Archive for April, 2020

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –51–அடியைத் தொடர்ந்து எழும் ஐவர் கட்காய் அன்று இத்யாதி —

April 23, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

ஸ்ரீ எம்பெருமானார் இந்த லோகத்தில் அவதரித்து அருளிற்று என்னை யடிமை கொள்ளுகைக்காக –
வேறு ஒரு ஹேதுவும் இல்லை -என்கிறார்.

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை–

பால்யமே பிடித்து -மாதுலேயன் என்று நினையாதே ரஷகன் என்றே அத்யவசித்து இருக்கிற-பஞ்ச பாண்டவர்களுக்கு
பிரதி பஷம் அழியும்படி சாரத்தியம் பண்ணின ஸ்ரீ கிருஷ்ணனுடைய ஆனைத்-தொழில்கள் எல்லாம்
தெளிந்த ஸ்வரூப ஞானம் உடைய ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஆராவமுதாய்-இருக்கும் ஸ்ரீ எம்பெருமானார் –
இந்த பாப பிரசுரமான பூ லோகத்திலே -அவதரித்தது -ஆராய்ந்து பார்த்தால் –
என்னை ஆளுகைக்காகவே என்று நிச்சிதமாய்த்து இத்தனை ஒழிய வேறு ஒரு ஹேது இல்லை என்கிறார் –

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-

என்னை அடிமை கொள்வதற்காகவே ஸ்ரீ எம்பெருமானார்-அவதாரம் செய்து அருளினார் –என்கிறார்

அவதாரத்துக்கு ஹேது -பயன்- கர்ம இல்லை ..கை பிடித்து உத்தாரணம் பண்ண தான்
நாம் கர்மம் அடியாக பிறக்க -/ஸ்வாமியோ -நம் கர்ம தீர அவதாரம்
நானும் பிறந்து நீயும் பிறக்க வேணுமா-ஸ்ரீ கண்ணன்-அர்ஜுனன் கீதையில்

அடியைத் தொடர்ந்து எழும் ஐவர் கட்காய் அன்று பாரதப்போர்
முடியப் பரி நெடும் தேர் விடும் கோனை முழுது உணர்ந்த
அடியர்க்கு அமுதம் இராமானுசன் என்னை யாள வந்திப்
படியில் பிறந்தது மற்றில்லை காரணம் பார்த்திடிலே –51 –

பத உரை –
அடியை தொடர்ந்து -திருவடிகளை உபாயமாக பற்றி கொண்டு அதன் வழியே பின்பற்றிச் சென்று
எழும் -எழுச்சியை பெரும்
ஐவர்கட்காய்-பஞ்ச பாண்டவர்களுக்காக
அன்று -அக்காலத்திலே
பாரதப் போர் -மகா பாரத யுத்தத்திலே
முடிய -எதிரிகள் நாசம் அடையும்படியாக
பரி-குதிரைகள் பூட்டிய
நெடும் தேர் -பெருமை வாய்ந்த தேரை
விடும் -செலுத்தும்
கோனை-சர்வேஸ்வரனை
முழுது உணர்ந்த -முழுவதும் தெரிந்து கொண்ட
அடியர்க்கு -அறிந்த அந்தந்த தன்மைகளுக்கு தோற்று அடிமை யானவர்களுக்கு
அமுதம் -இனியராய் இருக்கும்
இராமானுசன் -ஸ்ரீ எம்பெருமானார் –
இப்படியில் -இந்த பூமியில்
வந்து பிறந்தது -வந்து அவதாரம் செய்து
என்னை ஆள -என்னை ஆளுகைக்காக
பார்த்திடில் -ஆராய்ந்து பார்த்தல்
மற்று -வேறு காரணம்
இல்லை-ஏதும் இல்லை

வியாக்யானம் –
க்ருஷ்ணாஸ்ரயா க்ருஷ்ணபலா கிருஷ்ண நாதாச்ச பாண்டவா -பாரதம்-த்ரோண- 183- – என்கிறபடியே
திருவடிகளை பின் சென்று -கர்வோத்தரராய் இருக்கிற பாண்டவர்களுக்காகாத் துர்வர்க்கமடைய
அங்கே திரண்டு இவர்கள் தனிப்பட்டு -தன்னை ஒழிய வேறு துணை அற்று இருக்கிறவன்று –
பாரத சமரத்திலே அவர்கள் பிரதி பஷம் முடியும் படி –
ஆடிய மா நெடும்தேர் -திருவாய் மொழி – 6-8 9- –என்கிறபடியே
குதிரை பூண்ட நெடிய தேரை நடத்தின ஸ்ரீ சர்வேஸ்வரனை ஆஸ்ரித பஷபாதம் -ஆஸ்ரித பாரதத்ர்யம் –
ஆஸ்ரித விரோதி நிரசனம் –முதலான சர்வ ஸ்வபாவங்களையும் அறிந்து-அவவவ ஸ்வபாவங்களுக்கு தோற்று
எழுதிக் கொடுத்து இருக்கும் அவர்களுக்கு போகய பூதரராய் இருக்கும்-
ஸ்ரீ எம்பெருமானார் இந்தப் பூமியில் வந்து அவதரித்து -என்னை ஆளுகைக்காக –
ஆராயில் வேறு ஒரு காரணம் இல்லை –

எழுச்சி –கிளப்பும் -அதாவது -நாம் கிருஷ்ண ஆஸ்ரயர் -என்கிற ஒவ்த்தத்யம்
படி-பூமி–

அடியைத் தொடர்ந்து எழும் –
பால்யமே பிடித்து -வியாசர் குந்தி மார்கண்டேயன் முதலானவர்கள்- உடைய உக்தி விசேஷங்களாலும் –
ஆபத்து வந்த போதெல்லாம் உதவி ரஷித்த படியாலும் –
ஸ்ரீ கிருஷ்ணனை மாதுலேயன் என்று நினைக்கை அன்றிக்கே -தங்களை ரஷிக்கும் பரதத்வம் என்று அத்யவசித்து –
கிருஷ்ண ஆஸ்ரய கிருஷ்ணா பலா கிருஷ்ணா நாதஸ பாண்டவ -என்கிறபடியே அவன் திருவடிகளை ஆஸ்ரயித்து
ருத்ரேந்த்ராதிகளை வென்று -காலகேய ஹிடிம்ப ஜராசந்தாதிகளை சம்கரித்து லோகத்திலே-
தங்களுக்கு ஒருவரும் சதர்சர் இல்லை என்று கர்வோத்தராய் இருந்த ஔத்தத்யம் –

ஐவர்கட்கா –
தர்ம-பீமார்ஜுன நகுல சகதேவர் என்று ஐந்து பேரான பஞ்ச பாண்டவர்களுக்காக –

அடியைத் தொடர்ந்து எழும் ஐவர்கட்காய் –
அடியைத் தொடர்ந்ததனால் ஐவர் எழுந்தனர் –
தொடராமையால் மற்றையோர் அனைவரும் முடிந்தனர் –
கச்சத் தவமே நம் சரணம் சரண்யம் புருஷர்ஷபா -புருஷ ஸ்ரேஷ்டர்களே இந்தக் கண்ணனை-சரணம் அடையுங்கோள்-என்று
மார்கண்டேயன் உபதேசிக்க -அதன்படியே –
த்ரவ்பத்யா சஹிதாஸ் சர்வே நமச்சக்ரூர் ஜனார்த்தனம் -என்று
அனைவரும் த்ரவ்பதியோடு கூடினவர்களாய் கண்ணனை சரண் அடைந்தனர் –
பாண்டவர்கள் ஐவரும் ஸ்ரீ கண்ணனை சரண் அடைந்தமை காண்க –

ஐவர்கட்காய் –
என்றதனால் -ஐவர்கள் கையாளாய் தன்னை நினைத்து ஸ்ரீ கண்ணன் இழி தொழில் செய்தமை தோற்றுகிறது –
நாடுடை மன்னர்க்குத் தூது செல்னம்பிக்கு -என்றதும் காண்க –
ராஜ்யமுடையார் பாண்டவர்களே -நாம் அவர்களுக்கு ஏவல் செய்து நிற்கிறோம் என்று ஆயிற்று
அவன்-நினைத்து இருப்பது -என்பது அவ்விடத்திய- 6-8 3- – ஸ்ரீ ஈடு –
பாண்டவர்கள் தங்களைக் கண்ணன் அடிமைகளாக-நினைத்து இருக்க –
இவன் அவர்களுக்குத் தன்னை யடிமையாகக் காணும் நினைத்து இருப்பது .

அன்று –
துரி யோதனன் இடத்தில்-
பஷ பாதத்தால் கர்ண சல்யாதி துர்வர்க்கம் எல்லாம் திரண்டு -இந்த பாண்டவர்களும் தனிமைப் பட்டு-
தன்னை ஒழிய வேறு ஒரு துணை இன்றிக்கே இருக்கிற சமயத்திலே –

பாரத போர் முடிய –
உபய சேனையிலும் -பரத வம்சத்தாரில் பரிமிதரானாலும் துர்வர்க்கங்கள் இந்த உபய சேனையிலும்-அந்வயித்து
யுத்தம் பண்ணினார்கள் ஆகையாலே அந்த யுத்தத்துக்கு பாரத யுத்தம் என்று பேராய் இருக்கிறது –
அப்படிப்பட்ட உபய சேனையிலும் திரண்டு இருக்கிற பதினெட்டு அஷோகிணி பலத்துக்குமாக பாண்டவர்கள் ஐவரரும்
சேஷித்து அவர்களுக்கு பிரதி பஷ பூதரான மற்றப் பேர் எல்லாரும் முடியும்படி

பரி நெடும் தேர் விடும் கோனை –
ஆடிய மா நெடும் தேர் -என்கிறபடி
ஸ்வேதாச்வங்களாலே பூணப்பட்டு -சர்வாலன்க்ர்தமாய் –தேவதா ப்ரசாதத்தாலே வந்ததாகையாலே
திவ்யமாய் மகத்தான திருத் தேரை-
தான் சாரதியாய் நடத்தி தன்னுடைய சர்வ ஸ்வாமித்வம் சர்வருக்கும் தெரியும்படி இருக்கிற ஸ்ரீ கிருஷ்ணனை

தத்ர பாண்டவாநாம் குருணாம் ச யுத்தே ப்ராரப்தே பகவான் புருஷோத்தம சர்வேஸ்வர ஜகது
பக்ர்திமர்த்ய ஆஸ்ரித வாத்சல்ய விவச பார்த்தம் ரதினம் ஆத்மாநஞ்ச சாரதிம் சர்வலோக சாஷிகம் சகார-என்று
ஸ்ரீ கீதா பாஷ்யத்திலே இவ் அர்த்தத்தை ஸ்ரீ எம்பெருமானார் அருளிச் செய்தார் இறே -.
இந்த ஸ்ரீ கிருஷ்ணன்-யது குலத்திலே அவதரித்தாலும் – ஸ்ரீ ருக்மிணி பிராட்டி யினுடைய சுயம்வரதுக்காக குண்டின புரத்துக்கு
ஏற எழுந்து அருளின போது -இந்த்ரன் தேவ ஜாதிகையிலே ஒரு சிம்காசனத்தை அனுப்பி வைத்து-
ஸ்ரீ கிருஷ்ணனை ராஜாவாகும்படி அந்த சிம்காசனத்திலே எழுந்து அருளப் பண்ணுவித்து -திரு அபிஷேகம்
பண்ணிவித்தான் என்று பிரசித்தம் இறே –
ஆகா ராஜா என்னக் குறை இல்லை -இப்படிப் பட்டவனை –

அன்று –தேர் விடும் கோனை –
கையில் ஆயுதம் எடேன் -என்று பிரதிக்ஜை செய்து இருப்பதால்
தேரை விட்டுத் தேர்க் காலாலே சேனையைத் தூளாக்கினான் .
ஸ்வாமி ஸ்ரீ நம் ஆழ்வாரும்
குரு நாடுடை ஐவர்கட்காய் ஆடிய மா நெடும் தேர்ப்படை நீர் எழச் செற்ற பிரான் -திருவாய் மொழி – 6-8 3-என்றார் .
ஆயுதம் எடாமைக்கு அனுமதி பண்ணுகையாலே தேர்க் காலாலே -சேனையைத் துகள் ஆக்கினான் -என்பது ஆங்கு உள்ள ஸ்ரீ ஈட்டு ஸ்ரீ ஸூக்தி .
மகதி சயந்த நேச்த்திதவ் -பெரிய தேரில் இருப்பவர்கள்-என்றதற்கு ஏற்ப நெடும் தேர் –எனப்பட்டது –
தேர் விடும் கோனை
தேர் விடும் -என்பதால் சௌலப்யமும்
கோனை -என்பதால் பரத்வமும் புலன் ஆகின்றன

முழுது உணர்ந்த –ஸ்ரீ இராமானுசன்
ஐவர்கட்காய் என்று ஆஸ்ரித பஷ பாதமும்
தேர் விடும் -என்று ஆஸ்ரித பாரதந்திரியமும்
முடிய விடும் என்று விரோதி நிரசன சாமர்த்தியமும்
முழுதும் -என்பதனால்-உணர்த்தப்படுகின்றன –

முழுது உணர்ந்த அடியர்க்கு-
ஸ்வரூப ரூப குண விபூதிகளையும்
ஏஷ நாராயணஸ் ஸ்ரீ மான் ஷீரார்ணவ-நிகேதன -நாக பர்யங்க முத்ஸ்ரஜ்ய ஹ்யாகதோ மதுராம்புரிம் -என்கிறபடியே
சர்வ ஸ்மாத் பரனாயும்-அஜகத் ஸ்வபாவனாயும் வந்து அவதரித்து –
உபசம்காசர்வாத்மன் ரூபமே தச்சதுர்புஜம் -என்று பிதாவானவன் பிரார்த்திதவாறே ப்ராக்ரதரைப் போலே இருந்தபடியையும் –
யமுனா நதியைக் கால் நடையாக பண்ணினதும் –
ஓர் அபலை கையிலே கட்டுண்டு அடி உண்டதும் –
பூதனா சகட யமாளார்ஜுன உரிஷ்ட ப்ரலம்ப தேனுக காளிய-கேசி குவலயாபீட சாணூர கம்சாதிகளாகிற
ஆஸ்ரித விரோதிகளைக் கொன்றதும் –
அக்ரூர மாலாகாராதிகளை அனுக்ரகித்ததும் -கோவர்த்தன உத்தரணாத்ய அதி மானுஷ திவ்ய சேஷ்டிதங்களைப் பண்ணினதும் –
பாண்டவர்களுக்கு பரதந்த்ரனாய் கழுத்திலே ஓலை கட்டிக் கொண்டு தூத்யம் பண்ணினதும் –
காலாலே ஏவிக்-கார்யம் கொள்ளும்படியான சாரத்யத்தைச் செய்ததும் –
விஸ்வரூபத்தை தர்சிப்பததும் –
அர்ஜுன வ்யாஜேன லோக-உபகார அர்த்தமாக அத்யாத்ம சாஸ்த்ரத்தை வெளி இட்டதும் –
முதலானவற்றையும் அறிந்தவர்களாய் -அவ் வவ-ஸ்வ பாவங்களுக்கு தோற்று -தங்களை எழுதிக் கொடுத்து
சேஷத்வ ஸ்வரூபத்தில் நிஷ்டரான ஸ்ரீ ஆழ்வான் ஸ்ரீ ஆண்டான்-ஸ்ரீ பிள்ளான் ஸ்ரீ எம்பார் முதலானவர்களுக்கு –

இது நூற்றுவர் வீய சொன்னது அது-திரு வாய் மொழி- ஐ ஐந்து முடிக்க

அமுதம் –
ஸ்வரூப உஜ்ஜீவனத்தை பண்ணுமவர் ஆகையால் நித்ய அபூர்வராய் ரசிக்குமவரான –

இராமானுசன் –
ஸ்ரீ எம்பெருமானார் –

என்னை யாள வந்து –
பரம பதத்திலே பரி பூர்ண அனுபவம் நடவா நிற்க –
அத்தைக் காற்கடைக் கொண்டு -அதில் நின்றும் அடியேனை அடிமை கொள்ளுக்கைக்காக எழுந்து அருளி –
இப்படியில் -பகவத் ஸ்வரூப திரோதா நகரீம் விபரீத ஞான ஜநநீம் ஸ்வ விஷயா யாச்ய போக்ய புத்தர் ஜநநீம் -என்னும்படியான
ப்ராக்ருத பூமியிலே -பிறந்து -ஸ்ரீ மான் ஆவிர்பூதவ் பூமவ் -என்கிறபடியே அவதரித்து அருளினது –

என்னை யாள –
அஹ மச்ப்யபராத சக்ரவர்த்தி -என்றும்
பாபானாம் பிரதமோச்ம்யஹம்-என்னும்படியான-அடியேனை ரஷிக்கவே ஆய்த்து –

மற்று இல்லை காரணம் பார்த்திடிலே –
பின்னையும் இவ் அவதாரத்துக்கு மூலம் எது என்று ஆராய்ந்து பார்த்தால் வேறு ஒரு காரணம் இல்லை
என்று அருளிச் செய்தார் ஆயிற்று –

அவதார ரகஸ்யத்தை அறிந்து -ஸ்ரீ எம்பெருமான் ஸ்வபாவங்களுக்கு தோற்று உள்ள அடியர்
அமுதம் போல் இராமானுசனை அனுபவிக்கின்றனர் .ஆதலின் இவர் ப்ராக்ருதராய் இருத்தல் கூடாது .
அமுதம் திவ்யம் அன்றோ-
ஆகையால் -இவ்வமுதம் இப்படியில் பிறப்பதற்கு காரணம் அதன் கருமம் அன்று
பின்னை ஏன் பிறந்தது
என்னை யாளவே என்கிறார்
இந்தப் பாட்டில் -ஸ்ரீ எம்பெருமானார் என்னை விஷயீகரிக்க முடியாமையால்-அவன் திருவடிகளில்-எனக்கு ஈடுபாடு இல்லை –
எனக்காகவே அவதரித்து -விஷயீ கரித்தமையால்-ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே எனக்கு விலஷணமாய்த் தோற்றுகின்றன
என்று-ஸ்ரீ அமுதனார் கருதுவதாகத் தோற்றுகிறது .

ஸ்ரீ ஸ்வாமி இந்த லோகத்தில் அவதரித்து -திவ்யம்- அமுதம்- அருளிற்று என்னை அடிமை
கொள்ளுகைக்காக–வேறு ஒரு ஹேதுவும் இல்லை..

—————-

அருளிச் செயல்களும் -துவரைக் கோனாய் நின்ற மாயன் அன்று ஓதிய வாக்கும்–
பெரியாழ்வார் திருமொழி —
தாரித்து நூற்றுவர் தந்தை சொல் கொள்ளாது போருய்த்து வந்து புகுந்தவர் மண்ணாளப்
பாரித்த மன்னர் படப் பஞ்சவர்க்கு அன்று தேருய்த்த கைகளால் சப்பாணி -தேவகி சிங்கமே சப்பாணி -1-6-6-

பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கை செய்து –அஞ்சன வண்ணனே அச்சோ வச்சோ ஆயர் பெருமானே அச்சோ அச்சோ -1-8-3-

கழல் மன்னர் சூழக் கதிர் போல் விளங்கி எழலுற்று மீண்டு இருந்துன்னை நோக்கும்
சுழலைப் பெரிதுடைத் துச்சோதனனை அழல விழித்தானே அச்சோ வச்சோ ஆழி யங்கையனே அச்சோ வச்சோ –1-8-5-

போர் ஓக்கப் பண்ணி இப் பூமிப பொறை தீர்ப்பான் தேர் ஓக்க வூர்ந்தாய் செழும் தார் விசயற்காய்
நாந்தகம் ஏந்திய நம்பி சரண் என்று தாழ்ந்த தனஞ்சயர்க்காகி தரணியில்
வேந்தர்களுட்க விசயன் மணித் திண் தேர் ஊர்ந்தவன் என்னைப் புறம் புல்குவான் –உம்பர் கோன் என்னைப் புறம் புல்குவான் -1-9-5-

மெச்சூது சங்கமிடத்தான் நல்வேயூதி பொய்ச்சூதில் தோற்ற பொறையுடை மன்னார்க்காய்
பத்தூர் பெறாதன்று பாரதம் கை செய்த அத்தூதன் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் -2-1-1-

மலை புரை தோள் மன்னவரும் மாரதரும் மற்றும் பலர் குலைய நூற்றுவரும் பட்டழிய பார்த்தன்
சிலை வளையத் திண் தேர் மேல் முன்னின்ற செங்கண் அலவலை வந்தப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் -2-1-2-

ஒன்றே யுரைப்பான் ஒரு சொல்லே சொல்லுவான் துன்று முடியான் துரியோதனன் பக்கல்
சென்று அங்குப் பாரதம் கை எறிந்தானுக்கு கன்றுகள் மேய்ப்பதோர் கோல் கொண்டு வா கடல் நிற வண்ணற்கோர் கோல் கொண்டு வா -2-6-4-

சீரொன்று தூதாய்த் துரி யோதனன் பக்கல் ஊர் ஓன்று வேண்டிப் பெறாத வுரோடத்தால்
பார் ஒன்றிப் பாரதம் கை செய்து பார்த்ததற்குத் தேர் ஒன்றை யூர்ந்தாற்கோர் கோல் கொண்டு வா
தேவ பிரானுக்கோர் கோல் கொண்டு வா –2-6-5-

பற்றார் நடுங்க முன் பாஞ்ச சன்னியத்தை வாய் வைத்த போரேறே என் சிற்றாயர் சிங்கமே சீதை மணாளா -3-3-5-

பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கை செய்து —அஞ்சன வண்ணனைப் பாடிப் பற யசோதை தன் சிங்கத்தைப் பாடிப் பற -3-9-5-

மன்னர் மறுக மைத்துனன்மார்க்கு ஒரு தேரின் மேல் முன்னங்கு நின்று மோழை எழுவித்தவன் மலை –தென் திருமாலிருஞ்சோலையே -4-2-7-

பாண்டவர் தம்முடைய பாஞ்சாலி மறுக்கம் எல்லாம் ஆண்டு அங்கு நூற்றுவர் தம் பெண்டிர் மேல் வைத்த அப்பன் மலை –தொல்லை மாலிருஞ்சோலையதே -4-3-6-

திரை பொரு கடல் சூழ் திண் மதிள் துவரை வேந்து தன் மைத்துனன் மார்க்காய் அரசினை யவிய அரசினை யருளும்–கண்டம் என்னும் கடி நகரே -4-7-8-

மருமகன் தன் சன்னதியை உயிர் மீட்டு மைத்துனன் மார் உருமகத்தே வீழாமே குரு முகமாய்க் காத்தானூர் –புனல் அரங்கம் என்பதுவே –4-8-3-

மைத்துனன் மார் காதலியை மயிர் முடிப்பித்து அவர்களையே மன்னராக்கி உத்தரை தன் சிறுவனையும்
உய்யக் கொண்ட உயிராளன் யுறையும் கோயில் –திருவரங்கமே –4-9-6-

—————————————————

நாச்சியார் திருமொழி
பூங்கொள் திருமுகத்து மடுத்தூதிய சங்கொலியும் சாரங்கவில் நாண் ஒலியும் தலைப்பெய்வது எஞ்ஞான்று கொலோ –9-9-

செம்மையுடைய திருவரங்கர் தாம் பணித்த மெய்ம்மைப் பெரு வார்த்தை விட்டு சித்தர் கேட்டிருப்பர்
தம்மை யுகப்பாரைத் தாமுகப்பார் என்னும் சொல் தம்மிடையே பொய்யானால் சாதிப்பாரினியே —11-10-

—————————————————-

திருச்சந்த விருத்தம்
பார் மிகுத்த பாரம் முன் ஒழிச்சுவான் அருச்சுனன் தேர் மிகுத்து மாயமாகி நின்று கொன்று வென்றி சேர்
மாரதர்க்கு வான் கொடுத்து வையமைவர் பாலதாம் சீர் மிகுத்த நின்னலால் ஓர் தெய்வம் நான் மதிப்பனே –89-

—————————————–

பெரிய திருமொழி
பார்த்தற்காய் அன்று பாரதம் கை செய்திட்டு வென்ற பரஞ்சுடர் கோத்து அங்கு ஆயர் தம் பாடியில் –திருவேங்கடம் அடை நெஞ்சே -1-8-4-

முன் ஓர் தூது வானரத்தின் வாயில் மொழிந்து அரக்கன் மன்னூர் தன்னை வாளியினால் மாள முனிந்து -அவனே
பின் ஓர் தூது ஆதி மன்னார்க்காகி பெரு நிலத்தார் இன்னார் தூதன் என நின்றான் எவ்வுள் கிடந்தானே –2-2-3-

விற் பெரு விழாவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழ
செற்றவன் தன்னை புரமெரி செய்த சிவனுறு துயர் களை தேவை
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு பார்த்தன் தன் தேர் முன் நின்றானை
சிற்றவை பணியால் முடி துறந்தானைத் திரு வல்லிக் கேணிக் கண்டேனே -2-3-1-

இன் துணைப் பதுமத்து அலர் மகள் தனக்கும் இன்பன் நற் புவி தனக்கு இறைவன்
தன் துணை ஆயர் பாவை நப்பின்னை தனக்கு இறை மற்றையோர்க்கு எல்லாம்
வன் துணை பஞ்ச பாண்டவர்க்காகி வாயுரை தூது சென்றியங்கும்
என் துணை எந்தை தந்தை தம்மானைத் திரு வல்லிக் கேணிக் கண்டேனே -2-3-5-

அந்தகன் சிறுவன் அரசர் தம் அரசர்க்கு இளையவன் அணியிழையைச் சென்று
எந்தமக்கு உரிமை செய்யெனைத் தரியாது எம்பெருமான் அருள் என்ன
சந்தமல் குழலாள் அலக்கண் நூற்றுவர் தம் பெண்டிரும் எய்தி நூல் இழப்ப
இந்திரன் சிறுவன் தேர் முன் நின்றானைத் திரு வல்லிக் கேணிக் கண்டேனே -2-3-6-

பாரேறு பெரும் பாரம் தீரப் பண்டு பாரதத்துத் தூதியங்கி பார்த்தன் செல்வத் தேரேறு சாரதியாய் எதிர்ந்தார்
சேனை செருக்களத்துத் திறல் அழிய செற்றான் தன்னை –திருக் கோவலூர் அதனுள் கண்டேன் நானே -2-10-8-

வேல் கொள் கைத் தலத்து அரசர் வெம் போரினால் விசயனுக்காய் மணித் தேர் கொள் கைத் தலத்து எந்தை பெம்மானிடம் –திருவயிந்தரபுரமே -3-1-9-

ஏது அவன் தொல் பிறப்பு இளையவன் வளையூதி மன்னர் தூதுவனாய் அவனூர் சொல்லுவீர்கள் சொலீர் அறியேன் –புனலாலி புகுவர் கொலோ -3-7-4-

மல்லரையட்டு மாளக் கஞ்சனை மலைத்து கொன்று பல்லரசு அவிந்து வீழப் பாரதப் போர் முடித்தாய் –-காவளந்தண் பாடியாய் களை கண் நீயே -4-6-6-

மூத்தவற்கு அரசு வேண்டி முன்பு தூது எழுந்து அருளி மாத்தமர் பாகன் வீழ மத கரி மருப்பு ஓசித்தாய் —காவளந்தண் பாடியாய் களை கண் நீயே -4-6-7-

கரையார் நெடு வேல் மற மன்னர் வீய விசயன் தேர் கடவி–புள்ளம் பூதங்குடி தானே –5-1-8-

வாம்பரியுக மன்னர் தம் உயிர் செய் ஐவர்கட்க்கு அரசளித்த காம்பினார் திரு வேங்கடப் பொருப்ப
நின் காதலை அருள் எனக்கு –திரு வெள்ளறை நின்றானே –5-3-4-

வெள்ளைப் புரவித் தேர் விசயற்காய் விறல் வியூகம் விள்ள சிந்துக்கோன் விழ ஊர்ந்த விமலனூர் –நறையூர் –6-5-8-

பாரையூரும் பாரம் தீர பார்த்தன் தன் தேரையூரும் தேவ தேவன் சேருமூர் –நறையூரே –6-5-9-

மிடையா வந்த வேல் மன்னர் வீய விசயன் தேர் கடவி குடையா வரை யொன்று எடுத்து ஆயர் கோவாய் நின்றான் –நறையூர் நின்ற நம்பியே -6-7-7-

பந்தார் விரலாள் பாஞ்சாலி கூந்தல் முடிக்கப் பாரதத்து கந்தார் களிற்றுக் கழல் மன்னர் கலங்கச் சங்கம் வாய் வைத்தான் –நறையூர் நின்ற நம்பியே -6-7-8-

மண்ணின் மீ பாரம் கெடுப்பான் மற மன்னர் பண்ணின் மேல் வந்த படையெல்லாம் பாரதத்து
விண்ணின் மீதேறி விசயன் தேரூர்ந்தானை நண்ணி நான் நாடி நறையூரில் கண்டேனே –6-8-8-

உரங்களால் இயன்ற மன்னர் மாளப் பாரதத்து ஒரு தேரை ஐவரக்காய்ச் சென்று இரங்கி யூர்நது அவர்க்கு இன்னருள் செய்யும் எம்பிரானை -7-3-4-

பாரித்து எழுந்த படை மன்னர் தம்மை மாள பாரதத்துத் தேரில் பாகனா யூர்ந்த தேவ தேவன் ஊர் போலும் –அழுந்தூரே-7-5-2-

கயம் கொள் புண் தலைக் களிறுந்து வெந்திறல் கழல் மன்னர் பெரும் போரில் மயங்க வெண் சங்கம் வாய் வைத்த மைந்தனும் வந்திலன் –8-5-4-

துவரிக்கனி வாய் நில மங்கை துயர் தீர்ந்துய்ய பாரதத்துள் இவரித்தரசர் தடுமாற
இருள் நாள் பிறந்த அம்மானை –கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –8-8-9-

அரவ நீள் கொடியோன் அவையில் ஆசனத்தை அஞ்சிடாதே இட அதற்குப் பெரிய மா மேனி
அண்ட மூடுருவப் பெரும் திசை யடங்கிட நிமிர்ந்தோன் –திருக் கண்ணங்குடியில் நின்றானே –9-1-8-

பன்னிய பாரம் பார்மகட்க்கு ஒழியப் பாரத மா பெரும் போரில் மன்னர்கள் மடிய மணி நெடும் திண் தேர்
மைத்துனருக்கு உய்த்த மா மாயன் —திருக் கண்ணங்குடியில் நின்றானே –9-1-9-

பார்த்தனுக்கு அன்று அருளிப் பாரதத்து ஒரு தேர் முன் நின்று காத்தவன் தன்னை –திரு மால் இருஞ்சோலை நின்ற மூர்த்தியை -9-9-8-

செரு வழியாத மன்னர்கள் மாளத் தேர் வலம் கொண்டு அவர் செல்லும் அரு வழி வானம் அதர் படக் கண்டா ஆண்மை கொலோ -10-9-5-

அன்று பாரதத்து ஐவர் தூதனாய் சென்ற மாயனைச் செங்கண் மாலினை மன்றிலார் புகழ் மங்கை வாட் கலிகன்றி சொல் வல்லார்க்கு அல்லல் இல்லையே –11-1-10-

மன்னிலங்கு பாரதத்து தேரூர்ந்து —தேவர்க்கு இது கண்ணீர் என்னிலங்கு சங்கோடு எழில் தோற்று இருந்தேனே –11-3-1-

கோதை வேல் ஐவர்க்காய் மண்ணகலம் கூறிடுவான் தூதனாய் மன்னவனால் சொல்லுண்டான் காணேடீ
தூதனாய் மன்னவனால் சொல்லுண்டான் ஆகிலும் ஓத நீர் வையகம் முன்னுண்டு உமிழ்ந்தான் சாழலே–11-5-6-

பார் மன்னர் படை தொட்டு வெஞ்சமத்து தேர் மன்னர்க்காய் அன்று தேரூர்ந்தான் காணேடீ
தேர் மன்னர்க்காய் அன்று தேரூர்ந்தான் ஆகிலும் தார் மன்னர் தங்கள் தலை மேலான் சாழலே –11-5-7-

——————————————————-

திரு நெடும் தாண்டகம் –
ஓர் தேரால் மன்னிலங்கு பாரதத்தை மாள யூர்ந்த வரை யுருவின் மா களிற்றைத் தோழீ –இன்பம் எய்த எப்பொழுதும் நினைந்து உருகி இருப்பன் நானே -28-

—————————————————–

முதல் திருவந்தாதி
மயங்க வலம் புரி வாய் வைத்து வானத்து இயங்கும் எறி கதிரோன் தன்னை –
முயங்கமருள் தேராழியால் மறைத்தது என் நீ திருமாலே போராழிக் கையால் பொருது –8-

வேதியர்கள் சென்று இறைஞ்சும் வேங்கடமே வெண் சங்கம் ஊதிய வாய் மால் உகந்த வூர் –37-

———————————————

இரண்டாம் திருவந்தாதி
திரிந்தது வெஞ்சமத்து தேர் கடவி அன்று பிரிந்தது சீதையை மான் பின் போய் புரிந்ததுவும்
கண் பள்ளி கொள்ள அழகியதே நாகத்தின் தண் பள்ளி கொள்வான் தனக்கு -15–

————————————————

மூன்றாம் திருவந்தாதி
அடைந்தது அரவணை மேல் ஐவர்க்காய் அன்று மிடைந்தது பாரத வெம்போர் உடைந்ததுவும்
ஆய்ச்சி பால் மத்துக்கே வாள் எயிற்றுப் பீய்ச்சி பாலுண்ட பிரான் –28-

——————————————-

நான்முகன் திருவந்தாதி
நிலை மன்னும் என்நெஞ்சம் அந்நான்று தேவர் தலை மன்னர் தாமே மாற்றாக
பல மன்னர் போர் மாள வெங்கதிரோன் மாயப் பொழில் மறைய தேராழியால் மறைத்தாரால் -16-

நிகழ்ந்தாய் பால் பொன் பசுபுக் கார் வண்ணம் நான்கும் இகழ்ந்தாய் இருவரையும் வீய புகழ்ந்தாய்
சினப் போர்ச்சுசேதனைச் சேனாபதியாய் மனப்போர் முடிக்கும் வகை –24-

சேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன் ஆயன் துவரைக் கோனாய் நின்ற மாயன்
அன்று ஓதிய வாக்கதனைக் கல்லார் உலகத்தில் ஏதிலராய் மெய்ஞ்ஞானமில் –71–

—————————————————

பெரிய திரு மடல்
மன்னர் பெரும் சவையுள் வாழ் வேந்தர் தூதனாய் தன்னை இகழ்ந்து உரைப்பத் தான் முன நாள் சென்றதுவும் -141/142-

————————————————————————–

திருவாய்மொழி
தீர்த்தான் உலகளந்த சேவடி மேல் பூந்தாமம் சேர்த்தியவையே சிவன் முடி மேல் தான் கண்டு
பார்த்தன் தெளிந்து ஒழிந்த பைந்துழாயான் பெருமை பேர்த்தும் ஒருவரால் பேசக் கிடந்ததே –1-8-5-

கொல்லா மாக்கோல் கொலை செய்து பாரதப் போர் எல்லாச் சேனையும் இரு நிலத்தவித்த வெந்தாய்
பொல்லா வாக்கையின் புணர் வினை யறுக்கலறா சொல்லாய் யானுன்னைச் சார்வதோர் சூழ்ச்சியே -2-2-3-

நீர்மையில் நூற்றுவர் வீய ஐவருக்கு அருள் செய்து நின்று பார்மல்கு சேனையவித்த பரஞ்சுடரை நினைந்தாடி
நீர்மல்கு கண்ணினாராகி நெஞ்சம் குழைந்து நையாதே ஊன் மல்கி மோடு பருப்பார் உத்தமர்கட்க்கு என் செய்வாரே -2-5-7-

அடியோங்கு நூற்றுவர் வீய அன்று ஐவருக்கு அருள் செய்த நெடியோனை -2-7-11-

போர்ப்பாகு தான் செய்து அன்று ஐவரை வெல்வித்த மாய போர்த் தேர்ப்பாகனார்க்கு இவள் சிந்தை துழாய்த் திசைக்கின்றதே -4-6-1-

மாறு சேர் படை நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காய் அன்று மாயப் போர் பண்ணி நீறு செய்த வெந்தாய் –சிரீ வர மங்கல நகர் ஏறி வீற்று இருந்தாய் –5-7-4-

பிறந்தவாறும் வளர்ந்தவாறும் பெரிய பாரதம் கை செய்து ஐவர்க்குத் திறங்கள் காட்டியிட்டுச் செய்து போன மாயங்களும் -5-10-1-

மண் மிசைப் பெரும் பாரம் நீங்க ஒரு பாரத மா பெரும் போர் பண்ணி மாயங்கள் செய்து சேனையைப் பாழ் பட நூற்றிட்டுப் போய்
விண் மிசைத் தான தாமமே புக மேவிய சோதி தன் தாள் நண்ணி நான் வாங்கப் பெற்றேன் எனக்கார் பிறர் நாயகரே -6-4-10-

மாயம் அறிபவர் மாயவர்க்கு ஆளின்றி யாவரோ -தாயம் செறும் ஒரு நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காய்
தேசம் அறிய வோர் சாரதியாய்ச் சென்று சேனையை நாசம் செய்திட்டு நடந்த நல் வார்த்தை யறிந்துமே –-7-5-10-

வார்த்தை யறிபவர் மாயவர்க்கு ஆளின்றி யாவரோ போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு இறப்பிவை
பேர்த்து பெரும் துன்பம் வேரற நீக்கித் தன் தாளின் கீழ்ச் சேர்த்து அவன் செய்யும் சேமத்தை எண்ணித் தெளிவுற்றே -7-5-11-

பிறந்த மாயா பாரதம் பொருத மாயா –உன்னை எங்கே காண்கேனே –8-5-10-

கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் அது நிற்க வந்து மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தான் -9-1-10-

கண்டேன் கமல மலர்ப்பாதம் காண்டலுமே விண்டே ஒழிந்த வினையாயின வெல்லாம்
தொண்டே செய்து என்றும் தொழுது வழி ஒழுக பண்டே பரமன் பணித்த பணி வகையே -10-4-9-

வாட்டாற்றான் மன்னஞ்சப் பாரதத்துப் பாண்டவர்க்காப் படை தொட்டான் நல் நெஞ்சே நம் பெருமான் நமக்கு அருள் தான் செய்வானே-10-6-4-

————————————————————

இராமானுச நூற்றந்தாதி

அடல் கொண்ட நேமியன் ஆருயிர் நாதன் அன்று ஆரணச் சொல்
கடல் கொண்ட ஒண் பொருள் கண்டு அளிப்ப பின்னும் காசினியோர்
இடரின் கண் வீழ்ந்திட தானும் அவ் ஒண் பொருள் கொண்டு அவர் பின்
படரும் குணன் எம் இராமானுசன் தன் படி இதுவே -36 –

அடியைத் தொடர்ந்து எழும் ஐவர்க்காய் அன்று பாரதப் போர் முடிய பரி நெடும் தேர் விடுங்கோனை முழுதுணர்ந்த
அடியர்க்கமுதம் இராமானுசன் என்னை யால வந்து இப்படியில் பிறந்தது மற்றில்லை காரணம் பார்த்திடிலே–51-

———-

அடியர்க்கு அமுதம்

கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன் என்னப்பனில்
நண்ணித் தென் குருகூர் நம்பி என்றக்கால் அண்ணிக்கும் அமுதூரும் என்னாவுக்கே –

அமுதென்றும் தேனென்றும் ஆழியான் என்றும் அமுது அன்று கொண்டு உகந்தான் என்றும்
அமுதன்ன சொல்மாலை ஏத்தித் தொழுதேன் சொலப்பட்ட நல்மாலை ஏத்தி நவின்று

அமரர் முழு முதல் ஆகியவாதியை அமரர்க்கு அமுதீந்த ஆயர் கொழுந்தை
அமர வழும்பத் துழாவி என்னாவி அமரத் தழுவிற்று இனி யகலுமோ

ஆராவமுதே அடியேன் உடலம் நின்பால் அன்பாயே நீராய் அலைந்து உருக்குகின்ற நெடுமாலே
சீரார் செந்நெல் கவரி வீசும் செழு நீர்த் திருக் குடந்தை ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே

நெறி தரும் செந்தமிழ் ஆரணமே என்று இந் நீணிலத்தோர்
அறிதற நின்ற இராமானுசன் எனக்காரமுதே

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –50–உதிப்பனவுத்தமர் சிந்தையுள் ஒன்றலர் நெஞ்சம் அஞ்சிக் கொதித்திட மாறி நடப்பன இத்யாதி —

April 23, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

தென்னரங்கன் கழல் சென்னி வைத்து தானதில் மன்னும் -என்று
ஸ்ரீ எம்பெருமானாற்கு ஸ்ரீ பெரிய பெருமாள் திருவடிகளில் உண்டான ப்ராவண்ய அதிசயத்தை-அனுசந்தித்தார் கீழ் –
அந்த பிரசங்கத்திலே தமக்கு உத்தேச்யமான ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளை
அனுசந்தித்து -தத் ஸ்வபாவ அனுசந்தானத்திலே வித்தராகிறார் -இதில் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை–

ஸ்ரீ தென்னரங்கன் கழல் சென்னி வைத்து தான் அதில் மன்னும் -என்று ஸ்ரீ எம்பெருமானாருக்கு-
ஸ்ரீ பெரிய பெருமாள் திருவடிகளில் உண்டான ப்ராவண்யத்தை அனுசந்தித்தார் கீழ் -இதில்
அந்த பிரசங்கத்தில் தமக்கு உத்தேச்யரான ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளை அனுசந்தித்து –
அவற்றினுடைய ஸ்வரூப ஸ்வபாவங்களை அடைவே அருளிச் செய்து கொண்டு -வித்தார் ஆகிறார் –

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-

ஸ்ரீ எம்பெருமானாருக்கு ஸ்ரீ பெரிய பெருமாள் திருவடிகளில் உண்டான ஈடுபாடு முன் பாசுரத்தில்-கூறப்பட்டது .
இங்கு தமக்கு உத்தேச்யமான ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளின் ஸ்வபாவத்தை அனுசந்தித்து ஈடுபாடுகிறார் .

உதிப்பன வுத்தமர் சிந்தையுள் ஒன்றலர் நெஞ்சம் அஞ்சிக்
கொதித்திட மாறி நடப்பன கொள்ளை வன் குற்றம் எல்லாம்
பதித்த வென் புன் கவிப் பாவினம் பூண்டன பாவு தொல்சீர்
எதித்தலை நாதன் இராமானுசன் தன் இணை யடியே – – 50-

பத உரை
பரவு -பரவுகின்ற
தொல்-பழையதான
சீர்-குணங்களை உடையராய்
எதி-துறவிகளுக்கு
தலை -தலைவராய்
நாதன் -எனக்கு நாதனாய் இருக்கும்
இராமானுசன் தன் -ஸ்ரீ எம்பெருமானார் உடைய
இணை -ஒன்றுக்கு ஓன்று ஒப்புடைய
அடி-திருவடிகள்
உத்தமர் -உயர்ந்தவர்களுடைய
சிந்தை-மனத்துள்
உதிப்பன –தோன்றுவன
ஒன்றலர் -சேராதவருடைய
நெஞ்சம் -உள்ளம்
கொதித்திட -கொதிக்கும்படி
மாறி -ஒன்றுக்கு ஓன்று மாறி அடி இட்டு
நடப்பன -நடந்து செல்வன
கொள்ளை-மிக
வன் -வலிமையான
குற்றம் எல்லாம் -தோஷங்கள் அனைத்தும்
பதித்த -பதித்து வைக்கப்பட்ட
என் -எனது
புன் கவி -அற்பக் கவி யாகிற
பா இனம் -பா இனத்தை
பூண்டன -ஏற்றன –

வியாக்யானம் –
திசை யனைத்தும் ஏறும் குணன் -என்கிறபடியே சர்வ திக்கிலும் பரவி இருப்பதாய் –
ஸ்வரூப அனுபந்தி யாகையாலே -பழையதாய் இருந்துள்ள கல்யாண குணங்களை உடையராய் –
எதிகளுக்கு தலைவராய் -நாத பூதராய் -இருக்கும் ஸ்ரீ எம்பெருமானார் உடைய
சேர்த்தி அழகை உடைத்தாய் இருந்துள்ள திருவடிகள் ஆனவை –
அநந்ய ப்ரயோஜனராய் -அநந்ய சாதனராய் -இருக்கும் உத்தம அதிகாரிகள் உடைய திரு உள்ளங்களிலே –
எல்லையில் சீர் இள நாயிறு இரண்டு போலே -திருவாய் மொழி -8 5-5 – – என்கிறபடியே
ஆதித்யன் உதித்தால் போலே பிரகாசியா நிற்கும் தன்மையை உடையன .
பாஹ்ய குத்ருஷ்டிகளான பிரதி பஷ பூதருடைய ஹ்ருதயமானது -பீதமாய்-அந்த பய அக்நியாலே -பரிதபிக்கும் படி
பரஸ்பரம் மாறி இட்டு நடவா நிற்கும் தன்மையை உடையன –
சம்ருத்தமாய் பிரபலமாய் இருந்துள்ள தோஷங்கள் எல்லாம் சேர அழுத்தி வைக்கப்பட்ட என்னுடைய-புல்லிய கவிகள் ஆகிற –
சந்தஸ் சமூஹததை அணிந்து கொண்டன –
இவற்றின் உடைய தன்மை இருக்கும் படி என் என்று கருத்து –
இனத்தின் வகையான கலித்துறை யாகையாலே –பாவினம் -என்கிறார் ஆகவுமாம்-
ஒன்றலர் -சத்ருக்கள்
பாவுதல்-பரம்புதல்–
உதிப்பது -மாறி நடப்பன -பூண்டன மூன்றும் உடையவர் திருவடிகளால் நடந்தவை —
ரக்ஷணம் -அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்தி -போக்யத்வம் பாவானத்வம் -இரண்டும் -மோக்ஷ ஏக ஹேது-இணை அடியே -ஏவ காரம் –
அதமர் மத்யமர் இல்லாமல் – உத்தமர் -சிந்தை உள்ளே

பரவு தொல் சீர் –
பரவுகை -பரம்புகை –
திசை யனைத்தும் ஏறும் குணன்
என்று இவர்-தாமே அருளிச் செய்தபடி -சகல திக்குக்களிலும் வ்யாப்தங்களாய் –
வந்தேறி யன்றே -ஸ்வபாவிகங்களாய்-இருந்துள்ள கல்யாண குணங்களை வுடையவராய் –

எதித் தலை நாதன் –
ஸ்ரீ அருளாள பெருமாள் எம்பெருமானார்–ஸ்ரீ எம்பார் தொடக்கமான ஏழு நூறு ஜீயர்களுக்கும் வகுத்த சேஷியாய் –
அவர்களுக்கு ஸ்வரூப உபாய புருஷார்த்தங்களை-தத் யாதாம்ய பர்யந்தமாக உபதேசித்து அருளி –
அவ் வழியாலே அவர்களுக்கு தலைவராய் -நாத பூதராய்-இருந்துள்ள –

இராமானுசன் –
ஸ்ரீ எம்பெருமானார் –

தன் இணை யடியே –
இச் சம்சார சேதனரை அதில் நின்றும் நிவர்த்திப்பிக்கைக்கும் -அனுபாவ்யமாய்க் கொண்டு ரசிப்பிக்கைக்கும் –
இத் திருவடிகளோடு ஒத்து இருப்பார்- உண்டோ என்று ஆராய்ந்து பார்த்தால் –
வேத புருஷனாலும் சொல்லப்பட்ட பிரபாவத்தை உடைய ஸ்ரீ சர்வேஸ்வரனும் –
பிராப்யம் உண்டோ இல்லையோ என்று சம்சயிக்க வேண்டும்படி பண்ணக் கடவன் ஆகையாலும் –
ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு இரங்காதே போன படியாலும் -இவ் உபாயத்துக்கு ஒப்பாக மாட்டாது –
நிஸ் சம்சய பிரதிபாதகமாய் அந்ய யோகவ்ய வச்சேதகமாய் இருந்துள்ள பிரமாண பலத்தாலே இவ் உபாயம்-
அதிலும் ஸ்ரேஷ்டமாய்த்து இருப்பது –
ஆகையாலே அந்த அதிசயத்துக்கு ஒன்றுக்கு ஒன்றே -சதர்சமாய் இருக்கிற இரண்டு திருவடிகளும் -என்றபடி –

உதிப்பன உத்தமர் சிந்தையுள் –
உத்தமராவார் -அதம மத்யமரான வேத பாஹ்யரும் -வைதிகராய் கொண்டு-சாமான்ய தர்மத்திலே தானே மண்டி
இருக்குமவர்களுக்கும் -அவர்களுடைய நிஷ்டைக்கும் பிரதிபடராய் -பரம வைதிகரான -விசேஷ சாஸ்திர ஏக நிஷ்டராய் –
முமுஷுக்களாய் இருக்குமவர்கள் –
உத்க்ருஷ்டராய் -அநந்ய சாதனராய் -அநந்ய ப்ரயோஜனராய் இருக்கும் உத்தம அதிகாரிகள் -என்றபடி –
அன்றிக்கே –
இது சரம பர்வ பிரதிபாதாக சாஸ்திரம் ஆகையாலும் -முமுஷுக்களிலும் -ஏகாந்திகளிலும் –
பரம ஏகாந்திகளிலும் வைத்துக் கொண்டு –உத்தமர் பரம ஏகாந்திகள் ஆகையாலும் -இவ்விடத்திலே
உத்தமர் என்றது -பரம ஏகாந்திகளை சொன்னபடி என்னவுமாம் –

சிந்தையுள் –
அவர்களுடைய திரு உள்ளங்களிலே

உதிப்பன –
எல்லையில் சீர் இள நாயிறு இரண்டு போல் -என்கிறபடி சக்ரவாள பர்வதத்தில் இரண்டு ஆதித்யர்கள் சேர உதித்தால் போலே –
சத்துக்களுடைய திரு உள்ளங்களிலே எம்பெருமானார் உடைய இரண்டும் எப்போதும்-உதித்து பிரகாசியா நிற்கும் தன்மையை உடையன –
கீழ்ச் சொல்லப்பட்ட அத்யாவச்ய ரஹீதர்க்கு ஒருக்காலும் பிரகாசிக்கிறனவல்ல-
இப்படிப்பட்ட பிராவண்ய அதிசயம் உடையவர்களுக்கே பிரகாசிக்கும் என்றபடி –
யதீந்திர நாத -சிஷ்டாக்ர கணய ஜன சேவ்ய பவத் பதாப்ஜே -என்று இறே ஸ்ரீ ஜீயரும் அருளிச் செய்தது
அஜடா சயோதயம் யதிராஜ சந்த்ரம் -என்று அபியுக்தரும் அருளிச் செய்தார் இறே –

உதிப்பன உத்தமர் சிந்தையுள் –
உத்தமர் -மாதவான்க்ரி த்வயோபாய மாதவான்க்ரி பிரயோஜன ச உக்த மோதிகாரீ ஸ்யாத்-என்று
ஸ்ரீய பதியினுடைய இரு திருவடிகளையும் உபாயமாக கொண்டவனும் -அத்திருவடிகளையும் உபேயமாகக் கொண்டவனும் –
உத்தம அதிகாரி யாவான் -எனப்படும் உத்தம அதிகாரிகள் உடைய திரு உள்ளத்தில் தோன்றி பிரகாசிக்கும் தன்மை உடையன
ஸ்ரீ எம்பெருமானார் இணை யடிகள் என்றபடி –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் –
வேத பாஹ்யர் -அதமர் -பரம வைதிகர் ஆகிய சாமான்ய நிஷ்டர் மத்த்யமர் –
பரம வைதிகராய் விசேஷ சாஸ்திர நிஷ்டராய் முமுஷூ வானவர் உத்தமர் என்று கூறுகிறார் –

உதிப்பன என்றமையால் -திருவடிகளுக்கு ஸூர்ய சாம்யம் தோற்றுகிறது –
இள நாயிறு இரண்டு போலே -திருவாய் மொழி – 8-5 5- -என்று திருப்பாதத்தை -உதிக்கும் ஸூர்யன்
போன்றதாக திருவாய் மலர்ந்து இருப்பது இங்கு அனுசந்திகத் தக்கது –

ஒன்றலர் நெஞ்சம் அஞ்சிக் கொதித்திட மாறி நடப்பன –
ஒன்றலர் -என்றது பாஹ்ய குத்ர்ஷ்டிகள் தொடக்கமான-பிரதி பஷிகளை –
அவர்களுடைய ஹ்ருதயமானது சூர்யோதத்திலே திவா பீதங்கள் பயப்படுமா போலே –
ஷிப்த ப்ரத்யர்த்தி த்ர்ப்தி-என்னும்படியான அவர் திருவடிகள் தன் உதயத்தால் பீதமாய்-
ஆதித்யனுடைய தேஜசாலே-அவை பரிதபிக்குமா போலே -ஸ்வ தேஜச்சாலே பரிதபிக்கும்படி ஆதித்யன் இவற்றுக்கு பிரதிபடனாய் கொண்டு –
சர்வ திக்குகளிலும் பரஸ்பரம் மாறி நடவா நிற்கும் தன்மையை உடையன –
இத்தால் பாஹ்ய குத்ருஷ்டிகளை -நிரசிக்கைக்காக -ஸ்ரீ வேம்கடாசலத்துக்கும் ஸ்ரீ யாதவாசலத்துக்கும் ஸ்ரீ சாரதாபீடம் முதலான
ஸ்தலங்களுக்கும் இவர் எழுந்து அருளின படியை அருளிச் செய்தார் ஆய்த்து –

ஒன்றலர் —மாறி நடப்பன –
ஒன்றலர் –சேராதவர்கள் -அவர்கள் ஆகிறார் குத்ருஷ்டிகளும் பாஹ்யர்களும்
பிரதி பஷ நிரசனத்துக்கு ஸ்ரீ எம்பெருமானார் செய்த ஸ்ரீ திருவேம்கட யாத்திரை முதலியன இ
ங்கு நினைக்கத் தக்கன –
நடந்த நடையிலே யஞமூர்த்தி அஞ்சித் தோற்றமை உலகம் அறிந்ததே –

கொள்ளை வன் குற்றம் எல்லாம் பதித்த –
சர்வதா சர்வ பிரகாரத்தாலும் பண்ணப்பட்டவை யாகையாலே -ச்மர்த்தங்களாய் பிரபலங்களாய் இருந்துள்ள தோஷங்கள் எல்லாம்
திரட்டி ஒரு குப்பலாக வைக்கப்பட்ட –

என் புன் கவி பாவினம் –
கவி பாடுகைக்கு தகுதியான ஞானமும் -காவ்ய லஷண பரி ஜ்ஞானமும் இல்லாத-என்னுடைய கவி யாகையாலே –
புல்லியதாய் -அசமீசீனமான கவியாகிற சந்தஸ் சமூகத்தை –பாட்டுக்களை-என்றபடி –
அன்றிக்கே
அநேக சந்தஸ் ஸூக்களோடே கூடின கலித்துறை யாகையாலே –பாவினம் -என்றார் ஆகவுமாம் –

பூண்டன –
இவனுடைய அஞ்ஞானத்தாலே சொன்ன சொல்லுக்கள் அன்றோ –
இவை என்று அவற்றில் ஒரு-குறைகளும் பாராதே -கலம்பகன் மாலையை அலங்கரித்துக் கொள்ளுவாரைப் போலே
இவற்றை-அலங்கரித்து கொண்டன -இவற்றினுடைய தன்மை இருக்கும்படி என் என்று வித்தராகிறார் காணும் –

கொள்ளை –பாவினம் பூண்டன-
பாவினம் -பாக்களின் கூட்டம்
கலித்துறை யாகையாலே பாவினம் என்கிறார் ஆகலுமாம்-
உதிப்பன -என்று போக்யதையும்
நடப்பன -என்று ரஷகத்வமும்
பூண்டன -என்று குணம் உடைமையும் தோற்றுகின்றன

பரவு –இணை யடியே
வேறு ஒப்பற்ற ஒன்றுக்கு ஓன்று இணையம் படியான சேர்த்தி அழகு கண்டு –இணையடி -என்கிறார் .
நின்ற மா மருது இற்று வீழ நடந்த நின்மலன் நேமியான் என்றும்
வானவர் கை தொழும் இணைத் தாமரை யடி எம்பிரான் -பெரிய திருமொழி -1 8-3 – – என்று-ஸ்ரீ திருமங்கை மன்னன்
அசுரா வேசத்தாலே ஒன்றலராய் நின்ற மருது இற்று வீழ -நடந்த கண்ணன் அடிகளை-இணைத் தாமரை அடியாகக் கூறினார் .
அவ்வடிகளும் ஒப்பாகா எம்பெருமானார் இணை அடிகளுக்கு .
அங்கு இருவர் இற்று வீழ்ந்தனர் –
இங்கே பலர் அஞ்சிக் கொதிக்கின்றனர் –
தாமரையும் ஒப்பாகாமையால் –இணை தாமரை அடி -என்று இலர் –
பாவு தொல் சீர் கண்ணா என் பரம் சுடரே -திருவாய் மொழி – 3-2 7- -என்றார் ஸ்ரீ நம் ஆழ்வார் பிரதம பர்வதத்தை –
இவர் சரம பர்வதத்தை -பாவு தொல் சீர் எதித் தலை நாதன் -என்கிறார்.
ஸ்ரீ எம்பெருமானார் சீர் சத்ரு கோஷ்டியிலும் பிரசித்தமாய் இருத்தல் பற்றி -பாவு தொல் சீர் -எனப்பட்டது.
உலகம் அளந்த -ஸ்ரீ தென்னரங்கன் -பொன்னடியிலே ஈடுபட்டார் ஸ்ரீ எம்பெருமானார் .
இவ்வமுதனார் அவ்வெம்பெருமானார் இணை யடிகளில் ஈடுபட்டுப் பேசுகிறார் .
அச்சுதனுடைய இரண்டு திருவடித் தாமரைகள் ஆகிற பொன்னில் -வ்யா மோஹம் உடைய-ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளை
ஸ்ரீ ஆழ்வான் ஆஸ்ரயித்தால் போன்று இருக்கிறது இது

———-

இராமானுசன் தன் இணை யடியே –
என்றும் வானவர் கை தொழும் இணைத் தாமரை யடி எம்பிரான் -பெரிய திருமொழி-1-8-3-
நீடு பனி மலர் மாலை இட்டு நின் இணை யடி தொழுது ஏத்தும் -3-5-5-
ஆழி வண்ண நின்னடி இணை யடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்தம்மானே -5-8-1-
எனக்குமாதல் வேண்டும் என்று அடி இணை யடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்தம்மானே -5-8-2-
கொண்ட சீற்றம் ஓன்று உண்டுளது அறிந்து உன் அடியனேனும் வந்து அடி இணை யடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்தம்மானே -5-8-3
அஞ்சி வந்து நின்னடி இணை யடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்தம்மானே -5-8-4-
மாகமா நிலம் முழுதும் வந்து இறைஞ்சும் மலரடி கண்ட மா மறையாளன் –பொன்னருள் எனக்கும்
ஆகவேண்டும் என்று அடி இணை யடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்தம்மானே -5-8-5-
நின் சரண் எனச் சரணாய்–பின்னை என்றும் நின் திருவடி பிரியா வண்ணம் எண்ணிய பேரருள் எனக்கும்
அன்னதாகும் என்று அடி இணை யடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்தம்மானே -5-8-6
ஆதலால் வந்து உன் அடி இணை யடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்தம்மானே -5-8-7
ஆதலால் வந்து உன் அடி இணை யடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்தம்மானே -5-8-8-
அவ்வரத்த வடி இணையும் அங்கைகளும் பங்கயமே என்கின்றாளால் -8-1-7-

முன்பொலா விராவணன் தன் முது மதிள் இலங்கை வேவித்து அன்பினால் அனுமன் வந்து ஆங்கு
அடி இணை பணிய நின்றார்க்கு -திருக் குறுந்தான்டகம்- -15

எங்குப் போய் உய்கேன் உன் இணை யடியே யடையல் அல்லால்–பெருமாள் திருமொழி —-5-5-

நரங்கலந்த சிங்கமாய் கீண்ட திருவன் அடி இணையே அங்கண் மா ஞாலத்து அமுது -இரண்டாம் திருவந்தாதி –-84-

எந்தை இணை அடிக்கே யாளாய் மறவாது வாழ்த்துக வென்வாய்-17
தாவிய நின் எஞ்சா இணை அடிக்கே ஏழ் பிறப்பும் ஆளாகி அஞ்சாது இருக்க அருள் -18-

அடி இணையை தன்னுடைய அங்கைககளால் தான் தடவ தான் கிடந்தது —பெரிய திருமடல் –

தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாள் இணைக் கீழ் வாழ்ச்சி யான் சேரும் வகை யருளாய் வந்தே -திருவாய்மொழி -3-2-4-
என் பரஞ்சுடரே என்று உன்னை யலற்றி உன் இணைத் தாமரைகட்கு அன்புருகி நிற்கும் அது நிற்கச் சுமடு தந்தாய் -7-1-10-
திருச் செங்குன்றூர் திருச் சிற்றாறு அறிய மெய்மையே நின்ற வெம்பெருமான் அடி இணை அல்லது ஓர் அரணே-8-4-4-

உதிப்பனவுத்தமர் சிந்தையுள்
வந்தாய் என் மனம் புகுந்தாய் மன்னி நின்றாய் நந்தாத கொழுஞ்சுடரே எங்கள் நம்பீ -பெரிய திருமொழி-1-10-9-
அருள் புரிந்து இங்கு என்னுள் புகுந்தாய் ! இனி போயினால் அறையோ ! -3-5-8.
வந்த நாள் வந்து என் நெஞ்சு இடம் கொண்டான் மற்றோர் நெஞ்சு அறியான் -7-3-3..
தண் சேறை எம்பெருமான் தாள் தொழுவார் காண்மின் என் தலை மேலாரே -7-4-1-
எம்பெருமான் தாள் தொழுவார் எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றாரே–7-4-2-

உன் துளங்கு சோதித் திருப்பாதம் எல்லையில் சீர் இள ஞாயிறு இரண்டு போல் என்னுள்ள வா- திருவாய்மொழி–8-5-5-

———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ப்ரஹ்ம வித்யைகள்–32-/ஸ்ரீ நம்மாழ்வார்–33- திருநாமங்கள் –/ஸ்ரீ மத் ராமானுஜர் திருக் கோஷ்ட்டியூர் நம்பி இடம் -18-தடவை நடந்தது–

April 23, 2020

ஸ்ரீ ப்ரஹ்ம வித்யைகள்–32-

1-சத் வித்யா -சகலத்துக்கும் சர்வ வித காரணம் -சாந்தோக்யம்
2-அந்தர் ஆதித்ய வித்யா -சாந்தோக்யம்
3-ஆகாச வித்யா -சாந்தோக்யம்
4-பிராண வித்யா -சாந்தோக்யம்
5-பரஞ்சோதி வித்யா -சாந்தோக்யம்
6-சாண்டில்ய வித்யா -சாந்தோக்யம்
7-உபகோஸல வித்யா -சாந்தோக்யம்
8-வைச்வானர வித்யா -சாந்தோக்யம்
9-பூமா வித்யா -சாந்தோக்யம்
10-சத்யகாம வித்யா -சாந்தோக்யம்
11-தகர வித்யா -சாந்தோக்யம்
12-மது வித்யா -சாந்தோக்யம்
13-சம்வர்க்க வித்யா -சாந்தோக்யம்
14-காயத்ரி வித்யா -சாந்தோக்யம்
15-பஞ்ச அக்னி வித்யா -சாந்தோக்யம்
16-அஷி வித்யா -சாந்தோக்யம்
17-அந்தர்யாமி வித்யா -ப்ருஹதாரண்யம்
18-அக்ஷர வித்யா -ப்ருஹதாரண்யம்
19-ஜ்யோதிஷம் ஜ்யோதி வித்யா -ப்ருஹதாரண்யம்
20-மைத்ரேயி வித்யா -ப்ருஹதாரண்யம் -கணவர் யஜ்ஜனவல்க்யர் உபதேசம்
21-சர்வ அந்தராத்மா வித்யா -ப்ருஹதாரண்யம்
22-ஆனந்தமய வித்யா –தைத்ரியம்
23-வருணி வித்யா -தைத்ரியம்
24-ந்யாஸ வித்யா -தைத்ரியம்
25-பரம புருஷ வித்யா -கதா உபநிஷத்
26-நிச்சிகேத வித்யா -கதா உபநிஷத் -அக்னி உபாஸ்யம்
27-அங்குஷ்ட ப்ரமிதா வித்யா -கதா உபநிஷத்
28-பரியங்க வித்யா -கௌஷிதிக உபநிஷத்
29-ப்ரதர்தன வித்யா -கௌஷிதிக உபநிஷத் -இந்திரன் உபாஸ்யம்
30-பாலகி வித்யா -கௌஷிதிக உபநிஷத்
31-அக்ஷர பர வித்யா -முண்டக உபநிஷத்
32-ஈசாவாஸ்ய வித்யா -ஈஸா வாஸ்ய உப நிஷத்

—————-

ஸ்ரீ நம்மாழ்வார்–33- திருநாமங்கள்

1- சடகோபன் ….
2-தொண்டர்பிரான்
3-..மாறன் ..
4- நாவீரர்
5-..காரி மாறன் ..
6- திரு நாவீறு யுடைய பிரான்
7-பராங்குசன் ….
8-உதயபாஸ்கரர்
9-வகுளாபரணன் ….
10- வகுள பூஷண பாஸ்கரர்

11-குருகைப்பிரான் ….
12- ஞானத் தமிழுக்கு அரசு
13-குருகூர் நம்பி ….
14-ஞானத் தமிழ் கடல்
15-திருவாய்மொழி பெருமாள் ….
16- மெய் ஞானக்கவி
17-பொருநல் துறைவன் ….
18- தெய்வ ஞானக்கவி
19-குமரித்துறைவன் ….
20- தெய்வ ஞான செம்மல்

21-பவரோக பண்டிதன் ….
22-நாவலர் பெருமான்
23-முநி வேந்து ….
24- பாவலர் தம்பிரான்
25-பரப்பிரம்ம யோகி ….
26- வினவாது உணர்ந்த விரகர்
27-நிகாவலன் பெருமாள் ….
28- குழந்தை முனி
29-ஞான தேசிகன் ….
30- ஸ் ரீவைஷ்ணவ குலபதி

31-ஞானப்பிரான் ….
32-ப்ரபந்ந ஜன கூடஸ்தர்
33-மணிவல்லி – 9th பாசுரம் – திரு விருத்தம் -.
34-தென் குருகை வள்ளல்–ஸ்ரீ இராமானுஜ நூற்றந்தாதி-54

——————

ஸ்ரீ மத் ராமானுஜர் திருக் கோஷ்ட்டியூர் நம்பி இடம் -18-தடவை நடந்தது பிரசித்தம்
திருக் கோஷ்ட்டியூர் நம்பி பல தடவை ஸ்ரீ ரெங்கம் வந்து இவர் நன்மைக்கும் அர்த்தங்களை அருளுவதற்கும் வந்தமையும் உண்டே

1-சம்சார ஆசை தொலைந்து வர வேண்டும்
2-அகங்கார மமகாரங்கள் தொலைந்து வர வேண்டும்
3-ஆத்மஞானங்கள் பெற்ற பின்பு வர வேண்டும்
5-ஐஸ்வர்ய கைவல்ய ஆசைகள் தொலைத்து வர வேண்டும்
6-விஷயாந்தரங்களில் ஆசை தொலைந்து வர வேண்டும்
8-விருப்பு வெறுப்பு -ராக த்வேஷம் இரட்டைகள் தொலைந்து வர வேண்டும்
9-பரதந்தர்ய உணர்வு வந்த பின்பு வர வேண்டும்
10-ஸ்ரீ வைஷ்ணவம் கை கூடிய பின்பே வர வேண்டும்
11-சாத்விக பரிக்ரஹம் கிடைத்த பின்பே வர வேண்டும்
12-பாகவத பரிக்ரஹம் கிட்டிய பின்பே வர வேண்டும்
14-அநந்ய உபாயத்வம் பெற்ற பின்பே வர வேண்டும்
15-அநந்ய பிரயோஜனத்வம் மட்டில் த்வரை கிடைத்த பிறகே வர வேண்டும்
16-அநந்ய போக்யத்வம் கிடைத்த பிறகே வர வேண்டும்
17-ஆச்சார்யரை பற்றிய பின்பே வர வேண்டும்
18-அவர் கிருபையால் திரு மந்த்ரார்த்தம் கை கூடும் –

நமக்கு காட்டி அருளவே இந்த நாடகம் –
ஸ்ரீ ராமானுஜர் -18-படிகளை காட்டி திருமந்த்ரார்த்தம் பெற்று ஆசை யுடையோர்க்கு எல்லாம் வழங்கி -எம்பெருமானார் ஆனார் —

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் கோஷ்ட்டியூர் நம்பி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ யதிராஜ விம்சதி –ஸ்லோகங்கள்–17–20- ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் வியாக்யானம்–

April 23, 2020

ஸ்ரீ எறும்பியப்பா அருளிச் செய்த தனியன்

ய ஸ்துதிம் யதிபதி பிரசாதிதீம் வ்யாஜஹார யதிராஜ விம்சதிம்
தம் பிரபன்ன ஜன சாதகாம்புதம் தௌமி சௌம்ய வர யோகி புங்கவம் –

————-

இஷ்டங்களைக் கொடுக்கையும் அநிஷ்டங்களைப் போக்குகையும் உபாய பூதனான ஈஸ்வரன் கிருத்யம் அன்றோ –
நம்மால் அது செய்து தலைக்கட்டப் போமோ என்ன
பல்லுயிர்க்கும் வீடு அளிப்பான் –விண்ணின் தலை நின்று -மண்ணின் தலத்து உதித்து
ஸ்ரீ விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க சாயியாய் இருக்கிற தேவரீருக்கு முடியாதது உண்டோ –
ஆகிலும் அவதாரத்தில் மெய்ப்பாட்டுக்காக சர்வேஸ்வரன் தலையில் ஏறிட்டு அருளினீர் ஆகிலும்
அந்த ஈஸ்வரன் தானும் தேவரீருக்கு வஸ்யன் அன்றோ-
ஆனபின்பு ஆஸ்ரிதர் பாப விமோசனத்தில் சக்தி தேவரீருக்கே உள்ளது என்கிறார் –

ஸ்ருத் யக்ரவேத்ய நிஜ திவ்ய குண ஸ்வரூப
ப்ரத்யஷ தாமு பக தஸ்த்விஹா ரங்க ராஜ
வச்யஸ் சதா பவதி தே யதிராஜ தஸ்மாத்
சக்தஸ் ஸ்வகீய ஜன பாப விமோசநே த்வம்–17-

ஸ்ருத் யக்ரவேத்ய நிஜ-திவ்ய குண ஸ்வரூப-
அபவ்ருஷேயமாய் -நித்ய நிரதோஷமான வேதாந்தத்தில் வேத்யமான தன்னுடைய கல்யாண குண விசிஷ்டமான
திவ்ய ஆத்ம ஸ்வரூபத்தை யுடையவன் -ஸ்வரூப குணங்களை யுடையவன் –
ஸ்வரூப குணங்களைச் சொன்ன இது ரூப விபூதிகளுக்கும் உப லக்ஷணம்
திவ்ய குண ஸ்வரூப-என்று
கல்யாண குண விசிஷ்டமாக ஸ்வரூபத்தைச் சொல்லுகிறது –
வஸ்து நிர்குணம் என்பாருக்கு ணா எடுக்க இடம் அறும்படியாக நலமுடையவன் -என்னுமா போலே
நிர்க்குணம் நிரஞ்சனம் இத்யாதிகளில் தோற்றுகிற குண சாமான்ய நிஷேபம்
யஸ் சர்வஞ்ஞஸ் சர்வவித் -இத்யாதிகளில் விதிக்கப்பட்ட கல்யாண குண வ்யதிரிக்த ஹேய குண விசேஷம் என்று
தோற்றுகைக்காக-திவ்ய குண ஸ்வரூப -என்கிறார் –
இத்தால் அவனுடைய பரத்வம் சொல்லிற்று
ப்ரத்யஷ தாமு பக தஸ்த்விஹா ரங்க ராஜ
இப்படி என்றும் சாஸ்திரங்களில் கேட்டுப் போகை அன்றிக்கே -கண்ணாலே கண்டு எல்லாரும் அனுபவிக்கலாம் படி
ஸ்ரீ கோயிலிலே வந்து கண் வளர்ந்து அருளினை ஸுவ்லப்யத்தைச் சொல்கிறது
ப்ரத்யஷ தாமு பக தஸ்த்விஹா ரங்க ராஜ
என்றேனும் கட்கண்ணால் காணாத தன் வடிவை கண்ணுக்கு விஷயம் ஆக்கின படி –
ஞாலத்தூடே நடந்தும் நின்றும் -என்பாரைப் போலே தன் வடிவில் வாசி அறிந்து ஈடுபடுவார் இல்லாத சம்சாரத்திலே
கிடீர் தம் வடிவை ப்ரத்யஷிப்பித்தது –
ரங்க ராஜ
வி சத்ருசமான தேசத்திலே வந்தால் தன் வைபவம் குன்றுகை அன்றிக்கே துடித்த படி
பரம சாம்யா பன்னருக்கு முகம் கொடுத்துக் கொண்டு இருக்கிற இருப்பிலும் இங்கே வந்து ஈரரசு தவிர்ந்த பின்பு
யாய்த்து சேஷித்வம் தலை நின்றது
வச்யஸ் சதா பவதி தே யதிராஜ தஸ்மாத்
சக்தஸ் ஸ்வகீய ஜன பாப விமோசநே
த்வம்–-
இப்படி மேன்மை நீர்மை இரண்டாலும் பூரணமான ஸ்ரீ பெரிய பெருமாள் தேவரீருக்கு எப்போதும் வஸ்யர் அன்றோ –
நம் சேவகனார் மருவிய கோயில் என்றபடி -ஆஸ்ரிதருக்கு கை இலைக்கக்கு பவேவிக்கும் அவன் அன்றோ
உபய விபூதி ஐஸ்வர்யத்தையும் தேவரீருக்குத் தந்த படி –
நாம் பல பிறப்புப் பிறந்து திருத்தப் பார்த்த இடத்திலும் திருந்தாத சம்சாரிகள் முருடைத் தீர்த்து நமக்கு ஆளாம்படி
திருத்தித் தருகைக்கு இவர் ஒருவரைப் பெற்றோமே என்று நிரதிசய வ்யாமோஹத்தைப் பண்ணி-
ஒரு காரியத்தில் எப்போது இவர் நம்மை நியமிப்பது என்று -அவசர பிரதீஷராய்க் கொண்டு சர்வகாலமும்
இங்குத்தைக்கு விதேயராய்ப் போரா நின்றார் என்பது யாது ஓன்று
வச்யஸ் சதா பவதி
இப்படி ஆஸ்ரித பரதந்த்ரராய் -அத்தாலே சத்தை பெற்ற படி
ஆத்மா நாம் நாதி வார்த்தேயா -என்றும்
தேவும் தன்னையும் -என்னக் கடவது இறே
நிரங்குச ஸ்வதந்த்ரனானவன் ஒருக்காலாக இசைந்து நிற்கிலோ என்ன
வச்யஸ் சதா பவதி-என்கிறார்
ஸ்வ தந்திரத்தால் தன் சத்தை இன்றிக்கே தன் ஸ்வரூப ஸ்திதி அழியக் கார்யம் பார்க்குமோ –
தேவரீர் அளவிலே வ்யாமோஹத்தாலே பர தந்தரனாகை அன்றிக்கே
தன் ஸ்வரூப ஸ்திதிக்காகப் பர தந்திரனாகையாலே எப்போதும் இஸ் ஸ்வ பாவத்துக்கு குலைத்தலில்லை
தஸ்மாத்
ஆகையால் தேவரீர் ஆஸ்ரித ஜனங்களின் பாபத்தைப் போக்குகைக்கு சக்தர் அன்றோ -என்கிறார் –

——————–

உபாய பூதனான ஈஸ்வரன் நமக்கு பவ்யனாய் இருந்தாலும் அநாதி காலம் தத் ஆஜ்ஞா ரூப ஸாஸ்த்ர மரியாதையை உல்லங்கித்து-
கரண த்ரயத்தாலும் அதி குரூரமான பாபங்களைக் கூடு பூரித்து இப்போதும் அதிலே முதிர நடவா நின்ற அளவிலே
ஈஸ்வரனுக்கு உண்டான சீற்றத்தை அவன் தன்னையே இரந்து கால் கட்டி ஆற்றிக் கொள்ள வேண்டி அன்றோ இவனுக்கு இருப்பது-
என்று ஸ்ரீ எம்பெருமானாருக்குத் திரு உள்ளமாக
தான் மருந்து குடித்துப் பிள்ளை நோயைப் போக்கும் வத்ஸலையான தாயைப் போலே இதத்தாயான தேவரீரும்
ஆஸ்ரிதரான அடியோங்களுக்காக ஸ்ரீ பிராட்டிக்கு வல்லவனான எம்பெருமான் திருவடிகளில் சர்வ அபராதங்களையும்
பொறுத்து அருள வேண்டும் என்று பிரார்த்தித்து அருளுகையாலே அடியோங்களுக்கு அந்தக் குறையில்லை என்கிறார் –

கால த்ரேய அபி கரண த்ரய நிர்மிதாதி
பாப க்ரியஸ்ய சரணம் பகவத் ஷமைவா
சா ச த்வயைவ கமலாரமணே அர்த்தி தாயத்
ஷேமஸ் ஸ ஏவ ஹி யதீந்திர பவச்ச்ரிதா நாம் –18-

கால த்ரேய அபி
பூத காலத்தில் உள்ள பாபம் மாத்திரம் அன்றிக்கே கால த்ரயத்திலும் உண்டான பாபங்களுக்கும் ஆய்த்து
பொறை கொள்ள வேணுமாய்த்து
க்ருதான் க்ரியமாணான் கரிஷ்யமாணாம் ஸ்வ -என்றதைச் சொன்னபடி –
கரண த்ரய
ஒரு கரணத்தால் பண்ணினவற்றுக்கு பொறை கொள்ளுகை அன்றிக்கே காரணத்ரய
உபார்ஜிதங்களானவற்றுக்குப் பொறை கொள்ள வேணும்
இத்தால் மநோ வாக் காயை -என்றத்தைச் சொல்கிறது –
நிர்மிதாதி
இவை தான் சங்கல்பம் மாத்திரம் அன்றிக்கே பத்தும் பத்தாக செய்தவை என்கை
பாப க்ரியஸ்ய
என்று அக்ருத்ய கரணத்தையும்
அதி பாப
என்று பகவத் அபராதிகளையும் சொல்லுகிறது –
இத்தால் அக்ருத்ய கரண க்ருத்ய அகரண பகவத் அபசார பாகவத அபசார அஸஹ்யா அபச்சார ரூப
நாநா வித அநந்த அபசாரான்-என்றதைச் சொன்னபடி –
சரணம் பகவத் ஷமைவா
இப்படி இருந்துள்ள பாபத்தை யுடையவனுக்கு எம்பெருமானுடைய அபராத சஹத்வம் ஆகிய க்ஷமை ஒழிய வேறு புகல் இல்லை –
சா ச த்வயைவ கமலாரமணே அர்த்தி தாயத்
அந்த பொறை தானும் தேவரீர் தம்மால் ஸ்ரீ யபதி திருவடிகளில் மநோ வாக் காயை -என்று தொடங்கி
சர்வான் அசேஷதஸ் க்ஷமஸ்வ -என்று பிரார்திக்கப்பட்டது யாது ஓன்று உண்டோ –
அது தேவரீரைப் பற்றி இருக்கும் ஆஸ்ரித ஜனங்களுக்குப் பிழைக்கலாம் படி தேவரீர் வைத்த தண்ணீர் பந்தல் இறே
த்வயைவ
அபிமான அந்தர் பூதருக்குக் கார்யம் செய்ய வேணும் என்று ஈஸ்வரனோடு மன்றாடும்படியான ஸ்வரூபத்தை யுடைய
தேவரீர் அன்றோ பிரார்த்தித்து அருளிற்று –
இனி யாம் உறாமை –அடியேன் செய்யும் விண்ணப்பமே–மெய் நின்று கேட்டு அருளாயே -என்று பிரதம ஆச்சார்யர்
பிராரத்த படி கண்டால் அவர் அடி பணிந்த இவர்க்கும் இது அன்றோ அனுஷ்டானம் –
கமலாரமணே
அஹ்ருதயமான யுக்தியையும் சஹ்ருதயமாக்கிக் கார்யம் கொள்ளும் அவளும்
அவள் தன்னையும் அதி சங்கை பண்ணி ஆஸ்ரிதரை நோக்குமவனான சேர்த்தியில் அன்றோ பிரார்தித்தது –
அர்த்தி தாயத்
தாமும் அவனுமாக அறிந்து நெஞ்சால் அபேக்ஷித்தது அளவும் அன்றிக்கே பின்புள்ளவருக்கும் இது கொண்டு
வழக்கு பேசலாம் படி பாசுரம் இட்டு அன்றோ பிரார்த்தித்தது
அர்த்தித்தார் கார்யம் செய்தே நிற்க வேண்டும் படி பல் காட்டி அன்றோ போந்தது
ஷேமஸ் ஸ ஏவ ஹி யதீந்திர பவச்ச்ரிதாநாம்–
தேவரீருடைய ஸ்வ பாவத்தையும் அபிமான விஷய ஸ்வபாவத்தையும் பிரார்த்தனா பிரகாரத்தையும் அனுசந்தித்தால்
தேவரீர் திருவடிகளைப் பற்றினவர்களுக்கு ஆனைக் கழுத்தில் இருப்பாரைப் போலே
நிர்ப்பரராய் இருக்கைக்கு உறுப்பான ரக்ஷை அதுவே இறே –

——————–

இப்படி எம்பெருமானாருடைய திவ்ய வைபவத்தை தம்முடைய ப்ரேம அநு குணமாக பேசுகையில் இறங்கின இவர்
முதல் இரண்டு ஸ்லோகங்களாலே
ஸ்ரீ ஆழ்வார்கள் அளவிலும் அவர்களும் உகந்த விஷயமான ஸ்ரீ எம்பெருமான் அளவிலும்
ஸ்ரீ எம்பெருமானாருக்கு உண்டான ப்ராவண்ய அதிசயத்தையும்
ஸ்வ ஆஸ்ரிதற்கு ப்ராப்ய ப்ராபக பூதராய் இருக்கிற படியையும் பேசி

மேல் மூன்று ஸ்லோகங்களாலே
தமக்கு அபேக்ஷிதங்களான புருஷார்த்தங்களை அவர் திருவடிகளில் பிரார்த்தித்து

அநந்தர ஸ்லோகத்தாலே உடையவர் திருவடிகளில் ப்ரேம அபாவத்துக்கும் இதர விஷய ப்ராவண்யத்துக்கும் அடியான
பாபத்தை போக்கி அருள வேணும் என்று விண்ணப்பம் செய்து

மேல் ஆறு ஸ்லோகத்தாலே
பத த்ரய நிஷ்டைக்கு விரோதிகளான அக்ருத்ய கரணாதிகளையும் அபராதிகளையும் பரக்கப் பேசி

மேல் ஒரு ஸ்லோகத்தாலே
அநந்த கிலேச பாஜனமான தேகத்தோடே பொருந்தி இருக்கைக்கு அடியான பாபத்தைப் போக்க வேணும் என்று

அநந்தரம் இரண்டு ஸ்லோகங்களாலே
ஸ்ரீ யாமுனாச்சார்ய ப்ரப்ருதிகள் அருளிச் செய்த தோஷ சமூகங்களுக்கு எல்லாம் கொள்கலமான எனக்கு
தேவரீருடைய கிருபை ஒழிய வேறு புகல் இல்லை என்று

மேல் மூன்று ஸ்லோகங்களாலே
அடியேனுடைய அநிஷ்டங்களைப் போக்கி இஷ்டத்தை தந்து அருள வேணும் என்றும்
அவர் தம்முடைய கார்யங்களைச் செய்ய சக்தர் என்றும்
அவர் ஸ்ரீ கத்யத்ரயத்தில் ஸ்ரீ சர்வேஸ்வரன் திருவடிகளில் பண்ணின பிரபத்தியே தமக்குப் பேற்றுக்கு
உடல் என்று அருளிச் செய்தாராய் நின்றார் கீழ் –

இனி மேல் இரண்டு ஸ்லோகங்களாலும்
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளில் சேவையாகிற பரம ப்ராப்யம் நித்ய அபி விருத்யமாய்ச் செல்ல வேணும் என்றும் –
அதுக்கு பிரதிபந்தகமான சஷுர் விஷய சங்கம் நசிக்க வேணும் என்றும் ஸ்ரீ உடையவர் திருவடிகளில் பிரார்த்தித்து
இப்பிரபந்த முகேந அடியேன் விண்ணப்பம் செய்த இத்தை சாதரமாக அங்கீ கரித்து அருள வேணும் என்று
அபேக்ஷித்து ஸ்தோத்ரத்தைத் தலைக் கட்டி அருளுகிறார்

அதில் முதல் ஸ்லோகத்தாலே
தேவரீர் திருவடிகளில் சேவை யாகிற பரம ப்ராப்யமே நமக்கு நித்ய அவிவிருத்தியாம் படியாகவும்
அதுக்கு இடைச் சுவரான இதர விஷய சங்கம் அறும் படியாகவும் தேவரீர் செய்து அருள வேணும் என்று
ஸ்ரீ எம்பெருமானாரை பிரார்த்தித்து அருளுகிறார் –

ஸ்ரீ மன் யதீந்திர பவ தீய-(தவ திவ்ய)- பதாப்ஜ ஸேவாம்
ஸ்ரீ சைல நாத கருணா பரிணா மதத்தாம்
தாமன்வஹம் மம விவரதய நாத தஸ்யா
காமம் விருத்த மகிலஞ்ச நிவர்த்தய த்வம் –19-

ஸ்ரீ மன்
ஸ்ரீ பகவத் அனுபவ கைங்கர்யம் ஆகிற நிலை நின்ற சம்பத்தை யுடையவரே
யதீந்திர
அந்த ஸ்வரூப அநு ரூபமான சம்பத்தை பஜிக்கும் அளவில் எனக்கு என்று நாக்கு நீட்டாதபடி இந்திரியங்களை
நியமித்துக் கொண்டு போரும் படியைப் பற்ற யதீந்த்ர -என்று சம்போதிக்கிறார் –
ஆம் பரிசு அறிந்து கொண்டு -என்று ப்ராப்யமான கைங்கர்யத்தைச் சொன்ன அநந்தரம்
ஐம்புலன் அகத்து அடக்கி -என்று அதிலே ஸ்வ ப்ரயோஜன புத்தியால் ப்ரவணமாகிற இந்திரியங்களை
நியமித்துக் கொண்டு போரும் படியைச் சொல்லிற்று இறே
அன்றிக்கே
தமக்கு அபேக்ஷிதமான ப்ராப்யத்தைத் தருகைக்கு ஈடான ஞானாதி சம்பத்தை யுடையவர் என்றும்
அதுக்கு விரோதியைப் போக்க வல்ல சக்தியையும் யுடையவர் என்றும் நினைத்து
ஸ்ரீ மந் யதீந்த்ர -என்று சம்போதிக்கிறார் என்னவுமாம்
யதீந்திர பவ தீய-(தவ திவ்ய)- பதாப்ஜ ஸேவாம்
தம்முடைய ப்ராப்ய வேஷம் இருக்கிறபடி -வகுத்த சேஷியான தேவரீருடைய நிரதிசய போக்யமான திருவடிகளில்
நிரந்தரம் அனுபவமாகிற சேவையை
இராமானுசன் சரணாரவிந்தம் நாம் மன்னி வாழ -என்றும்
நம் தலை மிசையே பொங்கிய கீர்த்தி ராமானுஜன் அடிப் பூ மண்ணாவே -என்றும்
ஸ்ரீ பிள்ளை அமுதனார் உபக்ரம உபஸம்ஹாரங்களிலே பேசின கிரமத்தைக் கணிசிக்கிறது
இந்த ப்ராப்யம் நீர் உம்முடைய யத்னத்தாலே சாதித்துப் பெற்றதோ என்ன
அன்று தாயப்ராப்தம் -என்கிறார் –
ஸ்ரீ சைல நாத கருணா பரிணா மதத்தாம்-
எங்களுடைய ஆச்சார்யரான ஸ்ரீ பிள்ளை தாம் எப்போதும் அனுபவித்துக் கொண்டு போகிற இந்த பரம ப்ராப்யத்தை
யுபகரித்துக் கொண்டே நிற்க வேண்டும்படி தடையறப் பெருகுகிற தம்முடைய நிர்ஹேதுக கிருபைக்குப் போக்கு வீடாக
முலைக் கடுப்பாலே பாலைத் தறையிலே பீச்சுமா போலே எனக்கு அபேக்ஷை இன்றிக்கே இருக்க
தம்முடையது பேறாகவே சர்வ ஸ்வதாநம் பண்ணி அருளினார்
அத்தாலே எனக்கு வந்து கை கூடிற்று –
ஸ்ரீ பிள்ளை அருளாலே பேறு பெற்றீர் ஆகில் இப்போது நம் பக்கல் அபேக்ஷிக்கிறது என் என்ன
தாமன்வஹம் மம விவரதய
என்று அருளிச் செய்கிறார்
தேவரீர் இப்போது புதிதாக ஓன்று உண்டாக்க வேண்டுவது இல்லை –
ஸ்ரீ பிள்ளை அருளாலே உபகரித்த அத்தை நாள் தோறும் வளர்த்து அருளுகையே உள்ளது
அவரும் அப்படியே செய்யக் கடவோம்-என்னும் இடம் தோற்ற கருணா அம்ருத பரிணாம ரூப கடாக்ஷ வ்ருஷ்டிகளாலே குளிர வழியப் பார்க்க
அத்தாலே நிரஸ்த ஸமஸ்த பாப தப்தராய் பூர்ணமாக யுபகரியா நின்று கொண்டு உத்தர உத்தர
தழைத்துச் செல்லும்படி வளர்த்து அருள வேணும் என்கிறார்
தாமன்வஹம் மம விவரதய -என்று
உபகரிக்கிற ப்ராப்யத்தின் கௌரவம் ஆதல்
இவ்வுபகாரத்துக்கு இலக்கான என்னுடைய பாவமாதல் பாராதே தம்மளவில் உபகரித்து அருளுவதே என்று வித்தாராகிறார் தாம் என்று –
இப்படி செய்ய வேண்டும் நிர்பந்தம் என் என்ன அருளிச் செய்கிறார்
நாத
உடைமையானதின் கார்யம் செய்கை உடையவனுக்கே பரம் இறே
சர்வ ஆஸ்ரித சாதாரணாரான நமக்கு இவன் ஒருவனையே பார்த்து இருக்கப் போகுமோ என்று உபேக்ஷித்து அருளாதே
தேவரீர் திருவடிகளில் அனுபவத்தால் அல்லது செல்லாத என் பிரக்ருதியைத் திரு உள்ளம் பற்றி அருளி
எனக்கு ஒருவனுக்குமே முற்றூட்டு யாம்படி அவ்வனுபவத்தை இடைவிடாமல் வர்த்திப்பித்து அருள வேணும் என்கிறார்
இப்படி நாம் அனுபவத்தை வளர்த்துக் கொடுக்கிலும் இதுக்கு இடைச்சுவரான விரோதியைத் தானே கழித்துக் கொள்கிறான்
என்று விரோதி நிவ்ருத்திக்கு என்னை என் கையிலே காட்டித் தர ஒண்ணாது -அதுவும் தேவரீர் தாமே செய்து அருள வேணும் என்கிறார்
தஸ்யா காமம் விருத்த மகிலஞ்ச நிவர்த்தய த்வம் –-
என்று -தேவரீர் திருவடிகளில் சேவை யாகிற இந்தப் பரம ப்ராப்யத்துக்கு விருத்தமாய் -விஷய பேதத்தாலே
பஹு விதமாய் இருந்த விஷய ப்ராவண்ய ரூபமான காமத்தை சாவாசனமாக போக்கி அருள வேணும்
இங்கனம் அன்றிக்கே இதுக்கு விருத்தமான ஐஸ்வர்யா அனுபவமாகிற காமத்தையும் ஆத்ம அனுபவத்தையும்
பகவத் அனுபவத்துக்கு பிரதிபந்தகங்கள் எல்லாவற்றையும் போக்கி அருள வேணும் என்கிறார் ஆகவுமாம் –
இதில் முற்பட்ட யோஜனைக்கு ஓவ்வித்யம் உண்டு
சப்தாதி விஷய ப்ராவண்யமே இதுக்கு பிரதிபந்தமாக கீழே அருளிச் செய்ததும்
இப்படி ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளில் தமக்கு அபேக்ஷிதமாய் ஸ்வரூப அநு ரூபமான புருஷார்த்தத்தை அநாதி காலம்
இந்த புருஷார்த்தத்துக்கு இடைச்சுவராய் இப்போதும் அநு வர்த்தித்துப் போகும் அர்வாதீந விஷய ப்ராவண்ய நிவ்ருத்தி
பூர்வகமாகப் பல படியாகப் பிரார்த்திக்குக் கொண்டு போந்தார் –

————————–

என்னுடைய பாப பலத்தால் அடைவு கெட விண்ணப்பம் செய்த இந்த ஸ்தோத்ரத்தை அடியேனுடைய தோஷங்களைப் பார்த்து
உபேஷியாமல் அங்கீ கரித்து அருள வேணும் என்று ஸ்தோத்ரத்தை நிகமித்து அருளுகிறார்

விஜ்ஞாபனம் யதிதமத் யது மாம கீ நம்
அங்கீ குருஷ்வ யதிராஜ தயாம்பு ராஸே
அஜ்ஞோ அயம் ஆத்ம குண லேச விவர்ஜி தஸ்ச
தஸ்மாத் அநந்ய சரணோ பவதீதி மத்வா –20-

விஜ்ஞாபனம்
தம்முடைய அபேக்ஷித்ங்களைத் திருவடிகளில் விண்ணப்பம் செய்ய அது ப்ரபந்தமாய்த் தலைக் கட்டிற்று-
யதிதமத் யது மாம கீ நம்
யாருக்கும் சாதரமாய் இருக்கிற படி -செவிக்கு இனிய செஞ்சொல் -என்கிறபடி
ஒன்றை நினைத்து ஒன்றைச் சொன்னது இன்றிக்கே
நினைவும் சொலவும் சேர்ந்து இருக்கும்படியை சொன்னதாய் இருக்கை

பூ அலரும் போது போலே பேசுகிற தசையில் பேசுகிற தசையில் செவ்வியைச் சொன்னபடி
இச் சுவடு போவதற்கு முன்னே திருச் செவி சாற்றி -இளைய புன் கவிதை -என்கிறபடியே
ஸ்வச்சார்ய விஷய வைபவத்தை உள்ளபடி அறிந்து பேசுகைக்குத் தக்க ஞான சக்திகள் இன்றிக்கே இருக்க செய்தேயும் –
தன் உகப்பாகாப் பண்ணும் வை லக்ஷண்யம் அற்று இருந்தாலும் நம் அடியார் சொன்னது அன்றோ என்று
திரு உள்ளம் உகந்து கேட்டு அருளத் தக்கது என்கை –
அங்கீ குருஷ்வ
யாருடைய ப்ரயோஜனத்துக்காக யார் பிரார்த்திக்கிறார் இவன் வாக்கில் இப்படி -இதுக்கு கிருஷி பண்ணிப் போந்த
நம்மதன்றோ பிரயோஜனம் என்று அங்கீ கரித்து அருள வேணும் என்கிறார் –

யதிராஜ
இத்தலையில் தோஷத்தைப் போக்க வல்ல உடையவர் அன்றோ தேவரீர்
தயாம்பு ராஸே
சீறி எடுத்து எறியும் படியான தோஷம் இத்தலையிலே உண்டாலும் திருவடிகளைப் பூண்டு கொள்ளலாம் படி
இருக்கிற அருள் கடல் அன்றோ தேவரீர்
அஜ்ஞோ அயம் ஆத்ம குண லேச விவர்ஜி தஸ்ச
இவன் தான் ஸ்வ ரக்ஷணத்துக்கு நம்மை ஒழிய வேறே கைம்முதல் உண்டு என்று இருக்குமவனோ
நம்மை ஒழிய மற்று ஒன்றை அறியுமோ –
ஆத்ம குணம் உண்டாக நினைத்து பேற்றுக்கு உடல் என்று இருக்குமவனோ –
நம் கிருபைக்குத் தண்ணீர் துரும்பாகச் சொல்லத் தக்கதொரு சத் குண லேசம் உண்டோ
தஸ்மாத் அநந்ய சரணோ பவதீதி மத்வா –
ஆகையால் இவனுக்கு நம்மை ஒழிய வேறே புகல் உண்டோ
ஸ்வ ரக்ஷணத்துக்கு ஒரு உபாயாந்தரம் அறிந்து இருத்தல் செய்யத் தக்க ஞானம் இல்லாதவனுமாய்
சத்துக்கள் அங்கீ கரிக்கைக்கு உறுப்பான ஆத்ம குண சம்பத் ரஹிதனுமாய் இருக்கையாலே வேறு ஒரு புகல் இல்லாதவன் –
இதி மத்வா –
இப்படி பகவத் அனுபவாதிகளிலே அந்ய பரதையைத் தவிர்த்துத் திரு உள்ளம் பற்றி அருளி
இத்தை அங்கீ கரித்து அருள வேணும் என்று பிரார்த்தித்தார் ஆயிற்று

———————————————————–————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ யதிராஜ விம்சதி –ஸ்லோகங்கள்-13-16- ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் வியாக்யானம்–

April 22, 2020

ஸ்ரீ எறும்பியப்பா அருளிச் செய்த தனியன்

ய ஸ்துதிம் யதிபதி பிரசாதிதீம் வ்யாஜஹார யதிராஜ விம்சதிம்
தம் பிரபன்ன ஜன சாதகாம்புதம் தௌமி சௌம்ய வர யோகி புங்கவம் –

————-

இப்படி பாபார்ஜன பூமியாய் தத் பலமான துக்க அனுபவத்துக்கும் ஸ்தானமான சரீரத்தில் இருப்பைத் தவிர்த்துக் கொள்ள
மாட்டீரோ என்று ஸ்ரீ எம்பெருமானாருக்குத் திரு உள்ளமாக
என்னுடைய பாப அதிசயத்தாலே சரீர நிவ்ருத்தியில் அபேக்ஷை பிறக்கிறது இல்லை –
தாத்ருச பாவத்தை தேவரீர் தாமே சீக்கிரமாக போக்கி அருள வேணும் என்கிறார் –

தாபத்ரயீ ஜநித துக்க நிபாதி நோ அபி
தே ஹஸ்தி தௌ மம ருசிஸ்து ந தந் நிவ்ருத்தௌ
ஏதஸ்ய காரண மஹோ மம பாப மேவ
நாத த்வமேவ ஹர தத் யதிராஜ சீக்ரம் –13-

தாபத்ரயீ ஜநித துக்க நிபாதி நோ அபி–
இதிலே அனுபவிக்கிற துக்கம் தான் ஓன்று இரண்டாய் -அத்தைக் கழித்துக் கொள்ளாது ஒழிகிறதோ
கர்மம் ஏகவிதமாகில் இறே தத் பலமான துக்கமும் ஏக விதமாய் இருப்பது –
கர்ம அநு குணமாக அனுபாவ்யமான துக்கம் ஆத்யாத்மிகாதி ரூபேண த்ரிவிதமாய் இருக்கும்
இதில் ஆத்யாத்மிகம் தான் சாரீரம் என்றும் மாசம் என்றும் இரண்டு வகையாய் இருக்கும்
சாரீரம் தான் ஜ்வராதி வியாதிகளால் அநேக விதமாய் இருக்கும் –
மாநசம் காம க்ரோதாதிகளால் வருகிற வியசனம்
ஆதி பவ்திகமாவது -மிருக பக்ஷியாதிகளால் வரும் வியசனம்
ஆதி தைவிகமாவது-சீதோஷ்ணாதிகளால் வரும் வியசனம்
இப்படி மூவகைப்பட்ட தாப சமூகங்களால் உண்டான துக்க சாகரத்தில் உத்தர உத்தரம் அவகாஹியா நிற்கச் செய் தேயும்
தே ஹஸ்தி தௌ மம ருசிஸ்து ந தந் நிவ்ருத்தௌ-
சர்வம் மா ஸூபம்-என்கிற லௌகிகர் படியும் கடந்து இருக்கிற தூக்காஸ்பதமான சரீரத்தைக் குறைவற
நோக்கிக் கொள்ளுகையிலே யாய்த்து இப்போது ருசி
து
லௌகிகர் படியில் தமக்கு உண்டான விசேஷம்
ந தந் நிவ்ருத்தௌ-
அந்த ருசி இதனுடைய நிவ்ருத்தியிலும் ஒருக்கால் உண்டாய்த்து ஆகில் இத்தை விடுவித்துக் கொள்ளலாய்த்துக் கிடீர்
ஏதஸ்ய காரண
இதுக்கு காரணம் நான் பண்ணின பாபமே அன்றோ ஐயோ
ஏதஸ்ய காரண மஹோ மம பாப மேவ
நாத த்வமேவ ஹர தத் யதிராஜ சீக்ரம் –
நாத
இது அநாத வஸ்துவாய்த் தான் இங்கனம் எளிவரவு படுகிறதோ
த்வமேவ ஹர தத் யதிராஜ சீக்ரம்
இஸ் சம்பந்தத்தைப் பார்த்து சர்வத்தையும் ஸூபமாக விரும்புகிற இவன் மென்மேலும் அனர்த்தத்தை விளைத்துக் கொள்ளும்
என்று சடக்கென அந்த பாபத்தை போக்கி அருள வேணும் -என்கிறார் –

————

இப்போதும் பய அனுதாபாதிகளும் அற்று பாபார்ஜனத்தின் நின்றும் மீளாதபடியை யுடையனாய்
சரீர நிவ்ருத்தியிலும் அபேக்ஷை இன்றிக்கே இருக்கவும் நம்மாலே தத் ஹேது வான பாபங்களைப் போக்கு என்றால்
போக்கப் போமோ -ஆனபின்பு நீர் தாமே உம்முடைய ரக்ஷணத்துக்கு ஒரு வழி பார்க்க வேணும் காணும் என்ன –
தோஷமே வேஷமான எனக்கு தேவரீர் கிருபை ஒழிய வேறு கதி இல்லை
என்கிறார் மேல் இரண்டு ஸ்லோகத்தாலே –
அதில் முதல் ஸ்லோகத்திலே
சர்வஞ்ஞாரான ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்ரீ வரதராஜ ஸ்தவாதிகளிலே அருளிச் செய்த தோஷங்களுக்கு எல்லாம்
ஏக ஆஸ்ரயமான அடியேனுக்கு தேவரீர் கிருபை ஒழிய வேறே கதி இல்லை என்கிறார்

வாசா மகோசர மஹா குண தேசி காக்ர்ய
கூராதி நாத கதிதாகில நைச்ய பாத்ரம்
ஏஷா அஹமேவ ந புநர் ஜகதீத் ருசஸ் தத்
ராமாநுஜார்ய கருணைவது மத கதிஸ் தே –14–

வாசா மகோசர மஹா குண தேசி காக்ர்ய
கூராதி நாத கதிதாகில நைச்ய பாத்ரம்
மொழியைக் கடக்கும் பெறும் புகழான் -என்கிறபடி இவ்வளவு என்று வாக்கால் பரிச்சேதிக்க ஒண்ணாத படி இருப்பதாய்
நிஸ் சீமமான ஞான சக்த்யாதி கல்யாண குணங்களை யுடையராய் –
தன் திறத்திலே தீரக் கழிய அபராதம் பண்ணின நாலூரானையும் பெருமாளோடு ஒரு தலையாக மன்றாடி ரஷிக்கும்
பரம கிருபாவான் ஆகையால் -ஆச்சார்ய ச்ரேஷ்டராயும் உள்ள ஸ்ரீ கூரத்தாழ்வான் அருளிச் செய்த
அந்த நைச்யத்துக்கும் பாத்திரம் கீழ்ச் சொன்ன ஸ்வ பாவத்தை யுடைய நான் ஒருவனுமேயாய் இருக்கும்

ஏஷா அஹமேவ ந புநர் ஜகதீத் ருசஸ் தத்–
ஆராய்ந்து பார்த்தால் இஜ்ஜகத்தில் இப்படிப்பட்ட தோஷத்தை யுடையவன் ஒருவனும் இல்லை
ராமாநுஜார்ய கருணைவது மத கதிஸ் தே –
தேவரின் கிருபைக்கு வயிறு நிறையும்படிக்கு ஈடான தோஷ பூர்த்தி எனக்கு உண்டாகையாலே
தேவரீர் கிருபையே எனக்குப் புகல்
ஆர்ய
இவ்விஷயம் தேவரீர் அறியாமல் அடியேன் விண்ணப்பம் செய்ய வேணுமோ
மோக்ஷ ஏக ஹேதுவான சாதுர்யத்தை யுடைய சதுர அஷரியான திருநாமம் போதாதோ
ந சேத் ராமாநுஜேத் அக்ஷரா சதுரா சதுர் அக்ஷரீ -என்னக் கடவது இறே –

————————
இவ்வளவு அன்றிக்கே
பரமாச்சார்யரான ஸ்ரீ ஆளவந்தாரும் ஸ்ரீ கூரத்தாழ்வானும் அவருடைய திரு மகனாகிய ஸ்ரீ பட்டரும்
தாம் தாம் அருளிச் செய்த ப்ரபந்தங்களிலே ப்ரதிபாதித்த தோஷங்கள் அடைய எனக்கு ஒருவனுக்குமே உண்டான பின்பு
தேவரீர் கிருபையே எனக்கு உபாயம் -என்கிறார்
தோஷம் கணக்கா கணக்கா ஸ்ரீ எம்பெருமானார் கிருபை தம் அளவில் முழுமடை கொள்ளும் என்று இருக்கிறார்

ஸூ த்தாத்ம யாமுன குரூத்தம கூர நாத
பட்டாக்ய தேசிக வரோக்த சமஸ்த நைச்யம்
அத்யா அசத்ய அசங்குசித மேவ மயீஹ லோகே
தஸ்மாத் யதீந்திர கருணை வது மத் கதிஸ் தே –15-

ஸூ த்தாத்ம யாமுன குரூத்தம கூர நாத
பட்டாக்ய தேசிக வரோக்த சமஸ்த நைச்யம்-
பரி ஸூத்த அந்தக்கரணரான ஸ்ரீ ஆளவந்தார் -ஆச்சார்ய உத்தமரான ஸ்ரீ கூரத்தாழ்வான் -அவர் திரு மகனாரான ஸ்ரீ பட்டர்
இவர்கள் ஸ்வ ஸ்வ ப்ரபந்தங்களிலே
அமர்யாத–ஸூய்வாப நோப-அதி க்ரம அஞ்ஞானம் – இத்யாதிகளில் அருளிச் செய்த எல்லா நைச்சியமும்

திக ஸூசிமவி நீதம் நிர்தயம் மாமலஜ்ஜம் -ஸ்தோத் ரத் -47–என்றும் –
அபராத சஹஸ்ர பாஜனம்-48–என்றும்
அமர்யாத ஷூத்ரஸ் சல மதிர் அஸூயாப்ரசவபு –62- என்று ஸ்ரீ ஆளவந்தாரும்

ஹா ஹந்த ஹந்த ஹத கோ அஸ்மி கலோஸ்மி திங்மாம் –ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் -84- என்றும்
அத்யாபி நாஸ்த் யுபரதிஸ் த்ரிவித அபசாராத் -அது மானுஷ -59 -என்றும்
ஹை நிர்பயோ அஸ்ம்யோவிநயோ அஸ்மி –ஸ்ரீ வரத ஸ்தவம் -74-என்றும்
வித்வேஷா மான மதராக விலோப மோஹாத் யாஜான பூமி -ஸ்ரீ வரத ஸ்தவம் -76-என்றும் ஸ்ரீ ஆழ்வானும்

அதிக்ரா மன்னாஜ்ஞாம் தவ விதி நிஷேத பவ தேப்ய பித்ருஹ்யன் வாக்தீக்ருதிபி ரபி பக்தாய சத்தம் அஜானன் ஞானன் வாப
வாபவத சஹ நீயாக சிரத -ஸ்ரீ ரெங்க ஸ்தவம் -2-91-என்றும் ஸ்ரீ பட்டர் அருளிச் செய்தார் இறே

அத்யா அசத்ய அசங்குசித மேவ மயீஹ லோகே-தஸ்மாத் யதீந்திர கருணை வது மத் கதிஸ் தே-
இந்த லோகத்தில் இக்காலத்தில் நான் ஒருவன் பக்கலிலுமே சுருக்கமற உண்டாகா நின்றது என்பது யாதொன்று –
ஆகையால் தேவரீர் கிருபையே எனக்கு உஜ்ஜீவன உபாயம் –
இஹ லோகே
லோகாந்தரங்களில் உண்டாகில் தெரியாது
அத்யா
காலாந்தரத்தில் உண்டாகில் தெரியாது
அ சங்குசிதம்-
உண்டாகில் இப்படிக் குறைவற உண்டாகக் கூடாது -ஆகையால் இங்கனம் ஒத்த விஷயம்
தேவரீர் கிருபைக்கு வேறே எங்கும் எப்பொழுதும் இல்லை –
அடியேனுக்கும் தேவரீர் கிருபை ஒழிய வேறே புகல் இல்லை என்றபடி -இல்லை

இத்தால்
நிகரின்றி நின்ற என் நீசதைக்கு நின் அருளின் கண் அன்றிப் புகல் ஒன்றும் இல்லை –
அருட்க்கும் அஃதே புகல் 46–என்றத்தைச் சொன்னபடி –

—————————-

இப்படி தோஷ பாஹுள்யத்தையும்-தோஷ பூயிஷ்டரான தமக்கு உஜ்ஜீவன உபாயம் எம்பெருமானார் கிருபையே
என்னும் அத்தையும் இவர் அருளிச் செய்தவாறே
ஸ்ரீ எம்பெருமானார் இவரை விசேஷ கடாக்ஷம் பண்ணி அருளி உமக்கு அபேக்ஷிதம் என் என்று கேட்டு அருள
கீழ் இரண்டு ஸ்லோகங்களாலும் பிரார்த்தித்த அநிஷ்ட நிவ்ருத்தியையும் இஷ்ட ப்ராப்தியையும்
இஸ் ஸ்லோகத்தில் பூர்வ உத்தர அர்த்தங்களாலே பிரார்த்தித்து அருளுகிறார்

சப்தாதி போக விஷயா ருசிரஸ் மதீயா
நஷ்டா பவத் விஹ பவத் தயயா யதீந்திர
த்வத் தாஸ தாஸ கணநா சரமாவதௌ யஸ்
தத் தாஸதைகர சதா அவிறதா மமாஸ்து –16-

சப்தாதி போக விஷயா ருசிரஸ் மதீயா-நஷ்டா பவத் விஹ பவத் தயயா யதீந்திர
த்ருதீய பதத்தில் சொன்ன அநந்ய போக்யத்துக்கு சப்தாதி அனுபவம் இறே விரோதி யாகையாலே
அவித்யா நிவ்ருத்தியை அபேஷியாமல் விஷய ப்ராவண்ய நிவ்ருத்தியை அபேக்ஷிக்கிறார் –
இந்த ருசியால் அன்றோ அநாதி காலம் ஸ்வரூப அனுரூப புருஷார்த்தத்தை இழந்தது என்று
அதன் பேர் சொல்லவும் அஸஹ்யமாய் இருக்கிறதாய்த்து –
யாது சததா வி நாசம் -என்னுமா போலே உருக்காண ஒண்ணாத படி நசிக்க வேணும்
தேக அவசா நத்திலே தன்னடையே நசியாதோ என்ன
இஹ –நஷ்டா பவத்
இஸ் சரீரத்தோடு இருக்கிற இப்பொழுதே நசிக்க வேணும்
அன்றிக்கே
பேர் அளவு உடையவர்களையும் தன் கீழ் ஆக்கி சப்தாதிகள் தனிக் கோல் செலுத்துகிற இவ்விபூதியிலே என்னவுமாம்
அநாதி காலமே பிடித்துக் கரம்பேறிக் கிடக்கிற இது நசிக்கும் போதைக்கு ஒரு ஹேது வேண்டாவோ என்ன -அருளிச் செய்கிறார்

த்வத் தாஸ தாஸ கணநா சரமாவதௌ யஸ் தத் தாஸதைகர சதா அவிறதா மமாஸ்து –
நமக்கு சேஷமாய் வைத்து இவ்வஸ்து இவ்விஷயங்களின் காலிலே துகை யுண்வதே
இதன் கையில் இவன் இனி நலிவு படாமல் ஒழிவான் என்று தேவரீர் கிருபை பண்ணில் பிழைக்கலாம் அத்தனை –
கிருபா மாத்திரம் கொண்டு விஷய ருசியைத் தவிர்க்கப் போமோ என்ன
அருளிச் செய்கிறார்
யதீந்த்ர -என்று –
விஷயங்களை திரஸ்கரிக்கும் சக்திமான்களான யதிகளுக்கு தலைவரான தேவரீருக்கு முடியாதது உண்டோ –
இவ்வளவோ மற்றும் வேறே அபேக்ஷிதம் உண்டோ என்ன
இது ஆனு ஷங்கிகம் வேறே ஒரு பிரயோஜனம் உண்டு என்று தமக்கு அபேக்ஷித்தமான புருஷார்த்தத்தையே அபேக்ஷிக்கிறார் –

த்வத் தாஸ தாஸ கணநா சரமாவதௌ யஸ் தத் தாஸதைகர சதா அவிறதா மமாஸ்து –
தேவரீர் திருவடிகளில் சேஷத்வமே நிரூபகமாக உடைய சேஷ பூதருடைய பரம்பரையில் எல்லை நிலத்தில்
நிற்கிறவர்கள் யாவர் ஒருவர் அவர் திருவடிகளில் சேஷத்வம் ஒன்றிலுமே ஒருபடிப்பட்ட ரசத்தை யுடையனாகையே
இடைவிடாமல் எனக்கு நடக்க வேணும் –
மமாஸ்து
இதுவே புருஷார்த்தம் என்று அறுதி இட்டு இருக்கிற எனக்கு இது உண்டாவதாக
இந்த புருஷார்த்தத்தில் ருசி இல்லாதவர்கள் இழந்தார்கள் என்று ருசி யுடைய எனக்கும் இழக்க வேணுமோ –

———————————————————–————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ யதிராஜ விம்சதி –ஸ்லோகங்கள்-7-12- ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் வியாக்யானம்–

April 22, 2020

ஸ்ரீ எறும்பியப்பா அருளிச் செய்த தனியன்

ய ஸ்துதிம் யதிபதி பிரசாதிதீம் வ்யாஜஹார யதிராஜ விம்சதிம்
தம் பிரபன்ன ஜன சாதகாம்புதம் தௌமி சௌம்ய வர யோகி புங்கவம் –

இப்படி ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளில் ப்ரேம அபாவத்துக்கும்
இதர விஷய ப்ராவண்யத்துக்கும் ஹேதுவான பாபத்தைப் போக்கி அருள வேணும் என்று பிரார்த்தித்தவர்
மீளவும் பதத்ரய நிஷ்டா விரோதிகளாய் அநாதி காலமே பிடித்துப் பண்ணிப் போந்த
அக்ருத்ய கரண பகவத் பாகவத அபராதிகளையும் -இப்போது பண்ணிப் போகும் ஸூத்ர மந்த்ர
ஸூத்ர தேவாந்தர பஜனாதிகளையும் -இவை தொடக்கமானவற்றையும் அனுசந்தித்து –
இப்படி தோஷ பூயிஷ்டமான நான் தேவரீர் முன்னே கூசாதே நின்று இதை விண்ணப்பம் செய்கிறேன் என்று பீதராய்
தம்முடைய முஃயத்தை அனுசந்தித்து அருளுகிறார் மேல் நான்கு ஸ்லோகங்களால் –

வ்ருத்த்யா பஸூர் நர வபுஸ் தவ ஹமீத் ருஸோ அபி
ஸ்ருத்யாதி சித்த நிகிலாத்ம குணாஸ்ரயோ அயம்
இத்யாத ரேண க்ருதி நோ அபி மித ப்ரவக்தும்
அத்யாபி வஞ்சன பரோ அத்ர யதீந்திர வர்த்தோ –7-

ஸாஸ்த்ர அப்யாசிகளுக்கு யோக்கியமான மனுஷ்ய ஜென்மத்தில் பிறக்கையாலும் தத் விருத்தமான க்ருத்யாதிகளிலே
தடையற நடக்கையாலும் நர சாம்யமும் பசு சாம்யமும் தமக்கு உண்டாக அனுசந்திக்கிறார்
வ்ருத்தயா பஸூர்
என்னுடைய விருத்தியைப் பார்த்தால் iஜன்ய ஜனக விபாகமற வார்த்தைக்கும் பஸூ விருத்தியோடே ஒக்கும்
நர வபு
எடுத்த உடம்பைப் பார்த்தால் ஸாஸ்த்ர வஸ்யமான மனுஷ்ய சரீரமாய் இருக்கும்
துசப்தத்தால் மனுஷ்ய சரீர பரிக்ரஹம் பண்ணி வர்த்திக்கிற அல்லாதாரில் தமக்கு உண்டான வ்யாவ்ருத்தியை அருளிச் செய்கிறார்
மீத் ருஸோ அபி
கீழ்ச் சொன்னபடியே யுடையனாய் இருக்கச் செய் தேயும் -தம்முடைய தோஷ பரப்புக்கு பாசுரம் இடப் போகாமையாலே –
இப்படிப்பட்டவன் என்கிறார் –
நம்முடைய தோஷம் இதுவான பின்பு நாம் இவ்விஷயத்தை கிட்டுகை அயுக்தம் என்று கை வாங்க வேண்டி இருக்க
அது செய்யாத அளவன்றிக்கே-இவனைப் போலே ஆத்ம குண பூர்ணன் இல்லை –
ஆகையால் இவ்விஷயத்தை கிட்டிப் பரிமாறுகைக்கு இவன் அத்தனை அதிகாரிகள் இல்லை -என்று
அறிவில் தலை நின்றார்கள் எல்லாரும் தங்களில் ஏக கண்டராய் ப்ரீதிக்குப் போக்கு வீடு இட்டுப் புகழும் படி அன்றோ
இப்போதும் வ்ருத்த்யா பஸூர் நர வபுஸ் கொண்டு வர்த்தியா நின்றேன்
யதீந்திர –
ரோக நிவர்த்தகனான பிஷக்கைப் பற்றி இருக்கச் செய்தேயும் நோயின் கையிலே துகையுண்ணும் வியாதி க்ரஸ்தனைப் போலே
ஆஸ்ரித தோஷங்களைக் கழிக்கைக்கு சக்தரான தேவரீரைப் பற்றி இருக்கிற அடியேன்
இத் தோஷ சாகரத்தில் கிடந்தது அழுந்துகை பிராப்தமோ பிரானே என்கிறார்-

——————

துக்கா வஹோ அஹமநிசம் தவ துஷ்ட சேஷ்ட
சப்தாதி போக நிரதஸ் சரணா கதாக்ய
த்வத் பாத பக்த இவ சிஷ்ட ஜநௌக மத்யே
மித்யாசராமி யதிராஜ ததோ அஸ்மி மூர்க்க –8-

துக்கா வஹோ அஹமநிசம் தவ துஷ்ட சேஷ்ட–
தேவர் திருவடிகளில் சேஷத்வமே நிரூபகமாம்படியான ஸ்வரூபத்தை யுடைய நான் இவ்வாத்மாவுக்கு வகுத்த சேஷியான
தேவரீருக்கு இடைவிடாமல் ஹர்ஷாவாஹனாய்ப் போர வேண்டி இருக்க -அது செய்யாத அளவன்றிக்கே
தத் விருத்த்யமாக துக்காவஹோமானாய்க் கொண்டு போறா நின்றேன் -இது என்னுடைய பிரதம பார்யா நிஷ்டை இருந்தபடி –
துஷ்ட சேஷ்ட
தயாதி குண பூர்ணரும் ஏறிட்டுப் பார்க்க அருவருக்கும் படி துர் விருத்தியே யாய்த்து செய்து போருவது-
சப்தாதி போக நிரதஸ்
தேவரீர் திருவடிகளில் கைங்கர்யத்துக்கு இட்டுப் பிறந்து வைத்து அதுக்கு விருத்தமான சப்தாதி விஷய அனுபவத்தில்
ஒரு சர்வ சக்தியாலும் விடுவிக்க ஒண்ணாத படி மிகவும் பிரவணனாய்ப் போருகிறவன்
சரணா கதாக்ய-
சரணாகத்தான் என்கிற பேர் மாத்திரம் உள்ளது -அதிலும் நிஷ்டை இல்லை என்கை –
இத்தால் மத்யம பதார்த்த நிஷ்டா ஹானி சொல்கிறது
சப்தாதி போக நிரதஸ்-என்கையாலே த்ருதீய பதார்த்த நிஷ்டை இல்லை என்னும் இடம் சொல்லிற்று –
இதர விஷய ப்ரவணனாய் துஷ்ட வேஷ்டானாகையாலே இவனைக் கைக் கொள்ளப் போகிறது இல்லை –
சரணாகதன் என்றும் பேர் இட்டு இருக்கையாலே கை விடப் போகிறது இல்லை
இப்படி தள்ளவும் கொள்ளவும் போகாது இருக்கிற இவனை நாம் என் செய்வது என்று புண் படும் படி இருக்கையாலே
நித்யம் துக்காவாஹனாயே இருக்கை என்கை –
த்வத் பாத பக்த இவ சிஷ்ட ஜநௌக மத்யே-மித்யாசராமி யதிராஜ —
நம்படி இதுவானால் -நமக்கும் இவ்விஷயத்துக்கும் என்ன சேர்த்தி உண்டு என்று நடுங்கிக் கடக்க வர்த்திக்க வேண்டி இருக்க
அது செய்யாதே தேவரீர் திருவடிகளில் ப்ரேம பரிபூர்ணரரைப் போலே க்ருத்ரிமமாக வரியா நின்றேன் –
ததோ அஸ்மி மூர்க்க —
நிஸ் ஸ்நேஹனாய் இருக்கச் செய்தே ஸ்நேஹ யுக்தரைப் போலே அனுகூல கைங்கர்யங்களை ஆசைப்படுவது –
அர்த்திப்பதாய்க் கொண்டு க்ருத்ரிமமாக வர்த்தியா நின்றேன் என்பது யாது ஒன்றாலே –
அத்தாலே மூர்க்கனாகா நின்றேன் என்கிறார் –

————————

நித்யம் த்வஹம் பரிபவாமி குரும் ச மந்த்ரம்
தத்தேவதா ம்பி ந கிஞ்சித ஹோபி பேமி
இத்தம் சடோப்ய சடவத் பவதீய சங்கே
ஹ்ருஷ்டஸ் சராமி யதிராஜ ததோஸ்மி மூர்க்க –9-

நித்யம் த்வஹம் பரிபவாமி குரும் ச மந்த்ரம்-
அஹேதுகமாக அங்கீ கரித்து -ஸ்வ உபதேசத்தால் தத்வ ஞானத்தைப் பிறப்பித்து -ஸ்வரூப யாதாத்ம்ய ப்ரகாசகமான
திரு மந்திரத்தையும் சார்த்தமாக ப்ரசாதித்து அருளி ஸ்வரூப விருத்தங்கள் புகுராதபடி இரவு பகல் அவஹிதனாய்
நோக்கிக் கொண்டு போரும் ஆச்சார்யன் அருளிச் செய்தபடி அனுஷ்டியாமையாலும் –
தத் உபதிஷ்ட மந்த்ர ரஹஸ்யங்களை அநதி காரிகளுக்கு உபதேசிக்கையாலும் சர்வ காலமும் பிரதி க்ஷணம் பரிதவியா நின்றேன் –
அவ்வளவும் இன்றிக்கே
மந்த்ரம் பரிபவாமி
அனுசந்தாக்களுக்கு ரக்ஷகமாய் இருக்கையாலே -மந்த்ர ஸ்வ பாவமாய் -சகல வேதாந்த சாரமான திரு அஷ்டாக்ஷரத்தையும்
ஆச்சார்யர் அதுக்கு அருளிச் செய்த யதார்த்தத்தையும் மறக்கையாலும்-அயதார்த்தத்தை அதுக்கு அர்த்தமாக நினைக்கையாலும்
அதின் சீர்மை குன்றும்படி பரிதவியா நின்றேன் –
அவ்வளவும் இன்றிக்கே –
தத்தேவதா மபி-நித்யம் – பரிபவாமி
அந்த மந்திரத்துக்கு சேஷித்வ சரண்யத்வ ப்ராப்யத்வ வேஷத்தாலே ப்ரதிபாத்யனான எம்பெருமானையும்
தத் ஸமாச்ரயணத்தைப் பற்ற ஸ்ருஷ்டங்களான கரண த்ரயத்தையும் தத் விஷயத்தில் பிரவணம் ஆக்காமையாலும் –
தத் இதர விஷயங்களில் ப்ரவணம் ஆக்குகையாலும் பரிதவியா நின்றேன் –
தத்தேவதா ம்பி ந கிஞ்சித ஹோபி பேமி-
எப்போதும் உத்தேச்யமாகவே அநு சன்யித்து கௌரவிக்கத் தக்க குரு மந்த்ர தேவதைகளை அநவரதம் பரிபவித்து
இதுவே யாத்ரையாய்ப் போரா நின்றால்-இதிலே ஒரு சுற்றும் பயம் இன்றிக்கே இரா நின்றேன்
இத்தம் ச ஸோபி
மேல் எழவென்றிக்கே உள்ளூற ஆராய்ந்து பார்த்தால் சக்தனாய் இருக்கச் செய்தேயும்
அசடோப்ய அசடவத்–சங்கே ஹ்ருஷ்டஸ் சராமி —
ஆச்சார்ய விஷயத்திலும் -அவன் அபகரித்த மந்த்ர விஷயத்திலும் -தத் ப்ரதிபாதிதமான தேவதா விஷயத்திலும் யுக்த
கிரமம் தப்பாமல் யதா பிரதிபத்தியோடே வர்த்திக்குமவர்களாய்
தேவரீருடைய திருவடிகளில் சம்பந்தத்தை இட்டே நிரூபிக்கப் படுபவர்களான மஹாத்மாக்கள் நடுவே
குரு மந்த்ர தேவதைகள் அளவில் இவன் அத்தனை ப்ரேம அதிசயம் உடையவர்கள் இல்லை என்று தோற்றும்படி
நிரதிசய ஹர்ஷ யுக்தனாய்க் கொண்டு ஹர்ஷத்துக்கு போக்குவிட்டு இதஸ் ததஸ் சஞ்சரியா நின்றேன்
ததோஸ்மி மூர்க்க–
இப்படி குரு மந்த்ராதிகளை பரிஹரித்து அதில் ஒன்றும் பயமும் இன்றிக்கே -விலக்ஷணர் நடுவே புக்கு –
நானும் அவர்களில் ஒருவன் என்று கண்டவர்களுக்குத் தோற்றும் படி மசக்குப் பரலிட்டு களித்துத் திரியா நின்றேன் –
என்பது யாது ஓன்று உண்டோ அத்தாலே என் அத்தனை மூர்க்கர் இல்லை –

———————

பகவத் பாகவத ஆச்சார்ய விஷயங்களை அநு வர்த்திகைக்கு உண்டான மநோ வாக் காய ரூப கரண த்ரயத்தையும் கொண்டு
அவ்விஷயங்களை பரிதவித்து -அதில் ஒரு பயமும் இன்றிக்கே விலக்ஷணர் நடுவில் அனுவர்த்தியாத மாத்திரம் அன்றிக்கே
அநவரதம் அபராதமே பண்ணிக் கொண்டு போருகையால் உண்டான வியஸன அதிசயத்தால் அருளிச் செய்கிறார் –

ஹா ஹந்த ஹந்த மநஸா க்ரியயா ச வாசா
யோ அஹம் சராமி சத்தம் த்ரிவித அபசாரான்
ஸோஅஹம் தவா ப்ரியகர ப்ரியக்ருத் வதேவ
காலம் நயாமி யதிராஜ ததோஸ்மி மூர்க்க –10-

ஹா ஹந்த ஹந்த மநஸா
பகவத் பாகவத ஆச்சார்யர்களை அனுசந்திக்கக் கண்ட மனஸ்ஸூ படும் பாடே
க்ரியயா
க்ரியா சப்தத்தால் க்ரியா ஹேதுவான காயத்தை லஷிக்கிறது –
ச வாசா
உத்தேஸ்யங்களைக் குறித்து அஞ்சலி பிரணாமாதி அனுகூல விருத்தி பண்ணுகைக்கும் –
தத் குணங்களைப் புகழுகைக்குமாகக் கண்ட காயமும் வாக்கும் அபராதங்கள் பண்ணி அநர்த்தப்படுவதுக்கு உறுப்பாவதே –
சததம் –
ஸ்வரூப அனுரூபமான விருத்தியில் அந்வயித்தவகுக்கு கால விசேஷத்தில் விச்சேதம் வருகை
அஸஹ்யமானால் போலே யாய்த்து அந்த அபதார கரணத்திலும் கால விசேஷத்தால் உண்டான விச்சேதம் அஸஹ்யமான படி –
சராமி -என்கிற வர்த்தமான நிர்த்தேசத்தாலே சர்வ அவஸ்தையிலும் அபராதம் அனுவர்த்திக்கிறபடி –
த்ரிவித அபசாரான்
ஓர் ஒரு விஷயத்தில் அபராதமே அதி க்ரூரமாய் இருக்க மூன்று அபராதங்களிலும் அந்வயித்த படி –
அது தான் கதி பய அபதாரத்திலே ஸூவறுகை அன்றிக்கே-நாநா வியாபாரங்களிலும் அந்வயித்த படியைப்
பற்ற பஹு பவன பிரயோகம் பண்ணுகிறது
அஹம் சர்வம் கரிஷ்யாமிக்கு எதிர் தட்டு இருக்கிறபடி
ஸோஹம்
அபராத பண்ணின கையில் அராத இந்த பாபிஷ்டன்
தவா ப்ரியகர
ஸ்வரூப அனுரூபமான விருத்தியிலே அன்வயித்து வாழ வேணும் என்று இதுக்கு கிருஷி
பண்ணிக் கொண்டு போகும் தேவரீருக்கு
பண்ணின கிருஷியைப் பாழாக்கி அநிஷ்ட கரனாய்ப் போருமவன்-
ப்ரியக்ருத் வதேவ
அர்த்த சித்தி இதுவாய் இருக்க -பகவத் பாகவத ஆச்சார்ய விஷயங்களில் இவன் அத்தனை
ப்ரேமம் உடையாரும் கைங்கர்ய ருசி உடையாரும் இல்லை -ஆன பின்பு இவனே நமக்குப் பிரிய கரன் -என்று
தேவரீரும் நினைக்கும்படி யாய்த்து வர்த்திப்பது –
ஏவம் காலம் நயாமி
இப்படி க்ரித்ருமமான பரிமாற்றத்தால் காலத்தைக் கழியா நின்றேன்
யதிராஜ ததோஸ்மி மூர்க்க
ரக்ஷண சாமர்த்தியமும் உடைய தேவரீரும் சன்னிஹிதராய் இருக்க இவ் வஸ்து அபதாரத்திலே கை கழிகையாலே
என்னத்தனை மூர்க்கர் இல்லை என்கிறார் –

——————–

இப்படி அக்ருத்ய கரண பகவத் அபராதிகளிலே அந்விதனாய் இருக்கச் செய்தேயும் அவற்றிலே அந்வயிதாவனைப் போலேயும்
வர்த்திக்கையாலே என்னில் குறைந்தார் ஒருவரும் இல்லை என்று விஷண்ணரான
இவரைப் பார்த்து எம்பெருமானார்
அனுதாபாதிகள் உண்டாகில் அவை தன்னடையே கழியும் காணும் என்று அருளிச் செய்ய
அனுதாபாதிகளிலே லேசமும் இல்லாமையால் இப்போதும் அக்ருத்ய கரணமே எனக்கு நித்ய அனுஷ்டானமாகச் செல்லா
நின்றது -என்று விண்ணப்பம் செய்கிறார்

பாபே க்ருதே யதி பவந்தி பயா நுதாப
லஜ்ஜா புன கரண மஸ்ய கதம் கடேத
மோ ஹே ந மே ந பவதீஹ பயாதி லேச
தஸ்மாத் புன புநரகம் யதிராஜ குர்வே –11–

பாபே க்ருதே யதி பவந்தி பயா நுதாப லஜ்ஜா புன கரண மஸ்ய கதம் கடேத–
பயமாவது மேல் வரக் கடவ அனர்த்த விசேஷங்களுக்கு ஸூ சகமான விக்னங்களைக் கண்டு பிறக்குமது அன்றோ
இப்போது இத்தைச் செய்தால் மேல் நமக்கு அனர்த்தம் வரும் என்று வெருவுமவனுக்கு அப்படிப்பட்ட பயம் உண்டாகும்
நாம் அக்ருத்ய கரணத்தில் காட்டுவோம் அல்லோம் என்று அபிசந்தி விராமம் பிறந்து இருக்கச் செய்தேயும்
துர்வாசனையாலே நெஞ்சு கலங்கி நினைவரை அக்ருத்யத்திலே இறங்கினவனுக்கு அனுதாபம் உண்டாகும்
புத்தி பூர்வம் ப்ரவர்த்தியா நிற்கச் செய்தேயும் சிஷ்ட ஹர்ஹைக்கு அஞ்சினவனுக்கு லஜ்ஜையும் உண்டாகும்
இவற்றில் ஏதேனும் உண்டாயத்தாகில் மீளவும் பாபத்தைச் செய்கை எங்கனே கூடும்படி –
மோ ஹே ந மே ந பவதீஹ பயாதி லேச–
மேல் வரும் அனர்த்தத்தை யாதல் -இப்போது உண்டான சிஷ்ட ஹர்ஹை யாதல் ஒன்றையும் நிரூபிக்க அறியாத
அஞ்ஞானத்தாலே புத்தி பூர்வகமாக அக்ருத்யாதிகளிலே மண்டிப் போகும் எனக்கு ஏக தேசமும் பயாதிகள் உண்டானது இல்லை
தஸ்மாத் புன புநரகம் யதிராஜ குர்வே –
ஆகையால் அடுத்து அடுத்து பாபமே செய்யா நின்றேன் –

————————

சர்வேஸ்வரன் சகல வஸ்துக்களிலும் அந்தர்யாமியாய் ஸமஸ்த ப்ரவ்ருத்திகளையும் பார்த்துக் கொண்டு
எழுந்து அருளி இருக்கிறபடியை அனுசந்தித்தால் பாப கரணத்துக்கு இடமில்லை காணும் என்ன
அதுவும் அனுசந்திக்கைக்கு யோக்யதை இல்லாதபடி காம பரவச அந்தக்கரணனாய் இருக்கிறேன் என்கிறார்

அந்தர்ப்ப ஹிஸ் சகல வஸ்து ஷூ சந்தமீசம்
அந்தபுரஸ் ஸ்தித மிவாஹ மவீஷ மாண
கந்தர்ப்ப வஸ்ய ஹ்ருதயஸ் சத்தம் பவாமி
ஹந்த த்வதக்ரக மனஸ்ய யதீந்திர நார்ஹ–12 —

அந்தர்ப்ப ஹிஸ் சகல வஸ்து ஷூ சந்தமீசம்
அந்தபுரஸ் ஸ்தித மிவாஹ மவீஷ மாண
ஸ்வ பர விபாகம் அற சகல வஸ்துக்களிலும் உள்ளொடு புறம்போடு வாசி அற வியாபித்து இருக்குமவனாய்
வியாப்ய வஸ்துக்களை ஸ்வ அதீனமாக நியமித்துக் கொண்டு போருமவனை-
உள்ளே இருக்கிற படியை அறிந்தால் -நினைவுக்கு வாய்த்தலையான நெஞ்சில் இருக்கிறவன்
என் நினைந்து இருக்கும் என்று வேறுவி நெஞ்சால் பாப சிந்தை பண்ணப் போகாது
புறம்பு இருக்கிறபடியை அனுசந்தித்தால் உள்ளே அன்றோ அவன் புறம்பு இல்லை என்று
பாஹ்ய காரணங்கள் கொண்டு பாபம் செய்யப் போகாது

உள்ளும் புறமும் உள்ளவனாய் இருந்தாலும் செய்த பாவத்துக்கு உரிய தண்டம் பண்ணி நியமிக்கைக்கு
சக்தன் அல்லவனாகில் பாபம் செய்யலுமாம் –
அங்கனும் இன்றிக்கே அபராத அநு ஸ்மரணம் உண்டிகைக்கு உரிய நிரங்குச ஸ்வ தந்திரனுமாய் இருந்தால்
எங்கனே பாபம் செய்யலாவது –
அந்தபுரஸ் ஸ்தித மிவாஹ மவீஷ மாண–
ஜாதி அந்த்யன் தன்னுடைய முன்னே நிற்கிறவனைக் காண மாட்டாதாப் போலே தத்வ ஞான ஸூந்யனான நான்
ஸர்வத்ர சன்னிஹிதனான சர்வ நியாந்தாவானவனைக் காண மாட்டுகிறிலேன்
ஆச்சார்ய உபதேசாதி லப்ய ஞானம் உண்டாய் இருக்கக் காண மாட்டாமைக்கு ஹேது என் என்ன அருளிச் செய்கிறார் –
கந்தர்ப்ப வஸ்ய ஹ்ருதயஸ் –
அவனைக் காண்கைக்கு சாதனமான நெஞ்சு காம பாரவசயத்தாலே கலங்கின பின்பு காண விரகு உண்டோ –
விஷய ப்ரவணமான நெஞ்சில் ஆச்சார்ய உபதேச லப்யமான ஞானத்தை ப்ரதிஷ்டிப்பிக்கை அரிது இறே
சத்தம் பவாமி
மனஸ்ஸூக்கு காம பாரவஸ்யம் காதாசித்கமம் ஆய்த்தாகில் அல்லாத காலங்களிலே யாகிலும் பகவத் அநு சந்தானம் பண்ணலாம் –
சர்வ காலங்களிலும் சித்தம் காம கலுஷமானால் எங்கனம் அநுஸந்திக்கும் படி –
பவாமி-
என்கிற வர்த்தமான நிர்த்தேசத்தாலே கால கலை ஏக லேசமும் காம பாரவஸ்யம் தவிர்ந்து இல்லை என்கிறது –
க்ஷணம் காலமாகிலும் வாஸூ தேவ சிந்தனத்துக்கு யோக்யமாகாதபடி பாழே போவதே -என்கிற விஷாதத்தாலே
ஹந்த என்கிறார்
த்வதக்ரக மனஸ்ய யதீந்திர நார்ஹ–
சாஷாத்க்ருத பகவத் தத்வராய் நிரஸ்த ஸமஸ்த காமரானவர்கள் கிட்டி சேவிக்கும் படியான வைபவத்தை
யுடைய தேவரீர் திரு முன்பே வருகைக்கு
இப்படி இருக்கிற நான் அர்ஹனோ என்று தம்மையே தாம் நிந்தித்துக் கொண்டு அருளுகிறார் –

—————————————-————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் . –

ஸ்ரீ யதிராஜ விம்சதி –ஸ்லோகங்கள்–1-6 -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் வியாக்யானம்–

April 21, 2020

ஸ்ரீ மத் ராமானுஜ சரணவ் சரணம் ப்ரபத்யே -விளக்கம் யதிராஜ விம்சதி
ஸ்ரீ மதே ராமாநுஜாய நம -விளக்கமே ஆர்த்தி பிரபந்தம்

பிரபன்ன ஜன கூடஸ்தர் நம்மாழ்வாரும் சரம குருவான நமது பெரிய ஜீயரும் ஆழ்வார் திருநகரியிலே திரு அவதாரம்
அதே வைகாசி விசாகம் -திருவாய் மொழிப்பிள்ளை குந்திநகர் திரு அவதாரம் -திருமலை ஆழ்வார் இயல் பெயர்
எந்தை திருவாய் மொழிப் பிள்ளை இன்னருளால்
வந்த வுபதேச மார்க்கத்தைச் -சிந்தை செய்து
பின்னவரும் கற்க வுபதேசமாய்ப் பேசுகின்றேன்
மன்னிய சீர் வெண்பாவில் வைத்து –1-மோக்ஷ உபாயம் -உய்ய ஒரே வழி உடையவர் திருவடியே
இந்த யுபதேச ரத்ன மாலை தன்னைச்
சிந்தை தன்னில் நாளும் சிந்திப்பார் -எந்தை
எதிராசர் இன்னருளுக்கு என்றும் இலக்காகிச்
சதிராக வாழ்ந்திடுவர் தாம் ———73-

ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளையே சேஷி உபாயம் பிராப்யம்  என்று -அவர் உத்தாரக ஆசார்யர் –
க்ருபா மாத்திர பிரசன்னாச்சார்யர் ஸ்ரீ உடையவர் திருவடிகளைக் காட்டிக் கொடுத்து அருள
ஸ்ரீ மத் யதீந்திர தவ திவ்ய பதாப்ஜ சேவாம்-ஸ்ரீ சைல நாத கருணா -பரிணாமத்தாம் -என்றும்

தேசம் திகழும் திரு வாய் மொழிப் பிள்ளை மாசில் திருமலை யாழ்வார் என்னை
நேசத்தால் இப்படி எண்ணி நின் பால் சேர்த்தார் எதிராசா -ஆர்த்திப்பிரபந்தம்-என்றும்

தாமே அருளிச் செய்த படி தஞ்சமாக காட்டிக் கொடுத்த ஸ்ரீ உடையவர் மேலே அதிக பிராபண்யம் மிக்கு
ஸ்ரீ யதிராஜ விம்சதி அருளிச் செய்தார் –

வல்லார்கள் வாழ்த்தும் குருகேசர் தம்மை மனத்து வைத்து
சொல்லார வாழ்த்தும் மணவாள மா முனி தொண்டர் குழாம்
எல்லாம் தழைக்க எதிராச விம்சதி ஈன்றளித்தோன்
புல்லார விந்தத் திருத் தாள் இரண்டையும் போற்று நெஞ்சே -என்று அங்கே இருந்த முதலிகள் அனுசந்தித்தார்கள்

ஸ்ரீரகஸ்ய த்ரயம் -(திருமந்திரம் -8-த்வயம் 25 சரமஸ்லோகம் 32 )65 அஷரங்கள் என்பதால் ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் 65 ஸ்லோகங்கள் அருளிச் செய்தது போல்
அதில் உள்ள 20 பதங்கள் என்பதால் 20 ஸ்லோகங்கள் கொண்டு ஸ்ரீ மணவாள மா முனிகள் இந்த பிரபந்தம் அருளிச் செய்து அருளினார் –ஆளவந்தார் பிரதமபர்வத்தில்
இவரோ சரம பர்வத்தில் 

———-

யத் உதிதா யதி பூபதி விம்சதிஸ் ஸமவதீரித ஸீது ஸூதா ரஸா
விசத யத் யகிலம் பவி நாம் ஹிதம் வர முனிஸ் ச தநோது ஸூபாநி ந –ஸ்ரீ பிரதி வாத பயங்கர அண்ணா ஸ்வாமிகள் அருளிச் செய்த ஸ்ரீ வர வர முனி சதகம் -81-

எவரால் அருளிச் செய்யப் பட்டதும் -இனிமையில் தேன் அம்ருதம் இவற்றைத் தோற்கடிப்பதுமான
யதிராஜ விம்சதி என்ற ஸ்தோத்ரம் சம்சாரிகளுக்கு ஓன்று விடாமல் எல்லா நன்மைகளையும்
தெளிவு படுத்துகிறதோ அந்த மா முனிகள் நமக்கு மங்களங்களை வளர்த்து அருளட்டும் –

——————-

மஹா யோகீ வக்தா அநிதர குண சாமான்ய மஹிமா
ச து ஸ்துத்ய ஸ்ரீ மான் அமித குண பூமா யதிபதி
அதோ நிஸ் துல்யா யா யதி நரபதேர் விம்சதி ரிதி
வியவஸ் யந்தஸ் சந்த கலி மிஹ ஜயந்த் யுஜ்ஜ்வலதி ய–82-

யதிராஜ விம்சதியை இயற்றி அருளிய மா முனிகள் மற்றவர்களுக்குப் பொருந்தாத மஹிமை மிக்க
குணங்களை உடையவர் ஆவார் –
ஸ்துதிக்கு விஷயமாக இருப்பவரோ பிராட்டியின் கிருபையைப் பெற்றவரும் அளவற்ற குணங்களுக்கு இருப்பிடமானவரும்
யதிகளுக்கும் ஸ்வாமியுமான -உத்தாரக ஆச்சார்யரான -எம்பெருமானார் –
ஆகையால் இந்த யதிராஜ விம்சதி ஒப்பற்றது என்று உறுதி கொண்ட ஒளி மிக்க ஸ்ரீ யை உடைய
விலக்ஷண அதிகாரிகள் இங்கு கலியை வெல்கிறார்கள் –

————-

த்ராஷாமதி ஷிபதி நிந்ததி மாகரந்த தாராம் ஸூதா ரஸ
ஜரீ மதரீ கரோதி யத் ஸம் ப்ரணீத மது லம் யதி ஸார்வ பவ்ம
ஸ்தோத்ரம் ச மே வர முனிர் வித நோ து பத்ரம் –83-

எந்த மா முனிகள் அருளிச் செய்த ஒப்பற்ற யதிராஜா விம்சதியானது த்ராக்ஷையைத் தோற்படிப்பதாய்
தேன் தாரையைப் பழிப்பதாய் அம்ருத ரஸ ப்ரவாஹத்தை தாழ்வுறச் செய்கிறதாய்
நன்கு அருளிச் செய்யப் பட்டதோ அந்த யதீந்த்ர ப்ரவணரான மா முனிகள்
அடியேனுக்கு அருளத் திரு உள்ளம் பற்ற வேண்டும் –

————-

ஸ்ரீ மத் ரெங்க ஸூதாபிதா நக ஸூத் யர்த்த அநு சந்த உஜ்ஜ்வலா
கோதா உதார வச ப்ரதர்ஸித குரு உபாயத்வ நிஷ்ட ஆஸ்ரயா
யத் ஸூக்திர் யதிராஜ விம்சதி நுதி வேதாந்த ஸிந்தோஸ் ஸூதா
ஸ்ரீ மத் ரம்ய வராய ஸம்யமவதாம் நாதாய தஸ்மை நம –84-

திருவரங்கத்து அமுதனார் என்னும் திரு நாமத்தை உடைய கவியினுடைய ராமானுஜ நூற்று அந்தாதியின்
அர்த்தத்தை அனுசந்தித்த சிறப்பை உடைத்தாய்
ஸ்ரீ கோதா தேவியின் உதார வாக்கான நாச்சியார் திரு மொழியில் காட்டி அருளப் பெற்ற
ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் என்ற நிஷ்டையை ஏற்பதாய் -வேதாந்த பாற் கடலில் இருந்து
கடைந்து எடுத்த அமுதம் போன்றதாய் விளங்கும் யதிராஜ விம்சதி என்னும் ஸ்தோத்ர கிரந்தம் அருளிச் செய்து
அருளிய இந்த்ரியங்களில் அடக்கியவர்களில் ஸ்ரேஷ்டரான அந்த மா முனிகளுக்கு நமஸ்காரம் –
அடியேனுடைய ப்ரணாமங்களை சமர்ப்பிக்கிறேன் –

————–

திருமழிசை அண்ணா அப்பங்கார்  ஸ்வாமிகளும் (ஆனி௴, அவிட்டம் 1766 – 1817)சமஸ்க்ருத வியாக்யானம் செய்துள்ளார்

———-

ஸௌம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர சரணாம்புஜ ஷட்பதம் |
தேவராஜ குரும் வந்தே திவ்ய ஜ்ஞான ப்ரதம் சுபம் ||-ஸ்ரீ எறும்பியப்பாவின் தனியன் 

ஸ்ரீ எறும்பியப்பா அருளிச் செய்த தனியன்

ய ஸ்துதிம் யதிபதி பிரசாதிதீம் வ்யாஜஹார யதிராஜ விம்சதிம்
தம் பிரபன்ன ஜன சாதகாம்புதம் நௌமி சௌம்ய வர யோகி புங்கவம் –

ய: – யாவரொரு மணவாள மா முனிகள்,
யதிபதி ப்ரஸாதி³நீம் – எம்பெருமானாருடைய திருவுள்ளத்தை உகப்பிக்குமதான,
யதிராஜ விம்ஶதிம் ஸ்துதிம் – யதிராஜ விம்ஶதி யென்கிற தோத்திரத்தை,
வ்யாஜஹார – அருளிச் செய்தாரோ,
ப்ரபந்நஜந சாதக அம்பு³த³ம் –ப்ரபந்நர்களாகிற சாதக பக்ஷிகளுக்குக் கார் முகில் போன்றவரான,
தம் ஸௌம்ய வர யோகி³ புங்க³வம் – அந்த மணவாளமாமுனிகளை,
நௌமி – ஸ்துதிக்கிறேன்.-தம் ப்ரஸித்தி

எவரால் அருளிச் செய்யப் பட்டதும் -இனிமையில் தேன் அம்ருதம் இவற்றைத் தோற்கடிப்பதுமான
யதிராஜ விம்சதி என்ற ஸ்தோத்ரம் சம்சாரிகளுக்கு ஓன்று விடாமல் எல்லா நன்மைகளையும்
தெளிவு படுத்துகிறதோ அந்த மா முனிகள் நமக்கு மங்களங்களை வளர்த்து அருளட்டும் –

: – யாவரொருவர்,

யதிபதி ப்ரஸாதிநீம் – யதிராஜரான எம்பெருமானாரை அருள் செய்யும்படி பண்ணுமதான,

யதிராஜ விம்சதிம் – அந்த யதிராஜர் விஷயமான இருபது ஸ்லோகங்களைக் கொண்டதாகையால் யதிராஜவிம்ஸதி என்னும் பெயருடையதாகிய,

ஸ்துதிம் – ஸ்தோத்ரத்தை,

வ்யாஜஹார – அருளிச் செய்தாரோ,

ப்ரபந்நஜந சாதக அம்புதம் – ப்ரபந்ந ஜநங்களாகிய சாதக பக்ஷிகளுக்கு நீரையுதவும் மேகம் போன்றவரான,

தம் ஸௌம்ய வர யோகி புங்கவம் – அந்த அழகிய மணவாளரென்னும் பெயர் கொண்ட முநிஸ்ரேஷ்டரை (அழகியமணவாளமாமுனிகளை),

நௌமி – துதி செய்கிறேன்.

கருத்துரை:-

இத்தனியன் எறும்பியப்பா அருளிச்செய்தது.

யதிபதி ப்ரஸாதிநீ – இந்த யதிராஜ விம்சதி என்ற ஸ்தோத்ரமானது தன்னை அநுஸந்திப்பவர்கள் விஷயத்தில்

யதிபதியான எம்பெருமானாரை அருள் செய்தல்லது நிற்கவொண்ணாதபடி பண்ணவல்லதென்றபடி.

ப்ரபந்நஜநசாதக அம்புத: – சாதகப்பறவைக்கு (வானம்பாடிக்கு) உயிர்காக்கும் நீரைப் பொழியுமதான மேகம் போன்றவர்.

ப்ரபந்ந ஜநங்களுக்கு மோக்ஷமளித்து உயிர் காக்கும் எம்பெருமானார் என்பது இதன் கருத்து.

யோகி புங்கவ: – முனிவர் பெருமான் – மஹா முனிகள்.

தாத்பர்யம் –
யாதொரு மணவாள மா முனிகள் தம்முடைய ஆச்சார்யரான திருவாய் மொழிப்பிள்ளை தாமே உகந்து காட்டிக் கொடுத்த உடையவர் திருவடிகளில் அத்யந்தம் ப்ரவணராய் அவருடைய குண சேஷ்டிதாதிகளில் ஈடுபட்டு அவ் வனுபவத்துக்குப் போக்கு வீடாக இருபது ஸ்லோகங்களால் எம்பெருமானாருடைய ப்ரஸாத ஜனகமான யதிராஜ விம்சதி என்கிற ஸ்தோத்ரத்தை பின்புள்ளார் அனுசந்தித்து உஜ்ஜீவிக்கும் படி அருளிச் செய்தாரோ
பகவத் பிராப்தி சாதகங்களான கர்ம ஞானாதிகளை ஸ்வரூப அநநுரூபத்வ துஷ்கரத்வாதிகளால் உபேக்ஷித்து முடிந்த நிலமான ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் என்று இருக்குமவர்களாய் பூமி சம்பந்தமுள்ள நதி தடாகாதி ஜலங்களை உபேக்ஷித்து கேவல வர்ஷ தாரையையே ப்ரதீஷித்துக் கொண்டு இருக்கும் சாதகம் போன்ற ஸாத்விக ஜனங்களுக்கு கிருபா ரஸத்தை வர்ஷிக்கிற காள மேகம் போன்ற -அப்படிப்பட்ட மணவாள மா முனிகளை தெண்டன் சமர்ப்பிக்கின்றேன் என்று அஷ்ட திக் கஜங்களில் ஒருவரான எறும்பி யப்பா என்னும் ஸ்வாமிகள் யதிராஜ விம்சதி ப்ரஸாதித்து அருளின சீல குணத்தில் ஈடுபட்டு அருளிச் செய்கிறார்

——–

பிரவேசம்
தொண்டர்க்கு அமுது உண்ணச் சொல் மாலைகள் சொன்னேன் -என்கிறபடியே பூ ஸூ ரர்களான ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு
போக்யமாக திருவதரித்த திருவாய் மொழியிலே அவகாஹித்து
அதில் சாஸ்த்ரார்த்த ரசம் பாவ ரசம் இவற்றை அனுபவித்து தத் ஏக நிஷ்டராய் -தத் வ்யாதிரிக்த சாஸ்திரங்களை
த்ருணவத் பிரதிபத்தி பண்ணி இருக்கையாலே திருவாய் மொழி அமுத தாத்பர்ய அர்த்தத்தையே தமக்கு நிரூபகமாக உடையராய்
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளில் கைங்கர்யமே அநவரதம் செய்து கொண்டு போரும் ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை
ஸ்ரீ திருப் பாதத்தில் ஆஸ்ரயித்து திராவிட வேத அங்க உப அங்கங்களான ஸமஸ்த திவ்ய பிரபந்த தாத்பர்யங்களையும்
அவர் உபதேசத்தால் லபித்து
மிக்க வேதியர் வேதத்தின் உள் பொருளான சரம பர்வத்தில் நிஷ்டராய்
சேஷித்வ சரண்யத்வ ப்ராப்யத்வங்கள் மூன்றும் திருவாய் மொழிப் பிள்ளை இடம் அன்வயித்து தத் ஏக நிஷ்டராய்
எழுந்து அருளி இருக்கிற ஸ்ரீ ஜீயரை ஸ்ரீ பிள்ளை தாமே உகந்து ஸ்ரீ உடையவர் திருவடிகளில் காட்டிக் கொடுக்கையாலே
அவர் திருவடிகளில் மிகவும் பிரவணராய் தத் குண வேஷ்டிதங்களைப் பேசி அனுபவிக்கும் படியான தசை பிறந்து
தத் வைபவத்தைப் பேசுகிற இவர்
சரம உபாய நிஷ்டரான சரம அதிகாரிகளுக்கு அநவரதம் அநுசந்தேயங்களான சரம அர்த்தங்களை
இப்பிரபந்த முகேந வெளியிடா நின்று கொண்டு
ஸ்வ அபேக்ஷித்ங்களையும் அவர் திருவடிகளில் அபேக்ஷித்துத் தலைக் கட்டுகிறார் –

இதில் முதல் ஸ்லோகத்தாலே
ஆழ்வார் திருவடிகளில் ப்ரேம புஷ்கல்யத்தையும்-ஸ்வ அபிமான அந்தர் ஹுதருடைய ஸ்வ பாவங்களைப் போக்கி
ரஷிக்கும் படியையும் பேசா நின்று கொண்டு
தொடங்கின ஸ்தோத்ரம் தடையற நடக்கத் தக்கதாக உடையவர் திருவடிகளில் விழுகிறார்

ஸ்ரீ மாதவங்க்ரி ஜலஜ த்வய நித்ய சேவா
பிரேமா விசாஸய பராங்குஸ பாதபக்தம்
காமாதி தோஷஹர மாதமபதாஸ் ரிதாநாம்
ராமாநுஜம் யதிபதிம் ப்ரணமாமி மூர்த்நா —-1-

ஸ்ரீமாதவ அங்க்ரி ஜலஜ த்வய – எல்லாவற்றாலுமுண்டான பெருமையை உடையவளான ஸ்ரீமஹாலக்ஷ்மி போன்றவனாகிய திருவின் மணாளனுடைய தாமரை மலர் போன்ற திருவடியிணையில் செய்யத்தக்க,

நித்ய ஸேவா – ப்ரேம  ஆவில ஆஸய – நித்ய கைங்கர்யத்தில் அதிக ப்ரீதியாலே கலங்கிய அறிவையுடைய,

பராங்குஸ பாத பக்தம் – பராங்குஸரென்னும் நம்மாழ்வாருடைய திருவடிகளில் பரமபக்தி பூண்டவரும்,

ஆத்ம பத ஆஸ்ரிதாநாம் – தம்முடைய திருவடிகளை அடைந்தவர்களுடைய,

காம ஆதி தோஷ ஹரம் – காமம் முதலிய குற்றங்களைப் போக்கடிப்பவரும்,

யதி பதிம் – பொறிகளை யடக்கிய துறவிகளுக்குத் தலைவருமான,

ராமாநுஜம் – ராமாநுஜரென்னும் எம்பெருமானாரை,

மூர்த்நா – தலையால்,

ப்ரணமாமி – வணங்குகிறேன்.

ஸ்ரீ மாதவங்க்ரி ஜலஜ த்வய நித்ய சேவா
திருமாலே நானும் உனக்குப் பழ வடியேன்-என்கிறபடியே மிதுன சேஷத்வமே ஸ்வரூபம் ஆகையால்
ஸ்வரூப அனுரூபமான புருஷார்த்தமும் மிதுன விஷய கைங்கர்யமாகவே இருக்கும் –
திருமாற்கு அரவு –சென்றால் குடையாம்-என்று நித்ய ஸூ ரிகளில் தலைவரான திருவனந்த வாழ்வான்
அவனும் அவளுமான சேர்த்தியிலே கிஞ்சித்க் கரிக்கும் என்று சொல்லிற்று –
அந்த கருந்தலையில் வாசனையால் இறே-தொடர்ந்து குற்றேவல் செய்யப் போந்த இடத்திலும் –
பாவாம்ஸ்து சக வைதேஹ்யா-என்றும்
அஹம் சர்வம் கரிஷ்யாமி என்றும் அவர் அவரைப்பார்த்து பிரார்த்தித்தது
அப்படியே ஆழ்வாரும் –
அடிமை செய்வார் திருமாளுக்கே என்றும்
கோலத் திரு மா மகளோடு உன்னைக் கூட என்றும்
மிதுனமே கைங்கர்ய பிரதிசம்பந்தியாக அருளிச் செய்தார் இறே

பிரேமா விசாஸய பராங்குஸ பாதபக்தம்
ஆகையால் ஸ்ரீ யபதியான எம்பெருமான் திருவடித் தாமரைகளில் நித்ய கைங்கர்யத்தில் ஆசையால் கலங்கின
திரு உள்ளத்தை உடையரான ஆழ்வார் திருவடிகளில் ப்ரேமமே தமக்கு நிரூபகமாய் உடையவராய் இருக்குமவர் என்கிறது –
மாயா வசஸ் வத்தாலே ஸ்ரீ யபதித்தவம் ஸ்ரீ யமாகையாலே ஸ்ரீ சஸ்தம் ஓவ்பவாரிகம்
சீ மாதவன் கோவிந்தன் என்று ஆழ்வார் அருளிச் செய்த திவ்ய ஸூக்தியை உட் கொண்டாய்த்து இவர் இப்படி அருளிச் செய்தது

உடையவருக்கு வைபவம் சொல்லுகிற அளவில் ஞான பக்தி வைராக்யங்களை இட்டுச் சொல்லுகை அன்றிக்கே
ஆழ்வார் திருவடிகளில் சம்பந்தத்தையே இட்டுச் சொல்லுகைக்கு அடி –
மாறன் அடி பணிந்து உய்ந்தவன் -என்று பிள்ளை அமுதனார் அருளிச் செய்த திவ்ய ஸூக்தி ஆய்த்து –
அங்க்ரி சப்தத்தால்
திவ்ய மங்கள விக்ரஹ யோகம் சொல்கிறது –
ஜலஜ சப்தத்தால்
திருவடிகளின் போக்யதையைச் சொல்கிறது –
உன் இணை அடித் தாமரைகள் -என்கிறபடி இரண்டு தாமரைப் பூவை ஒழுங்கு படி நிரைத்து வைத்தால் போலே
இருக்கிற சேர்த்தி அழகைச் சொல்கிறது
சேவா சப்தத்தால்
சேஷ விருத்தியைச் சொல்கிறது

நித்ய சப்தத்தால்
ஒழிவில் காலம் எல்லாம் -என்கிறபடி யாவதாத்மா பாவி என்னும் இடம் சொல்கிறது
இது தான் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும் என்று சொன்ன
சர்வ தேசத்திலும் சர்வ காலத்திலும் சர்வ அவஸ்தைகளிலும் பண்ணக் கடவ சர்வவித கைங்கர்யங்களுக்கும் உப லக்ஷணம்
ஏவம்விதமான கைங்கர்யத்தைப் பெற வேணும் என்னும் ப்ரேம பாரவஸ்யத்தாலே யாயத்து
சிந்தை கலங்கி திருமாலே என்று அழைப்பன்-என்று இவர் கூப்பிட்டது
நாடு அடங்க அன்ன பாநாதிகளுக்கு வாய் புலற்றிக் கூப்பிடா நிற்க கைங்கர்யத்தால் அல்லது செல்லாமல் கூப்பிட்டு
அலமாக்கிற இவர் படி உபய விபூதியிலும் வ்யாவருத்தமாய் இருக்கையாலே
இப்படி இருக்கிற ஆழ்வாருடைய ஸ்வ பாவத்தில் வித்தராய்
இவருடைய திருவடிகளில் நிரவதிக ப்ரேம யுக்தராய் யாயத்து எம்பெருமானார் இருக்கும் படி

காமாதி தோஷஹர மாதமபதாஸ் ரிதாநாம் ராமாநுஜம் யதிபதிம் ப்ரணமாமி மூர்த்நா —–
பகவத் கைங்கர்ய விரோதியான சப்தாதி ரூப ப்ராவண்ய விஷயமான காமமும்
ஆதி சப்தத்தாலே
சங்க்ருஹீதைகளான பகவதேக ரஷ்ய விரோதியான அர்த்த திருஷ்ணையும்
தத் ஏக சேஷத்வ விரோதியான அகங்காரமும் முதலான துர் குணங்களை -தம்முடைய திருவடிகளை ஆஸ்ரயித்தவர்களுக்கு
ஸ்வ உபதேச அனுஷ்டங்களாலும் ஸ்வ கடாக்ஷ விசேஷங்களாலும் ச வாசனமாகப் போக்குமவர் -என்கை

ராமானுஜம்
ந சேத் ராமாநுஜேத் ஈஷா சதுரா சதுர் அக்ஷரீ -காமவஸ்யாம் பிரபத்யந்தே ஜந்தவோ ஹந்தமாத்ருஸா–என்று
அறிவுடையார் ஈடுபடும்படி மோக்ஷ ஹேதுவான திரு நாமத்தை உடையவர் என்கை –
யதி பதிம்
ஜிதேந்த்ரியரான சன்யாசிகளுக்குத் தலைவர் ஆனவர் என்கை –
இத்தால் கீழ்ச் சொன்ன ஆச்ரித தோஷ நிவர்த்தகத்துக்கு அடியான குண யோகம் சொல்லுகிறது

ப்ரணமாமி -என்கிற மாத்திரமே அமைந்து இருக்க ப்ரணமாமி மூர்த்நா
என்கிறது விஷய வைபவத்தை அனுசந்தித்து மாநஸமான பிரணவ மாத்திரத்தில் நிற்கை அன்றிக்கே
தம்முடைய ஆதார அதிசயத்தாலே நிர்மமராய் திருவடிகளில் தலையை மடுக்கிறார் என்னும் இடம் தோற்றவே-

————————

இப்படி தொடங்கின ஸ்தோத்ரம் நிர்விக்னமாகத் தலைக் கட்டுகைக்காக அவர் திருவடிகளை ஆஸ்ரயித்து
அத்தாலே நிறம் பெற்றவராய்க் கொண்டு எம்பெருமானாருடைய பகவத் பாகவத ப்ரேம புஷ்கல்யத்தையும்-
ஆஸ்ரித ஜனங்களுக்கு சரம ப்ராப்யராய் இருக்கும் படியையும் சொல்லி சாதரமாக ஏத்துகிறார் –

ஸ்ரீ ரங்க ராஜ சரணாம் புஜ ராஜ ஹம்சம்
ஸ்ரீ மத் பராங்குச பதாம் புஜ ப்ருங்க ராஜம்
ஸ்ரீ பட்ட நாத பரகால முகாப்ஜ மித்ரம்
ஸ்ரீ வத் சிஹ்ன சரணம் யதிராஜ மீடே –2-

ஸ்ரீ ரங்க ராஜ சரணாம் புஜ ராஜ ஹம்சம்

பகவத் விஷயத்தில் வந்தால் வெளிறான அம்சத்தைக் கழித்து சாரமான அம்சத்திலே யாயத்து இருப்பது –
பர வ்யூஹங்கள் நித்ய முக்தருக்கும் முக்த பிராயருக்கும் முகம் கொடுக்கும் இடமாகையாலும்
விபவ அந்தர்யாமிகள் புண்யம் பண்ணினாருக்கும் உபாசகருக்கும் முகம் கொடுத்து நிற்கிற நிலையாகையாலும்
அவ்வோ நிலைகளுக்கு ஓரொரு குறைகள் உண்டு
அடியோமுக்கே எம்பெருமான் அல்லீரோ -என்று பரத்வாதிகளுக்கு ஆளாகாத பிற்பாடாருக்கும் முகம் கொடுத்து நிற்கும்
அர்ச்சாவதாரத்துக்கு சொல்லலாவது குறை ஒன்றும் இல்லையே
இப்படி நீர்மைக்கு எல்லை நிலமான அர்ச்சா ஸ்தலங்களுக்கு எல்லாம் வேர் பற்றான ஸ்ரீ கோயில் நிலையிலே யாயத்து
ஸ்ரீ எம்பெருமானார் ஆழங்கால் பட்டு இருப்பது –
ஆகையால் ஸ்ரீ பெரிய பெருமாள் திருவடிகளில் மிக்க போக்யதையை அனுசந்தித்து
சரஸ சஞ்சரணம் பண்ணும் படி சொல்கிறது –
பரமபத ஐஸ்வர்யத்தையும் சிராங்கிக்கும் படியான விபவ ஐஸ்வர்யத்தை யுடைத்தாய் –
ரதிங்கத-என்கிறபடியே சர்வஞ்ஞனான சர்வேஸ்வரனையும் ஸ்வ போக்யத்தையாலே ஆழங்கால் படுத்தும் படி
நிரதிசய போக்யமான திருவரங்கத் திருப்பதியை –
அரங்கமாளி-என்கிறபடியே -ஸ்வ அதீனமாக ஆண்டு கொண்டு போருகையாலே வந்த பெருமையை யுடைய
அரங்கத்தம்மான் திருக்கமலப் பாதத்தில் அலையெறிகிற மது ப்ரவாஹத்திலே சிறகு அடித்துக் கொண்டு வர்த்திக்கிற
ஹம்ஸ ஸ்ரேஷ்டராய் உள்ளவரை -என்கை –
பொன்னரங்கம் என்னில் மயலே பெருகும் இராமானுசன் –என்னும்படி இறே
இவ்விஷயத்தில் இவருக்கு உண்டான ப்ராவண்யம் –

ஸ்ரீ மத் பராங்குச பதாம் புஜ ப்ருங்க ராஜம்-

இனி பாகவத விஷயத்தில் வந்தாலும் -ஸ்வ யத்னத்தால் ஈஸ்வரனைப் பெறப் பார்க்கும் ப்ரபத்தியிலே
அன்வயித்து இருக்கச் செய்தேதங்கள் ஸ்வீ காரத்தை சாதனமாக கொள்ளுமவர்களையும்
அவனே உபாயமாகக் கொள்ளா நிற்கச் செய்தேயும் பெற்ற பொது பெறுகிறோம் என்று ஆறி இருக்கிறவர்களையும்
மகிழ்ந்து ப்ராப்ய பிராபகங்கள் இரண்டும் அவனே என்கிறதை அத்யவசித்து -இப்போதே பெற்று அனுபவிக்க வேணும்
என்னும் அபிநிவேசத்தாலே கண்ணும் கண்ணீருமாய் யாய்த்து இருக்கும்படியான ஆர்த்தியை உடையராய்
பர வ்யூஹாதி ஸ்தலங்களில் காட்டில்-கண்டியூர் அரங்கம் -இத்யாதிப்படியே
ஸ்ரீ கோயில் முதலான அர்ச்சா ஸ்தலங்களில் ஆழங்கால் பட்டு இருக்கும்
ஆழ்வார்கள் அளவிலே யாய்த்து திரு உள்ளம் ஊன்றி இருப்பது

ஆகையால் கைங்கர்ய அபிநிவேசம் ஆகிற ஸ்வரூப அனுரூபமான சம்பத்தை உடையவராய்
நிரங்குச ஸ்வ தந்த்ரனான ஈஸ்வரனையும்
ஈஸ்வரோஹம் என்று இருக்கும் சம்சாரிகளையும்
ஸ்வ ஸூக்தி விசேஷங்களாலே வசீகருதராய் தலை சீய்க்கும் படி பண்ணுகையாலே பராங்குசர் என்னும்
திரு நாமத்தை யுடையராய் இருக்கிற ஆழ்வார்களில் தலைவரான ஸ்ரீ நம்மாழ்வாருடைய பரம போக்யமான திருவடிகளில்
போக்யதா அனுசந்தானமே நித்ய ஜீவனமாய் யுடையவர் என்கை –

கீழே பராங்குச பாத பக்தம்-என்று அவர் பக்கல் ப்ரேமத்தை உடையவர் என்கிற மாத்திரம் சொல்லிற்று –
இங்கு அந்த ப்ரேம அனுரூபமாக அவர் திருவடிகளில் போக்யத்தையுள் புக்கு அனுபவிக்கும் படி சொல்கிறது –
அல்லாத ஆழ்வார்களில் காட்டில் நம்மாழ்வாருக்கு உண்டான வ்யாவ்ருத்தி தோற்ற அவர்களோடே கூட அநுஸந்திக்குமது
மாத்திரம் போராது என்று தனியே முற்பட அனுசந்தித்தார்
இப்போது அவர்களோடு கூட அனுசந்தித்து அருளுகிறார் –
பெரிய பிராட்டியாரை அல்லாத நாய்ச்சிமாரோடு கூட அநுஸந்தியா நிற்கச் செய்தேயும் முந்துறவே
ஸ்ரீ யபதி -என்று அவள் வ்யாவ்ருத்தி தோற்ற உடையவர் அனுசந்தித்து அருளினால் போலே
அல்லாத ஆழ்வார்களில் இவருக்கு அவயவ பூதர் என்னும்படி இறே இவருடைய ஏற்றம் –

ஸ்ரீ பட்ட நாத பரகால முகாப்ஜ மித்ரம்-

மங்களா சாசன ரூபமாக ஐஸ்வர்யத்தை உடையவராய் ப்ராஹ்மண உத்தமரான ஸ்ரீ பெரியாழ்வாருடையவும்
பாஹ்ய குத்ருஷ்டிகள் ஆகிற பிரதிபக்ஷங்களுக்கு ம்ருத்யு பூதரான ஸ்ரீ திரு மங்கை ஆழ்வாருடையவும்
திருமுக மண்டலம் ஆகிற தாமரையை அலர்த்தும் ஆதித்யன் -என்கை –
ஆளுமாளார் -என்கிறவன் தனிமை தீர ஆள்கள் சேர்த்து அருளுகையாலும்
பாஹ்ய குத்ருஷ்டிகளைக் கிழங்கு எடுத்துப் பொகடுகையாலும் இவரைக் கண்ட போதே அவர்கள் திரு முகம் அலர்ந்த படி –

ஸ்ரீ வத் சிஹ்ன சரணம் யதிராஜ மீடே

கீழே -காமாதி தோஷஹர மாதமபதாஸ் ரிதாநாம்-என்று சாமாந்யேந திருவடிகளை ஆஸ்ரயித்தவர்களுக்கு
உபாய பூதர் என்னும் இடம் சொல்லிற்று –
இங்கு அவர்கள் எல்லாரும் ஒரு தட்டும் தாம் ஒரு தட்டுமாம் படியான ஏற்றத்தை யுடையராய்
சிஷ்ய வர்க்க க்ரமத்துக்கு சீமா பூமியான ஸ்ரீ கூரத்தாழ்வானுக்கு
ப்ராப்ய -பிராபகங்களாக இரண்டுமே தாமேயாக இருக்கும் படி சொல்கிறது

யதிராஜமீடே-
இப்படி ஸ்ரீ ஆழ்வார்கள் உகந்த விஷயமான ஸ்ரீ பெரிய பெருமாள் அளவிலும்
ஸ்ரீ முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்த ஸ்ரீ ஆழ்வார்கள் விஷயத்திலும்
தத் தத் விஷய அனுரூபமான ப்ரேம பூர்த்தியை யுடையராய்
ஆஸ்ரிதருக்கு ப்ராப்ய ப்ராபக பூதருமாய் இருக்குமவர் என்று ஸ்துதிக்கிறேன் என்கிறார்

——————-

நம்மைப் பற்றினாருக்கு ப்ராப்ய பிராபகமும் நாமேயாகச் சொன்னீரே –
நம்மைப் பற்றி நிற்கிற உமக்கும் இது ஒவ்வாதோ என்று ஸ்ரீ எம்பெருமானார் திரு உள்ளமாக –
எனக்கு அங்கன் அன்று-
தேவரீர் திருவடிகளையே ப்ராப்யமும் பிராபகமுமாகக் கொண்ட ஸ்ரீ கூரத்தாழ்வான் முதலாமவர் திருவடிகளே
ப்ராப்யமும் பிராபகமுமாகப் பற்றி இருக்குமவனாக வேணும் என்று
எம்பெருமானார் திருவடிகளில் பிரார்த்தித்து அருளுகிறார் –

வாசா யதீந்திர மநஸா வபுஷா ச யுஷ்மத்
பாதார விந்த யுகளம் பஜதாம் குருணாம்
கூராதி நாத குருகேச முகாத்ய பும்ஸாம்
பாதாநுசிந்தன பரஸ் சத்தம் பவேயம் –3-

ப்ரத்யக்ஷ குரவே ஸ்துத்யா -என்கிறபடியே பகவத் விஷயத்தில் உபகரண ஆச்சார்யர்களை
ஸ்துதிக்கைக்கும் ஸ்மரிக்கைக்கும் வணங்குகைக்கும் யாய்த்து இவனுக்கு அடியிலே
வாங் மனஸ் காயங்களை அடியிலே உண்டாக்கிற்று –
விசித்ரா தேக சம்பத்தி-இத்யாதிப்படியே சர்வேஸ்வரன் தன்னை ஆஸ்ரயிக்கக் கொடுத்த கரணங்களைக் கொண்டு
அந்ய பரராய் திரிகிற இவ்விபூதியிலே பகவத் ஸமாச்ரயண மாத்திரத்தில் துவளுகை அன்றிக்கே
அத்தையும் பிரதம அவதி என்று கழித்து சரம அவதியான ஆச்சார்ய விஷயத்தில் கரண த்ரயத்தையும் விநியோகிக்கும்
படியான ஏற்றத்தை உடைய இவர்கள் சிலரே என்று வித்தராய் அவர்கள் திருவடிகளைப் பற்றுகிறார் –

வாசா
வாய் அவனை அன்றி வாழ்த்தாது -என்று பிரதம பர்வ நிஷ்டர் பகவத் விஷயம் அல்லது மற்ற ஒரு விஷயத்தை
ஏத்தாதாப் போலே இவர்களும் வகுத்த விஷயம் ஒழிய மற்ற ஒன்றை ஏத்தாத படி –
அவர்களுக்கு வ்யாவ்ருத்தம் தேவதாந்த்ரம் -இவர்களுக்கு பகவத் விஷயம் -நாவ கார்யம் -என்றவர்கள் இறே இவர்கள்
மநஸா
மந பூர்வோ வாக் உத்தர -என்கிற நியமம் இல்லையாய்த்து இவர்களுக்கு –
வாய் திறக்க இவ்விஷயத்தில் அல்லது வாய் திறக்காதது போலே நெஞ்சுக்கும் விஷயம் அது அல்லது
வேறே இல்லையாய்த்து இவர்களுக்கு –
திருக் கோட்டியூர் நம்பியை -உமக்கு தியானத்துக்கு விஷயம் எது என்று கேட்ட பின்
அவர் அருளிச் செய்த திரு வார்த்தையை நினைப்பது –

வாசா மனசா வபுஷா ச
என்று தம் கரணங்களின் ப்ராவண்ய அதிசயத்தைச் சொல்கிறது –

யுஷ்மத் பாதார விந்த யுகளம் பஜதாம்
இவர்கள் வேப்பங்குடி நீர் இருக்கிற படி-
இவ்வாத்மாவுக்கு வகுத்த சேஷியான தேவரீருடைய நிரதிசய போக்யமாய் சேர்த்தி அழகை யுடைத்தான திருவடிகளை
ப்ராப்யமாகவும் ப்ராபகமாகவும் நிரந்தரமாக ஸேவிக்குமவர்களுடைய-
நித்யம் யதிவர சரணவ் சரணம் மதீயம்-என்று ஆழ்வார் திருவடிகளே ப்ராப்யமாகவும் ப்ராபகமாகவும்
பரமாச்சாரியார் அருளிச் செய்தார் இறே
திருவடிகளை வாக்காலே பஜிக்கை யாவது தத் வைலக்ஷண்யத்தை புகழுகை
மனஸ்ஸாலே பஜிக்கையாவது -திருவடிகளை நெஞ்சால் நினைக்கை-
சரீரத்தாலே பஜிக்கையாவது ப்ரணமாமிக்கு விஷயம் ஆக்குகை –

பாதாநுசிந்தன பரஸ் சத்தம் பவேயம்
அவர்கள் தேவரீருடைய பாதாரவிந்தங்களை அநுவரதம் த்யானம் பண்ணுமா போலே
இவ்வநுஸந்தானம் காதாசித்கமாகை அன்றிக்கே நித்தியமாக வேணும் என்கிறது –
அநு விந்தனம்-என்ற பாடமான போது-அநுஸ் யூதம் விந்தனம் -என்று கொள்ளும் போது சதத சப்தம் சங்கதமாகாது
அநு -ஹித அர்த்தத்திலேயாய் கிருஷ்ண அநு ஸ்மரணம்-என்னும் இடத்தில் போலே
தத் விஷயத்வ சேஷத்வ அனுசந்தானத்தைச் சொல்கிறது –
உன் தொண்டர்கட்கே அன்பு உற்று இருக்கும் படி என்னை ஆக்கி அங்கு ஆட் படுத்தே -என்கிற அர்த்தத்தைச் சொல்கிறது –
இவருக்கு இவ்விஷயத்தில் உண்டான பாவ பந்தத்தில் ஊற்றம் அவரவர் திருவடிகளில் பிரார்த்திக்கை
அவர் இடமே பிரார்த்திக்கும் படி யாய்த்து

——————————

எம்பெருமானார் திருவடிகளுக்கு இப்படி அவிநா பூதராய்-அவரை அல்லது அறியாத ஸ்ரீ கூரத்தாழ்வான் போல்வாருடைய
திருவடிகளில் சேஷத்வத்தையும் பிரார்த்தித்து அருளி -அவர்கள் அளவில் ஊற்றத்தாலே-அவர்கள் உகந்த விஷயமான
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளில் கரண த்ரயமும் ப்ரவணமாம் படி பண்ணி அருள வேணும்
என்று அவரைப் பிரார்த்தித்து அருளுகிறார் –

நித்யம் யதீந்திர தவதிவ்ய வபுஸ்ருதௌ மே
சக்தம் மநோ பவது வாக் குண கீரத்த நே சௌ
க்ருத்யம் ச தாஸ்ய கரணம் து கரத் வயச்ய
வ்ருத்யந்த ரேஸ்து விமுகம் கரணத்ர யஞ்ச –4-

நித்யம் யதீந்திர தவதிவ்ய வபுஸ்ருதௌ மே-சக்தம் மநோ பவது மே மநோ -தவதிவ்ய வபுஸ்ருதௌ-நித்யம் -சக்தம்-பவது —
அநாதி காலம் இதர விஷயங்களில் பழகிப் போந்த என்னுடைய மனஸ்ஸானது தேவருடைய திவ்ய மங்கள விக்ரஹத்திலே
சர்வகாலமும் மண்டி விஷயாந்தர ஸ்மரணத்துக்கு ஆளாகாத படி நன்றாக எய்வதாகவும் –
உந்தன் மெய்யில் பிறங்கிய சீர் அன்றி வேண்டிலேன் -என்கிறபடி
மனஸ்ஸுக்கு ஸூபாஸ்ரயமான அவலம்பனம் தேவரீருடைய திவ்ய மங்கள விக்ரகமே யாக வேணும் என்கை –

வாக் குண கீரத்த நே சௌ–பவது –
இதுக்கு முன் பஹுர் விஷயங்களை ஜல்பித்துப் போந்த வாக்கு தேவருடைய கல்யாண குணங்களையே வர்ணித்துக் கொண்டு
பேசுகையில் சகிதமாக வேணும் என்கை –

க்ருத்யம் ச தாஸ்ய கரணம் து கரத் வயச்ய
அந்ய வ்ஷயங்களுக்கு நிஹீன வ்ருத்தி செய்து போந்த கைகள் இரண்டுக்கும் க்ருத்யம் தேவருடைய நித்ய கைங்கர்யம் ஆவதாக –

வ்ருத்யந்த ரேஸ்து விமுகம் கரணத்ர யஞ்ச –
தேவரீர் விஷயத்தில் கரண த்ரயமும் அபிமுகமானாலும் விஷயாந்தரங்களில் வைமுக்யம் இல்லாத போது
இது நிலை நில்லாது என்று பார்த்து
புறப் பூதமான வை லக்ஷண்யத்தை யுடைய ஹேய விஷயங்களை நினைக்கை தொழுகை சொல்லுகை யாகிற வியாபாரத்தில்
நின்றும் கரண த்ரயமும் முகம் மாறுவதாக
இத்தனை நையும் மனம் உன் குணங்களை யுன்னி -இத்யாதிப்படியே
கரண த்ரயத்துக்கும் ஸ்ரீ எம்பெருமானார் விஷயத்தில் ப்ராவண்யத்தை இதர நிவ்ருத்தி பூர்வகமாக
பிரார்த்தித்து அருளி

னார் ஆய்த்து –

——————

எம்பெருமானே சேஷியும் உபாயமும் உபேயமும் என்று சாஸ்திரங்கள் சொல்லா நிற்க –
நீர் நம்மையும் நம் உடையாரையும் சேஷிகளும் உபாய பூதராகவும் சொல்லா நின்றீர்-
அது என் கொண்டு நீர் சொல்லுகிறது என்று ஸ்ரீ எம்பெருமானார் நினைவாக
சகல ஸாஸ்த்ர ரூபமான திருமந்திரம் இதுக்கு மூல பிரமாணம் –
அதில் பிரதிபாதிக்கிற அர்த்தத்துக்கு அனுரூபமான நிஷ்டையையும்
தத் பலமான தேவரீர் திருவடிகளில் அனுபவத்தையும் தந்து அருள வேணும் என்று அபேக்ஷிக்கிறார் –

அஷ்டாஷராக்ய மநுராஜ பத த்ரயார்த்த
நிஷ்டாம் மமாத்ர வித ராத்ய யதீந்திர நாத
சிஷ்டாக்ர கண்ய ஜன சேவ்ய பவத் பதாப்ஜே
ஹ்ருஷ்டா அஸ்து நித்யமனுபூய மமாஸ்ய புத்தி –5-

அஷ்டாஷராக்ய மநுராஜ பத த்ரயார்த்த நிஷ்டாம் மமாத்ர வித ராத்ய யதீந்திர நாத
ஓம் இத்ய ஏக அக்ஷரம் -நம இதை த்வே அக்ஷரே -நாராயணாய இதி பஞ்ச அக்ஷராணி –
இத் அஷ்டாக்ஷரம் மனு ஸ்வசகாய த்ரீ வேதி -என்று
திருமந்திரம் எட்டு திரு அக்ஷரமாய் மூன்று பதமாய் இருக்கும் என்னும் இடம் சுருதி சித்தம் –
மனு சப்தம் -மந்த்ர வாசி
மனு ராஜம் -என்றது மந்த்ர ராஜம் என்றபடி –
திரு மந்திரத்துக்கு ராஜாவாகையாவது -வேதங்களும் ரிஷிகளும் வைதிக புருஷர்களும் ஏக கண்டமாக பரிக்ரஹிக்கையாலும் –
அர்த்த பூர்த்தியாலும் -தானே ஸ்வ தந்திரமாய்க் கொண்டு சகல பலன்களையும் கொடுக்க வற்றாகையாலும் –
உபாயாந்தார சஹகாரியாகையாலும் -தன்னை ஒழிந்த வியாபக அவியாபக சகல பகவான்-மந்திரங்களிலும்
உத்க்ருஷ்டமாய் இருக்கை–

பத த்ரயங்களின் அர்த்தமாவது –
ஆத்மாவினுடைய அநந்யார்ஹ சேஷத்வம் -அநந்ய சரணத்வம் -அநந்ய போக்யத்வம் -இவைகளும்
தத் பிரதிகோடியான சர்வேஸ்வரனுடைய சேஷித்வ சரண்யத்வ ப்ராப்யத்வங்களும் –
அநந்யார்ஹ சேக்ஷத்வாதி ஆகாரத் த்ரயமும் தத் விஷயத்தில் போலே ததீய விஷயத்திலும் உண்டாய் இறே இருப்பது
ஆகை இறே திருமந்திரம் கற்ற ஸ்ரீ திருமங்கை ஆழ்வாரும்-
நின் திரு எட்டு எழுத்தும் கற்று நான் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -என்று அருளிச் செய்தது –
இப்படி சாமான்யேன ததீயருக்கு எல்லாம் தத் சம்பந்தம் மூலமாக சேஷித்வாதிகள் உண்டாகையாலே
ததீய விஷயமாக நிர்ஹேதுகமாக அடியிலே தன்னை அங்கீ கரித்து அருளி
இவ்வவஸ்யா பன்னனான ஸ்வாச்சார்ய விஷயத்திலும் சேஷித்வாதிகள் அனுசந்திக்கக் குறையில்லை –

ஆகையால் பத த்ரயத்திலும் சொல்லுகிற அர்த்தங்களில் சரம பர்வ பர்யந்தமான நிஷ்டையை –
இதில் அபேக்ஷை உடைய அடியேனுக்கு
இவ்வர்த்தத்தில் ருசி உடையாரைக் கிடையாத இவ்விபூதியிலே இப்பொழுதே தந்து அருள வேணும் –
பெரு விடாய்ப் பட்டு -தண்ணீர் தண்ணீர் -என்று துடிக்கிறவனுக்கு இவ்விடத்தில் இப்பொழுதே விடாய் தீர்க்க வேணும் இறே –
நீர் நம்மை அபேக்ஷித்தால் இப்படி உமது அபேக்ஷை செய்ய வேணும் ஹேது என் என்ன சொல்கிறது மேல்

நாத – என்று –
இத்தலையில் சொல்லலாவதொரு ஹேது இல்லை -இவ்வாத்மாவுக்கு வகுத்த சேஷியான தேவர் –
இது நம்முடைமை அன்றோ -என்று இச் சம்பந்தமே ஹேதுவாக செய்து அருள வேணும் -என்கை –

சிஷ்டாக்ர கண்ய ஜன சேவ்ய பவத் பதாப்ஜே ஹ்ருஷ்டா அஸ்து நித்யமனுபூய மமாஸ்ய புத்தி –
சிஷ்டர் ஆகிறார் -ஞான அனுஷ்டான பூர்ணராய் கண்ணழிவு அற்ற ப்ராப்ய ருசியை உடையவர்கள் –
அவர்களுக்கு அக்ர சரண்யர் ஆகிறார் ஸ்ரீ கூரத்தாழ்வான் போல்வார் -இப்படி இருந்தவர்களால் நிரந்தரம்
அனுபவிக்கப்படா நிற்பதாய் இருக்கிற வகுத்த சேஷியான தேவரீருடைய பரம போக்யமான திருவடிகளை –
இந்த ப்ராப்யம் பெறா விடில் தரியாத படியான இந்த என்னுடைய சிந்தையானது
யதா மநோ ரதம் அனுபவித்துக் களிப்பதாக
உனது அடிப்போதில் ஒண் சீராம் தெளி தேன் உண்டு அமர்ந்திட வேண்டி நின் பால் அதுவே போந்தது
என் நெஞ்சம் என்னும் பொன் வண்டு- என்ற ஐஸ்வர்யத்தைப் பிரார்த்தித்த படி –

——————–

ப்ராப்ய ருசியை யுடையராய் -புறம்புள்ள பாக்யங்களில் நசையற்ற ஸ்ரீ கூரத்தாழ்வான் போல்வார் அன்றோ
நம்மை அனுபவிப்பவர்களாகச் சொன்னீர் -உமக்கும் இரண்டும் உண்டோ-என்ன –
ஏகதேசமும் ப்ராப்ய ருசி அற்று இருக்கிறபடியையும் –
இதர விஷய ருசி கொழுந்து விட்டு வளருகிற படியையும் விண்ணப்பம் செய்து
இவ்விரண்டுக்கும் அடியான பாபத்தைப் போக்கி அருள வேணும் என்று பிரார்த்திக்கிறார்

அல்பா அபி மே ந பவதீயபதாப்ஜ பக்தி
சப்தாதி போக ருசிரந்வஹா மேத தேஹா
மத் பாபமேவ ஹி நிதான மமுஷ்ய நாந்யத்
தத் வாரயார்ய யதிராஜ தயைக சிந்தோ –6-

அல்பா அபி மே ந பவதீயபதாப்ஜ பக்தி-
தேவரீர் திருவடித் தாமரைகளில் பூர்ண பக்தி இல்லாத மாத்திரம் அன்றிக்கே அத்யல்ப பக்தியும்
இதர விஷய ப்ரவணனான எனக்கு இல்லை –
ஆனுகூ-ல்ய லேசம் இல்லை என்றாலும் பிரதிகூல நிவ்ருத்தி தான் உண்டாக வேணும் இறே –
அதுவும் எனக்கு இல்லை என்கிறார் –

சப்தாதி போக ருசிரந்வஹா மேத தேஹா-
தேவரீர் திருவடிகளில் அனுபவத்துக்கு விரோதியான சப்தாதி விஷய அனுபவ ரஸ்யதை வர்த்திஷ்ணுவாய்ச் செல்லா நின்றது –
இத்தால் த்ருதீய பதார்த்த நிஷ்டா விரோதி சொல்லிற்று –
இவ்விரண்டும் அடி எது என்ன

மத் பாபமேவ ஹி நிதான மமுummஷ்ய நாந்யத்
ப்ராப்த விஷய ப்ராவண்ய அபாவத்துக்கும் அபிராப்த விஷய ப்ராவண்யத்துக்கும் காரணம் பாபியான என்னுடைய துஷ் கர்மம் இறே
அவதாரணத்தாலே ஹேத்வந்தரத்தைக் கழிக்கிறது
ஹி-சப்தம் இவ்வர்த்தத்தினுடைய ப்ரஸித்தியைச் சொல்கிறது
நாந்யத் –
ஈஸ்வர ஸ்வா தந்தர்யம் இதுக்கு ஹேது அன்று -அவன் உஜ்ஜீவனத்துக்கு ஹிருஷீ பண்ணுகிறவன் ஆகையால் –
உம்முடைய கர்ம தோஷத்தால் வந்ததாகில் நம்மால் செய்யலாவது உண்டோ என்ன
என் செய்யலாவது இல்லையோ -அத்தை அடியேன் அளவில் கிட்டாதபடி தகைந்து அருள வேணும்
நாம் அதுக்கு சக்தரோ என்ன

தத் வாரயார்ய யதிராஜ தயைக சிந்தோ –
ஆர்ய-
செய்யும் விரகு அறிகைக்குஎன்று த் தக்க அறிவு இல்லையோ
யதி ராஜ
அறிந்தபடி செய்ய வல்ல சக்தி இல்லையோ
ஜிதேந்த்ரியர்களான சன்யாசிகளுக்குத் தலைவர் ஆகையால் அபிமான அந்தர்பூத்தருடைய பாபத்தைப்
போக்குதற்கு சக்தியில் குறை இல்லை
தயை ஏக சிந்த்யோ
அந்த ஞான சக்திகளை ரக்ஷண உபயோகியாக நடத்தும் கிருபைக்கும் சங்கோசமும் உண்டோ
அஸ்ய தயை ஏக சிந்த்யோ -என்று விசேஷஜ்ஞர் ஆழங்கால் படும்படி அன்றோ கிருபா பிராஸூர்யம்
ஏக சப்தத்தால் காரணாந்தரங்களை தடவிப் பிடிக்க வேண்டும் படி சொல்கிறது

——————-————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் . –

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –49–ஆனது செம்மை யற நெறி பொய்ம்மை அறு சமயம் போனது- இத்யாதி —

April 19, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

ஸ்ரீ எம்பெருமானார் விரோதிகளை நிரசித்துக் கொண்டு தம் திரு உள்ளத்தின் உள்ளே நிரந்தர வாசம்-பண்ணி அருளுகிற
மகா உபகார அனுசந்தானத்தால் வந்த ப்ரீதியையும் –
அந்த ப்ரீதியினுடைய அஸ்த்தையர் ஹேது வில்லாமையையும் -அருளிச் செய்தார் கீழ் இரண்டு பாட்டாலே –
இதில் –
அவர் திருவவதரித்து அருளின பின்பு-லோகத்துக்கு உண்டான சம்ருத்தியை அனுசந்தித்து-இனியராகிறார் .

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை–

ஸ்ரீ எம்பெருமானார் தம்முடைய பிராப்தி பிரதிபந்தங்களை எல்லாம் -போக்கி தம் திரு உள்ளத்திலே-நிரந்தர வாசம் பண்ணுகிற
மகோ உபகாரத்தால் வந்த ப்ரீதி பிரகர்ஷத்தையும் –
அந்த ப்ரீதி எப்போது உண்டாகக் கூடுமோ – என்று அதி சங்கை பண்ணினவரைக் குறித்து -அதினுடைய சாஞ்சல்ய ஹேது இல்லாமையும் –
கீழ் இரண்டு பாட்டுக்களாலே அருளிச் செய்து –
இதிலே -ஸ்ரீ எம்பெருமானார் திருவவதரித்து அருளின பின்பு –
வேதத்துக்கு உண்டான-சம்ர்தியையும் -துர்மதங்களுக்கும் கலி தோஷத்துக்கும் உண்டான விநாசத்தையும் அனுசந்தித்து –
இனியராகிறார் –

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை–

இரு வினையின் திறம் செற்று இரவும் பகலும் விடாது என் சிந்தை உள்ளே நிறைந்து ஒப்பற-இருந்தான் –
எனக்காரும் நிகரில்லையே -என்று ஸ்ரீ எம்பருமானார் செய்த மகா உபகாரத்தை-அனுசந்தித்தனால் வந்த ப்ரீதியையும் –
இனி நாம் பழுதே யகலும் பொருள் என் -பயன் இருவோமுக்கும் ஆன பின்னே -என்று
அந்த ப்ரீதி குலைதலுக்கு காரணம் இல்லாமையின் நிலை நின்றமையையும்-கீழ் இரண்டு பாட்டுக்களாலே கூறினார் –
இதில்-
ஸ்ரீ எம்பெருமானார் அவதரித்து அருளின பின்பு உலகிற்கு உண்டான நன்மைகளை கூறி இனியராகிறார் .

ஆனது செம்மை யற நெறி பொய்ம்மை அறு சமயம்
போனது பொன்றி இறந்தது வெங்கலி பூம் கமலத்
தேனதி பாய் வயல் தென்னரங்கன் கழல் சென்னி வைத்துத்
தானதில் மன்னும் இராமானுசன் இத் தலத்து உதித்தே -49 –

பத உரை –
பூம் கமலம் -அழகிய தாமரை மலர்களில் உண்டான
தேன் நதி -மதுவாகிய ஆறு
பாய்-நீராகப் பாய்கின்ற
வயல்-வயல்களை உடைய
தென்னரங்கன் -அழகிய ஸ்ரீ திருவரங்கத்தில் பள்ளி கொண்ட ஸ்ரீ பெரிய பெருமாள் உடைய
கழல்-திருவடிகளை
சென்னி வைத்து -தலை மேல் கொண்டு
தானதில் மன்னும் -தாம் அத்திருவடிகளில் இடைவிடாது பொருந்தி இருக்கும்
இராமானுசன் -ஸ்ரீ எம்பெருமானார்
இத்தலத்து -இவ்வுலகில்
உதித்து –அவதரித்து அருளி
செம்மை -நேர்மையான
அற நெறி -தர்ம மார்க்கம்
ஆனது -அமைந்தது
பொய்ம்மை -பொய்யான
அறு சமயம் -ஆறு மதமும்
பொன்றிப் போனது -அழிந்து போய் விட்டது
வெங்கலி -கொடிய கலியுகம்
இறந்தது-அழிந்தது-

அழகிய தாமரைப் பூக்களில் உண்டான தேனாகிற ஆறு நீராகப் பாயா நின்று உள்ள வயல்களை உடைத்தாய் –
திருச் சோலைகளும் திரு மதில்களும் -திருக் கோபுரங்களும் -திரு மாளிகைகளும் ஆன சமுதாய சோபையாலே தர்சநீயமாய் இருக்கிற
ஸ்ரீ கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிற ஸ்ரீ பெரிய பெருமாள் உடைய திருவடிகளை-சிரசா வஹித்துக் கொண்டு –
தாம் அதிலே நித்ய சம்ச்லேஷம் பண்ணா நின்றுள்ள – ஸ்ரீ எம்பெருமானார் இந்த ஸ்தலத்திலே அவதரித்து அருளி –
வைதிகம் ஆகையாலே செவ்வியதாய் உள்ள தர்ம மார்க்கம் முன்பு அழிந்து கிடந்தது மீண்டும் உண்டானது –
வேத பாஹ்யம் ஆகையாலே அயதாவான ஷட் சமயமும் முடிந்து போயிற்று –
வைதிக தர்மம் தலை சாய்ந்து -பாஹ்ய சமயம் மேலிடுகைக்கு உடலான க்ரூரமான கலி யுகமானது –
கலியும் கெடும் -திரு வாய் மொழி – -5 2-1 – என்கிறபடியே நசித்தது –
இவர் அவதரித்து அருளின பின் லோகத்துக்கு உண்டான சம்ருத்தி இருந்தபடி ஏன் என்று கருத்து –

பொன்றுதல்-முடிதல்
பொன்மை யறு சமயம் -என்று பாடமான போது -வேத பாஹ்யத்வேன பொல்லாதாய் இருக்கிற-ஷட் சமயம் என்றபடி –

திருவடித் தாமரை இவருக்கு தாரகம்-வயல் திவ்ய தேசத்துக்கும் தாரகம் தாமரை -அதில் பெருகும் தேனாலே வளரும் வயல் –
ஸ்ரீ யதிராஜருக்கு ஏற்ற கிரீடம் -அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசு -உபய விபூதி நாதத்வம் ஸூசகம்- அத்தாட்சி தென்னரங்கன் கழல் –
ஆக்குவது -ஆனது -தானே ஆனதே ஸ்ரேஷ்டம்-தலத்தில் உதித்ததுமே இவை தானாக ஆனது என்றபடி-
ஆனது செம்மை யற நெறி பொய்ம்மை யறு சமயம் போனது பொன்றி யிறந்த்து

வயலில் -ஜீவனுக்கு நெல் -ஜீவனத்துக்கு -வேதாந்தம் உஜ்ஜீவனத்துக்கு -ஸ்ரீ எம்பெருமானார் நியமித்த சிம்ஹாசனாதிபதிகள் வயல் ஸ்தானம்
ஸ்ரீ கோயிலைச் சுற்றி வாழ்பவர்கள் -தாமரைப் பூக்கள் மலிந்து இருப்பது போலே
தஹரம் விபாப்மம் பரவேச்ம பூதம் யத் புண்டரீகம் புரமத்த்யஸமஸ்தம்-என்றும்
போதில் கமல வன்னெஞ்சம் -என்றும்
பக்தா நாம் யத் வபுஷி தஹரம் பண்டிதம் புண்டரீகம் -என்றும்
சொல்லப்படும் ஹிருதய புண்டரீகம் மலர்ந்து திவ்யார்த்தங்கள் என்னும் தேன் அமுத வெள்ளம் பெருகா நிற்கும்
நம் போன்ற சிஷ்யர்கள் -கமலத்தேன் வெள்ளத்தை வண்டுகள் பருகிக் களிக்கும்-போந்தது என் நெஞ்சு என்னும் பொன் வண்டு –
திவ்யார்த்த அமிருத பிரவாஹத்தை ஆச்வாதனம் பண்ணி ஆனந்திக்க குறை இல்லை –

பூம் கமலத் தேன் நதி பாய் வயல் –
அழகிய தாமரைப் பூக்களில் உண்டான தேனாகிற ஆறு விளைநீராக-பாயா நின்றுள்ள வயலாலே சூழப்பட்ட –

தென்னரங்கன் –
திரு மதிள்களும் திருக் கோபுரங்களும் – திருச் சோலைகளுமான – சமுதாய சோபையாலே -தர்சநீயமான
ஸ்ரீ கோயிலை இருப்பிடமாக இருக்கிற பெரிய பெருமாளுடைய –

பூம் கமல –மன்னும் இராமானுசன்
ஸ்ரீ தென்னரங்கத்தில் வயல்கள் நீரால் விளைவான அல்ல -அவை தம்மிடத்து தோன்றிய
தாமரை மலரில் இருந்து பெருகும் தேன் பாய விளைவான -அதாவது தாமரையே தமக்கு தாரகமாகக் கொள்வன –
அங்கு எழுந்து அருளி இருக்கும் ஸ்ரீ எம்பெருமானாரும் ஸ்ரீ தென்னரங்கனது தேனே மலரும்
திருப்பாதத்தை தலை மேற்கொண்டு அவையே தாரகமாக மன்னி உள்ளார் –

கழல் சென்னி வைத்து –
திருவடிகளை தம்முடைய சிரச்சிலே வைத்துக் கொண்டு -கொக்கு வாயும் படு கண்ணியும் இசைந்தால் போலே ஆய்த்து
திருவடிகளும் திரு முடியும் சேர்ந்த படி –
அன்றிக்கே
ராஜாக்கள் சிம்ஹாசனத்தில் -ஆரோகிக்கும் போது-ஆதி ராஜ்ய ஸூசகமான அபிஷேகத்தை-தம் தாமுடைய சிரச்சுக்களில்
வைத்துக் கொண்டால் போலே –
உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்னும்படி பரம ப்ராப்யமான -அவர் திருவடிகளை –
தம்முடைய உபய விபூதி ஐஸ்வர்ய ஸூசகமாம்படி-திரு முடியிலே வைத்துக் கொண்டார் என்னவுமாம் –

கழல் சென்னி வைத்து -என்கிறார்
அரசர்க்கு தம் முடி போல் இவருக்கு ஸ்ரீ தென்னரங்கர் திருவடிகள் நினைத்த போது சூடலாம் படி சொந்தமாயின போலும் –
ஸ்ரீ உடையவர் -ஸ்ரீ யதிராஜர் -அடி சூடும் அரசர் ஆனார்
பருப்பதத்துக் கயல் பொறித்த பாண்டியர் குலபதி போல்
திருப் பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொறித்தாய் -ஸ்ரீ பெரியாழ்வார் திரு மொழி -5 4-7 – -என்றபடி –
ஸ்ரீ பெரியாழ்வார் சென்னியில் ஸ்ரீ இறைவன் முயன்று திருவடியைப் பொறித்த-அருமை ஸ்ரீ எம்பெருமானார் திறத்து இல்லை –
தானே எடுத்து வைத்துக் கொண்டது –நீள் கழல் சென்னி பொருமே -திருவாய் மொழி – 1-9 11- -என்றபடி
இவர் சென்னியின் வைத்துக்-கொள்ளும்படி போலும்– கழல் நீட்டி ஸ்ரீ யரங்கன் துயில்வது –

தான் அதில் மன்னும் –
தாமும் அதே நிஷ்டையிலே-ஸூ ப்ரதிஷ்டராய் திருவடிகளிலே நித்ய சம்ச்லேஷம் பண்ணா நின்று உள்ள –

இராமானுசன் –
ஸ்ரீ எம்பெருமானார் –

இத் தலத்து உதித்த –
வேதோக்த தர்மங்களுக்கு எல்லாம் சாங்கர்யம் வரும்படி வேத வ்ருத்தங்களான-ஷட் சமயங்களும் வியாபித்து –
கலியானது -சாம்ராஜ்யம் பண்ணிக் கொண்டு போருகிற இந்த மகா பிர்த்வியிலே -திரு வவதரிக்கவே –

இத்தலத்து உதித்து –
உதித்து என்றமையால் இவர் அவதாரம் -பகவத் அவதாரம் போலே காணும் என்கிறார் –
உதித்து ஆனது செம்மை அற நெறி –
சூரியன் உதித்து அன்றோ வழி செம்மையாய் துலங்குவது –
ஸ்ரீ இராமானுச திவாகரன் உதித்து அற நெறி செம்மை யாயிற்று -என்க-
இத்தலத்து தானதில் மன்னும்-
இந்தளத்தில்-கும்மிட்டியில் -செந்தாமரை போலே இருள் தருமா ஞாலத்தில்
ஸ்ரீ தென்னரங்கன் கழலில் மன்னி இருப்பது

ஆனது செம்மை அற நெறி –
அற நெறி செம்மை யானது -முன்பு அழிந்து போன வேதோக்தமான-சமீசீன தர்ம மார்க்கம் மீண்டும் உண்டானது –
அல்ப ச்ருதராலே ப்ரதாரணம் பண்ணப்பட்ட வேதம் எல்லாம் இவராலே ருஜூவாக திருந்தி –
ததுக்தி தர்ம பரமானது சமீசீனமாய் பிரதிஷ்டிதமாய் இரா நின்றது –
ஸ்ரீ மத் வேத மார்க்க பிரதிஷ்டாபநாசார்யார் இறே இவர் –

ஆனது செம்மை அற நெறி –
அற நெறி -அறமாகிய நெறி
அறமாவது -நன்மை பயப்பதாக வேதத்தின் மூலமாகவே உணர்த்தப் பெறுவது -வைதிக மார்க்கம் என்றபடி
ஆனது -அழிந்து கிடந்தது மீண்டும் உண்டாயிற்று –
செம்மை யானது என்னவுமாம் –
இவர் அவதரிப்பதற்கு முன்பு அற நெறி செவ்வி கேட்டு கிடந்தது –
மேலே பொய்ம்மை அறு சமயம்-பொன்றிப் போனது -என்று கூறுவதால் அற நெறி என்பது போதரும் .
ஸ்ரீ இராமானுசன் உதித்து ஆக்கினான் என்னாது –ஆனது என்றமையால்
அவருக்கு இதில் அருமை இன்மை-தோன்றுகிறது –
அற நெறி -வேதம் கூறும் மார்க்கம்–வேத மார்க்க பிரதிஷ்டாபனாசார்யார் அன்றோ இவர் –

பொய்மை யறு சமயம் போனது பொன்றி –
வேத பாஹ்யம் ஆகையாலே அயதாவான-ஷட் சமயமும் முடிந்து போய்த்து –
பொன்றுதல்-முடிதல் –
பொன்மை யறு சமயம் -என்ற பாடம் ஆனபோது –
பகவத் ஆக்ஜ்ஜாதி லங்கனம் பண்ணினவர்களை -ப்ரம பிரமாதங்களாலே நசிப்பிக்க கடவதான அப சித்தாந்தம் -என்றபடி –

பொய்ம்மை அறு சமயம் பொன்றிப் போனது –
புறச் சமயங்கள் கூறுவன பொய்யாய் இருத்தலின் அவை –பொய்ம்மை அறு சமயம் –எனப்பட்டன –
பொய் நூலை மெய் நூல் என்று ஒன்றும் ஓதி -என்றார் திரு மங்கை மன்னனும் –
பொன்மை யறு சமயம் -என்னும் பாடத்தில் –
மறை நெறிக்குப் புறம்பாய் இருத்தலின் பொல்லாத-அறு சமயம் என்றபடி –

இறந்தது வெங்கலி –
கீழ் சொன்னபடி அஞ்ஞாநத்தை விளவிப்பிக்குமதாகையாலே அதி க்ரூரமானது-நசித்து போய்த்து –
கலியும் கெடும் கண்டு கொண்மின் -என்று அருளிச் செய்தார் இறே ஸ்ரீ நம் ஆழ்வாரும் –
ஆசி நோதி ஹி சாஸ்த்ரார்த்தான் ஆசாரான் ஸ்தாபயத்ய்பி-ஸ்வய மாசாரதேயஸ்து ச ஆசார்ய உதாஹ்ர்த -என்று
இறே ஆசார்ய லஷணம் இருப்பது –
அது இவர் இடத்திலே காணும் நிறம் பெற்றது –
புண்யம் போஜ விகாசாய பாபத்வாந்த ஷயாயச-ஸ்ரீ மான் ஆவிரபூத் பூமவ் ராமானுஜ திவாகர –என்னக்கடவது இறே –

இறந்தது வெங்கலி
புற நெறியை ஆக்கி -அற நெறியை அளிக்க இடம் தந்தது பற்றி –வெங்கலி-என்கிறார்.
கலவ் சந்கீர்த்ய கேசவம் -கலி யுகத்தில் கேசவனைப் பாடி -என்றபடி
நாம சங்கீர்த்தனத்துக்கு-இடம் தரின் நற் கலியாம் –
இறந்தது என்கிறார் உயிர் உள்ளவன் போல் அது படுத்திய பாட்டை நினைத்து –

——————–

கோலமாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலே -4-3-6-
குரை கழல்கள் நீட்டி மண் கொண்ட கோல வாமனா குரை கழல் கை கூப்புவார்கள் கூட நின்ற மாயனே -4-3-7-
வேட்கை எல்லாம் விடுத்து என்னை உன் திருவடியே சுமந்து உழல கூட்டரிய திருவடிகள் கூட்டினை நான் கண்டேனே -4-9-9-
உழலை யென்பின் பேய்ச்சி முலை யூடுஅவளை உயிர் உண்டான் கழல்கள் அவையே சரணாகக் கொண்ட குருகூர் சடகோபன் -5-8-11
திருவல்ல வாழ் உறையும் கோனாரை அடியேன் அடி கூடுவது என்று கொலொ-5-9-1-
திருவல்ல வாழ் நகருள் நின்ற பிரான் அடி நீர் அடியோம் கொண்டு சூடுவதே -5-9-2-
திருவல்ல வாழ் நீடு உறைகின்ற பிரான் கழல் காண்டும் கொல் நிச்சலுமே -5-8-3-

பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்று மில்லை
கலியுங் கெடும் கண்டு கொண்மின் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
மலியப் புகுந்து இசை பாடி ஆடி உழி தரக் கண்டோம்–5-2-1-

திரியும் கலி யுகம் நீங்கித் தேவர்கள் தாமும் புகுந்து
பெரிய கித யுகம் பற்றிப் பேரின்ப வெள்ளம் பெருகக்
கரிய முகில் வண்ணன் எம்மான் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
இரியப் புகுந்து இசை பாடி எங்கும் இடம் கொண்டனவே–5-2-3-

இடங்கொள் சமயத்தை எல்லாம் எடுத்துக் களைவன போலே
தடங்கடற் பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதங்களே யாய்க்
கிடந்தும் இருந்தும் எழுந்தும் கீதம் பல பல பாடி
நடந்தும் பறந்தும் குனிந்தும் நாடகம் செய்கின்றனவே–5-2-4-

கலியுகம் ஒன்றும் இன்றிக்கே தன்னடியார்க்கு அருள் செய்யும்
மலியும் சுடரொளி மூர்த்தி மாயப் பிரான் கண்ணன் தன்னைக்
கலி வயல் தென்னன் குருகூர்க் காரி மாறன் சடகோபன்
ஒலி புகழ் ஆயிரத்து இப்பத்து உள்ளத்தை மாசறுக்குமே–5-2-11-

இலிங்கத் திட்ட புராணத் தீரும் சமணரும் சாக்கியரும்
வலிந்து வாதுசெய்வீர் களும்மற்று நும்தெய்வமு மாகிநின்றான்
மலிந்து செந்நெல் கவரி வீசும் திருக்குரு கூர்அதனுள்
பொலிந்து நின்ற பிரான்கண்டீர் ஒன்றும் பொய்யில்லை போற்றுமினே–4-10-5-

விளம்பும் ஆறு சமயமும்,அவை ஆகியும் மற்றும் தன்பால்
அளந்து காண்டற்கு அரியன் ஆகிய ஆதிப் பிரான் அமரும்
வளங்கொள் தண்பணை சூழ்ந்து அழகு ஆய திருக் குருகூரதனை
உளங்கொள் ஞானத்து வைம்மின் உம்மை உயக் கொண்டு போகுறிலே–4-10-9-

தாள்களை எனக்கே தலைத் தலைச் சிறப்பத் தந்த பேருதவிக் கைம்மாறா
தோள்களை யாரத் தழுவி என் உயிரை அறவிலை செய்தனன் சோதீ நீ -8-2-10-
தேனேறு மலர்த் துளபம் திகழ் பாதன் செழும் பறவை தானேறித் திரிவான தாளிணை என் தலை மேலே -10-6-5
தலை மேலே தாளிணைகள் தாமரைக் கண் என் அம்மான் நிலை பெறான் என் நெஞ்சத்து எப்பொழுதும் எம்பெருமான்
மலை மாடத் தரவணை வாட்டாற்றான் மதம் மிக்க கொலை யானை மருப்பொசித்தான் குரை கழல்கள் குறுகினமே -10-6-6-

வேங்கடத்து செங்கண் மால் சேவடிக் கீழ் அடி வீழ்ச்சி விண்ணப்பம் -8-7

விட்டு சித்தன் கோதை சொல் மருந்தாம் என்று தம் மனத்தே
வைத்துக் கொண்டு வாழ்வார்கள் பெரும் தாளுடைய
பிரான் அடிக்கீழ் பிரியாது என்றும் இருப்பாரே -14-10-

தில்லை நகரத் திருச் சித்ரா கூடம் தன்னுள் அரசு அமர்ந்தான்
அடி சூடும் அரசை அல்லால் அரசாக வெண்னேன் மற்றரசு தானே -10-7-

உன்ன பாதம் என்ன சிந்தை மன்ன வைத்து நல்கினாய் -திருச் சந்த விருத்தம் –-55-

கற்றினம் மேய்த்த வெந்தை கழலிணை பணிமின் நீரே–திருமாலை -9-

முடியினில் துளபம் வைத்தாய் மொய் கழற்கு அன்பு செய்யும் அடியரை யுகத்தி போலும் அரங்க மா நகர் உளானே -39-

மாகமா நிலம் முழுதும் வந்து இறைஞ்சும் மலரடி கண்ட மா மறையாளன் –பொன்னருள் எனக்கும்
ஆகவேண்டும் என்று அடி இணை யடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்தம்மானே -பெரிய திரு மொழி –-5-8-5-

ஒண் மிதியில் புனலுருவி யொருகால் நிற்ப ஒரு காலும் காமரு சீர் அவுணன் உள்ளத்து
எண் மதியும் கடந்து ஆண்ட மீது போகி இரு விசும்பினூடு போய் எழுந்து மேலைத்
தண் மதியும் கதிரவனும் தவிர வோடித் தாரகையின் புறம் தடவி யப்பால் மிக்கு
மண் முழுதும் அகப்படுத்து நின்ற வெந்தை மலர் புரையும் திருவடியே வணங்கினேனே –திரு நெடுந்தாண்டகம்-5–

இன்றே கழல் கண்டேன் ஏழ் பிறப்பும் யான் அறுத்தேன் -மூன்றாம் திருவந்தாதி —-2-
அரும்பும் புனந்துழாய் மாலையானை பொன் அம் கழற்கே மனம் துழாய் மாலாய் வரும் -29
பொருந்தும் சுடர் ஆழி யொன்று உடையான் சூழ் கழலே நாளும் தொடர் ஆழி நெஞ்சே தொழுது -24
வண்டு அறையும் தொங்கலான் செம் பொற் கழல் பாடி யாம் தொழுதும் கை -35-
மது நின்ற தண் துழாய் மார்வன் பொது நின்ற பொன் அம் கழலே தொழுமின் முழு வினைகள் முன்னம் கழலும் முடிந்து -88-

மெய்ப்படியால் உன் திருவடி சூடும் தகைமை யினார்–திரு விருத்தம்-94
நல்லார் நவில் குருகூர் நகரான் திரு மால் திருப்பேர் வல்லார் அடிக் கண்ணி சூடிய மாறன் -திரு விருத்தம்–100

————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –48–நிகரின்றி நின்ற வென் நீசதைக்கு நின்னருளின் கண் அன்றி இத்யாதி —

April 19, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

எனக்காரும் நிகரில்லை -என்று இவர் சொன்னவாறே ஸ்ரீ எம்பெருமானார் இவரைப் பார்த்து –
நீர் நம்மை விட்டு வேறு ஒரு விஷயத்தை அவலம்பித்தல் -நாம் உம்மை விட்டு வேறு ஒரு விஷயத்தை-விரும்புதல்-
செய்யில் இந்த ஹர்ஷம் -உமக்கு நிலை நிற்க மாட்டாதே என்ன –
என்னுடைய நைச்யத்துக்கு-தேவரீர் கிருபையும் -அந்த கிருபைக்கு என்னுடைய நைச்யமும் ஒழிய புகல் இல்லையாய் இருக்க –
வ்யர்த்தமே நாம் இனி அகலுகைக்கு காரணம் என் -என்கிறார் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை–

ஸ்ரீ இராமானுசன் இரவும் பகலும் விடாது என் தன் சிந்தை உள்ளே நிறைந்து ஒப்பற விருந்தான் –எனக்காரும் நிகர் இல்லை –
என்று இவர் சொன்னவாறே எம்பெருமானார் இவரைப் பார்த்து -நீர் -நம்மை விட்டு காலாந்தரத்தில்
வேறு ஒரு விஷயத்தை விரும்புதல் -நாம் உம்மை விட்டு வேறு ஒரு விஷயத்தை ஆதரித்தல் செய்யில்
இந்த ஹர்ஷம் நிலை நிற்க மாட்டாதே என்ன –
என்னுடைய நைசயத்துக்கு-தேவரீருடைய கிருபையும் -அந்த கிருபைக்கு என்னுடைய நைச்யமே ஒழிய –
புகல் இல்லையாய் இருக்க -வ்யர்த்தமே நாம் அந்ய பரர் ஆகைக்கு காரணம் என்கிறார் –

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை–

எனக்காரும் நிகரில்லை என்று களித்து கூறும் அமுதனாரை –
நம் இருவரில் எவரேனும் ஒருவர் மற்று ஒருவரை விட்டு விலகிடின் உமது இக் களிப்பு நிலை நிற்க மாட்டாதே -என்று
ஸ்ரீ எம்பெருமானார் வினவ –
என்பால் உள்ள நீசனாம் தன்மைக்குத் தேவரீர் அருள் அன்றி வேறு புகல் இல்லை –
அவ் வருளுக்கும் இந் நீசத் தண்மை யன்றி வேறு புகல் இல்லை-
ஆக இனி நாம் வீணாக என் அகலப் போகிறோம் -என்கிறார் –

நிகரின்றி நின்ற வென் நீசதைக்கு நின்னருளின் கண் அன்றிப்
புகல் ஒன்றும் இல்லை அருட்கும் அக்தே புகல் புன்மையிலோர்
பகரும் பெருமை இராமானுச இனி நாம் பழுதே
யகலும் பொருள் என் பயன் இருவோருக்கும் ஆன பின்னே – -48 —

பத உரை –
நிகர் -ஒப்பு
இன்றி நின்ற -இல்லாமல் நின்ற
என் நீசதைக்கு -எனது நீசனாம் தன்மைக்கு
நின் அருளின் கண் அன்றி-தேவரீர் உடைய கிருபையின் திறத்தில் ஒழிய
புகல்-கதி -ஒதுக்கும் இடம் –
ஒன்றும் இல்லை -ஒன்றும் கிடையாது
அருட்கும் -அந்த கிருபைக்கும்
அக்தே புகல்-அந்த நீசனாம் தன்மையே புகலாகும்
புன்மையிலோர் -குற்றமற்றவர்
பகரும் -பேசும்
பெருமை-பெருமையை உடைய
இராமானுச -ஸ்ரீ எம்பெருமானாரே
இருவோமுக்கும் -நம் இரண்டு பேருக்கும்
பயன் ஆன பின்பு -பிரயோஜனம் ஏற்பட்ட பிறகு
நாம்-பயன் கண்ட நாம்
இனி -இனி மேல்
பழுதே -வீணாக
அகலும் பொருள் என் -அகலுவதற்குக் காரணம் என்ன –

வியாக்யானம்-

இந்த பூமியில் ஆத்ம குண ராஹித்யத்தாலும்-அநாத்மகுண பாஹூள்யத்தாலும் வந்த தண்மையை வுடையவர்களை
தனித் தனியே ஆராய்ந்து பார்த்தல் என்னைப் போலே
ஆத்ம குண லவ லேச ரஹீதராய் -அநாத்ம குண பரி பூரணராய் இருப்பார் ஒருவரும் இல்லாமையாலே-
உபமான ரஹீதமாய்க் கொண்டு நின்ற என்னுடைய நீசதைக்கு –
அந் நீசதை தானே பச்சையாக அங்கீகரிக்கும் தேவரீருடைய கிருபையின் இடத்தில் ஒழிய-
ஒதுங்க நிழல் ஒன்றும் இல்லை –
அந்த கிருபை தனக்கும் -எத்தனையேனும் தண்ணியரே அநுத்தம பாத்ரம் ஆகையாலே
என்னுடைய நீசத்தை ஒழிய புகல் இல்லை –

அஸ்ப்ருஷ்ட தோஷ கந்தரானவர்கள் பேச்சுக்கு விஷயமான பிரபாவத்தை வுடையவரே-
எனக்கு-ஸ்வரூப லாபமாய் -தேவரீருக்கு குண லாபமாய் –
இப்படி நமக்கு இருவருக்கும் பிரயோசனமான பின்பு-இது அறிந்து இருக்கிற நாம் மேலுள்ள காலம்
வ்யர்த்தமே அகலுகைக்கு காரணம் என் –அகலுகைக்கு ஹேது இல்லை என்று கருத்து –
இருவர் இடமும் இருவர் தேட்டங்களும் இருக்க இழப்பேனோ

உன் அருள் -ராமன் சீதா அருள்களில் வாசி –
அநாதி காலம் ராஷஷிகளாக திரிந்து உள்ளோம் -சம்சார ஆர்ணவத்தில் மக்நராக மூழ்கி உள்ளோம் –
புன்மை இலோர் -நித்யர்களை சொல்லிற்று –
நாம் பழுதே-யகலும் பொருள் என் -ஸ்ரீ அமுதனார் தம்மையும் நம்மையும் -சேர்த்து அருளிச் செய்கிறார் –
தம்மையும் உடையவரையும் என்றுமாம்-

நிகரின்றி நின்ற என் நீசதைக்கு –
நீசனேன் நிறை ஒன்றுமிலேன் –
அஹமஸ்ம் யபராதா நாமாலய -அத்யாபி வஞ்சநபர -இத்யாதிப்படியே
ஆத்ம குண ராகித்யத்தாலும் -அநாத்தம குண பாஹூள்யத்தாலும் வந்த தண்மையை உடையவர்களை –
இந்த விபூதியிலே தனித் தனியே ஆராய்ந்து பார்த்தாலும் -என்னைப்-போலே ஆத்ம குண லவ லேச ரஹீதனாய் –
அநாத்மா குண பரி பூர்ணனாய் -இருப்பார் ஒருவர் ஆகிலும்-கிடையாமையாலே –
கோன்யோச் திசத்ர சோம்ய -என்கிறபடியே உபமான ரஹீதனாய் கொண்டு இருக்கிற என்னுடைய நீச பாவத்துக்கு –

நிகரின்றி நின்ற என் நீசதைக்கு –
நீசத்தை-தாழ்வு
அது நற்குணம் இல்லாமையாலும் -தீய குணம் உள்ளமையாலும் உண்டாவது .
அன்பு அருள் முதலிய நற்குணம் வாய்ந்தோர் உயர்ந்தோர் .-அவை இல்லாதவர் தாழ்ந்தோர் .
சினம் வசை கூறல் முதலிய தீய குணம் உடையோர் மிகத் தாழ்ந்தோர் –
இவர்களில் எனக்கு ஈடாவார் எவரும் இலர் .
குணம் இல்லாமையிலும் -குற்றம் உடைமையிலும் ஒப்புயர்வற்றவனாய் நன் இருத்தேன்
நிகரின்றி நின்றது என் நீசதை என்கிறார் .-நீசனேன் நிறை ஒன்றும் இலேன் 3-3 4- – என்றார் ஸ்ரீ நம் ஆழ்வார்
நின்ற என் நீசதை
நீசதை நீங்கி சிலர் நல்லவர் ஆதலும் உண்டு -என் நீசதை அங்கனம் நீங்காது நிலை நிற்பது
தோன்ற -நின்ற என் நீசதை-என்றார் .

உன் அருளின் கண் அன்றி –
வயசநேஷு மனுஷ்யாணாம் ப்ர்சம் பவதி துக்கித -என்கிறபடியே
பர துக்க துக்கித்வ நிராசி கீர்ஷத்வ-அசஹிஷ்ணுத்வாதி லஷணமான தேவரீருடைய கிருபா குணம் ஒழிய –
புகல் ஒன்றும் இல்லை –
வேறு ஒரு புகல் இடம் இல்லை -அந்த நீசதை தானே பச்சையாக அங்கீகரிக்கும் தேவரீருடைய கிருபையினிடத்தில் ஒழிய
ஒதுங்க நிழல் ஒன்றும் இல்லை என்றபடி –

நின்னருளின் கண் அன்றிப் புகல் ஒன்றும் இல்லை –
நிகரற்ற நீசனான நான் உயர தேவரீர் திரு வருளைத் தவிர வேறு புகல் இல்லை-என்றபடி.
எனவே தேவரீரை விட்டு அடியேன் அகல வழி இல்லாமையினால்
அருளுக்கு அடியேனை இலக்காக்க வேணும் என்பது கருத்து .

கண்-
இடம் -அபராத கணைர பூர்ண குஷி-கமலா காந்த தயே கதம் பவித்ரீ -என்னுமா போலே –
இவரும் வயிறு நிரம்புகைக்காக எப்போதும் பூர்ண தோஷத்தை தேடித் திரியுமவர் ஆகையாலும் –
சர்வேஸ்வரன் ஆர்த்த அபராதியான காகாசுரனை சிஷித்ததுவும் –
யதிவா ராவணஸ் ஸ்வயம் -என்று சொன்னதுவும் –
பாபிஷ்டரை ரஷித்தால் – யசஸ்ஸூ அதிசயித்து இருக்கும்-என்றதைப் பற்றவாகையாலும் –
சேஷ பூதனுடைய தோஷங்கள் எல்லாம் -சேஷியினுடைய கிருபா குணத்துக்கு-லஷ்யங்களாய் இறே இருப்பது –

ஆக தம்முடைய நீசதைக்கு -எம்பெருமானாருடைய கிருபா குணமொழிய- வேறு ஒரு புகல் இடம் இல்லை
என்று அருளிச் செய்யத் தட்டில்லை இறே –

அருட்கும் அக்தே புகல் –
தேவரீருடைய கிருபா-குணத்துக்கு அடியேனுடைய துஷ்ட பாவதையே லஷ்யமாய் இருக்கும் –
தோஷ ரஹீதர் ஆனவர்கள் பக்கலிலே-கிருபா குணத்துக்கு பிரயோஜனம் இல்லாமையாலே –
எத்தனை யேனும் தண்ணியரே -அதுக்கு பாத்ரம் ஆகையாலும் –
எனக்கு சதர்சரான பாபிஷ்டர் ஒருவர் ஆகிலும் இல்லாமையாலே -என்னுடைய நைச்யமே அதற்கு புகலிடம் -என்றது –

த்வயாபி -இப்படி நமக்கு கைப்பட்ட தேவரீருக்கும் –
இதாநீம் -இத்தனை நாளைக்கு இப்போது –
பகவன் -சர்வஞ்ஞனாய் இருந்தாயே -நான் சொல்ல வேணுமோ –
தயாயா -தேவரீர் உடைய கிருபைக்கு –
அநுத்தமம் பாத்ரமிதம் -என்கிறபடியே பூர்ண பாத்ரமான நானும் –
லப்த்தம் -தேவரீருக்கு பெறாப் பேறாக லபித்தேன் –
அநந்த பவார்ண வாந்த -பிரசித்த ஆர்ணவத்துக்கு பரிகணம் உண்டு –
என்னுடைய சம்சாரமாகிற ஆர்ணவத்துக்கு அந்தம் இல்லை –
காலமும் அநாதியாய் -ஜன்மங்களும் பலவாய் -கர்மங்களும் விசித்ரங்களாய் -பஹூவாய் இருக்கையாலே –
இந்த அரணவம் அனந்தமாய் இருக்கும் –
இப்படிப்பட்ட பவார்ணவத்தின் உடைய அகாத ஜலத்திலே –
நிமஜ்ஜதா -அழுந்திக் கிடப்பவன் –
கேவலம் ஸ்வ இச்சையவாஹம் ப்ரேதேஷகம் சித்கதாசன -என்கிறபடி அனநதமான-காலத்துக்கு –
மே-அடியேனுக்கு –
கூலமிவ -கரை போலே –
லப்தோஹி-பிரசித்த ஆர்ணவத்திலே விழுந்து அழுந்தின-சேதனன் அப்போதே முடிய -முஹூர்த்த மாத்ரத்திலே
அந்த பிணத்தை கொண்டு வந்து கரையிலே தள்ளி விடும்-என்று சர்வ ஜக பிரசித்தம் –

இந்த சம்சாரத்திலே அழுந்தி -அசந்நேவ-என்கிறபடியே -இருந்த என்னை
சிரகாலத்துக்கு-சத்தை உண்டாக்கி அந்த அர்ணவத்துக்கு பாரமாய் கைபட்டாய் –
கண்டு கொண்டு என்னைக் காரி மாறப் பிரான் -பண்டை வல் வினை பாற்றி அருளினான் – என்று
இருவருக்கும் பிரயோஜனமாய் இருந்தது என்று -அபியுக்தரும்-அருளிச் செய்தார் இறே –
அந்தோ அடியேன் உனபாதம் அகலகில்லேன் இறையுமே – என்றும் –
புகல் ஓன்று இல்லா அடியேன் உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்றும் அருளிச் செய்தார் இறே -ஸ்ரீ நம் ஆழ்வாரும் –

பரம காருணிகோ ந பவத்பர -பரம சோச்யதமோ நஹிமத்பர -என்னக் கடவது இறே —

அருட்கும் அக்தே புகல் –
தேவரீருடைய அருளுக்கு முழு இலக்காய் அமையும் தகுதி அடியேன் ஒருவனுக்கே உள்ளது என்று கருத்து –
குற்றம் அற்றவரை ஏற்பதில் அருளுக்கு சிறப்பு இல்லை .
குற்றம் நிறைந்தவரை ஏற்பதிலே தான் அருளுக்கு சீர்மை .
இராவணனே யாயினும் ஏற்பேன் என்ற ஸ்ரீ இராம பிரான் அருள் சீறியது .
குற்றம் புரிந்த வண்ணம் உள்ள அரக்கியரை அளித்த ஸ்ரீ பிராட்டியின் திருவருள் அதனிலும் சீரியது –
தவம் நீச சசவத் சம்ருத -நேசனான நீ முயல் போன்றவன் -என்று ஸ்ரீ பிராட்டி கூறிய படி
நீசனாகிய இராவணன் முதலியோர் போல் அல்லாமல்-
நிகரில்லா நீசனாகிய–என்னை ஏற்று அளித்ததனாலே தேவரீர் அருள் மிக சீரியது ஆகும்

நான் நீசதையில் நிகர் அற்றவன் –
நின் அருள் ஏனையோர் அருள்களினும்-நின் பால் உள்ள ஏனைய குணங்களினும் -சீர்மையில் நிகர் அற்றது .
நிகர் அற்றமையில் -என் நீசதைக்கும் தேவரீர் அருளுக்கும் ஒற்றுமை உண்டு .
ஆகவே அவை நிலைத்து ஏன் இணைந்து இருக்க மாட்டா -என்கிறார் .

இங்கு ஸ்ரீ வேதாந்த தேசிகன்
மயி திஷ்ட்ட திதுஷ்க்ருதாம் பிரதானே மித தோஷா நிதரான் விசின்வதீத்வம்
அபராத கணைர பூர்ண குஷி கமலா காந்த தயே கதம் பவித்ரீ –என்று
பாபம் செய்தவர்களுக்குள் எண்ணற்ற பாபங்கள் செய்ததனா பிரதானனாகிய நன் இருக்க –என்னைப் புறக்கணித்து –
அளவுக்கு உட்பட்ட பாபம் செய்தவர்களை தேடிக் கொண்டு இருக்கும் நீ
பாபத் திரள்களினால் வயிறு நிரம்பாமல் கமலியின் காதலனுடைய அருள் அணங்கே –
எப்படி யாகப் போகிறாயோ -என்றும் –

அஹம ச்ம்யபராத சக்ரவர்த்தீ கருணே த்வம்ச குனேஷூ சார்வ பௌ மீ
விதுஷீ ச்த்திதிமீத்ருசீம் ச்வயம்மாம் வருஷ சைலேச்வர பாத சாத்குரு-என்று
நான் பாபம் செய்தவர்களுள் சக்கரவர்த்தியாய் மேம்பட்டவன்
கருணையே -நீயும் குணங்களுள் தலை சிறந்தவள் .
இத்தகைய நம் நிலையை உணர்ந்து தானாகவே என்னை
ஸ்ரீ திரு வேம்கடமுடையான் திருவடிக்கு உரியனாக்குவாயாக -என்று ஸ்ரீ தயா சதகத்திலே -29 30- –
இக் கருத்தினையே தழுவி அருளி இருப்பது
நினைவுறத் தக்கது

புன்மை –
தோஷங்களுக்கு ஆகாரமான சம்சாரம் –
அநாதி அவித்யா கர்ம வாசனா ருசிபிரகிருதி சம்பந்த ரூபமான சம்சாரம் -என்றபடி –

இலோர் –
சம்சாரிகமான பந்தத்தை பூண் கட்டிக் கொண்டு நிற்கையாலே அவர்களை இங்கே சொல்ல ஒண்ணாது இறே –
முக்தர் சிறிது காலம் சம்சாரத்தை பூண் கட்டிக் கொண்டு திரிந்து -பின்னை -கரை கண்டோர் -என்னும்படி
அதை சவாசநமாக பொகட்டு -பகவத் குண அனுபவத்திலே -ஆழம் கால் பட்டு-இருந்தார்களே யாகிலும்
நிருப பதமாக சொல்லுகையாலே அவர்களையும் இங்கே சொல்லக் கூடாது இறே –
அஸ்ப்ருஷ்ட சம்சார கந்த ரஹீதரான நித்ய சூரிகளை ஆய்த்து -இலோர் -என்று அருளிச் செய்தது –

பகரும் பெருமை –
ஏக தேசாவஸ்தாநத்தாலும் –ஏக விஷய அனுபவத்தாலும் -அடியே பிடித்து இவருடைய-பிரபாவத்தை –
அடைவே அறியுமவர்கள் -நித்ய சூரிகள் ஆகையாலே –
அவர்களாலே ஸ்தோத்ரம் பண்ணப்பட்ட -பிரபாவத்தை உடையரான –

இராமானுச –
ஸ்ரீ எம்பெருமானாரே –

புன்மையிலோர் பகரும் பெருமை இராமானுச
புன்மை உடையோர் சோறு கூறைகளை விரும்பி பேசிடின் அதில் உண்மை இராது –
அப் பேச்சினால் பேசப்படுவோர்க்கு பெருமை இல்லை –
அவாவினை அறத் துரந்தமையின் -புன்மை இலாதார் பேசிடினோ அதனில் உண்மை இல்லாது இராது –
பயன் கருதி இல்லாததை ஏற்றி அவர்கள் பேச மாட்டார்கள் அன்றோ –
ஸ்ரீ எம்பெருமானார் பெருமை உண்மையானது என்பது கருத்து .

புன்மையிலோர் என்பது –
என்றும் சிறிது அளவும் புன்மை இல்லாதவர்கள் ஆகிய ஸ்ரீ நித்ய சூரிகளைச் சொல்லுகிறது என்று
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் உரைப்பர் .அப்பொழுது
தாமரை கண்ணனை விண்ணோர் பரவும் தலை மகனை -என்றபடி
விண்ணோர் தலை மகனது-அருள் நிறைந்த தாமரைக் கண் அழகைப் பாடுவதை விட்டு –
ஸ்ரீ எம்பெருமானார் அருள் பெருமையையே-பகருகின்றனர் -என்றது ஆயிற்று .

பயன் இருவோமுக்குமான பின்னே –
தேவரீரும் அடியேனும்-ஆகிற இருவருக்கும் ஸ்வரூப லாபமும் குண லாபமும் ஆகிற
பரம பிரயோஜனம் சித்தித்த பின்பு –
இப்படி இருவருக்கும் பிரயோஜமாய் இருக்க –

இனி நாம் பழுதே அகலும் பொருள் என் –
இது அறிந்து இருக்கிற-நாம் மேல் உள்ள காலம் எல்லாம் வ்யர்த்தமே அகலுக்கைக்கு காரணம் என் –
நாம் என்றது
தம்மையும் ஸ்ரீ எம்பெருமானாரையும் –
அன்றிக்கே –
நாம் என்று பஹூ வசன பிரயோகம் பண்ணுகையாலே –
ஸ்ரீ எம்பெருமானாரும் -இவருடைய சம்பந்த-சம்பந்திகளுமான எல்லோரும் என்று பொருள் ஆகவுமாம் –

நாம் பழுதே அகலும் பொருள் என் –
பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய் –
என்னைத் தீ மனம் கெடுத்தாய் -மருவித் தொழும் மனமே தந்தாய் –
அறியாதன அறிவித்த அத்தா நீ-செய்தன அடியேன் அறியேன் -என்கிறபடியே
நாம் க்ருத்ஜ்ஜராய் போம் அது ஒழிய நமக்கு-அகலுகை என்று ஒரு பிரயோஜனம் உண்டோ –
பாவத்தால் நான் பிறப்பேன் ஏலும் -இனி எந்தை-எதிராசன் தான் பிறக்கும் என்னை உய்ப்பதா -என்கிறபடியே –
கைவிடுகை அவருக்கு அவத்யமாக-தலைக்கட்டக் கடவதாகையாலும் –
பெறாப் பேறாக அடியோங்களை தேவரீர் விஷயீ கரித்துக்- கொள்ளுகையாலும் –
நிழலும் அடி தாறும் போலே அடியோங்களை அனந்யார்ஹராம் படி-அங்கீகரிக்கை ஒழிய
தேவரீருக்கு அகலுகை என்ற ஒரு பிரயோஜனம் உண்டோ என்றது ஆய்த்து –

இனி நாம் பழுதே அகலும் பொருள் ஏன் –
வீணாக காரணம் இன்றி நமதுய் பயனைக் கெடுத்து அகல மாட்டோம் -என்றபடி

பயனிருவோக்கும் ஆன பின்னே –
தேவரீருக்கு பயன் குண லாபம்
அடியேனுக்கு பயன் ஸ்வரூப லாபம்

கண்டு கொண்டு என்னைக் காரி மாறப் பிரான் பண்டை வல்வினை பாற்றி யருளினன் -என்று இருவருக்கும்
பயன் உண்டானதை ஸ்ரீ மதுர கவிகளும் அருளிச் செய்தார் .

நிமஜ்ஜ்தோ நந்த பவார்ணவாந்த சிராய மே கூல மிவாசி லப்த
த்-வயாபி லப்தம் பகவன் நிதானி மனுத்தமம் பாத்ரமிதம் தாயாய -என்று
பகவானே அளவில்லாத சம்சாரக் கடலுக்குள் மூழ்கிக் கொண்டு இருக்கிற எனக்கு
நெடும் காலம் கழித்து கரை போலக் கிடைத்து உள்ளீர் –
உம்மாலும் கருணைக்கு முகச் சிறந்த கொள்கலமாக நான் கிடைக்கப் பெற்று உள்ளேன் –
ததஹம் த்வத்ருதே ந நாதவான் மத்ருதே த்வம் தய நீய வாந்தச-
விதி நிர்மித மேத்தா தான்யம் பகவன் பாலய மாஸம ஜீஹப -என்று-பகவானே உம்மைத் தவிர நான்
வேறு நாதன் அற்றவனாய் இருக்கிறேன்-
நீரும் என்னைத் தவிர இரக்கப்படத் தகுந்தவன் இல்லாதவனாய் இருக்கிறீர்-
தற்செயலாக அமைந்த இந்த தொடர்பினை காத்து அருள வேண்டும் விட்டு விடாதீர் -என்று
ஸ்ரீ ஆள வந்தாரும் காட்டி யருளினார்

ஸ்ரீ மணவாள மா முனிகளும் இப்பாசுரத்தின் கருத்தை அடி ஒற்றி
யதிராஜ விம்சதியில் -வாசா மகோசர மகா குண தேசகாக்ர்யா கூராதி நாத கதிதாகில நைச்ய பாத்ரம்
ஏஷோ ஹமேவ ந புனர் ஜகதீச்ருசஸ் தத் ராமாநுஜார்ய கருணை வது மத் கதிச்தே -என்று-
மொழியைக் கடக்கும் பெரும் புகழை உடையரான ஆசார்யர்களில் சிறந்த ஸ்ரீ கூரத் ஆழ்வான்-கூறிய
எல்லா நீசதைக்கும் உறைவிடமாய் இருப்பவன் இந்த நான் ஒருவனே
உலகத்தில் இத்தகைய ஒருவனைக் காண முடியாது .ஆகையால் ஸ்ரீ எம்பெருமானரே
தேவரீர் உடைய வீறு பெற்ற கருணையே எனக்கு கதி -என்று
அருளிச் செய்து இருப்பது இங்கு அனுசந்திக்கதக்கதாகும்-

நன்மை தீமைகள் ஒன்றும் அறியேன் நாரணா என்னும் இத்தனை அல்லால்
புன்மையால் உன்னை புள்ளுவம் பேசி புகழ்வான் அன்று கண்டாய் திருமாலே
உன்னும் ஆறு உன்னை ஒன்றும் அறியேன் ஓவாதே நமோ நாரணா என்பன்
வன்மை யாவது உன் கோயிலில் வாழும் வைட்டணவன் என்னும் வன்மை கண்டாய் -ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி-5 1-3 –
புன்மையிலோர் என்பது –
என்றும் சிறிது அளவும் புன்மை இல்லாதவர்கள் ஆகிய ஸ்ரீ நித்ய சூரிகளைச் சொல்லுகிறது என்று
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் உரைப்பர்

இன்றாக நாளையேயாக இனிச் சிறிதும்
நின்றாக நின்னருள் என்பாலதே -நன்றாக
நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் -நாரணனே
நீ என்னை அன்றி இலை -7-

நன்றாக–நிச்சயமாக – அத்யாவசாயம் திடமாக உள்ளதே –சம்பந்தம் உணர்ந்து -நானும் உனக்கு பழ வடியேன்-
உனது திரு அருளுக்கு பரிபூர்ண பாத்ரனான பின்பு -என்னுடைய ஏற்றம் அறியாயோ
உன் அருளுக்கு நானே இலக்கு -என் பிரார்த்தனைக்கு நீயே இலக்கு -நீ தயநீயரைத் தேடி இரா நின்றாய்
-உன் தயையைத் தேடி நான் இரா நின்றேன் –
நிகரின்றி நின்ற என் நீசதைக்கு நின் அருளின் கண் அன்றிப் புகல் ஒன்றும் இல்லை அருட்க்கும்
அஃதே புகல் -அமுதனார் -இத்தை ஒட்டியே அருளுகிறார்

ஏதங்கள் ஆயின எல்லாம் இறங்க விடுவித்து என்னுள்ளே
பீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து
போதில் கமல வல் நெஞ்சம் புகுந்தும் என் சென்னித் திடரில்
பாத இலச்சினை வைத்தார் பண்டு அன்று பட்டினம் காப்பே -5 2-8 –

உனக்கு பணி செய்து இருக்கும் தவம் உடையேன் இனிப் போய் ஒருவன்
தனக்கு பணிந்து கடைத்தலை நிற்கை நின் சாயை அழிவு கண்டாய்
புனத் தினைக் கிள்ளி புது வவிக் காட்டின் பொன்னடி வாழ்க வென்
றினக் குறவர் புதியது உண்ணும் எழில் மால் இரும் சோலை எந்தாய் – 5-3 3- –

ஈசன் வானவர்க்கு என்பன் என்றால் அது
தேசமோ திரு வேங்கடத் தானுக்கு?
நீசனேன் நிறைவு ஒன்றுமிலேன் என் கண்
பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதிக்கே–3-3-4-

————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –47–இறைஞ்சப்படும் பரன் ஈசன் அரங்கன் என்று இத்யாதி —

April 18, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

மதியிலியேன் தேறும்படி என் மனம் புகுந்தான் -என்றார் கீழ் .
லோகத்தில் உள்ளவர்களுக்கு தத்தவ ஸ்திதியை யருளிச் செய்து –பகவத் சமாச்ரயண ருசியை ஜநிப்பிக்குமவர்
தம்மளவில் பண்ணின விசேஷ விஷயீகாரத்தை-யனுசந்தித்து –இப்படி விஷயீகரிக்க பெற்ற எனக்கு
சத்ருசர் இல்லை என்கிறார் இதில் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை-

கீழ்ப் பாட்டிலே எம்பெருமானார் தம்முடைய திரு உள்ளத்திலே பிரகாசித்து உஜ்ஜ்வலமாக-அவரை வணங்கினோம் என்று சொல்லி –
இதிலே -லோகத்தார் எல்லாரையும் குறித்து -சர்வ சமாஸ்ரயநீயனான சர்வேஸ்வரன் கோயிலிலே சந்நிகிதனாய் இருந்தான் –
அவனை ஆஸ்ரியுங்கோள் என்று பரம தர்மத்தை-உபதேசித்த உபகாரகன் -எம்பெருமானார் –
என்னுடைய ஆர்த்த அபராதங்களை நசிப்பித்து திவா ராத்ரி விபாகம் அற என்னுடைய ஹ்ருத்யத்திலே ஸூ ப்ரதிஷ்டராய் –
இவ் இருப்புக்கு சதர்சம் ஒன்றும் இல்லை என்னும்படி எழுந்தருளி இருந்தார் –
இப்படி ஆன பின்பு தமக்கு சத்ருசர் ஒருவரும் இல்லை என்கிறார்

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-

மதியிலியேன் தேறும்படி என் மனம் புகுந்தான் என்று தம்மை விஷயீகரித்த படியைக் கீழ் அருளிச் செய்தார் –
உலகத்தாருக்கு தத்வ உபதேசம் செய்து பகவத் சமாஸ்ரயண-ருசியை ஜநிப்பிக்குமவர்
தம்மளவிலே விசேஷமாக விஷயீகரித்ததை அனுசந்தித்து-இப்படிப் பட்ட எனக்கு நிகர் யாரும் இல்லை -என்கிறார் –

தாழ்ந்தவன் மனத்தில் இருந்து நீங்காமல் இருந்தான்- இருவருக்கும் நிகர் இல்லை.
இல்லை எனக்கு எதிர் இல்லை இல்லை எனக்கு நிகர் இல்லையே எம்பார் அருளியது போல–
மதி இலியேன் தேறும் படி புகுந்தான் என்றார் முன்னம்-
தத்வ ஸ்திதியை அருளி செய்து பகவத் சமாச்ரயண ருசியை ஜனித்தவர்-
தம் அளவில் விசேஷ விஷயீ காரத்தை அனுசந்தித்து -தமக்கு சருசர் இல்லை என்கிறார்-

இறைஞ்சப்படும் பரன் ஈசன் அரங்கன் என்று இவ்வுலகத்
தறம் செப்பும் அண்ணல் இராமானுசன் என் அருவினையின்
திறம் செற்று இரவும் பகலும் விடாது என் தன் சிந்தை உள்ளே
நிறைந்து ஒப்பற விருந்தான் எனக்காரும் நிகர் இல்லையே – 47- –

பத உரை –

இறைஞ்சப்படும் -எல்லாராலும் ஆஸ்ரயிக்கப்படும்
பரன்-பரம் பொருள்
ஈசன் -ஈஸ்வரனாக காட்சி தரும்
அரங்கன் என்று -திருவரங்கத்திலே கண் வளர்ந்து அருளுகிற பெரிய பெருமாள் என்று
இவ்வுலகத்து -இந்த லோகத்திலே
அறம் -தர்மத்தை
செப்பும் -அருளிச் செய்யும்
அண்ணல் -ஸ்வாமியான
இராமானுசன் -எம்பெருமானார்
என் அரு வினையின் -என்னுடைய அருமையான கர்மத்தின் உடைய
திறம்-சமூஹத்தை
செற்று -தொலைத்து
இரவும் பகலும் -இராப்பகலாக
விடாது -இடைவிடாது
என் தன் -என்னுடைய
சிந்தை உள்ளே -ஹ்ருதயத்திற்கு உள்ளே
நிறைந்து -பூரணமாய்
ஒப்புற-நிகர் இல்லாதபடி
இருந்தான் -எழுந்து அருளி யிருந்தார்
எனக்கு -இத்தகைய எனக்கு
ஆரும் -எவரும்
நிகர் இல்லை-ஒப்பு இல்லை

வியாக்யானம் –
சர்வ சமாஸ்ரயணீயனாக -வேதாந்த பிரசித்தனான -சர்வ ஸ்மாத் பரன் –அநந்த சாயித்வாதிகளாலே –
ஈஸ்வரத்வம் தோற்ற -வந்து கோயிலிலே –கண் வளர்ந்து அருளுகிற பெரிய பெருமாள் என்று –
அதர்ம அனுசாரியான இந்த லோகத்திலே சாஷாத் தர்மத்தை அருளிச் செய்யுமவராய்
ஆஸ்ரித இழவு பேறுகள் தம்மதாம் படியான சம்பந்தத்தை வுடையராய் இருக்கிற எம்பெருமானார் –
என்னுடைய அனுபவத்தாலும் -ப்ராயசித்தத்தாலும் போக்க வரிய கர்ம சமுஹத்தை நிரசித்து-
அல்லு நன்பகலும் இடை வீடின்றி -திரு வாய் மொழி -1 10-8 – -என்கிறபடியே-
திவாராத்ர விபாகமற இடைவிடாதே என்னுடைய ஹ்ருதயத்தின் உள்ளே பூரணராய் கொண்டு-
இவ்விருப்புக்கு சத்ருசம் இல்லை என்னும்படி எழுந்து அருளி இருந்தார் –
ஈதரு ச விஷயீகார பாத்ரமான எனக்கு ஒருவரும் சத்ருசர் இல்லை
திறம்-சமூஹம்
நிகர் -ஒப்பு–
சாத்விக அஹங்காரம் -எம்பார் -வார்த்தை/ஸ்ரீ ரெங்க மஹாத்ம்யம் அருளிய இராமானுசன் -வளர்த்த தாய் –
திருவரங்கன் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே
இறைஞ்சப்படும் ஷீராப்தி -பரன்-ஸ்ரீ வைகுண்ட நாதன் — ஈசன் அந்தர்யாமி /அரங்கன் அர்ச்சா -/அறம் செப்பும் வைபவம் –
கிருஷ்ணம் தர்மம் சனாதனம் -ஐந்தையும் சொன்னவாறு –

இறைஞ்சப்படும் –
எழுவார் விடைகொள்வார் ஈன் துழா யானை வழுவா வகை நினைந்து வைகல் தொழுவார் –என்றும் –
முழு எழ உலகுக்கும் நாதன் -என்றும் – சொல்லுகிறபடி
சர்வ சமாஸ்ரயநீயனாய்க் கொண்டு பிரசித்தனாய்

பரன் –
பராபரானாம் -என்கிறபடி சர்வ ஸ்மாத் பரன் –

ஈசன் –
சர்வேஸ்வரன் –

அரங்கன் என்று –
அநந்த சாயித்வாதிகளாலே-கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிற பெரிய பெருமாள் என்று –
அன்றிக்கே –
இறைஞ்சப்படும் -சர்வ சமாஸ்ரயநீயன் –
ஈசன் -சர்வ ஸ்மாத் பரன் –
ஈசன் -ஸ்வாபாவிக ரநவதிகாதிசயே சிதிர்த்வம் நாராயண த்வயி நமர்ஷ்யதி -என்கிறபடியே சர்வ ஸ்வாமியானவன் –
இந்த மஹிமாவான் யார் என்னில் –
அரங்கன் –அப்படிப்பட்டவன் -எட்டா நிலத்திலே இராதே -இன்று சந்நிகிதனாய் -சுலபனாய் –
கோயிலிலே எழுந்து அருளி இருக்கிற திருவரங்க செல்வனார் –
என்று -இப்படிப் பட்டவர் என்று –

இவ் உலகத்து –
அதர்ம அநுசாரியான இந்த லோகத்திலே -அதர்ம பூதமான -இருள் -தரும் மா ஞாலத்தில் உள்ள ஜனங்களுக்கு –

அறம் செப்பும் –
சாஷாத் தர்மத்தை அருளிச் செய்யும் –
அன்றிக்கே –
அப்படிப் பட்டவனை ஆஸ்ரயிக்க -சம்சார நிச்தரன உபாயத்தை உபதேசித்து அருளும் –
அன்றிக்கே –
இறைஞ்சப்படும் -தேவ ஜாதிக்கு ஒரு உபத்ரவம் வந்தால் -அவர்கள் எல்லாரும் திரண்டு -பிரமாவோடு கூடிப் போய் –
கூப்பிடும் கூப்பீடு கேட்கைக்காக -வியூக ஸ்தானமான திருப்பாற் கடலிலே கண் வளர்ந்து -அவர்களாலே சேவிக்கப்படுமவன் –
இத்தால் வியூகத்தை சொன்னபடி –

பரன் –
அயர்வறும் அமரர்கள் அதிபதியான பரன் –

ஈசன் –
அந்தப்ரவிஷ்டஸ் சாஸ்தா ஜனானாம் -என்கிறபடியே சர்வரையும் நியமிக்கைக்காக சர்வ அந்தர்யாமியாய் இருக்குமவன் –
இத்தால்-அந்தர்யாமித்வத்தை சொன்னபடி –

அரங்கன் –
அர்ச்சையஸ் சர்வ சஹிஷ்ணு ரர்ச்சாக பராதீநா கிலாத்மா ஸ்த்திதி -என்னும்படியான
அர்ச்சாவதாரங்களில் வைத்துக் கொண்டு பிரதானமாய் இருக்குமவன் –
இத்தால் அர்ச்சாவதாரத்தை சொன்னபடி –

என்று இவ் உலகத்து அறம் செப்பும் –
அறம் –ராமோ விக்ரஹவான் தர்ம –
யேசவேத விதொவிப்ரயேசாத்யாத்மா விதோஜன-தேவதந்தி மகாத்மானாம் க்ர்ஷ்ணம் தர்மம் சனாதனம் -என்கிறபடியே
அவதாரங்களிலே பிரதானமான விபவம் –
என்று –
என்கிறத்தை இத்தோடு அன்வயித்த படி –
அஞ்சு வகைப் பட்டு இருக்கும் நாராயணனை -பிராப்யமும் பிராபகமும் என்று அருளிச் செய்யும் என்னவுமாம் –

இறைஞ்சப்படும் பரன் ஈசன் அரங்கன் என்று –
வேதாந்தங்களிலே எல்லாராலும் ஆஸ்ரயிக்கப் படுவதாய்ச் சொல்லப்படும் பரம் பொருள்
ஈஸ்வரத்வம் தோற்ற பாம்பணை மேல் கண் வளர்ந்து அருளுகிற பெரிய பெருமாள் -என்று-எம்பெருமானார் உபதேசிப்பாராம் –
இன்னாரால் இறைஞ்சப்படும் என விதந்து கூறாமையாலே -எல்லாராலும் இறைச்சப்படும் எனக் கொள்க –
எல்லோராலும் ஆஸ்ரயிக்கப் படுபவனாக-கூறப்படும் பரம் பொருள் -கண்ணாலே காணலாம் படி -தன் ஈஸ்வரத்வம் தோற்றத்
தானே வந்து-கண் வளர்ந்து அருளுகிறது -என்கிறார் .
ஸ்ரீ ரங்க நாதனிடம் சர்வேஸ்வரத்வதைப் பல-படியாலும் சாஷாத் கரிக்கலாம் –
அணைவது அரவணை மேல் பூம்பாவை யாகம் புணர்வது -திருவாய்மொழி- 2- 8- 1- என்றபடி-
அநந்த சாயித்வமும் -பிராட்டி அகம் புணர்தலும் ஈஸ்வரத்வத்தை காட்டுகின்றன-

அனாலோசித விசேஷ அசேஷ லோக சரண்யன்-
அன்பன் தன்னை அடைந்தவர்கள் எல்லாம் அன்பன்-விசேஷணம் இன்றி அனைவருக்கும் அன்பன் அவன் ஒருவனே –
சர்வ லோகானாம் பிதா மாதாச மாதவன்–
எழுவார் விடை கொள்வார் ஈன் துழாய் யானை வழுவா வகை-மூவருக்கும் கதி த்ரயத்துக்கும் மூலத்வம்
நாரணன் முழு எழ உலகுக்கும் நாதன்–பிரசித்தனாய்-

அண்ணல் -சஹி வித்யாதஸ்தம் ஜனயதி தத் ஸ்ரேஷ்டம்-ஜன்ம -என்றும்
குருர் மாதா குரு பிதா -என்றும் சொல்லுகிறபடி –
இவ் உபதேச முகேன சேதனருக்கு சர்வ வித பந்துவாய்-அவர்களுடைய இழவு பேறுகள் தம்மதாம் படியான
சம்பந்தத்தின் உறைப்பை உடைத்தாய் இருக்கிற –

இராமானுசன் –
எம்பருமானார் –

இவ்வுலகத்து அறம் செப்பும் அண்ணல் இராமானுசன்
அதர்ம வழியே போகும் இவ் வுலகின் கொடுமையைக் காட்ட –இவ் உலகம் -என்கிறார் .
அதர்ம அனுசாரியான லோகத்திலே தர்ம உபதேசம் பண்ணி இருக்கிறார் .
ராமோ விக்ரஹவான் தர்ம -என்றும் -க்ருஷ்ணம் தர்மம் சனாதனம் -என்கிறபடியே
சாஷாத் தர்மத்தை உபதேசித்து அருளினார் .
பகவத் ஆஸ்ரயண ரூபமான உபாய தர்மத்தை என்றார் ஆகவுமாம் –
இவ் அரிய விஷயத்தை உபதேசிப்பதற்கு காரணம் அண்ணலாய் இருத்தல் என்கிறார் .
அண்ணல் -ஸ்வாமி
ஆஸ்ரிதர் இழவு பேறுகள் தம்மதாம் படியான உறவு முறை உடையவர் -என்றபடி .
இராமானுசன் -விபரீதனான இராவணனுக்கு உட்பட ஹிதம் நாடின இராமனை அனுசரித்தவர்-என்பது கருத்து .

என் அருவினையின் திறம் செற்று –
அஹம் அஸ்ய அபராதானாம் ஆலய -என்றும்
அமர்யாதா ஷூத்ரஸ் சலமதி -என்றும் –
பாபானாம் பிரதமோச்ம்ய்ஹம்-என்றும் –
ந நந்திதம் கர்மததச்திலோகே-சஹச்ரசோ யந்ந மயாவ்யதாதி -என்றும் –
அஹம் அஸ்ய அபராத சக்ரவர்த்தி -என்றும் –
யாவச் சயச் சதுரிதம்-சகலஸ் யஜந்தோ தாவத் சதத் தததிகம் சமமாஸ்தி சத்யம் -என்றும் சொல்லுகிறபடியே –
என்னால் தீரக் கழியச் செய்யப்பட்டதாய் -அனுபவத்தாலும் பிராயசித்தத்தாலும் -போக்க அரிதான பாப சமூகத்தை –
வானோ மறிகடலோ -என்னும்படி நசிப்பித்து –
திறம் –
சமூஹம் –

என் அரு வினையின் திறம் செற்று –
என் வினை-
என் வினை என்கிறார் உலகத்தார் வினையின் வேறுபாடு தோற்ற –
வினையின் திறம்-
வினைகள் பலகால் செய்யப்பட்டு செய்யாதது ஒன்றும் இன்றிப் பலவாய் இருத்தலின் வினையின் திறம் -என்றார் –
அருவினை
ந நிந்திதம் கர்ம ததஸ்தி லோகே சஹா ஸ்ரசோ யந் ந மயா வ்யதாயி-என்று
உலகத்தில் என்னால் பல காலும் செய்யப்படாத பாபங்கள் ஒன்றும் இல்லை –
நானே நானாவித நரகம் புகும் பாவம் செய்தேன் -பெரிய திரு மொழி – 1-9 2- – -என்றது போலே-
ப்ராயசித்ததாலோ -அனுபவத்தாலோ -அழியாத வினை என்பார் அருவினை என்றார் –

இரவும் பகலும் விடாது –
அல்லும் பகலும் இடைவீடு இன்றி -என்கிறபடியே -திவா ராத்ர விபாகம் அற -இடைவிடாதே –

இரவும் பகலும் விடாது
அல்லு நன்பகலும் இடைவீடு இன்றி நல்கி என்னை விடான் நம்பி நம்பியே -திருவாய்மொழி 1-10 8- – -என்கிற படியே
இடைவிடாதபடி எழுந்து அருளி இருந்தார்-

அமுதனார் தூங்கும் பொழுது புகுந்தாராம்–
பகலில் புகுந்தால் தடுப்பார் என்பதால் -விலக்காமை இரவில் இருக்குமே-
நிறைந்து -முழுவதுமாக சொரூபம் ரூபம்-அமுதனார் உகந்த திருமேனி குணம் விபவம் சேஷடிதம் புகுந்ததே சேஷ்டிதம்-
பூரணராய் கொண்டு இருந்தான்- எழுந்து அருளி இருந்தார்

என் தன் சிந்தை உள்ளே –
பண்டு எல்லாம் ஆசாபரனாய் போந்து இப்போது இவ் விஷயீ காரத்தை பெற்ற என்னுடைய ஹிருதயத்தின் உள்ளே –
நிறைந்து –
ஸ்பர்ஷடா ஸ்பர்ஷடி மாத்ரம் அன்றிக்கே -ஸ்வரூபத்தோடும் குணங்களோடும் விக்ரகத்தோடும் -விபூதியோடும் கூட –
அதிலே பூரணமாய் புகுந்து –
அணுவான ஆத்மாவின் உள்ளே -விபுவான ஈஸ்வரன் -ஸ்வரூப ரூப குணங்களோடு –
அசங்குசிதமாக வியாபித்து நிற்குமா போலே காணும் –
எம்பெருமானாரும் அதி சூஷ்மமான இவருடைய திரு உள்ளத்திலே அசங்குசிதமாக வியாபித்து நிற்கிறபடி –

ஒப்பற விருந்தான் –
இவ் வாத்சல்யத்துக்கு சத்ருசம் இல்லாதபடி இருந்தார் –
அதிலே தானே ஸூ ப்ரதிஷ்டராய்-எழுந்து அருளி இருந்தார் என்றபடி –
ஒப்பு -சத்ருசம் –

என் சிந்தை உள்ளே நிறைந்து ஒப்பற இருந்தான் –
ஆசாபாசங்களுக்கு உறைவிடமான என் சிந்தைக்கு உள்ளே இருந்தார் –
அருவருப்பின்றி மிக்க வாத்சல்யத்துடன் இதயத்தில் -ஈசானன் -அந்தர்யாமி -எந்தன் சிந்தை உள்ளே இருந்தார் –
அருவருப்பு இன்றி ஆதரத்துடன் இருப்பது மாத்ரம் அன்று –
குறை நீங்கி -நிறைவு பெற்றவராய் இருந்தார் .
க்ருத்ய பேற்றினை கைப்பற்றின வீறுடைமை தோற்ற ஒப்பற இருந்தார் –
அமுதனாரை வசப்படுத்துவது தவிர எம்பெருமானார் திரு வவதாரதிற்குப் பேறு வேறில்லை என்பது கருத்து .
நிறைந்து இருந்தான்–
பகவத் விஷயத்துக்கும் இடம் இன்றித் தானே சிந்தையுள் நிறைந்து இருந்தான் -என்னலுமாம்-
விஷயாந்தரங்களுக்கு அவகாசம் இல்லாதபடி
திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான் –திருவாய் மொழி – 10-8 1- – என்று
நம் ஆழ்வார் கூறியது போலே அமுதனாரும் கூறினார் .
நம் ஆழ்வார் நெஞ்சில் விஷயாந்தரங்களுக்கு இடம் இல்லை .
அமுதனார் நெஞ்சில் பகவத் விஷயத்துக்கும் இடம் இல்லை –

எனக்கு –
இப்படி எம்பெருமானார் உடைய விஷயீ காரத்தைப் பெற்ற எனக்கு –

ஆரும் நிகர் இல்லையே –
எத்தனை தரம் உடையார் உண்டானாலும் -சத்ருசம் ஆக மாட்டார்கள் –
அவித்யாந்தர்க்க தாச்சர்வே-தேஹி சம்சார கோசர -என்று சொல்லப்படுபவர்கள்
சத்ருசம் ஆக மாட்டார்கள் –
நிகர் -ஒப்பு-
த்ருணீ க்ருத விரிம்சாதி நிரங்குச விபூதய -ராமானுஜ பதாம் போஜ சமாஸ்ரயண சாலிந -என்னக் கடவது இறே —

எனக்காரும் நிகர் இல்லை –
எனக்கு-
எம்பெருமானார் திருவருளுக்கு இங்கனம் இலக்கான எனக்கு
அவர் ஒப்பற இருந்தார்
நான் ஆரும் நிகரில்லாத நிலையை எய்தினேன்
இருந்தவர் அருளுவாரில் ஒப்பற்றவர்
இருக்கும் சிந்தை வாய்ந்த நான் அருள் பெருவாரில் நிகர் அற்றவன்–

குற்றங்களை குணமாக கொண்டு இருந்தான்-அருவருப்பு இன்றி-ஆனந்தமாய் -வீறு கொண்டு -மூன்றிலும் நிகர் இல்லை –
ஸூ பிரதிஷ்டராய்-.அவதாரம் பிரயோஜனம் இவருள் புகுந்ததால் தான் –உச்சி உளானே போல –
ராமானுஜர் திருவடி பெற்ற பின் விபூதி எல்லாம் புல் போல நினைப்பார்கள் -தேசிகன்-

அருளிச் செயல்களில் பரத்வாதி பஞ்சகம்
இறைஞ்சப்படும் பரன் ஈசன் அரங்கன் என்று இவ்வுலகத் தறம் செப்பும் அண்ணல் இராமானுசன்

மாயவனை மதுசூதனனை மாதவனை மறையோர்கள் ஏத்தும் ஆயர்கள் ஏற்றினை அச்சுதனை
அரங்கத்து அரவணைப் பள்ளியானை -4-10-10-பெரியாழ்வாரின் அறு சுவை அமுது இது-

விண் மீதிருப்பாய்! மலை மேல் நிற்பாய்! கடற் சேர்ப்பாய்!
மண் மீதுழல்வாய்! இவற்றுள் எங்கும் மறைந் துறைவாய்!
எண் மீதியன்ற புற அண்டத்தாய்! என தாவி
உண் மீதாடி உருக் காட்டாதே ஒளிப்பாயோ!–6-9-5-என்று

குன்றில் நின்று வான் இருந்து நீள் கடல் கிடந்தது மண்
ஓன்று சென்று அது ஒன்றை உண்டு ஓன்று இடந்து பன்றியாய்
நன்று சென்ற நாள் அவற்றுள் நல் உயிர் படைத்து அவர்க்கு
அன்று தேவு அமைத்து அளித்த வாதி தேவன் அல்லையே -ஸ்ரீ திருச்சந்த விருத்தம்-–48-

மாயவனை மதுசூதனனை மாதவனை மறையோர்கள் ஏத்தும்
ஆயர்கள் ஏற்றினை அச்சுதனை அரங்கத்து அரவணைப் பள்ளியானை
வேயர் புகழ் வில்லி புத்தூர் மன் விட்டு சித்தன் சொன்ன மாலை பத்தும்
தூய மனத்தனராகி வல்லார் தூ மணி வண்ணனுக்கு ஆளர் தாமே –ரீ பெரியாழ்வார் திருமொழி- 4-10 10-

மாயனை -மன்னு வட மதுரை மைந்தனை-
தூய பெருநீர் யமுனைத் துறைவனை –
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை –
தூயோமாய் வந்து நாம் தூ மலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்––ஸ்ரீ திருப்பாவை–5-

ஏக மூர்த்தி மூன்று மூர்த்தி நாலு மூர்த்தி நன்மை சேர்
போக மூர்த்தி புண்ணியத்தின் மூர்த்தி எண்ணில் மூர்த்தியாய்
நாக மூர்த்தி சயநமாய் நலம் கடல் கிடந்தது மேல்
ஆக மூர்த்தி யாய வண்ணம் என் கொல் ஆதி தேவனே –-ஸ்ரீ திருச்சந்த விருத்தம்–17-

உடம்புருவில் மூன்று ஒன்றாய் மூர்த்தி வேறாய்
உலகுய்ய நின்றானை அன்று பேய்ச்சி
விடம்பருகு வித்தகனைக் கன்று மேய்த்து
விளையாட வல்லானை வரை மீ கானில்
தடம்பருகு கருமுகிலைத் தஞ்சைக் கோயில்
தவ நெறிக்கோர் பெரு நெறியை வையம் காக்கும்
கடும்பரி மேல் கற்கியை நான் கண்டு கொண்டேன்
கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே –ஸ்ரீ பெரிய திருமொழி-2-5-3-

பெரியானை யமரர் தலைவற்கும் பிரமனுக்கும்
உரியானை உகந்தான் அவனுக்கும் உணர்வதனுக்கு
அரியானை அழுந்தூர் மறையோர்கள் அடி பணியும்
கரியானை அடியேன் கண்டு கொண்டு களித்தேனே -7-6-6-

மூவரில் முன் முதல்வன் முழங்கார் கடலுள் கிடந்து
பூவள ருந்தி தன்னுள் புவனம் படைத்து உண்டு உமிழ்ந்த
தேவர்கள் நாயகனைத் திரு மால் இருஞ்சோலை நின்ற
கோவலர் கோவிந்தனைக் கொடியேரிடை கூடுங்கொலோ–9-9-1-

பாயிரும் பரவை தன்னுள் பருவரை திரித்து வானோர்க்
காயிருந் தமுதம் கொண்ட வப்பனை யெம்பிரானை
வேயிருஞ்சோலை சூழ்ந்து விரி கதிரிரிய நின்ற
மாயிருஞ்சோலை மேய மைந்தனை வணங்கினேனே –திருக் குறும் தாண்டகம் –3-

நீரகத்தாய் நெடு வரையின் உச்சி மேலாய்
நிலாத் திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி
ஊரகத்தாய் ஒண் துறை நீர் வெக்கா வுள்ளாய்
உள்ளுவார் உள்ளத்தாய் யுலகமேத்தும்
காரகத்தாய் கார் வனாத்துள்ளாய் கள்வா
காமரு பூம் காவிரியின் தென்பால் மன்னு
பேரகத்தாய் பேராது என் நெஞ்சின் உள்ளாய்
பெருமான் உன் திருவடியே பேணினேனே –திரு நெடும் தாண்டகம்–8-

விண் மீதிருப்பாய்! மலை மேல் நிற்பாய்! கடற் சேர்ப்பாய்!
மண் மீதுழல்வாய்! இவற்றுள் எங்கும் மறைந் துறைவாய்!
எண் மீதியன்ற புற அண்டத்தாய்! என தாவி
உண் மீதாடி உருக் காட்டாதே ஒளிப்பாயோ!––ஸ்ரீ திருவாய் மொழி––6-9-5-

கொண்டல் வண்ணா குடக்கூத்தா வினையேன் கண்ணா கண்ணா -என்
அண்ட வாணா வென்று என்னை ஆளக் கூப்பிட்டு அழைத்தக்கால்
விண் தன் மேல் தான் மண் மேல் தான் விரி நீர்க் கடல் தான் மற்றுத் தான்
தொண்டனேன் உன் கழல் காண ஒரு நாள் வந்து தோன்றாயே–8-5-6-

மனத்துள்ளான் வேங்கடத்தான் மா கடலான் மற்றும்
நினைப்பரிய நீள் அரங்கதுள்ளான்-எனைப்பலரும்
தேவாதி தேவன் எனப்படுவான் முன்னொரு நாள்
மாவாய் பிளந்த மகன் —-இரண்டாம் திருவந்தாதி–28-

அத்தி யூரான் புள்ளை யூர்வான் அணி மணியின்
துத்தி சேர் நாகத்தின் மேல் துயில்வான் -முத்தீ
மறையாவான் மா கடல் நஞ்சுண்டான் தனக்கும்
இறையாவான் எங்கள் பிரான் –96-

சேர்ந்த திருமால் கடல் குடந்தை வேங்கடம்
நேர்ந்த வென் சிந்தை நிறை விசும்பும் -வாய்ந்த
மறை பாடகம் அனந்தன் வண்டுழாய்க் கண்ணி
இறைபாடி யாய இவை —மூன்றாம் திருவந்தாதி–30–

பாற் கடலும் வேங்கடமும் பாம்பும் பனி விசும்பும்
நூற் கடலும் நுண்ணூல தாமரை மேல் -பாற் பட்டு
இருந்தார் மனமும் இடமாகக் கொண்டான்
குருந்து ஒசித்த கோபாலகன் ——-32-

கல்லும் கனைகடலும் வைகுந்த வானாடும்
புல்லென்று ஒழிந்தன கொல் ஏ பாவம் வெல்ல
நெடியான் நிறம் கரியான் உள் புகுந்து நீங்கான்
அடியேனது உள்ளத்தகம்––பெரிய திருவந்தாதி–68-

கார் கலந்த மேனியான் கை கலந்த வாழியான்
பார்களந்த வல்வயிற்றான் பாம்பணையான் -சீர் கலந்த
சொல் நினைந்து போக்காரேல் சூழ் வினையின் ஆழ் துயரை
என்னினைந்து போக்குவார் இப்போது –86-

————-

என் தன் சிந்தை உள்ளே நிறைந்து ஒப்பற விருந்தான்-

போதில் கமல வன்னெஞ்சம் புகுந்து –பெரியாழ்வார் -5–2–8-என்றும் –
அரவிந்தப் பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து –5–2–10-என்றும்-

நேர்ந்த என் சிந்தை நிறை விசும்பு –பூதத்தார்—30-

என் ஆவியுள் புகுந்தது என் கொலோ எம்மீசனே –திருச்சந்த –4-

பொன் முடி அம் போர் ஏற்றை எம்மானை நால் தடந்தோள்
தன் முடிவு ஒன்று இல்லாத தண் துழாய் மாலையனை
என் முடிவு காணாதே என்னுள் கலந்தானைச்
சொன் முடிவு காணேன் நான்; சொல்லுவது என்? சொல்லீரே–2-5-8-

மாயப்பிரான் நேசத்தினால் நெஞ்ச நாடு குடி கொண்டான் –8–6–4-

கோயில் கொண்டான் அதனோடு என் நெஞ்சகம் -8–6–5-

இருத்தும் வியந்து என்னைத் தன் பொன்னடிக் கீழ் என்று
அருத்தித் தெனைத்தோர் பல நாள் அழைத்தேற்கு
பொருத்தமுடை வாமனன் தான் புகுந்து என்தன்
கருத்தை யுற வீற்றிருந்தான் கண்டு கொண்டே–8-7-1

அடியேன் உள்ளான் உடல் உள்ளான் அண்டத்தகத்தான் புறம் உள்ளான் –8–8–2-

———–

எனக்காரும் நிகர் இல்லையே-

எனக்கு ஆவார் ஆர் ஒருவரே எம்பெருமான்
தனக்காவான் தானே மற்று அல்லால் -புனக்காயா
வண்ணனே யுன்னைப் பிறர் அறியார் என் மதிக்கு
விண்ணெல்லாம் உண்டோ விலை -நான்முகன் –51-

நிர்ஹேதுக கடாக்ஷ பூதனான எனக்கு ஒப்பார் உண்டோ -நீ அருளிச் செய்த மயர்வற மதி நலத்துக்கும் ஒப்பு உண்டோ –
சரம ஸ்லோகத்தின் படியே புறம்புள்ள உபாயங்களை ருசி வாசனைகளோடே விட்டு ஒழிந்து உன்னையே பற்றி
நிர்ப்பரனாயும் நிர்ப்பயனாயும் உள்ளேனே
அநந்ய உபாயத்வ அத்யவசாயம் உடைய எனக்கு –ஸ்வ பிரயத்தனம் கொண்டு உன்னை
அடையப் பார்ர்க்கும் உலகோர் ஒப்பில்லை
சேஷத்வ பாரதந்தர்ய காஷ்டையில் நிற்கும் எனக்கு சேஷித்வ ரக்ஷகத்தில் நிற்கும் நீயும் ஒப்பில்லை-

எனக்காவார் ஆரோருவரே எம்பெருமான்
தனக்காவான் தானே மற்றல்லால் புனக்காயாம்
பூ மேனி காணப் பொதியவிழும் பூவைப் பூ
மா மேனி காட்டும் வரம் ——முதல் திருவந்தாதி–89-

நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பனை ஞாலத்தார்
தமக்கும் வானத் தவர்க்கும் பெருமானைத் தண் தாமரை
சுமக்கும் பாதப் பெருமானைச் சொல் மாலைகள் சொல்லுமாறு
அமைக்க வல்லேற்கு இனி யாவர் நிகர் அகல் வானத்தே?–4-5-8-

வானத்தும் வானத்துள் உம்பரும் மண்ணுள்ளும் மண்ணின் கீழ்த்
தானத்தும் எண் திசையும் தவிராது நின்றான் தனை,
கூனற் சங்கத் தடக்கை யவனை, குடமாடியை,
வானக் கோனைக் கவி சொல்ல வல்லேற்கு இனி மாறு உண்டோ?–4-5-9-

நிகரின்றி நின்ற வென் நீசதைக்கு நின்னருளின் கண் அன்றிப்
புகல் ஒன்றும் இல்லை அருட்கும் அக்தே புகல் புன்மையிலோர்
பகரும் பெருமை இராமானுச இனி நாம் பழுதே
யகலும் பொருள் என் பயன் இருவோருக்கும் ஆன பின்னே – இராமானுஜ நூற்றந்தாதி-48 —

————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .