அடிசேர் முடியினர் ஆகி அரசர்கள் தாம்தொழ
இடிசேர் முரசங்கள் முற்றத்து இயம்ப இருந்தவர்
பொடிசேர் துகளாய்ப் போவர்கள் ஆதலில் நொக்கெனக்
கடிசேர் துழாய்முடிக் கண்ணன் கழல்கள் நினைமினோ.
பொ – ரை : ‘தம்முடைய அடிகளிலே பொருந்திய முடியினையுடையவர்களாகி அரசர்கள் தாங்கள் தொழாநிற்க, இடியைப்
போன்ற முரசங்கள் வீட்டின் முன்னிடத்திலே ஒலித்துக்கொண்டிருக்க வீற்றிருந்த சக்கரவர்த்திகள், (அந்நிலை கெட்டு) பொடியோடு சேர்ந்த தூளியாய்ப் போவார்கள்; ஆகையாலே வாசனை சேர்ந்திருக்கின்ற திருத்துழாயினைத் தரித்த முடியினையுடைய கண்ணபிரான் திருவடிகளை விரைவில் நினையுங்கோள்’ என்பதாம்.
வி-கு : ‘முடியினராகித் தொழ இருந்தவர்’ என்க. ‘இருந்தவர் துகளாய்ப் போவர்’ என முடிக்க; ‘ஆதலின், கழல்கள் நினைமின்’ என்க. நொக்கு என்பது, விரைவுக் குறிப்பினைக் காட்டுகின்ற இடைச்சொல்.
ஈடு : மூன்றாம் பாட்டு. 1இராசாக்கள், தங்கள் காலிலே விழுந்து கிடந்தால் அதனை ஒரு பொருளாக நினைத்து நோக்காத மதிப்பினையுடையவர்கள், 2‘ஒரு சேதநன் – மகன், என்று எண்ண முடியாதபடி மதிப்பு அறுவர்கள் என்கிறார்.
அடிசேர் முடியினர் ஆகி – தன்னோடு ஒக்க ‘அரசு’, என்று இருந்த இராசாக்கள் தன் காலிலே சேர்க்கப்பட்ட முடியையுடையராய். அரசர்கள் – இராசாக்கள். தாம் தொழ – தாங்கள் அறிந்ததாகத் தொழும் இத்தனை போக்கி, ‘இவன் இப்படித் தொழுதான்’ என்னும் நினைவு அவனுக்கு இல்லை’ என்பார், ‘தாம் தொழ’ என்கிறார். 3‘இன்று ஸ்ரீபாதத்திலே தலை தாக்கத் தொண்டன் இடப்பெற்றோம்,’ என்று இவன்
தான் நினைத்திருக்கும் இத்தனை என்பதாம். 1‘தலையாலே யாசித்த அந்தப் பரதாழ்வானுடைய வேண்டுகோள் என்னால் முடிக்கப்படவில்லை,’ என்கிறபடியே, ‘பிள்ளை தலையாலே இரக்க, நாம் மறுத்துப் போந்தோம்’ என்று புண்பட்டுத் தலை சீய்க்கும் இறைவனைத் தொழுகிறார்கள் அன்றோ? ‘இவன் இப்படித் தொழ, அவன் செய்தது என்? என்னில்,
இடி சேர் முரசங்கள் முற்றத்து இயம்ப இருந்தவர் – ‘இன்ன அரசன் காணப் புகுகிறான்’ என்று ஓலக்கம் இருந்து, நாடகச்சாலையில் உள்ளாரை அழைத்து அருளப் பாடிட்டு, நாட்டில் மரங்களை அடையத் தொளைத்துத் 2தோலை மேவி அதனை இடியைப் போன்று ஒலிக்கச் செய்து விருப்பு இன்றியே இருப்பான். ‘இன்னான் வந்து காலில் விழுந்து கிடந்தான்; அவன் இதனை விரும்பாமல் கூத்துக் காண்பது பாட்டுக் கேட்பது ஆனான் என்று உலகத்திலே பிரசித்தமாக வேண்டும்’ என்று ஆயிற்று இவன் இருப்பது. 3அங்கு நிற்கின்ற தூணைக் காட்டிலும் ஒரு வாசி இல்லை காணும் இவருடைய நினைவால்: ஆதலின், ‘இருந்தவர்’ என்கிறார். ‘இப்படி இருந்தவர்கள் என் ஆவர்?’ என்றால், பொடிபடுவர் என்கிறார் மேல் : பொடி சேர் துகளாய்ப் போவர்கள் – ‘தனக்கு’ என்று ஓர் தன்மை இன்றிக்கே ‘பொடியோடே சேர்ந்த தூளி என்று வேறு ஒன்றனோடே சேர்த்து நிரூபிக்க வேண்டும்படி ஆவர்கள். என்றது, ‘தம் காலிலே ஒருவன் குனிந்தால் அநாதரிக்கும்படியான
மதிப்புடையவர், தம் தலையிலே ஒருவன் அடி இட்டால் ‘நாம் இவன் தலையிலே அடி இட்டோம்’ என்று நினைக்க வேண்டாதபடி சிறிய துகளாய்ப் போவர்கள்’ என்றபடி.
ஆதலின் – பொருளின் உண்மை நிலை இதுவான பின்பு. நொக்கு என – சடக்கு என. கடி சேர் துழாய் முடிக் கண்ணன் கழல்கள் நினைமின் – 1முடி கொடுத்தால் மாலையும் கொடுக்க வேண்டுமே! திருமேனியின் பரிசத்தால் நாட்செல்ல நாட்செல்ல வாசனை ஏறி வாரா நின்றுள்ள திருத்துழாய் மாலையைத் திருமுடியிலேயுடையனாய் அடியார்கட்கு எளியவனான கிருஷ்ணன் திருவடிகளை நினைக்கப் பாருங்கோள். 2‘நினைத்தல் மாத்திரம் போதியதாமோ? துதிசெய்தல் வேண்டாவோ?’ எனின், நினைத்த மாத்திரத்தில் கொண்டு முழுகுமே அன்றோ திருவடிகளின் இனிமை? அன்றிக்கே, ‘இவ்வடியை நினைக்கவே சமுசாரம் அடி அறும்’, என்னுதல். என்றது, 3‘யமன், கையில் பாசத்தைத் தரித்த தன்னுடைய கிங்கரனைப் பார்த்து, ‘பகவானிடத்தில் பத்தியுள்ளவர்களை விட்டுவிடு; நான் மற்றையோர்க்கே எஜமானன்;பாகவதர்களுக்கு எஜமானன் அலன் என்று காதின் அடியில் சொன்னான் அல்லவா?’ என்கிறபடியே, யமன் முதலானோர் அஞ்சும்படியான மதிப்பைப் பெறுவர்,’ என்றபடி.
திறம்பேன்மின் கண்டீர் திருவடிதன் நாமம்
மறந்தும் புறந்தொழா மாந்தர் – இறைஞ்சியும்
சாதுவாராய்ப் போதுமின்கள் என்றான் நமனுந்தன்
தூதுவரைக் கூவிச் செவிக்கு.’
(நான்முகன் திரு. 68)
‘காவலில் புலனை வைத்துக் கலிதன்னைக் கடக்கப் பாய்ந்து
நாவலிட் டுழிதரு கின்றோம் நமன்தமர் தலைகள் மீதே
மூவுலகு உண்டு உமிழ்ந்த முதல்வ!நின் நாமங் கற்ற
ஆவலிப் புடைமை கண்டாய் அரங்கமா நகரு ளானே!’
(திருமாலை. 1)
என்னும் திருப்பாசுரங்களை அநுசந்திக்கத் தகும்.
ராஜாக்கள் தங்கள் காலில் விழுந்து இருந்தால் –
திரும்பி பார்க்காமல் அனாதரித்து கர்வம் கொண்டு
சேதனன் என்று மதிகபடாமல் தாழ்ந்து போகிறார்கள்
திருவடிகள் ஒன்றே சார்வு
ராஜாக்கள் காலில் விழுகிறார்கள்
அடி சேர் முடியினன்
இடி சேர் முரசங்கள் முற்றத்தில் ஒலிக்க
இடி ஓசையில் கவனம் செலுத்தி அநாதரித்து வேறு ஒன்றில் கவனம்
யுத்தம் வந்தால் பொடி சேர் துகள் போலே போவார்கள்
கண்ணன் -கடி சேர் துழாய் -திருவடி நினையும்
ராஜாக்கள் முடி தனது கலீல்
ராஜாதி ராஜா சர்வேசா காலில் ராஜாக்கள் விழ
தாம் தொழ -அரசர்கள் தொழ -அரசர்கள் தாம் தொழ –
இவர்கள் சேவித்தார்கள் என்ற எண்ணம் அவனுக்கு இல்லை –
தண்டன் இதான் நாம் நினைக்க எம்பெருமான் அணைத்துக் கொள்கிறான்
இங்கேயே இவன் அநாதரித்து கர்வம் கொண்டு இருக்கிறான்
பக்தன் அடி தோழா -எம்பெருமான் -இப்படி காலில் விழும்படி கிலேசம் படுகிறான்
பரத ஆழ்வான் -சிரஸா வணங்கி -கேட்டதை நிறைவேற்ற வில்லை
பிள்ளை தலையால் இரக்க -செய்து முடிக்கவில்லையே வருந்திய பெருமாள்
ராஜா காலில் விழுவதை தெரிவிக்க –
அனைவரையும் கூட்டி -ஓலக்கம் -அனைவரையும் அருள் பாடிட்டு
நாட்டில் உள்ள மரங்கள் அடைய அழித்து தோலைக் கட்டி முரசு செய்து –
இடி ஒக்க த்வநித் து
காலில் விழுவதை அநாதரித்து கூத்து பாட்டு
நாடகசாலை மக்களை கூட்டி
இவ்வளவு பெருமையாக இருந்தவன் -பொடி பொடி
இருந்தவர் -ஸ்தம்பம் போலே இருந்தவர் –
பொடி சேர் துகள் -தனக்கு ஆதாரம் இன்றி பொடி உடன் சேர்ந்த தூளி போலே ஆவார்
சடக்கென கடி சேர் வாசனை சேர்ந்த துழாய்
செம்மின் முடி திருமால்
முடி கொடுத்தால் மாலையும் கொடுப்பான்
பரிவட்டமும் மாலையும்
திரு மேனி ஸ்பர்சத்தால் கடி சேரும் நாள் நல செல்ல
ஆஸ்ரித சுலபனான கிருஷ்ணன் திருவடிகளை
நினைத்தாலே போதும்
முழுக்கச் செய்து விடும் இனிமை
இவ்வடியை நினைக்கவே சம்சாரம் அடி இறும்
மதுசூதன அடியார் யமனுக்கு பிரபுகள் -அஞ்சும்படி மதிப்பை உடையவர் ஆவார்கள்
ராஜா அடி வணங்கினவரும் வணங்கப்பட்டவரும் பொடி துகள்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
Leave a Reply