திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -8-6-6-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

கூத்த வம்மான் கொடியேன் இடர் முற்றவும்
மாய்த்த வம்மான் மது சூத வம்மான் உறை
பூத்த பொழில் தண் திருக் கடித் தானத்தை
ஏத்த நில்லா குறிக் கொண்மின் இடரே

————————————————————————————————————————————–

தம்முடைய மிக்க ப்ரீதியாலே
திருக் கடித் தானத்தை எல்லாரும் அடையும் கோள்
என்கிறார்-

கூத்த வம்மான் –
மனத்தினைக் கொள்ளை கொள்கின்ற
செயல்களை உடைய சர்வேஸ்வரன்

கொடியேன் –
மகா பாவியான என்னுடைய

இடர் முற்றவும் மாய்த்த வம்மான் –
தன்னைப் பிரிந்து நான் பட்ட கிலேசம் எல்லாம்
வாசனையோடே போக்கின
என்னுடைய ஸ்வாமி –

மது சூத வம்மான் உறை-
பகைவர்களை அழிக்கும் தன்மையனான சர்வேஸ்வரன்
நித்ய வாசம் செய்கின்ற தேசம் –

பூத்த பொழில் –
அவன் நித்யவாசம் செய்கையாலே
எப்போதும் மலர்களோடு கூடின பொழில் –
திருவருள் ஆகிய மழை மாறினால் அன்றோ
பூக்கள் மாறுவது –

தண் திருக் கடித் தானத்தை –
சிரமத்தைப் போக்குகிற திருக் கடித்தானத்தை –

ஏத்த இடர் நில்லா –
இனியதனைச் செய்ய
இடரானது நமக்கு இது தேசம் அன்று என்று
சும்மனாதே கை விட்டோடும் -பெரியாழ்வார் திருமொழி -5-4-3-

குறிக் கொண்மின் –
இதனை ஓலைக்க வார்த்தை என்று இராதே
புத்தி பண்ணும் கோள் –

ஆழ்வார் ப்ரீதி பிரகர்ஷத்தாலே
நம்மை எல்லாரையும் இந்த திவ்ய தேசம் ஏத்த உபதேசிக்கிறார் –
ஏத்தினால் இடர் நில்லா
குறிக்கொள்மின்
மாயக் கூத்தா கிலசம் வாசனை உடன் போக்கின ஸ்வாமி
மது பட்டது பட்டது கிடீர்
நித்ய வசந்தம் பொழில் நித்ய வாஸம் செய்வதால்
கூத்தனார் வரில் கூடிடு கூடலே
பூத்த நீள் கடம்பேறி
அத்தனை செடிகளும் காஞ்சு போக இது மட்டும்
கண்ணபிரான் திருவடி ஸ்பர்சத்தால் பூத்து இருக்க –
திருக்கண் கடாஷத்தால் முன்னமே பூத்தது
நெறிஞ்சி காடு பிருந்தாவனம் தளிரும் முறியுமாயிற்று
வனம் போக விருஷங்கள் வாட
திரும்பியதும் பூத்து குலுங்கிற்றே
ஸ்ரமஹரமான திவ்ய தேசம்
இடர் தேசம் இல்லை சும்மெனாத கை விட்டு ஓடும்
தன்னடையே போகும்
ஓலக்க வார்த்தை இல்லை –
நெஞ்சிலே கொள்ளும் உபதேசிக்கிறார்
ஏத்த இடர் நில்லா-

——————————————————————————————————————————————————————————

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading