ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்த-ஸ்ரீ பரந்த ரஹஸ்யம்-த்வய பிரகரணம் -பூர்வ கண்ட விவரணம் –

ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூ நவே
யத் கடாஷைக லஷ்யாணாம் ஸூ லபஸ்  ஸ்ரீ தரஸ் சதா —

ஆக -திருமந்த்ரார்த்தத்தை விசதீ கரிக்கிற த்வயத்திலே பூர்வார்த்தம் -பத த்ரயாத் மகமாய
தஸ்மான் நியாச மேஷாம் தபசாமதிரிக்த  மாஹூ -என்றும்
முமுஷூர் வை சரணமஹம் ப்ரபத்யே -என்றும்
த்வாமேவ சரணம் ப்ராப்ய நிஸ்தரந்தி மநீஷிண-என்றும்
சோஹம் த்வாம் சரணம பாரமப்ரமேயம் சம்ப்ராப்த -என்றும்
சரணம் தேவ்ரஜம்   விபோ –சரண்யம் சரணம் யாதோ கோவிந்தம் நாவசீததி –சரணம் வ்ரஜ –
மாமேகம் சரணம் வ்ரஜ -இத்யாதிகளிலே
முமுஷூவுக்குக் கர்த்தவ்யமாகச் சொல்லப் படுகிற பிரபத்தியையும் –
பிரபதவ்ய விஷய விசேஷத்தையும் –
அத்தை அச்சமற ஆஸ்ரயிக்கலாம் படி பண்ணித் தரும் புருஷகார விசேஷத்தையும் -சொல்லுகிறது –

—————————————————————————————-

ஸ்ரீ சப்தார்த்தம் –
அதில் பத த்ராயாத் மகமான பிரதம பதத்தில் ஸ்ரீ சப்தம் -புருஷகாரத்தைச் சொல்லுகிறது –
உபாயம் உபேயயார்த்த மாய் இருக்கச் செய்தேயும் -வ்யுத்பத்தி வேளை இன்றியிலே -அனுஷ்டான வேளையாய்-
உபாய அனுஷ்டான அனந்தரம் உபேய சித்தி யாகையாலே
பிரதமோபாத்த மானவோபாதி  இவ் வ்ய்பாய ஸ்வீகாரத்துக்கு முன்னே  வேணுமே சேர விடும் புருஷகாரமும் –
ஆகையாலே பிரதமத்திலே பிருஷகார பாவத்துக்கு ஏகாந்தமான  ஸ்வபாவ விசேஷங்களோடு கூடி இருக்கிற
வஸ்து விசேஷத்தை நிர்தேசிக்கிறது – ஸ்ரீ சப்தம்

அந்த ஸ்வ பாவங்கள் ஆவன –
புருஷகாரமாக நினைக்கிற வஸ்துவைப் பற்றும் போது வேறு ஒரு புருஷகாரம் தேட வேண்டாத படி
இவனோடு ஒரு சம்பந்த விசேஷம் யுண்டாகையும்-
இவன் நினைக்கிற விஷயத்தோடு சேர்க்கும் போது இவன் தன்னோ பாதி தனக்கு வேறு ஒரு புருஷகாரம் வேண்டாதபடி
அவ்விஷயத்தோடே ஒரு சம்பந்த விசேஷம் யுண்டாகையும் –
ஆக இரண்டும் இறே புருஷகார வஸ்துவுக்கு அபேஷிதம்-

அவை இரண்டு ஸ்வ பாவ விசேஷத்தையும் –
ஸ் ரிங் -சேவாயாம்-என்கிற தாதுவிலே -ஸ்ரீ யதே -ஸ் ரயதே-என்கிற வ்யுத்பத்தி த்வயத்தாலுமாக பிரகாசிப்பிக்கிறது –
வ்யுத்பத்தித் த்வயத்தாலும் -சேவிக்கப் படா நின்றாள் -சேவியா நின்றாள் -என்று
சேவா விஷயமாய் இருக்கும் –சேவைக்கு ஆஸ்ரயமுமாய் இருக்கும் என்கிறது –

ஈஸ்வரீம் சர்வ பூதா நாம் -அஸ்யே ஸாநா ஜகத -இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
பகவத் வ்யதிரிக்த சகல  பதார்த்தங்களுக்கும் ஈஸ்வரியாய் இருக்கையாலே த்ரிவித ஆத்ம வர்க்கத்தாலும் சேவிக்கப் படா நிற்கும் –
ஆகையாலே சேவா விஷய பூதையாய் இருக்கக் கடவள் –

விஷ்ணு பத்நீ -விஷ்ணோஸ் ஸ்ரீ ரீ -ஹ்ரீஸ்ஸ தே லஷ்மீஸ்ஸ பத்ன்யௌ-இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
பத்நீத்வேந ஈஸ்வரனுக்கு சேஷ பூதையாய் இருக்கையாலே அவனை சேவியா நிற்கும் —
ஆகையாலே சேவைக்கு ஆஸ்ரயமாய் இருக்கும் –

ஆன போது இறே -கர்ம கர்த்ரு பாவ விரோதம் இன்றிக்கே ஒழிவது –
மாதாவாகில் பிரஜைகளுக்கு ஸ்வாமிநீயுமாய் பர்த்தாவுக்கு சேஷ பூதையுமாய் இறே இருப்பது –
தவம் மாதா சர்வலோகா நாம் தேவ தேவோ ஹரி பிதா -என்னக் கடவது இறே –

ஆக -மாத்ருத்வத்தாலே சேதன ரோடு நித்ய சம்பந்தம் யுண்டாகையாலும்-
பத்நீத்வேந  ஈஸ்வரனோடே நித்ய சம்பந்தம் யுண்டாகையாலும் 
புருஷகார பூதை பிராட்டி என்னும் இடத்தை வ்யுத்பத்தித் த்வயத்தாலும் சொல்லிற்று ஆயிற்று –

புருஷகார பாவத்துக்கு ஏகாந்தமாக இவளுக்கு சொன்ன உபய சம்பந்ததத்துக்கும் யுண்டான
பிரயோஜன  விசேஷத்தைச் சொல்லுகிறது –
ஸ்ருணோ தீதி ஸ்ரீ -ஸ்ராவயதீதி ஸ்ரீ -என்கிற நிருத்தம்-
ஸ்ருணோதி -என்று கேட்கும் என்கையாலே -சேதன ரோடு யுண்டான பந்த காரியத்தைச் சொல்லுகிறது –
ஸ்ராவயதி-என்று கேட்பியா நிற்கும் என்கையாலே ஈஸ்வரனோடு யுண்டான பந்த காரியத்தைச் சொல்லுகிறது –

அதாவது –
இவன் -ஈஸ்வரத்வம் இல்லை -என்று எழுத்திடும் என்றும் -இவன் உரு மாயாதபடி இரா மடமூட்டுவாரோ பாதி
கண் காணாமல் நோக்கிப் போருவது-
கரண களேபர  விதுரமாய் அசித் கல்பமாய்க் கிடக்க -அபேஷா நிரபேஷமாகவே தயமான மனவாய்க் கொண்டு
கரண களேபரங்களைக் கொடுப்பது –
பின்பு -இவற்றுக்கு ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி சக்தி யுண்டாகைக்காக அநு பிரவேசிப்பது –
பின்பு அஸூர ராஷசாதிகள் காலிலே துகை யுண்ணும் போது -நாட்டில் பிறந்து -படாதன பட்டு
ராம கிருஷ்ணாதி ரூபேண மார்பிலே அம்பேற்று எதிரிகளை இடறிக் கொடுப்பது –
நம்மைப் பெருகைக்கு ஈடாய் இருப்பதொரு அறிவுண்டாமோ -என்னும் நோயாசையாலே –
வேதங்களையும் வைதிகரையும் ப்ரவர்த்திப்பித்து
இவை படுகிற நோவைக் கண்டு -இவர்களிலும் ப்ருசம் பவதி துக்கித -என்று திரு உள்ளம் மிகவும் உடை குலைப் படுவது –
சாதனங்களாகக் கொடுத்த கரண களேபரங்களே பாதகங்கள் ஆனால்  அவற்றைக் கொண்டு
அத பதியாமைக்காக அவற்றை ஓடித்திட்டு வைப்பது
பின்பு -ஸ ஏகாகி ந ரமேத -என்று நித்ய விபூதி யுக்தனான தான் இவற்றை ஒழியச் செல்லாமை
யுடம்பு வெளுப்பதாம் படியான நிருபாதிக பந்தமும்
ரஷ்யாபேஷாம் ப்ரதீஷதே -என்கிறபடியே இவை படுகிற நோவு பொறுக்க மாட்டாமையாலே
நாம் இழிந்து நோக்குகைக்கு சிறிது இடம் பண்ணித் தருவது காண்-என்று அவசர ப்ரதீஷனாவது
அரி பிராணான் பரித்யஜ்ய  ரஷிதவ்ய -என்று -நான் அழிந்தே யாகிலும் ஆஸ்ரிதரை ரஷிக்கக் கடவேன் -எனபது –
தோஷோ யத்யபி தச்யஸ்யாத் ந  கதஞ்சன -சமோஹம் சர்வ பூதேஷு என்னும் ஸ்வ பாவ விசேஷமும் –

ஏவ மாதிகள் அடைய ஆஸ்ரயணீயனான சர்வேஸ்வரன் பக்கலிலே சம வேதமாய் இரா நிற்கச் செய்தேயும்
அப்படிப் பட்டிருக்கிற அவனுடைய வாத்சல்ய சீதளமான திரு உள்ளத்தை –
க்ரோத மாஹாரயத் தீவரம் -என்கிறபடியே –
க்ரோதத்துக்கு இரையாக்கிக் கடல் கொதித்தாப் போலே கொதிக்கும் படி பண்ணுவது –
ப்ரியம் வத-என்கிறபடியே
ம்ருத சஞ்சீவிநியான   வாக்ம்ருதத்தை -ஷிபாமி -ந ஷமாமி -ஹன்யாம்-என்கிறபடியே
விஷ தாரை போலே ஸ்ரவண கடுகமாம் படி பண்ணுவது –
சர்வ உஜ்ஜீவன ஹேதுவான அவனுடைய திவ்ய வியாபாரங்களை நரகாதி களிலே தள்ளிக் குட்டிக் கொலையாக
நிறுத்து அறுத்துத் தீர்த்துகையிலே அதி க்ருதமாம்படியும்
அநாதி காலம் பண்ணிப் போருகிற பகவத அபசார -பாகவத அபசார -அசஹ்ய அபசார நாநாவித
அநந்த அபசார அனுசந்தானத்தாலே குடல் கரிந்து
அநாதி காலம் கர்மங்களை நிறுத்து அறுத்துத் தீர்த்துப் போருகிற அவனை ஆஸ்ரயிக்கப் புகுகிறது –
அவன் உதிரக் கை கழுவாத படி பண்ணிப் போந்த நான் ஆஸ்ரயிக்கப் புகுகிறேன்
அதுக்குக் கை தொடுமான கர்மம் இலச்சினைப் படியே குறி அழியாமல் கிடக்கிறது -என்கிற பயாதி சயத்தாலே தேங்கி
சம்சாரத்தில் வெம்மையும் பகவத் விஷயத்தில் வை லஷண்யமும் வடிம்பிடுகையாலே பண்டு போலே
ஆஸ்ரயண விமுகன் ஆக மாட்டாதே துஷ்கரத்வாதிகளாலே சாதனாந்தரங்களில் காலிடக் கூசி
புறம்பே போக்கடி அற்றுத் தெகிடாடுகிற இச் சேதனன்

ஈஸ்வரன் திரு உள்ளத்தில் நடையாடுகிற அழல் தீயை ஆற்றி -நம்மைச் சேர விடுகைக்கு
நம்மோடும் அவனோடும் நிருபாதிக சம்பந்தத்தை யுடையளாய்-ந கச்சின் ந அபராத்யதி -என்னும்
இவளை ஒழியப் புகு வாசல் இல்லை -என்று காக வ்ருத்தாந்தாதி முகத்தாலே அறுதி இட்டு
ப்ரணிபாத பிரசன்னா ஹி மைதிலீ ஜனகாத்மஜா -என்று புருஷகார நிரபேஷமாக அஞ்சலி மாத்ர ஸூலபையான இவளை வந்து கிட்டி
மாதர் மைதிலி ராஷசீஸ் த்வயி ததை வார்த்ரா பராதாஸ் த்வயா ரஷந்த்யா பவ நாத் மஜால் லகுதரா ராமஸ்ய கோஷ்டி க்ருதா-என்கிறபடியே
புறம்புள்ள  பொருத்தம் அடைய அற்று ஈஸ்வரனுக்கு ஆளாகாதபடி பூர்வ அபதாரத்தாலே அஞ்சின எனக்கு
நிருபாதிக ஜநநியான தேவரீர் திருவடிகள் ஒழியப் புகல் இல்லை –
இனி நான் ஈஸ்வரனுடைய இரக்கத்துக்கு இரையாய் ரஷிதன் ஆதல் –
அவனுக்கு ஸ்வ தந்த்ர்யா பாத்ரமாய் நாசத்தோடே தலைக் கட்டுதல் ஒழிய
இளைப்பாறுகைக்கு இடம் இல்லாத படி -அனன்ய கதி -இனி அடியேனுக்கு ஹிதம் இன்னது என்று அறிந்து
ரஷித்து அருளுகை தேவரீருக்கே பரம் -என்று இவன் சொன்ன வார்த்தையைக் கேட்கையும் –

அதுக்கு மேலே வெந்நீருக்கு குளிர் நீர் போலே நிரந்குச ஸ்வா தந்தர்யத்தாலே -அபிதா பாவ கோபமாம் -என்கிறபடியே –
அநபிபவ நீயனான ஈஸ்வரனைத் தன்னுடைய போக்யதாதி சயத்தாலே பதமாக்கி –
நாயந்தே இச் சேதனனை அங்கீ கரித்து அருளீர் -என்னும் –
ஆவாதென்-ஸ்ருதிஸ் ஸ்ம்ருதிர் மமை வாஜ்ஞா-என்று நம்முடைய ஆஜ்ஞா ரூபமான சாஸ்திர மரியாதையை
அதிலங்கித்து நம் நெஞ்சு புண்படும்படி தீரக் கழிய அபராதம் பண்ணிப் போந்தவன் அல்லனோ –
இவனை அங்கீ கரிக்கை யாவது என்-என்னும் ஈஸ்வரன் –
அவனுடைய  பூர்வ அபராதங்களை உம்முடைய பொறைக்கு இலக்காக்கி ரஷித்து அருளீர் -என்னும் பிராட்டி –
பொறையை நோக்குகைக்காக சாஸ்திர மர்யாதையைக் குட நீர் வழியவோ-என்னும் ஈஸ்வரன் –
சாஸ்திர மர்யாதையை நோக்குகைக்காக உம்முடைய ஸ்வா பாவிகமான ஷமா தத்வத்தைக்  குட நீர் வழியவோ -என்னும் பிராட்டி –
ஷமையை நோக்கில் சாஸ்திர மர்யாதை குலையும் -சாஸ்திர  மர்யாதையை நோக்கினால் ஷமா தத்வம் குலையும் –
இரண்டும் குலையாது ஒழிய வேண்டும் -செய்யப் படுவது என் -என்னும் ஈஸ்வரன் –
கிங்கர்த்தவ்ய தாகுலனாய் இருந்தால் அத்தனையே –
அவை இரண்டும் குலையாதபடி வழி சொல்லுகிறேன் –
அப்படியே செய்தருளீர் -என்னும் பிராட்டி –
இரண்டும் குலையாமல் இச் சேதனனை நோக்க வழி யுண்டாமாகில் நமக்குப் பொல்லாததோ -சொல்லிக் காண்-என்னும் ஈஸ்வரன் –
ஆனால் சாஸ்திர மர்யாதை விமுகர் விஷயம் ஆக்குவது -உம்முடைய ஷமையை அபிமுக விஷயம் ஆக்குவது
இரண்டும் ஜீவித்ததாய் அறும்-என்னும் விஷய விபாகம் பண்ணிக் கொடுக்கும் பிராட்டி –
அத்தைக் கேட்டு -அழகிய விபாகம் -என்று இச் சேதனனை அங்கீ கரித்து அருளும் ஈஸ்வரன் –

ஆக –
இப்படி சாபராத ஜந்துவை ஈஸ்வரன் அங்கீ கரித்து அருளும்படியான வார்த்தைகளைக் கேட்பித்து அருளுகையும் –

——————————————————————————-

மதுப்பின் அர்த்தம் –
ஆக -புருஷகாரத்வ சமர்ப்பகமான ஸ்வ பாவ விசேஷங்களும் -தத் கார்யங்களும் –
தர்மி க்ராஹகமான ஸ்ரீ சப்தத்தாலே சொல்லிற்று ஆயிற்று –
இப்படி புருஷகார பூதையாய் அற்றாலும் இவள் அசந்நிஹிதை யாய் இருக்குமாகில் –
சஞ்சலம் ஹி மன –சலசித்தம் -நின்றவா நில்லா நெஞ்சு -என்கிறபடியே
சூறாவளிக் காற்றுப் போலே சுழன்று வருகிற இஸ் சம்சாரி சேதனருடைய நெஞ்சு தளமாக அங்குரித்த ருசி யாகையாலே
ஷண பங்குரையாய் இருக்கும் ஆகையாலே அது தீவருக்கு முன்னே ஈஸ்வரனை ஆஸ்ரயிக்கைக்கு
விரகற்றுப் பழைய குருடே ஆய்விடும்  என்கிற சங்கையிலே
ருசி பிறந்தபோதே ஆஸ்ரயிக்கலாம்படி ஆஸ்ரயணீய வஸ்து வோடே இவள் நித்ய சம்யுக்தையாய் இருக்கும்
என்கிறது -மதுப்பு –

இம்மதுப்பு –
நித்ய யோகே மதுப் -ஆகையாலே அவள் நித்ய அனபாயிநியாய் இருக்கும் என்கிறது –
அதுக்கு ஹேது என் என்னில்

ஜ்ஞானானந்த லஷணமான பகவத் ஸ்வரூபத்துக்கு ஜ்ஞானானந்த லஷணமான  ஆத்ம ஸ்வரூபத்தில் காட்டில்
வ்யாவர்த்தகமான ஹேய ப்ரத்ய நீகத்வ விபுத்வ சேஷித்வாதிகளோ பாதி  -ஸ்ரீ யபதித்வமும் –
ம்ருது பாதா நகமான கடகரகாதிகளில் ப்ருது புத் நோதராகார ரூபியான கடத்வ ஜாதி கடத்துக்கு கரகாதி
வ்யாவ்ருத்தியைப் பண்ணுகிறவோ பாதி வ்யாவ்ருத்தியைப் பண்ணித் தரும்படி-ஸ்வரூப நிரூபக பூதை யாகையாலும்

ஸ்வா பாவிகமாகவும் ஔபாதிக மாகவும் பகவத் சாரூப்யம் பெற்று இருக்கிற
நித்யருடையவும் முக்தருடையவும் விக்ரஹங்களில் காட்டில் வ்யாவ்ருத்தமாம் படி –
ஸ்ரீ வத்ஸ வஷா-என்கிறபடியே -அசாதாரண திவ்ய மங்கள விக்ரஹத்துக்கு நிரூபக பூதை யாகையாலும்

ஒரு மிதுன விஷய கிஞ்சித் காரத்தை ஒழியில் ஷண காலமும் தரிக்க மாட்டாத படியான நித்யரையும் முக்தரையும்
நித்ய கைங்கர்யம் கொள்ளுகைக்காக –
ஸ்ரீ ரியா ஸார்த்த மாஸ்தே -என்கிறபடியே -நிரந்தர சம்ச்லேஷம்  பண்ணிக் கொண்டு இருக்கையாலும்

விபவாதிகளில் வந்தால் -தேவத்வே தேவ தே ஹேயம் மனுஷ்யத்வே ச மானுஷீ விஷ்ணோர் தேஹாநுரூபாம்
வை கரோத்யேஷாத் மனஸ் தநும் – என்கிறபடியே
அவ்வோ அவ்வோ அவதார சஜாதீயமான விக்ரஹ பரிக்ரஹம் பண்ணி வந்து அவதரிக்கையாலும்

அதுக்கு மேலே -அகலகில்லேன் இறையும்-என்று மார்பிலே இருந்து மடல் எடுக்கும் படி பகவத் போகத்தில் ஆழம் கால் பட்டு
ஜலான் மத்ஸ்யா விவோத்த்ரு தௌ-என்கிறபடியே ஷண கால விஸ்லேஷ அசஹையாய் இருக்கையாலும்

ஸ்வ வைஸ்வ ரூப்யேண  சதா நுபூதயாப்ய பூர்வவத் விஸ்மயமாததா நயா-என்கிறபடியே
அநு பூதாம்சம் அல்பமாய் அநு பாவய அம்சமே அபரிச்ச்ன்னமாம் படியான பெரிய வைபவத்தை யுடைய தானும்
தன்னுடைய ஜ்ஞான சக்த்யாதிகளையும் ஸ்வ ச்வைஸ்வ ரூபத்தையும் நேர்ந்து ஒரு கால கலைகதேசமும் மலடு பற்றாதபடி
நிரந்தர அநு பவம் பண்ணா நின்றாலும்-ஆனைக்குக் குதிரை வைத்து அந்த வைச்வரூப்ய அநு பாவம் அடைய
போகோபோத்காத கேளீ சுளகிதமாம்படி பண்ண வற்றான அவளுடைய நிரவதிக போகய அதிசயத்தாலே
மார்பிலே இருத்தி மடல் எடுக்கும் படி ஷண காலமும் விரஹ அசஹனாகையாலும் –
இவள் நித்ய சம்யுக்தையாய் இருக்கும் –

ஸ்ரீ யதே -என்கிற வ்யுத்பத்தியாலே த்ரிவிதாத்மா வர்க்கத்தில் காட்டில் வ்யாவ்ருத்தி சொல்லிற்று –
மதுப்பாலே அல்லாத நாச்சிமாரில் காட்டில் வ்யாவ்ருத்தி சொல்லிற்று –
அல்லாதவர்களுக்கு நித்ய சம்யோக ஹேது பூதங்களான  ஸ்வரூப நிரூபகத்வாதிகளில்லையே-

ஆக
இவள் சொன்னதை ஒன்றை மேல் விழுந்து கேட்கும்படியான இவளோடு யுண்டான நிருபாதிக பந்தத்தாலும் –
நித்ய அனபாயினியாய் நின்று
அல்லி மலர்மகள் போக மயக்குகளாகியும் நிற்கும் -என்னும்படி பண்ணும்
தன்னுடைய வால்லப்யாதிசயத்தாலும் நிருத்தமாம் படியான தன்னுடைய உக்தி விசேஷங்களாலும்
அவனுடைய ஸ்வா தந்த்ர்யத்தை ஆற்றிச் சேர விட ஷமை யாகையாலும் புருஷகார பாவம் சொல்லிற்று ஆயிற்று –

ஸ்ரீ மன் நாராயண சரனௌ-என்று உபாயதயா வஷ்யமாணனான நாராயணனுக்கு விசேஷணமாக
ஸ்ரீ மத்யைச் சொல்லா நின்றால்
நாராயண சப்தத்தினால் சொல்லப் புகுகிற குண விசேஷங்கள் விசேஷணத்வேன உபாய சரீரத்திலே
அன்விதமாகிறவோபாதி  இவளும் உபாயாவயமாக ப்ராப்தையுமாய்
மாதா பிதாக்கள் இருவரும் சேர இருந்து பிரஜா ரஷணம் பண்ணுகை ப்ராப்தமுமாய் –
அதுக்கு மேலே -வேரி மாறாத பூ மேல் இருப்பாள் வினை தீர்க்கும் -என்று
உபயக்ருத்யமான விரோதி நிவர்த்தகத்வம்  இவ்வர்த்தத்திலே நிஷ்டரான நம்மாழ்வார் திரு உள்ளத்தாலும் யுண்டாய்
பிரதேசாந்தரங்களில் இவளை புருஷகாரமாக நினைத்துச் சொல்லுகிறார்கள் என்கிற அவையும் 
உபாய பாவத்திலே அந்வயிப்பிக்க யோக்யமுமாய் –
அதுக்கு மேலே -அரி பிராணான் பரித்யஜ்ய ரஷிதவ்ய -என்று மேலே அனுஷ்டிக்கப் புகுகிற பிரபத்தி தானே
புருஷகார க்ருத்யத்தைச் செய்ய வற்றாகையாலும்
இவள் ஸ்வா தந்த்ர்யத்தை ஆற்றிச் சேரவிட உபாய பூதனான ஈஸ்வரன் ரஷிக்க அமைந்து இருக்க
உபாய அந்விதமான இவனுடைய ப்ரபத்ய அனுஷ்டானம் நிஷ்பலமாம் படி யுமாய் இருக்க
இவளுக்கு உபாய சரீரத்திலே அந்வயம் இல்லை -புருஷகாரத்திலே என்று ஒதுக்கித் தருவார் யார் என்னில் –

விசேஷணத்வம் யுண்டே யாகிலும்  விசேஷண பூதமான குண விசேஷங்களோபாதி
உபாய உபயோகித்வம் அவளுக்கு இல்லாமையாலும்
சமாஸ்ரயனை காந்தமான சௌசீல்யாதி குண உதய விரோதியான ஸ்வா தந்த்ர்யத்தைப் புருஷகார பூதையான இவள் ஆற்றினாலும்
அவன் கார்யம் செய்யும் போதைக்கு-ரஷ்யா பேஷாம் ப்ரதீஷதே -என்கிறபடியே
உபாய பிரார்த்தனா ரூபமான பிரபத்தி வேண்டுகையாலும் –
வினை தீர்க்கும் -என்கிற இடம் -களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்றிலேன் -என்கிறவருடைய
உக்தி யாகையாலே இத் திருவாய்மொழி அனுசந்தித்தவர்கள் பக்கல் இவளுக்கு யுண்டான ஆதராதி சாயா பிரகாசகம் ஆகையாலும்
இவளுக்கு புருஷகார பாவத்திலே நோக்காகக் கடவது –

இவளுக்கு  உபாய பாவத்தில் அந்வயம் யுண்டாகில் சாதன பூதமான கர்ம ஜ்ஞானாதிகளுக்கு –
பல்மத –ஸ ப்ரீதோலம் பலாய-என்று ஆராதன ப்ரீதனான  ஈஸ்வர முகத்தாலே
இஷ்ட அநிஷ்ட ப்ராப்தி பரிஹார ரூபமான பல சித்தி இவளாலேயாதல்-
அங்கன் இன்றியிலே பலோபபாத நஹேதுவான ஜ்ஞான சக்த்யாதிகளுக்கு உத்பாதகை யாதலாக வேண்டும் –
தான் பல பிரசாதையாகில் -யஸ் சர்வஜ்ஞஸ் சர்வவித் –பராஸ்ய சக்திர் விவிதைவ ஸ்ரூயதே ஸ்வா பாவிகீ ஜ்ஞான பலக்ரியா ச –
தேஜோ பலைஸ் வர்யமஹாவ போத  ஸூ வீர்ய சக்த்யாதி குணை கராசி-என்று ஸ்ருதி ஸ்ம்ருதிகளில் ஈஸ்வரனுக்கு சொல்லுகிற
ஜ்ஞான சக்த்யாதி குண விசேஷங்கள் இன்றியிலே ஒழிய வேணும் —
யுண்டாகில் இவளை ஒழியவே ஈஸ்வரன் தானே கார்யம் செய்ய ஷமனே-
அக்குணங்களை உத்பாதிக்கிறாள் ஆகில் குணங்களுக்கு ஸ்வா வாபிகத்வம் இன்றியிலே ஒழியும்-

சௌசீல்யாதி களோபாதி திரோஹிதமானவற்றை பிரகாசிப்பி க்கிறாள் என்னில் –
ஜகத் சிருஷ்டி ஸ்திதி சம்ஹாராதிகளிலே இடைவிடாமல் விநியோகம் கொண்டு போருகிற ஜ்ஞான சக்த்யாதிகளுக்கு
சௌசீல்யாதி திரோதாயகமான ஸ்வா தந்த்ர்யத்தோபாதி ஒரு திரோதானம் இல்லையே –
யுண்டாகில் ஸ்ருஷ்த்யாதிகள் நடவாது ஒழிய வேணும் –

சர்வதா அந்விதையம் ஆகில் ஸ்வ விரோதி நிவ்ருத்தியில் -தத் தஸ்ய சத்ருசம் பவேத் -என்று இருக்கக் கூடாதே –
குண விசேஷங்களே அமைகை யன்றோ —
ஆசம்சேயம் ஹரி ஸ்ரேஷ்ட்ட ஷிப்ரம் மாம் ப்ராப்ச்யதே பத்தி -அந்தராத்மா ஹி மே ஸூ த்தஸ் தச்மிம்ஸ்ஸ பஹவோ குணா -என்று
தன் பக்கல் அநந்ய உபாயத்வமும் அவன் பக்கல் குண விசேஷங்களுமே பலசித்திக்கும் அபேஷிதமாகத் தான் அறுதியிட்டு வைத்தது –

நாம் உபாயமாக யாதொரு வஸ்துவை ஸ்வீகரிக்கிறோம் -அவ்வஸ்துவுக்ககு இவள் ஸ்வரூபம் நிரூபகம் ஆகையாலே
பிரணவத்திலே பிரதம பதத்தில் போலே -யத்யபி சச்சித்த -என்கிற குண சித்தி ந்யாயத்தாலே அவர்ஜநீயமாய் அந்வயியாதோ என்னில்
ஸ்வரூப நிரூபகத்வேந அவர்ஜ நீய பந்தம்  யுண்டே யாகிலும் உபாய தசையில் கண்டு கொள்வதொரு பிரயோஜனம் இல்லாமையாலே –
ஸ்வரூப நிரூபகங்களான ஜ்ஞானானந்த களோபாதியும் ஸ்வரூப ஆஸ்ரயமான குணாந்தரங்களோபாதியும்  குமரிருந்து போம் அத்தனை –

இவற்றுக்கு பிரயோஜனம் இன்றிக்கே ஒழிகைக்கு ஹேது அவனுடைய நைரபேஷ்யம் ஆகில்
சில குண விசேஷங்கள் உபாய தயா அன்வயிக்கிற படி ஏன் என்னில்
அவை கர்ம உபயோகி யாகையாலும் -குணத்வேந அப்ருதக் புத்தி பிரவ்ருத்திகம் ஆகையாலும்
குணி குணி த்வாரா கார்யம் செய்கை நைரபேஷ்யத்துக்கு குறை இல்லாமையாலும் -அவற்றுக்குத் தட்டில்லை –

இவள்  கார்ய அனுப யுக்தி யாகையாலும் த்ரவ்யத்வேந  ப்ருதக்புத்தி ப்ரவ்ருத்தி யோக்யதை யுண்டாகையாலும்-
அத்தாலே உபாய நைரபேஷ்யத்துக்குக் கொத்தையாய் அறுகையாலும்-உபாய பாவத்தில் அந்வயம் இல்லை –

ஆகையாலே சேஷித்வ தசையிலும்  ப்ராப்யத்வ தசையிலும் ஒரு மிதுனமேயாக வேண்டினவோபாதி
உபாய தசையிலே ஸ்வ இதர  சகல சஹாயாசஹமாய் இருக்கையாலே
இவளுக்கு உபாய பாவத்தில் அந்வயம் இன்றியிலே புருஷகார பாவத்திலே யாகக் கடவது –

இச் சேதனன் உடைய சம்பந்தம் ஈஸ்வரனுக்கும் பிராட்டிக்கும் ஒத்து இருக்க –
அவன் புருஷகாரத்வாரா சமாஸ்ரயணீயனாகைக்கும் –
இவள் புருஷகார பூதை  யாகைக்கும் ஹேது என் என்னில் –
அவன் புருஷோத்தமனாய் பும்ஸ்த்வப்ருயுக்தமாய் வரும் காடிந்யம் நடையாடுகையாலும்
தேவ தேவோ ஹரி பிதா -என்கிறபடி
அதுக்கு மேலே ஸ்வ இதர சகல பதார்த்த சார்த்த நிருபாதிக நிர்வாஹகன்  ஆகையாலே –
தஹ பச-எண்ணும்படியான க்ரைர்யத்தாலும்
அவனை ஆஸ்ரயிக்கும் போது புருஷகாரத்வாரா ஆஸ்ரயிக்க வேண்டும்  –

இவள் நாரீணாம் உத்தமி யாகையாலே ஸ்த்ரீத்வ பிரயுக்தமாய் வரும் மார்த்வத்தாலும் –
தவம் மாதா சர்வ லோகா நாம் -என்கிறபடியே மாத்ருத்வ பிரயுக்தமான வாத்சல்யாதி சயத்தாலும்
தத் தத் கர்ம அநு குண நிர்வஹணம் இல்லாமையால் வரும் மாதுர்யத்தாலும்
அவனில் காட்டில் இவளுக்கு நெடு வாசி யுண்டாகையாலே இவள் புருஷகார பூதையாகக் கடவள் –

———————————————————————————-

நாராயண பதார்த்தம் –
ஆக -ஸ்ரீ மத் பதார்த்தத்தாலே ஆஸ்ரயண ஏகாந்தமான விலஷண புருஷகார யோகம் சொல்லிற்று ஆயிற்று –
அனந்தரம் -நாராயண பதம் -இச் சேதனனுடைய பூர்வ அபதார தர்சனத்தாலே கடல் கொதித்தாப் போலே
ஸ்வா பாவிகமான  சௌசீல்யாதிகள் தலை சாயும் படி
அத்யுன்னதமான  ஸ்வா தந்த்ர்யத்தை ஆற்றி
புருஷகார பூதையான பிராட்டி உத்பவித்த வாத்சல்யாதி குண விசேஷங்களைச் சொல்லுகிறது –
ஸ்வா தந்தர்யாபி பூதமான குணோதயம் இறே புருஷகாரயமாய் அறுவது-

இந்த குணோ தயத்துக்குப் புருஷகார அபேஷை யுண்டாகில்-
உபாயம் சாத்யமுமாய் -சாபேஷமுமாம்-அநுத் பூதமான குணங்கள் உத்பூதங்கள் ஆகிறதாகையாலே
உபாயத்துக்கு சாத்யத்வம் யுண்டாம் –
உபாய ஸ்வரூப உத்பத்திக்கு சஹகாரி சாபேஷத்வம் யுண்டாகையாலே பக்தியோபாதி அங்க சாபேஷத்வமுமாம்-

ஸ்வரூபகதமாய் திரோதிஹமாய் கிடந்ததை பிரகாசிப்பிக்கும் காட்டில் புருஷகாரத்துக்கு
அங்க சாதநத்வம் யுண்டாமோ -என்ன  ஒண்ணாதபடி
ஆத்ம தர்மமான  பக்தி விசேஷத்துக்கு ப்ரகாசகமான கர்ம யோகாதிகளை அங்க சாதனமாகச் சொல்லா நின்றது –

அதுக்கு மேலே ஆத்ம தர்மமாய் அப்ரகாசகமான அபஹத பாப்மத்வாதி குணங்களைப் பிரகாசிப்பிக்கிற ஈஸ்வரனுக்கு
பிரதான சாத்னத்வ வ்யவஹாரம் யுண்டாகா நின்றது –
ஆகையாலே உபாயாந்தர வ்யாவ்ருத்தி ரூபமான சித்தத்தவ நைரபேஷ்யங்கள் இரண்டும் குலையுமே என்னில் –

உபாயமாவது -இஷ்ட அநிஷ்ட ப்ராப்தி பரிஹார கரமாய் இருப்பது ஒன்றாய் –
அப்படிப்பட்ட உபாயமாவது ஜ்ஞான சக்தியாதி குண விசிஷ்டமான ஈஸ்வரன் ஆகையாலே
வாத்சல்யாதி குணங்களுக்கு உபாயத்வம் இல்லை —உள்ளது ஆஸ்ரயண ஏகாந்த தையே –
ஆகையாலே உபாயபூதமான ஜ்ஞான சக்த்யாதிகள் யுடைய உத்பத்யாதிகளுக்குப் புருஷகார அபேஷை இல்லாமையாலே
உபாயாந்தர வ்யாவ்ருத்தி ரூபமான சித்தத்வத்துக்கும் நிரபேஷத்வத்துக்கும் ஒரு குறை இல்லை –
ஆகை இறே -மாம் -என்கிற ஸ்வீகார்ய விஷயத்திலே ஸ்வீகாரோப யோகியான சௌசீல்யாதிகளை அனுசந்தித்தது –
அஹம் -என்கிற பாப விமோசகன் பக்கலிலே ஜ்ஞான சக்த்யாதிகளை அனுசந்தித்தது –

வாத்சல்யம் ஆவது –
வத்சம் லாலாயதி -என்கிற வ்யுத்பத்தியாலே -அன்றீன்ற கன்றின் பக்கல் தாய் பண்ணும் வ்யாமோஹம்-
அதாவது -சுவடுபட்ட புல்லையும் கால் கடைக் கொள்ளும் தசையிலும் தன் கடையினின்றும் புறப்பட்ட கன்றினுடைய
அளும்பு நாற்றத்தையே தனக்கு போக்யமாக ஸ்வீ கரித்து தன்னுடைய ஷீரத்தாலே அத்தை தரிப்பிக்குமா போலே
தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத்-என்கிறபடியே  ஆஸ்ரித கதமான தோஷங்களைத் தன் பேறாக மேல் விழுந்து போக்கித்
தன் குணங்களாலே அவர்களைத் தரிப்பிக்கை –
ஆத்ம குண அனுசந்தானம் ஆகையாலே ஆஸ்ரயண அனந்தரம் வரும் பாப விமோசன வியாபாரத்தோடு விரோதம் பிறவாது –

ஸ்வாமித்வம் ஆவது –
இந்த வாத்சல்யத்துக்கு ஊற்றாய் -ஈஸ்வர ப்ராப்தி ஆத்மாவுக்கு அன்று -ஆத்ம ப்ராப்தி ஈஸ்வரனுக்கு– என்னும்படி
இச் சேதன வஸ்துவை யுடையனாகை-
உடையான் இறே உடைமையைப் பெறுகையிலே யத்னம் பண்ணுவான் –

வத்சல்யனுமாய் -வகுத்தவனுமாய் இருந்தாலும் –
தமஸ பரஸ்தாத் –ரஜஸ பராகே -என்கிற தேச விசேஷத்திலே -அவாக்ய அநாதர-என்கிறபடியே தன்னுடைய 
விஸ்ருங்க லிதமான ஐஸ்வர்யம் அடையத் தோற்றும்படி இருக்குமாகில் இத் தேசத்தில் அதி ஷூத்ரனான
இச் சேதனனால் ஆஸ்ரயிக்க ஒண்ணாதே -என்ன வேண்டாதபடி –
மஹதோ மந்தைஸ் சஹ நீரந்த்ரேண சம்ஸ்லேஷ ஸ்வபாவ சீலம் -என்று பெரியவனான தான் தன்னைத் தாழ விட்டு
ஹே கிருஷ்ண ஹே யாதவ ஹே சகே -என்னலாம்படி சிறியாரோடு ஒரு நீராகக் கலந்து பரிமாறுகையும்-
பரிமாறா நின்றால்  –ஆத்மாநம் மாநுஷம் மன்யே ராமம் தசரதாத் மஜம்-என்கிறபடியே
தன் வைபவம் தன் திரு உள்ளத்தில் படாதபடி  பரிமாறுகையும் சௌசீல்யம் ஆவது –

இனி ஒரு தேச கால விபரகர்ஷாதிகளாலே நினைத்த போது ஆஸ்ரயிக்கை அசக்யமாய்  இருக்கை  அன்றியிலே –
எப்போதும் எல்லாராலும்  ஆஸ்ரயிக்கலாம் படி -அர்ச்சாவதார ஸூலபனாகை -சௌலப்யம் ஆவது –

பரமபதம்  ஷீராப்தி தொடக்கமானவை தேச விப்ர கர்ஷத்தாலே ஆஸ்ரயிக்க ஒண்ணாது –
விபவாதிகள் இஸ்த்தாநீந்தர்க்கு கால விப்ர கர்ஷத்தாலே ஆஸ்ரயிக்க ஒண்ணாது –
அந்தர்யாமித்வாதிகள் அசஷூர் விஷயம் ஆகையாலே ஆஸ்ரயிக்க ஒண்ணாது –
இனி இந்த கால  விப்ர கர்ஷத்தாலே வரும் குறையுமின்றியிலே -தேச விப்ர கர்ஷத்தாலே வரும் குறையும் இன்றியிலே
அசஷூர் விஷயத்தால் வரும் குறையும் இன்றியிலே பின்னானார் வணங்கும் சோதித் திரு மூழிக் களம் -என்கிறபடியே
சர்வ சமாஸ்ரயணீயமாய் அறுவது -உகந்து அருளின நிலமே யாகையாலே
சர்வ சௌலப்யம் பூரணமாய் இருப்பது அர்ச்சாவதாரத்துக்கே –

தன் தோஷம் கண்டு இறாயாமைக்கு வாத்சல்யத்தை அனுசந்திக்க வேணும் –
அவன் அப்ராப்தன் என்று இறாயாமைக்கு ஸ்வாமித்வத்தை அனுசந்திக்க வேணும் –
மேன்மை கண்டு இறாயாமைக்கு சௌசீல்யத்தை அனுசந்திக்க வேணும் –
அதீந்த்ரியன் என்று இறாயாமைக்கு சௌலப்யத்தை அனுசந்திக்க வேணும் –

தன்னுடைய தோஷமாதல் -அவனுடைய அப்ராப்தி யாதல் -அவன் மேன்மை யாதல் -அவன் அதீந்த்ரியத்வம் ஆதல்
இவை நெஞ்சிலே நடையாடில் ஆஸ்ரயிக்க யோக்யதை இல்லாமையாலே –
அவற்றுக்கு எதிர் தட்டாய்
ஆஸ்ரயண ஏகாந்தமாய் புருஷகார பூதையான பிராட்டியாலே உத்பவிக்கப் பட்டு
பின்னை அவள் தானே அழிக்க நினைக்கிலும்

அப்யஹம் ஜீவிதம் ஐஹாம் த்வாம் வா சீதே ஸ லஷ்மணாம்-என்றும் –
த்வயி கிஞ்சித் சமாபன்னே கிம் கார்யம் சீதயா மம-என்றும் –
தாமரையாள் ஆகிலும் சிதகுரைக்குமேல் என்னடியார் அது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார் –
என்னும்படி பண்ணக் கடவதாய்-
பிரதம ஆசார்யரான நம்மாழ்வாராலே ஆஸ்ரயண ஏகாந்தமாக –
நிகரில் புகழாய் -உலகம் மூன்று யுடையாய் -என்னை யாள்வானே -திரு வேங்கடத்தானே -என்று –
வாத்சல்யாதி க்ரமத்திலே அனுசந்திக்கப் பட்டு இருக்கிற நாலு குணங்களையும் சொல்லிற்று ஆயிற்று –

ஈஸ்வரன் ஆஸ்ரயணீயனாம் இடத்தில்  ஆஸ்ரயண சௌகர்யம் யுண்டாம் அளவு போராதே-
சம்சார பய பீதனாய் -பகவத் ப்ராப்தி ருசி வடிம்பிடும்படியான இவ்வதிகாரிக்கு –
சம்சார சம்பந்தத்தை அறுக்கைக்கும்-பகவத் அனுபவ ஜனித கைங்கர்யத்தைக் கொடுக்கைக்கும் ஏகாந்தமான
ஸ்வ பாவ  விசேஷங்கள் வேணும்
ஆகையால்  உத்தரார்த்தத்தில் சொல்லுகிற விரோதி நிவ்ருத்தி பூர்வகமான ப்ராப்ய சித்திக்கு ஏகாந்தமாய் –
அஹம் -சப்தத்தில் உக்தமான
ஜ்ஞான சக்த்யாதி குண சதுஷ்டகமும் -அவற்றுக்குப் பெரு நிலை நிற்கும்  இரக்கமும் இப்பதத்தில் அனுசந்தேயம் –

ஆஸ்ரிதருடைய ஹிதாஹிதங்கள் அறியும் போதைக்கு சர்வஜ்ஞனாக வேணும் –
அறிந்தபடியே கார்யம் செய்கைக்கு சர்வ சக்தி ஆக வேணும்
சர்வ சக்தன் ஆனாலும் இவன் பக்கல் ஒன்றும் நச்சாது ஒழிகைக்கு அவாப்த சமஸ்த காமனாக வேணும் –
இத்தனையும் யுண்டானாலும் தன் பேறாகக் கார்யம் செய்யும் போதைக்கு சர்வ ஸ்வாமி யாக வேணும்
அநாதி காலம் கர்ம அனுகுணமாக அறுத்து அறுத்துத்  தீற்றுகைக்கு கருவியாய்ப் போந்த இவை –
ரஷணத்துக்கு உறுப்பாகைக்கு இரக்கம் வேணும் –

ஆகையாலே
சௌசீல்யாதி குண சதுஷ்ட்யத் தோடு
ஜ்ஞான சக்த்யாதி குண பஞ்சகத்தோடு வாசி அற
இப்பதத்திலே அனுசந்தேயம்  –

நநு –
பகவத் ஸ்வரூப குண விபூத் யாதிகளுக்கு அவ்யவஹித வாசகமாய் இருக்க  இந்த நாராயண சப்தம்
ஸ்வரூ பாதிகளை ஒழிய குண ஜாதத்தில் குணைகதேசத்துக்கு வாசகம் ஆகிறது என்னும் இடத்துக்கு
நிர்ணயகப் பிரமாணம் ஏது என்னில் –

இவற்றுக்கு எல்லாத்துக்கும் வாசகமே யாகிலும் -ப்ரபத்யே -என்று பிரகரணம் ஆஸ்ரயணம் ஆகையாலே
அது கோப லீவர்த்த நியாயத்தின் படியே ஆஸ்ரயண ஏகாந்தமான குண விசேஷங்களையே ஒதுக்கித் தரக் கடவது –
ஒரு மாணிக்கப் பேழையிலே நாட்டில் உள்ள ஆபரணங்கள் அடையச் சமைத்திட்டு வைத்தால் –
தந்தாமுக்கு அவ்வோ காலங்களில் அபிமதமான ஆபரணங்களை எடுத்துப் பூண்பாரோபாதி-
இதுவும் சர்வார்த்தங்களுக்கும் வாசகமாய் இருந்ததே யாகிலும் -அவ்வோ காலங்களுக்கு அபேஷிதமான
அர்த்த விசேஷங்களை எடுத்து  விநியோகம் கொள்ளுமது ஒழிய எல்லாவற்றையும் எடுக்க வேணும் என்கிற நியமம் இல்லை –

யுண்டாகில் ஈஸ்வரனுக்கு உபாய உபேயத்வ ரூபமான விபாகம் இன்றியிலே ஒழியும் –
சமஸ்த கல்யாண குணங்களுக்கும் ஆஸ்ரயமாய் இருக்கச் செய்தேயும் உபாயத்வ ஏகாந்தமான ஸ்வ பாவ விசேஷங்களை
அவன் பக்கலிலே அனுசந்திக்கும் அது ஒழிய – ஏகாஸ்ரயச்தம் என்னா போகை காந்தமான  குணங்களை அனுசந்தியாதே
வாச்ய பூதனான அவன் பக்கல் அப்படியே யானால் வாசக பூதமான இந்த சப்தமும் அப்படியேயாம் அத்தனை –

கோபாலீவர்த்த நியாயம் ஆவது –
பிரயோஜகவ்ருத்தன் பிரயோஜ்ய வ்ருத்தனைக் குறித்து -காவ ஆ நீ யந்தாம் -என்று பசுக்களைக் கொண்டு வா -என்றால்
அந்த கோத்வ ஜாதி எருதின் பக்கலிலும் கிடக்கையாலே எருதுகளையும் பசுக்களையும் சேரப் பிடித்துக் கொண்டு வரப் புகும்
அப்போது பலீவர்த்தாச் திஷ்டந்து -என்று எருதுகள் நிற்க -என்கிற விசேஷ விதானத்தாலே
அவ் வெருதுகளை ஒழியப் பசுக்களை கொண்டு வருகை –
அப்படியே இதுவும் எல்லாவற்றுக்கும் வாசகமே யாகிலும் இந்த சப்தம் இப்போது பிரகரண பலத்தாலே 
இக் குண விசேஷங்களுக்கே வாசகமாக கடவது –

ஆக
நாராயண பதத்தில் –
நார-சப்தம் -நார சப்தேன ஜீவா நாம சமூஹா ப்ரோச்யதே புதை -என்கிறபடியே
ப்ராப்தாக்களான பிரத்யகாத்மாக்களைச் சொல்லி –
அயன -சப்தம் -இ ண் -க தௌ-என்கிற தாதுவிலே
சம்சார  ஆர்ணவ மக்நாநாம் விஷயாக்ராந்த சேதஸாம் விஷ்ணு போதம்  விநா நாந்யத் கிஞ்சித ஸ்தி பராயணம் –
என்கிறபடியே உபாய வாசகமாய் –

ஆக –
நாராயண பதம் –
சர்வேஸ்வரனையே சர்வாத்மாக்களுக்கும் சம்சார நிஸ்தரணாதிகளுக்கு சாதன பூதன் என்றாய்
அந்த சாதன சமாஸ்ரயணத்துக்காக சௌசீல்யாதி குண சதுஷ்கங்களை அனுசந்தித்ததாய்
கார்ய கரமாகைக்கு ஜ்ஞான சக்த்யாதி குண பஞ்சகங்களை அனுசந்தித்ததாய் நின்றது –

————————————————————————————-

சரனௌ-சப்தார்த்தம் –
அநந்தரம் குண விசிஷ்டமான ஆஸ்ரயணீய வஸ்து –
ஸூத்தேந மன சாக்ராஹ்ய -ஸ்வப்னதீ கம்யம் –ச ஹைவ சந்தம் ர விஜா நந்தி தேவா – யமாத்மா ந வேத —
பொறி யுணர்வவை யிலன்–என்கிறபடியே
ஐந்த்ரியிக ஜ்ஞான கம்யம் அல்லாமையாலும் –
கண்டால் அல்லது ஆஸ்ரயிக்க ஒண்ணாமை யாலும்
ஆஸ்ரயண சௌகர்யத்துக்காக-அவ்வஸ்துவை பிரகாசிப்பிக்கக் கடவதாய் –
கீழ்ச் சொன்ன சௌலப்யம் என்கிற ஆத்ம குணத்தின் யுடைய பலமான பிரகாசத்தை யுடைத்தான
விலஷண விக்ரஹத்தைச் சொல்லுகிறது -சரனௌ -என்கிற பதம் –

ஸ்வரூபத்தோடு ஸ்வரூப ஆஸ்ரயமான குணங்களோடு வாசி அற ஸூத்த சத்வ மயமான அப்ராக்ருத திவ்ய சம்ஸ்தானத்திலே-
பொற் குப்பியில் மாணிக்கம் போலே பொசிந்து காட்டுகையாலும் -அவ்வடிவு தான் –
ந சந்த்ருசே திஷ்டதி ரூபமஸ்ய ந சஷூஷா பஸ்யதி கஸ்ஸ நைனம்–என்றும் —
ந மாம்ச சஷூரபி வீஷ்தே தம் -என்றும் அபஸ்யந்த பரம் ரூபம் -என்கிற
பரம ரூபம் அன்றியிலே விபவ அர்ச்சாவதார ரூபம் ஆகையாலும் ஆஸ்ரயண ஏகாந்தமாகக் கடவது –

அங்கன் அன்றியிலே நாராயண பதத்தில் சொல்லுகிறபடியே
ஈஸ்வரன்  குணத்வாரா உபாய பூதனாமோபாதி  -விஹ்ரஹத்வாராவும்  உபாய பூதன் என்று விக்ரஹத்தின் யுடைய
ஸ்வதந்திர உபாயத்வம் தோற்றுகைக்காக-
தனியே விக்ரஹத்தை உபாதானம்  பண்ணுகிறது என்னவுமாம் –

சிந்தயந்தீ ஜகத் ஸூ திம் பரப் ப்ரஹ்ம ஸ்வரூபிணம் நிருச்ச வாசதாய முக்திம்  கதான்ய கோப கன்யகா -என்றும்
பிரசாத பரமௌ நாதௌ மம கேஹம் உபாகதௌ தன்யோஹம் அர்ச்சயிஷ்யா மீத்யாஹா மால்யோப ஜீவன -என்றும்  சொல்லுகிறபடியே
இடக்கையும் வலக்கையும் அறியாத இடைச்சி- போக்யமான பூவை விற்று  வயிறு வளர்க்கும் மாலாகாரர் தொடக்கமானவரை
பரமாத்மநி யோ ரக்தோ விரக்தோஸ் பரமாத்மாநி -என்றும்
மாற்பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கைவிட்டு -என்று தன் பக்கலிலே நிரதிசயமான ப்ராவண்யத்தைப் பிறப்பித்து
அதுவே கருவியாக இதர விஷய விரக்தியையும்  பிறப்பித்து –
தானே முடிய நடத்தக் கடவதாய் இறே விக்ரஹம் இருப்பது –

விக்ரஹமே உபாய பூதமாகில் விபவ அர்ச்சாவதார ரூபங்களைக் கண்டவர்கள் அடைய பகவத் விஷயத்தில்
ப்ரவணர் ஆகாது ஒழிவான் என் என்னில் –
எல்லார்க்கும்   ஒக்கக் காட்சி யுண்டாகிலும்-விஷயம் தான் சௌந்தர்யாதிகளை ஆவிஷ்கரியாமையாலே
அந்ய பரராகிறார்கள் அல்லது -விக்ரஹத்துக்கு அந்த ஸ்வபாவம் இல்லாமை யன்று –
ஆகை இறே சௌந்தர்ய சௌசீல்யாதி குணாவிஷ்காரேண அக்ரூர மாலாகாராதீன் பரம பாகவதான் க்ருத்வா –
என்று அருளிச் செய்ததும் –

ஆக -உக்தமான குணங்களுக்கு பிரகாசகமாக விக்ரஹத்தை உபாதானம் பண்ணுகிறதாதல்  –
ஸ்வதந்திர சாதனமாக உபாதானம் பண்ணுகிறதாதல் ஆகிறது –
நேரே வாசகமாய் இருப்பதொரு சப்தத்தை விட்டு விக்ரஹத்தைச் சொல்லாதே சரண சப்தார்த்தமான திருவடிகளாலே
விக்ரஹத்தைச் உபலஷிக்கைக்கு ஹேது என் என்னில்
இங்கு -உபாய தயா ஸ்வீகரிக்க இழிகிற அதிகாரி கீழே திரு மந்த்ரத்திலே ஸூஸிஷித ஸ்வரூபன் ஆகையாலே
சேஷத்வ ப்ரகாசகமான இந்த வ்யவஹாரம் ஒழிய அறியாமையாலும் –
ஸ்தனந்தயத்துக்கு  மாதாவினுடைய சர்வ அவயவங்களும் உத்தேச்யமாகா நிற்கச் செய்தேயும்
ஸ்தனத்திலே ஒரு விசேஷ பிராப்தி யுண்டாமோ பாதி
இவனுக்கும் திருவடிகளிலே ஒரு விசேஷ சம்பந்தம் யுண்டாகையாலும் திருவடிகளைக் கொண்டு விக்ரஹத்தை உப லஷிக்கிறது –

—————————————————————————————————

சரண -சப்தார்த்தம் –
அனந்தரம் -மேலில் பத த்வயமும் அதிகாரிகத மானவற்றைச் சொல்லுகிறது –
இதில் -சரண சப்தம் –
உபாயே க்ருஹ  ரஷித்ரோஸ் சப்தஸ் சரணம் இத்யயம் வர்த்ததே சாம்ப்ரதஞ்சைஷ உபாயார்த்தாக வாசக -என்கிறபடியே
உபாய வாசகமாய்
ஸ்ரியாசார்த்த மாஸ்த-சோஸ்நுதே சர்வான் காமான் –சதா பஸ்யந்தி ஸூராய -என்றும் சொல்லுகிறபடியே
ப்ராப்ய கோடியிலும் மூதலிட்டு
கீழ்ச் சொன்ன ஸ்ரீ மத்தைக்கும் நாராயண சப்த உக்தமான குண விசேஷங்களுக்கும்
அனந்தர உக்தமான  திவ்ய மங்கள விக்ரஹத்துக்கும் உபேய வ்யாவ்ருத்தியைப் பண்ணித் தருகிறது –

—————————————————————————————–

ப்ரபத்யே -சப்தார்த்தம் –
ப்ரபத்யே -என்று -பத்லு க தௌ-என்கிற  தாதுவிலே கத்யர்த்தமாய் –
கத்த்யர்த்தா  புத்த்யர்த்தா -என்று ஒரு ஜ்ஞான விசேஷத்தைச் சொல்லுகிறது –
அந்த ஜ்ஞான விசேஷம் ஆகிறது -அஹமஸ்ம் யபாரதாநா மாலயோ அகிஞ்சனோ அகதி -என்கிறபடியே
ஸ்வ அகிஞ்சன்யாத் யனுசந்தான பூர்வகமாய்
ப்ரார்த்தநா மதி -யாச்ஞா பிரபத்தி -என்கிறபடியே ப்ரார்த்தனா கர்ப்பமாய்
தவமே உபாய பூதோ மே பவ -என்றும் -ததே கோபாயதா யாச்ஞா-என்கிறபடியே
தான் உபாய சரீரத்தில்  அன்வியாதே உபாய ஸ்வீகாராத் மகமாகையாலே  உபேய சரீரத்திலும் அந்வயியாதே
அதிகாரிக்கு விசேஷணமாய்
ஹா விச்வாசாத்மகமான பிரதிபத்தி விசேஷம் -ப்ரபத்யே -என்று உத்தமனாகையாலே
கீழ் உக்தமான விஷயத்தை உபாயதயா ஸ்வீகரிக்கிறேன் என்று
ஸ்வ அனுஷ்டானமாய்க் கிடக்கிறது-

அங்கன் அன்றியிலே –
கதி -என்று வியாபாரமாய் -மானஸ கதியையும்-வாசிக கதியையும் – காயிக கதியையும் -சொல்லிற்று ஆகவுமாம் –
மானஸ கதியாவது –
உபாயத்வேன அத்யவசிக்கை –

வாசிக கதியாவது -ராகவம் சரணம் கத -அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேன் –
நாராயணா ஒ மணிவண்ணா நாகணையாய் வாராய் என்னாரிடரை நீக்காய் –
த்வயக்தா -என்று சொல்லுகிறபடியே ரஷித்து அருள வேணும் என்று வாயாலே பிரார்த்திக்கை-

காயிக கதியாவது-
அஞ்சலி பரமா முத்ரா ஷிப்ரம் தேவ பிரசாதி நீ -என்கிறபடியே -பகவத் பிரசாத ஹேது பூதமான
அஞ்சலியைப் பிரயோகிக்கை-

அங்கன் இன்றியிலே -நிஷாத காகாதிகளைப் போலே ரஷக வஸ்து இருந்த இடத்தே வருகை -என்னவுமாம் –
இத்தைப் பற்ற விறே-பத்தாஞ்சலி புடம் தீ நம் யாசந்தம் சரணாகதம் -என்று சதுர்விதமாகச் சொல்லிற்று –

இந் நாலும் ஏக ஆஸ்ரயத்திலே உண்டான போது அதிகாரி பூர்த்தி பிரகாசிக்கக் கடவது –
இவற்றிலே அந்ய தம மாத்ரமான போது பகவத் வைபவம் பிரகாசிக்கக் கடவது –

இதில் ஈத்ருசனான நான் அத்யவசிக்கிறேன் -என்று ஜாதி குண வ்ருத்தாதிகளாலே ஒருவனை விசேஷியாமையாலே
இப்பிரபத்த்ய   அனுஷ்டானம் சர்வாதிகாரம்  என்று தோன்றுகிறது –
இனி ருசியே வேண்டுவது -இந்த ருசி பிரயோஜகமாகை இறே -ராவணோ  நாம துர்வ்ருத்த -என்று தொடங்கித்
தன் நிகர்ஷாதிகள் அடையத் தன் வாயாலே சொல்லுவது –
ராவணஸ்யா நுஜோ ப்ராதா விபீஷண இதி ஸ்ருத சதுர்ப்பிஸ் சஹ  ரஷோபிர் பவந்தம் சரணம் கத -என்று
அருகிருந்தாரிலும் அவன் குறை சொல்லி ஷேபிப்பது-
அதுக்கு மேலே-வத்யதாம் -பத்யதாம் -என்பதாக நிற்கச் செய்தேயும் ஸ்ரீ விபீஷணப் பெருமாளை ரஷித்தது-
சரண்யரான பெருமாள் தாம் -யதி வா ராவணஸ் ஸ்வயம் -எனபது –
அவனோடு சேர்ப்பிக்கும் பிராட்டி -தேந மைத்ரி பவது தே யதி ஜீவிதுமிச்சசி-என்று உபதேசிப்பதாக நிற்கச் செய்தேயும் –
ந நமேயம் என்கிற பிரதிஜ்ஞை குலையாது ஒழிந்ததும்-

இப்பதத்திலே -அத்யவசிக்கிறேன் -என்று அத்யவசாயாத்மாக
ஜ்ஞான விசேஷத்துக்கு ஆஸ்ரயமான அதிகாரி ஸ்வரூபமும் அனுசந்தேயம்
அதாவது -திரு மந்த்ரத்தில் பத த்ரயத்திலும் சொன்ன ஆகார த்ரயமும் –

ஆக -இப்பதத்தாலே
சகல சாம்சாரிக துரித விதூ நந பூர்வகமாக -நிரஸ்தாதி சயாஹ்லாத ஸூகபாவைக லஷணமான
ஸ்வ ஆனந்தத்தை கொடுக்கைக்கு
அநாதி காலம் அவசர ப்ரதீஷனாய்-இவனுடைய வைமுக்ய வைபவத்தாலே  பிரதிஹத சக்தினனாய் –
ரஷிக்கைக்கு இடம் பெறாதே போந்த ஈஸ்வரனுக்கு -ரஷ்யாபேஷாம் ப்ரதீஷதே -என்கிறபடியே
ரஷண அவகாசமாய்-சைதன்ய பிரயுக்தமாய் -ச்யாமத்வ யுவத்வாதி களோபாதி-அதிகாரி விசேஷணமாய் –
அதிகாரி நியாமாபேஷை இல்லாமையாலும் –
ஆயாஸஸ் ஸ்மரணே கோசச்ய-என்று -ஸ்மரணாதி மாதரம் ஆகையாலே  அநாயாசாமாயும்-
யதா ததா வாபி -என்கிறபடி ப்ராங்முகத்வாதி நியமா நபேஷைமாகையாலும் –
இது தனக்கு சக்ருதேவ பிரபன்னாயா -என்கிறபடியே சக்ருத் கரணமாகை யாலும் –
அதிகாரி விசேஷ நியமா பேஷைமாய் -அத்யாயாச சாத்யமாய்-ப்ராங்முகத்வாதி  நியமா பேஷமாய்-
அசக்ருதாவ்ருத்தி ரூபமான கர்ம ஜ்ஞானாதிகளில் வ்யாவ்ருத்தமாய் –
ஆகிஞ்சன்ய சஹகாரியாய் பெருமாள் கடலைச் சரணம் புக்கு -சாபமா நய -வோடு தலைக் கட்டினால் போலே அன்றியிலே
இழிகிறவன் நேரே  அகிஞ்சனாதி காரியாகையாலும் எதிரி நேரே சர்வ சமாஸ்ரயணீய விஷயம் ஆகையாலும்
பலாவ்யபிசாரியான உபாயாத்யவசாயத்தை ஸ்வ அனுஷ்டானம் ஆக்கிற்றாய் நின்றது –

இந்த உபாயம் ஆகிறது –
வேதாந்தங்களில் சகல சாதநாதிகமாகவும் -தேவா நாம் குஹ்யம் -என்கிறபடியே
தேவ ரஹஸ்யமாகவும் எழுதப் படுகிறது ஒன்றானால் -கர்ம ஜ்ஞானாதி களோபாதி யாகிலும்
அதிக்ருதாதி காரமாக  வேண்டாவோ வேதாந்த சித்தமான இது –
அதிக்ருதாதி காரம் அன்றியிலே ஒழியில் கர்ம ஜ்ஞானாதிகளும் அதிக்ருதாதி காரம் இன்றியிலே ஒழிய வேணும் –
ஆனால் அவை அதிக்ருதாதி காரம் -இது சர்வாதி காரம் என்று நிர்ணயித்துத் தருவார் யார் என்னில் –

அவை த்ரை வர்ணிகாதி காரமாக  வேண்டுகிறது -அக்னி வித்யாங்ககம் ஆகையாலே –
இனி அக்னி வித்யாங்ககமான கர்ம அபேஷை யுண்டாகையாலே ஜ்ஞானாதிகளும் அதிக்ருதாதி காரம் ஆகிறது
இத்தனை போக்கி சாஸ்திர சித்தமாகையன்று  –
அங்கன் அன்றாகில் -சாஸ்திர சித்தமான பாக யஜஞ நாம சங்கீர்த்தனாதிகளில் ஸ்திரீ ஸூத்ராதிகளுக்கு
அன்வயம்  இன்றியிலே ஒழிய வேணும் –
நிஷாதன் கபோதத்தைச் சரணம் புகாது ஒழிய வேணும் –
காக விபீஷணாதிகள் சக்கரவர்த்தி திருமகனைச் சரணம் புகாது ஒழிய வேணும் –

சக்ரவர்த்தி திருமகன் கடலைச் சரணம் புகுகிற விடத்திலே –
ததஸ் சாகர வேலாயாம் தர்ப்பா நாச்தீர்ய ராகவ -அஞ்சலிம் ப்ராங்முக க்ருத்வா பிரதிசிச்யே மஹோ ததே  -என்று
ப்ராங்முகத்வாதி நியமங்களோடே சரணம் புக்கார் என்று எழுதா நின்றது –
ஆனால் நியமா நபேஷை இப்ப்ரபத்தி என்கிறபடி என் என்னில் –
சக்ரவர்த்தி திருமகனை ஸ்ரீ விபீஷண ஆழ்வான் சரணம் புகுகிற இடத்தில் –
த்வாம் து திக் குலபாம்சனம் -என்று ராவணன் உபேஷித்த காலமே காலமாக் கடல் கிட்டவே வாரா நிற்கச் செய்தேயும் –
ஸ்நான ஆசமனாதிகளும் பண்ணாதே
தான் இருந்தபடியே சரணம் புக்கான் என்று எழுதுகை யாலே  நியமாபேஷை யுண்டு என்னவும் ஒண்ணாது –

ஆகையால் -சந்த்யா வந்தனாதிகளோபாதி விடவுமாம் -சிகா யஜ்ஞோபாவி தாதி களோபாதி கிடக்கவுமாம் -என்கிற
அநியமம் அனுஷ்டான த்வயத்திலும் பிரகாசிக்கிறது –
சக்ருதேவ பிரபன்னாய -என்கிறபடியே சக்ருத் கரணம் அமையுமாகில் அசக்ருதா வ்ருத்தி ரூபமான உபாசனாத்மாக
ஜ்ஞானம் போலே இந்த அத்யவசாயாத்மாக ஜ்ஞானமும் –
ப்ரபத்யே -என்கிற வர்த்த மாநத்தால் தைல தாராவத விச்சின்னமாய்ப்  போர வேண்டும்படி தோன்றா நின்றது –
அப்போது   சக்ருதேவ -என்கிற இடம் பகவத் விஷயீ காரத்துக்கு  சக்ருத் கரணம் அமையும் என்னும் இடத்தை பிரகாசிப்பிக்கிறது –

வர்த்தமானம் யாவச் சரீரபாதம் காலஷேபா பேஷையாலும் –
அபிமத பல லாப த்வரையாலும் அனுவர்த்திக்கும் இடத்தை பிரகாசிப்பிக்கிறது –
யாவச் சரீர பாதம் அனுஷ்டியா நின்றாலும் -பெறுகிற பலத்தின் கனத்தைப் பார்த்தால் –
சக்ருத் -என்கைக்கும் போராதபடி காண் இருப்பது -என்று எம்பார் அருளிச் செய்வர் –
அங்கன் அன்றியிலே –
சஹாசா சப்தத்துக்கு -சக்ருதா தேசமாய் -சக்ருதேவ பிரபன்னாய -என்கிறது –
சஹசைவ பிரபன்னாய் -என்கிறபடி -என்று ஆழ்வான் பணிக்கும் –
அதாகிறது –
சம்சாரத்தில் பயாதிசயத்தாலும் -பகவத் விஷயத்தில் ருச்யதிசயத்தாலும் –
ஸ்ரத்தயா சரணம் யதி–ஆஜகாம முஹூர்த்தேன-என்று சொல்லுகிறபடியே சத்வரனாய்க் கொண்டு ஆஸ்ரயிக்கை-

ஆக –
பூர்வார்த்தத்தாலே -அத்யவசாயாத்மாக ஜ்ஞான விசேஷத்தையும் –
அதுக்கு உபேயாத்வசாயாத்தில் காட்டில் வ்யாவ்ருத்தியையும்
அந்த உபாயத்துக்கு சாத்ய உபாய வ்யாவ்ருத்தியையும்
அந்த சித்த உபாயத்தில் இழிகைக்கு விரோதியான பூர்வ அபராத பயத்துக்கு நிவர்த்தகமான
புருஷகார விசேஷத்தையும் -சொல்லிற்று ஆயிற்று –

———————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாம் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading