ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –
பகவத் அவதாரங்களில் திருந்தாதவர்கள் எல்லாரும் ஸ்ரீ எம்பெருமானார் உடைய அவதாரத்தாலே-திருந்தினார்கள் என்றார் கீழ் –
விஷய ப்ரவணனாய் நசித்துப் போகிற வென்னைத் தம்முடைய பரம கிருபையால்-வந்து எடுத்து அருளினார் என்று
தம்மை விஷயீகரித்த படியை அனுசந்தித்து தலை-சீய்க்கிறார் இதில் –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை-
கீழில் பாட்டிலே ஸ்ரீ ஈஸ்வரன் அவதரித்து உபதேசித்த இடத்திலும் -திருந்தாத லௌகிகர் –ஸ்ரீ எம்பெருமானார் அவதரித்த பின்பு
திருந்தி -விலஷணராய்-பகவதீயர் ஆனார்கள் -என்கிறார் –
இப்பாட்டிலே –ஆபாத ரமணீய வேஷைகளான தருணீ ஜனங்களுடைய ஸ்தனங்களிலே பத்தமான ப்ரீதியாலே-
ஆழம்கால் பட்டு நசித்துப் போகிற என் ஆத்மாவை -ஸ்ரீயபதியான -ஸ்ரீ திருவரங்க செல்வனாரே-சகல ஆத்மாக்களுக்கும் வகுத்த சேஷி
என்று உபதேசிக்கும்படியான ஞான வைசையத்தை உடையராய் நிர்துஷ்டரான ஸ்ரீ எம்பெருமானார் –
இப்போது அந்த லௌகிகர் எல்லார் இடத்திலும் பண்ணின தம்முடைய-ஸ்வாபாவிக கிருபையை –
அடியேன் ஒருவன் இடத்திலும் கட்டடங்க பிரவஹித்து -விஷயாந்திர-பிராவணயத்தில் கர்த்தத்தில் நின்றும்
உத்தரித்தார் கண்டாயே -என்று தலை சீய்க்கிறார் –
ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-
ஸ்ரீ மாதவன் அவதாரங்களிலும் திருந்தாவதர்கள் எல்லாரும் ஸ்ரீ எம்பெருமானார் அவதாரத்தாலே திருந்தினார்கள் என்றார் கீழ்ப் பாட்டிலே –
விஷய ப்ரவணனாய் நசித்துப் போகிற என்னைத் தமது பரம கிருபையால் ஸ்ரீ எம்பெருமானார் வந்து எடுத்து அருளினார் என்று தமது
பண்டைய இழி நிலையையும் இன்று எய்திய பேற்றின் சீர்மையையும் பார்த்துப் பெருமைப்பட்டுப் பேசுகிறார் -இந்தப் பாட்டிலே –
ஆயிழையார் கொங்கை தங்கு மக்காத லளற்ற ழுந்தி
மாயும் என்னாவியை வந்து எடுத்தான் இன்று மா மலராள்
நாயகன் எல்லா வுயிர் கட்கும் நாதன் அரங்கன் என்னும்
தூயவன் தீதில் இராமானுசன் தொல்லருள் சுரந்தே -42 – –
பத உரை –
ஆய் இழையார்-தெரிந்து எடுத்த அணிகள் பூண்டவர்களான பெண்களின் உடைய
கொங்கை -தங்களிலே
தங்கும் -நிலை நிற்கும்
அக்காதல்-அப்படிப்பட்ட காதல் எனப்படும்
அளறு-சேற்றில்
அழுந்தி -அழுந்திப் போய்
மாயும் -நசித்துக் கொண்டு இருக்கும்
என் ஆவியை -என்னுடைய உயிரை
மா மலராள் நாயகன் -பெரிய பிராட்டியாரான கணவரான
அரங்கன் -பெரிய பெருமாளே
எல்லா உயிர் கட்கும் -எல்லா ஆத்மாக்களுக்கும்
நாதன் -சேஷியாவான்
என்னும் -என்கிற உபதேசம் செய்யும்
தூயவன் -சுத்தியை உடையவராய்
தீது இல் -குற்றம் அற்றவரான
இராமானுசன் -ஸ்ரீ எம்பெருமானார்
தொல் அருள் சுரந்து -இயல்பான கிருபை பெருகி
வந்து இன்று எடுத்தனன் -வந்து இன்று எடுத்து அருளினார்
ஸ்ரக் வஸ்த்ராபரணான்க் கராகங்களாலே தேக தோஷம் புறம் தோற்றாதபடி மறைத்து சேதனரை மோஹிப்பிக்கு மவர்கள் ஆகையாலே
தங்களுக்கு அனுரூபமாக தெரிந்து பூணப்பட்ட-ஆபரணங்களை வுடையராய் -அதுவே -நிரூபகமாக விருக்கும் ஸ்திரீகளுடைய ஸ்தனத்துக்கு-
அவ்வருகு ஒன்றில் போகாததாய் -வாக்குக்கு நிலம் அல்லாதபடி-கை கழிந்து இருக்கிற ப்ராவண்யம் ஆகிற அளற்றிலே அழுந்தி –
நசித்து போகிற என்னாத்மாவை அளறு-பாய்ந்து முடிய தேடுகிற வர்களை விரகு அறியும் தார்மிகர் வந்து எடுக்குமா போலே-
ஸ்ரீயபதியான பெரிய பெருமாளே சர்வ ஆத்மாக்களுக்கும் சேஷி என்று உபதேசியா நின்று உள்ள-ஞான சுத்தியை வுடையராய்
இப்படி உபதேசிக்கும் இடத்தில் க்யாதி லாபாத்யபேஷா ரூப தோஷ ரஹீதரான ஸ்ரீ எம்பெருமானார்-
தம்முடைய ஸ்வபாவிக கிருபை கிளர்ந்து அந்த க்ருபா ப்ரேரிதராய் வந்து இன்று எடுத்து அருளினார் –
இப்படி செய்து அருளுவதே என்று கருத்து –
ஆய்தல்-தெரிதல்
இழை-ஆபரணம்
அக்காதல் என்று -அதினுடைய ஹேயதையை சொல்லிற்றாகவுமாம் –
மாய்தல்-நசித்தல் –
அஸ்மாத் துல்யோ பவத் -மா மலராள்-நாயகன் எல்லா வுயிர் கட்கும் நாதன் அரங்கன்-இத்தையே சொல்லி சொல்லி –
ஸ்ரீ யபதி -ஸ்ரீ அரங்கன் –ஸூ லபன் -உயிர்கள் பல -பர ப்ரஹ்மம் ஒருவனே -பொய் மாயை இல்லை –விசிஷ்டாத்வைதம் ஒரே வரியில் –
அக் காதலில் அழுந்தி இருந்தேன் -உபதேசம் கயிறு
ரக்ஷிக்க-புருஷகார பூதை–ஸ்ரீ மா மலராள்- அகலகில்லேன் இறையும்-என்று இருக்க இழக்கவோ-
ஸ்வாதி ஸ்ரீ கருடன் ஸ்ரீ பெரியாழ்வார் ஸ்ரீ நரசிம்மன் -தன் அடியார் திறத்தகத்து தாமரையாள்-இத்யாதி –
அக்காதல் லளற்ற ழுந்தி-பெருமாள் அழுந்திய காதலால் நமக்கு வாழ்வு –
ஸ்ரீ நீளா தேவி -தயா சதகம் கண் புரை உடனே இருக்கட்டும் போகைய படலம் பக்த தோஷை பார்க்க முடியாதது ஸூதர்சனம் –
ஆயிழையார்
சர்மா சர்க்கமாம் சமேதோச்த்தி மஜ்ஞாஞக்லாதிசம்யுதே –தேஹி சேத் ப்ரீதி மான்மூடோ -என்றும் –
கரிமிஜந்துசங்குலம் -என்றும்
ஸ்வ பாவ துர்கந்த மசவ்சமத்ரு-வம்களே பரம மூத்ரபுரீஷ பாஜனம் -என்றும் –
முடித் தலை யூண் என்றும் -சொல்லுகிறபடி
அதி ஹேயமாய் இருக்கிற தேஹத்தின் உடைய ஹேயதை தெரியாதபடி -ஸ்ரக் வஸ்த்ர ஆபரண- ஆதிகளாலே அலங்கரித்துக் கொண்டு –
ஆபா தரமனியைகளான தருணீ ஜனங்கள் உடைய –
ஆய்தல்-நெரிதல் –
இழை-ஆபரணம்
இழையார் –
ஸ்திரீகள் -அகவாயில் தோஷம் ஒன்றும் தோற்றாதபடி -கைப் பாணி இட்டால் போலே –காணும் இவர்கள் அலங்கரித்து கொண்டு இருப்பது –
கொங்கை தங்கும் –
ச்னதவ் மாம்சக்ரந்தி -என்கிறபடியே
மாம்சா சர்ன்மயமான ஸ்தனங்களிலே சக்தனாய் -அவற்றின் தோஷத்தை தெரிய மாட்டாதே –போக்யதா புத்தியைப் பண்ணி –
அவற்றுக்கு அவ்வருகே போக அசக்தனாய் -த்ர்ஷ்டார்த்தனானவன் –
தண்ணீர் பந்தலிலே விழுந்து கிடக்குமா போலே அவற்றிலே தான் நித்ய வாசம் பண்ணும்படியான –
அக் காதல் அளற்றில் அழுந்தி –
அந்த விஷயம் போலே அதி ஹேயமான வ்யாமோஹம் என்கிற அள்ளல் தரையிலே மக்நனாய் –
அன்றிக்கே –
அக் காதல் –
வாக்குக்கு நிலம் ஆகாதபடி -கை கழிந்த காதல் என்னவுமாம் –
கொங்கை தங்கும் காதல்
கொங்கைக்கு அப்பால் செல்லாது அங்கேயே காதல் தங்கியது -என்க
தங்கும் காதல்
என்னவே நிலை பேர்க்காலாகாமை தோற்றுகிறது –
அக்காதல்
பேசி மாளும்படி அன்றி மூளும் காதல் கைம்மிக்கது என்பார் –அக்காதல்-என்றார் –
இனி காதலின் பொல்லாங்கைக் கருதி -அக்காதல் -என்றதுமாம் –
அக்காதல் அளறு –
நிரயத்தினை-இடையீடு இன்றி பயப்பது என்பது பற்றி காதலை அளறு ஆக உருவகம் செய்தலுமாம்-
வரை விலா மாணிழையோர் மென் தோள் புரை யிலாப் பூரியர்கள் ஆழும் அளறு -வரைவின் மகளிர் -என்னும் குறளும்
அவர்கட்கு பூரியற்கு அளறு இடை இன்றிப் பயக்கும் என்பது தோன்ற -தோளினை-
உருவகம் ஆக்கியும் கூறினார் என்னும் பரி மேல் அழகர் உரையும் இங்கு உணரத் தக்கன
அளறு-
அகப்பட்டோரைத் தப்ப வொட்டாது ஆழ்த்தி முடிப்பது பற்றி காதல் அளறு என உருவகம் செய்யப்பட்டது –
ஆயிழையார் –அளற்றழுந்தி-
பெண்களை ஆயிழையார் என்று இங்கு குறிப்பிட்டது குறிக் கொள்ளத் தக்கது –
கண்டவர்கள் காதல் புரியும்படி தங்களை அலங்கரித்து கொள்ள அவர்கள் அணிகளை
ஆய்ந்து எடுப்பதிலேயே நாட்டம் கொண்டவர்கள் -என்பது கருத்து –
இழை என்பது ரத்னங்கள் இளைத்த உயர்ந்த அணிகளைக் கருதுகிறது –
இழை-உப லஷணமாய் ஆடை முதலிய வற்றையும் கொள்க –
கொள்ளவே ஆடைகளாலும் அணிகளாலும் -சாந்து முதலியவைகளாலும் -தங்கள் உடல் நாற்றம் முதலிய குற்றம் புறம் தோற்றாதவாரும்-
நலன் உள்ளது போல் தோற்றமாறும் மேனி மினுக்கி மயக்குமவர்கள் ஆகையால் –
மேல் தோற்றத்தில் அழகியராய்-படினும் ஆராய்ந்து பார்த்தால்-அருவருக்கத் தக்கவரே என்றது ஆயிற்று –
ஆகவே காதலை விளைவிப்பவர்களே அன்றி காதலிப்பதற்கு உரியர் அல்லர் என்னும் கருத்து புலப்படுகிறது –
இங்கு -அன்பின் விழையார் பொருள் விழை யுமாய் தொடியார் இன்சொல் இழுக்குத் தரும் –வரைவின் மகளிர் -என்னும் குறளும் –
ஆய்ந்த தொடியினை உடையார் என்றதனாலும் இனிய சொல் என்றதனாலும் -அவர் கருவி கூறப்பட்டது -என்னும்
பரி மேல் அழகர் உரையும் உணரத் தக்கன –
இனி இவன் தம்மைக் காதலித்து அணுகினும் தாம் இழை களையே காதலிப்பவராய்-அவைகளையே தேர்ந்து
எடுப்பவர் என்னலுமாம்-காதலித்தவன் அருள் நோக்கம் நாடி நிற்க அவர்கள் அணி நோக்கம் கொண்டவர்களாய்
இவனை அலஷ்யம் செய்கிறார்கள் -என்றபடி –
இவ்விடத்தில்
பணிமின் திருவருள் என்னும் அம் சீதப் பைம் பூம் பள்ளி அணி மென் குழலார்-
இன்பக் கலவி யமுதுண்டார் -ஸ்ரீ திருவாய் மொழி -4 1-5 – – என்னும் ஸ்ரீ நம் ஆழ்வார் ஸ்ரீ ஸூக்தியும் –
பணிமின் திருவருள் என்னும் -என்பதனை -இன்பக் கலவி யமுதுண்டார் -என்பதோடு இயைத்து ஸ்ரீ பட்டர் –
அவன் இப்படுக்கையிலே வைத்து திருவருள் பணிமின் -என்னா நின்றால்
அவர்கள் -கொண்டாடத்தை அநாதரித்து ஆபரணத்தை திருத்துவது குழலைப் பேணுவதாக நிற்பார்கள்
என்ற சுவையே வடிவு எடுத்தால் போன்று அருளிய வியாக்யானமும் நினைவு கூரத் தக்கன –
மாயும்
நசித்துப் போந்த –
என் ஆவியை –
கீழே லௌகிகர் எல்லாரையும் உத்தரித்தபடி அருளிச் செய்தீர் –இது உமக்கு தெரிந்தபடி என் –
கர்ண கரணியாய் -கேட்டு இருந்தீர் ஆகில் -இது நமக்கு விச்வசநீயமாய்-இருக்குமோ என்ன –
அப்படிக் கேட்டு சொன்னேன் அல்லேன் -இதுக்கு நான் சாஷி என்று தம்மைக் காட்டுகிறார் –
என் ஆவியை –
என் ஆத்மாவை -இவ்வளவும் -அசந்நேவ -என்னும் படியாய் போந்த என் ஆத்மாவை –ஒரு-கைம்முதல் இல்லா என் ஆத்மாவை –
மாயும் என் ஆவியை வந்து எடுத்தான் இன்று
மாயும் ஆவி என்கையாலே -சாகும் தருவாயிலே வந்து எடுத்தமை தோற்றுகிறது —
என் ஆவியை இராமானுசன் வந்து எடுத்தான் என்று கூறுதலின் தனது செயல் அறுதியைக் காட்டுகிறார் –
சற்று முன்பு வந்து எடுப்பினும் இவர் தடுப்பார் போலும் –
ஸ்ரீ எம்பெருமானார் தொல் அருள் உடையவராய் இருந்தும் இது காறும் எடுக்காது விட்டு இருந்து
இன்று வந்து எடுத்துதற்கு காரணம் இதுவே -அளற்றில் அழுந்தி மாய்தல் ஆவது –
புத்தி நாசாத் ப்ரணச்யதி-என்றபடி -வுய்யும் உபாயம் தோன்ற கிலாமையின் ஆன்ம ஸ்வரூபம் மங்கி -இருந்தும் இல்லாதது போலே ஆதல்-
காமாதி தோஷ மாத்ம பதாச் ரிதா நாம் -ஸ்ரீ யதிராஜ விம்சதி -என்றபடி -தம் அடியாரையும் காதல் அளறில் நெருங்க விடாதவர் –
அவ் அளறிலே தாமே வந்து -தார்மிகர் விரகு அறிவாராய் அளறறிலே பாய்ந்து முடிகிறவர்களை –
எடுப்பது போலே -என்னை எடுத்து அருளுவதே என்று ஈடுபடுகிறார் –
ஜட ரகு ஹரே தேவ ஸ்தி ஷ்டன்னிஷத்வர தீர்கி கா நிபதி தா நிஜா பத்யா தித் சாவதீர்ண பித்ரு க்ரமாத் -என்று
தேவன் அளற ஓடையில் விழுந்து விட்ட தன் குழந்தையை எடுக்கும் விருப்பத்தினால் அவ்வோடையில் இறங்கும்-தந்தை போன்று –
இதய குகையில் எழுந்து அருளி உள்ளான் -ரகஸ்ய த்ரய சாரம் -நிர்யானாதிகாரம் -என்று
ஸ்ரீ வேதாந்த தேசிகன் இதயத்தில் உள்ள கோஷத்தை பொருள் படுத்தாது தேவன் அந்தர்யாமி ரூபத்துடன்
சேதனனை கை தூக்கி விட வாத்சல்யத்துடன் எழுந்து அருளி இருப்பதை பாராட்டிப் பேசினார் –
ஸ்ரீ அமுதனார் காதல் அளறறிலே உள்ள குற்றத்தை -சற்றும் பொருள் படுத்தாது -தன்னைக் கை தூக்கி விட
வாத்சல்யத்துடன் ஸ்ரீ எம்பெருமானார் எழுந்து அருளி யதைப் பாராட்டி பேசுகிறார் –
ஸ்ரீ அமுதனாரைப் பின்பற்றி ஸ்ரீ மணவாள மா முனியும் ஸ்ரீ ஆர்த்தி பிரபந்தத்திலே
கூபத்தில் வீழும் குழலி யுடன் குதித்தல்
வாபத்தை நீக்கும் அந்த அன்னை போல் -பாபத்தால்
யான் பிறப்பே னேலும் இனி எந்தை எதிராசன்
தான் பிறக்கும் என்னை உய்ப்பதா -என்று அருளி இருப்பது அனுசந்திதற்கு உரியது
இதனாலே மாதவனே கண்ணுற நிற்கிலும் காண கில்லார் நாரணற்கு ஆனதற்கு தாமே சாஷி என்றார் ஆயிற்று –
மா மலராள் நாயகன்
மா மலர் என்று சமஸ்த புஷ்ப சாதிக்கும்-உத்க்ரிஷ்டமாய் ஸ்லாக்யமாய் இருந்தது ஆகையாலே கமலத்தை சொல்கிறது –
அந்த கமலம் தான்
தன்னுடைய கர சரண நேத்ராதிகளுக்கு ஒரு போலியாய் இருக்கையாலும் –
பரிமள பிரசுரம் ஆகையாலே-போக்ய தமம் ஆகையாலும் -அதிலே உத்பன்னையாய் –
அங்கே நித்ய வாசம் பண்ணுகையாலே மா மலராள் –என்கிறார் –
மலராள் நாயகன் –
பிரமச்சாரி எம்பெருமான் பந்த மோஷங்கள் இரண்டுக்கும் பொதுவாய் –
இவளோட்டை சேர்த்தியாலே –
வைஷம்ய நைர்க்ரன்யே நசாபேஷத்வாத க்ர்தாப்ரயத் ந அபேஷ ஸ்துவிஹி தப்ரதி ஷித்தாவை யதார்த்திப்ய-என்கிறபடியே –
சகல சேதனர்கள் உடையவும் யோக்யதை அயோக்யதைகளை அடைவே கடாஷித்து –
தத் அநு ரூபமாக பலத்தை கொடுப்பவன் என்று பயப்பட வேண்டாதபடி –
சஹா தர்மீ சரி ஸௌ ரே ச சம் மந்தரித்த-ஜகத்திதாம் -அனுக்ரஹா மயீம் வந்தே நித்யம் அஞ்ஞா ந நிக்ரகாம் -என்கிற படி
தானும் அஞ்ஞான நிக்ரகையாய் –அனுக்ரக ஏக மயியாய் –ஜகத்தினுடைய ஹிதத்தை சர்வேஸ்வரனுக்கு அறிவிப்பவளாய்-
கண்ணைப் புரட்டுதல்-கச்சை நெகிள்குதல் முதலான தன்னுடைய ப்ருவிலாச சேஷ்டிதங்களாலே -அவனை வசீகரித்து
தனக்கு-கையாளாகப் பண்ணிக் கொண்டு -தானும் -இறையும் அகலகில்லேன் -என்று அநபாயி யாய் இருந்துள்ள
ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கு வல்லபனானவன் -இவள் தான் -ந கச்சின் ந அபராத்யதி -என்றவள் இறே –
எல்லா உயிர்கட்கும் நாதன்
பதிம் விச்வச்ய -என்கிற படியே சகல ஆத்மாக்களுக்கும் பாலகன் -வகுத்த சேஷி -என்றபடி –
ஆனால் -விதி சிவ சனகாத்யைர் த்யாது மத்யந்த தூரம் -என்கிறபடியே –
நமக்கு எட்டாத நிலத்தில் இருந்தான்-என்ன வேண்டா –
அரங்கன் –
நாம் இருந்த இடம் தேடி சந்நிஹிதனாய் கொண்டு –
அபயம் சர்வ பூதேப்யோ ததாமி –-என்கிறபடியே இருந்தவன் அன்றோ -என்னும் -இப்படி உபதேசம் பண்ணும்படியான
தூயவன் –
நஹிஜ்ஞானே ந சதர்சம் மவித்ரா மித வித்யதே -என்கிறபடியே தத்வ யாதாம்ய ஜ்ஞான பூர்த்தியாலே
என் போல்வாரையும் பாவனராம் படி பண்ணுகிறார் –
ஆனால் நீர் அனுவர்த்தனம் பண்ணாதே விஷயாந்தர ப்ரவண ராய் இருந்தீரே என்ன –
மா மலராள் –என்னும் தூயவன் –
விரகு அறிந்த ஸ்ரீ எம்பெருமானார் தம்மைக் கை தூக்கி விட்ட படியை இதனால் ஸ்ரீ அமுதனார் காட்டுகிறார் .
