ஸ்ரீ எறும்பியப்பா அருளிச் செய்த தனியன்
ய ஸ்துதிம் யதிபதி பிரசாதிதீம் வ்யாஜஹார யதிராஜ விம்சதிம்
தம் பிரபன்ன ஜன சாதகாம்புதம் தௌமி சௌம்ய வர யோகி புங்கவம் –
பூர்வ தினசரிக்குப் பின்பு-அபிகமன இஜ்ஜயா பின்பு – ஸ்வாத்யாய – சரம பரவம் -இத் தனியனை ஸாதித்து பின்பு உத்தர தினசரி அருளிச் செய்துள்ளார் என்பர்
—————–
யத் உதிதா யதி பூபதி விம்சதிஸ் ஸமவதீரித ஸீது ஸூதா ரஸா
விசத யத் யகிலம் பவி நாம் ஹிதம் வர முனிஸ் ச தநோது ஸூபாநி ந –ஸ்ரீ பிரதி வாத பயங்கர அண்ணா ஸ்வாமிகள் அருளிச் செய்த ஸ்ரீ வர வர முனி சதகம் -81-
எவரால் அருளிச் செய்யப் பட்டதும் -இனிமையில் தேன் அம்ருதம் இவற்றைத் தோற்கடிப்பதுமான
யதிராஜ விம்சதி என்ற ஸ்தோத்ரம் சம்சாரிகளுக்கு ஓன்று விடாமல் எல்லா நன்மைகளையும்
தெளிவு படுத்துகிறதோ அந்த மா முனிகள் நமக்கு மங்களங்களை வளர்த்து அருளட்டும் –
——————-
மஹா யோகீ வக்தா அநிதர குண சாமான்ய மஹிமா
ச து ஸ்துத்ய ஸ்ரீ மான் அமித குண பூமா யதிபதி
அதோ நிஸ் துல்யா யா யதி நரபதேர் விம்சதி ரிதி
வியவஸ் யந்தஸ் சந்த கலி மிஹ ஜயந்த் யுஜ்ஜ்வலதி ய–82-
யதிராஜ விம்சதியை இயற்றி அருளிய மா முனிகள் மற்றவர்களுக்குப் பொருந்தாத மஹிமை மிக்க
குணங்களை உடையவர் ஆவார் –
ஸ்துதிக்கு விஷயமாக இருப்பவரோ பிராட்டியின் கிருபையைப் பெற்றவரும் அளவற்ற குணங்களுக்கு இருப்பிடமானவரும்
யதிகளுக்கும் ஸ்வாமியுமான -உத்தாரக ஆச்சார்யரான -எம்பெருமானார் –
ஆகையால் இந்த யதிராஜ விம்சதி ஒப்பற்றது என்று உறுதி கொண்ட ஒளி மிக்க ஸ்ரீ யை உடைய
விலக்ஷண அதிகாரிகள் இங்கு கலியை வெல்கிறார்கள் –
————-
த்ராஷாமதி ஷிபதி நிந்ததி மாகரந்த தாராம் ஸூதா ரஸ
ஜரீ மதரீ கரோதி யத் ஸம் ப்ரணீத மது லம் யதி ஸார்வ பவ்ம
ஸ்தோத்ரம் ச மே வர முனிர் வித நோ து பத்ரம் –83-
எந்த மா முனிகள் அருளிச் செய்த ஒப்பற்ற யதிராஜா விம்சதியானது த்ராக்ஷையைத் தோற்படிப்பதாய்
தேன் தாரையைப் பழிப்பதாய் அம்ருத ரஸ ப்ரவாஹத்தை தாழ்வுறச் செய்கிறதாய்
நன்கு அருளிச் செய்யப் பட்டதோ அந்த யதீந்த்ர ப்ரவணரான மா முனிகள்
அடியேனுக்கு அருளத் திரு உள்ளம் பற்ற வேண்டும் –
————-
ஸ்ரீ மத் ரெங்க ஸூதாபிதா நக ஸூத் யர்த்த அநு சந்த உஜ்ஜ்வலா
கோதா உதார வச ப்ரதர்ஸித குரு உபாயத்வ நிஷ்ட ஆஸ்ரயா
யத் ஸூக்திர் யதிராஜ விம்சதி நுதி வேதாந்த ஸிந்தோஸ் ஸூதா
ஸ்ரீ மத் ரம்ய வராய ஸம்யமவதாம் நாதாய தஸ்மை நம –84-
திருவரங்கத்து அமுதனார் என்னும் திரு நாமத்தை உடைய கவியினுடைய ராமானுஜ நூற்று அந்தாதியின்
அர்த்தத்தை அனுசந்தித்த சிறப்பை உடைத்தாய்
ஸ்ரீ கோதா தேவியின் உதார வாக்கான நாச்சியார் திரு மொழியில் காட்டி அருள பெற்ற
ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் என்ற நிஷ்டையை ஏற்பதாய் -வேதாந்த பாற் கடலில் இருந்து
கடைந்து எடுத்த அமுதம் போன்றதாய் விளங்கும் யதிராஜ விம்சதி என்னும் ஸ்தோத்ர கிரந்தம் அருளிச் செய்து
அருளிய இந்த்ரியங்களில் அடக்கியவர்களில் ஸ்ரேஷ்டரான அந்த மா முனிகளுக்கு நமஸ்காரம் –
அடியேனுடைய ப்ரணாமங்களை சமர்ப்பிக்கிறேன் –
————–
திருமழிசை அண்ணா ஸ்வாமிகளும் சமஸ்க்ருத வியாக்யானம் செய்துள்ளார்
பஞ்சகால பாராயணம்-ஸ்வ ஆச்சார்யர் வரவர முனி அனுஷ்டானம் அனுபவித்து எறும்பி அப்பா
அபிகமன உபாதான இஜ்ஜயா ஸூ -க்ரமமாக -பூர்வ தினசரி அருளிச் செய்து 18 நாழிகை கழிந்த பின்பு
அடுத்த கடைசி இரண்டும் –ஸ்வாத்யாயம் யோகம்
ஸ்வாத்தியாயம் காலத்தில் பூர்வர்கள் -வியாக்யானம் செய்து -எழுதி -கிரந்த நிர்மாணம் செய்து -சிஷ்யர்களுக்கு
ஸ்ரீ வசன பூஷணம் –வாக்யங்களால் அலங்கரிக்கப்பட்ட வாக்கியம் -வியாக்யானம் கிரந்த நிர்மாணம் -தனது அதிகார அனுரூபமாக -சரம உபாய நிஷ்டைக்கு -அனுரூபமாக யதீந்த்ர ப்ரபாவம் செய்யவே யதிராஜ விம்சதி அருளிச் செய்து
வசன ஸ்ரவணம் கேட்டு கடாக்ஷம் பெற்று ஆணைக்கு எதிர்பார்த்து இருக்கும் சிஷ்யரான எறும்பி அப்பா –
ஆனந்தம் அடைந்து –உத்தர தினசரி முதல் ஸ்லோகம் இதி ஆரம்பித்து
என்றாய் தொடங்கி -யதி குல பதியைப் போற்றி ஆரம்பிக்கிறார்
இதி சப்தத்தால் யதிராஜ விம்சதி குறிப்படுகிறது -என்கிறார்
(தத ஸூபாஸ்ரயே தஸ்மிந் நிமக்நம் நிப்ருதம் மன யதீந்த்ர ப்ரவணம் கர்த்தும் யதமானம் நமாமி தம் –பூர்வ தினசர்யா 32-
யோக அப்யாஸத்திற்குப் பிறகு அந்த ஸூபாஸ்ரய வஸ்துவில் லயித்து நிச்சயமாய் இருக்கின்ற திரு உள்ளத்தை மீட்டு
எம்பெருமானார் இடத்தில் ஊன்ற வைப்பதற்கு முயற்சி செய்து அருளா நின்ற அந்த மணவாள மா முனிகளைத் தொழுகின்றேன் –
ஹேய ப்ரத்ய நீகத்வே சதி சித்த ஆகர்ஷகத்வம் ஸூபாஸ்ரயத்வம் –ஸூபாஸ்ரய லக்ஷணம் –யதீந்த்ர சரண த்வந்த்வ ப்ரவனே நைவ சேதஸா –16-என்றாரே கீழே -யதீந்த்ர பிரவணர் என்றே நிரூபகம்
இடையில் – புருஷே புஷ்கரேஷனே சேதஸ் சமாதானம் -30-ப்ராப்தமான படியால் அந்த நிலையில் நின்றும் மீண்டும் பழைய படியே-யதீந்த்ர பிரவண ஹ்ருதயரானமை சொல்லிற்று ஆயிற்று –
எம்பெருமானார் திருவடிகளான ஸ்ரீ வைஷ்ணவர்களோடு கலந்து பரிமாறப்ப புகுந்த படியை மேலே உத்தர தினசரியைக்கு அவதாரிகை போலே அருளிச் செய்தபடி
அபராஹ்நத்தில் ஸ்ரீ வசன பூஷணாதி திவ்யாக்ரந்த காலஷேபம் அடுத்தபடியாக அருளிச் செய்யப்படுகிறது அன்றோ- -அதற்கு இந்த ஸ்லோகம் அவதரணிகை போலும்
உத்தர தின சர்யா — பிரவேசம்
இதி யதிகுல துர்ய மேதமாநை ஸ்ருதி மதுரை ருதிதை ப்ரஹர்ஷயந்தம் வர வர முனி மேவ சிந்த யந்தீ மதிரிய மேதி நிரத்யயம் பிரசாதம் —
இத்தால் யதிராஜ விம்சதியின் அனுசந்தானம் தெரிவிக்கப் பட்டதாயிற்று –இவ்விதமாக செவிக்கு இனிய செஞ்சொற்கள் நிறைந்த ஸ்துதியினால்
எம்பெருமானாரை ஸ்துதித்து திரு உள்ளம் உகந்து அருளா நின்ற மா முனிகளையே சிந்தனை செய்யும் என் மதியானது நிகரற்ற தெளிவு பெற்று விளங்குகின்றது –
(நம்மை ஆளவந்த கற்பகமே” இவர் எனில் குறைவில்லை.-
எம்பெருமானரின் குணாம்ருதசாகரத்தை ,தான் மட்டுமே பருக வொண்ணாது, அடியார்களும் இன்புற வேண்டி , யதிராஜ விம்ஸதி எனும் இச்சதகத்தை , த்வயத்தின் பூர்வ பாகமாகவும் ,ஆர்த்தி பிரபந்தத்தையும், உத்தரபாகமாவும் போக்கு வீடாக வெளியிட்டருளினார்!!)
———-
பிரவேசம்(ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர்)
தொண்டர்க்கு அமுது உண்ணச் சொல் மாலைகள் சொன்னேன் -என்கிறபடியே பூஸூரர்களான ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு போக்யமாக திருவதரித்த ஸ்ரீ திருவாய் மொழியிலே அவகாஹித்து
அதில் சாஸ்த்ரார்த்த ரசம் -(ஸப்த ரசமும் அர்த்த ரசமும்-)பாவ ரசம் இவற்றை அனுபவித்து -தத் ஏக நிஷ்டராய் -தத் வ்யதிரிக்த சாஸ்திரங்களை த்ருணவத் பிரதிபத்தி பண்ணி இருக்கையாலே- ஸ்ரீ திருவாய் மொழி அமுத தாத்பர்ய அர்த்தத்தையே தமக்கு நிரூபகமாக உடையராய்
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளில் கைங்கர்யமே அநவரதம் செய்து கொண்டு போரும் ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை ஸ்ரீ திருப் பாதத்தில் ஆஸ்ரயித்து
ஸ்ரீ திராவிட வேத அங்க உப அங்கங்களான ஸமஸ்த திவ்ய பிரபந்த தாத்பர்யங்களையும் அவர் உபதேசத்தால் லபித்து
மிக்க வேதியர் வேதத்தின் உள் பொருளான சரம பர்வத்தில் நிஷ்டராய்
சேஷித்வ சரண்யத்வ ப்ராப்யத்வங்கள் மூன்றும் ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை இடம் அன்வயித்து தத் ஏக நிஷ்டராய் எழுந்து அருளி இருக்கிற ஸ்ரீ ஜீயரை
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை தாமே உகந்து ஸ்ரீ உடையவர் திருவடிகளில் காட்டிக் கொடுக்கையாலே
அவர் திருவடிகளில் மிகவும் பிரவணராய் தத் குண சேஷ்டிதங்களைப் பேசி அனுபவிக்கும் படியான தசை பிறந்து தத் வைபவத்தைப் பேசுகிற இவர்-சரம உபாய நிஷ்டரான சரம அதிகாரிகளுக்கு அநவரதம் அநுசந்தேயங்களான சரம அர்த்தங்களை இப் பிரபந்த முகேந வெளியிடா நின்று கொண்டு
ஸ்வ அபேக்ஷிதங்களையும் அவர் திருவடிகளில் அபேக்ஷித்துத் தலைக் கட்டுகிறார் –
(யதிராஜ விம்சதி முழுவதும் -தனக்கு அபேக்ஷிதங்களை அருளிச் செய்து -அதன் மூலம் நமக்கு உணர்த்துகிறார்
தொழுது எழு என் மனனே -என்று நம்மாழ்வார் காட்டி அருளிய படியே மா முனிகளும் -மதுரமாக அருளிச் செய்கிறார்)
(மதுரேண ஸமாப்த்தம் -நம் பூர்வர் பரம்பரை -ஸ்வாமி உடன் முடியுமே_
———
பிரவேசம்(ஸ்ரீ ஸூத்த சத்வம் ஸ்ரீ தொட்டாசார்ய ஸ்வாமிகள்)
ஸ்ரீ யபதியாய் -பரம காருணிகரான-ஸ்ரீ சர்வேஸ்வரன் அந்தமில் பேரின்பமான த்ரிபாத் விபூதியிலே
ஸ்ரீ வைகுண்டாக்ய திவ்ய நகரத்திலே சஹஸ்ர ஸ்தம்ப சோபிதமான ஸ்ரீ திரு மா மணி மண்டபத்திலே –
சஹஸ்ர பணா மண்டல மண்டிதமான ஸ்ரீ திரு வனந்த ஆழ்வான் ஆகிற கோப்புடைய சீரிய சிங்காசனத்திலே –
திருமகள் மண்மகள் ஆயர் மட மகள் -திருவாய் -1-9-4 –ஸ்ரீ லஷ்மீ பூமி நீளா சமேதனாய்
ஏழ் உலகும் தனிக்கோல் செல்ல வீற்று இருந்து
க்ருஹீத்ய அனந்த பரிசார சாதநைர்தி ஷேவ்யமாணாம் சசிவைர்ய சோசிதம்-(ஸ்தோத்ர ரத்னம் )என்கிறபடியே
சத்ர சாமர தாஸ வ்ருத்தாத்ய ஏக கைங்கர்ய உபகரண சோபித ஹஸ்தரான-அயர்வறும் அமரர்களாலே
அனவரத பரிசர்யமாண சரண விதனாய்க் கொண்டு –
ஏதத் சாம காயத் நாஸ்தே -தைத்ரியம்
சாம வேத கீதனாய –திருச் சந்த -14-
தன்னை இன் கவி பாடின ஈசனை -திருவாய் -7-9-1- என்றும்
யானாய் தன்னைத் தான் பாடி தென்னா வென்னும் என்னம்மான் -திருவாய் -10-7-5-என்கிறபடியே
சஹஸ்ர சாக உபநிஷத் மயமான திருவாய் மொழி கேட்டு அருளா நிற்க(திருவாய் மொழியும் அங்கும் உண்டே -ஆகவே வேதம் போல் அருளிச் செயல்களும் நித்யம் )
ச ஏகாகி ந ரமேதே -மஹா உபநிஷத்-என்றும்
ஆற்றல் மிக்காளும்-4-5-4-
ந அதி ஸ்வஸ்த மகா -என்கிறபடியே
தேசாந்தர கதனான புத்ரன் இடத்தில் பித்ரு ஹிருதயம் செல்லுமா போலே சம்சாரி சேதனன் இடத்தில் திரு உள்ளம் குடி புகுந்து
உண்டது உருக்காட்டாதே சம்பந்தம் ஒத்து இருக்க இவர்கள் இவ்வனுபவத்தை இழந்து இருக்கிறது
தம் தாமை யறியாமையால் யன்றோ-என்று -போர நொந்து-திரு உள்ளம் இரங்கி
இனியாகிலும் இவர்கள் உஜ்ஜீவிக்கும் விரகு யாம்படி என்-என்று விசாரித்து
சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமும் –
நிவாசாய சய்யா ஆசன பாதுகா -இத்யாதிப்படியே
தம் திருவடிகளிலே ஒழிவில் காலத்தில் படியே எல்லா அடிமைகளும் தாம் ஒருவருமே செய்வதாகப் பாரித்துக் கொண்டு இருக்கிற
ஸ்ரீ திரு வனந்த ஆழ்வானைக் கடாஷித்து அருள
அவனும் ததஸ் தத் இங்கிதம் தஸ்ய ஜாதன் நேஷம் ஜகத்திதே -என்றும்
தஸ்மின் தாம்நி சடாராதே புரே புநராவாத் (யதீந்த்ர ப்ரவண பிரபாவம்)–(ஆழ்வார் திருவவதரித்த அதே திவ்ய தேசத்தில் ஆதி சேஷனே ராமானுஜர் அவதரித்த பின்பு மீண்டும் அவதரித்த மா முனிகள் )பூத்வோ பூயோவர வர முனிர் யோகி நாம் சார்வ பௌம–(ஸ்ரீ சைலேச அஷ்டகம் )என்கிறபடியே
பாவஜ்ஞ்ஞன் ஆகையாலே
சம்சாரிகள் இருக்கும் இவ்விடத்திலேயே ஸ்ரீ மாறன் மறை பயிலுமவர் ஆகையாலே
ஸ்ரீ ஆழ்வார் திருவவதார ஸ்தலமான ஸ்ரீ திரு நகரியிலே ஸ்ரீ அழகிய மணவாள மா முநிகளாய் திருவவதரித்து
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை சீர் அருளாலே யதிவர தத்த்வ வித் தமராய் சம்சாரிகள் துர்கதியைக் கண்டு திரு உள்ளம் இரங்கி
இவர்கள் ரஷ்யம் அபேஷம் ப்ரதீஷதே (லஷ்மி தந்திரம் -சம்சாரிகள் பரார்த்த பின்பு ரக்ஷிக்கிறேன் -ஸர்வ முக்தி பிரசங்கம் வாராமைக்காக )-என்கிறபடியே
ரஷ்ய அபேஷ ப்ரதீஷரான பகவத் விஷயத்துக்கு ஆளாகாமையைத் திரு உள்ளம் பற்றி
இனி இவர்களுக்கு காரேய் கருணை இராமானுசா -25-என்கிறபடியே
கிருபா மாத்ர பிரசன்னாசார்யாரான ஸ்ரீ எம்பெருமானார் சம்பந்தம் இன்றி
மற்று ஒரு உஜ்ஜீவன உபாயம் இல்லை என்று அறுதியிட்டு
உபதேசாதிகளாலே அறிவிக்கப் பார்க்கில் ஸ்வ உத்கர்ஷாதிகளையிட்டு அத்யவசிப்பார்கள் அன்று
யத் யதாசரதி ஸ்ரேஷ்ட –(கீதை )என்கிற நியாயத்தை திரு உள்ளம் பற்றி ஸ்வ அனுஷ்டானத்தாலே
திருத்தப் பார்க்கிறார் இப்பிரபந்தத்தில்(கத்ய த்ரயமும் ஸ்வ அனுஷ்டான கிரந்தம் தானே )
அனுசந்தித்தார் விஷயத்தில் ஸ்ரீ எம்பெருமானார்க்கு கிருபை பண்ணி யல்லது நிற்க ஒண்ணாத படியான
இப் பிரபந்தத்தை அருளிச் செய்கிறார் என்னவுமாம் –
ஸ்ரீ எம்பெருமானாருடைய உபாயத்வமாய்த்து பிரதிபாதிக்கப் படுகிறது உபக்கிரம உபசம்ஹாரங்களில்
அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வக இஷ்ட பிராபகத்வம் பர்யந்தமாகத் தோற்றுகையாலே-
எங்கனே என்னில் –
உபக்ரமத்தில் –
ஸ்ரீ மாதவாங்கரி ஜல ஜத்வய நித்ய சேவா -பிரேம ஆவிலாசய பராங்குச பாத பக்தம் -என்று ததீய பர்யந்தமான
பகவத் கைங்கர்யத்தை பிரசக்தி பண்ணி –
மேல்
காமாதி தோஷ ஹர மாத்ம பதார்ஸ்ரிதா நாம் -என்று
தத் விருத்தங்களான காமாதி தோஷங்களுக்கு நிவாரகர் என்கையாலும்-
முடிவில் –
தாமன்வஹம் மம விவர்த்தய நாத தஸ்யா காமம் விருத்த மகிலஞ்ச நிவர்த்தய த்வம்–என்கையாலும்
உபாயம் ஸ்ரீ எம்பெருமானாரே -என்கிறது(ஆர்த்தி பிரபந்தம் எம்பெருமானாரே உபேயம் )
ஸ்ரீ த்வயத்தில் பூர்வ உத்தர கண்டங்களாலே உபாய உபேயங்களுடைய ஐக்யம் சொல்லப் படா நிற்க -இங்கு
உபாயம் ஸ்ரீ எம்பெருமானாரும் உபேயம் ஸ்ரீ எம்பெருமான் என்கையும் சேருமோ என்னில் சேரும்
அங்கும் திருவடிகளை உபாயமாகவும் ஸ்ரீ யபதியை உபேயமாகவும் சொல்லிற்று இறே-
அங்கு திருவடிகள் அநந்யங்கள் யன்றோ என்னில் –
இவர் தாமும் திருவடிகள் ஆகையாலே -அநந்யராகக் குறையில்லை -ஆகையாலே இறே –
விஷ்ணுஸ் சேஷதீ –என்று ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளியதாக
ஸ்ரீ வைஷ்ணவ சமயாசார நிஷ்கர்ஷத்தில் எடுக்கப் பட்ட ஸ்லோஹம் திருவவதரித்தது
அன்றிக்கே
இவர் தாமே உபாயமும் உபேயமாகவும் -ஐக்யம் என்னவுமாம்
சரம உபாய உபேயங்கள்-பிரதம உபாய உபேயங்களுக்கு சேஷங்கள் ஆகையாலே பிரபத்தி சாஸ்திர விரோதம் இல்லை
இனி உபாயத்துக்கு வேண்டுவது
1-விஷய பூர்த்தியும் –
2-அபராத பூயஸ்தவமும் –
3-ஆகிஞ்சன்யமும் –
4-அநந்ய கதித்வமும் –
5-உபாய உபேய பிராத்தனையும் ஆகையாலே
1-அதில் முதல் இரண்டு ஸ்லோஹத்தாலே விஷய பூர்த்தியையும் –
2-மேல் ஸ்லோஹ த்ரயத்தாலே (3-4-5)பிராப்ய பிரார்த்தனையும் –
3-மேல் ஸ்லோஹ சப்தகங்களாலே (6-7-8-9-10-11-12-)தம்முடைய ஆகிஞ்சன்யத்தையும் -தம்முடைய தோஷ பூயஸ்தவத்தையும்-
4-மேல் ஒரு ஸ்லோஹத்தாலே (13)விரோதி நிவ்ருத்தி பிரார்த்தனையையும் –
5-மேல் இரண்டு ஸ்லோகங்களாலே (14-15)தம்முடைய அநந்ய கதித்வத்தையும் –
6-மேல் ஒரு ஸ்லோஹத்தாலே (16)விரோதி நிவ்ருத்தி பூர்வக பிராப்ய சரமாவதி பிரார்த்தனையையும் –
7-மேல் ஒரு ஸ்லோஹத்தாலே (17)அத்தலையில் கார்யகரத்வ உபயோகியான சக்தி விசேஷத்தையும் –
8-மேல் ஒரு ஸ்லோஹத்தாலே (18)எம்பெருமானாருடைய ஸ்வ சம்பந்தி பரம்பரா விஷயமாக பிரவ்ருத்தமான
பகவத் ஏக உபாயத்வ பிரார்த்தனையே தத் சம்பந்திகளுக்கு ரஷகம் என்னுமத்தையும் –
9-மேல் ஒரு ஸ்லோஹத்தாலே (19)ஆச்சார்ய ருசி பரிக்ரக்ருஹீத மாமதுவே தத் சம்பந்திகளுக்கு பிராப்யம் என்னுமத்தையும் அருளிச் செய்து –
10-நிகமத்தில் (20)அடியேனுடைய அஜ்ஞாநாதிகளைக் கடாஷித்து இவன் அநந்ய கதிகன் என்று திரு உள்ளம் பற்றி
இப்பிரபந்த ரூபமான அடியேன் விண்ணப்பத்தை அங்கீ கரித்து அருள வேணும் என்று விண்ணப்பம் செய்து தலைக் கட்டுகிறார் –
இதில் பிரதி ஸ்லோஹமும்-ஸ்ரீ எம்பெருமானாரை –ஸ்ரீ யதிராஜ -ஸ்ரீ யதீந்திர –என்று சம்போதிக்கிறது-
யதத் இதி -யச்சதீதி யதி -என்கிற வ்யுத்பத்தி த்வயத்தாலும் சொல்லப் படுகிற
(யதத் இதி)ஸ்ரீ ப்ரஹ்ம பிராப்தி ப்ரயத்தனமும் -(யச்சதீதி யதி) இதர விஷய வைராக்யமுமே இவருக்கு பிராப்ய ஹேதுவாகையாலே என்றாதல்
ஸ்வார்த்த பிரயத்யத்தையும் இதர விஷயத்தோடு சேர்த்து அதில் நின்றும் வ்யாவ்ருத்தராய் பரார்த்த ஏக பிரயத்தராய் இருக்குமதுவே தத் சம்பந்திகளுக்கு பற்றாசு என்று இருக்குமவர் யாகையாலே என்றாதல் –
இதுவே இங்குத்தைக்கு அசாதாரணமான குணம் –
ஸ்ரீ திருவாய் மொழி நூற்றந்தாதி ஸ்ரீ திருவாய் மொழிக்கு சங்க்ரஹமாம் போலேயும் –
ஸ்ரீ உபதேச ரத்ன மாலை ஸ்ரீ குரு பரம்பரா சங்க்ரஹமாம் போலேயும்-
இப் பிரபந்தம் ஸ்ரீ பிரபன்ன காயத்ரி சங்க்ரஹமாக இருக்கும் –
———–————
ஸ்ரீமத் ரங்கம் ஜயது பரமம் தாம தேஜோ நிதாநம் |
பூமா தஸ்மிந் பவது குசலீ கோபி பூமா ஸஹாய: ||
திவ்யம் தஸ்மை திசது பகவந் தேசிகோ தேசிகாநாம் |
காலே காலே வரவரமுநி: கல்பயந் மங்கலானி || -ஸ்ரீ எறும்பி அப்பா அருளிச் செய்த ஸ்ரீ வர வர முனி சதகம் –8-
மங்களா ஸாஸன ஸ்லோகம் இது
பூமா – உபநிஷத் சொல்லும் – அதிசய ஆனந்த குணக்கடல்
பூமா ஸஹாயா -ஸ்ரீ தேவி ஸ்ரீ பூமா தேவிமார்கள் உடன் –
அடியார்கள் வாழ அருளிச் செயல் வாழ குரவர் வாழ
வியாக்யானம் வாழ -அரங்க நகர் வாழ -மணவாள மா முனியே -நீர் நூற்று ஆண்டு இரும்
ஒளிக்கு நிதி போன்ற சிறந்த தலமான செல்வமுள்ள ஸ்ரீரங்க நகரம் விளங்க வேண்டும்.
அதில் ஒளிகளுக்கெல்லாம் ஒளி(யான எம்பெருமான்) க்ஷேமமாக வாழ வேண்டும்.
ஆசார்யர்களுக்கு ஆசார்யரான மணவாள மாமுனிகள் காலந்தோறும் மங்களங்களைச் செய்து கொண்டு அவருக்கு ஓர் ஒளியை அளிக்க வேண்டும்.
——
இதில் முதல் ஸ்லோகத்தாலே
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளில் ப்ரேம புஷ்கல்யத்தையும்-
ஸ்வ அபிமான அந்தர் ஹுதருடைய ஸ்வ பாவங்களைப் போக்கி ரஷிக்கும் படியையும் பேசா நின்று கொண்டு
தொடங்கின ஸ்தோத்ரம் தடையற நடக்கத் தக்கதாக ஸ்ரீ உடையவர் திருவடிகளில் விழுகிறார்-
ஸ்ரீ எம்பெருமானாருடைய1- ஜ்ஞான பூர்த்தியையும் -(பராங்குச பாத பக்தம் – -ஞான விசேஷம் பக்தி அன்றோ -பகவத் லாபாரத்தி ஞானி கீதையிலும் உண்டே )
2-அதினுடைய சம்ப்ரதாய ப்ராப்தியையும் –(பெருமாள் தாயார் விஷ்வக்சேனர் ஆழ்வார் -ஆழ்வார் திருவடி -குரு பரம்பரை )
3-அத்தால் இவர் பெற்ற நன்மையையும் அருளிச் செய்யா நின்று கொண்டு –
ப்ராரீப்சித(ஆரம்பிக்கப்பட்ட )க்ரந்த பரிசமாப்த்யர்த்தம் ஸ்ரீ ஆசார்ய அபிவாத ரூப மங்களத்தை செய்து அருளுகிறார் –(பல்லாண்டு -போற்றி- ஜிதந்தே -தோற்றோம் -நம-எல்லாமே மங்களா சாசனம் )
ஸ்ரீ மாதவங்க்ரி ஜலஜ த்வய நித்ய சேவா
பிரேம ஆவிசாஸய பராங்குஸ பாத பக்தம்
காமாதி தோஷ ஹர ஆத்ம பத ஆஸ்ரிதாநாம்
ராமாநுஜம் யதி பதிம் ப்ரணமாமி மூர்த்நா —-1-
ஸ்ரீ மாதவ அங்க்ரி ஜலஜ த்வய – எல்லாவற்றாலுமுண்டான பெருமையை உடையவளான ஸ்ரீமஹாலக்ஷ்மி போன்றவனாகிய திருவின் மணாளனுடைய தாமரை மலர் போன்ற திருவடியிணையில் செய்யத்தக்க,
நித்ய ஸேவா – ப்ரேம ஆவில ஆஸய – நித்ய கைங்கர்யத்தில் அதிக ப்ரீதியாலே கலங்கிய அறிவையுடைய,
பராங்குஸ பாத பக்தம் – பராங்குஸரென்னும் நம்மாழ்வாருடைய திருவடிகளில் பரமபக்தி பூண்டவரும்,
ஆத்ம பத ஆஸ்ரிதாநாம் – தம்முடைய திருவடிகளை அடைந்தவர்களுடைய,
காம ஆதி தோஷ ஹரம் – காமம் முதலிய குற்றங்களைப் போக்கடிப்பவரும்,
யதி பதிம் – பொறிகளை யடக்கிய துறவிகளுக்குத் தலைவருமான,
ராமாநுஜம் – ராமாநுஜரென்னும் எம்பெருமானாரை,
மூர்த்நா – தலையால்,
ப்ரணமாமி – வணங்குகிறேன்.
மிதுனத்தில் ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை ரசத்தில் மையல் ஏறிய
ஹ்ருதய கமலத்தை உடைய ஸ்ரீ பராங்குசன் திரு அடிகளை நிரந்தரம் பிரீதி சேவை செய்பவரும்
தம்முடைய திரு அடிகளை அடைந்தவரின் காமம் போன்ற தோஷங்களை நீக்குபவருமான
யதிகட்க்கு இறைவன் ஸ்ரீ ராமானுசனை தலையால் வணங்குகிறேன் ..
(ஸ்ரீ மாதவங்க்ரி ஜலஜ த்வய நித்ய சேவா பிரேம ஆவிசாஸய பராங்குஸ
பராங்குஸ பாத பக்தம் காமாதி தோஷ ஹர ஆத்ம பத ஆஸ்ரிதாநாம் ராமாநுஜம் யதி பதிம்
ராமாநுஜம் யதி பதிம் ப்ரணமாமி மூர்த்நா
பூ மன்னு மாது
மாது பொருந்திய மார்பன்
மார்பன் புகழ் மலிந்த பா
பா மன்னு மாறன்
மாறன் அடி பணிந் துய்ந் தவன் பல் கலையோர் தாம் மன்ன வந்த இராம னுசன்
இராம னுசன் சரணாரவிந்தம் நாம் மன்னி வாழ நெஞ்சே! சொல்லு வோமவன் நாமங்களே.)
ஸ்ரீ மாதவங்க்ரி ஜலஜ த்வய நித்ய சேவா
திருமாலே நானும் உனக்குப் பழ வடியேன்-என்கிறபடியே மிதுன சேஷத்வமே ஸ்வரூபம் ஆகையால்
ஸ்வரூப அனுரூபமான புருஷார்த்தமும் மிதுன விஷய கைங்கர்யமாகவே இருக்கும் –
திருமாற்கு அரவு –சென்றால் குடையாம்-என்று நித்ய ஸூரிகளில் தலைவரான ஸ்ரீ திருவனந்த வாழ்வான்
அவனும் அவளுமான சேர்த்தியிலே கிஞ்சித்க் கரிக்கும் என்று சொல்லிற்று –
அந்த கருந்தலையில் வாசனையால் இறே-தொடர்ந்து குற்றேவல் செய்யப் போந்த இடத்திலும் –
பாவாம்ஸ்து சக வைதேஹ்யா-என்றும்
அஹம் சர்வம் கரிஷ்யாமி என்றும் அவர் அவரைப் பார்த்து பிரார்த்தித்தது
அப்படியே ஸ்ரீ ஆழ்வாரும் –
அடிமை செய்வார் திருமாலுக்கே என்றும்
கோலத் திரு மா மகளோடு உன்னைக் கூட என்றும்
மிதுனமே கைங்கர்ய பிரதி சம்பந்தியாக அருளிச் செய்தார் இறே
பிரேம ஆவிசாஸய பராங்குஸ பாத பக்தம்
ஆகையால் ஸ்ரீ யபதியான ஸ்ரீ எம்பெருமான் திருவடித் தாமரைகளில் நித்ய கைங்கர்யத்தில் ஆசையால் கலங்கின
திரு உள்ளத்தை உடையரான ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளில் ப்ரேமமே தமக்கு நிரூபகமாய் உடையவராய் இருக்குமவர் என்கிறது –
மா–ஸப்தத்தாலே ஸ்ரீ யபதித்தவம் ஸித்த மாகையாலே ஸ்ரீ சஸ்தம் ஓவ்பவாரிகம்
சீ மாதவன் கோவிந்தன் என்று ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த திவ்ய ஸூக்தியை உட் கொண்டாய்த்து இவர் இப்படி அருளிச் செய்தது
ஸ்ரீ உடையவருக்கு வைபவம் சொல்லுகிற அளவில் ஞான பக்தி வைராக்யங்களை இட்டுச் சொல்லுகை அன்றிக்கே
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளில் சம்பந்தத்தையே இட்டுச் சொல்லுகைக்கு அடி –
ஸ்ரீ மாறன் அடி பணிந்து உய்ந்தவன் -என்று ஸ்ரீ பிள்ளை அமுதனார் அருளிச் செய்த திவ்ய ஸூக்தி ஆய்த்து –
அங்க்ரி சப்தத்தால்
திவ்ய மங்கள விக்ரஹ யோகம் சொல்கிறது –
ஜலஜ சப்தத்தால்
திருவடிகளின் போக்யதையைச் சொல்கிறது –
த்வய சப்தத்தால்-உன் இணை அடித் தாமரைகள் -என்கிறபடி இரண்டு தாமரைப் பூவை ஒழுங்கு படி நிரைத்து வைத்தால் போலே
இருக்கிற சேர்த்தி அழகைச் சொல்கிறது
சேவா சப்தத்தால்
சேஷ விருத்தியைச் சொல்கிறது
நித்ய சப்தத்தால்
ஒழிவில் காலம் எல்லாம் -என்கிறபடி யாவதாத்மா பாவி என்னும் இடம் சொல்கிறது
இது தான் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும் என்று சொன்ன
சர்வ தேசத்திலும் சர்வ காலத்திலும் சர்வ அவஸ்தைகளிலும் பண்ணக் கடவ சர்வ வித கைங்கர்யங்களுக்கும் உப லக்ஷணம்
ஏவம்விதமான கைங்கர்யத்தைப் பெற வேணும் என்னும் ப்ரேம பாரவஸ்யத்தாலே (ஆவிசாஸய)யாய்த்து
சிந்தை கலங்கி திருமாலே என்று அழைப்பன்-என்று இவர் கூப்பிட்டது
நாடு அடங்க அன்ன பாநாதிகளுக்கு வாய் புலற்றிக் கூப்பிடா நிற்க கைங்கர்யத்தால் அல்லது செல்லாமல் கூப்பிட்டு
அலமாக்கிற இவர் படி உபய விபூதியிலும் வ்யாவருத்தமாய் இருக்கையாலே
இப்படி இருக்கிற ஸ்ரீ ஆழ்வாருடைய ஸ்வ பாவத்தில் வித்தராய்
இவருடைய திருவடிகளில் நிரவதிக ப்ரேம யுக்தராய் யாய்த்து ஸ்ரீ எம்பெருமானார் இருக்கும் படி
காமாதி தோஷ ஹரம் ஆத்மபத ஆஸ்ரிதாநாம் ராமாநுஜம் யதிபதிம் ப்ரணமாமி மூர்த்நா —–
பகவத் கைங்கர்ய விரோதியான சப்தாதி ரூப ப்ராவண்ய விஷயமான காமமும்
ஆதி சப்தத்தாலே
சங்க்ருஹீதைகளான பகவதேக ரஷ்ய விரோதியான அர்த்த திருஷ்ணையும்
தத் ஏக சேஷத்வ விரோதியான அகங்காரமும் முதலான துர் குணங்களை –
தம்முடைய திருவடிகளை ஆஸ்ரயித்தவர்களுக்கு
ஸ்வ உபதேச அனுஷ்டங்களாலும் ஸ்வ கடாக்ஷ விசேஷங்களாலும் ச வாசனமாகப் போக்குமவர் -என்கை
ராமானுஜம்
ந சேத் ராமாநுஜேத் ஏஷா சதுரா சதுர் அக்ஷரீ -காமவஸ்யாம் பிரபத்யந்தே ஜந்தவோ ஹந்த மாத்ருஸா–என்று
அறிவுடையார் ஈடுபடும்படி மோக்ஷ ஹேதுவான திரு நாமத்தை உடையவர் என்கை –
யதி பதிம்
ஜிதேந்த்ரியரான சன்யாசிகளுக்குத் தலைவர் ஆனவர் என்கை –
இத்தால் கீழ்ச் சொன்ன ஆச்ரித தோஷ நிவர்த்தகத்துக்கு அடியான குண யோகம் சொல்லுகிறது
ப்ரணமாமி -என்கிற மாத்திரமே அமைந்து இருக்க
ப்ரணமாமி மூர்த்நா
என்கிறது விஷய வைபவத்தை அனுசந்தித்து மாநஸமான பிரணவ மாத்திரத்தில் நிற்கை அன்றிக்கே
தம்முடைய ஆதார அதிசயத்தாலே நிர்மமராய் திருவடிகளில் தலையை மடுக்கிறார் என்னும் இடம் தோற்றவே-
தாத்பர்யம்
சகல புருஷார்த்த பிரதமாய்
நிரதிசய போக்யமான ஸ்ரீ யபதியுடைய
திருவடித் தாமரைகளில் ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழிவிலா அடிமை செய்ய வேண்டும் என்று ஸகலவித அடிமை செய்யப் பாரித்து ப்ரேம பரவசராய் கலங்கின திரு உள்ளம் கொண்டு இருக்கும்
நம்மாழ்வாருடைய திருவடிகளில் நிரவதிக பிரேம யுக்தராய்
தம்முடைய திருவடிகளில் ஆஸ்ரயித்தவர்களுடைய பகவத் ப்ராவண்யத்துக்கு பிரதிபந்தகங்களான -விஷயாந்தர ப்ராவண்யம் முதலான தோஷங்களை –
கடாஷாதிகள்-ஆதி சப்தத்தால் உபதேசம் அனுஷ்டானம் -போன்றவற்றாலும் -போக்கி அருளும்-யதிகளுக்கு தலைவரான ராமானுஜர் திருவடிகளில் முக்கரணங்களால் சரணம் அடைகிறார் -ஸாஷ்டாமாக தெண்டன் சமர்ப்பிக்கிறார்- பிரபந்த உபக்ரமத்தில் நமஸ்கார பாவமான மங்களா சாசனம் செய்து அருளுகிறார்
(வணக்குடை தவ நெறி என்றபடியே -இதுவே மங்களா சாசனம் )
————————
ஸ்ரீ மாதவங்க்ரி ஜலஜ த்வய நித்ய சேவா(7 அர்த்தங்கள் அருளிச் செய்கிறார் )
ஸ்ரீ –
1-ஸ்ரீ மாயாதவ -மாதவ -என்கிற வ்யுத்பத்தியாலே
ஸ்ரீ யபதிக்கு வாசகமான மாதவ சப்தத்துக்கு விசேஷணம் ஆகையாலே –
ஸ்ரீ சப்தம் ஸ்ரீ யபதியினுடைய –
திருவுக்கும் திருவாகிய செல்வா –
கஸ் ஸ்ரீஸ் ஸ்ரிய– ஸ்ரியஸ் ஸ்ரியம்-என்றும் சொல்லுகிறபடியே
சர்வ மங்கள அவஹையான ஸ்ரீ பெரிய பிராட்டிக்கும் மங்களா வஹம் என்கிற மேன்மையைச் சொல்லுகிறது
அன்றிக்கே –
2-ஸ்ரீ சப்தம் லஷணையாக ஸ்ரீமத் வாசகமாய் மேல் சொல்லப் படுகிற ஸ்ரீ பிராட்டி சம்பந்தத்தாலே தலை எடுத்த வாத்சல்யாதி குண சம்ருத்தம் ஸ்ரீ யபதி என்னுமத்தைச் சொல்லுகிறது –(இவள் ஸந்நிதியாலே -நீரிலே நெருப்பு பூக்குமா போல் கல்யாண குணங்கள் -ஸ்வாதந்தர்யம் தலை சாய்ந்து இவை தலை எடுக்கும் அன்றோ-மா சம்பந்தத்தால் வரும் குணங்களை ஸ்ரீ சொல்லும் இங்கு )
அதுவும் அன்றிக்கே
3-ஸ்ரீ சப்தம் மா சப்தத்துக்கு விசேஷணமாய் ஸ்ரீ மான் மா என்று பிராட்டியுடைய பிராப்யத்வ புருஷகாரத்வ உபயோகிகளான சேவ்ய சேவதாதி பாவங்களையும்
ஜ்ஞான ஸ்வரூப ஜ்ஞான குணகத் வாதிகளையும் சொல்லுகிறது –(இங்கு மா வுடைய ஸ்ரீ -இவளுடைய தவன் மாதவன்-ஸ்ரேயதே ஸ்ரீயதே )
அங்கனும் அன்றிக்கே –
4-ஸ்ரியா மாதவா -என்ற வ்யுத்பத்தியாய் (ஸ்ரீ யாலே மாவுக்கு தவன் )-ஸ்ரீ சப்தத்தாலே –
யதிதம் சௌந்தர்ய லாவண்யா யோ -ஸ்ரீ ஸ்தவம் -7- என்கிறபடியே
சௌந்தர்ய சௌகுமார்யாதி குண சம்ருத்தியைச் சொல்லி அத்தாலே ஸ்ரீ பிராட்டிக்கு வல்லபன் என்னுமத்தைச் சொல்லுகிறது(ஸ்வரூப குண தாஸ்யம் தானே பிராட்டிக்கு இருந்தாலும் -குணங்களைப் பிரிக்க முடியாதே -அகல்யை இடம் சீதாபிராட்டி )
அங்கனும் அன்றிக்கே –
5-மாதவ சப்தம் ரூட்யா பகவத் வாசகமாய் –ஸ்ரியா யுக்தோ மாதவ -என்று மத்யம பத லோப சமாசமாய் ஸ்ரீ யபதியினுடைய –என்றுமாம் –(பங்கஜம் – ரூடி தாமரை -போல் மாதவன் -பிரிக்காமல் பெருமாள்-கூடி இருக்கும் மத்யம பதம் லோபம் -)
அங்கனும் அன்றியே
6-ஸ்ரீ சப்தம் அங்க்ரி த்வய சப்தத்துக்கு விசேஷணமாய் –திருவடிகளுடைய பரஸ்பர
சாஹித்யத்வத்தால் வந்த போக்யதாசிசயத்தைச் சொல்லவுமாம்
மாதவ –
7-மாதவ -சப்தத்தாலே த்வயத்தில் பூர்வ உத்தர கண்டங்களில் ஸ்ரீ மச் சப்தார்த்தமும் –குண சம்ருத்தி வாசகமான ஸ்ரீ சப்தத்தாலே பூர்வ உத்தர கண்டங்களில் நாராயண சப்தார்த்தமும் சொல்லப் பட்டது –
ஆக
சமஸ்த கல்யாண குணாத்மகனான ஸ்ரீயபதியினுடைய என்கையாலே பிராப்யமும் பிராபகமும் ஒரு மிதுனம் என்கிறது –
அங்க்ரி ஜலஜ-
சௌந்தர்ய சௌகந்த்ய சௌகுமார்யாதிகளாலே தாமரைக்கு ஒரு போலியான திருவடிகளுடைய
மாதவங்க்ரி -என்கையாலே -திருவடிகளினுடைய உத்தேச்யத்வமும்(வகுத்த பிராப்தி )
ஜலஜ சாம்யத்தாலே அனுத்தேச்யமாய் இருந்ததே யாகிலும் விட ஒண்ணாத போக்யாதிசயமும் சொல்லப் படுகிறது –
(அதீர்க்கம் அப்ரேமதுகம் க்ஷண உஜ்ஜ்வலம்
ந சோரம் அந்தக்கரணஸ்ய பச்யதாம்
அநுப்ஜமப்ஜம் நு கதம் நிதர்சனம்
வநாத்ரி நாதஸ்ய விசாலயோர் த்ருசோ –43-)
(அதீர்க்கம் –நீண்ட அப்பெரியவாய கண்கள் -என்றும்
இலங்கு ஒளி சேர் அரவிந்தம் போன்று நீண்ட கண்ணானை -என்று பேசும்படி யாகத் திருக்கண்கள்
நீண்டு இருப்பது போலே தாமரை நீண்டு இருக்க வில்லையே -நீட்சிக்குத் தாமரை ஒப்பாக மாட்டாதே
அப்ரேமதுகம் –நீண்ட அப்பெரியவாய கண்கள் பேதைமை செய்தனவே –என்னும் படி பிச்சேற்றும் திறம்
திருக்கண்களுக்கு அல்லது தாமரைக்கு இல்லையே -பிரேம பிரகர்ஷத்தை விலைப்பதில் தாமரை ஒப்பாக மாட்டாதே
க்ஷண உஜ்ஜ்வலம் –எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழி தோறும் அப்பொழுதைக்கு அப் பொழுது
என் ஆராவமுதமே –என்னும் படி நவம் நவமாய் விளங்கா நின்ற திருக்கண்களுக்கு அதி ஸ்வல்ப காலமே
விகாசத்தோடே கூடி விளங்கக் கடவதான தாமரை போய் ஒப்பாக மாட்டாதே)
(தாமரை திருக்கண்களுக்கு ஒவ்வாது என்று கூரத்தாழ்வான் -அதே போல் திருவடி இணைகளுக்கும் கொள்ளலாமே-ஒப்பு வேறே ஒன்றும் இல்லையே-ஒன்றுக்கு ஒன்றே ஒப்பு)
த்வய –
த்வய-இரண்டினுடைய -இத்தால் –சஹாயாந்தர நைரபேஷயமும் சத்ருசாந்தர ராஹித்யமும்
பரஸ்பர ராஹித்யத்தால் வந்த சோபாதிசயமும் சொல்லப்படுகிறது
அங்க்ரி ஜலஜத்வயம் என்கையாலே
சரணவ் சப்தமும் த்வி வசநார்த்தமும் சொல்லப்படுகிறது –
நித்ய
நித்ய –ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி –
சர்வேஷூ தேச காலேஷூ சர்வ அவஸ்தாச சாஸயுத கிங்கரோஸ்மி-என்கிறபடியே
சர்வ தேச சர்வகால சர்வ அவஸ்தைகளிலும் உளதான —
நித்யோ நித்யானாம் –
ஒண் பொருள் ஈறில-என்கிறபடியே
ஸ்வரூபம் நித்யமானதால் தன் நிரூபக தர்மமும் நித்தியமாய் செல்லும் இறே(ஆத்மா நித்யம் -ஸ்வரூபம் நித்யம் -அடியேன் உள்ளான் ஸ்வரூப நிரூபக தர்மமான தாஸ்யமும் நித்யம் )
சேவா
சேவா -தாஸ்ய பர்யாயமான சேவா சப்தத்தாலே –
வழு விலா வடிமை -என்கிறபடியே ஸ்வ போக்த்ருத்வ கந்த ரஹிதமான கைங்கர்யத்தைச் சொல்லுகிறது
இது தான் சமஸ்த கல்யாண குணாத்மகனான ஸ்ரீ யபதி விஷயத்திலே செய்யுமதாகையாலே
ஸூக ரூபமாயும்
ஸ்வரூப அநு ரூபமாயும் இருக்கும் –
இத்தால்
ஸ்ரீ த்வயத்தில் பூர்வ கண்டத்தில் சரணம் பிரபத்யே என்கிற பதங்களினுடைய அர்த்தமும்
உத்தர கண்டத்தில் நமஸ் சப்தார்த்தோடு கூடின சதுர்த்தி யர்த்தமும் சொல்லப் படுகிறது –
பஜன பர்யாயமான சேவா சப்தம் உபாய வாசி இறே –
இது தானும் ஸ்ரீ ஈஸ்வர கிருஷி பலமாகையாலே ப்ராப்ய யந்தர்கதமாய் (ஈஸ்வரனால் வந்தது ப்ராப்யத்துக்குள்ளே அடங்கும் )இறே இருப்பது –(நித்ய சேவா என்பதால் ப்ரபத்யே உபாயமும் ஆய நம களையற்ற கைங்கர்யமும் சொல்லிற்று)
ஆக இவ்வளவால் ஸ்ரீ த்வயார்த்தம் சொல்லப் படுகையாலே –
உபாசகனுக்கு ஸ்மர்த்தவ்ய விஷய சாரஸ்யத்தாலே உபாசனம் அத்யந்த பிரியம் ஆகிறாப் போலே
பிரபன்ன அதிகாரிகளுக்கு ஸ்ரீ த்வயம் அத்யந்த பிரியம் என்கிறது –
பிரபன்ன ஜன கூடஸ்தர் இறே ஸ்ரீ ஆழ்வார்
பஜன பர்யாயமான சேவா சப்தம் உபாய வாசி இறே –
பிரேம
பிரேம-சப்தத்தாலே -பிராப்தமுமாய் -போக்யமுமாய் -ஸ்வரூப அனுரூபமுமான நித்ய கைங்கர்யத்திலே
பிரேமை இல்லாவிடில் தரிக்க மாட்டாத படியான பிரேமத்தைச் சொல்லுகிறது –
இத்தால் ப்ராப்ய த்வராதிசயத்தைச் சொல்லுகிறது
ஆவிசாஸய –(கலங்கின உறுதி என்றபடி)
(பிரேம காதல் அன்பு வேட்க்கை அவா-பர்யாய சொற்கள் ) -ஆசயமாவது-கலங்கின ஆசயததை உடையரான-ஆவிசாஸய –ஆசயமாவது -அபிப்ராயம் -அதாவது திவ்யாத்மக ஜ்ஞானம் –(உறுதி)
இத்தால் ஸ்ரீ ஈச்வரனே உபாய உபேயங்கள் என்கிற அத்யாவசாயத்தைச் சொல்கிறது
ஆவிசமாவது -பிராப்ய த்வரை அதிசயத்தாலே அநந்ய உபாயத்வ விரோதியான மடல் எடுக்கை-முதலிய ஸ்வ யத்னத்திலே அன்வயிக்கை –
ஆனால் இது கூடுமோ என்னில் –
ஸ்வ ஸ்வரூபத்தைப் பற்றி வரும் கலக்கமாய்த்து த்யாஜ்யம் ஆகிறது –
அத்தலையில் வை லஷண்யம் அடியாக வருமவை எல்லாம் பிராப்யாந்தர்கதமாகையாலே கூடும் –
ஆக இப்படி கலங்கின ஆசயததை (உறுதியை அபிப்ராயத்தை )உடையரான
பராங்குஸ
ஸ்ரீ பராங்குஸ-
பரர்கள் உண்டு -ஸ்ரீ ஈஸ்வரனுக்கு குணம் இல்லை -விக்ரஹமும் இல்லை -விபூதி இல்லை –
முதலிலே அவன் தானும் இல்லை என்னும் குத்ருஷ்டிகளும் ஸூந்யவாதிகளும் –
அவர்களுக்கு அங்குசம் ஆகையாவது –
மத்த கஜத்தின் தலையிலே அங்குசத்தை நாட்டி -மதத்தை நிரசித்து -அத்தை ஸ்வ வசமாக்கிக் கொள்வாரைப் போலே
ஸ்ரீ ஈஸ்வரனை இவரை இட்டு குமதிகளுடைய துர்மதத்தைப் போக்கி ஸ்வ வசமாகக் கொள்ளுகைக்கு சாதனமாய் இருக்கை-
இவர் தாம்
உயர்வற உயர் நலம் -என்று தொடங்கி-
குண விக்ரஹ விபூதி விசிஷ்ட ஸ்ரீ ஈஸ்வரனை அவன் மயர்வற மதி நலம் அருளக் கண்டு அனுபவித்து பிறர்க்கும் உபதேசித்து – ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே ஆக்கினார் இறே -ஆகையால் அங்குசம் என்னக் குறையில்லை –
அன்றிக்கே –
பரன் -என்று –ஸ்ரீ ஈஸ்வரன் –
அவனுக்கு அங்குசமானவர்-என்றுமாம் –
அப்போதைக்கு அங்குசம் ஆவது -ஆனையின் தலை மேலே தான் இருந்து தன் ஸ்துதியாலே அத்தை ஸ்வீகரிக்குமா போலே
இவரும் தம்முடைய ஜ்ஞான பக்தி வைராக்யங்களாலே ஸ்ரீ ஈஸ்வரனை தலை துலுக்கும் படி –எமர் கீழ் மேல் எழு பிறப்பும் கேசவன் தமர் –என்று தம் வாயாலே சொல்ல வல்லராம் படி பண்ணி வசீகரித்தவர் என்கிறது
(பொன்னானாய் பொழில் ஏழும் காவல் பூண்ட
புகழானாய் இகழ்வாய தொண்டனேன் நான்
என்னானாய் என்னானாய் என்னால் அல்லால்
என்னறிவேன் ஏழையேன் உலகமேத்தும்
தென்னானாய் வடவானாய் குடபாலனாய்
குணபால மதயானாய் இமையோர்க்கு என்றும்
முன்னானாய் பின்னானார் வணங்கும் சோதி
திரு மூழிக் களத்தனாய் முதலானாயே–10-நான்கு ஆனைகளை வசப்படுத்தியவர் அன்றோ )
ஆக ஸ்ரீ ஈஸ்வர சேதனர் இருவரையும் வசீகரித்த ஸ்ரீ ஆழ்வாருடைய –
ஸ்ரீ ஈஸ்வரர் சேதனர் இருவரையும் வசீகரித்து ஒருவரோடு ஒருவர் சேர விடுபவர் இறே ஸ்ரீ ஆசார்யர் –
இவர் தாம் ஸ்ரீ பரமாச்சார்யார் இறே
(தென்னரங்க செல்வம் முற்றும் திருத்தி வைத்தார் வாழியே என ராமானுஜருக்கு பெருமை சொல்வதுண்டு. அது போல் திருகுரு கூர் செல்வம் அனைத்தும மாமுளிகள் திருத்தி வைத்தார். ஆழ்வார்கள் பாசுரங்கள் வாயிலாய் நம்மாழ்வார் ப்ரபாவம் தெரிந்து கொண்டோம்.- பட்டயம் வாசித்தல் – தங்கததால் எழுதப்பட்ட பட்டையத்தை நம்மாழ்வாருக்கு சாத்தப்படும். இந்த பத்தியை ஏற்படுத்தியதே மாமுளிகளாகும். இன்றளவும் க்ரமப்படி திருக்குருகூரில் நடக்கிறது. யதீந்திர ப்ரணவரான மாமுனிகள் ஏற்படுத்திய ப்ரமேய லக்ஷணம், ப்ரமாண லக்ஷணம், ப்ரமாதா லக்ஷணம் சொல்லப்பட்டுள்ளது. ரொம்ப பெரியவரான ஸ்லாமி ராமானுஜரின்-ராமானுஜ மா முனிகளின் -பெருமைகளை பேச அதற்கு தகுந்தவரான மா முனிகள் பேசினால் தான் சது ரசமாய் சிறப்பாய இருக்கும். அதனால் இந்த யதிராஜ விம்சதியை மாமுனிகள் அருளிச் செய்ததே மிக பொருத்தமாய் அமைந்துள்ளது)
பாத பக்தம்
பாத பக்தம் -திருவடிகள் விஷயமான பக்தியே தமக்கு நிரூபகமாய் இருக்குமவராய் –
இத்தால்
ஸ்ரீ பரமாச்சார்யரான ஸ்ரீ ஆழ்வாருக்கு பகவத் பிரேமம் நிரூபகமாம் போலேயும்
ஸ்ரீ எம்பெருமானாருக்கு ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளிலே பக்தி யாய்த்து நிரூபகம் என்கிறது
பக்தம் -என்று(க்ருஷ்ண த்ருஷ்ண தத்வ த்ருஷ்ண தத்வம் நம் ஸ்வாமிகள் )
சாமான்யமாகச் சொல்லுகையாலே ஈஸ்வர விஷயத்தில் ஆழ்வாருக்கு உண்டான பர பக்தி பர ஞானம் பரம பக்தி ரூப அவஸ்தய த்ரய விசிஷ்டையான பக்தி இவர் தமக்கு ஸ்ரீ ஆழ்வார் விஷயத்திலே என்கிறது —
இவர் தான் ஸ்ரீ மாறன் அடி பணிந்து உய்ந்தவர் இறே
ஆக பூர்வார்த்தத்தாலே
ஆச்சார்யஸ்ய ஜ்ஞாந வத்தாதுமாய -என்றும் –
ஜ்ஞானம் அனுஷ்டானம் இவை நன்றாகவே யுடையனான குருவை அடைந்தக்கால் –என்றும் சொல்லுகிறபடியே
சஹேதுகமாக இவருடைய ஜ்ஞான பூர்த்தியையும் அதினுடைய ஸத் சம்ப்ரதாய பரம்பரா பிராப்தியையும் அருளிச் செய்தாராய்த்து
ஸ்வ ஆஸ்ரித விஷயத்தில் இவர் செய்யும் உபகாரத்தைச் சொல்லுகிறது மேல்
காமாதி தோஷ ஹர மாத்மபதாஸ் ரிதாநாம் ராமாநுஜம் யதிபதிம் ப்ரணமாமி மூர்த்நா –
காமமாவது –
அபேஷ்யக ஜ்ஞானம் -அதாவது -(கண்ணனுக்கே காமம் உத்தேச்யம் )
விஷயாந்தர ஸ்ப்ருஹை-அத்தை அடியாக உடைத்ததான தோஷங்கள் உண்டு
அதாவது குரோத லோப மோஹ மத மாஸ்ரயங்கள்-அவைகளைப் போக்குமவர் என்னுதல்-
காமத்தை ஸ்வ காரணமாக உடைத்தான தோஷங்கள் உண்டு குரோத லோபாதிகள் -அவற்றைப் போக்குமவர் என்னுதல் –
காமம் அடியாக விறே குரோத லோபாதிகள் உண்டாகுவது –
அவற்றுக்கு அடியான காமத்தைப் போக்கவே அவை எல்லாம் தன்னடையே போக்கினவையாம் இறே
காமம் உப லஷணமாய்-
அத்தாலே அபிஷட் வர்க்கத்தைச் சொல்லி ஆதி தோஷ சப்தங்களாலே அஹங்காரத்தைச் சொல்லி –
ஹரம் என்று அத்தை போக்குமவர் -என்னுதல் –
இவை எல்லாவற்றாலும் அஹங்கார மமகார நிவர்த்தகர் -என்கிறது
கீழ் நித்ய சேவா -என்று பகவத் கைங்கர்யத்தைச் சொல்லி
பராங்குச பாத பக்தம் -என்று அதின் வ்ருத்தி ரூபமான ததீய கைங்கர்யத்தைச் சொல்லி
காமாதி தோஷ ஹரம் என்று தத் பிரதிபந்தக நிவர்த்தகர் என்கையாலே
கீழ்ச் சொன்ன ததீய பர்யந்தமான பகவத் கைங்கர்யத்துக்கு இவரே பிராபகர் -என்கிறது –
இப்படிச் செய்கிறது தான் ஆருக்கு என்னில்
ஆத்ம பத ஆஸ்ரிதாநாம் –
தம் திருவடிகளை ஆஸ்ரயித்தவர்களுக்கு என்கிறார் –
பத ஆஸ்ரிதாம் -என்று
திருவடிகள் சம்பந்தத்தையே நிரூபகமாகச் சொல்லுகையாலே -வர்ணாஸ்ரமாதி நியதிகள் இல்லை -என்கிறது
இத்தால் –
பிரதம பர்வமோபாதி சரம பர்வமும் சர்வாதிகாரம் என்கிறது –(ஸமோஹம் ஸர்வ பூதேஷு-ஸூஹ்ருதம் ஸர்வ பூதா நாம் –பூ சத்தா வாசி -அனைத்தைக்கும் )
ஆத்ம பத –
தம் திருவடிகளை –
ஆஸ்ரிதாநாம் –
மாதா பிதா இத்யாதிப் படியே சர்வ பிரகார ப்ராப்யமாய்ப் பற்றினவர்களுக்கு –
ததேவ லோகாந்தமனனம் -அயோத்யா -32-5–(லஷ்மணன் வார்த்தை -தேவ லோகமும் வேண்டாம் கைங்கர்யமே வேண்டும்–இவரோ நமக்காகவும் பிரார்தித்துப் பெற்றுத் தந்தார் )இத்யாதிப்படியே
தத் விருத்தமான காமாதி தோஷங்களுக்கு நிவாரகர் என்னவுமாம் –
அப்போது ஸேவாயும் பக்தியும் இவருக்கு நிரூபகங்கள் –
இத்தால் இவர் தாமே உபாயமும் உபேயமும் -என்கிறது –
இவ் விடத்தில் ஸ்ரீ எம்பெருமானார் சம்பந்தம் ஆகிறது –
ஸ்ரீ எம்பெருமானாருடன் சாஷாத் சம்பந்தமும் –
அவராலே ஸ்ரீ ஆசார்ய பதத்திலே நியுக்தரான எழுபத்து நாலு சிம்ஹாசனஸ்தர் உடைய சம்பந்த பரம்பரையிலே தானும் ஒருவனாகை–
இத்தாலே நியுக்தருடைய சம்பந்தி பரம்பரா சம்பந்தமே கார்ய கரம் (அவ்யஹித உபாயம் ராமசரம் போல் அமோகம் -பலன் தந்தே தீரும் )என்கிறது –
இவர் தமக்கு வாசகமான திரு நாமம் ஏது என்ன
ராமானுஜம் –
ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்துக்கு அல்லாத திரு நாமங்களும் கிடக்க ஸ்ரீ கோவிந்தன் -என்கிற திரு நாமம் –
கோவிந்தேதி யதாக்ரந்தத் கிருஷ்ணா மாம் தூர வாஸிதம் (கண்ணன் வார்த்தையால் பிரமாணம்-உத்யோக பர்வம் )என்கிறபடியே- பிரதானாம் ஆனாப் போலே –
ந சேத் ராமாநுஜேத் ஏஷா சதுரா சதுர் அக்ஷரீ -காமவஸ்யாம் பிரபத்யந்தே ஜந்தவோ ஹந்த மாத்ருஸா -(வரவர விஷய முக்தக ஸ்லோகம்-5 )என்னும்படி
இவ்வதாரத்துக்கு பிரதானமாய்க் காணும் ஸ்ரீ ராமானுஜன் என்கிற திரு நாமம் இருப்பது
(ராமானுஜம் ப்ரேமம் கைங்கர்யம் பக்தி -இஷ்ட பிராப்தி
யதிபதி பிரயத்தனம் -யதி – யத்னம் -அநிஷ்ட நிவ்ருத்தி)
யதி பதிம் –
ஜிதேந்த்ரியரில் தலைவரான ஸ்ரீ எம்பெருமானாரை —
ஜிதேந்த்ரியராவார் -சஷூராதி இந்த்ரியங்களை ரூபாதி விஷயங்களில் நின்றும் மீட்டு பகவத் விஷயத்திலே சேர்க்குமவர்கள்-
அவர்களில் தலைவராகை யாவது –
சர்வ இந்த்ரியாப்யாயகமான பகவத் அனுபவமே தமக்கு புருஷார்த்தம் என்று இருக்கை யன்றிக்கே
அனுபவ ஜனித ப்ரீதி கார்ய கைங்கர்யத்தால் உண்டான அத் தலையில் முக விலாசமே தமக்கு புருஷார்த்தம் என்று இருக்கை –
யதி பதிம் –
ஆஸ்ரித பிரத்யஸா அபேஷர் அன்றிக்கே தாமே மேல் விழுந்து ரஷிக்கும் ஸ்வ பாவரான ஸ்ரீ எம்பெருமானாரை -என்னுமாம்
(யதியாக மட்டும் இருந்தால் ஸ்வ கத ஸ்வீ காரம் -தாமே யத்னம் பண்ணி அடைபவர்
யதிபதி -பரகத ஸ்வீ காரம் -ஆம் முதல்வன் இவன் என்று ஆளவந்தார் தாமும் கடாக்ஷித்து பேரருளாளன் இடமும் பிரார்த்திப் பெற்றவர் அன்றோ
ராமானுஜரான பின்பு தானே யதிபதி யானார்)
ராமானுஜம் யதி பதிம்
மாற்பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கை விட்டு -என்கிறபடியே
சர்வாங்க ஸூத்தரான ஸ்ரீ பெருமான் இடத்தில் திரு உள்ளத்தை வைத்து திருவவதரித்தவர் ஆகையாலே
இதர விஷய விரக்தரான ஸ்ரீ எம்பெருமானாரை என்னவுமாம் –
(பும்ஸாம் த்ருஷ்டி ஸித்த அபஹாரம் -முதலில் ராமானுஜராகி பின்பு யதிபதி -பொய்கை ஆழ்வார் பாசுரம் படியே ரமயதீ ராமன் -பெருமாள் அழகிலே ஈடுபட்டு -ராமாயணம் என்னும் பக்தி வெள்ளம் குடி கொண்ட திரு உள்ளத்துடன் ஸ்ரீ திருவேங்கடத்தில் ஸ்ரீ சீதா ராமர் ப்ரதிஷ்டை கர்ப்ப க்ருஹத்திலே ஸ்தாபித்தார் அன்றோ)
த்வயி கிஞ்சித் சமா பத்தே கிம் கார்யம் சீதயா மம–என்றும்
அபிஷிச்ய ச லங்கா யம் ராஷசேந்த்ரம் விபீஷணம் க்ருத்க்ருத்யயஸ்தத -ராமோ விஜ்வர ப்ரமுமோத ஹ – என்று
அவன் ஸ்வார்த்த நிரபேஷனாய் பரார்த்த ஏக பரனாய் இருக்குமா போலே யாய்த்து
அவனை அனுசரித்து திருவவதரித்த இவர் ஸ்வார்த்த நிரபேஷராய் பரார்த்த ஏக பரராய் இருக்கும் படி என்னவுமாம் –
அன்றிக்கே
இவர் ஆஸ்ரிதர்க்கு இஷ்ட அநிஷ்ட பிராப்தி பரிஹாரங்களை செய்யும் படி எங்கனே என்ன –
ராமானுஜம் –
அதுவோ திரு நாமத்தாலே அறியலாம் -என்கிறார் –
ராமம் அநு ஸ்ருத்ய ஜாத ராமானுஜ -என்று வ்யுத்பத்தியால் அத்தால்
நாரீணாம் உத்தமியான ஸ்ரீ பிராட்டியை அனுசரித்து திருவவதரித்தவர் ஆகையாலே –
ஸ்ரீ பிராட்டி ராவணனுக்கு ஹிதம் சொல்லியும் ஏகாஷீ ஏக கரணி முதலான எழுநூறு ராஷசிகளுக்கு
தம் கிருபையாலே தாமே பவேயம் சரணம் ஹிவ -(ஸுந்தரகாண்டம் (58-90)–ஸ்வப்னம் கண்ட த்ரிஜடை வார்த்தை -இயலாமல் தவித்ததே கொண்டு –லகுதரா ராமஸ்ய கோஷ்ட்டி -)என்றால் போலே –
இவரும் சம்சாரிகள் படும் அலமாப்பைக் கண்டு பொறுக்க மாட்டாதே தாமே மேல் விழுந்து இவர்களுக்கு ஹிதம் செய்வது
தம் கார்யத்துக்காக வன்றி அவர்கள் உஜ்ஜீவிக்கையே பிரயோஜனமாகை என்கை –
ராமானுஜ யதி பதிம்
இராமானுஜன் என்னும் மா முனியே -16-என்கிறபடியே ஸ்ரீ ராமானுசன் என்னும் திரு நாமம் உடைய ஸ்ரீ எம்பெருமானாரை
யதி பதிம் –
ஸ்வ அனுஷ்டானத்தாலே ஸ்வ ஆஸ்ரித ரஷகரான ஸ்ரீ எம்பெருமானாரை -என்னவுமாம்
கீழே பாத பக்தம் -என்று சொல்லி வைத்து –
இங்கே யதி பதிம் -என்கையாலே இவருடைய ஞான பக்தி வைராக்யங்கள் சொல்லப் பட்டன –
பிரணமாமி மூர்த்த்நா–
கீழ்ச் சொன்ன படியே இவர் செய்து அருளிய மகா உபகாரகங்களைக் கண்டு
ஸ்ரீ பெருமாள் விஷயத்தில் ஸ்ரீ பிராட்டி சிரஸா ச அபி வதாயா -என்றாப் போலே
தாமும் இவ் விஷயத்தில் தலையால் வணங்குகிறார் –
மூர்த்த்நா-பிரணமாமி –
க்ருதஜ்ஞ்ஞாதிசயம் இருந்த படி என் தான் –நினைவும் சொல்லும் பிற்படும்படி காயம் தானும் முற்பட்டபடி –(மன பூர்வ வாக் உத்தர காயம் பின்பு மாறாடியபடி )
அன்றிக்கே –
மூர்த்த்நா–என்று காயிகத்தை முற்படச் சொல்லி
மேல் பிரணமாமி -என்றதுக்கு பூர்வ பாவியான வாசகத்தைச் சொல்லி
உப லஷணதயா இரண்டுக்கும் அடியான மானசிகத்தைத் சொல்லுவதாகவுமாம் –
ஆக கரண த்ரயத்தாலும் சேவிக்கிறார் என்னவுமாம் –
அன்றிக்கே
தத் விஜ்ஞாதார்த்தம் குருமேவ அபி கச்சேத்-(முண்டகம் -அவனை அறிய குருவைப் பற்ற வேண்டும் )என்றும் –
அத்தா நீ செய்தன அடியேன் அறியேனே -என்றும் சொல்லுகிறபடி
சிஷ்யனுக்கு ஜ்ஞான லாபம் ஸ்ரீ ஆசார்யனாகையாலே ததார்த்தமாக அவர் தம்மையே சரணமாகப் பற்றுகிறார் என்றுமாம்
பிரணமாமி
நமாமி -என்று ந நமேயம் -என்று இருக்கும்படி பண்ணுகிற அஹங்கார நிவ்ருத்தியைச் சொல்லி
பிர -என்ற உபசர்க்கத்தாலே அதினுடைய நிச்சேஷ நிவ்ருதியை சொல்லுகிறது
(வணங்காமல் தாழ்ந்து -வணங்கினால் வாழ்ந்து -நன்றாக வணங்கினால் – அவன் இசைவிக்க வணங்கி அவன் உகப்புக்காக கைங்கர்யம் -நித்ய வாழ்வு)
இத்தால்
ஆத்ம ரஷணத்தில் தனக்கு ஒரு அன்வயம் இன்றிக்கே அவன் இட்ட வழக்காய் இருக்கும் படியைச் சொல்லுகிறது
சிஷ்ய லாபம் ஸ்ரீ ஆசார்யனுக்கு புருஷார்த்தம் இறே-
ஆத்ம லாபாத் பரம் கிஞ்சித் அந்யத்தாஸ்தீதி நிச்சயாத் அங்கீ கர்த்தும் இவ பிராப்தம் அகிஞ்சதமிமம் ஜதம்ய -என்று
ஸ்வ அங்கீ காரத்தை அத் தலைக்கு புருஷார்த்தமாக விறே அப்பா அருளிச் செய்தது –
ஆத்ம லாபாத் பரம் கிஞ்சித் அந்யந்நாஸ்தீதி நிஸ்சயாத் |
அங்கீகர்த்துமிவ ப்ராப்தம் அகிஞ்சநமிமம் ஜநம் ||-பூர்வ தினசரியா -11–
ஆத்மலாபாத் – பரமாத்மாவுக்கு ஜீவாத்மாவைத் தன் தொண்டனாக ஆக்கி அவனைப் பெறுவதைவிட,
அந்யத் கிஞ்சித் – வேறான எதுவும்,
பரம் நாஸ்தி – உயர்ந்த லாபம் இல்லை,
இதிநிஸ்சயாத் – என்கிற திடமான எண்ணத்தினால்,
அகிஞ்சநம் – ஏற்றுக்கொள்வதற்குக் காரணமான நற்குணம் சிறிதுமில்லாதவனாய்,
இமம் ஜநம் – (அதற்கு நேர்மாறாக, நீக்குவதற்குக் காரணமாகிய தீய குணங்கள் அனைத்தும் நிறையப்பெற்ற) இந்த மனிதனை (அடியேனை),
அங்கீகர்த்தும் – (திருத்தித் திருமகள் கேள்வனுக்குத் தொண்டனாக்குவதற்காக) ஏற்றுக் கொள்வதற்கென்று,
ப்ராப்தமிவ – (அடியேன் எதிர்பாராமலிருக்கவும்) அடியேனேதிரில் எழுந்தருளுமாப்போலே இருக்கிற….)
யதி பதிம் மூர்த்நா ப்ரணமாமி
அவர் மேன்மைக்கு எல்லை நிலமானவோ பாதி இவர் தாழ்மைக்கு எல்லை நிலமாகிறார் –
அவர் ஸ்ரீ மாறன் அடி பணிந்து உய்ந்தவர்
இவர் ஸ்ரீ யதீந்திர மூர்த்நா ப்ரணமாமி-
இத்தால் ஸ்ரீ ஆச்சார்ய அபிவாத ரூப மங்களத்தைச் செய்து அருளுகிறார் –
—————–
ஸ்ரீ திருமழிசை அண்ணாவப்பங்கார் ஸ்வாமிகள்
பரம பூஜ்யரான மணவாளமாமுனிகள், ப்ரபந்ந ஜன கூடஸ்தரான (மோக்ஷமாகிய பலனுக்கு பகவானே உபாயமென்று கருதி அதற்காக ப்ரபத்தியை அநுஷ்டிக்கும் பெரியோர்கட்கு மூலபுருஷரான) நம்மாழ்வார் முதலான பூர்வாசார்ய பரம்பரையாகக் கிடைத்ததும், தம்முடைய ஆசார்யராகிய திருவாய்மொழிப்பிள்ளையால் தமக்கு உபதேஸிக்கப்பட்டதும், திருமந்த்ரம் த்வயம் சரம ஸ்லோகமாகிய ரஹஸ்யங்கள் மூன்றுக்கும் முக்கிய நோக்கத்திற்கு இலக்காகிய – முடிந்த பொருளானதுமாகிய பகவத் ராமாநுஜராகிய எம்பெருமானாரே அபாயமற்ற மோக்ஷோபாயம், அவரே உபேயம் (மோக்ஷத்தில் அடையத்தக்கவர்) என்ற விஷயத்தை, அவரிடத்தில் தாம் வைத்திருக்கிற அதிகமான பக்தியினாலும், ஸம்ஸாரத்தில் உழன்று கொண்டிருக்கிற ஜநங்களை உய்விக்க வல்லதான தமது கருணையின் பெருக்கினாலும் யதிராஜ விம்சதி என்னும் பெயர் பெற்ற ஸ்தோத்ரத்தின் மூலமாகத் தெளிய வருளிச் செய்ய விரும்பி, தாம் செய்யும் ஸ்தோத்ர க்ரந்தம் இடையூறேதுமின்றி இனிதே முடிவு பெறுவதற்காக,-ஸ்வ அதிகார அநு ரூபம் – தம்முடைய தகுதிக்குத் தக்கவாறு யதிராஜ நமஸ்கார ரூபமான மங்களத்தை இதன் முதலிரண்டு ச்லோகங்களால் செய்தருளுகிறார்.
தம்முடைய தகுதிக்குத் தக்கவாறு-சரம பர்வ நிஷ்டை –ஸ்வ அபிமானத்தால் ஈஸ்வர அபிமானத்தைக் குலைத்துக் கொண்ட இவனுக்கு ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம்
குருவின் ஞானம் முதல் ஸ்லோகம் -அனுஷ்டானம் இரண்டாவது ஸ்லோகம்
ரஹஸ்யங்களின் முடிந்த பொருளை உணர்த்தும் இந்தத் துதி நூலில், ரஹஸ்யங்களின் பதங்களுடைய இருபதென்ற எண்ணே, ச்லோகங்களில் ஏற்றுக் கொள்ளப்பட்டதென்பர் . திருமந்த்ரத்தில் மூன்று பதங்களும், த்வயத்தில் ஆறு பதங்களும், சரம் ச்லோகத்தில் பதினொரு பதங்களுமாக மூன்று ரஹஸ்யங்களிலும் சேர்ந்து இருபது பதங்கள் உள்ளவாற்றை நினைத்து, இந்த யதிராஜ விம்சதி என்ற ஸ்தோத்ரத்திலும் இருபது ச்லோகங்களே அருளிச் செய்யப்பட்டுள்ளமை காண்க. விம்சதி = இருபது.
ஸ்ரீ என்பது மாதவனுக்கு விசேஷணமாகும். ஸ்ரீ போன்ற மாதவனென்பது இதன் பொருள். ஸ்ரீ: என்றது பெரியபிராட்டியாரை. அழகு நறுமணம் மென்மை முதலிய தேஹகுணங்களென்ன, பேரன்பு, நீர்மை, எளிமை முதலான ஆத்மகுணங்களென்ன, அவற்றிலும் சிறந்த அடியாரைக் காப்பதில் திடமான விரதம் பூணுதலென்ன இவை தொடக்கமான பெருமைகளாலே பெரியபிராட்டியாரை ஒத்தவன் அவளுடைய மணவாளனாகிய எம்பெருமானென்பது இதன் திரண்ட பொருள். இங்ஙனன்றிக்கே, ஸ்ரீயினுடைய – மாதவன் திருவடிகள் என்று அந்வயித்து, பிராட்டி நித்யவாஸம் செய்யும் எம்பெருமான் திருவடிகளென்றலும் உண்டு. அப்போது, பிராட்டி எழுந்தருளியிருக்கிற பெருமான் திருவடிகளென்றதாய்க் கொண்டு, “ஸ்ரீமந்தௌ ஹரிசரணௌ ஸமாஸ்ரிதோSஹம்” (பிராட்டியோடு நித்யஸம்பந்தம் பெற்ற ஹரியின் திருவடிகளைத் தஞ்சமாகப் பற்றினேன் அடியேன்) (ஸுந்தர.ஸ்த.1) என்று கூரத்தாழ்வான் அருளிச்செய்த படியே மேலக்கோட்டையில் போலே பிராட்டியோடு கூடிய பெருமாள் திருவடிகளைச் சொல்லிற்றாகக் கொள்க. கண்ணபிரானுக்குத் தொண்டு செய்யவேணுமென்று மிகவும் ஆசைப்பட்ட நம்மாழ்வார், அவன் வந்து முகங்காட்டும் வரையில் பொறுத்திருக்க வேண்டிய தம்முடைய பாரதந்தர்யத்துக்கு முரண்பட்டதாகிய மடலூர்தலில் மூளும்படி மதி கலங்கப் பெற்றதைத் திருவுள்ளத்திற்கொண்டு ‘மாதவாங்க்ரி ஜலஜத்வய நித்யஸேவா ப்ரேமாவிலாஸய பராங்குஸ’ என்றருளிச் செய்தார். அத்தகைய நம்மாழ்வாரின் திருவடிகளில் பக்திகொண்டவர் எம்பெருமானார். ‘மாறனடி பணிந்துய்ந்தவன் – இராமாநுசன்’ என்றாரிறே அமுதனாரும். அவரை அடியொற்றியிறே ‘பராங்குஸபாதபக்தம் ராமாநுஜம்’ என்று இவரருளிச்செய்ததும். பரருக்கு – வேதத்தைப் ப்ரமாணமாக அங்கீகரியாத ஜைநபௌத்தாதிகளென்ன, வேதத்துக்கு அவப்பொருள் சொல்லும் அத்வைதவாதிகளென்ன இவர்களாகிய – புறமதத்தவராகிய யானைகளுக்கு. அவர்களை அடக்கவல்ல அங்குஸம் போன்றிருத்தலால் நம்மாழ்வார் பராங்குஸர் எனப்பட்டாரென்க. ‘ஒன்றும் தேவும்’ (திருவாய் 4-10) பதிகத்தில் ஆழ்வார் முற்கூறப்பட்டவர்களை அடக்கியது அதன் வ்யாக்யானங்களை ஸேவித்து அறியத்தக்கது.
(ராமாநுஜர்) ராமபிரானுடைய தம்பியான லக்ஷ்மணனுடைய அவதாரமாகையாலே, எம்பெருமானார் ராமாநுஜரென்ற பெயரைப்பெற்றார். அபிநவ தஸாவதாரங்களாகச் சொல்லப்படுகிற ஆழ்வார் பதின்மரில், இராமாவதாரமாக ப்ரஸித்தராகிய நம்மாழ்வாரிடம் லக்ஷ்மணனுடைய அவதாரமாகிய இராமாநுசருக்குப் பரமபக்தி இருப்பது மிகவும் பொருத்தம்-. மேலும் அவர் – எம்பெருமானார் தாம் மனம் முதலிய பொறிகளையடக்கிய ஸந்யாஸிகளுக்குத் தலைவராகையாலே, தம்மை யடைந்தவர்களுடைய மனத்தில் உண்டாகும் காமம், கோபம், உலோபம், திரிபுணர்ச்சி, செருக்கு, பொறாமை முதலிய குற்றங்களைப் போக்குமாற்றல் படைத்தவர் என்கிறார். தம் மனத்தை அடக்கிய பெருமை படைத்தவர்க்கன்றோ பிறர் மனத்தின்கண் உண்டாகும் குற்றங்களைக் களையுமாற்றல் உண்டாவது என்பது கருத்தாகும். மாதவன் திருவடிகளுக்குப் புதுமணம் புதுமலர்ச்சி மென்மை முதலிய குணங்களைக் கொண்ட தாமரைமலர்களோடு ஒப்புமைக் கூறப்பட்டதால் அக்குணங்கள் திருவடிகளில் உள்ளமை தோன்றுவதன் வாயிலாக- மாதவன் திருவடிகளில் பராங்குஸருக்கு ஏற்பட்ட பக்தி குணங்களுள்ளமையினாலென்பதும், பராங்குஸரின் திருவடிகளுக்குத் தாமரைகளோடு ஒப்புமை கூறாமையினால் அத்திருவடிகளில் இராமாநுசருக்கு ஏற்பட்ட பக்தி, குணங்களுள்ளமையினாலல்லாமல் ‘ஆசார்யன் திருவடிகளில் ஸிஷ்யனுக்கு ஸிஷ்யஸ்வரூபமடியாகவே பக்தியுண்டாகவேணும்’ என்ற நியதிப்படி இயற்கையாகவே அமைந்ததென்பதும் இங்குக் கருதத்தக்கதாகும். குணத்தினாலுண்டான பகவத்பக்தியைக் காட்டிலும் இயற்கையாகவே உண்டாகிய ஆசார்யபக்தி சிறந்ததென்னும் ஸாஸ்த்ரார்த்தம் இதனால் ஸிக்ஷிக்கப்பட்டதாகிறது.
எம்பெருமானாராகிய ஆசார்யரிடத்தில் பக்தராய் ஸந்யாஸியான தமக்கு அவ்வெம்பெருமானாரிடத்தில் பக்தி உண்டானதற்கு, அவர்தாமும் பராங்குஸராகிய ஆசார்யரிடத்தில் பக்தியுடையவராய் ஸந்யாஸி ஸ்ரேஷ்டராயிருக்கையே காரணமென்பது தோன்றும்படி ‘பராங்குஸ பாத பக்தம் யதிபதிம் ராமாநுஜம்’ என்று மாமுனிகள் எம்பெருமானாரை – பராங்குஸபாதபக்தரென்றும் யதிராஜரென்றும் சிறப்பித்தருளினார். “யதீநாம் பதி: யதிபதி:” என்பதற்கு, இடுகுறிப்பெயராகுந்தன்மையினால் ஸேஷி (அடிமையை ஏற்றுக்கொள்ளும் தலைவர்) என்றும், காரணப் பெயராகுந் தன்மையினால் “பாதி (ரக்ஷிக்கிறார்) இதி பதி:” என்று வ்யுத்பத்தியின் மூலம் ரக்ஷகர் என்றும் பொருள் தேறுகிறது. ஸந்யாஸிகட்கு ஸேஷியும் ரக்ஷகரும் எம்பெருமானாரென்னவே, ப்ராப்யரும் (கைங்கர்யத்தையேற்று மகிழுமவரும்) அவரே என்பது ஸித்தித்ததாகிறது. திருமந்த்ரத்திலுள்ள மூன்று பதங்களுக்கும் – ஆசார்யருடைய ஸேஷித்வமும், ரக்ஷகத்வமும், ப்ராப்யத்வமுமன்றோ முடிந்த பொருளாவது. இத்தகைய பெருமை பெற்ற யதிராஜரை – யதிராஜவிம்ஸதியாகிய துதிநூல் இனிதே முடிவடைவதன் பொருட்டு வணங்கினாராயிற்று மாமுனிகள் இந்த ஸ்லோகத்தினால்
மாதவன் -741-பக்த வாத்சல்யன் -742–ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாமம் -ப்ரேமம் மாதவன் இடம் வைக்க அவனும் பக்தர்களுக்கு வாத்சல்யம் காட்டி அருளுவான்-
ப்ராப்த விஷயத்தில் இழியவே அபிராப்த விஷய ப்ராவண்யம் தன்னடையே விலகிப்போகுமே-வாத்சல்யம் ஆழ்வார் அளவில் நிற்காமல் ஆழ்வார் தமர்கள் அளவும் பர்யவசிக்குமே
ராமானுஜர் பக்தியை வளர்த்து யதிபதி விஷயாந்தர ப்ராவண்யம் கழித்து அருள்வார்
மாதவ பெருமாள்-ஜலஜ த்வய திருவடித் தாமரை -குணக்ருத தாஸ்யம் –
பராங்குச பாத பக்தம் -இங்கு கமல பதம் இல்லையே -ஸ்வரூப ப்ரயுக்த பாகவத ப்ராவண்யம் அதிக அதிசயம்-ஸ்வாமிக்கு –
சரம பர்வ நிஷ்டர் உத்தம ஆஸ்ரமம் -இரண்டும் ராமானுஜர் யதிபதி
பக்திஸ்ய நியதா வீரா பாவோ நான்யத்ர கச்சதி -ப்ராப்த விஷய ப்ரேமம் -வைராக்யம் -இங்கும் இதே இரண்டு விஷயங்கள்
அமுதார்யர் -திருவரங்கத்து அமுதனார் -பெரும் புறக்கடல் பிருஹத் பஹி சிந்து போல் -ப்ரபந்ந சாவித்ரி போலவே இங்கும்
————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த சத்வம் தொட்டாசார்யா ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் . –