ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –38–ஆக்கி யடிமை நிலைப்பித்தனை என்னை இத்யாதி —

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

இப்படி ஸ்ரீ வைஷ்ணவர்கள் சேர்க்கும் போதும் -அத்வேஷாதிகள் வேண்டுகையாலே –
தத் ப்ரவர்தகனான-ஈஸ்வரன் இறே -இப் பேற்றுக்கு அடி என்று நினைத்து -சாஷாத் நாராயணோ தேவ -இத்யாதிப் படியே –
ஸ்ரீ எம்பெருமானார் தம்மை ஸ்ரீ ஈஸ்வரனாக பிரதி பத்தி பண்ணி –
இன்று என்னைப் பொருளாக்கி -திரு வாய் மொழி -10 8-9 –என்கிற பாட்டில் –
ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்தால் போலே -இவரும் அருளிச் செய்கிறார் –
அன்றிக்கே –
இவர்களை முன்னிட்டு தம்மை அங்கீகரித்து அருளின ஸ்ரீ எம்பெருமானார் -ஆகையாலே –
இவர் திரு முகத்தைப் பார்த்து -இத்தனை நாள் இவ்வூரிலே நான் வர்திக்கச் செய்தே
என்னை அங்கீகரியாது இருக்கைக்கும் இப்போது அங்கீகரிக்கைக்கும்-ஹேது என் என்று-கேட்கிறார் ஆகவுமாம் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை-

இப்படி ஸ்ரீ ஆழ்வானை இட்டு அடியேனை திருத்தி சேர்த்து -சேஷத்வத்துக்கு இசைவிப்பித்து –
தத் யாதாத்ம்ய ஸீமா பூமியான சரம பர்வதத்திலே -அத்ய அபிநிவிஷ்டனாம் படி -பண்ணி யருளின-தேவரீர் –
இதற்க்கு முற் காலம் எல்லாம் அந்த ரசத்தை அடியேனுக்கு அனுபவிப்பியாதே வ்யர்த்தமே-
விஷயாந்தரங்களிலே வைத்ததுக்கு மூலம் ஏது-
பாக்யவான்கள் உடைய வாக்கிலே இடை விடாது சர்வ காலமும் ஸ்துதிகப்படும் ஸ்ரீ எம்பெருமானாரே –
தேவரீர் உடைய க்ருபா பாத்ரம் உள்ளபடி அறியப் பார்த்தால் எத்தனை-தரம் உடையார்க்கும் அரிதாய் இருக்கும் –
தேவரீரே இந்த ஸூஷ்ம அர்த்தத்தை அருளிச் செய்ய வேணும்-என்றே நேரே கேட்கிறார் –

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை–

நல்லோர் ஆள் அவர்க்கு ஆக்கும் போதும் அத்வேஷாதிகள்-த்வேஷம் இன்மை முதலியவை -வேண்டும் அன்றோ –
அவைகட்கு ஈஸ்வரன் அன்றோ காரணம் -ஆக இப் பேற்றுக்கு அடி ஸ்ரீ ஈச்வரனே யாதல் வேண்டும் -அந்த ஸ்ரீ ஈஸ்வரன் தானும் –
சாஷாத் நாராயணோ தேவ -க்ருத்வா மர்த்யமயீம் தநூம் மக்நான் உத்தரதே லோகன் காருண்யாச் சாஸ்திர பாணி நா -என்று
ஸ்ரீ நாராயணன் நேரே ஆசார்யன்-வடிவம் கொண்டு -கீழ்ப்பட்டவர்களை சாஸ்திரக் கையினால்-கை தூக்கி விடுகிறான்-என்றபடி –
அவன் தானே ஓன்று பத்தாக்கி நடாத்தி கொண்டு போரும் –
நமக்கு ஆசார்யனான ஸ்ரீ எம்பெருமானாரே என்று நினைந்து அவரை நோக்கி
இன்று என்னைப்-பொருள் ஆக்குவதற்கும் முன்பு என்னைப் புறத்து இட்டதற்கும் என்ன ஹேது என்று வினவுகிறார் –
அல்லது –
தன்னடியார்களைக் கொண்டு ஸ்ரீ எம்பெருமானார் தன்னை அங்கீகரித்தவர் ஆகையால் அவரை நோக்கி –
இத்தனை நாள் நான் இவ்வூரிலேயே இருந்தும் என்னை அங்கீ கரியாதற்கும்
இன்று என்னை-அங்கீ கரித்தத்தற்கும் காரணம் என்ன -என்று கேட்கிறார் ஆகவுமாம்-

ஆக்கி யடிமை நிலைப்பித்தனை என்னை யின்றவமே
போக்கிப் புறத்திட்ட தென் பொருளா முன்பு புண்ணியர் தம்
வாக்கில் பிரியா விராமானுச நின்னருளின் வண்ணம்
நோக்கில் தெரிவரிதால் உரையாய் இந்த நுண் பொருளே – 38-

பத உரை –
என்னை ஆக்கி -என்னை சேஷத்வத்திற்கு இசையும் படி யாக்கி –
அடிமை-பாகவத சேஷத்வத்தின் எல்லை அளவிலும் வரும்படி செய்து -அது தன்னை
நிலைப்பித்தனை -நிலை நிற்கும்படி செய்து அருளினீர்
முன்பு -இதற்கு முந்திய காலம் எல்லாம்
அவமே போக்கி -வீணாகப் போகும்படி செய்து
புறத்து இட்டது -வெளி விஷயங்களில் தள்ளி வைத்தது –
என் பொருளா -என்ன காரணமாக
புண்ணியர் தம் -பாக்கியசாலிகள் உடைய
வாக்கில்-பேச்சில்
பிரியா -எப்பொழுதும் பிரியாது விஷயமாய் அமைந்து இருக்கும்
இராமானுச-எம்பெருமானாரே
நின் அருளின் வண்ணம் -தேவரீர் உடைய கிருபையின் பிரகாரம்
நோக்கில்-ஆராய்ந்து பார்த்தால்
தெரிவரிது-தெரிந்து கொள்ள முடியாததாய் இருக்கிறது
இந்த நுண் பொருள்-இந்த சூஷ்மமான விஷயத்தை
உரையாய்-தேவரீரே அருளிச் செய்ய வேணும் –

வியாக்யானம்
அநாதி காலம் -ஈச்வரோஹம் -என்று இருந்த என்னை சேஷத்வத்துக்கு இசையும் படியாக்கி–
அது தன்னை-ததீய சேஷத்வ காஷ்டை யளவும் செலுத்தி -ஸ்த்திப்பித்து அருளினீர் –
இன்று இப்படி செயலாய் இருக்கச் செய்தே பூர்வ காலம் எல்லாம் வ்யர்த்தமே போக்கி –
பாஹ்ய விஷயங்களில் தள்ளி விட்டு வைத்தது -என்ன நிமித்தமாக –
தேவரீரை உள்ளபடி அறிகைக்கு ஈடான பாக்யாதிகருடைய வாக்குக்கு நித்ய விஷயமாய்-இருக்குமவரே –
தேவரீர் உடைய கிருபா பிரகாரம் தர்சிக்கும் அளவில் துர் ஜ்ஞ்நேயமாய் இரா நின்றது –
இந்த ஸூஷ்ம அர்த்தத்தை தேவரீர் தாமே அருளி செய்ய வேணும்-
தெரிவரிது என்றது -விவேகிக்க அரிது என்ற படி –

மக்நன் ஆக உழன்று இருக்கும் நம்மை உத்தரணத்துக்காக வன்றோ நீர் ஆவிர்பவித்தது –உமக்குமா லீலா வியாபாரம் –
புண்ணியர் வாக்கில் பிரியா -கலியும் கெடும் ஸ்ரீ நம்மாழ்வார் தொடக்கமான -நின் –அருளின் வண்ணம் –
வாசி உண்டே ஸ்ரீ பெருமாள் அருளிலும் –

என்னை –
அநாதி காலமே தொடங்கி-சில நாள் தேகமே ஆத்மா என்று பிரமித்த அஞ்ஞாநத்தாலும் –
பின்பு தேஹாதிர்க்தமாய் கொண்டு ஒரு ஆத்மவஸ்து இருக்கிறது என்று அறிந்ததாலும் –
ஈச்வரோஹம் அஹம் போகி-சித்தோஹம் பலவான் ஸூகி -என்னும் படியான அந்யதா அஞ்ஞா நத்தாலும் –
பின்பு காமநாதிகாரத்திலே விழுந்து
காமைஸ் தைர்ஹ்ர்தஜ்ஞான ப்ரபத்யந்தே அந்யதேவதா -என்னும் படியான விபரீத அஞ்ஞா நத்தாலும் –திரிந்து
அசத்கல்பனாய் போந்த அடியேனை

இன்று –
இப்போது -ஆக்கி -அப்படிப் பட்டவற்றை எல்லாம் விடுவித்து –
முதலிலே நானும் உனக்கு பழ வடியேன் -பகவத் சேஷத்வத்தில் அந்வயிப்பித்து -அடிமை நிலைப்பித்தனை -பின்பு –
அடியார்க்கு என்னை ஆள் படுத்த விமலன் -உன் அடியார்க்கு ஆட் படுத்தாய் -என்னும்படி ஸ்ரீ சர்வேஸ்வரன்-உபகரித்தால் போலே –
குருரேவ பரப்ரம்மம் -ஆசார்யஸ் சகிரிஸ் சாஷாத் சாருபி ந சம்சய -என்னும் படியான தேவரீர்-
அடியேனை சேஷத்வ காஷ்டா ரூபமான ததீய சேஷத்வத்திலே நிலை நிறுத்தினீர் –

முன்பு –
பூர்வ காலத்திலே-

அவமே போக்கி –
வ்யர்த்தமாக பொகட்டு –

புறத்திட்டது –
அப்ராப்த விஷயங்களிலே பிரவணனாகப் பண்ணியது –

என் பொருளா –
என்ன பிரயோஜனம் -மூலம் ஏது -என்று கேட்க –
மக்நானுத் தீராதே லோகன் -என்கிறபடியே-சர்வரையும் உத்தரிப்பிக்கைக்காக அவதரித்த நீரும்
ஸ்ரீ சர்வேஸ்வரனைப் போலே என்னை உம்முடைய-கிரீடைக்கு இவ்வளவும் விஷயமாக்கி வைத்தீரே -என்ன –
இவ்வளவும் உமக்கு அதிகாரம் இல்லாமையாலே அப்படி வைத்தோம் -என்ன –
அதிகாரம் உண்டேல் அரங்கர்-இரங்கரோ – அதிகாரம் இல்லாதவர்களுக்கு அன்றோ
எதிராசா நீர் இரங்க வேண்டுவது –
ஆனாலும் இப்போது நீர் இரங்க வேண்டுவது எந்த அதிகாரத்தை பார்த்து-என்று
முன்பு தம்மை –அவமே புறத்திட்டது என் பொருளா –என்னும்படியை பிடிக்கிறார் காணும் –

இன்று என்னைப் பொருள் ஆக்கி –என்கிற பாட்டிலே ஸ்ரீ ஆழ்வாரும் அவன் மடியைப் பிடித்தார் இறே –
நம்முடைய கிருபையாலே இன்று உம்மை இப்படி-பண்ணினோம் என்றீர் ஆகில் –
அந்த கிருபையினுடைய ஸ்வபாவத்தை சொல்ல வேணும் என்கிறார் –

இன்று என்னை அடிமை யாக்கி நிலைப்பித்தனை –
முன்பு எல்லாம் ஸ்வ தந்திரனாய் மதித்துத் திரிந்த என்னை இன்று அடிமைக்கு இசையும் படி ஆக்கினீர் –
ஆக்கி அடிமையின் எல்லை நிலத்திலே கொண்டு போய் நிலை நிறுத்தினீர் –
அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் -என்று ஸ்ரீ இறைவனை ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்தார் –
அது போன்றது இதுவும் –
தான் முன்னர் இருந்த நிலைக்கும் இப்போது ஏற்பட்டு உள்ள நிலைமைக்கும் உள்ள நெடு வாசியை-நோக்கி –
ஆக்கி-என்கிறார் –
திருத்தி -என்கின்றிலர்-அவர்க்கே புதிய பொருளாகத் தோற்றுகிறது-
வேதமும் அசத் -சத் -என்று நெடு வாசியைக் காட்டிற்று –

அவமே போக்கிப் புறத்து இட்டது என் பொருளா முன்பு –
கழிந்த நாட்களுக்கு இரங்கிக் கூறுகிறார் -அவமே போக்கி -என்று
புறத்து இடல்-
பாஹ்ய விஷயங்களில் ஈடுபடும்படி விட்டு இருத்தல்-
இழப்பதும் ஸ்ரீ எம்பெருமானாராலேயே -பெறுவதும் ஸ்ரீ எம்பெருமானாராலேயே என்று இப்போது நினைக்கிறார் –
அத்வேஷாதி களுக்கு காரணமான ஸ்ரீ ஈச்வரனாம் மூல ஸூஹ்ருதத்தை -ஸ்ரீ எம்பெருமானாரிலும் வேறுபட்டதாக நினைப்பது சரி யன்று –
சாஷாத் அம்மூல ஸூஹ்ருதமே -ஸ்ரீ எம்பெருமானாராக வந்து-உள்ளது என்பது -ஸ்ரீ அமுதனார் கருத்தாகும் –

இட்டது -என்று -இடுகைக்கு கூறுமாற்றால் தனது பாரதந்த்ரியத்தை வெளிப்படுத்தினார்
என் பொருளா -என்ன காரணமாக
இன்று -என்பது ஆளாக்கினதற்கு பின்பு உண்டான காலத்து
முன்பு -என்பது -அதற்கு முன்புள்ள அநாதியான காலத்தை –

புண்ணியர் தம்
மயர்வற மதி நலம் பெறுகைக்கு உடலான பகவத் நிர்ஹேதுக கிருபையான பாக்யத்தை உடையவர்கள் –

வாக்கில் பிரியா –
அவர்கள் திரு வாக்கிலே இடைவிடாது இருக்கிற –
பூர்வே மூர்த் நாயஸ் யாஸ்வயமுபகதா தேசிக –என்னும்படியான ஸ்ரீ நம் ஆழ்வார் முதலானவர்கள் –
பொலிக பொலிக பொலிக என்று மங்களாசாசனம் பண்ணினார்கள் இறே
அன்றிக்கே –
குரோர் நாம சாதா ஜபேத் -குரோர் வார்த்தாஸ் சகதயேத்-என்று இருக்கையாலே –
நித்யம் யதீந்திர-தவ திவ்ய வபுஸ் ஸ்மர்தவ் மேசக்தம் மனோ பவ து வாக்குண கீர்தனவ் ஸௌ
க்ர்த்யஞ்ச தாஸ் கரனேது-கரத்வயஸ் யவ்ர்தயந்த்ரே -என்கிற படியே பிரார்த்தித்து அருளும் –
வாசா வுதீந்திர மனசா வபுஷா சயுஷ்மத் பாதாரவிந்த யுகளம் பஜதாம் குருணாம் கூராதி நாத குருகேச முகாத்யு பும்ஸாம் -என்னும்படி
ஸ்ரீ ஆழ்வான் ஸ்ரீ பிள்ளான்-தொடக்கமான பாக்யவான் களுடைய திரு உள்ளத்திலே சர்வ காலமும் அனுசந்திக்கப்படுகிற

இராமானுசா
ஸ்ரீ எம்பெருமானாரே –

புண்ணியர் தம் வாக்கில் பிரியா இராமானுசன் –
ஸ்ரீ எம்பெருமானாரை உள்ளபடி அறிக்கைக்கு ஈடான பாக்கியத்தை உடையவர் புண்ணியர் –
அவர் தம் வாக்கில் பிரியாமை -எப்பொழுதும் அவர்களால் துதிக்கப் பெறுதல்-

நின் அருளின் வண்ணம் –
பந்த மோஷங்கள் இரண்டுக்கும் பொதுவான அவனுடைய கிருபை-போல் அன்று இறே –
மோஷ ஏக ஹேதுவான தேவரீருடைய கிருபை
வண்ணம் -அதனுடைய பிரகாரம் ஸ்வபாவம்-என்றபடி –

நோக்கில் –
அதை நன்றாக தர்சித்தால் -அறிய வேண்டும் என்று பார்த்தால் –

தெரிய வரிது –
அறிக்கைக்கு-கடினமாய் இருக்கும் -இத்தனை நாளும் பலியாதே போய்
இன்று நிர்ஹே துகமாக பலித்த பிரகாரம் என் என்று-விசாரித்தால் அந்த பிரகாரம் இன்னது என்று
விவேக்கிக்க அரியதாய் இருக்கும் என்றபடி –

ஆல் –ஆச்சர்யம் –
ஏகாகாரமான தேவரீர் உடைய கிருபை என் அளவில் மாதரம் ஆகார த்வயத்தை பஜித்ததோ என்று ஆச்சர்யப்படுகிறார் –
அன்றிக்கே –
ஆல் என்றது இன்று நிர்ஹேதுகமாக பலித்த கிருபை முற்காலத்திலே பலியாதே
போர வைத்தாய் புறமே –
அற்ப சாரங்கள் அவை சுவைத்து அகன்று ஒழிந்தேன் -என்று ஸ்ரீ ஆழ்வார் நிர்வேதப் பட்டால் போலே-
இந்த அனுபவத்தை இழந்து விஷய ப்ரவணனாக போனேன் என்று இழந்த நாளை நினைந்து-நிர்வேதப்படுகிறார்

நின்னருளின் வண்ணம் நோக்கில் தெரிவரிதால்-
வண்ணம்-பிரகாரம்
நோக்கில்-ஆராய்ந்தால்
தெரிவரிது –விவரிக்க முடியாமல் இருக்கிறது
இதற்கு முன் நோக்காததும் -இன்று இலக்கு ஆக்கியதுமான பிரகாரம் தெரிவரிதாய் உள்ளது –
ஸ்ரீ எம்பெருமானார் –நல்லோர் இன்று உம்மை ஆளாக்கினர் -ஆகையால் அருள் பெற்றீர்–என்றார்
அன் நல்லோர் இது காறும் ஏன் ஆள் ஆக்கி கிற்றிலர் என்றார் -இவர்
இது காறும் உமக்கு இசைவில்லை -என்றார் அவர் –
இன்று இசைவு வந்தது எங்கனம் -என்றார் இவர்
அத்வேஷாதிகள் உம்மிடம் உண்டானமையால் என்றார் அவர்
அத்வேஷாதிகள் இன்று உண்டாவானேன் -என்றார் இவர்
அது ஸ்ரீ ஈஸ்வர கடாஷம் ஆகிற பிரதம ஸூஹ்ருதத்தாலே என்றார் அவர்
அவ் வீச்வரனும் தேவரீர் அன்றோ –ஏன் முன்பே கடாஷித்து இருக்க கூடாது –
இப்பொழுது-கடாஷிப்பதற்கு என்று ஒரு அதிகாரம் உண்டாயிற்றோ எனக்கு -ஆகையால் இப்பொழுது-
அருள் புரிதற்கும் முன்பு அருள் புரியாததற்கும் ஒரு காரணம் புரிய வில்லையே –
இது நுண் பொருளாய் இரா நின்றது -நீரே அருளிச் செய்ய வேண்டும் என்கிறார் –
ஆல்-அசை ஆல்-ஆகையால் என்றபடியுமாம்

உரையாய் இந்த நுண் பொருளே
இந்த ஸூஷ்ம அர்த்தத்தை -உபய விபூதி விருத்தாந்தத்தையும்-சாஷாத் கரித்தவர் ஆகையாலே
தேவரீர் அறிந்து அருளுமே -ஆகையாலே தேவரீரே அருளிச் செய்ய வேணும் என்றது ஆய்த்து .

உரையாய் இந்த நுண் பொருளே –
இந்த ஸூஷ்ம அர்த்தத்தை தேவரீரே அருளி செய்ய வேணும் –
இன்று என்னைப் பொருள் ஆக்கித் தன்னை என்னுள் வைத்தான்
அன்று என்னைப் புறம் போகப் புணர்த்தது என் செய்வான் -திரு வாய் மொழி10-8 9- – என்று-
ஸ்ரீ நம் ஆழ்வார் அருளி இருப்பது இங்கு அனுசந்திக்கத் தக்கது–

குளித்து மூன்று அனலை ஓம்பும் — தன்னை ஒழித்திட்டேன்–.என் கண் இல்லை நின் காணும் பக்தன் அல்லேன்
களிப்பது என் கொண்டு நம்பி -குண பூரணன்-களிக்கலாமே–.கடல் வண்ணா-இதன் மூலம் தெரிந்து கொண்டேன்
பிரயோஜனந்தார்களுக்கு கொடுத்தாயே – கதறுகின்றேன்.-இது ஒன்றே முடியும்
பிர பன்னன்-பண்ண கூடாதே -என் கண் இல்லை
ஞானமில்லை சொன்னேனே -அளித்து எனக்கு அருள் செய் கண்டாய் ..
அது போல இந்த பாசுரத்திலும் முன்னுக்கு பின் முரண் ஆக்கினீர் பாசுரம் பாடினேன்–

————-

ஆக்கி யடிமை நிலைப்பித்தனை என்னை-

அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து அறியா மா மாய்த்து அடியேனை வைத்தாயால் -2-3-3-

மாதவன் என்றதே கொண்டு, என்னை இனி இப்பால் பட்டது
யாதவங்களும் சேர் கொடேன் என்று என்னுள் புகுந்து இருந்து
தீது அவம் கெடுக்கும் அமுதம்; செந்தாமரைக் கண் குன்றம்;
கோது அவம் இல் என் கன்னற் கட்டி எம்மான் என் கோவிந்தனே–2-7-3-

பற்பநாபன், உயர்வு அற உயரும் பெருந்திறலோன்,
எற்பரன், என்னை ஆக்கிக் கொண்டு, எனக்கே தன்னைத் தந்த
கற்பகம், என் அமுதம், கார் முகில் போலும் வேங்கட நல்
வெற்பன், விசும்போர் பிரான் எந்தை தாமோதரனே–2-7-11-

மனக்கே ஆட் செய் எக் காலத்தும்’ என்று,என்
மனக்கே வந்து இடை வீடு இன்றி மன்னித்
தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே;
எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே–2-9-4-

ஆவார் ஆர் துணை? என்று அலை நீர்க் கடலு ளழந்தும்
நாவாய் போல் பிறவிக் கடலுள் நின்று நான் துளங்கத்
தேவார் கோலத் தொடும் திருச் சக்கரம் சங்கினொடும்
ஆஆ! என்று அருள் செய்து அடியேனொடும் ஆனானே–5-1-9-

ஆனான் ஆளுடையான் என்றஃதே கொண்டுகந்து வந்து
தானே இன்னருள் செய்து என்னை முற்றவும் தானானான்
மீனாய் ஆமையுமாய் நர சிங்கமு மாய்க் குறளாய்க்
கானார் ஏனமுமாய்க் கற்கியாம் இன்னம் கார்வண்ணனே–5-1-10-

பிரியாது ஆட்செய்து என்று பிறப்பறுத்து ஆள் அறக் கொண்டான்
அரியாகி இரணியனை ஆகம் கீண்டான் அன்று
பெரியார்க்கு ஆட்பட்டக் கால் பெறாத பயன் பெறுமாறு
வரி வாள்வாய் அரவணை மேல் வாட்டற்றான் காட்டினனே–10-6-10-

இன்று என்னைப் பொருள் ஆக்கி தன்னை என்னுள் வைத்தான்
அன்று என்னைப் புறம் போகப் புணர்த்தது என் செய்வான்
குன்று என்னத் திகழ் மாடங்கள் சூழ் திருப் பேரான்
ஓன்று எனக்கு அருள் செய்ய உணர்த்தல் உற்றேனே–10-8-9-

உண்ணி லாவிய ஐவ ராற் குமை தீற்றி என்னை உன் பாத பங்கயம்
நண்ணிலா வகையே நலிவான் இன்னம் எண்ணு கின்றாய்
எண்ணிலாப் பெரு மாய னே!இமையோர்கள் ஏத்தும் உலக மூன்றுடை
அண்ணலே! அமுதே! அப்பனே! என்னை ஆள்வானே!–7-1-1-

என்னை ஆளும் வன்கோ ஓரைந்திவை பெய்து இராப் பகல் மோது வித்திட்
டுன்னை நான் அணுகா வகை செய்து போதி கண்டாய்
கன்னலே! அமுதே! கார் முகில் வண்ணனே! கடல் ஞாலம் காக்கின்ற
மின்னு நேமியினாய்! வினையேனுடை வேதியனே!–7-1-2-

சூது நான் அறியா வகைச் சுழற்றி ஓர் ஐவரைக் காட்டி உன்னடிப்
போது நான் அணு காவகை செய்து போதி கண்டாய்
யாதும் யாவரும் இன்று நின் னகம் பால் ஒடுக்கி ஓர் ஆலி னீளிலை
மீது சேர் குழவி! வினையேன் வினைதீர் மருந்தே!–7-1-4-

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading