Archive for April, 2020

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –46-கூறும் சமயங்கள் ஆறும் குலைய -இத்யாதி —

April 17, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

ஸ்ரீ எம்பெருமானார் செய்து அருளின உபகாரத்தை யனுசந்தித்து அதுக்குத் தோற்றுத்
திருவடிகளிலே வணங்குகிறார்–

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை-

கீழ்ப் பாட்டில் சொல்லுகிறபடியே சமஸ்த கல்யாண குணாத் மகரானவர் -தம்மை-இவர்க்கு முற்றூட்டாக கொடுக்கையாலே –
அந்த உபகாரத்தை அனுசந்தித்து –
விஸ்ரப்பத்தராய் கொண்டு -துச்தர்க்கங்களாய் -கேவலம் உக்தி மாத்திர சாரங்களாய் இருக்கிற –
பாஹ்ய சமயங்கள் ஆறும் -குத்ருஷ்டி சமயங்கள் ஆறும் – அடியோடு நசிக்கும்படி பூ லோகத்தில்
ஸ்ரீ நம் ஆழ்வார் அருளிச் செய்த த்ரமிட வேதத்தை சார்த்தமாக அறிந்தவராய் -சகல திக் வ்யாபையான பிரதையை உடையவராய் –
அறிவு கேடனான நான் விச்வசிக்கும்படி -என்னுடைய-மனசிலே ஸ்தாவர பிரதிஷ்டையாக புகுந்து அருளின –
ஸ்ரீ எம்பெருமானாரை -ஆஸ்ரயிக்கிறோம் -என்கிறார் –

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-

ஸ்ரீ எம்பெருமானார் செய்து அருளிய உபகாரத்திற்கு தோற்று-அவர் திருவடிகளில் வணங்குகிறார்

கூறும் சமயங்கள் ஆறும் குலையக் குவலயத்தே
மாறன் பணித்த மறை யுணர்ந்தோனை மதியிலியேன்
தேறும்படி என் மனம் புகுந்தானைத் திசை யனைத்தும்
ஏறும் குணனை இராமானுசனை இறைஞ்சினமே -46- –

பத உரை
கூறும் -சொல்லளவில் பேசிக் கொண்டு இருக்கும்
சமயங்கள் ஆறும் -ஆறு புற சமயங்களும்
குலைய -குலைந்து போம் படியாக
குவலயத்தே -இம் மண்ணகத்திலே
மாறன்-ஸ்ரீ நம் ஆழ்வார்
பணித்த -அருளிச் செய்த
மறை -தமிழ் வேதமாகிய திரு வாய் மொழியை
உணர்ந்தோனை-கண்டு அறிந்தவரும்
மதியிலியேன் -அறிவிலியான நான்
தேறும்படி -தெளிவுறும்படி
என் மனம் -என்னுடைய ஹ்ருதயத்தில்
புகுந்தானை -எழுந்து அருளினவரும்
திசை யனைத்தும் -எல்லாத் திக்குகளிலும்
ஏறும் -பரவுகிற
குணனை -குணம் உடைய வருமான
இராமானுசனை -எம்பெருமானாரை
இறைஞ்சினம் -வணங்கினோம்

வியாக்யானம் –
விளம்பும் ஆறு சமயமும் -ஸ்ரீ திருவாய்மொழி -4 10-9 – -என்கிறபடியே
சிலவற்றை சொல்லா நின்றால் -தாங்களும் சில தர்க்கங்களைச் சொல்லா நிற்கும் அத்தனை போக்கி-
பிரமாண அனுகூல தர்க்கம் அல்லாமையாலே கேவலம் உக்தி சாரமேயாய் இருக்கிற-பாஹ்ய சமயங்கள் ஆறும்
சிதிலமாய்ப் போம்படியாக -அவ்வவ சமயங்கள் தன்னரசாக-நடத்தின இத்தேசத்திலே –
ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த திராவிட வேதமான ஸ்ரீ திரு வாய் மொழியை-சாஷாத் கரித்து அருளினவராய் –
பிரமாண கதிகளாலே தர்சித்து விஸ்வசிக்கைக்கு உறுப்பான-ஞானமில்லாத நான்
கீழில் பாட்டில் சொன்னபடியே
ப்ராப்ய ப்ராபகங்கள் இரண்டும் தாமே என்று விஸ்வசித்து இருக்கும்படி என்னுடைய ஹ்ருதயத்திலே வந்து புகுந்து அருளினவராய்
இப்படிகளாலே சர்வ திக்குகளிலும் பிரசித்தமான கல்யாண குணங்களை உடையரான
ஸ்ரீ எம்பெருமானரை இவ் உபகாரத்துக்கு தோற்று வணங்கினோம்–

ஊமைக்கும் திருவடி பலத்தால் -மதி இன்மையால் -கடாக்ஷ பலத்தால் திருத்தி அருளுவார் –
நம் ஸ்ரீ ஆச்சார்யர்கள் உடையவர் திருவடிகளில் சேர்த்து நமக்கும் அந்த பலம் கிட்ட பண்ணும் உபகாரகர்கள் –

கூறும் சமயங்கள் ஆறும் குலைய –
தேஹமே ஆத்மா வென்றும் -தேக பரிமாணமே ஆத்மா வென்றும் -ஷாணிக விஞ்ஞானமே ஆத்மா வென்றும் –
ஞானம் ஒன்றுமே உள்ளது என்றும் -சூன்யமே தத்துவம் என்றும் –
ப்ரஹ்மம் நிர்க்குணம் என்றும் -நிராகாரம் என்றும் -அத்வதீயம் என்றும் -அவிபூதிகம் என்றும் -நிஸ் ஸ்ரீ கம் என்றும் –
விக்ரக குணங்கள் எல்லாம் ஸ்வரூப விகாரம் என்றும் –
ப்ரஹ்மம் வ்யதிரிக்தம் எல்லாம் மித்யை என்றும் -ருத்ரன் சர்வ ஸ்மாத் பரன் என்றும் –
இப்படி பிரமாண தர்க்க அனுக்ர்ஹீ தங்கள் அன்றிக்கே -ஸ்வ ஸ்வா ஞான விஜ்ரம்பிதங்களான பிரலாபங்களை
அநேக பிரகாரமாக கத்திக் கொண்டு போருகிற பாஹ்ய குத்ருஷ்டி சமயங்களும்-சிதிலமாய் நசித்துப் போம் படி –

கூறும் சமயங்கள் ஆறும் குலைய –
விளம்புமாறு சமயமும் -என்ற ஸ்ரீ நம் ஆழ்வார் வாக்கை அடி ஒற்றி –
கூறும் சமயங்கள் ஆறும் -என்கிறார் ..வெறும் சொல் அளவில் சமயங்களே அன்றி
பிரமாணங்களுக்கும் யுக்திகளுக்கும் அனுகூலம் இல்லாதவை என்பது கருத்து .
ஆறு சமயங்கள் ஆவன -பௌத்தம் -சார்வாகம் ,நையாயிகம் -ஜைனம் -சாந்க்க்யம்-யோகம் -என்பன .

குவலயத்தே –
கலவ் கலு பவிஷ்யந்தி நாராயண பராயணா -க்வசித் க்வசித் மகா பாகா த்ராமிடே
ஷூச பூரிச -தாம்ர பரணீ நதீயத்ர க்ர்தமால பயச்விநீ -காவேரி ச மகா பாகோ ப்ரதீசீச மகா நதீ-என்றும்-
ஜாயதே -என்றும் -கொண்டாடும்படி –
மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஸ்ரீ ஆழ்வார்கள் உடைய -திரு அவதார பிரதேசமான பூ லோகத்திலே –
கலி யுகத்திலே -என்றபடி –

குவலயத்தே-
அவ்வாறு சமயங்களும் மேலோங்கி யிருக்கிற இந்நாட்டிலே -என்றபடி

மாறன் பணித்த –
உயர்வற உயர்நலம் உடையவன் –
அயர்வறும் அமரர்கள் அதிபதி -உளன் சுடர் மிகு சுருதியுள் -நான்முகன் தன்னோடு தேவர் உலகோடு உயிர் படைத்தான் –
நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான் –
அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல்-மங்கை உறை மார்பா –
அவாவில் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே -என்று இப்படி ஸ்ரீ நம் ஆழ்வாராலே அருளிச் செய்யப்பட்ட –

மறை வுணர்ந்தோனை
மிக்க இறை நிலையும் மெய்யா உயிர் நிலையும் தக்க நெறியும்-தடையாகி தொக்கியிலும்
ஊழ் வினையும் வாழ் வினையும் வோதும் குருகையர் கோன் யாழின் இசை வேதத்தியல் -என்கிறபடியே
ஸ்ரீ ஆழ்வாராலே அருளிச் செய்யப்பட்டதாய்-அர்த்த பஞ்சகத்தையும் அடைவே பிரதிபாதிக்கிற ஸ்ரீ திருவாய் மொழி யாகிற
திராவிட வேதத்தை சார்த்தமாக தெளிந்து கொண்டு இருக்கை யாகிற-பரி பூர்ண ஞானத்தை உடையராய் –

மாறன் பணித்த மறை வுணர்ந்தோனை –
மாறன் பணித்த மறை-
வட மொழி மறை போலே தான் தோன்றியாய் இராமல்-ஆபிஜாத்யத்தாலே உண்டான-மேம்பாடு தோற்ற –
மாறன் பணித்த மறை-என்றார் .
மறை-
மாறன் பணித்ததாயினும் தன்னிடம் அன்பு இல்லாதார்க்கு தன் பொருளை மறைத்திடுதல்-பற்றி –மறை -என்கிறார் –
ரகுவர சரிதம் முநி ப்ரநீதம்-என்பது போலே மறை மாறன் பணித்தது –என்றார்

ஸ்ரீ திரு குருகூர் அதனை உளம் கொள் -உம்மை உய்ய கொண்டு போக-.திவ்ய தேச ப்ராவண்யமே உய்ய ஒரே வழி என்றவாறு

குலைய உணர்ந்தோனை
ஸ்ரீ எம் பெருமானார் அன்புடையவர் ஆதலின் மறையை உணர்ந்தார் –
இவர் உணரவே -சமயங்கள் ஆறும் பயந்து -குலைந்து -அழிந்தன என்பார் -குலைய உணர்ந்தோனை –என்கிறார் –
குவலயத்தே என்பதைக் கூறும் சமயங்கள் என்பதோடு கூட்டினால் –
மெய்யறிவுடையதேவ லோகத்தே கூற அருகதை அற்ற சமயம் என்றது ஆயிற்று –
இனி –
குவலயத்தே பணித்த -எனக்கூட்டினால் இருள் தரும் மா ஞாலத்திலே வெளிச் சிறப்பு தோற்ற அருளிச் செய்த -என்றபடி
இனி
குவலயத்தே உணர்ந்தோனை-எனக் கூட்டினால் இந்த லோகத்திலே உணர்ந்தவர் இவர் ஒருவரே என அருமைப்பாடு தோன்றுகிறது –

திசை யனைத்தும் ஏறும் குணனை –
திக்குற்ற கீர்த்தி ராமானுசன் -இத்யாதிகளிலும் –
பாஷண்ட த்ருமஷண்ட தாவ தஹந -இத்யாதிகளிலும் –
காதா தாதா கதானாம் -இத்யாதிகளிலும்–சொல்லுகிறபடியே -திகந்தரங்களிலே -வ்யாப்ததையான கீர்த்தியை உடையராய் –

மதியிலேன்-தேறும்படி என் மனம் புகுந்தானை –
பிரமாண கதிகளாலே தர்சித்து -விஸ்வசிக்கைக்கு உடலான-ஸ்வரூப யாதாம்ய ஞான சூன்யனாய் -சுஷ்க ஹ்ர்தயனாய் –
அவிவேகியாய் போந்த அடியேன் –
கீழ் சொன்ன பிரபாவத்தை தெளிந்து விஸ்வசிக்கும்படி அடியேனுடைய மனசிலே பிரவேசித்து –
எனக்கு வகுத்த சேஷியான –

மதியிலியேன் தேறும்படி என் மனம் புகுந்தானை-
பிரமாணங்களின் போக்கைக் கொண்டு ஆராய்ந்து உண்மையான நம்பிக்கையிலே-நிற்கைக்கு உறுப்பான ஞானம் இல்லாதவன்
என்று –மதியிலியேன் -என்கிறார்
மதி -பக்திக்கும் உப லஷணம் –
தேறும்படி –
ப்ராப்ய ப்ராபகங்கள் இரண்டும் தாமே என்று நம்பும்படி என்றபடி –
அவர் புகுந்த மனம் ஆதலின் -அதனோடு சம்பந்தம் தோற்ற -என் மனம் –என்கிறார்-
இவருக்கு ப்ராப்யம் ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகள் .-அவருக்கு பிராப்யம் இவர் மனம் போலே காணும்

இராமானுசனை –
ஸ்ரீ எம்பெருமானாரை –

இறைஞ்சினோமே-
அவ் உபகாரத்துக்கு-தோற்று வணங்கினோம் –
அவருடைய குணா க்ர்ஷ்டராய்க் கொண்டு காணும் இவர் அவர் திருவடிகளிலே வணங்குவது-

திசை யனைத்தும் ஏறும் குணனை இராமானுசனை இறைஞ்சினமே-
இங்கனம் சமயங்கள் ஆறும் குலைய மாறன் உணர்ந்தமை -தேறும்படி என் மனம்-புகுந்தமை என்னும் குணங்கள்
திக்குகள் அனைத்திலும் பரவின -அத்தகைய நற்குணம்-வாய்ந்த ஸ்ரீ எம்பெருமானாரை
இவ் உபகாரத்துக்கு தோற்று வணங்கினோம் -என்றபடி –

பரத்வ பெருமை பேசி –ஸ்ரீ ஆழ்வாரும் -உயர்வற வுயர் நலம் சொல்லி –மதி நலம் அருளியதை நடுவில் சொல்லி-
பின்பு அயர்வறும் அதிபதி சொன்ன க்ரமம்–இவ்வளவு உயர்வானவன் தமக்குக் கொடுத்தானே -பெற்ற பேற்றைச் சொல்லி –
இதைக் கொடுத்தவன் அயர்வறும் அதிபதி
திசை அனைத்தும் கூறும் ஆறு. சமயங்கள் குலைத்தான்-நடுவில் மனசில் புகுந்தவனைச் சொன்னார் இங்கும்-
என் மனசில் புகுந்ததே பிரபாவம் என்கிறார்-எட்டு திக்கிலும் இந்த நீசன் உள்ளத்தில் புகுந்து தேறும் படி
பிராப்ய பிராபகங்கள் அருளிய குணங்களை பேசுகிறார்களாம் –
இவ் உபகாரத்துக்கு -தோற்று -வணங்கினோம்– வணங்குதலே பிராப்யம் பிராபகம் -அனுஷ்டானம் இது இறைஞ்சினோம் –
புகுந்து ஸ்தாவர பிரதிஷ்டை பேரேன் என்று என் நெஞ்சு நிறைய புகுந்து மன்னி கிடந்தான்–

இலிங்கத் திட்ட புராணத் தீரும் சமணரும் சாக்கியரும்
வலிந்து வாதுசெய்வீர் களும்மற்று நும்தெய்வமு மாகிநின்றான்
மலிந்து செந்நெல் கவரி வீசும் திருக்குரு கூர்அதனுள்
பொலிந்து நின்ற பிரான்கண்டீர் ஒன்றும் பொய்யில்லை போற்றுமினே–4-10-5-

விளம்பும் ஆறு சமயமும்,அவை ஆகியும் மற்றும் தன்பால்
அளந்து காண்டற்கு அரியன் ஆகிய ஆதிப் பிரான் அமரும்
வளங்கொள் தண்பணை சூழ்ந்து அழகு ஆய திருக் குருகூரதனை
உளங்கொள் ஞானத்து வைம்மின் உம்மை உயக் கொண்டு போகுறிலே–4-10-9-

திரியும் கலி யுகம் நீங்கித் தேவர்கள் தாமும் புகுந்து
பெரிய கித யுகம் பற்றிப் பேரின்ப வெள்ளம் பெருகக்
கரிய முகில் வண்ணன் எம்மான் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
இரியப் புகுந்து இசை பாடி எங்கும் இடம் கொண்டனவே–5-2-3-

இடங்கொள் சமயத்தை எல்லாம் எடுத்துக் களைவன போலே
தடங்கடற் பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதங்களே யாய்க்
கிடந்தும் இருந்தும் எழுந்தும் கீதம் பல பல பாடி
நடந்தும் பறந்தும் குனிந்தும் நாடகம் செய்கின்றனவே–5-2-4-

கலியுகம் ஒன்றும் இன்றிக்கே தன்னடியார்க்கு அருள் செய்யும்
மலியும் சுடரொளி மூர்த்தி மாயப் பிரான் கண்ணன் தன்னைக்
கலி வயல் தென்னன் குருகூர்க் காரி மாறன் சடகோபன்
ஒலி புகழ் ஆயிரத்து இப்பத்து உள்ளத்தை மாசறுக்குமே–5-2-11-

எண்டிசையும் அறிய இயம்புகேன் ஒண் தமிழ்ச் சடகோபன் அருளையே —

————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –45- பேறு ஓன்று மற்று இல்லை நின் சரண் அன்றி இத்யாதி —

April 17, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

இப்படி விமுகராய் இருந்த சேதனரிலே-அந்ய தமராய் இருந்த தம்மை நிர்ஹேதுகமாக விஷயீகரித்துத்
தம் திருவடிகளே ப்ராப்யமும் ப்ராபகமும் என்று விஸ்வசித்து இருக்கும்படி-பண்ணின உபகாரத்தை யனுசந்தித்து –
தேவரீர் செய்து அருளின உபகாரம் வாசகம் இட்டுச்-சொல்ல ஒண்ணாது -என்கிறார் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை-

கீழில் பாட்டிலே அஞ்ஞராய் போருகிற மனுஷ்யர் படியை சொல்லி – விஷண்ணராய் -இதிலே-
அப்படிப்பட்ட அஞ்ஞரில் அந்ய தமராய் போந்த தம்மை நிர்ஹேதுகமாக விஷயீ கரித்து –
தம்முடைய திருவடிகளே-ப்ராப்யமும் பிராபகமும் என்று விச்வசித்து இருக்கும்படி பண்ணின உபகாரத்தை அனுசந்தித்து –
அப்படிப்பட்ட பிரபாவத்தை கொண்டாடுகிறேன் என்று -சொல்ல ஒருப்பட்டால் -அதுவே –
நமக்கு வாசா மகோசரமாய் இருந்தது என்கிறார் –

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-

கல்லார் அகலிடத்தோர் என்று கூறப் பட்டோரில் ஒருவராய் இருந்த தம்மை –
ஹேது எதுவும் இன்றி -ஏற்று அருளித் தம் திருவடிகளையே உபாயமும் உபேயமுமாக நம்பும்படி செய்த
ஸ்ரீ எம்பெருமானார் உடைய உபகாரத்தை அனுசந்தித்து அவரை நோக்கித்
தேவரீர் செய்து அருளின உபகாரம் பேசும் திறத்தது அன்று -என்கிறார் .

உபாயமும் உபயமும் ஸ்வாமி திரு வடிகளே மட்டுமே -என்கிறார் இதில் .
அதையும் அவரே காட்டி கொடுத்தாரே
நாமும் உண்டியே உடையே என்று – இருந்த காலத்தில் ஸ்ரீ ஆழ்வான் மூலம் கைக் கொண்டாரே
அறியா காலத்து உள்ளே அடிமை கண் அன்பு செய்வித்து அறியா மா மாயத்து அடியேனை வைத்தாயால்
பால்ய பிராயத்திலே அடிமையில் ஆசை பிறப்பித்தாயே– ஆழ்வார் அருளியது போல –
பிராப்யம் பிராபகம் இவ் உலகுக்கும் அவ் உலகுக்கும் ..-சொல்லால் கூறும் பரம் இல்லை.

பேறு ஓன்று மற்று இல்லை நின் சரண் அன்றி அப் பேறு அளித்ததற்கு
ஆறு ஒன்றும் இல்லை மற்றச் சரண் அன்றி என்று இப்பொருளைத்
தேறும் அவர்க்கும் எனக்கும் உனைத் தந்த செம்மை சொல்லாற்
கூறும் பரம் அன்று இராமானுச மெய்ம்மை கூறிடிலே – 45- –

பத உரை
இராமானுச -ஸ்ரீ எம்பெருமானாரே
நின் சரண் அன்றி -தேவரீர் உடைய திருவடிகளை ஒழிய
மற்று -வேறு
பேறு –பயன்-ப்ராப்யம் –
ஒன்றும் இல்லை -ஒன்றும் இல்லை
அப்பேறு -அந்த ப்ராப்யத்தை
அளித்ததற்கு -கொடுத்ததற்கு
அச் சரண் அன்றி -அந்தத் திருவடிகளை ஒழிய
ஆறு-உபாயம்
ஒன்றும் இல்லை என்று -ஒன்றுமே இல்லை என்று
இப்பொருளை -இந்த விஷயத்தை
தேறும் அவர்க்கும் -நம்பித் தெளிந்தவர்களுக்கும்
எனக்கும் -அந்தத் தெளிவில்லாத எனக்கும்
உனைத் தந்த செம்மை-தேவரீரைக் கொடுத்து அருளின நேர்மை
மெய்ம்மை கூறிடில் -உண்மையைச் சொன்னால்
சொல்லால்-பேச்சாலே
கூறும் பரம் அன்று -பேசுவதற்கு இயலாததாய் உள்ளது

தேவரீர் திருவடிகளை ஒழிய வேறு ப்ராப்யம் ஒன்றும் இல்லை –
அந்த ப்ராப்யத்தை தருகைக்கும் அத்திருவடிகளை ஒழிய வேறு உபாயம் ஒன்றும் இல்லை-என்று இவ்வர்த்த தத்வத்தை
தத்வ யாதாத்ம்ய ஞாநத்தாலே -விஸ்வசித்து இருக்கும் அவர்களுக்கும்-
அதில் விசுவாச ஹீனனான எனக்கும் ஒரு வாசி பாராதே தேவரீரை உபகரித்து அருளின- நேர்மை
சொல்லால் உண்மை சொல்லில் -வாசா வ்யவஹரிக்கைக்கு சக்யம் ஆகிறதில்லை –
அனுசந்தித்து குமிழ் நீருண்டு போமித்தனை என்று கருத்து .
சொல்லால் கூறும் பரமன்று -என்றது வாசகம் இட்டுச் சொல்லும்படி
பரிஹரிக்கத்தக்க தன்று -என்கை-
செம்மை-செவ்வை
தேறுதல்-விஸ்வசித்தல் –

செம்மை ஆர்ஜவம் -ஸ்ரீ கூரத் ஆழ்வான் போல்வாருக்கும் எனக்கும் அன்றோ அருளினாய் –
1-வாசி இல்லாமல் / 2-தேவரீரையே கொடுத்து -உனைத் தந்த செம்மை /3- ஆச்ரயிக்காமல் எனைத் தந்த சொல்லாமல் /
4-ராமனைப் போலே ஆலிங்கனம் -பரிஷ்வங்கம் -லோக நாதம் இச்சித்தாரே /
மற்றை சரண் அன்று -கழிப்பது -மற்று ஒன்றும் வேண்டா -தேவு மற்று அறியேன் -சரம பர்வ நிஷ்டை ஸ்ரீ வைஷ்ணவ ஆதாரம்

பேறு ஒன்றும் மற்றில்லை நின் சரண் அன்றி –
ஆனந்தோ ப்ரஹ்ம -ரசோவைச-இத்யாதிகளிலே-
ஸ்ரீ சர்வேஸ்வரனே என்றும் பிராப்யம் என்று சொல்லுகையாலும் –
ஸ்ரீ சர்வேஸ்வரனே ஆஸ்ரயநீயன் என்று நிஷ்கர்ஷிக்கப்படுகையாலும் –
பாதிநான்யத்ரா -என்கையாலே ஆசார்யத்வம் ஸ்ரீ எம்பெருமானார் இடத்திலே தானே வ்யவஸ்த்திதமாய் இருக்கையாலும்
அவருடைய திருவடிகளே பிராப்யம் என்று நிஷ்கரித்து அருளினார் –

பேறு ஒன்றும் மற்றில்லை நின் சரண் அன்றி –
நகுரோர பரஸ்த்ராதா -என்கிறபடியே வகுத்த சேஷியான தேவரீருடைய திருவடிகளே புருஷார்த்தம் என்று இருக்கிற-
நமக்கு அத் திருவடிகளை ஒழிய வேறு ஒரு பிராப்யம் இல்லை –
ப்ரஹ்ம வேத ப்ரஹ்மைவ பவதி-சஏ நாந் ப்ரஹ்ம நம யதி — ரசம்ஹ்யேவாய லப்த்வா நந்தீபவதி -இத்யாதிகளாலே
பிரதிபாதிக்கப்பட்ட ப்ரஹ்ம- பிரதம பர்வதத்துக்கும் –
குருரேவ பர பிரம்ம – உபாயோபேய பாவேன தமேவ சரணம் வ்ரஜேத் -இத்யாதிகளாலே பிரதிபாதிக்கப்பட்ட சரம பர்வதத்துக்கும் –
உண்டான வாசி அறியாதவர்களுக்கு இறே -பிரதம பர்வம் பிராப்தமாய் இருக்கிறது –
அத்ர பரத்ர சாபி நித்யம் யதீய சரணவ் சரணம் மதீயம் என்று இறே ஸ்ரீ ஆளவந்தார் சந்தையும் –
சர்வத்ர அவதாரணத்தாலே –இந்த அதிகாரிக்கு ஸ்ரீ ஆசார்யன் திருவடிகளே பிராப்யம்-என்றது ஆய்த்து –

பேறு ஓன்று மற்று இல்லை நின் சரண் அன்றி –
குரு ரேவ பராகதி -என்றபடி ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே ப்ராப்யம் என்கிறார் .
மேவினேன் அவன் பொன்னடி -என்று ஸ்ரீ மதுர கவி ஆழ்வாரும்
அதர பரத்ரசாபி -இங்கும் அங்கும் -என்று ஸ்ரீ ஆள வந்தாரும்
ஸ்ரீ ஆசார்யன் திருவடியையே ப்ராப்யமாக அறுதி இட்டார்கள் –
பாத மூலம் கமிஷ்யாமி யானஹம் பர்யசாரிஷம் -என்று ஸ்ரீ ஆசார்யருக்கு நான் ஸூஸ்ருஷை பண்ணினேனோ-
அவர்களை அடையப் போகிறேன் -என்று ஸ்ரீ சபரியும் அவ்வாறே கூறினாள்-
மற்று ஒரு பேறு இல்லை என்பதால் பிரதம பருவத்தை இவர் கணிசிக்க வில்லை -என்று தெரிகிறது .-

அப் பேறு அளித்தற்கு ஆறு ஒன்றும் இல்லை மற்று அச் சரண் அன்றி
உபாயோபாய பாவேன தமேவ சரணம் வ்ரஜேத்-என்றும் –
ராமானுஜச்ய சரணவ் சரணம் பிரபத்யே -என்றும் நிஷ்கரிஷித்த படியே அந்த பிராப்யத்தை பெறுகைக்கு
அந்த திருவடிகளை ஒழிய வேறு ஒரு உபாயம் இல்லை –
ந குருரோர பரஸ்த்ராதா -குரோர் அன்யம் ந பாவயேத் – என்கிறபடியே வேறு ஒரு பிராபகாந்தரம் இல்லை –
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளைக் கண்டு கொண்ட நமக்கு -எம்மா வீடு -என்கிறபடியே –
எத்தனை விலஷணம் ஆனாலும் பரமபதம் பிராப்யம் அன்று –
பஜ ந சுகமே கஸ்ய விபுலம் -என்கிற பக்தி யோகமும் உபாயம் அன்று –
ஸித்திர் பவதி வாநேதி சம்சய அச்யுத சேவிதாம் -என்று சம்சயிக்க வேண்டும்படியான பகவத் பிரபத்தியும் உபாயம் அன்று –

வேதம் ஒரு நான்கின் உட்பொதிந்த மெய்ப்பொருளும்
கோதில் மநு முதல் கூறுவதும் -தீதில்
சரணா கதி தந்த தன்னிறைவன் தானே
சரணாகும் என்னும் அது -என்று
இவ் அர்த்தத்தை ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானாரும் அருளிச் செய்தார் இறே –
காலத்ரயேபி -இத்யாதியாலே ஸ்ரீ ஜீயரும் அனுசந்தித்து அருளினார் இறே –

அப் பேறு அளித்ததற்கு ஆறு ஒன்றும் இல்லை மற்றச் சரண் அன்றி –
இதனால் உபாயமும் -அத்திருவடிகளே -என்கிறார்

என்று இப் பொருளை தேறும் அவர்க்கும் –
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே பிராப்யமும் பிராபகமும் என்கிற இவ் அர்த்தத்தை –
ந சம்சயஸ்து தத் பக்த்த பரிசர்யார்யதாத்ம நாம் –என்கிறபடியே சம்சய விபர்யய நிரசன பூர்வகமாகக் கொண்டு –
தத்வ யாதாம்ய ஞானத்தாலே விச்வசித்து இருக்குமவர்க்கும்-
வாசா யதீந்திர –இத்யாதியால் சொல்லப்பட்ட அப்ரதிம பிரபாவரான ஸ்ரீ ஆழ்வான் ஸ்ரீ பிள்ளான் தொடக்கமானவர்களுக்கும் என்றபடி
தேறுதல்-விச்வசித்தல் –

அறிந்து அறிந்து தேறி தேறி–சௌலப்யம் பரத்வமும்..உணர்ந்து –
ஜன்ம ரகசியம் அறிந்து -கர்ம சேஷ்டிதம் மே திவ்யம் –

எனக்கும் –
வ்ருத்யாபசு -இத்யாதிப்படியே அதி பாபிஷ்டனாய் -அதிலே விசுவாசம் லேசம் இல்லாத-அடியேனுக்கும் –

என்று இப் பொருளைத் தேறும் அவர்க்கும் எனக்கும் –
இவ்விஷயம் வேதம் ஒரு நான்கின் உட்பொதிந்த விஷயமாயும் -மிக்க வேதியர் வேதத்தின் உட் பொருளாயும் இருத்தல் பற்றி –
இப்பொருளை தேறும் அவர்க்கும் -என்கிறார்.
தேறும் அவர்க்கும் எனக்கும் –எனவே-தேறாத எனக்கும் என்பது பெற்றோம்

இராமானுச –
ஸ்ரீ எம்பெருமானாரே –

உனைத் தந்த செம்மை –
ஞானதிகரானவர்களுக்கும் அஞ்ஞானான எனக்கும் உண்டான வாசி பாராதே
ஒரு வஸ்துவைக் கொடுக்கும் இடத்தில் -ததீயமாய் இருப்பதொரு வஸ்த்வந்தரத்தை கொடுக்கை அன்றிக்கே-
தேவரீர் தம்மையே கொடுத்து அருளினீர் –
நான் ஸ்வரூப சமர்ப்பணம் பண்ண வேண்டி இருக்க -தேவரீர்-தம்மை அடியோங்களுக்காக ஆக்கின இது அதரோத்தரம் ஆய்த்து –
லோக நாதம் புரா பூத்வா சுக்ரீவம் நாதம் இச்சதி –என்னுமா போலே ஆய்த்து –
ஏஷ சர்வஸ்வ பூதோமே பரிஷ்வங்கோ ஹநுமதா – என்று ஸ்ரீ பெருமாள் ஸ்ரீ திருவடிக்கு-சர்வ ஸ்வ தானம் பண்ணினால் போலே
நமக்கு இவரும் அப்படியே சர்வ ஸ்வ தானம் பண்ணுகிறார் காணும் –

உனைத் தந்த செம்மை –
இப்படி சர்வ ஸ்வ தானம் பண்ணுகைக்கு உடலான ஆர்ஜவ குணத்தை –

மெய்ம்மை கூறிடிலே –
சத்தியமாக சொல்லப் புக்கால் -உள்ளபடி பேசப் புக்கால் –

சொல்லால் கூறும் பரம் அன்று –ஒரு வாசக சப்தத்தை இட்டு உள்ளபடி-சொல்ல அரிதாய் இருக்கும் –
வாசா வ்யவஹரிக்க சக்யம் ஆகிறது இல்லை –
அனுபவித்து -குமிழ் நீர் உண்டு போம் இத்தனை-என்றது ஆய்த்து–

உனைத் தந்த செம்மை சொல்லால் கூறும் பரம் அன்று
தேறினவர்க்கும்-தேறாதவர்க்கும்ஒருபடிப் பட -தன்னையே கொடுக்கும் நேர்மை-செம்மை –
தன்னையே சேர்ந்தது ஒன்றைக் கொடுத்து விடுகை அன்றிக்கே
எனக்கே தன்னைத் தந்த கற்பகம் என்றபடி தேவரீர் தம்மையே கொடுத்து அருளினீர் – –
ஸ்ரீ எம்பெருமான் போலே ஆத்ம சமர்ப்பணத்தை எதிர்பாராது தேவரீர் தம்மையே அடியோங்களுக்கு ஆக்கி யருளுவதே-
உபகாரம் செய்த ஸ்ரீ திருவடிக்கு ஸ்ரீ பெருமாள் தன்னையே கொடுத்து அருளினார் –
தரம் பாராதே உபகாரம் செய்யாதவர்களுக்கும் தம்மைக் கொடுத்த-இச் செயலை என் என்று சொல்லுவது -என்கிறார்-

செம்மை- வாசி இன்றி ஞானம் கொடுத்தது
1-தம்மையே கொடுத்தது –
2–சேனை அவனுக்கும் தன்னை அர்ஜுனனுக்கும் கொடுத்த ஸ்ரீ பல- இராமனுசன் போல அன்றி இருவருக்கும் தன்னையே கொடுத்தது
ஆர் எனக்கு நின் பாதமே சரணக கொண்டு உகந்தாய்
3-தேவரீர வந்து என் இடம் கொடுத்தீரே-நாம் ஆத்ம சமர்ப்பணம் பண்ண-வேண்டி இருக்க நீரே உம்மை எனக்குத் தந்து –
லோக நாதம்-சுக்ரீவன் குரங்கு காலில் விழுந்தால் போல தலை கீழே மாறினது போல..
ஸ்ரீ ராமனும் தன்னையே ஸ்ரீ திருவடிக்கு கொடுத்தாரே-கண்டேன் சீதையே உபகாரம் பண்ணினவனுக்கு கொடுத்தார்-
இரண்டு உயிரை காத்தவனுக்கு அங்கு ஸ்ரீ பெருமாள் – உபகாரம் பண்ணிய ஸ்ரீ திருவடிக்கு அங்கு –
4–அபச்சாரம் பண்ணிய என்னை அன்றோ –
நானோ உலகின் உயிரை எடுக்க வந்தேன் -நீசனான எனக்கே கொடுத்தாரே-இப்படி நான்கு அர்த்தங்கள்

இராமானுச மெய்ம்மை கூறிடிலே
மெய்ம்மை கூறிடில் சொல்லால் கூறும் பரமன்று என்று கூட்டுக
ஏதோ சொல்ல வேணும் -என்று சொன்னால் -அது முழுமையும் கூறாமையின் பொய்யாகி விடும்
மெய்ம்மை கூறிடில் கூறும் பரமன்று என்கிறார்.
நெஞ்சால் நினைந்து குமிழ்நீர் உண்ணலாமே யன்றிச் சொல்லால் கூறும் பரமன்று என்கிறார் .

ஸ்ரீ சுவாமி ஸ்ரீ நம் ஆழ்வார் பிரதம பர்வதத்தையே உபாயமும் உபேயமுமாக தெளிந்து தன் நெஞ்சை நோக்கி
நான் கூறும் கூற்றாவ தித்தன்னையே நாணாளும்
தேங்காத நீருருவன் செங்கண்மால் -நீங்காத
மா கதியாம் வெந்நரகில்சேராமல் காப்பதற்கு
நீ கதியா நெஞ்சே நினை – -என்கிறார்
அத்தகைய தெளிவு வாய்ந்த தனக்கு உபாயமாக ஸ்ரீ தெய்வ நாயகன் தன் பாதத்தை தந்த
உபகாரத்தைக் கூறி அதற்குக் கைம்மாறு காணாது தடுமாறுகிறார் .
ஆறு எனக்கு நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய் உனக்கோர் கைம்
மாறு நான் ஓன்று இலேன் எனதாவியும் உனதே -ஸ்ரீ திருவாய்மொழி – 5-7 10- – என்பது காண்க –
ஸ்ரீ அமுதனாரோ அங்கனம் கூறவும் மாட்டாது தடுமாறுகிறார் –

படி எடுத்து சொல்லும் படி இல்லை — வாசகம் இட்டு சொல்ல ஒண்ணாதது-
பிரதம -சரம பல்லவிதம்- மொட்டு விடுவது போல புஷ்பம் கனி ஒன்பது விஷயம்
தத்வ ஹிதம் புருஷார்த்தம் ஒவ் ஒன்றிலும் மூன்று நிலை

பொன் முடியம் போரேற்றை எம்மானை நால் தடம் தோள்
தன் முடிவு ஒன்று இல்லாத தண் துழாய் மாலையனை
என் முடிவு காணாதே என்னுள் கலந்தானை
சொல் முடிவு காணேன் நான் சொல்லுவது என் சொல்லீரே –ஸ்ரீ திரு வாய் மொழி -2-5-8-

ஓடும் புள் ஏறிச், சூடும் தண் துழாய்
நீடு நின்று அவை, ஆடும் அம்மானே–1-8-1-
நித்திய விபூதியில் உள்ளாரோடு செவ்வியனாய்ப் பரிமாறும்படி சொல்லுகிறார் இப் பாசுரத்தில்.

அம்மானாய்ப் பின்னும், எம் மாண்பும் ஆனான்
வெம்மா வாய் கீண்ட, செம்மா கண்ணனே–1-8-2-
நித்திய விபூதியில் நின்றும் வந்து அவதரித்து விரோதிகளைப் போக்கிச் சம்சாரிகளுடன்
செவ்வையனாய்ப் பரிமாறும்படி சொல்லுகிறது.

வெற்பை ஒன்று எடுத்து, ஒற்கம் இன்றியே
நிற்கும் அம்மான் சீர், கற்பன் வைகலே.–1-8-4-
அவனுடைய ஆர்ஜவ குணம் தம் அளவிலே பலித்த படியை அருளிச் செய்கிறார்.
தாம் கற்கைக்காக வெற்பு எடுத்தது என்று இவ் வழியாலே இங்கு ஆர்ஜவம் சொல்லிற்று ஆகிறது

என்னை ஆக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த கற்பகம் 2-7-11–

கூவுமாறு அறிய மாட்டேன், குன்றங்கள் அனைத்தும் என்கோ!
மேவு சீர் மாரி என்கோ! விளங்கு தாரகைகள் என்கோ!
நாவியல் கலைகள் என்கோ! ஞான நல் ஆவி என்கோ!
பாவு சீர்க் கண்ணன் எம்மான் பங்கயக் கண்ணனையே–3-4-2-

அஃதே உய்யப் புகும் ஆறு என்று கண்ணன் கழல்கள் மேல்
கொய் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்
செய் கோலத்து ஆயிரம் சீர்த் தொடைப் பாடல் இவை பத்தும்
அஃகாமல் கற்பவர் ஆழ் துயர் போய் உய்யற் பாலரே–4-1-11-

என் சரண் என் கண்ணன் என்னை ஆளுடை என் அப்பனே -6-3-8-

திரு விண்ணகர் சேர்ந்த பிரான் கழல்கள் அன்றி மற்றோர் களை கண் இலம் காண்மின்களே-6-3-10-

அன்று மற்று ஓன்று இலேன் சரணே என்று அகலிரும் பொய்கையின் வாய்
நின்று தன் நீள் கழல் ஏத்திய ஆணையின் நெஞ்சிடர் தீர்த்த பிரான் -7-10-8-

அன்பாகும் தான தாள் அடைந்தார்க்கு எல்லாம் -9-10-6
அணியனாகும் தான தாள் அடைந்தார்க்கு எல்லாம் -9-10-8-
பாதம் நாளும் பணியத் தணியும் பிணி -9-10-9-

வாமனன் அடிக்கு என்று ஏத்த மாய்ந்தறும் வினைகள் தாமே -10-2-9-

உற்றேன் உகந்து பணி செய்து உன்ன பாதம் பெற்றேன் ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய் -10-8-10-

தரு துயரம் தடையேல் உன் சரண் அல்லால் சரண் இல்லை -5-1-

எங்குப் போய் உய்கேன் உன் இணை யடியே யடையல் அல்லால்-5-5-

புனித நின் இலங்கு பாதம் அன்றி மற்றோர் பற்றிலேன் எம் ஈசனே -90-

நின் சரண் எனச் சரணாய்–பின்னை என்றும் நின் திருவடி பிரியா வண்ணம் எண்ணிய பேரருள் எனக்கும்
அன்னதாகும் என்று அடி இணை யடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்தம்மானே -5-8-6-

சிறு புலியூர் சல சயனத்து அருமா கடல் அமுதே உனது அடியே சரணாமே -7-9-9-

உய நின் திருவடியே சேர்வான் நய நின்ற நன் மாலை கொண்டு
நமோ நாரணா வென்னும் சொல் மாலை கற்றேன் தொழுது -முதல் திருவந்தாதி –-57-

மூப்பு உன்னைச் சிந்திப்பார்க்கு இல்லை திரு மாலே நின்னடியை வந்திப்பார் காண்பர் வழி -75–

பொருந்திய நின் பாதங்கள் ஏத்திப் பணியாவேல் பல் பிறப்பும் ஏதங்கள் எல்லாம் எமக்கு -இரண்டாம் திருவந்தாதி –-37-

திருப் பொலிந்த ஆகத்தான் பாதம் அறிந்தும் அறியாத போகத்தால் இல்லை பொருள் -இரண்டாம் திருவந்தாதி –-40-

இன்றே கழல் கண்டேன் ஏழ் பிறப்பும் யான் அறுத்தேன் -மூன்றாம் திருவந்தாதி —-2-

தாவிய நின் எஞ்சா இணை அடிக்கே ஏழ் பிறப்பும் ஆளாகி அஞ்சாது இருக்க அருள் -18–

தொட்ட படையெட்டும் தோலாத வென்றியான் அட்ட புயகரத்தான் அந்நான்று
குட்டத்துக் கோள் முதலை துஞ்சக் குறித்து எறிந்த சக்கரத்தான் தாள் முதலே நங்கட்குச் சார்வு -99-

தமராவார் யாவர்க்கும் தாமரை மேலார்க்கும் அமரர்க்கும் ஆடரவார்த்தாற்கும்
அமரர்கள் தாள் தாமரை மலர்கள் இட்டு இறைஞ்சி மால் வண்ணன் தாள் தாமரை யடைவோம் என்று -நான்முகன் திருவந்தாதி-91

—————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –44–சொல்லார் தமிழ் ஒரு மூன்றும் சுருதிகள் நான்கும் இத்யாதி —

April 17, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

இப்படி உபதேசித்த விதத்திலும் ஒருவரும் இதில் மூளாமையாலே-அவர்கள் உடைய படியை அனுசந்தித்து இன்னாதாகிறார் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை-

கீழ் பாட்டில் லோகத்தார் எல்லாருக்கும் அவருடைய அதிகார நதிகார விபாகம் பாராதே அத்யந்த விலஷணமான-உபாயத்தை
உபதேசித்ததாலும் -அத்தை அத்யவசிக்க மாட்டாதே புருஷார்த்தம் எது என்று சந்தேகியா நின்று கொண்டு –
சிஷிதமான சப்த ராசியால் நிறையப் பட்டதாய் –அத்விதீயமாய் இயலும் இசையும் சந்தர்ப்பமும் கூடிய விலஷணமான இப் பிரபந்தமும் –
ரிகாதி வேத சதுஷ்டயமும் -அபரிமாய் தத் உப பிரஹமணமான தர்ம சாச்த்ரமாகிற இவற்றை அடைவே ஆராய்ந்து இருக்குமவராய் –
சத்துக்களாலே அடைவு கெட ஸ்துதிக்கும்படியாய் இருக்கிற ஸ்ரீ எம்பெருமானாருடைய
திருநாமத்தை அப்யசியாதே போனார்களே என்று இன்னாதாகிறார்

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-

இப்படி இவர் உபதேசித்தும் படியில் உள்ளோரில் ஒருவரும் இவர் வார்த்தையின் படி –
ஸ்ரீ இராமானுச திரு நாமத்தை சொல்ல முற்படாமையாலே -அவர்கள் தன்மையை நினைந்து வருந்திப் பேசுகிறார் –
இதிலும் ஸ்ரீ இராமானுச திரு நாம வைபவம் மீண்டும் சொல்கிறார்

சொல்லார் தமிழ் ஒரு மூன்றும் சுருதிகள் நான்கும் எல்லை
யில்லா வற நெறி யாவும் தெரிந்தவன் எண்ணரும் சீர்
நல்லார் பரவும் இராமானுசன் திரு நாமம் நம்பிக்
கல்லார் அகலிடத்தோர் எது பேறென்று காமிப்பரே – -44 –

பத உரை –
அகல் இடத்தோர் -அகண்ட பூமியில் உள்ளவர்கள்
பேறு -புருஷார்த்தம்
எது என்று -யாதொன்று
காமிப்பார் -விரும்புவர்
சொல் ஆர் -சொற்கள் நிறைந்த
ஒரு -ஒப்பற்ற
தமிழ் மூன்றும் -மூன்று வகைப்பட்ட தமிழையும்
சுருதிகள் நான்கும் -நால் வகைப்பட்ட வேதங்களையும்
எல்லை இல்லா -அளவில்லாத
அற நெறி யாவும் -தர்ம மார்க்கங்கள் அனைத்தையும்
தெரிந்தவன் -ஆராய்ந்து அறிந்தவராய்
எண்ணரும் சீர் -எண்ண முடியாத கல்யாண குணங்களை உடையவராய்
நல்லார் -நல்லவர்கள்
பரவும் -துதிக்கும் படி யிருக்கும்
இராமானுசன் திரு நாமம் -ஸ்ரீ எம்பெருமானாருடைய திரு நாமத்தை
நம்பி -நம்பிக்கை கொண்டு
கல்லார் -கற்கின்றினரே

விச்தீர்னையான பூமியில் உள்ளோர் புருஷார்த்தம் எது என்று இச்சியா நிற்பார்கள் –
சொல் நிரப்பத்தை உடைத்தாய் -அத்விதீயமாய் -இயல் இசை நாடக சம்பந்தத்தாலே மூன்று வகைப்பட்டு இருந்துள்ள தமிழும் –
ருகாதி சதுர்வேதங்களும் -அசங்க்யேமான தர்ம மார்க்கங்களான சகலமும் -அலகலகாக ஆராய்ந்து இருக்குமவராய் –
எண்ணப் புக்கால் எண்ணித் தலைக்கட்ட வரிதான கல்யாண குணங்களை உடையவராய் –
சத்துக்களுடைய ப்ரீதி பிரகர்ஷத்தாலே அடைவு கெட ஏத்தும்படியாய் இருக்கிற
ஸ்ரீ எம்பெருமானாருடைய -திரு நாமத்தை -நான் சொன்ன வார்த்தையை -விஸ்வசித்துக் கற்கிலர்கள் .
ஐயோ இவர்கள் அளவு இருந்தபடி என் என்று கருத்து .
எண்ணரும் சீர் -என்கிற இது நல்லாருக்கு விசேஷணம் ஆகவுமாம் –
நம்புதல்-விருப்பமுமாம் –

வேப்பங்குடி நீரையா சொல்லச் சொல்கிறேன் சொலப் புகில் வாய் முதல் பரக்கும் –
ஒரு மூன்றும் -திருவாய் மொழி -மற்ற மூ வாயிரம் /ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த நான்கும் /இயல் இசை நாடகம் மூன்று அர்த்தங்கள் –
ஒரு அத்விதீயம் -ஸூதகா பிரமாணம் -சுருதிகள் நான்கும் இப்படியே –

அகலிடத்தோர் –
அநந்தா என்றும் விபுலா என்றும் பேரை உடைத்தான இந்த மகா ப்ருதிவியில் உள்ள சேதனர்கள்

எது பேறு என்று காமிப்பர்-
நான் இவர்களது இழவைக் கண்டு பொறுக்க மாட்டாதே -மந்த்ரம் யத்நேன கோபயேத்-என்கிற
சாஸ்திரத்தையும் அதிக்ரமித்து -அத்யந்த சுலபமாய் குரோர் நாம சதா ஜபேத் -என்கிறபடியே –
ததீய சேஷ தைகரஸ்-ஸ்வரூப அநு ரூபமாய் -பரம போக்யமான சதுரஷரியை உபதேசித்தாலும் -அதிலே நிஷ்டர் ஆகமாட்டாதே
அறிவு கெட்டு -பின்னையும் -நமக்கு ஓர் சரணம் எது என்று இங்கும் அங்கும் நாடி -அந்த இச்சையோடு காலம் எல்லாம் இப்படியே
வ்யர்தமாகப் போக்குகிறார்கள் -ஐயோ இவர்கள் ப்ராப்தத்தின் உடைய க்ரௌர்யம் இங்கனே யாய் தலைக் கட்டிற்று-என்று இன்னாதாகிறார்

ஆனால் அத்யயனம் பண்ணுவிக்கும் அவர்கள் மந்த மதிகளுக்கு பின்னையும் ஒரு சந்தையைச் சொல்லி-
அவர்கள் தரிக்கும் அளவும் க்ருஷி பண்ணுவார்கள் இறே-அப்படியே நீரும் செய்ய வேண்டாவோ என்ன –
யச்சகிம் கிஞ் ஜகத் சர்வம் த்ர்சயதே ச்ருயதேபிவா -அந்தர்பகிச்த தத் சர்வம் வ்யாப்ய நாராயண ஸ்த்தித -என்றும்
எண் பெருக்கு அந் நலத்து ஒண் பொருள் ஈறில வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே -என்றும்
பிரபாவ புரச்சரமாக-அந்த மந்த்ரத்தை உபதேஸித்தால் போலே –
இவரும் தாம் முன்பு அருளிச் செய்த சதுரஷரி மந்த்ரத்தை ஏறிட்டு -பிரபாவ வர்ணன பூர்வகமாக அருளிச் செய்கிறார் –

எது பேறு என்று காமிப்பரே
நம்பித் திரு நாமம் கற்றலாம் புருஷார்த்தத்தை விட்டு –புருஷார்த்தம் எது என்று
தேடி அலையா நிற்கிறார்களே -இவர்கள் அறிவீனம் இருந்த படி என் -என்று கருத்து-

சொல்லார் தமிழ் ஒரு மூன்றும் –
சீர் தொடை ஆயிரம் -என்றும்
ஸ்ரீ சடகோப வாங்மயம் -என்றும் சொல்லுகிறபடியே கோமளங்களாய்-தத்வார்த்த நிச்சாயகங்களான சப்தங்களாலே நிறையப்பட்ட தமிழ் என்று –
ஸ்ரீ திரு வாய் மொழி -ஒரு என்ற சப்தம் காகாஷி நியாயேன பூர்வ உத்தர பதங்களிலே அன்வயிக்கும் –
லோகத்திலும் வேதத்திலும் அதுக்கு சதர்சமான பிரமாணம் இல்லை என்ற படி –
மூன்றும் –
அதுக்கு மூன்று பிரகாரமாக கணிசிக்க தக்கதாய்
அத்விதீயமான மற்ற மூவாயிரப் பிரபந்தமும் -இப்படி ஸ்ரீ ஆழ்வார் பதின்மராலும் செய்யப்பட சமஸ்த திவ்ய பிரபந்தங்களும் –
அன்றிக்கே
ஒரு மூன்று என்றது ஸ்ரீ திருவிருத்தம் ஸ்ரீ திருவாசிரியம் ஸ்ரீ பெரிய திருவந்தாதி யும் பொருள் ஆகவுமாம்.
அன்றிக்கே
சொல்லார் தமிழ் ஒரு மூன்றும் -சொல் நிரப்பத்தை உடையதாய் -அத்விதியீமாய்-இயல் இசை நாடக சம்பந்தத்தாலே
மூன்று வகைப்பட்டு இருந்துள்ள தமிழ் என்னவுமாம் –

சொல்லார் தமிழ் ஒரு மூன்றும் –
சொல்லார் தமிழ்
தமிழ் எனும் அளப்பரும் சலதி -என்றபடி சொற்கடலாய் அமைந்தது தமிழ் மொழி .
எல்லா மொழிகளிலும் சொற்கள் இருப்பினும் எத்தைகைய உணர்ச்சிகளையும் பொருள்களையும்
புலப்படுத்தும் பல சொற்கள் தமிழில் நிறைய காணப்படுதலின் –சொல்லார் தமிழ் –என்றார்.
ஒரு தமிழ்-
அத்தகைய தமிழ் ஒப்பற்றதாதலின் -ஒரு தமிழ் -என்றார் .
வட மொழி தெய்வத் தொடர்பு உடையதாயினும் -எளிதில் எல்லாராலும் பேசப்படுவதாயும் உணரப்படுவதாயும் -அமைந்து இலது –
தமிழ் மொழியோ அங்கன் அன்றி யாவராலும் பேசவும் உணரவும்
பெற்றுத் தெய்வத் தொடர்பும் உடையதாய் இருத்தலின் -ஒப்பற்ற தாயிற்று .
மூன்று தமிழ்
இயல் இசை நாடகம் -என்னும் உட்பிரிவினால் மூன்று தமிழ் ஆயிற்று .
தாய் மொழி யாதலானும் ஸ்ரீ ஆழ்வார்கள் ஈரத் தமிழ் ஆதலானும் -நான்கு ஸ்ருதிகளுக்கு முன்னர் மூன்று தமிழ்கள் கூறப்பட்டன –
செந்திறத்த தமிழோசை வட சொல்லாகி -என்று வட சொல்லுக்கு
முத்திச் செந்திறத்த தமிழை ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் அமைத்து அருளி இருப்பது இங்கு அறியற்பாலது –
தம் பாழி யாகையாலே தமிழை முதலில் கூறினார் என்பது அவ்விடத்திய வியாக்யானம் .

இயல் தமிழ் -இயல்பாய் அமைந்த தமிழ்
இசைத் தமிழ் -குறிஞ்சி காந்தாரம் முதலிய பண் அமைந்த தமிழ் .
இயலும் இசையும் விரவிய தமிழ் -நாடகத் தமிழ் –
இசைத் தமிழ் -பண்ணார் பாடல் எனப்பட்ட ஸ்ரீ திருவாய் மொழி -ஸ்ரீ பெரிய திருமொழி முதலியன
இயல் தமிழ் -ஸ்ரீ பொய்கையார் அந்தாதி முதலியன
நாடகத் தமிழ் -உரையாடல் வடிவமாய் அமைந்த ஸ்ரீ திருப்பாவை முதலியன –

சொல்லார் ஒரு தமிழ் என்று கூட்டி -ஸ்ரீ திருவாய் மொழியும்
ஒரு மூன்று -என்று மற்றை மூவாயிரமும் சொல்லப்படுகின்றன –
இனி ஸ்ரீ நம் ஆழ்வார் அருளிச் செய்த ஸ்ரீ திரு விருத்தம் ஸ்ரீ திரு வாசிரியம் ஸ்ரீ பெரிய திருவந்தாதி என்னும்
திவ்ய பிரபந்தங்கள் சொல்லப் படுகின்றன என்னலுமாம்-என்று ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் உரைப்பர் –
மேலே ஸ்ருதிகள் நான்கும் என்று வட மொழி வேதம் நான்கும் கூறப் படுவதற்கு ஏற்ப
தென் மொழி வேதம் நான்கும் கூறப் படுவது பொருந்தி உள்ளது என்பது அவர் கருத்து போலும் .

சொல்லார் தமிழ் –
என்பது –சொல் சீர்த் தொடை யாயிரம் -திரு வாய் மொழி – 1-2 11- –
ஸ்ரீ சடகோப வாங்மயம் -என்னும் ஸ்ரீ திருவாய் மொழியை நினைவுறுத்துகிறது .
இரும் தமிழ் நூலிவை மொழிந்து -ஸ்ரீ திருவாய் மொழி -10 -6 4- – என்றபடி
இரும் தமிழ் நூல் ஆதலின் -ஸ்ரீ திருவாய் மொழி -தமிழ் -என்றே வழங்கப் பட்டது .
தத்ராசவ் சத்த்வ சீம்ன சடமத நமுநே சம்ஹிதா சார்வபவ்மீ -என்று
இதிஹாச புராணங்களாலே ஸ்ருதிகளுக்கு செய்யும் செயலில் சத்துவ குணத்தின் எல்லையில் உள்ள-ஸ்ரீ சடகோப முனிவனுடைய
சம்ஹிதையான ஸ்ரீ திருவாய்மொழி தலை சிறந்தது -என்று
ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளியில் கூறியபடி ஸ்ரீ திருவாய் மொழி ஒப்பற்ற பிரமாணம் ஆதலின்-ஒரு தமிழ் -எனப்பட்டது .

ஸ்ருதிகள் நான்கும்
பிரமாணாந்தரங்களைப் போலே அநித்யுமுமாய் சாபேஷையுமாய் இருக்கை அன்றிக்கே –
வாசாவிருபு நித்யா -என்றபடி நித்தியமாய் அபௌருஷேயுமாய் சவாத பிரமாண முமாய்-புஸ்தக நிரீஷனாதி சாத்தியம் அன்றிக்கே –
ஸ்வாத்யா யோத்யே தவ்ய-என்கிறபடியே -ஆசார்ய உச்சாரண அநு உச்சாரண மகாத் அயன சாத்தியமாய் –
ரிசோ யஜூ சி சாமானி ததைவா தர்வணாநிச -என்னும்படியான பேர்களை உடைத்தாய் கொண்டு நாலு வகைப்பட்ட வேதங்களும் –

ஸ்ருதிகள் நான்கும்
ஆராலும் ஆக்கப்படாது அநாதியாக குரு வாயிலாக கேட்டே ஓதப்பட்டு வருதலின் வேதங்கள்
ஸ்ருதிகள் எனப்படுகின்றன -ஓதி ஒதுவித்தாதியாய் வரும் -பெரிய திருமொழி -3 5-6 – -என்றார் ஸ்ரீ திரு மங்கை மன்னனும் .
அவை ருக் -யஜூஸ் சாமம் அதர்வம் என்று நான்கு வகைப்படும்

எல்லை இல்லா அற நெறி –
அந்த வேதங்களினுடைய-அர்த்த பிரகாசங்களாய் தொகை இட்டு சொல்ல ஒண்ணாதபடி -அனந்தமான தர்ம மார்க்கங்களை –

யாவும் தெரிந்தவன் –
வேத மார்க்க பிரதிஷ்டாப நாசார்யா – உபய வேதாந்த சார்யர் -ஆகையாலே-இவை எல்லாவற்றையும்
அலகலகாக ஆராய்ந்து இருக்குமவராய்

எல்லை இல்லா அற நெறி யாவும் தெரிந்தவன்
அற நெறி -ஸ்ருதிகளில் சொன்ன தர்ம மார்க்கங்கள்
அவை எண்ணிக்கையில் அடங்காமையின் எல்லை இல்லாதன
அவை அனைத்தும் அறிந்தவர் ஸ்ரீ எம்பெருமானார்

எண்ணரும் சீர்
இவர் பகவத் அவதாரம் ஆகையாலே-சங்க்ய அனும் நை வசக்யந்தே குணா -என்னும்படி
அனந்த கல்யாண குனாகரராய் -நாதச்யேச கஸ்ய நதஸ்ய நாம மகத்யச –என்னும்படியான
அவனுடைய கீர்த்தியை பரிச்சேதிக்கிலும்-இவருடைய கீர்த்தியை பரிச்சேதிக்க ஒண்ணாது காணும் –
அன்றிக்கே
எண்ணரும் சீர் –
என்றது -நல்லோர் என்ற பதத்துக்கு விசேஷணம் ஆகவுமாம் –
அப்போது -வாசா மகோசர-மகா குணா தேசிகாக்ர்ய கூராதி நாத -என்னும்படி எண்ணித் தலைக் கட்ட அரிதான
கல்யாண குணங்களை உடையவரான ஸ்ரீ ஆழ்வான் ஸ்ரீ பிள்ளான் ஸ்ரீ எம்பார் தொடக்கமானவர் -என்றபடி

நல்லார் பரவும்
ஜயதி சகல வித்யா வரஹி நீ ஜன்ம சிலோ –இத்யாதியாலும் –
காதா தாதா கதானாம் -இத்யாதியாலும் –
வாழி எதிராசன் -இத்யாதியாலும் –அந்த சத்துக்கள் உடைய பிரதி பிரகர்ஷத்தாலே அடைவு கெட ஏத்தும்படி இருக்கிற

இராமானுசன் திருநாமம்
ஸ்ரீ எம்பெருமானாருடைய திருநாமம் –-ராமானுசன் என்கிற இத் திருநாமத்தை –

எண்ணரும் சீர் நல்லார் பரவும் இராமானுசன்
சீர் -குணங்கள்-அவைகள் எண்ண அரியன-இத்தனை என்று கணக்கிட முடியாதன
இனி நினைத்துப் பார்ப்பதற்கும் முடியாதன என்னலுமாம்
சீர் இராமானுசன் என்று இயைக்க
நல்லாரோடு இயைத்தலுமாம்-அப்பொழுது வாசா மகோசர மகா குண தேசிகாக்ர்ய கூராதி நாதர்
எனப்படும் ஸ்ரீ கூரத் ஆழ்வான் போல்வாரை நல்லார் என்றது ஆயிற்று .

நம்பிக் கல்லார் –
இவருடைய பிரபாவத்தை அறிந்து விச்வசித்து -இவருக்கு திருநாமமான சதுரஷரி மந்த்ரத்தை -அப்யசியாதே போனார்கள் –
குரங்கானாலும் மகாராஜர் ப்ரத்யயம் பண்ணின பின்பு-விச்வசித்தார் இறே –
இவர்கள் சதசத் விவேசனம் பண்ணுகைக்கு -யோக்யரான மனுஷ்யராய் இருந்தும் –
நம்மை ஸ்ரீ எம்பெருமானார் விஷயீ கரித்ததை தெளிவித்து ப்ரத்யயம் பண்ணிக் கொடுத்தாலும் -இவர்கள் விச்வசிக்க-மாட்டாதே போனார்கள் –
இவர்கள் அபாக்யத்தின் க்ரௌர்யம் என் என்று இன்னாதாகிறார் —

திரு நாமம் நம்பிக் கல்லார் அகல் இடத்தோர் –
நம்புதல் -விசுவாசம் கொள்ளுதல்
அமுதனார் உபதேசத்தில் நம்பிக்கை கொள்கிலர்-என்றபடி
நம்புதல்-விரும்புதலுமாம்
கற்றல்-குரு முகமாக உபதேசிக்கப் பெற்று அனுசந்தித்தல்
நாமம் கற்றலே கல்வி என்கிறதாகவுமாம் –
திரு நாமம் சொல் கற்றனமே -ஸ்ரீ திரு விருத்தம் – – என்று ஸ்ரீ நம் ஆழ்வாரும்
நின் நாமம் கற்ற ஆவலிப்பு -ஸ்ரீ திருமாலை -என்று ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வாரும் அருளினமை காண்க .
பரந்த உலகிலே நம்பித் திரு நாமம் கற்பார் ஒருவரும் இலரே என்னும் இன்னாப்புடன் அகலிடத்தோர் -என்கிறார் ,

கலியன் ஒலி செய் தமிழ் மாலை 1-5-10–
இரும் தமிழ் நூல் புலவன் மங்கையாளன் 1-7-10–
வண் தமிழ் செஞ்சொல் மாலைகள் 1-9-10–
கலிகன்றி இன் தமிழால் உரைத்த -2-1-10–

சீர் வண்ண ஒண் தமிழ்கள் இவை ஆயிரம் -திருவாய் 5-1-11–
சொல் தொடை அந்தாதி ஓர் ஆயிரத்துள்10-4-11–
சொல் சந்தங்கள் ஆயிரம் 10-9-11–

——————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –43– சுரக்கும் திருவும் உணர்வும் சொலப்புகில் வாயமுதம் பரக்கும் இத்யாதி —

April 16, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

இப்படி தம்மை விஷயீ கரிக்கையால் வந்த ப்ரீதியாலே -லௌகிகரைப் பார்த்து –
எல்லாரும் ஸ்ரீ எம்பெருமானார் திரு நாமத்தை சொல்லுங்கோள்-உங்களுக்கு
எல்லா நன்மையையும் உண்டாகும் -என்கிறார்

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை-

இப் பாட்டிலே -ஸ்ரீ எம்பெருமானார் -தம்முடைய தோஷங்களைப் பாராதே -தம்மை விஷயீ கரித்த வாத்சல்ய குணத்திலே ஈடுபட்டு –
அந்த ப்ரீதி தலை மண்டை இட்டு லோகத்தார் எல்லாரையும் – உஜ்ஜீவிப்பிக்க வேணும் பர சமர்த்தி பரராய் -அவர்களை சம்போதித்து –
சம்சார மக்னரான உங்களுக்கு-கரை கண்ட நான் -உபதேசிக்கிறேன் –
தர்ம பிரத்வேஷியான கலியை வைதேசிகமாக போக்கக்-கடவதான சதுரஷரி மந்த்ரத்தை அதிகரியுங்கோள் –
உங்களுக்கு சகல சுபங்களும் தன்னடையே-வந்து சேரும் என்கிறார் –

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-

இப்படி தம்மைக் கை தூக்கி விட்ட ப்ரீதியாலே உலகினரை நோக்கி ஸ்ரீ எம்பெருமானார் திரு நாமத்தை சொல்லுங்கோள் –
உங்களுக்கு எல்லா நன்மைகளும் உண்டாகும் -என்கிறார்–

உபதேசம் பண்ணி ஆவி வந்து எடுத்த -விஷயீ கரிக்கையால் வந்த ப்ரீதியாலே
எல்லோரும் ஸ்ரீ ஸ்வாமி திரு நாமத்தை சொல்லுங்கள்.-உய்யலாம் என்கிறார் –
ஸ்ரீ நாராயணா -ஸ்ரீ சடகோபன் -ஸ்ரீ ராமானுசா -சதுரமான சதுர் அக்ஷரங்கள் –
கிருபையால் சரம ஸ்லோக அர்த்தம் ஸ்ரீ ஸ்வாமி அருளியது போல அதி குஹ்யமான ரகஸ்யத்தை ஸ்ரீ அமுதனார் இங்கு வெளி இடுகிறார்.

சுரக்கும் திருவும் உணர்வும் சொலப்புகில் வாயமுதம்
பரக்கும் இருவினை பற்றவோடும் படியிலுள்ளீர்
உரைக்கின்றனன் உமக்கு யான் அறம் சீறும் உறு கலியைத்
துரக்கும் பெருமை இராமானுசன் என்று சொல்லுமினே – 43-

பத உரை –
படியில்-பூமியில்
உள்ளீர் -இருப்பவர்களே
யான்-நான்
உமக்கு -உங்களுக்கு
உரைக்கின்றனன் -சொல்லுகின்றேன்
அறம்-தர்மத்தை
சீறும் -கோபிக்கும்
உறு கலியை -வலிமை மிக்க கலியினை –
துரக்கும் -ஒட்டி விடும்
பெருமை -மகிமை வாய்ந்த
இராமானுசன் என்று சொல்லுமின் -ஸ்ரீ இராமானுசன் என்று திரு நாம சங்கீர்த்தனம் பண்ணுங்கள்
திருவும் -செல்வமும்
உணர்வும் -ஞானமும்
சுரக்கும் -தொடர்ந்து பெருகும்
சொலப்புகில் -சொல்ல முற்பட்ட உடனேயே
வாய்-வாயிலே
அமுதம் பரக்கும் -இனிமை பரவி நிற்கும்
இருவினை -பெரும் பாபங்கள்
பற்று அற -வாசனையும் அழிய
ஓடும் -உங்களை விட்டு ஓடிப் போய் விடும்

ஸ்ரீ எம்பெருமானார் திருவவதரித்து அருளுகையாலே -விச்வம் பரா புண்ய வதீ -என்கிறபடியே –
பாக்யவதியாய் இருக்கிற பூமிக்கு உட்பட்டவர்களே –
நிச்சிதமாக அனுபவத்தாலே கை கண்ட-நான் -இதில் வாசி அறியாமல் இழந்து இருக்கிற உங்களுக்கு சொல்லுகிறேன் –
தர்மம் எனபது ஒன்றே நடையாட சஹியாத -பிரபலமாய் உறைத்து நிற்கிற கலியை –
தம்முடைய சம்பந்தம் உள்ள விடத்திலே நில்லாதபடி ஒட்டி விடும் பிரபாவத்தை உடையரான-
ஸ்ரீ எம்பெருமானார் உடைய திரு நாம உச்சாரணத்தைப் பண்ணுங்கோள் –
பக்தி யாகிற சம்பத்தும் ஜ்ஞானமும் மேன்மேலும் வர்த்திக்கும்-

என்றக்கால் அண்ணிக்கும் அமுதூரும் -கண்ணி நுண் -1 – என்னும் அளவு அன்றிக்கே
சொல்லத் தொடங்கின போதே வாக்கிலே ரசம் பிறக்கும் –
அநுபவ விநாச்யம் ஆதல் -ப்ராயாசித்த விநாச்யம் ஆதல் -செய்யாத
மகா பாபங்கள் தானே யஞ்சி சவா சனமாக விட்டு ஓடும் –

தலை சீர் வண்ணம் தாம் கெட வரினே குறுகிய விகரமும் குற்றியலுகரமும் அளபெடையாவையும் அலகியல்பிலவே -என்கிற ந்யாயத்தாலே
உரைக்கின்றன நுமக்கியான் அறம் சீறு முறு கலியை -என்கிற பாதத்தில் உமக்கியான்
என்கிற இடத்தில் ககரத்தின் மேல் ஏறின இகரம் குற்றியல் இகரம் ஆகையாலே
வண்ணம் கெடாமைக்குக் கழித்து உடல் எழுத்தான ககரத்தை கீழோடு ஓன்று வித்து
பூர்வ உத்தர பாதங்களுக்கு ஒக்க பதினேழு எழுத்தாக்கி எண்ணக் கடவது –

ஏன் முடியாதெனக்கி யாதே யரியது-என்று ஆழ்வார் நூற்றந்தாதியிலும் இப்படி பிரயோக்கிகப் பட்டது இறே-
ஆகையால் மகா கவி பிரயோகங்கள் இப்படி வரக் கடவதாய் இருக்கும்..

அறம் சீறும் உறு கலியைத்-துறக்கும் பெருமை இராமானுசன் -இது தான் நாம் சொல்ல வேண்டிய சந்தை -கலியும் கெடுமே
பெருமை இராமானுசன்-மட்டுமே சொல்ல -வரும் நன்மைகளை -சொலப் புகில் -அமுதூறும் என் நாவுக்கே சொன்னால் ஸ்ரீ மதுர கவி ஆழ்வாருக்கு –
இங்கோ உத்யோக மாத்திரத்திலே
ஓத வல்லார் -சொல்ல சொல்ல ஊரும்-பிரதம பர்வம் -அமுதம் உப்பு சாறு கடைந்து -வாய் நஞ்சு பரக்கும் அங்கு –
வசவு / கொண்டாட்டம் / தாபம் மூன்றும் படியில் உள்ளீர் -என்பதால்-

படியில் உள்ளீர்
இருள் தரும் மா ஞாலமான இந்த லோகத்தில் வர்த்திக்கிற அறிவிலிகளான மனிசரே –
சுக துக்க மூலமான புண்ய பாபங்களுக்கு விளை நிலமாய் இருக்கிற பூமியிலே இருக்கிற மனுஷ்யரை என்றபடி –
அன்றிக்கே –
ஸ்ரீ எம்பெருமானார் திருவவதரித்து அருளுகையாலே -விச்வம்பரா புண்யவதி -என்கிறபடியே
பாக்யவதியாய் இருக்கிற-பூமிக்கு உட்பட்டவர்களே -என்னுதல் –
உள்ளபடி தத்வ ஹித புருஷார்த்தங்களை அறியப் பெறாதே -பிரக்ருதி ஸ்வபாவத்தில் திரியுமவர்களே -என்னுதல் –
படி –
பூமியும் -ஸ்வபாவமும் –
அநாதி காலமே தொடங்கி இதன் வாசி அறியாதே இதன்-சப்தாதி விஷயங்களுக்கே -சேஷமாய் போந்த உங்களுக்கு –

யான் –
முன்பு துர் விஷயங்களிலே மக்னனாக
பின்பு ஸ்ரீ எம்பெருமானார் தம்முடைய கிருபையாலே-மக்னானுத்தர தேலோ கான் காருண்யாஸ் சாஸ்திர பாணினா -என்கிறபடியே
சமுத்தரிக்க -அங்குத்தைக்கு அந்தரங்கனாய் -அங்கே இருக்கிற ரசத்தை அனுபவித்து கைக் கண்ட நான்

உரைக்கின்றனன்-
ஸ்நேஹாஸ் ச-பஹூமானாச்ச ஸ்மார யேத்வாம்னசிஷையே – என்கிறபடி ஹிதோபதேசம் பண்ணுகிறேன் –

படியில் உள்ளீர் உமக்கியான் –
வேட்கை விளைவிப்பதற்க்காகப் பயன்கள் கூறப்பட்டன கீழே –
அவற்றைத் தரும் திரு நாமத்தை உபதேசிக்கிறார் மேலே –
படியில் உள்ளீர் –
திரு நாமத்தைச் சொல்ல எல்லாரும் அதிகாரிகள் என்பது இவ்விளியினால் விளங்குகிறது –
இருள் தரும் மா ஞாலத்தில் -உள்ளவர்களுக்கு தெள்ளியோர் கைக் கொள்ளும் விஷயத்தை உபதேசிக்கிறேன் -என்றபடி –
இனி –
ஸ்ரீ எம்பெருமானார் அவதாரத்தினால் ஏற்றம் பெற்ற பூமியில் வாசம் செய்யும் பேறு பெற்ற உங்களுக்கு உபதேசிக்கிறேன் -என்றதுமாம் –
ஸ்ரீ எம்பெருமானார் அவதரித்த பூமியிலே பிறந்து -அவர் காலத்திலேயே -அப்பூமியில் உள்ள பாக்கியத்தை என் என்பது –
உரைக்கின்றனன் -என்று நிகழ் காலத்தில் கூறியது –
ஒரு கால் உரைத்து ஆறி இராமல் நீங்கள் இழக்கல்ஆகாது என்று மீண்டும் மீண்டும்
உபதேசித்துக் கொண்டே யிருக்கிறேன் என்னும் கருத்துக் கொண்டது –
உமக்கு
திரு நாம பிரபாவத்தை அறியாதவர்களாய் இழந்து இருக்கிற உங்களுக்கு
யான் –
அனுபவத்தினால் உண்மையான பிரபாவத்தை அறிந்து கொண்ட நான்

அறம் –
கலவ்கார்த்த யுக தர்ம கர்த்தும் இச்சதி யோ நர -சாதுர்வர்ண்யம் மயா ஸ்ரஷ்டா குணா கர்ம விபாகச –என்கிறபடி –
பகவத் ஆக்ஜா ரூபமாய் -தத்தத் வர்ணாஸ்ரம தேச காலாதி காரிகளாலே நியமதாய் –
அதீந்த்ரிய வியாபார நிவ்ருத்தமான வ்ருத்தி விசேஷம் –

சீறும் உறு கலியை –
இப்படிப்பட்ட தர்மத்தையும் தத் கர்த்தாவையும் குறித்து –ஸ்வா மித்ரோ ஹீதிதம் மத்வா தஸ்மை பிரத்வேஷ்யதே கலி -என்கிறபடி
அத்யந்த குபிதனாய் -இந்த-துர்வ்யாபாரத்திலே முறுகி இருக்கிற கலி புருஷனை –
அன்றிக்கே –
உறு கலியை –
பிரபலமாய் உறைத்து நிற்கிற கலியை-என்றுமாம் –

துரக்கும் பெருமை –
சும்மனாதே கை விட்டோடி தூறுகள் பாய்ந்தனவே -என்கிறபடியே
அந்த கலி புருஷனும் அவனாலே பிரவர்த்திக்கப்பட்ட அதர்மங்களும் ஓடிப்போம் படி பண்ணக் கூடிய அதிசயத்தை உடைய-

அறம் சீறும் உறு கலியை துரக்கும் பெருமை –
கலி அறத்தை சீறுவதற்கு வேறு ஒரு காரணமும் இல்லை –
அறம் அறமாய் இருத்தலே காரணம் .
கலிக்கு அறத்தின் மீது இயற்பகை என்க .
செல்லாக் கோபம் அன்று -அறத்தை குலைக்கும் வலிமை அதற்கு உண்டு என்பர் -உறு கலி –என்றார்
அத்தகைய கலியையும் தம் தொடர்புடைய இடத்து நின்றும் கால் பாவ ஒட்டாது ஒட்டி விடும் பிரபாவம் உடையவர் எம்பெருமானார் –
அவர் திரு நாமத்தை சொல்லுங்கள் என்கிறார் .

இப்பாசுரத்தில் மூன்றாம் அடியில் –உமக்கியான் -என்னும் இடத்தில் குற்றியலிகரம் அலகு பெறாது –

இராமானுசன் என்று சொல்லுமினே-
சஹாஸ்ராஷரி மாலா மந்த்ரத்தை ஜபிக்க வேண்டா –
ந சித்ரா மாநுஜெத்யஷா சதுரா சதுரஷரி –காமவச்தாம் ப்ரபத்யந்தே ஜந்தவோ ஹந்த மாத்ர்ச -என்று
இவருடைய ஆசார்யன் ஸ்ரீ ஆழ்வானும் ஆழம் கால்-பட்டால் போலே –
லோகத்தார் உடைய சம்சார துக்கத்தை பார்த்த இவர்க்கு கரை புரண்டு வந்தவாறே
ஸ்ரீ எம்பெருமானாரைப் போலே இவரும் இந்த அதி ரகஸ்யத்தை -தூளிதானமாக -எல்லார்க்கும் வெளி இடுகிறார் காணும் .
இத்தாலே பலிக்கிறது என் என்ன –

சுரக்கும் திரு உணர்வும் –
லஷ்மனோ லஷ்மி சம்பன்ன -சது நாகவர ஸ்ரீ மான் -என்றும்
ஒழிவில் காலம் எல்லாம் உடனே மன்னி வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம் -என்றும்-சொல்லுகிறபடி –
சர்வதேச சர்வ கால சர்வ அவச்தோசித-சர்வ வித கைங்கர்ய சம்பத்தும் –
அத்யந்த பர சேஷ தைகாச ஸ்வரூப ஞானமும் மேன்மேல் என வர்த்திக்கும் –
அடியார் அடியார் தம் அடியார் அடியார் தமக்கு அடியார் அடியார் தம் அடியார் அடியோங்களே –என்கிறபடியே பக்தி யாகிற சம்பத்தும் –
அதில் நின்றும் ததீய பர்யந்தமாய் இருக்கிற ஸ்வரூப-யாதாம்ய ஞானமும் –
சஹ்யத்தின் நின்றும் காவேரி பிறந்தால் போலே –சுரக்கும் என்றபடி –

சுரக்கும் திருவும் உணர்வும் –
திரு எனபது இங்கே பக்திச் செல்வத்தை
சுரத்தல்-மேன்மேலும் பெருகுதல்
விஷயம் விலஷணமாய் போக்யதை அளவு படாமை பற்றிப் பக்தியும் அளவிறந்து மேன்மேலும் வளர்கிறது -என்க-
உணர்வு -ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -என்றபடி
பரம் பொருளை அதன் எல்லை நிலமான அடியார் அளவும் உள்ளவாறு அறிதல் –
ஸ்வரூபம் ரூபம் குணம் முதலியன அளவு படாமையின் அவை பற்றிய உணர்வும் மேன்மேலும் அளவிறந்து பெருகுகிறது என்க –
பக்தியையும் உணர்வையும் உரைத்தது வைராக்யத்துக்கும் உப லஷணம்-
ஆத்ம குணங்களில் முக்கியமானவை ஆதலின் இவை மட்டும் கூறப்பட்டன-

திருவும் உணர்வும் சுரக்கும் பக்தியும் ஞானமும் -வைராக்யதுக்கும் உப லஷணம்–பக்தி தான் ஸ்ரீ சம்பத்–
ஒண் தாமரையால் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு
பிரணாவாகாரம் ஸ்ரீ ரெங்க விமானம் ஸ்ரீ பாஷ்யம் -மூன்றிலும் சேஷித்வம் தெரிந்து கொள்ளலாம்-

சொலப்புகில் வாய் அமுதம் பரக்கும்
தேவ ஜாதி எல்லாம் திரண்டு -அநேக சாமக்ரியை கொண்டு – நெடும்காலம் படாதன பட்ட பின்பு இறே இந்த உப்பு சாறு பிறந்தது –
பிறப்பே பிடித்து போஜன ரசம்-அறியாதவர்கள் ஆகையாலே -அத்தை அமருதம் என்று பேரிட்டார்கள் –
அது போல் அன்றிக்கே –
தென் குருகூர் நம்பி என்றக்கால் அண்ணிக்கும் அமுதூரும் என் நாவுக்கே -என்கிறபடியே ஸ்ரீ ஆழ்வாருடைய திருநாமம் தாம்
அனுசந்தித்த பின்பு இறே ஸ்ரீ மதுரகவிகள் நாவுக்கு யதார்த்தமான அமர்த்தம் பிறந்தது –
அதன் படியும் போல் அன்றிக்கே
இந்த சதுரையான சதுரஷரியை அனுசந்திக்க வேண்டும் என்று உத்யோக்கிகவே –அவர்களுடைய-திருப் பவளத்துக்கு
ஸ்வரூப உஜ்ஜீவனமான அம்ருதம் ஊற்று போலே சுரவா நிற்கும் –

சொலப் புகில் வாயமுதம் பரக்கும்
எனக்கு என்றும் தேனும் பாலும் அமுதுமாகிய திரு மால் திரு நாமம் –பெரிய திரு மொழி – 6-10 6- –
என்று நாராயணா நாமம் தனக்கு அமுதமுமாய் இருப்பதாக ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் அருளிச் செய்தார் –
தென் குருகூர் நம்பி என்னக்கால் அண்ணிக்கும் அமுதூரும் என் நாவுக்கே -என்று ஸ்ரீ நம் ஆழ்வார் திரு நாமம்
சொன்னால் அமுது தன் நாவில் ஊருவதாக ஸ்ரீ மதுர கவி ஆழ்வார் அருளிச் செய்தார் .

நாராயணா நாமம் சொல்ல சொல்ல அமுதமாக இருக்கிறது .
ஸ்ரீ நம் ஆழ்வார் திரு நாமம் ஒரு கால் சொன்னால் போதும் நாவிலே அமுதம் ஊறிக் கொண்டே இருக்கிறது .
ஸ்ரீ ராமானுச நாமமோ சொல்லத் தொடங்கின உடனேயே அமுதனாருக்கு வாயிலே அமுதம் பரக்கிறது –

உய்வித்தலானும் இனிமையானும் திரு நாமம் அமுதமாக சொல்லப்படுகிறது-
மூன்று திரு நாமங்களும் சதுரஷரி –நான்கு எழுத்துக்கள்-கொண்டவையே –
ஸ்ரீ நாராயண -ஸ்ரீ சடகோப- ஸ்ரீ ராமானுஜ -என்பவை அத்திரு நாமங்கள் .
ஸ்ரீ திரு மங்கை ஆழ்வாருக்கு அமுதாய நாமம் -ஐகிஹ லௌகிகம் ஐஸ்வர்யம் ஸ்வர்காத்யம் பார லௌகிகம்-என்றபடி
இம்மைப் பயனையும் மேலுலகப் பயனையும் தர வல்லது –
முக்தியை மாத்ரம் அன்றி சம்சாரத்தையும் பெருக்குவதே உள்ளது –
ஸ்ரீ மதுர கவிகளுக்கு அமுதூரும்படி அமைந்த ஸ்ரீ சடகோப நாமமோ -அவர் நாவுக்கே -சொன்ன பிறகே – அமுதூருவதாய் அமைந்தது .
ஸ்ரீ அமுதனாருக்கு அமுதம் பரக்கும்படி அமைந்த ஸ்ரீ ராமானுஜ நாமமோ சம்சாரத்துக்கு துணை புரியாது –
முக்தியே தர வல்லதாய் –படியில் உள்ளோர் அனைவருக்கும் சொல்லப் புக்கவாறே அமுதம்
பரக்கும்படி செய்ய வல்லதாய் வீறு பெற்று விளங்குகிறது –
இங்கனம் வீறு பெற்று விளங்குவது பற்றியே
ஸ்ரீ ஆழ்வான் -ந சேத் ராமானுஜெத்யேஷாசதுரா சதுரஷரீ காம வச்த்தாம் ப்ரபத்யன்னே ஜந்தவோ ஹந்த மாத்ருசா -என்று
சாதுர்யம் வாய்ந்த இந்த ஸ்ரீ ராமானுஜ சதுரஷரீ இல்லை எனின் -என் போன்ற பிராணிகள் என்ன நிலையை அடைவர் -என்றார்.
அத்யேஷ்யதேசைய இமம் தர்ம்யம் சம்வாத மாவயோஜ்ஞான யஜ்ஞ்ஞே நதேநாஹ மிஷ்ட ச்ச்யாமிதிமேமதி -என்று
ஸ்ரீ கீதை ஒதப் போகிறவன் எவனோ-அவனால் ஞான வேள்வியால் -நான் ஆராதிக்கப் பட்டவனாகி விடுவேன்-
என்பது என் அபிப்பிராயம் -என்று கூறியது போலே –
சொல்லப் புகில் வாய் அமுதம் பரக்கும் -என்று தம் ஆதரம் தோற்ற ஸ்ரீ அமுதனார் அருளிச் செய்கிறார்.
ஓத வல்ல பிராக்கள் நம்மை ஆளுடையார்கள் பண்டே –ஸ்ரீ திரு வாய் மொழி -9 1-11 – – என்று
ஸ்ரீ நம் ஆழ்வார் அருளிச் செய்து உள்ளமையும் காண்க .

இருவினை பற்றற ஓடும் –
ததா வித்வான் புண்ய பாபே விதூய -என்கிறபடியே அனுபவத்தாலும் பிராயசித்தத்தாலும் நிவர்திப்பிக்க
அரிதான மகா பாபங்கள் எல்லாம் வாசனையோடு -பிரிகதிர் படாதே விட்டோடும் –
வேதாந்த விரோதம் வாராமைக்காக –
சூஹுர்தச்சா துக்ர்த்யாம்த்விஷந்த பாப கர்த்யாம் -என்கிறபடியே
அசல் பிளந்தேறவிட்டு இந்த-அதிகாரிகளை நிர்மலராகப் பண்ணும் என்றது ஆய்த்து-

இரு வினைகள் பற்றற ஓடும்
இரு வினைகள்-பெரிய பாபங்கள்
பாபத்துக்கு பெருமையாவது -அனுபவத்தினாலோ -ப்ராயச்சித்ததினாலோ ஒழிக்க ஒண்ணாமை –
புண்ணிய பாபங்கள் என்கிற இரு வினைகள் ஆகவுமாம்-
அவைகளால் படும்பாடு பகைவர்கள் வேணும் என்று துன்புறுத்துவது போன்று இருத்தலால்
அவைகட்கு உயிர் கொடுத்து இதுகாறும் கண்ணுற்று படாதபாடு படுத்திய பாபங்கள் –
ஸ்ரீ இராமானுச நாமம் சொல்லப் புக்கவாறே அஞ்சி ஓடுவதாக அருளிச் செய்கிறார்.பற்றற ஓடுகின்றன-

இரு வினைகள் .பற்று அற-வாசனையும் இல்லாது முழுதும் ஒழிந்து விட்ட படியால் இனி மீள மாட்டாமை தொடருகிறது .
ஸ்ரீ நாராயண நாமம் ஆயின் வினைகள் மீண்டும் தலை காட்டவும் கூடும் –
மாடே வரப்பெறுவராம் என்றே வல் வினையார்
காடானு மாதானும் கைக்கொள்ளார் -ஊடே போய்ப்
பேரோதும் சிந்து திரைக் கண் வளரும் பேராளன்
பேரோதச் சிந்திக்கப் பேர்ந்து -ஸ்ரீ பெரிய திருவந்தாதி – 59– – என்று ஸ்ரீ நம் ஆழ்வார் வல்வினையார் பேர்ந்து போகாது
பக்கத்தில் இருப்பதாக அருளிச் செய்வது காண்க –
கண்டிலமால் என்பது தலை காட்டிற்று போலும் –

மாடே வரப் பெறுவாராம் என்றே
இன்னமும் நம்மிடத்திலே-வாழப் பெறலாம் என்ற-எண்ணத்தினாலோ
கீழே மாடு -செல்வம் அர்த்தம் இங்கே பக்கம்-மாடு -பொன் பக்கம் செல்வம் -நிகண்டு
என்றே சொல் நயத்தால் வாராமை காட்டி அருளுகிறார்
இனி நம்மிடம் வல்வினைகள் தங்க இடம் இல்லை என்றபடி –
வல்வினையார்
கொடிய பாவங்கள்
காடானும் ஆதானும் கைக் கொள்ளார் –
காடுகளிலோ மற்று ஏதேனும் ஓர் இடத்திலோ-போய்ச் சேராமல் இருக்கின்றனவோ
கீழே வானோ மறி கடலோ –என்று அருளிச் செய்த ஆழ்வார்-இப்பொழுதும் மீண்டும் இப்படி அருளிச் செய்யும்படி-
இருள் தரும் மா ஞாலத்தின் கொடுமை –

வினையின் ஸ்வபாவம் இதுவே இருந்தது .பக்கத்தில் வருதலோடு அமையாது -சினத்தால் கண் சிவந்து அடர்க்கவும் முற்பட்டதாக –
அகம் சிவந்த கண்ணினராய் -ஸ்ரீ பெரிய திருவந்தாதி – 69- -என்னும் பாசுரத்திலே ஸ்ரீ நம் ஆழ்வார் கூறி இருப்பதும் இங்குக் காணத் தக்கது-
அகம் சிவந்த கண்ணினராய் வல்வினையாராவார்
முகம் சிதைவராம் அன்றே முக்கி மிகும் திரு மால்
சீர்க்கடலை யுள் பொதிந்த சிந்தனையேன் தன்னை
ஆர்க்கு அடலாம் செவ்வே யடர்த்து –69-
அகம் சிவந்த கண்ணினராய்
கோபத்தினால் உள்ளே சிவந்த-கண்களை யுடையனவாய்-முன்பு போலே தனிக் கொல் செலுத்த முடியாமையினாலே
வல்வினையாராவார்
கடுமையான பாபங்களானவை-உயர் திணை யாகவும் கண்ணும் மூக்கும் உள்ளன போலும் பேசி-அவற்றின் கொடுமையை விளக்குகிறார்

நாயகன் நாரணன் தம்மன்னை நரகம் புகாள்

உன்னுமாறு ஒன்றும் அறியேன் ஓவாதே நமோ நாரணா என்பன் வன்மையாவதுன் கோயில் வாழும்
வைட்டணவன் என்னும் வன்மை கண்டாயே

நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன் நாராயணா வென்னும் நாமம்
என் நாவினால் உய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்
நன்று நானுய்ய நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்
நள்ளிருள் அளவும் பகலும் நான் அழைப்பன் நாராயணா என்னும் நாமம்
நற்பொருள் காண்மின் பாடி நீர் உய்ம்மின் நாராயணா என்னும் நாமம்
நல்துனையாகப் பற்றினேன் அடியேன் நாராயணா என்னும் நாமம்
நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்
துயர்வரில் நினைமின் துயரிலீர் சொல்லிலும் நன்றாம் நஞ்சு தான் நம்முடை வினைக்கு நாராயணா வென்னும் நாமம்

தேனும் பாலும் அமுதுமாய திருமால் திரு நாமம் நானும் சொன்னேன் நமரும் உரைமின் நமோ நாராயணமே

கலந்து நலியும் கடும் துயரை நெஞ்சே மலங்க வடித்து மதிப்பான் விலங்கல் போல் தொல் மாலைக் கேசவனை
நாரணனை மாதவனை சொல் மாலை எப்பொழுதும் சூட்டு

ஓராயிரமாய் உலகேழ் அளிக்கும் பேராயிரம் கொண்டது ஓர் பீடுடையன்
காராயின காள நன்மேநியின்ன் நாராயணன் நாங்கள் பிரானவனே

நண்ணினம் நாராயணனை நாமங்கள் பல சொல்லி மண்ணுலகில் வளம் மிக்க வாட்டாற்றான் வந்து இன்று
விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் விதி வகையே

பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்று மில்லை
கலியுங் கெடும் கண்டு கொண்மின் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
மலியப் புகுந்து இசை பாடி ஆடி உழி தரக் கண்டோம்–5-2-1-

——————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –42- ஆயிழையார் கொங்கை தங்கு மக்காத லளற்ற ழுந்தி மாயும் இத்யாதி —

April 16, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

பகவத் அவதாரங்களில் திருந்தாதவர்கள் எல்லாரும் ஸ்ரீ எம்பெருமானார் உடைய அவதாரத்தாலே-திருந்தினார்கள் என்றார் கீழ் –
விஷய ப்ரவணனாய் நசித்துப் போகிற வென்னைத் தம்முடைய பரம கிருபையால்-வந்து எடுத்து அருளினார் என்று
தம்மை விஷயீகரித்த படியை அனுசந்தித்து தலை-சீய்க்கிறார் இதில் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை-

கீழில் பாட்டிலே ஸ்ரீ ஈஸ்வரன் அவதரித்து உபதேசித்த இடத்திலும் -திருந்தாத லௌகிகர் –ஸ்ரீ எம்பெருமானார் அவதரித்த பின்பு
திருந்தி -விலஷணராய்-பகவதீயர் ஆனார்கள் -என்கிறார் –
இப்பாட்டிலே –ஆபாத ரமணீய வேஷைகளான தருணீ ஜனங்களுடைய ஸ்தனங்களிலே பத்தமான ப்ரீதியாலே-
ஆழம்கால் பட்டு நசித்துப் போகிற என் ஆத்மாவை -ஸ்ரீயபதியான -ஸ்ரீ திருவரங்க செல்வனாரே-சகல ஆத்மாக்களுக்கும் வகுத்த சேஷி
என்று உபதேசிக்கும்படியான ஞான வைசையத்தை உடையராய் நிர்துஷ்டரான ஸ்ரீ எம்பெருமானார் –
இப்போது அந்த லௌகிகர் எல்லார் இடத்திலும் பண்ணின தம்முடைய-ஸ்வாபாவிக கிருபையை –
அடியேன் ஒருவன் இடத்திலும் கட்டடங்க பிரவஹித்து -விஷயாந்திர-பிராவணயத்தில் கர்த்தத்தில் நின்றும்
உத்தரித்தார் கண்டாயே -என்று தலை சீய்க்கிறார் –

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-

ஸ்ரீ மாதவன் அவதாரங்களிலும் திருந்தாவதர்கள் எல்லாரும் ஸ்ரீ எம்பெருமானார் அவதாரத்தாலே திருந்தினார்கள் என்றார் கீழ்ப் பாட்டிலே –
விஷய ப்ரவணனாய் நசித்துப் போகிற என்னைத் தமது பரம கிருபையால் ஸ்ரீ எம்பெருமானார் வந்து எடுத்து அருளினார் என்று தமது
பண்டைய இழி நிலையையும் இன்று எய்திய பேற்றின் சீர்மையையும் பார்த்துப் பெருமைப்பட்டுப் பேசுகிறார் -இந்தப் பாட்டிலே –

ஆயிழையார் கொங்கை தங்கு மக்காத லளற்ற ழுந்தி
மாயும் என்னாவியை வந்து எடுத்தான் இன்று மா மலராள்
நாயகன் எல்லா வுயிர் கட்கும் நாதன் அரங்கன் என்னும்
தூயவன் தீதில் இராமானுசன் தொல்லருள் சுரந்தே -42 – –

பத உரை –
ஆய் இழையார்-தெரிந்து எடுத்த அணிகள் பூண்டவர்களான பெண்களின் உடைய
கொங்கை -தங்களிலே
தங்கும் -நிலை நிற்கும்
அக்காதல்-அப்படிப்பட்ட காதல் எனப்படும்
அளறு-சேற்றில்
அழுந்தி -அழுந்திப் போய்
மாயும் -நசித்துக் கொண்டு இருக்கும்
என் ஆவியை -என்னுடைய உயிரை
மா மலராள் நாயகன் -பெரிய பிராட்டியாரான கணவரான
அரங்கன் -பெரிய பெருமாளே
எல்லா உயிர் கட்கும் -எல்லா ஆத்மாக்களுக்கும்
நாதன் -சேஷியாவான்
என்னும் -என்கிற உபதேசம் செய்யும்
தூயவன் -சுத்தியை உடையவராய்
தீது இல் -குற்றம் அற்றவரான
இராமானுசன் -ஸ்ரீ எம்பெருமானார்
தொல் அருள் சுரந்து -இயல்பான கிருபை பெருகி
வந்து இன்று எடுத்தனன் -வந்து இன்று எடுத்து அருளினார்

ஸ்ரக் வஸ்த்ராபரணான்க் கராகங்களாலே தேக தோஷம் புறம் தோற்றாதபடி மறைத்து சேதனரை மோஹிப்பிக்கு மவர்கள் ஆகையாலே
தங்களுக்கு அனுரூபமாக தெரிந்து பூணப்பட்ட-ஆபரணங்களை வுடையராய் -அதுவே -நிரூபகமாக விருக்கும் ஸ்திரீகளுடைய ஸ்தனத்துக்கு-
அவ்வருகு ஒன்றில் போகாததாய் -வாக்குக்கு நிலம் அல்லாதபடி-கை கழிந்து இருக்கிற ப்ராவண்யம் ஆகிற அளற்றிலே அழுந்தி –
நசித்து போகிற என்னாத்மாவை அளறு-பாய்ந்து முடிய தேடுகிற வர்களை விரகு அறியும் தார்மிகர் வந்து எடுக்குமா போலே-
ஸ்ரீயபதியான பெரிய பெருமாளே சர்வ ஆத்மாக்களுக்கும் சேஷி என்று உபதேசியா நின்று உள்ள-ஞான சுத்தியை வுடையராய்
இப்படி உபதேசிக்கும் இடத்தில் க்யாதி லாபாத்யபேஷா ரூப தோஷ ரஹீதரான ஸ்ரீ எம்பெருமானார்-
தம்முடைய ஸ்வபாவிக கிருபை கிளர்ந்து அந்த க்ருபா ப்ரேரிதராய் வந்து இன்று எடுத்து அருளினார் –
இப்படி செய்து அருளுவதே என்று கருத்து –
ஆய்தல்-தெரிதல்
இழை-ஆபரணம்
அக்காதல் என்று -அதினுடைய ஹேயதையை சொல்லிற்றாகவுமாம் –
மாய்தல்-நசித்தல் –

அஸ்மாத் துல்யோ பவத் -மா மலராள்-நாயகன் எல்லா வுயிர் கட்கும் நாதன் அரங்கன்-இத்தையே சொல்லி சொல்லி –
ஸ்ரீ யபதி -ஸ்ரீ அரங்கன் –ஸூ லபன் -உயிர்கள் பல -பர ப்ரஹ்மம் ஒருவனே -பொய் மாயை இல்லை –விசிஷ்டாத்வைதம் ஒரே வரியில் –
அக் காதலில் அழுந்தி இருந்தேன் -உபதேசம் கயிறு
ரக்ஷிக்க-புருஷகார பூதை–ஸ்ரீ மா மலராள்- அகலகில்லேன் இறையும்-என்று இருக்க இழக்கவோ-
ஸ்வாதி ஸ்ரீ கருடன் ஸ்ரீ பெரியாழ்வார் ஸ்ரீ நரசிம்மன் -தன் அடியார் திறத்தகத்து தாமரையாள்-இத்யாதி –
அக்காதல் லளற்ற ழுந்தி-பெருமாள் அழுந்திய காதலால் நமக்கு வாழ்வு –
ஸ்ரீ நீளா தேவி -தயா சதகம் கண் புரை உடனே இருக்கட்டும் போகைய படலம் பக்த தோஷை பார்க்க முடியாதது ஸூதர்சனம் –

ஆயிழையார்
சர்மா சர்க்கமாம் சமேதோச்த்தி மஜ்ஞாஞக்லாதிசம்யுதே –தேஹி சேத் ப்ரீதி மான்மூடோ -என்றும் –
கரிமிஜந்துசங்குலம் -என்றும்
ஸ்வ பாவ துர்கந்த மசவ்சமத்ரு-வம்களே பரம மூத்ரபுரீஷ பாஜனம் -என்றும் –
முடித் தலை யூண் என்றும் -சொல்லுகிறபடி
அதி ஹேயமாய் இருக்கிற தேஹத்தின் உடைய ஹேயதை தெரியாதபடி -ஸ்ரக் வஸ்த்ர ஆபரண- ஆதிகளாலே அலங்கரித்துக் கொண்டு –
ஆபா தரமனியைகளான தருணீ ஜனங்கள் உடைய –
ஆய்தல்-நெரிதல் –
இழை-ஆபரணம்
இழையார் –
ஸ்திரீகள் -அகவாயில் தோஷம் ஒன்றும் தோற்றாதபடி -கைப் பாணி இட்டால் போலே –காணும் இவர்கள் அலங்கரித்து கொண்டு இருப்பது –

கொங்கை தங்கும் –
ச்னதவ் மாம்சக்ரந்தி -என்கிறபடியே
மாம்சா சர்ன்மயமான ஸ்தனங்களிலே சக்தனாய் -அவற்றின் தோஷத்தை தெரிய மாட்டாதே –போக்யதா புத்தியைப் பண்ணி –
அவற்றுக்கு அவ்வருகே போக அசக்தனாய் -த்ர்ஷ்டார்த்தனானவன் –
தண்ணீர் பந்தலிலே விழுந்து கிடக்குமா போலே அவற்றிலே தான் நித்ய வாசம் பண்ணும்படியான –

அக் காதல் அளற்றில் அழுந்தி –
அந்த விஷயம் போலே அதி ஹேயமான வ்யாமோஹம் என்கிற அள்ளல் தரையிலே மக்நனாய் –
அன்றிக்கே –
அக் காதல் –
வாக்குக்கு நிலம் ஆகாதபடி -கை கழிந்த காதல் என்னவுமாம் –

கொங்கை தங்கும் காதல்
கொங்கைக்கு அப்பால் செல்லாது அங்கேயே காதல் தங்கியது -என்க
தங்கும் காதல்
என்னவே நிலை பேர்க்காலாகாமை தோற்றுகிறது –
அக்காதல்
பேசி மாளும்படி அன்றி மூளும் காதல் கைம்மிக்கது என்பார் –அக்காதல்-என்றார் –
இனி காதலின் பொல்லாங்கைக் கருதி -அக்காதல் -என்றதுமாம் –
அக்காதல் அளறு –
நிரயத்தினை-இடையீடு இன்றி பயப்பது என்பது பற்றி காதலை அளறு ஆக உருவகம் செய்தலுமாம்-
வரை விலா மாணிழையோர் மென் தோள் புரை யிலாப் பூரியர்கள் ஆழும் அளறு -வரைவின் மகளிர் -என்னும் குறளும்
அவர்கட்கு பூரியற்கு அளறு இடை இன்றிப் பயக்கும் என்பது தோன்ற -தோளினை-
உருவகம் ஆக்கியும் கூறினார் என்னும் பரி மேல் அழகர் உரையும் இங்கு உணரத் தக்கன
அளறு-
அகப்பட்டோரைத் தப்ப வொட்டாது ஆழ்த்தி முடிப்பது பற்றி காதல் அளறு என உருவகம் செய்யப்பட்டது –

ஆயிழையார் –அளற்றழுந்தி-
பெண்களை ஆயிழையார் என்று இங்கு குறிப்பிட்டது குறிக் கொள்ளத் தக்கது –
கண்டவர்கள் காதல் புரியும்படி தங்களை அலங்கரித்து கொள்ள அவர்கள் அணிகளை
ஆய்ந்து எடுப்பதிலேயே நாட்டம் கொண்டவர்கள் -என்பது கருத்து –
இழை என்பது ரத்னங்கள் இளைத்த உயர்ந்த அணிகளைக் கருதுகிறது –
இழை-உப லஷணமாய் ஆடை முதலிய வற்றையும் கொள்க –
கொள்ளவே ஆடைகளாலும் அணிகளாலும் -சாந்து முதலியவைகளாலும் -தங்கள் உடல் நாற்றம் முதலிய குற்றம் புறம் தோற்றாதவாரும்-
நலன் உள்ளது போல் தோற்றமாறும் மேனி மினுக்கி மயக்குமவர்கள் ஆகையால் –
மேல் தோற்றத்தில் அழகியராய்-படினும் ஆராய்ந்து பார்த்தால்-அருவருக்கத் தக்கவரே என்றது ஆயிற்று –
ஆகவே காதலை விளைவிப்பவர்களே அன்றி காதலிப்பதற்கு உரியர் அல்லர் என்னும் கருத்து புலப்படுகிறது –

இங்கு -அன்பின் விழையார் பொருள் விழை யுமாய் தொடியார் இன்சொல் இழுக்குத் தரும் –வரைவின் மகளிர் -என்னும் குறளும் –
ஆய்ந்த தொடியினை உடையார் என்றதனாலும் இனிய சொல் என்றதனாலும் -அவர் கருவி கூறப்பட்டது -என்னும்
பரி மேல் அழகர் உரையும் உணரத் தக்கன –
இனி இவன் தம்மைக் காதலித்து அணுகினும் தாம் இழை களையே காதலிப்பவராய்-அவைகளையே தேர்ந்து
எடுப்பவர் என்னலுமாம்-காதலித்தவன் அருள் நோக்கம் நாடி நிற்க அவர்கள் அணி நோக்கம் கொண்டவர்களாய்
இவனை அலஷ்யம் செய்கிறார்கள் -என்றபடி –

இவ்விடத்தில்
பணிமின் திருவருள் என்னும் அம் சீதப் பைம் பூம் பள்ளி அணி மென் குழலார்-
இன்பக் கலவி யமுதுண்டார் -ஸ்ரீ திருவாய் மொழி -4 1-5 – – என்னும் ஸ்ரீ நம் ஆழ்வார் ஸ்ரீ ஸூக்தியும் –
பணிமின் திருவருள் என்னும் -என்பதனை -இன்பக் கலவி யமுதுண்டார் -என்பதோடு இயைத்து ஸ்ரீ பட்டர் –
அவன் இப்படுக்கையிலே வைத்து திருவருள் பணிமின் -என்னா நின்றால்
அவர்கள் -கொண்டாடத்தை அநாதரித்து ஆபரணத்தை திருத்துவது குழலைப் பேணுவதாக நிற்பார்கள்
என்ற சுவையே வடிவு எடுத்தால் போன்று அருளிய வியாக்யானமும் நினைவு கூரத் தக்கன –

மாயும்
நசித்துப் போந்த –

என் ஆவியை –
கீழே லௌகிகர் எல்லாரையும் உத்தரித்தபடி அருளிச் செய்தீர் –இது உமக்கு தெரிந்தபடி என் –
கர்ண கரணியாய் -கேட்டு இருந்தீர் ஆகில் -இது நமக்கு விச்வசநீயமாய்-இருக்குமோ என்ன –
அப்படிக் கேட்டு சொன்னேன் அல்லேன் -இதுக்கு நான் சாஷி என்று தம்மைக் காட்டுகிறார் –

என் ஆவியை –
என் ஆத்மாவை -இவ்வளவும் -அசந்நேவ -என்னும் படியாய் போந்த என் ஆத்மாவை –ஒரு-கைம்முதல் இல்லா என் ஆத்மாவை –

மாயும் என் ஆவியை வந்து எடுத்தான் இன்று
மாயும் ஆவி என்கையாலே -சாகும் தருவாயிலே வந்து எடுத்தமை தோற்றுகிறது —
என் ஆவியை இராமானுசன் வந்து எடுத்தான் என்று கூறுதலின் தனது செயல் அறுதியைக் காட்டுகிறார் –
சற்று முன்பு வந்து எடுப்பினும் இவர் தடுப்பார் போலும் –
ஸ்ரீ எம்பெருமானார் தொல் அருள் உடையவராய் இருந்தும் இது காறும் எடுக்காது விட்டு இருந்து
இன்று வந்து எடுத்துதற்கு காரணம் இதுவே -அளற்றில் அழுந்தி மாய்தல் ஆவது –
புத்தி நாசாத் ப்ரணச்யதி-என்றபடி -வுய்யும் உபாயம் தோன்ற கிலாமையின் ஆன்ம ஸ்வரூபம் மங்கி -இருந்தும் இல்லாதது போலே ஆதல்-

காமாதி தோஷ மாத்ம பதாச் ரிதா நாம் -ஸ்ரீ யதிராஜ விம்சதி -என்றபடி -தம் அடியாரையும் காதல் அளறில் நெருங்க விடாதவர் –
அவ் அளறிலே தாமே வந்து -தார்மிகர் விரகு அறிவாராய் அளறறிலே பாய்ந்து முடிகிறவர்களை –
எடுப்பது போலே -என்னை எடுத்து அருளுவதே என்று ஈடுபடுகிறார் –
ஜட ரகு ஹரே தேவ ஸ்தி ஷ்டன்னிஷத்வர தீர்கி கா நிபதி தா நிஜா பத்யா தித் சாவதீர்ண பித்ரு க்ரமாத் -என்று
தேவன் அளற ஓடையில் விழுந்து விட்ட தன் குழந்தையை எடுக்கும் விருப்பத்தினால் அவ்வோடையில் இறங்கும்-தந்தை போன்று –
இதய குகையில் எழுந்து அருளி உள்ளான் -ரகஸ்ய த்ரய சாரம் -நிர்யானாதிகாரம் -என்று
ஸ்ரீ வேதாந்த தேசிகன் இதயத்தில் உள்ள கோஷத்தை பொருள் படுத்தாது தேவன் அந்தர்யாமி ரூபத்துடன்
சேதனனை கை தூக்கி விட வாத்சல்யத்துடன் எழுந்து அருளி இருப்பதை பாராட்டிப் பேசினார் –

ஸ்ரீ அமுதனார் காதல் அளறறிலே உள்ள குற்றத்தை -சற்றும் பொருள் படுத்தாது -தன்னைக் கை தூக்கி விட
வாத்சல்யத்துடன் ஸ்ரீ எம்பெருமானார் எழுந்து அருளி யதைப் பாராட்டி பேசுகிறார் –
ஸ்ரீ அமுதனாரைப் பின்பற்றி ஸ்ரீ மணவாள மா முனியும் ஸ்ரீ ஆர்த்தி பிரபந்தத்திலே
கூபத்தில் வீழும் குழலி யுடன் குதித்தல்
வாபத்தை நீக்கும் அந்த அன்னை போல் -பாபத்தால்
யான் பிறப்பே னேலும் இனி எந்தை எதிராசன்
தான் பிறக்கும் என்னை உய்ப்பதா -என்று அருளி இருப்பது அனுசந்திதற்கு உரியது
இதனாலே மாதவனே கண்ணுற நிற்கிலும் காண கில்லார் நாரணற்கு ஆனதற்கு தாமே சாஷி என்றார் ஆயிற்று –

மா மலராள் நாயகன்
மா மலர் என்று சமஸ்த புஷ்ப சாதிக்கும்-உத்க்ரிஷ்டமாய் ஸ்லாக்யமாய் இருந்தது ஆகையாலே கமலத்தை சொல்கிறது –
அந்த கமலம் தான்
தன்னுடைய கர சரண நேத்ராதிகளுக்கு ஒரு போலியாய் இருக்கையாலும் –
பரிமள பிரசுரம் ஆகையாலே-போக்ய தமம் ஆகையாலும் -அதிலே உத்பன்னையாய் –
அங்கே நித்ய வாசம் பண்ணுகையாலே மா மலராள் –என்கிறார் –
மலராள் நாயகன் –
பிரமச்சாரி எம்பெருமான் பந்த மோஷங்கள் இரண்டுக்கும் பொதுவாய் –
இவளோட்டை சேர்த்தியாலே –
வைஷம்ய நைர்க்ரன்யே நசாபேஷத்வாத க்ர்தாப்ரயத் ந அபேஷ ஸ்துவிஹி தப்ரதி ஷித்தாவை யதார்த்திப்ய-என்கிறபடியே –
சகல சேதனர்கள் உடையவும் யோக்யதை அயோக்யதைகளை அடைவே கடாஷித்து –
தத் அநு ரூபமாக பலத்தை கொடுப்பவன் என்று பயப்பட வேண்டாதபடி –
சஹா தர்மீ சரி ஸௌ ரே ச சம் மந்தரித்த-ஜகத்திதாம் -அனுக்ரஹா மயீம் வந்தே நித்யம் அஞ்ஞா ந நிக்ரகாம் -என்கிற படி
தானும் அஞ்ஞான நிக்ரகையாய் –அனுக்ரக ஏக மயியாய் –ஜகத்தினுடைய ஹிதத்தை சர்வேஸ்வரனுக்கு அறிவிப்பவளாய்-
கண்ணைப் புரட்டுதல்-கச்சை நெகிள்குதல் முதலான தன்னுடைய ப்ருவிலாச சேஷ்டிதங்களாலே -அவனை வசீகரித்து
தனக்கு-கையாளாகப் பண்ணிக் கொண்டு -தானும் -இறையும் அகலகில்லேன் -என்று அநபாயி யாய் இருந்துள்ள
ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு வல்லபனானவன் -இவள் தான் -ந கச்சின் ந அபராத்யதி -என்றவள் இறே –

எல்லா உயிர்கட்கும் நாதன்
பதிம் விச்வச்ய -என்கிற படியே சகல ஆத்மாக்களுக்கும் பாலகன் -வகுத்த சேஷி -என்றபடி –
ஆனால் -விதி சிவ சனகாத்யைர் த்யாது மத்யந்த தூரம் -என்கிறபடியே –
நமக்கு எட்டாத நிலத்தில் இருந்தான்-என்ன வேண்டா –

அரங்கன் –
நாம் இருந்த இடம் தேடி சந்நிஹிதனாய் கொண்டு –
அபயம் சர்வ பூதேப்யோ ததாமி –-என்கிறபடியே இருந்தவன் அன்றோ -என்னும் -இப்படி உபதேசம் பண்ணும்படியான

தூயவன் –
நஹிஜ்ஞானே ந சதர்சம் மவித்ரா மித வித்யதே -என்கிறபடியே தத்வ யாதாம்ய ஜ்ஞான பூர்த்தியாலே
என் போல்வாரையும் பாவனராம் படி பண்ணுகிறார் –
ஆனால் நீர் அனுவர்த்தனம் பண்ணாதே விஷயாந்தர ப்ரவண ராய் இருந்தீரே என்ன –

மா மலராள் –என்னும் தூயவன் –
விரகு அறிந்த ஸ்ரீ எம்பெருமானார் தம்மைக் கை தூக்கி விட்ட படியை இதனால் ஸ்ரீ அமுதனார் காட்டுகிறார் .
உபதேசம் என்னும் நெடும் தடக்கையைக் கிருபையினால் நீட்டி -என்னை ஸ்ரீ எம்பெருமானார் எடுத்து அருளினார் -என்கிறார்.
போலி அழகிலே மயங்கி அளற றில் அழுந்தினையே –
அழகுத் தெய்வம் ஆகிய மா மலராளே காதல் உறும் நாயகன் உடைய மெய் அழகில் அன்றோ ஈடுபட வேண்டும் என்பது
ஸ்ரீ எம்பெருமானார் முதல் உபதேசம் -செய்தது –
ஸ்ரீ பெரிய பிராட்டியார் துய்க்கும் மெய் அழகினை நாம் துய்த்தல் முறையோ -என்னும் ஐயம் நீங்க –

எல்லா உயிர் கட்கும் நாதன் –என்பது அடுத்துச் செய்யும் உபதேசம் –
எல்லா உயிர் கட்கும் -ஸ்ரீ பிராட்டிக்கு உள்ள உறவு முறை உயிர் இனம் அனைத்தைக்கும் உண்டு என்பது கருத்து-
மா மலராளுக்கும் நாயகன் -உயிர் கட்கும் நாதன்-என்றது ஆயிற்று –

இனி எல்லா உயிர் கட்கும் நாதன் மா மலராள் நாயகன் –எனக் கொண்டு -நாதனாய்-சேஷியாய்-இருக்கும் தன்மை
ஸ்ரீ யபதிக்கே என்னலுமாம் –
உபயாதிஷ்ட்டானம் ச ஏகம் சேஷித்வம் -சேஷியாய் இருக்கும் தன்மை
பிராட்டி பெருமாள் இருவர் இடத்திலும் சேர்ந்து அமைந்து உள்ளது -என்றபடி –
நாதனாய் -சேஷியாய் -இருப்பவன் மா மலராள் நாயகனே -என்க –
மெய் அழகினை துய்ப்பது கண்ணினால் கண்டால் அன்றோ –

ஸ்ரீயபதியாய் -சேஷியாய் இருப்பானை நம்மால் காண இயலுமோ -என்னும் ஐயம் அறுப்பது –அரங்கனை- என்று மேலும் செய்யும் உபதேசம் –
நாம் எல்லாரும் ஸ்ரீ கண்ணாரக் கண்டு மெய் அழகினை துய்க்கலாம் படி
ஸ்ரீ கோயிலிலே ஸ்ரீ பெரிய பெருமாளாய் சேவை தரும் சௌலப்யம் -எளிமை-நிறைந்தவன் அரங்கன்-என்றபடி –
இங்கனம் அரங்கன் பால்-மா மலராள் நாயகன் -என்று மேன்மையையும் –
நாதன்-என்று ப்ராப்தியான -இயல்பான -தொடர்பினையும் – காண்பித்து காதல் விளைவித்து
ஸ்ரீ எம்பெருமானார் என்னை -அக்காதல் அளறறில் இருந்து எடுத்து அருளினார் என்கிறார்–

மாற்பால் மனம் சுழிக்கச் செய்து மங்கையர் தோள் கை விடச் செய்து அருளினார் -விரகு அறிந்த
ஸ்ரீ எம்பெருமானார் -ஸ்ரீ பிள்ளை உறங்கா வல்லி தாசரை இவ்விதமே ஸ்ரீ எம்பெருமானார் திருத்தி அருளினதும் இங்கு நினைக்கத் தகும் –

இனி மா மலராள் நாயகன் அரங்கன் எல்லா உயிர் கட்கும் நாதன் -என்று கூட்டி –
ஸ்ரீயபதியான பெரிய பெருமாளே சர்வத்மாக்களுக்கும் சேஷி என்று உபதேசித்து அருளினதாக கொள்ளலுமம் –
மா மலராள் மன்னும் ஆகமும் தானுமாய் காட்சி தரும் அரங்கனை சேஷியாக -சேஷத்வம் உடையவனாக –
சேஷ சயனம் உடையவனாக -நேரே உபதேசம் மூலம் கண்டு கொள்ளும்படி செய்து அக்காதல் அளறறில் இருந்து
எடுத்து அருளினார் ஸ்ரீ எம்பெருமானார் -என்க –

தூயவன் –
உபதேச ஞானத்தில் உள்ள தூய்மை உடையவர் மேல் ஏற்றப்பட்டது
தூய்மை யாவது ஐயம் திரியற்ற தெளிவு
இதனால் ஆப்தி அதிசயம் கருதப் படுகிறது -நம்பிக்கை கொள்ளத்தக்க உபதேசம் செய்பவர் -என்றபடி –

தீதில் –
அப்படி இத்தலையில் அதிகாரத்தை பார்க்கை யாகிற தோஷ ரஹீதர் –
உபதேசிக்கும் இடத்தில் க்யாதி லாப பூஜாத்ய பேஷா ரூபா தோஷ ரஹீதர் -என்றுமாம் –

இராமானுசன்
இப்படிப்பட்ட ஸ்ரீ எம்பெருமானார் –இன்று -அதுவும் காலாந்தரத்திலேயோ –

இன்று வந்து –
சகல ஜகத்துக்கும் பிரத்யஷமாகவே இப்போது வந்து –

தொல் அருள் சுரந்து –
உமக்கு ஒருவருக்கும் ஒரு கால விசேஷத்தில் கிருபை பண்ணினார் -அவருக்கு எப்போதும் உண்டோ என்ன –
தொல் –
அந்த கிருபை எப்போதும் அவருக்கு ஸ்வபாவிகம்-
அருள் சுரந்து –
அப்படி பட்ட கிருபை கிளர்ந்து
மேன்மேலும்-என்னுடைய துர்வாசனை எல்லாம் அடி மாண்டு போம் படி -த்ரி பாவனா ரேணு நிவார ணோதகம் –என்கிறபடியே
அவசரித்து மேஹம் வர்ஷித்தால் போலே பண்ணி அருளி

எடுத்தான் –
ஆற்று வெள்ளத்தில் பாய்ந்து-போகிறவனை விரகு அறியும் தார்மிகர் வந்து எடுத்து ரஷிக்குமா போலேயும் –
கூபத்திலே வீழும் குழவி உடன் குதித்து -அவ் ஆபத்தை நீக்கும் அந்த அன்னை போலவும் –
அந்த கிர்பா ப்ரேரிதராய்க் கொண்டு-வந்து எடுத்து அருளினார் –

தீதில் இராமானுசன் தொல் அருள் சுரந்தே –
தீது உபதேசத்துக்கு அனுவர்த்தனத்தை எதிர்பார்த்தல்-
எனது அனுவர்த்தனத்தை எதிர் பாராமல் தாம் பரம கிருபா மாத்ர பிரசன்னாசார்யராய் -உபதேசித்து-அருளினார் -என்றபடி –
இனி க்யாதி லாப பூஜைகளை எதிர்பாராமை யால் தீதிலர் என்னவுமாம் .

தொல் அருள் –
இயல்பான அருள்-நிர்ஹேதுதுக கிருபை என்றபடி-

மா மலராள் நாயகன்-அரங்கன்-எல்லா உயிர் களுக்கும் நாதன்-என்று உபதேசிக்கும் தூயவன்
தீது இல்லா இராமனுசன்–தொல் அருள் சுரந்து இன்று வந்து எடுத்தான்-என்று கூட்டி முடிக்க –

வாணில முறுவல் சிறு நுதல் பெரும் தோள் மாதரார் வன முலைப் பயனே
பேணினேன் அதனைப் பிழை யெனக் கருதிப் பேதையேன் பிறவி நோய் அறுப்பான்
ஏணிலேன் இருந்தேன் எண்ணினேன் எண்ணி இளையவர் கலவியின் திறத்தை
நாணினேன் வந்து உன் திருவடி யடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய்—1-6-1-

சிலம்படி யுருவில் கரு நெடும் கண்ணார் திறத்தனாய் அறத்தையே மறந்து
புலம்படிந்து உண்ணும் போகமே பெருக்கிப் போக்கினேன் பொழுதினை வாளா-1-6-2-

மானேய் கண் மடவார் மயக்கில் பட்டு மா நிலத்து
நானே நானாவித நரகம் புகும் பாவம் செய்தேன்
தேனேய் பூம் பொழில் சூழ் திருவேம்கட மா மலை என்
ஆனாய் வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே—1-9-2-

கண்ணும் சுழன்று பீளையோடு ஈளை வந்து ஏங்கினால்
பண்ணின் மொழியார் பைய நடமின் என்னாத முன்
விண்ணும் மலையும் வேதமும் வேள்வியும் ஆயினான்
நண்ணு நறையூர் நாம் தொழுதும் எழும் நெஞ்சமே -6-4-1–

பெண்டிரால் சுகங்கள் உய்ப்பான் பெரியதோர் இடும்பை பூண்டு
உண்டிராக் கிடக்கும் போது வுடலுக்கே கரைந்து நைந்து
தண் துழாய் மாலை மார்பன் தமர்களாய்ப் பாடி யாடித்
தொண்டு பூண்டு அமுதம் உண்ணாத் தொழும்பர் சோறு உகக்குமாறே–திரு மாலை–5-

சூதனாய்க் கள்வனாகித் தூர்தரோடு இசைந்த காலம்
மாதரார் கயல் கண் என்னும் வலையுள் பட்டு அழுந்துவேனை
போதரே என்று சொல்லிப் புந்தியுள் புகுந்து தன பால்
ஆதரம் பெருக வைத்தான் அழகனூர் அரங்கம் அன்றே–திரு மாலை–18-

பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணி செய்ய த்வரை என்னும் அதில்
நாயகராகி வீற்று இருந்த மணவாளர் மன்னு கோயில் -4-9-4-

அல்லி மா மலர் மங்கை நாதன் அரங்கன் மெய்யடியார்கள் தம்
எல்லையில் அடிமைத் திறத்தினில் என்று மேவு மனத்தானாம்
கொல்லி காவலன் கூடல் நாயகன் கோழிக் கோன் குலசேகரன் -2-10-

இலங்கை வேந்தன் இன்னுயிர் கொண்டவன் தம்பிக்கு அரசும் ஈந்து
திருமகளோடு இனிது அமர்ந்த செல்வன் தன்னை -10-7-

பூவார் திரு மா மகள் புல்கிய மார்பா -4-8-9-

அல்லி மாதர் அமரும் திரு மார்வன் அரங்கத்தை -5-4-10-

பூ வளரும் திருமகளால் அருள் பெற்று பொன்னுலகில் பொலிவர் தாமே -11-6-10–

திருமாலை அல்லது தெய்வம் என்று ஏத்தேன் வருமாறு என் என் மேல் வினை -முதல் திருவந்தாதி—64-

ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -முதல் திருவந்தாதி—67-

நாராயணன் என்னை யாளி நரகத்துச் சேராமல் காக்கும் திருமால் —நான்முகன் திருவந்தாதி –-14-

என்றும் மறந்து அறியேன் என் நெஞ்சத்தே வைத்து நின்றும் இருந்தும் நெடுமாலை
என்றும் திருவிருந்த மார்பன் சிரீதரனுக்கு ஆளாய் கருவிருந்த நாள் முதலாக் காப்பு -92-

பூவினை மேவிய தேவி மணாளனை –திரு விருத்தம் –-89–

குழவியாய் விடப்பால் அமுதா அமுது செய்திட்ட மாயன் வானோர் தலைவன்
மலராள் மைந்தன் எவ் உயிர்க்கும் தாயோன் தம்மான் என் அம்மான் –திருவாய்மொழி ––1-5-9-

மைந்தனை மலராள் மணவாளனை துஞ்சும் போதும் விடாது தொடர் கண்டாய் -1-10-4-

மைய கண்ணாள் மலர் மேல் உறைவாள் உறை மார்பினன் -4-5-2-

மையார் கரும் கண்ணி கமல மலர் மேல் செய்யாள் திரு மார்வினில் சேர் திருமாலே
வெய்யார் சுடராழி சுரி சங்கமேந்தும் கையா உன்னைக் காணக் கருதும் என் கண்ணே -9-4-1-

நாரணன் முழுவேழுலகுக்கும் நாதன் வேதமயன் காரணம் கிரிசை கருமம் இவை முதல்வன் எந்தை

மா மலராள் புணர்ந்த பொன் மார்வன் பொருந்தும் பதி தொறும் புக்கு நிற்கும்
குணம் திகழ் கொண்டல் -இராமானுஜ நூற்றந்தாதி–60-

அரங்கர் மௌலி சூழ்கின்ற மாலையைச் சூடிக் கொடுத்தவள் தொல் அருளால் வாழ்கின்ற வள்ளல்
இராமானுசன் என்னும் மா முனியே–இராமானுஜ நூற்றந்தாதி–16-

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –41-மண் மிசையோநிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவனே இத்யாதி —

April 16, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

இப்பாட்டில் ஸ்ரீ எம்பெருமானார் உபதேசத்தாலே லோகம் திருந்தின படியைக் கண்டு
ஸ்ரீ சர்வேஸ்வரன் அநேக அவதாரங்கள் பண்ணித் தன்னைக் கண்ணுக்கு இலக்கு ஆக்கின
அளவிலும் காண மாட்டாத லௌகிகர் எல்லாம்
ஸ்ரீ எம்பெருமானார் காலத்திலே யதாஜ்ஞானம் பிறந்து பகவதீயர் ஆனார்கள் என்கிறார் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை-

கீழ் பாட்டிலே ஸ்ரீ எம்பெருமானார் பண்ணின உபதேச வைபவத்தை சொல்லி –
இப்பாட்டிலே பூ லோகத்திலே-பிரகிருதி வச்யராய் இருக்கிற சேதனரை ரஷிக்கைக்காக ஸ்ரீ சர்வேஸ்வரன்
மனுஷ்ய திர்ய காத்யநேக தேக பரிக்ரகம்-பண்ணி எல்லாருக்கும் சுலபனாய் கண்ணுக்கு இலக்காய் நின்றாலும் –
இவன் சாது பரித்ராண அர்த்தமாக அவதரித்தான்-என்று அறிய மாட்டாத லௌகிகர்களே–
நமக்கு பிதாவான ஸ்ரீ எம்பெருமானார் அவதரித்த பின்பு அவர் ப்ரசாதத்தாலே-சம்யக் ஜ்ஞான நிஷ்டராய் –
ஸ்ரீ நாராயணனே நமக்கு சர்வ பிரகாரத்தாலும் வகுத்த சேஷி என்று தெளிந்து -அவனுக்கு
தங்களை சேஷமாக்கி வைத்தார்கள் என்று அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-

ஸ்ரீ எம்பெருமானார் செய்த உபதேசத்தாலே உலகம் திருந்தின படியைக் கண்டு
ஸ்ரீ திருமகள் கேள்வன்-பல அவதாரங்கள் புரிந்து கண்ணிற்கு இலக்காகி நிற்பினும்
கண் எடுத்துப் பார்க்க மாட்டாத உலகத்தவர் அனைவரும் –
ஸ்ரீ எம்பெருமானார் காலத்தில் மெய்யறிவு பிறந்து அவ்விறைவனை சார்ந்தவர்கள் ஆனார்கள் என்கிறார் –

திருத்தின வைபவம் –ஸ்ரீ ஆழ்வார் மனோ ரதித்தார் -பொலிக பொலிக பொலிக கலியும் கண்டு கொண்மின்–
ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ஆள வந்தார் ஆசை பட்டதை நடத்தி காட்டினார் ஸ்ரீ ஸ்வாமி –
அதை கொண்டாடுகிறார் ஸ்ரீ அமுதனார் இதில்
உபதேசம் முன்பு சொல்லி இதில் திருத்தின விதம் அருளுகிறார்

மண் மிசை யோநிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவனே
கண்ணுற நிற்கிலும் காணகில்லா உலகோர்கள் எல்லாம்
அண்ணல் இராமானுசன் வந்து தோன்றிய வப்பொழுதே
நண்ணரு ஞானம் தலைக் கொண்டு நாரணற்கு ஆயினரே – 41-

பத உரை –
மண் மிசை –பூமியிலே
யோநிகள் தோறும் -பிறப்புக்கள் தோறும்
பிறந்து -அவதாரம் செய்து
எங்கள்-எங்கள் உடைய
மாதவனே-திருமாலே
கண்ணுற -கண்ணிற்குப் புலனாக
நிற்கிலும் -நின்றாலும் கூட
காணகில்லா -கண்டு கொள்ள மாட்டாத
உலகோர்கள் எல்லாம் -உலகத்தவர் எல்லோரும்
அண்ணல்-ஸ்வாமியான
இராமானுசன் -ஸ்ரீ எம்பெருமானார்
வந்து தோன்றிய அப்பொழுதே -பிரசித்தி பெற்ற அக்காலத்திலேயே
நண்ணரும் -பெறலரிய
ஞானம் தலைக் கொண்டு -உண்மை அறிவு மிகுந்து
நாரணற்கு -ஸ்ரீ நாராயண னுக்கு
ஆயினர்-ஆளானார்கள்

வியாக்யானம் –
எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய் -திரு விருத்தம் – 1- என்கிறபடியே பூமியிலே
மனுஷ்ய திர்யகாதி யோநிகள் தோறும் அவதரித்து -நமக்கு நாதனான ஸ்ரீய பதியே
நமாம்ச சஷூ ரபி வீஷதேதம் -என்கிற தன்னைக் கண்ணுக்கு விஷயம் ஆக்கிக் கொண்டு நிற்கிலும் –
இவன் நமக்கு சேஷி என்று தர்சிக்க மாட்டாத லௌகிகர் எல்லாரும்
ஆஸ்ரிதருடைய இழவு பேறுகள் தம்மதாம் படியான -ஸ்வாமித்வ-ப்ராப்தியை உடையரான ஸ்ரீ எம்பெருமானார் வந்து –
பாஷ்ய கரணாதி களாலே பிரகாசரான அக்காலத்திலே -ஸ்வ யத்னத்தாலே
துஷ்ப்ராபமான ஜ்ஞானமானது அதிசயித்து –சகல சேதன அசேதனங்களும் பிரகாரமாக
தான் பிரகாரியாய் இருக்கையாலே ஸ்ரீ நாராயணா என்னும் திரு நாமத்தை உடையவனுக்கு-சேஷம் ஆனார்கள்
தோன்றல்-பிரகாசித்தல்
அதவா
தோன்றிய அப்பொழுதே -என்றது ஆவிர்பவித்த அப்பொழுதே என்னவுமாம்
அந்தப் பஷத்திலும் அப்பொழுதே என்றது அவதரித்து அருளின அக்காலத்திலே -என்றபடி
அல்லது தத் ஷணத்திலே என்ன ஒண்ணாது இறே
கண்ணுற நிற்க்கையாவது-சஷூர் விஷயமாக நிற்கை
ஞானம் தலைக் கொள்ளுகையாவது -ஞானம் அதிசயிக்கை-

ஸ்ரீ நாராயணன் என்று பேர் கொண்டவருக்கு ஆளாக்கினார் -இவனே பர ப்ரஹ்மம் என்று யார் என்று காட்டி அருளினார் –
ஸ்ரீ திரிபுரா தேவியார் வார்த்தை
அடியேன் -சொல்லாதார் இடத்தில் சொல்லாதே என்றாரே அந்த ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீ பெருமாள் இடமும் -கடல் அரசன் இடம் –

மண் மிசை யோநிகள் தோறும் பிறந்து
மாறி மாறி பல பிறப்பும் பிறந்த இச் சேதனரைப் போலே –
எந்நின்ற யோநியுமாய் பிறந்தாய் -என்கிறபடியே -மனுஷ்ய திர்யக் ஸ்தாவர ரூபங்களான பல யோநிகள் தோறும்-
ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ண ஸ்ரீ வராகாதி ரூபேண அவதரித்து –

எங்கள் மாதவனே –
இத்தனை நிஹிதமான யோநிகளில் புக்கது –
உங்களுடைய இழவைக் காண மாட்டாதே -பரம க்ருபையாலே இறே -உங்களை ரஷிக்கைக்காக என்றபடி –
மாதவனே –
கிருபா குணத்துக்கு உத்தம்பகை ஸ்ரீ பெரிய பிராட்டியார் ஆகையாலே அவளுடைய சேர்த்தியை ஸ்ம்ரிக்கிறார் –
லஷ்ம்யாம் சஹ ஹர்ஷீகேசாவ் தேவ்யா காருண்யா ரூபயா -ரஷகஸ் சர்வ சித்தாந்தே வேதான் தேஷு சகியதே -என்று
ஸ்ரீ ஈஸ்வரனுடைய ரஷணம் எல்லாம் ஸ்ரீ பெரிய பிராட்டியாரோடு கூடி ஆஸ்ரயிக்கப்படுகிறது ஆகையாலும் –
அவளும்-இந்த சேதனருடைய ரஷணத்துக்குகாகவே-
அகலகில்லேன் இறையும்-என்று சர்வதா அநபாயிநியாய் இருக்கையாலும்-அத்தைப் பற்றி –ஸ்ரீ மாதவன் –என்று அருளிச் செய்கிறார் –
அந்த ஸ்ரீ யாலே இட்டு கார்யம் கொள்ளுகை அன்றிக்கே-நேர் கொடு நேர் தானே-

மண் மிசை யோநிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவனே –
மாதவன்-ஸ்ரீ திரு மகள் கேள்வன்
மா -ஸ்ரீ இலக்குமி
தவன்-கணவன் -வட சொல் –
ஸ்ரீ மாதவன் பிறந்தான் உலகினரைக் காப்பதற்காக -பிறக்காமல் காப்பதற்காக தான் பிறந்தான் –
அங்கனம் பிறத்தற்கு ஹேது தான் மாதவனே இருத்தல் –
மா-
கருணா ரூபிணி யாதலின் -அவளால் தூண்டப்பட்ட கருனையடியாக அவன் பிறப்பு அமைந்தது -என்க –
நாதன்-
என்னும் உறவுமுறை பற்றி பிறந்தேயாக வேண்டியதாயிற்று என்பார்-எங்கள் மாதவன் -என்றார்.
எங்களுக்கு நாதனான மாதவன்-என்றபடி –
ஸ்ரீ மாதவனுடைய அரும் குணங்களை வெளிப்படுத்தும் பிறப்புக்கு தோற்ற –எங்கள் மாதவன் –என்கிறார் ஆகவுமாம்-
பிறப்பு இல்லாதவன் –மாதவன் -அவனே பிறந்தான் –
பிறப்புக்களும் ஒன்றா இரண்டா -அளவே இல்லாதன -அவன் பிறக்காத யோநிகள் இல்லை –
யோநிகள் தோறும் பிறந்தான் -தேவனாக ஸ்ரீ உபேந்த்ரனாக பிறந்தான் –
மானிடனாக -ஸ்ரீ ராமனாகவும் -ஸ்ரீ கண்ணனாகவும் பிறந்தான் –
விலங்கினமாக மீனாகவும் -ஆமையாகவும் -பிறந்தான்
தாவரமாக குள்ள மா மரமாய் பிறந்தான் –
எந்நின்ற யோனியுமாய் பிறந்தாய்– – திருவிருத்தம் -1 – என்றார் ஸ்ரீ நம் ஆழ்வாரும் .
அப்ராக்ருதனாய் இருந்தும் ப்ராக்ருதரைப் போலே இப் பிரகிருதி மண்டலத்திலே
விண்ணகத்தில் வந்து உபேந்த்ரனாய் தேவ யோனியில் பிறந்தது போதாதா –
அற்ப்பர்களான தேவர்களும் கால் பாவவும் அருவருக்கத் தக்க பூ லோகத்திலே வந்து பிறந்து நிற்கிறானே –என்னும் கருத்துடன் –
மண் மிசை-என்கிறார்-மாறி மாறி பல பிறப்பும் பிறந்து -திருவாய் மொழி -2-6 8- – என்றபடி
ஒரு சம்சாரி சேதனன் படும்பாடு படுகிறான் ஸ்ரீ மாதவன் –
அவ்வரும் பாட்டைத் திரு உள்ளத்திலே கொண்டு -பிறந்து -என்கிறார் –
இறைவனுக்கும் பிறத்தல் குற்றமாம் என்று கருதி -அவதாரங்களை தோற்றமாக கூறுவர் ஏனையோர் –
ஸ்ரீ அமுதனாரோ அருளடியாக பிறர்காகப் பிறத்தல் குற்றம் ஆகாது -நற்றமே யாம்-என்னும் கருத்துடன் –பிறந்து என்கிறார் –
ஒருத்தி மகனாய் பிறந்து -என்றாள் ஸ்ரீ ஆண்டாளும்
பிறந்தவாறும் -என்று ஈடுபட்டு மோஹித்தார் ஸ்ரீ நம் ஆழ்வார்

கண்ணுற நிற்கிலும் –
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் -என்கிறபடி சர்வ காலத்திலும்-சர்வ தேசத்திலும் -சர்வ பிரகாரத்தாலும் சர்வருடையவும் –
கண்ணுக்கு தன்னை விஷயமாக்கி கொண்டு நிற்கிலும் –
அபயம் சர்வ பூதேப்யோ ததாம் ஏதத் வரதம் –என்றும் –
மன்மநாபவ -மத்பக்தோ -மத்யாஜி -மாம் நமஸ்குரு –மாமைவேஷ்யசி -சத்யம்தே -ப்ரதிஜானோ ப்ரியோசிமே -என்றும் –
அஹம் த்வா சர்வ பாபேப்யோ-மோஷ இஷ்யாமி மாசுச -என்றும் –
அஹம் ஸ்மாராமி மத்பக்தம் நயாமி பரமாம்கதிம் -என்றும் –
இப்படி உபதேசித்து -படாதன பட்டு -தூத்ய சாரத்யங்களைப் பண்ணினாலும் –

கண்ணுற –எல்லாம்-
கட்கிலீ எனப்படும் அவன் ஸ்ரீ மாதவன்
கட் கண்ணால் காணாத தன் உருவத்தைத் காட்டினும் உலகத்தவர் காண முடியாதவர் ஆயினர் –
கட்கிலி தன் தன்மை மாறிக் கண்ணுற நிற்பினும் உலகத்தவர் தம் தன்மை மாறாது காண கில்லாதாராயே-இருக்கின்றனர் –

மாதவனே கண்ணுற நிற்கிலும்
எல்லாம் வல்ல ஸ்ரீ திரு மாலே தன்னைக் காட்ட முயலினும் பயன்படாத வியப்பு தோற்றுகிறது –
நிற்கிலும் –
சிறுது காலம் கண்ணுரும்படி ஆகி மறைந்தான் அல்லன் –
பதினோராயிரம் ஆண்டுகள் இந்நில உலகிலே ஷூத்ரர்களான சம்சாரிகளோடு
அருவருப்பின்றி – பழகி -தன் இடமான பரம பதத்தைப் பற்றி நினைவுஊட்ட வேண்டும்படி –
பிறந்து வைகினும் பயன் உறாமல் போயிற்றே என்கிறார் –

மண் மிசை நெடும் காலம் கண்ணுற நிற்றலின் மாதவனது எல்லை இல்லாத சௌசீல்ய குணம்-புலன் ஆகின்றது –
இங்கு ஸ்ரீ ஆழ்வான் அருளிச் செய்த –
சீல க ஏஷ தவ ஹந்த தயைகசிந்தோ ஷூத்ரே ப்ருதக் ஜநபதே ஜகதண்ட மத்யே
ஷோதீய சோபிஹி ஜனச்ய க்ருதே க்ருதீத்வ மத்ராவதீர்யா நனு லோசன கொசரோ பூ –அதி மானுஷ ஸ்தவம் -10 – என்று
அருளே நிறைந்த கடலே -நீ செய்ய வேண்டியவை அனைத்தும் செய்து முடித்து இருந்தும் –உலக அண்டத்திற்கு இடையே
சிறிதான பாமர மக்கள் குடி இருக்கும் இடத்தில்
மிகவும் அற்பர்களாகிய மக்களுக்காக இங்கே அவதரித்து கண்களுக்கு புலன் ஆயினை அன்றோ-
உனது சௌசீல்யம் குணத்தை என் என்பது -என்ற ஸ்லோகம் அனுசந்திக்க தக்கது

அளிப்பதற்கு ஸ்ரீ பிராட்டி கூட இருப்பது -இன்றியமையாதது யாதலின் –
உயிர் அளிப்பான் எந்நின்ற யோனியுமாய்-பிறக்கும் ஸ்ரீ இறைவன் ஸ்ரீ பிராட்டி யோடே அவதரிக்கிறான் -என்பது தோன்ற –
மாதவன் பிறந்து -என்றார்.
ராகவத்வே பவத் சீதா ருக்மிணீ கிருஷ்ண ஜன்மனி
அன்யேஷ சாவதாறேஷூ விஷ்ணு ரெஸா நபாயிநீ -விஷ்ணு புராண ஸ்லோகம்-என்று
இறைவன் ஸ்ரீ ராமனான போது -ஸ்ரீ சீதை யானாள்-ஸ்ரீ கிருஷ்ணனாய் பிறந்த போது ஸ்ரீ ருக்மிணி யானாள் –
மற்றைய அவதாரங்களிலும் ஸ்ரீ விஷ்ணுவை விடு கிலள்-

உலகினருக்கு தன்னைக் காட்டி அறிவு ஊட்டி அவர்களை ஆஸ்ரயிக்கும்படி செய்து உய்விப்பதற்கு ஆகப் பிறக்கிறான் ஸ்ரீ மாதவன் –
அப்பொழுது ஆஸ்ரயிப்பதற்கு உறுப்பான குணங்கள் ஸ்ரீ மாதவன் இடம் மிளிருகின்றன –
அவையாவன -வாத்சல்யம்-ஸ்வாமித்வம்-சௌசீல்யம் சௌலப்யம் என்பன
இவை அனைத்தும் பிறந்த மாதவன் இடம் பிறங்குவதை இங்கு அமைத்த சொல் தொடரில்
ஸ்ரீ அமுதனார் காட்டும் அழகு கண்டு கழிக்க தக்கதாய் உள்ளது
மண் மிசை பிறந்து -என்றமையால் வாத்சல்யம் தோன்றுகிறது-வாத்சல்யமாவது குற்றத்தையும் நற்றமாகக் கொள்ளுதல்
எங்கள் மாதவன்-என்றமையால் ஸ்வாமித்வம் தோற்றுகிறது-ஸ்வாமித்வமாவது உடைமைக்கு உரியனாய் இருத்தல்
நிற்கிலும் -என்பதால் சௌசீல்யம் தோற்றுகிறது – சௌசீல்யம் ஆவது மிகத் தாழ்வு உடையரோடு வேறுபாடு இன்றி பழகுதல்
கண்ணுற -என்றமையால் சௌலப்யம் தோற்றுகிறது சௌலப்யம் ஆவது கண்ணுக்கு புலனாய் தோற்றுதல்

காணகில்லா –
அவஜானந்தி மாம் மூடா மானுஷீம் தநும் ஆஸ்ரிதம் -பரம்பாவமஜானந்த மமபூதமகேச்வரம் -என்கிறபடியே
இவன் வகுத்த சேஷி என்று அறிய மாட்டாதே -நமாம் ஸா சஷூ ரபிவீஷதேதம் -என்னும்படியான அவனுடைய ஸ்வரூபம்
அவதரித்த இடத்திலும் அப்படியே யாய்த் தலை காட்டிற்று காணும் –
நதுமாம் சஷ்ய சேத்ரஷ்டும நே நை வஸ்வ சஷூஷா-நாஹம் வேதைர் நதபசா நதா நே ந சேஜ்யயா-
சக்ய ஏவம் விதோத் த்ரஷ்டும் -என்று அவதாரத்திலும் அவன் அப்படி-அருளிச் செய்தான் இறே –
கண்கள் காண்டற்கு அரியனாய் -என்றார் இறே ஸ்ரீ ஆழ்வாரும் –
இப்படி நேர் கொடு நேரே-உபதேசித்தாலும் திருந்தாத பேரான

காணகில்லா
காண்டல்-நம்மை உய்விக்க வந்த இறைவன் என்று தெரிந்து கொள்ளுதல் –
கண்ணுற நிற்கிலும் காண கில்லாமைக்கு ஹேது இவ்வுலகில் உள்ளமை –
இருள் தருமமா ஞாலம் அன்றோ இது .
நம்மைப் போல் இவ்வுலகில் உள்ள ஒரு மனிதனே இவன் என்று பார்க்கின்றனரே அன்றி
இறைமையைச் சிறிதும் உணர்கிலர் என்றபடி –
அவஜானந்தி மாம்மூடா மாதுச்ஹீம் ததுமாஸ்ரிதம் பரம்பாவம் அஜா நந்த –என்று
மூடர்கள் மானிட வடிவம் கொண்ட என்னை பரமபுருஷனாய் இருக்கும்
தன்மையை உணராதவர்களாய் அவமதிக்கின்றனர் -என்று
மேல் எழுந்தவாறு பார்க்கின்றனரே யன்றி உள்ளடங்கிய இறைமையைக் காண இயலாதவர்கள்-உலகினர் -என்க –
அக்ரூர் மாலாகாரர் முதலிய சிலர் காணும் திறனையும் கொடுத்து தன்னையும்-இறைவன் காட்டக் கண்டனரே யன்றி
மற்ற உலகோர்கள் எல்லாம் காண கில்லாதாரே -என்க

உலகோர்கள் எல்லாம் –
லௌகிகர்கள் எல்லாரும் –

அண்ணல்-
சஹி வித்யா தஸ்தம்-ஜநயிதி தஸ் ஸ்ரேஷ்டம் ஜன்ம -என்கிறபடி
அஸ்ரேஷ்டமாய் இருக்கிற -ஜன்ம ப்ரத்வம்சி ஜென்மத்தை கொடுத்து இருக்கிற –
அன்றிக்கே
ஸ்வ ஆஸ்ரிதருடைய இழவு பேறுகள் தம் தாம் படியான ஸ்வாமித்வ ப்ராப்தியை உடைய வரான

இராமானுசன் –
ஸ்ரீ எம்பெருமானார் வந்து -லோகத்தை எல்லாம் ரஷிக்கைக்காக பரம பதத்தில் நின்றும் தீஷிதராய் வந்து-

தோன்றிய அப்பொழுதே –
அவதரித்த அக்காலத்திலே –
அன்றிக்கே –
வந்து தோன்றிய அப்பொழுதே –
அவதரித்து ஸ்ரீ பாஷ்ய கரணாதிகளாலே தத்வ ஹித புருஷார்த்தங்கள் பிரகாசகரான அக் காலத்திலேயே என்றுமாம்
தோன்றுதல் –
பிரகாசித்தல்

அண்ணல் தோன்றிய அப்பொழுதே
அண்ணல்-ஸ்வாமி
அடியார்களுடைய இழவு பேறுகளை தம்மதாகக் கொள்பவர் -என்றபடி
தோன்றிய அப்பொழுதே –
ஸ்ரீ பாஷ்யம் முதலிய நூல்கள் இயற்றி பிரசித்து பெற்ற வுடனேயே என்றபடி-
தோன்றுதல்-
பிரகாசித்தல்
இனி
தோன்றுதல்-
அவதரித்தலுமாம்-
இப்பொழுது அவதரித்த வுடனே என்ன ஒண்ணாது
அவதரித்த காலத்திலே என்ன வேண்டும் .

ஸ்ரீ மாதவன் அவதாரத்தை –பிறந்து -என்றார்-சம்சாரிகள் போலப் பயன் பெறாமையின் –
ஸ்ரீ அண்ணல் அவதாரத்தை தோன்றி என்றார் பயன் பெற்றமை பற்றி –
பிறவாத நிலையில் போலத் தனியாகவே மீள வேண்டி இருந்தமையின் பயன் அற்றுப் போனமை காண்க –

நண்ணரு ஞானம் தலைக் கொண்டு –
ஜ்ஞானம் தலைக் கொள்ளுகையாவது -ஜ்ஞானம் அதிசயிக்கை –
சர்வ விலஷணமாய் ஸ்வ யத்னத்தாலே -ப்ராபிக்க வரிதான சம்பந்த ஜ்ஞானம் அதிசயித்தது -என்றபடி –

நண்ணரு ஞானம் தலைக் கொண்டு-
காண கில்லார் பெருவதாதலின் ஞானம் நண்ணரிய தாயிற்று –
தன் முயற்சியாலும் ஸ்ரீ மாதவன் முயற்சியாலும் பெறற்கு அரியதாய் –ஸ்ரீ எம்பெருமானார் அருளால் மட்டும் பெறப்படுவதாதலின்
நண்ணரு ஞானம் என்கிறார்.
பெற்ற ஞானம் இனிப் பெறாது மேலோங்கி நிலை நிற்கும் என்பார் –தலைக் கொண்டு –என்றார் –
தலைக் கொள்ளுதல்-அதிசயித்தல்
ஞானம் தலை கொண்டு-வளர்ந்து கொண்டே

நாரணற்கு ஆயினரே
மாதா பிதா ப்ராதா நிவாசாஸ் சரணம் சூக்ருதத் -என்றும் –
சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் –நன் மக்களும் மேலேத் தாய் தந்தையும் அவரே -என்றும் சொல்லுகிறபடியே –
1–சர்வ வித பந்துவாய் -அந்தர் பஹிஸ்ஸ தத் சர்வம் வ்யாப்ய – என்றும் –
2-கரந்து எங்கும் பரந்து உளன் -என்றும் சொல்லுகிறபடி – அந்தர் பஹிஸ்ஸ ஸ்வபாவனாய் –
யஸ் யாத்மா சரீரம் -ஏஷ சர்வ பூதாந்தராத்மா அபகதபாப்மா திவ்யா தேவ ஏக -என்றும்-
தான் ஓருருவே தனி வித்தாய் தன்னில் மூவர் முதலாய வானோர் பலரும் முனிவரும் மற்றும் மற்றும் முற்றுமாய் – என்றும்
சொல்லுகிறபடியே –
3-சகல சேதன அசேதனங்களும் பிரகாரமாய் –தான் பிரகாரி யாய் கொண்டு இருக்கிற நாராயணனுக்கே சேஷ பூதர் ஆனார்கள் —
திரு மந்திர த்வய நிஷ்டர்கள் ஆனார்கள் என்றது ஆய்த்து –

நாரணற்கு ஆயினர் –
பொருள் அனைத்தையும் உட் புக்கு நியமிப்பது பற்றி-நாராயணன் -என்று திரு நாமம் அமைந்தது –
ஸ்ரீ நாராயணன் என்பது ஸ்ரீ நாரணன் என்று மருவி நின்றது .
உட் புக்கு நியமிப்பது ஆத்மா ..அங்கன் நியமிக்கப் படுவது உடல் –
உடல் ஆத்மாவுக்கு போல -பரமாத்மாவுக்குப் பொருள் அனைத்தும் உபயோகப்பட்டு சிறப்பு உறுதல் இயல்பு
அங்கனம் சிறப்பித்தல் சேஷத்வம் எனப்படும் .அதனை உணர்த்தற்கே மாதவன் யோனிகள் தோறும் பிறந்தான் –
ஆனால் பயன் இல்லை –
ஸ்ரீ எம்பெருமானார் தோன்றியதும் உலகோர்கள் எல்லாம் தன் சேஷத்வத்தை உணர்ந்து சிறப்பு உறுத்தப்பட வேண்டிய
ஸ்ரீ நாராயண னுக்கு ஆளாகி விட்டனர் -என்றபடி –

யதா ஞானம் பிறந்து -மறந்த உறவை காட்டினார்..
அம் பொன் அரங்கர்க்கும் ஆவிக்கும் உள்ள சம்பந்தம் காட்டினார்

ஸ்ரீ நாரணன் யோநிகள் தோறும் பிறந்தும் பயன் இல்லை –
ஸ்ரீ எம்பெருமானார் ஒரு கால் தோன்றிய வுடனேயே பயன் பெற்று அமைவதாயிற்று –
ஸ்ரீ பிராட்டியும் ஸ்ரீ பெருமாளும் சேர்ந்து இருவரும் பல கால் பிறந்தும் பயனில்லை
ஸ்ரீ எம்பெருமானார் தனியே ஒரு கால் தோன்றிய அப்பொழுதே பயன் மிக்கது .
ஸ்ரீ மாதவனால் கையால் ஆகாது விடப் பட்டவர்களை எல்லாம் ஸ்ரீ எம்பெருமானார் கை கொடுத்து-எடுத்துக் காத்து விட்டார் -என்றது ஆயிற்று .

சம்பந்த ஞானம் ..நாரணர்க்கு –சர்வ வித பந்து /வியாபகன் /அந்தர்யாமி /சரீர ஆத்மா பாவம் /முழு முதல் காரணம் /பிரகார பிரகாரி பாவம்
தனி வித்தாய் .மூவரில் முதலாக ..முற்றும் முற்றும் மற்றும்–இது தான் நல்ல அரும் ஞானம் /
திரு மந்த்ரத்தில் வளர்ந்து-சம்பந்தம் தெரிந்து – துவயத்தில் வளர்ந்து -அனுஷ்டானம்-சரம ஸ்லோகம்-
மந்த்ரம் – -விதி -இரண்டையும் அறிந்து த்வய அனுஷ்டானம் -சரம ஸ்லோகத்தில் நாராயணன் வியக்தம் இல்லையே –…
பல யோனிகள் மிதுனத்துடன் பிறந்தான் தோன்றினான்-
இவர் தனியாக ஒரு தடவை ..ஆள் ஆக்கினரே அனைவரையும்..

எளிவரும் இயல்வினன் நிலை வரம்பு இல பல பிறப்பாய்
ஒளிவரும் முழுநலம் முதல் இல கேடு இல வீடாம்
தெளிதரு நிலைமை யது ஒழிவிலன் முழுவதும் இறையோன்
அளிவரு மருளினோடு அகத்தனன் புறத்தனன் அமைந்தே–1-3-2-

சன்மம் பல பல செய்து வெளிப்பட்டுச் சங்கொடு சக்கரம் வில்
ஒண்மை யுடைய உலக்கை ஒள் வாள் தண்டு கொண்டு புள் ஊர்ந்து உலகில்
வன்மை உடைய அரக்கர் அசுரரை மாளப் படை பொருத
நன்மை உடையவன் சீர் பரவப் பெற்ற நான் ஓர் குறைவு இலனே–3-10-1-

பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும்
இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை உயிர் அளிப்பான்
எந்நின்ற யோனியுமாய்ப்ப் பிறந்தாய் இமையோர் தலைவா
மெய்ந்நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே –1-

பல / தசாவதார பாசுரங்கள் –

தேவுடை மீனாய் ஆமையாய் ஏனமாய் அரியாய்க் குறளாய் மூவுருவில் இராமனாய்க் கண்ணனாய்க் கற்கியாய் –பெரியாழ்வார் -4-9-9-

அம்புலாவும் மீனுமாகி ஆமையாகி ஆழியார் தம்பிரானுமாகி மிக்க தன்பு மிக்கதன்றியும்
கொம்பராவு நுண் மருங்குல் ஆயர் மாதர் பிள்ளையாய் எம்பிரானுமாய வண்ணம் என் கொலோ எம்மீசனே – திருச்சந்த விருத்தம் -35-

அன்னமும் மீனும் ஆமையும் அரியுமாய எம்மாயனே அருளாய்–பெரிய திருமொழி -2-7-10-

கெண்டையும் குறளும் புள்ளும் கேழலும் அரியும் மாவும் அண்டமும் சுடரும்
அல்லாவற்றாலுமாய வெந்தை –திரு மணிக் கூடத்தான் -4-5-6-

ஏன மீன் ஆமையோடு அரியும் சிறு குறளுமாய் தானுமாய தரணித் தலைவன் இடம் –தென்னரங்கமே -5-4-8-

பன்றியாய் மீனாகி யரியாய்ப் பாரைப் படைத்துக் காத்து உண்டு உமிழ்ந்த பரமன் தன்னை -7-8-10-

நீர் மலிகின்றதோர் மீனாய் ஓர் ஆமையுமாய் சீர் மலிகின்றதோர் சிங்க யுருவாய்
கார்மலி வண்ணன் கண்ணபுரத் தெம்பெருமான் -8-4-4-

வாமனன் கற்கி மதுசூதன் மாதவன் தார் மன்னு தாசரதியாய தட மார்வன்
காமன் தாதை கண்ணபுரத்து எம்பெருமான் -8-4-7-

ஆமையாகி யரியாகி அன்னமாகி அந்தணர் தம் ஓமமாகி யூழியாகி உவரி சூழ்ந்த நெடும் புணரி சேம மதிள் சூழ்
இலங்கைக் கோன் சிரமும் கரமும் துணித்து முன் காமன் பயந்தான் கருதுமூர் கண்ணபுரம் நாம் தொழுதுமே -8–6-5-

மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் முன்னும் இராமனாய்த் தானாய் பின்னும் இராமனாய்த் தாமோதரனாய்
கற்கியுமானான் தன்னை கண்ணபுரத்து அடியான்
கலியன் ஓலி செய்த தேனாரின் சொல் தமிழ் மாலை செப்பப் பாவம் நில்லாவே -8-8-10-

அன்னமும் கேழலும் மீனுமாய ஆதியை நாகை அழகியாரை -9-2-10-

மானிட சாதியில் தான் பிறந்து தனக்கு வேண்டுருக் கொண்டு தான் தான சீற்றத்தினை முடிக்கும்
புனத்துழாய் முடி மாலை மார்பன் என்னப்பன் தன் மாயங்கள் நினைக்கும் நெஞ்சுடையேன் -6-4-7-

அமைவுடை நாரணன் மாயையை அறிபவர் யாரே -திருவாய் மொழி-1-3-3-

தோற்றோம் மட நெஞ்சே எம்பெருமான் நாரணற்கு -2-1-7-

நாட்டில் பிறந்தவர் நாரணற்கு ஆளன்றி ஆவரோ -7-5-2-

மயர்வற மதி நலம் அருளினன் என்கிறபடியே நிர்ஹேதுக பகவத் கடாஷத்தாலே
சமதிகத சமஸ்த வஸ்து வாஸ்தவரான ஆழ்வார்கள் எல்லாரும் விரும்பினார்கள் –
இதர மந்த்ரங்களை அநாதாரித்து இத்தையே தம் தாமுக்கு தஞ்சமாக அனுசந்தித்து –
உபதேச வேளையிலும் தம் தாமை வண் புகழ் நாரணன் -1-2-10
செல்வ நாரணன் -1-10-8
என்று தொடங்கி
வாழ் புகழ் நாரணன் –10-9-1-
என்று முடிவாக ஆதி மத்திய அவசானமாக ஸ்ரீ நம் ஆழ்வார் அருளிச் செய்கையாலும் –

நாடு நகரமும் நன்கு அறிய நமோ நாராயணா -திரு பல்லாண்டு -4-என்று தொடங்கி
ஓவாதே நமோ நாரணா என்பன்–பெரிய ஆழ்வார் திரு மொழி -5-1-3-என்று ஸ்ரீ பெரிய ஆழ்வாரும் –

நாத் தழும்பு எழ நாரணா-பெருமாள் திரு மொழி-2-4-
நலம் திகழ் நாரணன் –பெருமாள் திரு மொழி–10-1-என்று ஸ்ரீ பெருமாளும் –

நான்முகனை நாராயணன் படைத்தான் -என்று தொடங்கி
எட்டு எழுத்தும் ஓதுவார்கள் வல்லர் வானம் ஆளவே -திரு சந்த விருத்தம் -77-என்று ஸ்ரீ திரு மழிசைப் பிரானும்

நான் கண்டு கொண்டேன நாராயணா என்று ஒரு கால் போலே ஒன்பதின் கால் சொல்லி நாரயாணாவோ
மணி வண்ணா நாகணையாய் வாராய் -என்று ஸ்ரீ திரு மங்கை ஆழ்வாரும்
உபக்ரமத்தொடு உபசம்காரத்தொடு வாசி அற அருளிச் செய்கையாலும் –

நன்மாலை கொண்டு நமோ நாரணா என்னும் சொல் மாலை கற்றேன் –57-என்றும்
நாரணா என்று ஓவாது உரைக்கும் உரை உண்டே -95-என்றும் –
ஞான சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு-1-
நாரணன் தன நாமங்கள் 2-2-
பகல் கண்டேன் நாரணனை கண்டேன் -2-81-என்றும்
நாமம் பல சொல்லி நாராயணா -என்று-3-8- ஸ்ரீ முதல் ஆழ்வார்களும் அருளிச் செய்கையாலும்

மயர்வற மதி நலம் அருளினன் என்கிறபடியே நிர்ஹேதுக பகவத் கடாஷத்தாலே
சமதிகத சமஸ்த வஸ்து வாஸ்தவரான ஆழ்வார்கள் எல்லாரும் விரும்பினார்கள் –
இதர மந்த்ரங்களை அநாதாரித்து இத்தையே தம் தாமுக்கு தஞ்சமாக அனுசந்தித்து –
உபதேச வேளையிலும் தம் தாமைப் பற்றினவர்களுக்கும் இத்தையே உஜ்ஜீவன ஹேதுவாக
உபதேசித்து போருகையாலே அவ ஆழ்வார்களை பின் சென்ற ஆச்சார்யர்கள் எல்லாரும் விரும்பினார்கள் -என்கை-
இத்தால் மந்த்ராந்த்ரங்களில் காட்டில் இம் மந்த்ரத்துக்கு உண்டான வைபவம் சொல்லிற்று ஆய்த்து-

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –40-சேம நல் வீடும் பொருளும் தருமமும் இத்யாதி —

April 15, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

ஸ்ரீ எம்பெருமானார் தமக்கு செய்த உபகாரத்தை அருளிச் செய்தார் கீழ்ப் பாட்டில் –
இப்பாட்டில் லோகத்துக்கு செய்த உபகாரத்தை அனுசந்தித்து வித்தராகிறார் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை-

கீழ்ப் பாட்டிலே ஸ்ரீ எம்பெருமானார் தம்மமை ரஷித்த படியை சொல்லி ஹ்ர்ஷ்டராய்க் கொண்டு போந்து –
இதிலே -அர்த்தித்வ நிரபேஷமாக ஸ்ரீ வாமன அவதாரத்திலே -தாள் பரப்பி மண் தாவிய ஈசனை -என்கிறபடியே
சர்வருடைய சிரச்சுகளிலே -ஸ்ரீ பாதத்தை வைத்து உபகரித்தால் போலே -இவரும் அதிகார நதிகார விபாவம் அற-
எல்லார்க்கும் ஸ்வரூப அநு ரூபமான அர்த்தத்தை உபகரித்தார் என்று வித்தர்– ஆகிறார்

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-

ஸ்ரீ எம்பெருமானார் தமக்கு செய்த உபகாரங்களை அருளிச் செய்தார் கீழ் –
இப் பாட்டில் உலகிற்க்குச் செய்த உபகாரத்தை அனுசந்தித்து ஈடுபடுகிறார் –

சேம நல் வீடும் பொருளும் தருமமும் சீரிய நற்
காமமும் என்றிவை நான்கென்பர் நான்கினும் கண்ணனுக்கே
யாமது காமம் அறம் பொருள் வீடி தற்கென்று உரைத்தான்
வாமனன் சீலன் இராமானுசன் இந்த மண் மிசையே -40 – –

வாமனன் சீலன் -ஸ்ரீ வாமனப் பெருமாளை ஒத்த ஸ்வபாவம் வாய்ந்த
இராமானுசன்-ஸ்ரீ எம்பெருமானார்
சேம நல்வீடும் -ஷேம ரூபமாய் -சீரியதாயுமாய் இருந்துள்ள மோஷமும்
பொருளும் -அர்த்தமும்
தர்மமும் -தருமமும்
சீரிய -சிறப்பு வாய்ந்த
நற் காமமும் -நல்ல காமமும்
என்று இவை -என்று சொல்லப்படும் இவைகள்
நான்கு என்பர் -நான்கு புருஷார்த்தங்கள் என்று கூறுவர்
நான்கினும் -இந் நான்கிலும்
காமம் கண்ணனுக்கே ஆமது -காமமாவது ஸ்ரீ சர்வேஸ்வரன் விஷயத்தில் உண்டாவது
அறம் பொருள் வீடு -தர்மமும் அர்த்தமும் மோஷமும்
இதற்க்கு என்று -இந்தக் காமத்துக்கு உறுப்பாகவே என்று
இந்த மண் மிசை -இந்தப் பூமியிலே
உரைத்தான் -அருளிச் செய்தார்-

வியாக்யானம்
இத்தலையில் அர்த்தித்வாதி நிரபேஷமாகத் தாமே வந்து உபகரிக்கைக்கு
ஸ்ரீ வாமன துல்ய சீலரான ஸ்ரீ எம்பெருமானார் -தர்மார்த்த காம மோஷாக்க்ய புருஷார்த்த உதாஹ்ருத –என்கிறபடியே
ஷேம ரூபமாய் விலஷணமாய் இருந்துள்ள மோஷமும் ,-அர்த்தமும் ,தர்மமும் ,இவை போலே-
அங்கதயா புருஷார்த்தமாய் இருக்கை அன்றிக்கே –
ஸ்வயம் புருஷார்த்தம் ஆகையாலே -சீரியதாய் -விலஷணமாய் -இருந்துள்ள காமமும் என்று கொண்டு –
இவை நாலும் புருஷார்த்தமாக ப்ரமாணிகர் சொல்லுவார்கள்-
இவை நாலிலும் -காமமாவது -சர்வேஸ்வரன் விஷயத்திலே உண்டாமது –
தர்மமும் அர்த்தமும் மோஷமும் ஆகிற இவற்றிலே-
தர்மம் ஆனது -தர்மேன பாபா மப நுததி – என்கிற படியே எதத் விரோதி பாப ஷய ஹேதுவாகையாலும் –
அர்த்தம்-தானாதி முகத்தாலே அதுக்கு உபகாரம் ஆகையாலும்
மோஷம் ததபிவ்ருத்தி ஹேது வாகையாலும்
அம் மூன்றும் காம சப்த வாசியான பகவத் சம்ச்லேஷத்துக்கு சேஷமாய் இருக்கும் அத்தனை என்று-இந்த பூமியிலே அருளி செய்தார்
அபேஷா நிரபேஷமாக இவ்வர்த்தத்தை இப்படி யுபகரித்து அருளுவதே -என்று கருத்து-

வாமநன் சீரை – என்று பாடமான போது
பூர்வோக்த பிரக்ரியையாலே புருஷார்த்தத்தை நிர்ணயித்து
இப்புருஷார்த்தத்தை லபிக்க வேண்டும் இடத்தில் வருந்த வேண்டுவது இல்லை –
எளிதாகப் பெறலாம் -என்னும் இடத்தை தர்சிப்பிக்கைக்காக இத்தலையில்
அபேஷா நிரபேஷமாக வந்து கலக்குமவன் காணும் கோள் என்று
ஸ்ரீ வாமனுடைய ஸ்வபாவத்தை அருளிச் செய்தார் என்கை-

இதிலும் காட்டில் பூர்வ யோஜனைக்கு சப்த சுவாரஸ்யமும் அர்த்த கௌரவமும் உண்டு –

இம் மண் மிசையே ஸ்ரீ கண்ணனுக்கே ஆமது காமமே ஸ்வயம் பிரயோஜனம் -மற்றவை இதற்கு அங்கம் –
பாரோர் சொல்லப்பட்ட மூன்றும் -ஓராமை -ஏரார் முயல் விட்டு காக்கை பின் போவதே -திருமங்கை -அர்ச்சையே -என்பார் –
அடிக் கீழ் விள்ளாத அன்பன் அன்றோ இவர் -தசரதர் ஈடுபட்டது லௌகிக காமம் -வைதிக காமம் பற்றி வாழலாமே

சேம நல வீடும் –
மோஷத்தை கொடுக்குமதாய் -தமஸ பரஸ்தாத் -என்கிறபடி -அப்ராக்ருதமாய் –
அயோதியை என்னும்படி அபராஜிதை -என்றும் சொல்லப்படுகிற பரம பதமும்

சேம நல் வீடும்
ஷேமம் எனபது சேமம் ஆயிற்று -வட சொல்
ஷேமமாவது -உரிய பொருளைப் பாதுகாத்தல்
மோஷம் எனபது அனைவருக்கும் இயல்பாகவே உரியது ஓன்று ஆதலின் அதனைப் பெறுதல்
புதியது ஒன்றை பெற்று விட்டது ஆகாது -இழந்ததை மீண்டும் பெற்று நிலை நிறுத்திக் கொள்வதே யாதலின் -சேமமான வீடு -என்கிறார்
யோக நல் வீடு என்றால் கிடைக்காதது பெற்றதாகும் -சேம நல் வீடு என்பதால் ஆத்மாவுக்கு எடுத்தது இது தான் –
அக்கரையில் அழுந்தி இக்கரை என்பர்களே-
ஆஜகாம -ஸ்ரீ விபீஷணன் தன்னிடம் பெருமாள் இடம் வந்தான் என்றாரே வால்மீகியும் –
கைவல்யத்தின் நின்றும் வேறுபாடு தோற்ற நல் வீடு என்றார்-
பரமாத்மா அனுபவம் இல்லாமையின் கைவல்யத்தில் நன்மை இல்லை என்க-
ஆத்மாவான பகவானை அனுபவியாது பிரிந்து இருத்தலின் கைவல்யத்தை ஆத்மா வியோகம்-எனப்படும்
மரணமாக குறிப்பிட்டார் திருமங்கை ஆழ்வார் –
பிணி மூப்பு இல்லா பிறப்பிலியாய்-இறப்பதற்கே எண்ணாது -திரு நெடும் தாண்டகம் -1 – என்றார் .

பொருளும் –
அதுக்கு அங்கமாவது ஆதல் –பரம்பரையா சாதனமாகவாதல் -சாதனா அனுஷ்டானத்து உடலாதல் –
விதிக்கப்படுகிற ந்யாயார்ஜித தனமும் –

தருமமும் –
நித்ய நைமித்திகாதி ரூபமாய் –ஆராதனா ரூபமாய் -வர்ணாஸ்ரம விஹிதமாய் இருக்கிற தர்மமும் –

பொருளும் தர்மமும்
அவ்வீட்டிற்கு சாதனமாய் உள்ளன பொருளும் தருமமும் –
பொருள் தருமத்திற்கு பயன்பட்டு சாதனம் ஆகும்-தருமம் நேரே சாதனம் ஆகும்
நியாயமான முறையிலே பாகவத ஆராதனா ரூபமான தருமத்துக்கு தேடப்படும் பொருள் புருஷார்த்தம் ஆகும்
யஜ்ஞார்த்தாத் கர்மநோன்யாத்ரா லோகோயம் கர்ம பந்தன-ததர்த்தம் கர்ம கௌ ந்தேய முக்த சங்கச்ச்மாசர –என்று
பகவத் ஆராதனத்துக்கு என்று பொருள் ஈட்டல் முதலிய செயல் தவிரத் தனக்கு என்று செய்யப்படும் செயல் –
செய்பவனை சம்சாரத்தில் கட்டுப் படுத்தும் –
ஆகையால் பகவத் ஆராதனத்துக்கு என்று பற்று அற்றவனாய் அர்ஜுனா பொருள் ஈட்டல் முதலிய-செயல்களை செய்வாயாக -என்று
கண்ணன் அருளியதை இங்கே நினைவு கூர்க-
சரீர யாத்ராபிசதே நப்ரசித்த்யே தகர்மண-என்று கர்மத்தை அடியோடு விடின் ஞான நிஷ்டைக்கு-தேவைப் படும்
தேக யாத்ரையும் சித்திக்காது -கீதை – 3-8 – என்றும் பாஷ்யத்தில் –
ந்யாயர்ஜித தனென மகா யஞ்ஞாதிகம் க்ருத்வா தச்சிஷ்டா சனே நைவ சரீர தாரணம் கார்யம்-என்று-
நியாயப்படி ஈட்டிய பொருளினால் பெரு வேள்வி முதலியவற்றை புரிந்து -அதனில் எஞ்சியதை-உண்பதனாலேயே
சரீரத்தை தரித்து கொண்டு இருக்க வேண்டும் -என்றும் உரைக்கப் பட்டு-இருப்பதும் இங்கு உணரத் தக்கது –
முறைப்படி பொருள் ஈட்டி அதனைப் பயன்படுத்தும் வகையை-
பழி யஞ்சிப் பாத் தூண் உடைத்தாயின்-வாழ்க்கை வழி எஞ்சல் எஞ்ஞான்றும் இல்-என்னும் குறளும் –
பரிமேல் அழகர் அதனுக்கு –பாவத்தால் வந்த பிறன் பொருளைப் பகுத்து உண்ணின் அறம் பொருள் உடையார் மேலும் –
பாவம் தன் மேலுமாய் -நின்று வழி எஞ்சுமாதலின் பழிது அஞ்சி என்றார் -என்று எழுதிய உரையும்-நன்கு அறிவுறுத்தல் காண்க –
தருமமும்
பயன் கருதாது பகவத் ஆராதனமாக புரியும் நித்ய நைமித்திகாதி கர்மங்கள் தருமமாகும் –
தருமத்துக்கு இயல்பு முக்திக்காக பயன்படுதல்-பயனைக் கருதிடின் அவ்வியல்வு தடைப் பட்டு விடுகின்றது –
ஆக பொருளும் தருமமும் சாதனமாக அமைந்து புருஷார்த்தங்கள் ஆகின்றன –

சீரிய நற் காமமும்
சாஸ்த்ரங்களில் ஸ்லாக்கிக்கப்பட்டதாய்-போக்யமாய் -விஹிதமாய் – சுயம் புருஷார்த்தமான-காமமும் –

சீரிய நற் காமமும்
சீரிய காமம்
பொருளும் தருமமும் போலாது -தானே புருஷார்த்தமாய் இருத்தலின் காமத்துக்கு சீரிய -என்று அடை யிட்டார்-
நற் காமம்
தருமத்திற்கு முரண் பட்டதாயின் காமம் புருஷார்த்தம் ஆகாது என்று அதனை விலக்குவதற்காக நற் காமம் -என்றார்.
எனவே அறநெறிக்கு ஒத்த தக்கார் திறத்தது ஆகிய -விஹித விஷய -காமமே புருஷார்த்தம்-என்றது ஆயிற்று

என்று இவை நான்கு என்பர் –
ஏவம் வித ரூபேண நாலு வகைப் பட்டு இருக்கும் புருஷார்த்தம் என்று – வியாச பராசராதிகள் சொல்லுவார்கள் –
தர்மார்த்த காம மோஷாக்ய புருஷார்த்த உதாஹ்ர்தா -என்னக் கடவது இறே –
தர்ம அர்த்த காமங்கள் மூன்றும் ப்ராக்ருதங்களுமாய்-ஸ்வரூப அந அநு ரூபங்களாயுமாய்-இஸ் சரீரத்தோடு அனுபவிக்கபடுமவையாய் இருக்கும்
துரீய புருஷார்த்தமான மோஷம் சேதனற்கு பிரகிருதி விமோசன அநந்தரம்-இவன் தேகாந்தரத்தை பரிக்ரகித்து –
தேச விசேஷத்தில் சென்று அனுபவிக்குமது -அப்ராக்ருதமாய் இருக்கும்-இது சாதநாந்த பரனுக்கும் ஸ்வ பிரயோஜனமாய்- இருக்கும் –
ஸ்வரூப ஞானம் உடைய அதிகாரிக்கு இவை எல்லாம் மாறாடி இருக்கும் -எங்கனே என்னில்
சேதனன் அசித் வத் பரதந்த்ரனாய் -தனக்கு என்று ஒரு பிரயோஜனம் இன்றிக்கே பேறு இழவுகள்-ஸ்வாமி யான அவனுக்கே என்று
அத்யவசித்தவன் ஆகையாலே -என்றபடி
நான்கினும் –
நாலிலும் -என்றபடி -புருஷார்த்தமான நாலிலும் வைத்துக் கொண்டு –

என்று இவை நான்கு என்பர் நூல் வல்லோர் எனபது அவை நிலையான் வந்தது
தர்மார்த்த காம மோஷாக்க்ய புருஷார்த்த உதாஹ்ருத -அறம் பொருள் இன்பம் வீடு எனப்படும்-புருஷார்த்தம் கூறப்பட்டது -என்று
நூல் வல்லோரான முனிவர் கூறுதல் காண்க

கண்ணனுக்கே ஆமது காமம் –
வகுத்த சேஷியாய் -சுலபனான சர்வேச்வரனுடைய சம்ச்லேஷத்தை அபேஷிக்கும்படியான காமம் பிரதான புருஷார்தமாய் இருக்கும் –
அதிலே சுவார்த்தை யாகிற அஹங்காரத்தை-தவிர்த்து -அவனுடைய முக மலர்த்தியை உத்தேசித்து பண்ணும் –
பகவத் சம்ச்லேஷமே பிரதான புருஷார்த்தம் என்றபடி –
கண்ணனுக்கே –
என்கிற அவதாரணத்தாலே –தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே -என்றும் –
உற்றோமே யாம் உனக்கே நாம் ஆட் செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்று -என்கிறபடியே அத்யவசிக்க வேண்டும் -என்றபடி –
ஆக -இந்த அதிகாரிக்கு –பகவத் காமமே பிரதான புருஷார்தமாய் இருக்கும் –
காம ஏவர்த்த தர்மாப்யாம் கரீயநிதி மே மதி -என்று பெருமாள் சொன்னது நிந்தா ஸ்துதி யாகையாலே –
விருத்த காமத்தை கர்ஹித்த இத்தனை –
அர்த்த தர்மவ் பரித்யஜ்ய யக்காமம் அனுவர்த்ததே -ஏவமாதாத தேஷிப்ரம் ராஜா தசரதோயதா -என்று
அடைவே இவ் அர்த்தத்தை சொன்னார் இறே –

நான்கினும் கண்ணனுக்கே ஆமது காமம்
ஏனைய முனிவர்கள் உடைய கூற்றின் படி வீடே முக்கிய புருஷார்த்தமாக கருதப் படுகிறது –
இராமானுச முனிவர் உடைய சித்தாந்தம் அங்கன் அன்று –
காமமே முக்கிய புருஷார்த்தம் எனபது அவர் கொண்ட முடிவு –

கண்ணனுக்கே ஆமது –
சர்வேஸ்வரன் திறத்து செலுத்துவதான காமமே -அதாவது -பக்தியே -புருஷார்த்தம் என்பது கருத்து –
அக்காமம் தனக்கு இன்பமாய் இருப்பதன்றோ -அன்றி –
தனக்கும் கண்ணனுக்கும் இன்பமாய் இருப்பது அன்றோ கருதப்படலாகாது -கண்ணனுக்கே இன்பமாய் அமைய வேண்டும் –
அவன் இன்புறக் காண்பது அன்றி தனக்கு வேறு புருஷார்த்தம் இல்லை என்று கருதி
செலுத்தும் காமமே புருஷார்த்தம் என்றது ஆயிற்று –

இங்கு காமம் என்பது கண்ணைக் கலந்து களிப்புறுத்தும் நிலைமையேயாம்
அதாவது சம்ச்லேஷ சுகமே -கூடலின்பமே-என்றபடி –
கண்ணன்-எளியன் என்றபடி
காமம் ஏற்படுவதற்குத் தக்கபடி சர்வேஸ்வரன் அவதரித்து தன்னைக் காட்டி எளியனாக்கி-கொண்ட நிலைமை இதனால் தோன்றுகிறது –
மானுஷம் தனுமாஸ்ரிதம் பரம்பாவ மஜானந்த -கீதை -9 11- –
மானிடம் வடிவம் கொண்ட என்னை-சர்வேச்வரத் தன்மை உடையவன் என்று அறிகின்றிலரே மூடர்கள்-என்றபடி-
எளிமையில் பரத்வமும்-கலந்து மிளிர்கின்ற படியால் கண்ணனுக்கே யாம் காமம் புருஷார்த்தம் ஆயிற்று -என்க

வீடும் காமம் விளைவித்த கண்ண னதே-என்று நினைப்பார் கண்ணனைக் காமுற்றோர் கண்ணன் விண்ணூர் -திரு விருத்தம் -47 –
என்பது கண்ணனைக் காமுற்ற பராங்குச நாயிகையின் பேச்சு –
இனி மண் மிசையே –
என்பதைக் கண்ணன் என்பதோடு கூட்டி தாம் காணும் இந்த மண்ணகத்தில்-கோயில் கொண்ட அர்ச்சாவதார எம்பெருமானுக்கே
ஆமது காமம் என்று பொருள் கொள்ளலும் ஆம் –
குணங்கள் நிறைந்து பரத்வத்துடன் தன் பால் ஆதாரம் பெருகும்படி அழகினையும் காட்டி
எளிமைப்பட்ட அர்ச்சாவதாரத் தெம்பெருமானாம் கண்ணனுக்கே ஆம் காமம் புருஷார்த்தம் ஆயிற்று -என்க
வீடும் ஆதாரம் பெருக வைத்த -அர்ச்சை வடிவனான கண்ணனதே என்று கருதுவர் கண்ணனைக் காமுற்றோர் –
புவனியும் விண் உலகும் அங்காதும் சோராமே ஆள்கின்ற எம்பெருமான்
செங்கோல் உடைய திருவரங்கச் செல்வனார் – -நாச்சியார் திரு மொழி – 11-3 – என்பது
கண்ணனைக் காமுற்ற காரிகையாம் ஆண்டாள் திரு வாக்கு –
இனி தலைமைப் பொருளில் கண்ணன் என்று வழங்கியதாம் –

அறம் பொருள் வீடு இதற்கு என்று உரைத்தான் –
அறம் –
விசேஷ தர்மம் –
குணைர் தாஸ்யம் உபாகத -அஹம் சர்வம் கரிஷ்யாமி -உனக்கே நாம் ஆட் செய்வோம் -என்கிறபடியே-
சம்மார்ஜநோப லேபே நபவ நநந்த நாத் ஔபஸாரிக சாம்ச்பர்சிகங்கள் ஆகிற அசேஷ வ்ருத்திகளும் என்றபடி –
பொருள் –
தாச்யத்துக்கு உபயுக்தமாய் அமுதுபடி சாத்துப்படி முதலானவற்றுக்கு சாதனமாய் இருக்கிற அர்த்தம் –
வீடு –
தர்மார்த்தங்களை சம்பாதிகைக்கு தகுதியாய்-அவற்றினுடைய அபிவிருத்திக்கு உடலான ப்ராப்ய தேசம் –

இதற்கு என்று –
காம சப்தத வாச்யமான இந்த பகவத் சம்ச்லேஷ ரூபா பிரதான புருஷார்த்தத்துக்கு -சஹ காரியாய் –
சேஷமாய் இருக்கும் இத்தனை என்று –

அறம் பொருள் வீடு இதற்கு என்று உரைத்தான் –
தர்ம அர்த்த மோஷங்கள் கூடல் இன்பமான காமத்திற்கு உறுப்பாய் பயன்படுவன என்பது ஸ்வாமியின்-உபதேசம் –
தர்மம் பகவத் சம்ச்லேஷ ரூபமான காமத்துக்கு தடங்கலான பாபம் தொலைவதற்கு உபயோகப்படும் –
பொருள் தானம் முதலியவற்றால் அதற்கு உபகரிப்பதாகும் வீடு -அதனை மேலும் மேலும் தொடர்ந்து துய்ப்பதற்கு-ஹேதுவாகும் –

இந்த மண் மிசையே
ஒரு தேச விசேஷத்தில் அன்றிக்கே -பரி த்ர்ச்யமானமாய் –
எல்லாருக்கும் அஞ்ஞா நத்தை விளைவிக்கும் இந்த மகா ப்ருத்வியில் தானே –

வாமனன் சீலன் –
இத்தலையில் அர்த்தித்வாதி நிரபேஷமாக தாமே வந்து உபகரிக்கைக்கு ஸ்ரீ வாமன துல்ய சீலரான

இராமானுசன் –
எம்பெருமானார் –

உரைத்தான் –
ஒரு தேச விசேஷத்தே பெற வேண்டி இருக்கும்தான இவ் அர்த்தத்தை இங்கே தானே அருளிச் செய்தார் –

வாமனன் சீலன்
ஸ்ரீ வாமன அவதாரத்திலே அர்த்திவாதி நிரபேஷமாக -தானே வசிஷ்ட சண்டாள விபாகம் அற –
எல்லாருடைய தலைகளிலும் -நல்லடிப்போது -என்னும்படியான ஸ்ரீ பாதத்தை வைத்தால் போலே –
நிதித்யாசிதவ்ய –இத்யாதி -வேதாந்த சாஸ்திர விஹிதமாய் -மஹனீய விஷயே ப்ரீதிர்பக்தி -என்கிறபடியே
பக்தி ரூபமான இந்த பகவத் காமத்தை ஸ்ரீ பாஷ்ய முகேன -அருளிச் செய்தார் ஆகையாலும் –
லோகத்தார் எல்லாருக்கும் பகவத் சம்ச்லேஷ ரசம் பிறக்கும்படி -அவரது அதிகார நதிகாரங்களைப்-பாராதே உபதேசித்தார் ஆகையாலும் –
அவனுடைய ஸ்வபாவமே இவர்க்கும் ஸ்வபாவமாய்-அவனோடு துல்யர் ஆனார் என்றது ஆய்த்து –

வாமனன் சீலன் –
வேண்டுதலை எதிர்பாராது தானே வலியக் கொடுக்கையும் -சீரியதைக் கொடுக்கையும் –வரையாதே கொடுக்கையும் –
தன் பேறாக உவந்து கொடுக்கையும் -ஸ்ரீ வாமனனுக்கும் ஸ்ரீ எம்பெருமானாருக்கும்-ஒத்த ஸ்வபாவன்களாம் –
குறிப்பாக மாவலி யிடமிருந்து-விரகினால்-சாமர்த்தியத்தால்-ஸ்ரீ வாமனன் தன் விபூதியை -உலகினை-வாங்கியது போலே –
ஸ்ரீ எம்பெருமானாரும் என்னிடம் இருந்து –விரகினால் தன் விபூதிமான் ஆகிய அரங்கனை வாங்கிக் கொண்ட ஒப்புமை
இங்குக் கருதத் தக்கது –வாமனன் சீலன் -ஸ்ரீ கூரத் தாழ்வான் என்றபடி –
வாங்கின விபூதியை உரியது இந்திரற்கு இது என்று -இந்திரனிடம் ஒப்படைத்தான் -வாமனன் .-
வாங்கின விபூதிமானை உரியன் ஸ்ரீ வைஷ்ணவர்க்கு என்று ஸ்ரீ வைஷ்ணவர் இடம் ஒப்படைத்தார்-ஸ்ரீ எம்பெருமானார் –
ஒப்டைத்ததும் அந்த ஸ்ரீ வைஷ்ணவர்களை நோக்கி -இக்கண்ணனுக்கே ஆமது காமம் .
அதுவே புருஷார்த்தம்-ஏனைய புருஷார்த்தங்கள் இக் காமத்துக்காகவே ஏற்ப்பட்டன –என்று அனைவரும் –
ஸ்ரீ நம்பெருமாள்-ஸ்ரீ நம் பெருமாள்-என்று காமுரும்படி உபதேசித்து அருளினார் ஸ்ரீ எம்பெருமானார் -என்க –

வாமனன் சீரை -என்னும் ஒரு பாடமும் உண்டாம் –
அப்பொழுது இப் புருஷார்த்தம் பெற வருந்த வேண்டியது இல்லை
தானே வந்து கூடும் இயல்பினன் அவன் என்று ஸ்ரீ வாமனன் ஸ்வபாவத்தை அருளிச் செய்தார் என்பது பொருளாகும் ,
இந்தப் பாடத்திலும் முந்திய பாடமே சொல் அமைப்பிலும்
பொருள் ஈட்டு திறத்திலும் சீறியது என்கிறார் உரை அருளிய ஸ்ரீ பெரிய ஜீயர் –

இந்த மண் மிசை –
சுட்டு இழிவு குறித்தது
மண் மிசை உரைத்தான் என்று இயையும்
நேரிய காதலே அமையும் –
அவ்வின்ப வெள்ளத்தை விட்டு நல் வீடு பெறினும் தெள்ளியோர் குறிப்பு கொள்வது எண்ணுமோ-என்கிறார் ஸ்ரீ பராங்குசர் –
காமத்தின் மன்னும் வழி முறையே நிற்று நாம் -என்கிறார் ஸ்ரீ பரகாலர் –
அவர்கள் வழியிலே நின்று காமம் என்னும் முக்கிய புருஷார்த்தத்தை கைக் கொள்ளுமாறு-உபதேசிக்கிறார் ஸ்ரீ யதிவரர் .

இந்த பூமியிலே சொன்னார்..நல் பாலுக்கு உய்தனன் நான் முகனார் நாட்டுள்ளே-போல
நல் வீடு பெறினும் மீறிய காதலே அமையும்-ஸ்ரீ பராங்குசரும்
மன்னு காமத்தின் வழி மறைய –சீரார் இரு கரையும் எய்துவார்–ஸ்ரீ பரகலாரும் அருளினார்கள்.
இப் பார் ஆர் சொல்ல பட்ட மூன்று அன்றே அம் மூன்றும் ஆராய அறம் பொருள் இன்பம்
இவற்றின் இடை- அதனை -எய்துவார்
பெயரை சொல்லும் படி இல்லாமல் உசந்தது என்றும் பெயரை சொன்னால் அதிகம் சோகம் வரும் என்று
பொருள் – இடை அதனை -காமம்- எய்துவார்
வீடு சேர்க்க வில்லை–சிக்கு என மற்று ஆரானும் உண்டு என்பவர் எனபது தான்-வீடு-
அதுவும்-பெயர் சொல்ல வில்லை
ஒராமை அன்றே உலகோர் சொல்லும் சொல்.
மடலில். ஞானம் தசை மாறி பிரேம தசையில்
ஸ்ரீ ஸ்வாமி சாஸ்திரம் கொண்டு -நாலையும் சேர்த்து -ஸ்ரீ பரகால நாயகி சொன்னதையும் சேர்த்து- உபய வேதாந்தி ..அருளினார்
ஸ்ரீ கண்ணனுக்கே ஆமது காமம்-கிருஷ்ண சம்ஸ்லேஷணம்
பக்தி இல்லை–அனுபவிக்கும் பொழுது ஏற்படும் ப்ரீதி- ஒன்றே புருஷார்த்தம்–

குறையல் பிரான் அடிக்கீழ் விள்ளாத அன்பன் ராமானுஜன் மிக்க சீலம் அல்லால் ஓன்று அறியேன் எனக்குற்ற பேர் இயல்வே -2-
வாமனன் சீலன் ராமானுஜன் இம் மண் மிசையே -38-
மண்ணுலகில் ஈட்டிய சீலத்து இராமானுசன் -54-

இனிது என்பர் காமம் அதனிலு மாற்ற
இனிது என்பர் தண்ணீரும் எந்தாய் -இனிது என்று
காம நீர் வேளாது நின் பெருமை வேட்பரேல்
சேம நீர் ஆகும் சிறிது—–-இரண்டாம் திருவந்தாதி–35–

எல்லாம் கண்ணன் -என்கிறபடியே தாரக போஷக போக்யங்கள் எல்லாம் நீயே யாம்படி -என்னைப் புகுர நிறுத்தின
என் ஸ்வாமி யானவனே -அல்பமாய் அஸ்திரமாய் அபோக்யமான சப் தாதி விஷயங்களை போக்யங்களாக பிரமித்து
இவை இனிதாய் இருக்கிறது என்று விஷய அனுபவத்துக்கு சிரமம் செய்து இருக்கும் நாட்டார் சொல்லா நின்றார்கள்
விரக்தரோடு அவிரக்தரோடு வாசி அற சர்வரும் விரும்பும் படி இருக்கையாலே -அந்த விஷயங்களில் காட்டிலும்
மிகவும் இனிது என்று தண்ணீரைச் சொல்லா நின்றார்கள் –
பரீக்ஷகர் ஹேயமாகவே அறுதியிட்டு இருக்கிற விஷயங்களையும் தண்ணீரையும் அதஸ்மின் தத் புத்தியால் போக்யம் என்று
புத்தி பண்ணி -அவற்றை மேல் விழுந்து ஆசைப்படாதே ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய் –
நிரதிசய போக்ய பூதனான உன்னுடைய போக்யதா பிரகர்ஷத்தை ஏக தேசம் ஆசைப்படுமவர்களாமாகில் –
அது சர்வ தசையிலும் ரக்ஷகமான ஸ் வ பாவத்தை உடைத்தாகா நிற்கும் –

மருந்தும் பொருளும் அமுதமும் தானே
திருந்திய செங்கண் மால் ஆங்கே பொருந்தியும்
நின்று உலகம் உண்டும் உமிழ்ந்தும் நீரேற்று மூவடியால்
அன்று உலகம் தாயோன் அடி –மூன்றாம் திருவந்தாதி-—4—

மருந்தும் பொருளும் அமுதமும் தானே–
மருந்து என்று விரோதி நிரசன மாத்ரமாகக் கொண்டு
பொருள் என்று உபாயமாக்கி –அமுதம் என்று உபேயம் என்கிறது –
மருந்து என்று உபாயம் ஆக்கி பொருளும் அமுதமும் தானே என்று உபேயத்தில் இரண்டு அவஸ்தையைச் சொல்லுகிறது -என்றுமாம் –

பொருள் கையுண்டாய்ச் செல்லக் காணில் போற்றி என்று ஏற்றி எழுவர்
இருள் கொள் துன்பத்தின்மை காணில் என்னே என்பாருமில்லை
மருள் கொள் செய்கை யசுரர் மங்க வடமதுரைப் பிறந்தார்க்கு
அருள் கொள் ஆளாய் யுள்ளால் அல்லால் இல்லை கண்டீர் அரணே—–ஸ்ரீ திருவாய் மொழி–9-1-3-

சந்தமாய்ச் சமயமாகிச் சமய வைம்பூதமாகி
அந்தமா யாதியாகி யருமறை யவையும் ஆனாய்
மந்தமார் பொழில்கள் தோறும் மட மயிலாலு நாங்கைக்
கந்தமார் காவளந்தண் பாடியாய் களை கண் நீயே –பெரிய திருமொழி–4-6-9-

பண்டை நான்மறையும் வேள்வியும் கேள்விப் பதங்களும் பதங்களின் பொருளும்
பிண்டமாய் விரிந்த பிறங்கு ஒளி அனலும் பெருகிய புனலொடு நிலனும்
கொண்டல் மாருதமும் குரை கடல் ஏழும் ஏழு மா மலைகளும் விசும்பும்
அண்டமும் தானாய் நின்ற எம்பெருமான் அரங்க மா நகர் அமர்ந்தானே–5-7-1-

மாக மா நிலம் முழுதும் வந்து இறைஞ்சும் மலரடிக்கண்ட மா மறையாளன்
தோகை மா மயில் அன்னவர் இன்பம் துற்றிலாமை யிலத்த விங்கு ஒழிந்து
போகம் நீ எய்திப் பின்னும் நம்மிடைக்கே போதுவாய் என்ற பொன்னருள் எனக்கும்
ஆக வேண்டும் என்று அடி இணை அடைந்தேன் அணி பொழில் திரு வரங்கத் தம்மானே-5-8-5-
ஸ்ரீ கிருஷ்ணன் மலர் அடி கண்டதே காரணமாக —

நாம் உமக்கு அறியச் சொன்ன நாள்களும் நணியவான சேமம் நன்குடைத்துக் கண்டீர் -10-3-9-சேம நல் வீடு
செல்லும் நாள் குறிக்கப் பெற்றோம்
அறியச் சொன்ன சுப்ரபாதத்தே துணை புரியாமல் போக்கு ஒழித்து மீள்கின்றது இல்லை என்று நிச்சித்திருந்தவர்-
அதாவது-
நாமுமக்கு அறியச் சொன்ன நாள்களும் நணியவான -10-2-9–என்றும் –
நாளேல் அறியேன் -9-8-4–என்றும் –
மரணமானால்-9-10-5- என்றும் –
நான் உங்களுக்குச் சொன்ன நாள் ஆசன்னமாய்த்து என்று பிறர்க்கும் பேசும்படியாய் –
ஸூப்ரபாதாச மே நிசா-ஸ்ரீ விஷ்ணு புராணம்-5-17-3- -என்றும் –
ஸூப்ரபாதாத்ய ராஜநீ மதுரவாசா யோஷிதாம்-ஸ்ரீ விஷ்ணு புராணம்-6-18-24 -என்றும் சொல்லுகிறபடியே
பகவத் பிராப்தி அணித்தான வாறே நல் விடிவான நாளிலே –

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –39-பொருளும் புதல்வரும் பூமியும் பூம் குழலாரும் என்றே இத்யாதி —

April 14, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

இப்படி கேட்ட இடத்திலும் ஒரு மாற்றமும் அருளி செய்யக் காணாமையாலே அத்தை விட்டு-
செய்த உபகாரங்களை அனுசந்தித்து -ப்ரீதியாலே தம் திரு உள்ளத்தைப் பார்த்து –
நமக்கு-எம்பெருமானார் செய்யும் ரஷைகள் வேறு சிலர் செய்யும் அளவோ -என்கிறார்-

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை-

உரையாய் இந்த நுண் பொருளே -என்று இவர் நேர் கொடு நேர் நிற்று கேட்ட அளவிலும் –
எம்பெருமானார் ஒரு மாற்றமும் அருளிச் செய்யக் காணாமையாலே -அத்தை விட்டு -அவர் செய்த உபகாரங்களை-அனுசந்தித்து
அவற்றை தம் அருகே இருக்கும் பாகவதோரோடே சொல்ல ஒருப்பட்டவாறே –
இவ்வளவும் இவர் தாம் அவர்களைக் குறித்து எம்பெருமானார் உடைய கல்யாண குண வைபவத்தை பிரசங்கித்தார்
ஆகையாலே அவர்களும் அந்த குணங்களில் ஆழம் கால் பட்டு வித்தராய் –
இவர் சொல்லும் அத்தை-கேட்கவும் மாட்டாதே பரவசராய் இருக்க –தம்முடைய திரு உள்ளத்தை சம்போதித்து –
புத்திர தார் க்ரஹா-ஷேத்திர அப்ராப்த விஷயங்களிலே மண்டி நிஹீனராய் போந்த நமக்கு –
அஞ்ஞா னத்துக்கு உடலான துக்கத்தைப் போக்கி
நித்தியமாய் நிரவதிகமாய் இருக்கிற தம்முடைய கல்யாண குண ஜாதம் எல்லாம் தெளியும் படியான-அறிவைக் கொடுத்து அருளின –
எம்பெருமானார் செய்த ரஷணங்கள் பின்னை ஒருவராலே செய்யப் போமோ -என்கிறார் –

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை–

உரையாய் இந்த நுண் பொருளே -என்று அமுதனார் கேட்டும் -மறு மாற்றம் காணாமையாலே-அத்தை விட்டு –
அவர் செய்த உபகாரங்களை -அனுசந்தித்து -ப்ரீதியாலே –தம் திரு உள்ளத்தைப் பார்த்து –
எம்பெருமானார் செய்யும் ரஷைகள் வேறு சிலர் செய்யும் அளவோ -என்கிறார்-

பொருளும் புதல்வரும் பூமியும் பூம் குழலாரும் என்றே
மருள் கொண்டு இளைக்கும் நமக்கு நெஞ்சே மற்றுளார் தரமோ
இருள் கொண்ட வெந்துயர் மாற்றித் தன்னீறில பெரும் புகழே
தெருளும் தெருள் தந்து இராமானுசன் செய்யும் சேமங்களே -39 –

பத உரை –
நெஞ்சே -மனமே
பொருளும்-செல்வமும்
புதல்வரும்-புத்திரர்களும்
பூமியும் -வயலும்
பூம் குழலாரும் -அழகிய கூந்தலை உடைய மனைவியும்
என்றே -என்று இவற்றையே பயனாக கருதி
மருள் கொண்டு –மதி மயங்கி
இளைக்கும் -சோர்வடையும்
நமக்கு –
இருள் கொண்ட -அறியாமை கலந்த
வெந்துயர் -கொடிய துன்பங்களை
மாற்றி-போக்கி
தன-தம்முடைய
ஈறுதல்-அழிவற்ற
பெரும் புகழே -பெருமை வாய்ந்த நற் குணங்களையே
தெருளும் -அறியும்படியான
தெருள்-அறிவை
தந்து -கொடுத்து
இராமானுசன்-எம்பெருமானார்
செய்யும் சேமங்கள் -செய்யும் ரஷைகள்
மற்றுளார் தரமோ -வேறு உண்டானவர்கள் செய்யும் அளவோ

வியாக்யானம் –
அர்த்தமும் புத்ரர்களும் ,ஷேத்ரமும் ,தாரங்களும் ,என்று இவற்றையே விரும்பி அறிவு கெட்டு-அவசன்னராய் போருகிற நமக்கு
அஞ்ஞான யுத்தமான க்ரூர துக்கங்களை நீக்கித்–தம்முடைய நித்தியமாய் நிரவதிகமான கல்யாண குணங்களையே
அறியும்படி யான அறிவைத் தந்து எம்பெருமானார் செய்யும் ரஷைகள்-நெஞ்சே -மற்று உண்டான வர்கள் செய்யும் அளவோ –
பூம் குழல்-அழகிய குழல்-பூவை உடைத்தான குழல் என்னவுமாம்
மருள்-அறிவு கேடு
சேமம்-ரஷை
தரம்-ஒப்பு
மற்றுளார் தரமோ -என்றது -மற்று உள்ளாரோடு ஒப்போமோ -என்றபடி –

ராமனும் கண்ணனும் அருளாதவற்றை அன்றோ ராமானுஜர் அருளுகிறார் நமக்கு
என்றே -ஏவகாரம் ஒவ் ஒன்றாலும் கவலையில் ஆழ்ந்த படி
தாயே தந்தையே தாரமே -போலே-

பொருளும் புதல்வரும் என்று தொடங்கி -நெஞ்சே –
கீழில் பாட்டுக்களில் தமக்கு எம்பெருமானார் கிருபையாலே ப்ராப்தமான சம்ருத்தியும் அவருடைய கல்யாண குண வைபவத்தையும் –
சமீப வர்திகளான பாகவதர்களோடு சொல்லிக் கொண்டு-போருகிற அளவில் -அவர்கள் அவற்றில் -வித்தராய் பரவசராய்
ஒரு மறு மாற்றமும் அருளிச் செய்ய மாட்டாதே இருந்தவாறே தம்முடைய நெஞ்சைப் பார்த்து –
தாம் பெற்ற பல பரம்பரையை அருளிச் செய்கிறார் –

பொருளும்
சமஸ்த புருஷார்த்த சாதனமாய் -ஸ்வ ஜனங்களோடு கூடி யாவஜ்ஜீவம் செய்கைக்கு உறுப்பாய்-இருந்துள்ள –
தன கனக வஸ்து வாஹனாதி சகல பதார்த்தங்களும்
பொருளும் –
பொருள் இல்லார்க்கு இவ் உலகமில்லை யாதலின் அது முந்துறக் கூறப்பட்டது

புதல்வரும் –
புத்ரோத்பத்தி விநாசாப்யம்-நபரயம் சுக துக்கயோ -என்கிறபடியே
இனி இதுக்கு அருகே ஒரு சுகம் இல்லை என்னும்படி நிரவதிக-சுக ரூபனாயும்-கரனாபாடவதசையிலே போஷகனாயும் –
புன்நாம் நோ நரகாத் த்ரா யேத் -என்கிறபடியே
அத்ருஷ்ட உபகாரகனுமாயும் இருந்துள்ள -புத்ரனும் –
புதல்வரும்
பொருள் செல்வத்துக்கு பிறகு மக்கள் செல்வம் பேசப்படுகிறது
பெரும் அவற்றுள் யாம் அறிவதில்லை அறிவறிந்த மக்கள் பேறல்ல பிற -என்று பெரும் பேறாக மக்கள் செல்வம் பேசப்படுவது காண்க –
இம்மையில் முதுமை-நோய் முதலியவற்றால் துயருறும் காலத்து உதவியும்
மறுமையில் -புத்-என்னும் நரகத்து விழாது காத்தும் தாய் தந்தையர்க்கு பயன் படுபவர் புத்திரர் என்க-

பூமியும் –
சல ஸ்வபாவங்களான வஸ்துக்கள் போல் அன்றிக்கே
ஸ்தாவரம் ஆகையாலே புத்திர பௌதராதி பர்யந்தமாக ஜீவன ஹேதுவான ஷேத்ரமும்

பூம் குழலாரும் –
பரிமள பிரசுரங்களான புஷ்பங்களாலே பரிஷ்கரிக்கப் பட்ட -சபரீ பந்தங்களை –
பார்யாசமோ நாஸ்தி சரீர தோஷனே –என்று ஸ்லாகிக்கப் பட்ட நல்ல தாரமும் –

பூமியும் பூம் குழலாரும் என்றே –
நல வாழ்வுக்கு காரணமான நில நலனும் -வாழ்க்கை துணை நலனும் பேசப்படுகின்றன –
வாழ்க்கை பயன் பேசப்பட்டன கீழ்-
வாழ்க்கைத் துணைகள் பேசப்படுகின்றன இங்கே –
பூமியால் பொருளும் -பூம் குழலாரால் புதல்வரும் பயனாகப் பெரும்படும் அன்றோ –
உரிய தலைவனுக்குப் பருவத்திற்கு ஏற்ப பேணப்பட்டு போகத்தை தருதலின்
நிலத்தையும் பூம் குழலாரையும் சேர்த்து கூறினார் –

வள்ளுவனாரும் -சொல்லான் கிழவன் இருப்பின் நிலம் புலந்து இல்லாளின் ஊடி விடும் -பொருள் பால்-உழவு -9 –
என்று நிலத்துக்கு இல்லாளை உவமை யாக்கிக் கூறினார் .
தன்கட் சென்று வேண்டுவன செய்யாது வேறு இடத்தில் இருந்த வழி மனையாள் ஊடுமாறு போலே
என்றது அவன் போகம் இழத்தல் நோக்கி -என்று பரிமேல் அழகர் சுவை ததும்ப இக் குறளினை விளக்குவது கண்டு இன்புறுக-
நிலம் நல்ல முறையில் பேணப் படின் இல்லாமை இல்லை
பூம் குழலார் மாண்புடையராய் மதிக்கப் படினும் இல்லாமை இல்லை –

இலம் என்றசை – இருப்பாரைக் காணின் நிலம் என்னும் நல்லாள் நகும் -என்னும் குறளில்-
சோம்பி நல்ல முறையில் சாகுபடி செய்யாத வறியரை நோக்கி
அவருக்கு உரிய நில மங்கை பரிஹசிப்பதாக கூறப்பட்டு உள்ளது –
இதனால் சாகுபடி செய்யும்-நன் செய் நிலம் உடையாருக்கு இல்லாமை இராது என்பது போதரும் –
இங்கனமே -இல்லதென் இல்லவள் மாண்பானால்-என்று மாண்புடைய மனைவி உடையார்க்கும்
இல்லாமை இல்லை -என்கிறார் அக்குறள் ஆசிரியரே –
பூம் குழல்-அழகிய குழல்
பூவை உடைய குழலாகவுமாம்

என்றே மருள் கொண்டு இளைக்கும் –
ஷேத்ராணி மித்ராணி தா நா நிநாத-புத்ராஸ் ச தார –பசவோ க்ர்ஹாணி -த்வத் பாத பத்ம ப்ரவனாத்
மவர்தேர்பவந்தி சர்வே பிரதிகூல ரூபா -என்று-சொல்லப்படுகிற ஆகாரத்தை மறந்து –
இவை தாரக போஷாக போகயங்கள் என்று -இவற்றிலே சக்தனாய்-பிரமித்து -அந்த அஞ்ஞா நத்திலே துவக்குண்டு –
அவசன்னராய் போந்த நமக்கு –
தாயே தந்தை என்னும்-தாரமே கிளை மக்கள் என்றும் நோய் பட்டு ஒழிந்தேன் -என்றும் –
புத்ர தார க்ரஹா ஷேத்ரம் ர்கதர்ஷ்ணாம் புபுஷ்கலே — கர்த்த்யாகர்த்த்ய விவேகாந்தம் பரிப்ப்ராந்தமிதச்தித்த -என்றும்
சொல்லக் கடவது இறே

என்றே
பெரும் பேறு வேறு ஓன்று உண்டு என்னும் நினைப்பே இன்றி இவைகளையே பேறாக
விரும்பிப் போந்தோம் -என்கிறார்

மருள் கொண்டு இளைக்கும் நமக்கு
மருள்-விபரீத உணர்வு
பேறு அல்லாதவற்றைப் பேறாக நினைக்கை மருள் -என்க
இறைவன் திறத்தும் -அவன் அடியார் திறத்தும் -மிக்க ஈடுபாடு கொண்டார்க்கு –
மனைவி மக்கள் நிலம் செல்வம் முதலியன ஈடுபாட்டுக்கு பிரதி கூலங்களே அன்றோ –
ஆதலின் அவை பேறாக மாட்டா –
பேறாக அவற்றை கருதி விரும்புவது மருள் ஆயிற்று
பொருளில் நசை இருப்பின் -இறை யன்பு தடைப்படும்
அம்ருத தத்தவத்தை -இறை அனுபவத்தை -பொருளினால் பெற ஆசைப்படுவதற்கே இல்லை-என்பர் யாஜ்ஞவல்கியர் –
புத்ரபாசம் -அத்யாத்ம நூல்கள் அருளும் முனிவர் களுடைய ஆன்ம உணர்வையே-மறைத்து விடுவதை காண்கிறோம் –
பூமியும் பூம் குழலாரும் நம்மை அன்பால் இறைவன் பால் போக ஒட்டாது
தம் வசத்தே அகப்படுத்திக் கொள்ளுவதும் கண்கூடு –
இளைத்தல்-துன்புறுதல் -ஞான சங்கோசமும் ஆகவுமாம் –

இருள் கொண்ட வெந்துயர் மாற்றி –
அவிவிவேக நாந்த தின்முகே பஹுதா சந்தத துக்க வர்ஷிணி –பகவன் பவ துர்த்தி நேபா தச்கலிதம் – என்கிறபடியே
அஞ்ஞான மூலமாய் க்ரூரமாய் இருக்கிற-துக்கத்தை சவாசனமாக நிவர்ப்பிபித்து –

இருள் கொண்ட வெந்துயர் மாற்றி –
இருள்-அஞ்ஞானம் உவமை ஆகுபெயர்
இருள் கொண்டதாதலின் தப்பும் வழி புலனாகாது பட்டேயாக வேண்டியது தென்பது தோன்ற வெந்துயர் -என்றார்
மாற்றி-நீக்கி
அறியாமை என்னும் இருளை நீக்குமவன் குரு
எம்பெருமானாரே குரு
இராமானுஜ திவாகரன் முன்னே இருள் கொண்ட வெந்துயர் எங்கனம் நிற்க முடியும்

தன் ஈறில் பெரும் புகழ் –
ஸ்வபாவிகமாய் அவதி இன்றிக்கே-மென்மேலும் பெருகி வருகிற மகத்தான உம்முடைய கல்யாண குண ஜாதத்தை –

தெருளும் தெருள் தந்து –
தெளியும் படியான ஞானத்தைக் கொடுத்து –

இராமானுசன் செய்யும் சேமங்களே –
இப்படி எம்பெருமானார்-செய்து அருளும் ரஷணங்கள் –

தன் ஈறில் பெரும் புகழே தெருளும் தெருள் தந்து
புகழ்-புகழப் படும் குணம் -அது ஈறில்லாதது-அழிவின்றி நித்தியமாய் உள்ளது -எண்ணற்றதுமாம்
தன் புகழ்-எம்பெருமானாருக்கு அசாதாரணம் ஆனது
இறைவனது குணம் அருள் போலே மறு பாடு அற்றது
பெரும் புகழ்-புகழுக்கு பெருமை யாவது அனுபவிக்கும் குணத்தை விட்டு வேறு ஒரு குணத்தையோ
அன்றி வேறு ஒருவனாம் இறைவன் இடத்தில் உள்ள குணத்தையோ அனுபவிக்கப் போக ஒட்டாமை –
இனி
இருள் கொண்ட வெந்துயர் மாற்றி-அதனால் ஆகிய பெரும் புகழ் ஒன்றினையே
தெருளும் தெருள் தந்தார் -என்று உரை கூறலுமாம்
புகழே -ஏ பிரிநிலைக் கண் வந்தது
துயர் மாற்றிய புகழ் அன்றி வேறு ஒரு புகழ் தெரியாத வண்ணம் அப் புகழையே
என் அறிவுக்கு புலன் ஆக்கினர் என்றதாயிற்று –
நம் ஆழ்வார் சர்வேஸ்வரன் என்னுள்ளே புகுந்து பெறாப் பேறு பெற்றானாய்-கால் வாங்க மாட்டாதே
ரத்ன பர்வதம் போலே நின்ற இம் மகா குணத்தை யல்லது மற்றுள்ள புகழை ஒரு புகழாக
மதியேன் என்னும் கருத்துடன் -பாடி யருளிய –
என்னுள் திகழும் மணிக்குன்ற மொன்றே ஒத்து நின்றான்
புகழும் புகழ் மற்று எனக்கும் ஓர் பொருளே -திருவாய் மொழி -8 7-5 – -என்னும் ஸ்ரீ சூக்தி உடன்-இதனை ஒப்பிடுக-

மற்றுளார் தரமோ –
எத்தனை தரமுடையார் ஆகிலும் செய்ய சக்தரோ –
அறியாதன அறிவித்த அத்தா -நீ செய்தன அடியேன் அறியேனே -என்றால் போலே
சரம பர்வமான-எம்பெருமானார் பக்கலிலே க்ருதஞ்ஞராய் அருளிச் செய்கிறார் –
மற்றுளார் தரமோ –
கழுத்தில் ஓலை கட்டிக்-கொண்டு திரிந்தும் -சாரத்தியம் பண்ணியும் -பதினெட்டு அத்யாயம் உபதேசித்தும் –
சர்வ பாபேப்யோ மோஷ இஷ்யாமி – என்றும் –
அபயம் சர்வ பூதேப்யோ ததாம்யே தத்வ்ரதம் மம-என்றும்
அநேக பிரகாரமாக -படாதன பட்டும் –ஒருவனை ஆகிலும் சர்வேஸ்வரன் ரஷித்தான் அல்லன் –
நாராயண் மஹே திலோககுராவதந்தே கோமா-நுஷச் ரியமவாப சனாதனம் தாம் –
ராமானுஜே புவிமிதே சாகலோபி ஜந்துஸ் சம்சார திவ்ய பதயோர் நஹி வேத்தி பேதம் –-என்கிறபடியே
நெஞ்சே கண்டாயே எம்பெருமானார் நமக்கு பண்ணின உபகார பரம்பரை வாசா மகோசரம் ஆய்த்து –

தென்னரங்கர் தமக்காமோ தேவியர்கட்காமோ சேனையர்கோன் முதலான சூரியர்கட்காமோ
மன்னிய சீர் மாறனருள் மாரி தனக்காமோ மற்றும் உள்ள தேசிகர்கள் தங்களுக்குமாமோ
என்னுடைய பிழை பொறுக்க யாவர்க்கு முடியும் எதிராசா வுனக்கு அன்றி யான் ஒருவர்க்கும் ஆகேன் –
என்று இவ் அர்த்தத்தை ஜீயரும் அருளிச் செய்தார் இறே —

மற்றுளார் தரமோ
எம்பெருமானார் செய்யும் சேமங்கள் மற்ற எவராலும் செய்ய இயலாதவை
மண வாள மா முனிகள் –
தென்னரங்கர் தமக்காமோ தேவியர் கட்காமோ
சேனையர் கோன் முதலான சூரியர் கட்காமோ
மன்னிய சீர் மாறன் அருள் மாறி தமக்காமோ
மற்றுள்ள தேசிகர்கள் தங்களுக்குமாமோ
என்னுடைய பிழை பொறுக்க யாவருக்கு முடியும்
எதிராசா உனக்கன்றி யான் ஒருவர்க்கு ஆகேன்
உன்னருளால் எனக்கு ருசி தன்னையும் உண்டாக்கி
ஒளி வீசும்பில் அடியேனை ஒருப்படுத்து விரைந்தே -ஆர்த்தி பிரபந்தம் – 26-

கொண்ட பெண்டிர் மக்கள் உற்றார் சுற்றத்தவர் பிறரும்
கண்டதோடு பட்டது அல்லால் காதல் மற்று யாதும் இல்லை
எண்டிசையும் கீழும் மேலும் முற்றவும் உண்ட பிரான்
தொண்டரோமாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் துணையே–9-1-1-

சதிர மென்று தம்மைத் தாமே சம்மதித் தின் மொழியார்
மதுர போகம் துற்றவரே வைகி மற்றொன்றுறுவர்
அதிர்காள் செய்கை யசுரர் மங்க வட மதுரைப் பிறந்தார்க்கு
எதர் கொள் ஆளாய் யுய்யல் அல்லால் இல்லை கண்டீர் இன்பமே–9-1-5-

எண் பெருக்கு அந் நலத்து, ஒண் பொருள் ஈறு இல
வண் புகழ் நாரணன், திண் கழல் சேரே-1-2-10-

கொள்ளும் பயன் இல்லை, குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை
வள்ளல் புகழ்ந்து,நும் வாய்மை இழக்கும் புலவீர்காள்!
கொள்ளக் குறைவிலன் வேண்டிற்று எல்லாம் தரும் கோது இல் என்
வள்ளல் மணி வண்ணன் தன்னைக் கவி சொல்ல வம்மினோ–3-9-5-

ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன் தனக்கு
ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
ஏற்கும் பெரும் புகழ் ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து
ஏற்கும் பெரும் புகழ் சொல்ல வல்லார்க்கு இல்லை சன்மமே–3-9-11-

கொண்டாட்டும் குலம் புனைவும் தமர் உற்றார் விழு நிதியும்
வண்டு ஆர் பூங் குழலாளும் மனை ஒழிய, உயிர் மாய்தல்
கண்டு ஆற்றேன் உலகியற்கை! கடல்வண்ணா! அடியேனைப்
பண்டே போல் கருதாது,உன் அடிக்கே கூய்ப் பணி கொள்ளே–4-9-3-

கொள் என்று கிளர்ந்து எழுந்து பெருஞ்செல்வம் நெருப்பாகக்
கொள் என்று தமம் மூடும்; இவை என்ன உலகியற்கை!
வள்ளலே! மணிவண்ணா! உன கழற்கே வரும் பரிசு,
வள்ளல் செய்து அடியேனை உனது அருளால் வாங்காயே –4-9-4-

வம்புலாங் கூந்தல் மனைவியைத் துறந்து பிறர் பொருள் தாரம் என்று இவற்றை
நம்பினார் இறந்தால் நமன் தமர் பற்றி எற்றி வைத்து எரி எழுகின்ற
செம்பினால் இயன்ற பாவையைப் பாவீ தழு வென மொழிவதற்கு அஞ்சி
நம்பனே வந்துன் திருவடி யடைந்தேன் நைமி சாரணி யத்துள் எந்தாய் –ஸ்ரீ பெரிய திருமொழி—1-6-4-

பொறுத்தேன் புன் சொல் நெஞ்சில் பொருள் இன்பம் என இரண்டும்
இறுத்தேன் ஐம்புலன் கட்கனாயின வாயிலொட்டி
யறுத்தேன் யார்வச் செற்றமவை தன்னை மனத் தகற்றி
வெறுத்தேன் நின் அடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே -6-2-1-

பிறிந்தேன் பெற்ற மக்கள் பெண்டிர் என்று இவர் பின்னுதவாவது
அறிந்தேன் நீ பணித்த வருள் என்னும் ஒள் வாள் உருவி
எறிந்தேன் ஐம்புலன்கள் இடர் தீர வெறிந்து வந்து
செறிந்தேன் நின்னடிக்கே திரு விண்ணகர் மேயவனே -6-2-4-

ஆசை வாய்ச் சென்ற சிந்தையராகி அன்னை அத்தன் என் புத்திரர் பூமி
வாசவார் குழலாள் என்று மயங்கி மாளும் எல்லைக் கண் வாய் திறவாதே
கேசவா புருடோத்தமா என்றும் கேழலாகிய கேடிலீ என்றும்
பேசுவார் அவர் எய்தும் பெருமை பேசுவான் புகில் நம் பரம் அன்றே –ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி- 4-5 1-

சோர்வினால் பொருள் வைத்தது உண்டாகில் சொல்லு சொல்லு என்று சுற்றும் இருந்து
ஆர் வினவிலும் வாய் திறவாதே அந்த காலம் அடைவதன் முன்
மார்வம் என்பதோர் கோவில் அமைத்து மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி
ஆர்வம் என்பதோர் பூவிட வல்லார்க்கு அரவர் தண்டத்தில் உய்யலும் ஆமே – 4-5 3-

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –38–ஆக்கி யடிமை நிலைப்பித்தனை என்னை இத்யாதி —

April 14, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

இப்படி ஸ்ரீ வைஷ்ணவர்கள் சேர்க்கும் போதும் -அத்வேஷாதிகள் வேண்டுகையாலே –
தத் ப்ரவர்தகனான-ஈஸ்வரன் இறே -இப் பேற்றுக்கு அடி என்று நினைத்து -சாஷாத் நாராயணோ தேவ -இத்யாதிப் படியே –
ஸ்ரீ எம்பெருமானார் தம்மை ஸ்ரீ ஈஸ்வரனாக பிரதி பத்தி பண்ணி –
இன்று என்னைப் பொருளாக்கி -திரு வாய் மொழி -10 8-9 –என்கிற பாட்டில் –
ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்தால் போலே -இவரும் அருளிச் செய்கிறார் –
அன்றிக்கே –
இவர்களை முன்னிட்டு தம்மை அங்கீகரித்து அருளின ஸ்ரீ எம்பெருமானார் -ஆகையாலே –
இவர் திரு முகத்தைப் பார்த்து -இத்தனை நாள் இவ்வூரிலே நான் வர்திக்கச் செய்தே
என்னை அங்கீகரியாது இருக்கைக்கும் இப்போது அங்கீகரிக்கைக்கும்-ஹேது என் என்று-கேட்கிறார் ஆகவுமாம் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை-

இப்படி ஸ்ரீ ஆழ்வானை இட்டு அடியேனை திருத்தி சேர்த்து -சேஷத்வத்துக்கு இசைவிப்பித்து –
தத் யாதாத்ம்ய ஸீமா பூமியான சரம பர்வதத்திலே -அத்ய அபிநிவிஷ்டனாம் படி -பண்ணி யருளின-தேவரீர் –
இதற்க்கு முற் காலம் எல்லாம் அந்த ரசத்தை அடியேனுக்கு அனுபவிப்பியாதே வ்யர்த்தமே-
விஷயாந்தரங்களிலே வைத்ததுக்கு மூலம் ஏது-
பாக்யவான்கள் உடைய வாக்கிலே இடை விடாது சர்வ காலமும் ஸ்துதிகப்படும் ஸ்ரீ எம்பெருமானாரே –
தேவரீர் உடைய க்ருபா பாத்ரம் உள்ளபடி அறியப் பார்த்தால் எத்தனை-தரம் உடையார்க்கும் அரிதாய் இருக்கும் –
தேவரீரே இந்த ஸூஷ்ம அர்த்தத்தை அருளிச் செய்ய வேணும்-என்றே நேரே கேட்கிறார் –

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை–

நல்லோர் ஆள் அவர்க்கு ஆக்கும் போதும் அத்வேஷாதிகள்-த்வேஷம் இன்மை முதலியவை -வேண்டும் அன்றோ –
அவைகட்கு ஈஸ்வரன் அன்றோ காரணம் -ஆக இப் பேற்றுக்கு அடி ஸ்ரீ ஈச்வரனே யாதல் வேண்டும் -அந்த ஸ்ரீ ஈஸ்வரன் தானும் –
சாஷாத் நாராயணோ தேவ -க்ருத்வா மர்த்யமயீம் தநூம் மக்நான் உத்தரதே லோகன் காருண்யாச் சாஸ்திர பாணி நா -என்று
ஸ்ரீ நாராயணன் நேரே ஆசார்யன்-வடிவம் கொண்டு -கீழ்ப்பட்டவர்களை சாஸ்திரக் கையினால்-கை தூக்கி விடுகிறான்-என்றபடி –
அவன் தானே ஓன்று பத்தாக்கி நடாத்தி கொண்டு போரும் –
நமக்கு ஆசார்யனான ஸ்ரீ எம்பெருமானாரே என்று நினைந்து அவரை நோக்கி
இன்று என்னைப்-பொருள் ஆக்குவதற்கும் முன்பு என்னைப் புறத்து இட்டதற்கும் என்ன ஹேது என்று வினவுகிறார் –
அல்லது –
தன்னடியார்களைக் கொண்டு ஸ்ரீ எம்பெருமானார் தன்னை அங்கீகரித்தவர் ஆகையால் அவரை நோக்கி –
இத்தனை நாள் நான் இவ்வூரிலேயே இருந்தும் என்னை அங்கீ கரியாதற்கும்
இன்று என்னை-அங்கீ கரித்தத்தற்கும் காரணம் என்ன -என்று கேட்கிறார் ஆகவுமாம்-

ஆக்கி யடிமை நிலைப்பித்தனை என்னை யின்றவமே
போக்கிப் புறத்திட்ட தென் பொருளா முன்பு புண்ணியர் தம்
வாக்கில் பிரியா விராமானுச நின்னருளின் வண்ணம்
நோக்கில் தெரிவரிதால் உரையாய் இந்த நுண் பொருளே – 38-

பத உரை –
என்னை ஆக்கி -என்னை சேஷத்வத்திற்கு இசையும் படி யாக்கி –
அடிமை-பாகவத சேஷத்வத்தின் எல்லை அளவிலும் வரும்படி செய்து -அது தன்னை
நிலைப்பித்தனை -நிலை நிற்கும்படி செய்து அருளினீர்
முன்பு -இதற்கு முந்திய காலம் எல்லாம்
அவமே போக்கி -வீணாகப் போகும்படி செய்து
புறத்து இட்டது -வெளி விஷயங்களில் தள்ளி வைத்தது –
என் பொருளா -என்ன காரணமாக
புண்ணியர் தம் -பாக்கியசாலிகள் உடைய
வாக்கில்-பேச்சில்
பிரியா -எப்பொழுதும் பிரியாது விஷயமாய் அமைந்து இருக்கும்
இராமானுச-எம்பெருமானாரே
நின் அருளின் வண்ணம் -தேவரீர் உடைய கிருபையின் பிரகாரம்
நோக்கில்-ஆராய்ந்து பார்த்தால்
தெரிவரிது-தெரிந்து கொள்ள முடியாததாய் இருக்கிறது
இந்த நுண் பொருள்-இந்த சூஷ்மமான விஷயத்தை
உரையாய்-தேவரீரே அருளிச் செய்ய வேணும் –

வியாக்யானம்
அநாதி காலம் -ஈச்வரோஹம் -என்று இருந்த என்னை சேஷத்வத்துக்கு இசையும் படியாக்கி–
அது தன்னை-ததீய சேஷத்வ காஷ்டை யளவும் செலுத்தி -ஸ்த்திப்பித்து அருளினீர் –
இன்று இப்படி செயலாய் இருக்கச் செய்தே பூர்வ காலம் எல்லாம் வ்யர்த்தமே போக்கி –
பாஹ்ய விஷயங்களில் தள்ளி விட்டு வைத்தது -என்ன நிமித்தமாக –
தேவரீரை உள்ளபடி அறிகைக்கு ஈடான பாக்யாதிகருடைய வாக்குக்கு நித்ய விஷயமாய்-இருக்குமவரே –
தேவரீர் உடைய கிருபா பிரகாரம் தர்சிக்கும் அளவில் துர் ஜ்ஞ்நேயமாய் இரா நின்றது –
இந்த ஸூஷ்ம அர்த்தத்தை தேவரீர் தாமே அருளி செய்ய வேணும்-
தெரிவரிது என்றது -விவேகிக்க அரிது என்ற படி –

மக்நன் ஆக உழன்று இருக்கும் நம்மை உத்தரணத்துக்காக வன்றோ நீர் ஆவிர்பவித்தது –உமக்குமா லீலா வியாபாரம் –
புண்ணியர் வாக்கில் பிரியா -கலியும் கெடும் ஸ்ரீ நம்மாழ்வார் தொடக்கமான -நின் –அருளின் வண்ணம் –
வாசி உண்டே ஸ்ரீ பெருமாள் அருளிலும் –

என்னை –
அநாதி காலமே தொடங்கி-சில நாள் தேகமே ஆத்மா என்று பிரமித்த அஞ்ஞாநத்தாலும் –
பின்பு தேஹாதிர்க்தமாய் கொண்டு ஒரு ஆத்மவஸ்து இருக்கிறது என்று அறிந்ததாலும் –
ஈச்வரோஹம் அஹம் போகி-சித்தோஹம் பலவான் ஸூகி -என்னும் படியான அந்யதா அஞ்ஞா நத்தாலும் –
பின்பு காமநாதிகாரத்திலே விழுந்து
காமைஸ் தைர்ஹ்ர்தஜ்ஞான ப்ரபத்யந்தே அந்யதேவதா -என்னும் படியான விபரீத அஞ்ஞா நத்தாலும் –திரிந்து
அசத்கல்பனாய் போந்த அடியேனை

இன்று –
இப்போது -ஆக்கி -அப்படிப் பட்டவற்றை எல்லாம் விடுவித்து –
முதலிலே நானும் உனக்கு பழ வடியேன் -பகவத் சேஷத்வத்தில் அந்வயிப்பித்து -அடிமை நிலைப்பித்தனை -பின்பு –
அடியார்க்கு என்னை ஆள் படுத்த விமலன் -உன் அடியார்க்கு ஆட் படுத்தாய் -என்னும்படி ஸ்ரீ சர்வேஸ்வரன்-உபகரித்தால் போலே –
குருரேவ பரப்ரம்மம் -ஆசார்யஸ் சகிரிஸ் சாஷாத் சாருபி ந சம்சய -என்னும் படியான தேவரீர்-
அடியேனை சேஷத்வ காஷ்டா ரூபமான ததீய சேஷத்வத்திலே நிலை நிறுத்தினீர் –

முன்பு –
பூர்வ காலத்திலே-

அவமே போக்கி –
வ்யர்த்தமாக பொகட்டு –

புறத்திட்டது –
அப்ராப்த விஷயங்களிலே பிரவணனாகப் பண்ணியது –

என் பொருளா –
என்ன பிரயோஜனம் -மூலம் ஏது -என்று கேட்க –
மக்நானுத் தீராதே லோகன் -என்கிறபடியே-சர்வரையும் உத்தரிப்பிக்கைக்காக அவதரித்த நீரும்
ஸ்ரீ சர்வேஸ்வரனைப் போலே என்னை உம்முடைய-கிரீடைக்கு இவ்வளவும் விஷயமாக்கி வைத்தீரே -என்ன –
இவ்வளவும் உமக்கு அதிகாரம் இல்லாமையாலே அப்படி வைத்தோம் -என்ன –
அதிகாரம் உண்டேல் அரங்கர்-இரங்கரோ – அதிகாரம் இல்லாதவர்களுக்கு அன்றோ
எதிராசா நீர் இரங்க வேண்டுவது –
ஆனாலும் இப்போது நீர் இரங்க வேண்டுவது எந்த அதிகாரத்தை பார்த்து-என்று
முன்பு தம்மை –அவமே புறத்திட்டது என் பொருளா –என்னும்படியை பிடிக்கிறார் காணும் –

இன்று என்னைப் பொருள் ஆக்கி –என்கிற பாட்டிலே ஸ்ரீ ஆழ்வாரும் அவன் மடியைப் பிடித்தார் இறே –
நம்முடைய கிருபையாலே இன்று உம்மை இப்படி-பண்ணினோம் என்றீர் ஆகில் –
அந்த கிருபையினுடைய ஸ்வபாவத்தை சொல்ல வேணும் என்கிறார் –

இன்று என்னை அடிமை யாக்கி நிலைப்பித்தனை –
முன்பு எல்லாம் ஸ்வ தந்திரனாய் மதித்துத் திரிந்த என்னை இன்று அடிமைக்கு இசையும் படி ஆக்கினீர் –
ஆக்கி அடிமையின் எல்லை நிலத்திலே கொண்டு போய் நிலை நிறுத்தினீர் –
அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் -என்று ஸ்ரீ இறைவனை ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்தார் –
அது போன்றது இதுவும் –
தான் முன்னர் இருந்த நிலைக்கும் இப்போது ஏற்பட்டு உள்ள நிலைமைக்கும் உள்ள நெடு வாசியை-நோக்கி –
ஆக்கி-என்கிறார் –
திருத்தி -என்கின்றிலர்-அவர்க்கே புதிய பொருளாகத் தோற்றுகிறது-
வேதமும் அசத் -சத் -என்று நெடு வாசியைக் காட்டிற்று –

அவமே போக்கிப் புறத்து இட்டது என் பொருளா முன்பு –
கழிந்த நாட்களுக்கு இரங்கிக் கூறுகிறார் -அவமே போக்கி -என்று
புறத்து இடல்-
பாஹ்ய விஷயங்களில் ஈடுபடும்படி விட்டு இருத்தல்-
இழப்பதும் ஸ்ரீ எம்பெருமானாராலேயே -பெறுவதும் ஸ்ரீ எம்பெருமானாராலேயே என்று இப்போது நினைக்கிறார் –
அத்வேஷாதி களுக்கு காரணமான ஸ்ரீ ஈச்வரனாம் மூல ஸூஹ்ருதத்தை -ஸ்ரீ எம்பெருமானாரிலும் வேறுபட்டதாக நினைப்பது சரி யன்று –
சாஷாத் அம்மூல ஸூஹ்ருதமே -ஸ்ரீ எம்பெருமானாராக வந்து-உள்ளது என்பது -ஸ்ரீ அமுதனார் கருத்தாகும் –

இட்டது -என்று -இடுகைக்கு கூறுமாற்றால் தனது பாரதந்த்ரியத்தை வெளிப்படுத்தினார்
என் பொருளா -என்ன காரணமாக
இன்று -என்பது ஆளாக்கினதற்கு பின்பு உண்டான காலத்து
முன்பு -என்பது -அதற்கு முன்புள்ள அநாதியான காலத்தை –

புண்ணியர் தம்
மயர்வற மதி நலம் பெறுகைக்கு உடலான பகவத் நிர்ஹேதுக கிருபையான பாக்யத்தை உடையவர்கள் –

வாக்கில் பிரியா –
அவர்கள் திரு வாக்கிலே இடைவிடாது இருக்கிற –
பூர்வே மூர்த் நாயஸ் யாஸ்வயமுபகதா தேசிக –என்னும்படியான ஸ்ரீ நம் ஆழ்வார் முதலானவர்கள் –
பொலிக பொலிக பொலிக என்று மங்களாசாசனம் பண்ணினார்கள் இறே
அன்றிக்கே –
குரோர் நாம சாதா ஜபேத் -குரோர் வார்த்தாஸ் சகதயேத்-என்று இருக்கையாலே –
நித்யம் யதீந்திர-தவ திவ்ய வபுஸ் ஸ்மர்தவ் மேசக்தம் மனோ பவ து வாக்குண கீர்தனவ் ஸௌ
க்ர்த்யஞ்ச தாஸ் கரனேது-கரத்வயஸ் யவ்ர்தயந்த்ரே -என்கிற படியே பிரார்த்தித்து அருளும் –
வாசா வுதீந்திர மனசா வபுஷா சயுஷ்மத் பாதாரவிந்த யுகளம் பஜதாம் குருணாம் கூராதி நாத குருகேச முகாத்யு பும்ஸாம் -என்னும்படி
ஸ்ரீ ஆழ்வான் ஸ்ரீ பிள்ளான்-தொடக்கமான பாக்யவான் களுடைய திரு உள்ளத்திலே சர்வ காலமும் அனுசந்திக்கப்படுகிற

இராமானுசா
ஸ்ரீ எம்பெருமானாரே –

புண்ணியர் தம் வாக்கில் பிரியா இராமானுசன் –
ஸ்ரீ எம்பெருமானாரை உள்ளபடி அறிக்கைக்கு ஈடான பாக்கியத்தை உடையவர் புண்ணியர் –
அவர் தம் வாக்கில் பிரியாமை -எப்பொழுதும் அவர்களால் துதிக்கப் பெறுதல்-

நின் அருளின் வண்ணம் –
பந்த மோஷங்கள் இரண்டுக்கும் பொதுவான அவனுடைய கிருபை-போல் அன்று இறே –
மோஷ ஏக ஹேதுவான தேவரீருடைய கிருபை
வண்ணம் -அதனுடைய பிரகாரம் ஸ்வபாவம்-என்றபடி –

நோக்கில் –
அதை நன்றாக தர்சித்தால் -அறிய வேண்டும் என்று பார்த்தால் –

தெரிய வரிது –
அறிக்கைக்கு-கடினமாய் இருக்கும் -இத்தனை நாளும் பலியாதே போய்
இன்று நிர்ஹே துகமாக பலித்த பிரகாரம் என் என்று-விசாரித்தால் அந்த பிரகாரம் இன்னது என்று
விவேக்கிக்க அரியதாய் இருக்கும் என்றபடி –

ஆல் –ஆச்சர்யம் –
ஏகாகாரமான தேவரீர் உடைய கிருபை என் அளவில் மாதரம் ஆகார த்வயத்தை பஜித்ததோ என்று ஆச்சர்யப்படுகிறார் –
அன்றிக்கே –
ஆல் என்றது இன்று நிர்ஹேதுகமாக பலித்த கிருபை முற்காலத்திலே பலியாதே
போர வைத்தாய் புறமே –
அற்ப சாரங்கள் அவை சுவைத்து அகன்று ஒழிந்தேன் -என்று ஸ்ரீ ஆழ்வார் நிர்வேதப் பட்டால் போலே-
இந்த அனுபவத்தை இழந்து விஷய ப்ரவணனாக போனேன் என்று இழந்த நாளை நினைந்து-நிர்வேதப்படுகிறார்

நின்னருளின் வண்ணம் நோக்கில் தெரிவரிதால்-
வண்ணம்-பிரகாரம்
நோக்கில்-ஆராய்ந்தால்
தெரிவரிது –விவரிக்க முடியாமல் இருக்கிறது
இதற்கு முன் நோக்காததும் -இன்று இலக்கு ஆக்கியதுமான பிரகாரம் தெரிவரிதாய் உள்ளது –
ஸ்ரீ எம்பெருமானார் –நல்லோர் இன்று உம்மை ஆளாக்கினர் -ஆகையால் அருள் பெற்றீர்–என்றார்
அன் நல்லோர் இது காறும் ஏன் ஆள் ஆக்கி கிற்றிலர் என்றார் -இவர்
இது காறும் உமக்கு இசைவில்லை -என்றார் அவர் –
இன்று இசைவு வந்தது எங்கனம் -என்றார் இவர்
அத்வேஷாதிகள் உம்மிடம் உண்டானமையால் என்றார் அவர்
அத்வேஷாதிகள் இன்று உண்டாவானேன் -என்றார் இவர்
அது ஸ்ரீ ஈஸ்வர கடாஷம் ஆகிற பிரதம ஸூஹ்ருதத்தாலே என்றார் அவர்
அவ் வீச்வரனும் தேவரீர் அன்றோ –ஏன் முன்பே கடாஷித்து இருக்க கூடாது –
இப்பொழுது-கடாஷிப்பதற்கு என்று ஒரு அதிகாரம் உண்டாயிற்றோ எனக்கு -ஆகையால் இப்பொழுது-
அருள் புரிதற்கும் முன்பு அருள் புரியாததற்கும் ஒரு காரணம் புரிய வில்லையே –
இது நுண் பொருளாய் இரா நின்றது -நீரே அருளிச் செய்ய வேண்டும் என்கிறார் –
ஆல்-அசை ஆல்-ஆகையால் என்றபடியுமாம்

உரையாய் இந்த நுண் பொருளே
இந்த ஸூஷ்ம அர்த்தத்தை -உபய விபூதி விருத்தாந்தத்தையும்-சாஷாத் கரித்தவர் ஆகையாலே
தேவரீர் அறிந்து அருளுமே -ஆகையாலே தேவரீரே அருளிச் செய்ய வேணும் என்றது ஆய்த்து .

உரையாய் இந்த நுண் பொருளே –
இந்த ஸூஷ்ம அர்த்தத்தை தேவரீரே அருளி செய்ய வேணும் –
இன்று என்னைப் பொருள் ஆக்கித் தன்னை என்னுள் வைத்தான்
அன்று என்னைப் புறம் போகப் புணர்த்தது என் செய்வான் -திரு வாய் மொழி10-8 9- – என்று-
ஸ்ரீ நம் ஆழ்வார் அருளி இருப்பது இங்கு அனுசந்திக்கத் தக்கது–

குளித்து மூன்று அனலை ஓம்பும் — தன்னை ஒழித்திட்டேன்–.என் கண் இல்லை நின் காணும் பக்தன் அல்லேன்
களிப்பது என் கொண்டு நம்பி -குண பூரணன்-களிக்கலாமே–.கடல் வண்ணா-இதன் மூலம் தெரிந்து கொண்டேன்
பிரயோஜனந்தார்களுக்கு கொடுத்தாயே – கதறுகின்றேன்.-இது ஒன்றே முடியும்
பிர பன்னன்-பண்ண கூடாதே -என் கண் இல்லை
ஞானமில்லை சொன்னேனே -அளித்து எனக்கு அருள் செய் கண்டாய் ..
அது போல இந்த பாசுரத்திலும் முன்னுக்கு பின் முரண் ஆக்கினீர் பாசுரம் பாடினேன்–

————-

ஆக்கி யடிமை நிலைப்பித்தனை என்னை-

அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து அறியா மா மாய்த்து அடியேனை வைத்தாயால் -2-3-3-

மாதவன் என்றதே கொண்டு, என்னை இனி இப்பால் பட்டது
யாதவங்களும் சேர் கொடேன் என்று என்னுள் புகுந்து இருந்து
தீது அவம் கெடுக்கும் அமுதம்; செந்தாமரைக் கண் குன்றம்;
கோது அவம் இல் என் கன்னற் கட்டி எம்மான் என் கோவிந்தனே–2-7-3-

பற்பநாபன், உயர்வு அற உயரும் பெருந்திறலோன்,
எற்பரன், என்னை ஆக்கிக் கொண்டு, எனக்கே தன்னைத் தந்த
கற்பகம், என் அமுதம், கார் முகில் போலும் வேங்கட நல்
வெற்பன், விசும்போர் பிரான் எந்தை தாமோதரனே–2-7-11-

மனக்கே ஆட் செய் எக் காலத்தும்’ என்று,என்
மனக்கே வந்து இடை வீடு இன்றி மன்னித்
தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே;
எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே–2-9-4-

ஆவார் ஆர் துணை? என்று அலை நீர்க் கடலு ளழந்தும்
நாவாய் போல் பிறவிக் கடலுள் நின்று நான் துளங்கத்
தேவார் கோலத் தொடும் திருச் சக்கரம் சங்கினொடும்
ஆஆ! என்று அருள் செய்து அடியேனொடும் ஆனானே–5-1-9-

ஆனான் ஆளுடையான் என்றஃதே கொண்டுகந்து வந்து
தானே இன்னருள் செய்து என்னை முற்றவும் தானானான்
மீனாய் ஆமையுமாய் நர சிங்கமு மாய்க் குறளாய்க்
கானார் ஏனமுமாய்க் கற்கியாம் இன்னம் கார்வண்ணனே–5-1-10-

பிரியாது ஆட்செய்து என்று பிறப்பறுத்து ஆள் அறக் கொண்டான்
அரியாகி இரணியனை ஆகம் கீண்டான் அன்று
பெரியார்க்கு ஆட்பட்டக் கால் பெறாத பயன் பெறுமாறு
வரி வாள்வாய் அரவணை மேல் வாட்டற்றான் காட்டினனே–10-6-10-

இன்று என்னைப் பொருள் ஆக்கி தன்னை என்னுள் வைத்தான்
அன்று என்னைப் புறம் போகப் புணர்த்தது என் செய்வான்
குன்று என்னத் திகழ் மாடங்கள் சூழ் திருப் பேரான்
ஓன்று எனக்கு அருள் செய்ய உணர்த்தல் உற்றேனே–10-8-9-

உண்ணி லாவிய ஐவ ராற் குமை தீற்றி என்னை உன் பாத பங்கயம்
நண்ணிலா வகையே நலிவான் இன்னம் எண்ணு கின்றாய்
எண்ணிலாப் பெரு மாய னே!இமையோர்கள் ஏத்தும் உலக மூன்றுடை
அண்ணலே! அமுதே! அப்பனே! என்னை ஆள்வானே!–7-1-1-

என்னை ஆளும் வன்கோ ஓரைந்திவை பெய்து இராப் பகல் மோது வித்திட்
டுன்னை நான் அணுகா வகை செய்து போதி கண்டாய்
கன்னலே! அமுதே! கார் முகில் வண்ணனே! கடல் ஞாலம் காக்கின்ற
மின்னு நேமியினாய்! வினையேனுடை வேதியனே!–7-1-2-

சூது நான் அறியா வகைச் சுழற்றி ஓர் ஐவரைக் காட்டி உன்னடிப்
போது நான் அணு காவகை செய்து போதி கண்டாய்
யாதும் யாவரும் இன்று நின் னகம் பால் ஒடுக்கி ஓர் ஆலி னீளிலை
மீது சேர் குழவி! வினையேன் வினைதீர் மருந்தே!–7-1-4-

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –37–படி கொண்ட கீர்த்தி இராமாயணம் என்னும் பக்தி வெள்ளம் இத்யாதி —

April 14, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

இப்படி இருக்கிற இவர் தம்மை நீர் தாம் அறிந்து பற்றின படி என் -என்ன
நான் அறிந்து பற்றினேன் அல்லேன் –
அவர் திருவடிகளில் சம்பந்தம் உடையவர்களே -உத்தேச்யர் என்றும் இருக்குமவர்கள் –
என்னையும் அங்குத்தைக்கு சேஷம் ஆக்கினார்கள்-என்கிறார் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை-

இப்படி ஆஸ்ரயண சௌகர்ய ஆபாதகங்களான கிருபாதி குணங்களை நீர் அறிந்த பின்பு இறே ஆஸ்ரயித்தது-
இப்படி உமக்கு தெளிவு பிறந்தது என் என்று கேட்டவர்களைக் குறித்து –
முதலிலே நான் அறிந்து ஆஸ்ரயித்தேன் அல்லேன் –
ஸ்ரீ எம்பெருமானார் உடைய கல்யாண குணங்களை அனுபவிக்கும் பிரிய தமருடைய திருவடிகளிலே அவஹாகித்து-
அனுபவிக்கும் ரசஜ்ஜர் தங்களுடைய பரசமர்த்தை ஏக பிரயோஜனதையாலே –
என்னைப் பார்த்து அங்குத்தைக்கு ஆளாக்கி
அனந்யார்ஹராம்படி பண்ணினார்கள் –அத்தாலே நான் அறிந்தேன் என்கிறார் –

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை–

ஸ்ரீ எம்பெருமானாருடைய ஸ்வபாவத்தை எப்படி அறிந்து பற்றினீர்-என்பாரை நோக்கி
அவர் அன்பர் திருவடிகளில் சம்பந்தம் உடைய ஸ்ரீ வைஷ்ணவர்கள் என்னையும் சேர்க்க சேர்ந்தேன்-
நானாக அறிந்து பற்றினேன் அல்லேன் -என்கிறார் –

படி கொண்ட கீர்த்தி இராமாயணம் என்னும் பக்தி வெள்ளம்
குடி கொண்ட கோயிலில் இராமானுசன் குணம் கூறும்
கடி கொண்ட மா மலர்த்தாள் கலந்து உள்ளம் கனியும் நல்லோர்
அடி கண்டு கொண்டு உகந்து என்னையும் ஆள் அவர்க்கு ஆக்கினரே – 37-

பத உரை
படி கொண்ட -பூமி அடங்கப் பரவின
கீர்த்தி -கீர்த்தியை உடைய
இராமாயணம் என்னும் -இராமாயணம் என்று சொல்லபடுகிற
பக்தி வெள்ளம்-பக்தி பிரவாஹம்
குடி கொண்ட -குடி இருக்கிற
கோயில்-திருக் கோயிலாய் இருக்கிற
இராமானுசன் -எம்பெருமானாருடைய
குணம் கூறும் -குணங்களை பேசா நிற்கும்
அன்பர் -பக்தர்களின்
கடி கொண்ட -வாசனையயுடையதும்
மா -சீறியதும்
மலர்-அழகியதுமான
தாள் -திருவடிகளில்
உள்ளம் கலந்து -நெஞ்சம் கலந்து
கனியும் -அன்பு கனிந்து இருக்கும்
நல்லோர் -நல்லவர்கள்
அடி கண்டு – இவ் ஆத்மா வஸ்துவின் அடித்தளமான சேஷத்வத்தை அனுசந்தித்து
உகந்து -சந்தோஷித்து
கொண்டு-என்னை ஏற்று
என்னையும் அவர்க்கு -அவ் எம்பெருமானார்க்கு
ஆள் ஆக்கினர்-சேஷம் ஆக்கினார்கள்

வியாக்யானம் –
பூமியை அடங்கக் கொண்டு இருக்கும் கீர்த்தியை உடைத்தான – ஸ்ரீ இராமாயணம் ஆகிற-பக்தி சாகரம் –
நித்ய வாசம் பண்ணுவதொரு திவ்ய ஸ்தானமாய் இருக்கிற எம்பெருமானாருடைய-குணங்களை பேசா நின்றுள்ள –
பிரேம யுக்தருடைய பரிமளத்தை உடையதாய் -ஸ்லாக்யமாய் -போக்யமாய் –இருக்கிற திருவடிகளிலே –
நெஞ்சு கலந்து -ஸ்நேஹித்து இருக்கும் -விலஷணரானவர்கள்-
இவ் ஆத்ம வஸ்துவும் அங்குத்தைக்கு சேஷம் அன்றோ என்று கொண்டு -இதினுடைய படியை தர்சித்து
அந்த சம்பந்தமே ஹேதுவாக விரும்பி -அங்கீகரித்து -தங்களைப் போலே என்னையும் அவர்க்கு-சேஷமாம் படி பண்ணினார்கள்-
ஆகையாலே நான் அறிந்து இவ் விஷயத்தைப் பற்றினேன் அல்லேன்-
ஸ்ரீ வைஷ்ணவர்கள் சேர்க்கச் சேர்ந்தேன் இத்தனை என்று கருத்து –
ஸ்ரீ ராமாயணத்தை பக்தி சாகரம் என்றது நிரவதிக பக்தி ஜனகத்வத்தாலே
கடி -மணம்–

உலகத்தில் கடல் -மாறி இங்கு – கடல் உலகத்தில் -இவர் -உள்ளத்தில் உள்ளதே –
அடி கண்டு கொண்டு உகந்து -என்னை திருத்தும் ஆச்சார்யர்கள் –உகந்து ஆட்க்கொண்டார்கள் –
அவர்கள் உகப்பே நம்மை ஆளாக்கும் -குற்றம் பார்த்து கை விடாமல் –
நம் சம்பிரதாய ஏற்றம் -அதிகாரி இல்லாதார்க்கு அன்றோ எதிராசா நீ இரங்க வேண்டும் —
ஸ்ரீ வால்மீகி மலை -ஸ்ரீ ராமர் குணங்கள் கடல் -தேக்கி வைப்பது ஸ்ரீ ஸ்வாமி உள்ளத்தில் –
பக்தி ரசம் அறிந்து -தானே சுற்றம் எல்லாம் பின் தொடர்வது போலே சுயமாகவே அனுபவித்தார் –
திருவடி போலே ஆச்சார்யர்கள் நம்மை -இந்திரியங்கள் ராவணன் தலைகள் —

படி கொண்ட கீர்த்தி
சத கோடி பிரவிஸ்த்ரம் -என்றும் –
வேத ப்ராசேத ஸாதா சீத் சாஷாத் ராமாயணாத் மனா –என்றும் சொல்லுகிறபடியே
பூ லோகத்தில் எல்லாம் வ்யாப்தி இருக்கிற கீர்த்தி உடைத்தான –
படி கொண்ட -என்ற இது உபலஷணம் –
சத்ய லோகத்தில் நின்றும் பிரம்மாவும் தாதர்சரான நாரத பகவானும் பூலோகத்தில் வந்து- வால்மிகியைக் குறித்து நியமித்தும்
உபதேசித்தும் போருகையாலே -இதனுடைய கீரத்தி ஊர்த்த லோகங்களிலும் இறே பிரசித்தமாய் இருப்பது

ராமாயணம் என்னும் பக்தி வெள்ளம் –
காவ்யம் ராமாயணம் க்ரிச்னம் ஸீதாயாஸ் சரிதம் மஹத் – என்று இருந்தாலும்
யச்யைதே தஸ்ய தத்தனம் -என்கிற கட்டளையாலே அவளுடைய சம்பத் எல்லாம் சேஷியானவனது-ஆகையாலே
ராம விஷயமாய் இருக்கும் என்று சொல்லத் தட்டில்லை -இறே
தாசர்தமான ராமாயணம்-என்கிற கரை புரண்ட பக்தி ரசத்தை -இதில் பிரதிபாத்யமாய் இருந்துள்ள அர்த்தத்தை
பக்தி ரசம் என்று சொல்ல வேண்டி இருக்க-இது தன்னையே பக்தி வெள்ளம் என்றது –
தத் குண சாரச்யாத்து தத் வ்யபதேச -என்றால் போலே அதுக்கு உத்பாதகம் ஆகையாலே –
ஏகைகம ஷரம் ப்ரோக்தம் மகா பாதக நாசகம் -என்ற பிரகாரத்திலே
அர்த்த பர்யந்தம் போக வேண்டி இராதே-சப்த ராசி தானே ரசித்து இருக்கும் என்னுதல்
இப்படி பட்ட பக்தி தான் அங்கே ஆஸ்ரயித்து இருக்கும் நாங்கள் அத்தை பெருகைக்கு என் என்றால்

படி கொண்ட கீர்த்தி –
படி-
ஏனைய உலகங்களுக்கும் உப லஷணம்
பிரமனால் நூறு கோடிப் பிரபந்தமாக இராமாயணம் இயற்றப் பெற்று உம்பர் உலகில் பரவி இருப்பதாகவும் –
அதுவே நாரதர் வாயிலாக வால்மீகிக்கு வந்ததாகவும் சொல்லப் படுவது காண்க –
இனி
படியிலே கீர்த்தி கொண்ட இராமாயணம் என்று கூட்டி –
மற்ற முனிவர்கள் இயற்றிய-இராமாயணங்களை விட பிரசித்தி பெற்ற ஸ்ரீ வால்மீகி இராமாயணத்தை கூறிற்றாகவுமாம் –

இராமாயணம்-என்னும் பக்தி வெள்ளம் –
அளவற்ற பக்திப் பெருக்கிற்கு காரணமாகிய ஸ்ரீ இராமாயணத்தை -பக்தி வெள்ளம்-என்கிறார் –
இனி ஸ்ரீ வால்மீகி முனிவருடைய ஸ்ரீ ராம பக்தி உள் அடங்காது வெளிப்பட்டமை பற்றி -பக்தி வெள்ளம் –என்றார் ஆகவுமாம்-
வெள்ளம்-பிரவாஹம்
வால்மீகி கிரி சம்பூதா ராம சாகரகாமி நீ
புனாதி புவனம் புண்யா இராமாயண மகா நதீ–என்று
ஸ்ரீ வால்மீகி என்னும் மலையில் தோன்றி ஸ்ரீ இராமாபிரான் என்னும் கடலை நோக்கி செல்லும்
ஸ்ரீ இராமாயணம் என்னும் புண்ணிய நதி உலகத்தை சுத்தம் ஆக்குகிறது -என்று வெள்ளமாக-
ஸ்ரீ இராமயணத்தை முன்னோர் உருவகம் செய்து உள்ளமை காண்க –
இனி
வெள்ளம் -கடலுமாம் –
வெள்ளத்தின் உள்ளானும் – 99- என்று பொய்கை ஆழ்வாரால் கடல்-வெள்ளமாக சொல்லப்பட்டமை காண்க –
ஸ்லோக சார சமாகீர்ணம் சர்வ கல்லோல சங்குலம்-காண்டாக்ராஹா மகாமீனம் வந்தே இராமாயண ஆர்ணவம் -என்று
ஸ்லோகங்களின் சாரத்தினால் நிறைந்ததும்
சர்க்கம் என்கிற அலைகள் நெருங்கினதும்
காண்டம் ஆகிற முதலையாம் பெரு மீன்கள் உடையதுமான
ஸ்ரீ இராமயணமாம் கடலினை வந்திக்கிறேன் -என்று ஸ்ரீ இராமாயணம் கடலாக உருவகம் செய்யப்பட்டு உள்ளமையும் காண்க –

வெள்ள நீர் சடையன் -வெள்ளம் தண்ணீர் பக்தி வெள்ளம் -உருகி நைந்து ஈரமான நெஞ்சம் -என்றுமாம்

குடி கொண்ட-கோயில் இராமானுசன் –
ஸ்ரீ எம்பெருமானாரே ஒரு கோயிலாக அவர் திரு உள்ளத்தை ஒரு ஷணம் பிரியாதே இவ்விடமே-குடியாக நித்ய வாசம் பண்ணி இருந்தது-
இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மா இரும் சோலை என்னும் பொருப்பிடம்-மாயனுக்கு என்பர் நல்லோர் –
ஏதத் பிரதி பாத்யனான பரமபுருஷனுக்கு அவை எல்லாம் கோயில்கள் ஆமாப் போலே
தத் பிரதிபாதகமான ஸ்ரீ ராமாயணம் என்னும் பக்தி பிரவாஹத்துக்கு இவரும் ஒரு கோயிலாக காணும் இருப்பது –

இராமானுசன் –
அந்த ஸ்ரீ ராம அவதாரத்தில் திவ்ய தம்பதிகள் விஷயமாக சர்வவித கைங்கர்யங்களையும் பண்ணி-
வயிற்றைப் பெருக்கி பக்தியினுடைய ரசம் அறிந்தவர் இறே எம்பெருமானாராய் அவதரித்தது

குடி கொண்ட கோயில் இராமானுசன் –
பள்ளத்தாக்கான இடங்களில் வெள்ளம் கோத்து நிற்பது போலே எம்பெருமானாரது ஆழமான நெஞ்சத்தில்
ஸ்ரீ இராமாயணம் என்னும் பக்தி வெள்ளம் புகுந்து புகுந்து தேங்கிக் குடி கொண்டது –
ப்ரேமேயத்துக்கு கல் அரணாய் அமைந்த கோயிலே போதும் –
பிரமாணத்துக்கோ அறிவார்ந்த ஸ்ரீ எம்பெருமானாரே அரணாக அமைய வேண்டி இருக்கிறது –
பிரமாணம் அல்லது பிரமேயம் சித்தி யாமையாலே பிரபல பிரமாணமான ஸ்ரீ இராமாயணத்துக்கு
கல் அரணாம் கோயிலாக ஸ்ரீ எம்பெருமானாரே அமைகிறார் –
ஸ்ரீ வைஷ்ணவ சித்தாந்தம் இராமாயணத்தில் பொதிந்து கிடக்கையாலே அந்த சித்தாந்தத்தை ஸ்ரீ எம்பெருமானாரே-பாதுகாக்கின்றார் -என்க –

ஸ்ரீ இராமாயணமும் ஸ்ரீ திருவாய் மொழியும் ஆகிற வலியன இரண்டு மகா பிரபந்தங்கள் உண்டாய் இருக்க –
ஒரு மதிளை இடித்து விட்டால் அந்த வைஷ்ணவ சித்தாந்தம் குலைந்து விடுமா –
என்று ஸ்ரீ வைணவ கோயில்களை இடித்த குலோத்துங்க சோழனின் மகன் கூறியதாக -10 7-5 – – ஈட்டில்-காணப்படுகிறது –
உகவாதாரும் நெஞ்சு உளுக்கும்படி ஸ்ரீ வைஷ்ணவ சித்தாந்தமான பக்தியை புகட்டும் ஸ்ரீ இராமாயணத்தை-
சித்தாந்த ஸ்த்தாபகராகிய ஸ்ரீ எம்பெருமானார் கோயிலாக பாதுகாப்பது பொருத்தமாக இருக்கிறது அன்றோ –
மற்று ஒரு சித்தாந்த சாஸ்திரம் ஆகிய ஸ்ரீ திரு வாய் மொழியை பேணி வளர்த்து காப்பது போலே-
ஸ்ரீ இராமயணத்தையும் அவர் பேணி வளர்த்து காக்கின்றார் -என்க

ஸ்ரீ திருவாய் மொழியில் –கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ – 7-5 1- -என்று நம் ஆழ்வார்-அருளி செய்ததை
பின்பற்றி ஸ்ரீ எம்பெருமானார் இராமாயணத்தை எப்போதும் நெஞ்சில் வைத்து-அனுசந்திப்பார் ஆயினர் –
மற்றைய அவதார சரித்ரங்களை ஸ்ரீ இராம சரித்ரித்தற்கு போலியாகவே நினைத்து அருளுவர் –
ஸ்ரீ கண்ணன் இடம் காதல் கொண்டவள் ஆயினும் ஸ்ரீ ஆண்டாள்-மனதிற்கு இனியான் –என்று ஸ்ரீ இராமனைக்-குறிப்பிடுகிறாள் அன்றோ –
ஸ்ரீ பெரும்புதூர் மா முனிக்கும் அவர்க்கு பின்னானாளுக்கும் ஸ்ரீ இராமன் திறத்து-ஒரே மனப்பான்மை தான்-
ஸ்ரீ இராமாயணத்தை இடைவிடாது அனுசந்திப்பதனால் இவரிடம் பக்தி கரை-புரண்டமை பற்றி –
ஸ்ரீ இராமாயணம் என்னும் பக்தி வெள்ளம் -குடி கொண்ட கோயில்

ஸ்ரீ இராமானுசன் பக்தி வெள்ளம்-குடி கொண்ட கோயில் இராமானுசன் என்றதாகவும் கொள்ளலாம் –
பக்தி வெள்ளத்தை சுவை மிகுதி பற்றி –அமுத வெள்ளமாக -குறிப்பிடுகிறார் –
ஸ்ரீ நம் ஆழ்வார் திருவாசிரியத்திலே -இராம சரித்ரத்தை இடைவிடாது-அனுபவித்து பக்தி யாகிற அமுத வெள்ளத்தானாம்
சிறப்பு விட்டு நல் வீடு பெறினும் கொள்வது எண்ணாது அதனைப் புறக்கணித்தார் சிறிய திருவடி –

பக்தி வெள்ளம் எனப்படும் இராமாயணமாம் கடல் -சுவை மிக்கு இருத்தலின் ஸ்ரீ இராமானுச முனிவரின்-உள்ளத்திலேயே குடி கொண்டது –
அகஸ்த்ய முனிவரது உட் புகுந்த உப்பு வெள்ளம் அங்கே குடி கொள்ள-முடிய வில்லை -அகஸ்தியர் அதனை உமிழ்ந்து விட்டார் –
ய பிபன் சததம் ராம சரிதாம்ருத சாகரம் அத்ருப்தச்தம் முனிம் வந்தே ப்ராசேதச மகல்மஷம் -என்று
எவர் எப்பொழுதும் ராம சரித்ரம் ஆகிய அமுதக்கடலை குடித்தும் -போதும் என்று திருப்தி அடையாது இருக்கிறாரோ –
குற்றம் அற்ற அந்த வால்மீகியை வணங்குகிறேன் -என்றபடி வால்மீகி போலே
ஸ்ரீ எம்பெருமானாரும் பக்தி அமுதக் கடலை குடித்து தெவிட்டாதவர்-என்க –

இனி கோயில் இராமானுசன்
என்பதற்கு கோயிலில் -ஸ்ரீ ரங்கத்தில் -வாழும் இராமானுசன் என்று-பொருள் ஆகவுமாம் –
இதனால் ஸ்ரீ அயோத்தியில் வாழ்ந்த ஸ்ரீ இராமானுசனை -ஸ்ரீ இளைய பெருமாளை -விலக்குகிறது
ஸ்ரீ கோயில் அண்ணன் -என்று ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்ததற்கு இது பொருந்தி இருப்பது காண்க –

குணம் –
அவருடைய கல்யாண-குணங்களை –

கூறும் அன்பர்
இந்த லோகத்தார் எல்லாருக்கும் உபதேசிக்கும் பிரேம யுக்தர் –
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கி யாதொன்றும் இல்லைகலியும் கெடும் கண்டு கொண்மின் -என்று ஸ்லாகித்த ஸ்ரீ நம் ஆழ்வாரும் –
அவர் கொடுத்த ஸ்ரீ பவிஷ்யாசார்யா விக்ரகத்தை ஆராதித்துக் கொண்டு போந்த ஸ்ரீ நாத முனிகளும் –
ஆ முதல்வன் என்று-பிரதி பத்தி பண்ணின ஸ்ரீ ஆளவந்தாரும் –

குணம் கூறும் அன்பர் –
ஸ்ரீ இராமாயணத்தை மட்டும் விசேடித்து அனுசந்திப்பதை குறையாக கருதாது –
சாரத்தை கிரஹிக்கும் குணமாக கொண்டு -அதனைக் கூறுகின்ற பக்தர்கள்-என்றபடி –
இனி
தம்மை ஆஸ்ரயித்தை ஜனங்கள் இடம் அன்பு கொண்டவர் என்று கொண்டால்-
தங்கள்-அனுபவத்திற்கு உரிய எம்பெருமானார் குணங்களை அனுசந்திப்பதோடு அல்லாமல் ஜனங்கள் பால்-அன்பால்
அவற்றை கூறவும் செய்கின்றனர் எனக் கொள்க –
இனி –
பிணங்கி அமரர் பிதற்றும் குணம் கெழு கொள்கையினானே-திரு வாய் மொழி – -1 6-4 – – என்னும்-இடத்து போலே
தாங்கள் அனுபவித்த குணங்களை அன்பின் மிகுதியால் வெளியே கூறியே ஆக வேண்டும்-படி ஆயிற்று -என்பார்-
கூறும் அன்பர்-என்கிறார் என்னவுமாம் –

கடி கொண்ட மா மலர்த் தாள்-
அவர்களுடைய பரிமள பிரசுரமாய் -விலஷணமாய்-பரம போக்யமான திருவடிகளிலே –
கடி -பரிமளம்
மா -மகத்வம்-யாவதாத்மா பாவியாக அனுபவித்தாலும் சரம பர்வ-நிஷ்டர்க்கு குறை பட்டு இராதே –
மேன்மேலும் பெருமை உடைத்தாய் இறே இருப்பது
மலர் –
லோகத்தில்-புஷ்பம் போல் ஒருகால் விகசிதமாய் இருக்கை அன்றிக்கே -சர்வதா விகாசதோடே இருக்கும் என்றபடி –
அத்ர பரத்ர சாபி நித்யம் யதீய சரணவ் சரணம் மதியம் -என்னக் கடவது இறே –
தாள் –
யானிசா சர்வ பூதானாம்-தஸ்யாம் ஜாகர்த்தி சம்யமி-என்னும்படி இருக்கிற அவர்களுடைய திருத் தாள்களிலே –

கலந்துள்ளம்-திரு உள்ளம் கலந்து கனியும் நல்லோர்
பக்வ பலம் போலே ரசித்து இருக்கும் சம்யக் ஞானத்தை உடையரானவர்கள்-ஸ்ரீ கூரத் ஆழ்வான் -என்றபடி –

கடி கொண்ட மா மலர்த்தாள் கலந்து உள்ளம் கனியும் நல்லோர் –
மா என்று சீர்மையும் –மலர் -என்று அனுபவிக்கத் தக்க அழகு உடைமையும் -காட்டப் படுகின்றன –
ஆன்ம தத்துவம் உள்ள வரையிலும் அனுபவித்தாலும் குறைவு படாமை-சீர்மை-என்க –
நல்லோர் –
தம் அனுபவத்தில் பங்கு அளித்தல் என்னும் நன்மை உடையோர் -என்றபடி

அடி கொண்டு உகந்து
இவ் ஆத்மா வஸ்து -அங்குத்தைக்கு சேஷமானது அன்றோ என்று கொண்டு -இதனுடைய படியை தர்சித்து –
அந்த சம்பந்தமே ஹேதுவாக விரும்பி அங்கீகரித்து –
ஒரு-ராஜ புத்ரன் வழி தப்பிப் போய் ஒரு வேடன் கிரஹத்திலே சேர்ந்து இருக்க -அந்த பிரகாரத்தை அறிந்து இருக்கும்-தார்மிகர் சிலர் –
இவருடைய சம்பந்தத்தை அறிவிப்பித்து -இரு தலையும் சேர்க்குமா போலே-

அடி கண்டு ..உகந்து
இவ் ஆத்மா வஸ்துவும் எம்பெருமானார்க்கு சேஷப் பட்டது அன்றோ -என்று இதனுடைய
அடியாகிய சேஷத்வத்தை தர்சித்து அந்த சம்பந்தமே ஹேதுவாக விரும்பி அங்கீகரித்து -என்றபடி-

என்னையும்-ஆள் அவர்க்கு ஆக்கினரே
என்னையும் –
அவருக்கு தம்மைப் போலே என்னையும் ஸ்ரீ எம்பெருமானாருக்கு –
ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகன் பக்கலிலே பிரேம யுக்தர் ஆனவர் என்று -அவர்க்கு -என்று தத் சப்தத்தால் தோற்றுகிறது –
ஆள் ஆக்கினர் –
அங்குத்தைக்கு பிராப்தமான ஆகாரத்தோடு கூட்டினார்கள் -சேஷ பூதானாம் படி-பண்ணினார்கள் -என்றபடி –
ஆகையாலே நான் வகுத்த விஷயம் என்று அறிந்து ஆஸ்ரயித்தேன் அல்லேன் –
எனக்கு புருஷகார பூதரான ஆழ்வான் ஆஸ்ரயிப்பிக்க ஆஸ்ரயித்தேன் என்றது ஆய்த்து-

என்னையும் ஆள் அவர்க்கு ஆக்கினர் –
உம்மை-எச்ச உம்மை-என்னையும் தங்களைப் போலே அவர்க்கு ஆள் ஆக்கினர் என்றபடி –

கற்பார் ராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ-ஸ்ரீ ஆழ்வார் -ஸ்ரீ கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம்-
சகல கல்யாண குணங்களை கொண்டவர் ஸ்ரீ ராமனும் ஸ்ரீ சுவாமியும்.
ஏசல் உத்சவம் பக்தி உலா நடை – ஸ்ரீ ராமன் சந்நிதி முன் நடந்து கற்றவர் இடம் நடந்து காட்டுவார்-ஸ்ரீ ஸ்வாமி இன்றும்
ஸ்ரீ பெரும் தூரில் -காண கண் கோடி வேண்டும்
ஸ்ரீ பெரிய திரு மலை நம்பி மூலமும் ஸ்ரீ ராமாயணம் மூலம் கண்டு ஸ்ரீ ராமனைக் கற்றார் .
காட்டிக் கொடுத்த ஸ்ரீ ராமாயணத்தையே நெஞ்சில் கொண்டார்.
நாயகனாய்-ஸ்ரீ ராமனுஜரையே ஸ்ரீ ஆண்டாள் அருளுவதாக சொல்வர்
அடியவர் துன்பம் துடைக்கும் நாயகன்-10 லஷண்யங்களை ஸ்ரீ வால்மீகி அருளுகிறார் ஸ்ரீ ராமனுக்கு –
அனைத்தும் ஸ்ரீ சுவாமி -பக்கல் காணலாமே
முதல்-உயர்குடி பிறப்பு ..ஷத்ரிய குல கொழுந்து சூரிய குல திவாகரன் –விவஸ்வான் மனு.28 சதுர் யுகம் முன்-
கேசவ சோமயாஜுலு பிராமணர்-/பிர பன்ன குலம்-ஸ்வாமி
2-சாமுத்ரா லஷணம்- திரு மேனி அழகு .மூன்று பதக்கம் கோவில் பெருமாள் திருமலை செல்ல பிள்ளை
3-ராஜா சார்வ பௌமன்- மகா பாக்யசாலி- கருவிலே திரு உடன்
4-யதி சார்வ பௌமன் /வாரி வழங்கும் தன்மை–
கோ தானம் கதை -கொடுக்கும் பொழுது பிராமணர் கேட்க தடி எறிய சொல்லி-ராமன் சிரிக்க-அது பசு மாடு கொடுத்தது போல
இவரோ காப்பேன் சொன்னார் -இவரோ பின் படரும் குணன் பார்த்தோம்
5-தேஜஸ்வீ -வனம் சோபை அடைந்தது. பெருமாள் தண்ட காரண்யம் வந்ததும்
ஸ்வாமி -உள் இருட்டே போக்கினாரே -ராமானுஷ திவாகரன்
6 வைதப்யம் -எதை எப்பொழுது செய்யணும் அதை அவர் மூலம் நடத்தும் தன்மை-விரோதி நண்பன் என்றதால் வாலி இடம் வர வில்லை என்று
பிள்ளை உறங்கா வல்லி தாசரை அழகிய கண்களை பெரிய பெருமாளையே காட்ட சொல்லி திருத்தினார் சுவாமி-அப்பொழுது ஒரு சிந்தை செய்தே –
7-தார்மிகத்வம் -நேர்மை கிருபை-விருத்தி கிரந்தம் பார்த்தே எழுத –பிரமாண்யத்தில் உள்ள ஊற்றம்
8-தெய்வ தன்மை– பவான் நாரயனோ தேவ -ஸ்வாமியும் .அடையார் கமல கேள்வன் -ராமானுஜ முனி ஆயின
9 –பாண்டித்வம் -ஐந்து ஆச்சார்யர் –ஜைனர்களை வென்ற பாண்டித்தியம்-யாதவ பிரகாசர் போன்றோரை வென்ற
10- விநயம் உடையவர் -விச்வமித்ரர் இடம் இருவரையும் ஏவி பண்ணி கொள்ள சொல்லி–
ஸ்வாமி யும் கோஷ்டி கடைசியில் தீர்த்தம் வாங்கி கொண்ட வினயத்வம்

நின் தாள் நயந்து இருந்த -இவள்-வஸ்து நிர்நேயம் பண்ணினால் போல
வகுத்த விஷயம் என்று தெரிந்து இல்லை ஸ்ரீ கூரத் ஆழ்வான் சேர்ப்பிக்க சேர்ந்தேன்..
சம்பந்தமே முக்கியம்-

உள்ளம் கனியும் நல்லோர்
நீர்மை இல் நூற்றுவர் வீய ஐவர்க்கு அருள் செய்து நின்று
பார் மல்கு சேனை அவித்த பரஞ்சுடரை நினைந்து ஆடி
நீர் மல்கு கண்ணினர் ஆகி நெஞ்சம் குழைந்து நையாதே
ஊன் மல்கி மோடு பருப்பார் உத்தமர்கட்கு என் செய்வாரே!–3-5-7-

கருமமும் கரும பலனும் ஆகிய காரணன் தன்னைத்
திரு மணி வண்ணனைச் செங்கண் மாலினைத் தேவ பிரானை
ஒருமை மனத்தினுள் வைத்து உள்ளம் குழைந்து எழுந்து ஆடிப்
பெருமையும் நாணும் தவிர்ந்து பிதற்றுமின் பேதைமை தீர்ந்தே–3-5-10-

ஆள் அவர்க்கு ஆக்கினரே
கோவிந்தன் குடக்கூத்தன் கோவலன் என்று என்றே குனித்துத்
தேவும் தன்னையும் பாடி ஆடத் திருத்தி என்னைக் கொண்டு,என்
பாவம் தன்னையும் பாறக் கைத்து எமர் ஏழ் எழு பிறப்பும்
மேவும் தன்மையம் ஆக்கினான்: வல்லன் எம்பிரான் விட்டுவே–2-7-4-

பற்பநாபன், உயர்வு அற உயரும் பெருந்திறலோன்,
எற்பரன், என்னை ஆக்கிக் கொண்டு, எனக்கே தன்னைத் தந்த
கற்பகம், என் அமுதம், கார் முகில் போலும் வேங்கட நல்
வெற்பன், விசும்போர் பிரான் எந்தை தாமோதரனே–2-7-11-

நேர் பட்ட நிறை மூ வுலகுக்கும் நாயகன் தன்னடிமை
நேர் பட்ட தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் சொல்
நேர் பட்ட தமிழ் மாலை ஆயிரத்துள் இவை பத்தும்
நேர் பட்டார் அவர் நேர் பட்டார் நெடுமாற்கு அடிமை செய்யவே–8-9-11-

தொண்டர் அடிப் பொடி என்னும் அடியனை அளியன் என்று அருளி உன் அடியார்க்கு
ஆட்படுத்தாய் பள்ளி எழுந்து அருளாய் -11-

அமலனாதி பிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் -1-

திரு ஆர மார்வதன்றோ அடியேனை ஆட்கொண்டதே -5-

அவன் தமர் எவ்வினையராகிலும் எங்கோன்
அவன் தமரே என்று ஒழிவது அல்லால் நமன் தமரால்
ஆராயப் பட்டு அறியார் கண்டீர் அரவணை மேல்
பேராயற்கு ஆட்பட்டார் பேர் —முதல் திருவந்தாதி —-55-

சென்ற நாள் செல்லாத நாள் செங்கண் மால் எங்கள் மால்
என்ற நாள் எந்நாளும் நாளாகும் -என்றும்
இறவாத எந்தை இணையடிக்கே ஆளாய்
மறவாது வாழ்த்துக என் வாய் —மூன்றாம் திருவந்தாதி–17-

கடல் மல்லைத் தல சயனம் ஆர் என்னும் நெஞ்சுடையார் அவர் எம்மை ஆள்வாரே –பெரிய திருமொழி -2-6-2-

பக்தி வெள்ளம்
உலகு படைத்து உண்ட எந்தை அறை கழல்
சுடர் பூம் தாமரை சூடுதற்கு அவாவு ஆர்
உயிர் உருகி யுக்க நேரிய காதல்
அன்பில் இன்பீன் தேறல் அமுத
வெள்ளத்தானாம் சிறப்பு விட்டு ஒரு பொருள்க்கு
அசைவோர் அசைக திரு வோடு மருவிய
இயற்க்கை மாயாப் பெரு விறல் உலகம்
மூன்றினோடு நல் வீடு பெறினும்
கொள்வது எண்ணுமோ தெள்ளியோர் குறிப்பே ?—ஸ்ரீ திருவாசிரியம்–2–

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .