திருவாய் மொழி – திவ்யார்த்த தீபிகை-மல்லிகை கமழ் தென்றல் ஈருமாலோ—9-9-

இத் திரு வாய் மொழி மாலைப் பூசல் –
மேலே -10-3- வேய் மரு தோளிணை -காலைப் பூசல்
படை வீட்டில் இருந்தால் மாமனார் மாமியாருக்கு கூசி பெருமாள் உடன் நினைத்த படி பரிமாற போகாது என்று

காட்டிலே ஏகாந்தமாக அனுபவிக்க மநோ ரதித்துப் போந்த பிராட்டியை –
காந்தார மத்யே விஜனே விஸ்ருஷ்டா பாலேவ கன்யா விலலாப சீதா-என்கிறபடியே கூப்பிடப் பண்ணினால் போலே
திருநாவாயாலே புக்கு அனுபவிப்பதாக மநோ ரதித்த இவர்க்கு
பாதக வர்க்கத்துக்கு அஞ்சிக் கூப்பிடும்படியாய் விளைந்தது -நம்பிள்ளை ஈடு  –

——————————————————————————————————————————————————————————————————-

மல்லிகை கமழ் தென்றல் ஈருமாலோ வண் குறிஞ்சி யிசை தவருமாலோ
செல்கதிர் மாலையும் மயக்குமாலோ செக்கர் நன் மேகங்கள் சிதைக்குமாலோ
ஆழி யந்தாமரைக் கண்ணன் எம்மான் ஆயர்கள் ஏறு அரிஏறே எம்மாயோன்
புல்லிய முலைகளும் தோளும் கொண்டு புகலிடம் அறிகிலம் தமியமாலோ –9-9-1-

தவரும் -துளைக்கின்றது
தனித் தனியே நலியும் படி –
ஏகாகியாய் நின்று நலியக் கடவதான தென்றல் மல்லிகை பரிமளத்தையும் துணை கொண்டு
கிஷ்கிந்தா காண்டத்தில் பெருமாள்
யானி ஸ்ம ரமணீ யாநி தயா சஹ பவந்தி மே தான்யே வாரமாணீ யாநி ஜீவிதோ மே தயா விநா-என்றும்
சதா ஸூ கமஹம் மன்யே யம் புரா சஹ சீதயா மாருதஸ் ச விநா சீதாம் சோக சஞ்சனநகோ மம-என்றும் அருளிய ஸ்லோகங்கள் போலே
வண் குறிஞ்சி யிசை தவருமாலோ -குறிஞ்சி மருள் காமரம் காந்தாரம் -பண்களுக்கு பெயர்
தென்றல் மேல் எழ நலியா நின்றது
இசை செவி வழியே உள்ளே புகுந்து நலியா நின்றது
அதுக்குமேலே மாலைப் பொழுதும் வந்து மயக்க -கண்ட வஸ்துகளை பார்த்தும் கண்டாரோடும் பேசியும் பொழுது போக்க முடியாது
சியாமள நிற மேகங்கள் அவனது அவயவ சோபைக்கும் வடிவுக்கும் ச்மாரகங்களாய் கொண்டு கொலை புரியா நின்றன
இவ்வளவிலே அவனுடன் சம்ச்லேஷித்த அவயவங்களைக் கொண்டு எங்கனே ஆறி இருக்கும் படி –

—————————————————————————————————————————————————————————————————–

புகலிடம் அறிகிலம் தமியமாலோ புலம்புறு மணி தென்றல் ஆம்பலாலோ
பகலடு மாலை வண் சாந்தமாலோ பஞ்சமம் முல்லை தண் வாடை யாலோ
அகலிடம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்து எங்கும் அளிக்கின்ற வாயன் மாயோன்
இகலிடத் தசுரர்கள் கூற்றம் வாரான் இனி இருந்து என்னுயிர் காக்கும் ஆறு என் –9-9-2-

ஆம்பல் -இலைக் குழல் -ஊது குழல்
பல படிகளாலும் ரஷிக்கும் எம்பெருமான் வருகின்றிலன்
பாதக வர்க்கங்கள் திரளாகவும் தனித் தனியாகவும் வந்து நலியா நிற்கின்றன
தமியம் -தனிப்பட்ட நான் -புகலிடம் அறிகிலோம் -கீழ் சொன்ன கஷ்டங்களுக்கும் இங்கே சொன்னவற்றுக்கும் –
ஆல் ஒ -ஐயோ
புலம்புறு மணி-நாகுகளை தொடரும் சேக்களின் கழுத்தில் கட்டின மணியோசை விரஹிகளுக்கு உத்தீபகம் –
பகலடுமாலை -ஆச்வாசகரமான பகல் போதை முடித்துக் கொண்டு வந்து தோற்றின மாலைப் போது
பஞ்சமம் -பிக கூஜதி பஞ்சமம் -என்னும்படியான பண்
முல்லை என்று யாழையும் முல்லைப் பூவையும் சொல்லும்
இவை இன்ன செய்யும் சொல்லாமலே புலி புலி – பேரைச் சொன்ன போதே கொடுமையை சொன்னபடி
இனி பிராண தாரணம் பண்ணும் வகை அறியேன் –

————————————————————————————————————————————————————————————————

இனி இருந்து என்னுயிர் காக்குமாறு என் இணை முலை நமுக நுண்ணிடை நுடங்க
நுனி யிருங்கலவி செய்தாகம் தோய்ந்து துறந்து எம்மை யிட்டகல் கண்ணன் கள்வன்
தனி இளம் சிங்கம் எம் மாயன் வாரான் தாமரைக் கண்ணும் செவ்வாயும் நீலப்
பனியிரும் குழல்களும் நான்கு தோளும் பாவியேன் மனத்தே நின்று ஈருமாலோ –9-9-3-

நுனி யிருங்கலவி-துக்க கரமான சம்ச்லேஷம்
அவனுடைய திவ்ய அவயவங்களும் உள்ளே தோன்றி நலியா நின்றன
இனி உயிரைக் காக்க விரகு உண்டோ
இப்பொழுது வாராமல் உபேஷித்து இருப்பவன் அப்பொழுது வந்து சம்ச்லேஷிக்க வேணுமா
சம்ச்லேஷித்த படிகள் சொல்கிறது மேல்
முலைகள் இரண்டும் குழையும் படியாகவும்
நுண்ணிடை தளரவும்
பஹூ முகமான சங்கத்தைப் பண்ணி
என் வடிவிலே அவஹாகித்து அனுபவித்து
சம்ச்லேஷம் விச்லேஷமாய் அல்லது இராமையாலே உடனே பிரிந்து கள்வன் மீண்டு வருகிறிலன்
மறந்து பிழைக்கவும் முடியாமல் தாமரைத் தடம் கண்களும்
செங்கனி வாயும் மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழும் அழகும் தோள் அழகும்
என் நெஞ்சை விட்டு அகலாமல் நலிகின்றன-

—————————————————————————————————————————————————————————————————-

பாவியேன் மனத்தே நின்று ஈருமாலோ வாடை தண் வாடை வெவ்வாடை யாலோ
மேவு தண் மதியம் வெம்மதியமாலொ மென்மலர்ப் பள்ளி வெம் பள்ளியாலோ
தூவி யம் புள்ளுடைத் தெய்வ வண்டு துதைத்த எம் பெண்மை யம் பூவி தாலோ
ஆவியின் பரமல்ல வகைகளாலோ யாமுடை நெஞ்சமும் துணை யன்றாலோ –9-9-4-

கீழ்ச் சொன்ன வடிவு அழகே பாவியேன் நெஞ்சை ஈருமாலோ
மேலுள்ள வாடை முதலியவையும் ஈருமாலோ -பன்னீராயிரப்படி
மகள் வாடை என்று வெறுத்து சொன்னால் தாய்மார் வெறுப்பான் என் -இது தண் வாடை அன்றோ என்றார்கள்
ஐயோ வெவ்வாடையைத் தண் வாடை என்பதே – என்கிறாள் மகள் –
சந்திரனும் நெருப்பை சொரியா நின்றான்
இருவராய்ப் படுக்கவேண்டிய படுக்கை ஒருவருக்கு நெருப்பாக சொல்ல வேணுமோ
இப்படி பேசலாமோ என்றால் பெண்மையும் குடி வாங்கிப் போனதே என்கிறாள்
வண்டு பூவின் உள்ளே புகுந்து சாரத்தை கொள்ளுமா போலே
கருட வாஹனான எம்பெருமான் ஆகிய வண்டு சாரத்தை கவர்ந்து போயிற்றே
பறவை ஏறும் பரம் புருடன் வந்து கைக் கொண்டு என் பெண்மை அழித்து போனான்
சம்ச்லேஷ விஸ்லேஷ பிரகாரங்கள் -பாதக பதார்த்தங்களின் பாரிப்பு ஆகிய இவை எல்லாம் -வகைகள்
இவை ஆத்மா பொறுக்கக் கூடிய அளவு இல்லையே
உசாத் துணையான நெஞ்சையும் இழக்கப் பெற்றேனே-

—————————————————————————————————————————————————————————————————-

யாமுடை நெஞ்சமும் துணை யன்றாலோ ஆ புகு மாலையும் ஆகின்றாலோ
யாமுடை யாயன் தன் மனம் கல்லாலோ அவனுடைத் தீம் குழல் ஈருமாலோ
யாமுடைத் துணை என்னும் தோழிமாறும் எம்மின் முன்னவனுக்கு மாய்வராலோ
யாமுடை யாருயிர் காக்குமாறு என் அவனுடையருள் பெறும் போதரிதே –9-9-5-

அடியார்க்கு எளியவன் என்று பேர் பெற்றவனுடைய இரக்கம் பெறுகை அரிதான பின்பு நம் உயிரைக் காக்கும் விரகு உண்டோ
பசுக்கள் புகும் மாலைப் பொழுதும் வந்ததே
கண்ணன் வருவானே ஆறி இருக்கக் கூடாதோ என்னில்
கல்நெஞ்சக் காரன் அன்றோ
சேவிக்க வாழ்விக்கும் எம் கோன் அரங்கன் திருக் கோயில் சூழ் காவில் கலந்தாசை தந்து ஏகினார் நெஞ்சு கள் நெஞ்சமோ -திரு வரங்க கலம்பகம்
கள் நெஞ்சன் என்றால் கை வாங்கி இருக்கலாமே என்ன
இனிய குழலோசை கை விட ஒட்டாமல் பண்ணுகிறதே
நான் பகல் எல்லாம் பிரிந்தேன் -வரவு தாழ்ந்தேன் -பிரிவு ஆற்றேன்
பர தந்த்ரனாய் கெட்டேன் என்கிற புடைகளிலே சில
பாசுரங்களை குழலில் வைத்து இ றே ஊதுவது
அது கல் என்று கை வாங்காதே கிடாய் என்னா நின்றது
இப்பாசுரங்களால் அவன் குழல் ஓசை இரா நின்றது

நெஞ்சும் துணை அன்றி -அவனும் உதவாத போது -தோழி மீர் நீராவது உதவ வேண்டாமா
அந்தோ என் வியசனத்தைக் கண்டு எனக்கு முன்பே நோவு படா நின்றார்களே –
இனி ஆத்மா தரிக்க விரகு இல்லையே-

———————————————————————————————————————————————————————————————————————

அவனுடைய யருள் பெறும் போது அரிதால் அவ்வருள் அல்லன வருளுமல்ல
அவனருள் பெறும் அளவு ஆவி நில்லாது அடுபகல் மாலையும் நெஞ்சும் காணேன்
சிவனோடு பிரமன் வண் திருமடந்தை சேர் திரு வாகம் எம்மாவி ஈரும்
எவன் இனிப் புகுமிடம் எவன் செய்கேனோ ஆருக்கு என் சொல்லுகேன் அன்னைமீர்காள் –9-9-6-

ப்ரஹ்மாதிகளுக்கும் இடம் கொடுத்து நிற்கும் சீல குணம் என் உயிரை ஈரா நின்றதே
என் அருளைக் கொள்வார் உண்டோ என்று தேடி இருந்து கொள்வார் இல்லையே என்று வருந்திய அவன் அருள் அரிதாய் உள்ளதே இப்பொழுது
முதலாய நல்லான் அருள் அல்லால் நாமநீர் வையகத்துப் பல்லார் அருளும் பழுது -பொய்கையாழ்வார்
க்ரம பிராப்தியை சஹிப்பதொரு பிராணனைப் பெற்றால் அன்றோ ஆறி இருப்பது
அடுபகல் மாலையும் நெஞ்சும் காணேன் -மாலைப் பொழுதும் தொற்றிற்று நெஞ்சைக் காணோம் என்றும்
மாலையும் நெஞ்சையும் காணோம் -இரவை விட மாலை ஒருவாறு நன்று என்பதால் என்றுமாம்
சிவனோடு பிரமன் வண் திருமடந்தை சேர் திரு வாகம் -பஸ்யை காதச மே ருத்ரான் தஷிணம் பார்ச்வம் ஆஸ்ரிதான் -மோஷ தர்மம்
தபஸா தோஷிதஸ் தேன விஷ்ணுநா ப்ரப விஷ்ணுநா ஸ்வ பார்ஸ்வே தஷினே சம்போர் நிவாஸ பரிகல்பித -என்றும்
ஏறாளும் இறையோனும் திசை முகனும் திரு மகளும் கூறாளும் தனி உடம்பன் -என்றும்
அக்கும் புலியின தளும் உடையாரோருவர் பக்கம் நிற்க நின்ற பண்பர் -என்றும்
சர்வ காலமும் இவர்கள் எம்பெருமான் திரு மேனியில் இருப்பார்களோ என்னில் -ஆபத்துக்களிலே திரு மேனியில் இடம் கொடுத்து அருளும்
அது மகா குணம் ஆகையாலே ஆழ்வார்கள் எப்போதும் ஒக்க அருளிச் செய்து கொண்டு போவார்கள்
சாமந்தருக்கு புறம்பே நாடுகள் கனக்க உண்டாகிலும் மாளிக்கைக்கு உள்ளே செம்பாலே நாழி அரிசியை தங்களுக்கு வரிசையாக நினைத்து இருப்பார்கள் இ றே
அப்படியே இவர்கள் திரு மேனியில் பண்ணி வைக்கும் பிராப்தி விடார்கள் இ றே
ஒரோ கலஹங்க ளிலே அடையவளைந்தானுக்கு உள்ளே குடி வாங்கி இருந்து கலஹம் தெளிந்த வாறே புறம்பே புறப்பட்டாலும்
இவ்விடம் இன்னார் பற்று இவ்விடம் இன்னார் பற்று என்று பின்னும் பிராப்தி சொல்லி வைக்குமா போலே –
காபாலி கந்தற்கு எளியதானது கிடீர் எனக்கு அறிதாய்த்து -ஈட்டு ஸ்ரீ ஸூ க்தி-

——————————————————————————————————————————————————————————————————————————————

ஆருக்கு என் சொல்லுகேன் அன்னைமீர்காள் ஆருயிர் அளவன்றிக் கூர் தண் வாடை
காரொக்கும் மேனி நம் கண்ணன் கள்வம் கவர்ந்த வத்தனி நெஞ்சம் அவன் கண் அக்தே
சீருற்ற அகில் புகை யாழ் நரம்பு பஞ்சமம் தண் பசும் சாந்து அணைந்து
போருற்ற வாடை தண் மல்லிகைப் பூப் புது மணம் முகந்து கொண்டு எறியுமாலோ –9-9-7-

கீழ் சொன்ன பதார்த்தங்கள் எல்லாம் திரள வந்து நலிகிற படியைச் சொல்லுகிறாள்
ஆருக்கு என் சொல்லுகேன்-என்னைப் போலே நீங்களும் நெஞ்சு இழந்தவர்கள் அல்லர்
வாடை முதலிய பதார்த்தங்களை தேடித் பிடித்து உகப்பவர்களாய் உள்ளீர்
குளிர்ந்த வாடை என்னை சித்ரவதம் செய்யா நிற்கின்றது
உயிரை கொள்ளை கொள்ளாது விட்டிட்டு ஹிம்சிக்க நினைத்து இரா நின்றது போலும்
ஆருக்கு என் சொல்லுகேன்-வடுகருக்கு தமிழர் வார்த்தை சொல்லுமா போலே -ஈடு
நெஞ்சோ கண்ணபிரான் உடைய கள்வப் பணி மொழிகளிலே ஈடு படா நின்றது –எல்லா பாதகப் பொருள்களும் திரள வந்து நலியா நின்றன –

—————————————————————————————————————————————————————————————————————-

புது மணம் முகந்து கொண்டு எறியுமாலோ பொங்கிள வாடை புன் செக்கராலோ
அது மணந்து அகன்ற நம் கண்ணன் கள்வம் கண்ணனில் கொடிது இனி அதனில் உம்பர்
மதுமண மல்லிகை மந்தக் கோவை வண் பசும் சாந்தினில் பஞ்சமம் வைத்து
அது மணந்து இன் அருள் ஆய்ச்சியர்க்கே ஊதும் அத் தீம் குழற்கே உய்யேன் நான் –9-9-8-

இங்கனே பொங்கிள வாடையானது புது மணத்தை முகந்து கொடு எறியா நிற்கச் செய்தே
அதன் மேல் புன் செக்கர் வந்து நலியா நின்றது
அதன் மேலே அவனிலும் கொடியதாய் நின்ற அக்கலவி இன்ப நினைவு என்னை ஈரா நின்றது
இன்னும் அதுக்கு மேலே மது மண மல்லிகை மாலையும் வண் பசும் சாந்தும் வந்து பாதிக்கின்றன
அதன் மேலே நமக்கே கேட்கும்படி குரவைக் கூத்தாட பஞ்சமராகத்தை வைத்தூதும் தீங்குழல் ஓசை ஒன்றே நின்று என்னை முடிக்கின்றது
அது அது என்று கலவியைச் சொல்லி வாசா மகோசரம்

——————————————————————————————————————————————————————————————————————

ஊதும் அத் தீம் குழற்கே உய்யேன் நான் அது மொழிந்து இடை இடைத் தன செய் கோல
தூது செய் கண்கள் கொண்டு ஓன்று பேசித் தூ மொழி இசைகள் கொண்டு ஓன்று நோக்கி
பேதுறு முகம் செய்து நொந்து நொந்து பேதை நெஞ்சற வறப்பாடும் பாட்டை
யாதும் ஒன்றி அறிகிலம் அம்மவம்ம மாலையும் வந்தது மாயன் வாரான் -9-9-9-

ஊதும் அத் தீம் குழற்கே உய்யேன் நான் -நலிவதில் மற்றவை ஒரு தட்டு தீம்குழல் ஓசை -வேணு கானம் -ஒரு தட்டு
அதுவும் சாதாரண குழலூதுகை இல்லையே
பிரிந்தேன் -ஆற்றேன் -என்னுமா போலே நீச பாஷணங்களை இடை இடையே சொல்லி யாயிற்றுப் பாடுவது
கண்களாலேதூது விட்டும் -அவற்றாலும் பேசுவதும்
தூ மொழி இசைகளைக் கொண்டு நோக்குவதும் -விலஷணம்
பேச்சின் அபிப்பிராயம் கண் பார்வையிலும்
கண்ணாலே நோக்கி ஈடுபடுத்துமது இசைப் பாட்டுக்களினாலும் ஆகின்றது -என்றவாறு
பேதுறு முகம் செய்து -முகத்தைக் கண்டவாறே பைத்தியம் பிடிக்கும்படி செய்து
நொந்து நொந்து-நம்மிடம் ஈடுபட்ட அபலைகள் என்ன பாடு படுகிறார்களோ என்று தானும் நொந்து
சைதன்யம் உள்ள இடத்தே இந்த நோவுபாடு தவிர்க்க ஒண்ணாதே
பேதை நெஞ்சற வறப்பாடும் பாட்டை -பேதை நஞ்சம் அறவு அற -ஊடல் தீரும்படி யாயிற்று கண்ணன் பாடுவது
அது நலிவும் நலிவு சொல்லும் தரம் அன்று
மாயன் -தன்னைப் பிரிந்தார் லஜ்ஜிக்கும்படி தானே இழவாளனாய் வந்து கால் பிடிக்கும் ஆச்சர்ய பூதன் -நம்பிள்ளை

——————————————————————————————————————————————————————————————————–

மாலையும் வந்தது மாயன் வாரான் மா மணி புலம்ப வல்லேறு அணைந்த
கோல நன்னாகுகள் உகளுமாலோ கொடியன குழல்களும் குழறுமாலோ
வாலொளி வளர் முல்லை கருமுகைகள் மல்லிகை யலம்பி வண்டாலுமாலோ
வேலையும் விசும்பில் விண்டலறுமாலோ என் சொல்லி யுய்வன் இங்கு அவனை விட்டே –9-9-10-

வாலொளி-வெளுத்த ஒளி
மாலைவாய்த் தன்னுடைய நா ஒழியாது ஆடும் தனி மணியின் இன்னிசை ஓசையும் வந்து என் செவி தனக்கே
கொன்னவிலும் எக்கில் கொடிதாய் நெடிதாகும் என்னிதனைக் காக்குமா சொல்லீர் -பெரிய திருமடல்
மாட்டின் கழுத்து மணி ஓசையும் – ஏறுகளும் நாகுகளும் கலந்து பரிமாறி கோலாஹலங்கள் செய்வது விரஹிகளுக்கு உத்தீபகமாம்
கீழே தீம் குழல் ஒருமையாக சொல்லி
இங்கே கொடிய குழல்களும் பன்மையாக சொல்வது
வண் துவரைப் பெருமாள் உடைய திருத் தோழன்மார் குழல்களை ஊதிக் கொண்டு புகுரா நின்றனர் -ஆறாயிரப்படி பிள்ளான் –
இதுக்கு மேலே வண்டுகள் பலவகைப் பூக்களிலும் படிந்து முரலுவதும் உத்தீபகம்
கடலோசையும் கர்ணகடோரம்
இங்கனே பாதக வர்க்கங்கள் நலிய அவன் பிரிவை எங்கனே ஆற்றுவேன்-

———————————————————————————————————————————————————————————————————–

அவனை விட்டு அகன்று உயிர் ஆற்றகில்லா அணி யிழை யாய்ச்சியர் மாலைப்பூசல்
அவனை விட்டு அகல்வதற்கே யிரங்கி அணி குருகூர்ச் சடகோபன் மாறன்
அவனி யுண்டு உமிழ்ந்தவன் மேல் உரைத்த ஆயிரத்துள் இவை பத்தும் கொண்டு
அவனியுள் அலற்றி நின்று உய்ம்மின் தொண்டீர் அச் சொன்ன மாலை நண்ணித் தொழுதே –9-9-11-

வண் துவரைப் பெருமாளைப் பிரிந்து தரிக்க மாட்டாமல்
அந்தியம் போதில்
அணி யிழை யாய்ச்சிகள் திரள நின்று கூப்பிட்டால் போலே
ஆழ்வாரும் அவனைப் பிரிந்து தரிக்க மாட்டாமல்
கூப்பிட்டு அலற்றின இத்திருவாய் மொழி
தொண்டர்களுக்கு உஜ்ஜீவன சாதனம்
இப்பாசுரம் கற்பார் ஆழ்வாரைப் போலே கூப்பிட வேண்டாம்
ஆசைப் பட்ட பேறு பெறுகையில் கண்ணழிவு இல்லை-

—————————————————————————————————————————————————————————————————

திருவாய்மொழி நூற்றந்தாதி –

மல்லடிமை செய்யும் நாள் மால் தன்னைக் கேட்க அவன்
சொல்லும் அளவும் பற்றாத் தொன்னலத்தால் செல்கின்ற
ஆற்றாமை பேசி அலமந்த மாறன் அருள்
மாற்றாகப் போகும் என் தன் மால் –89

————————————————————————————————————————————————————————————————

ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading