ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –
இப்படி விமுகராய் இருந்த சேதனரிலே-அந்ய தமராய் இருந்த தம்மை நிர்ஹேதுகமாக விஷயீகரித்துத்
தம் திருவடிகளே ப்ராப்யமும் ப்ராபகமும் என்று விஸ்வசித்து இருக்கும்படி-பண்ணின உபகாரத்தை யனுசந்தித்து –
தேவரீர் செய்து அருளின உபகாரம் வாசகம் இட்டுச்-சொல்ல ஒண்ணாது -என்கிறார் –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை-
கீழில் பாட்டிலே அஞ்ஞராய் போருகிற மனுஷ்யர் படியை சொல்லி – விஷண்ணராய் -இதிலே-
அப்படிப்பட்ட அஞ்ஞரில் அந்ய தமராய் போந்த தம்மை நிர்ஹேதுகமாக விஷயீ கரித்து –
தம்முடைய திருவடிகளே-ப்ராப்யமும் பிராபகமும் என்று விச்வசித்து இருக்கும்படி பண்ணின உபகாரத்தை அனுசந்தித்து –
அப்படிப்பட்ட பிரபாவத்தை கொண்டாடுகிறேன் என்று -சொல்ல ஒருப்பட்டால் -அதுவே –
நமக்கு வாசா மகோசரமாய் இருந்தது என்கிறார் –
ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-
கல்லார் அகலிடத்தோர் என்று கூறப் பட்டோரில் ஒருவராய் இருந்த தம்மை –
ஹேது எதுவும் இன்றி -ஏற்று அருளித் தம் திருவடிகளையே உபாயமும் உபேயமுமாக நம்பும்படி செய்த
ஸ்ரீ எம்பெருமானார் உடைய உபகாரத்தை அனுசந்தித்து அவரை நோக்கித்
தேவரீர் செய்து அருளின உபகாரம் பேசும் திறத்தது அன்று -என்கிறார் .
உபாயமும் உபயமும் ஸ்வாமி திரு வடிகளே மட்டுமே -என்கிறார் இதில் .
அதையும் அவரே காட்டி கொடுத்தாரே
நாமும் உண்டியே உடையே என்று – இருந்த காலத்தில் ஸ்ரீ ஆழ்வான் மூலம் கைக் கொண்டாரே
அறியா காலத்து உள்ளே அடிமை கண் அன்பு செய்வித்து அறியா மா மாயத்து அடியேனை வைத்தாயால்
பால்ய பிராயத்திலே அடிமையில் ஆசை பிறப்பித்தாயே– ஆழ்வார் அருளியது போல –
பிராப்யம் பிராபகம் இவ் உலகுக்கும் அவ் உலகுக்கும் ..-சொல்லால் கூறும் பரம் இல்லை.
பேறு ஓன்று மற்று இல்லை நின் சரண் அன்றி அப் பேறு அளித்ததற்கு
ஆறு ஒன்றும் இல்லை மற்றச் சரண் அன்றி என்று இப்பொருளைத்
தேறும் அவர்க்கும் எனக்கும் உனைத் தந்த செம்மை சொல்லாற்
கூறும் பரம் அன்று இராமானுச மெய்ம்மை கூறிடிலே – 45- –
பத உரை
இராமானுச -ஸ்ரீ எம்பெருமானாரே
நின் சரண் அன்றி -தேவரீர் உடைய திருவடிகளை ஒழிய
மற்று -வேறு
பேறு –பயன்-ப்ராப்யம் –
ஒன்றும் இல்லை -ஒன்றும் இல்லை
அப்பேறு -அந்த ப்ராப்யத்தை
அளித்ததற்கு -கொடுத்ததற்கு
அச் சரண் அன்றி -அந்தத் திருவடிகளை ஒழிய
ஆறு-உபாயம்
ஒன்றும் இல்லை என்று -ஒன்றுமே இல்லை என்று
இப்பொருளை -இந்த விஷயத்தை
தேறும் அவர்க்கும் -நம்பித் தெளிந்தவர்களுக்கும்
எனக்கும் -அந்தத் தெளிவில்லாத எனக்கும்
உனைத் தந்த செம்மை-தேவரீரைக் கொடுத்து அருளின நேர்மை
மெய்ம்மை கூறிடில் -உண்மையைச் சொன்னால்
சொல்லால்-பேச்சாலே
கூறும் பரம் அன்று -பேசுவதற்கு இயலாததாய் உள்ளது
தேவரீர் திருவடிகளை ஒழிய வேறு ப்ராப்யம் ஒன்றும் இல்லை –
அந்த ப்ராப்யத்தை தருகைக்கும் அத்திருவடிகளை ஒழிய வேறு உபாயம் ஒன்றும் இல்லை-என்று இவ்வர்த்த தத்வத்தை
தத்வ யாதாத்ம்ய ஞாநத்தாலே -விஸ்வசித்து இருக்கும் அவர்களுக்கும்-
அதில் விசுவாச ஹீனனான எனக்கும் ஒரு வாசி பாராதே தேவரீரை உபகரித்து அருளின- நேர்மை
சொல்லால் உண்மை சொல்லில் -வாசா வ்யவஹரிக்கைக்கு சக்யம் ஆகிறதில்லை –
அனுசந்தித்து குமிழ் நீருண்டு போமித்தனை என்று கருத்து .
சொல்லால் கூறும் பரமன்று -என்றது வாசகம் இட்டுச் சொல்லும்படி
பரிஹரிக்கத்தக்க தன்று -என்கை-
செம்மை-செவ்வை
தேறுதல்-விஸ்வசித்தல் –
செம்மை ஆர்ஜவம் -ஸ்ரீ கூரத் ஆழ்வான் போல்வாருக்கும் எனக்கும் அன்றோ அருளினாய் –
1-வாசி இல்லாமல் / 2-தேவரீரையே கொடுத்து -உனைத் தந்த செம்மை /3- ஆச்ரயிக்காமல் எனைத் தந்த சொல்லாமல் /
4-ராமனைப் போலே ஆலிங்கனம் -பரிஷ்வங்கம் -லோக நாதம் இச்சித்தாரே /
மற்றை சரண் அன்று -கழிப்பது -மற்று ஒன்றும் வேண்டா -தேவு மற்று அறியேன் -சரம பர்வ நிஷ்டை ஸ்ரீ வைஷ்ணவ ஆதாரம்
பேறு ஒன்றும் மற்றில்லை நின் சரண் அன்றி –
ஆனந்தோ ப்ரஹ்ம -ரசோவைச-இத்யாதிகளிலே-
ஸ்ரீ சர்வேஸ்வரனே என்றும் பிராப்யம் என்று சொல்லுகையாலும் –
ஸ்ரீ சர்வேஸ்வரனே ஆஸ்ரயநீயன் என்று நிஷ்கர்ஷிக்கப்படுகையாலும் –
பாதிநான்யத்ரா -என்கையாலே ஆசார்யத்வம் ஸ்ரீ எம்பெருமானார் இடத்திலே தானே வ்யவஸ்த்திதமாய் இருக்கையாலும்
அவருடைய திருவடிகளே பிராப்யம் என்று நிஷ்கரித்து அருளினார் –
பேறு ஒன்றும் மற்றில்லை நின் சரண் அன்றி –
நகுரோர பரஸ்த்ராதா -என்கிறபடியே வகுத்த சேஷியான தேவரீருடைய திருவடிகளே புருஷார்த்தம் என்று இருக்கிற-
நமக்கு அத் திருவடிகளை ஒழிய வேறு ஒரு பிராப்யம் இல்லை –
ப்ரஹ்ம வேத ப்ரஹ்மைவ பவதி-சஏ நாந் ப்ரஹ்ம நம யதி — ரசம்ஹ்யேவாய லப்த்வா நந்தீபவதி -இத்யாதிகளாலே
பிரதிபாதிக்கப்பட்ட ப்ரஹ்ம- பிரதம பர்வதத்துக்கும் –
குருரேவ பர பிரம்ம – உபாயோபேய பாவேன தமேவ சரணம் வ்ரஜேத் -இத்யாதிகளாலே பிரதிபாதிக்கப்பட்ட சரம பர்வதத்துக்கும் –
உண்டான வாசி அறியாதவர்களுக்கு இறே -பிரதம பர்வம் பிராப்தமாய் இருக்கிறது –
அத்ர பரத்ர சாபி நித்யம் யதீய சரணவ் சரணம் மதீயம் என்று இறே ஸ்ரீ ஆளவந்தார் சந்தையும் –
சர்வத்ர அவதாரணத்தாலே –இந்த அதிகாரிக்கு ஸ்ரீ ஆசார்யன் திருவடிகளே பிராப்யம்-என்றது ஆய்த்து –
பேறு ஓன்று மற்று இல்லை நின் சரண் அன்றி –
குரு ரேவ பராகதி -என்றபடி ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே ப்ராப்யம் என்கிறார் .
மேவினேன் அவன் பொன்னடி -என்று ஸ்ரீ மதுர கவி ஆழ்வாரும்
அதர பரத்ரசாபி -இங்கும் அங்கும் -என்று ஸ்ரீ ஆள வந்தாரும்
ஸ்ரீ ஆசார்யன் திருவடியையே ப்ராப்யமாக அறுதி இட்டார்கள் –
பாத மூலம் கமிஷ்யாமி யானஹம் பர்யசாரிஷம் -என்று ஸ்ரீ ஆசார்யருக்கு நான் ஸூஸ்ருஷை பண்ணினேனோ-
அவர்களை அடையப் போகிறேன் -என்று ஸ்ரீ சபரியும் அவ்வாறே கூறினாள்-
மற்று ஒரு பேறு இல்லை என்பதால் பிரதம பருவத்தை இவர் கணிசிக்க வில்லை -என்று தெரிகிறது .-
அப் பேறு அளித்தற்கு ஆறு ஒன்றும் இல்லை மற்று அச் சரண் அன்றி
உபாயோபாய பாவேன தமேவ சரணம் வ்ரஜேத்-என்றும் –
ராமானுஜச்ய சரணவ் சரணம் பிரபத்யே -என்றும் நிஷ்கரிஷித்த படியே அந்த பிராப்யத்தை பெறுகைக்கு
அந்த திருவடிகளை ஒழிய வேறு ஒரு உபாயம் இல்லை –
ந குருரோர பரஸ்த்ராதா -குரோர் அன்யம் ந பாவயேத் – என்கிறபடியே வேறு ஒரு பிராபகாந்தரம் இல்லை –
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளைக் கண்டு கொண்ட நமக்கு -எம்மா வீடு -என்கிறபடியே –
எத்தனை விலஷணம் ஆனாலும் பரமபதம் பிராப்யம் அன்று –
பஜ ந சுகமே கஸ்ய விபுலம் -என்கிற பக்தி யோகமும் உபாயம் அன்று –
ஸித்திர் பவதி வாநேதி சம்சய அச்யுத சேவிதாம் -என்று சம்சயிக்க வேண்டும்படியான பகவத் பிரபத்தியும் உபாயம் அன்று –
வேதம் ஒரு நான்கின் உட்பொதிந்த மெய்ப்பொருளும்
கோதில் மநு முதல் கூறுவதும் -தீதில்
சரணா கதி தந்த தன்னிறைவன் தானே
சரணாகும் என்னும் அது -என்று
இவ் அர்த்தத்தை ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானாரும் அருளிச் செய்தார் இறே –
காலத்ரயேபி -இத்யாதியாலே ஸ்ரீ ஜீயரும் அனுசந்தித்து அருளினார் இறே –
அப் பேறு அளித்ததற்கு ஆறு ஒன்றும் இல்லை மற்றச் சரண் அன்றி –
இதனால் உபாயமும் -அத்திருவடிகளே -என்கிறார்
என்று இப் பொருளை தேறும் அவர்க்கும் –
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே பிராப்யமும் பிராபகமும் என்கிற இவ் அர்த்தத்தை –
ந சம்சயஸ்து தத் பக்த்த பரிசர்யார்யதாத்ம நாம் –என்கிறபடியே சம்சய விபர்யய நிரசன பூர்வகமாகக் கொண்டு –
தத்வ யாதாம்ய ஞானத்தாலே விச்வசித்து இருக்குமவர்க்கும்-
வாசா யதீந்திர –இத்யாதியால் சொல்லப்பட்ட அப்ரதிம பிரபாவரான ஸ்ரீ ஆழ்வான் ஸ்ரீ பிள்ளான் தொடக்கமானவர்களுக்கும் என்றபடி
தேறுதல்-விச்வசித்தல் –
அறிந்து அறிந்து தேறி தேறி–சௌலப்யம் பரத்வமும்..உணர்ந்து –
ஜன்ம ரகசியம் அறிந்து -கர்ம சேஷ்டிதம் மே திவ்யம் –
எனக்கும் –
வ்ருத்யாபசு -இத்யாதிப்படியே அதி பாபிஷ்டனாய் -அதிலே விசுவாசம் லேசம் இல்லாத-அடியேனுக்கும் –
என்று இப் பொருளைத் தேறும் அவர்க்கும் எனக்கும் –
இவ்விஷயம் வேதம் ஒரு நான்கின் உட்பொதிந்த விஷயமாயும் -மிக்க வேதியர் வேதத்தின் உட் பொருளாயும் இருத்தல் பற்றி –
இப்பொருளை தேறும் அவர்க்கும் -என்கிறார்.
தேறும் அவர்க்கும் எனக்கும் –எனவே-தேறாத எனக்கும் என்பது பெற்றோம்
இராமானுச –
ஸ்ரீ எம்பெருமானாரே –
உனைத் தந்த செம்மை –
ஞானதிகரானவர்களுக்கும் அஞ்ஞானான எனக்கும் உண்டான வாசி பாராதே
ஒரு வஸ்துவைக் கொடுக்கும் இடத்தில் -ததீயமாய் இருப்பதொரு வஸ்த்வந்தரத்தை கொடுக்கை அன்றிக்கே-
தேவரீர் தம்மையே கொடுத்து அருளினீர் –
நான் ஸ்வரூப சமர்ப்பணம் பண்ண வேண்டி இருக்க -தேவரீர்-தம்மை அடியோங்களுக்காக ஆக்கின இது அதரோத்தரம் ஆய்த்து –
லோக நாதம் புரா பூத்வா சுக்ரீவம் நாதம் இச்சதி –என்னுமா போலே ஆய்த்து –
ஏஷ சர்வஸ்வ பூதோமே பரிஷ்வங்கோ ஹநுமதா – என்று ஸ்ரீ பெருமாள் ஸ்ரீ திருவடிக்கு-சர்வ ஸ்வ தானம் பண்ணினால் போலே
நமக்கு இவரும் அப்படியே சர்வ ஸ்வ தானம் பண்ணுகிறார் காணும் –
உனைத் தந்த செம்மை –
இப்படி சர்வ ஸ்வ தானம் பண்ணுகைக்கு உடலான ஆர்ஜவ குணத்தை –
மெய்ம்மை கூறிடிலே –
சத்தியமாக சொல்லப் புக்கால் -உள்ளபடி பேசப் புக்கால் –
சொல்லால் கூறும் பரம் அன்று –ஒரு வாசக சப்தத்தை இட்டு உள்ளபடி-சொல்ல அரிதாய் இருக்கும் –
வாசா வ்யவஹரிக்க சக்யம் ஆகிறது இல்லை –
அனுபவித்து -குமிழ் நீர் உண்டு போம் இத்தனை-என்றது ஆய்த்து–
உனைத் தந்த செம்மை சொல்லால் கூறும் பரம் அன்று
தேறினவர்க்கும்-தேறாதவர்க்கும்ஒருபடிப் பட -தன்னையே கொடுக்கும் நேர்மை-செம்மை –
தன்னையே சேர்ந்தது ஒன்றைக் கொடுத்து விடுகை அன்றிக்கே
எனக்கே தன்னைத் தந்த கற்பகம் என்றபடி தேவரீர் தம்மையே கொடுத்து அருளினீர் – –
ஸ்ரீ எம்பெருமான் போலே ஆத்ம சமர்ப்பணத்தை எதிர்பாராது தேவரீர் தம்மையே அடியோங்களுக்கு ஆக்கி யருளுவதே-
உபகாரம் செய்த ஸ்ரீ திருவடிக்கு ஸ்ரீ பெருமாள் தன்னையே கொடுத்து அருளினார் –
தரம் பாராதே உபகாரம் செய்யாதவர்களுக்கும் தம்மைக் கொடுத்த-இச் செயலை என் என்று சொல்லுவது -என்கிறார்-
செம்மை- வாசி இன்றி ஞானம் கொடுத்தது
1-தம்மையே கொடுத்தது –
2–சேனை அவனுக்கும் தன்னை அர்ஜுனனுக்கும் கொடுத்த ஸ்ரீ பல- இராமனுசன் போல அன்றி இருவருக்கும் தன்னையே கொடுத்தது
ஆர் எனக்கு நின் பாதமே சரணக கொண்டு உகந்தாய்
3-தேவரீர வந்து என் இடம் கொடுத்தீரே-நாம் ஆத்ம சமர்ப்பணம் பண்ண-வேண்டி இருக்க நீரே உம்மை எனக்குத் தந்து –
லோக நாதம்-சுக்ரீவன் குரங்கு காலில் விழுந்தால் போல தலை கீழே மாறினது போல..
ஸ்ரீ ராமனும் தன்னையே ஸ்ரீ திருவடிக்கு கொடுத்தாரே-கண்டேன் சீதையே உபகாரம் பண்ணினவனுக்கு கொடுத்தார்-
இரண்டு உயிரை காத்தவனுக்கு அங்கு ஸ்ரீ பெருமாள் – உபகாரம் பண்ணிய ஸ்ரீ திருவடிக்கு அங்கு –
4–அபச்சாரம் பண்ணிய என்னை அன்றோ –
நானோ உலகின் உயிரை எடுக்க வந்தேன் -நீசனான எனக்கே கொடுத்தாரே-இப்படி நான்கு அர்த்தங்கள்
இராமானுச மெய்ம்மை கூறிடிலே
மெய்ம்மை கூறிடில் சொல்லால் கூறும் பரமன்று என்று கூட்டுக
ஏதோ சொல்ல வேணும் -என்று சொன்னால் -அது முழுமையும் கூறாமையின் பொய்யாகி விடும்
மெய்ம்மை கூறிடில் கூறும் பரமன்று என்கிறார்.
நெஞ்சால் நினைந்து குமிழ்நீர் உண்ணலாமே யன்றிச் சொல்லால் கூறும் பரமன்று என்கிறார் .
ஸ்ரீ சுவாமி ஸ்ரீ நம் ஆழ்வார் பிரதம பர்வதத்தையே உபாயமும் உபேயமுமாக தெளிந்து தன் நெஞ்சை நோக்கி
நான் கூறும் கூற்றாவ தித்தன்னையே நாணாளும்
தேங்காத நீருருவன் செங்கண்மால் -நீங்காத
மா கதியாம் வெந்நரகில்சேராமல் காப்பதற்கு
நீ கதியா நெஞ்சே நினை – -என்கிறார்
அத்தகைய தெளிவு வாய்ந்த தனக்கு உபாயமாக ஸ்ரீ தெய்வ நாயகன் தன் பாதத்தை தந்த
உபகாரத்தைக் கூறி அதற்குக் கைம்மாறு காணாது தடுமாறுகிறார் .
ஆறு எனக்கு நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய் உனக்கோர் கைம்
மாறு நான் ஓன்று இலேன் எனதாவியும் உனதே -ஸ்ரீ திருவாய்மொழி – 5-7 10- – என்பது காண்க –
ஸ்ரீ அமுதனாரோ அங்கனம் கூறவும் மாட்டாது தடுமாறுகிறார் –
படி எடுத்து சொல்லும் படி இல்லை — வாசகம் இட்டு சொல்ல ஒண்ணாதது-
பிரதம -சரம பல்லவிதம்- மொட்டு விடுவது போல புஷ்பம் கனி ஒன்பது விஷயம்
தத்வ ஹிதம் புருஷார்த்தம் ஒவ் ஒன்றிலும் மூன்று நிலை
பொன் முடியம் போரேற்றை எம்மானை நால் தடம் தோள்
தன் முடிவு ஒன்று இல்லாத தண் துழாய் மாலையனை
என் முடிவு காணாதே என்னுள் கலந்தானை
சொல் முடிவு காணேன் நான் சொல்லுவது என் சொல்லீரே –ஸ்ரீ திரு வாய் மொழி -2-5-8-
ஓடும் புள் ஏறிச், சூடும் தண் துழாய்
நீடு நின்று அவை, ஆடும் அம்மானே–1-8-1-
நித்திய விபூதியில் உள்ளாரோடு செவ்வியனாய்ப் பரிமாறும்படி சொல்லுகிறார் இப் பாசுரத்தில்.
அம்மானாய்ப் பின்னும், எம் மாண்பும் ஆனான்
வெம்மா வாய் கீண்ட, செம்மா கண்ணனே–1-8-2-
நித்திய விபூதியில் நின்றும் வந்து அவதரித்து விரோதிகளைப் போக்கிச் சம்சாரிகளுடன்
செவ்வையனாய்ப் பரிமாறும்படி சொல்லுகிறது.
வெற்பை ஒன்று எடுத்து, ஒற்கம் இன்றியே
நிற்கும் அம்மான் சீர், கற்பன் வைகலே.–1-8-4-
அவனுடைய ஆர்ஜவ குணம் தம் அளவிலே பலித்த படியை அருளிச் செய்கிறார்.
தாம் கற்கைக்காக வெற்பு எடுத்தது என்று இவ் வழியாலே இங்கு ஆர்ஜவம் சொல்லிற்று ஆகிறது
என்னை ஆக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த கற்பகம் 2-7-11–
கூவுமாறு அறிய மாட்டேன், குன்றங்கள் அனைத்தும் என்கோ!
மேவு சீர் மாரி என்கோ! விளங்கு தாரகைகள் என்கோ!
நாவியல் கலைகள் என்கோ! ஞான நல் ஆவி என்கோ!
பாவு சீர்க் கண்ணன் எம்மான் பங்கயக் கண்ணனையே–3-4-2-
அஃதே உய்யப் புகும் ஆறு என்று கண்ணன் கழல்கள் மேல்
கொய் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்
செய் கோலத்து ஆயிரம் சீர்த் தொடைப் பாடல் இவை பத்தும்
அஃகாமல் கற்பவர் ஆழ் துயர் போய் உய்யற் பாலரே–4-1-11-
என் சரண் என் கண்ணன் என்னை ஆளுடை என் அப்பனே -6-3-8-
திரு விண்ணகர் சேர்ந்த பிரான் கழல்கள் அன்றி மற்றோர் களை கண் இலம் காண்மின்களே-6-3-10-
அன்று மற்று ஓன்று இலேன் சரணே என்று அகலிரும் பொய்கையின் வாய்
நின்று தன் நீள் கழல் ஏத்திய ஆணையின் நெஞ்சிடர் தீர்த்த பிரான் -7-10-8-
அன்பாகும் தான தாள் அடைந்தார்க்கு எல்லாம் -9-10-6
அணியனாகும் தான தாள் அடைந்தார்க்கு எல்லாம் -9-10-8-
பாதம் நாளும் பணியத் தணியும் பிணி -9-10-9-
வாமனன் அடிக்கு என்று ஏத்த மாய்ந்தறும் வினைகள் தாமே -10-2-9-
உற்றேன் உகந்து பணி செய்து உன்ன பாதம் பெற்றேன் ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய் -10-8-10-
தரு துயரம் தடையேல் உன் சரண் அல்லால் சரண் இல்லை -5-1-
எங்குப் போய் உய்கேன் உன் இணை யடியே யடையல் அல்லால்-5-5-
புனித நின் இலங்கு பாதம் அன்றி மற்றோர் பற்றிலேன் எம் ஈசனே -90-
நின் சரண் எனச் சரணாய்–பின்னை என்றும் நின் திருவடி பிரியா வண்ணம் எண்ணிய பேரருள் எனக்கும்
அன்னதாகும் என்று அடி இணை யடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்தம்மானே -5-8-6-
சிறு புலியூர் சல சயனத்து அருமா கடல் அமுதே உனது அடியே சரணாமே -7-9-9-
உய நின் திருவடியே சேர்வான் நய நின்ற நன் மாலை கொண்டு
நமோ நாரணா வென்னும் சொல் மாலை கற்றேன் தொழுது -முதல் திருவந்தாதி –-57-
மூப்பு உன்னைச் சிந்திப்பார்க்கு இல்லை திரு மாலே நின்னடியை வந்திப்பார் காண்பர் வழி -75–
பொருந்திய நின் பாதங்கள் ஏத்திப் பணியாவேல் பல் பிறப்பும் ஏதங்கள் எல்லாம் எமக்கு -இரண்டாம் திருவந்தாதி –-37-
திருப் பொலிந்த ஆகத்தான் பாதம் அறிந்தும் அறியாத போகத்தால் இல்லை பொருள் -இரண்டாம் திருவந்தாதி –-40-
இன்றே கழல் கண்டேன் ஏழ் பிறப்பும் யான் அறுத்தேன் -மூன்றாம் திருவந்தாதி —-2-
தாவிய நின் எஞ்சா இணை அடிக்கே ஏழ் பிறப்பும் ஆளாகி அஞ்சாது இருக்க அருள் -18–
தொட்ட படையெட்டும் தோலாத வென்றியான் அட்ட புயகரத்தான் அந்நான்று
குட்டத்துக் கோள் முதலை துஞ்சக் குறித்து எறிந்த சக்கரத்தான் தாள் முதலே நங்கட்குச் சார்வு -99-
தமராவார் யாவர்க்கும் தாமரை மேலார்க்கும் அமரர்க்கும் ஆடரவார்த்தாற்கும்
அமரர்கள் தாள் தாமரை மலர்கள் இட்டு இறைஞ்சி மால் வண்ணன் தாள் தாமரை யடைவோம் என்று -நான்முகன் திருவந்தாதி-91
—————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply