சக்கரத்து அண்ணலே! என்று தாழ்ந்து, கண்ணீர் ததும்ப,
பக்கம் நோக்கி நின்று, அலந்தேன்; பாவியேன் காண்கின்றிலேன்;
மிக்க ஞான மூர்த்தி யாய வேத விளக்கினை என்
தக்க ஞானக் கண்க ளாலே கண்டு தழுவுவனே.
பொ-ரை : ‘சக்கரத்தையுடைய சுவாமியே!’ என்று சொல்லி அனுபவிக்கப் பெறாமையாலே கீழே விழுந்து கண்களில் நீர் மிகும்படி சுற்றும் பார்த்து நின்று வருந்தினேன்; பாவத்தைச் செய்த நான் காணப் பெறுகின்றிலேன்; மேம்பட்ட ஞானத்தையே உருவமாக உடையவனும் வேதமாகிற விளக்காலே காணப்படுகின்றவனுமான எந்தையை எனக்குத் தகுதியான ஞானமாகிற கண்களாலே கண்டு தழுவுவேன்,’ என்பதாம்.
ஈடு : பத்தாம் பாட்டு. 2‘காணப் பெறாவிட்டால், மறந்து பிழைக்க ஒண்ணாதபடி எனக்குத் தக்கது ஒரு ஞானக்கண் எங்ஙனே உண்டாயிற்று?’ என்கிறார்.
சக்கரத்து அண்ணலே என்று தாழ்ந்து – ‘திருவாழியைக் காட்டி என்னை எழுதிக்கொண்டவனே!’ என்று இவ் வார்த்தையோடே தரைப்பட்டு. கண் நீர் ததும்ப – கண்கள் நீர் மிகைக்கும்படி. 3இவருடைய துக்கத்தின் எல்லை காண்பது கண்ண நீரிலேகாணும். பக்கம் நோக்கி நின்று
அலந்தேன் – வருகைக்குத் தகுதியுள்ள திசையைப்பார்த்து நின்று வெறுத்தேன். 1‘பெரிய ஆபத்தை அடைந்தவனாய்’ என்னுமளவே அன்றோ? பாவியேன் காண்கின்றிலேன் – 2ஆபத்திற்குத் துணைவனாய் இருக்க, மஹா பாவி ஆகையாலே நான் காணப்பெறுகின்றிலேன். 3‘காணப்பெறாது ஒழிந்தால் மறந்து பிழைக்கலாம்படி நெஞ்சில் பிரகாசிக்காமல் ஒழியத்தான் பெற்றேனோ?’ என்கிறார் மேல் :
மிக்க ஞான மூர்த்தியாய் நிறைந்த ஞானத்தையே சொரூபமாக உடையவனான. வேத விளக்கினை – 4வேதமாகிற விளக்காலே காணப்படுமவனை. அன்றிக்கே, ‘வேதத்தைப் பிரகாசிக்கச் செய்கின்றவனை’ என்னலும் ஆம்; என்றது,’ வேதத்திற்கு விளக்காய் இருப்பவன்’ என்றபடி. என் தக்க ஞானக் கண்களால் கண்டு தழுவுவன் – எனக்குத் தக்காற்போலே ஒரு ஞானக்கண் உண்டாய், அதனாலே கண்டு அனுபவிப்பன். 5காணப் பெறாமையாலே அன்பு துக்கத்திற்குக் காரணம் ஆகிறாப்போலே, நெஞ்சில் பிரகாசிப்பதுவும் துக்கத்திற்குக் காரணம் ஆகிறாப்போலே, நெஞ்சில் பிரகாசிப்பதுவும் துக்கத்திற்குக் காரணம் ஆகாநின்றது. என்றது, ‘மயர்வு அற மதிநலம் அருளினன்’ என்கிற ஞானபத்திகள் இரண்டும்1கழுத்துக்கட்டியாய்விட்டன,’ என்றபடி. 2‘மறந்து பிழைக்க ஒண்ணாதபடி எனக்குத் தக்காற்போலே ஒரு ஞானமும் வேண்டுமோ?’ என்கிறார்.
வேத விளக்கினை’ என்பதற்கு இரண்டு பொருள் அருளிச்செய்கிறார்:
முதலது, ‘வேதத்தைத் தனக்கு விளக்காகவுடையவன்’ என்பது; ‘வேதத்தாலே
பிரதிபாதிக்கப்படுகின்றவன்’ என்றபடி. இரண்டாவது, ‘வேதத்துக்கு விளக்கு’
கழுத்துக் கட்டி – கழுத்தைக் கட்டுவது; ‘பாதகம்’ என்றபடி. அதாவது, ‘கண்டு
அனுபவிக்கவும் ஒட்டாது, மறந்து பிழைக்கவும் ஒட்டாது,’ என்றபடி.
என்பது.
காண முடிய வில்லை
ஞானம் உண்டே மறக்கவும் முடியவிலையே
மனக்கண்ணால் கண்டு கொண்டே இருக்கிறேன்
திரு ஆழி அழகை காட்டி எழுதிக் கொண்டு
பக்கம் நோக்கி அலந்தேன்
ஆபத் சகனாக இருக்க இழந்தேன்
மறக்கவும் முடியாமல் இருக்க –
மிக ஞான மூர்த்தியாய வேத விளக்கு
மூர்த்தி யாக இருக்கிற இங்கு
வேதம் விக்ளக்கால் காணப் படுபவன்
வேதத்தால் விளக்கப் படுபவன்
எனக்கு தக்க ஞான திருஷ்டி கொண்டு
அத்தால் கண்டு அனுபவித்து
காண பெறாமையாலே ப்ரேமம் இருந்து
துக்கம் மிகுந்து
கழுத்துக் கட்டியாய் மயர்வற மதி நலம் அருளி -இதுவே காரணம்
கழுத்துக் கட்டி – கழுத்தைக் கட்டுவது; ‘பாதகம்’ என்றபடி. அதாவது, ‘கண்டு
அனுபவிக்கவும் ஒட்டாது, மறந்து பிழைக்கவும் ஒட்டாது,’ என்றபடி.
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply