திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -4-7-3-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

ஈவுஇ லாத தீவினைகள் எத்தனை செய்த னன்கொல்?
தாவி வையம் கொண்ட எந்தாய்! தாமோதரா! என்றுஎன்று,
கூவிக் கூவி நெஞ்சுஉருகி, கண்பனி சோர நின்றால்,
பாவி நீஎன்று ஒன்று சொல்லாய், பாவியேன் காணவந்தே.

    பொ-ரை : ‘அழியக் கூடியன அல்லாத பாவங்கள் எத்தனை செய்தேனோ அறியேன்! பூலோகத்தை அளந்துகொண்ட எந்தையே! தாமோதரனே!’ என்று என்று கூவிக்கூவி நெஞ்சம் உருகிக் கண்களிலே நீர் சோரும்படி நின்றால், பாவியேன் காணும்படி முன்னே வந்து ‘நீ பாவி’ என்றாகிலும் ஒரு வார்த்தை சொல்லுகின்றாய் இல்லையே!’ என்கிறார்.

    வி-கு : ‘ஈ’ என்பது, ‘வீ’ என்ற சொல்லின் விகாரம்; தழல் – அழல், மலர் – அலர் என்பன போன்று வந்தது. வீ – அழிவு. ‘ஈபாவம் செய்து’ என்றார் முன்னரும். (திருவாய். 2. 2 : 2) சொல்லாய் என்பது, விதி மறை இரண்டற்கும் பொதுவான முற்று. சொல்லுவாய் என்ற பொருளில் விதி; சொல்லமாட்டாய் என்ற பொருளில் மறை. ‘காண வந்து ஒன்று சொல்லாய்; ஆதலால், பாவியேன் ஈவிலாத தீவினைகள் எத்தனை செய்தனன்கொல்’ என்க.

    ஈடு : மூன்றாம் பாட்டு. 1எனக்கு உன்னைக் காட்டாதொழிந்தால், ‘நீ என்னைப் பார்ப்பதற்கு நல்வினை செய்தாய் இல்லை,’ என்றாகிலும் என் கண்முன்னே வந்து ஒரு வார்த்தை சொல்லுகின்றிலை,’ என்கிறார்.

    ஈவு இலாத தீவினைகள் எத்தனை செய்தனன்கொல் – 2நான்தான் பெரிய பாவத்தைப் பண்ணுகிறேன்; அனுபவித்தாலும் மாளாதபடியான பாவத்தைச் செய்ய வேண்டுமோ? 3‘கர்மங்கள் அவசியம் அனுபவித்தே தீர்க்க

வேண்டும்; அனுபவிக்கப்படாத கர்மங்கள் பல கோடி கற்ப காலங்கள் கழிந்தாலும் நாசத்தை அடையமாட்டா, என்கிற வசனமும் என் அளவிலே பொய்யோ? அனுபவித்தாலும் குறையாதிருக்க வேண்டுமோ? ‘ஆயின், அனுபவித்தாரோ?’ என்னில், சிறிது நேரம் முகம் மாற வைத்த போதே எல்லாம் அனுபவித்தார் அன்றோ? ‘செய்வினை’ என்று ஒன்றாய் இருந்ததோ? எத்தனை கோடி பாவங்களைச் செய்தேனோ!’ என்பார், ‘தீவினைகள் எத்தனை செய்தனன் கொல்?’ என்கிறார். 1தாவி வையம் கொண்ட எந்தாய் – அரிய செயல்களையும் வருத்தம் அறச் செய்ய வல்லவன் அன்றோ? அது செய்யுமிடத்தில் வரையாதே எல்லாரையும் காக்குமவன் அன்றோ? அவன் இவற்றைக் காப்பதற்கு அடியிட்டான்; அச்செயலிலே இவரும் தோற்று அவனுக்கு உரியவராய் ‘எந்தாய்!’ என்கிறார். தாமோதரா – 2‘நீ எங்களுக்குப் பிள்ளையாகப் பிறக்க வேண்டும்’ என்று சிலர் இரக்க, அவர்களுக்குக் கட்டவும் அடிக்கவும் ஆம்படி உன்னைப் பரதந்திரன் ஆக்கினவன் அன்றோ? உன் வயிறு வாழாமல் அன்றோ இப்படிக் களவுகண்டு கட்டுண்டு அடி உண்டது?

    என்று என்று – இதனை ஒருகால் சொல்லி, பின்பு வேறு ஒன்றனைச் சொல்லுமவர் அன்றே! கூவிக் கூவி – இத்தகைய பெருஞ்செயல்களைச் சொல்லிக் கூப்பிட்டுக் கூப்பிட்டு. நெஞ்சு உருகி – முந்துறக் கூவுகிற இது பிற்படக் கூவுமதனை விருத்தி செய்யும்படி கூவுகிற தம் மிடற்று ஓசை செவிவழியே புக்கு, நெஞ்சமானது நீர்ப்பண்டமாய்

உருகும் ஆயிற்று. கண் பனிசோர நின்றால் – உருகின மனத்திற்குப் போக்குக் கண்டு விடுமாறு போலே கண்ணநீர் பெருக்கு எடுக்கும்படி நின்றால். பாவி நீ என்று ஒன்று சொல்லாய் – ‘இந்திரனுக்கு உதவினோம், யசோதை, முதலானவர்கட்கு உதவினோம்,’ என்றதனை நினைத்து நசை பண்ணுகிறது என்? ‘இந்திரன் சத்துவகுணத்தையுடையவன்; யசோதை தாய்; நீ பாவி’ என்று ஒரு வார்த்தை சொன்னால் ஆகாதோ? ‘இந்திரனைச் சத்துவகுணத்தை உடையவன் என்னலாமோ?’ எனின், ‘தேவர்களையும் அசுரர்களையும் வேறுபடுத்திப் பார்க்கும் வகையில் அவனையும் சத்துவ குணத்தையுடையவன் என்னலாமே அன்றோ? நான் ஆசையற்றவன் ஆகும்படி ஒரு வார்த்தை சொல்ல வேண்டும்’ என்பார், ‘நீ பாவி’ என்று சொல்லாய் என்கிறார்.

    ‘‘நீ பாக்கியவான்’ என்னவுமாம். ‘பாக்கிய ஹீநன்’ என்னவுமாம்; அதில் அர்த்தங்கொண்டு காரியம் இல்லை; உன் மிடற்றோசை கேட்குமித்தனையே எனக்கு வேண்டுவது,’ என்பார், ‘ஒன்று சொல்லாய்’ என்கிறார்.

    ஆனால், அங்ஙனம் சொல்லுமிடத்து நிர்ப்பந்தம் ஒன்று உண்டு; ‘என்னை?’ எனின், அதனைச் சொல்லுகிறார் மேல்: பாவியேன் காண வந்து -‘என் கண்களுக்கு இலக்காம்படி வந்து சொல்ல வேண்டும்; நாடு முழுதும் உண்டு உடுத்துத் திரியாநிற்க, இப்படிக் கேளாவிடில் உய்யாதபடி பாவத்தைச் செய்தேன்,’ என்பார், தம்மைப் ‘பாவியேன்’ என்கிறார். ‘நெஞ்சிலே மறைந்து நின்று சொல்லிலும் ஆமே அன்றோ? அத்தால் போராது’ என்பார், ‘காண வந்து’ என்கிறார். ‘சொல்லாய், காண,’ என்கிறார்; இவற்றால், இவருடைய 1ஐம்பொறி இன்பங்களின் ஈடுபாடு இருக்கிறபடி. ‘சொல்ல மாட்டுகின்றிலை’ ஆதலால், ‘ஈவிலாத தீவினைகள் எத்தனை செய்தனன்கொல்!’ எனக் கூட்டுக. 2இனி, ‘சொல்லாய்’ என்பதற்குச் சொல்ல வேண்டும் என்று பொருள் கூறலுமாம்.

சொல்லாய்’ என்கையாலே, செவி. ‘காண வந்து’ என்கையாலே, கண்.

2. ‘சொல்லாய்’ என்பதற்கு இரு வகையான பொருள் அருளிச்செய்கிறார்; முதல்
வகை, மறைவினை. இரண்டாவது வகை, விதி வினை.

கண் முகப்பே வந்து -நீ ஓன்று சொல்லு
பாவி யே ன் காண வந்து –
முடிவு இல்லாதா தீ வினைகள் செய்து இருக்கிறேன்
தாவி வையம் கொண்ட
தாமோதரா
என்று என்று
கண்ணீர் மல்கி
சொல்லாய் –
சொல்
சொல்ல மாட்டுகிராயே
உடன்பாடாகவும் பிரார்தனையாகவும் இரண்டு அர்த்தங்கள்
நான் தான் பெரிய பாபம் செய்து -தன்னை நொந்து கொண்டு
அனுபவித்தாலும் மாளாத பாபம் பண்ண வேண்டுமோ –
மேலே மேலே பெருகி வர்த்தமான -பாபங்கள் –
புஜித்தாலும் குறையாமல்
எல்லாம் செய்த பாபம் -அரை ஷணம் முகம் காட்டாத பொழுது
கஷ்டம் அதிகம் ஆனாலும்
வென் நரகம் சேராத வகை பாசுர வியாக்யானம்

ஆபத்தே செப்பேடாக -உதவ -உறுதி யாக ரஷித்து
கஜேந்த்திரன் பிரகலாதன் த்ரௌபதிக்கு உதவினது போலே
உத்தேச்ய விரோதி தமது செய் வினைகள் -ஆழ்வார் தமது அபிப்ராயத்தால் அருளி கொண்டு –
பாக்கியம் செய்ய வில்லை என்றாவது தமது கண் முகப்பே வந்து சொனால் போதும்
பாவியேன் காண வந்து பாவி நீ என்று ஓன்று சொல்லாய்
ஈவு முடிவு இல்லாத தீ வினைகள்
தாவி வையம் கொண்ட எந்தாய் தாமோதாரா
என்று என்று கூவி கண்ணீர் மல்க
வாராய் -வர மாட்டேன் என்கிறாயே -வர வேண்டும் பிரார்த்தனையும் உண்டே
உடன்பாட்டிலும் பிரார்த்தனையிலும் –
அனுபவித்தாலும் மாளாத பாபங்கள் செய்து -இருக்க வேணுமோ –
சாஸ்திர வசனமும் பொய்யோ -அவஸ்யம் அனுபவித்து கழிக்க வேண்டும்
அனுபவிக்க படாத கர்மம் அழிவது இல்லை சொல்கிறதே –
இதுவும் எனது விஷயத்தில் பொய்யானதே
வருத்தி அடைந்து வேற போகின்றன
ஷணம் முகம் காட்டாத பொழுதே ஏற்பட்ட துக்கம் மொத்த பாப பலன் அனுபவித்தாரே
வென் நரகம் சேர வகை -வில்லை வளைத்தான்
சக்கரவர்த்தி திருமகன் -நரகம் வாராது
பட்டர் -இங்கே அனுபவித்ததே நரகம் போலே -மேலே வேற நரகம் போக வேண்டாதபடி
அனுபவித்தான் -கையும் வில்லும் ஆன –
இப்படி அருளிச் செய்து இருந்த பட்டரை காண வேதாந்த முனி ஆசைப்பட்டு நஞ்சீயர்
திரு நெடும் தாண்டக சாஸ்திரம் கொண்டு –
பிஷா
அவரோ நீர் -ஆம் -விவாதம் –
அழகுக்கும் ப்ரீதிக்கும் தோற்றும் –
தீ வினைகள் -செய் வினை ஓன்று இல்லை
தாவி வையம் -வரையாதே அனைவரையும் ரஷித்து –
ரஷிக்க அடி இட்டான் –
செயலுக்கு தோற்று எந்தாய் -தமக்காக செய்த லீலை
தாமோதரா
கட்டவும் அடிக்கவும் ஆகும் படி விதேயமாக்கி
வயிறு வாடாமல் அன்றோ
ஆற்றதாய் -கொண்டா கொண்டா கேட்கும் வயிறு -வெண்ணெய் விழுங்க
ஆய்ச்சி வெகுண்ட கண்ணி கயிற்றால்
வயிற்றினோடு ஆற்றான் மகன் –
ஆரா வயிற்றினோடு ஆற்றாதான் -திருமங்கை ஆழ்வார் -வயிற்றை  வண்ணானுக்கு இட்டானாம்
வண்ணான் தாளா சாலா வயிரா –
கஞ்சி எப்பொழுதும் இருந்துண்டே இருக்குமே –
அது போலே–பிள்ளை உறங்கா வல்லி தாசர் –
வயிறு வாழாமல் அன்றோ இக்காரியம் செய்தாய்
அடியவர் விதேயமாக இருக்க –
இப்படி இல்லாமல் தரிக்க முடியாமல் –
உனக்காகவும் செய்தாய் பரார்தமாகவும் செய்தாய் இரண்டு அர்த்தம் –
தாமோதரன் தாமம் உதரம் இன்றும் பெரிய பெருமாள் இடம் சேவிக்க –
தழும்பு சேஷியினுடைய திரு இலச்சினை
நமக்கு தோளில் பொறி பொறியால் ஒட்டுண்டு -போலே -இது சேஷபூதர் திரு இலச்சினை

தளிகை கைங்கர்யம் -பஞ்ச சம்ஸ்காரம் ஆகி அதே திரு மாளிகையில் இருக்க வேண்டும் –
வயிற்றை  காட்டினாராம் -அடுத்த திரு மாளிகை
வயிறு வாழாமல் அன்றோ இப்படி களவு கண்டது -சாதுர்ய உக்தி
உரவிடை ஆப்புண்டு -மார்விலும் கட்டி
என்று என்று இதையே சொல்லி கூவி நெஞ்சு உருகி
முதலில் கூவுவது அடுத்த கூவுதளுக்கு அடிப்படி உருகி
கண்ணில் வர
கண் பனி சோர நின்றால்
பாவி –
ஓன்று சொல்லு
இந்தரன் – யசோதைக்கு உதவினோம்
சத்வ நிஷ்டர் தாய் நீ பாவி அப்படி சொன்னாலும் போதும்
சத்வ நிஷ்டரா -தேவ அசுர விபாகம் சொல்ல கீதை
இப்பொழுது -பாக்யவான் பாவி என்னவுமாம்
உனது மிடற்று ஒசைகேட்பதே வேண்டும்
நிர்பந்தம் உண்டு
பாவியேன் காண வந்து
நெஞ்சிலே மறைந்து இருந்து இல்லாமல்
கண்ணால் காண வந்து
பாவியேன் -உண்டு உடுத்து ஜீவியா நிற்க
லோகத்தில் யாரும் அழ வில்லை
நான் செய்த பாபம் தானே
நீ அருளிய மதி நலம் தானேகாரணம் இதற்க்கு
சப்தம் ரூபம் -இவருக்கும் பிரவண்யம்
அவன் மிடற்று ஓசை திரு மேனி அழகு இவருக்கு

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading