திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -4-7-2-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

‘கொள்ள மாளா இன்ப வெள்ளம்
கோதுஇல தந்திடும்என்
வள்ள லேயோ! வையம் கொண்ட
வாமனாவோ!’ என்றுஎன்று
நள்இ ராவும் நன்பகலும் நான்இருந்து,
ஓலம் இட்டால்
கள்ள மாயா! உன்னை என்கண்
காணவந்து ஈயாயே.

    பொ-ரை : ‘பூவுலகை அளந்துகொண்ட வாமனனே! குற்றம் இல்லாதனவும் அனுபவிக்க அனுபவிக்கக் குறைவுபடாதனவுமான ஆனந்தக்கடலைக் கொடுக்கின்ற வள்ளலே!’ என்று என்று நள் இராவும் நன்பகலும் நான் இருந்து அழைத்தால், கள்ள மாயனே! உன்னை என் கண்கள் காணும்படியாக நடந்து வந்து திருவருள் புரிதல் வேண்டும் என்கிறார்,’ என்றவாறு.

    வி-கு : ‘கோதில’ என்பது, இன்பத்திற்கு அடைமொழி. ‘கோதில்லாதனவும் கொள்ள மாளாதனவுமான இன்பம்’ என்க. கோது – குற்றம். நல் – செறிவு. ‘வந்து ஈயாய்’ என்க. ‘ஈயாய்’ என்பது விதி வினை; ‘ஈதல் வேண்டும்’ என்பது பொருள். இனி, இதனை மறைவினையாகக் கொண்டு, ‘ஈகின்றிலை, கொடுக்கின்றிலை’ என்னலுமாம். ஓகாரங்கள் துக்கத்தின் மிகுதியைக் காட்ட வந்தன.

    ஈடு : இரண்டாம் பாட்டு, 1‘முன்பு செய்த உபகாரங்களைச் சொல்லி, அப்படி உபகரித்து உன் இனிமையை

அறிவித்து, இப்போது நான் கூப்பிட முகங்காட்டாதே எழவாங்கி இருத்தல் போருமோ?’ என்கிறார்.

    கொள்ள மாளா இன்பவெள்ளம் – அனுபவிக்க அனுபவிக்கக் குறை பிறவாதபடியான ஆனந்த மாக்கடல்; 1 ‘வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனன்,’ என்றதனைச் சொல்லுகிறார். கோது இல தந்திடும் -ஆனந்தத்திற்குக் கோது ஆகிறது, ‘அனுபவித்தால் அமையும்’ என்றிருத்தல்; வேறு விஷயங்களிலே ஆசையை உண்டாக்குதல் செய்கை; இஃது அங்ஙன் அன்றிக்கே, அனுபவிக்க அனுபவிக்கத் தன் பக்கலிலே ஆசையைப் பிறப்பித்து, இதர விஷய வைராக்கியத்தையும் பிறப்பிப்பதான ஆனந்தமாதலின், ‘கோதில’ என்கிறார். ஆக, ‘கோது இலவாய்க் கொள்ளக்கொள்ள மாளாதபடியான ஆனந்த வெள்ளத்தைத் தந்தவன்’ என்றபடி.

    என் வள்ளலேயோ – தருகிற போது உன் பேறாகத் தந்து, இப்போது பேறு என்னது ஆக்கி, நான் கூப்பிட இருக்கிறாயே? வள்ளல்தனமாவது, தன் பேறாகக் கொடுத்தலே அன்றோ? 2‘ஆனந்தமய’, ‘ஆனந்தோ பிரஹ்ம’ என்கிற தன்னை உபகரித்தபடி அன்றோ? 3இப்படி இப்போது கூப்பிடப் பண்ண நினைத்திருந்தால், ‘வீற்றிருந்தேழுல’கிலே அப்படி என்னை அனுபவிப்பிக்க வேண்டுமோ?’ என்கிறார். 4சிறியதுக்கு இனியது இட்டுக் கெடுத்தான்காணும். 5‘சிறியன்’ என்றாரே தம்மை. வையம் கொண்ட வாமனாவோ – இரந்தார்க்குக் கொடுக்கைக்காக நீ இரக்குமவன் அன்றோ? ‘மூன்று உலக ஆட்சியையும் இழந்தேன்’ என்று காலிலே விழுந்த

இந்திரனைக் கண்ணநீரை மாற்றுகைக்காக, திருமகள் கேள்வனான தன்னை இரப்பாளன் ஆக்கினானே அன்றோ? என்றது, ‘நீ இரந்து தருகை ஒழிய நான் இரந்து கூப்பிட இருப்பதே இப்போது!’ என்கிறார் என்றபடி.

    என்று என்று – 1இந்திரனைப் போன்று இராச்சியம் பெற்றுப் போகிறார் அல்லர், மஹாபலியைப் போலே ஒளதார்யம் கொண்டாடிப் போகின்றார் அல்லர், எப்போதும் இதனையே சொல்லி. 2வையங்கொண்ட பின்பும் வாமன வேஷமாயிற்று இவர் திருவுள்ளத்தில் ஊற்று இருந்தது; ஆதலின், ‘வையம் கொண்ட வாமனா!’ என்கிறார். நள் இராவும் – ‘நள்’ என்று நடுவாதல்; செறிவாதல்; இரவில் மற்றைய பொருள்களின் ஒலி மாறினால் வருவதொரு ஒலியுண்டு, அந்த ஒலியாதல். எல்லாவற்றாலும் பலித்த பொருள், ‘நடு இரவு’ என்பது, 3‘இந்தப் பூதங்கள் தூங்குகிற காலத்தில் எவன் விழித்துக்கொண்டு இருக்கிறானோ’ என்கிறபடியே, ‘நீ உணர்ந்து கூப்பிடும்படி செய்வதே!’ என்பார், ‘நள்ளிராவும்’ என்கிறார். நன்பகலும் – ‘தீர்ப்பாரை யாம் இனி’ என்ற திருவாய்மொழியோடு வேற்றுமை அற, பகவானுடைய சம்பந்தம் மாறாதே போருகையாலே ‘நன்பகல்’ என்கிறார்.

    அன்றிக்கே, 4புறம்பு ஒரு விஷயத்தை அனுபவித்தால், காணாத போது மறந்து வேறு ஒன்றிலேயும் நெஞ்சை வைக்கலாம்படி இருக்குமே அன்றோ? அவனைக் காணப் பெறாமையாலே பாழ் அடைந்த காலம் ஆகையாலே, செவ்வாய்க் கிழமையை மங்களவாரம் என்னுமாறுபோன்று ‘நன்பகல்’ என்கிறார் என்னலுமாம். நான் இருந்து – கூப்பிடுகைக்கு ஆற்றலன் அல்லாதபடி பலமற்றவனான நான் இருந்து. அன்றிக்கே, ‘வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்த நான் இருந்து’ என்னலுமாம். ஓலம் இட்டால் -கூப்பிட்டால். கள்ள மாயா – கண்களால் பார்க்க ஒண்ணாதபடியாக்கி, நெஞ்சிலே மறக்கவொண்ணாதபடி செய்கிற ஆச்சரியத்தை உடையவனே! உன்னை – கண்டு அல்லது தரிக்கவொண்ணாதபடியான சிறப்பினையுடைய உன்னை; 1‘கோலம் மேனி’யே அன்றோ? என் கண் காண – 2விரும்பும் என் கண்கள் காணும்படி. வந்து ஈயாய் – திருவாய். 3. 8 : 4.– 3நடையழகு கண்டு வாழும்படி முன்னே நடந்து வந்து தரவேண்டும். அன்றிக்கே, ‘பிராட்டியைப் பிரிந்து ஒரு கணமும் பிழைத்திருக்க மாட்டேன்!’ என்றும், ‘இப்படிப்பட்ட பிராமணர்கள் வந்து என்னைத் தஞ்சம் அடைந்தார்கள் என்பது எனக்கே நாணமாய் இருக்கின்றது!’ என்றும் கூறும்படி இருக்கையாலே, ‘இவன் பக்கல் ஒரு குறை இல்லையாகாதே!’ என்று தோற்றும்படி ஆயிற்று வருவது. 4உன்னை நீயே கொண்டு வந்து தரவேண்டும். 5தந்தோமே – ‘அல்லாதார் இப்படிக் கூப்பிடாதிருக்க, உம்மை நம்மையே சொல்லிக் கூப்பிடச் செய்தோமே!’ என்ன, ‘அதனால் போராது, கண் காண வந்து ஈயாய்,’ என்கிறார். என்றது, ‘மாநச அனுபவத்தால் போராது; கண்களுக்கு இலக்காம்படி வரவேண்டும்’ என்றபடி. ‘ஈயாய்’ என்பதற்கு, 6‘ஈகின்றிலை’ என்னலுமாம்;அங்ஙனம் கொள்ளுமிடத்துச் ‘செய்வினையோ பெரிதால்’ என்ற மேல் பாசுரத்தோடே கூட்டுக. 

செய்த உபகாரங்கள் சொல்லி –
கள்ள மாயா
கொள்ள மாளா இன்ப வெள்ளம்
கோதிலா
வள்ளல்
வையம் கொண்ட வாமனா
என்று என்று இரவும் பகலும் ஓலம் இட்டாலும்
ஈயாய் கொடு
அனுபவிக்க அனுபவிக்க குறையாத வீவில் இன்பம்
கோது -போதும் குறை இன்றி –
விஷயாந்தர ஆசை பிறப்பிக்காமல் வேற நோக்கு போக விடாமல்
என் வள்ளல் -கொடுப்பதை பேறாக கொடுத்து
தன்னையே கொடுத்து ஆனந்த மயன்
வீற்று இருந்து ஏழு உலக்கில் அனுபவிக்க செய்ய வேண்டுமோ
பெற்றது போலே பாவனை உண்டாக்கி கதரும்படி செய்தாயே
சிறியதுக்கு இனியது இட்டு கெடுத்தால் போலே
நாக்குக்கு ரசம் அறியாமல்
வஸ்து கொடுத்து கெடுத்து
ஆத்மாவை கெடுத்து -சிறிய நாக்கு இரண்டு அர்த்தமும்
இனியது தம்மை
வையம் கொண்ட வாமனன்
இரந்தாருக்கு இரந்தது -ஸ்ரீ ய பதி இரந்து
உன்னை யாசகம் செய்யும் எனக்கு
என்று என்று –
இந்த்ரன் போலே ராஜ்ஜியம் பெற்று போகாமல்
மகா பலி போலே தானம் கொடுத்தேன் சொல்லி போகாமல்
என்று என்று
வையம் கொண்ட திருவிக்ரமன் சொல்லாமல் வாமனன்
நள் இரவில் -நடு இரவில் சப்தம் நள் ஆக இருக்குமாம்
உணர்ந்து நோக்கும் காலத்தில் -இரவு பகல் கத்திக் கொண்டு
நல்ல பகலிலும் நடு பகலிலும்
தீர்ப்பாரை வீற்று இருந்து வாசி அற
துக்கத்திலும் ஹர்ஷத்திலும் -உன்னையே நினைந்து
நசை வேற இடத்தில் வைக்காமல்
நன் பகல் எதிர்மறை இலக்கணம் போலே
ரொம்ப நல்ல காலம் -போலே
கூப்பிட சக்தி இன்றி இருந்து
வீவில் இன்பம் அனுபவித்து இருந்து
எல்லை இல்லா துக்கம் உடன் இருந்து
கள்ள மாயா
கண்ணில் தெரியாமல் நெஞ்சில் அறியும்படி
உன்னை கண்டு தரிக்க
கண்கள் காணும்படி கொடுப்பாய்
வந்து நடை அழகு காண
தோன்றும் பொழுது -ஷணம் பிரிந்து இருக்க மாட்டேன்
தண்ட காரணிய  ரிஷிகள் சொல்லிய வார்த்தை
கதரும்படி செய்தா யே
அது போதாது
கண்ணுக்கு காணும் படி செய்து அருள்
செய்ய மாட்டாய் செய்வினை பெரியது என்பதால்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading