி -திருவாய் -10-3-10-
கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் -திரு நெடும் தாண்டகம் -16-

கோவலன் –
ராஜ்யம் பண்ணாமைக்காகவும்–
கன்று மேய்த்து விளையாட -திருவாய்ப்பாடிக்கு வருவதற்காக-

அவனது ரஷகத்வ சௌசலப்யங்களுக்கு குறை இல்லை ‘
எனது ஆசை அன்பு அபி நிவேசங்களுக்கும் குறை இல்லை –

கூடிடு கூடலே-
ஆகையால் நீ கூடி எங்களைக் கூட்டுவாயாக –

—————————————————————————-

கொண்ட கோலக் குறள் உருவாய்ச் சென்று
பண்டு மா வலி தன் -பெரு வேள்வியில்
அண்டமும் நிலனும் அடி யொன்றினால்
கொண்டவன் வரில் கூடிடு கூடலே–4-9-

பண்டு–முற் காலத்திலே
கோலம் கொண்ட குறள் உரு ஆய்–(முப்புரி நூலும் க்ருஷ்ணாஜிநமும் முஞ்ஜியும் பவித்ரமும் தண்டுமான)
கோலம் பூண்ட வாமந ரூபியாய்
மாவலி தன்–பெரு வேள்வியில் சென்று
அண்டமும்–மேலுலகங்களையும்
நிலனும்–கீழுலகங்களையும்
அடி ஒன்றினால்–ஒவ்வோரடியாலே
கொண்டவன்–அளந்து கொண்ட த்ரிவிக்ரமன்
வரில்–வருவானாகில்
கூடலே!–கூடிடு

கொண்ட கோலக் குறள் உருவாய்ச் சென்று
யஜ்ஞ்ஞோபவீதமும் -க்ருஷ்ணாஜினமும் -முஞ்சியும் -பவித்ரமும் -தண்டும்
பரமபதத்தில் ஒப்பனையிலும் அழகியதா இருந்தபடி –

பண்டு மா வலி தன்பெரு வேள்வியில்-
கூடல் தலைக் கட்டியும் பெறாது இருக்க
வேள்வியின் நடுவே இவனைக் காணப் பெற்ற வேள்வி –

அண்டமும் நிலனும் அடி யொன்றினால் கொண்டவன் வரில் கூடிடு கூடலே-
அண்டமும் ஓரடியும்
நிலம் ஓரடியும் –
அவன் தன்னுடைமையை விடான் -நீ கூடுகையே குறை –

(ஒவ்வோர் அடியால் என்று பிரித்து வியாக்யானம்  )

த்ரீணி பதா விசக்ரமே –என்றும்
மூன்றடி நிமிர்த்து -பெரியாழ்வார் -4-7-10-என்றும் உண்டாய் இரா நின்றது –

இது-இரண்டு அடிகளாலே அளந்தான் என்ற இது – இருக்கிறபடி ஏன் -என்று நஞ்சீயர் -பட்டரைக் கேட்க –
பரோ மாதரயா தனுவா வருதான ந தே மஹித்வ மன்வஸ் நுவந்தி
உபே தே வித்ம ரஜசீ ப்ருதிவ்யா -விஷ்ணு தேவ தவம் பரமச்ய வித்சே —என்றும்

த்வே இதஸ்ய க்ரமேண ஸ்வர்த்த்ருசோ அபிக்யாய மர்த்யோ புரண்யாதி
த்ருதீயமஸ்தி நகிரா ததர்ஷதி வயஸ்சன பதயந்த பதத்ரிண-என்றும்
வேத புருஷன் தானே -இரண்டடியால் அளந்த இடம் எல்லாரும் அறியும் –
நீ மூன்று அடியால் அளந்த இடம் உனக்கே தெரியும் அத்தனை -என்று காணாமல் விட்டான்-
அவன் அளந்தமை யுண்டு –அவனுக்கே தெரியும் அத்தனை -என்று
அருளிச் செய்தார் என்று ஜீயர் அருளிச் செய்வர் –

(அத்ய த்ருஷ்ட தசாங்குலம் -புருஷ ஸூக்தம் –ஸ்ரீ வைகுண்டத்திலும் மூன்றாவது அடியால் அளந்து கொண்டான்
ரஷ்யத்தின் அளவு அல்லவே ரக்ஷகனின் பாரிப்பு –
அபகரிக்க முடியாத நித்ய விபூதியையும் அளந்தான்
இவர்களும் அவன் குழந்தைகள் தானே -)

————————————————————————-

பழகு நான் மறையின் பொருளாய் மத
மொழுகு வாரணம் உய்ய வளித்த எம்
அழகனார் அணி ஆய்ச்சியர் சிந்தையுள்
குழகனார் வரில் கூடிடு கூடலே –4-10-

பதவுரை

பழகு நால்மறையின் பொருள் ஆய–அநாதியான சதுர் வேதங்களின் உட்பொருளாயிருக்கு மவனாய்
மதம் ஒழுகு வாரணம் உய்ய அளித்த–மத ஜலம் பெருகா நின்ற கஜேந்த்ராழ்வான் (துயர் நீங்கி) வாழும்படி க்ருபை செய்தருளினவனாய்
எம் அழகனார்–எம்மை ஈடுபடுத்த வல்ல அழகை யுடையனாய்
அணி ஆய்ச்சியர் சிந்தையுள் குழகனார்–அழகிய கோபிமார்களின் நெஞ்சினுள்ளே குழைந்திருக்கு மவனான கண்ண பிரான்
வரில்–வரக் கூடுமாகில்
கூடலே! கூடலே

பழகு நான் மறையின் பொருளாய்
அபௌருஷேயமான வேதங்களின் அர்த்தம் இவனே இறே
அல்லாதவை ஏக விஜ்ஞான நியாய சித்தம் –

வேதைஸ்ஸ சர்வை ரஹமேவ வேத்ய -ஸ்ரீ கீதை -15-15-
யதா சோம்யை கேன மருத் பிண்டேன சர்வம் ம்ருண்மயம் விஞாதம் ஸ்யாத்-சாந்தோக்யம் -6-1-4-

மத மொழுகு வாரணம் உய்ய வளித்த
சம தமாத்யுபேதம் அன்று -அகப்பட்ட இடரில் நின்றும் உய்ய

எம் அழகனார் –
ஸ்ரக்பூஷாம் பரமயதாயதம் ததான -ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் -2-59-

அணி ஆய்ச்சியர் சிந்தையுள் குழகனார் வரில் கூடிடு கூடலே
தங்குமேல்-என்று இருக்குமவர்கள்
இவர்களுக்கு அணி யாவது –
கொங்கை மேல் குங்குமத்தின் குழம்பு அழியப் புகுந்து ஒரு நாள் தங்குமேல் என்னாவி தங்கும் என்றும் உரையீரே
-8-7-
அப்போதே இவன் உதவா விடில் இனிப் பிதற்ற அமையும்

எம் அழகனார் –
வரிலும் முகம் கொடுப்பது இல்லை என்று இருந்தவர்கள் நெஞ்சில்
மறம் மாறும்படி வாழ்வுகள் செய்தும்
தாழ்வுகள் சொல்லியும் கலந்தவர்களோடே கலக்க வல்லவன்-
கோலப் பாதத்தையும் -அணி மிகு தாமரைக் கையையும்

தலை மிசை வைத்து வாழ்வுகள் செய்தும்
அடியேன் குடியேன் குழைந்து கலந்து கலக்க வல்லவன்

தானும் குழைந்து -கலப்பவர்கள் உடைய
நெஞ்கை குழைய வைப்பவன் என்றுமாம் –

அப்படி என் இன்னாப்பை தீர்த்து கலக்குமாகில் கூடிடு –

——————————————————————————-

ஊடல் கூடல் உணர்தல் புணர்தலை
நீடு நின்ற நிறை புகழ் ஆய்ச்சியர்
கூடலைக் குழல் கோதை முன் கூறிய
பாடல் பத்தும் வல்லார்க்கு இல்லை பாவமே–4-11-

பதவுரை

ஊடல் கூடல்–ஊடலோடே கூடியிருக்கை யென்ன, (அதாவது ப்ரணய ரோஷஸஹிதைகளா யிருக்கை யென்ன)
உணர்தல்–குறைகளை உணர்த்துகை யென்ன
புணர்தல்–(பிறகு) ஸம்ச்லேஷிக்கை யென்ன (இப்படிப் பட்ட காரியங்களிலே)
முன்–அநாதி காலமாக
நீடு நின்ற–நீடித்துப் பொருந்தி நின்ற
நிறை புகழ் ஆய்ச்சியர் கூடலை–நிறைந்த புகழையுடைய ஆய்ப் பெண்கள் (இழைத்த) கூடலைப் பற்றி
குழல் கோதை–அழகிய மயிர் முடியை யுடையனான ஆண்டாள்
கூறிய–அருளிச் செய்த
பாடல் பத்தும்–பத்துப் பாட்டுக்களையும்
வல்லார்க்கு –ஓத வல்லவர்களுக்கு
பாவம் இல்லை-(எம்பெருமானைப் பிரிந்து துக்கிக்கும்படியான) பாவம் இல்லையாம்

ஊடல் கூடல் உணர்தல் புணர்தலை
ஊடலொடு கூடுகை -ஊடல் கூடல் –
ஊடி இருப்பார்கள் இறே பெண்கள் –
இவன் தன் குறைகளை அவர்கள் உணர்த்தும் படியும் —
எங்களை பிரிந்து நலிந்தாய் போல – உணர்த்தி –
அவன் பின்பு ஷாமணம் பண்ணி புணரும் படியும் –
உங்கள் ஆசை அன்பு காதல் வேட்கை அவா வளர்க்கத் தான் பிரிந்தேன்
என்றன போல்வன சொல்லி -புணர்வான் இறே

முன் -நீடு நின்ற நிறை புகழ் ஆய்ச்சியர்-கூடலைக்-
இவனோடு ஊடுவதும் கூடுவதும் -இதுவே யாத்ரையாய் புகழை உடைய திருவாய்ப்பாடியில்
பெண்கள் இத்தனை வருடையவும் பாசுரத்தையும்

நிறை புகழ் ஆய்ச்சியர் -என்கிறதுக்கு எம்பார் –
இவர்களுக்கு நிறை புகழாவது –
கிருஷ்ணனை
இன்னாள் நாலு பட்டினி கொண்டாள்-
இன்னாள் பத்து பட்டினி கொண்டாள்

-என்னும் புகழ் காண்-என்று அருளிச் செய்வர் –

குழல் கோதை முன் கூறிய பாடல் பத்தும் வல்லார்க்கு இல்லை பாவமே–
இவள் மயிர் முடியாலே அவனை கூடல் இழைப்பிக்க வல்லவள் –

பாவம் இல்லை –
இவளைப் போலே இப்படி பட வேண்டா –
சொன்ன இத்தை அப்யசிக்க வல்லார்க்கு கூடல் இழைக்க வேண்டா –

————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ நாச்சியார் திரு மொழி – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் -மூன்றாம் திருமொழி —

September 4, 2015

அவதாரிகை –

தொட்டு உதைத்து நலியேல் கண்டாய் -என்னும் படியாக வந்து ஸ்பர்சித்து –
அநந்தரம் –
எம்மைப் பற்றி மெய்ப் பிணக்கு இட்டக்கால் -என்னும்படி
இருவரும் இரண்டு உடம்பாய் இருக்கை அன்றிக்கே
ஓர் உடம்பு என்று பிரதிபத்தி பண்ணலாம் படி சம்ஸ்லேஷம் பிரவ்ருத்தமாய் –
அப்படி வ்ருத்தமான சம்ஸ்லேஷம் தான் –
காய்ந்து பொருந்துமா போலே –பிரிந்து கூடாவிடில் இரண்டு தர்மியும் அழியும் அளவாக –
இத்தை அனுசந்தித்து -அதாவது –

பிரிந்து கூடினால் நன்றாக கூடி தரிப்பார்கள் என்று -அனுசந்தித்து
இவர்களுடைய பந்து வர்க்கமானது சிறு பெண்களை இழக்க ஒண்ணாது –
இப்படி பிறந்து நின்ற பின்பு இனி போக்கடி என் என்று
பார்த்து இவர்களைக் கொண்டு போய் நிலவறைகளிலே -(under ground cell -)அடைக்க –

அவர்களும் பிரிவாற்றாமே –உபவாச க்ருசாம் தீ நாம் -சுந்தர -15-19–என்று
சொல்லுகிறபடியே ஆற்றாமை எல்லாம் உடையராய்
இவனும் –ந மாம்சம் ராகவோ புங்க்தே -சுந்தர -36-41-என்றும்
நைவ தம்சான் நமசகான் -என்றும்
பெருமாள் கடித்ததும் ஊர்ந்ததும் அறியாதே இருந்தால் போலே இருந்தது –
அதுக்கு அடி என் என்னில் –

த்வத்கதே நாந்தராத்மநா–சுந்தர -36-42- என்று
பரகாய பிரவேசம் பண்ணி இருப்பாருக்கும் ஓன்று தெரியுமோ -(இவன் ஆத்மா அவர்களிடமும் அவர்கள் ஆத்மா இவன் இடமும் -ஞானி து ஆதமைவ மே மதம் )
தமக்கு உணர்த்தி உண்டாகில் அன்றோ அவை அறிய வல்லராவது என்னும் படியாய் –
இவர்கள் ஒருகால் உறங்காது இருக்கில் –
அநித்ரஸ் சத்தம்
–சுந்தர -36-44-என்னும் படியாய்
இத்தலை –ஊர்த்வம் மாசாந்த ஜீவேயம் சத்யே நாஹம் ப்ரவீமி தே-சுந்தர -38-67-என்னில்
ந ஜீவேயம் ஷணம் அபி -சுந்தர 66-10-என்கிறபடியே
ஒரு ஷணமும் ஜீவிக்க மாட்டாத படி இறே அவன் படி

இப்படி இரண்டு தலைக்கும் ஆற்றாமை கரை புரண்டு இருக்க –
பெண்களுடைய தசையை அனுசந்தித்த பித்ராதிகள் -இவர்களை
நாம் முடிய நிரோதிக்கில் இழக்கும் அத்தனையாய் இருந்தது –
நாமே சேர்த்து விட்டோம் ஆக ஒண்ணாது –
இனி இங்கனே ஒரு வழி இடுவோம் –
பெண்கள் வர லாபத்திற்காக- பனி நீராட -என்று ஓன்று உண்டு செய்து போருவது –
அத்தை இவர்கள் செய்வார்கள் –
தங்கள் நினைவிலே அதுவும் பலிக்கிறது –

நாம் இது தன்னை அறிந்தோம் ஆகாது ஒழிகிறோம் -என்று இவர்கள் தாங்கள் தங்களிலே சமயம் பண்ணி இருக்க –
அவனும் பிரிந்த போது தொடங்கி –இவர்கள் இடையாட்டம் ஆராயும் அதுவே இறே அவனுக்குப் பணி
ஆகையால் தான் பிரிந்த பின்பு பிறந்தவை அடைய பஞ்ச லஷம் குடிக் காட்டில் –தனித் தனியே ஆளிட்டு ஆராய்ந்து ஊரில்
பிறந்த விசேஷங்களும் -பிறக்கிறவையும் -பிறக்க புகுகிறவையும் -அறிந்து

பிறக்கிறவை-பித்ராதிகள் -நீராடப் போகச் சொன்னவை
பிறக்கப் போகிறவை பெண்கள் நீராடப் போகிறவை –
இப்படி பனி நீராட போவதாக அத்யவசித்து இருந்தார்கள் என்று கேட்டு
தானும் ஒக்கப் போவதாக கணிசித்து இருக்க

அவர்களும் -இவனோட்டை சம்ஸ்லேஷம் தான் பொறுக்கப் போகாது
அதுக்கு மேலே விஸ்லேஷ வ்யசனம் தான் பாடாற்றப் போகாது –
சம்ஸ்லேஷமோ விஸ்லேஷந்தமாய் அல்லாது இராது
ஆன பின்பு அவனோடு சம்ஸ்லேஷித்து பின்னைப் பிரிந்து படும் வ்யசனத்தில்
முன்புற்றை விரஹ ஜ்வரத்துக்கு பரிகாரமாக நீரிலே போய் முழுகி அத்தால் வந்த ஆஸ்வாசத்தைப் பெற்று இருக்க அமையும்

அது செய்யும் இடத்தில் நாமும் அவனுமாய் முன்பு குளித்துப் போகும் பொய்கையில் போகில் அவன் அறிந்து வரும்
ஆன பின்பு அவன் அறியாத தொரு பொய்கை தேடித் போக வேணும் –
அது செய்யும் இடத்தில் திரளாகப் போகில் அவன் அறியும்
ஆன பின்பு ஒருவர் ஒருவராகப் போவோம்–
போம் இடத்திலும் வழி தெரியாத படி இட்ட அடியை அழித்துக் கொண்டு போவோம் -என்று
எல்லாரும் போனார்கள் –

அவ்வளவிலே இவனும் அவர்களைப் பெறுகைக்கு
எதிர் சூழல் புக்கு திரிவான் ஒருவன் -திருவாய்மொழி -2-7-6–இறே
இவர்கள் நினைவை அறிந்து இனித் தான் திருவயோத்யையில் உள்ளாரைப் போலே வழி மாறிப் போனால் அறிந்திலோம்
என்று மீளும் இளிம்பன் அன்று இறே –
இயேஷ பதமன்வேஷ்டும் சாரணா சரிதே பதி -சுந்தர -1-1-என்கிறபடியே அடி ஒற்றினான்

(ராவணனால் அபஹரிக்கப் பட்ட தேவர்கள் சாரணர்கள் சஞ்சரிக்கும் பாதையில் சத்ருக்களை வெல்ல வல்ல திருவடி –ஜீவாத்மாவை இந்திரியங்கள் அபகரிக்க -ஆச்சார்யர் -திருவடி-ஸ்த்ரீ லிங்கம் சீதா -அயோநி -ஜீவாத்மா -அவனுக்கே ஆட்பட்டவர்கள் பாரதந்தர்யம்-அஞ்ஞானம் போக்க வல்ல -சம்சார மண்டலத்தில் அவதரித்து -பூர்வாச்சார்யர் சதாசாரம் -ஆகாச மார்க்கம் -)

இவன் தான் இருள் அன்ன மா மேனி –பெரிய திருவந்தாதி -26-என்கிறபடியே
இருளோடு விகல்பிக்கலாய் இறே திரு மேனி இருப்பது –
ஆகையால் சாயாவானை சாயை பின் செல்லுமா போலே இவர்கள் நிழலிலே ஒதுங்கிப் போய்
முற்பட்டுக் கரையைப் பற்றினான்-

இவர்களும் இடைப் பெண்கள் ஆகையாலே பரியட்டங்களையும் ஆபரணங்களையும் அடையக்
கரையிலே இட்டு வைத்துப் போய் ஜலத்திலே அவகாஹித்தார்கள் —

அவ்வளவிலே இவற்றை அடைய வாரிக் கொண்டு பெரிய வேகத்தோடு போய் குருந்தின் மேலே ஏறித்
தன்னைத் தெரியாத படி மறைய நின்றான் –

இவர்களும் கரையிலே ஏறிப் பார்த்த இடத்திலே அவை காணாமையாலே -இருந்த படி என் –
என்று துணுக்கென்று நம்மோடு கூட வந்தார் ஒருவரும் உண்டோ –
இது ஆகாசம் கொண்டதோ -திக்குகள் கொண்டதோ
இக்குளம் கொண்டதோ -கிருஷ்ணன் கொண்டானோ -என்று இங்கனே கலங்கி

கின்னுச்யாத் சித்த மோஹோஸ்யம்–சுந்தர -34-23-என்கிறபடியே
திருவடி முன்னே இருந்து வார்த்தை சொல்லா நிற்கச் செய்தேயும்
இது இந்நிலத்தில் சம்பவிப்பது ஓன்று அல்ல -என்று இருந்த படியாலே -இது சித்தஸ்கலனம் பிறந்ததோ -என்றும்
உன்மாதஜோ விகாரோ வா ச்யாதியம் ம்ருக த்ருஷ்ணிகா –என்கிறபடியே
இது உன்மாதாமோ -பிரகிருதி விகாரம் பிறந்ததோ
இது இருந்தபடி என் -என்று சங்கித்து பின்பு தெளிந்தால் போலே

இவர்களும் அநேகத்தை சங்கித்து -இவர்களும் எங்கும் பரகு பரகு-என்னப் பார்த்துக் கொண்டு வாரா நிற்க –
இவனைக் குருந்தின் மேலே கண்டார்கள்
கண்ட அநந்தரம் –
இவன் நம்மை மடி பிடித்து வந்தான் –புடவைக்காக வந்தான் -சாடு -நாமும் இவனை
மடி பிடித்து வாங்கினோமாம் விரகு ஏதோ -என்று பார்த்து
இவனை -இரப்பார்–தொழுதோம் -3-1–
ஏத்துவார் –மதுவின் துழாய் முடி மாலே -3-2–
வாழ்த்துவார் –கூத்தாட வல்ல எங்கோவே –3-6–
தாழ்த்துவாராய்-சீறுவாராய்-குரக்கரசு –3-4 -என்றும் –
மசுமையிலீ -3-9-என்றும் சீறி

இவனை இப்படி தீம்பு செய்யப் பெற்று விட்ட தாயும் ஒருத்தியே -என்று –
அஞ்ச உரப்பாள் -3-9-என்று அவளை வெறுப்பார்
தங்கள் ஆற்றாமையை அறிவிப்பாராய்-
தடத்தவிழ் தாமரை -3-6–

இப்படி பஹூ பிரகாரங்களாலும் அனுவர்த்திக்க
அவனும் பரியட்டங்களையும் கொடுத்து சம்ஸ்லேஷித்தானாய்த் தலைக் கட்டுகிறது –

மேலில் திருமொழி விஸ்லேஷித்து கூடல் இழைக்கையாலே
இங்கே சம்ஸ்லேஷம் அர்த்தாத் -சித்தம் –

————————————————————–

கோழி அழைப்பதன் முன்னம் குடைந்து நீராடுவான் போந்தோம்
ஆழியம் செல்வன் எழுந்தான் அரவணை மேல் பள்ளி கொண்டாய்
ஏழைமை ஆற்றவும் பட்டோம் இனி என்றும் பொய்கைக்கு வாரோம்
தோழியும் நானும் தொழுதோம் துகிலைப் பணித்து அருளாயே—3-1-

பதவுரை

அரவு அணை மேல்–திருவனந்தாழ்வானாகிற படுக்கையின் மேலே
பள்ளி கொண்டாய்–திருக் கண் வளர்ந்தருளுமவனே!
குடைந்து–(குளத்தில்) அவகாஹித்து
நீர் ஆடுவான்–நீராடுவதற்காக
கோழி அழைப்பதன் முன்னம்–கோழி கூவுதற்கு முன்னம்
போந்தோம்–(இவ்விடம்) வந்தோம்;’ (இப்போதோ வென்றால்,)
பொய்கைக்கு–குளத்திற்கு
வாரோம்–நாங்கள் வருவதில்லை’
தோழியும் நானும் தொழுதோம்–தோழியும் நானுமாக (உன்னை) ஸேவியா நின்றோம்’
செல்வன்–(ஸ்ரீ மந்நாராயணன் தன்னிடத்து நித்ய வாஸம் பண்ணப் பெறுகையாகிற) செல்வத்தை யுடையனான
ஆழியன்–ஸூர்யன்
எழுந்தான்–உதித்தான் ’(பட்ட போது எழு போது அறியாள் -அஸ்தமனம் உதயம் தூய தமிழில் )
ஆற்றவும் ஏழமை பட்டோம்’ (நாங்கள் உன்னாலே) மிகவும் இளிம்பு பட்டோம் ’
இனி–இனி மேல்
என்றும்–என்றைக்கும்
துகிலை–(எங்களுடைய) சேலைகளை
தோழியும் நானும் தொழுதோம்–தோழியும் நானுமாக (உன்னை) ஸேவியா நின்றோம்’
துகிலை–(எங்களுடைய) சேலைகளை
பணித்தருளாய்–தந்தருள வேணும்.

கோழி அழைப்பதன் முன்னம் குடைந்து நீராடுவான் போந்தோம்
நாங்கள் ஒன்றை நினைத்து வர –அது ஒன்றாய் பலித்த படி கண்டாயே

கிருஷ்ணன் தான் ராத்ரி முற்கூற்று எல்லாம்
பெண்களுடைய முலைகளோடும் தோள்களோடும் பொருது உறங்குவது பிற்கூற்றிலே யாகையாலே
இக்காலத்தில் இவன் உணரான் என்று –
அது பற்றாசாக வாய்த்து -இவர்கள் போந்தது –

இவர்கள் நினைவு இதுவானாலும் கோழி கூவினவாறே உணர்வான் ஒருவன் ஆயத்து
தாங்கள் உறக்க உறங்கி கோழி உணர்த்த உணர்ந்து போரும்படியை கண்டு
அந்வய வ்யதிரேகங்கள் இரண்டும் அறிந்து யாய்த்து போந்தது –

அழைப்பதன் முன்னம்-
இவன் தன்னை துடை தட்டி எழுப்புவாரைப் போலே
கோழி கூவி எழுப்ப வேண்டும்படி யாய்த்து நித்ராபரவசனாய்க் கிடக்கும் படி-

இப்படி நம்மை மறைத்து நாம் உணருவதற்கு முன்னே நீங்கள் போந்தது என்ன காரியத்துக்குத் தான் -என்றான் –

குடைந்து நீராடுவான் போந்தோம்-
சரயூம் அவகாஹதே –ஆரண்ய -16-30-என்னுமா போலே
உன்னோட்டை விரஹ தாபம் எல்லாம் ஆறும்படி குளிக்கப் போந்தோம் –
உன் வரவை நினைந்து போந்தோம் அல்லோம் –
நீ வருவதற்கு முன்னே குளித்து மீள வேணும் என்னும் மநோ ரதத்தோடு போந்தோம்-

ஆனால் அதுக்கு வந்தது என் -செய்யலாகாதோ என்று அவனும் ஒன்றை நினைத்தான்
அதாவது தமிழர் கலவியை –சுனை நீராடல் -என்று ஒரு பேரை இட்டுப் போருவார்கள் –
அத்தைப் பற்ற தன் அபிமத சித்திக்கு உடலாக சொன்னான் அவன்

உனக்கு அது செய்ய ஒண்ணாது காண்-
உன் நினைவை எண்ணி வந்து தோற்றினான் காண் ஸ்ரீ மான் ஆதித்யன் -என்கிறார்கள்
ஆழியம் செல்வன் எழுந்தான்
கடலிலே முழுகி எழுவாரைப் போலே தோற்றினான் -என்னுதல் –ஆழி
கடல் என்று கொண்டு
அன்றிக்கே –
மண்டலத்தைச் சொல்லுதல் -வட்டம் -ஆதித்ய ரதத்தைச் சொல்லுதல் –
தேர் சக்கரம் ஆழி –தனி ஆழித் தேர் -சிறிய திருமடல்

செல்வன்
ஸ்ரீ யபதியான நாராயணன்
தன் பக்கலிலே பிராட்டியிடே சந்நிதி பண்ணும் படியான சம்பத்தை உடையவன்

(ஸ ஏஷ அந்தர் ஆதித்ய ஆதித்த மத்ய வர்த்தி -ஹிரண்மய புருஷ -கரு நீல வர்ணன் -ஹிரண்ய வர்ணை இருப்பதால் -ஸ்ரீ யபதி
விபரீத லக்ஷணை -கள்ளிச்செடி மஹா வ்ருக்ஷம் -இவன் வேறே ஆடை இல்லாமல் இருக்கும் எங்களை பார்க்கும் படி வந்தானே)

அது பின்னே ஆர்க்கு அழகு –
உங்களுடைய அங்க பிரத்யங்கங்களை அழகிதாகக் கண்டு அனுபவிக்கைக்கு உடலாகிறது –
நீங்கள் தான் ஒரு கார்யத்திலே உபக்ரமிக்கும் போது அது செய்து தலைக் கட்டுகைக்கு வேண்டும்
போது அறிந்து அன்றோ புறப்படுவது
நீங்கள் ஆரை நினைத்துப் போனது கோள்-என்ன

அரவணை மேல் பள்ளி கொண்டாய்-
உன் உறக்கத்தை மெய் என்று போந்தோம்
வினதை  சிறுவன் சிறகு என்னும் மேலாப்பின் கீழ் வருவானை -14-3–என்கிறபடியே
இவ்வவதாரம் தான் இருபுரியூட்டி இருக்கையாலே -மனுஷ்யத்வமும் பரத்வமும் சேர்ந்து –
திரு வநந்த ஆழ்வான் மேலே சாய்ந்து அருளின படியையும் தங்களுக்கு விசதமாகச் சொல்லிற்று ஆகவுமாம்
அங்கன் அன்றிக்கே
திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளின படியை நினைத்து சொல்லிற்று ஆகவு மாம் –
பாற் கடலில் பையத் துயின்ற பரமன்
என்றபடி
அங்கு கண் வளர்ந்து அருளின படியாகில்
உன்னுடைய ரஷணத்தை விஸ்வசித்துப் போந்தோம் -என்றார்கள் ஆகிறது -(அறி துயில் -அறியும் துயில் கூப்ப்பீடு கேட்க்கும் இடம் )

இங்கே பள்ளி கொண்டு அருளின படியால் –
படுக்கை வாய்ப்பாலே நீ உணராதே உறங்குவுதி -என்னுமத்தை பற்றப் போந்தோம் என்கிறது —
அவன் உறங்கினானாகில் -அவ்வுறக்கத்தை அனுசந்திப்பார்கள் –
உணர்ந்தானாகில் அத்தை அனுசந்திப்பார்கள் –
வேறு ஓன்று அறியார்கள் இறே

நம் உறக்கத்தை விஸ்வசித்துப் போந்த உங்களுக்கு இப்போது வந்தது என் என்ன –

அழகிதாக இளிம்பு பட்டோம் -ஆகில் இனி இதுக்கு மேல் வருவது என் –
ஆற்றவும் பட்டோம் -மிகவும் பட்டோம் –
நீ நெடுநாள் எங்கள் கையில்-பிரணய ரோஷத்தாலே பட்டது எல்லாம்
ஒரு ஷணத்திலே நாங்கள் உன் கையில் பட்டோம் -என்கிறார்கள் –

ஆகில் இனி இதுக்கு பரிஹாரம் உண்டோ –
அவசியம் அனுபோக்தவ்யம் அன்றோ -அத்தைத் தப்பப் போமோ இனி –
நீங்கள் தான் இதுக்கு போக்கடியாக நினைத்து இருந்தது என் -என்றான் –

இதுக்கு போக்கடி அற்றுப் போக வேணுமோ –
இனி என்றும் பொய்கைக்கு வாரோம்-
ஊரில் தான் பெண்கள் கிடாய் -கிருஷ்ணன் கிடாய் -என்று நியமிக்கையாலே
உனக்குத் தோற்றிற்று செய்ய ஒண்ணாது –
பொய்கையில் தானே வாரோம் -இத்தனை யன்றோ என்கிறார்கள் –

வாரோம் என்று சொல்லி யன்றோ நீங்கள் வருவது -என்றான் –

அத்தைக் கேட்டு என்றும் வாரோம் -என்கிறார்கள் –

என்றும் வாரோம் என்று சொல்லி யன்றோ என்றும் வருவது -என்றான் –

இனி –என்றும் பொய்கைக்கு வாரோம்

இவர்கள் வாரோம் இனி -என்றவாறே —
தப்ப விழுந்தாகாதே -என்று அஞ்சி –நம்மையும் இவர்களையும் சேர விடுவார் யாரோ -என்று பார்த்தான் –

இரண்டு தலையையும் சேர விடுகைக்கு பரிகரம் கை கண்டு வைத்தோம் –
இனி நம்மையும் இவர்களையும் சேர விடுகைக்கு அஞ்சலி அல்லது இல்லை என்று அறியுமே –
அது பார்த்துக் கொள்ளுகிறோம் –
நீங்கள் என்னை அறியாமல் போந்ததுக்கு பரிகாரமாக கும்பிடுங்கோள் என்றான் –
என்றவாறே ஒரு கையாலே கும்பிட்டார்கள் –

அது ஒண்ணாது இரண்டு கையாலும் கும்பிடுங்கோள் என்றான் –
ஆனால் –

தோழியும் நானும் தொழுதோம் துகிலைப் பணித்து அருளாயே-
அது போராது-நாலு கைகளாலும் தொழ வேணும் -என்றான்

தோழியும் நானும் தொழுதோம் —
இவர்கள் தொழச் செய்தேயும் கொடாதே –
ஆன்ரு சம்சயம் கொண்டாடி இருப்பார் பக்கல் அன்றோ இது பலிப்பது –
பிரணயிநீ விஷயத்தில் வந்தால் நம் அபிமதம் பெற்று அன்றோ கொடுப்பது –என்று
பின்னையும் ஒரு நிலை நிற்கிறான்

அந்த பிரணயித்வத்தை விடாய்-
அஞ்சலிக்கு பல சித்தி உண்டு காண்-
எங்கள் துகிலைத் தந்து அருள் –
உன் நினைவு ஒழியவும் பலிப்பது ஓன்று அன்றோ அது –
திரு நாமத்துக்கு புடவை சுரந்து அருளியதே –

அஞ்சலி பரமா முத்ரா -என்னக் கடவது இறே –

————————————————————————

இது என் புகுந்தது இங்கு அந்தோ இப் பொய்கைக்கு எவ்வாறு வந்தாய்
மதுவின் துழாய் முடி மாலே மாயனே எங்கள் அமுதே
விதி இன்மையால் அது மாட்டோம் வித்தகப் பிள்ளாய் விரையேல்
குதி கொண்டு அரவில் நடித்தாய் குருந்திடைக் கூறை பணியாய்-3-2-

பதவுரை

இங்கு–இங்கே
புகுந்து இது என்–(நீ) வந்து சேர்ந்த விதற்குக் காரணமென்ன?
இப் பொய்கைக்கு–இக் குளத்திற்கு
எவ்வாறு வந்தாய்–எவ் வழியாலே வந்தாய்?
மது இன் துழாய் முடிமாலே–தேன் மாறாத இனிய திருத்துழாய் மாலை சூடிய திருவபிஷேகத்தை யுடைய பெரியோனே!
மாயனே–ஆச்சரிய சக்தி யுடையவனே!
எங்கள் அமுதே–எங்களுக்கு அம்ருதம் போல் இனியவனானவனே!
விதி இன்மையால்–விதி யில்லாமையாலே
அது மாட்டோம்–ஸம்ச்லேஷத்திற்கு இசைய மாட்டோம்’
வித்தகப் பிள்ளாய்–ஆச்சரிய சேஷ்டைகளையுடைய பிள்ளாய்!
விரையேல்–அவஸரப் பட வேண்டா’
அரவில்–குதி கொண்டு காளிய நாகத்தின் மேல்-
குதி கொண்டு–குதித்துக் கொண்டு
நடித்தாய்–நர்த்தனஞ்செய்தவனே!
குருந்திடைக் கூறை–(அக்) குருந்த மரத்தின் மேல் வைத்திருக்கிற சேலைகளை
பணியாய் – கொடுத்தருள்.

விதி இன்மையால் அது மாட்டோம்
விதி இல்லாமையால் சம்ஸ்லேஷத்துக்கு இசைய மாட்டோம் –

இது என் புகுந்தது இங்கு அந்தோ இப் பொய்கைக்கு எவ்வாறு வந்தாய்
தங்கள் அபிமதம் பெற்றுப் போக பாரா நின்றார்கள் –
நம் அபிமதம் தான் நினைக்கிறிலர்கள்-
இவர்கள் போக்கு இருந்தபடி என் –

இங்கன் அல்ல செய்வது -என்று பார்த்து -குருந்தின் நின்றும் இழிந்து
சேஷித்த பரியட்டங்களை வாரிக் கொண்டு –
சுழல் காற்றுப் போலே எங்கும் வ்யாபரித்து கடுகப் போய்-குருந்தின் மேலே ஏறி மறைய இருந்தான் –

இவர்களும் கரையிலே போந்து ஏறி ஒன்றும் காணாமையாலே ஸ்தப்தைகளாய்-
இது என் புகுந்தது இங்கு-

மின்னாதே இடி விழுந்து நிற்கக் கண்டோம் –

இனி இங்குப் புகுந்தது தான் என்
நீ ஸ்தப்தனாய் இரா நின்றாய் –
அவ்விஷய ஸ்ரவணம் உனக்கு உண்டாய்த்தோ என்று கேட்கப் பண்ணும் விஷயம்
கண்ணால் கண்டால் பேசாது இருக்குமோ
ஸ்ரவண மாத்ரத்திலே அழிக்கும் விஷயம் சாஷாத் கரித்தால் கலங்காது இருக்க ஒட்டாது இறே –

பாலாழி நீ கிடக்கும் பண்பை நாம் கேட்டேயும் காலாழும் நெஞ்சு அழியும் கண் சுழலும் -பெரிய திருவந்தாதி –
குண ஸ்ரவணத்தாலே அழிக்கும் விஷயம் தீம்புக்கு இலக்கானால் பேசாது இருக்கப் போகாது இறே –

காமன் உடல் கொண்ட தவத்தாற்கு உமை உணர்த்த வண்டலம்பும் தாரலங்கல் நீண் முடியான்
தன் பெயரே கேட்டிருந்து
அங்காரலங்கள் ஆனமையால் ஆய்ந்து -நான்முகன் -78-என்றபடி –
கேட்ட சிவனை ஈடுபடுத்திய விஷயம்
கண்ணனாய் பிறந்த பின்பு அவன் தீம்புக்கு இலக்கானவர்களால் பேசாது இருக்க முடியாது அன்றோ

அந்தோ –
நம் நினைவு அவனுக்கு உடலாவதே –
நாம் இவனுக்கு முன்பே வர வேணும் என்று போந்தோமானோம் –
இவன் நமக்கு முன்னே கோலி வந்து நிற்பதே –

நீங்கள் இழவாளராய் நோவு படுக்கைக்கு இப்போது விசேஷித்து வந்தது என்-
பண்டு தான் நான் உங்களோடு வாரேனோ -என்ன –

இப் பொய்கைக்கு எவ்வாறு வந்தாய் –
நீயும் நாங்களுமாய் ஜல கிரீடை பண்ணிப் போரும் பொய்கையோ இது –
இது அறிந்து நீ வந்தபடி எங்கனே –
நாங்கள் உன்னைக் கூடக் கொண்டு போந்திலோம்-
இட்ட அடியையும் அழித்து அன்றோ நாங்கள் போந்தது -நீ இங்கு வந்த வழி என் –

இப் பொய்கைக்கு எவ்வாறு வந்தாய் –
ஆனை நின்ற பொய்கையாய் வந்தாய் அல்லை —
ஆர்த்த நாதம் வழி காட்ட வந்தாய் அல்லை –எவ்வாறு வந்தாய் –

இப் பொய்கைக்கு எவ்வாறு வந்தாய்
காளியன் நின்ற பொய்கையாய் வந்தாய் அல்லை –
அநு கூலன் கிடந்த பொய்கையாய் வந்தாய் அல்லை –
பிரதிகூலன் கிடந்த பொய்கையாய் வந்தாய் அல்லை
நீ வந்த வழி என் –

அது கொடு கார்யம் என் –
வந்து கொடு நின்றோமே –
பலன் கைப்பட்டால் சாதனம் நிரூபிக்கக் கடவதோ -என்றான் –

இவர்கள் தோல்வியையும் தன் ஜெயத்தையும் அநுசந்தித்து மேணானித்தமை தோற்ற
மிகைத்து வார்த்தை சொல்லத் தொடங்கினான் –

பொகடு -இவன் கையிலே அகப்பட்டோம்
இங்கன் அன்று இது வாங்குவது -ஸ்தவ ப்ரியன் –
இவனை ஏத்திக் கொள்வோம் -என்று பார்த்து ஏத்தத் தொடங்கினார்கள் –

மதுவின் துழாய் முடி மாலே மாயனே எங்கள் அமுதே-
ஆதி ராஜ்யம் அதிகம் புவநா நாம் ஈச தேபி ஸூ நயன் கில மௌலி -ஸ்ரீ வரதராஜ ஸ்தவம் -25-என்றபடி
ஆதி ராஜ்ய ஸூசகமாக வைத்த வளையத்தோடு கூட –
நித்ய ஸூரிகளுக்கு ஓலக்கம் கொடுத்து தன் மேன்மை தோற்ற
பரம பதத்திலே சர்வேஸ்வரனாய் இருக்கும் இருப்பைச் சொல்கிறது –

அவ்விருப்பை இவ்வருகு உள்ளாரும் பெற வேணும் என்னும் வாத்சல்யத்தால்
அகர்ம வச்யனான தான் கர்ம வச்யரோடு
சஜாதீயனாய் வந்து திருவவதரித்து
இடையருக்கு ஏவிக் கொள்ள லாம் படி பவ்யனாய் நின்ற
ஆச்சர்யத்தை சொல்லுகிறது -மாயனே -என்று

எங்கள் அமுதே –
அத்தனை பொதுவான நிலை அன்றிக்கே –
எங்களுக்கே ஸ்வம்மாய்-நிரவதிக போக்யதை உடையனாய் நிற்கிற நிலை –

தேவர்களுக்கு உப்புச் சாறு போல் அன்றிக்கே
எங்களுக்கு கூறான அமிர்தம் ஆயத்து

நீங்கள் தான் நம் மேன்மை அறிந்திகோளே-
உங்களுக்கே ஸ்வம்மானமை தோற்றச் சொன்னி கோளே –
தந்தாமது என்று அறிந்தால் –
தந்தாம் உடைமை மங்காமல் நோக்கி விநியோகம் கொள்ள வேண்டாவோ -என்றான் –

அது என் என்பது என்ன –
உங்கள் கண்களாலே என்னைக் கடாஷித்து –
என் சத்தையை உண்டாக்கி –
நீங்களும் நானுமாக அனுபவிக்க பார்க்க வாகாதோ -என்றான் –

விதியின்மையால் அது மாட்டோம் –
அது பொல்லாதோ -அழகியது ஓன்று அன்றோ –
ஆகிலும் எங்கள் பாக்ய ஹானியாலே அது மாட்டு கிறிலோம் -என்கிறார்கள் –

விதி இன்மையால் அது மாட்டோம்-என்று –
அது -என்றார்கள் இறே-அவன் நினைவைத் தாங்கள் அறிந்தமை தோற்ற

ஆகிலும் நானும் என்னுடைய பாக்ய ஹானியாலே பரியட்டம் தர மாட்டு கிறிலேன்-என்னா –
இவற்றையும் கொண்டு அரும் கொம்பிலே போய் ஏறினான் –
இவனுக்கு பாக்ய ஹானியாவது -அவர்களுடன் கூடாமை -இறே

வித்தகப் பிள்ளாய் விரையேல்-
எங்கள் சத்தையும் அழிக்கப் பாராதே கிடாய் –
வித்தகன்
-சமர்த்தன் –
எங்கள் போகத்துக்கு விச்சேதம் பண்ணினாய் ஆகிலும்
எங்கள் சத்தையை அழிக்கப் பாராதே கொள் –

நான் விரைந்து எங்கே என்ன சாஹசம் செய்யக் கண்டிகோள்-என்றான் –

குதி கொண்டு அரவில் நடித்தாய் –
ஏக்தா து வி நா ராமம் -கிருஷ்ணோ பிருந்தாவனம் யயௌ விசசார வ்ருதோ
கோபைர் வன்ய புஷ்பஸ் ரகுஜ்ஜ்வல
-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-1-7-என்கிறபடியே –
தமையனார் ஷணம் பேர நிற்கப் பாம்பின் வாயிலே விழக் கடவ உனக்கு
இவை சால அபூர்வமோ-அது கிடாய் -என்கிறார்கள் –

நம் கையிலே காணில் இறே இவர்கள் வேண்டுவது என்று பார்த்து
பரியட்டங்களை குருந்திலே இட்டு வைத்துக் கையைத் தட்டி
என் கையில் உண்டோ -நான் தர -என்றான்

குருந்திடைக் கூறை பணியாய்-
உன் கையில் இல்லை –
குருந்தின் மேல் கிடக்கிறவற்றைத் தா -என்கிறார்கள் –

எங்கேனும் கிடக்கிலும் இவன் திரு உள்ளம் உண்டாகில் அல்லது சித்தியாது -என்றபடி –

————————————————————————————

எல்லே ஈது என்ன விளமை எம்மனைமார் காணில் ஒட்டார்
பொல்லாங்கு ஈது என்று கருதாய் பூங்குருந்தேறி யிருத்தி
வில்லால் இலங்கை யழித்தாய் நீ வேண்டியது எல்லாம் தருவோம்
பல்லாரும் காணாமே போவோம் பட்டைப் பணித்து அருளாயே—–3-3-

பதவுரை

வில்லால்–வில்லாலே
இலங்கை–லங்கையை
அழித்தாய்–நாசஞ் செய்தருளினவனே!
எல்லே–என்னே!
ஈது என்ன இளமை–இது என்ன பிள்ளைத்தனம்!
எம் அனைமார்–எங்களுடைய தாய்மார்கள்
காணில்–கண்டால்
ஒட்டார்–(மறுபடியும் எங்களை வீட்டின் வழி வர) ஒட்டார்கள்’
(நீயொவென்றால்)
ஈது–கண்டாரடங்கலும் ஏசும்படி எங்களை அம்மணமாக்கி நிறுத்தியிருக்கிற இது
பொல்லாங்கு என்று–பொல்லாத காரியமென்று
கருதாய்–நினைக்கிறாயில்லை’
பூ குருந்து–புஷ்பித்திரா நின்ற குருந்த மரத்தின் மேல்
ஏறி இருத்தி–ஏறி யிரா நின்றாய்’
நீ வேண்டியது எல்லாம்–நீ அபேஷிக்கு மவற்றை யடங்கலும்
தருவோம்–கொடுக்கிறோம்’
பல்லாரும்–(ஊரிலுள்ள) பலரும்
காணோமே–காணாதபடி
போவோம்–போகிறோம்’
பட்டை–(எங்களுடைய) பட்டுச் சேலைகளை
பணித்தருளாய்–தந்தருள வேணும்

இவர்கள் நெடும் போது நீரிலே நின்று நோவு படச் செய்தே
இவர்கள் பரியட்டங்களை எல்லாம் வாரிக் கொண்டு குருந்தின் மேல் இட்டு வைத்து இருந்தான்
நாங்கள் நீரிலே நெடும் போது நின்று கிலேசப் பட நீ பேசாது இருக்கிறது என் –
பரியட்டங்களைத் தா -என்ன –
பரியட்டங்களைத் தர நீரில் நின்றும் கரையிலே போந்து ஏறுங்கோள்-என்றான் –
அத்தை மெய் என்று சிலர் கரையிலே போந்து ஏறினார்கள் –
ஏறின அவர்களுடைய அங்க பிரத் யங்கங்களை ஊன்றப் பார்த்து ஸ்மிதம் பண்ணி –
சில விலாச சேஷ்டிதங்களைப் பண்ண

எல்லே ஈது என்ன விளமை-
என்னே -இது ஒரு பாலிச பிரவ்ருத்திகள் இருக்கும் படி என் -என்கிறார்கள் –
நான் பாலனாக -நீங்களோ தான் பஞ்ச தச வார்ஷிக வயஸ்கராய் பரிமாறினிகோள் –
அதில் வந்தால் -உங்களோடு என்னோடு வாசி உண்டோ –
இரண்டு திறத்தாரும் ஒத்த பருவமான பின்பு பருவத்துக்கு ஈடாக பரிமாற நீங்கள் உடன்பட்டிலி கோள் -என்றான்

எம்மனைமார் காணில் ஒட்டார்-
நாங்கள் உடன்படாமை யுண்டோ —
எங்கள் பந்துக்கள் காணில் ஒட்டார்கள் -என்றத்தாலே காண் நாங்கள் மாட்டாது ஒழிகிறது -என்ன

எனக்கும் ஒரு தாயும் தமப்பனும் உறவுமுறை யாரும் இல்லையோ –
நான் ஏதேனும் காம்பற்று வானத்தில் நின்றும் விழுந்தேனோ
அவர்கள் உண்டாய் இருக்க அன்றோ நானும் இங்கனே இருக்கிறது –
உங்களுக்கு அது இல்லை யாய்த்தே -என்றான்

எங்களைப் போலேயோ நீ -என்றார்கள்

எனக்கு வாசி என் என்ன –

உனக்கு வாசி யுண்டு –

பொல்லாங்கு ஈது என்று கருதாய்-
நீ பழி என்னப் பணைப்புதி-
நாங்கள் பலிக்கு அஞ்சுவுதோம் –
இது காண் உனக்கும் எங்களுக்கும் வாசி –

பூங்குருந்தேறி யிருத்தி-
நான் பழிக்கு அஞ்சினேன் ஆகிலும் உங்களுக்கு இது தர வேண்டுவது இல்லை இறே –என்று
குருந்தின் மேல் இவற்றையும் கொண்டு
அதில் பூ பொருந்தினால் போலே பொருந்தி -இழியக் கணிசியாதே இருந்தான் –

வில்லால் இலங்கை யழித்தாய் –
ஒருத்திக்காக ப்ரஹ்மாதிகளுடைய அஸ்த்ரங்களுக்கும் அழியாத படி
வர பலத்தாலே பூண் கட்டின ஊரை
மனிச்சுக்கு ஏகாந்தமான வில்லாலே மூலையடியே வழி போம்படி பண்ணின உனக்கு
இப்போது ஸ்வபாவம் வேறு பட்ட படி என் –

இப்போது என் ஸ்வ பாவம் வேறுபட்டதில்லை –
உங்கள் ஸ்வ பாவமும் வேறுபட்டதில்லை –
உங்கள் ஸ்வ பாவமும் அப்படியே இருக்க வேணும் –
நீங்கள் என் நினைவுக்கு ஈடாக வரில் அன்றோ நான் உங்கள் கார்யம் செய்வது -என்ன

அதிலும் ஒரு குறையும் இல்லை
உன் அபேஷிதம் எல்லாம் செய்யக் கடவோம் என்றார்கள் –
நீ வேண்டியது எல்லாம் தருவோம்-

ஆகில் தரலாகாதோ -என்று மடியை ஏற்றான் –
மடியிலே வந்து ஏறுங்கோள்– என்றுமாம் –

பல்லாரும் காணாமே போவோம்-
இங்கன் அன்று காண் இது செய்வது –
அதில் உருவ நடக்கும் படி செய்ய வேண்டும் காண்
பல்லாரும் காணாமே போவோம் -என்றார்கள் –

பலர் காணிலும் காண்கிறார்கள் -தவிரிலும் தவிருகிறார்கள்-
நான் முந்துற முன்னம் கண்டேனே -ஆகில் போங்கோள் -என்றான்

பட்டைப் பணித்து அருளாயே—-
பிறர் முன்னே நாங்கள் நிற்கும்படி எங்களை பண்ணி அருளாயே –

—————————————————————————–

பரக்க விழித்து எங்கும் நோக்கிப் பலர் குடைந்தாடும் சுனையில்
அரக்க நில்லாக் கண்ண நீர்கள் அலமருகின்றனவா பாராய்
இரக்கமேல் ஒன்றும் இலாதாய் இலங்கை அழித்த பிரானே
குரக்கு அரசு ஆவது அறிந்தோம் குருந்திடைக் கூறை பணியாய்—-3-4-

பதவுரை

இலங்கை அழித்த பிரானே!-’
பலர் குடைந்து ஆடும் சுனையில்–பல பெண்கள் படிந்து நீராடும் இப் பொய்கையின் கரையில்
கண்ண நீர்கள்–கண்ணீர்த் தாரைகள்
அரக்க நில்லா–அடக்கினாலும் நிற்க மாட்டாதவைகளாய்
அலமருகின்ற–ஆ தளும்புகிறபடியை
எங்கும்–நாற் புறத்திலும்
பரக்க விழித்து–நன்றாக விழித்து
நோக்கி பாராய்– உற்று நோக்கு’
ஒன்றும் இரக்கம் இலாதாய்–கொஞ்சங்கூட தயவு இல்லாதவனே!
குரங்கு அரசு ஆவது அறிந்தோம்–நீ மரமேற வல்லார்க்குள் தலைவன் என்பதை அறிந்து கொண்டோம்’
(ஆன பின்பு)
குருந்திடை கூறை–குருந்தின் மேலுள்ள (எங்கள்) சேலைகளை கொடுத்தருள வேணும்.

பரக்க விழித்து எங்கும் நோக்கிப் பலர் குடைந்தாடும் சுனையில்-
இவர்களும் நான் சொன்னதுக்கு எல்லாம் மறுமாற்றம் சொல்லா நின்றார்கள் –
இங்கன் அன்று செய்வது –
அச்சமுறுத்திக் காரியம் கொள்ள வேணும் என்று பார்த்து –

சிலர் வருகிறார்களாகக் கொண்டு சுற்றிலே பார்த்து உடம்பை ஒடுக்குவது
திரியவும் சிலர் வருகிறார்களாகக் கொண்டு அதுக்கும் கூசினானாக அத்திக்கிலே சில தலைகளை இட்டு மறைப்பது –
தழைப் புரையே எட்டிப் பார்ப்பது -இப்படிகளைக் கொண்டு
சிலர் சிலருக்கு பயாவஹமாய் இருப்பன சிலவற்றைச் செய்யத் தொடங்கினான் –

அவ்விடமும் தான் பலரும் வரும் இடமாய் –
இவன் செய்கிற செயலுக்கு சம்பாவனை யுள்ள விடமாய் இருந்தது –
சர்வ சாதாரணமான சுனை யாய்த்து —
இவனுடைய பயாவஹமான வ்யாபாரத்தாலும் –
சர்வ சாதாரண பிரதேசம் ஆகையாலும் துணுக் என்று கண்ண நீர் விழ விடப் புக்கது –

அது தான் நாம் இவன் முன்னே செய்தோம் ஆகிறது என் –
மறைக்க வேணும் என்று பார்த்து அமைப்பதாக கணிசித்தார்கள் –
இவர்கள் நியமிக்கப் பார்த்த இடத்திலும் நின்றது இல்லை –

அரக்க நில்லாக் கண்ண நீர்கள் அலமருகின்றனவா பாராய்
அநந்தரம்-யார் வருகிறார்களோ என்னுமத்தாலும் –
கண்ண நீர் நில்லாமையாலும் கிடந்தது துடிக்க புக்கார்கள் –
நீ பரியட்டம் தர வேண்டா –
அந்ய பரத்தை பாவிக்கிறதை தவிர்ந்து நாங்கள் படுகிற அலமாப்பைப் பாராய்
-என்கிறார்கள் –

இவர்கள் இப்படிச் சொல்லச் செய்தேயும்
நிர்த்தயரைப் போலே பாராதே
இருந்தான்

இரக்கமேல் ஒன்றும் இலாதாய் -இலங்கை அழித்த பிரானே-
இப்போது இரக்கம் இன்றிக்கே இருக்கிற நீ
முன்பு ஒருத்திக்காக இலங்கையை அழியச் செய்து உபகரித்தவன் –
தனக்கே ஒருகால் ஒருபடியும் மற்று ஒரு போது ஒரு படியுமாக வேறு படுமோ ஸ்வ பாவம் –

நமக்கு உள்ளது அதையும் இல்லை என்னா நின்றி கோளாகில்
இனி இல்லையாயே விட அமையாதோ என்னா
அவற்றையும் கொண்டு ஒரு கொம்பிலே தாவினான் –

குரக்கு அரசு ஆவது அறிந்தோம் குருந்திடைக் கூறை பணியாய்—
நீ மரம் ஏற வல்லாருக்கு முதலி என்னும் இடம் நாங்கள் அறிந்தோம் காண்-
அன்றிக்கே
காபேயமாக சிலவற்றைச் செய்யத் தொடங்கினான் –
குரக்கு அரசு ஆவது அறிந்தோம் –என்கிறார்கள் ஆதல் –
கையிலே பர்யட்டங்களை குருந்திலே பொகட்டு-
நம்மை அலையாதே நீங்களே ஏறி வாங்கிக் கொள்ளுங்கோள் -என்றான் –

குரக்கு அரசு ஆவது அறிந்தோம்
மரம் ஏறு வார்க்கு நிர்வாஹகர் ஆனாரோ தருவார்
ஏற மாட்டாதாரோ தருவார் -எங்களாலே முடியுமோ -என்றார்கள் –

எம்பெருமானே உபாயம் ஆவது ஒழிய
சேதனனுடைய முயற்சி உபாயம் அன்று -ஸ்வாபதேசார்த்தம் –

————————————————————————–

ஆந்தராளக் குடியிலே -இடைக்குலத்திலே-முக்தரும் பக்தரும் இல்லாத -குலத்திலே –
பிறந்தாள் ஒருத்தி உண்டு போலே காணும் –
ஈஸ்வர மர்மஞ்ஞையாய் இருப்பாளாய்-
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் ஆபன்னனாக -தன் மேன்மை பாராதே அது இடர்பட்ட பொய்கையிலே
அரை குலையத் தலை குலைய வந்து உதவி அதின் ஆபத்தை பரிஹரித்து பின்னையும்
ஏற்கவே வந்து பரிஹரிக்கப் பெற்றிலோம் -நோவு பட்ட பின்பு வந்து பரிஹரித்தது இதுவும் ஒன்றாய்த்தோ என்று
திரு உள்ளம் புண் பட்டு இருக்கும் படியை அறிவாள் ஒருத்தி
நீ பண்டு உன்னை ஆஸ்ரயத்தித்த தொன்றை ஒரு நீர்ப் புழு நலிய –
ஒரு ஜலசர சத்வம் என்று பாராதே வந்து விழுந்த படி அறிதியே –
இன்று அவ்வளவு இன்றிக்கே இரண்டு கிடாய் எங்களை நலிகின்ற்றது -என்ன –
கயலும் வாளையும் சேர்ந்து நலிய –

பரியட்டங்களையும் கொண்டு வந்து விழும் என்று பார்த்து அத்தை முன்னிட்டுக் கொண்டு சொல்கிறாள் –

காலைக் கதுவிடுகின்ற கயலொடு வாளை விரவி
வேலைப் பிடித்து என் ஐமார்களோட்டில் என்ன விளையாட்டோ
கோலச் சிற்றாடை பலவும் கொண்டு நீ ஏறி இராதே
கோலம் கரிய பிரானே குருந்திடைக் கூறை பணியாய்—3-5-

பதவுரை

கரிய–கறுத்த
கோலம்–திருமேனியை யுடைய
பிரானே–கண்ண பிரானே!
கயலொடு–கயல் மீன்களும்
வாளை–வாளை மீன்களும்
விரவி–ஒன்றாய்க் கூடி
காலை–(எமது) கால்களை
கதுவிடுகின்ற–கடியா நின்றன’
(இப்படி நீ எங்களை வருத்தப்படுத்துவதைக் கேள்விப்பட்டு)-
என் ஐமார்கள்–எங்கள் தமையன்மார்கள்
வேலை பிடித்து–வேலைப் பிடித்துக் கொண்டு
ஓட்டில்-உன்னைத் துரத்திவிட்டால்
என்ன விளையாட்டு–அது பின்னை) என்ன விளையாட்டாய் முடியும்?
நீ–நீ
கோலம்–அழகிய
சிற்றாடை பலவும் கொண்டு–சிற்றாடைகளை யெல்லாம் வாரிக் கொண்டு
ஏறி இராது–(மரத்தின் மேல்) ஏறி யிராமல்
குருந்திடை–குருந்த மரத்தின் மேலுள்ள
கூறை–(எங்கள்) சேலைகளை
பணியாய்–தந்தருள்

காலைக் கதுவிடுகின்ற கயலொடு வாளை விரவி
கயலோடு வாளையானது கலந்து -காலைக் கதுவா நின்றது கிடாய் –
ஓன்று நலிய அன்று பட்ட பாடு அறிதியே நீ -இப்போது இரண்டு கிடாய் நலிகின்றன –
அதந்த்ரித சமூபதி பரஹித ஹஸ்த மச்வீக்ருத பரணீத மணி பாதுகம் கிமிதி சாகுலாந்தபுரம்-
அவாஹன -பரிஷ்க்ரியம் பதகராஜ மாரோஹத-கரிப்ரவர ப்ரும்ஹிதே பகவதஸ் தவறாயி நாம
-ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் -2-57-
ஆஸ்ரிதன் கால் நொந்து கை எடுத்துக் கூப்பிட நம் கையும் காலும் பேணவோ என்று
சேனை முதலியாரையும் கை விட்டு
திருவடி நிலைகளையும் காற்கடைக் கொண்டு நீ பட்ட பாடு அறுதியே-

கானமர் வேழம் கை எடுத்து அலறக் கரா அதன் காலினைக் கதுவ –
ஆனையின் துயரம் தீரப் புள்ளூர்ந்து சென்று நின்று-

ஆழி தொட்டு இ றே
– ரஷித்தது-பெரிய திருமொழி -2-3-9-

இப்போது இரண்டு கிடாய் நலிகிறது
அது பிறராலே வந்த நலிவாகையாலே பரிஹரித்தோம் –
இது நீங்களே விளைத்துக் கொண்டது ஓன்று அன்றோ
அதுக்கு நான் என் என்னா மேன்மேலும் சில விலாச சேஷ்டிதங்களை பண்ணத் தொடங்கினான் –

வேலைப் பிடித்து என் ஐமார்களோட்டில் என்ன விளையாட்டோ-
நாங்கள் நெடும் போது நின்று நோவு பட -நீ எங்கள் பரியட்டங்களை தாரா விட்டவாறே
பெண்கள் போய் உறவு முறையார் காலிலே விழுந்தவாறே
அவர்கள் பின்னை சாயுதராய்க் கொண்டு வந்து
உன்னை ஓடிப் பிடித்து கட்டி இட்டு வைப்பார்கள் –
அப்போது பின்னை அழகிய விளையாட்டாய் தலைக் கட்டும் இறே –

என் ஐமார் -தமையன்மார் –
இப்போது நாங்கள் உன் கையில் படுகிற பாடு அன்று கிடாய் நீ அவர்கள் கையில் படுவது –

அத்தனையே -எனக்கு பலித்தது பலிக்கிறது –
இப்போது கை புகுந்தவற்றைக் கொடுக்கிறது என் -என்று
அரையிலே ஒன்றைச் சாத்துவது –
தலையிலே ஒன்றைக் கட்டுவது –
உத்தரியமாக ஒன்றை இடுவதாக
இப்படி தன் திரு மேனிக்கு பரபாகமாம் படி நாநா வர்ணம் ஆனவற்றைக் கொண்டு அலங்கரித்து –
சேஷித்த வற்றை குருந்திலே இட்டு வைத்து –
கண்டி கோளே நமக்குத் தகுதியாய் இருந்த படி –
இத்தைக் கண்ட உங்களுக்கு வேண்ட வேண்டி இருந்ததோ -என்றான் –

கோலச் சிற்றாடை பலவும் கொண்டு நீ ஏறி இராதே கோலம் கரிய பிரானே குருந்திடைக் கூறை பணியாய்–
அழகியதாய் இருந்தது
நாங்கள் அவற்றை –கோலச் சிற்றாடைகளை -வேண்டுகிறோம் அல்லோம் –
குருந்திலே கிடக்கிறவற்றைத் தா -என்கிறார்கள் –

——————————————————————

தடத்தவிழ் தாமரைப் பொய்கைத் தாள்கள் எம் காலைக் கதுவ
விடத்தேள் எறிந்தாலே போலே வேதனை யாற்றவும் பட்டோம்
குடத்தை எடுத்து ஏறவிட்டுக் கூத்தாட வல்ல வெங்கோவே
படிற்றை எல்லாம் தவிர்ந்து எங்கள் பட்டைப் பணித்து அருளாயே-–3-6-

பதவுரை

தடம்–விசாலமாயும்
அவிழ் தாமரை–மலர்ந்த தாமரைகளை யுடையவுமான
பொய்கை–தடாகத்திலே
தாள்கள்–தாமரைத் தண்டுகளானவை
எம் காலை–எங்கள் கால்களை
கதுவ–கடிக்க,
விடம் தேள் எறிந்தால் போல–விஷத்தை யுடைய தேள் கொட்டினாற்போலே
ஆற்றவும்–மிகவும்
வேதனை பட்டோம்–வருத்தப் படா நின்றோம்’
குடத்தை–குடங்களை
எடுத்து–தூக்கி
ஏற விட்டு–உயர வெறித்து
(இப்படி)-
கூத்து ஆட–குடக் கூத்தை ஆடுவதற்கு
வல்ல–ஸாமர்த்தியமுள்ள
எம் கோவே–எம்முடைய தலைவனே!
படிற்றை எல்லாம் தவிர்ந்து–(நீ செய்கிற) தீம்புகளை யெல்லாம் விட்டு
எங்கள் பட்டை பணித்தருளாய்-.-படிற்றை எல்லாம் தவிர்ந்து-தீமைகளை எல்லாம் விட்டு நீ செய்கிற

தடம் அவிழ் தாமரை -விசாலமான -மலர்ந்த தாமரை
தாள்கள் -தண்டுகள்
படிற்றை -தீம்புகளை –

தடத்தவிழ் தாமரைப் பொய்கைத் தாள்கள் எம் காலைக் கதுவ
பொய்கையில் உண்டான ஜலசர சத்வங்கள் பாதகம் ஆகா நின்றது என்றால் –
துணுக்  என்னுமோ பாதி –
தாமரைப் பொய்கையிலே தண்டுகளும் பாதகமாகா நின்றது கிடாய் என்றால்
கூடுமோ என்று பார்த்து அத்தை ஸ்மரிக்கிறார்கள்-

பொய்கையில் தாமரைத் தண்டுகள் எங்களை நலியா நின்றது என்ன —
ஆகில் கரையிலே போந்து ஏறும் கோள்-என்றான்
கரையிலேயோ தான் தாமரை இன்றிக்கே இருக்கிறது –

செக்கமலத்து அலர் போலும் கண் கை கால் செங்கனி வாய்
அக்கமலத்து இலை போலும் திருமேனி யடிகளுக்கே
-திருவாய்மொழி -9-7-3-
தடம் –கரை -பரப்பு /பெருமை -பெரிய பொய்கை -இறே
கண்ணா கண் கை கால் தூய செய்ய மலர்களாய்ச் சோதிச் செவ்வாய் முகிழதா
சாயல் சாமத் திரு மேனி தண் பாசடையா-

தாமரை நீள் வாசத் தடம் போல் வருவானே
-திருவாய்மொழி -8-5-1—
தாமரைத் தடாகம் போல் இருப்பவன் அன்றோ அவன் –

கீழே இந்த தாமரைப் பொய்கை துன்புறுத்த
மேலே அந்த தாமரைப் பொய்கை துன்புறுத்துகிறதே –

விடத்தேள் எறிந்தாலே போலே வேதனை யாற்றவும் பட்டோம்-
விஷம் இல்லாத தேளும் உண்டு போலும் காணும் –
கரையில் உள்ள தாமரை தடம் விஷம் இல்லாத தேளாக இருந்து துன்புறுத்துகிறதே –
நாங்கள் மிகவும் கிலேசப் படா நின்றோம் –

நீங்கள் நீரிலே புக்க போது தொடங்கி நானும் மரத்திலே இருக்கிறேன் –
இம்மரத்திலே வர்த்திக்கிற பதார்த்தங்களுக்கு ஓர் எல்லை இல்லை –
நானும் இவற்றாலே படுகிற வேதனைக்கு ஓர் அவதி உண்டோ -என்றான் –
உங்கள் அளவேயோ நான் பட்டது -என்றான்

காலத்தின் நெடுமை அவனுக்கும் ஒத்து இருக்கச் செய்தே
அது தோற்றுகிறது இல்லை காணும் இவர்களுக்கு
இழந்து இருப்பார்க்கு இறே காலம் நெடுகித் தோற்றுவது-
நிரபேஷன் இறே அவன் -பரியட்டம் கைப்படுகையாலே -நிரபேஷதை–
இவர்களை ஒழியச் செல்லாத படியாய் காணும் அவனுடைய நைரபேஷ்யம் இருப்பது –
ஆஸ்ரீத விஷயத்தில் சாபேஷத்வம் நைர பேஷ்ய விரோதி யாகாது இறே
அந்தப்புரத்துக்கு தாழ நிற்கும் காட்டில் அபிஷிக்தனுக்கு குறையாகாது இறே –

வேதனை ஆற்றவும்  பட்டோம் -என்கிறார்கள்

நான் அன்றோ வேதனை ஆற்றவும் பட்டேன் -என்றான்

அது ஆராலே -நாங்கள் பரியட்டங்களை வாங்கிக் கொண்டு போய் குருந்தின் மேல் போய் ஏறினோமோ-
அது உன்னாலே வந்தது அன்றோ -என்றார்கள் –

அது என்னாலே வந்தது ஆனாலும்
இத் திரளைக் கலைக்கப் பார்த்திலோம் -என்றான் –

அத்தனையே -உனக்கு இங்கனே திரட்ட வேண்டி இருந்ததோ –
கூட்ட மாட்டாயோ பெண்கள் அடையத் திரளும் படி காண –

(குடங்கள் எடுத்து ஏற விட்டு கூத்தாட வல்ல எம் கோவே
மடம் கொள் மதி முகத்தாரை மால் செய்ய வல்ல என் மைந்தா
இடந்திட்டு இரணியன் நெஞ்சை இரு பிளவாக முன் கீண்டாய்
குடந்தை கிடந்த எம் கோவே குருக்கத்தி பூ சூட்ட வா -ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -2- 7-7-)

(குடக்கூத்துக்கும் ஆளாகாத நம் போல்வாரைத் திருத்தவே திருக்குடந்தை ஆராவமுதனானான்
குருக்கத்தி -ஸ்தல வ்ருக்ஷம் திருக்குடந்தையில்)

குடத்தை எடுத்து ஏறவிட்டுக் கூத்தாட வல்ல வெங்கோவே-
மன்றிலே குடக் கூத்தை யாடி நிர் லஜ்ஜனாய் –
அவ் வழியாலே பெண்களை எல்லாம் திரட்டுமவன் அன்றோ நீ
இவர்கள் தங்கள் ஈடுபாடு தோற்ற வார்த்தை சொன்னார்கள் என்னா –
அதுவே அவகாசமாக -இன்னது செய்தான் என்று
பிறருக்கு பாசுரம் இட்டு சொல்ல ஒண்ணாத படி சிலவற்றைச் செய்யத் தொடங்கினான் –

படிற்றை எல்லாம் தவிர்ந்து –
நீ பண்ணுகிற மிறுக்குகளை எல்லாம் தவிராய் -என்கிறார்கள் –

தவிரிகோள் ஆகில்-கொடு போங்கள் என்று
தன் பரியட்டத்தைக் கொடுக்கப் பார்த்தான் –

எங்கள் பட்டைப் பணித்து அருளாயே–
நாங்கள் இவற்றை உடுத்து கொடு போய் எங்கள் தாய்மார் முன்னே நிற்கப் புக்கால் –
இவை உங்களுக்கு வந்த வழி என் -என்று ஆராயார்களோ –
ஆன பின்பு எங்களுடைய பரியட்டத்தைத் தாராய் -என்கிறார்கள் –

பஞ்ச லஷம் குடியில் பெண்களுக்கும் வேறு ஒரு பரியட்டம் கொடுக்கைக்கு
புடவைக் கட்டணம் எடுப்பித்துக் கொண்டு போனானோ என்னில்
த்ரௌபதி அரையில் துகிலோபாதி இவனும் ஒரு பேரிட்டு கொடுக்கிறான் –
வேணுமாகில்-
கோவிந்த கோவிந்த -என்கிறாள் வேணுமாகில் –

—————————————————————————————

நீரிலே நின்று அயர்க்கின்றோம் நீதி யல்லாதன செய்தாய்
ஊரகம் சாலவும் சேய்ததால் ஊழி எல்லாம் உணர்வானே
ஆர்வம் உனக்கே யுடையோம் அம்மனைமார் காணில் ஒட்டார்
போர விடாய் எங்கள் பட்டைப் பூங்குருந்து ஏறி இராதே——3-7-

பதவுரை

ஊழி எல்லாம்–கற்பாந்த காலத்திலெல்லாம்
உணர்வானே–(ஜகத் ரக்ஷண சிந்தையுடன்) உணர்ந்திருப்பவனே!
நீரிலே நின்று அயர்க்கின்றோம்–ஜலத்தில் நின்று கொண்டு வருத்தப்படா நின்றோம்’
நீதி அல்லாதன – அநீதியான செயல்களை
ஆல்–ஐயோ!’
(இப்படி நீ எங்களை வருத்தத் செய்தேயும்)
உனக்கே–உன் விஷயத்திலேயே
ஆர்வம் உடையோம்–நாங்கள் அன்புள்ளவர்களா யிரா நின்றோம்’
அம்மனைமார்–எங்கள் தாய்மார்
காணில்–நீ பண்ணும் லீலைகளுக்கு நாங்கள் இணங்கி நிற்பதைக் கண்டால்
செய்தாய்–செய்யா நின்றாய்’
(உன் விஷமங்களுக்குத் தப்பி ஓடிப் பிழைக்கப் பார்ப்போமென்றால்)
ஊர்–எங்கள் ஊராகிய ஆய்ப் பாடியும்
அகம்–மாளிகைகளும்
சாலவும்–மிகவும்
சேய்த்து–தூரத்தி லிரா நின்றன:
ஒட்டார்–இசைய மாட்டார்கள்’
எங்கள் பட்டை–எங்களுடைய சேலைகளை
போர விடாய்–தந்தருளாய்,
பூ குருந்து–பூத்திரா நின்ற குருத்த மரத்தின் மேல்
ஏறி இராதே–ஏறிக் கொண்டு தீமைகளைச் செய்யாதே.

நீரிலே நின்று அயர்க்கின்றோம் நீதி யல்லாதன செய்தாய்-
கோழி கூவுவதற்கு முன்னே -போது விடிந்து நீ உணர்வதற்கு முன்னே -வந்து
நீரிலே புகுந்து ஒருபடிப்பட நின்றத்தாலே அறிவு கலங்கிப் படுகிற க்லேசத்தைப் பாராய் –

நீங்கள் நீரிலே நின்று அறிவு கெட்டி கோளாகில்-
நான் மரத்திலே நின்று அயர்கிறது நெடும் போது இல்லையோ
நீங்கள் அன்றோ இது எல்லாம் பண்ணினி கோள் -என்னா
பரியட்டங்களையும் கொடாதே -சில விலாச சேஷ்டிதங்களைப் பண்ணினான் –

வாராய் -இங்கனே முறை கெட பரிமாறல் ஆகாது காண் -என்கிறார்கள்

இனி அது கொடு கார்யம் என் -என் செய்கை செய்தோம் இறே –
நான் ஸ்வ தந்த்ரன் அன்றோ –நான் செய்ததுக்கு நிவாரகர் உண்டோ
இனி நீங்கள் நம்மால் பட்ட இடரை ஊரிலே போய் முறைப்பட மாட்டி கோளோ-என்றான் –

அது செய்யலாய்த்து இறே –
ஊரகம் சாலவும் சேய்ததால் –
ஊர் தான் தூரிது-அவ்வளவும் வருந்திச் சென்றோமே யாகிலும் அதுக்கு மேலே
ஊரில் அகம் தான் சால தூரிது -காண் -என்கிறார்கள் –

நான் மிறுக்குப் பண்ணா நின்றேனாகில்-
ஊரகம் சாலவும் தூரிதாகில் –
இனி இதுக்கு மேல் போக்கடியாக நீங்கள் நினைத்து இருந்தது என் என்றான் –

ஊழி எல்லாம் உணர்வானே-
பிறரால் வந்த நலிவோடு -தந்தாமால் வந்த நலிவோடு வாசியற
உன்னைக் கொண்டு தீர்க்குமா போலே
உன்னால் வந்த நலிவுக்கும் நீயே போக்கடி சொல் -என்றார்கள் –

உன்னை ஒழிந்த காலோபலஷித சகல பதார்த்தங்களும் அழிந்த அன்று
அவற்றுக்கு போக்கடி தேட வல்ல நீயே போக்கடி தேடும் அத்தனை அன்றோ –
சதேவ சோம்யே இதமக்ர ஆஸீத் ஏக மேவ அத்விதீயம் -சாந்தோக்யம் -6-2-1- என்னும் படியான அன்று
பஹூஸ்யாம் -என்று போக்கடி பார்க்க வல்ல நீ பார்க்கும் அத்தனை அன்றோ –உணர்வான்
சங்கல்ப ரூப ஜ்ஞானம் உடையவன் நீ அன்றோ

நாம் போக்கடி பார்த்து நல வழி போக்க்கலாய்த்து இறே அந்த ஜகத்துக்கு அப்ரதிஷேதம் உண்டாகையாலே
உங்கள் பக்கல் இது இல்லையே -என்றான்

அப்ரதிஷேதம் மாத்ரமே அன்று –
ஆர்வம் உனக்கே யுடையோம் –
எங்கள் பக்கலிலும் அதுக்கு ஒரு குறை இல்லை காண் –
நீ அது அறிந்திலை -இத்தனை உள்ளது -என்கிறார்கள் –

நான் அறிவேனோ இந்தக் கூட்டு எழுத்தை –
இல்லையாகில் அநிஷ்ட கார்யம் பலியா நிற்க ஆர்வம் உனக்கே உடையோம் -என்கையாவது என் –
ஒரு உக்தி அமையுமோ -அதின் கார்யம் பலிக்க வேண்டாவோ -என்றான்

அது நாங்கள் வேண்டாமோ
அம்மனைமார் காணில் ஒட்டார்-
பிறரை பரிஹரிக்க வேணும் என்று இருந்தோம் இத்தனை காண் -என்றார்கள்-

நானும் நீங்கள் பட்டுகளும் உடுத்து -மன ப்ரீதியோடு போய்
உங்கள் அகங்களில் புக்கிருந்து விளையாட அன்றோ வேண்டி இருப்பது
பட்டுத் தர நெஞ்சு இசைகிறது இல்லை -அத்தை இசைவித்து தர வேணும் -என்றான் –

நீ நெஞ்சு ஒழியத் தந்தாலும் அமையும் எங்களுக்கு -என்றார்கள் –

ஆகில் பிடியுங்கோள் -என்று பரியட்டத்தை எடுத்து செண்டிலே ஏறிட்டு
இவர்களுக்கு எட்டிற்று எட்டாதாக நாற்றி முகத்தை மாறிச்
சில பூக்களிலே கண்ணை வைத்து அந்ய பரரைப் போலே இருந்தான் –

போர விடாய் எங்கள் பட்டைப் பூங்குருந்து ஏறி –
எங்களுக்கு எட்டும்படி தாராய் –
பரியட்டங்களை வாரிக் கொண்டு போய் இவர்களுக்கு எட்டாத படி இருந்ததுக்கு மேலே ஓன்று இறே இது –
படு கொலை அடிக்காதே -என்கிறார்கள் –

———————————————————————————————-

மாமியார் மக்களே யல்லோம் மற்றும் இங்கு எல்லாரும் போந்தார்
தூ மலர்க்கண்கள் வளரத் தொல்லை யிராத் துயில்வானே
சேமமலேன்றிது சாலச் சிக்கனே நாமிது சொன்னோம்
கோமள வாயர் கொழுந்தே குருந்திடைக் கூறை பணியாய்–3-8-

பதவுரை

தொல்லை இரா – பழைய ராத்ரிகளில்
தூ மலர் கண்கள் வளர–பரிசுத்தமான மலர் போன்ற கண்கன் நித்ரா பரவசமாம்படி
துயில்வானே–பள்ளி கொள்பவனே!
(இப் பொய்கைக் கரையிலே நிற்குமவர்கள்)
மாமியார் மக்களே அல்லோம்–உனக்குத் தேவிமாராகும் முறையிலுள்ளார் மாத்திரமல்லோம்’
மற்றும் எல்லோரும்–மற்றுள்ள மாமிமார், அவர்கள் தாய்மார் முதலியவர்களும்
இங்கு–இவ் விடத்தில்
போந்தார்–வந்திருக்கின்றார்கள்’
இது–நீ செய்கிற இத் தீம்பானது
சால–மிகவும்
சேமம் அன்று–தகுதியானதன்று’
இது–இவ் வார்த்தையை
நாம் நாங்கள்
சிக்கன–திண்ணிதாக
சொன்னோம்–சொல்லுகின்றோம்’
ஆயர்–இடையர்களுக்கு
கோமளக் கொழுந்தே–இளங்கொழுந்து போன்றவனே!
குருந்திடை கூறை பணியாய்

இவன் ஒரு காலைக்கு ஒரு கால் மிகை செய்யப் புக்கவாறே –
ஊரில் இவை செய்யாதே இங்கே இவை செய்கிறதுக்கு கருத்து –
தனி இடத்தில் செய்ததுக்கு ஆராய்ச்சி இல்லை என்று இறே ‘
இவை அடைய ஊரிலேயும் வார்த்தையும் காண் -என்றார்கள்

ஊரில் வார்த்தை யாகிறது என் -நீங்களே யன்றோ இங்கே வந்திகோள்
நான் தான் தீம்பன் அன்றோ —

நீ தீம்பு செய்வான் என் என்றால்
மைதுனமையால் செய்தேன் என்று எனக்கு ஒரு மறுமாற்றம் உண்டு -என்ன

மாமியார் மக்களே யல்லோம் –
ஒருராக நோற்கப் போந்த இடத்தில் வெறும் மாமியார் மக்களாய் இருப்பார்களோ –

மற்றும் இங்கு எல்லாரும் போந்தார்-
அவர்களைப் பெற்ற வர்களும் உண்டாய் இராதோ –
நீ நினைத்தவர்கள் அல்ல காண் இங்குப் போந்தார்-
உனக்கு கூச்சு முறை உடையார் எல்லாரும் போந்தார்கள் காண் –
ஆகையால் இங்குப் பிறந்தவை ஊரிலும் வார்த்தை யாம் காண்-

நீங்கள் தான் நம்மை அறிவுதி கோள் –
நம்மை அறிந்தால் நாமும் நீங்களுமான பரிமாற்றத்துக்கு வேண்டாதாரை கொடு வரக் கடவுதி கோளோ -என்றான் –

தூ மலர்க்கண்கள் வளரத் தொல்லை யிராத் துயில்வானே-
நன்றாக நித்தரை பண்ணுவாய் -மீமிசைச் சொல் -என்று இருந்தோம் –
நீ பண்டு போலேயே இப்போது என்று இருந்தோம் -இப்போதாக வேறு ஒரு படியாவது அறிந்தோமோ
பழைய ராத்ரிகளில் முற்கூறு எல்லாம் பெண்களோடு தீம்பு செய்து
பிற்கூறு உறங்கிப் போரக் கண்ட படியாலே இப்போதும் அப்படி என்று இருந்தோம் –
நீ எங்களுக்கு முன்னே உணர்ந்து வந்து முற்பாடனாய் வந்து நிற்பது நாங்கள் அறிந்திலோம் காண் –

இனி அது கொடு கார்யம் காண் –
முற்பாடராய் வந்து நின்றோமே -என்று அதுக்கு மேலே சில மிகைகளைச் செய்யப் புக்கான் –

சேமமலேன்றிது சாலச் சிக்கனே நாமிது சொன்னோம்-
வாராய் -நீயும் நாங்களுமான பரிமாற்றம் உருவச் செல்ல வேணும் என்று இங்கன் சொல்லிப் போருவது உண்டு –
அதுக்கு உடல் அல்ல கிடாய் நீ இப்போது செய்கிறவை –
இவை ரஷை பெற்று போருவது ஓன்று அல்ல –
இவ்வளவிலே தலைக் கட்டும் கிடாய் என்ன –

இது ஆர் தான் சொன்னார் என்றான்

நாம் இது சொன்னோம் -என்றார்கள் –

அத்தைக் கேட்டு பயந்தது போலே நடித்து –
ஆகில் இவ்வாச்சார்யா வசனம் அதி லங்கிக்கல் ஆகாது -ஒக்கும் ஒக்கும் –
உங்கள் வார்த்தை அன்றோ -என்றான் –

அப்படி அல்ல காண் –
சிக்கென சொன்னோம் –
பிரதிபத்தி பண்ணாதார்க்கு குற்றத்தாலே வந்ததாம் அத்தனை கிடாய் இனி மேல் வரும் அநர்த்தம்-என்றார்கள் –

ஓம் இந்த குருகுல வசநாதி லங்கநம் பண்ணின நான் புக்க லோகத்திலே புகுகிறேன் என்று
அவற்றில்-திருவரைக்குத் தகுதியாய் இருப்பன சில பரியட்டங்களை திருவரையிலே சாத்தி –
சேஷித்த வற்றை குருந்திலே இட்டு வைத்து
கண்டி கோளே இவை நம் சௌகுமார்யத்துக்கு சேர்ந்து இருந்த படி -என்ன

கோமள வாயர் கொழுந்தே குருந்திடைக் கூறை பணியாய்–
அழகியதாய் இருந்தது
நாங்கள் தான் அவற்றைத் தரச் சொன்னோமோ
மேன்மை இல்லாத மரத்திலே கிடக்கிற வற்றைத் தா -என்கிறார்கள் –

———————————————————————————–

இவனுக்கு ஆகார த்வ்யமும் உண்டு –
அதாவது ஏத்தினாருக்கும் கார்யம் செய்யும் –
வைதார்க்கும் கார்யம் செய்யும் –
அதில் ஏத்திப் பார்த்த இடத்தில் ஒன்றும் பலித்ததில்லை –
இனி வைதால் கார்யம் செய்யுமாகில் -அத்தை செய்து பார்க்கிறோம் என்று வைகிறார்கள் –

கஞ்சன் வலை வைத்த வன்று காரிருள் எல்லில் பிழைத்து
நெஞ்சு துக்கம் செய்யப் போந்தாய் நின்ற விக்கன்னியரோமை
அஞ்ச யுரப்பாள் அசோதை ஆணாட விட்டிட்டிருக்கும் –
வஞ்சகப் பேய்ச்சி பாலுண்ட மசுமையிலீ கூறை தாராய்--3-9-

பதவுரை

கஞ்சன்–கம்ஸனானவன்
வலை வைத்த அன்று–உன்னை அழிப்பதாக நினைத்த காலத்தில்
கார் இருள்–மிக்க இருளை யுடையத்தான
எல்லில்–இரவில்
பிழைத்து–பிழைத்து,
நின்ற–(அம்மணமாக) நிற்கின்ற
இக் கன்னிய ரோமை–இளம் பெண்களான எங்களுக்கு
நெஞ்சு துக்கம் செய்ய–மனத் துன்பத்தை உண்டாக்குவதற்காக
போந்தாய்–வந்து பிறந்தாய்’
அசோதை–யசோதைப் பிராட்டியோ வென்றால்
அஞ்ச–நீ பயப்படும்படி
உரப்பாள்–உன்னை அதட்ட மாட்டாள்’
ஆணாட விட்டிட்டிருக்கும்–தீம்பிலே கை வளரும் படி உன்னை விட்டிரா நின்றாள்’
வஞ்சகம்–வஞ்சனை யுடைய
பேய்ச்சி–பூதனையினுடைய
பால்–முலைப் பாலை
உண்ட–(அவளுயிரோடே கூட) உறிஞ்சி யுண்ட
மசுமை இலீ–லஜ்ஜை யில்லாதவனே!
கூறை தாராய்–சேலைகளைத் தந்தருள்.

கஞ்சன் வலை வைத்த வன்று
அவன் உபய விபூதியையும் அழிக்கக் கோலின அன்று –
சத்தாயோகி -சகல பதார்த்தங்களையும் முடிக்க கோலின அன்று –
விபூதி அழிந்தால் அவன் உளனாக உண்டாக்கிக் கொள்ளலாம்
அவனுக்கு ஒரு நலிவு பிறந்ததால் பின்னை ஒன்றும் இல்லை இறே

ஸ்தன்யம் தத் விஷ சம்மிச்ரம் ரஸ்ய மாஸீஜ் ஜகத்குரோ —
விஷம் தானே தாரகமான பின்பு யாய்த்து ஜகத்துக்கு ஒரு சேஷி உண்டாய்த்து
விஷம் பாதகமாவது அம்ருதம் தாரகமாவது என்னும் மரியாதைகள் கட்டினவன் பக்கல் அது கார்யம் செய்ய மாட்டாதே –
தூய குழவியாய் விடப்பால் அமுதா அமுது செய்திட்ட மாயன் -திருவாய் -1-5-9-

காரிருள் எல்லில் பிழைத்து –
அவன் தப்பாத படி நலியக் கோலினான் —
அற்றை அளவிலே ரஷகமாகைக்கு ஓர் இருள் உண்டாவதே –
கொடு போகிற இடத்தில் பிறர்க்கு தெரியாத படி கொடு போகலாம் படி திருமேனி யோடு ஒத்த நிறமாகையும் –
காத்துக் கிடக்கிறவர்களுக்கு நித்ரா பாரவச்யத்துக்கு உடலாகையும் இரண்டும் உண்டு இறே

வீங்கு இருள்வாய் பூண்டு அன்று அன்னை புலம்பப் போய்
அங்கு ஓர் ஆய்க்குலம் புக்கதும்
-திருவாய் -1-5-9-என்னக் கடவது இறே –

இதுக்கு பிள்ளை உறங்கா வல்லி தாசர் –
இவன் தான் பருவம் நிரம்பாமையாலே தன்னை நோக்கிக் கொள்ள மாட்ட்றிற்று இலன் –
புறம்பு தான் பரிந்து நோக்குகைக்கு ஒருத்தர் இல்லை –
கம்சாதிகள் தப்பாமல் அகப்படுத்த கோலி நின்றார்கள் –
அவ்வளவிலே உதவித் தந்தது இருள் அத்தைச் சரணம் புகும் அத்தனை இறே -என்று பணிப்பாராம் –

அத்தைப் பற்ற இறே இவர்கள் தான் அந்த இருளை வெறுக்கிறது இப்போது
ஸ்ரீ வஸூ தேவரையும் ஸ்ரீ தேவகியாரையும் அவதார காலத்திலேயே விட்டுப் போருகையாலே பண்ணின நலிவே அன்றிக்கே
தேவகியாரை ஒழிந்த சேஷித்த ஸ்திரீ வர்க்கத்தை நலியா நின்றாய் –

நெஞ்சு துக்கம் செய்யப் போந்தாய் நின்ற விக்கன்னியரோமை-
கம்சன் வலையில் அகப்படாதே தப்பின இது –
பெண் பிறந்தாரை ரஷிக்கைக்கு உடல் என்று இருந்தோம் –
இது எங்களை நலிகைக்கு உடலாய் விட்ட அத்தனை ஆகாதே

இனி அவனால் புண்பட்ட நம்முடைய நோவுபாட்டை அறிவித்தால் தானும் பெண் பிறந்தவள் ஆகையாலே அறிந்து
இரங்கக் கூடும் என்று அவளுக்கு அறிவிக்கில்
அங்கனம் தீமைகள் செய்வார்களோ நம்பீ ஆயர் மட மக்களை -பெரிய திருமொழி -10-7-11-என்கிறபடியே –
இடைப் பெண்களை
நாயந்தே -நலியலாமோ -என்று அஹ்ருதயமாக ஒரு வார்த்தை சொல்லி
கண்ணஞ்சி நியமியாதே கை வாங்கி இருக்குமே –
அத்தைக் கேட்டு பொகடு பொகடு இவளில் இன்னமும் அவன் தானே நல்லான் காண் –

அஞ்ச யுரப்பாள் அசோதை ஆணாட விட்டிட்டிருக்கும் –
வந்த இவர்கள் எதிருக்கு ஒன்றைச் சொன்னாளாம் அத்தனை போக்கி அஞ்சும் படி பொடியாள் –

ஆணாட விட்டிட்டு இருக்கும்
இவர்கள் முறைப்படி நம்மை நலியப் பார்த்த -அதின் எல்லையும் கண்டு விட்டோம் -என்று முன்பே
தீம்பிலே கை வளருகிறவன் சஹகரிப்பாரையும் பெற்றவாறே சதசாகமாகப் பணைக்கும் ஆயத்து –

இருக்கும் –
தான் கண்ட படி இவனைத் தீம்பு செய்ய விட்டு –
நம் மகன் இப்படி பருவம் நிரம்பி தீமை செய்யப் பெற்றோம் என்று அத்தாலே –
தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே-பெருமாள் திருமொழி -7-8- என்கிறபடியே
ஆனந்த நிர்பரையாய் க்ருதக்ருதையாய் இருக்கும்

பிறரை இட்டு நெருக்கியோ என்னை நீங்கள் கார்யம் கொள்ளப் பார்த்தது -என்னாச் சிவிட்கு என்றான் –
நாங்கள் அங்கண் நினைத்திலோம் காண் –
வஞ்சகப் பேய்ச்சி பாலுண்ட மசுமையிலீ கூறை தாராய்–
நீ தான் தாய் முலைக்கும் பேய் முலைக்கும் வாசி அறியாதான் ஒருத்தன் இறே
பிறர் நோவு கண்டால் –ஹ்ரீரேஷா ஹி–ஆரண்ய -10-9-என்கிறபடியே
முற்பாடனாய் லஜ்ஜிக்கும் போது சக்கரவர்த்தி திருமகனாக வேண்டாவோ –
உனக்கு இவை தெரியுமோ -நீ லஜ்ஜா ஸூ நயன் அன்றோ —
மசிமை -சுணை

கூறை தாராய் –
நீ ஆனாராகிராய் -எங்கள் பரியட்டத்தை முதல் முன்னம் தா-

———————————————————

கன்னியரோடு எங்கள் நம்பி கரியபிரான் விளையாட்டை
பொன்னிய மாடங்கள் சூழ்ந்த புதுவையர் கோன் பட்டன் கோதை
இன்னிசை யால் சொன்ன மாலை ஈரைந்தும் வல்லவர் தாம் போய்
மன்னிய மாதவனோடு வைகுந்தம் புக்கிருப்பாரே–3-10-

பதவுரை

எங்கள் நம்பி–எமக்கு ஸ்வாமியாய்
கரிய–கார் கலந்த மேனியனான
பிரான்–கண்ண பிரான்
கன்னிய ரோடு–ஆயர் சிறுமியரோடே செய்த
விளையாட்டை–திவ்ய லீலைகளைக் குறித்து
பொன் இயல்–ஸ்வர்ண மயமான
மாடங்கள் சூழ்ந்த–மாடங்களால் சூழப்பட்ட
புதுவையர் கோன்–ஸ்ரீவில்லிபுத்தூரி லுள்ளார்க்குத் தலைவரான
பட்டன் கோதை–பெரியாழ்வார்க்குத் திருமகளான ஆண்டாள்
இன் இசையால் இனிய இசையாலே
சொன்ன–அருளிச் செய்த
மாலை–சொல் மாலையாகிய
ஈர் ஐந்தும்–இப் பத்துப் பாட்டுக்களையும்
வல்லவர் தாம்–கற்க வல்லவர்கள்
போய்–(அர்ச்சிராதி மார்க்கமாகப்) போய்
வைகுந்தம் புக்கு–பரம பதத்தை யடைந்து (அவ் விடத்திலே)
மன்னிய–நித்ய வாஸம் செய்தருளுகிற
மாதவனோடு–திருமாலோடு கூடி
இருப்பார்–நித்யா நுபவம் பண்ணிக் கொண்டு வாழ்ந்திருக்கப் பெறுவர்.

இத்தால் சொல்லிற்று யாய்த்து –
இவன் செய்யுமவற்றை அறியாதே சொன்னவற்றை மெய் என்று இருக்கைக்கும்
கால தத்வம் உள்ளது அனையும் அனுபவியா நின்றாலும்
புதுமை மாறாதே இருக்கைக்கும் —
இவன் பண்ணும் தீம்புக்கு பாடாற்ற மாட்டாதே இருக்கைக்கும்
கன்னியர் என்கிறது

எங்கள் நம்பி –
பஞ்ச லஷம் குடியில் பெண்களை நலிகைக்கு ஈடான தீம்பாலே பூரணன் –

கரிய பிரான் விளையாட்டை-
அக வாயில்-தீம்பில்லை யாகிலும் –
மேல் விழ வேண்டும்படி யாய்த்து வடிவு அழகு இருப்பது –

பொன்னிய மாடங்கள் சூழ்ந்த புதுவையர் கோன் பட்டன் கோதை-
இவ் விஷயத்தில் இவ்வளவான அவகாஹா நத்துக்கு அடி பெரியாழ்வார் வயிற்றில் பிறப்பு யாய்த்து –

இன்னிசை யால் சொன்ன மாலை ஈரைந்தும் வல்லவர் தாம் போய்-
பாட்யே கேயே ச மதுரம் -பால -4-8-
எங்கனம் சொல்லிலும் இன்பம் பயக்குமே –
திருவாய் -7-9-11-

மன்னிய மாதவனோடு வைகுந்தம் புக்கிருப்பாரே–
நித்தியமான ஸ்ரீ வைகுண்டத்திலே போய்
ஸ்ரீ யபதியான சர்வேஸ்வரன் உடன் கூட நித்ய அனுபவம் பண்ணப் பெறுவர்-

——————————————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ நாச்சியார் திரு மொழி – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் -இரண்டாம் திருமொழி —

September 2, 2015

அவதாரிகை –

இப்படி இவர்கள் பண்ணின ஆஸ்ரயணத்தை அனுசந்தித்து –
தங்களைப் பெறுகைக்கு நாம் வருந்த வேண்டும்படி இருக்குமவர்களை
நம்மைப் பெறுகைக்கு தாங்கள் வருந்துகை யாவது என் –

அது தன்னிலும் நம் காலில் விழுகை அன்றிக்கே
நம்மைப் பெறுகைக்கு ஒரு தேவதாந்தரத்தின் காலிலே துவளும் படி நாம் பிற்பாடர் ஆனோமே –
அழகியதாகக் கார்யம் பார்த்தோமே -என்று தன் பிற்பாட்டை அநு சந்தித்து –
திரு உள்ளம் நொந்து –

திருவாய்ப்பாடியிலே பொதுவானார் வருஷார்த்தமாக இந்தரனுக்கு கொடு போய் இடுகிற சோற்றைக் கண்டு
நாம் பிறந்து வளருகிற ஊரிலே சிலர் ஒன்றை தேவதாந்தரத்துக்கு ஆக்குகை யாவது என் -என்று
அதுவும் பொறுக்க மாட்டாதே
மலையின் முன்னே கொடு போய் குவியுங்கோள் -என்று சொல்லி
தான் மலையாய் இருந்து ஜீவிக்குமவன் –

தனக்கு அசாதாரணைகளான இவர்கள் -தன்னைப் பெறுகைக்கு காம சமாஸ்ரயணம்
பண்ணும் போது பொறுக்க மாட்டான் இறே –

ஒரு சாதன அனுஷ்டானத்தாலே யாதல் -அன்றிக்கே –
இதர சமாஸ்ரயண முகத்தாலே யாதல் –
தன்னைப் பெற வருந்தும் அதுவும் பொறுக்க மாட்டாதவன் –
நேர் கொடு நேர் காமன் காலிலே விழுந்தால் பொறுக்க மாட்டான் இறே –

அத்தாலே திரு உள்ளம் தளும்பி ஆனைக்கு உதவினால் போலே கடுக வந்து முகம் காட்ட
அவர்களும் இருந்து -அந்ய பரத்தை பாவித்து சிற்றில் இழைக்க-
அது தான் ஆகிறது -காம சமாஸ்ரயணத்தில் ஒரு வகை இறே –

அத்தை அழிப்பதாக உத்யோகிக்க –
இவர்களும் பல வகையாலும் -வேண்டா -என்ன –
நடுவே இவனும் வேணும் -என்ன

இப்படிகளாலே நடுவே ஒரு மஹா பாரதம் பிரவ்ருத்தமாய் –

அநந்தரம் –
சம்ச்லேஷம் பிரவ்ருத்தமாய்-

எம்மைப் பற்றி மெய்ப்பிணக்கு இட்டக்கால் -2-9–
—விஸ்லேஷ அந்தமான படியைச
கோழி அழைப்பதன் முன்னம்
 -மேலில் திருவாய் மொழி -சொல்லிற்று ஆயிற்று –

—————————————————————————–

நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணா நரனே உன்னை
மாமி தன் மகனாகப் பெற்றால் எமக்கு வாதை தவிருமே
காமன் போதரு காலம் என்று பங்குனி நாள் கடை பாரித்தோம்
தீமை செய்யும் சிரீதரா எங்கள் சிற்றில் வந்து சிதையேலே–2-1-

பதவுரை

நாமம் ஆயிரம்–ஸஹஸ்ர நாமத்தினால்
ஏத்த நின்ற–(நித்ய ஸூரிகள்) துதிக்கும்படி நின்ற
நாராயணா–நாராயணனே!
நரனே–(சக்கரவர்த்தித் திருமகனாய்ப் பிறந்து) மானிட வுடல் கொண்டவனே!
உன்னை–(ஏற்கனவே தீம்பனான) உன்னை
மாமி தன் மகன் ஆக பெற்றால்–பர்த்தாவாகவும் பெற்றால்
எமக்கு வாதை தவிருமே–நாங்கள் நலிவுபடா திருக்க முடியுமோ?’
காமன் போதரு காலம் என்று–மன்மதன் வருங்கால மென்று
பங்குனி நாள்–பங்குனி மாதத்தில்-
கடை–(அவன் வரும்) வழியை
பாரித்தோம்–கோடித்தோம்’
தீமை செய்யும்–தீம்புகளைச் செய்கின்ற
சிரிதிரா–ச்ரிய:பதியான கண்ண பிரானே!
எங்கள் சிற்றில்–நாங்களிழைக்கின்ற மணற் கொட்டகங்களை
வந்து–(நாங்கள் விளையாடுமிடத்தில்) வந்து
சிதையேல்–நீ அழிக்க வேண்டா.

கடை பாரித்தோம் -அவன் வரும் வழியை கோடித்தோம்-

நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணா நரனே உன்னை-
ஸ்தனனன்ய பிரஜை நோவு கொண்டால் அதுக்காக தான் குடிநீர் குடிக்கும் தாயைப் போலே
நர நாராயண ரூபத்தாலே வந்து
இச் சேதனருககாக தான் தபஸ்ஸூ பண்ணின இத்தை அனுசந்தித்த தேவ ஜாதி-
தேவரீர் என்ன கார்யம் செய்து தலைக் கட்டுகைக்காக இப்படி தபஸ் ஸூ பண்ணி அருளுகிறது -என்று ஸ்தோத்ரம்
பண்ணும் படியாக நின்ற நிலையைச் சொல்லிற்று ஆகவுமாம்

அன்றிக்கே –
நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணா –என்று பிரித்து
தத் விஷ்ணோ பரமம் பதம் சதா பஸ்யந்தி ஸூ ரய-திவீவ சஷூராரததம் –
தத் விப்ராசோ விபன்யவோ ஜாக்ருவாம்சஸ் சமிந்ததே விஷ்ணோர்யத் பரமம் பதம் -என்கிறபடியே
அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான நித்ய ஸூரிகள் ஸ்தோத்ரம் பண்ண
உபய விபூதி உக்தனாய்க் கொண்டு
நித்ய விபூதியிலே இருக்கும் இருப்பைச் சொல்லிற்று ஆகவுமாம்

நரனே –
ஏதத் இச்சாம்யஹம் ஸ்ரோதும் பரம் குதூஹலம் ஹி மே-மஹர்ஷே தவம் ஸ்மர்த்தோஸ் அஸி
ஜ்ஞாது-
மேவம் விதம் நரம் -பால -1-5-என்கிறபடியே –
அங்கு நின்றும் போந்து சக்கரவர்த்தி திரு மகனாய் நிற்கும் நிலையைச் சொல்லுகிறது –

உன்னை மாமி தன் மகனாகப் பெற்றால் எமக்கு வாதை தவிருமே-
அளவுடையரான நித்ய ஸூரிகள் தன்னை உள்ளபடி எல்லாம் அறிந்து ஸ்தோத்ரம் பண்ண –
தன் ஐஸ்வர்யம் எல்லாம் தோற்றும்படி
பரம பதத்திலே இருக்கும் இருப்பைச் சொல்லிற்று –

அங்கு நின்றும் போந்து  –
அறிவுடையார் அறிவில்லாதார் -என்ற வாசி இன்றிக்கே
இருந்ததே குடியாக எல்லாரும் ஒக்கத்
தன்னுடைய சீலாதி குணங்களுக்கு தோற்று நெஞ்சு உளுக்கி

ராமோ ராமோ ராம பிரஜா நாம பவன்கதா -ராமபூதம் ஜகத்பூத் ராமே ராஜ்யம்பிரசாசதி –யுத்த -131-102-என்றும்
பால அபி க்ரீடா மாநா க்ருஹத் வாரேஷூ சங்கச -ராமாபிஷ்டவ சம்யுக்தா சக்ருரேவ மித கதா -அயோத் -6-16-என்றும்
சொல்லுகிறபடியே ஏத்தும் படியாக வந்து
திரு வவதரித்து நிற்கும் படியைச் சொல்லிற்று

அவை போலே அன்றிக்கே —
அவற்றின் கார்யமான தீம்பாலே பெண்களை ஓடி எறிந்து
தான் செய்தது விலக்காத படியாகப் பண்ணி
செய்தது அடையப் பொறுக்கும் படியான பிராப்தியையும் முன்னிட்டுக் கொண்டு வர்த்திக்கிற படியை சொல்லுகிறது –

முன்பே தீம்பனாய் இருக்கிற நீ –
அதுக்கு மேலே ஒரு மைத்துனமை ஏறிட்டுக் கொண்டு

நலியப் புக்கால் எங்களால் நலிவு படாது இருக்கப் போமோ —
நாங்கள் இங்கனே நலிவு பட்டு போம் இத்தனை யன்றோ முடிய –

எமக்கு
ரூப ஔதார்ய குணை பும்ஸாம் திருஷ்டி சித்த அபஹாரிணம்-என்கிறபடியே
வன் நெஞ்சைரையும் கூட அழிக்குமது
பிறப்பே அபலைகளாய் இருக்கிற வர்களால் பொறுக்கப் போமோ -என்று
அவன் தீம்புகளுக்கு பொறுக்க ஒண்ணாமை தோற்ற சொன்னார்கள் இவர்கள் –

நானோ நீங்கள் அன்றோ முன் தீம்பு செய்திகொள்-
நான் நினைவு அற்று இருக்க என் வரவைக் கடாஷித்து சிற்றில் இளைத்து வைத்தி கோள்-என்றான்

அதுவோ –
அது வாகில் உன்னுடைய வரவை உத்தேசித்துச் செய்தோம் அல்லோம் காண்-

காமன் போதரு காலம் என்று பங்குனி நாள் கடை பாரித்தோம்-சிரீதரா எங்கள் சிற்றில் வந்து சிதையேலே–
காமன் வரும் காலம் என்று
அவன் வரும் மாசத்திலே எங்கள் வாசல்களை அலங்கரித்தோம்
நாங்கள் உன் வரவைக் கடாஷித்து செய்யுமவர்கள் அல்லோம் –
உன்னைச் சேர்ப்பார் வரவைக் கடாஷித்து செய்யுமவர்கள் காண் நாங்கள்

ஆன பின்பு அது அன்யார்த்தம் -என்றார்கள் -ஆகிலும்

என்னதும் அன்யார்த்தம் என்னா- சிற்றிலை அழிக்கப் புக்கான் –

எங்களை ஆராக நினைத்து இருந்தாய் –
பிராட்டி பரிகரமான எங்கள்
பக்கல் அவை செய்யப் போமோ -என்றார்கள்
அவள் புருஷகாரம் ஆனால் தங்களை நலிய ஒண்ணாது என்னுமத்தை பற்றச் சொன்னார்கள் –

அத்தனையோ –அவளோடு ஒரு சம்பந்தம் நீங்களே சொன்னி கோளே-நான் ஸ்ரீ யபதி அல்லேனோ-
நான் செய்ததுக்கு நிவாரகர் உண்டோ -என்று
அது தன்னையே- வழியாகக் கொண்டு அழிக்கப் புக்கான் –

தீமை செய்யும் சிரீதரா எங்கள் சிற்றில் வந்து சிதையேலே-
பிராட்டியோட்டை சம்பந்தம் எங்கள் பேற்றுக்கு உடல் என்று நினைத்து இருந்தோம் நாங்கள் –
அது அங்கன் அன்றிக்கே எங்கள் இழவுக்கு உடலாம்படி சிஷித்து விட்டாள் ஆகில்
எங்கள் சிற்றிலை அழியாதே –
அவள் தன்னுடைய சிற்றிலைப் போய் அழி-
என்கிறார்கள்

————————————————————————————-

இன்று முற்றும் முதுகு நோவ இருந்து இளைத்த விச் சிற்றிலை
நன்றும் கண்ணுற நோக்கி நாம் கொளும் ஆர்வம் தன்னைத் தணி கிடாய்
அன்று பாலகனாகி ஆலிலை மேல் துயின்ற வெம்மாதியாய்
என்றும் உன் தனக்கு எங்கள் மேல் இரக்கம் எழாதது எம் பாவமே–2-2-

பதவுரை

இன்று முற்றும்–இன்றைய தினம் முழுவதும்
முதுகு நோவ–முதுகு நோம்படி
இருந்து–உட்கார்ந்து கொண்டு
இழைத்த–ஸ்ருஷ்டித்த
இச் சிற்றிலை–இந்தச் சிற்றிலை
நன்றும்–நன்றாக
கண் உற நோக்கி–(நீ) கண் பொருந்தும்படி பார்த்து,
நாம் கொள்ளும் ஆர்வம் தன்னை தணிகிடாய்–நாங்கள் கொண்டிருக்கிற அபிநிவேசத்தைத் தணியச் செய் கிடாய்’
அன்று–மஹா ப்ரளயம் வந்த காலத்தில்
பாலகன் ஆகி–சிசு வடிவு கொண்டு
ஆல் இலை மேல்–ஆலந்தளிரின் மேல்
துயின்ற–கண் வளர்ந்தருளினவனும்
எம் ஆதியாய்–எமக்குத் தலைவனுமான கண்ண பிரானே!
என்றும்–எக் காலத்திலும்
உன் தனக்கு–உனக்கு
எங்கள் மேல்–எம்மிடத்தில்
இரக்கம் எழாதது–தயவு பிறவாமலிருப்பது
எம் பாவமே–நாங்கள் பண்ணின பாவத்தின் பயனேயாம்.

இருந்து
ஸ்தாவர பிரதிஷ்டை போலே இருந்து

இன்று முற்றும் –
ஒரு பகலாய் இருக்கச் செய்தேயும் அது தான் ஆயிரம் ஊழியாய் நெடுகித் தோற்றின படி
ஒரு பகல் ஆயிரம் ஊழி யாலோ -திருவாய் மொழி -10-3-1-

முதுகு நோவ இருந்து இளைத்த விச் சிற்றிலை-
உன்னைப் போலே —ததைஷத பஹூச்யாம் ப்ரஜாயேயேதி தத் தேஜோஸ் ஸ்ருஜாதா –சாந்தோக்யம் -6-2-3-என்று
ஒரு வருத்தம் அற சிருஷ்டித்து –
இது தனக்கு நாம் நேர்ந்ததோ பெருத்துக் கிடக்கிறது -என்று தரித்து இருக்கலாவது

ஓன்று அல்ல காண் –
மெய்யே நொந்து சிருஷ்டித்தது காண் –
மெய்யாகவே -உண்மையாகவே –சரீரம் கொண்டு என்றுமாம்

முதுகு நோவ –
சிற்றிலை அழிக்கை தவிர்ந்து முதுகைப் பிடிக்கும் என்று பார்த்து
முதுகு நோவ
-என்கிறார்கள் ஆயத்து –

கடக்க நின்று காலாலே சிற்றிலை அழியாதே –
கிட்டி நின்று கையாலே தீண்டுமாகில் ஆகாதோ
-என்று இருக்கிறார்கள் –

முதல் தன்னிலே அபலைகள் –
அதுக்கு மேலே விரஹ துர்பலைகள் –
கிருஷ்ணன் திருக் கண்களால் நெஞ்சூடுருவ ஏவுண்டு நிலையம் தளர்ந்து-13-3- இருப்பார்கள் –
இனி வெண்ணெய் விழுங்கி வளர்ந்தவர்கள் ஆகையாலே பொறுக்க மாட்டார்கள் இறே

இருந்து –
காற்றைப் பிடித்து ஓர் இடத்திலே இருத்தினால் போலே இருப்பது ஓன்று இறே
இவர்களை ஓர் இடத்திலே இருத்துகை யாவது –

இழைத்த-
நெஞ்சு ஒழியப் பண்ணுகிற வியாபாரம் சால அரிது இறே –
நெஞ்சு கண்ணன் இடத்தில் இருக்கும் போது –இழைத்தது -செயற்கரிய செயல் அன்றோ-

இச் சிற்றிலை
இது தான் இருந்தபடி கண்டாயே –
நீ அழிப்பது இத்தைப் பார்த்து அன்றோ –
இது இருந்தபடியால் சேதனராய் இருப்பார் இத்தை அழியார்கள் இறே
முதலிலே பரம சேதனனான நீ தானே அழியாயே –

நான் இத்தை அழித்தால் உங்களுக்கு வருவது என் என்ன –

நாங்கள் இதில் பட்ட வருத்தம் கண்டாயே –
நாங்கள் இத்தை -ஒருகால் கண்ணால் பார்த்துக் கொள்ள கிடையாது -என்கிறார்கள் –

அது என் -நீங்கள் இழைக்கிற போதே பார்த்து அன்றோ இழைத்தது என்ன –

அவயவங்கள் தோறும் பார்த்தோம் இத்தனை அல்லது
அவயவியாகப் பார்க்கப் பெற்றிலோமே

நாங்கள் அழகிதாக கண்கள் தைக்கப் பார்த்திடுக –
நான் கண்டு த்ருப்தன் ஆனேனே என்ன

நன்றும் கண்ணுற நோக்கி நாம் கொளும் ஆர்வம் தன்னைத் தணி கிடாய்
நாங்களும் ஒரு கால் கண்டு எங்கள் அபிநிவேசம் கெடும் கிடாய் –

எனக்கு இத்தனை கருத்து உண்டோ –
பரம பிரயோஜனம் வேணும் என்று இருக்கைக்கு ஈடான அறிவு எனக்கு உண்டோ –
நான் பாலன் அல்லேனோ -என்றான்

அன்று பாலகனாகி ஆலிலை மேல் துயின்ற வெம்மாதியாய் என்றும் உன் தனக்கு எங்கள் மேல் இரக்கம் எழாதது எம் பாவமே–
உனக்கு பருவம் நிரம்புவதற்கு முன்னே பிடித்து பணி யாய்த்து இறே எங்களை முடிக்கை –
அன்று பாலகனாகி ஆலிலை மேல் துயின்ற-

ஆலம் தளிருக்கு உள்ளே அடங்குவதொரு வடிவைக் கொண்டு அதிலே சகல லோகங்களையும் வைத்து
பவனான ஆலம் தளிரிலே கண் வளர்ந்து அருளி
யசோதை பிராட்டி தொட்டிலிலே பண்ணும் வியாபாரம் அடைய அதிலே பண்ணி
அங்கன் உணர்ந்து நோக்குகைக்கு ஒரு தாயும் இன்றிக்கே
துள்ளி விழில் ஒரு வெள்ளம் ஆபத்தாய் இருக்கிறதோர் இடத்தில்
சப்ரமாதமான செயலைச் செய்து அன்று எங்களை முடித்தாய் –

ஆதியாய் – 
எங்கள் சத்தா ஹேதுவை அன்றோ நீ அழிக்கப் புக்கது

என்றும்
உம்மைத்
தொகை கொண்டு இந்த வியாக்யான ஸ்ரீ ஸூ க்திகள்

சிறுவனாய் இருக்கும் இப் பொழுது
சிற்றிலை அழித்து முடிக்கப் பார்ப்பது வியப்பு அன்று –

என்றும் உன் தனக்கு எங்கள் மேல் இரக்கம் எழாதது எம் பாவமே-
அன்று அங்கனே முடிக்கப் பார்த்தாய்
இன்று இங்கனே எங்கள் சிற்றிலை அழியா நின்றாய் –

ஆக –
நாங்கள் விஷயமானால் என்றும் ஒக்க இறே உனக்கு எங்கள் பக்கல் கிருபை பிறவாமைக்கு –
ஜகத் ரஷணத்திலே தீஷித்து இருக்கிற உனக்கு கிருபை இல்லை என்ன ஒண்ணாது இறே –
அதுக்கடி -எங்கள் பாபம் இ றே
மமைவ துஷ்க்ருதம் கிஞ்சித்-
சுந்தர -38-48-என்னும் பிராட்டி வசனம் போலேயும்
மத பாபமேவாத்ர நிமித்தம் ஆஸீத் –அயோத்யா – என்னும் ஸ்ரீ பரத ஆழ்வான்   வசனம் போலேயும் –
இவர்களும் சொல்கிறார்கள் –

——————————————————————–

குண்டு நீர் உறை கோளரி மத யானை கோள் விடுத்தாய் உன்னைக்
கண்டு மாலுறு வோங்களைக் கடைக்கண்களால் இட்டு வாதியேல்
வண்டல் நுண் மணல் தெள்ளி யாம் வளைக் கைகளால் சிரமப் பட்டோம்
தெண் திரைக் கடல் பள்ளியாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே-–2-3-

பதவுரை

குண்டு–மிக்க ஆழத்தை யுடைத்தான
நீர்–கடலிலே
உறை–சாய்ந்தருள்பவனும்
கோள் அரி!–மிடுக்கை யுடைய சிங்கம் போன்றவனும்
மதம் யானை கோள் விடுத்தாய்–மதம் மிக்க கஜேந்திராழ்வானுக்கு (முதலையால் நேர்ந்த)
துன்பத்தைத் தொலைத்தருளி னவனுமான கண்ண பிரானே!
உன்னை–(அடியார் துயரைத் தீர்க்க வல்ல) உன்னை
கண்டு–பார்த்து
மால் உறுவோங்களை–ஆசைப் படுகின்ற எங்களை
கடைக் கண்களால் இட்டு–கடைக் கண்களால் பார்த்து
வாதியேல்–ஹிம்ஸிக்க வேண்டா’
யாம்–நாங்கள்
வண்டல்–வண்டலிலுள்ள
நுண் மணல்–சிறிய மணல்களை
வளை கைகளால்–வளையல்கள் அணிந்த கைகளினால்
தெள்ளி–புடைத்து
சிரமப்பட்டோம்–மிகவும் கஷ்டப் பட்டோம்’
தெண் திரை–தெளிந்த அலைகளை யுடைய
கடல்–திருப்பாற்கடலை
பள்ளியாய்–படுக்கையாக வுடையவனே!
எங்கள் சிற்றில் வந்து சிதையேல்

உறை-கண் வளர்ந்து அருள்பவனாய்-

குண்டு நீர் உறை கோளரி
ஆழத்துக்கு எல்லை இல்லாத ஏகார்ணவத்தில் –
சிருஷ்டி உன்முகனாய்க் கொண்டு சாய்ந்து அருளி
ஸ்ருஷ்ய பதார்த்தங்களுக்கு ஒரு நலிவு வாராதபடி அநபிபவ நீயானாய் இருக்கிறவனே –

மத யானை கோள் விடுத்தாய் –
சிருஷ்டித்து விட்டால் வரும் பிரதிபந்தங்களைப் போக்கும் படி சொல்கிறது –
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு முதலையால் வந்த நலிவைப் போக்கினவனே-

உன்னைக்- கண்டு மாலுறு வோங்களைக் கடைக் கண்களால் இட்டு வாதியேல்-
என்றும் ஒக்க துக்க நிவர்த்தகனாய் போரும் நீ –
உன்னைக் கண்டு பிச்சேறி இருக்கும் எங்களை –
உன்னைக் காண வேண்டி இராதாருடைய துக்கத்தைப் போக்கினாய் –
ஸூஷ்ம நிலையில் இருந்து ஸ்தூல நிலைக்கு ஆக்கி அருளினாய்

உன்னைக் கண்ணாலே கண்டு பிச்சேறி இருக்கிற எங்களுக்கு கிலேசத்தை விளையா நின்றாய்
தங்களுக்கு அவன் பக்கல் உண்டான ப்ரேமம் தோற்ற தாங்களே சொன்னவாறே அவனும் தங்கள் பக்கல்
தனக்கு உண்டான ஸ்நேஹம் தோற்றும் படி கடைக் கண்ணால் பார்த்தான்
நீ உன்னுடைய அபாங்க வீஷணத்தாலே எங்களை நலியாதே —
முழுக்கப் பார்க்க வல்லையே
-என்றார்கள்

வந்த அநர்த்தம் என் உங்களுக்கு -என்ன –
வண்டல் நுண் மணல் தெள்ளி யாம் வளைக் கைகளால் சிரமப் பட்டோம்-
நாங்கள் பட்ட பிரயாசத்தைப் பாராய் –
வண்டல் உள்ள இடம் தேடி —
அதிலே நுண்ணிய மணல் தேடி —
அது தன்னை தெள்ளி –
துர்ப்பலைகளாய் இருக்கிற நாங்கள்-
வளை கொண்டு பாடாற்றுகையே தொடங்கி அரிதாய் இருக்கிற கைகளைக் கொண்டு கிலேசப் பட்டோம் –
அவன் ஸ்பர்சித்த வளையாதலால் சிரமப் பட்டோம் –

இவர்கள் இப்படி சொல்லச் செய்தேயும் -இத்தை அழிக்க ஒருப்பட்டான் –
தெண் திரைக் கடல் பள்ளியாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே–
திருப் பாற் கடலிலே வந்து சாய்ந்தது உன்னுடைய சிற்றில் அழியாமைக்கே –
எங்கள் சிற்றிலை அழிக்கிறது என்

உன் சிற்றில் போலே நெருப்பும் காற்றுமாகக் கொண்டு இட்ட சிற்றில் அன்று காண்-
வாயோர் அக்னி –அக்னேராப
-தைத்ரியம் -1-2-
இது உபாதேயம் காண் –

எங்கள் சிற்றிலை அழியாதே
இன்னம் அங்கே போய் உன் சிற்றிலை நோக்கு கிடாய்
அந்த கடல் கரை அழியாத படி நோக்கிடுதல் –
அத்தைக் கரை கட்டுதல் –சேது கட்டுகை -போலே -செய்யப் பாராய் -என்கிறார்கள் –

—————————————————————–

பெய்யு மா முகில் போல் வண்ணா உன்தன் பேச்சும் செய்கையும் எங்களை
மையல் ஏற்றி மயக்க உன்முகம் மாய மந்திரம் தான் கொலோ
நொய்யர் பிள்ளைகள் என்பதற்கு உன்னை நோவ நாங்கள் உரைக்கிலோம்
செய்ய தாமரைக் கண்ணினாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே--2-4-

பதவுரை

பெய்யும்–வர்ஷியா நின்றுள்ள
மா முகில் போல் வண்ணா–காள மேகம் போன்ற திரு நிறத்தை யுடையவனே!
உன் தன்–உன்னுடைய
பேச்சும் செய்கையும்–(தாழ்ந்த) வார்த்தைகளும், (தாழ்ந்த) வியாபாரங்களும்
எங்களை–எங்களை
மையல் ஏற்றி –பிச்சேறப் பண்ணி
மயக்க–அறிவு கெடுக்கைக்கு
உன் முகம்–உன்னுடைய முகமானது
மாயம் மந்திரம் தான் கொலொ–சுக்குப் பொடியோ?
நொய்யர் பிள்ளைகள் என்பதற்கு–‘அற்பத்தனமுடைய சிறுமியர் இவர்கள்’ என்று நீ சொல்லுவாய் என்று பயப்பட்டு
நாங்கள்–நாங்கள்
உன்னை–உன்னைக் குறித்து
நோவ உரைக்கிலோம்–நெஞ்சு புண்படும்படி (ஒன்றும்) சொல்லுகிறோமில்லை;’
செய்ய தாமரை கண்ணினாய்–புண்டாரிகாக்ஷனே!
எங்கள் சிற்றில் வந்து சிதையேல்.

பெய்யு மா முகில் போல் வண்ணா
ஒரு வர்ஷூக வலாஹகம் மின்னி முழங்கி வில்லிட்டு சஞ்சரிக்குமா போலே யாய்த்து
பெண்கள் முன்னே ஸ்ரமஹரமான வடிவோடு சஞ்சரிக்கிற போது இருக்கிறது
இவர்கள் தன் வடிவிலே தோற்று ஈடுபட்டமை தோற்ற வார்த்தை சொன்னவாறே

அதுவே அவகாசமாக
அடியேன் குடியேன் என்றால் போலே சில தாழ்வுகள் சொல்வது

விரல் கவ்வுவதாய்க் கொண்டு சிலவற்றைச் செய்யப் புக்கான்-

அதிலே துவக்குண்டு அறிவு கெட்டு
உன்தன் பேச்சும் செய்கையும் எங்களை- மையல் ஏற்றி மயக்க உன்முகம் மாய மந்திரம் தான் கொலோ-
உன் தாழ்ந்த பேச்சுக்களும் வியாபாரங்களும் எங்களைப் பிச்சேற்றி அறிவு கெடுக்க
உன் முகம் அம்மான் பொடியோ -என்கிறார்கள்

அது எதாகில் என் -இனிச் செய்யலாவது உண்டோ என்றான் –

என் இனி செயல் அற்றுப் போக வேணுமோ –
நீ நெடுநாள் கூடி வ்யாபரித்து பண்ணினத்தை அடைய நாங்கள் ஒரு உக்தியாலே அழித்து
உன்னை மறுமுட்டு பெறாதபடி பண்ணலாய்த்து இறே அது செய்கிறிலோம்-
அது செய்தால் என் என்னில் –

நொய்யர் பிள்ளைகள் என்பதற்கு உன்னை நோவ நாங்கள் உரைக்கிலோம்
பாலனான இவன் தங்களை ஒழியச் செல்லாமை உடையனாய் தங்கள் திரளிலே வந்து புகுரப் புக்கால்
இவன் புகுந்திடுவானுக்கு -என்று இருந்தால் இவர்களுக்கு என்ன சேதமுண்டு
இவன் புகுர வேண்டா என்று இங்கனே விலக்குவதே-
இவர்கள் சாலப் புல்லியராய் இருந்தார்கள் -பாலராய் இருந்தார்கள் –
என்று நீ உள்ளே புகுந்து பண்ணும் மர்மம் அறியாதார் சொல்லா நிற்பர்கள்

நோவ உரைக்கிலோம்-
எங்களுக்கு ஒரு உக்தி மாதரம் –
உன்னை மறுமுட்டு பெறாதபடி பண்ணலாம்
அது செய்கிறிலோம்
உன்னை நோவ உரைத்தால் எங்களை –பிள்ளைகள் நொய்யர் புல்லியர் என்பர் –
அதுக்காக நோவச் சொல்ல மாட்டோம் -என்று வாக்யார்த்தம்

பின்னையும் அழிப்பதாக ஒருப்பட்டது மாறாதே இருக்கச் செய்தேயும் சாதரமாகப் பார்த்தான் –
செய்ய தாமரைக் கண்ணினாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே-
கண்ணாலே எங்கள் அபிசந்தியைக் குலையாதே கொள் –
அபிசந்தி -அந்ய பரதை காலாலே எங்கள் சிற்றிலை அழியாதே கொள் -என்கிறார்கள்

—————————————————————————–

வெள்ளை நுண் மணல் கொண்டு சிற்றில் விசித்திரப்பட வீதி வாய்த்
தெள்ளி நாங்கள் இழைத்த கோலம் அழித்தி யாகிலும் உன்தன் மேல்
உள்ளம் ஓடி உருகல் அல்லால் உரோடம் ஓன்று இலோம் கண்டாய்
கள்ள மாதவா கேசவா உன் முகத்தன கண்கள் அல்லவே –-2-5-

பதவுரை

கள்ளம்–கபடச் செய்கைகளை யுடைய
மாதவா–கண்ண பிரானே!
கேசவா–கேசவனே!
நாங்கள்–
வெள்ளை நுண் மணல் கொண்டு–வெளுத்துத் சிறுத்த மணல்களைக் கொண்டு
வீதியாய்–தெருவிலே
விசித்திரப்பட==(அனைவரும் கண்டு) ஆச்சாரியப்படும்படி
தெள்ளி இழைத்த–தெளிந்து கட்டின
சிற்றில்–சிற்றிலாகிற
கோலம்–கோலத்தை
அழித்தி ஆகிலும்–நீ அழித்தாயாகிலும், (அதற்காக)
உள்ளம்–(எங்களுடைய) நெஞ்சானது
ஓடி–உடைந்து
உருகல் அல்லால்–உருகுமத்தனை யொழிய
உன்தன்மேல்–உன்மேலே
உரோடம் ஒன்றும் இலோம்–துளியும் கோபமுடையோமல்லோம்’
உன்முகத்தன–உன்முகத்திலுள்ளவை
கண்கள் அல்லவே–கண்களன்றோ!

உரோடம் ஓன்று இலோம் -சிறிதும் கோபம் -ரோஷம்-உடையோம் அல்லோம்-

வெள்ளை நுண் மணல் கொண்டு –
நிலவைப் பரப்பினால் போலே வெளுத்து
அது தன்னிலும் பருக்கைப் படில் பொகட்டுப்போம் துச் சீல தேவதையாகையாலே –
அச்சமான மணலைக் கொண்டு –
அது –தன்னை தெள்ளி –

சிற்றில் விசித்திரப்பட –
விசித்திர சிருஷ்டி பண்ண வல்லேன் நான் என்று இராதே கொள் –
நாங்களும் வல்லோம் காண்-

வீதி வாய்த் தெள்ளி நாங்கள் இழைத்த கோலம் -அழித்தி யாகிலும்
தெருவிலே நாங்கள் இழைத்த அழகிய சிற்றிலை அழித்தாய் ஆகில் –
இது இருந்தபடி கண்டாயே –
இத்தைக் கண்டால் அழிப்பார் இல்லை இறே-

நீ தான் அழியாய் -என்கிறார்கள் –

நான் அழித்தால் தான் நீங்கள் செய்வது என் என்றான் –

உன்தன் மேல் உள்ளம் ஓடி உருகல் அல்லால் உரோடம் ஓன்று இலோம் கண்டாய்
நீ அழித்தாய் ஆகிலும் -ஒருவன் சிற்றிலை அழித்தபடி என் -என்று
அதற்கு ஹிருதயம் அழிந்து உடை குலைப்படுமது போக்கி
ரோஷம் என்று பேரிடலாவது ஒன்றும் இல்லை
நெஞ்சு வேவா நிற்கச் சொல்லும் வார்த்தை இறே இது

இவர்கள் தங்கள் அகவாயில் இழவு தோற்றச் சொல்லச் செய்தேயும் –
பின்னையும் தான் கொண்ட கோட்பாடு விடாது இருக்க –
அது தன்னையும் மறைத்து
ஸ்ரீ யபதியான செருக்குத் தோற்ற அங்கே இங்கே சஞ்சரிப்பது —
புறம்பே அந்ய பரதை பாவிப்பது —
குழலைப் பேணுவதாகப் புக்கான் –
அத்தை அறிந்து

கள்ள மாதவா கேசவா உன் முகத்தன கண்கள் அல்லவே –
நீயும் இத்தைக் கண்டு அன்றோ அழிக்கிறாய்
உன் முகத்தன கண்கள் அல்லவே
இவை தண்ணளிக்கு உறுப்பு என்று இருந்தோம் -அது அங்கன் அன்றிக்கே
பீலிக்கண் மாலைக் கண்ணோ பாதியாய்த்தோ
கண் என்று பேராய் –
கண்டாரை முன்னடியிலே விழ விட்டுக் கொள்வதொரு வலை இறே
கண் என்னும் நெடும் கயிறு -14-4-என்னக் கடவது இறே

—————————————————————————-

முற்றிலாத பிள்ளைகளோம் முலைபோந்திலாதோமை நாடொறும்
சிற்றில் மேலிட்டுக் கொண்டு நீ சிறிதுண்டு திண்ணென நாமது
கற்றிலோம் கடலை யடைத்தரக்கர் குலங்களை முற்றவும்
செற்று இலங்கையைப் பூசலாக்கிய சேவகா எம்மை வாதியேல்—-2-6-

பதவுரை

கடலை அடைத்து–ஸேது பந்தம் பண்ணி
அரக்கர் குலங்களை முற்றவும்–ராக்ஷஸருடைய குலங்களை முழுதும்
செற்று–களைந்தொழித்து
இலங்கையை–லங்கையை
பூசல் ஆக்கிய–அமர்க்களப் படுத்தின
சேவகா–வீரப்பாடு உடையவனே!
முற்றிலாத பிள்ளைகளோம்–முற்றாத இளம் பிள்ளைகளாய்
முலை போந்திலாதோமை–முலையும் கிளரப் பெறாத வெங்களை
நாள் தோறும்–நாள் தோறும்
சிற்றில் மேல் இட்டுக் கொண்டு–சிற்றில் விஷயமாக ஒரு வியாஜத்தை வைத்துக் கொண்டு
நீ சிறிது உண்டு–நீ செய்யுஞ் செய்திகள் சில உள’
அது திண்ணன நாம் கற்றிலோம்–அவற்றை நாங்கள் அழகிதாக அப்யஸித்தோமல்லோம்;’
எம்மை வாதியேல்–எங்களை (நீ) துன்பப்படுத்த வேண்டா.

முற்றிலாத பிள்ளைகளோம் முலைபோந்திலாதோமை நாடொறும்
இன்னது செய்தான் -என்று பிறருக்கு சொல்ல ஒண்ணாத படி சிலவற்றைச் செய்யத் தொடங்கினான்
அத்தைக் கண்டு சில செய்தோம் இத்தனையோ வேண்டுவது –
அதுக்கு எதிர் தலையில் பருவம் அறிந்து கொள்ள வேண்டாவோ
உன் நினைவு அறிகைக்கு ஈடான பருவம் அல்ல
உள்ள பருவத்துக்கு தக்க அறிவும் அல்ல
ஆனாலும் போக யோக்யதை யுண்டாகப் பெறிலுமாம் இறே

சிற்றில் மேலிட்டுக் கொண்டு நீ சிறிதுண்டு திண்ணென நாமது கற்றிலோம்
அதுவும் இல்லை இறே –
ப்ராமாதிகமாகவும் ஒரு செயலைச் செய்து விடுகை யன்றிக்கே -என்றும் ஒக்க –
சிற்றில்
என்ற ஒரு வியாஜத்தை இட்டுக் கொண்டு நீ செய்கிறதுக்கு ஒரு கருத்து உண்டு

ஒரு ஸ்வாபதேசம் –சம்ச்லேஷம் -உண்டு –அது வாகாதே நாங்கள் அழகிதாக அப்யசித்திலோம்-
அறிந்த வற்றே இவர்கள் அறியாது இருந்த படி
நீ நினைக்கிறவை நாங்கள் அறிக்கைக்கு குருகுல வாஸம் பண்ணிற்று இலோம் –

நீங்கள் கற்றிலி கோள் ஆகிலும் நான் கற்றேன் இறே என்று மேலிட்டு நலியத் தொடங்கினான் –
அணைப்பது போன்ற சேஷ்டிதங்களை செய்யத் தொடங்கினான்
கடலை யடைத்தரக்கர் குலங்களை முற்றவும்-செற்று இலங்கையைப் பூசலாக்கிய சேவகா
இதுக்கு முன்பு ஒருவர் தலை அழித்து அறியாக் கடலை அடைத்து
இதுக்கு முன்பு ஒருவர் மேலிட்டு அறியாத ராஷச ஜாதியாரை பக்க வேரோடு கிழங்கு எடுத்து
சிலர் எடுத்து விட்டு வந்து பொரக் கணிசியாத ஊரை பூசலாம்படி பண்ணி
அத்தால் வந்த ஆண் பிள்ளைத் தனத்தை உடையையாய் இருக்கிறவனே

எம்மை வாதியேல்-
எங்கள் பக்கல் பூசலை விளையாதே கொள்
பிரதிகூலர் திரண்ட இடத்தே செய்யுமவற்றை
அனுகூலர்
திரண்ட இடத்தும் செய்யாதே கொள்
அது ஒருத்திக்காக செய்த செயல் அன்றோ —
அது இப்போது அவள் தன்னோடு ஆய்த்தோ –

——————————————————————————-

பேத நன்கறிவார்களோடு இவை பேசினால் பெரிதின் சுவை
யாதும் ஓன்று அறியாத பிள்ளைகளோமை நீ நலிந்து என் பயன்
ஒதமா கடல் வண்ணா உன் மணவாட்டிமாரோடு சூழறும்
சேதுபந்தம் திருத்தினாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே——2-7-

பதவுரை

பேதம்–(உன் பேச்சின்) வாசியை
நன்கு அறிவார்களோடு–நன்றாக அறிய வல்லவரோடு
இவை–இப் பேச்சுக்களை
பேசினால்–பேசினால்
பெரிது இன் சுவை–மிகவும் போக்யமாயிருக்கும்’
யாது ஒன்றும் அறியாத–எவ்வகையான பாவத்தை யுமறிய மாட்டாத
பிள்ளைகளோமை–சிறுப் பெண்களான எங்களை
நீ நலிந்து என் பயன்–நீ வருத்த முறுத்துவதனால் என்ன பயன்?
ஓதம்–திரைக் கிளப்பத்தை யுடைய
மா கடல்–பெரிய கடலை யொத்த
வண்ண–திரு நிறத்தை யுடைய கண்ண பிரானே!
சேது பந்தம் திருந்தினாய்–திருவணை கட்டினவனே!
உன் மணவாட்டிமாரொடு சூழறும்–உன்னுடைய பத்தினிகளின் மேல் ஆணை’
எங்கள் சிற்றில் வந்து சிதையேல்-

பேத நன்கறிவார்களோடு இவை பேசினால் பெரிதின் சுவை யாதும் ஓன்று அறியாத பிள்ளைகளோமை நீ நலிந்து என் பயன்
சில வார்த்தைகளைச் சொல்லுகிறான் –
சொல்லப் புக்க வார்த்தையினுடைய பலன் -வேறு ஒன்றினுடைய பலத்தைப் பலிப்பதாக
சொல்லத் தொடங்கினான் -இரு பொருள் பட –
நீ சொல்லுகிற வற்றினுடைய கருத்து அறிவாரோடே சொன்னால் அன்றோ உனக்கு இத்தால் பிரயோஜனம் உள்ளது
எங்களோடு சொன்னால் என்ன பிரயோஜனம் உண்டு –
வார்த்தை வாசி அறிவாரோடே சொன்னால் அன்றோ உனக்கு பிரயோஜனம் உள்ளது –
அவர்கள் ஒன்றுக்கு பத்தாக மர்மத்தில் சொல்லுவார்களே
அது உனக்கு மிகவும் இனிதாய் இருக்கும் இறே
தண்ணீர் -என்றால் தண்ணீரே கொண்டு வரும்படி பாலைகளாய் இருக்கிற எங்களை
நெருக்கினால் உனக்கு என்ன பலம் உண்டு –

இவர்கள் இப்படி தங்கள் ஈடுபாடு தோற்ற-நலிவு பட்டு தோற்ற –
வார்த்தை சொன்னவாறே வடிவு இட்டு மாறினால் போலே இரட்டித்தது
ஒதமா கடல் வண்ணா —
நம் வடிவிலே துவக்குண்டார்கள் -நாம் செய்தது விலக்க மாட்டார்கள் என்னாச் சிற்றிலை அழிக்கப் புக்கான் –

உன் மணவாட்டிமாரோடு சூழறும்-
உனக்கு நல்லாரோடு சூழறும் கிடாய் இத்தை அழிப்பாய் ஆகில் –
உனக்கு இது அழிக்க வேணுமோ –
புறம்பே எத்தனை இடம் கிடக்கிறது -இவர்களும் அவனுக்கு மர்மம் சொல்லுகிறார்கள் ஆயத்து
ஏக தார வ்ரதனாய் இருக்கிறவனை -உனக்கு எத்தனை பேர் கிடக்கிறது எங்களை ஒழிய -என்கை சால மர்மம் இறே
இப்படி இவர்கள் ஆணை இடச் செய்தேயும் அழிக்கப் புக்கான்

சேதுபந்தம் திருத்தினாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே—
மிடுக்குக்கு ஈடான பிறப்பை யுடையையுமாய் -பருவம் நிரம்பின பின்பு –
கான வெண்கும் குரங்கும் பரிகரமாகக் -பெரிய திரு மொழி -6-10-6-கொண்டு கடலிலே
இத்தனை மணல் ஒழுக்குப் பட்ட பாடு எல்லாம் அறிதியே
அவ்வோபாதி போராதோ அபலைகளான நாங்கள் இதில் பட்ட வருத்தம்
அவசியம் உனக்கு அழிக்க வேணுமாகில் உன்னுடைய சிற்றிலை போய் அழி என்கிறார்கள்-

—————————————————–

வட்ட வாய்ச் சிறு தூதையோடு சிறு சுளகும் மணலும் கொண்டு
இட்ட மாவிளையோடு வோங்களைச் சிற்றில் ஈடழித்து என் பயன்
தொட்டுதைத்து நலியேல் கண்டாய் சுடர்ச் சக்கரம் கையில் ஏந்தினாய்
கட்டியும் கைத்தாலின்னாமை அறிதியே கடல் வண்ணனே–2-8-

பதவுரை

சுடர் சுக்கரம்–உன்னுடைய பத்தினிகளின் மேல் ஆணை’
கையில் ஏந்தினாய்–திருக் கையில் தரித்திரா நின்றுள்ள கண்ண பிரானே!
கடல் வண்ணனே! -’
வட்டம் வாய்–வட்ட வடிவமான வாயை யுடைய
சிறு தூரிதையோடு–சிறிய பானையோடு
சிறு சுளகும்–சிறிய முச்சிலையும்
மணலும் கொண்டு–மணலையும் கொண்டு வந்து
இட்டமா–இஷ்டப்படி
விளையாடுவோங்களை–விளையாடுகிற எங்களுடைய
சிற்றில்–சிற்றிலை
ஈடழித்து–மறுபடியும் உபயோகப் படாதபடி அழிப்பதனால்
என் பயன்? -’
தொட்டு–கையால் தொட்டும்
உதைத்து–காலால் உதைத்தும்
நலியேல் கண்டாய்–ஹிம்ஸியாதொழி கிடாய்’
கைத்தால்–நெஞ்சு கசத்துப் போனால்
கட்டியும்–கருப்புக் கட்டியும்
இன்னாமை–ருசியாது என்பதை
அறிதியே–அறிவா யன்றோ?

தூதை -பானை

வட்ட வாய்ச் சிறு தூதையோடு சிறு சுளகும் மணலும் கொண்டு இட்ட மாவிளையோடு வோங்களைச்-
இவற்றினுடைய விசித்திர சந்நிவேசம் இருந்தபடி கண்டாயே
இவற்றைக் கொண்டு எங்களுடைய இச்சைக்கு ஒருவரால் பிரதிஹதி பண்ண ஒண்ணாத படி
விளையாடுகிற எங்களை

சிற்றில் ஈடழித்து என் பயன்-
ஓர் அவயவி ஆக்கிக் காண  ஒண்ணாத படி –
மறுமுட்டுப் பெறாதபடி அழிக்கிற இத்தால் என்ன பிரயோஜனம் உண்டு –
இது தானே யன்றோ பிரயோஜனம் என்று வாராத் தொட்டான் –

தொட்டுதைத்து நலியேல் கண்டாய் –
வாராய் -எத்தனை பேரைத் தொட்டு வந்தாய் என்று தெரியாது
நீங்கள் என்னைத் தீண்டுவதே என்னா-சிவிட்கு என்றார்கள் –
ஆகில் சவியுங்கோள் என்னாக் காலாலே உதைத்தான்
அந்த ஸ்பர்சத்தாலே துவளா –நலியேல் -கண்டாய் -என்கிறார்கள் –

என்னுடைய ஸ்பர்சம் உங்களுக்கு நலிவாய் விட்டதோ –
நான் ஈஸ்வரன் அல்லேனோ-என்னா –

சுடர்ச் சக்கரம் கையில் ஏந்தினாய்-
வைச்வரூப்யம் காட்டினால் போலே திவ்ய ஆயுதங்களைத் தரித்துக் காட்டி
கூராராழி வெண் சங்கு ஏந்தி வாராய் –திருவாய் மொழி -6-9-1–என்று
எல்லாரும் ஆசைப் பட்டு இருக்கிற இது உங்களுக்குப் பொல்லாதோ -என்றான் –

அழகிது -ஆனாலும்
சுடர்ச் சக்கரம் கையில் ஏந்தினாய்-கட்டியும் கைத்தாலின்னாமை அறிதியே கடல் வண்ணனே-
கருப்புக் கட்டியே யானாலும் நெஞ்சு கைத்தால் இன்னது என்னும் இடம் அறிதியே –கடல் வண்ணனே –

கடல் வண்ணன் -என்கிற இவ் விசேஷணம் இட்டதுக்கு கருத்து –
கண்டு விடுமதுக்கு மேற்பட செய்யலாவது இல்லை
ஒரு கை அள்ளி முகத்தைக் கழுவுதல் -குடித்தல் -செய்ய ஒண்ணாதே கடலில் நீர் –
அப்படியே யன்றோ நீ -என்கை –

——————————————————–

முற்றத்தூடு புகுந்து நின் முகம் காட்டிப் புன் முறுவல் செய்து
சிற்றிலோடு எங்கள் சிந்தையும் சிதைக்கக் கடவையோ கோவிந்தா
முற்ற மண்ணிடம் தாவி விண்ணுற நீண்டு அளந்து கொண்டாய் எம்மைப்
பற்றி மெய்ப் பிணக்கிட்டக்கால் இந்தப் பக்கம் நின்றவர் என் சொல்லார் –2-9-

பதவுரை

கோவிந்தா கண்ணபிரானே!
முற்ற மண் இடம் தாவி–(ஒரு திருவடியினால்) பூ மண்டலம் முழுவதையும் தாவி யளந்து
விண் உற நீண்டு–பரமபதத்தளவு ஓங்கி
அளந்து கொண்டாய்–(மற்றொரு திருவடியினால் மேலுலகங்களை) அளந்து கொண்டவனே!
முற்றத்தூடு–(நாங்கள் ஏகாந்தமாக விளையாடுகிற) முற்றத்திலே
புகுந்து–நுழைந்து
நின் முகம் காட்டி–உனது திரு முகத்தை (எங்களுக்குக்) காண்பித்து
புன் முறுவல் செய்து–புன் சிரிப்புச் சிரித்து
சிற்றிலோடு எங்கள் சிந்தையும்–எங்கள் சிற்றிலையும் நெஞ்சையும்
சிதைக்கக் கடவையோ–அழிக்கக் கடவாயோ?
(அவ்வளவோடும் நில்லாமல்)-
எம்மைப் பற்றி–எங்களோடே
மெய் பிணக்கு இட்டக்கால்–கலவியும் ப்ரவருத்தமானால்
இந்த பக்கம் நின்றவர்–அருகில் நிற்பவர்கள்
என் சொல்லார்–என்ன சொல்ல மாட்டார்கள்?

மெய்ப் பிணக்கிட்டக்கால்-அணைத்துக் கொண்டால்

முற்றத்தூடு புகுந்து
இவன் கோலுகிறபடி சாலப் பொல்லாதாய் இருந்தது –
இவன் கண் வட்டத்தில் நிற்கில் தீம்பு செய்கை தவிரான் –
அதில் காட்டில் மறைய நிற்கை நன்று -என்று எல்லாரும் திரண்டு
சமேத்ய மந்த்ரயித்வா து சர்வே சங்கத புத்தய–ஊசுஸ்ச மநஸா ஜ்ஞாத்வா வ்ருத்தம்
தசரதம் ந்ருபம்
-அயோத்யா -2-20-என்கிறபடியே
சமயம் பண்ணி –
அது செய்யும் இடத்து எல்லாரும் திரளப் போவோமாகில் இவன் அடி ஒற்றிக் கொண்டு வரும் -என்று பார்த்து
ஒருவர் ஒருவராகப் போய்
பஞ்ச லஷம் குடியில் உள்ளார் எல்லாரையும் கொள்வதொரு முற்றத்திலே புக்கு
கதவுகளையும் -தலை வாசல் தொடங்கி அடைத்து கணையங்களையும் ஏறிட்டு
இவனுக்கு புகுர வழி இல்லாத படி பண்ணிக் கொண்டு இருந்தார்கள் –

இவனுக்கு புகுருகைக்கு வழி தேட வேண்டா இறே
இட்ட இலச்சினை அழியாது இருக்க வெண்ணெய் குடி போமா போலே
நினைவு இன்றிக்கே இருக்க தாங்கள் அவன் கையிலே அபஹ்ருதைகள் ஆனார்கள்

இம் முற்றத்திலே தங்கள் திரளின் நடுவில் வந்து நிற்கக் கண்டார்கள்

நாம் இவனை மறைத்துப் போந்தோம் என்று இருந்தோம் -அழகிதாய் இருந்தது
இவன் நமக்கு முற்பட்டுக் கொடு நின்றான் -என் செய்தோம் ஆனோம்
இவன் கையிலே அகப்பட்டோம் –
இனி இவனுக்கு தென்பட்டோம் ஆகாமல் கழியும் விரகு ஏதோ என்று பார்த்து
ஒரு போக்குக் காணாமல் லஜ்ஜித்து கவிழ் தலையிட்டார்கள்

நின் முகம் காட்டிப் –
எல்லாரையும் தனித் தனியே முகத்தை எடுத்து –
ஏன் வந்தோம் இறே பிற்பட்டோமே -கூட வரப் பெற்றிலோமே –
எவ்வழியே வந்தி கோள்-கால்கள் நொந்தது இறே -என்றால் போலே சிலவற்றைச் சொன்னான்
நம் நினைவு தப்புவதே -என்று தங்கள் தோல்வியை அனுசந்தித்து லஜ்ஜித்தார்கள்

புன் முறுவல் செய்து-
அத்தை அறிந்து -ஸ்மிதம் பண்ணினான் –
நாம் இவனுக்குத் தோற்று லஜ்ஜித்தோம் ஆனமை அவன் அறியல் ஆகாது –
புறம்பே அந்ய பரர ஆனோம் ஆவோம்
என்று அங்கேயே இருந்து சிற்றில் இழைக்கப் புக்கார்கள் –

இங்கேயே நம் சந்நிதியிலே இருந்து அந்ய பரதை பண்ணுவதே -என்று சிவிட்கு என்னா
நினைக்கைக்கு நெஞ்சும் கூடாதே –
வ்யாபரிக்கைக்கு கையும் கூடாத படியாகச் சிலவற்றைச் செய்தான் –

சிற்றிலோடு எங்கள் சிந்தையும் சிதைக்கக் கடவையோ கோவிந்தா
உனக்குத் தான் பசு மேய்க்கை அன்றோ பணி-
பெண்களை நலிகையும் பணியோ
சவாசனமாக அழிக்கக் கடவையோ –

முற்ற மண்ணிடம் தாவி விண்ணுற நீண்டு அளந்து கொண்டாய்
ஒன்றை வாங்கப் புக்கால் கொடுத்தவர்களை குழியிலே தள்ளுமவன் அன்றோ ஷணத்திலே –
இறைப் பொழுதில் பாதாளம் கலவிருக்கை கொடுக்குமவன்-பெரியாழ்வார் திருமொழி -4-9-7- இறே –
இனி என் பழி கேட்பது -கெட்டோம் -இதுக்கு மேல் கேட்பது இல்லை இறே -என்ன
பரியட்டங்களையும் கழித்து -பெண்களுக்கு உடம்பு கொண்டு -தாய்மார் முன்பு நிற்க ஒண்ணாத படி பண்ணினான் –

எம்மைப் பற்றி மெய்ப் பிணக்கிட்டக்கால் இந்தப் பக்கம் நின்றவர் என் சொல்லார்
உங்களுக்கு இது சால அசஹ்யமாய் இருந்ததோ –
நம்மோடு அணைகை பொல்லாததோ –
எத்தனையேனும் யோகிகளும் நம் உடம்புடன் அணைய அன்றோ ஆசைப் படுவது –
உங்களுக்குப் பொல்லாததோ -என்ன –

எங்களுக்கும் அழகிது -ஆனாலும்
இந்தப் பக்கம் நின்றவர் -என் சொல்லார் –
அவர்கள் தோற்றிற்றுச் சொல்லார்களோ –
இத்தால் சம்ஸ்லேஷம் பிரவ்ருத்தமான படி சொல்கிறது –
ஆண் பெண்ணாய் வார்த்தை-ஒரு நான்று தடி பிணக்கே -திருவாய் மொழி -6-2-7- என்றும்
பந்தும் கழலும் தந்து போகு  நம்பி -திருவாய்மொழி -6-2-1–என்றும் –
என் சினம் தீர்வன் நானே -பெருமாள் திருமொழி -6-8- என்றும்
வன்மையுடன் சொல்வது போல்வன சொல்லிற்றாகை அன்றிக்கே
-பெண் தனக்கே -அதுக்கு மேலே -ஒரு மென்மை பிறந்து
வார்த்தை சொல்லுகிறது என்னும் இடம் தோற்றி இருக்கிறபடி காணும் -என்று

நம் பிள்ளை தாமும் வித்தராய் அருளிச் செய்து அருளின வார்த்தை –
இந்தப் பக்கம் நின்றவர் என் சொல்லார் -என்று தனக்கு சம்ஸ்லேஷத்தில் உண்டான இசைவை
மார்த்தவம் தோற்றச் சொல்லுவதே -என்றபடி –

————————————————————

சீதை வாய் அமுதம் உண்டாய் எங்கள் சிற்றில் நீ சிதையேல் என்று
வீதிவாய் விளையாடும் ஆயர் சிறுமியர் மழலைச் சொல்லை
வேத வாய்த் தொழிலார்கள் வாழ் வில்லிபுத்தூர் மன் விட்டு சித்தன் தன்
கோதை வாய்த் தமிழ் வல்லவர் குறைவின்றி வைகுந்தம் சேர்வரே–2-10-

சீதை வாய் அமுதம் உண்டாய் எங்கள் சிற்றில் நீ சிதையேல் என்று-
கதா நு சாறு பிம்போஷ்டம் தஸ்யா பத்ம மிவாநனம்-
ஈஷதுன் நம்ய பாஸ்யாமி ரசாய நமிவோத்தமம்
-யுத்த -5-13-என்கிறபடியே
பருவம் நிரம்பினவளோடே இத் தீம்புகள் செய்தால் அன்றோ உனக்கு பிரயோஜனம் உள்ளது –
உன் நினைவு அறிந்து பரிமாறுகைக்கு அளவில்லாத
எங்கள் சிற்றிலை வந்து சிதையாதே கொள -என்று

வீதிவாய் விளையாடும் ஆயர் சிறுமியர் மழலைச் சொல்லை-
எல்லாரும் திரளும் இடத்தில்
மறைக்க வேண்டுமவை மறைக்கை அறியாதே பரியட்டங்களை இட்டு வைத்து –
ஸ்வைரமாக விளையாடுகிற பருவம் நிரம்பாத இடைப் பெண்கள் உடைய நிரம்பா மென் சொல்லை –

வேத வாய்த் தொழிலார்கள் வாழ் வில்லிபுத்தூர் மன் விட்டு சித்தன் தன்
வாயால் உச்சரிப்பது அடங்கலும் வேத சப்தம் ஆகையாலே
செய்வது அடங்கலும் வைதிக கிரியையாய் இருக்கிற
பிராமணர் வர்த்திக்கிற ஸ்ரீ வில்லி புத்தூருக்கு பிரதானரான பெரியாழ்வார் –

கோதை வாய்த் தமிழ் வல்லவர் குறைவின்றி வைகுந்தம் சேர்வரே-
திரு மகளுடைய -பகவத் அனுபவம் -வாச க்ரம வர்த்தித்வாத் –
வழிந்து புறப்பட்ட சொல்லை அப்யசிக்க வல்லவர்கள் –
அணைத்த அநந்தரம்-
இந்தப் பக்கம் நின்றவர் என் சொல்லார் –
என்னுதல் –

அன்றிக்கே –
காமன் காலிலே விழுதல் -செய்ய வேண்டாதே –
அணைத்த அநந்தரம் –
அருகு நிற்பாரும் எல்லாம்
பணியா அமரரான-திருவாய்மொழி -8-3-6-
நித்ய சித்தராய் யாம்படியான தேசத்திலே போய்ப் புகப் பெறுவார்கள் –

———————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ நாச்சியார் திரு மொழி – ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்யானம் -முதல் திருமொழி —

September 1, 2015

தையொரு திங்களும் –
மார்கழி மாசம் ஒரு மாசமும் நோன்பு நோற்றார்களாய் நின்றது இறே –
இனி தை ஒரு மாசமும் அவன் வரும் ஸ்தலத்தை அலங்கரித்து –

தையொரு திங்களும் தரை விளக்கித்
தண் மண்டலமிட்டு மாசி முன்னாள்
ஐய நுண் மணல் கொண்டு தெருவணிந்து
அழகினுக்கு அலங்கரித்த அனங்க தேவா
உய்யுமாம் கொலோ வென்று சொல்லி
உன்னையும் உம்பியையும் தொழுதேன்
வெய்யதோர் தழல் உமிழ் சக்கரக் கை
வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே –1-1-

அனங்க தேவா–காம தேவனே!
தை ஒரு திங்களும்–தை மாதம் முழுதும்
தரை விளக்கி–நீ எழுந்தருள வேண்டிய இடத்தைச் சோதித்து மண்டல பூஜைக்காக
தண் மண்டலம் இட்டு–குளிர்ந்த (அழகிய) மண்டலாகாரத்தை இட்டு
மாசி முன் நாள்–மாசி மாதத்தின் முதற்பக்ஷத்தில்
ஐய நுண் மணல் கொண்டு–அழகிய சிறிய மணல்களினால்
தெரு–(நீ எழுந்தருளும்) வீதிகளை
அழகினுக்கு அணிந்து அலங்கரித்து–அழகுண்டாவதற்காக நன்றாய் அலங்கரித்து
உய்யவும் ஆம் கொலோ என்று சொல்லி–(காமனைத் தொழுதால் நாம்) உஜ்ஜீவிக்கலாமோ? எனக் கருதி
உன்னையும்–(காமனாகிய) உன்னையும்
உம்பியையும்–உன் தம்பியான சாமனையும்
தொழுதேன்–வணங்கா நின்றேன்
வெய்யது–(ப்ரதிகூலர் பக்கலில்) உக்கிரமானதும்
தழல் உமிழ்–நெருப்புப் பொறிகளை உமிழா நிற்பதுமான
ஓர் சக்கரம்–ஒப்பற்ற திரு வழி யாழ்வானை
கை–திருக் கையில் அணிந்துள்ள
வேங்கடவற்கு–திருவேங்கட முடையானுக்கு
என்னை–என்னை
விதிக்கிற்றி–கைங்கரியம் பண்ணும்படி கல்பிக்க வேணும்
(ஏ-ஈற்றசை)

மண்டலம்-மண்டலாகாரமான கோலத்தை
மாசி முன்னாள் -மாசி மாதத்தில் முதல் பக்ஷத்தில்
ஐய -அழகிய -நுண் -நுண்ணிய
அழகுக்கு -கேவலம் அழகுக்காகவே
உம்பி-சாமன்
விதிக்கிற்றியே -அந்தரங்கம் கைங்கர்யம் பண்ணும் படி விதிக்க வேணும் –

தையொரு திங்களும் —
செங்கண் மால் எங்கள் மால் என்ற நாள் எந்நாளும் நாளாகும் -மூன்றாம் திரு -17-என்று
சர்வேஸ்வரன் நம் பக்கலிலே ஆபிமுக்யம் பண்ணினான் என்று
அறிவது ஒரு நாள் உண்டாகில்
கால த்ரயமும் அடிக் கழஞ்சு பெற்று செல்லா நிற்கும் இறே

இப்படி ஒரு நாளை யானுகூல்யம் மிகை -என்று இருக்கும் விஷயத்தை பற்றி வைத்து இறே
இவன் காலிலே ஒரு மாசமாக துவளப் பார்க்கிறது –

தரை விளக்கித்
திருக் கண்ணமங்கை ஆண்டானைப் போலே இது தானே பிரயோஜனமாகச் செல்லுகிற படி –
சர்வேஸ்வரனுக்கு அசாதாரணமான ஸ்தலங்களில் புக்கு பரிசர்யை பண்ணிப் போரும் குடியிலே பிறந்தவள் இறே –
பகவத் கைங்கர்யம் பண்ணுகைக்கு ஸ்தல ஸூத்தி பண்ணுகிற படி இறே இது

தண் மண்டலமிட்டு –
குளிர்ந்து தர்ச நீயமான மண்டலத்தை இட்டு
தொழுது மா மலர் நீர் சுடர் தூபம் கொண்டு எழுதும் என்னும் இது மிகை -திருவாய் -9-3-9–யான விஷயத்தைப் பற்றி வைத்து
இங்கே மண்டல பூஜை பண்ணுகிறாள் இறே ஆற்றாமை –

மண்டலமிட்டு –
வ்ருத்த ஹானியை அனுஷ்டியா நிற்கச் செய்தே இவள் செய்கையாலே
அது சத் வ்ருத்தமாய் இருக்கிறபடி –
ஞானம் கனிந்த நலமாகிய பக்தியாலே செய்கையாலே –

தண் மண்டலமிட்டு -மாசி முன்னாள்-
ஒரு பிரயோகம் பண்ணும் போது ஒரு மண்டலம் சேவிக்க வேணும் இறே -அதுக்கு பல வ்யாப்தி உண்டாம் போது –
அதுக்காக மண்டல சேவை பண்ணுகிறாள்

தண் மண்டலமிட்டு –
இம் மண்டலத்திலே செய்து அறியாதது ஓன்று இறே இவள் செய்கிறது –

மாசி முன்னாள் –
மாசி முற்கூறு -முதல் பதினைந்து -ஒரு பஷத்திலே நின்று அனுஷ்டிக்க வேணும்

ஐய நுண் மணல் கொண்டு தெருவணிந்து-அழகினுக்கு அலங்கரித்த –
ஐய தாய் –
அவன் சௌகுமார்யத்துக்கு சேரும் படி நுண்ணியதான மணலைக் கொண்டு
அவன் வரும் தெருவை அலங்கரித்து –
வேறு ஒரு பிரயோஜனதுக்காக அன்றிக்கே இது தானே பிரயோஜனமாக அலங்கரிப்பாரைப் போலே அலங்கரித்து

இப்படி சாதாரமாக ஆஸ்ரயிக்கிறது நீ என் பக்கலில் என் கொண்டு என்ன –
அனங்க தேவா-
உன்னை அழிய மாறியும் பிரிந்தாரை நீ சேர்க்கும் ஸ்வ பாவத்தைக் கண்டு –

உய்யுமாம் கொலோ வென்று சொல்லி
பேறு தப்பாது என்று அத்யவசித்து இருக்கலாவது ஒரு விஷயம் அன்றே பற்றிற்று –
விநாசத்தை விளைப்பதான செயலை இறே செய்தது
உஜ்ஜீவிக்கலாம் -என்று பார்க்கிறது –

ஆம் கொலோ –
சங்கை -பலத்துக்கு வ்யபிசாரம் இல்லாத சாதனத்தை பரிஹரித்து வைத்து இறே பலம் –
பாஷிகமான விஷயத்தில் விழுகிறது –

என்று சொல்லி –
உஜ்ஜீவிக்கலாம் என்னும் ஆசையாலே சொல்லி

உன்னையும் உம்பியையும் தொழுதேன்
ததீயரோடு கூட அவனை உபாசித்துப் போந்த வாசனையாலே
ச ப்ராதுஸ் சரனௌ காடம் நிபீட்ய ரகு நந்தன -சீதா முவாசாதி யசா ராகவஞ்ச மகாவ்ரதம் -அயோத்யா -31-2-என்னுமா போலே
தம்பி முன்னாகப் பற்றுகிறாள்–
காமன் -தம்பி சாமன் -சாமனையும் உன்னையும் தொழுதேன் என்கிறாள்
நமோஸ் அஸ்து ராமாயா ச லஷ்மணாயா –தேவ்யை ச தசை ஜனகாத்மஜாயை சுந்தர -13-60-என்னுமா போலே

தொழுதேன் –
தோள் அவனை அல்லால் தொழா-முதல் திரு -60- என்னும் குடியிலே பிறந்து இருக்கச் செய்தே இறே
இப்படி இவள் கை இழந்தது-
க்ருதாபராதச்ய ஹி தே நாந்யத் பச்யாம் யஹம் ஷமம் -அந்தரேண அஞ்சலிம் பத்த்வா லஷ்மணச்ய பிரசாத நாத் -கிஷ்கிந்தா -32-17-
தீரக் கழிய அபராதம் பண்ணின பின்பு ஓர் அஞ்சலி நேராமல் போகாது என்றான் இறே திருவடி
க்ருதாபராதர்க்கும் கூட கார்யகரம் ஆவது ஓன்று இறே அஞ்சலி

ஏதுக்குத் தான் இப்படி தொழுகிறதோ என்ன –
வெய்யதோர் தழல் உமிழ் சக்கரக் கை வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே –
ஸ்ரீ வைகுண்டத்திலே நித்ய ஸூரிகளுக்கு ஓலக்கம் கொடுத்து தன் செருக்கு தோற்ற இருக்கக் கடவன்-
சம்சாரிகளும் இப் பேற்றை பெற்று வாழ வேணும் -என்று
அங்கு நின்றும் போந்து முதல் பயணம் எடுத்து விட்டு-
ஆஸரீத விரோதி நிரசன சீலனான திரு வாழி யாழ்வானைக் கையிலே உடையனாய்க் கொண்டு
திருமலையிலே வந்து நிற்கிறவனுக்கு-

அக்கையும் திரு வாழியுமான சேர்த்தி அழகை காண வேணும் என்று ஆசைப் படுகிற என்னை
அவனுடனே சேர்த்து விட வல்லையே-
அவனோ அண்ணியனாய் வந்து நின்றான்-
எனக்கு அவனை ஒழியச் செல்லாமை உண்டாய் இருந்தது -இனி சேர்த்து விட வல்லையே-

இப்போது -வெய்யதோர் தழல் உமிழ் சக்கரக் கை -என்றதற்கு கருத்து
உகவாதவரை அழியச் செய்கைக்கும்-
உகப்பாருக்கு கண்டு கொண்டு இருக்கைக்கும் இது தானே பரிகரமாய் இருக்கை –
கூராழி வெண் சங்கு ஏந்தி வாராய் -6-9-1–என்று இறே இருப்பது –

ஏந்தி -திரு ஆபரணம் –இதுவே உத்தேச்யம் என்று காட்டுகிறாள் –

——————————————-

வெள்ளை நுண் மணல் கொண்டு தெருவணிந்து
வெள்வரைப்பதன் முன்னம் துறை படிந்து
முள்ளும் இல்லாச் சுள்ளி எரி மடுத்து
முயன்று உன்னை நோற்கின்றேன் காம தேவா
கள்ளவிழ் பூங்கணை தொடுத்துக் கொண்டு
கடல் வண்ணன் என்பதோர் பேர் எழுதி
புள்ளினை வாய் பிளந்தான் எனபது ஓர்
இலக்கினில் புக வென்னை எய்க்கிற்றியே–1-2-

காமதேவா–மன்மத தேவனே!
வெள்ளை நுண் மணல் கொண்டு–வெளுத்த சிறிய மணல்களைக் கொண்டு
முள்ளும் இல்லா சுள்ளி–(எறும்பு முதலியவை இல்லாத வளவே யன்றியே) முள்ளுமில்லாத சுள்ளிகளை
எரி மடுத்து–நெருப்பிலிட்டு
முயன்று–(இவ்வாறான) ப்ரயத்நங்களைச் செய்து
உன்னை தோற்கின்றேன்–நோன்பு நோற்கா நின்றேன்’
(ஆன பின்பு,)
கள் அவிழ்–தேன் பெருகா நின்றுள்ள
பூ புஷ்பங்களாகிற கணை–அம்புகளை
தெரு அணிந்து–வீதிகளை அலங்கரித்து,
வெள் வரைப் பதன் முன்னம்–கிழக்கு வெளுப்பதற்கு முன்னமே
துறை படிந்து–நீர்த் துறைகளில் முழுகி,
தொடுத்துக்–கொண்டு (வில்லில்) தொடுத்துக் கொண்டு
கடல் வண்ணன் என்பது ஓர் பேர் எழுதி–கண்ண பிரானுடைய கடல் வண்ணனென்கிற ஒரு நாமத்தை
(அம்பிலே) எழுதிக் கொண்டு
புள்ளினை வாய் பிளந்தான் என்பது ஓர் இலக்கினில்–‘பகாஸுரனுடைய வாயைக் கீண்டெறிந்தவன்,
என்னும் ஓர் குறியாகிற அக் கடல் வண்ணன் பக்கலில்)
புக–(நான்) சென்று சேரும்படி என்னை என்னை
எய்கிற்றி (நீ) சேர்ப்பிக்கவேணும்.

வெள் வரைப்பதன் முன்னம் -கிழக்கு வெளுப்பதற்கு முன்னே
முள்ளும் -முள் எறும்பு முதலியவையும் –

வெள்ளை நுண் மணல் கொண்டு தெருவணிந்து வெள்வரைப்பதன் முன்னம் துறை படிந்து
சத்வ பிரசுரனான சர்வேஸ்வரனுடன் உடைய சம்பந்தத்தாலும்
தேவதையினுடைய சௌகுமார்யத்தாலும்-
ஆக –
வெளுத்து –
நுண்ணியதாய் இருந்துள்ள
மணலைக் கொண்டு அவன் வரும் வழியை அலங்கரித்து –

நாட்காலே நீராடி -என்று
அவனை நோக்கி குளித்த வாசனையாலே
கிழக்கு வெளுப்பதற்கு முன்பே நீர் நிலைகளிலே மூழ்கி –

கீழ் வானம் வெள்ளென்று -என்று
அவனைக் குறித்து நோற்கும் இடத்து
துணுக் துணுக் -என்னும் இத்தை இறே இவனை நோக்கிச் செய்கிறது

துறை படிந்து –
ஸ்ரீ பரத ஆழ்வான் ஸ்ரீ ராம விரஹம் ஆறுகைக்கு செய்யுமத்தை யாய்த்து
இவன் பக்கல் செய்கிறது –
அத்யந்த ஸூக சம்வ்ருத்த ஸூ குமார ஸூ கோசித-கதம் ந்வபரராத்ரேஷூ சரயூம் அவஹாகதே –ஆரண்ய -16-20-

முள்ளும் இல்லாச் சுள்ளி எரி மடுத்து-
எறும்பும் மற்று ஓன்று உள்ளவை இல்லாமையே யன்றிக்கே –
முள்ளும் இன்றிக்கே இருக்கிற சுள்ளி உண்டு –இள விறகு-
அத்தை அக்னியிலே இட்டு —
சமித்தை அக்னியிலே போர மடுத்தனையும் கிருஷ்ணனை போர அணைக்கலாம் -என்று இருக்கிறாள்

பெரியாழ்வார் பகவத் சமாராதான ரூபமாகச் செல்லும் அக்னி ஹோத்ர ஹோமத்துக்கு –
ஸ்வயம் பிரயோஜனமான ஹோமத்துக்கு –
வேண்டுவன எடுத்து கை நீட்டக் கடவள் இறே இப்போது இது செய்கிறாள் –

முயன்று உன்னை நோற்கின்றேன் காம தேவா-
சரைஸ்து சங்குலம் க்ருத்வா லங்காம் பரபலார்த்தன -மாம் நயத்யதி
காகுத்ஸ்தஸ் தத் தஸ்ய சத்ருசம் பவேத் -சுந்த -39-30-என்னும்படியே
அவனே என்று அறுதி இட்டு இருக்கக் கடவ நான்
இப்போது அவனைப் பெறுகைக்கு
உன் காலிலே விழுந்து படுகிற யத்னம் எல்லாம் கண்டாயே

உன்னை –
நான் பற்றி இருக்கும் விஷயம் தான் இன்னது என்னும் இடம் அறிதியே –
அவனைப் பற்றி இருக்கக் கடவ நான் அன்றோ -உன் காலிலே விழுந்து துவளுகிறேன்

அது உண்டு -அதுக்கு நான் செய்ய வேண்டுவது என் -என்ன —
கள்ளவிழ் பூங்கணை தொடுத்துக் கொண்டு-கடல் வண்ணன் என்பதோர் பேர் எழுதி-
இனிச் சாணையில் ஏறிட வேண்டா வாய்த்து -சிதை -என்கிறபடியே –
மது விரியா நின்றுள்ள புஷ்ப பாணங்களை தொடுத்துக் கொண்டு –
கடல் போன்ற ஸ்ரமஹரமான வடிவை உடையவனுடைய திரு நாமத்தை அம்பிலே எழுதிக் கொண்டு -என்னுதல்–
ஹிருதயத்திலே எழுதிக் கொண்டு என்னுதல்

புள்ளினை வாய் பிளந்தான் எனபது ஓர் இலக்கினில் புக வென்னை எய்க்கிற்றியே-
பகாசூரனுடைய வாயைக் கிழித்து விரோதி நிரசன சீலனாய் இருக்கிறவன் பக்கலிலே
நான் சென்று சேரும் படி பண்ண வல்லையே-
தம் த்ருஷ்ட்வா சத்ரு ஹந்தாரம் மஹர்ஷீணாம் ஸூ காவஹம்
பபூவ ஹ்ருஷ்ட்வா வைதேஹீ பர்த்தாரம் பரிஷச்வஜே –ஆரண்ய -94-18-
நான் அவனை அணைக்கும் படி பண்ண வல்லையே –

————————————————————————–

மத்த நன்னறு மலர் முருக்க மலர் கொண்டு
முப்போது முன்னடி வணங்கி
தத்துவமிலி என்று நெஞ்செரிந்து
வாசகத்தழித்து உன்னை வைதிடாமே
கொத்தலர் பூங்கணை தொடுத்துக் கொண்டு
கோவிந்தன் என்பதோர் பேரெழுதி
வித்தகன் வேங்கட வாணன் என்னும்
விளக்கினில் புக வென்னை விதிக்கிற்றியே–1-3-

(காமதேவா!’
நல்நறு மத்த மலர்—நல்ல மணமிக்க ஊமத்த மலர்களையும்
முருக்க மலர் கொண்டு–முருக்க மலர்களையுங் கொண்டு
முப்போதும் மூன்று காலங்களிலும்
உன் அடி வணங்கி–உன் அடியை வணங்கி
தத்துவம் இலி என்று நெஞ்சு எரிந்து வாசகத்து அழித்து உன்னை வைதிடாமே ‘இவன் பொய்யான தெய்வம், என்று
சொல்லி மனங் கொதித்து அழித்து வாய் கொண்டு உன்னை நிந்திக்க வேண்டாதபடி
கொத்து அலர்ப்பூ கணை தொடுத்துக் கொண்டு–கொத்துக் கொத்தாக விகஸியா நின்ற
புஷ்பங்களாகிற அம்புகளை வில்லில் தொடுத்துக் கொண்டு
கோவிந்தன் என்பது ஓர் பேரெழுதி–கோவிந்த நாமத்தை (நெஞ்சில்) தரித்துக் கொண்டு
வித்தகன் வேங்கடம் வாணன் என்னும் விளக்கினில் புக–அற்புதனான திருவேங்கடமுடையான் என்கிற விளக்கிலே
என்னை விதிக்கிற்றி–என்னை நீ செய்ய வேணும்.

மத்த நன்னறு மலர் —ஊமத்தையினுடைய நல்ல மலர்களையும்
முருக்க மலர் கொண்டு-பலாசம் புஷ்பங்களையும் கொண்டு
முப்போது முன்னடி வணங்கி-காலை மாலை உச்சி யாகிற மூன்று போதுகளிலும் உனது அடிகளிலே தண்டன் இட்டு –

மத்த நன்னறு மலர்முருக்க மலர் கொண்டு-
ரஜோ குண பிரசுரனாய் இருக்கையாலே அதுக்கு அநுரூபமாம்படி மதகரமான புஷ்பங்களைக் கொண்டு –
மதமத்தையினுடைய நன்றான செவ்விப் பூ முருக்கம் பூ இவற்றைக் கொண்டு –
திருத் துழாய் பறிக்கும் குடியில் பிறந்தவள் இறே இப்போது இவனுக்கு இவை தேடுகிறாள் –

முப்போது முன்னடி வணங்கி-
ஒரு போது தொழுகை தானும் மிகையாம் படியான விஷயத்தை பற்றி வைத்து இறே இவனை த்ரி சந்தியும் ஆஸ்ரயிக்கிறது-
காலை மாலை கமல மலரிட்டு நீர் -மாலை நண்ணித் தொழுது எழுமினோ -9-10-1-
கள்ளவிழும் மலரிட்டு நீர் இறைஞ்சுமின்-9-10-2-
விண்டு வாடா மலரிட்டு நீர் இறைஞ்சுமின் -9-10-3-
பூசித்தும் போக்கினேன் போது -நான்முகன் திரு -63–என்று
கால ஷேப அர்த்தமாகவும் –
ஸ்வயம் போக்யமாகவும் –
பகவத் கைங்கர்யம் பண்ணும் குடியிலே பிறந்தவள் கிடீர் இப்படி இவனை ஆஸ்ரயிக்கிறாள்-

தத்துவமிலி என்று நெஞ்செரிந்து-வாசகத்தழித்து உன்னை வைதிடாமே-
உன் ஸ்வரூபம் அழியாமே நோக்கிக் கொள்ளப் பார் கிடாய் –
இவனை ஆஸ்ரயித்தால் பெருவதொரு பலம் இல்லை என்று -இவன் பொய் சொல்லி -என்று நெஞ்சு கொதித்து –
அதுதான் நினைவு மாத்ரமாகை யன்றிக்கே வாயாலே அழித்து பலரும் அறியும் படி உன்னை வைதிடாமே
தருமம் அறியாக் குறும்பனை –பொருத்தமிலியை –-14-6- என்றும்
புறம்போல் உள்ளும் கரியானை -14-7-
ஏலாப் பொய்கள் உரைப்பானை -14-3-
பெண்ணின் வருத்தம் அறியாத பெருமானை -13-1- என்று
அவனை வைவது போலே உன்னையும் வைய நேரும் என்று பயமுறுத்துகிறாள் –

கொத்தலர் பூங்கணை தொடுத்துக் கொண்டு
ததோ ராமோ மகா தேஜா தநுராதாய வீர்ய வான்-பிரவிச்ய ராஷசம் சைன்யம் சர வர்ஷம் வவர்ஷ ஹ -யுத்த -94-18-
என்று கொண்டு நூறும் பத்தும் ஆயிரமுமாக பெருமாள் திருச் சரங்களைத் தொடுத்து விடுமா போலே-
நீயும் கொத்து கொத்தான புஷ்பங்களைத் தொடுத்துக் கொண்டு

கோவிந்தன் என்பதோர் பேரெழுதி-
எங்களுடைய ரஷணத்துக்கு முடி சூடி இருக்கிறவனுடைய திரு நாமத்தையும் நெஞ்சிலே எழுதிக் கொண்டு –

வித்தகன் வேங்கட வாணன் என்னும்-
பரம பதத்தில் நித்ய ஸூரிகள் ஓலக்கம் கொடுக்க இருக்க கடவ -அவன் அவ்விருப்பை விட்டு-
கானமும் வானரமும் வேடரும் -நான் முகன் -47-
ஓலக்கம் கொடுக்கத் திருமலையிலே வந்து நிற்கிற விஸ்மய நீயன் –
மிகு மதத்தேன் விண்ட மலர் கொண்டு விறல் வேங்கடவனையே கண்டு வணங்கும் களிறு -மூன்றாம் திரு -70-என்றும் –
வைப்பன் மணி விளக்கா மா மதியை மாலுக்கு -நான்முகன் -46-என்று
எப்பொழுதும் கை நீட்டும் யானையை -என்றும்
திரு விளக்கு இடுவதும் -திரு வாராதனம் பண்ணுவனவும் இவை இறே –

சூட்டு நன் மாலைகள் தூயன வேந்தி விண்ணோர்கள் நன்னீராட்டி அந்தூபம் தரா நிற்கவே அங்கு -திருவிருத்தம் -21-
அதில் காட்டில் இது போக்யமாய் இறே இங்கு வந்து அவன் நிற்கிறது

வேங்கட வாணன் -என்னும் விளக்கினில் புக வென்னை விதிக்கிற்றியே–
பரம பதத்தில் ஸ்வரூபம் மைத்துப் போலே இருப்பது –
திருமலையிலே வந்து நின்ற பின்பாய்த்து-
ஸ்வரூப குணங்களுக்கு பிரகாசம் உண்டாய்த்து –
குன்றத்தில் இட்ட விளக்காய்த்தே
வேடார் திருவேங்கடம் மேய விளக்கு -பெரிய திரு -4-7-5-இறே –
திருமலையிலே பொருந்தின பின்பு உஜ்ஜ்வலனாய்த்து
அந்த விளக்கில் புகும்படி என்னை நியமிக்க வேணும் என்கிறாள் –

——————————————————–

சுவரில் புராண நின் பேர் எழுதிச்
சுறவ நற் கொடிக்களும் துரங்கங்களும்
கவரிப் பிணாக்ககளும் கருப்பு வில்லும்
காட்டித் தந்தேன் கண்டாய் காம தேவா
அவரைப் பிராயம் தொடங்கி என்றும்
ஆதரித்து எழுந்த என் தட முலைகள்
துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத்
தொழுது வைத்தேன் ஒல்லை விதிக்கிற்றயே–1-4-

பதவுரை

புராண–நெடு நாளாக எனக்கு உபகரிக்கு மவனே!
காம தேவா–மன்மதனே!
சுவரில்–சுவரிலே
நின் பேர் –உனது பெயர்களை
எழுதி–எழுதி
சுறவம் நல் கொடிகளும்–மீன்களாகிற நல்ல த்வஜங்களையும்
துரங்கங்களும்–குதிரைகளையும்
கவரி பிணாக்களும்–சாமரம் வீசுகின்ற பெண்களையும்
கரும்பு வில்லும்–கரும்பாகிற தநுஸ்ஸையும்
காட்டித் தந்தேன் கண்டாய்–உனக்கு உரியனதாகக் காட்டிக் கொடுத்தேன
அவரைப் பிராயம் தொடங்கி–இளம் பருவமே தொடங்கி
என்றும் ஆதரித்து–(அக் கண்ண பிரானையே) எப்போதும் விரும்பி
எழுந்த–கிளர்ந்த
என் தடம் முலைகள்–எனது பருத்த முலைகளை
துவரைப் பிரானுக்கே–த்வாரகைக்குத் தலைவனான அக் கண்ண பிரானுக்கே
சங்கற்பித்து–(அநுபவிக்கத் தக்கவை என்று) ஸங்கல்பித்து
தொழுது வைத்தேன்–(உன்னை) தண்டனிடா நின்றேன்
(இந்த மநோரதத்தை)
ஒல்லை விதிக்கிற்றி–(நீ) சீக்கிரமாகத் தலைக் கட்டுவிக்க வேணும்.

சுறவ -நற் கொடிக்களும்–சுறா என்னும் மத்ச்யங்கள் எழுதின நல்ல துகில் கொடிகளையும் –
அவரைப் பிராயம்-பால்ய பிராயம்-

சுவரில் புராண நின் பேர் எழுதிச்-
தன் த்வரையாலே ஒன்றைச் செய்கிறாள் இத்தனை போக்கி –
கிருஷ்ணனை ஸ்மரித்தவாறே இவனை மறக்கக் கூடுமே –
அதுக்காக அவன் பெயரை ஒரு பித்தியிலே எழுதி வைக்கும் யாய்த்து –

எழுதி வாசித்து கேட்டும் வணங்கி –வழி பட்டும் பூசித்தும் போக்கினேன் போது –நான்முகன் -63-என்கிறது எல்லாம்-
இவன் விஷயத்திலே யாய்த்து இவளுக்கு –

புராண
பழையதாகப் பிரிந்தாரை சேர்த்துப் போருமவன் அன்றோ நீ

சுறவ நற் கொடிக்களும் துரங்கங்களும்-
கருடத்வஜனோடே வாசனை பண்ணிப் போருமது தவிர்ந்து –
மகரத்வஜனை
நினைக்கும்படியாய் வந்து விழுந்தது

சுறவம் -ஒரு மத்ஸ்ய விசேஷம் –

துரங்கங்களும்-
கிருஷ்ணனுடைய தேர் பூண்ட புரவிகளை நினைத்து இருக்குமது தவிர்ந்து
இவனுடைய குதிரைகளை நினைத்து இருக்கிறாள்-

கவரிப் பிணாக்ககளும் –
விமலாதிகளை ஸ்மரிக்கும் அது தவிர்ந்து -இவனுக்கு சாமரம் இடுகிற ஸ்திரீகளை யாய்த்து நினைக்கிறது –

பிணா -என்று பெண் பேர் –

கருப்பு வில்லும்-
சார்ங்கம் என்னும் வில்லாண்டான் -என்னுமது தவிர்ந்து கருப்பு வில்லை யாய்த்து நினைக்கிறது

காட்டித் தந்தேன் கண்டாய் –
இவள் தன் நெஞ்சில் படிந்தவற்றை நமக்கு அறிவித்தால் என்று நீ புத்தி பண்ணி இரு கிடாய் –
வாஹ நாதிகள் சமாராதன காலத்தில் கண்டு அருளப் பண்ணும் வாசனையால் இங்குச் செய்கிறாள் –
ச விபூதிகனாய் இருக்குமவனுக்கு உபாசித்துப் போந்த வாசனை –

காம தேவா-
அபிமத விஷயத்தை பெறுகைக்கு-வயிற்றில் பிறந்த உன் காலில் விழும்படி யன்றோ என் தசை –

அவரைப் பிராயம் தொடங்கி
அரை விதைப் பருவம் தொடங்கி-பிராயம் தொடங்கி அவரை என்றும் ஆதரித்து –
பால்யாத் பிரப்ருதி ஸூ ஸ நிக்தோ லஷ்மணோ லஷ்மி வர்த்தன –
ராமஸ்ய லோக ராமஸ்ய ப்ராதுர் ஜ்யேஷ்டச்ய நித்யச
-பால -18-27-
என்று பருவம் நிரம்பாத அளவே தொடங்கி

என்றும் ஆதரித்து எழுந்த என் தட முலைகள்-
என்றும் ஒக்க அவனை ஆதரித்து –
அவ்வாதரமே எருவாக வளர்ந்து -போக்தாவால் உண்டு அறுக்க ஒண்ணாதபடி இருக்கிற முலைகளை –

துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத்-
பதினாறாயிரம் பெண்களுக்கும் -7-9-முன்னோட்டுக் -முந்தி சம்ச்லேஷிக்கை -கொடுத்தவன்
வேண்டுமாய்த்து இவற்றுக்கு ஆடல் கொடுக்கைக்கு –

தொழுது வைத்தேன்-
அவனுக்கு என்று சங்கல்ப்பித்தால் பின்னை அவன் குணங்களோ பாதி உபாச்யமாம் இத்தனை இறே-

இந்த முலைகளை தொழுது வைத்தேன்
இவற்றை தொழுது வைக்கக் குறை இல்லையே –

ஒல்லை விதிக்கிற்றயே-
என் ஆற்றாமை இருந்தபடி கண்டாயே
இனி இம் முலைகளிலே செவ்வி அழிவதற்கு முன்பே சேர்க்க வல்லையே –

————————————————————————————

வானிடை வாழும் அவ் வானவர்க்கு
மறையவர் வேள்வியில் வகுத்த வவி
கானிடைத் திரிவதோர் நரி புகுந்து
கடப்பதும் மோப்பதும் செய்வது ஒப்ப
ஊனிடை யாழி சங்கு உத்தமர்க்கு என்று
உன்னித் தெழுந்த என் தட முலைகள்
மானிடர்வர்க்கு என்று பேச்சுப் படில்
வாழகில்லேன் கண்டாய் மன்மதனே –1-5

பதவுரை

மன்மதனே!-
வானிடை–ஸ்வர்க்க லோகத்தில்
வாழும்–வாழுகின்ற
அவ் வானவர்க்கு–விலக்ஷணரான தேவர்களுக்கென்று
மறையவர்–ப்ராஹ்மணர்
வேள்வியில்–யாகத்தில்
வகுத்த அலி–கொடுத்த ஹவிஸ்ஸை
கானிடை திரிவது ஓர் நரி புகுந்து–காட்டிலே திரிகின்ற ஒரு நரியானது வந்து
என் தடம் முலைகள்–எனது பருத்த முலைகளானவை
மானிடவர்க்கு என்று பேச்சு படில்–(அப்புருஷோத்தமனை யொழியச் (சில) மநுஷ்யர்களுக்கு (உரியவை)
கடப்பதும் மோப்பதும் செய்வது ஒப்ப–கடந்தும் மோந்து பார்த்தும் கெடுப்பது போல
ஊனிடை — (தனது) திருமேனியில்
ஆழி சங்கு–திருவாழியையும் திருச்சங்கையும் (அணிந்துள்ள)
உத்தமற்கு என்று–புருஷோத்தமனுக்காக
உன்னித்து எழுந்த–ஆதரவுடன் கிளர்ந்த யவை) என்கிற பேச்சு (நாட்டில்) உண்டாகுமே யானால்
வாழகில்லேன்–உயிர் வாழ்ந்திருக்க மாட்டேன்’
(கண்டாய்–முன்னிலையசை.)

கடப்பதும் -தனக்காக்கிக் கொள்வதும்
ஊனிடை -தன் திரு மேனியிலே –

வானிடை வாழும் அவ்வானவர்க்கு-
போக பூமியில் வர்த்திக்கக் கடவராய் -விலஷண ஜன்மாக்களாய் இருக்கிற தேவர்களுக்கு –
தேவான் பாவயதா நேன தே தேவா பாவயந்து வா –
பரஸ்பரம் பாவயந்த ஸ்ரேய பரம வாப்ச்யாத
-ஸ்ரீ கீதை -3-10/11-என்கிறபடியே

மறையவர் வேள்வியில் வகுத்த வவி கானிடைத் திரிவதோர் நரி புகுந்து கடப்பதும் மோப்பதும் செய்வது ஒப்ப-
இங்கு உள்ள பிராமணர் தேவர்களை உபாசிக்கக் கடவரகளாயும்-
அவர்கள் இவர்களுடைய அபேஷித சம்விதானம் பண்ணக் கடவர்களாகவும்
ஈஸ்வரன் அடியிலே பார்த்து வைத்த தொரு பார்வை யுண்டிறே-

ஆகையால் பிராமணர் தம்தாமுடைய யாகங்களில் உண்டாக்கின ஹவுஸ் சை-
மனுஷ்யர் இல்லாத காட்டிலே சஞ்சரிப்பதொரு ஷூத்ர பதார்த்தங்கள் –
அவர்களுக்கு அது யோக்யமாகாத படி தூஷிக்குமா போலே

ஊனிடை யாழி சங்கு உத்தமர்க்கு என்று-
வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டி இருக்கிற அழகிய திரு மேனியிலே
திரு வாழியையும் ஸ்ரீ பாஞ்ச ஜந்யத்தையும் தரித்து இருப்பானாய்-
அவ்வழகு தன்னைப் பிறருக்கு என்று இருக்கையாலே உத்தமனாய் இருக்கிறவனுக்கு என்று அனுசந்தித்து-
அவ்வனுசந்தானமே நீராக வளர்ந்த என் முலைகள் –

மானிடர்வர்க்கு என்று பேச்சுப் படில் வாழகில்லேன் கண்டாய்-
நானும் அறியாது இருக்க –
அவனும் அறியாது இருக்க –
மனுஷ்யம் மாத்ரமாய் இருப்பாருக்கு என்று நாட்டிலே இங்கனே ஒரு சப்தம்

பரிமாறும் ஆகில்-
அது என் காதில் விழா விடிலும் – எனக்கு சத்தை இல்லை கிடாய் –
என்கிறாள்
பிறருக்காய் இருக்கும் இருப்பு -சத்த்யா பாதகமாய் இருந்த படி —

உனக்கே நாம் ஆட்செய்வோம் –என்ற உறுதி உள்ள இவளுக்கு –
ராவணன் மாயா சிரசைக் காட்டின போது இதர ஸ்திரீகளோ பாதி தரித்து இருந்ததுக்கு
கருத்து என் -என்று ஜீயரைக் கேட்க –
இவளுடைய சத்தைக்கு ஹேது பெருமாள் சத்தை யாய்த்து –
அதற்கு தைவம் அறிய ஒரு குறை இல்லாமையாலே தரித்து இருந்தாள்-
இவள் சத்தைக்கு ஹேது பிரதிபத்தி அபிரதிபத்திகள் இல்லை
அத்தலையில் சத்தை யாய்த்து -என்று அருளி செய்வர் –

மன்மதனே –
வயிற்றில் பிறந்த உன் காலிலே விழ வேண்டும் படி யன்றோ என் ஆற்றாமை –

——————————————————————–

மச்சித்தா மத்கத பிராணா போதயந்த பரஸ்பரம் -ஸ்ரீ கீதை -10-9-என்கிறபடியே
சத்வ நிஷ்டர் பகவத் குண அனுபவம் பண்ணி
போதயந்த பரஸ்பரம் பண்ணுகைக்கு சாத்விகரைக் கூடக் கொண்டு இழியுமா போலே –
ரஜோ குண பிரசுரமானவனை ஆஸ்ரியைக்கு
அதிலே தேசிகரைக் கொண்டு இழிகிறாள்-

உருவுடையார் இளையார்கள் நல்லார் ஒத்து வல்லார்களைக் கொண்டு வைகல்
தெருவிடை எதிர் கொண்டு பங்குனி நாள் திருந்தவே நோற்கின்றேன் காம தேவா
கருவுடை முகில் வண்ணன் காயா வண்ணன் கருவிளை போல் வண்ணன் கமல வண்ணத்
திருவுடை முகத்தினில் திருக் கண்களால் திருந்தவே நோக்க எனக்கு அருள் கண்டாய் –6-

காமதேவா–மன்மதனே!
உரு உடையார்–அழகிய வடிவையுடையராயும்
இளையார்கள்–யௌவன பருவமுடையராயும்
நல்லார்–காமதந்திரத்திற் சொன்ன ஆசாரங்களை யுடையராயும்
பங்குனி நாள்–பங்குனி மாதத்துப் பெரிய திருநாளில்
திருந்தவே நோற்கின்றேன்–நல்ல அறிவுடனே (உன்னைக் குறித்து) நோன்பு நோற்கா நின்றேன்’
கரு உடை முகில் வண்ணன்–(நீரைக்) கருவிலே யுடைய மேகம் போன்ற திருநிறமுடையவனும்
காயா வண்ணன்–காயாம் பூப் போன்ற திரு நிறத்தை யுடையவனும்
ஒத்து வல்லார்களை கொண்டு–காம ஸுத்திரத்தில் வல்லமை யுடையவராயுமுள்ளவர்களை முன்னிட்டுக் கொண்டு
வைகல்–நாள்தோறும்
தெருவிடை–நீ வரும் வழியிலே
எதிர் கொண்டு–எதிரே சென்று
கருவிளை போல் வண்ணன்–காக்கணம் பூப் போல் பளபளப்பை யுடையனுமான கண்ண பிரான்
கமலம் வண்ணம் திரு உடை முகத்தினில் திருக் கண்களால்–செந்தாமரை மலரின் நிறம் போன்ற
காந்தியை யுடைய திருமுகமண்டலத்திலுண்டான திருக்கண்களினால்
எனக்கு–என் விஷயத்தில்
திருந்தவே நோக்க–விசேஷ கடாக்ஷம் செய்தருளும்படி
அருள்–நீ கிருபை பண்ண வேணும்.

ஒத்து -காம சாஸ்த்ரத்தில்

உருவுடையார் இளையார்கள் நல்லார் ஒத்து வல்லார்களைக் கொண்டு
வடிவுடையாராய் –
யுவாக்களாய் –
வ்ருத்தவான்களாய்
காம ஸூத்ரம் கண்ணழிவு அற கைவந்து இருப்பாராய்-இருக்கிறவர்களை முன்னாகக் கொண்டு

வைகல் தெருவிடை எதிர் கொண்டு-
நாள் தோறும் அவன் வருகிற வழியிலே எதிர் கொண்டு

பங்குனி நாள் திருந்தவே நோற்கின்றேன் –
பெரிய திரு நாளிலே கலங்காதே தெளிந்து இருந்து –
உன்னை ஆஸ்ரயிக்கும் படி அன்றோ எனக்கு உண்டான த்வரை –

செய்ய வேண்டுவது என் என்னில்
காம தேவா கருவுடை முகில் வண்ணன் காயா வண்ணன் கருவிளை போல் வண்ணன்-
நீர் கொண்டு எழுந்த காள மேகம் போலே இருக்கிற வடிவை யுடையவன்
எல்லாம் பட்டும் பெற வேண்டும் படி அன்றோ அவன் வடிவு படைத்த படி –

நெஞ்சிலே இருள் படுகைக்கு-காயா வண்ணன்
கண்டார் கண்ணுக்கு நேத்து இருக்கைக்கு –கருவிளை போல் வண்ணன்

கமல வண்ணத் திருவுடை முகத்தினில் திருக் கண்களால் திருந்தவே நோக்க எனக்கு அருள் கண்டாய்-
கமலத்தினுடைய நிறம் போலே இருக்கிற காந்தியை யுடைத்தான திரு முகத்தில் உண்டான திருக் கண்களாலே
சோலை பார்ப்பாரைப் போலே பார்க்கை அன்றிக்கே
அவன் விசேஷ கடாஷம் பண்ணும் படியாக அருள் கிடாய்-

சோலை பார்வை -சமுதாயேன பார்வை அன்றிக்கே அவயவங்கள் தோறும் கடாஷித்து அருள வேணும்-
நம் ஆற்றாமைக்காக நோக்கினான் ஆகை அன்றிக்கே
தனது ஆற்றாமை தீரும்படி நோக்கினானாம் படியாய் பண்னுகிடாய்-

———————————————————————-

காயுடை நெல்லொடு கரும்பமைத்துக் கட்டியரிசி யவலமைத்து
வாயுடை மறையவர் மந்திரத்தால் மன்மதனே உன்னை வணங்குகின்றேன்
தேச முன்னளந்தவன் திரிவிக்கிரமன் திருக் கைகளால் என்னைத் தீண்டும் வண்ணம்
சாயுடை வயிறும் என் தட முலையும் தரணியில் தலைப் புகழ் தரக்கிற்றியே –1-7-

பதவுரை

மன்மதனே மன்மதனே!
காய் உடை நெல்லோடு–பசுங்காய் நெல்லும்
கரும்பு–கரும்பும்
அமைத்து–சமைத்து
(அதனோடு கூட)
கட்டி–கருப்புக் கட்டியும்
அரிசி–பச்சரிசியும்
அவல்–அவலும்
(ஆகிய இவற்றையும்)
அமைத்து–சமைத்து
அளந்தவன் -(திருவடிகளால்) அளந்தருளினவனும்
திருவிக்கிரமன்–திருவிக்ரமனென்னும் திருநாமமுடையனுமான கண்ணபிரான்
என்னை–என்னுடைய
சாய் உடை–ஒளியை யுடைய
வயிறும்–வயிற்றையும்
மென் தடம் முலையும்–மென்மையும் பருமையும் பொருந்திய முலைகளையும்
வாய் உடை–நல்ல ஸ்வரத்தையுடையராயும்
மறையவர் -காம சாஸ்திரத்தில் வல்லவர்களாயுமிருப்பவர்களுடைய
மந்திரத்தால்–மந்திரத்தினால்
உன்னை வணங்குகின்றேன்-’-
முன்–மூவுலகும் மாவலியால் அபஹரிக்கப்பட்ட காலத்தில்
தேசம் ஸகல லோகங்களையும்
திருக் கைகளால்- (தனது) திருக்கையினால்
தீண்டும் வண்ணம்–ஸ்பர்சிக்கும்படி பண்ணி
தரணியில்–(இப்) பூமண்டலத்தில்-
தலைப் புகழ்–நிலை நின்ற கீர்த்தியை
தர கிற்றி–(நான்பெறும்படி) தந்தருள வேணும்.

காயுடை நெல் -பசுங்காய் நெல்
வாயுடை -நல்ல ஸ்வரத்தை யுடையவராய்
சாயுடை -ஒளியை யுடைய -அழகை உடைய –
தலைப் புகழ் -நிலை நின்ற புகழ் –

காயுடை நெல்லொடு கரும்பமைத்துக் கட்டியரிசி யவலமைத்து-
ரஜோ குண பிரசுரனாய் இருக்கையாலே அவனுக்கு ஆமவை தேடுகிறாள் யாய்த்து
பால் மாறாத பசுங்காய் நெல்லோடு கூட
கருப்புக் கட்டி -பச்சரிசி -அவள் -இவற்றைச் சமைத்து

வாயுடை மறையவர் மந்திரத்தால் மன்மதனே உன்னை வணங்குகின்றேன்-
நல்ல ஸ்வரத்தை உடையராய் இருக்கிற மறையவர் உண்டு -அதில் தேசிகராய் இருக்குமவர்கள் –
அவர்களுடைய மந்திரத்தாலே –
வயிற்றில் பிறந்தவன் என்று பாராதே -உன்னை ஆஸ்ரயிக்கிறேன்-

தேச முன்னளந்தவன் திரிவிக்கிரமன் திருக் கைகளால் என்னைத் தீண்டும் வண்ணம்-
வரையாதே எல்லாரையும் அடியிலே விஷயீ கரித்தவன் திருக்கையாலே என்னை –

சாயுடை வயிறும் என் தட முலையும் தரணியில் தலைப் புகழ் தரக்கிற்றியே —
ஒளியை உடைத்தான வயிற்றையும்-
அவன் தனக்கும் உண்டு அறுக்க ஒண்ணாத படியான முலையையும்

திருக்கைகளால் தீண்டும் வண்ணம் –
அவன் ஸ்பர்சிக்கும் படி பண்ணி –
லோகத்திலே சால நிற்பது ஒரு புகழ் இறே-அத்தை நாம் பெரும் படி தர வல்லையே
அவன் திருக்கையாலே தீண்டுகையே நிலை நின்ற புகழ் –

——————————————————–

மாசுடை யுடம்போடு தலை யுலறி வாய்ப் புறம் வெளுத்து ஒரு போதும் உண்டு
தேசுடைத் திறலுடைக் காமதேவா நோற்கின்ற நோன்பினைக் குறிக்கொள் கண்டாய்
பேசுவது ஓன்று இங்கு உண்டு எம்பெருமான் பெண்மையைத் தலை யுடைத்தாக்கும் வண்ணம்
கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள் என்னும் இப் பேறு எனக்கு அருள் கண்டாய் –1-8-

பதவுரை

தேச உடை–(பிரிந்தாரைக் கூட்டு கையால் வந்த) புகரை யுடையவனும்
திறல் உடை–மிடுக்கை யுடையவனும்
எம்பெருமான்–எமக்கு ஸ்வாமியுமான
காமதேவா–மன்மதனே!
மாசு உடை–அழுக்குப் படிந்த
உடம்பொடு–உடம்போடே கூட
தலை–தலை மயிரை
உலறி–விரித்துக் கொண்டு
வாய்ப் புறம் வெளுத்து–(தாம்பூல சர்வணமில்லாமையால்) உதடுகள் வெளுப்பாகப் பெற்று
ஒரு போது உண்டு–ஒரு வேளை புஜித்து
(இப்படிப்பட்ட வருத்தத்துடன்)
நோற்கின்ற நோன்பினை–(நான்) நோற்கின்ற நோன்பை
குறிக்கொள்–(நீ எப்பொழுதும்) ஞாபகத்தில் வைக்க வேணும்’
இங்கு–இப்போது
பேசுவது ஒன்று உண்டு–சொல்ல வேண்டுவது ஒன்று உளது
(அதைச் சொல்லுகிறேன் கேள்’)
பெண்மையை–(என்னுடைய) ஸத்தையை
தலை யுடையத் தாக்கும் வண்ணம்–ஜீவித்திருக்கும்படி செய்வதற் குறுப்பாக
கேசவன் நம்பியை கால் பிடிப்பாள் என்னும்–கண்ண பிரானுக்குக் கால் பிடிப்பவன் இவள் என்கிற
இப் பேறு–இப் புருஷார்த்தத்தை
எனக்கு அருள்–எனக்கு அருளவேணும்.
(கண்டாய் – முன்னிலையசை.)

மாசுடை யுடம்போடு தலை யுலறி வாய்ப்புறம் வெளுத்து ஒரு போதும் உண்டு-
ஸ்நானத்தை ஒழிய செல்லாதபடியான உடம்பு மாசு ஏறும்படி பண்ணி
சுரும்பார் குழல் கோதை –9-10-என்னும்படியான
மயிர் முடியை உடையவள் அத்தைப் பேணாதே
போகய த்ரவ்யங்களைக் கொடுத்து –
இன்னம் ஒரு கால் காணலாமோ என்னும் நசையாலே
சத்தை கிடக்க வேண்டும் அளவாய்த்து உஜ்ஜீவிப்பது -ஒரு போதும் உண்டு –

இவ் வழியாலே ஒரு கால் மீளாதே
நோற்கின்ற -நிகழ் கால பிரயோகம் –
இடை விடாமல் நோற்கின்ற நோன்பை குறிக் கொள் கிடாய்

ருணம் பிரவ்ருத்தம் இவ மே-என்று நெஞ்சிலே இது எப்போதும் பட்டுக் கிடக்க வேண்டும் கிடாய் –

தேசுடைத் திறலுடைக் காமதேவா நோற்கின்ற நோன்பினைக் குறிக்கொள் கண்டாய்-
பிரிந்தாரைச் சேர்க்க வல்ல என்கிற பிரசித்தியாலே வந்த புகழையும் –
அவர்கள் விரோதியைப் போக்குகைக்கு ஈடான மிடுக்கையும் உடையவன் அன்றோ நீ –

பேசுவது ஓன்று இங்கு உண்டு எம்பெருமான் –
நான் சொல்வது ஓன்று உண்டு –
எனக்கு ஸ்வாமி யானவனே –

பெண்மையைத் தலை யுடைத்தாக்கும் வண்ணம் கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள் –
என்னும் இப் பேறு எனக்கு அருள் கண்டாய் —
என் சத்தை தலைமை பெருவதொரு பிரகாரம் –
விரோதி நிரசன சீலனாய் –
கல்யாண குணங்களாலே பூர்ணனாய் இருக்கிறவனை
நான் ஸ்வரூப அநுரூபமான பேற்றைப் பெறும்படி பண்ணு கிடாய்

முலையாலே அணைக்க வென்றே தான் ஆசைப் பட்டது –
முதல் அடியே பிடித்து அடிமை செய்யத் தேடுகிறாள் —

முதலில் இருந்து -முதலான திருவடிகளையே அடைந்து
கைங்கர்யம் செய்வதே ஸ்வரூப அநு ரூபமான பரம புருஷார்த்தம் –

———————————————————–

தொழுது முப்போது முன்னடி வணங்கித் தூ மலர் தூயத் தொழுது ஏத்துகின்றேன்
பழுதின்றிப் பார்க்கடல் வண்ணனுக்கே பணி செய்து வாழப் பெறா விடில் நான்
அழுது அழுது அலமந்து அம்மா வழங்க ஆற்றவும் அது வுனக்கு உறைக்கும் கண்டாய்
உழுவது ஓர் எருத்தினை நுகங்கொடுபாய்ந்து ஊட்டமின்றித் துரந்தால் ஒக்குமே—1-9-

பதவுரை

முப்போதும்–(இரண்டு சந்தி, உச்சிப் போது ஒன்று ஆகிய மூன்று காலங்களிலும்
தொழுது வணங்கி–ப்ரணாம பூர்வமாக (உன்னை) ஆச்ரயித்து
உன் அடி–உன் பாதங்களில்
தூ மலர் தூய்–பரிசுத்தமான புஷ்பங்களைப் பணிமாறி
தொழுது–ஸேவித்து-
ஏத்துகின்றேன் நான்–ஸ்தோத்திரம் பண்ணுகின்ற நான்
பார் கடல் வண்ணனுக்கே– பூமியைச் சூழ்ந்த கடல் போன்ற திருநிறத்தை யுடைய கண்ணபிரானுக்கே
பழுது இன்றி–குற்றமொன்றுமில்லாமல்
பணி செய்து–கைங்கரியம் பண்ணி
வாழப் பெறா விடில்–உஜ்ஜீவியா தொழிவேனாகில்
அழுது அழுது–(பின்பு நான்) பல காலும் அழுது
அலமந்து–தடுமாறி
அம்மா வழங்க–‘அம்மா!’ என்று கதறிக் கொண்டு திரிய
வழங்க -சஞ்சரித்து –
அது–அப்படி என்னைத் துடிக்க விடுவது
ஆற்றவும்–மிகவும்
உனக்கு உறைக்கும்–உன் தலை மேல் ஏறும்’ (அன்றியும், என்னை உபேஷிப்பது) வேறாதொழிவதானது
உழுவது ஓர் எருத்தினை–ஏருழுகின்ற ஒரு எருதை
நுகம் கொடு பாய்ந்து–நுகத் தடியால் தள்ளி
ஊட்டம் இன்றி –தீனி யில்லாமல்
துரந்தால் ஒக்கும்–ஒட்டி விடுவதைப் போலாம்

தொழுது முப்போது முன்னடி வணங்கித் தூ மலர் தூயத் தொழுது ஏத்துகின்றேன்-
சத்வ நிஷ்டராய் இருப்பார் சமாராதன காலங்களில் அவகாஹனம் பண்ணி
சமாராதனம் தலைக் கட்டின அநந்தரம்
திருவடிகளிலே விழுந்து –
நான் தொடங்கின சமாராதானம் தலைக் கட்டினேன்-

திரு உள்ளத்துக்கு பாங்கான படியே போது போக்கி அருள வேணும் -என்று
ஸ்தோத்ர ரூபமான வற்றை விண்ணப்பம் செய்யுமா போலே
அவற்றை எல்லாம் இவன் பக்கலிலே செய்கிறாள்

பழுதின்றிப் –
வழு விலா அடிமை செய்ய வேண்டும் நாம் -என்கிறவதில்
ஒரு பழுது இன்றிக்கே –

பார்க்கடல் வண்ணனுக்கே பணி செய்து வாழப் பெறா விடில் நான்-
பார் சூழ்ந்த கடல் போலே இருக்கிற வடிவை உடையவனுக்கே அடிமை செய்து வாழப் பெறாது ஒழியில்

அழுது அழுது அலமந்து அம்மா வழங்க ஆற்றவும் அது வுனக்கு உறைக்கும் கண்டாய்-
நான் அழுது அழுது -தடுமாறி –
இழவோடே சஞ்சரித்து
கால ஷேபம் பண்ணுமது உனக்கு உறைக்கும் கிடாய் –

ஆற்றவும் -மிகவும்

ஆதாய ஸூஹ்ருதம் தஸ்ய சர்வம் கச்சேத ரஷித -யுத்த -18-30-
சரணா கதனை நோக்கா விட்டால்
இவனுடைய பாப பலத்தை அவன் அநு பவித்து
அவனுடைய ஸூஹ்ருத பலம் இவன் பக்கலிலே வருவதாக சொல்லா நின்றது இறே –

அப்படியே உன்னைக் குறித்து நான் பண்ணின ஆஸ்ரயணத்துக்கு பலம் இன்றிக்கே ஒழியுமாகில்
அது உனக்கு பொல்லாதமாம் கிடாய் –
அவன் தான் தன்னை ஆஸ்ரயித்தார்க்கு அங்கக் காரனாய் நின்று இறே அவர்களைச் சேர்ப்பது –
நம்மையும் உம்மையும் சேர்த்தான்
இவன் நல்ல அங்கக் காரனாய் இருந்தான் -என்று அவன் -ருத்ரன் -கொண்டாட-
அவனுடைய திருஷ்டி தோஷத்தால் இறே இவன் அநங்கன் ஆயத்து –

உழுவது ஓர் எருத்தினை நுகங்கொடுபாய்ந்து ஊட்டமின்றித் துரந்தால் ஒக்குமே—
எருத்தைக் கொண்டு தன்  ஜீவனார்த்தமாக கார்யம் கொண்டு –
அனந்தரத்திலே அத்தை ஒன்றாலே தள்ளி
அதுக்கு ஜீவனம் இடாதே துரத்துமா போலே இருப்பது ஓன்று கிடாய்
நான் வருந்தினதுக்கு ஒரு பலம் இன்றிக்கே ஒழியுமாகில் –

————————————————————————

கருப்பு வில் மலர்க்கணைக் காமவேளைக் கழலிணை பணிந்து அங்கு ஓர் கரி அலற
மருப்பினை யொசித்துப் புள் வாய் பிளந்த மணி வண்ணற்கு என்னை வகுத்திடு என்று
பொருப்பன்ன மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர் கோன் விட்டு சித்தன் கோதை
விருப்புடையின் தமிழ் மாலை வல்லார் விண்ணவர் கோன் அடி நண்ணுவரே-1-10-

பதவுரை

கரும்பு வில் மலர்கணைகாமன் வேளை–கரும்பாகிற வில்லையும் புஷ்பங்களாகிற அம்புகளையுமுடைய மன்மதனுடைய
கழல் இணை பணிந்து–இரண்டு பாதங்களையும் வணங்கி
அங்கு ஓர் கரி அலற மருப்பினை ஒசித்து புள்வாய் பிளந்த மணிவண்ணற்கு என்னை வகுத்திடு என்று–
கம்ஸன் மாளிகை வாசலில் (குவாலயாபீடமென்ற) ஒரு யானையானது வீரிடும்படியாக (அதன்) கொம்புகளை முறித்தவனும்
பகாஸுரனுடைய வாயைக் கீண்டெறிந்தவனும், நீலமணி போன்ற நிறத்தானுமான கண்ணபிரானுக்கு என்னை அடிமைப்படுத்தவேணும் என்று
பொருப்பு அன்ன –மலை போன்ற
மாடம்–மாடங்கள்
பொலிந்து தோன்றும்–மிகவும் விளங்கா நிற்கப் பெற்ற
புதுவையர் -ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ளவர்கட்கு
கோன்–ஸ்வாமியான
விட்டு சித்தன்–பெரியாழ்வாருடைய (மகளாகிற-)
கோதை–ஆண்டாள் (அருளிச் செய்த)
விருப்புடை–விருப்பமடியாகப் பிறந்த
இன் தமிழ் மாலை–இனிய தமிழ்மாலை யாகிய இப் பாசுரங்களை
வல்லார்–ஓத வல்லவர்கள்
விண்ணவர் கோன்–நித்ய ஸூரிகளுக்குத் தலைவனான எம்பெருமானுடைய
அடி–திருவடிகளை
நண்ணுவர்–கிட்டப் பெறுவர்

கருப்பு வில் மலர்க்கணைக் காமவேளைக் கழலிணை பணிந்து-
சார்ங்கம் என்னும் வில்லாண்டான் -என்றும்
சரங்கள் ஆண்ட தண் தாமரைக் கண்ணனுக்கு அன்றி என் மனம் தாழ்ந்து நில்லாது -பெரிய திரு -7-3-4-என்றும்
இது எல்லாம் இவனுடைய வில்லையும் அம்பையும் சொல்லி
இவன் காலிலே விழும்படியாய் வந்து விழுந்தது-
இவளுடைய பிராப்ய த்வரை படுத்தும் பாடு இது –

அங்கு ஓர் கரி அலற மருப்பினை யொசித்துப் புள் வாய் பிளந்த மணி வண்ணற்கு என்னை வகுத்திடு என்று-
குவலயா பீடமானது பிளிறி எழும்படியாக அதன் கொம்பை அநாயாசேன முறித்து
பகாசூரனை வாயைக் கிழித்து-
வைத்த கண் மாறாதே கண்டு கொண்டு இருக்க வேண்டும்படியான வடிவு அழகை உடையவனோடே என்னைச் சேர்த்து விடு -என்று
உன் காலில் விழுந்தாவது அவனைப் பெற வேண்டும் படியான வடிவு அழகு –
அநிஷ்ட நிவர்த்தகன் -ப்ராபகன் -மணி வண்ணன் -பிராப்யன்

பொருப்பன்ன மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர் கோன் விட்டு சித்தன் கோதை-
மலைகளைக் கொடு வந்து சேர வைத்தால் போலே இருக்கிற மாடங்கள்
ஸூ சம்ருத்தமாய்க் கொண்டு தோன்றா நின்றுள்ள ஸ்ரீ வில்லி புத்தூரில் உள்ளாருக்கு
நிர்வாஹரான பெரியாழ்வார் திருமகளாருடைய-

விருப்புடையின் தமிழ் மாலை வல்லார் விண்ணவர் கோன் அடி நண்ணுவரே–
விருப்பம் அடியாகப் பிறந்த -பிராப்ய த்வரை விஞ்சி -அருளிச் செய்த இனிய தமிழ் தொடை வல்லார்கள்-
சாத்விக அக்ரேசரான பெரியாழ்வார் வயிற்றிலே பிறந்து வைத்து
பகவல் லாபத்துக்காக மடல் எடுப்பரோபாதி-
காமன் காலில் விழ வேண்டும் படியான இவரைப் போல் அன்றிக்கே –
இப் பிரபந்தம் கற்றார்கள் -சம்சாரத்தை விட்டு நித்ய அநுபவம் பண்ணுகிற

நித்ய ஸூ ரிகளோடே ஒரு கோவையாக –
வானவர்க்காவர் நற்கோவையே -4-2-11–திருவாய் மொழி -அனுபவிக்கப் பெறுவார்கள் –

———————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ நாச்சியார் திரு மொழி -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த தனியன் வியாக்யானம் / ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த அவதாரிகை –

August 31, 2015

திருக்கண்ண மங்கை ஆண்டான் அருளிச் செய்த தனியன் –
ஸ்ரீ நாதமுனிகள் சிஷ்யர் -நாச்சியார் திருமொழி தனியன் –
ஸ்வ வியாபாரத்தை விட்டார் என்று இவர் பெருமை உண்டே –

இதில் ஆண்டாளுடைய ஐஸ்வர்யம் தொடக்கமாக -ஆபிஜாத்ய பர்யந்தமான வைபவம் சொல்லுகிறது-
1-புருஷகாரத் தன்மை –
2-ஐஸ்வர்யம் –
3-சௌந்தர்யம் –
4-எம்பெருமான் உடன் உள்ள ஆநுரூப்யம் –
5-நல் குடிப் பிறப்பு -முதலிய
ஐந்து வைபவம் சொல்லுகிறது-

அல்லி நாள் தாமரை மேல் ஆரணங்கின் இன் துணைவி
மல்லி நாடாண்ட மட மயில் -மெல்லியலாள்
ஆயர் குல வேந்தன் ஆகத்தாள் தென் புதுவை
வேயர் பயந்த விளக்கு-

அல்லி நாள் தாமரை -இதழ்கள் உடைய அப்போது அலர்ந்த தாமரைப் பூவிலே
மேல் ஆரணங்கின் ஆர்-பொருந்தி இரா நின்ற -அணங்கின்-தெய்வப் பெண்ணான பெரிய பிராட்டியாருக்கு-
இன் துணைவி—இஷ்ட சகி  யாகவும்-
மல்லி நாடாண்ட மட மயில் -மல்லி நாட்டை குணத்தாலே ஈடுபடுத்தி ஆளா நின்ற அழகிய மயில் போன்றவளாயும்
மெல்லியலாள்-மென்மைத் தன்மையும் உடையவளுமான ஆண்டாள்
ஆயர் குல வேந்தன் ஆகத்தாள்-இடைக் குலத்துக்கு தலைவனான கண்ணபிரானுடைய திரு மேனியில் பொருத்தம் உடையவளாயும்
தென் புதுவை-அழகிய ஸ்ரீ வில்லி புத்தூரிலே
வேயர் பயந்த விளக்கு-வேயர் குலத்தில் உதித்தவரான பெரிய ஆழ்வாராலே பெறப்பட்ட விளக்கையும் இரா நின்றாள் –

அல்லி நாள் தாமரை மேல் ஆரணங்கின் இன் துணைவி-
தாதுவும் வண்டுவும் உடைய தாமரை நாட்பூவை வாஸஸ் ஸ்தானமாக உடையவளாய்
அப்ராக்ருத ஸ்வ பாவையான பெரிய பிராட்டியாருக்கு இஷ்டமான சகியாய்
மண் மகளும் திருவும் நிழல் போல்வனர் -திரு விருத்தம் -3-
உத்புல்ல பங்கஜ தடாக மிபோபயாநி -ஸ்ரீ ரெங்க ராஜ மிஹ தஷிண சவ்யசீம்நோ –
லஷ்மீம் விஹார ரசிகாமிவ ராஜ ஹம்சீம் –சாயா மிவாப் யுதயி நீ மவ நீஞ்ச தசா –ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் -1-63-
ஏவம் பூத பூமி நீளா நாயக -ஸ்ரீ சரணாகதி கத்யம் -5–என்னக் கடவது இறே-
ஆகையால் சம சகியாய் இருக்கை –
சாஷாத் ஸ்ரீ லஷ்மிக்கு சகியாய்த்து இவள் இருப்பது –
இத்தால் புருஷகார பூதை என்றது ஆயிற்று –

மல்லி நாடாண்ட மட மயில் –
அவளோட்டை சேர்த்தியாலே வந்த செல்வம் –
உடன் அமர் காதல் மகளிர் திருமகள் மண் மகள் ஆயர் மட மகள் –ஆளும் உலகமும் மூன்றே —
துணைவி -மயில் -என்கையாலே -ஒருத்திக்கு சகியுமாய் ஒரு தேசத்துக்கு சிகியுமாய் இருக்குமவள் என்றது ஆயிற்று –
இவள் தான் பேடை மயில் சாயல்  பின்னை -பெரியாழ்வார் -3-3-3–என்று சொல்லப் பட்டாள் அன்றோ
புன மயிலே -திருப்பாவை -11- என்கிற காட்டு மயிலாய் இருக்கை  அன்றிக்கே நாட்டு மயிலாய் இருந்தது –
தன்  குணத்தாலே -நாடாக ஈடுபடும் படி பண்ணி அத்தை ஆளுமவள் என்கை-
மயில் என்றது அளகபாரத்தையும் பெண்மையும் இட்டுப் பேசுகிறது –
இது தான் பராபிமானத்தில் ஒதுங்கி வளரும் இறே –
இவளும் பட்டர்பிரான் அபிமானத்தில் ஒதுங்கி வளருமவள் ஆயத்து-

மெல்லியலாள்-
மிருது ஸ்வ பாவை -என்றபடி –
கொங்கை மேல் குங்குமத்தின் குழம்பு அழியப் புகுந்து ஒரு நாள் தங்குமேல்
என்னாவி தங்கும்-8-7-என்னும்படி-விஸ்லேஷ அசஹமான மார்த்தவம் –

ஆயர் குல வேந்தன் ஆகத்தாள் –
அந்த மார்த்தவம் தான் -பொன்னாகம் புல்குதற்கு -8-4-ஸ்வ பாவத்தாலே பிரிவாற்ற மாட்டாமல்
ஆயர் குல வேந்தனான ஸ்ரீ கிருஷ்ணனுடைய பொன்னாகம் புல்கி இருக்குமவள் ஆயத்து –
கொம்மை முலைகள் இடர் தீர கோவிந்தனை -13-9-தழுவி முழுசி புகுந்து  என்னைச் சுற்றிச் சுழன்று  இருப்பது -13-5-

இனி ஆபிஜாத்யத்தாலும் அநு ரூபை என்கிறது-
தென் புதுவை வேயர் பயந்த விளக்கு-
வேயர் தங்கள் குலத்து உதித்த விட்டு சித்தன் கோதை இறே
வேயர் தங்கள் குலத்து உதித்த விட்டு சித்தன் -5-4-11
வேயர் புகழ் வில்லி புத்தூர் கோன் கோதை 6-11
விட்டு சித்தன் கோதை-14-10-
குல ப்ரதீபையாய் இருக்கை-
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்குக்கு-திருப்பாவை -5- அநு ரூபமாய் இறே வேயர் பயந்த விளக்கும் இருப்பது –
ஸ்ரீ கோப ஜென்மத்தை ஆஸ்தானம் பண்ணின குடி இறே
ஆகையால் குலத்திலும் சத்ருசையாய் இருக்கை

அல்லி நாள் தாமரை மேல் என்று தொடங்கி-இவளுடைய ஐந்து ஆகாரத்தையும் –
1-புருஷகாரத்வம் –
2-ஐஸ்வர்யம் –
3–சௌந்தர்யம் –
4-பிரிவாற்றாமை –
5-நல்  குடிப் பிறப்பு -சொல்லுகையாலே
இவளுடைய சத்ருச வைபவம் அனுசந்திக்கப் பட்ட்டதாயிற்று

முன்னவள் தென் புதுவை தெரிவை திருமகள்
தாரணி என்பவள் நாரணன் தன்  உருவுக்கு இனியவள்
ஊர் அரங்கம் என்னும் சீர்மையவள் பருவப் பணி மொழி
என்னைப் பணிந்து அருளே-என்ற முன்னோர் சந்தை இங்கே அனுசந்திக்கத் தக்கது-

1-தென் புதுவை தெரிவை திருமகள் –
2-தாரணி என்பவள் –
3-நாரணன் தன்  உருவுக்கு இனியவள் –
4-ஊர் அரங்கம் என்னும் சீர்மையவள் –
5-பருவப் பணி மொழி -என்னைப் பணிந்து அருளே-

——————————

ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயர் அருளிச் செய்த தனியன் –

இதில் பகவத் ப்ரத்யா சன்னரைக் குறித்து –
1-தத் போக்யதையை பிரஸ்னம் பண்ணும் படியையும்-
2-தத் தேச வாசத்தால் உண்டான ப்ராசச்யத்தையும்-
3-பர்த்ரு வசீகரண ஹேதுவான வால்லப்யத்தையும்-சொல்லி
ஏவம் வித ஆகாரையான ஆண்டாள் திருவடிகளே அநந்ய கதிகளுக்குத் துணை என்கிறது

கோலச் சுரி சங்கை மாயன் செவ்வாயின் குணம் வினவும்
சீலத்தனள் தென் திரு மல்லி நாடி செழும் குழல் மேல்
மாலைத் தொடை தென்னரங்கர்கீயும் மதிப்புடைய
சோலைக் கிளி அவள் தூய நற் பாதம் துணை நமக்கே-

கோலச் சுரி சங்கை-
அழகையும் சுரியையும் உடைய ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை நோக்கி
மாயன் செவ்வாயின் குணம் வினவும்-
ஸ்ரீ கண்ணபிரானுடைய சிறந்த திரு அதரத்தின்
அதிசயத்தை கேட்க்கும் சீலத்தனள்-தன்மை உடையவளும்-

தென் திரு மல்லி நாடி –
தென் திசையில் உள்ள திரு மல்லி நாட்டுக்குத் தலைவியும்

செழும் குழல் மேல்-
செழுமை தங்கிய தனது திருக் குழல் கற்றையிலே சூட்டப் பெற்ற

மாலைத் தொடை தென்னரங்கர்கீயும் –
மதிப்புடைய
கலம்பக மாலையை அழகிய மணவாளனுக்கு சமர்ப்பிக்கும் படியான
மேன்மை உடையவளும்

சோலைக் கிளி அவள் தூய நற் பாதம் துணை நமக்கே-
சோலையிலே வளரும் கிளி போலே இனிய மொழியையும் உடையவளான ஆண்டாளுடைய-
பாவனமும் போக்யமுமான திருவடி இணைகளே நமக்கு தஞ்சம்

கோலச் சுரி சங்கை-
கோலப் பெரும் சங்கே -7-3- என்றும்
சுரியேலும் சங்கும் -என்றும் –
சுரி சங்கு-திருவாய் -7-3-1- என்றும் சொல்லப் படுகிற
அழகையும் சுரியையும் உடைத்தான சங்கை —

மாயன் செவ்வாயின் குணம் வினவும் சீலத்தனள் –
பூங்கொள் திரு முகத்து மடுத்தூதிய சங்கு -9-9-ஆகையாலே
மது சூதன் வாயமுதம் பன்னாளும் உண்டு -7-5-இறே போருவது-
வெண் சங்கமூதிய வாய் –முதல் திரு -37-
சங்கம் வாய் வைத்தான் -பெரிய திருமொழி -6-7-8-என்னும் படி இறே சங்கு வாய் வைப்பது —
அத்தாலே வாய் விடாத சாதியைக் கேட்கிறாள் –

மாயன் செவ்வாயின் குணம் வினவுகையாவது –
கருப்பூரம் நாறுமோ கமலப் பூ நாறுமோ திருப் பவளச் செவ்வாய் தான்
தித்தித்து இருக்குமோ-7-1-என்னும் படியான குணம் –
பாலொடு நெய் தயிர் ஒண் சாந்தொடு செண்பகமும் பங்கயம் நல்ல கருப்பூரமும் நாறி வரக்
கோல நறும் பவளச் செந்துவர் வாய்-1-5-9- என்று
இறே இவள் திருத் தமப்பனார் அருளிச் செய்தது —

மாயன் -என்றது –
சௌந்தர்ய சீலாதிகளால் ஆச்சர்ய பூதனான ஸ்ரீ கிருஷ்ணன் என்றபடி –
ஆய மாயன் -திருவாய் -4-3-4-
ஆயன் மாயோன் -திருவாய் -9-9-2-என்றார் இறே

வினவுகை யாவது -விருப்புற்று கேட்கை -7-1-
சீலத்தினள் ஆவது -இதுவே ஸ்வ பாவமாய் இருக்கிறவள் -என்கை –
சர்வ கந்த சர்வ ரச -சாந்தோக்யம் -3-14-2-என்னும் வஸ்துவுடன் சர்வ கால அனுபவ
அபேஷை இவளுக்கு ஸ்வ பாவம் என்றபடி-

தென் திரு மல்லி நாடி –
இவளுக்கு இந்த ஸ்வ பாவம் நாட்டு நலத்தாலே வந்தது -கோசல தேசத்தில் உள்ளாருக்கு போலே-
திரு மல்லி நாடு -என்று அதுவே நிரூபகமாம் படியான அதிசயத்தை உடையவள் –

தென் திரு மல்லி நாடி —
தெற்குத் திக்கிலேயாய் –
தர்ச நீயமாய் இருக்கிற -திருமல்லி நாடு-
ஸ்ரீ வில்லி புத்தூரை அடுத்து அணித்தான நாட்டுக்கு திரு மல்லி நாடு என்று இறே திரு நாமம்-

இனி பர்த்ரு வால்லப்யத்தைச் சொல்லுகிறது
செழும் குழல் மேல் மாலைத் தொடை தென்னரங்கர்கீயும் -மதிப்புடைய சோலைக் கிளி -என்று
மாலைத்தொடை -பெரியாழ்வார் கட்டின கலம்பகன் மாலைத் தொடையை
தென்னரங்கர்கீயும் -மதிப்புடைய சோலைக் கிளி —
ராம சீதொப நீதங்களான– ஹேமாம் போஜைங்களை -ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம் —
விரும்பிச் சாத்தி அருளும் அவர்க்கு –

பெரியாழ்வார் கட்டின மாலையை சூடிக் கொடுத்தது வட பெரும் கோயில் உடையானுக்கு அன்றோ –
பெரிய பெருமாளுக்கு அன்றே என்னில் –
ஆராமம் சூழ்ந்த அரங்கம் -சிறிய திருமடல் -70- என்றும்
தலை யரங்கம் -இரண்டாம் திருவந்தாதி -70-என்று
எல்லா திருப்பதிகளையும் அவயவமாக உடைத்தாய்-
அகில திவ்ய தேச பிரதானமாய் இருக்கையாலும்-
திரு மணம் புணர்ந்ததும் அழகிய மணவாளப் பெருமாளை யாகையாலும் –
இனித் தான் கண் வளர்ந்து அருளுகிற ஆகாரமும் ஒத்து போக ஸ்தானமாய் இருக்கையாலும்-
தர்மையைக்யத்தாலும் -அப்படிச் சொல்லலாம் இறே

ஸ்ரீ மாலா காரர் மகள் ஆகையாலே —
அரங்க மாலை -திருக் குறும் தாண்டகம் -12-என்னும் படியான மாலுக்கு மாலையை வழங்கினாள் –
இப்போதும் இது நம் பெருமாள் ஆறாம் திருநாள் ஆனை ஏற்றத்தின் அன்று அனுபவ சித்தம் –
அங்கு அவனோடும் உடன் சென்று அங்கு ஆனை மேல் -6-10- என்று இறே இவள் அபேஷை இருப்பது –

தென்னரங்கர்கீயும் -மதிப்புடைமை யாவது –
பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காதும் சோராமே யாள்கின்ற எம்பெருமானான-
செங்கோல் உடைய திருவரங்கச் செல்வனார்க்கு -11-3-சூடிக் கொடுத்த மதிப்பு இறே –

ஸ்வோச்சிஷ்டாயாம் ஸ்ரஜி நிகளிதம் யா பலாத்க்ருத்ய புங்க்தே-என்று
சூடிக் களைந்தன சூடும் இத் தொண்டர்-திருப் பல்லாண்டு -9- படி யாய்த்து –
அண்டர்கோன் அணி யரங்கன் –அமலனாதி -10—படியும் —
அவன் தான் பரம பிரணயி இறே

மதிப்புடைய சோலைக் கிளி –
பெரியாழ்வார் திருமகள் -என்னும் மதிப்பை யுடைய கிளி –
கிளி மொழியாள்– திருவாய் -4-8-5- இறே
எல்லே இளம் கிளியே –திருப்பாவை -15-என்றாளே இவளும்
பெரியாழ்வார் -தேனும் பாலும் அமுதுமாய திருமால் திரு நாமத்தாலே வளர்த்து எடுத்த கிளி -பெரிய திரு -6-10-6-
மெய்ம்மை பெரு வார்த்தை -11-10-கற்ப்பித்தாரும் இவரே
திருமாலைப் பாடக் கேட்டு வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக வென்று மடக் கிளியை
கை கூப்பி-வணங்கினாளே-திரு நெடும் தாண்டகம் -14–என்று
வளர்த்து எடுப்பார்க்கும் காலிலே வணங்க வேண்டும்படியான கிளி –
வியாசம் வசிஷ்ட நப்தாரம் சக்தே பௌத்ரமகல்மஷம்-பராசராத்மஜம் வந்தே ஸூக தாதம் தபோ நிதிம் -என்னுமா போலே-
பெற்றோர்களை விஞ்சி யாய்த்து ஸூகம் இருப்பது

சோலைக் கிளி –
ஆழ்வார் ஆஸ்ரமத்தில் கிளி —
இத்தால் பராபிமாநத்தே வளர்ந்தமை தோற்றுகிறது-

அவள் தூய நற் பாதம் -துணை நமக்கே-
ஏவம் வித ஆகாரையாய் -பாவநத்வ போக்யத்வங்களை யுடையவள் -திருவடிகள் –
அல்லியம்பூ மலர்க் கோதாய் அடி பணிந்தேன் -பெரியாழ்வார் -3-10-2- என்றும் –
செம்மை யுடைய திருக் கையால் தாள் பற்றி -6-8-என்றும்-
சேஷ சேஷிகள் இருவருக்கும் தாம் தாம் ஸ்வரூப அநு குணமாக-சேஷைத்வ பிரணியித்வ -குணமாக
இழியும் துறையை இருக்கும் திருவடிகள் –
அது தான் பாடகம் சேர் மெல்லடி -பெரிய திரு -4-8-7-யாய் இருக்கும்
பாடகக் காலிணை தானே பரம பதம் தருமே –

திருவடிகள் –
1-இங்கு இருக்கும் நாளைக்குத் துணையாய் –
2-மேலே வழித் துணையாய்
3-அதுக்கு மேலே கைங்கர்யத்துக்கு துணையாய் –
4-கைங்கர்ய வர்த்தகமுமாய் இருக்கும்-

பண்டு ஏனமாய் உலகை யன்று இடந்த பண்பாளா -என்று நின்று தொண்டானேன் திருவடியே
துணை அல்லால் துணை இலேன்-பெரிய திரு -7-4-6-
ஞாலப் பொன் மாது -திரு விருத்தம் -40-இறே
ஆகையால் கோலத் திருவடிகளோ பாதி ஞாலப் பொன் மாதான
ஆண்டாள் திருவடிகளும் உத்தேச்யம் என்றது ஆயத்து –

——————————————————————

ஸ்ரீ மத்  கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூ நவே
யத் கடாஷைக லஷ்யாணாம் ஸூ லப ஸ்ரீ தரஸ் சதா

அவதாரிகை –

பிராப்ய ஸ்வீகாரமும் பண்ணி –
உன் தன்னைப் பிறவி பெரும்தனைப் புண்ணியம் யாமுடையோம் -28-என்று உபாயமாக எம்பெருமானைப் பற்றி
ப்ராப்யத்தையும் -நிஷ்கர்ஷித்தாராய் -நின்றார் கீழ் –

உனக்கே நாம் ஆட செய்வோம் -29- என்று அவன் உகப்புக்காக கைங்கர்யம் –
இப்பிரதி பத்தி இறே இத்தலைக்கு வேண்டுவது-
இத்தலையிலே கண்ணழிவு அற்று இருந்தது –
அவன் பக்கலிலே அபி நிவேசம் கரை புரண்டு இருந்தது

அநந்தரம்-
அபி நிவேச அநு ரூபமாக பெற்றுக் கொடு நிற்கக் கண்டது இல்லை
இத்தலையிலே ஒரு ஹேதுவை கொள்ளில் இறே -அது பக்வமாய் பெறுகிறோம் என்று ஆறி இருக்கலாவது-
அதுக்கு அங்கன் ஓன்று இன்றிக்கே இருந்தது –

இனி
பரிக்ரஹித்த சாதனம் –பலத்தோடு வ்யபிசாரம் இல்லாத படி சித்தமாய் இருந்தது –
இங்கனே இருக்கச் செய்தே பலிக்கக் காணாமையாலே யுக்த  அயுக்த நிரூபண ஷமம் அல்லாதபடி கலங்கி –
அபிமத விஷயத்தை பிரிந்தார் திரியட்டும் கூடுகைக்கு
மடல் எடுக்குமா போலே

பிரிந்தாரைக் கூட்டிப் போருகையே- ஸ்வ பாவமாக உடையான் ஒருவன் என்னும் இதுவே பற்றாசாக
காம சமாஸ்ரயணம் பண்ணிப் பெறுகையிலே உபக்ரமிக்கிறாள் –

பெருமாளை அல்லது அறியாத திரு அயோத்யையில் உள்ளார் அவருக்கு நன்மையை எண்ணி
ஸ்த்ரியோ வ்ருத்தாஸ் தருண் யஸ்ய சாயம் ப்ராதா சமாஹிதா -சர்வான் தேவான் நமஸ்யந்தி-
ராமஸ்யார்த்தே யசஸ் விந -அயோத்யா -2-52–என்று
தேவதைகள் காலிலே விழுந்தார்கள் இறே

இவ் வஸ்துவை தன்னை -பாவோ நான்யத்ர கச்சதி பர தசையிலும் வேண்டேன் என்ற திருவடி-
நமோஸ்ஸ்து வாஸஸ் பதயே -சுந்த -32-14-என்றான் இறே

கீழ் நாம் செய்து நின்ற நிலை இது -தவிர்ந்தது இது -என்று அறியாதபடி கலங்கினார் உடைய
வியாபாரம் இருக்கும் படி இறே இது-

யயௌ ச காசித் ப்ரேமாந்தா தத் பார்ஸ்வம் விலம்பிதம்-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-3-19–என்கிற
பிரேமத்தால் வந்த மருட்சி படுத்துகிற பாடு இறே இது —

ரஜோ ராகாத்மகம் வித்தி த்ருஷ்ணா சங்க சமுத்பவம் -ஸ்ரீ கீதை -14-7-என்கிறபடியே
சத்வ நிஷ்டரான சாத்விகரோடே சேர்ந்து பகவத் சமாஸ்ரயணம் பண்ணக் கடவதாய் இருக்க
சாத்விக அக்ரேசரான பெரியாழ்வார் வயிற்றிலே பிறந்தவள்
ரஜோ குண பிரசுரரான தேவதைகள் காலிலே விழும்படி என்-என்னில் –
அநபாயிநியான பிராட்டி-தத் தஸ்ய சத்ருசம் பவேத் – பெருமாள் அளவில் உண்டான நித்ய சம்ச்லேஷ அர்த்தமாக
சர்வான் தேவான் நமஸ் யந்தி -என்று -எல்லா தேவதைகள் காலில் விழுந்தால் போலேயும்-

இவளுடைய திருத் தமப்பனாரான நம்மாழ்வார் அஞ்சு குடிக்கு ஒரு சந்ததி -உபதேசரத்ன மாலை -24–அபிமான புத்ரி தானே –
தெய்வங்காள் -என் செய்கேன் ஓர் இரவு ஏழு ஊழியாய் மெய் வந்து நின்று எனதாவி மெலிவிக்கும்-
கை வந்த சக்கரத்து என் கண்ணனும் வாரானால் தைவந்த தண் தென்றல் வெஞ்சுடரில் தான் அடுமே -5-4-8- என்று
தேவதைகளை முன்னிட்டால் போலேயும் –
இவளும் அயர்த்துக் கலங்கின படி –

இப்படிப் பட்ட கலக்கத்தாலே பிரிந்தாரைக் கூட்டும் என்னும் இதுவே கொண்டு காம சமாஸ்ரயணம் பண்ணுகிறாள்-
தன்  உடலை அழிய மாறி நின்று இறே இவன் தான் பிரிந்தாரைச் சேர்ப்பது-
இது தான் இவளுடைய ப்ராப்ய த்வரை இருக்கிற படி –

அதாவது பெரியாழ்வார் ப்ராப்ய ருசியாலே ஒரு கருமுகை மொட்டாகிலும் வட பெரும் கோயில் உடையானுடைய திருக் குழலிலே
வெடிக்க வேணும் என்று கருமுகையை ஸூஸ்ருஷையா நிற்பர் –
மத்த நன் நறு மலர் முருக்க மலர் கொண்டு -1-3-இவளுடைய பிராப்ய த்வரை இருக்கும் படி –
காமன் காலிலே ஒரு மத்த மலராகிலும் முருக்கம் மொட்டாகிலும் வெடிக்க வேணும் என்று
மத மத்தம் முருக்கு இவற்றை ஸூஸ்ரூஷியா நிற்கும் –
கடகர் உகந்ததே தேடி இட வேணும் இறே

தேசிகன் -பரமத பங்கம்–21 அத்யாயம் – -ரஹஸ்ய கிரந்தம்
சிருங்கார சமாதி அனுகுண கிருஷ்ண ரூபாந்தர விஷயம்
மன்மத-மதன கோபாலன் உபாசனை என்கிறார் –

பாவோ நாந் யத்ர என்ற திருவடியும் நமோஸ்து -ருத்ராதி -யமாதி அனைத்து தேவர்களையும் –
அபிமத சீதா தேவி தரிசனத்துக்கு
இந்த ஸ்லோகம் -காணாமல் போனவற்றைக் கிடைக்கச் செய்யும் ஸ்லோகம்

————————————————————————–

ஸ்ரீ கோயில்  கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர்  திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீபெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ நாச்சியார் திரு மொழி – பதினான்காவது திரு மொழி – – ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை -ஸ்ரீ உ. வே. P.B.A.. ஸ்வாமிகள்–

September 10, 2014

பிரவேசம் –

தையொரு திங்களும் என்று தொடங்கி
கீழ்த் திரு மொழி அளவும்
ஆண்டாள் பட்ட கிலேசம் எல்லாம் தீரும்படி
கண்ண பிரான் வந்து சேவை தந்து அருளின படியை
கூறுவது ஆய்த்து ‘இந்த திருமொழி –

நம் ஆழ்வார் –என் அவா அறச் சூழ்ந்தாயே -என்னும்படியாக பெற்ற பேற்றை
ஆண்டாளும் பெற்றாளாய்
அப்பேற்றை நேராகப் பேசாதே
கண்ண பிரானைக் கண்டதுண்டோ -என்று கேட்பாரும்
ஒ நன்றாக கண்டது உண்டு -என்று விடை அளிப்பாருமாக
இத்தகைய அந்யோபதேச பிரக்ரியையிலே
அமைத்து அருளிச் செய்கிறாள் –
இத் திரு மொழியிலே-

ஈற்றுப் பாட்டு ஒழிந்த ஒன்பது பாட்டிலும்
முன்னடிகள் -கண்டீரே -என்ற முடிவினால் வந்த வினாவாகவும்
பின்னடிகள்
விருந்தாவனத்தே கண்டோமே -என்ற முடிவினால் வந்த விடையாகவும் நிகழும் –
ஒரு வ்யக்தியாகிய ஆண்டாள் தானே
அநேக வ்யக்திகளின் அவஸ்தையை ஏக காலத்திலே
அடையுமாறு பொருந்துமோ என்ன

எம்பெருமானது அருளின் மிகுதியாலே
ஞானத்தில் தடையற்றால் பொருந்தாதது ஒன்றும் இல்லை –

இவளுடைய திருத் தகப்பனார் பெரியாழ்வார் தமது திவ்ய பிரபந்தத்தில்
என்னாதான் தேவிக்கு -திருமொழியில்
இரண்டு ஆயர் மங்கையின் அவஸ்தையை அடைந்து
ஒருத்தி கிருஷ்ணாவதார வ்ருத்தாந்தத்தை பாடுவதாகவும்
ஒருத்தி ராமாவதார வ்ருத்தாந்தத்தை பாடுவதாகவும்
கொண்டு பரஸ்பரம் எதிரியாய் நின்று சொல்லி
உபய அவதார குண சேஷ்டிதங்களையும் பேசி அனுபவித்தால் போலேயும்

திரு மங்கை ஆழ்வார் பெரிய திருமொழியில்
மானமரும் மென்னோக்கி -இரண்டு பிராட்டிமார் தசையிலே

ஏக காலத்திலே பெற்று பேசினால் போலேயும்
இவளும் பேசுகிறாள் -என்கை

பரமபதத்தில் நித்ய முக்தர்கள் ஏக காலத்தில் பல சரீரங்களை
பர்ஹரிப்பதாக உபநிஷத்கள் கூறுமே
அது பொருந்துவது எம்பெருமான் அருளால் இறே
அப்படியே இங்கும் கொள்ளலாம் என்று பட்டர் அருளிச் செய்யும் படி –

————————————————————————————————

பட்டி மேய்ந்தோர் காரேறு பலதேவற்கோர் கீழ்க் கன்றாய்
இட்டீறிட்டு விளையாடி இங்கே போதக் கண்டீரே
இட்டமான பசுக்களை யினிது மறித்து நீரூட்டி
விட்டுக் கொண்டு விளையாட விருந்தாவனத்தே கண்டோமே –14-1-

பதவுரை

ஓர் கார் ஏறு–(கண்ண பிரானென்கிற) கறுத்த காளை யொன்று
பட்டி மேய்ந்து–காவலில்லாமல் யதேச்சமாய்த் திரிந்து கொண்டும்
பல தேவற்கு–பல ராமனுக்கு
ஓர் கீழ் கன்று ஆய்–ஒப்பற்ற தம்பியாய்
இட்டீறிட்டு–ஸந்தோஷத்துக்குப் போக்கு வீடாகப் பலவகையான கோலா ஹலங்களைப் பண்ணி
விளையாடி–விளையாடிக் கொண்டு
இங்கே போத–இப்படி வர
கண்டீரே–பார்த்தீர்களோ?
இட்டம் ஆன–(தனக்கு) இஷ்டமான
பசுக்களை–பசுக்களை
இனிது–த்ருப்தியாக
மறித்து–மடக்கி மேயத்து
நீர் ஊட்டி–தண்ணீர் குடிப்பித்து
விட்டுக் கொண்டு–(இப்படியாக) அவற்றை மேய விட்டுக் கொண்டு
விளையாட–(அப் பெருமான்) விளையாட நிற்க
விருந்தாவனத்தே–ப்ருந்தாவனத்திலே
கண்டோம்–ஸேவித்தோம்.

சிறைக்கூடத்தில் கட்டுண்டு கிடப்பாரைப்போலே
பரமபதத்தில் திருவனந்தாழ்வான் மடியிலும்
ஸேனை முதலியார் பிரமபின் கீழிலும்
பெரிய திருவடி சிறகின் கீழிலும் ஒடுங்கி வர்த்தித்த பெருமான்
இந் நிலத்தே போந்து யதேச்சமாகத் திரிந்து விளையாடா நிற்கக் கண்டதுண்டோ? என்று
கேட்பவர்களின் பாசுரம் முன்னடிகள்.

தனக்கு மிகவும் ப்ரீதி பாத்ரமான பசுக்களைப் புல்லும் தண்ணீருமுள்ள விடங்களிலே கொண்டு போய்
மேய்த்துப் பரமானந்தத்துடனே விளையாடா நிற்குங்கால்
ஸ்ரீப்ருந்தாவனத்திலே காணப் பெற்றோம் என்று விடையளிப்பார் பாசுரம் பின்னடிகள்.

பட்டி மேய்கையாவது –
தடை செய்வாரில்லாதபடி கண்டவிடஙகளிலும் சுற்றுச் சுழன்று மேய்கை.
இப்படி ஸ்வச் சந்த விஹாரம் செய்வதற்காகவே யிறே எம்பெருமான் திருநாட்டை விட்டுத் திருவாய்ப்பாடியில் பிறந்தது.
திருநாட்டிலே இவனுக்குப் பட்டிமேய வொண்ணாதே.
* வானின் வரசாயிருக்க வேணுமே.
அந்தச் சிறையிருப்புக் குறைதீர இங்கே வந்து பட்டி மேய்கிறபடி.

“ஆனை கருப்பந்தோட்டத்தே புக்கால் திரியுமாப் போலே யாய்த்து இவனும் ஊரை முலையடியே திரியும்படி,
பரமபதத்தில் நூல் பிடித்துப் பரிமாறு மதுபோலன்றிக்கே
“வெண்ணெய் களவு போய்த்து, பெண்கள் களவு போய்த்து என்னும்படியாக வாய்த்து
மரியாதைகளை யழித்துக் கொண்டு திரியும் படி“ என்ற வியாக்கியான ஸ்ரீஸூக்திகள் இங்கே அநுஸந்திக்கத்தக்கன.

இவ்விடத்தில் காரேறு என்கையாலே,
பரமபதத்திலே உடம்பு வெளுத்திருக்கும் போலும்.
இஷ்டப்படி பரிமாறலாம்படியான இடத்திலிறே உடம்பு தன்னிறம் பெற்றிருக்கும்.
அது உள்ளது இங்கே யாய்த்து.

பலதேவற்கு ஓர் கீழ்க் கன்றாய் –
பட்டி மேயும் கண்ண பிரான் பலராமனுக்கோர் கீழ்க்கன்றாப் இருப்பனோ வென்னில்,
பெண்கள் திறத்திலே நிச்சலும் தீமைகள் செய்து திரியுமவன் பலராமனளவிலே பவ்யனாயிருப்பனாம்,
அபிமத விஷயங்களிலே தன்னைச் சேர விடுகைக்கு அவன் துணைவனாகையாலே
அவன் நினைவின்படியே அவனளவில் அடங்கி வர்த்திருப்பனென்க.

இட்டீறிட்டு என்பதற்கு த்ருப்தி கரமான பொருள் விளங்கவில்லை
பெயரியவாச்சான் பிள்ளை வியாக்கியானத்தில் உள்ளதாவது –
“இட்டீறிட்டு -இச்சேதனன் னுக்தனானால் பகவதனுபவத்தால் வந்த ஹர்ஷத்துக்குப் போக்குவிட்டு “***“
(ஏதத் ஸாம காயந்நாஸதே) என்று ஸாம கானம் பண்ணுமா போலே
அவன்றான் இங்கே வந்து அவதரித்து
இப் பரிமாற்றத்தைப் பெறுகையாலே வந்த ஹர்ஷத்துக்குப் போக்கு விட்டுப் பண்ணும் வியாபாரமிருக்கிறபடி.“
என்றிவ்வளவே உள்ளது.
இவ்விடத்திற்கு அரும்பதவுரையிட்டாரொருவர் – “இட்டீறு – செருக்கால் வந்த வியாபாரம்“ என்றெழுதிவைத்து.
“இட்டீறிடுகை – ஸப்த மிடுகை“ என்றும் எழுதியுள்ளார்
இனி, தெளிவுடையார் பக்கல் தினவடங்கக் கேட்டறிக.

விருந்தாவனம் என்பது –
கண்ணன் அவதரித்த வட மதுரைக்குச் சிறிது தூரத்தில் யமுநா நதிக்கரையிலுள்ள இடம்.
கண்ணன் வளர்ந்த இடமான கோகுலமெனப்படுகிற திருவாய்ப்பாடியிலுள்ள
நந்தகோபர் முதலான ஆயர்கள் அங்குப் பூதனை வந்து இறந்தது, சகடுமாறி வீழ்ந்தது, இரட்டை மருதமரம் முறிந்தது
முதலியவற்றை உற்பாதங்களெனக் கொண்டு அஞ்சி மஹா வனமெனப் படுகிற அவ்விடத்தை விட்டு,
கன்று காலி முதலிய எல்லாப் பொருள்களோடும் ப்ருந்தாவனத்திற் சென்று குடியேறினார்.
நெரிஞ்சிக் காடாய்க் கிடந்த அந்த ப்ருந்தாவனம் ஸ்ரீ கிருஷ்ண பகவான குளிர்ந்த திருவுள்ளத்தோடு அநுக்ரஹிதத்தனால்,
பசுக்கள் முதலானவை வ்ருத்தியடைதற்கு ஏற்ப மிகச்செழிப்புற்றது.
பின்பு அங்கு நெடு நாள் கண்ணன் கன்றுகளையும் பசுக்களையும் மேய்த்துக் கொண்டு
பல திருவிளையாடல்கள் செய்து கொண்டு வளர்ந்தருளினன்.
ப்ருந்தாவனம் என்ற வடசொல் விருந்தாவனமென விகாரப்பட்டது. நெரிஞசிக்காடென்பது பொருள்.

——————————————————————————————-

அனுங்க வென்னைப் பிரிவு செய்து ஆயர்பாடி கவர்ந்துண்ணும்
குணுங்கு நாறிக் குட்டேற்றைக் கோவர்த்தனனைக் கண்டீரே
கணங்களோடு மின் மேகம் கலந்தால் போலே வனமாலை
மினுங்க நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே–14-2-

பதவுரை

அனுங்க–நான் வருந்தும்படியாக
என்னை பிரிவு செய்து–என்னைப் பிரிய விட்டுப் போய்
ஆயர்பாடி–திருவாய்ப் பாடியை
கவர்ந்து–ஆக்ரமித்து
உண்ணும்– அநுபவிக்கின்றவனாய்
மின் மேகம்–மின்னலும் மேகமும்
கலந்தால் போல்–ஒன்றோடொன்று சேர்ந்தாற்போலே
வனமாலை மினுங்க நின்று–(கறுத்த திருமேனியிலே மின்னல் போன்ற) வனமாலை திகழப் பெற்று
குணுங்கு நாளி–வெண்ணெய் மொச்ச நாள்ளம் நாறுமவனாய்
குட்டேற்றை–இளைய ரிஷபம் போன்றவனான
கோவர்த்தனனை–கண்ண பிரானை கண்டீரே?
கணங்களோடு–(தோழன்மாருடைய) கூட்டங்களோடு கூட
விளையாட–விளையாடா நிற்க (விருந்தாவனத்தே கண்டோம்)

நான் மிகவும் தளர்ச்சி யடையும்படி என்னைப் பிரிந்து போய்த்
திருவாய்ப்பாடி முழுதையுங் கொள்ளை கொண்டு திரியுமவனாய்,
* வெண்ணெ யளைந்த குணுங்கு நாற்றம் கமழுமவனான கோபாலகிருஷ்ணனைக் கண்டதுண்டோ? என்று
கேட்பார் பாசுரம் -முன்னடிகள்.
மின்னலும் மேகமும் சேர்ந்தாற்போலே, ஸ்யாம்மான திருமேனிக்குப் பரபாகமாய் உஜ்ஜவலமான வனமாலை
அசையை அசையத் * தன்னோராயிரம் பிள்ளைகளோடு விளையாட நிற்க
விருந்தாவனத்தே கண்டோமென்று விடையளிப்பார் பாசுரம் பின்னடிகள்.

ஆயர்பாடி கவர்ந்துண்ணும் –
ஆயர்பாடி யென்றது இடவாகு பெயராய்,
திருவாய்ப்பாடியிலுள்ள பெண்களையும் தயிர் நெய்பால் முதலிய போக்ய பதார்த்தங்களையும் குறிக்கும்
குணுங்கு நாற்றமாவது – மொச்ச நாள்ளம். இடைச் சாதியர்க்கு இளயல்வான நாற்றம்.
குட்டேறு – இளைய வ்ருஷபம்
கோவர்த்தனன் – பசுக்களை ஒன்று நூறாக வளர்க்குமவன்.

கணங்களோடு – வடசொல் – கூட்டமென்று பொருள்படும்.
இங்கே, தோழன்மார் கூட்டமெனக் கொள்க.
* தன்னேராயிரம் பிள்ளைகளோடு தளர்நடையிட்டு வருவானிறே கண்ணபிரான்.

மின் மேகம் – உம்மைத் தொகை
மின்னலும் மேகமும் என்றவாறு.

வனமாலை மினுங்க நின்று
கறுத்த -ச்யாமமான- திருமேனியிலே -பரபாகமாய்
உஜ்ஜ்வலமான
மின்னல் போன்ற வனமாலை திகழ -அசைய அசைய –

விளையாட விருந்தாவனத்தே கண்டோமே –
விளையாடா நிற்க விருந்தாவனத்தே கண்டோமே-

—————————————————————————————————

மாலாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை
ஏலாப் பொய்கள் உரைப்பானை இங்கே போதக் கண்டீரே
மேலால் பரந்த வெயில் காப்பான் வினதை சிறுவன் சிறகு என்னும்
மேலாப்பின் கீழ் வருவானை விருந்தாவனத்தே கண்டோமே–14-3-

பதவுரை

மால் ஆய் பிறந்த நம்பியை–பெண்கள் பக்கலுண்டான) வ்யாமோஹமே ஒரு வடிவாய்க் கொண்டு பிறந்ததென்ன லாம்படியான பெருமானாய்
மாலே செய்யும் மணாளனை–வ்யாமோஹத்தையே செய்கிற மணவாளப் பிள்ளையாய்
ஏலா பொய்கள் உரைப்பானை–பொருந்தாத பொய்களைச் சொல்லுமவனான கண்ண பிரானை
இங்கே போதக் கண்டீரே?
மேலால்–மேலே
பரந்த–பரவின
வெயில்–வெய்யிலே
காப்பான்–(திருமேனியில் படாமல்) தடுப்பதற்காக
வினதை சிறுவன் சிறகு என்னும் மேலாப்பின்கீழ் வருவானை–கருடனுடைய சிறகாகிற விதானத்தின் கீழ்
எழுந்தருளா நின்ற அப் பெருமானை (விருந்தாவனத்தே கண்டோம்.)

பெண்கள் திறந்திலேயுள்ள வ்யாமோஹமே ஒரு வடிவுகொண்டது என்னலாம்படி.
வ்யாமோஹபிண்டமாயிருப்பவனும், ஸகலகுணங்களாலும் பரிபூர்ணனும், எல்லார்க்கும் ஆசைப்படத் தகுந்தவனும்,
அஸம்பத்தங்களான பொய்களைக் கூசாது கூறுமவனுமான கண்ணபிரான்
இங்கே எழுந்தருளக் கண்ட துண்டோ? என்று கேட்பார் பாசுரம் – முன்னடிகள்.

மேலே வெய்யில்படாதபடி பெரிய திருவடி தன் சிறகைவிரித்து நிழல்செய்ய, அதாகிற மேற்கட்டியின் கீழ்
விருந்தாவனத்திலே எழுந்தருளக் கண்டோமென்று விடையளிப்பார் பாசுரம் – பின்னடிகள்.

ஏலாப் பொய்களுரைப்பானை – “ஒற்று மஞ்சளும் மாளிகைச் சாந்துமாய் வந்தால் ‘இதெல்லாம் எங்கு நின்றும் பெற்றாய்?‘
என்று கேட்டால் மற்றொன்றுண்டோ? நான் புறம்பு அறிவேனோ? என்னும்.“ என்ற வியாக்கியான ஸ்ரீஸூக்தியின் அழகை நோக்குமின்.
(கஸ் த்வம் பால! நுஜ கமிஹ தே மந்மந்திராசங்கயா, யுக்தம் தத் நவநீதபாண்டவிவரே ஹஸ்தம் கிமர்த்தம் ந்யதா?
மாத கஞ்சந வத்ஸகம் ம்ருகயிதும், மகா விஷாதம் க்ஷணாதியேவம் வநவல்லவீநிகித க்ருஷணஸ் ஸ புஷ்ணாதுனந)
என்கிற ச்லோகத்தை இங்கே பரக்க உபந்யஸித்தருள்வர் அழகிய மணவாளச்சீயர்.

இதன் கருத்து – ஒருநாள் கண்ணபிரான் பிறர்மனையில் புகுந்து வெண்ணெய்த்தாழியில் கையிட்டவளவில்
அம்மனையுடையாள் சடக்கெனவந்து பிடித்துக்கொண்டு “பயலே! நீ ஆர்? என்ன, ‘நான் பலராமன் தம்பி‘ என்ன,
‘இங்கு எதுக்கு வந்தாய்‘? என்ன, “ என் அகம் என்று மயங்கிவந்துவிட்டேன்“ என்ன?
“அது சரிதான், வெண்ணெய்தாழியில் கையிட்டாயே அஃது ஏன்? என்ன ‘அம்மா! ஒரு கன்றுக்குட்டி கை கழிந்து போயிற்கு,
அதைத் தேடுவதற்காக வெண்ணெய்க்குடத்திற் கையிட்டுத் துழாவிப் பார்த்தேன்“ என்ன,
இதுகேட்ட அவ்விடைச்சி ‘தென்னைமரத்திலே புல் பிடுங்க ஏறினேன்“ என்பாரைப் போல இவன்
உத்தரமுரைக்கும் ஸாஹஸமென்னென்று சினந்து தாம்பால்கட்டி அடிக்கப்புக, கண்ணபிரான் அழத்தொடங்க,
அதுகண்ட அவ்விடைச்சி, “இச்செய்தி யசோதையின் காதில் எட்டுமாகில்
“என்றுமென்பிள்ளைக்குத் தீமைகள் செய்வார் அங்ஙனமாவர்களே“ என்று சபிப்பளே“ என்றஞ்சி,
‘கண்ணா! அழேல் அழேல்‘ என்று ஸமாதானப் படுத்திப் போக விட்டாளென்க. இப்படிப்பட்ட ஏலாப் பொயகளுரைத்தல் பல்லாயிரம்.

மேலால் என்றது -மேலே என்றபடி. கண்ணபிரான் வீதியிலே எழுந்தருளும்போது மேலே வெய்யில் படாமைக்காகப்
பெரிய திருவடி தன் சிறகைக் குடையாக விரித்து நிழ்ல் செய்வேன், அது கண்ணபிரானுக்கு மேற்கட்டி பிடித்தாற் போலிக்கும்,
அதன் கீழே அழகாக எழுந்தருள்வனென்க. கருடனுடைய தாய்க்கு விந்தா என்று பெயர்.

மாலாய்ப் பிறந்த நம்பியை –
பெண்கள் பக்கம் உண்டான வ்யாமோஹமே
ஒரு வடிவாய்க் கொண்டு பிறந்த என்னலாம் படியான
பெருமானாய்-
சகல குணங்களாலும் பரி பூர்ணனும்

மாலே செய்யும் மணாளனை –
வ்யாமோஹத்தையே செய்யும் மணவாள பிள்ளையாய் –

ஏலாப் பொய்கள் உரைப்பானை –
பொருந்தாத பொய்கைளைச் சொல்லுமவனான கண்ணபிரானை –
ஒற்று மஞ்சளும் மாளிகைச் சாந்துமாய் வந்தால்
இது எல்லாம் எங்கு நின்றும் பெற்றாய் என்று கேட்டால்
மற்று ஓன்று உண்டோ -என்றும்
நான் புறம்பு அறிவேனோ என்றும் –

கஸ் த்வம் பால பலாநுஜ
கிமிஹ தே மன்மந்திரர் சங்கயா யுக்தம் தத்
நவநீத பாண்ட விவரே ஹஸ்தம் கிமர்த்தம் நயதா
மாதா கஞ்சன வத்சகம் ம்ருகயிதும் மாகா விஷாதம்
ஷணா தித்யேவம் வனவல்லவீ நிகதித கிருஷ்ணஸ் ஸ புஷ்ணாதுந -என்ற-ச்லோஹத்தை
பரக்க உபன்யாசித்து அருளுவர் இங்கே அழகிய மணவாள சீயர்
இங்கே போதக் கண்டீரே –மேலால் பரந்த வெயில் காப்பான் –
மேலே பரவின வெய்யிலை
திரு மேனியிலே படாமல் தடுப்பதற்காக

வினதை சிறுவன் சிறகு என்னும் மேலாப்பின் கீழ் வருவானை
பெரிய திருவடியின் சிறகாகிற விதானத்தின் கீழே
எழுந்து அருளா நின்ற அப் பெருமானை –
மேலாப்பு -மேல் கட்டி விதானம்

விருந்தாவனத்தே கண்டோமே-

—————————————————————————————

காரத்தண் கமலக் கண் என்னும் நெடுங்கயிறு படுத்து என்னை
ஈர்த்துக் கொண்டு விளையாடும் ஈசன் தன்னைக் கண்டீரே
போர்த்த முத்தின் குப்பாயப் புகர் மால் யானைக் கன்றே போல்
வேர்த்து நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே –14-4-

பதவுரை

கார்–காளமேகத்திலே
தண்–குளிர்ந்த
கமலம்–தாமரை பூத்தாற் போன்றுள்ள
கண் என்றும்–திருக் கண்கள் என்கிற
நெடு கயிறு–பெரிய பாசத்திலே
என்னை படுத்தி–என்னை அசப்படுத்தி
ஈர்த்துக் கொண்டு–(தான் போமிடமெங்கும் என்னெஞ்சையும் கூடவே) இழுத்துக் கொண்டு போய்
விளையாடும் ஈசன் தன்னைக் கண்டீரே?
போர்த்த முத்தின் குப்பாயம–போர்வையாகப் போர்த்த முத்துச் சட்டையை யுடையதாய்
புகர்–தேஜஸ்ஸை யுடையதாய்
மால்–பெரிதான
யானை கன்று போல்–யானைக் குட்டி போலே
வேர்த்து நின்று விளையாட–வேர்வையுற்று நின்று விளையாட (விருந்தாவனத்தே கண்டோம்)

மேகத்திலே அழகிய இரண்டு தாமரைப்பூக்கள் பூத்தனவோ? என்னும்படி யமைந்த திருக்கண்களாகிற வலையிலே
என்னை அகப்படுத்தித் தான் போகுமிடமெங்கும் என்னையும் (அதாவது -என் நெஞ்சையும்) இழுத்துக்கொண்டு முன்னடிகள்.

முத்துச் சட்டையிட்டாற்போலே குரு வெயர்ப்பு அரும்பிய புகரை யுடைத்தான யானைக் கன்று போலே
வேர்த்து நின்று விளையாடும்போது விருந்தாவனத்திலே கண்டோமென்பார் பாசுரம் – பின்னடிகள்.

கார் – முகம்போலே, தண் -குளிர்ந்த, என்றும் உரைக்கலாம்.
“குப்பாயமென நின்று காட்சி தருங்கோவர்த்தனமென்னுங் கொற்றக்குடையே“ என்றார் பெரியாழ்வாரும்.
“மெய்ப்பை கஞ்சுளி கஞ்சுகம் வாரணம் குப்பாய மங்கி சட்டையாகும்“ என்பது திவாகரம்.
கண்ணபிரான் யானைக்குட்டி போலவும், அவன் வேர்வை யரும்புகளை அணிந்து நிற்கும் நிலைமை
முத்துச் சட்டை யணிந்திருக்கை போலவும் உவமிக்கப்பட்டுள்ளமை காண்க.

காரத்தண் கமலக் கண் என்னும் –
காளமேகத்திலே
குளிர்ந்த தாமரை பூத்தால் போன்ற திருக்கண்கள் என்கிற
மேகத்திலே அழகிய இரண்டு தாமரைப் பூக்கள் பூத்தனவோ
என்னும் படி அமைத்த

நெடுங்கயிறு படுத்து என்னை-
பெரிய பாசத்தாலே –
என்னை அகப்படுத்தி –
திருக்கண்கள் ஆகிற வலையிலே என்னை அகப்படுத்தி
மேகம் போலே குளிர்ந்த என்றுமாம்

ஈர்த்துக் கொண்டு-
தாம் போம் இடம் எங்கும்
என் நெஞ்சையும் கூடவே இழுத்துக் கொண்டு போய்-

விளையாடும் ஈசன் தன்னைக் கண்டீரே-

போர்த்த முத்தின் குப்பாயப் –
போர்வையாகப் போர்த்த
முத்துச்சட்டையை யுடையதாய் –
குப்பாயம் என நின்று காட்சி தரும் கோவர்த்தனம் எனும் கொற்றக் குடையே –பெரியாழ்வார்
மெய்ப்பை கஞ்சுளி கஞ்சுகம் வாரணம் குப்பாய மங்கி சட்டையாகும் -எனபது திவாகரம் –

புகர் மால் யானைக் கன்றே போல்-
தேஜஸ் சை யுடைத்தான
பெரிதான யானைக் குட்டி போலே –

வேர்த்து நின்று விளையாட-
வேர்வை யுற்று நின்று விளையாட –
குரு வெயர்ப்பு அரும்பி –
வியர்வை அரும்புகள் அணிந்து நிற்கும் நிலைமை
முத்துச் சட்டை அணிந்து இருக்கும் நிலைமை போலே என்றது ஆய்த்து

விருந்தாவனத்தே கண்டோமே-

—————————————————————————————————

மாதவன் என் மணியினை வலையில் பிழைத்த பன்றி போல்
ஏதுமொன்றும் கொளத்தாரா ஈசன் தன்னைக் கண்டீரோ
பீதக வாடை யுடை தாழப் பெருங்கார் மேகக் கன்றே போல்
வீதியார வருவானை விருந்தா வனத்தே கண்டோமே —14-5-

பதவுரை

மாதவன்–ஸ்ரீய பதியாய்
என் மணியினை–எனக்கு நீல ரத்னம் போலே பரம போக்யனாய்
வலையில் பிழைத்த பன்றி போல்–வலையில் நின்றும் தப்பிப் பிழைதத்தொரு பன்றி போலே (செருக்குற்று)
ஏதும் ஒன்றும்–(தன் பக்கலுள்ள) யாதொன்றையும்
கொள தாரா–பிறர் கொள்ளும்படி தாராதவனான (ஒருவர் கைக்கும் எட்டாதவனான) ஈசன் தன்னை கண்டீரே?
பீதகம் ஆடை–திருப் பீதாம்பரமாகிற
உடை–திருப் பரிவட்டமானது
தாழ–தொங்கத் தொங்க விளங்க
பெரு கார் மேகம் கன்று போல் வீதி ஆர வருவானை–பெருத்துக் கறுத்துதொரு மேகக் குட்டி போலே
வீதி ஆர வருவானை–திரு வீதி நிறைய எழுந்தருளும் பெருமானை (விருந்தாவனத்தே கண்டோம்)

திருமகள் கொழுநனாய், எனக்கு நீலமணிபோலே அனுபாவ்யனாய், வலையிலே அகப்பட்டிருந்து தப்பின பன்றி போல்
செருக்கி ஒருவர் கைக்கும் பிடிகொடாதவனான பெருமானைக் கண்டதுண்டோ? உண்டு, திருவரையில்
பீதாம்பரத்தைத் தொங்கத் தொங்க அணிந்துகொண்டு காளமேகக்குட்டியிபோல் திருவீதி நிறைய
எழுந்தருளும்போது விருந்தாவனத்திலே கண்டோம்.

“மாதவனென் மணியினை” என்று ப்ரதீகமெடுத்து -“தன்னுடைய ரஸிசுத்வம் எனக்கு முடிந்தாளலாம்படி பவ்யனாயிருக்கிறவனை” என்று
தாத்பர்ய மருளிச்செய்த பெரியவாச்சான் பிள்ளையின் திருவுள்ளத்தின் ஆழத்தை என் சொல்வோம்!.
“சுவையன் திருவின் மணாளன்“ என்ற திருவாய்மொழியை அடியொற்றி மாதவனென்பதற்கு ரஸிகனென்றே பொருள் கொண்டார்,
ஒரு சிறந்த மணியானது பெருவிலையுடைத்தாயிருப்பினும் துணியின் தலைப்பில் முடிந்தாளலாம்படி கைச் சரக்காயிருக்குமென்பது
திரு வுற்றம்பற்றி என்மணியினை என்பதற்கு “எனக்கு முடிந்தாளலாம்படி பவ்யன்“ எனப்பொருள் கொண்டார்.
இனி ஸமபிவ்யாஹார ஸித்தமான தாத்பர்ய விசேஷத்தைப் பரமபோய்கமாக அருளிச்செய்தார்.

வலையிலன் – ஐந்தாம் வேற்றுமை. என்றைக்கும் வலையில் அகப்படாத தொன்றை வருந்தி வலைப்படுத்தலாம்.
வலைப்பட்டிருந்து தப்பினதை வருந்தியும் வலைப்படுத்தமுடியாது, அப்படித் தப்பின பின்பு அதற்குள்ள செருக்கும்
வாசாமாகோசரமாயிருக்கும். அப்படிப்பட்ட செருக்கு கண்ணபிரானுக்குள்ள தென்பதைக் காட்டுதற்பொருட்டு
“வலையிற் பிழைத்த பன்றிபோல்“ எனப்பட்டதென்க ஏதும் ஒன்றும் – அணுமாத்திரமும்,
கௌ -பிறர் கொள்ளும்படி தாரா – தன்னிடத்திலிருந்து கொடாத -செருக்கு மிக மிக துர்லபத்வம் (கைக்கு எட்டாமை) மிகுகின்றதென்றபடி.
கொள்ள என்பது கொள என்று தொக்கிக் கிடக்கிறது.

வீதியார வருவானை – மேகமானது ஆகாசப் பரப்படங்கலும் தனக்கு இடமாக்கிக்கொண்டு வருமாபோலே கண்ணபிரான்
வீதிப்பரப்பையெல்லாம் தனக்கு இடமாக்கிக்கொண் எழுந்தருள்வனென்க.

“பஸ்சாத் கவாம் கோபஸுதை பரீதோ வேணுஸ்வாநாந்ந்தித விச்வ சேதா, ஸம்பூர்ய வீதீம் ஸவிலாஸமாயந்
கோபலபால குலதைவதம் ந“ என்று ப்ரதிவாதி பயங்கரம் அண்ணரப்பா அருளிச்செய்த ச்லோகம் இங்கே அநுஸந்திக்கத்தக்கது.

மாதவன் –
ஸ்ரீ யபதியாய் –
திருமகள் கொழுநனாய்

என் மணியினை –
எனக்கு நீல ரத்னம் போல் பரம போக்ய்னாய் –
அனுபாவ்யனுமாய் –

மாதவனை -என் மணியினை –
தன்னுடைய ரசிகத்வம்
எனக்கு முடிந்து ஆளலாம் படி
பவ்யனாய் இருக்கிறவனை –
சுவையன் திருவின் மணாளன் –
சமபீவ்யாஹார சித்தமான தாத்பர்ய விசேஷத்தை
பரம போக்யமாக அருளிச் செய்கிறார்

வலையில் பிழைத்த பன்றி போல் –
வலையின் நின்றும் தப்பிப் பிழைத்த தொரு
பன்றி போலே செருக்குற்று –
வலையில் நின்றும் மீண்ட ஒன்றை மீண்டும் எளிதில் வழிப்படுத்த முடியாதே
அதனால் செருக்குற்றுக் கிடக்குமே –

ஏதுமொன்றும் –
தன பக்கல் உள்ள எது ஒன்றையும்
அணு மாதரமும் -ஏதும் -கூட தாரா

கொளத்தாரா –
பிறர் கொள்ளும்படி தாராதவனாக –
ஒருவர் கைக்கும் எட்டாதவனான –
கொள்ள -சுருங்கி- கொள -ஆயிற்று

ஈசன் தன்னைக் கண்டீரோ –

பீதக வாடை யுடை –
திருப் பீதாம்பரம் ஆகிற திருப் பரிவட்டமானது –

தாழப்-
தொங்கத் தொங்க விளங்க

பெருங்கார் மேகக் கன்றே போல் –
பெருத்த கறுத்த தொரு
மேகக் குட்டி போலே
காளமேகக் குட்டி போலே

வீதியார வருவானை –
திரு வீதி நிறைய எழுந்து அருளும் பெருமானை —
மேகமானது ஆகாசப் பரப்பு அடங்கலும் தனக்கு இடமாக்கிக் கொண்டு வருமா போலே

விருந்தா வனத்தே கண்டோமே –

பஸ்சாத் கவாம் கோப ஸூதை பரீதோ வேணு ஸ்வ நாந்தித
விஸ்வ சேதா சம்பூர்ய வீதீம் சவிலா சமாயான் கோபாலபால குலதைவதம் ந-
ஸ்ரீ .உ. வே .பிரதி வாதி பயங்கரம் அண்ணரப்பா அருளிச் செய்த கிருஷ்ண கர்ணாம்ருதம் ஸ்லோகம் –

————————————————————————————————-

தருமம் அறியா குறும்பனைத் தன கைச் சார்ங்கமதுவே போல்
புருவம் வட்ட மழகிய பொருத்த மிலியைக் கண்டீரே
வுருவு கரிதாய் முகம் செய்தாய் உதய பருப் பதத்தின் மேல்
விரியும் கதிரே போல்வானை விருந்தாவனத்தே கண்டோமே –14-6-

பதவுரை

தருமம் அறியா–இரக்கமென்பது அறியாதவனாய்
குறும்பனை–குறும்புகளையே செய்யுமவனாய்
தன் கை சார்ங்கம் அதுவே போல்–தனது திருக்கையிலுள்ள சார்ங்க வில்லைப் போன்ற
புருவ வட்டம்–திருப் புருவ வட்டங்களாலே
அழகிய–அழகு பெற்றவனாய்
பொருத்தம் இலியை–(அவ்விழகை அன்பர்கட்டு அநுபவிக்கக் கொடுத்து) பொருந்தி வாழப் பெறாதவனான பெருமானை
உருது கரிது ஆய்–திருமேனியில் கருமை பெற்றும்
முகம் செய்து ஆய்–திரு முகத்தில் செம்மை பெற்றும் இருப்பதாலே
உதயம் பருப்பதத்தின் மேல் விரியும் கதிர் போல்வானை–உதய பர்வதத்தின் மேலே விரிகின்ற
சூரியன் போல் விளங்கும் அப்பெருமானை (விருந்தாவனத்தே கண்டோமே)

தயையென்கிற தர்மத்தை ஈஷத்தும் அறியாதவனாய், குறும்பு செய்வதையே தொழிலாகக்கொண்டவனாய்,
தன்கையிலுள்ள சார்ங்க வில்போன்று வட்டமாய் அழகியதான திருப்புருவங்களை யுடையவனாய், உதந்தாரோடே
பொருந்தி வாழப் பெறாதவனான பெருமானைக கண்டதுண்டோ? உண்டு, கண்டாருடைய கண்களெல்லாம் குளிரும்படி
இருண்ட வவையுடையனாய், செந்தாமரைபோற் சிவநத திருமுகமண்டலத்தை யுடையவனாய், உதய பர்வதத்தின்மேலே
ஆதித்யன் உதிக்கும் போதுள்ள ப்ரபா விசேஷத்தை யுடையனான கண்ணபிரானை விருந்தாவனத்திலே கண்டோம்.

(தர்மம்) என்றும் வடசொல் தரும்மெனத் திரிந்தது. “ஆந்ரு சம்ஸ்யம் பரோ தரம்“ என்று பிறர் பக்கல் இரக்கமே
பரம தர்மமாகச் சொல்லுகையாலே அப்படிப்பட்ட இரக்கமில்லாதவனென்று ஊடல் தலையெடுத்துச் சொல்லுகிறபடி.

(தன்கைச் சார்ங்கமித்யாதி) கண்ணபிரானுடைய திருப்புருவங்களுக்கு வேறொன்றும் ஒப்பாகமாட்டாது,
அவன் கையிலே வில்லைப் பார்த்தால் “முகத்திலிருக்க வேண்டியது கையிலிருக்கிறதே! இஃது என்ன? என்று
வியக்கும்படி யாகவும், முகத்திலே புருவத்தைக் கண்டால் “கையிலேயன்றோ வில் இருக்க வேண்டுவது,
இஃதென்ன முசத்திலிருக்கிறதே! முகத்திலேயும்வில் இருக்கக் கடவதோ? என்று வியக்கும்படியாகவும் இருக்குமாம்.
இத்தால் – சாரங்கத்துக்கும் புருவத்துக்கும் தார்ரூப்யமல்ல, தாதாத்யம் என்று சொன்னபடி வேறொன்று ஒப்பில்லாதிருக்கும்
உறைப்பைத் தெரிவித்தபடி. வட்டம் (வருத்கம்) என்ற வடசொல் விகாரம்.

(பொருத்தமிலியை) “இவ்வழகுண்டானால் பிரயோஜனம் ஏன்? உகந்தார் பக்கல் ரஸந்தொங்கிலும் தொங்கான்“ என்ற
வியாக்கியான ஸ்ரீஸூக்தியின் போக்யத்தையை அநுபவிக்க.

(உருவு கரிதாய் இத்யாதி) திருவுருவம் உதய பர்வதமாகவும், முகம் ஸூர்யமண்டலமாகவும் ரூபிக்கப்பட்டது.
பர்வதமென்னும் வடசொல் பருப்பதமென்று கிடக்கிறது. “பருப்பதத்துக் கயல் பொறித்த“ என்றாரிறே பெரியாழ்வாரும்.

தருமம் அறியா
இரக்கம் எனபது அறியாதவனாய் –
தயை என்கிற தர்மத்தை
ஈஷத்தும் அறியாதவனாய் –
ஆன்ரு சம்சயம் பரோ தர்ம -இரக்கமே பரம தர்மம் –

குறும்பனைத்-
குறும்புகளையே செய்யுமவனாய் –
குறும்பு செய்வதையே தொழிலாகக் கொண்டவனாய்
தன கைச் சார்ங்கமதுவே போல்-
தனது திருக்கையில் உள்ள
திருச் சார்ங்கம் வில்லை போன்ற

புருவம் வட்ட மழகிய-
திருப் புருவ வட்டங்களாலே
அழகு பெற்றவனாய் –
திருப் புருவங்களுக்கு வேறு ஒன்றும் ஒப்பாக மாட்டாது –
கையில் வில்லைப் பார்த்தால் இது என்ன முகத்தில் இருக்க வேண்டியது கையில் உள்ளதே என்றும்
முகத்திலே புருவத்தைக் கண்டால்
கையில் அன்றோ வில் இருக்க வேண்டுவது
முகத்திலே வில் இருக்கக் கடவதோ -என்று வியக்கும் படி இருக்கும்
இத்தால் –
சார்ங்கத்துக்கும் புருவத்துக்கும் தாத்ரூப்யம் அல்ல-தாதாசாம்யம் -என்று சொன்னபடி
வேறு ஒன்றும் ஒப்பு இல்லா உறைப்பைத் தெரிவித்தபடி

பொருத்த மிலியைக் –
அந்த அழகை அன்பர்களுக்கு அனுபவிக்கக் கொடுத்து
பொருந்தி வாழப் பெறாதவனான-
உகந்தார் உடன் பொருந்தி வாழப் பெறாதவனான
பெருமானை –
இவ் வழகு உண்டானால் பிரயோஜனம் என்
உகந்தார் பக்கல் ரசம் தொங்கிலும் தொங்கான் –

கண்டீரே –

வுருவு கரிதாய் –
கண்டார் உடைய கண்கள் எல்லாம் குளிரும்படி இருண்ட வடிவை –
திரு மேனியிலே கருமை பெற்றும்-

முகம் செய்தாய் –
செந்தாமரை போன்று திரு முகத்திலே செம்மை பெற்றும் இருப்பதாலே –

உதய பருப் பதத்தின் மேல் விரியும் கதிரே போல்வானை –
உதய பர்வத்தின் மேலே விரிகின்ற
சூர்யன் போலே விளங்கும்
அப்பெருமானை –
திரு உருவம் உதய பர்வதமாகவும்
திருமுகம் சூர்ய மண்டலமாகவும்
ரூபிக்கப் பட்டது –

பருப்பதத்து கயல் பொறித்த -என்றார் இறே -பெரியாழ்வாரும்

விருந்தாவனத்தே கண்டோமே-

——————————————————————————————–

பொருத்த முடைய நம்பியைப் புறம் போல் உள்ளும் கரியானை
கருத்தைப் பிழைத்து நின்ற அக்கரு மா முகிலைக் கண்டீரே
அருத்தி தாரா கணங்களால் ஆரப் பெருகு வானம் போல்
விருத்தம் பெரிதாய் வருவானை விருந்தாவனத்தே கண்டோமே–14-7-

பதவுரை

பொருத்தம் உடைய நம்பியை–பொருத்தமுடைய ஸ்வாமியாய்
புறம் போல் உள்ளும் கரியானை–உடம்பு போலே உள்ளமும் கறுத்திரா நின்றவனாய்
கருத்தை பிழைத்து நின்ற–நான் எண்ணும் எண்ணத்தைத் தப்பி நிற்பவனாய்
அக் கரு மா முகிலே–கறுத்துப் பெருத்த முகில் போன்றவனான அக் கண்ணபிரானை கண்டீரே?
அருத்தி–விரும்பப் பெறுகின்ற
தாரா கணங்களால்–நக்ஷத்ர ஸமூஹங்களாலே
ஆர பெருகு–மிகவும் நிறைந்திருந்துள்ள
வானம் போல்–ஆகாசம் போல்
விருத்தம் பெரிது ஆய்–பெருங்கூட்டமாய்
வருவானை–எழுந்தருளா நின்ற அப் பெருமானை

கீழ்ப்பாட்டில் பொருத்தமிலியைக் கண்டீரே என்றுவைத்து இப்பாட்டில் “பொருத்தமுடைய நம்பியை“ என்றது ஏன்? என்னில்,
பத்துடையடியவர்க்கு எளியவனான பெருமானையோ நாம் பொருத்தமிலி என்பது, அப்படிச் சொல்வது தகுதியல்ல.
அவன பொருத்தமுடையவனேயாவன் என்று திருவுள்ளம் பற்றிச் சொல்லுகிறாள். என்பர் சிலர்.
அங்ஙன்ன்றியே “இந்தப்பிள்ளை பரமஸாது“ என்றால்அஃது எதிர்மறை இலக்கணையாய் துஷ்டன் என்று காட்டுமா போலே
இங்கும் பொருத்தமுடைய நம்பியென்றது பொருத்தமில்லாமையே சொல்லிற்றாகக் கொள்க
இதுவே பெரியவாச்சான் பிள்ளை திருவுள்ளம்பற்றின கருத்தாம்.

பொருத்தமிலியென்பது நாட்டில் பொருந்தாரளவில் நிற்கு மன்றன்றோ“ என்பது வியாக்கியான ஸ்ரீஸூக்தி –
பொருத்தமில்லாதவர்கள் உலகிலும் பலபேருண்டு, அவர்களைப் பொருத்தமிலிகள் என்று சொல்லுகிறாப் போலவே
எம்பெருமானையும் பொருத்தமிலி என்று சொல்லிவிட்டால் நாட்டாருடைய பொருத்தமின்மைக்கும் எம்பெருமானுடைய
பொருத்தமின்மைக்கும் வாசி ஏற்படாமல் போகுமென்று அதற்காக விலக்ஷண ப்ரக்ரியையிலே சொல்லுகிறபடி. அதாவது விபரீத லக்ஷணை.

புறம் போலுள்ளும் கரியான் – திருமேனி கறுத்திருந்தாலும் திருவுள்ளம் சுத்தமாயிருக்கலாமே,
அதுவும் அசுத்தமாகவே யிருக்கிற தென்று நர்மோக்தி
அதவா – இதுவும் விபரீதலக்ஷணை, உள்ளும் புறமும் ஒத்திருப்பவன்,
மநஸ்யந்யத் வசஸ்யந்யத் கர்மண்யந்யத்துராத்மநாம் என்கிற கோடியில் சேர்ந்தவனல்லன்,
“மநஸ்யேகம் வசஸ்யேகம் சர்மண்யேகம் மஹாத்மநாம்“ என்கிற கோடியிலு சேர்ந்தவன் என்று மேலெழ் சொல்லுகிறபடியாய்,
விபரீத லக்ஷணையால், உள்ளேயொன்றும் வெளியே ஒன்றுமாயிருப்பவனென்று காட்டுகிறது.

கருத்தைப் பிழைத்து நின்ற – ஸம்ஸ்லேஷித்திருக்குங் காலத்திலே “மாதே! உன்னை நான் விட்டுப்பிரியென், பிரிந்தால்தரியேன்“ என்று
அவன் சொல்ல அதைமெய்தானென்று நம்பியிருக்கிற நம்பிக்கையைப் போக்கடித்தவன் என்றவாறு.
இப்படிச் சொல்லுகிறவன் ஒருகாலும் நம்மைவிட்டுப் பிரியமாட்டான் என்று கொண்ட கருத்தைத் தப்பி, பிரிந்திருப்பவனென்றபடி.

(அருந்த்தித்தாராகணங்களால் இத்யாதி) அருத்தி என்று விருப்பத்திற்கும் விருபபப்படும் பொருளுக்கும் பெயர்.
ரமணீயங்களான தாராகணங்களால் என்றப்படி. இங்ஙனே தமிழர்கள் நிர்வஹிக்கும்படி. பூருவர்களின் வியாக்கியானரீதியோவென்னில்,
வடசொல் அருத்தியெனத்திரிந்து, ப்ராத்திக்கப்படுகின்ற“ என்று பொரு பெற்றுக்கிடக்கிறதாய்,
சேதநர் பிரயோஜநார்த்தமாக நவக்ரஹங்களையும் உபாஸனை பண்ணுகையாலே அதைப் பற்றி அருத்தி என்ற அடைமொழி கொடுக்கப்பட்டதாக.

விருத்தம் – (ப்ருந்தம்) என்னும் வடசொல் விருத்தமெனத்திரிந்து கிடக்கிறது.

பொருத்த முடைய நம்பியைப் –
பொருத்தம் உடைய ஸ்வாமியாய் –
எதிர்மறை இலக்கணையாய் அருளுகிறார் –
பத்துடை அடியவர்க்கு எளியன் பிறர்க்கு அறிய வித்தகன்
அவனா பொருத்தமிலி எனபது -என்று அருள வில்லை
பொருத்தமிலி எனபது நாட்டில் பொருந்தார் அளவில் நிற்கும் அன்று அன்றோ –

புறம் போல் உள்ளும் கரியானை –
உடம்பு போலே உள்ளமும்
கறுத்து இரா நின்றுள்ள –
உள்ளமும் அசுத்தம் என்றது நர்மோக்தி
உள்ளும் ஒருவிதமாகவும் புறமும் வேறு விதமாகவும் இருப்பவன் அல்லன் –
மனச்யேகம் வசச்யேகம் கர்மண் ஏகம் மகாத்மா நாம் -கோடியிலே சேர்ந்தவன் விபரீத லஷணை-

கருத்தைப் பிழைத்து நின்ற-
நான் என்னும் எண்ணத்தை தப்பி நிற்பவனாய் –
சம்ச்லேஷித்து இருக்கும் காலத்தில்
மாதே நான் உன்னை விட்டுப் பிரியேன் -பிரியில் தரியேன் -என்று அவன் சொல்ல
அத்தை நம்பி இருக்கிற நம்பிக்கைப் போக்கடித்தவன் –
பிரிந்து இருக்கிறவன் -என்றபடி

அக்கரு மா முகிலைக் –
கறுத்து பெருத்து
முகில் போன்றவனான
அக் கண்ணபிரானை –

கண்டீரே –

அருத்தி தாரா கணங்களால் –
விரும்பப் பெறுகின்ற
நஷாத்ர சமூஹங்களாலே –
அருத்தி -விருப்பத்துக்கும்
விருப்ப படும் பொருளுக்கும் பெயர்
ரமணீயங்களான தாரா கணங்கள்
பிரார்த்திக்கப் படுகின்ற -என்றுமாம்
சேதனர் பிரயோஜனார்த்தமாக நவகிரஹங்களை உபாசனை
பண்ணுவதால் அருத்தி -அடை மொழி

ஆரப் பெருகு வானம் போல் –
மிகவும் நிறைந்து இருந்துள்ள
ஆகாசம் போலே

விருத்தம் பெரிதாய் வருவானை –
பெரும் கூட்டமாய்
எழுந்து அருளா நின்ற அப்பெருமானை –

விருந்தாவனத்தே கண்டோமே-

————————————————————————————————

வெளிய சங்கு ஓன்று உடையானைப் பீதவாடை யுடையானை
அளி நன்குடை திருமாலை ஆழியானைக் கண்டீரே
களி வண்டும் கலந்தால் போல் கமழ் பூங்குழல்கள் தடந்தோள் மேல்
மிளிர நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே ––14-8-

பதவுரை

வெளிய சங்கு ஒன்று உடையானை–வெளுத்த ஸ்ரீபாஞசயன மொன்றை வுடையனாய்
பீதகம் ஆடை உடையானை–பீதாம்பரத்தை உடையாகக் கொண்டவனாய்
நன்கு அளி உடைய–நன்றாகக் கிருபை யுடையவனாய்
ஆழியானை–திருவாழியாழ்வானை யுடையவனாய்
திருமாலை–ஸ்ரீய, பதியான கண்ணனை
களி வண்டு–(மதுபானத்தாலே) களித்துள்ள வண்டுகளானவை.
எங்கும்–எப் புறத்திலும்
கலந்தால்–பரம்பினாற்போலே
கமழ் பூங்குழல்கள்–பரிமளிக்கின்ற அழகிய திருக் குழல்களானவை
தடதோள்மேல்-பெரிய திருத் தோள்களின் மேலே
மிளிர நின்று விளையாட–(தாழ்ந்து) விளங்க நின்று விளையாட

கடல்போலே கறுத்த திருமேனிக்குப் பரபாகமான வெண்மையையுடைய விலக்ஷணமான ஸ்ரீபாஞ்சந்யத்தை கையிலேயுடையனும்,
பீதாம்பரதரனும், பிராட்டியோட்டைச் சேர்த்யடியாக கருணையுடையனும் திருவாழியாழ்வானை யுடையனுமான
பெருமானைக கண்டதுண்டோ? மதுபானத்தாலே மதித்தவண்டுகள் பரம்பினாற்போல, பரிமளப்ரசுரமாய் அழகான
திருக்குழல்களானவை திருத்தோள்களிலே நிறலைய விளையாடா நிற்க விருந்தாவத்திலே கண்டோம்.

வெளிய – வெள்ளிப் என்பதன் தொகுத்தல். இப்பாட்டுக்கு அழகிய மணவாளச்சீயர் மூலத்தின் மேல் பொருள் அருளிச் செய்யும் போது
‘வெளியசங்கொன்றுடையானை, என்றதன் பக்கத்திலே ஆழியானை என்பதைக்கொண்டு சேர்த்து
(பாடக்ரமாத் அர்த்தக்ரமோ பலீயாந்) என்கிற ந்யாயத்தாலே “வெளிசங்கொன்றுடையானை ஆழியானை” என்று
அந்வயித்துப் பொருள் கொள்ளுதல் நான்று என்றருளிச்செய்து, மேலே வியாக்கியானம் ஸேவிக்குமிடத்து.

“ஆழியானை – ஸ்ரீபாச ஜந்யத்தோடே சொல்லில் கண்ணெச்சிலாமென்று பிரித்து அநுபவிக்கிறாள்“ என்ற ஸ்ரீஸூக்தியைத்
திருச்செவிசாத்தி. “ஐயோ! இந்த ஸ்வாரஸ்யத்தை அறியப்பெற்றிலேனே!
இப்படி அர்த்தமருளிச்செய்ய ஆர்க்குத் தெரியும் என்று நெடும்போது கண்ணுங் கண்ணீருமாயிருந்தருளினார்.

எம்பெருமானுடைய திருக்குழல்கள் “மைவண்ணநறுங்கிகுஞ்சி குழல் பின்தாழ” என்றபடி தோள்களில் அலையா நிற்பதைக்
களி வண்டுகள் பரம்பினதாக உத்ப்ரேக்ஷிக்கிறபடி. “செங்கமலப்பூவில் தேனுண்ணும் வண்டேபோல் திருமேனியாகையாலே வண்டுகள் மொய்க்குமிறே.

வெளிய சங்கு ஓன்று உடையானைப் –
வெளுத்த ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை யுடையனாய் –
கடல் போலே கறுத்த திரு மேனிக்கி பரபாகமாய்

பீதவாடை யுடையானை –
பீதாம்பரத்தை யுடையனாய்க் கொண்டவனாய்

அளி நன்குடை –
நன்றாக கிருபை யுடையானாய் –

திருமாலை ஆழியானைக் –
திரு வாழி ஆழ்வானை உடையனாய்
ஸ்ரீ யபதியான
கண்ணனை –

பாடக் க்ரமாத் அர்த்த க்ரமோ பலீயான்-என்கிற நியாயத்தில்
வெளிய சங்கு ஓன்று உடையானை ஆழியானை -என்று அந்வயித்து-
ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தோடே சொல்லில் கண் எச்சிலாம் என்று பிரித்து அனுபவிக்கிறார்
ஐயோ இந்த ஸ்வா ரச்யத்தை அறியப் பெற்றிலேனே
இப்படி அருளிச் செய்ய ஆர்க்குத் தெரியும்
என்று நெடும் போது கண்ணும் கண்ணநீருமாய்
இருந்து அருளினார் அழகிய மணவாள சீயர்-

கண்டீரே –

களி வண்டு எங்கும் –
மது பானத்தாலே களித்துள்ள
வண்டுகளானவை –
எப்புறத்திலும்

கலந்தால் போல்-
பரம்பினால் போலே –

கமழ் பூங்குழல்கள் -தடந்தோள் மேல்
பரிமளிக்கின்ற அழகிய
திருக் குழல்களானவை-பெரிய
திருத் தோள்களின் மேலே
மை வண்ண நறுங்குஞ்சி குழல் பின் தாழ-என்றபடி
தோள்களில் அலையா நிற்பதை
களி வண்டுகள் பரம்பினதாக உத்ப்ரேஷிக்கிற படி –
செங்கமலப் பூவில் தேனுண்ணும் வண்டே போல் பங்கிகள் -பெரியாழ்வார்
சர்வ கந்த -திரு மேனி யாகையாலே வண்டுகள் மொய்க்கும் இ றே

மிளிர நின்று விளையாட –
தாழ்ந்து விளங்க நின்று
விளையாட –
மிளிர்த்தல் -விளங்குதல் –

விருந்தாவனத்தே கண்டோமே –

———————————————————————————————-

நாட்டைப் படை என்று அயன் முதலா தந்த நளிர் மா மலருந்தி
வீட்டைப் பண்ணி விளையாடும் விமலன் தன்னைக் கண்டீரே
காட்டை நாடித் தேனுகனும் களிறும் புள்ளும் உடன் மடிய
வேட்டை யாடி வருவானை விருந்தாவனத்தே கண்டோமே —14-9-

பதவுரை

நாட்டை படை என்று–உலகங்களை ஸ்ருஷ்டி என்று
அயன் முதலா–பிரமன் முதலான பிரஜாபதிகளை
தந்த–உண்டாக்கின
நளிர் மா மலர் உந்தி வீட்டை பண்ணி–குளிர்ந்த பெரிய மலரை யுடைத்தான திருநாபி யாகிற வீட்டை யுண்டாக்கி
விளையாடும்–இப்படியாக லீலா ரஸம் அநுபவிக்கிற
விமலன் தன்னை–பரம பாவனனான பெருமானை
தேனுகனும்–தேநுகாஸுரனும்
களிறும்–குவலயாபீட யானையும்
புரளும்–பகாஸுரனும்
உடன் மடிய–உடனே மாளும்படியாக
காட்டை நாடி வேட்டை ஆடி வருவானை–காட்டிற் சென்று வேட்டையாடி வரும் அப் பெருமானை.

சிறிது இடத்தைத்தானே கைதொட்டு ஸ்ருஷ்டித்து மேலுள்ளதையெல்லாம் ஸ்ருஷ்டிங்களென்று சதுர்முன் முதலான
ப்ரஜாபதிகளையுண்டாக்கினவனும், அந்த நான் முகனுக்கிருப்பிமாகத் திருநாபிக் கமலத்தை புண்டாக்கித் தந்து
இதுவே லீலையாக இருப்பணுமான பரமபுருஷனைக் கண்டதுண்டோ? கம்ஸன் ஏவின அஸுராவேம் பெற்ற
ஐந்துக்களை யெல்லாம் முடித்துக்கொண்டு வேட்டையாடி வந்த அப்பெருமானை விருந்தாவனத்திலே கண்டோம்

“அயன் முதலானவர்களை“ என்றதநிணங்க “நாட்டைப்படைமின்“ என்று பன்மையாகவன்றோ இருக்கவேணும்,
படை என்று ஒருமையாக இருத்தல் கூடுமோ? எனின், அயன் முதலானவர்களைத் தனித்தனியே விளித்து
“நீநாட்டைப்படை“ என்று விதிதத்தாகக்கொள்க. “அயன் முதலாத்தந்த“ என்பதைவிட “அயன்றன்னைத்தந்த“ என்று
படமாகில் அழகாயிருக்குமென்று நம்பிள்ளை அருளிச்செய்வாராம்.
அயன்-பிரானை, முதலா-முதன்மையாக தந்த-, என்றும் பொருள் கொள்ள இடமுகடு.
அயன் -அஜ என்ற வடசொல்விகாரம். அ-எம்பெருமான் பக்கலில், ஜா-தோன்றினவன்.
விமலன் -லீலாரஸந்தவிர வேறொருபலனை விரும்பாமையாகிற தூய்மையுடையவன் என்கை.

தேனுகனை மடித்தவரலாறு -கண்ணபிரான் பலராமனோடும் ஆயர் சிறுவர்களோடும் மாடு மேய்த்துக் கொண்டு பழங்க
அழகாக மிகுதியாய்ப் பழுத்து வாஸனை வீசிக்கொண்டிருந்த ஒரு பங்காட்டையடைந்து அப்பனம்பழங்களை விரும்பி
உதிர்த்துக்கொண்டு வருகையில் அவ்வாத்துக்குத் தலைவனும் கம்ஸன் பரிவாரத்தில் ஒருவனுமாகிய கழுதை வடிவங்கொண்ட
தேனுகாஸுரன் கோபகொண்டு ஓடிவந்து எதிர்த்துப் போர்செய்ய உடனே கண்ணன் அதிலாக்யமாய்ப்
பின்னங்காலிரண்டையும் பற்றி அவ்வாரக்கழுதையைச் சுழற்றி உயிரிழக்கும்படி பனைமரத்தின் மேலெறிந்து அழித்தனன் என்பதாம்.
தேனுகனைத் தொலைத்ததும் களிற்றைக் கொன்றதும் புள்ளின் வாய் கீண்டதும் வெவ்வேறு ஸமயங்களிலாகிலும்
கண்ணபிரானுடைய ஏகப்ரயோகத்தாலேயே இவை மூன்றும் தொலைந்தன என்று ஆண்டாள் கருதுகின்றனள் போலும்-உடன்மடிய-என்கையாலே.

நாட்டைப் படை என்று
உலகங்களை சிருஷ்டி என்று –
சிறிது இடத்தை தானே கை தொட்டு சிருஷ்டித்து
மேல் உள்ளதை எல்லாம் நீங்களே ஸ்ருஷ்டியுங்கோள் என்று

அயன் முதலா தந்த –
பிரமன் முதலான
பிரஜாபதிகளை ‘
உண்டாக்கின –

அயன் முதலா -ஏற்ப நாட்டை படை -பன்மையாக இருக்க வேண்டாமோ என்னில்
தனித் தனியாக விளித்து நீ படை -என்று நியமித்து அருளினான் –
அயன் தன்னைத் தந்த -பாடம் அழகாய் இருக்கும் என்று நம்பிள்ளை அருளிச் செய்வாராம்
அயன் முதலா -ப்ரஹ்மன் முதன்மையாக என்றும் கொள்ளலாம்
அயன் -அஜ -அ-பெருமாள் இடம் இருந்து ஜ -ஜனித்தவன்
நளிர் மா மலருந்தி வீட்டைப் பண்ணி –
குளிர்ந்த பெரிய மலரை யுடைத்தான
திரு நாபி யாகிற வீட்டை
யுண்டாக்கி –

விளையாடும் –
இப்படியாக லீலா ரசம்
அனுபவிக்கிற –

விமலன் தன்னைக் –
பரம பாவனனான பெருமானைக்
விமலன் -லீலா ரசம் தவிர வேறு ஒன்றை விரும்பாத பரிசுத்தம்

கண்டீரே –

காட்டை நாடித் தேனுகனும் களிறும் புள்ளும் உடன் மடிய
தேனுகாசுரனும் -கழுதை வடிவம் கொண்ட அசுரனை –
குவலயா பீட யானையும்
பகாசுரனும்
உடனே மாளும் படி
கட்டில் சென்று

வேட்டை யாடி வருவானை-
வேட்டை யாடி வரும் அப் பெருமானை –
ஏக காலத்திலேயே போலே தோன்றும் கண்ணபிரான் பலம் அனுசந்திக்க

விருந்தாவனத்தே கண்டோமே –

——————————————————————————————-

பருந்தாள் களிற்றுக்கு அருள் செய்த பரமன் தன்னைப் பாரின் மேல்
விருந்தா வனத்தே கண்டமை விட்டு சித்தன் கோதை சொல்
மருந்தாம் என்று தம் மனத்தே வைத்துக் கொண்டு வாழ்வார்கள்
பெருந்தாள் உடைய பிரான் அடிக்கீழ் பிரியாது என்றும் இருப்பரே–14-10-

பதவுரை

பரு தாள் களிற்றுக்கு–பருத்த கால்களை யுடைய கஜேந்திராழ்வானுக்கு
அருள் செய்த–க்ருபை பண்ணின
பரமன் தன்னை–திருமாலை
பாரின் மேல்–இந் நிலத்திலே
விருந்தாவனத்தே கண்டமை–ஸ்ரீ ப்ருந்தாவனத்திலே ஸேவிக்கப் பெற்றமையைப் பற்றி
விட்டு சித்தன் கோதை சொல்–பெரியாழ்வார் திருமகளான ஆண்டாளருளிச் செய்த இப் பாசுரங்களை
மருந்து ஆம் என்று–(பிறவி நோய்க்கு) மருந்தாகக் கொண்டு
தம் மனத்தே–தங்கள் சிந்தையிலே
வைத்துக் கொண்டு வாழ்வார்கள்–அநுஸந்தித்துக் கொண்டு வாழுமவர்கள்
பெரு தாள் உடைய பிரான் அடி கீழ்–பெருமை பொருந்திய திருவடிகளை யுடைய எம்பெருமானுடைய திருவடிகளின் கீழே
என்றும்–எந்நாளும்
பிரியாது இருப்பார்–பிரியாமலிருந்து நித்யாநுபவம் பண்ணப் பெறுவர்கள்

நிகமத்தில் –
இத் திரு மொழி கற்றார்க்கு பலன் சொல்லி
தலைக் கட்டி அருளுகிறார் –
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் முதலையின் வாயில் அகப்பட்டு நெடுநாள் துடித்து
பிறகு எம்பெருமானுடைய சேவையைப் பெற்று
துயர் தீர்ந்து
பரமானந்தத்தை அடைந்தது போலே
ஆண்டாளும் நெடுநாள் பட்ட விஸ்லேஷ வ்யசனம் தீர்ந்து
மகிழப் பெற்றாள் –

பருந்தாள் களிற்றுக்கு
பருத்த கால்களை யுடைய
கஜேந்திர ஆழ்வானுக்கு

அருள் செய்த பரமன் தன்னைப் –
கிருபை பண்ணி அருளிய
திருமாலை –

பாரின் மேல் –
இந்நிலத்திலே –
கொம்மை முலைகள் இடர் தீர கோவிந்தற்கோர் குற்றேவல்
இம்மைப் பிறவி செய்யாதே இனிப் போய்ச் செய்யும் தவம் தான் என்-என்று
பரமானந்தத்தை வெறுத்து இருந்த இவளுக்கு ‘இந்நிலத்திலேயே பேறு கைபுகுந்தது என்கை –
விருந்தா வனத்தே கண்டமை –
ஸ்ரீ பிருந்தா வனத்திலே சேவிக்கப் பெற்றமை யைப் பற்றி –

விட்டு சித்தன் கோதை சொல் –
பெரியாழ்வார் திரு மகளான ஆண்டாள்
அருளிச் செய்த இப்பாசுரங்களை

மருந்தாம் என்று –
பிறவி நோய்க்கு
மருந்தாகக் கொண்டு –
சம்சார பேஷஜமாககொண்டு –
சம்சாரிகளுக்கு மருந்து –
சம்சாரம் ஆகிய நோய்க்கு மருந்து –
ஆர் மருந்து இனி யாகுவர் -என்றும்
மருந்தும் பொருளும் அமுதமும் தானே என்று சொல்லுகிறபடி
எம்பெருமான் தானே அன்றோ மருந்து என்னில்
அந்த மருந்துக்கு கார்யகரத்வ சக்தி அதிசயத்தை விளைக்க வல்ல மருந்து இதுவே

தம் மனத்தே-
தங்கள் சிந்தையிலே –

வைத்துக் கொண்டு வாழ்வார்கள் –
அனுசந்தித்துக் கொண்டு
வாழுமவர்கள்

பெருந்தாள் உடைய பிரான் அடிக்கீழ் –
பெருமை பொருந்திய திருவடிகளை
யுடைய எம்பெருமான் யுடைய
திருவடிகளின் கீழே –

பிரியாது என்றும் இருப்பரே –
எந்நாளும்
பிரியாமல் இருந்து
நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார்கள்
எஞ்ஞான்றும் எம்பெருமான் அடிக்கீழ் இணை பிரியாது இருப்பார்கள் –
என்று சொல்லி தலைக் கட்டி அருளுகிறார் –

———————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ உ வே -அண்ணங்கராச்சார்யர்  ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .