அறிந்துஅ றிந்து, தேறித் தேறி,
யான்எனது ஆவியுள்ளே
நிறைந்த ஞான மூர்த்தி யாயை
நின்மல மாகவைத்து,
பிறந்தும் செத்தும் நின்றுஇடறும் பேதைமை
தீர்ந்தொழிந்தேன் ;
நறுந்து ழாயின் கண்ணி அம்மா!
நான்உனைக் கண்டுகொண்டே.
பொ-ரை : ‘வாசனை பொருந்திய திருத்துழாய் மாலையைத் தரித்த அம்மானே! நான் உன்னை நெஞ்சாலே கண்டுகொண்டு அறிந்து அறிந்து தெளிந்து தெளிந்து யான் என் உயிரினுள்ளே நிறைந்திருக்கின்ற ஞானமே திருமேனியாகவுடைய உன்னை, ஐயம் திரிபுகள் அறும்படி வைத்துப் பிறப்பதும் சாவதுமாய் நிலைபெற்றுத் தடுமாறுகின்ற அறிவின்மை தீர்ந்துவிட்டேன்,’ என்கிறார்.
வி-கு : ‘கண்ணி அம்மா! நிறைந்த ஞான மூர்த்தியாயை உன்னை நான் கண்டுகொண்டு அறிந்து தேறி அறிந்து தேறி யான் எனதாவியுள்ளே நின்மலமாக வைத்து இடறும் பேதைமை தீர்ந்தொழிந்தேன்,’ எனக் கூட்டுக. நின்மலம் – மலம் அறும்படி. தீர்ந்தொழிந்தேன் – ஒரு சொல்.
ஈடு : ஏழாம் பாட்டு, 1‘நீர் நம்மைப் போர இன்னாதாகாநின்றீர்; உமக்கு ஒன்றும் உதவிற்றிலேமோ? நாம் ஒன்றும் உதவிற்றிலோம் என்றேயோ நீர் நினைத்திருக்கிறது?’ என்ன, ‘சிறிது செய்தமை உண்டு; இந்த அமிசத்தைப் பெற்றேன்; எனக்கு இதனால் போராது,’ என்கிறார்.
அறிந்து தேறி அறிந்து தேறி – முதல் திருவாய்மொழியிலே பரத்துவத்தை நினைந்தார், அது விஷயமானவாறே பிறப்பது ஒரு தெளிவு உண்டே அன்றோ? அந்தத் தெளிவும்; பின்பு, 2‘வணங்கத்தக்கவன்’ என்று அருளிச்செய்தார், அதனாலே பிறந்த ஒரு தெளிவும்; பின்பு ‘சுலபன்’ என்று கூறினார், ‘அங்ஙனம் கூறியதால் பிறந்ததொரு தெளிவும்; பின்பு, ‘குற்றங்களைப் பொறுப்பவன்’ என்று கூறினார், அதனாலே பிறந்தது ஒரு தெளிவும் இப்படிக் கிரமத்திலே அன்றோ திருவாய்மொழி முடிய நடந்தது? 3இவையெல்லாம் மானச அனுபவங்களே அன்றோ?
1அன்றிக்கே, நீ மயர்வு அற மதிநலம் அருளுகையாலே, மிக்க இறைநிலை, 2மனன் உணர்வு அளவு இலன், பொறி உணர்வு அவையிலன், எதிர் நிகழ் கழிவினும் இனன் இலன், மிகுநரை இலன், உணர் முழுநலம், இனன்’ என்று அறிய, அதனாலே பிறப்பது ஒரு தெளிவும், அந்தப் பரமாத்தும சொரூபத்தினுடைய யாதாத்மியம், 3‘அது நமது விதி வகையே,’ 4‘நெஞ்சினால் நினைப்பான் எவன் அவன் ஆகும் நீள்கடல் வண்ணன்’ என்கிறபடியே, அர்ச்சாவதார பரியந்தமான அடியார்கட்குப் பரதந்திரப்பட்டவனாய் இருத்தல் என்று அறிய, அதனாலே பிறப்பது ஒரு தெளிவும்; உயிர்நிலை, 5‘சென்று சென்று பரம்பரமாய் யாதும் இன்றித் தேய்ந்து அற்று, நன்று தீது என்று அறிவு அரிதாய் நன்றாய் ஞானம் கடந்திருக்கும்’ என்று அறிய, அதனாலே பிறந்தது ஒரு தெளிவும், அதனுடைய யாதாத்மியம், 6‘சிறுமாமனிசராய் என்னை ஆண்டார் இங்கே திரிய, நறு மா விரை நாண்மலர் அடிக்கீழ்ப் புகுதல் உறுமோ?’ என்றும், 7‘தம்மடியார் அடியோங்களே’ என்றும் ‘அடியார்கட்கு அடிமையாய் இருத்தல் எல்லையாய் இருக்கும்’ என்று அறிய, அதனாலே பிறந்ததொரு தெளிவும்; தக்க நெறியின் சொரூபம், 8‘நாகணைமிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு’ என்று அறிய, அதனாலே பிறந்தது ஒரு தெளிவும்; அதனுடைய யாதாத்மியம், அறிவின் காரியமாய் அதிகாரி விசேஷணமான பிரபத்தியையும் உபாயமாகக் கொள்ளப் பொறாதது என்று அறிய, அதனாலே பிறந்ததொரு தெளிவும்; பல சொரூபம், 9‘ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி, வழுவிலா அடிமை செய்கை’ என்று அறிய, அதனாலே பிறந்தது ஒரு தெளிவும்; அதனுடைய
யாதாத்மியம், 1‘உன்றன் திருவுள்ளம் இடர் கெடுந்தோறும் நாங்கள் வியக்க இன்புறுதும்’ என்று அறிய, அதனாலே பிறப்பதொரு தெளிவும்; விரோதி சொரூபம், 2‘யானே என்றனதே என்று இருக்கை’ என்று அறிய, அதனாலே பிறந்தது ஒரு தெளிவும்; அதனுடைய யாதாத்மியம், ‘கைங்கரியத்தில் அகங்காரத்தை உட்கொண்டதான மமகாரம்’ என்று அறிய, அதனாலே பிறப்பது ஒரு தெளிவும் என்று பொருள் கூறலுமாம்.
யான் – இப்படி நீ அறிவிக்க அறிந்த யான். எனது ஆவியுள்ளே – எனது மனத்தினுள்ளே. நிறைந்த ஞான மூர்த்தியாயை – நிறைந்த ஞானமே உருவமான உன்னை. என்றது, ‘பெற்ற அளவினைக் கொண்டு மனம் நிறைவு பெற்றவனாக ஒண்ணாதபடியான வேறுபட்ட சிறப்பினையுடைய உன்னை’ என்றபடி. நின்மலமாக வைத்து – குற்றம் அறும்படியாக நினைத்து. பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்ந்தொழிந்தேன் – சாவது பிறப்பதாய்க் கொண்டு தடுமாறுகிற அறிவு கேடு தவிரப் பெற்றேன்.
என்றது, ‘அறிவு பிறந்த பின்பு, ‘இந்நின்ற நீர்மை இனியாம் உறாமை’ என்று விரும்பிய அது பெற்றேன்’என்றபடி. நறுந்துழாயின் கண்ணி வேந்தே – வைத்த வளையத்தைக் காட்டி அவ்வடிவிலே குருகுலவாசத்தைப் பண்ணுவித்து அறிவு பிறப்பித்தாயிற்றுத் தனக்கு ஆக்கிக் கொண்டது. 1இவ்வறிவு பிறக்கைக்கு அவன் இட்ட பச்சை இருக்கிறபடியைத் தெரிவித்தபடி.-‘இவ்வறிவு பிறந்தமைக்கு’ என்று தொடங்கும் வாக்கியம், ரசோக்தி. ‘பச்சை’
என்றது, சிலேடை : திருத்துழாய் என்பதும், உபகாரம் என்பதும் பொருள்.– நான் உன்னைக் கண்டுகொண்டு – உன் இனிமையை அறிந்த நான், எல்லையற்ற இனியனான உன்னைக் கண்டுகொண்டு. ‘நறுந்துழாயின் கண்ணி அம்மா! நான் உன்னைக் கண்டுகொண்டு, அறிந்து அறிந்து தேறித் தேறி யான் எனது ஆவியுள்ளே நிறைந்த ஞானமூர்த்தியாயை நின்மலமாக வைத்து, பிறந்தும் செத்தும் நின்று இடறும் 2பேதைமை தீர்ந்தொழிந்தேன்! இது நான் பெற்ற அளவு,’ என்கிறார்.
இத்திருப்பாசுரம் எச்சமாய்க் கிடக்கிறது; அதாவது, ‘பேதைமை
தீர்ந்தொழிந்தேனித்தனை; மார்பும் மாலையுமான வடிவழகைக்
கண்ணிட்டுக் காணப் பெற்றிலேன்,’ என்பது எச்சம்.
இத்திருவாய்மொழியிலே முன்னும் பின்னும் விஸ்லேஷமாயிருக்க,
இத்திருப்பாசுரம் பிரீதியாகச் சொல்லுமது பிரகரணத்திற்கு முரண்
ஆகையாலே, பிரகரணத்திற்குச் சேர விருப்பம் முற்றுப் பெறாத தன்மையாக
அவதாரிகை அருளிச்செய்கிறார், ‘இந்த அமிசத்தைப் பெற்றேன்,’ என்று.
என்றது, ‘மயர்வற மதிநலம் அருள, அதனாலே, இறப்பது பிறப்பதான அறிவு
கேடு தவிரப் பெற்றேன்,’ என்றபடி.
2. ‘வணங்கத் தக்கவன்’ என்றது, ‘வீடுமின் முற்றவும்’ என்ற
திருவாய்மொழியைத் திருவுள்ளம் பற்றி – ‘பத்துடையடியவர்’ என்ற
திருவாய்மொழியைக் கடாக்ஷித்து ‘சுலபன்’ என்கிறார். ‘குற்றங்களைப்
பொறுப்பவன்’ என்றது, ‘அஞ்சிறைய’ என்ற திருவாய்மொழியைத்
திருவுள்ளம் பற்றி.
3. ‘இப்படித் திருவாய்மொழிதோறும் அறிவும் தெளிவுமாய்ச் சென்றால்
அனுபவம் உண்டேயன்றோ? அங்ஙனமிருக்கக் கூப்பிடுகிறது என்?’ என்ன,
அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘இவையெல்லாம்’ என்று தொடங்கி.
இனி, ‘அறிந்து அறிந்து தேறித்தேறி’ என்றதனை அர்த்த பஞ்சக பரமாக்கி
வேறும் ஒரு கருத்து அருளிச்செய்கிறார், ‘அன்றிக்கே’ என்று தொடங்கி.
என்றது, ‘பரம்பொருளின் சொரூபத்தை அறிந்து தேறி, அந்தப்
பரம்பொருளின் யாதாத்மியத்தையறிந்து தேறி’ என்றபடி. இப்படியே, மற்றை
நாலுக்கும் கண்டுகொள்க. யாதாத்மியம் – அதனுடைய முடிவின் எல்லை;
அதனுடைய உண்மை நிலை.
2. திருவாய். 1. 1 : 2.
3. திருவாய். 10. 6 : 1.
4. திருவாய். 3. 6 : 9.
5. திருவாய். 8. 8 : 5.
6. திருவாய். 8. 10 : 3.
7. திருவாய். 3. 7 : 10.
8. திருவாய். 5. 10 : 11.
9. திருவாய். 3. 3 : 1.
. திருவாய். 10. 3 : 9.
2. திருவாய். 2. 9 : 9.
ஆக, பரம்பொருளின் சொரூபத்தை அறிதலாலது, சித்து அசித்து
இவற்றைக்காட்டிலும் வேறுபட்டிருப்பது என்று அறிதல்; பரம்பொருளின்
யாதாத்மியத்தை அறிதலாவது, ஆஸ்ரிதபாரதந்திரியம் என்று அறிதல்.
ஜீவாத்துமாவின் சொரூபத்தை அறிதலாவது, ஞான ஆனந்தங்கள்
தொடக்கமானவை என்று அறிதல்; ஜீவாத்துமாவின் யாதாத்மியத்தை
அறிதலாவது, அவன் அடியார்கட்கு அடிமைப்பட்டிருத்தல் என்று அறிதல்.
உபாயத்தின் சொரூபத்தை அறிதலாவது, அவனே மோக்ஷத்திற்குச்
சாதனமாக இருப்பவன் என்று அறிதல்; உபாயத்தின் யாதாத்மியத்தை
அறிதலாவது, இவன் செய்யும் பிரபத்தியையும் சாதனமாகப் பொறாது தானே
சாதனமாக இருப்பவன் என்று அறிதல்; பலத்தின் சொரூபத்தை அறிதலாவது,
கைங்கரியம் புருஷார்த்தம் என்று அறிதல்; பலத்தின் யாதாத்மியத்தை
அறிதலாவது, தனக்கும் அவனுக்கும் பொதுவாக இல்லாமல், அவனுக்காகவே
செய்தல் என்று அறிதல்; விரோதி சொரூபத்தை அறிதலாவது, அகங்கார
மமகாரங்கள் என்று அறிதல்; விரோதி யாதாத்மியத்தை அறிதலாவது,
கைங்கரியத்தில் அகங்கார மமகாரங்கள் என்று அறிதல் எனக் கொள்க.
ஆற்றாமை மிக்கு கதறுகிறார்
பரி பூரணன் அவன் தனக்கு ஆர்த்தி மிக்கு இருக்க
போக இன்னாராக பேசுகிறீரே
ஒன்றுமே செய்ய வில்லையா என்ன
சிறிது செய்தது உண்டு இத்தால் போதாது என்கிறார் இதில் –
முன்பு ஒன்றும் செய்ய வில்லையே மட்டுமே சொல்லி
முழுவதும் கொடுக்காமல் ஞானம் மட்டும் கொடுத்து –
யாதாம்ய ஞானம் அதிலும் உள்ளபடியான ஞானம் கொடுத்து –
சாமான்ய விசேஷ ஞானம் இரண்டும் கொடுத்து
அறிந்து அறிந்து தேறி தேறி –
இரண்டு தடவை –
அறிந்து -ஞானம் –தேறி உள்ளபடியான ஞானம் -யாதாம்ய ஞானம்
தத்வ த்ரயம் ஞானம் அறிந்து உள்ளபடி ஞானம் அறிந்து –
யார் எனது ஆவியின் உள்ளே ஞான மூர்த்தியாக இருக்கிற உன்னை
நெஞ்சுள் வைத்து
பேதைமை தீர்ந்து ஒழிந்தேன் -அறியாமை தீர்ந்து
நல்ல துழாய் கண்ணி அணிந்த உன்னை கண்டு கொண்டு -பேதைமை தீர்ந்து ஒழிந்தேன்
36 திருவாய்மொழி ஆன பின்பு –
திருக் கல்யாண குணங்கள் -காட்டி
பரத்வம் முதலில் அனுசந்தித்து -தெளிவு ஏற்பட்டு
பஜநீயத்வம் அனுசந்தித்து தெளிவு அடைந்து –
சுலபன் பத்துடை அடியவருக்கு எளியவன் -அறிந்து
அபராத சகாயத்வன் அஞ்சிறை மட நாராய் அறிந்து பற்ற தெளிந்து
க்ரமத்தில் திருவாய்மொழி முடிய நடந்தது
மானச அனுபவம் இ றே –
அன்றிக்கே
அர்த்த பஞ்சக ஞானம் -தெளிவு –
ஆசார்ய ஹிருதயம் சூர்ணிகை –
நம்பிள்ளை விளக்கி காட்டி இங்கே –
பர ஸ்வரூபம் மனன் உணர்வு அறியிலன் பொறி உணர்வு அறியிலன்
விதி வகையே -நம்மது -ஆஸ்ரித பாரதந்த்ர்யம்
நெஞ்சினால் நினைப்பவன் எவன் -அர்ச்சை அவதார பர்யந்தம்
விதி சூழ்ந்ததால் -பகவத் கிருபை
சௌலப்யம் -அர்ச்சாவதார பர்யந்தம்
நாம் இட்ட வழக்காய் -பர ஸ்வரூபம்
அடுத்து ஜீவ ஸ்வரூபம்
சென்று சென்று -பரண் பரமாய் அன்ன மய –ஆனந்த மய -பகவத் சேஷத்வம்
தேறி -யாதாம்ய சிறு மாநிசராய் இங்கே திரிய பாகவத சேஷத்வம் பர்யந்தம் –
அடியார் தம் அடியார் அடியோங்களே
உபாய ஸ்வரூபம்
நாரணன்மிசை நம்பிரான் சரணே சரண்
எதிர்பார்க்காமல் -யாதம்ய ஞானம்
சக காரி நைரபெஷ்யம் -சைதன்ய கருத்யம் -முமுஷுப்படி -அதிகாரி விசேஷணம்
நியாய சாஸ்திரம் -மூலமும் அறிந்து –
சேதனன் இருந்து அனுக்ரகம் செய்பவன்
கை நீட்டுபவருக்கு தானம்
முன்னே சென்று கை நீட்டுவதை எதிர்பார்க்கிறார் குறையா –
ஸ்வீகாரம் பொறாத -எம்பெருமான் –
பல ஸ்வரூபம் ஒழிவில் காலம் எல்லாம் உடனே மன்னி வழு இலா அடிமை
தனைக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே யாதாம்ய ஞானம் –
உன்னுடைய ஹ்ருதய இன்பம் கோபிமார் வார்த்தை போலே -யாதாம்ய ஞானம்
விரோதி ஸ்வரூபம் யானே என் தனதே என்று இருக்கை
கைங்கர்யம் யானே நீ என் உடைமையும் நீயே அஹங்கார கர்ப்பம் இன்றி –
நெய் உண்ணாமை பால் உண்ணாமை –
தள்ள வேண்டிய அம்சம்
ஸ்வ தந்த்ரம் நீக்கி அறிந்து
நான் செய்தேன் என்ற எண்ணம் இன்றி
அர்த்த பஞ்சக ஞானம் யதாம்ய ஞானம்
மேன்மை ஆஸ்ரித பரதந்த்ரம்
பகவத பாகவத சேஷத்வம்
அவனே உபாயம் -பற்றுதலும் உபாயம் இல்லை
கைங்கர்யம் -களை அறுத்து
ஸ்வ தந்த்ரம் புத்தி -நன் செய்தேன் என்ற எண்ணம் இன்றி
ஆவி உள்ளே நிறைந்த ஞான மூர்த்தியான உன்னை
பரி பூர்ண ஞானம் -யாதம்ய ஞானம் கொடுத்த பின்பு
வேற என்ன வேண்டும் –
உன்னை அடைய வேண்டும்
விசத தமமாக அனுபவித்து
பிறந்தும் -செத்தும் -பேதைமை
இனி யாம் உறாமை -வேண்டுமே
சம்சாரம் நீக்கி
அறிவு கேட்டை தவிரப் பெற்றேன் –
காரணம் துழாய் மாலை சாதிக் கொண்டு உள்ளும் ஸ்வாமி
அறிவு பிறக்க அவன் இட்டபச்சை -இது தானே
உபகாரம் பச்சை -துழாய்
வைத்த வளையத்தை காட்டி
குருகுல வாஸம் பண்ணும்படி செய்து
போக்யதை அறிந்த நான் -உன்னைக் கண்டு கொண்டு
பேதைமை சேற்று ஒழிந்தேன்
அறிந்து அறிந்து தேறி தேறி -அந்வயம்
செய்த உபகார
கண்டு கொள்ள வைத்தே
அர்த்த பஞ்சக ஞானம்
ஞானம் ஹிருதயம் வைத்து
சம்சாரம் நீக்க நசை கொண்டு
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.