அவதாரிகை –
உபாய
அத்யாவசாய
நிஷ்டரான -அதிகாரியை
எழுப்புகிறார்கள்
(விஷ்ணு ஸஹஸ்ர நாம பாராயணமும் பகவத் சம்பத் ரக்ஷணத்துக்குக் கூட பண்ணக் கூடாது -பராசர பட்டர்)
(துயில் அணை மேல் கண் வளரும் -இங்கு
கும்பகரணனும் தோற்று உனக்குப் பெரும் துயில் தந்தானே தூக்கம் -செயல்பாடு இல்லாமல் -மார்பில் கை வைத்த வாழும் சோம்பர்
நம்மது என்றால் சம்சாரம் த்யாஜ்யம்-அவனது சொத்து என்று பார்த்தால் உபா தேயம்-தூ மணி மாட–பாகவதர்கள் -சரீரமும் உத்தேச்யம்
அதே போல் உபாய பாவம் இல்லாமல் கைங்கர்ய பாவ நிஷ்டர்கள்)
(தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி நான்ய பந்தா வித்யதே அயநாயா=அநந்ய சாத்யே-வேறே ஒன்றால் கிடைக்க மாட்டானே -அவனே அவனைத் தந்து அனுபவிக்கிறான்
( ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் ந பிபேதி குதச்சன” (தைத்ரீய உபநிஷத் 2:4:1)
தூ மணி -நாம் சரணாகதி செய்து அவன் ஆனந்த மயன் என்று அறிகிறோம்
ஏஷ ஹ்யா -அவனே நம்மைப் பற்றி ஆனந்தம் ஊட்டுவது அடுத்த பாசுரம் –
அநுகாரம் -சரீரம் அவனுக்கு என்று உணர்ந்து பிரகலாதனை ஆழ்வார் -அவனைப்போலவே –பரம ஐகாந்திக பக்தி -அநுகார முதிர்ச்சி
ஆண்டாள் கோபியை அனுகரித்து -ததீயர் நிலையில் – -மாமான் மகளே -என்கிறாள்-ஆத்ம பந்துத்வம் மட்டும் இல்லாமல் தேஹ சம்பந்தமும் ஆசைப்படுகிறாள்
ஸ்ரீயப்பதியாய் இருப்பதாலேயே பரத்வம் ஸுலபம்
லோக நாத மாதவ பக்த வாத்சல்யன்
ஒவ்வொன்றுக்கும் ஸஹஸ்ர நாமங்கள் -என்று என்று –
துவளில் மா மணி -தொலை வில்லி மங்கலம்-தூய்மை செய்யப்பட்டவை அங்கு -இங்கு தூ மணி -இயற்கையாகவே தூய்மை
——————————————————————————————
தூ மணி மாடத்து சுற்றும் விளக்கெரியத்
தூபம் கமழத் துயில் அணை மேல் கண் வளரும்
மாமன் மகளே மணிக்கதவம் தாள் திறவாய்
மாமீர் அவளை எழுப்பீரோ உன் மகள் தான்
ஊமையோ அன்றிச் செவிடோ வனந்தலோ
ஏமப்பெரும் துயில் மந்தரப் பட்டாளோ
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்
பதவுரை
தூ மணி மாடத்து–பரிசுத்தமான மாணிக்கங்கள் அழுத்திச் சமைத்த மாளிகையில்
சுற்றும்–நாற் புறமும்
விளக்கு எரிய–விளக்குகள் எரியவும்
தூபம் கமழ–(அகில் முதலியவற்றின்) வாசனைப் புகைகள் மணம் வீசவும்,
துயில் அணை மேல் கண் வளரும்–மென்மையான படுக்கையின் மீது நித்திரை செய்யா நின்ற,
மாமான் மகளே–அம்மான் பெண்ணே!
மணி கதவம்–மாணிக்கக் கதவினுடைய
தாள்–தாழ்ப்பாளை
திறவாய்–திறந்திடுவாயாக,
மாமீர்–அம்மாமீ!
அவளை–(உள்ளே உறங்குகிற) உன் மகளை
எழுப்பீரோ–எழுப்ப மாட்டீரோ?
உன் மகள்;–உன் மகளானவள்
ஊமையோ–வாய்ப் புலன் இல்லாதவளோ?
அன்றி–அல்லாமற் போனால்
செவிடோ–செவிப் புலன் இல்லாதவனோ? (அன்றி)
அனந்தலோ–பேருறக்க முடையவளாயிருக்கின்றாளோ? (அன்றி)
பெரு துயில்-பெரிய படுக்கையில்
ஏமப்பட்டாளோ–காவலிடப்பட்டாளோ? (அன்றி)
மந்திரம்பட்டாளோ–மந்திர வாதத்தினால் கட்டுப் படுத்தப் பட்டானோ?
மா மாயன்–‘அளவிறந்த ஆச்சரியச் செய்கைகளை யுடையவனே!’
மாதவன்–‘திருமகள் கேழ்வனே!’
வைகுந்தன்–‘ஸ்ரீ வைகுண்டநாதனே!’
என்று என்று–என்று பலகால் சொல்லி
நாமம் பலவும்–(எம்பெருமானுடைய) திரு நாமங்கள் பலவற்றையும்
நவின்று–(வாயாரக்) கற்றோம்;
(இனியாகிலும் உன் மகள் உணரலாகாதா?)
ஏல் ஓர் எம் பாவாய்!
——————————————————————————————
வியாக்யானம் –
தூ மணி மாடத்து –
அப்ராக்ருதமாய்
பஞ்ச உபநிஷத் மயமான
திவ்ய மங்கள விக்ரஹத்திலே-
சுற்றும் விளக்கெரியத்
சர்வதோ முகமாக
ஜ்ஞான தீபம் பிரகாசிக்க-
தூபம் கமழத் –
ஞானம் பரிமளிக்க
ஞானம் பரிமளிக்கையாவது
அனுஷ்டான சேஷமாய் இருக்கை–
(பொய் நின்ற ஞானம் -பொல்லா ஒழுக்கம் -அழுக்கு உடம்பு -இவற்றுக்கு எதிர் தட்டு
தூ மணி மாடம் -சுற்றும் விளக்கு -தூபம் கமழ-அனுஷ்டானம் இல்லாத ஞானவான் நாய் வால் போல் வீண் )
துயில் அணை மேல் கண் வளரும்
நித்ரா ப்ரதமான சயனத்திலே கண் வளருகிற
அதாவது
ஸ்வ பிரயத்ன
சாமான்ய நிவ்ருத்தி பூர்வகமான
பகவத் ஏக உபாய அத்யவச்யத்தாலே
நிஷ்டனாய் இருக்கை —
(சர்வ தர்மான் பரித்யஜ்யமும்
சரணம் வ்ரஜவும் வேண்டுமே)
மாமன் மகளே –
மாமன் என்றும் அம்மான் என்றும் இரண்டும் பர்யாயம் ஆகையாலே
(அம்மான்)ஸ்வாமியான எம்பெருமானாலே புத்ரத்வேன அபிமதராய்
அனந்யார்ஹரான பாகவதரே-
(மகன் -ஸ்வா தந்தர்யம் தோன்றுவதால் மகள் -பாரதந்தர்யம் காட்டும்
மனு -ஸ்த்ரீக்கு ஸ்வா தந்தர்யம் கிடையாது)
மணிக் கதவம் தாள் திறவாய்-
மணி மாடத்தினுடைய மணிக் கதைவையும் மணித் தாள் திறவாய் –
அதாவது
த்வத் அனுபவ விரோதியான
தேஹாத்மாக்கள் இரண்டிலும் உண்டான மமகாரத்தைப்
தவிர்ப்பாய் -என்றபடி –
அன்றிக்கே
த்வத் அனுபவ விரோதியான
பகவத் சௌந்தர்யத்திலும்
பகவத் பக்தியிலும்
மம காரத்தைத் தவிர்ப்பியாய் என்கிறார்கள் —
(அநக -ராம பக்தியிலும் கால் தாழாமல் -உன் அடியார்க்கு என்னை ஆட்படுத்து என்று அவனையே கால்பிடித்து வேண்டிக்கொள்ளவேண்டுமே)
இவர்கள் இப்படி சொன்ன இடத்திலும் இவ் வதிகாரி பேசாதே கிடைக்கையாலே
இவ்வதிகாரிக்கு ஜனகையாய் இருக்கிற
அநந்ய உபாயத்வ ஸ்வரூப ஞானம் ஆகிற -திருத் தாயார் –
அவர்கள் இப்படி அழைக்க நீ பேசாதே கிடப்பதே -என்ன —
ஸ்வாமிநீ யான நீர் உமது ஸ்வம்மான அவளை எழுப்பீரோ –ஞானமான நீ நம்பிக்கையை உணர்த்த வேண்டாமோ
தன்னிடத்தில் அநந்ய உபாயத்வ ஞானம் பிறந்த பின்பு தானே அவனே உபாயம் என்ற திட அத்ய வசாயம் பிறக்கும்
இப்படி சொன்ன இடத்திலும் எழுந்திராத இன்னாப்பாலே
உன் மகள் தான் ஊமையோ -என்கிறார்கள் –அதாவது
மறுமாற்றம் சொல்ல வல்லள் அல்லளோ-என்றபடி –
இவளைப் பேச ஒட்டாதே வாயை மூடினார் உண்டோ -என்று பாவார்த்தம் –
(சம்பந்த ஞானம் தோழி-பிரணவ அர்த்தம்
உபாய அத்ய வசாயம் தாயார் -நமஸ் சப்தார்த்தம்
உபேய த்வரை மகள்-நாராயணாயா அர்த்தம்)
அன்றிச் செவிடோ –
ஊமையான மாத்ரம் அன்றிக்கே நம் வார்த்தை கேளாதபடி செவிடோ –
நம் பேச்சு கேளாதபடி அங்கே ஆரவாரம் உண்டோ என்று பாவார்த்தம் –
வனந்தலோ-
சோம்பலோ -என்றபடி –
நெடும் போது நாயகனோடு கூடி இருந்து படுக்கையிலே சாய்ந்தது இப்போதோ -என்று பாவார்த்தம்
தனித் தனியே வாக்யாதி இந்திரியங்கள்
பகவத் விஷயத்தில் ப்ரவணங்கள் ஆகையாலே
ஒரு கார்யத்திலும் சக்தி அல்லள் -என்றுமாம் –
(என் நெஞ்சினாரும் அங்கு ஒழிந்தார் போல் அனைத்து இந்திரியங்களும் அவன் இடம் போயிற்றோ)
(ந அந்நிய கர்த்தும் த்ரஷ்டும் -யத்ர நான்யத்ர பஸ்யதி இத்யாதி –பூமா)
ஏமப் பெரும் துயில் மந்தரப் பட்டாளோ-
காவல் இடப் பட்டாளோ –
மகா நித்தரை உண்டாம்படி மந்திர வாதம் பண்ணப் பட்டாளோ –
ஸ்வ பிரவ்ருத்தி சாமான்யமும் (தானே செய்யும் அனைத்துக் காரியங்களும் )உபாய விரோதி யாகையாலே
இதில் அந்வயியாதபடி
தடுத்து வைத்தார்கள் உண்டோ –
அதாவது –நமஸ் தடுத்தோ -என்றபடி –
உபாய வைலஷண்யம் பிரவ்ருத்யந்தரத்தில்
அந்வயியாதபடி மோஹிப்பித்ததோ -என்றபடி –
(சணல் கயிறு கண்ட ப்ரஹ்மாஸ்திரம் போல் அன்றோ பிரபத்தியும் வேறே ஒன்றையும் ஸஹிக்காதே
தூது விடல் -அனுகரித்தல் -மடல் எடுத்தல் -பல நீ காட்டிப்படுப்பாயோ -நெறி காட்டி நீக்குதியோ)
இப்படி இவர்கள் இன்னாதாக
திருத்தாயார் -திரு நாமத்தைச் சொல்லுங்கோள் இவள்
எழுந்திருக்கைக்கு என்ன
மா மாயன் மாதவன் வைகுந்தன்
மா மாயன் –
அத்யந்த சுலபன்
மாதவன்
இதுக்கு குருகுல வாஸம் பண்ணின இடம்
வைகுந்தன்
இந்த சௌலப்யம் குணமாகைக்கு ஈடான பரத்வம் உடையவன் –
என்றென்று நாமம் பலவும் நவின்று-மாமீர் அவளை எழுப்பீரோ –
ஸ்வார்த்த பிரவ்ருத்தி சாமான்யமும் உபாய விரோதி –
பரார்த்த பிரவ்ருத்தி சாமான்யமும் உபாய பலமாயும் உபாய அனுகூலமாயும் இருக்கும் என்று அறிவித்து
அவளை –
உபாய அத்யாவசாய நிஷ்டரை -எழுப்பீரோ -என்று அந்வயம்-
(முளைக் கதிரை குறுங்குடியுள் முகிலை மூவா மூவுலகும் கடந்தப்பால் முதலாய் நின்ற
அளப்பரிய ஆரமுதை அரங்கம் மேய அந்தணனை அந்தணர் தம் சிந்தையானை
விளக்கொளியை மரகதத்தை திருத் தண்காவில் வெஃகாவில் திருமாலைப் பாடக் கேட்டு
வளர்த்தனால் பயன் பெற்றேன் வருக என்று மடக் கிளியைக் கை கூப்பி வணங்கினாளே– திருநெடுந்தாண்டகம் -14 )
——————————————————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ சுத்த சத்வம் தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.