Archive for April, 2020

ஸ்ரீ யதிராஜ விம்சதி – தனியன்-ஸூத்த சத்வம் ஸ்ரீ தொட்டாசார்யா ஸ்வாமிகள் வியாக்யானம்–

April 28, 2020

ஸ்ரீ மத் ராமானுஜ சரணவ் சரணம் ப்ரபத்யே -விளக்கம் யதிராஜ விம்சதி
ஸ்ரீ மதே ராமாநுஜாய நம -விளக்கமே ஆர்த்தி பிரபந்தம்

பிரபன்ன ஜன கூடஸ்தர் நம்மாழ்வாரும் சரம குருவான நமது பெரிய ஜீயரும் ஆழ்வார் திருநகரியிலே திரு அவதாரம்
அதே வைகாசி விசாகம் -திருவாய் மொழிப்பிள்ளை குந்திநகர் திரு அவதாரம் -திருமலை ஆழ்வார் இயல் பெயர்
எந்தை திருவாய் மொழிப் பிள்ளை இன்னருளால்
வந்த வுபதேச மார்க்கத்தைச் -சிந்தை செய்து
பின்னவரும் கற்க வுபதேசமாய்ப் பேசுகின்றேன்
மன்னிய சீர் வெண்பாவில் வைத்து –1-மோக்ஷ உபாயம் -உய்ய ஒரே வழி உடையவர் திருவடியே
இந்த யுபதேச ரத்ன மாலை தன்னைச்
சிந்தை தன்னில் நாளும் சிந்திப்பார் -எந்தை
எதிராசர் இன்னருளுக்கு என்றும் இலக்காகிச்
சதிராக வாழ்ந்திடுவர் தாம் ———73-

ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளையே சேஷி உபாயம் பிராப்யம்  என்று -அவர் உத்தாரக ஆசார்யர் –
க்ருபா மாத்திர பிரசன்னாச்சார்யர் ஸ்ரீ உடையவர் திருவடிகளைக் காட்டிக் கொடுத்து அருள
ஸ்ரீ மத் யதீந்திர தவ திவ்ய பதாப்ஜ சேவாம்-ஸ்ரீ சைல நாத கருணா -பரிணாமத்தாம் -என்றும்

தேசம் திகழும் திரு வாய் மொழிப் பிள்ளை மாசில் திருமலை யாழ்வார் என்னை
நேசத்தால் இப்படி எண்ணி நின் பால் சேர்த்தார் எதிராசா -ஆர்த்திப்பிரபந்தம்-என்றும்

தாமே அருளிச் செய்த படி தஞ்சமாக காட்டிக் கொடுத்த ஸ்ரீ உடையவர் மேலே அதிக பிராபண்யம் மிக்கு
ஸ்ரீ யதிராஜ விம்சதி அருளிச் செய்தார் –

வல்லார்கள் வாழ்த்தும் குருகேசர் தம்மை மனத்து வைத்து
சொல்லார வாழ்த்தும் மணவாள மா முனி தொண்டர் குழாம்
எல்லாம் தழைக்க எதிராச விம்சதி ஈன்றளித்தோன்
புல்லார விந்தத் திருத் தாள் இரண்டையும் போற்று நெஞ்சே -என்று அங்கே இருந்த முதலிகள் அனுசந்தித்தார்கள்

ஸ்ரீரகஸ்ய த்ரயம் (திருமந்திரம் -8-த்வயம் 25 சரமஸ்லோகம் 32 )-65 அஷரங்கள் என்பதால் ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் 65 ஸ்லோகங்கள் அருளிச் செய்தது போல்
அதில் உள்ள 20 பதங்கள் என்பதால் 20 ஸ்லோகங்கள் கொண்டு ஸ்ரீ மணவாள மா முனிகள் இந்த பிரபந்தம் அருளிச் செய்து அருளினார் –ஆளவந்தார் பிரதமபர்வத்தில்
இவரோ சரம பர்வத்தில் 

———-

யத் உதிதா யதி பூபதி விம்சதிஸ் ஸமவதீரித ஸீது ஸூதா ரஸா
விசத யத் யகிலம் பவி நாம் ஹிதம் வர முனிஸ் ச தநோது ஸூபாநி ந –ஸ்ரீ பிரதி வாத பயங்கர அண்ணா ஸ்வாமிகள் அருளிச் செய்த ஸ்ரீ வர வர முனி சதகம் -81-

எவரால் அருளிச் செய்யப் பட்டதும் -இனிமையில் தேன் அம்ருதம் இவற்றைத் தோற்கடிப்பதுமான
யதிராஜ விம்சதி என்ற ஸ்தோத்ரம் சம்சாரிகளுக்கு ஓன்று விடாமல் எல்லா நன்மைகளையும்
தெளிவு படுத்துகிறதோ அந்த மா முனிகள் நமக்கு மங்களங்களை வளர்த்து அருளட்டும் –

——————-

மஹா யோகீ வக்தா அநிதர குண சாமான்ய மஹிமா
ச து ஸ்துத்ய ஸ்ரீ மான் அமித குண பூமா யதிபதி
அதோ நிஸ் துல்யா யா யதி நரபதேர் விம்சதி ரிதி
வியவஸ் யந்தஸ் சந்த கலி மிஹ ஜயந்த் யுஜ்ஜ்வலதி ய–82-

யதிராஜ விம்சதியை இயற்றி அருளிய மா முனிகள் மற்றவர்களுக்குப் பொருந்தாத மஹிமை மிக்க
குணங்களை உடையவர் ஆவார் –
ஸ்துதிக்கு விஷயமாக இருப்பவரோ பிராட்டியின் கிருபையைப் பெற்றவரும் அளவற்ற குணங்களுக்கு இருப்பிடமானவரும்
யதிகளுக்கும் ஸ்வாமியுமான -உத்தாரக ஆச்சார்யரான -எம்பெருமானார் –
ஆகையால் இந்த யதிராஜ விம்சதி ஒப்பற்றது என்று உறுதி கொண்ட ஒளி மிக்க ஸ்ரீ யை உடைய
விலக்ஷண அதிகாரிகள் இங்கு கலியை வெல்கிறார்கள் –

————-

த்ராஷாமதி ஷிபதி நிந்ததி மாகரந்த தாராம் ஸூதா ரஸ
ஜரீ மதரீ கரோதி யத் ஸம் ப்ரணீத மது லம் யதி ஸார்வ பவ்ம
ஸ்தோத்ரம் ச மே வர முனிர் வித நோ து பத்ரம் –83-

எந்த மா முனிகள் அருளிச் செய்த ஒப்பற்ற யதிராஜா விம்சதியானது த்ராக்ஷையைத் தோற்படிப்பதாய்
தேன் தாரையைப் பழிப்பதாய் அம்ருத ரஸ ப்ரவாஹத்தை தாழ்வுறச் செய்கிறதாய்
நன்கு அருளிச் செய்யப் பட்டதோ அந்த யதீந்த்ர ப்ரவணரான மா முனிகள்
அடியேனுக்கு அருளத் திரு உள்ளம் பற்ற வேண்டும் –

————-

ஸ்ரீ மத் ரெங்க ஸூதாபிதா நக ஸூத் யர்த்த அநு சந்த உஜ்ஜ்வலா
கோதா உதார வச ப்ரதர்ஸித குரு உபாயத்வ நிஷ்ட ஆஸ்ரயா
யத் ஸூக்திர் யதிராஜ விம்சதி நுதி வேதாந்த ஸிந்தோஸ் ஸூதா
ஸ்ரீ மத் ரம்ய வராய ஸம்யமவதாம் நாதாய தஸ்மை நம –84-

திருவரங்கத்து அமுதனார் என்னும் திரு நாமத்தை உடைய கவியினுடைய ராமானுஜ நூற்று அந்தாதியின்
அர்த்தத்தை அனுசந்தித்த சிறப்பை உடைத்தாய்
ஸ்ரீ கோதா தேவியின் உதார வாக்கான நாச்சியார் திரு மொழியில் காட்டி அருளப் பெற்ற
ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் என்ற நிஷ்டையை ஏற்பதாய் -வேதாந்த பாற் கடலில் இருந்து
கடைந்து எடுத்த அமுதம் போன்றதாய் விளங்கும் யதிராஜ விம்சதி என்னும் ஸ்தோத்ர கிரந்தம் அருளிச் செய்து
அருளிய இந்த்ரியங்களில் அடக்கியவர்களில் ஸ்ரேஷ்டரான அந்த மா முனிகளுக்கு நமஸ்காரம் –
அடியேனுடைய ப்ரணாமங்களை சமர்ப்பிக்கிறேன் –

————–

திருமழிசை அண்ணா அப்பங்கார் ஸ்வாமிகளும் (ஆனி௴, அவிட்டம் 1766 – 1817)சமஸ்க்ருத வியாக்யானம் செய்துள்ளார்

———-

ய ஸ்துதிம் யதிபதி பிரசாதிதீம் வ்யாஜஹார யதிராஜ விம்சதிம்
தம் பிரபன்ன ஜன சாதகாம்புதம் தௌமி சௌம்ய வர யோகி புங்கவம் –ஸ்ரீ எறும்பியப்பா அருளிச் செய்த தனியன்

ய-
யதிவர தத்த்வ விதே …-ஸ்ரீ வரவரமுனி சதகம் -3-என்றும் –
கருணைக சிந்தோ –ஸ்ரீ வரவர முனி சதகம் -100-என்றும் சொல்லுகிறபடியே
ஸ்ரீ எம்பெருமானாருடைய அவதார விசேஷமாகவும் -அவர் தம்முடைய யாதாம்ய தர்சியாகவும் தயாம்பு ராசியாகவும்
பிரசித்தரான யாதொரு ஸ்ரீ மணவாள மா முனிகள்
யச்சப்தம் பிரசித்த பராமர்சி இறே-

(குணமணி நிதயே நமோ நமஸ்தே
குருகுல துர்ய நமோ நமோ நமஸ்தே |
வரவரமுநயே நமோ நமஸ்தே
யதிவர தத்வ விதே நமோ நமஸ்தே || 3

(சிறந்த குணங்களுக்கு நிதியாக இருப்பவரின் பொருட்டு வணக்கம். ஆசார்யர்களில் சிறந்தவரே உமக்கு வணக்கம்.
மணவாள மாமுனிகளே உமக்கு வணக்கம். யதிராஜரின் திருவுள்ளம் அறிந்தவரே உமக்கு வணக்கம்.)

யன்மூலமாஸ்வயுஜமாஸ்யவதார மூலம் |
காந்தோ பயந்த்ரு யமிந:கருணைக ஸிந்தோ: ||
ஆஸீத ஸத்ஸுகணிதஸ்ய மமாபி ஸத்தா மூலம் |
ததேவ ஜகதப்யுதயைக மூலம் || 101

கருணைக் கடலான ஸ்ரீ மணவாள மாமுனிகளுக்கு ஐப்பசி மாதத்தில்
எந்த மூலம் அவதாரத் திருநக்ஷத்ரம் ஆகிறதோ –
அஸத் என்பவைகளில் கணக்கிடப்பட்ட எனக்கு ஸத்தைக்கு அதுவே காரணமாக ஆயிற்று,
அதுவே ஜகத்துக்கு க்ஷேம காரணமாகவும் ஆகிறது)

யதிபதி பிரசாதிதீம்
யதிதாம் பதி -யத்பதி / யதிபதே பிரசாத அஸ்யாம்-அஸ்தீதி-யதிபதி பிரசாதிதீம் என்ற வ்யுத்பத்தியாய் –
ஜிதேந்த்ரியர்களுக்கு உத்தர உத்தர இந்த்ரிய நிக்ரஹம் வாராமல் பண்ணியும்
மென்மேலும் இந்த்ரிய நிக்ரஹம் அபிச்சின்னமாக அபிவிருத்தமாம் படி பண்ணியும்
ரஷகரான ஸ்ரீ எம்பெருமானாருடைய ப்ரீதி விஷயம் என்னுதல் –

யதிபதி பிரசாத் யதீதி -யதிபதி பிரசாதி தீ தாம் -என்று வ்யுத்பத்தியாய் தன்னை அனுசந்தித்தவர்கள் பக்கல்
ஸ்ரீ எம்பெருமானாரை அனுக்ரஹ சீலராம்படி பண்ண வற்றன என்னுதல்

இத்தால்
இவர் ஸ்ரீ எம்பெருமானாருடைய நிரபேஷ உபாயத்வத்தையும் -சம்சாரிகளுடைய சர்வ பிரகாராதிதாயித்வத்தையும் –
அத்வதாயிபி சைவ கஸ்ய சம்யந்த்யஸ்தாத் மநோஹரௌ சர்வ ஏவ ப்ரமுச்யேரந்த்ர
பூர்வே பரே ததா -பாரத்வாஜ சம்ஹித -1-1-31-என்கிறபடியே
இவர் சம்பந்தமே சர்வ உத்தாரகம் ஆகிறபடியும் திரு உள்ளம் பற்றி –
இப் பிரபந்தம் அனுசந்தானத்தால் மாத்ரமே யாகிலும் ஸ்ரீ எம்பெருமானார் சம்பந்தம் உண்டாக அமையும் -என்று
அவர் தமக்கு பிரசாத ஜனகமான இப் பிரபந்தத்தை அருளிச் செய்தார் என்கிறது –

இரண்டு யோஜனையிலும் இப் பிரபந்தம் ஸ்ரீ எம்பெருமானார்க்கு அத்யந்த அபிமதம் ஆகையாலும்
அத்தை அனுசந்தித்தவர் பக்கல் ஸ்ரீ எம்பெருமானார் தன்னடையே பிரசாதத்தை பண்ணி அருளுவார் என்கிறது –

பிரசாதிதீம்
தாமரையாள் ஆகிலும் சிதகுலைக்கும் (4-9)-என்னுமா போலே இச் சேதனனை தான் கடாஷிப்பது இல்லை என்று இருக்கும்
ஸ்ரீ எம்பெருமானையும் இப்பிரபந்தம் ஸ்வ ஸ்மரண மாத்ரத்தாலே அவன் தன்னிடத்தே பிரசாதத்தை பண்ணி யல்லது
நிற்க ஒண்ணாத படி பண்ணுவிக்கும் என்கிறது –
இவர் தம் ஸ்ரீ ராமானுஷ அஷ்ட சதகத்தில் பிரசித்தம் இறே –
இது தன்னை சுரக்கும் திருவும் உணர்வும் -43 என்று ஸ்ரீ அமுதனார் அருளிச் செய்தார் இறே

(சுரக்கும் திருவும் உணர்வும் சொலப் புகில் வாயமுதம்
பரக்கும் இருவினை பற்றற வோடும் படியிலுள்ளீர்
உரைக்கின்றனன் உமக்கு யான் அறஞ் சீறும் உறு கலியைத்
துரக்கும் பெருமை இராமானுசனென்று சொல்லுமினே.–43-)

யதிராஜ விம்சதிம்
பிரதி ஸ்லோஹம் ஸ்ரீ யதிராஜ சப்தத்தை இட்டுச் சொல்லுகையாலே -ஸ்ரீ யதிராஜ விம்சதி -என்கிற
திரு நாமத்தை உடையது என்னுதல்
இதில் ஒரு ஸ்லோகஹத்தை அனுசந்திக்கவே அனுசந்தாத்ரு விஷயத்தில் ப்ரேமம் கரை புரண்டு ஓர் ஆயிரத்தில் படியே
இருபடி யாய்த்து ஸ்ரீ எம்பெருமானார் இவர் தனக்கு ரஷகராம் படியும் என்கிறது –
இதில் படி என்று திருமேனி

ஸ்துதிம்
ஸ்தோத்ரத்தை –ஸ்தூ யத இதி ஸ்துதி
ஸ்ரீ எம்பெருமானாருடைய குண அனுபவ ரூபமான இப்பிரபந்தத்தை

வ்யாஜஹார-
இஸ் சப்தம் –ஜகார -ஆஜஹார -வ்யாஜஹார -என்று த்ரி பிரிகார பிரகாரமாய் இருக்கையாலே –
ஸ்ரீ எந்தை திருவாய் மொழிப் பிள்ளை இன்னருளால் வந்த உபதேச மார்க்கத்தை –என்கிறபடியே –
பூர்வாசார்யர்களுடைய உபதேச பரம்பரராப்தமான அர்த்தத்தை
சம்சாரிகளுடைய துர்க்கதியைக் கண்டு பொறுக்க மாட்டாதே இப்பிரபந்த ரூபேண அருளிச் செய்தார் என்கிறது –

(ஜகார-எந்தை திருவாய் மொழிப் பிள்ளை இன்னருளால் வந்த வுபதேச மார்க்கத்தைப்பெற்று –
ஆஜஹார-சிந்தை செய்து–புள்ளு பிள்ளைக்கு இரை தேடி -தகுந்தபடி சாத்மிக்க சாத்மிக்க அருள வேண்டுமே
வ்யாஜஹார-பின்னவரும் கற்க வுபதேசமாய்ப் பேசுகின்றேன்)

தம் பிரபன்ன ஜன சாதகாம்புதம்
அவ்வழியாலே உபகாரராய் -அத ஏவ -பிரபன்ன ஜன சாதகாம்புதம்-பிரபன்ன ஜனங்கள் உண்டு –பர அபிமானமே உத்தாரகம் என்று இருக்கும் அவர்களாகிற சாதகங்களுக்கு-வர்ஷூ கலாவஹரான பிரபன்ன ஜனங்களை சாதகங்கள் ஆகவும் –
இவ்விடத்தில் இவரை வர்ஷூ கலாவஹரான பிரபன்ன ஜனங்களை சாதகங்கள் ஆகவும் – இவரை அம்புதமாகவும் நிரூபிக்கையாலே
சாதகங்களுக்கு வர்ஷ பிந்து அன்றிக்கே தாரகம் இல்லாதாப் போலே யாய்த்து
பிரபன்ன ஜனங்களுக்கு பராபிமானம் அன்று உஜ்ஜீவன உபாயம் இல்லை என்கையும்

அம்புதமாவது –
சமுத்ரோதத்தை தாம் பருகி ஸ்வ சம்பாதத்தாலே அதன் லாவண்யத்தைப் போக்கி(உப்புத் தன்மையைப் போக்கி )
மாதுர்யத்தை உண்டாக்கி
அத்தை சர்வ உபாய போக்யமாம் ஆக்குமா போலே
யதீந்த்ராக்ய பத்மாகரேந்த்ரமான பகவத் காருண்ய ரசத்தை தாம் அனுபவித்து
அதில் ஸ்ரீ ஈஸ்வர ஸ்வா தந்த்ர்யத்தாலே வரும் அவைரச்யத்தை மாற்றி
சாபராத சேதன ரஷண உபயோகியாக்கி
அத்தை சர்வர்க்கும் கொடுக்குமவர் –

(லஷ்மி நாதாக்ய சிந்தவ்-சடரி புஜலத ப்ராப்ய காருண்ய நீரம் -நாதாத்ரா வப்யஷி -சத்தநுர குபத அம்போஜா சஷூர் ஜ்ஜ்ராப்யாம் – கத்வாதாம் யமுநாக்யாம் சரிதம நு யதீந்த்ராக்ய பத்மாகரேந்த்ரம் சம்பூர்ய ப்ரானிசச்யே ப்ரவஹதி- நிதராம்-தேசிகேந்திர பிரமௌநை )

1-நிரபேஷ உபகாரகர் யென்கையும் –
2-பர சம்ருத்தியே ஸ்வ ச்ம்ருத்தியாய் இருக்குமவர் யென்கையும்
3-தாம் தாமாக ஓர் அர்த்தத்தை கல்ப்பித்து உபதேசிக்கை யன்றிக்கே உபதேச பரம்பரா ப்ராப்தமான அர்த்தத்தையே
உபதேசித்தார் யென்கையும் தோற்றுகிறது-

அன்றிக்கே
சம்பந்திகளான ஜனங்கள் ஆகிற சாதகங்களுக்கு வர்ஷூ கலாவஹர் என்றுமாம் –

அப்போது ஸ்ரீ எம்பெருமானாருடைய கல்யாண குணங்களை தாம் அனுபவித்து அவைகளை தத் சம்பந்திகளுக்கு
போக்யமாக உபதேசிக்குமவர் என்கிறது –
பகவத் வந்தன கார்யம் குரு வந்தன பூர்வகம் –என்று ததீய விஷயத்தில் ஒக்கும் இறே

சௌம்ய வர யோகி புங்கவம்
மகா உபாகரகர் ஆகையாலே -சதா தர்ச நீயராய் -மங்கள அவாஹமாய் -இவ் விரண்டு ஆகாரத்தாலே
பெரு மதிப்புத் தம் திரு உள்ளத்திலே தட்டாதவராய் -பர சம்ருதியே பிரயோஜனமாய் இருக்கிற
ஸ்ரீ அழகிய மணவாள மா முனிகளை

தௌமி-
ஸ்ரீ பெரிய ஜீயர் திருவடிகளை ஆஸ்ரயித்து-அதிகத பரமார்த்தரான ஸ்ரீ எறும்பியிலப்பா-
ஸ்ரீ யதிவர பிரசாத ஜனகமான இப்பிரபந்தத்தை உபகரித்து அருளி மஹா உபகாரகத்துக்குத் தோற்று
தம்மை அத்தலைக்கு சேஷமாக்கிக் கொடுக்கிறார் –
ரேணுஸ்தௌ – இறே
இத்தால் அஹங்கார நிவ்ருத்தியைச் சொல்லுகிறது –
அதாவது –ஸ்வஸ்மித ஸ்வார்ஹதா நிவ்ருத்தி -சாண உல்லிடமான மணிக்கு ஒளி ஸ்வபாவகம் இறே

—————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ எறும்பியப்பா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த சத்வம் தொட்டாசார்யா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் . –

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –59–கடளவாய திசை எட்டினுள்ளும் கலி யிருளே மிடை தரு காலத்து இராமானுசன் இத்யாதி —

April 28, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

இவர் இப்படி வித்தராகிற இத்தைக் கண்டவர்கள் -இவர் இது செய்திலர் ஆகிலும் –
சேதனர் பிரமாணங்களைக் கொண்டு நிரூபித்து -ஈஸ்வரன் சேஷி-என்று அறியார்களோ -என்ன –
கலியுக பிரயுக்தமான அஞ்ஞான அந்தகாரத்தை ஸ்ரீ எம்பெருமானார் போக்கிற்றிலர் ஆகில்
ஆத்மாவுக்கு சேஷி ஸ்ரீ ஈச்வரனே என்று நிரூபித்து ஒருவரும் அறிவார் இல்லை-என்கிறார் .

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை–

ஸ்ரீ எம்பெருமானார் வேத உத்தாரணம் பண்ணி அருளினார் என்றும் –
தத் அர்த்த உத்தாரம் பண்ணி அருளினார் என்றும் கீழ் எல்லாம் படியாலும் சொன்னீர் –அவர் இப்படி செய்தார் ஆகிலும் –
பிரமாதக்களான சேதனரும் நித்தியராய் -பிரமாணங்களான வேதமும் நித்தியமாய் இருக்கையாலே –
அவர்கள் அந்த வேதத்தை அடைவே ஓதி -தத் ப்ரதிபாத்யனான நாராயணனே ஆத்மாக்களுக்கு சேஷி என்று தெளிந்து –
உஜ்ஜீவிக்கலாகாதோ என்று சொன்னவர்களைக் குறித்து –
கலி இருளானது லோகம் எல்லாம் வியாபித்து தத்வ யாதாம்ய ஜ்ஞானத்துக்கு பிரதிபந்தகமாயிருக்கையாலே –
ஸ்ரீ எம்பெருமானார் திருவவதரித்து -சகல சாஸ்திரங்களையும் அதிகரித்து -அவற்றினுடைய நிரவதிக தேஜச்சாலே
அந்த கலி பிரயுக்தமான அஞ்ஞான அந்தகாரத்தை ஒட்டிற்றிலர் ஆகில் -ஸ்ரீ நாராயணன் சர்வ சேஷி என்று
இந்த ஜகத்தில் உள்ளோர் ஒருவரும் அறியக் கடவார் இல்லை என்கிறார் –

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-

அத்வைதிகளை இங்கனம் வாதில் வென்றிலர் ஆயினும் -அறிவாளர்கள் பிரமாணங்களைக் கொண்டு –
ஸ்ரீ நாராயணனே ஸ்ரீ ஈஸ்வரன் ஆதலின் உலகமாம் உடலை நியமிக்கும் ஆத்மாவான சேஷி என்று அறிந்து கொள்ள மாட்டார்களோ -என்று
தமது ஈடுபாட்டைக் கண்டு கேட்பாரை நோக்கி –
கலிகால வேதாந்தங்கள் ஆகிய அத்வைதங்களாம் அக இருள் உலகு எங்கும் பரவி உள்ள இக் கலி காலத்தில்
ஸ்ரீ எம்பெருமானார் அவ் விருளைப் போக்கா விடில் –ஆத்மாவுக்கு ஆத்மாவான சேஷி ஸ்ரீ ஈச்வரனே -என்று எவரும்
நிரூபித்து அறிந்து இருக்க மாட்டார்கள்-என்கிறார் .

கடளவாய திசை எட்டினுள்ளும் கலி யிருளே
மிடை தரு காலத்து இராமானுசன் மிக்க நான்மறையின்
சுடர் ஒளியால் அவ் இருளைத் துரந்திலனேல் உயிரை
யுடையவன் நாரணன் என்று அறிவார் இல்லை யுற்று உணர்ந்தே – -59 –

பத உரை
கடல் அளவு ஆய -நாலு புறங்களிலும் கடலை எல்லையாக கொண்ட
திசை எட்டின் உள்ளும் -எட்டு திசைகளிலும் -அதாவது -எல்லா இடங்களிலும்
கலி இருளே -கலி காலத்தில் நேர்ந்த அத்வைத அஞ்ஞானமாம் அக இருளே
மிடை தரு காலத்து -நெருங்கி உள்ள வேளையிலே
இராமானுசன் -ஸ்ரீ எம்பெருமானார்
மிக்க -பிரமாணங்களில் சிறந்த
நான்மறையின் -நான்கு வேதங்களின் உடைய
சுடர் ஒளியால்-சிறப்பு வாய்ந்த பிரகாசத்தினால்
அவ்விருளை-அந்த அக இருளை
துரந்திலன் ஆகில் -ஓட்ட வில்லை யானால்
உயிரை உடையவன் -ஆத்மாவுக்கே சேஷியான ஆத்மாவே இருப்பவன்
நாரணன் என்று -ஸ்ரீ நாராயணன் என்று
கற்று உணர்ந்து -கவனித்து ஆராய்ந்து
அறிவார் இல்லை-தெரிந்து கொள்வார் இல்லை

வியாக்யானம் –
சதுச்சாகர பர்யந்தமான சர்வ திக்குகளிலும் கலி பிரயுக்தமான அஞ்ஞான ரூப தமச்சே நெருங்கி வர்த்திக்கிற காலத்திலே
ஸ்ரீ எம்பெருமானார் -சர்வ பிரமாண உத்க்ருஷ்டமான சதுர் வேதத்தின் உடைய நிரவதிக தேஜச்சாலே –
அந்த தமச்சை ஒட்டிற்று இலர் ஆகில் –
ஆத்மாவுக்கு சேஷி யானவன் –
தன்னை ஒழிந்தது அடங்கலும் தனக்கு பிரகாரமாக -தான் பிரகாரியாய் இருக்கையாலே –
நாராயண – சப்த வாச்யனானவன் என்று கொண்டு -உற்று அனுசந்தித்து -அறியத் தக்கார் இல்லை .

மிடைதல்-நெருங்குதல்
சுடர் என்றும் ஒளி என்றும் பர்யாயமாய் -மீமிசைச் சொல்லாய் -மிக்க ஒளி -என்றபடி –
துரத்தல்-ஒட்டுதல் .

ஞானம் கனிந்த நலம் -பக்தி ரூபாபன்ன ஞானம் -மதி நலம் -மதிக்கடல் -சேமுஷீ பக்தி ரூபம் –
ஞானம் பக்தி வைபவம் இரண்டையும் கொண்டாடுகிறார் –
கலி இருளே -ஏவ காரம் –துக்கமேயாக —
ஆத்மா நாராயண பர –
கலி =தோஷ நிதி – மிக்க நான்மறை -சுடர் ஒளி -விசேஷணன்கள்-உடன் -அருளி –
ஆச்சார்ய தேவோ பாவ -ஞானம் -சாவி கொண்டு திறந்து அவனைக் காட்டி – பதிம் விஸ்வஸ்ய–
உற்று அறிவார் -விசத தமமாக அறிவார் –

கடல் அளவாய திசை எட்டின் உள்ளும் –
சதுஸ் சாகர பர்யந்தமான அஷ்ட திக்குகளின் உடைய ஆந்த்ரமான பிரதேசம் எல்லாம் –
சதுஸ் சமுத்திர முத்ரிமான பூமிப் பரப்பு எல்லாம் என்றபடி –

கலி இருளே-மிடை தரு காலத்து –
கலேர்த்தோஷநிதே -என்னும்படியான -கலி புருஷன் தன்னுடைய ஸ்வ பாவத்தாலே
லோகத்தார் எல்லார்க்கும் ஞான பிரம்சத்தைப் பண்ணி வித்தும் –
சன்மார்க்கத்தை மூலையடியே நடப்பித்தும் –
போருகையாலும் தத் பிரயுக்தமான அஞ்ஞா நத்தாலே நெருங்கி எங்கும் ஒக்க வியாபித்துக் கொண்டு வர்த்திக்கும் காலத்திலே–
கலி சாம்ராஜ்யம் பண்ணுகிற காலத்திலே என்றபடி –

மிடைதல் –
நெருங்குதல்

கடளவாய —மிடை தரு காலத்து
கடல் அளவாய திசை எட்டின் உள்ளும் -கடல் சூழ்ந்த பூ மண்டலம் எங்கும் -என்றபடி-
அங்கே பரவி நெருங்கி நின்றது கலி இருள் .
வானகமாய் இருப்பின் -அல்லது கிருத யுகமாய் இருப்பின் -நாரணனை உயிரை உடையவன்
என்று உற்று உணர்ந்து அறிவார் இருப்பார் .
அங்கன் இன்றி -இருள் தருமமா ஞாலத்தில் –
கலி இருளும் பரவி -நெருங்கி இருத்தலின் -உற்று உணர்வார் இலர் ஆயினர் -என்க –

கலவ் ஜகத்பதிம் விஷ்ணும் சர்வஸ்ரஷ்டார மீச்வரம் நார்ச்ச யிஷ்யந்தி மைத்ரேய பாஷண்டோபஹதா ஜனா -என்று
மைத்ரேயனே-கலி காலத்தில் மத நம்பிக்கை அற்றவர்களால் கெடுக்கப்பட்ட ஜனங்கள் உலகிற்கு சேஷியும்
அனைவரையும் படைப்பவனும் -நியமிப்பவனுமான ஸ்ரீ விஷ்ணுவை வழி படப் போவது இல்லை-என்றபடி .
கலி காலத்தில் இறைவனை உள்ளபடி அறிய மாட்டாத இருள் உடைமை ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் பேசப் பட்டு உள்ளமை -காண்க –

ஸ்ரீ எம்பெருமானார் காட்டி யருளிய பிரதான பிரதி தந்திரமாகிய சரீர -ஆத்மா பாவ ரூபமான சம்பந்தத்தை
அவர் காட்டா விடில் இந்நில உலகில் கலி காலத்தில் எவர் தான் அறிய வல்லார் –

பிரதான பிரதி தந்திரமாவது மற்றையோரிசையாது -நம் மதத்தவரே முக்கியமாக ஏற்கும் பொருளாகும் .
அந்திம யுகே கச்சித் விபச்சித் தம் யதி வித்யாத் -என்று
கடைப்பட்ட யுக காலத்திலே –ஸ்ரீ எம்பெருமானார் அருளிய பிரதான பிரதி தந்திரமான இந்த சரீர ஆத்மா பாவ ரூப
சம்பந்தத்தை ஒரு புலவர் பெருமான் அறிவானே ஆகில் -என்று ஸ்ரீ வேதாந்த தேசிகனும் கலியில் அறிய முடியாமையை காட்டினார் .

அபேதத்தையே பற்றி நின்று -இதனை அறிய மாட்டாத அத்வைதிகளைப் பிரம மீமாம்சகர் என்றார் ஸ்ரீ பராசர பட்டரும் –

கலி யிருளே மிடை தரு காலத்து –சிறிதும் வெளிச்சம் இன்றி இருள் அடர்ந்த காலத்தில்
நிராலோகே லோகே -வெளிச்சம் இல்லாத உலகிலே -என்றார் ஸ்ரீ வேதாந்த தேசிகனும் ஸ்ரீ யதிராஜ சப்ததியிலே

மிடைதரு -துணை வினை

இராமானுசன் –
விண்ணின் தலை நின்றும் மண்ணின் தலத்து உதித்த ஸ்ரீ எம்பெருமானார் –

மிக்க நான் மறையின் –
மிக்க வேதியர் வேதத்தின் உட்-பொருள் -என்றும் –
சுடர்மிகு சுருதியுள் – என்றும் சொல்லுகிறபடியே
சர்வ பிரமாண உத்க்ருஷ்டமாய் -ஸ்ரீ சர்வேச்வரனுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளை அடைவே பிரகாசிக்கக் கடவதாய் –
அபௌருஷமாய் -நித்ய நிர்தோஷமாய் -ரிக் யஜூர் சாம அதர்வண ரூபேண நாலு வகைப்பட்டு இருக்கிற வேதத்தினுடைய –

சுடர் ஒளியால் –
சுடர் மிகு ஸ்ருதியாகையாலே அந்த வேதத்தின் உடைய சுடர் வளர்ந்து
அவைதிக சமயங்களை எல்லாம் நிர்மூலமாக்கி -பின்னையும் மேல் மேல் என ஒளி நெருங்கி வருகையாலே
சுடர் ஒளி -என்று பிரயோக்கிகிறார் –அப்படிப்பட்ட நிரவதிக தேஜச்சாலே –

அவ்விருளை –
அஞ்ஞான திமிராந்தச்ய –
அஞ்ஞானத் வாந்த ரோதாத் -என்கிறபடியே
கலி புருஷனாலே ப்ரவர்த்திக்கப் பட்ட பாபங்களாலே உண்டாய் இருக்கிற அஞ்ஞான அந்தகாரத்தை –

துரந்து இலனேல் –
பிரமாணமும் அநாதியாய் நித்தியமாய் -பிரமாதக்களும் அநாதியாய் நித்தியமாய் -காலமும் அநாதியாய் நித்தியமாய் –
கொண்டு இருந்தாலும் ஒருத்தர் ஆகிலும் வேதார்த்ததை சுயமாகவே தெளிந்து உஜ்ஜீவித்தார் என்று
ஒரு சாஸ்திரமும் சொல்லக் கேட்டதில்லை –

யஸ்ய தேவே பராபக்திர் யதாதே வேததா குரவ தஸ்யை தேகதிதா ஹ்யர்த்தா பிரகாசந்தே மகாத்மன –என்றும்
ஞானா ஞ்ஜனசலாகயா -என்றும்
சஷூ ருன்மீலிதம் எனதச்மைத த்குரவே நம – நாராயணோ பிலிக்ர்தம் யாதிகுரோ பிரச்யுதச்ய துர்ப்புத்தே -என்றும் –
கமலம் ஜலதா பேதம் சோஷயதிரவிர் ந் தோஷயதி – என்று ஸ்ருதி ஸ்ம்ருதி யாதிகளிலே சொல்லப்படுகையாலும் -என்றும்
அனைத்து உயிர்க்கும் ஈரம் செய் நாரணனும்-அன்று தன் ஆரியன் பால் அன்பு ஒழியில் நின்ற புனல் பிரிந்த
பங்கயத்தை பொங்கு சுடர் வெய்யோன் அனல்-உமிழ்ந்து தான் உலர்த்தி யற்று -என்று ஸ்ரீ அருளாள பெருமாள் அருளிச் செய்கையாலும் –

ஸ்வ அபிமானத்தால் ஈஸ்வர அபிமானத்தை குலைத்து கொண்ட இவனுக்கு ஆசார்ய அபிமானம் ஒழிய கதி இல்லை என்று ஸ்ரீ பிள்ளை
பலகாலம் அருளிச் செய்யக் கேட்டிருக்கையாய் இருக்கும் -என்கையாலே –

சும்மனாதே கை விட்டோடி தூறுகள் பாய்ந்தனவே -என்கிறபடி ஓடிப் போம் படி பண்ணுகை அன்றிக்கே –
அவரவர் விதி வழி அடைய நின்றனரே -என்று தடஸ்தனாய் இருந்து கொண்டு அந்த அஞ்ஞான அந்தகாரத்தை
போக்குகைக்கு க்ருஷி பண்ணாதே ஒழிந்தால் –
துரத்தல் -ஒட்டுதல் –

உயிரை உடையவன் நாரணன் என்று –
பதிம் விஸ்வத்யாத்மேச்வரம்-என்றும்
யச்சகிம் கிஜ்ஜகத் யச்மிந்தர்ச்தேச்ய ச்ரூயதேபிவா -அந்தர்பஹிஸ்ஸ-தத் சர்வம் வ்யாப்ய நாராயண ஸ்தித -என்றும் –
நிகரில் புகழாய் உலகம் மூன்று உடையாய் -என்றும்-
ய தண்ட மண்டாந்தர கோசரம் சயத்த சோத்தரான்ய வராணா நியா நிச –
குணம் பிரதானம் புருஷம் பரமம் பதம்-பராத்பரம் பிரம்ம ச தேவி பூதய -என்றும் சொல்லுகிறபடியே
தன்னை ஒழிந்தது அடங்கலும் பிரகாரமாய்-தான் பிரகாரியாய் இருக்கையாலே ஸ்ரீ நாராயண சப்த வாச்யனான ஸ்ரீ சர்வேஸ்வரன்
இந்த த்ரிவித சேதன-வர்க்கத்தையும் தனக்கு சேஷமாக உடையானாய் இருப்பான் என்று –

உற்று –
அத்யவசித்து -விசதமாக தெளிந்து கொண்டு –

அறிவார் இல்லை –
அறியத் தக்கார் இல்லை –
பிபேத் அல்ப்ஸ் ருதாத் வேதொமாமயம் பிரதியிஷ்யதி -என்கையலே-
அத்தாலே ஸ்வரூப நாசமே சித்திக்கும் இத்தனை ஒழிய ஸ்வரூப சித்தி இல்லை என்றது ஆய்த்து –

நிரா லோகே லோகே நிரவதி பர சிநேக பரிதோ யதிஷ்மா பரத்தீ போயதி ந கலு ஜாஜ் வல்யத இஹா –
அஹம்காரத்வாந்தம் விஜயதுகதம் காரமநகா க்ர்தஸ் தத்யா லவ்லகம் குமதிமதபா தாள குஹாம் -என்று
இவ்வர்த்தைத்தை அபியுக்தரும் அருளிச் செய்தார் இறே –

மிக்க நான் மறையின் –துரந்து இலேனேல்
பிரமாணங்களுக்குள் சிறந்தமை பற்றி மிக்க நான் மறை என்றார்
சுடர் ஒளி-மீமிசை என்பது போலே மிகுதியில் இரட்டிப்பு
அளவற்ற நான்மறை அளவை -பிரமாண -ஒளியால்-கலி இருளைத் துரத்தினார் எம்பெருமானார் -என்க .

ஸ்ரீ வேதாந்த தேசிகன் -ஸ்ரீ எம்பெருமானார் ஆகிய ஒளி விளக்கே இருளைத் தொலைத்ததாக –
நிராலோகே லோகே நிருபத்தி பர சிநேக பரிதோ யதிஷ்மாப்ருத் தீப -என்று
வெளிச்சம் அற்ற உலகில் இயல்பாய் அமைந்த இறை பக்தியாம் நெய் நிறைந்த ஸ்ரீ எதிராஜராம்
குன்றில் இட்ட விளக்கு -என்று அருளிச் செய்து இருப்பது இங்கு நினைவுக்கு வருகிறது .

சிறையிலே நள் இருள் கண் -ஞானத்தின் ஒளி உருவான கண்ணன் என்னும் ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கு வந்தது –
வெளிச்சம் அற்ற நில உலகில் கலி இருள் மிடை தரு காலத்தில் -பிரபன்ன குலத்தினில் ஸ்ரீ யதிராஜர் என்னும்
குன்றில் இட்ட-விளக்கு வந்து ஜ்வலித்தது .
நான்மறை -என்றும் இருப்பினும் -அம் மறையின் சுடர் ஒளி -கொண்டு இருளைத் துறக்கும் திறமை
எம்பெருமானார் ஒருவருக்கே உள்ளது என்க –

அவ்விருள் –
அந்த மிடை தந்த கலி இருள் -வெகு தொலைவில் போய் விட்டமை பற்றி- அதனைக் காணாது –அவ்விருள்-என்கிறார் –

தத் இதி பரோஷே விஜா நீயாத் -என்று அது என்னும் சுட்டி கண்ணுக்கு புலப்படாத இடத்தில் கொள்ள வேண்டும் -என்றது காண்க
இனி
மிடை தரும் இருளின் கொடுமை பற்றி -அவ்விருள்-என்கிறார் ஆகவுமாம்-
தேச தோஷத்தலும் -கால தோஷத்தாலும் -நேர்ந்த அறியாமை தொலைந்தது -என்றது ஆயிற்று .

துரந்து இலேனேல் -பிறவினை பொருளில் வந்ததன் வினை
உயிரை உடையவன் –உற்று உணர்ந்தே
உயிர் -ஆத்மா-சாதி ஒருமை
உடையவன் -தனக்கு உடலாக உடையவன்
நாரணன்-ஸ்ரீ நாராயணன் என்னும் வட சொல் சிதைவு

ஸ்ரீ நாராயணன் என்பதன் பொருள் உயிரை உடையவன் என்பது –இனி இதனை விவரிப்போம்
ஸ்ரீ நாராயண என்னும் சொல்
நார அயன என்னும் இரு சொற்கள் இணைந்த தொகைச் சொல்
இதனை நாரங்களுக்கு அயனமாய் உள்ளவன் என்று ஆறாம் வேற்றுமை தொகையாகவும்-தத் புருஷ சமாசம் –
நாரங்களை அயனமாக கொண்டவன் -என்று அன் மொழித் தொகை -பஹூவ்ரீஹி சமாசம் –ஆகவும் கொள்ளலாம்

நார என்பதற்கு ஜீவத்மாக்களின் திரள் என்பது பொருள்.
நரர் -அழிவு இல்லாத ஆத்மாக்கள் -அவற்றின் திரள்கள் நாரங்கள்-
நார சப்தே ஜீவானாம் சமூஹா -பரிகீர்த்யதே -நார என்னும் சொல்லால் ஜீவாத்மாக்களுடைய சமூகம் சொல்லப்படுகிறது -என்பது காண்க .

அயனம்-இடம்
வேற்றுமை தொகையில் ஜீவாத்மாக்களுக்கு இடமாய் -அதாவது -ஆதாரமாய் -இருப்பவன் என்று பொருள் படுகிறது –
என்றும் பிரியாது -ஆதாரமாய் உள்ள சேதனன் ஆத்மா என்ற லஷணத்தின் படி –
நாரங்கள் சரீரம் ஆகவும் -அயனமான பரமன் ஆத்மாவாகவும் ஆகிறான் .
ஒரு பொருளை என்றும் தாங்கி நிற்கும் பொருள் ஆத்மா -என்றும்
அங்கனம் தாங்கப்படும் பொருள் சரீரம் என்றும் முறையே ஆத்மாவுக்கும் சரீரத்துக்கும் லஷனம் உணர்க .

இனி
நாரங்களை அயனமாக கொண்டவன் -என்று அன் மொழித் தொகையாக கொண்டால்-
நாரங்களில் -சுருதிகளில் ஓதியபடி -அந்தர்யாமியாய் இருப்பவன் -என்று பொருள் படுகிறது .
அந்தர்யாமியாய் இருப்பவனே அதாவது உட் புக்கு நியமிப்பவனே ஆத்மா என்ற லஷணத்தின் படி
நாரங்கள் சரீரங்களாயும் -அவற்றை நியமிக்கும் இடமாக கொண்டவன் ஆத்மா ஆகவும் ஆகிறான் .
உட் புக்கு நியமிக்கும் பொருள் ஆத்மா என்றும் அங்கனம்நியமிக்க படும் பொருள் சரீரம் என்றும்
முறையே ஆத்மாவுக்கும் சரீரத்துக்கும் லஷனம் உணர்க

இங்கனம் உயிர்களை உடலாக உடையவன் நாரணம் என்னும் பொருளை எம்பெருமானார் காட்டிலரேல்-
யாரே ஆராய்ந்து அறிய வல்லார் –
இனி உலகில் ஜீவாத்மா தன் பயனுக்காகவே உடலை பயன் படுத்திக் கொள்வது போல
பரமாத்மாவும் தனது போகம் அல்லது லீலை என்னும் பயனுக்காகவே எல்லாப் பொருளையும் உபயோகப் படுத்திக் கொள்வதனால்-
உடலுக்கு ஆத்மா போலே உலகிற்கு ஈஸ்வரன் சேஷி யாகிறான் -என்க .

பயன் உறுவது சேஷி என்றும் பயன் உறுத்துவது சேஷம் என்றும் உணர்க .
ஸ்ரீ ஈஸ்வரனுக்கு உயிர்கள் சேஷமாய் இருத்தலின் -அவன் உகப்பாய் நோக்கி பணி புரிதலே புருஷார்த்தம் ஆயிற்று -என்க –
இவை எல்லாம் ஸ்ரீ எம்பெருமானார் இருளைத் துரந்து காட்ட நாம் கண்டவை -என்க

அறிந்து அறிந்து தேறி தேறி உணர்ந்து உணர்ந்து–உணரிலும் இறை நிலை உணர்வு அரிது-
யாதாத்மா ஞானத்துக்கு கலி பிரதி பந்தம் –எங்கள் மாதவனே பிறந்தும் காணகிலா — பாசுரம்

நிருபாதிகம்-காரணம் இன்றி நிஷ் காரணமாக தான் கொடுக்கிறான் -காரண விசேஷம் இன்னது என்று அறிய மாட்டாத
காரண விசேஷம்- கசண்டு அற்ற நெய்யால் தீபம் ஏறிய – வேத உண்மை பொருளை காட்ட- ஸ்ரீ பாஷ்யம் -அருளி-
சர்வ அதிகாரமாய் சர்வ காலத்திலும் சர்வருக்கும் ஸ்ரீ ஆழ்வார்கள் அருளி செயல் கொண்டே சூத்தரங்களை ஒருங்க விட்டார்–

பன்னலார் பவிலும் பரனே உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே

நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய் நர நாரணனே கரு மா முகில் போல் எந்தாய்

வீடாக்கும் மெய்ப்பொருள் தான் வேத முதல் பொருள் தான் விண்ணவர்க்கு நல் பொருள் தான் நாராயணன்

நாராயணன் என்னை யாளி நரகத்துச் சேராமல் காக்கும் திருமால்

இனி யறிந்தேன் ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம் இனி யறிந்தேன் எம்பெருமான் உன்னை காரணன் நீ
கற்றவை நீ கற்பவை நீ நற்கிரிசை நாரணன் நீ நன்கு அறிந்தேன் நான்

எண் பெருக் கந்நலத்து ஒண் பொருள் ஈறில வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே

அமைவுடை நாரணன் மாயையை அறிபவர் யாரே

நாரணன், முழு ஏழ் உலகுக்கும் நாதன், வேத மயன்,
காரணம் கிரிசை கருமம் இவை முதல்வன், எந்தை
சீரணங்கு அமரர் பிறர் பலரும் தொழுது ஏத்த நின்று
வாரணத்தை மருப்பு ஒசித்த பிரான் என் மாதவனே–2-7-2-

நல்லருள் நம் பெருமான் நாராயணன் நாமங்களே.–5-9-10-
நல் அருள் நம்பெருமான் –
நல்ல அருளையுடையவனாய் நமக்கு ஸ்வாமியாயிருக்குமவன்.
நல்லருளாவது, வாத்சல்யம். வாத்சல்ய ஸ்வாமித்வங்கள், -நல்லருள்-வாத்சல்யம் – நம் பெருமான் -ஸ்வாமித்வம்
நாராயண சப்தார்த்தமாகும்.
அர்த்தத்தை அருளிச் செய்து பின்பு சப்தத்தை அருளிச் செய்கிறார்:
நாராயணன் நாமங்களே –
நாராயண சப்தம், தர்மி நிர்த்தேசம்.ஸ்வரூப நிரூபகமாய்-
நாரங்களுக்கு அயனம் -நாரங்கள் எல்லாம் யாருக்கு அயனமோ – உள்ளும் புறமும் -நியமனம் வியாபகம்

மண்மிசை யோனிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவனே கண்ணுற நிற்கிலும் காணகில்லா உலகோர்கள் எல்லாம்
அண்ணல் இராமானுசன் வந்து தோன்றிய அப்பொழுதே நண்ணரு ஞானம் தலைக் கொண்டு நாரணற்கு ஆயினரே

நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன நாரணனைக் காட்டிய வேதம் களிப்புற்றது தென் குருகை வள்ளல்
வாட்டமிலா வண் தமிழ் மறை வாழ்ந்தது மண்ணுலகில் ஈட்டிய சீலத்து இராமானுசன் தன் இயல்வு கண்டே

மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள்……என் நெஞ்சுள் நிறுத்தினான் (கண்ணினுண் சிறுத்தாம்பு 8-9)
“நன்மையால் மிக்க நான் மறையாளர்கள்” (மதுரகவியாழ்வார்)
மிக்கார் வேதிவிமலர்” (திருவாய்மொழி 2-9-8)
“வேதநூல் ஓதுகின்றது உண்மை அல்லதில்லை மற்று உரைக்கின்றேன் “ என்று திருமழிசைப்பிரான் (72)

சுடர்மிகு சுருதி–“அநாதியானது” “அபௌருஷேயமானது” -எம்பெருமான் வேத விளக்கு
பல இடங்களில் ஆழ்வார்கள் வேதத்தையும் விளக்காகக் கூறுகிறார்கள்.
மறையாய் விரிந்த விளக்கை (8-9-4) வேத நல்விளக்கை (4-3-8) (திருமங்கை மன்னன் )–
வேதாந்த விழுப்பொருளின் மேலிருந்த விளக்கை (பெரியாழ்வார் 4-3-11)

வேதங்களைக் கொண்டு பகவதனுபவம் பண்ணுவதே பூர்ணமானது.
கண்ணா! நான்முகனைப் படைத்தானே!
காரணா! கரியாய்! அடியேன் நான்
உண்ணா நாள் பசியாவதொன்றில்லை
ஓவாதே ‘நமோநாரணா!’ என்று
எண்ணாநாளும் இருக்கெசுச்சாம
வேத நான்மலர் கொண்டுன் பாதம்
நண்ணா நாள் அவை தத்துறு மாகில்
அன்றெ னக்கவை பட்டினி நாளே. (5-1-6)
நமோ நாராயணா -என்றது போராமே -பெரும் திருப் பாவாடையிலே மண்டுகிறார் –
திருமந்தரம் -ஸங்க்ரஹமும் -வேதம் விவரணுமாயும் இறே இருப்பது

பண்ணூறு நான்மறையோர் புதுவை” 1-5-11

முற்ற உலகு எல்லாம் நீயேயாகி –
ஸ்வ வ்யதிரிக்த சமஸ்த வஸ்துக்களும் பிரகாரமாக -தான் பிரகாரியாக இருக்கையாலே –
ஓன்று ஒழியாதபடி சகல லோகங்களும் நீயேயாய் – சர்வம் கல்விதம் பிரம -என்றும் –
புருஷ ஏவேதம் ஸ்ர்வம்-என்னக் கடவது இறே –

மூன்று எழுத்தாய முதல்வனேயோ-
அஷய த்ரயாத்மகமான -பிரணவத்துக்கு வாச்யனாய் கொண்டு -சர்வ காரண பூதனாய் இருக்கிறவனே
மூன்று எழுத்தாய -என்கிற -சாமாநாதி கரண்யம் -வாச்ய வாசக பாவ சம்பந்த நிபந்தனம் –
பிரணவம் தான் -சப்த பிரதான்யத்தாலே -ஜீவ பரமாய் – அர்த்த ப்ராதான்யத்தாலே பகவத்பரமாய் இறே இருப்பது –
ஓங்காரோ பகவான் விஷ்ணு -என்றும் –
ஓம் இத் ஏக அஷரம் பிரம வ்யாஹரந்மா மநுச்மான்-என்றும் சொல்லக் கடவது இறே –
அதில் பிரதம அஷரத்தில் பிரக்ர்த்யம் இறே சர்வ காரணத்வம் –

——————–———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –58–பேதையர் வேதப் பொருள் இது என்று உன்னி- இத்யாதி —

April 28, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

கீழே பல இடங்களிலும் ஸ்ரீ எம்பெருமானார் பாஹ்ய மத நிரசனம் பண்ணின ஸ்வபாவத்தை அனுசந்தித்து வித்தரானார் –
குத்ருஷ்டி நிரசனம் பண்ணின படியை அனுசந்தித்து வித்தார் ஆகிறார் இதில் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை–

பல இடங்களிலும் -வேத பாஹ்ய சமயங்கள் பூ லோகத்தில் நடையாடாதபடி ஸ்ரீ எம்பெருமானார்
சாஸ்திர முகத்தாலே அவர்களோடு பிரசங்கித்து -அவர்களை சவாசனமாக நிரசித்த வைபவத்தை கொண்டாடினார்
இதிலே –
கட்டப் பொருளை மறைப் பொருள் என்று சொல்கிற குதருஷ்டிகளை வேதாந்த வாக்யங்களாலே பிரசங்கம்
பண்ணி ஜெயித்தவருடைய வைபவத்தை கொண்டாடுகிறார் –

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-

கீழே தம் பேதைமை தீர்ந்தமை கூறினார் –
இங்கே வேதப் பொருள் கூறுவதில் வரும் பேதைமை தீர்ந்தமையைக் கூறுகிறார் .
புறச் சமயங்களை களைந்த ஸ்வபாவம் கீழ்ப் பல கால் ஈடுபாட்டுடன் கூறப்பட்டது .
குத்ருஷ்டி மதம் களைந்தபடி இங்கே ஈடுபாட்டுடன் அனுசந்திக்கப் படுகிறது .

பேதையர் வேதப் பொருள் இது என்று உன்னிப் பிரமம் நன்று என்று
ஓதி மற்று எல்லா வுயிரும் அக்தென்று உயிர்கள் மெய் விட்டு
ஆதிப் பிரானோடு ஒன்றாம் என்று சொல்லும் அவ்வல்லல் எல்லாம்
வாதில் வென்றான் எம் இராமானுசன் மெய்ம் மதிக் கடலே – 58- –

பத உரை
பேதையர் -அறிவிலிகள்
வேதப் பொருள் -வேதத்தின் உடைய அர்த்தம்
இது என்று -இது தான் என்று
உன்னி -தீர்மானித்து
பிரமம்-ப்ரஹ்மம்
நன்று -நல்லது -சத் ரூபமாய் -விலஷணம் ஆனது –
என்று ஓதி-என்று பொருள்படும் என்று வேதாந்த வாக்யங்களால் உபபாதித்து
மற்று எல்லா உயிரும் -பிரமத்தை தவிர்த்து மற்ற எல்லா ஜீவான்மாக்களும்
அஃது என்று -அந்த ப்ரஹ்மம் தான் என்று
உயிர்கள் -ஜீவான்மாக்கள்
மெய் விட்டு -உடல் முதலிய உபாதி நீங்கி
ஆதிப் பரனோடு -காரணமாய் -பரம் பொருளான -ப்ரஹ்மத்தோடு
ஓன்று ஆம் என்று -ஐக்கியம் அடையும் என்று
சொல்லும் அவ் அல்லல் எல்லாம் -சொல்லுகிற அந்த கோஷங்களை எல்லாம்
மெய்ம் மதிக் கடல் -உண்மை அறிவுக் கடலான
எம் இராமானுசன் -எங்கள் நாதரான ஸ்ரீ எம்பெருமானார்
வாதில் -வாதப் போரில்
வென்றான் -ஜெயித்து அருளினார் –

வியாக்யானம்
வேதப் பிராமணிய வாதிகளான பாஹ்யரைப் போல் அன்றிக்கே -வேதத்தை பிரமாணமாக அங்கீகரித்து -வைத்து –
ததர்த்த தர்சனத்தில் குத்ருஷ்டிகளாய் இருக்கிற அஞ்ஞர்-
வேதத்தின் உடைய அர்த்தம் இது என்று நிரூபித்து –
ப்ரஹ்மமே விலஷணம் என்று வேதாந்த வாக்யங்களாலே பிரதிபாதித்து –
தத் வ்யதிரிக்த சமஸ்த ஜீவர்களும் அந்த ப்ரஹ்மம் தானே என்று -இப்படி தத்தவ நிர்ணயத்தை பண்ணி –
மோஷ நிர்ணயம் பண்ணுகிற அளவிலும் –
ஜீவ வர்க்கம் -தேஹாத் யுபாதி வி நிர்முக்தமானவாறே காரண பூதனான சர்வஸ்மாத் பரனோடே ஏகீபவிக்கும் என்று –
இப்படிச் சொல்லுகிற அந்த கோஷத்தை எல்லாம்
தத்தவ ஜ்ஞான சாகரமாய்
நம்முடைய நாதராய் இருக்கிற ஸ்ரீ எம்பெருமானார் லோக ரஷண அர்த்தமாக வாதம் பண்ணி ஜெயித்து அருளினார் .
இப்படி செய்து அருளுவதே -என்று கருத்து –

ஆதிப் பரன்-என்றது ஸ்வ பஷத்தாலே – அல்லாதவர்கள் இப்படி சொல்லார்கள் இறே –
ப்ரஹ்ம அம்சமான ஜீவ வர்க்கம் தேஹாத்யு பாதிவி நிர்முக்தமானவாறே -ப்ரஹ்ம ஐக்யத்தை ப்ராபிக்கும் என்று இறே-அவர்கள் சொல்வது –
அல்லல்-ஆரவாரம்-அதாவது கோஷம் –
அகாத பகவத் பக்தி சிந்துவே -ஞான சாகரம் -மதிக்கடல்
மெய் மதிக் கடல் -சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் – -நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய்-

சரீராத்மா பாவம் ஒத்துக் கொள்ள வில்லை த்வத்தைத்தில் -இதுவே வாசி -அதுக்கு
சர்வம் கல்விதம் இதம் ப்ரஹ்மம் –சரீராத்மா பாவத்தால் இது பொருந்தும் – தத்வமஸி –
சதைவ சோமயே ஏகமேவ அத்விதீயம் – யஸ்ய ஆத்மா சரீரம் —
ஐக்கியம் அல்ல -சாதாரம்யம்–ப்ரஹ்ம வேத ப்ரஹ்மம் இவ பவதி –போலே ஆகிறான் –இரண்டாவது வருமே –
நீல தோயத மத்யஸ்த -திருமேனி வர்ணிக்கும் -பிராகிருத சரீரம் இல்லை என்றது வேறே வாக்கியம் –
போக்யம் போக்தா ப்ரேரிதா-காம ரூபியான் அநு சஞ்சாரம் -முக்தன் சரீரம் கொண்டு கைங்கர்யம் -சேஷி சேஷ பாவம் உண்டே-

பிள்ளாய் –பாகவத பிரபாவம் அறியாதவர் போலே வேதம் அறியாத பாஹ்யர் –
பேய்ப் பெண்ணே -அறிந்தும் தப்பாக காணும் குத்ருஷ்டிகள் போலே
சத் என்பதை நன்று என்று ஓதி -மற்றவை எல்லாம் அஃது -பேத ஞானம் தவிர்ந்து அதுவே மோக்ஷம் என்பர் அத்வைதிகள் –
தத்வ ஹிதம் சொல்லி ஒன்றுவதே புருஷார்த்தம் என்பர் -அல்லல் வேற்று கோஷம் –
அதே வாக்யங்களைக் கொண்டு வாதில் வென்றார் –
கம்பீரமான ஞானம் கொண்டு -மதிக் கடல் -எம் நாதன் ஸ்வாமி என்றவாறு –

பேதையர் என்று தொடங்கி –
பேதையர் –
வேதத்தை பிரமாணம் என்று இசையாத சார்வாகாதிகளுடைய சம்யச்தரான பாஹ்யரைப் போல் அன்றிக்கே –
வேதத்தை பிரமாணமாக அங்கீகரித்து வைத்தும் -அந்த அர்த்த நிரூபணம் பண்ணுகிற வேளையிலே –
அநாதி பாப வாசனா தூஷிதா சேஷ ஷேமூஷிகராய் கொண்டு -வேதத்துக்கு தம் தாமுடைய
குத்ருஷ்டி கல்பங்களான-அபார்த்தங்களைச் சொல்லி –
அதயாவத் பிரஜா நாதி புத்திஸ் சாபார்த்ததாமாசி -என்கிறபடியே
தமஸ் பிரசுரராய் போருகிற-சங்கர பாஸ்கர யாதவாதிகளை -பேதையர் –என்று நிர்தேசிக்கிறார் –

பேதையர் –
அஞ்ஞர் –

வேதப் பொருள் இது என்று உன்னி –
வேதாந்தங்களினுடைய தாத்பர்ய அர்த்தம் இதுவே என்று நிரூபித்து –

உன்னுதல் –
நிரூபித்தல் –

ப்ரஹ்மம் நன்று என்று ஓதி –
ப்ரஹ்மமே சமஸ்த பிரபஞ்ச விலஷணம் என்று -அந்த வேத வாக்யங்களாலே பிரதி பாதித்து –

சர்வம் கல்விதம் ப்ரஹ்மம் –
சதேவ சோம்ய இத மக்ர ஆஸீத் — ஏகமேவ அத்வதீயம் –
யத்ரத்வச்ய சர்வமாத்மை வாபவத் -என்கிற விசிஷ்ட ஐக்ய பிரதிபாதகங்களான சுருதி வாக்யங்களுக்கு
குத்ருஷ்டி கல்பனமாக -அசேஷ விசேஷ ப்ரத்ய நீக சின்மாத்ர ப்ரஹ்மைவ பரமார்த்த -என்று
அபார்த்தங்களை சொல்லி -என்றபடி –

மற்று எல்லா உயிரும் அஃது என்று –
ப்ரஹ்ம வ்யதிரிக்தமான ஜீவ வர்க்கங்கள் அடங்கலும்
அந்த ப்ரஹ்மத்தினுடைய பிரதிபிம்ப பூதமாய் இருக்கும் –
ஸ்வ அஜ்ஞானத்தாலே ப்ருதக் பூதமாய் தோற்றுகிறது இத்தனை என்று –
தததிரேகி நாநாவித ஜ்ஞாத்ர் ஜ்ஜேய தத் தத் க்ர்தஜ்ஞான
பேதாதி சர்வம் தசமின்னேவ பரிகல்பிதம் மித்யாபூதம் -என்றும் –
நிர் விசேஷ சின் மாத்ரம் ப்ரஹ்மை வசத்யம் -என்றும் -தத்வ நிர்ணயத்தை பண்ணி -என்றபடி –

உயிர்கள் மெய் விட்டு ஆதிப் பரனோடு ஒன்றாம் என்று சொல்லும் –
மோஷ நிர்ணயம் பண்ணுகிற அளவிலும் அப்படிப்பட்ட ஜீவ வர்க்கங்கள் அடங்கலும்
தேஹாத் யுபாதி விநிர்முக்தமானவாறே -ப்ரஹ்ம வேத ப்ரஹ்மைவ பவதி –
பரஞ்சோதி ரூப சம்பந்த்ய ஸ்வேன ரூபேணபி நிஷ்பஷ்யதே -இத்யாதி ஸ்ருதிகளுடைய தாத்பர்யத்தை அறிய மாட்டாதே –
அவற்றுக்கு காரண பூதனான சர்வ ஸ்மாத் பரனோடே ஏகீபவித்து இருக்கும் என்கிற
அபார்த்தத்தை சொல்லும் –

அவ்வல்லல் எல்லாம் –
இப்படி சொல்லுகிற குத்ருஷ்டிகளுடைய சூஷ்க தர்க்கங்களுடைய தோஷங்களை எல்லாம் –
அல்லல்-ஆரவாரம் -அதாவது தோஷம் –

ஆதிப் பரனோடு -என்று
குத்ருஷ்டிகளுடைய பஷத்தை பார்த்து சொன்ன வார்த்தை அன்று –
ஒரு ஜகத்தையும் -அதுக்கு அவனுடைய காரணத்வத்தையும் -சர்வமும் பரார்த்த பூதமாய் –
அவற்றுக்கு எல்லாம் பரனாய் இருப்பான் -என்னும் அத்தையும்-அந்த பஷத்தார் இசையார் இறே –
ஆக ஸ்வ -சித்தாந்த அபிப்ப்ராயத்தாலே அருளிச் செய்தார் இத்தனை –

வாதில் வென்றான் –
லோக ரஷண அர்த்தமாக வாதம் பண்ணி ஜெயித்து அருளினார் –

சர்வம் கல்விதம் ப்ரஹ்மம் -என்கிற ஸ்ருதிக்கு –
ப்ரஹ்மம் சப்தம் சமஸ்த கல்யாண குணாத்மகமான வஸ்துவையும் –
இதம் சப்தமும் -சர்வ சப்தமும் பரித்ர்ச்யமாநமாய் இருக்கிற -போக்ய -போக உபகரண -போக ஸ்தான –
போக த்ர்வர்க்க தத்வைவித்யத்தையும் பிரதிபாட கடவதாய் இருக்கையாலே –
ப்ரஹ்மம் ஒன்றே சத்யம்-தத் வ்யதிரிக்தம் எல்லாம் மித்யாபூதம் -என்கிற சுத்த அத்வைதம் சித்தியாதே –
சரீர பூதமாய் இருக்கிற-சேதன அசேதன வர்க்கத்துக்கும் -சரீரியான ப்ரஹ்மத்துக்கும் –
சரீர சரீரி பாவ நிபந்தனமாக ஐக்யம்-சித்திக்கையாலே -விசிஷ்ட ஐக்யமே அர்த்தம் என்று சொல்லியும் –

சதேவ சோம்ய இத மக்ர ஆஸீத் — ஏகமேவ அத்வதீயம் – -என்கிற ஸ்ருதிக்கு –
அவ்யக்தமஷரே லீயதே அஷரம் தமசி லீய தே தம பரதேவ ஏகீ பவதி -என்கிறபடி –
கல்பாதியிலே சூஷ்ம சித் அசித் சரீரகனாய் –ஒருவனே இருந்தான் என்றும் –
காணாத மதத்திலே ஒரு கார்யத்தை குறித்து அநேக காரணங்கள் உண்டாய் இருக்கிறாப் போலே –
இந்த ஜகத் ரூப கார்யத்துக்கும் அவித்யை ஒழிய வேறு ஒரு காரணாந்தரம் வேண்டாதபடி தானே
சர்வவித காரணமாய் இருக்கையாலே –
அபிந்ன நிமித்த கோபாதன காரணமாய் இருக்கும் என்றும்-அஷரார்த்தத்தை பிரதிபாதித்தும்

யத்ரத்வச்ய சர்வமாத்வைமாத் -என்கிற ஸ்ருதிக்கு –
ஜகத்துக்கு தாரகனாயும்-வ்யாபகனாயும் – நியந்தாவாயும் -அந்தர்யாமியாவும் -ஸ்வாமியாவும் -சேஷியாவும் –
இருக்கையாலே -எல்லாம் அந்த ப்ரஹ்மமாயே இருக்கும் என்று அர்த்த வரணநம் பண்ணியும் –
இன்னமும் அவர்கள்

ஸ்வ அஜ்ஞானத்தாலே -அபாரத்தங்களை சொல்லியும் -உதாஹ்ர்தங்களான-
தத்தவமசி – இத்யாதி ஸ்ருதிகளுக்கு எல்லாம் அயதாவஸ்த்தித்த பதார்த்தங்களை சொல்லியும் –
தாம் சொன்ன அர்த்தங்களுக்கு எல்லாம் அநு கூலமாய் இருந்துள்ள –

போக்தா போக்கியம் ப்ரேரிதாரம் சமத்வா ஜூஷ்டஸ் ததச்தே நாம்ர்தத்வமேதி ப்ரதகாத்மானம் ப்ரேரிதாரம் சமத்வா – என்றும் –
த்வா ஸூபர்ணா சயுஜா சாகாயா சாமானாம் வ்ர்ஷம் பரிஷச்வஜாதே தயோரன்யம் பிப்பலம் சாத்வத்தி
அனஸ் நன் நன்யோ அபிசாக் சீதி -என்றும் –
நித்ய அநித்யானாம் சேதனஸ் சேதனா நாம் ஏஹோ பஹூ நாம் யோவிததாதி காமர்ன் –இத்யாதியான
ஜீவ ப்ரஹ்மனோர் அத்யந்த பேத பிரதிபாதிக சுருதிகளையும் –
யப்ருத்வ்யாம் திஷ்டன் -யஸ்ய பர்த்வீ சரீரம் -ஏஷ சர்வ பூதாந்தராத்மா உபஹதபாப்மா திவ்யா தேவ எகோ நாராயணா –இத்யாதி
கடக சுருதிகளையும் உபந்யசித்து –

இனி பிரபஞ்ச மித்யாத்வ பிரதிபாதநத்துக்கு பௌத்தார்த்த சாரங்களான
கேவல துச்தர்க்கங்களை ஒழிய சமீசீன பிரமாணம் ஒன்றும் இல்லை என்று -அத்தை நிரசித்து –
ப்ரஹ்மை வேத ப்ரஹ்மை பவதி -ச ஏ நாந் ப்ரஹ்ம கமயதி — ஸ்வேன ரூபேணபி நிஷ்பத்யதே -இத்யாதி ஸ்ருதிகளுக்கு
முக்தி வேளையில் ஐக்யத்தை பிரதிபாதிக்கை – அர்த்தம் என்று சொன்னால்
இமான் லோகான் காமான் நீகாமரூப்ய நுசம்சரண் ,ஏதத் சாம காயன் நாஸ்தே -என்றும் –
சகல்வேவம் வர்த்தயன் யாவதாயுஷம் ப்ரஹ்ம லோக மபிசம்பத்யதே -நசபு நராவர்த்ததே நசபு நராவர்த்ததே -என்றும் –
நிரஞ்சனம் ப்ரஹ்ம் சாம்யம் உபைதி -என்றும் –
மமஸா தர்ம்ய மாகதா-என்றும்-
போக மாத்ர சாம்ய லிங்காச்ச -என்றும் -இத்யாதி அநேக ஸ்ருதி ஸ்மரதி சூத்திர விரோதம் வரக் கடவதாகையாலே –
ப்ரஹ்ம பூத ப்ரசன்னாத்மா நசோசதி ந கான்ஷதி – என்கிறபடியே –
ப்ரஹ்ம சாம்யா பன்னராய் -ப்ரஹ்ம பிரகார பூதராய் –
சர்வகத்வாத நந்தச்ய ஏவாஹா முபஸ்தித-என்கிறாப் போலே இருக்கிறார்கள் என்றும் –
அந்த ஸ்ருதிகளுக்கு அர்த்த நிர்ணயம் பண்ணி –
பஹூ முகமாக பிரசங்கித்து அருளி -அவர்களை ஜெயித்தார் என்றபடி –

கூறுமாறு குரு மதத் தொடங்கிய குமாரிலன் மதமவற்றின் மேல் கொடிய தர்க்க சரம் விட்ட பின்
குறுகி மாயவாதியரை வென்றிட -மீறி வாதில் வரு பரற்கு அரன் மத விலக்கடி கொடி எறிந்து போய்
மிக்க யாதவர் மதத்தை மாய்த்த பெரு வீரர் நாளும் மிக வாழியே – என்று இந்த
ஆனைத் தொழில் களில் ஈடுபட்டு ஜீயரும் மங்களா சாசனம் பண்ணினார் இறே –

எம்மிராமானுசன் –
இப்படிப் பட்ட ஆனைத் தொழில்களை செய்து அருளினவர் ஆகையாலும் –
அத்யந்த பிரதி கூலனாய் விமுகனாய் -அநாதியான சம்சாரத்திலே அழுந்தி கிடக்கிற என்னை உத்தரிக்கைக்காக
அவதரித்து அருளின ஸ்ரீ எம்பெருமானார் உடைய –

மெய் மதிக் கடல் –
யதார்த்த ஜ்ஞானம் கடல் போலே அவிச்சின்னமாய் இருக்கும் என்றபடி –
அன்றிக்கே
தத்வ ஜ்ஞான சாகரமாய் நம்முடைய நாதராய் இருக்கிற ஸ்ரீ எம்பெருமானார் லோக ரஷண அர்த்தமாக
குத்ருஷ்டிகளோடே பிரசங்கம் பண்ணி அவர்களை ஜெயித்து அருளினார் என்று இங்கனே அன்வயிக்கவுமாம் –
இவர் தாமே -வாதியர்காள் உங்கள் வாழ்வு அற்றதே –என்று அருளிச் செய்தார் இறே –
இவ் அர்த்தத்தை அபியுக்தரும் அருளிச் செய்தார் இறே –

பேதையர் வேதப் பொருள் இது என்று உன்னி –
வேதத்தை பிரமாணமாக ஏற்காத புற மதத்தவர் போல் அல்லாது -அதனை பிரமாணமாக ஏற்றுக் கொண்டு இருப்பினும் –
அதன் உண்மைப் பொருளைக் காண மாட்டாது –
அறிவிலிகளாய் இருக்கின்றனரே -என்னும் இறக்கம் தோற்ற –பேதையர் –என்கிறார் .
கையிலே விளக்கு இருந்தும் அதனைப் பயன் படுத்த மாட்டாத கண் அற்றவர்களாய் உள்ளனரே –என்கிறார் ..

இது வேதப் பொருள் என்று தாம் கொண்ட கொள்கையை அவர்கள் வேதப் பொருள்களாக ஆக்குகின்றனர்
வேதத்தின் பொருளை அவர்கள் சொல்ல வில்லை –
தாங்கள் சொல்வதை அவர்கள் வேதப் பொருளாக ஆக்குகின்றனர் –
செம்மைப் பொருளை அவர்கள் உன்ன வில்லை .
தாங்கள் கற்பித்த பொருளை வேதப் பொருளாக உன்னுகின்ற்றனர் –
தாங்களாக கொண்ட அத்வைத கொள்கை வேதப் பொருளாக தீர்மானிக்கப் பாட்டு
அவர்களால் நிரூபிக்க படுகிறது -என்றது ஆயிற்று .

ஸ்ரீ பாஷ்யத்தில் –
அந்தி கதபத வாக்ய ஸ்வரூப ததர்த்த யாதாத்ம்ய பிரத்யஷாதி சகல பிரமாண
ததிகர்த்தவ்யதாரூப சமீசீ நந்யாய மார்க்காணாம்-என்று

சொல்-வாக்யங்களின் ஸ்வரூபம் பொருளின் உண்மைக் கருத்து ப்ரத்யஷம் முதலிய பிரமாணங்கள் உணர்த்துவது –
அதற்கு உறுப்பான நேரிய யுக்தி வழிகள் இவற்றை அறியாதவர்கள் -என்று
மகா சித்தாந்தத் தொடக்கத்தில் அருளி உள்ளதை அடி ஒற்றி –பேதையர்-என்கிறார் .

அத்வைத மதம் என்பது –
எவ்வித பேதமும் அற்று -அறிவு வடிவமான ப்ரஹ்மம் ஒன்றே உண்மைப் பொருள் ..
நிர் விசேஷம் எனப்படும் அதனைத் தவிர -பிற யாவும் உண்மை இல்லாத பொய்ப் பொருளே என்னும் கொள்கை உடைத்து .
இக் கொள்கையே வேதத்தினால் உணர்த்தப் படுகிறது என்பது அத்வைத மத ப்ரவர்த்தகர்களுடைய கற்பனை யாகும் –

சத்வித்தையில் -ஓதப்படும் ———சதேவ சோம்ய இத மக்ர ஆஸீத் — ஏகமேவ அத்வதீயம் –—–
என்னும் வாக்கியம் த்வைதத்தை ஒதுக்கி தள்ளி அத்வைதத்தை நிலை நாட்டுவதாக அவர்கள் கருதுகின்றனர் .
த்வைதம்-பேதம் –அத்வைதம்-அபர்த்தம்————————————————————————————-என்று வ்யுத்புத்தி சொல்வர் .
கண் எதிரே பெயரும் வடிவும் வாய்ந்த பொருள்களாக அமைந்த இவ்வுலகம் சிருஷ்டி காலத்துக்கு முன்பு பெயரும் வடிவும் இன்றி –
சத்-இருப்பது என்னும் அறிவு பொருள் -ஆகவே இருந்தது .
அது ஒன்றாகவே இருந்தது
தனது காரிய பொருள் வேறு ஒன்றுமே இன்றி இருந்தது –
குடம் உண்டாவதற்கு முன்பு மண்ணோடு குடமாக மாற்றுவிக்கும் குயவன் ஒருவன் இருப்பது போலே
உலகம் உண்டாவதற்கு நிமித்த காரணமாக மற்று ஒரு பொருள் இன்றி இருந்தது –

இவ்வாறு கூறும் சத் வித்யா வாக்யத்தில் –
சத் ஏவ -என்பதனால் -சத்தான பொருளைத் தவிர வேறு அசத்தான பொருள் இல்லை -என்று தோற்றுவதால் –
விஜாதீய பேதம் -மரத்துக்கு வேற்றினப் பொருளாகிய கல் முதலிய பொருள்களினின்றும் வேறுபாடு போலே
வேறுபட்ட அசத்தினின்றும் வேறு பாடு -சத்தாகிய இப் பொருளுக்கு இல்லை என்று கொள்ள வேண்டும் .
வேறு பொருள் இருந்தால் அன்றோ அதனினும் வேறுபாடு இதன் பால் தோற்றும் –
வேறு பொருள் பொய் என்பது கருத்து –

இனி ஏகம் ஏவ –என்பதனால்-சத்தான பொருள் ஒன்றே –
அவ்வினத்தை சேர்ந்த வேறு ஒரு பொருள் இல்லை என்று தோற்றுவதால்-சஜாதீய பேதம் –
ஒரு மரத்துக்கு அவ்வினத்தை சேர்ந்த மற்று ஒரு மரத்தின் நின்றும் வேறுபாடு போலே-சத் -என்னும் அதன்
இனத்தை சேர்ந்த வேறு ஒரு பொருளினின்றும் வேறுபாடு -இப்பொருளுக்கு இல்லை -என்று கொள்ளல் வேண்டும் .
அத்தகைய பொருள் இருந்தால் அன்றோ அதனின்றும் வேறுபாடு தோற்றும் -அத்தகைய வேறு பொருள் பொய் என்பது கருத்து –

இனி அத்விதீயம் -என்பதனால்-
இரண்டாம் பொருள் அற்றது -என்று கூறுவதனால் –ஸ்வகத பேதம் -மரத்தில் உள்ள இலை -பூ -பழம்-என்று பல
வெவ்வேறு பொருள்களினின்றும் மரத்துக்கு வேறு பாடு போலே -தன்னிடம் உள்ள குணம் முதலியவற்றினின்றும்-சத்-என்னும்
பொருளுக்கு வேறுபாடு -இப் பொருளுக்கு இல்லை -என்று கொள்ளல் வேண்டும் .
குணம் முதலியன இருந்தால் அன்றோ அவற்றினின்றும் வேறுபாடு தோற்றும் –குணம் முதலியன பொய் என்பது கருத்து –

இனி ஏகம் என்பது -ஸ்வகத பேதம் இல்லாமையும் –
ஏவ -என்பது சஜாதீய பேதம் இல்லாமையும் –
அத்விதீயம் -என்பது விஜாதீய பேதம் -இல்லாமையும்
கூறுவதாக உரைப்பதும் உண்டு .

உண்மைப் பொருளாகிய கயிற்றில் பொய்ப் பொருளாகிய பாம்பு தோற்றுவது போலே –
உண்மைப் பொருள் ஆகிய -சத் -எனப்படும் ப்ரஹ்மத்தின் இடத்தில் பொய்ப் பொருளாகிய உலகம் தோற்றுகிறது .
இதனை தெளிவாக ——————————————ப்ருஹ் -6 5-7 – – என்னும் வாக்கியம் பேசுகிறது .
இந்த ஆத்மா என்பது யாதொன்று அது தான் உலகம் அனைத்தும் என்கிறது
இந்த வாக்கியம் -இந்தக்கயிறு என்பது -யாதொன்று அது தான் இந்தப் பாம்பு என்னும் சொல் தொடர் போன்றது இந்த சுருதி வாக்கியம் –

கயிற்றினில் பாம்பின் தோற்றம் அச் சொல் தொடரினால் நீக்கப் படுகிறது
ப்ரஹ்மத்தில் உலகின் தோற்றம் இச் சுருதி வாக்கியத்தால் நீக்கப் படுகிறது –
கயிற்றை கண்டு அறிந்தவனுக்கு பாம்பின் தோற்றம் பாதிக்கப் படுவது போலே
ப்ரஹ்மத்தை சாஷாத் கரித்தவனுக்கு உலகின் தோற்றம் பாதிக்கப் படுகிறது –படவே பாம்பு போலவே உலகும் பொய்ப் பொருள் என்க –

பாதிக்கப் படும் உணர்வை உண்டு பண்ணும் பொருளையும் –பாதிக்கும் உண்மை உணர்வை உண்டு பண்ணும் பொருளையும் –
குறிக்கும் சொற்களை -அத்யச்ததத்தையும் அதிஷ்டானத்தையும் –கூறும் சொற்களை –சமாநாதிகரணமாக–வெவேறு தன்மைகளை
முன்னிட்டு சொல்லும் பல சொற்கள் சேர்ந்து ஒரு பொருளைக் கூறுவதாக –வழங்குவது மரபு .
இதனை -பாதாயாம் சாமா நாதி கரண்யம் -என்பர் நூல் வல்லோர் –
இனி உலகில் பல்வகைப் பட்ட பொருள்களை உள்ளனவாகப் பார்ப்பவன் -அறியாமையில் இருந்து
மேலும் அறியாமையை அடைகிறான் -என்று ———————————————————ப்ருஹ் – -6 4-19 – என்னும் உபநிஷத் கூறுவதும் கவனிக்கத் தக்கது .
இதனால் பர ப்ரஹ்மத்தை தவிர ஏனைய பொருள்கள் உள்ளன போல் தோன்றி -உண்மை அறிவினால் -ஒழியும்
பொய்ப் பொருள்களே என்பது நன்கு விளங்கும் –
இங்கனம் வேதம் ஓதும் மதம் அத்வைதமே என்று அவர்கள் நிரூபணம் செய்கின்றனர் -என்க –

ப்ரஹ்ம நன்று என்று –அஃது என்று —
தங்கள் மதம் வைதிகம் என்று நிரூபித்தனர் கீழே –
தத்துவ நிர்ணயம் பண்ணுகின்றனர் இங்கே –
ப்ரஹ்ம ஸ்வரூபத்துக்கு லஷணம் -நன்று -என்று கூறப்படுகிறது –
நன்று -நல்லது -சத்து என்றபடி -சத்து -உள்ளது -அசத்து அல்லாதது -விலஷணம் ஆனது -என்றபடி –
இதனால்———————————-தைத் ஆனந்த வல்லி – 1-1 – -என்கிற சோதக வாக்கியம் கருதப்படுகிறது .
காரணமாய் இருத்தல் பற்றி குற்றம் நேரிடுமோ என்கிற சங்கையை போக்குவதனால் -இந்த வாக்கியம் சோதக வாக்கியம் எனப்படுகிறது .
காரண வாக்யத்தால் நிர் விசேஷமாக கூறப் பட்டு இருப்பதற்கு ஏற்பவும் -எதிர் மறையில் சோதக வாக்யமாய்
அமைந்த —————————————————-என்னும் வாக்யத்தில் அவயவம் அற்றதாயும் -சிருஷ்டி முதலிய செயல் அற்றதாயும் கூறப்பட்டு
இருப்பதற்கு ஏற்பவும் இந்த வாக்கியம் நிர் விசேஷ ப்ரஹ்மத்தின் லஷணத்தை கூறுவதாக கொள்ளல் வேண்டும் .-
செயல் அற்றது என்று கூறுவதால்- சிருஷ்டி முதலிய செயல்கள் பொய்யானவைகளாக கருதப்படல் வேண்டும் .

ஆக –
சத்யம் முதலிய மூன்று சொற்களும் முறையே அசத்தியத்தில் இருந்தும் -ஜடத்தில் இருந்தும் -அளவு பட்டவைகளில் இருந்தும் –
வேறுபட்ட நிர் விசேஷ ப்ரஹ்ம ஸ்வரூபத்தை மட்டும் கூறும் நோக்கம் கொண்டவை என்று உணர்தல் வேண்டும் .
அவித்யையினால் -ப்ரஹ்மத்தில் தோன்றும் பொய்ப் பொருள் என்பது ஜடப் பொருளே –
அறிவுப் பொருள் சத்தியமானது –ஆத்ம தத்துவத்தை தவிர மற்றவை அனைத்தும் பொய்யானவையே.
ஜீவாத்மாக்கள் ஒருவருக்கு ஒருவர் வேறு பட்டவர்கள் அல்லர் . எல்லா உயிர்களும் அந்தப் பர ப்ரஹ்மமே என்கின்றனர் –
அஹமாத்மா குடாகேச சர்வ பூதாசயச்த்தித -கீதை -16 20- -எல்லா பிராணிகள் உடைய
இதயத்திலே இருக்கும் ஜீவாத்மா நானே -என்று கூறும் கண்ணனை தங்களுக்கு சான்று பகருவதாக அவர்கள் கருதுகின்றனர் –

ஆக
நிர் விசேஷ வஸ்துவே தத்துவம் என்றும்
ஜீவான்மாக்களும் வேறுபடாது அத்தத்துவமாகவே உள்ளனர் என்றும்
தத்துவம் ஒன்றே என்றும் நிர்ணயம் செய்யப் பட்டதாயிற்று .

உயிர்கள் மெய் விட்டு –பரனோடு ஒக்கும் –
தத்துவ நிர்ணயம் செய்த பிறகு புருஷார்த்தம் நிர்ணயம் -அதாவது -மோஷ நிர்ணயம் – செய்யப்படுகிறது .
சரீர சம்பந்தத்தை அறவே விட்டு -ப்ரஹ்மத்தொடு ஜீவான்மா ஐக்கியம் அடைவதே மோஷம் என்று நிர்ணயிக்கிறார்கள் .
மக⁴வந்மர்த்யம் வா இத³ꣳ ஶரீரமாத்தம் ம்ருʼத்யுநா
தத³ஸ்யாம்ருʼதஸ்யாஶரீரஸ்யாத்மநோঽதி⁴ஷ்டா²நமாத்தோ வை
ஸஶரீர: ப்ரியாப்ரியாப்⁴யாம் ந வை ஸஶரீரஸ்ய ஸத:
ப்ரியாப்ரியயோரபஹதிரஸ்த்யஶரீரம் வாவ ஸந்தம் ந ப்ரியாப்ரியே ஸ்ப்ருʼஶத: ॥ -சாந்தோ-8.12.1॥ – – – என்பதை
அடி ஒற்றி மெய் விட்டு -என்கிறார் .
மெய்-சரீரம் -விபரீத இலக்கணை
நன்று ஆன -அதாவது சத்யமான ஆத்மா -அசத்தியமான சரீரத்தின் தொடர்பு அற்றது -என்று விவேகித்து
அறிதலே சரீரத்தை விடுதல்-என்க –

இதனையே ——அஶரீரோ வாயுரப்⁴ரம் வித்³யுத்ஸ்தநயித்நுரஶரீராண்யேதாநி
தத்³யதை²தாந்யமுஷ்மாதா³காஶாத்ஸமுத்தா²ய பரம் ஜ்யோதிருபஸம்பத்³ய
ஸ்வேந ரூபேணாபி⁴நிஷ்பத்³யந்தே ॥ –சாந்தோ -8.12.2॥।——–-என்கிறது சுருதி சமுத்தாய என்கிறதற்கு விவேகித்து என்று பொருள் .
சரீர சம்பந்தம் விடுதலே மோஷம் என்க –

பிரித்த உபாதியான சரீரம் விடுபடவே -ஜீவான்மாவும் ப்ரஹ்மமும் ஒன்றாகி விடுகின்றன .
விவேகி உடனே பரம் ஜோதியோடு ஓன்று பட்டு -ஸ்வ ஸ்வரூப ஆவிர்பாவத்தை பெற்று விடுவதாக அத்வைதிகள் கூறுவது
இங்கு உணரத் தக்கது
ப்ரஹ்ம ஞானம் ஏற்பட்டதும் – அர்ச்சிராதி கதி இன்றி -ஐக்கியம் அடைவதான மோஷம் கிடைத்து விடுகிறது என்பது அவர்கள் சித்தாந்தம் .

ப்ரஹ்மத்தை அறிந்தவன் ப்ரஹ்மம் ஆகவே ஆகி விடுகிறான் -என்று

ஸ யோ ஹ வை தத்பரமஂ ப்ரஹ்ம வேத ப்ரஹ்மைவ பவதி நாஸ்யாப்ரஹ்மவித்குலே பவதி.
தரதி ஷோகஂ தரதி பாப்மாநஂ குஹாக்ரந்திப்யோ விமுக்தோமரிதோ பவதி৷৷ முண்டகம் –3.2.9৷৷

ஸ யோ ஹ வை தத்பரமஂ ப்ரஹ்ம வேத ப்ரஹ்மைவ பவதி –ப்ரஹ்மத்தை அறிந்து அவனை அடைந்து அனுபவிக்கிறான் –
அஸ்யகுல நபவதி -அப்ரஹ்மவித்–ப்ரஹ்மத்தை அறியாதவர்கள் போலே மீண்டும் பிறப்பது இல்லை –
ப்ரஹ்மவித்குலே பவதி.-குலத்தில் பிறந்தவர்களும் ப்ரஹ்ம ஞானம் பெற்றே பிறப்பார்கள்
தரதி ஷோகஂ தரதி பாப்மாநஂ குஹாக்ரந்திப்யோ விமுக்தோமரிதோ பவதி–சோகம் பெறுவது இல்லை
கர்மங்கள் வாசனை உடன் கழியப் பெற்றவன் ஆகிறான் –
அஞ்ஞான அந்தகார முடிச்சுக்கள் அவிழ்க்கப் பெற்று பகவத் அமிருதம் அனுபவிக்கப் பெறுகிறான்———என்னும் சுருதி
ஐக்யத்தை – மோஷமாக ஓதுவதும் காண்க .
இந்த ஸ்ருதியை அடி ஒற்றி –மெய் விட்டு -என்பதற்கு ப்ரஹ்ம ஞானத்துடன் சரீர ஆத்ம விவேகம் பண்ணி
என்று பொருள் கொள்ளல் வேண்டும் .

ஆதிப் பரன் –
வ்யவஹார தசையில் காரண வஸ்துவாக கூறப்பட்டதும் –
பர வித்தையினால் அறியப் படுவதுமான -நிர் குண ப்ரஹ்மமான பரமாத்மா -என்றபடி –
இனி காரணமாய் அமைந்த ஸ்ரீ பரம புருஷன் என்று தம் சித்தாந்தத்தில் உள்ள வாசனையாலே ஸ்ரீ அமுதனார் கூறினதாகவுமாம் .

என்று சொல்லும் –வாதில் வென்றான் –
ஸ்ரீ எம்பெருமானாருடைய வாதத் திறமையினால் அத்வைதிகள் ஆரவாரம் ஒடுங்கி வாய் மாண்டு நின்றனர் – என்றபடி
இனி ஸ்ரீ பாஷ்ய காரர் அவர்களை வாய் மாளப் பண்ணினதை ஒவ் ஒன்றாககக் கவனிப்போம் .

இந்தப் பாசுரத்தில் அத்வைதிகள் முதலில் கூறியது அத்வைத மதமே வைதிகம் என்பது –
அதனை ஸ்ரீ பாஷ்ய காரர் எளிதில் வென்று விடுகிறார் .

சதேவ சோம்ய இத மக்ர ஆஸீத் — ஏகமேவ அத்வதீயம்———என்று தொடங்கும் சத் வித்யா வாக்கியம்
மூன்று வகைப் பட்ட பேதமும் இன்றி –
நிர் விசேஷமான ப்ரஹ்மம் ஓன்று தான் உள்ளது –மற்றவை அனைத்தும் பொய் என்பதைக் காட்டாது .
நிர் விசேஷமான வஸ்து ஓன்று இருத்தல் சம்பவிக்கக் கூடியது ஓன்று அன்று –
ஆதலின் -எந்த பிரமாணமும் அதைக் காட்ட இயலாது -குறிப்பிட்ட சத்வித்யா -வாக்கியம் ஒன்றை அறிந்தால்
அனைத்தையும் அறிந்ததாகும் என்று முன்னர் கூறியதை விளக்கும் வகையில் –

சத் -எனப்படும் பர ப்ரஹ்மம் உலகிற்கு உபாதான -குடமாக மாறப் போகும் மண் போலக் காரியப் பொருளாய்
மாறும் காரணப் பொருள் -காரணமாகவும் –
நிமித்த -மண்ணைக் குடமாக மாற்றும் குயவன் போல காரியப் பொருளாக மாற்றும் பொருளான -காரணமாகவும் –காட்டி-
அந்நிலைக்கு ஏற்ப எல்லாம் அறிந்தமை -எல்லாம் வல்லமை -சத்ய சங்கல்பம் வாய்ந்தமை –
எல்லாவற்றிலும் உள் புக்கு இருத்தல் -நியமித்தல்-முதலிய நற் குணங்கள் உடைமையும் –
உலகு அனைத்தும் அப் பொருளையே ஆத்மாவாக கொண்டாமையும் பிரதி பாதித்து –
இத்தகைய ப்ரஹ்மத்தை ஆத்மாவாக கொண்டவனாக நீ இருக்கிறாய் -என்று ச்வேதகேதுவுக்கு உபதேசம் செய்யப் புகுந்த
இந்த பிரகரணம் நிர் விசேஷமான ப்ரஹ்மத்தை சொல்லுவதாக கூறுவது இசையாது -என்கிறார் ஸ்ரீ பாஷ்ய காரர் .

ஸ்ரீ பாஷ்ய காரர் இங்கனம் அருளிய திரு வாக்கினை சிறிது விளக்குவோம் .
சோதக வாக்கியங்களில் வெறும் அறிவு வடிவமாய் ப்ரஹ்மம் உணர்த்தப் படுவதற்கு ஏற்ப -சதேவ -என்பது போன்ற
காரணத்வத்தைக் கூறும் வாக்கியங்கள் நிர் விசேஷ ப்ரஹ்மத்தை கூறுவதாக வியாக்யானம் செய்வது நேரியதாகாது .
எதனை கேட்டால்-மனனம் பண்ணினால் -அறிந்தால் –
கேளாததும் -மனனம் செய்யப் படாததும் -அறியப்படததும் –
கேட்டதும் -மனனம் செய்யப்பட்டதும் -நன்கு அறியப்பட்டதும் ஆகுமோ –
அந்த ஆதேசம்-பிரசாசனம் செய்யும் -ப்ரஹ்மத்தை கேட்டனையா -என்று ச்வேதகேதுவை நோக்கி தந்தை வினவுகிறான் .

இதனால் காரணப் பொருளான ப்ரஹ்மத்தை அறிவதனால்-
காரிய பொருளாகிய அனைத்தும் அறிந்ததாகும் என்று சொல்லப் படுகின்றது .
மண்ணாகிய காரணப் பொருளும் அதன் காரியப் பொருளும் அடுத்து திருஷ்டாந்தமாக
காட்டப் படுவதற்கு ஏற்ப இங்கனம் பொருள் கொள்வதே முறையாகும் .
ப்ரஹ்மம் ஒன்றே இருப்பதானால் மற்றை அனைத்தும் தெரிந்தவைகளாகி விட முடியாது .
மண் உருண்டை இருப்பதனால்-அதன் காரியப் பொருள்கள் எல்லாம் தெரிந்தவைகள் ஆகி விடுவது இல்லையே –
காரணப் பொருளினின்றும் வேறுபட்டு -இனி உண்டாகப் போகிறவை -எங்கனம் காரணப் பொருளை
அறிந்த மாதரத்தில் அறியப் பட்டவைகள் ஆகும் -என்று காரியப் பொருள் புதிதாய் உண்டாகிறது என்னும்
வைசேஷிக மதத்தைப் பற்றி கேள்வி எழும் பொழுது விடை இறுக்கப் படுகிறது .

இத மக்ர ஆஸீத்—-என்று தொடங்கி -மண்ணின் மாறுபாடான நிலையே குடமாய் இருக்கும் நிலை –அது புதிதாக உண்டானது அன்று –
வடிவும் பெயரும் உபயோகமும் மாறினவே அன்றி பொருள் வேறு பட்டு இலது ..
மண் என்பதே உண்மையானது -குடம் உண்டான பின்பும் -மட்குடம்-என்று தோற்றுவதால் மண் குடமாவது ப்ரத்யக்ஷமாக தெரிகிறது .
குடம் என்னும் அறிவும் பெயரும் வேறு பொருளாக ஆக்கி விட மாட்டாது .
நான் சுகம் உள்ளவன் -நான் துக்கம் உள்ளவன் -என்று ஒரே வடிவத்தில் அறிவும் சொல்லும் வேறு பாட்டு உள்ளன .
ஆதலின் சொல்லும் வடிவமும் -குடம் படம் -முதலிய வேறு பட்ட பொருள்களிலும் –
சுகி துக்கி -என்று ஒரே பொருளிலும் கூறப்படுவதால் அவை பொருள்களை வேறு படுத்த மாட்டா -என்கை-

மண் ஒன்றே உண்மையானது -அதன் விகாரமான பொருள்கள் அனைத்தும் பொய் என்பது கருத்தாயின் –
மண் சத்யம் என்று சொல்லப்பட்டு இருக்க வேண்டும் –
அங்கன் ————–என்னாது ———————————-என்று மண் என்பதே உண்மை என்று ———–என்று என்னும் சொல்லை வழங்கியது பயன் அற்றதாகி விடும் .
மேலும் மண்ணின் விகாரங்கள் ஆகிய குடம் முதலியன பொய் ஆனால் -சத் -எனப்படும் பர ப்ரஹ்மத்துக்கு
மண்ணை திருஷ்டாந்தமாக காட்டி -அதன் விகாரங்களை பொய் என்பது பொருந்தாது -என் எனின்
அவை உண்மை பொருள்களாக உலகினில் தோன்றுகின்றன -எடுத்துக் காட்டாக காட்டப்படும் பொருளும் –
எதனுக்கு எடுத்துக் காட்டு காட்டுகிறோமோ -அந்த பொருளும் ஒரே மாதிரியான தன்மை வாய்ந்தவைகளாக இருக்க வேண்டும் அன்றோ –

சத் -எனப்படும் பொருளே உள்ளது -பிற யாவும் பொய் யானவை என்பார்க்கு
மண்ணின் விகாரமான குடம் முதலியன உண்மை பொருளாக தோன்றக் கூடாது அன்றோ –
பாரமார்த்திகமான உண்மை அவற்றில் இல்லை –
குடம் முதலியவை பாரமார்த்திகமாக -உண்மை நிலையில் -இல்லாதவைகளே –
வ்யவஹாரத்தில் -உலக நடையில் -உள்ளவைகளாக அவை தோற்றுகின்றன -என்னில்
மண்ணுருன்டையும் பாரமார்த்திகமாக இல்லாததையும் வ்யவஹாரத்தில் உள்ளது ஒன்றாயும் இருத்தலின்
காரணப் பொருள் பாரமார்த்திகமாய் உள்ளதாக கொள்ள இயலாமல் பொய் விடும்
வ்யவஹாரத்தில் உள்ளதாக காரணப் பொருள் அமைந்தாலே போதும் எனின் -குடம் முதலிய காரியப் பொருள்களும்
வ்யவஹாரத்தில் உள்ள பொருள்களே யாதலின் வேற்றுமை இன்றிப்போம் .

இனி குறிப்பிட்ட குடம் முதலிய மட கலங்களுக்கு மண் காரணம் ஆவது போலே –
பர ப்ரஹ்மம் குறிப்பிட்டவற்றுக்கு காரணமான தன்று -உலகு அனைத்துக்கும் கரணம் என்கிறது —-என்று தொடங்கும் வாக்கியம்
உலகு அனைத்தும் படைப்புக்கு முன்பு சத்தாகவே -ஒன்றாகவே -பிரித்து ஓன்று இன்றி -இருந்தது என்கிறது இந்த வாக்கியம்
பின்னர் படைப்பு கூறப்படுதலின் படைப்புக்கு முன்பு என்று பொருள் உரைக்கப் பட்டது .

இந்த வாக்கியம் மூன்று விதமான பேதமும் இல்லாமையை காட்டாது –
நேர் மாறாக அவை உள்ளமையைக் காட்டுகிறது –
முன்பு என்று காலம் உள்ளமையைக் கூறுவதால்-விஜாதீயமான -வேற்று இனத்தின் -பேதம் உள்ளமை தெரிகிறது .
ஒன்றே என்றமையால்-சஜாதீய -ஒரே இனத்தின் -பேதம் தோன்றுகிறது –
படைப்பைக்கு வேண்டிய அறிவாற்றல் முதலியவை தோற்றுதலின் -ஸ்வகத பேதமும் -குணம் முதலியன
தன் பால் உள்ளமை -தோன்றுகிறது .

சத் ஏவ -என்பது விஜாதீய பேதம் இல்லாமையையும்
அத்விதீயம் -என்பது ஸ்வகத பேதம் இல்லாமையையும்
ஸ்ருதின் —-முன்பு என்பது கூடாது என்றும் -நிர் விசேஷமாய் அன்றோ ப்ரஹ்மம் இருப்பது
இனி சத் ஏவ -என்பது விஜாதீயமான அசத் அன்று என்பதைக் காட்டாதோ எனின் -காட்டும்
ஆயின் விஜாதீயம் என்கிற முறையில் காட்டாது-பின்னையோ எனில் சத்துக்கு விரோதி என்னும் முறையில் காட்டும் என்க –

ஏகம் ஏவ -எனபது தனியே பெயர் வடிவம் தோன்றாத படி -அனைத்தையும் தன்னுள் ஒடுக்கிக் கொண்ட ப்ரஹ்மத்தை சொல்லுகிறது –
காரண நிலையில் ஒன்றே எனபது மேலே
பல பொருளாகக் கடவேன் -பஹுஸ்யாம்-என்பதற்கு ஏற்ப -பல பொருள்களாக போகிரே ஒரே பொருள்-என்றபடி .
எனவே மண்ணே குடம் முதலிய பல பொருள்கள் ஆவது போலே ப்ரஹ்மமே உலகமாக ஆகப் போவதனால்
உலகினுக்கு ப்ரஹ்மம் உபாதான காரணம் எனபது பெறப்பட்டது –
குடமாகிற மண் -கடத்துக்கு உபாதான காரணம் ஆவது போலே -உலகமாக மாறப் போகிற ப்ரஹ்மம் உலகிற்கு உபாதான காரணம் -என்க..

அத்விதீயம் -எனபது மற்று ஒரு பொருள் இல்லாதது -என்றபடி .
ஏகமேவ -என்பதனால் உபாதான காரணம் எனபது தோன்றவே –
மண்ணைக் குடமாக்கும் நிமித்த காரணமாக குயவன் ஒருவன் இருபது போலே
நிமித்த காரணமாக ப்ரஹ்மத்தை தவிர -மற்று ஒரு பொருள் உண்டோ என்னும் கேள்வி எழும் போது –
மற்று ஒரு பொருள் இல்லை -என்கிறது அத்விதீயம் -என்னும் சொல் –
ப்ரஹ்மம் ஒன்றே உபாதான காரணமும் நிமித்த காரணமும் என்றது ஆயிற்று –

மண் அறிவற்ற பொருள் ஆதலின் அதனைக் குடமாகக அறிவாளியான குயவன் தேவைப்பட்டான் –
ப்ரஹ்மம் பலவாகக் கடவேன் என்று சங்கல்பம் செய்யும் அறிவாளி ஆதலின் -ஆக்குவதற்கு மற்று ஒருவன் தேவை இன்றி –
தானே உபாதான காரணமாகவும் நிமித்த காரணமாகவும் ஆயிற்று என்று உணர்க –
சங்கற்பம் செய்வதால் அறிவுடைமையும் –
படைப்பதால் ஆற்றல் உடைமையும் -தோன்றுகின்றன –
பல பொருள்களாக ஆவதனால் சத்ய சங்கல்பமும் தெரிகிறது –
அந்தர் பகித்ச ———-என்று ஜீவனை உடலாக கொண்டு உட் புக்கு உள்ளமையாகிய அனுப்ரேவேசம்
ஓதப்படுவதனால்-சர்வாந்தரத்வம் தெரிகிறது –

ஜீவனுக்கு உள்ளும் அனுபிரவேசம் அசேதனப் பொருளில் போலே கூறப் படுதலின்
ஜீவனையும் ப்ரஹ்மத்தையும் ஒன்றாக கொள்ள வழி இல்லை .———————————என்று
சத்தான பொருளை ஆதாரமாக கொண்டவைகளாக பிரஜைகளைக் கூறுவதனால் –
சர்வத்துக்கும் ஆதாரமாய் இருத்தலும் சொல்லப்படுகின்றது –
இதனாலேயே சர்வ நியமனமும் சொல்லப்பட்டது ஆகிறது .

—————————————————————————————–ப்ருஹ் – 5-8 9- – என்று நியமனத்தொடு -ஆதாரமாய் இருத்தலும் ஓதப்படுவது காண்க .
இங்கனம் அனைத்துக்கும் ஆதாரமாயும் -நியமிப்பதாயும் -எதனினும் உட் புக்கு இருப்பதையும் –
கூறப்படவே ப்ரஹ்மம் உலகினுக்கு ஆத்மா -என்றது ஆயிற்று
——————————–சாத் – 6-8 7– என்று உலகம் அனைத்தும் ப்ரஹ்மத்தை ஆத்மாவாக கொண்ட உடல் எனப்படுவதும் காண்க –
ஆதாரமாய் உட் புக்குநியமிப்பது ஆத்மா என்றும் -ஆதேயமாய் -தாங்கப்படும் பொருளாய் -அங்கனம்
நியமிக்கப் படும் பொருள் உடல் என்றும் உணர்க .

ஆக -தேவன் நான் -மனிதன் நான் -என்னும் இடங்களில் சரீரத்தை சொல்லும் தேவன் முதலிய சொற்கள்
அச் சரீரத்துடன் கூடிய ஆத்மா பர்யந்தம் சொல்லுவது போலே –
தத்தவம் அஸி -என்னும் இடத்திலும்
த்வம்-என்னும் சொல் ச்வேதகேதுவின் ஜீவாத்மாவை உடலாக கொண்ட ஆத்மாவாகிய ப்ரஹ்மத்தை சொல்லி –
கீழ்க் கூறிய தன்மைகள் வாய்ந்த ப்ரஹ்மமும் உனக்கு ஆத்மாவாய் அமைந்த ப்ரஹ்மமும் ஒன்றே என்கிறது .
ஆக சத்வித்யா பிரகரணம் முழுதும் நிர் விசேஷ ப்ரஹ்மத்தைப் பற்றியது அன்று –
ச விசேஷ ப்ரஹ்மத்தைப் பற்றியதே என்று தேறுகிறது .

கயிற்றில் தோன்றும் பாம்பு போன்றது -ப்ரஹ்மத்தினிடம் தோன்றும் உலகம் என்பதும் பொருந்துவதாய் இல்லை –
ஏன் எனில் கயிற்றை பார்ப்பவர்க்கு அமைப்பு ஒத்து இருத்தலின் கயிற்றில் பாம்பு என்று மருள் -உண்டாகிறது
அது போல ப்ரஹ்மத்தை தவிர பார்ப்பவர் தனித்து இல்லாமையாலும் –
ஒப்புமை இன்மையாலும் -ப்ரமம்-மருள்-ஏற்பட வழி இல்லை .

இனி அவித்யா சபளிதமான ப்ரஹ்மமே பார்ப்பவராகவும் மருளுக்கு உரிய பொருளாகவும் பிரமிக்கிறது என்று கொள்ளின் –
ஸ்வ பிரகாசமாய் ஒளிரும் அறிவு வடிவமான அது எங்கனம் அவித்யா சபளிதமாகக் கூடும் –
ஞானத்தினால் பாதிக்கப் படுவதாய் அன்றோ அவித்யை உங்களால் ஒப்புக் கொள்ளப் பட்டது –
அறிவு வடிவமான ப்ரஹ்மத்தை அவ் வறிவினாலேயே அழிவதான அவித்யை சார்ந்து பிரமிக்க செய்யின்
அவித்யை என்றும் அழியாது நிலை நின்று விடும் அன்றோ –

இனி ஸ்வரூப ஞானம் அன்று -ஞான ஸ்வரூபமாய் உள்ளது ப்ரஹ்மம் என்னும் அதனைப் பற்றிய ஞானமே
அவித்யைப் போக்க வல்லது என்னில் –
அந்த ஞானமும் ப்ரஹ்ம ஸ்வரூபத்தை தவிர வேறுபடாமையின் -ஸ்வரூபத்தை பற்றிய ஞானமே அவித்யயை
போக்க வல்லது அன்று -என்று வேறுபாட்டிற்கு இடம் ஏது-
இனி எங்கு எங்கு அஞ்ஞானம் போக்கடிக்கப் படுகிறதோ -அங்கு எல்லாம் போக்கடிப்பது ஸ்வரூப ஞானம் அல்லாமல்
பிரமாண ஞானமாகவே இருத்தல் பற்றி -இங்கும் பிரமாண ஞானமே அவித்யையை போக்க வல்லது என்று கொள்ளல் வேண்டும் –
எனில்-கூறுவோம் .

கயிற்றில் பாம்பு தோன்றும் அஞ்ஞானம் -இது கயிறு -என்கிற பிரமாண ஞானத்தினால் போக்கடிக்கப் பட வேண்டும் எனபது உண்மையே –
கயிறு ஜடப் பொருள் -அது தன்னை தான் காட்டாது -ஆதலின் ஆங்கு பாம்பு என்கிற ப்ரமம் ஏற்படுவது தகும் –
இது கயிறு -என்கிற உண்மை பிரமாண ஞானத்தினால் அது போக்கடிக்கப் படுவது பொருந்துகின்றது
ப்ரஹ்மமோ ஸ்வயம் பிரகாச சைதன்ய ரூபம் ஆதலின் அது பிரகாசியா நிற்க –
அதற்கு முரண்பட்ட ப்ரமம் -மருள்-ஏற்படுவதற்கே சிறிதும் இடம் இல்லை என்று தெளிக .

ஞான ஸ்வரூபம் ப்ரஹ்மம் -என்கிற ஞானத்துக்கு விஷயமாக ப்ரஹ்மத்தைக் கொள்ளின் அது பிரமேயம் –அறியப்படும் பொருள் -ஆகி விடும்
ஆயின் அதுவும் பொய்ப் பொருளாம்
ஆகவே ப்ரஹ்மம் மருளுக்கு ஆஸ்ரயமாய் இருக்கிறது என்னும் கொள்கையை கை விட்டே ஆக வேண்டும்
————————————–என்னுமிடத்தில் அதிஷ்டானத்தையும் அத்த்யாச்த்தத்தையும் சொல்லுகிற சொற்கள் பாதாயாம் சாமா நாதி கரண்யமாக
அமைந்து இருப்பதாக கொளல் ஆகாது
ஆத்மா என்றமையின் -சரீரம் ஆத்மா என்ற தொடர்பு பற்றி வந்தது சாமாந்யாதிகரண்யம் என்று கொள்க –
உலகம் உண்மையானது -பொய் என்பதற்கு பிரமாணம் இல்லை .———————————————–எனபது போன்ற
சுருதிகள் ப்ரஹ்மாத்மகம் அல்லாத பொருள்களே இல்லை என்கின்றனவே யன்றி வேறு பொருள்களே இல்லை என்று கூற வில்லை .

ஆக நிர் விசேஷ ப்ரஹ்மமே சத்யம் -மற்றவை அனைத்தும் பொய் -என்னும்-அத்வைத மதமே
வேதம் ஓதும் வைதிக மதம் என்கிற நிரூபணம் தவறு என்று தெளிவுறுத்தப் பட்டது .

இனி அவர்கள் இரண்டாவதாக செய்த தத்வ நிர்ணயத்தையும் மிக எளிதில் வென்று விடுகிறார் ஸ்ரீ பாஷ்ய காரர் .
காரண வாக்யத்தில் நிர் விசேஷ ப்ரஹ்மம் பிரதிபாதிகப் படவில்லை –
எல்லாம் அறிதல்-எல்லாம் வல்லமை -முதலிய எல்லா விசேஷங்களும் வாய்ந்த ச விசேஷ ப்ரஹ்மமே பிரதி பாதிக்கப் படுகிறது என்று –
முன்னரே நிரூபிக்க பட்ட படியால் –
காரண வாக்யத்தை அடி ஒற்றி ————————————என்கிற வாக்கியம் நிர் விசேஷ ப்ரஹ்மத்தை கூறுவதாக கொள்வது ஏற்ப்பு உடைத்து ஆகாது .

இனி ————————————————————–என்கிற எதிர்மறை சோதக வாக்யத்திற்கு ஏற்ப சிருஷ்டி முதலிய செயல்களும் குணங்களும்
அற்றதாக ஒப்புக்கொள்ள வேண்டாவோ -எனின் –
இருப்பதாகவே கொள்ள கொல்ல வேண்டுமே அன்றி – எந்தக் குணமும் எந்த செயலும் அற்றதாக கொள்வதற்கு இடமில்லை
இங்கனம் ஒப்புக் கொள்ளா விடின் – ப்ரஹ்மத்துக்கு நித்யமும் -என்றும் உள்ளமையும் -ஒப்புக்கொள்ள முடியாமல் போய் விடும் .
ச்வேதாச்வதார உபநிஷத்தில் செயல் அற்றது என்று கூறும் இந்தப் பிரகரணத்திலேயே-
ப்ரஹ்மம் பிரமனை படைத்ததாகவும் -வேதங்களை அவனுக்கு அளித்ததாகவும் -ப்ரஹ்மத்தின்
செயல் கூறப் பட்டு இருப்பது கவனிக்கத் தக்கது .

ப்ரஹ்மத்துக்கு குணங்களும் செயல்களும் உண்டு என்னும் வாக்யங்களுக்கும் -இல்லை என்னும் வாக்யங்களுக்கும்
முரண்பாட்டை தவிர்ப்பதற்காக -குணமும் செயலும் உண்டு எனபது பொய் என்றும் -இல்லை எனபது மெய் என்றும்
கொள்வது முறை யாகாது
முரண்பாடு இருந்தால் அன்றோ இங்கனம் தவிர்ப்பது –
குணமும் செயலும் உண்டு எனபது அப்ராக்ருதமானவற்றை –
இல்லை எனபது பிரகிருதி சம்பந்தத்தால் வந்த ஹேய குணங்களையும் -செயல்களையும் என்று
சாமான்ய விசேஷ நியாயத்தினால் பாகுபடுத்தினால் முரண்பாடே இல்லை அன்றோ

ஆக —சதேவ சோம்ய இத மக்ர ஆஸீத் — ஏகமேவ அத்வதீயம்—–என்னும் வாக்கியம் சத்யத்வம் முதலிய வற்றோடு கூடின
ச விசேஷ ப்ரஹ்மத்தை சொல்லுகிறது என்று தான் கொள்ளல் வேண்டும் –
நீலம் உத்பலம் என்னும் இடத்தில் நீலத்வமும் உத்பலத்வமும் என்னும் இவற்றினோடு கூடிய ஒரே பொருள் சொல்லப்படுவது போலே –
சத்யத்வம் ஞானத்வம் முதலியவற்றோடு கூடிய ப்ரஹ்மம் என்னும் ஒரே பொருள் சொல்லப் படுகிறது என்று கொள்ள வேண்டும் .
சத்யத்வம் முதலியவை வெவ்வேறு தன்மைகள் ஆயினும் -அவை யனைத்தும் வாய்ந்தது ப்ரஹ்மம் என்று ஒரே பொருள் தான் .
ஆதலின் சாமா நாதி கரண்யம் நன்கு பொருந்துகிறது –
அசத்தியம் முதலியவற்றின் நின்று வேறுபட்ட ஸ்வரூபம் கூறப்படுவதாக கொள்வார்க்கு லஷணை கொள்ள வேண்டி வருகிறது –

இனி ஆன்ம தத்துவமும் ப்ரஹ்மமும் வேறு பட்டவைகள் அல்ல -ஒரு பொருளே -என்பதும் –
ஆன்மாக்களுக்குள் பேதம் இல்லை -எல்லாம் ப்ரமமே -மருளே -என்பதுவும் ஏற்புடையன அல்ல என்கிறார் ஸ்ரீ பாஷ்ய காரர் ..
———————————————————————————————கட- 2-5 13- – ஸ்வேத -6 13- – என்கிற-சுருதி-
ஜீவாத்மாக்கள் நித்தியமாய் இருப்பவர்கள் என்றும் –
அவர்கள் பலர் என்றும் –
அவர்களுடைய விருப்பங்களை ப்ரஹ்மம் ஒன்றே நிறைவேற்றி வைக்கிறது என்றும் -விதிப்பதால்-
ஜீவான்மக்களுள் பேதமும் –
ப்ரஹ்மத்திற்கும் ஜீவான்மக்களுக்கும் பேதமும் உணர்த்தப் படுகின்றன
இந்த சுருதி வாக்கியம் விருப்பங்களை நிறை வேற்றுவதை மட்டும் விதிப்பதாக கொள்ளல் ஆகாது –
ஆத்மாக்களுடைய நித்யத்வத்தையும் பன்மையையும் -இந்த ஒரே வாக்யமே விதிப்பதாக கொண்டால் வாக்ய பேதம் பிரசங்கிக்கும் –
ஒவ் ஒரு நோக்கத்திற்கும் தனி தனி வாக்யங்களாக பிரிக்க நேரிடும் .

ஜீவாத்மாக்கள் பலவாய் இருத்தல் -உலகத்திலே நேரே கண்டு அறிந்தது ஆதலின் -அதனை இந்த சுருதி வாக்கியம்
விதிப்பதாக கொள்ளவது தகாது –
தெரியாத விஷயத்தை தெரிவிப்பதால் அன்றோ சாஸ்திரம் பயன் பெறுகிறது .
ஆதலின் விருப்பங்களை நிறைவேற்றுதல் மட்டுமே விதிப்பதாக கொள்வதே தகும் -எனின் -கூறுதும்
தேகத்துடன் கூடிய ஆத்மா பலவாய் இருப்பதை உலகத்தில் நாம் கண்டு அறிந்து உள்ளோமே ஆயினும்
தேக சம்பந்தம் அற்ற பரிசுத்த ஆத்மாக்கள் நித்தியமாய் பலவாய் இருத்தல் நாம் கண்டு அறியாததே –
ஆதலின் அதனை சாஸ்திரம் கொண்டே அறிய வேண்டி இருத்தலின் அதனை இந்த சாஸ்திரம் விதித்தே யாக வேண்டும் -என்று அறிக –

தேஹத்துடன் கூடிய நிலையில் ஆத்மாக்கள் நித்தியமாய் இருத்தல்- கூடாது ஆதலின் -நித்யத்துவத்துடன் கூடிய பன்மை-
தேக சம்பந்தம் அற்ற பரிசித்த ஆத்மா ஸ்வரூபங்களுக்கு கூடும் ஆதலின்
இங்கே பரி சுத்தமான ஆத்மா ஸ்வரூபங்கள் பல என்பது சொல்லப் பட்டது ஆகிறது .
ஆகவே நித்யர்களாய் -பலராய் உள்ள சேதனர்கள் அனைவருக்கும் விருப்பங்களை ப்ரஹ்மம் ஒன்றே நிறைவேற்றுவதாக
அனைத்தையும் சேர விதிப்பதிலேயே இந்த வாக்யத்துக்கு நோக்கம் என்று கொள்ள வேண்டி இருக்கிறது .
இது —————————- எனப்படும் விசிஷ்ட விதிகளில் வாக்ய பேத பிரசங்கம் தோஷம் ஆகாது

இனி அஹமாத்மா குடாகேச சர்வ பூதாசய சத்தித – 18-20 என்று ஸ்ரீ கீதாசார்யன் எல்லா உடல்களிலும் ஆத்மாவாக
தானே இருப்பதாக கூறி உள்ளானே –
அதனால் எல்லா ஆத்மாகளுக்கும் ஒருவருக்கு ஒருவர் பேதம் இல்லாமையும் –
ப்ரஹ்மத்துக்கும் ஆத்மாக்களுக்கும் பேதம் இல்லாமையும் நன்கு புலப்படுகின்றன அன்றோ -இங்கன் இருக்க –
ஆத்மாக்களுக்குள் ஒருவருக்கு ஒருவர் பேதத்தையும் -ப்ரஹ்மத்துக்கும் ஆத்மாக்களுக்கும் பேதத்தையும் உணர்த்தும்
கீழ் சொன்ன சுருதி வாக்யத்தொடு முரண்பாடு இன்றி
ஸ்ரீ கீதாசார்யன் கூறியதை எங்கனம் நிர்வஹிப்பது எனில் -கூறுவோம் .

ஜீவனுக்கு அந்தர்யாமியான ஆத்மாவே இருத்தலின் உடலையும் ஆத்மாவையும் ஒன்றாக
வழங்கும் மரபு பற்றி கீதாசார்யனால் அங்கனம் கூறப் பட்டது என்க-
சர்வம் சமாப் நோஷி ததோசி சர்வ -18 40- – என்று மேலே எல்லாவற்றிலும் அந்தர்யாமியாய்
வியாபித்து உள்ளே -ஆதலின் எல்லாப் பொருளுமாய் உள்ளே -என்று பேசப்படுவதும் இங்கு அறியத் தக்கது .
உபநிஷத்திலும் ——————————————————————–என்று வ்யபித்தளால் ப்ரஹ்மம்
சேதன அசேதன பொருள்கள் ஆனதாக ஓதப்பட்டு இருப்பதும் உணரத் தக்கது .
மேலும் சர்வ பூதாசய சத்தித -என்று பூத சப்தத்தை இங்கே வழங்கி இருப்பதும் கவனத்திற்கு உரியது .
அச் சொல் உடலை மாதரம் சொல்ல வில்லை -ஆத்ம பர்யந்தமான உடலைக் கொள்கிறது .

———————————–பூதங்கள் அனைத்திற்கும் ஹிம்சை செய்யல் ஆகாது என்னும் இடத்து உள்ள
பூத சப்தம் போன்றது இங்கு உள்ள பூத சப்தமும் என்று அறிக
அங்கு வேற்று உடம்புக்கு ஹிம்சை இழைத்தல் இயலாது ஆதலின் ஆத்ம பர்யந்தம் கருதியாக வேண்டும் .
இங்கும் அங்கனமே கருத்தின் ஆத்ம பர்யந்தமான தேகத்துக்கு ஆத்மாவே இருத்தல் கூறப்பட்டது ஆகிறது .
இங்கனம் அந்தர்யாமியாய் இருத்தலைப் பொறுத்து சொன்னதாக கொள்ளாமல்-
ஸ்வரூப ஐக்கியம் சொன்னதாக கொண்டால் ———————————————என்று ஆத்மாக்களைப் பார்க்கிலும் பரமாத்மாவை வேறுபட்டதாக
ஸ்ரீ கீதையிலே சொல்வது முரண்படும் என்று உணர்க .

ஆக ஆத்ம தத்வத்தில் பேதம் இல்லாமையால் நிர் விசேஷ சித் மாத்ர ப்ரஹ்மம் ஒன்றே உள்ளது
என்று அத்வைதிகள் செய்த தத்துவ நிர்ணயமும் ஸ்ரீ பாஷ்ய காரரால் இவ்வாறு வெல்லப் பட்டதாயிற்று .

இனி மூன்றவதாக அவர்கள் செய்த மோஷ நிர்ணயத்தையும் மிக மிக எளிதில் வென்று விடுகிறார் ஸ்ரீ பாஷ்ய காரர் .
மோஷம் என்னும் சொல்லுக்கு விடுதலை எனபது பொருள் ..
வீடு எனபது அதன் நேர் மொழி பெயர்ப்பு சொல்லாகும் .-எதனின்றும் விடுதலை —
அசித்து பொருளாகிய பிரகிருதி தத்வம் அநாதி காலமாக ஜீவாத்மா தத்துவத்தை கட்டுப் படுத்தி
ஈஸ்வர தத்துவத்தை உணர்ந்து -அதனை நெருங்க ஒட்டாது தடுத்து -வருகின்றது .
அத்தடை யினின்றும் பெறும் விடுதலையே மோஷம் எனப்படுகிறது .
அறிவாளன் ஆகிய ஜீவாத்மாவை ஜடப் பொருளாகிய பிரகிருதி தத்வம் தன்னுள் அகப்படுத்தி –அறியாமைக்கு உள்ளாக்கி விடுகிறது .
அதாவது பிரகிருதி உடன் கூடிய ஆத்மாவை -இது பிரகிருதி இது ஆத்மா -என்று பகுத்து உணர முடியாத வண்ணம் செய்து விடுகிறது

ஆத்மா பிரகிருதி உடன் கூடி இருத்தல் ஆவது –
பிரளய காலத்தில் சூஷ்மமான பிரகிருதி தத்துவத்தில் ஒடுங்கி நிற்றலும்
சிருஷ்டி காலத்தில் பிரக்ருதியின் பரிணாமமான -மாறு பாடான -தேஹத்தொடு ஒன்றி நிற்றலுமாம் .
பிரகிருதி பரிணாமமான தேகத்தை பகுத்து உணராமையின் –தேகமே ஆத்மா -என்னும் விபரீத உணர்வு-மருள்-ஏற்படுகிறது
ஆத்மாவை பகுத்து உள்ளவாறு இறைவனுக்கு உரியதாய் அவனுக்கு பாரதந்திரமான ஜீவாத்மாவை ச்வதந்திரமாக காணும் அந்யதா ஞானம் –
வேறு வையில் காணும் அறியாமை -ஏற்படுகிறது –
இவ்விருவகை அறியாமையும்
அநாத்ம த்யாத்மா புத்திர்யா-என்று ஆத்மா அல்லாத தேஹத்தில் ஆத்மா என்றும் விபரீத உணர்வு என்றும் –
யோந்யதா சந்தமாத்மானம் அந்யதா ப்ரதிபத்யதே -என்று பாரதத்ரியமான ஆத்மாவை வேறு வகையில் ச்வதந்த்ர்மாகப் பார்த்தல் என்றும் –
பிரமாணங்களில் கூறப் பட்டு உள்ளமை காண்க –
இவ் வறியாமைகளால் ஜீவாத்மா புண்ய பாப ரூபன்களான கர்மங்களை செய்கிறான் –
அதனால் நல்ல அல்லது கெட்ட சரீரங்களை ஜீவாத்மா மீண்டும் மீண்டும் பெறுகிறான் .
அந்நிலையே பந்தம் எனப்படுகிறது .அதனின்றும் விடுதலையே மோஷம் என்க .

ஆத்மா தத்தவத்தை வீடு பெறா வண்ணம் பிநித்தல் பற்றியே சரீரத்தை -யாக்கை -என்பர் தமிழில்
யாத்தல்-பிணித்தல் –
சரீரம் சத்த்வம் ரஜஸ் தமஸ் என்னும் முக் குணங்கள் வாய்ந்து உள்ளமையின் முறையே
ஞான சுகங்களில் பற்றுதலையும் –
புண்ய பாப ரூபமான செயல்களில் பற்றுதலையும் –
கவனிப்பு இன்மை சோம்பல் உறக்கம் -என்னும் இவற்றையும் உண்டு பண்ணி மீண்டும் மீண்டும் பிறந்து –உழலுமாறு
ஜீவாத்மாவை பிணித்துக் கொண்டு இருக்கிறது –
இத்தகைய சரீரத்தின் தொடர்பு அறவே விட்டு நீங்குதலே மோஷம் எனப்படுகிறது .அந்நிலையே இயல்பானது

இயல்பான அந்நிலையில் இறைவனைக் கிட்டி நின்று விட்டு பிரியாது அபஹத பாப்மத்வம் முதலிய எட்டு குணங்களுடன்
விண்ணகத்தில் விளங்குகிறான் ஜீவாத்மா –
இதனையே ——————————————————————————-இந்த ஜீவாத்மா இச் சரீரத்தின் நின்றும் மேலே கிளம்பி பரம் ஜோதியான பரமாத்மாவைக் கிட்டி
இயல்பான தன ரூபம் வெளிப்பட்டவன் ஆகிறான் -என்று ஸ்ருதியும் ஓதுகிறது .
இதனால் சரீர சம்பந்தம் நீங்கி மேலே கிளம்பி பரம் ஜோதியான பரமாத்மா உள்ள இடமாகிய பரம பதத்தை அணுகி
இயல்பான தன்மை உடன் ஜீவாத்மா மிளிருவதே -மோஷம்-என்று நன்கு புலப்படுத்த தாயிற்று .
உண்மை இங்கன் இருக்க –
அத்வைதிகள் -சத்-உள்ளது -என்றோ அசத் -இல்லது -என்றோ சொல் ஒண்ணாத தோர் அவித்யயை அநாதியாகக் கொண்டு
அதனால் ஆத்ம ஸ்வரூபம் மறைக்கப் படுவது -பந்தம் -என்றும் -அது நெஞ்குவது -மோஷம்-என்றும் சொல்லுகின்றனர்

——————————————————————————————————யஜூ- 2-8 9- – -என்னும் சுருதியை
அவித்யை உள்ளது என்றோ இல்லது என்றோ சொல்லொணாத ஒரு பொருள் என்பதற்கு பிரமாணமாக அவர்கள் காட்டுகிறார்கள்
ஒளிரும் அறிவு வடிவமான ஆத்ம ஸ்வரூபம் அவித்யையினால் மறைக்கப் படுவது எங்கனம் பொருந்தும் –
பொன் முதலிய பொருள்கள் வேறு பொருள்கள் கலப்பதனால்-ஒளியை இழப்பது போன்றது இஃது என்று கூற இயலாது
ஒளியை மழுங்கப் பண்ணும் வேறு பொருளின் கலப்பு உண்மையில் இல்லை அன்றோ -பின்னையோ எனின் –
புஷ்பம் பக்கத்தில் இருக்கும் போது ஸ்படிக்கக் கல் சிவந்து தோற்றுவது போலே -அவித்யையின் சம்பந்தினாலே ஆத்ம ஸ்வரூபத்தில்
தேஹம் தோற்றுகிறது -விவேகித்து பார்க்கும் போது-ஸ்ப்படிகம் சிவப்பு நிறத்தோடு ஓட்டற்று இயல்பான வெண்மை உடன் மிளிருவது போலே
விவேக ஞானத்தாலே -தேஹத்தொடு ஓட்டற்று ஒளிரும் ஆத்ம ஸ்வரூபமே இயல்பான நிலையில் மிளிருகிறது
இதனையே ——————————–என்று தொடங்கும் சுருதி ஓதுகின்றது
இந்த ஸ்ருதியில் -சமுத்தாய என்பதற்கு -மேலே கிளம்பி என்று பொருள் கொள்ளல் ஆகாது –
ஏன் எனில் ஆத்ம ஸ்வரூபம் இயற்க்கை நிலையினில் வெளிப்படுவதற்கு -விவேக ஞானம் தான் தேவையே அன்றி மேலே கிளம்புதல் அன்று –
ஆதலின் சமுத்தாய -என்பதற்கு -பகுத்து அறிந்து -என்று பொருள் கொள்வதே -முறை யாகும் .

இவ்விதமே -உபசம்பந்த்ய -என்பதற்கு -கிட்டி -என்று பொருள் கொள்ளல் ஆகாது -சாஷாத் கரித்து என்று பொருள் கொள்வதே -தகும்
ப்ரஹ்மத்தோடு ஒன்றுவதற்கு ஓர் இடம் தேடித் போக வேண்டிய அவசியம் இல்லையே –
இனி -அர்ச்சிராதி கதியும் -ப்ரஹ்ம பிராப்தியும் சாஸ்த்ரங்களில் சொல்லப் பட்டு உள்ளனவே -எனின் –
அவைச குண ப்ரஹ்ம உபாசகர்களுக்கே கூறப் பட்டன .நிர் விசேஷ
பிரம்மத்தை விவேகித்து அறியும் ஞானிகளுக்கு அவை பயன்படா என்று உணர்க ..
விவேகித்து பாராமையாலே ஸ்வரூபம் வெளிப்படாது ஸ்ப்படிகம் சிவப்பாய் தோற்றி -விவேகித்த மாத்ரத்திலே –
அந்த ஸ்ப்படிகம் இயல்பான வெண்மை வாய்ந்ததாய் வெளிப்படுவது போலே –
விவேகிதுப் பார்த்த மாத்திரத்தில் -முன்பு தேஹமாய் தோற்றிய ஆத்ம ஸ்வரூபம் சைதன்ய ஆகாரமாய் –
இயல்பான நிலையில் வெளிப்படுகிறது ..இதுவே மோஷம் .

தூய்மை படுத்தப் பட்டதும் தன்பால் படிந்தமாக நீங்கி கண்ணாடி இயல்பான நிலையில் விளங்குவது போல் –
ஆத்ம தத்துவம் உபாசனையால் -சம்ச்கரிக்கப் பட்டதும் -திரோதானம் -மறைவு நீங்கி –
மோஷ நிலை-இயல்பான நிலை -ஆத்ம தத்துவத்திற்கு ஏற்படுவதாக கொள்ளுதல் தக்கதாகாது .
ஏன் எனில்
உபாசனை ஒரு செயல் ஆதலின் -செயலால் நேரிடும் விகாரம்-மாறுபாடு -அவ் வாத்ம தத்துவத்துக்கு இசைய வேண்டியதாய்
இருத்தலின் அதனை அநித்யமாய் கொள்ள வேண்டி வரும் . .
உபாசனையால் மோஷம் எனபது பொருந்தாது .-அறியாமையை -ப்ரமத்தை-நீக்க எந்த உபாசனையாலும் இயலாது .
உண்மை அறிவு தான் பிரமத்தை நீக்க வேண்டும் . .அந்த உண்மை அறிவும் ப்ரத்யஷரூபமான வாக்யார்த்த ஞானம் ஆகவே அமைதல் வேண்டும்
ப்ரத்யஷ ரூபமான பிரமத்தை -தேக -ஆத்மா பிரமத்தை – ப்ரத்யஷ ஞானம் அல்லது மற்றது போக்க வல்லதாகாதன்றோ –
ஆக ———————-முதலிய வாக்யார்த்த ஞானத்தால் ஏற்படும் ஜீவ பர ஐக்ய சாஷாத் காரமே –மோஷம் என்கின்றனர் அத்வைதிகள்

ஸ்ரீ பாஷ்ய காரர் இதனையும் எளிதில் வென்று விடுகிறார் .—————————-என்னும் சுருதி
அவர்கள் கொள்ளும் அவித்யைக்கு பிரமாணம் ஆகாது எனபது அவர் திரு உள்ளம்
அங்கு உள்ள -சத் -அசத் -என்னும் சொற்கள் சித்து அசித்து -என்னும் வ்யஷ்டி சிருஷ்டியில் காணப்படும் பொருள்கள்
பிரளய காலத்தில் அசித்தின் சமஷ்டியாக -தமஸ் -என்று சொல்லப்படும் பொருளில்
ஒடுங்கி கிடந்தமையைச் சொல்லுகின்றனவே அன்றி -அவித்யை உள்ளதும் இல்லதும் அன்று –
அது அநிர்வச நீயம் என்பதைச் சொல்லவில்லை -என்று அவர் கருதுகிறார் .

மேலும் அறிவொளி வடிவமான ப்ரஹ்ம ஸ்வரூபம் அவித்யையினால் மறைக்கப் படுவதாக கூறுவதும் யுக்திக்குப் பொருந்தாது –
அவித்யையினால் அறிவொளி ஒளிராமல் போவது தானே மறைவு எனப்படுவது -அறிவொளி வடிவமான ப்ரஹ்மம்
அவித்யையினால் ஒளிராமல் போவான் என் –
ஒளி உண்டாகாமல் அவித்யை தடுக்கிறது -என்ன ஒண்ணாது -ஒளி உண்டு பண்ணத் தக்கதாய் யல்லாமல் என்றும் உள்ளது ஆதலின் –
அங்கன் சொல்ல ஒண்ணாது .இனி இருக்கும் ஒளி -ஞான பிரகாசம் – நாசப் படுத்தப் படுகிறது -என்று தான் சொல்ல வேண்டும்
அங்கனம் சொல்லின் ஒளி வேறு -ஸ்வரூபம் வேறாக இல்லாமையின் ப்ரஹ்ம ஸ்வரூபத்திற்கே நாசத்தை ஒப்புக் கொண்டதாக ஆகி விடும்

இனி பாஷ்ய காரர் மதத்திலும் அறிவொளி வடிவமாக ஆத்ம ஸ்வரூபம் ஒப்புக் கொள்ளப் பட்டு இருப்பினும் –
அந்த ஆத்ம ஸ்வரூபத்துக்கு அவித்யையினால் மறைவு ஏற்படுவதாக ஒப்புக் கொள்ளப் படவில்லை-
ஆத்ம ஸ்வரூபம்-அவித்யை-அறியாமை-எனப்படும் பிரமத்துக்கு -விரோதி அன்று .
ஆத்ம ஸ்வரூபத்தின் பால் உள்ள நித்ய தன்மை -அணு அளவு -அவயவம் அற்றவை -முதலியவைகளே விரோதிகள்-
அவைகள் சாஸ்த்ரிரத்தால் அறியத் தக்கனவாய் உள்ளன.
அவைகளே மறைக்கப் படுதலின் ஆத்ம ஸ்வரூபதுக்கு நாசம் ஏற்பட வழி இல்லை-என்க-

நித்ய தன்மை முதலியவை மறைகப்படுதலாவது –அவை பற்றிய அறிவு வெளிப் படாது இருத்தலே யாம் .
ஸ்ரீ பாஷ்ய காரர் சித்தாந்தத்தில் ஆத்ம ஸ்வரூபம் அறிவு வடிவமாய் இருத்தலோடு
அறிவுடைமையைத் தன் தன்மையாகவும் -கொண்டு இருத்தலின் –
தன்மையாய் அமைந்த அறிவு
ஒரு பொருள் ஆதலின் -ஒடுங்களும் விரிதலும் அதனுக்கு ஏற்கும் -என்க
அவித்யை முழுதும் கழிவது -அப்ராக்ருதமான தேசத்தை அடைந்த பிறகு தான் என்று கொள்ளல் வேண்டும் .

————————————என்று தேக சம்பந்தம் நீங்கும் காலத்தை எதிர் பார்ப்பது போலே -தேசத்தை அடைதலையும்
அவித்யா நிவ்ருத்தி எதிர் பார்க்கிறது -என்க
இன்றேல் அர்ச்சிராதி கதியை சொல்லும் சாஸ்திரங்கள் பயன் அற்றவைகளாய் விடும்
இனி பகுதி அற்றதாகவும் -நிலை வேறு படாதையும் -நிரம்சமமாயும் ,அவஸ்தா பேதம் அற்றதாயும் -உள்ள பிரம்மம் போய்
அடைய வேண்டிய நிலையை எங்கனம் எய்துதல் கூடும் -எனில் கூறுவோம் .

கிராமத்தை அடைவதற்கான வழி போலே பிரம்மத்தை அடைவதற்காக ஏற்ப்பட்டது அன்று அர்ச்சிராதி கதி .
பின்னையோ எனின் -ப்ரஹ்மத்தை அடைவதற்கு -பிரதிபந்தகங்கள் -அடியோடு தொலைவதற்காக.
கதி சாஸ்த்ரத்தை கொண்டு -பிரதிபந்தங்கள் அடியோடு நீங்கி -வித்யை-நிஷ்பன்னம் ஆவது
குறிப்பிட்ட அப்ராக்ரருத தேசத்திலே என்று கொள்ளுகிறோம்
ஆழ்வார்கள் இது பற்றியே -தெளி விசும்பு -என்றனர் பரம பதத்தை

நிர் விசேஷ ப்ரஹ்மம் எனப்படும் நிர் குண ப்ரஹ்மம் ஓன்று இருப்பது சம்பவியாத ஓன்று ஆதலின் -நிர் குண ப்ரஹ்ம நிஷ்டரான
ஞானிகளுக்கு கதி கிடையாது – ச குண ப்ரஹ்ம நிஷ்டருக்கே அர்ச்சிராதி கதி என்று பிரிப்பதற்கு ஆதாரம் ஏதும் இல்லை -என்க .
வள்ளுவனாரும் -கற்றீண்டு மெய்ப் பொருள் கண்டார் தலைப் படுவர் மற்றீண்டு வாரா நெறி –என்பதனால்-
மெய் உணர்ந்த ஞானியர் வாரா நெறி யாகிய அர்ச்சிராதி கதி யில் செல்லுதலை கூறி -ஸ்ரீ பாஷ்ய காரர் தழுவிய பண்டைய
கொள்கையே ஆதரிப்பது இருப்பது -இங்கு அறிதற் பாலது . .

இனி ————————————————-ப்ருஹ்- 4-4 6- என்று சுருதி நிர் குண நிஷ்டனுக்கு -ஞானிக்கு சரீரத்தின் நின்றும் மேல் நோக்கிக்
கிளம்புதல் இல்லை-என்று ஸ்பஷ்டமாக ஓதுகிறது .——————–என்று
இங்கேயே ப்ரஹ்ம அனுபவ ரூபமான முக்தி கிடைப்பதாகவும் சுருதி ஓதுகின்றது .
உத்க்ராந்தியும் -கதியும் -உபாசகனுக்கே ஓதப்படுகின்றன -அவ் உபாசகனுக்கு – உபாசனைக்கு ஏற்ப- அனுபவித்தற்கு தக்க –
ப்ரஹ்ம ஸ்வரூபம் ப்ரஹ்ம லோகத்திற்கு உட் பட்டதாதலின் -அவனுக்கு உத்க்ராந்தியும் அர்ச்சிராதி கதியும் தேவைப் படுகின்றன –
நிர் குண நிஷ்டனுக்கு அவை தேவை இல்லை யன்றோ –
எனில் -கூறுவோம் –

——————————————என்னும் சுருதி -ஞானிக்கு சரீரத்தில் இருந்து உத்க்ராந்தி இல்லை என்று சொல்ல வில்லை .
சாரீரமான ஜீவாத்மாவை விட்டு பிராணன் பிரிவது இல்லை -என்றே சொல்லுகிறது .
ஜீவாத்மாவை விட்டு பிராணன் பிரியாமையின் -சூஷ்ம சரீரத்துடன் அர்ச்சிராதி கதியில் போவது அவனுக்கு எளிதாகி விடுகிறது –
எனபது சுருதியின் கருத்து ..——————————எனபது உபாசனை வேளையில் ஏற்படும் பிரம்ம அனுபவத்தை பற்றினதகும் .

ஆகவே ———————————-என்று தொடங்கும் சுருதி வாக்யத்தில் -சமுத்தாய -என்பதற்கு -பகுத்தறிந்து –என்று பொருள் கொள்ளுதலும் –
உபசம்பத்ய -என்பதற்கு -சாஷாத் கரித்து-என்று பொருள் கொள்ளுதலும் தேவை அற்றவை ஆகி விடுகின்றன –
அவ்வாறு பொருள் கூறுதல் சொல்லமைதிக்கு முரண் பட்டது ஆகும் .
சர்பாத் சமுத்தாய ரஜ்ஜூம் உபசம்பத்ய -என்னும் சொல் தொடரை –
பாம்பையும் கயிற்றையும்-பகுத்து அறிந்து -கயிற்றை நேரே கண்டு -என்னும் பொருளில் வட மொழி அறிந்த ஒருவன் வழங்கிடின் –
அதனை அங்கனம் பொருள் கூறுவோர் ஏற்ப்பார்களோ -என்பதை நினைத்து பார்க்க வேண்டும் –
மேலும் சரீரத்தில் இருந்து கிளம்பி -என்று தொடங்கும் இவ் விஷயத்திற்கு அங்கேயே ஆகாசத்தில் இருந்து கிளம்பி வாயு முதலியவை
பரம்ஜோதியை அடைந்து தம் நிலையை அடைகின்றன -என்று காட்டும்

திருஷ்டாந்தங்கள் நமக்கே ஒத்து வரும் -பிறர்க்கு ஒத்து வர மாட்டா -இதனை சிறிது விளக்கிக் காட்டுவோம் .
அசரீரமான -சரீரம் இல்லாத -வாயு முகில் மின்னல் முழங்கும் மேகம் என்னும் இவைகள் -இந்த ஆகாசத்தின் நின்றும் மேல் கிளம்பி
பரம் ஜோதியை அடைந்து -தம் இயல்பான நிலையில் துலங்குகின்றன -என்று திருஷ்டாந்தம் காட்டப் பட்டு உள்ளது
வாயு முதலியவை -ஆகாசத்தில் இருந்து – மேலே கிளம்புதல் ஆவது -அவை அவை தம் தம் செயல் புரிவதற்காக மேலே வெளிப்படுதல் –
பரம் ஜோதியை -என்னும் இடத்தில் -பர -என்னும் சொல் -அவ் அவற்றுக்கு காரணமான நிலையைக் குறிக்கிறது
சோதி என்னும் சொல்லோ -காரணப் பொருள்கள் காரியப் பொருள்களை பிறப்பிப்பத்தின் வாயிலாக –
அவற்றை வெளிப்படுத்தும் -நிலையைக் கருதி வழங்கப் பட்டது .

ஆக –காரிய பொருள்களை தோற்றுவிக்கும் காரணப் பொருள்களே -பரம் ஜோதி -என்பதால் கூறப் பட்டனவாயின –
வாயு முதலிய பொருள்கள் காரணப் பொருள்களை அடைந்து -காரியப் பொருளாய் –அடைந்து -காரியப் பொருளாய் நிற்கும்
நிலையை விட்டு -காரணப் பொருளோடு ஒத்த வடிவத்தை அடைகின்றன
வாயு -சப்த மருத்து -என்னும் கார்யப் பொருளாய் நிற்கும் நிலையை விட்டு வாயு என்ற காரணப் பொருள் போன்றதாகி விடுகிறது .
இங்கனமே மின்னல்-என்பதும் கார்யப் பொருளாய் நிற்கும் தன்மையை விட்டு -தேஜஸ்-என்னும் காரணப் பொருள் போன்றதாகி விடுகிறது .
முகில் -முழங்கும் மேகம் விஷயத்திலும் -இங்கனே கொள்க –

இவ்விதமே ஜீவனும் சரீரத்தில் இருந்து மேல் கிளம்பி -அர்ச்சிராதி வழியாகப் பரம் ஜோதியான பரமாத்மாவை போன்றவன் ஆகிறான் என்று
த்ருஷ்டாந்தமும் -தார்ஷ்டிந்தாகிகமும் -பொருந்தி உள்ளமை காண்க .
சமுத்தாய -என்பதற்குப் பகுத்தறிந்து -என்று பொருள் கூறும் பிறர்க்கு இந்த திருஷ்டாந்தங்கள் ஒத்து வர மாட்டாமை தெளிவு

இனி சைதன்ய ஆகாரமான ஆத்ம ஸ்வரூபம் தேஹமாகத் தோற்றும் ப்ரத்யஷ ப்ரமம் பகுத்தறியும் -சாஷாத் காரத்தாலே தான் நீங்கும்
அறியாமை எத்தகைத்தோ -அத்தகைத்தாக உண்மை அறிவும் இருத்தல் வேண்டும் அன்றோ –
ஆகவே ——————முதலிய வாக்யார்த்த ஞானத்தாலேயே சைத்தன்ய ஆத்ம சாஷாத் காரம் ஏற்படுகிறது -என்பதையும் சிறிது கவனிப்போம் –

——————————முதலிய வாக்யங்களால் உண்டாகும் ஐக்ய ஞானம் மோஷ சாதனம் எனபது பொருந்தாது
——————————————–என்று தொடங்கும் சுருதி வாக்யத்தில் ஜீவாத்மாவையும் அந்தர் யாமியாய் பிரேரணை செய்யும் பரமாத்வாமையும்
வேறாக நினைத்துப் -பரமாத்வாவின் ப்ரீதிக்கு உரியவனாகி -முக்தியைப் பெருமவனாக -ஜீவாத்மாவை சொல்லி இருத்தலின் –
அதனோடு முரண் படுதலால்-என்க
எனவே மோஷத்துக்கு சாதனம் -ஜீவனிலும் தனிப்பட்ட அந்தர்யாமியான ப்ரஹ்மத்தைப் பற்றிய ஞானம் என்று கொண்டால்-
எல்லா இடத்திலும் முரண்பாடு இன்றி பொருள் கொள்ள இயலும்

மேலும் சரீரத்தால்-ஜீவாத்மாவுக்கு ஏற்ப்பட்ட பந்தம் பாதிக்கப் படாமையாலே பரமார்த்தமானது –
அதனை எந்த தத்துவ ஞானமும் போக்கடிக்க முடியாது –
பரம புருஷனுடையஅனுக்ரகத்தாலே -தான் அந்த பந்தத்தில் இருந்து விடுதலை பெற வேண்டும் .
பாம்பு கடித்த விஷம் உபாசனையால்- ப்ரீதி கொண்ட கருடனுடைய அனுக்ரகத்தால் நீங்குவது போலே-உபாசனையால் ப்ரீதி கொண்ட பரம
புருஷனுடைய அனுக்ரகத்தாலேயே பந்தம் நீங்குகிறது என்று கொள்ள வேண்டும் .
இதனால் உபாசனை மோஷ சாதனம் ஆகாது என்னும் வாதமும் –
உபாசனையால் சம்ச்கரிக்கப்படின் ஆத்ம தத்துவமும் விகாரம் உள்ளதாய் -மாறுபாடு உள்ளதாய் -அநித்யமாம் –
எனபது போன்ற வாதங்களும் -தள்ளுண்டமை காண்க .

இனி —————————————என்னும் வாக்யத்தினால் ப்ரஹ்ம ஞானத்தினால் இடையீடு இன்றி ப்ரஹ்மமாகவே ஆவதாக ஓதப்படுதலின் –
ஜீவ ப்ரஹ்ம ஐக்ய மோஷம் என்று கொள்ள வேண்டி உள்ளதே -எனில்-கூறுவோம் –
சரீரம் ஆத்ம என்னும் தொடர்பு பற்றி-அறியும் ஜீவனும் -அறியப்படும் ப்ரஹ்மமும் ஒன்றாக கூறப்படுகின்றனவே அன்றி –
ஸ்வரூப ஐக்கியம் அங்கே கூறப் படவில்லை-எனபது உணரத் தக்கது .
அந்தர்யாமி பிராமணத்தில் -ப்ருத்வி முதலிய அசேதனப் பொருள்களும் ஆதித்யன் முதலிய அசேதனத்தொடு கூடிய சேதனப் பொருள்களும் –
சரீரமாகவே கூறப்பட்டு – அசேதன கலப்பு நீங்கின பரி சுத்த ஆத்ம ஸ்வரூபமும் சரீரமாக கூறப்படுவதனால்-
முக்தி நிலையில் பரி சுத்த ஆத்ம ஸ்வரூபமும் ப்ரஹ்மத்துக்கு சரீரமே என்னும் கருத்து கொண்டு –
சரீரத்தையும் ஆத்மாவையும் ஒன்றாகவே வழங்கியது -வேதம் -என்க .

ப்ரஹ்ம ஞானம் ஏற்பட்டதும் -இடையீடு இன்றி -ப்ரஹ்மமாகவே ஆகி விடுவதாகக் கொள்ளுதலும் தகாது –
———————–என்று ஸ்பஷ்டமாக ஓதுவதற்கு ஏற்ப -ப்ரஹ்மத்தின் அனுக்ரகத்தின் வாயிலாகவே ப்ரஹ்மம் ஆகிறான் என்று கொள்ளுதல் வேண்டும் .
அந்தர்யாமி ப்ராஹ்மனத்திலும்——————என்று அந்தர்யாமியான ப்ரஹ்மத்தை ஜீவாத்மா அதன் அனுக்ரகம் இன்றி தானே அறிவது இல்லை
என்று கருதப்படல் -காண்க –

ஆக
முக்தியில் ஆத்மா சரீரம் என்கிற பேதம் தவிர்க்க ஒண்ணாது -பரம் ஜோதியான ப்ரஹ்மத்தை அடைந்து -ஸ்வ ஸ்வரூப ஆவீர் பாவம் –
அதாவது -தனது இயல்பான -அபஹத பாப்மத்வம் -முதலிய தன்மைகள் தோன்றி-ப்ரஹ்மத்திற்கு சமமான நிலைமையை ஜீவாத்மா அடைதல்
மோஷம் -என்க —
—————-என்று ப்ரஹ்ம சாம்யாபத்தியை மோஷமாக வேதம் ஓதியதும் காண்க .
இனி இந்த சாம்ய ஸ்ருதிக்கு ஏற்ப ————————என்னும் இடத்திலும் -ஏவ என்பதற்கு சாம்யத்தை பொருளாக கொள்ளலுமாம் .
ப்ரஹ்மம் போன்று ஆகிறான் -என்றபடி –ஒப்புமை பொருளில் -ஏவ -எனபது வேதத்திலேயே வழங்கப் பட்டு உள்ளது —
———————————————————————எனபது காண்க .
இங்கே மோஷம் சொல்லப் பட வில்லை.ஆகையால் விஷ்ணுவாகவே ஆகி-என்று ஐக்கியம் சொல்லுவதற்கு இடம் இல்லை
யாகம் செய்பவனுக்கு பலன் சொல்லப்படுகிறது .விஷ்ணு போலே ஜெயிக்கிறான் என்று தான் பொருள் சொல்லியாக வேண்டும் .

ஆக
சமமான குணத்தோடு இருத்தலே மோஷம்-ஐக்கியம் அன்று -என்று ஸ்ரீ பாஷ்ய காரர் வாதத்தில் வென்றார் ஆயிற்று .
ஸ்ரீ பாஷ்ய காரர் இங்கனம் -பாஸ்கரர் -யாதவ பிரகாசர் -என்னும் குத்ருஷ்டிகளையும் வாதில் வென்று உள்ளார் –
இவர்கள் இருவரும் பேத அபேத வாதிகள்.

அசித்திக்கும் ப்ரஹ்மத்துக்கும் பேத அபேதங்கள் இயல்பானவை –
சித்துக்கும் ப்ரஹ்மத்துக்கும் அபேதமே இயல்பானவை –
பேதமோ உபாதியால் வந்தது -இயல்பானது அன்று -இயல்பான முக்தி நிலையில் அபேதமே ஓதப்படுதலால்-எனபது பாஸ்கர மதம் .

அசித்துக்கும் ப்ரஹ்மத்துக்கும் பேதமும் அபேதமும் இயல்பாய் அமைந்து இருப்பது போலே
சித்துக்கும் ப்ரஹ்மத்துக்கும் கூட பேதமும் அபேதமும் இயல்பானவையே –
இயல்பான முக்தியில் அபேதம் – -ஓதப்படுதலால் -எனபது -யாதவ பிரகாசர் மதம் .

பாஸ்கர மதத்தில் ஜீவனுக்கும் ப்ரஹ்மத்துக்கும் பேதம் இன்றி -ஐக்கியம் ஒப்புக் கொள்ளப் படுதலால்-ஜீவனுடைய தோஷங்கள்
ப்ரஹ்மத்துக்குத் தவிர்க்க ஒண்ணாதவைகளாம் –

யாதவ பிரகாசர் மதத்தில் அசித் துக்கும் ப்ரஹ்மத்துக்கும் அபேதம் கொள்ளப் படுவதால்
ப்ரஹ்ம ஸ்வரூபம் மாறு படுவதாக ஒப்புக் கொள்ள வேண்டி வரும் .

இவ்வாறு அபேத வாதிகள் அனைவர்கள் உடைய அல்லலையும் வாதில் வென்றார் ஸ்ரீ இராமானுசன் -என்க .
அல்லல் எல்லாம் ஸ்ரீ இராமானுசன் வெல்வதற்கு ஹேது மெய் மதிக் கடலாய் இருத்தலாம் –

மெய்மதிக்கடல்-
தத்துவ ஞானத்திற்கு கடலே இருப்பவர் –
மெய் உணர்வு என்றும் குன்றாது -நிலைத்து இருத்தல் பற்றி கடல் என்கிறார் ,
அறிவு அனைத்தும் -அறிவுக்கு புலனாம் அவை யாவும் -மெய்யே -என்பது -இவர் சித்தாந்தம் ஆதலின் –
ஸ்ரீ எம்பெருமானாரை மெய் மதிக் கடல்-என்கிறார்
சந்நியாசி வாதம் செய்தல் ஆகாது -என்ற நியதி இருப்பினும் -தமக்கு உள்ள மெய் உணர்வை உலகமும் எய்தி உய்வுற வேண்டும் என்று கருதி –
வதில் வென்றாரே அன்றி -தமக்கு க்யாதி லாப பூஜைகளை -கருதி அன்று என்று உணர்க –

சங்கற்ப சூர்யோதயத்தில் -இரண்டாம் அங்கத்தில் –
விவேக மகா ராஜனாலே பிற மதத்தவரை வேரோடு களைவதற்காக ஏவப்பட்ட -வேதாந்த சித்தாந்தம் எனப்படும் –
சந்நியாசி-தன் ஆஸ்ரமத்துக்கு இசையாது என்று – தானே நேராக செய்யாமல்-வாதம் எனப்படும் சிஷ்யனைக் கொண்டு –-
விஸ்வாமித்ரர் ராமனைக் கொண்டு அரக்கரை அழிப்பது போலே -குத்ருஷ்டிகளையும் பாஹ்யர்களையும் நிரசிக்க விரும்புவதாக பேசி இருப்பதால்-
எதிரிகளை களைவதில் நோக்கம் கொண்டு நேரே வாதம் செய்வது தகாது -என்க –
அத்தகைய நோக்கம் இன்றி -உலகம் உய்யும் நோக்குடன் வாதில் வென்று மெய் உணர்வை உலகு எங்கும் பரப்புவதில் -யாதொரு குற்றமும் இல்லை-என்க –
பிற மதத்தவரால் உலகில் உள்ளோர் அனைவரும் அறியாமை இருளினால் அனர்த்தப் படும் பொது –
ஸ்ரீ இராமானுசன் -நான்மறை சுடர் ஒளியால் – அவ்விருளை துரந்திலரேல்-நாராயணனே உயிரை உடையவன் -என்று
உற்று உணர்ந்தவர் அறிவார் இல்லை என்று அடுத்த பாசுரத்தில் பேசுவதால் -உலகம் உய்யும் நோக்குடனே வாதில் வென்றமை தெளிவு .
மெய் மதிக் கடல் இப்படி வாதில் வென்று அருளுவதே -என்று ஸ்ரீ அமுதனார் ஈடுபடுகிறார்

உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன் –
அடியை அடைந்து உள்ளம் தேறி ஈறில் இன்பத்து இரு வெள்ளம் மூழ்கினன்-2-6-8-
கூட்டரிய திருவடிக்கள் கூட்டினை நான் கண்டேனே 4-9-9–

———————-———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ தேசிகர் அருளிச் செய்த ஸ்ரீ அஞ்சலி வைபவம் –சில்லறை ரஹஸ்ய கிரந்தம் —

April 27, 2020

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

ஸ்ரீ அம்ருதா ஸ்வாதிநீ -ரஹஸ்யங்களில் மூன்றாவது-ஸ்ரீ அஞ்சலி வைபவம் –

ஸ்ரீ ஆளவந்தார் -ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -28-ஸ்லோக விஸ்தரமான வியாக்யானம் – அருளிச் செய்ய –
ஸ்ரீ ஸ்வாமி தேசிகன் இந்த கிரந்தம் அருளிச் செய்கிறார்
இதில் அஞ்சலி பிரபாவமும் -அது பரம்பரையா மோக்ஷ காரணமாவதும் –
அஞ்சலி முத்திரை ஆகிஞ்சனம் தெரிவிப்பதாய் ப்ரபத்தியே விவஷிதம் என்பதால் சாஷாத் மோக்ஷ காரணம்
என்பதும் அருளிச் செய்யப்பட்டது

இதில் அவதாரிகா ரூபமாய் -ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம்-27-

தவாம்ருதஸ் யந்தி நி பாத பங்கஜே
நிவேஸி தாத்மா கத மந்யதிச் சதி
ஸ்திதே அரவிந்தே மகரந்த நிர்ப்பரே
மது வ்ரதோ நே ஷூ ரகம் ஹி வீஷதே–27-திருச் சரணார விந்தங்களின் போக்ய அதிசயம்

இந்த ஸ்லோகத்துக்கு மூலப்பாட்டு –
நாளும் நின்று அடும் நம் பழமை யம் கொடு வினை உடனே
மாளும் ஓர் குறைவில்லை மனனக மலமறக் கழுவி
நாளும் நம் திரு உடை அடிகள் தம் நலம் கழல் வணங்கி
மாளும் ஓர் இடத்திலும் வணக்கொடு மாள்வது வலமே –திருவாய் -1-3-8-

சேவா யோக்யதை அருளிச் செய்யும் முதல் பத்தில் -ஸுவ்லப்யத்தை அருளிச் செய்யும் மூன்றாம் திருவாய் மொழியில் –
சர்வ கால ஆஸ்ரயத்வத்தை வெளியிட்டு அருளும் எட்டாவது பாசுரம் இது

இதற்கு திருக் குருகைப் பிரான் பிள்ளான் -இப்படி அநந்ய ப்ரயோஜனராய்க் கொண்டு
நம் திரு உடை அடிகள் தம் நலம் கழல் வணங்கவே–ஒரு குறை இல்லை –
நாம் அபேக்ஷித்த படியே எம்பெருமானை அனுபவிக்கப் பெறலாம் -இப்படி சிர காலம் கூட பலவத் சாத்தியமான
பக்தி யோகத்தை சாதிக்கைக்குக் காலமும் பலமும் இன்றியே அந்திமதசாபன்னரானார் இழந்து போம் யத்தனையோ என்னில் –
அந்த அந்திம தசையிலாகிலும் ஓர் அஞ்சலி மாத்ரமாதல் ஓர் யுக்தி மாத்ரமாதல் ஓர் ஸ்ம்ருதி மாத்ரமாதல்
அவன் திறத்திலே செய்ய அந்த பக்தி யோகத்திலும் நன்று என்கிறார் -என்று நிரூபிக்கப் பட்டு இருக்கிறது –
ப்ரபத்தியே ஸூசிக்கப்படுகிறது

அந்தராதி கரணம்
முன் பின் -கேசவன் தமர் கீழ் மேல் -ரக்ஷித்துக் கொடுக்கும்

த்வத் அங்க்ரிம் உத்திஸ்ய கதா அபி கேநசித்
யதா ததா வா அபி சத்ருக் ருத்தோ அஞ்ஜலி
ததைவ முஷ்ணாத்ய ஸூ பான்யசேஷ தஸ்
ஸூ பானி புஷ்ணாதி ந ஜாது ஹீயதே—28-

த்வத் அங்க்ரிம் உத்திஸ்ய ————திரு உடை அடிகள் தம் நலம் கழல்
கதாபி கேநசித் யதா —————மனனக மலமறக் கழுவி
ததா வாபி ஸக்ருத் க்ருத அஞ்சலி —-மாளும் ஓர் இடத்திலும் வணக்கொடு மாள்வது
ததைவம் உஷ்ணதி —————-உடனே மாளும்
அஸூபாநி அசேஷத—————–நாளும் நின்று அடும் நம் பழமை யம் கொடு வினை
ஸூபாநி புஷ்ணாதி —————–வலமே
ந ஜாது ஹீயதே ——————–ஓர் குறைவில்லை

இவ் வஞ்சலி–நோற்ற நோன்பிலேன் –புகல் ஓன்று இல்லா அடியேன் –இத்யாதிகளில் படியே –
ஆகிஞ்சன்ய அநந்ய கதித்வாதி யோகத்தால் -பிரபத்தி அதிகாரியாய்ப் -பர ந்யாஸம் பண்ணுகிறவனுடைய –
ஸ்வ ரக்ஷண அர்த்த -ஸ்வ வியாபாரத்தில் -கை முடங்குகிற படியைக் காட்டுகிற முத்ரையாய் நின்ற போது

தாவதார்த்திஸ் ததா வாஞ்ஜா தாவந் மோஹஸ் ததா ஸூகம்
யாவந் ந யாதி சரணம் த்வாம் அசேஷாக நாசநம் –இத்யாதிகளில் படியே
இவ்வஞ்சலிக்கு உள்ளீடாய்க் கொண்டு சகல பல ஸாதனமாய் நிற்கிற பிரபத்தியின் ப்ரபாவத்தைச் செல்லுகையில்
தாத்பர்யம் ஆகையால் இங்கு ஒரு பிராமண விரோதமும் வாராது –

அல்லாத பகவத் கர்மங்கள் போல் இவ்வஞ்சலியும் ஒரு சத் கர்ம விசேஷமாய் நின்றால் —
இட்ட படை கல் படையாய் -பாப ஷயம் -சத்வ உந் மேஷம் -சம்யக் ஞானம் -பக்தி பிரபத்திகள் -என்று
இப்பரம்பரையாலே மோக்ஷ சாதனத்வம் உண்டாகையாலே கீழ்ச் சொன்ன
சர்வ அநிஷ்ட நிவ்ருத்திக்கும் சர்வ அபீஷ்ட சித்திக்கும் விரோதம் இல்லை

———-

அஞ்சலி -அம் ஜலயதி –நெஞ்சு உருகும் பக்தனை கண்டு நெஞ்சு உருகுவானே அவனும் –

இரும்பு போல் வலிய நெஞ்சையும் உருக்குவானே —

கர்த்ருத்வ தியாகம் காட்டுவதே அஞ்சலி –

அகிஞ்சனன் என்பதைக் காட்டுவதே அஞ்சலி என்றுமாம் –

—————-

இதன் தனியன் –
ஹிதாய சர்வ ஜெகதாம் வ்யக்தம் யோ அஞ்சலி வைபவம்
பிராஸீக சத் தம் வந்தே அஹம் வேதாந்த யுக தேசிகம் —

————-

அவதாரிகை -த்வத் அங்க்ரிம் உத்திஸ்ய –சப்தார்த்தம் –கதாபி-சப்தார்த்தம்- கேநசித் -சப்தார்த்தம்
யதா ததா வாபி -சப்தார்த்தம்—ஸக்ருத் க்ருத –சப்தார்த்தம் –அஞ்சலி–சப்தார்த்தம்–
ததைவ -சப்தார்த்தம் முஷ்ணதி அஸூபாநி –சப்தார்த்தம்–அசேஷத –சப்தார்த்தம்
ஸூபாநி புஷ்ணாதி —சப்தார்த்தம்-ந ஜாது ஹீயதே -சப்தார்த்தம்–
அஞ்சலி பிரபன்னன் ஆகிஞ்சன்யத்தைக் காட்டும் முத்திரை –சரண்யனுடைய அபய முத்திரையின் பிரயோஜனம் —
பர ந்யாஸ வ்யஞ்ஜக முத்ரா ரூபத்வ சமர்த்த தமம் -சஹஜ கிருபா விஸிஷ்ட பகவானே மோக்ஷ ப்ரதன்–
அஞ்சலியின் பரம்பரயா மோக்ஷ சாதனத்வம் -அஞ்சலி விஷயத்தில் அதிவாதாதிகளின் அநவ் சித்ய நிரூபணம் –
ஸ்லோகார்த்த ஸங்க்ரஹம் -பகவத் அநந்யார்ஹத்வ அத்யவசாயத்தைக் காணும் பிரகாரம் -உப சம்ஹாரம் –

————

அவதாரிகை –

ஸ்ரீ பெரிய முதலியார் -தவாம்ருதஸ் யந்திநி பாத பங்கஜ -என்கிற ஸ்லோகத்தில் –
பகவச் சரணார விந்தத்திலே போக்யதாதிசயத்தை அத்ய வசித்தவனுக்கு அதனுடைய துத்ஸ்த்ய ஜதையால்
கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும் ஐங்கருவி கண்ட இன்பம் தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம் -என்னுமதில்
சொல்லுகிற ஐஸ்வர்ய கைவல்ய ரூபங்களான ப்ராப்யாந்தரங்களிலே இளைப்பாறுகை கூடாது என்று அருளிச் செய்தார்

அநந்தரம்-தவத் அங்க்ரி முத்திஸ்ய –என்கிற ஸ்லோகத்தால்
அப்படிப்பட்ட அதிகாரிகளுக்குத் திருவடிகளை உத்தேசித்து உண்டான அல்ப அநு கூலங்களான வியாபாரத்தால்
சர்வ அபேக்ஷித சித்தி உண்டாம் படியான ஆஸ்ரயண ஸுவ்கர்யத்தாலும் திருவடிகளுடைய
துஸ்த்ய ஜதையை அருளிச் செய்கிறார் -தவத் அங்க்ரி முத்திஸ்ய-இத்யாதியால்

த்வத் அங்க்ரிம் உத்திஸ்ய -கதாபி– கேநசித் யதா ததா வாபி —-ஸக்ருத் க்ருத — –அஞ்சலி–
ததைவ – முஷ்ணதி அஸூபாநி — –அசேஷத — ஸூபாநி புஷ்ணாதி — -ந ஜாது ஹீயதே

———–

த்வத் அங்க்ரிம் உத்திஸ்ய –சப்தார்த்தம் —
த்வத் அங்க்ரிம் உத்திஸ்ய-என்கிறது சர்வ லோக சரண்யமாய் -சர்வ போக்யாதிசயிகளான தேவரீருடைய
சரணார விந்தங்களை உபாயமாகவும் பிராப்யமாகவும் அபி சந்தி பண்ணி என்கிற படி -இத்தால்
ப்ராஹ்மாணம் சிதி கண்ட்டம் ச யாஸ் ச அந்யா தேவதா ஸ்ம்ருதா
பிரதிபுத்தா ந சே வந்தே யஸ்மாத் பரிமிதம் பலம் –சாந்தி பர்வம் -357-36–
ஏதவ் த்வவ் விபுத ஸ்ரேஷ்ட்டவ் பிரசாத க்ரோதஜவ் ஸ்ம்ருதவ்
தத் ஆதர்சித பந்தாநவ் ஸ்ருஷ்ட்டி சம்ஹார காரரவ் –சாந்தி பர்வம் -357-19-இத்யாதிகளில்
பரதந்த்ர சேதனராகச் சொல்லுகையாலே சாஷாந் மோக்ஷத்திற்கு சமர்த்தர் அல்லாத
எருத்துக் கொடியுடையானும் பிரமனும் இந்திரனும் முதலான திருவில்லாதத் தேவரை கை விட்ட படியும்
அல்ப அஸ்திரத்வாதி தோஷ தூஷிதங்களான ப்ரயோஜனாந்தரங்களில் பற்று அற்ற படியும் சொல்லிற்று ஆயிற்று

———————

கதாபி-சப்தார்த்தம்-
பஹு த்வாரஸ்ய தர்மஸ்ய –என்கிறபடியே நாநா விதங்களான தர்மங்கள் எல்லாம் கால விசேஷங்களைப்
பற்றி இருக்கும் -எங்கனே என்னில் –
அந்யே க்ருதயுகே தர்மா -மனு -1-85-இத்யாதிகளில் படியே -யுக வேதம் -அயன பேதம் -மாச பேதம் -பக்ஷ பேதம் –
திதிவார நக்ஷத்ர பேதம் -ராத்ரி திவ சாதி பேதம் -யாம பேதம் -ராசி பேதம் -முஹுர்த்த பேதம் -என்று இப்படிப்பட்ட
கால பேதங்களில் வ்யவஸ்திதங்களாய் இறே கர்ம விசேஷங்கள் இருப்பது
இவ்வஞ்சலி பந்த ரூபமான ஸூகர்மத்திற்கு ருசி பிறந்த போதே காலம் -மற்றொரு கால விசேஷம்
பார்த்து இருக்க வேண்டாம் என்னும் இடத்தை கதாபி -என்று அருளிச் செய்கிறார் –

மதுராந்தகத்திலே பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொண்டாரே எம்பெருமானார் பெரிய நம்பியிடம்

பிரதமத்தில் பாடம் செய்த சிஷ்யன் அறிவு மங்குமா போல் பிராட்டி இளைத்து இருந்தாள் -வால்மீகி ராமாயணம்

—————

கேநசித் -சப்தார்த்தம்
வர்ண தர்மம் -ஆஸ்ரம தர்மம் -குண தர்மம் -நிமித்த தர்மம் என்றால் போலே சொல்லும் தர்மங்கள் எல்லாம்
சில அதிகாரி விசேஷங்களை பற்றி இருக்கும் –
இவ்வஞ்சலி பந்தம் ஸத்ய வசனாதிகளைப் போலே சாமான்ய தர்மம் ஆகையால்
ப்ராஹ்மணன் முதலாக ஸ்வ பாகன் அளவாக சர்வருக்கும் சாஸ்த்ரயீமுமாய் ஸூ கரமுமாய் இருக்கும் என்னும் இடத்தை –
கேநசித் -என்று அருளிச் செய்கிறார்

—————-

யதா ததா வாபி -சப்தார்த்தம்—

அல்லாத தர்மங்களுக்கு எல்லாம் நாநா விதங்களான பிரகார விசேஷ நியமங்கள் உண்டாய் இருக்கும் –
இவ்வஞ்சலிக்குப் பர அவர தத்துவ ஹித புருஷார்த்தங்களில் தெளிவு உண்டாகவுமாம்-இல்லை யாகவுமாம் –
மஸ்திஷ்க சம்புடாதிகளில் வேண்டியபடி யாகவுமாம் -வசம் செய்யும் கை இல்லாத போது வாக்காலும் மனஸ்ஸாலும் ஆகவுமாம்
எல்லாப்படிக்கும் இது ச பலமாம் என்னும் இடத்தை-யதா ததா வாபி -என்று அருளிச் செய்கிறார்

ஐஸ்வர்யம் அக்ஷர கதிம் பரமபதம் வா கஸ்மை சித் -லஜ்யதே -அனைத்தும் அருளி அஞ்சலிக்கு ஈடாக செய்ய வில்லையே
கடைக்குப் போகும் பொழுது கை கூப்பி வைப்போமே என்று இருந்தவர்களுக்கும் அருளிய பின்பு
ஸத்ருசமாக செய்யப் பெற்றிலோமே வெட்க்கி குனிந்து -பட்டர்

—————-

ஸக்ருத் க்ருத –சப்தார்த்தம் —
ஸக்ருத் க்ருத சாஸ்த்ரார்த்த -என்கிற சாமான்யத்துக்கு அபவாதம் இல்லாமையால்
ஆவ்ருத்த் யபேஷை இல்லை -என்னும் இடத்தை -ஸக்ருத் க்ருத -என்று அருளிச் செய்கிறார்

————————

அஞ்சலி–சப்தார்த்தம்–
ஸர்வேஷாம் ஏவ தர்மாணாம்ந் உத்தமோ வைஷ்ணவோ விதி
ரக்ஷதே பகவான் விஷ்ணு பக்தான் ஆத்ம சரீரவத்–ஆனு பர்வம் -36-24- இத்யாதிகளில்
தர்மாந்தரங்களில் காட்டில் அதிக ப்ரபாவங்களாக ப்ரசித்தங்களான சம்மார்ஜன உப லேபனே மாலாகரண
தீப ஆரோபண ப்ரதக்ஷிண ப்ரணாம ஸ்துதி சங்கீர்த்தன ஜாபாதிகளில் காட்டில் அதிக தமமாக
அஞ்சலி பரமா முத்ரா -ஸ்ரீ பரத்வாஜ சம்ஹிதை -என்று சொல்லப்பட்ட இதன் ஸ்வரூபம்
கை கூப்பும் அளவே என்று தோற்றுகைக்காக அஞ்சலி என்கிறார்

உப லேபனே-பெருக்கி விளக்குவது -கடைத்தலை சீய்க்கப் பெறுதல்
அதிக தமமாக–பரமாம் -greatest

—————

ததைவ -சப்தார்த்தம்
காலாந்தரத்தில் பலிக்கும் கர்மங்கள் போல் அன்றிக்கே –
க்ஷிப்ரம் தேவ ப்ரஸாதி நீ –ஸ்ரீ பரத்வாஜ சம்ஹிதை-என்ற ப்ரபாவத்தை -ததைவ- என்று அருளிச் செய்கிறார்

————-

முஷ்ணதி அஸூபாநி –சப்தார்த்தம்–
அஸூபங்களை நசிப்பிக்கும் என்ற அர்த்தத்தை -முஷ்ணதி அஸூபாநி–என்று அருளிச் செய்ய வேண்டிற்று என் என்னில்
ஆஸ்ரிதனானவன் அநாதி வாசனைகள் மேலிட்டு சாம்சாரிக புண்ய பாப ரூபங்களான விலங்குகளை விடுவிக்க இசையாது ஒழியிலும்
தமர்கள் கூட்ட வல்வினையை நாசம் செய்யும் சதிர் மூர்த்தி என்கிறபடி
பாலனை உபச் சந்தனம் பண்ணி அபத்தயத்தை பரிஹரிக்குமா போலே ஒரு விரகால் இவனுக்கு
அநு கூலங்களாகத் தோற்றும் பந்தகங்களைக் கழிக்கும் என்றபடி
இங்குச் சொல்லுகிற அசுபங்கள் ஆவன-பிராப்தி விரோதிகளான கர்மங்கள் ஆதல் –
உபாக்யாதிகளை விரோதிக்கும் கர்மங்களை யாதல் என்று யதா அதிகாரம் கண்டு கொள்வது

முஷணம் pick pocket -அறியாமலே திருடுதல் பிரார்த்திக்காமலேயே -நானும் வேண்டாம் நீயும் வேண்டாம் தன்னடையே போகும் –

ஸ்ரீ மூஷ்ணம் -திவ்ய தேசம் இத்தைப் பண்ணுவதாலேயே பெற்ற பெயர்
முஷித க்ருத கர்மம்– -சபரி செய்ததாக ரகுவீர கத்யம் -ஸாஷீ மாத்திரம் பெருமாள்

—————-

அசேஷத –சப்தார்த்தம்

க்ருச்சர சாந்த்ரயாணாதி கர்மங்கள் சில அஸூ பங்களைக் கழிக்க வற்றாய் இருக்கும் –
இது அப்படி அன்று -சர்வ அநிஷ்டங்களையும்

——————

ஸூபாநி புஷ்ணாதி —சப்தார்த்தம்-ந ஜாது ஹீயதே -சப்தார்த்தம்–
அஞ்சலி பிரபன்னன் ஆகிஞ்சன்யத்தைக் காட்டும் முத்திரை –சரண்யனுடைய அபய முத்திரையின் பிரயோஜனம் —
பர ந்யாஸ வ்யஞ்ஜக முத்ரா ரூபத்வ சமர்த்த தமம் -சஹஜ கிருபா விஸிஷ்ட பகவானே மோக்ஷ ப்ரதன்–
அஞ்சலியின் பரம்பரயா மோக்ஷ சாதனத்வம் -அஞ்சலி விஷயத்தில் அதிவாதாதிகளின் அநவ் சித்ய நிரூபணம் –
ஸ்லோகார்த்த ஸங்க்ரஹம் -பகவத் அநந்யார்ஹத்வ அத்யவசாயத்தைக் காணும் பிரகாரம் -உப சம்ஹாரம் –

———–

ந ஜாது ஹீயதே

சந்ததிகளுக்கும் சேர்த்தே பேறு -கேசவன் தமர் கீழ் மேல் ஏழு பிறப்பும்
விபீஷணன் உடன் வந்த நால்வருக்கும் பேறு-ஏழு தலைமுறைகளுக்கும் குடி குடி ஆக்கமும் அளிக்கும் –

————

12-அம் ஜலயதி அஞ்சலி –கர்த்ருத தியாக ஸூ சகம்

பிரபத்தி லக்ஷணம் -ஸூ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி

வாக்ய குரு பரம்பரை ஸ்லோக குரு பரம்பரை
கை முடங்கி -இரு கையையும் கூப்பினேனோ திரௌபதியைப் போலே
ஓட்டைக்கைக்கும் யானைக்கும் இடையே ஓர் ஆயிரம் தூரம் –
துவாரகை =ஹஸ்தினா புரம்
இடையே நடக்குது புடவை வியாபாரம்

——–

13-அஞ்சலி முத்திரை பிரபன்னனுக்கு-சேஷனுக்கு அடையாளம்
சேஷிக்கு முத்திரை – அபய ஹஸ்தம்–ஸத்யஸங்கல்பன் -சங்கல்ப மாத்திரத்தில் அஞ்சலி கண்டு உகந்து அனைத்தையும் அளிப்பான்–
அஞ்சலி விரதம் சத்வ குணத்தை வளர்க்கும் -பலன் கருதாமல் அஞ்சலி செய்வதே சாலச் சிறந்தது –

ப்ரபன்னன் வாங்கிய கைக்கு வைத்த கை அபய ஹஸ்தம்

————

14-பலன் காட்டி அருளுகிறார்
ப்ரயோஜனாந்தர பரர்களுக்கு அவ்வோ ப்ரயோஜனாந்தரங்களை அளிக்கும்
அநந்யார்ஹ அவா அற்று வீடு பெறும் அவஸ்தை அருளும்

———–

15-பிரதி ஹஸ்தம் இதுவே

ஹஸ்தீஸ துக்க விஷ திக்த பல அநு பந்தினி
அப்ரஹ்ம கிதம பராஹதா ஸம்ப்ரயோகே
துஷ் கர்ம சஞ்சய வஸாத் துரதிக்ரமே நா
பிரதி அஸ்ரம் அஞ்சலி அசவ் தவ நிக்ரஹ அஸ்த்ரே––ஸ்ரீ வரதராஜ பஞ்சாசத் —–30-

அஞ்சலி பரமாம் முத்திரை அன்றோ -நிக்ரஹ சங்கல்பம் மாற்றி மோக்ஷ பர்யந்தம் அளிக்கச் செய்யுமே –

அஸ்வத்தாமா நாராயண அஸ்திரம் ஏவ
அர்ஜுனன் இதற்கு பிரதி
துரோணர் பிள்ளைக்கு மட்டும் சொல்லிக் கொடுத்த அஸ்திரம்
கை கூப்புவதே -பிரதி
பீமன் செய்யாமல் இருக்க இருவர் கைகளைத் தூக்கி
hands up போல் இதுவே

————

16-நான்கு அடையாளங்கள்

கண புரம் நான் ஒருவருக்கு உரியேனோ
மற்ற தெய்வம் தொழாமல்
சிற்றின்ப ஆசை ஒழித்து
நிர் பரத்வ அத்யவசாயம்
இந்த நான்கு அடையாளங்கள் இருக்க வேண்டும் என்று அருளிச் செய்து நிகமிக்கிறார்

————

1.-ஸ்ரீ யபதியே பராத்பரன் -ஸர்வேச்வரேச்வரன் –
2. அஞ்சலிக்கு கால நியதி இல்லையே –
3. சர்வாதிகாரம் -சரம எளிய உபாயம்–
4. மற்ற தர்மங்களில் அதி உத்க்ருஷ்டம் அஞ்சலியே-
5. அஞ்சலியே அனைத்து பிரதிபந்தகங்களையும் பாப சமூகங்களைப் போக்கி அருளும் –
6. அஞ்சலியின் பயன்கள் –
7. அஞ்சலியா சரணாகதியா எது மோக்ஷ உபாயம் –
8. -சேதனனுக்கு அஞ்சலி முத்திரை -பரம சேதனனுக்கு அபய ஹஸ்தம் –
9.-அஞ்சலி தன்னுள்ளே பரந்யாசத்தையும் கொண்டு உள்ளதே –
10. நம் அபராதங்களால் அவனுக்கு உள்ள சீற்றம் ஒரே அஞ்சலியால் காணாமல் போகுமே –
11.ஒப்பற்ற சரணாகதியின் மஹிமை –
12. பிரபன்னன் தனது ஆத்மாவாகவே கொல்லப்படுகிறானே-
13. அஞ்சலி அனைத்தையும் அருளி ப்ரீதி காரித கைங்கர்யத்தையும் அளிக்கும் –
14. அஞ்சலி மஹிமையை அதிசங்கை பண்ணுவார்கள் வாதங்கள் சமாதானம் –
15. ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீ ஸூக்திகளில் அஞ்சலி மஹாத்ம்யம் –
16. பிரபன்னனுக்கு முக்கியமான நான்கு விசேஷணங்கள்-அவற்றை அங்கீ கரிக்கும் அடையாளங்கள் -போன்றவை இதில் உள்ளன –

சார அசார விவேகிகள்-ஸ்ரீ யயதியின் திருவடிகளே உபாயமும் உபேயமும் என்று அறிவார்கள்
இவனே மோக்ஷபலப்ரதன் -சர்வ நியாமகன் -ப்ரஹ்மாதிகளுக்கும் ஈஸ்வரன் –
அஞ்சலிக்கு கால தேச அதிகார நியதி இல்லையே -வர்ணாஸ்ரம தர்ம நியதியும் இல்லையே –
ப்ரஹ்மாதி பிப்பிலி ஈறாக இதற்கு அதிகாரிகள் –

பரிபூர்ண அனுக்ரஹம் அளிக்கும் – தத்வ த்ரய ரஹஸ்ய த்ரய அர்த்த பஞ்சக ஞான சூன்யர்களும் இதுக்கு அதிகாரிகள்-
மனஸ் பூர்வகமாக இல்லாவிட்டாலும் -வாக் சஹகாரியாக இல்லாவிட்டாலும் -காயம் முழுவதும் வணங்காமல்
அஞ்சலி மாத்திரமே பலனை அளிக்க வல்லதே-
கை கூப்பாமலே மனசாலே நினைத்தாலும் வாய் வார்த்தையாகச் சொன்னாலும் பலன் கொடுக்கும் –
கடைத்தலை சீய்க்கப் பெறுதல் -தூ மலர் தூவித் தொழுதால் -திரு விளக்கு ஏற்றுதல் -ப்ரதக்ஷிணங்கள் செய்தல் –
சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தல் – -ஸ்தோத்திரங்கள் ஸ்துதிப்பதும் செய்தல் – -திருநாம சங்கீர்த்தனம் செய்தல் –
இவற்றை விட அஞ்சலி எளிமையானது மட்டும் இலை -அவனுக்கு மிகவும் உகப்பாக கால விளம்பம் இல்லாமல் பலனை அளிக்கும்

ருசி வாசனைகளையும் போக்கி அருளும்-அஞ்சலி விரதமே சதாச்சார்யர் அனுக்ரஹம் பெற்று உஜ்ஜஜீவிக்க உதவுமே –
பரிபூர்ண அனுபவம் அங்கும் பெற இது வழி காட்டும் -ப்ரபத்தியில் மூட்டும் -பிரபத்தி அங்கங்களை எளிதாக்கும் –
பகவத் பாகவத கைங்கர்யங்களிலும் மூட்டும் –
ஏழு தலைமுறைகளுக்கும் குடி குடி ஆக்கமும் அளிக்கும் –
பக்தியில் அசக்தனுக்கு இது -ப்ரபன்னனைக் காட்டும் முத்திரை -அஞ்சலியும் ப்ரபத்தியும் வேறே வேறே இல்லையே –

——-

13-அஞ்சலி முத்திரை பிரபன்னனுக்கு-சேஷனுக்கு அடையாளம்
சேஷிக்கு முத்திரை – அபய ஹஸ்தம்–ஸத்யஸங்கல்பன் -சங்கல்ப மாத்திரத்தில் அஞ்சலி கண்டு உகந்து அனைத்தையும் அளிப்பான்–
அஞ்சலி விரதம் சத்வ குணத்தை வளர்க்கும் -பலன் கருதாமல் அஞ்சலி செய்வதே சாலச் சிறந்தது –

ப்ரபன்னன் வாங்கிய கைக்கு வைத்த கை அபய ஹஸ்தம்

————

14-பலன் காட்டி அருளுகிறார்
ப்ரயோஜனாந்தர பரர்களுக்கு அவ்வோ ப்ரயோஜனாந்தரங்களை அளிக்கும்
அநந்யார்ஹ அவா அற்று வீடு பெறும் அவஸ்தை அருளும்

1-அந்ய சேஷத்வம் கழிந்து
2-தேவதாந்த்ர போஜனம் இல்லாமல்
3-பலனைக் கருதாமல்
4-பர சமர்ப்பணம் தானே அஞ்சலி

பரம ஏகாந்தி -உபாயாந்தர தோஷம் இல்லாமல் -தேவதாந்த்ர பஜநம் இல்லாமல் –
பிரயோஜனாந்தர தோஷம் இல்லாமல் –பர சமர்ப்பணம் பண்ணி
நிர்ப்பர நிர்ப்பயராய் -நம் பூர்வர்களைப் போலவே இருப்போம்
பூசும் சாந்து என் நெஞ்சமே –தேசமான அணிகலனும் என் கை கூப்புச் செய்கையே –ஸ்ரீ நம்மாழ்வார் –

கண்ணன் கழல் தொழக் கூப்பிய கையின் பெருமை தனை
எண்ணம் கடக்க யமுனைத் துறைவர் இயம்புதலால்
திண்ணம் இது என்று தேறித் தெளிந்த பின் சின் மதியோர்
பண்ணும் பணிதிகள் பாற்றிப் பலம் தொழில் பற்றினமே

ஸ்ரீ மத் வேங்கடாந்த ஸ்ரீதரா பாத பத்ம சக்த சிந்தனம்
அஞ்சலி வைபவம் அகதயத் அநு ஸ்ம்ருதம் யமுனாச்சாரியை –

——————-

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —

—————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆளவந்தார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரும் தேவி தாயார் சமேத ஸ்ரீ தேவாதி ராஜ பர ப்ரஹ்மம் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –57–மற்றொரு பேறு மதியாது அரங்கன் மலரடிக்கா ளுற்றவரே இத்யாதி —

April 27, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

இனி என் வாக்கு உரையாது -என் மனம் நினையாது -என்பான் என் –
விபூதி இதுவாகையாலே அஞ்ஞானம் வரிலோ -என்ன
ஸ்ரீ எம்பெருமானாரை இந்த லோகத்திலே லபித்த பின்பு -விவேகம் இன்றியே -கண்டது ஒன்றை-விரும்பக் கடவ
பேதைத் தனம் ஒன்றும் அறியேன் -என்கிறார் .

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை–

இனி என் வாக்கு உரையாது -என் மனம் நினையாது மற்று ஒன்றையே -என்றீர் –
இருள் தரும் மா ஞாலத்திலே -இந் நாளிலே இந்த நியமம் நிலை நிற்குமோ -என்ன –
சஞ்சலம் ஹி மன-என்று மனஸ்ஸூ ஒரு விஷயத்தில் தானே சர்வ காலமும் நிற்க மாட்டாது இறே –
ஆகையாலே மற்றொரு காலத்திலே மனஸ்ஸூ வ்யபிசரித்து அஞ்ஞாநத்தை விளைத்தாலோ என்று ஆஷேபித்தவர்களைக் குறித்து –
நீங்கள் சொன்னதே சத்யம் -ஆகிலும் நான் கீழே இழந்து போன நாள் போல் அன்று இந் நாள் –
இப்போது தம்தாமுடைய பரமை ஏகாந்த்யத்தாலே ஸ்ரீ ரங்கநாதன் உடைய பரம போக்யமான திருவடிகளுக்கு
அடிமைப் படுக்கையே பரம புருஷார்த்தம் என்று அத்யவசித்து இருக்குமவர்களையே தமக்கு பந்து பூதராக அங்கீ கரித்து கொண்டு
பிரபன்ன குல உத்தேச்யராய் –
சர்வ தபஸ்ஸூக்களிலும் வைத்துக் கொண்டு -விலஷணமான தபசான சரணாகதி தர்மத்திலே நிஷ்டர் ஆனவர்கள் –
தம்முடைய வைபவத்தைச் சொல்லி புகழும்படியான ஸ்ரீ எம்பெருமானாரை இந்த லோகத்திலே லபித்தேன் –
ஆன பின்பு ப்ராப்த அப்ராப்த விவேகம் இன்றிக்கே கண்டதொன்றை விரும்பக் கடவதான அஞ்ஞாநமானது
என் இடத்தில் சேரக் கண்டிலேன் -என்கிறார் –

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-

என் வாக்கும் மனமும் மற்று ஒன்றை இனி உரையாது நினையாது என்னும் உறுதி எங்கனம் கூடும் –
இருள் தரும் மா ஞாலம் அன்றோ –
மீண்டும் அறியாமை வாராதோ -என்பாரை நோக்கி
இன் நானிலத்தில் ஸ்ரீ எம்பெருமானாரை நான் பெற்ற பின்பு நன்மை தீமைகளைப் பகுத்து அறியாது
கண்டதொன்றை விரும்பும் பேதைமை ஒன்றும் அறியேன் -என்கிறார் .

மற்றொரு பேறு மதியாது அரங்கன் மலரடிக்கா
ளுற்றவரே தனக்குற்றவராய்க் கொள்ளும் உத்தமனை
நற்றவர் போற்றும் இராமானுசனை யின் நானிலத்தே
பெற்றனன் பெற்ற பின் மற்று அறியேன் ஒரு பேதமையே -57- –

பத உரை –
மற்று ஒரு பேறு -வேறு பயனை
மதியாது -ஒரு பொருளாகக் கருதாமல்
அரங்கன் -ஸ்ரீ பெரிய பெருமாள் உடைய
மலர் அடிக்கு -அழகிய திருவடிகளுக்கு
ஆள் உற்றவரே -ஆட் புக்கு நிலை நிற்பவர்களையே
தனக்கு உற்றவராய் -தமக்கு உறவினராக
கொள்ளும் -ஏற்கும்
உத்தமனை -மிக்க மேன்மை வாய்ந்தவரான
நல் தவர் –நல்ல தவமாம் சரணா கதி தர்மத்தை கை கொண்டவர்கள்
போற்றும் -துதியா நிற்கும்
இராமானுசனை -ஸ்ரீ எம்பெருமானாரை
இன் நானிலத்தே -இந்த உலகத்திலே
பெற்றனன் -பெரும் பேறாக பெற்று விட்டேன்
பெற்ற பின் -பெற்ற பிறகு
மற்று -இப் பேற்றைத் தவிர மற்று ஒன்றை விரும்புவதற்கு உறுப்பான
ஒரு பேதைமை -ஒரு அஞ்ஞானம்
அறியேன் -வருவது கண்டிலேன் .

வியாக்யானம் –
வேறு ஒரு பிரயோஜனன்களை ஒன்றாக நினையாதே
ஸ்ரீ பெரிய பெருமாளுடைய நிரதிசய போக்யமான திருவடிகளுக்கு அடிமையாகையே பரம புருஷார்த்தம் என்று -அதிலே ஊன்றி
இருக்குமவர்களையே-தமக்கு பந்து பூதராக அங்கீகரிக்கும் உத்தம அதிகாரிகளாய் –
ஸூசுகத்வ -அவிளம்ப்ய-பலப்ரதத்வ -ஸ்வரூப அநுரூபத் வாதிகளாலே -சர்வ தபஸூக்களிலும் வைத்துக் கொண்டு –
விலஷண தபச்சான -சரணாகதி தர்மத்திலே நிஷ்டரானவர்கள் –
தம்முடைய வைபவத்தையே சொல்லிப் புகழும்படியான ஸ்ரீ எம்பெருமானாரை இந்த லோகத்திலே லபித்தேன் –
லபித்தற்கு பின்பு இத்தை ஒழிய ப்ராப்த அப்ராப்த விவேகம் பண்ணாதே கண்ட தொன்றிலே
மேல் விழுகைக்கு உறுப்பான ஒரு அஞ்ஞானம் கண்டிலேன் –
ஆதலால் மேலும் உண்டாகக் கூடாது என்று கருத்து–

பித்தர் பேசினார் பேதையர் பேசினர்–கம்பர் – -அஞ்ஞானம் இல்லை என்கிறார் இதில்
மூடர் ஆசூரா பாவம் -அவதரித்தவனை உண்மையாக அறியாத பாஷாண்டிகள் –
நல் தவர் -உபாயமும் உபேயமும் அவனே என்று அத்யவசித்து –74 சிம்ஹாசநாதிகளும் –
ஜகத் குரு -சத்யம் சத்யம் ஸ்ரீ எதிராஜரே ஜகத் குரு -சம்சயம் இல்லை -தத் ஏவ சர்வ லோகாநாம் உத்தாரகர்
பெற்ற பின் மற்று அறியேன் -பெற்ற ஹர்ஷத்தால் மீண்டும் அருளிச் செய்கிறார்-
ஸ்ரீ ஆழ்வாராதிகளையும் -ஸ்ரீ அரங்கன் அடியாரர்களையும் உற்றவராக -உத்தமன் –ஆச்சார்ய சிரேஷ்டர் -என்றவாறு –
மேல் கீழ் விடாமல் எல்லா பாசுரங்களும் -ஸ்ரீ ஆழ்வார் -ஸ்ரீ ராமானுஜர் -ஸ்ரீ ஆழ்வான் போல்வார் —
உத் -பகவான் / உத்தர ஆழ்வார் / உத்தமர் -ஆச்சார்யர் -வைபவம் மிக்கு என்றபடி –

மற்று ஒரு பேறும் மதியாது –
நமாம் துஷ்க்ர்திநோ மூடா ப்ரபத்யந்தே நராதமா -மாயாயாப ஹ்ர்தஞான ஆசூரிம் பாவாமாஸ்ரிதா –
கலவ் ஜகத்பதிம் விஷ்ணும் சர்வ ஸ்ரஷ்டாரமீச்வரம் -நார்ச்சயிஷ்யந்தி
மைத்ரேய பாஷண்டோபஹதாஜனா -காமைஸ் தைஸ் தைர் ஹ்ர்தஜ்ஞான ப்ரபத்யந்தே அந்ய தேவதா –என்று நிஷேதித்த படியே
சத்துக்கள் உடைய உபதேசாதிகளாலே தெளிந்து கொண்டு –
அனந்யாஸ் சிந்தயந்தோமாம் – வ்யவசாயாத் மிகா புத்த்திரே கேஹ குரு நந்தன –
மயிஸா நனந்யோகே ந பக்தி ர வ்யவிசாரிணி -என்கிறபடியே ததேக நிஷ்டராய் –
ஏகாந்தீது விநிஸ் சித்ய தேவதா விஷயாந்தரை பக்தயுபாயம் சமம் க்ருஷ்ண ப்ராப்தவ் -கிருஷ்ண ஏக சாதன -என்னும்படி
தேவதாந்திர -மந்த்ராந்தர -பிரயோஜனாந்தரங்களை-ஸ்மரியாத பரம ஏகாந்த யத்தாலே –

மதிக்கை -விரும்புகை-

மற்றொரு –உத்தமனை –
அரங்கன் மலர் அடிக்கே ஆளுகையே பேறு
அடிகள் நிரதிசய போக்யமாய் மலர் போன்று இருத்தலின் ஆளுறுகை பெரும் பேறாயிற்று –
திரு வரங்கத்தில் அரங்கன் திருவடி வாரத்தில் பண்ணும் கைங்கர்யமே பரம புருஷார்த்தம்
மற்ற புருஷார்த்தங்கள் புருஷார்த்தமாக மதிக்கத் தக்கன அல்ல என்று ஆளுற்றவர் கருதுகின்றனர் .

இனி
திருவரங்கத்தில் அரங்கனுக்கு ஆளுறுகை தவிர்ந்து பரம பதத்தில் பர வாசுதேவனுக்கு ஆளுறுகை
நேரினும் -அதனையும் மதிக்கிலர் என்னும் கருத்தில் –மற்றொரு பேறு மதியாது -என்று கூறினதாகக் கொள்ளலலுமாம்-

மற்று ஒரு பேறு –
பரம பதத்தில் பெரும் பேறு -முக்த ஐஸ்வர்யம் என்றபடி –
இப்படி பொருள் கொள்ளும்போது –மற்று ஒரு பேறும் என்று பிரிக்க -உம்மை உயர்வு சிறப்புப் பொருளது –
சீரிய முக்த ஐஸ்வர்யத்தையும் மதிக்கிலர் என்றது ஆயிற்று –

திருவரங்கத்தில் ஈடுபட்டவர்கள் பரம பதத்தையும் விரும்ப மாட்டார்கள் என்பது கீழ் வரும் ஐதிஹ்யங்களாலே விளங்கும் .
ஆள வந்தார் மகனார் சொட்டை நம்பி -அந்திம தசையிலே முதலிகள்-ஸ்ரீ வைஷ்ணவர்கள் –
அடைய புக்கிருந்து -நீர் நினைத்துக் கிடக்கிறது என் -என்ன –
ஸ்ரீ வைகுண்டத்தில் சென்றால் நம் பெருமாள் உடைய குளிர்ந்த முகம் போலே
ஸ்ரீ வைகுண்ட நாதன் முகம் குளிர்ந்து இருந்தது இல்லை யாகில் -முறித்துக் கொண்டு இங்கு
ஏற ஓடிப் போகும் இத்தனை -என்று கிடக்கிறேன் -என்றார் .

பட்டர் -பெருமாள் பாடே புக்கு இருக்க -பெருமாள் திரு மஞ்சனத்துக்கு ஏறி அருளுகிறவர் –
பட்டரைக் கண்டு -உனக்கு வேண்டுவது என் -என்று கேட்டு அருள –
சேலையைக் கடுக்கி -திருவரையையும் துடைப்பற்றையும் ஒரு கால் காட்டி அருள வேணும் -என்றார் .
பெருமாள்-அஞ்சினாயோ -என்று கேட்டு அருள -ஆடை இல்லாத ஏகாந்த நிலையில் -பெருமாளை சேவித்தால் –
சீக்கிரம் பரம பதத்துக்கு போவார் -என்கிற பிரசித்தியைப் பற்ற -பரம பதம் போவதற்கு அஞ்சினாயோ –
என்று பட்டரை பெருமாள் கேட்டு அருளினார் -என்க ..
நாயந்தே பரம பதம் என் சிறு முறிப்படி அழியும் –எனக்கு வசப்பட்டதே பரம பதம் ஆதலின் அங்குப் போக நான் அஞ்ச வில்லை -என்றபடி –
உம்முடைய குளிர்ந்த திரு முகமும் திரு நாமத் தழும்பும் இழக்கிறேனாக கருதி அஞ்சா நின்றேன் -என்றார் .

இவ்விரண்டி ஐ திஹ்யங்களும் -திரு விருத்தம் – 44- ஆம் பாசுரத்தில் -வ்யாக்யானத்தில்-
பெரிய வாச்சான் பிள்ளை காட்டியவைகள் .
நாச்சியார் திரு மொழி வ்யாக்யானத்திலும் -அவராலே -சிறிது மாறு பாட்டு -இவை –
நல்லார்கள் வாழும் நளிர் அரங்க நாகணையான் -11 5-என்னும் இடத்தில் கட்டப் பாட்டு உள்ளன –
அவ்விடத்திலேயே -பரம பதம் வரில் செய்வது என் என்று நடுங்குவார்கள் போலே காணும் அவ்வூரில் திருவரங்கத்தில்
வர்த்திக்கிறவர்கள் – – என்று அவர் அருளிச் செய்து இருப்பதும் இங்கு அறியத் தக்கது –

அரங்கன் மலர் அடிக்கு –
ஸ்ரீ ரங்கம் ரங்கமிதி ப்ரூயாத்யோஜநாநாம் -சதைரபி முச்யதே சர்வ பாபேப்யோ –
ஸ்ரீ விஷ்ணு லோகம் ச கச்சதி -இதம் ஹி ரங்கம் த்யஜிதாமி ஹாங்கம்-என்னும்படி பிரசித்த தமமான
ஸ்ரீ ரங்க நகரை தனக்கு இருப்பிடமாக உடையனாய் –
அதுவே நிரூபகமாம்படி -எழுந்து அருளி இருக்கிற ஸ்ரீ ரங்க நாதனுடைய –
சர்வே வேதா யத்பதமாமநந்தி -விஷ்ணோ பதே பரமே மத்வ உத்ச -என்றும் –
கதா புனஸ் சங்க ரதாங்க கல்பக த்வஜார விந்தாகுச வஜ்ராலாஞ்சனம் -திரிவிக்கிரம த்வச் சரணாம்
புஜத்வயம் மதீய மூர்த்தானம் அலங்கரிஷ்யதி -என்றும்
கதாஹம் பகவத் பாதாம் புஜத்வம் சிரஸா சங்கர ஹிஷ்யாமி –என்றும் சொல்லுகிறபடியே –
வேதாந்த வாக்ய சர்வ ஸ்வம்மாய்-நித்ய நிரதிசய போக்யமாய் -சர்வ லஷணோ பேதமாய் –
அத்யந்த ப்ரார்த்த நீயமாய் -புஷ்ப ஹாச சூகுமாரமாய் -சேவித்தவர்களை அனந்யார் ஹராம்படி
பண்ணக் கடவதான திருவடிகளுக்கு –

ஆள் உற்றவரே –
தாசோஹம் வாசுதேவச்ய -லஷ்மீ பர்த்துர் நர ஹரித நோர்த்தா சதா சச்ய தாஸா -என்றும் –
பொன் ஆழிக் கை என்னம்மான் நீக்கமில்லா அடியார் -என்றும் சொல்லுகிறபடியே –
வழு இலா அடிமைகளில் அன்வயித்து –
முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன் -என்றும்
ஆதலால் உன் அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே -என்றும் –
அதுவே பரம புருஷார்த்தம் என்றும் அத்யவசித்து இருக்கிற பராங்குச பரகாலாதிகளே –

தனக்கு உற்றவராகக் கொள்ளும் –
பாந்தவா விஷ்ணு பக்தாஸ்ஸ –என்றும் –
மாதா பிதா யுவதயஸ் தனயா விபூதிஸ் சர்வம் -என்றும் சொல்லுகிறபடியே
மாதா பித்ர்ப்ரப்ர்தியான சர்வ வித பந்துக்களாய் அனுசந்தித்து இருக்குமவராய் –

உத்தமனை –
கீழ் சொன்ன அதிகாரிகளில் எல்லாரையும் வைத்துக் கொண்டு -உத்தம அதிகாரியாய் -ஆசார்யராய் – என்றபடி –

அரங்கன் மலர் அடிக்கு ஆளுற்றவர் பரம பத நாதனுக்கு ஆளுருதலையும் பேறாக மதிக்கிலர் –
வான் இளவரசு வைகுந்தக் குட்டன் தானே அவன் –
அரங்கனோ புவனியும் விண்ணுலகும் ஆதும் சோராமல் ஆள்கின்றவன்
மாகம் -பரம ஆகாசமாம் பரம பதம் -மட்டும் இறைஞ்சும் அது பரம பத நாதன் அடி –
அரங்கனதோ -மாகம் மாநிலம் முழுதும் வந்து இறைஞ்சும் மலரடி .தனக்கு உற்றவராய்க் கொள்ளும் உத்தமனை

அரங்கன் திரு முற்றத் தடியார்களையே தமக்கு உறவினராக கொண்டவர் -எம்பெருமானார் -என்றபடி .
துறக்கும் போதும் ஆண்டானையும் ஆழ்வானையும் துறவாது உறவாக -ஆத்மபந்துவாக -கொண்டவர் அன்றோ அவர் .
மாதவன் திருவடிகளை உபாயமாகவும் -உபேயமாகவும்-கொள்ளுமவன் உத்தம அதிகாரி எனப்படுவான் .
எம்பெருமானார் அத்தகைய அதிகாரி ஆதலின் அவரை உத்தமன்-என்கிறார் .
த்வயார்த்த நிஷ்ட்டர் -என்றபடி .

உத்தமனை
கீழ் சொன்ன அதிகாரிகளில் அரங்கனையும் சேர்த்து
உத் புருஷன் உத்தர புருஷன் ஆழ்வார்கள் உத்தம புருஷன் ஆச்சார்யர்கள் என்ற படி..

நற்றவர் போற்றும் –
தவம் –தபசு
நல தவம் -வி லஷணமான தபசு –
தஸ்மான் நியாச மேஷாம் தபஸா மதி ரிக்த மாஹூ-என்றும் –
சத் கர்ம நிரதாஸ் சூத்த -சாங்க்ய யோக விதஸ்ததா -நார்ஹந்தி சரணஸ் த்தச்யகலாம் கோடிதமீமபி -என்னும்
ஸ்ருதி ஸ்ம்ருதிகளாலே -பிரசம்சிக்கப் பட்டதாய் –
அர்ஜுனனுக்கு மோஷ உபாயங்களை உபதேசிக்கும் இடத்தில்
முந்துற முன்னம் -கர்ம யோக ஞான யோக பக்தி யோக அவதார ரகஸ்ய புருஷோத்தம வித்யா நாம
சங்கீர்த்தன ரூப இதர உபாயங்களை உபதேசித்தவாறே –
அவற்றைக் கேட்டு சோக விசிஷ்டனானவனைக் குறித்து அவனுடைய சோகாபநோத நார்த்தமாக உபதேசிக்கப்பட்ட அர்த்தமாய் –
அத ஏவ சுகமாய் -அவிளம்ப்ய பல ப்ரதமாய் –ஸ்வரூப அநு ரூபமாய் -அத்யந்த விலஷணமான –சரணாகதி தர்மத்திலே –
அத்யபிநிவிஷ்டரான –ஸ்ரீ ஆழ்வான் ஸ்ரீ ஆண்டான் ஸ்ரீ பிள்ளான் ஸ்ரீ எம்பார் ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் முதலான முதலிகளும் –
லோகத்தாரை உத்தரிப்பிக்கைக்காக அவதரித்த வருடைய வைபவத்தை அறிந்து –

ந சேத் ராமாநுஜேத்யேஷா சதுரா சதுரஷரி காமவஸ்த்தாம் ப்ரபத்யந்தே ஜந்தவோ ஹந்த மாதரசா -என்றும்
புண்யம் போக விகாசாய பாபத்வாந்த ஷயாயச ஸ்ரீ மான் ஆவீர் பூத் பூமவ் ராமானுஜ திவாகர -என்றும் –
த்ர்ணீ க்ரத விரிஞ்சாதி நிரந்குச விபூதயா-ராமானுஜ பதாம் போஜ சமாச்ரயண சாலிந -என்றும்
சத்யம் சத்யம் புனஸ் சத்யம் யதிராஜோ ஜகத் குரு -ச ஏவ சர்வ லோகா நாம் உத்தர்த்தா ந அத்ர சம்சய -என்றும்
குதர்ஷ்டி குஹ நாமுகே நிபதித பரப்ரஹ்மண கரக்ரஹ விசஷணே ஜயதி லஷ்மணோ யம் முனி -என்றும் –
ச்ருத்யக்ர வேத்ய நிஜ திவ்ய குண ஸ்வரூப ப்ரத்யஷ தாமுபக தஸ்த்வி ஹ ரங்கராஜ வச்யஸ் சதாபவதி தே
யதிராஜ தஸ்மாத் சக்தஸ்ஸ்வ கீய ஜன பாப விமோச நேத்வம் -என்றும்
வாழி எதிராசன் வாழி எதிராசன் -என்றும் சொல்லிப் புகழும்படி எழுந்து அருளி இருக்கிற –

நல் தவர் போற்றும் இராமானுசனை –
த்வயார்த்த நிஷ்டர் ஆதலின் அத்தகையோர் அவரைப் போற்றுகின்றனர் .
தவம்-சரணாகதி –
தவங்களுக்குள் தனக்கு மேற்பட்டது ஓன்று இல்லாத தவம் ந்யாசம் எனப்படும் சரணா கதி – என்று வேதம் ஓதுகிறது .
ஏனைய தவங்களில் நின்றும் மேம்பாடு தோற்ற –நல் தவம் –என்று விசேஷித்தார் –

நன்மையாவது –
எளிதில் கை யாளலாம்படி இருத்தலும் –
காலம் தாழ்த்தாது பயன் அளித்தாலும் –
ஜீவான்ம ஸ்வரூபத்தின் பார தந்த்ரியத்திற்கு இயைந்து இருத்தலும் .

ஏனைய தவங்கள்-சாதனாந்தரங்கள் -அரும் பாடு பாட்டு கைக் கொள்ள தக்கனவாய் உள்ளன .
காலம் தாழ்த்து -அதாவது -பிராரப்த கர்மம் தீர்ந்த பின்னர் பயன் அளிப்பன –
அஹங்காரம் கலந்தவை யாதலின் ஆன்மாவின் பாரதந்த்ரியம் நிலைக்கு இசையாதன -என்றுணர்க –
அத்தகைய நல் தவம் உடையவர்கள் -சரணா கதி நிஷ்டர்கள் –
எம்பெருமானார்
தான் சரணா கதியைக் கைக் கொண்டும் –
உபதேசத்தாலும் -நூல்களாலும் உலகினரை சரணா கதி நெறியில் ஒழுகச் செய்தும் –
தாம் செய்த சரணா கதியில் செருகி உலகினர் உய்யுமாறு வரம் பெற்றும் –
சரணா கதியை எங்கும் -என்றும் -நிலை நிறுத்தின பெருதவிக்குத் தோற்று
நல் தவத்தவர்கள் எம்பெருமானாரைப் போற்றுகின்றனர் -என்க –

இராமானுசனை –
எம்பெருமானாரை –

இந் நானிலத்தே –
இருள் தருமமா ஞாலத்திலே –

பெற்றனன் –
ஆஸ்ரயித்தேன் –
நிழலும் நீரும் இல்லாத மருகாந்தரத்திலே தண்ணீர் பந்தல் பெற்றவன் ஹ்ர்ஷ்டனாப் போலே –
இந்த லோக ஸ்வ பாவத்தை அழிய மாறி என்னை உஜ்ஜீவிப்பிக்கும் விஷயத்தை பெற்றேன் என்று ஹ்ர்ஷ்டர் ஆகிறார் காணும் –

பெற்றபின் மற்று அறியேன் ஒரு பேதமையே –
எம்பெருமானாரை ஆஸ்ரயித்த பின்பு
முன்பு அநாதி காலமே தொடங்கி ஆவிர்பூதமாய் இருக்கிற என்னுடைய -தேகாத்ம – பிரமமும்
ஸ்வ ஸ்வா தந்த்ர்யா பிரமமும்-அந்ய சேஷத்வ பிரமமும் -அநுபாய உபாயத்வ பிரமமும் -எங்கே சென்றது கண்டிலேன் –

மற்று அறியேன் ஒரு பேதமையே –
அஞ்ஞானமானது மனசுக்கு தோற்றுகிறது இல்லை –
பிரத்யஷமாக காணப்படுகிறது இல்லை -பிராப்த அப்ராப்த விவேகம் பண்ணாதே -கண்ட ஒன்றிலே மேல் விழுந்து
மண்டிகைக்கு உறுப்பான அஞ்ஞானம் வாசனையோடு போய்த்து என்றபடி –
த்யஜபட தூரதரென தான பாபான் –என்றாப் போலே அஞ்ஞானம் அடங்கலும் தூரதோ நிரச்தம் என்றது ஆய்த்து –

இன் நானிலத்தே –பேதமையே –
பெறற்கு அரிய எம்பெருமானார் ஆகிய பேறும் பேற்றினை இவ்வுலகிலே பெற்று விட்டேன் .
பெற்றனன் என்று கூறி -மீண்டும் பெற்ற பின் என்று அநுவாதம் செய்கையாலே இதனது பெறாப் பேறாம் தன்மை புலப்படுத்தப் படுகிறது .
இப் பேற்றினை பெற்ற பிறகு -தக்கது இது -தகாதது இது -என்று பகுத்து பாராது கண்ட ஏதேனும் ஒரு பொருளிலே
ஈடுபடுகைக்கு உறுப்பான பேதைமை -அறியாமையை நான் –கண்டிலேன் .என்கிறார் .
பேதமையை பற்றி எதுவுமே அறிந்து கொள்ள முடியாத படி அடியோடு அது ஒழிந்தமையின்
இனி அது தலை காட்டவே முடியாது என்பது கருத்து –
தன் இயல்பினை விஷய வைலஷண்யம் மாற்றியது போலே இருள் தரும் மா ஞாலத்தின்
இயல்பையும் மாற்றி விட்டது -என்பது உட் கருத்து–

அறியேன்-தெரியவே தெரியாது என்கிறார்–
தெரிந்து விட வில்லை வாசனையே தெரியவே தெரியாது-ஸ்வாமி திருவடிகளைப் பெற்ற பின்–

————

அரங்கன் மலரடிக் காளுற்றவரே தனக்குற்றவராய்க் கொள்ளும் உத்தமனை

உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -8-10-3-

உறும் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் நல் பாதம் உறும் கண்டாய் –இரண்டாம் -77-

உற்று வணங்கித் தொழுமின் -94-

உளன் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் என்றும் உளன் கண்டாய் –மூன்றாம் -40-

மாறாய தானவனை வள்ளுகிரால் மார்பிரண்டு
கூறாகக் கீறிய கோளரியை -வேறாக
ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்று அவரைச்
சாத்தி இருப்பார் தவம்–-நான்முகன் திருவந்தாதி -18-

உறுமோ பாவியேனுக்கு இவ் வுலக மூன்றுமுடன் நிறைய
சிறு மா மேனி நிமிர்ந்த எம் செந்தாமரைக் கண் திருக் குறளன்
நறு மா விரை நாள் மலரடிக் கீழ் புகுதல் அன்றி அவன் அடியார்
சிறு மா மனிசராய் என்னை யாண்டார் இங்கே திரியவே–-ஸ்ரீ திருவாய் மொழி-8-10-3-

உற்றேன் உகந்து பணி செய்தேன்

———————–———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –56-கோக்குல மன்னரை மூ வெழு கால் – இத்யாதி —

April 26, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

கொண்டலை மேவித் தொழும் குடியாம் எங்கள் கோக்குடி -என்று இவர் சொன்னவாறே –
முன்பும் ஒரோ விஷயங்களில் நின்றால் இப்படி யன்றோ நீர் சொல்லுவது .
இதுவும் அப்படி அன்றோ -என்ன
எம்பெருமானாரை ஆஸ்ரயித்த பின்பு என் வாக்கு மனச்சுக்கள் இனி வேறு ஒரு விஷயம் அறியாது -என்கிறார் .

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை–

கொண்டலை மேவித் தொழும் குடியாம் எங்கள் கோக்குடியே -என்று சொன்னவாறே –
நீர் இப்போது-எம்பெருமானாருடைய கல்யாண குணங்களை அனுபவித்து வித்தராய் சொன்னீர் –
நீர் விஷயாந்தரங்களை-விரும்பின போது முற்காலத்தில் அப்படியே அன்று சொல்லுவது -ஆகையாலே உமக்கு இது ஸ்வபாவமாய் விட்ட பின்பு
இவரையே பற்றி இருக்கிறேன் என்ற இது நிலை நிற்க கடவதோ என்று சிலர் ஆட்சேபிக்க -அவர்களை குறித்து-
நான் துர்வாசனையாலே விஷயாந்தரங்களை விரும்புவதாக யத்நித்தேன் ஆகிலும்
என்னுடைய வாக்கும்-மனசும் அவற்றை விரும்ப இசையாதே இருந்தது -என்கிறார் –

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-

கொண்டலை மேவித் தொழும் குடி எங்கள் கோக்குடி எனபது நீர் பற்றின ஒவ் ஒரு விஷயத்திலும்
தனித் தனியே உணர்ச்சி வசப்பட்டு பேசினது போனது அன்றோ –
அது போலே இதுவும் உணர்ச்சி வசப்பட்ட பேச்சாய் நிலை நிற்காதே -என்ன –
எம்பெருமானாரை பற்றின பின்பு -மற்று ஒரு விஷயத்தை –
என் மனம் பற்றி நினையாது –
என் வாக்கு உரையாது -என்கிறார் .

கோக்குல மன்னரை மூ வெழு கால் ஒரு கூர் மழுவால்
போக்கிய தேவனைப் போற்றும் புனிதன் புவனம் எங்கும்
ஆக்கிய கீர்த்தி இராமானுசனை யடைந்த பின் என்
வாக்குரையாது என் மனம் நினையாது இனி மற்று ஒன்றையே -56-

பத உரை
கோக்குல மன்னரை -ராஜ -ஷத்ரிய குலத்தில் பிறந்த அரசர்களை
மூ ஏழு கால் -இருபத்தொரு தடவை
ஒரு -ஒப்பற்ற
கூர் மழு வால் -கூர்மையான மழு என்னும் ஆயுதத்தினால்
போக்கிய -உலகை விட்டு போகும்படி செய்த
தேவனை-புகழ் பெற்ற சர்வேஸ்வர அவதாரமான பரசுராமனை
போற்றும் -ஏத்தும்
புனிதன் -தூயவரான
புவனம் எங்கும் -உலகம் எங்கும்
ஆக்கிய -பரவும்படி பண்ணின
கீர்த்தி -புகழை உடைய
இராமானுசனை -எம்பெருமானாரை
அடைந்த பின் -ஆஸ்ரயித்த பிறகு
இனி -மேலுள்ள காலம் எல்லாம்
மற்று ஒன்றை -வேறு ஒரு விஷயத்தை
என் வாக்கு -என்னுடைய வாக்கானது
உரையாது -பேசாது
என் மனம் -என்னுடைய நெஞ்சு
நினையாது -நினைவில் கொள்ளாது

வியாக்யானம் –
ஐச்வர்யத்தால் – ராஜ குலத்தை ப்ராபிக்கை யன்றிக்கே -ஷத்ரிய குலோத்பவரான ராஜாக்களை
இருபத்தொரு கால் அரசு களை கட்ட -திருவாய் மொழி -9 2-10 – – என்கிறபடியே
இருப்பதொரு கால்-அத்விதீயமாய்க் -கூரியதாய்-இருக்கிற மலுவாலே நிரசித்த –
விரோதி நிரசன பிரயுக்தமான ஔஜ்வல்யத்தை உடைய சர்வேஸ்வரனை -அந்த குணஜிதராய்க் கொண்டு ஏத்தா நிற்ப்பராய்-
ஸ்வ சம்பந்த்தாலே அசுத்தரையும் சுத்தராக்க வல்ல-பரம பாவன பூதராய்-
இப்பார் முழுதும் போர்த்தான் புகழ் கொண்டு – – 52- என்கிறபடியே
லோகம் எங்கும் வ்யாபிக்கும்படி பண்ணின கீர்த்தியை உடைய எம்பெருமானாரை ஆஸ்ரயித்த பின்பு
மேலுள்ள காலம் வேறு ஒரு விஷயத்தை என்னுடைய வாக்கானது கீர்த்தியாது –
என்னுடைய மனஸ்சானது-ஸ்ம்ரியாது –

போற்றுதல் -புகழ்தல் / புனிதன் -சுத்தன்
கரணங்களுக்கு இவ்விஷயத்தில் அனந்யார்ஹமாம் படி விளைந்த ப்ராவன்யத்தைக் கண்ட ப்ரீதி அதிசயத்தாலே –
என் வாக்கு -என் மனம் -என்று தனித் தனியே ஸ்லாகித்து அருளிச் செய்கிறார் .

அடைந்ததற் பின் வாக்குரையாது என் மனம் நினையாது -என்றும் பாடம் சொல்லுவார்கள் .
பரசுராம அவதாரம் அஹங்கார யுக்த ஜீவனை அதிஷ்ட்டித்து நிற்கையாலே முமுஷுக்களுக்கு-அனுபாஸ்யம் அன்றோ –
போக்கிய தேவனைப் போற்றும் புனிதன் -என்பான் என் என்னில் –
அதுக்கு குறை இல்லை -விரோதி நிரசனம் பண்ணின உபகாரத்துக்குத் தோற்று – ஸ்துதிக்கிற மாத்ரம் ஒழிய –
தத் உபாசனம் அல்லாமையாலே .
மன்னடங்க மழு வலங்கை கொண்ட விராம நம்பி -பெரியாழ்வார் திரு மொழி – 4-5 -9 -என்றும்
வென்றி மா மழு ஏந்தி முன் மண் மிசை மன்னரை மூ வெழு கால் கொன்ற தேவா –பெரிய திரு மொழி –4 3-1 – என்றும்
ஆழ்வார்கள் அருளிச் செய்ததும் -விரோதி நிரசன ஸ்வபாவத்துக்கு தோற்றுத் துதித்தது இத்தனை இறே ..

கோக்குல மன்னர் -அரச குலத்தில் பிறந்த மன்னர் -ஷத்ரியர்களாக பிறந்த -மற்ற வம்ச அரசர்களை அழிக்க வில்லையே ஸ்ரீ பரசுராமர்
உறுதியான -தந்தை சொல் கேட்டு தாயையும் அழித்து -21 தலை முறை ஷத்ரிய அரசர்களை அழித்து –
இதனால் வந்த உறுதி அமுதனார்க்கும் உறுதி

கோக்குல மன்னரை –
த்ரேதா யுகத்திலே -கார்த்த வீர்யார்ஜுனன் -என்பான் ஒரு ராஜா மகா பல பராக்கிரம சாலியாய்
ஒருவரும் எதிரி இன்றிக்கே திரிகிற காலத்திலே -ஒரு நாள் ஜமதக்னி-மகரிஷியினுடைய ஆஸ்ரமத்திலே சென்று –
பிரசந்காத் ராஜ்ய கர்வத்தாலே -அவனை ஹிம்சித்துப் போக –
அந்த ரிஷி புத்ரனான ஸ்ரீ பரசுராம ஆழ்வான் -அச் செய்தியை கேட்டு மிகவும் குபிதனாய் -தத் ஷணத்திலே-
தானே அந்த ராஜாவை கொன்றும் பித்ர்வத ஜன்யமான கோபம் சமியாமையாலே –
ராஜ குலத்தை எல்லாம் நிஷத்ரமாக பண்ணக் கடவோம் -என்று சங்கல்பித்து பூமியில் உள்ள ராஜாக்களை எல்லாம் சம்ஹரித்து-
சிறிது நாள் தபசு பண்ணி கொண்டு போந்து பின்னையும் ஷத்ரிய குலம் உத்பன்னமாய் கொழுந்து விட்டு படர்ந்தவாறே
அத்தைக் கண்டு திரியட்டும் முன்பு போலே நிஷத்ரமாக பண்ணி இப்படி
இருபத்தொரு தலை முறை -ஷத்ரிய ராஜாக்களை எல்லாம் சம்ஹரித்து அவர்களுடைய ரத்தத்தால்-தில தர்ப்பணம் பண்ணினார்
என்று பிரசித்தம் இறே -அப்படி ரோஷா விசிஷ்டனாய் நின்ற போது

வேறொரு குலத்தில் பிறந்தார் ராஜ்ஜியம் பண்ணிக் கொண்டு இருந்தாலும் அவர்கள் வழி போகாதே
ஷத்ரிய குல மாத்ரத்தையே சம்ஹரித்த படியை அருளிச் செய்கிறார் –
கோக்குல மன்னரை –
வேறொரு குலத்தில் பிறந்து ஐச்வர்யத்தாலே ராஜ குலத்தை பிராப்பிக்கை அன்றிக்கே –
சாஷாத் ஷத்ரிய குலோத்பவரான ராஜாக்களை –

கோக்குல மன்னரை –போக்கிய தேவனை
உலகினில் ஷத்ரிய பூண்டே இல்லாமல் தொலைத்து விட வேண்டும் என்பதே ஸ்ரீ பரசு ராமனது
நோக்கம் ஆதலின் மன்னரை என்பதோடு அமையாமல் -கோக்குல மன்னரை –என்றார் .

மூ வெழு கால் –
மூ வேழுதரம் -இருபதொருகால் அரசு களை கட்ட -என்கிறபடியே இருப்பதொரு முறை என்றபடி –

மூ ஏழு கால் –
இருப்பதொரு தடவை -ஒரு தலை முறைக்கு ஒரு கால் என்கிற கணக்கில்
இருபத்தொரு கால் உலகினை வலம் வந்து ஷத்ரிய இனத்தவர் அனைவரையும் ஸ்ரீ பரசுராமன் –கொன்று தள்ளினார் -என்பர்
இருபத்தொரு கால் அரசு களை கட்ட வென்றி நீண் மழுவா -ஸ்ரீ திரு வாய் மொழி -6 2-10 – – –என்னும் ஸ்ரீ நம் ஆழ்வார் ஸ்ரீ ஸூக்தி காண்க –
அஷத்ராமிஹா சந்த தஷய இமாம் த்விச்சப்தக்ருத்வ ஷிதம்-என்று
ஷத்ரிய பூண்டு இல்லாமல் -மூ வெழு கால் பூமியைச் செதுக்கினான் -என்றார் ஸ்ரீ வேதாந்த தேசிகனும் .

ஒரு கூர் மழுவால் –
ஆவேச அவதாரமான ஸ்ரீ பரசுராம ஆழ்வானுக்கு நிரூபகமாய் இருக்கையாலே அத்விதீயமாய் இருப்பதொரு -பர்யாயம்-
ஷத்ரியரை சம்ஹரிக்கத் தக்கதான கூர்மை உடைய பரசுவாலே –

வென்றி நீண் மழு -என்று ஸ்ரீ நம் ஆழ்வாரும் –
வென்றி மா மழு -என்று ஸ்ரீ திருமங்கை ஆழ்வாரும் பாராட்டும்படி ஒப்பற்ற -பெருமை தோற்ற –ஓர் கூர் மழு -என்றார் .
மழு ஒன்றினாலேயே போக்கினமையின் அங்கனம் கூறியது ஆகவுமாம்-

போக்கிய தேவனை –
விரோதி நிரசன பிரயுக்தமான ஔஜ்வல்யத்தை உடைய சர்வேஸ்வரனை என்றபடி
இப்படிப் பட்ட தொழில்களை எல்லாம் அந்த அவதாரத்தில் பண்ணின கிரீடை யாகையாலே –
ஏவம் பிரகாரமான க்ரீடா யுக்தனை -என்றபடி –

போக்கிய தேவனை –
மீளாத படி உலகினின்றும் போக்கினான்
மழுவால் தேவன் போக்கினான் -சங்கல்பத்தால் அன்று
தேவன் -விளையாட்டு
ஒளி என்னும் பொருள் கொண்ட –திவ் -என்னும் வினையடி யிலிருந்து பிறந்தது இச் சொல் .
தேவன் என்பதற்கு -பகை களைந்த களிப்பினால் வந்த ஒளி படைத்தவன் -என்று பொருள் கொள்க .
இனி அரசு களை கட்டத்தை விளையாட்டாக கொண்டவன் என்று பொருள் கொள்ளலுமாம் .
ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கு உலகினை அடர்க்கும் அசூரத்தன்மை வாய்ந்த அரசர்களை அழிப்பது புகரூட்டுவதாகவும்
விளையாட்டாகவும் இருக்கிறது என்க-

போற்றும் –
ஆஸ்ரயித்து இருக்கிற மங்களா சாசனம் பண்ணிக் கொண்டு இருக்கிற –
போற்றுதல் -புகழ்தல் -விநாசாய ச துஷ்க்ர்தாம் –என்கிறபடி ஆஸ்ரித விரோதி நிரசன சீலமாகிற குணத்திலே
தோற்று ஏத்தா நின்றார்கள் காணும் –
மகா பாராத பாஞ்சராத்ராதிகளாலும் -நம்முடைய பூர்வாச்சார்யர்களாலும் –
பிரம ருத்ர அர்ஜுன வியாச ககுஸ்த ஜாமதக்னியாதிகள் அனுபாச்யர் என்று பஹூ முகமாக சொல்லி இருக்க
எம்பெருமானார் -பரசுராம ஆழ்வானை ஏத்துகிற இது -சேருமோ என்னில் –
அந்த அவதாரம் எம்பெருமானுடைய அஹங்கார யுக்த ஜீவ ஆவேசம் ஆகையாலே -அவனாலே செய்யும் அம்சத்துக்கு
எம்பெருமானார் ஈடுபட்டு ஸ்துதித்தார் என்று சொன்னேன் இத்தனை ஒழிய
தத் உபாசனம் பண்ணுகிறார் என்று சொல்லாமையாலே விரோதம் இல்லை –
மன்னடங்க மழு வலங்கை கொண்ட இராம நம்பி -என்றும் –
வென்றி மா மழு வேந்தி முன் மண் மிசை மன்னரை மூ வெழு கால் கொன்ற தேவா -என்றும் –
மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர் அருளிச் செய்ததும் விரோதி நிரசன ஸ்வ பாவத்துக்கு தோற்று –

புனிதன் –
பகவத் மங்களா சாசனத்தாலே பரிசுத்த ஸ்வ பாவராய் -தம்மை ஆஸ்ரயித்தவர்களையும் –
ஆத்மசாம்யா வஹத்வாத் -என்று சொல்லப் பட்ட -ஸ்வ சாம்யத்தை உடையராம்படி பண்ண வல்ல பாவனர் –
புனிதன் -சுத்தன் –

போற்றும் புனிதன் –
இங்குப் போற்றுதல் வழி படுதல் அன்று
உலகினுக்கு உதவி புரிந்தமைக்கு தோற்றி நன்றி உடன் புகழுதல்-என்று உணர்க –
ஸ்ரீ பரசுராமனை தெய்வமாக கொண்டு வழி படலாகாது என்று சாஸ்திரங்கள் கூறுவதற்கு ஏற்ப
அங்கனம் உணர்தல் வேண்டும் –

அனர்ச்ச்யா நபி வஷ்யாமி ப்ராதுர் பாவான் யதாக்ரமம் -என்று தொடங்கி
பூஜிக்கத் தகாத அவதாரங்களையும் முறைப்படி சொல்வேன் -என்று தொடங்கி
அர்ஜுனோ தன்வினாம் ஸ்ரேஷ்ட்டோ ஜாமதக்ன்யோ மகான் ருஷி –
வில்லாளிகளுள் சிறந்த ஸ்ரீ கார்த்த வீரியர்ஜுணனும் –
பெரிய ருஷியான ஸ்ரீ பரசு ராமனும் -என்று பரசு ராமனையும் எடுத்துள்ளமை காண்க –

பூஜிக்காமைக்கு ஹேது –
ஆவிஷ்ட மாத்ராச்தே சர்வே கார்யார்த்தம் அமிதத்யுதே -பகவான் ஒரு காரியத்துக்காக ஆவேசித்து உள்ளமை மட்டுமே
இவர்களிடம் உள்ளது -என்று பகவான் ஒரு காரியத்துக்காக ஆவேசித்து அவர்கள் இடம் இருப்பினும்
அஹங்காரம் வாய்ந்த ஜீவாத்மாக்களாக அவர்கள் இருப்பதே என்று ஸ்ரீ விஷ்வக் சேன சம்ஹிதையில் கூறப்பட்டு உள்ளது
இதனால் ஸ்ரீ பரசு ராம அவதாரம் பத்து அவதாரங்களில் ஓர் அவதாரமாக கருதப் படினும் –
ஸ்ரீ இராமன் போலவும் ஸ்ரீ கண்ணன் போலவும் சாஷாத் அவதாரம் அன்று –
அஹங்காரம் வாய்ந்த ஜீவாத்மாவின் இடம் பகவான் ஆவேசித்த அவதாரமே என்பது -தெளிவு

ஆவேச அவதாரம் இரண்டு வகைப்படும் .
ஸ்வரூப ஆவேசம் -பகவானுடைய ஆத்ம ஸ்வரூபமே ஒரு கார்யத்துக்காக ஒரு ஜீவான்மாவிடம் விசேடித்து புக்கு நின்றால் –
சக்தி ஆவேசம் -ஒரு காரியத்தை நிறைவேற்றுவதற்காக ஸ்வரூபத்தால் அன்றி சக்தியைக் கொண்டே உட்புக்கு நடாத்துதல் –
என்பன இவ்விரு வகைகள்
சக்தி ஆவேச அவதாரமாக -ஸ்ரீ கார்த்த வீர்யார்ஜுனன் கருதப்படுகிறான் .

ஆக சாஷாத் அவதாரம்-என்றும் ,ஸ்வரூப ஆவேச அவதாரம் என்றும் -சக்தி ஆவேச அவதாரம் என்றும்
அவதாரங்கள் மூன்று திறத்தனவாம் .
ஆயினும் சாஷாத் அவதாரம் ஸ்வரூப ஆவேச அவதாரத்தை விடப் பலம் வாய்ந்தது .
ஸ்வரூப ஆவேச அவதாரம் சக்தி ஆவேச அவதாரத்தை விட பலம் வாய்ந்தது .
ஆதல் பற்றியே ஸ்ரீ இராமன் இடம் ஸ்ரீ பரசுராமனும்
ஸ்ரீ பரசு ராமனிடம் ஸ்ரீ கார்த்த வீர்யார்ஜுணனும் தோல்வி கண்டனர் .
அவதாரங்கள் அனைத்தும் ஒரே தரத்ததனவாயின் வெற்றி தோல்விக்கு இடம் இல்லை அன்றோ .
இவ்விஷயங்கள் -விதிசிவ வியாச ஜாமதக்ன்யார்ஜுன -என்று தொடங்கும் ஸ்ரீ தத்வ த்ரைய சூர்ணிகை வ்யாக்யானத்திலும் –
என் வில் வலி கண்டு -ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி – 3-9 2- – வ்யாக்யானத்திலும் ஸ்ரீ மணவாள மா முநிகளால் விளக்கப் பாட்டு உள்ளன ..

ஆக .முக்தியை கோருமவர்களுக்கு வழிபாட்டிற்கு உரிய தேவன் ஆகாமையின்
ஸ்ரீ எம்பெருமானார் ஸ்ரீ பரசுராமனை துதித்தனரே யன்றி வழி பட்டிலர் என்று தெளிக-
இங்கனமே ஸ்ரீ பெரியாழ்வார் -மன்னடங்க மழு வலம் கைக் கொண்ட இராமன் –5 4-6 – – – என்றும்
ஸ்ரீ திரு மங்கை ஆழ்வார் – வென்றி மா மழு வேந்தி முன் மண் மிசை மன்னரை மூ வெழு கால் கொன்ற தேவா -5 6-1 – –
என்றும் அருளிச் செய்தவை விரோதிகளைக் களைந்தமைக்கு தோற்றுத் துதித்தவைகளே என்று கொள்க –
புனிதன் –
தூய்மை அற்றவர்களையும் -தன் சம்பந்தத்தால் தூயர் ஆக்க வல்ல தூய்மை படைத்தவர் -என்க .

புவனம் ஒக்கும் ஆக்கிய கீர்த்தி –
இப்பார் முழுதும் போர்த்தான் புகழ் கொண்டு -என்கிறபடியே இந்த லோகம் எல்லாம் வ்யாபிக்கும்படி
பண்ணின கீர்த்தியை உடையரான –

இராமானுசனை –
எம்பெருமானாரை –

அடைந்த பின் –
ஆஸ்ரயித்த பின்பு –
இங்கே
அடைந்தததற் பின் -என்றும் பாடம் சொல்லுவார்கள் -ஆகிலும் அர்த்த பேதம் இல்லை –

இனி மற்று ஒன்றை –
மேல் உள்ள காலம் எல்லாம் வேறு ஒரு விஷயத்தை –

என் வாக்கு உரையாது-என் மனம் நினையாது –-
முற் காலத்தில் எல்லாம் அசத்ய பாஷணத்தையும் -அசத் கீர்த்தனத்தையும் – பண்ணிக் கொண்டு போந்த
என் வாக்கானது -எம்பெருமானாரை ஆஸ்ரயித்த பின்பு -அவருடைய திவ்ய குணங்களையே கீர்த்தியாய் நிற்கும் இத்தனை ஒழிய –
வேறு ஒன்றை கீர்த்திக்க மாட்டாது –

முற் காலம் எல்லாம் பாப சிந்தனையே பண்ணிக் கொண்டு போந்த என் மனசானது -அவரை ஆஸ்ரயித்த பின்பு –
அவருடைய திவ்ய குணங்களிலே ஈடு பட்டு சர்வவிதா அவை தன்னை மனனம் பண்ணிக் கொண்டு இருக்கும் இத்தனை ஒழிய
வேறு ஒன்றை ஸ்மரிக்க மாட்டாது என்று அருளிச் செய்தார் ஆய்த்து –

த்ர்ணீ க்ரத விரிஞ்சாதி நிரந்குச விபூதய -ராமானுஜ பதாம் போஜ சமாச்ரயண ஸாலிந -என்னக் கடவது இறே –

அடைந்த பின் என் வாக்கு –மற்று ஒன்றினையே –
அடைந்த பின் மற்று ஒன்றை என் வாக்கு உரையாது .மனம் நினையாது என்னவே –
அடைவதற்கு முன்பு எந்த விஷயத்தை பற்றி நிற்பினும் மற்று ஒன்றை வாக்கு உரைக்கும் .
மனம் நினைக்கும் என்பதை ஒப்புக் கொண்டார் ஆகிறார் ஸ்ரீ அமுதனார் .
இராமானுசனை அடைந்த பின் அங்கனம் இல்லை -என்கிறார் .

என்னது மாறும் இயல்பே
இராமானுசனை யடைந்த பின் என்னிலை மாறியது .
என் வாக்கையும் மனத்தையும் தன்பால் துவக்க வைத்து -மாறாத நிலையனாக என்னை மாற்றி விட்டார் -ஸ்ரீ எம்பெருமானார் .
விஷய வைலஷண்யம் அப்படிப் பட்டதாய் இருக்கிறது என்று -கருத்து –
வாக்கும் மனமும் பிறர் திறத்தன வாகாது –
வகுத்த ஸ்ரீ எம்பெருமானார் திறத்தே விளைந்த ஈடுபாட்டுடன் திகழ்வது கண்டு -பேருவகை கொண்டு உறவு பாராட்டி –
என் வாக்கு -என் மனம் -என்று அவற்றை தனித் தனியே கொண்டாடுகிறார் –

அடைந்ததற் பின் வாக்குரையா தென் மனம் நினையாது -என்றும் பாடம் உண்டாம் .
பின் என அமைந்து இருக்க -இனி -என்று வேண்டாது கூறினார் –
மேலுள்ள காலம் அனைத்தும் முன் போலே வீணாகாது பயன் பெறச் செய்யும் நோக்கம் தோற்றற்கு-

புறம்புள்ள விஷயத்தில் தமக்கு ஏற்பட்ட வெறுப்பு தோற்ற -மற்று ஒன்றை -என்கிறார் .
ஆவித்யாரண்யா நீ குஹா விஹரன்மாம்கமன பீரமாத்யன் மாதங்க ப்ரதம நிகளம் பாத யுகளம் –
ஸ்ரீ யதிராஜர் இணை யடி அறியாமை யடவிக்குள்ளே விளையாடுகிற என் மனம் என்னும்
மதக் களிற்றுக்கு முதல் விலங்கு ஆகும் -என்று ஸ்ரீ வேதாந்த தேசிகன் தன மனத்தை மற்று ஒரு
இடத்துக்கு போக ஒட்டாது தடுத்து நிறுத்துவதாக கூறியது நினைவு கூரத் தக்கது –

இனி ஸ்ரீ தென்னரங்கன் தொண்டர்கள் அரங்கனை விட்டு ஸ்ரீ எம்பெருமானாரைக் குலாவுவது போலே
என் வாக்கு ஸ்ரீ எம்பெருமானாரை விட்டு மற்று ஒன்றை -ஸ்ரீ தென்னரங்கனை -உரையாது
என் மனம் மற்று ஒன்றை–ஸ்ரீ தென்னரங்கனை- நினையாது -என்னலுமாம்-

இனி வேறு ஒரு விஷயம் அறியாது-முன்பு எத்தனித்தேன் ஆகிலும் -துர் வாசனையால் விஷயாந்த்ரங்களில் அலைந்து
போனாலும் என் வாக்கும் மனசும் ஒத்துழைக்காது-
இவற்றை ஸ்வாமி இடம் சமர்பித்து விட்டேன்–
மனமும் கண்ணும் ஓடி–கைவளையும் கனவளையும் காணேன்-

புனிதன்-
மங்களா சாசனம் பண்ணியே பெற்ற சுத்தி-.
ஸ்வ சம்பந்தத்தால் அசுத்தரையும் சுத்தராக்க வல்ல பரம பாவன பூதராய்-
இப் பார் முழுதும் போர்த்தான் புகழ் கொண்டு-52 -என்கிற படி-லோகம் எங்கும் வியாபிக்கும் படி பண்ணின கீர்த்தி உடைய
ஸ்ரீ எம்பெருமானாரை ஆச்ரயித்த பின்பு-மேல் உள்ள காலம் வேறு ஒரு விஷயத்தை
என் உடைய வாக்கானது கீர்த்தியாது -என் உடைய மனஸ் ஸ்மரியாது–என் மனம் என் வாக்கு என்கிறார்-
இங்கு -தனி தனியே ப்ரீய அதிசயத்தாலே-அனந்யார்ஹமாம் படி –ஸ்லாகித்து அருளி செய்கிறார்-

புனிதன்
எட்டு குணங்களில் சாம்யம் அவன் அருளும் மோஷம்–இவர் அடிமை தனம் ஒன்றே கொடுத்து பாவன-தமர் ஆக்குவர்

———-

ஸ்ரீ பரசுராம திரு அவதாரம் – பற்றிய அருளிச் செயல்கள் –

என் வில் வலி கொண்டு போ என்று எதிர் வந்தான்
தன் வில்லினோடும் தவத்தை எதிர் வாங்கி
முன் வில் வலித்து முது பெண் உயிர் உண்டான்
தன் வில்லின் வன்மையைப் பாடிப் பற
தாசரதி தன்மையைப் பாடிப் பற –ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி – 3-9 2- –

உழுவதோர் படையும் உலக்கையும் வில்லும் ஒண் சுடர் ஆழியும் சங்கும்
மழுவோடு வாளும் படைக்கலமுடைய மால் புருடோத்தமன் வாழ்வு
எழுமையும் கூடி ஈண்டிய பாவம் இறைப் பொழுது அளவினில் எல்லாம்
கழுவிடும் பெருமைக் கங்கையின் கரை மேல் கண்டம் என்னும் கடி நகரே – 4-7 5-

உன்னுடைய விக்கிரமம் ஓன்று ஒழியாமல் எல்லாம்
என்னுடைய நெஞ்சகம் பால் சுவர் வழி எழுதிக் கொண்டேன்
மன்னடங்க மழு வலம் கை கொண்ட விராம நம்பீ
என்னுடை வந்து எம்பெருமான் இனி எங்கு போகின்றதே -5 4-6 –

வற்புடைய வரை நெடும் தோள் மன்னர் மாள
வடிவாய மழு வேந்தி உலகம் ஆண்டு
வெற்புடைய நெடும் கடலுள் தனி வேல் உய்த்த
வேள் முதலா வென்றானூர் விந்தை மேய
கற்புடைய மடக்கன்னி காவல் பூண்ட
கடி பொழில் சூழ் நெடு மறுகில் கமல வேலி
பொற்புடைய மலை யரையன் பணிய நின்ற
பூம் கோவலூர் தொழுதும் போது நெஞ்சே –ஸ்ரீ திரு நெடும் தாண்டகம் -7-

அன்று ஆயர் குலமளுக்கு அரையன் தன்னை
அலை கடலைக் கடைந்த அம்மான் தன்னைக்
குன்றாத வலி யரக்கர் கோனை மாளக்
கொடுஞ்சிலை வாய்ச் சரம் துரந்து குலங்களைந்து
வென்றானைக் குன்றெடுத்த தோளினானை
விரிதிரைநீர் விண்ணகரம் மருவி நாளும்
நின்றானைத் தண் குடந்தை கிடந்த மாலை
நெடியானை அடி நாயேன் நினைந்திட்டேனே –29-

கோ மங்க வங்கக் கடல் வையம் உய்யக் குல மன்னரங்கம் மழுவில் துணிய
தாம் அங்கு அமருள் படை தொட்ட வென்றித் தவ மா முனியைத் தமக்காக கிற்பீர்
பூ மங்கை தங்கிப் புல மங்கை மன்னிப் புகழ் மங்கை எங்கும் திகழ புகழ் சேர்
சேமம் கொள் பைம் பூம் பொழில் சூழ்ந்த தில்லைத் திருச் சித்ரகூடம் சென்று சேர்மின்களே–-ஸ்ரீ பெரிய திருமொழி -3-2-5-

வென்றி மா மழு வேந்தி முன் மண் மிசை மன்னவரை மூ வெழு கால்
கொன்ற தேவ நின் குரை கழல் தொழுவதோர் வகை எனக்கு அருள் புரியே
மன்றில் மாம் பொழில் நுழை தந்து மல்லிகை மௌவலின் போது அலர்த்தித்
தென்றல் மா மணம் கமழ் தரவரு திரு வெள்ளறை நின்றானே —-5-3-1-

வடிவாய் மழுவே படையாக வந்து தோன்றி மூ வெழு கால்
படியார் அரசு களை கட்ட பாழியானை அம்மானை
குடியா வண்டு கொண்டு உண்ணக் கோல நீலம் மட்டுகுக்கும்
கடியார் புறவில் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே —8-8-6-

இரு நில மன்னர் தம்மை யிரு நாலும் எட்டும் ஒரு நாலும் ஒன்றும் உடனே
செரு நுதலூடு போகியவராவி மங்க மழு வாளில் வென்ற திறலோன்
பெரு நில மங்கை மன்னர் மலர் மங்கை நாதர் புல மங்கை கேள்வர் புகழ் சேர்
பெரு நிலம் உண்டு உமிழ்ந்த பெரு வாயராகியவர் நம்மை யாள்வர் பெரிதே -11-4-6-

நின்றிலங்கு முடியினாய்! இருபத்தோர்கால் அரசு களை கட்ட
வென்றி நீள் மழுவா? வியன்ஞாலம் முன்படைத்தாய்!
இன்றிவ் வாயர் குலத்தை வீடுய்யத் தோன்றிய கரு மாணிக்கச்சுடர்!
நின்றன்னால் நலிவே படுவோம் என்றும் ஆய்ச்சியோமே.–6-2-10-

கோக்குல மன்னரை மூ வெழு கால் ஒரு கூர் மழுவால்
போக்கிய தேவனைப் போற்றும் புனிதன் புவனம் எங்கும்
ஆக்கிய கீர்த்தி இராமானுசனை யடைந்த பின் என்
வாக்குரையாது என் மனம் நினையாது இனி மற்று ஒன்றையே -ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி -56-

யடைந்த பின் என் வாக்குரையாது என் மனம் நினையாது இனி மற்று ஒன்றையே

என்னை நெகிழ்க்கிலும் என்னுடை நல் நெஞ்சம்
தன்னை அகல்விக்கத் தானும் இங்கு இல்லான் இனிப்
பின்னை நெடும் பணைத் தோள் மகிழ் பீடுடை
முன்னை அமரர் முழு முதலானே–1-7-8-

முடியானேஎ! மூவுலகும் தொழுது ஏத்தும் சீர்
அடியானேஎ! ஆழ் கடலைக் கடைந்தாய்! புள்ளூர்
கொடியானேஎ! கொண்டல் வண்ணா! அண்டத்து உம்பரில்
நெடியானேஎ! என்று கிடக்கும் என் நெஞ்சமே–3-8-1-

நெஞ்சமே நீள் நகராக இருந்த என்
தஞ்சனே! தண் இலங்கைக்கு இறையைச் செற்ற
நஞ்சனே! ஞாலம் கொள்வான் குறளாகிய
வஞ்சனே! என்னும் எப்போதும் என் வாசகமே–3-8-2-

சொன்னால் விரோதம் இது, ஆகிலும் சொல்லுவன் கேண்மினோ!
என் நாவில் இன் கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்
தென்னா தெனா என்று வண்டு முரல் திரு வேங்கடத்து
என் ஆனை என் அப்பன், எம் பெருமான் உளனாகவே–3-9-1-

தொழில் எனக்கு தொல்லை மால் தன் நாமம் ஏத்த
பொழுது எனக்கு மற்றதுவே போதும் -கழி சினத்த
வல்லாளன் வானவர் கோன் வாலி மதன் அழித்த
வில்லாளன் நெஞ்சத்து உளன் -நான்முகன் திருவந்தாதி-–85-

என்றும் மறந்தறியேன் என்நெஞ்சத்தே வைத்து
நின்றும் இருந்தும் நெடுமாலை -என்றும்
திரு இருந்த மார்பன் சிரீதரனுக்கு ஆளாய்
கருவிருந்த நாள் முதலாக் காப்பு-92-

———————–———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –55–கண்டவர் சிந்தை கவரும் கடி பொழில் தென்னரங்கன் இத்யாதி —

April 25, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

ஸ்ரீ எம்பெருமானார் ஸ்வபாவத்தைக் கண்டு வேதம் கர்வோத்தரமாய் ஆயிற்று என்றார் கீழ் .
இப்படி ஒருவர் அபேஷியாது இருக்கத் தாமே -சகல வேதங்களும் பூமியிலே நிஷ்கண்டமாக
நடக்கும் படி பண்ணின ஔதார்யத்திலெ ஈடுபட்டு அவரை ஆஸ்ரயித்து இருக்கும் குடி
எங்களை யாள உரிய குடி -என்கிறார் இதில் .

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை–

கீழ்ப் பாட்டிலே வேதமானது ஸ்ரீ எம்பெருமானாருடைய வைபவத்தை கண்டு கர்வித்து
தனக்கு ஒருவரும் லஷ்யம் ஆக மாட்டார்கள் என்று பூ லோகத்தில் சஞ்சரியா நின்றது என்றார் -இதிலே –
அப்படி அந்த வேதங்களை ஒருவர் அபேஷியாது இருக்க தாமே நிஷ்கண்டனமாக ப்ரவர்ப்பித்த-ஔதார்யத்தை உடையராய் –
சகல ஜன மநோ ஹரமாய் -பரிமளத்தை உடைய திவ்ய உத்யானங்களாலே-சூழப்பட்டு -தர்சநீயமான
ஸ்ரீ கோயிலுக்கு ஸ்வாமியான ஸ்ரீ பெரிய பெருமாளுடைய அடியவரான ஸ்ரீ ஆழ்வார்களை-கொண்டாடுகிற ஸ்ரீ எம்பெருமானார் –
இந்த ஸ்வபாவங்களிலே ஈடுபட்டு ஆஸ்ரயித்து இருக்குமவர்களுடைய குலத்தார் –
எங்களை ஆளக்கடவ ஸ்வாமித்வத்தை உடைய குலத்தார் என்கிறார் –

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-

ஸ்ரீ நாரணனைக் காட்டிய வேதம் களிப்புரும்படி யாகச் செய்த ஸ்ரீ எம்பெருமானார் உடைய வள்ளன்மையில்-ஈடுபட்டு –
அவரை ஆஸ்ரயித்து இருக்கும் குடி எங்களை ஆள்வதற்கு உரிய குடி –என்கிறார்

கண்டவர் சிந்தை கவரும் கடி பொழில் தென்னரங்கன்
தொண்டர் குலாவும் இராமானுசனைத் தொகை யிறந்த
பண்டரு வேதங்கள் பார் மேல் நிலவிடப் பார்த்தருளும்
கொண்டலை மேவித் தொழும் குடியாம் எங்கள் கோக்குடியே – -55 –

பத உரை –
தொகை இறந்த -ஒரு தொகையில் அடங்காத
பண் தரு வேதங்கள்-ஸ்வரங்களை வெளியிடுகிற வேதங்கள்
பார் மேல்-பூமியிலே
நிலவிட -நிற்கும்படியாக
பார்த்தருளும் -செய்தருளும்
கொண்டலை -மேகம் போலே வள்ளன்மை வாய்ந்தவரும்
கண்டவர் -பார்த்தவருடைய
சிந்தை-நெஞ்சை
கவரும் -கொள்ளை கொள்ளும்
கடி பொழில் -மணம் உள்ள சோலைகள் உடைத்தான
தென்னரங்கன் -அழகிய ஸ்ரீ திருவரங்கத்தில் உள்ள ஸ்ரீ பெரிய பெருமாள் உடைய
தொண்டர்-அடியார்கள்
குலாவும் -மகிழ்ந்து கொண்டாடும் படி இருப்பவருமான
இராமானுசனை -ஸ்ரீ எம்பெருமானாரை
மேவி-பொருந்தி
தொழும் குடி -ஆஸ்ரயித்து இருக்கிற திருக் குலம்
எங்கள் கோக்குடி -எங்களை ஆளும் குலம் ஆகும்

வியாக்யானம் –
அநந்தா வை வேதா -என்கிறபடியே -ஒரு தொகையில் நில்லாத -அடங்காத -படி -அனந்தமாய்-
உதாத்யாதியான ஸ்வரங்களுக்கு பிரகாசகங்களாய் இருக்கிற வேதங்களானவை-
பூமியிலே வர்த்திக்கும்படி -பண்ணி யருளின பரம உதாரராய் –
கண்டவர்கள் நெஞ்சை யபஹரியா நிற்பதாய் –பரிமளத்தை உடைத்தான திருச் சோலைகளை உடைத்தாய் –
தர்சநீயமான ஸ்ரீ கோயிலிலே நித்ய வாசம் பண்ணுகிற ஸ்ரீ பெரிய பெருமாள் திருவடிகளுக்கு சேஷ பூதரான வர்கள் –
அந்த ஸ்வபாவத்துக்கு தோற்று கொண்டாடும்படி -யிருக்கிற ஸ்ரீ எம்பெருமானாரை -தத் ஸ்வபாவத்திலே ஈடுபட்டு -விஷயாந்தர விமுகராய் –
ஆஸ்ரயித்து இருக்கும் குலம்-தத் சம்பந்திகளே உத்தேச்யர் என்று இருக்கும் எங்களை ஆள உரிய குலமாய் இருக்கும்

எங்கள் கோக்குடி என்றது -எங்களுக்கு கோவான குடி -என்றபடி -.
கண்டவர் சிந்தை கவரும் -என்ற இது -ஸ்ரீ பெரிய பெருமாளுக்கு விசேஷணம் ஆகவுமாம்-
கடி -மணம் /குலாவுதல்-கொண்டாட்டம்/நிலவுதல்-வர்த்தித்தல்
பண்டரு வேதங்கள் -என்கிற இடத்தில் -பண்டே உள்ளதாய் அரிதாய் இருந்துள்ள வேதங்கள் என்று-
வேதங்களினுடைய அநாதித்வத்தையும் – அலப்யத்த்வத்தையும் -சொல்லுகிறதானாலோ என்னில் –
பண்டையருவேதம் -என்று பாடமாயிற்றாகில் அப்படி பொருள் கொள்ளலாம் –
பண்டு என்கிற சப்தம்
பூர்வ காலத்துக்கு வாசகமாம் இத்தனை யல்லது பூர்வ காலீ நமானத்துக்கு வாசகம் ஆகையாலே அப்படிச் சொல்லப் போகாது –
பண்டை நான்மறை -பெரிய திரு மொழி -4 7-1 –
பண்டைக் குலம்-– .பண்டையோமல்லோம் –பெருமாள் திரு மொழி -9 7- –
பண்டு நூற்றுவர் -பெரியாழ்வார் திரு மொழி – 9-7 –
பண்டுமின்றும் -திருச் சந்த விருத்தம் – -22 –
பண்டொரு நாள் ஆலின் இலை-பெரியாழ்வார் திரு மொழி -1 4-7 – – என்றும்
இத்யாதி ஸ்த்தலங்களிலே இந்த விபாகம் கண்டு கொள்வது .

ஸ்ரீ திரு அரங்கத்தில் நித்ய வாசம் செய்வதே இவருக்கு பெருமை
ஸ்ரீ ஆழ்வார்கள் கொண்டாடும் ஸ்ரீ இராமானுசன் என்றும் ஸ்ரீ ஆழ்வார்களைக் கொண்டாடும் ஸ்ரீ ராமானுஜன் –
பதின்மர் பாடும் பெருமாள் பெருமை ஸ்ரீ அரங்கனுக்கு மட்டுமே –
எங்கள் -நம்மையும் சேர்த்து அருளிச் செய்கிறார்–
ஸ்ரீ தென்னரங்கன்-தொண்டர் குலாவும் ஸ்ரீ இராமானுசனைத் —ஸ்ரீ அரங்கன் தொண்டர்கள் ஸ்ரீ ஆழ்வார்கள் -குலாவும் ஸ்ரீ இராமானுசன்
ஸ்ரீ இராமானுசன் குலாவும் ஸ்ரீ அரங்கன் அடியார்களான ஸ்ரீ ஆழ்வார்கள் ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள்
ஸ்ரீ அரங்கன் தொண்டர்களாக நாம் குலாவும் ஸ்ரீ ராமானுஜர் என்றுமாம் –
சிந்தை –பொழில்–தன்னை முழுவதும் -காட்டி -நம் சிந்தையை கவர்ந்து இஷ்ட விநியோக அர்ஹமாக்கி
ஸ்ரீ ராமானுஜர் அடியார்களாகிய ஆக்கினவனே ஸ்ரீ அரங்கன் அன்றோ –

தொகை இறந்த –
வேதங்களை எண்ணப் புக்கால் -அநந்தாவை வேதா -என்கையாலே எண்ணித்-தலைக் கட்டப் போகாது இறே –
தொகை -சங்க்யை -இப்படி ஒரு தொகையில் அடங்காதபடி -அனந்தமாய் –

பண் தரு வேதங்கள் –
பண் என்று கானமாய் –அது தானும் இங்கு உதாத்தாநுதாத்த ஸ்வரித ப்ரசயாத்மகமாய்-
அந்த ஸ்வரங்களும் சாகா பேதேந -பஹூ விதங்களாய் -அவற்றுக்கு பிரகாசகமான வேதங்கள் என்னுதல் –
எல்லார்க்கும் அவ்வவ ஸ்வர பரிஜ்ஞானத்தை கொடுக்க வல்ல வேதங்கள் என்னுதல் –
சமஸ்த்தான் ஜ்ஞாதவ்யார்தம் ஸ்சவேதய தீதிவேத -என்று ஆராதன அர்த்த்யோ உபாயாத்மகமான
அர்த்தத்தை அபேஷித்தவர்களுக்கு அடைவே அறிவிப்பிக்கும் அதாலே வேதம் என்று பேராய் இருக்கிறது .

பண்டரு வேதங்கள் -என்கிற இடத்தில் பண்டு -என்று பூர்வ காலீ நமாய் –
அரு -என்று தெரிய அரியதாய் இருக்கும் வேதங்கள் என்று பொருள் ஆனாலோ என்னில் –
பண்டு என்று கால மாத்ர வாசகம் ஆகையாலே காலீ நத்தை சொல்ல மாட்டாது –பண்டை -என்றால் காலீ நத்தை சொல்லலாம் –
பண்டை நான்மறை —பண்டைக்குலம் –பண்டையோமல்லோம் -என்று இவை காலீ நத்துக்கு உதாஹரணங்கள் –
பண்டு நூற்றுவர் -பண்டொரு நாள் -என்று இவை பூர்வ கால வாசகத்துக்கு மட்டும் உதாஹரணங்கள் –
ஆகையால் பண்டு என்று பதம் பண்ணினாலும் கால பரமாய் போம் இத்தனை ஒழிய காலீ நபரம் ஆக மாட்டாது –
ஆக பண் தரு என்று பதச் சேதம் பண்ணினால் தான் – ஸூ சங்கதம் என்று உரையிலே ஸ்ரீ ஜீயரும் அருளிச் செய்தார் இறே-
இப்படி இருந்துள்ள ரிக் யஜூர் சாம அதர்வண ரூப சதுர் வேதங்களும் –
ஸ்ரீ பராசர ஸ்ரீ பாராசர்ய ஸ்ரீ ப்ராசேதச -ஆதி பரம ரிஷிகளாலே அவகாஹிக்கப்பட்ட வேதாந்தங்களும் –

பார் மேல் –
மகா ப்ர்த்வியில் –

நிலவிடப் பார்த்தருளும்-
ஜைன பௌ த்தாதி பாஹ்யரை வேரோடே முடிவித்து-
வேதங்களை ஆசேது ஹிமாசலம் வ்யாபிக்கும்படி பண்ணியருளின-
நிலவுதல் -வர்த்தித்தல் –
இவர் தாம் வேத மார்க்க பிரதிஷ்டாப நாச்சார்யர் -இறே –

கொண்டலை –
ஜல ஸ்தல விபாகம் அற வர்ஷிக்கும் மேகம் என்னலாம் படி வதாந்யராய் –

கண்டவர் சிந்தை கவரும் –
பூகி கண்ட த்வய சசர சந்நிக்த தநீரோப கண்டாமவிர்மோத -ஸ்திமிதசகு நாநூதித பிரம்ம கோஷாம் –
மார்க்கே மார்க்கே பதிக நிவஹை ரும்ச்யாமா நாபவர்க்காம் பாடிச்யந்தாம் புனரபிபுரீம் ஸ்ரீ மதிம் ரங்க தாம்ன-என்கிறபடியே –
தன்னைப் பார்க்கிறவர்களுடைய மனசை அபஹரித்து –தன் வசமாக்கி
பாராது போது -திரும்பவும் காண்கிறது எப்போதோ -என்று ஆகான்க்ஷிக்கும் படி நிற்பதாய் –
கவருகை -க்ரஹிக்கை –

கடி பொழில் தென்னரங்கன் –
பரிமள பிரசுரங்களான சோலைகளாலே சூழப்பட்டும் விமான மண்டப கோபுர பிரகார உத்யானங்களாலே நிபிடமாயும் –
த்வஜ பதாகாதிகளாலே அலங்க்ருதமாயும் இருக்கையாலே தர்சநீயமாய் இருக்கிற ஸ்ரீ கோயிலிலே
நித்ய வாசம் பண்ணி அதுவே நிரூபகமாம்படி இருக்கிற ஸ்ரீ திருவரங்க செல்வனாருடைய —
கடி -பரிமளம் –
கண்டவர் சிந்தை கவரும் கடி -என்று பரிமளத்துக்கு விசேஷணமாய் சொல்லவுமாம் –
அன்றிக்கே –
கண்டவர் சிந்தை கவரும் தென்னரங்கன் -என்று பெரிய பெருமாளுக்கு விசேஷணமாக சொல்லவுமாம் –
சர்வ கந்த -என்று சொல்லப்படுகிறவரோட்டை ஸ்பர்சத்தாலே காணும் அவ்விடத்தே இருக்கும் திருச் சோலைகளுக்கு –
கடி பொழில் -என்று நிரூபிக்கும் படி பரிமளம் உண்டாவது –

தொண்டர் குலாவும் –-
கண்டேன் திருவரங்கமே யான் திசை –என்றும் –
இனி அறிந்தேன் தென் அரங்கத்தை -என்றும்
தேனார் திருவரங்கம் -என்றும் –
பண்டரங்கமே எதுவும் -என்றும் –
திட்கொடி மதிள் சூழ் திருவரங்கத்தாய் -என்றும் –
அரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும் கடல் விளங்கு கருமேனி அம்மான் தன்னை கண்ணாரக் கண்டு -என்றும் –
அணி அரங்கத்தே கிடந்தாய் -என்றும் –
அரங்கத்தம்மா -என்றும் –
அண்டர்கோன் அணி யரங்கன் என் அமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே -என்றும் –
நின் அடி இணை அடைந்தேன் அணி பொழில் சூழ் அரங்கத்தம்மானே -என்றும்

அவருடைய போக்யதையில் ஈடுபட்டு இருக்கிற ஸ்ரீ பொய்கையார் தொடக்கமான ஸ்ரீ ஆழ்வார்கள் பத்துப் பேரையும் –
அன்று எரித்த திருவிளக்கை தன் திரு உள்ளத்தே இருத்தும் -இத்யாதிகளில் சொல்லுகிறபடியே கொண்டாடி நிற்கிற —
அவர்கள் பக்கலிலே எப்போதும் பிரதி பத்தி பண்ணிக் கொண்டு போரா நிற்கிற என்றபடி –
குலவுதல் -கொண்டாட்டம்-

கண்டவர் –தென்னரங்கன்
சர்வ கந்தன் -எல்லா வாசனையுமாய் இருப்பவன் எனப்படும் ஸ்ரீ அரங்கனும் -இங்கு வசிக்கலாம் படி பொழில்
நல்ல மணம் உடைத்தாய் இருத்தல் பற்றி –கடி பொழில் -என்கிறார் –
கண்டவர் யாவராயினும் சரி – அவர் மனம் சிந்தைக்கு உள்ளாய் இருப்பினும் சரி-அத்தகைய மனத்தையும் கவர்ந்து விடுகிறது
கடி பொழில் -இனி கவரும் ஸ்ரீ தென்னரங்கன் -என்று கூட்டிப் பொருள் கொள்ளலுமாம் .
ஸ்ரீ கண்ண புரத்தம்மானைக் கண்டவர் தன மனம் வழங்குவர்
ஸ்ரீ தென்னரங்கன் கண்டவர் சிந்தை கவருவார்
தொண்டுக்கு பாங்கான இடம் எனபது தோற்ற –கடி பொழில் தென்னரங்கன் –என்றார்
தொண்டர் –ஸ்ரீ இராமானுசன்
அடியார்களுக்கு ஊரோ குடியோ நிரூபகம் இல்லை -தொண்டே நிரூபகம்
தொண்டர்-அடி இல்லாமல் அடியேன் இல்லை-

இராமானுசனை –
ஸ்ரீ எம்பெருமானாரை –

மேவித் தொழும் குடி –
அவருடைய ஸ்வபாவங்களிலே-அத்ய அபிநிவிஷ்ட சித்தராய் -விஷயாந்தர அபிமுகராய் -ஆஸ்ரியித்து இருக்கும்
அவர்களுடைய -திரு வம்சத்தார் அடங்கலும் –

தங்கள் சிந்தை கவரும் ஸ்ரீ தென்னரங்கன் உடைய தொண்டர்கள்
அவ்வரங்கனை விட்டு ஸ்ரீ எம்பெருமானாரைக் குலாவுகின்றனர் –
ஸ்ரீ அரங்கனை விட அவர்கள் சிந்தையை ஸ்ரீ எம்பெருமானார் கவர்ந்து விடுகிறார்
அவர்களை அவர் அப்படி ஆனந்தப்படுத்துகிறார் .
அவர்கள் தொண்டு பட்ட ஸ்ரீ அரங்கனே வேதாந்த விழுப் பொருள் என்று ஸ்ரீ பாஷ்யத்தாலே நிரூபித்து வேதம் களிப்புரும்படி
செய்யவே வைதிகர்களான அத் தொண்டர்கள் இந்த ஸ்ரீ எம்பெருமானாரைக் குலாவத் தொடங்கி விடுகின்றனர் ,

நிருபதி ரங்கவ்ருத்தி ரசிகா நபிதாண்ட வயன் நிகம விமர்ச கேலி ரசிகைர் நிப்ருதைர் வித்ருத
குண பரிணத்த சூக்தி த்ருட கோண விகட்ட நயாரடதி திசாமுகேஷூ யதிராஜ யச படஹா-என்று
வேறு ஒரு காரணம் இன்றி ஸ்ரீ ரங்கத்திலே இருப்பதையே ரசித்துக் கொண்டு இருப்பவர்களை களிக்கூத்தாடும்படி செய்து கொண்டு –
வேதத்தை விமர்சனம் செய்தல்
ஆகிய விளையாட்டிலே –
ரசிகர்களினாலே ஓர்மையுடன் தாங்கப்படும் குணங்களினாலே-நூல்களினாலே –கட்டப்பட்ட ஸூக்திகள் -என்கிற
த்ருடமான கொம்பு கொண்டு அடிப்பதனால் – ஸ்ரீ யதிராஜர் உடைய – புகழ் என்கிற பேரி-திசைகள் அனைத்திலும் ஒலிக்கிறது -என்று
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்ரீ யதிராஜ சப்ததியில் -ஸ்ரீ ரங்க வாச ரசிகர்களை
ஸ்ரீ எம்பெருமானார் புகழ் கூத்தாடச் செய்வதாக வருணித்து இருப்பது -இங்கு காணத்தக்கது –

ஆம் எங்கள் கோக்குடியே –
தத் சம்பந்திகளே உத்தேச்யர் என்று இருக்கும் எங்களை அடிமை கொள்ள வல்லவர்களுடைய திரு வம்சத்தார் ஆவர் –
தமக்கு ஒருவருக்குமே அன்றி -தம்முடைய சம்பந்த சம்பந்திகளுக்கு இக் குடி ஒன்றுமே வகுத்த சேஷி என்று காணும் –
இவருடைய பிரதிபத்தி இருக்கும்படி –
அன்றிக்கே –
ஸ்ரீ எம்பெருமானாருடைய திருவடிகளில் ஆஸ்ரயித்தவர்கள் எந்தக் குலத்திலே அவதரித்தாலும் அந்தக் குலமே எங்களை எழுதிக்
கொள்ள வல்ல ஸ்வாமியாம் என்று யோஜிக்கவுமாம் –
தவத் தாஸ தாஸ கண ந சரம அவதவ்யச சதத் தாசதைகரசதா விரதாமமாஸ்து -என்று ஸ்ரீ ஜீயரும் அருளிச் செய்தார் இறே –
சாரன்ஜோயதிகஸ் சிதச்திபுவனே நாதஸ் சயூதச்ய ந-என்று ஸ்ரீ அபியுக்தரும் அருளிச் செய்தார் இறே –
குலம் தாங்கும் சாதிகள் நாலிலும் கீழ் இழிந்து எத்தனை நலம் தான் இல்லாத சண்டாள சண்டாளர் ஆகிலும் –
வலம் தாங்கு சக்கரத் தண்ணல் மணி வண்ணற்கு ஆள் என்று உள் கலந்தார் அடியார் தம் அடியார் எம் அடிகளே -என்றால் போலே
அருளிச் செய்தார் ஆய்த்து –

தொகை–கொண்டல்-
வேதங்கள் அனந்தங்கள் ஆதலின் –தொகை இறந்த -என்று விசேஷித்தார்.
உதாந்தம் -அநுதாத்தம் -ஸ்வரிதம் -ப்ரசயம் – என்று பல் தரப்பட்டள் ஸ்வரங்க வேதத்தில் உள்ளமையால் –
பண் தரு வேதங்கள் -என்றார் .

கருத்து அறியப்படாது போது வேதங்கள் இருந்தும் பயன் இல்லை -அன்றோ
எம்பெருமானார் அவற்றின் கருத்தை ஸ்ரீ பாஷ்யம் முதலிய நூல்களினால் உலகு எங்கும் பரப்பவே –
அவ்வேதங்கள் பார் மேல் நிலவின ஆயின –

தொகை இறந்த என்றமையின் -சர்வ சாகா ப்ரத்யத்ய ந்யாயம்-சர்வ வேதாந்த ப்ரத்யய ந்யாயம்
முதலியவைகளால் வேதத்தின் கருத்தை இவர் அறிந்தமை தோற்றுகிறது ..
அர்த்தங்களை அறிந்த பின்பே அர்த்தங்களை அறிவிப்பது வேதம் என்னும் காரண இடுகுறிப் பெயர்
அதற்க்கு இசைதலின் வேதங்கள் பார் மேல் நிலவிட -என்றார் .

பார்த்தருளும் என்றமையால்-
எம்பெருமானாருக்கு அதில் அருமை இன்மை தோற்றுகிறது .
அறு சமயங்கள் பதைப் பட பார்த்தார் முன்பு –
வேதங்கள் பார்மேல் நிலவிடப் பார்த்தார் இங்கு –

இங்கனம் செய்தது வேறு பயன் கருதி யன்று நீர் நிலம் என்கிற வேறு பாடு இன்றி மேகம் மழை பொழிவது போலே
எல்லாருக்கும் அநந்ய ப்ரயோஜனராய் உபகரித்தமை தோற்ற –கொண்டல்– என்றார் .
மேவித் தொழும் –கோக்குடியே
இத்தகைய உபகாரத்துக்கு தோற்று புறம்பான விஷயங்களை விட்டு ஒழித்து அநந்ய ப்ரயோஜனராய்
எம்பெருமானாரை ஆச்ரயித்தவர்கள் குலம் –
எக்குலமாயினும் – அவர் சம்பந்தம் வாய்ந்த அனைவருமே நம்மை யாள்பவர் என்னும் எண்ணம் கொண்ட
எங்களுக்கு ஆட் கொள்வதற்கு உரிய குலமாகும் -என்கிறார் .
கோக்குலம் என்று ஓதுவாரும் உளர் .

———-

கண்டவர் சிந்தை கவரும் கடி பொழில் தென்னரங்கன்
கண்டவர் தம் மனம் வழங்கும் கண்ணபுரத்தம்மானைக் கண்டாள் கொலோ -8-1-9-

பண்டரு வேதங்கள்
பண்டை நான்மறை -பெரிய திரு மொழி -4 7-1 –
பண்டைக் குலம்-– .பண்டையோமல்லோம் –பெருமாள் திரு மொழி -9 7- –
பண்டு நூற்றுவர் -பெரியாழ்வார் திரு மொழி – 9-7 –
பண்டுமின்றும் -திருச் சந்த விருத்தம் – -22 –
பண்டொரு நாள் ஆலின் இலை-பெரியாழ்வார் திரு மொழி -1 4-7 –
ஆயிரத்துள் இவையுமோர் பத்து இசையோடும் பண்ணில் பாட வல்லார் கேசவன் தமரே-2-6-11-
பண்ணிய தமிழ் மாலை ஆயிரத்துள் இவை பன்னிரண்டும்
பண்ணில் பன்னிரு நாமப்பாட்டு அண்ணல் தாள் அணைவிக்குமே -2-8-13–
பரஞ்சுடர் பண்டு நூற்றுவர் அடவரும் படை மங்க ஐவர்கட்காகி-3-6-10-
பண் கொள் ஆயிரத்து -3-6-11-
பண்டை நாளாலே நின் திருவருளும் -9-2-1-
பண்ணார் தமிழ் ஆயிரத்து -9-8-11-

தொழும் குடியாம் எங்கள் கோக்குடியே –
எம் பல் பிறப்பிடை தோறு எம் தொழு குலம் தாங்களே -3-7-8-

கடல் மல்லைத் தல சயனத்து உறைவாரை கொண்டாடும் நெஞ்சுடையார் அவர் எங்கள் குல தெய்வமே –2-6-4-
செல்வத் தண் சேறை எம்பெருமான் தாள் தொழுவார் காண்மின் என் தலை மேலாரே -7-4-1-

தொண்டர் குலாவும் –-
கண்டேன் திருவரங்கமே யான் திசை –என்றும் –
இனி அறிந்தேன் தென் அரங்கத்தை -என்றும்
தேனார் திருவரங்கம் -என்றும் –
பண்டரங்கமே எதுவும் -என்றும் –
திட்கொடி மதிள் சூழ் திருவரங்கத்தாய் -என்றும் –
அரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும் கடல் விளங்கு கருமேனி அம்மான் தன்னை கண்ணாரக் கண்டு -என்றும் –
அணி அரங்கத்தே கிடந்தாய் -என்றும் –
அரங்கத்தம்மா -என்றும் –
அண்டர்கோன் அணி யரங்கன் என் அமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே -என்றும் –
நின் அடி இணை அடைந்தேன் அணி பொழில் சூழ் அரங்கத்தம்மானே -என்றும்
அவருடைய போக்யதையில் ஈடுபட்டு இருக்கிற பொய்கையார் தொடக்கமான ஆழ்வார்கள் பத்துப் பேரையும் –

பார்த்தருளும் கொண்டலை
சூரணை-155-

இனி மேல் இப் பிரகரணத்தில் மேகமாக அருளிச் செய்தது யாரை என்னும்
ஆ காங்க்ஷையிலே அருளிச் செய்கிறார் மேல் —

பூண்ட நாள் சீர்க் கடலை உள் கொண்டு
திரு மேனி நல் நிறம் ஒத்து உயிர் அளிப்பான்
தீர்த்தகரராய் எங்கும் திரிந்து
ஜ்ஞான ஹ்ரதத்தைப் பூரித்து
தீங்கின்றி வாழ நிதி சொரிந்து
கொடுத்தது நினையாதே லஜ்ஜித்து
வெளுத்து ஒளித்து கண்டு உகந்து
பர சம்ருத்தியே பேறான
அன்பு கூறும் அடியவர்
உறையில் இடாதவர்
பு யற்கை அருள்மாரி
குணம் திகழ் கொண்டல்
போல்வாரை மேகம் என்னும் —

அதாவது
1-பூண்ட நாள் சீர் கடலை உள் கொண்டு —
வர்ஷிக்கைக்கு உடலான காலங்களிலே கடலிலே புக்கு அதில் நீரைப் பருகி
கொண்டு இருக்கும் -மேகம் போலே –
நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீராடுவான்-பூண்ட நாள் எல்லாம் புகும் -மூன்றாம் திருவந்தாதி -69-என்றும் –
திரு மால் சீர்க் கடலை உள் பொதிந்த சிந்தனையேன் –பெரிய திருவந்தாதி -69–என்றும் –
சொல்லுகிறபடி -விடிந்த நாள் எல்லாம் அவன் கண் வளர்ந்து அருளுகிற கடலிலே
புகுந்து ஸ்ரீ யபதியான அவனுடைய கல்யாண சாகரத்தை
மன வுள் கொண்டு –பெரிய திருமொழி –7–3–1–என்கிற படியே
உள்ளே அடக்கி கொண்டு —

2-திரு மேனி நன்னிறம் ஒத்து –
திரு மால் திரு மேனி ஒக்கும் –திரு விருத்தம் –32–என்றும் –
கண்ணன் பால் நன்னிறம் கொள் கார் –பெரிய திருவந்தாதி -85–என்றும் –
சொல்லுகிறபடியே மேகமானது அவன் திரு மேனி ஒத்ததாய் இருக்கும் நிறத்தை உடைத்தாய் இருக்குமா போலே
விக்ரக வர்ணத்தால் அவனோடு சாம்யாபன்னராய் –

3-உயிர் அளிப்பான் தீர்த்தகரராய் எங்கும் திரிந்து –
உயிர் அளிப்பான் மாகங்கள் எல்லாம் திரிந்து -திரு விருத்தம் –32-என்று
மேகமானது வர்ஷ முகேன -பிராணி ரஷணம் பண்ணுகைக்காக –
விஸ்த்ருமான ஆகாசப் பரப்பு எங்கும் சஞ்சரிக்குமா போலே – சம்சாரிகளான ஆத்மாக்களை ரஷிக்கைகாக
தீர்த்தகரராமின் திரிந்து –இரண்டாம் திருவந்தாதி –14–என்றும் ,
தீதில் நன்னெறி காட்டி எங்கும் திரிந்து –பெருமாள் திருமொழி –2–6–என்றும்-
சொல்லுகிறபடியே -லோக பாவனராய் -உஜ்ஜீவன மார்க்க பிரதர்சகராய் கொண்டு-சர்வத்ர சஞ்சாரம் பண்ணி

4-ஜ்ஞானஹ்ரதத்தை பூரித்து –
மேகம் வர்ஷித்தாலே தடாகாதிகள் நிறைக்குமா போலே –
ஜ்ஞானஹ்ரதே த்யான ஜலே ராக த்வேஷ மலாபஹே
ய ஸ்நாதி மானசே தீர்த்தே ஸ யாதி பரமாம் கதிம் -என்று
மானஸ தீர்த்த வர்ணனத்திலே , சொன்ன ஜ்ஞானம் ஆகிற
வர்ணனத்தை -தாங்கள் வர்ஷிக்கிற பகவத் குண ஜலங்களாலே நிறைத்து —

5-தீங்கின்றி வாழ நிதி சொரிந்து –
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து –திருப்பாவை -3–என்றும் –
வாழ உலகினில் பெய்திடாய் -திருப்பாவை -3–என்றும் ,
மாமுத்த நிதி சொரியும் –நாச்சியார் திருமொழி –8–2–என்றும்
சொல்லுகிற படியே -அநர்த்த கந்தம் இன்றிக்கே –அகிலரும் உஜ்ஜீவிக்கும் படி-
பகவத் குண ரத்னங்களை வர்ஷித்து-

6-கொடுத்தது நினையாதே லஜ்ஜித்து —
ஒவ்தார்ய அதிசயத்தாலே உபகரித்ததை நினையாதே –
இன்னமும் உபகரிக்க பெற்றிலோம் ! நாம் செய்தது போருமோ ? என்று லஜ்ஜித்து-

7–வெளுத்து –
உபகரிக்கப் பெறாத போது – உடம்பு வெளுத்து ஒளித்து
(அர்த்த விசேஷங்களை உபதேசிக்கப் பெறாத பொழுது உடம்பு வெளுத்து

8- ஒளித்து –
மறைந்து வெளியே முகம் காட்டாமல்
ஸூவ அனுபவ பரர்களாய் ஏகாந்த சீலர்களாய் இருப்பதைத் தெரிவித்த படி – )

9–கண்டு உகந்து –
உபகரிக்கும் தசையில் எதிர் தலையில் சம்ருத்தி கண்டு உகந்து –

10-பர சம்ருத்தியே பேறான
அந்த பர சம்ருத்தி தங்களுக்கு பேறாக நினைத்து இருக்கிற-

அன்பு கூறும் அடியவர் –
ஆங்கு அரும்பி கண்ணீர் சோர்ந்து அன்பு கூறும்
அடியவரான- பெரிய திருமொழி -2–10–4––முதல் ஆழ்வார்கள்-
(ஆங்கு அரும்பி கண்ணீர் சோர்ந்து அன்பு கூறும் அடியவர் –
அடியவர் என்று பொய்கையார் -பர பக்தி நிலை -ஞான பிரதம நிலை —
அன்பு கூறும் அடியவர் என்று பூதத்தாழ்வார் பர ஞான நிலை -தர்சன-சாஷாத்காரம் பெற்றவர்கள் –
அரும்பி கண்ணீர் சோர்ந்து அன்பு கூறும் அடியவர் -பேயாழ்வார் -பரம பக்தி நிலை -பிராப்தி தசை -என்றவாறு )

உறையில் இடாதவர் –
உருவின வாள் உறையில் இடாதே -ஆதி மத்திய அந்தம் தேவதாந்திர அவரத்வ –பிரதிபாதன -பூர்வகமாக
பகவத் பரத்வத்தை வுபபாதிக்கும் திரு மழிசைப் பிரான்

புயற்கை அருள் மாரி –
காரார் புயற்கை கலி கன்றி –பெரிய திருமொழி–3-2-10-என்றும் ,
அருள் மாரி –பெரிய திருமொழி–3-4-10–என்றும் ,
ஒவ்தார்யத்தில் மேக சத்ருசராய் கொண்டு கிருபையை வர்ஷிக்கும் திரு மங்கை ஆழ்வார்-

கண்டவர் சிந்தை கவரும் கடி பொழில் தென்னரங்கன்
தொண்டர் குலாவும் இராமானுசனைத் தொகை யிறந்த
பண்டரு வேதங்கள் பார்மேல் நிலவிடப் பார்த்தருளும் கொண்டலை–55–என்றும்
குணம் திகழ் கொண்டல்–இராமானுச நூற்றந்தாதி -60—என்று
குண உஜ்ஜ்வலமான மேகமாகச் சொல்லப் பட்ட எம்பெருமானார் —போல்வாரை மேகம் என்னும் –
இந்த குண சாம்யத்தை இட்டு மேகம் என்று சொல்லும் என்ற படி —

(ஸ்ரீ நம்மாழ்வார் த்ரிகாலம் உணர்ந்தவர் -முற்பட்டவர் பின்பட்டவர் பற்றியும் அறிந்தவர்
ஸ்ரீ வால்மீகி முற்காலம் பிற்கால நிகழ்வுகளை அருளிச் செய்தது போலே – )

———————–———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –54– நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன- இத்யாதி —

April 25, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

இப்படி ஸ்ரீ எம்பெருமானார் யதார்த்த ஸ்தாபனம் பண்ணி யருளின ஸ்வபாவத்தைக் கண்டு
பாஹ்ய சமயங்களுக்கும் வேதத்துக்கும் ஸ்ரீ திரு வாய் மொழிக்கும் உண்டான
ஆகாரங்களை அருளிச் செய்கிறார் –

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை–

கீழ் எல்லாம் ஸ்ரீ எம்பெருமானார் துர்மத நிரசனம் பண்ணினார் என்றும் –
வேதொத்தரணம்-பண்ணினார் என்றும் –
ஸ்ரீ ஆழ்வார்களுடைய திவ்ய சூக்திகளிலே தானே அவஹாகித்தார் என்றும் -சொன்னீர் –
ஆன பின்பு –
அத்தால் துர் மதங்களுக்கும் -வேதங்களுக்கும் -ஆழ்வாருடைய அருளிச் செயல்களுக்கும் உண்டான
ஆகாரத்தை சொல்ல வேண்டாவோ என்ன –
துர் மதங்கள் அடங்கலும் வேரோடு கூட நசித்துப் போந்தன –
வேதமானது பூ லோகத்தில் எனக்கு யாரும் நிகர் இல்லை -என்று கர்வித்து இருந்தது –
அருளிச் செயல்கள் எல்லாம்-அனைவரும் உஜ்ஜீவிக்கும்படி நித்யாபிவ்ர்த்தங்களாய் கொண்டு இருந்தன –என்கிறார் –

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-

நற்பொருள் நாட்டிய தன்மை கண்டு -புற மதங்களும் -வேதங்களும் -ஸ்ரீ திருவாய்மொழியும்-
அடைந்த நிலைகளை -இதில் அருளிச் செய்கிறார்

நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன நாரணனைக்
காட்டிய வேதம் களிப்புற்றது தென் குருகை வள்ளல்
வாட்டமிலா வண் தமிழ் மறை வாழ்ந்தது மண்ணுலகில்
ஈட்டிய சீலத்து இராமானுசன் தன்னியல்வு கண்டே – 54- –

பத உரை –
மண்ணுலகில் -பூ லோகத்திலே
ஈட்டிய -திரட்டிய
சீலத்து -சீல குணம் உடையரான
இராமானுசன் தன் -ஸ்ரீ எம்பெருமானார் உடைய
இயல்வு -ஸ்வபாவத்தை
கண்டு-பார்த்து
நாட்டிய -தங்கள் தங்கள் யுக்தியால் நிலை நாட்டிய
நீசச் சமயங்கள் -கீழ்ப் பட்ட மதங்கள்
மாண்டன -அழிந்தன
நாரணனை-ஸ்ரீ சர்வேஸ்வரனை
காட்டிய -காண்பித்துக் கொடுத்த
வேதம்-வேதமானது
களிப்புற்றது -கர்வம் அடைந்தது
தென்-அழகிய
குருகை-ஸ்ரீ திரு நகரியில் எழுந்து அருளி இருக்கும்
வள்ளல்-வள்ளல் தன்மை வாய்ந்த -ஸ்ரீ நம் ஆழ்வார் அருளிச் செய்த
வாட்டமிலா -ஒரு குறைவும் இல்லாத
வண் தமிழ் மறை -வள்ளல் தன்மை வாய்ந்த திரு வாய் மொழி
வாழ்ந்தது -வாழ்வு பெற்றது .

வியாக்யானம்
ஷூத்ரரான சேதனரோடே தம் பெருமையும் -அவர்கள் சிறுமையும் பாராதே -கலந்து பரிமாறி –
பூ லோகத்திலே மேன்மேலும் திரட்டிக் கொண்ட சீல குணத்தை உடையரான
ஸ்ரீ எம்பெருமானார் உடைய ஸ்வபாவத்தைக் கண்டு –
ஆதித்ய தர்சனத்தில் அந்தகாரம் நசித்து அம்புஜ ஜாதங்கள்முகம் மலருமா போலே –
ஸ்வ யுக்தி ஸ்தாபிதங்களாய் -வேத பாஹ்யங்கள் ஆகையாலே -தண்ணிதான சமயங்கள் நசித்தன .

பூர்வ பாகம் ஆராதன ஸ்வரூபத்தையும்
உத்தர பாகம் ஆராத்ய ஸ்வரூபத்தையும் -சொல்லுகையாலே
வேதைஸ் ச சர்வைரஹமேவ வேத்ய -கீதை -என்கிற உபய விபூதி யுக்தனான
ஸ்ரீ சர்வேஸ்வரனை பிரகாசிப்பித்த வேதம் ஆனது -நமக்கு இனி ஒரு குறை இல்லை -என்று-கர்வித்தது –

சர்வ பிரகார விலஷண்மான ஸ்ரீ திரு நகரியை தமக்கு வாசஸ்தானமாக உடையராய் –
பகவத் அனுபவ பரீவாஹா ரூபமான ஸ்வ உக்திகளை லோகத்துக்கு உபகரித்து அருளின பரம உதாரரான
ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்ததாய் –
பாஹ்ய குத்ருஷ்டிகளால் அவிசால்யம் ஆகையாலே ஒரு குறை இன்றிக்கே இருப்பதாய் –
ஜ்ஞான ப்ரப்ருதி மோஷ அந்தமான சகல பலங்களையும் கொடுக்கும் ஔ தார்யத்தை உடைத்தாய் இருக்கிற
திராவிட வேதமான ஸ்ரீ திரு வாய் மொழி ப்ராப்த ஐஸ்வர்யம் ஆயிற்று –

களிப்புறுதல்-கர்வித்தல்
வாட்டம்-சங்கோசம்
ஈட்டுதல்-திரட்டுதல்
இயல்வு-ஸ்வபாவம்–

நாட்டிய -அண்டை கொடுத்து பேசி வைத்த என்றபடி –
பேச நின்ற -ஸூலபத்தில் போக்க முடியாமல் நாட்டிய –
பக்தாம்ருதம் -தொண்டர்க்கு அமுது உண்ண சொல் மாலைகள் – –
நல்ல பதத்தால் மனை வாழ்வர் கொண்ட பெண்டிர் -இவை பத்தும் வீடே –
இஹ லோக பர லோக ஸமஸ்த பிரபன்ன ஜனங்களும் மங்களா சாசனம் –
தண் தமிழ் நூல் வாழ மணவாள மா முனியே நூற்றாண்டு இரும் ஸ்ரீ சடகோபன் சொல் கேட்டு கை கூப்புகிறோம் வாழி வாழி

நாட்டிய நீசச் சமயங்கள் என்று தொடங்கி-
மண்ணுலகில் –
அஞ்ஞா னத்துக்கு விளை நிலமான பூ லோகத்திலே –

ஈட்டிய சீலத்து –
உபய விபூதி ஐச்வர்யத்தை பெற்ற தம்முடைய மஹாத்ம்யத்தையும் -லௌகிகருடைய சிறுமையும் பாராதே —
1-ஸ்ரீ திருக் கோட்டியூரிலே பால வ்ருத்த விபாகம் அற எல்லார்க்கும் குஹ்ய தமமாக தாம் பெற்ற சரம ஸ்லோகார்த்தத்தை வெளி இட்டு –
2–கொங்கில் பிராட்டியையும் -இரட்டை திருப்பதியில் மாடு மேய்க்கும் பெண் பிள்ளையையும் -மேல் நாட்டுக்கு எழுந்து அருளும் போது
3–காட்டிலே ஒரு இடையனையும் -ஊமை முதலானவர்களையும் -நிர்ஹேதுகமாக விஷயீ கரித்து கலந்து பரிமாறி –
மேல் மேல் என திரட்டிக் கொண்ட சௌசீல்யம் உடையவரான –
ஈட்டுதல் -திரட்டுகை –

இராமானுசன் –
ஸ்ரீ எம்பெருமானார் உடைய –

இயல்வு கண்டு –
பிரதிபஷ பிரதி ஷேபகத்வ தர்ம மார்க்க பிரதிஷ்டாபகத்வாதி ஸ்வபாவங்களைக் கண்டு –
இயல்வு -ஸ்வபாவம்

நாட்டிய நீச சமயங்கள் மாண்டன –
சோழ மண்டலத்தில் இருக்கிற திவ்ய தேசங்களில் ஸ்ரீ கோயில்களில் எல்லாம்-நைஷ்யடிம்பரான பாஷாண்டிகள் பிடுங்கிப் போகட்டு –
சிவாலயங்களை கட்டுவிக்கும் போது -ஸ்ரீ திரு மங்கை மன்னன் திருவவதரித்து அருளி –
அந்த பாஷாண்டிகளுடனே பிரசங்கித்து –அவர்களை வென்று திவ்ய தேசங்களை கட்டடங்க நிர்வஹித்தார் –

ஸ்ரீ ஆள வந்தார் சோழன் சபையிலே ருத்ர பஷ பாதிகளோடே பிரசங்கித்து -அவர்களை வென்று
அந்த ராஜாவாலே அர்த்த ராஜ்யத்தை வென்றார் –

இங்கே அப்படி இன்றிக்கே -இவர் தம்முடைய காலத்தில் -தானே
அவ்யயபதேசன் என்பான் ஒருவன் -சிவாத்பரதரம் நாஸ்தி -என்று சாசனத்தை எழுதி –
இந்த பூ மண்டலத்திலே ஸ்தாபிப்பதாக-அநேக பகவத் பாகவத் ரோகங்களைப் பண்ணி கொண்டு போந்து
நீசரும் மாண்டனர் -என்கிறபடியே –
இவருடைய யத்னம் இன்றிக்கே -இவர் தம்முடைய அதிப்ராத்திமா பிரபாவத்தை கண்ட போதே –
கழுத்திலே புண் பட்டு கிரிமி கண்டனாய் நசித்தான் -என்றும்-

காளஹஸ்தியில் -நின்றும் சைவர்கள் திரண்டு வந்து ஸ்ரீ திரு வேம்கடமுடையானை தங்களுடைய-கந்த நாயனார் -என்று
வழக்கு பிடித்து அக் காலத்திலே-ராஜாவான-யாதவராயனாலேயும் பரிகரிக்க அரிதாம் படி-திருமலையை ஆக்ரமிக்க –
அப்போது ஸ்ரீ திருவேம்கடமுடையானுடைய விஷயீ காரத்தாலே ஸ்ரீ எம்பெருமானார்-எழுந்து அருளி –
அவர்களை பராஜிதர் ஆக்கினவாறே -அவர்கள் எல்லாரும் தலை அறுப்புண்டு போனார்கள் என்றும் –

மேல் நாட்டிலே பௌத்த சமயத்தார் பிரபலராய் அவ்விடத்திலே ராஜாவும் அவர்களுடைய சிஷ்யனாய் –
அத்தேசத்தில்-தத் வ்யதிரிக்தர் இருக்கவும் கூட அரிதாய் போந்து இருந்த காலத்தில் –
இவரும் யதார்ச்சிகமாக அத் தேசத்தில் சில நாள்-எழுந்து அருளி இருக்க -அந்த ராஜாவும் இவருடைய வைபவத்தை சேவித்து –
அந்த பௌத்தருக்கும் ஸ்ரீ எம்பெருமானாருக்கும் பிரசங்கம் பண்ணுவித்து -அவர்களுடைய குத்ர்ஷ்டி கல்பனத்தையும் –
ஸ்ரீ எம்பெருமானாருடைய-சமீசீன கல்பனத்தையும் கண்டு வித்தனை இவருடைய திருவடிகளில் ஆஸ்ரயித்து-
பட்டாசார்யன் காலத்திலும் நசியாதே வேர் பாய்ந்து இருக்கிற பௌத்தருடையவும் ஜைனருடையவும்-தலைகளை யறுப் பித்து
அத்தேசத்திலே அப்படிப்பட்ட நீச சமயங்கள் நடையாடாதபடி பண்ணினார்-என்றும் பிரசித்தம் இறே –

நாட்டிய -இத்யாதி –
ஆதித்ய தர்சனத்தில் அந்தகாரம் நசிக்குமா போலே இவருடைய-வைபவங்களைக் கண்டு
பிரமாண தர்க்கங்கள் அன்றிக்கே -ஸ்வ யுத்தி ஸ்தாபிதங்களாய் –
எத்தனை-தரமுடையவராலும் நிவர்திப்பிக்க அசக்யங்களாய் -வேத பாஹ்யங்கள் ஆகையாலே அதி நீசங்களாய் இருக்கிற-
அவைதிக சமயங்கள் எல்லாம் நிர்மூலமாகப் போயின –

நாட்டிய –சமயங்கள் மாண்டன –
தாமே நிற்கும் தகுதி அற்றவை -பர சமயங்கள் .
அவரவர்கள் தாங்கள் தாங்கள் கற்பித்த யுக்திகளாலே நிலை நிறுத்தப் பட்டவை அவை –
பிரமாண பலத்தாலே நற் பொருளை ஸ்ரீ எம்பெருமானார் நாட்டிய பின்பு
மெய்க்கு எதிரே பொய் போலவும் -கதிரவனுக்கு எதிரே நள்ளிருள் போலவும் –சமயங்கள் தாமாக மாண்டன
மாண்டன –
என்றமையின் -இனி அவை தலை தூக்க மாட்டாமை தோற்றுகிறது

நாரணனைக் காட்டிய வேதங்கள் களிப்புற்றது —
நாராயண பர ப்ரஹ்ம தத்வம் நாராயணா பர நாராயணா பரஞ்சோதி ராத்மாநாராயணா –
பர யச்சகிம் சிஜ்ஜகத்-யஸ்மின் தர்ச்யதே ச்ரூயதேபிவா -அந்தர்பஹிஸ் சதத் சர்வம் வ்யாப்ய நாராயண ஸ்தித -என்றும் –
நாராயணாத் பிரம்மா ஜாயதே -என்று தொடங்கி நாராயண பரத்வத்தை காட்டுகிற வேதமானது-
பூர்வோத்தர பாதங்கள் இரண்டிலும் வைத்துக் கொண்டு –
பூர்வ பாகம் ஆராதன கர்ம ஸ்வரூப பிரதிபாதகம்-ஆகையாலும் –
உத்தர பாகம் ஆராத்ய பிரம்ம ஸ்வரூப உபாய புருஷார்த்த பிரதி பாதகம் ஆகையாலும்-
இரண்டுக்கும் ஏக சாஸ்த்ரவத்தை இவ் எம்பெருமானார் சமர்த்தித்து –
ஆசேது ஹிமாசல பிரதிஷ்டை-பண்ணுகையாலே -இனி நமக்கு ஒரு குறைகளும் இல்லை என்று –
தேஜிஷ்டமாய் கோயில் சாந்து பூசிக் கொண்டு-இந்த லோகத்தில் நாவலிட்டு சஞ்சரியா நின்றது –
களித்தல் -கர்வித்தல் –

நாரணனைக் காட்டிய வேதம் களிப்புற்றது –
நாரணன் முழு எழ உலகுக்கும் நாதன் -வேத மயன்-திருவாய்மொழி 2-7 2- – – என்றபடி –
நாரணன் உலகு அனைத்திற்கும் நாதன் –உபய விபூதி நாயகன் -என்றபடி –
வேதத்தில் முற்பகுதி -இறைவனுடைய ஆராதன ரூபமான கர்மத்தையும்
பிற்பகுதி ஆராதிக்கப்படும் இறைவனுடைய ஸ்வரூப ரூபாதிகளையும் காட்டுகையாலே வேதம் நாராயணனைக் காட்டியதாகக் கூறினார் .
முற்பகுதி பிற்பகுதி இரண்டையும் சேர்த்து-ஒரே சாஸ்திரம் என்கிற சித்தாந்தத்தை காட்டி அருளுகிறார் –

ஸ்ரீ நாரணனைக் காட்டிய வேதம் என்கையாலே
ஸ்ரீ நாரணனைக் கூறுவதிலேயே வேதத்திற்கு நோக்கம்-என்று தெரிகிறது –
வேதைஸ் ச சர்வை அஹமேவ வேத்ய -எல்லா வேதங்களாலும் நானே அறியப்-படுகிறேன் -என்று ஸ்ரீ கீதையில்
ஸ்ரீ கண்ணன் அருளிச் செய்ததும் இங்குக் கருதத் தக்கது .
அத்தகைய வேதம் இனி எவராலும் அவப்பொருள் கூறி நம்மைக் குறைப் படுத்த முடியாது என்று-செருக்குக் கொண்டது -என்கிறார்
ஸ்ரீ வேதாந்த தேசிகன்–த்ரிவேதீ நிர்வேத ப்ரசமன விநோத ப்ரணயிநீ-என்று
மூன்று வகைப் பட்ட வேதமும் சோர்வடைவதைப் போக்கடிப்பதைத் தனக்கு விநோதமாக விரும்புவது -என்று
ஸ்ரீ யதிராஜ சப்ததியில் கூறி உள்ளமை காண்க –

தென் குருகை வள்ளல் வாட்டமிலா வண் தமிழ் மறை வாழ்ந்தது –
ஸ்ரீ திருவழுதி நாடு என்றும் –
ஸ்ரீ தென் குருகூர் என்றும் -என்கிறபடி
தென் தேசத்துக்கு எல்லாம் அலங்கார பூதமாய் -தர்சநீயமான-ஸ்ரீ திரு நகரியை தமக்கு திரு அவதார ஸ்தலமாய் உடையராய் –
பகவத் ஸ்வரூப ரூப குண விபூதிகளை-அனுபவிக்க அனுபவிக்க உள்ளடங்காமே தத் அனுபவ பரிவாக ரூபங்களாய் –
மொழி பட்டோடும் -கவியமுதின் நுகர்ச்சி உறுமோ முழுதுமே -என்று
தம்மாலே ஸ்லாக்கிக்கப் படுமவையான ஸ்வ ஸூக்திகளை-லோகத்தார் எல்லாருக்கும் சர்வ அதிகாராம் ஆகும் படி உபகரித்தருளும்
பரமோதாரரான ஸ்ரீ நம் ஆழ்வாராலே-அருளிச் செய்யப்பட்டதாய் –
பாஹ்ய குத்ருஷ்டிகளாலே அவிசால்யம் ஆகையாலே ஒரு குறையும் இன்றிக்கே-இருப்பதாய் –
நல்ல பதத்தால் மனை வாழ்வார் கொண்ட பெண்டிர் மக்களே -என்கிறபடி ஐ ஹிக-புருஷார்த்தத்தையும் –
நிரல் நிறை ஆயிரத்து இவை பத்தும் வீடே -இவை பத்தும் பிடித்தார் பிடித்தார்-வீற்று இருந்து பெரிய வானுள் நிலாவுவரே –
அவாவில் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே -என்கிறபடியே ஆமுஷ்மிகமான பரம புருஷார்த்தையும்
கொடுக்கக் கடவதான ஔதார்யத்தை உடைத்தாய்-இருக்கிற திராவிட வேதமான ஸ்ரீ திரு வாய் மொழி யானது –
சடகோபன் தண் தமிழ் நூல் வாழ -என்கிறபடியே-
சமஸ்த பிரபன்ன ஜனங்களும் மங்களா சாசனம் பண்ணும்படி உஜ்ஜ்வலம் ஆய்த்து –
வாட்டம் -சங்கோசம் –

தென் குருகை –வாழ்ந்தது
உதார சந்தர்சயன் நிரமமீத புராண ரத்னம்-என்று பராசரர் என்னும் வள்ளல் எல்லாப் பொருள்களுக்கும் காண்பிப்பதற்காக –
ஸ்ரீ புராண ரத்னம் -என்னும் ஸ்ரீ விஷ்ணு புராணத்தை-இயற்றி அருளினார் -என்றபடி-
மொழி பட்டோடும் கவி யமுதத்தை உலகிற்கு உபகரித்தமையின்-ஸ்ரீ நம் ஆழ்வாரை வள்ளல்-என்கிறார் .
வேதம் போலே அவப்பொருள் காண்பதற்கு இடம் ஆகாமையின் ஒரு குறையும் இல்லாதது -என்பது தோன்ற –
வாட்டமிலா மறை-என்கிறார் .
பொருள் விளங்கும்படி தமிழில் அமைந்தமையின்-வண் தமிழ் மறை -என்கிறார் .
வள்ளல் தந்த மறையும் -வண் மறை யாயிற்று –
தமிழ் மறைக்கு வண்மையாவது –
ஞானம் முதல் வீடு -வரை எல்லாப் பயன்களையும் அளிக்கும் தன்மை .

கதிரவன் வருகை கண்டதும் -தாமரை மலர்வது போல்
எம்பெருமானார் இயல்வு கண்டதும்-வேதம் களிப்புற்றது
வண் தமிழ் மறை வாழ்வுற்றது -என்க –
ஆதித்ய தர்சனத்தில் அந்த காரம் நசித்து அம்புஜ ஜாதங்கள்-அம்புஜாதிகள்- முகம் மலருமா போல மலர

மண்ணுலகில் –இயல்வு கண்டே –
சீலம் ஈட்ட வேண்டிய இடம்-மண்ணுலகம் ஆதலின் –மண்ணுலகில் -என்கிறார்
பாமர மக்களிடம் உள்ள சிறுமையையும்-தம்மிடம் உள்ள பெருமையையும் பாராது அவர்களோடு புரை யற
கலந்து பரிமாறி கலந்து-இம் மண்ணுலகத்தில் சீலத்தை ஸ்ரீ இராமானுசர் திரட்டிக் கொண்டார் -என்க
சீல குணம் வாய்ந்தவராய் ஸ்ரீ எம்பெருமானார் பாமரரோடும் பழகி -அவர்களை ஆட் கொள்ளலின்-
நீசச் சமயங்கள் அவர்கள் இடமும் இடம் பெற மாட்டாமல் மாண்டு ஒழிந்தன -என்க –

நாரணனைக் காட்டிய வேதம்
நாரணன் முழு ஏழ் உலகுக்கும் நாதன் வேத மயன் காரணம் கிரிசை கருமம்
இவை முதல்வன் எந்தை –வாரணத்தை மருப்பு ஒசித்த பிரான் 2-7-2-

தென் குருகை வள்ளல் வாட்டமிலா வண் தமிழ் மறை வாழ்ந்தது

வளம் குருகூர்ச் சடகோபன் பாட்டாய தமிழ் மாலை –10-6-11-
பெரிய வண் குருகூர்ச் சடகோபன் பேணின ஆயிரத்துள்ளும் உரிய சொல் மாலை–8-1-11-
வண் குருகூர் சடகோபன் சொன்ன தீதில் அந்தாதி ஓர் ஆயிரத்துள்-8-2-11-
தென் குரு கூர்ச் சடகோபன் சொல் தெளிவுற்ற ஆயிரத்துள் இவை-7-5-11-
அரியை ஆம் வண்ணத்தால் குருகூர்ச் சடகோபன் அறிந்து உரைத்த ஆம் வண்ண ஒண் தமிழ்கள் இவை–7-8-11-
குருகூர்ச் சடகோபன் சொன்ன தூய ஆயிரத் திப்பத்தால்–6-4-11-
தென்னன் குருகூர்க் காரி மாறன் சடகோபன் ஒலி புகழ் ஆயிரத்து இப்பத்து–5-2-11-

———————–———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –53–அற்புதன் செம்மை இராமானுசன் இத்யாதி —

April 24, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

பார்த்தன் அறு சமயங்கள் பதைப்ப -என்று பாஹ்ய சமயங்களை குலைய பண்ணி –
இவ்விபூதியில்-இவர் ஸ்தாபித்த வர்த்தம் ஏது என்ன –
சகல சேதன அசேதனங்களும் ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கே சேஷம் என்கிற விலஷணமான
அர்த்தத்தை ஸ்தாபித்து அருளினார் -என்கிறார் .

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை–

பார்த்தான் அறுசமயங்கள் பதைப்ப -என்று பாஹ்ய சமயங்களை குலைய பண்ணினார் என்றும் –
அரங்கன் செய்ய தாளிணை யோடு ஆர்த்தான் -என்று பரம புருஷார்த்த சாம்ராஜ்யத்தை கொடுத்தார் என்றும் –சொன்னீர் –
அம் மாத்ரமேயோ -அவர் செய்தது என்னில் -அவ்வளவு அன்று –
சகல அபேஷிதங்களையும் –
1–அபேஷா நிரபேஷமாக கல்பகம் போலே கொடுக்குமவராய் –
2-சௌசீல்யம் உடையவராய் –
3-அத்ய ஆச்சரிய பூதராய் –
4–ஆர்ஜவ குண யுக்தரான ஸ்ரீ எம்பெருமானார் –சகல லோகங்களிலும் இருந்து உள்ள சகல ஆத்மாக்களும்
சர்வ ஸ்மாத் பரனுக்கே சேஷ பூதர் என்று இந்த லோகத்திலே பிரதிஷ்டிப்பித்து அருளினார் –

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-

அறு சமயங்கள் பதைப்ப பார்த்து இவர் இவ்வுலகத்தில் நிலை நாட்டின பொருள்
ஏது என்ன –எல்லாப் பொருள்களும் ஸ்ரீ சர்வேஸ்வரனுக்கே சேஷம் -என்ற
இந்த நற் பொருளை நிலை நாட்டி யருளினார்-என்கிறார் .

அற்புதன் செம்மை இராமானுசன் என்னை யாளவந்த
கற்பகம் கற்றவர் காமுறு சீலன் கருதரிய
பற் பல்லுயிர்களும் பல்லுலகி யாவும் பரன தென்னும்
நற் பொருள் தன்னை இந்நானிலத்தே வந்து நாட்டினனே – -53 –

வியாக்யானம் –
என்னை அடிமை கொள்ளுகைக்காக நான் கிடந்த விடம் தேடி வந்த பரம உதாரராய் –
அறிவுடையார் ஆசைப்படும் படியான சௌசீல்யத்தை உடையராய் -அதி மானுஷமான செயல்களை செய்கையாலே –
ஆச்சர்ய பூதராய் ஆஸ்ரிதர் உடைய கௌடில்யதை பார்த்து-கை விடாதே –
நீர் ஏறா மேடுகளில் விரகாலே நீர் எற்றுவாரைப் போலே தம்மை
அவர்களுக்கு ஈடாக அமைத்துப் பரிமாறும் ஆர்ஜவ குண யுக்தரான ஸ்ரீ எம்பெருமானார்
நினைக்கப் புக்கால் நினைத்து தலைக் கட்ட -அரிதாம்படி அஸங்க்யாதரான ஆத்மாக்களுக்கும் -அவர்களுக்கு வாசஸ்தானமாய் –
அஸங்க்யாதமாய் இருக்கிற சகல லோகங்களும் -சர்வ ஸ்மாத் பரனுக்கே சேஷம் என்கிற சீரிய அர்த்தத்தை-
இந்த லோகத்திலே ஒருவர் அபேஷியிதாய் இருக்கத் தாமே வந்து ஸ்தாபித்து அருளினார் .

கற்பகத்தைக் காட்டில் இவர்க்கு விசேஷம் -அடிமை கொள்ளுகையும் -இருந்த இடம் தேடி வருகையும்
காமுறுதல்-விரும்புதல்
பற் பல்லுயிர்கள்-பல பலவான உயிர்கள்-அசந்க்க்யாதரான உயிர்கள் என்றபடி
பல்லுலகில் யாவும் -என்றும் பாடம் சொல்லுவார்கள் -எழுத்தேற்றம் வருகையால் அது சேராது –
ஆனால் பல்லுலகியாவும் -என்றால் எழுத்தேற்றம் வாராதோ என்னில்
உரைக்கின்றனனுமக்கியான் -49-என்கிற இடத்தில் போலவே –
பல்லுலகியாவும் -என்கிற இடத்தில் -இகரமும் குற்றியலிகரமாய் வண்ணம் கெடாமைக்கு-கழிவுண் கையாலே எழுத்தேற்றம் வாராது
நாட்டுதல்-ஸ்தாபித்தல்–

பற் பல்லுயிர்களும் பல்லுலகி யாவும் பரன தென்னும்-நல் பொருள் -எனக்கே தன்னைத் தந்த கற்பகம் –
வந்து அருளி என் நெஞ்சிடம் கொண்ட வானவர் கொழுந்தாய் –
வந்தாய் மனம் புகுந்தாய் அதனால் சிந்தனைக்கு இனியாய் என்று அறிந்தேன் -ஸ்ரீ அமுதனார் இருந்த இடம் தேடி வந்தார்
காமுறு சீலர் –
ஸ்ரீ வடுக நம்பி ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் ஸ்ரீ உடையவர் திரு மேனியில் ஈடுபட்டதால் -ஸ்ரீ ஆழ்வான் ஸ்ரீ ஆண்டான் இரு கரையர் என்பர்
ஸ்ரீ கோபிந்த ஜீயர் யதி தர்மம் சமுச்சயம் -யாதவ பிரகாசர் மாறி உடையவர் திருவடி அடைந்து

என்னை யாள-
ஸ்ரீய பதியினுடைய திவ்ய ஆக்ஜ்ஜையாலே -சகல லோக உஜ்ஜீவன-விஷயமாக அவதரித்தாரே ஆகிலும் –
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே அருள் செய்ய -என்கிறபடியே
லோகத்தார் எல்லாரிலும் -நீசனேன் நிறை ஒன்றுமிலேன் -என்கிறபடியே அத்யந்த நிஹினனான
என்னிடத்தில் கிருபை பண்ணி அருளி -அடியேனை அடிமை கொள்ளுகைக்காக –

வந்த கற்பகம் –
தம்மை ஒருவரை-ரஷிக்கைக்காக அவதரித்தார் என்று காணும் இவர் திரு உள்ளத்தில் ஓடுகிறது –
வந்த கற்பகம் –
நித்ய விபூதியில் இருந்து-லீலா விபூதிக்கு எழுந்து அருளின கற்பகம் –
கல்பகம் போலே அபீஷ்டார்த்த ப்ரதரானவர் -ஜடமாய் ஸ்தாவரமாய்-ஐஹிக புருஷார்த்த மாத்ர ப்ரதமாய் –
ஒரு தேச விசேஷத்தில் தானே நியதமாய் இறே அந்த கல்பகம் இருப்பது –
இந்த கல்பகம் அதில் நின்றும் –
1-அதி விலஷணமாய் –2-அப்ராக்ருதமாய் –3–அஜஹத்ரி வர்க்கமபவர்க்க வைபவம் -என்றும்
நலமந்தமில்லதோர் நாடு புகுவீர் -என்றும் –
நல்ல பதத்தால் மனை வாழ்வார் கொண்ட பெண்டிர் மக்கள் -என்கிறபடி
ஐ ஹிக ஆமுஷ்மிக சமஸ்த புருஷார்த்தங்களையும் கொடுக்கக் கடவ ஔ தார்யத்தை உடையதாய் –
4–உபய விபூதியிலும் வியாபித்து இருப்பதாய் –
5–நித்தியமாய் நிற்பது ஓன்று இறே –

ஆகையால் -வந்த கற்பகம் -என்று
சாகா சந்திர நியாயேன புத்த்யாரோபத்துக்காக சொன்னார் இத்தனை –
நான் கிடந்த இடம் தேடி வந்து-விஷயீ கரித்த இது – மகா ஒவ்தார்யம் என்று வித்தராய் காணும் –வந்த கற்பகம் என்கிறார்

என்னை ஆள வந்த கற்பகம்-
கற்பகத்தின் நின்றும் வேறுபாடு -தோற்ற
ஆட் கொள்கையும் -இரப்பாளர் இருக்குமிடம் தேடி வருகையும் -ஸ்ரீ எம்பெருமானார் ஆகிய கற்பகத்துக்கு கூறப்பட்டன –
வந்த கற்பகம் –
ஸ்ரீ பெருமாள் கோயிலில் இருந்து ஸ்ரீ ரங்கத்திற்கு ஸ்ரீ எம்பெருமானார் வந்தது தம்மை ஆளுவதற்காகவே-என்று கருதுகிறார் -ஸ்ரீ அமுதனார் –
என்னை-
இரக்கவும் அறியாத என்னை –
என்னை யாக்கி எனக்கே தன்னைத் தந்த கற்பகம் -என்னும் ஸ்ரீ நம் ஆழ்வார் ஸ்ரீ திரு வாய் மொழியை-இங்கு நினைவு கூர்க-
வந்த கற்பகம் –
ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகன் -சமேத்யப்ரதி நன்த்யச -இரப்பாளர் இடம் வந்தும் கொண்டாடியும் -என்றபடி –
இரப்பாளர் இடம் வந்து கொடுப்பது போலே ஸ்ரீ எம்பெருமானாரும் இரப்பாளனாகிய என்னிடம் வந்து-தன்னையே வழங்கினார்

சௌசீல்யம் ஆச்சர்ய சேஷ்டிதம் ஆர்ஜவம் நேர்மை உடையவர் நாட்டினார்–
1-கற்பகம் வள்ளல் மறைத்து வைக்காமல் வெளி இட்டார்–
2-அஞ்ஞானம் போக்கி இந் நானிலத்தே வந்து நாட்டியத்தால் சௌசீல்யம் –
3-ஆச்சர்யம் -இங்கு வந்து நாட்டிய செயல்–
4-ஆர்ஜவம்-தத்வ த்ரயம் சொல்லி ஏக தத்வம் போன்றவற்றை/சாஸ்திரம் ஒத்து கொண்ட நல் பொருளை நாட்டினார்

சிலருக்கு ஒரு காலத்தில் உபதேசித்து போகாமல்-ஸ்ரீ கீதாசார்யன் போல அன்றிக்கே –
அடிமை கொள்கையும் இருந்த இடத்தே வருகையும் கற்பகம் விட ஏற்றம் ஸ்ரீ ஸ்வாமிக்கு-
என்னை ஆள வந்த கற்பகம்-
தன்னையும் விடாமல் கை கொண்டதை அருளி கொண்டு வருகிறார்–

கற்றவர் காமுறு சீலன் –
சகல சாஸ்திரங்களையும் அப்யசித்தாதாலே ஜ்ஞாநாதிகாராய்-
உன்னை ஒழிய ஒரு தெய்வம் மற்று அறியா மன்னு புகழ் சேர் வடுக நம்பி -என்று கொண்டாடப்படுகிற
ஸ்ரீ வடுக நம்பி ஸ்ரீ கிடாம்பி ஆச்சான்-முதலான ஸ்ரீ முதலிகள் வ்யாமுக்தராய்
ஆசைப் படும்படியான ஸ்வபாவத்தையும்-சத்வ்ரத்தியையும் உடையவராய் –
அன்றிக்கே –
பெரியவன் தாழ்ந்தவருடன் புரையறக் கலந்து பரிமாறுகை யாகிற சீல குணத்தை உடையவர் -என்றுமாம் –
காமுறுதல் -விரும்புதல் –

ஸ்ரீ எம்பெருமானார் ஸ்ரீ கோயிலிலே வாழுகிற காலத்தில் -ஒரு நாள் மாத்யாஹ்ன சமயத்திலே-திருக் காவேரியிலே நீராடித்
திரும்பவும் எழுந்து அருளிகிற அளவிலே வழியில் ஸ்ரீ திருக் கோட்டியூர் நம்பி எதிரே-எழுந்து அருள –
ஸ்ரீ எம்பெருமானாரும் அந்த மணலிலே சாஷ்டாங்கமாக தண்டன் இட்டு நிற்க -ஸ்ரீ நம்பியும்-அவரைக் கடாஷித்து -எழுந்திரும் -என்று
அருளிச் செய்யாதே வெறுமனே இருந்தவாறே -அச் சேர்த்தியை-ஸ்ரீ கிடாம்பி ஆச்சான் கடாஷித்து அருளி –
ஸ்ரீ நம்பீ இவரைக் கொல்ல நினைத்தீரோ – என்று சீறு பாறு செய்து -மணலிலே சாஷ்டாங்கமாக விழுந்து இருக்கிற
ஸ்ரீ எம்பெருமானாரை வாரி எடுத்துக் கொண்டார் -என்று நம் முதலிகள்-கோஷ்டியில் பிரசித்தம் இறே –

கற்றவர் காமுறு சீலன் –
புன்மையாளனான என்னை ஆள வந்தமை யின் சீலமுடைமை தோற்றுகிறது –
இத்தகைய சீலம் கற்றவர்களால் விரும்பப் படுகிறதாம் –
கற்றவர் இடம் சீலம் காண்பது அரிது அன்றோ –
அது கற்றவர் ஆகிய ஸ்ரீ எம்பெருமானார் இடம்-இருப்பதைக் கண்டு கற்ற மற்றவர்களும் அதனை ஆசைப்படுகிறார்களாம் –
காமம் உறுதல்-காமுறுதல் –காமமுறுதல் என்பதன் மரூஉ

தன்னை கற்றவர் கோஷ்டியில் சேர்க்க வில்லை ஸ்ரீ அமுதனார்

அற்புதம் செம்மை –
அதி மானுஷங்களான சேஷ்டிதங்களை பண்ணுகையாலே -அத்புதராய் –
ஆஸ்ரிதருடைய-கௌடில்யத்தை பார்த்து கை விடாதே நீர் ஏறா மேடுகளிலே -விரகாலே நீர் ஏற்றுமா போலே –
தம்மை-அவர்களுக்கு ஈடாக அமைத்து பரிமாறும் ஆர்ஜவ குணத்தை உடையவரான –

இராமானுசன் –
ஸ்ரீ எம்பெருமானார் –

கருதரிய –
நினைக்கப் புக்கால் -நினைத்து தலைகாட்ட அரிதாம்படி –

பற்பல் உயிர்களும் –
பலபடியான –பல் பல்-என்கையாலே -ஒரு ஜாதியே -அஸங்க்யாதமாய் -அப்படிப்பட்ட ஜாதி குலங்களும் -அஸங்க்யாதங்களாய்-
எண் பெருக்கு அந் நலத்து ஒண் பொருள் -என்கிறபடியே -எண்ணிறந்த ஆத்மாக்களும் –

பல் உலகியாவும் –
அந்த ஆத்மாக்களுக்கு ஆவாஸ ஸ்தானமாய் –அஸங்க்யாதமாய் -இருக்கிற சகல லோகங்களும் –

கருதரிய பற் பல்லுயிர்களும் பல்லுலகியாவும் –
இத்தனை என்று கருதிப் பார்த்து எண்ணித் தலைக் கட்ட முடியாமையின் கருதரிய-பற் பல்லுயிர்களும் என்றார் .
சுருதியும் -இறைவன் ஒருவனே –பல -பஹூ-உயிர்களுக்கு விருப்பத்தை அளிப்பதாக ஓதி உள்ளமை காண்க .
பல்லுலகில் யாவும் -என்றும் பாடம் சொல்லுவார்கள் -அது சரி அன்று
ஓர் அடிக்கு பதினேழு எழுத்து ஆதலின் நேர் பதினாறு என்ற இலக்கணத்தோடு பொருந்தாமையின் என்க .
பல் லுலகியாவும் என்ற பாடத்தில் இகரம் குற்றியலிகரம் ஆதலின் அது தனி எழுத்தாக எண்ணப்படாது –
பல்லுலகியாவும் –
அந்த உயிர்களுக்கு இருப்பிடமான எல்லா உலகங்களும் என்றபடி

பரனது என்னும் –
பரபரானாம் -என்கிறபடியே -பிரம்ம ருத்ராதிகளுக்கும் பரனாய் -ஸ்ரீய பதியானவனுக்கே -சேஷ பூதம் என்றும் –
சர்வே சோபி ச நாத நாகில ஜகத் வ்யாப்தாவ போதாமல நந்தாகார யுதோப்ய நந்த சூ குணஸ் சர்வாத்மாநாம் சாஸிதா
தேஹீ தாரண சாசநேசன முகை -ஸ்வாதீ ந நித்ய ஸ்த்திதி ஸ்வாமீ நித்யம நோக்ய-மங்களவபும் ஸ்ரீ பூமி நீள அதிப -என்கிறபடியே –
போக்ய போக உபகரண போக ஸ்தான போக்த்தர்த்தவங்கள்-எல்லாம் -சர்வ ஸ்மாத் பரனான-ஸ்ரீ நாராயணனுக்கே சேஷ பூதம் என்கிறது –

பரனது –
பிரமன் தொடங்கி எல்லா உயிர் களுக்கும் மேற்பட்டு இருத்தலின் இறைவன் பரன் எனப்படுகிறான் .
நம்மிலும் மேற்பட்டவர்கள் ஆகிய பிரமன் முதலியோர்க்கும் மேற்பட்டவன் என்னும் கருத்தில்
ஸ்ரீ நம் ஆழ்வார் -முழுதுண்ட பரபரன்-என்றார் .
பர பரன் ஆதலின் -புரம் எரித்ததும் -அமரர்க்கு அறிவு இயந்ததும் பரபரன் செயலே என்று அவர் கருதுகிறார் .
இங்கும் பற் பல்லுயிர்கள் என்று
பிரமன் உட்பட எல்லா ஆன்மாக்களுக்கும் மேற்பட்டவனாக பரன் என்று சொல்லுகையாலே
ஸ்ரீ நம் ஆழ்வார் கூறிய பரபரனே இங்கு அமுதனாரால் கருதப் படுகிறான் .

அந்தர்யாமியாக எழுந்து அருளி இருந்து புரம் எரித்தல் –முதலிய செயல்களை செய்தது போலே-
எல்லாப் பொருள்கள் இடத்திலும் –
நீராய் நிலனாய்..சிவனாய் அயனாய் -என்றபடி அந்தர்யாமியாக அவன் இருத்தலின்
சிவன் முதலியோர்-போலே எல்லா பொருள்களும் அவன் இட்ட வழக்காய் உள்ளமை போதரும் .
போதரவே -பொருள்கள் அனைத்தும் -உள் நின்று இறைவனால் நியமிக்க படுதலின் இறைவனுக்கு உடல் ஆகின்றன –
இறைவன் பொருள் அனைத்திற்கும் ஆத்மா ஆகிறான்

பிரியாது நின்று நியமிக்கும் பொருள் ஆன்மா என்றும்
அங்கனம் நியமிக்கப்படும் பொருள் உடல் என்றும்
ஆன்மாவுக்கும் உடலுக்கும் இலக்கணம் கூறுவர்
அத்தகைய உடல் உயிர் என்னும் தொடர்பே பரனது -என்கிற இடத்தில் –
அது –என்கிற
ஆறாம் வேற்றுமை உருபினால் கருதப்படுகிறது
இத்தொடர்பினை பிரதான பிரதிதந்த்ரார்ர்த்தம் -பிற மதத்தவரால் ஏற்கப் படாது –
நம் மதத்தவரால் மட்டும் ஏற்றுக் கொள்ளப் பட்ட முக்கியமான பொருள்-என்பர் .
அத்தகைய முக்கியமான பொருள் என்பது தோன்ற –நற் பொருள்-என்றார் .

நற்பொருள் தன்னை –
யதாவஸ்தித தசமீசீ நஜ்ஞா நத்தை -அன்றிக்கே இப்படிப்பட்ட சீரிய அர்த்தத்தை-

இந் நானிலத்தே வந்து –
இந்த லோகம் எல்லாம் உஜ்ஜீவிக்கைக்காக தாமே வந்து அவதரித்து அருளி –

நாட்டினானே –
ஒருவரும் அபேஷியாது இருக்கச் செய்தே -நிர்ஹேதுகமாக பிரதிஷ்டிப்பித்து அருளினார் –
நாட்டுதல் -ஸ்தாபித்தல் –
சிலருக்கு ஒரு காலத்தில் உபதேசித்து போன மாத்ரமே அன்றிக்கே –
லோகத்தார் எல்லாரும்-சர்வ காலமும் அனுபவித்து உஜ்ஜீவிக்கும் படியாக –
ஸ்ரீ பாஷ்யாதி முகேன பிரதிஷ்டாபனம் பண்ணி அருளினார்-என்றது ஆய்த்து –
யதண்ட மண்டாந்தர கோசரம் சயத்த சோத்தரான்யவரனா நியா நிச – குணாம் பிரதான புருஷ-பரமபதம்
பராத்பரம் பிரமசதேவிபூதையே -என்று ஸ்ரீ ஆள வந்தாரும் அருளிச் செய்தார் இறே –

கல்பத்தைக் காட்டிலும் இவருக்கு விசேஷம் –
அடிமை கொள்ளுகையும் -இருந்த இடத்தே வருகையும் –

பல்லுலகில் யாவும் -என்றும் பாடம் சொல்லுவார்கள் -எழுத்து ஏற்றம் ஆகையாலே அது சேராது –
ஆனால் பல்லுலகியாவும் என்றால் எழுத்து ஏற்றம் வாராதோ என்றால்
உரைக்கின்றனனுமக்கியான்-என்கிற இடத்தில் போலே பல்லுலகியாவும் -என்கிற இடத்திலும்
இகரம் குற்றியலிகரமாய் வண்ணம்-கெடாமைக்கு வழி உண்டாகையாலே எழுத்து ஏற்றம் வாராது என்று
ஸ்ரீ ஜீயரும் அருளிச் செய்தார் இறே –

இந்நானிலத்தே –
இந் நற்பொருளை அறிய மாட்டாத இருள் தரும் இவ்வுலகிலே அதனை ஏற்கும்படி
ஸ்ரீ பாஷ்யம் முதலிய-நூல்களினாலும் வாதங்களினாலும் -இந் நற்பொருளை நிலை நாட்டினார் -என்க .

இங்கு பற் பல்லுயிர் பரனது என்கையாலே ஜீவான்மாவிற்க்கும் பரமான்விற்கும் உள்ள பேதமும் –
ஜீவான்மாக்களுக்குள் ஒருவருக்கு ஒருவர் உள்ள பேதமும் காட்டப்படுகின்றன –
பல்லுலகு என்கையாலே -அவ வான்மாக்கள் இருக்கும் இடமாகிய பிரக்ருதியின்
பரிணாமமான அசித்து என்னும் பொருள் கூறப்பட்டது –
பரன் என்கையாலே ஈஸ்வர தத்வம் காட்டப்பட்டது –
ஆக
சித்து -அசித்து -ஸ்ரீ ஈஸ்வரன் -என்கிற தத்வ த்ரயமும்
பரனது -என்னும் இடத்து அது என்றதால் நம்முடைய மதத்திற்கே உரிய சரீர ஆத்ம பாவ ரூபமான சம்பந்தமும் கட்டப்பட்டன ஆயின .

——–

நாவலம் பெரிய தீவினில் வாழும் நங்கைமீர் இது ஓர் அற்புதம் கேளீர் -3-6-1-
முற்ற வுலகு எல்லாம் நீயேயாகி மூன்று எழுத்தாய முதல்வனேயோ -4-10-4–
பறவை ஏறும் பரம் புருடா 5-4-2-

பரும் தாள் களிற்றுக்கு அருள் செய்த பரமன் தன்னை -14 -10–

அத்தனாகி அன்னையாகி ஆளும் எம்பிரானுமாய்
ஒத்தொவ்வாத பல் பிறப்பு ஒழித்து நம்மை ஆட் கொள்வான் -115-

நாட்டினான் தெய்வம் எங்கும் நல்லதோர் அருள் தன்னாலே -10-

நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும் -5–

பற்பல ஆயிரம் உயிர் செய்த பரமா -3-2-6–

ஆளும் பரமனைக் கண்ணனை -3-7-2-

இவையும் அவையும் உவையும் இவரும் அவரும் உவரும்
யவையும் யவரும் தன்னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும்
அவையுள் தனி முதல் எம்மான் கண்ணபிரான் என் அமுதம்
சுவையன் திருவின் மணாளன் என்னுடைச் சூழலுளானே–1-9-1-

பற்பநாபன், உயர்வு அற உயரும் பெருந்திறலோன்,
எற்பரன், என்னை ஆக்கிக் கொண்டு, எனக்கே தன்னைத் தந்த
கற்பகம், என் அமுதம், கார் முகில் போலும் வேங்கட நல்
வெற்பன், விசும்போர் பிரான் எந்தை தாமோதரனே–2-7-11-

மேல் இரும் கற்பகத்தை வேதாந்த விழுப்பொருளின் மேல் இருந்த விளக்கை
விட்டு சித்தன் விரித்தனவே —பெரியாழ்வார் -4-3-11-

பரந்த தெய்வமும் பல்லுலகும் படைத்து 4-10-3-

கற்பகக் காவன நற்பல தோளற்கு -6-6-6–

அனைத்து உலகுமுடைய அரவிந்த லோசனனை -6-7-10-

ஆள்கின்றான் ஆழியான் யாரால் குறையுடையோம் -10-4-3-

கற்றார் மறை வாணர்கள் வாழ் திருப்பேராற்கு அற்றார் அடியார் தமக்கு அல்லல் நில்லாவே -10-8-10-

———————–———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி பாசுரமும்- ஸ்ரீ ஆழ்வார் பாசுரங்களும் –52–பார்த்தான் அறு சமயங்கள் பதைப்ப இத்யாதி —

April 24, 2020

ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –

என்னை ஆள வந்து இப்படியில் பிறந்தது -என்று ஒருவராலும் என்னை ஆள வரியனான-என்னை ஆளுகைக்காக
வந்து அவதரித்தார் என்றீர் .
இவர் தாம் இப்படி அகடிதகடநா சமர்த்தரோ என்ன –
அவர் செய்த அகடிதகடனங்களை அருளிச் செய்கிறார் .

ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை–

என்னை ஆள வந்து இப்படியில் பிறந்தது -என்று ஒருவராலும் ஆள அரிய என்னை-ஆள வந்து அவதரித்தார் என்று
அவரைக் கொண்டாடா நின்றீர் -இந்த அவதாரத்திலே உம்மை ஒருவரையே-ஆளா நின்றாரோ என்ன –
முதல் முன்னம் உத்தேசித்து அவதரித்தது என்னை ஆளுக்கைக்காகவே -ஆகிலும்
இவர் அவதரித்து அருளி -அவைதிக சமயங்களாலே நசித்துப் போன லோகங்களை எல்லாம் சகிக்க மாட்டாதே –
அந்த அவைதிக மதங்களை நசிப்பித்து -தம்முடைய கீர்த்தியாலே லோகங்கள் எல்லாவற்றிலும் வியாபித்து –
க்ரூர பாவியான என் பக்கலிலே பிரவேசித்து -என்னுடைய பாபங்கள் எல்லாம் நசித்துப் போகும்படி பண்ணி –
பின்பு பெரிய பெருமாள் உடைய அழகிய திருவடிகளோடு சம்பந்திப்பித்தார் –
இப்படி ஒரு கார்யத்தை உத்தேசித்து-அநேக கார்யங்களை செய்தார் –
இப்படி இந்த எம்பெருமானார் செய்து அருளும் ஆச்சர்யங்களைக் கண்டீரே-என்று வித்தார் ஆகிறார்

ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-

ஒருவராலும் ஆள முடியாத என்னை ஆண்டதுபோலே -இன்னும் பல
பொருந்தாவற்றையும் பொருந்த விடும் திறமை -எம்பெருமானார் இடம் உண்டு என்கிறார் .

பார்த்தான் அறு சமயங்கள் பதைப்ப இப்பார் முழுதும்
போர்த்தான் புகழ் கொண்டு புன்மையினேன் இடைத்தான் புகுந்து
தீர்த்தான் இருவினை தீர்த்து அரங்கன் செய்ய தாள் இணையோடு
ஆர்த்தான் இவை எம் மிராமானுசன் செய்யும் அற்புதமே –52-

பத உரை –
அறு சமயங்கள்-ஆறு மதங்கள்
பதைப்ப -நடுங்கும்படியாக
பார்த்தான்-நோக்கினார்
இப்பார் முழுதும் -இம்மண்ணுலகம் எங்கும்
புகழ் கொண்டு –தம் கீர்த்தியாலே
போர்த்தான் -மூடினார்
புன்மையினேன் இடை -குற்றமுடையவனாகிய என்னிடத்திலே
தான் புகுந்து -தாமே வந்து புகுந்து
இரு வினை-பெரிய பாபங்களை
தீர்த்தான் -நீக்கினார்
தீர்த்து -இவ்வாறு தீ வினைகளை அகற்றி
அரங்கன் -பெரிய பெருமாள் உடைய
செய்ய -அழகிய
தாள் இணையோடு -திருப் பாதங்களோடே
ஆர்த்தான் -பிணைத்தார் –
எம் இராமானுசன் -எம் தலைவரான எம்பெருமானார்
செய்யும்-செய்திடும்
அற்புதம் இவை -வியத்தகு செயல்கள் இவை

வியாக்யானம் –
வேத பாஹ்யங்களான ஷட் சமயங்களும் நடுங்கும்படியாக கண்டார் .
இந்தப் பூமி எங்கும் தம்முடைய திவ்ய கீர்த்தியாலே மூடி விட்டார்
அநாத்ம குணங்களை நிரூபகமாக உடையனாய் இருக்கிற என் பக்கலிலே என்னுடைய அர்த்தித்வாதி நிரபேஷமாக தாமே புகுந்து –
யத் பிரம கல்ப நியுதா நுபவேப்ய நாச்யம்-வைகுண்ட ஸ்தவம் -59 – என்கிறபடியே
கால தத்வமுள்ளதனையும் அனுபவித்தாலும் -தொலையாது என்னும்படியான மகா பாபங்களை-போக்கினார் –
இப்படி பாபங்களைப் போக்கி -பெரிய பெருமாள் உடைய அழகிய திருவடிகளோடு-சம்பந்தித்தார் –
எங்களுக்கு நாதரான எம்பெருமானார் செய்து அருளின ஆச்சர்யங்கள் இவை –
அற்புதம்-அத்புதம்-அதாவது அகடிதகட நா பிரயுக்தமான ஆச்சர்யம்
பதித்தல்-துடித்தல்
போர்த்தல்-மூடுதல்
இருமை-பெருமை
ஆர்த்தல்-பந்தித்தல்–

இராவண வதம் -வியாஜ்யம் -அபராத பிரதான சாரம் -ஜடாயு மோக்ஷம் இத்யாதிகள் உண்டே –
புன்மை உடையவன் இல்லை புன்மையாகவே -தர்மி தர்மம் வாசி இல்லாமல் -கருதும்படி புன்மைகள் செய்தவன் என்றபடி
தானே வந்து புகுந்து -நிர் ஹேதுகமாக -தீர்த்து அரங்கன் திருவடிகளை காட்டி -அருகில் நமக்காக வந்த பெரிய பெருமாள் திருவடிகள்

பார்த்தான் அறு சமயங்கள் பதைப்ப –
அறு சமயங்கள் –
பௌத்த சாருவாக சாக்ய உலூக்ய பாசுபத காணா பத்யங்கள்-என்கிற வேத பாஹ்ய சமயங்கள் ஆறும் என்னுதல் –
அன்றிக்கே –
அனுஷ்டான தசையிலே அத்யந்த துக்க ரூபங்கள் ஆனவை-என்னுதல் –

பதைப்ப பார்த்தான் –
இப்படிப் பட்ட வேத பாஹ்ய சமயங்கள் எல்லாம் நிர்மூலமாக போம்படி அவற்றை-கடாஷித்தார் –
பதைத்தல் -துடித்தல் –
திக்சவ்தாபத் தஜைத்ரத் வஜபடபவ நச்பாதி நிர்த்தூத தத் தத் சித்தாந்த ச்தோம கூலச்த
பகவிகம நவ்யக்தசத் வர்த்த நீகா -என்று அபியுக்தரும் அருளிச் செய்தார் இறே –

பார்த்தான் அறு சமயங்கள் பதைப்ப –
ஆறு சமயங்களும் தம்முள் ஒன்றுக்கு ஓன்று முரண்பட்டுக் போரிடவனவாயினும்
வைதிக மதத்தை எதிர்ப்பதில் அவையாவும் கருத்து ஒன்றிக் கூடுவன –
எம்பெருமானார் ஏறிட்டுப் பார்த்த உடன் திரண்ட அவை யாவும் பதைத்னவாம்

இப்பார் முழுதும் போர்த்தான் புகழ் கொண்டு –
லோகம் எல்லாம் நிச்சபத்னமாகப் பண்ணவே தமக்கு எல்லாம் கைவசம் ஆய்த்து –
இப்படிப்பட்ட பூமி எங்கும் பண்டித பாமார சாதாரணமாக தம்மைக் கொண்டாடும்படி தம்முடைய கீர்த்தியை
சர்வ திக்கிலும் வ்யாபித்தார் –
போர்த்தல் -மூடுதல் –

இப்பார் -போர்த்தான்
கற்றார் மாற்றார் என்ற வேறு பாடின்றி உலகம் அனைத்தும் இவர் புகழ் பரவியது என்றபடி –
அறு சமயங்கள் பதைப்பப் பார்த்தமையால் உண்டான புகழ் ஆதலின் அந்த
சமயங்கள் பரவிய உலகம் அனைத்திலும் அப் புகழ் பரவியது என்க –

புன்மையின் இடை –
வந்தேறியான பாபங்கள் ஒன்றும் இன்றிக்கே -வேம்பு முற்ற கைப்பு மிகுவது போலே -என்கிறபடியே
நாள் தோறும் என்னால் தீரக் கழியச் செய்யப்பட்டவையாய் –
பாபாநாம்வா -என்றும் –
தேத்வகம் புஞ்சதேபாப -என்றும் சொல்லுகிறபடியே –
அந்த பாபங்களே ஒரு வடிவாக உடையவன் ஆகையாலே அத்யந்த பாபியான என் இடத்திலே –

தான் புகுந்து –
அடியேன் ஒரு சாதனா அனுஷ்டானம் பண்ணாதே இருக்கச் செய்தேயும் –
அர்த்தியாதே இருக்கச் செய்தேயும் –
தத் உபய நிரபேஷமாக தாமே நிர்ஹேதுகமாக வந்து பிரவேசித்து —

இருவினை –
இரண்டு வகைப்பட்ட வினை -புண்ய பாபங்கள்-என்றபடி –
அன்றிக்கே –
இருமை -பெருமையாய் –
யத் பிரம கல்ப நியுதா நுபவேப்ய நாச்யம் தத் கில்பிஷம் ஸ்ர்ஜதி ஜந்து ரிஹஷனார்த்தே -என்றும்–
பாபானாம் பிரதமோச்ம்யஹம் -என்றும் –
மயிதிஷ்டதி துஷ்க்ர்தாம் பிரதானே -என்றும் அஹமசம்ய பராதசக்ரவர்த்தி -என்றும்-
அனுபவ பிராயசித்தங்களாலும் -எத்தனைஎனும் தரம் உடையவராலும் நிவர்திப்பிக்க அரியதான
என்னுடைய மகா பாபங்களை -என்றபடி-

தீர்த்தான் –
இவற்றை அநாயாசேன மணலிலே எழுதின எழுத்தை துடைப்பாரைப் போலே துடைத்தார் –
வானோ மறிகடலோ மாருதமோ தீயகமோ கானோ ஒருங்கிற்று கண்டிலமால் -என்றும் –
சும்மனாதே கை விட்டோடி தூறுகள் பாய்ந்தனவே -என்றும் சொல்லுகிறபடி வாசனையோடு போக்கினார் என்றபடி –

தீர்த்து –
அந்தப்படி ரஷணம் பண்ணி ஆறி கை வாங்கி இருக்கை அன்றிக்கே -இப்படி பாபங்களை எல்லாம் போக்கி –

அரங்கன் –
எட்டா நிலமான பரம பதத்தில் போய் ஆஸ்ரயி என்றும் –
யோக மார்கத்தில் அந்தர்யாமியை ஆஸ்ரயி என்றும்-
இப்படி அநேகங்களானவற்றை உபதேசித்து போருகை அன்றிக்கே –
அத்யந்த சுலபராய் கொண்டு -நான் இருந்த இடத்தில்-இருக்கிற பெரிய பெருமாள் உடைய –

செய்ய தாளிணையோடு ஆர்த்தான் –
அரங்கத்தம்மான் திருக்கமல பாதம் -என்கிறபடியே -தர்சநீயமாய் -பாவனத்வ போக்யங்களுக்கு
பரஸ்பர சதர்சமான திருவடிகளோடு சம்பந்திப்பித்தார் -சேஷ சேஷி பாவ சம்பந்தத்தை அறிவிப்பித்தார் -என்றபடி —
ஆர்த்தல் -பந்தித்தல்

புன்மையினேன் இடை –ஆர்த்தான்
இப்படியில் பிறந்து -தன்னை ஆண்ட விதத்தை அருளிச் செய்கிறார் –
நன்மையால் மிக்க நான் மறையாளர்கள் புன்மையாக கருதிய தன்னை –
அன்னையாய் அத்தனாய் நம் ஆழ்வார் ஆண்ட தன்மையை மதுர கவிகளும் அருளி செய்தார் –
தம்மிடம் புன்மையே மிக்கு இருத்தலின் -அதனையே தமக்கு நிரூபகமாக – புன்மையினேன் -என்கிறார்.

புன்மையினேன் இடைப் புகுந்து -என்றமையால்-வாத்சல்யம் -தோற்றுதலின் -அன்னையாய் ஆண்டமை கூறப்பட்டதாயிற்று –
இரு வினை தீர்த்தமையின் அத்தனாய் ஆண்டமை-கூறப்பட்டதாயிற்று .
தான் புகுந்து -என்றமையின் –நிர்ஹேதுகத்வம் -காண்பிக்க பட்டதாயிற்று –
சாதன அனுஷ்டானம் இன்றி புகுந்தமை கூறப் பட்டதாயிற்று –
புன்மையினேன் இடைத்தான் புகுந்து என்று –
புன்மை அல்லாது புகுந்தமைக்கு ஹேது வேறு இல்லை-என்பது தோன்ற அருளிச் செய்ததனால் –
புன்மையாகக் கருதுவராதலின் என்னை யாண்டிடும் தன்மையான் – என்ற பொருள் காண்பிக்க பட்டதாயிற்று –
புகுந்து என்ற சொல் நயத்தாலே -எம்பெருமானாரையும் வர ஒட்டாது-தடுக்க வல்ல புன்மையின் திண்மை தோற்றுகிறது –

இருவினை –
மகா பாபம்-
புண்ய பாபங்கள் ஆகவுமாம் –
தீர்த்தான் தீர்த்து -என்று மீண்டும் கூறுவதால் -ஒரு அரிய செயல் செய்து முடித்தமை தோற்றுகிறது –
இதனால் அநிஷ்ட நிவ்ருத்தி கூறப் பட்டது .

இனி அரங்கன் செய்ய தாள் இணையோடு ஆர்த்தான்-என்று இஷ்ட ப்ராப்தி கூறப் படுகிறது
ஈஸ்வரன் சார்ந்த இரு வல் வினைகளும் சரித்து-
மாயப் பற்று அறுத்து –
தீர்ந்து
தன்பால் மனம் வைக்கத் திருத்தி
தன் அடியார்க்காக வீடு திருத்துவான் –

எம்பெருமானாரோ -இவ்வமுதனாரை புன்மையினர் ஆதலின் அரங்கன் செய்ய தாள்
இணையோடு ஆர்த்து வைத்தார் .

இவை எல்லாம் ராமானுசன் செய்யும் அற்புதமே –
இவ்வளவும் சொன்னவை எல்லாம் எங்களுக்காக அவதரித்து-அருளின எம்பெருமானார் செய்தருளும் அற்புத காரியங்கள் –
அற்புதம் -அத்புதம் –
பித்ர்வாக்ய பரிபாலனம் பண்ண-வேண்டும் என்று காட்டுக்கு போய் அவ்வளவோடு நில்லாதே –
ராஷசரை எல்லாம் சம்ஹரித்து -திரு வணை கட்டுவித்து –
மகா ராஜருக்கும் ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கும் ஸ்வ ஸ்வராஜ்யங்களைக் கொடுத்துப் போந்த-
சக்கரவர்த்தி திருமகனைப் போலே -ஓன்று செய்ய என்று ஒருப்பட்டு –
அநேகமான அதி மானுஷ சேஷ்டிதங்களைப் பண்ணி அருளினார் காணும் இவரும் –
இப்படி இறே மகா புருஷர்கள் படி இருப்பது –
கா புருஷர்கள் ஆனால்-உபக்ரமத்திலே அநேக பிரகல்பங்களைச் சொல்லி -கார்ய சமயம் வந்தவாறே –
வருந்தியும் அல்பமாகிலும் செய்ய மாட்டார்கள் -என்றது ஆய்த்து –

என் இடை =என் இடத்தில்
அறம் பொருள் காமம் ஆர் ஆர் இவற்றின் இடை அதனை எய்துவார் மூன்றின் உள்ளே -போல
தானே வந்து கை கொண்டார்.
அரங்கன் உடன் ஆர்த்தான்
தாள் இணை உடன் ஆர்த்தான்
செய்ய தாமரை தாள் இணை வாழியே
அரங்கன்-செய்ய தாள் இணை..எட்டா நிலம் இல்லை-ஏரார் முயல் விட்டு காக்கைபின் போவதே-
திரு கமல பாதம் -செய்ய தாள் இணை- சேர்க்கை-பாவனத்வம் போக்யத்வம்/ உபாய உபேயம் –
அழகிய மணவாளன் உடன் ஆர்த்தான் சம்பத்திதான் விடு பட முடியாமல் ..-இது தான் பெரிய அகடிதகட கார்யம்

——————–

பார்த்தான் அறு சமயங்கள் பதைப்ப–

இலிங்கத் திட்ட புராணத் தீரும் சமணரும் சாக்கியரும்
வலிந்து வாதுசெய்வீர் களும்மற்று நும்தெய்வமு மாகிநின்றான்
மலிந்து செந்நெல் கவரி வீசும் திருக்குரு கூர்அதனுள்
பொலிந்து நின்ற பிரான்கண்டீர் ஒன்றும் பொய்யில்லை போற்றுமினே–4-10-5-

விளம்பும் ஆறு சமயமும்,அவை ஆகியும் மற்றும் தன்பால்
அளந்து காண்டற்கு அரியன் ஆகிய ஆதிப் பிரான் அமரும்
வளங்கொள் தண்பணை சூழ்ந்து அழகு ஆய திருக் குருகூரதனை
உளங்கொள் ஞானத்து வைம்மின் உம்மை உயக் கொண்டு போகுறிலே–4-10-9-

திரியும் கலி யுகம் நீங்கித் தேவர்கள் தாமும் புகுந்து
பெரிய கித யுகம் பற்றிப் பேரின்ப வெள்ளம் பெருகக்
கரிய முகில் வண்ணன் எம்மான் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
இரியப் புகுந்து இசை பாடி எங்கும் இடம் கொண்டனவே–5-2-3-

இடங்கொள் சமயத்தை எல்லாம் எடுத்துக் களைவன போலே
தடங்கடற் பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதங்களே யாய்க்
கிடந்தும் இருந்தும் எழுந்தும் கீதம் பல பல பாடி
நடந்தும் பறந்தும் குனிந்தும் நாடகம் செய்கின்றனவே–5-2-4-

கலியுகம் ஒன்றும் இன்றிக்கே தன்னடியார்க்கு அருள் செய்யும்
மலியும் சுடரொளி மூர்த்தி மாயப் பிரான் கண்ணன் தன்னைக்
கலி வயல் தென்னன் குருகூர்க் காரி மாறன் சடகோபன்
ஒலி புகழ் ஆயிரத்து இப்பத்து உள்ளத்தை மாசறுக்குமே–5-2-11-

அரங்கன் செய்ய தாள் இணையோடு ஆர்த்தான்

என்றும் வானவர் கை தொழும் இணைத் தாமரை யடி எம்பிரான் -பெரிய திருமொழி-1-8-3-
நீடு பனி மலர் மாலை இட்டு நின் இணை யடி தொழுது ஏத்தும் -3-5-5-
ஆழி வண்ண நின்னடி இணை யடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்தம்மானே -5-8-1-
எனக்குமாதல் வேண்டும் என்று அடி இணை யடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்தம்மானே -5-8-2-
கொண்ட சீற்றம் ஓன்று உண்டுளது அறிந்து உன் அடியனேனும் வந்து அடி இணை யடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்தம்மானே -5-8-3
அஞ்சி வந்து நின்னடி இணை யடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்தம்மானே -5-8-4-
மாகமா நிலம் முழுதும் வந்து இறைஞ்சும் மலரடி கண்ட மா மறையாளன் –பொன்னருள் எனக்கும்
ஆகவேண்டும் என்று அடி இணை யடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்தம்மானே -5-8-5-
நின் சரண் எனச் சரணாய்–பின்னை என்றும் நின் திருவடி பிரியா வண்ணம் எண்ணிய பேரருள் எனக்கும்
அன்னதாகும் என்று அடி இணை யடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்தம்மானே -5-8-6
ஆதலால் வந்து உன் அடி இணை யடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்தம்மானே -5-8-7
ஆதலால் வந்து உன் அடி இணை யடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்தம்மானே -5-8-8-
அவ்வரத்த வடி இணையும் அங்கைகளும் பங்கயமே என்கின்றாளால் -8-1-7-

முன்பொலா விராவணன் தன் முது மதிள் இலங்கை வேவித்து அன்பினால் அனுமன் வந்து ஆங்கு
அடி இணை பணிய நின்றார்க்கு -திருக் குறுந்தான்டகம்- -15

எங்குப் போய் உய்கேன் உன் இணை யடியே யடையல் அல்லால்–பெருமாள் திருமொழி —-5-5-

நரங்கலந்த சிங்கமாய் கீண்ட திருவன் அடி இணையே அங்கண் மா ஞாலத்து அமுது -இரண்டாம் திருவந்தாதி –-84-

எந்தை இணை அடிக்கே யாளாய் மறவாது வாழ்த்துக வென்வாய்-17
தாவிய நின் எஞ்சா இணை அடிக்கே ஏழ் பிறப்பும் ஆளாகி அஞ்சாது இருக்க அருள் -18-

அடி இணையை தன்னுடைய அங்கைககளால் தான் தடவ தான் கிடந்தது —பெரிய திருமடல் –

தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாள் இணைக் கீழ் வாழ்ச்சி யான் சேரும் வகை யருளாய் வந்தே -திருவாய்மொழி -3-2-4-
என் பரஞ்சுடரே என்று உன்னை யலற்றி உன் இணைத் தாமரைகட்கு அன்புருகி நிற்கும் அது நிற்கச் சுமடு தந்தாய் -7-1-10-
திருச் செங்குன்றூர் திருச் சிற்றாறு அறிய மெய்மையே நின்ற வெம்பெருமான் அடி இணை அல்லது ஓர் அரணே-8-4-4-

———————–———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-