திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -4-1-10-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

குறுக மிகஉணர் வத்தொடு நோக்கிஎல் லாம்விட்ட
இறுகல் இறப்பெனும் ஞானிக்கும் அப்பயன் இல்லையேல்,
சிறுக நினைவதுஓர் பாசம்உண்டாம்; பின்னும்வீ டுஇல்லை,
மறுகல்இல் ஈசனைப் பற்றி விடாவிடில், வீடுஅஃதே.

    பொ-ரை : ‘(மனமானது) தன்னைச் சார (தன் வசப்பட்ட அம்மனத்தினை) ஞான சொரூபமாக உள்ள ஆத்துமாவோடு சேர்த்து நன்றாகப் பார்த்து எல்லாப்பற்றுகளையும் அடியோடே விட்ட, குறுகிய ஆத்தும அனுபவத்தையே மோக்ஷமாக நினைத்திருக்கும் ஞானிகளுக்கும் பகவானை உபாயமாகப் பற்றுதல் இல்லையாகில் சிறிய பேறுகளை நினைப்பதற்குக் காரணமான ஒரு பற்று உண்டாகும்; அதற்குமேல், அம்மோக்ஷமும் இல்லை; ஆன பின் ஒரு விதக் குற்றமும் இல்லாத இறைவனை அடைந்து அகலாதொழிவானேயானால், அதுவே பரமபுருஷார்த்தமான மோக்ஷமாகும். ஆதலால், மேற்பாசுரத்தில் கூறிய ‘அண்ணல் கழல்கள் குறுகுமினோ’ என்ற அதுவே மோக்ஷமாகும் என்றபடி.

    வி-கு : ‘குறுக நோக்கி விட்ட ஞானி’ என்க. உணர்வு – ஞானம்; ஆத்துமா. இறுகல் – இறுகப்பிடித்தல். இறப்பு – மோக்ஷம். பாசம் – பற்று. மறுகல் – குற்றம். ‘பற்றி விடாவிடில் பின்னும் வீடு இல்லை’ எனக் கூட்டுக. இங்கே, ‘வீடு’ என்றது, கைவல்யத்தை. ‘அஃதே வீடு’ என மாறுக.

    ஈடு : பத்தாம் பாட்டு. 3‘பூமியில் ஐஸ்வர்யம், சுவர்க்க அனுபவம் இவை நிலை நில்லா,’ என்றார் மேல்;

‘இவைபோல் அன்றிக்கே, ஆத்தும அனுபவம் நிலை நின்ற புருஷார்த்தமே அன்றோ?’ என்னில்,’ ‘மேலே கூறியவற்றை நோக்கும்போது இதற்கு ஒரு நன்மை உண்டேயாகிலும், பகவானுடைய ஆனந்தத்தைப் பார்க்கும்போது இது மிகச் சிறியதாய் இருக்கையாலே இதுவும் தண்ணிது; ஆன பின்பு, அவனைப் பற்றப் பாருங்கோள்,’ என்கிறார்.

    குறுக உணர்வத்தொடு மிக நோக்கி – பல காலம் புறம்பே உள்ள விஷயங்களில் பண்ணிப் போந்த வாசனை அடைய ஆத்துமாவிலேயாம்படி 1‘விசத தமமாகத் தியானம் செய்து’ என்றது, ‘புறம்பேயுள்ள விஷயங்களிலே தூரப் போய்ப் பற்றுகின்ற மனத்தினை ஆத்துமாவின் பக்கலிலே சேர்த்து’ என்றபடி. இது 2கண்ணை இட்டுக் கண்ணைப் பார்த்தாற்போலே இருப்பது ஒன்று ஆதலின், 3குறுக’ என்கிறார். இதனால், முதல் தன்னிலே ஆத்துமாவின் பக்கலிலே சேர்த்திய மனத்தினையுடையவனுக்கே ஆத்தும அனுபவத்தில் அதிகாரம் உள்ளது என்பதனைத் தெரிவித்தபடி. எல்லாம் விட்ட – 4திருமகள் கேள்வன் பெரிய திருவடி திருத்தோளிலே தோளும் தோள் மாலையுமாய் வந்து நின்றாலும், சாணகச்சாற்றைப் போன்று-சாணகச்சாறு – பஞ்ச கவ்யம்.– சுத்தி மாத்திரத்தையே பற்றிக்கொண்டு, இனிமையிலே நெஞ்சு செல்லாதபடி அதனையும் விடுவது.

    இறுகல் இறப்பு என்னும் ஞானிக்கும் – 5சங்கோசத்தை மோக்ஷம் என்று சொல்லுகிற ஆத்தும ஞானிக்கும்.இவ்வருகு உள்ளனவற்றை நோக்கும்போது ‘விரிந்தது, மேலானது’ என்று இருந்தானே ஆகிலும், அவ்வருகும் கண்டவர் ஆகையாலே

மோக்ஷ உலகத்தை. ‘ஒண்டொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்பக்,
கண்ட சதிர் கண்டொழிந்தேன் அடைந்தேன் உன் திருவடியே,’ என்பது
இவருடைய திருவாக்கு.-
(திருவாய்மொழி,4.9:10)

‘இறுகல்’ என்று இருக்கிறார் இவர். இறப்பு – மோக்ஷம். 2அப்பயன் இல்லையேல் – அந்தப் பகவானுடைய உபாசனம் இல்லையாகில் ஆத்துமாவைத் தியானம் செய்ய ஒண்ணாது, உபாசனமானது இன்பரூபமாயிருக்கையாலே அதனைப் ‘பயன்’ என்கிறார். அவனுடைய சாதனம் இவருக்குப் பலமாய் இருக்கிறது. சிறுக நினைவது ஓர் பாசம் உண்டாம் – 3தன்னை முன்புத்தையிற் காட்டில் மிகச் சிறியனாக நினைக்கும்படி தளைகளான அவித்தை முதலானவைகள் நூறு கிளைகளாகக் கிளைக்கும். ‘தேவோஹம் – நான் தேவன், மனுஷ்யோகம் – நான் மனிதன்’ என்கைக்கு அடியான தளை ஆதலின், ‘சிறுக நினைவது ஓர் பாசம்’ என்கிறார்.

    மறுகல் இல் ஈசனைப் பற்றி விடாவிடில் பின்னும் வீடு இல்லை – இந்திரிய நியமனம் முதலானவைகள் உண்டாய், பின்பு பகவானை வழிபட்டுக் கர்மங்களை எல்லாம் அழித்து, ஆத்துமாவைக் காண வேண்டும் என்று இருக்கின்ற அன்றும், சர்வேசுவரன் பக்கல் 4அந்திம ஸ்மிருதி பண்ணிஇச்சரீரத்தை விடுவதற்குப் பாரானாகில், அந்த மோக்ஷந்தான் இல்லை. மறுகல் இல் ஈசனை – குற்றங்கட்கு எதிர்த்தட்டான சர்வேசுவரனை, அன்றிக்கே, 1‘மறுகலில் – மறுகுகிற சமயத்தில்; உயிர் நீங்குங்காலத்தில் வருகின்ற கலக்கத்தில்’ என்னுதல். ஈசனைப் பற்றி விடாவிடில் – 2அந்திம ஸ்மிருதி இல்லையாகில் ஆதி பரதனைப்போலே மான் ஆதல், மரை ஆதல் ஆமித்தனை. அஃதே வீடு – ‘திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்து உய்ம்மினோ’ என்று நான் சொல்லுகிற அதுவே புருஷார்த்தம்.

ஆத்ம லாபம் -கைவல்யம் -பகவத் ஆனந்தம் பற்ற இது ஏக
தேசம் தண்ணியது –
குறுக மிக உணர்வு -சிறிய பலன்
அப்பயன் இலையேல் -பகவத் அனுபவம்
வீடு இல்லை –
உணர்வை குறுக்கி -நிலை நிறுத்தி த்யானம்
பிரத்யாக்ருத இந்திரியங்கள் -அவனுக்கு தான் ஆத்ம பிராப்தி
கண்ணை இட்டு கண்ணை பார்ப்பது போலே கஷ்டம்
வெளி விஷயம் பாராமல் ஆத்மாவை நோக்கி
எல்லாம் விட்ட -ஆசை அனைத்தையும் -ஐஸ்வர்யம் -பகவத் லாபம் -ஸ்ரீ ய பதி
பெரிய திருவடி தோளில் வந்தாலும் அத்தையும் விட்டு -எல்லாம் விட்டு –
தோளும் தோள் மாலையுமாக வந்தாலும்
இருந்தாலும் எம்பெருமானை நோக்கி தான் உபாசனம் செய்ய வேண்டும் –
சப்தாதி விஷயங்கள் ஈடுபாடு இன்றி ஸ்வர்க்காதி நோக்குபவன் போலே
இங்கே எம்பெருமான் மேனகை அழகை போலே நினைந்து
சாணக சாறு
பஞ்ச கவ்யம் -சுத்திகாக உண்பர் போக்யமாக இல்லை

போக்யதையில் நெஞ்சு செல்லாதபடி அவனையும் விட்டு –
சாணம் எச்சில் பிரட்டி –
தூரப் போடுவது போலே
கைவல்யம் பெற்று அவனை விட்டு –
இறுகல் ஞான சங்கோசம் -மோஷம் என்று சொல்லும் ஆத்ம ஞாநி
கைவல்ய நிஷ்டர் படி இதுவும் விஸ்தரம்
இவருக்கு இதுவும் இறுகல் -அவ்வருகை கண்டவர் ஆகையாலே
கிணற்று தவளை சமுத்திர தவளை போலே
அப்பயன் இல்லையேல் -பலமாக பற்றாமல் சாதனமாக பற்றுகிறான் கைவல்யார்த்தி
பயனா சாதனமா –
ஆழ்வார் அப்பயன் இல்லையேல் தம்முடைய நினைவால் இந்த சப்தம் –
உபாசனம் சுச்சுகம் இனிமையாக இருக்கும்
அவனுடைய சாதனம் இவருக்கு பிரயோஜனமாக இருக்கிறது
சித்திக்காமல் போனால் அவித்யாதிகள் உண்டாகி சரீரமே ஆத்மாவாக நினைக்க நேரிடும்
கைவல்யம் வேண்டும் என்று த்யானம் செய்பவன்
அந்திம ஸ்ம்ருதி –
வேற நினைவு வந்தால் -கைவல்யம் கிட்டாதே

சர்வேஸ்வரன் பக்கல் –
இந்திரியங்கள் அடக்கி
உபாசனம் செய்து
கர்மங்கள் கழிந்து
ஆத்மாவை மட்டுமே நோக்கி
அந்திம ஸ்மரதி பண்ணி
பெற வேண்டிய கஷ்டம் –
மீண்டும் சம்சாரத்தில் விழுவான்
கரணம் தப்பினால் மரணம்-ஜடபரதர் -மான் ஆன வ்ருத்தந்தம்
மறு கல் -ஹேய பிரத்யநீகன்
மறுக்கிற சமயத்தில் ஈசனைப் பற்றி சரீரம் விடா விடில்

மோஷம் எம்பெருமானைப் பற்றுவதே
தண்ணியது
கைவல்யம் விடாவிடில் அதுவே வீடு -மீண்டு அவனை பெற முடியாதே
இரண்டும் கேட்டான் நிலை அடைவானாம் –
பெருக நினைப்பது அவனை நினைப்பது

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading