ஸ்ரீ திருப்பாவை – நோற்றுச் சுவர்க்கம் -ஸ்ரீ சுத்த சத்வம் தொட்டாசார்யர் அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானம் –

பத்துப் பெண்களும் எழுப்ப வேண்டியவர்களாக இருந்தாலும் கீழ் பாசுரத்திலும் இதிலும் தூக்கம் ஸ்பஷ்டமாக விலக்கப்பட்டு உள்ளது
ஸித்த ஸ்வீ காரம்-உபாயமாக பற்றும் செயல்களில் -செய்வதற்கு ஒன்றும் இல்லை -கைங்கர்யம் என்றால் அனைத்தையுமே சுய வேண்டுமே
ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் -என்னாதே-ஏஷ ஹ்யேவா நந்தயாதி -என்று அவன் ஆனந்திப்பிக்க இருப்பாள் ஒருத்தி –

(ஸ்வ கத ஸ்வீ காரம் -ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் -அறிதல் வித்வான் வேதனம் முக்கியம்-தியானித்து ஆனந்தமயன் என்று அறிந்து பேறு
இதுக்கே மேல் படி ஏஷஹ்யேவா நந்தயாதி-பர கத ஸ்வீ காரம் -ஆனந்தம் ப்ரஹ்மம் ஊட்டுகிறது -இதில் ப்ரஹ்மமே காரணம் )

யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான்
ந பிபேதி கதாசனேதி தஸ்யைஷ ஏவ சாரீர ஆத்மா ய: பூர்வஸ்ய
“ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் ந பிபேதி கதாசனேதி” – ப்ரம்ஹத்தின் ஆனந்தத்தை உணர்ந்தவருக்கு பயம் ஏது?

ஏஷ ஹ்யேவாऽऽநந்த³யாதி ।
யதா³ ஹ்யேவைஷ ஏதஸ்மிந்நத்³ரு’ஶ்யேऽநாத்ம்யேऽநிருக்தேऽநிலயநேऽப⁴யம்
ப்ரதிஷ்டா²ம் விந்த³தே । அத² ஸோऽப⁴யம் க³தோ ப⁴வதி ।

ஸித்த ஸாதந ஸ்வீகாரம் பண்ணி, உபாயாத்யவஸாயத்தில் நிறைந்த ஊற்றமுடைய
மஹாநுபாவரை உணர்த்துதல், இப்பாட்டுக்கு உள்ளுறை பொருளாம்.-கீழே அனந்தல் உடையவள் -இங்கு ஆற்ற அனந்தல் உடையவள்

வாழும் சோம்பராக இருக்க வேண்டுமே
அனன்யா சாத்யே தத் ஏக உபாய பூதோ -புரிதல் மாநசமே ஸரணாகதி
ஆத்ம ஞானமும் அப்ரதிசேதமுமே வேண்டியது
கைங்கர்யம் -முக்கரணங்களாலும் -செய்ய வேண்டுமே -ப்ரபத்தி மட்டும் மாநஸம்
கைங்கர்யமும் மாநசமே என்று இருத்தலே ஊமை செவிடு அனந்தல்)

(போற்றப் பறை தரும் புண்ணியனால்-புண்ணியம் நாம் உடையோம் -மேல் வரும் -நம்மைத் தேடி வந்த ஸித்த புண்ணியமே அவன்-போற்றுதல் உபாயமல்லவே -இதுவே ப்ராப்யம் விருந்து )

————–

அவதாரிகை
இப்பாட்டில் உபாய நிஷ்டரை எழுப்புகிறார்கள்

(கீழ் உபாய அத்யவசாய நிஷ்டர் -ஸ்வ கத ஸ்வீ கார நிஷ்டர்-ஞானத்துக்கு முக்யம் அங்கு இதில் அவனுக்கு முக்யத்வம் )

(உபாயாந்தரம் இரண்டையும் பொறுக்கும் -உபாயம் தன்னைப் பொறுக்கும் இது பிரபத்தி இரண்டையும் பொறுக்காது -அந்த அத்யாவசாயத்தையும் ஒழித்து இது விசிஷ்டாத்த்வத்தை அத்வைதம்)

(பிரபத்தி சரணாகதி புரிதல் -அவனையே குறிக்கும் -பெருமானைத் தவிர வேறே ஒன்றும் உபாயம் ஆகாது -இந்த நினைவும் உபாயம் ஆகாதே)

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற வம்மனாய்
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகர்ணனும்
தோற்றும் உனக்கே பெரும் துயில் தான் தந்தானோ
ஆற்ற வனந்தல் உடையாய் அருங்கலமே
தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய்

பதவுரை

நோற்று–நோன்பு நோற்று
சுவர்க்கம் புகுகின்ற–ஸுகாநுபவம் பண்ணா நின்ற-நிகழ் கால பத பிரயோகம் நித்தியமாக அனுபவித்துக் கண்டு இருக்கிறாள்
அம்மனாய்–அம்மே!
வாசல் திறவாதார்–வாசற்கதவைத் திறவாதவர்கள்
மாற்றமும் தாராரோ–ஒருவாய்ச் சொல்லுங் கொடுக்க மாட்டாரோ?
நாற்றத் துழாய் முடி–நறு நாற்றம் வீசா நின்றுள்ள திருத் துழாய் மாலையை அணிந்துள்ள திரு முடியையுடைய
நாராயணன்–நாராயணனும்,–ஸர்வ அந்தர்யாமி –
நம்மால் போற்ற பறை தரும்–நம்மால் மங்களாசாஸனம் பண்ணப் பெற்றுப் புருஷார்த்தங்களைத் தந்தருள்பவனும்-
புண்ணியனால்–தர்மமே வடிவு கொண்டு வந்தாற் போன்றவனுமான இராமபிரானால்
பண்டு ஒரு நாள்–முன் ஒரு காலத்திலே
கூற்றத்தின் வாய் வீழ்ந்த–யமன் வாயில் (இரையாக) விழுந்தொழிந்த
கும்பகரணனும்–கும்பகர்ணனும்
தோற்று–தோல்வி யடைந்து
பெருந்துயில்–(தனது) பேருறக்கத்தை
உனக்கே தான் தந்தானோ–உனக்கே தான் கொடுத்து விட்டானோ?
ஆற்ற அனந்தல் உடையாய்–மிகவும் உறக்கமுடையவளே!
அரும் கலமே–பெறுதற்கரிய ஆபரணம் போன்றவளே!
தேற்றம் ஆய் வந்து திற–தெளிந்து வந்து, (கதவைத்) திறந்திடு;
ஏல் ஓர் எம் பாவாய்,

ஸ்வர்க்க வாசல் -பரமபத வாசல் -ஸ்ரீ வைகுண்ட வாசல் -இந்த்ர லோகம் வாழும் அச்சுவை பெறினும் வேண்டேன் -போல் இங்கும் ஸ்வர்க்கம் புகுகின்ற

வியாக்யானம் –
நோற்றுச் –
சித்த சாதனத்தை-பரிக்ரஹம் பண்ணி –

சுவர்க்கம் –
சுக ரூபமான பிராப்யத்தை

(பாஷாணம் போல் இருப்பதே புருஷார்த்தம் மத நிரஸனம் -துக்கம் தீருவது மட்டும் முக்தி அல்லவே
மனோ பாவம் மட்டும் ஞானம் மட்டும் அல்ல
பரமபதம் ஒரு ஸ்தானம் –ஸூத்த ஸத்வ ம யம் -அங்கு சென்று தான் இது கிட்டும் -)

புகுகின்ற –
அனுபவிக்கிற –

வம்மனாய்-
ஸ்வாமிநி யானவளே

மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்-
வாசல் திறவாதார் -மாற்றமும் தாராரோ-
த்வத் அனுபவ விரோதியான வாசலை -அஹங்காரத்தை நீக்கி-
எங்களை உன்னை அனுபவிப்பியா விடிலும்
நாங்கள் கேட்டு வாழும் படி ஒரு வார்த்தையும் அரிதோ –

(வந்து தோன்றாய் -அன்றேல் -உன் வையம் தாய மலரடிக் கீழ் முந்தி வந்து நான் நிற்ப முகப்பே கூவிப் பணி கொள்ளாய் -ஆழ்வார் பகவத் விஷயத்தில்)

அவனை எழுந்து இருக்க ஒட்டா விடிலும்-
இருந்த இடத்தே இருந்து வார்த்தை சொன்னால் ஆகாதோ -என்று பாவார்த்தம் –

இப்போது அவன் இங்கு உண்டோ -ஏன் பழி இடுகிறீர்கள் என்ன

நாற்றத் துழாய் முடி
இப்போது அவன் இங்கே இல்லா விடில் பரிமளம் ஏது-என்ன-
அவனை ஒருகால் அணைக்க-ஒன்பது குளியலுக்கு பரிமளம் நிற்குமே என்ன –

(குட்ட நாட்டுத் திருப் புலியூர் இவள் நேர் பட்டதே -அம் தண் துழாய் கமழ்தல் -)

கட்டும் காவலுமான இடத்துக்கு அவனால் புகுரப் போமோ என்ன –
நாராயணன் –
வேண்டும் இடத்து ஆவிர்பகிக்கைக்கு அன்றோ-அவனுடைய வ்யாப்தி -என்ன

(வஸ்துவுக்கு ஸத் பாவம் தருவதற்கு அவன் வியாப்தி -வேண்டிய இடத்தில் தோன்ற வியாப்தி அடுத்த நிலை -ப்ரகலாதன் பிரார்த்திக்க தூணில் இருந்து வந்தானே
நம்மிடமும் தான் ஏற நாள் பார்த்து இருக்கும் -)

நம்மால் போற்றப் பறை தரும் புண்ணியனால் –
நம்மாலே போற்றப் பட்டவனாய் கொண்டு-புருஷார்த்த பிரதனான நாராயணனாலே

பண்டொரு நாள் கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகர்ணனும் தோற்றும் உனக்கே பெரும் துயில் தந்தானோ-
முன்பு ஒரு தம அபிபூதமான காலத்திலேயே-மிருத்யுவினுடைய வாயிலே விழுந்த
தாமசனான கும்பகர்ணனும்-உன் துயிலுக்கு தான் தோற்று-
உனக்கே தன்னுடைய பெரும் துயிலையும் தானே தந்தானோ-

(அவனே உபாயம் ஞானம் இவனது தமோ குணத்தைத் தோற்கடிக்கும் அன்றோ-இருவர் தூக்கத்துக்கும் நெடு வாசி உண்டே )

இவ்விடத்தில் கும்பகர்ணன் -என்றது தமோ குணத்தை
தமோ குணம் தன்னை அன்றியில்-இவளுக்கு உண்டான நித்ரையைக் கண்டு
இவளுடைய-நித்ரா ஜனகத்வ சக்திக்கு தான் தோற்று
தன்னுடைய-நித்ரா ஜனகத்வ சக்தியையும் தந்தானோ-என்று ரகசியம்

சாத்விகனான இவ் வதிகாரிக்கு நித்தரை யாவது-
ஸ்வ அனுபவ தசையிலே இதர விஷயங்கள் தோற்றாது இருக்கை –

இவள் இப்படி சொன்னவாறே அவள் எழுந்திருந்து சோம்பல் முறிக்க-
ஆற்ற வனந்தல் உடையாய் –
மிகவும் சோம்பலை உடையவளே-சோம்பலாவது வ்யாபாராந்தராஷமதை -(அவன் அனுபவத்தைத் தவிர வேறே வியாபாரங்களை பொறுக்காதவள் )
அத ஏவ –

அருங்கலமே-
துர்லபமான ஆபரணமே-

ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே -என்கையாலே-
சோம்பல் முறிக்கையும்
துர்லபமான ஆபரணம் போலே-அத்யாகர்ஷகமாய் இருக்கிறது -என்றுமாம்-

(பெருமாள் மான் தோல் மர வுரி கண்ட மஹரிஷிகள் பும்ஸாம் ஸித்த அபஹாரிணாம் ஆனால் போல் இவர்களுக்கும் இருக்குமே)

இவள் ஆற்றாமையைக் கண்டு சடக்கென வந்து திறக்கப் புக –

தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய்-என்கிறார்கள் –
நாங்கள் புறக்கட்டிலே இருக்கிறோம் ஆகையாலே-இருந்த படியே வாராமே
சத்ஸ்தையாய் வந்து திற என்கிறார்கள் –

தேற்றமாய் வந்து திற-என்கையாலே-
இவ்வதிகாரிக்கும் லோக கர்ஹை வாராமல்
லௌகிக அனுவர்த்தனம் கார்யம் என்றது ஆய்த்து –

(உங்களுக்கு அவ்வளவும் போதாது -இவ்வளவு வந்தவனுக்கு எதுவும் வேண்டாமே -பட்டர் –
ராமானுஜர் 120 திருநக்ஷத்ர ஆனாலும் அமர்ந்த அர்க்க்ய பிரதானம் பண்ணினார் அன்றோ)

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ சுத்த சத்வம் தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading