1-பாரோர் புகழ மாலை –
க்யாதி லாப பூஜை அபேஷை அற மலர் நாடி ஆட் செய்ய -ஆசார்ய ஹ்ருதயம் சூரணை -205-
நாடு புகழும் பரிசினால் நன்றாக -என்றும் திருப்பாவை -27
வாழ்வார் வாழ்வு எய்தி ஞாலம் புகழவே -திருவாய்மொழி 3-3- ஒழிவில் காலம் பல சுருதி –
புகழ -மகிழ -உலகெல்லாம் மகிழும்படி
பாரோர் புகழப் படிந்து நீராடப் போதுவீர் போதுமினோ -என்று அந்வயித்து
நாராயணன் நமக்கே பறை தருவான் பாரோர் புகழப் படிந்து பறை தருவான் -என்று அந்வயித்து
படிந்து -விதேயனாகி –
ஆழியான் அருள் தருவான் அமைகின்றான் அது நம் விதி வகையே -10-6-1-
அது நம்முடைய பாக்ய அனுகுணமாக இ றே -ஈட்டு ஸ்ரீ ஸூ க்தி -பூர்வர்கள்
எம்பெருமானார் -நிர்வாஹம் நாம் வித்திதபடி செய்வானாய் இருந்தான் என்கிறார்
நமது சொல் வகையே என்னாது விதி வகையே என்பான் என் என்னில் –
வித்யதிக்ரமத்தில் ப்ரத்யவாயத்துக்கு அஞ்சுவாரைப் போலே அஞ்சா நின்றான் –
அது போலே படிந்து பறை தருவான் -நாம் கீறின கீற்றைக் கடவாமே நாம்
விதித்தபடியே தருவான் -அப்படி தரும்படியைக் கண்டு பாரோர் புகழாது இருக்க முடியாது –
நிரந்குச ஸ்வ தந்த்ரன் -இப்படி எளிமையாக அவதரித்து அவர்கள் விதித்த படி செய்வதே
என்று புகழ வேணும் என்னும் பொருள்
—————————————————————————————–
2-உய்வு மாலை–
உய்வுமாறு எண்ணி –
ஆறு -திருக்கச்சி நம்பி ஆறு வார்த்தை எண்ணி
கண்ணா பிரான் விஷயமாக ஆறு வார்த்தைகள் –
1-வதுவை வார்த்தை
2-நெய் உண் வார்த்தை
3-வெண்ணெய் வார்த்தை
4-நடந்த நல் வார்த்தை
5-மெய்ம்மைப் பெரு வார்த்தை
6-கஞ்சன் விடுத்தான் என்பதோர் வார்த்தை –
1—வதுவைவார்த்தை யுள் ஏறு பாய்ந்ததும் -திருவாய்மொழி -5-10-2-ஸ்ரீ ஸீதா விவாகத்துக்கு
வில் முறித்தால் போலே -எருது ஏழையும் அடர்த்துப் பின்னை தோள் மணந்தது அளவும்
இவ்வார்தையில் அனுசந்தேயம்
2—நெய் உண் வார்த்தையுள் அன்னை கோல் கொள்ள -5-10-3-
குறி அழிந்து கிடைத்ததை கண்ட யசோதி நீராம் இது செய்தீர் என்று சிறு கோலை எடுக்க
தாமரைக் கண்கள் நீர் மல்க நிற்க –
அழுகையும் அஞ்சி நோக்கும் அந்நோக்கும் அணி கொள் செஞ்சிறுவாய்
நெளிப்பதும் தொழுகையும் ஆனான் -இந்த விஷயம் நெய் உண் வார்த்தையில் அனுசந்தேயம்
வெண்ணெய் வார்த்தை –
ஆய்ச்சியாகிய யன்னையால் யன்று வெண்ணெய் வார்த்தசியுள்
சீற்றம் உண்டு அழு கூத்த வப்பனாம் நம் கண்ணன் –
கண்ணா நீயா வெண்ணெய் திருடினாய் என்று கேட்டாரும் இல்லை
மடம் மொழுகுபவன் -பிரசித்தம் ஆனதும் தன்னை சொல்வதாக எண்ணி அழுத விருத்தாந்தம் போலே
கழவு பிரசங்கம் ஆனதுமே தனது களவை தானே வெளி இட்டுக் கொண்டான் என்கிற விசேஷமே
வெண்ணெய் உண் வார்த்தை யில் அனுசந்தேயம் –
நடந்த நல் வார்த்தை –
தாயம் செறும் ஒரு நூற்றுவர் மங்க வோர் ஐவர்க்காய் தேசம் அறிய ஓர் சாரதியாய் சென்று
சேனையை நாசம் செய்திட்டு நடந்த நல் வார்த்தை இது –
கண்ணனாய் தூதவ சாரதி போல பல செய்து பின்பு தன்னடி சோதிக்கு நடந்த நல் வார்த்தை
களி மலர் துழாய் அலங்கல் கமழ முடியன் கடல் ஞாலத்து அளி மிக்கான் –
எதிரம்பு கோத்து நலிய நினைப்பாரும் -அவஜானந்தி மாம் மூடா -அவமானம் பண்ணுவார்
மலிந்த நாடு என்பதால் தன்னிடம் போய் சேர்ந்தானே என்று அன்பர்கள் உகக்கும் படி
தன்னடி சேர நடந்ததை நல் வார்த்தை என்னக் குறை இல்லையே
மெய்ம்மைப் பெரு வார்த்தை –
செம்மை உடைய திருவரங்கர் தாம் பணித்த மெய்ம்மைப் பெரு வார்த்தை -யாவது
மாயன் அன்று ஐவர் தெய்வத் தேரினில் செப்பிய கீதையின் சாரமான சர்மா ஸ்லோகம் ஆகிற வார்த்தை
கண்ணபிரான் வார்த்தை திருவரங்கர் தாம் பணித்த வார்த்தை
வள வெழும் தவள மாட மதுரை மா நகரம் தன்னுள்
கவளமால் யானை கொன்ற கண்ணனை அரங்கமாலை -என்றும் –
கொண்டால் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன்
என் உள்ளம் கவர்ந்தானை அண்டர் கோன் அணி அரங்கன் -என்றும்
பெரியாழ்வார் வெண்ணெய் விழுங்கி வெறும் கலத்தை பதிகம் நிகமனப் பாசுரத்தில்
வண்டு களித்து இரைக்கும் பொழில் சூழ் வரு புனல் காவேரி தென்னரங்கன்
பண்டவன் செய்த கிரீடை எல்லாம் -என்றும் –
ஆண்டாளும்
கண்ணாலம் கோடித்து கன்னி தன்னைக் கை பிடிப்பான்
திண்ணார்ந்து இருந்த சிசுபாலன் தேசம் அழிந்து
அண்ணாந்து இருக்கவே ஆங்கு அவளைக் கைப்பிடித்த பெண்ணாளன்
பேணுமூர் பேரும் அரங்கமே -என்றும் –
அநாதி காலம் பாபங்களை கண்டு நீ பட்ட பாட்டை அவை தான் படும்படி பண்ணுகிறேன்
இனி உன் கையிலும் உன்னைக் காட்டித் தரேன் -என் உடம்பில் அழுக்கை நானே
போக்கிக் கொள்ளேனோ -பாபங்களை நான் பொறுத்துப் புண்ணியம் என்று
நினைப்பிடா நிற்க நீ சோகிக்க கடவையோ -முமுஷுப்படி -ஸ்ரீ ஸூ க்தி
கண்ணன் வார்த்தையே திருவரங்கர் தாம் பனித்த மெய்ம்மைப் பெரு வார்த்தை
கஞ்சன் கருக்கொண்டு நின் மேல் கரு நிற செம்மயிர் பேயை
வஞ்சிப்பதற்க்கு விடுத்தான் என்பதோர் வார்த்தையும் உண்டு -பெரியாழ்வார் திருமொழி -2-8-6-
என்பதோர் வார்த்தை உண்டு -என்று காஞ்சி ஸ்வாமியை தட்டி எழுப்பி இத்தை ஆறாவது
வார்த்தையாக சேர்த்துக் கொள்ள நியமிப்பது போலே அமைத்த ஸ்ரீ ஸூக்தி
தன்னைக் கொல்லப் பிறந்த கண்ணன் என்னும் பெரும் தெய்வம்
சீதக் கடலுள் அமுதன்ன தேவகி கோதைக் குழலாள் யசோதைக்குப்
போத்தந்த பேதைக் குழவியாய் திருவாய்ப்பாடியிலே ஒளித்து வளருகின்றது
விரோதி நிரசன வார்த்தையை ஆழ்வார் யசோதை சொல்வதாக அனுசந்தித்து அருளிய ஸ்ரீ ஸூ க்தி
இந்த ஆறு வார்த்தையும் ரசிகர்களுக்கு நித்ய அனுசந்தேயம் -இவையே உய்யும் ஆறு
————————————————————————————————-
3-செல்வமாலை –
வள்ளல் பெரும்பசுக்கள் நீங்காத செல்வம் –
கைம்மாறு கருதாமல் மஹா அர்த்தங்களை வர்ஷிப்பவர்கள்
பதினான்கு வித்யைகளையும்
பஞ்ச கவ்யம் போல அர்த்த பஞ்சக ஞான அர்த்தங்களையும் -இவையே நீங்காத செல்வம்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முளை பற்றி வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் –
தேங்குதல் -தயங்குதல் -தியங்குதல் -தத் வித்தி ப்ராணிபாதேன பதி பிரச்நேன சேவையா –
என்று விதித்த படி குருகுல வாசம் செய்து தயங்காமல் சேவை செய்து
சீர்த்த நான்கு முலைகள் -1-பகவதாஜ்ஞ்ஞா பரிபாலனம் என்னும் நினைவு
2-சிஷ்யர்கள் வருந்தி வேண்டி கொள்வதால் ஆதல் -3-துர்கதி கண்டு சஹிக்காமை
யாதல் -4-சொல்லாமல் தாங்கள் தரிக்காததால்
பற்றி வாங்க குடம் நிறைக்கும் –
அர்ஜுனன் -சிஷ்யஸ் தேஹம் சாதிமாம் த்வாம் பிரபன்னம் -என்ற ஒரு சொல் கேட்டதுயம்
அத்யாயம் அத்யாயமாக சுரந்த கீதாசார்ய அமுதம் போலேயும் –
நாரதம் பரிப ப்ரச்ச வால்மீகிர் முநி புங்கவம் -ஸ்ரீ இராமாயண அமிர்தம்
கறந்த நாரத ரிஷி போலேயும் –
மைத்ரேய பரிப ப்ரச்ச ப்ரணி பத்யா பிவாத்யச -என்கிறபடியே மைத்ரேயர் கேட்டவாறே
கறந்த பராசர பகவான் போலேயும்
கடல்வாய் சென்று மேகம் கவிழ்ந்து இறங்கி கதுவாய்பட நீர் முகந்தேறி
எங்கும் குடவாய்ப்பட நின்று மழை மொழியும் -குடம் = பாத்ரம்
ஆசார்ய தயா பாத்ர பூதர்களான சிஷ்யர்கள்
நிறைக்கை -தம்மோடு ஒக்க ஞான பூர்த்தி உடையவர்களாய்
இப்படி செய்ய வல்ல வள்ளல் பெரும் பசுக்கள் -நீங்காத செல்வம் நிறைந்து விடுமே
ஞான பக்தி செல்வம் நீங்காது -அழியாமல் குறையாமல் -நிறையும் என்றபடி
—————————————————————————————————
4-மகிழ் மாலை-
நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்து –
நீராடப் போதுவீர் போதுமினோ -என்று முதலில் அருளி
மேகத்தை -நாங்களும் மார்கழி நீராட உலகினில் பெய்திடாய் -என்று இதில் அருளி
குள்ளக் குடைந்து நீராட -என்றும் அருளி
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை இப்போதே எம்மை நீராட்டு என்றும் அருளி
மாலே மணி வண்ணா மார்கழி நீராட -என்றும் அருளி
பொய்கை கரைக்கு போகாமல்ஸ்ரீ நந்தகோபர் திருமாளிகை சென்று
ஸ்ரீ நப்பின்னை கொங்கை மேல் வைத்த மலர் மார்பனை திவ்ய தம்பதிகள் உடன்
உன் தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட் செய்வோம்
நீராட -கிருஷ்ண சம்ச்லேஷம் -கலவியை சுனையாடல் சொல்வது போலே
ஏஷ ப்ரஹ்ம ப்ரவிஷ்டோச்மி க்ரீஷ்மே சீதமிவ ஹ்ரதம் -என்று
பகவத் சம்ச்லேஷத்துக்கு கிரீஷ்ம காலத்திலே குளிர்ந்த மடுவில் படிவத்தை திருஷ்டாந்தமாக சொல்வது போலே
மார்கசீர்ஷம் உறுப்பான மார்க்கம் -தலையான உபாயம் -காலை நன் ஞானத்துறை
படிந்தாடி -திரு விருத்தம் -சதாசார்யா சன்னதியிலே அவஹாகிப்பது
இதை விட நல்லது ஆசார்ய அபிமானமே
ஸ்வ அபிமானத்தாலே ஈஸ்வர அபிமானத்தை குலைத்துக் கொண்ட இவனுக்கு
ஆசார்ய அபிமானம் ஒழிய கதி இல்லை –
ஸ்வ ஸ்வா தந்த்ர்யா பய த்தாலே பக்தி நழுவிற்று
பகவத் ஸ்வா தந்த்ர்யா பயத்தாலே பிரபத்தி நழுவிற்று
ஆசார்யனையும் தான் பற்றும் பற்று அஹங்கார கர்ப்பம் ஆகையாலே
காலன் கொண்டு மோதிரம் இடுமோபாதி ஆசார்ய அபிமானமே உத்தாரகம் -ஸ்ரீ வசன பூஷண ஸ்ரீ ஸூ க்தி
இந்த ஆசார்ய அபிமானம் படிந்து விட்டால் மகிழ்ச்சிக்கு குறை ஏது
இதையே -நாங்களும் மகிழ்ந்து மார்கழி நீராட -என்று அருளுகிறாள்
மகிழ்வு மாலை –எண்ணாமல் மகிழ் மாலை -என்றது
மகிழ் மாலை மார்பினரான நம் ஆழ்வாரை -ஆழி மழைக் கண்ணா –
லஷ்மி நாதாக்ய சிந்தௌ -சடரி புலஜத -ப்ராப்ய காருண்ய நீரம் -இத்யாதி படி
நம் ஆழ்வார் காளமேகம் -ஸ்ரீ ய பதி கடல் -கருணை நீர் மழை -நாதமுனி மலை –
உய்யக் கொண்டார் மணக்கால் நம்பி அருவிகள் –யமுனைதுறைவர் ஆற்றிலே பெருகி
எம்பெருமானார் ஏரி -வீராணம் -74 மதகுகள் வழியே சிம்ஹாச நாதபதிகள் வழியாக
சம்சார சேதனர் பக்கல் இடைவிடாது பெருகிக் கொண்டு இருப்பதால்
நாம் எல்லாம் மகிழ்ந்து மார்கழி நீராடப் பெறுகிறோம்
—————————————————————————————————–
5-பிழை மாயும் மாலை –
போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்
வேதாந்த விழுப் பொருள் -ப்ரஹ்ம வித்யை அடைவதற்கு முன்பும் பின்பும்
பூர்வ பாபங்களின் விநாசமும் -உத்தர பாபங்களின் அலேபமும்
——————————————————————————————————-
6-குளிர் மாலை
அரி என்ற பேரரவம் -உள்ளம் புகுந்து குளிர்ந்து
முனிவர்களும் யோகிகளும் -பக்தைர் பாகவதைஸ் சஹ -வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர் -திருவாய்மொழி –
குண அநுபவ நிஷ்டர் -கைங்கர்ய நிஷ்டர்
அரி -நாராயணன் -சிங்கம் -விரோதி மூன்று பொருள்கள் உண்டே
அந்தியம் போதில் அரி உருவாகி அரியை அழி-யசோதை இளம் சிங்கத்தை -விரோதி நிரசன்னா சீலம்
ஹரிர் ஹரதி பாபாநி -மற்றை நம் காமங்கள் மாற்று என்று கைங்கர்ய விரோதியையும் போக்கவும் –
ஸ்வரூப பிராப்ய பிராபக மூன்று விரோதியும் போக்கவும்
ப்ரகர்ஷயிஷ்யாமி -பிரபல விரோதி பிராப்ய விரோதி தானே –
——————————————————————————————————–
7-தேச மாலை –
தேசமுடையாய் -தேசம் -தேஜஸ் இரண்டு பொருளும் விவஷிதம்
பகவான் -ஞான சக்தி பல ஐஸ்வர்ய வீர்ய தேஜஸ்
அசஹாய சூரத்வமே தேஜஸ்
மண்ணாட்டிலாராகி எவ்விழி விற்றானாலும் ஆழி யங்கை பேராயற்கு ஆளாம் பிறப்பு
உண்ணாட்டு தேசன்றே -பெரிய திருவந்தாதி
பண்டை நாளிற் பிறவி உண்ணாட்டு தேசு இ றே -ஆசார்ய ஹ்ருதய ஸ்ரீ ஸூக்தி
பண்டை நாளில் பிறவி என்றது திருவாய் மொழி 9-2 பதிகம் –
பல் படி கால் குடி குடி வழி வந்தாட் செய்யும் தொண்டர் -உன் பொன்னடி கடவாதே
வழி வருகின்ற அடியார் -தொல் வடிமை வழி வரும் தொண்டர் -கைங்கர்ய
ரூபமான குடிப்பிறப்பு -இத்தை தேஜஸ்
இனி தேசம் உபய விபூதி -பொன்னுலகு ஆளீரோ புவனி முழுது ஆளீரோ –
அருளார் திருச் சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும்
இருளார் வினை கெட செங்கோல் நடாவுதீர் -என்றும் –
பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும்
அங்காதும் சோராமே ஆள்கின்ற எம்பருமான் -என்றும் –
சொல்லப்பட்ட உபய விபூதி நாயகன்
தன்னையே ஒக்க அருள் செய்து -உபய தேச வாசிகளையும் தம் கையில் உடைத்தாய்
இருக்கும் உடையவரை போலே என்ற தாயிற்று –
—————————————————————————————————
8-அருள் மாலை
ஆவா வென்று ஆராய்ந்து அருள் –
தேவாதி தேவன் -ஹா ஹா என்று அருள் செய்வான் -நான் சென்று சேவித்தால் ஆராய்ந்து
சந்தோஷத்தாலும் சங்கடத்தாலும்
நீலமேனி ஐயோ நிறை கொண்டது யென்னெஞ்சினையெ
செய்யவாய் ஐயோ என் சிந்தை கவர்ந்ததுவே போலே -சந்தோஷத்திலும் ஐயோ
குளிருக்கு அஞ்சியும் -கோபால வயோதிகருக்கு அஞ்சியும் இருக்க கடவ
ஆயர் சிறுமியர் தம்மிடம் தேடி வந்தார்களே -ஸ மஹாத்மா துர்லப -என்ன ஆச்சர்யம்
அதிசயம் என்று மகிழ்வானாம் இவர்கள் இளைய வயது பக்தி கண்டு –
ரிஷிகள் இடம் சக்கரவர்த்தி திருமகன் வருந்தி அருளியதுபோலே
ஸ்வகத ச்வீகாரத்தில் இழிந்தால் அவன் மனம் புண் படுமே –
———————————————————————————————————
9-திரு நாம மாலை –
மா மாயன் மாதவன்வைகுந்தன் என்று என்று நாமம் பலவும் நவின்று –
அது இது உது என்னலாவன அல்ல என்னை உன் செய்கை நைவிக்கும்
பொத்த உரலைக் கவிழ்த்து அதன் மேலேறித்
தித்தித்த பாலும் தடாவில் வெண்ணெய உண்பது –
கன்றுகள் ஓடச் செவியினில் கட்டெறும்பு பிடித்து இடுவது –
தாய் எடுத்த சிறு கோலுக்கு உளைந்து ஓடுவது –
அஞ்சி நோக்குவது
ஆப்புண்டு விம்மி அழுவது
ஆயனாகி ஆயர் மங்கை வேய தோள் விரும்பியது
கஞ்சனைத் தகர்த்தது
ஆழியால் அன்று அங்கு ஆழியை மறைத்து
வைதிகன் பிள்ளைகளை உடலோடும் கொண்டு கொடுத்தது போன்ற மாயங்கள் செய்தானே
லஷ்மிபதி
ஸ்ரீ வைகுண்ட பதி
ஆசார்ய பரமான –
இராமானுசன் செய்யும் அற்புதமே
மாதவன் மஹா தபஸ்வி
வைகுண்ட ப்ரதாயகன்
ஆக எம்பெருமானுக்கும் ஆசார்யாருக்கும் சாதாரணமான திருநாமங்களை நவின்றது ஆயிற்று
———————————————————————————————–
10-தேற்ற மாலை –
தேற்றமாய் வந்து திற -தெளிவாய் -இருவராய் வந்தார் -இருவராம்படி வந்தார் போலே –
செய்த வேள்வியர் -திருவாய்மொழி -5-7-5-க்ருதக்ருதராய் இருக்கும் நிலை தெளிந்த நிலை
சாஸ்த்ரிகள் தெப்பக் கரையரைப் போலே இரண்டையும் இடுக்கி பிறவிக் கடலை நீந்த
சாரஞ்ஞர் விட்டத்தில் இருப்பாரைப் போலே இரு கையும் விட்டுக் கரை காணும் காலம்
எண்ணி இருப்பர்கள் -ஸ்வ ப்ரவ்ருத்தி நிலை கை ஒழிந்து நிற்கும் நிலையே தெளிந்த நிலை -இருகையும் விட்டேனோ த்ரௌபதியைப் போலே –
சாத்ய உபாய நிஷ்டர் அன்றிக்கே ஸித்த உபாய நிஷ்டர்
காம்பறத் தலை சிரைத்து உன் கடைத்தலையில் இருந்து வாழும் சோம்பர் –
இப்படி இருப்பவளே அரும்கலம் –
உமக்கு உண்டான தெளிவு எமக்கு உண்டாம்படி வந்து வாயைத் திறந்தருள வேண்டும் –
———————————————————————————————–
11-பொருள் மாலை –
எற்றுக்குறங்கும் பொருள் –
ச்டம்சாரிகள் உறக்கம் தமோ குணத்தினால் –
அவன் யோக நித்ரை செய்வது போலே
நடந்த கால்கள் நொந்தவோ –கிடந்தவாறு -திருச்சந்த விருத்தம் -61-
கொடியார் மாட கோளூர் அகத்தும் -பணியாயே -திருவாய்மொழி -8-3-5-
கண்கள் துஞ்சுதலே இல்லையே இவர்களுக்கு –
இது அறிந்தே கேட்ட கேள்வி
மறை நான்கின் உளாயோ –சிறு புலியூர் ..தல சயனத்தாயோ -உனதடியார்
மனத்தாயோ அறியேன் –
சம்சாரிகளின் பகலை இரவாக்கிக் கொண்டு கண் மூடி இருக்கும் வி லஷண
வ்யக்தி அல்லவோ நீ -என்கிறாள்
நாங்களும் உன்னைப் போலேவே என்பதால் கண்ணை திறக்கலாம் என்கிறார்கள் –
———————————————————————————————
12-அறிவு மாலை –
அனைத்து இல்லத்தாரும் அறிந்து –
ஏகாந்தமாக குருகைக் காவலப்பனைப் போலே ரகஸ்யமாக அனுபவிக்கிறாய்
வேறே புறம்பே அதிகாரி இல்லை என்பதால் -திருவாய்ப்பாடியிலே பகவத் அனுபவ மகிமை
அறியாதார் யாரும் இல்லையே
அறியும் உலகு எல்லாம் யானேயும் அல்லேன் -முதல் திருவந்தாதி -22-அப்படி உலகு
எல்லாம் அறிந்த விஷயம் ஏது என்னில் –
வெறி கமழும் காம் பேய் மென் தோளி கடை வெண்ணெய் உண்டாயை
தாம்பே கொண்டு ஆர்த்த தழும்பு -பரத்வம் அறிபவர் துர்லபம் ஆனாலும் சௌலப்யம்
அறியாதார் உளரோ -இவ்வனுபவதுக்கு அதிகாரிகள் உஊராக மலிந்து இருக்க
நீயும் இத்திரளிலே சேர்ந்து அனுபவிக்கப் பாராய் –
அன்றிக்கே
முன்னம் ஸ்ரீ ராம வ்ருத்தாந்தம் -மனதுக்கு இனியானைப் பாடவும் -கிருஷ்ண குணங்களே
வெள்ளம் கோத்துக் கிடக்கும் திருவாய்ப்பாடியிலே ராம கதையை சொல்வது நீதியோ
ராமோ ராமோ என்று இருக்கும் திரு அயோத்யையில் கிருஷ்ண வ்ருத்தாந்தம் பேச்சுப்படில் சஹித்து இருப்பாரோ -என்னில் –
ராம கிருஷ்ண அபத்தத்தை அறியாதார் யாரும் இங்கே இல்லையே
சீதை வாய் அமுதம் உண்டாய் எங்கள் சிற்றில் நீ சிதையேல் –
வளை துகில்களைக் கைகொண்ட கண்ணனை -இரக்கமே லொன்றும் இலாதாய் இலங்கை
அழித்த பிரானே -என்றும் –
ஆகவே தென்னிலங்கை கோமானைச் செற்றவனும் நமது மனதுக்கு இனியவனான கண்ணனும்
ஒரே வ்யக்தி என்பதை அனைத்து இல்லத்தாரும் அறிந்து இருக்கையாலே
சீறுபாறு என்னாதே கடுக்க வந்து சேர் என்கிறார்கள் என்னவுமாம் –
————————————————————————————————–
13-கள்ளம் தவிர் மாலை
கள்ளம் தவிர்ந்து கலந்து –
ஸ்வ தந்திர புத்தியும் அந்ய சேஷத்வ புத்தியும் கள்ளம் -உன்னை கச்சிக்
கள்வா என்று ஓதுவது என் கொண்டு -பிள்ளை பெருமாள் ஐயங்கார்
பாகவத சேஷத்வ எல்லையில் இருக்கும் இந்த அதிகாரிக்கு கள்ளம் எது என்னில் –
அணியரங்கன் திரு முற்றத்து அடியார் தங்கள் இன்பமிகு பெரும் குழுவு கண்டு
யானும் இசைந்து உடனே என்று கொலோ இருக்கும் நாளே -பெருமாள் திருமொழி -1-10-
கைவல்யம் போலே தனி பகவத் அனுபவம் -அதை தவிர்ந்து எங்கள் உடன் கலந்து அனுபவிக்க வாராய் –
அன்றிக்கே
நாங்கள் புள்ளின் வாய் கீண்ட கண்ணனையும் பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்த
ராமபிரானையும் வாசியறப் பாடுமவர்கள்
வருக வருகவருக இங்கே வாமன நம்பி வருக இங்கே
கரிய குழல் செய்யவாய் முகத்து என் காகுத்த நம்பி வருக இங்கே -என்றும் –
என் சிற்றாயர் சிங்கமே சீதை மணாளா -என்றும் –
உபயத்தையும் அனுபவிக்க
நீயோ ராம அனுபவம் தேவதாந்தர அனுபவம் என்று எண்ணி கிருஷ்ண ஏக அனுபவ பரையாய்
இருக்கும் கள்ளம் தவிர்ந்து
நந்தன் மதலையையும் காகுத்தனையும் நவின்று பாடும் எங்கள் கோஷ்டியில் கலந்து
உபய அனுபவமும் பண்ணப் பாராய்
கீழே -தென்னிலங்கை கோமானைச் செற்ற மனதுக்கு இனியானை -என்றோம்
என்றும் எனக்கு இனியானை என் மணி வண்ணனை -என்று யசோதி கூரினதற்க்கு
முரணாக வேறு ஒருவனை கூறிய இவர்களோடு நமக்கு என்ன சேர்த்தி என்று
நினைத்து தனி அனுபவம் செய்து இருப்பாய் ஆகில் -இந்த அயதா பிரதிபத்தியும்
தவிர வேணும் என்கிறார்கள் –
————————————————————————————————
14-பாடல் மாலை –
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் -பங்கயக் கண்ணானைப் பாட –
மண்டோதரி -தம்ஸ பரமோ தாத சங்க சக்கர கதாதர –
திருவடியும் பெருமாளை சங்கு சக்கரத்துடன் செவித்தாரே
தாய் தந்தையர் சங்கு சக்கரத்துடன் சேவிக்க பிறந்தானே கண்ணபிரான்
உகவாதவருக்கு மறைக்க சொல்லி கேட்டதும் உடனே மறைத்துக் கொண்டான்
அப்பூச்சி காட்டுகின்றான் -எம்பார் -உய்ந்த பிள்ளை அரையருக்கு -காட்டி அருளிய ஐதீகம்
திருவாய்ப்பாடிக்கு வடமதுரையில் இருந்து எழுந்து அருளிய கண்ணனை
நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய கைத்தலங்கள் வந்து காணீரே -என்கிறாள் யசோதை பிராட்டி
அஞ்சுடர் ஆழி உன் கையகத்து ஏந்தும் அழகா -நீ பொய்கை புக்கு
நஞ்சுமிழ் நாகத்தினோடு பிணங்கவும் நான் உயிர் வாழ்ந்து இருந்தேன் –
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி –
அர்ஜுனனும் சதுர்புஜ தர்சனத்தில் பழகி இருந்தானே
நாகப் பழம் விற்கும் அவளும் சங்கு சக்கர ரேகை கண்டு -பழங்கள்
இவன் இடம் விற்பதா -நமது ஆத்ம சமர்ப்பணம் செய்ய வேணும் என்றாள் இ றே
பங்கயக் கண்ணானைப் பாட
க புண்டரீக நயன புருஷோத்தம க
பங்கய நீணயனத்தஞ்சன மேனியனே -தண் அம் தாமரைக் கண்ணனே கண்ணா –
————————————————————————————————–
15-வேறோர் பாடல் மாலை –
மாயனைப் பாட
கண்ணானை பாடல் மாலை முந்தியது இதுவோ மாயனைப் பாடல் மாலை
வெண்ணெய் திரண்டதனை வேறோர் கலத்தில் இட்டு -சிறிய திரு மடல் போலே
வல்லானை கொன்றானை மாற்றானை மாற்றழிக்க வல்லானை மாயனைப் பாட விரும்பி –
வல்லானை கொன்றானை பாடுகையாவது
ஆவரிவர் செய்வது அறிவார் -அஞ்சன மா மலை போலே மேவு சினத்தடல் வேழம்
வீழ முனிந்து -அழகாய காவி மலர் நெடும் கண்ணார் கை தொழ வீதி வருவான்
வாழ்க வாழ்க வாழ்கவே -என்றும்
கவள யானை கொம்பொசித்த கண்ணன் வாழி -என்றும்
மாற்றாரை மாற்று அழிக்க வல்லான் -மிச்சம் இன்றி முடிப்பானே பெருமாளை போலே இல்லாமல் –
மாயன் -இத்தனையும் சிரமப் பட்டு செய்யாமல் -எல்லையில் ஞானத்தன் ஞானம் அக்தே
கொண்டு எல்லா கருமங்களும் செய் எல்லையில் மாயனை கண்ணனை -திருவாய்மொழி -படி
இத்தகைய கீர்திமைகளைப் பாடி –
இனி ஆசார்ய பரமாக
யானை கொன்றது -வாரி சுருக்கி மதக் களிறு ஐந்தினையும் சேரி திரியாமல் -முதல் திருவந்தாதி -47-ஜிதேந்த்ரியர்கள்
மாற்றாரை மாற்று அழிக்கும் -நமனுக்கு இங்கி யாதொன்றும் இல்லை கலியும் கெடும்
கண்டு கொண் மின் -என்றும் -கொன்று உயிர் உண்ணும் –தீயன வெல்லாம் நின்று இவ்வுலகில்
கடிவான் நேமிப்பிரான் தமர் போந்தார் -என்றும் –
மாயனை -மண் மிசை யோனிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவனே கண்ணுற நிற்கிலும்
காணகில்லா வுலகொர்கள் எல்லாம் அண்ணல் இராமானுசன் வந்து தோன்றிய
அப்பொழுதே நண்ணரு ஞானம் தலைக் கொண்டு நாரணற்கு ஆயினரே -41-
இரும்பை பொன்னாக்குவது போலே நித்ய சம்சாரியை வெள் உயிர் ஆக்கி -நித்ய ஸூரி
பரிஷத்தில் வைக்கும் ஆச்சர்யம்
இப்படி கண்ணனையும் ஆசார்யரையும் ஏக யோக்த்யா பாடப் பாரித்த படி –
————————————————————————————————–
16-நேய மாலை
நேச நிலைக் கதம் -நீக்கு
நாயனனாய் -நடுநாயகமாய் எம்பெருமானார்
நந்தகோபன் -எம்பருமானைப் புத்ரனாக பெற்றார்
எம்பெருமானார் -எதிராஜ சம்பத்குமார் -செல்லப்பிள்ளை
உடைய ஸ்வாமிக்கு உடையவர் என்னும் திருநாமம்
கோயில் காப்பான் -திருவரங்கம் பெரிய கோயிலையும் மற்ற கோயில்களையும் காத்தரே
தென்னரங்கம் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே
மன்னிய தென்னரங்கபுரி மா மலை மற்றும் உவந்திடும் நாள் –
கொடித் தோன்றும் தோரண வாயில் காப்பான் -கொடியணி நெடுமதிள் கோபுரம் குறுகினர்
நெடுவரைத் தோரணம் நிறைந்து எங்கும் தொழுதனர் உலகே -என்றும் –
கொடியும் தோரணமும் உள்ள பரமபத வாசல் -இதுவும் எம்பெருமானார் ஆளுகையில்
உள் பட்டதே
மணிக்கதவம் தாள் திறவாய் -மணி நவரத்னம் -நவ கிரந்தம் -மறைப் பொருளுக்கு சேமக் கதவம் போலே
ஆயர் சிறிமியரோம் மணிக்கதவம் தாள் திறவாய் -அறிவிலிகளுக்கு புரியும்படி அருளிச் செய்ய வேண்டும்
முன்னமே வாய் நேரந்தான் -கலௌ ராமானுஜஸ் ஸ்ம்ருத -கலௌ கஸ்சித் பவிஷ்யதி
தூயோமாய் வந்தோம் -ஆசார்ய அபிமானமே உத்தாரகம் என்று அறிந்தவர்களாய் வந்தோம்
துயில் எழப் பாடுவான் -அஞ்ஞானம் நீங்கி சாமகானம் பண்ணிக் கொண்டு இருக்க வந்தோம்
நேச நிலைக் கதவம் நீக்கு
கதவு இரட்டை
திருமந்தரம் -பிரணவம் -மந்திர சேஷம் -கதவம் -நமது பொருளைக் காப்பாற்றி
தருவது
எண் பெருக்கு அநநலத்து ஒண் பொருளான ஆத்ம ஸ்வரூபத்தை காத்து கொடுக்கும் திரு மந்த்ரம்
சரம ஸ்லோகம் -பூர்வார்த்தம் -உத்தரார்தம் -நிலை நின்று ரஷிப்பதற்க்காக
பிரதிக்ஜை
த்வயம் -பூர்வ வாக்கியம் -உத்தர வாக்கியம் -நம் பக்கம் நேசம் உள்ள பிராட்டியின் மந்த்ரம் –
இவள் தாயாய் இவர்கள் உடைய கிலேசம் பொறுக்க மாட்டாதே -அவனுக்கு பத்னியாய்
இனிய விஷயமாய் இருக்கையாலே கண்ணழிவு அற்ற புருஷகாரம்
திருவடியைப் பொறுப்பிக்குமவள் தன் சொல் வழி வருமவனை பொறுப்பிக்க
சொல்ல வேண்டா இ றே
ஆக ரகஸ்ய த்ரயத்தின் பொருளை விளக்கி அருள வேணும் என்றும்
விசேஷித்து
த்வய யர்த்தத்தை திறந்தருள வேண்டும் என்றும் பிரார்திக்கிறபடி –
—————————————————————————————————
17-உறங்கா மாலை –
உம்பியும் நீயும் உறங்கேல்
நந்தகோபன் யசோதை கண்ணபிரான் பலராமன் -ஆசார்யன் -திருமந்தரம் –
திருமந்த்ரார்தம் -திருமந்த்ரார்த்த சாரம்
அம்பரம் ஆகாசம் பரமாகாசம் நலம் அந்தமில்லா நாட்டை ப்ராபிக்க செய்யும் ஆசார்யன்
தண்ணீர் -விரஜை யாறு
சோறு அன்னம் ப்ரஹ்மேதி வ்யாஜாநாத்
எடுத்த பேராளன் நந்தகோபன் -நிதி எடுத்தால் போலே பரி பூர்ண பகவத் அனுபவம் செய்த ஆசார்யர்
மந்த்ரோ மாதா குரு பிதா -மாதா போலே மந்த்ரமும் பகவானை தன்னுள்ளே அடக்கிக் கொண்டு இருக்கும்
ஞாலத்து புத்திரனைப் பெற்றார் நங்கைமீர் நான் மற்று யாரும் இல்லை -பெரிய மந்த்ரம் பிரதானம் –
அம்பரமூடறுத்து ஓங்கி உலகு அளந்த -சர்வ வ்யாபகத்வம் -நாராயண அர்த்தம்
மந்த்ரத்தை மந்தரத்தால் –மறவாது என்றும் வாழுதி யே ல் அருளி -அடுத்து
ஒண் மிதியில் புனலுருவி-திருவிக்கிரம அபதானம் அருளினாரே திருமங்கை ஆழ்வாரும்
செல்வா பல தேவா -நின் திரு எட்டு எழுத்தும் கற்று நான் உற்றது உன் அடியார்க்கு அடிமை –
பெரிய திருமொழி -8-10-3-பாகவத சேஷத்வம் -பகவத் சேஷத்வ காஷ்டை -வெவ்வேறு இல்லை
இதை உணர்த்தவே உம்பியும் நீயும் உறங்கேல் -என்று இருவரையும் சேர்த்து பிணைத்து பேசிற்று
—————————————————————————————————–
18-மகிழ்ச்சி மாலை –
பந்தார் விரலி வுன் மைத்துனன் பேர் பாடச் -செந்தாமரைக் கையால் வளை
ஒலிப்ப மகிழ்ந்து வந்து திறவாய் –
பந்து -லீலா உபகரணம் -பிராணிகள் –
செந்தாமரைக் கையால் -உபதேச முத்ரை கொண்ட திருக்கை –
சீரார் வளை ஒலிப்ப -த்வனி பொருள்கள் மல்கும் படி உபதேசித்து அருள –
மகிழ்ந்து -தமது பேறாக உபதேசித்து அருள
தக்கார் பலர் தேவிமார் சால உடையீர் -பெரிய திருமொழி -10-8-8-
பல்லாயிரம் தேவி மாரோடு -பெரியாழ்வார் திருமொழி -4-1-6-
இருந்தும் நப்பின்னை பிராட்டி போலே எம்பெருமானார் ஒருவரே அவன் திரு உள்ளம் உகந்த
ஆசார்யர் -நமத்து உத்தாரக ஆசார்யர்
ஏழு காளைகள் -ஏழு விரோதிகள் -அறு சமய செடி யதனை அடி யறுத்தான் வாழியே –
செறுகலியை சிறிதும் அறத் தீர்த்து விட்டான் வாழியே -ஆகிய எழுவர் –
கந்தம் கமழும் குழலி -கமநீ சிகா நிவேசம் -என்றும் -ஸிகாய சேகரிணம் பதிம் யதீநாம் –
என்றும் -காரி சுதன் சூழல் சூடிய முடியும் கன நற் சிகை முடியும் -என்றும் –
பந்தார் விரலி -பந்து -கழல் பாவை -பொங்கு ஐம் புலனில் போக்யாதி சமூஹம் –
லீலா விபூதி முழுவதும் -நித்ய விபூதிக்கும் உப லஷணம் -உடையவர் இரண்டையும் கையிலே உடையவர் இ றே
மகிழ்ந்து -மனம் உடையீர் என்கிற ஸ்ரத்தையே அமைந்த மர்ம ஸ்பர்சிக்கு நானும்
நமரும் என்னும்படி சர்வரும் அதிகாரிகள்
பரம திருப்தி உடன் -நெஞ்சு திறந்து –வாய் திறந்து -கதவு திறந்து -உபதேசிக்க வேணும் என்றபடி –
—————————————————————————————————————————————————–
19-தகவு மாலை –
மைத்தடம் கண்ணினாய் பக்தி சித்தாஞ்சனம் அணியப் பெற்று ஞான விகாசம் பெற்றவரே –
நீ உன் மணாளனை -ஆசார்யரை
தத்துவம் தகவு அன்று -தத்வமஸி க்கு பிறர் கூறும் பொருள் தகுதி அற்றது
தத் த்வம் தகவன்று
தத் -வாச்யமான பர ப்ரஹ்மமும்
த்வம் -வாச்யமான ஜீவாத்மாவும் –
ஒன்றே எனபது தகவு அன்று
——————————————————————————————————–
20-நீராட்டு மாலை —
இப்போதே எம்மை நீராட்டு –
உனது மணாளன் தாபமும் எங்கள் தாபமும் தீர்ந்ததாகும் படி திருவே –
தாப த்ரயீ மய -நமக்கு
நாம் அடிமை செய்ய விடாய் நானானேன் எம்பெருமான்
தானடிமை கொள்ள விடாய் தானானன் -ஆனதற் பின்
வெள்ளக் குளத்தே விடாய் இருவரும் தணிந்தோம்
உள்ளக் குளத்தேனை யொத்து -பிள்ளை பெருமாள் ஐயங்கார்
நம்மை அடிமை செய்வித்துக் கொள்ள அவன் விடாய் மிகவும் பெரிது –
அவன் பேராவல் கொண்டு சம்ச்லேஷிக்க வந்தாலும் நாம் வெறுத்து தள்ள
ஆற்ற ஒண்ணாமல் பதறுகின்றானே
ஷூத்த்ருட் பீடித நிரதநரைப் போலே கண்டு கொண்டு உண்டு பருகி -ஆசார்ய ஹ்ருதய ஸ்ரீ ஸூக்தி
இருதலையினுடைய தாபத்தையும் தணிய செய்திடாய் -நப்பின்னை பிராட்டியே என்று பிரார்த்திக்கிறார்கள் –
———————————————————————————————————-
21-புகழ் மாலை
மாற்றான் உனக்கு வலி தொலைந்து உன் வாசற் கண்
ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே
போற்றி யாம் வந்தோம் புகழ்ந்து –
பாகவத விரோதம் பண்ணி திரியுமவர்களை -எதிர் அம்பு கோத்து ஜீவிக்க மாட்டாமல்
வலி மாண்டு தம் தம் அநந்ய கதித்வம் தோன்ற உன் திரு வாசலிலே வந்து படுகாடு
கிடந்தது புகழ்வது போலே
ஆசார்ய பரம் -மாற்றார் பிரமாணங்களையும் -ப்ரேமேயங்களையும் -பிரமாதக்களையும்
தூஷித்துக் கொண்டு -யாதவ பிரகாசர் யஞ்ஞ மூர்த்தி போல்வார் -எம்பெருமானார் திருவடிகளில் பணிந்ததும்
தஞ்சீரை ஞானியர்கள் தாம் புகழும் வேதாந்திகள் நஞ்சீயராகி பட்டர் திருவடிகளை பணிந்தததும்
ஆசார்யருடைய திருக் குணங்களை புகல்வதே சிஷ்யர்கள் கர்த்வயம் –
ஏற்றி மனத்தெழில் ஞான விளக்கை இருள் அனைத்தும் மாற்றினவருக்கு
ஒரு கைம்மாறு மாயனும் காண கில்லான் -போற்றி உகப்பதும் புந்தியில்
கொள்வதும் -பொங்கு புகழ் சாற்றி வளர்ப்பதும் சற்றல்லவோ முன்னம் பெற்றதற்கே –
—————————————————————————————————–
22–சாப நிவாரண மாலை –
நிவாரணம் -போக்குவது என்னாமல்
இழிந்து -தன்னடையே தொலைந்து போகும் -நிவ்ருத்தி சப்தம் இருக்க வேணுமே –
ஆய்ச்சிகள் உடைய அனுபவித்தே தீரும்படியான பாபமே இங்கே சாபம் என்கிறாள் –
ஸ்ரமணீ விதுர ரிஷி பத்நிகளை பூதாராக்கின புண்டரீகாட்ஷன் நெடு நோக்கு சாபம் இழிந்து
என்னப் பண்ணும் இ றே -ஆசார்ய ஹ்ருதய சூர்ணிகை –
திருவடித்தூள் அஹல்யை யின் சாபம் தீர்க்க பண்ணிற்றே
திரு முழம் தாள் -குபேர புத்ரர்களான நள கூபர மணிக் ரீவர்களின் சாபம் தீர்த்தன –
ருத்ர சாபம் திரு மார்பில் ஸ்வேதத்தால் தீர்ந்தது
துர்வாசஸ் சாபம் மார்பில் இருப்பவளாலே தீர்ந்தது
திருக்கண் கடாஷம் -ஜாயமானம் ஹி புருஷம் யம் பச்யேத் மது சூதன –
அப்படி கடாஷிக்க பெற்றவர்களுக்கு திருவடியே தஞ்சம் –அப்படி விழுந்தவர்களை
அஞ்சேல் என்று கை கவியாய் -அபய முத்ராஞ்சிதமான ஹஸ்தம் –
ஆசார்யர் பரி பூர்ண கடாஷம் தாங்காது என்று புள்ளு பிள்ளைக்கு இரை தேடும் -போலே
செங்கண் சிறு சிறிதே விழிக்கை
ஆசார்யன் கண் கடாஷம் -மற்றையோர் உடைய மூன்று கண்களாலோ
எட்டு கண்களாலோ -ஆயிரம் கண்களாலோ -இந்திரன் உடையவை அல்ல –
துணை மலர் கண்கள் ஆயிரத்தாய் -அடைய முடியாது என்கை
ஆ முதல்வன் இவன்
உள் கண்ணாலும் வெளிக் கண்ணாலும் -சபரி பவித்ரம் ஆன
அவித்யாதிகளையே சாபம் என்கிறது
போயிற்று வல் உயிர் சாபம் –
—————————————————————————————————-
23-ஆராய்ச்சி மாலை –
யாம் வந்த கார்யம் ஆராய்ந்து அருள் –
திருப்பள்ளி யறையிலே சாய்ந்து இருந்தபடி என்ன கார்யம் என்று கேட்டருளாதே
சீரிய சிங்கா சனத்து இருந்து பின்பு ஆராய்ந்து அருள் -என்கிறார்கள்
ஆலோசித்து அருள் அர்த்தம் இல்லை வினவி அருள்
வந்த கார்யத்தை எல்லா பாட்டிலும் செய்கிறார்கள்
எட்டாம் பாட்டில் ஆராய்ந்து அருள் -தேவாதி தேவனை நாம் சென்று சேவித்தால்
அவன் ஆராய்ந்து ஆவா என்று அருள்வன்
இங்கே அருள வேண்டும் என்று வேண்டுகோள்
வந்த கார்யம் -வருகைக்கு உறுப்பான கார்யம் இங்கேயும் –
பள்ளி கொள்ளும் பொழுது ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் அம்மானே -என்றும் –
அம்மா மலர்க்கண் வளர்கின்றானே என் நான் செய்கேன் -என்றும் ஈடுபட்டு
அரவணையாய் ஆயர் ஏறே துயில் எழாயே -என்று திருப் பள்ளி உணர்த்த கார்யம்
புறப்பட்டு அருளும் அழகை காண வேண்டும் -சீரிய சிங்காசனத்து
வீற்று இருக்கும் அழகு காண வேண்டும் -பல்லாண்டு பாட வேண்டும் -என்பன
உன் கோயில் நின்று இங்கனே போந்தருளி -நடை அழகு காணும் ஆசை
பெருமாள் நடை அழகை காணும் ஆசை பிராட்டிக்கு
அதில் ஈடுபட்டு கைங்கர்யம் இழக்காதே -சுமத்ரை லஷ்மணன் இடம் அருளியது
கானகம் படி உலாவி உலாவி –மேனகையோடு திலோத்தமை யரம்பை
உருப்பசி யரவர் வெள்கி மயங்கும் பை உலாவுவானே கண்ணன்
விண்ணின் மீதுஅமரர்கள் விரும்பித் தொழ மிறைத்து ஆயர்பாடியில் வீதி யூடே காளிப்பின்னே
எழுந்தருளும் நிலையில் நடை அழகைக் காணவும்
பல்லாயிரம் பெரும் தேவிமாரோடு –சிங்காசனத்து இருந்தானைக் கண்டார் உளர் -பெரியாழ்வார் திருமொழி -4-1-6–
இந்த அழகு எல்லாம் நாங்கள் காண வேண்டாமோ
வலி மிக்க சீயம் இராமானுசன் -திக் விஜய யாத்ரையில் சிம்ஹ கர்ஜனை போதருமா போலே
உன் கோயில் நின்று இங்கனே போந்தருளி -ஸ்ரீ பெரும் பூதூரில் இருந்து பெருமாள் கோயில்
திருமலை -திருவரங்கம் -திரு நாராயணபுரம் -போந்தருளிய படி
சிங்காசனம்
சீரிய சிங்காசனம்
கோப்புடைய சீரிய சிங்காசனம்
த்ரி வேதம் -பேத ஸ்ருதி -அபேத ஸ்ருதி -கடக ஸ்ருதி
விசிஷ்டாத்வைத தர்சன நிர்வாஹம்
ஆழ்ந்து ஆராய்ந்து அறிய வேண்டிய பொருள்களை ஆராயும் ஆற்றலை அருள்க
—————————————————————————————————-
24-இரக்க மாலை –
இன்று யாம் வந்து இரங்கு –
வாய் படைத்த பிரயோஜனம் -இது
இரங்கி அருளுவதும் கடாஷிப்பதும் அவன் திரு உள்ளத்தினால் தான் ஆகும்
உன்னை நான் அடைந்தேன்
உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேன்
உனக்கு அடிமைத் தொழில்கள் பூண்டேன்
உன்னை எங்கனம் விடுகேன்
உனக்கு பல்லாண்டு கூறுவன்
ஒரு நாள் காண வாராய்
என்னை நீ குறிக் கொள்ளே
ஒருவன் அடியேன் உள்ளான் என்று பலவகையாக பேசும் அடைவிலே
அடியேன் இடரைக் களையாயே
நெடியாய் அடியேன் இடரை நீக்கே
அடியேற்கு ஒரு நாள் இரங்காயே
தாமரைக் கண்களால் நோக்காய்
இவர் அர்த்திக்க வேண்டாவோ -சர்வஞ்ஞன் இவன் நினைவு அறியானோ என்னில்
இவன் பாசுரம் கேட்டவாறே இவன் திரு உள்ளம் உகக்கும் –
அதுவும் அவனது இன்னருளே
இரங்கு -தயை -ஆசார்யன் இடத்தில் உபதேசிக்க
பிரபு இடம் ஷமித்தருள
ஸூ -க ஸூ ப்த பரந்தப -பாவியேன் துயில் உணர்த்தி விட்டேன் கெட்டேன்
துடித்து கோயில் காப்பான் வாசல் காப்பான் இருவரையும் நிர்பந்தமாக வேண்டி வந்தோமே
இதை ஷமித்தருள வேண்டும்
புஷ்பஹாச ஸூகுமாரமான திருவடிகளை -பிராட்டிமார் கூட கூசிப் பிடிக்கும் மெல்லடிகள் -கொண்டு நடக்க பண்ணினோமே ஷமித்தருள வேண்டும்
மங்களா சாசனம் வேற பண்ணினோமே பிரேம பரவசர் செய்யுமத்தை மாம் அநுகரிப்பதா
ஷமித்தருள வேண்டும் –
இன்றி யாம் வந்தோம் என்றும் பிரித்து
கைம்முதலும் இன்றி
நோற்ற நோன்பு இலேன் நுண் அறிவு இலேன்
ஐம் புலன் வெல்ல கிலேன்
பூ பறித்து ஏத்த கில்லேன்
அகிஞ்சனர்களாய் வந்தோம்
தண்ணீர் துரும்பாக கையில் ஏதும் இல்லை
இரங்கி அருள் என்கிறார்கள் –
—————————————————————————————————–
25-வருத்தம் தீர் மாலை
ஒருத்தி மகனாய் –வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து –
வருத்தம் எப்படி தீர்ந்தது -திருத்தக்க செல்வமும் சேவகமும் பாட –
துல்ய சீல வயோ வ்ருத்தாம் -துல்ய அபிஜன லஷணாம் -ராகவோர்ஹதி வைதேஹீம்
தஞ்சேய மஸி தேஷணா -பிராட்டிபோன்ற செல்வம் உடைய எம்பெருமானார் –
நம்போல்வாருக்கு புருஷகார க்ருத்யம் செய்வதே எம்பெருமானாருக்கும் பிராட்டிக்கும் செல்வம் -செல்வமும் சேவகமும் -பரத்வ சௌலப்யங்கள் –
திருத்தக்க செல்வம் -திருத்தத்தக்க செல்வமும் -பயன் நன்றாகிலும் பாங்கு அல்லர் ஆகிலும்
திருத்திப் பணி கொள்வாரே -இராமானுசா நீ இந்த மண்ணகத்தே திருத்தித் திருமகள்
கேள்வனுக்கு ஆக்கிய பின் -பணிமானம் பிழையாமே அடியேனைப் பணி கொண்ட -ஐதீகம்
திருத்தக்க செல்வம் -உள் புகுந்து ஆராய்ந்து அறியக் கூடிய சீரிய -பொருள்
நம் சம்ப்ரதாயமே திரு சேர்த்து
திருமஞ்சனம் -திருவடி -திருத் துழாய் -திரு வாராதனம் -திருக் கண் வளர்த்தல் –
திரு ஆடிப் பூரம் –
திருமால் உரு ஒக்கும் மேரு -அம்மேருவில் செஞ்சுடரோன் திருமால் திருக்கைத்
திருச் சக்கரம் ஒக்கும் -அன்ன கண்டும் திருமால் உருவொடு அவன் சின்னமே பிதற்றா
நிற்பதோர் திருமால் தலைக் கொண்ட நங்கட்கு எங்கனே வரும் தீவினையே –
வியாமோகம் -மால் கொண்டதை சொலவும் திரு சேர்த்து
அது போலே செல்வம் -சம்ப்ரதாய செல்வம் திரு சேர்த்து திரு தக்க செல்வம்
திருவுக்கும் திருவாகிய செல்வா -சுவையன் திருவின் மணாளன் -பரம ரசிகன் அவன்
ரசிகத்வத்துக்கு உஊற்றுவாய் சொல்கிறது திருவின் மணாளன் -பெரிய பிராட்டியார்
அகலகில்லேன் என்னப் -பிறந்தவன்
——————————————————————————————————-
26-ஆலினிலையான் மாலை –
மாலே மணி வண்ணா –ஆலினிலையாய் அருள் –
பாலகன் என்று பரிபவம் செய்யேல் பண்டொருநாள் ஆலினிலை வளர்ந்த சிறுக்கன் இவன்
-உய்ய உலகு படைத்து உண்ட மணி வயிறா ஆலினிலை யதன் மேல் பைய யுயோகு துயில் கொண்ட பரம்பரனே –
அக்காக்காய் நம்பிக்கு கோல் கொண்டு வா –ஆலத்திலையான் அரவின் அணை மேலான் –
பூச்சூட வா –உண்டிட்டு உலகினை ஏழும் ஓர் ஆலிலையில் துயில் கொண்டாய் –
நளிர் மதி சடையனும் நான்முகக் கடவுளும் தளிர் ஒளி இமையவரும் தலைவனும் முதலா
யாவகை உலகமும் யாவரும் அகப்பட நிலா நீ தீ கால் சுடர் இரு விசும்பும் மலர் சுடர் பிறவும் சிறிதுடன் மயங்க
ஒரு பொருள் புறப்பாடு இன்றி முழுவதும் அகப்படக் கரந்து ஓர் ஆலிலைச் சேர்ந்த
எம்பெரு மா மாயனை அல்லது ஒரு மா தெய்வம் மற்றுடையமோ யாமோ –
சம்சாரிகளைப் போலே அனர்த்தப் பட்டு போகாமல் எம்பெருமானுக்கு அடிமை
பட்டு இருக்க பெற்றோமே என்று ஹ்ருஷ்டராய் –
அவனே பரதெய்வம் மற்றவர் களின் அவரத்வத்தையும் கை இலங்கு நெல்லிக் கனியாக
காட்டுமே ஆலிலை அன்ன வசம் செய்து இருக்கும் நிலை –
பாலன் தனது உருவாய் ஏழு உலகு உண்டுஆலிலை யின் மேல் அன்று நீ வளர்ந்த
மெய் என்பர் -ஆலன்று வேலை நீருள்ளதோ விண்ணதோ மண்ணதோ -சோலை சூழ்
குன்று எடுத்தாய் சொல்லு -முதல் திருவந்தாதி -69-
எத்திறம் -என்னும் படி மோஹிக்க செயும் விருத்தாந்தமிது
இந்த வினாவுக்கு விடை யிறுக்க அத்புத சக்தி யோக ப்ரபஞ்சனம் ஒழிய வேறு தஞ்சம் இல்லை இ றே
ஆசார்ய பரமான நிலையில்
ஆலின் நிலையாய் -ஆல் மரத்தின் நிழலில் ஒதுங்கினது போலே –
எம்பெருமான் பனை மர நிழல் -அம்மங்கி அம்மாள் பணித்த வார்த்தை
——————————————————————————————————
27-கூடி இருந்து குளிர் மாலை –
கூடி இருப்பவர் உடன் கூடி இருப்பதே
மெய்யில் வாழ்கையை மெய்யெனக் கொள்ளும் மிவ்வையம் தன்னொடும் கூடுவது இல்லையான் –
நூலனேர் இடையார் திறத்தே நிற்கும் ஞாலம் தன்னொடும் கூடுவது இல்லையான் –
மாரனார் வரி வெஞ்சிலைக்கு ஆட் செய்யும் பாரினாரொடும் கூடுவது இல்லையான் –
உண்டியே உடையே உகந்து ஓடும் இம்மண்டலதொடும் கூடுவது இல்லையான் –
தீதில் நன்னெறி நிற்க அல்லாது செய் நீதியாரோடும் கூடுவது இல்லை யான் –
இனி கூடத் தக்கவர்கள் –
மறம் திகழு மனம் மொழிந்து வஞ்சம் மாற்றி வன் புலன்கள் அடக்கி இடர்ப்பாரத் துன்பம்
துறந்து இரு முப்பொழுது ஏத்தி எல்லை இல்லாத் தொன் நெறிக் கண் நிலை நின்ற தொண்டர் –
தூராத மனக் காதல் தொண்டர் தங்கள் குழாம் குழுமித் திருப் புகழ்கள் பலவும் பாடி ஆராத
மனக் களிப்போடே அழுத கண்ணீர் மழை சோர நினைந்து உருகி ஏத்தும் அவர்கள் –
அன்போடு தென் திசை நோக்கி பள்ளி கொள்ளும் அணி யரங்கன் திரு முற்றத்து அடியார்கள் –
தென்னரங்கனை வாழ்த்தி மால் கொள் சிந்தையராய் ஆட்டமேவி அலம் தழைத்து
அயர்வு எய்தும் மெய்யடியார்கள்
பேராளன் பேரோதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேன் என்று இருக்குமவர்கள்
பழுதே பல காலும் போயின என்று அஞ்சி அழுது கொண்டு இருக்குமவர்கள்
மணவாள மா முனிவன் பொன்னடியாம் -செங்கமலப் போதுகளை
யுன்னிச் சிரத்தாலே தீண்டில் அமானவனும் நம்மை கரத்தாலே தீண்டல் கடன் -என்று
அத்யவசாயம் தலை நின்று இருக்குமவர்கள்
உன் தன்னோடு உற்றோமே
உனக்கே நாம் ஆட செய்வோம் என்று இருக்குமவர்கள்
சம்சாரிகளைக் கண்டால் சர்ப்பத்தைக் கண்டால் போலேயும்
ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண்டால் பந்துக்களையும் கண்டால் போலேயும் இருக்குமவர்கள்
ஈஸ்வரனைக் கண்டால் பிதாவைக் கண்டால் போலேயும்
ஆசார்யனைக் கண்டால் பசியன் சோற்றைக் கண்டால் போலேயும் இருக்குமவர்கள்
பூர்வர்கள் சீர்த்த நிலை தன்னிலே நிலை நின்று இருக்குமவர்கள் நித்ய அநுபவ யோக்யர்கள்
கோவிந்தா உன்னோடு கூடி இருந்து குளிர வேணும் என்று இருக்கும் நாங்கள்
உந்தன் பொய்யைக் கேட்டு –வஞ்சிக்கப் பெற்றோம் -நட நம்பி நீயே -போகு நம்பி நீயே –
ஏதுக்கு இது வென் ஏதுக்கு இது வென் -கதவடைத்து ஊடினவர்கள் அன்றோ
அக்கொடிய நிலைகள் எல்லாம் தவிர்ந்து நாம் எப்போதும் கூடி இருந்து குளிர்வோமாக –
கூடி இருந்து கண் வளராமல் குளிர்வோம் –
———————————————————————————————————
28-பறை தரும் மாலை –
இறைவா நீ தாராய்
நாராயணனே நமக்கே பறை தருவான்
கீழ் வானம் –பாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு -பாடுகையாகிற உத்தேச்யத்தை பெற்று
நோற்றுச் சுவர்க்கம் –நம்மால் போற்றப் பறை தரும் புண்ணியனால் –
இங்கே நம்மால் போற்றப் பறை தரும் புண்ணியன் -சக்கரவதிதிருமகன்
அன்று இவ்வுலகம் -பறை கொள்வான் இன்று யாம் வந்தோம் –
ஒருத்தி மகனாய் –உன்னை அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில் –
மாலே மணி வண்ணா –சாலப் பெரும் பறையே
கூடாரை –உன்தன்னைப் பாடிப் பறை கொண்டு -இங்கும் பாடுகை யாகிற உத்தேச்யம் பெற்று
கைங்கர்யம் செய்கையே விவஷிதம்
கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள் என்னும் இப்பேறு எனக்கருள் கண்டாய் –
வள்ளல் மாலிரும் சோலை மணாளனார் பள்ளி கொள்ளும் இடத்து அடி கொட்டிடக் கொள்ளுமாகில் –
இற்றைப் பறை கொள்வானன்று -பறை ஒரு நாளுடன் போவது அன்று
யாவதந்தமபாவி கைங்கர்யமே வேண்டும்
இரங்கு -அருள் -என்றதற்கு சாதநாம்சம் ஒன்றும் இல்லை
1-பேற்றுக்கு கைமுதலாவது ஒன்றும் இல்லை
2-மேலும் செய்ய ஒன்றும் இல்லை -தம்முடைய அபகர்ஷத்தை அனுசந்தித்து –
3-ஈஸ்வரனுடைய குனபூர்த்தியை அனுசந்திக்கையும் –
4-சம்பந்தத்தை உணருகையும்
5-பூர்வ அபராதங்களுக்கு ஷாபணம் பண்ணுகையும்
6-உபேயத்தை அபேஷிக்கையும்
ஆகிய அதிகார அங்கங்கள் ஆறையும் அருளுகிறாள் இங்கே
—————————————————————————————————-
29-காமங்கள் மாற்று மாலை
விரோதி தான் மூன்று -ஸ்வரூப உபாய உபேய விரோதிகள்
ப்ராப்ய விரோதி இங்கே மற்றை நம் காமங்கள் மாற்று -என்கிறாள்
நிலா தென்றல் சந்தானம் புஷ்பம் போலே –
ப்ரகர்ஷய்யாமி -நம கைங்கர்யத்தில் களை அறுக்கிறது
களையாவது தனக்கு என்ன பண்ணுமது
கைங்கர்ய பிரார்த்தனை போலே இப்பதத்திலும் பிரார்த்தனை உண்டு
மருந்தே நங்கள் போக மகிழ்ச்சிக்கு -என்னா நின்றது இ றே
கந்தல் கழிந்த அந் நிலத்திலும் ஸ்வ போக்த்ருத்வ ப்ரதிபத்தி ஆகிய விரோதி கழிந்து தங்கள் ஸ்வரூபம் நிலை நிற்க
அங்கும் பிரார்த்தனை -உண்டே
—————————————————————————————————-
30-திருவருள் மாலை
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்
பண்டை நாளாலே நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் கொண்டு
பங்கய மாமலர் பாவையைப் போற்றுதும் -தாம் அபேஷித்த ஸித்தி -எம்பெருமானாரை போற்ற -திருவருளையே தஞ்சமாகக் கொண்டார் திருவரங்கத் தமுதனாரும் –
ஓங்கி உலகளந்த -கோபிகள் தாங்கள் அனுஷ்டிக்கும் நோன்பினால் வரும் பலனை சொல்லி
இப்பாசுரம் திருப்பாவை கற்றாருக்கு பலன் சொல்லி அருளுகிறாள்
நாமாக ஒரு பலனை விரும்பக் கூடாது சூத்திர பலன் ஆகி விடும்
செங்கண் திரு முகத்து செல்வத் திருமாலால் எங்-பிராட்டி உடைய ஸ்ரீ ஸூக்தி
உபய விபூதியிலும் நமக்கு இன்பம் நிஸ் சந்தேகம் என்று தேறி இருக்கலாம்
திருவருள் -திருவின் அருள் என்பதை விட
திருவை அருளுக்கு அடைமொழி யாக்கி -திருவடி -திருவாய் -திருக் கண் -திருக் குளம் -போலே -சிறந்த அருள்
செல்வத் திருமாலால் -அருள் செய்கையிலே பிராட்டியின் அந்வயம் அருளிச் செய்தாயிற்றே
பிராட்டி புருஷகாரம் ஆனால் அல்லது ஈஸ்வரன் கார்ய்சம் செய்யான்
இத்தலையில் வாத்சல்ய அதிசயத்தாலும்
அத்தலையில் வால்லப்ய அதிசயத்தாலும்
புருஷகாரமாய் கொண்டு ஜீவர்களுக்கு தஞ்சமாகிறாள்
புருஷகாரத்வமும் உபாயத்வமும் எகாஸ்ரயத்தில் கூடி இருக்க முடியாதே
அந்த திருவருளின் பிரஸ்தாவத்தினால் தலைக் கட்டுவோம்
————————————————————————————————-
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
July 17, 2023 at 8:52 am |
[…] […]