திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -8-6-5-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

கோயில் கொண்டான் தன் திருக் கடித் தானத்தை
கோயில் கொண்டான் அதனோடும் என்நெஞ்சம்
கோயில் கொள் தெய்வமெல்லாம் தொழ
வைகுந்தம் கோயில் கொண்ட குடக் கூத்த வம்மானே

———————————————————————————————————————————————

என் பக்கல் கொண்ட மிக்க காதலாலே
திருக் கடித் தானத்தோடே கூட
என் மனத்திலே புகுந்து அருளினான் –
என்கிறார்

கோயில் கொண்டான் தன் திருக் கடித் தானத்தை
திருக் கடித் தானத்தை தன் கோயில் கொண்டான் –
திருக் கடித் தானத்தை தனக்கு அசாதாரணமான கோயிலாகக் கொண்டான் –

கோயில் கொண்டான் அதனோடும் என்நெஞ்சம் –
அதனோடும் என்நெஞ்சம் கோயில் கொண்டான் –
செருப்பு வைத்து திருவடி தொழுவாரைப் போலே ஆக ஒண்ணாது -என்று
திருக் கடித் தானத்தோடே கூட வந்து என் நெஞ்சில் புகுந்து அருளினான் –

கோயில் கொள் தெய்வமெல்லாம் தொழ வைகுந்தம் கோயில் கொண்ட-
ஒரோ கோயில்கள் உண்டாய் இருக்கும் அன்றோ –
திருவடி திரு வநந்த ஆழ்வான் சேனை முதலியார் இவர்களுக்கு –
இவர்கள் தொழும்படி ஸ்ரீ வைகுண்டத்தை தனக்குக் கோயிலாகக் கொண்ட சர்வேஸ்வரன் –

குடக் கூத்த வம்மானே –
கிருஷ்ணனாய் வந்து அவதரித்து
குடக் கூத்து ஆடினவன் –
குடக் கூத்து ஆடின அந்த சிரமம் எல்லாம் ஆறும்படி
திருக் கடித் தானத்தை கோயிலாக கொண்டான் –
அதனோடு கூட என் மனத்தினை தனக்குக்
கோயிலாகக் கொண்டான்
அரவத்து அமளியினோடும் அழகிய பாற்கடலோடும்
அரவிந்தப் பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து
பரவைத் திரை பல மோதப் பள்ளி கொள்கின்ற பிரானைப்
பரவுகின்றான்விட்டு சித்தன் பட்டினம் காவற் பொருட்டே -என்கிறபடியே –
திருக் கடித் தானத்தில் நிலை
என்னைப் பெறுகைக்கு ஆகையாலே
சாத்தியம் கை பட்டால் சாதனத்தில் இழிவார் இல்லையாய் இருக்க
என்னைப் பெற்றது அத் தேசத்தில் நிற்கையாலே என்று
அத் தேசத்தோடு வந்து புகுந்தான் -என்கிறார்-

என் பக்கல் ப்ரேமம் காரணமாக
திவ்ய தேசத்துடனே
கோயில் கள் தைவம் எல்லாம் தொழும் படி சர்வேஸ்வரன்
திருக் கடித்தானம் -அசாதாரணமாக கோயில் கொண்டான்
அத்துடன் நெஞ்சில் புகுந்து –
சேர்ப்பு வைத்து
பாதம் பித்தம் -செருப்பு போட்டு கொண்டு போக -ஐதிகத்தில் இத்தையும் சொல்லி
திருப்பாவை அனுசந்தானம் -மாதுகரம் -பாதுகை இன்றி போவார்கள் –
செருப்பு வைத்து திருவடி தொழுவார்
அஹங்காரம் வைத்து திருவடி
வெளியில் இருந்தால் கவனம் திரும்புமே
அத்தையும் கூட்டி வந்தான் –
தயிர் வெண்ணெய் உண்டானை –உலகு எழ தன்னுள் ஒடுக்கி
உலகம் வேண்டிய கார்யம் செய்து பின்பு தயிர் வெண்ணெய் உண்டான் –
கோயில் கொள் தைவம்-நித்ய சூரிகளுக்கும் சந்நிதி உண்டே
கிருஷ்ணனாக கூத்தாடி
சிரமம் தீர்க்க திருக் கடித்தானம்
அத்துடனே இவர் ஹிருதயத்தில் வந்தான் –
அழகிய பாற்கடலோடு
பிரேம அதிசயம் –
சாத்தியம் கைப்பட்டால் –
என்னை பெற்றது இந்த தேசத்தால் என்பதால் –
ஆழ்வாரை பெற இங்கே எழுந்து அருளி இருந்து –
பெற்ற பின்பு சாதனத்தில் இழிவாரோ
படகு அக்கரை போன பின்பு பார்ப்பாரோ
கிருதஞ்ஞை காட்ட –
அதனோடும் என் நெஞ்சகம் கோயில் கொண்டான் –
பொட்டிக்கடை ஆரம்பித்து பெரிய maal -பெருமை
கருமை பெருமை மையல் கொடுக்குமே maal
மாலே செய்யும் மணாளனே –
பிரமாண்டம் பெருமை
கருமை black market
பெட்டிக்கடை விட மாட்டாரே -இதனால் ஐஸ்வர்யம் பெற்றோம் என்பதால்-

———————————————————————————————————————————————————————-

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading