Archive for November, 2016

இரண்டாம் திருவந்தாதி- பாசுரங்கள் -41-50– -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை-

November 14, 2016

கீழ் பிறருக்குத் தாம் உபதேசித்த உபதேசம் அவர்கள் திருந்துகைக்கு உடல் அன்றிக்கே –
தம் வைஸ்யத்துக்கு (தெளிவுக்கு )உடலாய்த் தம் திரு உள்ளத்தைக் குறித்து
ஸ்ரமஹரமான சர்வேஸ்வரன் திருவடிகளை நீ முந்துற முன்னம் மறவாதே கிடாய் -என்கிறார் –

(காமத்தால் பயன் இல்லை கீழ் -பொருளால் பயன் இல்லை இதில்
காமத்தாலும் பொருளாலும் பயன் இல்லை கீழ்
தர்மமும் அதன் பலனும் அவன் அதீனம் இதில்)

பொருளால் அமர் உலகம் புக்கி இயலல் ஆகாது
அருளால் அறம் அருளும் அன்றே -அருளாலே
மா மறையோர்க்கு ஈந்த மணி வண்ணன் பாதமே
நீ மறவேல் நெஞ்சே நினை—–41–

பதவுரை

அமருலகம்–ஸ்வர்க்க லோகத்தை
பொருளால்–‘இதுவும் ஒரு புருஷார்த்தம்’ என்கிற எண்ணத்துடன்
புக்கு இயலல் ஆகாது–போய்ச் சேர முயல்வது தகாது;
அருளான்–பரம தயாளுவான எம் பெருமான்
அறம்–புண்யத்தின் பயனான ஸ்வர்க்க லோகத்தை-அஜத லக்ஷணை -விடாத லக்ஷணை
அருளும் அன்றே–தன் க்ருபையாலே கிடைக்கச் செய்வனாம்;
அருளாலே–கிருபையினாலே
மா மறை யோர்க்கு–மஹர்ஷிகளுக்கு-மறையோற்கு -ஒருமை
ஈந்த–முக்தி யளித்த
மணி வண்ணன் பாதமே-நீல மணி நிறத்தவனான எம்பெருமானது திருவடிகளையே
நெஞ்சே நீ மறவேல்–நெஞ்சே! நீ மறவாதே
நினை–தியானித்துக் கொண்டிரு.

சாஸ்திர சித்தம் ஆகையால் மோக்ஷத்தோ பாதி இதுவும் ஒரு புருஷார்த்தம் அன்றோ என்று புத்தி பண்ணி
ப்ரஹ்மாதி லோகங்களில் புக்கு அனுபவிக்க வேணும் என்று அதுக்கு ஈடாக யத்னிக்கலாகாது-

அதுக்கு அடி( அதற்குக் காரணம் -அருளான் -அருளாளன் -நிரவதிக கிருபாவான் )
நிரவதிக கிருபாவான சர்வேஸ்வரன் தர்ம பலமான ஸ்வர்க்காதிகளைத் தந்து அருளுமவன் அன்றோ –

ஆன பின்பு சம்சார போகங்களில் விரக்தராய்த் தன்னைப் பெற்று அனுபவிக்க வேணும் என்று இருக்கும்
ஸூக வாம தேவாதிகளான பரம வைதிகருக்கு –
ஸூ கோ முக்தோ வாம தேவோ முக்த -என்னும்படி
தன்னுடைய கிருபையால் மோக்ஷத்தை கொடுத்து அருளினவனாய்

அவர்களுக்கு அனுபாவ்யமாய் -நீல ரத்னம் போலே ஸ்ரமஹரமான வடிவை யுடைய
சர்வேஸ்வரனுடைய -திருவடிகளையே
அறிவுக்கு பிறப்பிடமான நெஞ்சே நீ மறவாதே கொள்-எப்போதும் நினைத்த படியே இரு –

அறம் என்று லக்ஷணையாலே தத் பலத்தை நினைக்கிறது –
அன்றிக்கே அர்த்தத்தை சாதனமாக்கிக் கொண்டு நித்ய ஸூரிகள் நிரந்தர அனுபவம் பண்ணி வாழுகிற
பரம பதத்திலே போய்ப் புக ஒண்ணாது –

ஸ்வர்க்க அபவர்க்கங்கள் இரண்டும் தன் கிருபையால் கொடுக்கும் சர்வேஸ்வரனை மறவாதே கொள் -என்றுமாம் –

இப்போது இவ்வுடம்போடே அவனை மறவாதே அனுபவிக்கப் பெறில்
பரமபதம் அநபேஷிதம் -என்று கருத்து –

அன்றிக்கே
மா மறையோர்க்கு -என்று ஸ்ரீ தண்ட காரண்யத்தில் ரிஷிகளையாய் -அவர்களுக்கு –
தத்ரூ ஸூர் விஸ்மிதாகாரா –என்னும்படி
தன் விக்ரஹத்தை அனுபவிப்பித்தவன் -என்றுமாம் –

மா மறையோற்கு-என்று றகர ஒற்றான போது
மார்கண்டேயனுக்கு நித்யத்வம் கொடுத்த படியைச் சொல்லுகிறது –

(கீழே போகத்தால் இல்லை பொருள் என்று காம புருஷார்த்தத்தால் பயனில்லை என்றார்
இதில் அர்த்தம் -என்னும் புருஷார்த்தத்தாலும் பயனில்லை என்கிறார் –
அறம் தர்மம் இங்கு அஜஹல் லக்ஷணையாலே தர்ம பலனைச் சொல்லும் -தர்ம மோக்ஷ புருஷார்த்தங்கள் அவன் அதீனம் என்கிறார் –
அருளாலே -கிருபையே ஏக ஸஹகாரி நிரபேஷ ஹேது
ரூப ஸம்ஹ நநம் லஷ்மீம் ஸுகுமார்யம் ஸூ வேஷதாம்
தத்ரூஸூர் விஸ்மிதாகாரா ராமஸ்ய வன வாஸிந -ஆரண்ய -1-13-
அவனது பாதமே என்றுமே மறக்காமல் நினைத்து இருப்பாய்
இப்போது இருக்கும் உடம்புடன் மறக்காதே அனுபவிக்கப் பெறுவோமாகில் பரமபதமும் வேண்டா
ஸதா பஸ்யந்தி இங்கேயே கிடைக்கப் பெற்றால் போதுமே –
நெஞ்சே -அறிவு பெருகும் இடமாய் இருக்கும் நீ அறிவாளிகள் செயலைச் செய்ய வேண்டுமே -)

செற்று எழுந்து தீ விழித்துச் சென்றவிந்த வேழ் உலகும்
மற்றிவையா வென்று வாய் அங்காந்து முற்றும்
மறையவர்க்குக் காட்டிய மாயவனை யல்லால்
இறையேனும் ஏத்தாது என் நா –-முதல் திருவந்தாதி –94-

ஹிரண்ய சம்ஹாரத்துக்கு பிறகு ஸ்ரீ பிரகலாத ஆழ்வானுக்கு காட்டியதாகவுமாம் –
இந்த வைஸ்வரூப்யம் துரியோதன சதஸ்ஸிலே காட்டினதாகவுமாம் –
மார்க்கண்டேய பகவானுக்கு இது அடையத் தன் வயிற்றிலே இருந்தபடியைக் காட்டிற்று ஆகவுமாம்
தத் பஸ்யம் அஹம் சர்வம் தஸ்ய குஷவ் மஹாத்மன –என்கிறபடியே –
(வாய் அங்காந்து -விஸ்வரூபம் காட்டிய -பத பிரயோகத்தால் -மறையவர்க்கு -ஒருவர் என்று கொண்டு மார்க்கண்டேயர் ப்ரஹ்லாதன் என்றும் பன்மையாகக் கொண்டு துரியோதனாதிகள் பீஷ்ம த்ரோணாதிகள் -என்று நான்கு நிர்வாஹங்கள்-பொய்யாசானம் இட -அடங்கிட நிமர்ந்தோன் -விஸ்வரூபம் காட்ட அங்கும் பீஷ்ம த்ரோணாதிகள் கண்டார்கள்
11 அத்யாயம் -விஸ்வரூபம் -பாரத சமரம் -அங்கும் பீஷ்ம த்ரோணாதிகள் கண்டார்கள்
மார்கண்டேயருக்கு திரு வயிற்றில் சேவை காட்டிய வ்ருத்தாந்தம்
கீழ் பாசுர நா மடித்த விளக்கம் என்றும் கொண்டு ப்ரஹ்லாதனுக்கு -தான் தான் உலகு எல்லாம் என்று காட்டிய வ்ருத்தாந்தம் –
இப்படி நான்கும் இதில் உண்டு )

———————————————————————–

(பகவானுக்கு )புறம்புள்ள சம்சார போகங்களைத் துறந்து அவனை அநுஸந்திக்குமவர்கள் இறே
ஜென்மங்களில் பிரவேசியாதார் -என்கிறார் –

நினைப்பன் திருமாலை நீண்ட தோள் காண
நினைப்பார் பிறப்பொன்றும் நேரார் -மனைப்பால்
பிறந்தார் பிறந்து எய்தும் பேரின்பம் எல்லாம்
துறந்தார் தொழுதாரத் தோள்–42–

பதவுரை

திருமாலை–லக்ஷ்மீ நாதனான எம்பெருமானை
நீண்ட தோள் காண நினைப்பன்–(அவனது) சிறந்த திருத் தோள்களைக் கண்டு அநுபவிப்பதற்காக நினைக்கின்றேன்.
நினைப்பார்–இப்படி நினைப்பவர்கள்
ஒன்று பிறப்பும் நேரார்–ஒருவகை யோனிப் பிறப்பையும் அடைய மாட்டார்கள்
அத் தோள்–அந்தத் திருத் தோள்களை
தொழுதார்–தொழுமவர்கள்
மனைப்பால் பிறந்தார் பிறந்து எய்தும் பேர் இன்பம் எல்லாம் துறந்தார்–ஸம்ஸாரத்தில் பிறந்தவர்கள் ஜன்ம மெடுத்ததனால்
அடையக் கூடிய சிற்றின்பங்களை யெல்லாம் வெறுப்பவராவர்-வைராக்கியத்துடன் இருப்பர் .- (பேர்இன்பம் என்றது -விபரீத லக்ஷணை )

இவ் வாத்மாவுக்கு பிரிய ஹிதங்கள் தானும் அவனுமாய்க் கொண்டு நடத்திக் கொண்டு போரும் பெரிய பிராட்டியாரோடு
கூடிக் கொண்டு இருக்கும் சர்வேஸ்வரனை –
அவளோட்டைக் கலவியாலே -அளவிறந்த போக்யதையை யுடைத்தான
திருத் தோள்களைக் கண்டு அனுபவிக்கைக்காக நினையா நின்றேன் –

இப்படி நினைக்குமவர்கள் -இவ் வனுபவத்துக்கு இடைச் சுவரான தொரு ஜன்மத்தையும் கிட்டார்கள்-
அந்த அழகிய தோளைத் தொழுவார்கள் ஒரோ மனையிடத்துப் பிறந்தவர்கள்
பிறந்து பிராபிக்கும் நிரவதிக ஸூகம் எல்லா வற்றையும் பரித்யஜித்த வர்களானவர்கள் கிடீர் –
தோள் அழகு தானே மற்றுள்ள இன்பங்களைத் துறக்கும் படி பண்ணும் என்கை

பேர் இன்பம் எல்லாம் துறந்தவர்கள் இறே -அது தோள்கள் தொழுவார் ஆகிறார் என்னவுமாம் –
அன்றிக்கே –
ஒரு ஸ்ம்ருதி மாத்திரமே பற்றாசாக அவன் தானே தன்னைக் கொண்டு வந்து காட்டுமது ஒழிய ஆர் தான்
இவற்றைத் துறந்து அது தோள்களை தொழுவார் என்றுமாம் –

(விபரீத லக்ஷணம் என்றும் -அனுபவிக்கும் அவன் நினைவால் பேர் இன்பம் என்கிறார்)

பிறப்பென்றும் நேரார்-என்ற பாடமான போது –
எல்லாக் காலத்திலும் ஜன்மத்தைக் கிட்டார்கள் -என்று பொருளாகக் கடவது –

(நினைப்பன் திருமாலை -இவளை முன்னிட்டுக் கொண்டு அவனைப் பற்றுகிறவர்களுக்கு பிரிய ஹிதங்கள் இரண்டுமே ஸித்திக்கும் என்றதாயிற்று –
நீண்ட தோள் காண -உத்த்ருதாஸி வராஹேண கிருஷ்ணேந சத பாஹு நா -தைத்ரியம் –
தடம் பெரும் தோள் ஆரத் தழுவும் பார் என்னும் மடந்தையை மால் யார் காண்பாரே -திருவாய் -2-8-7-
ப்ரஹர்ஷ யந்தம் மஹிஷீம் மஹா புஜம் -ஸ்தோத்ர ரத்னம் –44-
மால் பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கை விட்டு -மூன்றாம் -14-
கடையறப் பாசங்கள் விட்ட பின்னை யன்றி அவனவை காண் கொடானே -திருவாய் -8-2-8-
நினைப்பான் என்ற நினைவையே பெரிதாகக் கொண்டு-அப்பரம புருஷன் தானே தன்னைக் கொண்டு வந்து காட்ட வேண்டுமது ஒழிய
யார் தான் த ங்கள் முயற்சியால் சிற்றின்பங்களை ஒழித்து அத் தோள் அணைப்பைப் பெறப் பெறுவார் -என்று பரகத ஸ்வீ கார பரமான பொருள் தேறுகிறது)

———————————————————————————–

எனக்கு அவன் தோள் தொழ வேண்டா -தொழுவார் தொழ அமையும் –
அத் தோள் தொழுவார் தாளைத் தொழும் அத்தனை நாம் -என்கிறார் –

தோள் இரண்டும் எட்டு ஏழும் மூன்றும் முடி அனைத்தும்
தாள் இரண்டும் வீழச் சரம் துணிந்தான் -தாள் இரண்டும்
ஆர் தொழுவார் பாதம் அவை தொழுவது அன்றே என்
சீர் கெழு தோள் செய்யும் சிறப்பு —43-

பதவுரை

தோள் இரண்டு எட்டு ஏழும் மூன்றும்–இருபது தோள்களும்-வெட்ட வெட்ட முளைக்கும் அதனால் பிரித்து அருளிச் செய்கிறார்
வீழ–முடியும்படி
சரம் துரந்தான்–அம்புகளைச் செலுத்தின பெருமானுடைய
தாள் இரண்டும்–இரண்டு திருவடிகளையும்
தொழுவார் ஆர்–தொழுகிறவர்கள் எவரோ (அவர்களது)-எத்தனை சண்டாளராகிலும் -தாள் தொழுவாராக இருந்தாலே போதும் –
முடி அனைத்தும்–(பத்தாகிய) எல்லாத் தலைகளும்
தாள் இரண்டும்–இரண்டு கால்களும்
பாதம் அவை–திருவடிகளை
தொழுவது அன்றே–ஸேவிப்பதன்றோ
என் சீர் கெழு தோள் செய்யும் சிறப்பு–எனது அழகிய தோள்கள் (எனக்குச்) செய்யும் உபகாரமாம்.-பிடித்தார் பிடித்தாரைப் பற்றுமதே சிறப்பு

பிராட்டியைத் தனிச் சிறை வைத்து (தனிச்சிறையில் விளிப்புற்ற கிளி மொழியாள் )நலிந்த ராவணனுடைய இருப்பது தோள்களும் –
அறுக்க அறுக்க முளைக்கையாலே -ஒரு சங்க்யையில் அடங்காத தலைகளும் –
இவை எல்லாவற்றுக்கும் ஆதாரமான கால்கள் இரண்டும் அறுப்புண்ணும் படிக்கு ஈடாகத்
திருச் சரங்களை ப்ரேரித்து நடத்தின பெரு வீரரான சக்கரவர்த்தி திருமகனுடைய திருவடிகள்
இரண்டையும் தொழுமவர்களாய்

அபிமான ஹேது அல்லாத ஏதேனும் ஜென்ம வ்ருத்தாதிகளை உடையராய் இருக்கும் மஹா புருஷர்களுடைய
பரம உத்தேச்யமாக பிராமண பிரசித்தமான அந்தத் திருவடிகளைத் தொழுமதன்றோ –
அவர்களில் வியாவிருத்தனான என்னுடைய ததீயரைத் தொழ என்றால்
பல்கிப் பணைக்கும் அழகு சேர்ந்த தோள்களானவை-எனக்குச் செய்யும் உபகாரம் –

(அவர்கள் பகவத் சேஷபூதர்கள்
கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையவர்கள்
அடியேன் ததீய பாகவத சேஷ பூதன் -குருகூர் நம்பி பாவின் இன்னிசை பாடித்தறியும் மதுரகவி நிலை
இதுவே வ்யாவ்ருத்தம்)

(சித்திர் பவதி வா நேதி ஸம்சய அச்யுத ஸேவி நாம்
ந ஸம்சய அஸ்தி தத் பக்த பரிசர்யாரதாத்மநாம்
வேறாக ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்றவரைச் சாத்தி இருப்பார் தவம் -நான்முகன் -18-
அவன் அடியார்களைத் தொழ நினைத்தால் பூரித்து எழுமே அவனுடைய திருத்தோள்கள்
செய்யும் சிறப்பு -அவனுடைய தோள் தொழுவாருடைய தாள் தொழுவதே என் தோள் எனக்குச் செய்யும் உபகாரம் -)

———————————————————————————

இப்படி அசல் காக்கும் படி பண்ண வல்ல விஷயத்தை ஆஸ்ரயியாதே(பற்றினவரைப் பற்றாமல் )
மறந்து இருக்குமவர்கள் சேதனர் அல்லர் கிடீர் -என்கிறார் –

(அன்பினால் ஆள் செய்பவரை ஆதரித்தது கீழ்
அன்பிலாதவரை நிந்தித்து இது
எம்மானை –சொல்லிப்பாடி துள்ளாதார் பதிகம் போல்
பற்றினவனை தொழுவாரை அமரர் தேவர் தொழுவர்
பற்றாதவரை நிந்திக்க அடியேன் என்றார் அங்கே ஆழ்வார்)

சிறந்தார்க்கு எழு துணையாம் செங்கண் மால் நாமம்
மறந்தாரை மானிடமா வையேன் –அறம் தாங்கும்
மாதவனே என்னும் மனம் படைத்தது மற்றவன் பேர்
ஓதுவதே நாவினால் உள்ளு ——-44–

பதவுரை

சிறந்தார்க்கு–பிடித்தார் பிடித்தாரைப் பற்றும் ஸ்ரீவைஷ்ணவோத்தமர்களுக்கு
எழு துணை ஆம்–உஜ்ஜீவந ஹேதுவான துணையாகின்ற(வழித்துணை பெருமாள் திரு மோகூர் ஆப்தன் )
நாமம்–திருநாமத்தை
மறந்தாரை–மறப்பவர்களை
மானிடம் ஆ–மநுஷ்ய யோனியிற் பிறந்தவர்களாக
வையேன்–என்னெஞ்சில் கொள்ள மாட்டேன்
அறம் தாங்கும் மாதவனே என்னும் மனம் படைத்து–“தர்ம ஸ்தாபநம் பண்ண வல்ல திருமாலே!“ என்று
கூவியழைக்கும்படி யான அத்யவஸாயங்கொண்டு
செம் கண்மால்–செந்தாமரைக் கண்ணனான பெருமானுடைய
மற்று–மேலும்
அவன் பேர்–அவனது திருநாமத்தை
நாவினால் ஓதுவதே–நாவினால் சொல்லுவதையே
உள்ளு–(ப்ராப்தமென்று) அநுஸந்தித்திரு. (நெஞ்சமே! என்று விளி வருவித்துக் கொள்க)

ஞானீ த்வாதமைவ மே மதம் –என்று(என்னது உன்னதாவியில் அறிவார் ஆத்மாவார் அவன் மதம் தோன்றுமே )
தான் உகக்கும் படி தன் திரு உள்ளத்துக்கு அனுரூபமாக ஆஸ்ரயித்து இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு
சம்சார சம்பந்தத்தை அறுத்து ஞான விகாச உடையவராய்
உஜ்ஜீவிக்கைக்குப் போம் அர்ச்சிராதி மார்க்கத்துக்கு ஆதி வாஹிகர் முன்னே
நயாமி -என்கிறபடியே
துணையாமவனாய் -அவர்கள் விஷயத்தில் வாத்சல்யத்தால் குதறிச் சிவந்த திருக் கண்களை யுடைய
வியாமுக்தனாவனுடைய வாத்சல்யாதி குணங்களுக்கு வாசகமான திரு நாமத்தை
விஸ்மரித்து இருக்குமவர்களை சாஸ்திர வஸ்யமான மனுஷ்ய ஜென்மத்தில்
பிறந்தவர்களாய் என் மனசில் நினைத்து இரேன் –

ஆன்ரு சம்சயம் ஆகிற பரம தர்மத்தை தரியா நிற்கும் ஸ்ரீ யபதியானவனே -என்று
ஆதரிக்கும் புத்தியை உண்டாக்கிக் கொண்டு
அதுக்கு மேலே அந்த ஸ்ரீ யபதியானவனுக்கு வாசக நாமமான த்வயத்தை நாவால் சொல்லுகையிலே மனசே அநுஸந்தி –

மனஸை அத்யாஹரித்துக் கொள்வது –
கீழே பாகவதர்களை விரும்பினார் –
இதிலே அபாகவதர்களை அநாதரிக்கிறார் –

(த்ருவாஸோ அஸ்ய கீரயோ ஜநாஸ –விஷ்ணு ஸூக்தம் -விஷ்ணுவை சங்கீர்த்தனம் செய்பவர் நிலையாய் இருப்பார்கள் –
ஞாநீத் வாத்மைவ மே மதம் -கீதை -7-18-ஞானிகள் எனது உயிர் நிலை -அறியார் உயிராவாய்
நயாமி பரமாம் கதிம்
மானிடர் அல்லர் என்று என் மனத்தே வைத்தேனே –பெரிய திருமொழி -11-7-9-
ஆன்ரு சம்ஸ்யம் பரோ தர்ம -ஸூ ந்தர -38-41-
த்வத்த ஏவ மயா ஸ்ருத -ஸூ ந் த்தர -38- 41-
லகு தரா ராமஸ்ய கோஷ்ட்டி க்ருதா -ஸ்ரீ குணரத்னகோசம்
மா தவன் -அவள் சம்பந்தத்தாலேயே இவன் அறம் தாங்குபவனாகிறான்
அவன் பேர் நாவினால் ஒத்துவதே உள்ளு -த்வயத்தை நாவால் சொல்வதையே நினைப்பாய் மனமே என்கிறார் -)

————————————————————————————————————————

இப்படி பகவத் பஜநம் பண்ணி இருக்குமவர்கள் இதர விஷயங்களினுடைய லாப அலாபங்களால் வரும்
ஹர்ஷ சோகங்களை உடையர் அல்லர் கிடீர் -என்கிறார் –

(தவாம்ருதஸ்யந்திநி பாத பங்கஜே
நிவேஶிதாத்மா கதம் அந்யதிச்சதி? |
ஸ்திதே’ரவிந்தே மகரந்தநிர்ப்பரே
மதுவ்ரதோ நேக்ஷுரகம் ஹி வீக்ஷதே ||-ஸ்தோத்ர ரத்னம் -ஶ்லோகம் 27 –இப்பாசுரம் அடி ஒற்றியே
அதிகமான தேனைப் பெருக்கும் உன்னுடைய திருவடிகளில், உன்னுடைய க்ருபையினால் பதிந்திருக்கும் என் மனம்,வேறு விஷயங்களை எப்படி ஆசைப்படும்?
தேன் நிறைந்த சிவந்த தாமரை இருக்கும்பொழுது, ஒரு வண்டானது முள்ளிப்பூவை விரும்பாதன்றோ?

யோ நித்யம் அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம வ்யாமோஹதஸ் தத் இதராணி த்ருணாய மேநே
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ ராமாநுஜஸ்ய சரணவ் சரணம் ப்ரபத்யே –1- ​-தனியன் இப்பாசுரம் அடி ஒற்றியே)

உளது என்று இறுமாவார் உண்டு இல்லை என்று
தளர்தலதனருகும் சாரார் -அளவரிய
வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடி தோயும்
பாதத்தான் பாதம் பயின்று —45-

பதவுரை

அளவு அரிய வேதத்தான்–அநந்தாய வேத  அளவிட முடியாதபடி அந்நதமாயுள்ள வேதங்களினால் பிரதிபாதிக்கப்படுபவனும்
வேங்கடத் தான்–திருமலையிலே வந்து நிற்பவனும்
பயின்று–பழகி (இருக்குமவர்கள்)
உளது என்று இறுமாவார்–தமக்குச் செல்வமுள்ள தென்று செருக்குக் கொள்ள மாட்டார்கள்
உண்டு இல்லை என்று–(செல்வம்) நேற்று இருந்து இன்று அழிந்த போயிற்றென்று
விண்ணோர் முடி தோயும் பாதத்தான்–நித்ய ஸூரிகளின் முடிகள் பணியப் பெற்ற திருவடிகளை யுடையனுமான எம்பெருமானுடைய
பாதம்–திருவடிகளிலே
தளர்தல் அதன் அருகும் சாரார்–தளர்ச்சி யடையும் ஸ்வபாவத்தின் கிட்டவும் செல்ல மாட்டார்கள்.

ஆர்க்கும் அளவிட ஒண்ணாத படி அபரிச்சின்னமான வேதங்களாலே பரம தனமாக பிரதி பாதிக்கப் படுமவனாய் –
இப்படி ஓலைப் புறத்திலே கேட்டுப் போகை அன்றிக்கே –
கண்ணாலே கண்டு அனுபவிக்கலாம் படி திருமலையிலே வந்து
சந்நிஹிதனான ஸுலப்யத்தை யுடையனாய்

பரத்வ அனுபவத்தில் பழுத்து இருக்கும் பரம பத ஸ்தானரான நித்ய ஸூரிகள்
அவன் நீர்மைக்குத் தோற்றுத் தாங்கள் திரு முடியைத் திருவடிகளை யுடையனான சர்வேஸ்வரனுடைய திருவடிகளை
இடைவிடாமல் செறிந்து வைத்து ஜென்ம தரித்ரனாய்-திரியச் செய்தே–
நடுவே வந்த திரண்ட தனத்தைக் கண்டு இது நமக்கு உண்டாகப் பெற்றது-என்று
பிறர்க்கு சஞ்சரிக்க ஒண்ணாதபடி கார்வோத்தரராய் இரார்கள்-(இராமல் மட்டும் இன்றிக்கே )

சில நாள் குறைவற ஜீவித்த பின்பு வெறுவியரான அன்று அங்கனே நமக்கு இது உண்டாய்த்து-
இன்று இங்கனே இல்லையாய்த்து –என்று சோகித்து
தறைப் படுகை யாகிற அதன் அருகும் கூட கிட்டார்கள் –

(நினைக்கும் நெஞ்சுடையேன் எனக்கு இனி ஆர் நிகர் நீள் நிலத்தே -திருவாய் -6-4-7-
அழுநீர் துளும்ப அலமருகின்றன வாழியரோ -திரு விருத்தம் -2-விஸ்லேஷ கண்ணீருக்குப் பல்லாண்டு
கிமர்த்தம் தவ நேத்ராப்யாம் வாரி ஸ்ரவதி சோகஜம் –ஸூ ந்தர –33-4-
முன்னம் நோற்ற விதி கொலோ முகில் வண்ணன் மாயம் கொலோ -திருவாய் -6-5-7-தளர்ச்சியையும் பாக்கியமாக ஸ்லாகித்துப் பேசினாரே
பீமசேனன் திருவடியைக் கண்டு அவன் திருமேனியில் துவட்சியாலே பகவத் சம்பந்தமுடையவன் என்று அறுதியிட்டு
நிர்க்குண பரமாத்மா சவ் தேஹம் தே வியாப்ய திஷ்டதி -வன பர்வம் -14-68-
அநந்தா வை வேதா யஜுர் கடகம் -1-11-
வேதைஸ் ச சர்வைர் அஹமேவ வேத்ய -15-15-
அநந்த ஸ்திர பலமாய் இருப்பவனுடைய திருவடிகளிலே இடைவிடாமல் சேர்ந்து இருப்பவர்கள் அல்ப அஸ்திரமான இவ்வுலகச் செல்வங்களை இழப்பதாலும் பெறுவதாலும் துன்ப இன்பங்களை அடைய மாட்டார்களே -)

(துரீஸ்வர த்வார பஹிர் விதார்த்திகா
துராஸி காயை ரசீதோயம் அஞ்சலி
யதஞ்சநாபம் நிரபாய மஸ்தி மே
தனஞ்சய ஸ் யந்தன பூஷணம் தனம் –-ஸ்ரீ வைராக்ய பஞ்சகம் —4-

நாஸ்தி பித்ரார்ஜிதம் கிஞ்சித் ந மயா கிஞ்சி தார்ஜிதம்
அஸ்தி மே ஹஸ்தி சைலாக்ரே வஸ்து பைதாமஹம் தனம் –6-)

————————————————————————————————————

இப்படி தன்னை ஆஸ்ரயித்தவர்கள் இதர போகங்களின் லாப அலாபங்களால் வரும் விகாரம் அற்றுத்
தன்னைச் செறிந்து அனுபவிக்கை யாகிற இந்நினைவு இவர்களுக்கு உண்டாம் படி
பல திருப்பதிகளிலும் அவன் வருந்தி கிருஷி பண்ணின படியை அருளிச் செய்கிறார் -(கிருஷி -பக்தி உழவன் அன்றோ )

(அரங்கம் திருவேங்கடம் -சயனம்
வேங்கடம் -நின்ற
திரு நீர் மலை -ஒரே திவ்ய தேசத்தில்-நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தான் -அன்றோ
எனவே பிரித்து அருளிச் செய்கிறார்-

நான்கு திவ்ய தேசங்களை அருளிச் செய்தது -நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் சேவை சாதிக்கும் எல்லா திவ்ய தேசங்களுக்கும் உப லக்ஷணம் )

(சாமான்ய ரஷணம் -ஆஸ்ரித விசேஷ ரக்ஷணம் -கை கூப்பி முதல் -மேல் அவனது ஆஸ்ரித விசேஷ ரக்ஷணத்துக்கு நாமும் அனைத்தும் செய்ய வேண்டுமேமற்று அல்லால் -விசேஷ ரஷணம் -அவன் பரம் -நமக்கு கை கூப்புச் செயலுக்கு மேல்)

பயின்றது அரங்கம் திருக்கோட்டி பன்னாள்
பயின்றதுவும் வேங்கடமே பன்னாள் -பயின்ற
தணி திகழும் சோலை யணி நீர் மலையே
மணி திகழும் வண் தடக்கை மால் —46-

பதவுரை

மணி திகழும்–நீல மணி போல் விளங்குமவனும்
வண் தடக்கை–உதாரமாய் நீண்ட திருக்கைகளை உடையனுமான
மால்–எம்பெருமான்-சர்வேஸ்வரன் -வ்யாமோஹம் உடையவன்
பயின்றது–நித்ய வாஸம் செய்தருளுமிடம்
அரங்கம் திருக்கோட்டி–திருவரங்கமும் திருக்கோட்டியூருமாம்
பல் நாள்–அநாதி காலம்
பயின்றதுவும்-நித்ய வாஸம் செய்யுமிடமும்
வேங்கடமே–திருமலையாம் (பல்நாள் பயின்றதுவும்)
அணி திகழும் சோலை–அழகு விளங்குகின்ற சோலைகளை யுடைத்தாய்
அணி–இந் நிலவுலகுக்கு அலங்காரமான
நீர்மலை–திருநீர்மலையாம்.

நீல மணி போலே ஸ்ரமஹரமாய் ஒளி விடுகிற வடிவையும் –
அவ்வடிவை சம்சாரிகளுக்கு சர்வ ஸ்வதானம் பண்ணுகிற
சுற்றுடைத்தான திருக் கைகளையும் உடையனான சர்வேஸ்வரன் அவதாரங்கள் போலே தீர்த்தம் பிரசாதியாதே
நித்ய வாசம் பண்ணி அருளிற்று கோயில் திருக் கோட்டி யாகிற திருப்பதிகளில் –
சிர காலம் செறிந்து வர்த்தித்ததுவும் திரு மலையிலே

இப்படியே சிர காலம் நெருங்கி வர்த்தித்ததுவும் அழகு விளங்கா நின்றுள்ள சோலைகளை யுடைத்தாய்
சம்சாரத்துக்கு ஆபரணமான திரு நீர் மலையிலே –
இப்படியே ஆஸ்ரித அர்த்தமாக அவன் விரும்பி வர்த்திக்கிற
திருப்பதிகளுக்கு ஓர் எல்லை இல்லை கிடீர் -என்கை –

(கிடை அழகையும் நின்ற அழகையும் ஒவ்வோர் இடத்திலே காட்டி இருப்பதில் திருப்தி உறாமல்
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற்கு இடம் மா மலையாவது நீர் மலையே -பெரிய திருமொழி -2-4-1-
சேதனர்களை வசீகரிக்க உபகரணங்களாக திருமேனி அழகையும் குணங்களையும் உடையவன்
என் பால் ஆதாரம் பெறுக வைத்த அழகன் அன்றோ
நீல மணி போலே கண்டார் களைப்பை ஆற்றும் படி ஒளி விடும் திவ்ய மங்கள விக்ரஹம் யுடையனாய்க் கொண்டு
அந்தத் திருமேனியை சர்வருக்கு ஸர்வ ஸ்வ தானம் பண்ணி அருளும் உதார குண பூர்ணனாய்
கொடுத்துக் கொடுத்துப் பூரித்து இருக்கும் திருக்கைகளை யுடையவன் அன்றோ -)

—————————————————————————————————————-

அவன் இப்படி உங்களைப் பெறுகைக்காகப் பல திருப்பதிகளிலும் புகுந்து செறிந்து கிருஷி பண்ணும்
ஸ்வபாவனான பின்பு எல்லாரும் க்ருதஞ்ஞராய் அவனை ஆஸ்ரயிங்கோள் என்கிறார் –

மாலை யரி உருவன் பாத மலர் அணிந்து
காலை தொழுது எழுமின் கை கோலி-ஞாலம்
அளந்து இடந்து உண்டு உமிழ்ந்த அண்ணலை மற்று அல்லால்
உளம் கிடந்த வாற்றால் உணர்ந்து ———47-

பதவுரை

ஞாலம்–பூமி முழுவதையும்
அளந்து–ஒரு கால் அளந்தும்
இடந்து–மற்றொருகால் (வராஹமாகி) இடந்தும்
உண்டு–(பிரளயத்தில்) திருவயிற்றினுள் வைத்தும்
உமிழ்ந்த–பிறகு வெளிப்படுத்தியும்
இப்படி யெல்லாம் (ரக்ஷணத் தொழில்) செய்த
அண்ணலை–ஸர்வ ஸ்வாமியான எம்பெருமானை
மற்று அல்லால்–கீழ்ச்சொன்ன வகையான ரக்ஷணத் தொழில்கள் தவிரவும்
உளம் கிடந்த ஆற்றல்–(அன்பருடைய நெஞ்சை உருக்கிக்கொண்டு அவர்களுடைய) நெஞ்சிலே கிடக்கும் விதங்களோடுகூட
உணர்ந்து–அநுஸந்தித்து, (முன்பொருகால் ப்ரஹ்லாதனுக்கருள் செய்வதற்காக)
மாலை–மாலைப் பொழுதிலே
அரி உருவன்–நரசிங்க மூர்த்தியாய்த் தோன்றின அப்பெருமானுடைய
பாதம்–திருவடிகளை
மலர்–புஷ்பங்களாலே
அணிந்து–அலங்கரித்து
காலை–சிற்றஞ சிறுகாலையில்
கைகோலி தொழுது–கைகூப்பிவணங்கி
எழுமின்–உஜ்ஜீவியுங்கள்

பூமிப் பரப்பு அடங்க லும் அநாயாசேன அளந்து அழிந்த தசையில் இடந்து எடுத்து –
அழிவதற்கு முன்னே திரு வயிற்றிலே வைத்து நோக்கி
பின்பு வெளிநாடு காணப் புறப்பட உமிழ்ந்து –
இப்படி ஜகத்தை பஹு முகமாக ரஷித்தவனாய் –

இவ்வோ செயல்களால்
தானே சர்வ ஸ்வாமி என்று தோற்ற இருக்கிறவனை –
இப்படிப் பொதுவாகப் பண்ணும் வியாபாரங்கள் ஒழிய
மற்றும் ஆஸ்ரித விஷயமாகச் செய்தவையாய் –

அவர்கள் இது ஒரு நீர்மையே -என்று நெஞ்சு உளுக்கும் படி
ஹிருதயத்தைப் பற்றிக் கிடக்கிற குண சேஷ்டித்த பிரகாரங்களோடு கூட அறிந்து
அனுசந்தித்துக் கொண்டு ஆஸ்ரிதனுக்காக தன்னை அழிய மாறிக் கொண்ட
நரசிம்ஹ வேஷத்தை உடையனானவனுடைய திருவடித் தாமரைகளில் செவ்வி மாலைகளை
அழகு பெறச் சாத்தி சத்வ உத்தரமான ப்ரஹ்ம முஹூர்த்தத்திலே
கையைக் கூப்பிக் கொண்டு ஆஸ்ரயித்து உஜ்ஜீவியுங்கள் –

(அந்தியம் போதில் அரியுருவாகி
உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும் கொண்ட கோலத்தோடே வீற்று இருந்தும் மணம் கூடியும்
கண்டவாற்றால் தனதே உலகு என நின்றான் -திருவாய் -4-5-10-
அடியார்கள் இது ஒரு நீர்மையே -என்று நெஞ்சு உருகும்படி அவர்களுடைய நெஞ்சைப் பற்றிக் கிடைக்கும்
குணம் -செயல் -பிரகாரம் -முதலியவற்றின் கூட அறிந்து அனுசந்தித்துக் கொண்டு
அடியேனுக்கேயான நரசிங்கனை ஆஸ்ரயித்து உஜ்ஜீவியுங்கோள் என்றதாகிறது -)

————————————————————————————–

உளம் கிடந்த வாற்றால் -என்று ஆஸ்ரிதற்கு மறக்க ஒண்ணாத படியாக நான் செய்த செயல் தான்
ஏது என்ன -அதுக்கு ஓர் எல்லை இல்லை -என்கிறார் –

(கீழ் வட திருவேங்கடம் -இதில் தென் திருவேங்கடம்)

உணர்ந்தாய் மறை நான்கும் ஓதினாய் நீதி
மணந்தாய் மலர்மகள் தோள் மாலே -மணந்தாய் போய்
வேயிரும் சாரல் வியலிரு ஞாலம் சூழ்
மா யிரும் சோலை மலை——48-

பதவுரை

மாலே–ஸர்வேஸ்வரனே!
மறை நான்கும்–நான்கு வேதங்களையும்
உணர்ந்தாய்–(பிரளயந்தோறும்) ஞாபகத்தில் வைத்துக் கொண்டிருந்து பிறகு வெளியிடுகின்றாய்-உரைத்தாய் அல்ல -அப்ருவஷேயம்
நீதி–அந்த வேதங்களின் பொருளை விவரிக்க வல்ல ஸ்ம்ருதி முதலிய உபப்ரும்ஹண நூல்களையும்
ஓதினாய்–(மநு முதலிய மஹர்ஷிகள் முகமாக) அருளிச் செய்கின்றாய்
மலர் மகள்–பூவிற் பிறந்த பெரிய பிராட்டியாருடைய
தோள்–திருத் தோளோடே
மணந்தாய்–கூடி வாழ்கின்றாய்
வேய் இரும் சாரல்–மூங்கில்கள் நிறைந்த தாழ்வரையை யுடையதும்
இரு ஞாலம் சூழ்–பரந்த இப் பூமியிலுள்ளவர்களால் பிரதக்ஷிணஞ் செய்யப்படுவதுமான
மாயிருஞ் சோல மலை போய்–திருமாலிருஞ் சோலை மலையிலே வந்து
மணந்தாய்–திருவுள்ளமுவந்து வாழ்கின்றாய்-

பிரளய தசையில் சங்கோசித்து ஸம்ஸ்கார ரூபேண கிடந்த நாலு வேதங்களையும் –
ஸூப்த ப்ரப்த்தா நியாயத்தால்
பத வர்ண அநு பூர்வி தப்பாதபடி உணர்ந்து அருளிச் செய்தாய் –

அந்த வேதார்த்தங்களை சம்சய விபர்மயம் அற நயிப்பித்து
விஸதீ கரிக்கக் கடவ ஸ்ம்ருத்யாதி உப ப்ரும்ஹணங்களை மன்வாதிகளான
முனிவர்களை யுண்டாக்கி நின்று அருளிச் செய்தாய்(முனிவரை இடுக்கியும் முந்நீர் வண்ணானாயும் வெளியிட்டு அருளினான் அன்றோ )

அந்த வேதங்களுக்கும் உப ப்ரும்ஹணங்களுக்கும் பிரதான ப்ரதிபாதயையாய் –
தாமரைப் பூவை இருப்பிடமாக உடையவளான பெரிய பிராட்டியாருடைய திருத் தோளோடு –
வைகுண்டே  து பரே லோகே –ஸ்ரியா ஸார்த்தம் ஆஸ்தே -என்னும் படி ஒரு தேச விசேஷத்திலே
நித்ய சம்ஸ்லேஷம் பண்ணிக் கொண்டு எழுந்து அருளி இருந்தாய் –
அவள் பக்கலிலே பெரும் பிச்சானவனே

ஓலைப் புறத்திலே கேட்டுப் போம் படி எட்டாத நிலத்திலே அவளோடு கலந்து வர்த்திக்கிற அளவன்றிக்கே
சம்சாரிகளோடே கலந்து பரிமாறும் படி -மூங்கில்கள் நிறைந்த பர்யந்தங்களை யுடைத்தாய் -விஸ்மய நீயமாய்
பரப்பை யுடைத்தான பூமியில் உள்ளவர்களால் சூழ்ந்து ஆஸ்ரயிக்கப் படுமதாய் –
உயர்ந்து பரந்த சோலைகளை யுடைத்தான திருமலையை உகப்புடனே போய்க் கலந்தாய் –

(நயதீதி நீதி –வேதார்த்தங்களை நியாயங்களாலே நயப்பித்துத் தெளிவு படுத்துகையாலே உப ப்ரும்ஹணங்கள் நீதி எனப்படுகின்றன
வைகுண்டே து பரே லோகே ஸ்ரியா ஸார்த்தம் ஜகத்பதி
ஆஸ்தே விஷ்ணுர் அசிந்த்யாத்மா பக்தைர் பாகவதை சஹ-
பித்தர் பனி மலர்ப்பாவைக்கு -திரு நெடும் தாண்டகம் -18-
மாலிருஞ்சோலை வளம் செய்து நாளும் மருவுதல் வழக்கே -திருவாய் -2-10-8-
அடியார்கள் மறக்க ஒண்ணாதபடி நீ செய்து அருளின செயல்களுக்கு எல்லையே இல்லையே -)

————————————————————————————————

நெஞ்சே அவன் இப்படி திருமலையிலே சந்நிஹிதன் ஆன பின்பு -நமக்கு ஒரு பிரதிபந்தகம் உண்டு என்று
அஞ்சாதே ஜகத்து அடங்கலும் அதிரும்படி அவனைச் சொல்லிக் கூப்பிடு என்கிறார் –

(பாபங்கள் அநேகம் என்கிற சந்தேகம் -வர -அதுக்கு சமாதானம் இப் பாசுரம் -திருநாம சங்கீர்த்தனம் பலமாக செய்ய அனைத்தும் தீருமே
எங்கும் அதிரும்படி கூக்குரல் – பூதநா ஸம்ஹாரம் செய்து அருளிய கண்ணனே –
பூதனை பட்டது அவை படுமே)

மலை ஏழும் மா நிலங்கள் ஏழும் அதிர
குலை சூழ் குரை கடல்கள் ஏழும் -முலை சூழ்ந்த
நஞ்சுரத்த பெண்ணை நவின்று உண்ட நாவன் என்று
அஞ்சாதே என்நெஞ்சே அழை—49-

பதவுரை

என் நெஞ்சே–எனது மனமே!
மலை ஏழும்–ஸப்த குல பர்வதங்களும்
மா நிலங்கள் ஏழும்–ஸப்த த்வீபங்களும்
குலை சூழ் குரை கடல்கள் ஏழும்–கரையாலே சூழப்பட்டு ஒலி செய்கிற ஸப்த ஸாகரங்களும்
அதிர–அதிரும்படியாக
நாவன் என்று-திருப்பவளத்தை யுடையவளே!“ என்று சொல்லி
முலை சூழ்ந்த நஞ்சு உரத்து பெண்ணை–“முலையில் வியாபித்த விஷத்தாலுண்டான கொடுமையை யுடைய (பூதனை யென்னும்) பேய் மகளை
நவின்று–(முலையுண்ணும்போது) இடையிடையே மழலைச் சொற்கள் சொல்லிக் கொண்டே
உணட–உண்டுமுடித்த
அஞ்சாது–கூசாமல்
அழை–வாய் விட்டுக் கூப்பிடு–

பூமிக்கு ஆதாரங்களான சப்த குல பர்வதங்களும் -பரப்பை யுடைத்தான சப்த த்வீபங்களும் -கரையாலே சூழப்பட்டு
அத்தை அதிக்ரமியாதே அதுக்குள்ளே கிடந்தது கோஷிக்கிற சப்த சமுத்ரங்களும் அதிரும்படி-
முலையிலே எங்கும் வியாபித்த விஷத்தால் உண்டான மிடுக்கை யுடைய பேய்ப் பெண்ணை க்ருதஜ்ஜதை தோற்ற
நடு நடுவே சில முக்த ஜல்ப்பிதங்களை சொல்லிக் கொண்டு முலை யுண்டு முடித்த நாவை யுடையவன் என்று-
எனக்கு விதேயமான நெஞ்சே பிரதிபந்தகத்தை நினைத்து அஞ்சாதே வாய் விட்டுக் கூப்பிடு –

(ஒக்கலை வைத்து முலைப்பால் உண் என்று தந்திட -திருவாய் -1-9-5-
பேய்ச்சி பெரு முலையூடு உயிரை வற்ற வாங்கி யுண்ட வாயம் -பெரிய திருமொழி -1-8-1-
முந்துற்ற நெஞ்சே -பெரிய திருவந்தாதி -1-
என்னை நெகிழ்க்கிலும் என்னுடை நன்னெஞ்சம் தன்னை அகல்விக்கத் தானும் கில்லான் இனி -திருவாய் -1-7-8-
உலகு எல்லாம் எதிர் ஒலிக்கும் படி அழைப்பாயாக -என்று அந்வயம்)

——————————————————————————————————-

இப்படி நெஞ்சைக் கூப்பிடச் சொல்லி நியமித்தவர்-
அநந்தரம் திரு வாய்ப்பாடியில் பெண்கள் அவன் திரு நாமங்களை-(பிரேம பாரவஸ்யத்தால் தளர்ந்து தோற்றச் சொல்லுமா போல் நெஞ்சுக்கு முன்னே தாமே கூப்பிட )ஓயாமல் பரவி அனுபவிக்கும் படி செய்து அருளினாய் என்கிறார்-

(கோபிகள் -அங்கு அப்பறை கொண்ட வாற்றை அனுகரித்து நாச்சியார் ஸ்ரீ ஸூக்திகள் போல்
முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் பேசி
பெரும் பெயர் -அறியாத பிள்ளைகளாய் முன்பு பேசிய நாராயணாதி நாமங்கள் போல் அல்லவே கோவிந்தன் -கோபாலன் -யாதவன் -போன்றவை -இவை அன்றோ குற்றம் அற்ற பெரும் பெயர்கள்-குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா -உன் தன்னை சிறு பேர் அழைத்தனம் சீறி அருளாதே )

அழைப்பன் திருமாலை ஆங்கு அவர்கள் சொன்ன
பிழைப்பில் பெரும் பெயரே பேசி -இழைப்பரிய
வாயவனே யாதவனே என்றவனை யார் முகப்பும்
மாயவனே என்று மதித்து —50-

பதவுரை

இழைப்பு அரிய–ஆராய்வதற்கு அருமையான ஸ்வரூப ஸ்வபாவங்களையுடைய
ஆயவனே என்றும்–கோபால க்ருஷ்ணனே!என்றும்
மாயவனே என்றும்–(குண சேஷ்டிதங்களினால்) ஆச்சரிய பூதனே என்றும்!
மதித்து–அநுஸந்தித்துக் கொண்டு
ஆங்கு அவர்கள் சொன்ன–அத் திருவாய்ப் பாடியிலுள்ளவர்கள் சொல்லி யழைத்த யது குலத்தில்
யாதவனே என்றும்–(வஸு தேவர் மகனாய்த்) தோன்றினவனே என்றும்!
பிழைப்பு இல் பெரு பெயரே பேசி–குற்றமற்ற சிறந்த திருநாமங்களையே பேசி
யார் முகப்பும்–எல்லாரெதிலும்
திருமாலை அவனை–திருமாலாகிய அப்பெருமானை
அழைப்பன்–கூப்பிடா நின்றேன்.

ஆர்க்கும் ஸ்வ யத்னத்தால் நினைக்க அரியனாய் பெண்பிறந்தாரை புண் படுத்தும் இடையனானவனே –
என்றும் யது குலத்திலே ஸ்ரீ வஸூ தேவர் திரு மகனாய் பிறந்தவனே -என்றும் –
குண சேஷ்டிதங்களால் ஆச்சர்ய பூதனானவனே என்றும் –
புத்தி பண்ணிக் கொண்டு நஞ்சுரத்து பெண்ணை நவின்றுண்ட நாவன்-என்று
ப்ரஸ்துதமான அந்த திரு வாய்ப்பாடியில் உள்ள இடைப் பெண்களானவர்கள் சொன்னதாய்
உள்ளீடான குண சேஷ்டித்த சாரஸ்யத்தையாலே அனுசந்திப்பார்க்கு பிழைக்க ஒண்ணாதா படியாய் இருப்பதாய்
இரண்டு மூன்று அக்ஷரமாய் இருக்கச் செய்தே-தளர்த்தியின் கனத்தாலே சொல்லி முடிக்க ஒண்ணாத
பெருமையை யுடைத்தான -திரு நாமங்களைச் சொல்லி -(கல் எடுத்து கல் மாரி காத்தது அவலீலை அவனுக்கு -இவளுக்கோ சொல் எடுத்து சொல்வது அரிதானதே )
உகப்பாரோடு உகவாதாரோடு வாசியற எல்லார் முன்பும் ஸ்ரீ யபதியான அந்த சர்வேஸ்வரனை –
அவர்களுக்கு இரங்கினால் போலே நம் பக்கலிலும் இரங்கக் கூடும் என்று கூப்பிடா நின்றேன் –

(பிழைப்பில் -தோஷம் அற்ற பெயர் என்று கொள்ளலாமே யாகிலும் பிரகரண ஸ்வா ரஸ் யத்தாலே
அனுசந்தித்தாருக்குப் பிழைக்க ஒண்ணாத என்று பொருள் கொள்ளக் கடவது –
பெரும் பெயரே பேசி -நாராயணாதி பரத்வ பரம் இன்றிக்கே ஸுலப்யாதி குணங்களை அன்றோ பேச அடுத்து -கோவிந்த பட்டாபிஷேகத்துக்குப் பின் –
ந அஹம் தேவோ ந கந்தர்வோ ந யஷோ ந ச தாநவ அஹம் வோ பந்தவோ ஜாத -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-3-12- என்றவன் அன்றோ அவன்
யாரும் ஓர் நிலைமையன் என அறிவரிய எம்பெருமான் -1-3-4-
இமையோர் தமக்கும் நெஞ்சால் நினைப்பரிதால் வெண்ணெய் ஊண் என்னும் ஈனச் சொல்லே -திரு விருத்தம் -98-
திருவாய்ப்பாடியிலே பெண்களுக்கு மனம் இரங்கினால் போலே நம்மிடமும் இரங்குவான் என்று கூப்பிடா நின்றேன்
நெஞ்சிலும் முற்பட்டு அழைப்பேன்)

—————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

இரண்டாம் திருவந்தாதி- பாசுரங்கள் -31-40– -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை-

November 14, 2016

இப்படி (பூமியை இடந்து )ஆபத் சகனானவன் திருவடிகளை புஷ்பாதி (ஆதி -தூபம் தீபம் இத்யாதி )உபகரணங்களைக் கொண்டு ஆஸ்ரயிக்குமவர்கள்
அப்ராக்ருதமான அவன் திரு மேனியை ப்ரீதி பூர்வகமாக அனுபவிக்கப் பெறுவர்-என்கிறார் –

(அர்ச்சனைக்குப் பலம் தர்சனம் என்று -பலத்தாலேயே பலத்தைப் பெற்று மகிழலாம் –நன்றி செலுத்தவே பூக்களைக் கொண்டு அர்ச்சித்து –ஸ்வயம் பிரயோஜனம் -ஸ்ரம ஸாத்யம் அல்லவே

பெரிய உபகாரகங்கள் செய்தார்
அதுக்கு பிரானே என்று கொண்டாடி
பூக்களைக் கொண்டு அர்ச்சித்து திருவடி வணங்கி
திவ்ய மங்கள விகிரஹம் உகப்புடன் சேவிக்கப் பெறலாம் -இப்படி நான்கும் இதில் –

தன்னையே வணங்கும் படி செய்து அருளியதும் மஹா உபகாரம் தானே
சென்னாள் –அந்நாள் உன பாதம் பிடிக்கும் நாளே )

பிரான் என்று நாளும் பெரும் புலரி என்றும்
குரா நற் செழும் போது கொண்டு -வராகத்
தணி யுருவன் பாதம் பணியுமவர் கண்டீர்
மணி யுருவம் காண்பார் மகிழ்ந்து—31–

பதவுரை

பிரான் என்றும்–‘மஹோபகாரங்கள் பண்ணினவனே!’
பெரு புலரி என்றும்–‘இன்றே நல் விடிவு’ என்றும் (கொண்டாடிக் கொண்டு)-புலர்தல் -விடிவு –
நாளும்–நாள் தோறும்
நல்குரா–நல்ல மணம் மிக்க
செழு–அழகிய
போது கொண்டு–புஷ்பங்களைக் கொண்டு,
வராகத்து அணி உருவன் பாதம்–அழகிய வராஹ வுருக் கொண்ட பெருமானுடைய திருவடிகளை
பணியுமவர் கண்டீர்–வணங்குபவர்களே
மணி உருவம்–(அப் பெருமானுடைய) திவ்ய மங்கள விக்ரஹத்தை
மகிழ்ந்து காண்பர்–ஸேவித்து ஆநந்திக்கப் பெறுவர்கள்.

பெரும் புலரி என்றும்-இன்றே நல் விடிவு என்றும்
நல் செழு குரா போது கொண்டு -மணம் மிக்க அழகிய –குரா மரப் புஷ்பங்களைக் கொண்டு –

இவ்வாத்மாவுக்கு வகுத்த சேஷியானவனே -என்றும் -(பிரான் -உபகாரகன் கீழே -இங்கு சேஷி -சேஷபூதனுக்கு நல்லது செய்ய வேண்டுமே )
இதர விஷய அனுபவத்துக்கு உறுப்பாய்க் கொண்டு பாழே கழிகிற நாளிலே-
ஸூ ப்ரபாதா ச மே நிசா -என்கிறபடியே
பகவத் அனுபவத்துக்கு யோக்யமாய்க் கொண்டு -அடிக் கழஞ்சு பெற்றுச் செல்லுகிற
பெரிய தொரு நல் விடிவு உண்டாவதே -என்றும் ஆதரித்துக் கொண்டு –

குராவினுடைய அழகியதாய் விலக்ஷணமான செவ்வியை யுடைத்தான பூவை சம்பாதித்திக் கொண்டு
வராஹ சஜாதீயமாய் -அழகு தான் ஒரு வடிவு கொண்டால் போலே
இருக்கிற திவ்ய விக்ரஹத்தை யுடையவன் திருவடிகளை
பக்ந அபி மானராய் ஆஸ்ரயிக்குமவர்கள் கிடீர்
நீல ரத்னம் போலே இருண்டு குளிர்ந்த வடிவு அழகை உகந்து கண்டு அனுபவிக்கப் பெறுவர்கள் –

(ஸூ ப்ரபாதா ச மே நிஸா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-17-3-எனக்கு இன்று இரவு நன்றாக விடிந்தது
காட்டில் உள்ள குரா மலரைக் கொண்டே அர்ச்சிக்கலாம் படி ஸ்ரீ வராஹ உருவைக் கொண்டான்
ஸூஸூகம் கர்த்தும் அவ்யயம் -ஸ்ரீ கீதை -9-2- சாதன தசையோடே ஸாத்ய தசையோடே வாசி யற இனிதாய் இருக்குமே -பலத்துக்கு பலமாகுமே -)

—————————————————————————————————–

இப்படி உபதேசித்த அநந்தரம் -தம்முடைய கரணங்கள் உபதேச நிரபேஷமாக
அங்கே பிரவணமான படியை அருளிச் செய்கிறார் –

(முடியானே கரணங்கள் போல் – ஒவ்வொன்றும் மற்றவற்றை ஆசைப்பட்டன- 1-சிந்தை -2-மற்றும் -வாக்கு -ஆகம் -சரீரம்-மூன்றுக்கும் தனித்தனியாக மகிழ்ந்தது ஸப்த பிரயோகம் -சிந்தை மகிழ்ந்தது வாக்கு மகிழ்ந்தது -உடல் காயம் மகிழ்வது எப்படி என்னில் -ஆத்மா தானே மகிழும் -பகவத் விஷயத்தில் எல்லாம் பொருந்தும்
ஞான பிரசரம் மனம்-வாக்கு பாட பாட ஞானம் அது வழியாகப் போகுமே -உடல் மயிர் கூச்செரித்து -நடுங்கி கை கால் தள்ளாடி -கால் ஆளும் நெஞ்சு அழியும் கண் சுழலுமே )

மகிழ்ந்தது சிந்தை திருமாலே மற்றும்
மகிழ்ந்தது உன் பாதமே போற்றி -மகிழ்ந்தது
அழலாழி சங்கமவை பாடியாடும்
தொழிலாகம் சூழ்ந்து துணிந்து—-32–

பதவுரை

திருமாலே!–லக்ஷ்மீபதியே!
சிந்தை–என் நெஞ்சமானது
மகிழ்ந்தது–(உன்னைச் சிந்தித்து அதனாலே) ஆநந்த முற்றது;
மற்றும்–நெஞ்சுக்கு அடுத்ததான வாக்கும்
உன் பாதமே போற்றி–உன் திருவடிகளையே துதித்து
மகிழ்ந்தது–ஆநந்திக்கப் பெற்றது;
ஆகம்–என்னுடைய தேஹமானது
அழல்–எதிரிகளின் மீது நெருப்பை உமிழ்கின்ற
ஆழி–திருவாழியையும்
சங்கம்–ஸ்ரீபாஞ்ச ஜந்யத்தையும்
அவை–மற்றுமுள்ள திவ்யா யுதங்களையும்
பாடி ஆடும்–கொண்டாடிப் பாடி ஆடுகையாகிற
தொழில்–வியாபாரத்திலே
சூழ்ந்து–பொருந்தி
துணிந்து–இதுவே நமக்குக் காரியமென்று துணிவு கொண்டு
மகிழ்ந்தது–களிக்கப் பெற்றது.

இச் சேர்த்தி அழகாலே அனுசந்தித்தவர்களை மகிழப் பண்ணும் ஸ்ரீ யபதியானவனே —
ப்ரீதி தத்வம் புதியது உண்டு அறியாத
என் மனஸ்ஸானது உன்னை அனுசந்தித்து ப்ரீதி யுக்தமாய்த்து –

மன பூர்வோ வாக் உத்தர -என்னும் படி அநந்தரம்
எண்ணப்படும் என் வாக் இந்த்ரியமானது ஸ்ரீ யபதியான
உன்னுடைய திருவடிகளை ஏத்தி மகிழப் பெற்றது-

என் ஹிருதயமானது (காயமானது )பிரதிபக்ஷத்தின் மேலே –
அழலை உமிழா நின்றுள்ள திரு வாழி ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் ஆகிற
இவற்றைப் பாடி ஆடுகை ஆகிற தொழிலிலே வியாப்தமாய்க் கொண்டு
அத்யவசித்து உகக்கப் பெற்றது –

(அந்வயம் மாற்றி இங்கு வியாக்யானம் -பாடி துணிந்தது-அங்கு பெரியவாச்சான் பிள்ளை -துணிந்து மகிழ்ந்தது இவர் -)

(முடியானே -3-8- திருவாய் மொழியிலே ஆழ்வாரின் கரணங்கள் பட்ட பாட்டைப் படுகின்றன இதில் இவ்வாழ்வாரின் கரணங்கள்
மநோ பூர்வக வாக் உத்தர -உன் பாதமே போற்றி -சிந்தைக்கும் சேரும் -ஞான ப்ரஸுர த்வாரமாய் இருக்கையாலே
மகிழ்ச்சியின் காரணமான மயிர்க் கூச்சு எறிவதால் உடலுக்கும் அது பொருந்தும் –
ஆகம் பாடி யாடும் -சரீரம் ஆடுவதும் பாடுவதும் தொழிலாகக் கொண்டு உள்ளது)

——————————————————————————————-

கீழே அனுபவத்தால் பிறந்த ஹர்ஷம் சொல்லிற்று –
இதில் அவனை அனுபவிக்கையாலே
மநோ வாக் காயங்கள் அத்யவசித்த படியை அருளிச் செய்கிறார் –

(இதிலும் முக்கரணங்கள் -மகிழ்ந்தது கீழ் -துணிந்தது இங்கு
வறட்டு ஞானத்தால் அத்யாவசியம் -ரிஷிகள்
ஞானம் முதிர்ந்து பக்தியாய் இனிமையால் துணிந்தது -அனுபவத்தாலேயே -மகிழ்ச்சியாலேயே வந்த துணிவு ஆழ்வார்கள் பரம் -_

துணிந்தது சிந்தை துழாய் அலங்கல் அங்க
மணிந்தவன் பேருள்ளத்துப் பலகால் -பணிந்ததுவும்
வேய் பிறங்கு சாரல் விரல் வேங்கடவனையே
வாய் திறங்கள் சொல்லும் வகை——-33–

பதவுரை

சிந்தை–என் மனமானது
துழாய் அலங்கல் அணிந்தவன் பேர்–திருத்துழாய் மாலையை அணிந்துள்ள பெருமானுடைய திருநாமங்களை
பல்கால்–பலமுறை
உள்ளத்து–நினைப்பதில்
துணிந்தது–த்ருடமாக அத்யவஸாயங் கொண்டது;
அங்கமும் (பல்கால்)–எனது உடலும் எப்போதும்
பணிந்தது–வணங்குவதாயிரா நின்றது;
வாயும்–என் வாக்கும்
வேய் பிறங்குசாரல்–மூங்கில் மிக்கிருக்குந் தாழ்வாரையையுடைய
விரல் வேங்கடவனை–திருமலையிலெழுந்தருளியிருக்கிற மிடுக்குடைய பெருமானது
திறங்களே-தன்மைகளையே
(பல்கால்)-எப்போதும்–
சொல்லும் வகை–சொல்லுகிற விதத்திலே
(துணிந்தது)–துணிவு கொண்டதாயிற்று.

திருத் துழாய் மாலையாலே அலங்க்ருதனானவனுடைய ஒப்பனை அழகுக்கு வாசகமான திரு நாமங்களை ஹிருதயத்திலே
மநோ ரதமானது உத்தர உத்தரம் அனுசந்திக்க வேணும் என்று அத்யவசித்தது –

இனி சரீரமானது சர்வ காலமும் வணங்குவது
மூங்கில்கள் மிக்கு இருந்துள்ள பர்யந்தத்தை யுடைய திருமலையிலே வர்த்திக்கிற அழகாலே
நம்மை எழுதிக் கொள்ளும் மிடுக்கை யுடைய திருவேங்கடமுடையானை

என்னுடைய வாக் இந்த்ரியமானது -அவனுடைய ஸ்வரூப ரூப குணாதிகளான
ஸ்வ பாவங்களைச் சொல்லும் பிரகாரத்தில் அத்யவசித்து –

(உள்ளத்து என்றது உள்ளுகை என்றும் மனத்திலுள்ள மநோ ரதம் என்றுமாம்
வேங்கடவனையே -ஏவ காரம் அத்யவசாயத்தைக் காட்டும்
வாக்கானது அவனுடைய ஸத்யத்வ ஞானத்வாதி ஸ்வரூப நிரூபிக்க குணங்களையும் –
ஸுசீல்ய வாத்சல்யாதி நிரூபித்த ஸ்வரூப விசேஷணமான குணங்களையும் சொல்லும் வகைகளிலே உறுதி பூண்டது –
துணிந்தது என்னும் சொல் சிந்தைக்கும் வாக்குக்கும் கூட்டிக் கொள்ள வேண்டும் -)

———————————————————————————————–

ஏவம் விதமான இப் பெரிய பேறு தான் தேவருடைய கடாக்ஷத்தாலே பெற்றேன் என்கிறார் –

(ஈஸ்வரனுடைய நிர்ஹேதுக கடாக்ஷம் தானே என் பாக்யம் -தானும் அறியாதே சாஸ்திரமும் சம்மதியாதே – அவன் நினைவாலே –
ஸூஹ்ருத தேவர் நம் பெருமாளே தானே -அவரையே என் பாக்யம்
விதி வாய்க்கின்றது காப்பார் யார் -மாற்ற முடியாத ஓன்று தானே இது த-அதுவே அவனது நிர்ஹேதுக கடாஷம் -கிருபா விசேஷம் –
அவனது கிருஷி பலனாகவே இவை பெறப்பெற்றேன்-அன்பே தகளி -தொடங்கி இதில் மிக வாய்ந்த அன்பாக்கி ஏத்தி அடிமைப் பட்டேன் -ஆதாரம் பெறுக வைத்த அழகன் அன்றோ )

வகையால் அவனி இரந்து அளந்தாய் பாதம்
புகையால் நறு மலரால் முன்னே -மிக வாய்ந்த
அன்பாக்கி ஏத்தி அடிமைப் பட்டேன் உனக்கு
என் பாக்கியத்தால் இனி—–34–

பதவுரை

முன்னே–முற் காலத்திலே
வகையால்–உபாயத்தினால்
அவனி–பூமியை
இரத்து–(மாவலி பக்கல்) யாசித்து
அளந்தாய்–அளந்து கொண்ட வுன்னுடைய
பாதம் புகையால்–திருவடிகளை தூபங்கொண்டும்
நறுமலரால்–நல்ல பரிமளமுள்ள புஷ்பங்களைக் கொண்டும்
மிக வாய்ந்த அன்பு ஆக்கி–மிகுதியாக (நன்றாக)ப் பொருந்தின ப்ரீதியுடனே
ஏத்தி–துதித்து
இனி–மேலுள்ள காலமெல்லாம்
என் பாக்கியத்தால்–நீ என்மேல் பண்ணின விசேஷ கடாக்ஷமாகிற பாக்யத்தாலே
உனக்கு அடிமைப்பட்டேன்–உனக்குத் தொண்டனாய் விட்டேன்.

வடிவு அழகு -முக்த ஜல்பிதம் -மநோ ஹரமான திவ்ய சேஷ்டிதம் -தொடக்கமான பிரகாரங்களாலே –
ஆஸ்ரிதனான இந்திரன் திருவடிகளிலே வந்து விழுந்த முற்காலத்திலே
பூமியை மஹா பலி பக்கலிலே ஸ்ரீ யபதியான பெருமையை அழிய மாறிச் சென்று
அர்த்தித்து அளந்து கொண்டாயான-உன்னுடைய திருவடிகளை

(வகையால்–உபாயத்தினால்-நாமும் பூமியை அவனதாக்கிக் கொள்வோம்-ஆஸ்ரயித்த இந்த்ரனும் தன் கார்யம் பெறுவான் என்கிற வகைகளாலே அவனி இரந்து அளந்த உன் திருவடிகளை -என்பர் பெரியவாச்சான் பிள்ளை)

தூபத்தால் செவ்விய பூ முதலான உபகரணங்களைக் கொண்டு முடிக்கவும் செறிந்த ப்ரேமத்தை யுடையனாய் –
ஸுந்தர்ய சீலாதிகளுக்குத் தோற்று ஸ்துதித்து -வகுத்த சேஷியான தேவர்க்கு
இனி மேல் உள்ள காலம் -தேவர் என் பக்கல் பண்ணின விசேஷ கடாக்ஷம் ஆகிற பாக்யத்தால்
அடிமை செய்யுமவனாய் விட்டேன்

என்னுடைய விலக்காமை யாகிற பாக்யத்தாலே என்னுதல் —

முன்னே -சந்நிதியில் என்னுதல்-(முப்பத்து மூவர் –முன் சென்று -பயப்படும் முன் -இடம் முன் இரண்டும் உண்டே அதே போல் இங்கும் )

(முன்னே -முற் காலத்திலேயே என்றும்
உனது ஸந்நிதியில் என்றும்
புகை நறு மலர்களைச் சொன்னது மற்ற ஆராதன உப கரணங்களுக்கும் உப லக்ஷணம்
என் பாக்யத்தால் என்றது -உனது நிர்ஹேதுக கிருபை என் பாக்கள் வெள்ளம் இட்ட தாகிற அத்ருஷ்டத்தால் என்றும்
என்னுடைய அப்ரதிஷேதத்தால் என்றும்
இப் புண்ணியத்துக்கும் மூல காரணம் நீ அவதாராதி முகத்தாலே பட்ட பாடுகளே என்பதையே -வகையால் அவனி இரந்து அளந்தாய் -என்னும் விளியாலே காட்டி அருளுகிறார் -)

———————————————————————————————–

இப்படி அல்ப அனுகூல்யம் பற்றாசாகத் தானே மேல் விழுந்து -சர்வ ரக்ஷைகளையும் பண்ணும்
உன்னை விட்டுச் சேதனர் சப்தாதி விஷயங்களில் மண்டி அநர்த்தப் படுவதே -என்று வெறுக்கிறார் –

இனிது என்பர் காமம் அதனிலு மாற்ற
இனிது என்பர் தண்ணீரும் எந்தாய் -இனிது என்று
காம நீர் வேளாது நின் பெருமை வேட்பரேல்
சேம நீர் ஆகும் சிறிது—–35–

பதவுரை

எந்தாய்–என் ஸ்வாமி யானவனே!
(பாமரர்கள்)
காமம்–ஹேயமான சப்தாதி விஷயங்களை
இனிது என்பர்–போக்யமாகக் கொள்வர்;
(விரக்தர்களுங்கூட)
தண்ணீர் அதனிலும் ஆற்றவும் இனிது என்பர்–அந்த சப்தாதி விஷயங்களிற் காட்டிலும் தண்ணீர் மிகவும் போக்யமென்பர்கள்;
காமம் நீர்–(கீழ்ச் சொல்லப்பட்ட) காமத்தையும் தண்ணீரையும்
இனிது என்று வேளாது–போக்யமாகக் கொண்டு அவற்றிலே ஆசை கொள்ளாமல்
நின் பெருமை சிறிது வேட்பர் ஏல்–உன்னுடைய போக்யதையே கொஞ்சமேனும் விரும்பி மேல் விழுவார்களாயின் (அது)
சேமம் நீர் ஆகும்–(எல்லா நிலைமையிலும்) ரக்ஷகமான தன்மையை யுடையதாகும்

எல்லாம் கண்ணன் -என்கிறபடியே
தாரக போஷக போக்யங்கள் எல்லாம் நீயே யாம்படி -என்னைப் புகுர நிறுத்தின
என் ஸ்வாமி யானவனே –
அல்பமாய் அஸ்திரமாய் அபோக்யமான சப்தாதி விஷயங்களை போக்யங்களாக பிரமித்து
இவை இனிதாய் இருக்கிறது என்று விஷய அனுபவத்துக்கு ஸ்ரமம் செய்து இருக்கும் நாட்டார் சொல்லா நின்றார்கள்

விரக்தரோடு அவிரக்தரோடு வாசி அற சர்வரும் விரும்பும் படி இருக்கையாலே –
அந்த விஷயங்களில் காட்டிலும் மிகவும் இனிது என்று தண்ணீரைச் சொல்லா நின்றார்கள் –

பரீக்ஷகர் (விவேகிகர் )ஹேயமாகவே அறுதியிட்டு இருக்கிற விஷயங்களையும் (விஷயாந்தரங்களையும் )தண்ணீரையும்
அதஸ்மின் தத் புத்தியால் போக்யம் என்று புத்தி பண்ணி –
அவற்றை மேல் விழுந்து ஆசைப்படாதே

ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய் – -நிரதிசய போக்ய பூதனான உன்னுடைய போக்யதா பிரகர்ஷத்தை
ஏக தேசம் ஆசைப்படுமவர்களாமாகில் –
அது சர்வ தசையிலும் ரக்ஷகமான ஸ்வ பாவத்தை உடைத்தாகா நிற்கும் –

(ஆப ஏவ ஹி ஸூ மனச -ஸாஸ்த்ரமும் தண்ணீரில் அனைவரும் அபேக்ஷை யுடையவர்களாயே இருப்பார்கள் –
வாஸூ தேவஸ் ஸர்வமிதி ச மஹாத்மா ஸூ துர்லப -ஸ்ரீ கீதை -7-19-
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை -தாரக போஷக போக்யங்கள் -எல்லாமே கண்ணனே
ததேவ ப்ரீதயே பூத்வா புனர் துக்காய ஜாயதே
ததேவ கோபாய யதஸ் ப்ரஸாதய ச ஜாயதே
தஸ்மாத் துக்காத்மகம் நாஸ்தி ந ச கிஞ்சித் ஸூ காத்மகம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -2-6-46-47-
ஒரே விஷயமே இன்பமாயும் பின்பு துன்பமாயும் இருக்குமே -எனவே இயற்கையில் துன்பமயமாயும் இன்பமயமாயும் இருப்பது ஒன்றும் இல்லை
ஆத்ம நஸ்து காமாய ஸர்வம் ப்ரியம் பவது -ப்ருஹதாரண்யம் -6-5-6-பகவத் சங்கல்பத்தால் ஏற்படும் இனிமையும் அல்பமாயும் அஸ்திரமாயுமே இருக்கும்
சிறிது வேட்பரேல் -இவற்றில் வைக்கும் ஆசையில் சிறிது உன் பக்கல் வைத்தாலே உஜ்ஜீவனம் ஆகுமே

யா ப்ரீதிர் அவிவேகா நாம் விஷ யேஷ்வநபாயி நீ
த்வாம் அநு ஸ்மரதஸ் சா மே ஹ்ருதயான் மாப சர்ப்பது –ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-20-19-ஸ்ரீ ப்ரஹ்லாதனின் பிரார்த்தனை

த்யாயதோ விஷயாந் பும்ஸஸ் ஸங்கஸ் தேஷூபஜாயதே.—
ஸங்காத் ஸம் ஜாயதே காம-காமாத் க்ரோதோபி ஜாயதே—৷৷2.62৷৷

சப்தம் முதலான ஐந்து புலன்களையும் சிந்திப்பவனாய் -என்னை த்யானிக்காத அதிகாரிக்கு அப்புலன்களில் பற்று வளர்கிறது -அப் பற்றினால் காமம் ஏற்படுகிறது –
விஷயங்களில் பற்று -கொண்டு -சங்கம்-முதிர்ந்த பழுத்த ஆசையே காமம்
இது இல்லாமல் தரிக்காத தசை ஆபன்னன் அடைந்தவன் காமத்தினால் கோபம் பரவலாக உண்டாகிறது

க்ரோதாத்பவதி ஸம்மோஹ ஸம்மோஹாத் ஸ்ம்ருதி விப்ரம—
ஸ்ம்ருதி ப்ரம்ஸாத் புத்திநாஸோ புத்திநாஸாத் ப்ரணஸ்யதி—৷৷2.63৷৷

கோபத்தினால் பகுத்து அறிவின்மை உண்டாகிறது –
பகுத்து அறிவின்மையால் நினைவின் அழிவு ஏற்படுகிறது –
நினைவின் அழிவினால் அறிவின் அழிவு உண்டாகிறது –
அறிவின் அழிவினால் சம்சாரத்தில் மூழ்கி அழிகிறான்

சப்தாதி விஷய ப்ராவண்யமே அழிவையே உண்டாக்கும்-படிக்கட்டு காட்டி அருளுகிறார் இந்த இரண்டு ஸ்லோகங்களால்

மித்ர பாவேந ஸம் ப்ராப்தம் ந த்யஜேயம் கதஞ்சன -யுத்த -18-3-

எல்லா ஆசையும் உண்டானாலும் சப்தாதி விஷயங்கள் இவன் விரும்பும் அளவு கிடைக்க மாட்டா
அல்ப ஆசை யுண்டானாலும் பரமபுருஷன் இவனுக்கு கையாளாக நிற்பானே –
இந்த அரிய கருத்தை உள்ளடக்கிய பாசுரம் இது -)

———————————————————————————————————–

நாட்டார் செய்தபடி செய்கிறார்கள் -நெஞ்சே –
நீ முந்துற முன்னம் -அவனுடைய வியாபாரங்களை-(சேஷ்டிதங்களை )
அனுசந்தித்திக் கொண்டு ஸூகமே இருக்கப் பார்–என்கிறார் –

சிறியார் பெருமை சிறிதின் கண் எய்தும்
அறியாரும் தாம் அறியார் ஆவர் -அறியாமை
மண் கொண்டு மண் உண்டு மண் உமிழ்ந்த மாயன் என்று
எண் கொண்டு எண் நெஞ்சே இரு–36–

பதவுரை

சிறியார்–(இயற்கையான மேன்மை சிறிதுமில்லாமல்) அற்பரான ஸம்ஸாரிகளுடைய
பெருமை–(நானே ஈஸ்வரன் என்று அஹங்கரிப்பதால் வருகிற) மேன்மையானது
சிறிதின் கண் எய்தும்–(தமக்குப் பழமையாயுள்ள) தாழ்விலேயே கொண்டு சேர்ப்பிக்கும்;
அறியாரும்–த்யாஜ்ய உபாதேய விவேக ஞானம் இல்லாத -அவிவேகிகளும்
(தங்களை ஸர்வஜ்ஞராக நினைத்திருந்தார்களாகிலும்)
தாம் அறியார் ஆவர்–(நன்மை தீமைகளைத்) தாங்கள் அறியாதவர்களாகவே ஒழிந்திடுவர்;
என் நெஞ்சே–என் மனமே!.
அறியாமை–பிறர் அறியாதபடி
மண் கொண்டு–(மாவலியிடத்தில்) பூமியைப் பெற்றவனாயும்
மண் உண்டு–இந்தப் பூமியை (ப்ரளயத்திலே)திருவயிற்றில் வைத்தவனாயும்
மண் உமிழ்ந்த–(பிறகு) அந்தப் பூமியை வெளிப்படுத்தினவனாயுமிருக்கிற
மாயன் என்று–ஆச்சர்ய கரனான எம் பெருமான் என்று
எண் கொண்டு–இடைவிடாது கருதி
இரு–(அவனைப் பற்றின நமக்கு ஒரு குறை இல்லை யென்று) நிர்ப் பரனாக இருப்பாயாக.

ஸ்வத உத்கர்ஷ கந்தம் இன்றிக்கே -அதி ஷூத்ரராய் இருக்கிற சம்சாரிகளுடைய –
ஈஸ்வரோஹம் -என்று இருக்கும் துர்மானத்தாலே வந்த பெருமையானது –
ஸ்வத ப்ராப்தமான பழைய ஷூத்ரதையில் சென்று பர்யவசித்து விடும்

(மாறு உளதோ இம் மண்ணின் மிசையே -சாத்விக அஹங்காரம் ஆழ்வாரது
இவனுக்கோ துரபிமானம்)

ஸ்வத க்ருத்யாக்ருத்ய விவேகம் பண்ண ஷமர் இன்றிக்கே இருக்கிற அறிவு கேடரானவர்களும்
தங்கள் நினைவாலே சர்வஞ்ஞராக அபிமானித்து இருந்தார்களாகிலும் –
பழைய அறிவு கேட்டை உடையாராயே விடுவர்கள்

நான் அவன் படிகளை சொன்னால் -அறிகைக்குப் பாங்கான என் மனஸ்ஸே –
நீ அறிவு கேடரான நாட்டார் படியைக் கை விட்டு
ஸ்ரீ யபதி இப்படி இரப்பாளனாய் வந்தான் என்று ஒருவரும் அறியாத படி பூமியை இரந்து அளந்து கொண்டு
பிரளயத்தில் அழியாதபடி அந்த பூமியைத் திரு வயிற்றிலே வைத்து நோக்கி
அநந்தரம் உள்ளுக் கிடந்து தளராதபடி அந்த பூமியை வெளி நாடு காணப் புறப்பட விட்டனாய் –

இவ்வளவு அன்றிக்கே
ஆஸ்ரிதர் விஷயத்தில் பண்ணும் ரக்ஷணத்துக்கு எல்லை காண ஒண்ணாத ஆச்சர்ய பூதனுமாய் இருப்பான்
ஒருவன் என்று அநவரதம் அனுசந்தித்திக் கொண்டு –
அவனைப் பற்றின நமக்கு இனி ஒரு குறை யுண்டோ -என்று நிர்ப் பயமாய் இரு-

(ஈஸ்வரோஹம் அஹம் போகீ சித்தோஹம் பலவான் ஸூகீ
ஆட்யோ அபி ஜநவாநஸ்மி கோ அந்யோ அஸ்தி சத்ருஸோ மயா -ஸ்ரீ கீதை -16-14-15-என்கிறபடி அபிமானித்து இருப்பது –
ப்ரஹ்மாணம் ஸிதி கண்டஞ்ச யாஸ் சான்யா தேவதா ஸ்ம்ருதா
ப்ரதி புத்தாந ஸேவந்தே யஸ்மாத் பரிமிதம் பலம்-சாந்தி பர்வம் -350-86-
திருவுக்கும் திருவாய் இருப்பவன் மாணியாய் இரந்த பேராளன் பேர் ஓதும் பெரியோர் -பெரிய திருமொழி -7-4-4-
மாஸூச என்று தனது நெஞ்சுக்கு பயம் அற்று வாழ வழி காட்டுகிறார் -)

(மண் அளந்து மண் உண்ட உமிழ்ந்த -மூன்றிலும் எல்லாத் தேவதைகளும் உண்டே –

இதனாலேயே -தேவதாந்த்ர சம்பந்தத்துக்கு வழியே இல்லையே என்கிறார்)

———————————————————————————————-

இப்படிப்பட்ட சர்வேஸ்வரனை ஆஸ்ரயியாத ஜென்மங்கள் எல்லாம் வ்யர்த்தம் -என்கிறார் –

(சர்வேஸ்வரன் -ஸர்வ சமாஸ்ரயணீயன் -என்று அறிந்தும் இழந்து போகிறார்களே)

இரும் தண் கமலத்து இரு மலரின் உள்ளே
திருந்து திசை மகனைத் தந்தாய் -பொருந்திய நின்
பாதங்கள் ஏத்திப் பணியாவேல் பல் பிறப்பும்
ஏதங்கள் எல்லாம் எமக்கு—-37-

பதவுரை

இரு–அளவில் பெரிய
தண்–குளிர்ந்த
கமலத்து–திரு நாபிக் கமலத்தின்
இரு மலரின் உள்ளே–இரு -பெருமையில் பெரிய -பெருமை பொருந்திய பூவில்
திருந்து–ஸமர்த்தனான
திசைமுகனை–நான்முகக் கடவுளை
தந்தாய்–படைத்தருளின பெருமானே!
பொருந்திய–ஸர்வ லோக சரண்யனாகி எல்லாரோடும் பொருந்தி யிருக்கிற-பிரமனும் பொருந்திய பாதங்கள் -பெருமை -நாம் விலக ஆரானும் பற்றிய நீங்கி விரதம் கொள்வோமே என்று எல்லாரும் பொருந்தும்படி எளியவன் என்கிறார்
நின்–உன்னுடைய
பாதங்கள்–திருவடிகளை
ஏத்தி–வாயாரத் துதித்து
பணியா ஏல்–வணங்கித் தொழுவதிற்கு உறுப்பாகா விட்டால்
எமக்கு–எங்கட்டு-எங்களுக்கு என்று -சம்சாரிகளுடைய இழவு தங்களாதகாகக் கொள்ளும் ஆழ்வார் -பர துக்க துக்கித்தவம் கொண்டவர்கள் அன்றோ
பல் பிறப்பும் எல்லாம்–பல வகையாகப் பிறக்கின்ற பிறவிகளெல்லாம்
ஏதங்கள்–பயனற்றவையே யாம்

பரந்து குளிர்ந்த -திரு நாபீ கமலத்தினுடைய விஸ்தீர்ணமான பூவினுள்ளே -மறுத்துக் கேள்வி கொள்ளாதே சொன்ன கட்டளையிலே
ஜகத்தை ஸ்ருஷ்டிக்கைக்கு சமர்த்தனான சதுர்முகனை ஸ்ருஷ்ட்டி பிரயோஜனம் எனக்கேயாம் படி உபகரித்து அருளினவனே –

அசேஷ லோக சரண்யனாகக் கொண்டு எல்லோரோடும் பொருந்தி இருக்கிற உன்னுடைய திருவடிகளை வாயார ஏத்தித்
தலையார வணங்கி ஆஸ்ரயியைக்கு உறுப்பு அல்லவாமாகில் –
எங்களுக்கு கர்ம அனுகுணமாக மேலே மேலே
உண்டாயச் செல்லுகிற ஜென்மங்கள் அடங்கலும் வியர்த்தங்கள் –

ஜன்மத்துக்கு பிரயோஜனம் உன்னை ஆஸ்ரயிக்கை இறே-
அதுக்கு உறுப்பு அல்லாத போது அவை அடங்க நிஷ் பிரயோஜனம் என்கை –

(புஷ்கர பர்ணே ஸம்பவத் -நாபியில் நான்முகனைப் படைத்தான்
யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் முமுஷுர் வை சரணம் அஹம் ப்ரபத்யே -ஸ்வேதர -6-18-
பர துக்க துக்கித்தவமே கருணையில் மேல் எல்லை
நீ சம்சாரிகளை பெற முயலும் அவற்றை அறிந்தும் சம்சாரிகள் உன்னை இழந்து உழல்வதே என்று வருந்துகிறார் -)

(ஆஸ்ரயித்தால் கிருபைக்கு விஷயம் ஆவோம்
ஆஸ்ரயிக்கா விடில் கர்மத்துக்கே விஷயம் ஆவோமே)

———————————————————————————————

அநர்த்த கரமான அர்த்தத்தை புருஷார்த்தம் என்று இராதே -ஸ்ரீ யபதியை நினைப்பது –
ஏத்துவதாய்க் கொண்டு ஆஸ்ரயிக்கையே -சர்வர்க்கும் கர்தவ்யம் என்கிறார் –

(செல்வத்தின் மேல் உள்ள ப்ராவண்யம் செல்வ நாராயணன் -திரு நாராயணன் -மேல் வைத்து உஜ்ஜீவிக்கலாமே)

எமக்கு என்று இரு நிதியம் ஏமாந்து இராதே
தமக்கென்றும் சார்வம் அறிந்து -நமக்கென்றும்
மாதவனே என்னும் மனம் படைத்தது மற்றவன் பேர்
ஓதுவதே நாவினால் ஓத்து—38–

பதவுரை

இரு நிதியம்–(இப்பொருளை எப்போது நாம் கொள்ளை யடிக்கப் போகிறோம்’ என்று
அயலார் எதிர்பார்த்திருப்பதற்குக் காரணமான) பெருஞ்செல்வத்தை
எமக்கு என்று–தங்களுடையதாக நினைத்து
ஏமாந்து இராதே–மனச் செருக்குக் கொண்டிராமல்
தமக்கு என்றும் சார்வம் அறிந்து–தங்களுக்கு எப்போதும் ரக்ஷகமாயிருக்கக் கூடிய உபாயத்தை யறிந்து
நமக்கு என்றும் மாதவனே என்னும் மனம் படைத்து–‘நமக்கு எக் காலத்திலும் எம்பெருமானே சரணம்’ என்று
துணிந்திருக்கும் நெஞ்சை யுடையராய்
மற்று–அதற்குப் பின்பு
அவன் பேர்–அத்திருமாலினது திருநாமங்களை
ஓதுவதே–ஸங்கீர்த்தநம் பண்ணுவதே
நாவினால் ஒத்து–நாவுக்கு ஓதுவதற்கு உரிய விஷயம்.

பிறர் -இடம் பார்த்து அறிந்து விநியோகம் கொள்ள வேணும் என்று கருதும் படி –
தனக்கும் பிறர்க்கும் பொதுவாய் இருக்கிற மஹா தனத்தை-
துர் வாசனையாலே நமக்கு வேணும் என்று அபிமானித்துக் கொண்டு –
ந பிபேதி -என்னும் விஷயத்தைப் பற்றினால் போலே –
அறிவு கெட்டு நிர்ப் பரனாய் இராதே –
தம் தாமுக்கு அறிந்த போதோடு அறியாத போதோடு வாசி யற சர்வ காலத்திலும்
நித்தியமான அபாஸ்ரயம் -ஓன்று -என்று –
சாஸ்திர அப்யாசாதி களாலே அறிந்து –
இனி நமக்கு கால தத்வம் உள்ளதனையும் ஸ்ரீ யபதியானவனே
ஆஸ்ரயணீயனும் பிராப்யனும் என்று துணிந்து இருக்கும் மனசை யுடையராய் –
அதுக்கு மேலே அந்த ஸ்ரீ யபதியினுடைய
அச் சேர்த்திக்கு வாசகமான திரு நாமங்களைச் சொல்லுகையே
வாக் இந்த்ரியத்தால் உச்சரிக்கப்படும் –

(புருஷார்த்தமாக அவளும் ப்ராப்யமாக அவனும் ப்ராபகமாக மிதுனமும்)

(கொள் என்று கிளர்ந்து எழுந்த பெரும் செல்வம் நெருப்பு -திருவாய் -4-9-4-
ந பிபேதி குதஸ் சந -தைத்ரியம் -பரம புருஷனைப் பற்றி இருப்பவன் எத்தைக் கண்டும் பயப்பட மாட்டான்
சேதனர் அனைவர்க்கும் அறிந்த நிலையோடு அறியாத நிலையோடு வாசி இல்லாமல் நிரந்தரமான பற்றுக்கொம்பு தானே அவன்
எல்லாக் காலத்திலும் அவனே தாரக போஷக போக்யம் -உபாயம் உபேயம் என்ற துணிந்த மனத்துடன்
மாதவன் ஸ்ரீ தரன் போன்ற இம் மிதுனத்தின் பெயரைச் சொல்வதே நாவுக்கு ஓதத் தக்கது -)

—————————————————————————————————

நாவினால் ஓதுகை யாவது தான் ஏது என்ன -சகல வேத சங்க்ரஹமான திரு மந்த்ரத்தை உச்சரித்துக் கொண்டு
வேதாந்தத்தில் சொல்லுகிற மர்யாதையாலே பக்தி மார்க்கத்தில் நின்று ஆஸ்ரயிங்கோள் என்றும்

அது மாட்டாதார் -(ஸ்வரூப ஞானம் -அசத்தி அப்ராப்தம் -பக்தி பாரவசயத்தால் -மூன்றாலும் மாட்டாதார் )த்வயத்தில் கட்டளையில் -ஸ்ரீ யபதியானவன் திரு நாமத்தைச் சொல்லி ஆஸ்ரயிங்கோள் -என்றும்
இரண்டு வகையாக ஆஸ்ரயணத்தை-
அதிகார அநு குணம் விதிக்கிறார் –

(உயிரான பாசுரம் -மேம் பொருள் பாசுரம் போல்)

(சாதன பக்தி -திருமந்திரம் கொண்டு -அதுவே வேதம்
அது மாட்டீராகில் த்வயம் படி சரணாகதி பண்ணுங்கோள் என்கிறார்
ஓம் இத் ஆத்மாநாம் உன்ஞீதே –
வியாபக மந்த்ரங்கள் மற்றவற்றில் ஏற்றம் -அவற்றுள் நாராயணா -அபூர்த்தி இல்லா குறை -அஸிஷ்ட பரிக்ரஹம் -உபாயாந்தர பரர்களும் திருமந்திரம் கொண்டு ஸ்துதிப்பார்கள் அன்றோ
இந்த அர்த்தம் கொண்டு அப்பிள்ளை உரை)

ஒத்தின் பொருள் முடிவும் இத்தனையே உத்தமன் பேர்
ஏத்தும் திறம் அறிமின் ஏழைகாள் -ஒத்ததனை
வல்லீரேல் நன்றதனை மாட்டீரேல் மாதவன் பேர்
சொல்லுவதே ஒத்தின் சுருக்கு —39–

பதவுரை

ஏழைகாள்–‘கண்ட கண்ட தேவதைகளின் கால்களிலெல்லாம் விழுகிற அறிவு கேடர்களே!,
ஓத்து அதனை–வேதமோதுவதாகிற காரியத்தை(ச் செய்ய)
வல்லீர் ஏல்–ஸமர்த்தர்களா யிருப்பீர்களாகில்
நன்று–அப்படியே வேதமோதுவது நல்லது;
அதனை மாட்டீர் ஏல்–அது செய்ய சக்தி யற்றவர்களாகில்
மாதவன் பேர்–திருமாலின் திருநாமங்களை
சொல்லுவதே–உச்சரிப்பதே
ஓத்தின் சுருக்கு–ஸகல வேதங்களின் ஸாரமாகும்;
ஓத்தின் பொருள் முடிவும் இத்தனையே–வேதத்தினுடைய அர்த்தங்களில் நிஷ்கர்ஷிக்கப்படடதும் இவ்வளவே; (ஆகையாலே)
உத்தமன்–புருஷோத்தமனான எம்பெருமானுடைய
பேர்–திருநாமங்களைக் கொண்டு
ஏத்தும் திறம்–(அவனைத்) துதிக்கும் வகையை
அறிமின்–தெரிந்து கொள்ளுங்கள்.

வகுத்த விஷயத்தை இழந்து -இதர விஷயத்தில் பிரவணராய் திரிகிற சபலர்காள் –
சங்க வேத அத்யயனம் பண்ணி
அதில் சொல்லுகிற -அர்த்தங்களையும் அறிந்து
அறிந்த படியே சாஷாத் கார ரூபமான பகவத் பக்தியைப் பேற்றுக்கு
உபாயமாக அனுஷ்ட்டிக்க வல்லி கோளாகில்-

சர்வ வித ரக்ஷகனாய் -சர்வ பிரகாரியான புருஷோத்தமனுடைய
சர்வ ரக்ஷகத்வ வாதியான சகலார்த்தங்களுக்கும் வாசகமான திரு மந்த்ரம் ஆகிற திரு நாமத்தைச் சொல்லி(அவ ரக்ஷண -நாரங்களுக்கு அயனம்-ஆதி என்பதால் ஸ்வாமி சேஷி காரணம் ஆதாரம் இத்யாதி )
ஸ்தோத்ரம் பண்ணும் பிரகாரமான இத்தனையே வேதத்தில் சொல்லுகிற அர்த்தங்கள் எல்லாவற்றிலும்
தாத்பர்யமாக நிர்ணயித்துத் தலைக் கட்டின அம்சம் –

இப்படி நன்றாக அத்தை அறிய மாட்டிற்றிலி கோளாகில்
ஸ்ரீ யபதியினுடைய திரு நாமத்தை சொல்லுகையே –
அந்த வேதப் பரப்பு எல்லா வற்றிலும் கூட சங்ஷேபித்துத் தலைக் கட்டும் –

இவ் வர்த்தம் பகவத் பிரசாதத்தாலே தெளியக் கண்ட நான் சொன்ன வார்த்தை யாகையாலே
இத்தைத் தப்பாது என்று விஸ்வஸித்து அறியுங்கோள் –
இத்தைச் சுருக்கு என்கையாலே
கீழ்ச் சொன்னது வேதத்தில் பரக்கச் சொன்ன பொருள் -என்று தோற்றுகிறது –

(அவரவர் விதி வழி அடைய நின்றனர் -அந்தர்யாமியாக இவன் உண்டே -நின்று பலன் கொடுக்க- நியமிக்கிறவன் புருஷோத்தமன் தானே)

(மாநஸமே சரணாகதி -சொல்லுவதே -வாய் வார்த்தையாக -புத்தியில் படாமல் சொன்னாலும் -அதுவும் உனது ப்ரஸாதத்தாலே)

(வேத அக்ஷராணி யா வந்தி படிதாநி த்விஜாதிபி
தா வந்தி ஹரி நாமாநி கீர்த்திதாநி ந ஸம்சய
வேதைஸ் ச சர்வைர் அஹமேவ வேத்ய -15-15-
திருமாலின் பெயரைச் சொல்வதே வேத சாரம் திருமந்த்ரத்தைச் சொல்லியும்
‘த்வயத்தைச் சொல்லியும் ஆஸ்ரியிப்பார்
வல்லீரேல் -அர்த்த ஞானமும் அனுஷ்டானமும் துர்லபம்
கர்ம ஞான பக்திகளிலே இழிந்தவருக்கு விரோதியைப் போக்கி அவற்றைத் தலைக் கட்டிக் கொடுக்கும் –
திருமந்திரம் பக்திக்கு அங்கம்
இதில் பிரபத்தி பண்ணும் அதிகாரிகள் மூவர் -அஞ்ஞரும் ஞானாதிகரும் பக்தி பரவசரும் –
அஞ்ஞானத்தாலே ப்ரபன்னர் அஸ்மதாதிகள்
ஞானாதிக்யத்தாலே ப்ரபன்னர் பூர்வாச்சார்யர்கள்
பக்தி பாரவஸ்யத்தாலே ப்ரபன்னர் ஆழ்வார்கள்
தஸ்மாத் ந்யாஸம் ஏஷாம் தபஸாம் அதிரிக்தம் ஆஹு – )

———————————————————————————————————

இப்படியான பின்பு -ஸமஸ்த வேதங்களுக்கும் தாத்பர்ய பூதனான ஸ்ரீ யபதியைச்
சரம தசா பன்னராவதற்கு முன்னே கடுக ஆஸ்ரயிங்கோள் என்கிறார் –

சுருக்காக வாங்கிச் சுலாவி நின்று ஐயார்
நெருக்கா முன் நீர் நினைமின் கண்டீர் -திருப் பொலிந்த
ஆகத்தான் பாதம் அறிந்தும் அறியாத
போகத்தால் இல்லை பொருள்—-40–

பதவுரை

ஐயார்–கோழையானது
சுருக்காக வாங்கி–சரீரத்தைச் சுருங்க வலித்து
சுலாவி நின்று–உடம்பு முழுவதும் சூழ்ந்து கொண்டு நின்று
நெருக்கா முன்–(உயிர் போகும் போது கழுத்தளவிலே வந்து கூடி) நெருக்குவதற்கு முன்பே,
திரு பொலிந்த ஆகத்தான் பாதம்–பிராட்டியாலே விளங்குகின்ற திரு மார்பை யுடைய பெருமானுடைய திருவடிகளை
நீர் நினைமின்–நீங்கள் சிந்தியுங்கோள்:
அறிந்தும்–பகவத் விஷயத்தை அறிந்தவர்களாயிருந்தும்
அறியாத–அறியாதவர்களாகவே உங்களைச் செய்ய வல்ல
போகத்தால்–சப்தாதி விஷயங்களால்
பொருள் இல்லை–ஒரு ப்ரயோஜனமுமில்லை.

(ஞானத்தை அனுஷ்டான பர்யந்தமாக ஆக்க போகம் தடுக்கும் -ஆகவே பாதம் அறிந்தும் -போகாததால் அறியாத என்கிறார்

நினைமின் -போகாததால் லாபம் இல்லை என்று நினைமின்
சரீரம் ஸ்பஷ்டமாக இருக்கும் போதே நினைமின்)

சரீரம் எங்கும் ஓக்கப் பூர்வத்தில் வியாபித்து நின்ற ஸ்லேஷமாவானது -சரீர விஸ்லேஷ தசையில் கண்ட ஸ்தானத்தில் வந்து
செறியத் தக்கதாகச் சுருங்க வழித்து இழுத்துக் கொண்டு -வாக் வியவஹார யோக்யதை இல்லாத படி மிடற்றை அடைத்து
மிறுக்குப் படுவதுக்கு முன்னே(உடம்பு சுருங்கி கீழே பார்த்தோம் –இங்கே ஸ்லேஷ சுருக்கம் )

பெரிய பிராட்டியாராலே சம்ருத்தமாய் விளங்கா நின்றுள்ள திருமேனியை யுடையனான
சர்வேஸ்வரன் திருவடிகளை நீங்கள் அனுசந்தித்துக் கொண்டு நில்லும் கிடிகோள்

பகவத் விஷயத்தை அறிந்து வைத்தும் அறியாதார் கணக்காம் படி பண்ணக் கடவ
சப்தாதி போகங்களால் வரக் கடவ பிரயோஜனம் இல்லை –

சுலாவி நின்று ஐயார்–சுருக்காக வாங்கி–நெருக்கா முன் — –
திருப் பொலிந்த-ஆகத்தான் பாதம் நீர் நினைமின் கண்டீர் –
என்று அந்வயம் –

(ப்ராண ப்ரயாண ஸமயே கப வாத பித்தைர் கண்டா வரோதந விதவ் ஸ்மரணம் குதஸ்தே -முகுந்தமாலை
ஸ்ரத்தயா தேவோ தேவத்வம் அஸ்நுதே
உத்தம ராஜ கன்யயாஸமே யிவான் அதீவ ராம ஸூ ஷுபே விபு ஸ்ரியா விஷ்ணு ரிவாம ரேஸ்வர-பால -77-99-
வடிவாய் நின் வள மார்பினில் வாழ்கின்ற
திகழ்கின்ற திரு மார்பில் திரு மங்கை தன்னோடும் திகழ்கின்ற திருமாலார்–திருவாய் -10-6-9-
விஷய போகத்தைக் கை விட்டுத் திருப்பொலிந்த ஆகத்தான் பாதத்தை சரண் அடையுங்கோள் என்கிறார் -)

——————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

இரண்டாம் திருவந்தாதி- பாசுரங்கள் -21-30- -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை-

November 13, 2016

எம்பெருமானை பஜிக்கைக்கு (பக்தி செய்ய )ஈடான கரண சம்பத்தில் குறைவற்று இருக்கச் செய்தேயும் -சம்சாரிகள் விலக்கடி
தேடிக் கொண்டு போய்ப் புகுகிறபடி எங்கனே என்று விஸ்மயப் படுகிறார் –

தாமுளரே தம் உள்ளம் உள் உளதே தாமரையின்
பூ உளதே ஏத்தும் பொழுது உண்டே -வாமன்
திரு மருவு தாள் மருவு சென்னியரே செவ்வே
அரு நரகம் சேர்வது அரிது—————–21-

பதவுரை

தாம் உளரே–(எம்பெruருமானைப் பணிவதற்குப் பாங்கான கரண களேபரங்களை யுடைய)-புருஷ சா பேஷமும் புருஷகார சா பேஷமுமாய் இருக்குமே –
சேதநர் தாங்கள் ஏற்கனவே இருக்கின்றார்களே;-சேதனர் அறிவுடைய -முமுஷார்த்தியாக இருப்பதே அறிவின் பிரயோஜனம் –
தம் உள்ளம் உள்உளதே–(எம்பெருமானைச் சிந்திப்பதற்கான) தங்களுடைய (மனமும் வெளியே போய்த் தேட வேண்டாதபடி)
தமக்குள்ளே யிருக்கின்றதே.
தாமரையின் பூ உளதே–(எம்பெருமான் திருவடிகளில் சாத்தத் தக்க) தாமரைப்பூ (குளங்கள் தோறும்) நிறைந்து கிடக்கின்றதே;
ஏத்தும் பொழுது உண்டே–அவனை வாய் விட்டுப் புகழ்வதற்கு ஏற்ற காலம் ஏராளமாக வுள்ளதே;
வாமன்–(தன் உடைமையைப் பெறுகைக்குத் தான் யாசகனாகச் சென்ற சீலமுள்ள) வாமந மூர்த்தியான ஸர்வேச்வரனுடைய
திரு மருவு தாள்–அழகிய திருவடிகளை
மருவு–பணிவதற்குப் பொருத்தமான
சென்னியரே–தலையை யுடையவர்களாக இருக்கின்றார்களே;
(இப்படி ஒன்றாலும் குறையின்றியே யிருக்கவும் இவ்வுலகத்தவர்கள்)
செவ்வே–நேராக
அரு நரகம்–கொடிய நரகத்தை
சேர்வது–அடைவதானது
அரிது–ஆச்சரியப்படத் தக்க அருமையான செயலாயிருக்கின்றது.(சம்சார சூழலில் சிக்குவது அரிது என்றுமாம் )

ஆஸ்ரயண உபகரணமான கரண களேபர விசிஷ்டரான தாங்கள் முந்துற முன்னம் உளராய் இருந்தார்கள் –
அனுசந்தான பரிகரமான தம்தாமுடைய மனஸ்ஸூ புறம்பே தேட வேண்டாத படி உண்டாய் இருந்ததே –

திருவடிகளிலே பணிமாறுகைக்கு உறுப்பான கைக்கு எட்டின தாமரைப் பூ உண்டாய் இருந்ததே –

வாய் விட்டுப் புகழுகைக்கு ஈடான காலம் உண்டாய் இருந்ததே –

தன் உடமை பெறுகைக்குத் தன்னை இரப்பாளனாக்கும் நீர்மையை யுடையனான சர்வேஸ்வரனுடைய
ஐஸ்வர்ய ப்ரகாசகமாய் த்விஜ அரவிந்தாதி சிந்நிஹிதமான திருவடிகளிலே
சேஷத்வ அனுரூபமாகச் சேருகைக்கு அனுரூபமான தலையை உடையராய் இருந்தார்கள்-

இப்படி இருக்க நேர் கொடு நேரே கொடிதான சம்சாரத்தைச் சென்று கிட்டுகை அரிது –
இங்கனே இருந்த பின்பு இவர்கள் விலக்கடி தேடிக் கொண்டு திரிகிற படி எங்கனேயோ –
என்று ஆச்சர்யப்படுகிறார் –

(நாமோ பரமபதம் செல்வதே அரிது என்று நினைத்து உள்ளோம் -ஆழ்வார்கள் இதுக்கே நேர் மாறாக சம்சார சூழலில் சிக்கித் தவிப்பதே அரிது என்கிறார் -)

(நா வாயில் யுண்டே நமோ நாரணா என்று
ஓவாது உரைக்கும் உரை யுண்டே -மூவாத
மாக் கதிக் கண் செல்லும் வகை யுண்டே என் ஒருவர்
தீக் கதிக் கண் செல்லும் திறம் -முதல் திரு -95- அடி ஒற்றியே இப்பாசுரம்-
விசித்ரா தேஹ ஸம்பத்திர் ஈஸ்வராய நிவேதிதும்
பூர்வமேவ க்ருதா ப்ரஹ்மன் ஹஸ்த பாதாதி ஸம் யுதா -ஸ்ரீ விஷ்ணு தத்வம் -6-
இங்கே தாமரையின் பூ என்றது
கள்ளார் துழாயும் கண வலரும் கூ விளையும் முள்ளார் முளரியும் ஆம்பலும் -பெரிய திருமொழி -11-7-6-
செண்பக மல்லிகையோடு செங்கழு நீர் இருவாட்சி எண்பகர் பூவும் -பெரியாழ்வார் -2-7-10-
என்னும் பூக்களுக்கு எல்லாம் உப லக்ஷணம்
பத்ரம் புஷ்பம் -கீதை -9-26-
புரிவதுவும் புகை பூவே -திருவாய் -1-6-1- என்கிறபடி
எம்பெருமானுக்கு ஆகாத பூவே இல்லையே –
ந கண்ட காரிகா புஷ்பம் தேவாய விநி வேதயத்-என்று தள்ளியதும் ஆஸ்ரிதன் கையில் முள் தைக்காமக்கைக்குத் தானே
அவனுடைய புஷ்ப ஹாஸ திருமேனிக்கு இது ஸத்ருசம் அன்று என்று இவன் நினைவாலே என்றுமாம்
நாராயணேதி சப்தோஸ்தி வாக் அஸ்தி வச வர்த்தி நீ
ததா அபி நரகே கோரே பதந்தீத்யே ததத்புதம் –
நமோ நாரணா என்று ஓவாது உரைக்கும் உரை உண்டே -முதல் திரு -95- என்றபடி
மற்ற உபகரணங்களும் உப லக்ஷணம்
திரு மருவு தாள் -வடிவிணை யில்லா மலர் மகள் மற்றை நில மகள் பிடிக்கும் மெல்லடி -திருவாய் -9-2-10-
புருஷகார பூதையும் அருகிலே உண்டே
சங்க ரதாங்க கல்பக த்வஜ அரவிந்த அங்குச வஜ்ர லாஞ்ஜனம் த்ரி விக்ரம த்வத் சரணாம்புஜ த்வயம் -ஸ்தோத்ர ரத்னம் -31-என்று
திரு -ஐஸ்வர்யம் காட்டும் திருவடிகள்
அவனை அடைய அருளிய உபகரணங்களைக் கொண்டே அவனிடம் இருந்து விலக உறுப்பு ஆக்கிக் கொள்வதே என்று ஆச்சர்யப்படுகிறார் -)

——————————————————————————————-

தங்களுக்கு ஒரு பரிகர சம்பத்தி அற்று இருந்ததே யாகிலும் அவன் பக்கலிலே ந்யஸ்த பரராய் இருப்பார்க்கு
எளிதாக ஆஸ்ரயிக்கலாம் படி யன்றோ அவன் நீர்மையின் ஏற்றம் இருப்பது -என்கிறார்-

(சார்வே தவ நெறிக்கு -பக்தி பிரபத்தி இரண்டாலும் -என்றே நிர்வாஹம் -அதே போல் இப்பாசுரமும்
ஸ்வ தந்த்ர பிரபத்தி- பக்தி இருக்கும் நாள் கைங்கர்யத்துக்கு வேண்டுமே -மரணமானால் வைகுந்தம் தருபவன் -மரணமாக்கி அல்லவே
பக்தி மூலம் போனாலும் அங்க பிரபத்தி செய்து தடங்கல் போக்கி பக்தி செய்து உபாசகர் பேறு பெறுவர்)

(பெறுக முயல்வான் -பக்தி உழவன் -பிரபத்தி பரம் -அநிஷ்ட நிவ்ருத்திக்கும் இஷ்ட ப்ராப்திக்கும் ஸ்வ தந்த்ர பிரபத்தி
ஈஸ்வர ப்ரவ்ருத்திக்கு விரோதமாய் இருக்கும் ஸ்வ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி தானே பிரபத்தி –
உபாயாந்தர நிஷ்டனும் பெறுக முயல்வானாகக் கொண்டு பக்தி பரம் -இதுக்கும் அநிஷ்டம் போக்க அவன் இதன் பிரபத்தி வேண்டுமே)

அரியது எளிதாகும் ஆற்றலால் மாற்றி
பெருக முயல்வாரைப் பெற்றால் -கரியதோர்
வெண் கோட்டு மால் யானை வென்றி முடித்தது அன்றே
தண் கோட்டு மா மலரால் தாழ்ந்து——22-

பதவுரை

(சேதநனுக்கு வேண்டிய ஸகல காரியங்களையும் தானே செய்வதாக என்று கொண்டு)
பெருக முயல்வாரை–மிகவும் உத்ஸாஹங் கொண்டிருக்கின்ற மஹாபுருஷனான எம்பெருமானை
பெற்றால்–கிடைக்கப் பெற்றால்
அரியது–செய்வதற்கு அருமையான செயலும்
எளிது ஆகும்–லகுவாய்விடும்; (இப்படியாக எங்கே கண்டோமென்னில்)
வெண் கோடு–வெண்ணிறமான தந்தங்களை யுடைய
மால்–பெரிய
கரியது ஓர் யானை–கருநிறமுள்ள கஜேந்திராழ்வான்
தண்–குளிர்ந்த
கோடு–பொய்கைக் கரையிலே
மா–சிறந்த
மலரால்–தாமரைப் பூக்களைக் கொண்டு
(மடுவின் கரையிலெழுந்தருளின எம்பெருமான் திருவடிகளிலே)
தாழ்ந்து–வணங்கி யடிமை செய்ததனால்
வென்று முடித்தன்றே–விரோதியை ஜயித்துத் தன் அபீஷ்டத்தை நிறைவேற்றிக் கொண்டதன்றோ.
ஆற்றலால்–தன்னுடைய சக்தியினால்
மாற்றி–சேதநன் செய்யும் முயற்சி ஒன்றும் வேண்டாவென்று விலக்கி

அகடி தகடநா சாமர்த்தியம் உள்ளவனே ஆற்றல் உடையவன் -அவனே பெறுக முயல்கின்றவன் -கிருஷி பண்ணும் பக்திஉழவன்

வஸ்துவை வஸ்தாந்தரம் ஆக்க வல்ல சக்தி யோகத்தாலே –
உன் பேற்றுக்கு உறுப்பாக நீ ஒன்றும் யத்தனித்துச் செய்ய வேண்டா என்று ஸ்வ ரக்ஷண அர்த்தமாக –
இவன் பண்ணும் ப்ரவ்ருத்திகளை அடைய மாற்றி –
ஞானம் ப்ரேமம் முதலாகக் கைங்கர்ய பர்யந்தமாக இவனுக்குச் செய்ய வேண்டும் சர்வ காரியமும்
தன் தலையிலே ஏறிட்டுக் கொண்டு இவன் பக்கலிலே அந்வயமாம் படி –

(பல ப்ரதாதாகவும் பல கரணங்களாகவும் அவனே ப்ரபன்னனுக்கு -பலம் அனுபவமே இவனுக்கு கர்தவ்யம்
பக்தி யோகனுக்கு பக்தி தானே கருவி)

தன் பேறாக சர்வ ரக்ஷைகளையும் பண்ணுகையிலே மிகவும் உத்ஸாஹியா (பெறுக முயல்வான் )நிற்கும் மஹா புருஷரைப் பெற்றால் –
பெறுதற்கு அரிதான பகவல் லாபமும் எளிதாகா நிற்கும் -அது எங்கே கண்டோம் என்னில்-

கறுத்த நிறத்தையும் -வெளுத்த கொம்பையும் பெரிய வடிவையும் யுடைத்தான ஆனையானது –
அடிமைக்கு கால் கட்டான முதலையை ஜெயித்து அழியச் செய்தன்றே-(தானாக அழியாச் செய்ய வில்லையே )

குளிர்ந்த பொய்கைக் கரையிலே ஸ்லாக்யமான தாமரைப் பூக்களைக் கொண்டு –
அரை குலையத் தலை குலைய வந்து தோன்றி
விரோதியைப் போக்கி ரக்ஷித்து அருளின அவன் திருவடிகளிலே தாழ்ந்து
அடிமை செய்யப் பெற்றது -(அவனே அநிஷ்டத்தையும் போக்கி இஷ்டபிராப்தியையும் தந்து அருளி கைங்கர்யமும் கைக்கொண்டான் அன்றோ )

தாழ்ந்து என்றது தாழ்ந்தது என்றபடி –
கோடு என்று கரைக்குப் பேர் –
தட்டம் குளிர்த்தி
குளிர்ந்த பொய்கை கரையிலே என்றபடி –

தண் தோட்டு மா மலர் -என்ற பாடமான போது –
குளிர்ந்த இதழை யுடைத்தான பெரிய புஷ்ப்பத்தாலே-என்று பொருளாகக் கடவது –

(பிரபத்தி பரமாகவும் பக்தி பரமாகவும் இரண்டு நிர்வாகங்கள் இப்பாசுர வியாக்யானத்தில் உண்டே
பகவத் ப்ரவ்ருத்தி விரோதி ஸ்வ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி பிரபத்தி -என்று அன்றோ பிரபத்தியின் லக்ஷணம்
நெறி காட்டி நீக்குதியோ -பெரிய திருவந்தாதி -6-
நஹி கச்சித் ஷணமபி ஜாது திஷ்டத் யகர்மக்ருத் -கீதை -2-5-என்கிறபடி நிவ்ருத்தியும் தன்னாலே சாதித்துக் கொள்ள முடியாதது ஒன்றே
அதுவும் அவனது இன்னருளே என்று அவனாலேயே பெற வேண்டும்
இத்தை எங்கே கண்டோம் என்ன -கஜேந்திர ஆழ்வானைத் த்ருஷ்டாந்தமாகக் காட்டி அருளுகிறார் –
பரமா பதமா பந்ந மனஸா சிந்தயத் ஹரிம்
ஸ து நாகவர ஸ்ரீ மான் நாராயண பராயண -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -68-
தாழ்ந்து வென்றி முடித்ததன்றே -என்று திருவடிகளில் மலரை இட்டு பக்தியைப் பூர்த்தி செய்து
பேறு பெற்றது என்று பக்தி பரமாகவுமாம்
பகவத் பக்தியாகிய தனது முயற்சியே சரணாகதியில் மூட்டி பக்தியோகத்தைப் பூர்த்தி செய்ய முடிந்தது

அஞ்ஞானத்தாலும் -ஞாநாதிக்யத்தாலும் பக்தி பாரஸ் யத்தாலும் பிரபன்னர்கள் மூ வகை உண்டே –
பக்தியும் சரணாகதியிலே மூட்டும்
அங்க பிரபத்தி பக்தி ஆரம்ப விரோதிகளை போக்க வேணுமே

இப்படி இரண்டு நிர்வாஹங்கள் இருந்தபோதிலும்
நாராயண பராயண-என்ற ரிஷி வாக்யத்துக்கும்
பிடி சேர் களிறு அளித்த பேராளா -முதல் திரு -95- என்றபடி
பக்திக்கு அங்கமான வைராக்யம் அற்று இருந்தான் என்பதால்
முதல் நிர்வாஹமே சாலப் பொருந்தும் -என்று ஆச்சார்யர்களால் மிகவும் ஆதரிக்கப் பட்டதாகும் )

——————————————————————————————

தன்னை ஆஸ்ரயித்தார்களுடைய விரோதிகளை போக்கி அபிமத சித்தியையும் பண்ணிக் கொடுத்துத்
தத் தத் அதிகார அனுகுணமாக ரஷிக்கும் என்கிறார் –

(பிரதிபந்தகங்கள் விளாம்பழமும் கன்றும் பட்ட பாடும் மஹா பலியுடைய துரபிமானமும் பட்ட பாடும் படும் என்று காட்டவே இந்த த்ருஷ்டாந்தங்கள்)

தாழ்ந்து வரம் கொண்டு தக்க வகைகளால்
வாழ்ந்து கழிவாரை வாழ்விக்கும் -தாழ்ந்த
விளங்கனிக்கு கன்று எறிந்து வேற்றுருவாய் ஞாலம்
அளந்தடிக்கீழ் கொண்ட வவன்—-23-

பதவுரை

தாழ்ந்த–(பழத்தின் கனத்தினால் கிளைகள்) தாழ்ந்து கிடந்த
விளா–விளா மரத்தினுடைய
கனிக்கு–பழங்களை உதிர்ப்பதற்காக
கன்று–கன்றை (எறி கோலாகக் கொண்டு) வீசி யெறிந்தவனாயும்
வேறு உரு ஆய்–(திருமாலான தன்னுடைய வடிவத்தை விட்டு யாசகனான வாமன மூர்த்தி வடிவமாய்
ஞாலம்–பூமியை
அளந்து–அளந்து
கொண்ட–அடங்கும்படி கொண்டவனாயுமுள்ள
அவன்–அந்த எம்பெருமான்
தாழ்ந்து–தனது திருவடிகளிலே வணங்கி
வரம் கொண்டு–(எங்கள் இஷ்டத்தை நீயே பூர்த்தி செய்து தரவேணுமென்று சொல்லித் தனது) திருவருளைப் பெற்று-வரம் -ஸ்ரேஷிடம் என்றபடி –
தக்க வகைகளால்–(தங்கள் தங்கள் நிலைமைக்கு) ஏற்ற வண்ணமாக
வாழ்ந்து–ஐஸ்வரியத்தையோ கைவல்யத்தையோ பகவத் ப்ராப்தியையோ பெற்று
கழிவாரை–மேன்மேலும் ஸுகத்தை மிகுத்துக் கொள்ள வேணுமென்றிருக்கிற அந்தந்த அதிகாரிகளை
வாழ்விக்கும்–வாழ்விப்பான்.

கனியப் பழுத்துக் கிடக்கையாலே தரை அளவும் வரத் தாழ்ந்து கிடக்கிற அஸூர மயமான விளாவினுடைய பழங்களுக்கு
அஸூர மயமான கன்றை எறி கோலாக எடுத்து எறிந்து-

ஸ்ரீ யபதியான தன் உருவை விட்டு -அர்த்தியான வாமன ரூபத்தை
உடையனாய்க் கொண்டு -பூமியை அளந்து -தன் கால் கீழே இட்டுக் கொண்ட –
அந்த சர்வேஸ்வரன் –

ந நமேயம் -என்கிற ஸ்வாதந்தர்யத்தைப் பொகட்டுத் தன் திருவடிகளிலே வணங்கி –
எங்கள் அபிமதம் நீயே பண்ணித் தர வேணும் என்று
தன் பிரசாதத்தைக் கை தொடுமானமாகப் (பற்றுக் கொம்பாக )பிடித்துக் கொண்டு
தம் தாமுடைய அதிகாரங்களுக்குத் தகுதியாக இருந்த பிரகாரங்களாலே(ததாமி புத்தி யோகம் -அத்தையே பற்றிக் கொண்டு அடைகிறான் என்றானே )

ஐஸ்வர்யம் ஆத்ம லாபம் -ஸ்வ பிராப்தி ஆகிற ஸ்வ ஸ்வ அபிமதங்களைப் பெற்று
ஸூக உத்தரராய்த் தலைக் கட்ட வேணும் என்று இருக்கும் அவ்வவ அதிகாரிகளையும் –
அவர்கள் ருசிக்கும் உபாசனத்துக்கும் ஈடான தத் தத் பலன்களைக் கொடுத்து ரஷியா நிற்கும் –

(தன்னை ஆஸ்ரயிப்பவர்கள்
ப்ரபன்னராகவுமாம்
உபாயாந்தர நிஷ்டர்களாகவுமாம்
அநந்ய ப்ரயோஜனராகவுமாம்
ப்ரயோஜனாந்தர பரராகவுமாம்
அவர்களுக்குத் தானே எளியனாகி -விரோதியையும் போக்கி -இஷ்ட ப்ராப்தியையும் செய்து கொடுத்து
அவரவர்கள் விருப்பத்துக்குத் தக்கபடி அவரவர்களே ரக்ஷித்து அருளுகிறான் –

த்விதா பஜ்யேயம் அப்யேவம் ந நமேயம் து கஸ்ய சித்
ஏஷ மே ஸஹ ஜோ தோஷஸ் ஸ்வ பாவோ துரதிக்ரம -யுத்த -36-11-என்கிறபடி
ஸ்வா தந்தர்யத்தைக் கை விட்டு -பக்தி பிரபத்தி மூலம்
அவன் அருளையே பற்றாசாகக் கொண்டு வணங்கி
வாழ்விக்கும் -அந்தவந்த அதிகாரிகளுக்குத் தக்க பலன்களை அளித்து
இதற்குத் தடைகள் ஏற்பட்டால் விளங்கனி பட்டதும் -மஹாபலி அஹங்காரம் பட்டதும் படும்
தன்ன தானே பூமியைத் தானே அளந்து தன் அடிக்கீழ் ஆக்கிக் கொண்ட அந்த ஸர்வேஸ்வரன் வாழ்விக்கும் என்று கீழோடே அந்வயம் -)

————————————————————————————————

இவன் உண்டான அன்று இவன் அபேக்ஷிதம் கொடுத்து ரக்ஷித்தான் -என்னும் இது ஓர் ஏற்றமோ –
அடியே தொடங்கி இவனுடைய சத்தையை நோக்கிக் கொண்டு போருகிறவனுக்கு -என்கிறார் –

(படைக்கிறவனே ரக்ஷிக்க வேண்டுமே -இத்தகி செய்தவன் எத்தைச் செய்ய மாட்டான் -உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன் -ஸ்வரூப பரம் போல் இதுவும் அவன் கண்டாய் என்று விளக்கிக் காட்டி அருளுகிறார்)

அவன் கண்டாய் நன் நெஞ்சே யார் அருளும் கேடும்
அவன் கண்டாய் ஐம் புலனாய் நின்றான் -அவன் கண்டாய்
காற்றுத் தீ நீர் வான் கருவரை மண் காரோதச்
சீற்றத் தீ யாவானும் சென்று —24-

பதவுரை

நல் நெஞ்சே–நல்ல மனமே!
ஆர் அருளும்–பரி பூர்ண க்ருபையாலே உண்டாகக் கூடிய மோக்ஷமும்-காரண வாஸ சப்தத்தால் கார்யம் குறிக்கப்படுகிறது -அனுக்ரஹத்தாலே தானே மோக்ஷமும்
கேடும்-நிக்ரஹத்தால் வரக் கூடியதான ஸம்ஸாரமும்
(ஆகிய இரண்டுக்கும் நிர்வாஹகன்
அவன் கண்டாய்–அந்த எம்பெருமானே யாவன்;
ஐம்புலன்–பஞ்சேந்திரிய வடிவமான சரீரத்திற்கு உத்பாதகங்களான-மனசுக்கும் இவை உப லக்ஷணம்
காற்று தீ நீர் வான் மண் ஆய் நின்றான் அவன் கண்டாய் –பஞ்ச பூதங்களாய் நிற்பவனும் அந்த எம்பெருமானே யாவன்;
கரு வரை–கறுத்த மலைகளும்
(அவன் கண்டாய்)–அவனேயாம்;
சென்று–(இந்தப் பிரபஞ்சத்தை யழிக்கத் திருவுள்ளம்) ப்ரஸரித்து
கார் ஓதம் சீற்றம் தீ ஆவானும்–கறுத்த கடலைச் சீறிச் சுடவல்ல படபாக்நி யாகுமவனும்–வைச்வானர அக்னி நமக்குள்ளளே -பாடவாகினி கடலுக்குள்ளே
அவன் கண்டாய்–அந்த எம்பெருமானேயாம்.

பகவத் வைபவம் கேட்டால் உகக்கும் நல்ல நெஞ்சே –
பரி பூர்ணமான கிருபையால் உண்டாகக் கடவ மோக்ஷமும் –
நிக்ரஹ காரியமாய் வரக் கடவ சம்சாரம் ஆகிற மஹா அநர்த்தமும் ஆகிற இவற்றுக்கு நிர்வாஹகன் அவனே கிடாய் –

இரண்டுக்கும் பொதுவான சரீரத்துக்கு ஆரம்பகமான வாயு அக்னி ஜலம் ஆகாசம் பூமிகள் ஆகிற பூத பஞ்சகம்
தத் கார்யமான பெரிய பர்வதங்கள் ஆகிற இவற்றை அடியிலே உண்டாக்குவானும் அவன் கிடாய் –

சம்சார காலத்திலே இவற்றை அழிக்க ஒருப்பட்டுத் திரு உள்ளம் சென்று -அதுக்கு உபகரணமாய் –
கறுத்த கடலைச் சீறிச் சுடக் கடவ படபாமுக அக்னிக்கு நிர்வாஹகனாய் இருப்பவனும் அவன் கிடாய்-

ஆக
த்யாஜ்ய உபேதேயங்கள் இரண்டுக்கும் நிர்வாஹகன் என்றபடி –

ஆர் அருள் என்று
அருளின் கார்யமான மோக்ஷத்தை லஷிக்கிறது

அன்றிக்கே
அநுக்ரஹ ஹேதுவான புண்யத்தையும் –
நிக்ரஹ ஹேதுவாய் -அநர்த்த கரமுமான பாபத்தையும் சொல்லவுமாம் –

(மா மேவ யே ப்ரபத்யந்தே மாயா மேதாம் தரந்தி தே –கீதை -7-14-
ஆர் அருள் -அருளுக்கு காரணமான புண்யமும்
கேடு -நிக்ரஹ காரணமான பாபமும்
ஸம்ஸார பந்த ஸ்திதி மோக்ஷ ஹேது -ஸ்வே தாஸ்வர
கர்ம காரயதி-கௌஷீக
அனைத்தும் இவனாலேயே -நிர்வாஹக நிர்வாஹ்ய பாவ ஸம்பந்தம் -இருப்பதால் ஒரே வேற்றுமையில் படிக்கிறார்
மன ஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்த மோஷாயா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -6-7-28-
மனத்துக்கும் இந்திரியங்களுக்கு நிர்வாஹனன் ஹ்ருஷீகேசனான அவனே
ஹ்ருஷீ காண் இந்த்ரியாண் யாஹூஸ் தேஷாமீஸோ யதோ பவான்
ஹ்ருஷீ கேஸஸ் ததோ விஷ்ணு க்யாதோ தேவேஷு கேஸவ -ஸ்ரீ ஹரி வம்சம்
சத்தை தொடக்கமாக சம்ஹாரம் ஈறாக சமஸ்தமும் அவன் அதீனமான பின்பு
தன்னை ஆஸ்ரயித்தாற்கு அபீஷ்டங்களை அளித்து அருளுவது வியப்போ -என்கிறார் -)

—————————————————————————————

இப்படி சர்வ சாதாரணனாய் நின்று ரஷிக்கும் அளவன்றிக்கே ஆஸ்ரித விஷயத்தில் –
அசாதாரணனாய் நின்று பக்ஷபதித்து ரஷிக்கும் படியை அருளிச் செய்கிறார் –

(பொதுவான ரக்ஷணம் கீழே -இதில் ஆஸ்ரித ஸம் ரக்ஷணம் ஆஸ்ரித பக்ஷ பாதன் -விசேஷ ரக்ஷணம் என்றுமாம்
படைக்கப் பட்டவை எல்லாம் ரக்ஷிப்பவனும் அவனே -வில்லால் ஓங்கு முந்நீர் அடைத்தான் -தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் -இங்கு கோபத்தால் -)

சென்றதிலங்கை மேல் செவ்வே தன் சீற்றத்தால்
கொன்றது ராவணனை கூறுங்கால் -நின்றதுவும்
வேயோங்கு தண் சாரல் வேங்கடமே விண்ணவர் தம்
வாயோங்கு தொல் புகழான் வந்து—-25—

பதவுரை

விண்ணவர் தம் வாய்–தேவர்களின் வாயினால்
ஓங்கு தொல் புகழான்–உயர்வாகக் கூறப்படுகின்ற பழமையான புகழை யுடைய எம்பெருமான்
செவ்வே–நேராக
சென்றது–சீறிச் சென்றது
இலங்கை மேல்–லங்காபுரியின் மேலாகும்;
தன் சீற்றத்தால்–தனக்கு வந்தேறியான கோபத்தால்
கொன்றது–ஸம்ஹரித்தது
இராவணனை–ராவணனையாம்;
கூறுங்கால்–சொல்லுமிடத்து
வந்து நின்றதுவும்–(சேதநர் எக்காலத்தும் உஜ்ஜீவிக்க வேணுமென்று கருதி) வந்து
வேய் ஓங்கு தண் சாரல் வேங்கடமே–மூங்கில்கள் ஓங்கி வளர்ந்துள்ள குளிர்ந்த சாரலை யுடைய திருவேங்கடமலையேயாம்.

பரமபத வாசிகளான நித்ய ஸூரிகள் தாங்கள் வாய் விட்டு ஏத்துகைக்கு விஷயம் ஆகையால்
உத்துங்கமாய் -ஸ்வாபாவிகமான கல்யாண குணங்களை யுடைய சர்வேஸ்வரன் –
அங்கு நின்றும் வந்து அவதரித்து -சங்கல்பத்தால் அன்றிக்கே
நேர் கோடு நேரே -அபியாதா -என்னும் படி
எடுத்து விட்டுச் சென்றது

இந்த்ராதிகள் கேட்கவே வயிறு பிடிக்கும் படியான லங்கையில்
ப்ரஹர்த்தா ச -என்கிறபடியே
அவதாரத்தில் மெய்ப்பாட்டாலே அபேக்ஷித சமயத்திலே உதவி முகம் காட்டக் கடவதான
கோபத்தால் கொன்று விழ விட்டது -அவத்யனாக வரம் பெற்றுடைய ராவணனை –

(ஜித க்ரோதன்-கோபத்தை வென்றவனும் குணம் என்னும் குன்று ஏறி நின்றவன் கோபிக்க யார் நிற்க முடியும் -ஜிதம் வந்தால் யாரும் எதிரே நிற்க முடியாதே -கோபஸ்ய வஸமே ஆனானே)

அவன் படிகளை சொல்லப் புக்கால் அவதார காலத்தில்
இழந்தவர்கள் இழவைப் பரிஹரிக்கைக்காக எழுந்து அருளி நின்றதுவும்
மூங்கில் வளர்ந்து இருக்கிற குளிர்ந்த பர்யந்தங்களை யுடைத்தான திருமலையிலே –

விண்ணவர் -இத்யாதிக்கு
ராவண வத சமனந்தரம்-ப்ரஹ்மாதிகளால் ஸ்துதிக்கப் படுகிற புகழை யுடையவன் என்று பொருள் ஆகவுமாம் –

(க்ரோதம் ஆஹாரயத் தீவ்ரம் -ஆரண்ய -24-34-
கோபஸ்ய வஸமே யிவான் -யுத்த -59–136-
அபியாதா ப்ரஹர்த்தா ச -அயோத்யா -1-29-படை எடுத்துச் சென்று அடிப்பவன்
சென்று கொன்று வென்றி கொண்ட வீரன் -திருச்சந்த -56-
ஓங்கு -குணங்களின் உயர்த்தி
தொல் புகழ் -வந்தேறி அல்ல -ஸ்வாபா விகம்
வந்து -நித்ய ஸூரி நாதன் வந்து அவதரித்து பின்னானார் வணங்கும் ஜோதியாக இங்கே நித்ய ஸேவை சாதித்து அருளுகிறான் )

—————————————————————————————————

கீழ் ப்ரஸ்துதமான திருமலை தான் பின்னையும் இவர்க்கு ஆகர்ஷகமாய் -அங்கே
திரு உள்ளம் சென்று திருமலைக்கு உள்ள வைலக்ஷண்யம் சொல்லுகிறார் –

(கீழே -25 திருமலைக்கு என்றே காட்டி
இதுவும் 26-திருமலைக்குத் தான் -இதில் திருமலை திரு வேங்கடம் சொற்கள் இல்லை என்றாலும்
வாழும் பதி என்றே இருப்பதால் -திருமலை வைபவ தொடர்ச்சி என்றே கொள்ள வேண்டும் –பெரியவாச்சான் பிள்ளை இதுக்கு சேர்த்து அருளினார்
கபிஸ்தலம் -ஆற்றங்கரை கிடக்கும் கண்ணன் -என்றே இருந்தாலும்)

வந்தித்து அவனை வழி நின்ற ஐம்பூதம்
ஐந்தும் அகத்தடக்கி ஆர்வமாய் -உந்திப்
படி யமரர் வேலையான் பண்டு அமரர்க்கு ஈந்த
படி யமரர் வாழும் பதி—-26–

பதவுரை

படி அமரர்–நிலத் தேவரான பிராமணர்கள்
வாழும்–நித்ய வாஸம் பண்ணுகிற
பதி–திருப்பதியாகிய திருமலை யென்பது,
வழி நின்ற–(எம்பெருமானை ஆஸ்ரயிப்பதற்குத் தடங்கலாய்) குறுக்கே நிற்பனவான
ஐம் பூதம் ஐந்தும்–பஞ்ச பூதங்களையும் -அஞ்ச வேண்டும்படியான -பஞ்சேந்திரியங்களையும்
அகத்து அடக்கி–வெளியிற் போக வொண்ணாதபடி நியமித்து
அவனை–அவ் வெம்பெருமானை
வந்தித்து–வணங்கி
ஆர்வம் செய்–பக்தி யுடையவர்களாய்
உந்தி–ஒருவரை யொருவர் தள்ளிக் கொண்டு மேல் விழுந்து
படி–வந்து படிகின்ற
அமரர்–தேவர்களுக்காக
வேலையான்–திருப்பாற்கடலிலுள்ள பெருமான்
பண்டு அமரர்க்கு ஈந்த–முன்னைத் தேவர்களான நிர்ய ஸுரிகட்கும் (அநுபாவ்யமாகக்) கொடுத்த தலமாகும்.

அபிமான ஸூன்யராய்க் கொண்டு –திருவடிகளிலே தலை மடுத்து -அவனை ஆஸ்ரயித்து –
(அபிமான பங்கமாய் வந்து நின் பள்ளிக்கட்டில் கீழே )தத் பிராப்தி பிரதிபந்தகங்களாய்க் கொண்டு
நடுவே நின்று தகைகிற பிருதிவ்யாதி பஞ்ச பூதங்களையும் -ஸ்ரோத்ராதிகளான இந்திரிய பஞ்சகத்தையும் ப்ரத்யகர்த்த ப்ரவணமாம் படி
நியமித்து அவன் பக்கலிலே அபிநிவேசத்தை உடையராய்க் கொண்டு ஒருவர்க்கு ஒருவர் முற்கோலி வந்து ஆஸ்ரயிக்கும் படி
ப்ரஹ்மாதி தேவர்களுக்காகத் திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிற சர்வேஸ்வரன்
யத்ர பூர்வே சாத்யா சந்தி தேவ -என்னும்படி முற்பாடரான நித்ய ஸூரிகளுக்கு சர்வ ஸ்வதானம் பண்ணுவாரைப் போலே கொடுத்து அருளிற்று
பூஸூராரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் அனுபவித்து அடிமை செய்து வாழ்கிற திருமலை முன்பு நித்ய ஸூரிகளுக்கு கொடுத்தது என்றுமாம் –

(மந்தி பாய் வட வேங்கட மா மலை வானவர்கள் சந்தி செய்ய நின்றான்
தண்ணருவி வேங்கடமே வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு -நான்முகன் -45-
கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்குத் தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே –திருவாய் -1-8-3-
படி -உலகு -படி அமரர் -முக்த பிராயரான நிலத்தேவர் -ஸ்ரீ வைஷ்ணவர்கள்
பதி -கீழ் ப்ரஸ்துதமான திருமலை)

————————————————————————————————————-

இப்படி திருமலையிலே நிலையை அனுசந்தித்தவர் அங்கு நினைத்த பரிமாற்றம் பெறாமையாலே -நினைத்தபடி
பரிமாறலாம் பரம பதத்திலே இருக்கிற சர்வேஸ்வரனைத் தேடா நின்றது என் நெஞ்சு என்கிறார் –

பதி யமைந்து நாடிப் பருத்து எழுந்த சிந்தை
மதி உரிஞ்சி வான் முகடு நோக்கி -கதி மிகுத்தங்கு
கோல் தேடி யோடும் கொழுந்ததே போன்றதே
மால் தேடி ஓடும் மனம்——27-

பதவுரை

பதி–திருமலைத் திருப்பதியிலே
அமைந்து–வேரூன்றி நின்று
நாடி–எங்கே யென்று தேடிக் கொண்டு
பருத்து எழுந்த சிந்தை-மிகவும் வளர்ந்து மேற் கிளர்ந்த மனோ ரதத்தை யுடையதாய்
மதி உரிஞ்சி–சந்திர பதத்தையும் உராய்ந்து கொண்டு
வான் முகடு நோக்கி–(அப்பால்) அண்ட முகட்டையும் பார்த்து விட்டு
(அங்கும் நில்லாமல்)
மால் தேடி–பரமபத நாதனைத் தேடிக் கொண்டு
கதி மிகுத்து ஓடும்–விரைவு மிகுந்து செல்லுகின்ற
மனம்–என்னெஞ்சமானது
அம் கோல் தேடி ஓடும்–அழகிய கொள் கொம்பைத் தேடிக் கொண்டு பரந்து செல்லுகின்ற
கொழுந்து அது போன்றது–கொடியை ஒத்திரா நின்றது.

திருமலை யாகிற ஸ்தானத்தில் வேரூன்றி நின்று அபிநிவேசம் தோற்ற -எங்கே எங்கே என்று தேடிக் கொண்டு
சதா சாகமாகப் பணைத்துக் கிளம்பின மநோ ரதத்தை யுடைத்தாய் –

(இதம் பூர்ணம் –சர்வம் பூர்ணம் -குண பூர்ணம் உள்ள இடம் அர்ச்சையே -நினைத்தபடி பரிமாற்ற நமது ஞான சக்திகளின் குறையே -மந்திபாய் வடவேங்கட மா மலை -ஸ்ரீ ரெங்கம் அனுபவத்தில் -வரத்து தேசம் தேடித் போனது போல் இங்கும் வரத்து தேசம் ஓடிப்போகுமே-சீரார் திருவேங்கடமே –ஆராமம் சூழ்ந்த அரங்கம் -திருமங்கை ஆழ்வாரோ சர்ச்சை தேசங்கள் தேடி ஓடுவார் -)

சந்த்ர பதத்தையும் உரோஸிக் கொண்டு
அவ் வருகு பட்டு -அண்ட பித்தியில் செல்லக் கடாக்ஷித்து -ஸமஸ்த கல்யாண குண பூர்ணனாய்க் கொண்டு
பரம பதத்திலே தம் மேன்மை தோற்ற எழுந்து அருளி இருக்கிற சர்வேஸ்வரனைத் தேடி விட்டவிடத்தில் விடாதே
பற்றிச் செல்லுகிற என்னுடைய நெஞ்சானது கமன சைக்ர்யத்தை (கதி மிகுத்து )உடைத்தாய்க் கொண்டு அழகிய கொம்பைத் தேடி
பரந்து செல்லுகிற கொழுந்து போலே இரா நின்றது –மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணுமா போலே -)கம் மே கம் ஆகாசம் சுகம் -பரமாகாசம் -மா கம் )

(மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் ஏகம் எண்ணும் இராப்பகல் இன்றியே -திருவாய் -9-3-7-
கொடியானது அழகிய கொள் கொம்பைத்தேடி மேல் நோக்கி விரைந்து செல்வது போலே
மனமானது அழகியானான ஸர்வேஸ்வரனைத் தேடிப் பரமபதத்தளவும் விரைந்து செல்கிறது என்பதே திரண்ட பொருள் -)

——————————————————————————————-

தன் திரு உள்ளம் இப்படி அபிநிவேசித்த வாறே -அவனும் அத்யபி நிவிஷ்டனாய்க் கொண்டு(என்னில் முன்னம் பாரித்து -அபி சப்த்தார்த்தம் )
கோயில் திருமலை முதலான தன் இருப்பிடங்களை உபேக்ஷித்துத் தன் திரு உள்ளத்தே வந்து புகுந்தான் -என்கிறார் –

(பரத்வம் -வ்யூஹம் -விபவம் – -இரண்டு சர்ச்சை -ஆச்சார்யனுக்கு இரட்டை சம்பாவனை -அந்தர்யாமி மனதுள்ளான் -அவன் வந்த வரிசையில் அருளிச் செய்கிறார்-வேங்கடத்தான் -என்றே உள்ளது வேங்கடத்துள்ளான் இல்லையே -வந்து கிளம்பி கோயிலிலே கிடந்ததால் அங்கு உள்ளான்
ஏஷ நாராயண ஸ்ரீ மான்-ஷீராப்தி நிகேதன்-ஆகதோ மதுராம் புரிம்
கீழ் ஆழ்வார் மனம் மேலே சென்றதை அருளிச் சொல்லி
இதில்
என்னில் முன்னம் பாரித்தது இதில்
ஒவ்வொரு இடமும் தாண்டி மனத்துள்ளான்
தேவாதி தேவன் எனப்படுவான் -அத்தை விட்டு வந்தான்
இளம் கோயில் கைவிடேல் இவர் பிரார்த்தித்து தானே அங்கும் இருப்பான் -)

மனத்துள்ளான் வேங்கடத்தான் மா கடலான் மற்றும்
நினைப்பரிய நீள் அரங்கதுள்ளான்-எனைப்பலரும்
தேவாதி தேவன் எனப்படுவான் முன்னொரு நாள்
மாவாய் பிளந்த மகன் —-28-

பதவுரை

எனை பலரும்–கணக்கில்லாத வைதிக புருஷர் யாவராலும்
தேவாதி தேவன் எனப்படுவான்–தேவர்கட்கும் தேவவென்று ப்ரஸித்தமாகச் சொல்லப்படா நிற்பவனும்
மா கடலான்–பரந்த திருப்பாற் கடலிலே பள்ளி கொண்டிருப்பவனும்
முன் ஒரு நாள்–முன்பொரு காலத்தில்
(ஸ்ரீகிருஷ்ணனா யவதரித்தபோது)
மா வாய் பிளந்த–குதிரை யுருக் கொண்டு வந்த கேசியின் வாயைக் கீண்ட
மகன்–சிறு பிள்ளை யானவனும்
மற்றும்–பின்னும்
நினைப்பு அரிய நீள் அரங்கத்து உள்ளான்–நினைப்பதற்கும் அருமையான யோக்யதை மிக்கிருந்துள்ள கோயிலிலே பள்ளி கொள்பவனுமாகி
வேங்கடத்தான்–திருமலையிலே (ஸர்வ ஸுலபனாய்க் கொண்டு) எழுந்தருளி நிற்பவன்
(இப்போது)
மனத்து உள்ளாள்–என் மநஸ்ஸிலே நித்ய வாஸம் பண்ணா நின்றான்.

அசங்க்யாதரரான வேத வைதிக புருஷர்கள் பலரும் -நித்ய ஸூ ரிகளுக்கு நிர்வாஹகானான -பெரிய மேன்மையை யுடையவன்
என்று சொல்லப் படா நிற்பானாய் -ஜகத் ரக்ஷண அர்த்தமாக -அங்கு நின்றும் வந்து -பரப்பை யுடைத்தான
திருப் பாற் கடலிலே பள்ளி கொண்டு அருளா நிற்பானாய் -முன்பே ஒரு நாளிலே கிருஷ்ணனாய் வந்து
அவதரித்துக் கேசி வாயை அநாயாசேன பிளந்து புகட்ட சிறு பிள்ளையாய் -அதுக்கு மேலே நினைக்க அரிதான
நீர்மை ஏற்றத்தை யுடையனாய்க் கொண்டு போக்யதை மிக்கு இருக்கிற கோயிலிலே -சம்சாரிகளை ரக்ஷித்து அல்லது பேரேன் -என்று
கண் வளர்ந்து அருளுமவனாய் -திருமலையிலே சர்வ ஸூலபனாய்க் கொண்டு எழுந்து அருளி நிற்கிறவன்
என்னைப் பெறுகைக்காக முன்பு விரும்பின அவ்வவ ஸ்தலங்களை உபேக்ஷித்து -இப்போது
அத்யபி நிவிஷ்டனாய்க் கொண்டு என் மனசிலே நித்ய வாசம் பண்ணா நின்றான் –

(யத்ர பூர்வே ஸாத்யா சந்தி தேவா -புருஷ ஸூக்தம்
யோ தேவேப்ய ஆதபதி யோ தேவாநாம் புரோ ஹித– புருஷ ஸூக்தம்
ஸதா பஸ்யந்தி ஸூரய
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன்
இமையோர் தலைவன்
த்ரிபாத் தூர்த்தவ உதைத் புருஷ பாதோஸ் யேஹா பவாத் புநா -புருஷ ஸூக்தம் -மூன்று வ்யூஹங்களை யுடைய
பர வாஸூ தேவன் சங்கல்பிக்க அவனுடைய ஒரு வ்யூஹமான அநிருத்தன் ஷீராப்தி நாத்தனாக அவதரித்தான் –
அம்பஸ்ய பாரே
யமந்தஸ் ஸமுத்ரே கவயோ வயந்தி
சமுத்ரேந்தம் விஸ்வ ஸம்புவம்
ததோ விஷ்வங் வ்யக்ராமத் சாசநாந ஸேநே அபி –புருஷ ஸூக்தம்
மந்தி பாய் வட வேங்கட மா மலை வானவர்கள் சாந்தி செய்ய நின்றான்
கானமும் வானரமும் வேடுமுடை வேங்கடம்
வண்டினம் முரலும் சோலை மயிலினம் ஆலும் சோலை
கொண்டல் மீது அணவும் சோலை குயிலினங்கள் கூவும் சோலை
ஸம்ஸாரம் கிழங்கு எடுத்து அல்லது பேரேன்
உளம் கோயில் உள்ளம் வைத்து உள்ளினேன் வெள்ளத்து இளம் கோயில் கை விடேல் என்று -இரண்டாம் திரு -54-

அனந்தன் பாலும் கருடன் பாலும் ஐது நொய்தாக வைத்து என்
மனந்தனுள்ளே வந்து வைகி வாழ செய்தாய் எம்பிரான்-பெரியாழ்வார் -5-4-8-

பனிக்கடலில் பள்ளி கோளைப் பழக விட்டு ஓடி வந்து என்
மனக்கடலில் வாழ வல்ல மாய மணாளா நம்பீ
தனிக்கடலே தனிச் சுடரே தனி உலகே என்று என்று
உனக்கு இடமாய் இருக்க என்னை உனக்கு உரித்து ஆக்கினையே -5- 4-9 –

வட தடமும் வைகுந்தமும் மதிள் த்வராவதியும்
இடவகைகள் இகழ்ந்திட்டு என்பால் இடவகை கொண்டனையே -5 -4-10 –

கல்லும் கனை கடலும் வைகுந்த வானாடும்
புல்லென்று ஒழிந்தன கொல் ஏ பாவம் வெல்ல
நெடியான் நிறம் கரியான் உள் புகுந்து நீங்கான்
அடியேனது உள்ளத் தகம்–-பெரிய திருவந்தாதி -68-

பாட க்ரமத்தை விட அர்த்த க்ரமம் பலமுடையதாகையாலே –
எனைப்பலரும்-தேவாதி தேவன் எனப்படுவான் –
மா கடலான் –
முன்னொரு நாள் மாவாய் பிளந்த மகன் —
வேங்கடத்தான்
மற்றும் நினைப்பரிய நீள் அரங்கதுள்ளான்-
மனத்துள்ளான் -என்று அன்வயித்து பர வ்யூஹாதி க்ரமத்திலே கூட்டிப் பொருள் கொள்ள வேண்டும் -)

——————————————————————————————————-

மாவாய் பிளந்த மகன் -என்று பிரஸ்துதமான கிருஷ்ண அவதாரத்தில் கால் தாழ்ந்து சுழி யாறு பாடுகிறார் –

மகனாக கொண்டு எடுத்தாள் மாண்பாய கொங்கை
அகனார உண்பன் என்று உண்டு -மகனைத் தாய்
தேறாத வண்ணம் திருத்தினாய் தென்னிலங்கை
நீறாக வெய்தழித்தாய் நீ——-29-

பதவுரை

தென் இலங்கை–அழகிய லங்காபுரி
நீறு ஆக–நீறாகி யொழியும்படி
எய்து–அம்புகளைச் செலுத்தி
அழித்தாய்–முடித்தவனே!
நீ-:மகன் ஆக கொண்டு எடுத்தாள்
உன்னைப் புத்திர பாவனை செய்து (பரிவு காட்டி முலை கொடுக்க) எடுத்துக்கொண்ட பூதனையினுடைய
மாண்பு ஆய கொங்கை–அழகான முலையை
அகன் ஆர உண்பன் என்று உண்டு–வயிறார உண்ணக் கடவேனென்று சொல்லி (பாலோடு அவளுயிரையும்) குடித்து
மகனை–புத்ரனான உன் விஷயத்திலே
தாய்–உனது தாயாகிய யசோதை
தேறாத வண்ணம்–நம்பிக்கை யற்றிருக்கும்படி
திருத்தினாய்–செய்து விட்டாய்.

(ஆசை யுடன் பூதனை இடம் குடித்தான் அன்றோ -தன்னிடம் போல் அங்கு இல்லை -அங்கு போல் இங்கும் -என்ற பயம் இவளுக்கு-அஸ்தானே பய சங்கையால் -கௌசல்யைக்கு நம்பிக்கை போகாதபடி-மார்பிலே கை வைத்து உறங்கும் படி இலங்கை சென்று செற்றாய் -எனக்கு அப்படி இல்லையே -)

பக்குவமான தசையில் கட்டளைப் பட்ட லங்கையை பஸ்ம சாத்தாக மனஸுக்கு ஏகாந்தமான திரு வில்லாலே
திருச் சரங்களை நடத்தி முடித்துப் பொகட்டவனே –
இப்படி இருக்கிற நீ பருவம் நிரப்புவதற்கு முன்னே யசோதை பிராட்டியை போலே புத்ரனாகவே புரையற ஸ்நேஹித்துக் கொண்டு
பரிவு தோற்ற ஒசழக்காகத் தூக்கி எடுத்த பூதனையுடைய பாலின் கனத்தாலே விம்மி ஒளி விடுகிற முலையை
வயிறு நிறையத் தக்கதாக உண்பான் என்று அபிநிவேசம் தோற்ற பாலோடு பிராணனும் போம்படி அமுது செய்து
புத்திரனான உன்னைத் தாயாரான யசோதை பிராட்டி விஸ்வசியாதே துணுக்கு துணுக் என்று வயிறு மறுகும் படி சிஷித்து விட்டாய் –

(மாத்ரு ஸ்நேஹத்துக்கும் புத்ர ஸ்நேஹத்துக்கும் எல்லை நிலம் கண்ணனும் யசோதையும் என்பதால் மகன் தாய் என்று நிர்த்தேசிக்கிறார் –
கீர்த்தி பூதாம் பதா காம் யோ லோகே ப்ரமயதி ப்ரபு கிந்நாம துர்லபம் தஸ்ய -அயோத்யா -44-7-)

—————————————————————————————————-

இப்படி கிருஷ்ண விஷயமும் ராம விஷயமும் அனுசந்தித்த பிரசங்கத்தில் அவற்றோடே சேர்ந்த
அவதாரங்களையும் பல சேஷ்டிதங்களையும் அனுசந்தித்து ப்ரீதராகிறார் –

நீ அன்று உலகளந்தாய் நீண்ட திருமாலே
நீ அன்று உலகு இடந்தாய் என்பரால் -நீ யன்று
காரோத முன் கடைந்து பின் அடைத்தாய் மா கடலை
பேரோத மேனிப் பிரான்—30-

பதவுரை

பேர் ஓதம் மேனி பிரான்–பெரிய கடல் போன்ற திருமேனியை யுடைய பெருமானே!
நீண்ட திருமாலே–எண்ணுதற்கு அரிய பெருமை படைத்த திருமாலே-உலகு அளந்த நீட்சியை விட எண்ணுவது நீட்சியாயே இருக்கும்
நீ–இப்படிப்பட்ட நீ
அன்று–முன்பொருகால்
உலகு–உலகங்களை
அளந்தாய்–(திரிவிக்கிரமனாகி) அளந்து கொண்டாய் (என்றும்)
நீ–நீ
அன்று–மற்றுமொரு காலத்தில்
உலகு–பூமியை
இடந்தாய்–(மஹா வராஹமாகி) அண்ட பித்தியில் நின்றும் ஒட்டு விடுவித்துக் கொணர்ந்தாய் (என்றும்)
நீ அன்று-;
கார் ஓதம் முன் கடைந்து-கரிய கடலை முன்னே கடைந்தா யென்றும்
மா கடலை–(அந்தப் பெரிய கடல் தன்னையே)
பின்–பிறகு (ராமவதாரத்திலே)
அடைத்தாய்–அணை கட்டித் தூர்த்தாயென்றும்
என்பர்–(மஹர்ஷிகள்) சொல்லுகின்றனர்.

பெரிய கடல் போலே இருண்டு குளிர்ந்த திரு மேனியை யுடையனாய் -அவ் வழகை முற்றூட்டாக என்னை அனுபவிப்பித்த
உபகாரகனாய் -அபரிச்சேத்ய வைபவனான ஸ்ரீ யபதியே -இப்படி சர்வாதிகனான நீ ஆஸீரிதரான இந்திரன்
ஐஸ்வர்யத்தை இழந்து கண்ணும் கண்ண நீருமாய் திருவடிகளிலே விழுந்த அன்று -மஹா பலி பக்கலிலே அர்த்தியாய்ச் சென்று
இரந்து -ஜகத்தைத் திருவடிகளாலே அளந்து கொண்டாய் என்றும் -பூமியானது பிரளயத்தில் கரைந்து அண்ட பித்தியிலே சென்று
ஒட்டின அன்று -நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வடிவைக் கொண்டு ரக்ஷகனான நீ அந்த பூமியை பிரளயத்தில் முழுகி
இடந்து எடுத்துக் கொண்டு ஏறினாய் என்றும் -துர்வாச சாபத்தால் நஷ்ட ஸ்ரீ கராய்க் கொண்டு இந்த்ராதிகள்
சரணம் புக்க வன்று சர்வ சக்தியான நீ கறுத்த நிறத்தை யுடைத்தான கடலை பிராட்டியை லபிக்கைக்காக முற்படக் கடைந்து
பின்பு ஒரு காலத்தில் அவள் முக மலர்ச்சி காண் கைக்காக -தத் சஜாதீயமான பெரிய கடலை அடைத்து அருளினாய் என்றும்
உன் படியை அறியக் கடவ பிராமாணிகரான ரிஷிகள் சொல்லா நின்றார்கள்
இவை சில சேஷ்டிதங்கள் இருக்கும் படியே என்று வித்தாராகிறார் –

———————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

இரண்டாம் திருவந்தாதி- பாசுரங்கள் -11-20 – -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை-

November 13, 2016

நாட்டில் உள்ளார் ஷூத்ர தேவதைகளை ஆஸ்ரயித்து ஷூத்ர பலத்தைப் பெற்றுப் போமது ஒழிய
சர்வாதிகனான உன்னை(சர்வேஸ்வரன் ஸர்வ நியந்தா -சர்வாதிகன் -பரமன் மேம்பட்டவன் )அறிந்து ஆஸ்ரயிக்க வல்லார் ஆர் -என்கிறார் –

(ஆரோக்யம் இச்சேத் பாஸ்கரன் -ஸ்ரீ இச்சேத் செல்வம் அக்னி – சங்கரம் இச்சேத் ஞானம்  –மோக்ஷம் இச்சேத் ஜனார்த்தனன் –சகல பல பிரதன் விஷ்ணு-குலம் தரும் -செல்வம் தரும் நீள் விசும்பு அருளும் -)

கடை நின்று அமரர் கழல் தொழுது நாளும்
இடை நின்ற வின்பத்தராவர் -புடை நின்ற
நீரோத மேனி நெடுமாலே நின்னடியை
யாரோத வல்லார் அவர்———11-

பதவுரை

(பாழும் ஸம்ஸாரிகளானவர்கள்)
அமரக் கடை நின்று–தேவதாந்தரங்களின் வாசல்களைப் பற்றி நின்று-அமரர்களும் தேவரீர் கடையிலே நின்று பிரயோஜநாந்தரங்களைப் பெற்றுப் போகிறார்களே
நாளும் கழல் தொழுது–நெடுங்காலம் வரையில் (அவர்களுடைய) காலில் விழுந்து
(பரமாநந்தம் பெற மாட்டாமல்)-தேவதாந்தரங்கள் உனது திருவடிகளைப் பற்றி -அதன் பிரபாவம் முழுவதும் அறியாமலேயே -ப்ரயோஜனாந்தரங்களைப் பெற்றுப் போவார்கள் என்றுமாம் -கடலுக்குள் உள்ள திமிங்கலம் போல் அவர்கள் ஆளவந்தார்
இடைநின்ற இன்பத்தர் ஆவர்–நடுவே கிடக்கிற (-ஸ்வர்க்கம் முதலிய) சுகத்தைப் பெற்றொழிவர்கள்;
புடைநின்ற நீர் ஓதம் மேனி நெடுமாலே–(இவ்வுலகைச்) சூழ்ந்து கிடக்கிற கடல் போன்ற திருமேனியையுடைய ஸர்வேஸ்வரனே!,-இரண்டாலும் திருமேனி -ஸ்வரூபம் இரண்டையும் சொன்னபடி
நின் அடியை–உனது திருவடிகளை
ஓதவல்லாரவர் ஆர்–அநுஸந்திக்கவல்லார் ஆரேனு முண்டோ? (யாருமில்லையே!)

அவ்வோ தேவதைகளின் வாசல் கடைப் பற்றி நின்று நம்மில் காட்டில் நாலு நாள் ஏற இருந்து சாகக் கடவ ப்ரஹ்மாதி தேவர்களுடைய கால்களை -(ந காலம் தத்ரைவ பிரபு  அங்கு -அத்தை ஒப்பிட்டால் இது பரணில் இருப்பது போல் நாலு நாள்கள் தானே )
துராராதரானவர்கள் (அரியன் அலன் ஆராதனைக்கு -இவன் ஸூ ஆராதனன் ) இரங்கிக் கார்யம் செய்யும் அளவும் நெடும் காலம் ஆஸ்ரயித்து
அங்கே வந்து உன்னை அனுபவித்தல்- இங்கே இருந்து உன்னை ஆஸ்ரயித்தல்-
செய்கைக்கு யோக்யதை இல்லாத படி நடுவே மிடறு பிடியாய் நின்ற(அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன் )
ஸ்வர்க்காதி ஸூகத்தைப் பெற்று அனுபவிக்கப் பெறுவர் –

சுற்றும் சூழ்ந்து கிடக்கிற ஜல ஸம்ருத்தியை யுடைய கடல் போலே ஸ்ரமஹரமான
வடிவை யடைய அபரிச்சேத்ய வைபவன் ஆனவனே –

(நெடுமாலுக்கு இங்கு மூன்றாவது அர்த்தம் -அளவிட்டு அறிய முடியாதவன் -த்ரிவித பர்ச்சேத ரஹிதன் –
கீழே சர்வாதிகன் என்றும் ஸர்வேஸ்வரன் என்றும் பார்த்தோம்)

இப்படி சர்வாதிகனான உன்னுடைய திருவடிகளை ஸ்தோத்ராதிகளைப் பண்ணி –
ஆஸ்ரயிக்க வல்லவர் ஆர் தான் –

அன்றிக்கே
தேவதாந்த்ரங்கள் உன் வாசலிலே நின்று உன் திருவடிகளைத் தொழுது
உன்னைப் பிரயோஜனமாகக் கொள்ளாதே பிரயோஜனாந்தரங்களைக் கொண்டு போவார் என்றுமாம் –

(ந ப்ரஹ்மா ந ஈஸாநா -ஸ்ருதி அர்த்தம் அறியாமல் என்றுமே சாகாது இருப்பவர்கள் என்று தப்பாக நினைக்கிறார்கள் –
பையனை அறுத்துத் தா போல் ஆராதனைக்கு அரியவர்கள் அன்றோ இவர்கள் –
பத்ரம் புஷ்பம் பலம் தோயம் –ஸ்ரீ கீதை -9-26- என்னுமவனைப் போல் அல்லரே
இடை நின்ற இன்பம் இங்கும் இல்லாமல் அங்கும் இல்லாமல் திரிசங்கு சுவர்க்கம் போல் கால்  கட்டாகவே இருக்குமே
கடிக் கமலத்துள் இருந்தும் காண்கிலான் கண்ணன் அடிக் கமலம் தன்னை அயன் -முதல் திருவந்தாதி -56
ப்ரஹ்மாவால் இழந்தே போவது
உன்னை ஆஸ்ரயித்து உஜ்ஜீவிக்கவும் வழி இல்லாமல்
கழுத்துக்கு கட்டியாயே இருக்குமே
வாஸூ தேவஸ் ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸூ துர்லப-7-19-
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாமே கண்ணன் என்னும் மஹாத்மா கிடைத்தற்கு அரியவர் அன்றோ
கற்பக வ்ருக்ஷத்திடம் கௌபீந பிக்ஷை கேட்டுப் பெறுவாரைப் போலே அன்றோ இவர்கள்
நின்னை விண்ணோர் தாள் நிலம் தோய்ந்து தொழுவர் நின் மூர்த்தி பல் கூற்றில் ஒன்றும் காணலுமாம் கொலோ என்றே வைகல் காலையும் மாலையும் -திரு விருத்தம் -92-)

——————————————————————————

ஆனால் அந்த தேவதைகளை ஆஸ்ரயிக்க ஒண்ணாதோ -அவர்களை ஷேபிக்கிறது என் என்னில் –
அவர்கள் தாங்களும் தம் தாம் அபிமதம் பெறுகைக்கு அவனை ஆஸ்ரயியா நின்ற பின்பு நமக்கும்
அவனை ஆஸ்ரயிக்கை யன்றோ அடுத்து -என்கிறார் –

அவர் இவர் என்று இல்லை அரவணையான் பாதம்
எவர் வணங்கி ஏத்தாதார் எண்ணில்-பவரும்
செழும் கதிரோன் ஒண் மலரோன் கண்ணுதலோன் என்றே
தொழும் தகையார் நாளும் தொடர்ந்து———12-

பதவுரை

எண்ணில்–(எம்பெருமானை ஆஸ்ரயித்து ஸ்வரூப ஸித்தி பெறுகிறவர்கள் ஆரார்?’ என்று) ஆராயுமளவில்
அவர் இவர் என்று இல்லை–இன்னார் தாம் ஆஸ்ரயிப்பவர்கள், இன்னார் ஆஸ்ரயிக்காதவர்களென்ற ஒருவாசி யில்லை;
அரவு அணையான் பாதம்–சேஷசாயியான அப்பெருமானுடைய திருவடிகளை
வணங்கி–தொழுது
ஏத்தாதார்–ஸ்துதியாதவர்கள்
எவர்–யாவர்? (ஒருவருமிலர்)
பவரும் செழுகதிரோன்–பரவின அழகிய ஆயிரங் கிரணங்களை யுடையவனான ஸூரியனும்
ஒள் மலரோன்–அழகிய (திரு நாபிக் கமல) மலரை இருப்பிடமாக வுடைய பிரமனும்
கண் நுதலோன்–நெற்றிக் கண்ணனான ருத்ரனும்
(ஆகிய, நாட்டிலுள்ளவர்களால் ஆஸ்ரயிக்கப்படுகிறவர்களென்று பிரசித்தரான இவர்கள்)
நாளும்–நாள் தோறும்
தொடர்ந்து தொழும் தகையார் அன்றே–அப்பெருமானெழுந்தருளியிருக்கின்ற இடத்தைத் தேடி ஆஸ்ரயிக்கும் ஸ்வபாவமுள்ளவர்களன்றோ?

ஆஸ்ரயணீயரான-அந்த தேவர்கள் -அவர்களை ஆஸ்ரயிக்கிற இந்த மநுஷ்யர்கள் என்ன ஒரு வாசி இல்லை –

திருவனந்த ஆழ்வானைப் படுக்கையாக யுடைய சர்வாதிகனுடைய திருவடிகளைத் தலையாலே வணங்கி வாயாலே ஏத்தி
எவர் தான் ஆஸ்ரயியாதவர்கள் -ஆராய்ந்து பார்க்குமளவில் பரம்பின அழகிய கிரணங்களை யுடையனான ஆதித்யனும்
அழகிய திரு நாபீ கமலத்தை இருப்பிடமாக யுடைய ப்ரஹ்மாவும் -லலாட நேத்ரனான ருத்ரனும் ஆகிற நாட்டுக்கு
ஆஸ்ரயணீயராக பிரசித்தரான இவர்கள் அன்றோ நாள் தோறும் அவன் புக்க இடம் புக்கு பின்பற்றி
ஆஸ்ரயிக்கையே ஸ்வபாவமாக உடையராய் இருக்கிறார்கள் –

(கீழ்ப்பாட்டில் -நெடுமாலே நின்னடியை யார் ஓத வல்லாரவர் -என்று சொல்லி வைத்து
இதில் -அவர் இவர் என்று இல்லை அரவணையான் பாதம்-எவர் வணங்கி ஏத்தாதார்-என்று அருளி இருப்பது முரண் அல்லவோ
எனில் முரண் ஆகாது
சென்ற பாசுரத்தில் பரம புருஷனுடைய திருவடிகளை ப்ராப்யமாக அறிந்து அவனை ஸ்துதிப்பவர்கள் அருமைப்பட்டு இருப்பர் என்று அருளினார்
இப்பாசுரத்தில் இதர பலன்களுக்காக ப்ரஹ்மாதி தேவர்களும் மனிதர்களும் வாசி இல்லாமல் அனைவருமே அவனை ஸ்துதிப்பவர்கள்
ஆகையால் ஒரு முரணும் இல்லை -)

(நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் படைத்தான் -ஸர்வ காரணத்வம் சொல்லி
ஸர்வரும் உன்னை ஆஸ்ரயிக்கிறார்கள் -என்றாலும்
எழுவார் விடைகொள்வாருமே மிக்கு
வைகல் தொழுது உன் இடமே இருப்பார் சிலரே என்கிறார்

பவான் நாராயண ஸ்ரீ ராமாயணம்
உவராய் வந்து நிற்பார்கள்
அந்திக்காப்பு இடுகிறோம் -)

———————————————————————————————-

இப்படி பெரியார் ஆஸ்ரயிக்கிற அளவு அன்றிக்கே ஜென்ம வ்ருத்தாதிகளால் குறைய நின்றவர்களுக்கும்
கூச்சம் அற சென்று ஆஸ்ரயித்து உஜ்ஜீவிக்கலாம் என்கிறார் –

(தேவர்கள் அன்றோ பற்றினார் என்று நாம் விலக
ஸ்ரீ கஜேந்திர மோக்ஷம் பற்றி அருள
நாங்கள் விலங்கு இல்லையே என்று யாதானும் பற்றி விலக அன்றோ பார்க்கிறோம்)

தொடரெடுத்த மால் யானை சூழ் கயம் புக்கு அஞ்சி
படரெடுத்த பைங்கமலம் கொண்டு -அன்று இடர் அடுக்க
ஆழியான் பாதம் பணிந்து அன்றே வானவர் கோன்
பாழி தான் எய்திற்றுப பண்டு—–13-

பதவுரை

தொடர் எடுத்த மால் யானை–காற்சங்கிலியை முறித்துக் கையிற்கொண்டு பதறியோடுந் தன்மையதான மதயானையானது(ஸ்துதிக்கையே ஸ்வரூபமான துதிக்கை அன்றோ )
சூழ் கயம் புக்கு–(கரை காண வொண்ணாதபடி) விசாலமாயிருந்த பொய்கையிலே இழிந்து
படர் எடுதுத பை கமலம் கொண்டு–மலர்ந்து ஓங்கியிருக்கிற அழகிய தாமரைப் பூவை (எம்பெருமானுக்கு ஸமர்ப்பிப்பதற்காக)க் கையிற் கொண்டு-தொழும் காதல் களிறு அன்றோ
அன்று இடர் அடுக்க–அந்த நிலைமையிலே (முதலையின் வாயிலகப்பட்டு விடுவித்துக் கொள்ள முடியாத) பெருந்துன்பமுண்டாக
அஞ்சி–(செவ்வி யழிவதற்கு முன்னே இந்த மலர்களை எம்பெருமானுக்கு ஸமர்ப்பிக்க முடியாமற் போய் விடுமோவென்று) மனம் பதறி,
ஆழியான் பாதம்–(முதலையைத் துணிக்குங் கருவியான) திருவாழியைக் கையிலேந்தின எம்பெருமானுடைய திருவடிகளை (தியானித்து) வணங்கியதனாலன்றோ-நாராயணா மணி வண்ணா என் ஆர் இடரை நீக்காய்
தான்–அந்த கஜேந்திரம்
பண்டு–முற்காலத்தில்
வானவர் கோன்பாழி–தேவாதி தேவனுடைய இருப்பிடமான பரமபதத்தை
எய்திற்று–அடைந்தது.(ஸ்ரீ கஜேந்திர மோக்ஷம் பிரசித்தம் அன்றோ )

இட்ட விலங்கை ஒடித்துக் கையிலே கொண்டு ஸ்வைரமாகத் திரிகிற மத்த கஜமானது தன்னால் கரை காண ஒண்ணாத
பரப்பை யுடைத்தான பொய்கையில் அத்யபி நிவிஷ்டமாய் சென்று புக்கு -விகசிதமாய் ஓங்கி இருந்துள்ள அழகிய
தாமரைப் பூவை சாதரமாகப் பிடித்துக் கொண்டு -அத்தசையிலே முதலையின் வாயிலே அகப்பட்டது-

தன்னாலும் பிறராலும் பரிஹரிக்க ஒண்ணாத படியான துக்கம் பிரஸ்த்துதமாகப் பதறி -பூ செவ்வி அழிவதற்கு முன்னே
திருவடிகளிலே பணிமாறப் பெறுகிறிலோம் என்று பயப்பட்டு –

முதலையைத் துணிக்கைக்குப் பரிகரமான திருவாழியை
யுடையனான சர்வேஸ்வரனுடைய திருவடிகளை ஆஸ்ரயித்து அன்றோ –
முன்பு ஒரு நாளிலே (க்ருத யுக சரித்திரம் அன்றோ )அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவனுடைய பரமபதம் ஆகிற ஸ்தானம் தன்னை பிராபித்தது –

ஆன பின்பு அவனை ஆஸ்ரயிக்கும் இடத்தில்
இன்னார் ஆவார் இன்னார் ஆகார் என்னும் நியதி இல்லை என்று கருத்து –

(கஜ ஆகர்ஷ தீரே –க்ராஹ ஆகர்ஷதே ஜலே -ஸ்ரீ விஷ்ணு தர்மம் -69-46-

நாஹம் கலே பரஸ் யாஸ்யா த்ராணார்த்தம் மது ஸூதந
கரஸ்த கமலாந்யேவ பாதயோ ரர்ப்பிதம் தவ –

அதிகாரி நியமம் இன்றிக்கே ஒழிந்தபடி என் என்னில் –
தர்ம புத்ராதிகளும்
திரௌபதியும்
காகமும்
காளியனும்
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானும்
ஸ்ரீ விபீஷண ஆழ்வானும்
பெருமாளும்
இளைய பெருமாளும்
தொடக்கமானவர்கள்
சரணம் புகுருகையாலே
அதிகாரி நியமம் இல்லை–ஸ்ரீ வசன பூஷணம் –சூரணை -32-)

—————————————————————————————-

இப்படி அவன் சர்வ ஸமாஸ்ரயணீயன் ஆன பின்பு -சம்சார வர்த்தகரான ஷூத்ரரை ஸ்தோத்ரம் பண்ணாதே –
எம்பெருமானை ஆஸ்ரயித்து நாட்டையும் உங்கள் சஞ்சாரத்தால் பரிசுத்தமாம் படி பண்ணுங்கோள் -என்கிறார் –

பண்டிப்பெரும் பதியை யாக்கி பழி பாவம்
கொண்டிங்கு வாழ்வாரைக் கூறாதே எண்டிசையும்
பேர்த்த கர நான்குடையான் பேரோதிப் பேதைகாள்
தீர்த்த கரராமின் திரிந்து—14-

பதவுரை

பேதைகாள்–அவிவேகிகளே!,
பண்டியை–வயிற்றை-அநாதி காலம் இருக்கும் சம்சாரம் ஆக்கி வளர்த்து என்றுமாம் -ஆக்கியவர்-ஸ்ருஷ்டித்த கரம் நான்கு உடையவன் -என்றுமாம்
பெரு பதி ஆக்கி–பெரிய ஊர் போலக் கண்டதையுங் கொண்டு நிரம்பச் செய்து வளர்த்து(பண்டி -பண்டு -யை பண்டு இப் பெரும் பதி ஆக்கி –பண்டியை )
பழி பாவம் கொண்டு–தெரியாமல் விளையுங் குற்றங்களையும் தெரிந்து செய்யுங் குற்றங்களையும் மேன்மேலும் வளர்த்துக் கொண்டு-செய்யாத குற்றத்தை ஏறிட்டு சொல்வது பழி -பண்ணுவதை நிரூபித்து சொல்வது பாவம் என்றுமாம் –
இங்கு–இவ்வுலகில்
வாழ்வாரை–வாழ்கின்ற ஸம்ஸாரிகளை
கூறாதே–புகழ்ந்து பேசுகை தவிர்ந்து,
எண் திசையும் பேர்த்த கரம் நான்கு உடையான்–(உலகளந்த காலத்தில்) எட்டுத் திக்குக்களையும் பேர்த்துப்  போடும்படி-வியாபித்து
விம்மி வளர்ந்த நான்கு திருத்தோள்களையுடையனான பெருமானுடைய
பேர்–திருநாமங்களை
ஓதி–இடைவிடாது சொல்லிக் கொண்டு-ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி -ஆண்டாள் சுலபமாக அருளிச் செய்தாள் அன்றோ -ஸ்வயம் பிரயோஜனமாக என்பதால் ஓதி -சொல்லி பாடி என்று இல்லாமல்
திரிந்து–திவ்ய தேசங்கள் தோறும் ஸஞ்சரித்து
தீர்த்தகரர் ஆமின்–(உங்கள் ஸஞ்சாரத்தாலே நாடு முழுவதும்) பரிசுத்தமாம்படி செய்ய வல்லவராக ஆகுங்கோள்.

வயிற்றைப் பெரிய ஊர் போலே கண்ட அன்னலும் துன்னலுமாக இட்டு வளர்த்து -அதுக்கு உறுப்பாகத் தான்
அறியாதே பிறர் அறிந்து ஏறிடும்படி -அபுத்தி பூர்வகமாக செய்யப்படும் பழியையும் -புத்தி பூர்வகமாகத் தான்
அனுஷ்ட்டித்துப் போரும் நிஷித்தா சரணம் ஆகிற பாபத்தையும் உத்தரோத்தரம் வளர்த்துக் கொண்டு
இஹ லோகத்தில் பர லோக ஸூகம் கனாக் கண்டு- அறியாதவர்கள் ஆகையால் -இத்தை பெரிய வாழ்வாக
நினைத்துக் களித்துத் திரியும் ஹேயரான சம்சாரிகளை -(பேதைகாள் )உனக்கு ஒரு பழி யுண்டோ -பாவம் யுண்டோ -என்று புகழாதே-கண்டது அல்லது அறியாத அறிவு கேடர்காள் —

திரு வுலகு அளந்து அருளின போது எட்டு திக்குகளையும் பேர்த்துப் பொகடும்படி
விம்ம வளர்ந்த நாலு திருத் தோள்களை யுடையனான சர்வேஸ்வரனுடைய குணாதிகளுக்கு வாசகமான திரு நாமங்களை
இடை விடாமல் சொல்லிக் கொண்டு –

தீதில் நன்னெறி காட்டி (குலசேகராழ்வார் )எங்கும் சஞ்சரித்து -உங்கள் ஸஞ்சாரத்தாலே
நாட்டை இருந்ததே குடியாகப் பரி சுத்தராம் படி பண்ணுங்கோள் –

பண்டிப் பெரும் பதி-என்று முன்பு
இந்த சம்சாரத்தை வர்த்திப்பித்து என்னுதல் –
பழையதான சம்சாரத்தைச் சேர்த்து -என்னவுமாம் –

(தீர்த்தம் கரோதீதி தீர்த்த கர -பிறரைப் பரிசுத்தப் படுத்துபவர்

அதி பாதக யுக்தோபி த்யாயன் நிமிஷம் அச்யுதம்
பூயஸ் தபஸ்வீ பவதி பங்க்தி பாவந பாவந
மஹா பாவங்களை செய்தவனாயினும் -அச்யுதனை ஒரு க்ஷணம் நினைத்தாலே மஹா தபஸ்ஸைச் செய்தவனாயும்
தன் ஸம்பந்தத்தாலேயே ஒரு பங்க்தி-வரிசை முழுவதையும் பாவனம் செய்யும் பங்க்தி பாவனர்களையும் பரிசுத்தப் படுபவனாயும் ஆகிறான்

ஞானதோ அஞ்ஞானதோ வா அபி வாஸூ தேவஸ்ய கீர்த்த நாத்
தத் ஸர்வம் விலயம் யாதி தோயஸ்தம் லவணம் யதா
தெரிந்து தெரியாமலோ வாஸூ தேவனை சங்கீர்த்தனம் செய்வதன் மூலம் மனிதனுடைய பாபம் எல்லாம்
தண்ணீரில் உள்ள உப்பு போலவே கரைந்து விடும்

யன் நாம கீர்த்தனம் பக்த்யா விலாயநம நுத்தமம்
மைத்ரேய அசேஷ பாபா நாம் தாதூ நாமிவ பாவக
மைத்ரேயரே -என்னுடைய நாமத்தை அன்புடன் கீர்த்தனம் செய்வது தாதுக்களை அழிக்கும் நெருப்பு போலவே
எல்லா பாபங்களையும் அழித்து ஒழிப்பதாய் இருக்குமது அன்றோ

ஸமா யாலம் ஜலம் வஹ்நேஸ் தமஸோ பாஸ்கர உதயா
சாந்தி கலேர கௌ கஸ்ய நாம சங்கீர்த்தனம் ஹரே
நெருப்பை அணைக்க நீரும் -இருட்டை நீக்க ஸூர்ய உதயமும் போதும் அன்றோ
அதே போலவே கலியின் பாபக் கூட்டங்களை அழிக்க ஹரியின் திரு நாம சங்கீர்த்தனத்தாலேயே இயலும் –
என்று சாஸ்த்ரங்கள் கோஷிக்குமே

ஆதி அந்தம் அநந்தம் அற்புதம் ஆன வானவர் தம்பிரான்
பாத மா மலர் சூடும் பத்தி இலாத பாவிகள் உய்ந்திட
தீதில் நல் நெறி காட்டி எங்கும் திரிந்து அரங்கன் எம்மானுக்கே
காதல் செய் தொண்டர்க்கு எப் பிறப்பிலும் காதல் செய்யும் என் நெஞ்சமே –பெருமாள் திருமொழி -2-6-)

(மழை மேகம் போல் முதல் ஆழ்வார்கள் மூவரும் எங்கும் சென்று உலகத்தை திருத்தி அருளினார்கள் அன்றோ கொண்டல் அனைய வண்மையாலேயே -)

————————————————————————————–

இவர்கள் இப்படி தங்கள் உடம்பைப் பேணிப் பேய்களாய்த் திரிய –
இவர்களுக்காக கிருஷ்ணனாவது -ராமன் ஆவதாக கொண்டு
அதி ஸூ குமாரமான திரு மேனியோடு அவன் பட்ட மிறுக்குகளை நினைத்து வெறுக்கிறார் –

(த்ரிவிக்ரமன் ராமன் கிருஷ்ண -மூன்று அவதாரங்களும் திருப்பாவையில் போல் முன் பாசுரத்திலும் -இப் பாசுரத்திலும் மூன்றும் உண்டே-அருகில் உள்ள அவதாரமான கிருஷ்ணாவதாரம் சொல்லி ராமாவதாரம் –
தேஹ போஷணம் பண்ணும் சம்சாரிகளுக்காகவாச இப்படி அவதாரம் செய்வது -என்கிறார்-இப்படி இரண்டு சங்கதி )

திரிந்தது வெஞ்சமத்துத் தேர் கடவி அன்று
பிரிந்தது சீதையை மான் பின் போய்-புரிந்ததுவும்
கண் பள்ளி கொள்ள அழகியதே நாகத்தின்
தண் பள்ளி கொள்வான் தனக்கு—-15-

பதவுரை

வெம் சமத்து–கொடிய (பாரத) யுத்தத்திலே
தேர் கடவி–(பார்த்த ஸாரதியாகித்) தேரை நடத்திக் கொண்டு
திரிந்ததும்–அலைந்ததும்,
அன்று–இராமனாகத் திருவவதரித்த காலத்து
மான்பின் போய்–மாரிசனாகிற மாயமானின் பின்னே சென்று
சீதையை பிரிந்ததும்–பிராட்டியைப் பிரிந்து அலைச்சற்பட்டதும்,
கண்–தரையிலே
பள்ளி கொள்ள–படுத்துக் கொள்ளும்படி
புரிந்ததுவும்–ஆசை கொண்டதும்
(ஆகிய இச் செயல்கள் யாவும்)
நாகத்தின் தண் பள்ளி கொள்வான் தனக்கு–திருவனந்தாழ்வான் மேலே குளிரப் பள்ளி கொண்டிருக்க வேண்டிய பெருமானுக்கு
அழகியதே–ஏற்றவையோ?

கண் பள்ளி கொள்ள —தரையிலே பள்ளி கொண்ட தலை சயனப்பெருமாளை அனுசந்தித்து என்றும்
பெருமாள் தரையிலே பள்ளி கொண்டதுவும் என்றதுவாம்

கொடிதான யுத்தத்திலே எதிரிகள் விடுகிற அம்புகள் தன் மேலே படும்படி உடம்புக்கு ஈடு கொடாமல் -சாரதியாய்க் கொண்டு
அர்ஜுனன் சொன்ன இடத்திலே தேரை நடத்திக் கொண்டு திருமேனி அலசும்படி இதஸ் தத்ஸ சஞ்சரித்ததுவும்(சித்திரத்தேர் வலவா -மாயப்போர் தேர்ப்பாகனாய் )

வன வாஸோ மஹோதய -என்று
சொல்லும்படி உகப்புடன் காட்டிலே சஞ்சரித்துத் திரிகிற அன்று மாயா மிருகத்தின் பின்னே போய்
நித்யம் ப்ராணசமையான பிராட்டியைப் பிரிந்து அலைச்சல் பட்டதும் –

அதி கடினமான பூமியிடத்திலே பள்ளி கொண்டு அருள
ஆதரித்ததுவுமான இவ்வோ செயல்கள் எல்லாம்

மென்மை குளிர்த்தி நாற்றங்களை பிரக்ருதியாக யுடைய திரு வனந்த ஆழ்வான் மேலே குளிரப் பள்ளி கொண்டு
அருளக் கடவ அதி ஸூகுமாரனான தனக்குச் சால அழகியதாய் இருந்தன என்று வயிறு பிடிக்கிறார் –

கண் பள்ளி கொள்ள -என்றது(கண் வளர்ந்த என்ற அர்த்தத்தில் இல்லையாய் )
கண் -என்று இடமாய் –
தரைக் கிடை கிடக்க என்றபடி –

(தேர் கடாவி –
ஆத்மாநம் ரதிநம் வித்தி சரீரம் ரதமேவ ச
புத்திம் து சாரதிம் வித்தி மனஸ் ப்ரக்ரஹ மேவ ச
இந்திரியாணி ஹயாநா ஹுர் விஷயாம்ஸ் தே ஷு கோசரான் –கடவல்லி -1-3-34-
அனைவரையும் நடத்தி செல்பவன் அன்றோ இங்கு ஒரு ரதிக்கு அடங்கி சாரதி யாகிறேனே

ராமாவதாரத்தில்
மா ச லஷ்மண ஸந்தாபம் கார்ஷீர் லஷ்ம்யா விபர்யயே
ராஜ்ஜியம் வா வன வாஸோ வா வன வாஸோ மஹோதய –ஆரண்ய 2-29-
வனவாசமமே அரசாள்வதை விட சிறந்ததாகும் என்றானே
மேலும் பிராட்டியைப் பிரிந்து
ராஜ்யாத் ப்ரம்சோ வன வாஸ ஸீதா நஷ்டா ஹதோ த்விஜ
ஈத்ரு ஸீயம் மமா லஷ்மீர் நிர்த ஹேதபி பாவகம் -ஆரண்ய -67-24-
இப்படி வந்த துன்பங்கள் எல்லாம் நெருப்பையும் எரிக்கும்படி அன்றோ)

———————————————————————————

இப்படி நம்மைப் பெறுகைக்கு எம்பெருமான் தானே கை தொடனாய் உதித்து கிருஷி பண்ணா நிற்க –
சேதனனான வாசிக்கு அவனைப் பெற வேணும் என்னும் ருசி மாத்திரம் ஒழிய நாம் பேற்றுக்கு
யத்னம் பண்ண வேணும் என்பது ஓன்று உண்டோ -என்கிறார் –

(பர கத ஸ்வீ காரம் அருளிச் செய்ய வந்த பாசுரம்)

தனக்கு அடிமைப் பட்டது தான் அறியான் ஏலும்
மனத்தடைய வைப்பதாம் மாலை -வனதிடரை
ஏரியாம் வண்ணம் இயற்றும் இது வல்லால்
மாரி யார் பெய்கிற்பார் மற்று—–16-

பதவுரை

தனக்கு–சேதநனாகிய தனக்கு
அடிமை–சேஷத்வமென்பது
பட்டது–பொருந்தி அமைந்திருக்கின்ற தென்பதை
தான் அறியான் ஏலும்–தான்தெரிந்து கொள்ள அசக்தனாயிருந்தாலும்–யானே என்னை அறியகில்லாத -அடிமைப்பட்டது -சேஷத்வம் -ஆத்மாவை சேஷத்வமே என்று ஆதரிக்கும்
பூவுக்கு மணம் -ரத்னத்துக்கு ஒளி போல்-
(எம்பெருமான் தானாகவே)
மனத்து–மனத்திலே
அடைய–வந்து சேர்ந்த வளவில்-சொத்தை தேடி ஸ்வாமி வந்த அளவிலே
மாலை–அப்பெருமானை-மால் -ஆஸ்ரித வ்யாமோஹம் -பித்தன்–மால் பெரியவன் கருமை -அழகன் -பாலைக் குடிக்க காலைப்பிடிக்க வேண்டுமோ –
வைப்பது–இடங்கொடுத்து வைத்துக்கொள்வது தகும்;-இத்தால் ஸ்வீ காரத்தில் உபாய பாவத்தைத் தவிர்க்கிறது -அதிகாரி விசேஷணம் இது –
(இவனுக்கு -யானே என்னை அறிய கில்லாமல் இருந்தாலும் -இவ்வளவு ருசிமாத்திரம் உண்டானால் விரோதியைப் போக்கித் தன்னைத் தானே
தந்தருள்வன் எம்பெருமான்; அது எங்ஙனே யென்னில்–ந்யாஸ இதி ப்ரஹ்ம -சரணாகதி பிரபத்தி செயல் அல்ல -அவனே -ஈஸ்வரனே உபாயம் என்னும் திட அத்யவசாயம் போஜனத்துக்கு ஸூத்து போல் பசி போல்-வைப்பது ஆம் -இதுவே பொருத்தம் -பல அனுபவ யோக்யதா ஆபத்வம்-பசி போல் விலக்காமை -வைப்பதாம் -என்கிறது )
வனம் திடரை–காடெழுந்து கிடக்கிற மேட்டு நிலத்தை
ஏரி ஆம் வண்ணம் இயற்றும் இது அல்லால்–(பெய்யும் மழைநீர் அப்பால் போகாமல் தடையின்றி வந்து புகும்படி)
ஏரியாகக் குழி வெட்டுதல் செய்யக்கூடுமேயன்றி
மற்று-பின்னும்
மாரி–மழையை
பெய்கிற்பார்–பெய்யும்படி செய்விக்க வல்லவர்கள்
யார்–யாவருளர்? (மழை பெய்ய வேண்டுவது பகவத் ஸங்கல்பத்தாலன்றோ?.)

ஆத்ம தாஸ்யம் ஹரே ஸ்வாம்யம் ஸ்வபாவம் ச சதா ஸ்மர-என்று
எம்பெருமானுக்கு சேஷித்வம் கூறப் பட்டால் போலே
தனக்கு சேஷத்வம் கூறப் பட்டது என்னும் இடத்தை
பிராமண பிரசித்தி யாலும் –
ஆச்சார்ய சேவையாலும்
தான் உள்ளபடி அறிய மாட்டாதவனாய் இருந்தானேயாகிலும் –

நம் உடைமையை நாமே பெற வேணும் -என்று மேல் விழுகிற வியாமுக்தனானவனை –
திரு வாணை இட்டுப் புகாத படி தடுக்கை யன்றிக்கே மனசிலே வந்து
சேரத் தக்கதாகத் தான் பொருந்தி இடம் கொடுத்து வைத்துக் கொள்ளுவது –

இத் தலையிலே இவ்வளவு ருசி மாத்திரம் உண்டானால்
விரோதியைப் போக்கித் தன்னைத் தருகை அவனுடைய பரம் இறே —
அது எங்கனே என்னில் –

காடு எழுந்து கிடக்கிற அதி கடினமான திடரை-
வருகிற வர்ஷ ஜலம் புறம்பு போகாதே தடை யற வந்து புகுரும்படி
ஏரியாம் பிரகாரம் யத்தனித்து வெட்டுவிக்கும் இத்தனை ஒழியப் பின்னை வர்ஷத்தைப் பெய்விப்பார் ஆர்
அதுக்கு கடவனான பர்ஜன்யன் அன்றோ –

ஏரி வர்ஷத்தை உண்டாக்கிக் கொள்ளும் அன்று அன்றோ
பிராப்தி இவனால் உண்டாக்கிக் கொள்ளல் ஆவது
ஆன பின்பு இத் தலையில் விலக்காமையே பற்றாசாகத் தானே
விரோதியைப் போக்கி
ப்ராப்தியைப் பண்ணித் தரும் என்றபடி –

(ஸ்வீ காரம் -ஏற்றல் -அவன் இடம் இருப்பது பர கத ஸ்வீ காரம் -நம்மிடம் இருப்பது ஸ்வ கத ஸ்வீ காரம்-குரங்கு குரங்குக்குட்டி பூனை பூனைக்குட்டி –
புல் மண்டி இருக்கும் காட்டுப் போல் மனஸ்ஸூ -காம க்ரோதாதிகளால் மண்டி இருப்பதை மாற்றுவதும் அவன் கிருபையால் தானே முடியும் )

அங்கன் அன்றிக்கே —
மனத்தடையே வைப்பதால் மாலை –
அவன் சேஷி தான் சேஷம் என்னும் இடத்தை சேதனன் தான் அறிய மாட்டானே யாகிலும் –
யத்ய தாசரதி ஸ்ரேஷ்டம்-என்கிறபடியே
தனக்கு ருசி இன்றிக்கே இருக்கச் செய்தேயும்
செய்வார் செய் முறை பாடு காண்டாகிலும் சர்வேஸ்வரனை ஹிருதயத்திலே வைத்துக் கொள்வது –

இவ்வளவு கொண்டே
அவன் தானே விரோதியையும் போக்கி ப்ராப்தியையும் பண்ணிக் கொடுக்கும் –
அதுக்கு த்ருஷ்டாந்தம் சொல்லுகிறது –

வனத்திடரை -இத்யாதி –
காட்டுத் திடரை ஏரியாம் படி கல்லுகை ஒழிய
மற்றும் மழை பெய்விப்பார் ஆர் -என்று யோஜிக்கவுமாம் –

அங்கனும் அன்றிக்கே –
மாலை மனத்திடை வைப்பதாம்-சர்வேஸ்வரனை ஹிருதயத்திலே கொண்டு வந்து
சர்வ சக்தி வையானோ என்று ஷேபம் -( வெறுப்பில்-உன்னால் செய்யப்போமோ மனத்தடைய வந்தவனே வைப்பான் அன்றோ )

(அதுக்கு த்ருஷ்டாந்தத்தில் விளக்கி -அனைத்துக்கும் அந்தராத்மாவான அவனே வெட்டுவித்தகு -மழை பெய்வித்து -செய்து அருள்குபவன் அன்றோ)

வனத்திடரை இத்யாதி –
மனுஷ்யரை ப்ரேரித்து கல்லுவிப்பானும் -இந்திரனை இடுவித்து மழை பெய்விப்பானும்
அவன் தானே யன்றோ என்கிறார் –

அப்படியே மனத்திடரில்-
அவித்யா கர்மா வாசா நாதிகளைப் போக்கி ருசி உண்டாக்குவானும் –
தன் கல்யாண குணங்களை வர்ஷிப்பானும்
அவனே யன்றோ என்னவுமாம் —

முற்பட்ட யோஜனை திருமலை நம்பியது –
இரண்டாம் யோஜனை ஆழ்வானது-

(ருசியை விளைவிப்பானும் அவனே -கூரத்தாழ்வான் நிர்வாஹம் -அஹம் ஹி ஸர்வ யஞ்ஞானாம்–போக்தா ச பிரபு -செய்யும் கிரிசைகளும் – செய்வார்களைச் செய்வானும் யானே என்னும் -இத்யாதி)

(ருசி ஜனக விபவ லாவண்யம் வைஷ்ணவ வாமனத்தில் பூர்ணம் –திருக்குறுங்குடியில்
ருசி விவசர்க்கு -உதார குணம் -பாதத்தையே சரண் ஆக்கி அருளுபவர் -பிராப்தி வானமா மலை
நடுவில் கடல் ஞாலம் -)

(அவனைப் பெற ருசி ஒன்றே போதும் -முயல வேண்டா -பரகத ஸ்வீ காரத்தின் சிறப்பைத் தெளிவிக்கும் பாசுரம் இது –
ஸ்வத்வ மாத்மநி ஸஞ்ஜாதம் ஸ்வாமித்வம் ப்ரஹ்மணி ஸ்திதம் -உடைமையாய் இருக்கை ஜீவாத்மாவின் இடமும் உடையவனாய் இருக்கை பரமாத்மாவிடமும் உள்ளன –
ஆத்ம தாஸ்யம் ஹரே ஸ்வாம்யம் ஸ்பாவஞ்ச ஸதா ஸ்மர –ஆத்மாவின் தாசத்தன்மையும் ஹரியின் ஸ்வாமித் தன்மையும் இயற்க்கை என்பதை எப்போதும் அறிவாயாக
அவனே நெஞ்சமே நீள் நகராகக் கொண்டு வாழ அபிநிவேசத்துடன் வந்து அடையும் போது
திருவாணை இட்டுத் தடுக்காமல் பொருந்து இருக்கும் படி இடம் கொடுக்க வேண்டுமே –
யத்ய தாசாரதி ஸ்ரேஷ்ட தத் ததே வேத ரோஜந -3-21–அறிவாளர்கள் அனுஷ்டிப்பதை அறிவில் குறைந்தவனும் பின்பற்றி அனுஷ்டிக்கிறான்
இவனுடைய விலக்காமையையும் ருசியையும் கொண்டு விரோதியைப் போக்கித் தன்னையே தந்து அருளுபவர் அவன்
ருசி மாத்திரம் -திருமலை நம்பி நிர்வாஹம்
ருசியையும் உண்டாக்கிக் தன்னைத் தந்து அருளுபவன் -ஆழ்வான் நிர்வாஹம்–என் உணர்வினுள்ளே இருத்தினேன் அதுவும் அவனது இன்னருளே -எல்லாமே அவனாலே –

மனத்தடைய –மேல் விழும் முயற்சி மாலது அவனது-பக்தி உழவன் அன்றோ
வைப்பதாம் –இதுவே நமது கர்தவ்யம்

அருள் மழையைப் பொழிய வரும் போது -அஞ்ஞானம் கர்மா வாசனை போன்ற புதர்களை அழித்து
ருசியாகிய விதையை விதைத்து
அத்தை பேர் அமர் காதல் பின் நின்ற காதல் -கடல் புரைய -அதனிலும் பெரிய அவாவாக்க தனது கல்யாண குணங்களாகிற மழையைப் பொழிந்து
வித்தும் இட வேண்டும் கொலோ விடை யடர்த்த பத்தி யுழவன் பழம் புனத்து -நான்முகன் -23-
உபாய உபேயத்வே ததிஹ தவ தத்துவம் ந து குணவ் -ரெங்க ராஜ ஸ்தவம் -2-87-உபாயத்வமும் உபேயாத்வமும் உனக்கு ஸ்வரூப நிரூபனம்
மற்றவை போல் நிரூபித்த ஸ்வரூப குணங்கள் அல்ல -ஞான பலாதி ஆறு குணங்களும் ஸ்வரூப நிரூபக குணங்கள்
பெரிய பெருமாளை நிரூபிக்கவே உபாயத்வமும் உபேயத்வமும் – என்கிறார் பட்டர் -)

———————————————————————————

இப்படி இருக்கிற அவனை ஒழிய மற்று ஆஸ்ரயணீயர் இல்லை என்கிறார் –

மற்று ஆர் இயலாவார் வானவர் கோன் மா மலரோன்
சுற்றும் வணங்கும் தொழிலானை -ஒற்றைப்
பிறை யிருந்த செஞ்சடையான் பின் சென்று மாலைக்
குறை யிரந்து தான் முடித்தான் கொண்டு—–17-

பதவுரை

வானவர் கோன்–தேவர்கட்குத் தலைவனான இந்திரனும்
மா மலரோன்–(எம்பெருமானது) சிறந்த (திருநாபிக் கமலத்தை இருப்பிடமாகவுடைய பிரமனும்
சுற்றும் வணங்கும் தொழிலானை–பக்கங்களிற் சூழ்ந்துகொண்டு ஆஸ்ரயிப்பதற்கேற்ற சேஷ்டிதங்களை யுடையனான
மாலை–எம்பெருமானை
ஒற்றை பிறை இருந்த செம்சடையான்–ஓரு கலா மாத்திரமான சந்திரனைத் தரித்த சிவந்த சடையையுடைய ருத்ரன்
பின் சென்று–அநுவர்த்தித்து
இரந்து-(பல்லைக் காட்டி) யாசித்து
குறை–தனது குறையை
தான் முடித்து கொண்டான்–தான் நிறைவேற்றிக் கொண்டான்;
(ஆனபின்பு)
இயல் ஆவார்–ஆஸ்ரயிக்கலாம்படி தகுதியுடையவர்
மற்று ஆர்-அந்த ஸர்வேஸ்வரனைத் தவிர வேறு யாவர்?

முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு எல்லாம் நிர்வாஹகனான இந்திரனும் –
ஸ்லாக்யமான திரு நாபீ கமலத்தை வாசஸ் ஸ்தானமாக யுடைய ப்ரஹ்மாவும் –
நேர் கொடு நேரே சென்று கிட்ட மாட்டாமல் பாடே பக்கே நின்று திருவடிகளிலே பின்னாபிமானராய் (பக்ந அபிமானராய் )விழுந்து
ஆஸ்ரயிக்கைக்கு உறுப்பான ஸுந்த்ர்யாதி சீலாதி குண சேஷ்டிதங்கள் ஆகிற பிரகாரங்களை யுடையனாய் –
சர்வாதிகனானவனை

(விரோதி நிரசன சாமர்த்தியம் குணம் -கேசி அழித்தவன்-சேஷ்டிதம்
சர்வ ஆதாரன் குணம் – -கோவர்த்தந தாரி -சேஷ்டிதம் போல்)

கலா மாத்ர மான சந்திரனை தரித்து இருக்கிற சிவந்த ஜடையை யுடையனான ருத்ரன்
தன் ஹிருதயத்திலே அனுசந்தித்திக் கொண்டு இருந்த துர்மானத்தை விட்டு பின்பற்றி அனுவர்த்தித்து –
அநந்தரம் பல் காட்டி அர்த்தித்துத் தன்னுடைய குறையை தான் தலைக் கட்டிக் கொண்டான்
ஆன பின்பு அவனை ஒழிய வேறு ஆர் தான் சத்ருச ஸமாஸ்ரயணீயனாய் இருப்பர் –

(அபிதஸ் பாவ கோபமம் -அயோத்யா -99-26- சுற்றிலும் தீயைப் போல அணுக ஒண்ணாதவன்
கடிக்கமலத்துள் இருந்தும் காண் கிலான் கண்ணன் அடிக்கமலம் தன்னை அயன் -முதல் திரு -56-
பின் சென்று -நேராக விழிக்க ஒண்ணாமையால் என்றும்
நெஞ்சிலே உள்ள துற அகங்காரத்தை விட்டுப் பின் பற்றி அனுவர்த்தித்து -என்றுமாம்
ப்ரஹ்மாதி தேவர்களும் இவனை ஆஸ்ரயித்து குறைகள் தீரப் பெற்றார்கள் -எனவே
இவனைப் போல் ஆஸ்ரயிக்கத் தக்கவர் வேறே யார் என்று கீழோடே அந்வயம்)

வேதாபஹார குருபாதக தைத்யபீடாதி
ஆபத் விமோசந மஹிஷ்ட பல ப்ரதாநை: |
கோ’ந்ய: ப்ரஜா பஶு பதீ பரிபாதி கஸ்ய
பாதோதகேந ஸ ஶிவஸ் ஸ்வ ஶிரோத்ருதேந ||–ஸ்தோத்ர ரத்னம் -13

ப்ரஜாபதி என்று சொல்லப்படும் பிரமனையும், பசுபதி என்று சொல்லப்படும் ருத்ரனையும் மற்றும் இந்திரனையும்
முறையே அவர்களுக்கு வந்த ஆபத்தான வேதம் திருடப்பட்டு அதை இழந்ததையும்,
தன்னுடைய தந்தையின் தலையைக் கிள்ளிய பாபத்தையும், அஸுரர்களால் ஏற்பட்ட துன்பத்தையும் போக்கியவன் யார்?
யாருடைய ஸ்ரீபாத தீர்த்தத்தைத் தலையில் தாங்கி, ருத்ரன் புனிதத் தன்மையை அடைந்தான்?

————————————————————————————————————–

இப்படி ஸமாஸ்ரயணீயனாய் சர்வாதிகனாய் இருந்து வைத்து –
தன்னை அழிய மாறியும் ஆஸ்ரிதரை நோக்கும் (ரக்ஷிக்கும்)ஸ்வபாவன் என்கிறார் –

கொண்டது உலகம் குறள் உருவாய் கோளரியாய்
ஒண் திறலோன் மார்வத்து உகிர் வைத்தது -உண்டதுவும்
தான் கடந்த ஏழ் உலகே தாமரைக் கண் மால் ஒரு நாள்
வான் கடந்தான் செய்த வழக்கு——-18-

பதவுரை

குறள்உரு ஆய்–வாமந ரூபியாய் மாவலியிடஞ் சென்று யாசித்து
உலகம்–பூமி முதலிய லோகங்களை
கொண்டது–ஆக்ரமித்துக் கொண்டதும்,
கோள் அரி ஆய்–மிடுக்கையுடைய நரசிங்கமாகி
ஒண்திறலோன் மார்வத்து–மஹா பலசாலியான இரணியனுடைய மார்பிலே
உகிர் வைத்தது–தனது நகங்களை யழுத்திக் கீண்டொழித்ததும்
ஒருநாள்–ஒரு காலத்திலே
தான் கடந்த–தான் அளந்து கொண்ட
ஏழ் உலகே–எல்லா வுலகங்களையும்
உண்டதுவும்–(பிரளயங் கொள்ளாதபடி) திரு வயிற்றிலே வைத்துக் கொண்டதும்
(ஆகிய இச் செயல்கள்)
வான் கடந்தான்–ஆகாசத்தை யளவிட்டாலும் அளவிட வொண்ணாத படியுள்ள பெருமையை யுடையவனும்-வான் -பரமாகாசம் -லக்ஷனையால் -நித்ய ஸூரிகள் மநோ ரதங்களைக் கடந்தவன் என்றுமாம்
தாமரை கண்–செந்தாமரைக் கண்ணனுமாகிய
மால்–எம்பெருமான்
செய்த–செய்தருளின
வழக்கு–நியாயமான செயல்களாம்-பிராப்தம் -சர்வாதிகன் -சர்வேஸ்வரன் -அன்றோ எனவே வகுத்ததே

ஆகாசத்தை அளவிடிலும் அளவிட ஒண்ணாத பெருமையை யுடையவனாய் -இவனே சர்வ ஸ்மாத் பரன் என்னும் இடத்தை
கோள் சொல்லித் தருகிற தாமரை போன்ற கண் அழகை யுடையனான சர்வேஸ்வரன் –

(கஶ்ஶ்ரீ: ஶ்ரிய: பரமஸத்வ ஸமாஶ்ரய: க:
க: புண்டரீகநயந: புருஷோத்தம: க: |
கஸ்யாயுதாயுத ஶதைக கலாம்ஶகாம்ஶே
விஶ்வம் விசித்ர சிதசித் ப்ரவிபாக வ்ருத்தம்||-ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் -ஶ்லோகம் 12 –

ஸ்ரீ: என்று சொல்லப்படும் ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் செல்வம் யார்? யாரிடத்தில் சுத்த ஸத்வம் உள்ளது?
யார் புண்டரீகாக்ஷன்? யார் புருஷோத்தமன் என்று சொல்லப்படுபவன்? யாருடைய ஸங்கல்பத்தின் ஒரு சிறு பகுதி,
பலவகைப்பட்ட சேதனர்கள் மற்றும் அசேதனப்பொருள்களாக விரிந்திருக்கும் இவ்வுலகத்தைத் தாங்குகிறது?)

நம்முடைமையை நாமே நம்மை
அழிய மாறி ரஷிக்கை நமக்கு ஸ்வரூப பிராப்தம் அன்றோ -என்று நியாயமாகச் செய்த செயல்கள் இருந்த படி –

ஸ்ரீ வாமனனாய் தன்னை அழிய மாறி அர்த்தித்து பூமி முதலான லோகத்தை வாங்கிக் கொண்டதும் –

மிடுக்கை யுடைத்தான நரசிம்ஹ ரூபியாய்க் கொண்டு அழகிய மிடுக்கை யுடையனான ஹிரண்யனுடைய
மார்விலே -திரு உகிரை நாட்டிப் பிளந்து பொகட்டதுவும்

ஒரு நாளிலே தான் அளந்து கொண்ட சப்த லோகங்களையும் தர தம விபாகம் பாராதே திரு வயிற்றிலே எடுத்து வைத்து
நோக்கியும் செய்த செயல்கள் இவைகள் கிடீர்

வழக்கு -நியாயம் -பிராப்தம் -என்றபடி –

பிறருக்கு ஒரு கார்யம் செய்தானாய் இருக்கை அன்றிக்கே
தனக்கு அடைத்த கார்யம் செய்தானாய் இருக்கை –
உடையவன் உடமையை ரஷிக்கை பிராப்தம் இறே –

(சேஷ பூதனுக்கு கைங்கர்யம் வகுத்தது போல் சேஷிக்கு ரக்ஷணமே பிராப்தம் அன்றோ
அவனுக்கு பரீஷை களே -திரௌபதி கஜேந்திரன் விபீஷணன் -பிரகலாதன் விருத்தாந்தம்)

(தாமரைக் கண் மால் –
ஆஸ்ரித பக்ஷபாதத்தையும்
ஸர்வ ஸ்வாமித்வத்தையும் கோட் சொல்லும் திருக்கண்கள்
வான் கடந்தான் –
அங்குள்ள நித்ய ஸூ ரிகளாலும் அளவிட முடியாதபடி இருப்பவன்
ஒரு நாள் வான் கடந்தான்
உலகு அளந்த வ்ருத்தாந்தம் என்றும் கொள்ளலாம்
அடியார்களுக்காகச் செய்தவையானாலும் தனது காரியமாகவே உகந்து செய்து அருளினான்
அபி ஷிச்ய ச லங்கா யாம் ராக்ஷ ஸே ந்தரம் வீபீஷணம்
க்ருதக்ருத்யஸ் ததா ராம விஜ்வர பிரமுமோத ஹ
உடைமையை ரக்ஷிப்பது உடையவனுக்கே அன்றோ ப்ராப்தம்)

———————————————————————————-

நம்மை அழிய மாறியும் நம் உடமையை நோக்குகை நமக்கு பிராப்தம் என்று அவன் நினைத்து இருக்க
இவர் அவனுடைய ஸுகுமார்யத்தை அனுசந்தித்து இது அப்ராப்தம் என்று வயிறு எரிகிறார்-(உனது திருமேனி உன்னதே அல்லவே -பக்தா நாம் ப்ரகாஸதே அன்றோ )

(கொண்ட பெண்டிர் மக்களே -உத்தேச்யம் என்று முடித்து -அடுத்த பாசுரம் கொண்ட பெண்டிர் த்யாஜ்யம் என்று மாற்றி அருளிச் செய்தது போல்
வழக்கு பிராப்தம் என்று முடித்து அடுத்த பாசுரத்தில் தகுந்தது அல்லவே என்கிறார்)

வழக்கன்று கண்டாய் வலி சகடம் செற்றாய்
வழக்கு என்று நீ மதிக்க வேண்டா -குழக்கு அன்று
தீ விளவின் காய்க்கு எறிந்த தீமை திரு மாலே
பார் விளங்கச் செய்தாய் பழி—-19-

பதவுரை

திருமாலே! ; நீ;
(கிருஷ்ண சிசுவாயிருந்த போது-இந் நம்பி பிறந்த ஏழு திங்களில் )
வலி சகடம்-வலிதான சகடத்தை
செற்றாய்–உதைத்து முறித்துத் தள்ளினாய்;
வழக்கு அன்று கண்டாய்–இது உனக்குத் தகுதியன்று காண்;
வழக்கு என்று நீ மதிக்க வேண்டா–இது நமக்குத் தகுந்ததேயென்று நினைக்கலாகாது;
(இப்படிப்பட்ட ஸாஹஸச் செயல் செய்ததோடு நில்லாமல்)
குழ கன்று–(அஸுரனான) இளங்கன்றை
தீ விளவின் காய்க்கு எறிந்த–தீய விளங்காயை உகுக்கும் பொருட்டு வீசிப்போட்ட
தீமை–இந்தத் தீம்பான செயல்
பார் விளங்க–பூமியிலே பிரகாசிக்கும்படி
பழி செய்தாய்–தவறு செய்தாய்

பெரிய பிராட்டியார் -என் புகுகிறதோ -என்று வயிறு எரிந்து-
மங்களாந் யபி தத்யுஷீ –என்று (சீதாப்பிராட்டி திக் பாலர்கள் ரக்ஷிக்க -மங்களா ஸாஸனம் )மங்களா சாசனம் பண்ணி
நோக்க வேண்டும் படி நிரதிசய ஸூ குமாரமானவனே –

இப்படி இருக்கிற நீ சிறு பிள்ளையாய்க் கொண்டு அதி ஸூகுமாரமான திருவடிகளாலே அதி பிரபலமான சகடத்தை
உதைத்து முறித்து விழ விட்டாய் –
பிரானே இது பிராப்தம் அன்று கிடாய்

ரக்ஷகனான நமக்கு விரோதிகளை போக்கி நோக்குகை பிராப்தம் அன்றோ என்று
இந்த ஸாஹஸ பிரவ்ருத்தி யிலே அனுதாபம் கூட அற்று இருக்கிற நீ புத்தி பண்ண வேண்டா –

அதுக்கு மேலே
அஸூரனான குழக் கன்றைக் கொண்டு அஸூர வடிவாயத் தீதான
விளாவின் காய்க்கு எறிந்த இந்த தீம்பான செயலானது பூமியிலே பிரகாசிக்கும் படியாக தப்பாகச் செய்தாய் –

அவன் புகழ் என்று இருக்க இவர் பழி என்று வயிறு பிடிக்கிறார் –
விபூதியில் ஏக தேசத்தை நோக்கப் புக்கு
உபய விபூதியையும் அழிக்கப் பார்த்தாய் -என்று இன்னாதாகிறார் –

(பிறந்த எழு திங்களில் –சேடன் -திரு மறு மார்பன் கிடந்து திருவடியால் -மலை போல் ஓடும் சகடத்தை -பெரிய திருமொழி -10-7-9-இங்கும் திருமாலே –
தலை நீர்ப்பாட்டிலே இருந்து சர்வேஸ்வரனுடைய பெருமை எல்லாம் அறியும் பிராட்டியே அஸ்தானே பய சங்கையாலே வயிறு பிடித்தாள்
முலை வரவு தாழ்த்து உதைத்தாய் போலும் -பொன்றச் சகடம் உத்தரித்தாய் புகழ் போற்றி என்ற அநந்தரம்
அதிலும் சாஹசம் மிக்க -கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி –
பழி -அவன் புகழ் என்று எண்ணி இருப்பதை பய சங்கையால் பழி என்கிறார் –

மார்பில் கிடக்கிறவர்கள் -மண்ணில் இருப்பவர்கள் வாசி இல்லாமல் இருவரும் தவிக்கும் படி செய்த செயல்கள் அன்றோ -திருப்பாவை வியாக்யானத்தில்
கிருஷ்ணாவதாரத்தில் மாதா பிதாக்கள் சாது இடையர்களாய்
ஊர் இடைச்சேரியாய்
கம்ஸாதிகள் எதிரிகளாய்
ஸ்ரீ பிருந்தா வனத்தில் முளைத்து எழும் பூண்டுகள் எல்லாம் அஸூரர்களாய்
தமையன் ஒரு கணம் தப்பில் தான் பாம்பின் வாயில் விழும் தீம்பனாய்
பூதநாதிகளால் பிறந்த அபாயங்களை ஓர் எல்லை இல்லாமையால் மங்களா சாசனம் ஒழியக்
காவல் இல்லாமையாலே ஆழ்வார்கள் கண்ணனுக்கு மங்களா ஸாஸனம் செய்வதிலேயே மண்டி இருப்பர்கள் என்பர் பட்டர் )

————————————————————————————————-

பகவத் ஸமாஸ்ரயணத்தில் முதல் அடி இட்டாரோடு –
முடியாத தலைக் கட்ட பெற்றாரோடு வாசி அற
க்ருதக்ருத்யர் -என்கிறார் –

(ஸ்ரீ பாஷ்யம் -கற்று -மாட்டிற்றிலன் ஆகில் -கீழே கீழே போனால் போல் -எல்லா படிகளில் உள்ளாருக்கும் ஒரே பூர்ண பலன்)

பழி பாவம் கை யகற்றிப் பல் காலும் நின்னை
வழி வாழ்வார் வாழ்வராம் மாதோ -வழுவின்றி
நாரணன் தன் நாமங்கள் நன்குணர்ந்து நன்கேத்தும்
காரணங்கள் தாமுடையார் தாம்———–20-

பதவுரை

பழி–அபகீர்த்தியையும்
பாவம்–பாவங்களையும்
கை அகற்றி–நீக்கி
பல்காலும்–எப்போதும்
நின்னை–உன்னை
வழி வாழ்வார்–வழிப்பட்டு -ஸாஸ்த்ர வழியில் பூர்ணமாக -ஆஸ்ரயிக்குமவர்களும்
நாரணன் தன்–நாராயணனான வுன்னுடைய
நாமங்கள்–திருநாமங்களை
நன்கு உணர்ந்து–நன்றாக அறிந்து
வழு இன்றி–இடைவீடின்றி
நன்கு ஏத்தும் காரணங்கள் உடையார் தாம்–அழகாகத் துதிப்பதற்கேற்ற உபகரணங்களை யுடையவர்களும்-அத்வேஷம் ஆபி முக்கியம் பாகவத சமாஹம் போன்ற காரணங்கள்
(ஆகிய இவ்விருகை யதிகாரிகளும்)
வாழ்வராம்–மகிழ்ந்து வாழப் பெறுவர்கள்.
(மாதோ- அசை).ஆச்சர்யம் என்றுமாம்

தங்கள் அறியாது இருக்கப் பிறர் அறிந்து ஏறிடும் அபகீர்த்தியையும்
அறிந்து அனுஷ்ட்டிக்கப் பட்ட பர ஹிம்சாதி ரூபமான பாபத்தையும் கை கழிய விட்டு
சர்வ காலமும் யுன்னை ஸாஸ்திரங்களில் சொல்லுகிற கட்டளையிலே வழி பட்டு நின்று
போக ரூபமாக ஆஸ்ரயிக்குமவர்களும் -(சார்வே தவ நெறிக்கு தாமோதரன் தாள்கள் )

நாராயண சப்த வாசகன் ஆகையால் சர்வ ரக்ஷகனாய் இருக்கிற உன்னுடைய திரு நாமங்களை
விச்சேதம் இல்லாத படி ப்ரேம யுக்தராய்க் கொண்டு அழகிதாக அறிந்து ப்ரேம பரவசராய்க் கொண்டு
அழகிதாக ஏத்துகைக்கு ஹேதுக்களான ப்ரேமம் –
தத் ஹேதுவான உத் (மிகுதியான)பஜனம் –
தந்நிதானமான ருசி –
தந்நிதானமான ஸூ ஹ்ருதம்
அதுக்கு அடியான உன் கடாக்ஷம் -என்றால் போலே சொல்லுகிற
இவற்றைத் தாங்கள் பெற்று உடையராய் இருக்குமவர்களான
இவ் விரண்டு அதிகாரிகளும் ஸூகோத்தரராய் வாழப் பெறுவார்கள்

மாதோ என்கிற இது
ஓர் அவ்யயமாய் –
இது ஓர் ஆச்சர்யம் இருந்த படி என் -என்னும் பொருள் பெற்றுக் கிடக்கிறது –

(ராஜ வித்யா –ஸூ ஸூ கம் கர்த்தும் அவ்யயம் -ஸ்ரீ கீதை -9-2-பக்தி யோகம் அனுஷ்ட்டிக்கவே இனியதாய் இருக்கும்
வாழ்வராம் -நல்ல பாதத்தால் மனை வாழ்வார் கொண்டபெண்டிர் மக்களே -திருவாய் -8-10-11-
இங்கும் வாழ்ச்சி பெற்று பின்பு பேர் இன்பமும் பெறப் பெறுவர்
ந ஸூ கால் லப்யதே ஸூகம் -இன்பத்துக்குப் பின் எப்போதுமே இன்பமே உண்டாகும் என்பது இல்லை என்னும் லௌகிக விஷயம் போல் அல்லவே பகவத் விஷயம்
மாதோ -ஆச்சார்யம் -ஸர்வ காலமும் ஆஸ்ரயிப்பார் பெரும் பேற்றை உன்னை ஆஸ்ரயிக்கத் தொடங்கி இருப்பாராம் பெறும்படி இருப்பதே –
பரிபூர்ணமாக ஆஸ்ரயித்தவர்களைப் போலே இவர்களும் பேறு பெறுவது நிச்சயமே
நேஹாபி க்ரம நாஸோஸ்தி –ஸ்ரீ கீதை -2-40-இட்ட படை கற் படை என்று கண்ணன் தானே அருளிச் செய்தான் அன்றோ –
காரணங்கள் என்று காரண பரம்பரைகளைச் சொன்னவாறு –
தாரணங்கள் பாட பேதம் -த்ருதி என்னும் மன உறுதியை யுடையவர் அவனை அடைவது நிச்சயம் என்றவாறு –
நாயமாத்மா பல ஹீநேந லப்யா -மநோ பலம் அற்றவனால் இவன் அடையப்பட மாட்டான் என்பதையே
தாரணங்கள் தாமுடையார் தாம் வாழ்வாராம் -என்று அந்வய முகத்தால் அருளிச் செய்கிறார் -)

——————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

இரண்டாம் திருவந்தாதி-தனியன் / அவதாரிகை / பாசுரங்கள் 1-10- – -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரை-

November 13, 2016

திருக்கடல் மல்லையிலே–மலர்ந்த உத் பல்ல புஷ்ப்பத்திலே —
ஐப்பசி -அவிட்டத்தில்-ஸ்ரீ கௌமோதகீ என்னும் திருக் கதையின் அம்சமாக –
ஆவிர்பவித்த ஸ்ரீ பூதத்தாழ்வாரை ஸ்துதிப்போம் –

தநிஷ்டா-அவிட்டம்–கௌமோதகீ -ஆனந்தம் கொடுக்கும் கதாம்சம் –

துலா தநிஷ்டா ஸம்பூதம் பூதம் கல்லோல மாலின
தீரே புல்லோத்பல மல்லா புர்யா மீடே கதாம்சஜம் –

மல்லாபுர வராதீசம் மாதவீ குஸூமோத்பவம்
பூதம் நமாமி யோ விஷ்ணோ ரவிம் தீப மகல்பயத்-

எவர் ஒருவர் பரம புருஷனுக்கு ஞானச் சுடர் விளக்கை ஏற்றினாரோ
கடல் மல்லையின் தலைவராய் -மாதவீ-குருக்கத்திப் பூவில் திரு அவதரித்து அருளினை பூதத்தாழ்வாரை வணங்குகிறேன்

அன்பே தகளி நூறும் அருளினான் வாழியே
ஐப்பசியில் அவிட்டத்தில் அவதரித்தான் வாழியே
நன் புகழ் சேர் குருக்கத்தி நாண் மலரோன் வாழியே ‘நல்ல திருக் கடல் மல்லை நாதனார் வாழியே
இன்புருகு சிந்தை திரியிட்ட பிரான் வாழியே
எழில் ஞானச் சுடர் விளக்கை ஏற்றினான் வாழியே
பொன் புரையும் திருவரங்கர் புகழ் யுரைப்போன் வாழியே
பூதத்தார் தாளிணை இப்பூதலத்தில் வாழியே –

———

(பூதம் சிரஸ்ஸூ -நம்மாழ்வார் அவயவி
இரும் தமிழ் நூல் புலவர் -இவர் ஸ்ரீ ஸூக்தி கொண்டே –
யானே இரும் தமிழ் நன் மாலை இணை அடிக்கே சொன்னேன் பெரும் தமிழன் நல்லேன் பெரிது –74
இறையும் அகலகில்லேன் -செவ்விப் படிக் கோலம் கண்டு அகலாள் –82-இவரது
அலர் மேல் மங்கை உறை மார்பா -திருமங்கை நின்று அருளும் தெய்வம் -57-
மாலே நெடியானே –100
போன்ற பல ஸ்ரீ ஸூ க்திகள் கொண்டே நம்மாழ்வார் ஸ்ரீ ஸூக்திகளுக்கு இவரதே மூலம்
அன்பிலே ஞானத்தமிழ் -இரும் தமிழ் -தானே கொண்டாடும் படி இவர் திவ்ய பிரபந்தம் )

———-

மூவரும் அடுத்த அடுத்த திரு நக்ஷத்திரத்தில் திரு அவதாரம்
எங்கும் தீர்த்தாரராய் திரிந்து -திருக்கோவிலூரில் -நெருக்கு உகந்த மிதுனம்
பா மாலை பாடி கைங்கர்யம்
மூவரும் பூவில் அவதாரம்
கார்ய காரண பாவம் மூவருக்கும் -மூவருக்கும் -பூ காய் பழம் போல்
பர பக்தி -பர ஞானம் -பரம பக்தி
ஞான -தர்சன -பிராப்தி -ஞானம் த்ரஷ்ட்டும் பிரவேஷ்டும் -கீதை
மூன்றுமே மூவருக்கும் உண்டு –
பூவே காயாகி பழம் -உலகில் ஒன்றே தான் இருக்கும்
இங்கு அப்படி அல்லவே -மூவரும் கூடவே இருந்து -மூன்று மநோ நிலைகளும் உண்டு –

உபய விபூதிநாதன் சர்வேஸ்வரன் -அடையாளம் மட்டும் சொல்லி –
அடுத்தவர் -நாரணற்கு -என்று வியக்தமாகக் காட்டி அருளி –
அடுத்தவர் -மிதுனம் -ஸ்ரீ யபதி -கண்டு பாடி அருளினார்
நம்மாழ்வார் இவற்றை விளக்காகக் கொண்டு -முதல் பத்தில் உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன் –
உபய விபூதி நாதன் ஸர்வேஸ்வரன் என்று காட்டி அருளி
அடுத்த பதிகம் வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே என்று அருளி
மலர்மகள் விரும்பும் நம் திருவுடை அடிகள் -என்று மூன்றாம் பதிகத்தில் மிதுனம் -ஸ்ரீ யபதி காட்டி அருளினார்
திருமழிசை ஆழ்வார் -உறை இடாமல் -திரு வில்லாத் தேவரை தேறேல் மின் –
ஒண் சங்கு கதை வாள் ஆழி -ஆழ்வார்கள் வரிசை
அத்புதம் பாலகம் சங்கு கதை காட்டிய ஸ்லோகம் உண்டே-

இறைவனைக் காணும் இதயத்து இருள் கெட ஞானம் என்னும்
நிறை விளக்கு ஏற்றிய பூதத் திருவடி தாள்கள் நெஞ்சத்து
உறைய வைத்து ஆளும் இராமானுசன் புகழோதும் நல்லோர்
மறையினைக் காத்து இந்த மண்ணகத்தே மன்ன வைப்பவரே – இராமானுஜ நூற்றந்தாதி -9-

இதயத்து-ஸூத்தமான மனஸ்ஸூ தானே -இறைவனைக் காணும் கருவி –
பாபங்கள் காமம் க்ரோதம் -இந்திரியாணி -மனம் புத்தி -ஞானம் மூன்றையும் தாக்கும்
ஞான தீபேண பாஸ்கர -ஆதித்ய வத்-அஞ்ஞானம் இருளை நாசமாக்கி -உள்ளத்தில் இருந்து ஒளி விளக்கு ஏற்றி –
ஆதித்யவது-முதல்திருவந்தாதி – ஞானம்-இரண்டாவது – – ப்ரகாசயத்தி -மூன்றாவது -தத் பரம் -கீதை மூன்று சப்தங்கள்
கீதாச்சார்யன் அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்
தேஷாம் -அங்கு சொன்னது முதல் ஆழ்வார்களையே –

இராமானுசன் புகழோதும் நல்லோர்-நம்மாழ்வார் நாதமுனிகள் முற்பட்டவரையும் குறிக்கும்
மறை -சம்ஸ்க்ருத -கூரத்தாழ்வான்
மறை -அருளிச் செயல் -பிள்ளான் முதலோர்-

——————————————————————————————

திரு குருகைப் பிரான் பிள்ளான் அருளிச் செய்த தனியன் –

என் பிறவி தீர இறைஞ்சினேன் இன்னமுதா
அன்பே தகழி யளித்தானை -நன் புகழ் சேர்
சீதத்தார் முத்துக்கள் சேரும் கடல் மலை பூதத்தார்
பொன் அம் கழல் –

என் பிறவி தீர இன்னமுதா-இனிய அமுதம் -சாகா அம்ருதம் போல் அல்லவே -மீளாத பேர் இன்பம் அளிக்குமே
அன்பே தகழி யளித்தானை –
நன் புகழ் சேர்-நல்ல கீர்த்தி சேர்ந்த -பெருமாள் ஆழ்வார் ஆச்சார்யர்கள் சேர்ந்த
சீதத்தார் முத்துக்கள் சேரும் -குளிர்ந்த -கடல் முத்துக்கள் தண்ணீர் ஸ்பர்சம் –
கடல் மலை பூதத்தார்
பொன் அம் கழல் -ஸ்ப்ருஹணீயம் -விரும்பத்தக்க அழகிய திருவடிகள் -பாவன போக்யத்வங்கள் இரண்டும் உண்டே –
இறைஞ்சினேன்-முக் கரணங்களாலும் ஸ்துதித்தேன்

இதில் திவ்ய பிரபந்த ப்ரதாதாவுமாய் -திவ்ய தேசத்தை ஜென்ம தேசமாக யுடையாருமாய் இருக்கிற பூதத்தாருடைய
ஸ்ப்ருஹணீயமான திருவடிகளை ஜென்ம சம்பந்தம் அறும் படி (முக்கரணங்களாலும் )பஜித்தேன் என்கிறது –

(திருமங்கை ஆழ்வார் பாகவத சேஷத்வம் அருளிச் செய்த நன்மை
பொன் முத்துக்கள் சேரும் –பெருமாளும் – முக்த பிராயரும் சேர்
கடல் மல்லை பூதத்தார் -கடல் மல்லை தலை சயனப்பெருமாள் -சேஷி சேஷன் இருவருக்கும் நிரூபகமான நன்மை
கடல் வண்ணன் பூதங்கள் -மலிய-கலி கெடுமே )

இன்னமுதாய் -அன்பே தகழி யளித்தாருமாய் –
நன் புகழ் சேர்-சீதத்தார் முத்துக்கள் சேரும் கடல் மலை பூதத்தார்
பொன் அம் கழல் களை -என் பிறவி தீர இறைஞ்சினேன் -என்கிறது –

என் பிறவி தீர இறைஞ்சினேன்
என் பிறவி யாவது -இவர் தாம் -இது கண்டாய் நன்னெஞ்சே இப்பிறவி யாவது -66-என்று அருளிச் செய்தபடியே
மாறி மாறி பல பிறப்பும் பிறந்து -(திருவாய் -2-6-8-)
பல் பிறவியில் படிந்து (படிக்கின்ற யான் -திருவாய் -3-2-2-)
பிறவிப்  பெரும் கடலிலே (பெரிய திருமொழி -8-9-8-)
உடலாழி பிறப்பிலே (திருவாய் -1-4-10)புக்கு உழலுகை
ஏவம் விதமான ஜென்ம பரம்பரைகள்(புனரபி ஜனநம் புனரபி மரணம் என்று ) தீரும்படி ஜென்ம வைபவத்தை யுடைய பூதத்தார் பொன்னம் கழலை இறைஞ்சினேன் என்கிறது
இறைஞ்சுதல் -பஜிக்கை -அதாவது சேவிக்கை என்றபடி (முக்கரணங்களாலும் வணங்குகை )

பொது நின்ற பொன்னம் கழலே தொழுமின் முழு வினைகள் முன்னம் களாலும் முடிந்து -(மூன்றாம் திருவந்தாதி -88)என்னுமா போலே
பூதத்தாழ்வார் பொன்னம் கழற்கு ஆன ஜன்மம் (அத்தாள்களை நெஞ்சத்து உறைத்து இருப்பவர்களுக்கு பிறப்பு இறப்புக்கள் )கழலும் இறே

இனி அவர் உபகாரத்வ வைபவம் சொல்லுகிறது-

இன்னமுதா அன்பே தகளி அளிக்கையாவது-

(அளிக்கை யாவது கொடுக்கை -அதாவது
விலை மதிப்பற்ற மாணிக்கத்தைக் கூவிக் கொடுப்பாரைப் போலே
உத்தமன் பேர் ஏத்தும் திறம் அறிமின் -39-என்று மேல் விழுந்து உபகரிக்கை)

இன்னமுதா அன்பே தகளி அளிக்கையாவது
அமுதன்ன சொன்மாலையான-(இரண்டாம் திருவந்தாதி -85)(தொண்டர்க்கு அமுது என்ன சொன் மாலைகள் சொன்னேன் -திருவாய் -9-4-9 )
இரும்தமிழ் நன் மாலை இணை அடிக்கே சொன்னேன் பெரும் தமிழன் நல்லேன் (14)-என்றும்
நாரணற்கு ஞானத் தமிழ் புரிந்த நான் (1)- என்னும்படியான
அன்பே தகளியா -என்னும் திவ்ய பிரபந்தத்தை
உத்தமன் பேர் ஏத்தும் திறம் அறிமின்(39) -என்னும்படி உபகரிக்கை –

அன்றிக்கே
கொடுக்கை –

கீழே ஞான வைபவம் சொல்லிற்று
இனி ஜன்ம வைபவம் சொல்கிறது மேலே-நன் புகழ் சேர்-சீதத்தார் முத்துக்கள் சேரும் கடல் மலை பூதத்தார்-என்று
அதாவது -ஸ்லாக்யமான யஸஸ்ஸூ சேரும் ஊருமாய் –
சீதள அதிசய முக்தாமணிகள் சேரும்படியாய் இருக்குமூர் -சீதக் கடலில் பிறந்த முக்தாதிகளும் சீதளமாய் இருக்கும் இறே
சீதக்கடல் -(பெரியாழ்வார் -1-2-1)என்று குளிர்த்தி நிறைந்த கடலில் தோன்றும் முத்துக்கள் சீதத்தார் முத்துக்களாய் இருக்கும் அன்றோ

நன் புகழ் ஆவது –
(பெருமாள் -புண்டரீக மஹ ரிஷிகள் -ஆழ்வார் -ஆச்சார்யர்கள் சேரும் திவ்ய தேசம் )
நிவாஸ வ்ருஷ ஸாதூ நாம் யசஸ் சைக பாஜனம் (புகழுக்கு ஒரே இருப்பிடமாய் இருப்பவன் ராமபிரான் கிஷ்கிந்தா -15-19-)
சேரும் கொடை புகழ் எல்லை இலானை(திருவாய் -3-9-7)
அந்தமில் புகழ் கார் எழில் அண்ணலே(திருவாய் -3-3-2)
எண்ணிறந்த புகழினானை (பெரிய திருமொழி -2-5-8) -என்னும்படியான
கடல் மலை தல சயனத்து உறைவாரையும்-(தல சயனப் பெருமாளையும் )
எப் புவியும் பேசும் புகழ் (உபதேச ரத்ன மாலை -6)பூதத்தாரையும் உடைத்ததாகையாலும் – உண்டான முத்துக்கள்

(சீதள அதிசய முக்தா மணிகள் சேரும்படியான ஸ்தலம் –
திசைவில் வீசும் செழு மா மணிகள் சேரும் திருக்குடந்தை (திருவாய் -5-8-9-)என்கிறபடியே
முத்துக்களும்
மணிகளும்
ஸ்வாபதேசத்தில்
ஞானச் சிறப்பாலே உலகம் எங்கும் ஒளி வீசும் பாகவத உத்தமர்களை குறிக்கின்றன
சம தமாதி குணங்களை யுடையவராகையாலே அவர்களையும் சீதத்தார் முத்துக்கள் என்னலாம்
சீதத்தார் முத்துக்கள் சேரும் -இந்நிலத்திலே உண்டான முத்துக்கள்)

இதன் கரையிலே
வந்துதித்த வெண்டிரைகள் வெண் முத்தத்தை கொழிக்கை(மூன்றாம் திருவந்தாதி -16)
மா மணி வந்து உந்து முந்நீர் மல்லையிலே-(திரு நெடும் தாண்டகம் -9)

சங்கிடம் கொள் முத்து ஒன்றும்
கரை கடந்த முத்தொன்றும் -சேரும் ஸ்தலம் –

(சங்கிடம் கொள் முத்து ஒன்றும்-சங்கை இடக்கையில் கொண்ட எம்பெருமான்
சங்கில் முளைத்த முத்து என்றுமாம்
கரை கடந்த முத்தாகிற ஆழ்வார் -இருவரும் சேரும் இடம்)

இக்கரை ஏறி -என்னக் கடவது இறே(அக்கரை என்னும் அநர்த்தக் கடலுள் அழுந்திக் கிடந்தேனை உன் பேர் அருளால் இக்கரை ஏறி -பெரியாழ்வார் -5-3-7))
கரை கண்டார் (திருவாய் -8-3-10)என்னும்படியான முக்தர் ஆயிற்று இவரும்

கடல் மலை –
விலஷண வஸ்துக்கள் சேரும் ஸ்தலம் –
சங்கு தங்கு தடம் கடல் கடல் மல்லை (யுள் கிடந்தாய் -பெரிய திருமொழி-2-5-8 ) இறே
மா மல்லை என்று இறே இவர் தாமும் மண்டி இருப்பது

(திருமங்கை மன்னன் அருளிச் செய்த பெருமையால் இவரும் தமர் உள்ளும் மா மல்லை (70 )-என்று ஈடுபட்டார் )

கச்சிக் கிடந்தவனூர் கடல் மலை தல சயனம் -(பெரிய திருமொழி -2-6-5 )என்று (கச்சியையும் கடல் மல்லையையும் )அடுத்தடுத்து படிக்கும் படி தேசமாக இறே பாடினார்
ஆகையால் அவன் படுகாடு கிடக்கும் தேசம் என்கிறது

(பொய்கையார் பூதத்தார் -அடுத்து அடுத்து அவதாரம் -அவன் படுகாடு கிடந்தது இவர்களை அவதரிப்பித்து நம்மை அடைய கோர மா தவம் செய்கிறான்)

கடல் மல்லை  பூதத்தார் –
தடம் கடல் பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதம் -(திருவாய் -5-2-4)
பாற்கடல் மேல் பாம்பணை மேல் பள்ளிக் கொண்டு அருளும்
சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியரே -(திரு விருத்தம் -79)என்னக் கடவது இறே
இண்டை கொண்டு தொண்டர் ஏத்த வெவ்வுள் கிடந்தான் (பெரிய திருமொழி -2-2-10)என்கிறபடியே
மிக்க சீர் தொண்டரான (பெரிய திருமொழி-11-1-9)புண்டரீகர் –
வண்டு கிண்டு நறும் துழாய் அலங்கல் கொண்டு (பெருமாள் திரு மொழி -2-8)சாத்தக் கிடந்த இடம் இறே

கடல் மலை பூதத்தார் –
திருக்கடல் மல்லையிலே குருக்கத்திப் பூவிலே ஐப்பசி அவிட்டத்தில் திருவவதாரம்
இவரும் இரும் தமிழ் நன் மாலை இணை அடிக்கே சூட்டினார் (74-புண்டரீகர் பூ மாலை சூட்ட )இறே –
அத்தை இட்டு -கடல் மலை பூதத்தார் -என்கிறது
அவனுக்கும் -கடல் மலை தல சயனது உறைவார் -( பெரிய திருமொழி -2-6-4)என்று இறே நிரூபகம்

பூதத்தார் பொன் அம் கழல் இறைஞ்சினேன் –
மேவினேன் அவன் பொன்னடி (கண்ணி-2)-என்னுமா போலே
தமிழ் தலைவன் பொன்னடி (இராமானுச -10 )-என்னக் கடவது இறே

பொன் அம் கழல் என் பிறவி தீர இறைஞ்சினேன் –
இவர் பொன்னடி யடியாக விறே ஜன்ம சம்சார பந்தம் நீங்குவது

இத்தால்
பூதத்தார் பாதத்தை பணியவே பிறப்பறும் என்றதாயிற்று-

—————————————————————————————————-

ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் அருளிச் செய்த அவதாரிகை –

கீழில் திருவந்தாதியில்
உபய விபூதி நாதனாய்
சர்வ ஸ்மாத் பரனாய் இருக்கிற சர்வேஸ்வரனுடைய
ஸ்வரூப ரூப குண விபூதிகளைத்
தன் நிர்ஹேதுக கடாக்ஷ விசேஷ லப்தமாய்
பரபக்தி தசா பன்னமான ஞான விசேஷத்தாலே சாஷாத் கரித்து அனுபவித்து
அனுபவ ஜெனித ப்ரீதி பிரகர்ஷத்தாலே அனுபவித்த படியே
ச விபூதிகனான எம்பெருமானைப் பேசி
ப்ராப்தாவான ஆத்மாவினுடைய சேஷத்வமான ஸ்வரூபத்தையும்(வாய் அவனை அன்றி வாழ்த்தாது இத்யாதியால் )
சேஷியான எம்பெருமான் திருவடிகளிலே பண்ணும் நித்ய கைங்கர்யமே ஸ்வரூப அனுரூபமான ப்ராப்யம் என்னும் இடத்தையும்
அந்த ப்ராப்யத்தைக் கைப் படுத்தித் தரும் ஸ்வரூப அனுரூபமான ப்ராபகமும் அவன் திருவடிகளே என்னும் இடத்தையும்
அறுதியிட்டார் முதல் ஆழ்வார்களில் முதல் ஆழ்வாரான ஸ்ரீ பொய்கையை யாழ்வார்-

அநந்தரம் பூதத்தார் –
வையம் தகளியில் அருளிச் செய்த எம்பெருமான் படிகளைக் கூட இருந்து
உத்தரோத்தரம் அனுபவித்துக் கொண்டு போருகையாலே-
எம்பெருமானுடைய அருளே தளமாக முளைத்துக் கிளர்ந்த தம்முடைய பரபக்தியானது
பரஞான தசா பன்னமாம் படி பரிபக்குவமாய் வளர –
அந்த பரஞான தசா பன்ன ப்ரேம விசேஷத்தாலே அவன் படிகளைக் கட்டடங்க சாஷாத் கரித்து
அனுசந்தித்துத்
தாம் அனுபவித்த பிரகாரத்தை நாடு அறிந்து அனுசந்தித்து வாழும் படி
நடை விளங்கு தமிழ் மாலையாலே பேசித் தலைக் கட்டுகிறார் –

பகவத் சேஷமான விபூதியை ஸ்வ தந்திரம் என்றும் –
அந்நிய சேஷம் என்றும் பிரமிக்கிற பாஹ்யமான அஞ்ஞான அந்தகாரம் நீங்கும் படி
பிருதிவ்யாதி பூத பவ்திக பதார்த்தங்களை தகளி யாகவும் நெய்யும் விளக்குமாக
ரூபித்துக் கொண்டு பேசினார் பொய்கையார் –

இவர் ஆந்தரமான பகவத் பிரேமத்தில் அவஸ்தா விசேஷங்களைத் தகளி யாகவும் நெய்யும் விளக்குமாக ரூபிக்கும் படி
இவ் விஷயத்தில் உள்ளூற அவகாஹித்து
இறைவனைக் காணும் ஹிருதயத்தைப் பற்றிக் கிடக்கிற உள்ளிருள் நீங்கும் படியாக
ப்ரத்யக் வஸ்துவான ஆத்ம பரமாத்மாக்களில் உண்டாகக் கடவ சம்சய விபர்யயங்களை அறுக்கிறார் –

பர பக்த்யாதிகள் மூன்றும் மூவர்க்கும் தனித்தனியே குறைவற உண்டாய் இருக்கச் செய்தேயும்
ஓர் ஒருத்தருக்கு ஒரோ அவஸ்தை தலையெடுத்து –
அல்லாத அவஸ்தைகள் அதுக்கு உள்ளே அடங்கிக் கிடக்கும் –

1-பர ஞான பரம பக்திகள் நிழலிட்டுத் தோற்றும் படியே பர பக்தியே விஞ்சி இருக்கும் அவருக்கு –

2-பர பக்தி முற்றிப் பக்வமானதாய் -பரம பக்தி சிரஸிகமான (தலையாகக் கொண்ட )பர ஞானமேயாய் இருக்கும் இவருக்கு

3-பரம பக்தியே விஞ்சிப் பர பக்தி பர ஞானங்கள் இரண்டும் அதன் கீழே செருகிக் கிடக்கும் மற்றை யவருக்கு –

பர பக்த்யாதிகளினுடைய உத் பத்தியும் வ்ருத்தியும் இன்னாருக்கு இன்ன போது இன்னது தலை எடுக்கக் கடவது
இன்னது அடங்கிக் கிடக்கக் கடவது என்னும் இவை எல்லாம் ஈஸ்வரன் நினைவாலே உண்டாகத் தட்டில்லை –

பகவத் விஷயத்தை சாஷாத் கரிக்க வேணும் என்னும் அபிநிவேசம் பர பக்தி–
சாஷாத் காரம் பர ஞானம் —
பின்பு உத்தரோத்தரம் அனுபவிக்க வேணும் என்னும் அபிநிவேசம் பரம பக்தி –

சம்ஸ்லேஷத்தில் ஸூகித்து –விஸ்லேஷத்திலே துக்கிக்கும் படி இருக்கை பர பக்தி –
அடியாரோடு இருந்தமை -என்னும் படி பூர்ண சாஷாத் காரம் பர ஞானம் –
அனுபவம் பெறா விடில் நீரைப் பிரிந்த மத்ஸ்யம் போலே மூச்சு அடங்கும் படி இருக்கை பரம பக்தி என்று
அருளிச் செய்யும் படி –

நிரூபித்தால் தன்னில் இரண்டும் ஒக்கும் –
இவை பிராமாணிகருக்கு முக்தி அவஸ்தையில் உண்டாம் இத்தனை –
மயர்வற மதி நலம் அருள பெற்ற ஆழ்வார்களுக்கு இங்கே இருக்கச் செய்தே பகவத் பிரசாதத்தாலே யுண்டாய்த்து –

இனி –
பர பக்தி பர ஞான பரம பக்தி ஏக ஸ்வ பாவம் மாம் குருஷ்வ (சரணாகதி கத்யம் )-என்று பிராமாணிகருக்கு
அவன் பக்கலிலே பிரார்த்துப் பெற வேணும் -(இவை உபாயம் என்றால் அவை அங்கே வேண்டாமே
அங்கும் பிரார்த்திப்பது – கைங்கர்யம் தூண்ட ப்ராப்ய ருசி வர்த்திக்க பக்தி வேண்டுமே )

ஞான தர்சன ப்ராப்திகள் என்று சாஸ்திரங்களில் பர பக்த்யாதிகளைச் சொல்லும் –

ஞாதும் த்ரஷ்டுஞ்ச்ச தத்த்வேன பிரவேஷ்டுஞ்ச பரந்தப–ஸ்ரீ கீதை -11 -54-என்று இறே கீதாச்சார்யன் வார்த்தை

பக்த்யா த்வநந்யயா ஸக்ய மஹமேவஂவிதோர்ஜுந.–
ஜ்ஞாதும் த்ருஷ்டும் ச தத்த்வேந ப்ரவேஷ்டும் ச பரந்தப—৷৷11.54৷৷

வேதத்தாலோ தபஸாலோ –யாகங்களாலும் முடியாதே -பக்தி ஒன்றை தவிர -அறிவதற்கும் காண்பதற்கும் அடைவதற்கும் –
பக்தி இல்லாத வேதம் தபஸ் யாகம் தானம் மூலம் அடைய முடியாதே
பக்தி ஒன்றாலே முடியும் -எதிரிகளை தப்பிக்க செய்பவன் -பரந்தப –
அறிய பார்க்க அடைய -உண்மையாக -இந்த உருவத்தை பார்க்க பக்தி ஒன்றே –
பர பக்தி பர ஞானம் பரம பக்தி ஞான தரிசன பிராப்தி அவஸ்தைகள் –

ஸம் ஞ்ஞாயதே சந் த்ருச்யதே வாப்யதி கம்யதே வா தத் ஞானம் –ஸ்ரீ விஷ்ணு புராணம் -6 -5-87–என்று இறே பராசர வசனம் –

——————————————————————————————-

பகவத் பிரசாத லப்தமான தம்முடைய ப்ரேம அவஸ்தா விசேஷங்களைத் தகளியும் நெய்யுமாக
நிரூபியா நின்று கொண்டு
சர்வ சேஷியான நாராயணனுக்குப் பர ஞானம் ஆகிற உஜ்ஜ்வல தீபத்தை ஏற்றி
அடிமை செய்யப் பெற்றேன் என்று க்ருதார்த்தர் ஆகிறார் –

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடு திரியா -நன்புருகி
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்-1-

பதவுரை

ஞானம் தமிழ் புரிந்த நான்–பகவத் விஷய ஜ்ஞானத்தைத் தருமதாய் த்ராவிட பாஷா ரூபமான
திருவந்தாதிப் பிரபந்தத்தை (உலகத்தார்க்கு) விரும்பி வெளியிட்ட அடியேன்.-பேர் ஊர் சொல்லிக் கொள்ளாத ஆழ்வார் அன்றோ இவர்  —

அன்பே  தகளி ஆ (பரபக்தியின் ஆரம்ப தசையான) ஸ்நேஹம் தகளியாகவும்
ஆர்வமே நெய் ஆக–(அந்த ஸ்நேஹம் மூலமாகப் பிறந்த) அபிநிவேசம் நெய்யாகவும்
இன்பு உருகு சிந்தை இடுதிரி ஆ–(பகவத் விஷயத்தின்) இனிமையாலே நீர்ப்பண்டமாக உருகுகின்ற
மனமானது (விளக்குக்கு) இடப்படுகிற திரியாகவுங்கொண்டு
நன்பு உருக–ஞானம் என்றே சொல்லலாம் படி ஞான ஸ்வரூபமான  ஆத்மாவும் உருகப் பெற்று
நாரணற்கு–ஸ்ரீமந் நாராயணனுக்கு
ஞானம் சுடர் விளக்கு ஏற்றினேன்–பரஜ்ஞானமாகிற பிரகாசமான தீபத்தை ஏற்றினேன்.

அகல் -அன்பு தொடக்க நிலை பக்தி ஆதாரம் -அதில் தான் பர பக்தி -அது வளர்ந்து பர ஞானம் ஆக வேண்டுமே

விஷய வைக்ஷண்யம் தளமாக முளைத்துக் கிளருகிற பர பக்தி உபக்ரம ரூபமான ஸ்நேஹமானது –
மேல் சொல்லுகிற நெய் திரி முதலான வற்றுக்கு ஆதாரமான தகளி யாகவும் –
அந்த விஷய வை லக்ஷண்யத்துக்கு என் புகுகிறதோ என்று
பரிந்து காப்பிடும் படி பரிபக்குவ தசாபன்னமான அபிநிவேசமானது
மேல் ஏற்றத் தேடுகிற விளக்கை வளர்க்கைக்கு உறுப்பான நெய்யாகவும் –
விஷய வை லக்ஷண்ய அனுசந்தான ஜெனிதமான ஆனந்தத்தால் த்ரவீ பூதமான அந்த ப்ரேம அவஸ்தைகளுக்கு
வாய்த் தலையான ஹிருதயமானது மேல் சொல்லுகிற பர ஞானம் ஆகிற விளக்குக்கு இடப்படும் திரியாகவும் –

(நன்பு -ஞானம் -நன்மை )–ஞான ஆனந்த லக்ஷணமாய் -ஞான குணகமாய் -பகவத் அநந்யார்ஹ சேஷம் ஆகையால்
அத்யந்த விலக்ஷணமான ஆத்ம வஸ்துவானது பகவத் குண ஆஸ்வாத ரசத்தாலே-
த்ரவ்ய த்ரவ்யமாய் யுருகிப் பர ஞானம் ஆகிற உஜ்ஜ்வல தீபத்தை
(ஞானத் தமிழ் புரிந்த நான் ஏற்றினேன் )பகவத் தத்வ யாதாத்ம்ய ஞான ஜனகமாய் -வேதாதிகள் போலே அதிகாரம் அநாதிகாரம் அன்றிக்கே
சர்வாதிகாரமான திராவிட பிரபந்தத்தை
லோக உபகாரகமாகப் பண்ணின நான்-
சர்வ சேஷியான நாராயணனுக்கு
ஸ்வ ஸ்வரூப பர ஸ்வரூபங்கள் உள்ள படியே பிரகாசிக்கும் படி ஏற்றினேன் –

பேசுவிக்க ஒருப்பட்ட ஈஸ்வரன் ஸத்ய ஸங்கல்பன் ஆகையாலும் –
பேசித் தலைக் கட்டி யல்லது தரிக்க ஒண்ணாத தம் ப்ரக்ருதியாலும் –
சித்தவத் கரித்து -தமிழ் புரிந்த -என்கிறார் –

(பகவத் குணாம்ருதமான மதுவைப் பருகி -காலாளும் நெஞ்சு அழியும் கண் சுழலும் –பெரிய திருவந்தாதி -34- என்னும் நிலைக்கும் மேலே சென்று
எரிக்க முடியாத ஆத்மா நீர்ப்பண்டமானதே –
ஆர்வமான நெய்யும் உருகிற்று
சிந்தையும் உருகிற்று
அனைத்துக்கும் ஆதாரமான ஆத்மாவும் உருகிற்று –
பகவத் குணங்கள் படுத்தும் பாடு இது –
நாரணற்கு -விளக்கு ஏற்றத் தகுந்தவனுக்கு -ஸமஸ்த ஸகல பதார்த்தங்களையும் தன்னுள் கொண்டவனை
ரத்தினங்கள் அடங்கிய பெட்டியை விளக்கு ஏற்றிக் கண்டு அனுபவிப்பாரைப் போலே அனுபவித்தேன்
ஞானத்தமிழ் -பகவானின் யாதாத்ம்ய அறிவை விளைக்கும் -அனைவரும் கற்கலாம் படியான அமுதினிலும் இனிய தமிழ் நூல்
அம் தமிழ் இன்பப்பாவினை அவ்வடமொழியை -பெருமாள் -1-4-என்றும்
செந்திறத்த தமிழ் ஓசை வடசொல்லாகி -திரு நெடும் தாண்டகம் -4-
புரிந்த -விரும்பிச் செய்கை -தனது பேறாக உபகரிக்கை –
புரிந்த -உபக்ரமத்திலேயே முடிந்தது போல் -ஸத்ய ஸங்கல்பன் பேசுவிப்பதாலும்
பிரபந்தத்தை முடிக்காமல் நிற்க மாட்டாத தனது ஸ்வ பாவத்தாலும்
இயற்றிய -என்று இறந்த கால பத பிரயோகம் )

அறை கழல் சுடர்ப் பூந்தாமரை சூடுதற்கு அவா வாருயிர் உருகி உக்க நேரிய காதல் அன்பு -திருவாசிரியம் -2–என்று ஆழ்வாரும்
பரபக்த்யாதிகள் மூன்றும் தமக்கு உண்டு என்று அருளிச் செய்கிறவர் –
சூடுதற்கு அவா -என்று பர பக்தியை முந்துற அருளிச் செய்து
பர ஞானம் அருளிச் செய்கிற இடத்தில் -அவா வாருயிர் உருகி உக்க நேரிய காதல் -என்று
பர பக்தியால் உருகி உக்க ஆருயிர் யுண்டு -ஆத்ம வஸ்து –அதின் இடத்தில் யுண்டான ஸூஷ்மமான காதல் -என்று
பர ஞான அவஸ்தையில் ஆத்மா த்ரவ்ய த்ரவ்யமாக உருகும் என்னும் இடம் அருளிச் செய்தார் இறே –

(சூடுதற்கு அவாவு ஆர் உயிர்
சூடுகையிலே அவாவி இருக்கிற -ஆசைப்படுகிற ஆத்ம வஸ்து –
உருகி யுக்க
அத் தலையில் வை லக்ஷண்யத்தை அனுசந்தித்தால்
அவன் பக்கல் ருசி பண்ணி அல்லது நில்லான் இறே சேதனன்
அத் தலையில் வை லக்ஷண்யத்தை அனுசந்தித்தவாறே
அச் சேத்யமான ஆத்ம வஸ்து த்ரவ்ய த்ரவ்யமாய்
ஓர் அவயவி யாக்கிக் காண ஒண்ணாத படி மங்கிற்று ஆயிற்று –
பக்தி பரவசரான படியை அருளிச் செய்கிறார்
நேரிய காதல்
அந்த அவாவானது விலக்ஷணமானதொரு சங்கத்தையும் பிறப்பித்தது)

அந்த நேரிய காதலாலே உண்டான அன்பு -என்று பரம பக்தியைச் சொல்லுகிறது –
ஆவல் அன்பு யுடையார் –நாச் 4-8–என்றும்
ஸ்ரத்தை தன்னால் வேடிக்கை மீதூர -திருக் குறுந்தாண்டகம் -4-என்றும் –
ஈர நெல் வித்தி –பேரமர் காதல் -5-3-4-என்றும்

பர பக்தி தனக்கே இரண்டும் உண்டாக அருளிச் செய்கையாலே –
அன்பு -ஆர்வம் -என்று ஓர் அவஸ்தை தன்னில்
உபக்ரம சரம அவஸ்தைகளை சொல்லத் தட்டில்லை –

பரபக்திக்கு
ஆவல் -ஸ்ரத்தை ஈரம் ஆகியவை தொடக்க நிலை
அன்பு வேட்கை பேர் அமர் காதல் -முடிந்த நிலை

சங்காத் சஞ்சாயதே காம -ஸ்ரீ கீதை -2-62 -என்று இறே கீதாச்சார்யனும் அருளிச் செய்தது –
காமோ நாம சங்கஸ்ய விபாக தசா -என்று இறே அதுக்கு பாஷ்யம் –
ஸ்நேஹோ மே பரம –பக்திஸ்ஸ நியதா வீர -என்றான் இறே திருவடியும் –
ஆகையால் பர பக்த்ய அங்குர ரூபமான அன்பே தகளி என்றும் —

அத் தலைக்குப் பரிந்து அல்லது நிற்க ஒண்ணாத படி பரிபக்வமான பரபக்தியை நெய் என்றும் –
நன்புருகி ஞானச் சுடர் விளக்கு -என்று
ஆஸ்ரயமான ஆத்ம வஸ்து உருகி விழும்படியான பர ஞான அவஸ்தையை
விளக்கு என்று இவரும் அருளிச் செய்தார் ஆயிற்று –

ஈர நெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெரும் செய்யுள் -5-3-4-என்று
பக்த்யங்குரமான சங்க அவஸ்தை முதலாக
நெஞ்சு தளமாக உண்டாமதாயிருக்க பர ஞான அவஸ்தைக்கு காரணமாக நெஞ்சை சொல்லுகிறது –

உருகுமால் நெஞ்சம் –பெருகுமால் வேட்க்கை–9 -6 -1-என்று
பர பக்த் யவஸ்தையில்
கரணமான நெஞ்சும் உருகும்

பர ஞான அவஸ்தையில்
கரணமான நெஞ்சும் –
கரணியான ஆத்மாவும் உருகும் -என்கிற விசேஷம் தோற்றுகைக்காக–

—————————————————————————————

பக்தி பரவசர்களாய்க் கொண்டு அக்ரமமாகத் திரு நாமங்களைச் சொல்லி கூப்பிடுமவர்களை –
சர்வேஸ்வரன் நித்ய ஸூரிகளோடு ஒத்த தரத்தைக் கொடுத்து ரஷிக்கும் என்கிறார் (சததம் கீர்த்த யந்த நித்ய யுக்த -கீதை )

நிஷ் கல்மஷைர் நிஹத ஜென்ம ஜரா விகாரைர்
பூயிஷ்ட பக்தி விபவை அபவை அவாப்யம்
அந்யைர் அதந்ய புருஷைர் மநசாபி அநாப்யம்
வைகுண்ட நாம தவ தாம தத் ஆம நந்தி –ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் -45-

கல்மஷம் அற்றவர்களாயும் -பிறப்பு மூப்பு முதலிய விகாரங்களைத் தொலைத்தவர்களாயும்
பக்திச் செல்வம் மிகுந்தவர்களாயும் உள்ள முமுஷுக்களாலே அடையத் தகுந்ததாய்
மற்றையோர்களான தரித்ரர்களாலே நெஞ்சினாலும் அணுகத் தகாததாய் உள்ள -அப்படிப்பட்ட
ஸ்ரீ வைகுண்டம் என்னும் ஸ்தானத்தை -எம்பெருமானே -தேவரீருடைய இருப்பிடமாகச் சொல்லுகின்றார்கள் –

ஞானத்தால் நன்கு உணர்ந்து நாரணன் தன் நாமங்கள்
தானத்தால் மற்றவன் பேர் சாற்றினால் வானத்
தணியமரர் ஆக்குவிக்கும் அஃது அன்றே நங்கள்
பணியமரர் கோமான் பரிசு-2-

பதவுரை

நாரணன் தன்–ஸ்ரீமந் நாராயணனுடைய
நாமங்கள்–(திருமேனி முதலியவற்றிற்கு வாசகமான) திருநாமங்களையும்
மற்று–மற்றும்
அவன் பேர்–அப்பெருமானுடைய (விபூதி விஸ்தாரங்களுக்கு வாசகமான) திருநாமங்களையும்
ஞானத்தால்–(ப்ரேம ரூபமான) ஜ்ஞானத்தாலே-அன்பே உருவான அறிவாலே -பக்தியால் -அறிவும் அன்பும் கலந்தால் பக்தி ஆகுமே
நன்கு உணர்ந்து–உள்ளபடி யறிந்து
தானத்தால்–(ப்ரேமத்தின் முடிவெல்லையான) ஸ்தானத்திலே நின்று
சாற்றினால்–அநுஸந்தித்தால்,
நங்கள் பணி அமரர் கோமான் பரிசு–நமக்கு பந்துக்களாயும் எப்போதும் கைங்கர்ய பரர்களாயுமுள்ள
நித்ய ஸூரிகளுக்குத் தலைவனான எம்பெருமானுடைய தன்மையாவது,
வானத்து அணி அமரர் ஆக்குவிக்கும் அ”து அன்றே–பரம பதத்திற்கு அலங்காரமான நித்ய ஸூரிகளாக (நம்மை)ச் செய்து வைக்கு மதுவேயாம்

(இங்கே இருக்கும் பொழுது திரு நாமங்களை முறை கெட்டு பிதற்ற– முறையுடன் சொல்லும் -நீதி வானவர்-கோஷ்ட்டியில் ஒரு கோவையாக்குமே-கண்ட பேர் முன் பணியாத அமரர் நித்யர் )

வகுத்த சேஷியான சர்வேஸ்வரனுடைய விக்ரஹாதிகளுக்கு வாசகமாய் –
அசாதாரணமான திரு நாமங்களையும்

(பிரமன் ருத்ரன் இந்திரன் வாயு ஆகாசம் போன்றவை அவனுடைய விபூதிகளைக் காட்டி -சரீரீ யான அவன் அளவும் பர்யவசிக்குமே )
ப்ரேம தசா பன்னமான ஞானத்தாலே-அவனுக்கும் தனக்கும் யுண்டான சேஷ சேஷித்வ ரூபமான உறவளவும் செல்ல
உள்ளபடி அறிந்து -(இதுவே நன்கு உணர்தல் )
பேர் பல சொல்லிப் பிதற்றி -திருவாய்-3-5-8-என்கிறபடியே
சொல்லி அல்லது நிற்க ஒண்ணாத படி
தலை மண்டிக் கொண்ட பிரேமத்தினுடைய முடி ஸ்தானத்தில் நின்று -அடைவு கெடக் கூப்பிட்டால் –

(சாற்றினால் –
அத்யந்த பக்தி யுக்தஸ்ய ந ஸாஸ்த்ரம் நைவ ச க்ரம -என்றபடி முறை கெடக் கூப்பிட்டால்
அல்லது அறிந்த அளவு சொல்லுதல்)

பரமாகாச சப்த வாஸ்யமான பரம பதத்தில் ஸ்வ சம்பந்தத்தாலே நிறம் கொடுக்கும் படியான அழகை யுடையரான
ஸூரிகளோடு ஒத்த பெருமை யுடையராம் படி பண்ணுமாதன்றோ –

நமக்கு நிருபாதிக பந்துக்களாய் –
நித்யாஞ்சலி புடா -என்கிறபடியே
கையும் அஞ்சலியுமாக கொண்டு தொழுகையே
நித்ய யாத்திரையாக யுடையராய் இருக்கிற அநந்த வைநதேயாதிகள் ஆகிற நித்ய சித்த புருஷர்களுக்கு
நிருபாதிக சேஷியானவனுடைய பிரகாரம் –

(நங்கள் அமரர் -ஸ்வா பாவிக ஸம்பந்தம் உடையவர்
பணி அமரர் -கைங்கர்யம் செய்வதையே யாத்ரையாகக் கொண்டவர்
என்பதால் நித்ய ஸூரிகளைச் சொன்னவாறு)

இங்கே அடைவு கெட திரு நாமம் சொன்னவர்களை அங்கே
அடைவு கெட்டுக் கூப்பிடும் கோஷ்டியிலே வைக்கும் என்றபடி –

——————————————————————————

அடுத்து அணித்தாகத் திருப் பாற் கடலிலே வந்து கண் வளர்ந்து அருளுகிற
நீர்மையை யுடையவனை ஆஸ்ரயிக்குமவர்கள் –
பரம பதத்தைச் சென்று பிராபிக்கப் பெறுவார் -என்கிறார் –

(கீழ்ப் பாட்டின் விவரணமாக இப் பாசுரம் -நல்லமரர் கோமான் நகர் நமக்கு பரிசாகக் கிடைக்கும்
பத்ரம் புஷ்ப்பம் பலம் தோயம் -இதுக்கே இப்பலம்-புகப் பெறுவர் போலாம்-என்ன ஆச்சர்யம் )

பரிசு நறு மலரால் பாற்கடலான் பாதம்
புரிவார் புகப்பெறுவர் போலாம் -புரிவார்கள்
தொல்லமரர் கேள்வித் துலங்கொளி சேர் தோற்றத்து
நல்லமரர் கோமான் நகர் -3-

பதவுரை

பால் கடலான் பாதம்–க்ஷீராப்தி நாதனுடைய திருவடிகளை
பரிசு நறுமலரால்–செவ்வி குன்றாத பரிமளம் மிக்க புஷ்பங்களைக் கொண்டு
புரிவார்–விரும்பித் தொழுமவர்கள்,
புரிவார்கள் தொல் அமரர்–ஸாதநாநுஷ்டாந பரர்களான (இந்திரன் முதலிய) பழைய தேவர்களுக்கும்
கேள்வி–(கண்ணால் காண முடியாமல்) காதால் மாத்திரம் கேட்டுக் கொண்டிருக்கக் கூடியதும்
துலங்கு ஒளி சேர் தோற்றத்து–மிக விளங்குகின்ற ஒளி பொருந்தித் தோன்றுதலையுடையதுமான
நல் அமரர் கோமான் நகர்–நித்யஸூரி நாதனுடைய திவ்யநகரமான பரமபதத்தை
புகப்பெறுவர் போலாம்–அடையப் பெறுவர்கள்

செவ்வி குன்றாத அழகிய பூக்களைக் கொண்டு சம்சாரிகளை (விரஜைக்கு )அக்கரைப் படுத்துகைக்காகத் திரு பாற் கடலிலே
முற்கோலிக் கண் வளர்ந்து அருளுகிறவனுடைய திருவடிகளை
சாஸ்திர யுக்தமான பிரகாரத்தால் பக்தி பரவசராய்க் கொண்டு ஆஸ்ரயிக்குமவர்கள் –

முழுகுவது -மூக்குப் புதைப்பது -ஜபிப்பது -தொழுவது -புகழுவதாய்க் கொண்டு இடை விடாமல்
அவனை ஆஸ்ரயித்துக் கொண்டு போரக் கடவர்களாய் –
சம்சாரிகளில் பழையரான ப்ரஹ்மாதி தேவர்கள்
காண ஒண்ணாதே என்றும் –
கேட்டே போம் இத்தனையாய் –
நிரவதிக தேஜஸை உடைத்தாய்க் கொண்டு பிரகாசிக்கக் கடவதாய் இருந்து –
பிரியில் தரிக்க மாட்டாத நன்மையை யுடைய நித்ய ஸூரிகளுக்கு நாயகனான
சர்வேஸ்வரனுடைய வைகுண்ட மா நகரத்தை பிராபிக்க பெறுவாராம் –

(கேள்வி நகர்
யந் ந தேவா ந முநயோ ந ச அஹம் ந ச சங்கர
ஜா நந்தி பரமேஸஸ்ய தத் விஷ்ணோ பரமம் பதம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1-9-55-என்கிறபடியே
ப்ரஹ்மாதிகளாலும் கேட்டே போகுமது -காண முடியாதது அன்றோ –

ஸ்ரீ பத்ம நாப ஸ்ரீ யா -பிறந்த குழந்தை நான்முகன் உளறுகிறது -ஜல்பிக்க -யாரும் பார்த்தது இல்லை -கேட்டு உய்க்கும் அனந்தஸாயி -தேசிகன்

அத்யர்க்க அநல தீப்தம் தத் ஸ்தாநம் விஷ்ணோர் மஹாத்மன
ஸ்வ யைவ ப்ரபயா ராஜன் துஷ் ப்ரேஷம் தேவதாநவை -பாரதம் -ஆரண்ய -186-18-

நல் அமரர்
ந ச ஸீதா த்வயா ஹீநா ந ச அஹம் அபி ராகவா -அயோத்யா -53-31-என்கிறபடியே
அக்குளத்தில் மீன் போல் க்ஷணம் விஸ்லேஷம் வந்தாலும் சத்தையை இழப்பவர்கள்
யத்ர பூர்வே ஸாத்யா சந்தி தேவா -நித்ய ஸூரிகளே நல் அமரர்கள்
ப்ரபன்னர்களுக்கு ஒரு முயற்சியும் செய்ய வேண்டாமல் பரம புருஷார்த்தத்தை தனது பேறாகவே அளிக்கிறான்)

———————————————————————————–

அன்பே தகளி என்று தொடங்கி –
தம்முடைய பக்த்யாவஸ்த விசேஷங்களை -தகளியும் நெய்யும் விளக்குமாக நிரூபித்தால் போலே
தம்முடைய பக்த்யாவஸ்த விசேஷங்களை -இதழும் -அல்லியும்-தாதுமாய் -இருபத்தொரு –
தாமரைப் பூவாக நிரூபித்துக் கொண்டு அவனை ஆஸ்ரயிக்கிறார்-(அது பிரகாசம் இங்கு பரிமளம் )

(நகரம் நித்திலம் மணியான மாணிக்கம் வயிரம்
நாள் மலர் -பைம் கமலம் -புற இதழ் -உள் இதழான அல்லி -தாது
ஆழ்வார் திரு உள்ளம்-நெஞ்சம் -ஸ்நேஹம் சங்கமாகிய பற்று -காமம்
விதிப்படி ஸ்வாமி சேஷி அறிந்து பற்றி இனிமை அறிந்து காதல் அபி நேசம் -ரூபக அதிசய யுக்தி )

(ஸ்ரீ மன் நாராயண சரணவ் சரணம் நம — பனி மலராள் அங்கம் வலம் கொண்டான் அடி பைங்கமல மேந்திப் பணிந்தேன்)

நகர் இழைத்து நித்திலத்து நாள் மலர் கொண்டு ஆங்கே
திகழும் மணி வயிரஞ் சேர்த்து -நிகரில்லாப்
பைங்கமல மேந்திப் பணிந்தேன் பனி மலராள்
அங்கம் வலம் கொண்டான் அடி-4-

பதவுரை

நகர் இழைத்து–என்னுடைய நெஞ்சை எம்பெருமான் வாழக் கூடிய திரு மண்டபமாக அமைத்து
நித்திலத்து நாள் மலர் கொண்டு–(அதிலே) ஸ்நேஹமாகிற முத்தை செவ்வி குன்றாத புற விதழாக அமைத்து
திகழும் மணி வயிரம் சேர்த்து–ஸங்கம் காமம் என்கிற நல்ல மாணிக்கத்தையும் வயிரத்தையும் அல்லியும் தாதுமாக வைத்து
நிகர் இல்லா–ஒப்பில்லாத
பைங் கமலம் ஏந்தி–பக்தியாகிற அழகிய தாமரைப் பூவைத் தரித்துக் கொண்டு
பனி மலராள் அங்கம் வலம் கொண்டான்–குளிர்ந்த தாமரைப் பூவிற் பிறந்த பிராட்டியை வல மார்பினில் வைத்துக் கொண்டிருக்கும் பெருமானுடைய
அடி–திருவடிகளை
பணிந்தேன்–வணங்கினேன்.

பக்தி யுத்ப்பத்தி ஸ்தானமான நெஞ்சை
ராஜாதி ராஜனான சர்வேஸ்வரனுக்கு திருப் படை வீடாக வகுத்து –
விஸ்வதோ ஆயதனம் மஹத்
நெஞ்சமே நீள் நகர் -5-8-2-
அந்தத் திருப் படை வீட்டிலே -அந்நெஞ்சில் ( ஸ்நேஹம் )யுண்டாய் –

(உபமேயத்தை மறைத்து உபமானமாகவே சொல்லுகையாலே ரூபாய் அதிசயித்த யுக்தி -அணி அலங்காரம் ஆகும்)

ஸ்வாதந்தர்யம் ஆகிற அழல் தட்டாமையாலே குளிர்ந்து
சர்வ கந்த -என்கிற விஷயத்தைப் பற்றிக் கிளருகையாலே பரிமளிதமாய்-
ஒளி விடுகிற ஸ்நேஹம் ஆகிற முத்தை செவ்வி குன்றாத இதழாக வகுத்துக் கொண்டு

(சாதன பக்தி நிஷ்டர்களின் ஸ்நேஹம் -ஸ்வா தந்தர்யமாகிய வெப்பத்துடன் இருக்கும்
இங்கோ பாரதந்தர்யமாகிய தண்மை குளிர்த்தி இருப்பதால் பக்தியின் தொடக்க நிலையான -(இதனாலே புற இதழ் )ஸ்நேஹத்தைக் குளிர்ந்த முத்தாலே கூறுகிறார் -)

ப்ராப்தியையும் வை லக்ஷண்யத்தையும் விஷயீ கரித்து (பிராப்தி அறிந்து சங்கம் வருமே -வை லக்ஷண்யம் அறிந்து காமம் வருமே  )இரண்டு கூறாக எழுந்து இருக்கிற அபிநிவேசம் ஆகிற
உஜ்ஜவலமான மாணிக்ய வைரங்களை அல்லியும் தாதுமாகச் சேர்த்து
இப்படி லௌகீகமான தாமரையில் காட்டில் வியாவிருத்தமான
இதழையும் அல்லியையும் தாதையும் யுடைத்தாய் யாகையாலே
உபமான ரஹிதமான பக்தி யாகிற பெரிய தாமரைப் பூவை அழகு பெற தரித்துக் கொண்டு

குளிர்ந்த தாமரைப் பூவை இருப்பிடமாக யுடைய போக்யதை ஏக வேஷையான (மென்மை நறுமணம் இத்யாதியால் மலராள் ) பெரிய பிராட்டியாரைத்
திரு மேனியில் வலவருகான திரு மார்விலே வைத்துக் கொண்டவனுடைய திருவடிகளிலே
நிர் மமனாய்க் கொண்டு விழுந்து ஆஸ்ரயித்தேன் –

நெஞ்சை நகரமாக ரூபிக்கையாலே-
நகரம் ஆகில் -முத்து மாணிக்கம் முதலான விலக்ஷண வஸ்துவை உடைத்தாய் இருக்கும் என்று
பக்த்யாவஸ்தா பேதமான ஸ்நேஹாதிகளை முத்து மாணிக்யாதிகளாக ரூபிக்கிறது –

பைங்கமலம் ஏந்தி -என்று
பக்தியைத் தாமரையாக நிரூபிக்கையாலே அந்த பக்த்யாவஸ்த பேதமான ஸ்நேஹாதிகளை
அதுக்கு இதழும் அல்லியும் தாதுவும் ஆக ரூபிக்கிறது –

பக்தியினுடைய போக உபகரணத்வமும் -போக்யத்தையும் -தோற்றுகைக்காக –
அத்தைத் தாமரையாக நிரூபிக்கிறது –

(ஆங்கே திகழும் மணி வயிரம் சேர்த்து -ஸ்நேஹம் -அடுத்து -சங்கம் -காஜாமம் –
சர்வேஸ்வரன் வகுத்த ஸ்வாமி என்று அனுசந்திக்க சங்கம் ஏற்படும்
அவனது போக்யதையை அனுசந்திக்க காமம் எனப்படும் பக்தி நிலை – ஏற்படும் –
இரண்டும் சேர்ந்து அபி நிவேசம் காதல் ஏற்படும்
பர ஞான பக்தி தசையே நிகர் இல்லா பைம் கமலம்)

நெஞ்சை நரகமாக நிரூபிக்கிறது –
கலங்கா பெரு நகரத்தில் பண்ணும் விருப்பத்தைத் தன் நெஞ்சிலே பண்ணிக் கொண்டு
அவன் ரஸோத்தரமாக வர்த்திக்கும் என்று தோற்றுகைக்காக -(அந்தாமத்து அன்பு செய்து என்னாவி சேர் அம்மான் அன்றோ )

(நகர் முத்து மாணிக்கம் வயிரங்களை யுடைத்தால் போலே நெஞ்சில் பக்தியின் முன் நிலைகளை -ஸ்நேஹம் சங்கம் காமம் யுடையதாய் இருக்குமே –
நெஞ்சை நீள் நகரம் என்றது ஸ்ரீ வைகுண்டத்தி திவ்ய தேசங்கள் அனைத்துடன் ஸ்ரீ பூமி நீளா தேவிமார்களுடனும் நித்ய ஸூரிகளுடன் புகுந்து
அவை எல்லாம் இளம் கோயில் என்னும் படி பெரிய விசாலமான நகரமாய் இருக்குமே
பக்தி பகவத் அனுபவ உபகரணமாகவும் -தானே ஸ்வயம் பிரயோஜனமாக அனுபவிக்கத் தக்கதாயும் –
பிற இன்பங்கள் அனுபவிக்கத் தக்கதாயும் இருப்பதால் தாமரையாக உருவகம்)

—————————————————————————-

ஆழ்வீர் நீர் நம்மைப் பணிந்தீரோ என்ன -ஒன்றைச் சொன்னேன் அத்தனை போக்கி
ஏவம் விதனான உன் நீர்மை ஒருவரால் பரிச்சேதிக்கப் போமோ என்கிறார் –

(பணி அமரர் -நித்ய ஸூரிகளில் ஒருவராக இருந்தாலும் ஏவம் விதமான அவனது நீர்மை யாராலும் பரிச்சேதிக்க ஒண்ணாதே
என்னும் இடத்துக்கு உலகு அளந்த விருத்தாந்தம் காட்டி அருளுகிறார்-

நன்கு உணர்ந்து பேர் சாற்றினால் -2- என்றும்
பாதம் புரிவார் புகப்பெறுவர் -3-என்றும்
அடி பணிந்தேன் -4-என்றும் என்று உரைத்தீரே
நீர் நம்மை நன்கு உணர்ந்து பணிந்தீரோ என்ன
உன்னை முழுவதும் அறிய ஒருவராலும் முடியாதே
உனது மேன்மையைச் சிறிது அறிந்தாலும் நீர்மையை யாவராலும் அறிய முடியாதே என்கிறார் )

அடி மூன்றால் இவ்வுலகம் அன்று அளந்தாய் போலும்
அடி மூன்று இரந்து அவனி கொண்டாய் -படி நின்ற
நீரோத மேனி நெடுமாலே நின்னடியை
யாரோத வல்லார் அறிந்து–5–

பதவுரை

படி நின்ற–அத்யந்த ஸூ லபனாய் -தேவர்கள் கால் பாவாத -பூமியிலே அவதரித்து நின்ற
நீர் ஓதம் மேனி நெடுமாலே–கடல்வண்ணனான ஸர்வேச்வரனே!,
அன்று இ உலகம்–முன்பொரு காலத்தில் இவ்வுலகத்தை
அடி மூன்றில் அளந்தாய் போலும்–மூவடியாலே அளந்து கொள்பவன் போல
அடி மூன்று அவனி–மூவடி நிலத்தை
இரந்து கொண்டாய்–(மாவலியிடத்தில்) யாசித்துப் பெற்றாய்;
நின் அடியை–இப்படிப்பட்ட சர்வ ஸூ லபனான உனது திருவடிகளை
அறிந்து–நன்றாகத் தெரிந்து கொண்டு
ஓதவல்லார் ஆர்–பேசவல்லவர்கள் யாவருளர்? (யாவருமில்லை)

சால தூர (தீர்க்க )தர்சியாய்க் கொண்டு –
இரண்டு அடியாலே அளந்து –
ஓரடிக்குச் சிறையிட்டு வைப்பாயாக -மஹா பலி பக்கலிலே முந்துறச் சென்று –
மூன்றடியை அர்த்தித்து -பூமியை அளந்து கொண்டாய் –

(அளந்து கொண்டாய் என்றும் அளந்து கொண்டவனே -என்று சம்போதகம் ஆகவுமாம்)

அளந்து கொள்ளுகிற அக் காலத்திலே இரண்டு அடியால் அளந்து கொண்டது
அத்தனை போக்கி –
மூன்று அடியால் இந்த லோகங்களை அளந்து கொண்டாயோ தான் –

(மாவலியை சிறையில் இட்டு வைக்கவே இச்செயல் என்று நிந்தா ஸ்துதி என்றுமாம்)

பூமியிலே ரக்ஷகனாய் கொண்டு செவ்வே வந்து அவதரித்து நின்று நீர்மையை யுடையையாய் –

(மற்ற தேவதைகளை போல் இங்கு தண்மையால் கால் பாவாமல் நிற்கை அன்றிக்கே
தேவாதி தேவனான நீ -தனது உடைமையான இதன் இடம் உள்ள அதி வ்யா மோஹத்தாலே
இதுவே இவனுக்கு வந்தேறியாக இல்லாமல் இயற்கையான இருப்பிடம் என்று காண்பார் கருதும்படி கால் தோய்ந்து நின்றமையால் ஈடுபட்டு அருளிச் செய்கிறார்)

(படி நின்ற நீர்-நீர்மை என்றும்
நீரோதம் -நீர் நிறைந்த கடல் என்றும் கொண்டு கூட்டிப் பொருள்)

ஜல ஸம்ருத்தியை யுடைத்தான கடல் போலே ஸ்ரமஹரமான வடிவை யுடையையாய் –சர்வாதிகனான ஸர்வேஸ்வரனே –

இப்படி நீர்மையே வடிவான உன்னுடைய திருவடிகளை –
என்னைப் போலே அறிவு கெட்டார் பேசில் பேசும் அத்தனை போக்கி
நேர் கொடு நேரே இவ்வளவு என்று அறிந்து பேச வல்லார் யார் –

(இப்படி நீர்மையே வடிவான உன்னுடைய திருவடிகளின் பெருமையை என்னைப் போல் அறிவு கலங்கியவர்கள் பேசலாம் ஒழிய
அது இல்லாதவர்களால் இவ்வளவு என்று அளவிட்டுப் பேச முடியுமோ என்றுமாம்)

த்வே இதஸ்ய க்ரமேண ஸ்வர் த்ருசோ அபிக்யாய மர்த்யோ புரண்யதி
த்ருதீய மஸ்ய நகிரா ததர்ஷதி வயஸ்சந பத யந்தஸ் பதத்ரிண -ருக் அஷ்டகம் -2-2-25-

பரமபதத்தைக் காண்பவனான விஷ்ணுவினுடைய இரண்டு அடி வைப்புக்களையே மனிதன் நன்கு அறிந்து பஜிக்கிறான்
இந்த விஷ்ணுவின் மூன்றாவது அடி வைப்பை ஒரு போதும் அறிய வல்லன் அல்லன்
அந்த ஆகாசத்தில் எங்கும் வீசும் வாயுக்களும் பறக்கும் பறவைகளும் அறிய வல்லன வல்ல-

பரோ மாத்ராய தன்வா வ்ருதாந ந தே மஹித்வ மன்வஸ் நுவந்தி
உபதே வித்ம ரஜஸீ ப்ருதிவ்யா விஷ்ணோ தேவ த்வம் பரமஸ்ய வித்ஸே –ருக் அஷ்டகம் -5-5-24-

ஓங்கு உலகு அளந்த உத்தமனே -நீ மிகப் பெரியவன் -உனது பெருமையை அளவிட்டு அனுபவிக்க – அறிய வல்லார் யாருமே இல்லையே
பூமியில் இருந்து தொடங்கிய உன்னுடைய இரண்டு பாத ஸ்தானங்களை அறிகிறோம்
அதற்கு மேற்பட்ட மூன்றாவது அடி வைப்பை நீயே அறிகிறாய்
என்கிற ஸ்ருதி சாயையில் மூன்றாவது அடி வைப்பை எவராலும் அறிய முடியாது என்கிறார் ஆகவுமாம்)

—————————————————————————————————

ஆனால் இப்படி யாரும் அறியாதே இழந்து போம் அத்தனையோ -என்னில்
அது வேண்டா -இதர விஷய சங்கம் அற்று
அவன் திரு நாமங்களைச் சொல்லிப் புகழும் அவர்கள் அவன் திருவடிகளைப் பெறுவார் -என்கிறார் –

(கீழே அவனை ஆறும் அறியார் என்றது -எத்தனை அளவுடையராய் இருந்தாரே யாகிலும் அவனை அளவிட்டு அறிய முடியாது என்றார்
இதில் அன்புடன் அவனை ஆஸ்ரயிப்பவர்களுக்குத் தானே தன்னைக் காட்டி அருளுவான் என்கிறார்
ஆகையால் யாதும் விரோதம் இல்லை
யாதும் ஒரு நிலைமையன் என அறிவரிய எம்பெருமானே
யாதும் ஓர் நிலைமையன் என அறிவெளிய எம்பெருமான் அன்றோ)

அறிந்து ஐந்தும் உள்ளடிக்கி யாய் மலர் கொண்டு ஆர்வம்
செறிந்த மனத்தராய் செவ்வே -அறிந்தவன் தன்
பேரோதி ஏத்தும் பெரும் தவத்தோர் காண்பரே
காரோத வண்ணன் கழல்-6-

பதவுரை

அறிந்து–(எம்பெருமானுடைய வைலக்ஷண் யத்தையும் விஷயங்களின் கெடுதல்களையும் நன்றாக) அறிந்து கொண்டு
பஞ்சேந்திரியங்களையும்–பஞ்சேந்திரியங்களையும்
உள் அடக்கி–(பட்டி மேய வொண்ணாதபடி தடுத்து) பகவத் விஷயத்திலே ஊன்றும்படி நியமித்து
ஆய் மலர் கொண்டு–(பகவானுக்கு ஏற்கும்படி) ஆராய்ந்த புஷ்பங்களை ஸம்பாதித்துக் கொண்டு
ஆர்வம் செறிந்த மனத்தர் ஆய்–பக்தி மிகுந்த மனத்தை யுடையராகி
செவ்வே அறிந்து–(எம்பெருமானுக்கும் தமக்குமுள்ள -சேஷ சேஷி பாவத்தை -முறைமையை) நன்றாக அறிந்து
அவன் தன் பேர்–அப்பெருமானது திரு நாமங்களை
ஓதி–இடைவிடாமற் சொல்லிக் கொண்டு
ஏத்தும்–துதிக்கின்ற
பெரும் தவத்தோர்–மஹா பாக்யசாலிகள்
கார்ஓதம் வண்ணன் கழல்–கருங்கடல் வண்ணனான அப்பெருமானுடைய திருவடிகளை
காண்பர்–கண்டு அநுபவிக்கப்பெறுவார்கள்.

பகவத் வை லக்ஷண்யத்தையும் -இதர விஷய தோஷங்களையும் நன்றாக அறிந்து -ஹேய விஷயங்களில் போகாதபடி
ஸ்ரோத்ராதிகளான இந்திரியங்கள் ஐந்தையும் ப்ரத்யக்கான பகவத் விஷயத்தில் ப்ரவணமாம் படி நியமித்து

(கடையற பாசங்கள் விட்ட பின்னை யன்றி அவனவை காண் கொடானே -திருவாய் -8-2-8-

சப்தாதிகள் -இந்திரியங்கள் -மனஸ் -புத்தி ஆத்மா -மேல் மேல் உயர்ந்த நிலை )

அங்குத்தைக்கு சத்ருசமாம் படி கந்தல் அற  (த்ரிவித தியாகங்கள் உடன் )ஆயப்பட்ட செவ்விப் பூக்களை சம்பாதித்துக் கொண்டு
அபிநிவேசம் மிக்க மனஸை யுடையராய் –

அவன் சேஷி -நாம் சேஷ பூதர் -என்னும் முறையை நன்றாகத் தெரிந்து
குண சேஷ்டிதாதிகளுக்கு வாசகமான அவன் திரு நாமங்களை இடைவிடாமல் சொல்லிக் கொண்டு ப்ரீதி பிரகர்ஷத்தாலே
ஸ்தோத்ரம் பண்ணும் பெரிய பாக்யாதிகர்கள் ஆனவர்கள் —

(புரிவதுவும் புகை பூவே -திருவாய் -1-6-1-
‘கள்ளார் துழாயும் கணவலரும் கூ விளையும் முள்ளார் முலரியும் ஆம்பலும் -பெரிய திருமொழி -11-7-6-என்று இருந்தாலும்
பொங்கும் பரிவாலே அசாரமான பூக்களைக் கழித்து ஸூ குமாரமான திருமேனிக்குத் தக்கதாய் அன்று அலர்ந்தபூக்களைக் கொண்டு ஆராதிக்க வேண்டுமே
இத்தையும் விஹிதம் என்று எண்ணாமல் -பெரும் காதல் நிறைந்த மனத்தோடு இதினிலும் இனியது இல்லை என்ற எண்ணத்துடன் –
உபாய புத்தியைச் சிறிதும் வைக்காமல் -நம் கார்யம் செய்பவன் ஸ்வாமியான அவனே என்ற எண்ணத்துடன்
குண சேஷ்டிதங்களுக்கு வாசகமான திரு நாமங்களை ஸ்வயம் ப்ரயோஜனமாகக் கீர்த்தனை பண்ணி
நியாஸம் ஏஷாம் தபஸாம் அதிக்ரிதமாஹு -என்று
சரணமாகப் பற்றுகிறவர்கள் பாக்கியசாலிகள் என்கிறார் )

கறுத்த கடல் போலே ஸ்ரமஹரமான வடிவை யுடையனாவன் திருவடிகளைக் கண்டு அனுபவிக்கப் பெறுவர்கள் –

(திருவடிகளையே உபாயமாகப் பற்றி திருவடிகளையே அடைவார்கள் என்கிறார்)

————————————————————————————————————

இப்படி பாக்ய உத்தரர் அடங்கலும் ஆஸ்ரயித்து வாழுகிற விஷயத்தை ப்ரீதி பூர்வகமாக
நெஞ்சே -நீயும் அனுசந்திக்கப் பார்-என்கிறார் –

கழல் எடுத்து வாய் மடித்துக் கண் சுழன்று மாற்றார்
அழல் எடுத்த சிந்தையராய் அஞ்ச -தழல் எடுத்த
போராழி ஏந்தினான் பொன் மலர்ச் சேவடியே
ஓராழி நெஞ்சே உகந்து-7-

பதவுரை

ஆழி நெஞ்சே–ஆழ்ந்த மனமே!
முன்பு த்ரிவிக்ரமாவதாரம் செய்தருளின போது)
கழல் எடுத்து–திருவடிகளை உயரத் தூக்கினவனாயும்,
மாற்றார்–எதிரிட்ட நமுசி முதலானவர்கள்
அழல் எடுத்த சிந்தையர் ஆய் அஞ்ச–பயாக்னி கொளுந்தின நெஞ்சை யுடையவர்களாய் நடுங்கும்படியாக
வாய் மடித்து–உதட்டை மடித்துக் கடித்துக் கொண்டு
கண் சுழன்று–(பார்க்கிற பார்வையிலேயே அவ்வெதிரிகள் சுருண்டு விழும்படி) கண்கள் வட்டமிட
தழல் எடுத்த போர் ஆழி–நெருப்பை யுமிழ்கிற போர் செய்ய வல்ல திருவாழி யாழ்வானை
ஏந்தினான்–தரித்தவனாயுமிருக்கிற எம்பெருமானுடைய,
பொன்மலர் சே அடியே–அழகிய மலர் போன்ற திருவடிகளையே,
உகந்து ஓர்–விரும்பி அநுஸந்திப்பாயாக.

ஆஸ்ரிதர் வாழும் படி திருவடிகளை வளர்த்து -சத்ருக்களான நமுசி பிரக்ருதிகள் நெருப்புக் கொளுத்தின
ஹ்ருதயத்தை யுடையராய்க் கொண்டு -(பயமே அக்னியாக இவர்களுக்கு )

(கழல் எடுத்து -நமுசி பிரக்ருதிகள் அஞ்சும்படி பூமி அதிரும்படி என்றும்
அடியார் வாழும்படி திருவடியைத் தூக்கி உலகு அளந்தான் என்றும் கொள்ளலாம்)

பல்லிறுகி -நா மடித்துக் கொண்டு -பார்வையில் பட்டு விழும்படி சுடப் பார்க்கிற கண் -பரிபிரமித்து
நடுங்கும் படியாக எதிரிகள் மேலே நெருப்பை உமிழ்கிற
யுத்த உன்முகமான திரு வாழியை தரித்த (ஏந்தினான்-தூக்கினான் இல்லையே )சர்வேஸ்வரனுடைய
பொன் போலேயும் பூ போலேயும் -ஸ்ப்ருஹணீயமாய் -அதி ஸூ குமாரமான சிவந்த திருவடிகளையே

அளவுடைய நெஞ்சே -தேவையாக யன்றிக்கே ப்ரீதியோடே கூடிக் கொண்டு அநுஸந்தி —

வாய் மடித்துக் கொண்டு கண் சுழன்று கொண்டு
மாற்றார் அழல் எடுத்த சிந்தையராம் படி தழல் எடுத்த போராழி என்னவுமாம் –

(வாமனனுக்கு ஆழி உண்டோ என்னில் திரிவிக்ரமனுக்கு உண்டே -ஆழி எழ இத்யாதி )

(ஆழி நெஞ்சே -கடல் போலே ஆலமுடைய கம்பீரமான நெஞ்சே -உனது ஆழத்தை எந்நாளும் அறிய முயல் அன்றோ
முந்துற்ற நெஞ்சான உனக்கு நான் உபதேசிக்க வேண்டுகிறது
பொன் மலர்ச் சேவடியே உகந்து ஓர் -இது கடன் விதி என்ற புத்தி இல்லாமல் அன்புடன் ப்ரீதி மண்டி
கைக் குழந்தைக்குத் தாய் முலை போலே சேஷபூதனுக்கு இனிதாய் தாரகமாய் இருக்கும் சேஷியுடைய திருவடிகளைப்
பற்றச் சொல்லி நான் உபதேசிக்க வேண்டுமோ
பால் குடிக்கக் கால் பிடிக்க வேண்டுமோ
என்னிலும் முந்துற்று நீயே உகந்து பற்ற வேண்டிய விஷயம் அன்றோ திருவடிகள் என்கிறார் – )

—————————————————————————————————

இப்படி ஆஸ்ரயிக்கும் இடத்தில் -பிரதிபந்தகம் உண்டானாலோ என்னில் —
பூதனையை முடித்தால் போலே
அவன் தானே அவற்றைப் போக்கும் என்கிறார் –

உகந்து உன்னை வாங்கி ஒளி நிறம் கொள் கொங்கை
அகம் குளிர உண் என்ற அவளாவி உகந்து
முலை  யுண்பாய் போலே முனிந்து உண்டாய் நீயும்
அலை பண்பா லானமையால் அன்று—8-

பதவுரை

(பூதனை யானவள்)
உகந்து–யசோதைப் பிராட்டியைப் போல அன்புடையவளாக அபிநயஞ்செய்து
உன்னை வாங்கி–(நீ தூங்கும்போது வந்து) உன்னைத்தூக்கியெடுத்து
ஒளிநிறம் கொள் கொங்கை–(பால் விம்மியிருத்தலால்) ஒளிவிட்டு அழகுபெற்றுள்ள (தனது) ஸ்தனத்தை
அகம் குளிர உண் என்றாள்–(‘குழந்தாய்!) மனமகிழ்ந்து உண்ணு’ என்று சொல்லி வாயிலே வைத்தாள்.
ஆனமையால்–ஆகையினாலே,
அன்று–அவள் முலைதந்த; அக்காலத்தில்
நீயும்–சிறு குழந்தையான நீயும்
அலை பண்பால்–அலையெறிகிற (அதிகமான) உன் ஸௌலப்ய குணத்தினாலே
முலை உண்பாய் போலே–மெய்யே ஸ்தன்யபானஞ்செய்பவனைப் போலே
உகந்து–(பெறாப்பேறு பெற்றாற் போலே) மகிழ்ந்துகொண்டு
முனிந்து–(மனத்தில்) சீற்றங் கொண்டு
ஆவி–(அந்தப் பூதனையின்) உயிரை
உண்டாய்–உறிஞ்சி உட்கொண்டாய்.

(பொத்த உரலும் பூதனை விஷப்பாலும் அவனுக்கே என்று அற்று தீர்ந்து இருப்பதால் திரு உள்ளம் உகப்பானே
விஷமே அம்ருதமான வேளையில் திரு அவதாரம் அன்றோ

அலை பண்பால்-கண்ணனுக்கும் பூதனைக்கும் -அலைகிற பண்பு -அலை எறிகிற குணத்தால் -குழந்தைத் தனம் -தாழ்ந்த குணம்

கையார் சக்கரத்து–போனாய் மா மருதின் நடுவே -தேனே இன்னமுதே என்று என்று சில கூத்துக்கள் சொல்ல
மெய்யே பெற்று ஒழிந்தேன்

பாசுரத்தில் உகந்து இரண்டு தடவை -அவளும் இவனும் )

பூதனை யானவள் -யசோதை பிராட்டி ஸ்நேஹிக்குமா போலே ஸ்நேஹித்துப் பரிவு தோற்ற ஒசழக்காக
உன்னை உறக்கத்தில் தூக்கி எடுத்து -பால் விம்மி -ஒளி விடுகின்ற புகரை யுடைத்தான முலையை
ஹிருதயம் குளிரும்படி உண் என்று சாதரமாக முலை தந்தாள் –

ஆகையால் நீயும் அவள் முலை தந்த அன்று அலை எறிகிற குணத்தால் பெறாப் பேறு பெற்றால் போலே உகந்து கொண்டு
மெய்யே முலை உண்பாரைப் போலே சீறி யுண்டு அவள் பிராணனை முடித்துப் பொகட்டாய் –

அலை பண்பால்-என்று
அழிந்த நீர்மையை யுடையவள் -என்று அவள் மேலே ஏறிடவுமாம் –

உகந்து உன்னை வாங்கி ஒளி நிறம் கொள் கொங்கை-அகம் குளிர உண்-என்றாள் —
ஆனமையால் நீயும் -அலை பண்பால் உகந்து-முலை  யுண்பாய் போலே
முனிந்து ஆவி உண்டாய் –
என்று அந்வயம் –

(மித்ர பாவேந ஸம் ப்ராப்தம் ந த்யஜேயம் -என்கிற நீ
வெளி வேஷ அன்பை யுடையாளாய் வந்த பூதனையையும்
ரக்ஷித்து உன்னிடம் சேர்த்துக் கொண்டு இருப்பாய்
அப்படிச் செய்யாமல் அவளை அழித்தது -உன்னை ஒழிய சத்தை நிலை இல்லாத அடியார் இடம் உனக்குள்ள பக்ஷ பாதத்தால் அன்றோ )

————————————————————————————————————–

பூதனை படியை அனுசந்தித்த நெஞ்சாறல் தீர -இவ் விஷயத்தில் நிலை நின்ற ப்ரேமமுடைய
யசோதை பிராட்டியும் ஒருத்தியே என்று அவள் ஸ்நேஹத்தைக் கொண்டாடுகிறார் –

அன்றது கண்டு அஞ்சாத ஆய்ச்சி உனக்கு இரங்கி
நின்று முலை தந்த இந் நீர்மைக்கு -அன்று
வரன் முறையால் நீ  யளந்த மா கடல் ஞாலம்
பெரு முறையால் எய்துமோ பேர்த்து—9-

பதவுரை

அன்று–(பூதனை பிணமாக விழும்படி நீ முலை யுண்டு அவளுயிரை முடித்த) அக் காலத்தில்
அது கண்டு–முலை கொடுத்த அவள் செத்துக் கிடந்த அச் செய்தியைக் கண்ணாலே பார்த்தும்
அஞ்சாத–‘முலை கொடுக்கிற நாமும் ஒருகால் செத்துப் போவோமோ!’ என்று பயப்படாத
ஆய்ச்சி–யசோதைப் பிராட்டியானவள்
நன்று–தரித்து நன்று
அந்தப் பூதனையின் (விஷத்திற்கு மாற்றாக)–
உனக்கு இரங்கி முலை தந்த–உன்னிடத்துப் பரிவு கொண்டு முலை கொடுத்த
இ நீர்மைக்கு–இந்தப் பெருங் குணத்திற்கு,
அன்று நீ வரன் முறையால் அளந்த மா கடல் சூழ் ஞாலம்–முன்பு நீ சிறந்த உறவினாலே அளந்து கொண்ட கடல் சூழ்ந்த இவ்வுலகமானது
பெருமுறையால் எய்துமோ–இன்னது பெரியதென்று பார்க்கும் முறையில் ஒப்பாகப் பொருந்துமோ?

அவள் பிணமாய் விழும்படி நீ முலை யுண்டு முடித்த அன்று –
முலை கொடுத்தவள் பட்டது கண்டு -நாமும் அப்படிச் செய்வது என் -என்று பயப்படாத யசோதை பிராட்டியானவள் –
உனக்கு ஏது விளையத் தேடிற்றோ -என்னும் வயிறு எரிச்சலாலே பரிந்து
தளராதே தறையிலே கால் பாவும் படி தரித்து நின்று முலை தந்த இந்த மஹா ஸ்வபாவத்துக்கு

மஹா பலி நீர் வார்த்துத் தந்த அன்று நீ உடையவனும் இவை உடைமையும் ஆகிற ஸ்ரேஷ்டமான உறவாலே ரக்ஷகனான நீ
அந்நிய அபிமானத்தால் வந்த அழல் மாறும் படி குளிரத் திருவடிகளாலே ஸ்பர்சித்து அளந்து கொண்ட பெரிய கடலாலே
சூழப் பட்ட பூமியானது மறித்துப் பார்க்கும் இடத்தில் –
இதில் இது பெரியது என்று பெருக்கப் பார்க்கும் க்ரமத்தாலே ஒக்குமோ
அதுவும் பெரிய செயல் -இதுவும் பெரிய செயல் -அந்த ஸ்வ பாவத்துக்கு இது ஒப்பாகப் போருமோ என்றபடி –

(இவ்வுலகம் எல்லாம் யசோதைப் பிராட்டியின் இந்த குணத்துக்கு ஒப்பாகுமோ

பொங்கும் பரிவாலே கொழு மோர் காய்ச்சி ஐம்படைத்தாலி போல்வன சாத்தி பின்பு தானம் முலை கொடுத்து-பரே சப்தம் கௌஸ்துபம் போல்வன பறை சாற்றை -கூர்ம வியாக்ரம் -ஸுலப்யம் பறை சாற்றுமே –
அப்ராக்ருத குணக்கடலான உனது பெருமையும் பிராகிருத சம்பந்தம் யுடையவளாய் இருந்தும் இப்படிச் செய்த இவள் குணத்துக்கு ஒப்பாகுமோ
இத்தால் யசோதை பிராட்டிக்கு கண்ணன் மீது உள்ள அன்பின் மஹாத்ம்யம் சொல்லிற்று )

—————————————————————————————————-

அவளைப் போலே எனக்கு உன் பக்கல் அதி மாத்ர பிராவண்யம் இல்லையே யாகிலும் –
ப்ராவண்ய லேசம் தான் ஆகிலும் யுண்டே –
அதுவே பற்றாசாக அடியே பிடித்துக் கண்ட கண்ட தேவதைகள் கால் கீழே தலை மடுத்துப் பட்ட
என் தண்மையைப் போக்கி ரக்ஷிக்க வேணும் -என்கிறார் –

பேர்த்தனை மா சகடம் பிள்ளையாய் மண்ணிரந்து
காத்தனை பல்லுயிரும் காவலனே -ஏத்திய
நா வுடையேன் பூ வுடையேன் நின்னுள்ளி நின்றமையால்
கா அடியேன் பட்ட கடை———-10-

பதவுரை

காவலனே–ஸர்வ ரக்ஷகனே!,
பிள்ளைஆய்–சிறு குழந்தையாயிருந்து
மா சகடம்–(அஸுராவேசமுள்ள) பெரிய வொரு வண்டியை
பர்த்தனை–கட்டழியும்படி உதைத்துத் தள்ளினாய்;
மண்–பூமியை
இரந்து–(மஹாபலியினிடத்தில்) யாசித்துப் பெற்று
(திருவடியாலே குளிரத்தடவி)
பல் உயிரும்–எல்லா ஆத்மாக்களையும்
காத்தனை–ரக்ஷித்தருளினாய்;
நின்–(இப்படி ரக்ஷகனான) உன்னை
உள்ளி நின்றமையால்–(ஆஸ்ரயிக்கத் தக்கவனாக) மனப்பூர்வமாக எண்ணியிருப்பதனால்
ஏத்திய நா உடையேன்–உன்னை ஸ்துதிப்பதையே ஸ்வபாவமாகவுள்ள நாக்கை யுடையவனாயிருக்கிறேன்;
பூ உடையேன்–(அர்ச்சிப்பதற்கு உரிய) புஷ்பங்களையுமுடையவனாயிருக்கிறேன்;
(ஆனபின்பு)
அடியேன்–உனக்கு அடியவனாயிருக்கும் பெரும் பதவியைப் பெற்றிருக்கிற நான்
பட்ட–வெகுகாலமாக அடைந்துள்ள
கடை–தாழ்வுகளை
கா–காப்பாற்று -போக்கி யருள வேணும்.

வளர்த்தின தொட்டிலிலே கிடக்கும் படியான சிறு பிள்ளையாய்க் கொண்டு
பெரிய சகடத்தை கட்டு அழியும் படி தள்ளிப் பொகட்டாய் –
சர்வ ரக்ஷகன் ஆனவனே –

அந்த ரஷ்ய ரக்ஷக சம்பந்தத்தை புரஸ்கரித்துக் (முன்னிட்டுக் )கொண்டு ஆஸ்ரிதனான இந்திரன் இழவைப் பரிஹரிக்கைக்காக
பூமியை அர்த்தித்து வாங்கிக் கொண்டு -திருவடிகளாலே குளிர ஸ்பர்சித்து சகல ஆத்மாக்களையும் ரக்ஷித்து அருளினாய்

இப்படி ரக்ஷகனான உன்னை சர்வ ஸமாஸ்ரயணீயன் என்று
அனுசந்தித்து நிற்கையாலே தனக்குத் தானே ஏத்தும் படியான நாவை யுடையேன் ஆனேன் –

காயிகமான அடிமை செய்கைக்கு உபகரணமான புஷ்பங்களை யுடையேன் ஆனேன் –
உனக்கு சேஷ பூதன் ஆகையால் வந்த ராஜ குலத்தை யுடையேனான நான்
அநாதி காலம் அர்வாசீநமான தேவதைகளின் கால் கீழே
தலை மடுத்துப் பட்ட தண்மையை இனி வாராத படி தேவரீர் காத்து அருள வேணும் –

(நீ ஸர்வ ரக்ஷகன் என்பதை உனது ஒவ்வொரு செயலும் பறை சாற்றுகிறதே -உன்னால் அத்தை மறைக்கப் போமோ
பிள்ளையாய் ஆன திசையிலும் ஸர்வ ரக்ஷகத்வத்தை மறைக்கப் போமோ
ஸர்வ ரக்ஷகத்வம் ஸ்வா பாவிக ஸ்வரூபம் அன்றோ உனக்கு
இதனால் அன்றோ பல பிரதனான உனது ஸ்வரூபத்தை மாற்றிக் கொண்டு மாணியாய் இரந்து
அத்தை வியாஜ்யமாக்கி -தாய் பிரஜையை தனது பேறாகவே அணைத்துக் கொள்வது போல் அன்றோ
நீ ஸமஸ்த லோகங்களையும் அளந்து அருளினாய்
இந்த ரக்ஷகத்வத்தை அனுசந்தித்து
என்னிலும் முந்துற்ற கரணங்கள் -உன்னி -ஏத்திய நா -பூ உடையேன் -என்பதால் மநோ வாக் காயங்கள் மூன்றும்
பகவத் விஷயத்தில் ஈடுபட்டமையை வெளியிட்டு அருளுகிறார் –
அடியேன் பட்ட கடை கா
இவ்வாறு உனக்கே அநந்யார்ஹ சேஷ பூதனான அடியேன் முன்பு அநாதி காலம் தாழ்ந்த -கடை என்றது தாழ்வைக் குறிக்கும்
அடுத்த பாசுரத்தில் -அமரர் கழல் தொழுது நாளும் இடை நின்ற இன்பத்தராவர்-என்று தேவதாந்த்ர பஜநம் சொல்வதால்
இங்கும் கடை என்று அத்தையே சொல்லிற்று எனக் கொள்ளலாம்
கா -ஸர்வ ரக்ஷகனான நீயே இப்படிப்பட்ட தாழ்வுகளை -அல் வழக்குகளை -இனிப்படாமல் ரக்ஷித்து அருள வேணும் என்கிறார் )

——————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

மூன்றாம் திருவந்தாதி– பாசுரங்கள்-91-100—ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் –

November 12, 2016

சாமான்யேன ஜகத்தை யுண்டும்- பிரதிகூலருடைய பிராணனையும் -அனுகூலர் ஸ்பர்சித்த
த்ரவ்யத்தையும் யுண்டும் -பர்யாப்த்தம் ஆயிற்று இல்லை என்கிறார் –

அவனுடைய ஆஸ்ரித பாரதந்தர்யத்தை அருளிச் செய்கிறார் –

மண்ணுண்டும் பேய்ச்சி  முலை யுண்டும் ஆற்றாதாய்
வெண்ணெய் விழுங்க வெகுண்டு ஆய்ச்சி -கண்ணிக்
கயிற்றினால் கட்டத் தான் கட்டுண்டு இருந்தான்
வயிற்றினோடுஆற்றா மகன் ———91-

பதவுரை

வயிற்றினோடு ஆற்ற மகன்–வயிற்றைக் கொண்டு ஆறியிருக்க மாட்டாத (கண்ணனாகிற) பிள்ளையானவன்
மண் உண்டும்–(பிரளயத்தில்) உலகங்களை யெல்லாம் அமுது செய்தும்)
பேய்ச்சி–பூதனையினது
முலை–(நஞ்சு தீற்றின) முலையை
உண்டும்–அமுது செய்தும்
ஆற்றதாய்–த்ருப்தி பெறாதவனாய்
வெண்ணெய்–வெண்ணெயை
விழுங்க–(களவு செய்து) விழுங்கின வளவிலே
ஆய்ச்சி–யசோதைப் பிராட்டி
வெகுண்டு–கோபங்கொண்டு
கண்ணி கயிற்றினால்–பல முடிச்சுகளை யுடைய தாம்பினால்
கட்ட–உரைக்கக் கட்டிப் போட,
தான்–ஸர்வசந்தனான தான்
கட்டுண்டு இருந்தான்–(அதற்கொரு பரிஹாரம் செய்து கொள்ள மாட்டாமல்) கட்டுண்டிருந்தான்

மண்ணுண்டும் பேய்ச்சி  முலையுண்டும் ஆற்றாதாய்–
ஜகத்தை வயிற்றிலே வைத்தும் -பூதனை யுடைய பிராணனை யுண்டும்
இரண்டாலும் அபரியாப்தனாய்

வெண்ணெய் விழுங்க வெகுண்டு ஆய்ச்சி –
இவனுக்கு வெண்ணெய் களவு காண்கையிலே ஸ்நேஹம் போரும் இறே அவளுக்கு ரஷிக்கையிலும் –
வெண்ணெய் களவு போயிற்று என்ற மாத்திரத்திலே இவன் முகத்திலே பையாப்பையைக் கண்டு தாயார் சீறி –

கண்ணிக்-கயிற்றினால் கட்டத் தான் கட்டுண்டு இருந்தான் வயிற்றினோடுஆற்றா மகன் —–
பல பிணை யுடைத்தான கயிற்றாலே அவள் கட்டுவதற்கு பரிஹாரம் இன்றிக்கே கட்டுண்டு இருந்தான்

தாய் எடுத்த சிறு கோலுக்கு உளைந்து–(8-3-5)-

நெய்யுண் வார்த்தை யுள் அன்னை கோல் கொள்ள நீ யுன் தாமரைக்கு கண்கள்
நீர் மல்கப் பையவே நிலையும்–5-10–3

முழுதும் வெண்ணெய் அளந்து தொட்டுண்ணும் முகிழ் இளம் சிறு தாமரைக் கையும் -7-8

வயிற்றினோடு ஆற்றா மகன் –
இதுக்கு பிள்ளை உறங்கா வல்லி தாசர் வயிற்றை வண்ணானுக்கு இட்டாலோ என்று பணித்தார் –

என் குற்றமே யென்று சொல்லவும் வேண்டா காண் என்னை நான் மண் ணுண்டேனாக
அன்புற்று நோக்கி அடித்தும் பிடித்தும் அனைவர்க்கும் காட்டிற் றிலையே
வன் புற்றரவின் பகைக் கொடி வாமன நம்பீ உன் காதுகள் தூரும்
துன்புற்றன வெல்லாம் தீர்ப்பாய் பிரானே திரி யிட்டுச் சொல்லுகேன் மெய்யே–பெரியாழ்வார் -2-3-8-

வாய் எடுத்த மந்திரத்தால் அந்தணர் தம் செய் தொழில்கள்
தீ எடுத்து மறை வளர்க்கும் திருக் கண்ண புரத் துறையும்
தாய் எடுத்த சிறு கோலுக்கு உளைந்தோடி தயிர் உண்ட
வாய் துடைத்த மைந்தனுக்கு இழந்தேன் என் வரி வளையே-8-3-5-

பெய்யும் பூங்குழல் பேய் முலை யுண்ட பிள்ளைத் தேற்றமும் பேர்ந்தொர் சாடிறச்
செய்ய பாதமொன்றால் செய்த நின் சிறுச் சேவகமும்
நெய் யுண் வார்த்தையுள் அன்னை கோல் கொள நீ யுன் தாமரைக் கண்கள் நீர் மல்கப்
பையவே நிலையும் வந்து என் நெஞ்சை உருக்குங்களே.–5-10-3-

முழுதும் வெண்ணெய் அளைந்து தொட்டு உண்ணும்
முகிழ் இளம் சிறு தாமரை கையும்
எழில் கொள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு எள்கு
நிலையும் வெண் தயிர் தோய்ந்த செவ் வாயும்
அழுகையும் அஞ்சி நோக்கும் அந் நோக்கும்
அணி கொள் செஞ்சிறு வாய் நெளிப்பதுவும்
தொழுகையும் இவை கண்ட வசோதை
தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே– 7-8-

—————————————————————————-

அவனுடைய ஆஸ்ரித பாரதந்தர்யத்தை அருளிச் செய்கிறார் –

அனுகூல பிரதிகூல விபாகமற பூமியில் உள்ளவர்களை திரு வயிற்றிலே வைத்து ரஷித்தும் –
பிரதிகூலையான பூதனையுடைய முலையை அவள் பிணமாய் விழும்படி அமுது செய்தும் –
இவற்றால் பர்யாப்தி பிறவாமல் அனுகூலர் கடைந்து சேர்த்து வைத்த
வெண்ணெயைக் களவிலே அமுது செய்ய –

பரிவுடையாளான யசோதை பிராட்டி ஸ்நேஹம் தோற்றச் சீறி
பல முடிச்சுகளை யுடைத்தான தாம்பாலே உரைக்கப் பட்ட ஸ்வ சங்கல்பத்தாலே சர்வரையும் கட்டுவது விடுவதாய் போரும்
சர்வ சக்தியான தான் கட்டுண்டு அதுக்கு ஒரு பிரதிகிரியை பண்ண மாட்டாதே இருந்தான்

வயிற்றைக் கொண்டு எங்கு புகுவோம் என்று பாடாற்ற மாட்டாத பிள்ளை –

————————————————————————————————————–

ஆஸ்ரித விரோதி நிரசன ஸ்வபாவனானவனை நெஞ்சே பூர்ணமாக நினை என்கிறார் —

மகன் ஒருவர்க்கு அல்லாத மா மேனி மாயன்
மகனாம் அவன் மகன் தன் காதல் -மகனைச்
சிறை செய்த வாணன் தோள் செற்றான் கழலே
நிறை செய்தேன் நெஞ்சே நினை——-92-

பதவுரை

என் நெஞ்சே–எம் மனமே!
ஒருவற்கு மகன் அல்லாத–(கருமமடியாக) ஒருவனுக்கு மகனாகப் பிறக்கத் தகாத (ஸர்வ லோக பிதாவான)
மா மேனி–சிறந்த திருமேனியை யுடைய
மாயன்–ஆச்சர்ய பூதனாய்
மகன் ஆமவன்–(வஸுதேவர்க்குப்) பிள்ளையாகப் பிறந்தவனாய்
மகன் தன்–தனது மகனான பிரத்யும்நனுடைய
காதல் மகனை–இஷ்ட குமாரனான அநிருத்தாழ்வானை
சிறை செய்த–சிறையிலே வைத்த
வாணன்–பாணாஸுரனுடைய
தோள்–தோள்களாயிரத்தையும
செற்றான்–அறுத்தொழித்தவனான பெருமானுடைய
கழலே–திருவடிகளையே
நிறை செய்து–பூர்த்தியாக
நினை–சிந்தை செய்வாயாக

மகன் ஒருவர்க்கு அல்லாத மா மேனி மாயன்–
பிதா புத்ரேண பித்ருமான் -என்னும்படி இல்லாமையாலே சர்வேஸ்வரனுக்கு
அலாப்ய லாபம் இறே-புத்ர லாபம் —
தனக்கு இல்லாத ஒன்றிலே இறே ஸ்நேஹம் ஜனிப்பது

மகனாம் அவன் மகன் தன் காதல் -மகனைச்–சிறை செய்த வாணன் தோள் செற்றான் கழலே–நிறை செய்தேன் நெஞ்சே நினை—
புத்ரனைக் காட்டில் பவுத்ரன் பக்கல் ஸ்நேஹம் யுண்டு இறே —
ஸ்நிக்தனுமாய் பவ்த்ரனுமான அநிருத்த ஆழ்வானைச் சிறை செய்த சீற்றத்தால்
பாணனுடைய தோளைக் கழித்தவனுடைய திருவடிகளை –
நெஞ்சே அவன் பிரதிபந்தகங்களைப் போக்க -ஸ்நேஹித்து அனுபவி –

நேர் செறிந்தான் கொடிக் கோழி கொண்டான் பின்னும்
நேர் செறிந்தான் எரியும் அனலோன் பின்னும்
நேர் செறிந்தான் முக்கண் மூர்த்தி கண்டீர் அப்பன்
நேர் சரி வாணன் திண தோள் கொண்ட வன்றே –7-4-8-

கார்த்திகையானும் கரி முகத்தானும் முக்கண்
மூர்த்தியும் மோடியும் வெப்பும் முதிகிட்டு மூவுலகும்
பூத்தவனே என்று போற்றிட வாணன் பிழை பொறுத்த
தீர்த்தனை ஏத்தும் இராமானுசன் என் தன் சேம வைப்பே – 22- –

——————————————————————–

ஆஸ்ரித விரோதி நிரசன ஸ்வபாவனானவனை நெஞ்சே பூர்ணமாக நினை என்கிறார் —

கர்மம் அடியாக ஒருவனுக்குப் பிள்ளையாய் பிறக்குமவன் அன்றிக்கே –
(அகில காரணன் நிஷ் காரணன் அத்புத காரணன் இவன் ஒருவனே )சர்வ லோகத்துக்கும் பிதாவான பெருமையை யுடையனாய்
அப்ராக்ருதம் ஆகையால் பரம பூஜ்யமான திருமேனியை யுடையனாய் –
அத்யாச்சர்யமான ஞானாதி குணங்களை அமைத்துக் கொண்டு
ஸ்ரீ வாஸூதேவர்க்குப் பிள்ளையாய்ப் பிறந்த கிருஷ்ணன தன்னுடைய புத்ரனுக்குப் புத்ரனாய் -அத்தாலே மிகவும் ஸ்நிக்தனாய்
இருக்கிற அநிருத்த ஆழ்வானைச் சிறையிலே வைத்த பாணாசூரனுடைய செருக்கும்-
அதுக்கும் அடியான தோள்கள் ஆயிரத்தையும் அறுத்துப் பொகட்டவனுடைய திருவடிகளை –
எனக்கு விதேயமான நெஞ்சே பூர்ணமாக அனுசந்திக்கப் பார்–

———————————————————————————————————————–

(யுகங்கள் தோறும் ஆழ்வார்கள் அவதாரம் உண்டே
அவன் இவர்கள் நாவில் புகுந்து தன்னைப் பாடுவித்துக் கொள்கிறான்
அருளிச் செயல்களைக் கண்ட ரிஷிகள் முனிகள்
விளக்கு ஏற்றி -ப்ரகாசப்படுத்திக் காட்டி அருளுகிறார்)

(தாரக போஷக போக்யமாக –உபாய உபேயமாக அவனை பூர்ணமாக நினைக்க வேண்டுமே -)

இப்படி இருக்கிறவனுடைய ஆச்சர்ய சேஷ்டிதங்களை லோகத்தில் அறிவார் ஒருவரும் இல்லை யானாலும்
நீ அவனை உன் ஹிருதயத்திலே கொடு புகுந்து வை கிடாய் என்கிறார் –

நினைத்து உலகிலார் தெளிவார் நீண்ட திருமால்
அனைத்துலகும் உள்ளொடுக்கி யால் மேல் -கனைத்துலவு
வெள்ளத்தோர் பிள்ளையாய் மெள்ளத் துயின்றானை
உள்ளத்தே வை நெஞ்சே யுய்த்து  —–93-

பதவுரை

நெஞ்சே–ஓமனமே!
நீண்ட–(முன்பு உலகங்களை அளப்பதற்காக) வளர்ந்து
திருமால்–ஸ்ரீய பதியானவனும்
நீண்ட திருமால் –அப்ரமேயமான பெருமை பொருந்திய திருமால் என்னவுமாம்.
கனைத்து உலவு வௌளத்து–கோஷித்துக் கொண்டு எங்கும் பரந்த பிரளய வெள்ளத்திலே
ஒர் பிள்ளை ஆய் –ஒப்பற்ற சிறு குழந்தையாய்
அனைத்து உலகும்–உலகங்களை யெல்லாம்
உள் ஒடுக்கி–திருவயிற்றினுள்ளே அடக்கி
ஆல் மேல்–ஆலந்தளிரின் மேலே
மெள்ள துயின்றானை–மெள்ள சயனித்துக் கொண்டவனுமான பெருமானை
உய்த்து–சரணாக அநுஸந்தித்து
உள்ளத்தே வை,–தியானிக்கக் கடவாய்-உள்ளத்தே வைத்தால் உஜ்ஜீவனம் அடையலாம் என்றுமாம் –
உலகில்–இவ்வுலகில்
நினைத்து–(அப் பெருமானை) அநுஸந்தித்து
ஆர் தெளிவார்–தெளிவு பெறுவார் ஆரேனு முண்டோ? (ஒருவருமில்லை)

(த்வன் நிர்மிதா -உனது சொத்து -இரந்தா கொள்ள வேண்டும் -அதிமானுஷ ஸ்தவம்
ஆழ்வார்கள் இவற்றைப் பாட -அதனால் பக்தி வளர -நீ செய்த செயல்கள் அன்றோ)

நினைத்து உலகிலார் தெளிவார் -அவனை அனுபவித்துத் தம் தாமுக்கு உரியராக வல்லார் யுண்டோ –

நீண்ட திருமால்-அனைத்துலகும் உள்ளொடுக்கி யால் மேல்
லோகத்தை எல்லாம் அளக்கைக்கு வளர்ந்து –
அளந்த லோகத்தை ஒரு வயிற்றிலே வைத்து ஒரு பவனாய் இருபத்தொரு ஆலிலையிலே

கனைத்துலவு-வெள்ளத்தோர் பிள்ளையாய்–
சப்தித்துப் பரந்து வளரா நின்றுள்ள வெள்ளத்திலே உளனான பிள்ளையாய்

மெள்ளத் துயின்றானை-உள்ளத்தே வை நெஞ்சே யுய்த்து  —–
வயிற்றிலே புக்க லோகம் தளராத படிக்கு ஈடாக மெள்ளக் கண் வளர்ந்தவனை —

உள்ளத்தே வை நெஞ்சே யுய்த்து-
கொடு வருகை யாவது -அவன் புகுரப் புக்கால் விலக்காது ஒழிகை –

கண்டாய் நெஞ்சே கருமங்கள் வாய்க்கின்றோர்
எண் தானும் இன்றியே வந்தியலுமாறு
உண்டானை உலகேழுமோர் மூவடி
கொண்டானைக் கண்டு கொண்டனை நீயுமே –1-10-5-உண்டு அளந்தது ஆழ்வார்கள் பலரும் ஒரே பாசுரத்தில்

பாலன்  றனதுருவாய்  யேழுலகுண்டு ஆலிலையின்
மேலன்று நீ வளர்ந்த மெய்யன்பர் ஆலன்று
வேலைநீ ருள்ளதோ விண்ணதோ மண்ணதோ
சோலை சூழ் குன்றெடுத்தாய் சொல்லு —–69-

பாலனா யேழுல குண்டு பரிவின்றி,
ஆலிலை யன்னவ சஞ்செய்யும் அண்ணலார்,
தாளினை மேலணி தண்ணந் துழாயென்றே
மாலுமால், வல்வினை யேன்மட வல்லியே.

ஆல மா மரத்தினிலை மேலொரு பாலகனாய்
ஞால மேழுமுண்டா னரங்கத் தரவினணையான்
கோல மா மணி யாரமும் முத்துத் தாமமும் முடிவில்லதோ ரெழில்
நீல மேனி ஐயோ நிறை கொண்ட தென் நெஞ்சினையே —–9-

———————————————————————–

இப்படி இருக்கிறவனுடைய ஆச்சர்ய சேஷ்டிதங்களை லோகத்தில் அறிவார் ஒருவரும் இல்லை யானாலும்
நீ அவனை உன் ஹிருதயத்திலே கொடு புகுந்து வை கிடாய் என்கிறார் –

சர்வ பிரகாரத்தாலும் அபரிச்சேதயனான ஸ்ரீ யபதியாய் -(நீண்ட -அபரிச்சேத்யன் என்றும் உலக அலங்க ஓங்கியதுமாம் )
இப்படி இருந்து வைத்து -சகல லோகங்களையும் திரு வுதரத்திலே ஏக தேசத்திலே அடக்கி வைத்து
ஒரு பவனாய் இருப்பதோர் ஆலந்தளிரின் மேலே கோஷித்துக் கொண்டு
கண்ட இடம் எங்கும் தடையற சஞ்சரிக்கிற பிரளயத்தில்
அத்விதீயமான முக்த சிஸூ விக்ரஹத்தை யுடையனாய்க் கொண்டு
வயிற்றிலே புக்க பதார்த்தத்துக்கு ஓர் அலசு வராதபடி மெள்ள கண் வளர்ந்து அருளினவனை –

நமக்கு இவன் அல்லது தஞ்சம் இல்லை என்று
அனுசந்தித்து லோகத்தில் கலங்காமல் அறிய வல்லார் ஒருவரும் இல்லை –
ஆனாலும் நெஞ்சே இப்படி இருக்கிறவனைக் கொடு வந்து உன் ஹிருதயத்திலே வை –
அவன் புகுரப் புக்கால் விலக்காதே கிட்டி அநுஸந்தி -என்றபடி

அன்றிக்கே
நீண்ட திருமால் அனைத்து உலகும் உள்ளொடுக்கி என்றாய் –
லோகத்தை எல்லாம் அளக்கைக்காக வளர்ந்த ஸ்ரீ யபதியாய்
அளந்த லோகத்தைத் திரு வயிற்றிலே வைத்து ஆலின் மேலே மெள்ளத் துயின்றானை என்றுமாம் –

——————————————————————————————————–

இப்படி அவனை அநுஸந்தி என்று திரு உள்ளத்துக்கு தாம் அருளிச் செய்த அளவிலே
அத்யபி நிவிஷ்டனாய்க் கொண்டு
அவன் தம்முள்ளே புகுந்து தம் பக்கல் வியாமுக்தனான படியை அருளிச் செய்கிறார் –

உய்த்து உணர்வு என்னும் ஒளி கொள் விளக்கேற்றி
வைத்தவனை நாடி வலைப் படுத்தேன் -மெத்தனவே
நின்றான் இருந்தான் கிடந்தான் யென்னெஞ்சத்துப்
பொன்றாமல் மாயன் புகுந்து ———-94–

பதவுரை

உய்த்து உணர்வு என்னும்—சித்த உபாய -நிஷ்டை ஞானம்- உணர்வு-விவேக வுணர்ச்சி யாகிற
ஒளி கொள் விளக்கு–உஜ்வலமான தீபத்தை
ஏற்றி–ஏற்றி-விஸ்வாசம் முதலில் வேண்டுமே -இந்த விளக்கை ஏற்றிய பின்பு பேறு
அவனை நாடி வைத்து–அவ் வெம்பெருமானைத் தேடிப் பிடித்து
வலைப் படுத்தேன்–ஸ்வாதீனப் படுத்திக் கொண்டேன்
மாயன்–அப் பெருமான்
பொன்றாமை–குறைவின்றி
என் நெஞ்சத்து–என்னுடைய ஹ்ருதயத்திலே
புகுந்து–வந்து சேர்ந்து
மெத்தென–மெதுவாக
நின்றான்–(முதலில்) நின்றான்
இருந்தான்–(பிறகு) வீற்றிருந்தான்,
கிடந்தான்–(அதன் பிறகு) பள்ளி கொண்டருளினான்.

உணர்வு என்னும் ஒளி கொள் விளக்கேற்றி–
உணர்வு ஆகிற –தைலவர்த்திகளால் (எண்ணெய் தீ இத்யாதிகளால் )யுண்டான அழுக்கு இன்றிக்கே-
திணுங்கின தேஜஸ்ஸை -ஒளி விளக்கு ஏற்றி –

உய்த்து – வைத்தவனை நாடி வலைப் படுத்தேன் –
கொடு வந்து வைத்து அநு சந்தித்து ஆனுகூல்யம் ஆகிற வலையிலே அகப்பட்டு

(கமலக் கண்ணன் என்னும் நெடும் கயிறு -அவன் வலை
அனுகூல்ய லேசம் -நம் வலை)

மெத்தனவே-நின்றான் இருந்தான் கிடந்தான் யென்னெஞ்சத்துப்-பொன்றாமல் மாயன் புகுந்து —–
விச்சேதம் இன்றிக்கே என்னுடைய நெஞ்சிலே நிற்பது இருப்பது கிடப்பது ஆனான் –

பொன்றாமை -என்றது நான் நசியாமல் -என்னவுமாம்

ஹிருதயத்திலே ஸ்தியாதிகளுக்கு விச்சேதம் இன்றிக்கே என்றுமாம் –

——————

இப்படி அவனை அநுஸந்தி என்று திரு உள்ளத்துக்கு தாம் அருளிச் செய்த அளவிலே
அத்யபி நிவிஷ்டனாய்க் கொண்டு
அவன் தம்முள்ளே புகுந்து தம் பக்கல் வியாமுக்தனான படியை அருளிச் செய்கிறார் –

ஞானம் ஆகிற தைலவர்த்திகளால் யுண்டான அழுக்கு இன்றிக்கே செறிந்த ஒளியை யுடைத்தான விளக்கை ஏற்றி
அவனைக் கொண்டு வந்து வைத்து -தத் ஸ்வபாவங்களை ஆராய்ந்து அனுசந்தித்து –
ஆனு கூல்யம் ஆகிற வலையிலே தப்ப ஒண்ணாத படி சேர்த்துக் கொண்டேன் –

அநந்தரம் ஆச்சர்ய பூதனானவன் நான் நசித்துப் போகாத படியாக
என் ஹ்ருதயத்தில் வந்து புகுந்து மெள்ளக் கொண்டு கால் பாவி தரித்து நின்றான் –
புறம்பு போக்கு இல்லை என்று தோற்ற வாசனை பற்றுண்டாய் இருந்தான் –

பின்னை படுத்த படுக்கை கொட்டுப் படாமல் பள்ளி கொண்டு அருளினான்

பொன்றாமை என்று
ஹிருதயத்திலே ஸ்தியாதிகளுக்கு விச்சேதம் வாராத படி என்றுமாம் –

(மாயனாக இருப்பதால் புகுந்து கிடந்தான் -புகுந்து கிடந்ததால் மாயனானான் என்றுமாம்)

————————————————————————————————-

தம்முடைய பக்கல் அவன் ஸூலபனான படியைக் கண்டு
ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு ஸூலபனான படியைச் சொல்லுகிறார் –

தம்முடைய பக்கல் அவன் ஸூலபனான படியைக் கண்டு
ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு ஸூலபனான படியைச் சொல்லா நின்று கொண்டு –
நெஞ்சே இப்படி உபகாரகனானவன் திருவடிகளை வணங்கி வாழ்த்தப் பாராய் -என்கிறார் –

புகுந்திலங்கும் அந்திப் பொழுதத்து அரியாய்
இகழ்ந்த இரணியனதாகம் -சுகிர்ந்தெங்கும்
சிந்தப் பிளந்த திருமால் திருவடியே
வந்தித்தென் நெஞ்சமே வாழ்த்து  ——95-

பதவுரை

அந்தி புகுந்து–ஸாயங்காலமானது வந்து சேர்ந்து
இலங்கும் பொழுதத்து–விளங்கும் ஸமயத்திலே
அரி ஆய்–நரஸிம்ஹ மூர்த்தியாய்த் திருவவதரித்து,
இகழ்ந்த இரணியனது ஆகம்–நிந்தித்துக் கொண்டிருந்த ஹிரண்யாஸுரனது சரீரத்தை
சுகிர்ந்து–பல கூறாக வகிர்ந்து
எங்கும் சிந்த–(ரத்தம்) எங்கும் சிந்தும்படியாக
பிளந்த–பிளந்தொழித்த
திருமால்–எம்பெருமானுடைய
திருஅடியே–திருவடிகளையே
என் நெஞ்சமே–எனது மனமே!
வந்தித்து வாழ்த்து–தலையார வணங்கி வாயார வாழ்த்து

(திருமால் திருவடியே-சேஷி ப்ராப்யம் -அறிந்து வணங்கி வாழ்த்த வேண்டுமே)

(சிந்தையினால் இகழ்ந்த -ஹிரண்யன் அன்றோ)

சந்த்யா புகுந்தது என்றும்
அரியுருவாய் சந்த்யா காலத்தில் புகுந்தான் என்றுமாம்

புகுந்திலங்கும் அந்திப் பொழுதத்து அரியாய்-இகழ்ந்த இரணியனதாகம் —
ஹிரண்யன் வரம் கொள்ளாத ஸந்த்யையிலே

புகுந்து இலங்கும் என்றது –
ஸந்தையினுடைய பிரவேசத்தைச் சொல்லுகிறது –

அரியாய்-இகழ்ந்த இரணியனதாகம் —சுகிர்ந்தெங்கும்-சிந்தப் பிளந்த-
ஆஸ்ரித விரோதி யாகையாலே கொன்றது என்ற மாத்திரம் அன்றிக்கே சீற்றத்தின் உரம் இருந்த படி –

திருமால் திருவடியே–
ஆஸ்ரிதர் பக்கல் ஓரத்துக்கு அடி பிராட்டி அருகே இருக்கை -என்கிறது –

திருமால் திருவடியே வந்தித்தென் நெஞ்சமே வாழ்த்து  ——
வந்திகைக்கும் விஷயம் அவளோடு கூடினவன் போலே –

——————————————————————

தம்முடைய பக்கல் அவன் ஸூலபனான படியைக் கண்டு
ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு ஸூலபனான படியைச் சொல்லா நின்று கொண்டு –
நெஞ்சே இப்படி உபகாரகனானவன் திருவடிகளை வணங்கி வாழ்த்தப் பாராய் -என்கிறார் –

வந்து பிரவேசியா நிற்பதாய் செக்கர் வண்ணத்தால் வந்த ஒளியை யுடைத்தாய் –
அசூரர்க்குப் பலம் வர்த்தித்துச் செல்லக் கடவதான சந்த்யா சமயத்திலே –
அவன் வரத்துக்குள் அடங்காத நர சிம்ம ரூபியாய்க் கொண்டு
நிர் நிபனந்தனமாகத் தன்னையும் ப்ரஹ்லாதனையும் பஹு முகமாக நிந்தித்த
அஸஹ்ய அபசாரத்தை யுடையனான ஹிரண்யாசூரனுடைய வர பலாதிகளால் வளர்ந்த சரீரத்தை –
சீற்றத்தின் மிகுதியால் –
சின்னம் பின்னம் -என்கிறபடியே
பல கூறாக வகிர்ந்து
சர்வ பிரதேசத்திலும் சிதறி விழும்படியாகப் பிளந்து பொகட்ட ஸ்ரீயபதியானவனுடைய திருவடிகளை

என் கருத்திலே நடக்கும் நெஞ்சே -தலையால் வணங்கி வாயார மங்களா சாசனம் பண்ணு –

அந்தித்துப் பொழுதத்து இலங்கும் அரியாய்ப் புகுந்து என்றாய் –
சந்த்யா காலத்திலே ஒளியை யுடைத்தான நரசிம்ஹமமாய் புகுந்து என்றுமாம் –

திருமால் என்று
ஆஸ்ரித விஷயத்தில் ஓரத்துக்கு அடி அவ்ளோட்டைச் சேர்த்தி என்கை –

(அந்தியம் பொழுது அரியுருவாகி அரியை அழித்தவன் அன்றோ)

(உன்னைச் சிந்தை செய்து செய்து உன் நெடுமா மொழியிசை பாடியாடி என்
முன்னைத் தீ வினைகள் முழு வேரரிந்தனன் யான்
உன்னைச் சிந்தையினால் இகழ்ந்த இரணியன் அகல் மார்வம் கீண்ட என்
முன்னைக் கோளரியே முடியாதது என் எனக்கே –2-6-6-)

———————————————————————————————————-

நித்ய ஸூரிகளுடைய பரிமாற்றம் பொறாத ஸுகுமார்யத்தை யுடையவன் என்கிறது –

நித்ய ஸூரிகளுடைய பரிமாற்றம் பொறாத ஸுகுமார்யத்தை யுடையவன் -என்கிறார்

வாழ்த்திய வாயராய் வானோர் மணி மகுடம்
தாழ்த்தி வணங்கத் தழும்பாமே -கேழ்ந்த
அடித் தாமரை மலர் மேல் மங்கை  மணாளன்
அடித் தாமரை யாமலர் ———-96-

பதவுரை

கேழ்த்த அடி–பெருத்த தாளை யுடைய-அழகிய சிவந்த என்றுமாம்
தாமரை மலர் மேல்–தாமரைப் பூவிற் பிறந்த
மங்கை–பெரிய பிராட்டிக்கு
மணாளன்–வல்லபனான எம்பெருமானுடைய
அடி ஆம் தாமரை அலர்–திருவடிகளாகிற தாமரைப் பூக்களை
வானோர்–தேவர்
வாழ்த்திய வாயர் ஆய்–வாயால் வாழ்த்து கின்றவராய்க் கொண்டு
மணி மகுடம்–மணிகளழுத்தின மகுடத்தை
தாழ்த்தி–தாழ விட்டு
வணங்க–வணங்குவதனால்
தழும்பு ஆமே–(அத் திருவடிகள்) தழும்பேறிக் கிடக்கின்றனவே.

கேழ்ந்த-அடி–பெருத்த தாளை யுடைய

தாமரை மலர்மேல் மங்கை  மணாளன்-அடித் தாமரை யாமலர் —
திருவடிகள் ஆகிற தாமரைப் பூக்கள்

அழகிய சிவந்த திருக்கைகளால் =கூசிப் பரிமாற வேண்டும் படியான ஸ்ரீ யபதியின் திருவடிகள்

வாழ்த்திய வாயராய் வானோர் மணி மகுடம்-தாழ்த்தி வணங்கத் தழும்பாமே —
வாயாலே வாழ்த்தி மணிகள் அழுத்தின கிரீடத்தை தாழ விட்டு வனக்குப்பதால் தழும்பு ஏறிக் கிடக்கின்றனவே –

வயிறு பிடிக்கிறார்

————————

நித்ய ஸூரிகளுடைய பரிமாற்றம் பொறாத ஸுகுமார்யத்தை யுடையவன் -என்கிறார்

பெருத்த தாளை யுடைய
தாமரைப் பூவின் மேல் வர்த்திக்கிற நித்ய யவ்வன பிராட்டியாருக்கு போக்தவாய்
அவளும் கூசிப் பரிமாற வேண்டும்படி மிருதுவான திருவடிகள்
ஏத்து கையே தொழிலாகக் கொண்ட நித்ய ஸூரிகள்
வணங்க
ரத்ன பிரசுருமான திரு அபிஷேகம் பொருந்திய திருமுடியின் ஸ்பர்சம் பொறாமல் சிவக்க

வானோர் ப்ரஹ்மாதிகள் என்றுமாம்

கேழ் பெருமைக்கும் நிறத்துக்கும் கொள்ளலாம்

—————————————————————————————————————–

இப்படி ஸ்ரீ யபதியாய் அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவனை ஆஸ்ரயித்துப் பெறில் பெறும் அத்தனை
அல்லது ஸ்வ யத்னத்தால் ப்ரஹ்மாதிகளுக்கும் அறிய முடியாது என்கிறார் –

அலரெடுத்த  வுந்தியான் ஆங்கு எழிலாய
மலரெடுத்த மா மேனி மாயன் –அலரெடுத்த
வண்ணத்தான் மா மலரான் வார் சடையான் என்று இவர்கட்கு
எண்ணத்தான்   ஆமோ இமை ——-97-

பதவுரை

அலர் எடுத்த உத்தியான்–தாமரைப் பூ ஓங்கி யிருக்கப் பெற்ற திருநாபியை யுடையவனும்
எழிலாய மலர் எடுத்த–அழகிய காயம் பூப் போன்ற
மா மேனி–பெரிய திருமேனியை உடையனுமான
மாயன்– எம்பெருமான்
அவர் எடுத்த வண்ணத் தான்–காஞ்சி மலர் போன்ற நிறத்தை யுடையனான இந்திரனென்ன
மா மலரான்–தாமரைப் பூவிற் பிறந்த பிரமனென்ன
வார் சடையான்–நீண்ட ஜடையை யுடையனான சிவனென்ன
என்ற இவர்கட்கு-ஆகிய இத் தேவர்கட்கு
இமை–சற்றேனும்
எண்ணத்தான் ஆமோ–நெஞ்சால் நினைக்கவுங் கூடியவனோ

அலரெடுத்த  வுந்தியான் ஆங்கு எழிலாய-மலரெடுத்த மா மேனி மாயன் —
அலரைக் காட்டா நின்ற திரு நாபியை யுடையனாய்
எழிலை யுடைத்தாய் இருந்துள்ள மலர் காட்டா நின்ற திரு மேனியை யுடைய ஆச்சர்ய பூதன்

அலரெடுத்த-வண்ணத்தான் மா மலரான் வார் சடையான் என்று இவர்கட்கு-எண்ணத்தான்   ஆமோ இமை –
இந்த்ராதிகளுக்கும் அவனை மநோ ரதிக்கத் தான் போமோ –

இமை -விசாரி –
சற்றுப் போது என்றுமாம்

——————————————————————-

இப்படி ஸ்ரீ யபதியாய் அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவனை ஆஸ்ரயித்துப் பெறில் பெறும் அத்தனை
அல்லது ஸ்வ யத்னத்தால் ப்ரஹ்மாதிகளுக்கும் அறிய முடியாது என்கிறார் –

சகல ஜகத் யுதபத்தி காரணமான தாமரைப் பூவை தோற்றுவியா நிற்கிற திரு நாபியை யுடையனாய் –
அழகை யுடைத்தான பூவை பிரகாசிப்பிக்கிற அதி ஸூ குமாரமான கறுத்த திருமேனியை யுடைய
ஆச்சர்ய பூதனான அவன் இடையாட்டத்தில் பூவைத் தெரிவிப்பிக்கிற நல்ல நிறத்தை யுடைய இந்திரன்
ஸ்லாக்யமான திரு நாபீ கமலத்தில் பிறந்த ப்ரஹ்மா -தாழ்ந்த ஜடையை யுடையனான ருத்ரன் என்று
பிரசித்தரான இவர்களுக்கு நெஞ்சால் தான் நினைக்கத் தான் போமோ

இது ஒக்குமோ ஒவ்வாதோ என்று விசாரித்துப் பார் –
சற்றுப் போது என்றுமாம்

அலர் எடுத்த உந்தியான் எழிலாய மலர் எடுத்த மா மேனி ஆயன் அங்கு –
அவன் இடையாட்டத்திலே -என்றுமாம் –

——————————————————————————————————–

தன்னை ஆஸ்ரயித்து இருக்கிற நம்முடைய விரோதியான சம்சார சம்பந்தத்தை அறுத்துத் தருவான் அவனே என்கிறார் –

(பூதனை தொடக்கமாக கேசி பர்யந்தம் -விரோதி நிரஸனம்
இவன் வடிவம் கண்டு -ஜகத் அஸ்தமிக்கப் போகிறதோ என்று -நாரதர் பயந்தாரே
பருமனாலும் உயர்த்தியாலும் வேகத்தாலும்-மூன்று ஹிமாலயம் -ஆகாசம் -காற்று -மூன்று த்ருஷ்டாந்தங்கள்
இவற்றைக் கீழே தள்ளி -குதிரை -அதிசய யுக்தி -பொங்கும் பரிவால் இப்படிச் சொன்னவாறு
பகவானின் ஸ்வ பாவ யுக்தி –ஸர்வ வியாபகன் நம்மை ரக்ஷிக்கவே கண்ணனாய் திருவவதரித்தவன் என்றவாறும்-தொட்டாலே நிரஸனம் -)

இமம் சூழ் மலையும் இரு விசும்பும் காற்றும்
அமஞ் சூழ்ந்தற  விளங்கித் தோன்றும் -நமஞ்சூழ்
நரகத்து நம்மை நணுகாமல் காப்பான்
துரகத்தை வாய் பிளந்தான் தொட்டு —–98-

பதவுரை

இமம் சூழ் மலையும்–பனியாலே சூழப்பட்டிருகிற இமய மலையையும்
இரு விசும்பும்–பெரிய ஆகாயத்தையும்
காற்றும்–வாயுவையும்
அமம் சூழ்ந்து–(பருமனாலும் உயர்த்தியாலும் வேகத்தாலும்) திரஸ்கரித்து-இவை கண்ணனைச் சொல்லி -அப்படி விபுவானவன் என்றுமாம்
அற விளங்கி தோன்றும்–மிகவும் விளங்கிக் கண்ணெதிரே வந்து தோன்றின
துரகத்தை–குதிரை வடிவு கொண்டு வந்த கேசி யென்னுமசுரனை
தொட்டு–திருக் கையால் பற்றி
வாய் பிளந்தான்–(அவனது) வாயைக் கிழிந்துப் போட்ட பெருமான்
நம்மை–நம்மை
நமன் சூழ் நரகத்து நணுகாமல் கரப்பான்–யமனைத் தலைவனாகக் கொண்ட நரகத்திலே புகவொட்டாமல் ரக்ஷித்தருள்வன்

(நரகம் ஸம்ஸாரம் என்றுமாம் -நம் அம் சூழ் -நம்மால் அழகாக சூழ்ந்த நரகம் என்றுமாம்)

அமம் சூழ்ந்து -பருமன் உயர்த்தி வேகத்தாலும்-கீழ்ப் படுத்தி வியாபித்து –
துரகத்தை-குதிரை வடிவு கொண்டு வந்த கேசி என்னும் அசுரனை –

இமம் சூழ் மலையும் இரு விசும்பும் காற்றும்-அமஞ் சூழ்ந்தற  விளங்கித் தோன்றும் துரகத்தை வாய் பிளந்தான் தொட்டு–
ஹிமவானிலும் வாயுவின் பக்கலிலும் அமைத்துப் பரந்து அற பிரகாசித்துத் தோன்றுகிற
துரகத்தைத் தொட்டு வாய் பிளந்தான்

நமஞ்சூழ்-நரகத்து நம்மை நணுகாமல் காப்பான்–துரகத்தை வாய் பிளந்தான் தொட்டு —-
கேசியை ஆஸ்ரித விரோதி என்று கை தொட்டுப் பிளந்தவன்
நமனாலே சூழ்க்கப் பட்டு உள்ள நரகத்திலே நம்மைக் கிட்டாமல் காக்குமவன் –

————————————————————————–

தன்னை ஆஸ்ரயித்து இருக்கிற நம்முடைய விரோதியான சம்சார சம்பந்தத்தை அறுத்துத் தருவான் அவனே என்கிறார் –

பனியால் சூழப் பட்டு இருக்கிற பர்வதமும் –
சர்வத்துக்கும் அவகாச பிரதமான பெரிய ஆகாசமும் -வாயுவும் –
சகல பதார்த்தங்களிலும் வியாபித்து நிற்குமவனாய் இருந்து வைத்துக்
கண் காண வந்து அவதரித்து –
ஒளி வரும் முழு நலம் -என்கிறபடியே
மிகவும் உஜ்ஜவலமான குணங்களை யுடையனாய்க் கொண்டு பிரகாசிக்குமவனாய் –
பத்தும் பத்தாக நம்மாலே சூழ்த்துக் கொள்ளப் பட்ட சம்சாரம் ஆகிற நரகத்திலே நம்மைக் கிட்டாதபடி ரக்ஷிக்குமவன் –
கேசியாகிற குதிரையைப் பிடித்து வாயைக் கிழித்துப் பொகட்ட கிருஷ்ணன் –

அன்றிக்கே எம வஸ்யத்தை தவிராத படியான சம்சாரத்தில் நம்மைக் கிட்டாத படி காப்பான் என்னவுமாம் –

அற விளங்கித் தோன்றும் துரகத்தை வாய் பிளந்தான் என்று குதிரைக்கு விசேஷணம் ஆகவுமாம்
அப்போது மிகவும் பிரகாசித்தது தோற்றுகிற குதிரை வாயைக் கிழித்துப் பொகட்டான் என்று பொருளாகக் கடவது –

எளிவரும் இயல்வினன்*  நிலை வரம்பு இல பல பிறப்பாய்* 
ஒளிவரும் முழு நலம்*  முதல் இல கேடு இல வீடு ஆம்*
தெளிதரும் நிலைமையது ஒழிவு இலன்*  முழுவதும்; இறையோன்* 
அளிவரும் அருளினோடு*  அகத்தனன் புறத்தனன் அமைந்தே.–பல பிறப்பாய் ஒளி விஞ்சி 
—————————————————————————————————–

ஆஸ்ரித விரோதிகளை போக்கும் ஸ்வ பாவனான எம்பெருமான் திருவடிகளே பரம ப்ராப்யம் என்கிறார் –

(சக்கரத்தான்–ஆபத்து போக்கி அருள
தாள் முதலே -ஸம்பத்து அருள-தாள் முதலே-வேறே ஒன்றை எதிர்பார்க்காமல் -சஹாயாந்தர அஸஹத்வம் –
நங்கட்குச் -அவனே உபாயம் உபேயம் என்று ஸ்வரூபம் உணர்ந்த நமக்கு
சார்வு–ஸூபஸாஸ்ரயம் -பாராயணம்
திண்ணிய கழல் -அவனும் அவளும் விட்டாலும் விடாமல் கைக் கொள்ளும் கழல்கள் –ஆழ்வார்கள் -ஆச்சார்யர்கள்)

தொட்ட படை யெட்டும் தோலாத வென்றியான்
அட்ட புயகரத்தான்  அந் நான்று-குட்டத்துக்
கோள் முதலை  துஞ்சக் குறித்தெறிந்த சக்கரத்தான்
தாள் முதலே நங்கட்குச் சார்வு ——99-

பதவுரை

தொட்ட–ஏந்தின
படை எட்டும்–எட்டு திவ்யாயுதங்களாலும்
தோலாத–தோல்வி யடையாத–அபராஜிதா -தேசத்துக்கே பெயர் உண்டே
வென்றியான்–ஜய சீலனும்
அட்டபுய காத்தான்–கச்சித் திருவட்டபுயகரத் திருப்பதியிலுள்ளவனும்
அந்நான்று–முன்பொரு காலத்தில்
குட்டத்து–நீர்ப் பொய்கையிலே
கோள் முதலை துஞ்ச–மிடுக்குடைய முதலை முடியும்படியாக
குறித்து எறிந்த சக்கரத்தான்–இலக்குத் தப்பாமல் பிரயோகிக்கப்பட்ட திருவாழியை யுடைய பெருமானது
தாள் முதலே–பாத மூலமே-ஏவ காரம் -வேறே ஒன்றையும் எதிர்பார்க்காத உபாயம் உபேயம் -திண் கழல் சேரே
நங்கட்கு–ப்ராப்யமும் பிராப்பகமும் அவனே என்று ஆத்ம ஸ்வரூபம் உணர்ந்த -எங்களுக்கு
சார்வு–பரம ப்ராப்யம்-அபாஸ்ரயம் ப்ராப்யமும் பிராப்பகமும்

(சார்வே தவ நெறிக்குத் தாமோதரன் தாள்கள்
கார் மேக வண்ணன் கமல நயனத்தன்
நீர் வானம் மண் எரி காலாய் நின்ற நேமியான்
பேர் வானவர்கள் பிதற்றும் பெருமையனே–10-4-1-)

(ந தர்மநிஷ்டோ’ஸ்மி நசாத்மவேதீ
நபக்தி மாம்ஸ்த்வச் சரணாரவிந்தே |
அகிஞ்சநோ’நந்யகதிஶ் ஶரண்ய!
த்வத் பாத மூலம் ஶரணம் ப்ரபத்யே ||–ஸ்தோத்ர ரத்னம் -22- -ஆளவந்தார்)

தொட்ட படை யெட்டும் தோலாத வென்றியான்-அட்ட புயகரத்தான்  அந்நான்று–
ஏதேனும் ஒரு ஆயுதத்தைத் தொட்டால்
அவ்வாயுதத்தால் எதிரிகளுக்கு தோலாதே-வெற்றியை யுடையனாய்
திரு அட்ட புயகரத்திலே நின்றவன் –

குட்டத்துக்-கோள் முதலை  துஞ்சக் குறித்தெறிந்த சக்கரத்தான்-தாள் முதலே நங்கட்குச் சார்வு –
த்வத் பாத மூலம் சரணம் ப்ரபத்யே என்னும் படியே
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு உதவினவனுடைய திருவடிகளே நமக்கு அபாஸ்ரயம் –

(ஸூ ப்ரவ்ருத்தி ஸூ ப்ரயோஜன நிவ்ருத்தி இல்லாமல்)

(நாகணை மிசை நம்பிரான் சரணே சரண்
ஆஸன பத்மத்திலே அழுத்தின திருவடிகளே சரணம்
முதலே -நிரபேஷ உபாயம் -உபேயமுமாம்)

(செம்பொன் இலங்கு வலங்கை வாளி திண் சிலை தண்டொடு சங்கம் ஒள் வாள்
உம்பர் இரு சுடர் ஆழியோடு கேடகம் ஒண் மலர் பற்றி எற்றே
வெம்பு சினத்து அடல் வேழம் வீழ வெண் மறுப்பொன்று பறித்து இருண்ட
அம்புதம் போன்று இவரார் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே–2-8-3-)

பெண்ணுலாம் சடையினானும் பிரமனும் உன்னைக் காண்பான்
எண்ணிலா யூழி யூழி தவம் செய்தார் வெள்கி நிற்ப
விண்ணுளார் வியப்ப வந்து ஆனைக்கு அன்று அருளை ஈந்த
கண்ணுறா வுன்னை என்னோ களை கணாக் கருதுமாறே–44-

——————————————————————–

ஆஸ்ரித விரோதிகளை போக்கும் ஸ்வ பாவனான எம்பெருமான் திருவடிகளே பரம ப்ராப்யம் என்கிறார் –

எடுத்த திவ்யாயுதங்கள் எட்டாலும் போரிலே தோலாதே எதிரிகளை மூலமற மாய்த்து –
வெற்றியை யுடையனாய் இருக்கும் ஆண் பிள்ளையாய் –
இந்த வடிவோடும் மிடுக்கோடும் எட்டா நிலத்திலே இருக்கை யன்றிக்கே –
திரு அட்ட புயகரத்திலே சந்நிஹிதனாய் –

ஸ்ரீ கஜேந்த ஆழ்வான் ஆபன்னனான அத் தசையிலே மடுவில் முடிக்கும் ஸ்வ பாவமான
முதலையானது உருவழிந்து சிதிலமாம் படி –
அவ் வாபத்திலும் (ஸூ ரக்ஷண ஸ்வாந்வயம் ஆபத்து போனதே )கலங்காத ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் பக்கலிலே பரிவாலே
இலக்குத் தப்பாத படி எறிந்த திரு வாழியை யுடையவனுடைய பாத மூலமே
ப்ராப்ய ருசி பரவசரான எங்களுக்கு பரம ப்ராப்யம் –

அன்றிக்கே ஸ்வ ரக்ஷணத்திலே அசக்தரான எங்களுக்கு
த்வத் பாத மூலம் சரணம் ப்ரபத்யே -என்கிறபடியே
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு உதவின சிவந்த திருவடிகளே
சஹாயாந்தர நிரபேஷமான உபாயம் என்னவுமாம் -(ஸஹாய அஸஹத்வம் உண்டே அவனுக்கு )

(மீனமர் பொய்கை நாண மலர் கொய்வான் வேட்கையினோடு சென்று இழிந்த
கானமர் வேழம் கை எடுத்து அலறக் கராவதன் காலினைக் கதுவ
ஆனையின் துயரம் தீரப் புள்ளூர்ந்து சென்று நின்று ஆழி தொட்டானை
தேனமர் சோலை மாட மா மயிலைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே—2-3-9-)

————————————————————————————————————

எம்பெருமான் அபாஸ்ரயமான பெரிய பிராட்டியார் திருவடிகளே
என்றும் புகலிடமாம் பற்றினார்க்கு என்றுமாம் –

(திருவில் உபக்ரமித்து திருவிலே உப ஸம்ஹாரம்
மிதுனமே உத்தேச்யம்
அவளுக்கு அவன் என்றும் சார்வு
நமக்கு இவளே என்றும் சார்வு)

(எம்பெருமானைப் பற்றுவது சார்வு-ஆழியான் -ரக்ஷிக்கவும் சிஷிக்கவும் எம்பெருமான்
பிராட்டியைப் பற்றுவது என்றுமே சார்வு
அபராதங்களைப் பார்க்காமல் -நித்ய அஞ்ஞான நிக்ரஹ –
ராவணனுக்கும் உபதேசம் -சரணம் என்று வாயாலே கூடச் சொல்லாத ராக்ஷஸிகளையும் ரஷித்த பிராட்டி
ரமஸ்ய கோஷ்ட்டியை லகுவாக்கிய பெருமை உண்டே)

சார்வு நமக்கென்றும் சக்கரத்தான் தண்டுழாய்த்
தார் வாழ் வரை மார்வன் தான் முயங்கும் -காரார்ந்த
வானமரு மின்னிமைக்கும் வண்டாமரை நெடுங்கண்
தேனமரும் பூ மேல் திரு ——100-

பதவுரை

சக்கரத்தான்–திருவாழியைக் கையிலே உடையவனும்
தண் துழாய் தார் வாழ்–குளிர்ந்த திருத் துழாய் மாலை விளங்கப்பெற்ற
வரை மார்பன் தான்–மலை போன்ற திருமார்பை யுடையனுமான எம்பெருமானால்
முயங்கும்–ஸம்ச்லேஷிக்கப் படுகின்றவளாய்
கார் ஆர்ந்த வான்–மேகங்கள் செறிந்த ஆகாசத்திலே-மின்னல் நிலைத்து இருக்காதே -நித்ய அநபாயினி ஆகவே ஆர்ந்த விசேஷணம்
அமரும்–நிலைத்து நிற்கக் கூடியதான
மின்–மின்னல் போல
இமைக்கும்–விளங்குகின்றவளாய்
வண் தாமரை–அழகிய தாமரைப் பூப் போன்ற
நெடு–நீண்ட
கண்–திருக் கண்களை யுடையளாய்-அஸி தேக்ஷிணை
தேன் அமரும் பூமேல்–தேன் நிறைந்த தாமரைப் பூவில் வஸிப்பவளான
திரு–பெரிய பிராட்டியார்
நமக்கு என்றும் சார்வு–நமக்கு எப்போதும் சரணம்.

சார்வு நமக்கென்றும் சக்கரத்தான் தண்டுழாய்த்–தார் வாழ் வரை மார்வன் தான் முயங்கும் —
ஆபத்துக்கு சர்வேஸ்வரன் –
ஆபத்து உள்ள போதும் எற்றைக்கும் நமக்கு அபாஸ்ரயம் பெரிய பிராட்டியார் –

ரக்ஷணத்துக்கு உபகரணமான திரு வாழியைக் கையிலே யுடையவனுமாய் –
போக உபகரணமான திரு வாழியைக் கையிலே யுடையவனுமாய்
போக உபகரணமான திருத் துழாயை யுடையவன் தானே -ஸம்ஸ்லேஷியா நின்றுள்ளவளான —
இதுக்கு உவமானம் மேலே –

காரார்ந்த-வானமரு மின்னிமைக்கும் வண்டாமரை நெடுங்கண்-தேனமரும் பூ மேல் திரு —
மேகங்கள் செறிந்து இருந்துள்ள ஆகாசத்தில் அமர்ந்த மின்னைக் காட்டா நின்று உள்ளாளுமாய்-
ஆஸ்ரித ரக்ஷணத்திலே குளிர நோக்கா நின்ற திருக் கண்களை யுடையாளாய் –
தேன் செறிந்த பூவின் மேலே இருக்கும் திரு சார்வு நமக்கு என்றும் –
பெரிய பிராட்டியார் நமக்கு எல்லா காலத்துக்கும் அபாஸ்ரயம் –

(அவனை அழகாலே திருத்தும் நம்மையோ அருளாலே திருத்தும் அஸி தேக்ஷிணை)

——————————————————————-

எம்பெருமான் அபாஸ்ரயமான பெரிய பிராட்டியார் திருவடிகளே
என்றும் புகலிடமாம் பற்றினார்க்கு என்றுமாம் –

திரு வாழியைத் திருக் கையிலே யுடையனாய்
போக உபகரணமாய்
சர்வ ஐஸ்வர்ய ஸூ சகமான குளிர்ந்த திருத் துழாய் மலையானது செவ்வி பெற்றுத் தழைத்துச்
செல்லா நிற்கிற மலை போலே உறைத்து பரந்த திரு மார்வை யுடையனான
தான் அத்யபி நிவிஷ்டனாய்க் கொண்டு அநவரதம் சம்ஸ்லேஷிக்கும் படி இருக்குமவளாய் –
மேகங்கள் நிறைந்து இருந்துள்ள ஆகாசத்தில் பொருந்தின மின் போலே
கறுத்த திரு நிறத்துக்குப் பகைத் தொடையாக பிரகாசியா நிற்பாளாய் –
ஆஸ்ரிதரை சஹ்ருதயமாகக் குளிர நோக்குகிற உதாரமான தாமரைப் பூ போலே இருக்கிற
அழகான நீண்ட திருக் கண்களை யுடையாளாய்
தேன் நிறைந்து இருந்துள்ள பூவின் மேலே எழுந்து அருளி இருக்கிற பெரிய பிராட்டியார் தன்னை ஒழிய
வேறு புகல் இன்றியே இருக்கிற நமக்கு
ஆபத்து உள்ள போதோடு
இல்லாத போதோடு வாசியற
சர்வ காலத்திலும் அபாஸ்ரயம் –

(ஆழியான்-விரோதி நிரஸனம் –திருத் துழாய் போக்யம் ஸ்ரீ யபதித்தவம் –ஸர்வேஸ்வரத்வ மூன்று அடையாளங்களையும் பாசுரம் காட்டுமே)

(பத்ம பிரிய பத்மாலய பத்ம வாஸிநி பத்ம லோசநே)

——————-

பாலேய் தமிழர்” (1.5.11)
இன்கவி பாடும் பரமகவிகள்” (7.9.6)
“செந்தமிழ் பாடுவார்”
“பலரடியார் முன்பருளிய” (7.10.5)
“செஞ்சொற் கவிகாள்” (10.7.1) –

மற்றுள்ள ஆழ்வார்களுக்கு முன்னே வந்துதித்து
நல் தமிழால் நூல் செய்து நாட்டையுய்த்த –
பெற்றிமையோர் என்று முதலாழ்வார்கள் என்னும்
பெயரிவர்க்கு நின்றதுலகத்தே நிகழ்ந்து.

முதலாழ்வார்கள் பிரணவம் போல – எப்பொழுதும் தொடக்கமாகிற படியால்.
முதலாழ்வார்களே திராவிட வேதமாம் திவ்ய பிரபந்தத்திற்கு உயர்ந்த திராவிட மொழியில் (தமிழ்) அஸ்திவாரம்/ அடித்தளம் இட்டனர்.

————

திரு மயிலை கேஶவப் பெருமாள் கோயிலின் அருகில் உள்ள கிணற்றில் பேயாழ்வார் அவதரித்தார்.
இவரின் மறு பெயர்கள் மஹதாஹ்வயர் மற்றும் மயிலாபுராதிபர் ஆகியவை ஆகும்.

த்ருஷ்ட்வா ஹ்ருஷ்டம் ததா விஷ்ணும் ரமயா மயிலாதிபம்
கூபே ரக்தோத்பலே ஜாதம் மஹதாஹ்வயம் ஆஸ்ரயே–இவரது தனியன்:

திருக்கண்டேனென நூறுஞ் செப்பினான் வாழியே
சிறந்த ஐப்பசியில் சதயம் செனித்த வள்ளல் வாழியே
மருக் கமழும் மயிலை நகர் வாழ வந்தோன் வாழியே
மலர்கரிய நெய்தல் தனில் வந்துதித்தான் வாழியே
நெருங்கிடவே யிடை கழியில் நின்ற செல்வன் வாழியே
நேமி சங்கன் வடிவழகை நெஞ்சில் வைப்போன் வாழியே
பெருக்கமுடன் திரு மழிசைப் பிரான் தொழுவோன் வாழியே
பேயாழ்வார் தாளிணை யிப் பெரு நிலத்தில் வாழியே–இவரது வாழி திருநாமம்:

————————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

மூன்றாம் திருவந்தாதி– பாசுரங்கள்-81-90—ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் –

November 12, 2016

(கார் கலந்த மேனியான் கை கலந்த ஆழியான்,
பார் கலந்த வல் வயிற்றான் பாம்பணையான்,-சீர் கலந்த
சொல் நினைந்து போக்காரேல் சூழ் வினையின் ஆழ் துயரை,
என் நினைந்து போக்குவர் இப் போது.– இப்போது சம்சாரிகளைப் பார்த்து ஆழ்வார்கள்
நினைக்க விரகு கேட்டால் -ஆழ்வார்கள் மறக்க விரகு இல்லையே என்பார்களே-

மறக்கவே முடியாதே –மறக்க விரகு குருகை காவல் அப்பன் அருளிய வார்த்தை –

துஞ்சா முனிவரும் அல்லாதவரும் தொடர நின்ற
எஞ்சாப் பிறவி இடர் கடிவான் இமையோர் தமக்கும்
தன் சார்விலாத தனிப் பெரு மூர்த்தி தன் மாயம் செவ்வே
நெஞ்சால் நினைப்பரிதால் வெண்ணெய் ஊண் என்னும் ஈனச் சொல்லே – -98 –-இது அன்றோ எத்திறம் என்னப் பண்ணும் )

கீழ் சம்சாரிகளுக்கு இல்லாதது தமக்கு உண்டானவாறே
நெஞ்சு பகவத் விஷயத்திலே மண்டிற்று என்று கொண்டாடினார் –
விஷயத்தைப் பார்த்த வாறே அடியிட்டிலராய் இருந்தார் என்கிறது –

நெஞ்சால் நினைப்பரியனேலும் நிலைப் பெற்றேன்
நெஞ்சமே பேசாய் நினைக்கும் கால் -நெஞ்சத்துப்
பேராது நிற்கும் பெருமானை என் கொலோ
ஓராது நிற்பது உணர்வு –—–81-

பதவுரை

என் நெஞ்சமே–எனது மனமே!,-எனக்கு வசப்பட்ட நெஞ்சமே
நெஞ்சால் நினைப்பு அரியன் எலும்–(எம்பெருமான்) நெஞ்சாலும் நினைக்க முடியாத பெருமை
வாய்ந்தவனே யாயினும் (அவனுடைய பெருமையை நினையாமல் ஸௌலப்யத்தையே நினைத்து)
நிலைப் பெற்று–காலூன்றி நின்று
பேசாய்–அவனைப் பேசப் பார்
நினைக்குங் கால்–நாம் ஒருகால் நினைத்தாலும்
நெஞ்சத்து–நெஞ்சு தன்னிலே
பேராது நிற்கும்-விட்டு நீங்காமல் நிலைத்து நிற்கின்ற
பெருமானை–எம்பெருமானை
உணர்வு–நமது நெஞ்சானது
ஓராது நிற்பது என்கொலோ–அநுஸந்தியாமல் வாளா விருப்பது ஏனோ?

நெஞ்சால் நினைப்பரியனேலும் —
நெஞ்சமே உன்னால் நினைக்கப் போகாதது ஆகிலும் –

நிலைப் பெற்றேன்- நெஞ்சமே பேசாய்–
நிலை பெற்று என் நெஞ்சமே பேசாய் –
ஐஸ்வர்யம் கன்று பிற்காலியாதே அனுபவியாய் –

நினைக்கும் கால் -நெஞ்சத்துப் பேராது நிற்கும் பெருமானை –
ஒரு கால் நினைக்கில் நாக்குண்டா நா எழா என்ற நெஞ்சு விட்டுப் போக அறியாத சர்வேஸ்வரனை –
கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில் -என்கிறபடியே

(நாக்குண்டா நா எழா-நெஞ்சுக்கு நாக்கு உண்டோ இருந்தால் பேசாமல் இருப்பதோ)

என் கொலோ- ஓராது நிற்பது உணர்வு —–
அவனை நினையாதே மணலை முக்கப் பார்க்கிறதோ
அவனை நினையாதே தான் உண்டாம் படி எங்கனே –
ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு —

(கண்ணுள்ளே நிற்கும்*  காதன்மையால் தொழில்,* 
எண்ணிலும் வரும்*  என் இனி வேண்டுவம்?*
மண்ணும் நீரும்*  எரியும் நல் வாயுவும்* 
விண்ணும் ஆய் விரியும்*  எம் பிரானையே.-1-10-)
(எண்ணிலும்-நினைக்க -என்பது அல்ல ஓன்று இரண்டு என்று எண்ணி 26 சொல்லவே வருவான் அன்றோ
பேர் உந்தி எண் 26 வந்ததா சொன்னாலும் வந்து நிற்கும் பித்தன் அன்றோ)
சந்த மேதம் பவதி -அஸன்ன- அவன் உண்டு என்று அறிந்தால் உளன் ஆவான் -இல்லை என்றால் இவனும் இல்லை யாவான்
பெயரும் கருங்கடலே நோக்குமாறு ஒண் பூ
உயரும் கதிரவனே நோக்கும் உயிரும்
தருமனையே நோக்கும் ஒண் தாமரையாள் கேள்வன்
ஒருவனையே நோக்கும் உணர்வு —(முதல் திருவந்தாதி-67- ஞானம் த்வாரமே மனஸ் நெஞ்சு தானே -)

—————————————————————————-

(சம்சாரிகள் நெஞ்சு போலே அந்ய பரராய் இருக்கச் செய்தே
என் நெஞ்சு ப்ரவணராய் என்று கீழ் கொண்டாடினவாறே
விஷய வை லக்ஷண்யம் பார்த்த வாறே இதில் முதல் அடி இட்டதாகவே இல்லை
அவன் துர் ஜேயம் -என்றாவது அநு சந்திக்கப் பார்(அறிவுக்கு அப்பால் பட்டவன் என்றாவது புலம்பி அனுசந்திக்கலாமே )

(மனனக மலமற மலர் மிசை எழு தரும்
மனன் உணரளவிலன் பொறியுணர் யவையிலன்
இனன் உணர் முழு நலம் எதிர் நிகழ் கழிவினும்
இனன் இலன் எனன் உயிர் மிகு நரையிலனே –1-1-2– -கட்டுப்படாதவன்-அளவிட முடியாதவன்
திரு உள்ளத்தில் -இப்படி இருக்க நினையாமல் இருப்பது என் என்று தனக்கே அனுசந்தானம்)

பரிச்சின்ன வஸ்து க்ராஹகமான மனஸ்ஸாலே பரிச்சேதித்து நினைக்க ஒண்ணாத
பெருமையை யுடையனாய் இருந்தானேயாகிலும்
அவன் பெருமையை நினைத்து பிற்காலியாதே
ஆஸ்ரித ஸூலபன் என்று அனுசந்தித்து காலூன்றி தரித்து நின்று
எனக்கு பவ்யமான நெஞ்சே –
அவனைப் பேசப் பாராய் –

இப்படிச் சொன்ன இடத்திலும் திரு உள்ளம் மெத்தென்று (ஈடுபடாமல் )இருந்தவாறே-
தனக்குப் பாங்கான சமயத்திலே இவன் ஒரு கால் நினைத்துக் கை வாங்கினால்
பின்னை எப்போதும் நெஞ்சு விட்டுப் போக மாட்டாமே நித்ய வாசம் பண்ணும் சர்வேஸ்வரனை
அறிவுக்கு வாய்த்தலையான மனஸ்ஸானது அநுஸந்தியாதே இருக்கிறது என்னோ

வேறே சில துராராத தேவதைகளை பற்ற இருக்கிறதோ –
சப்தாதி விஷயங்களை பற்ற இருக்கிறதோ

இந்த மனஸ் ஸூ எத்தை நினைத்து அவனை நினையாது இருக்கிறது -என்று
ஸ்வ கதமாக அனுசந்தித்தார் யாய்த்து –

(துப்புடையாரை அடைவது எல்லாம்*  சோர்விடத்துத் துணை ஆவர் என்றே* 
ஒப்பிலேன் ஆகிலும் நின் அடைந்தேன்*  ஆனைக்கு நீ அருள் செய்தமையால்* 
எய்ப்பு என்னை வந்து நலியும்போது*  அங்கு ஏதும் நான் உன்னை நினைக்கமாட்டேன்* 
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்*  அரங்கத்து அரவணைப் பள்ளியானே! (2)

ஸ்திதே மனஸி ஸூஸ்வதே சரீரே சதி யோ நர
தாது சாம்யே ஸ்திதே ஸ்மர்த்தா விஸ்வ ரூபஞ்ச மா மஜம்
ததஸ்தம் ம்ரியமாணம் து காஷ்ட பாஷாண சந்நிபம்
அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதிம் –

தான் ஏற நாள் பார்த்து இருக்கும் )

————————————————————————————————————–

(மனசை நொந்து கொள்வது எதனால்
நித்ய ஸூரிகளும் அன்றோ முழுவதுமாக உணர முடியாமல் உள்ளார்கள்
நினைக்காமல் விடவும் முடியாது
அவனே உள்ளே வந்து புகுந்தாலும் வஸ்து ஸ்வ பாவம் அறிவுக்கு அப்பால் பட்டே இருக்குமே
நினைந்து முழுவதும் அறிய முடியாது என்கிறார்)

(இனியவன்-அடுத்த பாசுரத்தில் மூன்று தடவை இப்பத பிரயோகம் உண்டே
மிக்க இனியவனாய் இருக்க இனி அவனைக் கிட்ட விரகு உண்டோ
மிக்க இனியவனாய் இருக்க இனி அவனை விடவும் விரகு உண்டோ)

(நம சகண்ட-அகண்ட – -பிரித்து எனக்கு நான் அல்லன் -நமஸ்காரம் போல் இங்கும்-இனியவன்-இனி யவன்)

இம் மனசை இன்னாதாகிறது என் –
ஒருவருக்கும் ஒரு வகையும் அறிய ஒண்ணாதபடி இருப்பானாய்
நிரதிசய போக்யனுமாய் இருந்த பின்பு
இனி யவனை நாம் கிட்டிக் கொண்டோமாயத்
தலைக் கட்ட விரகு உண்டோ -என்கிறார் –

உணரில் உணர்வரியன் உள்ளம் புகுந்து
புணரிலும் காண்பரியன் உண்மை -இணரணையக்
கொங்கணைந்து வண்டறையும் தண்  துழாய்க் கோமானை
எங்கணைந்து காண்டும் இனி ——–82-

பதவுரை

உணரில்–(அப்பெருமானை நாமாக) அறியப் பார்த்தாலும்
உணர்வு அரியன்–(அவன்) அறியக் கூடாதவன்
உள்ளம் புகுந்து புணரிலும்–(அவன் தானே)நெஞ்சிலே வந்து புகுந்து சேர்ந்தாலும்
உண்மை காண்பு அரியன்–உள்ளபடி அறியக் கூடாதவன்-வஸ்து ஸ்வ பாவம் தன்மையே அறிவுக்கு அரியனாய் இருக்கை அன்றோ
இனி–இப்படியான பின்பு
இணர் அணைய–பூங்கொத்துகள் தாழும்படியாக
கொங்கு–தேனிலே
வண்டு–வண்டுகள்
அணைந்து–வந்து கிட்டி (மதுவைப் பருகி)
அறையும்–ரீங்காரம் செய்யப் பெற்ற
தண்–குளிர்ந்த
துழாய்–திருத்துழாய் மாலையை அணிந்துள்ளவனான
கோமானை–அப் பெருமானை-இது அன்றோ அசாதாரண சிஹ்னம் ஸர்வேஸ்வரனுக்கு
எங்கு–எவ்விடத்தில்
அணைந்து–கிட்டி
காண்டும்–காணக் கடவோம்.

உணரில் உணர்வரியன் —
தன்னாலும் அறியப் போகாது –
இவனால் அறியப் போகாது –
தனக்கும் தன் தன்மை அறிவரியானை-(8-4-6)
ஸ்வ யத்னத்தால் காண்பார்க்குக் காணப் போகாது

உள்ளம் புகுந்து-புணரிலும் காண்பரியன் உண்மை –
தானே வந்து ஹிருதயத்திலே புணர்ந்தானே யாகிலும் அவனுடைய உண்மை அறியப் போகாது

இணரணையக்-கொங்கணைந்து வண்டறையும் தண்  துழாய்க் கோமானை-எங்கணைந்து காண்டும் இனி —
காண அரியன் என்று கை வாங்கப் போகாது என்கிறது –
பூம் கொத்துக்கள் தாழும் படிக்கு ஈடாக -மதுவைப் பானம் பண்ணின
வண்டுகள் சப்தியா நின்ற திருத் துழாய் மாலையை யுடைய சர்வேஸ்வரனை
எங்கே கிட்டிக் காண்போம் இனி –

எனக்கு நல்லரணை எனதாருயிரை இமையவர் தந்தை தாய் தன்னை
தனக்கும் தன் தன்மை யறிவரியானைத் தடங்கடல் பள்ளியம்மானை
மனக்கொள் சீர் மூவாயிரவர் வண் சிவனும் அயனும் தானும் ஒப்பார் வாழ்
கனக்கொள் திண் மாடத் திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு அதனுள் கண்டேனே–8-4-6-

தாந்தம் பெருமை அறியார் தூது
வேந்தர்க்காய வேந்தரூர் போல்
காந்தள் விரல மென்கலை நன் மடவார்
கூந்தல் கமழும் கூடலூரே–5-2-1-

(இவ்வளவு பெருமை உள்ளவர் வந்தார் என்று மயங்கவே முடியும்
பிரசாத பரமவ் நாத மம கேஹம் உபாகதவ்- என்று மயங்கலாம்-எத்திறம் -என்னப் பண்ணுமே
விதுரர் மயங்கி வாழைப்பழம் தோல் கொடுத்தது போல் )

————————————————————————–

இம் மனசை இன்னாதாகிறது என் –
ஒருவருக்கும் ஒரு வகையும் அறிய ஒண்ணாதபடி இருப்பானாய்
நிரதிசய போக்யனுமாய் இருந்த பின்பு
இனி யவனை நாம் கிட்டிக் கொண்டோமாயத்
தலைக் கட்ட விரகு உண்டோ -என்கிறார் –

யாரேனும் ஒருத்தருக்கும் ஸ்வ யத்னத்தால் அறியப் பார்க்கும் அளவில் அறிவரியனாய் இருப்பான் ஒருவன்
இவ் வருமை தீர அவன் தானே வந்து ஹிருதயத்திலே வந்து புகுந்து கலந்தானே யாகிலும் இவ்வளவு என்று
பரிச்சேதித்துக் காண்கைக்கு அரியனாய் இருப்பான் ஒருவன் –

இது பரமார்த்தம் -இப் படியான பின்பு
பூம் கொத்துக்கள் தாழும் படிக்கு ஈடாக தேனில் வண்டுகள் வந்து கிட்டி
அத்தை கழுத்தே கட்டளையாகப் பருகிச் செருக்கி
அதுக்கு போக்கு விட்டு சப்தியா நின்றுள்ள குளிர்ந்த திருத் துழாயை யுடைய சர்வேஸ்வரனை
எங்கே கிட்டுக் காணக் கடவோம்

காண்பரியன் உண்மை -என்றான போது
ஒருவருக்கும் இவ்வளவு என்று அளவிட்டுக் காண அரிதான
வைலக்ஷண்யத்தை யுடையவன் என்று பொருளாகக் கடவது –

இணர் -பூங்கொத்து-

(திருத்துழாய் அணிந்ததால் கோமான் -சர்வேஸ்வரத்வ ஸூ சகம் -அவனுக்கே அசாதாரணம் என்றவாறு)

——————————————————————————————————–

(மூன்று இனியவன் -இனி அவன் இதில்
கிடைத்தவனை அனுபவிக்கலாம்
முழுவதும் அறிய வேண்டியது இல்லையே
விட்டுடவும் முடியாது
உன்னால் கிட்டு ஆரம்பிக்கவும் முடியாது
அவனே வந்த மஹா பாக்யம் கிட்டிய பின் அனுபவிப்பதில் என்ன குறை)

(மகா பலி போல் ஈஸ்வரோஹம் என்று இருந்தாலும் நாம் அறியாத படி உளன்
அவன் கள்ளத்தால் மண் கொண்டு விண் கடந்தவன் அன்று
இனி உள்ளத்தில் இருக்க அனுபவிக்கலாம்
ஸம்பந்தம் -பந்தம் கிட்டும் -பிரகிருதி போல் -தேஹ சம்பந்தம்
அவன் ஸம்பந்தம் உணர்ந்து இனிமையில் மூழ்கலாமே)

இப்படி இவன் ஒருவராலும் காணவும் நினைக்கவும் ஒண்ணாதான் ஒருவன் ஆகிலும் –
அவன் இருந்தபடி இருக்க – இப்போது முந்துற முன்னம்
என் ஹிருதயத்திலே புகுந்து சந்நிதி பண்ணா நின்றான் என்கிறார் –

இனியவன் மாயன் என வுரைப்பரேலும்
இனியவன் காண்பரியனேலும் -இனியவன்
கள்ளத்தால் மண் கொண்டு விண் கடந்த பைங்கழலான்
உள்ளத்தின் உள்ளே உளன் ———83-

பதவுரை

இனி–இப்போது
அவன்–‘அந்த ஸர்வேச்வரன்
மாயன்–மாயக்காரன்‘-ஆச்சர்ய பூதன்
என–என்று
உரைப்பர் ஏலும்–சொல்லுவார்களே யாகிலும்,
இனி–இப்போது
அவன்–அப்பெருமான்
காண்பு அரியன் ஏலும்–கண்டு அநுபவிக்கக் கூடாதவனே யாகிலும்
கள்ளத்தால்–க்ருத்ரிம வேஷத்தினால் (மாவலி பக்கலிலே சென்று)
மண் கொண்டு–பூமி தானம் வாங்கி
விண் கடந்த பை கழலான் அவன்–ஆகாசம் முதலிய மேலுலகங்களையும் ஆக்ரமித்துக் கொண்ட
பரந்த திருவடிகளை யுடையனான அப்பெருமான்-பை -பரந்த
இனி–இப்போது
உள்ளத்தின் உள்ளே உள்ள–எனது ஹ்ருதயித்தினுள்ளே (வேறிடமறியாமே) நிலைத்து நிற்கின்றான்
(இந்த பரம லாபமே போது மென்கை)

இனியவன் மாயன் என வுரைப்பரேலும்–
வர்த்தமான தசையில் -பிரக்ருதியில் சம்பந்தித்து
மம மாயா துரத்யயா–(7-14)என்னும் படி காண அரியன் ஆகிலும்(பகவத் ஸ்வரூப திரோதானம் தானே பிரகிருதி )

இனியவன் காண்பரியனேலும் -இனியவன்-கள்ளத்தால் மண் கொண்டு
விண் கடந்த பைங்கழலான்-உள்ளத்தின் உள்ளே உளன் —
நெஞ்சுக்கு இனியனுமாய்த்
தன்னுடைமையை மஹா பலி பக்கலிலே வஞ்சித்தானாய்க் கொண்டு
அளந்தவன் ஹிருதயத்திலே நின்று மறக்க ஒட்டான்–

தைவீ ஹ்யேஷா குண மயீ மம மாயா துரத்யயா.–
மாமேவ யே ப்ரபத்யந்தே மாயா மேதாம் தரந்தி தே৷৷—7.14৷৷

என்னுடையதான இந்த முக் குண மயமான ப்ரக்ருதி -தேவனான என்னால் படைக்கப் பட்டதாகையாலே –
எவராலும் தம் முயற்சியால் மட்டும் -கடக்க அரிதாக உள்ளது –
எவர்கள் என்னை சரணம் அடைகிறார்களோ அவர்கள் இந்த மாயையைத் தாண்டுகிறார்கள்

——————————————————————

இப்படி இவன் ஒருவராலும் காணவும் நினைக்கவும் ஒண்ணாதான் ஒருவன் ஆகிலும் –
அவன் இருந்தபடி இருக்க – இப்போது முந்துற முன்னம்
என் ஹிருதயத்திலே புகுந்து சந்நிதி பண்ணா நின்றான் என்கிறார் –

பகவத் ஸுலப்யத்தின் ஏற்றம் அறியாத வாய் கரையர் ஆனவர்கள்
இப்போது அந்த சர்வேஸ்வரன் ஒருவராலும் அறிய அரிய ஆச்சர்ய பூதன் என்று சொல்லுவார்கள் யாகிலும் –
இப்போது அவன் ஒருவராலும் கண்டு அனுபவிக்கைக்கு அரியனாய் இருந்தானே யாகிலும் –
ஈஸ்வரன் என்று தெரியாதபடி க்ருத்ரித்மத்தாலே
மஹா பலி பக்கலிலே பூமியை நீர்ஏற்று வாங்குவாரைப் போலே அபஹரித்துக் கொண்டு
ஆகாசாதிகளான லோகங்களை அநாயாசேன அளந்து கொண்ட
பரந்த திருவடிகளை யுடையனான அவன் –

இப்போது பட்டது பட -என் ஹிருதயத்தினுள்ளே ஸ்தாலாந்தரம் அறியாத படி சந்நிஹிதனாய் இரா நின்றான் –
இவ்வம்சத்தை (இந்த அம்சத்தை )ஒருவராலும் இல்லை செய்ய ஒண்ணாது இறே -என்கை –

(பொருந்தாதவற்றைப் பொருந்த விடும் -அழகியான தானே அரி யுருவம் தானே )

(வாய் கரையர் ஆனவர்கள்-கடலை கடல் கரையில் நின்று பார்ப்பது போல் -பரத்வம் மட்டும் காணும் ரிஷிகள்
ஸுலப்யம் காணும் ஆழ்வார்கள் தானே ஆழ்ந்து கண்டு அனுபவித்து
அது வழிந்து அருளிச் செயல்கள் அருளினார்கள்
அந்த ஸுலப்யம் பயன் படுத்த நாம் அறிய வேண்டுமே)

இனி -என்று -இப்போது -என்றபடி –
அன்றிக்கே
இனியவன் என்று ஒரே சொல்லாய்
அனுசந்திப்பார்க்கு நிரதிசய போக்யனாய் இருக்குமவன் என்று மூன்று இடத்துக்கும் பொருளாகவுமாம் –

மாயன் -என்றது
மம மாயா துரத்யயா -என்கிறபடியே
தன்னுடையதான ப்ரக்ருதியாலே பந்தித்து இவர்களுக்கு காண அரியனாய் இருக்குமவன் -என்றுமாம் –

பைங்கழலான் -என்று அழகிய திருவடிகளை யுடையவன் என்றுமாம் –

(விரிந்து பரந்த திருவடிகள் கீழே பார்த்தோம்)

(அடியேன் உள்ளான் உடல் உள்ளான் அண்டத்தகத்தான் புறத்துள்ளான்
படியேயிது வென்றுரைக்கலாம் படியனல்லன் பரம் பரன்
கடி சேர் நாற்றத்துள்ளாலை இன்பத் துன்பக் கழி நேர்மை
ஓடியா வின்பப் பெருமையோன் உணர்விலும்பர் ஒருவனே–8-8-2-)

———————————————————————————————————–

வேதைக சமதி கம்யனானவனை ஒருவரால் காண முடியாது -கண்டாராகச் சொல்லுகிறவர்களும்
கவிகளைக் கொண்டாடினார் அத்தனை அல்லது ஒருவரும் கண்டார் இல்லை -என்கிறார் –

உளனாய நான் மறையினுள் பொருளை உள்ளத்து
உளனாகத் தேர்ந்து உணர்வரேலும் உளனாய
வண்டாமரை நெடுங்கண்  மாயவனை யாவரே
கண்டாருகப்பர் கவி ———–84-

பதவுரை

நால் மறையின்–நான்கு வேதங்களினுடைய
உள் பொருள்–உள்ளுறை பொருளாக
உளனாயவனை–இருக்கின்ற எம்பெருமானை
தேர்ந்து–(ஜ்ஞாந யோகத்தாலே) ஆராய்ந்து
உள்ளத்து உளன் ஆக–நெஞ்சிலே பொருந்தி யிருப்பவனாக
உணர்வர் ஏலும்–(சில ஞானிகள்) அறிய வல்லாரென்றாலும்,
வண் தாமரை–அழகிய தாமரைப் பூப் போன்ற
நெடு கண்–நீண்ட தீருக் கண்களை யுடைய
மாயவன்–ஆச்சர்ய பூதனாக
உளனாமவனை–இருக்கின்ற அப்பெருமானை
கண்டார் யாவரே–கண்டு அநுபவிக்கப் பெற்றார் யாவர்? (ஒருவருமில்லை)
கவி உகப்பர்–தோத்திரக் கவிகளை உகந்து வாயாற் சொல்லிக் கொண்டு போது போக்குவர்களத்தனை.-நா படைத்த பயன் பெற்று சத்தை பெறுவார்கள்

உளனாய நான் மறையினுள் பொருளை —
நிர் தோஷ பிராமண சித்தன் ஆகையால் தான் உளனாய் –
வேதத்தாலே பிரதிபாதிக்கப் பட்டவனை(உளன் -வஸ்து ஸத் பாவம் )

உள்ளத்து-உளனாகத் தேர்ந்து உணர்வரேலும்–
கர்ம யோகத்தாலே ஞான யோகம் கை வந்து -ஞான யோகத்தாலே காண ஆசைப் பட்டாரே யாகிலும்

உளனாய-வண்டாமரை நெடுங்கண்  மாயவனை யாவரே கண்டார் கவி ———–
யதா கப்யாசம் புண்டரீகம் ஏவ அக்ஷிணீ –என்று
ஸ்ருதி ப்ரஸித்தமான கண் அழகை யுடைய சர்வேஸ்வரனை ஆர் காண வல்லார் –

(ஏக தேசம் கண்ணின் அழகையே அறியாமல் இருக்க ஸ்வரூப ரூப குண விபூதியை முழுவதுமாக அறிந்து இருப்பார் யாரும் இல்லை)

உகப்பார் கவி –
பின்னைக் காணும் படி எங்கனே என்னில்
அவனுடைய ஸ்தோத்ரத்தை உகக்கும் அத்தனை –

—————————————————————————

வேதைக சமதி கம்யனானவனை ஒருவரால் காண முடியாது -கண்டாராகச் சொல்லுகிறவர்களும்
கவிகளைக் கொண்டாடினார் அத்தனை அல்லது ஒருவரும் கண்டார் இல்லை -என்கிறார் –

ருக்காதி பேதத்தாலே நாலு வகைப்பட்ட வேதத்தில் பூர்வ பாக ஸித்தமான கர்மாதிகள் போல் அன்றிக்கே
உபநிஷத் பாக ஸித்தமான ரஹஸ்யார்த்த பூதனாய்க் கொண்டு
உளனாய் இருக்கிறவனை –

கர்ம யோக ஸித்தமான ஞான யோகத்தாலே யதாவாக ஆராய்ந்து
ஹ்ருதயத்தில் சந்நிஹிதனாகப் பரிச்சேதித்து அறிந்தார்களே யாகிலும்

(காண ஆசைப்படுவபவர்கள் பெரியவாச்சான்பிள்ளை -இங்கு அறிந்தவர்களே ஆகிலும்)

யதா கப்யாசம் புண்டரீகம் ஏவ அக்ஷிணீ –என்கிறபடியே
அழகிய தாமரைப் பூ போலே நீண்ட திருக் கண்களை யுடைய
ஆச்சர்ய பூதனாய்க் கொண்டு உளனானவனை யார் தான் கண்டு அனுபவிக்கப் பெற்றார்

கண்டாராகச் சொல்லுகிறவர்களும் இவ்விஷயத்தில் கிஞ்சித் கரித்தோமாக வேணும் என்னும் ஆசையினால்
கவியை உகந்தார்கள் அத்தனை அல்லது உள்ளபடி காணப் பெற்றார்களோ என்று கருத்து –

(பொன்னார் சார்ங்கம் உடைய அடிகளை இன்னார் என்று அறியேன் என்று சொல்லும் படி அன்றோ)

—————————————————————————————————————–

ஒருத்தரால் அறியப் போகாதாகில் –
வாழ்த்துவர் பலராக என்னும் படியே
பூமியில் உள்ளார் எல்லாரும் கூடினாலும்
அறியவும்
ஏத்தவும் போமோ -என்னில்
ஒண்ணாது என்கிறார் –

நால்வர் இருவரால் அறியப் போகாது என்கிற அளவன்றிக்கே
பூமியில் உள்ளார் அடங்கலும் பெரு முனையாகக் கூட்டித்
தம் தாமுடைய சர்வ கரணங்களையும் கொண்டு ஸ்தோத்ரம் பண்ணப் புக்காலும்
அவர்களுக்கும் எட்ட ஒண்ணாத படி
அவ்வருகு பட்டு அன்றோ அவ்விஷயம் இருப்பது என்கிறார் –

(யானுமேத்தி ஏழுலகும் முற்றுமேத்தி பின்னையும்
தானுமேத்திலும் தன்னை யேத்த வேத்த வெங்கு எய்தும்
தேனும் பாலும் கன்னலும் அமுதமாகித் தித்திப்ப
யானும் எம்பிரானையே ஏத்தினேன் யானுய்வானே –4-3-10-)

(குண ஏக தேசம் கூட ப்ரஹ்மாதிகளுமே ஒரு முகமாக பேசினாலும் சொல்லவே முடியாதே -ஸ்ரீ வராஹ புராணம்)

கவியினார் கை புனைந்து கண்ணார் கழல் போய்ச்
செவியினர் கேள்வியராய்ச் சேர்ந்தார் புவியினார்
போற்றி யுரைக்கப் பொலியுமே பின்னைக்காக
ஏற்று யிரை யட்டான் எழில் —–85-

பதவுரை

கவியினார்–தோத்திரங்கவிகளைச் சொல்லு பவராய்க் கொண்டு
கை புனைந்து–அஜ்ஞலி பண்ணி
கண்–தமது கண்கள்
ஆர் கழல் போய்–(அவனது) விலக்ஷணமான திருவடிகளிலே சென்று சேரப் பெற்று
செவியின் ஆர் கேள்வியர் ஆய்–காது நிறைந்த கேள்விகளை யுடையராய்க் கொண்டு
சேர்ந்தார்–வந்து பணிந்தவர்களான
புவியினார்–பூமியிலுள்ளா ரெல்லாரும்
போற்றி உரைக்க–(ஒன்று கூடிப்) போற்றி யுரைத்தாலும்,
பின்னைக்காய் ஏறு உயிரை அட்டான் எழில் பொலியுமே–நப்பின்னைப் பிராட்டிக்காக ரிஷபங்களினுயிரை மாய்ந்த
பெருமானுடைய அழகு சிறப்புறச் சொல்லப்பட்ட தாகுமோ?

கவியினார் கை புனைந்து-
ஸ்தோத்ரத்தால் அபிமான ஸூன்யராய்த் தொழுது –

கண்ணார் கழல் போய்ச்-
கண் விலக்ஷணமான திருவடிகளை அடைந்து –

செவியினர் கேள்வியராய்ச் சேர்ந்தார் -புவியினார்–
செவி நிறைந்த கேள்வியை யுடையராய்ச் சேர்ந்தாரான பூமியில் உள்ளார் எல்லாம் –

போற்றி யுரைக்கப் பொலியுமே —–
எல்லாரும் கூடிப் போற்றி உரையா நின்றால் அங்குத்தைக்கு ஏதேனும் அதிசயத்தைப் பண்ணப் போமோ –

பின்னைக்காக-ஏற்று யிரை யட்டான் எழில்–
நப் பின்னை பிராட்டி கலவிக்கு பிரதிபந்தகமான வ்ருஷபங்களை அடர்த்த
ஒரு செயலையும்
நடுவு அழகையும்
முடிவாகச் சொல்லப் போமோ –

——————————————————————-

நால்வர் இருவரால் அறியப் போகாது என்கிற அளவன்றிக்கே
பூமியில் உள்ளார் அடங்கலும் பெரு முனையாகக் கூட்டித்
தம் தாமுடைய சர்வ கரணங்களையும் கொண்டு ஸ்தோத்ரம் பண்ணப் புக்காலும்
அவர்களுக்கும் எட்ட ஒண்ணாத படி
அவ்வருகு பட்டு அன்றோ அவ்விஷயம் இருப்பது என்கிறார் –

நப்பின்னைப் பிராட்டிக்கு பர தந்திரனாய்க் கொண்டு
தத் சம்ஸ்லேஷ பிரதிபந்தகமான ரிஷபங்களுடைய ப்ராணன்களை முடித்து
பொகட்டவனுடைய மணக் கோலமும் –
ஏறு தழுவின ஒரு செயலும்
வாயாலே சொன்ன கவியோடே கூடிக் கொண்டு –
கையாலே அஞ்சலியைப் பண்ணி –
கண்களானவை அழகு நிறைந்துள்ள திருவடிகளிலே சென்று கிட்டி -(திண் கழல் சேரே -அவனும் அவளும் கை விட்டாலும் விடாத்திய திண்மை )
செவியில் நிறையும்படியான அவன் கல்யாண குணங்களில் கேள்வியை யுடைய ராய்க் கொண்டு
கிட்டினாரான பூமியில் உள்ளார் எல்லாம் மங்கள வாசகமான சப்தங்களைக் கொண்டு ஸ்தோத்ரம் பண்ணி
அவர்கள் புகழப் புகழ மேன் மேல் என சம்ருத்தமாம் அத்தனை போக்கிச்
சிறிது வரையிட்டுக் காட்டுமோ-
இவர்கள் சொன்னார்கள் என்று அங்குத்தைக்கு முன்பு இல்லாதொரு நன்மை யுண்டாமோ என்றுமாம் –

—————————————————————————————————————–

ஸ்வரூப ரூபங்கள் பரிச்சேதிக்கப் போகாது –
உபமானத்தாலே சிறிது சொல்லலாம் இத்தனை என்கிறது –

அவனுடைய அழகை ஒருவராலும் அளவிட்டு காண ஒண்ணாதாகிலும்
அத்தை விட்டு ஆறி இருக்க மாட்டாதே
கண்டு அனுபவிக்க வேணும் என்று ஆசைப்படுமவர்களுக்கு
மேகங்கள் தானே அவன் வடிவைக் காட்டும் என்கிறார்

(மேகத்தை சிக்ஷித்து-எழில் கொண்ட ஒவ்வொன்றிலும் அன்வயம் -நீல தோயதா மத்யஸ்தா -இத்யாதி போல்)

கரு உடை மேகங்கள் கண்டால்*  உன்னைக் கண்டால் ஒக்கும் கண்கள்* 
உரு உடையாய்! உலகு ஏழும்*  உண்டாக வந்து பிறந்தாய்!* 
திரு உடையாள் மணவாளா!*  திருவரங்கத்தே கிடந்தாய்!* 
மருவி மணம் கமழ்கின்ற*  மல்லிகைப் பூச் சூட்ட வாராய் 

எழில் கொண்ட மின்னுக் கொடி எடுத்து வேகத்
தொழில் கொண்டு தான் முழங்கித் தோன்றும் -எழில் கொண்ட
நீர் மேகமன்ன நெடுமால் நிறம் போலக்
கார் வானம் காட்டும் கலந்து ——-86-

பதவுரை

எழில் கொண்ட–அழகை யுடைத்தாய்
நீர்–நீர் நிறைந்ததான
மேகம் தான்–மேகமானது
எழில் கொண்ட மின் கொடி எடுத்து–அழகிய மின்னற்கொடி படரப் பெற்று
வேகம் தொழில் கொண்டு–வேகமாகத் திரிதலாகிற வியாபாரத்தைச் செய்யப் பெற்ற
முழங்கி தோன்றும்–கர்ஜித்துக் கொண்டு விளங்குதற்கிடமான
கார் வானம்–கார் காலத்து ஆகாசமானது
அன்ன நெடுமால் நிறம்போல கலந்து காட்டும்–அப்படிப்பட்ட எம்பெருமானுடைய திரு நிறத்தை அநுகரித்திரா நின்றது.

எழில் கொண்ட மின்னுக் கொடி எடுத்து —
எழிலை யுடைத்தான மின்னைக் கொடியாக எடுத்து

(மின்னலைத் தன்னுள் கொண்டு என்றும் கொடியாகக் கொண்டு என்றும்)

வேகத்-தொழில் கொண்டு தான் முழங்கித் தோன்றும் –
வேகத்தை யுடைத்தான தொழிலைக் கொண்டு தானே முழங்கித் தோன்றா நின்ற கார் வானம்

எழில் கொண்ட-நீர் மேகமன்ன நெடுமால் நிறம் போலக் கார்வானம் காட்டும் கலந்து —–
ஆகளமாக நீரைப் பானம் பண்ணின காள மேகம் போலே இருந்துள்ள சர்வேஸ்வரன்
உடைய நிறம் போலே –கார் காலத்திலே மேகமானது கலந்து காட்டும் –

——————————————————————————

அவனுடைய அழகை ஒருவராலும் அளவிட்டு காண ஒண்ணாதாகிலும்
அத்தை விட்டு ஆறி இருக்க மாட்டாதே
கண்டு அனுபவிக்க வேணும் என்று ஆசைப்படுமவர்களுக்கு
மேகங்கள் தானே அவன் வடிவைக் காட்டும் என்கிறார்

(கூட்டுண்டு நீங்கிய கோலத் தாமரை கண் செவ்வாய்
வாட்டமில் என் கரு மாணிக்கம் கண்ணன் மாயன் போல்
கோட்டிய வில்லொடு மின்னு மேகக் குழாம் காள் !
காட்டேன் மின் நும்  உரு என்  உயிர்க்கு  அது காலனே –9-5-7-ஸ்மாரக பதார்த்தம்)

அழகை யுடைத்தாய் கொண்டு மின்னை த்வஜமாகத் தரித்து
வேகமாகிற வியாபாரத்தை உடைத்தாய்க் கொண்டு தான்
மிகவும் கோஷித்துக் கொண்டு தோற்றுகிற கார் காலத்திலே மேகமானது
கண் மாற வைக்க ஒண்ணாத அழகை யுடைத்தாய்
கழுத்தே கட்டளையாக நீரைப் பருகின காளமேகம் போலே இருந்துள்ள சர்வேஸ்வரனுடைய
நிறம் போலே சேர்ந்து பிரகாசியா நிற்கும்

எழில் கொண்ட மின்னுக் கொடி எடுத்து -என்று பாடமான போது
அழகை யுடைத்தாய் இருக்கிற கார் வானம் என்று மேகத்துக்கு விசேஷணமாகக் கடவது –

(உடுத்து -தரித்து என்றும் பாட பேதம்)

——————————————————————————————————

பின்னையும் உபமானத்திலே பார்க்கிறார்

அவனுடைய ஸ்வதஸ் ஸித்தமான அழகைப் பின்னையும் உபமானத்திலே பார்க்கிறார்

கலந்து மணியிமைக்கும் கண்ணா நின்
மேனி மலர்ந்து மரகதமே காட்டும் -நலந்திகழும்
கொந்தின் வாய் வண்டறையும் தண்டுழாய்க்  கோமானை
அந்தி வான் காட்டுமது ————-87-

பதவுரை

மணி கலந்து–ஸ்ரீகௌஸ்துப மணியோடு கூடி
இமைக்கும்–விளங்கா நின்ற
கண்ணா–கண்ண பிரானே!
மரதகம்–மரதக ரத்னமானது
மலர்ந்து–ஒளிப் பரப்பை யுடைத்தாய்க் கொண்டு
நின் மேனி காட்டும்–உனது திருமேனியை ஒத்திரா நின்றது,
நலம் திகழும்–அழகாக விளங்குகின்ற
கொந்தின் வாய்–கொத்துகளிலே
வண்டு அறையும்–வண்டுகள் ரீங்காரம் செய்யப் பெற்ற
தண் துழாய்–திருத் துழாய் மாலை யணிந்த
கோமானை–ஸர்வேஸ்வரனாகிய உன்னை
அந்தி வான் அது காட்டும்–ஸந்தியா காலத்து ஆகாசமானது ஒத்திரா நின்றது.

கலந்து மணியிமைக்கும் கண்ணா–நின்-மேனி மலர்ந்து மரகதமே காட்டும் —
ஸ்ரீ கௌஸ்துபத்தோடே கலந்து பிரகாசியா நின்ற
உன்னுடைய திரு மேனியை –பிரகாசியா நின்ற ஸ்ரமஹரமான மரகதமே காட்டா நின்றது –

நலந்திகழும்-கொந்தின்வாய் வண்டறையும் தண்டுழாய்க்  கோமானை-அந்தி வான் காட்டுமது —
அழகு நிகழா நின்ற கொத்திலே வண்டு அறையா நின்ற திருத் துழாயை யுடைய
சர்வேஸ்வரனை சந்த்யா ராகத்தாலே சிவந்த மேகம் காட்டா நின்றது –

————————————————————————-

அவனுடைய ஸ்வதஸ் ஸித்தமான அழகைப் பின்னையும் உபமானத்திலே பார்க்கிறார்

ஆஸ்ரித ஸூலபனானவனே-ஸ்ரீ கௌஸ்துபத்தோடே கலந்து பிரகாசியா நின்ற
உன்னுடைய திருமேனியை -ஸ்ரமஹரமான மரகத ரத்னமானது விஸ்திருதமான பிரபையை யுடைத்தாய் கொண்டு
ஸ்பஷ்டமாக பிரகாசிப்பியா நின்றது

அழகு விளங்கா நின்றுள்ள கொத்துக்களிலே படிந்து மது பானம் பண்ணின வண்டுகள் சப்தியா நின்றுள்ள
குளிர்ந்த திருத் துழாயை யுடைய சர்வேஸ்வரனான
உன்னை சந்த்யா ராகத்தை யுடைத்தான அந்த ஆகாசமானது பிரகாசிப்பியா நின்றது

திருத் துழாயின் பசுமையும் திவ்ய அவயவங்கள் சிவப்பும் கூடின திருமேனியை அந்தி வான் காட்டும் என்றபடி –

அது போல் காட்டும் என்னவுமாம் –

—————————————————————————————————————

உங்களுடைய பிரதிபந்தகங்கள் வேறு ஒரு வியக்திக்கு ஆகாத படி போம் என்கிறார் –

இதர விஷயங்களில் உள் மனம் புற மானங்களை ஆராய்ந்து சம்சயியாதே
சர்வ ஸமாஸ்ரயணீயனான சர்வேஸ்வரன் திருவடிகளை ஆஸ்ரயிங்கோள் –
உங்களுடைய ஸமஸ்த துக்கங்களும் போம் என்கிறார் –

அது நன்று இது தீது என்று ஐயப்படாதே
மது நின்ற தண்  துழாய் மார்வன் -பொது நின்ற
பொன்னங்கழலே தொழுமின் முழுவினைகள்
முன்னம் கழலும் முடிந்து ——–88-

பதவுரை

அது நன்று இது தீது என்று ஐயம் படாதே–‘அது நல்லதோ? இது கெட்டதோ?‘ என்று ஸந்தேஹப்பட்டுக் கொண்டிராமல்
மது நின்ற தன் துழாய் மார்வன்–தேன் நிறைந்த தண்டுழாய் மாலையைத் திருமார்பிலணிந்த பெருமானுடைய
பொது நின்ற–ஸர்வ ஜந ஸாதாரணமான
பொன் அம் கழலே–விரும்பத் தக்க அழகிய திருவடிகளையே
தொழுமின்–தொழுங்கோள், (அப்படி தொழுதால்)
முன்னம்–முந்துறவே
முழு வினைகள்–ஸமஸ்த பாபங்களும்
முடிந்து–உரு மாய்ந்து
கழலும்–விட்டு நீங்கும்.

அது நன்று இது தீது என்று ஐயப்படாதே–
பகவத் ப்ராவண்யம் நன்று விஷய ப்ராவண்யம் பொல்லாது என்று சம்சயப் படாதே

மது நின்ற தண்  துழாய் மார்வன்–பொது நின்ற-பொன்னங்கழலே தொழுமின் –
சமசயிக்க ஒண்ணாத படி ஆதி ராஜ்ய ஸூ சகமான திருத் துழாயை யுடையவனுடைய
திருவடிகளை ஆஸ்ரயியுங்கோள்

முழு வினைகள்-முன்னம் கழலும் முடிந்து ——
நீங்கள் பண்ணின பாபம் வ்யக்த்யந்தரத்துக்கு ஆகாத படி நசிக்கும் –

——————————————————————————-

இதர விஷயங்களில் உள் மனம் புற மானங்களை ஆராய்ந்து சம்சயியாதே
சர்வ ஸமாஸ்ரயணீயனான சர்வேஸ்வரன் திருவடிகளை ஆஸ்ரயிங்கோள் –
உங்களுடைய ஸமஸ்த துக்கங்களும் போம் என்கிறார் –

சாஸ்திர ஸித்தமான பகவத் விஷயம் நல்லது –
ப்ரத்யக்ஷ ஸித்தமான இதர விஷயங்கள் சாலப் பொல்லாதது -என்னும்
இவ் வர்த்தத்தில் சம்சயப்படாதே —

ஐஸ்வர்ய பிரகாசமாய் தேன் நிறைந்து இருக்கிற குளிர்ந்த திருத் துழாயாலே அலங்க்ருதமான
திரு மார்வை யுடையவனுடைய
சர்வ ஆஸ்ரித சாதாரணமாய் ஸ்ப்ருஹணீயமாய் அழகியதாய் இருந்துள்ள திருவடியை ஆஸ்ரயியுங்கோள்

ஆஸ்ரயண விரோதிகளான ஸமஸ்த பாபங்களும் வியாக்த்யந்தரங்களில் கார்யகரம் ஆகமாட்டாத படி நசித்து
தொழுவதாக ஒருப்பட்ட அளவிலே விட்டு நீங்கும் –

அது நன்று இது தீது என்று ஐயப்படாதே என்று
அனுபூதமான விஷயம் நல்லது இப்போது அனுபவிக்கிற விஷயம் பொல்லாது என்று
இதர விஷயங்களில் உள்மானம் புறமானங்களைப் பார்த்து சம்சயியாதே என்னவுமாம் –

(தேவா நாம்-தானவானாம் -ஜிதந்தா ஸ்தோத்ரம்)

(பகவத் விஷயம் தான் நன்று உலக விஷயம் தீது என்று இருப்பதில் ஐயம் இல்லாமல் உறுதியாக விச்வாஸம் கொள்ள வேண்டும் என்கிறார் -)

(சர்வ லோக சரண்யாயா ராகவாயா மஹாத்மனே -எளிமை மேன்மை சேர்ந்த-ராவணனும் பற்றும்படி
பொது நின்ற பொன் அம் கழல்
சாமான்யம் அதி தெய்வதம்
உறுதியாக பற்ற வேண்டுமே)

—————————————————————————————————

திருமலையிலே குறவரோடு -திருவேங்கடமுடையானோடு வாசியற எல்லாம் உத்தேஸ்யமாய் இருக்கிறபடி –

இப்படி சமாஸ்ரயணீயனானவனைக் கண்டு அனுபவிக்கலாவது திரு மலையிலே கிடீர் என்கிறார் –

(ப்ரத்யக்ஷ தெய்வம் திருமலை அப்பன் இருக்க விஸ்வஸிக்க குறை இல்லையே)

(ஆச்சார்யர்கள் திருக் கோயில் பிரதக்ஷணம் மெள்ள மெள்ள அனைத்தையும் அனுபவித்து செல்வார்களே)

முடிந்த பொழுதில் குற வாணர் ஏனம்
படிந்துழு சால் பைந்தினைகள் வித்த -தடிந்து எழுந்த
வேய்ங்கழை போய் விண் திறக்கும் வேங்கடமே மேலோருநாள்
தீங்குழல் வாய் வைத்தான் சிலம்பு ———-89-

பதவுரை

முடிந்த பொழுதில் குற வாணர்–மரணமடையும் நிலைமையிலுள்ள கிழவர்களான குறவர்கள்
ஏனம் படிந்து உழு சால்–காட்டுப் பன்றிகள் (தங்கள் செருக்காலே மூங்கில்கள் வேர் பறிந்து விழும்படி) படிந்து உழுத சால்களிலே
பை தினைகள் வித்த–புதிய தினை விதைகளை விதைக்க
தடிந்து–அறுத்துப் போட்ட பின்பும்
எழுந்த–(நில வளத்தினால்) ஓங்கி வளர்ந்த
வேய்ங்கழை–மூங்கில் தடிகளானவை
போய்–மேலே சென்று
விண் திறக்கும்–ஆகாசத்தை யளாவப் பெற்ற
வேங்கடம்–திருவேங்கடம்
மேல் ஒரு நாள்–முன்பொரு நாள்
தீம் குழல்–மதுரமான புல்லாங்குழலை
வாய் வைத்தான்–திருப் பவளத்தில் வைத்து ஊதின கண்ண பிரானுடைய
சிலம்பு–திருமலையாம்.

முடிந்த பொழுதில் குறவாணர் —
சரம அவஸ்தையில் வர்த்திக்கிற குறவர்க்கு நிர்வாஹகர் -(சாயம் காலம் என்றுமாம்)

ஏனம்-படிந்துழு சால் பைந்தினைகள் வித்த –
தங்களுக்கு பலம் இன்றிக்கே பன்றி உழுத சாலிலே அழகிய திணைகளை வித்த

தடிந்து எழுந்த-வேய்ங்கழை போய் விண் திறக்கும்–வேங்கடமே –
தினை விரைக்காக வெட்டி எழுந்த வேய்ங்கழை போய் விண்ணைத் திறக்கும் திருமலை

மேலோருநாள்-தீங்குழல் வாய் வைத்தான் சிலம்பு ———
பண்டு ஒரு நாள் இனிய குழலை வாயிலே வைத்து திரு வாய்ப்பாடியில்
உள்ளாரை வசீகரித்தால் போலே
ஒரு மலையிலே நின்று சம்சாரிகளை வசீகரிக்க நிற்குமவன் சிலம்பு –

(ஒரு சிலரை ஒரு காலே ஊதி வசீகரித்தவன் இன்று சர்வர்களையும் ஸதா காலமும் நின்ற நிலையிலே வசீகரிக்கிறான் அன்றோ)

———————————————————————

இப்படி சமாஸ்ரயணீயனானவனைக் கண்டு அனுபவிக்கலாவது திரு மலையிலே கிடீர் என்கிறார் –

அப்போது முடித்தார்கள் இப்போது முடித்தார்கள் என்னும் படி
சரம தசை ஆபன்னரான குற வ்ருத்தர்கள்
தங்கள் ஏர் பிடித்து உழ மாட்டாமையாலும்
ஜாதி உசித வ்ருத்தி தவிர ஒண்ணாமையாலும்
வராஹங்களானவை தாங்கள் செருக்காலே மூங்கில்கள் வேர் பறிந்து விழும்படி படிந்து உழுத சால்களிலே –

உழுத செவ்வி போவதற்கு முன்பே அழகிய தினைகளை விதைக்க
பிற்றை நாள் பன்றிகள் சாய்த்துப் பொகட்ட மூங்கில்களை தினைக்கு களையாக ஒண்ணாது என்று அவர்கள்
வெட்டிக் களைந்த வேய் மூங்கில்கள் ஆனவை போய் ஆகாசத்தை ஊடுருவ வளர்ந்து நிற்கும்படியான திருவேங்கடமே
பண்டு ஒரு நாள் திருவாய்ப்பாடியிலே இடைச்சிகள் முதலானோரை பிச்சேற்றும்படி அழகிய திருக் குழலை திருப்பவளத்திலே
வைத்து ஊதினவன் -பின்புள்ள சம்சாரிகளையும் வசீகரிக்கைக்காக விரும்பி வர்த்திக்கிற திரு மலை — சிலம்பு -மலை –

அன்றிக்கே
அந்தி விட்டவாறே
குறவர்கள் ஏனம் படிந்து –
குறவர்களும் மூங்கில்களும் திருவேங்கடசமுடையானும் உத்தேச்யம் என்றவாறு

ஸ்வாபதேசம்
குற வாணர்கள் -சரம பர்வ நிஷ்டையில் உள்ளவர்களைச் சொன்னவாறு -பயம் நீங்கி -நாமாக உழுது பயிர் செய்யாமல்
இருக்கும் நாள் கைங்கர்யம்
வராஹ பெருமாள் காட்டிய வழியிலே சொல்லுபவர்கள்
ஈனச் சொல்லா -ஞானப்பிரானை அல்லது இல்லை நான் கண்ட நல்லதுவே
ஸூவ ப்ரயோஜன ஸூவ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி
மூங்கில் வெட்டி -அஹங்காரங்கள் மமகாரங்கள் போக்கி
பின் வளர்ந்தது –
ப்ராப்யமாக வளர்ந்து யாவதாத்மா பாவியாய்
பரார்த்த கைங்கர்யம் அங்கும் உண்டே
அதுவே விண் முட்ட வளர்ந்தது என்கிறார் –

—————————————————————————————————————-

திருமலையில் மூங்கில்கள் அகப்பட உத்தேசியமான இடத்தில்
அதில் நின்றவன் உத்தேச்யமாக சொல்ல வேண்டா இறே என்கிறார் –

திருமலையில் மூங்கில்களோ பாதி திருவேங்கட முடையானும் உத்தேச்யம் ஆகையால் அங்கே நின்று
ஆஸ்ரித ரக்ஷணம் பண்ணி அருளுகிறவன் படியை அருளிச் செய்கிறார்

சிலம்புஞ் செறி கழலும் சென்றிசைப்ப விண்ணார்
அலம்பிய சேவடி போய் அண்டம் -புலம்பிய தோள்
எண்டிசையும் சூழ இடம் போதாது என் கொலோ
வண்டுழாய் மாலளந்த  மண் ————90-

பதவுரை

சிலம்பும்–(திருவடிகளில் சாத்தின) நூபுரங்களும்
செறி கழலும்–செறிவாக அணிந்த வீரத் தண்டைகளும்
சென்று இசைப்ப–எங்கும் ஒலிக்க
விண் ஆறு–ஆகாச கங்கையிலே
அலம்பிய–விளக்கப்பட்ட
சேவடி–திருவடிகளானவை
அண்டம் போய்–அண்ட பித்தி யளவும் நீண்டு போன போது,
புலம்பிய–(அனைவராலும்) துதிக்கத் தக்க
தோள்–திருத் தோள்கள்
எண் திசையும் சூழ–எட்டுத் திசைகளையும் வியாபிக்க
இடம் போதாது–இடம் போர வில்லை,
வண் துழாய் மால்–அழகிய திருத் துழாய் மாலை யணிந்த எம்பெருமான்
அளந்த–அளந்து கொண்ட
மண்–பூமியானது
என் கொல்–(சிறியதே போலும்)

சிலம்புஞ் செறி கழலும் சென்றிசைப்ப விண்ணார் அலம்பிய சேவடி போய் அண்டம் –
சிலம்பையும் செறி கழலையும் யுடைத்தாய் -கங்கையிலே விளக்கின திருவடி போய் அண்டம் சென்று இசைப்ப

புலம்பிய தோள்-எண்டிசையும் சூழ இடம் போதாது என் கொலோ-வண்டுழாய் மாலளந்த  மண் ——
சங்கைஸ் ஸூ ராணாம் என்ற தேவர்களால் திரள் திரளாக நின்று ஏத்தப் பட்ட தோள்
எட்டுத் திக்கும் சூழ இடம் போராது
அளக்குமவன் அளக்கப்படுமத்தை உண்டாக்கிக் கொண்டு அன்றோ அளப்பது –

——————————————————————

திருமலையில் மூங்கில்களோ பாதி திருவேங்கட முடையானும் உத்தேச்யம் ஆகையால் அங்கே நின்று
ஆஸ்ரித ரக்ஷணம் பண்ணி அருளுகிறவன் படியை அருளிச் செய்கிறார்

திருச் சிலம்பும் செறியச் சாத்தின திரு வீரக் கழலும் சர்வோதிக்கமாக ஒக்கச் சென்று த்வனிக்க –
ஆகாச கங்கையில் விளக்கப்பட்ட
சிவந்த திருவடிகளானவை அண்ட பித்தியிலே தாக்க –
சகல லோகங்களும் வாய் புலத்தும் படியான அழகை யுடைத்த திருத் தோள்களானவை எட்டுத் திக்குகளையும் வியாபிக்க –
அழகிய திருத் துழாய் மாலையாலே அலங்க்ருதனான
சர்வேஸ்வரன் அளந்த பூமியானது
அவன் தனக்கு நின்று அளக்க இடம் போதாது -இது என்ன ஆச்சர்யம் தான் –

———————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

மூன்றாம் திருவந்தாதி– பாசுரங்கள்-71-80—ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் –

November 12, 2016

விரோதி நிரசன ஸ்வ பாவனானவன் நின்று அருளின திருமலை வ்ருத்தாந்தத்தை
அனுபவித்து இனியர் ஆகிறார் –

(தேஹ யாத்திரையே ஸமாஸ்ரயணமாகக் கொல்லுமவன் என்றார் கீழ்
அதற்கு வரும் பிரதிபந்தங்களையும் போக்கி அருளுபவனும் இந்த திருமலை என்கிறார்

சமன் கொள் வீடு தரும் சமன் குன்றம்-இங்கு யானைக்கு பிரமிப்பு –
கீழ் கடுவனுக்கு பார்த்தோம் -)

களிறு முகில் குத்தக் கையெடுத்தோடி
ஒளிறு மருப்பொசிகை யாளி -பிளிறி
விழக் கொன்று நின்றதிரும் வேங்கடமே மேனாள்
குழக் கன்று கொண்டு எறிந்தான் குன்று ——–71-

பதவுரை

களிறு–யானையானது
கை எடுத்து ஓடி–தனது துதிக்கையை எடுத்துக் கொண்டு வேகமாக ஓடி
முகில்–(மத யானை போலெழுந்து) மேகங்களை-மத யானை போல் எழுந்த மா முகில்கள்
குத்த–(எதிரி யானை யென்று நினைத்துக்) குத்த
யாளி–(இதைக் கண்ட) யாளியானது
ஒளிறு மருப்பு–(அந்த யானை யினுடைய) விளங்குகின்ற கொம்பை
ஓசி–முறிக்கிற
கை–கையை யுடைத்தாய்க் கொண்டு
பிளிறி விழ கொன்று–(அந்த யானை) வாய் விட்டலறிக் கொண்டு விழும்படி (அதனைக்) கொன்று
நின்று அதிரும்–அங்கேயே நின்று கொண்டு பெரு முழக்கம் செய்யப் பெற்ற
வேங்கடமே–திருவேங்கடமே
மேல் நாள்–முன்பொரு காலத்தில்
குழ கன்று கொண்டு–இளங்கன்றை (எறி குணிலாகக்) கொண்டு
எறிந்தான்–(விளங்கனிமீது) எறிந்த பிரானுடைய
குன்று–திருமலையாம்.

களிறு முகில் குத்தக் கையெடுத்தோடி–
கையை எடுத்துக் கொண்டு ஓடிக் களிறானது முகிலைக் குத்த –

ஒளிறு மருப்பொசிகை யாளி –வெண் மருப்பை முறியா நின்ற யாளி —
கை எடுத்தோடி என்று யாளிக்காகாச் சொல்லவுமாம் –

பிளிறி-விழக் கொன்று நின்றதிரும் வேங்கடமே–
யானையானது பிளிறிக் கொண்டு விழும் படிக்கு ஈடாகக் கொன்று
சினத்தாலே நின்று அதிரா நின்ற திருமலை –

மேனாள்-குழக் கன்று கொண்டு எறிந்தான் குன்று ——–
சஹஜ சத்ருக்களை முடித்து விரோதி போகப் பெற்றது என்று உகந்து நிற்கும் அவனுடைய திருமலை இறே –

திருமலையில் பின்னை ஒன்றுக்கு ஓன்று பாதகம் ஆகுமோ என்னில்
அக்நீஷோமீய ஹிம்சையோ பாதி இறே அவற்றுக்கும் –

(திவ்ய தேசங்களில் அனைத்துமே உத்தேச்யம்
போது அரிந்து வானவர்கள் -திவ்ய தேச முதலைகள் விரோதம் அல்லவே
இங்கு ஆகுமோ என்னில்
பலி கொடுக்கும் ஆட்டுக்கும் ஸ்வர்க்கம் கிட்டுமே
அறுவை சிகிச்சை -இப்பொழுது துன்பம் நீண்ட நாளுக்கு இன்பம் போல் ப்ரஸவ வலி ஹிம்ஸை அல்லவே
கட்டடம் கட்ட ஒத்தாசை பண்ணியவர்களுக்கு காவேரியில் தள்ளி மோக்ஷம் அருளிய கலியன்)

—————————————————————-

விரோதி நிரசன ஸ்வ பாவனானவன் நின்று அருளின திருமலை வ்ருத்தாந்தத்தை
அனுபவித்து இனியர் ஆகிறார் –

ஆனையானது தன் துதிக்கையை எடுத்துக் கொண்டு பெரிய வேகத்தோடு சென்று மத யானை போலே எழுந்த
மா முகிலை (8-9)(1-2)பிரதி கஜம் என்று புத்தி பண்ணி குத்த –

இத்தைக் கண்ட யாளியானது -அந்த யானையினுடைய வெளுத்த நிறத்தை யுடைத்தான கொம்பை
அநாயாசேன முறியா நின்ற கையை யுடைத்தாய்க் கொண்டு
அது வாய் விட்டு அலறிக் கொண்டு முறிந்து விழும்படி கொன்று பொகட்டு
பின்னையும் சீற்றம் மாறாத படியால்
இவ்விடம் தன்னிலே நின்று ஷூத்ர மிருகங்கள் மண் உண்ணும் படி கர்ஜியா நிற்கும் வேங்கடமே
முன்பு ஒரு நாளிலே குழக் கன்றைக் கொண்டு விளங்கனி எறிந்தவனுடைய திருமலை –

மத யானை போல் எழுந்த மா முகில்காள் வேங்கடத்தைப்
பதியாக வாழ்வீர்காள் பாம்பணையான் வார்த்தை என்னே
கதி என்றும் தானாவான் கருதாது ஓர் பெண் கொடியை
வதை செய்தான் என்னும் சொல் வையகத்தார் மதியாரே–8-9-

வாலி மா வலத்தொருவன துடல் கெட வரிசிலை விளைவித்து அன்று
ஏல நாறு தண் தடம் பொழில் இடம் பெற இருந்தநல்லிமயத்துள்
ஆலி மா முகிலதிர் தர வருவரை அகடுற முகடேறி
பீலி மா மயில் நடம் செயும் தடம் சுனைப் பிரிதி சென்று அடை நெஞ்சே –1-2-1-

(வண்டினம் முரலும் சோலை*  மயிலினம் ஆலும் சோலை,* 

கொண்டல் மீதுஅணவும் சோலை*  குயிலினம் கூவும் சோலை,*
அண்டர்கோன் அமரும் சோலை*  அணி திருவரங்கம் என்னா,* 
மிண்டர் பாய்ந்து உண்ணும் சோற்றை  விலக்கி* நாய்க்கு இடுமின்நீரே.  )

—————————————————————————————————-

(மேலை இளங்குமரர் -உயரத்தில் – மேல் தன்மையில் மேலானவர் -யத்ர பூர்வ ஸாத்யா சந்தி தேவர்)

(நான்கு வியாக்கியானங்கள் இப்பாட்டுக்கு-வேங்கடத்தைப் பதியாக வாழ்வதால் வந்த ஏற்றங்கள்

திருமலையின் உயரம் -கையில் சக்தி -அடர்ந்த மூங்கில் -வளையலின் ஒளி சிறப்பு -நான்கையும் சொன்னவாறு

விளையாடுகிற கழலானது-அம்மானை ஆட -அது மேல் சென்று ராகுவை விடுவித்தது என்றும்
மூங்கில் சென்றும் என்றும் )

குன்று ஒன்றினாய குற மகளிர் கோல் வளைக்கை
சென்று விளையாடும் தீங்கழை  போய் -வென்று
விளங்கு மதி கோள் விடுக்கும் வேங்கடமே மேலை
இளங்குமரர்   கோமான் இடம் —–72-(தீங்கழை-தீம் கழல் பாட பேதம் )

பதவுரை

குன்று ஒன்றினாய–அத் திருமலை யொன்று தவிர வேறொரிடமும் அறியாதிருக்கிற
குற மகளிர்–குறத்திகள்
கோல் வளை கை–அழகிய வளைகளணிந்த கைகளினாலே
சென்று–மலை மேலேறி
விளையாடும்–விளையாடா நிற்கப் பெற
தீம் கழை–அழகிய மூங்கில்கள்
போய்–சந்திர மண்டலத்தளவும் போய்
வென்று–ராஹுவைத் தகர்த்து,
விளங்கு மதி கோள் விடுக்கும்–விளங்கா நின்ற சந்திரனுடைய கிரஹணத்தை விடுவிக்கப் பெற்ற
வேங்கடமே–திருமலையே
மேலே–மேலுலகத்திலுள்ள
இளங் குமரர் கோமான்–நித்ய யுவாக்களான நித்ய ஸூரிகளுக்குத் தலைவனான பெருமானுடைய
இடம்–திவ்ய தேசமாம்.

குன்று ஒன்றினாய குற மகளிர் —
திருமலைக்கு கீழ் இழியில் குடிப் பழியாம் குறவருடைய பெண்கள் –

கோல் வளைக் கை-சென்று விளையாடும் திங்கழை  போய் –
குறவருடைய பெண்கள் கோல் வளையை யுடைத்தான கையாலே-சென்று விளையாடுகிற கழலானது போய் –

வென்று விளங்குமதி கோள் விடுக்கும் வேங்கடமே மேலை

இளங்குமரர்   கோமான் இடம் —-
உஜ்ஜவலமான சந்திரனை ராஹு வானது க்ரஹிக்க ஒண்ணாது என்று
வென்று சந்திரனுக்கு அந்த வியசனத்தைப் போக்கும் திருமலை பரம பதத்தில் தன்னோடு ஓக்க
(த்வி) த்வாதஸ வார்ஷிகரான நித்ய ஸூ ரிகளுக்கு சேஷியானவன் இடம் -(பஞ்ச விம்சதி வார்ஷிகர் உபநிஷத் )

தீங்கிழை -என்று
இவர்கள் ஊஞ்சல் ஆடுகைக்குப் பிடித்து விளையாடும் மூங்கில் ஆகவுமாம் –

(சிகரம் உயர ஏற்றம்-பெண்களின் கையின் திண்மை -இரண்டையும் சொன்னவாறு )

————————————————————

திருப்பதியினின்று இழிகை குடிப் பழி என்று நினைத்துத் திருமலை ஒன்றையுமே உடையராய்க் கொண்டு
வேங்கடத்தைப் பதியாக வாழக் கடவராய் -ஸ்வ இச்சையால் சென்று விளையாடும் குறப் பெண்களுடைய
தர்ச நீயமான வளையை உடைத்தான கையானது –
பசுமையாலும் சுற்று உடைமையாலும் ஒழுகு நீட்சியாலும் அழகிய மூங்கில்களை வென்று

(வேய் போலும் எழில் தோளி -அழகு சொல்லக் கடவது
இங்கு குறப் பெண்களுடைய கை வென்றதை இங்கு சொல்லி மேல் ராகுவை வென்றதைச் சொல்லி)

அதுக்கு மேலே
உஜ்ஜவலனான சந்திரனை க்ரஸிக்க ஒருப்படுகிற ராஹுவாலே வந்த அவன் வியசனத்தைப் போக்கும் திருமலையே —
சர்வ உத்தமராய் -நிரந்தர அனுபவத்தால் நித்ய யவ்வன ஸ்வ பாவரான நித்ய ஸூ ரிகளுக்கு ஸ்வாமி யானவன்
விரும்பி வர்த்திக்கும் ஸ்தானம் –

விளையாடும் குற மகளிர் கோல் வளைக் கையானது சென்று நல்ல மூங்கில் செறிவை நீக்கிக் கிரணங்களை யுடைய
சந்திரன் இங்குப் புகுரப் பெறாமையால் உண்டான இடரை நீக்கும் என்றுமாம்

அன்றிக்கே –
அவர்கள் வளையின் ஒளி சந்திரன் ஒளி புகுரப் பெறாத மூங்கில் இருளை அறுத்து வெளி யாக்கிச்
சந்திரன் மறுவையும் போக்கும் -என்றுமாம் –

அங்கனும் இன்றிக்கே –
குற மகளிர் கோல் வளைக் கையாலே ஊஞ்சல் ஆடுகைக்காக வளைத்து விட்ட மூங்கிலானது
போய் விளங்கு மதி கோள் விடுக்கும் என்றுமாம் –

——————————————————————————————————————–

திருமலையில் நின்று அருளின மநோ ஹாரி சேஷ்டிதங்களை யுடையனானவன் திருவடிகளை
ஏத்துகையே நாவால் கொள்ளும் பிரயோஜனம் என்கிறார் –

இடம் வலம் ஏழ் பூண்ட இரவித் தேரோட்டி
வட முக வேங்கடத்து மன்னும் -குட நயந்த
கூத்தனாய் நின்றான் குரை கழலே கூறுவதே
நாத் தன்னால் உள்ள  நலம் ——73-

பதவுரை

ஏழ் பூண்ட–ஏழு குதிரைகளைப் பூண்ட-ஏழு சந்தஸ்ஸுக்கள்
இரவி தேர்–ஸூர்யனுடைய தேரை
இடம் வலம்–(மேருவுக்கு) இடப்பக்கமாகவும் வலப்  பக்கமாகவும்
ஒட்டி–(அந்தர்யாமியா யிருந்து கொண்டு) நடத்துகிறவனும்
வட முகம் வேங்கடத்து மன்னும்–வட திசையின் கண்ணுள்ள திருவேங்கடத்தில் நித்ய வாஸம் பண்ணுமவனும்
குடம் நயந்த கூத்தன் ஆய் நின்றான்–ஆசையோடு குடக் கூத்தாடின கண்ணபிரான் போன்று நிற்பவனுமான பெருமானுடைய
குரை கழல் கூறுவதே–ஆபரண வொலி பொருந்திய திருவடிகளே ஏத்துவதே
நா தன்னால் உள்ள நலம்–நாவினால் கொள்ளக் கூடிய பிரயோஜனம்.

இடம் வலம் ஏழ் பூண்ட இரவித் தேரோட்டி-
இடத்திலும் வலத்திலுமாக ஏழு குதிரை பூண்ட ஆதித்யனுடைய தேரை ஒட்டி
ஏழு பூண்ட ஆதித்ய ரதத்தை மஹா மேருவுக்கு வலமே இடமாக -மார்க்கமாக ஒட்டி என்றுமாம்
இரவியினுடைய தேரை பாரத சமரத்திலே நடத்தி -என்றுமாம் –

(துவாதச ஆதித்யர்கள் -காயத்ரி சந்தஸ்ஸுக்கள் -(6-12-அஷரம் பாதம் -காயத்ரி முக்காலி மூன்று -ஒவ்வொன்றும் 8 அக்ஷரம் )

(காயத்ரீ, ப்ருஹதீ, உஷ்ணிக், ஜகதீ, த்ரிஷ்டுப், அநுஷ்டுப், பங்க்தி என்ற ஏழு சந்தஸ்ஸுக்கள் ஏழு குதிரைகளாகும்.)

வடமுக வேங்கடத்து மன்னும் –
வடக்கில் திக்கில் உண்டான திருமலையிலே நித்ய வாசம் பண்ணுகிற –
குட நயந்த-கூத்தனாய் நின்றான் குரை கழலே கூறுவதே

நாத் தன்னால் உள்ள  நலம் ——
குடமாடி நின்றவனுடைய ஆபரண ஒலியை யுடைத்தான திருவடிகளைக் கூறுகை
நாவால் படைக்கும் சம்பத்து –

குடக் கூத்து ஆடின இளைப்பு ஆறத் திருமலையிலே வந்து நின்றான் போலே –

———————————————————————-

திருமலையில் நின்று அருளின மநோ ஹாரி சேஷ்டிதங்களை யுடையனானவன் திருவடிகளை
ஏத்துகையே நாவால் கொள்ளும் பிரயோஜனம் என்கிறார் –

மேருவுக்கு இடமாயும் வலமாயும் சஞ்சரிக்கக் கடவதாய் –
ஏழு நாமத்தை யுடைத்தாய் இருப்பதாய் –
ஏழு குதிரை பூண்ட ஆதித்ய ரதத்தை தத் அந்தர்யாமியாய்க் கொண்டு ஒட்டி
வடக்குத் திக்கில் பிரதானமாய் இருந்துள்ள திருமலையிலே நித்ய வாசம் பண்ணா நின்றானுமாய்
அத்யபி நிவிஷ்டனாய்க் கொண்டு குடம் எடுத்து ஆடுகிற மநோ ஹாரி சேஷ்டிதத்தை உடையவனாய்
நின்றவனுடைய ஆபரணத் த்வனியை உடைத்தான திருவடிகளை ஏத்துகையே நாவால் கொள்ளும் பிரயோஜனம் –

(பாரோர்கள் எல்லாம் மகிழ பறை கறங்க –
சீரார் குடம் இரண்டு -ஏந்தி -செழும் தெருவே –
ஆராரெனச் சொல்லி -ஆடுமது கண்டு
எராரிள முலையார் என்னையரும் எல்லாரும் –
வாராயோ என்றார்க்குச் சென்றேன் என் வல் வினையால் –
காரார் மணி நிறமும் கை வளையும் காணேன் நான் –)

(மன்றம் அமரக் கூத்தாடி மகிழ்ந்தாய் என்றும் )

(ஜிஹ்வே கீர்தய கேசவம் -முகுந்த மாலை)

——————————————————————————————————-

அவன் பக்கல் ஸ்நேஹம் யுடையாரில் யசோதை பிராட்டி அத்தனை பரிவர் இல்லை கிடீர் என்கிறார் –

நலமே வலிது கொல் நஞ்சூட்டுவன் பேய்
நிலமே புரண்டு போய் வீழ  -சலமே தான்
வெங்கொங்கை   யுண்டான் மீட்டாய்ச்சி யூட்டுவான்
தங்கொங்கை வாய் வைத்தாள் சார்ந்து ——–74-

பதவுரை

சலமே–கபடமாகவே
நஞ்சு–விஷத்தை
ஊட்டு–உண்பிக்க வந்த
வன் பேய்–கொடிய பூதனை யானவள்
நிலமே–பூமியிலே
புரண்டு போய் வீழ–(பிணமாய்) மறிந்து போய் விழும்படியாகக்
தான் சலமே–தானும் கபடமாகவே
வெம் கொங்கை–(அவளது) வெவ்விய முலையை
உண்டானை–அமுது செய்த கண்ண பிரானை-தாய் முலை இருக்க பேய் முலை வாய் வைத்த பித்தன்
ஆய்ச்சி–யசோதை யானவள்
மீட்டு–(அப் பூதனை பக்கலில் நின்றும்) மீட்டு
ஊட்டுவன்–(தனது முலைப் பாலை) உண்பிப்பதற்காக
சார்ந்து–அணுகிச் சென்று
தன் கொங்கை–தனது முலையை
வாய் வைத்தான்–அவனது வாயிலே உண்ணக் கொடுத்தாள்,
நலமே வலிதுகொல்–இந்த ப்ரேமம் எவ்வளவு கனத்தது!

நலமே வலிது கொல் —
ஸ்த்ரீத்வ பிரயுக்தமான அச்சத்தில் காட்டில் ஸ்நேஹமே வலிதாகாதே–

சலமே தான்- நஞ்சூட்டுவன் பேய்–
தாய் வேஷத்தைக் கொண்டு நஞ்சூட்டுவதாக வந்த வலிய பேயானது –

(தாய் வடிவில் வந்த பேய் -கைகேயியை பரதன் குகன் இடம்-குகன் பெருமாள் திரு உள்ளம் புண் படும் -)

(பொய்யர்க்கே பொய்யனாகும் -இவள் சல புத்தி யுடன் போக அவன் சலமே தான் வெங்கொங்கை   யுண்டான் )

நிலமே புரண்டு போய் வீழ  –
நிலத்திலே புரண்டு விழும் படிக்கு ஈடாக(பாலுடன் பிராணனும் வரும்படி இழுத்து உண்டான் )

வெங்கொங்கை   யுண்டான் மீட்டாய்ச்சி யூட்டுவான் தங்கொங்கை வாய் வைத்தாள் சார்ந்து ——
விஷ முலை யுண்டத்துக்குப் நலமே வலிது கொல்-
அச்சமும் ஸ்நேஹமும் கூடினால் -ஸ்நேஹமே வலிதாகாதே —

முற்ற மூத்துக் கோல் துணையா முன்னடி நோக்கி வளைந்து
இற்ற கால் போல் தள்ளி மெள்ள இருந்து அங்கு இளையா முன்
பெற்ற தாய் போல் வந்த பேய்ச்சி பெரு முலை யூடு உயிரை
வற்ற வாங்கி யுண்ட வாயான் வதரி வணங்குதுமே –1-3-1-

———————————————————

அவன் பக்கல் ஸ்நேஹம் யுடையாரில் யசோதை பிராட்டி அத்தனை பரிவர் இல்லை கிடீர் என்கிறார் –

பேய் வடிவை மறைத்துத் தாய் வடிவு கொண்டு வருகை யாகிற க்ருத்ரிமத்தாலே
விஷத்தைப் புஜிப்பதாக ஒருப்பட்ட கடின சித்தையான பூதனையானவள் பூமியிலே பிணமாய் மறிந்து போய்
விழும்படியாக வெவ்விய முலையை அமுது செய்தவனை முலையை அமுது செய்தவனை
அவள் பக்கலில் நின்றும் மீட்டு யசோதை பிராட்டி யானவள்

விஷத்துக்கு ப்ரத்ய ஒளஷதமான அம்ருதத்தை புஜிப்பதாக கேட்ட இடத்திலே மோஹித்து விழாதே அவ்வளவும்
கால் நடை தந்து சென்று கிட்டித் தன்னுடைய முலையை அவன் திருப் பவளத்திலே கொடுத்தாள் –

ஆன பின்பு நம்மை இழக்க வரில் செய்வது என் என்று பயப்பட்டு மீளுகைக்கு உடலான அறிவில் காட்டிலும்
தன்னைப் பேணாதே அவனைப் பேணுகைக்கு உறுப்பான பிரேமமே வலிதாகாதே –
ஒருத்தி யுடைய ஸ்நேஹம் இருக்கும் படியே -என்று வித்தாராகிறார் –

என்னொருவர் மெய்யென்பர் ஏழு உலகு உண்டு ஆலிலையில்
முன்னோருவனாய முகில் வண்ணா நின்னுருகிப்
பேய்த்தாய் முலை தந்தாள் பேரிந்திலளால் பேரமர்க்கண்
ஆய்த்தாய் முலை தந்தவாறே —முதல் திருவந்தாதி —-34–

—————————————————————————————————–

இப்படி விரோதி நிரசன ஸ்வ பாவனான ஸ்ரீ கிருஷ்ணன் விரும்பி வர்த்திக்கிற
திருமலை விருத்தாந்தத்தை அனுபவிக்கிறார் –

(மதி தவழ் குடுமி மாலிருஞ்சோலை போல் ஒக்கம்-திருமலையில் எல்லாமே உத்தேச்யம் தானே -)

சார்ந்தகடு தேய்ப்பப்த் தடாவிய கோட்டுச்சிவாய்
ஊர்ந்தியங்கும் வெண் மதியின் ஒண் முயலை -சேர்ந்து
சின வேங்கை பார்க்கும் திருமலையே ஆயன்
புன வேங்கை நாறும் பொருப்பு —–75-

பதவுரை

தடாவிய–பரப்பை யுடைத்தான
கோடு-சிகரங்களினுடைய
உச்சி வாய்–உச்சயிலே
அகடு தேய்ப்ப–கீழ் வயிறு உராயும்படியாக
சார்ந்து–கிட்டி
ஊர்ந்து இயங்கும்–மெல்ல ஸஞ்சரிக்கின்ற
வண் மதியின்–அழகிய சந்திரனிடத்துள்ள
ஒண் முயலை–அழகிய முயலை,
சினம் வேங்கை–கோபத்தை யுடைத்தான வேங்கைப் புலியானது-வேங்கை மரத்துக்கும் ஒருவகைப் புலிக்கும் பெயர்
சேர்ந்து–கிட்டி
பார்க்கும்–(அதைப் பிடித்துக் கொள்ளவும் விட்டுப் போகவும் மாட்டாமல்) எப்போதும் பார்த்தபடியே நிற்கப் பெற்ற
ஆயன்–கண்ணபிரானுடையதாய்
புனம் வேங்கை நாறும்–தன்னிலத்தில் வளர்ந்து செழிப்புற்ற வேங்கை மரங்கள் கமழப் பெற்றதான
பொருப்பு–மலை

சார்ந்தகடு தேய்ப்பப்த் தடாவிய கோட்டுச்சிவாய்–
பரந்த கொடு முடியில் கிட்டிக் கீழ் வயிறு தெப்ப-

ஊர்ந்தியங்கும் வெண் மதியின் ஒண் முயலை –
போக்யதையாலே மெள்ள சஞ்சரியா நின்ற சிகரத்தில் தேய்க்கையாலே
ஒளியை யுடைத்தான சந்திரன் பக்கல் முயலை –

(பாலகன் என்று பரிபவம் செய்யேல் -நின் முகம் கண்ணுளவாகில் நீ இங்கே நோக்கிப் போ -பெரியாழ்வார்)

(தேய்க்கையாலே செயற்கை அழுக்கு போக -இயற்கை கரும்திட்டு -முயல் – போகாமல் விளங்குமே)

சேர்ந்து-சின வேங்கை பார்க்கும் திருமலையே —
கிட்டிச் சினத்தாலே புலி படப் பார்க்கும் திருமலை -(முயல் பட்டுப்போகும் படி தீ விழி )

ஆயன்-புன வேங்கை நாறும் பொருப்பு —–
இடையர்க்கு காட்டில் மரங்களுடைய நாற்றம் சால பிரியம் இறே –

(காடு வாழ் சாதியையும் ஆகப் பெற்றான் -காட்டுப் பூவும் இவன் இருக்கவே கமழும் அன்றோ)

——————————————————————

இப்படி விரோதி நிரசன ஸ்வ பாவனான ஸ்ரீ கிருஷ்ணன் விரும்பி வர்த்திக்கிற
திருமலை விருத்தாந்தத்தை அனுபவிக்கிறார் –

பரப்பை யுடைத்தான சிகரங்களினுடைய உச்சி இடத்திலே கீழ் வயிறு தேயும் படியாகக் கிட்டி
அங்குத்தை போக்யத்தையிலே கால் தாழ்ந்து மெள்ள சஞ்சரிக்கக் கடவனாய் –
கொடு முடியில் தேய்க்கையாலே சாணையிலே இட்டால் போலே ஒளியை யுடையனாய்
இருக்கிற சந்திரன் பக்கல் யுண்டான அழகிய முயலை –

கோபத்தை யுடைத்தான வேங்கைப் புலியானது கிட்டித் தனக்கு ஆமிஷமான முயலாகக் கருதி –
பிடித்துக் கொள்ளுதல் -விட்டுப் போதல் செய்ய மாட்டாதே
எப்போதும் பார்த்த படியே நிற்கும் திருமலையே

ஸ்ரீ கிருஷ்ணன் என்னது என்று அபிமானித்த ஸ்தலமாய்
ஜாதி உசிதமான தன்னிலத்திலே வேங்கைகள் நிரந்தரமாகப் பரிமளிக்கும் பர்வதம் –

————————————————————————————————-

(ஊன் வாட உண்ணாது உயிர் காவலிட்டு உடலில் பிரியாப் புலன் ஐந்தும் நொந்து
தாம் வாட வாடத் தவம் செய்ய வேண்டா தமதா இமையோர் உலகாள கிற்பீர்
கானாட மஞ்சைக் கண மாட மாடே கயலாடு கானீர்ப் பழனம் புடை போய்
தேனாட மாடக் கொடியாடு தில்லைத் திருச் சித்ர கூடம் சென்று சேர்மின்களே–3-2-1-)

(இளைப்பினை இயக்கம் நீக்கி இருந்து முன் இமையைக் கூட்டி
அளப்பில் ஐம்புலன் அடக்கி அன்பு அவர் கண்ணே வைத்து
துளக்கமில் சிந்தை செய்து தோன்றலும் சுடர் விட்டு ஆங்கே
விளக்கினை விதியில் காண்பர் மெய்ம்மையே காண்கிற் பாரே–18-)

(ஸ்வ யத்னத்தால் காண்பாருக்கு காணப் போகாது –என்கிறது –
சரணம் சொல்லி நிரந்தரம் கைங்கர்யம் செய்தாலே போகுமே
கோர மா தவம் செய்தான் அவன் அன்றோ நம்மைப்பெற
இங்கும் நீர் தவம் செய்ய வேண்டா)

(அறியேன் மற்றருள் என்னை யாளும் பிரானார்
வெறிதே யருள் செய்வர் செய்வார்கட்குகந்து
சிறியேனுடைச் சிந்தையுள் மூவுலகும் தன
நெறியா வயிற்றில் கொண்டு நின்று ஒழிந்தாரே–8-7-8–)

(வெறிதே யருள் செய்வர் –நிர்ஹேதுகமாக திருவருள் செய்வர் –யமே வைஷ வ்ருணுதே -கடவல்லி உபநிஷத் -2-என்கிறபடியே
தான் அங்கீகரிக்க நினைத்தார்க்கு)

(சும்மெனாதே கை விட்டு ஓடிப்போகுமே
நாம் ஆராய்ந்து கை தொழுதால் என்றும்
தீ வினைகள் ஆய்ந்து விலகிப்போகுமே)

சர்வேஸ்வரன் சம்சாரத்திலே புகுந்து தன்னுடம்பைப் பேணாதே நம் கார்யம் செய்யா நின்றான்
நீங்கள் உடம்பை ஒறுக்க வேண்டா -என்கிறார் –

உடம்பை ஒறுத்து -துஷ்கரமான சாதனங்களை அனுஷ்ட்டித்து துக்கப்பட வேண்டா —
வெஃகாவில் துயில் அமர்ந்த வேந்தை ஆஸ்ரயிக்க சகல துக்கங்களும்
தன்னடையே விட்டுப் போம் என்கிறார் –

பொருப்பிடையே நின்றும் புனல் குளித்தும்
ஐந்து நெருப்பிடையே நிற்கவும் நீர் வேண்டா -விருப்புடைய
வெக்காவே சேர்ந்தானை மெய்ம் மலர் தூயக் கை தொழுதால்
அக்காவே தீ வினைகள் ஆய்ந்து ——-76-

பதவுரை

(ஒ உலகத்தவர்களே)
நீர்–நீங்கள்
பொருப்பு இடையே–மலைகளின் நடுவே
நின்றும்–நின்று கொண்டும்
புனல்–நீர் நிலைகளிலே
குளித்தும்–முழுகிக் கொண்டும்
ஐந்து நெருப்பு இடையே–பஞ்ச அக்நி மத்யத்திலே
நிற்கவும்–நின்று கொண்டும் தவஞ்செய்ய
வேண்டா–வேண்டியதில்லை,
விருப்பு உடைய–(எல்லாராலும்) விரும்பத் தக்கதா யிருக்கின்ற
வெஃகா–திரு வெஃகாவில்
சேர்ந்தானை–வந்து கண் வளர்த்தருளும் பெருமானை
மெய்–மெய்யாக (அநந்நய ப்ரயோஜநமாக)
மலர் தூய் கை தொழுதால்–புஷ்பங்களைப் பணிமாறி வணங்கப் பெற்றால்
தீ வினைகள்–துஷ் கருமங்களெல்லாம்
ஆய்ந்து–(நமக்கு இவ்விடம் வாஸயோக்யமன்று என்று) நிரூபித்தறிந்து
அஃகாவே–சுருங்கிப் போக மாட்டாவோ? (அகன்றோடிப் போய்விடுமென்கை)

(தொழுதால்-ஆல் –அநந்யார்ஹமாக கை தொழுவது துர்லபம் -என்பதைக் காட்டியவாறு)

பொருப்பிடையே நின்றும் புனல் குளித்தும்–
பனி நாள் மலைகளில் (நின்றும் பனி நாளில்  )பொய்கைளிலே புக்குக் குளித்து

ஐந்து நெருப்பிடையே நிற்கவும் நீர் வேண்டா–
கோடை நாள் பஞ்சாக்கினி மத்யஸ்தனாய் நிற்கவும் வேண்டா –

(வேண்டா என்று முன்னிலையாகச் சொல்வதே போதுமே
நீர் வேண்டா என்று குறிப்பிட்டுச் சொல்வான் என்னில்
நம்மைப் பெறவே அவன் கோர மா தவம் செய்கின்றான் என்பதை காட்டவே -)

(தஸ்மாத் நியாஸமே உத்க்ருஷ்ட தபஸ் ஸூ)

(மூன்று தத்வங்கள் மூன்று காலங்கள் அப்பிள்ளை
இங்கு இரண்டு
பொருப்பிடை ஐந்து நெருப்பிடை கோடைக்காலம் ஆச்சார்ய ஹ்ருதயம்)

விருப்புடைய-வெக்காவே சேர்ந்தானை–
விரும்பப் படுவதான திரு வெஃகாவிலே சேர்ந்தவனை –

(அனைவருக்கும் விருப்பு -உகந்து அவனுக்கும் -ஆழ்வாராதிகளுக்கும் -ஆச்சார்யர்களுக்கும் -நமக்கும்)

(புருஷகாரத்துக்கு திவ்ய தேசம் இருக்கும் என்றவாறு)

மெய்ம்மலர் தூயக் கை தொழுதால்-அக்காவே தீ வினைகள் ஆய்ந்து ——-
அநந்ய பிரயோஜனனாய் புஷ்பாதி உபகரணங்களைக் கொண்டு ஆய்ந்து அனுசந்தித்து கை தொழுதால் –
அசேதனமான கொடிய பாபங்கள் தானே தன்னை ஆஸ்ரயிக்க நிற்க வற்றோ –
தீ வினைகள் தானே ஆராய்ந்து நமக்கு நிலம் அன்று என்று போகாவோ என்றுமாம் –

வ்ருஷ்டி பிரதீஷாஸ் சாலய-என்னும் நியாயத்தாலே
சும்மானாதே கை விட்டோடித் தூறுகள் பாய்ந்தனவே -என்கிறபடியே –

(மழைக்கு பயிர்கள் காத்து இருக்க ஞானம் உண்டோ-அதே போல் தீ வினைகளுக்கு ஞானம் இல்லை
சேதன சமாதியில் சொல்கிறார்)

எம்மனா என் குல தெய்வமே என்னுடை நாயகனே
நின்னுள்ளேனாய் பெற்ற நன்மை இவ்வுலகினில் யார் பெறுவார்
நம்மன் போலே வீழ்த்த முக்கும் நாட்டிலுள்ள பாவம் எலாம்
சும்மெனாதே கை விட்டோடித் தூறுகள் பாய்ந்தனவே -5- 4-3 –

——————————————————————–

உடம்பை ஒறுத்து -துஷ்கரமான சாதனங்களை அனுஷ்ட்டித்து துக்கப்பட வேண்டா —
வெஃகாவில் துயில் அமர்ந்த வேந்தை ஆஸ்ரயிக்க சகல துக்கங்களும்
தன்னடையே விட்டுப் போம் என்கிறார் –

(கல் எடுத்துக் கல்-மாரி காத்தாய்! என்னும்* காமரு பூங் கச்சி ஊரகத்தாய்! என்னும்* 
வில் இறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய்! என்னும்* வெஃகாவில் துயில் அமர்ந்த வேந்தே! என்னும்*
மல் அடர்த்து மல்லரை அன்று அட்டாய்! என்னும்* மா கீண்ட கைத்தலத்து என் மைந்தா! என்னும்* 
சொல் எடுத்துத் தன் கிளியைச் சொல்லே என்று* துணை முலைமேல் துளி சோர சோர்கின்றாளே!    )

பனி காலத்தில் மலைகளில் நடுவே நின்றும் –
குளிர் காலத்திலே பொய்கைகளிலே புக்கு நீரிலே முழுக்கிக் கிடந்தும்
உஷ்ண காலத்தில் பஞ்சாக்கினி நடுவே நின்று வெந்து விழுந்தும் –
இப்படி குரூரமான சாதனங்களை அனுஷ்ட்டித்து நீங்கள் துக்கப்பட வேண்டா –

(மாற்றி செய்தால் உகந்தே செய்வோமே)

அவனோடு அல்லாதாரோடு வாசியற சர்வரும் ஒரு மிடறாக விரும்பும் படியான திரு வெஃகாவில்
தன்னைப் பேணாதே நம்மை ரஷிக்கைக்காக வந்து கண் வளர்ந்து அருளினவனை
பிரயோஜனாந்தர பரதையாகிற பொய் கலசாதே
அநந்ய பிரயோஜனராய்க் கொண்டு பூக்களை அக்ரமமாகப் பணிமாறி
கையாலே அஞ்சலி பந்தத்தைப் பண்ணி ஆஸ்ரயித்ததால்
துஷ் கர்மங்கள் அடங்கலும் நமக்கு இவ்விடம் ஆஸ்ரயம் அன்று என்று அனுசந்தித்துத் தானே விட்டுப் போகாவோ

சும்மெனாதே கை விட்டோடி என்னுமா போலே
சேதன சமாதியாலே சொல்லுகிறது —

அன்றியே
மெய்ம்மலர் தூவி -ஆய்ந்து -அவன் குணங்களை அனுசந்தித்து -கை தொழுதால்
தீ வினைகள் அக்காவே என்னவுமாம்

மென்மலர் என்ற பாடமாகில்
மிருதுவான மலரை -என்றதாகிறது –

(புண்யம் பாபம் -அவனுக்கு பிரியமும் சீற்றமுமே தானே
அஞ்சலி பரமாம் முத்திரை -அம் ஜலதி -அஞ்சலி)

(கள்ளார் துழாயும் கணவலரும் கூவிளையும்
முள்ளார் முளரியும் ஆம்பலும் முன் கண்டக்கால்
புள்ளாய் ஓர் ஏனமாய்ப் புக்கிடந்தான் பொன்னடிக்கு என்று
உள்ளாதார் உள்ளத்தை உள்ளமாக் கொள்ளோமே –11-7-6-)

(தூயோமாய் வந்து -அநந்ய ப்ரயோஜனராய் -மடி தடவாத சோறுக்கு விதுரரையும்,
சுறு நாறாத பூவுக்கு ஸ்ரீ மாலாகாரரையும்,
சுண்ணாம்பு படாத சாந்திற்குக் கூனியையும் பிள்ளைலோகாச்சார்யார் உதாரணமாகக் கூறுகிறார்.)

பரிவதில் ஈசனைப் பாடி –விரிவது மேவலுறுவீர்
பிரிவகையின்றி நன்னீர்த் தூயப் –புரிவதும் புகை பூவே –1-6-1-

பரிவதில் ஈசன் படியைப் பண்புடனே பேசி
அரியனலன் ஆராதனைக்கு என்று -உரிமையுடன்
ஓதி யருள் மாறன் ஒழிவித்தான் இவ்வுலகில்
பேதையர்கள் தங்கள் பிறப்பு——6-

———————————————————————————————————

கீழ் சர்வேஸ்வரனை ஆஸ்ரயிக்கவே உங்கள் பாபங்கள் எல்லாம் போம் என்றது-
இதில் அளவுடையரான ப்ரஹ்மாதிகளுக்கு வழி கேடாகப் புக்கால் பரிஹரிப்பான் அவனே என்கிறது –

பேர் அளவுடையரான ப்ரஹ்மாதிகளும் விளைவது அறியாமல்
தங்களுக்கு ஆபத்தை விளைத்துக் கொள்ள தேடினால்
ஏற்கவே அவ் வாபத்தைப் போக்கி அவர்களை ரஷிக்கக் கடவ
சர்வேஸ்வரன் திருவடிகளே நமக்கு ரக்ஷகம் என்கிறார் –

(காமம் ஆஸ்ரய துஷ்பூரம் நடைவேற முடியாத தப்பான காரியத்துக்காக தவம் செய்வார் ராவண ஹிரண்யாதிகள்
விளையப் போகும் அநர்த்தம் அறியாமல் வரங்களை தேவர்கள் அளிப்பார்கள்-இன்புறும் இவ் விளையாட்டுடையவன் -)

(சமுத்திர ராஜன் -மீறக்கூடாது என்று நீரே ஸ்ருஷ்ட்டி செய்தபின் எவ்வாறு வழி விடுவேன்
நளன் தபஸ் பண்ணி வரம் நொண்டி சாக்கு வைத்து அணை கட்டி
அனைத்துக்கும் ஸம் ஐயம் செய்து அன்றோ நீர் நிர்வஹிக்கிறீர்)

(கோலம் போல் ராமாயணம் பாரதம் -புள்ளி வைத்து கோலம் -கோலம் முடிந்ததும் புள்ளிகள் தெரியாதே
அனைத்துக்கும் தாத்பர்யங்கள் ஆச்சார்யர்கள் காட்டி அருளுகிறார்
உன்னுடைய விக்ரமம் ஒழியாமல் எல்லாம் நீயே காட்டிக் கொடுக்கிறாய் ஆழ்வாராதிகளுக்கு)

(ஆளவந்தார் ப்ரஹ்மா, ருத்ரன் ஆகியோரின் க்ஷேத்ரஜ்ஞத்வத்தையும் (ஜீவாத்மாவாக இருக்கும் தன்மையையும்)
பகவானின் பரத்வத்தையும், இதிஹாஸ மற்றும் புராணங்களில் உள்ள சரித்ரங்களைக் கொண்டு அருளிச் செய்கிறார்..

வேதாபஹார குருபாதக தைத்யபீடாதி
ஆபத் விமோசந மஹிஷ்ட பல ப்ரதாநை: |
கோ’ந்ய: ப்ரஜா பஶு பதீ பரிபாதி கஸ்ய
பாதோதகேந ஸ ஶிவஸ் ஸ்வ ஶிரோத்ருதேந ||–ஶ்லோகம் 13 –

ப்ரஜாபதி என்று சொல்லப்படும் பிரமனையும், பசுபதி என்று சொல்லப்படும் ருத்ரனையும் மற்றும் இந்திரனையும்
முறையே அவர்களுக்கு வந்த ஆபத்தான வேதம் திருடப்பட்டு அதை இழந்ததையும்,
தன்னுடைய தந்தையின் தலையைக் கிள்ளிய பாபத்தையும், அஸுரர்களால் ஏற்பட்ட துன்பத்தையும் போக்கியவன் யார்?
யாருடைய ஸ்ரீபாத தீர்த்தத்தைத் தலையில் தாங்கி, ருத்ரன் புனிதத் தன்மையை அடைந்தான்?)

(ஆமே யமரர்க்கு அறிய வது நிற்க
நாமே யறிகிற்போம் நன்னெஞ்சே பூமேய
மாதவத்தோன் தாள் பணிந்த வாளரக்கன் நீண் முடியை
பாதமத்தால் எண்ணினான் பண்பு -ஸ்ரீ முதல் திருவந்தாதி- –45-)

(கொண்டு குடங்கால் மேல் வைத்த குழவியாய்
தண்ட வரக்கன் தலை தாளால் -பண்டு எண்ணி
போங்குமரன் நிற்கும் பொழில் வேங்கட மலைக்கே
போங்குமரர் உள்ளீர் புரிந்து–நான்முகன் அந்தாதி -44-)

ஆய்ந்த வரு மறையோன் நான்முகத்தோன் நன் குறங்கில்
வாய்ந்த குழவியாய் வாளரக்கன் -ஏய்ந்த
முடிப்போது மூன்று ஏழு என்று எண்ணினான் ஆர்ந்த
அடிப்போது நங்கட்கு அரண்  —–77-

பதவுரை

ஆய்ந்த–ஆராய்ந்து அதிகரிக்கப்பட்ட
அரு மறையான்–அருமையான வேதங்களை யுடையனான
நான் முகத்தோன்–சதுர்முக ப்ரஹ்மாவினுடைய
நன் குறங்கில்–அழகிய மடியிலே
வாய்ந்த–நேர் பட்ட
குழவி ஆய்–இளங்குழந்தை யாயிருந்து கொண்டு
வாள் அரக்கன்–இராவணனுடைய
போது ஏய்ந்த–புஷ்ப மாலை பொருந்தின
முடி–தலைகளை
மூன்று ஏழ் என்று எண்ணினான்–பத்து என்று (தனது திருவடியாலே) எண்ணிக் காட்டினவனுடைய
அடி போது–திருவடித் தாமரைகள்
நங்கட்கு–நமக்கு
ஆர்ந்த அரண்–குறையற்ற சரணம்.

ஆய்ந்த வரு மறையோன் நான்முகத்தோன் நன் குறங்கில் வாய்ந்த குழவியாய் வாளரக்கன் —
சர்வேஸ்வரனாலே ஓதுவிக்கப் பட்டு வேதார்த்த நிரூபணம் பண்ண வல்ல ப்ரஹ்மாவினுடைய குறங்கிலே–

(யோ ப்ராஹ்மணம் விததாதி பூர்வம் –யோ வை வேதாம்ச்ச ப்ராஹினோதி தஸ்மை )

ஸ்வாபாவிகமான சேஷித்வம் இல்லாமை யாலே புதுக் கும்பிடைக் கண்டு இறுமாந்து
தாங்கள் அநர்த்தம் அறியாதே ராவணனுக்குத் தேடிற்று எல்லாம் கொடுக்கப் புக –

இவனால் நோவு பட்டாலும் நம்முடைய பாடே இறே இவர்கள் வந்து விழுவது என்று பார்த்து –

வாய்ந்த குழவியாய்–
அழகிய பிள்ளையாய்

வாளரக்கன்-
சாயுதனான ராக்ஷஸன் யுடைய

ஏய்ந்த-முடிப்போது மூன்று ஏழு என்று எண்ணினான் ஆர்ந்த-அடிப்போது நங்கட்கு அரண்  —
ராக்ஷஸனுடைய தலைகளை முஃயத்தாலே-மூன்று ஏழு என்று எண்ணினவனுடைய
அபேக்ஷித்தத்தைச் செய்யவற்றாய் போக்யமான திருவடிகள் நமக்கு ரக்ஷை –

(ஆச்சார்யர்கள் திருவடி ஸ்தானம் -உபதேஸிக்கப் பண்ணுகிறான் நம்மையும் திருத்திப் பணி கொள்ளவே
அவர்கள் ஆதி பணிந்து உஜ்ஜீவனம் அடையலாம்-திருவடிகளே அவனுக்கும் ரக்ஷகம் )

——————————————————————-

பேர் அளவுடையரான ப்ரஹ்மாதிகளும் விளைவது அறியாமல்
தங்களுக்கு ஆபத்தை விளைத்துக் கொள்ள தேடினால்
ஏற்கவே அவ் வாபத்தைப் போக்கி அவர்களை ரஷிக்கக் கடவ
சர்வேஸ்வரன் திருவடிகளே நமக்கு ரக்ஷகம் என்கிறார் –

அர்த்த ஸஹிதமாக ஆராய்ந்து அதிகரிக்கப் பட்ட பெறுதற்கு அரிய வேதத்தைத் தனக்கு நிரூபகமாக யுடையனான
சதுர்முகனுடைய அழகிய மடியிலே நேர் பட்ட முக்த சிஸூவாய்க் கொண்டு சாயுதனான ராவணனுடைய
அறுப்புண்கைக்குத் தகுதியான மாலை கட்டின தலைகளைத் தன் முஃத்யம் தோற்ற மூன்றும் ஏழும் என்று
அறுப்புண்கைக்கு யோக்யம் என்னும் இடம் தோற்றத் திருவடிகளால் எண்ணிக் காட்டி ப்ரஹ்மாவை ரஷித்தவனுடைய
போக்யத்தையால் பரி பூர்ணமான திருவடிகள் ஆகிற செவ்விப் பூக்கள் –அகிஞ்சனராய் அநந்ய பிரயோஜனரான நமக்கு ரக்ஷை –

(மாறுசெய்த வாள்அரக்கன்*  நாள்உலப்ப அன்றுஇலங்கை* 
நீறுசெய்து சென்று கொன்று*  வென்றி கொண்ட வீரனார்,*
வேறுசெய்து தம்முள் என்னை*  வைத்திடாமையால்,*  நமன்- 
கூறுசெய்து கொண்டுஇறந்த*  குற்றம் எண்ண வல்லனே.  -வாள் அரக்கன் -சந்த்ரஹாசம் வாள் சிவன் கொடுக்க -பிரமன் கொடுக்கும் நாள் )

—————————————————————————————————

(நரகாந்தகன் -நரகத்தையே முடித்தவன் -உன்னை மறக்காமல் இருக்க அருள் -முகுந்த மாலை
வாழ் ஆட்ட பட்டு நின்று வல்லீரேல்-வாஸூ தேவம் சர்வம் பயின்று இருப்பார் -ஸூ துர்லபம் )

(திக்குற்ற கீர்த்தி இராமானுசனை,* என் செய்வினையாம்-
மெய்க்குற்றம் நீக்கி விளங்கிய மேகத்தை* மேவும்நல்லோர்-
எக்குற்ற வாளர் எதுபிறப்பேது இயல்வாக நின்றோர்*
அக்குற்றம் அப்பிறப்பு* அவ்வியல்வே நம்மை ஆட்கொள்ளுமே )

(அதிகாரம் உண்டேல் அரங்கர் இரங்காரோ
அதிகாரம் இல்லாதார்க்கு அன்றோ -எதிராசா
நீ இரங்க வேண்டுவது நீயும் அதிகாரிகளுக்கே
இரங்கில் என் செய்வோம் யாம் —14-)

அவன் சர்வ ரக்ஷகன் ஆகிலும் -நம்முடைய ஞான வ்ருத்த ஜென்மங்கள் யுடைய
கொற்றை -கொத்தை -பார்க்க வேண்டாவோ என்ன -வேண்டா என்கிறது –

அவன் நமக்கு சரணமாம் இடத்தில் நம்முடைய வித்யா வ்ருத்தங்களின் பொல்லாங்கைப் பார்த்து
உபேக்ஷியாதே ரக்ஷகனாம் -ஆன பின்பு அவனுடைய திரு நாமங்களைச் சொல் என்கிறார்

(நின்று எதிராய நிரை மணித் தேர் வாணன் தோள்
ஒன்றிய ஈரைஞ்ஞூறுடன்  துணிய -வென்றிலங்கும்
ஆர்படுவான் நேமி அரவணையான் சேவடிக்கே
நேர்படுவான் தான் முயலும் நெஞ்சு-80 பாசுரம் நெஞ்சமே -அத்தை இங்கே கூட்டிக் கொண்டு நெஞ்சுக்கு உபதேசம் இதிலும்)

அரணாம் நமக்கு என்றும் ஆழி வலவன்
முரணாள் வலம் சுழிந்த மொய்ம்பன் -சரணாமேல்
ஏது கதி ஏது நிலை ஏது பிறப்பு என்னாதே
ஒது கதி மாயனையே ஓர்த்து———-78-(மாயவனை -ஆச்சார்ய பூதன் -மாதவன் ஸ்ரீ யபதி -பாட பேதங்கள் )

பதவுரை

ஆழி–திருவாழி யாழ்வானை
வலவன்–வலத் திருக் கையிலுடையவனும்
முரன்–முராஸுரனுடைய
நாள்–ஆயுளையும்
வலம்–வலிமையையும்
சுழித்த–போக்கின
மொய்ம்பன்–மிடுக்கை யுடையவனுமான பெருமான்
சரண் ஆம் ஏல்–ரக்ஷகனாக அமையும் பக்ஷத்தில்
கதி ஏது நிலை எது பிறப்பு எது என்னாதே–(நம்முடைய) ஞானமென்ன!, ஆசார மென்ன! ஜன்ம மென்ன! என்று
(இவற்றின் தாழ்வுகளைப் பார்த்து உபேக்ஷியாமல்
நமக்கு என்றும் அரண் ஆம்–நமக்கு எல்லாக் காலத்திலும் ரக்ஷகனாகவே யிருப்பன், (ஓ நெஞ்சமே)
ஓர்த்து–இதை நன்றாக அறிந்து கொண்டு
மாயனையே–ஆச்சரியமான குண சேஷ்டிதங்களை யுடையனான அப்பெருமானையே
கதி–உபாயமாக
ஓது–அநுஸந்தித்துக் கொண்டிரு.

அரணாம் நமக்கு என்றும் ஆழி வலவன்–
சர்வ சக்தி நமக்கு ரக்ஷையாம் –
வலவருகே திரு வாழி பிடிக்குமவன் போலே காணும் ரக்ஷகனாவான் –
தன்னைப் புரஸ்கரித்து (சுட்டிக்காட்டி )இறே -மாஸூச -என்றது –இவனுடைய அஹம் புத்தி சோக நிமித்தம்
அவனுடைய அஹம் புத்தி சோக நிவர்த்தகம் –

முரணாள் வலம் சுழிந்த மொய்ம்பன் –
விரோதியைப் போக்கி ரக்ஷிக்க வல்லன் என்னும் இடத்தை உபபாதிக்கிறது
முரனுடைய ஆயுஸூ ஆகிற மிடுக்கை முடிக்க வல்ல மிடுக்கன் –

(நரகாந்தகன்-நரனை அளித்தவன் -நரகம் அளித்தவன் – முராரி -முரனை அளித்தவன்)

சரணாமேல்-ஏது கதி ஏது நிலை ஏது பிறப்பு என்னாதே ஆழி வலவன்-அரணாம்–
ஆஸ்ரயணீயன் ஆகும் –
சமோஹம் சர்வ பூதேஷூ நமே த்வேஷயோ அஸ்தி ந ப்ரிய-(9-20-) யோ அபி ஸ் யு பாபயோ நய–
எத்தனை நலம் தான் இல்லாத சண்டாள சண்டாளர்கள் ஆகிலும் –

ஒது கதி மாயனையே ஓர்த்து–சரண்யனாய் ஆச்சர்ய பூதனானவனை அனுசந்தித்து
அவன் திரு நாமங்களை சொல்லு –

(ஸமோஹம் ஸர்வ பூதேஷு ந மே த்வேஷ்யோஸ்தி ந ப்ரிய–
யே பஜந்தி து மாம் பக்த்யா மயி தே தேஷு சாப்யஹம் —৷৷9.29৷৷

நான் பலவகைப் பட்டு இருக்கும் ஜீவ ராசிகள் விஷயத்திலும் -என்னை ஆஸ்ரயிக்கும் விஷயத்தில் சமமாய் இருப்பவன்
எனக்குத் தாழ்ந்தவன் என்னும் காரணத்தால் ஆஸ்ரயிக்கத் தகாதவன் எவனும் இல்லை
எவர்களோயெனில் -என்னிடம் பக்தியையே பலனாகக் கொண்டு அன்பு செய்கிறார்களோ
என்னிடத்தில் அவர்கள் வாழ்கிறார்கள் –
அவர்கள் இடத்தில் நானும் வாழ்கிறேன் -என் னிலும் உயர்ந்தவர்கள் இடத்தில் போல் பரிமாறுகிறேன்
தேவ மனுஷ திரியக் ஜங்கமங்கள் சர்வருக்கும் சமம் -யாரையும் த்வேஷிக்காதவன் –)

(குலம் தாங்கு சாதிகள்*  நாலிலும் கீழ் இழிந்து,*  எத்தனை 
நலம் தான் இலாத*  சண்டாள சண்டாளர்கள் ஆகிலும்,* 
வலம் தாங்கு சக்கரத்து அண்ணல்*  மணிவண்ணற்கு ஆள் என்று உள் 
கலந்தார்,*  அடியார் தம் அடியார் எம் அடிகளே.)

————————————————————————

அவன் நமக்கு சரணமாம் இடத்தில் நம்முடைய வித்யா வ்ருத்தங்களின் பொல்லாங்கைப் பார்த்து
உபேக்ஷியாதே ரக்ஷகனாம் -ஆன பின்பு அவனுடைய திரு நாமங்களைச் சொல் என்கிறார்

ரக்ஷண பரிகரமான திரு வாழியை வலவருகே யுடையனாய் முராஸூரனுடைய ஆயுசாலே வந்த பலத்தைப் போக்கின
மிடுக்கை யுடையனானவன் ரஷகனாகும் இடத்தில் -(துர்லபம் ஆல் )
ஏது ஞானம் -ஏது வ்ருத்தி ஏது ஜென்மம் என்று வித்யா வ்ருத்த ஜென்மங்கள் யுடைய நிகர்ஷம் பார்த்து உபேக்ஷியாதே –
ஆபன்னராய்-ரக்ஷக அபேக்ஷை யுடையரான நமக்கு சர்வ காலத்திலும் ரக்ஷகனாம் –

(வித்யா விருத்த ஜென்மம் -பிறப்பு யோக்யதை அல்ல -ஆசை அபேக்ஷையே வேண்டியது
ஆசை யுடையார்க்கு எல்லாம் ஆரியர்காள் கூறும் என்று பேசி வரம்பு அறுத்தார்)

ஆன பின்பு நம்முடைய குற்றத்தைப் பார்த்து பிற்காலியாதே சரணத்வ ஏகாந்தமான
ஆச்சர்ய குண சேஷ்டிதங்களை உடையவனானவனையே உபாயமாக அத்யவசித்து –
அவன் திரு நாமங்களை இடைவிடாமல் நெஞ்சே சொல்லு –

நேர் படுவான் தான் முயலும் நெஞ்சு -என்று மேலே(80) சொல்லுகிற நெஞ்சு இங்கும் முன்னிலைக்கு விஷயம் –

அன்றிக்கே
நிலை வரம்பில பல பிறப்பாய் -என்கிறபடியே
முரன் நாள் வலம் சூழ்ந்த மொய்ம்பன் சரணாம் இடத்தில் தனக்கு என்ன ஒரு நியதி இன்றிக்கே
ஆஸ்ரித ரக்ஷணத்துக்கு உறுப்பான ஏதேனும் ஒரு ஜென்ம வித்யா வ்ருத்தங்களைத் தான் உடையனாய்க் கொண்டு
நமக்கு என்றும் காரணாம் என்றுமாம்

(எளிவரும் இயல்வினன் நிலை வரம்பில பல பிறப்பாய்
ஒளி வரு முழு நலம் முதலில கேடில வீடாம்
தெளிதரு நிலைமையது ஒழிவிலன் முழுவதும் இறையோன்
அளிவரும் அருளினோடு அகத்தனன் புறத்தனன் அமைந்தே –1-3-2-

(தனக்கும் ஒரு வரம்பு இன்றி-என்நின்ற யோனியாம் பிறப்பில் -மாசு உடம்பில் -மானமிலா பன்றியாய் )

ஒது கதி மாதவனையே ஓர்த்து -என்ற பாடமாகில் –
ஸ்ரீ யபதியை உபாயமாகப் புத்தி பண்ணி
அவன் திரு நாமங்களை ஏத்து -என்று பொருளாகக் கடவது –

(மாயவனை -ஆச்சார்ய பூதன் -மாதவன் ஸ்ரீ யபதி -பாட பேதங்கள்)

—————————————————————————————————-

(ரிஷிகள் ஸ்வரூப த்யானம் -மனம் அடக்கினால் தான் ஸாத்யம்
ஆழ்வார்கள் ரூபத்தில் இழிந்து மேல் மேல் பலவும் உண்டாகும்
புலன்களை அடக்கி -சம்சாரம் தண்மை உணர்த்தி -தீ மனம் கெடுத்து மருவித் தொழும் மனமே தந்து அருளுவான்
ஐயப்பாடு அறுத்துத் தோன்றும் அழகன்-ஆதாரம் பெறுக வைத்த அழகன் -அன்றோ

மால்பால் மனம்சுழிப்ப*  மங்கையர்தோள் கைவிட்டு,* 
நூல்பால் மனம்வைக்க நொய்விதுஆம்,*  நால்பால
வேதத்தான் வேங்கடத்தான்*  விண்ணோர் முடிதோயும்,*
பாதத்தான் பாதம் பணிந்து. 
மெய்யர்க்கே மெய்யன் ஆகும் விதியிலா வென்னைப் போலே
பொய்யர்க்கே பொய்யனாகும் புட்கொடி உடைய கோமான்
உய்யப்போம் உணர்வினார்கட்கு ஒருவன் என்று உணர்ந்த பின்னர்
ஐயப்பாடு அறுத்துத் தோன்றும் அழகனூர் அரங்கம் அன்றே–15-
சூதனாய்க் கள்வனாகித் தூர்தரோடு இசைந்த காலம்
மாதரார் கயல் கண் என்னும் வலையுள் பட்டு அழுந்துவேனை
போதரே என்று சொல்லிப் புந்தியுள் புகுந்து தன பால்
ஆதரம் பெருக வைத்தான் அழகனூர் அரங்கம் அன்றே–16-

மால் பால் மனம் வைக்க -ஓர்த்த மனத்தர் ஆய்–அநுஸந்திக்கின்ற மனமுடையாய்–மேலே மேலே
ஐந்து அடக்கி–பஞ்சேந்திரியங்களையும் வென்று-புலன் அடங்கிய பின்பே சம்சாரம் தண்மை அறிய முடியும் –
ஆராய்ந்து–ஸம்ஸாரத்தின் கெடுதல்களை ஆராய்ந்து
பேர்த்தால்–ஸம்ஸாரத்தில் நின்றும் நெஞ்சைத் திருப்பிக் கொண்டால்
பிறப்பு ஏழும்–ஒன்றின் பின் ஒன்றாக நேரக்கூடிய ஜன்ம பரம்பரைகளை
போக்கலாம்–தொலைத்து விடலாம்.-யத்ர நான்யத்ர கச்சதி பூமா இதுவே -வேறு ஒன்றில் போக முடியாதே )

(ஆளவந்தார் “அநந்ய கதித்வத்தினால் மட்டுமா நான் உன்னைப் பிரியாமல் இருக்கிறேன்?
உன்னுடைய போக்யமான தன்மையில் என் மனம் மூழ்கியிருப்பதால், நான் வேறு விஷயங்களை விரும்ப மாட்டேன்” என்கிறார்.

தவாம்ருதஸ்யந்திநி பாத பங்கஜே
நிவேஶிதாத்மா கதம் அந்யதிச்சதி? |
ஸ்திதே’ரவிந்தே மகரந்தநிர்ப்பரே
மதுவ்ரதோ நேக்ஷுரகம் ஹி வீக்ஷதே ||-ஶ்லோகம் 27 –

அதிகமான தேனைப் பெருக்கும் உன்னுடைய திருவடிகளில், உன்னுடைய க்ருபையினால் பதிந்திருக்கும் என் மனம்,
வேறு விஷயங்களை எப்படி ஆசைப்படும்?
தேன் நிறைந்த சிவந்த தாமரை இருக்கும்பொழுது, ஒரு வண்டானது முள்ளிப்பூவை விரும்பாதன்றோ?)

அநாதி காலம் பண்ணின பாபத்தைப் போக்கும் போது அநந்த காலம் வேண்டாவோ -என்னில்
அவனை அனுசந்தித்து சப்தாதிகளிலே அநாதரம் பிறக்கச் சடக்கெனப் போக்கலாம் என்கிறது –

(ஸூ பாஸ்ரய திவ்ய மங்கள விக்ரஹம் -பாலே மருந்தும் விருந்துமாம் போல்
அநந்த கால பிரதிபந்தங்கள் சடக்கென போகுமே )

(விரையார் நறுந்துழாய்-மணம் செவ்வி இரண்டையும் என்றும்
திருமேனி சர்வ ரசம் சர்வ கந்தம் -அவனுக்கும் திருத்துழாய் மாலைக்கும் மணம் என்றுமாம்)

ஒர்த்த மனத்தராய் ஐந்தடக்கி ஆராய்ந்து
பேர்த்தால் பிறப்பு ஏழும் பேர்க்கலாம் -கார்த்த
விரையார் நறுந்துழாய் வீங்கோத மேனி
நிரையார மார்வனையே நின்று ——79-

பதவுரை

கார்த்த–பசுமையான நிறமுள்ளதாய்
விரை ஆர்–பரிமளம் நிரம்பியதான
நறு துழாய்–செவ்வித் திருத்துழாய் மாலையை யுடையவனும்
வீங்கு ஓதம் மேனி-பொங்குங்கடல் போன்ற திருமேனியை யுடையவனும்-அடியார்களைக் கண்டு பொங்கும் கடல் வண்ணன்
நிரை ஆரம் மார்வனையே–ஒழுங்கான ஹாரங்களணிந்த திரு மார்பை யுடையவனுமான பெருமானையே
நின்று–நெஞ்சு நிலைத்து நின்று
ஓர்த்த மனத்தர் ஆய்–அநுஸந்திக்கின்ற மனமுடையாய்
ஐந்து அடக்கி–பஞ்சேந்திரியங்களையும் வென்று
ஆராய்ந்து–ஸம்ஸாரத்தின் கெடுதல்களை ஆராய்ந்து
பேர்த்தால்–ஸம்ஸாரத்தில் நின்றும் நெஞ்சைத் திருப்பிக் கொண்டால்
பிறப்பு ஏழும்–ஒன்றின் பின் ஒன்றாக நேரக்கூடிய ஜன்ம பரம்பரைகளை
போக்கலாம்–தொலைத்து விடலாம்.

விரையார் நறுந்துழாய் வீங்கோத மேனி-நிரையார மார்வனையே —–
அழகிய திருத் துழாய் மாலையை யுடையவனுமாய்
தேங்கின கடல் போலே இருக்கும் திரு மேனியை யுடையவனாய்
சப் தாதிகளை நாக்கு வளைக்கலாம் படி ஆபரண அழகை யுடையவனை –

நின்று ஒர்த்த மனத்தராய் ஐந்தடக்கி ஆராய்ந்து பேர்த்தால் பிறப்பு ஏழும் பேர்க்கலாம்-
நின்று அனுசந்தித்த மனசை யுடையராய் இந்திரியங்களை விஷயங்களில் போகாத படி அடக்கி
அவை பொல்லாது என்று ஆராய்ந்து -சம்சாரத்தைப் போக்கப் புக்கால் போக்கலாம்

ஏழு பிறப்பு என்றது உப லக்ஷணம் –
ஜென்மம் அடங்கப் போக்கலாம் என்ற படி –

—————————

அநாதி காலம் பண்ணின பாபத்தைப் போக்கும் போது அநந்த காலம் வேண்டாவோ -என்னில்
அவனை அனுசந்தித்து சப்தாதிகளிலே அநாதரம் பிறக்கச் சடக்கெனப் போக்கலாம் என்கிறார் –

பசுத்த நிறத்தை யுடைத்தாய் பரிமள பிரசுரமான செவ்வித் திருத் துழாயாலே அலங்க்ருதனாய் –
தேங்கின கடல் போலே இருண்டு குளிர்ந்த வடிவு அழகை யுடையனாய் –
ஒழுங்கு பட்டு இருக்கிற திரு ஆரத்தாலே அலங்க்ருதமான திரு மார்வை யுடையவனையே ஒருபடப் பட
நின்று -நிரந்தரமாக அனுசந்திக்கிற மனஸை யுடையராய்

ஸ்ரோத்ராதிகளான ஐந்து இந்த்ரியங்களையும் விஷயங்களில் போகாத படி நியமித்து –
சம்சார தோஷத்தை அனுசந்தித்து –அதில் நின்றும் ஹிருதயத்தை மீள விட்டால் ஒன்றின் பின் ஒன்றாக
வரக் கடவ ஜென்ம பரம்பரைகளை அநாயாசேன பேர்க்கலாம்-

அவனுடைய ஸ்வாபாவிகமான வடிவு அழகையும் ஒப்பனை அழகையும் அனுசந்தித்தால்
சப்தாதி விஷயங்களை நாக்கு வளைத்து உபேக்ஷிக்கலாம் என்று கருத்து –

————————————————————————————————————

(முயற்றி சுமந்து எழுந்து முந்துற்ற நெஞ்சே
இயற்றுவாய் எம்மோடி நீ கூடி –நயப் புடைய
நாவீன் தொடை கிளவி யுள் பொதிவோம் நற் பூவைப்
பூ வீன்ற வண்ணன் புகழ் –1-

நல்லை நெஞ்சே நாம் தொழுதும் நம்முடை நம் பெருமான்
அல்லி மாதர் புல்க நின்ற ஆயிரம் தோளன் இடம்
நெல்லி மல்கிக் கல்லுடைப்பப் புல்லிலை யார்த்து அதர் வாய்ச்
சில்லி சில் லென்ற சொல் அறாத சிங்க வேள் குன்றமே—1-7-9-

நெஞ்ச மே! நல்லை நல்லை உன் னைப்பெற்றால்
என் செய் யோம் இனி என்ன குறைவினம்
மைந்த னைமல ராள்மண வாளனைத்
துஞ்சும் போதும்வி டாது தொடர்கண்டாய்.-1-10-4-
 -கொண்டாடும் படி அன்றோ ஆழ்வார்கள் திரு உள்ளம்)

(நேர் செறிந்தான் கொடிக் கோழி கொண்டான் பின்னும்
நேர் செறிந்தான் எரியும் அனலோன் பின்னும்
நேர் செறிந்தான் முக்கண் மூர்த்தி கண்டீர் அப்பன்
நேர் சரி வாணன் திண் தோள் கொண்ட வன்றே –7-4-8-)

நம்மால் இந்திரிய ஜெயம் பண்ணி அவனை அனுசந்தித்து சம்சார சம்பந்தம் அறுக்கப் போகாது –
அவன் பிரதிபந்தகங்களைப் போக்க அவனை அனுசந்திக்க ஆசைப்படா நின்றது நெஞ்சு என்கிறார் –

பிரதிகூல நிரசன ஸ்வபாவனானவனைப் பெற வேணும் என்று தமக்கு முன்னே தம் திரு உள்ளம்
அவ்விஷயத்தில் பிரவணமான படியை அருளிச் செய்கிறார் –

நின்று எதிராய நிரை மணித் தேர் வாணன் தோள்
ஒன்றிய ஈரைஞ்ஞூறுடன்  துணிய -வென்றிலங்கும்
ஆர் படு வான் நேமி அரவணையான் சேவடிக்கே
நேர் படுவான் தான் முயலும் நெஞ்சு —80-

பதவுரை

நின்று–(கூசாமல்) முன்னே வந்து நின்று
எதிர் ஆய–எதிரியாய்ப் போர் செய்ய வந்தவனும்
நிரை மணி தேர்–ஒழுங்காக அழுத்தின மணிகளை யுடைய தேரின் மேலேறி யுள்ளவனுமான
வாணன்–பாணாஸுரனுடைய
ஒன்றிய ஈர் ஐந்நூறு தோள்–அடியுரமுள்ள ஆயிரந்தோள்களும்
உடன் – ஏக காலத்தில்–
துணிய–அறுப்புண்டு விழும்படியாகக் காரியஞ் செய்து
வென்று–வெற்றி பெற்று
இலங்கும்–விளங்குகின்ற
ஆர்படு–கூர்மையை யுடைய
வான்–திவ்யமான-வலிய –
நேமி–திருவாழியாழ்வானை யுடையவனாய்
அரவு அணையான்–சேஷசாயியான எம்பெருமானுடைய
சே அடிக்கே–திருவடிகளிலே-நேர் படுவான்-சேஷ பூதனுக்கு அநு ரூபமான தாஸ்யத்துக்கு
நெஞ்சு தான்–(எனது) நெஞ்சு தானே
முயலும்–உத்ஸாஹப் படுகின்றது.

நின்று எதிராய நிரை மணித் தேர் வாணன் தோள் ஒன்றிய ஈரைஞ்ஞூறுடன்  துணிய –
தாமஸ தேவதையை ஆஸ்ரயிக்கையாலே சர்வேஸ்வரன் என்று அறியாதே
எதிரிட்டு தேரை யுடையனான பாணன் யுடைய தோளோடு தோள் ஒன்றிய அல்லாத
ஆயிரம் தோளும் துணியும் படிக்கு ஈடாக வென்று –

வென்றிலங்கும்-ஆர்படுவான் நேமி அரவணையான் சேவடிக்கே-
ஒளியையும் கூர்மையையும் யுடைய திரு வாழியை யுடைய
அநந்த சாயியுடைய திருவடிகளிலே

நேர்படுவான் தான் முயலும் நெஞ்சு —
அணைய நெஞ்சானது தானே ப்ரவர்த்தியா நின்றது –

தீயிற் பொலிகின்ற செஞ்சுட ராழி திகழ்திருச் சக்கரத்தின்
கோயிற் பொறியாலே ஒற்றுண்டு நின்று குடிகுடி ஆட்செய்கின்றோம்
மாயப் பொரு படை வாணனை ஆயிரந் தோளும் பொழி குருதி
பாயச் சுழற்றிய ஆழி வல் லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே.

சுழற்றிய –
திரு வாழியை விட வேண்டி இற்றில்லை -சுழற்றின இத்தனை –
அவன் ஒருக்கால் திரு ஆழியைச் சுழற்ற வாணனுடைய தோள்கள் ஆயிரமும் ஒருக்காலே
மலைக் கொடு முடிகள் போலே முறிந்து விழுந்தன –

வாணனுடைய தலையை அறாது ஒழிந்தது குற்றம் போறாமை யன்று
உஷை பித்ர் ஹீநை யாகாமைக்காகவும் –
தேவதாந்தர பஜனம் பண்ணுவாருக்கு பலம் இது என்னும் இடத்துக்கு மச்சமாகவும் –
அதாவது –
பரிவின்றி வாணனைக் காத்தும் 3-10என்று பிரதிக்ஜை பண்ணி
யுத்தத்திலே இவனைக் காட்டிக் கொடுத்து -ஸ பரிகரனாய் கொண்டு முதுகு
காட்டிப் போனான் ரஷகன் -ரஷ்ய பூதன் தோள் துணி உண்டான் -உன்னை ரஷிக்கப்
புக்கு நான் பட்டதோ -என்றும் -உன்னை ஆஸ்ரயித்து நான் பட்டதோ -என்றும்
இருவரும் கூடக் கட்டிக் கொண்டு கதறுகை இறே பலமாய் விட்டது –

பரிவு இன்றி வாணனைக் காத்தும் என்று அன்று படையொடும் வந்து எதிர்ந்த
திரிபுரம் செற்றவனும் மகனும் பின்னும் அங்கியும் போர் தொலையப்
பொரு சிறைப் புள்ளைக் கடாவிய மாயனை ஆயனைப் பொன் சக்கரத்து
அரியினை அச்சுதனைப் பற்றி யான் இறையேனும் இடர் இலனே.–3-9-4-

கார்த்திகையானும் கரி முகத்தானும் முக்கண்
மூர்த்தியும் மோடியும் வெப்பும் முதிகிட்டு மூவுலகும்
பூத்தவனே என்று போற்றிட வாணன் பிழை பொறுத்த
தீர்த்தனை ஏத்தும் இராமானுசன் என் தன் சேம வைப்பே – 22- –

————————————————————————-

பிரதிகூல நிரசன ஸ்வபாவனானவனைப் பெற வேணும் என்று தமக்கு முன்னே தம் திரு உள்ளம்
அவ் விஷயத்தில் பிரவணமான படியை அருளிச் செய்கிறார் –

ருத்ரனை அண்டை கொண்ட பலத்தால் சர்வேஸ்வரன் என்று அறியாதே கூசாமல்
முன்னே வந்து நின்று எதிராய் நின்றவனாய்
ஒழுங்கு பட அழுத்தின மணிகளோடே கூடின தேரிலே எறி வந்த பாணாஸூ ரனுடைய
அடி ஒன்றாய் பணைத்து இருந்துள்ள ஆயிரம் தோளும் ஏக உத் யோகேந அறுப்புண்டு விழும்படியாக ஜெயித்து –
அத்தாலே ஒளி விடா நிற்பதாய் –

கூர்மையை யுடைத்தாய் அதி பிரபலமான திரு வாழியை யுடையனான அநந்த சாயினுடைய
சிவந்த திருவடிகளிலே நெஞ்சானது எனக்கு முன்னே கிட்டுவதாகத் தானே உத்சஹியா நின்றது-

ஆர் படுகை–கூர்மையை யுடைத்தாகை–
அரங்களை யுடைத்தாகை -என்றுமாம் – -(ஸஹஸ்ர ஆரங்கள் கொண்ட ஆழி )

வான் -வலி-

(கற்பக வருஷம் வாஹனம் சேவிக்கும் பொழுது நினைக்க வேண்டியது
என்னை ஆக்கி -எனக்கே தன்னைத் தந்த கற்பகம் -மூன்று ஏற்றம் கற்பக வ்ருக்ஷத்தை விட
முதலில் என்னையும் ஆக்கி -அர்த்திகளை உருவாக்கி -விரோதி நிரஸனமும் செய்து அருளி
தன்னையே தந்து –
பாரிஜாத மரம் வ்ருத்தாந்தம் அறிவோமே
மறப்பேன் என்று நேரில் புகுந்து -பேரேன் என்று நெஞ்சு நிறையப் புகுந்து
எனக்கே -அனைவருக்கும் தனக்கு மட்டுமே என்று சொல்லிக் கொள்ளும்படி பூர்ண அனுபவம் )

(இப்படி அவன் படியாய் இருக்க நெஞ்சு முற்பட கேட்க வேணுமோ)

(கச்ச ராம மயா ஸஹ -சீதாபிராட்டி முன்னே சென்று கல்லும் முள்ளும் அகற்றி
சேதனர்களைத் திருத்திப் பணி கொண்டு பெருமாள் இடம் சேர்த்தாளே அன்றோ)

————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

மூன்றாம் திருவந்தாதி– பாசுரங்கள்–61-70— -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் –

November 11, 2016

(திரு விண்ணகர் -திவ்யதேசம் பெரியவாச்சான் பிள்ளை –ஸ்ரீ வைகுண்டம் -அப்புள்ளார் -இருவரும் மாற்றி
திரு உள்ளம் வந்த பின்பு -எங்கு இருந்து வந்தார் ஆலோசிக்க
அர்ச்சையில் இருந்து வந்து -அதற்கு
பாற்கடலில் இருந்து வந்து -அதற்கு
வைகுந்தத்தில் இருந்து
என்று க்ரமமாக
அடுத்த இரண்டுமே திவ்ய தேச பாசுரங்கள்

பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான் –
பூகத ஜலம் போலே அந்தர்யாமித்வம்:
ஆவரண் ஜலம் போலே பரத்வம்:
பாற்கடல் போலே வியூகம்;
பெருக்காறு போலே விபவம்
அதிலே தேங்கின மடுக்கள் போலே அர்ச்சாவதாரம்:

இனியார் ஞானங்களால் எடுக்கல்  எழாத எந்தாய்!
கனிவார் வீட்டின்பமே! என்கடற்படா அமுதே!
தனியேன் வாழ் முதலே!! பொழில்ஏழும் ஏனம் ஒன்றாய்
நுனியார் கோட்டில் வைத்தாய்! 1நுனபாதம் சேர்ந்தேனே.-2-3-5-
 )

பிரதிபந்தகங்களைப் போக்கும் அளவேயோ -பரம பதத்தை கலவிருக்கையாக யுடையவன் –
சம்சாரத்திலே உகந்து அருளின திருப்பதிகளைத் தனக்கு இருப்பிடமாகக் கொள்ளுகிறது
ஆஸ்ரித அர்த்தமாக வன்றோ -என்கிறார் –

பிரதிபந்தகங்களைப் போக்குகின்ற அளவு அன்றிக்கே -பரமபதத்தை கலவிருக்கையாக யுடையவன் இங்கே
ஆஸ்ரித அர்த்தமாக வந்து திருப்பதிகளில் சந்நிஹிதன் ஆனான் -என்கிறார் –

பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்
கொண்டு அங்கு உறைவாற்குக் கோயில் போல் -வண்டு
வளம் கிளரும் நீள் சோலை வண் பூங்கடிகை
இளங்குமரன் தன் விண்ணகர் —–61-

பதவுரை

வைகுந்தம்–பரமபதத்தை
கொண்டு–இருப்பிடமாகக் கொண்டு
அங்கு–அவ்விடத்திலே
உறைவாற்கு–வாஸம் பண்ணு மெம்பெருமானுக்கு
பால் கடல்–திருப்பாற்கடலும்
வேங்கடம்–திருமலையும்
வண்டு வளம் கிளரும் நீள் சோலை–வண்டுகளின் திரள் மிக்கிருக்கிற பரந்த சோலைகளை யுடைத்தாய்
வண்–அழகியதாய்
பூ–போக்யமான
கடிகை–திருக் கடிகைக் குன்றும்
இள குமரன் தன் விண்ணகர்—யுவா குமாரா -நித்ய யுவாவான அவனுடைய தன்னதான திருவிண்ணகரும்
(ஆகிய இத்திருப்பதிகளெல்லாம்)
பண்டு எல்லாம்–என்னை விஷயீ கரிப்பதற்கு முன்பெல்லாம்
கோயில் போல்–கோயில்களாக இருந்தன போலும்.
(இப்போதோவென்னில், என்னெஞ்ச மொன்றே அவனுக்குக் கோயிலாயிருக்கிறது என்பது உள்ளுறை).

பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்-கொண்டு அங்கு உறைவாற்குக் கோயில் போல்–
திருமால் வைகுந்தமே தண் திரு வேங்கடமே -என்று பரம பதத்தோ பாதியாகத் திருமலையைச் சொல்கிறது

வைகுந்தம் கோயிலாகக் கொண்டு அங்கு உறைவார்க்கு -வேங்கடம் பாற் கடல் –
வண்டு-வளம் கிளரும் நீள் சோலை வண் பூங்கடிகை
இளங்குமரன் தன் விண்ணகர் —-
விண்ணகரான இவை இளங்குமரனான தனக்கு இப்போது கோயில் போலே

திருமால் இரும் சோலை மலையே திருப் பாற் கடலே என் தலையே
திருமால் வைகுந்தமே தண் திரு வேங்கடமே எனது உடலே
அருமா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே
ஒருமா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வன் ஒருவனே–10-7-8-

—————————————————————————

பிரதிபந்தகங்களைப் போக்குகின்ற அளவு அன்றிக்கே -பரமபதத்தை கலவிருக்கையாக யுடையவன் இங்கே
ஆஸ்ரித அர்த்தமாக வந்து திருப்பதிகளில் சந்நிஹிதன் ஆனான் -என்கிறார் –

ஸ்ரீ வைகுண்டத்தைத் தனக்கு அபிமத வாசஸ் ஸ்தானமாகக் கொண்டு –
அங்கே ஆதரித்து நித்ய வாசம் பண்ணுகிற வைபவத்தை உடையவர்க்கு –
திருப் பாற் கடலும் -திருமலையும் -வண்டுகளினுடைய திரள் மிக்கு வாரா நின்றுள்ள
பரப்பை யுடைத்தாய் அழகியதாய் போக்யமான திருக் கடிகையும்-
நித்ய யுவ ஸ்வ பாவனானவன் தன்னது என்று
ஆதரித்து வர்த்திக்கிற -இவ்வவ திவ்ய தேசங்கள் என்னை விஷயீ கரிப்பதற்கு முன்பு
எல்லாம் உகப்புடன் எழுந்து அருளி இருக்கிற கோயில்கள் போலே இருந்தன –

என்னை அங்கீ கரித்த பின்பு அவ்வவ தேசங்களைக் காட்டிலும்
என்னுடைய ஹிருதயமே அவனுக்கு வாசஸ் ஸ்தானமாய் விட்டது என்று கருத்து-

பனிக்கடலில் பள்ளி கோளைப் பழக விட்டு ஓடி வந்து என்
மனக்கடலில் வாழ வல்ல மாய மணாளா நம்பீ
தனிக்கடலே தனிச் சுடரே தனி உலகே என்று என்று
உனக்கு இடமாய் இருக்க என்னை உனக்கு உரித்து ஆக்கினையே -ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி -5- 4-9 –

நின்றது எந்தை ஊரகத்து இருந்தது எந்தை பாடகத்து
அன்று வெக்கணைக் கிடந்தது என்னிலாத முன்னெலாம்
அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின்பு மறந்திலேன்
நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே -ஸ்ரீ திருச்சந்த விருத்தம்-–64-

நிற்பதும் ஓர் வெற்பகத்து இருப்பும் விண் கிடப்பதும்
நற் பெரும் திரைக் கடலுள் நான் இலாத முன்னெலாம்
அற்புதன் அனந்த சயனன் ஆதி பூதன் மாதவன்
நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் என் நெஞ்சுளே -ஸ்ரீ திருச்சந்த விருத்தம்-–65-

இடமாவது என் நெஞ்சம் இன்றெல்லாம் பண்டு
பட நாகணை நெடிய மாற்கு -திடமாக
வையேன் மதி சூடி தன்னோடு அயனை நான்
வையேன் ஆட் செய்யேன் வலம்–66-

வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று
ஆர்வுற்ற என்னை ஒழிய என்னில் முன்னம்
பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான்
கார் ஒக்கும் காட் கரை அப்பன் கடியனே–9-6-10-

———————————————————————————————————————–

(இதில் வாமனன் சீலம் தாழ்வு-ஸுசீல்யம் ஸுலப்யம் -இங்கு எல்லாம் கண்டேன் -ஏழு திவ்ய தேசங்களில் காட்டி அருளக் கண்டேன்
கீழ் வைகுந்தம் பாற் கடல் பரத்வம்
சேம நல் வீடும் பொருளும் தருமமும் சீரிய நற்
காமமும் என்றிவை நான்கென்பர் நான்கினும் கண்ணனுக்கே
யாமது காமம் அறம் பொருள் வீடி தற்கென்று உரைத்தான்
வாமனன் சீலன் இராமானுசன் இந்த மண் மிசையே -40 – ––வாமனன் சீலன்-சீரை -பாட பேதம்
இரண்டுருவும் ஒன்றாய் இசைந்து —-63–சங்கர நாராயணன் -திருமேனியில் இடம் கொடுத்த ஸுசீல்யம் -திரு வேங்கடத்தில் காணலாம் என்கிறார்
இங்கு எல்லாம் வாமனன் சீல குணம் போல் அங்கும் -உருவத்தை அல்ல)

கேவலம் சம்சாரத்தில் நின்ற மாத்ரமேயோ –
பரமபதத்தில் இருப்பு மனிச்சுக்காய்-தாழ்ச்சியோடே கூட
இருப்பது உகந்து அருளின தேசங்களில் அன்றோ என்கிறார் –

ஆஸ்ரித ரக்ஷணத்துக்கு ஏகாந்த ஸ்தலங்கள் என்று
உகந்து அருளின நிலங்களைச் சால விரும்பி இருக்கும் -என்கிறார் –

விண்ணகரம் வெக்கா விரிதிரை நீர் வேங்கடம்
மண்ணகரம் மா மாட வேளுக்கை மண்ணகத்த
தென் குடந்தை தேனார் திருவரங்கம் தென்  கோட்டி
தன் குடங்கை நீரேற்றான் தாழ்வு  ——62-

பதவுரை

விண்ணகரம்–திருவிண்ணகரமும்
வெஃகா–திருவெஃகாவும்
விரி திரை நீர் வேங்கடம்–விரிந்து அலை யெறிகிற நீர் பொருந்திய திருமலையும்
மண் நகரம்–பூமிலுண்டான வைகுந்தமாநகர் போன்ற
மா மாடம் வேளுக்கை–பெரிய மாடங்களை யுடைத்தான திருவேளுக்கையும்
மண் அகத்த தென் குடந்தை–பூமியிலுண்டான அழகிய திருக்குடந்தையும்
தேன் ஆர் திரு அரங்கம்–தேன் (வெள்ளமிடுகிற சோலைகள்) பொருந்திய திருவரங்க மாநகரும்
தென் கோட்டி–தென் திருக்கோட்டியூரும்
(ஆகிய இத் திருப்பதிகள்)
தன் குடங்கை–தனது உள்ளங்கையாலே
நீர் எற்றான்–(மாவலி பக்கல்) உதக தானம் பெற்ற பெருமான்
தாழ்வு–தங்குமிடங்களாம்.

விண்ணகரம் வெக்கா விரிதிரை நீர் வேங்கடம்–திரு விண்ணகரம் -வெக்கா –
விரிதிரை நீர் வேங்கடம்–திருமலையை ஒரு விசேஷண ரஹிதமாகச் சொல்ல மாட்டார் இறே

மண்ணகரம் மா மாட வேளுக்கை மண்ணகத்த
தென் குடந்தை தேனார் திருவரங்கம் தென்  கோட்டி-போக்யதை குறைவற்ற கோயில்

தன் குடங்கை நீரேற்றான் தாழ்வு  —-
மஹா பலி பக்கலிலே தன்னுடைமை பெறுகைக்கு அர்த்தித்தவம் தோற்றும்படி
அர்த்தியாய் நின்றால் போலே –
உகந்து அருளின தேசங்களில் தாழ்வு தோற்றும் படி நின்றான் —

(இங்கு எல்லாம் உடமைகளான நம்மைப் பெறவே வாமனுடைய சீல குணம் காட்டி தாழ்ந்து நின்று சேவை சாதிக்கிறான்)

—————————————————————————–

ஆஸ்ரித ரக்ஷணத்துக்கு ஏகாந்த ஸ்தலங்கள் என்று
உகந்து அருளின நிலங்களைச் சால விரும்பி இருக்கும் -என்கிறார் –

திரு விண்ணகரமும் திரு வெக்காவும் விஸ்தீர்ணமாய் அலை எறிகிற ஜல ஸம்ருத்தியை யுடைத்தான திருமலையும்
பூமியிலே யுண்டாய் வைகுண்ட மா நகர் போலே அவனுக்கு போக ஸ்தானமான திவ்ய நகராய்
பெரிய மாடங்களை யுடைத்தான திரு வேளுக்கையும் -பூமியிலே யுண்டான அழகிய திருக் குடந்தையும்
தேன் வெள்ளம் இடுகிற திருச் சோலையை யுடைத்தான திருவரங்கப் பெரு நகரும்
தெற்குத் திக்கில் யுண்டான திருக் கோட்டியூரும் ஆகிற இவ்விவ திருப்பதிகள் –

தன்னுடைய சிறாங்கித்த திருக் கையிலே(கோட்டங்கை வாமனனாய் )
நீர் ஏற்றுத் தன் உடமை பெறுகைக்கு அர்த்தியானவன்-இந்த ஆத்மாக்களை பெறுகைக்கு அர்த்தியாய்க் கொண்டு
அவதாரங்கள் போலே தீர்த்தம் பிரசாதியாதே எப்போதும் உதவும்படி கால் தாழ்ந்து வர்த்திக்கிற தேசங்களாய் இருக்கும் –

(ஆவரண ஜலம் போல் விண்ணாடு –பூ கத ஜலம் போல் அந்தர்யாமி –
திரு பாற் கடலுள் பையத் துயின்ற பரமன்–வியூகம் –பெருக்காறு போலே விபவங்கள்–
ஆற்றில் தேங்கிய மடுக்கள் போல் அர்ச்சை-பின்னானார் வணங்கும் ஜோதி )

————————————————————————————————————

(வில்வ மலரால் அர்ச்சனை -நாகாபரணம் சாத்தி -சங்கு சக்கரம் தொண்டைமானுக்கு அருளி
சைவர் இவன் திருமால் அல்லன்-வேண்டிய வேதங்கள் ஓதி விரைந்து கிளி அறுத்தான் –
பிரமாணம் காட்டி -அவனே தன்னைக் காட்டி பரத்வ ஸ்தாபனம் முன்பு –
வேதம் புராணங்கள் இவனே திருமால் -பிரமாணம் விஸ்வசிக்காதவர்களுக்கு –
யோக சக்தியால் ப்ரத்யக்ஷமாகக் காட்டி அருளினார் பாஷ்யகாரர்
அப்பனுக்கு சங்கு ஆழி அளித்தான் வாழியே-இன்றும் ஞான முத்திரையுடன் சேவை திருமலையில்

கீழ் குடங்கை நீர் ஏற்றான் -சீலவத்தை -ஸுசீல்யம் இங்கும் காட்டி அருளுகிறார்-

ஸம்ஸாரி மக்நராக போகாமல் இருக்கவே ஸாஸ்த்ர பாணியாக தானே அவதரித்துத் தன்னைக் காட்டிக் கொடுக்கிறான் )

(உருவத்தை அல்ல என்றே கொள்ள வேண்டும்
சக்கரமும் -என்பதால் வலது பக்கம் -இருப்பது பிரபலம்
அர்த்த நாரீஸ்வரர் தான் வலப்புறம் பார்வதி இடப்புறம்
வலப் புறம் இருப்பதால் பிரபலம் அங்கும்
அதே போல் இங்கும் சிவபிரான் இடப்பக்கம்
நரஸிம்ஹம் -நரமா ஸிம்ஹமா பெரியது போட்டி அல்லவே
அதே போல் இங்கும் கொள்ள வேண்டும்
த்வந்த ஸமாஸம் -உத்தர பூர்வ ஸப்தம் -இரண்டுக்கும் சமானம்
பீதாம்பர தாரி -தரிக்கும் அவனுக்கு தானே பிரதானம்
அதே போல் சங்கர நாராயணன் -இறைவருக்கும் கொள்ளாமல் இந்த உருவம் கொண்ட அவனுக்கே பிரதானம்
ஏறுஆளும் இறையோனும், திசைமுகனும், திருமகளும்,
கூறுஆளும் தனிஉடம்பன், குலம்குலமா அசுரர்களை
நீறுஆகும் படியாக நிருமித்து, படைதொட்ட
மாறாளன் கவராத மணிமாமை 1குறைஇலமே.
–கண்ட காபாலி கந்தர் பெற்றுப் போகிற உடம்பு அன்றோ எனக்கு அரிது ஆகிறது?’ என்கிறாள்

கூறாளும்  – -ஒரு கூறு -ஏக தேசம் கொடுத்து -பொதுவான உருவம் -ஜகத்தே அவனுக்கு சரீரம்
இங்கு சங்கர நாராயணன் உருவம்-இப்படிச் சீலமுடையவனாய் இருக்கின்றவனை அன்றோ நான் இழந்திருக்கிறது?’ என்கிறாள்.

மந்திபாய் –வானவர் சந்தி செய்ய -ஸுசீல்யம் திருவேங்கடத்தில்

மண்ணோர் விண்ணோர் வைப்பில் போகின்ற ஏழு உலகுக்கு உயிர் பாசம் வைத்த
நிகரில் வாத்சல்யம் உஜ்ஜ்வலம்-ஸ்ரீ ஆச்சார்ய ஹ்ருதயம் சூரணை -160-

வரத்தை மீறாமல் இருக்க நரஸிம்ஹ இரட்டை
ஸாதன வேஷ ஸித்த வேஷங்கள் இங்கு இரட்டை-ஒவ்வொன்றுக்கும் மூன்று அடையாளங்கள் இதில் -1-3-5 சிவனுக்கும் 2-4-6 நாராயணனுக்கு
நர நாராயணன் -தானே சிஷ்யனுமாய் ஆச்சார்யனுமாக இரட்டை

ஷத்ரிய ராஜர் ஆகாச ராஜன் மாமனார் கொடுத்த ஆபரணம்
சூடாமணி கொடுத்த சீதை -ஜனகர் தான் தசரதன் நினைவுக்கு வரக்கொடுத்தாள்
நமாமி வில்வ நிலையாம் -மஹா லஷ்மி திருமாலுக்கும் உகந்த
தொண்டைமான் சக்ரவர்த்தி -ஆழ்வார் தீர்த்தம் பின் வழியாக தனியாக செல்லும் வழி உண்டே
அம்பரீஷன் -துர்வாசர் -சக்கரம் கொடுத்தது போல்
குமரா தீர்த்தம் இங்கு உண்டு -புராணம் இங்கு இருந்து தபஸ்ஸு பண்ணினான்
வேங்கடாசல இதிஹாச மாலை -பூம் கொத்து போல் 10 -பாகங்கள் கொண்டது -)

ஸித்தமான வேஷத்தையும்-சாதகமான வேஷத்தையும் -ஓக்க தரிப்பதே –
இது ஒரு சீலவத்தையே -என்கிறார் –

இத் தேசங்களில் வந்து சந்நிஹிதன் ஆனவன் சீலாதிகனாய் இருக்குமவன் கிடீர் -என்கிறார் –

தாழ் சடையும் நீண் முடியும் ஒண் மழுவும் சக்கரமும்
சூழரவும் பொன்னாணும் தோன்றுமால் சூழும்
திரண்டருவி பாயும் திருமலை மேல் எந்தைக்கு
இரண்டுருவும் ஒன் றாய் இசைந்து —-63-

பதவுரை

தாழ் சடையும்–தாழக் கட்டின ஜடையும்
நீள் முடியும்–நீண்ட திருவபிஷேகமும்
ஒண் மழுவும்–அழகிய மழுவென்னுமாயுதமும்
சக்கரமும்–திருவாழியாழ்வானும்
சூழ் அரவும்–சுற்றிலும் அணிந்துள்ள நாகாபரணமும்
பொன் நாணும்–பொன் னரை நாணுமாய்க் கொண்டு
இரண்டு உருவும்–ஒன்றுக்கொன்று சேராச் சேர்த்தியாயிருக்கிற இரண்டு வடிவும்
சூழும் திரண்டு அருவி பாயும் திரு மலை மேல் எந்தைக்கு–நாற்புறமும் திரள் திரளாக அருவிகள்
பெருகப் பெற்ற திருமலை மேலுள்ள அப்பனுக்கு
ஒன்று ஆய் இசைந்து தோன்றும்–ஒரு வடிவமாய் அமைந்து விளங்கா நின்றது
ஆல்–ஆச்சரியம்!

தாழ் சடையும் நீண் முடியும் ஒண் மழுவும் சக்கரமும்-சூழரவும் பொன்னாணும் தோன்றுமால் -சூழும்-திரண்டருவி பாயும்
திருமலை மேல் எந்தைக்கு–
சூழத் திரண்டு அருவி பாயா நின்ற திருமலை மேலே-நிற்கிற என்னுடைய ஸ்வாமிக்கு –

இரண்டுருவும் ஒன்றாய் இசைந்து —
ஓன்று சாதகமாய் ஓன்று சித்தமானால் சேராச் சேர்த்தியாய் இருக்குமோ என்னில்
இரண்டு உருவும் இசைந்து ஒன்றாய் இருக்கும் பொருந்தி இருக்கும் –

ஆல் -இது என்ன பொருத்தம் என்றவாறு(ஹந்த -என்ன ஆச்சர்யம் )

(அருவி சோர் வேம்கடம் நீர் மலை என்று வாய்
வெருவினாள் மெய்யம் வினவி இருகின்றாள்
பெருகு சீர்க் கண்ண புரம் என்று பேசினாள்
உருகினாள் உள் மெலிந்தாள் இது என் கொலோ ? 8-2-3-
ஒழிவுஇல் காலம்எல்லாம் உடனாய் மன்னி
வழுஇலா அடிமை செய்ய வேண்டும்நாம்
தெழிகுரல் அருவித் திருவேங் கடத்து
எழில்கொள் சோதி-எந்தைதந்தை தந்தைக்கே.
-நீங்கள் இங்கே வந்து ஆஸ்ரயியுங்கோள் என்று கூப்பிடுமே
அலரெடுத்த வுந்தியான் ஆங்கு எழிலாய
மலரெடுத்த மா மேனி மாயன் –அலரெடுத்த
வண்ணத்தான் மா மலரான் வார் சடையான் என்று இவர்கட்கு
எண்ணத்தான் ஆமோ இமை ——-97-
நெஞ்சால் நினைக்கவும் முடியாதே -ஸாம்யம் சொல்ல முடியாதே
அரியும் சிவனும் ஓன்று என்பது -ஸ்வரூபத்தால் அல்ல -சரீர பூதர் தானே -பிரகாரி பிரகார பாவம் சொன்னவாறு
பரன் திறம் அன்றி மற்ற தெய்வம் அல்லவே
நாராயணனே பரம் ஜோதி -நாராயணன் நான்முகனைப் படைத்தான்

வேதம் பிரமாணம் கர்மம் சரணாகதி -ஆச்சார்யர் சிஷ்யர் உபதேசம் -ஸம்ஸாரம் கழிந்து முக்தி –
ஸநாதன தர்ம சித்தம் சைவருக்கும் உண்டே )

(ஒரு பால் உலகளந்த மாயவனாம் மற்ற ஒரு பால் உமை யவளாம் -காரைக்கால் அம்மையார்
உலகு அளந்த ப்ராபல்யம் சொல்லி
அர்த்தம் ஹரஸ்ய -இரண்டும் இருவரால் -தானவர் வைரி -ஹிமாச்சல புத்ரி -அர்த்த நாரீஸ்வர கோலம்
அபர்ணா இலை கூட உண்ணாமல் தவம் இருக்க உ மா பண்ணாதே தாயார் சொல்ல உமா
பர்வத ராஜன் குமாரி பார்வதி)

——————————————————————–

இத் தேசங்களில் வந்து சந்நிஹிதன் ஆனவன் சீலாதிகனாய் இருக்குமவன் கிடீர் -என்கிறார் –

சாதகத்வ ஸூசகமாம் படி -தாழக் கட்டின ஜடையும் –
ஆதி ராஜ்ய ஸூ சகமான ஒக்கத்தை யுடைத்தான திரு அபிஷேகமும்

கொலைக்குப் பரிகரமான அழகிய மழுவும் –
ரக்ஷணத்துக்கு பரிகரமான அருளார் திருச் சக்கரமும்

பயாவஹமாம் படி இடையிலே சூழப் பட்ட சர்ப்பமும்-
ஐஸ்வர்ய ஸூசகமாம் படி திருவரையிலே சாத்தின பொன்னரை நூலுமாகக் கொண்டு

ஒன்றுக்கு ஓன்று சேராச் சேர்த்தியாய் இருக்கும் இரண்டு வடிவும்

நாலு பாடும் சூழ்ந்து கொண்டு திரண்டு அருவிகள் வந்து குதியா நிற்கிற திருமலை மேலே
நித்ய வாசம் பண்ணா நின்றுள்ள என் ஸ்வாமி யானவனுக்குத்
தன் திரு மேனிக்கு இதுக்கும் ஒரு வாசி தோற்றாத படி பொருந்தி ஒரு கோவையாய்க் கொண்டு தோற்றா நின்றது –

கெட்டேன் -(ஆல் -இது என்ன பொருத்தம் என்றவாறு )
இது ஒரு சீலாதிசயம் இருக்கிற படியே -என்று ஆச்சர்யப் படுகிறார் –

———————————————————————————————————

(கச்சி வெக்காவில் கிடந்தது இருந்து நின்றதுவும் அங்கு – –
கச்சி வெஃகாவில் கிடந்து
கச்சி திருப்பாடகத்தில் இருந்து
கச்சி திரு ஊரகத்தில் நின்று

நின்றது எந்தை ஊரகத்து*  இருந்தது எந்தை பாடகத்து,* 
அன்று வெஃகணைக் கிடந்தது*  என்னிலாத முன்னெலாம்,*
அன்று நான் பிறந்திலேன்*  பிறந்த பின் மறந்திலேன்,* 
நின்றதும் இருந்ததும்*  கிடந்ததும் என் நெஞ்சுளே.)

பிரயோஜனாந்தர பரர்க்கும் உடம்பு நோவக் கடல் கடைந்து அபேக்ஷித சம்விதானம் பண்ணுமவன்
ஸ்வ பாவத்தை அனுசந்தித்து அவனுக்குப் பரிகிறார்

இசைந்த வரவும் வெற்பும் கடலும்
பசைந்தங்கு அமுது படுப்ப -அசைந்து
கடைந்த வருத்தமோ கச்சி வெக்காவில்
கிடந்தது இருந்து நின்றதுவும் அங்கு – —–64-

பதவுரை

இசைந்த–கடை கயிறாகக் கொள்வதற்குத் தகுதியான
அரவமும்–வாஸுகி நாகமும்
(இசைந்த)
மத்தாக நாட்டுவதற்குத் தகுதியான
வெற்பும்–மந்தர பர்வதமும்
(இசைந்த)
தாழியாக்குவதற்குத் தகுதியான
கடலும்–கடலும்
(ஆகிய இம்மூன்றையும்)
பசைந்து–ஒன்றோடொன்று ஸம்பந்தப் படுத்தி
அங்கு–அந்தக் கடலிலே
அமுது–அம்ருதமானது
படுப்ப–உண்டாம்படி
அசைந்து–அலைச்சல் பட்டு
கடைந்த வருத்தமோ–கடைந்ததனாலுண்டான ஆயாஸத்தினாலோ
கச்சி–காஞ்சீபுரத்திலுள்ள
வெஃகாவில்–திருவெஃகாவில்
கிடந்து–சயனித்துக் கொண்டும்
அங்கு–அக் காஞ்சீபுரத்தில் (திருப் பாடகத்தில்)
இருந்து–வீற்றிருந்தும் (திரு வூரகத்தில்)
நின்றதுவும்–நின்று கொண்டும் இருப்பது?

(இசைந்த அரவும்
இசைந்த வெற்பு
இசைந்த கடல் -பொருத்தமாக மூன்றும்)

இசைந்த வரவும் வெற்பும் கடலும்–கடலிலே ஒரு மலையை நட்டு -ஒரு பாம்பைக் சுற்றிக் கடையா நின்றால்
சேராச் சேர்த்தியாய் இருக்குமோ என்றால் -இசைந்த -தன்னில் பொருந்தி இருந்தபடி –

(கீழ் சாதனா சாதக சேர்த்தியும் சேராச் சேர்த்தி
நரஸிம்ஹர் போல்
யானை குதிரை விஷம் மஹா லஷ்மி பாரிஜாதம் இத்யாதி வந்ததும் சேராச் சேர்த்தி
இவன் ஸங்கல்ப மகிமையால் பொருந்தியவை)

பசைந்தங்கு அமுது படுப்ப —-அதிலே அமிருதம் வரும்படிக்கு ஈடாகப் பசை கொடுத்து –
அசைந்து-கடைந்த வருத்தமோ-உலாவிக் கடைந்த வருத்தமோ

கச்சி வெக்காவில்-கிடந்தது இருந்து நின்றதுவும் அங்கு – —–திருக் கச்சியிலும் திரு வெஃகாவிலும்
கிடப்பது இருப்பது நிற்பது ஆகிறது தனியே கடலைக் கடைந்ததாலே திரு மேனியில் பிறந்த ஆயாசமோ –

(தனியே -இவனே செய்த செயல்
ப்ரயோஜனாந்தர பரர் சம்பந்தம் கூடாதே
தேவர்கள் அசுரர்கள் மந்தரம் வாசுகி அனைத்துக்கும் அந்தர்யாமி
ஒல்லை நானும் கடைவன் அங்கு மட்டும் அவள் ஸ்பர்சம் உத்தேஸ்யம்
புலவர் நெருக்கு உகக்கும் பெருமான்)

————————————————————————–

பிரயோஜனாந்தர பரர்க்கும் உடம்பு நோவக் கடல் கடைந்து அபேக்ஷித சம்விதானம் பண்ணுமவன்
ஸ்வ பாவத்தை அனுசந்தித்து அவனுக்குப் பரிகிறார்

கடை கயிறாகக் கொள்ளுகைக்கு தகுதியான வாஸூகியும் –
மத்தாக நாட்டுகைக்குத் தகுதியான மந்த்ர பர்வதமும்
தாழி யாக்குகைக்குத் தகுதியான கடலுமான இம் மூன்றையும் கொண்டு -நீர் கோதாம் படி கலக்கி

அந்தக் கடலிலே அமிர்தம் உண்டாக்குகைக்காக அலைச்சல் பட்டுக் கடைந்த ஆயாசமோ –
திருக் கச்சியிலே திரு வெஃகாவிலே கண் வளர்ந்து -அந்த திருக் கச்சி தன்னிலே திருப் பாடகத்திலே எழுந்து அருளி இருந்து
திரு ஊரகத்திலே எழுந்து அருளி நின்றதுவும் –கடல் கடைந்த இளைப்பாலே நிற்பது இருப்பது கிடப்பதாகக் கொண்டு

இங்கனே நோவு படுகிறான் ஆகாதே -என்று வயிறு எறிகிறார் –

(சொன்ன வண்ணம் செய்த பிரான் யாதோத்தகாரி -வேகா சேது
பிரமன் சொன்ன வண்ணமும் திருமழிசைப்பிரானும் சொன்ன வண்ணம் செய்த பெருமாள்)

உத்சவம்-ஆயாஸம் தீர – விடாய் ஆற்ற -அதுக்கும் கூட்டம் உண்டே -அதே போல் இங்கும் அவனுக்கு ஆயாசம் -வயிறு பிடிக்கிறார்

தாளால் உலகம் அளந்த அசைவே கொல்,
வாளா கிடந்தருளும் வாய் திறவான், – நீளோதம்
வந்தலைக்கும் மா மயிலை மாவல்லிக் கேணியான்,
ஐந்தலைவாய் நாகத் தணை.
நடந்த கால்கள் நொந்தவோ? நடுங்க ஞாலம் ஏனமாய்
இடந்த மெய் குலுங்கவோ? இலங்கு மால் வரைச் சுரம்
கடந்த கால் பரந்த காவிரிக் கரைக் குடந்தையுள்
கிடந்தவாறு எழுந்திருந்து பேசு வாழி கேசனே.–49

கொடியார் மாடக் கோளூர் அகத்தும் புளிங்குடியும்
மடியாதின்னே நீ துயில் மேவி மகிழ்ந்தது தான்
அடியார் அல்லல் தவிர்த்த வசவோ அன்றே விப்
படிதான் நீண்டு தாவிய வசவோ பணியாயே –8-3-5-

புளிங்குடி கிடந்து வரகுண மங்கை யிருந்து வைகுந்தத்துள் நின்று
தெளிந்த என் சிந்தை அகங்கழியாதே என்ன யாள்வாய் எனக்கருளி
நளிர்ந்த சீருலகம் மூன்றுடன் வியப்ப நாங்கள் கூத்தாடி நின்றார்ப்ப
பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனி வாய் சிவப்ப நீ காண வாராயே !!

அஜிதன் -பாற் கடல் கடைந்த பெருமாள்
ஹரி -கஜேந்திர மோக்ஷம் அளித்தவன்

—————————————————————————————————–

அம்ருத மதனம் பண்ணின ஆயாசம் மாத்திரம் அன்றிக்கே அல்லாத அவதாரங்களிலும் அலைச்சலுக்கு
அடியான அவன் செயல்களை அனுசந்திக்கிறார் –

(அங்கற்கு-பிள்ளையான ப்ரஹ்லாதனுக்கு-அங்கஜ -கடைக்குறை அங்க -அங்கு மகற்கு -அங்கனுக்கு -அங்கருக்கு என்றுமாம்
ப்ரஹ்மதுக்கு அங்கம் -ஆழ்வார் பிள்ளையாக ஸ்வீ காரம்-பள்ளியில் ஒதி வந்த தன் சிறுவன்
தன் மகனைக் காய்ந்து -போல் இங்கும் ஆழ்வாருக்கு அங்கன்-அங்கு மகற்கு -கடைக்குறை என்றுமாம் )

அங்கற்கு இடரின்றி அந்திப் பொழுதத்து
மங்க விரணியன தாகத்தை -பொங்கி
அரியுருவமாய்ப் பிளந்த அம்மானவனே
கரி யுருவம் கொம்பொசித்தான் காய்ந்து ——65–(கார் உருவம் பாட பேதம் )

பதவுரை

அங்கற்கு–பிள்ளையான ப்ரஹ்லாதனுக்கு-அங்கஜன் -கடைக்குறை அங்க
இடர் இன்றி–ஒரு துன்பமும் வராதபடி
அந்தி பொழுதத்து–ஸாயங்காலத்தில்
இரணியனது–ஹரண்யனுடைய
ஆகத்தை–மார்வை-சிந்தையினால் இகழ்ந்தான் அன்றோ
மங்க–அழிந்து போம்படியாக
அரி உருவம் ஆய் பொங்கி–நரஸிம்ஹ ருபியாய்க் கிளர்ந்து
பிறந்த–கிழித்தொழிந்த
அம்மான் அவனே-அப் பெருமானே
காய்ந்து–சீறி
கரி உருவம்–கறுத்த வுருவத்தை யுடைத்தாயிருந்த குவலயா பீடத்தினுடைய
கொம்பு–தந்தத்தை
ஒசித்தான்–முறித்துப் போட்டான்-கோட்டுக்கால் கட்டில் நப்பின்னைக்கு

அங்கற்கு இடரின்றி — -பிள்ளை யுடைய விடாய் தீர —
அங்குக்கு இடர் இன்றி -என்ற பாடமாகில் -அவ் விடத்தில் விடாய் தீர –
அந்திப் பொழுதத்து-அஸூரர்க்கு பலம் வர்த்திக்கும் காலத்திலே
மங்க விரணியன தாகத்தை–ஹிரண்யனுடைய ஹிருதயமானது மங்கும் படிக்கு ஈடாக
பொங்கி-அரியுருவமாய்ப் பிளந்த அம்மான் -பிறை எயிற்று அன்று அடல் அரியாய்ப் பெருகினானை -என்னும் படி –
அவனே கரியுருவம் கொம்பொசித்தான் காய்ந்து —அவனே குவலயா பீடத்தினுடைய கொம்பை ஓசித்தான் –
காய்ந்து –சீற்றம் இல்லாதவன் சீறி —

(பெண்ணாகி யின்னமுதம் வஞ்சித்தானைப் பிறை எயிற்று அன்று அடல் அரியாய்ப் பெருகினானை
தண்ணார்ந்த வார் புனல் சூழ் மெய்யம் என்னும் தடவரை மேல் கிடந்தானைப் பணங்கள் மேவி
எண்ணானை எண்ணிறந்த புகழினானை இலங்கொளி சேர் அரவிந்தம் போன்று நீண்ட
கண்ணானை கண்ணாரக் கண்டு கொண்டேன் கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே–2-5-8-)

ஈஸ்வரன் செய்து அருளும் ஆனைத் தொழிலகள் எல்லாம் பாகவத அபசாரம் பொறாமையால் -நஞ்சீயர்

கடி கொள் பூம் பொழில் காமரு பொய்கை*  வைகு தாமரை வாங்கிய வேழம்* 
முடியும் வண்ணம் ஓர் முழு வலி முதலை பற்ற*  மற்று அது நின் சரண் நினைப்ப* 
கொடிய வாய் விலங்கின் உயிர் மலங்கக்*  கொண்ட சீற்றம் ஒன்று உண்டு உளது அறிந்து*  உன 
அடியனேனும் வந்து அடி இணை அடைந்தேன்*  அணி பொழில் திருவரங்கத்து அம்மானே.

—————————————————————————-

அம்ருத மதனம் பண்ணின ஆயாசம் மாத்திரம் அன்றிக்கே அல்லாத அவதாரங்களிலும் அலைச்சலுக்கு
அடியான அவன் செயல்களை அனுசந்திக்கிறார் –

சிறு பிள்ளையான ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு துக்கம் வாராத படி -அஸூரர்க்கு பலம் வர்த்திக்கும் படியான
சந்த்யா காலத்திலே ஆஸூர பிரக்ருதியான ஹிரண்யனுடைய வர பலாதிகளாலே பூண் கட்டின மார்வை
உருத் தெரியாத படி அழிந்து போம்படி யாக பெரும் கிளர்த்தியை யுடையனாய்க் கொண்டு
நரசிம்ஹ ரூபியாய் இடந்து பொகட்ட சர்வேஸ்வரனான அவனே –
சீறிக் கொண்டு குவலயா பீடத்தின் யுடைய கொம்பை அநாயாசேன முறித்துப் பொகட்டவன்

அங்கர் என்றது அங்கன் என்ற படியாய் பிள்ளை என்றபடி –
அன்றிக்கே —
சர்வகத்வாத் அநந்தஸ்ய ச ஏவாஹ(சர்வகத்வாத் அநந்தஸ்ய ஸ ஏவ அஹம் அவஸ்தித:”என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 1. 19 : 85.)

அங்கு -அவ்விடத்து -என்று பிரித்து –
மகற்கு என்கிறதை தலைக் குறைத்தலாய்க் கிடக்கிறது என்னவுமாம்

ஹிரண்யனுடைய மகனுக்கு இடர் இல்லாத படி -என்று பொருளாகக் கடவது –

அங்கற்க் கிடர் -என்ற பாடமான போது
அவ்விடத்து இடர் இல்லாத படி என்று பொருளாகக் கடவது –

————————————————————————————————————-

உணர்த்தி உண்டான போது விரோதி நிரசனம் பண்ணினது ஓர் ஏற்றமோ -அவதானம் இன்றிக்கே
இருக்கச் செய்தே விரோதிகளை முடிக்க வல்லவனுக்கு -என்கிறார் -(பையத் துயின்ற பரமன் அன்றோ )

தான் ஒரு வடிவு கொண்டு வந்து விரோதியைப் போக்கினான் என்கிற இது ஓர் ஏற்றமோ –
கண் வளர்ந்து அருளுகிற இடத்தே வந்து கிட்டின விரோதிகளை முடிக்க வல்லவனுக்கு -என்கிறார் –

(மது ஸூ தனன் கைடபாரி திரு நாமங்கள் அவனுக்கு -கொழுப்பு இவர்கள் உருவம் -தொடையில் வைத்து முடித்தான்)

(திரு மெய்யம் -அகன்ற கர்ப்ப க்ருஹம் -ஆதி சேஷன் மூச்சு-ஜ்வாலை யுடன் ஓடுவதையும் சேவிக்கலாம்
மது ஸூதனன் கைடபாரி இவருக்கு திருநாமம்
ஆதிசேஷன் இவர் அங்கம் தானே -மூக்கு அரிந்திட்ட குமரனார் சொல்லும் பொய்யானால் போல் இங்கும்
மாணிக்கம் ஒளி மூச்சு ஒலி-ஸ்பர்சம் -ஒளி பட்டு விஞ்சி இருக்கும்-தேஜஸே மேல் கட்டி விதானம் )

(அனுகூல புத்தியால் கிட்டினால் வாழலாம் -பிரதிகூல புத்தியால் கிட்டினால் வீழ்ந்தே போவார்கள்)

காய்ந்திருளை மாற்றிக் கதிரிலகு மா மணிகள்
ஏய்ந்த பணக் கதிர் மேல் வெவ்வுயிர்ப்ப-வாய்ந்த
மதுகைடபரும் வயிறுருகி மாண்டார்
அதுகேடவர்கு இறுதி யாங்கு   ——-66-

பதவுரை

காய்ந்து–சீறி
இருளை மாற்றி–இருளைப் போக்கி
கதிர் இலகு–ஒளிவிடா நின்றுள்ள
மா மணிகள்–சிறந்த ரத்னங்கள்
ஏய்ந்த–பொருத்தி யிருக்கிற
பணம்–(தன்னுடைய) படங்களினுடைய
கதிர் மேல்–ஒளிக்கு மேலே (திருவனந்தாழ்வான்)
வெவ் வுயிர்ப்ப–பெரு மூச்சு விட,
வாய்ந்த–கிட்டின
மது கைடபரும்–மதுகைடபர்கள்
வயிறு உருகி மாண்டார்–குடலழுகி முடிந்து போனார்கள்
அவர்க்கு–அந்த மதுகைடபர்களைப் போலே பிரதிகூலராய் வருமவர்களுக்கு
ஆங்கு–அவ் வண்ணாமாகவே
அது இறுதி கேடு–அப்படிப்பட்ட ப்ராண விநாசமான கேடே (பலிக்கும்)

காய்ந்திருளை மாற்றிக் சீறி இருளைப் போக்கி –கதிரிலகு மா மணிகள்-ஏய்ந்த பணக் கதிர் மேல் வெவ்வுயிர்ப்ப-
ஒளி விடா நின்றுள்ள மணிகள் சேர்ந்த பணத்தில் யுண்டான தேஜஸ்ஸின் மேலே நெடு மூச்சு விட
வாய்ந்த-மதுகைடபரும் வயிறுருகி மாண்டார்–
கிட்டின மது கைடபர்கள் வயிறு உருகி முடிந் தார்கள்

அது கேடவர்கு இறுதி யாங்கு   —-என்றும்
என் பிள்ளைக்குத் தீமை செய்வார்கள் அங்கனம் ஆவர்களே-3-3-7

(அங்கு அது கேடு இங்கு -அங்கனம் ஆவார்கள் -அங்கு -எனக்கு நிம்மதி பெரு மூச்சு வந்தது என்கிறார்)

பன்றியும் ஆமையும் மீனமும் ஆகிய பாற் கடல் வண்ணா உன் மேல்
கன்றின் உருவாகி மேய் புலத்தே வந்த  கள்ள வசுரர் தம்மை
சென்று பிடித்து சிறுக் கைகளாலே விளங்காய் எறிந்தாய் போலும்
என்றும் என் பிள்ளைக்கு தீமைகள் செய்வார்கள் அங்கனம் ஆவார்களே -பெரியாழ்வார் -3- 3-7 –

——————————————————————–

தான் ஒரு வடிவு கொண்டு வந்து விரோதியைப் போக்கினான் என்கிற இது ஓர் ஏற்றமோ –
கண் வளர்ந்து அருளுகிற இடத்தே வந்து கிட்டின விரோதிகளை முடிக்க வல்லவனுக்கு -என்கிறார் –

சஹாவஸ்தானம் இல்லாத மாத்திரம் இன்றிக்கே சீறிக் கொண்டு இருளைப் போக்கிக் கிரணங்கள் ஒளி விடா நின்றுள்ள
பெரு விலையனான ரத்தினங்கள் சேர்ந்து இருக்கிற தன்னுடைய பணங்களின் ஒளிக்கு மேலே திருவனந்த ஆழ்வான்
அனுபவ ஜெனித ஹர்ஷ பிரகர்ஷத்துக்குப் போக்கு விட்டு வெவ்விதாக உச்சவாச நிசுவாசங்களைப் பண்ண-
இவ்வளவிலே விரோதித்து வந்து கிட்டின மது கைடபர்களும் குடல் அழுகி முடிந்து விட்டார்கள் –

அனுகூலர்க்கு வாழவும் ஜீவிக்குமான அந்தக் கண் வளர்ந்து அருளுகிற ஸ்தலத்திலே பிரதிகூலித்து வந்து
கிட்டினவர்களுக்கு அந்தக் கிட்டினதுவே வாழ்வுக்கு பிரதி கோடியான கேடும்-

சத்தையோடு ஜீவிக்கைக்கு ப்ரதி கோடியுமான விநாசமுமாய் விட்டது –

(சத்தை-சேஷத்வ பாரதந்தர்ய ஸ்வரூப லாபம்-வாழ்வு -சத்தை -இதுக்கு பிரதி கோடி- இறுதி கேடு )

(கிடந்ததோர் கிடக்கை -அரவின் அணை மிசை மேய மாயனார் -ஏரார் கோலம் திகழக் கிடந்தாய்)

(சுந்தர பாஹு ஸ்தவம் ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -இரண்டிலும் மது கைடப நிரசன  விருத்தாந்தம் உண்டே)

—————————————————————————————————————

ஹிரண்யனும் மது கைடபர்களும் முடிந்த பின்பு கண் வளரும் போதை அழகை அனுபவிக்கிறார் -(கீழ் இரண்டு பாசுரங்களுக்கும் இதுக்கும் சங்கதி )

அங்குக் கண் வளர்ந்து அருளுகிறவனுடைய திரு நாபீ கமலமானது திருக் கையும் திரு ஆழ்வார்களுமான
சேர்த்தியைக் கண்டு அலருவது மொட்டிப்பது ஆகிற படியை அனுபவிக்கிறார் –

(கவி -நிகழ்வுகளை ஏற்றிச் சொல்வது போல் இங்கும்-தற் குறிப்பு ஏற்று அணி —
பெருமாள் -மிதிலா தேசம் நுழையும் போது ஒல்லை வா என அழைத்தனவே
கோவலன் நுழைய வராதே கொடிகள் அங்கு -இளங்கோ அடிகள் )

(உந்தித்  தாமாரை பரத்வம் ஜகத் காரணத்வம் பொதுவாக சொல்வர்
இங்கு அழகு சவுந்தர்யம்)

ஆங்கு மலரும் குவியும் மாலுந்தி வாய்
ஓங்கு கமலத்தின் ஓண் போது -ஆங்கைத்
திகிரி சுடர் என்றும் வெண் சங்கம் வானில்
பகருமதி என்றும் பார்த்து  ——67-

பதவுரை

மால்–ஸர்வேச்வரனுடைய
உந்தி வாய்–திரு நாபியிலே
ஓங்கு–உயர வளர்ந்த
ஒண் கமலத்தின் போது–அழகிய தாமரைப் பூவானது
கை–அவனுடைய வலத் திருக் கையில்
ஆம்–உண்டான
திகிரி–திருவாழியை
சுடர் என்றும்–ஸூர்யனென்றும்
(ஆங்கை-கை ஆம்)
இடத் திருக் கையிலுள்ள
வெண் சங்கம்–வெளுத்த சங்கை
வானில் பகரும் மதி என்றும்–ஆகாசத்தில் விளங்குகிற சந்திரனென்றும்
பார்த்து–நினைத்துக் கொண்டு
ஆங்கு–எக் காலத்திலே
மலரும் குவியும்–மலர்வதும் மூடிக் கொள்வதுமா யிரா நின்றது.-குவியும் ஆல் -ஆச்சர்யம் என்றுமாம்

(சம்பு காவியம் -வெங்கடாத்ரி கவி
ரமா ஹஸ்த–இத்யாதி
திரிசானு -தப்பு கண்ணில் படும்
விஷ்வாயுசு நல்லதே கண்ணில் படும்
நாபியில் கமலம் -பிராட்டியார் திருக்கையில் லீலா பத்மம்
தேன் சொட்டும் பிள்ளைக்கு-த்யுக முக சிசு -இரண்டு இரட்டை நான் முகன்)

மாலுந்தி வாய்-ஓங்கு கமலத்தின் ஓண் போது —திரு நாபீ கமலத்தில் ஓங்கி இருந்துள்ள அழகியதான தாமரைப் பூ
ஆங்கைத்-திகிரி சுடர் என்றும் –கையில் திரு வாழியை ஆதித்யன் என்றும்

வெண் சங்கம் வானில்-பகருமதி என்றும் பார்த்து–
ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை ஆகாசத்தில் விளங்கா நின்றுள்ள சந்திரன் என்றும் பார்த்து-அனுசந்தித்து –

ஆங்கு மலரும் குவியும்-ஆல்–
இரண்டு காலத்திலே பிறக்கக் கடவ அவ்விரண்டு அவஸ்தையானது யுகபத் உண்டாகா நின்றது –

(வெள்ளை சரி சங்கோடு –சங்கோடு சக்கரம் பங்கயக் கண் -கண் தாமரை மலர்வதும் குவிவதும் சொல்வர்)

——————————————————————

அங்குக் கண் வளர்ந்து அருளுகிறவனுடைய திரு நாபீ கமலமானது திருக் கையும் திரு ஆழ்வார்களுமான
சேர்த்தியைக் கண்டு அலருவது மொட்டிப்பது ஆகிற படியை அனுபவிக்கிறார் –

திரு நாபீ கமலத்தில் உண்டாய் -உயர வளர்ந்த தாமரையினுடைய செவ்வி குன்றாத அழகிய பூவானது அவனுடைய
வலத் திருக் கையிலே உண்டான திரு வாழியை ஆதித்யன் என்றும் –
மற்றைத் திருக் கையிலே ஏந்தின வெளுத்த நிறத்தை யுடைத்தான ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை
ஆகாசத்தில் வர்த்திக்கிற ஒளியையுடைய சந்திரன் என்றும்
உத் ப்ரேஷித்துக் கொண்டு -அக்காலத்திலே அலர்வது மொட்டிப்பதாக நிற்கும் –
இது ஓர் ஆச்சர்யம் இருக்கிற படியே என்று அனுபவிக்கிறார்

மாலுந்தி வாய் -என்ற போது
சர்வேஸ்வரனுடைய திரு நாபியில் என்றாகக் கடவது –

அங்கு -அந்தப் பொழுதில் -ஏக காலத்திலே என்றபடி –
வானிலே வர்த்திக்கிற ப்ரசித்தனான சந்திரன் -என்னவுமாம் –

(பகரும் மதி -ஒளி விடுபவன் என்றும் ப்ரஸித்தமாகப் பேசப்படும் என்றும்)

(பன்னக ஸார்வ பவ்மன் ந அஹம் -எனக்கும் தெரியாது-ரிஷிகளுக்கும் தெரியாது -குழந்தை ஜன்னி போல் உழன்று
ஸ்ரீ பத்ம நாபன் ஆனந்தமாகக் கேட்டுக் கொண்டு இருக்கிறான் -தேசிகன்
இங்கு நாபி கமலம் மட்டுமே -இன்னும் பிரமன் உத்பத்தி இல்லை-திரு வாட்டாறு போல்)

———————————————————————————————————

இப்படிப்பட்டவனுடைய அழகை அனுபவிக்கைக்காக திரு பாற் கடல் ஏறப் போக வேண்டா –
திரு மலையிலே அனுபவிக்கலாம் கிடீர் -என்கிறார்

(இங்குள்ள திர்யக்க்கின் தேஹ யாத்திரையும் உத்தேச்யம்-கீழ் மதியை கண்ணாடியாக கேட்டதையும் பார்த்தோம் )

பார்த்த கடுவன் சுனை நீர் நிழல் கண்டு
பேர்த்தோர் கடுவன் எனப் பேர்ந்து -கார்த்த
களங்கனிக்கிக் கை நீட்டும் வேங்கடமே மேனாள்
விளங்கனிக்குக் கன்று எறிந்தான் வெற்பு —-68-

பதவுரை

சுனை நீர்–திருமலைச் சுனையின் நீரிலே
பார்த்த–கவிந்து பார்த்த
கடுவன்–குரங்கானது
நிழல் கண்டு–நீரினுள்ளே பிரதி பலிக்கிற தன்னிழலைக் கண்டு
பேர்த்து ஓர் கடுவன் என–(தனக்கு எதிரியான) வேறொரு குரங்கு இருப்பதாக ப்ரமித்து
பேர்ந்து–அவ்விடம் விட்டு நீங்கி (மறுபடியும் சாபல்யத்தாலே)
கார்த்த களங்கனிக்கு கை நீட்டும்–கரிய களாப் பழத்தைப் பறித்துத் தா வென்று கை நீட்டப் பெற்ற
வேங்கடமே–திருவேங்கடம் தான்
மேல் நாள்–முன்பொரு காலத்தில்
விள கனிக்கு–(அஸுராவேசங்கொண்ட) விளாம் பழங்கள் உதிர்வதற்காக
கன்று எறிந்தான்–வத்ஸாஸுரனை (எறி குணிலாகக் கொண்டு) வீசி யெறிந்த பெருமானுடைய
வெற்பு–திருமலை.

பார்த்த கடுவன் சுனை நீர் நிழல் கண்டு–சுனை நீரிலே கடுவானானது தன்னுடைய நிழலைக் கண்டு

பேர்த்தோர் கடுவன் எனப் பேர்ந்து -வேறே தனக்கு எதிரியான கடுவன் எனப் பேர்ந்து

கார்த்த–களங்கனிக்கிக் கை நீட்டும் -பின்னையும் தன்னுடைய சாபலத்தாலே அருகில்-களாப் பழத்தை அறுத்துத் தா என்றும் கை நீட்டா நிற்கும் -வேங்கடமே -திருமலை -(இது பண்டு கன்றைக் கொண்டு விளங்கனிக்கு எறிந்த கண்ணன் சேஷ்டிதத்துக்கு ஸ்மாரகம் )

மேனாள்-விளங்கனிக்குக் கன்று எறிந்தான் வெற்பு —-பண்டு கன்றைக் கொண்டு விளங்கனிக்கு எறிந்தவனுடைய திருமலை –

(ஸூ ந்த்தர பாஹு ஸ்தவம்
பிரதி பார்த்து நரஸிம்ஹம் கொண்ட சீற்றம்
பக்த ப்ரகலாதனைக் கண்ட மயக்கம்)

(திருமலையில் கர்ப்ப க்ருஹம் -சீதா ராமர்
நர்த்தன கண்ணன் -சேவை உண்டே)

——————————————————————

இப்படிப்பட்டவனுடைய அழகை அனுபவிக்கைக்காக திரு பாற் கடல் ஏறப் போக வேண்டா –
திரு மலையிலே அனுபவிக்கலாம் கிடீர் -என்கிறார்(உருவகம் அழகு அங்கும் இங்கும் )

கரையிலே களாவிலே நின்று சுனையின் நீரைப் பார்த்த கடுவானானது –
நீருக்கு உள்ளே தன்னுடைய நிழலைக் கண்டு
இது நம்முடைய நிழல் என்று புத்தி பண்ண மாட்டாதே –
தனக்கு எதிரியான வேறு ஒரு கடுவன் என்று பிரதி பத்தி பண்ணி
தன் கையின் சிவப்புக்குப் பகைத் தொடையான கறுத்த நிறத்தை யுடைத்தான காளாவின் பழத்துக்கு
தான் நிற்கிற களாவின் நிழல் என்று அறியாதே
வேறு ஒன்றாகக் கருதி அதின் பழமும் பெற வேணும் என்னும்
சாபலத்தாலே அத்தை அறுத்துத் தா என்று கை நீட்டா நிற்கும் –

வேங்கடமே -பண்டு ஒரு நாளில் விளாம்பழத்துக்கு கன்று எறிந்தவன் வர்த்திக்கிற திருமலை –
இதினுடைய முஃத்யம் (அறிவின்மை பிள்ளைத்தனம் )போலே யாய்த்து அவனுடைய முஃத்யம் இருக்கும் படி –

(கடுவன் ஆண் குரங்கு மந்தி பெண் குரங்கு)

(பகைத் தொடை-மாற்று நிறம் -இணைத் தொடை ஒரே நிறம்)

———————————————————————————————————-

ஆழ்வாரான அவஸ்தை போய் ஒரு பிராட்டி அவஸ்தியைப் பஜித்து
அவளுடைய தசையை தாயார் சொல்லுகிறாள் –

இப்படிப் பட்ட திருவேங்கடமுடையானுடைய முஃத்யத்தை அனுபவித்து
தாமான தன்மை அழிந்து -ஒரு பிராட்டி தசையைப் பிராப்தராய் –
அவளுடைய யுக்தி வ்ருத்திகளை திருத் தாயாராக அனுவதித்திக் கொண்டு பேசுகிறார் –

(முலையோ முழு முற்றும் போந்தில மொய் பூம் குழல் குறிய
கலையோ அரையில்லை நாவோ குழறும் கடல் மண்ணெல்லாம்
விலையோ வென மிளிரும் கண் இவள் பரமே பெருமான்
மலையோ திருவேம்கடம் என்று கற்கின்ற வாசகமே – 60–பிரஸ்தாபம் வந்தாலே -திருவேங்கடம் என்று கற்கும் வாசகம் )

(முள் எயிற்று ஏய்ந்திலக் கூழை முடி கொடா
தெள்ளியள்  என்பதோர்   தேசிலள்  என் செய்கேன்
கள்ளவிழ் சோலைக் கண புரம் கை தொழும்
பிள்ளையை பிள்ளை என்று எண்ணப் பெறுவரே–8-2-9-)

(பாடும் -சூடும் -நீராடுவான்- புகும் -மூன்று வினைச் சொற்கள்
திருத் துழாய் சூடிக் கொள்ள பாசுரம் –
குலசேகரப் பெருமாள் குஹ்யதே -திருவரங்கம் போல் இவள் திருவேங்கடம் தினம் தினம்-பூண்ட நாள் எல்லாம் புகும்)

வெற்பு என்று வேங்கடம் பாடும் வியன் துழாய்
கற்பு என்று சூடும் கருங்குழல் மேல் -மற்பொன்ற
நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீராடுவான்
பூண்ட நாள் எல்லாம் புகும் —–69-

பதவுரை

வெற்பு என்று–ஏதேனும் ஒரு மலையைச் சொல்ல நினைத்தாலும்
வேங்கடம்–திருமலையைப் பற்றி
பாடும்–பாடுகின்றாள்,-
கற்பு என்று–குல மரியாதைக்குத் தகுந்திருப்ப தென்று
வியன் துழாய்–விலக்ஷணமான திருத் துழாயை
கரு குழல் மேல்–(தனது) கரிய கூந்தலில்
சூடும்–அணிந்து கொள்ளுகிறாள்.
மல்–மல்லர்களை
பொன்ற–பொடி படுத்தின
நீண்ட தோள்–நீண்ட திருத் தோள்களை யுடைய
மால்–ஸர்வேச்வரன்
கிடந்த–சயனித்திருக்கப் பெற்ற
நீள் கடல்–பரந்த திருப்பாற் கடலிலே
நீராடுவான்–தீர்த்தமாடுவதற்காக
பூண்ட நாள் எல்லாம்–விடிந்த விடிவுகள் தோறும்
புகும்–புறப்படுகிறாள்.

வெற்பு என்று வேங்கடம் பாடும் வியன் துழாய்-
லோக யாத்திரையும் இவளுக்கு பகவத் விஷயத்திலேயே
திருமலையை ஒழிய வேறு ஒரு மலையையும் அறியாள்-

(நீணிலா முற்றத்து நின்றிவள் நோக்கினாள்
காணுமோ கண்ண புரம் என்று காட்டினாள்
பாணனார் திண்ணம் இருக்க   வினி  யிவள்
நாணுமோ நன்று நன்று நறையூரர்க்கே –8-2-2-)

கற்பு என்று சூடும் கருங்குழல் மேல் —
காட்டுப் பூ சூடாள்-
தொடுத்த துழாய் மலர் சூடிக் களைந்தன சூடும் இத் தொண்டர்களோம்-என்கிறபடியே
விஸ்மயமான திருத் துழாய் அல்லது குழலிலே வையாள்–

(திருத் துழாய் ஒன்றே இவனைக் காட்டும் பூ)

(வாராயின முலையாளிவள் வானோர் தலைமகனாம்
சீராயின தெய்வ நன்றோயிது தெய்வத் தண்ணந்துழாய்
தாராயினும், தழையாயினும் தன் கொம்பதாயினும் கீழ்
வேராயினும் நின்ற மண்ணாயினும் கொண்டு வீசுமினே-திரு விருத்தம் )

கற்பு என்று பாதி வ்ரத்யம் –

(அன்றி மற்றோர் உபாயம் என் இவள் அம்தண் துழாய் கமழ்தல்
குன்ற மா மணி மாட மாளிகைக் கோலக் குழாங்கள் மல்கி
தென் திசைத் திலதம் புரை குட்ட நாட்டுத் திருப் புலியூர்
நின்ற மாயப் பிரான் திருவருளாம் இவள் நேர் பட்டதே–8-9-10-)

மற்பொன்ற-நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீராடுவான்-பூண்ட நாள் எல்லாம் புகும் —
விரோதி நிரசனத்துக்காக வளர்ந்த தோளை யுடையனாய் –
வியாமுக்தனானவன் கிடந்த நீள் கடலிலே
விடிந்த நாள் எல்லாம் புகா நின்றாள்-
திருப் பாற் கடல் ஒழிய வேறு ஒன்றில் குளித்தால் விடாய் கெடாது என்று இருக்கிறாள்

இப் பிரகரணத்தில் கீழும் மேலும் அந்யாபதேசம் இன்றிக்கே இருக்க
இப்பாட்டு ஒன்றும்
இப்படிக் கொள்ளுகிறது என் என்றும் நிர்வஹிப்பர்கள்-

(சூடும் பாடும் நீராடும் -வினை முற்றுச் சொற்கள்-நம்மைப் பார்த்து சொல்வதாக -தாமான தன்மை)

அம்மலை இம்மலை என்று ஒன்றைச் சொல்லக் கடவி கோள் இறே –
ஆன பின்பு திருமலையைப் பாடுங்கோள்-

ஒரு பூவைச் சூடக் கடவி கோள் இறே –
ஆன பின்பு வகுத்தவன் உகக்கும் திருத் துழாயைச் சூடுங்கோள்

பிராதஸ் ஸ்நானம் பண்ணக் கடவி கோள் இறே –
ஆன பின்பு விரோதி நிரசன சீலனானவன் கிடந்த திருப் பாற் கடலிலே முழுகுங்கோள்–

(மனத்துள்ளான் மா கடல் நீருள்ளான் -எங்கு சயனித்து இருந்தாலும் பாற் கடல் போலவே கொள்ளலாம்)

பாடோமே எந்தை பெருமானைப் பாடி நின்று
ஆடாமே ஆயிரம் பேரானைப் பேர் நினைந்து
சூடாமே சூடும் துழாய் அலங்கல் சூடி நாம்
கூடாமோ கூடக் குறிப்பாகில் நன்னெஞ்சே —ஸ்ரீ பெரிய திருமொழி-11-3-8-

———————————————————————-

இப்படிப் பட்ட திருவேங்கடமுடையானுடைய முஃத்யத்தை அனுபவித்து
தாமான தன்மை அழிந்து -ஒரு பிராட்டி தசையைப் பிராப்தராய் –
அவளுடைய யுக்தி வ்ருத்திகளை திருத் தாயாராக அனுவதித்திக் கொண்டு பேசுகிறார் –

(கடல் ஞானம் செய்தேனும் யானே என்னும் போல் அனுவதித்திக் கொண்டு பேசுகிறா)

ஏதேனும் ஒரு மலையைச் சொல்லப் புக்காள் ஆகில்
திருமலையையே ப்ரீதி பிரேரிதையாய்ப் பேசா நிற்கும்

ஏதேனும் ஒரு பூவைச் சூட நினைத்தாள் ஆகில்
விஸ்மயமான திருத் துழாய் குல மரியாதைக்கு சேருவது ஓன்று என்று
தொடுத்த துழாய் மலர் சூடிக் களைந்தன சூடும் இத் தொண்டர்களோம் -என்கிறபடியே
இருண்ட குழலின் மேலே சாதரமாகச் சூடா நிற்கும் –

மல்ல வர்க்கம் பொடி படும் படி வளர்ந்த திருத் தோள்களை யுடைய சர்வேஸ்வரன் கண் வளர்ந்து அருளின
பரந்த திருப் பாற் கடலிலே நீராடுகைக்காக விடிந்த விடிவுகள் தோறும் புகா நிற்கும்

வேறு ஒரு மலையில் பேர் சொல்லுதல் –
நாறு பூச் சூடுதல் –
வேறு ஒரு நீர் நிலைகளில் குளித்தல் செய்யாள்

பாடுகை சூடுகை முதலான லோக யாத்திரை அடங்கலும் இவளுக்கு பகவத் விஷயத்திலேயாய் இருக்கிற படி

(உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணனே –
வாஸூ தேவ ஸர்வம் -என்று இருக்கும் மஹாத்மா)

மால் கிடந்த -வியாமுக்தனானவன் பள்ளி கொண்டு அருளின என்னவுமாம் -(சர்வேஸ்வரனை என்றும் வ்யாமுக்தன் என்றும் மால்)

இங்கண் இன்றிக்கே கீழும் மேலும்
அந்யாபதேசம் அற்று இருக்க இது ஒன்றும் இப்படி கொள்கிறது என் என்று
பர உபதேசமாக நிர்வஹிப்பார்கள்

அப்போது அம்மலை இம்மலை என்று ஏதேனும் ஒரு மலையைச் சொல்லப் பார்த்தீர்கள் ஆகில்
திரு மலையைப் பாடுங்கோள்
ஏதேனும் ஒரு பூச் சூட நினைத்தீர்கள் ஆகில் திருத் துழாயைச் சூடுங்கோள்
ஏதேனும் ஒரு நீர் நிலைகளில் புக்கு பிராதஸ் ஸ்நானம் பண்ணப் பார்த்தீர்கள் ஆகில்
அவன் சாய்ந்து அருளின கடலிலே நாள் தோறும் அவகாஹிக்கப் பாருங்கோள் என்று பொருளாகக் கடவது –

கற்பு என்று பாதி வ்ரத தர்மம் என்றுமாம் -(குல வரம்பு என்றும் )

——————————————————————————————————-

(இதிலும் திருமலையில் உள்ள களிறு செய்யும் கைங்கர்யம்
அர்க்யம் பாத்யம் ஆசமன்யம் செய்து புஷ்பம் சமர்ப்பித்து-

ஸ்ரீ கஜேந்திரன் போல் தொழும் காதல் களிறு இங்கு உள்ளவை எல்லாமே
இங்கு முதலை நீர் புழுக்களே இருக்காதே )

அனுகூலருடைய தேஹ யாத்திரையே எல்லாம் தனது ஸமாஸ்ரயணத்துக்கு உடலாகக் கொள்ளும்
அவன் எழுந்து அருளி இருக்கும் திருமலை
ஞான பக்திகள் எல்லாம் வேண்டாம் – இவையே யாகம் தவம் என்று கொள்ளும் அத்யந்த ஸுலப்யம்
ஸ்ரீ வைகுண்ட விரக்தாய ஸ்வாமி புஷ்கரிணீ தடே, ரமயா ரமமாணாய வேங்கடேசாய மங்களம்.-
உகந்து அருளி நித்ய வாஸம் செய்து அருளுகிறான்

ஆகில் அவனை ஆஸ்ரயிக்கும் போது சிறிது யோக்யதை சம்பாதிக்க வேண்டாவோ -என்ன
அது வேண்டா
திர்யக்குகளும் ஆஸ்ரயிக்கலாம் படி இருப்பான் ஒருவன் என்கிறார் –

புகு மதத்தால் வாய் பூசிக் கீழ்த் தாழ்ந்து அருவி
உகு மதத்தால் கால் கழுவிக் கையால் -மிகு மதத்தேன்
விண்ட மலர் கொண்டு விறல் வேங்கடவனையே
கண்டு வணங்கும் களிறு —–70-

பதவுரை

களிறு–(திருமலையிலுள்ள) யானையானது
புகு மதத்தால் வாய் பூசி–மண்டையில் நின்றும் கபோலங்களில் நின்றும் வாயிலே புகுகின்ற
மத ஜலத்தாலே வாய் கொப்பளித்து ஆகமனம் பண்ணி
கீழ் தாழ்ந்து அருவி உகு மதத்தால்–மேலிருந்து கீழ் வரையில் அருவி போலே வந்து பெருகுகிற மத ஜலத்தாலே
கால் கழுவி–கால்களை சுத்தி செய்து கொண்டு
கையால்–துதிக்கையால்
மிகு மதம் தேன்–மிகுந்த மதத்தை யுண்டு பண்ணக் கூடிய தேனை யுடையதும்
விண்ட–மலர்ந்ததுமான
மலர் கொண்டு–புஷ்பத்தைக் கொண்டு
விறல் வேங்கடவனையே–பெரு மிடுக்கனான திருமலை யப்பனையே
கண்டு வணங்கும்–ஸேவித்து வணங்குகின்றது.

புகு மதத்தால் வாய் பூசிக் —
வாயிலே புகுந்த மத ஜலத்தால் வாய் கழுவி

கீழ்த் தாழ்ந்து அருவி-உகு மதத்தால் கால் கழுவிக் —
கீழே தாழ்ந்த அருவி போலே உகா நின்ற மத ஜலத்தாலே கால் கழுவி

கையால் -மிகு மதத்தேன்-விண்ட மலர் கொண்டு விறல் வேங்கடவனையே
கையாலே மிக்க மதத்தை யுடைத்தாய் -அலரா நின்ற பூவைக் கொண்டு களிறு ஆனது

விறல் வேங்கடவனையே கண்டு வணங்கும் களிறு —
விறல் வேங்கடவனையே-என்று திருமலையிலே திர்யக்குகளும் தன்னை வணங்கும்படி
ஞானத்தை கொடுக்க வல்ல சக்தியை யுடையவன் என்கிறது -(ததாமி புத்தி யோகம் )

ஞான கார்யமான ஸமாஸ்ரயணத்தை தேச வாசத்தாலே பண்ணி வைக்கும் –

(தேசோயம் ஸர்வ காம துக் -சமன் கொள் வீடு தரும் தடம் குன்றமே-அவனே இது மூலம் அருளுகிறான் )

(ஊரிலேன் காணி இலேன் -பாரிலேன் பற்றிலேன் -திவ்ய தேச வாஸம் இல்லா விடில் பற்று சமாஸ்ரயணம் பண்ண மாட்டோமே)

(அளித்த யானை கஜேந்திரன் -அழித்த யானை குவலயா பீடம்
நாகம் –பிரணார்த்தம் -ந அஹம் -இந்த உடலை ரக்ஷிக்க நான் உன்னை அழைக்க வில்லை
கரஸ்த கமலான் -ஸமர்ப்பிக்கவே கூப்பிட்டேன் -தொழும் காதல் களிறு அளிப்பான் தோன்றினையே)

(அசேஷ ஜககதித்த அநு சாசன ஸ்ருதி நிகர ஸிரஸி ஸமதிகதோ யமர்த்த
ஜீவ பரமாத்ம யாதாத்ம ஞான பூர்வக வர்ணாஸ்ரம தர்மேதி கர்தவ்யதாக
பரம புருஷ சரண யுகள த்யான அர்ச்சன பிரணாமாதி
அத்யர்த்தப்பிரிய -தத் பிராப்தி பல-ஸ்ரீ வேதார்த்த ஸங்க்ரஹம்

(அசேஷ ஜககதித்த அநு சாசன -தத்வம் சித்தம் -ஹிதம் புருஷார்த்தம் ஸாத்யம் -சாஸனமே பிரதானம்
ஸ்ருதி நிகர -சமுதாயம் -ஸிரஸி -வேதாந்தம்
ஸமதிகதோ யமர்த்த -நன்கு அறியப்படும்
ஜீவ பரமாத்ம யாதாத்ம ஞான பூர்வக -ஸர்வ காரணம் ஸமஸ்த இதர விலக்ஷணன் இத்யாதி –
ஞான ஸ்வரூபன் சேஷ பூதன்- அணு -இத்யாதி -இவை முன்னுட்டு
வர்ணாஸ்ரம தர்மேதி கர்தவ்யதாக–இவற்றை அங்கமாக -த்ரிவித த்யாகத்துடன் ஆராதன ரூபமாக செய்து-இதி கர்தவ்யதா -அங்கமாக –
பரம புருஷ சரண யுகள த்யான அர்ச்சன பிரணாமாதி-பக்தி யோக உபாசனத்துக்கு இவையே அங்கங்கள் -மத யாஜி மாம் நமஸ்க்ரு
அத்யர்த்தப் பிரிய -அளவு கடந்த வாக்குக்கு அப்பால் பட்ட பிரியம்
தத் பிராப்தி பல-பகவத் பிராப்தி)

——————————————————————

ஆகில் அவனை ஆஸ்ரயிக்கும் போது சிறிது யோக்யதை சம்பாதிக்க வேண்டாவோ -என்ன
அது வேண்டா
திர்யக்குகளும் ஆஸ்ரயிக்கலாம் படி இருப்பான் ஒருவன் என்கிறார் –

மஸ்தக ஸ்தலம் கண்ட ஸ்தலம் இவற்றின் நின்றும் பாய்ந்து வாயிலே புகுகிற மத ஜலத்தாலே வாய் கொப்பளித்து
ஆசமனம் பண்ணி கீழே தாழ்ந்து அருவிகள் போலே வந்து விழுகிற மத ஜலத்தாலே காலைக் கழுவி துதிக்கையாலே

மிக்க மதத்தைப் பண்ணிக் கடவ தேனை யுடைத்தாய்
அப்போது அலர்ந்த செவ்விப் பூக்களை பொய்க்கைகளிலே புக்குப் பறித்துக் கொண்டு

சாஸ்திர வஸ்யம் அல்லாத திர்யக்குகளும் ஸ்வ விஷயத்தில் ஞான ப்ரேமங்களை விளைக்க வல்ல
பெரு மிடுக்கனான திருவேங்கடம் மேய எந்தையைக் கண்டு தலையார வணங்கி ஆஸ்ரியியா நிற்கும்
அங்குண்டான ஆனையானது –

மதம் என்று கந்தமாய் மிக்க கந்தத்தையும் தேனையும் யுடைய செவ்விப் பூக்களைக் கொண்டு என்னவுமாம் –

——————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

மூன்றாம் திருவந்தாதி– பாசுரங்கள்–51-60— -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -ஸ்ரீ அப்பிள்ளை ஸ்வாமிகள் உரையுடன் –

November 11, 2016

(ஸர்வ ரக்ஷகன்
ஆஸ்ரித பக்ஷபாதி
என்று அருளிச் செய்து ரக்ஷணமே இயல்பு ஊண் என்றும்
ரக்ஷணம் செய்த பின்பு நீல வண்ணன் ஆனான் முன்பு பார்த்தோம்)

இப்படி ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுடைய ஆபன் நிவாரணம் பண்ணினவன் கிடீர்
நமக்கு எல்லாம் (உபய ) உபாய பூதன் ஆவான் -என்கிறார்

(மூன்று முறையும் அவனே -ஸஹ கார்யம் நிரபேஷன் –
ஆபத் நிரசனத்துக்கும்-ப்ராபகத்துக்கும் -ஸம்பத் அருளி ப்ராப்யனாகவும் அவனே)

(ஸஹ காரி நைரபேஷ்யம் -மாம் ஏகம் -அர்த்தம் எதிர்பார்க்காமலும் பொறுக்காமலும் இரண்டுமே உண்டே —
அஸஹத்வம் -விரும்புவதும் இல்லை ஏற்பதுவும் இல்லை –
சணப்பனார்  கண்ட ப்ரஹ்மாஸ்திரம் போல் பிரதிபந்தகமே ஆகும்
இலங்கா புரம் எரித்தான் எய்து -இங்கும் அவனே என்றால்
ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் அடைத்து -அம்புகள் கூட வேண்டாம்
வில்லெடுத்த ஒரு செயலால்
உலகங்கள் உய்ய செருவிலே செற்ற சேவகனார்
சங்கை இல்லா மூன்றுடன் சேர்த்து இத்தையும் அருளிச் செய்கிறார் )

(உபாயம்-சர்வேஸ்வரனான ஸித்த உபாயம் தன்னைப் பொறுக்கும்
உபாயாந்தரம் பக்தி இரண்டையும் பொறுக்கும்
இது சரணாகதி இரண்டையும் பொறாதே -நாம் பற்றும் அதுவும் உபாயம் இல்லையே)

(அங்கம் தன்னை ஒழிந்தவற்றை பொறாது ஒழிகை –
சரம ஸ்லோகத்தில் இத்தை சாங்கமாக விதிக்கையாலே –ஸ்ரீ வசன பூஷணம் -சூரணை -56-
உபாயம் தன்னை பொறுக்கும்-சூரணை -57-
உபாயாந்தரம் இரண்டையும் பொறுக்கும் –
இரண்டையும் -என்றது -தன்னையும் மற்றத்தையும் உபாயம் என்னப் பொறுக்கும் –
அங்கம் என்றாலும் அங்கி என்றாலும் பொறுக்கும் –சூரணை -58-
இது இரண்டையும் பொறாது-சூரணை -59-
நிவ்ருத்தி ரூபமாய் இருக்க அங்கம் என்றால் பிரவ்ருத்தம் ஆகுமே அதனால் பொறுக்காது –
இது நிரபேஷ சித்தம் -சாதிக்க வேறே ஒன்றும் வேண்டாமே –
முன்னால் இதர த்யாஜ்யம் இருக்கிறதே என்னில் -அவை ஹேது வாகாதே –
ஆநுக்கூலஸ்யாதிகளும் அங்கங்கள் இல்லை சம்பாவிதங்கள் தானே இவை -உபாயமாக விதித்ததும் ஞான பாக அனுகுணமாக
சித்த உபாயத்தை பற்ற வழி படிக்கட்டு போலே
சரணாகதி -பண்ணி – ருசி வளர்ந்தவனுக்கு பிராப்தி சித்தம் –பிரியதமனாக விஷயாந்தர வெறுப்புக்கள் வேண்டுமே –)

ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் அடைத்து உலகங்கள் உய்யச்
செருவிலே யரக்கர் கோனைச் செற்ற நம் சேவகனார்
மருவிய பெரிய கோயில் மதிள் திருவரங்கம் என்னா
கருவிலே திரு விலாதீர் காலத்தைக் கழிக்கின்றீரே-11

அவனே அரு வரையால் ஆநிரைகள் காத்தான்
அவனே அணி மருதம் சாய்த்தான் -அவனே
கலங்கா  பெரு நகரம் காட்டுவான் கண்டீர்
இலங்கா புரம் எரித்தான் எய்து ——51-

பதவுரை

அரு வரையால்–ஒருவரால் அசைக்கவும் முடியாததான கோவர்த்தன மலையினால்(இப்பொழுது 84 அடி உயரம் தான் )
ஆநிரைகள்–பசுக் கூட்டங்கள்
காத்தான்–ரக்ஷித்தருளினவன்
அவனே கண்டீர்–அப்பெருமானை யாவன்,
அணி மருதம்–அழகாக நின்று கொண்டிருந்த இரட்டை மருத மரங்களை
சாய்த்தான்–முறித்துத் தள்ளினவனும்
அவனே கண்டீர்–அப் பெருமானே யாவன்,
எய்து–அம்புகளைப் பிரயோகித்து
இலங்காபுரம்–லங்கா பட்டணத்தை
எரித்தான்–எரிய விட்டவனான
அவனே–அப்பெருமானே
கலங்கா பெருநகரம்–ஒரு வகைக் கலக்கமுமில்லாத பரம பதத்தை
காட்டுவான்–காட்டித் தருவான்.

அவனே அருவரையால் ஆநிரைகள் காத்தான்–
வர்ஷத்தாலே நோவு பட்ட பசுக்கள் தம்முடைய ரக்ஷணத்துக்குத் தாம் ப்ரவர்த்தித்தது யுண்டோ –
அவனே யன்றோ -என்று
சஹ ஹாரி நைரபேஷயத்தைச் சொல்கிறது(அத்வேஷம் ஒன்றே வேணும் )

அவனே அணி மருதம் சாய்த்தான் —
நிரபேஷமாக மருதத்தைச் சாய்த்தானும் அவனே

அவனே-கலங்கா  பெரு நகரம் காட்டுவான் –
பரம பதம் அவனே காட்டக் காணும் அத்தனை –
ஸ்வ யத்னத்தாலே காண்பார்க்குக் காணப் போகாது –

(நாயமாத்மா ஸ்ருதி ஸித்தம்

நாயமாத்மா ப்ரவசனேன லப்⁴யோ ந மேத⁴யா ந ப³ஹுனா ஶ்ருதேன ।
யமேவைஷ வ்ருணுதே தேன லப்⁴ய- ஸ்தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தனூம் ஸ்வாம் ॥ 3॥)

கண்டீர்-இலங்கா புரம் எரித்தான் எய்து ——
லங்கையை அழித்து பிராட்டியைப் பெறுகைக்கு யத்னம் பண்ணினானும் தானே –

(தத் தஸ்ய ஸத்ருசம் பவத் –பிராட்டியே அருளிச் செய்தாள் அன்றோ)

(எல்லை நீத்த உலகங்கள் யாவும் என் சொல்லினால் சுடுவேன், அது தூயவன்
வில்லின் ஆற்றற்கு மாசு என்று வீசினேன்’)

———————————————————–

ஒருவராலும் சலிப்பிக்க அரிதான கோவர்த்தன பர்வதத்தாலே -(கல் எடுத்து கல் மாரி காத்தான் அன்றோ )
கல்  வர்ஷத்திலே அகப்பட்டு அழியப் புக்க பசுக்களை ஒரு நோவு வாராமல் குறைவற ரக்ஷித்து அருளி
தான் சஹாயாந்தர நிரபேஷமாக ரக்ஷிக்க வல்ல சக்திமானாவான் அவனே கிடீர்

தன்னிலே இடை வெளி யறச் சேர்ந்து நின்ற யமளார்ஜுனங்களை யசோதாதிகள் சஹகாரியாது
இருக்க தள்ளி விழ விட்டான் அவனே தானே கிடீர்

பிராட்டியைப் பெறுகைக்காக திருச் சரங்களை ப்ரேரித்து விட்டு ப்ரஹ்மாதிகளுக்கும் கணிசிக்க ஒண்ணாத
லங்கா புரத்தை அவர்கள் ஏக தேசமும் சஹகரியாது இருக்க
தக்தமாக்கி விழ விட்டான் அவன் தானே கிடீர்

அப்படியே ஒருவர் கூறை எழுவர் உடுக்கிற சம்சாரத்தில் உள்ள கலக்கம் ஒன்றும் இன்றிக்கே இருக்கிற
பெரிய ராஜ தானியான பரம பதத்தை நீ கண்டு கொள் (3-9-9)என்கிறபடியே
அகிஞ்சனரான நமக்கு காட்டித் தருவானும் நிரபேஷ உபாய பூதனான அவனே கிடீர்

(கலங்கா பெரு நகரம் அது -இதுவோ கலக்கும் வென் நரகம்)

(வாய் கொண்டு மானிடம் பாடவந்த கவியேன் அல்லேன்;
ஆய் கொண்ட சீர் வள்ளல் ஆழிப் பிரான் எனக்கே உளன்;
சாய் கொண்ட இம்மையும் சாதித்து, வானவர் நாட்டையும்
நீ கண்டு கொள் என்று வீடும் தரும் நின்று நின்றே.–3-9-9-)

(அபூர்வம் போல் அல்ல -நமக்கு சகஜமான-வானவர் நாட்டையும்
நீ- நித்யர்களைப் போல்- அத்தை அனுபவிக்கப் பிறந்தவன் அன்றோ)

அறிவில்லாத பசுக்களோடு
அறிவில் தலை நின்ற பிராட்டியோடு ஒரு வாசி இல்லை

அறிவுக்கு பிரயோஜனம்
தத் தஸ்ய சத்ருசம் பவேத் -என்று இருக்கை

அறியாமைக்கு பிரயோஜனம் –
பண்ணுகிற ரக்ஷணத்தை விலக்காமை என்றபடி –

——————————————————————————————————–

கீழ் ப்ரஸ்துதமான ராம வ்ருத்தாந்தம் தன்னிலே தெரியவும்
ஆழம் கால் பட்டு அத்தைப் பேசுகிறார் –

(புணரா நின்ற மரமேழ் அன் றெய்த ஒருவில் வலவாவோ!
புணரேய் நின்ற மரமிரண்டின் நடுவே போன முதல்வாவோ!
திணரார் மேக மெனக்களிறு சேரும் திருவேங்கடத்தானே!
திணரார் சார்ங்கத் துனபாதம் சேர்வ தடியேன் எந்நாளே.

ராமனைச் சொல்லி கண்ணனை நம்மாழ்வார் -இவர் கண்ணனைச் சொல்லி பின்பு ராமனைச் சொல்கிறார்)

(ஏழு மராமரம் எய்தவனையும் ஏழு உலகையும் ஓங்கி வளர்ந்தவனையும் சேர்த்து அருளிச் செய்கிறார் இவர் இங்கு)

எய்தான் மராமரம் ஏழும் இராமனாய்
எய்தான் அம்மான் மறிய  ஏந்திழைக்காய் -எய்ததுவும்
தென்னிலங்கைக் கோன் வீழச் சென்று குறளுருவாய்
முன்னிலம் கைக் கொண்டான் முயன்று   ——-52-

பதவுரை

இராமன் ஆய்–ஸ்ரீராமனாகத் திருவவதரித்து
மராமரம் ஏழும்–ஸப்த ஸால வ்ருஷங்களையும்
எய்தான்–அம்பு செலுத்தித் துளைத்தான்,
ஏந்து இழைக்கு ஆய்–தரிக்கப்பட்ட ஆபரணங்களை யுடைய பிராட்டிக்காக
அ மான் மறிய–அப்படிப்பட்ட மாரீச மாயா மிருகக் குட்டியை-புரண்டு விழும் படி என்றும்
எய்தான்–பின் சென்றான்,
எய்த்துவும்–அம்புகளைச் செலுத்தினதும்
தென் இலங்கை கோன் வீழ–தென்னிலங்கைக்கு அரசனான இராவணன் முடியும் படியாகவாம்,
முன்–முன்பொரு காலத்திலே
குறள் உரு ஆய்–வாமன ரூபியாய்
சென்று–மாவலியிடத்திற் சென்று
முயன்று–(வடிவழகு காட்டுதல், மழலைச் சொற்களைச் சொல்லுதல் முதலிய) முயற்சிகளைச் செய்து
நிலம் கைக் கொண்டான்–பூமியைக் கைப்பற்றினான்.

எய்தான் மராமரம் ஏழும் இராமனாய்-
இராமனாய் ஆஸ்ரிதர்க்காக மராமரம் ஏழையும் எய்தான் –

எய்தான் அம்மான் மறிய  ஏந்திழைக்காய் –
மான் குட்டி என்று பாராதே பிராட்டி சொன்னாள் என்று எய்தான் -(நின் அன்பின் வழி நின்றே -பெரியாழ்வார் )

(மின்னொத்த நுண் இடையாய் மெய்யடியேன் விண்ணப்பம்
பொன்னொத்த மான் ஓன்று புகுந்து இனிது விளையாட
நின் அன்பின் வழி நின்று சிலை பிடித்து எம்பிரான் ஏக
பின்னே அங்கு இலக்குமணன் பிரிந்ததும் ஓர் அடையாளம் – 3-10 7- –)

எய்ததுவும்-தென்னிலங்கைக் கோன் வீழச் –
எய்ததும் ராவணனைக் கொல்லுகைக்காக

சென்று குறளுருவாய்-முன்னிலம் கைக் கொண்டான் முயன்று —
குறளுருவாய் சென்று மூன்று லோகத்தையும் அடங்கலும் கைக் கொண்டான் –

—————

கீழ் ப்ரஸ்துதமான ராம வ்ருத்தாந்தம் தன்னிலே தெரியவும்
ஆழம் கால் பட்டு அத்தைப் பேசுகிறார் –

சக்கரவர்த்தி திருமகனாய் வந்து அவதரித்து அருளி
மஹா ராஜரை வீஸ்வசிப்பைக்காக மராமரங்கள் ஏழையும் பட்டுருவ எய்து விட்டான்

தரிக்கப்பட்ட ஆபரணங்களை யுடைய பிராட்டிக்காக —
அவ் வாபரண சேர்த்தி அழகிலே ஆழம் கால் பட்டு மேல் விளைவது அறியாமல்
அந்த மாயா மிருகம் புரண்டு விழும்படியாக எய்து பொகட்டான்-

அவள் சிறை இருப்பு மாற்றுகைக்காக தெற்குத் திக்கில் யுண்டான
லங்கைக்கு நிர்வாஹகனான ராவணன் குட்டிச் சுவர் போலே உருண்டு விழும்படியாக எய்ததும் -(கிள்ளிக் களைந்தான் அன்றோ )

முன்பு ஒரு காலத்திலே ஸ்ரீ வாமனனாயக் கொண்டு மஹா பலி பக்கலிலே சென்று வடிவு அழகைக் காட்டுவது-
முக்த ஜலப்பிதங்களைப் பண்ணுவதாய்க் கொண்டு மிகவும் உத்யோகித்து பூமியை வாங்கிக் கொண்டான்

இது ஒரு செயல்கள் இருக்கும் படியே என்று வித்தகராய் அனுபவிக்கிறார்

அம் மான் மறியை என்ற பாடமான போது-
அந்த மான் குட்டியை எய்தான் -என்றாகக் கடவது –

———————————————————————————————————

ப்ரஸ்துதமான ஸ்ரீ வாமனனோடு போலியான வட தள சாயியை
ஆஸ்ரயி என்று தம் உள்ளத்தைத் தூண்டுகிறார் –

(திருக்கமல பாதம் வந்த பின்பு
வந்தாய் என் மனம் புகுந்தாய்
நாமும் கொஞ்சம் அத்வேஷம் காட்டாமல் இருக்க வேண்டுமே)

முயன்று தொழு நெஞ்சே மூரி நீர் வேலை
இயன்ற மரத்தாலிலையின் மேலால் -பயின்று அங்கோர்
மண்ணலம்  கொள் வெள்ளத்து மாயக் குழவியாய்த்
தண்  அலங்கல் மாலையான் தாள்  —–53-

பதவுரை

மூரி நீர் வேலை–பழையதான நீரை யுடைத்தான ஸமுத்தரத்திலே
இயன்ற — ஸ்ரீபொருந்தியுள்ள
ஆல மரத்து இலையின் மேலால்–ஆல மரத்தின் இலை மீது
பயின்று–நெடுங்காலம் சாய்ந்திருந்தது
அங்கு–அங்கே
மண்–பூமியினுடைய
நலம்–நன்மையை
கொள்–அபஹரித்த
வெள்ளத்து–பிரளய வெள்ளத்திலே
ஓர் மாயம் குழவி ஆய்–ஆச்சரியமான ஒரு குழந்தையாய்
தண் அலங்கல் மாலையான்–குளிர்ந்து அசைகின்ற மாலையை யுடையவனான எம்பெருமானுடைய
தாள்–திருவடிகளை
நெஞ்சே–நெஞ்சமே!
முயன்று தொழு–உத்ஸாஹங்கொண்டு வணங்கு.

முயன்று
துர்கடங்களை கடிப்பிக்க சேர்ப்பிக்க வல்லவன்

முயன்று தொழு நெஞ்சே-
யத்னம் பண்ணி ஆஸ்ரயிக்கப் பார் –

மூரி நீர் வேலை-இயன்ற மரத்தாலிலையின் மேலால் -பயின்று –
உலவா நின்ற நீரை யுடைத்தான கடலிலே யுண்டான மரத்தினுடைய பல்லவமான இருபத்தொரு
ஆலிலை மேலே பயின்று

அங்கோர்-மண்ணலம்  கொள் வெள்ளத்து மாயக் குழவியாய்த்-
சேதனர்க்கு போக உபகரண -போக ஸ்தான போக்யமான பூமியை
அழியா நின்ற வெள்ளத்திலே ஆச்சர்யமான பிள்ளை யானவன்

தண்  அலங்கல் மாலையான் தாள்  —–
ஆலின் இலை மேலே கண் வளர்ந்து அருளுகிற போது பொகட்ட மாலையும் தானுமாய்க் கிடந்த படி –
அவனுடைய திருவடிகளை முயன்று தொழு நெஞ்சே –

————————————————————————–

ப்ரஸ்துதமான ஸ்ரீ வாமனனோடு போலியான வட தள சாயியை
ஆஸ்ரயி என்று தம் உள்ளத்தைத் தூண்டுகிறார் –

சஞ்சரியா நின்றுள்ள நீரை யுடைத்தான சமுத்ரத்திலே பொருந்தி இருக்கிற
ஆல மரத்தின் யுடைய பவனாய் இருபத்தொரு ஆலின் இலை மேலே சிர காலம் சாய்ந்து அருளி –
அங்கே பூமியினுடைய –சேதனர்க்கு போக்யாதிகளாய் விநியோகிக்கப் படுகிற சாராம்சத்தை க்ரஸியா நின்றுள்ள
பிரளயத்தில் அக்கடிகடனா சாமர்த்தியம் ஆகிற ஆச்சர்ய சேஷ்டிதத்தை யுடைய
முக்த சிஸூ வானவன் ஸ்ரமஹரமாய அசைந்து வாரா நின்றுள்ள திருமாலையாலே
அலங்க்ருதனானவன் திருவடிகளை -நெஞ்சே –

(போக்யாதிகளாய்-போக்யம் போக உபகரணம் போக ஸ்தானங்கள்)

வரில் பொகடேன்-கெடில் தேடேன் -என்று இருக்கை அன்றிக்கே
உத்ஸாஹித்துக் கொண்டு ஆஸ்ரயிக்கப் பார் –

அலங்கல் -அசைவு –

————————————————————————————————————–

வட தள சாயி விருத்தாந்தத்தோடு ஒக்கச் சொல்லலாம் படியான
கிருஷ்ண விருத்தாந்தத்தை அனுபவிக்கிறார் –

(இவளுக்கு அவன் இடம் காதல் -அவனுக்கு இவள் இடம் பெரிய காதல்
வாரிக் கொண்டு விழுங்குவன் என்று போக –முற்றப் பருகுமவன் அன்றோ)

தாளால் சகட்முதைத்துப் பகடுந்தி
கீளா மருதிடை  போய்க் கேழலாய் -மீளாது
மண்ணகலம் கீண்டு அங்கோர் மாதுகந்த மார்வற்குப்
பெண்ணகலம்   காதல் பெரிது —–54-

பதவுரை

சகடம்–சகடாஸுரனை
தாளால்–திருவடியாலே
உதைத்து–உதைத் தொழித்தவனாயும்
பகடு–(குவலயாபீட மென்கிற) யானையை
உந்தி–உதைத்துத் தள்ளினவனாயும்
மருது இடை போய்–மருத மரங்களின் நடுவே தவழ்ந்து சென்று
கீளா–(அம் மரங்களை) முறிந்து விழச் செய்தவனாயும்
கேழல் ஆய்–வராஹ ரூபியாய்க் கொண்டு
மீளாது–காரியம் தலைக் கட்டாமல் திரும்பி வருவதில்லை யென்று ஸங்கல்பித்துக் கொண்டு சென்று
அகலம் மண் கீண்ட–அகன்ற பூமியை (அண்ட பித்தியில் நின்றும்) ஒட்டு விடுவித் தெடுத்தவனாயும்
ஓர் மாது உகந்த மார்வற்கு—நாரீணாம் உத்தம வது -ஒப்பற்ற பெரிய பிராட்டியாரை விரும்பி யிருக்கின்ற திரு மார்பை யுடையவனாயுமுள்ள எம்பெருமானுக்கு
பெண் அகலம்–பூமிப் பிராட்டியினுடைய திருமேனியில்
காதல்–ஆசையானது
பெரிது–கரை புரண்டிருப்பது.

தாளால் சகடமுதைத்துப்–
திருவடிகளாலே சகடாசூர நிரசனம் பண்ணி

பகடுந்தி–
குவலயா பீடத்தைத் தள்ளி

கீளா மருதிடை  போய்க்-
இரண்டாய் அருகே நின்ற மருதூடே போய் –

கீளா –
பிளவா மருதிடை போய் என்றுமாம் –

கேழலாய் -மீளாது-மண்ணகலம் கீண்டு –அங்கோர் மாதுகந்த மார்வற்குப்-
ஸ்ரீ வராஹ ரூபியாய் மீளாத படிக்கு ஈடாக பூமியைக் கீண்டு ஸ்ரீ பூமிப் பிராட்டியை உகந்த மார்பர்க்கு

பெண்ணகலம்   காதல் பெரிது —–
பிராட்டி பக்கலிலே ஸ்நேஹம் பெரிது –

—————————————————————–

வட தள சாயி விருத்தாந்தத்தோடு ஒக்கச் சொல்லலாம் படியான
கிருஷ்ண விருத்தாந்தத்தை அனுபவிக்கிறார் –

அஸூரா விஷ்டமாய் மேல் விழுகிற சகடத்தை முலை வரவு தாழ்த்துச் சீறி நிமிர்த்த திருவடிகளாலே
உதைத்து விழ விட்டு

புகுவாய் நின்ற போதகம் என்னும் படி
வழியிலே நின்று நலிய புக்க குவலயா பீடத்தைத் திருக் கையாலே உருண்டு விழும் படி தள்ளிப் பொகட்டு

(பகுவாய் வன் பேய் கொங்கை சுவைத்து ஆர் உயிர் உண்டு
புகுவாய் நின்ற போதகம் வீழப் பொருதானூர்
நெகுவாய் நெய்தல்  பூ மது மாந்திக் கமலத்தின்
நகுவாய் மலர் மேல் அன்னம் உறங்கும் நறையூரே –6-5-6-பகுவாய் -பெரிய வாய்-)

இடை வெளி யறப் பொருந்தி நின்ற மருதுகளின் நடுவே
அவை அடி அற்று விழும் படி தவழ்ந்து கொண்டு போய்

ஸ்ரீ யபதியான தன் பெருமை பாராதே வராஹ வேஷத்தை யுடையனாய்க் கொண்டு
வடிவை அழிய மாறின அளவிலே மீளுகை இன்றிக்கே
அந்த பிரளயத்தில் முழுகி அண்ட பித்தியிலே ஒட்டிக் கிடக்கிற அத்விதீயமான
பரப்பை யுடைத்தான பூமியை இடந்து எடுத்துக் கொண்டு ஏறி-

நாரீணாம் உத்தமையான பெரிய பிராட்டியார் இறையும் அகலகில்லேன் என்று விரும்பும் படியான
திரு மார்வை யுடையவனுக்கு
ஸ்ரீ பூமிப் பிராட்டியுடைய அபரிச்சின்ன்ன போக்யமான திரு மேனியில் பிரேமம் கரை புரண்டு இருந்தது

பகடு -யானை –
கீளா மருதிடைபோய் –கிழித்துக் கொண்டு மருதுகளின் நடுவே போய் என்னவுமாம் –
காதல் பெரிது -அவள் பக்கல் பிரேமத்தின் கனத்தாலே இறே
அவள் அபிமானித்த பூமியை எடுத்தது என்கை

கிடந்து இருந்து நின்று அளந்து கேழலாய்க் கீழ்ப் புக்கு
இடந்திடும்; தன்னுள் கரக்கும்; உமிழும்;
தடம் பெருந்தோள் ஆரத் தழுவும்;பார் என்னும்
மடந்தையை மால் செய்கின்ற மால் ஆர் காண் பாரே?–2-8-7-

ஊர்த்தம் மாஸம்-உகப்பு அவளுக்கு
ந ஜீவேயம் க்ஷணம் அபி விநாஸாம் அஸி தீக்ஷிணை -பெரிய காதல் அவள் மேல் இவனுக்கு

———————————————————————————————————

இப்படி ஸ்ரீ பூமிப் பிராட்டி பக்கல் பெரும் பிச்சானாவான் அழகை அனுபவிக்கிறார் –

பெரிய வரை மார்வில் பேராரம் பூண்டு
கரிய முகிலிடை மின் போல் -திரியுங்கால்
பாண் ஒடுங்க வண்டறையும் பங்கயமே மற்றவன் தன்
நீண் நெடுங்கண் காட்டும் நிறம் ———-55-

பதவுரை

பெரிய வரை மார்வில்–பெரிய மலை போன்ற திருமார்பிலே
பேர் ஆரம் பூண்டு–பெரிய ஹாரத்தை அணிந்து கொண்டு
திரியுங்கால்–உலாவினால்
கரிய முகிலிடை மின் போல–காள மேகத்திலே மின்னல் மின்னினாற் போன்றிருக்கும்!
மற்று–அன்றியும்,
அவன் தன்–அப்பெருமானுடைய
நீள் நெடு கண்–நீண்டு பரந்த திருக் கண்களினுடைய
நிறம்–நிறத்தை (ராமக ரக்தாந்த ராஜீவ லோசன )
பாண் ஒடுங்க வண்டு அறையும் பங்கயமே காட்டும்–பாட்டென்று பேர் பெற்றவை யெல்லாம் ஒடுங்கும் படியாக
(அதி மதுரமாக) வண்டுகள் இருந்து பாடப் பெற்ற தாமரைப் பூவே காட்டித் தரும்.

திருக் கண்கள் நிறம்-தாமரை -வண்டு அறையும் தாமரை -அவற்றின் ரீங்காரம் பாண் ஒடுங்கும் படி -இப்படி அன்வயம்

பெரிய வரை மார்வில் பேராரம் பூண்டு–
ஆராத்தால் -ஹாரத்தால் -பரிச்சேதிக்கப் போகாத மார்பிலே —

பேராரம் பூண்டு-
மடித்துப் பூண வேண்டும் பெரிய ஹாரத்தைப் பூண்டு

கரிய முகிலிடை மின் போல் –
மார்புக்கும் ஹாரத்துக்கும் த்ருஷ்டாந்தம் –
மேகத்திலே மின்னினால் போலே
ஸ்யாமமான திரு மார்பிலே ஹாரம் கிடந்த படி

திரியுங்கால்–தெரியுங்கால் -பாட பேதம் –
அநுஸந்திக்கும் போது என்றும் -சஞ்சரிக்கும் காலத்தில் என்றுமாம் –

(அடியார்களை ஈர்க்கவே சஞ்சரிக்கிறான் என்று அனுசந்திக்க)

பாண் ஒடுங்க வண்டறையும் பங்கயமே மற்றவன் தன் நீண் நெடுங்கண் காட்டும் நிறம் ——-
பாண் சாதியாக ஒடுங்கும் படி பாடா நின்ற வண்மை யுடைத்தான பங்கயமே
அவனுடைய பரிச்சதிக்கப் போகாத கண்ணினுடைய நிறத்தைக் காட்டா நின்றது –

(புல்லாங்குழல் கேட்டு ஆடல் பாடல் மறந்து வெட்க்கினார் போல்)

(கம்பீராம்ப ஸமுத் பூத ஸ்ம்ருஷ்ட நாள ரவிகர விகசித புண்டரீக தல அமலாய தீக்ஷண-நீண் நெடுங்கண்-நீண்டும் நெடியதாயும் -பரந்து -)

————————————————————————-

இப்படி ஸ்ரீ பூமிப் பிராட்டி பக்கல் பெரும் பிச்சானாவான் அழகை அனுபவிக்கிறார் –

ஹாரத்தால் பரிச்சேதிக்க ஒண்ணாத படி பெரிய மலை போலே பரந்து இருக்கிற திரு மார்பிலே
இரு மடி இட்டுச் சாத்த வேண்டும் படி பெருத்து இருக்கிற திரு வாரத்தைச் சாத்தி
மநோ ஹராமாம் படி சஞ்சரிக்கப் புக்கால்

காள மேகத்திலே மின் கொடி பரந்தால் போல் அத்தியாநுபாவ்யமாய் –
அதுக்கு மேலே அவனுடைய மிக்க அழகை யுடைத்தான திருக் கண்களுடைய நிறத்தை
பாட்டு என்று பேர் பெற்றவை அடக்கலும் லஜ்ஜித்து ஒடுக்கும் படிக்கு ஈடாக
வண்டுகளானவை சப்தியா நின்றுள்ள தாமரைப் பூவே காட்டா நிற்கும்

தெரியுங்கால் -என்று பாடமாகில் –
அவ் வழகை அநுஸந்திக்கும் போது -என்று பொருளாகக் கடவது –

——————————————————————————————————

என்னுடைய ஸ்வாமியினுடைய ரூபத்தை இன்னபடி இருக்கும் என்று சொல்லப் போகாது –
பிரயோஜகத்தை சொல்லும் அத்தனை என்கிறார் –

(நிறம் -பாசுரம் -நிறம் கொண்ட வடிவைச் சொன்னபடி-ஸ்வாமியினுடைய ரூபத்தை
பச்சை வண்ணன்
பவள வண்ணன்)

இவனுடைய அழகை அனுபவித்துக் குமிழ் நீர் உண்ணும் அத்தனை ஒழிய
நம்மால் அளவிட்டுப் பேச ஒண்ணாது கிடீர் என்கிறார் –

(ஒரு வகையில் கார் மேகத்தில் மின்னல் -சொல்ல முயலலாம் ஒழிய சொல்லி முடிக்க முடியாதே
சொல்லாமலும் இருக்க முடியாதே-ஸாஷாத் மன்மத மன்மதன் அன்றோ –
நா படைத்த பயனுக்காகவும் காது படைத்த பயனுக்காகவும்
கடலின் கரையில் இருந்து திவலையை அனுபவிப்பது போல்)

(நான்கு யுகங்களிலும்
க்ருத யுகம் ஸத்வ குணம் மிக்கு -வெளுப்பாக
த்ரேதா ரஜோ -சிகப்பாக
த்வாபர -ரஜோ தமோ கலந்து மாந்தளிர் பச்சை
கலி யுகம் பிரார்த்திக்காமல் இருக்க ஸ்வா பாவிக கறுமை

பாலின் நீர்மை செம் பொன் நீர்மை*  பாசியின் பசும் புறம்,* 
போலும் நீர்மை பொற்பு உடைத்தடத்து*  வண்டு விண்டு உலாம்,*
நீல நீர்மை என்று இவை*  நிறைந்த காலம் நான்குமாய்,* 
மாலின் நீர்மை வையகம்*  மறைத்தது என்ன நீர்மையே?)

நிறம் வெளிது செய்து பசிது கரிது என்று
இறை யுருவம் யாம் அறியோம் எண்ணில் -நிறைவுடைய
நா மங்கை தானும் நலம் புகழ் வல்லளே
பூ மங்கை கேள்வன் பொலிவு ——-56-

பதவுரை

இறை–ஸர்வேச்வரனுடைய
உருவம்–திவ்ய மங்கள விக்ரஹமானது
நிறம்–நிறத்தால் வெளுத்திருக்குமோ (அல்லது)
செய்து–சிவந்திருக்குமோ, (அல்லது)
பசிது–பச்சென்றிருக்குமோ, (அல்லது)
கரிது–கறுத்திருக்குமோ,
என்று–எவ் வண்ணமா யிருக்குமென்று
எண்ணில்–ஆராயுமிடத்தில்
யாம் அறியோம்–நாம் அறிய மாட்டோம் (இது நிற்க)
நிறைவு உடைய–ஜ்ஞான சக்திகளில் பூர்த்தியை உடையவளான
நா மங்கை தானும்–ஸரஸ்வதீ தேவியும்
பூ மங்கை கேள்வன்–பூவிற்பிறந்த பெரிய பிராட்டிக்குக் கணவனான எம்பெருமானுடைய
பொலிவு–பூர்த்தியை
நலம் புகழ வல்லளே–அழகையும் குணங்களையும் நன்றாகப் புகழ சக்தி யுடையவளோ
(அல்லள்)

நிறம் வெளிது செய்து பசிது கரிது என்று-இறையுருவம் —யாம் அறியோம் எண்ணில் —
இறையினுடைய வடிவானது
வெளுப்பு சிவப்பு பசுமை கருமை என்று எண்ணில் நாம் அறியோம் –

நிறைவுடைய-நா மங்கை தானும் நலம் புகழ் வல்லளே
நாமே மாட்டாதோமானால் மதிப்புடையளான சரஸ்வதி அங்குத்தைக்குத் தரமாகப் புகழ வல்லளோ-

பூ மங்கை கேள்வன் பொலிவு –
புகழப் போகாமை என் என்னில்
ஸ்ரீ யப்பதியுடைய ஸம்ருத்தியை சிலவரால் பேசப் போமோ –

(நீல தோயத மத்யஸ்தா வித்யுத் தைத்ரியம்
ஆதித்ய வர்ணம் தாமச பரம்
மஹா ராஜனும் வாசா –யதா இந்திரா கோப –யதா அக்னி –யதா புண்டரீகம் -யதா வித்யுத் -ப்ருஹதாரண்யம்
இப்படி ஸ்ருதிகள் இருக்க விக்ரஹம் இல்லை குணம் இல்லை என்று சொல்லுவார் மிடற்றைப் பிடிக்கும் படி
துயர் அறு சுடர் அடி
மதி நலம் -உயர்வற உயர் நலம் -குணவான்
உபய விபூதி நாதன்

யஸ்ய சா ஜனகாத்மஜா அப்ரமேயம் மாரீசன் புத்திக்கே எட்டாதே)

—————————————————————————–

இவனுடைய அழகை அனுபவித்துக் குமிழ் நீர் உண்ணும் அத்தனை ஒழிய
நம்மால் அளவிட்டுப் பேச ஒண்ணாது கிடீர் என்கிறார் –

சர்வ ஸ்வாமியான சர்வேஸ்வரனுடைய திவ்ய மங்கள விக்ரஹமானது –
நிறத்தால் வெளுத்து இருக்கும் சிவந்திருக்கும்
பச்சென்று இருக்கும் கறுத்து இருக்கும் என்று ஆராயும் இடத்தில் ஏக தேசமும் அறிய மாட்டுகிறிலோம் –

இது கிடக்க எல்லாரும் அவனைப் பேசும் இடத்தில் தன்னைப் பற்ற வேணும் படியுமாய் –
தான் உள்ளபடி அறிந்து பேசுகைக்கு ஈடான
ஞான சக்த்யாதி பூர்த்தியை யுடையளான சரஸ்வதி யானவளும்
புஷ்ப நிவாசியான பெரிய பிராட்டியார்க்கு வல்லபனானவனுடைய
ஸ்வரூப ரூப குணாதிகளால் யுண்டான ஸம்ருத்தியை
அங்குத்தைக்குத் தகுதியாம் படி நன்றாகக் புகழ வல்லளோ-
ஸ்ரீ யப்பதியினுடைய ஸம்ருத்தியைச் சிலரால் சொல்லாய் இருந்ததோ என்றபடி –

(பேசிற்றே பேசல் அல்லால் பெருமை ஒன்றும் உணரலாகாது
பேசினார் பிறவி நீத்தார்
செலக் காண்பிப்பார் காணும் அளவும் செல்லும் கீர்த்தியார்)

——————————————————————————————————————

கருட வாஹனனுடைய திருவடிகளை ஆஸ்ரயி என்கிறது –

(முயன்று தொழு நெஞ்சே (53-பாட்டில்) இருந்து நெஞ்சே வருவித்திக் கொண்டு நெஞ்சே தெளி -என்கிறார் இங்கு)

(கீழ் திரு மார்பில் ஹாரம் -இங்கு திரு-கார் வானில் மின்னே போல் தோன்றி மலிந்து திரு)

ஏவம் விதமான வைபவத்தை யுடையவனை அநுஸந்திக்குமதுவே நமக்கும் உத்கர்ஷ ஹேது என்கிறார் –

பொலிந்து இருண்ட கார் வானில் மின்னே போல் தோன்றி
மலிந்து திருவிருந்த மார்வன் -பொலிந்த
கருடன் மேல் கண்ட கரியான் கழலே
தெருடன் மேல் கண்டாய் தெளி ——–57-

பதவுரை

திரு–பிராட்டியானவள்,
பொலிந்து இருண்ட கார்–செறிந்து இருளை யுடைத்தான கார் காலத்திலுண்டான
வானில்–மேகத்தில்
மின்னே போல் தோன்றி–மின்னல் போல் பிரகாசித்து
மலிந்து திரு இருந்த மார்வன்–பொருந்தி யிருக்கப் பெற்ற திரு மார்பை யுடையனாய்
பொலிந்த கருடன் மேல் கொண்ட–விளங்குகின்ற கருடனால் ஏற்றக் கொள்ளப் பட்டவனான(மேல் இருந்து நடத்தா நிற்கும் -பொறு சிறைப்புள் உவந்து ஏறும் )
கரியான்–கருநிறப் பெருமானுடைய
கழலே–திருவடிகளே
தெருள் தன் மேல்-ஜ்ஞாநத்திற்கு மேற்பட்டதான பக்திக்கு விஷயமென்று-பக்தி ஞான விசேஷம் –
தெளி கண்டாய்–(நெஞ்சே!) தெளிந்திரு

(பக்தியே கழல் தெளி கண்டாய் -விஷய விஷயீ பாவ சாமானாதிகரண்யம்-பக்திக்கு விஷயமான கழல்
சார்வே தவ நெறிக்கு தாமோதரன் தாள்கள் போல் இங்கும் )

பொலிந்து இருண்ட கார் வானில் மின்னே போல் தோன்றி–மலிந்து திரு விருந்த மார்வன்–
சம்ருத்தமாய் இருண்ட கார் காலத்தில்
மேகத்தில் மின் போலே தோற்றித் தண்ணீர் தண்ணீர் என்று ஆசைப்படா நின்ற
(இறையும் அகலகில்லேன் என்று )பெரிய பிராட்டியார் உகந்த திரு மார்வை யுடையவன் –

பொலிந்த-கருடன் மேல் கண்ட கரியான் கழலே
மஹா மேருவில் ஒரு அஞ்சன கிரி (மைப்படி மேனியான் )இருந்தால் போலே சம்ருத்தனான பெரிய திருவடி மேலே
இருந்தவனுடைய திருவடிகளில் யுண்டான –

தெருடன் மேல் கண்டாய் தெளி -(தெருள் தன் மேல் கண்டாய் தெளி)
ஞான விபாகையான பக்தியை எல்லா வற்றுக்கும் மேலாகக் கொண்டு அநுஸந்தி

ஓலக்க வார்த்தை என்று இராதே கொள்–

(ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் ஶ்லோகம் 41 –
இதில், ஆளவந்தார் எம்பெருமான் பெரிய திருவடியுடன் (கருடாழ்வார்) கூடியிருப்பதை அனுபவிக்கிறார்.
பெரியதிருவடி, எம்பெருமானுக்குக் கொடியாகவும், மற்றும் எல்லாமாகவும் பழுத்த கனியைப் போன்று
எம்பெருமானுக்கு விரும்பத்தக்கவராக இருக்கிறார்.

தாஸஸ் ஸகா வாஹநம் ஆஸநம் த்வஜோ
யஸ்தே விதாநம் வ்யஜநம் த்ரயீமய: |
உபஸ்திதம் தேந புரோ கருத்மதா
த்வதங்க்ரி ஸம்மர்த்த கிணாங்கஶோபிநா ||

வேதங்களையே அங்கங்களாக உடைய அந்த கருடாழ்வார், உனக்கு அடியவனாகவும், நண்பனாகவும், வாஹனமாகவும்,
ஆஸனமாகவும், கொடியாகவும், விதானமாகவும், சாமரமாகவும் இருக்கிறார்;
மேலும் உன்னுடைய திருவடிகள் அவருடைய தோள்களில் அழுத்தியதால் ஏற்பட்ட தழும்புகளாலே ஒளிவிடுகிறார்;
உன்னுடைய ஸன்னிதியில் இப்படிப்பட்ட கருடாழ்வாரால் நீ வணங்கப்படுகிறாய் —)

(நீலம் உண்ட மின்னன்ன மேனி பெருமான் –ஸ்ரீ திருவிருத்தம் 29-)

————————————————————————-

ஏவம் விதமான வைபவத்தை யுடையவனை அநுஸந்திக்குமதுவே நமக்கும் உத்கர்ஷ ஹேது என்கிறார் –

செறிந்து இருளை யுடைத்தான கார் காலத்தில் மேகத்தில் யுண்டான
மின் போலே பிரகாசித்துப் பெரிய பிராட்டியார் ஆனவள்
ஸ்வரூப ரூப குணாதிகளாலே வந்த வைபவத்தை யுடையளாய்க் கொண்டு
எழுந்து அருளி இருக்கிற திரு மார்வை யுடையனாய்

(அவன் உள்ள இடங்களில் எல்லாம் இவள் விபு -ஆத்மாக்கள் அனைத்திலும் விலக்ஷணம்
போக்யத்தில் அவனில் விலக்ஷணம்
நாச்சியார் கண் அழகு விழிக்க ஒண்ணாதே
பாபானாம் வா -லுகுதாரா ராமஸ்ய கோஷ்டி)

அதுக்கு மேலே மிக்க வைபவத்தை யுடையனாய்க் கொண்டு –
மஹா மேருவில் ஒரு அஞ்சன கிரி இருந்தால் போலே பொற்க்கென்று இருக்கிற நிறத்தை யுடைத்தாய் –
பெரிய திருவடி மேல் கொண்டு நடத்தா நின்றுள்ள கறுத்த நிறத்தை யுடைய சர்வேஸ்வரனுடைய திருவடிகளே கிடாய்
உத்கர்ஷ ஹேதுவாக அனுசந்திக்கப்படும் ஸ்வ பாவம் எல்லா வற்றிலும் மேலான உத்கர்ஷம்-

நெஞ்சே நீ இத்தை நன்றாக புத்தி பண்ணு –
சேஷ பூதனுக்கு ஸ்வரூப அனுகுணமான உத்கர்ஷம் சேஷி திருவடிகளை அறிகை இறே

(அடியானுக்கு திருவடிகளை அறிந்து உணர்ந்து நித்தியமாக நினைப்பதே ஸ்வரூபம்)

பொலிந்த கருடன் என்ற பாடமான போது –
சம்ருத்தமான திருவடி என்ற பொருளாகக் கடவது

தெருடன் மேல் கண்டாய் —
தெருடல் தெருடப்படுமது-
அனுசந்திக்கப் படுமவற்றில் இதுவே கிடாய் மேலானது என்றபடி

அன்றிக்கே
தெருள் -என்று ஞானமாய்
ஞானத்தில் மேலாய் இருக்கிற பக்தியைச் சொல்லுகிறதாய் –
ஞான விபாக ரூபையான பக்தியால் கரியான் கழலைக் கண்டு அனுபவிக்கப் பெற்றாயே என்றுமாம் –

(வேத ஸ்வரூபம் மேல் அவன் -ஞானத்துக்கு மேல் பக்தி பண்ண வேண்டிய அவன் தானே உத் கர்ஷம்)

முயன்று தொழு நெஞ்சே என்கிற பாட்டில்(53)
சொன்ன நெஞ்சே இங்கும் முன்னிலை –

——————————————————————————————————————-

(பரத்வத்திலும் அதுக்கு பிரதி நிதியான திரிவிக்ரம விபவ அவதாரத்தில் அதுக்கு பிரதிநிதியான
திருவேங்கடத்திலும் முதல் ஆழ்வார்கள் ஊன்றி இருப்பார்கள் அன்றோ)

(யத் துங்க ச்ருங்க விநிஷங்கி ஸூராங்கநா நாம்
ந்யஸ்த ஊர்த்தவ புண்ட்ர முக மண்டன மண்டிதா நாம்
தர்ப்பண்ய பூத் த்ருதம் அபாங்க ச சாங்க ப்ருஷ்டம்
தத் தாம ஸூந்தர புஜஸ்ய மஹாந் வநாத்ரி –6-

ந்யஸ்த ஊர்த்தவ புண்ட்ர முக மண்டன மண்டிதா நாம் –அணியப்பட்ட ஊர்த்தவ புண்ட்ரம் ஆகிற
முக அலங்காரத்தாலே அலங்கரிக்கப் பட்டவர்கள்
யத் துங்க ச்ருங்க விநிஷங்கி ஸூராங்கநா நாம் –யாது ஒரு திருமலையினுடைய உன்னதமான சிகரத்தில்
வந்து சேர்ந்த தேவ மாதர்களுக்கு
த்ருதம பாங்க ச சாங்க ப்ருஷ்டம்-தர்ப்பண்ய பூத்–அ களங்க சந்த்ர மண்டல மானது கையிலே எந்தப்பட்ட கண்ணாடி ஆயிற்று
அபாங்கம் என்றது அபகதமான அங்கத்தை -களங்கம் அற்ற
நிஷ் களங்கனாக-தேவதாந்த்ர ஸ்பரிசத்தால் வந்த களங்கத்தை இத் திருமலையை சேவித்து தீர்த்துக் கொண்டமையை
அடுத்த ஸ்லோகம் விவரிக்கும்
தத் தாம ஸூந்தர புஜஸ்ய மஹாந் வநாத்ரி –அந்த ஸ்தானம் ஸூந்தர தோளுடையானது திருமாலிருஞ்சோலையாம் –
மலமறு மதி சேர் மாலிருஞ்சோலை அன்றோ –

அதிசய யுக்தி அலங்காரத்தால் இங்கும் திருமலையின் வளர்த்தி அனுபவம்
சிலம்பு ஆர்க்க வந்து தெய்வ மகளிர்கள் ஆடும் சீர் சிலம்பாறு பாயும் திருமாலிருஞ்சோலையே
அவர்கள் நிர்மலமான சந்திரனையே கண்ணாடியாகக் கொண்டு ஊர்த்வ புண்ட்ர அலங்காரம் செய்து கொள்கிறார்கள்)

(மதி என்று ஞானம் -இத்தால் ஜீவன்-களங்கம் அற்ற மதி முக்தாத்மா
பிராட்டி புருஷகாரமாய் ஜீவாத்மாக்களை மேல் தூக்கி விட பிரார்த்திக்க
அவன் அருளுவதைச் சொன்னவாறு)

அஸ்மின் மயா சார்த்தம் -என்று
பிராட்டி செய்த செயலைத் திருமலையில் திர்யக்குகளும் அனுவர்த்தியா நின்றது என்கிறார் –

(கோதாவரி நதிக்கரையில் பாறையில் பிராட்டி உடன் இருந்த விருத்தாந்தம் பற்றி பெருமாள் இளைய பெருமாள் இடம் சொன்னது போல்)

இப்படிப்பட்ட ஐஸ்வர்யத்தை யுடையவன் கண்ணாலே காணலாம் படி
திருமலையிலே வந்து நின்றான் என்கிறார் –

தெளிந்த சிலா தலத்தின் மேலிருந்த மந்தி
அளிந்த கடுவனையே நோக்கி -விளங்கிய
வெண் மதியம் தா வென்னும் வேங்கடமே மேலோரு நாள்
மண் மதியில் கொண்டுகந்தான் வாழ்வு ——-58-

பதவுரை

தெளிந்த–ஸ்வச்சமாயிருக்கிற
சிலா தலத்தின் மேல் இருந்த மந்தி–கற்பாறையின் மீது இருக்கும் பெண் குரங்கானது.
அளிந்த கடுவனை நோக்கி–ஸ்நேஹமுள்ள ஆண் குரங்கை நோக்கி
விளங்கிய வெண் மதியம் தா என்னும் வேங்கடம்–‘விளங்குகின்ற வெளுத்த சந்திரன் (ப்பிடித்துக்) கொடு‘
என்ற சொல்லும்படி இருக்கிற திருவேங்கடம்
மேல் ஒருநாள்–பண்டொரு காலத்தில்
மண்–பூமியை
மதியின்–தனது புத்தி சாதுரியத்தினால்-மதியினால் குறள் மாணாய்
கொண்டு–(மாவலி யிடத்தில் பெற்றுக் கொண்டு)
உகந்தான்–திருவுள்ள முவந்த ஸர்வேச்வான்
வாழ்வு–வாழுமிடம்

தெளிந்த சிலா தலத்தின் மேலிருந்த மந்தி-
ஸ்படிகப் பாறையில் இருந்த பெண் குரங்கு

அளிந்த கடுவனையே நோக்கி –
தன் பக்கல் ஸ்நேஹித்த ஆண் குரங்கை நோக்கி –

விளங்கிய வெண் மதியம் தா வென்னும் வேங்கடமே —
ஊடினால் ஒரு கடகர் பொருந்த விட வேண்டாதே தானே
சந்திரனுடைய மேல் புறம் ஆகையால் களங்கம் அற்று உஜ்ஜவலமாய் இருந்துள்ள சந்த்ர மண்டலத்தை தா என்னா நின்றது
இழிந்து (குனிந்து )வாங்க வேண்டும் காண் திருமலையினுடைய உயர்த்தி –

(நாம் சந்திரனுக்கு கீழ் -களங்கம் உள்ள பாதியைத் தான் பார்க்கிறோம்
இங்கே மேல் பகுதி என்பதால் ஒரே பிரகாசம்-விளங்கிய வெண் மதியம்)

மேலோரு நாள்-மண் மதியில் கொண்டுகந்தான் வாழ்வு ——-
பண்டு ஒரு நாள் பூமியை மதியால் கொண்டு
அலாப்யா லாபம் பெற்றானாய் உகந்தவனுடைய ஐஸ்வர்யம் –

——————————————————————-

இப்படிப்பட்ட ஐஸ்வர்யத்தை யுடையவன் கண்ணாலே காணலாம் படி
திருமலையிலே வந்து நின்றான் என்கிறார் -(சகல மனுஷ நயன விஷய தாங்கனாக )

ஸ்படிகமான சிலா தலத்திலே தன் வேண்டல் பாடு தோற்ற இருந்த பெண் குரங்கானது –
நம்மை ஏவிக் கார்யம் கொள்வது எப்போதோ என்று அவசர பிரதீஷமாய்-
ஸ்நேஹமே ஒரு வடிவு கொண்டால் போலே இருக்கிற ஆண் குரங்கை ப்ரணய ரோஷம்
மாறி சாதரமாகப் குளிரப் பார்த்து பார்க்கைக்குக் கண்ணாடி கொண்டு வந்து தா என்பாரைப் போலே
மேல் புறம் ஆகையால் களங்கம் அற்று ஒளி விடுகிற பூர்ண சந்த்ர மண்டலத்தைத் தா என்று
சொல்லும் படி இருக்கிற திருவேங்கடமே
பண்டு ஒரு காலத்திலே பூமியைத் தன் புத்தி யோகத்தாலே
மஹா பலி இருப்புக்குப் பொருந்தும்படி அர்த்தித்து வாங்கிக் கொண்டு அலாப்ய லாபம் பெற்றால் போலே
உகந்த சர்வேஸ்வரன் தனக்கு சர்வ சம்பத்துமாக நினைத்து இருக்கும் தேசம் –

—————————————————————————————————————

(வாமனன் ஸுலப்யம் ஸுசீல்யம்
திரிவிக்ரமன் -பரத்வம் பொலியும்
பரத்வம் -திரிவிக்ரமன் -திருவேங்கடம் -இவற்றிலே மண்டி இருப்பர் முதல் ஆழ்வார்கள் என்றாலும்
ஸுலப்யமும் வாத்சல்யமும் -அனைவரையும் தீண்டியதால் தோன்றுமே)

சர்வேஸ்வரனைப் பற்றி ஆத்மாவுக்கு வகுத்த சம்பத் என்று வ்யுத்புத்தி பண்ணினேன் -(எங்கள் மால் என்று அறிந்து கொண்டேன் )

(ப்ரஹ்மம் ஜகத் காரணம் -வியாபித்து -பொதுவான லக்ஷணங்கள்
தாமரைக் கண்ணன்- கறுமை திவ்ய மேனி -செங்கண் மால் -ஸ்ரீயப்பதி -எங்கள் மால்
வாத்சல்யம் சவுந்தர்யம் லாவண்யம் மிக்கு புருஷகாரமும் இருந்தால் தானே நாம் அணுகி அனுபவித்து வாழலாம்)

கரியான் கழலே தெருடன் மேல் கண்டாய் -என்று
திரு உள்ளத்தைக் குறித்து அனுபவிக்கச் சொல்லி-
திருவடிகளைத் தாம் கிட்டி அனுபவித்த படியை அருளிச் செய்கிறார் –

வாழும் வகை யறிந்தேன் மை போல் நெடு வரை வாய்த்
தாழும் அருவி போல் தார் கிடப்ப -சூழும்
திரு மா மணி வண்ணன் செங்கண் மால் எங்கள்
பெருமான் அடி சேரப் பெற்று ——59-

பதவுரை

மை போல் நெடு வரை வாய்–மை போன்று இருண்டு பெரிதான மலையிடத்திலே
தாழும்–இரு பக்கமும் தாழ விழிந்து பாய்கின்ற
அருவி போல்–அருவி போலே
தார் கிடப்ப–மாலை சாத்தப் பட்டிருக்க, (அதிலே யீடுபட்டு)
சூழும்–ஒருக்ஷணமும் விட்டுப் பிரியாமல் வளைத்துக் கொண்டிருக்கிற
திரு–பிராட்டியை யுடையவனும்
மா மணி வண்ணன்–நீல மணி போன்ற நிறத்தை யுடையவனும்
செம் கண்மால்–செந்தாமரை போன்ற திருக் கண்களை யுடைய பெரியோனுமான
எங்கள் பெருமான்–எம்பெருமானுடைய
அடி–திருவடிகளை
சேர பெற்று–அருகப் பெற்றதனால்
வாழும் வகை அறிந்தேன்–உஜ்ஜீவிக்கும் வழி தெரிந்தவனானேன்.

(அழகும் சம்பந்தமும் பிராப்தியும் புருஷகாரமும் இருக்க இங்கேயே வாழ்ச்சி உண்டே-
திருவேங்கடத்தானையும் திரிவிக்ரமனையும் சொன்னவாறு –
மீனுக்கு உடம்பு எங்கும் போல் திரு இவனுக்கு -சூழும் பத பிரயோகம் -இதனாலேயே —
பச்சை மா மலை -நீல மணி -கறுத்து பளபளத்து இருப்பதையே சொன்னவாறு – )

வாழும் வகை யறிந்தேன் மை போல் நெடு வரை வாய்த்–தாழும் அருவி போல் தார் கிடப்ப–
அஞ்சன கிரியில் பாயா நின்ற அருவி போலே திரு மார்பிலே சாத்தின தோள் மாலை கிடப்ப

சூழும்-திரு- மா மணி வண்ணன் —
அதிலே ஆசைப்படா நின்ற பெரிய பிராட்டியாரை யுடையனாய் –
ஸ்ரமஹரமான வடிவை யுடையவன் –

செங்கண் மால்–
ஈஸ்வரத்வத்தை ஸூசிப்பியா நின்ற திருக் கண்களை யுடையவன் -( தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீக ஏவம் அக்ஷிணீ )

எங்கள்-பெருமான் அடி சேரப் பெற்று —–
போக்ய பூதனாய் -என்னை யுடையவனாய் -வகுத்தவனுடைய திருவடிகளைக் கிட்டப் பெற்று

புத்தி நாஸாத் பிரணஸ்யதி-என்று சப்தாதிகளைப் பற்றாதே வாழும் பிரகாரம் அறிந்தேன் -(தாழும் வகை தவிர்ந்து வாழும் வகை அறிந்தேன்)

(த்யாயதோ விஷயாந் பும்ஸஸ் ஸங்கஸ் தேஷூபஜாயதே.—
ஸங்காத் ஸம் ஜாயதே காம-காமாத் க்ரோதோபி ஜாயதே—৷৷2.62৷৷

சப்தம் முதலான ஐந்து புலன்களையும் சிந்திப்பவனாய் -என்னை த்யானிக்காத அதிகாரிக்கு
அப்புலன்களில் பற்று வளர்கிறது -அப் பற்றினால் காமம் ஏற்படுகிறது –
விஷயங்களில் பற்று -கொண்டு -சங்கம்
முதிர்ந்த பழுத்த ஆசையே காமம்
இது இல்லாமல் தரிக்காத தசை ஆபன்னன் அடைந்தவன்
காமத்தினால் கோபம் பரவலாக உண்டாகிறது

இதிலும் அடுத்ததிலும் -படிக்கட்டு -அவரோகணம் –தலை குப்புற விழ –

(க்ரோதாத் பவதி ஸம்மோஹ ஸம்மோஹாத் ஸ்ம்ருதி விப்ரம—
ஸ்ம்ருதி ப்ரம்ஸாத் புத்திநாஸோ புத்திநாஸாத் ப்ரணஸ்யதி—৷৷2.63৷৷

கோபத்தினால் பகுத்து அறிவின்மை உண்டாகிறது –
பகுத்து அறிவின்மையால் நினைவின் அழிவு ஏற்படுகிறது –
நினைவின் அழிவினால் அறிவின் அழிவு உண்டாகிறது –
அறிவின் அழிவினால் சம்சாரத்தில் மூழ்கி அழிகிறான்–இப்படி படிக்கட்டு -கீழே விழ –

விஷயாந்தர ப்ராவண்யம் தொடங்கி -சங்கம் காமம் க்ரோதம் -அவி விவேகம்-சம்சாரத்தில் மூழ்கி அழிகிறான் -படிக்கட்டுக்கள்)

(மாதலி கவிதை வர்ணனை நீல மேக ஸ்யாமள கண்ணன் அணிந்த மாலைகளை பற்றி
நீல ஆகாசம் -முத்து மாலைகள் ஸாத்தினால் போல் ஆகாச கங்கை அருவிகள் )

——————————————————————-

(தெருடன் மேல் தெருள் ஞானம் அதன் மேல் அவன் பக்தி -கீழே பார்த்தோம் )

கரியான் கழலே தெருடன் மேல் கண்டாய் -என்று
திரு உள்ளத்தைக் குறித்து அனுபவிக்கச் சொல்லி-
திருவடிகளைத் தாம் கிட்டி அனுபவித்த படியை அருளிச் செய்கிறார் –

அஞ்சனம் போலே இருண்ட நிறத்தை யுடைத்தான பெரிய மலையிடத்திலே இரண்டு அருகும்
தாழ விழுந்து பாயா நின்ற அருவி போலே திருத் தோள்களில் சாத்தின திருமாலையானது
அனுபாவ்யமாய்க் கிடந்தது பிரகாசியா நிற்க-

இவ் ஓப்பனை அழகைக் கண்டு -இறையும் அகலகில்லேன் (நித்ய அநபாயினி நிரவத்யாம் )-என்று
சூழ்ந்து போந்து அங்கே நித்ய வாசம் பண்ணுகிற பெரிய பிராட்டியாரை யுடையனாய் –

பெரு விலையனான நீல ரத்னம் போலே ஸ்ரமஹரமான திருமேனியை யுடையனுமாய்-
இவ் வைஸ்வர்ய ஸூ சகமான சிவந்த திருக் கண்களை யுடையனாய் –
சர்வாதிகனாய் –
ஆஸ்ரிதரான எங்களுக்கு வகுத்த சேஷியுமான சர்வேஸ்வரனுடைய திருவடிகளைக் கிட்டப் பெற்று
(சேஷத்வ பாரதந்த்ர  )ஸ்வரூப அனுரூபமாக வாழும் பிரகாரத்தை அறிந்தேன் –

————————————————————————————————————

பிரதிபந்தகங்கள் போனால் அன்றோ வாழும் படி யாவது என்னில் –
அவன் தானே பிரதிபந்தகங்களைப் போக்கும் என்கிறது –

உமக்கு வாழ்விலே அந்வயமாகில் அதுக்கு பிரதிபந்தகமானவை செய்தது என் என்ன-
அது போக்குகை அவனுக்கு பரமாய் விட்டது -என்கிறார் –

(பெற்றம் பிணை மருதம் பேய் முலை மாச் சகடம்
முற்றக் காத்தூடு போய் உண்டுதைத்து
பெற்றம் முற்றக் காத்து
பிணை மருதமூடு போய்
பேய் முலை உண்டு
மாச் சகடம் உதைத்து
நிரல் நிறை
அரவம் இத்யாதியில் – 10 சேஷ்டிதங்கள் உண்டே

அரவம் அடல் வேழம் ஆன்குருந்தம் புள்வாய்
குரவை குட முலை மற் குன்றம் கரவின்றி
விட்டு இறுத்து மேய்த்து ஒசித்துக் கீண்டு கோத்து ஆடி உண்டு
அட்டு எடுத்த செங்கண் அவன் ———–54–)

பெற்றம் பிணை மருதம் பேய் முலை மாச் சகடம்
முற்றக் காத்தூடு போய் உண்டுதைத்து -கற்றுக் குணிலை
விளங்கனிக்குக்  கொண்டு எறிந்தான் வெற்றிப்
பணிலம் வாய் வைத்துகந்தான் பண்டு —–60-

பதவுரை

பெற்றம்–பசுக்களை
முற்ற காத்து–ஒன்று தப்பாமல் ரக்ஷித்தவனாயும்(காப்பான் -சாலப் பல நாள் உயிர்கள் உகந்து காப்பான் )
பிணை மருதம் ஊடு போய்–இரட்டை மருத மாங்களிடையே சென்றவனாயும்
பேய் முலை உண்டு–பூதனையின் முலையை உண்டவனாயும்
மா சகடம் உதைத்து–பெரிய சகடத்தை உதைத் தொழித்தவனாயும்
கன்று குணிலை கொண்டு- கன்றாகிய எறி தடியைக் கொண்டு
விளங்கனிக்கு எறிந்தான்–விளாம்பழத்தின் மீது எறிந்தவனாயுமுள்ள எம்பெருமான்
பண்டு–முன்பொரு காலத்தில்
வெற்றி பணிலம்–ஜய சீலமான சங்கை(வெற்றியை இயல்பாக உடைய சங்கு )
வாய் வைத்து–வாயிலே வைத்து ஊதி
உகந்தான்–மகிழ்ந்தான்

பெற்றம் பிணை மருதம் பேய் முலை மாச் சகடம்
முற்றக் காத்தூடு போய் உண்டுதைத்து —இது நிரல் நிறை–

பெற்றம் முற்றாக காத்து
பிணை மருதமூடு போய்
பேய் முலை யுண்டு
மாச்சகடம் உதைத்து -என்றபடி –

கற்றுக் குணிலை-விளங்கனிக்குக்  கொண்டு எறிந்தான்
கன்றாகிய எறி கருவியைக் கொண்டு விளங்கனிக்கு கொண்டு எறிந்தவன் –

வெற்றிப்-பணிலம் வாய் வைத்துகந்தான் பண்டு —
வெற்றியை விளைப்பதான ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை வாயிலே வைத்து உகந்தவன் –
பண்டு உண்டான பிரதிபந்தகங்களை எல்லாம் போக்கும் –

(சங்கர ஐயா உன் செல்வம் சால அழகியதே)

(அஷ்ட மஹிஷிகள் உரிமை உண்டு
16108-க்ருஹஸ்த தர்மம் -ஒவ்வொருவருக்கும் க்ருஹம் -அனைவருக்கும் ஒரு திவ்ய மங்கள விக்ரஹம்
கோபிகள் -ஐந்து லக்ஷம் -அனைவருக்கும் ஆனந்தம்
தர்ம பரிபாலனம் -விரோதி நிரஸனம் -போக்யம் அனைத்தையும் காட்டி அருளி-அனைத்துமே ஆழ்வாராதிகளுக்கு)

———————————————————————

உமக்கு வாழ்விலே அந்வயமாகில் அதுக்கு பிரதிபந்தகமானவை செய்தது என் என்ன-
அது போக்குகை அவனுக்கு பரமாய் விட்டது -என்கிறார் –

பசுக்களை ஓன்று ஒழியாமல் ரக்ஷித்து —
ஒன்றோடு ஓன்று பிணைந்து நிர் விவரமாய் நின்ற மருதுகளை ஊடறுத்துக் கொண்டு போய் விழ விட்டு —
பூதனையுடைய முலையை அவள் பிணமாக விழும் படி உண்டு –
பயாவஹமான பெரிய சகடத்தை முறிந்து விழும் படி உதைத்துப் பொகட்டு –
கன்றாகிய எறி கருவியைக் கொண்டு விளவினுடைய பழத்துக்கு எறிந்து இரண்டையும் முடித்துப் பொகட்டவன்-

முன்பு ஒரு நாளிலே விஜயத்தை யுண்டாக்குமதான ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை
பிரதி பக்ஷம் நசிக்கும் படி திருப் பவளத்திலே மடுத்தூதி –
விரோதி போகப் பெற்றோம் என்று உகந்து அருளினவன் கிடீர் –

(புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோவிலில்
வெள்ளை விளிச்சங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு
கள்ளச்சகடம் கலக்கழிய காலோச்சி
வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்து கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெல்ல எழுந்து ஹரி என்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்-இங்கும் பேய் முலை நஞ்சுண்டு கள்ளச்சகடம் கலக்கழிய காலோச்சி-அடுத்து அடுத்து)

——————————————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –