ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –41-மண் மிசையோநிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவனே இத்யாதி —

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

இப்பாட்டில் ஸ்ரீ எம்பெருமானார் உபதேசத்தாலே லோகம் திருந்தின படியைக் கண்டு
ஸ்ரீ சர்வேஸ்வரன் அநேக அவதாரங்கள் பண்ணித் தன்னைக் கண்ணுக்கு இலக்கு ஆக்கின
அளவிலும் காண மாட்டாத லௌகிகர் எல்லாம்
ஸ்ரீ எம்பெருமானார் காலத்திலே யதாஜ்ஞானம் பிறந்து பகவதீயர் ஆனார்கள் என்கிறார் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை-

கீழ் பாட்டிலே ஸ்ரீ எம்பெருமானார் பண்ணின உபதேச வைபவத்தை சொல்லி –
இப்பாட்டிலே பூ லோகத்திலே-பிரகிருதி வச்யராய் இருக்கிற சேதனரை ரஷிக்கைக்காக ஸ்ரீ சர்வேஸ்வரன்
மனுஷ்ய திர்ய காத்யநேக தேக பரிக்ரகம்-பண்ணி எல்லாருக்கும் சுலபனாய் கண்ணுக்கு இலக்காய் நின்றாலும் –
இவன் சாது பரித்ராண அர்த்தமாக அவதரித்தான்-என்று அறிய மாட்டாத லௌகிகர்களே–
நமக்கு பிதாவான ஸ்ரீ எம்பெருமானார் அவதரித்த பின்பு அவர் ப்ரசாதத்தாலே-சம்யக் ஜ்ஞான நிஷ்டராய் –
ஸ்ரீ நாராயணனே நமக்கு சர்வ பிரகாரத்தாலும் வகுத்த சேஷி என்று தெளிந்து -அவனுக்கு
தங்களை சேஷமாக்கி வைத்தார்கள் என்று அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-

ஸ்ரீ எம்பெருமானார் செய்த உபதேசத்தாலே உலகம் திருந்தின படியைக் கண்டு
ஸ்ரீ திருமகள் கேள்வன்-பல அவதாரங்கள் புரிந்து கண்ணிற்கு இலக்காகி நிற்பினும்
கண் எடுத்துப் பார்க்க மாட்டாத உலகத்தவர் அனைவரும் –
ஸ்ரீ எம்பெருமானார் காலத்தில் மெய்யறிவு பிறந்து அவ்விறைவனை சார்ந்தவர்கள் ஆனார்கள் என்கிறார் –

திருத்தின வைபவம் –ஸ்ரீ ஆழ்வார் மனோ ரதித்தார் -பொலிக பொலிக பொலிக கலியும் கண்டு கொண்மின்–
ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ஆள வந்தார் ஆசை பட்டதை நடத்தி காட்டினார் ஸ்ரீ ஸ்வாமி –
அதை கொண்டாடுகிறார் ஸ்ரீ அமுதனார் இதில்
உபதேசம் முன்பு சொல்லி இதில் திருத்தின விதம் அருளுகிறார்

மண் மிசை யோநிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவனே
கண்ணுற நிற்கிலும் காணகில்லா உலகோர்கள் எல்லாம்
அண்ணல் இராமானுசன் வந்து தோன்றிய வப்பொழுதே
நண்ணரு ஞானம் தலைக் கொண்டு நாரணற்கு ஆயினரே – 41-

பத உரை –
மண் மிசை –பூமியிலே
யோநிகள் தோறும் -பிறப்புக்கள் தோறும்
பிறந்து -அவதாரம் செய்து
எங்கள்-எங்கள் உடைய
மாதவனே-திருமாலே
கண்ணுற -கண்ணிற்குப் புலனாக
நிற்கிலும் -நின்றாலும் கூட
காணகில்லா -கண்டு கொள்ள மாட்டாத
உலகோர்கள் எல்லாம் -உலகத்தவர் எல்லோரும்
அண்ணல்-ஸ்வாமியான
இராமானுசன் -ஸ்ரீ எம்பெருமானார்
வந்து தோன்றிய அப்பொழுதே -பிரசித்தி பெற்ற அக்காலத்திலேயே
நண்ணரும் -பெறலரிய
ஞானம் தலைக் கொண்டு -உண்மை அறிவு மிகுந்து
நாரணற்கு -ஸ்ரீ நாராயண னுக்கு
ஆயினர்-ஆளானார்கள்

வியாக்யானம் –
எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய் -திரு விருத்தம் – 1- என்கிறபடியே பூமியிலே
மனுஷ்ய திர்யகாதி யோநிகள் தோறும் அவதரித்து -நமக்கு நாதனான ஸ்ரீய பதியே
நமாம்ச சஷூ ரபி வீஷதேதம் -என்கிற தன்னைக் கண்ணுக்கு விஷயம் ஆக்கிக் கொண்டு நிற்கிலும் –
இவன் நமக்கு சேஷி என்று தர்சிக்க மாட்டாத லௌகிகர் எல்லாரும்
ஆஸ்ரிதருடைய இழவு பேறுகள் தம்மதாம் படியான -ஸ்வாமித்வ-ப்ராப்தியை உடையரான ஸ்ரீ எம்பெருமானார் வந்து –
பாஷ்ய கரணாதி களாலே பிரகாசரான அக்காலத்திலே -ஸ்வ யத்னத்தாலே
துஷ்ப்ராபமான ஜ்ஞானமானது அதிசயித்து –சகல சேதன அசேதனங்களும் பிரகாரமாக
தான் பிரகாரியாய் இருக்கையாலே ஸ்ரீ நாராயணா என்னும் திரு நாமத்தை உடையவனுக்கு-சேஷம் ஆனார்கள்
தோன்றல்-பிரகாசித்தல்
அதவா
தோன்றிய அப்பொழுதே -என்றது ஆவிர்பவித்த அப்பொழுதே என்னவுமாம்
அந்தப் பஷத்திலும் அப்பொழுதே என்றது அவதரித்து அருளின அக்காலத்திலே -என்றபடி
அல்லது தத் ஷணத்திலே என்ன ஒண்ணாது இறே
கண்ணுற நிற்க்கையாவது-சஷூர் விஷயமாக நிற்கை
ஞானம் தலைக் கொள்ளுகையாவது -ஞானம் அதிசயிக்கை-

ஸ்ரீ நாராயணன் என்று பேர் கொண்டவருக்கு ஆளாக்கினார் -இவனே பர ப்ரஹ்மம் என்று யார் என்று காட்டி அருளினார் –
ஸ்ரீ திரிபுரா தேவியார் வார்த்தை
அடியேன் -சொல்லாதார் இடத்தில் சொல்லாதே என்றாரே அந்த ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீ பெருமாள் இடமும் -கடல் அரசன் இடம் –

மண் மிசை யோநிகள் தோறும் பிறந்து
மாறி மாறி பல பிறப்பும் பிறந்த இச் சேதனரைப் போலே –
எந்நின்ற யோநியுமாய் பிறந்தாய் -என்கிறபடியே -மனுஷ்ய திர்யக் ஸ்தாவர ரூபங்களான பல யோநிகள் தோறும்-
ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ண ஸ்ரீ வராகாதி ரூபேண அவதரித்து –

எங்கள் மாதவனே –
இத்தனை நிஹிதமான யோநிகளில் புக்கது –
உங்களுடைய இழவைக் காண மாட்டாதே -பரம க்ருபையாலே இறே -உங்களை ரஷிக்கைக்காக என்றபடி –
மாதவனே –
கிருபா குணத்துக்கு உத்தம்பகை ஸ்ரீ பெரிய பிராட்டியார் ஆகையாலே அவளுடைய சேர்த்தியை ஸ்ம்ரிக்கிறார் –
லஷ்ம்யாம் சஹ ஹர்ஷீகேசாவ் தேவ்யா காருண்யா ரூபயா -ரஷகஸ் சர்வ சித்தாந்தே வேதான் தேஷு சகியதே -என்று
ஸ்ரீ ஈஸ்வரனுடைய ரஷணம் எல்லாம் ஸ்ரீ பெரிய பிராட்டியாரோடு கூடி ஆஸ்ரயிக்கப்படுகிறது ஆகையாலும் –
அவளும்-இந்த சேதனருடைய ரஷணத்துக்குகாகவே-
அகலகில்லேன் இறையும்-என்று சர்வதா அநபாயிநியாய் இருக்கையாலும்-அத்தைப் பற்றி –ஸ்ரீ மாதவன் –என்று அருளிச் செய்கிறார் –
அந்த ஸ்ரீ யாலே இட்டு கார்யம் கொள்ளுகை அன்றிக்கே-நேர் கொடு நேர் தானே-

மண் மிசை யோநிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவனே –
மாதவன்-ஸ்ரீ திரு மகள் கேள்வன்
மா -ஸ்ரீ இலக்குமி
தவன்-கணவன் -வட சொல் –
ஸ்ரீ மாதவன் பிறந்தான் உலகினரைக் காப்பதற்காக -பிறக்காமல் காப்பதற்காக தான் பிறந்தான் –
அங்கனம் பிறத்தற்கு ஹேது தான் மாதவனே இருத்தல் –
மா-
கருணா ரூபிணி யாதலின் -அவளால் தூண்டப்பட்ட கருனையடியாக அவன் பிறப்பு அமைந்தது -என்க –
நாதன்-
என்னும் உறவுமுறை பற்றி பிறந்தேயாக வேண்டியதாயிற்று என்பார்-எங்கள் மாதவன் -என்றார்.
எங்களுக்கு நாதனான மாதவன்-என்றபடி –
ஸ்ரீ மாதவனுடைய அரும் குணங்களை வெளிப்படுத்தும் பிறப்புக்கு தோற்ற –எங்கள் மாதவன் –என்கிறார் ஆகவுமாம்-
பிறப்பு இல்லாதவன் –மாதவன் -அவனே பிறந்தான் –
பிறப்புக்களும் ஒன்றா இரண்டா -அளவே இல்லாதன -அவன் பிறக்காத யோநிகள் இல்லை –
யோநிகள் தோறும் பிறந்தான் -தேவனாக ஸ்ரீ உபேந்த்ரனாக பிறந்தான் –
மானிடனாக -ஸ்ரீ ராமனாகவும் -ஸ்ரீ கண்ணனாகவும் பிறந்தான் –
விலங்கினமாக மீனாகவும் -ஆமையாகவும் -பிறந்தான்
தாவரமாக குள்ள மா மரமாய் பிறந்தான் –
எந்நின்ற யோனியுமாய் பிறந்தாய்– – திருவிருத்தம் -1 – என்றார் ஸ்ரீ நம் ஆழ்வாரும் .
அப்ராக்ருதனாய் இருந்தும் ப்ராக்ருதரைப் போலே இப் பிரகிருதி மண்டலத்திலே
விண்ணகத்தில் வந்து உபேந்த்ரனாய் தேவ யோனியில் பிறந்தது போதாதா –
அற்ப்பர்களான தேவர்களும் கால் பாவவும் அருவருக்கத் தக்க பூ லோகத்திலே வந்து பிறந்து நிற்கிறானே –என்னும் கருத்துடன் –
மண் மிசை-என்கிறார்-மாறி மாறி பல பிறப்பும் பிறந்து -திருவாய் மொழி -2-6 8- – என்றபடி
ஒரு சம்சாரி சேதனன் படும்பாடு படுகிறான் ஸ்ரீ மாதவன் –
அவ்வரும் பாட்டைத் திரு உள்ளத்திலே கொண்டு -பிறந்து -என்கிறார் –
இறைவனுக்கும் பிறத்தல் குற்றமாம் என்று கருதி -அவதாரங்களை தோற்றமாக கூறுவர் ஏனையோர் –
ஸ்ரீ அமுதனாரோ அருளடியாக பிறர்காகப் பிறத்தல் குற்றம் ஆகாது -நற்றமே யாம்-என்னும் கருத்துடன் –பிறந்து என்கிறார் –
ஒருத்தி மகனாய் பிறந்து -என்றாள் ஸ்ரீ ஆண்டாளும்
பிறந்தவாறும் -என்று ஈடுபட்டு மோஹித்தார் ஸ்ரீ நம் ஆழ்வார்

கண்ணுற நிற்கிலும் –
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் -என்கிறபடி சர்வ காலத்திலும்-சர்வ தேசத்திலும் -சர்வ பிரகாரத்தாலும் சர்வருடையவும் –
கண்ணுக்கு தன்னை விஷயமாக்கி கொண்டு நிற்கிலும் –
அபயம் சர்வ பூதேப்யோ ததாம் ஏதத் வரதம் –என்றும் –
மன்மநாபவ -மத்பக்தோ -மத்யாஜி -மாம் நமஸ்குரு –மாமைவேஷ்யசி -சத்யம்தே -ப்ரதிஜானோ ப்ரியோசிமே -என்றும் –
அஹம் த்வா சர்வ பாபேப்யோ-மோஷ இஷ்யாமி மாசுச -என்றும் –
அஹம் ஸ்மாராமி மத்பக்தம் நயாமி பரமாம்கதிம் -என்றும் –
இப்படி உபதேசித்து -படாதன பட்டு -தூத்ய சாரத்யங்களைப் பண்ணினாலும் –

கண்ணுற –எல்லாம்-
கட்கிலீ எனப்படும் அவன் ஸ்ரீ மாதவன்
கட் கண்ணால் காணாத தன் உருவத்தைத் காட்டினும் உலகத்தவர் காண முடியாதவர் ஆயினர் –
கட்கிலி தன் தன்மை மாறிக் கண்ணுற நிற்பினும் உலகத்தவர் தம் தன்மை மாறாது காண கில்லாதாராயே-இருக்கின்றனர் –

மாதவனே கண்ணுற நிற்கிலும்
எல்லாம் வல்ல ஸ்ரீ திரு மாலே தன்னைக் காட்ட முயலினும் பயன்படாத வியப்பு தோற்றுகிறது –
நிற்கிலும் –
சிறுது காலம் கண்ணுரும்படி ஆகி மறைந்தான் அல்லன் –
பதினோராயிரம் ஆண்டுகள் இந்நில உலகிலே ஷூத்ரர்களான சம்சாரிகளோடு
அருவருப்பின்றி – பழகி -தன் இடமான பரம பதத்தைப் பற்றி நினைவுஊட்ட வேண்டும்படி –
பிறந்து வைகினும் பயன் உறாமல் போயிற்றே என்கிறார் –

மண் மிசை நெடும் காலம் கண்ணுற நிற்றலின் மாதவனது எல்லை இல்லாத சௌசீல்ய குணம்-புலன் ஆகின்றது –
இங்கு ஸ்ரீ ஆழ்வான் அருளிச் செய்த –
சீல க ஏஷ தவ ஹந்த தயைகசிந்தோ ஷூத்ரே ப்ருதக் ஜநபதே ஜகதண்ட மத்யே
ஷோதீய சோபிஹி ஜனச்ய க்ருதே க்ருதீத்வ மத்ராவதீர்யா நனு லோசன கொசரோ பூ –அதி மானுஷ ஸ்தவம் -10 – என்று
அருளே நிறைந்த கடலே -நீ செய்ய வேண்டியவை அனைத்தும் செய்து முடித்து இருந்தும் –உலக அண்டத்திற்கு இடையே
சிறிதான பாமர மக்கள் குடி இருக்கும் இடத்தில்
மிகவும் அற்பர்களாகிய மக்களுக்காக இங்கே அவதரித்து கண்களுக்கு புலன் ஆயினை அன்றோ-
உனது சௌசீல்யம் குணத்தை என் என்பது -என்ற ஸ்லோகம் அனுசந்திக்க தக்கது

அளிப்பதற்கு ஸ்ரீ பிராட்டி கூட இருப்பது -இன்றியமையாதது யாதலின் –
உயிர் அளிப்பான் எந்நின்ற யோனியுமாய்-பிறக்கும் ஸ்ரீ இறைவன் ஸ்ரீ பிராட்டி யோடே அவதரிக்கிறான் -என்பது தோன்ற –
மாதவன் பிறந்து -என்றார்.
ராகவத்வே பவத் சீதா ருக்மிணீ கிருஷ்ண ஜன்மனி
அன்யேஷ சாவதாறேஷூ விஷ்ணு ரெஸா நபாயிநீ -விஷ்ணு புராண ஸ்லோகம்-என்று
இறைவன் ஸ்ரீ ராமனான போது -ஸ்ரீ சீதை யானாள்-ஸ்ரீ கிருஷ்ணனாய் பிறந்த போது ஸ்ரீ ருக்மிணி யானாள் –
மற்றைய அவதாரங்களிலும் ஸ்ரீ விஷ்ணுவை விடு கிலள்-

உலகினருக்கு தன்னைக் காட்டி அறிவு ஊட்டி அவர்களை ஆஸ்ரயிக்கும்படி செய்து உய்விப்பதற்கு ஆகப் பிறக்கிறான் ஸ்ரீ மாதவன் –
அப்பொழுது ஆஸ்ரயிப்பதற்கு உறுப்பான குணங்கள் ஸ்ரீ மாதவன் இடம் மிளிருகின்றன –
அவையாவன -வாத்சல்யம்-ஸ்வாமித்வம்-சௌசீல்யம் சௌலப்யம் என்பன
இவை அனைத்தும் பிறந்த மாதவன் இடம் பிறங்குவதை இங்கு அமைத்த சொல் தொடரில்
ஸ்ரீ அமுதனார் காட்டும் அழகு கண்டு கழிக்க தக்கதாய் உள்ளது
மண் மிசை பிறந்து -என்றமையால் வாத்சல்யம் தோன்றுகிறது-வாத்சல்யமாவது குற்றத்தையும் நற்றமாகக் கொள்ளுதல்
எங்கள் மாதவன்-என்றமையால் ஸ்வாமித்வம் தோற்றுகிறது-ஸ்வாமித்வமாவது உடைமைக்கு உரியனாய் இருத்தல்
நிற்கிலும் -என்பதால் சௌசீல்யம் தோற்றுகிறது – சௌசீல்யம் ஆவது மிகத் தாழ்வு உடையரோடு வேறுபாடு இன்றி பழகுதல்
கண்ணுற -என்றமையால் சௌலப்யம் தோற்றுகிறது சௌலப்யம் ஆவது கண்ணுக்கு புலனாய் தோற்றுதல்

காணகில்லா –
அவஜானந்தி மாம் மூடா மானுஷீம் தநும் ஆஸ்ரிதம் -பரம்பாவமஜானந்த மமபூதமகேச்வரம் -என்கிறபடியே
இவன் வகுத்த சேஷி என்று அறிய மாட்டாதே -நமாம் ஸா சஷூ ரபிவீஷதேதம் -என்னும்படியான அவனுடைய ஸ்வரூபம்
அவதரித்த இடத்திலும் அப்படியே யாய்த் தலை காட்டிற்று காணும் –
நதுமாம் சஷ்ய சேத்ரஷ்டும நே நை வஸ்வ சஷூஷா-நாஹம் வேதைர் நதபசா நதா நே ந சேஜ்யயா-
சக்ய ஏவம் விதோத் த்ரஷ்டும் -என்று அவதாரத்திலும் அவன் அப்படி-அருளிச் செய்தான் இறே –
கண்கள் காண்டற்கு அரியனாய் -என்றார் இறே ஸ்ரீ ஆழ்வாரும் –
இப்படி நேர் கொடு நேரே-உபதேசித்தாலும் திருந்தாத பேரான

காணகில்லா
காண்டல்-நம்மை உய்விக்க வந்த இறைவன் என்று தெரிந்து கொள்ளுதல் –
கண்ணுற நிற்கிலும் காண கில்லாமைக்கு ஹேது இவ்வுலகில் உள்ளமை –
இருள் தருமமா ஞாலம் அன்றோ இது .
நம்மைப் போல் இவ்வுலகில் உள்ள ஒரு மனிதனே இவன் என்று பார்க்கின்றனரே அன்றி
இறைமையைச் சிறிதும் உணர்கிலர் என்றபடி –
அவஜானந்தி மாம்மூடா மாதுச்ஹீம் ததுமாஸ்ரிதம் பரம்பாவம் அஜா நந்த –என்று
மூடர்கள் மானிட வடிவம் கொண்ட என்னை பரமபுருஷனாய் இருக்கும்
தன்மையை உணராதவர்களாய் அவமதிக்கின்றனர் -என்று
மேல் எழுந்தவாறு பார்க்கின்றனரே யன்றி உள்ளடங்கிய இறைமையைக் காண இயலாதவர்கள்-உலகினர் -என்க –
அக்ரூர் மாலாகாரர் முதலிய சிலர் காணும் திறனையும் கொடுத்து தன்னையும்-இறைவன் காட்டக் கண்டனரே யன்றி
மற்ற உலகோர்கள் எல்லாம் காண கில்லாதாரே -என்க

உலகோர்கள் எல்லாம் –
லௌகிகர்கள் எல்லாரும் –

அண்ணல்-
சஹி வித்யா தஸ்தம்-ஜநயிதி தஸ் ஸ்ரேஷ்டம் ஜன்ம -என்கிறபடி
அஸ்ரேஷ்டமாய் இருக்கிற -ஜன்ம ப்ரத்வம்சி ஜென்மத்தை கொடுத்து இருக்கிற –
அன்றிக்கே
ஸ்வ ஆஸ்ரிதருடைய இழவு பேறுகள் தம் தாம் படியான ஸ்வாமித்வ ப்ராப்தியை உடைய வரான

இராமானுசன் –
ஸ்ரீ எம்பெருமானார் வந்து -லோகத்தை எல்லாம் ரஷிக்கைக்காக பரம பதத்தில் நின்றும் தீஷிதராய் வந்து-

தோன்றிய அப்பொழுதே –
அவதரித்த அக்காலத்திலே –
அன்றிக்கே –
வந்து தோன்றிய அப்பொழுதே –
அவதரித்து ஸ்ரீ பாஷ்ய கரணாதிகளாலே தத்வ ஹித புருஷார்த்தங்கள் பிரகாசகரான அக் காலத்திலேயே என்றுமாம்
தோன்றுதல் –
பிரகாசித்தல்

அண்ணல் தோன்றிய அப்பொழுதே
அண்ணல்-ஸ்வாமி
அடியார்களுடைய இழவு பேறுகளை தம்மதாகக் கொள்பவர் -என்றபடி
தோன்றிய அப்பொழுதே –
ஸ்ரீ பாஷ்யம் முதலிய நூல்கள் இயற்றி பிரசித்து பெற்ற வுடனேயே என்றபடி-
தோன்றுதல்-
பிரகாசித்தல்
இனி
தோன்றுதல்-
அவதரித்தலுமாம்-
இப்பொழுது அவதரித்த வுடனே என்ன ஒண்ணாது
அவதரித்த காலத்திலே என்ன வேண்டும் .

ஸ்ரீ மாதவன் அவதாரத்தை –பிறந்து -என்றார்-சம்சாரிகள் போலப் பயன் பெறாமையின் –
ஸ்ரீ அண்ணல் அவதாரத்தை தோன்றி என்றார் பயன் பெற்றமை பற்றி –
பிறவாத நிலையில் போலத் தனியாகவே மீள வேண்டி இருந்தமையின் பயன் அற்றுப் போனமை காண்க –

நண்ணரு ஞானம் தலைக் கொண்டு –
ஜ்ஞானம் தலைக் கொள்ளுகையாவது -ஜ்ஞானம் அதிசயிக்கை –
சர்வ விலஷணமாய் ஸ்வ யத்னத்தாலே -ப்ராபிக்க வரிதான சம்பந்த ஜ்ஞானம் அதிசயித்தது -என்றபடி –

நண்ணரு ஞானம் தலைக் கொண்டு-
காண கில்லார் பெருவதாதலின் ஞானம் நண்ணரிய தாயிற்று –
தன் முயற்சியாலும் ஸ்ரீ மாதவன் முயற்சியாலும் பெறற்கு அரியதாய் –ஸ்ரீ எம்பெருமானார் அருளால் மட்டும் பெறப்படுவதாதலின்
நண்ணரு ஞானம் என்கிறார்.
பெற்ற ஞானம் இனிப் பெறாது மேலோங்கி நிலை நிற்கும் என்பார் –தலைக் கொண்டு –என்றார் –
தலைக் கொள்ளுதல்-அதிசயித்தல்
ஞானம் தலை கொண்டு-வளர்ந்து கொண்டே

நாரணற்கு ஆயினரே
மாதா பிதா ப்ராதா நிவாசாஸ் சரணம் சூக்ருதத் -என்றும் –
சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் –நன் மக்களும் மேலேத் தாய் தந்தையும் அவரே -என்றும் சொல்லுகிறபடியே –
1–சர்வ வித பந்துவாய் -அந்தர் பஹிஸ்ஸ தத் சர்வம் வ்யாப்ய – என்றும் –
2-கரந்து எங்கும் பரந்து உளன் -என்றும் சொல்லுகிறபடி – அந்தர் பஹிஸ்ஸ ஸ்வபாவனாய் –
யஸ் யாத்மா சரீரம் -ஏஷ சர்வ பூதாந்தராத்மா அபகதபாப்மா திவ்யா தேவ ஏக -என்றும்-
தான் ஓருருவே தனி வித்தாய் தன்னில் மூவர் முதலாய வானோர் பலரும் முனிவரும் மற்றும் மற்றும் முற்றுமாய் – என்றும்
சொல்லுகிறபடியே –
3-சகல சேதன அசேதனங்களும் பிரகாரமாய் –தான் பிரகாரி யாய் கொண்டு இருக்கிற நாராயணனுக்கே சேஷ பூதர் ஆனார்கள் —
திரு மந்திர த்வய நிஷ்டர்கள் ஆனார்கள் என்றது ஆய்த்து –

நாரணற்கு ஆயினர் –
பொருள் அனைத்தையும் உட் புக்கு நியமிப்பது பற்றி-நாராயணன் -என்று திரு நாமம் அமைந்தது –
ஸ்ரீ நாராயணன் என்பது ஸ்ரீ நாரணன் என்று மருவி நின்றது .
உட் புக்கு நியமிப்பது ஆத்மா ..அங்கன் நியமிக்கப் படுவது உடல் –
உடல் ஆத்மாவுக்கு போல -பரமாத்மாவுக்குப் பொருள் அனைத்தும் உபயோகப்பட்டு சிறப்பு உறுதல் இயல்பு
அங்கனம் சிறப்பித்தல் சேஷத்வம் எனப்படும் .அதனை உணர்த்தற்கே மாதவன் யோனிகள் தோறும் பிறந்தான் –
ஆனால் பயன் இல்லை –
ஸ்ரீ எம்பெருமானார் தோன்றியதும் உலகோர்கள் எல்லாம் தன் சேஷத்வத்தை உணர்ந்து சிறப்பு உறுத்தப்பட வேண்டிய
ஸ்ரீ நாராயண னுக்கு ஆளாகி விட்டனர் -என்றபடி –

யதா ஞானம் பிறந்து -மறந்த உறவை காட்டினார்..
அம் பொன் அரங்கர்க்கும் ஆவிக்கும் உள்ள சம்பந்தம் காட்டினார்

ஸ்ரீ நாரணன் யோநிகள் தோறும் பிறந்தும் பயன் இல்லை –
ஸ்ரீ எம்பெருமானார் ஒரு கால் தோன்றிய வுடனேயே பயன் பெற்று அமைவதாயிற்று –
ஸ்ரீ பிராட்டியும் ஸ்ரீ பெருமாளும் சேர்ந்து இருவரும் பல கால் பிறந்தும் பயனில்லை
ஸ்ரீ எம்பெருமானார் தனியே ஒரு கால் தோன்றிய அப்பொழுதே பயன் மிக்கது .
ஸ்ரீ மாதவனால் கையால் ஆகாது விடப் பட்டவர்களை எல்லாம் ஸ்ரீ எம்பெருமானார் கை கொடுத்து-எடுத்துக் காத்து விட்டார் -என்றது ஆயிற்று .

சம்பந்த ஞானம் ..நாரணர்க்கு –சர்வ வித பந்து /வியாபகன் /அந்தர்யாமி /சரீர ஆத்மா பாவம் /முழு முதல் காரணம் /பிரகார பிரகாரி பாவம்
தனி வித்தாய் .மூவரில் முதலாக ..முற்றும் முற்றும் மற்றும்–இது தான் நல்ல அரும் ஞானம் /
திரு மந்த்ரத்தில் வளர்ந்து-சம்பந்தம் தெரிந்து – துவயத்தில் வளர்ந்து -அனுஷ்டானம்-சரம ஸ்லோகம்-
மந்த்ரம் – -விதி -இரண்டையும் அறிந்து த்வய அனுஷ்டானம் -சரம ஸ்லோகத்தில் நாராயணன் வியக்தம் இல்லையே –…
பல யோனிகள் மிதுனத்துடன் பிறந்தான் தோன்றினான்-
இவர் தனியாக ஒரு தடவை ..ஆள் ஆக்கினரே அனைவரையும்..

எளிவரும் இயல்வினன் நிலை வரம்பு இல பல பிறப்பாய்
ஒளிவரும் முழுநலம் முதல் இல கேடு இல வீடாம்
தெளிதரு நிலைமை யது ஒழிவிலன் முழுவதும் இறையோன்
அளிவரு மருளினோடு அகத்தனன் புறத்தனன் அமைந்தே–1-3-2-

சன்மம் பல பல செய்து வெளிப்பட்டுச் சங்கொடு சக்கரம் வில்
ஒண்மை யுடைய உலக்கை ஒள் வாள் தண்டு கொண்டு புள் ஊர்ந்து உலகில்
வன்மை உடைய அரக்கர் அசுரரை மாளப் படை பொருத
நன்மை உடையவன் சீர் பரவப் பெற்ற நான் ஓர் குறைவு இலனே–3-10-1-

பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும்
இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை உயிர் அளிப்பான்
எந்நின்ற யோனியுமாய்ப்ப் பிறந்தாய் இமையோர் தலைவா
மெய்ந்நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே –1-

பல / தசாவதார பாசுரங்கள் –

தேவுடை மீனாய் ஆமையாய் ஏனமாய் அரியாய்க் குறளாய் மூவுருவில் இராமனாய்க் கண்ணனாய்க் கற்கியாய் –பெரியாழ்வார் -4-9-9-

அம்புலாவும் மீனுமாகி ஆமையாகி ஆழியார் தம்பிரானுமாகி மிக்க தன்பு மிக்கதன்றியும்
கொம்பராவு நுண் மருங்குல் ஆயர் மாதர் பிள்ளையாய் எம்பிரானுமாய வண்ணம் என் கொலோ எம்மீசனே – திருச்சந்த விருத்தம் -35-

அன்னமும் மீனும் ஆமையும் அரியுமாய எம்மாயனே அருளாய்–பெரிய திருமொழி -2-7-10-

கெண்டையும் குறளும் புள்ளும் கேழலும் அரியும் மாவும் அண்டமும் சுடரும்
அல்லாவற்றாலுமாய வெந்தை –திரு மணிக் கூடத்தான் -4-5-6-

ஏன மீன் ஆமையோடு அரியும் சிறு குறளுமாய் தானுமாய தரணித் தலைவன் இடம் –தென்னரங்கமே -5-4-8-

பன்றியாய் மீனாகி யரியாய்ப் பாரைப் படைத்துக் காத்து உண்டு உமிழ்ந்த பரமன் தன்னை -7-8-10-

நீர் மலிகின்றதோர் மீனாய் ஓர் ஆமையுமாய் சீர் மலிகின்றதோர் சிங்க யுருவாய்
கார்மலி வண்ணன் கண்ணபுரத் தெம்பெருமான் -8-4-4-

வாமனன் கற்கி மதுசூதன் மாதவன் தார் மன்னு தாசரதியாய தட மார்வன்
காமன் தாதை கண்ணபுரத்து எம்பெருமான் -8-4-7-

ஆமையாகி யரியாகி அன்னமாகி அந்தணர் தம் ஓமமாகி யூழியாகி உவரி சூழ்ந்த நெடும் புணரி சேம மதிள் சூழ்
இலங்கைக் கோன் சிரமும் கரமும் துணித்து முன் காமன் பயந்தான் கருதுமூர் கண்ணபுரம் நாம் தொழுதுமே -8–6-5-

மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் முன்னும் இராமனாய்த் தானாய் பின்னும் இராமனாய்த் தாமோதரனாய்
கற்கியுமானான் தன்னை கண்ணபுரத்து அடியான்
கலியன் ஓலி செய்த தேனாரின் சொல் தமிழ் மாலை செப்பப் பாவம் நில்லாவே -8-8-10-

அன்னமும் கேழலும் மீனுமாய ஆதியை நாகை அழகியாரை -9-2-10-

மானிட சாதியில் தான் பிறந்து தனக்கு வேண்டுருக் கொண்டு தான் தான சீற்றத்தினை முடிக்கும்
புனத்துழாய் முடி மாலை மார்பன் என்னப்பன் தன் மாயங்கள் நினைக்கும் நெஞ்சுடையேன் -6-4-7-

அமைவுடை நாரணன் மாயையை அறிபவர் யாரே -திருவாய் மொழி-1-3-3-

தோற்றோம் மட நெஞ்சே எம்பெருமான் நாரணற்கு -2-1-7-

நாட்டில் பிறந்தவர் நாரணற்கு ஆளன்றி ஆவரோ -7-5-2-

மயர்வற மதி நலம் அருளினன் என்கிறபடியே நிர்ஹேதுக பகவத் கடாஷத்தாலே
சமதிகத சமஸ்த வஸ்து வாஸ்தவரான ஆழ்வார்கள் எல்லாரும் விரும்பினார்கள் –
இதர மந்த்ரங்களை அநாதாரித்து இத்தையே தம் தாமுக்கு தஞ்சமாக அனுசந்தித்து –
உபதேச வேளையிலும் தம் தாமை வண் புகழ் நாரணன் -1-2-10
செல்வ நாரணன் -1-10-8
என்று தொடங்கி
வாழ் புகழ் நாரணன் –10-9-1-
என்று முடிவாக ஆதி மத்திய அவசானமாக ஸ்ரீ நம் ஆழ்வார் அருளிச் செய்கையாலும் –

நாடு நகரமும் நன்கு அறிய நமோ நாராயணா -திரு பல்லாண்டு -4-என்று தொடங்கி
ஓவாதே நமோ நாரணா என்பன்–பெரிய ஆழ்வார் திரு மொழி -5-1-3-என்று ஸ்ரீ பெரிய ஆழ்வாரும் –

நாத் தழும்பு எழ நாரணா-பெருமாள் திரு மொழி-2-4-
நலம் திகழ் நாரணன் –பெருமாள் திரு மொழி–10-1-என்று ஸ்ரீ பெருமாளும் –

நான்முகனை நாராயணன் படைத்தான் -என்று தொடங்கி
எட்டு எழுத்தும் ஓதுவார்கள் வல்லர் வானம் ஆளவே -திரு சந்த விருத்தம் -77-என்று ஸ்ரீ திரு மழிசைப் பிரானும்

நான் கண்டு கொண்டேன நாராயணா என்று ஒரு கால் போலே ஒன்பதின் கால் சொல்லி நாரயாணாவோ
மணி வண்ணா நாகணையாய் வாராய் -என்று ஸ்ரீ திரு மங்கை ஆழ்வாரும்
உபக்ரமத்தொடு உபசம்காரத்தொடு வாசி அற அருளிச் செய்கையாலும் –

நன்மாலை கொண்டு நமோ நாரணா என்னும் சொல் மாலை கற்றேன் –57-என்றும்
நாரணா என்று ஓவாது உரைக்கும் உரை உண்டே -95-என்றும் –
ஞான சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு-1-
நாரணன் தன நாமங்கள் 2-2-
பகல் கண்டேன் நாரணனை கண்டேன் -2-81-என்றும்
நாமம் பல சொல்லி நாராயணா -என்று-3-8- ஸ்ரீ முதல் ஆழ்வார்களும் அருளிச் செய்கையாலும்

மயர்வற மதி நலம் அருளினன் என்கிறபடியே நிர்ஹேதுக பகவத் கடாஷத்தாலே
சமதிகத சமஸ்த வஸ்து வாஸ்தவரான ஆழ்வார்கள் எல்லாரும் விரும்பினார்கள் –
இதர மந்த்ரங்களை அநாதாரித்து இத்தையே தம் தாமுக்கு தஞ்சமாக அனுசந்தித்து –
உபதேச வேளையிலும் தம் தாமைப் பற்றினவர்களுக்கும் இத்தையே உஜ்ஜீவன ஹேதுவாக
உபதேசித்து போருகையாலே அவ ஆழ்வார்களை பின் சென்ற ஆச்சார்யர்கள் எல்லாரும் விரும்பினார்கள் -என்கை-
இத்தால் மந்த்ராந்த்ரங்களில் காட்டில் இம் மந்த்ரத்துக்கு உண்டான வைபவம் சொல்லிற்று ஆய்த்து-

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading