ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –
இப்படி உபதேசித்த விதத்திலும் ஒருவரும் இதில் மூளாமையாலே-அவர்கள் உடைய படியை அனுசந்தித்து இன்னாதாகிறார் –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை-
கீழ் பாட்டில் லோகத்தார் எல்லாருக்கும் அவருடைய அதிகார நதிகார விபாகம் பாராதே அத்யந்த விலஷணமான-உபாயத்தை
உபதேசித்ததாலும் -அத்தை அத்யவசிக்க மாட்டாதே புருஷார்த்தம் எது என்று சந்தேகியா நின்று கொண்டு –
சிஷிதமான சப்த ராசியால் நிறையப் பட்டதாய் –அத்விதீயமாய் இயலும் இசையும் சந்தர்ப்பமும் கூடிய விலஷணமான இப் பிரபந்தமும் –
ரிகாதி வேத சதுஷ்டயமும் -அபரிமாய் தத் உப பிரஹமணமான தர்ம சாச்த்ரமாகிற இவற்றை அடைவே ஆராய்ந்து இருக்குமவராய் –
சத்துக்களாலே அடைவு கெட ஸ்துதிக்கும்படியாய் இருக்கிற ஸ்ரீ எம்பெருமானாருடைய
திருநாமத்தை அப்யசியாதே போனார்களே என்று இன்னாதாகிறார்
ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-
இப்படி இவர் உபதேசித்தும் படியில் உள்ளோரில் ஒருவரும் இவர் வார்த்தையின் படி –
ஸ்ரீ இராமானுச திரு நாமத்தை சொல்ல முற்படாமையாலே -அவர்கள் தன்மையை நினைந்து வருந்திப் பேசுகிறார் –
இதிலும் ஸ்ரீ இராமானுச திரு நாம வைபவம் மீண்டும் சொல்கிறார்
சொல்லார் தமிழ் ஒரு மூன்றும் சுருதிகள் நான்கும் எல்லை
யில்லா வற நெறி யாவும் தெரிந்தவன் எண்ணரும் சீர்
நல்லார் பரவும் இராமானுசன் திரு நாமம் நம்பிக்
கல்லார் அகலிடத்தோர் எது பேறென்று காமிப்பரே – -44 –
பத உரை –
அகல் இடத்தோர் -அகண்ட பூமியில் உள்ளவர்கள்
பேறு -புருஷார்த்தம்
எது என்று -யாதொன்று
காமிப்பார் -விரும்புவர்
சொல் ஆர் -சொற்கள் நிறைந்த
ஒரு -ஒப்பற்ற
தமிழ் மூன்றும் -மூன்று வகைப்பட்ட தமிழையும்
சுருதிகள் நான்கும் -நால் வகைப்பட்ட வேதங்களையும்
எல்லை இல்லா -அளவில்லாத
அற நெறி யாவும் -தர்ம மார்க்கங்கள் அனைத்தையும்
தெரிந்தவன் -ஆராய்ந்து அறிந்தவராய்
எண்ணரும் சீர் -எண்ண முடியாத கல்யாண குணங்களை உடையவராய்
நல்லார் -நல்லவர்கள்
பரவும் -துதிக்கும் படி யிருக்கும்
இராமானுசன் திரு நாமம் -ஸ்ரீ எம்பெருமானாருடைய திரு நாமத்தை
நம்பி -நம்பிக்கை கொண்டு
கல்லார் -கற்கின்றினரே
விச்தீர்னையான பூமியில் உள்ளோர் புருஷார்த்தம் எது என்று இச்சியா நிற்பார்கள் –
சொல் நிரப்பத்தை உடைத்தாய் -அத்விதீயமாய் -இயல் இசை நாடக சம்பந்தத்தாலே மூன்று வகைப்பட்டு இருந்துள்ள தமிழும் –
ருகாதி சதுர்வேதங்களும் -அசங்க்யேமான தர்ம மார்க்கங்களான சகலமும் -அலகலகாக ஆராய்ந்து இருக்குமவராய் –
எண்ணப் புக்கால் எண்ணித் தலைக்கட்ட வரிதான கல்யாண குணங்களை உடையவராய் –
சத்துக்களுடைய ப்ரீதி பிரகர்ஷத்தாலே அடைவு கெட ஏத்தும்படியாய் இருக்கிற
ஸ்ரீ எம்பெருமானாருடைய -திரு நாமத்தை -நான் சொன்ன வார்த்தையை -விஸ்வசித்துக் கற்கிலர்கள் .
ஐயோ இவர்கள் அளவு இருந்தபடி என் என்று கருத்து .
எண்ணரும் சீர் -என்கிற இது நல்லாருக்கு விசேஷணம் ஆகவுமாம் –
நம்புதல்-விருப்பமுமாம் –
வேப்பங்குடி நீரையா சொல்லச் சொல்கிறேன் சொலப் புகில் வாய் முதல் பரக்கும் –
ஒரு மூன்றும் -திருவாய் மொழி -மற்ற மூ வாயிரம் /ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த நான்கும் /இயல் இசை நாடகம் மூன்று அர்த்தங்கள் –
ஒரு அத்விதீயம் -ஸூதகா பிரமாணம் -சுருதிகள் நான்கும் இப்படியே –
அகலிடத்தோர் –
அநந்தா என்றும் விபுலா என்றும் பேரை உடைத்தான இந்த மகா ப்ருதிவியில் உள்ள சேதனர்கள்
எது பேறு என்று காமிப்பர்-
நான் இவர்களது இழவைக் கண்டு பொறுக்க மாட்டாதே -மந்த்ரம் யத்நேன கோபயேத்-என்கிற
சாஸ்திரத்தையும் அதிக்ரமித்து -அத்யந்த சுலபமாய் குரோர் நாம சதா ஜபேத் -என்கிறபடியே –
ததீய சேஷ தைகரஸ்-ஸ்வரூப அநு ரூபமாய் -பரம போக்யமான சதுரஷரியை உபதேசித்தாலும் -அதிலே நிஷ்டர் ஆகமாட்டாதே
அறிவு கெட்டு -பின்னையும் -நமக்கு ஓர் சரணம் எது என்று இங்கும் அங்கும் நாடி -அந்த இச்சையோடு காலம் எல்லாம் இப்படியே
வ்யர்தமாகப் போக்குகிறார்கள் -ஐயோ இவர்கள் ப்ராப்தத்தின் உடைய க்ரௌர்யம் இங்கனே யாய் தலைக் கட்டிற்று-என்று இன்னாதாகிறார்
ஆனால் அத்யயனம் பண்ணுவிக்கும் அவர்கள் மந்த மதிகளுக்கு பின்னையும் ஒரு சந்தையைச் சொல்லி-
அவர்கள் தரிக்கும் அளவும் க்ருஷி பண்ணுவார்கள் இறே-அப்படியே நீரும் செய்ய வேண்டாவோ என்ன –
யச்சகிம் கிஞ் ஜகத் சர்வம் த்ர்சயதே ச்ருயதேபிவா -அந்தர்பகிச்த தத் சர்வம் வ்யாப்ய நாராயண ஸ்த்தித -என்றும்
எண் பெருக்கு அந் நலத்து ஒண் பொருள் ஈறில வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே -என்றும்
பிரபாவ புரச்சரமாக-அந்த மந்த்ரத்தை உபதேஸித்தால் போலே –
இவரும் தாம் முன்பு அருளிச் செய்த சதுரஷரி மந்த்ரத்தை ஏறிட்டு -பிரபாவ வர்ணன பூர்வகமாக அருளிச் செய்கிறார் –
எது பேறு என்று காமிப்பரே
நம்பித் திரு நாமம் கற்றலாம் புருஷார்த்தத்தை விட்டு –புருஷார்த்தம் எது என்று
தேடி அலையா நிற்கிறார்களே -இவர்கள் அறிவீனம் இருந்த படி என் -என்று கருத்து-
சொல்லார் தமிழ் ஒரு மூன்றும் –
சீர் தொடை ஆயிரம் -என்றும்
ஸ்ரீ சடகோப வாங்மயம் -என்றும் சொல்லுகிறபடியே கோமளங்களாய்-தத்வார்த்த நிச்சாயகங்களான சப்தங்களாலே நிறையப்பட்ட தமிழ் என்று –
ஸ்ரீ திரு வாய் மொழி -ஒரு என்ற சப்தம் காகாஷி நியாயேன பூர்வ உத்தர பதங்களிலே அன்வயிக்கும் –
லோகத்திலும் வேதத்திலும் அதுக்கு சதர்சமான பிரமாணம் இல்லை என்ற படி –
மூன்றும் –
அதுக்கு மூன்று பிரகாரமாக கணிசிக்க தக்கதாய்
அத்விதீயமான மற்ற மூவாயிரப் பிரபந்தமும் -இப்படி ஸ்ரீ ஆழ்வார் பதின்மராலும் செய்யப்பட சமஸ்த திவ்ய பிரபந்தங்களும் –
அன்றிக்கே
ஒரு மூன்று என்றது ஸ்ரீ திருவிருத்தம் ஸ்ரீ திருவாசிரியம் ஸ்ரீ பெரிய திருவந்தாதி யும் பொருள் ஆகவுமாம்.
அன்றிக்கே
சொல்லார் தமிழ் ஒரு மூன்றும் -சொல் நிரப்பத்தை உடையதாய் -அத்விதியீமாய்-இயல் இசை நாடக சம்பந்தத்தாலே
மூன்று வகைப்பட்டு இருந்துள்ள தமிழ் என்னவுமாம் –
சொல்லார் தமிழ் ஒரு மூன்றும் –
சொல்லார் தமிழ்
தமிழ் எனும் அளப்பரும் சலதி -என்றபடி சொற்கடலாய் அமைந்தது தமிழ் மொழி .
எல்லா மொழிகளிலும் சொற்கள் இருப்பினும் எத்தைகைய உணர்ச்சிகளையும் பொருள்களையும்
புலப்படுத்தும் பல சொற்கள் தமிழில் நிறைய காணப்படுதலின் –சொல்லார் தமிழ் –என்றார்.
ஒரு தமிழ்-
அத்தகைய தமிழ் ஒப்பற்றதாதலின் -ஒரு தமிழ் -என்றார் .
வட மொழி தெய்வத் தொடர்பு உடையதாயினும் -எளிதில் எல்லாராலும் பேசப்படுவதாயும் உணரப்படுவதாயும் -அமைந்து இலது –
தமிழ் மொழியோ அங்கன் அன்றி யாவராலும் பேசவும் உணரவும்
பெற்றுத் தெய்வத் தொடர்பும் உடையதாய் இருத்தலின் -ஒப்பற்ற தாயிற்று .
மூன்று தமிழ்
இயல் இசை நாடகம் -என்னும் உட்பிரிவினால் மூன்று தமிழ் ஆயிற்று .
தாய் மொழி யாதலானும் ஸ்ரீ ஆழ்வார்கள் ஈரத் தமிழ் ஆதலானும் -நான்கு ஸ்ருதிகளுக்கு முன்னர் மூன்று தமிழ்கள் கூறப்பட்டன –
செந்திறத்த தமிழோசை வட சொல்லாகி -என்று வட சொல்லுக்கு
முத்திச் செந்திறத்த தமிழை ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் அமைத்து அருளி இருப்பது இங்கு அறியற்பாலது –
தம் பாழி யாகையாலே தமிழை முதலில் கூறினார் என்பது அவ்விடத்திய வியாக்யானம் .
இயல் தமிழ் -இயல்பாய் அமைந்த தமிழ்
இசைத் தமிழ் -குறிஞ்சி காந்தாரம் முதலிய பண் அமைந்த தமிழ் .
இயலும் இசையும் விரவிய தமிழ் -நாடகத் தமிழ் –
இசைத் தமிழ் -பண்ணார் பாடல் எனப்பட்ட ஸ்ரீ திருவாய் மொழி -ஸ்ரீ பெரிய திருமொழி முதலியன
இயல் தமிழ் -ஸ்ரீ பொய்கையார் அந்தாதி முதலியன
நாடகத் தமிழ் -உரையாடல் வடிவமாய் அமைந்த ஸ்ரீ திருப்பாவை முதலியன –
சொல்லார் ஒரு தமிழ் என்று கூட்டி -ஸ்ரீ திருவாய் மொழியும்
ஒரு மூன்று -என்று மற்றை மூவாயிரமும் சொல்லப்படுகின்றன –
இனி ஸ்ரீ நம் ஆழ்வார் அருளிச் செய்த ஸ்ரீ திரு விருத்தம் ஸ்ரீ திரு வாசிரியம் ஸ்ரீ பெரிய திருவந்தாதி என்னும்
திவ்ய பிரபந்தங்கள் சொல்லப் படுகின்றன என்னலுமாம்-என்று ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் உரைப்பர் –
மேலே ஸ்ருதிகள் நான்கும் என்று வட மொழி வேதம் நான்கும் கூறப் படுவதற்கு ஏற்ப
தென் மொழி வேதம் நான்கும் கூறப் படுவது பொருந்தி உள்ளது என்பது அவர் கருத்து போலும் .
சொல்லார் தமிழ் –
என்பது –சொல் சீர்த் தொடை யாயிரம் -திரு வாய் மொழி – 1-2 11- –
ஸ்ரீ சடகோப வாங்மயம் -என்னும் ஸ்ரீ திருவாய் மொழியை நினைவுறுத்துகிறது .
இரும் தமிழ் நூலிவை மொழிந்து -ஸ்ரீ திருவாய் மொழி -10 -6 4- – என்றபடி
இரும் தமிழ் நூல் ஆதலின் -ஸ்ரீ திருவாய் மொழி -தமிழ் -என்றே வழங்கப் பட்டது .
தத்ராசவ் சத்த்வ சீம்ன சடமத நமுநே சம்ஹிதா சார்வபவ்மீ -என்று
இதிஹாச புராணங்களாலே ஸ்ருதிகளுக்கு செய்யும் செயலில் சத்துவ குணத்தின் எல்லையில் உள்ள-ஸ்ரீ சடகோப முனிவனுடைய
சம்ஹிதையான ஸ்ரீ திருவாய்மொழி தலை சிறந்தது -என்று
ஸ்ரீ திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளியில் கூறியபடி ஸ்ரீ திருவாய் மொழி ஒப்பற்ற பிரமாணம் ஆதலின்-ஒரு தமிழ் -எனப்பட்டது .
ஸ்ருதிகள் நான்கும்
பிரமாணாந்தரங்களைப் போலே அநித்யுமுமாய் சாபேஷையுமாய் இருக்கை அன்றிக்கே –
வாசாவிருபு நித்யா -என்றபடி நித்தியமாய் அபௌருஷேயுமாய் சவாத பிரமாண முமாய்-புஸ்தக நிரீஷனாதி சாத்தியம் அன்றிக்கே –
ஸ்வாத்யா யோத்யே தவ்ய-என்கிறபடியே -ஆசார்ய உச்சாரண அநு உச்சாரண மகாத் அயன சாத்தியமாய் –
ரிசோ யஜூ சி சாமானி ததைவா தர்வணாநிச -என்னும்படியான பேர்களை உடைத்தாய் கொண்டு நாலு வகைப்பட்ட வேதங்களும் –
ஸ்ருதிகள் நான்கும்
ஆராலும் ஆக்கப்படாது அநாதியாக குரு வாயிலாக கேட்டே ஓதப்பட்டு வருதலின் வேதங்கள்
ஸ்ருதிகள் எனப்படுகின்றன -ஓதி ஒதுவித்தாதியாய் வரும் -பெரிய திருமொழி -3 5-6 – -என்றார் ஸ்ரீ திரு மங்கை மன்னனும் .
அவை ருக் -யஜூஸ் சாமம் அதர்வம் என்று நான்கு வகைப்படும்
எல்லை இல்லா அற நெறி –
அந்த வேதங்களினுடைய-அர்த்த பிரகாசங்களாய் தொகை இட்டு சொல்ல ஒண்ணாதபடி -அனந்தமான தர்ம மார்க்கங்களை –
யாவும் தெரிந்தவன் –
வேத மார்க்க பிரதிஷ்டாப நாசார்யா – உபய வேதாந்த சார்யர் -ஆகையாலே-இவை எல்லாவற்றையும்
அலகலகாக ஆராய்ந்து இருக்குமவராய்
எல்லை இல்லா அற நெறி யாவும் தெரிந்தவன்
அற நெறி -ஸ்ருதிகளில் சொன்ன தர்ம மார்க்கங்கள்
அவை எண்ணிக்கையில் அடங்காமையின் எல்லை இல்லாதன
அவை அனைத்தும் அறிந்தவர் ஸ்ரீ எம்பெருமானார்
எண்ணரும் சீர்
இவர் பகவத் அவதாரம் ஆகையாலே-சங்க்ய அனும் நை வசக்யந்தே குணா -என்னும்படி
அனந்த கல்யாண குனாகரராய் -நாதச்யேச கஸ்ய நதஸ்ய நாம மகத்யச –என்னும்படியான
அவனுடைய கீர்த்தியை பரிச்சேதிக்கிலும்-இவருடைய கீர்த்தியை பரிச்சேதிக்க ஒண்ணாது காணும் –
அன்றிக்கே
எண்ணரும் சீர் –
என்றது -நல்லோர் என்ற பதத்துக்கு விசேஷணம் ஆகவுமாம் –
அப்போது -வாசா மகோசர-மகா குணா தேசிகாக்ர்ய கூராதி நாத -என்னும்படி எண்ணித் தலைக் கட்ட அரிதான
கல்யாண குணங்களை உடையவரான ஸ்ரீ ஆழ்வான் ஸ்ரீ பிள்ளான் ஸ்ரீ எம்பார் தொடக்கமானவர் -என்றபடி
நல்லார் பரவும்
ஜயதி சகல வித்யா வரஹி நீ ஜன்ம சிலோ –இத்யாதியாலும் –
காதா தாதா கதானாம் -இத்யாதியாலும் –
வாழி எதிராசன் -இத்யாதியாலும் –அந்த சத்துக்கள் உடைய பிரதி பிரகர்ஷத்தாலே அடைவு கெட ஏத்தும்படி இருக்கிற
இராமானுசன் திருநாமம்
ஸ்ரீ எம்பெருமானாருடைய திருநாமம் –-ராமானுசன் என்கிற இத் திருநாமத்தை –
எண்ணரும் சீர் நல்லார் பரவும் இராமானுசன்
சீர் -குணங்கள்-அவைகள் எண்ண அரியன-இத்தனை என்று கணக்கிட முடியாதன
இனி நினைத்துப் பார்ப்பதற்கும் முடியாதன என்னலுமாம்
சீர் இராமானுசன் என்று இயைக்க
நல்லாரோடு இயைத்தலுமாம்-அப்பொழுது வாசா மகோசர மகா குண தேசிகாக்ர்ய கூராதி நாதர்
எனப்படும் ஸ்ரீ கூரத் ஆழ்வான் போல்வாரை நல்லார் என்றது ஆயிற்று .
நம்பிக் கல்லார் –
இவருடைய பிரபாவத்தை அறிந்து விச்வசித்து -இவருக்கு திருநாமமான சதுரஷரி மந்த்ரத்தை -அப்யசியாதே போனார்கள் –
குரங்கானாலும் மகாராஜர் ப்ரத்யயம் பண்ணின பின்பு-விச்வசித்தார் இறே –
இவர்கள் சதசத் விவேசனம் பண்ணுகைக்கு -யோக்யரான மனுஷ்யராய் இருந்தும் –
நம்மை ஸ்ரீ எம்பெருமானார் விஷயீ கரித்ததை தெளிவித்து ப்ரத்யயம் பண்ணிக் கொடுத்தாலும் -இவர்கள் விச்வசிக்க-மாட்டாதே போனார்கள் –
இவர்கள் அபாக்யத்தின் க்ரௌர்யம் என் என்று இன்னாதாகிறார் —
திரு நாமம் நம்பிக் கல்லார் அகல் இடத்தோர் –
நம்புதல் -விசுவாசம் கொள்ளுதல்
அமுதனார் உபதேசத்தில் நம்பிக்கை கொள்கிலர்-என்றபடி
நம்புதல்-விரும்புதலுமாம்
கற்றல்-குரு முகமாக உபதேசிக்கப் பெற்று அனுசந்தித்தல்
நாமம் கற்றலே கல்வி என்கிறதாகவுமாம் –
திரு நாமம் சொல் கற்றனமே -ஸ்ரீ திரு விருத்தம் – – என்று ஸ்ரீ நம் ஆழ்வாரும்
நின் நாமம் கற்ற ஆவலிப்பு -ஸ்ரீ திருமாலை -என்று ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வாரும் அருளினமை காண்க .
பரந்த உலகிலே நம்பித் திரு நாமம் கற்பார் ஒருவரும் இலரே என்னும் இன்னாப்புடன் அகலிடத்தோர் -என்கிறார் ,
கலியன் ஒலி செய் தமிழ் மாலை 1-5-10–
இரும் தமிழ் நூல் புலவன் மங்கையாளன் 1-7-10–
வண் தமிழ் செஞ்சொல் மாலைகள் 1-9-10–
கலிகன்றி இன் தமிழால் உரைத்த -2-1-10–
சீர் வண்ண ஒண் தமிழ்கள் இவை ஆயிரம் -திருவாய் 5-1-11–
சொல் தொடை அந்தாதி ஓர் ஆயிரத்துள்10-4-11–
சொல் சந்தங்கள் ஆயிரம் 10-9-11–
——————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply