Archive for January, 2021

ஸ்ரீ விஷ்ணு பர்வம்–அத்யாயம் – 82–அசுரர்களின் நகரம் – ஷட்புரம் |–(-ஷட்புரவதம்)–

January 31, 2021

பிரம்மன் அசுரர்களுக்கு அளித்த வரம்; பிராமணர்களுக்குத் தொல்லை கொடுக்கக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் தேவர்களால் கொல்லப்படாதவர்களான அசுரர்கள்; அசுரர்களுக்கு வழிகாட்டிய சிவன்–

ஜநமேஜய உவாச
வைஷ²ம்பாயந த⁴ர்மஜ்ஞ வ்யாஸஷி²ஷ்ய தபோத⁴ந |
பாரிஜாதஸ்ய ஹரணே ஷட்புரம் பரிகீர்திதம் ||2-82-1

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! வியாசரின் சீடரே, ஓ! அறநெறிகளை அறிந்தவரே, ஓ! தவத்தையே செல்வமாகக் கொண்டவரே, ஓ! வைசம்பாயனரே, பாரிஜாத மரம் அபகரிக்கப்பட்ட கதையைச் சொன்ன போது, பயங்கரம் நிறைந்த அசுரர்களின் வசிப்பிடமான ஷட்புரத்தைக் குறித்தும் நீர் குறிப்பிட்டீர்.

நிவாஸோ(அ)ஸுரமுக்²யாநாம் தா³ருணாநாம் தபோத⁴ந |
தேஷம் வத⁴ம் முநிஷ்²ரேஷ்ட² கீர்தயஸ்வாந்த⁴கஸ்ய ச ||2-82-2

ஓ! தவசிகளிலும், முனிவர்களிலும் முதன்மையானவரே, அந்த அந்தகாசுரர்களின் அழிவை இப்போது சொல்வீராக” என்று கேட்டான்.

வைஷ²ம்ப்யந உவாச
த்ரிபுரே நிஹதே வீரே ருத்³ரேணாக்லிஷ்டகர்மணா |
தத்ர ப்ரதா⁴நா ப³ஹவோ ப³பூ⁴வுரஸுரோத்தமா꞉ ||2-82-3

வைசம்பாயனர், “சக்திமிக்கவனான ருத்திரன் வீரம் நிறைந்த திரிபுரர்களைக் கொன்ற பிறகும் முன்னணி அசுரர்கள் பலர் எஞ்சியிருந்தனர்.

ஷ²ராக்³நிநா ந த³க்³தா⁴ஸ்தே ருத்³ரேண த்ரிபுராலயா꞉ |
ஷஷ்டி²꞉ ஷ²தஸஹஸ்ராணி ந ந்யூநாந்யதி⁴காநி ச ||2-82-4

திரிபுரவாசிகளில், அறுபது லட்சத்திற்கும் குறையாத அசுரர்கள் ருத்திரனுடைய கணைகளின் நெருப்பால் எரிக்கப்படாமல் இருந்தனர்

தே ஜ்ஞாதிவத⁴ஸம்தப்தாஷ்²சக்ருர்வீரா꞉ புரா தப꞉ |
ஜம்பூ³மார்கே³ ஸதாமிஷ்டே மஹர்ஷிக³ணஸேவிதே ||2-82-5

ஆதி³த்யாபி⁴முகா² வீரா꞉ ஸஹஸ்ராணாம் ஷ²தம் ஸமா꞉ |
வாயுப⁴க்ஷா ந்ருபஷ்²ரேஷ்ட² ஸ்துவந்த꞉ பத்³மஸம்ப⁴வம் ||2-82-6

ஓ!மன்னர்களில் முதன்மையானவனே, தங்கள் உற்றார் உறவினரின் அழிவின் விளைவால் துயரில் பீடிக்கப்பட்டிருந்த அந்த வீரர்கள், சூரியனை நோக்கித் திரும்பிய முகங்களுடன் காற்றை மட்டுமே உண்டு, நல்லோரும், பெரும் முனிவர்களும் விரும்பும் ஜம்பூத்வீபத்தில் பிரம்மனைத் துதித்துக் கொண்டு நூறாயிரம் ஆண்டுகள் தவம் செய்து வந்தனர்.(5,6)

தேஷாமுது³ம்ப³ரம் ராஜந்க³ண ஏக꞉ ஸமாஷ்²ரித꞉ |
வ்ருக்ஷம் தத்ராவஸந்வீராஸ்தே குர்வந்தோ மஹத்தப꞉ ||2-82-7

சிலர் அத்தி மரத்தின் அடியில் உறைவிடத்தை ஏற்படுத்திக் கொண்டு கடுந்தவங்களைச் செய்து வந்தனர்;

கபித்த²வ்ருக்ஷமாஷ்²ரித்ய கேசித்தத்ரோஷிதா꞉ புரா |
ஸ்ருகா³லவாடீஸ்த்வபரே சேருருக்³ரம் ததா² தப꞉ ||2-82-8

சிலர் விளா மரத்தின் அடியிலும், வேறு சிலர் நரிகளின் குகைகளிலும் {ஸ்ருகால மரங்களின் அடியிலும்} வாழ்ந்து கொண்டு கடுந்தவங்களில் ஈடுபட்டனர்.

வடமூலே ததா² சேருஸ்தப꞉ கௌரவநந்த³ந |
அதீ⁴யந்தோ பரம் ப்³ரஹ்ம வடம் க³த்வாஸுராத்மஜா꞉ ||2-82-9

ஓ! குருவின் வழித்தோன்றலே, இன்னும் சில அசுரர்கள் ஆல மரத்தின் அடியை அடைந்து, ஆன்ம அறிவியலைக் கற்றுத் தவங்களைச் செய்து வந்தனர்.

தேஷாம் துஷ்ட꞉ ப்ரஜாகர்தா நரதே³வபிதாமஹ꞉ |
வரம் தா³தும் ஸுரஷ்²ரேஷ்ட²꞉ ப்ராப்தோ த⁴ர்மப்⁴ருதாம் வர꞉ ||2-82-10

ஓ! மன்னா, அறவோரில் சிறந்தவனும், தேவர்களில் முதன்மையானவனுமான படைப்பாளன் பிரம்மா, அவர்களுடைய தவங்களில் நிறைவடைந்து வரமளிப்பதற்காகக் கீழே வந்தான்.

வரம் வரயதேத்யுக்தாஸ்தே ராஜந்பத்³மயோநிநா |
நேஷுஸ்தத்³வரதா³நம் து த்³விஷந்தஸ்த்ர்யம்ப³கம் விபு⁴ம் ||2-82-11

தாமரையில் பிறந்த அந்தத் தேவனால், “வரத்தை வேண்டுவீராக” என்று கேட்கப்பட்டும், தலைவன் திரயம்பங்கனிடம் {சிவனிடம்} கொண்ட வன்மத்தின் காரணமாக அவர்கள் எதையும் {எந்த வரத்தையும்} வேண்டாதிருந்தனர்.

இச்ச²ந்தோ(அ)பசிதிம் க³ந்தும் ஜ்ஞாநிநாம் குருநந்த³ந |
தாநுவாச ததோ ப்³ரஹ்மா ஸர்வஜ்ஞ꞉ குருநந்த³ந ||2-82-12

ஓ! குருவின் வழித்தோன்றலே, அவர்கள் தங்கள் உற்றார் உறவினரின் அழிவுக்குப் பழிவாங்கும் விருப்பத்தை வெளிப்படுத்திய போது, அனைத்தையும் அறிந்தவனான பெரும்பாட்டன் {பிரம்மன்},

விஷ்²வஸ்ய ஜக³த꞉ கர்து꞉ ஸம்ஹர்துஷ்²ச மஹாத்மந꞉ |
க꞉ ஷ²க்தோ(அ)பசிதிம் க³ந்தும் மாஸ்து வோ(அ)த்ர வ்ருதா² ஷ்²ரம꞉ ||2-82–13

அநாதி³மத்⁴யநித⁴ந꞉ ஸோமோ தே³வோ மஹேஷ்²வர꞉ |
தமாஸூய ஸுக²ம் ஸ்வர்கே³ வஸ்துமிச்ச²ந்தி யே(அ)ஸுரா꞉ ||2-82-14

“உமாதேவியுடன் கூடிய தலைவன் மஹேஷ்வரன் பிறப்பும், நடுநிலையும் {இருப்பும்}, அழிவும் அற்றவனாவான் {ஆதி, மத்யம், அந்தமற்றவனாவான்}. மொத்த அண்டத்தையும் அவனே படைக்கிறான், அவனே அழிக்கிறான். அவனுக்குத் தீங்கிழைக்க வல்லவன் எவன்? அது பயனற்ற காரியமே. அவனுக்கு எதிரான உங்கள் வன்மத்தைக் கைவிட்டுத் தேவர்களின் நகரில் மகிழ்ச்சியாக வாழ விரும்புவீராக” என்றான்.(13,14)

தே நேஷுஸ்தத்ர கேசித்து து³ராத்மாநோ மஹாஸுரா꞉ |
அதே²ஷுரபரே ராஜந்நஸுரா ப⁴வ்யபா⁴வநா꞉ ||2-82-15

இவ்வாறு பிரம்மனால் சொல்லப்பட்டதும் தீய ஆன்மா கொண்ட அசுரர்கள் பலர் அதற்கு இணங்கவில்லை; ஆனால் பவனின் {சிவனின்} சக்திகளை அறிந்த அவர்களில் சிலர் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தினர்.

நேஷுர்யே ஸுது³ராத்மாநஸ்தாநுவாச பிதாமஹ꞉ |
வரயத்⁴வம் வரம் வீரா ருத்³ரக்ரோத⁴ம்ருதே(அ)ஸுரா꞉ ||2-82-16

பெரும்பாட்டன், விருப்பமில்லாத தீய அசுரர்களிடம், “ஓ! அசுர வீரர்களே, ருத்ரனுக்கு எதிரான உங்கள் பழியுணர்வைத் தவிர வேறு எந்த வரத்தையும் வேண்டுவீராக” என்று கேட்டான்.

தே ஊசு꞉ ஸர்வதே³வாநாமவத்⁴யா꞉ ஸ்யாம ஹே விபோ⁴ |
புராணி ஷட்ச நோ தே³வ ப⁴வந்த்வந்தர்மஹீதலே ||2-82-17

இதைக் கேட்ட அவர்கள், “ஓ! தலைவா, நாங்கள் தேவர்கள் அனைவராலும் கொல்லப்படமுடியாதவர்களாவோமாக. நாங்கள் பூமிக்கு அடியில் ஆறு நகரங்களை நிறுவுவோமாக;

ஸர்வகாமஸம்ருத்³தா⁴ர்த²ம் ஷட்புரம் சாஸ்து ந꞉ ப்ரபோ⁴ |
வயம் ச ஷட்புரம் க³த்வா வஸேம ச ஸுக²ம் விபோ⁴ ||2-82-18

ஷத்புரம் என்ற பெயரில் அவை அழைக்கப்படட்டும் {எங்கள் விருப்பங்களை அந்நகரங்கள் நிறைவேற்றட்டும்}. ஓ! தலைவா, அந்த ஆறு நகரங்களுக்குச் சென்று நாங்கள் மகிழ்ச்சியாக வாழ்வோமாக.

ருத்³ராது³க்³ரம் ப⁴யம் ந ஸ்யாத்³யேந நோ ஜ்ஞாதயோ ஹதா꞉ |
நிஹதம் த்ரிபுரம் த்³ருஷ்ட்வா பீ⁴தா꞉ ஸ்ம தபஸாம் நிதே⁴ ||2-82-19

ஓ! தவத்தையே செல்வமாகக் கொண்டவனே, திரிபுரவாசிகள் கொல்லப்பட்டதைக் கண்டு நாங்கள் பேரச்சத்தால் பீடிக்கப்பட்டிருக்கிறோம். எங்கள் உற்றார் உறவினரைக் கொன்ற ருத்ரனிடம் இருந்து எங்களுக்கு அச்சமுண்டாகாதிருப்பதாக” என்று கேட்டனர்.

பிதாமஹ உவாச
அஸுரா ப⁴வதாவத்⁴யா தே³வாநாம் ஷ²ங்கரஸ்ய ச |
ந பா³தி⁴ஷ்யத² சேத்³விப்ராந்ஸத்பத²ஸ்தா²ந்ஸதாம் ப்ரியாந் ||2-82-20

பெரும்பாட்டன் {பிரம்மன்}, “ஓ! அசுரர்களே, நல்லோரை விரும்புகிறவர்களும், நல்ல வழிமுறைகளில் நடப்பவர்களுமான பிராமணர்களின் வழியில் தடைகளை ஏற்படுத்தாமல் இருந்தால் நீங்கள் தேவர்களாலும், சங்கரனாலும் கொல்லப்பட முடியாதவர்களாக இருப்பீர்கள்.

விப்ரோபகா⁴தம் மோஹாச்சேத்கரிஷ்யத² கத²ஞ்சந |
நாஷ²ம் யாஸ்யத² விப்ரா ஹி ஜக³த꞉ பரமா க³தி꞉ ||2-82-21

உலகின் மிகச்சிறந்த புகலிடங்களான பிராமணர்களுக்கு நீங்கள் அறியாமையினால் தீங்கிழைக்க நேர்ந்தாலும் அழிவை அடைவீர்கள்

நாராயநாத்³விபே⁴தவ்யம் குர்வத்³பி⁴ர்ப்³ராஹ்மணாஹிதம் |
ஸர்வபூ⁴தேஷு ப⁴க³வாந்ஹிதம் த⁴த்தே ஜநார்த³ந꞉ ||2-82-22

அனைத்து உயிரினங்களுக்கு நன்மையைச் செய்பவன் தலைவன் ஜனார்த்தனன் என்பதால், நீங்கள் பிராமணர்களைத் துன்புறுத்தினால் நாராயணனிடமிருந்து உங்களுக்கு அச்சமுண்டாகும்” என்றான் {பிரம்மன்}

தே க³தா அஸுரா ராஜந்ப்³ரஹ்மணா யே விஸர்ஜிதா꞉ |
யே(அ)பி ப⁴க்தா மஹாதே³வமஸுரா த⁴ர்மசாரிண꞉ ||2-82-23

ஸ்வயம் ஹி த³ர்ஷ²நம் தேஷாம் த³தௌ³ த்ரிபுரநாஷ²ந꞉ |
ஷ்²வேதம் வ்ருஷப⁴மாருஹ்ய ஸோம꞉ ஸப்ரவர꞉ ப்ரபு⁴꞉ |
உவாசேத³ம் ச ப⁴க³வாநஸுராந்ஸ ஸதாம் க³தி꞉ ||2-82-24

ஓ! மன்னா, பெரும்பாட்டனால் விடை கொடுத்து அனுப்பப்பட்ட அந்த அசுரர்கள் அங்கிருந்து சென்றனர். நல்லோரின் புகலிடமும், திரிபுரவாசிகளைக் கொன்றவனுமான அந்தத் தெய்வீகத் தலைவனே, உமையுடனும், தன் தொண்டர்களுடனும், அறம் சார்ந்தவர்களும், தன் தொண்டர்களுமான மற்ற அசுரர்களின் முன் தோன்றினான்.(23,24)

வைரமுத்ஸ்ருஜ்ய த³ம்ப⁴ம் ச ஹிம்ஸாம் சாஸுரஸத்தமா꞉ |
மாமேவ சாஷ்²ரிதாஸ்தஸ்மாத்³வரம் ஸாது⁴ த³தா³மி வ꞉ ||2-82-25

{சிவன் அவர்களிடம்}, “ஓ! அசுரர்களில் முதன்மையானவர்களே, உங்களுக்கு நன்மை நேரட்டும். பகைமை, செருக்கு, வன்மம் {ஹிம்சை} ஆகியவற்றைக் கைவிட்டு என் புகலிடத்தை நாடியிருக்கிறீர்கள். எனவே நான் உங்களுக்கு வரமளிக்கப் போகிறேன்

யைர்தீ³க்ஷிதா꞉ ஸ்த² முநிபி⁴꞉ ஸத்க்ரியாபரமைர்த்³விஜை꞉ |
ஸஹ தைர்க³ம்யதாம் ஸ்வர்க³꞉ ப்ரீதோ(அ)ஹம் வ꞉ ஸுகர்மணா ||2-82-26

உங்கள் செயல்பாடுகளில் நான் நிறைவடைந்திருக்கிறேன். எப்போதும் நற்பணிகளில் ஈடுபடுபவர்களும், உங்களுக்குத் தீக்ஷை அளித்தவர்களுமான {உங்களை நல்வழியில் ஈடுபடுத்தியவர்களுமான} இருபிறப்பாளர்களுடன் சேர்ந்து நீங்கள் தேவலோகத்திற்குச் செல்வீராக

இஹ யே சைவ வத்ஸ்யந்தி தாபஸா ப்³ரஹ்மவாதி³ந꞉ |
அபி காபித்தி²கா வ்ருக்ஷே தேஷாம் லோகோ யதா² மம ||2-82-27

பிரம்மஞானத்தை அறிந்தவர்களும், இந்த விளா மரத்தின் அடியில் வாழ்பவர்களுமான தவசிகள் என் உலகை அடைவார்கள்

இஹ மாஸாந்தபக்ஷாந்தௌ ய꞉ கரிஷ்யதி மாநவ꞉ |
வாநப்ரஸ்தே²ந விதி⁴நா பூஜயந்மாம் தபோத⁴ந꞉ ||2-82-28

ஒரு மாதமோ, அரை மாதமோ {ஒரு பக்ஷமோ} {புது நிலவு நாளிலோ, முழு நிலவு நாளிலோ} அறச்சடங்குகளுடன் என்னைத் துதிக்கும் துறவிகள் {வானப்ரஸ்தர்கள்},

வர்ஷாணாம் ஸ ஸஹஸ்ரம் து தபஸாம் ப்ராப்ஸ்யதே ப²லம் |
க்ருத்வா விராத்ரம் விதி⁴வல்லப்ஸ்யதே சேப்ஸிதாம் க³திம் ||2-82-29

ஓராயிரம் ஆண்டுகள் செய்த தவத்தின் பலனை அடைவார்கள். அவர்கள் என்னை மூன்று இரவுகள் வழிபட்டால் தாங்கள் விரும்பிய உலகை {விரும்பிய கதியை} அடைவார்கள்.

அர்கத்³வீபே நிவஸதோ த்³விகு³ணம் தத்³ப⁴விஷ்யதி |
ந விதே³ஷே² ச ப⁴த்³ரம் வோ வரமேதத்³த³தா³ம்யஹம் ||2-82-30

அர்க்கத்வீபத்தில்[பூமியில் ஜம்பூத்வீபம், சாகத்வீபம், குசத்வீபம், சால்மலிகத்வீபம், கிரௌஞ்சத்வீபம், புஷ்கரத்வீபம் முதலிய த்வீபங்கள் இருப்பதாக மஹாபாரத பீஷ்ம பர்வ 11ம் அத்யாயத்திலும், 12ம் அத்யாயத்திலும் வரும் பூமி பர்வ உபபர்வத்தில் சொல்லப்படுகிறது. அர்க்கம் என்றொரு த்வீபம் சொல்லப்படவில்லை. சூரியனுக்கும் அர்க்கன் என்ற பெயர் உள்ளதால் இங்கே சொல்லப்படுவது சூரியலோகம் என்றும், அர்க்கன் என்பதற்கு நல்லோன் என்ற பொருளும் உள்ளதால் நல்லவர்கள் வசிக்கும் த்வீபம் என்றும் பொருள் கொள்ளலாம். இதே அத்யாயத்தில் 5, 6ம் ஸ்லோகங்களில் “நல்லோரும், பெரும் முனிவர்களும் விரும்பும் ஜம்பூத்வீபம்” வருவதன் பொருள் உணர்ந்தால் இது ஜம்பூத்வீபத்தையே குறிப்பிடுகிறது என்ற தீர்மானத்திற்கு வரலாம்.] {நல்ல மனிதர்கள் விரும்பும் த்வீபத்தில் / ஜம்பூத்வீபத்தில் / இந்தியாவில்} வாழும் மனிதன், இவ்வழியில் என்னை வழிபட்டால் இருமடங்கு பலன்களை அறுவடை செய்வான்; ஆனால் பகை நாட்டில் வாழும் மனிதனால் எதையும் ஈட்ட முடியாது. {உங்களுக்கு நன்மை நேரட்டும்}.

ஷ்²வேதவாஹநநாமாநம் யஷ்²ச மாம் பூஜயிஷ்யதி |
ஸர்வதோ ப⁴யசித்தோ(அ)பி க³திம் ஸ மம யாஸ்யதி ||2-82-31

என்னை ஸ்வேதவாஹனனாக (வெள்ளை நிறக் காளையை வாகனமாகக் கொண்டவனாக) இங்கே துதிப்பவன், மனத்தில் அச்சத்தால் பீடிக்கப்பட்டவனாக இருப்பினும் என்னை அடைவான்.

ஔது³ம்ப³ராந்வாடமூலாந்த்³விஜாந்காபித்தி²காநபி |
ததா² ஸ்ருகா³லவாடீயாந்த⁴ர்மாத்மாநோ த்³ருட⁴வ்ரதாந் ||2-82-32

அறம் சார்ந்தவர்களும், அர்ப்பணிப்பில் உறுதிமிக்கவர்களும், அத்தி, ஆல, விளா மரங்களுக்கு அடியில் வாழ்பவர்களும், நரிகளின் குகைகளில் {ஸ்ருகால மரங்களுக்கு அடியில்} வாழ்பவர்களும்,

முநீம்ஷ்²ச ப்³ரஹ்மவாதீ³யாந்ஸவிஷே²ஷேண யே நரா꞉ |
பூஜயிஷ்யந்தி ஸததம் தே யாஸ்யந்தீப்ஸிதாம் க³திம் ||2-82-33

குறிப்பாக முனிவர்களை வழிபடுபவர்களுமான மனிதர்கள் தாங்கள் விரும்பிய உலகங்களை {கதிகளை} அடைவார்கள்” {என்றான் சிவன்}

இத்யுக்த்வாத² மஹாதே³வோ ப⁴க³வாஞ்ச்²வேதவாஹந꞉ |
தைரேவ ஸஹித꞉ ஸர்வே ருத்³ரலோகம் ஜகா³ம வை ||2-82-34

ஓ! பெரும் மன்னா, தெய்வீகமானவனும், ஸ்வேதவாஹனனுமான மஹாதேவன் இதைச் சொல்லிவிட்டு, அவர்களுடன் {அறம் சார்ந்த அசுரர்களுடன்} சேர்ந்து ருத்ர லோகத்திற்குச் சென்றான்.

ஜம்பூ³மார்க³ம் க³மிஷ்யாமி ஜம்பூ³மார்கே³ வஸாம்யஹம் |
ஏவம் ஸங்கல்பமாநோ(அ)பி ருத்³ரலோகே மஹீயதே ||2-82-35

நான் ஜம்பூத்வீபத்திற்கு {இந்தியாவுக்குச்} செல்லப் போகிறேன், நான் அங்கே {ஜம்பூத்வீபத்தில்} வாழப்போகிறேன்” என்று மனத்தில் தீர்மானிப்பவர்களே கூட ருத்ரலோகத்தை அடைவார்கள்[“ஜம்பு மார்க்கம் போவேன். நான் ஜம்பு மார்க்கத்தில் வசிக்கிறேன் இப்படி ஸங்கல்பம் செய்கிறவன் கூட ருத்ரலோகத்தில் பெருமை அடைகிறான்”]” என்றார் {வைசம்பாயனர்}

இதி ஷ்²ரீமஹாபா⁴ரதே கி²லேஷு ஹரிவம்ஷே² விஷ்ணுபர்வணி
ஷட்புரவதே⁴ த்³வ்யஷீ²திதமோ(அ)த்⁴யாய꞉

————–—————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாஸ பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ விஷ்ணு பர்வம்–அத்யாயம் – 81–(உமாவ்ரதகதநஸமாப்தி꞉)-அதிதி, சாவித்ரி, கங்கா, யாம விரதங்கள் |–

January 31, 2021

உமை சொன்ன விரத விளக்கம் முடிவு; தேவதைகள் செய்த சாவித்ரி, அதிதி, கங்கா, யாம விரதங்கள்; கிருஷ்ணனின் மனைவிமாரான ருக்மிணி, ஜாம்பவதி, சத்யபாமா ஆகியோர் செய்த விரதங்கள்-

உமோவாச
பா³ந்த⁴வாந்ஸகு³ணாநிச்சே²தே³கப⁴க்தேந நித்யதா³ |
ஸப்தமீம் ஸப்தமீம் நித்யம் க்ஷ²பேத்ஸ்த்ரீ பதிதே³வதா ||2-81-1

உமை {அருந்ததியிடம்}, “திறன்மிக்க நண்பர்களையும், உறவினர்களையும் பெற விரும்பும் கற்புள்ள ஒரு பெண், ஓராண்டு காலத்திற்கு ஒவ்வொரு சப்தமியிலும் {வளர்பிறை ஏழாம் நாள், தேய்பிறை ஏழாம் நாள் ஆகியவற்றில்} உண்ணா நோன்பிருக்க வேண்டும்.

தத꞉ ஸம்வத்ஸரே பூர்ணே வ்ருக்ஷம் த³த்³யாத்³தி⁴ரண்மயம் |
ஸத³க்ஷிணம் ப்³ராஹ்மணாய ஷு²ப⁴ப³ந்து⁴மதீ ப⁴வேத் ||2-81-2

ஓராண்டு நிறைவடைந்ததும், பணக்கொடையுடன் சேர்த்து தங்கத்தாலான ஒரு மரத்தையும் ஒரு பிராமணனுக்குக் கொடையளிக்க வேண்டும். அப்போது அவள் அறம்சார்ந்த நண்பர்களையும், உறவினர்களையும் பெறுவாள்

கரஞ்ஜே தீ³பகம் த³த்³யாத்ஸதா³ யா ப்ரமதா³ வரே |
பூர்ணே ஸம்வத்ஸரே த³த்³யாத்ஸௌவர்ணம் தீ³பகம் தத꞉ ||2-81-3

ஓ! அறம் சார்ந்தவளே, பெண்களில் முதன்மையானவளே, புங்க மரத்தின் அடியில் ஓராண்டு காலம் விளக்கேற்றி, ஓராண்டு நிறைவடையும் நாளில் பொன்னாலான விளக்கைக் கொடையளிப்பவள்,

ருச்யா ஸா ஸ்த்ரீ ப⁴வேத்³ப⁴ர்துரிஷ்டா புத்ரவ்தீ ததா² |
ஸபத்நீநாமதி⁴ ததா² தீ³பவஜ்ஜ்வலதே ஷு²பே⁴ ||2-81-4

மகன்களைப் பெற்ற அன்னையாகவும், தன் அழகால் கணவனுக்குப் பிடித்தவளுமாகித் தன் தலைவனின் மனைவியருக்கு மத்தியில் விளக்கைப் போல ஒளிர்வாள்.

யா ஷே²ஷபோ⁴ஜிநீ நித்யம் நைவ ச ஸ்யாத³ருந்துதா³ |
ந ச ஸ்யாத்³வ்யஷ²நா ஸௌம்யே நித்யம் ச பதிதே³வதா ||2-81-5

ஓ! மங்கலப் பெண்ணே, கடுஞ்சொற்களால் பிறரைக் காயப்படுத்தாதவளும், புதன்கிழமைகளில் உணவு உண்ணாதவளும், கடுஞ்சொல் பயன்படுத்தாதவளும், அனைவருக்கும் பிறகு எப்போதும் இறுதியாக உணவு உண்பவளும்,

ஷௌ²சாந்விதா ச ஸததம் ந ச ரூக்ஷாபி⁴பா⁴ஷிணீ |
ஷ்²வஷ்²ரூஷ்²வஷு²ரயோர்நித்யம் ஷு²ஷ்²ரூஷாபி⁴ரதா ஸதீ ||2-81-6

பழக்க வழக்கங்களில் தூய்மையுள்ளவளும், மாமனார், மாமியாருக்குத் தொண்டாற்றுபவளும், கணவனையே தெய்வமாகக் கருதுபவளும்

கிம் தஸ்யா வ்ரதகை꞉ கார்யம் கிம் வா ஸ்யாது³பவாஸகை꞉ |
யா ப⁴ர்த்ருதே³வதா நித்யம் ஸத்யத⁴ர்மகு³ணாந்விதா ||2-81-7

வாய்மை நிறைந்தவளுமான கற்புள்ள ஒரு பெண் விரதமோ, உண்ணா நோன்போ இருக்க வேண்டிய அவசியமே இல்லை

வித⁴வா ஸ்த்ரீ து யா ஹி ஸ்யாத்³தை³வயோகா³த்ஸதீ ஸதி |
தஸ்யா வக்ஷ்யாமி யோ த⁴ர்ம꞉ புராணோக்த꞉ ஸுமத்⁴யமே ||2-81-8

ஓ! இளமை நிறைந்த கற்புள்ள பெண்ணே, கற்புள்ள எந்தப் பெண்ணாவது தற்செயலாக விதவையாகும் நிலை நேர்ந்தால், அவள் புராணங்களில் விதிக்கப்பட்டுள்ள சில சடங்குகளைப் பின்பற்ற வேண்டும். நான் அவற்றைச் சொல்கிறேன் கேட்பாயாக

பதிம் ஸங்கல்பயித்வாஸா சித்ரஸ்த²ம் வாத²ம்ருந்மயம் |
தஸ்ய பூஜாம் ஸதா³ குர்யாத்ஸதாம் த⁴ர்மமநுஸ்மரேத் ||2-81-9

ஒரு விதவை, அறம்சார்ந்தோரின் நல்லொழுக்கத்தை நினைவில் கொண்டு தன் கணவனின் வடிவை மண்ணால் செய்தோ, அவனைப் போன்ற ஓவியத்தை வரைந்தோ அதை {அந்த வடிவத்தை} வழிபட வேண்டும்.

தத ஏவாப்⁴யநுஜ்ஞாம் ஸா நித்யம் யாசேத ஸுவ்ரதா |
வ்ரதகே சோபவாஸே ச போ⁴ஜநே ச விஷே²ஷத꞉ ||2-81-10

ஒரு விரதத்தையோ, உண்ணாநோன்பையோ செய்யும் போது, குறிப்பாக உணவை உண்ணும் நேரத்தில், கற்புள்ள ஒரு பெண் அந்த வடிவத்திடம் {சிலையிடமோ, ஓவியத்திடமோ} அனுமதி பெற வேண்டும்

ப⁴ர்த்ருலோகாந்வ்ரஜத்யேவ ந சேத்³வ்யுச்சரதே பதிம் |
ஷா²ண்டி³லீ ஸூர்யவத்³பா⁴தி ஸததம் பதிதே³வதா ||2-81-11

தன் கணவனுக்குக் கீழ்ப்படிந்து வந்தவளான அந்த விதவையானவள், {பெண்முனியான} சாண்டிலியைப்[மஹாபாரதம் உத்யோக பர்வம் பகுதி 113லும், அநுசாஸன பர்வம் பகுதி 123லும் சாண்டிலி பற்றிய செய்திகள் இருக்கின்றன.] போலத் தன் கணவன் சென்ற உலகுக்கே சென்று அங்கே சூரியனைப் போல ஒளிர்வாள்.

அத்³யப்ரப்⁴ருதி ஸர்வேஷாம் தே³வாநாம் சைவ யோஷித꞉ |
த்³ரக்ஷ்யந்தி புண்யகவிதி⁴ம் பௌராணோ ய꞉ ஸநாதந꞉ ||2-81-12

புராணங்களில் விதிக்கப்பட்டுள்ள நித்தியமான அறச்சடங்குகளை {புண்யக விரத விதிமுறைகளை} இன்று முதல் தெய்வீகக் காரிகையர் {தேவ ஸ்திரீகள்} அறிவார்கள்.

முநிஷ்²ச நாரத³꞉ க்ருத்ஸ்நம் பௌராணம் ஜ்ஞாஸ்யதே விதி⁴ம் |
உபவாஸஸ்ய த⁴ர்மாத்மா வ்ரதகாநாம் ததை²வ ச ||2-81-13

அற ஆன்மா கொண்ட நாரத முனிவர், புராணங்களில் விளக்கப்பட்டுள்ளபடியே உண்ணாநோன்பு, விரதங்கள் தொடர்பான மொத்த விதிமுறைகளையும் அறிவார்

அதி³திஸ்தபஸேந்த்³ராணீ த்வம் ச ஸோமஸுதே வரே |
ப்ரவர்தநே புண்யகாநாம் வ்ரதகாநாம் ச ஸர்வதா³ ||2-81-14

கீர்தநீயா꞉ ஸதீநாம் ஹி ப⁴விஷ்யத² கு³ணாந்விதா꞉ |
உபவாஸவ்ரதவிதி⁴ம் யதா²வதி³ஹ க்ருத்ஸ்நஷ²꞉ ||2-81-15

ஓ! சோமனின் மிகச் சிறந்த மகளே {அருந்ததி}, ஏற்கனவே சொல்லப்பட்ட உண்ணா நோன்புகள், விரதங்களுடைய விதிகளின் நீட்சியாகச் செய்யப்படும் அறச்சடங்குகளின் காரியத்தில் அறம்சார்ந்த அதிதியும், இந்திராணியும் {சசிதேவியும்}, {அருந்ததியான} நீயும் கற்புள்ள பெண்களின் கூட்டத்தில் முதன்மையானவர்களாகக் கொண்டாடப்படுவீர்கள்.(14,15)

ப்ராது³ர்பா⁴வேஷு ஸர்வேஷு பா⁴ர்யா விஷ்ணோர்மஹாத்மந꞉ |
ஜ்ஞாஸ்யந்தி புண்யகவிதி⁴ம் நித்யமேவ ஸநாதநம் ||2-81-16

உயரான்ம விஷ்ணுவின் அவதாரங்கள் அனைத்திலும், அவனது மனைவிகள் நித்தியமான இந்தப் புண்யகச் சடங்கின் விதிகளை அறியவருவார்கள்.

ஸவிஷே²ஷம் ச த⁴ர்மாணாம் ஸ்த்ரீத⁴ர்மேஷு ப்ரஷ²ஸ்யதே |
பதிப⁴க்திரது³ஷ்டத்வமவாக்³து³ஷ்டத்வமேவ ச ||2-81-17

ஓ! கற்புள்ள பெண்ணே, மேலும் நான் என்ன சொல்லப் போகிறேன்; கணவனிடம் அர்ப்பணிப்பு, தீமை இல்லாமை, சொல்லாலும் பாவம் செய்யப்படாமை ஆகியவையே அறங்கள் அனைத்திலும், அதிலும் குறிப்பாகப் பெண்களின் கடமைகளில் முதன்மையானவையாகும்” என்றாள் {உமாதேவி}”

நாரத³ உவாச
ஏவமுக்தாஸ்து தா꞉ ஸாத்⁴வ்யோ மஹாதே³வ்யா தபோத⁴நா꞉ |
ஜக்³முர்ஹ்ருஷ்டா மஹாதே³வீம் ப்ரணிபத்ய ஹரப்ரியாம் ||2-81-18

நாரதர் {ருக்மிணியிடம்}, “ஹரனின் அன்புக்குரியவளான அந்தப் பெருந்தேவியால் இவ்வாறு சொல்லப்பட்டதும், தவத்தையே செல்வமாகக் கொண்ட அந்தத் தவச்செல்விகள் அவளை வணங்கி விடைபெற்றுச் சென்றனர்.

அதி³திர்வ்ரதகம் சக்ரே ஷ்²ருணுயாத்³த⁴ர்மசாரிணீ |
உமாவ்ரதவிதி⁴꞉ ஸர்வ꞉ பூர்வோத்³தி³ஷ்டஸ்தயா க்ருத꞉ ||2-81-19

அறச்சடங்குகளை எப்போதும் நோற்பவளான அதிதி, ஏற்கனவே சொல்லப்பட்ட விதிமுறைகளின்படி உமா விரதத்தைச் செய்தாள்.

பாரிஜாதே நிப³த்⁴யாத² மம த³த்தஸ்து கஷ்²யப꞉ |
அதி³திவ்ரதகம் நாம தத்³த³த்தம் ஸத்யபா⁴மயா ||2-81-20

கசியபரைப் பாரிஜாத மரத்துடன் கட்டி எனக்குக் கொடையளித்த அவளுடைய அந்த விரதம் அதிதி விரதம் என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. அந்த விரத விதிகளின் படியே சத்யபாமா கொடைகளை அளித்தாள்

ததே³வ வ்ரதகம் த³த்தம் ஸாவித்ர்யா த⁴ர்மநித்யயா |
தைரேவ யுக்தை꞉ ஸம்யுக்தமித³ம் த்வப்⁴யதி⁴கம் க்ருதம் ||2-81-21

அறத்தில் எப்போதும் நிலைக்கும் சாவித்ரியும் அந்த நோன்பைச் செய்தாள். தற்போது சத்யபாமா முறையாக அந்த விரதத்தையே செய்தாள். இது மற்ற அனைத்தையும் விடச் சிறந்ததாக இருக்கிறது.

ஸம்த்⁴யாகாலே து ஸம்ப்ராப்தே ஸ்தா²நே ஸ்தா²நே ததை²வ ச |
பூஜநம் வா நமஸ்காரோ ஜபஷ்²ச த்³விகு³ண꞉ ஸ்ம்ருத꞉ ||2-81-22

இந்த விரதம் நோற்கும் போது, மாலை வேலையில் சரியான இடத்தில், பெயர்களை உரைத்து நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்குவது இரு மடங்கு பலனை அளிக்கும்.

ஸாவித்ரீவ்ரதகம் க்ருத்வா ததா²தி³த்யா வ்ரதம் ஸதீ |
ப⁴ர்து꞉ குலம் பித்ரூகுலமாத்மாநம் சைவ தாரயேத் ||2-81-23

சாவித்ரி விரதத்தையும், அதிதி விரதத்தையும் செய்யும் கற்புள்ள பெண்ணால், தன் கணவனின் குடும்பத்தையும், தன் தந்தையின் குடும்பத்தையும், தன்னையும் காத்துக் கொள்ள முடியும்.

இந்த்³ராணீ வ்ரதகம் சக்ரே ததே³வௌமம் யதா²விதி⁴ |
ரக்தமப்⁴யதி⁴கம் வாஸோ போ⁴ஜநம் சைவஸாமிஷம் ||2-81-24

இந்திரனின் ராணி {இந்திராணியான சசிதேவி}, உமாவிரத விதிகளின் படி சடங்கைச் செய்து எண்ணற்ற செவ்வாடைகளையும், மீனும், இறைச்சியும் கலந்த உணவையும் கொடையளித்தாள்.

சதுர்தே² தி³வஸே வாபி புண்யகார்த²ம் விதி⁴꞉ புந꞉ |
அஹோராத்ரோபவாஸஷ்²ச தே³யம் கும்ப⁴ஷ²தம் ததா² ||2-81-25

நான்காம் நாளில் {வளர்பிறை, தேய்பிறை சதுர்த்தித் திதிகளில்} கடைப்பிடிக்க வேண்டிய மற்றொரு விதி இந்த விரதத்தில் இருக்கிறது. அதன்படி ஒருத்தி பகலும், இரவும் உண்ண நோன்பிருந்து நூறு குடங்களைக் கொடையளிக்க வேண்டும்.

க³ங்க³யா வ்ரதகம் த³த்தம் ததே³வௌமம் யஷ²ஸ்கரி |
ஸ்நாநமப்⁴யதி⁴கம் த்வத்ர ப்ரத்யூஷஸ்யாத்மநோ ஜலே ||2-81-26

ஓ! சிறப்புமிக்கப் பெண்ணே, கங்கா தேவி அந்த உமாவிரதத்தை நிறைவேற்றி அதிகாலையில் தன் நீரிலேயே நீராடினாள்.

அந்யஸ்மிந்வா ஜலே மாக⁴ஷு²க்லபக்ஷே ஹரிப்ரியே |
ஏதத்³க³ங்கா³வ்ரதம் நாம ஸர்வகாமப்ரத³ம் ஸ்ம்ருதம் ||2-81-27

ஓ! ஹரியின் அன்புக்குரிய ராணியே {ஹரிப்ரியே / ருக்மிணி}, ஒருத்தி மாசி மாதத்தின் வளர்பிறையில் இந்தக் கங்கா விரதத்தைச் செய்து, வேறு எந்த நீரில் {கங்கையிலோ, வேறு எந்த நீரிலோ} நீராடினாலும் விரும்பிய பொருட்கள் அனைத்தும் கிடைக்கும் என்று {வேதத்தில்} சொல்லப்படுகிறது

ஸப்த ஸப்த ச ஸப்தாத² குலாநி ஹரிவல்லபே⁴ |
ஸ்த்ரீ தாரயதி த⁴ர்மஜ்ஞா க³ங்கா³வ்ரதகசாரிணீ ||2-81-28

ஓ! ஹரியின் அன்புக்குரிய அவனது மனைவியே, அறச்சடங்குகள் அனைத்தையும் அறிந்த ஒரு பெண், கங்கா விரதம் செய்தால், {கணவனின் குலம், தந்தையின் குலம், தாயின் குலம் ஆகிய} மூன்று குலங்களின் ஏழு தலைமுறைகளை அவளால் காக்க முடியும்
கங்கா வ்ரதம் நடத்தும் தர்மமறிந்த ஸ்த்ரீ, பதியின் குலம், பிதா குலம், மாதாமஹ குலம் ஆகிய மூவேழு குலங்களைக் கரையேற்றுகிறாள்”

தே³யம் கும்ப⁴ஸஹஸ்ரம் து க³ங்கா³யா வ்ரதகே ஷு²பே⁴ |
தாரணம் பாரணம் சைவ தத்³வ்ரதம் ஸார்வகாமிகம் ||2-81-29

ஓ! மங்கலப் பெண்ணே, கவலைகளை அகற்றுவதும், விருப்பத்திற்குரிய பொருட்கள் அனைத்தையும் கொடுப்பதுமான இந்தக் கங்கா விரதத்தை ஒருத்தி செய்யும்போது, அவள் ஆயிரம் குடங்களைக் கொடையளிக்க வேண்டும்

யமபா⁴ர்யா சகாராத² வ்ரதம் யாமரத²ம் ஷு²ப⁴ம் |
ஹேமந்தே தத்து கர்தவ்யமாகாஷே² ஹரிவல்லபே⁴ ||2-81-30

ஓ! ஹரியின் அன்புக்குரிய ராணியே, யமனின் மனைவியால் கொண்டாடப்பட்ட யாம விரதம் என்ற பெயரைக் கொண்ட விரதத்தை ஒருத்தி பனிக்காலம் நிலவும் இடத்தில் {கூதிர் காலத்தில் திறந்த வெளியில்} செய்யலாம்.

இமாநி சைவ வாக்யாநி ப்³ரூயாதா³காஷ²மாஸ்தி²தா |
ஸ்நாத்வா ஷு²சிஸமாசாரா நமஸ்க்ருத்ய பதிம் ஷு²பே⁴ ||2-81-31

ஓ மங்கலப் பெண்ணே, இந்த விரதத்தைச் செய்யும் தூய ஒழுக்கம் கொண்ட பெண் ஒருத்தி, நீராடிய பிறகு கணவனை வணங்கிவிட்டு வானத்தை நோக்கிப் பின் வரும் சொற்களைச் சொல்ல வேண்டும்.

சராம்யஹம் யாமரத²ம் ஹிமம் ப்ருஷ்டே²ந தா⁴ரயே |
பதிவ்ரதா ஜீவபுத்ரா ப⁴வேயம் ச புரோ(அ)தி⁴கா||2-81-32

{அவள்}, “நான் பனியை முதுகில் தாங்கி யாமரத விரதத்தைச் செய்வதால், பிழைத்திருக்கும் மகன்களைக் கொண்டவர்களும், கணவர்களிடம் அர்ப்பணிப்புள்ளவர்களுமான பெண்களில் முதன்மையானவளாகத் திகழ்வேனாக.

ஸபத்நீரதி⁴திஷ்டே²யம்பஷ்²யேயம் சைவ மா யமம் |
ஸப⁴ர்த்ருபுத்ரா ஜீவேயம் சிரம் ச ஸுக²மேவ ச ||2-81-33

என் கணவரின் மற்ற மனைவியரை நான் ஆள்வேனாக, நான் யமனைக் காணாதிருப்பேனாக, நான் என் கணவருடனும், மகன்களுடனும் எப்போதும் மகிழ்ச்சியாக வாழ்ந்திருப்பேனாக.

பதிலோகம் ச க³ச்சே²யம் ப⁴வேயம் நந்தி³நீ ததா² |
ஸுசைலா ம்ருஷ்டஹஸ்தா ச ஸ்வஜநேஷ்டா கு³ணாந்விதா ||2-81-34

இந்த விரதத்தின் சக்தியால் நான் என் கணவருடன் ஒரே உலகத்திற்கு {அவர் செல்லும் உலகத்திற்கே} செல்வேனாக. செல்வச் செழிப்புள்ளவளாகவும், நல்ல ஆடைகளைக் கொண்டவளாகவும், திறந்த கைகளை உடையவளாகவும், சொந்தங்களால் விரும்பப்படுபவளாகவும், சாதித்தவளாகவும் ஆவேனாக” {என்று வானத்திடம் சொல்ல வேண்டும்}

ஏவம் க்ருத்வா ததோ விப்ரம் மது⁴நா ஸ்வஸ்தி வாசயேத் |
திலைரபி ததா² க்ருஷ்ணை꞉ பாயஸேந து போ⁴ஜயேத் ||2-81-35

இவ்வாறு சொல்லிவிட்டு அவள் ஒரு பிராமணனுக்குத் தேனைக் காணிக்கையாக அளித்து, அவனை நலந்தரும் மந்திரங்களை உரைக்கச் செய்து, எள் பாயசத்துடன் அவனுக்கு உணவளிக்க வேண்டும்.

ஏவம் வ்ரதாநி தே³வீபி⁴꞉ க்ருதாந்யமரவர்ணிநி |
மஹாதே³வ்யா புரோக்தாநி ருத்³ரபத்ந்யா ஹரிப்ரியே ||2-81-36

ஓ! தேவர்களின் நிறத்தைக் கொண்டவளும், ஹரியின் அன்புக்குரியவளுமான ஹரியின் மனைவியே {ருக்மிணியே}, இவ்வாறே ருத்ரனின் மனைவியான அந்தப் பெருந்தேவியால் {உமையால்} விளக்கப்பட்ட பல்வேறு விரதங்களைத் தேவிகள் {தேவ மங்கையர்} நோற்றனர்.

அஹம் ப்³ரவீமி தபஸா மதீ³யேந ஸமந்விதா |
ஸர்வா த்³ரக்ஷ்யத² கு³ண்யாநி வ்ரதகாநி ததை²வ ச ||2-81-37

பௌராணாந்யுமயா தே³வ்யா யாநி த்³ருஷ்டாநி வை புரா |
கல்யாணகு³ணயுக்தாநி பாவநாநி ஷு²பா⁴நி ச ||2-81-38

நான் உனக்கு உண்மையைச் சொல்கிறேன்; புராணங்களில் சொல்லப்பட்டதும், முன்பே உமாதேவியால் அடையப்பட்டதுமான மங்கலமான அந்தப் புனிதச் சடங்குகளின் பலன்களை என் தவச் சக்தியின் மூலம் நீ அறுவடை செய்வாயாக {காண்பாயாக}” என்றார் {நாரதர்}”.(37,38)

வைஷ²ம்பாயந உவாச
ருக்மிணீ வ்ரதகம் சக்ரே த்³ருஷ்ட்வா வ்ரதகவிஸ்தரம் |
உமாயா வரதா³நேந த்³ருஷ்ட்வா தி³வ்யேந சக்ஷுஷா ||2-81-39

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “உமையால் அளிக்கப்பட்ட வரத்தின் மூலம் தெய்வீகப் பார்வையைப் பெற்ற ருக்மிணி, விரத விதிகள் அனைத்தையும் கண்டு அதை {விரதத்தைச்} செய்தாள்.

உமாவ்ரதேஷு ஸர்வேஷு வ்ருஷதா³நம் ததா²தி⁴கம் |
ரத்நமாலாப்ரதா³நம் சயதா²ந்நம் ஸார்வகாமிகம் ||2-81-40

காளைகளையும், ரத்தினங்களையும், உணவையும் கொடையளிப்பது உமாவிரதத்தின் அனைத்து வடிவங்களிலும் பெரும் பலன்களையும், விரும்பிய பொருட்கள் அனைத்தையும் கொடுக்கும் என்ற காரணத்தால் அவள் அவற்றைக் கொடையளித்தாள்.

ததா² ஜாம்ப³வதீ சக்ரே புரோமாவ்ரதகம் யதா² |
த³தா³வப்⁴யதி⁴கம் ஸா து ரத்நவ்ருக்ஷம் மநோஹரம் |2-81-41

ஓ! ஜனமேஜயா, ஜாம்பவதியும் இந்த விரதத்தைச் செய்த பிறகு ரத்தினங்களாலான அழகிய மரத்தைக் கொடையளித்தாள்.

ஸத்யா த³தௌ³ ததை²வாத² புரோமாவ்ரதகம் ததா² |
பீதமப்⁴யதி⁴கம் வாஸஸ்தயா த³த்தமுமாவ்ரதே ||2-81-42

சத்யா {சத்யபாமா}, இந்த உமாவிரதத்தைச் செய்து எண்ணற்ற மஞ்சள் ஆடைகளைக் கொடுத்தாள்

ரோஹிண்யாத² ச பா²ல்கு³ந்யா மக⁴யா ச புராதநே |
வ்ரதாநி க²லு த³த்தநி ப³ஹூநி குலவர்த⁴நே ||2-81-43

{ரோஹிணி, பூரம், உத்திரம், மகம் ஆகியோரும் {அகிய நட்சத்திரங்களும்} தங்கள் குலங்களின் புகழுக்கு வழிவகுக்கும்படி பல வகையான நோன்புகளை முன்னர் நோற்றனர்}

த³தௌ³ ஷ²தபி⁴ஷா சைவ வ்ரதகம் புண்யலக்ஷணம் |
யேந நக்ஷத்ரமுக்²யத்வம் ஜகா³ம குருநந்த³ந ||2-81-44

ஓ! குருவின் வழித்தோன்றலே, சதபிஷக் தேவியும் {சதயம் நட்சத்திரமும்}, இந்தப் புனிதச் சடங்கைச் செய்து நட்சத்திரங்களின் மத்தியில் மிக உயர்ந்த நிலையை அடைந்தாள்” என்றார் {வைசம்பாயனர்}.

இதி ஷ்²ரீமஹாபா⁴ரதே கி²லேஷு ஹரிவம்ஷே² விஷ்ணுபர்வணி
பாரிஜாதஹரணே உமாவ்ரதகத²நஸமாப்தௌ
பாரிஜாதஹரணகத²நஸமாப்தௌ சைகாஷீ²திதமோ(அ)த்⁴யாய꞉ ||

ஸமாப்தம் சேத³ம் ஹரிவம்ஷ²ஸ்ய பூர்வார்த⁴ம்

————–—————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாஸ பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ விஷ்ணு பர்வம்–அத்யாயம் – 80–(அங்கநிர்வேஷஹேதூநி வ்ரதாநி)–உறுப்புகளின் நலத்துக்குரிய விரதங்கள் |–

January 31, 2021

பெண்களின் உடல் உறுப்புகளில் மேன்மையேற்படுவதற்குரிய விரதங்களும், விதிகளும்

ப⁴க³வத்யுவாச
நிர்வேஷ்டவ்யம் ஷ²ரீரம் யைர்வ்ரதகை꞉ புண்யகைரபி |
அருந்த⁴தி ப்ரவக்ஷ்யாமி ஸஹைதாபி⁴ர்வரேண து ||2-80-1

தேவி {உமை [அருந்ததியிடம்]} தொடர்ந்தாள், “ஓ! அருந்ததி, மிகச் சிறந்த அருள் நிலையை {ஆனந்தத்தை / பேரின்பத்தை} அடையத் தகுந்ததாக உடலை ஆக்கும் அறச்சடங்குகளை {புண்யக விரதங்களைச்} சொல்லப் போகிறேன் இந்தப் பெண்களுடன் சேர்ந்து நீ கேட்பாயாக.

க்ருஷ்ணாஷ்டமீம் யா க்ஷிபதி ஸ்யாத்³வா மூலப²லாஷி²நீ |
ப்³ராஹ்மநாயைகமஷ²நம் ஸ்வம் த³த்த்வா ப⁴ர்த்ருதே³வதா ||2-80-2

கற்புள்ளவளான ஒரு பெண், மாதத்தின் தேய்பிறை எட்டாம்நாளில் {கிருஷ்ணபக்ஷ அஷ்டமியில்} உண்ணாமல் இருந்தோ, கிழங்குகளையும், கனிகளையும் மட்டுமே உண்டோ ஒரு பிராமணருக்கு உணவளித்தாலும்,

ஷு²க்லவஸ்த்ரா ஷு²பா⁴சாரா கு³ருதை³வதபூஜகா |
ஏவம் ஸம்வத்ஸரம் க்ருத்வா ததோ த³த்³யாத்³த்³விஜாதயே ||2-80-3

கோ³வாலரஜ்ஜுஸுக்ருதம் சாமரம் ச த்⁴வஜம் ததா² |
த³க்ஷிணாபூர்ணமிஷ்டாந்நம் ஷ²க்த்யா வாபி ஷு²சிவ்ரதே ||2-80-4

வெள்ளை ஆடை உடுத்தி, தூய்மையான ஒழுக்கத்தைப் பின்பற்றி, ஆசானையும் தேவர்களையும் ஓராண்டு துதித்து, தன் சக்திக்கேற்ற வகையில் பசுவின் வாலால் செய்யப்பட்ட சாமரம், கொடி ஆகியவற்றையும், பாகிலிடப்பட்ட கனிகளையும் {உணவையும்} இருபிறப்பாளருக்கு {பிராமணர்களுக்குக்} கொடுத்தாலும்,(3,4)

ஊர்மிமந்த꞉ ஸ்வராலாக்³ரா꞉ ஷ்²ரோணிதே³ஷா²வலம்பி³ந꞉ |
தஸ்யா ப⁴வந்தி கேஷா²ஸ்து ப⁴க்திமத்யா ஹி ப⁴ர்தரி ||2-80-5

சுருண்டு, இடை வரை வளர்ந்து, அலைவீசும் கூந்தல் அவளுக்கு அமையும், அவள் தன் கணவனுக்கு மிகப் பிடித்தவளாக ஆவாள்

ஷி²ரோ நிர்வேஷ்டுகாமா து கோ³மயேந ஷி²ர꞉ ஸதீ |
ப்ரக்ஷாலயேந்மலம் தா⁴த்ர்யா பி³ல்வேந ஷ்²ரீப²லேந ச ||2-80-6

கோ³மூத்ரம் ச ஸதா³ ப்ராஷ்²யேச்சி²ர꞉ஸ்நாநம் ச மிஷ்²ரயேத் |
க்ருஷ்ணாம் சதுர்த³ஷீ²ம் த்வேதத்கர்தவ்யம் வரவர்ணிநி ||2-80-7

ப⁴வத்யவித⁴வா சைவ ஸுப⁴கா³ விஜ்வரா ததா² |
ஷி²ரோரோகை³ர்நைவ சாஸ்யா꞉ ஷ²ரீரமபி⁴தப்யதே ||2-80-8

மிகச் சிறந்த அருளுக்குத் தகுந்ததாகத் தன் தலை இருக்க வேண்டுமென விரும்பும் கற்புள்ள ஒரு பெண், கோமயத்தாலும் {பசுஞ்சாணத்தாலும்}, வில்வக் கனியும், நெல்லிக்கனியும் கலந்த பாலாலும் அதை {தலையைக்} கழுவி, கோமியம் {பசுவின் சிறுநீரைப்} பருகி, கோமியம் கலந்த நீரால் தன் தலையைக் கழுவிக் கொள்ள வேண்டும். ஓ! அழகிய பெண்ணே, மாதத்தின் தேய்பிறை பதினான்காம் நாளில் {கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசியில்} இந்த நடைமுறைகளை ஒருத்தி செய்தால், அவள் விதவையாகாமால், நற்பேறு பெற்றவளாகவும், பிணிகளில் இருந்து விடுபட்டவளாகவும் ஆகிறாள். தலையில் உண்டாகும் நோய்களால் அவள் ஒருபோதும் பீடிக்கப்படமாட்டாள்.(6-8)

த³ர்ஷ²நீயம் லலாடம் யா காங்க்ஷதி ஸ்த்ரீ ஷு²சிஸ்மிதே |
திதி²ம் ப்ரதிபத³ம் நித்யம் ஸா க்ஷிபேதே³கபோ⁴ஜநா ||2-80-9

ஓ! தூய புன்னகை கொண்டவளே, அழகிய நெற்றியை விரும்பும் பெண், பிரதமை திதியில் {வளர்பிறை முதல்நாள், தேய் பிறை முதல் நாள் ஆகியவற்றில்} ஒரு வேளை உணவு மட்டுமே உண்ண வேண்டும்.

பயஸா ச ததா²ஷ்²நீயாத்³யாவத்ஸம்வத்ஸரோ க³த꞉ |
ப்³ராஹ்மணாய ததோ த³த்³யாத்படம் ரூப்யமயம் ஷு²ப⁴ம் ||2-80-10

இப்படியே ஓராண்டு முடியும் வரை அவள் பாலும், பால் கலந்த உணவும் மட்டுமே உண்ண வேண்டும். அதன்பிறகு, பொன்னாலான இருக்கை ஒன்றை ஒரு பிராமணனுக்கு அளிப்பவள் மிக அழகிய நெற்றியை அடைவாள்.

லலாடம் ரூபஸம்பந்நமாப்நோதி ஸ்த்ரீ ஸுமத்⁴யமா |
ஸததம் ஸ்த்ரீ த்³விதீயாயாம் ப்⁴ருவோரிச்சே²த்ஸுரூபதாம் ||2-80-11

அழகிய புருவங்களை நாடும் இளமைநிறைந்த பெண், துவிதியையில் {வளர்பிறை பனிரெண்டாம் நாள், தேய்பிறை பனிரெண்டாம் நாள் ஆகியவற்றில்} தொடங்கி ஒரு நாள் விட்டு மறுநாள் காய்கறி கலந்த உணவை உண்டு அவள் வாழ வேண்டும்

அநந்தரோபவாஸேந ஷா²கப⁴க்தாஷ²நா ஸதீ |
தத꞉ ஸம்வத்ஸரே பூர்ணே ப்³ராஹ்மணம் ஸ்வஸ்தி வாசயேத் ||2-80-12

ப²லை꞉ பரிணதை꞉ ஸௌம்யைர்மாஷாணாம் த³க்ஷிணாந்விதை꞉ |
லவணேந ச ப⁴த்³ரம் தே க்⁴ருதபாத்ரேண சாநகே⁴ ||2-80-13

ஓ! மென்மையான பெண்ணே, இவ்வாறு ஓராண்டை நிறைவு செய்யும் அவள் ஒரு பிராமணனுக்குக் கனிந்த கனிகளையும், உப்பையும், நெய் நிறைந்த பாத்திரங்களையும், உளுந்து நிறை கொண்ட பொன்னையும் தக்ஷிணையாகக் கொடுத்து, அவனை ஆசிகூறும் மந்திரங்களை உரைக்கச் செய்ய வேண்டும்.(12,13)

ஆத்மந꞉ ஷோ²ப⁴நௌ கர்ணாவிச்ச²தீ ஸ்த்ரீ ஸுமத்⁴யமா |
நக்ஷத்ரே ஷ்²ரவணே ப்ராப்தே த்⁴ருவம் பு⁴ஞ்ஜீத யாவகம் ||2-80-14

அழகிய காதுகளைப் பெற விரும்பும் இளமைநிறைந்த பெண், சிரவண {திருவோணம்} நட்சத்திரத்தில் கோதுமை உணவு உண்ண வேண்டும்.

தத꞉ ஸம்வத்ஸரே பூர்ணே கர்ணௌ த³த்³யாத்³தி⁴ரண்மயௌ |
க்⁴ருதே ப்ரக்ஷிப்ய விப்ராய பயஸா ஸஹிதே ஷு²பே⁴ ||2-80-15

இவ்வாறு ஓராண்டு நிறைவடைந்ததும், பொன்னாலான இரு காதுகளைத் தெளிந்த நெய்யில் இட்டு, பாலுடன் சேர்த்து அவற்றை ஒரு பிராமணனுக்குக் கொடுக்க வேண்டும்.

நாஸாமிச்சே²ல்லலாடாந்தாமவ்யங்கா³ம் வ்யாதி⁴வர்ஜிதாம் |
திலகு³ல்மம் ஸதா³ ஸிஞ்சேத்³யாவத்புஷ்பேத்³தி⁴ ரக்ஷித꞉ ||2-80-16

நெற்றியை எட்டும் நீண்ட அழகிய மூக்கை விரும்பும் காரிகை, மலர்கள் வளரும் காலம் வரை ஒரு நாள் விட்டு மறுநாள் உண்ணா நோன்பிருந்து, எள்ளும் நீரும் காணிக்கை அளிக்க வேண்டும் {எள் செடிக்கு நீரூற்ற வேண்டும்}.

அநந்தரோபவாஸேந ஸேக்தவ்ய꞉ ஸலிலை꞉ ஸதா³ |
தஸ்மாத³வாப்ய புஷ்பாணி க்⁴ருதே ப்ரக்ஷிப்ய தா³பயேத் ||2-80-17

மலர்கள் வளர்ந்ததும் அவற்றில் சிலவற்றைக் கொய்து, தெளிந்த நெய்யிலிட்டு அவற்றைக் கொடையளிக்க வேண்டும்

ஸ்வக்ஷீப⁴வேயமிதி யா ஸ்த்ரீ காங்க்ஷத்யம்ருதோத்³ப⁴வே |
அநந்தரம் வை பு⁴ஞ்ஜாநா பயஸாத² க்⁴ருதேந வா ||2-80-18

ஓ! தூய புன்னகை கொண்டவளே, ஓ! அமுதத்தில் பிறந்தவளே, அழகிய கண்களைப் பெற விரும்பும் கற்பும், கல்வியுமுள்ள பெண், ஒருநாள் விட்டு மறுநாள் உண்ணா நோன்பிருந்து, பாலும், தயிரும் உண்டு வாழ வேண்டும்.

தத꞉ ஸம்வத்ஸரே பூர்ணே பத்³மபத்ராணி மண்டி³தா |
ததை²வோத்பலபத்ராணி ந்யஸேத்க்ஷீரே ஷு²சிஸ்மிதே ||2-80-19

இவ்வாறு ஓராண்டு நிறைவடைந்ததும் தாமரை இலைகளையும், நெய்தல் இலைகளையும் பாலில் இட்டு அவை மிதந்து கொண்டிருக்கும்போதே

ப்லவமாநாநி விப்ராய ததோ த³த்³யாத்ஸதீ ஸதி |
க்ருஷ்ணஸாரஸமாநாக்ஷீ தத்³த³த்த்வா ப⁴வதி ஸ்ம வை ||2-80-20

அவற்றை ஒரு பிராமணனுக்குக் கொடையளிக்கவேண்டும். ஓ! கற்புள்ள பெண்ணே, இந்தக் கொடையால் அவள் கருப்பு மானைப் போன்ற கண்களை நிச்சயம் பெறுவாள்

இச்சே²தோ³ஷ்டௌ² சாருரூபௌ யா ஸ்த்ரீ த⁴ர்மகு³ணாந்விதா |
ஸா ம்ருந்மயேந து பிபே³து³த³கம் வத்ஸரம் ஸதீ ||2-80-21

அயாசிதேந பு⁴ஞ்ஜீத நவம்யாம் த⁴ர்மபா⁴கி³நீ |
தத꞉ ஸம்வத்ஸரே பூர்ணே வித்³ருமம் தா³துமர்ஹதி ||2-80-22

தேந பி³ம்ப³ப²லாபௌ⁴ஷ்டீ² ஸ்த்ரீ ப⁴வேத்யேவ ஷோ²ப⁴நே |
ஸுப⁴கா³த² வபு꞉புத்ரத⁴நாட்⁴யா கோ³மதீ ததா² ||2-80-23

அழகிய உதடுகளை அடைய விரும்பும் அறம்சார்ந்த, கற்புள்ள பெண், ஓராண்டு காலம் நவமிகளில் {வளர்பிறை ஒன்பதாம் நாள், தேய்பிறை ஒன்பதாம் நாள் ஆகியவற்றில்} வேண்டப்படாத {பிச்சையில் பெறாத} உணவை உண்டு, மண் குடத்தில் இருந்து நீரைப் பருக வேண்டும். இவ்வாறு ஓராண்டு நிறைவடைந்ததும், பவளங்களைக் கொடையளிக்க வேண்டும். ஒரு பெண் இவ்விதியைப் பின்பற்றினால் அவள் நற்பேறு பெற்றவளாகவும், மகன்களைப் பெற்ற அன்னையாகவும், செல்வச்செழிப்புள்ளவளாகவும், பசுக்களை உடையவளாகவும் இருப்பாள், அவளது உதடுகள் கோவைக்கனிகளைப் போல ஒளிரும்.(21-23)

யா சாருரூபாநிச்சே²த த³ந்தாநமரவர்ணிநி |
ஷு²க்லாஷ்டமீம் ந ஸாஷ்²நீயாத்³ப⁴க்தத்³வயமநிந்தி³தா ||2-80-24

அழகிய பற்களை விரும்பும் அழகிய பெண், வளர்பிறையின் எட்டாம் நாளில் {சுக்லபக்ஷ அஷ்டமியில்} இரு வேளை உணவைத் தவிர்க்க வேண்டும்

தத꞉ ஸம்வத்ஸரே பூர்ணே த³த்³யாத்³ரௌப்யமயாந்ஸதீ |
த³ந்தாண்ப்ரக்ஷிப்ய த⁴ர்மஜ்ஞே பயஸ்யதிகு³ணோதி³தே ||2-80-25

ஓ! திறன்மிக்க அறம்சார்ந்த பெண்ணே, கற்புள்ள ஒரு பெண், இவ்வழியில் ஓராண்டை நிறைவு செய்து, வெள்ளியாலான பல்லை பாலில் இட்டு, அவற்றைக் கொடையளிக்க வேண்டும்.

தேந ஸா ஜாதிபுஷ்பாபா⁴ந்த³ந்தாந்ப்ராப்நோதி ஸா ஸதீ |
ஸௌபா⁴க்³யமபி சாப்நோதி ஸபுத்ரத்வம் ததா²நகே⁴ ||2-80-26

ஓ! பாவமற்றவளே, இந்தச் சடங்கைச் செய்யும் கற்புள்ள ஒரு பெண், ஜாதிப்பூக்களைப் போன்ற பற்களையும், நல்லூழையும் {சௌபாக்யத்தையும்}, மகன்களையும் அடைவாள்.

ஸர்வமேவ முக²ம் காந்தமிச்சே²த்³யா ருசிராநநே |
ஸா பூர்ணமாஸ்யாம் ஸ்நாத்வா து ப்ராப்ய சந்த்³ரோத³யே ஷு²பே⁴ ||2-80-27

ஓ! அழகிய முகம் கொண்டவளே, அழகிய முகத்தை விரும்பும் பெண், முழு நிலவு {பௌர்ணமி} இரவில் சந்திரன் எழும்போது நீராடி

யாவகம் பயஸா ஸித்³த⁴ம் த³த்த்வா விப்ராய பா⁴மிநீ |
தத꞉ ஸம்வத்ஸரே பூர்ணே சந்த்³ரம் ரூப்யமயம் ஷு²ப⁴ம் ||2-80-28

பாலில் சமைத்த கோதுமையை ஒரு பிராமணனுக்குக் கொடையளிக்க வேண்டும். இவ்வாறு ஓராண்டு நிறைவடைந்ததும், தூய்மையான வெள்ளியாலான நிலவை முற்றுமலர்ந்த தாமரையில் வைத்து ஒரு பிராமணனுக்குக் கொடுத்து,

பத்³மே பு²ல்லே து விந்யஸ்ய ப்³ராஹ்மணாந்ஸ்வஸ்தி வாசயேத் |
பூர்ணசந்த்³ரமுகீ² தேந தா³நேந ஸ்த்ரீ ஷு²பா⁴ ப⁴வேத் ||2-80-29

அவனை நலந்தரும் மந்திரங்களை உரைக்கச் செய்ய வேண்டும். அத்தகைய கொடையால் ஒரு பெண் முழு நிலவைப் போன்ற அழகிய முகத்தைப் பெறுவாள்

ஸ்தநாவிச்ச²தி யா நாரீ த்ருணராஜப²லோபமௌ |
அயாசிதம் த³ஷ²ம்யாம் ஸா நித்யமஷ்²நீத வாக்³யதா ||2-80-30

பனங்கனிகளைப் போன்ற திரண்டெழும் முலைகளை விரும்பும் பெண், தசமியில் {வளர்பிறை பத்தாம் நாள், தேய் பிறை பத்தாம் நாள் ஆகியவற்றில்} தன் பேச்சைக் கட்டுப்படுத்தி {மௌன விரதம் இருந்து}, வேண்டப்படாத {பிச்சையில் பெறாத} உணவை உண்ண வேண்டும்.

ஸம்வத்ஸரே தத꞉ பூர்ணே த்³வே பி³ல்வே காஞ்சநே ஷு²பே⁴ |
ஸத³க்ஷிணே ப்³ராஹ்மணாய ப்ரயச்ச²தி த்⁴ருதாத்மநே ||2-80-31

இவ்வாறு அவள் ஓராண்டை நிறைவு செய்து தங்கத்தாலான வில்வக் கனிகள் இரண்டை தற்கட்டுப்பாடுடைய பிராமணன் ஒருவனுக்குத் தக்ஷிணையாகக் கொடுக்க வேண்டும்.

ஸௌபா⁴க்³யம் பரமாப்நோதி ப³ஹுபுத்ராம்ஸ்ததை²வ ச |
ஸதோ³ந்நதௌ ஸ்தநௌ ஸா ஸ்த்ரீ பி³ப⁴ர்த்யமரவர்ணிநி ||2-80-32

இதனால் ஒரு பெண் திரண்ட முலைகளையும், பெரும் நற்பேற்றையும், பல மகன்களையும் பெறுவாள்.

ஷா²தோத³ரத்வமிச்ச²ந்தீ க்ஷிபேதே³காந்தபோ⁴ஜிநீ |
பஞ்சம்யாம் தத்ர போ⁴க்தவ்யமந்நம் தோயேந நித்யதா³ ||2-80-33

மெலிந்த வயிற்றை அடைய விரும்பும் பெண், பஞ்சமியில் {வளர்பிறை ஐந்தாம் நாள், தேய்பிறை ஐந்தாம் நாள் ஆகியவற்றில்} தண்ணீருடன் சேர்ந்த உணவை ஒரு வேளை மட்டுமே ஓராண்டு காலம் உண்ண வேண்டும்.

தத꞉ ஸம்வத்ஸரே பூர்ணே த³த்³யாஜ்ஜாதிலதாம் ஷு²பே⁴ |
பு²ல்லாம் ஸத³க்ஷிணாம் த⁴ந்யே ப்³ராஹ்மணாய த்⁴ருதாத்மநே ||2-80-34

ஓராண்டு நிறைவடைந்ததும் தற்காட்டுப்பாடு கொண்ட ஒரு பிராமணனுக்குக் கொடைகளுடன் சேர்ந்து அழகிய ஜாதிக் கொடியையும் கொடுக்க வேண்டும்

ஹஸ்தாவிச்ச²தி யா நாரீ ரூபயுக்தௌ ஸுமத்⁴யமே |
த்³வாத³ஷீ²ம் ஸா க்ஷிபத்வேவம் ஷா²கை꞉ ஸர்வைரநிந்தி³தை꞉ ||2-80-35

ஓ! இளமை நிறைந்த பெண்ணே, அழகிய கைகளைப் பெற விரும்புபவள், ஒவ்வொரு துவாதசி அன்றும் {வளர்பிறை பனிரெண்டாம் நாள், தேய்பிறை பனிரெண்டாம் நாள் ஆகியவற்றில்} அனைத்து வகைக் காய்கறிகளை மட்டுமே உண்ண வேண்டும்.

ஸம்வத்ஸரே தத꞉ ப்ராப்தே ரௌக்மே பத்³மே த³தா³து ஸா |
ப்³ராஹ்மணாயாபி⁴ரூபாய ததா² பத்³மத்³வயம் ஷு²ப⁴ம் ||2-80-36

இவ்வாறு ஓராண்டு நிறைவடைந்ததும் அவள் ஒரு பிராமணனுக்குத் தங்கத்தாலான தாமரை ஒன்றையும், நீரில் பிறந்த இரண்டையும் {இரண்டு தாமரைகளையும்} கொடையளிக்க வேண்டும்.

ஷ்²ரோணீம் விஷா²லாமந்விச்சே²த்ஸ்த்ரீ க்ஷிபத்வேவ ஸுவ்ரதே |
த்ரயோத³ஷீ²மேகப⁴க்தமஷ்²நாத்வேவமயாசிதம் ||2-80-37

ஓ! உறுதியான நோன்புகளைக் கொண்டவளே, அகன்ற பிட்டங்களை {பின்பாகத்தைப்} பெற விரும்புபவள், ஒவ்வொரு திரயோதசியிலும் {வளர்பிறை பதிமூன்றாம் நாள், தேய்பிறை பதிமூன்றாம் நாள் ஆகியவற்றில்} வேண்டப்படாத {பிச்சையில் பெறப்படாத} உணவை ஒரு வேளை மட்டுமே உண்ண வேண்டும்.

தத꞉ ஸம்வத்ஸரே பூர்ணே லவணம் ஸம்ப்ரயச்ச²து |
ப்ரஜாபதிமுகா²காரம் க்ருத்வா தத்ர வராநநே || 2-80-38

ஓ! அழகிய முகம் கொண்டவளே, இவ்வாறு ஓராண்டு நிறைவடைந்ததும் பிரஜாபதியின் {பிரம்மனின்} முக வடிவில் உப்புக்குவியலை அமைத்து அதைக் கொடையளிக்க வேண்டும்.

காஞ்சநம் சைவ தா³தவ்யம் ததா³காரஸ்ய ஸர்வதா³ |
அஞ்ஜநேந ச த⁴ர்மஜ்ஞா ஷ²நகைரவசூர்ணயேத் ||2-80-39

அறச்சடங்குகளை அறிந்த பெண் அதன் பிறகு, தங்கத்தாலான அவனது {பிரம்மனின்} வடிவைக் கொடையளிக்க வேண்டும். அஞ்சன மையையும், பிற பொடிகளையும் தவிர்க்க வேண்டும்[பொதுவாக விரதக் காலங்களில் மையிடுவது தவிர்க்கப்பட வேண்டும்].

ரத்நாநி சைவ பூர்ணாநி வாஸோ ரக்தம் ச தா³பயேத் |
தேந ஷ்²ரோணீமபி⁴மதாம் ஸ்த்ரீ ஸௌம்யே ப்ரதிபத்³யதே ||2-80-40

உடையாத {சிறந்த} ரத்தினங்களையும், செவ்வாடைகளையும் கொடையளிக்க வேண்டும். ஓ! மென்மையான பெண்ணே, இதைச் செய்வதால் அவள் தன் இதயத்தில் விரும்பும் வகையிலான பிட்டத்தை அடைவாள்.

மது⁴ராம் வாசமிச்ச²ந்தீ வர்ஜயேல்லவணம் ஸதீ |
ஸம்வத்ஸரம் வா மாஸம் வா ப்ரய்ச்சே²ல்லவணம் தத꞉ ||2-80-41

ஸத³க்ஷிணம் ப்³ராஹ்மணய பரம் மாது⁴ர்யமிச்ச²தீ |
ஷு²கவாக்யாச்ச²தகு³ணம் ப⁴வத்யமரவர்ணிநி ||2-80-42

இன் சொல் விரும்பும் கற்புள்ள பெண், ஓராண்டு காலம் உப்பு பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். அல்லது ஒரு மாதமாவது தவிர்க்க வேண்டும், பிறகு ஒரு பிராமணனுக்குப் பணக்கொடையுடன் உப்பையும் கொடுக்க வேண்டும். அந்த அழகிய பெண் இதனால் கிளிகளைக் காட்டிலும் இனிமைமிகுந்த சொற்களைப் பேசுபவளாவாள்.(41,42)

கூ³ட⁴கு³ல்ப²ஷி²ரௌ பாதா³விச்ச²ந்த்யா ஸோமநந்தி³நி |
ஷஷ்ட்²யாம் ஷஷ்ட்²யாம் வராரோஹே போ⁴க்தவ்யம் ஸலிலௌத³நம் ||2-80-43

ஓ! சோமனின் மகளே {அருந்ததி}, அழகிய கால்களை அடைய விரும்பும் பெண் ஒவ்வொரு சஷ்டியிலும் {வளர்பிறை ஆறாம் நாள், தேய்பிறை ஆறாம் நாள் ஆகியவற்றில்} நீர்சார்ந்த உணவை உட்கொள்ள வேண்டும்.

அக்³நிர்வா ப்³ராஹ்மணோ வாபி ந ஸ்ப்ரஷ்டவ்ய꞉ பதா³ ஸதா³ |
யதா³ பதா³ ஸ்ப்ருஷே²த்தம் ச வந்தே³த தபஸாந்விதே ||2-80-44

ஓ! தபங்களில் ஈடுபடுபவளே, அவள் தன் கால்களால் நெருப்பையோ, பிராமணனையோ தீண்டாதிருக்க வேண்டும்; எப்போதாவது அவ்வாறு நேர்ந்து விட்டால் அந்தக் கால்களையோ, பிராமணனையோ துதிக்க வேண்டும்.

பாதே³ந ந ச வை பாத³ம் ப்ரக்ஷாலயிதுமர்ஹதி |
ஏதைர்நித்யவ்ரதைர்யுக்தா த⁴மஜ்ஞா பதிதே³வதா ||2-80-45

அறச்சடங்குகளை நன்கறிந்தவளான கற்புள்ள ஒரு பெண் இந்த நோன்பை நோற்கும்போது, தன்னுடைய ஒரு காலால் மற்றொரு காலைக் கழுவக்கூடாது {காலால் கால் தேய்த்துக் கழுவக் கடாது}

கூர்மௌ ரூப்யமயௌ த³த்³யாத்³ப்³ராஹ்மணாய பதிவ்ரதே |
தௌ வராய ப்³ராஹ்மணாய ஸ்தா²பயித்வா க்⁴ருதே(அ)நகே⁴ ||2-80-46

ஓ! பாவமற்றவளே, ஓ! கற்புள்ள பெண்ணே, இந்த விரதத்தின் நிறைவில் அவள் தங்கத்தாலான ஆமைகள் இரண்டைத் தெளிந்த நெய்யில் இட்டு அவற்றை ஒரு பிராமணனுக்குக் கொடையளிக்க வேண்டும்

பத்³மே சாதோ⁴முகே² க்ருத்வா த³த்³யாத்³விப்ராய நந்தி³நீ |
ரக்தைர்த்³ரவ்யைர்மிஷ்²ரயித்வா காஞ்சநேநாப்⁴யலங்க்ருதே ||2-80-47

ஓ! அழகிய பெண்ணே, அதன்பிறகு இரண்டு தாமரைகளைக் கீழ்முகமாக வைத்து அவற்றைச் சிவப்பு நிறப் பொருட்களுடன் கலந்து ஒரு பிராமணனுக்குக் கொடையளிக்க வேண்டும்

ஸர்வமேவ து யா கா³த்ரமிச்ச²த்யதிமநோஹரம் |
த்ரிராத்ரம் புஷ்பகாலே ஸா கரோது பதிதே³வதா ||2-80-48

ஓ! தூய பெண்ணே, உடலில் அனைத்து உறுப்புகளையும் அழகாகப் பெற விரும்பும் கற்புள்ள பெண், மலர்கள் மலரும் பருவ காலத்தில் {மாதவிடாயின் போது / ரஜஸ்வலா காலத்தில் என்றும் கொள்ளலாம்} மூன்று இரவுகள் உண்ணாநோன்பு நோற்க வேண்டும்

கௌமுத்³யாமத²வா ஷஷ்ட்²யாம் மாத்⁴யாம் சாஷ்²வயுஜே ததா² |
மாதரம் பிதரம் சைவ மந்யதே திதி²தை³வதம் ||2-80-49

ஆடி, ஐப்பசி, கார்த்திகை, மாசி மாதங்களில் ஏதாவதொன்றின் முழுநிலவு நாளில் {பௌர்ணமியில்} தன் தந்தை தாயாரை அந்த நாளின் தலைமை தெய்வமாகத் துதிக்க வேண்டும்

க்⁴ருதம் ச நித்யம் விப்ரேப்⁴யோ த³தா³து லவணம் ததா² |
ஸம்மார்ஜநம் க்³ருஹே சைவ கரோது பதிதே³வதா ||2-80-50

ஓ! மதிப்புக்குரிய பெண்ணே, அந்தப் பெண் அந்தக் காலத்தில் கணவனையே தெய்வமாகக் கருதி நாள்தோறும் தெளிந்த நெய்யையும், உப்பையும் ஒரு பிராமணனுக்குக் கொடையளிக்க வேண்டும்.

உபலேபநம் ச த⁴ர்மஜ்ஞே ப³லிகர்ம ச மாநிநி |
வாக்³து³ஷ்டா சைவ மா ஷு²ப்⁴ரே ப⁴வத்வாத்மார்த²பண்டி³தா ||2-80-51

பர்யஷ்²நாது ச ஸா கஞ்சித³பி தா³ஸம் யஷ²ஸ்விநி |
ப³லிம் ஸ்ருஜத்வதத்²யம் ச பரித்யஜது பா⁴மிநி ||2-80-52

அவள் தன் வீட்டைத் தூய்மைப்படுத்தி, களிமண்ணால் பூச {சாணத்தால் மெழுகி சுத்தம் செய்ய} வேண்டும். ஓ! தூய்மையானவளே, ஓ! சிறப்புமிக்கப் பெண்ணே, கணவனையே தன் தெய்வமாகக் காணும் காரிகை அந்தக் காலத்தில் சொல்லாலும் பாவம் இழைக்காதவளாக, காய்கறிகளை உண்ணாதவளாக, தூய்மையற்ற உணவேதும் கொடையளிக்காதவளாக இருக்க வேண்டும்” {என்றாள் உமாதேவி}.(51,52)

இதி ஷ்²ரீமஹாபா⁴ரதே கி²லேஷு ஹரிவம்ஷே² விஷ்ணுபர்வணி
பாரிஜாதஹரணே வ்ரதகத²நே(அ)ஷீ²திதமோ(அ)த்⁴யாய꞉

————–—————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாஸ பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ விஷ்ணு பர்வம்–அத்யாயம் – 79–புண்யகவ்ரதவர்ணனம்)–உமா விரதம் | —

January 31, 2021

புண்யக நோன்பு தொடர்பான நியமங்கள், கொடைகள்; பிள்ளை வரம் முதலிய வரங்களுக்கான நியம விதிகள்; உமா விரதம்.

உமோவாச
விதி⁴னைதேன க்ருத்ஸ்னேன ஸ்த்ரீ ஸதா³ ப⁴ர்த்ருதே³வதா |
சரேத்ஸம்வத்ஸரம் தா³ந்தா ஷண்மாஸான்மாஸமேவ ச ||2-79-1

ஸ்த்ரியோ ஹ்யாவாஹயேத்ஸாத்⁴வீரேகாத³ஷ² ஸமாதி⁴னா |
ஸ்வயம் சைவ விதி⁴ர்த்³ருஷ்டோ வ்ரதகானாம் மயா ஷு²ப⁴꞉ ||2-79-2

உமை {அருந்ததியிடம்}, “இவ்வாறே தற்கட்டுப்பாட்டைக் கொண்டவளும், கற்புடையவளுமான ஒரு பெண், பரிந்துரைக்கப்பட்ட அனைத்து விதிகளின் படி ஒரு வருடத்திற்கோ, ஆறு மாதங்களுக்கோ, ஒரு மாதத்திற்கோ நோன்பை நோற்க வேண்டும்; அதன் பிறகு அவள் கற்புடைய பதினோரு பெண்மணிகளை மதிப்புடன் அழைக்க வேண்டும். ஓ! மங்கலப் பெண்ணே {அருந்ததியே}, நான் இந்தப் புனித விதியைப் பின்பற்றினேன்.(1,2)

அத்³பி⁴ர்த³த்³யாத்ஸதீ꞉ ஸர்வா யா மூலவ்ரதினீ ப⁴வேத் |
தாஸாம் து நிஷ்க்ரயோ தே³ய꞉ காலதே³ஷா²னுரூபத꞉ ||2-79-3

இந்த நோன்பை நோற்கும் பெண்மணி {மூலவர்த்தினி}, கணவர்களின் நம்பிக்கைக்குரியவர்களாக இருக்கும் அந்தப் பெண்களுக்கு நீருடன் சேர்த்து காணிக்கைகளை அளிக்க வேண்டும். அவர்களுக்கு இடத்திற்கும், காலத்திற்கும் {கால, தேச, வர்த்தமானத்திற்குத்} தகுந்த ஈடான மாற்றாக அந்தக் கொடை அளிக்கப்பட வேண்டும்.

ததோ மாஸாந்தஷு²க்லஸ்ய திதௌ² ச நவமீ ததா² |
ஆராத⁴யித்வா கர்தவ்யம் வ்ரதகஸ்யாபவர்ஜனம் ||2-79-4

பிறகு அவள், மாத முடிவின் வளர்பிறை நவமி திதியில் துதிகளைத் துதித்துச் சடங்கை நிறைவு செய்ய வேண்டும்

உபவாஸமஹோராத்ரம் வ்ரதகம் சாபி நிஷ்²சிதம் |
ஆதௌ³ சாந்தே ச குர்வீத வ்ரதகஸ்யாபி ஸித்³த⁴யே ||2-79-5

விரதம் செய்ய விரும்பும் பெண், அதைச் சாதிப்பதற்காக அதன் {விரதத்தின்} தொடக்கத்திலும், முடிவிலும் பகலிரவில் உண்ணா நோன்பிருக்க {அஹோராத்ரம் உபவாஸ விரதம் செய்ய} வேண்டும்.

க்ஷுரகர்ம ததோ ப⁴ர்துராத்மனஷ்²சைவ காரயேத் |
உத்ஸாத³னம் ச ஸ்னானம் ச தஸ்மின்னஹனி ஸம்ஸ்ம்ருதம் ||2-79-6

அதன் பிறகு கணவனின் தலைமுடி வெட்டப்பட வேண்டும். அந்தப் பெண்ணின் நகங்கள் வெட்டப்பட வேண்டும். அதே நாளில் நோன்பின் நிறைவில் அவள் நீராட வேண்டும்.

ததோ விவாஹவத்ஸ்னானம் விஹிதம் புண்யகே ஷு²பே⁴ |
மண்ட³னம் சைவ விஹிதம் மால்யதா⁴ரணமேவ ச ||2-79-7

அதன்பிறகு, ஓ! மங்கலப் பெண்ணே, அவள் நீராடிவிட்டு, திருமண நிகழ்வின் போது அலங்கரிக்கப்படுவதைப் போல ஆபரணங்களாலும், மாலைகளாலும் தன்னை அலங்கரித்துக் கொள்ள வேண்டும்

கும்பை⁴ஸ்து ஸ்னாப்யமானேமம் ஸாத்⁴வீ மந்த்ரமுதீ³ரயேத் |
ப⁴ர்து꞉ பாதௌ³ நமஸ்க்ருத்ய மனஸா வாத² வா கி³ரா ||2-79-8

அவள், பின் வரும் மந்திரத்தை உரைத்த பிறகு, மனத்தாலோ சொற்களாலோ கணவனின் பாதங்களை வணங்கி, குடத்தில் உள்ள நீரைக் கொண்டு நீராட வேண்டும்.

ஆபோ தே³வ்ய ருஷீணாம் ஹி விஷ்²வதா⁴த்ர்யோ
தி³வ்யா மத³ந்த்யோ யா꞉ ஷ²ங்கரா த⁴ர்மதா⁴த்ர்ய꞉ |
ஹிரண்யவர்ணா꞉ பாவகா꞉ ஷி²வதமேன
ரஸேன ஷ்²ரேயஸோ மாம் ஜுஷந்து ||2-79-9

{அந்த மந்திரம்}, “நீரின் தேவியே {ஜலதேவியே} ரிஷிகளைப் பெருகச் செய்பவளும் {வளர்க்கும் தாயும்}, அண்டத்தைப் பாதுகாப்பவளுமாவாள். தேவலோகத்தில் பிறந்த அவள் (வேள்வியில்) மதந்தி {நன்மையையும், இன்பத்தையும் வளர்ப்பவள்} என்று அழைக்கப்படுகிறாள். அறத்தின் பிறப்பிடமாக இருப்பதால் அவள் மகிழ்ச்சி தருபவளாக இருக்கிறாள். அவள் தூய்மையானவளாகவும், தூய்மைப்படுத்துபவளாகவும் இருக்கிறாள். எனவே, மிக உயர்ந்த நன்மையைத் தரும் சாற்றாலும் {மங்கல ரசத்தாலும்}, அருளாலும் அவள் என்னை நிறைக்கட்டும்” {என்பது நீரின் தேவியைத் துதிக்கும் மந்திரமாகும்}[ரிஷிகளைப் பெருகச் செய்பவளும், அண்டத்தைப் பாதுகாப்பவளுமான நீரின் தேவியே, தேவலோகத்தில் பிறந்தவள் நீயே, நன்மையையும், இன்பத்தையும் வளர்க்கும் மதந்தி என்று வேள்வியில் அழைக்கப்படுபவள் நீயே. அறத்தின் பிறப்பிடமும், மகிழ்ச்சியைத் தருபவளும் நீயே. தூய்மையானவளும், தூய்மைப்படுத்துபவளும் நீயே. ஓ நீரின் தேவியே, மிக உயர்ந்த நன்மையைத் தரும் உன்னுடைய மங்கலச் சாற்றாலும், அருளாலும் என்னை நிறைப்பாயாக” என்றும் படிக்கலாம்.].

அபாமேஷ ஸ்ம்ருதோ மந்த்ர꞉ ஸர்வத்ரான்யத்ர மே ஷ்²ருணு |
மந்த்ரா꞉ புராணவிஹிதா꞉ ஸ்த்ரீணாம் ஸர்வாங்க³ஷோ²ப⁴னே ||2-79-10

நீருக்கான {சொல்லப்படும்} இந்த மந்திரம் எங்கும் கேட்கப்படுகிறது. ஓ! முற்றிலும் அழகிய அங்கங்களைக் கொண்டவளே {அருந்ததி}, பெண்களுக்கெனப் புராணங்களில் அனுமதிக்கப்படும் பின் வரும் மந்திரங்களைக் கேட்பாயாக.

ஷு²பா⁴வ்யயா கு³ணினீ யுக்தத⁴ர்மா
ப⁴ர்த்ரா ஸாகம் மம தா³ஸ்யா வரேண |
மா கர்மனா மனஸா வாபி வாசா
ப⁴ர்துர்ப⁴வேயம் ருஷதீ ஸ்யாம் வஷ²ங்கா³ ||2-79-11

{அந்த மந்திரங்கள் பின்வருமாறு}, “நான் என் கணவனுக்கு நன்மை செய்வேனாக, நான் செல்வத்தை வீணாக்காமல் இருப்பேனாக, நான் திறன்மிக்கவளாக இருந்து, என் கணவருடன் சேர்ந்து அறச்சடங்குகளைச் செய்து வரத்திற்காக ஓர் அடிமையைப் போல அவருக்குத் தொண்டு செய்வேனாக. செயல்களாலோ, மனத்தாலோ, சொற்களாலோ நான் என் கணவரை அலட்சியம் செய்யாதிருப்பேனாக. கோபத்துடன் இருந்தாலும் அவரை நான் பின்பற்றுவேனாக.

ஸபத்னீநாமதி⁴ நித்யம் ப⁴வேயம்
ஸபுத்ரா ஸ்யாம்ஸுப⁴கா³ சாருரூபா |
ஸம்பன்னஹஸ்தா கு³ணவாதி³னீ ச
ஸர்வாத்மனா ஸ்யாம் மா த³ரித்³ரா ப⁴வேயம் ||2-79-12

என் கணவரின் பிற மனைவியருக்கு மேலானவளாகவும், அழகிய வடிவத்தைக் கொடையாகக் கொண்டவளாகவும், நற்பேறு பெற்றவளாகவும், மகன்களுடன் கூடிய அன்னையாகவும், உணவைப் பகிர்ந்தளிப்பதில் தாராளம் கொண்டவளாகவும், பிறரின் சாதனைகளைச் சொல்பவளாகவும், அனைத்து வகையிலும் வறுமையில் இருந்து விடுபட்டவளாகவும் இருப்பேனாக.

பதிஷ்²ச மே ஸ்யாத்ஸுமுகோ² மத்ப்ரதீக்ஷோ
நித்யம் மத்³ப⁴க்த꞉ ஸ்யான்மன்மதிர்மத்³க³திஷ்²ச |
ப்ரீதிஷ்²ச நௌ ஸ்யாச்சக்ரவாகானுரூபா
மனோவிராகோ³ ந ப⁴வேத்ஸாது⁴வத்ஸ்யாத் ||2-79-13

என் கணவர் அழகிய முகத்துடன் இருக்கட்டும்; அவர் என்னைச் சார்ந்தவராகவும், என்னில் நிலைத்த மனம் கொண்டவராகவும், என்னிடம் அர்ப்பணிப்பு கொண்டவராகவும், என்னைப் பின்பற்றுபவராகவும் இருக்கட்டும். சக்கரவாகப் பறவைகளின் இணையைப் போல எங்கள் அன்பும் இருக்கட்டும்; எங்களுக்கிடையில் பற்றில்லாமை வளராதிருக்கட்டும், மங்கலநிலையால் நாங்கள் மகுடம் சூட்டப்படுவோமாக.

லோகான்ஸாத்⁴வீநாமுத்தமானாம் வ்ரஜேயம்
யாபி⁴꞉ ஸர்வம் தா⁴ர்யதே விஷ்²வரூபம் |
உபே⁴ குலே யா꞉ ஷு²பா⁴꞉ பாவயந்தி
பிதுர்ப⁴ர்துஷ்²ச பதிப⁴க்த்யோர்ஜிதாஷ்²ச||2-79-14

கணவரிடம் கொண்ட அர்ப்பணிப்பின் மூலம் மிக உயர்ந்த பண்பை அடைந்து, தங்கள் தந்தையின் குடும்பத்தையும், கணவரின் குடும்பத்தையும் தூய்மையாக்கி, மொத்த அண்டத்தையும் நிலைநிறுத்தி வரும் கற்புடைய மிகச் சிறந்த பெண்மணிகளின் உலகிற்கு நான் செல்வேனாக.

பூ⁴மிர்வாயுர்ஜலமாகாஷ²மக்³னி꞉
ரந்த꞉ க்ஷேத்ரஜ்ஞ꞉ ப்ரக்ருதிர்யோ மஹாம்ஷ்²ச |
அஹங்காரஷ்²ச மம ஸாக்ஷ்யே நியுக்தா꞉
ஸ்மரேயுர்மே நிஷ்²சயம் ச வ்ரதம் ச ||2-79-15

இருக்கும் நிலம், காற்று, நீர், ஆகாயம், நெருப்பு, வானம், ஆன்மா, இயற்கை {பிரக்ருதி}, பெருமை மற்றும் அகங்காரக் கோட்பாடுகள் {மஹத்தத்வம், அஹங்காரம்} ஆகியவையும், முனிவர்களும் என் சாட்சிகளாக இருந்து, என் தவங்களையும், மதிப்புமிக்க நம்பிக்கையையும் {என்னுடைய இந்த விரதத்தை} நினைவில் கொள்ளட்டும்.

யைராரப்³தோ⁴ தே³ஹினாம் பௌ⁴திகோ(அ)யம்
விதி⁴꞉ ஸத்த்வாத்³யைர்பூ⁴தயுக்தை꞉ ஸபீ³ஜை꞉ |
ஸந்த்வேதே மே ஸாக்ஷிண꞉ ஸர்வஸம்ஸ்தா²
வ்ரதே சாஸ்மிந்நிஷ்²சயே சாபி நித்யம் ||1-79-16

உயிரினங்களின் பணிகளில் ஈடுபடுபவர்களும், மனிதர்களுக்குப் பிறந்தவர்களும், பிற உயிரினங்களுக்குப் பிறந்தவர்களும், சத்வம் முதலிய குணங்களைக் கொண்டவர்களும், உயிரினங்களின் உடல்களைப் படைத்தவர்களும், எங்கும் இருப்பவர்களுமான அடிப்படை படைப்பாளிகள் {தேவர்கள்} என்னுடைய விரதத்தையும், மதிப்புமிக்க நம்பிக்கையையும் சாட்சியாகக் காண்பார்களாக.

சந்த்³ராதி³த்யௌ புண்யஸாக்ஷீ யமஷ்²ச
தி³ஷ²꞉ ஸர்வா த³ஷ² சாத்மாச மேயம் |
ஸந்த்வேதே வை ஸாக்ஷிண꞉ ஸர்வஸம்ஸ்தா²
வ்ரதே சாஸ்மிந்நிஷ்²சயே சாபி நித்யே ||2-79-17

புனிதச்செயல்களின் சாட்சிகளான சூரிய சந்திரரும், யமனும், பத்து திக்குகளும், என் மனமும் என் தவங்களுக்கும், உறுதிக்கும் சாட்சிகளாக இருக்கட்டும்” {என்பவையே அந்த மந்திரங்கள்}.

மந்த்ரைரேதை꞉ புராணோக்தை꞉ ஸர்வத்³ரவ்யாபி⁴மந்த்ரணம் |
வ்ரதசர்யாத்ப்ரப்⁴ருதி வை புராணே ஸமுதா³ஹ்ருதம் ||2-79-18

ஒரு விரதத்தின் தொடக்கத்திலிருந்தே ஒவ்வொரு நாளும் அனைத்துப் பொருட்களும் இந்த மந்திரத்தால் ஊட்டமளிக்கப்பட {மந்திரிக்கப்பட} வேண்டும் என்று புராணங்களில் விதிக்கப்பட்டிருக்கிறது.

ஸ்னாத்வாத² வாஸஸீ த³த்³யாத்³ப⁴ர்து꞉ கர்த்ய ஸ்வ்யம் ஷு²பே⁴ |
அதா²த்மகர்திதம் ந ஸ்யாச்சு²பே⁴ விக்⁴னேன கேனசித் ||2-79-19

வாஸோ(அ)ன்யதே³வ த³த்³யாச்ச ஷ்²வேதம் முக்²யம் நவம் ஷு²சி |
ஸ்வகர்திதம் ச ஸூத்ரம் து வாஸஸா தேன மிஷ்²ரயேத் ||2-79-20

ஓ! மங்கல அருந்ததி, இவ்வாறு நீராடிய அவள் தன் கையால் செய்யப்பட்ட இரண்டு உடைகளைத் தன் கணவனுக்குக் கொடுக்க வேண்டும். ஏதோ தடையால் தன் கையால் இரண்டு உடைகளைச் செய்ய முடியவில்லையெனில், அவள் தன் கையால் பின்னப்பட்ட நூலுடன் சேர்த்து வெள்ளை நிறத்திலான மற்றொரு புத்தாடையைக் கொடுக்க வேண்டும்.(19,20)

ததோ த்³விஜம் ஷு²சிம் தா³ந்தம் ஜ்ஞானவிஜ்ஞானகோவித³ம் |
போ⁴ஜயேச்ச யதா²ஷ²க்த்யா ஸஹ ப⁴ர்த்ரா ஸுமத்⁴யமே ||2-79-21

ஓ! இளம்பெண்ணே, அதன் பிறகு அவள் தன் கணவனுடன் சேர்த்து, பகுத்தறியும் ஞானம் கொண்டவரும், தற்கட்டுப்பாட்டுடன் கூடியவரும், தூய்மையானவருமான மற்றொரு பிராமணருக்கும் தன் சக்திக்குத் தகுந்த வகையில் உணவளிக்க வேண்டும்

ப்³ராஹ்மணஸ்யாபி தா³தவ்யம் வாஸோயுக்³மம் மஹாதபே |
ஷ²ய்யாஸனம் க்³ருஹம் தா⁴ன்யம் தா³ஸம் தா³ஸீம் ததை²வ ச ||2-79-22

அவள் அந்தப் பிராமணருக்கு, இரண்டு உடைகளையும், படுக்கைகளையும், வாகனங்களையும், தானியங்களையும், ஆண், பெண் பணியாட்களைக் கொண்ட ஒரு வீட்டையும் கொடுக்க வேண்டும்.

அலங்கார꞉ ஷ²க்திதஷ்²ச ரத்னபர்வத ஏவ ச |
ஸர்வதா⁴ன்யஸமுன்மிஷ்²ரஸ்திலைஷ்²ச ஸவிஷே²ஷத꞉ ||2-79-23

மேலும் அவள், தன் சக்திக்குத் தகுந்த வகையில் ஆபரணங்களையும், பல்வேறு வகையான தானியங்களையும், குறிப்பாக எள் கலந்த ரத்தின மலையையும் கொடுக்க வேண்டும்

வாஸோபி⁴ஷ்²ச ப்ரதிச்ச²ன்னோ நானாவர்ணைரருந்த⁴தீ |
ஹஸ்த்யஷ்²வாவசயஷ்²சைவ தே³யா கௌ³ரேவ ச த்⁴ருவம் ||2-79-24

அவள் பல்வேறு வண்ண விரிப்புகளால் மறைக்கப்பட்ட யானைகளையும், குதிரைகளையும், பசுக்களையும் கொடையளிக்க வேண்டும்

லவணப்ரதிமாம் த³த்³யான்னவனீதஸ்ய சாபராம் |
கு³ட³ஸ்ய மது⁴னஷ்²சைவ ஸுவர்ணஸ்ய ச ஷோ²ப⁴னாம் ||2-79-25

மேலும் அவள் உப்பு, வெண்ணெய், பாகு {வெல்லம்}, தேன், பொன்,

ததை²வ ஸர்வக³ந்தா⁴னாம் ரஸானாம் ப்ருத²கே³வ ச |
ததா² ஸுமனஸாம் த³த்³யாத்³ரௌப்யஸ்யௌது³ம்ப³ரஸ்ய ச ||2-79-26

ப²லானாம் சைவ ஸர்வேஷாம் வாஸஸாமபி நந்தி³னி |
சித்ரப்ரதிக்ருதம் சைவ காஷ்ட²ஸ்ய ப்ரதிமாம் ததா² ||2-79-27

பல்வேறு நறுமணப் பொருட்கள், சாறுகள், மலர்கள், வெள்ளி, தாமிரப் பாத்திரங்கள், அனைத்து வகைக் கனிகள், ஆடைகள்,(26,27

ஷி²லாம் ப்ரதிக்ருதிம் சைவ த³த்⁴னோ(அ)த² பயஸஸ்ததா² |
ஸர்பிஷா தூ³ர்வயா சைவ யா சான்யாஅமப்யபீ⁴ப்ஸதி ||2-779-28

மரம் {மரத்தாலான சிலைகள்}, கல் {கல்லாலான சிலைகள்}, தயிர், பால், தெளிந்த நெய், தூர்வம் {அருகம்புல்} ஆகியவற்றையும், தான் விரும்பும் பிற பொருட்களையும் கொடையளிக்க வேண்டும்

காலதே³ஷா²னுரூபம் ச தே³யம் விப⁴வத꞉ ஸதி |
அல்பம் வா ப³ஹுலம் வாபி ப⁴ர்துஷ்²ச²ந்தே³ன ஸர்வதா³ ||2-79-29

அவள் அவற்றுடன் சேர்த்து உமை, மஹேஷ்வரரின அழகிய சிலைகளையும் அவற்றைப்போன்ற ஓவியங்களையும் கொடையளிக்க வேண்டும். ஓ! கற்புக்கரசியே, கணவனின் விருப்பப்படியும், அவனது வாழ்வுக்கான வழிமுறைகள், நாடு, காலம் ஆகியவற்றுக்கு இணக்கமானபடியும் மட்டுமே சிறிய அளவிலோ, பெரிய அளவிலோ கொடைகளனைத்தும் அளிக்கப்பட வேண்டும்

திலபாத்ரம் ப்ரதா³தவ்யம் ந தே³யம் நனு ஷோ²ப⁴னே |
கௌ³ஸ்த்வவஷ்²யம் ப்ரதா³தவ்யா கபிலா காம்ஸ்யமேவ ச ||2-79-30

கணவன் அனுமதி தந்தால் அவள் எள் நிறைந்த பாத்திரங்களையும், வெண்கலப்பாத்திரங்களையும், கபிலை பசுவையும் கொடையளிக்க வேண்டும்.

க்ருஷ்ணாஜினம் ச ஸுப⁴கே³ஸதிலம் வாஸஸான்விதம் |
ஆத³ர்ஷ²ஷ்²சைவ கூர்சஷ்²ச ததா²ஜினமனிந்தி³தே ||2-79-31

ஓ! குற்றமற்றவளே, நல்லூழ் கொண்ட காரிகையே {சௌபாக்யவதி}, எள், ஆடைகள், கண்ணாடி, மான் தோல் ஆகியவற்றுடன் ஒரு கருப்பு மான் தோலைக் கொடுத்தால் அவள் விரும்பிய பொருட்கள் அனைத்தையும் அடைவாள்.

ஏதத்³த³த்வா ஸர்வகாமானாப்னோதி வரவர்ணினி |
புரோ(அ)தி⁴கா புத்ரவதீ ஸுப⁴கா³ ரூபபா⁴கி³னீ ||2-79-32

ம்ருஷ்டஹஸ்தா த⁴னாட்⁴யா ச ஸ்த்ரீ ப⁴வத்யமலேக்ஷணா |
இச்ச²யா லப⁴தே சைவ கன்யா ரூபகு³ணான்விதா꞉ ||2-79-33

ஓ! அழகிய முகம் கொண்டவளே, ஒரு பெண் இவ்வாறு ஒரு விரதத்தை (நோன்பை) நிறைவேற்றினால், அவள் பெண்களில் முதன்மையானவளாகவும், நல்லூழ் பெற்றவளாகவும், மகன்களின் அன்னையாகவும், அழகியாகவும், தயாள குணமும், செல்வச் செழிப்பும், தாமரைக் கண்களையும் கொண்டவளாகவும் திகழ்வாள். அவள், தன் இதயம் விரும்பும் திறனுடனும், அழகுடனும் கூடிய ஒரு மகளையும் பெறுவாள்.(32,33)

ப⁴வந்தி ஸுப⁴கா³ஷ்²சர்யாஸ்ததை²வ ச புரோ(அ)தி⁴கா꞉ |
புத்ரவத்யோ த⁴னாட்⁴யாஷ்²ச ஷீ²லவத்யஷ்²ச நித்யதா³ ||2-79-34

இவ்வழியில் கொடையளிப்பவர்கள் நல்லூழுடைய பெண்கள் அனைவரிலும் முதன்மையானவர்களாகவும், மகன்களின் அன்னையாகவும், செல்வச்செழிப்பும், திறனும், நற்குணமும் கொண்டவர்களாகவும் திகழ்வார்கள்

அருந்த⁴தி க்ருதம் ஹ்யேதன்மயைவ ப்ரத²மம் யத꞉ |
உமாவ்ரதகமித்யேவ க்²யாதமத்ர மஹீதலே ||2-79-35

ஓ! அருந்ததி, நானே இந்த விரதத்தை முதலில் செய்தவளாக இருப்பதால் இஃது உமா விரதம் என்ற பெயரை உலகில் பெற்றது.

ஏததே³வோத்தமம் ஸ்த்ரீணாம் வ்ரதம் தஸ்மாத்ஸமாசரேத் |
ஸர்வகாமானவாப்னோதி த³த்வைவைதத³னிந்தி³தே ||2-79-36

ஓ! குற்றமற்ற பெண்ணே, இதுவே பெண்கள் செய்யும் விரதங்களில் சிறந்த விரதமாகும். மேலும் இந்த விரதத்திற்கான விதிமுறைகளின்படி கொடைகளை அளித்தால் அவர்கள் விரும்பிய பொருட்கள் அனைத்தையும் அடைவார்கள்.

ஏதத்³வ்ரதகரோ ஹ்யேவ தே³வதே³வோ வ்ருஷத்⁴வஜ꞉ |
புராபி⁴ஷிக்தவான்ஸௌம்யே ப்ரியார்த²ம் மம ஸர்வக்ருத் ||2-79-37

ஓ! மென்மையான பெண்ணே {அருந்ததியே}, தேவர்களின் தேவரும், காளையைச் செலுத்துபவருமான சிவன், இந்த விரதத்தைச் செய்ததால் நிறைவடைந்து தம்முடைய பட்டத்துராணியாக என்னைத் தேர்ந்தெடுத்தார்.

வ்ரதகஸ்யாவஸானே(அ)த² தே³யம் போ⁴ஜ்யம் ச நித்யதா³ |
ஸ்த்ரீணாம் காமா꞉ ப்ரதே³யாஷ்²ச ஸத்³ருஷா²꞉ காலதே³ஷ²யோ꞉ ||2-79-38

விரத்தின் நிறைவில் அந்தந்த நாட்டில், அந்தந்த நேரத்தில் கிட்டக்கூடிய உணவுப் பொருட்களையும், பிற பொருட்களையும் கொடுக்க வேண்டும்.

ஏகைகஸ்ய ப்ரதா³தவ்யம் வ்ரதகம் வரவர்ணினி |
ச²ந்த³தோ ப்³ராஹ்மணானாம் து தே³யமன்னம் ஸத³க்ஷிணம் ||2-79-39

ஓ! அழகியே பெண்ணே, விரதத்திற்கான பொருட்களைப் பிராமணர்களுக்கு மத்தியில் பகிர்ந்து கொடுக்க வேண்டும். அவர்கள் விரும்பிய உணவையும் கொடைகளுடன் சேர்த்துக் கொடுக்க வேண்டும்.

பாயஸம் தத்ர தா³தவ்யம் வ்ரதகே நான்யதி³ஷ்யதே |
நாத்ர ப்ராணிவத⁴꞉ கார்ய꞉ புராணே நியதா ஷ்²ருதி꞉ ||2-79-40

இந்த விரதத்தில் பாயசம் கொடுக்கப்பட வேண்டும். அது தனிப் பலனைக் கொடுக்கவல்லது. எனினும், இதில் விலங்குகள் பலியிடப்படக் கூடாது. இவ்வாறே புராணங்களில் விதிக்கப்பட்டிருக்கிறது.

அத² த்³விதீயம் வக்ஷ்யாமி வ்ரதம் ஸோமஸமுத்³ப⁴வே|
மஹாதே³வப்ரஸாதே³ன த்³ருஷ்டவத்யஸ்மி யச்சு²பே⁴ ||2-79-41

ஓ! சோமனின் மங்கல மகளே {அருந்ததியே}, மஹாதேவரின் தயவால் நான் அறிந்து கொண்ட இரண்டாவது விரதத்தையும் நான் இப்போது சொல்லப் போகிறேன்

ஸர்வா꞉ புத்ரப²லா நார்ய꞉ ஸத்³பி⁴ரேதது³தா³ஹ்ருதம் |
தஸ்மாத³ன்விஷ்யதீம் த³த்³யாத்ஸபுத்ரகரகாஞ்சு²பே⁴ ||2-79-42

ஒரு மகனே பெண்கள் விரும்பும் ஒரே பலன் எனக் கல்விமான்கள் கருதுகிறார்கள். மகன்களைப் பெற விரும்புகிறவர்கள் சிறு பாத்திரங்களைக் கொடையளிக்க வேண்டும்.

ஜ்யேஷ்டா²ஷாடௌ⁴ ஷு²பௌ⁴ மாஸௌ புரோக்தம் விதி⁴மாசரேத் |
அத² வா ஜ்யேஷ்ட²மேவைகமாஷாட⁴ம் வா ஸமாசரேத் ||2-79-43

ஆனி, ஆடி ஆகிய இரண்டு மங்கல மாதங்களிலோ, தனியே ஆனியிலோ, ஆடியிலோ முன்பு சொன்ன விதிமுறைகளை நோற்க வேண்டும்.

ததோ மாஸத்³வயே பூர்ணே மாஸே வா வரவர்ணினி |
ஸபுத்ரகரகாந்த³த்³யாத்பா²ணிதப்ரதிபூரிதான் ||2-79-44

ஓ! அழகிய பெண்ணே, குறிப்பிட்ட அந்த இரண்டு மாதங்களோ, ஒரு மாதமோ முடியும்போது பானகம் நிறைந்த சிறிய பாத்திரத்தைக் கொடையளிக்க வேண்டும்.

ஸர்பிஷ꞉ பயஸஷ்²சைவ த³த்⁴னோ(அ)த² மது⁴னோ(அ)னகே⁴ |
ஜலஸ்ய ச ததா² த³த்³யாத்பூரயித்வா ஷ²ஷி²ப்ரபே⁴ ||2-79-45

ஓ! சந்திரப் பிரகாசம் கொண்டவளே, அதே போல அவள் தெளிந்த நெய், தயிர், பால், தேன், குடுவைகள் நிறைந்த நீர் ஆகியவற்றையும் கொடுக்க வேண்டும்.

ஏதஸ்மை ஜ்ஞானவ்ருத்³தா⁴ய ஸுவ்ரதாய ஜிதாத்மனே |
ஸபுத்ரகரகாந்த³த்³யாத்³யாவந்தோ மனஸ꞉ ப்ரியா꞉ ||2-79-46

அவள் எத்தனை மகன்களை விரும்புகிறாளோ அத்தனை அளவுக்கான சிறிய பாத்திரங்களைத் தற்கட்டுப்பாட்டைக் கொண்டவரும், உறுதியான நோன்புகளை நோற்பவரும், ஞானத்தில் பழுத்தவருமான ஒரு பிராமணருக்கு அவள் கொடையளிக்க வேண்டும்.

இச்சே²த ஸ்த்ரீ து³ஹிதரம் ஸ்த்ரீணாம் காமகரம் தத꞉ |
கிஞ்சித்³த்³ரவ்யம் ஸுதாகாமாத்ஸுதாம் ப்ராப்னோத்யஸம்ஷ²ய꞉ ||2-79-47

மகளைப் பெற விரும்பும் எந்தப் பெண்ணும், ஒரு பிராமணருக்கு எந்தப் பொருளையும் தானே விரும்பிக் கொடுத்தால் நிச்சயம் மகளைப்பெறுவாள்.

கௌ³ர்வாத² காஞ்சனம் வாபி த³க்ஷிணா சைவ ஷ²ஸ்யதே |
விப்ரஸ்யாச்சா²த³னம் தே³யமவஷ்²யம் து ஷு²சிஸ்மிதே ||2-79-48

யஜ்ஞோபவீதம் வ்ரதகே த³த்³யாந்நாரீ ஷு²சிவ்ரதா |
ஸபுத்ரகரகாணாம் து விதி⁴ருக்தோ விபஷ்²சிதா ||2-79-49

ஓ! தூய புன்னகை கொண்டவளே, விரிப்புகள், பசு, பொன் ஆகியவை கொடைகளில் சிறந்தவையாகும். அறிவுள்ள தூய்மையான பெண்ணொருத்தி, இந்த விரதத்தில், மகன்களைப் பெறுவதற்கு அளிக்கப்படும் சிறு பாத்திரங்களின் கொடை தொடர்பான விதிமுறைகளின்படியே பூணூல்களையும் கொடையளிக்க வேண்டும்.(48,49)

அபத்யாக்²யானயோகே³ன ப்³ராஹ்மணேப்⁴ய꞉ ஷு²சிவ்ரதா |
ஸம்வத்ஸரம் ஸுஸம்பூர்ணம் வ்ரதத⁴ர்மானுபாலினீ ||2-9-50

விரதத்தின் விதிகளைக் கடைப்பிடிக்கும் பெண், (மகனுக்கோ, மகளுக்கோ உகந்த) மங்கல நட்சத்திரங்களில்[“அபத்யாக்யான யோகத்தால் தான் விரும்பும் பெண் ப்ரஜை, புருஷ ப்ரஜைக் கேற்ப ஸங்கற்பம் செய்து கொண்டு முறையே ரோஹிணி முதலிய ஸ்த்ரீ லிங்க நக்ஷத்ரங்களிலும், புஷ்யம், ஹஸ்தம், திருவோணம் ஆகிய புல்லிங்க நக்ஷத்ரங்களிலும் வருஷ முடிவில் பர்த்தாவின் அனுமதி பேரில் புனித வ்ரத முறையளாய் நன்கு நிறைந்த ஒரு வருஷ காலம், வ்ரதத் தர்மங்களை நடத்திக் கொண்டு (இறுதியில்) ப்ராஹ்மணர்களுக்குக் கமண்டலங்களையும், மற்றவையையும் தானம் செய்ய வேண்டும்”] ஒரு வருடம் முழுவதும் பிராமணர்களுக்குக் கொடையளிக்க வேண்டும்.

கரகானபி த³த்³யாச்ச பூர்ணே ஸம்வத்ஸரே ஷு²பே⁴ |
அனுஜ்ஞயா ஸதா³ ப⁴ர்து꞉ ஸத்யவாதி³ன்யருந்த⁴தி ||2-79-51

ஓ! வாய்மை நிறைந்த அருந்ததி, ஒரு வருடம் நிறைவடைந்ததும் அவள் தன் கணவனின் அனுமதியின் பேரில் சிறு பாத்திரங்களைக் கொடையளிக்க வேண்டும்

ஸுவர்ணஸூத்ரம் விப்ராய கௌமுத்³யாம் தா³துமர்ஹதி |
யஜ்ஞோபவீதம் விப்ரஸ்ய வ்ரதம் ஸம்ஸ்தா²ப்ய காமிகம் ||2-79-52

அவள், கார்த்திகை மாத பௌர்ணமியில் விரதத்தை முடித்துக் கொண்டு, ஒரு பிராமணருக்குப் பூணூலையும், தங்கப் பூணூலையும் கொடையளிக்க வேண்டும்

யஜ்ஞோபவீதம் கரகம் த³க்ஷிணாம் ச ஸ்வஷ²க்தித꞉ |
ப்ரயச்ச²தீ ஸதீ ஸ்த்ரீப்⁴ய꞉ ஸர்வான்காமான்ஸமஷ்²னுதே ||2-79-53

கற்புடைய ஒரு பெண் தன் சக்திக்குத் தக்கடி ஒரு பிராமணருக்குப் பூணூலையும், சிறு பாத்திரங்களையும், தக்ஷிணையையும் கொடுத்தால் அவள் விரும்பிய பொருட்கள் அனைத்தையும் அடைவாள்

நவம் ந ப⁴க்ஷயேத்கிஞ்சிந்நாரீ தா⁴ன்யமதோ² ப²லம் |
புஷ்பாணி நோபயுஞ்ஜீத யாவதே³வம் ஸமாசரேத் ||2-79-54

ஒரு பெண் எவ்வளவு காலம் இந்த நோன்பை நோற்பாளோ அவ்வளவு காலம் புதிய அரிசி தானியங்களையோ, கனிகளையோ உண்ணக் கூடாது, மலர்களையும் சூடிக் கொள்ளக்கூடாது

ஏகப⁴க்தேன த⁴ர்மஜ்ஞே புண்யகம் கர்துமர்ஹதி |
ப்³ராஹ்மனாய ததா² தே³யம் ப⁴ர்துஷ்²ச தத³னந்தரம் ||2-79-55

ஓ! அறநெறிகளை அறிந்தவளே, ஒரு பெண் ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு உண்டு புண்யகச் சடங்கைச் செய்ய வேண்டும். அதே வகையில் அவள் பிராமணர்களுக்கும், தன் கணவனுக்கும் உணவளிக்க வேண்டும்.

ஏவம் ஸம்வத்ஸரம் க்ருத்வா ஸுப⁴கா³ ரூபஷா²லினீ |
ப⁴வத்யவித⁴வா சைவ ஸ்த்ரீ த⁴னஸ்ய ததே²ஷ்²வரீ ||2-79-56

ஒரு பெண் இவ்வழியில் முழுமையாக ஒரு வருட காலம் நோன்பை நோற்றால், அவள் நற்பேறு பெற்றவளாகவும், அழகு நிறைந்தவளாகவும், செல்வச் சீமாட்டியாகவும் ஆவாள், ஒருபோதும் விதவையாகமாட்டாள்.

வார்தாகானி ச கா²தே³த்³யா ஸ்த்ரீ பூர்ணம் பரிவத்ஸரம் |
ந ஸா புத்ரவிநாஷ²ம் ஹி பஷ்²யதீத்யவக³ம்யதாம் ||2-79-57

ஓ! அருந்ததி, ஒரு வருடம் முழுவதும் கத்தரிக்காய் உண்ணாத பெண் ஒருபோதும் தன் மகனின் அழிவைக் காணமாட்டாள்; இதை உறுதியாக அறிவாயாக

ஷ²ஷ²கம் ம்ற்^க³மாம்ஸம் வா நித்யமேவ விவர்ஜயேத் |
நாப்னோதி மரணம் நாரீ ப்ராப்னோதி பதிதே³வதாம் ||2-79-58

ஒரு பெண் முயல், அல்லது மானின் இறைச்சியை உண்ணாதிருந்தால் அவள் கற்புடையவளாகவும், நீண்ட வாழ்நாளைக் கொண்டவளாகவும் இருப்பாள்

அலாபு³ம் வர்ஜயேந்நாரீ ததை²வோத்பாதி³காமபி |
கலம்பீ³ம் காஞ்சனம் நாத்³யாத்³யா ப⁴ர்து꞉ ஸுக²மிச்ச²தி ||2-79-59

தன் கணவனின் நலத்தை நாடும் பெண், சுரைக்காய், கலவைக்கீரை, மஞ்சள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

பூர்ணே ஸம்வத்ஸரே த³த்³யாதே³கைகம் ஷா²கமாத்³ருதா |
ஸத³க்ஷிணம் புத்ரவதீ ப⁴வத்யேகா புரோ(அ)தி⁴கா ||2-79-60

ஒரு வருடம் நிறைவடைந்ததும், தொடக்கத்திலிருந்தே செல்வத்துடன் சேர்த்து காய்கறிகளையும் கொடையளிக்கும் பெண், மகன்களைக் கொண்ட பெண்களில் முதன்மையானவளாவாள்

ஸ்வயம் ப்ரக்ஷாலயானா ஸ்த்ரீ ஸ்வபாதா³வேவமாதி³த꞉ |
ப்ரதிஷ்டா²ம் லப⁴தே நித்யமுத்³வேக³ம் நாதி⁴க³ச்ச²தி ||2-79-61

தொடக்கத்திலிருந்தே தன் கால்களைத் தானே கழுவி கொள்ளும் பெண் புகழை அடைவாள், ஒருபோதும் கவலை அடைய மாட்டாள்.

தி³வா யா ஸூர்யபூதேன வர்தயேத்ஸ்த்ரீ பதிவ்ரதா |
ஏகம் ஸம்வத்ஸரம் பூர்ணம் ராத்ராவன்னம் விவர்ஜயேத் ||2-79-62

ஸா ஜீவபுத்ரா ஸுப⁴கா³ ப⁴வத்யமரவர்ணினி |
அதி⁴திஷ்ட²தி ஸர்வாஷ்²ச ஸபத்ன்யோ நாத்ர ஸம்ஷ²ய꞉ ||2-79-63

ஒரு வருடம் முழுவதும் இரவில் உணவை உண்ணாமல், பகலில் மட்டுமே உண்ணும் கற்புடைய பெண், நற்பேறு பெறுவாள், ஒரு போதும் அவளது மகன்கள் மாளாதிருப்பார்கள். அவள் தன் கணவனின் பிற மனைவியரைவிட நிச்சயம் மேன்மையடைவாள்.(62,63)

பூர்ணே ஸம்வத்ஸரே த³த்³யாத்ஸௌவர்ணம் ஸூர்யமுத்தமம் |
ப்³ராஹ்மணாயாபி⁴ரூபாய த³ரித்³ராய யஷ²ஸ்வினே ||2-79-64

இவ்வழியில் ஒரு வருடம் நிறைவடைந்ததும், அவள் தன் இதய விருப்பத்துடன் தங்கத்தாலான ஒரு சூரியப் பிரதிமையை ஒரு சிறப்புமிக்கப் பிராமணனுக்குக் கொடையளிக்க வேண்டும்.

ப²லானி வாத² புஷ்பாணி ப⁴க்ஷ்யாண்யபி ச ஸுவ்ரதா |
த³த்³யாத³னஸ்தமிதகே சரிதவ்ரதகா ததா² || 2-79-65

இவ்வாறு விரதம் நோற்கும் அறம்சார்ந்த பெண், சூரியன் மறைவதற்கு முன் மலர்களையும், கனிகளையும், பிற உணவுப் பொருட்களையும் கொடையளிக்க வேண்டும்.

யா ததா²ஸ்தமிதே ஸூர்யே பு⁴ங்க்தே ஸ்த்ரீ நியதா ஸதீ |
சந்த்³ரநக்ஷத்ரபூதானி போ⁴ஜ்யானி வரவர்ணினி ||2-79-66

ஸா த³த்³யாத்காஞ்சனம் சந்த்³ரம் நக்ஷத்ராணி க்³ரஹானபி |
அபி⁴ரூபாய விப்ராய வாஸஷ்²ச லவணான்விதம் ||2-79-67

ஓ! அழகிய பெண்ணே {அருந்ததியே}, இதே போல ஒருவருடம் முழுவதும் சூரியன் மறைந்த பிறகு உணவை உண்ணும் கற்புள்ள பெண், சந்திரனாலும், நட்சத்திரங்களாலும் தூய்மையாக்கபட்ட உணவுப் பொருட்களையும், தங்கத்தாலான சந்திரன், நட்சத்திரங்கள், கோள்களையும், உப்பால் மறைக்கப்பட்ட ஆடைகளையும் குறிப்பிட்ட பிராமணனுக்குக் கொடையளிக்க வேண்டும்.(66,67)

சந்த்³ரஷீ²தலகா³த்ரீ ஸா ப⁴வத்யமரவர்ணினீ |
ஸுப⁴கா³ த³ர்ஷ²னீயா ச புத்ரவத்யபி பா⁴வினீ ||2-79-68

ஓ! தேவியைப் போன்ற வண்ணம் கொண்டவளே, இவ்வாறு செய்வதால் ஒரு பெண் நற்பேறு பெற்றவளாகவும், அழகியாகவும், அனைவராலும் காணத்தகுந்தவளாகவும் ஆவாள். அவளது உடல் சந்திரனைப் போலக் குளிர்ந்திருக்கும்.

பௌர்ணமாஸ்யாம் து ஸததம் ப்ராப்தே ஸோமோத³யே(அ)ங்க³னா |
அர்க⁴ம் த³த்³யாத்ஸுமனஸாம் ஸாக்ஷதம் ஸகுஷ²ம் ததா² ||2-79-69

யாவகம் ச ப³லிம் த³த்³யாத்³த³த்⁴னா ச ஸஹ ஸம்யுதம் |
ஏவம் யா குருதே நித்யம் ஸர்வான்காமானவாப்னுயாத் ||2-79-70

கார்த்திகை மாத வளர்பிறையில், குசப்புல்லால் பாதங்கழுவுவதற்குரிய தீண்டப்படாத நீரையும், தயிரோடு கூடிய கோதுமை உருண்டைகளையும், தேவர்களுக்குக் காணிக்கையளிக்கும் பெண் தான் விரும்பிய பொருட்கள் அனைத்தையும் அடைவாள்.(69,70)

அத்³ருஷ்ட்வா யா து நாஷ்²னாதி ஸூர்யம் நாரீ பதிவ்ரதா |
து³ர்தி³னே வாத² வா வ்யப்⁴ரே ஸேஷ்டான்காமானவாப்னுயாத் ||2-79-71

தெளிந்த நாளென்றாலும், மேகமூட்டமுள்ள நாளென்றாலும் சூரியனைக் காணாமல் உணவை உண்ணாத பெண் தன் நோக்கங்கள் அனைத்தும் நிறைவேறப் பெறுவாள்.

காஞ்சனம் ஷ²க்திதோ த³த்³யாத்ஸா விப்ராய மனஸ்வ்னீ |
ஸுப⁴கா³ த³ர்ஷ²னீயா ச ப⁴வத்யமரவர்ணினீ ||2-79-72

தன் சக்திக்கு ஏற்ற வகையில் ஒரு பிராமணனுக்குத் தங்கத்தைக் கொடையளிக்கும் பெண், நற்பேறு பெற்றவளாகவும், அழகியாகவும், அனைவராலும் காணத்தகுந்தவளாகவும் ஆகிறாள்” என்றாள் {உமாதேவி}.

இதி ஷ்²ரீமஹாபா⁴ரதே கி²லேஷு ஹரிவம்ஷே² விஷ்ணுபர்வணி
பாரிஜாதஹரணே வ்ரதகத²ன ஏகோநாஷீ²திதமோ(அ)த்⁴யாய꞉

————–—————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாஸ பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ விஷ்ணு பர்வம்–அத்யாயம் – 78–(புண்யகவ்ரதவர்ணனம்)–ஸ்ரீ உமை சொன்ன புண்யக நோன்பு | —

January 31, 2021

கற்புக்கரசிகளின் மேன்மையைக் கூறி புண்யக நோன்பில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளைச் சொன்ன உமாதேவி-

உமோவாச
ஸர்வஜ்ஞாஹம் யதா³ ப⁴ர்து꞉ ப்ரஸாதே³ன ஷு²சிஸ்மிதே |
ததா³ புரா மமாதி³ஷ்டோ த்³ருஷ்ட꞉ புண்யவிதி⁴꞉ ஷு²ப⁴꞉ ||2-78-1

உமை {அருந்ததியிடம்}, “ஓ! தூய புன்னகையுடையவளே, என் கணவரின் {சிவனின்} அருளால் நான் அனைத்தையும் அறிந்தவளான போது, அறச்சடங்குகள் அனைத்தின் புனித விதிமுறைகளையும் அறிந்து கொண்டேன்.

ஸனாதன꞉ புண்யவிதி⁴ரிதி பு³த்³த்⁴யாவக³ம்யதாம் |
மஹாதே³வப்ரஸாதே³ன மயா த்³ருஷ்டஸ்த்வருந்த⁴தி ||2-78-2

ஓ! அருந்ததி, அந்தப் புனிதச் சடங்குகளின் விதிமுறைகள் ஏற்கனவே நித்தியமாக இருந்து வந்தவையாக இருப்பினும், மஹாதேவனின் தயவாலேயே நான் அவற்றை அறிந்து கொண்டேன்.

புண்யகானி ச ஸர்வாணி சீர்ணவத்யஸ்ம்யனிந்தி³தே
அனுஜ்ஞயா ப⁴க³வதோ ப⁴ர்து꞉ ஷ²ர்வஸ்ய தீ⁴மத꞉ ||2-78-3

ஓ! குற்றமற்ற பெண்ணே, தெய்வீகமானவரும், நுண்ணறிவுமிக்கப் பவனுமான என் கணவரின் {பவனான சிவனின்} ஆணையின் பேரில் நான் அந்த அறச்சடங்குகளைச் செய்தேன்.

ஸதீத்வம் த⁴ர்மசரணம் யஸ்யா நித்யமக²ண்டி³தம் |
புண்யகானாம் விதி⁴ஸ்தஸ்யா꞉ புராணை꞉ பரிகீர்தித꞉ || 2-78-4

கற்பையும், புனிதச் சடங்குகளையும் பயில விரும்புவோருக்கேற்ற அறச்சடங்குகள் புராணங்களில் {புண்யக விதிகள் பழைய ரிஷிகளால்} சொல்லப்பட்டிருக்கின்றன

தா³னோபவாஸபுண்யானி ஸுக்ருதான்யப்யருந்த⁴தி |
நிஷ்ப²லான்யஸதீனாம் ஹி புண்யகானி ததா² ஷு²பே⁴ ||2-78-5

ஓ! அறம்சார்ந்த அருந்ததி, கொடைகளும், உண்ணாநோன்புகளும் {உபவாசங்களும்}, நற்செயல்களும், அறச் செயல்களும் கற்பற்ற பெண்களுக்குப் பலனற்றவையாகின்றன

யா வஞ்சயந்தி ப⁴ர்தாரம் யோனிது³ஷ்டாஷ்²ச யா꞉ ஸ்த்ரிய꞉ |
யோனிதோ³ஷாத்புண்யப²லம் நாஷ்²னந்தி நிரயங்க³மா꞉ || 2-78-6

பாலியல் கலவியென்ற பாவத்தின் மூலம் அறச்சடங்குகள் மாசடைகின்றன. கணவனை வஞ்சிப்பவர்களோ, பாவம்நிறைந்த கலவியில் ஈடுபடுபவர்களோ புனிதச் சடங்குகளின் பலன்களை ஒருபோதும் அடைவதில்லை; மாறாக அவர்கள் நரகத்திற்குச் செல்கிறார்கள்.

ஸாத்⁴வ்யோ ஜக³த்³தா⁴ரயந்தி ஸுஷீ²லா꞉ பதிதே³வதா꞉ |
அனன்யா த⁴ர்மநித்யாஷ்²ச ஸதீபந்தா²னமாஷ்²ரிதா꞉ ||2-78-7

கணவனையே தங்கள் தேவனாகக் கொண்டவர்களும், நல்லியல்புடனும், கற்புடனும் கூடியவர்களும், தங்கள் தலைவனைத் தவிர வேறு மனிதனை {ஆடவனை} அறியாதவர்களும், அறத்தில் முழு மன அர்ப்பணிப்புடன் கூடியவர்களும், கற்புக்கரசிகளின் வழியையே ஒரே புகலிடமாகக் கொண்டு அதையே பின்பற்றுபவர்களுமான காரிகையரே இந்த அண்டத்தை நிலைக்கச் செய்கிறார்கள்.

அவாக்³து³ஷ்டா꞉ ஷௌ²சயுக்தா த்⁴ருதிமத்ய꞉ ஷு²ப⁴வ்ரதா꞉ |
ஸததம் ஸாது⁴வாதி³ன்யோ தா⁴ரயந்தி ஜக³த்க²லு ||2-78-8

சொல்லாலும் பாவம் இழைக்காதவர்களாக, தூய்மையானவர்களாக, நுண்ணறிவுமிக்கவர்களாக, பேச்சில் இனிமை நிறைந்தவர்களாக, எப்போதும் அறச்சடங்குகளைச் செய்பவர்களாக இருக்கும் பெண்களே இந்த உலகைப் பாதுகாக்கிறார்கள்

வ்யாதி⁴த꞉ பதிதோ வாபி தீ³னோ வாபி கத²ஞ்சன |
ந த்யக்தவ்ய꞉ ஸ்த்ரியா ப⁴ர்தா த⁴ர்ம ஏஷ ஸனாதன꞉ ||2-78-9

ஒரு மனைவியானவள், தன் கணவன் வறியவனாகவோ, பிணியுற்றவனாகவோ, வீழ்ந்தவனாகவோ {ஒழுக்கங்கெட்டவனாகவோ} இருந்தாலும் எந்தச் சூழ்நிலையிலும் அவனைக் கைவிடக்கூடாது. இதுவே நித்திய அறமாகும் {இந்த தர்மம் மிகப் பழையது}

அகார்யகாரிணம் வாபி பதிதம் வாபி நிர்கு³ணம் |
ஸ்த்ரீ பதிம் தாரயத்யேவ ததா²(ஆ)த்மானம் ஷு²பா⁴னனே ||2-78-10

கணவன் திறனற்றிருந்தாலும், தவறான செயல்களை இழைத்தாலும், வீழ்ந்தவனானாலும் கூட ஒரு மனைவியால் தன்னையும், அவனையும் காத்துக் கொள்ள முடியும்

யோனிது³ஷ்டஸ்த்ரியோ நாஸ்தி ப்ராயஷ்²சித்தம் ஹதைவ ஸா |
வாக்³து³ஷ்டே விஹிதம் ஸத்³பி⁴꞉ ப்ராயஷ்²சித்தம் புராதனே ||2-78-11

சொற்களால் பாவமிழைத்த பெண்களுக்கான தூய்மைச் சடங்குகளை வேதங்களில் முனிவர்கள் வகுத்துள்ளனர். ஆனால், பாலியல் கலவியால் பாவமிழைத்தவர்களுக்கு எந்தத் தவமும் இல்லை (பரிகாரமும் விதிக்கப்படவில்லை); எப்போதைக்கும் வீழ்ந்துவிட்டவர்களென அவர்களை நீ கருதுவாயாக.

ப⁴ர்துஷ்²ச²ந்தே³ன கர்தவ்யம் வ்ரதகம் ஸர்வதா³ ஸ்த்ரியா |
உபவாஸோ(அ)பி வா ஸத்யே காங்க்ஷந்த்யா ஸுக்ருதாம் க³திம் ||2-78-12

ஓ! அருளப்பட்ட பெண்ணே, நல்லோரின் பாதையில் நடக்க விரும்பும் பெண், தன் கணவனின் விருப்பத்தின்படியே {அவனுடைய அனுமதியின் பேரிலேயே} சடங்குகளைச் செய்யவும், உண்ணா நோன்புகளை நோற்கவும் வேண்டும்.

கல்பாந்தரஸஹஸ்ரேஷு ந ஸ்த்ரீ ஸா லப⁴தே க³திம் |
திர்யக்³யோநிஸஹஸ்ரேஷு பச்யதே யோனிவிப்லவாத் ||2-78-13

ஒழுக்கங்கெட்ட கலவியின் மூலம் ஒரு பெண் இழிந்த பிறவியை அடைகிறாள். மேலும் அவள் ஆயிரம் பிறவிகள் எடுத்தாலும் சிறந்த வாழ்வை {நல்ல கதியை} அடைவதில்லை

யதி³ ஸா நாம மானுஷ்யம் ஸ்த்ரீ லபே⁴த³ஸதீ ஸதீ |
சண்டா³லயோனௌ து³ர்மேதா⁴ ஜாயதே குக்குராஷ²னா ||2-78-14

ஒழுக்கங்கெட்ட பெண், தற்செயலாக மானிடப் பெண்ணாகப் பிறந்தாலும், அவள் சண்டாள வகையில் பிறந்து, மிகத் தீயவளாகி, நாயின் இறைச்சியை உண்டு வாழ்வாள்.

ப⁴ர்தா தே³வ꞉ ஸதா³ ஸ்த்ரீணாம் ஸத்³பி⁴ர்த்³ருஷ்டஸ்தபோத⁴னே |
யஸ்யா ஹி துஷ்யதே ப⁴ர்தா ஸா ஸதீ த⁴ர்மசாரிணீ ||2-78-15

ஓ! தவத்தையே செல்வமாகக் கொண்டவளே, கணவனையே பெண்களின் தேவனாக முனிவர்கள் நியமித்திருக்கின்றனர். கணவன் எவளிடம் நிறைவுடன் இருக்கிறானோ, அவளே கற்புடைய நல்ல மனைவி {சதிதர்மசாரினி} ஆவாள்.

கௌதூஹலஹதானாம் து ஸ்த்ரீணாம் லோகோ ந ஷோ²ப⁴ன꞉ |
ப⁴ர்தர்யேவ மனோ யாஸாம் ஸத்³பா⁴வேன வ்யவஸ்தீ²தம் ||2-78-16

கர்மணா மனஸா வசா பதிம் நாதிசரந்தி யா꞉ |
தாஸாம் புண்யப²லம் ஸௌம்யே புண்யகை꞉ ஸமுதா³ஹ்ருதம் ||2-78-17

பேராவலின் மூலம் வீழ்ந்துவிட்ட பெண்களுக்குப் புனித உலகமேதும் கிடையாது. ஓ! மென்மையான பெண்ணே, தங்கள் கணவர்களிடம் அர்ப்பணிப்புள்ள நிலையான மனங்களைக் கொண்டவர்களும், சொல்லாலும், செயலாலும், மனத்தாலும் அவர்களை அலட்சியம் செய்யாதவர்களுமான பெண்களே அறச்சடங்குகளின் பலன்களை அடைவார்கள்.(16,17)

புண்யகானாம் விதி⁴ம் க்ருத்ஸ்னம் ஸ்வர்லோகப்ரதிஷோ²ப⁴னே |
நிபோ³த⁴ ஸஹ ஸர்வாபி⁴ர்த்³ருஷ்டோ யஸ்தபஸா மயா ||2-78-18

ஓ! அழகிய பெண்ணே, என் தவத்தின் மூலம் நான் கண்ட தேவலோகத்திற்கான அறச்சடங்குகளின் விதிமுறைகளை {புண்யக விதி முழுமையும்} அனைவருடன் சேர்ந்து நீயும் கேட்பாயாக.

ஸ்னாத்வா ஸ்த்ரீ ப்ராதருத்தா²ய பதிம் விஜ்ஞாபயேத்ஸதீ |
உபவாஸார்த²மத² வா வ்ரதகார்த²ம் த்³ருதவ்ரதே ||2-78-19

ஷ்²வஷு²ராப்⁴யாம் ச சரணௌ ஸததம் ஸத்தமஸ்ய ச |
க்³ரஹாயௌது³ம்ப³ரம் பாத்ரம் ஸகுஷ²ம் ஸாக்ஷ்தம் ததா² ||2-78-20

ஓ! உறுதியான நோன்புகளைக் கொண்டவளே, தவத்தையோ, உண்ணா நோன்பையோ {உபவாசத்தையோ} செய்ய விரும்பும் கற்புள்ள பெண் ஒருத்தி, அதிகாலையில் எழுந்து, நீராடிய பின், தன்னுடைய மாமனாரின் பாதங்களையும், மாமியாரின் பாதங்களையும் வணங்கி, அதன் பிறகு தன் கணவனிடம் அதைச் சொல்ல வேண்டும் {தவமோ, உண்ணா நோன்போ இருக்கப் போகிறேன் என்று சொல்லி அவனிடம் அனுமதி கேட்க வேண்டும்}. பிறகு குசப்புல்லையும் {தர்ப்பைப் புல்லையும்}, ஒரு தாமிரப் பாத்திரத்தையும் எடுத்துக் கொண்டு,(19,20)

கோ³ஷ்²ருங்க³ம் த³க்ஷிணம் ஸிச்ய ப்ரதிக்³ருஹ்ணீத தஜ்ஜலம் |
ததோ ப⁴ர்து꞉ ஸதீ த³த்³யாத்ஸ்னாதஸ்ய ப்ரயதஸ்ய ச ||2-78-21

ஒரு பசுவின் வலது கொம்பில் தண்ணீர் தெளிக்க வேண்டும். பிறகு தற்கட்டுப்பாட்டுடன் தூய்மைச் சடங்குகளைச் செய்த தன் கணவனின் தலையில் அவள் அந்த நீரைத் தெளிக்க வேண்டும்.

ஆத்மனோ(அ)பி நிஷேக்தவ்யம் தத꞉ ஷி²ரஸி தஜ்ஜலம் |
த்ரைலோக்யஸர்வதீர்தே²ஷு ஸ்னானமேதது³தா³ஹ்ருதம் ||2-78-22

அதன் பிறகு அவள் தன் தலையில் அதை ஊற்ற வேண்டும். விதிகளின் கோட்பாட்டில் அமைந்த இந்த நடைமுறையானது புனிதத்தலங்கள் அனைத்திலும் நீராடல் {மூவுலகு புண்ய தீர்த்த ஸ்நாநம்} என்றழைக்கப்படுகிறது.

உபவாஸேஷு கர்தவ்யமேதத்³தி⁴ வ்ரதகேஷு ச |
ஸ்னானமேதத்³தி⁴ ஸாமான்யம் ஸ்த்ரீணாம் பும்ஸாம் ச பா⁴மினி ||2-78-23

ஓ! பெரும் அருந்ததி, ஒரு விரதத்தையோ, உண்ணாநோன்பையோ {உபவாசத்தையோ} செய்யும்போது கணவன், மனைவி இருவரும் இவ்வழியிலேயே நீராட வேண்டும்

அருந்த⁴தி மயா த்³ருஷ்டம் தபஸா ஹரதேஜஸா |
அஷ²ல்யவித்³த⁴ம் ஷ²யனமாஸனம் ச ததா²வித⁴ம் ||2-78-24

ஸ்வயம் ப்ரக்ஷாலனம் சாபி பாத³யோரனுஷ²ப்³தி³தம் |
அஷ்²ருப்ரபாதோ ரோஷஷ்²ச கலஹஷ்²ச க்ருத꞉ ஸதி |
உபவாஸாத்³வ்ரதாத்³வாபி ஸத்³யோ ப்⁴ரம்ஷ²யதி ஸ்த்ரிய꞉ ||2-78-25

ஹரனின் சக்தியின் மூலமும், என் தவத்தின் மூலமும் நானே இதைக் கண்டேன். ஓர் அறச் சடங்கைச் செய்யும்போது ஒருத்தி தன் காலைத் தானே கழுவிக் கொள்ள வேண்டும்; கணையை {அம்புகளைப்} பயன்படுத்துவதும், உறங்குவதும், அமர்வதும் கூடாது. உண்ணாநோன்பையோ, விரதத்தையோ நோற்பவளான ஒரு பெண் கண்ணீர் சிந்தவோ, சச்சரவு செய்யவோ {சண்டை போடவோ}, கோபப்படவோ கூடாது, அவ்வாறு செய்தால் உடனே அவள் வீழ்ந்தவளாவாள் {விரதங்கெட்டவளாவாள்}.(24,25)

ஷு²க்லமேவ ஸதா³ வாஸ꞉ ப்ரஷ²ஸ்தம் சந்த்³ரஸம்ப⁴வே |
அந்தர்வாஸோ(அ)பரம் சைவ உபவாஸே வ்ரதே ததா² ||2-78-26

ஓ! சந்திரனுக்குப் பிறந்தவளே, ஒரு விரதத்தையோ, உண்ண நோன்பையோ நோற்கும் சந்தர்ப்பத்தில் ஒரு பெண் வெள்ளை ஆடையையும், வெள்ளை உள்ளாடையையும் அணிய வேண்டும்.

பாது³கார்த²ம் த்ருணை꞉ கார்யம் ஸர்வதா³ வ்ரதகே ஸதி |
உபவாஸே(அ)பி ச விதி⁴ரேஷ ஏவ ப்ரவர்தித꞉ ||2-78-27

அவள் நாணல் போன்ற புல்லால் காலணி {திருணம்} செய்து பயன்படுத்த வேண்டும்.

அஞ்ஜனம் ரோசனம் சாபி க³ந்தா⁴ன்ஸுமனஸஸ்ததா² |
வ்ரதகே சோபவாஸே ச நித்யமேவ விவர்ஜயேத் ||2-78-28

அவள் அஞ்சனமை {மையிடுதல் மஞ்சள் பூச்சு, சந்தனப்பூச்சு}, நறுமணப்பொருட்கள், மலர்கள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

த³ந்தகாஷ்ட²ம் ஷி²ர꞉ஸ்னானமுத்³வர்தனமதா²பி வா |
விவர்ஜிதம் ம்ருதா³ ஸர்வம் ஷௌ²சார்த²ம் து விதீ⁴யதே ||2-78-29

மரக்குச்சியினால் பற்களைத் துலக்காமலும், தலையை அலம்பாமலும் அவள் தன் தூய்மைச் சடங்குகள் அனைத்தையும் மண்ணால் செய்ய வேண்டும்.

பி³ல்வாம்ருதப²லைர்நித்யம் ஷ்²ரீப²லைஷ்²ச ஸமாசரேத் |
ப்ரக்ஷாலனம் வை ஷி²ரஸ꞉ ஸதா³ ம்ருண்மிஷ்²ரிதைர்ஜலை꞉ || 2-78-30

அந்த மண்ணை அகற்ற வில்வம், நெல்லி கலந்த நீரால் தன்னுடைய தலையை அலம்ப வேண்டும். {அவற்றிலேயே அமுதமும் இருக்கிறது, ஸ்ரீயும் இருக்கிறாள். மண் கலந்த நீரிலேயே அவள் தலைமுழுக வேண்டும், பிறகு வில்வம், நெல்லி கலந்த நீரால் தலையை அலம்ப வேண்டும்}

ஷி²ரஸோ(அ)ப்⁴யஞ்ஜனம் ஸௌம்யே நைவ தாவத்ப்ரஷ²ஸ்யதே |
ந பாத³யோர்ன கா³த்ரஸ்ய ஸ்னேஹேனேதி ஸ்தி²தி꞉ ஸ்ம்ருதா ||2-78-31

அவள் தன் தலை, பாதம், உடல் ஆகியவற்றில் எண்ணெய் தேய்க்கக் கூடாது[“தலை, பாதம், உடல் ஆகியவற்றில் எண்ணெய் தேய்க்க வேண்டும்” ].

கோ³யானமுஷ்ட்ரயானம் ச க²ரயானம் ச வர்ஜிதம் |
நக்³னஸ்னானம் ச ஸததம் வ்ரதே சாப்யுபவாஸகே ||2-78-32

விரத, நோன்புக் காலங்களில் எருது, ஒட்டகம், கழுதை ஆகியவற்றால் இழுக்கப்படும் வண்டிகளை எப்போதும் தவிர்க்க வேண்டும், மேலும் ஆடையில்லாமல் நீராடக் கூடாது

நதீ³ஜலம் ப்ரஸ்ரவஜம் ப்ரஷ²ஸ்தம் ஸோமனந்தி³னி |
ஷு²பே⁴ தடா³கே³ வாப்யாதௌ³ விஸ்தீர்ணே ஜலஜாயுதே ||2-78-33

கிணறுகளிலும் நீராடுவது மிகச் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. வெளிப்படையாக வெளியே {பொது இடங்களுக்கு} வராத பெண்களுக்கு இது வசதியானதல்ல என்பதன் தொடர்ச்சியாக அவர்கள் பாத்திரத்தில் உள்ள நீரில் நீராட அனுமதிக்கப்படுகிறார்கள்.

க³த்வா ஸ்னானம் ப்ரஷ்²ஸ்தம் து ஸதை³வ க²லு ஸர்வதா² |
அலாபே⁴ த்வவருத்³தா⁴ ஸ்த்ரீ க⁴டஸ்னானம் ஸமாசரேத் || 2-78-34

கிணறுகளிலும் நீராடுவது மிகச் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. வெளிப்படையாக வெளியே {பொது இடங்களுக்கு} வராத பெண்களுக்கு இது வசதியானதல்ல என்பதன் தொடர்ச்சியாக அவர்கள் பாத்திரத்தில் உள்ள நீரில் நீராட அனுமதிக்கப்படுகிறார்கள்.

நவைஷ்²ச கும்பை⁴꞉ ஸ்னாதவ்யம் விதி⁴ரேஷ புராதன꞉ |
ஸ்னானம் ச கார்யம் ஷி²ரஸா தப꞉ப²லமவாப்னுயாத் ||2-78-35

பழைய வழக்கமான இத்தகைய நடைமுறையில் புதிய பாத்திரங்களையே பயன்படுத்த வேண்டும். இவ்வழியில் தன் தலையைக் கழுவுபவள் {சிரஸ்நாநம் செய்பவள்}, தபங்களின் பலன்களை அடைகிறாள்” என்றாள் {உமை}.

இதி ஷ்²ரீமஹாபா⁴ரதே கி²லேஷு ஹரிவம்ஷே² விஷ்ணுபர்வணி
பாரிஜாதஹரணே(அ)ஷ்டஸப்ததிதமோ(அ)த்⁴யாய꞉

————–—————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாஸ பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ விஷ்ணு பர்வம்–அத்யாயம் – 77–(புந்யாகவிதி)–புண்யக நோன்பின் வரலாறு |–

January 31, 2021

ஜநமேஜய உவாச
புண்யகாநாம் மமோத்பத்திம் கத²யஸ்வ த்³விஜோத்தம |
த்³வைபாயநப்ரஸாதே³ந ஸர்வம் ஹி விதி³தம் தவ ||2-77-1

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! இருபிறப்பாளர்களில் முதன்மையானவரே, துவைபாயனரின் {வியாசரின்} அருளால் நீர் அனைத்தையும் எனக்குச் சொன்னீர். எனவே, புண்யக அறச்சடங்கின் தோற்றம் குறித்து எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்

வைஶம்பாயந உவாச
உமயா புண்யகவிதி⁴ர்நரேந்த்³ரோத்பாதி³த꞉ புரா |
ஶ்ருணு யேந விதா⁴நேந லோகே த⁴ர்மப்⁴ருதாம் வர ||2-77-2

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “ஓ! அறம்சார்ந்த மன்னர்களில் முதன்மையானவனே, முன்பு உமையால் சொல்லப்பட்ட விதிகளுக்கு ஏற்ப மனித குலத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்ட புண்யகச் சடங்கை {புண்யக விரத அனுஷ்டான முறையைக்} குறித்துக் கேட்பாயாக

ஸ்வர்கா³ந்நீதே பாரிஜாதே க்ருஷ்ணேநாக்லிஷ்டகர்மணா |
யயௌ த்³வாரவதீம் தீ⁴மாந்நாரதோ³ முநிஸத்தம꞉ ||2-77-3

தே³வாஸுரே ந்ருபஶ்ரேஷ்ட² ஸங்க்³ராமே ஸமுபஸ்தி²தே |
ஷட்புரஸ்ய வதே⁴ கோ⁴ரே மஹாதே³வாஜ்ஞயாநக⁴ ||2-77-4

ஓ! பாவமற்ற மன்னா, களைப்பில்லா செயல்பாடுகளைக் கொண்ட கிருஷ்ணனால் தேவலோகத்தில் இருந்து பாரிஜாத மரம் எடுத்துச் செல்லப்பட்டு, தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் போர் தொடங்கி ஷத்புரத்தின் தானவர்கள் பயங்கரமாகக் கொல்லப்பட்ட பிறகு, நுண்ணறிவுமிக்க நாரத முனிவர் துவாராவதி நகருக்குச் சென்றார்.(3,4)

க்ருஷ்ணேந ஸஹிதம் விப்ரம் நாரத³ம் த⁴ர்மவித்தமம் |
ஆஸீநம் பரிபப்ரச்ச² ருக்மிணீ பை⁴ஷ்மிகீ ந்ருப ||2-77-5

தத்ர ஜாம்ப³வதீ தே³வீ ஸத்யபா⁴மா ச பா⁴மிநீ |
கா³ந்தா⁴ரராஜபுத்ரீ ச யோக³யுக்தா நராதி⁴ப ||2-77-6

தே³வ்யஶ்ச ந்ருப க்ருஷ்ணஸ்ய ப³ஹ்வ்யோ(அ)ந்யா வை ஸமாக³தா꞉ |
குலஶீலகு³ணோபேதா த⁴ர்மஶீலா꞉ பதிவ்ரதா꞉ ||2-77-7

தேவியைப் போன்ற ஜாம்பவதியும், மதிப்புமிக்கச் சத்யபாமாவும், காந்தார மன்னனின் தவப்புதல்வியும் {யோகயுக்தையும்}, அறம்சார்ந்தவர்களும், கற்புக்கரசிகளும், திறன்மிக்கவர்களுமான கேசவனின் மனைவிமார் எண்ணற்றவரும்[விஷ்ணு பர்வம் 61:43ம் ஸ்லோகத்தின் அடிக்குறிப்பில், கிருஷ்ணனின் முக்கிய மனைவிகளாக 1. சூரியனின் மகளான காளிந்தி, 2. வசுதேவனின் தங்கையான ராஜாதி தேவிக்கும், அவந்தி மன்னனுக்கும் பிறந்த மகளான மித்ரவிந்தை (சைப்யை என்று அறியப்படுபவள்), 3. கோசல நாட்டு மன்னன் நக்னஜித்தின் மகளான ஸத்யா (கௌசல்யா), 4. ஜாம்பவானின் மகளான ஜாம்பவதி, 5. வசுதேவனின் தங்கையான சுருதகீர்த்தியின் மகள் ரோஹிணி (பத்ரை என்றும், கைகேயி என்றும் அறியப்படுபவள்), 6. மத்ர மன்னனின் மகளான லக்ஷ்மணை, 7. சத்ராஜித்தின் மகளான சத்யபாமா, 8. காந்தாரி ஆகிய எட்டு பேர் குறிப்பிடப்படுகின்றனர். முதல் மனைவியான ருக்மிணி {விதர்ப்பி} ஸ்ரீதேவி என்பதால் இங்கே கணக்கில் கொள்ளப்படவில்லை. சில பட்டியல்களில் காந்தாரி விடுபடுகிறாள். ஒருவேளை காந்தாரியும், மித்ரவிந்தையும் ஒருத்தியாகவே இருக்கலாம். ] ஒன்றுகூடியிருந்தபோது, பீஷ்மகனின் மகளான ருக்மிணி, அப்போது அங்கே கிருஷ்ணனுடன் இருந்தவரும், இறையியலை நன்கறிந்தவரும், பிராமணர்களில் முதன்மையானவருமான நாரதரிடம்,(5-7)

ருக்மிண்யுவாச
முநே த⁴ர்மப்⁴ருதாம் ஶ்ரேஷ்ட² த⁴ர்மஜ்ஞாநப்⁴ருதாம் வர |
உத்பத்திம் புண்யகாநாம் த்வம் வக்துமர்ஹஸ்யஶேஷத꞉ ||2-77-8

விதி⁴ம் ச ப²லயோக³ம் ச தா³நகாலம் ததை²வ ச |
கௌதூஹலம் நஸ்தத்ஸித்³தி⁴ம் வத³ஸ்வ வத³தாம் வர ||2-77-9

“ஓ! முனிவரே, பேசுபவர்களிலும், அறம்சார்ந்தவர்களிலும் முதன்மையானவரே, புனிதமான சடங்குகளின் {புண்யக நோன்புகளின்} தோற்றம், அவற்றைச் செய்வதற்கான விதிமுறைகள், பலன்கள், அவற்றோடு தொடர்புடைய கொடைகள் அளிக்கும் தருணங்கள் ஆகியவற்றைக் குறித்துக் கேட்கும் பேராவலால் பீடிக்கப்பட்டிருக்கிறோம். அன்புகூர்ந்து அவற்றை விரிவாகச் சொல்வதன் மூலம் அதை நீக்குவீராக” என்றாள்.(8,9)

நாரத³ உவாச
ஶ்ருணு வைத³ர்பி⁴ த⁴மஜ்ஞே ஸபத்நீபி⁴꞉ ஸஹாநகே⁴ |
புண்யகாநாம் விதி⁴꞉ ப்ரோக்தோ யதா² தே³வி புரா மயா ||2-77-10

நாரதர், “ஓ! அறச்சடங்குகளை அறிந்த பாவமற்ற வைதர்ப்பிப் பெண்ணே {விதர்ப்ப மன்னனின் மகளான ருக்மிணியே}, பழங்காலத்தில் புண்யகச் சடங்கின் விதிமுறைகளை உமை எவ்வாறு விளக்கினாள் என்பதைக் கேட்பாயாக.

சசாரோமா வ்ரதம் தே³வீ புண்யகாநாம் ஶுசிவ்ரதா |
வ்ரதாவஸாநே(அ)த² ததா² ஸக்²யோ தே³வி நிமந்த்ரிதா꞉ ||2-77-11

ஓ! தேவி, தூய நோன்புகளைக் கொண்ட உமாதேவி ஒரு சந்தர்ப்பத்தில் புண்யக அறச்சடங்கைச் செய்தாள்; அந்தச் சடங்கின் நிறைவில் அவள் தன் நண்பர்கள் {தோழியர்} அனைவரையும் அழைத்தாள்

அதி³த்யாத்³யா꞉ ஸுதா꞉ ஸர்வா த³க்ஷஸ்யாக்லிஷ்டகர்மண꞉ |
பௌலோமீ ச ஶசீ தே³வீ க்²யாதா லோகே பதிவ்ரதா ||2-77-12

அதிதி, எல்லாம் செய்யவல்ல சக்தி படைத்த தக்ஷனின் பிற மகள்கள், கணவரிடம் கொண்ட அர்ப்பணிப்பால் உலகில் புகழ்பெற்ற புலோமனின் மகள் சசி {இந்திராணி},

ரோஹிநீ ச மஹாபா⁴கா³ ஸோமஸ்ய த³யிதா ஸதீ |
பா²ல்கு³நீ ச ததா² பூர்வா ரேவதீ ச விஶாம்பதே ||2-77-13

பெரும் சதி, சோமனின் {சந்திரனின்} அன்புக்குரிய மனைவியரான {நட்சத்திரங்களுமான} ரோஹிணி, பூர்வபல்குனி {பூரம்}, ரேவதி,

ததா² ஶதபி⁴ஷா சைவ மகா⁴ ச குருநந்த³ந |
ஏதாபி⁴ர்ஹி மஹாதே³வீ பூர்வமாராதி⁴தா ஸதீ ||2-77-14

சதபிஷக் {சதயம்}, மகம் ஆகியோர் அனைவரும் முன்பே அங்கே வந்து பெருந்தேவியான உமையை வழிபட்டுக் கொண்டிருந்தனர்.

க³ங்கா³ ஸரஸ்வதீ சைவ வேணீ கோ³தா³ ச நிம்நகா³ |
ததா² வைதரணீ சைவ க³ண்ட³கீ யா ச பா⁴ரத ||2-77-15

அழகிய ஆறுகளின் தலைமை தேவியரான கங்கை, சரஸ்வதி, வேணி, கோதாவரி, வைதரணி, கண்டகி ஆகியோரும்,

அந்யாஶ்ச ஸரிதோ ரம்யா லோபாமுத்³ரா ச பா⁴ரத |
ஸத்யஶ்சாந்யா ஜக³த்³தே³வ்யோ தா⁴ரய்தி ஹி தா꞉ ஶுபா⁴꞉ ||2-77-16

{ஆறுகளாக இருக்கும் தேவிகள்} பிறரும், மங்கலக் கற்புக்கரசியான பெண்மணிகளான லோபாமுத்ரையும், தங்கள் ஆற்றலால் அண்டத்தை நிலைநிறுத்துபவர்களான {மங்கல தேவியர்} பிறரும்

ஶுபா⁴ஶ்ச கி³ரிநந்தி³ந்யோ வஹ்நிகந்யாஶ்ச ஸுவ்ரதா꞉ |
ஸ்வாஹா வஹ்நிப்ரியா தே³வீ ஸாவித்ரீ ச யஶஸ்விநீ ||2-77-17

மலைகளின் மங்கல மகள்கள் {மலைப்பெண்டிர்}, உறுதியான நோன்புகளைக் கொண்ட நெருப்பின் மகள்கள் {அக்னிமகளிர்}, நெருப்பை ஆள்பவனின் {அக்னியின்} மனைவியான ஸ்வாஹா, சிறப்புமிக்கவளான சாவித்ரி தேவி,

ருத்³தி⁴꞉ குபே³ரகாந்தா ச ஜலேஶமஹிஷீ ததா² |
பா⁴ர்யா பித்ருபதேஶ்சைவ வஸுபத்ந்யஸ்ததா² ச யா꞉ ||2-77-18

குபேரனின் அன்புக்குரிய மனைவியான ஹிருத்தி {ருத்தி}, நீர்நிலைகளின் தலைவனுடைய ராணி {வருணபத்னி}, பித்ருக்களை ஆள்பவனுடைய மனைவி {யமபத்னி}, வசுக்களின் மனைவியர் {வசுபத்னிகள்}

ஹ்ரீ꞉ ஶ்ரீர்த்⁴ருதிஸ்ததா² கீர்திராஶா மேதா⁴ ச ஸுவ்ரதா꞉ |
ப்ரீதிர்மதிஶ்ச க்²யாதிஶ்ச ஸந்நீதிஶ்ச தபோத⁴நா꞉ ||2-77-19

தவமும், நோன்புகளும் நோற்பவர்களான ஹிரி {ஹ்ரி}, ஸ்ரீ, திருதி {த்ருதி}, கீர்த்தி, ஆசா, மேதா, பிரீதி {ப்ரீதி}, மதி, கியாதி, ஸன்னதி ஆகியோரும்,

தே³வ்ய꞉ ஸத்யஸ்ததை²வாந்யா꞉ ஸர்வபூ⁴தஹிதே ரதா꞉ |
தாஸாம் வ்ரதாவஸாநே ச பூஜாம் சக்ரே(அ)ம்பி³கா ததா³ ||2-77-20

திலரத்நமயம் த³த்த்வா பர்வதம் ஸர்வதா⁴ந்யவத் |
வாஸோபி³ர்பூ⁴ஷணைர்முக்²யைர்நாநாராகை³꞉ ஸுமத்⁴யமே ||2-77-21

ஓ! பேரிளமை கொண்ட பெண்ணே, அனைத்து உயிரினங்களுக்கும் நன்மை செய்வதில் ஈடுபடும் பிற தேவியரும் அங்கே இருந்தனர். அந்தச் சடங்கு நிறைவடைந்தபோது, அந்த அம்பிகை {உமாதேவி} பல்வேறு வகையான தானிய, ரத்தின மலைகளையும், பல்வேறு வண்ணங்களிலான துணிகளையும், மிகச் சிறந்த ஆபரணங்களையும் கொடுத்து அவர்கள் அனைவரையும் கௌரவித்தாள்.(20,21)

ப்ரதிக்³ருஹ்ய து தாம் பூஜாம் த³த்தாம் தே³வ்யா தபோத⁴நா꞉ |
உபவிஷ்டா꞉ கதா²ஶ்சித்ரா꞉ குர்வந்த்யோ ப⁴ர்த்ருதே³வதா꞉ ||2-77-22

கற்புக்கரசிகளும், தவமெனும் செல்வம் கொண்டவர்களுமான அவர்கள் அந்தத் தேவி {உமாதேவி} கொடுத்த கொடைகளை ஏற்றுக் கொண்டு, தங்கள் இருக்கைகளில் அமர்ந்து, பல்வேறு காரியங்கள் குறித்த உரையாடல்களில் ஈடுபட்டனர்.

புண்யகார்த²ம் கதா²ஸ்தாஸாமாஸந்தே³வீ ஶஶம்ஸ யா꞉ |
விதி⁴ம் ச புண்யகஸ்யாத² ஸதீநாம் ப⁴ர்த்ருதே³வதே ||2-77-23

ஓ! கணவனையே தேவனாகக் கொண்டவளே, புண்யகச் சடங்கு குறித்து அவர்களது உரையாடல் வளர்ந்தபோது, அந்தத் தேவி அது தொடர்பான பலவற்றையும், அதைச் செய்யும் விதிமுறைகளையும் குறித்துப் பேசினாள்.

தாஸாம் மதேந ஸாத்⁴வீநாம் ஸவாஸாம் ஸோமநந்தி³நீ |
பர்யப்ருச்ச²து³மாம் தே³வீம் புண்யகாநாம் விதி⁴ம் வரா ||2-77-24

அப்போது சோமனின் மகளான அருந்ததி, கற்புக்கரசிகள் கூடியிருந்த அந்தச் சபையின் ஒப்புதலுடன் புண்யகச் சடங்கு தொடர்பான மிக முக்கியமான விதிகளைக் குறித்து உமாதேவியிடம் கேட்டாள்.

உமா தாஸாம் ப்ரியார்த²ம் து புண்யகாந்யப்³ரவீத்ததா³ |
ஸமக்ஷம் மம வைத³ர்பி⁴ ஸர்வபூ⁴தஹிதே ரதா ||2-77-25

ஓ! வைதர்ப்பி {ருக்மிணி}, உமாதேவி, அவர்கள் அனைவரையும் நிறைவடையச் செய்யவும், அனைத்து உயிரினங்களுக்கும் நன்மையை விளைவிக்கவும் அந்த அறச்சடங்குகள் குறித்து என் முன்னிலையில் அவர்களுக்குச் சொன்னாள்.

மமைவ சோமயா த³த்த꞉ ஸ ததா³ ரத்நபர்வத꞉ |
ப்ரதிக்³ருஹ்ய மயா சைவ க்ருதோ ப்³ராஹ்மணஸாச்சு²பே⁴ ||2-77-26

ஓ! அழகானவளே, அந்நேரத்தில் உமை ரத்தினங்களின் மலையை எனக்குக் கொடையளித்தாள்; நானும் அந்தக் கொடையை ஏற்றுக் கொண்டு, பிராமணர்களின் தொண்டுக்காக அதை அர்ப்பணித்தேன்.

உமா த்வருந்த⁴தீம் ஸாத்⁴வீமாமந்த்ர்ய யத³பா⁴ஷத |
ஶ்ருணு கல்யாணி வக்ஷ்யாமி ஸர்வாபி⁴꞉ ஸஹிதா ஶுபே⁴ ||2-77-27

புண்யகாநாம் விதி⁴ம் க்ரூத்ஸ்நம் யதா²வத³நுபூர்வஶ꞉ |
யதா² சைவ மயா த்³ருஷ்டஸ்தத ஏஷ விதி⁴꞉ ஶுபே⁴ ||2-77-28

ஓ! மங்கலப் பெண்ணே {கல்யாணி}, புண்யகச் சடங்குகளைக் குறித்து நான் கண்டதையும், கற்புக்கரசியான அருந்ததியிடம் உமை சொன்னதையும் இவர்கள் {இந்தப் பெண்கள்} அனைவருடன் சேர்ந்து கேட்பாயாக. நான் தொடக்கத்தில் இருந்தே அதை முழுமையாக உரைக்கப் போகிறேன்” {என்றார் நாரதர்}.(27,28)

இதி ஶ்ரீமஹாபா⁴ரதே கி²லேஷு ஹரிவம்ஶே விஷ்ணுபர்வணி
புண்யகவிதி⁴கத²நே ஸப்தஸப்ததிதமோ(அ)த்⁴யாய꞉

————–—————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாஸ பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ விஷ்ணு பர்வம்–அத்யாயம் – 76–த்யுதரோ꞉ புந꞉ ஸ்வஸ்தாநே நயநம்)–புண்யகச் சடங்கைச் செய்த சத்யபமா |–

January 31, 2021

சத்யபாமையின் புண்யக நோன்பு; நாரதருக்குக் கொடையளித்துத் தன்னை மீட்டுக் கொண்ட கிருஷ்ணன்; பாரிஜாதத்தை மீண்டும் சொர்க்கத்திற்குக் கொண்டு சென்றது.

வைஶம்பாயந உவாச
அத² க்ருஷ்ணஸ்ய கௌரவ்ய த்⁴யாதமாத்ரஸ்தபோத⁴ந꞉ |
ஆஜகா³ம முநிஶ்ரேஷ்டோ² நாரதோ³ வத³தாம் வர꞉ ||2-76-1

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “ஓ! குருவின் வழித்தோன்றலே, முனிவர்களிலும், பேசுபவர்களிலும் முதன்மையானவரும், தவத்தையே செல்வமாகக் கொண்டவருமான நாரதர், கிருஷ்ணனால் நினைக்கப்பட்டவுடனேயே அங்கே வந்தார்.

ஸம்பூஜயித்வா விதி⁴வத்³வாஸுதே³வோ விஶாம்பதே |
ப்ரதிக்³ரஹார்த²ம் விதி⁴வச்ச்²ரீமாந்ப⁴க்த்யா ந்யமந்த்ரயத் ||2-76-2

ஓ! மன்னா, ஸ்ரீயின் அழகிய தலைவன் முறையாக அவரை வழிபட்டு, புண்யகச் சடங்குகளை ஏற்றுக்கொள்ளுமாறு மதிப்புடன் அழைத்தான்.

தத꞉ காலே ச ஸம்ப்ராப்தே ஸ்நாதம் தே³வோ மஹாமுநிம் |
ஸம்பூஜ்ய மால்யைர்க³ந்தை⁴ஶ்ச போ⁴ஜயாமாஸ பா⁴ரத ||2-76-3

ஸார்வகாமிகமந்நாத்³யம் ஸர்வபூ⁴தக்ருத³ந்வய꞉ |
ஸத்யயா ப்ரியயா ஸார்த⁴ம் ப்ரஹ்ருஷ்டேநாந்தராத்மநா ||2-76-4

ஓ! பரதனின் வழித்தோன்றலே {ஜனமேஜயனே}, குறிப்பிட்ட நேரம் வந்த போது, அனைத்து உயிரினங்களையும் படைத்த நித்யனான வாசுதேவன், நீராடி நறுமணப் பொருட்களையும், மாலைகளையும் சூடிக்கொண்டு வந்த நாரதரைத் தன் அன்புக்குரிய சத்யாவுடன் {சத்யபாமாவுடன்} மகிழ்ச்சியாக வழிபட்டான்.(3,4)

புஷ்பதா³மாவஸஜ்யாத² கந்டே² க்ருஷ்ணஸ்ய பா⁴விநீ |
ப³ப³ந்த⁴ க்ருஷ்ணம் ஸுப⁴கா³ பாரிஜாதே வநஸ்பதௌ ||2-76-5

அந்த நல்லூழ் கொண்ட நங்கை {சௌபாக்யவதி சத்யபாமா}, கிருஷ்ணனின் கழுத்தைச் சுற்றி பூமாலையைச் சூடி பாரிஜாத மரத்துடன் சேர்த்து அவனைக் கட்டினாள்

அத்³பி⁴ர்த³தௌ³ நாரதா³ய ததோ(அ)நுஜ்ஞாப்ய கேஶவம் |
தே³வீ தே⁴நுஸஹஸ்ரம் ச காஞ்சநஸ்ய ச பர்வதம் ||2-76-6

ஹிரண்யரூப்யமிஶ்ரம் ச மணிரத்நப்ரப⁴ஸ்ய ச |
திலமிஶ்ரஸ்ய ச ததா² த⁴ந்யைரந்யைர்யுதஸ்ய ச ||2-76-7

அதன்பிறகு கேசவனின் அனுமதியைப் பெற்றுக் கொண்டு அவனை நாரதருக்கு அர்ப்பணித்தாள். அதன்பிறகு அவள், ஆயிரம் பசுக்களையும், எள்ளும், பிற தானியங்களும், பிரகாசமான ரத்தினங்களும் கலந்து, ஒளிர்ந்து கொண்டிருந்த தங்க மலையையும் கொடையாக அளித்தாள்.(6,7)

ப்ரதிக்³ருஹ்ய து தத்ஸர்வம் நாரதோ³ முநிஸத்தம꞉ |
ஸ ஸம்ப்ரஹ்ருஷ்டோ² பு⁴க்த்வாத² பூ⁴ய꞉ கேஶவமப்³ரவீத் ||2-76-8

பேசுபவர்களில் முதன்மையான நாரத முனிவர், அந்தப் பொருட்கள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு, கேசவனிடம் மகிழ்ச்சியாக

போ⁴꞉ கேஶவ மதீ³யஸ்த்வமத்³பி⁴ர்த³த்தோ(அ)ஸி ஸத்யயா |
ஸ த்வம் மாமநுக³ச்ச²ஸ்வ குரு யத்³யத்³ப்³ரவீம்யஹம் ||2-76-9

“ஓ! கேசவா, சத்யாவால் நீருடன் சேர்த்துக் கொடுக்கப்பட்ட நீ எனதானாய். என்னைப் பின்தொடர்ந்து வந்து நான் சொல்வதைச் செய்வாயாக” என்றார்

ப்ரத²ம꞉ பக்ஷ இத்யேவமப்³ரவீந்மது⁴ஸூத³ந꞉ |
வ்ரஜந்தமநுவவ்ராஜ நாரத³ம் ச ஜநார்த³ந꞉ ||2-76-10

இதைக் கேட்ட ஜனார்த்தனன், “இதுவே முதல் படி {காரியம்}” என்று சொல்லிவிட்டு, புறப்பட ஆயத்தமாக இருந்த நாரதரைப் பின்தொடர்ந்து செல்லத் தொடங்கினான்.

பரிஹாஸம் ப³ஹுவித⁴ம் க்ருத்வா முநிவரஸ்ததா³ |
திஷ்ட²ஸ்வ க³ச்சா²மீத்யுக்த்வா பரிஹாஸவிசக்ஷண꞉ ||2-76-11

கேலிபேசுவதில் எப்போதும் நுண்ணறிவுமிக்கவரும், முனிவர்களில் முதன்மையானவருமான அவர் {நாரதர்}, இவ்வாறு பல்வேறு வகையில் கேலி பேசியபடி, “இங்கே இரு, நான் புறப்படுகிறேன்” என்று சொல்லி,

அபநீய தத꞉ கண்டா²த்புஷ்பதா³மைநமப்³ரவீத் |
கபிலாம் கா³ம் ஸவத்ஸாம் போ⁴ நிஷ்க்ரயார்த²ம் ப்ரயச்ச² மே ||2-76-12

க்ருஷ்ணாஜிநம் திலை꞉ பூர்ணம் ப்ரயச்ச² ச ஸகாஞ்சநம் |
ஏஷோ(அ)த்ர நிஷ்க்ரய꞉ க்ருஷ்ண விஹிதோ வ்ருஷகேதுநா ||2-76-13

கிருஷ்ணனின் கழுத்தில் இருந்து) மலர்மாலையை எடுத்துவிட்டு, “உன்னை விடுவிப்பதற்காகக் கன்றுக்குட்டியுடன் கூடிய ஒரு கபிலப் பசுவையும், எள்ளும் தங்கமும் நிறைந்த கருப்பு மான் தோலையும் {தோற்பையையும்} எனக்குக் கொடுப்பாயாக. காளையைச் சின்னமாகக் கொண்ட தேவனால் (சிவனால்) விடுதலைக்கான இந்த வழிமுறை விதிக்கப்பட்டது” என்றார்.(12,13)

ததே²த்யுக்த்வா ஹ்ருஷீகேஶஸ்ததா² சக்ரே ஜநாதி⁴ப |
ஸ உவாச முநிஶ்ரேஷ்ட²ம் ஹஸித்வா மது⁴ஸூத³ந꞉ ||2-76-14

வரம் வரய த⁴ர்மஜ்ஞ யஸ்தே நாரத³ காங்க்ஷித꞉ |
தத்தே தா³தாஸ்மி த⁴ர்மஜ்ஞ பரா ப்ரீதிர்ஹி மே த்வயி ||2-76-15

ஓ! மன்னா {ஜனமேஜயா}, ஜனார்த்தனன், “அவ்வாறே ஆகட்டும்” என்று சொல்லி விடுதலைக்காக அவர் கேட்ட கட்டணத்தையே {கொடையையே} அவருக்குக் கொடுத்தான். அதன் பிறகு சிரித்துக் கொண்டே அவன் முனிவர்களில் முதன்மையான நாரதரிடம், “ஓ! நாரதரே, ஓ! அறமறிந்தவரே, நான் உம்மிடம் பெரிதும் நிறைவடைந்தேன். நீர் விரும்பிய வரத்தைக் கேட்பீராக, நான் அதை உமக்குத் தருவேன்” என்றான்.(14,15)

நாரத³ உவாச
நித்யமேவாஸ்து மே ப்ரீதோ ப⁴வாந்விஷ்ணோ ஸநாதந |
த்வத்ப்ரஸாதா³த்து ஸாலோக்யம் வ்ரஜேயம் தே மஹாமதே ||2-76-16

நாரதர், “ஓ! நித்யனே, பெரும் விஷ்ணுவே, நீ எப்போதும் என்னிடம் நிறைவுடன் இருப்பாயாக. உன் தயவால் நான் உன்னுடன் வசிக்கும் நிலையை அடைவேனாக.

அயோநிஜோ ப⁴வேயம் தேநாராயண ஸதாம் க³தே |
ப⁴வேயம் ப்³ராஹ்மணஶ்சைவ புநர்ஜாத்யந்தரேஷ்வபி ||2-76-17

ஓ! நல்லோரின் புகலிடமான விஷ்ணுவே, {நான் பிறப்பற்றவனாக இருப்பேனாக. ஒருவேளை} நான் மீண்டும் பிறக்க வேண்டியிருந்தால் எந்தப் பெண்ணிடமும் பிறக்காத பிராமணனாக இருப்பேனாக” என்று சொன்னார்.

ஏவமஸ்த்விதி தம் தே³வோ விஷ்ணு꞉ ப்ரோவாச பா⁴ரத |
துதோஷ ச ததோ தீ⁴மாந்நாரதோ³ முநிஸத்தம꞉ ||2-76-18

ஓ! பரதனின் வழித்தோன்றலே, தலைவன் விஷ்ணு, “அவ்வாறே ஆகட்டும்” என்று சொன்னான், பெரும் நுண்ணறிவுமிக்க நாரத முனிவரும் மகிழ்ச்சியடைந்தார்.

ஷோட³ஶஸ்த்ரீஸஹஸ்ராணி விஷ்ணோரதுலதேஜஸ꞉ |
நிமந்த்ரிதாநி கௌரவ்ய ஸத்யயா ஹரிகாந்தயா ||2-76-19

ஓ! குரு குலப் பேரரசே, ஹரியின் அன்புக்குரிய மனைவியான சத்யபாமா {ஹரிப்ரியை}, அந்தப் புண்யகச் சடங்கு நிகழ்ந்தபோது, பெருஞ்சக்திவாய்ந்த விஷ்ணுவின் பதினாறாயிரம் மனைவியரையும் அழைத்திருந்தாள்.

தாஸாம் த³தௌ³ ஸந்நியோக³மேகைகம் ஹரிவல்லபா⁴ |
ஶச்யா யோ வாஸுதே³வஸ்ய புரா த³த்தோ நராதி⁴ப ||2-76-20

அந்தச் சடங்கு நிறைவடைந்ததும், சசி முன்பு வாசுதவேனிடம் கொடுத்த தெய்வீக ஆடைகளையும், ஆபரணங்கள் அனைத்தையும் அவர்கள் ஒவ்வொருவருக்கும் கொடுத்தாள்.

பாரிஜாதோ வஸம்ஸ்தத்ர தத꞉ ப்ரவவ்ருதே ததா³ |
ஆஜ்ஞயா வாஸுதே³வஸ்ய நாரதே³ந மஹாத்மநா ||2-76-21

அங்கே இருந்த பாரிஜாதம், வாசுதேவனின் ஆணையின் பேரில் தன் சிறப்புகள் அனைத்தையும் வெளிப்படுத்த தொடங்கியது.

நிமந்த்ரிதா க³ணா꞉ ஸர்வே கேஶவேந மஹாத்மநா |
விபூ⁴திம் பாரிஜாதஸ்ய த³த்³ருஶு꞉ குருநந்த³ந ||2-76-22

உயரான்ம நாரதராலும், கேசவனாலும் அழைக்கப்பட்ட நண்பர்களும், உறவினர்களும் அந்தப் பாரிஜாதத்தின் சக்தியைக் காணத் தொடங்கினர்

பாண்ட³வாம்ஶ்சாநயாமாஸ ஸஹைவ ப்ருத²யா ஹரி꞉ |
த்³ரௌபத்³யா ச மஹாதேஜாஸ்ததை²வ ச ஸுப⁴த்³ரயா ||2-76-23

அந்தப் பெருவிழா நடந்தபோது, பெருஞ்சக்திவாய்ந்த ஹரி அங்கே பாண்டவர்களையும், பிருதை {குந்தி}, திரௌபதி, சுபத்திரை ஆகியோரையும் வரவழைத்தான்.

ஶ்ருதஶ்ரவாம் ச ஸஸுதாம் பீ⁴ஷ்மகம் ஸஸுதம் ததா³ |
அந்யாநபி ச கௌரவ்ய மித்ரஸம்ப³ந்தி⁴பா³ந்த⁴வாந் ||2-76-24

ஓ! குரு குல மன்னா, சுருதசிரவையும் அவளது மகனும் {சிசுபாலனும்}, பீஷ்மகனும் அவனது மகனும் {ருக்மியும்}, பிற நண்பர்களும், உறவினர்களும் அங்கே அழைக்கப்பட்டிருந்தனர்.

ரேமே ச ஸஹ பார்தே²ந பா²ல்கு³நேந ஜநார்த³ந꞉ |
ஸாந்த꞉புரோ மஹாதேஜா꞉ பரமர்த்³த்⁴யாவஸந்ந்ருப ||2-76-25

ஓ! மன்னா, இவ்வழியில் பெருஞ்சக்திவாய்ந்த ஜனார்த்தனன், பிருதையின் மகனான அர்ஜுனனுடன் சேர்ந்து தனது அந்தப்புரத்துப் பெண்களின் துணையுடன் மகிழ்ச்சியாகத் தன் நேரத்தைக் கடத்தத் தொடங்கினான்.

ஸம்வத்ஸரே ததோ யாதே கேஶிஹாமரஸத்தம꞉ |
பாரிஜாதம் புந꞉ ஸ்வர்க³மாநயத்ஸர்வபா⁴வந꞉ ||2-76-26

தத்ராதி³திம் கஶ்யபம் ச த்³ருஷ்ட்வா ஸ்வஜநநீம் ப்ரபு⁴꞉ |
ஶக்ரேண ஸஹிதோ தீ⁴மாநப்ரமேயபராக்ரம꞉ ||2-76-27

இவ்வழியில் ஓர் ஆண்டுக் கடந்ததும், பெருஞ்சக்திவாய்ந்தவனும், ஒப்பற்ற ஆற்றலையும், நுண்ணறிவையும் கொண்டவனும், தேவர்களில் முதன்மையானவனும், அனைவரையும் காப்பவனுமான கேசவன், பாரிஜாதத்துடன் தேவர்களின் நகரத்திற்குத் திரும்பி சக்ரனையும், அதிதியையும், கசியபரையும் வணங்கினான்.(26,27)

தமுவாசாதி³திர்மாதா ப்ரணதம் மது⁴ஸூத³நம் |
ஸௌப்⁴ராத்ரமஸ்து வாமேவம் நித்யம் சாமரஸத்தம ||2-76-28

இவ்வாறு மதுசூதனன் வணங்கிய பிறகு அன்னையான அதிதி, “ஓ! தேவர்களில் முதன்மையானவனே, நீங்கள் இருவரும் எப்போதும் உடன்பிறந்த உணர்வோடு {ஸஹோதர வாத்ஸல்யத்தோடு} இருப்பீராக

மநோரத²ம் மம த்வம் ச பூரயஸ்வ ஜநார்த³ந |
ததே²த்யேவாப்³ரவீத்க்ருஷ்ணஸ்ததோ மாதரமாத்மவாந் ||2-76-29

ஓ! ஜனார்த்தனா, என்னுடைய இந்த விருப்பத்தை நீ நிறைவேற்றுவாயாக” என்றாள். இதைக் கேட்ட நுண்ணறிவுமிக்கக் கேசவன் தன் அன்னையிடம், “அப்படியே ஆகட்டும்” என்றான்.

ஆமந்த்ரயித்வா பிதரௌ தே³வராஜாநமப்³ரவீத் |
வாஸுதே³வோ மஹாதேஜா꞉ காலப்ராப்தமித³ம் வச꞉ ||2-76-30

பெருஞ்சக்திவாய்ந்தவனான வாசுதேவன், தன் தாய் தந்தையரை வணங்கிய பிறகு, அந்தச் சந்தர்ப்பத்திற்குத் தகுந்த பின் வரும் சொற்களுடன் தேவர்களின் மன்னனிடம்

மஹாதே³வேந தே³வேஶ ஸந்தி³ஷ்டோ(அ)ஸ்மி மஹாத்மநா |
அந்தர்பூ⁴மிதலே வத்⁴யாநஸுராந்ப்ரதி மாநத³ ||2-76-31

“ஓ! தேவர்களின் மன்னா, ஓ! கௌரவங்களை அளிப்பவனே, பூமியில் வாழ்ந்து வரும் கொல்லப்படாத தானவர்கள் அனைவரையும் அழிக்குமாறு உயரான்ம சிவனால் எனக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது

ததி³தோ த³ஶராத்ரேண ஹந்தாஹமஸுரோத்தமாந் |
தத்ரோபவிஷ்டாந்ஸ்தா²தவ்யம் ப்ரவரேண மஹாத்மநா ||2-76-32

இன்றிலிருந்து பத்து நாட்களுக்குள் அந்த அசுரர்கள் அனைவரையும் நான் கொல்வேன். ஓ! தேவர்களின் மன்னா, அந்தப் போர் நடக்கும் நேரத்தில் பிரவரனும்,

ஜயந்தேந ச வீரேண தா³நவாநாம் ஜிகா⁴ம்ஸயா |
ஏகோ(அ)த்ர மாநுஷோ தே³வோ தே³வபுத்ரஸ்ததா² பர꞉ ||2-76-33

வீரனான ஜயந்தனும் சேர்ந்து அந்தத் தானவர்களைக் கொல்தற்காக ஆகாயத்தில் காத்திருக்க வேண்டும். அவர்களில் ஒருவன் மனித வடிவில் இருக்கும் தேவன், மற்றொருவன் தேவனின் மகன்.

அவத்⁴யா꞉ கில தே தே³வைர்ப்³ரஹ்மணோ வரத³ர்பிதா꞉ |
அஸ்மாபி⁴꞉ கில ஹந்தவ்யா மாநுஷத்வமுபாக³தே ||2-76-34

பிரம்மனால் வழங்கப்பட்ட வரத்தின் மூலம் செருக்குடன் கூடிய அந்தத் தானவர்கள், தேவர்களால் கொல்லப்பட முடியாதவர்களாக இருந்தாலும், நான் இப்போது மனிதனாக இருப்பதால் அவர்களை நம்மால் கொல்ல முடியும்” என்றான்

ததே²தி க்ருஷ்ணம் ஸ ஹரி꞉ ப்ரீதரூபஸ்ததா²ப்³ரவீத் |
ஸஸ்வஜாதே ததோ தே³வாவந்யோந்யம் ஜநமேஜய ||2-76-35

இந்திரன் நிறைவடைந்தவனாகக் கிருஷ்ணனிடம், “அவ்வாறே ஆகட்டும்” என்றான். பிறகு, ஓ! ஜனமேஜயா அவர்கள் ஒருவரையொருவர் தழுவிக் கொண்டனர்” என்றார் {வைசம்பாயனர்}.

இதி ஶ்ரீமஹாபா⁴ரதே கி²லேஷு ஹரிவம்ஶே விஷ்ணுபர்வணி
பாரிஜாதஹரணே ஸ்வர்கே³ பாரிஜாதஸ்தா²பநே
ஷட்ஸப்ததிதமோ(அ)த்⁴யாய꞉

————–—————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாஸ பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ விஷ்ணு பர்வம்–அத்யாயம் – 75–(ஸ்வர்காத் ஸ்ரீ பாரிஜாதாநயனம்)–ஸ்ரீ மத் துவாரகையில் ஸ்ரீ பாரிஜாத மரம் | —

January 31, 2021

கிருஷ்ணனுக்கும் இந்திரனுக்கும் இடையில் மீண்டும் போர்; அமைதியை நிலைநாட்டிய கசியபரும் அதிதியும்; துவாரகை வந்த பாரிஜாதம்

வைஷ²ம்பாயன உவாச
ததோ ரத²வரம் க்ருஷ்ண꞉ ஸமாருஹ்ய மஹாமனா꞉ |
பி³ல்வோத³கேஷ்²வரம் தே³வம் நமஸ்க்ருத்ய யயௌ ந்ருப꞉ ||2-75-1

மஹேந்த்³ரமாஹ்வயாமாஸ ரத²ஸ்தோ² மது⁴ஸூஅன꞉ |
ஸத்க்ருதம் புஷ்கராப்⁴யாஷே² ஸர்வைர்தே³வக³ணை꞉ ஸஹ ||2-75-2

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “உயர்ந்த ஆன்மா கொண்டவனும், மதுசூதனனுமான கிருஷ்ணன், வில்வத்துக்கும், நீருக்கும் தலைவனை {சிவனை} வணங்கிவிட்டுத் தன் தேரில் ஏறிச் சென்றான்; அவன் தன் தேரில் அமர்ந்து கொண்டு புஷ்கரையின் அருகில் தேவர்களுடன் கூடிய தேவமன்னனை {இந்திரனை} அழைத்தான்.(1,2)

தத꞉ ஷ²க்ரோ ஜயந்தோ(அ)த² ஹரிபி⁴ர்யுக்தமுத்தமம் |
ஆருரோஹ ரத²ம் தே³வ꞉ ஸர்வகாமப்ரத³꞉ ஸதாம் ||2-75-3

நல்லோரின் விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றுபவனும், பிரகாசமிக்கவனுமான சக்ரனும், ஜயந்தனும் சிறப்புமிக்கக் குதிரைகளால் இழுக்கப்படும் தேர்களில் ஏறினார்கள்

ததோ ரத²ஸ்த²யோர்யுத்³த⁴மப⁴வத்குருநந்த³ன |
தே³வயோர்தே³வயோகே³ன பாரிஜாதக்ருதே ததா³ ||2-75-4

ததோ(அ)ஹனத்³ரணே விஷ்ணுர்பா³ணை꞉ ஷ²த்ருப³லார்த³ன꞉ |
ஸைன்யானி தே³வராஜஸ்ய பா³ணஜாலைரஜிஹ்மகை³꞉ ||2-75-5

உபேந்த்³ரம் ந மஹேந்த்³ரோ(அ)த² நைவ விஷ்ணு꞉ ஸுரேஷ்²வரம் |
தாட³யாமாஸதுர்வீரௌ ஷ²ஸ்த்ரை꞉ ஷ²க்தாவபி ப்ரபோ⁴ ||2-75-6

ஓ! குருக்களில் வழித்தோன்றலே, அப்போது தேரில் அமர்ந்திருந்த அந்தத் தேவர்கள் இருவருக்கும் இடையில் விதிவசத்தால் பாரிஜாதத்திற்காகப் போர் நடந்தது. பகைவரை ஒடுக்குபவனான விஷ்ணு, நேராகச் செல்லும் கணைகளால் தேவர்களின் மன்னனுடைய படைவீரர்களைத் தாக்கினான் ஓ! தலைவா, இந்திரன் உபேந்திரனைத் தாக்கவல்லவனாக இருப்பினும் அவனைத் தாக்கவில்லை, பின்னவனும் முன்னவனைத் தாக்கவில்லை.(4-6)

ஏகைகமஷ்²வம் த³ஷ²பி⁴ர்மஹேந்த்³ரஸ்ய ஜனார்த³ன꞉ |
விவ்யாத⁴ விஷி²கை²ஸ்தீக்ஷ்ணைரஸ்த்ரயுக்தைர்ஜனேஷ்²வர ||2-75-7

ஷை²ப்³யாத்³யானபி தே³வேந்த்³ர꞉ ஷ²ரைரமரஸத்தம꞉ |
சாத³யாமாஸ ராஜேந்த்³ர கோ⁴ரைரஸ்த்ராபி⁴மந்த்ரிதை꞉ ||2-75-8

ஓ! மன்னா, ஜனார்த்தனன் கூர்மையான பத்து கணைகளால் தேவர்களின் மன்னனுடைய குதிரைகள் ஒவ்வொன்றையும் தாக்கினான்; தேவர்களில் முதன்மையான வாசவனும், வில்லில் இருந்து ஏவப்பட்ட பயங்கரக் கணைகளால் சைப்யத்தையும், பிற குதிரைகளையும் மறைத்தான்

ஸ ச பா³ணஸஹஸ்ரைஷ்²ச க்ருஷ்ணோ க³ஜமவாகிரத் |
க³ருட³ம் ச மஹாதேஜா ப³லபி⁴த்³த⁴ரிவாஹனம் ||2-75-9

கிருஷ்ணன் ஆயிரங்கணைகளால் (இந்திரனின்) யானையையும், பலம்வாய்ந்தவனான பலனை {பலாசுரனைக்} கொன்றவன் {இந்திரன்} கருடனையும் மறைத்தனர்.

பூ⁴யிஷ்டா²ப்⁴யாம் லதாப்⁴யாம் தௌ தத³ஹ꞉ ஷ²த்ருதா³ரணௌ |
யுயுதா⁴தே மஹாத்மானௌ நாராயணஸுராதி⁴பௌ ||2-75-10

சகம்பே வஸுதா⁴ க்ருத்ஸ்னா நௌர்ஜலஸ்தே²வ பா⁴ரத |
தி³ஷா²ம் தா³ஹேன தி³க்³தே³ஷா²꞉ ஸம்வ்ருதாஷ்²ச ஸமந்தத꞉ ||2-75-11

ஓ! பரதரின் வழித்தோன்றலே {ஜனமேஜயனே}, உயரான்மாவும், பகைவருக்குப் பயங்கரனுமான நாராயணனும், தேவர்களின் மன்னனும் இவ்வாறே தங்கள் தேர்களில் அமர்ந்து கொண்டு ஒருவரோடொருவர் போரிட்டபோது, நீரில் மூழ்கும் படகைப் போலப் பூமி நடுங்கினாள், திசைகள் அனைத்தும் ஒளியில் பொதிந்திருந்தன.(10,11)

சேலுர்கி³ரிவராஷ்²சைவ பேதுஷ்²ச ஷ²தஷோ² த்³ருமா꞉ |
பேதுஷ்²ச த⁴ரணீப்ருஷ்டே² மர்த்யா த⁴ர்மகு³ணான்விதா꞉ ||2-75-12

மலைகள் நடுங்கின, நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன, நல்ல மனிதர்கள் பூமியில் விழுந்தனர்

நிர்கா⁴தா꞉ ஷ²தஷ²ஷ்²சான்யே பேதுஸ்தத்ர நராதி⁴ப |
ஊஹுஷ்²ச ஸரிதஹ் ஸர்வா꞉ ப்ரதிஸ்ரோதோ விஷா²ம்பதே ||2-75-13

விஷ்²வக்³வாதா வவுஷ்²சைவ பேதுருல்காஷ்²ச நிஷ்ப்ரபா⁴꞉ |
முஹுர்முஹுர்பூ⁴தஸங்கா⁴ ரத²நாதே³ன மோஹிதா꞉ ||2-75-14

ப்ரஜஜ்வால ஜலே சைவ வஹ்நிர்ஜனபதே³ஷ்²வர |
யுயுது⁴ஷ்²ச க்³ரஹை꞉ ஸார்த⁴ம் க்³ரஹா நப⁴ஸி ஸர்வத꞉ ||2-75-15

ஓ! மன்னா, நூற்றுக்கணக்கான புயல்கள் வீசின. அந்தப் போர் நடந்து கொண்டிருந்தபோது, ஆறுகள் எதிர் திசையில் பாய்ந்தன, கடுங்காற்று வீசியது, எரிகொள்ளிகள் ஒளியிழந்து விழுந்தன, தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலியால் உயிரினங்கள் மீண்டும் மீண்டும் தன்னினைவை இழந்தன. ஓ! மன்னா, நீரிலும் கூட நெருப்பு எரிந்தது, வானத்தில் கோள்களுடன் கோள்கள் போரிட்டன.(13-15)

ஜ்யோதீம்ஷி ஷ²தஷ²꞉ பேது꞉ ஸ்வர்கா³ச்ச த⁴ரணீதலம் |
தி³ஷா²ம் க³ஜா꞉ ப்ரகுபிதா꞉ நாகா³ஷ்²ச த⁴ரணீதலே ||2-75-16

நூற்றுக்கணக்கான விண்மீன்கள் வானத்தில் இருந்து பூமியில் விழுந்தன. திசைகளின் யானைகளும் {திக்கஜங்களும்}, பூமியில் உலவும் யானைகளும் நடுங்கத் தொடங்கின

க³ர்த³பா⁴ருணஸம்ஸ்தா²னைஷ்²சி²ந்நாப்⁴ரைஷ்²சாவ்ருதம் நப⁴꞉ |
வினந்த³த்³பி⁴ர்மஹாராவைருல்காஷோ²ணிதவர்ஷிபி⁴꞉ ||2-75-17

கழுதையைப் போன்று சாம்பல் நிறம் கொண்டவையும், பயங்கரக் குருதியைப் பொழிபவையுமான மேகங்கள் பெருமுழக்கத்துடன் வானை மறைத்தன.

ந பூ⁴ர்ன த்³யௌர்ன க³மனம் நரேந்த்³ரவ்ருஷபா⁴ ப⁴வன் |
ஸ்வஸ்தா²னி ஸுரவீரௌ து த்³ருஷ்ட்வா யுத்³த⁴க³தௌ ததா³ || 2-75-18

ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, வீரர்களான அவ்விரு தேவர்களும் போரிடுவதைக் கண்ட பூமியும், சொர்க்கமும், ஆகாயமும் காட்சியில் இருந்து மறைந்தன.

ஜேபுர்முனிக³னா மந்த்ரஞ்ஜக³தோ ஹிதகாம்யயா |
ப்³ராஹ்மநாஷ்²ச மஹாத்மானோ ஹ்யதிஷ்ட²ம்ஸ்தேஷு ஸத்வரா꞉ ||2-75-19

அந்நேரத்தில் பூமியின் நன்மைக்காக முனிவர்கள் மந்திரங்களை ஓதத்தொடங்கினர், பிராமணர்களும் தியானங்களில் ஈடுபட விரைந்தனர்.

ததோ ப்³ரஹ்மா மஹாதேஜா꞉ கஷ்²யபம் வாக்யமப்³ரவீத் |
க³ச்ச² வத்⁴வா ஸஹாதி³த்யா புத்ரௌ வாரய ஸுவ்ரத ||2-75-20

அப்போது பெருஞ்சக்திவாய்ந்த பிரம்மன், கசியபரிடம், “ஓ! உறுதியான நோன்புகளைக் கொண்டவனே, உன் மனைவியான அதிதியுடன் சென்று உன் மகன்கள் இருவரையும் தடுப்பாயாக” என்றான்

ஸ ததே²தி ததா³ தே³வமுக்த்வா பத்³மப⁴வம் முனி꞉
ஜகா³ம ரத²மாஸ்தா²ய தஸ்தௌ² நரவராந்திகே ||2-75-21

அம்முனிவர் {கசியபர்}, தாமரையில் பிறந்த தேவனிடம், “அவ்வாறே ஆகட்டும்” என்று சொல்லிவிட்டு மனிதர்களில் முதன்மையானவனிடம் {கிருஷ்ணனிடம்} தன் தேரில் சென்றார்

ஸ்தி²தம் து கஷ்²யபம் த்³ருஷ்ட்வா ஸஹாதி³த்யா தத³ந்தரா |
உபௌ⁴ ராதா²ப்⁴யாம் த⁴ரணீமவதீர்ணௌ மஹாப³லௌ ||2-75-22

ந்யஸ்தஷ²ஸ்த்ரௌ ச தௌ வீரௌ வவந்த³துரரிந்த³மௌ |
பிதரௌ த⁴ர்மதத்த்வஜ்ஞௌ ஸர்வபூ⁴தஹிதே ரதௌ ||2-75-23

அறத் தத்துவங்களை நன்கறிந்தவர்களும், உயிரினங்கள் அனைத்தின் நன்மையில் எப்போதும் ஈடுபடுபவர்களும், பகைவரைக் கொல்பவர்களும், பெருஞ்சக்திவாய்ந்தவர்களுமான அந்த வீரர்கள் இருவரும் போர்க்களத்தில் கசியபரையும், அதிதியையும் கண்டு தங்கள் தேர்களில் இருந்து இறங்கி, ஆயுதங்களைக் கைவிட்டுத் தங்கள் பெற்றோரின் பாதங்களை வணங்கினர்.(22,23)

உபௌ⁴ க்³ற்^ஹீத்வா ஹஸ்தாப்⁴யாமதி³திஸ்த்வப்³ரவீத்³வச꞉ |
அஸோத³ராவிவைவம் கிமன்யோன்யம் ஹந்துமிச்ச²த꞉ ||2-75-24

அப்போது அதிதி அவர்கள் இருவரின் கரங்களையும் பற்றிக் கொண்டு, “ஒரே தாய்தந்தையருக்குப் பிறந்தும், உடன்பிறவாதவர்களைப் போல ஏன் நீங்கள் ஒருவரையொருவர் கொல்ல முயல்கிறீர்கள்?

ஸ்வல்பமர்த²ம் புரஸ்க்ருத்ய ப்ரவ்ருத்தமதிதா³ருணம் |
ஸத்³ருஷ²ம் நேதி பஷ்²யாமி ஸர்வதா² மம புத்ரயோ꞉ ||2-75-25

{சிறு காரியத்திற்காக இந்தப் பயங்கரச் செயலைச் செய்கிறீர்கள். இஃது என் மகன்களுக்கு எந்த வகையிலும் தகுந்ததல்ல என்பதை நான் காண்கிறேன்}.

ஷ்²ரோதவ்யம் யதி³ மாதுஷ்²ச பிதுஷ்²சைவ ப்ரஜாபதே꞉ |
ந்யஸ்தஷ²ஸ்த்ரௌ ஸ்தி²தௌ பூ⁴த்வா குருதம் வசனம் மம ||2-75-26

நடந்தது போகட்டும். தாயின் சொற்களுக்கும், பெற்ற தந்தையின் சொற்களுக்கும் கீழ்ப்படிய நீங்கள் நினைத்தால் உங்கள் ஆயுதங்களைக் கைவிட்டுவிட்டு நான் சொல்வதைக் கேட்பீராக” என்றாள்.

ததே²த்யுக்த்வா ச தௌ தே³வௌ ஸ்னாதுகாமௌ மஹாப³லௌ |
க³ங்கா³ம் ஜக்³மதுரேவாத² ப்ரஜல்பந்தௌ பரஸ்பரம் ||2-75-27

பெருஞ்சக்திவாய்ந்தவர்களான அந்தத் தேவர்கள் இருவரும், “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி, ஒருவரோடு ஒருவர் கலந்து பேசிய படியே ஜானவி {கங்கை} ஆற்றங்கரைக்குச் சென்றனர்

ஷ²க்ர உவாச
த்வம் ப்ரபு⁴ர்லோகக்ருத்க்ருத்ஸ்னராஜ்யே(அ)ஹம் ஸ்தா²பிதஸ்த்வயா |
ஸ்தா²பயித்வா கத²ம் நாம புனர்மாமவமன்யஸே ||2-75-28

சக்ரன், “ஓ! கிருஷ்ணா, அண்டத்தைப் படைத்த தலைவனும், அரசில் {தேவலோக அரசில்} என்னை நிறுவியவனும் நீயே. இங்கே என்னை நிறுவிவிட்டு இப்போது ஏன் நீயே என்னை அவமதிக்கிறாய்?

ப்⁴ராத்ருத்வமுபக³ம்யைவ ஜ்யேஷ்ட²த்வம் சாப்யபோஹ்ய ச |
கத²ம் கமலபத்ராக்ஷ நிர்வாணம் கர்துமிச்ச²ஸி ||2-75-29

ஓ! தாமரைக் கண்ணா, என்னை அண்ணனாக ஏற்றுக் கொண்ட நீ இப்போது என்னை ஏன் அழிக்க விரும்புகிறாய்?” என்று கேட்டான்.

ஸ்னாதௌ து ஜாஹ்னவீதோயே புனரப்⁴யாக³தௌ ந்ருப |
யத்ராதி³தி꞉ கஷ்²யபஷ்²ச மஹாட்மானௌ த்³ருட⁴வ்ரதௌ ||2-57-30

ஓ! மன்னா {ஜனமேஜயா}, பிறகு அவர்கள் இருவரும் ஜானவியாற்றின் நீரில் நீராடிவிட்டு உறுதியான நோன்புகளைக் கொண்ட உயரான்ம கசியபரிடமும், அதிதியிடமும் திரும்பி வந்தனர்.

ப்ரியஸங்க³மனம் நாம தம் தே³ஷ²ம் முனயோ(அ)வத³ன் |
யத்ர தௌ ஸங்க³தௌ சோபௌ⁴ பித்ருப்⁴யாம் கமலேக்ஷணௌ ||2-75-31

தாமரைக் கண்களைக் கொண்ட அந்தச் சகோதரர்கள் இருவரும் தங்கள் தாய்தந்தையருடன் இணைந்த அந்த இடத்திற்கு “அன்புக்குரியோர் இணையும் களம் {ப்ரியஸங்கமனம்}” என்று முனிவர்கள் பெயர்சூட்டினர்

தத꞉ ஷ²க்ரஸ்ய கௌரவ்ய த³த்வா வாசாப⁴யம் ததா³ |
யத்ர தே³வக³ணா꞉ ஸர்வே ஸமேதா த⁴ர்மசாரிண꞉ ||2-75-32

ததோ யயுர்விமானைஸ்து தே³வா꞉ ஸர்வே த்ரிவிஷ்டபம் |
ருத்³த்⁴யா பரமயா யுக்தாஸ்தேஷாமேவானுரூபயா ||2-75-33

ஓ! குருக்களின் வழித்தோன்றலே, அழகிய வடிவங்களில் அங்கே ஒளிர்ந்து கொண்டிருந்த நல்ல தேவர்களின் {தேவகணங்களின்} முன்னிலையில் கிருஷ்ணன் இந்திரனின் பாதுகாப்புக்கான உறுதியை அளித்ததும், அவர்கள் தங்கள் தேர்களில் {விமானங்களில்} ஏறி தேவலோகத்திற்குச் சென்றனர்.(32,33)

கஷ்²யபஷ்²சாதி³திஷ்²சைவ ததா² ஷ²க்ரஜனார்த³னௌ |
விமானமேகமாருஹ்ய க³தா ராஜம்ஸ்த்ரிவிஷ்டபம் || 2-75-34

ஓ! மன்னா, கசியபர், அதிதி, இந்திரன், உபேந்திரன் ஆகியோர் ஒரே தேரில் அமர்ந்து தேவலோகத்திற்குப் புறப்பட்டுச் சென்றனர்.

தே ஷ²க்ரஸத³னம் ப்ராப்தா ரம்யம் ஸர்வகு³ணான்விதம் |
ஊஷுரேகத்ர கௌரவ்ய முதி³தா த⁴ர்மசாரிண꞉ ||2-75-35

ஓ! குருவின் வழித்தோன்றலே, அனைத்துக் குணங்களையும் கொண்ட நல்ல தேவர்கள் சக்ரனிடம் வந்து தங்கள் இருக்கையில் அமர்ந்த பிறகு,

ஷ²சீ து கஷ்²யபம் பத்ன்யா ஸஹிதம் த⁴ர்மவத்ஸலா |
உபாசரன்மஹாத்மானம் ஸர்வபூ⁴தஹிதே ரதம் ||2-75-36

அறத்தையே எப்போதும் விரும்புபவளான சசி, அனைத்து உயிரினங்களின் நன்மையில் எப்போதும் ஈடுபடுபவர்களான உயரான்ம கசியபரையும், அவரது மனைவியையும் {அதிதியையும்} துதித்தாள்.

ததஸ்தஸ்யாம் ப்ரபா⁴தாயாம் ரஜன்யாமப்³ரவீத்³த⁴ரிம் |
ஆதா³தத⁴மதத்த்வஜ்ஞா ஸர்வஹூதஹிதம் வச꞉ ||2-75-37

அந்த இரவு கடந்ததும், அறக் கோட்பாடுகளை அறிந்தவளான அதிதி, உயிரினங்களுக்கு எப்போதும் நன்மையை விளைவிக்கும் ஹரியிடம் {கிருஷ்ணனிடம்},

உபேந்த்³ர த்³வாரகாம் க³ச்ச² பாரிஜாதம் நயஸ்வ ச |
வத்⁴வா ஸம்ப்ராபயஸ்வேஷ² புண்யகம் ஹ்ருத³யே ஸ்தி²தம் ||2-75-38

“ஓ! உபேந்திரா, இந்தப் பாரிஜாதத்தை எடுத்துக் கொண்டு, துவாரகை சென்று, உன் மனைவியுடன் சேர்ந்து மங்கலச் சடங்கை {புண்யக நோன்பை} நிறைவேற்றுவாயாக

புண்யகே ஸத்யயா ப்ராப்தே புனரேவ த்வயா தரு꞉ |
நந்த³னே புருஷஷ்²ரேSடா² ஸ்தா²ப்ய꞉ ஸ்தா²னே யதோ²சிதே ||2-75-39

ஆனால், ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, அந்தச் சடங்கு நிறைவடைந்ததும், நீ இந்த மரத்தைத் திரும்பவும் கொண்டு வந்து நந்தனவனத்தில் முன்பு போலவே வைப்பாயாக” என்றாள்.

ஏவமஸ்த்விதி க்ருஷ்ணேன தே³வமாதா யஷ²ஸ்வினீ |
உக்தா த⁴ர்மகு³ணைர்யுக்தா நாரதே³ன மஹாத்மனா ||2-75-40

இதைக் கேட்ட கிருஷ்ணன், அறம் சார்ந்த குணம் கொண்டவளென நாரதரால் சொல்லப்பட்டவளும், சிறப்புமிக்கவளுமான தேவர்களின் அன்னையிடம் {அதிதியிடம்}, “அவ்வாறே ஆகட்டும்” என்றான்[“இதைக் கேட்ட கிருஷ்ணன், சிறப்புமிக்கவளான தேவர்களின் அன்னையிடம் {அதிதியிடம்}, “அவ்வாறே ஆகட்டும்” என்றான். நாரதரும் அதற்கு உடன்பட்டார்” ].

ததோ(அ)பி⁴வாத்³ய பிதரம் மாதரம் ச ஜனார்த³ன꞉ |
மஹேந்த்³ரம் ஸஹ ஷ²ச்யாத² ப்ரதஸ்தே² த்³வாரகாம் ப்ரதி ||2-75-41

அதன் பிறகு ஜனார்த்தனன், தன் அன்னையையும், தந்தையையும், சசியுடன் கூடிய மஹேந்திரனையும் வணங்கிவிட்டு, துவாரகை செல்லும் தன் விருப்பத்தை வெளிப்படுத்தினான்.

த³தௌ³ க்ருஷ்ணாய பௌலோமீ நியோகா³ன்குருநந்த³ன |
ஸர்வாஸாமேவ க்ருஷ்ணஸ்ய பா⁴ர்யாணாம் த⁴ர்மசாரிணீ ||2-75-42

புலோமனின் நன்மகள் {சசிதேவி}, கிருஷ்ணனின் மனைவியருக்கென அவனிடம் அழகிய ஆபரணங்கள் பலவற்றைக் கொடுத்தாள்.

தி³வ்யானாம் ஸர்வரத்னானாம் வாஸஸாம் ச மனஸ்வினீ |
நானாராகா³விரக்தானாம் ஸதே³வாரஜஸாமபி ||2-75-43

பா⁴ர்யாணாம் ச ஸஹஸ்ராணி யானி ஷோட³ஷ² மாத⁴வே |
ப்ரதிக்³ருஹ்ய மஹாதேஜா꞉ ப்ரயயௌ த்³வாரகாம் ப்ரதி ||2-75-44

ஸம்பூஜ்யமானோ த்³யுதிமான்கே²சரை꞉ புண்யகர்மபி⁴꞉ |
ஸஸாத்யகி꞉ ஸபுத்ரஷ்²ச ப்ராப்தோ ரைவதகம் கி³ரிம் ||2-75-45

பெரும் மனம் கொண்ட புலோமனின் மகள் {சசி}, மாதவனின் பதினாறாயிரம் மனைவியருக்கும் பல்வேறு வகையான தெய்வீக ரத்தினங்களையும், பல்வேறு வண்ணங்களிலான ஆடைகளையும் கொடுத்து அனுப்பினாள். பெருஞ்சக்திமிக்கவனும், பிரகாசமிக்கவனுமான கேசவன், அந்தப் பரிசுகள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு, வானுலாவிகளில் நல்லவர்களால் {தேவகணங்களால்} கௌரவிக்கப்பட்டு, பிரத்யும்னனுடனும், சாத்யகியுடனும் துவாரகைக்குப் புறப்பட்டு, ரைவதக மலையை அடைந்தான்.(43-45

ஸ தத்ர ஸ்தா²பயித்வா ச பாரிஜாதம் வரத்³ருமம் |
ஸத்யகம் ப்ரேஷயாமாஸ த்³வாரகாம் த்³வாரஷா²லினீம் ||2-75-46

மரங்களில் முதன்மையான பாரிஜாதத்தை அங்கே நிறுத்தி வைத்த மாதவன், வாயில்களைக் கொண்ட {நகரமான} துவாரகைக்குச் சாத்யகியை அனுப்பிவைத்தான்

ஷ்²ரீக்ருஷ்ண உவாச
பாரிஜாதமிஹானீதம் மஹேந்த்³ரஸ்த³னான்மயா |
நிவேத³ய மஹாபா³ஹோ பை⁴மானாம் பை⁴மவர்த⁴ன ||2-75-47

கிருஷ்ணன், “ஓ! பெருங்கரங்களைக் கொண்ட பைமர்களின் மன்னா {பீம குல சாத்யகி / பைமவர்த்தனா}, மஹேந்திரனின் வசிப்பிடத்தில் இருந்து பாரிஜாதத்தை இங்கே நான் கொண்டு வந்திருக்கிறேன் என்ற செய்தியை பைமர்களிடம் {பீம குலத்தோரிடம்} சொல்வாயாக

அத்³ய த்³வாரவதீம் சைவ பாரிஜாதமஹம் த்³ருமம் |
ப்ரவேஷ²யிஷ்யே நக³ரே ஷோ²பா⁴ ப்ரக்ரியதாம் ஷு²பா⁴ ||2-75-48

மரங்களில் சிறந்த இந்தப் பாரிஜாதத்தை நான் இன்றே துவாரகைக்குக் கொண்டு செல்லப் போகிறேன். நகரம் மங்கல அடையாளங்களால் அலங்கரிக்கப்படட்டும்” என்றான்.

இத்யுக்த꞉ ஸத்யகோ க³த்வா ததோ²க்த்வ புனராக³த꞉ |
குமாரைர்நாக³ரை꞉ ஸார்த⁴ம் ஸாம்ப³ப்ரப்⁴ருதிபி⁴꞉ ப்ரபோ⁴ ||2-75-49

ஓ! தலைவா, இவ்வாறு கேட்டுக் கொள்ளப்பட்ட சாத்யகி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றான். அவன், கிருஷ்ணனின் சொற்களைப் பைமர்களிடம் சொல்லிவட்டு, குடிமக்களுடனும், சாம்பனின் தலைமையிலான இளவரசர்களுடனும் சேர்ந்து திரும்பி வந்தான்.

ததோ(அ)க்³ரத꞉ பாரிஜாதமாரோப்ய க³ருடே³ ததா³ |
ப்ரத்³யும்னோ த்³வாரகாம் ரம்யாம் விவேஷ² ரதி²னாம் வர꞉ ||2-75-50

தேர்வீரர்களில் முதன்மையான பிரத்யும்னன், பாரிஜாதத்தைக் கருடனின் முதுகில் எடுத்த வைத்து, அவனை {கிருஷ்ணனை} முன்னிட்டுக் கொண்டு, அழகிய துவாரகா நகருக்குள் நுழைந்தான்

ஷை²ப்³யாதி³ஹயயுக்தேன ரதே²னானுனயௌ ஹரி꞉ |
தஸ்யாத² ரத²முக்²யேன ஸத்யக꞉ ஸாம்ப³ ஏவ ச ||2-75-51

சைப்யத்தாலும், பிற குதிரைகளாலும் இழுக்கப்படும் தேரில் ஹரி {கிருஷ்ணன்} அமர்ந்திருந்தான், சாத்யகியும், சாம்பனும் மிகச் சிறந்த மற்றொரு தேரில் அமர்ந்து அவனைப் பின்தொடர்ந்து சென்றனர்.

தே த்வன்யே ந்ருப வார்ஷ்ணேயா யானைர்ப³ஹுவிதை⁴ஸ்ததா² |
யயு꞉ ப்ரஹ்ருஷ்டாஸ்தத்கர்ம பூஜயந்தோ மஹாத்மன꞉ ||2-75-52

ஓ! மன்னா, விருஷ்ணி வம்சத்தைச் சேர்ந்த பிறரும் கேசவனின் செயலை உயர்வாகப் புகழ்ந்தவாறே பல்வேறு வாகனங்களில் புறப்பட்டுச் சென்றனர்.

ஸத்யகாத்³விஸ்தரம் ஷ்²ருத்வா யாத³வா நாக³ராஸ்ததா² |
விஸ்மயம் பரமம் ஜக்³முரப்ரமேயஸ்ய கர்மணா ||2-75-53

ஆனர்த்தத்தின் யது குடிமக்கள், ஒப்பற்ற சக்தி கொண்ட கேசவனின் அற்புதமிக்க அருஞ்செயல்களைச் சாத்யகியிடம் இருந்து கேட்டு ஆச்சரியத்தால் நிறைந்தனர்.

தம் தி³வ்யகுஸுமம் வ்ருக்ஷம் த்³ருஷ்ட்வா(ஆ)நர்தநிவாஸின꞉ |
ராஜன்ன தத்ருபுர்ஹ்ருஷ்டா꞉ பஷ்²யமானா மஹோத³யம் ||2-75-54

தெய்வீக மலர்களால் நிறைந்திருக்கும் அந்த மரத்தை மீண்டும் மீண்டும் கண்டும் அவர்களால் மகிழ்ச்சியில் நிறைவை எட்ட முடியவில்லை

தமத்³பு⁴தமசிந்த்யம் ச மத³கேலிகலாண்ட³ஜம் |
வ்ருக்ஷோத்தமம் பஷ்²யதாம் வை வ்ருத்³தா⁴நாமக³மஜ்ஜரா ||2-75-55

விளையாட்டுத்தனமான பறவைகள் நிறைந்ததும், மிகச் சிறந்ததும், அற்புதமானதும், சிந்தனைக்கு அப்பாற்பட்டதுமான அந்த மரத்தைக் கண்ட முதிய பெண்களின் முதுமையும் மறைந்துவிட்டது {அவர்களுக்கு இளமை திரும்பியது}.

யே த்வந்த⁴சக்ஷுஷ꞉ ஸர்வே தே(அ)ப⁴வந்தி³வ்யசக்ஷுஷ꞉ |
விரோகா³ ரோகி³ணஷ்²சாஸங்க்⁴ராத்வா க³ந்த⁴ம் வனஸ்பதே꞉ ||2-75-56

அந்த மரத்தின் நறுமணத்தை முகர்ந்த குருடர்கள் தெய்வீகப் பார்வையைக் கொடையாகப் பெற்றனர், பிணியுற்றிருந்தவர்கள் தங்கள் நோய்களில் இருந்து விடுபட்டனர்.

லபந்த꞉ கோகிலாஞ்ச்²வேதாஞ்ச்²ருத்வா(ஆ)நர்தநிவாஸின꞉ |
ப³பூ⁴வுர்ஹ்ருஷ்டமனஸோ வவந்து³ஷ்²ச ஜனார்த³னம் ||2-75-57

அந்த மரத்தில் இருந்த குயில் போன்ற பறவைகளின் இனியகுரலைக் கேட்டு மகிழ்ச்சியில் நிறைந்த ஆனர்த்தவாசிகள் ஜனார்த்தனனை வணங்கினர்

நானாவிதா⁴னி தூர்யாணி கே³யானி மது⁴ராணி ச |
ஷு²ஷ்²ருவுஸ்தஸ்ய வ்ருக்ஷஸ்ய நாதிதூ³ரம் க³தா நரா꞉ ||2-75-58

தொலைவில் வாழ்ந்து வந்த நகரத்து மக்களும் அந்த மரத்தில் இருந்து உண்டாகும் இனிய இசையைக் கேட்டனர்

யோ(அ)யம் ஸங்கல்பயாமாஸ க³ந்த⁴ம் ஹ்ருத்³யம் நரஸ்ததா² |
ஸ ததை³வ தமாஜக்⁴ரே பாரிஜாதஸமுத்³ப⁴வம் ||2-75-59

அந்த நேரத்தில் ஒவ்வொரு மனிதனும் அந்தப் பாரிஜாத மரத்தில் இருந்து தான் விரும்பிய நறுமணத்தை அடைந்தான்

தத꞉ ப்ரவிஷ்²ய ரம்யாம் து த்³வாரகாம் யது³நந்த³ன꞉ |
வஸுதே³வம் மஹாத்மானம் த³த்³ருஷே² தே³வகீம் ததா² ||2-75-60

யது குலத்துக் கிருஷ்ணன், இவ்வாறு அழகிய துவாரகா நகருக்குள் நுழைந்து, வசுதேவனையும், தேவகியையும்,

குகுராதி⁴பதிம் சைவ ப³லம் ப்⁴ராதரமேவ ச |
வ்ருத்³தா⁴ஷ்²ச யாத³வானாம் யே மானார்ஹானமரோபமான் ||2-75-61

தன் அண்ணனான பலனையும் {பலராமனையும்}, குகுர மன்னனையும் {உக்ரசேனனையும்}, தேவர்களுக்கு ஒப்பானவர்களும், மதிக்கத் தகுந்தவர்களுமான பிற யாதவர்களையும் சந்தித்தான்.

விஸ்ருஜ்ய தான்வை ப⁴க³வானநாதி³நித⁴னோ(அ)ச்யுத꞉ |
ஸம்பூஜ்ய ச யதா²ந்யாயம் ஸ்வமேவ ப⁴வனம் க³த꞉ ||2-75-62

ஸ ஸத்யபா⁴மயா வாஸம் விவேஷ² மது⁴ஸூத³ன꞉ |
பாரிஜாதம் தருஷ்²ரேஷ்ட²ம் க்³ரஹாய க³த³பூர்வஜ꞉ ||2-75-63

நித்தியனும், தெய்வீகமானவனும், கதனின் அண்ணனுமான மதுசூதனன், அவர்கள் அனைவரையும் முறையாகக் கௌரவித்து, விடைபெற்றுக் கொண்டு, தன் வசிப்பிடத்திற்குப் புறப்பட்டுச் சென்றான். அவன், மரங்களில் சிறந்த பாரிஜாதத்தை எடுத்துக் கொண்டு சத்யபாமாவின் அரண்மனைக்குள் நுழைந்தான்.(62,63)

ஸாதே³வீ பூஜயாமாஸ ப்ரஹ்ருஷ்டா வாஸவானுஜம் |
ப்ரதிஜக்³ராஹ தம் சாபி பாரிஜாதம் மஹாத்³ருமம் ||2-75-64

தெய்வீகமான சத்யபாமா அதைக் கண்டு பெரிதும் மகிழ்ந்தாள்; அவள் உபேந்திரனைத் துதித்து அந்தப் பெரும் பாரிஜாத மரத்தை ஏற்றுக் கொண்டாள்.

மனீஷிதேன ஸ தருரல்போ ப⁴வதி பா⁴ரத |
மஹாம்ஷ்²ச வாஸுதே³வஸ்ய தத³த்³பு⁴தமபூ⁴ன்மஹத் ||2-75-65

ஓ! பரதனின் வழித்தோன்றலே, அந்த மரம் வாசுதவேனின் விருப்பத்திற்கிணங்க சிறிய வடிவை ஏற்றது. அஃது அனைவருக்கும் பேராச்சரியத்தை அளித்தது.

கதா³சித்³த்³வாரகாம் ஸர்வாம் ப்ரச்சா²த³யதி பா⁴ரத |
கதா³சித்³த⁴ஸ்ததா⁴ர்யஸ்து ப⁴வத்யங்கு³ஷ்ட²ஸன்னிப⁴꞉ ||2-75-66

ஓ! ஜனமேஜயா, சில வேளைகளில் பெரும் வடிவை ஏற்றுத் துவாரகை முழுவதையும் அது மறைத்தது, அதன் பிறகு மீண்டும் கட்டைவிரல் அளவை அடைந்து {உள்ளங்கையில்} அனைவராலும் அடையக்கூடியதாக மாறியது

நனந்த³ ஸத்யா கௌரவ்ய தே³வீ ப்ராப்ய மனோரத²ம் |
புண்யகார்த²ம் து ஸம்பா⁴ரான்ஸம்ப⁴ர்துமுபசக்ரமே ||2-75-67

இவ்வாறு தன் நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்ட சத்யபாமா, புண்யகச் சடங்கைச் செய்வதற்கான பொருட்கள் அனைத்தையும் திரட்டத் தொடங்கினாள்.

யானி த்³ரவ்யாணி கௌரவ்ய ஜம்பூ³த்³வீபே து கானிசித் |
யோக்³யானி தானி க்ருஷ்ணேன ஸம்ப்⁴ருதானி மஹாத்மனா ||2-75-68

கிருஷ்ணன், ஜம்பூத்வீபத்தில் அடையக்கூடிய அனைத்தையும் திரட்டினான். ஓ! குருவின் வழித்தோன்றலே

முனிம் ததா³ ஸம்ஸ்ம்ருதவான்ஸ நாரத³ம்
ஜனார்த³ன꞉ ஸர்வகு³ணோசிதம் வஷீ² |
ப்ரதிக்³ரஹார்த²ம் வ்ரதகஸ்ய ஸத்யயா
யதோ²பதி³ஷ்டஸ்ய புரந்த³ரானுஜ꞉ ||2-75-69

தற்கட்டுப்பாட்டைக் கொண்டவனான கேசவன் சத்யாவுடன் {சத்யபாமாவுடன்} அமர்ந்து நோன்பை நோற்பதற்காக நாரத முனிவரை நினைத்தான்” என்றார் {வைசம்பாயனர்}.

இதி ஷ்²ரீமஹாபா⁴ரதே கி²லேஷு ஹரிவம்ஷே² விஷ்ணுபர்வணி
பாரிஜாதாநயனே பஞ்சஸப்ததிதமோ(அ)த்⁴யாய꞉

————–—————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாஸ பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ விஷ்ணு பர்வம்–அத்யாயம் – 74–(ஸ்ரீ கிருஷ்ண க்ருதா ஸ்ரீ சிவ ஸ்துதி)–

January 31, 2021

இரவில் போர்நிறுத்தம்; வில்வத்துடனும், கங்கை நீருடனும் கிருஷ்ணன் செய்த சிவஸ்துதி; வில்வோதகேஷ்வரன் என்ற பெயரை ஏற்ற சிவன்; பாரியாத்ர மலை பெற்ற வரம்

வைஶம்பாயந உவாச
தமாருஹ்ய ரத²ம் க்ருஷ்ண꞉ பாரியாத்ரம் கி³ரிம் யயௌ |
யத்ரைராவதமாஸ்தா²ய ஸ்தி²த꞉ ஸுரபதி꞉ ப்ரபு⁴꞉ ||2-74-1

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “கிருஷ்ணன் தன் தேரில் ஏறிக் கொண்டு, ஐராவதத்தின் முதுகில் தேவர்களின் வலிமைமிக்கத் தலைவன் இருந்த பாரியாத்ர மலைக்குச் சென்றான்.

பாரியாத்ரோ கி³ரிஶ்ரேஷ்டோ² த்³ருஷ்ட்வா யாந்தம் ஜநார்த³நம் |
ஶாணபாத³ஸமோ பூ⁴த்வ ப்ரவிவேஶ வஸுந்த⁴ராம் ||2-74-2

ப்ரியார்த²ம் வாஸுதே³வஸ்ய ப்ரபா⁴வஜ்ஞோ மஹாத்மந꞉ |
தஸ்ய ப்ரீதோ ஹ்ருஷீகேஶ꞉ பர்வதஸ்ய ஜநாதி⁴ப ||2-74-3

வசுதேவனுடைய உயரான்ம மகனின் சக்திகளை அறிந்த மலைகளில் முதன்மையான பாரியாத்ரம், ஜனார்த்தனன் வருவதைக் கண்டு சந்தனத்தை அரைக்கப் பயன்படும் {உளுந்தளவுக்கு} சிறு கல்லைப் போன்றாகி பூமியில் நுழைந்தது. அப்போது, ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, ரிஷிகேசன் அந்த மலையிடம் பெரும் நிறைவடைந்தான்.(2,3)

தத꞉ ப்ரயாதம் யுத்³தா⁴ர்த²மச்யுதம் குருநந்த³ந |
ஸபாரிஜாதோ க³ருட³꞉ ப்ருஷ்ட²தோ(அ)நுயயௌ ததா³ ||2-74-4

ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, கிருஷ்ணன் போரிடச் சென்றபோது, பாரிஜாதத்தை முதுகில் கொண்ட கருடனும் அவனைப் பின்தொடர்ந்து சென்றான்.

ப்ரத்³யும்ந꞉ ஸாத்யகிஶ்சாபி க³ருட³ஸ்தௌ² மஹாப³லௌ |
க³தாவுபௌ⁴ ரக்ஷநார்த²ம் பாரிஜாதமரிம்த³மௌ ||2-74-5

கைவரை அடக்குபவர்களும், பெருஞ்சக்திவாய்ந்த இருவருமான சாத்யகியும், பிரத்யும்னனும் பாரிஜாத மரத்தைக் காப்பதற்காகக் கருடனின் முதுகில் ஏறிச் சென்றனர்.

ததஸ்த்வஸ்தம் க³த꞉ ஸூர்ய꞉ ப்ரவ்ருத்தா ரஜநீ ந்ருப |
உபஸ்தி²தம் புநர்யுத்³த⁴ம் ஶக்ரகேஶவயோரிஹ ||2-74-6

அந்நேரத்தில் சூரியன் அடிவானில் மறைந்து இரவு உண்டானது. ஆனால், ஓ! மன்னா, சக்ரனுக்கும், கேசவனுக்குமிடையில் மீண்டும் போர் தொடங்கியது.

ஸுப்ரஹாராஹதம் த்³ருஷ்ட்வா விஷ்ணுரைராவதம் க³ஜம் |
நாதிகல்பம் மஹாதேஜா தே³வராஜாநமப்³ரவீத் ||2-74-7

பெருஞ்சக்திவாய்ந்த கிருஷ்ணன், ஐராவத யானை கடுமையாகத் தாக்கப்பட்டுக் காயமடைந்திருப்பதைக் கண்டு, தேவர்களின் மன்னனிடம் இவ்வாறு பேசினான்

க³ருடா³பி⁴ஹத꞉ பூர்வம் நாதிகல்போ க³ஜோத்தம꞉ |
ஐராவதோ மஹாபா³ஹோ ராத்ரிஶ்ச ஸமுபோஹ்யதே ||2-74-8

{கிருஷ்ணன் இந்திரனிடம்}, “ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, யானைகளில் முதன்மையான ஐராவதன் கருடனால் பெருங்காயம் அடைந்திருக்கிறான்; இரவும் வேகமாக வளர்கிறது.

ஶ்வ꞉ ப்ரபா⁴தே யதா²காமம் ப்ரவர்தஸ்வ யதே²ச்ச²ஸி |
ஏவமஸ்த்விதி க்ருஷ்ணம் து தே³வராஜோ(அ)ப்³ரவீத்ப்ரபு⁴꞉ ||2-74-9

நாம் (இப்போது) போரை நிறுத்துவோம். நாளை காலையில் நீ விரும்பும் செயலைச் செய்வாயாக” என்றான். அப்போது தேவர்களின் மன்னனும், “அப்படியே ஆகட்டும்” என்று அவனுக்கு மறுமொழிகூறினான்.

உவாஸ புஷ்கராப்⁴யாஶே தே³வராஜ꞉ புரந்த³ர꞉ |
வ்ரஜம் கி³ரிமயம் க்ருத்வா த⁴ர்மாத்மா ந்ருபஸத்தம ||2-74-10

ஓ! மன்னர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, சிறப்புமிக்க ஆன்மாவைக் கொண்ட தேவர்களின் மன்னன் புரந்தரன், கற்களால் ஒரு தற்காலிக கவிகையை அமைத்துக் கொண்டு புஷ்கரையின் அருகில் அவ்விரவு தங்கினான்

ப்³ரஹ்மா ததோ ஜகா³மாத² கஶ்யபஶ்ச மஹாந்ருஷி꞉ |
அதி³திஶ்சைவ ஸர்வே ச தே³வா முநய ஏவ ச ||2-74-11

அப்போது, பிரம்மன், பெரும் முனிவரான கசியபர், அதிதி ஆகியோரும், பிற தேவர்களும், முனிவர்களும் அவனிடம் வந்தனர்.

ஸாத்⁴யா விஶ்வே ச கௌரவ்ய நாஸத்யாவஶ்விநௌ ததா² |
ஆதி³த்யாஶ்சைவ ருத்³ராஶ்ச வஸவஶ்ச ஜநேஶ்வர ||2-74-12

ஓ! மனிதர்களின் ஆட்சியாளா, ஓ! குரு வம்சத்தின் வழித்தோன்றலே, சாத்யர்கள், விஷ்வேதேவர்கள், அசுவினி குமாரர்கள், ஆதித்யர்கள், ருத்ரர்கள், வசுக்கள் ஆகியோரும் அங்கே கூடினர்.

நாராயணஶ்ச புத்ரேண ஸத்யகேந ச பா⁴ரத |
ஸஹோவாஸ கி³ரௌ ரம்யே பாரியாத்ரே ப்ரஹ்ருஷ்டவத் ||2-74-13

மறுபுறம், ஓ! பாரதா {ஜனமேஜயா}, நாராயணனும் இனிமை நிறைந்த மலையான பாரியாத்ரத்தில் தன் மகனுடனும் {பிரத்யும்னனுடனும்}, சாத்யகியுடனும் தங்கினான்.

யத்ஸ ஶாணப்ரமாணோ(அ)ஸ்ய ப⁴க்த்யா ஸமப⁴வந்ந்ருப |
வரம் ப்ராதா³த்ததஸ்தஸ்ய பர்வதஸ்ய மஹ்த்³யுதி꞉ ||2-74-14

அப்போது, பெரும்பிரகாசம் கொண்ட அவன், சாணைக் கல்லின் வடிவத்தை ஏற்றிருந்த பாரியாத்ர மலைக்கு ஒரு வரத்தைக் கொடுத்தான்

ஶாணபாத³ இதி க்²யாதோ ப⁴விஷ்யஸி மஹாகி³ரே |
புண்யேநார்த்³தே⁴ந துல்யோ ஹி புண்யோ ஹிமவத꞉ ஶுப⁴꞉ ||2-74-15

கிருஷ்ணன்}, “ஓ! பெரும் மலையே, நீ சாணபாதம் {சரணபாதன்} என்றழைக்கப்படுவாய்; இமய மலையைப் போலவே நீயே மங்கலமும், புனிதமும் நிறைந்தவனாவாய்.

ஏவமேவ ச பூ⁴யிஷ்டோ² ப⁴வ பர்வதஸத்தம |
மேருணா ஸ்பர்த⁴மாநோ ஹி ப³ஹுசித்ரம்ருகை³ர்யுத꞉ |
ரமே த்வாம் பஶ்யமாநோ(அ)ஹம் ப³ஹுசித்ரநகா³யுதம் ||2-74-16

ஓ! மலைகளில் முதன்மையானவனே, இவ்வாறே நீ தலைசிறந்தவனாக இருப்பாய்; எண்ணற்ற வகை ரத்தினங்கள் நிறைந்தவனாகப் புகழ்பெற்ற மேரு மலையை விஞ்சியவனாக இருப்பாய். பல்வேறு வகையான மதிப்புமிக்க ரத்தினங்கள் நிறைந்த உன்னைக் கண்டு எப்போதும் நான் மகிழ்ந்திருப்பேன்” என்றான்.

ததா² த³த்த்வா வரம் தஸ்ய பர்வத்ஸ்ய து கேஶவ꞉ |
த³த்⁴யௌ க³ங்கா³ம் ஸரிச்ச்²ரேஷ்டா²ம் நம்ஸ்க்ருத்வா வ்ருஷத்⁴வஜம் ||2-74-17

இவ்வாறு அந்த மலைக்கு வரத்தை அளித்த கேசவன், காளையைச் சின்னமாகக் கொண்ட தேவனை {சிவனை} முறையாக வணங்கிவிட்டு, ஆறுகளில் முதன்மையான கங்கையை நினைவுகூர்ந்தான்

அதா²யயௌ விஷ்ணுபதீ³ ஸ்ம்ருதா க்ருஷ்ணேந பா⁴ரத |
ஸம்புஜ்ய தாம் தத꞉ க்ருஷ்ண꞉ க்ருத்வா ஸ்நாநமதோ⁴க்ஷஜ꞉ ||2-74-18

ஓ! பாரதா, இவ்வாறு கிருஷ்ணனால் நினைவுகூரப்பட்ட (விஷ்ணுவின் பாதத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட) அந்த விஷ்ணுபதி ஆறானவள் அங்கே வந்தாள். கிருஷ்ணன் அவளை வழிபட்டுவிட்டு, அவளது நீரில் தன் தூய்மைச் சடங்குகளைச் செய்தான்.

உத³கம் ச க்³ருஹாயாத² பி³ல்வம் ச ஹரிரவ்யய꞉ |
தே³வமாவாஹயாமாஸ ருத்³ரம் ஸர்வேஶ்வரேஶ்வரம்||2-74-19

நித்யனான அந்த ஹரி, புனித ஆறான கங்கையின் நீரையும், வில்வ இலைகளையும் எடுத்துக் கொண்டு, அனைத்துப் பொருட்களின் தலைவர்களாக இருக்கும் அனைவருக்கும் தலைவனான ருத்ரதேவனை இருப்புக்கு அழைத்தான் {ஆவாஹணம் செய்தான்}

தத꞉ ப்ராப்தோ மஹாதே³வ꞉ஸோம꞉ ஸப்ரவரோ விபு⁴꞉ |
தஸ்தா²வுபரி பி³ல்வஸ்ய ததா²க³ங்கோ³த³கஸ்ய ச ||2-74-20

அப்போது தேவனான மஹாதேவன், கங்கை நீரிலும், வில்வ இலைகளிலும் உமையுடனும், தன் தொண்டர்களான கணங்களுடனும் சேர்ந்து தன்னை வெளிப்படுத்திக் கொண்டான் {கங்கை நீருக்கும் வில்வதளத்துக்கும் மேல் நின்றான்}

தம் பாரிஜாதகுஸுமைரர்சயாமாஸ கேஶவ꞉ |
துஷ்டாவ வாக்³பி⁴ரீஶேஶம் ஸர்வகர்தாரமீஶ்வரம் ||2-74-21

கேசவன், பாரிஜாத மரத்தின் மலர்களைக் கொண்டு அவனை வழிபட்டான். பிறகு அந்த நாநயமிக்கவன் {கிருஷ்ணன்}, அனைத்தையும் படைத்தவனும், தலைவர்களுக்குத் தலைவனுமான அவனை {சிவனைத்} துதிக்கத் தொடங்கினான்.

ஶ்ரீக்ருஷ்ண உவாச
ருத்³ரோ தே³வஸ்த்வம் ருத³நாத்³ராவணாச்ச
ரோரூயமாணோ த்³ராவணாச்சாதிதே³வ꞉ |
ப⁴க்தம் ப⁴க்தாநாம் வத்ஸலம் வத்ஸலாநாம்
கீர்த்யா யுங்க்ஷ்வேஶாத்³ய ப்ரப⁴வாம்யந்தரேண ||2-74-22

மங்கலனான அந்தக் கிருஷ்ணன், “ஓ! தேவா, (உன் படைப்புகளான) உயிரினங்களை மாயையில் மறைக்கிறாய், அவற்றை அழிக்கவும் செய்கிறாய்; உயிரினங்கள் பிறக்கும்போதே அண்டத்தில் படர்ந்தூடுருவியிருக்கும் ஒலியின் மூலம் உன்னை அவற்றுக்கு {அந்த உயிரினங்களுக்கு} வெளிப்படுத்திக் கொள்ளும் காரணத்தால் நீ ருத்ரன் என்றழைக்கப்படுகிறாய்; ஓ! தலைவா, நீ தானாக வெளிப்படுகிறாய்; நலந்தரும் உன் பாதுகாப்பில் என்னை நான் முழுமையாக ஒப்படைக்கிறேன். உன் பக்தர்களிடம் அர்ப்பணிப்புள்ளவனும், உன் அன்பைப் பெற்றவர்களின் அன்புக்குரியவனுமான எனக்கு {வெற்றி எனும்} புகழால் மகுடம் சூட்டுவாயாக

க்³ராம்யாரண்யாநாம் த்வம் பதிஸ்த்வம் பஶூநாம்
க்²யாதோ தே³வ꞉ பஶுபதி꞉ ஸர்வகர்மா |
நாந்யஸ்த்வத்த꞉ பரமோ தே³வதே³வ
ஜக³த்பதி꞉ ஸுரவீராரிஹந்தா ||2-74-23

வாழ்வை பின்பற்றுவோரிடம் {வாழ்வின் இன்பங்களில்} பற்று கொண்டவர்களும் {கிருஹஸ்தர்களும்}, அவர்களை {அவற்றைத்} துறந்தவர்களுமாக {வானப்ரஸ்தர்களுமாக} இருக்கும் உயிரினங்கள் அனைத்தின் தலைவனாக இருப்பதால் நீ {உயிரினங்கள் அனைத்தின் தலைவன் என்ற பொருளில்} பசுபதி என்று அழைக்கப்படுகிறாய். செயல்கள் அனைத்தையும் செய்பவன் நீயே. ஓ! தேவர்களின் தேவா, தெய்வீக வீரர்களின் பகைவரைக் கொல்பவனான உன்னைக் காட்டிலும் மேலான எவனும் அண்டத்தில் இல்லை.

யஸ்மாதீ³ஶோ மஹதாமீஶ்வராணாம்
ப⁴வாநாத்³ய꞉ ப்ரீதித³꞉ ப்ராணத³ஶ்ச |
தஸ்மாத்³தி⁴ த்வாமீஶ்வரம் ப்ராஹுரீஶம்
ஸந்தோ வித்³வாம்ஸ꞉ ஸர்வஶாஸ்த்ரார்த²தஜ்ஜ்ஞா꞉ ||2-74-24

ஓ! தலைவா, தொடக்கமாகவும், உயிரைக் கொடுப்பவனாகவும், தெய்வீகப் பேராசான்கள் அனைவரின் மனநிறைவுக்கும் காரணனாகவும் இருப்பதால், சாத்திரங்கள் அனைத்தின் முக்கியப் பொருளை அறிந்த நல்லோராலும், கல்விமான்களாலும் நீ தேவர்களின் தேவன் என்று {ஈசன் என்றும் ஈஷ்வரன் என்றும்} அழைக்கப்படுகிறாய்.

பூ⁴தம் யஸ்மாஜ்ஜக³த³த்யந்ததீ⁴ர
த்வத்தோ(அ)வ்யக்தாத³க்ஷராத³க்ஷரேஶ |
தஸ்மாத்த்வாமாஹுர்ப⁴வ இத்யேவ பூ⁴தம்
ஸர்வேஶ்வராணாம் மஹதாமப்யுதா³ரம் ||2-74-25

ஓ! புத்தியின் பிறப்பிடமே, ஓ! வெளிப்பட்டிருக்கும் படைப்புகள் அனைத்தின் தலைவா, புலப்படும் உலகம் {யாவும்} படைப்பாளர்கள் அனைவரையும் படைத்து, நலந்தரும் வரங்களை அளிக்கும் சுயம்புவான உன்னால் பெறப்பட்டதால் (பிறந்திருப்பவற்றின் பிறப்பிடம் என்ற பொருளில்) நீ பவன் என்று அழைக்கப்படுகிறாய்.

யஸ்மாஜ்ஜிதைரபி⁴ஷிக்தோ(அ)ஸி ஸர்வை-
ர்தே³வாஸுரை꞉ ஸர்வபூ⁴தைஶ்ச தே³வ |
மஹேஶ்வரம் விஶ்வகர்மாணமாஹு-
ஸ்த்வாம் வை ஸர்வே தேந தே³வாதிதே³வ ||2-74-26

ஓ! தேவர்கள் அனைவருக்கும் மேலான தேவா, வெல்லப்பட்ட தேவாசுரர்கள் அனைவராலும், அனைத்து உயிரினங்களாலும் நீ {ஈசனாக} மகுடம் சூட்டப்பட்டதால் அண்டத்தைப் உண்டாக்கும் (மிக உயர்ந்த தேவனான) மஹேஸ்வரன் என நீ அழைக்கப்படுகிறாய்

பூஜ்யோ தே³வை꞉ பூஜ்யஸே நித்யதா³ வை
ஶஶ்வச்ச்²ரேய꞉ காங்க்ஷிபி⁴ர்வரதா³மேயவீர்ய |
தஸ்மாத்³விக்²யாதோ ப⁴க³வாந்தே³வதே³வ꞉
ஸதாமிஷ்ட꞉ ஸர்வபூ⁴தாத்மபா⁴வீ ||2-74-27

ஓ! வரங்களை அளிப்பவனே, ஓ! அளவில்லா ஆற்றல் கொண்டவனே, அனைவராலும் துதிக்கப்படுபவன் நீ என்பதாலே நலம்விரும்பும் தேவர் எப்போதும் உன்னை வழிபடுகிறார்கள், அதன் காரணமாகவே நல்லோரால் விரும்பப்படும் பகவான் என்ற பெயரால் நீ கொண்டாடப்படுகிறாய்; அனைத்து உயிரினங்களில் ஆன்மாவாக இருக்கும் உன் இருப்பையே அது குறிப்பிடுகிறது (அனைத்து உயிரினங்களிலும் ஈசனாக நீ இருக்கிறாய்}.

பூ⁴மித்ரயாணாம் தே³வ யஸ்மாத்ப்ரதிஷ்டா²
புநர்லோகாநாம் பா⁴வநாமேயகீர்தி꞉ |
த்ர்யம்ப³கேதி ப்ரத²மம் தேந நாம
தவாப்ரமேய த்ரிதி³ஶேஶநாத² ||2-74-28

ஓ! சொர்க்கத்தின் தலைவர்களில் முதன்மையானவனே, ஓ! எல்லையற்றவனே, ஓ! தேவா, உற்பத்திக்கும், (பூமி, வானம், வெளி, சூரியன், நெருப்பு, காற்று முதலிய) பதிமூன்று கூறுகளுக்கும் காரணனாக நீ இருப்பதால் அளவில்லா புகழ் கொண்ட திரியம்பகன் என்று முக்கியமாக நீ அழைக்கப்படுகிறாய்

ஶர்வ꞉ ஶத்ரூணாம் ஶாஸநாத³ப்ரமேய-
ஸ்ததா² பூ³ய꞉ ஶாஸநாச்சேஶ்வரேண |
ஸர்வவ்யாபித்வாச்சங்கரத்வாச்ச ஸத்³பி⁴꞉
ஶப்³த³ஸ்யேஶாந꞉ ஶ்ரீகரார்காக்³ர்யதேஜா꞉ ||2-74-29

பகைவரை அடக்குவதால் சர்வன் என்றும், எவராலும் வெல்லப்பட முடியாதவனாக இருப்பதால் அப்ரமேயன் என்றும் அழைக்கப்படுகிறாய். ராஜக் கோட்பாடுகள் முதலியவற்றால் அனைத்தையும் ஆள்வதால் நீ அனைத்திலும் படர்ந்தூடுருவி இருப்பவன் {ஸர்வவியாபி} என்றழைக்கப்படுகிறாய்; இன்பத்தின் பிறப்பிடமாக இருப்பதால் நீ சங்கரன் என்றழைக்கப்படுகிறாய்; வேதமே உன் சொல்லாக இருப்பதால் ஒலியின் தலைவனாகவும், சூரியனைவிடப் பிரகாசமிக்கவனாக இருப்பதால் அர்காக்ரயதேஜனாகவும் நீ இருக்கிறாய்.

ஸம்ஸக்தாநாம் நித்யதா³ யத்கரோஷி
ஶமம் ப்⁴ராத்ருவ்யாந்யத்³வ்யநைஶீ꞉ ஸமஸ்தாந் |
தஸ்மாத்³தே³வ꞉ ஶங்கரோ(அ)ஸ்யப்ரமேய꞉
ஸத்³பி⁴ர்த⁴ர்மஜ்ஞை꞉ கத்²யஸே ஸர்வநாத²꞉ ||2-74-30

ஓ! அனைவரின் தலைவா, ஆனந்தத்தால் {பேரின்பத்தால்} உன் பக்தர்களுக்கு மகுடம் சூட்டுவதும், உன் பகைவரான அசுரர்களுக்கும் நன்மையைக் கற்பிப்பதுமான அண்டந்தழுவிய பேரின்ப அம்சத்திற்காக உன்னை எல்லையில்லா ஆற்றல் கொண்டவனும், தானே வெளிப்பட்டவனுமான {சுயம்புவுமான} சங்கரன் என்று அறத்தின் சாரமறிந்த நல்லோர் அழைக்கின்றனர்.

த³த்த꞉ ப்ரஹார꞉ குலிஶேந பூர்வம்
தவேஶாந ஸுரராக்ஷ்ஜ்ஞாதிவீர்ய |
கந்டே² நைல்யம் தேந தே யத்ப்ரவ்ருத்தம்
தஸ்மாத்க்²யாதஸ்த்வம் நீலகண்டே²தி கல்ப꞉ ||2-74-31

ஓ! அபரிமித ஆற்றல் கொண்ட ஈஷ்வரனே, பழங்காலத்தில் தேவர்களின் தலைவன் தன் வஜ்ரத்தால் உன் தொண்டையில் தாக்கினான்; அதற்குப் பதிலடி கொடுக்கும் திறனை கொண்டிருந்தாலும், அன்பினால் நீ தொண்டை நீலமாகப் பொறுத்துக் கொண்டாய்; இந்தக் காரணத்தால் நீ நீலகண்டன் என்ற பெயரால் கொண்டாடப்படுகிறாய்.

யல்லிங்கா³ங்கம் யச்ச லோகே ப⁴கா³ங்கம்
ஸர்வம் ஸோம த்வம் ஸ்தா²வரம் ஜங்க³மம் ச |
ப்ராஹுர்விப்ராஸ்த்வாம் கு³ணிநம் தத்த்வவிஜ்ஞா-
ஸ்ததா² த்⁴யேயாமம்பி³காம் லோகதா⁴த்ரீம் ||2-74-32

ஓ! சோமதேவா, அசையும் படைப்புகளிலும் {உயிரினங்களிலும்}, அசையாத படைப்புகளிலும் {உயிரற்ற பொருட்களிலும்} ஆண், பெண் குறியீடுகளாக இருப்பதால் பொருட்களில் சாரமறிந்த பிராமணர்கள், அண்டத்தைப் பாதுகாப்பவளும், எப்போதும் துதிக்கத்தக்கவளுமான அம்பிகை என்றும், (முழுமைக்கு எதிரான) தகுதிவாய்ந்த இருப்பின் பிறப்பிடம் {குணவான்} என்றும் உன்னை அழைக்கிறார்கள்.

வேதை³ர்கீ³தா ஸா ஹி தத்த்வம் ப்ரஸூதா
யஜ்ஞோ தீ³க்ஷாணாம் யோகி³நாம் சாதிரூப꞉ |
நாத்யத்³பு⁴தம் த்வத்ஸமம் தே³வ பூ⁴தம்
பூ⁴தம் ப⁴வ்யம் ப⁴வதே³வாய நாஸ்தி ||2-74-33

கருத்துடன் கூடிய உற்பத்தியாகவும், செயல்திறமிக்க சக்திகளாகவும் வேதங்களில் உள்ள மாயை என்றறியப்படும் புதிர்நிறைந்த சக்தியான மஹாதத்வம் நீயே. சடங்குகளில் தீக்ஷை பெற்றவர்களின் யஜ்ஞமும் {வேள்வியும்}, அவர்களின் முக்கிய ஆற்றலும், யோகிகளின் பேராத்மாவும் நீயே; எனவே, உன்னைப் போன்ற ஓர் இருப்பும் {இதுவரை} இருந்ததில்லை, இருக்கப் போவதுமில்லை, இருக்கவும் முடியாது.

அஹம் ப்³ரஹ்மா கபிலோ யோ(அ)ப்யநந்த꞉
புத்ரா꞉ ஸர்வே ப்³ரஹ்மணஶ்சாதிவீரா꞉ |
த்வத்த꞉ ஸர்வே தே³வதே³வ ப்ரஸூதா
ஏவம் ஸர்வேஶ꞉ காரணாத்மா த்வமீட்³ய꞉ ||2-74-34

ஓ! தேவர்களின் தேவா, நானும், பிரம்மனும், கபிலரும், அனந்ததேவனும் {ஆதிசேஷனும்}, பிரம்மனின் சிறப்புமிக்க மகன்கள் யாவரும் உன் அம்சங்களால் உண்டானோம்; அனைவரின் தலைவன் நீயே, அனைத்தின் முக்கியக் காரணன் நீயே, துதிக்கத் தகுந்த முழுமையானவன் நீயே” என்றான் {என்று துதித்தான் கிருஷ்ணன்}.

இதி ஸம்ஸ்தூயமாநஸ்து ப⁴க³வாந்கோ³வ்ருஷத்⁴வஜ꞉ |
ப்ரஸார்ய த³க்ஷிணம் ஹஸ்தம் நாராயணமதா²ப்³ரவீத் ||2-74-35

இவ்வாறு துதிக்கப்பட்டவனும், காளையைத் தன் சின்னமாகக் கொண்டவனுமான மஹாதேவன், தன் வலக்கரத்தை நீட்டி நாராயணனிடம் இவ்வாறு பேசினான்

மநீஷிதாநாமர்தா²நாம் ப்ராப்திஸ்தே ஸுரஸத்தம |
பாரிஜாதம் ச ஹர்தாஸி மா பூ⁴த்தே மநஸோ வ்யதா² ||2-74-36

{சிவன் கிருஷ்ணனிடம்}, “ஓ! தேவர்களில் சிறந்தவனே, நீ விரும்பிய பொருட்களை அடைவாய்; பாரிஜாத மரத்தை நீ கொண்டு செல்வாய்; உன் மனம் {ஏமாற்றத்தால்) கிஞ்சிற்றும் துன்புறாது.

யதா² மைநாகமாஶ்ரித்ய தபஸ்த்வமகரோ꞉ ப்ரபோ⁴ |
ததா² மம வரம் க்ருஷ்ண ஸம்ஸ்ம்ருத்ய ஸ்தை²ர்யமாப்நுஹி ||2-74-37

ஓ! வலிமைநிறைந்த கிருஷ்ணா, மைநாக மலையில் நீ செய்த தவங்களையும், அந்தச் சந்தர்ப்பத்தில் நான் உனக்களித்த வரத்தையும் நினைவுகூர்வாயாக.

அவத்⁴யஸ்த்வமஜேயஶ்ச மத்த꞉ ஶூரதரஸ்ததா² |
ப⁴விதாஸீத்யவோசம் யத்தத்ததா² ந தத³ந்யதா² || 2-74-38

“நீ கொல்லப்பட முடியாதவனாக இருப்பாய்”, “நீ வெல்லப்பட முடியாதவனாக இருப்பாய்”, “நீ என்னைவிட அதிகமாக வெல்லப்பட முடியாதவனாக {சூரனாக} இருப்பாய்” என்றெல்லாம் அப்போது நான் சொன்னவை அப்படியே ஆகும், மாறாக நடக்காது (நான் சொன்ன சொல் பிசகாமல் நடக்கும்)

யஶ்ச ஸ்தவேந மாம் ப⁴க்த்யா ஸ்தோஷ்யதே(அ)மரஸத்தம |
த்வயா க்ருதேந த⁴ர்மஜ்ஞ த⁴ர்மபா⁴க்ஸம்ப⁴விஷ்யதி |
ஸமரே ச ஜயம் விஷ்ணோ ப்ராப்ய பூஜாம் ததோ²த்தமாம் ||20-74-39

மேலும், ஓ! தேவர்களில் முதன்மையானவனே, அறம்சார்ந்தவனே, உன்னால் தொகுக்கப்பட்ட இந்தத் துதியால் என்னைத் துதிப்பவன் நிச்சயம் உயர்ந்த அறத்தையும், போரில் பகைவரிடம் வெற்றியையும், உயர்ந்த வகையிலான மதிப்பையும் அடைவான்

பி³ல்வோத³கேஶ்வரோ நாம ப⁴விதாஹமிஹாநக⁴ |
தே³வேஶ்வர த்வயாஸ்தா²பி தே³வஸித்³தோ⁴பயாசந꞉ ||2-74-40

ஓ! பாவமற்றவனே, ஓ! தேவர்களின் தலைவா, உன்னால் இங்கே வழிபடப்பட்ட நான் வில்வோதகேஷ்வரன் என்றழைக்கப்பட்டு, என்னை அணுகுவோர் அனைவரின் விருப்பங்களையும் நிறைவேற்றுவேன்

இஹஸ்தோ²போஷிதோ வித்³வாந்ப⁴க்திமாந்மம கேஶவ |
த்ரிராத்ரமீப்ஸிதாம்ˮல்லோகாந்க³மிஷ்யதி ஜநார்த³ந ||2-74-41

ஓ! கேசவா, ஓ! ஜனார்த்தனா, கல்விமானும், வணக்கமுள்ளவனுமான எந்தப் பக்தன், நோன்பு நோற்று இங்கே மூன்று இரவுகளைக் கழிப்பானோ அவன் தான் விரும்பும் உலகங்களை அடைவான்.

அவிந்த்⁴யா நாம தே³ஶே(அ)ஸ்மிந்க³ங்கா³ சைவ ப⁴விஷ்யதி |
க³ங்கா³ஸ்நாநஸமம் ஸ்நாநம் மந்த்ரதோ ப⁴விதா ததா² ||2-74-42

(புனித ஆறான) கங்கையும் இங்கே அவிந்தியா {அவிந்தியை} என்றழைக்கப்படுவாள். உரிய மந்திரங்கள் சொல்லி அந்த நீரில் செய்யப்படும் தூய்மைச் சடங்குகள் கங்கையில் செய்த புண்ணியச் செயல்களுக்கு இணையானவையாக இருக்கும்.

ஷட்புரம் நாம நக³ரம் தா³நவாநாம் ஜநார்த³ந |
அத்ராந்தர்த்³த⁴ரணீதே³ஶே பராக்ரம்ய மஹாப³லா꞉ ||2-74-43

ஏதே தை³த்யா து³ராத்மாநோ ஜக³தோ தே³வகண்டகா꞉ |
ச²ந்நா வஸந்தி கோ³விந்த³ ஸாநாவஸ்ய மஹாகி³ரே꞉ ||2-74-44

ஓ! வலிமைமிக்க ஜனார்த்தனா, இந்த மலையின் உச்சியில் உள்ள குகையின் அடியில் ஷட்புரம் என்றழைக்கப்படும் தானவர்களின் நகரம் இருக்கிறது. தேவர்களின் வழிகளிலும், அண்டத்தின் பாதையிலும் முட்களாக இருப்பவர்களும், தீய ஆன்மா கொண்டவர்களுமான வலிமைமிக்க தானவர்கள் அந்தக் காட்டுக்குள் {பூமிக்கடியில்} மறைந்திருக்கின்றனர்.(43,44)

அவத்⁴யா தே³வதே³வாநாம் வரேண ப்³ரஹ்மணோ(அ)நக⁴ |
மாநுஷாந்தரிதஸ்தஸ்மாத்த்த்வமேதாஞ்ஜஹி கேஶவ ||2-74-45

ஓ! பாவமற்றவனே, ஓ! தேவா, பிரம்மன் அவர்களுக்கு அளித்த வரத்தின் மூலம் அவர்கள் தேவர்களால் கொல்லப்பட முடியாதவர்களாக இருக்கிறார்கள்; எனவே, ஓ! கேசவா, இப்போது மனிதத் தோற்றத்தில் இருக்கும் நீ அவர்களைக் கொல்வாயாக” என்றான் {சிவன்}

ஏவமுக்த்வா மஹாதே³வஸ்தத்ரைவாந்தரதீ⁴யத |
பரிஷ்வஜ்ய மஹாத்மாநம் வாஸுதே³வம் ஜநாதி⁴ப ||2-74-46

ஓ! மனிதர்களின் ஆட்சியாளா {ஜனமேஜயா}, இவ்வாறு சொல்லி வாசுதேவனை ஆரத்தழுவிய மஹாதேவன் அந்த இடத்திலேயே மறைந்து போனான்.

ததோ யாதே மஹாதே³வே ப்ரபா⁴தாயாம் நராதி⁴ப꞉ |
தஸ்யாம் நிஶாயாம் கோ³விந்த³꞉ ஸ்தூய பர்வதமப்³ரவீத் ||2-74-47

தவாத⁴꞉ பர்வதஶ்ரேஷ்ட²நிவஸந்தி மஹாஸுரா꞉ |
அவத்⁴யா தே³வதே³வாணாம் வரேண ப்³ரஹ்மண꞉ புரா |2-74-48

இவ்வாறு மஹாதேவன் சென்ற பிறகு, ஓ! மனிதர்களின் ஆட்சியாளா, அந்த நாளின் விடியலில் கோவிந்தன் (பாரியாத்ர) மலையிடம்[பாரியாத்ர மலையானது, மஹாபாரதச் சபா பர்வத்தின் 10ம் அத்யாயம் 31ம் ஸ்லோகத்திலும், பீஷ்ம பர்வம் 9ம் அத்யாயத்திலும் குறிப்பிடப்படுகிறது. பாரியாத்ரம் என்ற இந்த மலை சாணபாதம் எனப் பெயர் மாற்றப்பட்டதாக இந்த அத்யாயத்தின் 15ம் ஸ்லோகம் குறிப்பிடுகிறது. அதற்கடியில் ஷட்புரம் என்ற காடு அல்லது தானவ நகரம் இருப்பதாகவும் இந்த அத்யாயத்தின் 43ம் ஸ்லோகம் குறிப்பிடுகிறது.], “ஓ! மலைகளில் முதன்மையானவனே, பிரம்மனால் கொடுக்கப்பட்ட வரத்தின் மூலம் தேவர்களாலும் கொல்லப்பட முடியாத வலிமைமிக்க அசுரர்கள் உனக்கடியில் வாழ்கிறார்கள்.(47,48)

நிர்க³மிஷ்யந்தி தே நைவ மயா ருத்³தா⁴ மஹாப³லா꞉ |
த்³வாரே நிருத்³தே⁴ அத்ரைவ விநங்க்ஷ்யந்தி மமாஜ்ஞயா ||2-74-49

அவர்கள் பெருஞ்சக்தி வாய்ந்தவர்களாக இருப்பினும், (உனக்கடியில் பூமிக்குள்) நான் அவர்களை அடைக்கும்போது அவர்களால் வெளியே வர இயலாது; இவ்வாறு வழிமுறைகள் துண்டிக்கப்படும் அவர்கள் அந்த இடத்திலேயே மடிவார்கள்.

த்வயி ஸந்நிஹிதஶ்சாஹம் ப⁴விஷ்யாமி மஹாகி³ரே |
அதி⁴ஷ்டா²ய மஹாகோ⁴ராந்நிவத்ஸ்யாமி ச பர்வத ||2-74-50

ஓ! பெரும் மலையே, நானும் உன்னில் பொதிந்திருப்பேன். ஓ! மலையே, பயங்கரம் நிறைந்த அந்த அசுரர்களைத் தடுத்துக் கொண்டு நான் உன்னில் வாழ்ந்திருப்பேன்.

ஆருஹ்ய மூர்த்⁴நி மத்³ரூபம் த்³ருஷ்ட்வா பர்வதஸத்தம |
கோ³ஸஹஸ்ரப்ரதா³நஸ்ய ப²லம் ப்ராப்ஸ்யதி ஶாஶ்வதம் ||2-74-51

ஓ! மலைகளில் முதன்மையானவனே, உன் சிகரத்தில் ஏறி என் வடிவைக் காணும் எவனும் ஆயிரம் பசுக்களைக் கொடையாக அளித்த தகுதியை {புண்ணியத்தை} அடைவான்.

த்வத்தோ(அ)ஶ்மபி⁴ஶ்ச ப்ரதிமாம் காரயித்வா ஹி ப⁴க்தித꞉ |
ஶுஶ்ரூஷயந்தி யே நித்யம் மம யாஸ்யந்தி தே க³திம் ||2-74-52

உன் கற்களைக் கொண்டு என் சின்னத்தை அமைத்து பக்தியுடன் தினமும் வழிபடுவோர், என்னையே {பரமபதத்தை} அடைவார்கள்” என்றான் {கிருஷ்ணன்}

இதி தம் பர்வதம் க்ருஷ்ணோ வரதோ³(அ)நுக்³ருஹீதவாந் |
ததா³ப்ரப்⁴ருதி தே³வேஶஸ்தத்ர ஸந்நிஹிதோ(அ)ச்யுத꞉ ||2-74-53

இவ்வாறே வரமளிப்பவனான விஷ்ணு, அந்தத் தலைவனுக்கு வரமளித்தான். பிழைசெய்யாதவனான அந்தத் தேவன் அதுமுதல் அவ்விடத்தில் பொதிந்திருக்கிறான்.

பாஷாணை꞉ ப்ரதிமாம் தாத காரயித்வா ச கௌரவ |
ஶுஶ்ரூஷந்தி க்ருதாத்மாநோ விஷ்ணுலோகாபி⁴காங்க்ஷிண꞉ ||2-74-54

ஓ! குருக்களின் வழித்தோன்றலே, தூய்மையடைந்த ஆன்மாக்களைக் கொண்டோர், விஷ்ணுவை அடையும் நோக்குடன் அந்த மலையின் கல்லால் ஒரு தோற்றத்தை அமைத்து அங்கே எப்போதும் அவனை வழிபட்டுக் கொண்டிருக்கிறார்கள்” என்றார் {வைசம்பாயனர்}

இதி ஶ்ரீமஹாபா⁴ரதே கி²லேஷு ஹரிவம்ஶேவிஷ்நுபர்வணி
பாரிஜாதஹரணே க்ருஷ்ணக்ருதஶிவஸ்துதிர்நாம
சது꞉ஸப்ததிதமோ(அ)த்⁴யாய꞉

————–—————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாஸ பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ விஷ்ணு பர்வம்–அத்யாயம் – 73–(இந்த்ரக்ருஷ்ணயோர்யுத்தம் விஷ்ணோருத்கர்ஷஶ்ச)–

January 30, 2021

கிருஷ்ணனுக்கும் இந்திரனுக்கும், பிரத்யும்னனுக்கும் ஜயந்தனுக்கும், சாத்யகிக்கும் பிரவரனுக்கும், கருடனுக்கும் ஐராவதத்துக்கும் இடையில் நடந்த போர்.

வைஶம்பாயந உவாச
அத² விஷ்ணுர்மஹாதேஜா முஹூர்தாப்⁴யுதி³தே ரவௌ |
ம்ருக³யாவ்யபதே³ஶேந யயௌ ரைவதகம் கி³ரிம் ||2-73-1

ஆரோப்யைகரதே² தே³வ꞉ ஸாத்யகிம் நரபுங்க³வம் |
ப்ரத்³யும்நமநுக³ச்சே²தி ப்ரோக்த்வா குருகுலோத்³வஹ ||2-73-2

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, “ஓ! குருக்களின் வழித்தோன்றலே, பெருஞ்சக்திவாய்ந்த விஷ்ணு {கிருஷ்ணன்}, சூரியன் உதித்த ஒரு கணத்திற்கு {ஒரு முகூர்த்த காலத்திற்குப்} பிறகு, தன் தேரில் மனிதர்களில் முதன்மையான சாத்யகியை ஏற்றிக் கொண்டு, “என்னைப் பின்தொடர்வாயாக” எனப் பிரத்யும்னனிடம் சொல்லிவிட்டு வேட்டைக்குச் செல்லும் போலிக்காரணத்தோடு ரைவதக மலைக்குச் சென்றான்.(1,2)

ரைவதம் ச கி³ரிம் தே³வோ க³த்வா தா³ருகமப்³ரவீத் |
மதீ³யம் ரத²மேநம் த்வம் க்³ரஹாயேஹைவ தா³ருக ||2-73-3

ப்ரதிபாலய மாம் ஸௌம்ய தி³நார்த்³த⁴ம் வாரயந்ஹரீந் |
ரதே²நைவ ப்ரவேஷ்டாஹம் த்³வாரகாம் ஸூதஸத்தம ||2-73-4

அந்தத் தெய்வீகமானவன் {கிருஷ்ணன்}, ரைவதக மலையை அடைந்ததும் {தன் தேரோட்டியான} தாருகனிடம், “ஓ! தாருகா, ஓ! தேரோட்டிகளில் முதன்மையானவனே, என் தேரை உன் பொறுப்பில் எடுத்துக் கொண்டும், குதிரைகளை மேயவிட்டுக் கொண்டும் அரை நாள் வரை என்னை எதிர்பார்த்து இங்கே காத்திருப்பாயாக. இந்தத் தேரிலேயே நான் மீண்டும் துவாரகைக்குள் நுழைவேன்” என்றான்.(3,4)

இதி ஸந்தி³ஶ்ய ப⁴க³வாநாருரோஹ ஜயோத்³யத꞉ |
தார்க்ஷ்யம் ஸஸாத்யகோ தீ⁴மாநப்ரமேயபராக்ரம꞉ ||2-73-5

சிறப்பும், நுண்ணறிவும், அளவற்ற ஆற்றலும் மிக்கவனான அந்தத் தேவன் இவ்வாறு {தாருகனிடம்} ஆணையிட்டுவிட்டு, சாத்யகியுடன் சேர்ந்து கருடனின் முதுகில் ஏறிச் சென்றான் {பறந்து சென்றான்}

ப்ருத²க்³ரதே²ந கௌரவ்ய ப்ரத்³யும்ந꞉ ஶத்ருஸூத³ந꞉ |
ஆகாஶகா³மிநா ராஜந்ப்ருஷ்ட²த꞉ க்ருஷ்ணமந்வயாத் ||2-73-6

ஓ! குருக்களின் வழித்தோன்றலே, பகைவரைக் கொல்பவனான பிரத்யும்னனும், மலைகளில் செல்லவல்ல தனித்தேரில் கிருஷ்ணனைப் பின்தொடர்ந்து சென்றான்

நிமேஷாந்தரமாத்ரேண நந்த³நம் காநநம் ஹரி꞉ |
தே³வோத்³யாநம் யயௌ தீ⁴மாந்பாரிஜாதஜிஹீர்ஷயா ||2-73-7

நுண்ணறிவுமிக்கவனான ஹரி, தேவர்களின் இன்பத் தோட்டமான நந்தனவனத்திலிருந்து பாரிஜாதத்தைக் கவர்ந்து செல்லும் நோக்கத்துடன் கண்ணிமைக்கும் நேரத்தில் அவ்விடத்தை அடைந்தான்.

த³த³ர்ஶ தத்ர ப⁴க³வாந்தே³வயோதா⁴ந்து³ராஸதா³ந் |
நாநாயுத⁴த⁴ராந்வீராந்நந்த³நஸ்தா²நதோ⁴க்ஷஜ꞉ ||2-73-8

சிறப்புமிக்கவனான அதோக்ஷஜன் {கிருஷ்ணன்}, வெல்லப்படமுடியாதவர்களும், துணிவுமிக்கவர்களும், பல்வேறு ஆயுதங்களைத் தரித்தவர்களுமான தெய்வீகப் போர்வீரர்களின் படையை அங்கே கண்டான்.

தேஷாம் ஸம்பஶ்யதாமேவ பாரிஜாதம் மஹாப³ல꞉ |
உத்பாட்யாரோபயாமாஸ பாரிஜாதம் ஸதாம் க³தி꞉ ||2-73-9

நல்லோரின் புகலிடமும், வலிமைமிக்கவனுமான கிருஷ்ணன், அவர்களின் கண்களுக்கு எதிரிலேயே பாரிஜாத மரத்தை வேருடன் பிடுங்கி கருடனின் முதுகில் அதை வைத்தான்

க³ருட³ம் பக்ஷிராஜாநமயத்நேநைவ பா⁴ரத |
உபஸ்தி²தோ விக்³ரஹவாந்பாரிஜாத꞉ ஸ கேஶவம் ||2-73-10

ஓ! பாரதா, அப்போது அந்தப் பாரிஜாதம் உடல்வடிவம் கொண்டு கேசவனையும், பறவைகளின் மன்னனான கருடனையும் (வேண்டுதலுடன்) அணுகியது

ஸாந்த்விதோ வாஸுதே³வேந பார்ஜாதஶ்ச பா⁴ரத |
உக்தஶ்ச வ்ருக்ஷ மா பை⁴ஸ்த்வம் கேஶவேந மஹாத்மநா ||2-73-11

உயரான்ம கேசவன், அந்தப் பாரிஜாதமரத்துக்கு ஆறுதலளித்து, “ஓ! மரமே, அஞ்சாதே” என்று சொல்லித் தேற்றினான்

தம் ப்ரஸ்தி²தம் தரும் த்³ரூஷ்ட்வா பாரிஜாதமதோ⁴க்ஷஜ꞉ |
அமராவதீம் புரீம் ஶ்ரேஷ்டா²ம் ததஶ்சக்ரே ப்ரத³க்ஷிணாம் ||2-73-12

பிறகு அந்தப் பாரிஜாத மரம் (அந்தப் பறவையின் முதுகில்) பாதுகாப்பாக வைக்கப்பட்டதை உறுதி செய்து கொண்ட அதோக்ஷஜன், கோட்டைகளில் சிறந்ததான தேவர்களின் வசிப்பிடத்தை {அமராவதி நகரை} வலம் வரத் தொடங்கினான்.

தே து நந்த³நகோ³ப்தார꞉ பாரிஜாதோ த்³ருமோத்தம꞉ |
ஹ்ரியதீதி மஹேந்த்³ராய க³த்வா ந்ருப ஶஶம்ஸிரே ||2-73-13

அதே வேளையில், அந்தத் தேவ தோட்டத்தின் {நந்தனவனத்தின்} காவலர்கள் மஹேந்திரனிடம் ஓடிச்சென்று, “மரங்களில் மிகச் சிறந்த பாரிஜாதம் அபகரிக்கப்பட்டது” என்று சொன்னார்கள்

அதை²ராவதமாருஹ்ய நிர்யயௌ பாகஶாஸந꞉ |
ஜயந்தேந ரத²ஸ்தே²ந ப்ருஷ்ட²தோ(அ)நுக³த꞉ ப்ரபு⁴꞉ ||2-73-14

பாகனை அடக்கியவன் (இந்திரன்) ஐராவதத்தில் ஏறிக் கொண்டும், தேரில் பின்தொடரும் ஜயந்தனுடன் சேர்ந்தும் வெளியே வந்தான்.

பூர்வமப்⁴யாக³தம் த்³வாரம் கேஶவம் ஶத்ருநாஶநம் |
த்³ருஷ்ட்வோவாச ப்ரவ்ருத்தம் போ⁴꞉ கிமித³ம் மது⁴ஸூத³ந ||2-73-15

பகைவரைக் கொல்பவனான வாசுதேவன் அந்த நேரத்தில் கிழக்கு வாயிலை அடைந்திருப்பதைக் கண்ட இந்திரன், “ஓ! மதுசூதனா, என்ன நடக்கிறது?” என்று கேட்டான்.

ப்ரணம்ய க³ருட³ஸ்தோ²(அ)த² கேஶவ꞉ ஶக்ரமப்³ரவீத் |
வத்⁴வாஸ்தே புண்யகார்யாய நீயதே(அ)யம் வரத்³ரும꞉ ||2-73-16

அப்போது கருடனின் முதுகில் அமர்ந்திருந்த கேசவன், சக்ரனுக்குத் தலைவணங்கி, “உமது கொழுந்தியாளின் (சத்யபாமாவின்) நோன்பைக் கடைப்பிடிப்பதற்காகவே இந்தச் சிறந்த மரத்தை எடுத்துச் செல்கிறேன்” என்றான்.

தமுவாச தத꞉ ஶக்ரோ மா மைவம் புஷ்கரேக்ஷண |
அயோத⁴யித்வா ந தருர்நயிதவ்யஸ்த்வயாச்யுத ||2-73-17

சக்ரன், “ஓ! தாமரைக்கண்ணா, ஓ! பிழை செய்யாதவனே, போருக்கு என்னை அறைகூவியழைக்காமல் இம்மரத்தை நீ எடுத்துச் செல்லக்கூடாது

ப்ரஹரஸ்வ மஹாபா³ஹோ ப்ரத²மம் மயி கேஶவ |
ப்ரதிஜ்ஞா ஸப²லா தே(அ)ஸ்து முக்த்வா கௌமோத³கீம் மயி ||2-73-18

ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட கேசவா, முதல் அடியை நீயே அடிப்பாயாக; என் மீது கௌமோதகி கதாயுதத்தை வீசும் உன்னுடைய உறுதிமொழி நிறைவேறட்டும்” என்றான்.

தத꞉ க்ருஷ்ண꞉ ஶரைஸ்தீக்ஷ்ணைர்தே³வராஜக³ஜோத்தமம் |
பி³பே⁴தா³ஶநிஸங்காஶை꞉ ப்ரஹஸந்நிவ பா⁴ரத ||2-73-19

ஓ! பாரதா, அப்போது கிருஷ்ணன், இடியைப் போன்று கடுமையான கூரிய கணைகளால் தேவர்களின் மன்னனுடைய சிறந்த யானையை {ஐராவதத்தைத்} துளைக்கத் தொடங்கினான்.

விவ்யாத⁴ க³ருட³ம் வஜ்ரீ தி³வ்யை꞉ ஶரவரைஸ்ததா² |
பா³ணாம்ஶ்சிச்சே²த³ ஸஹஸா கேஶவஸ்ய தரஸ்விந꞉ ||2-73-20

வஜ்ரபாணி {இந்திரன்} தெய்வீகமான சிறந்த கணைகளால் கருடனைத் துளைக்கத் தொடங்கினான்; பிறகு நளினமான கரங்களைக் கொண்ட கேசவனால் ஏவப்படும் கணைகள் அனைத்தையும் அறுப்பதிலும் விரைவில் வென்றான்.

யாந்யாந்முமோச தே³வேந்த்³ரஸ்தாம்ஸ்தாம்ஶ்சிச்சே²த³ மாத⁴வ꞉ |
மாத⁴வேந ப்ரயுக்தாம்ஶ்ச சிச்சே²த³ ப³லவ்ருத்ரஹா ||2-73-21

மாதவனும், தேவர்களின் தலைவனால் ஏவப்பட்ட கணைகள் அனைத்தையும் அறுத்தான்; பலனையும், விருத்திரனையும் கொன்றவனும் புன்னகைத்தவாறே மாதவனால் ஏவப்பட்டவற்றை அறுத்தான்

மஹேந்த்³ரஸ்ய ச ஶப்³தே³ந த⁴நுஷ꞉ குருநந்த³ந |
ஶார்ங்க³ஸ்ய ச நிநாதே³ந முமுஹு꞉ ஸ்வர்க³வாஸிந꞉ ||2-73-22

ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, அப்போது மஹேந்திரனுடைய வில்லின் ஒலியாலும், சாரங்க வில்லின் நாணொலியாலும் சொர்க்கவாசிகள் மயக்கமடைந்தனர்.

தயோர்வர்ததி ஸங்க்³ராமே க³ருட³ஸ்தோ² மஹாப³ல꞉ |
பாரிஜாதம் ஜயந்தோ(அ)த² ஹர்துமப்⁴யுத்³யதோ ப³லீ ||2-73-23

இவ்வாறு அவர்களுக்கிடையில் போர் நடந்து கொண்டிருந்தபோது, பெருஞ்சக்திவாய்ந்த ஜயந்தன் கருடனின் முதுகில் இருந்த பாரிஜாத மரத்தை அபகரிக்க முயன்றான்.

ப்ரத்³யும்நமத² கம்ஸக்⁴நோ வாரயேதி ததா³ப்³ரவீத் |
ததஸ்தம் வாரயாமாஸ ரௌக்மிணேய꞉ ப்ரதாபவாந் ||2-73-24

கம்சனைக் கொன்றவன் {கிருஷ்ணன்} அப்போது பிரத்யும்னனிடம், “(பாரிஜாத மரத்தை அபகரிப்பதில் இருந்து) அவனைத் தடுப்பாயாக” என்றான்; பெருஞ்சக்தி வாய்ந்தவனான ருக்மிணி மகனும் {பிரத்யும்னனும்} உடனே அவனை (உறுதியாக) எதிர்த்தான்.

ஜயந்தோ ஜயதாம் ஶ்ரேஷ்டோ² ரௌக்மிணேயமதே²ஷுபி⁴꞉ |
ஸர்வகா³த்ரேஷு விஹஸந்நாஜகா⁴ந ரதே² ஸ்தி²த꞉ ||2-73-25

வெற்றியாளர்களில் முதன்மையான ஜயந்தன் தன்னுடைய தேரில் அமர்ந்தவாறே சிரித்துக் கொண்டு கூரிய கணைகளால் ருக்மிணி மகனின் {பிரத்யும்னனின்} உடல் பகுதிகள் அனைத்தையும் துளைக்கத் தொடங்கினான்.

ரத²ஸ்த² ஏவ ரதி²நம் காமஸ்து கமலேக்ஷண꞉ |
ஐந்த்³ரிமப்⁴யர்த³யாமாஸ பா³ணைராஶீவிஷோபமை꞉ ||2-73-26

மறுபுறம் தாமரைக் கண்களைக் கொண்ட மன்மதத் தேவன் {பிரத்யும்னன்}, தன் தேரில் அமர்ந்து கொண்டே பாம்புகளைப் போலத் தெரியும் கணைகளால் இந்திரனின் மகனைத் துளைத்தான்

ஸ ஸந்நிபாதஸ்துமுலோ ப³பூ⁴வ குருநந்த³ந |
ஜயந்தஸ்ய ச வீரஸ்ய ரௌக்மிணேயஸ்ய சோப⁴யோ꞉ ||2-73-27

ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, அப்போது வீரனான ஜயந்தனுக்கும், ருக்மிணி மகனுக்கும் இடையில் ஒரு கடும்போர் நடந்தது.

க்ருதப்ரதிக்ருதம் யுத்³தே⁴ சக்ரதுஸ்தௌ மஹாப³லௌ |
மஹேந்த்³ரோபேந்த்³ரதநயௌ ஜக³த்யஸ்த்ரப்⁴ருதாம் வரௌ ||2-73-28

ஆயுதபாணிகளில் முதன்மையான உபேந்திர மஹேந்திரர்களின் மகன்களும், வலிமைமிக்கவர்களுமான அவ்விரு வீரர்களும், தாக்குதலுக்கும், தற்காப்புக்கும் உரிய ஆயுதங்களைக் கொண்டு ஒருவரோடொருவர் போரிட்டனர்.

தே³வாஶ்ச முநயஶ்சைவ த³த்³ருஶூர்விஸ்மயாந்விதா꞉ |
தம் ஸம்க்³ராமம் மஹாகோ⁴ரம் ஸித்³தா⁴ஶ்சைவ ஸசாரநா꞉ ||2-73-29

தேவர்கள், முனிவர்கள், சித்தர்கள், சாரணர்கள் ஆகியோர் அனைவரும் அந்தக் கடும்போரைக் கண்டு ஆச்சரியமடைந்தனர்.

ததஸ்து ப்ரவரோ நாம தே³வதூ³தோ மஹாப³ல꞉ |
பாரிஜாதம் புநர்ஹர்துமியேஷ குருநந்த³ந ||2-73-30

அதேவேளையில், ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, பெரும்பலம்வாய்ந்தவனும், பிரவரன் எனும் பெயரைக் கொண்டவனுமான தேவர்களின் தூதன் ஒருவன், கருடனின் முதுகில் இருந்த பாரிஜாதத்தை அபகரிக்க முயன்றான்

ஸகா² ஸ தே³வராஜஸ்ய மஹாஸ்த்ரவித³ரிந்த³ம꞉ |
அவத்⁴யோ வரதா³நேந ப்³ரஹ்மண꞉ குருநந்த³ந ||2-73-31

ஓ! குருக்களின் வழித்தோன்றலே, இந்தப் பிரவரன், தேவர்களின் ஆட்சியாளனுடைய நண்பனாவான்; அவன் வலிமைமிக்க ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் திறன் மிக்கவனும், தன் பகைவரனைவரையும் அடக்கவல்லவனும் ஆவான்; பிரம்மனிடம் இருந்து பெற்ற வரத்தின் மூலம் அவன் கொல்லப்பட முடியாதவனாகவும் இருந்தான்

ப்³ராஹ்மணஸ்தபஸா ஸித்³தோ⁴ ஜம்பு³த்³வீபாத்³தி³வம் க³த꞉ |
ஸ்வஶக்த்யா ந்ருப ஸம்யாத꞉ ஸகி²த்வம் ப³லகா⁴திநா ||2-73-32

முன்பொரு சமயம் அவன் ஜம்புத் தீவில் {ஜம்பூ த்வீபத்தில் / நாவலந்தீவில்} ஒரு பிராமணனாக {பிறந்து} இருந்து, தன் தவங்களின் அறத்தகுதியால் சொர்க்கத்தை அடைந்து, பலனைக் கொன்றவனின் {பலாசுரனைக் கொன்ற இந்திரனின்} நட்பைத் தன் சக்தியால் ஈட்டினான்.

தமாபதந்தம் ஸம்ப்ரேக்ஷ்ய க்ருஷ்ண꞉ ஸாத்யகிமப்³ரவீத் |
அத்ரஸ்த² ஏவ ப்ரவரம் ஶரைர்வாரய ஸாத்யகே ||2-73-33

அவன் {பிரவரன்} முன்னேறி வருவதைக் கண்ட கிருஷ்ணன், சாத்யகியிடம், “ஓ! சாத்யகி, உன் கணைகளைக் கொண்டு இவ்விடத்தில் இருந்தே பிரவரனை எதிர்ப்பாயாக.

ந த்வத்ர நிர்த³யம் பா³ணா மோக்தவ்யா꞉ ஸாத்யகே த்வயா |
அஸ்ய ப்³ராஹ்மணசாபல்யம் ஸோட⁴வ்யம் க²லு ஸர்வதா² ||2-73-34

ஓ! சாத்யகி, கடுங்கணைகளால் நீ அவனைத் தாக்காதே; நிலையற்றதாக இருக்கும் இவனது பிராமணத்தன்மையை எல்லாவகையிலும் நாம் பொறுத்துக் கொள்ள வேண்டும்” என்றான்.

தத꞉ ஷஷ்ட்யா ரதே²ஷூணாம் க³ருட³ஸ்த²ம் த்³விஜஸ்ததா³ |
ஆஜகா⁴ந மஹாபா³ஹோ ஸாத்யகிம் ப்ரவரோ ப்⁴ருஶம் ||2-73-35

அப்போது, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், இருபிறப்பாளர்களில் முதன்மையானவனுமான பிரவரன், கருடன் மீது அமர்ந்திருந்த சாத்யகியை கூரிய அறுபது கணைகளால் துளைத்தான்.

ஶிநேர்நப்தா த⁴நுஸ்தஸ்ய க்ஶிபத꞉ ஸாயகாந்ந்ருப |
சிச்சே²த³ புருஷவ்யாக்⁴ரோ வசநம் சேத³மப்³ரவீத் ||3-73-36

ஓ! மன்னா, போர்வீரர்களில் முதன்மையான சிநியின் பேரன் {சாத்யகி}, கணைகளை ஏவப்பயன்படுத்தப்பட்ட பிரவரனின் வில்லை அறுத்து, அவனிடம்,

ப்³ராஹ்மணோ நாபி⁴ஹந்தவ்யஸ்திஷ்ட² திஷ்ட² ஸ்வவர்த்மநி |
அவத்⁴யா யாத³வாநாம் ஹி ஸ்வாபராதே⁴(அ)பி ஹி த்³விஜா꞉ ||2-73-37

“நீ பிராமணனென்பதால் கொல்லத்தக்கவனல்ல; சென்று உனக்கான வாழ்வுமுறையைப் பின்பற்றுவாயாக; இருபிறப்பாளர்கள் குற்றமிழைத்தாலும் யாதவர்களால் கொல்லத்தகாதவர்கள்” என்றான்.

ப்ரவரஸ்து ப்ரஹஸ்யைநமுவாச குருநந்த³ந |
அலம் க்ஷாந்த்யா ந்ருணாம் ஶூர யுத்³த்⁴ய ஸர்வாத்மநா ரணே ||2-73-38

ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, அப்போது பிரவரன் புன்னகைத்தவாறே, “ஓ! வீரமிக்க மனிதர்களில் முதன்மையானவனே, நீ மன்னிக்க {பொறுமைகாக்க} வேண்டியதில்லை; உன் வலிமை அனைத்தையும் பயன்படுத்திப் போரிடுவாயாக.

ஜாமத³க்³ந்யஸ்ய ராமஸ்ய ஶிஷ்யோ(அ)ஹமபி யாத³வ |
நாமத꞉ ப்ரவரோ நாம ஸகா² ஶக்ரஸ்ய தீ⁴மத꞉ ||2-73-39

நான் ஜமதக்னியின் மகனான ராமரின் {பரசுராமரின்} சீடன், என் பெயர் பிரவரன். நான் சிறப்புமிக்கச் சக்ரனிடம் நட்பு கொண்டவன்.

ந தே³வா யோத்³து⁴மிச்ச²ந்தி மந்யந்தோ மது⁴ஸூத³நம் |
ஆந்ருண்யம் ஸௌஹ்ருத³ஸ்யாஹமதி⁴க³ந்தாஸ்மி மாத⁴வ ||2-73-40

இங்கே இருக்கும் தேவர்கள் மதுசூதனனிடம் கொண்டிருக்கும் மதிப்பினால் இந்தப் பிணக்கில் இணைய விரும்பவில்லை; ஆனால், ஓ! மாதவா, நான் இன்று இந்திரனுக்குப் பட்டுள்ள நட்புக்கடனை (இந்திரனின் பகைவனைக் கொல்வதன் மூலம்) தீர்க்க வந்திருக்கிறேன்” என்றான்.

ததஸ்தயோஸ்ததா³ ரௌத்³ர꞉ ஸம்க்³ராமோ வவ்ருதே⁴ ந்ருப |
அஸ்த்ரைர்தி³வ்யைர்நரவ்யாக்⁴ர ஶைநேயத்³விஜமுக்²யயோ꞉ ||2-73-41

பிறகு, ஓ! மன்னா, சிநியின் பேரனுக்கும், இருபிறப்பாளரில் சிறந்தவனுக்கும் இடையில் நடந்த போரில் அவர்கள் தெய்வீக ஆயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்

த்³யௌஶ்சசால ததா³ ராஜந்ஹ்யசலாஶ்ச ஸஹஸ்ரஶ꞉ |
தஸ்மிந்வர்ததி ஸம்க்³ராமே தேஷாமதிமஹாத்மநாம் ||2-73-42

அந்த உயரான்மாக்களுக்கிடையில் போர் நடந்த போது வானம் நடுங்கத் தொடங்கியது, மலைகள் பெரிதும் கலக்கமடைந்தன.

நாதிஶிஷ்யே ரணே கார்ஷ்ணிரைந்த்³ரிமஸ்த்ரப்⁴ருதாம் வரம் |
ஐந்த்³ரி꞉ கார்ஷ்ணிம் மஹாத்மாநம் மாயிநம் ஶூரஸத்தமம் ||2-73-43

மறுபுறம், கிருஷ்ணனின் மகனாலும் ஆயுதபாணிகள் அனைவரிலும் முதன்மையானவனை {இந்திரனின் மகனான ஜயந்தனை} வீழ்த்த முடியவில்லை, பின்னவனாலும் {ஜயந்தனாலும்} வீரர்களில் சிறந்தவனும், சிறப்புமிக்கவனுமான கிருஷ்ணனின் வீர மகனை {பிரத்யும்னனை} வீழ்த்த முடியவில்லை

ஹந்த க்³ருஹ்ண ப்ரதீச்சே²தி தாவுபௌ⁴ யோத⁴ஸத்தமௌ |
யுயுதா⁴தே நரஶ்ரேஷ்ட² பரஸ்பரஜயைஷிணௌ ||2-73-44

ஓ! மனிதர்களில் சிறந்தவனே, வீரர்களில் முதன்மையானவர்களான அவ்விருவரும், ஒருவரையொருவர் வெல்ல விரும்பி, “தாக்கு”, “பிடி” முதலிய சொற்களைச் சொல்லிக் கொண்டே போரிட்டனர்.

அத² ஶார்ங்கா³யுத⁴ஸுதம் ஶசீபுத்ர꞉ ப்ரதாபவாந் |
விபா⁴ஷ்யாப்⁴யஹநத்³ராஜந்தி³வ்யேநாஸ்த்ரேண ஸத்வர꞉ ||2-73-45

ஓ! மன்னா, சசியின் பலம்வாய்ந்த மகன் {ஜயந்தன்}, சாரங்க வில் தரிப்பவனின் (கிருஷ்ணனின்) மகனை {பிரத்யும்னனை} அறைகூவியழைத்து தெய்வீக ஆயுதத்தால் அவனைத் தாக்கினான்.

ஸோ(அ)ஸ்த்ரம் தத³பி⁴தீ³ப்யந்தமாபதந்தம் ஶிதை꞉ ஶரை꞉ |
தஸ்தம்பே⁴ பா³ணஜாலேந தத³த்³பு⁴தமிவாப⁴வத் ||2-73-46

அப்போது கிருஷ்ணனின் மகன், கூரிய கணைகளால் பின்னப்பட்ட கணை வலையைக் கொண்டு அந்தப் பிரகாசமான ஈட்டிகளைத் தடுத்தான். இஃது அற்புதம் நிறைந்ததாகத் தெரிந்தது.

ததஸ்தத்³தீ³ப்யமாநம் து பபாத ரணமூர்த்³த⁴நி |
ரௌக்மிணேயஸ்ய கௌரவ்ய கோ⁴ரம் தா³நவமர்த³நம் ||2-73-47

ஆனால், ஓ! குருக்களின் வழித்தோன்றலே, பிரகாசமிக்கதும், பயங்கரமானதும், தானவர்களுக்கு அழிவை உண்டாக்குவதுமான அந்த ஆயுதம் ஒரு கணம் நின்று ருக்மிணி மகனுடைய தேரின் மீது விழுந்தது.

தேநாஸ்த்ரேண ரதோ² த³க்³த⁴꞉ ப்ரது³ம்நஸ்ய மஹாத்மந꞉ |
நாத³ஹத்தத்ஸுகோ⁴ரம் தம் ரௌக்மிணேயம் நராதி⁴ப ||2-73-48

சிறப்புமிக்கப் பிரத்யும்னனின் தேர் அந்த ஆயுதத்தால் எரிக்கப்பட்டாலும், ஓ மனிதர்களின் ஆட்சியாளா, அதனால் ருக்மிணியின் மகனை எரிக்க முடியவில்லை.

த³ஹத்யக்³நிம் ந க²ல்வக்³நிருத்³த⁴தோ(அ)பி விஶாம்பதே |
த³க்³தா⁴ந்ரதா²ந்மஹாபா³ஹூ ரௌக்முணேய꞉ ப்ரசக்ரமே ||2-73-49

ஏனெனில், ஓ! மனிதர்களின் தலைவா, நெருப்பு பேராற்றல் வாய்ந்ததாக இருப்பினும் மற்றொரு நெருப்பை அதனால் எரிக்க முடியாது. அதன்பிறகு, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனான ருக்மிணியின் மகன் எரியும் தேரில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டான்.

அத² நாராயணஸுதோ விரதோ² ரதி²நாம் வர꞉ |
ஸ்தி²தோ த⁴நுஷ்மாநாகாஶே ஜயந்தமித³மப்³ரவீத் ||2-73-50

தேர்வீரர்களில் சிறந்தவனான நாராயணன் மகன் {பிரத்யும்னன்}, தேரை இழந்தவனாகக் கையில் வில்லுடன் ஆகாயத்தில் நின்றவாறு ஜயந்தனிடம்,

மஹேந்த்³ரபுத்ர தி³வ்யம் த்வம் யத³ஸ்த்ரம் முக்தவாநஸி |
நாஹமீத்³ருஶரூபாணாம் ஶக்யோ ஹந்தும் ஶதைரபி ||2-73-51

ஓ! மஹேந்திரனின் மகனே, நீ ஏவிய தெய்வீக ஆயுதத்தினாலும், அத்தகைய நூற்றுக்கணக்கான ஆயுதங்களினாலும் என்னைக் கொல்ல இயலாது.

ப்ரயத்நம் குரு ஶிக்ஷாணாம் யத்நம் மே(அ)த்³ய ப்ரத³ர்ஶய |
நாஸ்தி மே(அ)திஶயம் கர்தா ஸம்க்³ராமே(அ)மரநந்த³ந ||2–73-52

சிறந்த முயற்சியைச் செய்து இன்று உன் கல்வியையும், ஞானத்தையும் வெளிப்படுத்துவாயாக; ஆனால், ஓ! தேவனின் மகனே {ஜயந்தனே}, போரில் என்னை எவராலும் வெல்ல இயலாது.

ஆஸீந்மே ஸாத்⁴வஸம் த்³ருஷ்ட்வா ரத²ஸ்த²ம் த்வாம் த்⁴ருதாயுத⁴ம் |
பி³பே⁴மி தவ நேதா³நீம் யுத்³தே⁴ த்³ருஷ்டப³லோ(அ)ப³லம் ||2-73-53

ஆயுதங்களைத் தரித்தவனாக உனது தேரில் நீ வெளியே வந்த போது நான் சற்றே அஞ்சினேன்; ஆனால் இப்போதோ போரில் உன் ஆற்றலைக் கண்ட பிறகு, எனக்கு உன்னிடம் கிஞ்சிற்றும் அச்சமில்லை

மநஸா ஸ்மர்யாதாம் ஸைஷ பாரிஜாதஸ்த்வயா தரு꞉ |
ஶக்யம் ந க²லு ஹஸ்தாப்⁴யாம் ஸ்ப்ரஷ்டவ்யோ யஸ்த்வயா ஹ்யஸௌ ||2-73-54

இனியும் உன்னால் இந்தப் பாரிஜாத மரத்தைக் கரங்களால் தீண்ட முடியாது என்பதால் நீ அதை உன் மனத்தில் மட்டுமே நினைத்து நிறைவடைவாயாக.

ரதோ² மாயாமயோ த³க்³த⁴ஸ்த்வய யோ ஹ்யஸ்த்ரதேஜஸா |
ஈத்³ருஶாநாம் ஸஹஸ்ராணி ஸ்ரஷ்டும் ஶக்தோ(அ)ஸ்மி மாயயா ||2-73-55

உன் ஆயுதத்தின் தழலால் நீ எரித்த மாயத் தேரைப் போன்ற ஆயிரக்கணக்கான தேர்களை என் மாய சக்திகளின் மூலம் என்னால் உண்டாக்க முடியும்” என்றான் {பிரத்யும்னன்}.

ஏவமுக்தோ ஜயந்தஶ்ச முமோசாஸ்த்ரம் மஹாப³ல꞉ |
தபஸோபசிதம் தேந ஸ்வயமேவாதிதேஜஸா ||2-73-56

பெருஞ்சக்திவாய்ந்த ஜயந்தன், இவ்வாறு சொல்லப்பட்டதும், கடுந்தவங்களின் மூலம் தான் அடைந்த ஒரு கடும் ஆயுதத்தைப் பெருஞ்சக்தியுடன் அவன் {பிரத்யும்னனின்} மீது ஏவினான்.

தத்ப்ரத்³யும்நோ மஹாதே³வம் ஶரஜாலைரவாரயத் |
சத்வார்யஸ்த்ராணி தி³வ்யாநி முமுசே சாபராணி ஸ꞉ ||2-73-57

பிரத்யும்னன், பெருஞ்சக்தியுடன் ஏவப்பட்ட அந்த ஆயுதத்தைத் தன் கணைவலையால் எதிர்த்தான்; இந்திரனின் மகன் மேலும் நான்கு கணைகளை அடுத்தடுத்து ஏவினான்.

தி³க்ஷு ஸர்வாஸு ருருதூ⁴ஸ்தாந்யஸ்த்ராண்யத² பா⁴ரத |
ரௌக்மிணேயம் மஹாத்மாநமந்தரிக்ஷே ச பஞ்சமம் ||2-73-58

ஓ! பாரதா, அந்த ஆயுதங்கள் ஆகாயத்தின் அனைத்துத் திக்குகளையும் அடைத்தன; பிறகு அவன் ருக்மிணியின் மகனை மேலும் ஐந்து கணைகளால் வானத்தில் முழுமையாக மறைத்தான்

மஹோல்காஸத்³ருஶாந்பா³ணாநஸ்த்ராண்யமரஸத்தம꞉ |
முமோச யாநி கோ⁴ராணி ப்ரத்³யும்நம் ப்ரதி ஸர்வத꞉ ||2-73-59

தேவர்களில் முதன்மையானவன் {ஜயந்தன்} ஏவிய சுடர்மிக்க நெருப்பைப் போன்ற கணைகளும், பயங்கரமான ஆயுதங்கள் அனைத்தும் பிரத்யும்னன் மீது அனைத்துப் பக்கங்களில் இருந்தும் பாய்ந்தன.

தாநி ஸர்வாணி பா³நௌகை⁴꞉ கார்ஷ்ணிரஸ்த்ராண்யவாரயத் |
ஜயந்தம் சாபரைர்பா³ணைர்விவ்யாத⁴ நிஶிதைஸ்ததா³ ||2-73-60

அந்த ஆயுதங்களையும், கணைகள் அனைத்தையும் கிருஷ்ணனின் மகன் தன் கணைகளால் தடுத்தான்; பிறகு வேறு கூரிய கணைகளால் அவன் ஜயந்தனையும் துளைத்தான்.

ததோ நாத³꞉ ஸமுத்ஸ்ருஷ்டோ ஹ்யமரை꞉ புண்யகர்மபி⁴꞉ |
த்³ருஷ்ட்வா ஸ்தை²ர்யம் ச ஶைக்⁴ர்யம் ச ப்ரத்³யும்நஸ்ய மஹாத்மந꞉ ||2-73-61

அப்போது புனிதச் செயல்களைச் செய்யும் தேவர்கள், உயரான்ம பிரத்யும்னனின் கரநளினத்தையும், உறுதியையும் கண்டு மகிழ்ச்சி முழக்கம் செய்தனர்

ப்ரவரஸ்யாபி பா³ணேந ஶிதேந ஶிநிபுங்க³வ꞉ |
சிச்சே²தே³ஷ்வாஸநம் வீரோ ஹஸ்தாவாபம் ச பா⁴ரத ||2-73-62

ஓ! பாரதா, சிநியின் வீர வழித்தோன்றலும் {சாத்யகியும்}, பிரவரனுடைய வில்லின் நாணை அறுத்து, மற்றொரு கூரிய கணையால் அவனது விரலுறையையும் {கையுறையையும்} அறுத்தான்

ததோ(அ)ந்யத்ஸ து ஜக்³ராஹ மஹத்தத்³த⁴நுருத்தமம் |
மஹேந்த்³ரத³த்தம் ப்ரவரோ மஹாஶநிஸமஸ்வநம் ||2-73-63

பிரவரன், மஹேந்திரனால் தனக்குக் கொடுக்கப்பட்டதும், இடியின் ஒலிக்கு ஒப்பான நாணொலியைக் கொண்டதுமான மற்றொரு சிறந்த வலிமைமிக்க வில்லை எடுத்துக் கொண்டான்

ஸ தேந வீரோ மஹதா த⁴நுஷா விப்ரஸத்தம꞉ |
ஶராண்முமோச விவிதா⁴நர்கரஶ்மிநிபா⁴ம்ஸ்ததா³ ||2-73-64

இருபிறப்பாளர்களில் முதன்மை வீரனான பிரவரன், அந்த வலிமைமிக்க வில்லைக் கொண்டு பிரகாசமானவையும், சூரியனின் கதிர்களைப் போலப் பிரகாசிப்பவையுமான அனைத்து வகைக் கணைகளையும் ஏவத் தொடங்கினான்.

சகர்த ச த⁴நுஶ்சித்ரம் ஶைநேயஸ்யாமிதௌஜஸ꞉ |
விவ்யாத⁴ ஸர்வகா³த்ரேஷு பா³ணைரபி ஸ ஸாத்யகிம் ||2-73-65

அவன் சிநியின் வலிமைமிக்கப் பேரனுடைய அழகிய வில்லை அறுத்து, எண்ணற்ற கணைகளால் அவனது உடற் பகுதிகள் அனைத்தையும் துளைத்தான்.

த⁴நுராதா³ய ஶைநேயஸ்ததோ(அ)ந்யத்குருநந்த³ந |
த்³ருட⁴ம் பா⁴ரஸஹம் தீ⁴மாந்விவ்யாத⁴ ப்ரவரம் ரணே ||2-73-66

அதன்பிறகு, ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, சிநியின் பேரன், அதிகச் சக்தியைத் தாங்கவல்ல மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டான்; அப்போது அந்த நுண்ணறிவுமிக்கவன், அந்தப் போரில் பிரவரனை மிகக் கடுமையாகத் துளைத்தான்.

உச்சகர்ததுரந்யோந்யவர்மணீ தௌ ஶிதை꞉ ஶரை꞉ |
கா³த்ரேப்⁴யஶ்சைவ மாம்ஸாநி மர்மபி⁴த்³பி⁴꞉ ஶரோத்³யமை꞉ ||2-73-67

கூரிய கணைகளால் அவர்கள் ஒருவருக்கொருவர் கவசங்களை அறுத்தனர்; இதயத்திற்கே ஊடுருவிச் செல்லவல்ல கூரிய கணைகளால் அவர்கள் ஒருவருக்கொருவர் சதைகளைச் சிதைத்தனர்.

அதா²ஷ்டதா⁴ரபா³ணேந புநரிஷ்வாஸநம் த்³விதா⁴ |
சிச்சே²த³ ப்ரவரோ வீரஸ்த்ரிபி⁴ஶ்சைநமதாட³யத் ||2-73-68

வீரனான பிரவரன், எட்டு கூரிய கணைகளால் மீண்டும் சாத்யகியின் வில்லை அறுத்து, மேலும் மூன்றால் அவனையும் துளைத்தான்

அந்யதி³ஷ்வாஸநம் தம் து க்³ரஹிதுமநஸம் த்³விஜ꞉ |
க³த³யா தாட³யாமாஸ க்ஷேப்யயா லகு⁴ஹஸ்தவாந் ||2-73-69

சாத்யகி மற்றொரு வில்லை எடுக்க நினைத்தபோது, பெருங்கரநளினம் கொண்ட அந்த இருபிறப்பாளன், பகைவரை நோக்கி ஏவவல்ல கதாயுதம் கொண்டு அவனைத் தாக்கினான்.

ஸோ(அ)ஸிம் சர்ம ச ஜக்³ராஹ ஸாத்யகி꞉ ப்ரஹஸந்நிவ |
ந ஜக்³ராஹ த⁴நுர்தீ⁴மாந்க³த³யாபி⁴ஹதோ ப்⁴ருஶம் |
தத꞉ ஶரஶதாந்யேவ முமோச ப்ரவரஸ்ததா³ ||2-73-70

அப்போது வில்லால் கடுமையாகத் தாக்கபட்டிருந்த நுண்ணறிவுமிக்கச் சாத்யகி, தன் வில்லை எடுக்காமல், தன் வாளையும், கேடயத்தையும் புன்னகையுடன் எடுத்துக் கொண்டான். ஆனால் துணிவுமிக்கப் பிரவரன் முழுமையாக நூறு கணைகளை ஏவி அந்த வாளையும், கேடயத்தையும் அறுத்தான்.

விஹஸ்தமிவ விஜ்ஞாய ஸாத்யகிம் யது³நந்த³நம் |
ப்ரத்³யும்நோ(அ)ஸ்ய த³தௌ³ க²ட்³க³ம் நிர்மலாகாஶஸந்நிப⁴ம் ||2-73-71

யதுக்களைத் திளைக்கச் செய்பவனான சாத்யகி ஆயுதமற்றவனாக இருப்பதைக் கண்ட பிரத்யும்னன், மேகமற்ற வானைப் போன்ற பிரகாசமான மற்றொரு வாளை அவனுக்குக் கொடுத்தான்

தஸ்ய சிச்சே²த³ ப⁴ல்லேந நிஸ்த்ரிம்ஶம் ப்ரவரஸ்தததா³ |
த்ஸருதே³ஶே(அ)பாதயச்ச ப்ரவர꞉ ப்ரஹஸந்நிவ ||2-73-72

ஆனால் பிரவரனோ, அந்த வாள் தன் உரிமையாளனின் கைப்பிடிக்குள் வந்தபோது புன்னகையுடன் அதையும் அறுத்தான்

வ்யத⁴மச்ச ததா² சர்ம ஶிதைர்பா³ணைரஜிஹ்மகை³꞉ |
ஆஜகா⁴ந ச ஶக்த்யைநம் ஹ்ருதி³ விப்ரோ நநாத³ ச ||2-73-73

அதன்பிறகு அவன் நேரான கூரிய கணைகளால் சாத்யகியின் தோலைச் சிதைக்கத் தொடங்கினான்; அந்த இருப்பிறப்பாளன் ஓர் ஈட்டியால் {வேலால் / சக்தி ஆயுதத்தால்} அவனுடைய மார்பில் தாக்கி மகிழ்ச்சியில் முழங்கினான்.

தம் விக்லவமிவ ஜ்ஞாத்வா பாரிஜாதஜிஹீர்ஷயா |
தார்க்ஷ்யாப்⁴யாஶே ரதே²நைவ ஸ தஸ்தௌ² ப்ரவரஸ்ததா³ ||2-73-74

அவன் {சாத்யகி} மயங்கியதைக் கண்ட பிரவரன், கருடனின் முதுகில் இருக்கும் பாரிஜாதத்தை அபகரிக்கும் நோக்கில் தன் தேரில் அவனை {கருடனை} நோக்கிச் சென்றான்

தம் பக்ஷபுடவேகே³ந சிக்ஷேப க³ருட³ஸ்ததா² |
க³வ்யூதிமேகாம் ஸரத²꞉ ஸ பபாத முமோஹ ச ||2-73-75

அப்போது அவன் {பிரவரன்} தன் தேருடன் சேர்ந்து முழுமையாக நான்கு மைல்கள் {ஒரு கவ்யூதி = 4000 தண்டங்கள் = 2 குரோசங்கள்} தொலைவுக்குத் தள்ளி விழுந்து மயங்கும் அளவுக்குக் கருடன் அவனைத் தன் சிறகுகளால் மிகக் கடுமையாகத் தாக்கினான்.

தம் ஜயந்தோ நிபத்யாத² பதிதம் ப்³ராஹ்மணம் ந்ருப |
ஸமாஶ்வாஸ்ய ரத²ம் ஶீக்⁴ரம் ஸமாரோபிதவாம்ஸ்ததா³ ||2-73-76

ஓ! மன்னா, அப்போது ஜயந்தன், இவ்வாறு தூக்கிவீசப்பட்ட அந்தப் பிராமணனை விரைந்து சென்று தூக்கித் தன் தேரில் ஏற்றிக் கொண்டு அவனைத் தேற்றினான்

ஶைநேயமபி முஹ்யந்தம் பதந்தம் ச முஹுர்முஹு꞉ |
ஆஶ்வாஸயாந꞉ ப்ரத்³யும்ந꞉ பித்ருவ்யம் பரிஷஸ்வஜே ||2-73-77

மறுபுறம் பிரத்யும்னன், மீண்டும் மீண்டும் மயங்கி விழும் சிநியின் பேரனான தன் சிற்றப்பனை {சாத்யகியைத்} தழுவி (அவனது பலத்தை மீட்பதற்காக) உற்சாகமூட்டித் தேற்றினான்.

தம் ஹி பஸ்பர்ஶ ஹஸ்தேந ஸவ்யேந மது⁴ஸூத³ந꞉ |
விருஜ꞉ ஸ்பர்ஶமாத்ரேண ஸாத்யகி꞉ ஸமபத்³யத ||2-73-78

மதுசூதனன் தன் வலக்கரத்தால் சாத்யகியைத் தீண்டினான்; இந்தத் தீண்டல் பட்ட உடனேயே பின்னவன் {சாத்யகி} வலியில் இருந்தும் துன்பத்தில் இருந்தும் விடுபட்டான்.

ப்ரத்³யும்நோ த³க்ஷிணே பார்ஶ்வே வாமே து ஶிநிபுங்க³வ꞉ |
தஸ்த²து꞉ பாரிஜாதஸ்ய யுத்³த⁴ஶௌண்ட³தராவுபௌ⁴ ||2-73-79

அப்போது போர்வீரர்களில் முதன்மையானவர்களான பிரத்யும்னனும், சாத்யகியும் (பாரிஜாதத்தைக் காப்பதற்காக) பாரிஜாதத்தின் வலப்புறத்திலும், இடப்புறத்திலும் தங்களை நிறுத்திக் கொண்டார்கள்

ஜயந்த꞉ ப்ரவர்ஶ்சைவ ரதே²நைகேந பா⁴ரத |
ஸம்பதந்தௌ மஹேந்த்³ரேண ப்ரஹஸ்யோக்தௌ மஹாத்மநா ||2-73-80

மறுபுறம், ஓ! பாரதா, உயரான்ம மஹேந்திரன், ஒரே தேரில் மீண்டும் போரிடத் திரும்பும் ஜயந்தனையும், பிரவரனையும் கண்டு, புன்னகையுடன் அவர்களிடம்,

நாஸந்நமபி⁴க³ந்தவ்யம் க³ருட³ஸ்ய கத²ஞ்சந |
ப³லவாநேஷ பததாம் ராஜா ச விநதாஸுத꞉ ||2-73-81

“இறகுபடைத்த படைப்புகளின் மன்னனான கருடனின் அருகில் ஒருபோதும், எந்தச் சந்தர்ப்பத்திலும் செல்லாதீர்கள்; வினதையின் மகன் அபரிமித வலிமைபடைத்தவன்.

த³க்ஷிணே சைவ ஸவ்யே ச பார்ஶ்வே மம த்⁴ருதாயுதௌ⁴ |
உபௌ⁴ ஸ்தி²தௌ யுத்³த்⁴யமாநம் மாமேவ ஹி ப்ரபஶ்யதம் ||2-73-82

நீங்கள் இருவரும் எனக்கு இடப்புறத்திலும், வலப்புறத்திலும் நின்று கொண்டு (கிருஷ்ணனுடன்) நான் போரிடுவதைப் பார்ப்பீராக” என்றான்.

ஏவமுக்தௌ ஸ்தி²தௌ வீரௌ தத꞉ ஶக்ரஸ்ய பார்ஶ்வயோ꞉ |
த³த்³ருஶாதே யுத்³த்³த்⁴யமாநௌ தே³வராஜஜநார்த³நௌ ||2-73-83

இவ்வாறு சொல்லப்பட்ட அவ்விரு வீரர்களும், சக்ரனின் இருபுறத்தையும் அடைந்து, இந்திரனுக்கும் ஜனார்த்தனனுக்கும் இடையில் நடந்த போரைக் கண்டனர்.

அதே²ந்த்³ரோ க³ருட³ம் பா³ணைர்மஹாஶநிஸமஸ்வநை꞉ |
விவ்யாத⁴ ஸர்வகா³த்ரேஷு மஹாஸ்த்ரப்ரவரைஸ்ததா² ||2-73-84

அப்போது இந்திரன், கணைகளாலும், சிறந்தவையும், இடிமுழக்கத்திற்கு ஒப்பான ஒலியைக் கொண்டவையும், வலிமைமிக்கவையுமான ஆயுதங்களாலும் கருடனுடைய உடலின் அனைத்துப் பகுதிகளையும் துளைத்தான்.

ஸ தாந்பா³ணாநக³ணயந்வைநதேய꞉ ப்ரதாபவாந் |
ஸஸாராபி⁴முகோ² வீர꞉ ஶக்ரநாக³மரிந்த³ம꞉ ||2-73-85

ஆனால் பெருஞ்சக்திவாய்ந்தவனும், பகைவரை அடக்கும் வீரனுமான அந்த வினதையின் மகன் {கருடன்}, அந்தக் கணைகளைச் சற்றும் மதிக்காமல் அலட்சியம் செய்து, சக்ரனின் யானையை {ஐராவதத்தை} நோக்கி வேகமாகப் பறந்து சென்றான்.

உபௌ⁴ தௌ ஸஹஸா ராஜந்ப³லிநௌ க³ஜபக்ஷிணௌ |
ப்ரயுத்³தௌ⁴ வீர்யஸம்பந்நௌ மஹாப்ராணௌ து³ராஸதௌ³ ||2-73-86

அப்போது வலிமைமிக்கவர்களும், பெருஞ்சக்திவாய்ந்தவர்களும், துணிவுமிக்கவர்களும், வெல்லப்பட முடியாதவர்களுமான அந்தப் பறவையானவனும், யானையானவனும் மிகக் கடுமையாகப் போரிடத் தொடங்கினர்

ரத³நை꞉ பந்நக³ரிபும் கரேண ஶிரஸா ததா³ |
ஐராவதோ க³ஜபதிராஜகா⁴ந நத³ம்ஸ்ததா² ||2-73-87

யானைகளின் மன்னனான ஐராவதன், உரக்கப் பிளிறியபடியே தன் தந்தங்களாலும், துதிக்கையாலும், தலையாலும் பாம்புகளின் பகைவனை {கருடனைத்} தாக்கத் தொடங்கினான்.

ததா² நகா²ங்குஶைஸ்தீக்ஷ்ணைர்வைநதேயோ ப³லோத்கட꞉ |
ததா² பக்ஷநிபாதைஶ்ச ஶக்ரநாக³ம் ஜகா⁴ந ஹ ||2-73-88

மறுபுறம் கடும்பலம்வாய்ந்த வினதையின் மகனும், தன் கூரிய நகங்களினாலும், சிறகடிப்புகளாலும் இந்திரனின் யானையைத் தாக்கினான்.

முஹூர்தம் ஸுமஹாநாஸீத்ஸம்பாதோ க³ஜபக்ஷிணோ꞉ |
விஸ்மாபநீயோ ஜக³த꞉ ப்ரேக்ஷித்ரூணாம் ப⁴யாவஹ꞉ ||2-73-89

பறவைக்கும், யானைக்கும் இடையிலான அந்தப் போர், பார்வையாளர்களின் இதயத்தில் அச்சத்தையும், மொத்த அண்டத்திற்கும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தும் வகையில் ஒரு கணத்திற்குள் பயங்கரமடைந்தது.

மூர்த்⁴ந்யதை²ராவதம் தார்க்ஷ்யஸ்தாட³யாமாஸ பா⁴ரத |
நகா²ங்குஶகராலேந சரணேந மஹாப³ல꞉ ||2-73-90

அதன்பிறகு, ஓ! பாரதா, வலிமைவாய்ந்த கருடன், அச்சத்தை ஏற்படுத்தும் தன்னுடைய உகிர்களுடன் கூடிய கடும் நகங்களால் ஐராவதத்தின் தலையைத் தாக்கினான்

ஸம்ப்ரஹாராபி⁴ஸம்தப்தோ நிபபாத த்ரிவிஷ்டபாத் |
பாரியத்ரே கி³ரிஶ்ரேஷ்டே² த்³வீபே(அ)ஸ்மிஞ்ஜநமேஜய ||2-73-91

ஓ! ஜனமேஜயா, கடுமையான காயத்தால் பீடிக்கப்பட்ட அந்த யானையானவன் ஆகாய உயரத்தில் இருந்து, நாம் வாழும் இந்தத் தீவில் இருக்கும் {ஜம்பூத்வீபத்தின்} மலைகளில் சிறந்த பாரியாத்ரத்தின் உச்சியில் விழுந்தான்.

பதந்தமபி தம் ஶக்ரோ ந முமோச மஹாப³ல꞉ |
காருண்யாத³த² ஸௌஹார்தா³த்பூர்வாப்⁴யுபக³மாத³பி || 2-73-92

அவன் அவ்வாறு விழுந்தபோதும் வலிமைமிக்கச் சக்ரன், கருணையாலும், நட்பாலும், ஏற்கனவே தான் செய்து கொடுத்த உறுதிமொழியாலும் அவனைவிட்டு விலகாமல் இருந்தான்.

க்ருஷ்நோ(அ)ப்யந்வக³மச்சைநம் ப்ருஷ்ட²த꞉ ப்ரப⁴வாவ்யய꞉ |
பாரிஜாதவதா தீ⁴மாந்க³ருடே³ந மஹாப³ல꞉ ||2-73-93

பரமபுத்தியைக் கொண்டவனும், பிழைசெய்யாதவனும், வலிமைமிக்கவனுமான கிருஷ்ணன், பாரிஜாத மரத்தைச் சுமக்கும் கருடனுடன் அவனைப் பின்தொடர்ந்து சென்றான்.

ஸ தஸ்தௌ² பர்வதஶ்ரேஷ்டே² பாரியாத்ரே து வ்ருத்ரஹா |
ஐராவதே ஸமாஶ்வஸ்தே ஸங்க்³ராமோ வவ்ருதே⁴ புந꞉ ||2-73-94

கிருதனை {விருத்திரனைக்} கொன்றவன் {இந்திரன்} இவ்வாறே பாரியாத்ர மலைக்குக் கொண்டு வரப்பட்டான். ஐராவதம் மீண்டும் பலம்பெற்றதும் கிருஷ்ணனுக்கும், இந்திரனுக்கும் இடையிலான போர் மீண்டும் நடந்தது.

ஶரைராஶீவிஶப்ரக்²யை ரத்நயுக்தை꞉ ஸுதேஜிதை꞉ |
அந்யோந்யம் குருஶார்தூ³ல ஶக்ரகேஶவயோர்மஹாந் ||2-73-95

ரத்தினங்கள் பதிக்கப்பட்டவையும், வடிவில் பாம்புகளுக்கு ஒப்பானவையும், கவனமாகக் கடினமாக்கிக் கல்லில் கூர்த்தீட்டப்பட்டவையுமான கணைகளைக் கொண்டு அவர்கள் ஒருவரையொருவர் தாக்கினர்.

ததோ வஜ்ராயுதோ⁴ வஜ்ரமஶநிம் ச புந꞉ புந꞉ |
முமோச க³ருடே³ ராஜந்நைராவதரிபௌ ந்ருப ||2-73-96

ஓ! மன்னா, சொர்க்கத்தின் வஜ்ரதாரி {இந்திரன்}, ஐராவதத்தின் பகைவனான கருடன் மீது தன் வஜ்ரத்தைப் பேரொலியுடன் மீண்டும் மீண்டும் ஏவினான்.

வஜ்ராஶநிநிபாதாம்ஸ்தாந்ஸேஹே ஶக்ரஸ்ய பக்ஷிராட் |
அவத்⁴யோ ப³லிநாம் ஶ்ரேஷ்டோ² நிஸர்கே³ண ததோ ப³லாத் ||2-73-97

ஆனால், உயிரினங்கள் அனைத்திலும் முதன்மையானவனும், ஆற்றல்வாய்ந்தவனும், எவராலும் கொல்லப்பட முடியாதவனுமான பறவைகளின் மன்னன் இடி போன்ற அந்தத் தாக்குதல்கள் அனைத்தையும் பொறுமையாகத் தாங்கிக் கொண்டான்

முமோச பக்ஷமேகைகம் மாநயந்நஶநிம் ஸதா³ |
வஜ்ரம் ச தே³வராஜ்ஞோ(அ)த² ப்⁴ராது꞉ கஶ்யபஸம்ப⁴வ꞉ ||2-73-98

ஆனால் வஜ்ரத்தின் மீதும், தன் அண்ணனான தேவமன்னன் சக்ரனின் மீதும் கொண்ட மதிப்பினால் ஒவ்வொரு முறையும் அந்தப் பறவைகளின் மன்னன், தன் சிறகில் இருந்து ஓர் இறகை உதிர்த்தான்

ஆக்ரம்யமாணஸ்தார்க்ஷ்யேண ந்யமஜ்ஜந்ந்ருபதே கி³ரி꞉ |
விவேஶ த⁴ரநீம் ராஜஞ்ச்சீ²ர்யமாண꞉ ஸமந்தத꞉ ||2-73-99

அப்போது, ஓ! மன்னா, அந்தப் பாரியாத்ர மலையின் பகுதிகள் அனைத்தும் கருடனின் சுமையால் நடுங்கி நொறுங்கி பூமிக்குள் புதைந்தன.

சுகூஜ ப³ஹுமாநேந க்ருஷ்ணஸ்ய ஸ து பர்வத꞉ |
தம் சாத்³ராக்ஷீத்தத꞉ க்ருஷ்ண꞉ கிஞ்சிச்சே²ஷமதோ⁴க்ஷஜ꞉ ||2-73-100

கிருஷ்ணனிடம் உள்ள மதிப்பைக் காட்டுவதற்காக அஃது {அந்த மலை} இனிய ஒலியை வெளியிட்டது, அப்போது அதோக்ஷஜன் பூமிக்கு மேலே இருக்கும் அதன் மிகச் சிறு பகுதியை மட்டுமே கண்டான்.

தம் முக்த்வா க³ருடே³நாத² தஸ்தௌ² தே³வோ விஹாயஸி |
ப்ரத்³யும்நம் ச ததோ³வாச ஸர்வக்ருல்லோகபா⁴வந꞉ ||2-73-101

அதன் பிறகு அவன் அதைக் கைவிட்டு கருடனின் முதுகில் வானத்திற்கு உயர்ந்தான்; அனைத்தையும் படைத்தவனும், உலகங்களைப் பாதுகாப்பவனுமான அவன் {கிருஷ்ணன்} பிரத்யும்னனிடம்,

இதோ த்³வாரவதீம் க³த்வா ரத²மாநய மா சிரம் |
ஸதா³ருகம் மஹாபா³ஹோ மத்தேஜோப³லமாஶ்ரித꞉ ||2-73-102

“ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, என் சக்தியின் உதவியால் துவாரகைக்குச் சென்று தாருகனுடன் சேர்ந்து தாமதமில்லாமல் என் தேரைக் கொண்டு வருவாயாக.

வக்தவ்யோ ப³லப⁴த்³ரஶ்ச ராஜா ச குகுராதி⁴ப꞉ |
ஶ்வோ ஜித்வேந்த்³ரம் த்வாக³மிஷ்யே த்³வாரகாமிதி மாநத³ ||2-73-103

ஓ! கௌரவங்களை அளிப்பவனே, பலபத்ரரிடமும் {பலராமரிடமும்}, குகுரர்களின் ஆட்சியாளரிடமும் {உக்ரசேனரிடமும்}, நாளை நான் இந்திரனை வீழ்த்திவிட்டுத் துவாரகை திரும்புவேன் என்று சொல்வாயாக” என்றான்.

ததே²த்யுக்த்வா து த⁴ர்மாத்மா ப்ரத்³யும்ந꞉ பிதரம் விபு⁴꞉ |
க³த்வா யதோ²க்தமுக்த்வா ச யாத³வேந்த்³ரப³லாவுபௌ⁴ ||2-73-104

அறம்சார்ந்தவனும், பலம்வாய்ந்தவனுமான பிரத்யும்னன், “அவ்வாறே ஆகட்டும்” என்று தன் தந்தையிடம் மறுமொழிகூறிவிட்டு, துவாரகைக்குச் சென்று தன் தந்தையின் சொற்களை உக்ரசேனனிடமும், பலபத்ரனிடமும் சொன்னான்.

நாடி³காந்தரமாத்ரேண புநஸ்தம் தே³ஶமாயயௌ |
தா³ருகேண ஸமாயுக்தே ரத²மாஸ்தா²ய பா⁴ரத ||2-73-105

அதன் பிறகு, ஓ! பாரதா, அவன் தாருகனுடன் சேர்ந்து கிருஷ்ணனின் தேரில் ஒரு மணிநேரத்திற்குள் போர் நடக்கும் இடத்திற்குத் திரும்பி வந்தான்” என்றார் {வைசம்பாயனர்}

இதி ஶ்ரீமஹாபா⁴ரதே கி²லேஷு ஹரிவம்ஶே விஷ்ணுபர்வணி
பாரிஜாதஹரணே க்ருஷ்ணேந்த்³ரயுத்³தே⁴ த்ரிஸப்ததிதமோ(அ)த்⁴யாய꞉

————–—————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேத வியாஸ பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-