ஸ்ரீ பெரிய ஜீயர் அருளிய உரை ––அவதாரிகை –
இவர் இப்படி வித்தராகிற இத்தைக் கண்டவர்கள் -இவர் இது செய்திலர் ஆகிலும் –
சேதனர் பிரமாணங்களைக் கொண்டு நிரூபித்து -ஈஸ்வரன் சேஷி-என்று அறியார்களோ -என்ன –
கலியுக பிரயுக்தமான அஞ்ஞான அந்தகாரத்தை ஸ்ரீ எம்பெருமானார் போக்கிற்றிலர் ஆகில்
ஆத்மாவுக்கு சேஷி ஸ்ரீ ஈச்வரனே என்று நிரூபித்து ஒருவரும் அறிவார் இல்லை-என்கிறார் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை–அவதாரிகை–
ஸ்ரீ எம்பெருமானார் வேத உத்தாரணம் பண்ணி அருளினார் என்றும் –
தத் அர்த்த உத்தாரம் பண்ணி அருளினார் என்றும் கீழ் எல்லாம் படியாலும் சொன்னீர் –அவர் இப்படி செய்தார் ஆகிலும் –
பிரமாதக்களான சேதனரும் நித்தியராய் -பிரமாணங்களான வேதமும் நித்தியமாய் இருக்கையாலே –
அவர்கள் அந்த வேதத்தை அடைவே ஓதி -தத் ப்ரதிபாத்யனான நாராயணனே ஆத்மாக்களுக்கு சேஷி என்று தெளிந்து –
உஜ்ஜீவிக்கலாகாதோ என்று சொன்னவர்களைக் குறித்து –
கலி இருளானது லோகம் எல்லாம் வியாபித்து தத்வ யாதாம்ய ஜ்ஞானத்துக்கு பிரதிபந்தகமாயிருக்கையாலே –
ஸ்ரீ எம்பெருமானார் திருவவதரித்து -சகல சாஸ்திரங்களையும் அதிகரித்து -அவற்றினுடைய நிரவதிக தேஜச்சாலே
அந்த கலி பிரயுக்தமான அஞ்ஞான அந்தகாரத்தை ஒட்டிற்றிலர் ஆகில் -ஸ்ரீ நாராயணன் சர்வ சேஷி என்று
இந்த ஜகத்தில் உள்ளோர் ஒருவரும் அறியக் கடவார் இல்லை என்கிறார் –
ஸ்ரீ அமுது விருந்து-ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் ஸ்வாமிகள்-அருளிய உரை–அவதாரிகை-
அத்வைதிகளை இங்கனம் வாதில் வென்றிலர் ஆயினும் -அறிவாளர்கள் பிரமாணங்களைக் கொண்டு –
ஸ்ரீ நாராயணனே ஸ்ரீ ஈஸ்வரன் ஆதலின் உலகமாம் உடலை நியமிக்கும் ஆத்மாவான சேஷி என்று அறிந்து கொள்ள மாட்டார்களோ -என்று
தமது ஈடுபாட்டைக் கண்டு கேட்பாரை நோக்கி –
கலிகால வேதாந்தங்கள் ஆகிய அத்வைதங்களாம் அக இருள் உலகு எங்கும் பரவி உள்ள இக் கலி காலத்தில்
ஸ்ரீ எம்பெருமானார் அவ் விருளைப் போக்கா விடில் –ஆத்மாவுக்கு ஆத்மாவான சேஷி ஸ்ரீ ஈச்வரனே -என்று எவரும்
நிரூபித்து அறிந்து இருக்க மாட்டார்கள்-என்கிறார் .
கடளவாய திசை எட்டினுள்ளும் கலி யிருளே
மிடை தரு காலத்து இராமானுசன் மிக்க நான்மறையின்
சுடர் ஒளியால் அவ் இருளைத் துரந்திலனேல் உயிரை
யுடையவன் நாரணன் என்று அறிவார் இல்லை யுற்று உணர்ந்தே – -59 –
பத உரை
கடல் அளவு ஆய -நாலு புறங்களிலும் கடலை எல்லையாக கொண்ட
திசை எட்டின் உள்ளும் -எட்டு திசைகளிலும் -அதாவது -எல்லா இடங்களிலும்
கலி இருளே -கலி காலத்தில் நேர்ந்த அத்வைத அஞ்ஞானமாம் அக இருளே
மிடை தரு காலத்து -நெருங்கி உள்ள வேளையிலே
இராமானுசன் -ஸ்ரீ எம்பெருமானார்
மிக்க -பிரமாணங்களில் சிறந்த
நான்மறையின் -நான்கு வேதங்களின் உடைய
சுடர் ஒளியால்-சிறப்பு வாய்ந்த பிரகாசத்தினால்
அவ்விருளை-அந்த அக இருளை
துரந்திலன் ஆகில் -ஓட்ட வில்லை யானால்
உயிரை உடையவன் -ஆத்மாவுக்கே சேஷியான ஆத்மாவே இருப்பவன்
நாரணன் என்று -ஸ்ரீ நாராயணன் என்று
கற்று உணர்ந்து -கவனித்து ஆராய்ந்து
அறிவார் இல்லை-தெரிந்து கொள்வார் இல்லை
வியாக்யானம் –
சதுச்சாகர பர்யந்தமான சர்வ திக்குகளிலும் கலி பிரயுக்தமான அஞ்ஞான ரூப தமச்சே நெருங்கி வர்த்திக்கிற காலத்திலே
ஸ்ரீ எம்பெருமானார் -சர்வ பிரமாண உத்க்ருஷ்டமான சதுர் வேதத்தின் உடைய நிரவதிக தேஜச்சாலே –
அந்த தமச்சை ஒட்டிற்று இலர் ஆகில் –
ஆத்மாவுக்கு சேஷி யானவன் –
தன்னை ஒழிந்தது அடங்கலும் தனக்கு பிரகாரமாக -தான் பிரகாரியாய் இருக்கையாலே –
நாராயண – சப்த வாச்யனானவன் என்று கொண்டு -உற்று அனுசந்தித்து -அறியத் தக்கார் இல்லை .
மிடைதல்-நெருங்குதல்
சுடர் என்றும் ஒளி என்றும் பர்யாயமாய் -மீமிசைச் சொல்லாய் -மிக்க ஒளி -என்றபடி –
துரத்தல்-ஒட்டுதல் .
ஞானம் கனிந்த நலம் -பக்தி ரூபாபன்ன ஞானம் -மதி நலம் -மதிக்கடல் -சேமுஷீ பக்தி ரூபம் –
ஞானம் பக்தி வைபவம் இரண்டையும் கொண்டாடுகிறார் –
கலி இருளே -ஏவ காரம் –துக்கமேயாக —
ஆத்மா நாராயண பர –
கலி =தோஷ நிதி – மிக்க நான்மறை -சுடர் ஒளி -விசேஷணன்கள்-உடன் -அருளி –
ஆச்சார்ய தேவோ பாவ -ஞானம் -சாவி கொண்டு திறந்து அவனைக் காட்டி – பதிம் விஸ்வஸ்ய–
உற்று அறிவார் -விசத தமமாக அறிவார் –
கடல் அளவாய திசை எட்டின் உள்ளும் –
சதுஸ் சாகர பர்யந்தமான அஷ்ட திக்குகளின் உடைய ஆந்த்ரமான பிரதேசம் எல்லாம் –
சதுஸ் சமுத்திர முத்ரிமான பூமிப் பரப்பு எல்லாம் என்றபடி –
கலி இருளே-மிடை தரு காலத்து –
கலேர்த்தோஷநிதே -என்னும்படியான -கலி புருஷன் தன்னுடைய ஸ்வ பாவத்தாலே
லோகத்தார் எல்லார்க்கும் ஞான பிரம்சத்தைப் பண்ணி வித்தும் –
சன்மார்க்கத்தை மூலையடியே நடப்பித்தும் –
போருகையாலும் தத் பிரயுக்தமான அஞ்ஞா நத்தாலே நெருங்கி எங்கும் ஒக்க வியாபித்துக் கொண்டு வர்த்திக்கும் காலத்திலே–
கலி சாம்ராஜ்யம் பண்ணுகிற காலத்திலே என்றபடி –
மிடைதல் –
நெருங்குதல்
கடளவாய —மிடை தரு காலத்து
கடல் அளவாய திசை எட்டின் உள்ளும் -கடல் சூழ்ந்த பூ மண்டலம் எங்கும் -என்றபடி-
அங்கே பரவி நெருங்கி நின்றது கலி இருள் .
வானகமாய் இருப்பின் -அல்லது கிருத யுகமாய் இருப்பின் -நாரணனை உயிரை உடையவன்
என்று உற்று உணர்ந்து அறிவார் இருப்பார் .
அங்கன் இன்றி -இருள் தருமமா ஞாலத்தில் –
கலி இருளும் பரவி -நெருங்கி இருத்தலின் -உற்று உணர்வார் இலர் ஆயினர் -என்க –
கலவ் ஜகத்பதிம் விஷ்ணும் சர்வஸ்ரஷ்டார மீச்வரம் நார்ச்ச யிஷ்யந்தி மைத்ரேய பாஷண்டோபஹதா ஜனா -என்று
மைத்ரேயனே-கலி காலத்தில் மத நம்பிக்கை அற்றவர்களால் கெடுக்கப்பட்ட ஜனங்கள் உலகிற்கு சேஷியும்
அனைவரையும் படைப்பவனும் -நியமிப்பவனுமான ஸ்ரீ விஷ்ணுவை வழி படப் போவது இல்லை-என்றபடி .
கலி காலத்தில் இறைவனை உள்ளபடி அறிய மாட்டாத இருள் உடைமை ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் பேசப் பட்டு உள்ளமை -காண்க –
ஸ்ரீ எம்பெருமானார் காட்டி யருளிய பிரதான பிரதி தந்திரமாகிய சரீர -ஆத்மா பாவ ரூபமான சம்பந்தத்தை
அவர் காட்டா விடில் இந்நில உலகில் கலி காலத்தில் எவர் தான் அறிய வல்லார் –
பிரதான பிரதி தந்திரமாவது மற்றையோரிசையாது -நம் மதத்தவரே முக்கியமாக ஏற்கும் பொருளாகும் .
அந்திம யுகே கச்சித் விபச்சித் தம் யதி வித்யாத் -என்று
கடைப்பட்ட யுக காலத்திலே –ஸ்ரீ எம்பெருமானார் அருளிய பிரதான பிரதி தந்திரமான இந்த சரீர ஆத்மா பாவ ரூப
சம்பந்தத்தை ஒரு புலவர் பெருமான் அறிவானே ஆகில் -என்று ஸ்ரீ வேதாந்த தேசிகனும் கலியில் அறிய முடியாமையை காட்டினார் .
அபேதத்தையே பற்றி நின்று -இதனை அறிய மாட்டாத அத்வைதிகளைப் பிரம மீமாம்சகர் என்றார் ஸ்ரீ பராசர பட்டரும் –
கலி யிருளே மிடை தரு காலத்து –சிறிதும் வெளிச்சம் இன்றி இருள் அடர்ந்த காலத்தில்
நிராலோகே லோகே -வெளிச்சம் இல்லாத உலகிலே -என்றார் ஸ்ரீ வேதாந்த தேசிகனும் ஸ்ரீ யதிராஜ சப்ததியிலே
மிடைதரு -துணை வினை
இராமானுசன் –
விண்ணின் தலை நின்றும் மண்ணின் தலத்து உதித்த ஸ்ரீ எம்பெருமானார் –
மிக்க நான் மறையின் –
மிக்க வேதியர் வேதத்தின் உட்-பொருள் -என்றும் –
சுடர்மிகு சுருதியுள் – என்றும் சொல்லுகிறபடியே
சர்வ பிரமாண உத்க்ருஷ்டமாய் -ஸ்ரீ சர்வேச்வரனுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளை அடைவே பிரகாசிக்கக் கடவதாய் –
அபௌருஷமாய் -நித்ய நிர்தோஷமாய் -ரிக் யஜூர் சாம அதர்வண ரூபேண நாலு வகைப்பட்டு இருக்கிற வேதத்தினுடைய –
சுடர் ஒளியால் –
சுடர் மிகு ஸ்ருதியாகையாலே அந்த வேதத்தின் உடைய சுடர் வளர்ந்து
அவைதிக சமயங்களை எல்லாம் நிர்மூலமாக்கி -பின்னையும் மேல் மேல் என ஒளி நெருங்கி வருகையாலே
சுடர் ஒளி -என்று பிரயோக்கிகிறார் –அப்படிப்பட்ட நிரவதிக தேஜச்சாலே –
அவ்விருளை –
அஞ்ஞான திமிராந்தச்ய –
அஞ்ஞானத் வாந்த ரோதாத் -என்கிறபடியே
கலி புருஷனாலே ப்ரவர்த்திக்கப் பட்ட பாபங்களாலே உண்டாய் இருக்கிற அஞ்ஞான அந்தகாரத்தை –
துரந்து இலனேல் –
பிரமாணமும் அநாதியாய் நித்தியமாய் -பிரமாதக்களும் அநாதியாய் நித்தியமாய் -காலமும் அநாதியாய் நித்தியமாய் –
கொண்டு இருந்தாலும் ஒருத்தர் ஆகிலும் வேதார்த்ததை சுயமாகவே தெளிந்து உஜ்ஜீவித்தார் என்று
ஒரு சாஸ்திரமும் சொல்லக் கேட்டதில்லை –
யஸ்ய தேவே பராபக்திர் யதாதே வேததா குரவ தஸ்யை தேகதிதா ஹ்யர்த்தா பிரகாசந்தே மகாத்மன –என்றும்
ஞானா ஞ்ஜனசலாகயா -என்றும்
சஷூ ருன்மீலிதம் எனதச்மைத த்குரவே நம – நாராயணோ பிலிக்ர்தம் யாதிகுரோ பிரச்யுதச்ய துர்ப்புத்தே -என்றும் –
கமலம் ஜலதா பேதம் சோஷயதிரவிர் ந் தோஷயதி – என்று ஸ்ருதி ஸ்ம்ருதி யாதிகளிலே சொல்லப்படுகையாலும் -என்றும்
அனைத்து உயிர்க்கும் ஈரம் செய் நாரணனும்-அன்று தன் ஆரியன் பால் அன்பு ஒழியில் நின்ற புனல் பிரிந்த
பங்கயத்தை பொங்கு சுடர் வெய்யோன் அனல்-உமிழ்ந்து தான் உலர்த்தி யற்று -என்று ஸ்ரீ அருளாள பெருமாள் அருளிச் செய்கையாலும் –
ஸ்வ அபிமானத்தால் ஈஸ்வர அபிமானத்தை குலைத்து கொண்ட இவனுக்கு ஆசார்ய அபிமானம் ஒழிய கதி இல்லை என்று ஸ்ரீ பிள்ளை
பலகாலம் அருளிச் செய்யக் கேட்டிருக்கையாய் இருக்கும் -என்கையாலே –
சும்மனாதே கை விட்டோடி தூறுகள் பாய்ந்தனவே -என்கிறபடி ஓடிப் போம் படி பண்ணுகை அன்றிக்கே –
அவரவர் விதி வழி அடைய நின்றனரே -என்று தடஸ்தனாய் இருந்து கொண்டு அந்த அஞ்ஞான அந்தகாரத்தை
போக்குகைக்கு க்ருஷி பண்ணாதே ஒழிந்தால் –
துரத்தல் -ஒட்டுதல் –
உயிரை உடையவன் நாரணன் என்று –
பதிம் விஸ்வத்யாத்மேச்வரம்-என்றும்
யச்சகிம் கிஜ்ஜகத் யச்மிந்தர்ச்தேச்ய ச்ரூயதேபிவா -அந்தர்பஹிஸ்ஸ-தத் சர்வம் வ்யாப்ய நாராயண ஸ்தித -என்றும் –
நிகரில் புகழாய் உலகம் மூன்று உடையாய் -என்றும்-
ய தண்ட மண்டாந்தர கோசரம் சயத்த சோத்தரான்ய வராணா நியா நிச –
குணம் பிரதானம் புருஷம் பரமம் பதம்-பராத்பரம் பிரம்ம ச தேவி பூதய -என்றும் சொல்லுகிறபடியே
தன்னை ஒழிந்தது அடங்கலும் பிரகாரமாய்-தான் பிரகாரியாய் இருக்கையாலே ஸ்ரீ நாராயண சப்த வாச்யனான ஸ்ரீ சர்வேஸ்வரன்
இந்த த்ரிவித சேதன-வர்க்கத்தையும் தனக்கு சேஷமாக உடையானாய் இருப்பான் என்று –
உற்று –
அத்யவசித்து -விசதமாக தெளிந்து கொண்டு –
அறிவார் இல்லை –
அறியத் தக்கார் இல்லை –
பிபேத் அல்ப்ஸ் ருதாத் வேதொமாமயம் பிரதியிஷ்யதி -என்கையலே-
அத்தாலே ஸ்வரூப நாசமே சித்திக்கும் இத்தனை ஒழிய ஸ்வரூப சித்தி இல்லை என்றது ஆய்த்து –
நிரா லோகே லோகே நிரவதி பர சிநேக பரிதோ யதிஷ்மா பரத்தீ போயதி ந கலு ஜாஜ் வல்யத இஹா –
அஹம்காரத்வாந்தம் விஜயதுகதம் காரமநகா க்ர்தஸ் தத்யா லவ்லகம் குமதிமதபா தாள குஹாம் -என்று
இவ்வர்த்தைத்தை அபியுக்தரும் அருளிச் செய்தார் இறே –
மிக்க நான் மறையின் –துரந்து இலேனேல்
பிரமாணங்களுக்குள் சிறந்தமை பற்றி மிக்க நான் மறை என்றார்
சுடர் ஒளி-மீமிசை என்பது போலே மிகுதியில் இரட்டிப்பு
அளவற்ற நான்மறை அளவை -பிரமாண -ஒளியால்-கலி இருளைத் துரத்தினார் எம்பெருமானார் -என்க .
ஸ்ரீ வேதாந்த தேசிகன் -ஸ்ரீ எம்பெருமானார் ஆகிய ஒளி விளக்கே இருளைத் தொலைத்ததாக –
நிராலோகே லோகே நிருபத்தி பர சிநேக பரிதோ யதிஷ்மாப்ருத் தீப -என்று
வெளிச்சம் அற்ற உலகில் இயல்பாய் அமைந்த இறை பக்தியாம் நெய் நிறைந்த ஸ்ரீ எதிராஜராம்
குன்றில் இட்ட விளக்கு -என்று அருளிச் செய்து இருப்பது இங்கு நினைவுக்கு வருகிறது .
சிறையிலே நள் இருள் கண் -ஞானத்தின் ஒளி உருவான கண்ணன் என்னும் ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கு வந்தது –
வெளிச்சம் அற்ற நில உலகில் கலி இருள் மிடை தரு காலத்தில் -பிரபன்ன குலத்தினில் ஸ்ரீ யதிராஜர் என்னும்
குன்றில் இட்ட-விளக்கு வந்து ஜ்வலித்தது .
நான்மறை -என்றும் இருப்பினும் -அம் மறையின் சுடர் ஒளி -கொண்டு இருளைத் துறக்கும் திறமை
எம்பெருமானார் ஒருவருக்கே உள்ளது என்க –
அவ்விருள் –
அந்த மிடை தந்த கலி இருள் -வெகு தொலைவில் போய் விட்டமை பற்றி- அதனைக் காணாது –அவ்விருள்-என்கிறார் –
தத் இதி பரோஷே விஜா நீயாத் -என்று அது என்னும் சுட்டி கண்ணுக்கு புலப்படாத இடத்தில் கொள்ள வேண்டும் -என்றது காண்க
இனி
மிடை தரும் இருளின் கொடுமை பற்றி -அவ்விருள்-என்கிறார் ஆகவுமாம்-
தேச தோஷத்தலும் -கால தோஷத்தாலும் -நேர்ந்த அறியாமை தொலைந்தது -என்றது ஆயிற்று .
துரந்து இலேனேல் -பிறவினை பொருளில் வந்ததன் வினை
உயிரை உடையவன் –உற்று உணர்ந்தே
உயிர் -ஆத்மா-சாதி ஒருமை
உடையவன் -தனக்கு உடலாக உடையவன்
நாரணன்-ஸ்ரீ நாராயணன் என்னும் வட சொல் சிதைவு
ஸ்ரீ நாராயணன் என்பதன் பொருள் உயிரை உடையவன் என்பது –இனி இதனை விவரிப்போம்
ஸ்ரீ நாராயண என்னும் சொல்
நார அயன என்னும் இரு சொற்கள் இணைந்த தொகைச் சொல்
இதனை நாரங்களுக்கு அயனமாய் உள்ளவன் என்று ஆறாம் வேற்றுமை தொகையாகவும்-தத் புருஷ சமாசம் –
நாரங்களை அயனமாக கொண்டவன் -என்று அன் மொழித் தொகை -பஹூவ்ரீஹி சமாசம் –ஆகவும் கொள்ளலாம்
நார என்பதற்கு ஜீவத்மாக்களின் திரள் என்பது பொருள்.
நரர் -அழிவு இல்லாத ஆத்மாக்கள் -அவற்றின் திரள்கள் நாரங்கள்-
நார சப்தே ஜீவானாம் சமூஹா -பரிகீர்த்யதே -நார என்னும் சொல்லால் ஜீவாத்மாக்களுடைய சமூகம் சொல்லப்படுகிறது -என்பது காண்க .
அயனம்-இடம்
வேற்றுமை தொகையில் ஜீவாத்மாக்களுக்கு இடமாய் -அதாவது -ஆதாரமாய் -இருப்பவன் என்று பொருள் படுகிறது –
என்றும் பிரியாது -ஆதாரமாய் உள்ள சேதனன் ஆத்மா என்ற லஷணத்தின் படி –
நாரங்கள் சரீரம் ஆகவும் -அயனமான பரமன் ஆத்மாவாகவும் ஆகிறான் .
ஒரு பொருளை என்றும் தாங்கி நிற்கும் பொருள் ஆத்மா -என்றும்
அங்கனம் தாங்கப்படும் பொருள் சரீரம் என்றும் முறையே ஆத்மாவுக்கும் சரீரத்துக்கும் லஷனம் உணர்க .
இனி
நாரங்களை அயனமாக கொண்டவன் -என்று அன் மொழித் தொகையாக கொண்டால்-
நாரங்களில் -சுருதிகளில் ஓதியபடி -அந்தர்யாமியாய் இருப்பவன் -என்று பொருள் படுகிறது .
அந்தர்யாமியாய் இருப்பவனே அதாவது உட் புக்கு நியமிப்பவனே ஆத்மா என்ற லஷணத்தின் படி
நாரங்கள் சரீரங்களாயும் -அவற்றை நியமிக்கும் இடமாக கொண்டவன் ஆத்மா ஆகவும் ஆகிறான் .
உட் புக்கு நியமிக்கும் பொருள் ஆத்மா என்றும் அங்கனம்நியமிக்க படும் பொருள் சரீரம் என்றும்
முறையே ஆத்மாவுக்கும் சரீரத்துக்கும் லஷனம் உணர்க
இங்கனம் உயிர்களை உடலாக உடையவன் நாரணம் என்னும் பொருளை எம்பெருமானார் காட்டிலரேல்-
யாரே ஆராய்ந்து அறிய வல்லார் –
இனி உலகில் ஜீவாத்மா தன் பயனுக்காகவே உடலை பயன் படுத்திக் கொள்வது போல
பரமாத்மாவும் தனது போகம் அல்லது லீலை என்னும் பயனுக்காகவே எல்லாப் பொருளையும் உபயோகப் படுத்திக் கொள்வதனால்-
உடலுக்கு ஆத்மா போலே உலகிற்கு ஈஸ்வரன் சேஷி யாகிறான் -என்க .
பயன் உறுவது சேஷி என்றும் பயன் உறுத்துவது சேஷம் என்றும் உணர்க .
ஸ்ரீ ஈஸ்வரனுக்கு உயிர்கள் சேஷமாய் இருத்தலின் -அவன் உகப்பாய் நோக்கி பணி புரிதலே புருஷார்த்தம் ஆயிற்று -என்க –
இவை எல்லாம் ஸ்ரீ எம்பெருமானார் இருளைத் துரந்து காட்ட நாம் கண்டவை -என்க
அறிந்து அறிந்து தேறி தேறி உணர்ந்து உணர்ந்து–உணரிலும் இறை நிலை உணர்வு அரிது-
யாதாத்மா ஞானத்துக்கு கலி பிரதி பந்தம் –எங்கள் மாதவனே பிறந்தும் காணகிலா — பாசுரம்
நிருபாதிகம்-காரணம் இன்றி நிஷ் காரணமாக தான் கொடுக்கிறான் -காரண விசேஷம் இன்னது என்று அறிய மாட்டாத
காரண விசேஷம்- கசண்டு அற்ற நெய்யால் தீபம் ஏறிய – வேத உண்மை பொருளை காட்ட- ஸ்ரீ பாஷ்யம் -அருளி-
சர்வ அதிகாரமாய் சர்வ காலத்திலும் சர்வருக்கும் ஸ்ரீ ஆழ்வார்கள் அருளி செயல் கொண்டே சூத்தரங்களை ஒருங்க விட்டார்–
பன்னலார் பவிலும் பரனே உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே
நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய் நர நாரணனே கரு மா முகில் போல் எந்தாய்
வீடாக்கும் மெய்ப்பொருள் தான் வேத முதல் பொருள் தான் விண்ணவர்க்கு நல் பொருள் தான் நாராயணன்
நாராயணன் என்னை யாளி நரகத்துச் சேராமல் காக்கும் திருமால்
இனி யறிந்தேன் ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம் இனி யறிந்தேன் எம்பெருமான் உன்னை காரணன் நீ
கற்றவை நீ கற்பவை நீ நற்கிரிசை நாரணன் நீ நன்கு அறிந்தேன் நான்
எண் பெருக் கந்நலத்து ஒண் பொருள் ஈறில வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே
அமைவுடை நாரணன் மாயையை அறிபவர் யாரே
நாரணன், முழு ஏழ் உலகுக்கும் நாதன், வேத மயன்,
காரணம் கிரிசை கருமம் இவை முதல்வன், எந்தை
சீரணங்கு அமரர் பிறர் பலரும் தொழுது ஏத்த நின்று
வாரணத்தை மருப்பு ஒசித்த பிரான் என் மாதவனே–2-7-2-
நல்லருள் நம் பெருமான் நாராயணன் நாமங்களே.–5-9-10-
நல் அருள் நம்பெருமான் –
நல்ல அருளையுடையவனாய் நமக்கு ஸ்வாமியாயிருக்குமவன்.
நல்லருளாவது, வாத்சல்யம். வாத்சல்ய ஸ்வாமித்வங்கள், -நல்லருள்-வாத்சல்யம் – நம் பெருமான் -ஸ்வாமித்வம்
நாராயண சப்தார்த்தமாகும்.
அர்த்தத்தை அருளிச் செய்து பின்பு சப்தத்தை அருளிச் செய்கிறார்:
நாராயணன் நாமங்களே –
நாராயண சப்தம், தர்மி நிர்த்தேசம்.ஸ்வரூப நிரூபகமாய்-
நாரங்களுக்கு அயனம் -நாரங்கள் எல்லாம் யாருக்கு அயனமோ – உள்ளும் புறமும் -நியமனம் வியாபகம்
மண்மிசை யோனிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவனே கண்ணுற நிற்கிலும் காணகில்லா உலகோர்கள் எல்லாம்
அண்ணல் இராமானுசன் வந்து தோன்றிய அப்பொழுதே நண்ணரு ஞானம் தலைக் கொண்டு நாரணற்கு ஆயினரே
நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன நாரணனைக் காட்டிய வேதம் களிப்புற்றது தென் குருகை வள்ளல்
வாட்டமிலா வண் தமிழ் மறை வாழ்ந்தது மண்ணுலகில் ஈட்டிய சீலத்து இராமானுசன் தன் இயல்வு கண்டே
மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள்……என் நெஞ்சுள் நிறுத்தினான் (கண்ணினுண் சிறுத்தாம்பு 8-9)
“நன்மையால் மிக்க நான் மறையாளர்கள்” (மதுரகவியாழ்வார்)
மிக்கார் வேதிவிமலர்” (திருவாய்மொழி 2-9-8)
“வேதநூல் ஓதுகின்றது உண்மை அல்லதில்லை மற்று உரைக்கின்றேன் “ என்று திருமழிசைப்பிரான் (72)
சுடர்மிகு சுருதி–“அநாதியானது” “அபௌருஷேயமானது” -எம்பெருமான் வேத விளக்கு
பல இடங்களில் ஆழ்வார்கள் வேதத்தையும் விளக்காகக் கூறுகிறார்கள்.
மறையாய் விரிந்த விளக்கை (8-9-4) வேத நல்விளக்கை (4-3-8) (திருமங்கை மன்னன் )–
வேதாந்த விழுப்பொருளின் மேலிருந்த விளக்கை (பெரியாழ்வார் 4-3-11)
வேதங்களைக் கொண்டு பகவதனுபவம் பண்ணுவதே பூர்ணமானது.
கண்ணா! நான்முகனைப் படைத்தானே!
காரணா! கரியாய்! அடியேன் நான்
உண்ணா நாள் பசியாவதொன்றில்லை
ஓவாதே ‘நமோநாரணா!’ என்று
எண்ணாநாளும் இருக்கெசுச்சாம
வேத நான்மலர் கொண்டுன் பாதம்
நண்ணா நாள் அவை தத்துறு மாகில்
அன்றெ னக்கவை பட்டினி நாளே. (5-1-6)
நமோ நாராயணா -என்றது போராமே -பெரும் திருப் பாவாடையிலே மண்டுகிறார் –
திருமந்தரம் -ஸங்க்ரஹமும் -வேதம் விவரணுமாயும் இறே இருப்பது
பண்ணூறு நான்மறையோர் புதுவை” 1-5-11
முற்ற உலகு எல்லாம் நீயேயாகி –
ஸ்வ வ்யதிரிக்த சமஸ்த வஸ்துக்களும் பிரகாரமாக -தான் பிரகாரியாக இருக்கையாலே –
ஓன்று ஒழியாதபடி சகல லோகங்களும் நீயேயாய் – சர்வம் கல்விதம் பிரம -என்றும் –
புருஷ ஏவேதம் ஸ்ர்வம்-என்னக் கடவது இறே –
மூன்று எழுத்தாய முதல்வனேயோ-
அஷய த்ரயாத்மகமான -பிரணவத்துக்கு வாச்யனாய் கொண்டு -சர்வ காரண பூதனாய் இருக்கிறவனே
மூன்று எழுத்தாய -என்கிற -சாமாநாதி கரண்யம் -வாச்ய வாசக பாவ சம்பந்த நிபந்தனம் –
பிரணவம் தான் -சப்த பிரதான்யத்தாலே -ஜீவ பரமாய் – அர்த்த ப்ராதான்யத்தாலே பகவத்பரமாய் இறே இருப்பது –
ஓங்காரோ பகவான் விஷ்ணு -என்றும் –
ஓம் இத் ஏக அஷரம் பிரம வ்யாஹரந்மா மநுச்மான்-என்றும் சொல்லக் கடவது இறே –
அதில் பிரதம அஷரத்தில் பிரக்ர்த்யம் இறே சர்வ காரணத்வம் –
——————–———————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply