கீழே -அறுக்கும் வினையாயின -திருவாய் மொழியில் -அவனைப் பெற வேணும் என்னும் மநோ இதமாய்ச் சென்றது –
அந்த மநோ ரதம் நிறைவேறாமையாலே கிலேசித்த படி சொல்லிற்று கீழ்த் திருவாய்மொழியில்
இத்தை அறிந்த எம்பெருமான் -ஆழ்வீர் எம்மைப் பெறாமையால் நீர் நோவு படுவது கிடக்கட்டும் –
உம்மைப் பெறாமல் இழவு பட்டுக் கிடப்பவன் நான் அன்றோ
உமக்கு ஒரு குறை உண்டோ
திரு நாட்டை விட்டு திருக் கண்ணபுரத்திலேநாம் சந்நிதி பண்ணி இருப்பது உமக்காக அன்றோ
இந்த சரீரத்தின் முடிவில் உம்முடைய அபேஷிதம் நிறைவேற்றக் கடவோம் -என்று சொல்லி சமாதானம் பண்ண
ஆழ்வாரும் சமாஹிதராய் அதனைச் சொல்லி மகிழ்கிறார் இத் திரு வாய் மொழியில்
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் -உயிரான பாசுரம்
சர்வேஸ்வரன் சர்வ ஜன சமாஸ்ரயணீயனாய்க் கொண்டு திருக் கண்ணபுரத்திலே கோயில் கொண்டு இரா நின்றான்
எல்லாரும் அவனை சென்று ஆஸ்ரயிங்கோள்
ஆஸ்ரயிக்கும் இடத்தில் அவன் திருவடிகளில் பக்தியை பண்ணுங்கோள்
பக்திக்கு உபகரணம் இல்லாதோர் பிரபத்தியைப் பண்ணுங்கோள்
அதற்கு உரிய அத்யவசாயம் இல்லாதார் உக்தி மாத்ரைத்தை ஆகிலும் சொல்லுங்கோள்
அவ்வளவே கொண்டு அவன் தான் கை விடான்
ஆனபின்பு எல்லாரும் ஒக்க அவனை ஆஸ்ரயிங்கோள் -என்று
பரோபதேசமாக செல்கின்றது இப்பதிகம் –
மோஹித்துக் கிடந்தார் ஆகில் கிடக்கும் அத்தனை போக்கி உணர்ந்தார் ஆகில் பிறர்க்கு ஹிதம் சொல்லி அல்லது நிற்க மாட்டார்-என்பர் நம்பிள்ளை –
——————————————————————————————————————————————————————————————————————-
மாலை நண்ணித் தொழுது எழுமினோ வினை கெட
காலை மாலை கமல மலரிட்டு நீர்
வேலை மோதும் மதிள் சூழ் திருக் கண்ணபுரத்து
ஆலின் மேலால் அமர்ந்தான் அடியிணைகளே –9-10-1-
வடதள சயனனான மகா உபகாரகன் பக்கலில்
பிரேமத்துடன் பணிந்து
அநவரதம் கைங்கர்யம் பண்ணுமின் -இப்பதிக சங்க்ரஹம்
மாலை நண்ணி -மால் என்று திருமாலை -மால் -அன்பு பிரேமா உக்தராய் என்றுமாம்
வினை கெட -பகவத் பிராப்தி விரோதி வர்க்கம் எல்லாம் கெடும்படி
கீழ் மல்லிகை கமழ் -நான் பட்ட கிலேசம் எல்லாம் கிட்டாத படி என்றுமாம்
காலை மாலை கமல மலரிட்டு-காலை ஒரு முறையும் மாலை ஒரு முறையும் தொழுது எழு என்கிறது அன்று
பகலும் இரவும் என்றபடி
ஆஸ்ரயணத்துக்கு கால நியதி இல்லை
கமல மலரிட்டு-புஷ்ப நியதி இல்லை -அவனுக்கு ஆகாத புஷ்பம் இல்லையே
கள்ளார் துழாயும் கணவலரும் கூவிழையும்
முள்ளார் முளரியும் ஆம்பலும் முன் கண்டக்கால்
புள்ளாய் ஓர் ஏனமாய் புக்கு இடந்தான் பொன்னடிக்கு என்று
உள்ளாதார் உள்ளத்தை உள்ளமாய்க் கொள்ளோமே-திருமங்கை ஆழ்வார்
எண்டிசையும் உள்ள பூக்கொண்டு -என்றார் இவரே
கமலமலர் என்றது உப லஷணம்
வேலை மோதும் மதிள் சூழ் திருக் கண்ணபுரத்து-
சமுத்ரம் அணித்தாகையாலே திரைகள் வந்து மோதா நின்றுள்ள மதிளாலே சூழப் பட்டு இருந்துள்ள திருக் கண்ணபுரத்திலே -ஈடு
கலங்கல் முந்நீர் கண்ணபுரம் -திருமங்கை ஆழ்வார்
நாளடைவில் சமுத்ரம் ஒதுங்கிப் போய் இருக்கக் கூடும் என்பர்-
————————————————————————————————————————————————————————————————————————
கள்ளவிழும் மலரிட்டு நீர் இறைஞ்சுமின்
நள்ளி சேரும் வயல் சூழ் கிடங்கின் புடை
வெள்ளி ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரம்
உள்ளி நாளும் தொழுது எழுமினோ தொண்டரே –9-10-2-
கள்ளவிழும் மலரிட்டு நீர் இறைஞ்சுமின் -என்கையாலே இன்ன மலர் என்ற நிர்பந்தம் இல்லை
வாடி வதங்கிப் போன மலர் இல்லாமல் அப்போது அலர்ந்த மலர்
அஹிம்சா பிரதமம் புஷ்பம்
புஷ்பம் இந்த்ரிய நிக்ரஹ
சர்வ பூத தயா புஷ்பம்
ஷமா புஷ்பம் விசேஷத
த்யானம் புஷ்பம்
தப புஷ்பம்
ஜ்ஞானம் புஷ்பம்
தவைவச சத்யம்
அஷ்டவிதம் புஷ்பம் விஷ்ணோ ப்ரீதிகரம் பவேத் -சொன்னபடியாகவுமாம்
வெள்ளி ஏய்ந்த மதிள்-வெள்ளி -சுக்ரன் -நஷத்திர மண்டலத்தளவும் ஓங்கிய மதிள்
வெள்ளியாலே ஏய்ந்த மதிள்-ரஜதத்தாலே ஏய்ந்த மதிள்
வெள்ளி போலே சுப்ரமாய் இருக்கின்ற மதிள்
இத்தகைய பிரகார சம்ருத்தி உண்டாக ஆசம்சித்து அருளிச் செய்கிறார் என்னவுமாம்-
—————————————————————————————————————————————————————————————————————
தொண்டர் நுந்தம் துயர் போக நீர் ஏகமாய்
விண்டு வாடா மலரிட்டு நீர் இறைஞ்சுமின்
வண்டு பாடும் பொழில் சூழ் திருக் கண்ணபுரத்து
அண்டவாணன் அமரர் பெருமானையே –9-10-3-
உபய விபூதி நாதன் இங்கே எழுந்து அருளி உள்ளான்
அநந்ய பிரயோஜனராய் அவனை ஆஸ்ரயித்து உங்கள் துக்கம் போக்கிக் கொள்ளுங்கோள்
தொண்டர் -அண்மை விளி-தொண்டர்களே -இளைய பெருமாளை போலே அஹம் சர்வம் கரிஷ்யாமி என்று பாரித்து இருப்பவர்களே
நுந்தம் துயர் போக-துயர் எல்லாம் ஒரே வகையாக இராதே
சம்சாரிகளுக்கு விரோதி சத்ரு பீடாதிகள்
முமுஷூக்களுக்கு விரோதி தேக சம்பந்தம்
முக்தர்க்கும் நித்யர்க்கும் விரோதி கைங்கர்ய ஹானி -முமுஷூப்படி
தம்தாமுடைய விரோதிகள் தொலையும்படி
நீர் ஏகமாய் -ஏகீப வித்தர்களாய்-பல வகை பலன்களை கணிசியாதே பகவத் கைங்கர்யம் ஒன்றையே கணிசித்து
செவ்விப் பூவைக் கொண்டு ஆஸ்ரயிங்கோள்
நீர் நீர் -முதல் அடியிலும் இரண்டாம் அடியிலும் சொன்னது உங்கள் ஸ்வரூபத்தை நோக்க வேணும்
வண்டு பாடும் பொழில் சூழ் திருக் கண்ணபுரத்து -வண்டுகள் போலே சாராக்ராஹிகள் வர்த்திக்கும் திவ்ய தேசம்
அண்டவாணன் அமரர் பெருமானையே-உபய விபூதி நாதன்
அண்டவாணன் -லீலா விபூதி நிர்வாஹகத்வம்
அமரர்பெருமான் -நித்ய விபூதி நிர்வாஹகத்வம்-
————————————————————————————————————————————————————————————————————
மானை நோக்கி மடப்பின்னை தன் கேள்வனை
தேனை வாடா மலரிட்டு நீர் இறைஞ்சுமின்
வானை யுந்து மதிள் சூழ் திருக்கண்ணபுரம்
தான் நயந்த பெருமான் சரணாகுமே –9-10-4-
நப்பின்னை பிராட்டி புருஷகாரமாக ஆஸ்ரியுங்கோள் -அவள் புருஷகார பலத்தாலே பேறு தப்பாது
மானை நோக்கி-மான் நை நோக்கி -மானானது நையும்படியான -தோற்கும்படியான நோக்கை உடையவள்
தேனை வாடா மலரிட்டு -தேன் போன்ற பரம போக்யமானவனை
ஆச்சார்யஹிருதயம் -4-9-அதில் துர்பல புத்திகளுக்கு மாலை நண்ணி காலை மாலை விண்டு தேனை வாடா மலரிட்டு அன்பராம் சாங்க பக்தி -என்பதால்
தேனை வாடா மலர் இட்டு -ஒரே சொல்லாக கொள்ளுகிற யோஜனையும் உண்டு
தேனை உடைத்தாய் வாடாத மலர் இட்டு -என்கை
வானை யுந்து மதிள் சூழ் திருக்கண்ணபுரம் -ஆகாசத்தை தள்ளுமா போலே -அத்துடன் ஸ்பர்த்தை பண்ணி
ஆசூர பிரக்ருதிகள் கிட்ட ஒண்ணாத
தான் நயந்த பெருமான் சரணாகுமே-அடியார்களை ரஷிக்க-சம்ச்லேஷிக்க பாங்கான தேசம் என்று உகந்து நித்யவாசம் செய்து அருளும் திவ்ய தேசம்-
————————————————————————————————————————————————————————————————————————-
சரணமாகும் தான தாள் அடைந்தார்க்கு எல்லாம்
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்
அரண் அமைந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரத்
தரணி யாளன் தனது அன்பர்க்கு அன்பாகுமே –9-10-5-
கீழ் சொன்ன பக்தி யோகத்தால் ஆஸ்ரயிக்க இயலாதார்க்கு –
தன் திருவடிகளையே உபாயமாக பற்றினவர்களுக்கு
சர்வ ரஷகனாய் -தேக அவசானத்திலே இந்த பிரகிருதி சம்பந்தம் விடுவித்து திரு நாட்டிலே கொண்டு போய் வைத்து அருளுவான்
ஆழ்வாருக்கு அவன் அருளிச் செய்ததை வெளியிட்டு அருளுகிறார்
இவ்வுடல் முடியும் தனையும் பொறுத்து இரும்
முடிந்த உடன் பிராரப்த கர்மாக்கள் முடிந்தனவாகக் கொண்டு
சஞ்சித கர்மாக்களை ஷமைக்கு விஷயம் ஆக்கி
இவ்வளவோடு ஜன்ம பரம்பரையை முடித்திட்டு
பொய் நின்ற ஞானமும் –இனி யாம் உறாமை -அடியிலே பிரார்த்தித்த படியே தலைக் கட்டி அருளுவேன் -என்றத்தை அனுபாஷித்து அருளுகிறார்
மரணமாக்கி வைகுந்தம் கொடுக்கும் பிரான் -இல்லை
அரண் அமைந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரத் தரணி யாளன்-ஆழ்வார் தமது அச்சம் தவிருகிறார்
தரணி -பூமிக்கு பெயராய் சம்சாரிகளை ஆட்கொள்ளுபவன் –
தனது அன்பர்க்கு அன்பாகுமே-தம்மை உகப்பாரை தாம் உகப்பார் என்றபடி
அன்பருக்கு அன்பனாகும் என்னாதே அன்பாகும் என்றதால்
எம்பெருமான் அன்பை இட்டே நிரூபிக்க வேண்டும்படி –
——————————————————————————————————————————————————————————————————————————
அன்பனாகும் தான தாள் அடைந்தார்க்கு எல்லாம்
செம்பொன் ஆகத்து அவுணன் உடல் கீண்டவன்
நன் பொன் ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரத்து
அன்பன் நாளும் தன் மெய்யர்க்கு மெய்யனே –9-10-6-
அன்பனாகும் தான தாள் அடைந்தார்க்கு எல்லாம் -அனலோசித விசேஷா சேஷ லோக சரண்யா -எம்பெருமானார்
இன்னார் இனையார் வாசி இன்றி -வசிஷ்ட சண்டாள விபாகம் அற எல்லாருக்கும் ஒக்க ச்நேஹிக்குமவன்
ய கச்சிதேவ யதி கிஞ்சன ஹந்த ஜந்து பவ்யோ பஜேத் பகவந்தம் அந்யசேதா
தம் சோயம் ஈத்ருச இயா நிதி வாப்ய ஜானன் ஹை வைனதேய சமமபி உரரீக ரோஷீ-ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம்
செம்பொன் ஆகத்து அவுணன் உடல் கீண்டவன் -ஆசூர யோனியில் இருந்தும் ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான் உடைய விரோதியைக் கீண்டு ரஷித்து அருளினவன்
பாரமார்த்திக பிரயோஜன புத்தி உடையாருக்கு அப்படியே இருப்பவன்
———————————————————————————————————————————————————————————————————————————
மெய்யனாகும் விரும்பித் தொழுவார்க்கு எல்லாம்
பொய்யனாகும் புறமே தொழுவார்க்கு எல்லாம்
செய்யில் வாளை யுகளும் திருக் கண்ணபுரத்து
ஐயன் ஆகத்து அணைப்பார்கட்கு அணியனே –9-10-7-
மெய்யனாகும் விரும்பித் தொழுவார்க்கு எல்லாம் –
பிரயோஜனாந்தரங்களான சூத்திர பலன்களை கணிசியாமல்
தன்னையே பரம பிரயோஜனமாக பற்றினார்க்கு
ஆரேனும் ஆகிலும் -தன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளை
உள்ளது உள்ளபடியே காட்டிக் கொடுப்பவன் –
பொய்யனாகும் புறமே தொழுவார்க்கு எல்லாம் -புறம்பே சூத்திர பலன்களை கணிசித்து அதற்காக ஆஸ்ரயித்தால்
அந்த அல்ப பலன்களைக் கொடுத்து தன்னை மறைய நிற்பவன்
ஆகத்து அணைப்பார்கட்கு அணியனே-ஹிருதயத்தில் வைப்பாருக்கு கையாளாய் இருப்பான்
இமௌ ஸ்ம முனிசார்தூல கிங்கரௌ சமுபச்திதௌ
ஆஜ்ஞாப்ய யதேஷ்டம் வை சாசனம் கரவாவகிம் -என்று
விசவா மித்ரனை நோக்கி சொன்னதை அனுஷ்டான பர்யந்தம் ஆக்கி அருளுவான் –
————————————————————————————————————————————————————————————————-
அணியனாகும் தனதாள் அடைந்தார்க்கு எல்லாம்
பிணியும் சாரா பிறவி கெடுத்து ஆளும்
மணி பொன் ஏய்ந்த மதிள் சூழ் திருக்கண்ணபுரம்
பணிமின் நாளும் பரமேட்டி தன் பாதமே –9-10-8-
தனது திருவடிகளே பிராப்யமஎன்று பற்றினார் எல்லார் உடையவும் -ஆறாயிரப்படி
அநந்ய பிரயோஜனராய் பற்றினார்க்கு
துக்க ஹேதுவான சம்சாரத்தையும் போக்கி
அடிமையும் கொண்டு அருளுவான்
திரு நாட்டில் இருக்கும் படியில் ஒன்றும்குறை இல்லாத
ஸ்ரீ சௌரி ராஜன் பெருமாள் திருவடிகளையே பற்றுங்கோள்-
———————————————————————————————————————————————————————————————
பாதம் நாளும் பணியத் தணியும் பிணி
ஏதம் சாரா எனக்கேல் இனி என் குறை
வேத நாவர் விரும்பும் திருக் கண்ணபுரத்து
ஆதியானை அடைந்தார்க்கு அல்லல் இல்லையே –9-10-9-
தம் உள்ளம் அவனை ஆஸ்ரயித்து குறை தீர்ந்தபடியை பேசிக் களிக்கிறார்
அனுபவத்தால் சொல்கிறேன்
நீங்களும் குறை தீரப் பெற வேண்டும் என்று சொல்கிறேன்
வேத வித்துகள் விரும்பி வர்த்திக்கும் திருக் கண்ணபுரத்தில்
எழுந்து அருளி இருக்கும் காரண பூதனை
ஆஸ்ரயித்த பின்பு அல்லல் இருக்குமோ
தாய் மடியில் சாய்ந்தார்க்கு கிலேசம் இல்லை என்று சொல்லவும் வேணுமோ –
——————————————————————————————————————————————————————————————–
இல்லை யல்லல் எனக்கேல் இனி என் குறை
அல்லி மாதர் அமரும் திரு மார்பினன்
கல்லில் ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரம்
சொல்ல நாளும் துயர் பாடு சாராவே –9-10-10-
பக்தியையோ
பிரபத்தியையோ
அனுஷ்டிக்க சக்தர் அல்லாதார்
திருக்கண்ணபுரம் என்று சொன்ன அளவிலே சமஸ்த துக்கங்களும் போகும்
இல்லை யல்லல் எனக்கேல் இனி என் குறை -மீண்டும் உகப்பால் அருளிச் செய்கிறார்
இடையூறுகள் எல்லாம் தொலைந்த பின்பு
இனி ஒரு தேச விசேஷம் போக வேண்டாமல்
இங்கேயே கைங்கர்யம் செய்யப் பெறுவார்
பெரிய பிராட்டியார் நித்ய வாசம் பண்ணுகிற திரு மார்பன் ஆதலால் ஆஸ்ரயிக்க ருசியே வேண்டுவது
காலம் பார்க்க வேண்டா
அப்படிப் பட்ட பெருமான் வாசம் செய்து அருளும் திருக்கண்ணபுரம் வாயாலே சொல்ல சகல திரிதங்களும் போம்-
—————————————————————————————————————————————————————————————————-
பாடுசாரா வினை பற்றற வேண்டுவீர்
மாட நீடு குருகூர்ச் சடகோபன் சொல்
பாடலான தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்
பாடியாடி பணிமின் அவன் தாள்களே –9-10-11-
பலன் அருளிச் செய்யும் பாசுரத்தில்
இப்பத்தும் பாடியாடி பணிமின் அவன் தாள்களே-என்று
உபதேச ரூபமாகவே அருளிச் செய்தார் ஆயினும்
இதுவும் பலன் உரைப்பதாகவே தலைக் கட்டும்
அவன் தாள்களையே பணியும் பலன் கிட்டும் -பேறு சித்திக்கும்-
———————————————————————————————————————————————————————-
திருவாய்மொழி நூற்றந்தாதி –
மாலுமது வாஞ்சை முற்றும் மன்னும் உடம்பின் முடிவில்
சால நண்ணிச் செய்வன் எனத் தான் உகந்து மேலவனைச்
சீரார் கணபுரத்தே சேரும் எனும் சீர் மாறன்
தாரானோ நந்தமக்குத் தாள் –90
—————————————————————————————————————————————————————————
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply