ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –
இராமானுசன் மன்னு மலர்த் தாள் அயரேன்-என்றீர் –
நாங்களும் இவரை ஆஸ்ரயிக்கும்படி இவர் தம்முடைய ஸ்வபாவம் இருக்கும்படி சொல்லீர் என்ன –
அதை அருளிச் செய்கிறார் –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை-
இராமானுசன் மன்னு மலர்த்தாள் அயரேன் -என்றீர் -நாங்களும் அவரை ஆஸ்ரயிக்கப் பார்க்கிறோம் –
அவருடைய ஸ்வபாவம் இருந்தபடி சொல்லிக் காணீர் என்று கேட்க –
பிரதி பஷத்துக்கு பயங்கரனான திரு வாழி யாழ்வானை-ஆயுதமாக வுடையனாய் -சகல ஆத்மாக்களுக்கும் சேஷி யானவன் –
உபய சேனா மத்யத்திலே பந்து ஸ்நேகத்தாலே அர்ஜுனன் யுத்தா நிவர்த்தனான அன்று –
கடலிலே அழுந்தி தரைப் பட்டு கிடக்கிற ரத்னங்களை கொண்டு வந்து-உபகரிப்பாரைப் போலே –
வேதாந்த சமுத்ரத்திலே -குப்த்தங்களாய்-ச்லாக்யங்களான அர்த்தங்களை-ஸ்ரீ கீதா சாஸ்திர முகேன – உபகரித்து அருளின பின்பும் –
இந்த கலி காலத்திலே லௌகிக ஜனங்கள் அவசாதத்தாலே கிடக்க –
அந்த கீதா ரூபமான அத்யந்த சாஸ்த்ரத்தை வியாக்யானம் பண்ணி உபதேசிகைக்கு-அந்த லௌகிக ஜனங்களை
ஸ்ரீ பத்ரிகாச்ரமம் அளவும் பின் தொடர்ந்த மகா குணம் உடைய பேர் இல்லை கிடீர்-என்று கொண்டு
இப்படி இருந்துள்ள எம்பெருமானார் உடைய ஸ்வபாவம் இது என்று அருளிச் செய்கிறார் .
ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை–
இராமானுசன் மன்னு மா மலர்த்தாள் அயரேன் -என்றீர்-
நாங்களும் இவரை ஆசரிக்கும் படி இவர்தம்முடைய ஸ்வபாவம் இருக்கும் படி சொல்லீர்
என்பாரை நோக்கி எம்பெருமானார் ஸ்வபாவத்தை அருளிச் செய்கிறார் –
அடல் கொண்ட நேமியன் ஆருயிர் நாதன் அன்று ஆரணச் சொல்
கடல் கொண்ட ஒண் பொருள் கண்டு அளிப்ப பின்னும் காசினியோர்
இடரின் கண் வீழ்ந்திட தானும் அவ் ஒண் பொருள் கொண்டு அவர் பின்
படரும் குணன் எம் இராமானுசன் தன் படி இதுவே -36 –
பத உரை –
அடல் கொண்ட -பலம் வாய்ந்த
நேமியன் -திரு வாழியை உடைய
ஆருயிர் நாதன் -அருமையான எல்லா ஜீவாத்மாக்களுக்கும் சேஷியான சர்வேஸ்வரன்
அன்று -அக்காலத்தில்
ஆரணச் சொல் -வேத சப்தமாகிற
கடல் கொண்ட-சமுத்ரம் தன்னுள்ளே வைத்துக் கொண்டு இருக்கிற
ஒண் பொருள்-சீரிய பொருள்களை
கண்டு -பார்த்து
அளிப்ப -ஸ்ரீ கீதை வாயிலாக கொடுத்து அருள
பின்னும் -அதன் பிறகும்
காசினியோர் -பூமியில் உள்ளவர்கள்
இடரின் கண் -சம்சார துக்கத்திலே
வீழ்ந்திட -விழுந்து அழுந்திட
தானும் -எம்பெருமானாரைகிய தானும்
அவ் ஒண் பொருள் கொண்டு -சர்வேஸ்வரன் முன்பு அருளிச் செய்த அந்த சீரிய அர்த்தத்தைக் கொண்டு
அவர் பின் -அந்த பூமியில் உள்ளவர்களுக்கு பின்னே
படரும்குணன் -தொடர்ந்து செல்லலும் குணத்தை உடையரான
எம்ராமானுசன் தன்-எங்கள் எம்பெருமானாருடைய
படி-ஸ்வபாவம்
இது -இத்தகையது –
‘விரோதி நிரசன சக்தியை உடைத்தான திரு வாழியை உடையனாய் -சகல ஆத்மாக்களுக்கும்-சேஷியானவன்-
அஸ்த்தானே சிநேக காருண்யா தர்ம அதர்ம தியாகுலனாய் -கீதார்த்த சங்க்ரஹம் -கொண்டு-அர்ஜுனன் சோகா விஷ்டனான அன்று –
அவனை வ்யாஜீகரித்து –
பெரும்கடலிலே மறைந்து கிடக்கும் பெரு விலையனான -ரத்னங்கள் போலே வேத சப்தமாகிற சமுத்ரத்துக்கு உள்ளே
ஒருவருக்கும் தெரியாதபடி -மறைந்து கிடக்கிற விலஷனமான அர்த்தங்களை -தர்சித்து –
சகல சேதனருடைய உஜ்ஜீவன அர்த்தமாக ஸ்ரீ கீதா முகேன உபகரித்து அருள –
பின்னையும்
பூமியில் உள்ளவர்கள் சம்சார துக்கத்தில் அழுந்தி தரைப்பட-
தாமும் முன்பு சர்வேஸ்வரன் அருளி செய்த அந்த விலஷனமான அர்த்தத்தைக் கொண்டு இது கைக் கொள்ளும் அளவும் –
அவர்களைப் பின் தொடரா நின்ற குணத்தை உடையராய் இருப்பராய் –எங்களுக்கு தம்மை முற்றூட்டாக தந்த
எம்பெருமானார் உடைய ஸ்வபாவம் இது –
ஆருயிர் நாதன் என்று ஆரணச் சொல் கடல் கொண்ட ஒண் பொருள் கண்டு அளிப்ப –என்று பாடமான போது –
அடல் கொண்ட நேமியனான சர்வேஸ்வரனே ஆத்மாக்களுக்கு சேஷி என்று கொண்டு –
வேதத்தில் மறைந்து கிடக்கிற அர்த்தத்தை -தர்சித்து -ஸ்ரீ கீதா முகேன அருளி செய்த -என்ற பொருளாக கடவது –
அடல்-மிடுக்கு
காசினி-பூமி
இடரின் கண் -என்றது -இடரின் இடத்திலே என்கை-
படி -ஸ்வபாவம்–
ஸ்ரீ கீதா பாஷ்யம் அருளி -ஸ்ரீ கீதா சாரம் சரம ஸ்லோகம் அர்த்தம் பெற 18 தடவை திருக் கோஷ்டியூர் நம்பி இடம் பெற்று
அதன் ஏற்றம் நமக்கு காட்டி அருளி -ஆசை உடையோர் அனைவருக்கும் உபதேசித்து அருளி –
வேத கடல் கொண்ட வஸ்து –கீதாச்சார்யர் -இரண்டாவது கடல் கடைந்து அமிர்தம்–
சர்வ உபநிஷத் பசு –கன்றுக்கு குட்டி அர்ஜுனன் கீதை பால் -நமக்கு –
பின்னும் -கருட வாஹனனும் நிற்க -நாம் நம் கார்யம் செய்து கொண்டே இருக்க –
அத்தை கடைந்து -கீதா சாரம் -ஸ்வாமி அருளி -தானும் -அவனே ஸ்வாமியாக ஆவிர்பவித்து –
அவர் கண் படரும் குணன் –
சம்சாரிகளை விடாமல் -திவ்ய தேசங்கள் எல்லாம் -நீர் நம்மை விட்டாலும் நான் உன்னை விட்டேன் –
எங்கும் இருப்பார் -பரகால பராங்குச யதிராஜர் எல்லா கோயில்களிலும் பிரதிஷ்டை உண்டே –
தத்வ ஹித புருஷார்த்தங்கள் அனைத்தும் நமக்கு தெளிய அருளி –18 சொல்லி அத்தாலே கலங்கிய அர்ஜுனனுக்கு
சரணாகதி சாஸ்திரம் வழங்கி –சர்வ தர்மான் இத்யாதி – சோகம் போக்கி என்றுமாம் – அங்கு ஒருவன் -இங்கே நாம் அனைவரும் –
அதனாலே தானும் -ஸ்வாமி –பின்னும் தானும் -அவ் ஒண் பொருள் கொண்டு -இரண்டு உம்மை தொகை –
ஸ்வாமி பெருமை காட்ட -கலி யுகம் -பாப பிரசுரம் -தோஷம் பூயிஷ்டர் நாம் –
அடல் கொண்ட நேமியன் –
மடுவின் கரையில் ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானை பாதித்த முதலையும்-
அஸ்வத்தாமா ப்ரேரிதமாய் கொண்டு பரிஷித்தை பாதிக்க ப்ரஹ்மாச்த்ரமும் துடக்கமான ஆஸ்ரித விரோதிகளுக்கு
அத்யந்த பயங்கரமான ஆகாரத்தை உடையவனாய் –
வடிவார் சோதி வலத்து உறையும் சுடர் ஆழி – என்கிற-திரு வாழி யாழ்வானை பிரதானமான ஆயுதமாக உடையனாய் –
அடல் -மிடுக்கு –
அடல் கொண்ட நேமியன்
அடல்-மிடுக்கு-அதாவது விரோதிகளை அழிக்கும் திறன் –நேமி -சக்கரம் –
நல்லவர்கள் இறைவனை அனுபவிப்பதற்கு இடையூறாக உள்ள பாபங்கள் என்னும் விரோதிகளை-
அழிக்கும் திறமையை இங்கு கருதுகிறார் –
நம் மேல் வினை கடிவான் எப்போதும் கை கழலா நேமியான் –பெரிய திருவந்தாதி -86 – எனபது காண்க –
ஆர் உயிர் நாதன் –
பதிம் விச்வச்யாத்மேச்வரம் – உதாம்ர்தத் வச்யேசானா -என்றும் –
அயர்வறும் அமரர்கள் அதிபதி -என்றும் சொல்லுகிறபடியே – சகல-ஆத்மாக்களுக்கும் நாதனாய் –
நாத்ர்யாச்ஞாயம் -என்கையாலே -சகல அர்த்தங்களும் யாசிக்கப்படுபவனாய் –
ஏகோ பஹூனாம் யோவிததாதி காமான் -என்கிறபடியே சமஸ்த புருஷார்த்த பிரதனானவன் –
ஆருயிர் நாதன் –
எல்லா ஆத்மாக்களுக்கும் சேஷி -விச்வத்திற்கு பத்தி -என்றது வேதம் –
நேமியன் ஆகையாலே -ஆருயிர் நாதன்-என்க-
நேமி-இறைவனது பரத்வத்துக்கு உரிய குறி-
தமஸ பரமோதாதா சங்க சக்ர கதாதர –
பிரகிருதி மண்டலத்துக்கு அப்பால் பட்ட இறைவன் சங்கு-சக்கரம் கதை இவைகளை எந்தினவன் -என்றது காண்க –
பர வாசுதேவன்
ஆதலின் எல்லா உயிர்க்கும்-அவன் சேஷியானன்
நேமியன்
என்கையாலே காசினியோரை இடரினின்றும் எடுக்கும் திறன் உடைமையும் –
நாதன்-
என்கையாலே -எடுத்தாக வேண்டிய உறவு முறையும் காட்டப் பட்டன –
அன்று –
குரு பாண்டவர்கள் யுத்த சன்னத்தரான அளவிலே –
பித்ரீ நத பிதாமகன் மாதுவக்னச்வசுரான்-ப்ராத் ரீன் புத்ரான் பௌத்த்ரன் சகீம்ஸ்ததா-இத்யாதி யாலே சொல்லப்படுகிற
பந்து வர்க்கத்தை எல்லாம்-உபய சேனையிலும் அர்ஜுனன் பார்த்து –
எஷாமர்த்தம் கான்க்ஷித தமனோ ராஜ்ஜியம் போகஸ் சூகாநிச-தம் இமே வசதி தாயுத்தே ப்ரானாஸ் யுக்த்வாத நாநிச –
ஆச்சார்யா பிதர புத்ரா யேதான் நஹந்து மிச்சாமி-க்ந்தோபி மது சூதனா -என்று
பந்து ஸ்நேகத்தாலே தர்மத்திலே அதர்ம புத்தி பண்ணி –
விசர்ஜய சசரம்சாபம்-சோகசம் விக்நமா நாசா -என்று சோகித்து -யுத்தான் நிவர்த்தன் ஆன அன்று-
அன்று –
போர்க் களத்திலே -நிற்கும் எதிரிகளை உறவினராகப் பார்க்கும் அன்பும் –
வீணில் மடியப் போகிறார்களே-என்ற கருணையும் –
ஷத்ரியனுக்கு உரிய தர்மமான போரை அதர்மம் என்னும் மதி மயக்கமும்-உடையவனாய்
அர்ஜுனன் கலங்கிய வேளையில் -என்றபடி
ஆரணச் சொல் கடல் கொண்ட-ஒண் பொருள் கண்டு அளிப்ப –
சமுத்திர மத்யத்திலே -மறைந்து கிடக்கிற -தரைப்பட்டு கிடக்கிற-மகா ரத்னங்களை எடுத்துக் கொண்டு வந்து
உபகரிப்பாரைப் போலே -கடல் போல் கம்பீரமாய் இருந்துள்ள வேதாந்த வாக்யங்களிலே –
தாவான் சர்வேஷு வேதேஷு ப்ராஹ்மானச்ய விஜானதா -என்னும் படியாக –
ரகஸ்ய தமமாய் -விலஷண அர்த்தங்களை அடைவே கடாஷித்து –கீதா சாஸ்திர முகேன உபதேசித்து-ரஷித்து அருள –
அன்றிக்கே –
அன்று -கார்ப்பண்யா தோஷா பகுதஸ் ஸ்வபாவ ப்ரச்சாமித்வா தர்ம சம்முட சேதா –
யச்ச்ரேயஸ் யாநிச்சிதம்ப்ருஹி தன்மே – சிஷ்யச்தே ஹம்சாதி மாம்த்வாம் பிரபன்னம் -என்று அர்ஜுனன்-உபசத்தி பண்ணினவாறே –
அவனுக்கு மோஷ உபாயமாக -கர்ம யோகத்தையும் ஞான யோகத்தையும்-பக்தி யோகத்தையும் அவதார ரகஸ்யத்தையும் –
புருஷோத்தம வித்தை தொடக்கமான வற்றையும் உபதேசிக்க-
அவை எல்லாம் துஸ் சகங்கள் என்றும் சப்ரமாதங்கள் என்றும் விளம்ப பலப்ரதங்கள் என்றும் ஸ்வரூப விரோதிகள் என்றும் நினைத்து
அர்ஜுனன் சோக விசிசிஷ்டனான அன்று-
ஆரண சொல் கடல் கொண்ட-ஒண் பொருள் கண்டு அளிப்ப –
வேதாந்த வாக்யங்கள் ஆகிற சமுத்ரத்திலே -தஸ்மான் நியாச மோஷம் தபஸா-மதிரிக்த மாஹூ -என்றும் –
வேதாந்த விஞ்ஞான சூநிச்சிதர்த்தாஸ் சந்நியாச யோகாத்ய தயச்சுத்த சத்வா –
தி பிரம லோகேது பராந்தகாலே பராம்தாத்பரி முச்யந்தி சர்வே -என்றும் –
ந கர்மணா ந ப்ரஜயாத நே நத்யா-கே நை கே அமர்த்தவ மானச -என்றும் -இத்யாதிகளிலே
குக்ய தமமாக பிரதிபாதிக்கப்படுகிற-விலஷண அர்த்தங்களை எல்லாம் -கண்டு திரட்டி –
மன்மனாபவ மத பாகத்த -என்றும் -சர்வ தர்மான் பரித்யஜ்ய -என்றும்
இரண்டு ஸ்லோகத்தாலே சகல சேதனருடையவும் உஜ்ஜீவன அர்த்தமாக -அர்ஜுன வயாஜேன பிரபத்தி-உபதேசம் பண்ணியும்
லோகத்தை எல்லாம் ரஷிக்க என்னவுமாம் –
ஆரணச் சொல் –கண்டு அளிப்ப
பெரும் கடலிலே ரத்னங்கள் மறைந்து கிடப்பது போலே வேத சப்த ராசி -என்கிற சமுத்ரத்திலே –
பல சீரிய பொருள்களும் மறைந்து கிடக்கின்றன -பல விதமான அந்த வேதாந்த ரத்னங்களை-கண்டு எடுத்து
சம்சாரம் என்னும் இடரின் கண் வீழ்ந்த காசினியோர்க்கு கீதா சாஸ்திரம் என்கிற-பேரிலே கொடுத்து அருளினான்
பின்னும் –
பிற் காலத்திலான கலி யுகத்திலும் –
காசினியோர் –
பூ லோகத்தில் உள்ள சேதனர் எல்லாரும் –
காசினி -பூமி –
இடரின் கண் வீழ்ந்திட –
சம்சார துக்கத்தில் விழுந்து- அழுந்தி தரைப்பட்டு கிடக்க –
த்வாபரத்தில் அர்ஜுனன் ஒருவனே இடர் பட்டான் -இந்த கலி யுகத்தில் ஒரு லோகம்-காணும் இடர் பட்டது –
இத்தைக் கண்டு பொறுக்க மாட்டாத தம்முடைய கிருபையாலே –
சர்வேஸ்வரன் அங்கனம் கொடுத்தான் அதனைக் கையாள-அறியாது -அக்காசினியோர் மீண்டும்
இடரின் கண் வீழ்ந்து விட்டனர் –
பின்னும் காசினியோர் இடரின் கண் வீழ்ந்திட -என்கையாலே –
முன்னும் அவர்கள் இடரின் கண்-வீழ்ந்து கிடந்தமை புலனாகிறது –
ஆக -அர்ஜுனனை வியாஜமாக கொண்டு உலகிற்கு ஆருயிர் நாதன்-கீதை அருளினான் -என்றது ஆயிற்று –
எல்லாம் அறிந்த இறைவனும் -விலஷனமான வேதங்களை ஆராய்ந்து – கண்டு அளித்தான் -என்பது தோன்ற –
கண்டளிப்ப-என்கிறார் –
நெறி யுள்ளி யுரைத்த கணக்கறு நலத்தனன் -என்றார் நம் ஆழ்வாரும்
த்ரை குணிய விஷயா வேதா -சத்வம் ரஜஸ் தமஸ் என்னும் மூன்று குணங்களை உடைய மக்களுக்கு-ஏற்ப
விஷயங்களை சொல்வன வேதங்கள்-என்றபடி –
அவரவருடைய குணங்களுக்கு ஏற்ப –அவரவர்களுக்கு வேண்டிய பல திறத்தனவான விஷயங்களை உடைய வேதத்தை-
விலை உயர்ந்த ரத்னங்களையும் சிப்பி போன்ற எளிய பொருள்களையும் கொண்ட-கடலாக உருவகம் செய்கிறார் –
ஆருயிர் நாதன் -என்று பாடம் ஓதுவாரும் உண்டு –
அப்பொழுது என்று என்பதை
பொருள் என்பதுடன் கூட்டி-
அடல் கொண்ட நேமியனான சர்வேஸ்வரனே ஆத்மாக்களுக்கு சேஷி என்ற கடல் கொண்ட
ஒண் பொருளைக் கண்டு அளிப்ப -என்று கூட்டிப் பொருள் கொள்க –
சர்வேஸ்வரனே ஆத்மாக்களுக்கு சேஷி என்னும் பொருளே-ஆரண சொற்கடலில் கண்டு அளித்த பொருள் ஆயிற்று –
பின்னும் காசினியோர் இடரின் கண் வீழ்ந்திட-
சர்வ சக்தனும் -இயல்பான சேஷித்வ ரூபமான உறவு முறை வாய்ந்தவனுமான சர்வேஸ்வரன்
கண்டு அளித்த பின்னரும் -இடரின் கண் காசினியோர் வீழ்ந்தனரே -இது என்ன விந்தை -என்கிறார் –
தானும் அவ் ஒண் பொருள் கொண்டு –
எம்பெருமானாரும் அந்த ச்லாக்கியமான கீதா சாஸ்தரத்துக்கு வியாக்யானம் பண்ணி யருளி அத்தைக் கொண்டு –
அன்றிக்கே –
திருக் கோட்டியூர் நம்பியை பதினெட்டு தரம் அனுவர்த்தித்து பரம குக்யம் என்று அவரால் உபதேசிக்கப் பெற்ற-
சரம ஸ்லோக அர்த்தத்தை கொண்டு என்றுமாம் –
அவர் பின் படரும் குணன்
ஸ்ரீ பத்ரிகாச்ரமம் ஈறாக இந்த-பூ லோகத்தில் உள்ள சேதனர் எல்லாருக்கும் போதித்து
பின் தொடர்ந்தவருடைய சம்சார துக்கத்தை-போக்க கடவதான கிருபா குணத்தை உடையரான –
அங்கன் அன்றிக்கே –
பின்னும் தானும் அவ் ஒண் பொருள் கொண்டு
பின்னும் தானும் என்னும் இரண்டு பதத்திலும் -சகாரங்களைப் பிரயோகித்தது –
அந்த த்வாபர காலம் புண்ய-பிரசுரமானது –
அதிகாரி ஞானாதிகனான அர்ஜுனன் –
உபதேஷ்டா பர ப்ரஹ்ம பூதனானவன் -ஆகையாலே அது அரிது அன்று
இந்த கலி காலம் பாப பிரசுரமானது –
அதிகாரிகள் தோஷ பூயிஷ்டரான சர்வ வர்ண ஜனங்களும் -ஆகையாலே இவர்-லோகத்தை எல்லாம்
ரஷித்ததுவே அரிது என்னும் இடம் தோற்றுக்கைக்காக-
தானும் –
எம்பெருமானரும் –
அவ் ஒண் பொருள் கொண்டு –
திருக் கோஷ்டியூர் நம்பி பக்கல் பதினெட்டு தரம் எழுந்து அருளின அளவிலே அவரும் சூழரவு கொண்டு-
குக்ய தமம் என்று நியமித்து சரம ஸ்லோக அர்த்தத்தை நியமித்தவாறே
அந்த ஸ்லோக அர்த்தத்தை கொண்டு-அவர் பின் படரும் குணனை –
காசியின் உள்ள ஜனங்களை அதிகார ந அதிகாரவிபாகம் அற -தாமே வந்து-தொடர்ந்து –
அந்த சரம ஸ்லோக அர்த்தத்தை பூரி தானமாக கொடுத்த கிருபா வாத்சல்ய ஔதார் யாதி குணங்களை உடைய-
எம் இராமானுசன் தன் –
இப்படிப் பட்ட கல்யாண குணமான திவ்ய மங்கள விக்ரகத்தை நமக்கு முற்றூட்டாக கொடுத்து அருளின-
எம்பெருமானார் தம்முடைய படி இதுவே –ஸ்வபாவம் இதுவே –
படி
ஸ்வபாவம் -ஏதாவா நஸ்ய மஹிமா –என்கிற படியே ஆய்த்து .
தானும் அவ் ஒண் பொருள் கொண்டு –
கீதை சொன ஆருயிர் நாதன் –
அர்ஜுனன் சோகத்தை பார்த்து அந்த வாசத்தில் கீதை யருளினான்-
கீதா பாஷ்யம் அருளிய எம்பெருமானார் காசினியோர் இடரைக் கண்டு அவ் ஒண் பொருளையே விளக்கி யருளினார் –
சர்வ சக்தனும் முயன்றும் காசினியோர்க்கு பயன்படாமல் போயிற்று –
எம்பெருமானார் தம் பரம கிருபையினால் அவ் விஷயத்திலே முயன்று -வெற்றி காண முற்படுகிறார் –
அவர் பின் படரும் குணன் –
கீதாசார்யன் தன் சிஷ்யனாக ஆன அர்ஜுனனை நோக்கி உலகிற்காக உபதேசித்து ஓய்ந்தான் –
ஸ்ரீ கீதா பாஷ்யாசார்யாரோ சிஷ்யர் ஆவதை எதிர்பாராது –
காசினியோர் எல்லாம் இவ் ஒண் பொருளை-இழக்கல் ஆகாது என்று அவர்கள் அறிந்து கைக் கொள்ளும் அளவும் –
அவர்களைப் பின் தொடர்ந்து – அவ் ஒண் பொருளை ஓயாது உணர்த்திக் கொண்டு இருக்கிறார் –
சிஷ்யன் ஆசார்யனை பின் படர்வது போய் –ஆசார்யன் கிருபா மாத்திர பிரசன்னரராய் பின் படர்ந்து உபதேசிக்கிறார் –
இங்கனம் பின் படர்தல்-ஒரு பயன் கருதி அன்று -இதுவே ஸ்வபாவம் -என்கிறார் –
சிஷ்யன் கால் அடியில் இருந்து உபதேசித்தான் கீதாசார்யன் –
கீதா பாஷ்யாசார்யர் -காசினியோரைப் பின் தொடர்ந்து ஏற்கும் அளவும் உபதேசிக்கிறார் –
அடல் கொண்ட நேமியன் அளிப்ப
கிரீடினம் கதினம் சக்ர ஹஸ்தம் இச்சாமி த்வாம் த்ரஷ்டு மஹம் ததைவ -என்று
கிரீடம் அணிந்தவனும் கதை ஏந்தினவனும் சக்கரக் கையனுமான உன்னை முன் போலவே-நான் காண விரும்புகிறேன் –என்று
விஸ்வரூபம் சேவித்த பிறகு அர்ஜுனன் பழைய படி-கையும் சக்கரமும் ஆக உன்னைக் காண விரும்புகிறேன் என்கையாலே –
அடல் கொண்ட நேமியனாக-சேவை தந்து கண்ணன் கீதை உபதேசித்தான் என்று தெரிகிறது –
அடல் கொண்ட நேமியன் தன் நேமியினாலேயே துர் யோதநாதியாரை வெல்லலாம் ஆயினும்-
கையில் ஆயுதம் உபயோக்கிகலாகாது என்ற பிரதிக்ஜையை ஏற்பப் போரிடும்படி அர்ஜுனனைத்-தூண்டுவதற்காக
கீதா சாஸ்திரம் உபதேசிக்க வேண்டியது ஆயிற்று -என்க
அடல் கொண்ட நேமியன் ஆரண சொற்பொருளை கண்டு அளித்தது பயன் படாது போயிற்று –
கையிலே ஆயுதம் பிடிப்பவன் வேதர்த்தத்தை உபதேசித்தால் அது எங்கனம் பயப்படும் -என்று-
ரசமான பொருளும் இங்கே தோன்றுவதை சுவைத்து இன்புருக –
பற்றார் நடுங்க முன் பாஞ்ச சன்னியத்தை வாய் வைத்த போரேறே -பெரியாழ்வார் திருமொழி —-3-3-5-
பூங்கொள் திருமுகத்து மடுத்தூதிய சங்கொலியும் சாரங்கவில் நாண் ஒலியும் தலைப்பெய்வது எஞ்ஞான்று கொலோ-நாச்சியார் திருமொழி –9-9-
செம்மையுடைய திருவரங்கர் தாம் பணித்த மெய்ம்மைப் பெரு வார்த்தை விட்டு சித்தர் கேட்டிருப்பர்
தம்மை யுகப்பாரைத் தாமுகப்பார் என்னும் சொல் தம்மிடையே பொய்யானால் சாதிப்பாரினியே —11-10-
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு பார்த்தன் தன் தேர் முன் நின்றானை–பெரிய திருமொழி–2-3-1-
இந்திரன் சிறுவன் தேர் முன் நின்றானைத் திரு வல்லிக் கேணிக் கண்டேனே -2-3-6-
பாரேறு பெரும் பாரம் தீரப் பண்டு பாரதத்துத் தூதியங்கி பார்த்தன் செல்வத் தேரேறு சாரதியாய் எதிர்ந்தார்
சேனை செருக்களத்துத் திறல் அழிய செற்றான் தன்னை –திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே -2-10-8-
மண்ணின் மீ பாரம் கெடுப்பான் மற மன்னர் பண்ணின் மேல் வந்த படையெல்லாம் பாரதத்து
விண்ணின் மீதேறி விசயன் தேரூர்ந்தானை நண்ணி நான் நாடி நறையூரில் கண்டேனே –6-8-8-
கயம் கொள் புண் தலைக் களிறுந்து வெந்திறல் கழல் மன்னர் பெரும் போரில்
மயங்க வெண் சங்கம் வாய் வைத்த மைந்தனும் வந்திலன் –8-5-4-
மயங்க வலம் புரி வாய் வைத்து வானத்து இயங்கும் எறி கதிரோன் தன்னை –
முயங்கமருள் தேராழியால் மறைத்தது என் நீ திருமாலே போராழிக் கையால் பொருது –முதல் திருவந்தாதி–8-
வேதியர்கள் சென்று இறைஞ்சும் வேங்கடமே வெண் சங்கம் ஊதிய வாய் மால் உகந்த வூர் –முதல் திருவந்தாதி-–37-
சேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன் ஆயன் துவரைக் கோனாய் நின்ற மாயன்
அன்று ஓதிய வாக்கதனைக் கல்லார் உலகத்தில் ஏதிலராய் மெய்ஞ்ஞானமில் –நான்முகன் திருவந்தாதி–71–
போர்ப்பாகு தான் செய்து அன்று ஐவரை வெல்வித்த மாய போர்த்
தேர்ப்பாகனார்க்கு இவள் சிந்தை துழாய்த் திசைக்கின்றதே –திருவாய்மொழி–4-6-1-
மாயம் அறிபவர் மாயவர்க்கு ஆளின்றி யாவரோ -தாயம் செறும் ஒரு நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காய்
தேசம் அறிய வோர் சாரதியாய்ச் சென்று சேனையை நாசம் செய்திட்டு நடந்த நல் வார்த்தை யறிந்துமே –-7-5-10-
வார்த்தை யறிபவர் மாயவர்க்கு ஆளின்றி யாவரோ போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு இறப்பிவை
பேர்த்து பெரும் துன்பம் வேரற நீக்கித் தன் தாளின் கீழ்ச் சேர்த்து அவன் செய்யும் சேமத்தை எண்ணித் தெளிவுற்றே -7-5-11-
கண்டேன் கமல மலர்ப்பாதம் காண்டலுமே விண்டே ஒழிந்த வினையாயின வெல்லாம்
தொண்டே செய்து என்றும் தொழுது வழி ஒழுக பண்டே பரமன் பணித்த பணி வகையே -10-4-9-
அடியைத் தொடர்ந்து எழும் ஐவர்க்காய் அன்று பாரதப் போர்
முடிய பரி நெடும் தேர் விடுங்கோனை முழுதுணர்ந்த
அடியர்க்கமுதம் இராமானுசன் என்னை யாள வந்து
இப்படியில் பிறந்தது மற்றில்லை காரணம் பார்த்திடிலே–-இராமானுச நூற்றந்தாதி-51-
சரணம் அடைந்த தருமனுக்கா பண்டு நூற்றுவரை
மரணம் அடைவித்த மாயவன் தன்னை வணங்க வைத்த
கரணம் இவை யுமக்கு என்று இராமானுசன் உயிர்கட்க்கு
அரண் அங்கு அமைத்திலனேல் அரண் ஆர் மற்று இவ்வார் உயிருக்கே–-இராமானுச நூற்றந்தாதி-67-
ஆர் எனக்கு இன்று நிகர் சொல்லில் மாயன் அன்று ஐவர் தெய்வத்
தேரினில் செப்பிய கீதையின் செம்மைப் பொருள் தெரியப்
பாரினில் சொன்ன இராமானுசனைப் பணியும் நல்லோர்
சீரினில் சென்று பணிந்தது என் ஆவியும் சிந்தையுமே –இராமானுச நூற்றந்தாதி-68-
ஸ்ரீ கீதா பாஷ்ய அவதாரிகை
ஸ்ரீ யபதி–நிகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணை கதாந்ர-ஸ்வ இதர ஸமஸ்த வஸ்து விலக்ஷண அனந்த ஞான ஆனந்த ஏக ஸ்வரூபம் –
ஸ்வபாவிக அனவதிக அதிசய ஞான பல ஐஸ்வர்ய வீர்ய சக்தி தேஜஸ் ப்ரப்ருத்ய அசங்க்யேய கல்யாண குண கண மஹோ ததி-
ஸ்வ அபிமத அநுரூப ஏக ரூப அசிந்த்ய திவ்ய அத்புத நித்ய நிரவத்ய நிரதிசய உஜ்வல்ய ஸுந்தர்ய
ஸுகுமார்ய லாவண்ய யவ்வனத்தி அனந்த குண நிதி -திவ்ய ரூப
ஸ்வ உசித விவித விசித்திர அனந்த ஆச்சர்ய நித்ய நிரவத்ய அபரிமித திவ்ய பூஷண
ஸ்வ அநு ரூப அசங்க்யேய அசிந்த்ய சக்தி நித்ய நிரவத்ய நிரதிசய கல்யாண திவ்ய திவ்யாயுத
ஸ்வாமி மத் அநு ரூப நித்ய நிரவத்ய ஸ்வரூப ரூப குண விபவ ஐஸ்வர்ய சீலாத்யா அனவதிக அதிசய அசங்க்யேய கல்யாண குண ஸ்ரீ வல்லப
ஸ்வ சங்கல்ப அநுவிதாயி ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி பேதச அசேஷதைகரதி ரூப
நித்ய நிரவத்ய நிரதிசய ஞான கிரியை ஐஸ்வர்யாத்
அனந்த குண கணா அபரிமித ஸூரிபிர் அனவரத அபிஷ்ருத சரண யுகல
வாங்மனச அபரிச்சேதய ஸ்வரூப ஸ்வபாவ
ஸ்வ உசித விகித விசித்திர அனந்த போக்ய போக உபகரண போக ஸ்தான சம்முத்த அனந்த ஆச்சர்ய அனந்த மஹா விபவ
அனந்த பரிமாண நித்ய நிரவத்ய அஸாக்ஷர பரம வ்யோம நிலய
விவித விசித்திர அனந்த்ய போக்ய போக்த்ரு வர்க்க பரி பூர்ண நிகில ஜகத் உதய விபவ லய லீல
பரம் ப்ரஹ்ம புருஷோத்தம பர நாராயண
ப்ரஹ்மாதி ஸ்தவாரந்த அகிலம் ஜகத் ஸ்ருஷ்ட்வா
ஸ்வரூபேண அவஸ்தித தக்ஷ ப்ரஹ்மாதி தேவ மனுஷ்யானாம் த்யான ஆராத்யானாம் கோசார
அபார காருண்ய ஸுசீல்ய வாத்சல்ய உதாரய மஹோ ததி ஸ்வ மே ரூபம் தத் தத் சஜாதீய ஸம்ஸ்கானம் ஸ்வ ஸ்வபாவம் அஜஹதேவ குர்வன்
தேஷூ தேஷூ லோகேஷ் வவதீர்ய அவதீர்ய தைஸ்தைராராதித தத் அதிஷ்டான ரூபம் தர்மார்த்த காம மோஷாக்க்யம் பலம் பிரயச்சன்
பூபார அவதாரனதேசேன அஸ்மதாதீநாம் அபி ஸமாச்ரயணித்வாய அவதிர்யோர்வ்யாம் சகல மனுஷ நயன விஜயதாம் கத
பராவர நிகில ஜன மநோ நயன ஹாரி திவ்ய சேஷ்டிதானி குர்வன் பூதநா சாக்கடை யமார்ஜுன அரிஷ்ட ப்ரிலம்ப தேனுக காலீய கேசீ
குவலாயாபீட சாணூர முஷ்டிக தோசல கம்சாதீன் நிஹத்ய
அனவதிக தயா ஸுஹார்த்த அநு ராக கர்ப்ப அவலோகந ஆலாபம்ருதை-விஸ்வமாப் யாயியின் நிரதிசய ஸுந்தர்ய ஸுசீல்யாதி குண கணா
விஷ்ட தாரேண அக்ரூர மாலாகாராதீந் பரம பாகவதான் பூதான் க்ருத்வா-
ஸ்வரூபம் ரூபம் குணம் விபூதிகளை அவதாரிகையில் விவரித்து அருளி
ச பகவான் புருஷோத்தம -அந்த–கீழே சொன்ன பெருமைகள் எல்லாம் -ச -ஒரே எழுத்தால்
பகவான் – கல்யாண குணங்களுக்கு இருப்பிடமான –
புருஷோத்தமன் -வைலக்ஷண்யம் -ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன் –
அபுருஷன் அசித் -புருஷன் உத் புருஷன் உத்தர புருஷன் உத்தம புருஷன் -ஐந்து விரல்களும் காட்டுமே
சர்வேஸ்வரேஸ்வர- ராமானுஜர் இப்படி தான் அவனை எங்கும் அருளிச் செய்வார்-
பாண்டு தனய-வ்யாஜேந -பரம புருஷார்த்த மோக்ஷ சாதனதயா பக்தி யோகம் –ஞான கர்மயோகம் அங்கமாகக் கொண்டது
ஞான கர்ம அநுக்ரஹீதமான பக்தி யோகம் –வித்யாஞ்ச அவித்யாஞ்ச -இரண்டாலும் பரிஷ்காரம் பண்ணிய உள்ளத்துடன் –
அவித்யா என்று ஞானம் விட வேறு பட்ட கர்மயோகம் –
ஸூ விஷயம் -தன்னிடம் பக்தி -மறந்தும் புறம் தொழா மாந்தர் -அநந்யார்ஹத்வம்-ஆனை துரத்தினாலும் ஆனைக்கால் நுழையாதவர்
——————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .