ஸ்ரீ சைலேச தயா பாத்ரம் தனியன் -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் வியாக்யானம் –

ஸ்ரீ சைலேச தயா பாத்ரம் தீ பக்தியாதி குணார்ணவம்
யதீந்திர பிரணவம் வந்தே ரம்யா ஜாமாதரம் முநிம்–

ஸ்ரீ சைலேச தயா பாத்ரம்-

நமஸ் ஸ்ரீ சைல நாதாயா குந்தி நகர ஜன்மனே
பிரசாத லப்த பரம ப்ராப்ய கைங்கர்ய சாலினே-என்றும்

பரம ப்ராப்ய பராங்குச சரண பங்கஜ விஷய விவித கைங்கர்ய
கரண சாதுர்ய துர்ய ஸ்ரீ சைல வர தேசிகாதீச -என்றும்

அநந்தன் திருமலை ஆழ்வார் என அவதரித்து -என்றும்
அவதார விசேஷமாய் சொல்லப்படுமவராய்

சரம பர்வமான ஆழ்வார் திருவடிகளிலே கைங்கர்யத்தை அவர் அருளாலே லபித்து வாழுமவராய்

அதிலும் அவர் திருவடிகளான எதிராசர் செம் பொற் பாதம் இரவு பகல் மறவாமல் இறைஞ்சி ஏத்தும் எழிலை உடைய
திருவாய்மொழிப் பிள்ளை சீர் அருளுக்கு ஏற்ற கலமாய் உள்ளவரைபவ்ய ஸ்ரீ சைல நாதார்ய பரிபூர்ண க்ருபா ஜூஷே-என்னக் கடவது இறே

ஸ்ரீ சைல பூர்ணர் கிருபையாலும்
ஸ்ரீ சைல தேசிகர் தயை யாலும்
இராமாயணம் என்னும் பக்தி வெள்ளமும்
தீர்த்தங்கள் ஆயிரமுமான திருவாய்மொழியும்
யதீந்திர தத் ப்ரவணர் இடங்களிலே குடி கொண்டு தேங்கிற்று-

இவரும் தன் பக்தி என்னும் வீட்டின் கண் வைத்த பின்பு இறே பெருகி வெள்ளம் யிட்டு விளைந்தது –
ஸ்ரீ இராமாயண துக்த சிந்து –
பாலோடு அமுது அன்ன வாயிரம் –
இராமானுசன் இறே இவரும்-

——-

தீ பக்தியாதி குணார்ணவம் –
மதி -நலங்கள் இவருக்கு பிள்ளை அருளால் உண்டாயிற்று –

ப்ரக்ருஷ்ட விஜ்ஞான பலைக தாமநி –(ஸ்தோத்திர ரத்நம்.)என்றும்
லஷ்மணஸ்ய சதீ மத -(ஸூந்தர 16-4–மிகவும் அறிவுள்ள இளைய பெருமாள் )என்றும்
ந தேவ லோகா க்ரமணம் -என்று தொடங்கி-த்வயா விநா ந காமயே-என்றும் இறே ஏதத் பூர்வ அவதாரங்களிலும் ஜ்ஞாந பக்திகள் பூரணமாய் இருப்பது –
ஆராவன்பு இளையவன் இறே –
அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம வ்யாமோஹாதிகள் உண்டு இறே இங்கே

——–

தயா ஸஹ ஆஸிநம் அநந்த போகிநி ப்ரக் ருஷ்ட விஜ்ஞாந பல ஏக தாமநி
பணாமணி வ்ராத மயூக மண்டல ப்ரகாசமா நோதர திவ்ய தாமநி.-(ஸ்தோத்திர ரத்நம்.)

அறமுயல் ஆழிப்படை-ஸர்வேஸ்வரனிலும் ஆஸ்ரித ரக்ஷணத்தில் முயலா நின்றுள்ள —லஷ்மணஸ்ய ச தீ மத -(ஸூந்தர 16-4–மிகவும் அறிவுள்ள இளைய பெருமாள் )என்றும்

ந தேவ லோகா க்ரமணம் -இது இளைய பெருமாள் உடைய -ஏறாளும் இறையோன்
ந ஹி மே ஜீவிதே நாரத்த -இது பிராட்டியினுடைய ஏறாளும் இறையோன்
பகவத் கைங்கர்யத்துக்கு உறுப்பு அல்லாதது முமுஷுக்களுக்கு த்யாஜ்யம் என்னும் சாஸ்த்ரார்த்தம் –
கொள்ளும் பயன் ஓன்று இல்லாத கொங்கை தன்னை கிழங்கோடும் அள்ளிப் பறித்திட்டு அவன் மார்பில் எறிந்து என் அழலை தீர்வேனே போலே –

ந கதஞ்சந ஸா கார்யா கரிஹீத தநுஷா த்வயா.
புத்திர் வைரஂ விநா ஹந்துஂ ராக்ஷஸாந் தண்டகாஷ்ரிதாந்৷৷
அபராதஂ விநா ஹந்துஂ லோகாந்வீர ந காமயே.– ஆரண்ய -3.9.26৷৷

பாராளும் படர் செல்வம் பரத நம்பிக்கே அருளி ஆராவன்பு இளையவனோடு அரும் கானம் அடைந்தவன் – 8 -5

——–

அவ்வவதாரத்தில் குறைகளும் தீர்க்க அவதரித்த இடத்திலும்
பெரிய பெருமாள் விஷயத்துக்கு அனுரூபமாக
பெரிய ஜீயருடைய அந்த ப்ரேமாதிகள் இரட்டித்து இறே இருப்பது

நிர்மல குண மணி கண வருணாலய-என்றும்
யதா ரத்நாதி ஜலதே -என்றும்
குணா நாமா கரா -என்றும் சொல்லக் கடவது இறே

சௌமித்ரிர் மே ஸ கலு பகவான் சௌம்ய ஜாமாத்ரு யோகீ-என்றும்
யதிவர புநர் அவதார -என்றும் சொல்லக் கடவது இறே-

இனி நம் பெருமாள் இடத்தில் பிராவண்யம் எல்லையான எம்பெருமானார் அளவும் வர்த்தித்த படி சொல்லுகிறது –
சாத்ய விருத்தியாய்க் கொண்டு சரம பர்வம் வரக் கடவதாய் இருக்கும்
யதீந்திர பிரணவம்-
அந்த பிராவண்யம் தான் –யதீந்திர ப்ரவணாய அஸ்மத் குரவே குண சாலினே –என்று
விசேஷ்ஞ்ஞரான வேதாந்தாச்சார்யாரும் விக்ருதராய்ப் பேசி அனுபவிக்கும் படியாய் இருக்கும் –

இவர் தாம் நிஜ தேசிக சந்தர்சித சம்ய மிதுரந்தர நிஹித சகல நிஜ பரவர வரமுனிவர் இறே –
அவர் பராங்குச பாத பக்தர் –
இவர் யதீந்திர ப்ரவணர் –
அந்த ப்ராவண்யம் இறே இவரை அனைவரையும் கால் கட்டுகிறது

———-

வந்தே ரம்யாஜா மாதரம் முநிம்–
வந்தே முகுந்த பிரியாம் -என்கிறது எல்லாம் இவருக்கு இவ்விஷயத்திலே யாயிற்று
ஸ்ரீ மதே ரம்யா ஜாமாத்ரு முனயே விததே நம -என்னுமா போலே திரு நாமத்தை அனுசந்தித்து திருவடிகளில் விழுகிறார் –
இவருடைய அனுசந்தான விஷயமான மந்த்ரமும் ஸ்துதி பிரணாமமும் இருக்கும் படி இதுவாயிற்று –

வந்தே நியதோ முநிம் -என்கிறபடி -சேஷ சேஷிகள் உடைய சத்தா சம்ருதிகள்
இவர் சங்கல்ப அதீனைகளாய் இருக்கும்படியை யைப் பற்ற முனி என்கிறது-

இப்படிகளால் ஏற்றம் உடைய இவர் ஸ்துதி ரூபமான இவர் தனியன் தான்
யத் வேதாதௌ ஸ்வர ப்ரக்தௌ வேதாந்தேச ப்ரதிஷ்டித -என்று
வேதத்துக்கு ஓம் என்னுமா போலே -திராவிட வேத -தத் அங்க -உபாயங்கள் என்ன
ஏதத் வியாக்யான விசேஷங்கள் என்ன
ஏதத் சார பூதமான ரஹச்யங்கள் என்ன
இவற்றின் உடைய ஆதி அந்தங்களிலே
அகில திவ்ய தேச விலஷணராலும் அனுசந்திக்கப் படுமதாய் இருக்கும் –

இவருடைய சகல திவ்ய பிரபந்த பரவர்த்தகத்வம் பண்டு பல இடங்களிலே கண்டு கொள்வது
அதுக்கு மேலே உபய பிரதான பிரணவமான உறை கோயிலிலே இறே இவர் உதித்து அருளிற்று –
இவருக்கு இவ்வைபவம் ஜன்ம சித்தம் –

இது பிரணவ அர்த்தம் ஆகிறது
பிதா புத்ர -ரஷ்ய ரஷக -சேஷ சேஷி சம்பந்த த்ரயமும் இவர் இடத்திலே தர்சிக்கை யாய் இருக்கையாலே
அகாரஸ் சித் ச்வரூபச்ய விஷ்ணோர் வாசக இஷ்யதே
உகாரஸ் சித் ஸ்வரூபாய ஸ்ரியோ வாசீ ததா விது
மகாரஸ்து தயோர் தாஸ இதி பிரணவ லஷணம்-என்கையாலே
அகாரம் பகவத் வாசகமாயும் -மகாரம் சேதன வாசகமாயும் உகாரம் உபய சம்பந்த பிரகாசிகையும் சொல்லும் –

அவ்வானவர்க்கு மவ்வானவர் எல்லாம் உவ்வாவனவர் அடிமை என்று உரைத்தார் –என்னக் கடவது இறே –
விளக்குப் பொன் போலே நடு நிலைத் தீபம் இறே –
மங்கள தீப ரேகாம்
ஸ்ரியோ கடக பாவத –
ஸ்ரிய கடிகயா-என்று ஏதத் சாபேஷமாய் இறே இருப்பது –

ஜகதோ ஹித சிந்தையை ஜாக்ரதஸ் சேஷ சாயின
அவதாரேஷ் வன்ய தமம் வித்தி சௌம்ய வரம் முநிம் -என்றும்

ஆத்மா சேஷி பவசி பகவன் நாந்தரஸ் ஸாசிதா த்வம்-என்றும்

தேவீ லஷ்மீ பவசிதயயா வத்சலத்வேன ஸ த்வம் -என்றும்

சௌமித்ரிர் மே ஸ கலு பகவான் சௌம்ய ஜாமாத்ரு யோகீ -என்னக் கடவது இறே

இப்படி முப்புரி யூட்டி இறே இவர் அவதார வைபவம் இருப்பது

இன்னம் இஸ் ஸ்லோகத்தில் பதங்கள் தோறும் இவ்வர்த்தம் காணலாய் இறே இருப்பது -எங்கனே என்னில்
ஸ்ரீ சைலேச -என்கையாலே அகார வாச்யனான சர்வேஸ்வரனைச் சொல்லி
தயா பாத்ரம் என்கையாலே -பகவத் அனன்யார்ஹ சேஷ பூதனான சேதனன் அவன் கிருபைக்கு பாத்ரம் என்னுமத்தை சொல்லுகிறது
அடியில் பதத்தில் ஆசார்யனை அவன் தானாக சொல்கிறது விசேஷ அதிஷ்டானத்தாலே –
தத் குண சாரத்வாத் தத் வ்யபதேசம் போலே –
அஜ்ஞ்ஞானத் வாந்தரோதாத் -இத்யாதி
ஆச்சார்யஸ் ஸ ஹரிஸ் சாஷாத்

தீ பக்த்யாதி குணார்ணவம் -என்கிற இப்பதத் தாலும்
தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -என்றும்
ஆதியாம் சோதிக்கே ஆராத காதல் -என்றும்
உன்னித்து மற்று ஓர் தெய்வம் தொழாள் -என்றும் சொல்லுகிறபடியே
ஜ்ஞான பக்தி வைராக்யங்களை பிரதிபாதிக்கையாலே
அகாரோதித பகவத் சேஷத்வத்தை பக்தியாலே சொல்லுகிறது –

ஸ்வரூபமும் உன் இணைத் தாமரைகட்கு அன்புருகி நிற்கும் அது இறே –அகிஞ்சித் கரஸ்ய சேஷத்வ அனுபபத்தே –
ஜ்ஞானம் ஆவது -தத் ஜ்ஞானம் இறே -பகவத் ஏக அவலம்பியாய் இறே ஜ்ஞானம் இருப்பது
வைராக்கியம் ஆவது -தேவதாந்திர த்யாக பிரதானமாய் இறே இருப்பது-

யதீந்திர பிரவணம்
யதீந்த்ரர் ஆகையாவது ஸ்வ ஸ்வரூபத்தை அனுசந்தித்து துரும்பு நறுக்காது இருக்குமவர்களை
திருத்தி -திருமகள் கேள்வனுக்கு ஆக்கி அடிமை செய்விக்கை –
தம் அளவிலும் யதி சப்தம் அவிஷ்டம் ஆகையாலே தத் இந்த்ரராகையைப் பற்ற பிரவணர் ஆகிறார்
பகவத் அனன்யார்ஹ சேஷத்வம் ததீய பர்யந்தம் இறே

அன்றிக்கே
யதீந்திர பிரவணம்
அசாதாரணமான ராமானுஜ சப்த பர்யாய வாசகமாய் இறே இத்திரு நாமம் இருப்பது -அதுவும் பிரணவார்த்தம்-
ராம சப்தத்தாலே அகாரார்த்தமும்
அனுஜ சப்தத்தாலே தச் சந்த அனுவர்த்தியாய் இருக்கிற ஆத்ம ஸ்வரூபம் இறே சொல்லுகிறது
ராமானுஜம் யதிபதிம் ப்ரணமாமி மூர்த்தன -என்று இறே ப்ராவண்யம் இருப்பது

வந்தே ரம்யஜா மாதரம் முநிம் –
இத்தாலும் உக்தார்த்தமே சொல்கிறது
ரம்யஜாமாத்ரு சப்தத்தாலே அகார வாச்யனைச் சொல்லி
முனி சப்தத்தாலே தத் அனன்யார்ஹ சேஷத்வ ஜ்ஞானத்தை உடைய பரம சேதனனைச் சொல்கிறது
ரம்ய ஜாமாதுர் மனனம் கரோ தீதி -ரம்ய ஜாமாத்ரு முனி
ஆக இவை எல்லாவற்றாலும் பிரணவ அனுசந்திக்கத் தட்டில்லை-

அயோத்யா மதுரா மாயா -என்றும் -வடதிசை மதுரை –அயோத்தி -என்றும் -அவதார ஸ்தலத்தை சொல்லுகிறபடியே
கோயிலுக்கு வடக்காய் இருக்கிற வடதிருவேங்கட நாட்டில் ஏரார் பெரும் பூதூரிலே
எம்பெருமானார் வட மொழியையும் தென் மொழியையும் வெளியிட அவதரித்து அருளினார் –

நாரணனைக் காட்டிய வேதங்கள் களிப்புற்றது தென் குருகை வள்ளல் வாட்டமிலா வண் தமிழ் மறை வாழ்ந்தது -என்னக் கடவது இறே

அரங்க நகரும் மேவு திருநகரியும் வாழ வந்த மணவாள மா முனி -என்கிறபடியே

தென்னாட்டுத் திலதமான தென் குருகூரிலே பெரிய ஜீயர் தென் மொழியை வெளியிடவே அவதரித்து அருளினார் –
விரவு தமிழ் மறை மொழியும் வட மொழியும் வெளியாய்ச் செல்லும் விசித்ர வியாக்யான சேஷன்-என்னக் கடவது இறே –
ஆர்யாச் ஸ்ரீ சைல நாதாத் –
இவருக்கும் இரண்டின் உடைய ப்ரவர்த்தகம் உண்டே யாகிலும் ஊற்றத்தைப் பற்ற ஒன்றிலே ஓதுகிறது

உடையவருடைய அவதார விசேஷம் ஆகையாலும்
மற்றும் சர்வதா சாம்யத்தாலும் யதிவர புநர் அவதாரம் ஆகையாலும்
தீர்க்க சரணாகதியை ஈன்ற முதல் தாயினுடைய மாதா பிதா போலே யோ நித்யமும் ஸ்ரீ சைலேசமும் நடந்து செல்கிறது-

இவரும் ஜன்ம பூமியை விட்டு வந்து –காவிரி நடுவு பாட்டிலே கருமணியைக் கண்டு -தன் மத்யஸ்தராய்-
வைஷ்ணவ ஸ்ரீ யோடு வாழ்ந்து கொண்டு இருந்து
ஸ்ரீ ரெங்க ஸ்ரீயையும்
ஸ்ருதி சாகரத்தையும்
திராவிட வேத சாகரத்தையும்
பெருகப் பண்ணி பெருமாளை நோக்கிப் போந்தார் –

அவர் எல்லா உயிர்கட்கும் நாதன் அரங்கன் என்னும் பொருள் சுரந்தார்

இவர் பல்லுயிர்க்கும் விண்ணின் தலை நின்றும் வீடு அளிப்பான் அனைத்துலகும் வாழப் பிறந்த எதிராச மா முனிவன் என்னும் அர்த்தத்தை அருள் சுரந்தார் –

ஜீயர் அவதரித்து வெளியிடா போது கண்ணோந்தாரகமாய் இறே உடையவர் வைபவம் இருப்பது
இராமானுச முனி செய்ய குன்றில் ஏற்றிய தீபம் இறே இவர்

நர நாராயண அவதாரம் போலே இறே இவர்களுடைய அவதாரமும்
நாராயணம் நமஸ்க்ருத்ய நரஞ்சைவ நரோத்தமம் -என்றும்
சாஷான் நாராயணோ தேவ க்ருத்வா மர்த்த மயீம் தநும் -என்றும்
யோ அத்யாபி சாஸ்தே-என்றும்
தஸ்யாம் ஹி ஜாகர்தி -என்றும்
இரண்டுக்கும் உண்டான தர்ம ஐக்யமும் அப்படியே -சம்பந்தமும் அப்படியே

அவர் நாராயண வைபவ பிரகாசகர்
இவர் ராமானுஜ வைபவ பிரகாசகர்

அவ்வதாரத்திலும் இவ்வவதாரத்துக்கு ஏற்றம் உண்டு
பிறப்பாய் ஒளி வரு
நாராயண
ராமானுஜ
என்று இறே சதுரஷரிகளின் வாசி இருப்பது

இவர் சதுரரிலே தலை யாகையாலே சரம சதுர அஷரியிலே நிலை நின்றார்

ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்று அவரை சாத்தி இருப்பார் தவம் –

தஸ்மான் மத் பக்த பக்தாஸ்ஸ பூஜா நியா விசேஷத -என்றும்
அடியேன் சதிர்த்தேன் இன்று -என்றும்
நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே -என்றும் –
ஆழ்வாருக்கு மதுர கவிகளிலும் சரமமான திரு அடிகள் ராமானுஜன் ஆனால் போலே
அந்த ராமானுஜனான இவர்க்கும் ஸ்ரீ வத்சாங்க ஆச்சார்யரிலும் சரமமான சரணங்கள் யதீந்திர பிரவணர் இறே
ஆகையால் சரம பர்வமான ஜீயர் விஷயமான இத் தனியனும் சகல வேத சாரமான பிரபத்தி போலே நிரந்தர அனுசந்தேயமாகக் கடவது

ஸ்ரீ அழகிய மணவாள மாமுனிகள் (ஐப்பசித் திருமூலம்)

ஸ்ரீசைலேச தயா பாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம் |
யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முநிம் ||

ஸ்ரீ திருமலை ஆழ்வார் கருணைக்குப் பாத்திரரும்,
ஞானம் பக்தி முதலிய குணங்கள் கடல் போல் நிரம்பியவரும்
ஸ்ரீ யதீந்த்ரர் ஸ்ரீ ராமாநுசரை எப்போதும் அனுசரித்திருப்பவருமான
ஸ்ரீ அழகிய மணவாள மாமுனிகளை வணங்குகிறேன்.

——-

தெய்வ வாக்கில் வந்த மஹிமை உண்டே –
இந்த ஸ்லோகம் அருளிச் செய்த ஸ்ரீ பெரிய பெருமாளே பண்டு
ஸ்ரீ சக்ரவர்த்தி திரு மகனாகவும் ஸ்ரீ கண்ணபிரானாகவும் திரு அவதாரம் செய்து அருளினவன் –

மா முனி வேள்வியைக் காத்து அவபிரதம் ஆட்டிய அடு திறல் அயோத்தி எம் அரசே அரங்கத்தம்மா -என்றும்
கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் அண்டர் கோன் அணி அரங்கன் -என்றும்
மதுரை மா நகரம் தன்னுள் கவளமால் யானை கொன்ற கண்ணனை அரங்க மாலை -என்றும்
திரு அவதரித்த காலத்திலும் சில வியக்திகள் இடம் ஆஸ்ரயித்து திரு உள்ளத்தில் வெறுப்புடன் இருக்க

அது தீரும் படி ஸதாச்சார்ய லக்ஷண பூர்த்தியுடன் இவரை ஆஸ்ரயிக்கப் பெற்றோமே
என்று ஹ்ருஷ்டராய் இருந்தமை
இந்த ஸ்லோகத்தில் ஒவ் ஒரு விசேஷணத்தாலும் ஸ்புடமாகக் காட்டப்படுவதைக் காணலாம் –

ஸ்ரீ ராமாவதாரத்தில் ஒரு ஸ்ரீ சைல தயாபாத்ரமான ஒரு வியக்தியை –சைலம் ரிஸ்யமுக பர்வதம் –
அதுக்கு ஈசர் மதங்க முனிவர் -அவருக்கு தயா பாத்திரம் சுக்ரீவன் –
ஸூ க்ரீவம் சரணம் கத-ஸூ க்ரீவம் நாதம் இச்சதி -என்று இருந்த பெருமாள் மனஸ்தாபம் பட
நேர்ந்த குறை தீர திருமலை ஆழ்வார் என்னும் திருவாய் மொழிப்பிள்ளை இன்னருளுக்கு
இலக்கான நம் ஸ்வாமியை அடைந்து குறை தீரப் பெற்றான்

அங்கு சமுத்திரம் ராகவோ ராஜா சரணம் கந்தும் அர்ஹதி-என்ற விபீஷணன் வாக்கின் படி சரண் அடைந்தும்
சாபமாநயா ஸுமித்ரே சராம்ச்ச ஆஸீ விஷாபமான் சாகரம் சோக்ஷயிஷ்யாமி -என்று முடிந்த குறை தீர
இந்த ஞான பக்தி வைராக்யக்யம் மிக்குள்ள ஆர்ணவம் பற்றி குறை தீரப் பெற்றான்

அப்பனுக்கு சங்கு ஆழி அளித்து அருளும் பெருமாள் என்று போற்றப்படும் ஸ்ரீ ராமானுஜர் -இதில்
மந்திபாய் வட வேங்கட மா மலை வானவர்கள் சாந்தி செய்ய நின்று அருளிய
அரங்கத்து அரவின் அணையானுக்கு மனஸ்தாபம் இல்லை என்றாலும் –
தன்னை யுற்று ஆட் செய்வதில் காட்டிலும் தன்னை யுற்று ஆட் செய்யும் தன்மையினோரை யுற்று
ஆட் செய்வாரையே சிறந்தவர் என்று பாடக் கேட்டவர் ஆகையால்
யதீந்த்ரை விட யதீந்த்ர ப்ரவணரை இறைஞ்சி மகிழ்ந்தான்

விச்வாமித்ர சாந்தீப முனிகளை அடைந்து பட்ட குறைகள் தீர ஸமஸ்த கல்யாணக் குணக் கடலான
வைராக்ய நீதியான ரம்யஜா மாத்ரு முனியை ஆஸ்ரயித்து ஹ்ருஷ்டர் ஆனான்

மன்னு புகழ் சேர் மணவாள மா முனிவன்
தன்னருளே தஞ்சம் எனத் தாம் கொண்ட மின்னு புகழ்
வேதியர்கள் தாள் அன்றி வேறு அறியாதார்
மேதினியில் விண்ணவருக்கும் மேல் அன்றோ –

———————————–

ஸ்ரீ சைல அஷ்டகம் -ஸ்ரீ எறும்பி அப்பா ஸ்வாமிகள்-–6-

ஸ்ரீ மான் ரெங்கேஸ்வரோ யத் வகுல வர வஸோ பாஷ்ய ஸாரார்த்த ஜாதம்
ஸ்ருத்வா ஸுவ்ம்யோ பயந்தா முனி வர சரணே ஸாத்ர பாவம் ப்ரபந்ந
ஸ்ரீ சைலே ஸேதி பத்யம் ககபதி நிலேயே மண்டபே தத் ஸமாப்தவ்
உக்த்வாஸ் அத்யே தவ்யமே தன் நிகில நிஜ க்ருஹே ஸ்வாதி ஸத் தத் ததாதவ் –

ஸாத்ர பாவம்-ஸிஷ்ய பாவம் –
உக்த்வாஸ் அத்யே தவ்யம் ஏதன் -முதல் முதலில் இத்தையே சொல்ல வேண்டும்
நிகில நிஜ க்ருஹே-அனைத்து க்ருஹங்களிலும் திவ்ய தேசங்களிலும்

ஸ்ரீ சம்பிரதாய சந்திரிகை–ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள்–

ஆனந்த வருடத்தில் கீழ்மை ஆண்டில்
அழகான ஆனி தனில் மூல நாளில்
பானுவாரம் கொண்ட பகலில் செய்ய
பௌரணையில் நாளிட்டுப் பொருந்தி வைத்தே
ஆனந்த மயமான மண்டபத்தில்
அழகாக மணவாளர் ஈடு சாற்ற
வானவரும் நீறிட்ட வழக்கே என்ன
மணவாள மா முனிகள் களித்திட்டாரே –7–

சென்றவர்கள் இருவருமே சேர வந்து
திருவரங்கன் தினசரியைக் கேளா நிற்பச்
சந்நிதி முன் கருடாழ்வார் மண்டபத்தில்
தாம் ஈடு சாற்றுகின்ற சமயம் தன்னில்
பொன்னி தனில் நீராடி புகழ்ந்து வந்து
புகழ் அரங்கர் சந்நிதி முன் வணங்கி நிற்பச்
சந்நிதியின்று அரங்கர் தாமே அந்தத்
தனியனுரை செய்து தலைக் கட்டினாரே –5–

பிரமாதீச வருஷம் -ஆனி -பவுர்ணமி -மூலம் -12-6-1433-அன்று தனியன் அவதாரம்

ஸ்ரீ குரு பரம்பரை அனுசந்தானம் லஷ்மீ நாத -தனியன்
ஸ்ரீ ராமானுஜர் -யோ நித்யம் அச்யுதா -தனியன்
ஸ்ரீ நம்மாழ்வார் -மாதா பிதா -தனியன்
ஸ்ரீ ஆழ்வார்கள் ஸ்துதி -பூதம் சரஸ் ஸ-தனியன்

மா முனிகளுக்கு முன்பு உள்ள தனியன் அனுசந்தான க்ரமம் இப்படியே இருக்க –
அவற்றுக்கும் முன்பு இந்தத் தனியனை அனுசந்திக்க ஆணை பிறந்தது
இதுவே குரு பரம்பரைக்கும் பொருந்தும் –

ஸ்ரீ வைஷ்ணவ பரம்பரையில் உள்ள ஆச்சார்யர்கள் அனைவருக்கும் பொருந்தும் படியை மேல் பார்ப்போம்

ஸ்ரீ பெரிய பெருமாள்
ஸ்ரீ சைலம் -திருமலை –
திருமலையே ஆயன் புன வேங்கை நாறும் வெற்பு -என்றும்
திருமலை மேல் எந்தைக்கு -என்றும் ஸ்ரீ பேயாழ்வார்
அந்த ஸ்ரீ சைலத்துக்கு ஈசன் திருவேங்கடவன் -அங்கு இன்றும் ஸ்ரீ ரெங்க மண்டபம் உண்டே –
நம் பெருமாள் பல ஆண்டுகள் அங்கே எழுந்து அருளினது நாம் அறிந்ததே

ஸ்ரீ சைலத்தைத் தனக்குப் பாத்திரம் ஆக்கிக் கொண்ட ஸ்ரீ பெரிய பெருமாள் என்றும் கொள்ளலாம் –
கானமும் வானரமும் வேடுமுடை வேங்கடமான -உலகுக்கு எல்லாம் தேசமாய் திகழும் மலையைத்
தன்னுடைய தயைக்குப் பாத்திரம் ஆக்கி
தென்னாடும் வடனாடும் தொழ நின்ற திருவரங்கம் -நல்லோர்கள் வாழும் நளிர் அரங்கம் -விட்டு
பல்லாண்டுகள் எழுந்து அருளி இருந்தான் அன்றோ –
திருவரங்கன் தீ பக்த்யாதி குண ஆர்ணவன்
யஸ் ஸர்வஞ்ஞ-ஸர்வ வித் -என்றபடி ஞானக்கடல்
ஸ்நேஹ பூர்வம் அநு த்யானம் பக்தி -ப்ரீதி -அடியவர்கள் இடம் அளவற்ற ப்ரீதி கொண்டவன் -அன்றோ

யதீந்த்ரர் இடம் இவன் கொண்ட ப்ராவண்யம் லோக ப்ரஸித்தம் –
அவரும் மயலே பெருகும் படி ப்ராவண்யம் அரங்கன் மேலே கொண்டவர்

ரம்யஜா மாதா -அழகிய மணவாளன் தானே –

முனி -மனந சீலன் -உறங்குவான் போல் யோகு செய்யும் பெருமான் அன்றோ

—————-

2-ஸ்ரீ பெரிய பிராட்டியார் –
ஸ்ரீ திருமலையைத் தனக்குப் பாத்திரமாகி பல்லாண்டுகள் எழுந்து அருளி இருந்த நம்பெருமாள்
ஸ்ரீ சைலன் என்று கொண்டு அவன் தயைக்குப் பாத்திரம் அன்றோ இவளும்
இவளே ஸ்ரீ பத்மாவதிப் பிராட்டியாக ஸ்ரீ சைலனான திரு வேங்கடம் உடையானுக்குப் பாத்ரம் ஆனாள் –
திருவேங்கடத்தைத் தனது தயைக்குப் பாத்திரம் ஆக்கி ஐஸ்வர்யம் பொலிய ஆக்கி அருளினாள் என்றுமாம் –

அவன் ஸ்வரூபத்தாலே விபு -இவள் ஞானத்தால் விபு –
அகலகில்லேன் இறையும் -என்று தண்ணீர் தண்ணீர் என்னுமவள் ஆகையால் பக்தி ஆர்ணவம் அன்றோ –

விந்த்ய மலை அடிவாரத்தில் இருந்து யதீந்த்ரரை மீட்டு -வேடுவச்சியாக தண்ணீர் கேட்டு –
ப்ராவண்யம் காட்டி அருளினாள் அன்றோ –
அவரது ப்ராவண்யம்-ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாஸே –ஸ்ரீ பாஷ்யத்திலும் ஸ்ரீ கத்யத்திலும் காணலாமே –

ரம்யஜா மாதரம் -அழகே வடிவு எடுத்தவள் -உலகுக்கு எல்லாம் தாய் அன்றோ
முனி -சேதனர் உஜ்ஜீவனத்துக்காகவே அவனை அழகாலும் இவர்களை அருளாலும் திருத்துபவள் அன்றோ –

———–

3-ஸ்ரீ சேனை முதலியார்
வானவர் வானவர் கோன் உடன் சிந்து பூ மகிழும் திருவேங்கடம் -என்றும்
வானவர் வானவர் கோன் உடன் நமன்று எழும் திருவேங்கடம் -என்றும்
அவன் தயைக்குப் பாத்திரமானவர் அன்றோ –

த்வதீய புக்த உஜ்ஜித சேஷ போஜிநா த்வயா நிஸ் ருஷ்டாத்மப ரேண-ஸ்ரீ ஆளவந்தார் வாக்கின் படி
உலகையே நிர்வகிக்கும் ஞானத்தையும்
அவன் அமுது செய்து அருளிய ப்ரஸாதத்தையே அமுது செய்கின்ற பக்தியும் உடையவர் அன்றோ

விஸ்வக்சேனோ யதிபதிரபூத் –சப்தாதி –32-என்றபடி யதீந்த்ர அவதார பிரவணர் அன்றோ இவர்

ரம்யஜா மாதுர் மனநம் கரோதீதி ரம்யஜா மாத்ரு முனி -அவனையே ஸர்வ காலம் த்யானம் செய்பவர் அன்றோ –

——————————-

4- ஸ்ரீ நம்மாழ்வார்
ஒழிவில் காலம் எல்லாம் -3-3-
உலகம் உண்ட பெரு வாயா –6-10-
ஸ்ரீ த்வயம் பூர்வ உத்தர வாக்யார்த்தம் இரண்டுமே திருவேங்கடப் பதிகங்களே –
அவனுடைய பரிபூர்ண தயைக்குப் பாத்ரம் ஆனவர்

மதி நலம் அருளப் பெற்றவர் -தீ பக்த்யாதி குண ஆர்ணவம்

பொலிக பொலிக பொலிக –கலியும் கெடும் கண்டு கொண்மின் –
மாறன் அடி பணிந்து உய்ந்தவன்
பராங்குச பாத பக்தம்

ரம்யஜா மாதுர் மனநம் கரோதீதி ரம்யஜா மாத்ரு முனி -அவனையே ஸர்வ காலம்-
கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் என்று வாய் வெருவும்படி இருப்பவர் அன்றோ –

—————-

5-ஸ்ரீ நாத யாமுனர் தொடக்கமாக ஸ்ரீ எம்பெருமானார் ஆச்சார்ய குரு பரம்பரை –
அனைவருமே ஸ்ரீ சைல நாத பாத்ர பூதர்களே
ஞான வைராக்ய ராஸயே
அகாத பக்தி சிந்தவே

அனைவரும் எம்பெருமானார் ப்ராவண்யத்துக்கு இலக்கு ஆனவர்களே

ஸ்ரீ எம்பெருமானார் பரமாகும் பொழுது ஸ்ரீ ஆளவந்தாரே யதீந்த்ரர் என்று கொள்ளலாமே

ரம்யஜா மாதுர் மனநம் கரோதீதி ரம்யஜா மாத்ரு முனி என்றபடி அழகிய மணவாளனையே –
ஸர்வ காலம்- சிந்தித்துக் கொண்டே இருப்பவர்கள் தானே அனைவரும் –

————————-

ஸ்ரீ வைஷ்ணவ வேர் பற்று ஸ்ரீ ரெங்கமே
ஸ்ரீ மா முனிகள் ஒருவரே சகல பூர்வாச்சார்யர்கள் வடிவமாக -embodiment -திகழும் ஸ்வாமி
மா முனிகளின் அஷ்டோத்ர சத நாம ஸ்தோத்ரத்தில்
சர்வ பூர்வோத்தர ஆச்சார்ய ஸூதா சாகர ஸந்த்ரமா -என்பது உண்டே

இந்த தனியன் மற்றவைகளைப் போல் வேறே ஸ்தோத்ர பாடங்களில் இருந்து எடுக்கப்படாமல்
ஸ்ரீ பெரிய பெருமாளே திருச் சோதி வாய் திறந்து அருளிச் செய்து முதல் முதல் அனுசந்திக்க ஆஜ்ஜை செலுத்தி
இதன் மூலம் நாம் அனைவரையும் அநுஸந்திக்க வைத்து அருளினான் –

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் என்று அனுசந்திக்க
ஸ்ரீ ஆழ்வார் திரு நகரியில் எழுந்து அருளி சேவை சாதிக்கும் மூவரையும் குறிக்கும்

அடியார்கள் வாழ அரங்க நகர் வாழ,
சடகோபன் தண்தமிழ்நூல் வாழ, கடல் சூழ்ந்த,
மன்னுலகம் வாழ, மணவாள மாமுனியே,
இன்னுமொரு நூற்றாண் டிரும்.

இவ்வாறாக குரு பரம்பரையின் முதல் ஆசார்யரான, ஶ்ரீமந் நாராயணனே, கடைசி ஆசார்யன்
ஸ்ரீ மணவாள மாமுநிகளுக்கு சீட்ரானதால் ஆதியும், அந்தமும் ஒன்றே என்றாயிற்று.

“ஆழ்வார்கள் வாழி அருளிச் செயல் வாழி
தாழ்வாது மில் குரவர் தாம் வாழி” .
அடியார்கள் வாழ அரங்க நகர் வாழ
சடகோபன் தன் தமிழ் நூல் வாழ
கடல் சூழ்ந்த மண் உலகம் வாழ
மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்

ஆழ்வார்கள் வாழ மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்
அருளிச் செயல் வாழ மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்
தாழ்வாது மில் குரவர் தாம் வாழ மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்
அடியார்கள் வாழ மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்
அரங்க நகர் வாழ மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்
சடகோபன் தண் தமிழ் நூல் வாழ மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்
கடல் சூழ்ந்த மன் உலகம் வாழ மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும்

ஆழ்வார்கள் வாழ அருளிச் செயல் வாழ வேண்டும்
அருளிச் செயல் வாழ தாழ்வாது மில் குரவர் தாம் வாழ வேண்டும்
தாழ்வாது மில் குரவர் தாம் வாழ அடியார்கள் வாழ வேண்டும்
அடியார்கள் வாழ அரங்க நகர் வாழ வேண்டும்
அரங்க நகர் வாழ சடகோபன் தண் தமிழ் நூல் வாழ வேண்டும்
சடகோபன் தண் தமிழ் நூல் வாழ கடல் சூழ்ந்த மன் உலகம் வாழ வேண்டும்
கடல் சூழ்ந்த மன் உலகம் வாழ மணவாள மா முனியே இன்னும் ஒரு நூற்று ஆண்டு இருக்க வேண்டுமே

ஸ்ரீ மதே ரம்ய ஜாமாத்ரு முநீந்த்ராய மகாத்மனே
ஸ்ரீ ரெங்க வாசினே பூயாத் நித்ய சீர் நித்ய மங்களம் –

—————————————————————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவாய் மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading