திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -4-7-9-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

இடகி லேன்ஒன்று; அட்ட கில்லேன்; ஐம்புலன் வெல்லகிலேன்;
கடவ னாகிக் காலந்தோறும் பூப்பறித்து ஏத்தகிலேன்;
மடவல்நெஞ்சம் காதல்கூர, வல்வினையேன் அயர்ப்பாய்த்
தடவு கின்றேன்; எங்குக் காண்பன் சக்கரத்து அண்ணலையே?

    பொ-ரை : ‘பசியுடையார்க்கு ஒரு பிடிச்சோற்றை இட்டேன் அல்லேன்; தாகமுடையார்க்கு ஒரு மிடறு தண்ணீர் வார்த்தேன் அல்லேன்; ஐம்புலன்களையும் வென்றேன் அல்லேன்; கடமையையுடையவனாய் அவ்வக்காலங்களில் பூக்களைப் பறித்துத் துதித்தேன் அல்லேன்; மடமையையும் வலிமையையுமுடைய மனத்திலே காதல் மிக, கொடிய வினையையுடைய யான் அறிவின்மையால் சக்கரத்தையுடைய தலைவனைக் காண வேணும் என்று தடவுகின்றேன்; எங்கே காணக்கடவேன்?’ என்கிறார்.

வி-கு : ‘வல்வினையேன் சக்கரத்து அண்ணலைக் காணவேண்டுமென்று அயர்ப்பாய்த் தடவுகின்றேன்; எங்குக் காண்பன்?’ எனக் கூட்டுக. ‘காதல் கூரத் தடவுகின்றேன்’ என்க.

    ஈடு : ஒன்பதாம் பாட்டு. 1‘எம்பெருமானைக் காண்கைக்குத் தகுதியான கர்மயோகம் முதலான உபாயங்களுள் ஒன்றும் இன்றிக்கே இருக்கிற நான் ‘காண வேண்டும்’ என்று ஆசைப்பட்டால், காண்கைக்கு வழி உண்டோ?’ என்கிறார்.

    இடகிலேன் – வருந்துகிற உயிர்களைக் கண்டால், ‘ஐயோ!’ என்று இரங்கிச் சில இடில், அது சர்வேசுவரன் திருவுள்ளத்துக்கு மிகவும் உகப்பே அன்றோ? அங்ஙனம் ஒன்றும் செய்யப் பெற்றிலேன். ஒன்று அட்டகில்லேன் – கையில் பொருளை அவிழ்த்து இடாவிட்டால், உடம்பு நோவத் தண்ணீர் சுமந்து வார்க்கலாமே அன்றோ? அதுவும் செய்திலேன். ஐம்புலன் வெல்லகில்லேன் – ‘பிறர்க்கு ஒன்று வேண்டும்’ என்று இராவிட்டால், ‘எனக்கு’ என்னுமதுதான் தவிரப் பெற்றேனோ?’ என்கிறார்; சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்னும் விஷயங்களிலே 2பட்டிபோகாதபடி வென்றிலேன். கடவனாகிக் காலந்தோறும் பூப்பறித்து ஏத்தகிலேன் – சாஸ்திரங்களில் சொல்லுகிறபடியே, அடைத்த காலங்களிலே மலர் முதலான உபகரணங்களைக் கொண்டு தேவர் திருவடிகளிலே சிறந்த ஆராதனத்தைச் செய்தேன் இலன். ‘ஆயின், 3இவர் சமாராதனம் செய்து அறியாரோ?’ என்னில், நூல் பிடித்தாற்போலே சாஸ்திரங்களிலே சாதனரூபமாகச்

சொல்லுகிற சமாராதனத்தில் இவர்க்குச் சம்பந்தம் இல்லை; தேக யாத்திரைக்கு உடலாகச் செய்யுமது உண்டு. 1‘இவை உண்டாயினவானால் பத்தி சொரூபத்திலே அடக்கிவிடலாம், அதுவும் இல்லை,’ என்கிறார். ‘ஆயின், கர்மயோகம் முதலானவற்றை விலக்குகிறதோ?’ எனின், அவற்றினுடைய சொரூபத்தை விலக்க வந்தது அன்று; அவற்றினுடைய உபாயத் தன்மையை விலக்குகிறது.

    மடம் வல் நெஞ்சம் – மடப்பத்தால் மென்மையை நினைக்கிறது : அதாவது, ‘பகவத் விஷயம்’ என்றால் கடுக விழுந்துகொண்டு நிற்கை. வன்மையாவது, விழுந்தால் பின்னை அங்குநின்றும் மீட்க அரிதாய் இருக்கை. காதல் கூர – இப்படிப்பட்ட மனத்திலே அன்பு மிக. வல்வினையேன் எங்குக் காண்பன் – ‘அன்பிற்குத் தகுதியாகக் காணப் பெறாத பாவத்தைச் செய்தவன். காதலுக்கு விஷயம் பெற்றேன் அல்லேன்; 2இதனை அகஞ்சுரிப்படுத்தினேன் அல்லேன், ஆசை சிறிதுடையார்க்கு முகங்கொடாதவனாய் இழந்தேன் அல்லேன்; என் பாவம் இருந்தபடி என்?’ என்கிறார்.

    அயர்ப்பாய் – அறிவு கேட்டை உடையேனாய். தடவுகின்றேன் – 3‘கௌசல்யையே! உன்னைப் பார்க்கிறேன் இல்லை,’ என்கிறபடியே, முன்னே வந்து நின்றாலும் காண மாட்டாதபடி தடவாநின்றேன். எங்குக் காண்பன் – 4ஒரு கைம்முதல் இன்றிக்கே இருக்கக் கூப்பிடுகிற நான், எங்கே காணக் கூப்பிடுகின்றேன்? சக்கரத்து அண்ணலையே – கையில் திருவாழியையுடைய சர்வேசுரனை.

எங்கே காணக் கடவேன்? 1யசோதைப்பிராட்டி கையும் வெண்ணெயுமாகப் பிடித்துக்கொண்டாற்போலே, கையும் நெய்யார் ஆழியுமாகப் பிடித்துக்கொள்ளவாயிற்று இவர் ஆசைப்படுகிறது.  

கர்ம யோகம் போன்ற உபாயம் இல்லை
அதனால் பெற விலை என்கிறார்
ஐயோ என்று இரக்கம் காட்டி -சர்வேஸ்வரன் திரு உள்ளம் உகக்கும் அத்தை செய்யப் பெற்றிலேன்
கர்ம யோகம் –
அட்டகில்லேன்
தண்ணீர் வார்த்து சோறு இட்டு -கர்ம யோக அந்தர்பூதம் இவை
யஞ்ஞாம் தானம் தபம் இவை கர்ம யோகம்
ஐம் புலனும் வெல்ல கில்லேன் -எனக்கும் ஒன்றும் செய்யாமல் இல்லை
விஷயாந்தரங்களில் படி மேய்த்து ஞானம் யோகம் இல்லை
திருவாராதனம் பூ பறித்து ஏத்த கில்லேன் பக்தி யோகமும் இல்லை

மேலே, ‘எண்திசையுமுள்ள பூக்கொண்டு ஏத்தி’ என்றதனைத் திருவுள்ளம்
பற்றி, ‘இவர் சமாராதனம் செய்து அறியாரோ? என்னில்,’ என்கிறார். ‘நூல்
பிடித்தாற்போலே’ என்றது, சிலேடை : நூல் – சாஸ்திரமும், முறையும்.
‘முறை தப்பாமல்’ என்றபடி. தேக யாத்திரைக்கு – கைங்கரியத்திற்கு.
அதாவது, கைங்கரியம் செய்யாத போது தரிக்கமாட்டாமையாலே
செய்துகொடு நிற்பர். இதனால், ‘பிராப்பியம் என்ற எண்ணத்தால் செய்யுமது
உண்டு’ என்றபடி.

தேக யாத்ரைக்கு உடலாக செய்தார்
சாதனமாக செய்தது இல்லை –
உயிர் தரிக்க உடலாக செய்தார் –
ஸ்வரூப -சர்வ தரமான் பரித்யஜ்ய கைங்கர்ய ரூபமாக செய்வதே
உபாய கோஷ்டியில் இல்லை
மட வன் நெஞ்சம் -மென்மை யான நெஞ்சம் -அவனை நினைக்க
வன்மை -விழுந்தால் அவனே மீட்க்க முடியாமல்
வல் வினையேன் சிநேகம் அனுகூலமாக சேவிக்க முடியாமல்
ஆஸா லேசம் உடையாருக்கு முகம் கொடுப்பவன் காண முடியாமல் பாபங்கள் செய்து
கதறுகின்றேன் -முன்னே வந்தாலும் காண முடியாமல்
தசரதன் தடவா நின்றது போலே
கைம்முதல் ஒன்றும் இல்லை
கதற தான் முடியும்
சக்கரத்து அண்ணலை –
கையும் வீணையும் பிடித்து கொண்டு இருப்பது போலே
கையும் வெண்ணெயும் ஆசை பட்டது போலே

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading