திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -8-6-7-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

கொண்மின் இடர்கெட உள்ளத்துக் கோவிந்தன்
மண் விண் முழுதும் அளந்த ஒண் தாமரை
மண்ணவர் தாம் தொழ வானவர் தாம் வந்து
நண்ணு திருக் கடித் தான நகரே

—————————————————————————————————————————————–

உங்கள் துன்பம் நீங்குவதற்கு ஏத்த வேண்டா
திருக் கடித்தானத்தை நெஞ்சாலே நினைக்க அமையும் -என்கிறார்

கொண்மின் இடர்கெட திருக் கடித் தான நகரே -உள்ளத்துக் கொள்மின் –
இடர் கெட -திருக் கடித்தான நகர் உள்ளத்துக் கொள்மின்
உங்கள் எல்லாத் துன்பங்களும் போகும்படியாக
திருக் கடித்தானத்தை மனத்தாலே நினையும் கோள் –

கோவிந்தன் –
சர்வ சுலபன் ஆனவனுடைய –

மண் விண் முழுதும் அளந்த ஒண் தாமரை –
ஒரு தாமரைப் பூவை கொண்டாயிற்று
பூமியையும் வான் உலகத்தையும் அளந்து கொண்டது –

மண்ணவர் தாம் தொழ –
இடக்கை வலக்கை அறியாத பூமியில் உள்ளார் தொழ
பரமபதம் நித்ய சூரிகளுக்கே யாக இருக்குமா போலே
உகந்து அருளின தேசம் சம்சாரிகளுக்கு ஆகவேயாய் இருக்கை

வானவர் தாம் வந்து நண்ணு –
சம்சாரிகட்கு முகம் கொடுத்துக் கொண்டு நிற்கும் நீர்மையை
நினைத்து நித்ய சூரிகளும் வந்து கிட்டுகிற

திருக் கடித்தான நகரை
கொண்மின் இடர் கெட உள்ளத்து –
இங்கு உள்ளார் அங்கு போவது மேன்மையை அனுபவிக்க
அங்கு உள்ளார் இங்கே வருவது சீல குணத்தை அனுபவிப்பதற்கு

துக்க நிவ்ருதிக்கு ஏத்த கூட வேண்டாம்
நெஞ்சிலே நினைத்தாலே போதுமே என்கிறார்
ஏத்துதல் நினைத்து வாயாலே சொல்ல வேண்டுமே –
கோவிந்தன் -சர்வ சுலபனுடைய
மண்ணையும் விண்ணையும் அளந்த -ஒண் தாமரை –
இத்தை கொண்டே அளந்தான் -தாமரை போல மென்மையான திருவடி -சௌகுமார்யம் –
கரடு முரடுமான கல்லும் முல்லுமான பூமி அளந்து
மன்னவர் தாம் தோழா -இடக்கை வலக்கை அறியாத
பரம பதம் நித்யர் -வானவர் தாம் தோலே -நீர்மை அனுபவிக்க
சௌலப்யம் சேவிக்க நித்யர் வரும் தேசம்
இந்த திவ்ய தேசம் நெஞ்சத்தில்
கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு திரு மலை போலே

———————————————————————————————————————————————————————————————

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading