திருவாய் மொழி – திவ்யார்த்த தீபிகை-இன்னுயிர்ச் சேவலும் நீரும்–9-5-

கீழே-9-2- -பண்டை நாளலே -பதிகத்தில் ஆழ்வாருக்கொரு கிலேசம் பிறந்தது
அத்தை -ஆள்வீர் நான் நாராயணன் அல்லவோ -உமக்கு எல்லா உறவின் காரியமும் குறையறச் செய்வேன் – என்று ஒருவாறு சமாதானம் படுத்த
அவனுடைய சீலாதி குணங்களில் கால் தாழ்ந்து மூன்றாம் பதிகம் அருளிச் செய்தார் இந்த ஒன்பதாம் பத்தில்
தொண்டர்க்கு அமுது உண்ணச் சொல்மாலைகள் சொல்லும் படி உம்மை ஆக்கினேன்
இது உமக்கு சாமான்யமாக கிடைக்கும் பேறு இல்லையே என்று நினைப்பூட்டகளிப்படைந்து தரித்து நின்றார் கீழ் பதிகத்தில்
அதில் தேவர்கட்கு எல்லாம் கருவாகிய கண்ணனை கண்டு கொண்டேனே -என்று அருளிச் செய்தவர்க்கு
பாஹ்ய சம்ச்லேஷத்திலே அபேஷை பிறந்தது –
இவருக்கு இன்னும் விடாயைப் பிறப்பித்து முகம் காட்ட வேணும் -என்று இருக்கையாலே தாமதிக்கிறான்
ஆழ்வாருக்கு தளர்ச்சி மிக்கு இருந்தது
லௌகிக பதார்த்தங்களில் கண் வைத்து அவனோடு போலியான பொருள்களை கண்டாகிலும் தரிப்போம் என்று கண் வைக்க
அவனாய் இருக்கு படியை நினைந்தும்
அவனோடு சம்பந்தம் இருக்கும் படியையும் நினைந்து
அவனுக்கு போலியாய் இருக்கும் படியையும் நினைந்து
மேலும் தளருமவர் அன்றோ இவர்
கீழே மண்ணை இருந்து துலாவி பதிகத்தில் இவர் பட்ட பாடு அறிவோமே
ஆகையால் அவைகள் நலிய நோவு பட்டு அன்யோபதேசத்தால் அருளுகிறார் இத் திருவாய் மொழியை –
எம்பெருமான் உடன் கலந்து பிரிந்த பிராட்டி ஒருத்தி
போலியான பதார்த்தங்கள் கண்டு பரிபஎன்று பூம் சோலைக்கு புறப்பட
அங்குள்ள குயில் மயில் முதலானவை அவனுடைய பேச்சையும் வடிவையும் நினைவு ஊட்ட
இவை தாமாக நம்மை நலிய வில்லை
அவன் நம்மை நலியப்பண்ண இவற்றை ஏவி உள்ளான் என்று கொண்டு
உங்களுக்கு என்னை நலிய இவ்வளவுபாரிப்பு வேணுமோ
என் உயிரை கொடுக்க நானே சித்தமாக உள்ளேன் -என்று சொல்லியும்
அவன் உடைய திருக் கல்யாண குணங்களை ஒருவாறு நினைத்தும் தரித்து போருகிறது இத் திருவாய்மொழி-

———————————————————————————————————————————————————————————————————————–

இன்னுயிர்ச் சேவலும் நீரும் கூவிக் கொண்டு இங்கு எத்தனை
என்னுயிர் நோவ மிழற்றேன்மின் குயில் பேடைகாள்
என்னுயிர்க் கண்ணபிரான் நீர் வரக் கூவகிலீர்
என்னுயிர் கூவிக் கொடுப்பார்க்கும் இத்தனை வேண்டுமோ –9-5-1-

இத்தனை பாரிப்பு வேணுமோ -அபலையாய் -அற்றுக் கிடக்கும் -என்னை முடிக்க
கோழி வெண் முட்டைக்கு என்செய்வது எந்தாய் குறும் தடி
இன்னுயிர்ச் சேவலும் நீரும் கூவிக் கொண்டு -நற்சீவனான நீங்கள் இருவரும் சேர்த்தியாலும் பேச்சாலும் நலிய வேண்டுமோ
விரஹிகளுக்கு கூடி இருப்பாரைக் காண்பதும் அசஹ்யம்
பரஸ்பரம் பேச்சுக்களை கேட்பதும் அசஹ்யம்
என்னுயிர் நோவ மிழற்றேன்மின் குயில் பேடைகாள் –
ஏற்கனவே அற்றுக் கிடக்கும் என் உயிரை இன்னும் படு கொலை படுத்தி
அவன் உயிர் தளிர்க்கும் அங்கு போய் கூவுமின்
என் அருகே கூவினால் சிதிலம் ஆகும்
என்னுயிர்க் கண்ணபிரான் நீர் வரக் கூவகிலீர்-உங்களுக்கு கூவுதல் ஜாதி பணி என்றால் இத்தை செய்மின்
என் உயிரை மாய்க்க இங்கு கூவுகிறீர்கள்
இத்தனை சம்ப்ரமம் வேண்டி இருந்ததோ
என் உயிரை வாங்கி அவன் கையிலே கொடுக்க -இத்தனை முயற்சி வேணுமோ
என் உயிரை கொடுக்க நானே சித்தமாய் இருக்க -இத்தனை முயற்சி வேணுமோ

———————————————————————————————————————————————————————————————————————-

இத்தனை வேண்டுவது அன்று அந்தோ அன்றில் பேடைகாள்
எத்தனை நீரும் நும் சேவலும் கரைந்து ஏங்குதிர்
வித்தகன் கோவிந்தன் மெய்யன் அல்லன் ஒருவர்க்கும்
அத்தனையாம் இனி என்னுயிர் அவன் கையதுவே –9-5-2-

அன்றில் க்ரௌஞ்சம்-குரரீ -பனை மரத்தில் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும்
வாய் அலகு நெகிழ்ந்த அளவிலே உடல் மெலியும்
பெரிய திரு மடலில் -பெண்ணை மேல் பின்னும் அவ்வன்றில் பெடைவாய்ச் சிறு குரலும் என்னுடைய நெஞ்சுக்கு ஓர் ஈர் வாளாம் என் செய்கேன் –
பெரிய திருமொழி -காவாற் மடப் பெண்ணை யன்றில் அரி குரலும் ஏவாயினூடி எங்கும் எக்கில் கொடிதாலோ –
இத்தனை வேண்டுவது அன்று அந்தோ அன்றில் பேடைகாள்

-குயில்கள் தொனியிலியே உயிரை இழந்து கொண்டு இருக்கும் என் மேல் உங்கள் தொனியையும் கேட்பித்து முடிக்க பிரயாசை பட வேண்டுமோ
பூசல் செய்து கொள்ளை கொள்ளும் கள்ளர் காலில் விழுந்து ஐயோ என்பாரைப் போலே ஆழ்வார் அந்தோ என்கிறார்
பத்துடை அடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய வித்தகன் என்று இருந்தோம்
இப்பொழுது பத்துடை அடியவர்க்கு அரியனான வித்தகன் என்று முடிவு செய்தோம்
வித்தகன் -விஸ்மய நீகன்-இப்போது அனுகூலர்க்கு அரிய வித்தகன் –
கோவிந்தன் சர்வ ரஷகன் -இத்தால் ரஷகரைப் போல் இருந்து பாதகனாமவன் -ரஷகன் என்று பற்றப் போகாது -ஈடு
மெய்யர்க்கே மெய்யனாகும்–பொய்யர்க்கே போய்யனாகும் -என்றார் ஓர் ஆழ்வார் திரு மாலையில்
இவர் ஒருவர்க்கும் மெய்யன் அல்லன் என்கிறார்
ராமாவதாரத்தில் மெய்யும் கிருஷ்ணாவதாரத்தில் பொய்யும் இ றே ஆஸ்ரிதற்கு தஞ்சம் -என்பர் நம் முன்னோர்
அத்தனையாம் இனி என்னுயிர் அவன் கையதுவே-என்றது
இனி என்னுயிர் அவன் கையதுவே-யாம் அத்தனை -என்றவாறு
என்னுயிர் நோவ மிழற்றேன்மின் என்று சொல்லச் செய்தேயும் கூவுகை தவிராமல் இருப்பதால் முடிந்தேன் என்கிறாள்

——————————————————————————————————————————————————————————————————–

அவன் கையதே எனதாருயிர் அன்றில் பேடைகாள்
எவம் சொல்லி நீர் குடைந்து ஆடுதிர் புடை சூழவே
தவம் செய்தில்லா வினையாட்டியேன் உயிர் இங்கு உண்டோ
எவம் சொல்லி நிற்றும் நும் ஏங்கு கூக்குரல் கேட்டுமே –9-5-3-

அவன் உயிர் என் கைப் பட்ட நிலை மாறி எனது உயிர் அவன் கைப்பட்டதே
உன்னது என்னதாவியும் என்னதுன்னதாவியும் -என்றார் கீழே நாலாம் பத்தில்
அன்றில் பேடைகாள் -பிரிந்தார் படும் துயரம் அறிய வேண்டாமோ
எவம் சொல்லி நீர் குடைந்து ஆடுதிர்-நீங்கள் எத்தனை உக்தி விசேஷங்களை சொல்லி சம்ச்லேஷம் பண்ணி பரிமாறா நிற்கின்றீர்கள்
பேச்சும் காதால் கேட்கப் போகிறது இல்லை
செயலும் கண்ணால் காண முடிகிறது இல்லை
தனது வாயால் அனுவாதம் சொல்ல கூசி -எவம்சொல்லி -என்கிறாள்
உங்கள் குசால் உங்கள் பேச்சில் அன்றோ தெரிகிறது
புடை சூழ -சுற்றி சுற்றி சஞ்சரியா நிற்கிறீர்கள் -செவியைப் புதைப்பு பிழைப்பேனா -கண்ணைப் புதைத்து பிழைப்பேனோ
தவம் செய்தில்லா வினையாட்டியேன் உயிர் இங்கு உண்டோ-தவம் ஆவது பாக்யம்
உயிரை இங்கே வைத்து உபகரிக்க பாக்யம் பண்ணிற்று இலேன் -இருந்தால் நீங்கள் நலிந்து கொண்டு இருக்கலாம்
அன்றிக்கே
அவனைப் போலே பிரிவுக்கு சிளையாத படி பாக்கியம் பண்ணப் பெற்றிலேன் -பிள்ளான் பணிக்கும்
உயிர் இங்கு உண்டோ-கள்வர்கள் இடம் விளக்கு ஏற்றி இங்கே ஏதாவது சரக்கு உண்டோ பார்த்துக் கொள்ளுங்கோள் காட்டுகிறாள் –
உயிர் போகும் தருவாயில் என்று கருத்து
எவம் சொல்லி நிற்றும் நும் ஏங்கு கூக்குரல் கேட்டுமே-கேட்டாரை முடிக்க வல்ல உங்கள் தொனியைக் கேட்டும் தரிக்க முடியுமோ –

—————————————————————————————————————————————————————————————————————————-
கூக்குரல் கேட்டும் நம் கண்ணன் மாயன் வெளிப்படான்
மேற்கிளை கொள்ளேன் மின் நீரும் சேவலும் கோழி காள்
வாக்கும் மனமும் கருமமும் நமக்கு ஆங்கு அதே
ஆக்கையும் ஆவியும் அந்தரம் நின்று உழலுமே –9-5-4-

சில மயில்களை குறித்து -நீங்கள் உயரக் கூவி என் உயிரை முடிக்கப் பார்க்கிறீர்கள்
கூக்குரல் கேட்டும் நம் கண்ணன் மாயன் வெளிப்படான்-உங்கள் கூக்குரல் அங்கும் கேட்குமே
அது கேட்டு நான் படுகிற பாட்டை அவனும் பட நேரிடுமே
அப்படி இருந்தும் பதறி ஓடி வாராமல் இருக்கிறான்
தனது ஆற்றாமையை காட்டியபடி
இங்கனம் சொல்லியும் அவை உயர்த்த குரலில் பாட
மேற்கிளை கொள்ளேன் மின் நீரும் சேவலும் கோழி காள்-கோழி என்றது மயிலை இங்கு
கிளை -தொனி
மேலான கிளை -உச்ச த்வனி -ஜாதிக்கு தக்கதாய் பிரணயித்வ பிரயுக்தமாய் -உச்ச த்வனி
இங்கனம் சொல்லியும் மேலும் செய்ய தன்னுடைய முக்கரணங்களும் இங்கே இல்லை என்கிறாள்
வாக்கும் மனமும் கருமமும் நமக்கு ஆங்கு அதே -அங்கே சென்றன -அங்கே சென்று கத்தலாமே
நீர் இங்கு பேசுவது எங்கனே என்ன –
ஆக்கையும் ஆவியும் அந்தரம் நின்று உழலுமே-உடலும் உயிரும் ஏதோ நடுவே நின்று
அனர்த்தப் படுகின்றன இத்தனை -தரித்து நிற்பதாக நினைக்க வேண்டா –

————————————————————————————————————————————————————————————————————————–

அந்தரம் நின்று உழல்கின்ற யானுடைப் பூவைகாள்
நும் திறத்தேதும் இடையில்லை குழறேன்மினோ
இந்திர ஞாலங்கள் காட்டி இவ் வேழுலகும் கொண்ட
நம் திரு மார்பன் நம்மாவி யுண்ண நன்கு எண்ணினான் -9-5-5-

அந்தரம் நின்று உழல்கின்ற யானுடைப் பூவைகாள்-நிஷ் பலமாக நின்று ஸ்ரமப்படும் பூவைகாள்
இங்கு பசை இருந்தால் நலியலாம் -வீணாக ஆயாசப் படுவது எதற்கு
யான் வளர்த்த பூவைகளாக இருந்து என்னை நலியலாமோ
அவனும் என்னுடையவன் ஆகையால் நலிகிறான்
நலிக்கைக்கு என்னுடைமையே ஹேது போலும்
நும் திறத்தேதும் இடையில்லை குழறேன்மினோ -உங்கள் இடத்தே ஓர் அவகாசமும் இல்லை
என்னைக் கொலை பண்ண அவன் கங்கணம் கட்டி ஜாகரூகனாய் இருக்க உங்களுக்கு எதுக்கு வீண் பரிச்ரமம்
இனி பின்னடிகள் தன்னில் தானே சொல்லிக் கொள்வது
பண்டு இந்த லோகத்தை தனக்கு ஆக்கிக் கொள்ளுகைக்கு சில பொய் செய்தால் போலே
என்னோடு கலந்து பரிமாறுபவனாக தோற்றும்படி சில பொய்களைச் செய்து அகன்று போய் என்னை முடிக்கைக்கு ஒரு நல்ல விரகு பார்த்தான்
என்ன சதிரனோ -என்று தன்னில் தானே நொந்து கொள்கிறாள் -ஆறாயிரப்படி
வடிவு அழகு
சீலம்
சேஷ்டிதங்கள் எல்லாம் காட்டி
வாய் மாளப் பண்ணி
நான் எனது என்று இருந்த ஆத்மாவை தனதாக்கிக் கொண்டு
என்னை முடிக்கைக்கு நல்ல உபாயம் பார்த்தான்
சர்வ சக்தன் உத்யோகித்த கார்யத்தில் ஒரு குறை கிடக்குமோ
பின்னடிகளும் பூவையை நோக்கி சொல்லுவது என்றாலும் குறை இல்லை –

—————————————————————————————————————————————————————————————————————————————–

நன்கு எண்ணி நான் வளர்த்த சிறு கிளிப் பைதலே
இன் குரல் நீ மிழற்றேல் என்னார் உயிர்க் காகுத்தன்
நின் செய்ய வாய் ஒக்கும் வாயன் கண்ணன் காலினன்
நின் பசும் சாம நிறத்தன் கூட்டுண்டு நீங்கினான் –9-5-6-

இந்நிலையில் நாம் திரு நாமத்தை சொல்லல் ஆகாது என்று அறியாதே திரு நாமத்தை சொல்லி நலியும் கிளிப் பிள்ளையைக் குறித்து என்னை நோவு படுத்தாதே -என்கிறாள் –
நன்கு எண்ணி நான் வளர்த்த-வளர்த்தல் -திரு நாமம் கற்பித்தல்-
எந்த சமயத்தில் அது சொன்னால் சாத்மிக்கும்
எந்த சமயத்தில் அது சொன்னால் பாதகமாகும்
என்று அறிந்து சொல்லுவாய் என்று கற்பித்த –
இன் குரல் -கூரிய வேல் -என்னுமா போலே என்பர் நம்பிள்ளை
நிரம்பா மென் சொல்லால் என்னை முடியாதே கொள்–மாத்ரு வதத்திலேயும் ப்ரவர்த்திப்பார் உண்டோ –ஈடு
அவன் வடிவு போலே இருக்கும் உன் வடிவைக் காட்டி
அதற்கு மேலே
திரு நாமங்களையும் சொல்லி
என்னை நோவு படுத்தாதே -என்கிறாள் –

—————————————————————————————————————————————————————————————————————————————————-

கூட்டுண்டு நீங்கிய கோலத் தாமரைக் கண் செவ்வாய்
வாட்டமில் என் கரு மாணிக்கம் கண்ணன் மாயன் போல்
கோட்டிய வில்லொடு மின்னு மேகக் குழாங்கள் காள்
காட்டேன்மின் நும்முரு என்னுயிர்க்கு அது காலனே –9-5-7-

போலியான மேகக் கூட்டங்களை கண்டு பேசுகிறாள்
பிரிந்த பின்பு சௌந்தர்ய லாவண்யாதிகள் அதிகரிக்கப் பெற்றான் போலும்
ஏக தத்வம் என்னும்படி கலந்து பிரிந்த பின்பு
அவனுடைய அவயவ சோபை இருந்தபடி -என்னுதல்
இவளோட்டை கல்வியால் வந்த சோபை என்னுதல் -நம்பிள்ளை
அவனைப் பிரிந்த நான் -சங்கம் சரிந்தன சாய் இழந்தேன் தட முலை பொன்னிறமாய் தளர்ந்தேன் -என்றும்
சாயலோடு மணிமாமை தளர்ந்தேன் -என்றும் இருக்க
அவனோ கண்ணும் வாயும் விகாசம் பெற்று உள்ளான்
மின்னு மேகக் குழாங்கள் காள் -கீழே எட்டாம் பத்தில் -ஒக்கும் அம்மான் உருவம் என்று உள்ளம் குழைந்து நாள் நாளும்
தொக்க மேகப் பல் குழாங்கள் காணும் தோறும் தொலைவன் நான் -என்றார்
மேகம் வில்லொடு கூடி விளங்கும் போது -வேலிக்கோல் வெட்டி விளையாடு வில்லேந்தி இருக்கும் கண்ணன் நினைவு வாராமல் இராதே
மேகம் மின்னும் போது ஸ்ரீ கௌஸ்துபம் போன்ற திரு ஆபரணங்களால் மின்னா நின்றுள்ள கண்ணபிரான் நினைவு வாராமல் இராதே
அத்தை இட்டு – என் கரு மாணிக்கம் கண்ணன் மாயன் போல் கோட்டிய வில்லொடு மின்னு மேகக் குழாங்கள் காள்-என்கிறாள்
காட்டேன்மின் நும்முரு –
மிருத்யு என்னலாம் படியான உங்கள் உருவைக் காட்டி என்னைக் கொலை செய்ய வேண்டா
என்னுயிர்க்கு அது காலனே-பண்டே விரஹம் தின்ற என்னுயிர்க்கு அது எமன் அன்றோ
மேகக் குழாங்கள் காள் -முன்னிலையாக விளித்து
நும்முரு -என்றும் சொல்லி வைத்து
இது -என்ன வேண்டி இருக்க
அது -என்று பரோஷம் போலே சொல்லி இருக்கையாலே
கண் கொண்டு காட்ட மாட்டாமை முகத்தை மாற வைத்து சொல்லுகிறாள் எனபது போதரும்
குழாங்கள் காள்-வடமொழி வைதிக பிரயோகம் போலே
எட்டாம் பத்தில் -இடையில்லை நான் வளர்த்த கிளிகாள் பூவைகள் காள்
மேலே பத்தாம்பாட்டில் -நாரைக் குழாங்கள் காள் -இதுபோலே பிரயோகம் உண்டு-

————————————————————————————————————————————————————————————————————————————————-

உயிர்க்கு அது காலன் என்று உம்மை யான் இரந்தேற்கு நீர்
குயில் பைதல்காள் கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்
தயிர்ப் பழம் சோற்றோடு பால் அடிசிலும் தந்து சொல்
பயிற்றிய நல் வளமூட்டினீர் பண்புடையீரே–9-5-8-

இந்த நிலையில் பகவன் நாமமும் அசஹ்யமாய் இருப்பதை அன்யோபதேசத்தால் அருளிச் செய்கிறார்
ராம நாமம் ம்ருத சஞ்சீவனம் -உயிர் தொலையும் படியான நிலையில் சொல்ல வேண்டும்
கிருஷ்ண நாம பிரஸ்தாபமும் கூடாது என்று சொல்லி வைத்து இருக்க
அவை கிருஷ்ண நாமத்தை சொல்ல ஒ படுகொலை படுகொலை என்கிறாள்
வெற்றே வெறிதே பெற்ற தாய் வேம்பேயாக வளர்த்தாளே -நாச் திரு -1-7-
நெஞ்சை புண்படுத்தவைக்கும் கிர்ஷ்ண நாமத்தை அவ்யக்த மதுரமாக சொல்லி கொலை செய்கிறீர்களே
ம்ருத சஞ்சீவியான ராம நாமத்தை சேர்த்து சொன்னால் ஆகாதோ
உபகாரம் செய்தார்க்கு அபகாரம் செய்வது நியதியோ
என்ன உபகாரம் செய்தது என்கிறாள் மேல்
தயிர்ப் பழம் சோற்றோடு பால் அடிசிலும் தந்து சொல்
பயிற்றிய நல் வளம்-பஞ்சாமிர்தம் அளித்து அன்றோ உங்களை வளர்த்தது
தயிர் என்ன பழம் என்ன சோறு என்ன -பால் என்ன -அடிசில் என்ன
அடிசில் விசேஷ மிச்ர சோறு
அர்த்த பஞ்சகம் உபதேசித்து சிஷ்யர்களை போஷித்தமை ஸ்வா பதேசம் –
பழம் சோறு -தனித் தனியாக இல்லாமல் பழைய சோறு –
தயிரும் பழம் சோறும் பாலும் வெஞ்சோறும் அவ்வவ காலங்களில் கொடுத்து -முன்னோர் வியாக்யானம்-

—————————————————————————————————————————————————————————————————————————-

பண்புடை வண்டொடு தும்பிகாள் பண் மிழற்றேன்மின்
புண்புரை வேல் கொடு குத்தால் ஒக்கும் நும் இன்குரல்
தண் பெரு நீர்த் தடம் தாமரை மலர்ந்தால் ஒக்கும்
கண் பெரும் கண்ணன் நம்மாவி யுண்டு எழ நண்ணினான் –9-5-9-

பண்புடை வண்டொடு தும்பிகாள் பண் மிழற்றேன்மின்-நான் வளர்த்த குயில் போலே நீங்கள் நன்றி கெட்டவர்கள் அன்றே
தார்மிகர்கள் அன்றோ
இரக்கம் பிறக்கும்படி கொண்டாடி பேசுகிறாள் -பண்புடை -பண்பு -நீதி
பண்புரை -பாட பேதம் நம்பிள்ளை காட்டி அருளுவார் -அழகிய முரலுகையை உடைய –
புண்புரை வேல் கொடு குத்தால் ஒக்கும் நும் இன்குரல் -முன்பு குயில் மயில் தொனியாலே புண் பட்ட உயிரிலே
வேலைக் கொண்டு குத்தினால் போலே உங்கள் குரல்
நானும் அவனும் சேர்ந்து இருக்கும் பொழுது பாடும் பாட்டுகளை பிரிந்து இருந்து கேட்க முடியுமோ
தன வடிவு அழகை காட்டி என்னை முடித்து போன இந்த சமயத்திலா நீங்கள் இன்குரல் மிழற்றுவது-

—————————————————————————————————————————————————————————————————————————-

எழ நண்ணி நாமும் நம் வான நாடனொடு ஒன்றினோம்
பழன நன்னாரைக் குழாங்கள் காள் பயின்று என் இனி
இழை நல்ல வாக்கையும் பையவே புயக்கற்றது
தழை நல்ல வின்பம் தலைபெய்த்து எங்கும் தழைக்கவே–9-5-10-

பழன நன்னாரைக் குழாங்கள் காள் பயின்று என் இனி-பழனம் -நீர் நிலை -ஓன்று கூடி ஆலோசிப்பதால் என்ன பயன்
இனி ஜீவித்து இருக்க ஆசை இல்லையே எனக்கு
எழ நண்ணி நாமும் நம் வான நாடனொடு ஒன்றினோம் -நாமும் போக்கிலே ஒருப்பட்டு அயர்வறும் அமரர்கள் அதிபதி உடன் ஓன்று சேர்ந்தோம் ஆனோம்
இழை நல்ல வாக்கையும் பையவே புயக்கற்றது -உடல் ஒன்றே இங்கே உள்ளது -அதுவும் இதோ போய்க் கொண்டே இருக்கிறதே
இழை -ஆபரணம் -ஆபரணங்களால் அழகியதான சரீரம்
அன்றிக்கே
அவனுக்கு ஆபரணம் போலே ஸ்ப்ருஹணீயமான சரீரம்
பையவே -இன்று நாளையே -புயக்கற்றது -பசையற்றது -தொலையப் போகிறது என்றபடி
தழை நல்ல வின்பம் தலைபெய்த்து எங்கும் தழைக்கவே-இதற்க்கு மூன்று நிர்வாஹங்கள்
ஆளவந்தார் -பெரியவர்கள் பரமபதம் எழுந்து அருளும் போது -லோகாஸ் சமஸ்தாஸ் சூகினோ பவந்து
சொல்லிப் போவது போலே
நாடு வாழ்க -மங்களா சாசனம் பண்ணிப் போகிறார் ஆழ்வார்
எம்பெருமானார் நிர்வாஹம் -நான் பிறந்து பகவத் விஷயத்தில் ஈடு பட்டு படாதன பட்டேன்
இதோ முடிகிறேன்
நான் பட்ட பாடு பிறர் ஒருவரும் பட வேண்டா
பட்டர் நிர்வஹிப்பாராம் -இது வரையில் ஆழ்வார் படும் பாடுகளைக் கண்டு
ஐயோ இவ்வளவு ஆர்த்தி பட்டு வருந்துகிறாரே -இவரை எம்பெருமான் சீக்கிரம் திருவடியில் சேர்த்து கொள்ளக் கூடாதோ
என்று பலர் நினைத்து இருந்தார்களாம்
அப்படிப் பட்டவர்களை நோக்கி இதோ நான்ஆரத்திகள் எல்லாம் தீர்ந்து முடிந்து போகப் போகிறேன்
என் ஆர்த்தி கண்டு நோவு பட வேண்டா
நீங்கள் ஆனந்தமாக இருங்கள் -என்கிறார் -என்பதால ஒரு விலஷண அர்த்தம் பட்டர் பணித்தாராம் –

——————————————————————————————————————————————————————————————————————————————-

இன்பம் தலைப் பெய்து எங்கும் தழைத்த பல்லூழிக்கு
தன் புகழ் ஏத்தத் தனக்கருள் செய்த மாயனை
தென் குருகூர்ச் சடகோபன் சொல் லாயிரத்துள் இவை
ஒன்பதோடு ஒன்றுக்கும் மூவுலகும் உருகுமே –9-5-11-

இப்பதிகத்தில் பாசுரம் நெஞ்சில் பட்டால் உருகி நிற்பார்கள்
ஆறாம் பத்திலும் பொன்னுலகு ஆளீரோ -ஊற்றின் கண் நுண் மணல் போல் உருகா நிற்பார் நீரையே -என்றார்
இன்பம் தலைப் பெய்து எங்கும் தழைத்த பல்லூழிக்கு –
லோகம் எல்லாம் வெள்ளம் இட்ட அழகு கடந்த ப்ரீதியை உடையராய் கொண்டு
அன்றிக்கே
இன்பம் தலைப்பெய்து எங்கும் தழைத்த தன் புகழை பல்லூழிக்கு ஏத்த அருள் செய்த மாயனை
அனுபவிதாக்களுக்கு நிரவதிக ஸூ கவாஹமாய் லோகம் எல்லாம் நிறைந்த
தன் புகழை சர்வ காலமும் யேத்தும்படி தனக்கு அருள் செய்த மாயனை -ஆறாயிரப்படி
பத்தாம் பாட்டு பரம விலஷணம் என்பதால் ஒன்பதோடு ஒன்றும்
ஒன்றுக்கும் கரையாதே உருகாதே கல்லாய் இருப்பார்களையும் உருகச் செய்வது ஒரு பலன் அன்றோ
அதனால் இப்படி பலன் அருளி தலைக் கட்டுகிறார் –

————————————————————————————————————————————————————————————————————————

திருவாய் மொழி நூற்றந்தாதி –

இன்னுயிர் மால் தோன்றினது இங்கு என் நெஞ்சில் என்று கண்ணால்
அன்னவனைக் காண வெண்ணி யான் பெண்ணாய் பின்னையவன்
தன்னை நினைவிப்பவற்றால் தான் தளர்ந்த மாறன் அருள்
உன்னுமவர்க்கும் உள்ளம் உருகும் –85

————————————————————————————————————————————————————————————————————-

ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading