ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –
இப்படி இருக்கிற இவர் தம்மை நீர் தாம் அறிந்து பற்றின படி என் -என்ன
நான் அறிந்து பற்றினேன் அல்லேன் –
அவர் திருவடிகளில் சம்பந்தம் உடையவர்களே -உத்தேச்யர் என்றும் இருக்குமவர்கள் –
என்னையும் அங்குத்தைக்கு சேஷம் ஆக்கினார்கள்-என்கிறார் –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை-
இப்படி ஆஸ்ரயண சௌகர்ய ஆபாதகங்களான கிருபாதி குணங்களை நீர் அறிந்த பின்பு இறே ஆஸ்ரயித்தது-
இப்படி உமக்கு தெளிவு பிறந்தது என் என்று கேட்டவர்களைக் குறித்து –
முதலிலே நான் அறிந்து ஆஸ்ரயித்தேன் அல்லேன் –
ஸ்ரீ எம்பெருமானார் உடைய கல்யாண குணங்களை அனுபவிக்கும் பிரிய தமருடைய திருவடிகளிலே அவஹாகித்து-
அனுபவிக்கும் ரசஜ்ஜர் தங்களுடைய பரசமர்த்தை ஏக பிரயோஜனதையாலே –
என்னைப் பார்த்து அங்குத்தைக்கு ஆளாக்கி
அனந்யார்ஹராம்படி பண்ணினார்கள் –அத்தாலே நான் அறிந்தேன் என்கிறார் –
ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை–
ஸ்ரீ எம்பெருமானாருடைய ஸ்வபாவத்தை எப்படி அறிந்து பற்றினீர்-என்பாரை நோக்கி
அவர் அன்பர் திருவடிகளில் சம்பந்தம் உடைய ஸ்ரீ வைஷ்ணவர்கள் என்னையும் சேர்க்க சேர்ந்தேன்-
நானாக அறிந்து பற்றினேன் அல்லேன் -என்கிறார் –
படி கொண்ட கீர்த்தி இராமாயணம் என்னும் பக்தி வெள்ளம்
குடி கொண்ட கோயிலில் இராமானுசன் குணம் கூறும்
கடி கொண்ட மா மலர்த்தாள் கலந்து உள்ளம் கனியும் நல்லோர்
அடி கண்டு கொண்டு உகந்து என்னையும் ஆள் அவர்க்கு ஆக்கினரே – 37-
பத உரை
படி கொண்ட -பூமி அடங்கப் பரவின
கீர்த்தி -கீர்த்தியை உடைய
இராமாயணம் என்னும் -இராமாயணம் என்று சொல்லபடுகிற
பக்தி வெள்ளம்-பக்தி பிரவாஹம்
குடி கொண்ட -குடி இருக்கிற
கோயில்-திருக் கோயிலாய் இருக்கிற
இராமானுசன் -எம்பெருமானாருடைய
குணம் கூறும் -குணங்களை பேசா நிற்கும்
அன்பர் -பக்தர்களின்
கடி கொண்ட -வாசனையயுடையதும்
மா -சீறியதும்
மலர்-அழகியதுமான
தாள் -திருவடிகளில்
உள்ளம் கலந்து -நெஞ்சம் கலந்து
கனியும் -அன்பு கனிந்து இருக்கும்
நல்லோர் -நல்லவர்கள்
அடி கண்டு – இவ் ஆத்மா வஸ்துவின் அடித்தளமான சேஷத்வத்தை அனுசந்தித்து
உகந்து -சந்தோஷித்து
கொண்டு-என்னை ஏற்று
என்னையும் அவர்க்கு -அவ் எம்பெருமானார்க்கு
ஆள் ஆக்கினர்-சேஷம் ஆக்கினார்கள்
வியாக்யானம் –
பூமியை அடங்கக் கொண்டு இருக்கும் கீர்த்தியை உடைத்தான – ஸ்ரீ இராமாயணம் ஆகிற-பக்தி சாகரம் –
நித்ய வாசம் பண்ணுவதொரு திவ்ய ஸ்தானமாய் இருக்கிற எம்பெருமானாருடைய-குணங்களை பேசா நின்றுள்ள –
பிரேம யுக்தருடைய பரிமளத்தை உடையதாய் -ஸ்லாக்யமாய் -போக்யமாய் –இருக்கிற திருவடிகளிலே –
நெஞ்சு கலந்து -ஸ்நேஹித்து இருக்கும் -விலஷணரானவர்கள்-
இவ் ஆத்ம வஸ்துவும் அங்குத்தைக்கு சேஷம் அன்றோ என்று கொண்டு -இதினுடைய படியை தர்சித்து
அந்த சம்பந்தமே ஹேதுவாக விரும்பி -அங்கீகரித்து -தங்களைப் போலே என்னையும் அவர்க்கு-சேஷமாம் படி பண்ணினார்கள்-
ஆகையாலே நான் அறிந்து இவ் விஷயத்தைப் பற்றினேன் அல்லேன்-
ஸ்ரீ வைஷ்ணவர்கள் சேர்க்கச் சேர்ந்தேன் இத்தனை என்று கருத்து –
ஸ்ரீ ராமாயணத்தை பக்தி சாகரம் என்றது நிரவதிக பக்தி ஜனகத்வத்தாலே
கடி -மணம்–
உலகத்தில் கடல் -மாறி இங்கு – கடல் உலகத்தில் -இவர் -உள்ளத்தில் உள்ளதே –
அடி கண்டு கொண்டு உகந்து -என்னை திருத்தும் ஆச்சார்யர்கள் –உகந்து ஆட்க்கொண்டார்கள் –
அவர்கள் உகப்பே நம்மை ஆளாக்கும் -குற்றம் பார்த்து கை விடாமல் –
நம் சம்பிரதாய ஏற்றம் -அதிகாரி இல்லாதார்க்கு அன்றோ எதிராசா நீ இரங்க வேண்டும் —
ஸ்ரீ வால்மீகி மலை -ஸ்ரீ ராமர் குணங்கள் கடல் -தேக்கி வைப்பது ஸ்ரீ ஸ்வாமி உள்ளத்தில் –
பக்தி ரசம் அறிந்து -தானே சுற்றம் எல்லாம் பின் தொடர்வது போலே சுயமாகவே அனுபவித்தார் –
திருவடி போலே ஆச்சார்யர்கள் நம்மை -இந்திரியங்கள் ராவணன் தலைகள் —
படி கொண்ட கீர்த்தி
சத கோடி பிரவிஸ்த்ரம் -என்றும் –
வேத ப்ராசேத ஸாதா சீத் சாஷாத் ராமாயணாத் மனா –என்றும் சொல்லுகிறபடியே
பூ லோகத்தில் எல்லாம் வ்யாப்தி இருக்கிற கீர்த்தி உடைத்தான –
படி கொண்ட -என்ற இது உபலஷணம் –
சத்ய லோகத்தில் நின்றும் பிரம்மாவும் தாதர்சரான நாரத பகவானும் பூலோகத்தில் வந்து- வால்மிகியைக் குறித்து நியமித்தும்
உபதேசித்தும் போருகையாலே -இதனுடைய கீரத்தி ஊர்த்த லோகங்களிலும் இறே பிரசித்தமாய் இருப்பது
ராமாயணம் என்னும் பக்தி வெள்ளம் –
காவ்யம் ராமாயணம் க்ரிச்னம் ஸீதாயாஸ் சரிதம் மஹத் – என்று இருந்தாலும்
யச்யைதே தஸ்ய தத்தனம் -என்கிற கட்டளையாலே அவளுடைய சம்பத் எல்லாம் சேஷியானவனது-ஆகையாலே
ராம விஷயமாய் இருக்கும் என்று சொல்லத் தட்டில்லை -இறே
தாசர்தமான ராமாயணம்-என்கிற கரை புரண்ட பக்தி ரசத்தை -இதில் பிரதிபாத்யமாய் இருந்துள்ள அர்த்தத்தை
பக்தி ரசம் என்று சொல்ல வேண்டி இருக்க-இது தன்னையே பக்தி வெள்ளம் என்றது –
தத் குண சாரச்யாத்து தத் வ்யபதேச -என்றால் போலே அதுக்கு உத்பாதகம் ஆகையாலே –
ஏகைகம ஷரம் ப்ரோக்தம் மகா பாதக நாசகம் -என்ற பிரகாரத்திலே
அர்த்த பர்யந்தம் போக வேண்டி இராதே-சப்த ராசி தானே ரசித்து இருக்கும் என்னுதல்
இப்படி பட்ட பக்தி தான் அங்கே ஆஸ்ரயித்து இருக்கும் நாங்கள் அத்தை பெருகைக்கு என் என்றால்
படி கொண்ட கீர்த்தி –
படி-
ஏனைய உலகங்களுக்கும் உப லஷணம்
பிரமனால் நூறு கோடிப் பிரபந்தமாக இராமாயணம் இயற்றப் பெற்று உம்பர் உலகில் பரவி இருப்பதாகவும் –
அதுவே நாரதர் வாயிலாக வால்மீகிக்கு வந்ததாகவும் சொல்லப் படுவது காண்க –
இனி
படியிலே கீர்த்தி கொண்ட இராமாயணம் என்று கூட்டி –
மற்ற முனிவர்கள் இயற்றிய-இராமாயணங்களை விட பிரசித்தி பெற்ற ஸ்ரீ வால்மீகி இராமாயணத்தை கூறிற்றாகவுமாம் –
இராமாயணம்-என்னும் பக்தி வெள்ளம் –
அளவற்ற பக்திப் பெருக்கிற்கு காரணமாகிய ஸ்ரீ இராமாயணத்தை -பக்தி வெள்ளம்-என்கிறார் –
இனி ஸ்ரீ வால்மீகி முனிவருடைய ஸ்ரீ ராம பக்தி உள் அடங்காது வெளிப்பட்டமை பற்றி -பக்தி வெள்ளம் –என்றார் ஆகவுமாம்-
வெள்ளம்-பிரவாஹம்
வால்மீகி கிரி சம்பூதா ராம சாகரகாமி நீ
புனாதி புவனம் புண்யா இராமாயண மகா நதீ–என்று
ஸ்ரீ வால்மீகி என்னும் மலையில் தோன்றி ஸ்ரீ இராமாபிரான் என்னும் கடலை நோக்கி செல்லும்
ஸ்ரீ இராமாயணம் என்னும் புண்ணிய நதி உலகத்தை சுத்தம் ஆக்குகிறது -என்று வெள்ளமாக-
ஸ்ரீ இராமயணத்தை முன்னோர் உருவகம் செய்து உள்ளமை காண்க –
இனி
வெள்ளம் -கடலுமாம் –
வெள்ளத்தின் உள்ளானும் – 99- என்று பொய்கை ஆழ்வாரால் கடல்-வெள்ளமாக சொல்லப்பட்டமை காண்க –
ஸ்லோக சார சமாகீர்ணம் சர்வ கல்லோல சங்குலம்-காண்டாக்ராஹா மகாமீனம் வந்தே இராமாயண ஆர்ணவம் -என்று
ஸ்லோகங்களின் சாரத்தினால் நிறைந்ததும்
சர்க்கம் என்கிற அலைகள் நெருங்கினதும்
காண்டம் ஆகிற முதலையாம் பெரு மீன்கள் உடையதுமான
ஸ்ரீ இராமயணமாம் கடலினை வந்திக்கிறேன் -என்று ஸ்ரீ இராமாயணம் கடலாக உருவகம் செய்யப்பட்டு உள்ளமையும் காண்க –
வெள்ள நீர் சடையன் -வெள்ளம் தண்ணீர் பக்தி வெள்ளம் -உருகி நைந்து ஈரமான நெஞ்சம் -என்றுமாம்
குடி கொண்ட-கோயில் இராமானுசன் –
ஸ்ரீ எம்பெருமானாரே ஒரு கோயிலாக அவர் திரு உள்ளத்தை ஒரு ஷணம் பிரியாதே இவ்விடமே-குடியாக நித்ய வாசம் பண்ணி இருந்தது-
இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மா இரும் சோலை என்னும் பொருப்பிடம்-மாயனுக்கு என்பர் நல்லோர் –
ஏதத் பிரதி பாத்யனான பரமபுருஷனுக்கு அவை எல்லாம் கோயில்கள் ஆமாப் போலே
தத் பிரதிபாதகமான ஸ்ரீ ராமாயணம் என்னும் பக்தி பிரவாஹத்துக்கு இவரும் ஒரு கோயிலாக காணும் இருப்பது –
இராமானுசன் –
அந்த ஸ்ரீ ராம அவதாரத்தில் திவ்ய தம்பதிகள் விஷயமாக சர்வவித கைங்கர்யங்களையும் பண்ணி-
வயிற்றைப் பெருக்கி பக்தியினுடைய ரசம் அறிந்தவர் இறே எம்பெருமானாராய் அவதரித்தது
குடி கொண்ட கோயில் இராமானுசன் –
பள்ளத்தாக்கான இடங்களில் வெள்ளம் கோத்து நிற்பது போலே எம்பெருமானாரது ஆழமான நெஞ்சத்தில்
ஸ்ரீ இராமாயணம் என்னும் பக்தி வெள்ளம் புகுந்து புகுந்து தேங்கிக் குடி கொண்டது –
ப்ரேமேயத்துக்கு கல் அரணாய் அமைந்த கோயிலே போதும் –
பிரமாணத்துக்கோ அறிவார்ந்த ஸ்ரீ எம்பெருமானாரே அரணாக அமைய வேண்டி இருக்கிறது –
பிரமாணம் அல்லது பிரமேயம் சித்தி யாமையாலே பிரபல பிரமாணமான ஸ்ரீ இராமாயணத்துக்கு
கல் அரணாம் கோயிலாக ஸ்ரீ எம்பெருமானாரே அமைகிறார் –
ஸ்ரீ வைஷ்ணவ சித்தாந்தம் இராமாயணத்தில் பொதிந்து கிடக்கையாலே அந்த சித்தாந்தத்தை ஸ்ரீ எம்பெருமானாரே-பாதுகாக்கின்றார் -என்க –
ஸ்ரீ இராமாயணமும் ஸ்ரீ திருவாய் மொழியும் ஆகிற வலியன இரண்டு மகா பிரபந்தங்கள் உண்டாய் இருக்க –
ஒரு மதிளை இடித்து விட்டால் அந்த வைஷ்ணவ சித்தாந்தம் குலைந்து விடுமா –
என்று ஸ்ரீ வைணவ கோயில்களை இடித்த குலோத்துங்க சோழனின் மகன் கூறியதாக -10 7-5 – – ஈட்டில்-காணப்படுகிறது –
உகவாதாரும் நெஞ்சு உளுக்கும்படி ஸ்ரீ வைஷ்ணவ சித்தாந்தமான பக்தியை புகட்டும் ஸ்ரீ இராமாயணத்தை-
சித்தாந்த ஸ்த்தாபகராகிய ஸ்ரீ எம்பெருமானார் கோயிலாக பாதுகாப்பது பொருத்தமாக இருக்கிறது அன்றோ –
மற்று ஒரு சித்தாந்த சாஸ்திரம் ஆகிய ஸ்ரீ திரு வாய் மொழியை பேணி வளர்த்து காப்பது போலே-
ஸ்ரீ இராமயணத்தையும் அவர் பேணி வளர்த்து காக்கின்றார் -என்க
ஸ்ரீ திருவாய் மொழியில் –கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ – 7-5 1- -என்று நம் ஆழ்வார்-அருளி செய்ததை
பின்பற்றி ஸ்ரீ எம்பெருமானார் இராமாயணத்தை எப்போதும் நெஞ்சில் வைத்து-அனுசந்திப்பார் ஆயினர் –
மற்றைய அவதார சரித்ரங்களை ஸ்ரீ இராம சரித்ரித்தற்கு போலியாகவே நினைத்து அருளுவர் –
ஸ்ரீ கண்ணன் இடம் காதல் கொண்டவள் ஆயினும் ஸ்ரீ ஆண்டாள்-மனதிற்கு இனியான் –என்று ஸ்ரீ இராமனைக்-குறிப்பிடுகிறாள் அன்றோ –
ஸ்ரீ பெரும்புதூர் மா முனிக்கும் அவர்க்கு பின்னானாளுக்கும் ஸ்ரீ இராமன் திறத்து-ஒரே மனப்பான்மை தான்-
ஸ்ரீ இராமாயணத்தை இடைவிடாது அனுசந்திப்பதனால் இவரிடம் பக்தி கரை-புரண்டமை பற்றி –
ஸ்ரீ இராமாயணம் என்னும் பக்தி வெள்ளம் -குடி கொண்ட கோயில்
ஸ்ரீ இராமானுசன் பக்தி வெள்ளம்-குடி கொண்ட கோயில் இராமானுசன் என்றதாகவும் கொள்ளலாம் –
பக்தி வெள்ளத்தை சுவை மிகுதி பற்றி –அமுத வெள்ளமாக -குறிப்பிடுகிறார் –
ஸ்ரீ நம் ஆழ்வார் திருவாசிரியத்திலே -இராம சரித்ரத்தை இடைவிடாது-அனுபவித்து பக்தி யாகிற அமுத வெள்ளத்தானாம்
சிறப்பு விட்டு நல் வீடு பெறினும் கொள்வது எண்ணாது அதனைப் புறக்கணித்தார் சிறிய திருவடி –
பக்தி வெள்ளம் எனப்படும் இராமாயணமாம் கடல் -சுவை மிக்கு இருத்தலின் ஸ்ரீ இராமானுச முனிவரின்-உள்ளத்திலேயே குடி கொண்டது –
அகஸ்த்ய முனிவரது உட் புகுந்த உப்பு வெள்ளம் அங்கே குடி கொள்ள-முடிய வில்லை -அகஸ்தியர் அதனை உமிழ்ந்து விட்டார் –
ய பிபன் சததம் ராம சரிதாம்ருத சாகரம் அத்ருப்தச்தம் முனிம் வந்தே ப்ராசேதச மகல்மஷம் -என்று
எவர் எப்பொழுதும் ராம சரித்ரம் ஆகிய அமுதக்கடலை குடித்தும் -போதும் என்று திருப்தி அடையாது இருக்கிறாரோ –
குற்றம் அற்ற அந்த வால்மீகியை வணங்குகிறேன் -என்றபடி வால்மீகி போலே
ஸ்ரீ எம்பெருமானாரும் பக்தி அமுதக் கடலை குடித்து தெவிட்டாதவர்-என்க –
இனி கோயில் இராமானுசன்
என்பதற்கு கோயிலில் -ஸ்ரீ ரங்கத்தில் -வாழும் இராமானுசன் என்று-பொருள் ஆகவுமாம் –
இதனால் ஸ்ரீ அயோத்தியில் வாழ்ந்த ஸ்ரீ இராமானுசனை -ஸ்ரீ இளைய பெருமாளை -விலக்குகிறது
ஸ்ரீ கோயில் அண்ணன் -என்று ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்ததற்கு இது பொருந்தி இருப்பது காண்க –
குணம் –
அவருடைய கல்யாண-குணங்களை –
கூறும் அன்பர்
இந்த லோகத்தார் எல்லாருக்கும் உபதேசிக்கும் பிரேம யுக்தர் –
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கி யாதொன்றும் இல்லைகலியும் கெடும் கண்டு கொண்மின் -என்று ஸ்லாகித்த ஸ்ரீ நம் ஆழ்வாரும் –
அவர் கொடுத்த ஸ்ரீ பவிஷ்யாசார்யா விக்ரகத்தை ஆராதித்துக் கொண்டு போந்த ஸ்ரீ நாத முனிகளும் –
ஆ முதல்வன் என்று-பிரதி பத்தி பண்ணின ஸ்ரீ ஆளவந்தாரும் –
குணம் கூறும் அன்பர் –
ஸ்ரீ இராமாயணத்தை மட்டும் விசேடித்து அனுசந்திப்பதை குறையாக கருதாது –
சாரத்தை கிரஹிக்கும் குணமாக கொண்டு -அதனைக் கூறுகின்ற பக்தர்கள்-என்றபடி –
இனி
தம்மை ஆஸ்ரயித்தை ஜனங்கள் இடம் அன்பு கொண்டவர் என்று கொண்டால்-
தங்கள்-அனுபவத்திற்கு உரிய எம்பெருமானார் குணங்களை அனுசந்திப்பதோடு அல்லாமல் ஜனங்கள் பால்-அன்பால்
அவற்றை கூறவும் செய்கின்றனர் எனக் கொள்க –
இனி –
பிணங்கி அமரர் பிதற்றும் குணம் கெழு கொள்கையினானே-திரு வாய் மொழி – -1 6-4 – – என்னும்-இடத்து போலே
தாங்கள் அனுபவித்த குணங்களை அன்பின் மிகுதியால் வெளியே கூறியே ஆக வேண்டும்-படி ஆயிற்று -என்பார்-
கூறும் அன்பர்-என்கிறார் என்னவுமாம் –
கடி கொண்ட மா மலர்த் தாள்-
அவர்களுடைய பரிமள பிரசுரமாய் -விலஷணமாய்-பரம போக்யமான திருவடிகளிலே –
கடி -பரிமளம்
மா -மகத்வம்-யாவதாத்மா பாவியாக அனுபவித்தாலும் சரம பர்வ-நிஷ்டர்க்கு குறை பட்டு இராதே –
மேன்மேலும் பெருமை உடைத்தாய் இறே இருப்பது
மலர் –
லோகத்தில்-புஷ்பம் போல் ஒருகால் விகசிதமாய் இருக்கை அன்றிக்கே -சர்வதா விகாசதோடே இருக்கும் என்றபடி –
அத்ர பரத்ர சாபி நித்யம் யதீய சரணவ் சரணம் மதியம் -என்னக் கடவது இறே –
தாள் –
யானிசா சர்வ பூதானாம்-தஸ்யாம் ஜாகர்த்தி சம்யமி-என்னும்படி இருக்கிற அவர்களுடைய திருத் தாள்களிலே –
கலந்துள்ளம்-திரு உள்ளம் கலந்து கனியும் நல்லோர்
பக்வ பலம் போலே ரசித்து இருக்கும் சம்யக் ஞானத்தை உடையரானவர்கள்-ஸ்ரீ கூரத் ஆழ்வான் -என்றபடி –
கடி கொண்ட மா மலர்த்தாள் கலந்து உள்ளம் கனியும் நல்லோர் –
மா என்று சீர்மையும் –மலர் -என்று அனுபவிக்கத் தக்க அழகு உடைமையும் -காட்டப் படுகின்றன –
ஆன்ம தத்துவம் உள்ள வரையிலும் அனுபவித்தாலும் குறைவு படாமை-சீர்மை-என்க –
நல்லோர் –
தம் அனுபவத்தில் பங்கு அளித்தல் என்னும் நன்மை உடையோர் -என்றபடி
அடி கொண்டு உகந்து
இவ் ஆத்மா வஸ்து -அங்குத்தைக்கு சேஷமானது அன்றோ என்று கொண்டு -இதனுடைய படியை தர்சித்து –
அந்த சம்பந்தமே ஹேதுவாக விரும்பி அங்கீகரித்து –
ஒரு-ராஜ புத்ரன் வழி தப்பிப் போய் ஒரு வேடன் கிரஹத்திலே சேர்ந்து இருக்க -அந்த பிரகாரத்தை அறிந்து இருக்கும்-தார்மிகர் சிலர் –
இவருடைய சம்பந்தத்தை அறிவிப்பித்து -இரு தலையும் சேர்க்குமா போலே-
அடி கண்டு ..உகந்து
இவ் ஆத்மா வஸ்துவும் எம்பெருமானார்க்கு சேஷப் பட்டது அன்றோ -என்று இதனுடைய
அடியாகிய சேஷத்வத்தை தர்சித்து அந்த சம்பந்தமே ஹேதுவாக விரும்பி அங்கீகரித்து -என்றபடி-
என்னையும்-ஆள் அவர்க்கு ஆக்கினரே
என்னையும் –
அவருக்கு தம்மைப் போலே என்னையும் ஸ்ரீ எம்பெருமானாருக்கு –
ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகன் பக்கலிலே பிரேம யுக்தர் ஆனவர் என்று -அவர்க்கு -என்று தத் சப்தத்தால் தோற்றுகிறது –
ஆள் ஆக்கினர் –
அங்குத்தைக்கு பிராப்தமான ஆகாரத்தோடு கூட்டினார்கள் -சேஷ பூதானாம் படி-பண்ணினார்கள் -என்றபடி –
ஆகையாலே நான் வகுத்த விஷயம் என்று அறிந்து ஆஸ்ரயித்தேன் அல்லேன் –
எனக்கு புருஷகார பூதரான ஆழ்வான் ஆஸ்ரயிப்பிக்க ஆஸ்ரயித்தேன் என்றது ஆய்த்து-
என்னையும் ஆள் அவர்க்கு ஆக்கினர் –
உம்மை-எச்ச உம்மை-என்னையும் தங்களைப் போலே அவர்க்கு ஆள் ஆக்கினர் என்றபடி –
கற்பார் ராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ-ஸ்ரீ ஆழ்வார் -ஸ்ரீ கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம்-
சகல கல்யாண குணங்களை கொண்டவர் ஸ்ரீ ராமனும் ஸ்ரீ சுவாமியும்.
ஏசல் உத்சவம் பக்தி உலா நடை – ஸ்ரீ ராமன் சந்நிதி முன் நடந்து கற்றவர் இடம் நடந்து காட்டுவார்-ஸ்ரீ ஸ்வாமி இன்றும்
ஸ்ரீ பெரும் தூரில் -காண கண் கோடி வேண்டும்
ஸ்ரீ பெரிய திரு மலை நம்பி மூலமும் ஸ்ரீ ராமாயணம் மூலம் கண்டு ஸ்ரீ ராமனைக் கற்றார் .
காட்டிக் கொடுத்த ஸ்ரீ ராமாயணத்தையே நெஞ்சில் கொண்டார்.
நாயகனாய்-ஸ்ரீ ராமனுஜரையே ஸ்ரீ ஆண்டாள் அருளுவதாக சொல்வர்
அடியவர் துன்பம் துடைக்கும் நாயகன்-10 லஷண்யங்களை ஸ்ரீ வால்மீகி அருளுகிறார் ஸ்ரீ ராமனுக்கு –
அனைத்தும் ஸ்ரீ சுவாமி -பக்கல் காணலாமே
முதல்-உயர்குடி பிறப்பு ..ஷத்ரிய குல கொழுந்து சூரிய குல திவாகரன் –விவஸ்வான் மனு.28 சதுர் யுகம் முன்-
கேசவ சோமயாஜுலு பிராமணர்-/பிர பன்ன குலம்-ஸ்வாமி
2-சாமுத்ரா லஷணம்- திரு மேனி அழகு .மூன்று பதக்கம் கோவில் பெருமாள் திருமலை செல்ல பிள்ளை
3-ராஜா சார்வ பௌமன்- மகா பாக்யசாலி- கருவிலே திரு உடன்
4-யதி சார்வ பௌமன் /வாரி வழங்கும் தன்மை–
கோ தானம் கதை -கொடுக்கும் பொழுது பிராமணர் கேட்க தடி எறிய சொல்லி-ராமன் சிரிக்க-அது பசு மாடு கொடுத்தது போல
இவரோ காப்பேன் சொன்னார் -இவரோ பின் படரும் குணன் பார்த்தோம்
5-தேஜஸ்வீ -வனம் சோபை அடைந்தது. பெருமாள் தண்ட காரண்யம் வந்ததும்
ஸ்வாமி -உள் இருட்டே போக்கினாரே -ராமானுஷ திவாகரன்
6 வைதப்யம் -எதை எப்பொழுது செய்யணும் அதை அவர் மூலம் நடத்தும் தன்மை-விரோதி நண்பன் என்றதால் வாலி இடம் வர வில்லை என்று
பிள்ளை உறங்கா வல்லி தாசரை அழகிய கண்களை பெரிய பெருமாளையே காட்ட சொல்லி திருத்தினார் சுவாமி-அப்பொழுது ஒரு சிந்தை செய்தே –
7-தார்மிகத்வம் -நேர்மை கிருபை-விருத்தி கிரந்தம் பார்த்தே எழுத –பிரமாண்யத்தில் உள்ள ஊற்றம்
8-தெய்வ தன்மை– பவான் நாரயனோ தேவ -ஸ்வாமியும் .அடையார் கமல கேள்வன் -ராமானுஜ முனி ஆயின
9 –பாண்டித்வம் -ஐந்து ஆச்சார்யர் –ஜைனர்களை வென்ற பாண்டித்தியம்-யாதவ பிரகாசர் போன்றோரை வென்ற
10- விநயம் உடையவர் -விச்வமித்ரர் இடம் இருவரையும் ஏவி பண்ணி கொள்ள சொல்லி–
ஸ்வாமி யும் கோஷ்டி கடைசியில் தீர்த்தம் வாங்கி கொண்ட வினயத்வம்
நின் தாள் நயந்து இருந்த -இவள்-வஸ்து நிர்நேயம் பண்ணினால் போல
வகுத்த விஷயம் என்று தெரிந்து இல்லை ஸ்ரீ கூரத் ஆழ்வான் சேர்ப்பிக்க சேர்ந்தேன்..
சம்பந்தமே முக்கியம்-
உள்ளம் கனியும் நல்லோர்
நீர்மை இல் நூற்றுவர் வீய ஐவர்க்கு அருள் செய்து நின்று
பார் மல்கு சேனை அவித்த பரஞ்சுடரை நினைந்து ஆடி
நீர் மல்கு கண்ணினர் ஆகி நெஞ்சம் குழைந்து நையாதே
ஊன் மல்கி மோடு பருப்பார் உத்தமர்கட்கு என் செய்வாரே!–3-5-7-
கருமமும் கரும பலனும் ஆகிய காரணன் தன்னைத்
திரு மணி வண்ணனைச் செங்கண் மாலினைத் தேவ பிரானை
ஒருமை மனத்தினுள் வைத்து உள்ளம் குழைந்து எழுந்து ஆடிப்
பெருமையும் நாணும் தவிர்ந்து பிதற்றுமின் பேதைமை தீர்ந்தே–3-5-10-
ஆள் அவர்க்கு ஆக்கினரே
கோவிந்தன் குடக்கூத்தன் கோவலன் என்று என்றே குனித்துத்
தேவும் தன்னையும் பாடி ஆடத் திருத்தி என்னைக் கொண்டு,என்
பாவம் தன்னையும் பாறக் கைத்து எமர் ஏழ் எழு பிறப்பும்
மேவும் தன்மையம் ஆக்கினான்: வல்லன் எம்பிரான் விட்டுவே–2-7-4-
பற்பநாபன், உயர்வு அற உயரும் பெருந்திறலோன்,
எற்பரன், என்னை ஆக்கிக் கொண்டு, எனக்கே தன்னைத் தந்த
கற்பகம், என் அமுதம், கார் முகில் போலும் வேங்கட நல்
வெற்பன், விசும்போர் பிரான் எந்தை தாமோதரனே–2-7-11-
நேர் பட்ட நிறை மூ வுலகுக்கும் நாயகன் தன்னடிமை
நேர் பட்ட தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் சொல்
நேர் பட்ட தமிழ் மாலை ஆயிரத்துள் இவை பத்தும்
நேர் பட்டார் அவர் நேர் பட்டார் நெடுமாற்கு அடிமை செய்யவே–8-9-11-
தொண்டர் அடிப் பொடி என்னும் அடியனை அளியன் என்று அருளி உன் அடியார்க்கு
ஆட்படுத்தாய் பள்ளி எழுந்து அருளாய் -11-
அமலனாதி பிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் -1-
திரு ஆர மார்வதன்றோ அடியேனை ஆட்கொண்டதே -5-
அவன் தமர் எவ்வினையராகிலும் எங்கோன்
அவன் தமரே என்று ஒழிவது அல்லால் நமன் தமரால்
ஆராயப் பட்டு அறியார் கண்டீர் அரவணை மேல்
பேராயற்கு ஆட்பட்டார் பேர் —முதல் திருவந்தாதி —-55-
சென்ற நாள் செல்லாத நாள் செங்கண் மால் எங்கள் மால்
என்ற நாள் எந்நாளும் நாளாகும் -என்றும்
இறவாத எந்தை இணையடிக்கே ஆளாய்
மறவாது வாழ்த்துக என் வாய் —மூன்றாம் திருவந்தாதி–17-
கடல் மல்லைத் தல சயனம் ஆர் என்னும் நெஞ்சுடையார் அவர் எம்மை ஆள்வாரே –பெரிய திருமொழி -2-6-2-
பக்தி வெள்ளம்
உலகு படைத்து உண்ட எந்தை அறை கழல்
சுடர் பூம் தாமரை சூடுதற்கு அவாவு ஆர்
உயிர் உருகி யுக்க நேரிய காதல்
அன்பில் இன்பீன் தேறல் அமுத
வெள்ளத்தானாம் சிறப்பு விட்டு ஒரு பொருள்க்கு
அசைவோர் அசைக திரு வோடு மருவிய
இயற்க்கை மாயாப் பெரு விறல் உலகம்
மூன்றினோடு நல் வீடு பெறினும்
கொள்வது எண்ணுமோ தெள்ளியோர் குறிப்பே ?—ஸ்ரீ திருவாசிரியம்–2–
—————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply