பெரிய திருமொழி -திவ்யார்த்த தீபிகை – 1-5–கலையும் கரியும் பரிமாவும்–

திருமந்தரம் லபித்த படி முதல் திருமொழியில் பேசி
அடுத்து திரு பிதிரி திவ்ய தேசம் அனுபவித்து
அடுத்த திரு மந்த்ரம் அருளிச் செய்த ஸ்ரீ பத்ரி நாராயணன் எழுந்து அருளி இருக்கும்
ஸ்ரீ வதரியையும் ஸ்ரீ பத்ரிகாஸ்ரமும் அனுபவித்து
எம்பெருமான் ஸ்ரீ சாளகிராமம் திவ்ய தேசம் ஆழ்வார் ஞானக் கண்ணுக்கு தோற்றுவிக்க
நெஞ்சே சாளக்கிராமத்தை சென்று சேருவோம் வா -என்கிறார் இதில்
எம்பெருமான் ஆஸ்ரிதர்களான அஸ்மாதாதிகளை அனுபவிக்க
பல திவ்ய மங்கள விக்ரஹங்களைப் பரிக்ரஹித்து திவ்ய தேசங்கள் தோறும் சந்நிதி பண்ணி அருளுகிறான்

சௌபரி போகத்துக்கு உறுப்பாக அநேகம் வடிவு கொண்டாற் போலே
ஆஸ்ரிதரை அனுபவிகைக்கு உறுப்பாக
உகந்து அருளின நிலங்கள் எல்லாம் புகுந்து
சந்நிதி பண்ணினான் ஆயிற்று அவன் –
இனி இவர்
தாமும் தன உகந்த ஊர் எல்லாம் தன் தாள் பாடி-
எங்கும் புக்கு அனுபவிக்கையிலே யாயிற்று
அபேஷை பண்ணி இருப்பது –
ஒரு விஷயத்தை அனுபவிக்கப் புக்கால்
அவ்விஷயத்தில் அவயவங்கள் தோறும் ஸ்ப்ருஹை பண்ணுவாரைப் போலே
யாயிற்று இவர் எங்கும் புக்கு அனுபவிக்கப் பாரிக்கிறதும்

——————————————————-

கலையும் கரியும் பரிமாவும் திரியும் கானம் கடந்து போய்
சிலையும் கணையும் துணையாகச் சென்றான் வென்றிச் செருக்களத்து
மலை கொண்டலை நீரணை கட்டி மதிள் நீர் இலங்கை வாள் அரக்கர்
தலைவன் தலை பத்து அறுத்து உகந்தான் சாளக்ராமம் அடை நெஞ்சே —-1-5-1-

காட்டின் கொடுமையை சொல்ல யானை சிங்கம் புலி சொல்லாமல் -கலையும் -என்றது மாயமான் –
பிராட்டி பட்டது எல்லாம் மூல காரணம் என்பதால்
அன்றிக்கே மாரீசன் உபகாரனே அன்றி அபகாரகன் அல்லன்
கூச்சல் போடாமல் இருந்தால் சிறை புகுந்து தேவர் கார்யம் செய்ய முடியாதே
கானம் கடந்து போய் -காட்டில் இருந்து வேறு காடு -தே வநேன வனம் கத்வா-வால்மீகி
வென்றிச் செரு-சென்ற இடங்கள் எல்லாம் வெற்றியே கர தூஷணாதிகள் முதலிய இடைப் போர்கள் உண்டே
அதனால் சென்றான் வென்றிச் செருக் களத்து-என்கிறார்
சிலையும் கணையும் துணையாக கானம் கடந்து போய்
மலை கொண்டு அலை நீர் அணை கட்டி வென்றிச் செருக் களத்து சென்றான் என்று அந்வயம் –

வாள் அரக்கர் தலைவன் தலை பத்து அறுத்து உகந்தான் -ஒரு தேவதையை ஆஸ்ரயித்து
அதின் பக்கலிலே ஒரு வாளைப் பெற்று
அது தனக்கு அரணாக நினைத்து இருப்பவனாய் –
துர் வர்க்கத்துக்கு எல்லாம் நியாமகனாய் –
இருக்கிற ராவணனுடைய
தலைகள் பத்தையும் அறுத்து –
தேவர்களும் தம் தாமுடைய குடி இருப்பு பெற்றார்கள்
ருஷிகளும் தம் தாமுடைய ஆஸ்ரமங்களில் இருந்து தபஸ் பண்ணப் பெற்றார்கள்
என்று உகந்தவன்-

———————————————————

கடம் சூழ் கரியும் பரிமாவும் ஒலி மாந்தேரும் காலாளும்
உடன் சூழ்ந்து எழுந்த கடி இலங்கை பொடியா வடிவாய்ச் சரம் துரந்தான்
இடம் சூழ்ந்து எங்கும் இரு விசும்பில் இமையோர் வணங்க மணம் கமழும்
தடம் சூழ்ந்து எங்கும் அழகாய சாளக்கிராமம் அடை நெஞ்சே–1-5-2-

விசாலமான ஸ்வர்க்கத்தில் உள்ள தேவர்கள் இங்கு வந்து சேவிக்கும் படி அழகான சந்நிவேசங்களை உடைய தேசம்
புஷ்ப வாசனைகள் வீசுகின்ற தடாகங்களால் சூழப்பட்டு
எல்லா பக்கங்களிலும் அழகாய் உடைத்தான சாளக்ராமம்-

—————————————————————

உலவு திரையும் குல வரையும் ஊழி முதலா வெண் திக்கும்
நிலவும் சுடரும் இருளுமாய் நின்றான் வென்றி விரலாழி
வலவன் வானோர் தம் பெருமான் மருவா வரக்கர்க்கு எஞ்ஞான்றும்
சலவன் சலம் சூழ்ந்து அழகாய சாள்க்கிராமம் அடை நெஞ்சே——1-5-3-

பண்டை நான் மறையும் வேள்வியும் கேள்விப் பயன்களும் பதங்களின் பொருளும்
பிண்டமாய் விரிந்த பிறங்கொளி யானாலும் பெருகிய புனலொடு நிலனும்
கொண்டல் மாருதமும் குரை கடல் ஏழும்ஏழு மா மலைகளும் விசும்பும்
அண்டமும் தானாய் நிற்ற எம்பெருமான் -என்றபடி
ஜகத் ஸ்வரூபியாய் –
சர்வம் கல்விதம் ப்ரஹ்மம் -ஸ்ருதி சாயலில்
வென்றி விறலாழி வலவன் -அசாதாராண திவ்ய மங்கள விக்ரஹம் உடையவன்
சலம் -தீராக் கோபம் -வஞ்சம் -பொய் –
சலவன் சலத்தை உடையவன்
நல்லார்க்கு மெய்யனாய் தீயார்க்கு பொய்யனாய்

—————————————————————–

ஊரான் குடந்தை யுத்தமன் ஒரு கால் இரு கால் சிலை வளைய
தேரா வரக்கர் தேர் வெள்ளம் செற்றான் வற்றா வரு புனல் சூழ்
பேரான் பேர் ஆயிரம் உடையான் பிறங்கு சிறை வண்டறைகின்ற
தாரான் தாரா வயல் சூழ்ந்த சாளக்கிராமம் அடை நெஞ்சே–1-5-4-

ஊரான் குடந்தை திரு ஊரகம் திருக்குடந்தை
தேரா அரக்கர் -ஆராயாத அரக்கர் -சாஷாத் புருஷன் எம்பெருமான் உடனா நாம் எதிர் இடுவது என்று ஆராயாமல்
வற்றா வரு புனல் சூழ் பெறான் திருப்பேரான்
பிறங்கு சிறை வண்டறைகின்ற தாரான் -பிறங்கு= பிரகாசித்தல் -நிறைந்து இருத்தல்
சிறைக்கும் தாருக்கும் விசேஷணம்
தாரா வயல் சூழ்ந்த -தாரா பஷி விசேஷம் -சாரச பஷி என்பர்

———————————————————————–

அடுத்தார்த்து எழுந்தாள் பில வாய் விட்டலற அவள் மூக்கயில் வாளால்
விடுத்தான் விளங்கு சுடர் ஆழி விண்ணோர் பெருமான் நண்ணார் முன்
கடுத்தார்த்து எழுந்த பெரு மழையைக் கல் ஓன்று ஏந்தி இன நிரைக் காத்
தடுத்தான் தடம் சூழ்ந்து அழகாய சாளக்கிராமம் அடை நெஞ்சே–1-5-5-

ராமஸ்ய தஷிணோ பாஹூ
கல் ஓன்று ஏந்தி -அநாயாசமாக கோவர்த்தன மலை எடுத்தான்

அயில் கூர்மை

——————————————————————-

தாயாய் வந்த பேய் உயிரும் தயிரும் விழுதும் உடன் உண்ட
வாயான் தூய வரி யுருவில் குறளாய்ச் சென்று மா வலியை
ஏயான் இரப்ப மூவடி மண்ணின்றேதா வென்று உலகு ஏழும்
தாயான் காயா மலர் வண்ணன் சாளக்கிராமம் அடை நெஞ்சே —1-5-6-

விழுதும் -வெண்ணெயும்
ஏயான்-யாசிக்கத் தகாதவன் -அலம் புரிந்த தடம் கையனாய் இருந்து வைத்து
தயிர் வெண்ணெய் போலே பூதனை உயிரும் போக்யமாய் இருந்தமை
தஸ்யாஸ் ஸ்தனம் பபௌ கிருஷ்ண ப்ராணைஸ் சஹ நனாத ச -ஸ்தண்யம் தத் விஷ சம்மிச்ரம்
ரச்யமாசீத் ஜகத் குரோ -ஹரி வம்சம்
பெருமா வஞ்சப் பேய் வீய தூய குழவியாய் விடப்பாலமுதா வமுது செய்திட்ட மாயன்
இறப்ப -அவனும் மூவடி மண் தாரை வார்த்து கொடுப்ப
மாவலியையே யான் இரப்ப-மா வலியை நோக்கி -யான் இரப்ப மூவடி மண் இன்றே தா –
மாவலியை ஏ யான் இரப்ப -ஏ -அடா மாவலி என்றபடி

——————————————————————

ஏனோர் அஞ்ச வெஞ்சமத்துள் அரியாய்ப் பாரிய விரணியனை
ஊனார கலம் பிளவெடுத்த ஒருவன் தானே யிரு சுடராய்
வானாய்த் தீயாய் மாருதமாய் மலையாய் அலை நீர் உலகனைத்தும்
தானாய் தானுமானான் தன் சாளக்கிராமம் அடை நெஞ்சே–1-5-7-

உலகேழும் தாயோன் -சர்வ வ்யாபகத்வம் நினைவுக்கு வர எங்கும் உளன் கண்ணன்
ஏனோர் இரணியனும் அவனுக்கு பக்க பலமாய் இருந்த அசூர வர்க்கங்கள்
உலகம் அனைத்தும் தானாய் -அந்தராத்மா சாதாரண ஆகாரம்
தானும் ஆனான் -அசாதாராண திவ்ய மங்கள விக்ரஹம் உடையவன்-

—————————————————————

வெந்தார் என்பும் சுடு நீரும் மெய்யில் பூசிக் கையகத்து ஓர்
சந்தார் தலை கொண்டு உலகு ஏழும் திரியும் பெரியோன் தான் சென்று என்
எந்தாய் சாபம் தீர் என்ன இலங்கமுது நீர் திரு மார்வில்
தந்தான் சந்தார் பொழில் சூழ்ந்த சாளக்கிராமம் அடை நெஞ்சே —1-5-8-

கூறு செய்த ஊரிலே -கையும் கைத்தளையுமாய்-கை விலங்குமாய் – திரிவாரைப் போலே
ஈஸ்வர அபிமாநியாய்
தன் ஆஞ்ஞை நடத்திப் போந்த இடத்தில்
கையும் ஒடுமாய் திரிந்த
துர் மாநியானவன் சென்று –
-என் ஸ்வாமீ என்னுடைய சாபத்தைப் போக்க வேணும் -என்ன –

—————————————————————–

தொண்டாம் இனமும் இமையோரும் துணை நூல் மார்பில் அந்தணரும்
அண்டா வெமக்கே யருளாய் என்று அணையும் கோயிலருகெல்லாம்
வந்தார் பொழிலின் பழனத்து வயலினயலே கயல் பாய
தன்டாமரைகள் முக மலர்த்தும் சாளக்கிராமம் அடை நெஞ்சே–1-5-9-

ஒழிவில் காலம் எல்லாம் உடனே மன்னி வழு விலா அடிமை செய்ய வேணும் -கைங்கர்யம் செய்யப்
பாரிக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் கோஷ்டியும்
இங்கே சௌசீல்ய சௌலப்யம் அனுபவிக்க வந்த நித்ய சூரிகள் கோஷ்டியும்
நாம் உயர்ந்த ஜாதி பிராமணர் -சாமான்யர் உடன் சேரக் கூடாது என்று எண்ணி இருக்கும் கோஷ்டியும்
வயலின் அயலே கயல் பாய அயல் வயலின் கயல் பாய -அயல் -அருகும் இடமும்-

———————————————————

தாராவாரும் வயல் சூழ்ந்த சாளக்கிராமத் தடிகளை
காரார் புறவின் மங்கை வேந்தன் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை
ஆரார் உலகத்தறிவுடையார் அமரர் நன்னாட்டரசு ஆள
பேர் ஆயிரமும் ஒதுமின்கள் அன்றி யிவையே பிதற்றுமினே–1-5-10-

சஹஸ்ர நாம சங்கீர்த்தனம் பண்ணும் பலமும்
இப்பதிகம் கற்கும் பலனும் துல்யம்
அன்று இவை ஓதுமினோ என்னாமல் பிதற்றுமினே
சொல்லும் க்ரமம் ஒழியச் சொன்னாலும் தன ஸ்வரூபம் கெட நில்லாது –
முமுஷூப்படி இது போன்ற அருளிச் செயல்களின் அடி

———————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P .B .A .ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading