சோலைத் திருக் கடித் தானத்துறை திரு
மாலை மதிட் குருகூர்ச் சடகோப சொல்
பாலோடு அமுதன்ன ஆயிரத்திப் பத்தும்
மேலை வைகுந்தத்து இருத்தும் வியந்தே
————————————————————————————————————————————————————–
நிகமத்தில்
இத் திருவாய்மொழி கற்றவர்களை
இது தானே திரு நாட்டில் கொடு போய் விடும் -என்கிறார்
சோலைத் திருக் கடித் தானத்துறை திரு மாலை –
சிரமத்தைப் போக்குவதாய்
காட்சிக்கு இனியதான
சோலையை உடைய திருக் கடித் தானத்திலே
நித்ய வாசம் செய்கிற திருமகள் கேள்வனை –
மதிட் குருகூர்ச் –
சம்சாரம் காரணமாக உண்டாகிற
பாப கூட்டங்களுக்கு புக ஒண்ணாத
அரணை உடைய திருநகரி –
சடகோப சொல் –
ஸ்ரீ வால்மீகி முனிவராலே சொல்லப் பட்ட ஸ்ரீ ராகவனுடைய சரிதை –
ரகுவர சரிதம் முனிப்ரணீதம் -பால -2-43-என்னுமாறு போலே –
பாலோடு அமுதன்ன ஆயிரத்திப் பத்தும் –
பாலோடு அமுதன்ன ஆயிரம் என்னுதல்
பாலோடு அமுதன்ன இப்பத்து என்னுதல்
வாச்சிய வாசகங்களின் சேர்த்தி இருக்கிறபடி –
பால் -என்றது
சோலைத் திருக் கடித் தானத்துறை திருமாலை
அமுது -என்றது
சடகோபன் சொல் வாசகத்தை –
இது ஆளவந்தார் நிர்வாஹம் –
இப்பத்தும் வியந்து மேலை வைகுந்தத்து இருத்தும் –
சம்சாரத்தில் இதனைக் கற்பவன் ஒருவன் உண்டாவதே
என்று ஆச்சர்யப் பட்டு
எல்லா உலகங்கட்கும் மேலான பரம பதத்தில் கொடு போய் வைக்கும் -என்றது
மாயக்கூத்தா -என்ற திருவாய் மொழியில் உண்டான விடாய்
நடையாடாத தேசத்திலே வைத்து
ஒரு நாளும் பிரியாத அனுபவத்தைக் கொடுக்கும் -என்றபடி-
நிகமத்தில்
இது தானே திருநாடு கொடு போகும்
திருமாலை அருளிய ஆழ்வார் சொல்
பாலும் அமுதும் சேர்ந்தது போலே
ஆயிரமும்
இப்பத்து
வியந்து இருத்தும்
ஸ்ரமகரமான சோலைகள்
மதிள்-சம்சார துக்கம் நுழைய முடியாத திவ்ய தேசம் –
சம்சார ருசி உள்ளார் உள்ளே போக மாட்டார்களே
சடகொஇபன் சொல்
ரகுவர சரிதம் முனி வால்மீகி ஆப்த உத்தமர் அருளி
ஆப்த வாக்கியம் -ஏற்றம் உண்டே சடகோபன் சொல்
பாலோடு அமுது அன்ன
ஆயிரம்
பால் அமுது வாச்ய வாசக சேர்த்து
அக்காரவடிசில் போலே கலந்து
பால் -திருமால்
அமுது -சடகோபன் சொல் ஆளவந்தார்
ஆழ்வார் திரு வாக்கில் அப்படி சேர்ந்து
தொண்டர்க்கு அமுது உண்ண
தேனே பாலே கன்னலே அமுது அவன் பால்
மாயக் கூத்து விடாய் நடமாடாத தேசம்
பிரியாத அனுபவம் கொடுக்கும்-
——————————————————————————————————————————————————————
எல்லி பகல் நடந்த இந்த விடாய் தீருகைக்கு
மெல்ல வந்து தான் கலக்க வேணும் என நல்லவர்கள்
மன்னு கடித் தானத்தே மாலிருக்க மாறன் கண்டு
இந்நிலையைச் சொன்னான் இருந்து—76
சாரம்
இந்த விடாய் எல்லியும் பகலும் தொடர
தீருககைக்கு
மெல்ல வந்து
தான் கலக்க வேணும் என
நல்லவர்கள் வாழும் திருக் கடித் தானத்தே
மால் இருக்க
இந்நிலையைச் சொன்னான் மாறன் இருந்து
———————————————————————————————————————————————
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply