திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -8-6-3-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

ஒருவர் இருவர் ஓர் மூவர் என நின்று
உருவு கரந்து உள்ளும் தோறும் தித்திப்பான்
திருவமர் மார்பன் திருக் கடித் தானத்தை
மறவி யுறைகின்ற மாயப்பிரானே

———————————————————————————————————————————-

பிராட்டியோடு கூடி திருக் கடித் தானத்திலே
நித்ய வாசம் செய்கிற ஆச்சர்யத்தை உடையனான உபகாரகன்
நினைக்கும் தோறும் இனியன் ஆக நின்றான் -என்கிறார்-

மேல் பாசுரத்தில் கூறிய வாறே வாளி பொழிந்த படி எங்கனே -என்ன –
இங்கனே என்கிறார்

ஒருவர் இருவர் ஓர் மூவர் என நின்று உருவு கரந்து –
ஒருவராய்த் தோன்றி –
இருவராய் தோன்றி –
மூவராய் தோன்றி
பின் கட்புலனாலே காண முடியாதவாறு சாரிகை வந்து
ஒருவர் இருவர் மூவர் என நின்று
செருக்கடுத்து அன்று திகைத்த அரக்கரை
உருக்கெட வாளி பொழிந்த ஒருவன்
திருக்கடித் தானமும் என்னுடைச் சிந்தையும்
ஒருக்கடுத்து உள்ளே உறையும் பிரான் கண்டீர் –
என மேல் பாசுரத்தோடே சேரக் கடவது –
மூலபலம் சாம்படி அருளுகிற அன்று
சாரிகையில் வேகம் மிக மிக இருவர் மூவருமாகத்
தோன்றி -வேகம் மிக்க வாறே-இந்த்ரிய சம்யோகத்துக்கு இடம் இல்லாமையாலே
ரூபக்ரஹனம் அரியதாய் உருக்கெட வாளி பொழிந்த ஒருவன் -24000 படி
ஒருவர்
திருவமர் மார்பன்-
குற்றம் செய்யாதவர் யாவர் -என்னும் பிராட்டியோடேகூட
ஆயிற்று வந்தது –
திருவமர் மார்பன் திருக் கடித் தானத்தை மறவி யுறைகின்ற மாயப்பிரானே உள்ளும் தோறும் தித்திப்பான்
பெரிய பிராட்டியார் நித்ய வாசம் செய்கிற திருமார்வினை
உடையனாய்
திருக் கடித்தானத்தை மருவி உறையா நின்று கொண்டு
என் பக்கலிலே ஆச்சர்யமாம்படி
ஈடுபட்டு இருக்குமவனாவன் நினைக்கும் தோறும் புதியனாய்
இனியன் ஆகா நின்றான்

பிராட்டி உடன் நித்ய வாஸம்
திரு அமர் மார்பன் –
உபகாரகன்
உள்ளும் தோறும் தித்திப்பான்
சொல்லும் தோறும் தித்திப்பான்
ஒருவர் இருவர் ஓர் மூவர் -உருவு கரந்து-
திருக் கடித்தானத்தை மருவி உறைகின்ற
திகைத்த அரக்கரை -அழித்த விதம் காட்டுகிறார்
வாளி பொழிந்த படி எங்கனே என்னில் இங்கனே
நிகும்பன யஞ்ஞம்-இந்த்ரஜித் – செய்ய மூல பல விநாசம் –
வேகமாக சுற்றி -ரூபமே கரந்து –
இந்த்ரிய அர்த்த சம்யோகம் இல்லாமல் வேகமாக சுற்றி
கீழே உடன் கூட்டி வியாக்யானம்
14000 ராஷசர் வதம் செய்யும் பொழுது
கபந்தம் ஆடும் -10 பிரேதம் ஆடும் பொழுது
கோதண்டம் மணி அடிக்கும்
ஒரு நாழிகை காலம் அடிக்கும்
அதனை கபந்தன்கள் –
வேகமாக சுற்றி –
பானம் மழை பொழிந்த படி –

வாளி பொழிந்தவன் செயலையே அனுபவித்து வியாக்யானம் –
மூல பல யுத்தம் செய்த விதம்
ஆச்சர்யமான ஈடுபாடு
உள்ளம் தோறும் இல்லை
உள்ளும் தோறும்
அனுசந்திக்கும் போதொரும் புதியனாய் இனியன் ஆகா நின்றான்

———————————————————————————————————————————————————————————————————-

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading