இருந்தான் கண்டு கொண்டே எனதேழை நெஞ்சாளும்
திருந்தாத வோரைவரைத் தேய்ந்தற மன்னி
பெருந்தாட் களிற்றுக்கு அருள் செய்த பெருமான்
தருந்தானருள் தான் இனி யானறியேனே-
——————————————————————————————————————————————
நான் இந்த்ரியங்களுக்கு கட்டுப்பட்டு இருந்த தன்மையை
தன் அழகாலே தவிர்த்து
என்னை அங்கீகரித்த உபகாரத்துக்கு ஒவ்வாது
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் உடைய ஆபத்தை நீக்கிய தன்மையும்
என்கிறார்-
இருந்தான் கண்டு கொண்டே-
கண்டு கொண்டே-இருந்தான்-
வறிஞன் செல்வப் பேறு உண்டானால் பார்த்துக் கொண்டு இருக்குமா போலே
பார்த்த படியே இரா நின்றான் –
தத ஸூ ப்ரீத மனசௌ தௌ உபௌ கபிராகவென
அன்யோன்யம் அபி வீஷந்தௌ ந த்ருப்திம் உபஜக்மது -கிஷ்கிந்தா -5-18
சுக்ரீவனும் ஸ்ரீ ராம பிரானும் ஆகிய இவர்களும் மிகுந்த களித்த மனமுடையவர்களாய்
ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு மன நிறைவு பெற்றார்கள் -என்கிறபடியே
சொல்ல எதிர்தலையான தம்மை காண்கின்றிலர்
எனதேழை நெஞ்சாளும்-
எனது ஏழை நெஞ்சு ஆளும் –
கண்டன எல்லா வற்றிலும் ஆசை கொள்ளுகின்ற
என்னுடைய மனத்தை –
அதுவே பற்றாசாக இந்திரியங்கள் பொதி எடுக்கத் தொடங்கிற்று -என்றது
ஒரு பிரபலனைப் பற்றாதே-விஷயங்களில் உள்ள ஆசையால்
நடுவே நின்றவாறே பணி கொள்ளத் தொடங்கிற்று – என்றபடி-
திருந்தாத –
வரம்பு இல் ஆற்றலை உடைய சர்வேஸ்வரனாலும்
பலகாலும் திருத்தப் போகாதபடி அன்றோ
இவற்றின் வன்மை இருப்பது –
ஓர் ஐவர் –
இனி இப்படி ஓர் ஐவரை தேடப் போகாது
இவற்றால் பட்ட நலிவின் மிகுதியாலே
ஐவர் -என்று உயர் திணையாக கூறுகிறார்-
தேய்ந்தற மன்னி இருந்தான் –
கண்களுக்கு இலக்கான உலக விஷயங்களிலே பற்று நேராக அழியும்படி
தன் வடிவு அழகைக் காட்டிக் கொண்டு புகுந்து இருந்தான் –
வேறு விஷயங்களிலும் வடிவு அழகில் அன்றோ இவன் இவன் துவக்குண்டு இருப்பது
அரசர்கள் பகைவர்கள் ஆசன பலத்தாலே வெல்லுமாறு போலே
இருப்பாலே இந்த்ரியங்களை வெல்ல வேண்டும் என்று வந்து புகுந்து இருந்தான்
போதரே என்று சொல்லிப் புந்தியில் புகுந்து தன்பால்
ஆதரம் பெருக வைத்த அழகன் -திருமாலை -16 -அன்றோ-
பெருந்தாட் களிற்றுக்கு
பெரிய தாள்களை உடைய களிற்றுக்கு
அருளின சர்வேஸ்வரன்
வடிவில் கனமும் நோவில் பாடு அற்ற ஒண்ணாமைக்கு
காரணம் ஆதலின் -பெரும் தாள் -என்கிறார் –
அருள் செய்த பெருமான் -தருந்தானருள் தான்-
பெருமான் தான் தரும் அருள் தான் –
தரும் என்கிற இது – தந்த -தருகின்ற -தரும் -என
முக்காலத்திலும் சொல்லலாய் இருக்கையாலே
தரும் அருள் -என்கிறார்
அடியாருக்கு செய்ததும் தமக்குச் செய்ததாக அன்றோ இவர் நினைத்து இருப்பது
ஆதலின் -கொடுத்த என்னாது -தரம் -என்கிறார்-
இனி யானறியேனே
எனக்கு உதவின பின்பு
நான் அதனை ஒன்றாக நினைத்து இரேன்
யான் நோவு பட்டது பல ஆண்டுகள்
அகப்பட்ட பொய்கை அளவுக்கு உட்பட்டது
முதலை ஓன்று
காலம் அநாதி
அகப்பட்டது பிறவிப் பெரும்கடல்
முதலை ஐந்து
இதனை மீட்டுக் கொண்ட மகா குணத்துக்கு
ஒரு குணமாய்ற்றதோ
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் பக்கலிலே செய்த அருளை இட்டு
புறம்பு உள்ளாரைப் பிரித்து வேறு படுத்தினார்
தமக்குச் செய்த அருளை இட்டு அதனையே பிரித்து வேறுபடுத்துகிறார்
இந்திர்ய வச்யத்தை தவிர்த்து
ஆபன் நிவாரணம்
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் உபகரிதத்தை விட இதுவே மகத்து
எம்மா வீட்டு -கைம்மா துன்பம் களைந்த பிரானே -அங்கும்
துக்கம் சுகம் இரண்டிலும் இப்படியே
ஒரு முதலை
மாடு அங்கெ -இங்கோ சம்சார சாகரம்
1000 தேவ சம்சாரம் அநாதி காலம் இங்கே
எனது சபலமான நெஞ்சை -ஆளும் ஓர் ஐவர் -சேதன சமாதியால் –
திருந்தாத ஓர் ஐவர்
தேய்ந்து அற -அழித்து
யானைக்கு செய்தது உபகாரமே இல்லை இத்தை ஒப்பிடும்பொழுது
இருந்தான் கண்டு கொண்டே
தரித்திரன் -தனம் லாபம் வந்தால்
வாசு தேவ சர்வம் -பக்தர் தரித்திரன் அவன்
அன்யோன்யம்
சுக்ரீவன் பெருமாள் -இருவரும்
திருப்தி அடையாமல் -பார்த்து கொண்டே
இப்படி சொல்ல எதிர் தலை தம்மை காணாமல்
இருந்தான் கண்டு கொண்டே என்கிறார் –
எனது ஏழை நெஞ்சு
இதுவே பற்றாசாக பொதி எடுக்க தொடங்கிற்று
பிரபலனை பற்றாமல் துர்லபமாக
ஏமாந்தவன் தலையில் மிளகாய் அரைக்க
சர்வேஸ்வரன் கோடா திருத்த முடியாத
ஓர் ஐவர் ஒப்பற்ற ஐவர் –
ஓர் ஐவர் காகி பாண்டவர் போலே
பட்ட நலிவால் சொல்கிறார்
பற்று போக தம் வடிவு அழகைக் காட்டி இருந்தான்
மால் பால் மனம் சுளிப்ப மங்கையர் தோள் கை விட்டு
தாழ்ந்த வஸ்து விலகுமே உயர்ந்த திவ்ய மங்கள விக்ரகம் கண்டதும்
விஷயாந்தரங்களிலும்
இருப்பாரை
இருந்தான் -பிரயத்னம் செய்ய வேண்டாம் –
படுத்துக் கொண்டே வெல்வேன் -சொல்லியது போலே
ராஜாக்கள் ஆசன பலத்தால் வெல்வது போலே இருந்தான்
போதரே -வலையுள் பட்டு அழுந்திய –
ஸ்திரீகள் இடம் ஈடுபட்டு
கோயில்லுக்குள் போனேன் ஸ்திரீகள் பார்க்கபோனேன் அத்வேஷம் இல்லை காட்ட
கட தீபம் ஸ்திரீகள் ஏற்ற
போதரே -அடே வா -என்று சொல்லி
தன் பால் ஆதாரம் பெருக வாய்த்த அழகன் –
பெரும் தாள் களிறு
ஆனைக்கால் -வடிவில் கனமும்-ஆனைக்கு தக்க வாதம்
நோவில் -பாடாகக முடியாத படி கனம்
தரும் அருள் –
தந்த அருள் -தருகின்ற அருள் -தர பூக்கும் அருள் முக்காலத்தும்
கொடுத்த அருள் இல்லை
தனக்கு உதவினது போல்
இனி யான் அறியேன்
எனக்கு உதவின பின்பு -அத்தை அருளாக நினையேன்
1000 வருஷம் காலம் அநாதி இங்கே
சம்சார சாகரம் -மடு-பொய்கை
ஐந்து முதலைகள்
வாலி -துந்துபி சரீரம் எரிந்து
ஏழு சால வ்ருஷம் துளைக்க
இலுப்பை மரம் ஆக கெட்டியாக இருக்கும் –
மீட்டுக் கொண்ட மகா குணத்துக்கு அது அருளோ
சம்சாரம் அரணவம் இழுக்கும் இந்த முதலைகள்
புறம்புள்ளார்-கஜேந்த்திரன் -வாசி அவனே ரஷகன் நாராயணா மணிவண்ணா -வ்யாவர்த்தி
வேறுபாடு
தமக்கு அருளிய பின்பு அத்தையும் வ்யாவர்த்திக்கிறார்
இவன் ஆதி மூலம் -இவனை நினைத்து புறம்பு உள்ளார் வேறுபடுத்த –
உபகாரகம் நினைத்து ஹர்ஷர் ஆகிறார்
இருந்தான் கண்டு கொண்டே
பாரமாய பழவினை பற்று அறுத்து
வைத்ததன்றி என்னுள் புகுந்து இருந்தான் -போலே
————————————————————————————————————————————————————————————
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply