படிமன்னும் பல்கலன் பற்றோடு
அறுத்து,ஐம் புலன்வென்று,
செடிமன்னு காயம்செற் றார்களும்,
ஆங்குஅவ னைஇல்லார்
குடிமன்னும் இன்சுவர்க்கம் எய்தியும்
மீள்வர்கள்; மீள்வுஇல்லை;
கொடிமன்னு புள்ளுடை அண்ணல்
கழல்கள் குறுகுமினோ.
பொ-ரை : பூமியையும் பொருந்திய பல ஆபரணங்களையும் அவற்றிலுள்ள வாசனையோடு நீக்கி, ஐந்து இந்திரியங்களையும் வென்று, தூறு மண்டும்படி இச்சரீரத்தை ஒறுத்துத் தவம் செய்தவர்களும், அவ்விஷயத்தில் அவனுடைய திருவருள் இல்லாதவர்கள் குடிகள் பொருந்தி இருக்கின்ற இனிமையையுடைய சுவர்க்கலோகத்தை அடையினும் மீண்டு வருவார்கள்; ஆதலால், நிலைபெற்ற கொடியிலே கருடப்பறவையையுடைய சர்வேசுவரனுடைய திருவடிகளைச் சேருங்கோள்; சேர்ந்தால், மீண்டு வருதல் இல்லாத தன்மையையுடைய உலகத்தைப் பெறலாம்.
வி-கு : ‘அறுத்து வென்று செற்றார்களும் அவனை இல்லார் எய்தியும் மீள்வர்கள்,’ என்க. ‘அண்ணல் கழல்கள் குறுகுமின்; மீள்வு இல்லை,’ எனக் கூட்டுக.ஈடு : ஒன்பதாம் பாட்டு. 1மேல் எட்டுப் பாசுரங்களால் ‘இவ்வுலக இன்பம் நிலை அற்றது,’ என்றார்; இப்பாசுரத்தில். ‘உடலை வருத்தும் தன்மையையுடைய தவத்தைச் செய்து அந்தத் தவத்தின் பலம் சுவர்க்கமாகக் கொண்டு சுவர்க்கத்தை அடையும்போது பகவானுடைய திருவருள் வேண்டும்; அவனுடைய திருவருளால் சுவர்க்கத்தை அடைந்தாலும், அதனுடைய இயற்கையாலே நிலை நில்லாது,’ என்கிறார்.
இவன் தவத்தைச் செய்தற்குத் தொடங்கும் போது விடுமவை சொல்லப்படுகின்றன மேல் : படி – பூமி. மன்னு பல்கலன் – முறையாக வந்த பல வகைப்பட்ட ஆபரணங்களின் கூட்டம். அன்றிக்கே, ‘படி மன்னு பல்கலன்’ என்பதற்குத் 2‘தன் குலத்திலுள்ளார் பரம்பரையாகப் பூண்டு போருகிற பல வகைப்பட்ட ஆபரணங்கள்’ என்னுதல். பற்றோடு அறுத்து – அவற்றை நீக்கி விட்டு வாழ்தல் அன்றிக்கே அவற்றில் வாசனையும் போகை. ஐம்புலன் வென்று – அவற்றில் ருசிக்குக் காரணமான ஐம்பொறிகளும் விஷயங்களிற்போகாதபடி வென்று. 3‘உன்னால் முன்பு இந்திரியங்கள் வெல்லப்பட்டு மூன்று உலகங்களும் வெல்லப்பட்டன,’ என்றாள் மண்டோதரி. செடி மன்னு காயம் செற்றார்களும் – தவத்திற்காகப் பல காலம் ஒரோ ஆசனங்களிலே இருந்தால் சலியாமையாலே உடம்பிலே தூறு மண்டும்படி சரீரத்தை ஒறுத்துத்
தவத்தைச் செய்தவர்களும்; 1‘நெறியார் குழற்கற்றை முன்னின்று பின் தாழ்ந்து அறியாது இளங்கிரி என்று எண்ணிப்-பிறியாது, பூங்கொடிக்கள் வைகும்’ என்னக் கடவது அன்றோ?
சரீரத்திலே தூறு மண்டும்படி தவம் செய்தலுக்கு மேற்கோள், ‘நெறியார்’
என்று தொடங்கும் பாசுரம். இது, இரண்டாந்திருவந். 53.
அங்கு அவனை இல்லார் – அவன் திருவருள் இல்லையாகில் தானே சித்தியாது. அவன் திருவருளால் பெற்றதாகில், குடி மன்னும் இன்சுவர்க்கம் எய்தியும் – ‘இதற்கும் ஆள் பற்றுவதே!’ என்பர் பட்டர். குடிகளினது நெருக்கத்தையுடைத்தாய்; நரகத்தைக் காட்டிலும் வேறுபட்டதான இனிமையையுடைத்தான சுவர்க்கத்தை அடைந்தாலும். மீள்வர்கள் – மீளுவார்கள்; 2புண்ணியம் குறைந்தவாறே ‘த்வம்ச’ என்று தள்ளுவார்கள் அன்றோ?
மீள்வு இல்லை – அங்ஙனம் ஒரு மீட்சி இல்லை. என்றது, ‘அப்படி அவனுடைய புண்ணியத்திற்குக் குறைவு இல்லையே’ என்றபடி. 3‘புணை கொடுக்கிலும் போக ஒட்டாரே’ என்பர் பட்டர் பிரான்.- பெரியாழ்வார் திருமொழி, 4. 5 : 2.
கொடி மன்னு புள் -கொடியாய் மன்னாநின்றுள்ள பறவை. என்றது, தன்னை அடைந்த அடியாரையும் தனக்கு வேறுபடுத்தும் விசேஷணமாகக் கொள்ளுமவன் என்பதனைத் தெரிவித்தபடி. ‘அல்லாதாரைக்காட்டிலும் அவனை வேறுபடுத்தும் விசேஷணமாகக் கொள்ள வேண்டுவான் என்?’ என்னில், அவனுடைய மூக்கு வலியும் அவன் பக்கல் 4பக்ஷபாதமும் அதற்கு அடி. புள்ளுடை அண்ணல் – ‘திருமகள் கேள்வன்’ என்னுமாறு போலே ஈசுவரனுக்கு நிரூபகமேயன்றோ அவன்? அண்ணல் – தலைவன். கழல்கள் குறுகுமின் – உங்கள் பிறவி கழல அவன் கழல்களைக் குறுகுங்கோள். ‘திருநாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்து உய்ம்மினோ’ என்றார் முதற்பாசுரத்தில். இங்கே, ‘புள்ளுடை அண்ணல் கழல்கள்குறுகுமினோ’என்கிறார்காணும், 1அவளோபாதி 2இவனும் அங்குத்தைக்கு நிரூபக தர்மம் என்று.
கீழே எட்டு பாசுரம் ஐ ஹிஹ போகம் சொல்லி
மேலே ஆமுஷ்யஹா போகம்
உடம்பை வர்த்தித்து ஸ்வர்க்காதி பலன் பெற்றாலும்
அதனது ச்வாபத்தாலே நிலை இல்லை என்கிறார் இதில்
செடி முளைக்கும் போலே தபசு செய்தாலும்
இன் ஸ்வர்க்கம் எய்தினாலும் மீள்வர்கள்
படி மன்னு -படி பூமி
மன்னு பல் கலன் -பரம்பரை ஆபரணங்கள் பற்றோடு அறுத்து
ஐம்புலன் அறுத்து
ராவணன் தபஸ் செய்தது போலே
ராவணன் -ராமனால் முடியவில்லை
இந்திரியங்கள் மேலே கிளர்ந்து காமங்கள் உண்டாக்கி ஒழிந்தான் மண்டோதரி
காயம் -உடம்பு
தபஸ் செய்ய அசையாமல் இருக்க
செடி மன்னு
பூதத் தாழ்வார் -செடியார் -அறியாது இளம் கிரி என்று எண்ணி கொடிகள் படர –
செடி மன்னு காயம் –
வால்மீகி -வால்மிக புற்று -கிளம்பி -புளந்து வந்தாராம் –
கிருஷ்ண த்வைபாயனர் வேத வியாசர் இயல் பெயர் –
குடி மன்னும் இன் சுவை இதற்கும் ஆள் பற்றுவதே பட்டர் –
வெளியூர் போவதருக்கும் ஆள் உண்டே சொல்வது போலே
நெருக்கம் உடைத்தே -நரகம் வ்யவர்திக்க ஸ்வர்கம்
மீள்வர்
அவனது புண்ணியம் ஷயம் இலையே -மீட்சி இல்லையே
ராமோ விக்ரஹவான் தர்ம –
கிருஷ்ணன் தர்மம் சனாதன
ஜாமீன் கொடுத்தாலும் போகாவ்ட்டார்கள்
அண்ணல் கழல்
கருட ஆழ்வான் -எம்பெருமானை பற்ற வந்தவன் -அவனை அடையாளம் காட்டும்படி
ஆச்ரயித்தாரும் வ்யாவர்தக விசேஷணம் -அவனுடிய மூக்குவளியும் -பழியும் –
பஷ பாதமும்
அலகில் பலமும் இறக்கை
புள்ளுடை அண்ணல் -ஸ்ரீ ய பதி போலே நிரூபகம் –
திருநாராயண புரம்
துழாய் முடி அண்ணல்
வைர முடி பிரதானம்
கருடாத்ரி பெயரும் உண்டே
கருடன் கொண்டு சமர்ப்பிக்கும் வைர முடி
சம்சாரம் கழல இவன் கழல் பற்ற
திருநாரணன் தாள் புள்ளுடை அண்ணல் கழல்
அவர்களோபாதி இவனும் நிரூபகம்
திரு இல்லா தேவர் -தேவர் என்ன மாட்டோமே போலே
கருட ஆழ்வானும் –
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
Leave a Reply