உபதேசம் என்னும் நெடும் தடக்கையைக் கிருபையினால் நீட்டி -என்னை ஸ்ரீ எம்பெருமானார் எடுத்து அருளினார் -என்கிறார்.
போலி அழகிலே மயங்கி அளற றில் அழுந்தினையே –
அழகுத் தெய்வம் ஆகிய மா மலராளே காதல் உறும் நாயகன் உடைய மெய் அழகில் அன்றோ ஈடுபட வேண்டும் என்பது
ஸ்ரீ எம்பெருமானார் முதல் உபதேசம் -செய்தது –
ஸ்ரீ பெரிய பிராட்டியார் துய்க்கும் மெய் அழகினை நாம் துய்த்தல் முறையோ -என்னும் ஐயம் நீங்க –
எல்லா உயிர் கட்கும் நாதன் –என்பது அடுத்துச் செய்யும் உபதேசம் –
எல்லா உயிர் கட்கும் -ஸ்ரீ பிராட்டிக்கு உள்ள உறவு முறை உயிர் இனம் அனைத்தைக்கும் உண்டு என்பது கருத்து-
மா மலராளுக்கும் நாயகன் -உயிர் கட்கும் நாதன்-என்றது ஆயிற்று –
இனி எல்லா உயிர் கட்கும் நாதன் மா மலராள் நாயகன் –எனக் கொண்டு -நாதனாய்-சேஷியாய்-இருக்கும் தன்மை
ஸ்ரீ யபதிக்கே என்னலுமாம் –
உபயாதிஷ்ட்டானம் ச ஏகம் சேஷித்வம் -சேஷியாய் இருக்கும் தன்மை
பிராட்டி பெருமாள் இருவர் இடத்திலும் சேர்ந்து அமைந்து உள்ளது -என்றபடி –
நாதனாய் -சேஷியாய் -இருப்பவன் மா மலராள் நாயகனே -என்க –
மெய் அழகினை துய்ப்பது கண்ணினால் கண்டால் அன்றோ –
ஸ்ரீயபதியாய் -சேஷியாய் இருப்பானை நம்மால் காண இயலுமோ -என்னும் ஐயம் அறுப்பது –அரங்கனை- என்று மேலும் செய்யும் உபதேசம் –
நாம் எல்லாரும் ஸ்ரீ கண்ணாரக் கண்டு மெய் அழகினை துய்க்கலாம் படி
ஸ்ரீ கோயிலிலே ஸ்ரீ பெரிய பெருமாளாய் சேவை தரும் சௌலப்யம் -எளிமை-நிறைந்தவன் அரங்கன்-என்றபடி –
இங்கனம் அரங்கன் பால்-மா மலராள் நாயகன் -என்று மேன்மையையும் –
நாதன்-என்று ப்ராப்தியான -இயல்பான -தொடர்பினையும் – காண்பித்து காதல் விளைவித்து
ஸ்ரீ எம்பெருமானார் என்னை -அக்காதல் அளறறில் இருந்து எடுத்து அருளினார் என்கிறார்–
மாற்பால் மனம் சுழிக்கச் செய்து மங்கையர் தோள் கை விடச் செய்து அருளினார் -விரகு அறிந்த
ஸ்ரீ எம்பெருமானார் -ஸ்ரீ பிள்ளை உறங்கா வல்லி தாசரை இவ்விதமே ஸ்ரீ எம்பெருமானார் திருத்தி அருளினதும் இங்கு நினைக்கத் தகும் –
இனி மா மலராள் நாயகன் அரங்கன் எல்லா உயிர் கட்கும் நாதன் -என்று கூட்டி –
ஸ்ரீயபதியான பெரிய பெருமாளே சர்வத்மாக்களுக்கும் சேஷி என்று உபதேசித்து அருளினதாக கொள்ளலுமம் –
மா மலராள் மன்னும் ஆகமும் தானுமாய் காட்சி தரும் அரங்கனை சேஷியாக -சேஷத்வம் உடையவனாக –
சேஷ சயனம் உடையவனாக -நேரே உபதேசம் மூலம் கண்டு கொள்ளும்படி செய்து அக்காதல் அளறறில் இருந்து
எடுத்து அருளினார் ஸ்ரீ எம்பெருமானார் -என்க –
தூயவன் –
உபதேச ஞானத்தில் உள்ள தூய்மை உடையவர் மேல் ஏற்றப்பட்டது
தூய்மை யாவது ஐயம் திரியற்ற தெளிவு
இதனால் ஆப்தி அதிசயம் கருதப் படுகிறது -நம்பிக்கை கொள்ளத்தக்க உபதேசம் செய்பவர் -என்றபடி –
தீதில் –
அப்படி இத்தலையில் அதிகாரத்தை பார்க்கை யாகிற தோஷ ரஹீதர் –
உபதேசிக்கும் இடத்தில் க்யாதி லாப பூஜாத்ய பேஷா ரூபா தோஷ ரஹீதர் -என்றுமாம் –
இராமானுசன்
இப்படிப்பட்ட ஸ்ரீ எம்பெருமானார் –இன்று -அதுவும் காலாந்தரத்திலேயோ –
இன்று வந்து –
சகல ஜகத்துக்கும் பிரத்யஷமாகவே இப்போது வந்து –
தொல் அருள் சுரந்து –
உமக்கு ஒருவருக்கும் ஒரு கால விசேஷத்தில் கிருபை பண்ணினார் -அவருக்கு எப்போதும் உண்டோ என்ன –
தொல் –
அந்த கிருபை எப்போதும் அவருக்கு ஸ்வபாவிகம்-
அருள் சுரந்து –
அப்படி பட்ட கிருபை கிளர்ந்து
மேன்மேலும்-என்னுடைய துர்வாசனை எல்லாம் அடி மாண்டு போம் படி -த்ரி பாவனா ரேணு நிவார ணோதகம் –என்கிறபடியே
அவசரித்து மேஹம் வர்ஷித்தால் போலே பண்ணி அருளி
எடுத்தான் –
ஆற்று வெள்ளத்தில் பாய்ந்து-போகிறவனை விரகு அறியும் தார்மிகர் வந்து எடுத்து ரஷிக்குமா போலேயும் –
கூபத்திலே வீழும் குழவி உடன் குதித்து -அவ் ஆபத்தை நீக்கும் அந்த அன்னை போலவும் –
அந்த கிர்பா ப்ரேரிதராய்க் கொண்டு-வந்து எடுத்து அருளினார் –
தீதில் இராமானுசன் தொல் அருள் சுரந்தே –
தீது உபதேசத்துக்கு அனுவர்த்தனத்தை எதிர்பார்த்தல்-
எனது அனுவர்த்தனத்தை எதிர் பாராமல் தாம் பரம கிருபா மாத்ர பிரசன்னாசார்யராய் -உபதேசித்து-அருளினார் -என்றபடி –
இனி க்யாதி லாப பூஜைகளை எதிர்பாராமை யால் தீதிலர் என்னவுமாம் .
தொல் அருள் –
இயல்பான அருள்-நிர்ஹேதுதுக கிருபை என்றபடி-
மா மலராள் நாயகன்-அரங்கன்-எல்லா உயிர் களுக்கும் நாதன்-என்று உபதேசிக்கும் தூயவன்
தீது இல்லா இராமனுசன்–தொல் அருள் சுரந்து இன்று வந்து எடுத்தான்-என்று கூட்டி முடிக்க –
வாணில முறுவல் சிறு நுதல் பெரும் தோள் மாதரார் வன முலைப் பயனே
பேணினேன் அதனைப் பிழை யெனக் கருதிப் பேதையேன் பிறவி நோய் அறுப்பான்
ஏணிலேன் இருந்தேன் எண்ணினேன் எண்ணி இளையவர் கலவியின் திறத்தை
நாணினேன் வந்து உன் திருவடி யடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய்—1-6-1-
சிலம்படி யுருவில் கரு நெடும் கண்ணார் திறத்தனாய் அறத்தையே மறந்து
புலம்படிந்து உண்ணும் போகமே பெருக்கிப் போக்கினேன் பொழுதினை வாளா-1-6-2-
மானேய் கண் மடவார் மயக்கில் பட்டு மா நிலத்து
நானே நானாவித நரகம் புகும் பாவம் செய்தேன்
தேனேய் பூம் பொழில் சூழ் திருவேம்கட மா மலை என்
ஆனாய் வந்தடைந்தேன் அடியேனை யாட் கொண்டருளே—1-9-2-
கண்ணும் சுழன்று பீளையோடு ஈளை வந்து ஏங்கினால்
பண்ணின் மொழியார் பைய நடமின் என்னாத முன்
விண்ணும் மலையும் வேதமும் வேள்வியும் ஆயினான்
நண்ணு நறையூர் நாம் தொழுதும் எழும் நெஞ்சமே -6-4-1–
பெண்டிரால் சுகங்கள் உய்ப்பான் பெரியதோர் இடும்பை பூண்டு
உண்டிராக் கிடக்கும் போது வுடலுக்கே கரைந்து நைந்து
தண் துழாய் மாலை மார்பன் தமர்களாய்ப் பாடி யாடித்
தொண்டு பூண்டு அமுதம் உண்ணாத் தொழும்பர் சோறு உகக்குமாறே–திரு மாலை–5-
சூதனாய்க் கள்வனாகித் தூர்தரோடு இசைந்த காலம்
மாதரார் கயல் கண் என்னும் வலையுள் பட்டு அழுந்துவேனை
போதரே என்று சொல்லிப் புந்தியுள் புகுந்து தன பால்
ஆதரம் பெருக வைத்தான் அழகனூர் அரங்கம் அன்றே–திரு மாலை–18-
பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணி செய்ய த்வரை என்னும் அதில்
நாயகராகி வீற்று இருந்த மணவாளர் மன்னு கோயில் -4-9-4-
அல்லி மா மலர் மங்கை நாதன் அரங்கன் மெய்யடியார்கள் தம்
எல்லையில் அடிமைத் திறத்தினில் என்று மேவு மனத்தானாம்
கொல்லி காவலன் கூடல் நாயகன் கோழிக் கோன் குலசேகரன் -2-10-
இலங்கை வேந்தன் இன்னுயிர் கொண்டவன் தம்பிக்கு அரசும் ஈந்து
திருமகளோடு இனிது அமர்ந்த செல்வன் தன்னை -10-7-
பூவார் திரு மா மகள் புல்கிய மார்பா -4-8-9-
அல்லி மாதர் அமரும் திரு மார்வன் அரங்கத்தை -5-4-10-
பூ வளரும் திருமகளால் அருள் பெற்று பொன்னுலகில் பொலிவர் தாமே -11-6-10–
திருமாலை அல்லது தெய்வம் என்று ஏத்தேன் வருமாறு என் என் மேல் வினை -முதல் திருவந்தாதி—64-
ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -முதல் திருவந்தாதி—67-
நாராயணன் என்னை யாளி நரகத்துச் சேராமல் காக்கும் திருமால் —நான்முகன் திருவந்தாதி –-14-
என்றும் மறந்து அறியேன் என் நெஞ்சத்தே வைத்து நின்றும் இருந்தும் நெடுமாலை
என்றும் திருவிருந்த மார்பன் சிரீதரனுக்கு ஆளாய் கருவிருந்த நாள் முதலாக் காப்பு -92-
பூவினை மேவிய தேவி மணாளனை –திரு விருத்தம் –-89–
குழவியாய் விடப்பால் அமுதா அமுது செய்திட்ட மாயன் வானோர் தலைவன்
மலராள் மைந்தன் எவ் உயிர்க்கும் தாயோன் தம்மான் என் அம்மான் –திருவாய்மொழி ––1-5-9-
மைந்தனை மலராள் மணவாளனை துஞ்சும் போதும் விடாது தொடர் கண்டாய் -1-10-4-
மைய கண்ணாள் மலர் மேல் உறைவாள் உறை மார்பினன் -4-5-2-
மையார் கரும் கண்ணி கமல மலர் மேல் செய்யாள் திரு மார்வினில் சேர் திருமாலே
வெய்யார் சுடராழி சுரி சங்கமேந்தும் கையா உன்னைக் காணக் கருதும் என் கண்ணே -9-4-1-
நாரணன் முழுவேழுலகுக்கும் நாதன் வேதமயன் காரணம் கிரிசை கருமம் இவை முதல்வன் எந்தை
மா மலராள் புணர்ந்த பொன் மார்வன் பொருந்தும் பதி தொறும் புக்கு நிற்கும்
குணம் திகழ் கொண்டல் -இராமானுஜ நூற்றந்தாதி–60-
அரங்கர் மௌலி சூழ்கின்ற மாலையைச் சூடிக் கொடுத்தவள் தொல் அருளால் வாழ்கின்ற வள்ளல்
இராமானுசன் என்னும் மா முனியே–இராமானுஜ நூற்றந்தாதி–16-
———————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply