ஸ்ரீ மத் கிருஷ்ண சமாஹ்வாய நமோ யாமுன ஸூ நவே
யத் கடாஷைக லஷ்யாணாம் ஸூ லபஸ் ஸ்ரீ தரஸ் சதா —
அவதாரிகை –
நம் ஆசார்யர்கள் இம் மந்த்ரார்த்தத்தை விசதமாக அநுசந்தித்த பிரகாரமாக –
மந்த்ரம் த்ராயதே -என்கிற வ்யுத்பத்தியின் படியே
அநுசந்தாதாவை ரஷிக்கையாலே -மந்திர சப்த வாச்யமுமாய்
வாக்ய த்வயாத்மகம் ஆகையாலே- த்வயம் என்று திரு நாமமுமாய்-
சிஷ்டா சார த்வாரத்தாலே மந்திர சித்தமான அர்த்தத்துக்கு பிரமாண முமாய்-
இவ்வர்த்த நிஷ்டருடைய அனுஷ்டான ரூபமாய் இருக்கிற த்வயம் –
திரு மந்த்ரத்தில் நமஸ் சப்தத்திலும் நாராயண பதத்திலும் உக்தமாய்
சகல சாஸ்திர தாத்பர்ய பூமி பூதமான உபாய அம்சத்தையும் உபேய அம்சத்தையும் விசதீ கரிக்கிறது –
இப்பதத் த்வயத்திலும் சொன்ன உபாய உபேயங்கள் சகல சாஸ்திர தாத்பர்யம் என்று நிர்ணயித்துத் தருவார் யார் என்னில்
நின்றார் நின்ற நிலைகளிலே அவ்வோருக்கு ருசி விஷய பூதமான புத்ர பஸ்வன்னாதி புருஷார்த்த சித்திக்கு
சாதன விசேஷங்களை எழுதிப் போருகிற சாஸ்திரம் தானே
பரீஷ்ய லோகன் கர்மசிதான் ப்ராஹ்மணோ நிர்வேத மாயாத் -என்றும்
ஷரந்தி சர்வா வைதிக்யா ஜூஹோதி யஜதிக்ரியா -அஷரம் ந ஷரம் ஜ்ஞேயம் ப்ரஹ்மா சைவ பிரஜாபதி -என்றும்
அல்ப அஸ்திரத்வாதி தோஷ பஹூளமாய் இருக்கையாலே நிர்வேத கோசரமாகச் சொல்லி –
நிரஜ்ஞன பரமம் சாம்யம் உபைதி -என்றும் –
ப்ரஹ்மணோ மஹிமநமாப்நோதி –
மம சாதர்ம்யமாகதா சர்க்கேபி நோபஜா யந்தே பிரளயே ந வய தந்தி ச –
ரசம் ஹ்யேவாயம் லப்த்வா நந்தி பவதி –
யத்ர நாந்யத் பஸ்யதி நான்யஸ் ஸ்ருணோதி நாந்யத் விசாநாதி ச பூமா –
நிரஸ்தாதி சயாஹ்லாத ஸூகபாவைக லஷணா பேஷஜம் பகவத் ப்ராப்தி ரேகாந்தாத் யந்திகீ மாதா –
ஏதத் சாம காயன் நாஸ்தே ஹாவு ஹாவு –
யேன யேன தாதா கச்சதி தேன தேன சஹ கச்சதி –
இமாம் மா நவமா வர்த்தம் நாவர்த்தந்தே –
ந ச புநரா வர்த்ததே ந ச புநரா வர்த்ததே
அநாவ்ருத்திஸ் சப்தாத் அநாவ்ருத்திஸ் சப்தாத் –
ஆ ப்ரஹ்ம புவ நால்லோகா புநரா வர்த்தி நோர்ஜூன-மாமுபேத்ய து கௌந்தேய புனர் ஜன்ம ந வித்யதே –
என்கிறபடியே
யாவதாத்மபாவி அநுபவியா நின்றாலும் அநு பூதாம்சம் அல்பமாய்
அநு பாவ்யாம்சம் -யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனசா சஹ -என்கிறபடியே
வாங் மனஸ் ஸூகளுக்கு அவிஷயமாம் படி நிரவதிக வைபவத்தை யுடைத்தாய்
சம்சாரம்-பஹுதா சந்தத துக்க வர்ஷிணி-என்கிறபடியே
ஸூக லேசா கந்தம் இல்லாதபடி நிஷ்க்ருஷ்ட துக்கமேயாய் இருக்குமா போலே
நோபஜனம் ஸ்மரன்நிதம் சரீரம் -என்கிறபடியே பூர்வ அநு பூத துக்க ஸ்ம்ருத்திக்கு அவகாசம் இல்லாதபடி
ஈறிலின்பத்திரு வெள்ளம் யான் மூழ்கினன் -என்று நிஷ்க்ருஷ்ட ஸூ காவகாகன ரூபமாய்
ஒரு காலத்திலே தோன்றி காலாந்தரத்திலே கழியுண்ணுமது அன்றிக்கே
போக்யமான அந்தப் பர வஸ்துவோடே போக்தாவான தன்னோடு போக வர்த்தகமான அத் தேசத்தோடு வாசி அற
அகால கால்யமாய் இருக்கையாலே அவை யுள்ளதனையும் அநு வ்ருத்தமாய் நேரே நிஷ்க்ருஷ்டமான
சேதனனுடைய ஸ்வரூபத்துக்கு அனுரூபமாய்
பகவத் குண அனுபவ ஜனித ப்ரீதி ப்ரேரிதமுமான பகவத் கைங்கர்யமே பரம ப்ராப்யம் என்று சொல்லுகையாலும்
அதுக்கு மேலே நிரதிசயமாய் இருப்பதொரு புருஷார்த்தம் யுண்டான ஸ்ருதம் அல்லாமையாலும்
உபேயமாய் அறுவது பகவத் கைங்கர்யம் –
அப்படி பரம ப்ராப்யமான கைங்கர்யத்தைப் பெறுகைக்கு சாதனமாக சாஸ்த்ரங்களிலே எழுதுகிற –
சத்யம் தபோ தமஸ் சமோ தானம் தர்ம பிரஜன நமக்ன யோக நிஹோத்ரம் யஜ்ஜோ மாநசம் நியாச-என்றாப் போலே
சொல்லுகிற சாதனா சமூஹங்களை
தஸ்மாத் சத்யம் பரமம் வதந்தி தஸ்மாத் தப பரமம் வதந்தி -என்று ஒன்றுக்கு ஓன்று
உத்க்ருஷ்டமாகச் சொல்லி எல்லாத்துக்கும் மேலே
தஸ்மான் நியாச மேஷாம் தபசாம திரிக்த மாஹூ-என்றும்
நியாச இதி ப்ரஹ்மா ஹி பர பரோ ஹி ப்ரஹ்மா தானி வா ஏதான்யாவராணி தபாம்சி நியாச ஏவாத்ய ரேசயத் -என்று
சர்வ உத்க்ருஷ்டமாக நியாச சப்த வாச்யமான உபாய விசேஷத்தைச் சொல்லி –
தத் வ்யதிரிக்தங்கள் அடைய அபக்ருஷ்டமாகச் சொல்லுகையாலும்
இதுக்கு மேலே விலஷணமாய் இருப்பதொரு உபாய விசேஷத்தை எடாமையாலும் -அந்த கைங்கர்ய ப்ராப்திக்கு
உசிதமான உபாயமும் நமஸ் சப்த உக்தமான உபாயமே ஆகையாலே இவை
சகல சாஸ்திர தாத்பர்யங்கலான உபாய உபேயங்கள்-
ஆக -இந்த சாஸ்த்ரத்துக்குத் தாத்பர்யமாய் அறுவது இங்கு சொன்ன உபாயமும் உபேயமும் ஆகில்
உபாயாந்தரங்களையும் உபேயாந்தரங்களையும் உபபாதிக்கை அடி என் என்னில் –
சாஸ்திரம் ஆகிறது –
தரை குண்ய விஷயா வேதா -என்கிறபடியே –
பெற்ற தாய் -அந்த பதிராதிகளான விகல கரணரோடு படு கரணரோடு வாசி அற
வத்சலையாய் இருக்குமா போலே -மாதாபிதா சஹஸ்ரங்களில் காட்டிலும் வத்சலதரம் ஆகையாலே
தம பிரசுரரோடு சத்வ பிரசுரரோடு வாசி அற அவர்கள் அபேத பிரவ்ருத்தராய் நசிக்க விட ஷமம் அல்லாமையாலே
அவ்வோருடைய குண அநு குணமாக புருஷார்த்தங்களையும் தத் சாதனங்களையும் உபதேசித்துக்
கொள் கொம்பிலே ஏறுகைக்கு சுள்ளிக் கால் நாட்டுவாரோபாதி -இவ்வோ முகங்களாலே தன்னுடைய தாத்பர்ய அம்சத்திலே
ஆரோபிக்கைக்காக ப்ரவர்த்திப்பிக்கிறது ஆகையாலே குறை இல்லை –
அதாவது -ஒருவன் தன்னுடைய கர்ம விசேஷத்தாலே பர ஹிம்சை சாதனமாக
த்ரவ்யார்ஜனம் பண்ணுகையிலே ருசி யுடையனாம் –
அவனுக்கு பரம புருஷார்த்த லஷண மோஷ ஸ்வரூபத்தையும் தத் சாதனத்தையும் உபதேசித்தால் ஜீவிக்கை யாகாது –
இவனை அநாதரிக்கில் அபதே பிரவ்ருத்தனாய் நஷ்டனாம் -அதுக்காக இவனுடைய ருசி அநு குணமாக
நீ த்ரவ்யார்ஜனம் பண்ணுகைக்காக வழி பறிக்கையில் அந்வயிக்கில் அது ஆயாச சாத்யமுமாய் –
நீ நினைக்கிற பலம் தான் பாஷிகமுமாய் -நரகோதர்க்க முமாய் இருக்கும் –
நான் சொல்லுகிற வழியே இழியில் அவ்வாயாச சாத்யத் வாதிகள் இன்றியிலே நீ நினைக்கிற பலம் பெறலாம் –
நீ கணிசிக்கிற பர ஹிம்சையும் கை விட வேண்டா -என்று ஸ்யேன-விதியை உபதேசிக்கும் –
ஆனால் -சேதம் என்-என்று இதிலே இழிந்து இத்தை அனுஷ்டிக்கும் –
அது போய் அநாயாசேன பல பர்யந்தம் ஆனவாறே சாஸ்த்ரத்திலே ஒரு விஸ்வாச விசேஷம் பிறக்கும் –
அத்தாலே ஷீண பாபனாம் –
அந்த பாப ஷயத்தாலே பிறரைக் கொன்று வயிறு வளர்க்கையில் ருசி கழிந்து அஹிம்சாத் மகமாய இருப்பதொரு வழியாலே
த்ரவ்யார்ஜனம் பண்ணுகையிலே ருசி பிறக்கும் –
அவ்வளவிலே வாயவ்யம் ஸ்வேத மால பேத பூதி காம –சித்ரயா யஜேத பசுகாம –காரீர்யா வ்ருஷ்டிகாமே யஜேத –
என்றால் போலே ஐஹிக பல சாதனங்களை விதிக்கும் –
இந்த ஐஹிக பலமான ஷேத்ராதிகளிலே அல்பத்வ பரிமித கால வர்த்தித் வாதிகளைக் கண்டு பஹூளமாய்
சிரகால வர்த்தியான பலத்திலே ருசி யுண்டான போது-
ஜ்யோதிஷ்டோமே ந ஸ்வர்க்க காமோ யஜேத -என்றாப் போலே ஸ்வர்க்காதி சாதனா விசேஷங்களை விதிக்கும்
அவை தன்னிலும் ஸ்வர்க்கேபி பாதபீ தஸ்ய ஷயிஷ்ணோர் நாஸ்தி நிர்வ்ருதி -என்றும்
அசன் தோஷஸ்ஸ பவதி த்ருஷ்ட்வா தீப்தாம் பரஸ்ரியம்-இத்யாதிகளில் சொல்லுகிறபடியே
கர்ம சாத்தியம் ஆகையாலும் கர்ம ஷயத்திலே ஷீணம் ஆவது ஒன்றாகையாலும்
இடைவிடாமல் பத நபயம் நடையாடுகையாலும்
பர சம்ருத்தி பொறுக்க மாட்டாத படியாலே உண்டது உருக்காட்டாதே தனக்கு யுண்டான ஸூகம் கீழ் அற்றுப் போகையாலும்
சிருஷ்டி சம்ஹாராதிகளுக்குக் கர்மீபவித்துப் போரும் தேசம் ஆகையாலும் –
நிர் விண்ணனாய்-துக்கங்கள் நேராக கழலுகையிலே ருசி பிறந்ததாகில்
யோகி நாமாம்ருதம் ஸ்தானம் ஸ்வாத்ம சந்தோஷ காரிணாம் – என்கிறபடியே
ஆத்மப்ராப்தி ஹேது பூதமான யோக விசேஷத்தை விதிப்பது -அது தன்னிலும்
தெரிவரிய வளவில்லாச் சிற்றின்பம் -என்கிறபடியே ப்ராக்ருத விஷய போகத்தில் காட்டில் மினுங்கி இருந்ததே யாகிலும்
ஸ்வாத்ம அனுபவ மாதரம் ஆகையாலே விதவா போகத்தோபாதி சங்குசிதமாய் இருக்கும் என்று
தத் சங்கோச நிபந்தனமான உபேஷை பிறந்ததாகில்
ஆனந்தோ ப்ரஹ்ம-ஆனந்த மய-ஆனந்த யாதி –ஆனந்தி பவதி -என்றும்
வீலில் இன்பம் மிக வெல்லை நிகழ்ந்தனன் மேவியே -என்கிறபடியே
தன்னோடு கிட்டினாரை யடைய பரம ஆனந்திகளாகப் பண்ணும்படி ஆனந்த மயமான
சர்வேஸ்வரனைப் பெறுகைக்கு உபாயமான
கர்ம ஞானாதி சாதன பரம்பரைகளை விதிப்பது –
அந்த சாதனங்களுடைய துஷ்கரத்வ சாபாயத்வ சிரகால சாத்யத்வ விளம்பிய பலப்ரதத்வாத்
யனு சந்தானத்தாலே இளைத்தவனுக்கு
அந்த சாதனங்களுக்கு எதிர்த் தட்டாய் இருக்கும் சாதன விசேஷத்தை விதிப்பதாய் போருகிறதாகையாலே
பரம புருஷார்த்த லஷண மோஷத்தை விதிக்கலாவது –
தத் வ்யதிரிக்த சகல புருஷார்த்தங்களிலும் ஜூகுப்சை பிறந்தவனுக்கு –
அந்த புருஷார்த்தத்துக்கு சாதனமான சரம உபாயத்தை விதிக்கலாவது
முமுஷூவுக்கு சம்சாரத்தில் யுண்டான பயமடைய இஸ் சாதனங்களிலே யுடையனாய் இருக்குமவனுக்கு –
ஆக –
இவை இரண்டும் அநதிகாரிகளுக்கு உபதேசிக்கைக்கு யோக்யதை இல்லாமையாலே
அதிகாரிகள் ஆகைக்காக தத்தத் குண அநு குணமான புருஷார்த்த தத் சாதனங்களை விதிக்கிறது –
———————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாம் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
November 29, 2015 at 11:00 pm |
This is a wonderful kainkaryam. Great effort.
One small suggestion. There are innumerable spelling mistakes, especially between ச and ஸ, ஷ and க்ஷ, ந and ன, ஈச் and ஈஸ் etc etc. Poorvacharya vyakyanama aksharams should not be altered as per our style. If these mistakes are corrected, this is a monumental effort for our sampradayam. Whoever is doing this, pallandu, pallandu, pallandu…..