Archive for January, 2013

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -3-2-4ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

January 26, 2013

சூழ்ச்சி ஞானச்
சுடர்ஒளி யாகிஎன்றும்
ஏழ்ச்சி கேடுஇன்றி,
எங்கணும் நிறைந்தஎந்தாய்!
தாழ்ச்சிமற்று எங்கும்
தவிர்ந்து,நின் தாள்இணைக்கீழ்
வாழ்ச்சியான் சேரும்
வகைஅரு ளாய்வந்தே.

பொ-ரை : வளர்தலும் குறைதலுமின்றி, சூழ்தல் பொருந்தி, மிக்க ஒளியோடு கூடிய ஞானத்தையுடையையாய் எப்பொழுதும் எல்லாவிடங்களிலும் நிறைந்திருக்கிற என் தந்தையே! மற்று எல்லாப் பொருள்களிலும் கால் தாழ்தல் நீங்கி, உன் திருவடிகளின் கீழே யான் வாழ்வினைப் பொருந்தும்படி வந்து அருள் செய்தல் வேண்டும்.

    வி-கு : ‘ஏழ்ச்சி கேடு இன்றிச் சுடர் ஒளி ஞானம் ஆகி’ என்றும், ‘எங்கணும் சூழ்ச்சி நிறைந்த எந்தாய்’ என்றும் கூட்டுக. சூழ்ச்சி, ஏழ்ச்சி – பண்புப்பெயர்கள். எழுச்சி என்பது ஏழ்ச்சி என வந்தது விகாரம். தாழ்ச்சி, வாழ்ச்சி – தொழிற்பெயர்கள். ‘மற்று’ என்னும் இடைச்சொல், ஈண்டுப் ‘பிறிது’ என்னும் பொருளில் வந்தது. ‘தவிர்ந்து சேரும் வகை வந்து அருளாய்’ என்க.

    ஈடு : நான்காம் பாட்டு. 1‘இப்படி நீர் இருந்த இடத்தே நாம் வந்தும் இழந்தீராகில், அவதாரங்களைப் போன்று ஒரு கால விசேடத்திலேயாகாமல் எல்லாக்காலத்திலும் உயிருக்குள் உயிராக உகவாதார் பக்கலிலும் விடமாட்டாமையாலே புகுந்து நின்றோமே! அங்கே அநுகூலித்து உம்முடைய விருப்பத்தைப் பெற்றுப் போக மாட்டிற்றிலீரோ?’ என்ன, ‘அதற்கும் தப்பினேன்’ என்கிறார்.

    சூழ்ச்சி ஞானம் சுடர் ஒளியாகி – எங்கும் ஒக்கப் பரந்து நிறைந்திருப்பதாய் மிக விளக்கமாயிருக்கிற ஞான ஒளியையுடையையாய். ஆத்துமாக்களைத் தப்பாதபடி அகப்படுத்திக் கொள்ளுகையாலே எங்கும் பரந்து நிறைந்திருத்தலைச் ‘சூழ்ச்சி’ என்கிறார். இனி, ‘ஞானச்சுடரொளி’ என்பதற்கு ஞானத்திற்கு இருப்பிடமான சொரூபத்தைச் சொல்லுகிறார் என்னுதல். இரண்டும் பிறருக்காகவே இருத்தலின், சொரூப 2வியாப்தி, ஞான வியாப்தி என்னும் இரண்டும் சொல்லக்கடவது. என்றும் ஏழ்ச்சி கேடு இன்றி – எல்லாக் காலத்திலும் மலர்ச்சியாதல் சுருங்குதலாதல் இல்லாமல்; கர்மம் அடியாக ஆத்துமாவுக்கு வரக்கூடிய சுருங்குதல் மலர்தல் என்பன இல்லாமல் இருத்தலின், ‘ஏழ்ச்சி கேடின்றி’ என்கிறது. ‘இப்படி எங்கும் பரந்து நிறைந்திருப்பது

ஓர் இடத்திலேயோ?’ என்னில், எங்கணும் நிறைந்த – 1இடந்திகழ் பொருள்தொறும் கரந்து’ என்கிறபடியே, எல்லா இடத்திலும் உண்டான எல்லாப் பொருள்களிலும், சாதி வடிவுதோறும் நிறைந்து தங்கியிருத்தல் போன்று பூர்ணமாகப் பரவி நிறைந்திருக்கும். கண் – இடம். எந்தாய் – ஒருவனைப் பிடிக்க நினைத்து ஊரை வளைவாரைப் போன்று எங்கும் பரந்திருத்தலும் தமக்காக என்றிருக்கிறாராதலின், ‘எந்தாய்’ என்கிறார். ‘ஆக, உன் பக்கல் அகப்படுத்திக்கொள்ள விரகு தேடி உணர்ந்து என்னைச் சூழ்ந்துகொண்டு நீ நிற்கச்செய்தேயும், விஷயப் பிரவணனாய்த் தப்பினேன்,’ என்கிறார்.

    மற்று எங்கும் தாழ்ச்சி தவிர்ந்து – உன்னையொழிந்த மற்றுள்ள இடத்தில் வரக்கூடிய தாழ்ச்சியையும் தவிர்ந்து. 2‘யாதானும் பற்றி’ என்கிறபடியே, ‘நீயன்றிக்கேயொழிய அமையுமே நான் மேல் விழுகைக்கு,’ என்றபடி. நின் தாள் இணைக்கீழ் வாழ்ச்சி – வகுத்ததுமாய் நிரதிசய போக்கியமுமாயிருக்கிற உன் திருவடிகளிலுண்டான கைங்கரியத்தை. யான் சேரும் வகை அருளாய் – இதற்கு முன் 3புதியது உண்டு அறியாதன யான் கிட்டுவதொரு வகையை அருளிச்செய்ய வேண்டும். இனி, ‘இவ்வாழ்ச்சிக்கு இட்டுப் பிறந்து வைத்து அதனை இழந்திருக்கிற நான் கிட்டுவதொரு வகையை அருளிச்செய்ய வேண்டும்.’ என்னுதல். ‘இரண்டு இடங்களிலும் ஈடுபாடு ஒத்திருந்தும், ‘எல்லாம் பிறனுக்கு உரிமைப்பட்டிருப்பது துக்கம்’ என்றும், 5‘பிறரிடம் சேவிப்பது நாய்த்தொழில்’ என்றும் அவற்றைச் சொல்லுகையாலே, அதனைத் ‘தாழ்ச்சி’ என்றும், 6‘நிழலானது பொருள்களைத்

தொடர்வது போல’ என்ற இதனைச் சொல்லுகையாலே, இதனை, ‘வாழ்ச்சி’ என்றும் அருளிச்செய்கிறார். வந்தே – அது தானும் முகந்தோற்றாதபடி நின்று அருளவொண்ணாது; என் கண்களுக்கு இலக்காம்படி இராமன் கிருஷ்ணன் முதலிய அவதாரங்களைப் போன்று, எனக்காக ஓர் அவதாரத்தைச் செய்தேயாகிலும் வந்தருள வேண்டும்.

அடித்து நான்காம் பாட்டு
தனது அந்தர்யாமித்வம்
உண்டே
இழக்க வேண்டுமா
அதுக்கும் தப்பினேன் –

சூழ்ந்து –
விகாசம் சங்கோசம் இன்றி –
எங்கும் நிறைந்து -அந்தர்யாமித்வம்
தாழ்ச்சி தவிர்ந்து தாள் இணை கீழ் வாழ
செதனரை தப்பாதபடி அகப்படுத்தி கொள்கையாலே சூழ்ச்சி என்கிறார்
அவன் அறியாத படி -தம் வசத்தில் கொள்வதால் வ்யாப்தியை சூழ்ச்சி
எங்கும் ஒக்க வியாபித்து -விசத தமமாய் இருக்கும் -ஞானம் -சங்கோசம் இன்றி –
ஞான சுடர் ஒளி யாகி -ஆஸ்ரயமான ஸ்வரூபம் -ஞானமே வடிவு எடுத்தவனாகி  என்னவுமாம்
ஸ்வரூபத்தாலும் ஞானத்தாலும் வியாபித்து -பரார்தமாகஎல்லா காலத்திலும் உகவதார் பக்கலிலும் புகுந்து இருக்கிறான் –
எழுச்சி விகாசம் கேடு சங்கோசம் இன்றி –
எங்கனும்  நிறைந்த எந்தாய்
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து
உனது தாள் இணைக் கீழ் சேரும் விரகு அருளுவாய் –
தனது வசத்தில் கொள்ளுகிறான் -நம் அறியாதபடி புகுந்து
எங்கும் ஒக்க வியாபித்து -விசத தமம் -விசதம் -விசத தரம் -தமம் நன்றாக மலர்ந்து
ஞான சுடர் ஒளி ஆகி ஆஸ்ரயமான ஸ்வரூபம்ஞானம் இரண்டையும் சொல்லி
ஸ்வரூப ஞான வ்யாப்தி இரண்டும் பரார்த்தம்
ஆகாசம் இடை வெளி போலே -வ்யாபகத்வம் இந்த பத்தில்
நியாமகத்வம் அடுத்த பத்தில்
யானை சரீரம் எறும்பு சரீரம் ஆத்மாவே விரியும் சுருங்கும் அழியும் தப்பு
ஞானம் தான்சரீரம் முழுக்க வியாபிக்கும்
தர்ம பூத ஞானம் விளக்கு ஒளி போலே வியாபிக்கும் எம்பெருமான் எல்லாருக்கும் வ்யாபிக்கிறான்
கோத்வம் -போலே வ்யாபிக்கிறான்-விபு தத்வம் –
பரர்தமாக வியாபித்து –
கர்மம் அடியாக அன்றி –
வ்யாபிப்பது எங்கணம் -எல்லா இடத்திலும் இடம் திகழ் பொருள் தொறும் கரந்து –
ஜாதி கோத்வம் போலே

எந்தாய் –எனக்கு ஸ்வாமி -வ்யாப்தி எல்லாம் இவருக்காக
ஒருவரைப் பிடிக்க ஊரை வளைப்பாரை போலே -இவரை கொள்ள விரகு கண்டு பிடித்து
அதற்கும் தப்பினேன் -விஷய ப்ராவன்யத்தில் இழிந்து –

அந்தர்யாமித்வதுக்கும் தப்பினேன்
இல்லை என்று நினைத்து -சாஷியாக இருந்தாலும் -கண்ட இடங்களில் திரிந்து இழந்து போகிறோமே

உள்ளுவார் உள்ளத்தில் -இருந்து -வெள்கி -தொண்டர் அடி பொடி ஆழ்வார் –
தாழ்ச்சி தவிர்ந்து யாதானும் பற்றி -நீ அன்றிக்கே அமையுமே நான் மேல் விழ –
எங்கும் தாழ்ச்சி -தானே தவிர வேண்டும்
நின் தாழ் இணை -வகுத்த நிரதிசய போக்கியம்
முன் இது போல் உண்ணாத -வாழ்ச்சி
இரண்டு இடத்திலும் பிராவண்யம் ஒத்து இருக்க –
சம்சார -பகவத்-ஓன்று தாழ்ச்சி -ஓன்று வாழ்ச்சி –
பிரசவம் பிறத்தியார் குற்றம் சேவா நாய் பிழைப்பு தாழ்ச்சி
கைங்கர்யம் வாழ்ச்சி ஸ்வ வருத்தி -ஸ்வரூபத்துக்கு ஏற்பட
நிழல் போலே பின் தொடர்ந்து -உகந்த வகுத்த விஷயத்தில் கைங்கர்யம் –
சகுந்தலை துஷ்யந்தன் விசிற ஆனந்தம் இவ் வாழ்ச்சிக்கு  இட்டு பிறந்து இழந்து –
சேரும் வகை வந்து அருளாய்
முகம் தோ ற்றாபடி இன்றி -ராம கிருஷ்ணர் போலே வந்து அருளாய்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -3-2-3ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

January 25, 2013

கொல்லா மாக்கோல்
கொலைசெய்து பாரதப்போர்
எல்லாச் சேனையும்
இருநிலத்து அவித்தஎந்தாய்!
பொல்லா ஆக்கையின்
புணர்வினை அறுக்கல்அறா;
சொல்லாய், யான்உன்னைச்
சார்வதுஓர் சூழ்ச்சியே.

    பொ-ரை : கொல்லுதற்குரிய கருவி அல்லாத, குதிரையை யோட்டுவதான சம்மட்டியைக்கொண்டு கொன்று, பாரதப்போரில் இரு திறத்திலுமுள்ள படைகளையெல்லாம் குரு க்ஷேத்திரத்திலே அழித்த என் தந்தையே! கேட்டினை விளைக்கின்ற சரீரத்தினுடைய சம்பந்தத்தை அறுப்பதற்கு இயலவில்லை; நான் உன்னையடைவதற்குரிய உபாயத்தைச் சொல்ல வேண்டும்.

    வி-கு : ‘கொல்லா’ என்பது கோலுக்கு அடை. ‘கொலை செய்து அவித்த எந்தாய்’ என்க. கொலைசெய்து – ஒரு சொல். புணர்வினை – ஒரு சொல்; புணர்வு தொழிற்பெயர்; இன் – சாரியை. ஐ – இரண்டனுருபு. இனி, இதனை இருமொழியாகக்கொண்டு; ‘ஒன்றோடொன்று சேர்ந்திருக்கின்ற வினைகள்’ என்று பொருள் கூறலுமாம். ‘சார்வதோர் சூழ்ச்சி சொல்லாய்’ என மாறுக.

    ஈடு : மூன்றாம் பாட்டு. 1‘வாமனாவதாரம் முற்காலத்திலேயாகையாலும் நீர் பிற்பாடராகையாலும் இழந்து அங்குக் கிட்டப்பெற்றிலீராகில், 2ஒருத்தியுடைய மங்கலநாணிற்காகப் பாண்டவர்களுக்குச் சொல்லிற்றுச் செய்து திரிந்தோமே! அங்கே வந்து கிட்டமாட்டிற்றிலீரோ?’ என்ன, ‘அங்குந்தப்பினேன்,’ என்கிறார்.

    கொல்லா மாக்கோல் கொலை செய்து – 3துரியோதனனும் அருச்சுனனுமாக, கிருஷ்ணன் பள்ளிகொண்டிருந்த காலத்தில்படைத்துணை வேண்டி வந்து, துரியோதனன் திருமுடிப் பக்கத்தேயிருந்தான்; அருச்சுனன் திருவடிகளின் பக்கத்திலேயிருந்தான்; பள்ளியுணர்ந்தருளி, ‘இராசாக்கள் போந்தது என்?’ என்ன, ‘துரியோதனன் நான் முற்பட வந்தேன்,’ என்ன, 1‘நீர் முற்பட வந்ததற்குக் குறையில்லை. நம் கண் முற்பட்டது இவன் பக்கலிலே,’ என்று, அவனுக்காகத் தான் சில வழக்குச் சொல்லி, ‘உங்களுக்கு வேண்டுவது என்?’ என்ன, ‘படைத்துணை வேண்டி வந்தோம்,’ என்ன, ‘ஆகில், 2நாராயண கோபாலர்களை ஒருவர் கொள்ளுவது; என்னை ஒருவன் கொள்ளுவது’ என்ன, 3அசேதனக்கிரியா கலாபங்களைப் பற்றுவாரைப் போன்று துரியோதனன் அவர்களைக் கொண்டு போக, வீடுமன் முதலியோர் கேட்டுத் ‘தப்புச் செய்தாய்! இனி, கிருஷ்ணன் ஆயுதமெடாதொழிவானாக வேண்டிக்கொண்டு வாராய்!’ என்ன, அவனும் வந்து, ‘நீ ஆயுதம் எடாதொழிய வேணும்,’ என்ன, ‘அப்படியேயாகிறது’ என்று சொல்லிவிட்டு, கொலைக்குக் கருவியல்லாத குதிரையை நடத்துகிற கோலைக்கொண்டு முடித்துப் போகட்டான். பாரதப் போர் – பாரதச் சண்டையிலே. எல்லாச் சேனையும் – துர்வர்க்கம் அடையத் திரண்டதன்றோ இரண்டு படைகளிலும்? 4இங்கே நாலைந்து பேரும், அங்கே ஒன்றிரண்டு பேரும் ஒழிய, முடித்துப் போகட்டான். இரு நிலம் – அவர்கள் பக்கல் நன்மையில்லையேயாகிலும், அங்கே பட்டார்க்கு வீரசுவர்க்கங்கிட்டும் பூமியிலே. அவித்த – வீடுமன் முதலியோர் காட்டுத்தீக் கிளர்ந்தாற்போலே வர, காளமேகம் மழை பெய்வது போன்று அவித்தான். 5‘மழை

கொலோ வருகின்றது!’ என்னும்படியன்றோ அவன் வரவுதான் இருப்பது? எந்தாய் – பாண்டவர்கட்கு அன்று உதவி செய்ததும் தமக்கு என்று இருக்கிறார்.

    பொல்லா ஆக்கையின் புணர்வினை அறுக்கல் அறா – சரீரத்துக்கு அடியாய் ஒன்றோடொன்று பிணைந்திருக்கின்ற பாவங்களை அறுக்க முடியா. நீ அழியச்செய்த துரியோதனன் முதலியோர்கள் அளவன்றுகாண் இதன் 1தண்மை; அநுகூலம் போலே இருந்து பாதகமாமன்றோ இது? தன்பக்கல் இனிமைப்புத்தியைப் பிறப்பித்து, ஈசுவரனுடைய இனிமையை அவமதிக்கச் செய்யும். பெரியோர்கள் ஒருவனிடத்தில் குற்றங்கள் பல உண்டானால், ‘அவன் தண்ணியன்’ என்று விடுவார்கள் அன்றே? அப்படியே இவர் இச்சரீரத்தின் தன்மைகளையெல்லாம் ஒருசேர நினைத்துப் ‘பொல்லா ஆக்கை’ என்கிறார். இராவணன் தலைகள் போன்று முளையாநிற்றலின், ‘அறுக்கல் அறா’ என்கிறார். இனி, புணர்வினை என்பதற்குச் சரீர சம்பந்தந்தன்னை என்னுதல். யான் – சிறையிலே கிடப்பாரைப் போன்று பிரகிருதியோடே பிணையுண்டிருக்கிற நான். உன்னை – ஒரு தேச விசேடத்திலே நித்தியசூரிகள் அனுபவிக்கும் உன்னை. சார்வது ஓர் சூழ்ச்சி சொல்லாய் – இதனைக் கழித்து நான் உன்னைக் கிட்டுவதொரு விரகு அருளிச்செய்ய வேண்டும். நான் அறியில் தப்புவன்; நான் அறியாதபடி விரகு பார்க்க வேண்டும்; அதுதன்னை எனக்குச் சொல்லவும் வேணும் என்பார், ‘சூழ்ச்சி சொல்லாய்’ என்கிறார். அதாவது, 2‘எல்லாப் பாவங்களினின்றும் உன்னை விடுவிக்கிறேன்; நீ துக்கப்படாதே!’ என்று அருளிச்செய்யவேண்டும் என்றபடி.

பிற்பாடு ஆகையால் இழந்தீர்
மங்கள சூத்ரத்துக்கு பாண்டவர் -உதவி வந்தேனே அங்கெ கிட்ட
அதுவும் தப்பினேன்
செவ்வாய் கிழைமை  முற்பட பிறந்திலேன்
கொல்லா  மா கோல்
எல்லா சேனையும் அழித்து
குதிரை விரட்டும் சாட்டை கொண்டு
கொல்லா மா கோல் -துரி யோதனன் திரு முடி பக்கம்
முற்பட வந்தேன்
இளையவன் முதலில்
நம் கண் முற்பட கண்டது இவன் -அர்ஜுனன்
வழக்கு சொல்லி –
படைத் துணை
நாராயண கோபாலர் -படை –
அசேதனம் கிரியா லாபம் பற்றுவாரைப் போலே -சைன்யம் வாங்கி கொண்டு போக
பீஷ்மாதிகள் இத்தை கேட்டு தப்பை செய்தாய்
கிருஷ்ணன் ஆயுதம் எடுக்காமல்
அப்படியே -என்றான் -மகா பாரதம் முதலிலே இப்படி அருளி –
குதிரை நடத்தும் கோல் கொண்டு -முடித்தான் இங்கே நாலு ஐந்து பெரும் அங்கெ ஓன்று இரண்டு பே ரும் அஸ்வத்தாமா
36 லஷம் பேரில் -8 பேர் தான் பிழைக்க
இரு நிலத்தில் -வீர ஸ்வர்க்கம் பெற்று தரும் உயர்ந்த நிலம்
அவித்த -கட்டு தீ போல் வர காள மேகம் போலே அழித்து
எந்தாய் -பாண்டவர் உதவி தமக்கு என்கிறார்
பொல்லா ஆக்கை -துரி யோதனதிகள் விட கொடுமை
அநு  கூலரை போலே இருந்து பாதகம்
போக்யதா புத்தி பிறப்பித்து ஈஸ்வரன் போக்யதை இழக்க பண்ணும்
விட்டு தொலைக்க வேண்டும் -பொல்லா ஆக்கை
அடியாய் -பிணைந்து இருக்கும் பாபங்கள்
சரீர சம்பந்ததாலும்
அறுக்க முடியாது
அறுக்க அறுக்க முளைக்கும் ராவணன் தலை போலே
இத்தை கழித்து உன்னை கிட்ட வழி -நான் அறியாதபடி
காட்டி -சொலவும் வேண்டும்
சொன்னால் தப்பி
நான் -சிறையில் உள்ளவன் போலே பிரக்ருதியில்
உன்னை -தேச விசேஷம்
சர்வ பாபேப்யோ மோஷ இஷ்யாமி
நீயே உனது திருவாக்கால் சொல்வாய்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -3-2-2-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

January 25, 2013

வன்மா வையம் அளந்தஎம் வாமனா!நின்
பன்மா மாயப் பல்பிறவியில் படிகின்றயான்,
தொன்மா வல்வினைத் தொடர்களை முதல்அரிந்து,
நின்மா தாள்சேர்ந்து நிற்பதுஎஞ் ஞான்றுகொலோ?

பொ-ரை : வலிய பெரிய உலகத்தையெல்லாம் அளந்த, என் வாமனனே! உன்னுடைய பல வகைப்பட்ட தாண்ட முடியாத பெரிய மாயை காரணமாக வருகின்ற பல வகையான பிறவிகளில் உழலுகின்ற யான், பழையதாய் வருகின்ற அளவிடற்கரிய வலிய வினைகளாகிற கட்டினை அடியோடு அரிந்து, உன்னுடைய பெருமை பொருந்திய திருவடிகளைச் சேர்ந்து நிற்பது எக்காலமோ?

    வி-கு : ‘யான் அரிந்து சேர்ந்து நிற்பது எஞ்ஞான்று?’ என முடிக்க. நிற்பது – தொழிற்பெயர். ‘கொல், ஓ’ என்பன அசைநிலைகள்.

    ஈடு : இரண்டாம் பாட்டு. 1உம்முடைய உடம்புகொண்டு நாம் இருந்த இடத்தே வந்து கிட்ட மாட்டிற்றிலீராகில், நம்முடம்பைக்கொண்டு நீர் இருந்த இடத்தே வந்து கிட்டினோமே! வாமன வடிவைக்கொண்டு மஹாபலி முன்னே வந்து நின்றோமே! அங்கே கிட்டமாட்டிற்றிலீரோ?’ என்ன, ‘அதற்குந் தப்பினேன்’ என்கிறார்.

    வன் மா வையம் அளந்த – 2வன்மையையுடைத்தான பெரிய பூமியை அளந்த. 3‘வடிவிணை இல்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியை’க்கொண்டு காடும் மலையுமான பூமியை அளந்தானாதலின் ‘வன்வையம் அளந்த’ என்கிறார். வன்மை என்பது ஈண்டு வையத்துக்கு அடை. இனி, வையத்தை ஆகுபெயராக்கி, வன்மையை ஆகுபெயர்ப்பொருளுக்கு அடைமொழியாக்கி, அவன் தானே தன்னைக் கொடுவந்து காட்டின இடத்திலும் நெஞ்சில் நெகிழ்ச்சியின்றியிருந்த சமுசாரிகளுடைய நெஞ்சில் வன்மையைச் சொல்லுகிறார் என்னுதல். இப்பொருளில் ‘அசுரத் தன்மையையுடைய மஹாபலிக்கு உள்ள இரக்கமும் இல்லையே! சுக்கிரன் முதலானோர் விலக்கவும் அவர்கள் வழி போயிற்றிலனே அவன்!’ என்று இவர்கள் மனநெகிழ்ச்சியின்மைக்கு இரங்குகின்றமை தோன்றும். இனி, மஹாபலி

தோள் மிடுக்காலே ஒருவர்க்கும் நுழைவதற்கு அரிதான வன்மையை உடைத்தாயிருந்ததாதலின், ‘வன் மா வையம்’ என்கிறார் என்னுதல். எம் வாமனா – பிறரால் கவர்ந்துகொள்ளப்பட்ட ராஜ்யத்தையுடையவனான இந்திரனுக்காக அன்று, 1வாமனாவதாரமும் தம்பொருட்டு என்றிருக்கிறார். நின் – 2‘எனது மாயையினை ஒருவராலும் தாண்ட முடியாது,’ என்று சொன்ன இது என் ஒருவனுக்கும் பலித்துவிட்டது. பன் மா மாயம் – பல விதமான பெரிய மூலப்பகுதி. 3தேவர்கள் முதலான பல்வகைப் பொருள்களாகிய காரியத்தின் பன்மையைக் காரணத்தின்மேலிட்டு உபசார வழக்கால் ‘பன்மாயம்’ என்கிறார். இனி, ‘மூலப்பகுதி முக்குணங்களுக்கும் இருப்பிடமாயிருக்கையாலே குணபேதங்களை இட்டுப் ‘பன்மாயம்’ என்கிறார்,’ எனலுமாம்.

    சுக்கிரன் தடுத்தமையையும், மஹாபலி அவன் வார்த்தைகளைக் கேளாமையையும் கம்பராமாயணம், பாலகாண்டம், வேள்விப்படலத்தில் 25 முதல் 34 முடிய உள்ள செய்யுள்களிற் காண்க. அவற்றுள்,

‘கண்ட திறத்திது கைதவம் ஐய!
கொண்டல் நிறக்குறள் என்பது கொள்ளேல்;
அண்டமு முற்றும் அகண்டமும் மேனாள்
உண்டவ னாம்இது உணர்ந்துகொள் என்றான்.’

‘வெள்ளியை யாதல் விளம்பினை; மேலோர்
வள்ளிய ராக வழங்குவ தல்லால்
எள்ளுவ என் சில? இன்னுயி ரேனும்
கொள்ளுதல் தீது; கொடுப்பது நன்றால்.’

பல் பிறவியில் – மூலப்பகுதி சம்பந்தங்காரணமாக உண்டாகிற பல வகைப்பிறவிகளிலே. படிகின்ற – தரை காணாமல் முழுகுகிற. இக்கேட்டிலே வெறுப்பின்றிப் பொருந்தியிருந்தாராதலின், ‘விழுகின்ற’ என்னாது, ‘படிகின்ற’ என்றார். ‘படிகின்ற’ என்ற நிகழ்காலத்தால், ‘இன்னம் தரை கண்டதில்லை’ என்பது போதரும். யான் – சமுசாரத்தின் வழியிலே செல்லுகிற நான். தொல் மா வல்வினைத் தொடர்களை முதல் அரிந்து – இவ்வாத்துமாக்கள் உள்ளவன்றே உள்ளனவாய், அனுபவித்தாலும் அழியாதனவாய், ஈஸ்வரன் போக்கு மன்றும் ஒரு நிலை நின்று போக்கவேண்டும்படி பிரபலமாய், ஒன்றோடொன்று தொடர்ந்து தாம் கூட்டமாயிருக்கிற பாபங்களை வாசனையோடே போக்கி. தொடர் – விலங்கு. நின் மா தாள் சேர்ந்து – 1பரமப் பிராப்பியமாய் நிரதிசய போக்கியமாயிருக்கிற திருவடிகளைக் கிட்டி. நிற்பது – நித்திய சமுசாரிகளுக்குப் பகவானையடைதல்; 2‘பறக்கிற தொன்றிலே பாரம் வைத்தாற்போலே இருப்பதொன்று’ ஆதலின், ‘நிற்பது’ என்கிறார். 3‘பயமில்லாமைக்காகப் பரம்பொருளிடத்தில் இடைவிடாத நினைவின் ரூபமான நிஷ்டையையடைகிறவன் பயமின்மையை அடைகிறான்,’ எனப்புகலும் உபநிடதம். நிற்பது எஞ்ஞான்றுகொலோ – 4‘அது எந்நாளாக வற்றோ? ‘காட்டினின்றும் மீண்டு வருகிற உன்னை எந்த நாளில் பார்ப்பேனோ, அந்தநாள் இந்த நாளாகவேண்டும்,’ என்பதுபோன்று ‘எஞ்ஞான்று கொலோ!’ என்கிறார் என்றபடி. இனி, இதற்கு ‘இந்நாள் என்று ஓரவதி பெற்றதாகில், இன்று பெற்றதோடொக்கும் என்றும் பொருள் அருளிச்செய்வர்.

உம்முடைய உடம்பு கொண்டு கிட்டாவிடில்
அவதரித்து
அந்தர்யாமி
மூன்றையும் அவதாரிகை காட்டி
என்னுடையசரீரம் கொண்டு நானே வாமனனாக வந்தேனே
மகா பலி முன் நின்றோமே
அதுக்கும் தப்பினேன் -என்கிறார் –
கொடுமையான வையம்
நின் பல மாய பல் பிறவிகள் படிந்து
தொல் மா வல் வினை
தன்னைக் காட்டினாலும் -நெஞ்சு கடிந்து –
மகா பலியே உருகி
உருகாமால் பூமி வன்மை -யாக இருந்ததே
சுக்ராதிகள் விலக்க செய்தேயும் -கொடுத்தான்
மகா பலி அளக்க முடியாத பூமி
மெல்லடி கொண்டு -வடிவு இணை இலா மலர்மகள் மற்றும் நிலா மகள் பிடிக்க கூசும் -வன்மை
மகா பலி -தோள் வலிமையால் யாரும் பிரவேசிக்க முடியாத வன்மை
இந்தரனுக்கு அன்றி தமக்காக எம் வாமனா
நின் பல் பிறவி -மாய பல் பிறவி -வன் மாயபால் பிறவி
மம மாயா என்று கீதை -நின் -எனக்கு பலித்தது
மாயம் மூல பிரகிருதி
வன்மை -கார்ய -காரணம் ஏறிட்டு சொல்லுதல்
தேவ மனுஷ திர்யக் ஸ்தாவரம் -குண பேதங்கள் இட்டு பல் பிறவி
அவற்றில் படிகின்ற -படிந்து தரை காணாமல் -விழுகின்ற
பொருந்தி இருந்து –
படிகின்ற நிகழ காலம் இன்னும் தரை கண்டது இல்லை -வர்த்தமானம் உழன்று இருக்கின்றேன்
மலையாள படு குழி விழுந்து கொண்டே இருக்கின்றேன் -போலே
சம்சார ஆபன்ணன் –
தொன் மா வல் வினை -தொன்மை
அனுபவித்தாலும் நசியாமல்
அவனே நின்று நிலைத்து போக்கும் படி
சிகள்
தான் குவாலாய் இருக்கும் பாப கூட்டங்கள்
முதல் அறிந்து வாசனை உடன் போக்கி
விலங்கு -நீக்கி
நின்பரம ப்ராப்யம் நிரதிசய போக்கியம்
நிற்பது என்று -கொலோ
பறந்து கொண்டு இருக்கிறோம் –
சம்சாரத்தில் பறக்கும் என் மேல் உனது திருவடி வைத்து
பயம் போக்க –
என்று -இன்று கூடாதோ
இந்நாள் -அவதி பட்டதாகில் இன்று கிடைத்ததாக கொள்வோம்
நாள் குறித்து வாயால் அருளும்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -3-2-1-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

January 25, 2013

இரண்டாந்திருவாய்மொழி – ‘முந்நீர்’

முன்னுரை

    பட்டர் திருக்கோட்டியூரிலே எழுந்தருளியிருந்த காலத்தில் 1சீராமப்பிள்ளை, ‘இவர் பரத்துவ அனுபவத்தை ஆசைப்பட்டு, அது ஒரு தேசவிசேடத்திலே சென்றால் அனுபவிக்கக் கூடியதாகையாலே அதனைப் பெறாமல் நோவுபடுகிறாரல்லர்; அவதாரங்களில் ஆசைப்பட்டுப் பிற்பாடர் ஆனோம்’ என்று நோவுபடுகிறாரல்லர்; உகந்தருளின நிலங்களிலே ஆசைப்பட்டார்; அவற்றிலும் திருமலையிலே அனுபவிக்க ஆசைப்பட்டார்; பின்னர் மேன்மேலென அனுபவிக்குமதொழிய இவர் இழந்து நோவுபடுகைக்குக் 2காரணம் என்?’ என்று கேட்க, ‘பரத்துவம் வியூகம் விபவங்களோடு அர்ச்சாவதாரத்தோடு வேற்றுமையறத் தர்ம ஐக்கியத்தாலே விஷயம் எங்கும் ஒரே தன்மையவாக நிறைந்திருக்கும். குறைந்து தோன்றுகிற இடம் நினைக்கின்ற மக்களுடைய நினைவின் தோஷத்தாலேயாயிருக்கும். கடலருகே சென்று நின்றால் தன் கண்களாலே முகக்கலாமளவே காணுதல் கூடும்; அப்படியே, அழகருடைய அழகு முதலானவற்றை அனுபவிக்கப்புக்க இடத்தில் விளாக்குலை கொண்டு அனுபவிக்கக் கூடியனவாக அவையில்லை; பெருவிடாய்ப்பட்டவன், சேர்ந்த குளிர்ந்த தண்ணீர் அண்மையிலிருக்க, வியாதியினாலே வாய் மூடப்பட்டால் அதனைக் குடிக்க முடியாது துடிக்குமாறு போன்று, விஷயமும் அண்மையிலிருந்து விடாயும் மிக்கிருக்கச்செய்தே, அளவிற்கு உட்படாத விஷய மாகையாலே பரிச்சேதித்து அனுபவிக்கவொண்ணாதொழிய நோவுபடுகிறார். ஆயின், ‘பிரகிருதி சம்பந்தத்தை அறுத்துத் தந்தருள வேணும் என்று வேண்டுவான் என்?’ எனின், ‘இவ்வாறு அனுபவிக்கவொண்ணாதொழிந்தது இறைவனுடைய வைலக்ஷண்யத்தாலே வந்தது’ என்று அறிய மாட்டாது, தம்முடைய கரணங்களின் குறைவு காரணமாக வந்தது என்று அநுசத்தித்து. ‘இறைவன் தான் முதலிலே இத்தைக் கழித்துத் தன்னை அனுபவிக்கைக்கு உறுப்பாக 1உலகத்தைப் படைத்தான்; படைக்கப்பட்ட உலகத்திலே தான் வந்து அவதரித்தான்; அதற்குமேல் அந்தர்யாமி யுருவமாய் நின்று சத்து ஆதிகளை நிர்வஹித்தான்; அவன் இப்படி உபகாரங்களைத் தொடர்ந்து செய்துகொண்டு வர, நான் அவற்றையெல்லாம் அசத்துக்குச் சமமாக்கிக்கொண்டேன்; இனி, நான் அவனைக் கிட்டுகை என்று ஒன்று உண்டோ?’ என்று எல்லையற்ற துக்க சாகரத்தினுள்ளே மூழ்கினவராய், ‘முடிந்தேனேயன்றோ?’ என்று இவர் சோகிக்க, ‘நீர் கரணங்களின் குறைவு காரணமாக வந்தது என்று சோகிக்க வேண்டா; கரண சங்கோசமில்லாதாரும் நம்மை அனுபவிக்குமிடத்தில்

இப்படியேகாணும் படுவது’ என்று இவர் இழவினை நீக்க நினைத்து, ‘நீர் நினைத்த வகைகளெல்லாம் பரிமாறுகைக்கு ஈடாக வடக்கில் திருமலையில் நின்றோம்; அங்கே கிட்டி அனுபவியும்,’ என்று தான் அங்கு நிற்கிற நிலையைக் காட்டிச் சமாதானம் பண்ண, சமாதானத்தையடைந்தவராய்த் தலைக்கட்டுகிறார்.

    ‘ஆயின், 1தெற்குத் திருமலையிலே நிற்கிற நிலையை அனுபவிக்க நினைத்துப் பெறாமல் நோவுபட்ட இவரை வடக்குத் திருமலையில் நிற்கிற நிலையைக் காட்டிச் சமாதானம் செய்தபடி என்?’ என்னில், 2முலை வேண்டி அழுத குழந்தைக்கு முலையைக் கொடுத்துப் பசியைப் போக்குதல் செய்யுமித்தனையேயன்றோ? ‘நன்று; இன்ன முலையைத் தரவேண்டும் என்று அழுதால் அம்முலையையே கொடுத்து ஆற்ற வேண்டாவோ?’ என்னில், வேண்டா; 3இவர் தாம் வழி திகைத்து அலமருகையாலே ‘அதுவே வேணும்; அது அன்று இது,’ என்கிற தெளிவில்லை ஆயிற்று இவர்க்கு. 4மற்றும், ‘ஒரு பொருள்தானே ஒருபோது தாரகமாய், மற்றைப்போது அதுதானே பாதகமாகக் காணாநின்றோம்; பசியில்லாத காலத்தில்

பாதகமான சோறுதானே அது கழிந்தவாறே தாரகம் ஆகாநின்றதே? ‘இவர்க்கு இன்னது இன்ன போது தாரகமாம்: இன்னது இன்ன போது பாதகமாம்’ என்று தெரியாது; குணங்களின் 1ஆவிஷ்காரத்தாலே தரிப்பித்துக்கொண்டு செல்லுகிற ஈசுவரனுக்கும் தரித்த இவருக்கும் தெரியுமத்தனை இதுதான். 2மற்றும், மக்களுக்கு மட்டும் முகங்கொடுத்துக்கொண்டிருக்கிற நீர்மை அங்கு; கானமும் வானரமும் வேடுமானவற்றுக்கு முகங் கொடுத்த நீர்மை உண்டே இங்கு.

234

முந்நீர்ஞா லம்படைத்த
எம்முகில் வண்ணனே!
அந்நாள் நீ தந்த
ஆக்கையின் வழிஉழல்வேன்;
வெம்நாள்நோய் வீய
வினைகளை வேர்அறப்பாய்ந்து
எந்நாள்யான் உன்னை
இனிவந்து கூடுவனே?

    பொ-ரை : கடல் சூழ்ந்த உலகத்தை உண்டாக்கின, எனது முகில் போன்ற நிறத்தையுடையவனே! அக்காலத்திலே உன்னால் கொடுக்கப்பட்ட சரீரத்தினது நல்வினை தீவினைகளின் வழியே திரிகின்ற யான், கொடிய நாளில் பிறவித்துன்பம் நீங்க, நல்வினை தீவினைகளை அடியோடு அற்றுப்போகும்படி அழித்து, இனி எந்த நாளில் யான் உன்னை வந்து கூடுவேன்?வி-கு : ‘படைத்த வண்ணன்’ என்க. உழல்வேன் – வினையாலணையும் பெயர். ‘வீயப் பாய்ந்து வந்து கூடுவன்’ எனக் கூட்டுக.

    இத்திருவாய்மொழி நாற்சீர் நாலடியான் வருதலின் கலி விருத்தம் எனப்படும்.

    ஈடு : முதற்பாட்டில், 1‘உலகத்தைப் படைத்து, உன்னை வழிபடுகைக்கு உறுப்பாகக் கரண களேபரங்களைக் கொடுத்துவிட்டாய் நீ; நான் அவற்றை இதர விஷயப் பிராவண்யத்துக்கு உறுப்பாக்கிக் கெட்டுப்போனேன்; இங்ஙனமிருக்கிற நான் உன்னை வந்து கிட்டுவதொரு நாள் சொல்ல வேண்டும்,’ என்கிறார்.

    முந்நீர் – 2ஆற்றுநீர், ஊற்றுநீர், மழைநீர் என்னும் மூன்று நீரையுடையதாதலின் ‘முந்நீர்’ எனப்பட்டது. இனி, 3‘இறைவன் முதலிலே தண்ணீரையே படைத்தான்,’ என்கிறபடியே, முதன்முன்னர்த் தண்ணீரைப் படைத்துப் பின்னரே அண்டத்தைப் படைத்தானாதலின், 4முன்னே படைத்த நீர் என்னுதல். ஞாலம்படைத்த – விசித்திரமாக உலகத்தையுண்டாக்கின. 1இரங்கத்தக்க நிலையைக்கண்டு, 1இவை கரண களேபரங்களைப் பெற்றுக் கரைமரஞ் சேரவேணும்’ என்று அருள்வசப்பட்டவனாய்ப் படைத்தபடி. எம் முகில் வண்ணனே – 2அவன் எல்லாப் பொருள்கள் நிமித்தமாக உதவியைச் செய்தான்; அவ்வுதவியைத் ‘தன் பொருட்டு’ என்றிருக்கிறார் செய்ந்நன்றியறியுமவராதலின். ஒருவன் சாதநாநுஷ்டானங்களைச் செய்து மழையைப் பெய்விக்க உலகம் வாழ்ந்து போமாறு போன்று, அவன் எனக்காக உலகத்தைப் படைத்தான்; உலகம் வாழ்ந்துபோயிற்று என்று இருக்கிறார். சர்வ விஷயமாக உதவி செய்தபடியும், பிரதியுபகாரங்கொள்ள இராமையும் நோக்கி, ‘முகில் வண்ணனே’ என்கிறார்.    (வண்ணம் என்பது ஈண்டுத் தன்மையைக் குறித்தது; நிறம் அன்று.) அந்நாள் – கரண களேபரங்கள் அற்றதாய், 3தமோ குணத்தோடு கூடியதாய், அருள் செய்யக்கூடிய நிலையையடைந்ததாய்க் கிடந்த அந்நாள். நீ – இந்நிலையிலே 4‘பிரகிருதியில் லயப்பட்டிருந்த அக்காலத்தில் ஆத்துமவர்க்கமில்லாமையால் அவன் தனியனாக மகிழ்ச்சியடைந்தானில்லை,’ என்கிறபடியே, இழவு உன்னதாக முகங்காட்டின நீ. தந்த – திருவடிகளிலே தலைசாய்த்து உன்னைப் பெறுகைக்கு உறுப்பாக உடம்பை உதவி செய்த. இனி, ‘நீ தந்த’ என்பதற்குப் ‘பேரருட்கடலான நீதந்த; அதாவது, ‘இவை விரும்பாமலிருக்கவும் தனது அருளாலே தந்த இத்தனை,’ என்னுதல். ‘இதனை உபகாரமாகச் சொல்லுகிறது என்? கர்மங்கட்குத் தகுதியாக அன்றோ படைத்தல் இருப்பது?’ என்னில், 1படைப்பது கர்மங்களை நோக்கியேயாயினும், யௌகபத்யம் அருளின் காரியம்; 2ஒவ்வொரு கால விசேடங்களிலே சிறை வெட்டி விடுமாறு போன்று தன் பேரருளாலே உண்டாக்குமத்தனை. 3‘வரதனே! பிரளய காலத்தில் அசேதனத்திற்காட்டிலும் வாசி அற்றவர்களாய்த் துவள்கின்ற ஆத்துமாக்களை இந்திரியங்களோடும் சரீரங்களோடும் சேர்ப்பதற்கு விரும்பித் திருவுள்ளமிரங்கி உன்னுடைய சங்கற்பத்தின் வசப்பட்டு மூலப்பகுதியை ‘மஹாந்’ என்ன, அகங்காரமென்ன, ‘ஐம்பூதங்கள்’ என்ன, ‘இந்திரியங்கள்’ என்ன இவற்றினுடைய வரிசையாகிற அரும்புகளையுடையதாம்படி செய்தாய்,’ என்றார் பட்டர்.ஆக்கையின் வழி உழல்வேன் – 1நீ ஒன்றை நினைத்துத் தந்தாய்; நான் சரீரத்தின் வழியே போந்தேன். ‘தெப்பத்தை நூக்கிச் சென்று பெருமாளைச் சேவிக்கலாயிருக்க, ‘சரீரம் பாங்கன்று’ என்று நீரின் வழியே சென்று கடலிலே புகுவாரைப் போலே, இதர விஷயப் பிராவண்யத்துக்கு உறுப்பாக்கிக் கேட்டினை விளைத்துக்கொண்டேன்,’ என்கிறார் என்பர் எம்பார். வெந்நாள் – சொரூப ஞானம் பிறந்த பின்பு சமுசாரத்திலிருக்கிற இருப்பு, பிராட்டி இலங்கையிலே இருந்தாற்போன்று தோற்றாநின்றது காணும் இவர்க்கு; ஆதலின், ‘வெம்நாள்’ என்கிறார். இனி, பகவானைப் பிரிந்து இருக்கையாலே, நெருப்பை ஏறட்டினாற் போலே இருக்கிறதாதலின் ‘வெம்நாள்’ என்கிறார். என்னுதல். நோய்-பிறவி. இனி, ‘பகவானைப் பிரிந்த பிரிவாலுளதாய நோய்’ என்னுதல். ‘ஆயின், நோய் என்பது பிரிவாகிய நோயினைக் காட்டுமோ?’ எனின், 2ஸ்ரீபரதாழ்வானுடைய நோய் என்றால் சாதுர்த்திகமாயிராது இராமவிரகத்தாலேயாயிருக்குமே? அப்படியே இவர் நோயும் பிரசித்தங்காணும். வீய – முடிய.

    வினைகளை வேர் அறப் பாய்ந்து எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவன் – பிரிவுத் துன்பத்துக்கு அடியான அவித்தியை முதலானவைகளை வாசனையோடே போக்கி உன்னை நான் எப்பொழுது வந்து கூடுவன்? 3‘என் கணவர், இராக்கதர்களுக்கு அழிவினைச்செய்து, இராவணனையும் கொன்று, இலங்கையையும் வேரோடு அழித்து, எப்பொழுது என்னைப் பார்ப்பார்?’ என்று பிராட்டி கூறியது போன்று ‘எந்நாள் இனி வந்து கூடுவன்?’ என்கிறார். 4‘பாய்ந்து’ என்பதில் சினம் தோற்றுகிறது. ‘ஒரு 5சர்வ சத்தி செய்யுமதனை யான் செய்யவோ?’ என்கிறார். எந்நாள் – எனக்கு இப்போதே பெறவேண்டும்’ என்னும் விருப்பமில்லை; 6பதினான்கு வருடங்கள் நிறைந்திருக்க, பஞ்சமி திதியன்று’ என்கிறபடியே, ‘ இன்ன நாள் பெறக்கடவை’ என்று ஒரு நாளிட்டுத்தர அமையும். யான் – நீ தந்த கரணங்களை இதர விஷயப் பிராவண்யத்துக்கு உறுப்பாக்கிக் கேட்டினைச் சூழ்த்துக் கொண்ட யான். உன்னை – ‘நான் விளைத்துக்கொண்ட கேட்டிற்குப் போக்கடி சொல்லாய்’ என்று வளைக்கலாம்படியாயிருக்கிற உன்னை. இனி – நீ தந்த கைம்முதலை அழித்துக்கொண்ட பின்பு. இனி வந்து கூடுவனே – ‘இனி வந்து கிட்டுகை என்று ஒரு பொருள் உண்டோ?’ என்று ஆசையற்றவராகிறார் என்று முன்புள்ள முதலிகள் அருளிச்செய்வர்.     எம்பெருமானார் ‘நிராசர் ஆனால் பின்னை முடிவார் ஒருவர்; ஒன்பதாம் பாட்டில் – நிராசராக, பத்தாம் பாட்டில் – அவன் வந்து சமாதானம் செய்தானாக அமையும்’ என்று அருளிச்செய்வர். 1ஆதலால், இப்பாசுரத்தில் ‘நான் வந்து உன்னைக் கிட்டுவேனாக நீ பார்த்து வைத்த நாளைச் சொல்லாய்,’ என்கிறார் என்றபடியாம் என்பது.

1. இத்திருவாய்மொழியில் உள்ள ‘முந்நீர் ஞாலம் படைத்த’ என்ற பாசுரத்தைக்
கடாக்ஷித்து, ‘உலகத்தைப் படைத்தான்’ என்கிறார். ‘எம் வாமன’ என்ற
பகுதியைக் கடாக்ஷித்து, ‘அவதரித்தான்’ என்கிறார். ‘எங்கணும் நிறைந்த
எந்தாய்’ என்ற பகுதியைக் கடாக்ஷித்து, ‘அந்தர்யாமி யுருவமாக’ என்கிறார்.
‘ஆக்கையின் வழி உழல்வேன்’ என்றதனைக் கடாக்ஷித்து, ‘அசத்துக்குச்
சமமாக்கிக்கொண்டேன்’ என்கிறார். ‘எங்கினித் தலைப்பெய்வன்?’
என்றதனை நோக்கி, ‘இவர் சோகிக்க’ என்கிறார். ‘சிந்து பூ மகிழும்’
என்றதனைக் கடாக்ஷித்து, ‘இப்படியேகாணும் படுவது’ என்று
அருளிச்செய்கிறார். ‘நிலை பெற்று என் நெஞ்சம்’ என்றதனைத் திருவுள்ளம்
பற்றிச் ‘சமாதானத்தை அடைந்தவராய்த் தலைக்கட்டுகிறார்’ என்கிறார்.

இதற்கு மூன்று வகையாகச் சமாதானம் அருளிச்செய்கிறார், ‘முலை வேண்டி
அழுத’ என்று தொடங்கி. ‘முலை வேண்டி’ என்றவிடத்தில்,

  ‘தென்னன் உயர்பொருப்பும் தெய்வ வடமலையும்
என்னும் இவையே முலையா வடிவமைந்த
அன்ன நடைய அணங்கு’

(பெரிய திருமடல்)

  என்னும் பகுதியை நினைவு கூர்க.

யாற்று நீரும் ஊற்று நீரும் மழைநீருமுடைமையால், கடற்கு முந்நீர் என்பது
பெயராயிற்று; அன்றி, ‘முன்னீர்’ என்றோதி நிலத்திற்கு முன்னாகிய நீர்
என்றும் உரைப்ப,’ என்பர் புறநானூற்று உரையாசிரியர். (புறம்.  9)
‘முந்நீர் – கடல்; ஆகுபெயர்; ஆற்று நீர். ஊற்று நீர், மேனீர் என இவை’
என்பார்க்கு, ‘அற்றன்று; ஆற்றுநீர் மேனீர் ஆதலானும், இவ்விரண்டும்
இல்வழி ஊற்று நீரும் இன்றாமாதலானும், இவற்றை முந்நீர் என்றல்
பொருந்தியது அன்று; ‘முதிய நீர்’ எனின் ‘நெடுங்கடலும் தன்னீர்மை
குன்றும்’ என்பதனால், அதுவும் மேனீர் இன்றி அமையாமையின் ஆகாது;
‘ஆனால், முந்நீர்க்கும் பொருள் யாதோ?’ எனின், முச்செய்கையையுடைய
நீர் முந்நீர் என்பது; முச்செய்கையாவன – மண்ணைப் படைத்தலும்
மண்ணை அழித்தலும் மண்ணைக் காத்தலுமாம்,’ என்பர், அடியார்க்கு
நல்லார். நச்சினார்க்கினியரும் இக்கருத்தினரேயாவர்.

முன் அருளிய திருவாய் மொழி அழகர் பற்றியே
பூர்ண அனுபவம் பெற பெறாமல் துக்கப் படுகிறார்
ஸ்ரீ ராம பிழை பட்டர்
பரத்வம் தேச விசேஷம்
விபவம் கால விசேஷம்
அர்ச்சை அதுவும் அழகர் அனுபவிக்க என்ன குறை
இவன் தான் அங்கெ-ஆதி அம் சோதி உருவை அங்கெ வைத்து
கரணங்கள் கொண்டு
தரமி ஐக்கியம்
பரி பூர்ண -வாசி அற -அனுபவிக்க முடியாதே விசுவாசம் குறைய
முழுவதும் அனுபவிக்க முடியாதே
கடல் அருகில் கண்ணாலே நோக்குவதே காண முடியும்
அழகர் சௌந்த்ர்யாதிகள் -விழாக் குலை கொண்டு அனுபவிக்க முடியாதே –
பூரணமாக அனுபவிக்க பெரு விடாய்  பட்டவன் -துடிக்குமா போலே
எடுத்து குடிக்க முடியாமல்
தளர்ந்து போய் துடிக்கிறான் –
விஷயமும் சம்கிதமாய் விடாயும் மிக்கு -அபரிச்சித்த விஷயம்
வை லஷண்யம் -மூலம் வந்தது என்று அறியாமல்
தமது இந்த்ரியங்கள் சங்கோசம் அடியாக என்று நினைத்து கிலேசப் படுகிறார் –

ஆழ்வீர் -நித்ய சூரிகளும் இதே பாடு படுகிறார்கள் என்று காட்டி தந்தான்
இது தன இந்த திருவாய்மொழி சாரம் -சிருஷ்டித்து
கரண களேபரங்கள் கொடுத்து
அவன் செய்த கார்யங்கள் பட்டியல்
அவதரித்து
அந்தர்யாமியாய் சத்தாதிகள் கொடுத்து
அசத் சமம் ஆக்கிக் கொண்டேன் கிட்ட முடியுமா
வயசன சாகாரம் முழுகி -கட்டளைப் படாத -சமுத்ரம் -கரை காண முடியாத –
சகிக்க வேண்டாம் -கரணங்கள் குறை இல்லை
நித்ய முக்தர்களும் நம்மை அனுபவிக்கும் பொழுது இப்படியே படுவார்கள்
வடக்கு திருமலையில் நின்ற்கிறோம் அங்கெ வந்து கிட்டி அனுபவியும் –
எம்மா வீட்டில் தொடங்கி இது வரை அழகர் விஷயம் –
சமாதானம் பண்ணி -அங்கெ வந்து அனுபவிக்க சொன்னான் -என்று பட்டர் பதில்

இன் ன அளவு அரிதாக கண்ணன் ஒருமை படுத்தினான்
தெற்கு திருமலை -வடக்கு திருமலை காட்டி சமாதானம் செய்வது என்ன
முலை கேட்கும் குழந்தைக்கு பால் கொடுப்பது
அது வேணும் இது வேணும் தெளிவு இல்லை பசிக்கு பால் வேண்டும்
வேணும் என்று கேட்பதே பாதகம் ஆகலாமே
சோறு -மாந்தம் மந்தச்ய பாவம் -தாரகம் ஆனதே பாதகம் ஆகுமே
ஈஸ்வரன் ஒருவனே அறிவான் எதை காட்டி தரிக்க வைக்கலாம் –
தரிப்பிப்பிகை  தவிர்த்து இத்தை கொடுத்தான் –
ஆரியர்இகழ்ந்த  தஷிண -மிலேச்ச பூமி -கள்ளர் வாழும் இடம் -அங்கெ
பலி காவல் தேவதை பதினெட்டாம் படி கருப்பன் –
செம் குருதி கொண்டு -பூதங்கள் சித்தை புடைத்து -பெரியாழ்வார் பாசுரம் –
யார் எதை உண்கிறார்களோ அதை சமர்ப்பித்து உண்ண  வேண்டும்
சாஸ்த்ரத்தில் அனுமதிக்கப் பட
கானும் வானரம் வேடர் உடை வேம்கடம் -அவனை விட சௌலப்யம் காட்டிக் கொடுத்தான் -முதல் பாட்டில் -அனுபவிக்க முடிய விலையே வீணாக்கி விட்டேன்
ஜகத் சிருஷ்டி பண்ணி கரண களேபரம் கொடுத்தாய்
வீணாக்கி இதர விஷய ப்ராவன்யத்தில் செலுத்தினேன்
இங்கனே இருக்கிற நான் உன்னை அடைய விரகு சொல்லி அருள வேண்டும் –
முந்நீர் ஞாலம் படைத்த முகில் வண்ணன்
ஆக்கை வழி  உழன்று
நோய் தீர -வினைகளை அறுத்து என்று கூடப் போகிறேன்
கிட்டுவது என்ற பொருள் இல்லை
முந்நீர் -மூன்று நீர் ஆற்று ஊற்று வர்ஷ நீர் -ஞாலம்
முற்பட ஜல சிருஷ்டி முன் நீர் இரண்டு அர்த்தம்
ஆபக -பிர்த்வி அப்புறம் -முன்னீர் இங்கே
விசித்ரமான ஜகத் சிருஷ்டி
கிருபை அடியாக
முகில் வண்ணன் ச்வாபாவம் தயை ஒன்றே கொண்டு
போக அனுபவ சூன்யர் இறகு ஒடிந்த பஷி போலே இருக்க
கரை மரம் சேர வேண்டும் என்று சிருஷ்டித்து
எம் முகில் வண்ணன் -தன்னை சிருஷ்டிக்க லோகம் சிருஷ்டித்தான்
ஒருவன் சாதனா அனுஷ்டானம்
செய்து நல்லார் உண்டால் மழை எல்லாருக்கும்
நல்லார் பொல்லார் பார்க்காமல் அனைவரையும் சிருஷ்டித்து
பலன் எதிர்பார்க்காமல் மேகம் தன்மை
அந்நாள் -சூஷ்ம தமசால் மூழ்கி இருந்த அன்று
நீ -தந்த ஆக்கை -ஏகாக்கி ந ரமேத – இழவு உன்னதாக முகம் காட்டிய நீ
தந்த -கேட்காமல் கொடுத்த
உடம்பை திருவடியில் தலை சாய்த்து பெற வேண்டி இருக்க நீயே தந்தாய்
அர்ததிகாமல் கொடுத்து அருளி துர்லபோ மானுஷ தேக
அரிது அரிது மானிடர் பிறவி அரிது கர்மம் அடி தானே நீ தந்த
ஸ்ருஷிடிபது கர்மம் அடிதான்
ஏக கால சிருஷ்டி -பிரளய காலம் யுகம் முதலில்
அசித் அவிஷேத -ஒன்றாக கிடக்க பிரளய வெள்ளத்தில்
தயமான -பட்டர் ஸ்லோகம்
தண்டனை சிறை -ராஜா விடுவிப்பது போலே
ஆக்கையின் வழி உழன்றேன்
சரீரம் கொண்டு உன்னை அடைய தந்தாய்
அதன் வழியே போய் –
காவேரி வெள்ளம் -படுகு கொடுத்து பகவனை சேவிக்க -உடம்பு முடியவில்லை -கடலில் போய் விழுவது போலே

எம்பார் வார்த்தை இதர விஷய ப்ராவன்யதுக்கு உடலாக்கி –
வெம்மையான நாள் ஸ்வரூப ஞானம் பிறந்த பின்பு
பிராட்டி இலங்கையில் இருந்தபடி
விச்லேஷதில் -நெருப்பை கிட்டியது போல்
நோய் -பிறவி ஜன்மம் தான்
பரத ஆழ்வான் நோய் -சாதுர் நன்கு நாள் நோய் இல்லை -வைரஸ்
ராம விரகத்தால் இவருக்கும் உலகத்தில் இருப்பதே நோய்
அது வீய – முடிய
வினைகளை வேர் உடன் அழித்து
ராஷசர் அழித்து -இலங்கை மூலை அடி ஆக்கி என்னை கொள்வது என்றோ பாரித்து போலே
அவித்யாதிகளை பாய்ந்து
சர்வ சக்தன் ஒருவனே செய்ய முடியும் –
நாம் போக் கவோ –
எனக்கு இப்போதே பெற அபேஷை இல்லை
என்று நாள் குறித்து கொடு என்கிறார்
இன்று பெற கடவை பரதனுக்கு 14 வருஷம் சொல்லி அருளியது போலே
அநர்த்தம் விளைவித்து கொண்ட நான்
போக்கடி சொல்லாய் -என்று உறவு முறை உள்ள நீ
கை முதலை அழித்துக் கொண்ட பின்பு
நிராசராய் அருளுகிறார் முற்பட்ட முதலிகள் சோழ
எம்பெருமானார் -நிராசரானார் முடிவார்
பாசுரங்கள் இன்றும் உண்டே
ஒன்பதாம் பாட்டு வரை நிராசை
அவன் வந்து சமாதானம் செய்து தரிப்பித்தான்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -3-1-11-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

January 24, 2013

வியப்புஆய வியப்புஇல்லா
மெய்ஞ்ஞான வேதியனைச்
சயப்புகழார் பலர்வாழும்
தடங்குருகூர்ச் சடகோபன்
துயக்குஇன்றித் தொழுதுஉரைத்த
ஆயிரத்துள் இப்பத்தும்
உயக்கொண்டு பிறப்பு அறுக்கும்
ஒலிமுந்நீர் ஞாலத்தே.

    பொ-ரை : பிறரிடத்தில் ஆச்சரியப்படத் தக்கனவான காரியங்களனைத்தும் இயல்பாய் அமைந்துள்ள, உண்மை ஞானத்தைக் கூறுகின்ற வேதங்களால் சொல்லப்படுகின்றவனை, வெற்றிப் புகழையுடைய பெரியார் பலர் வாழ்கின்ற விசாலமான திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீ சடகோபர் ஐயம் திரிபுகள் இன்றி வணங்கியுரைத்த ஆயிரந்திருப்பாசுரங்களுள் இப்பத்துப் பாசுரங்களும் ஒலிக்கின்ற கடலாற்சூழப்பட்ட இப்பூமியில் உய்வு பெறச்செய்து பிறப்பினை நீக்கும்.

    வி-கு : வியப்பாய – வினையாலணையும் பெயர். இல்லாத வேதியன் என்க. சமயம் – ஞானவெற்றி.

    ஈடு : முடிவில், ‘இத்திருவாய்மொழிதானே இது கற்றாரை உய்வு பெறச்செய்து, பின்னர் இவ்வுலகத்திலுண்டாகும் எல்லாத் தீவினைகளையும் போக்கும்,’ என்கிறார்.வியப்பு ஆய வியப்பு இல்லா – வேறு சிலரிடத்திலே கண்டால் ஆச்சரியப்படுதற்குக் காரணமாயிருப்பவையடைய இவன் பக்கலிலே கண்டால் இயல்பாய் இருக்கும். ஒருவன் நான்கு பசுக்களைத் தானம் செய்தான் என்றால், அது ஆச்சரியத்திற்குக் காரணமாயிருக்கும்; ‘பெருமாள் செய்தார்’ என்றவாறே, தக்கதாயிருந்ததேயன்றோ? என்றது, ‘எல்லாச் சொத்துகளையும் தானம் பண்ணிக் கையொழிந்த அளவிலே ‘திரிசடன்’ என்பான் ஒரு பிராஹ்மணன் வர, அப்பொழுது ஒன்றும் தோன்றாமையாலே ‘உனக்கு வேண்டும் பசுக்களை அடித்துக்கொண்டு போ,’ என்ன, தண்டைச்சுழற்றி எறிந்து அதற்கு உட்பட்ட பசுக்களையடைய அடித்துக்கொண்டு போனான்’ என்னும் சரிதப்பகுதியை உணர்த்தியவாறு. மெய்ஞ்ஞான வேதியனை – உண்மையைக் கூறுகின்ற வேதங்களாலே சொல்லப்படுகின்ற ஏற்றத்தை (முதன்மையை) உடையவனை. சயம் புகழார் பலர் வாழும் தனம் குருகூர்ச் சடகோபன் – 1‘இந்நின்ற நீர்மை இனியாம் உறாமை’ என்ற இவர்தம்மைப்போன்று சமுசாரத்தை வென்றமையால் வந்த புகழையுடைய ஸ்ரீ வைஷ்ணவர் பலரும் ஆழ்வாரை அனுபவித்து வாழ்க்கைக்குத் தகுதியாகப் பரப்பையுடைத்தான திருநகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார்.

    துய்க்கு இன்றித் தொழுது உரைத்த ஆயிரத்துள் இப்பத்தும் ஒலி முந்நீர் ஞாலத்தே உய்யக்கொண்டு பிறப்பு அறுக்கும் – ஐயம் திரிபுகள் இல்லாமம் உள்ளதை உள்ளவாறு அறிந்து அருளிச் செய்த ஆயிரத்திலும் இப்பத்தும், ஒலியையுடைத்தான முந்நீரையுடைய பூமியிலே 2‘பரம்பொருள் இலன் என்று அறிவானாகில் அவனும் இல்லாதவனாகிறான்,’ என்கிறபடியே, அசத்துக்கு ஒப்பானவர்களை, ‘பரம்பொருள் உளன் என்று அறிவானாகில் அவனும் உள்ளவனாகிறான்,’ என்கிறபடியே, உய்வு பெறச் செய்து விரோதிகளையும் போக்கும். என்றது, ‘அரசன் இல்லாத தேசத்திலே அரசபுத்திரன் தலையிலே முடியை வைத்து விலங்கு வெட்டிவிடுமாறு போன்று, அழகர் திருவடிகளிலே செய்யும்

தொண்டிலே சேர்ப்பித்துப் பின்பு அதற்கு விரோதியான சமுசார சம்பந்தத்தை அறுத்துக்கொடுக்கும் என்கிறார்,’ என்றபடி.

    முதற்பாட்டில், அழகருடைய திருவணிகலன்களுக்கும் திருமேனிக்குமுண்டான பொருத்தத்தின் மிகுதியைக் கூறினார்; இரண்டாம்பாட்டில், அதற்கு உலகத்தார் உவமையிட்டுச் சொல்லுமவையெல்லாம் தாழ்வினை விளைக்குமென்றார்; மூன்றாம் பாட்டில், ‘உலகத்தாரை விடும், மயர்வற மதிநலம் அருளப்பெற்ற நீர் சொல்லீர்,’ என்ன, ‘என்னாற்சொல்லி முடியாது,’ என்றார்; நான்காம் பாட்டில், ‘இப்படி விலக்ஷணனாய் நிரதிசய போக்யனாயிருக்கிற உன்னை உலகத்தார் இழந்துபோம்படி அவர்கட்கு மதி மயக்கத்தினைப் பண்ணினாய்,’ என்றார்; ஐந்தாம் பாட்டில், ‘உலகத்தாரில் வேறுபட்டவர் அல்லீரோ? உம்மால் பேசவொண்ணாமைக்குக் குறை என்?’ என்ன, ‘என்னை வேறுபட்டவனாக்கியது போன்று உன்னை ஓரளவிலே நிற்கின்றவனாக்கிற்றில்லையே!’ என்றார்; ஆறாம் பாட்டில், ‘வேதங்களும் நீரும் கூடப் பேசினாலோ?’ என்ன, ‘அவையும் உன்னைப் பரிச்சேதிக்க மாட்டா,’ என்றார்; ஏழாம் பாட்டில், ‘வேதங்கள் கிடக்க; வைதிக புருஷர்கள் என்று சிலருளரே, அவர்கள் ஏத்தக் குறை என்?’ என்ன, ‘அதுவும் உனக்கு நிறக்கேடு’ என்றார்; எட்டாம் பாட்டில், ‘கர்மபாவனையில்லாமல் பிரஹ்மபாவனையேயாயிருப்பான் ஒரு பிரஹ்மாவைக் கற்பித்து அவன் ஏத்திலும் தேவரீர்க்குத் தாழ்வு’ என்றார்; ஒன்பதாம் பாட்டில், ‘மேன்மை பேசவொண்ணாது’ என்கைக்கு, ‘நீர்மையோதான் பேசலாயிருக்கிறது’ என்றார்; பத்தாம் பாட்டில், ‘உன்னாலே படைக்கப்பட்டவனான பிரமனாலே படைக்கப்பட்டவர்களான இவர்கள் உன்னை ஏத்துகையாவது உனக்குத் தாழ்வே அன்றோ? என்றார்; முடிவில், ‘இத்திருவாய் மொழிதானே பேற்றினைத் தரும்’ என்றார்.

(11)

திருவாய்மொழி நூற்றந்தாதி

முடியார் திருமலையில் மூண்டுநின்ற மாறன்
அடிவாரந் தன்னில் அழகர் – வடிவழகைப்
பற்றி முடியும் அடியும் படிகலனும்
முற்றும் அனுபவித்தான் முன்.

வியப்பாயா ஆச்சர்யம்
விஸ்மய ஹேதுவாக இருக்கும்
பிரப்தமாய் இருக்கும்
ஒருவனுக்கு நாலு பசு கொடுத்தால் விஸ்மயமாய் இருக்கும்
பெருமாள் கோ தானம் திரிஜடன் பிராமணன் -தண்டை சுழற்றி எறிந்து உட்பட்ட பசுக்களை கொண்டு போனானே
வியப்பு இல்லா மெய் ஞான வேதியன்
எதா பூதவாதி வேதத்தால்
திரு குருகூர் இந்நின்ற நீர்மை -சம்சாரத்தை ஜெயிக்கையால் வந்த பலர் வர்த்திக்கும்
துயக்கு இன்றி மனம் கிலேசம் சங்கை சம்சய விபரித்த ராகிதமாக சாஷாத் கரித்து
ஞாலத்தில் அசந்நேவ ஆசாத் கலப்பர் போல் சதுக்க்ச்ள் போலே உஜீவித்து பிறப்பை அறுக்கும்
ராஜ புத்திரன் தலையி முடியை வைத்து விடுவிக்குமா போலே
அழகர் திருவடியில் கைங்கர்யம் அனுபவித்து
சம்சாரம் அறுத்து கொடுக்கும் –
பாட்டு தோறும் அருளிய அர்த்தம் மீண்டும் சொல்லி

அழகர் மீண்டும் தொடர்ந்து -முடியும் அடியும் அழகை அனுபவித்து –

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -3-1-10-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

January 24, 2013

மறையாய நால்வேதத்
துள்நின்ற மலர்ச்சுடரே!
முறையால்இவ் வுலகுஎல்லாம்
படைத்துஇடந்துஉண்டு உமிழ்ந்தளந்தாய்;
பிறைஏறு சடையானும்
நான்முகனும் இந்திரனும்
இறையாதல் அறிந்துஏத்த
வீற்றிருத்தல் இதுவியப்பே!

பொ-ரை : ‘மறையாயிருக்கின்ற நான்கு வேதங்கட்கு உட்பொருளாய் நின்ற பரந்த ஒளியுருவனே! அவ்வக்காலத்தில் இவ்வுலகத்தையெல்லாம் உண்டாக்கி, பிரளயத்தில் புக்கு இடந்து எடுத்து, பின்னர் மஹாபிரளயத்தில் புசித்து, பிரளயம் நீங்கிய பின்னர் வெளியில் உமிழ்ந்து, திருவடிகளால் அளந்தவனே! பிறைச்சந்திரனைத் தரித்த சிவபெருமானும் பிரமனும் இந்திரனும் ஆகிய இவர்கள், நீ தலைவனாக இருத்தலையறிந்து ஏத்தும்படி வேறொருவர்க்கு இல்லாத பெருமையோடு எழுந்தருளியிருத்தலாகிய இது ஆச்சரியமோ!’ என்கிறார். ‘இன்று’ என்றபடி.

    வி-கு : மறை – தன் பொருளை மறைத்து வைத்திருப்பது. வேதம் – தன் பொருளையறிவிப்பது. வீற்றிருத்தல் – வேறு ஒருவர்க்கில்லாத பெருமையோடு எழுந்தருளியிருத்தல்.

    ஈடு : பத்தாம் பாட்டு. 1வேதங்களாலே அறியக்கூடியவனாய்ச் சர்வேசுவரனாயிருக்கிற உனக்கு, உன்னாலே படைக்கப் பட்டவர்களாய் உன்னாலே ஞானத்தைப் பெற்றவர்களாயுள்ள பிரமன் முதலான தேவர்கள், ‘ஈசுவரன்’ என்று அறிந்து ஏத்த இருக்குமது ஆச்சரியமோ!’ என்கிறார்.

    மறையாய நால்வேதத்துள் நின்ற மலர்ச்சுடரே – வேதங்களிலே எல்லாரைக்காட்டிலும் அதிகனாகவும் நிரதிசய போக்கியனாகவும் பிரகாசிக்கின்றவனே! புறம்பானவர்களாய் நாஸ்திகராயிருப்பார்க்குத் தன் படிகளை மறைக்கையாலே, ‘மறை’ என்றும், ‘ஆஸ்திகராயிருப்பார்க்குத் தன் பொருளை வெளியிட்டுக் காட்டுகையாலே ‘வேதம்’ என்றும் இரண்டு படியாகச் சொல்லப்படுதலின் ‘மறையாய நால்வேதம்’ என்கிறார்: முற்பகுதி – ஆராதன சொரூபத்தைச் சொல்லுகிறதாய், பிற்பகுதி – ஆராதிக்கப்படுகின்ற இறைவனுடைய சொரூபத்தைச் சொல்லுகிறதாய், 2’பூர்வபாகம் என்றும், உத்தரபாகம் என்றும் பிரிவுபட்டுள்ள எல்லா வேதங்களாலும் நான் அறியப்படுபவன்,’ என்கிறபடியே, எல்லா வேதங்களும் தன்னையே சொல்லும்படி இருக்கையாலே உண்டான புகரையுடை

யவனாதலின் ‘உள் நின்ற மலர்ச்சுடரே’ என்கிறார். 1பகவானே! வேதங்களானவை முதலிலே வேறொரு பிரமாணத்தை விரும்பாமலே தாமாகவே பிரமாணங்கள் ஆகின்றன; மநு முதலான ஸ்மிருதிகளானவை இதிகாசங்களோடு கூடிய புராணங்களோடும் பூர்வ உத்தர மீமாம்சைகளோடும் கூடி அந்த வேதங்கட்குப் பொருள் விவரணம் செய்வதில் உதவியாய் இருக்கின்றன; வேதங்களில் முற்பகுதியானது தேவரீருடைய திருவாராதன முறைமையைச் சொல்லும் வகையில் முடிகின்றது; பிற்பகுதியோ என்னில், தேவரீருடைய செயல்கள் குணங்கள் விபூதிகள் இவற்றை விளங்கத் தெரிவிப்பதனாலே தேவரீருடைய திருவடிகளைச் சேர்வதில் முடிகின்றது; ‘எல்லா வேதங்களாலும் அறியப்படுகின்றவன் நானே!’ என்று தேவரீர் அருளிச்செய்ததுமுளது,’ என்றார் பட்டர்.

    முறையால் இவ்வுலகெல்லாம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்தாய் – கரண களேபரங்கள் அற்றனவாய்ப் போக மோக்ஷங்களில்லாதனவாய்க் கிடந்த அன்று இவற்றை உண்டாக்கி, படைத்த உலகத்தைப் பிரளயங்கொள்ள மஹா வராகமாய் இடந்து, மீண்டு பிரளயம் வர வயிற்றினுள்ளே வைத்து நோக்கி, பின்னர் வெளிநாடு காண உமிழ்ந்து, மஹாபலி போல்வார் பருந்து 2இறாஞ்சினாற்போன்று அபஹரிக்க எல்லை நடந்து மீட்டு, இப்படி எல்லா விதமான ரக்ஷணங்களையும் செய்தவனே! ‘முறையால்’ என்றதற்குப் பொருள், ‘உடையவன் உடைமை என்ற சம்பந்தத்தால்’ என்னுதல்; ‘மாறி மாறி’ என்னுதல். ‘இதனை உபகாரமாகச் சொல்லுகிறது என்? கர்மங்கட்குத் தகுதியாக அன்றோ பல படியாகப் படைத்தல் இருப்பது?’ எனில், படைத்தல் கர்மங்களைக் கடாக்ஷித்தேயாகிலும் ஒரே காலத்தில் ஒரு சேரப்படைத்தல் அநுக்கிரகத்தின் காரியம்.

    பிறை யேறு சடையானும் நான்முகனும் இந்திரனும் இறையாதல் அறிந்து ஏத்த வீற்றிருத்தல் இது வியப்பே – சடை கழற்றாமல் சாதக வேஷத்தோடேயிருந்தும், கலா மாத்திரமான சந்திரனைத் தரித்துக்கொண்டு சுகத்தையே பிரதானமாகக் கொண்டுள்ள முதன்மை பெற்றவனாயிருக்கிற சிவனும், அவனுக்குங்கூடத் தந்தையான பிரமனும், இவர்களோடு ஒக்க எண்ணலாம்படியிருக்கிற இந்திரனும், நீ ஸ்வாமியான முறையறிந்துஏத்த, அதனாலே உன்னுடைய வேறுபாடு தோன்ற இருந்தாய் என்றால் இது உனக்கு ஆச்சரியமோ! அதாவது, ஒருவன் ஒரு 1குழமணனைச் செய்து அதன் கழுத்திலே காக்கைப்பொன்னைத் தொற்றி அதன் தலையிலே காலை வைத்து, ‘இது என்னை வணங்கிற்று’ என்று இறுமாந்திருக்குமாறு போன்று, 2’நன்மைப்புனல் பண்ணி நான்முகனைப் பண்ணி’ என்கிறபடியே, உன்னாலே மனையப்பட்ட பிரமனும், அவனாலே உண்டாக்கப்பட்ட இவர்களும் உன்னையேத்த, அதனாலே இறுமாந்திருந்தாயென்றால் அது உனக்கு ஏற்றமோ! நகையாய் முடியுமத்தனையன்றோ!’ என்றபடி.வேதைக சமதைகனாய் -சர்வேஸ்வரன்
உன்னாலே படைக்கப் பட்ட உன்னாலே ஞானம் கொடுத்த
வேதம் அறிவிக்கும்
மறை மறைக்கும்
இரண்டுமே –
பாஹ்யராய் நாஸ்திகராய் இருபாருக்கு மறைக்கும்
ஆராதனா ஸ்வரூபம்
ஆராத்ய பகவான் ஸ்வரூபம்
அஹமேவ வேதே வேதம் பாகம் எல்லாம் அவனை சொல்லும்
சகல வேதங்களும் தன்னை பிரதிபதிக்கும்
வேதாக ஏவ நான்குவித அந்வயம்
மலர் சுடர் புகழ்
சர்வாதிகன் நிரதிசய
முறையால் -வேதங்கள் பிரதிபதிப்பது இவனுடைய ரஷகத்வம்
முறை ஸ்வாமித்வம்
படைத்தது கரண களேபரங்கள் உண்டாக்கி
ஸ்ருஷ்டமான ஜகத்தை பிரளயம் கோல இடர்ந்து உண்டு உமிழ்ந்து
பருத்து போலே அபகரிக்க எல்லை நடந்து மீட்டு கொண்டு
சர்வவித ரஷணம் செய்து
இரண்டு வித சிருஷ்டி -விஷம சிருஷ்டி கர்மம் அடியாக -பிரம்மா
சம சிருஷ்டி -கிருபாகார்யம் -முறையால் படைத்து
சடையனும் -சாதக வேஷத்துடன் இருக்க செய்தே பிறை சந்தரன் போக
சுக பிரதனாமாக
சும்மாட்டில் பூ வைத்து கொண்டது போலே
ஜனகன் சதுர்முகன்
இந்திரன் இவர்களோடு எண்ணலாம் படி
பொம்மை செய்து காக்காய் சரிகை செய்து -இது என்னை வணங்கிற்று என்னுமா போலே
இவர்கள் ஏத்தினால் ஹாஸ்யமாக தலைக்கட்டுமே

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -3-1-9-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

January 24, 2013

மழுங்காத வைந்நுதிய
சக்கரநல் வலத்தையாய்த்
தொழுங்காதல் களிறுஅளிப்பான்
புள்ஊர்ந்து தோன்றினையே!
மழுங்காத ஞானமே
படையாக மலர்உலகில்
தொழும்பாயார்க்கு அளித்தால்உன்
சுடர்ச்சோதி மறையாதே?

பொ-ரை : ‘மழுங்குதல் இல்லாத கூர்மையான நுனியையுடைய சக்கரத்தைச் சிறந்த வலத்திருக்கையிலேயுடையவனாகி, தொழுகின்ற அன்பையுடைய யானையைக் காக்கும்பொருட்டுக் கருடப் பறவையினையூர்ந்து வந்து தோன்றினையே! அங்ஙனமிருக்க, குறைதலில்லாத ஞானத்தையே கருவியாகக் கொண்டு, பரந்த உலகத்திலே உனக்கு அடிமைப்பட்ட அடியார்கட்குத் திருவருள் செய்தால் உனது பேரொளியானது மறையாதோ!’ என்கிறார். ‘மறையும்’ என்றபடி.

    வி-கு : ‘வலத்தையாய் அளிப்பான் ஊர்ந்து தோன்றினை,’ என முடிக்க. தொழும்பு – அடிமை.

    ஈடு : ஒன்பதாம் பாட்டு. 1’பேசவொண்ணாதது மேன்மைதானோ? நீர்மையும் பேச்சுக்கு நிலமன்று,’ என்கிறார்.

    மழுங்காத வை நுதிய சக்கர நல் வலத்தையாய் – மழுங்குதலில்லாத கூரிய முனையையுடைய திருவாழியை 2’வடிவார் சோதி வலத்துறையும் சுடராழி’ என்கிறபடியே, வலவருகே உடையையாய். பகைவர்களின் உடல்களிலே படப்படச் சாணையிலே இட்டாற்போன்று புகர் பெற்று வருமாதலின், ‘மழுங்காத வைந்நுதிய’ என்கிறார். நல்வலத்தையாய்த் தொழுங்காதல் களிறு அளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே – ‘துன்பப்பட்டவனுடைய துன்ப ஒலி செவிப்பட்டவாறே தன்னை மறந்தான்; கையில் திருவாழியிருந்தது அறிந்திலன்; அறிந்தானாகில், இருந்தவிடத்தேயிருந்து அதனையேவிக் காரியம் கொண்டிருப்பான்,’ என்பார், ‘வலத்தையாய்த் தோன்றினையே’ என்கிறார். ‘அறிந்தாலும் இருந்தவிடத்தேயிருந்து துக்கத்தைப் போக்கவொண்ணாது,’ என்பார், ‘தொழுங் காதற்களிறு’ என்கிறார். கையுந்திருவாழியுமான அழகு காண ஆசைப்பட்டிருக்கும் களிறு ஆதலின், ‘காதல் களிறு’ என்கிறார். 3’சதுர்த்தந்தி’ என்னுமாறு போன்று, காதல் இதற்கு நிரூபகமாக இருக்கிறபடி. இதன் கையில் பூ செவ்லியழியாமல் திருவடிகளில் இடுவித்துக்கொண்டானாதலின் ‘அளிப்பான்’ என்கிறார். திருவடியின் வேகம் நினைவிற்கும்

முற்பட்டாயிற்று இருப்பது; அவன் வேகமும் போராமல் அவனையும் இடுக்கிக்கொண்டு வந்து விழுந்தானாதலின், ‘புள் ஊர்ந்து தோன்றினை’ என்கிறார். இடர்ப்பட்டார் தாமாகத் தமக்குத் தோன்றியது போன்றிருத்தலின், ‘தோன்றினையே’ என்கிறார். மழுங்காத ஞானமே படையாகத் தோன்றினையே-இதனால், ‘திருவாழியைக்காட்டிலும் மிக அண்மையிலிருக்கிற 1சங்கல்ப ரூப ஞானத்தையோ நினைத்தது,’ என்கிறார்.

    மழுங்காத 2ஞானமே படையாக – பலப்பல காரியங்களிலே ஏவாநின்றாலும் மழுங்குதல் இல்லாமல் புகர் பெற்று வருகின்ற சங்கற்ப ரூப ஞானமே கருவியாக. மலர் உலகில் தொழும்பாயார்க்கு – திருநாபிக் கமலத்தை அடியாகவுடைத்தான இவ்வுலகத்தில் அடியரானார்க்கு. அளித்தால் உன் சுடர் சோதி மறையாதே – இருந்தவிடத்தேயிருந்து சங்கற்ப ரூப ஞானத்தாலே பாதுகாத்தாயாகில், ‘யானை இடர்ப்பட்ட மடுவின் கரையிலே அரைகுலையத் தலைகுலைய உணர்த்தி அற்று வந்து விழுந்தான்,’ என்கிற நிரவதிக தேஜஸ்ஸானது இழந்ததேயன்றோ!

    சிற்றாட்கொண்டான் என்பார், ‘மறையாதே’ என்பதற்கு ‘மறையும் மறையும்’ என்று அருளிச்செய்வர்.

பேச ஒண்ணாது மேன்மை சொன்னேன்
நீர்மை நெஞ்சால் நினைப்பு அரிதால்
சுடர் சோதி மறையாதோ
மழுங்காத -நுதி கொண்ட சக்கரம் நல வலத்தை
மழுங்காத ஞானம் தர்ம பூத ஞானம்
தொழும் காதல் களிறு அளிப்பான்
ஞானம் ஒன்றால் ரஷித்தால்
மழுங்காத சாணை பிடிக்க -கல் சுற்றி –
இங்கே கத்தி சுற்ற -சத்ருக்கள் மேனியில்
வடிவார் சோதி வலத் து உறையும்
wet grainder
கையில் இருந்த திரு ஆழி அறிந்திலன் அதுவும் ஆர்த்த நாதம் செவிப் பட்ட உடன்
சென்று நின்று ஆழி தொட்டன
தன்னை மறந்தான்
நினைத்து இருந்தாலும் -ஆர்த்த ரஷணம்
தொழும் காதல் களிறு ஆயிற்றே
கையில் திரு ஆளியுமான அழகை ஆசைப்பட்ட கஜேந்த்திரன்
பிராணார்தம் -இல்லை –
காதல் களிறு ஆசையே அவயவம்
நிரூபகம் சதுர கந்த யானை ஐராவதம் போலே
ஆசை கொண்ட யானை கஜேந்த்திரன்
இத்தை அளித்தால் பூவை செவ்வி அழியாமல் திருவடி
கரச்த கமலானி பாதானி ஸ்லோகம்
புள்ளூர்ந்து சங்கல்பம் விட திருவடி அதி வேகமாக வந்து கைங்கர்யம் -செய்யும் திருவடி
அவனையும் இடுக்கிக் கொன்று தோன்றினையே
கருட வாகனம் வேண்டுமே இவனது நிரூபக தர்மம் –
ஓடி வந்து விழுந்தான்
இடர் பட்டார் தமக்காக தோன்றி ஆழ்வார்
சங்கல்ப ஞானம் -உண்டே மழுங்காத ஞானம் –
கையில் திரு ஆழி
அதிலும் -அணித்தான கிட்டிய ஞானம்
ஸ்வரூப  ஞானம் ஒன்றாலே சிருஷ்டித்து
தொழும்பு ஆயா தொப்புள் குடியில் உண்டாகி
ஏகாரம் -மறையாதோ
யானை இடர் பட்ட -கரையில் அரை குலைய தலை குலைய உணர்ச்சி அற்று -நினைவு அழிந்து விழுந்தான்
வேகத்துக்கு நமஸ்காரம் -பட்டர்
கொண்டாடி இருக்க மாட்டார்களே -நிரவதிக தேஜஸ்
சிற்றார்  கொண்டான் மறையும் மறையும் தம்மை மறந்து அருளினாராம்
சாது பரித்ரானாம் முக்கிய காரணம்
இத்தை வைத்தே எம்பெருமானார் அருளி –

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -3-1-8-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

January 24, 2013

மாசூணாச் சுடர்உடம்பாய்
மலராது குவியாது
மாசூணா ஞானமாய்
முழுதுமாய் முழுதுஇயன்றாய்
மாசூணா வான்கோலத்து
அமரர்கோன் வழிப்பட்டால்
மாசூணா உனபாத
மலர்ச்சோதி மழுங்காதே?

    பொ-ரை : ‘எக்குற்றங்களுமில்லாத பேரொளி வடிவினனாய்’ விரிதல் சுருங்குதல் இன்றிக் குற்றமில்லாத ஞானத்தையுடையனாய், உலகமே உருவனாய், எல்லாவற்றையும் நிர்வஹிக்கின்றவனே! குற்றமில்லாத ஞானத்தையுடைய பிரமன் துதித்தால், குற்றமில்லாத உன்னுடைய திருவடிகளில் பரந்திருக்கின்ற ஒளி குறையாதோ!’ என்கிறார். ‘குறையும்’ என்றபடி.

    வி-கு : கோலம் – அழகு; அது, ஈண்டு ஞானத்தை உணர்த்திற்று. அமரர் கோன் – ஈண்டு, பிரமனைச் சுட்டுகிறது.

    ஈடு : எட்டாம் பாட்டு. மேற்பாசுரத்தில், சிவன் தொடக்கமானார் ஏத்தமாட்டார்கள் என்றார்; இப்பாசுரத்தில், ‘சிவன் தனக்குங்கூடத் தந்தையான பிரமன் துதித்தாலும் அதுவும் உனக்குத் தாழ்வாம்,’ என்கிறார் என்பாருமுளர். ‘அவனையும் மேற் பாசுரத்திலே அருளிச்செய்தாராய், இப்பாசுரத்தில் 2உபய பாவனையுமுடைய அப்பிரமனைப் போலன்றிக் கேவலம் பிரஹ்ம பாவனையேயாய் இருப்பான் ஒரு பிரஹ்மாவைக் கற்பித்து,

அத்தகைய பிரமன் ஏத்தினாலும் தேவர்க்குத் தாழ்வாமித்தனை யன்றோ?’ என்கிறார் என்று பட்டர் அருளிச்செய்வர்.

    மாசு உண்ணாச் சுடர் உடம்பாய் – 1ஹேயப் பிரத்யநீகமாய்ச் சுத்த சத்துவமாகையாலே நிரவதிக பேரொளி உருவமான திவ்விய விக்கிரகத்தையுடையையாய். மலராது குவியாது – 2’அரும்பினை அலரை’ என்னும்படியாயிருக்கும்; அதாவது, ‘யுவாகுமார:’ என்கிறபடியே ஒரே காலத்தில் இரண்டு நிலையும் சொல்லலாயிருக்கை. இனி, ‘மலராது குவியாது’ என்பதற்கு, 3’தன் சொரூபத்திற்குத் துல்லியமான ஒரே தன்மையையுடைய திவ்விய மங்கள விக்கிரகத்தையுடையவன்’ என்கிறபடியே, 4குறைதல் வளர்தலின்றி இருக்கின்ற திருமேனியையுடையையாய்’ என்று பொருள் கூறலுமாம். மாசு உண்ணா ஞானமாய் – ஒருகாரணத்தாலே மாசு ஏறக் கூடியதல்லாத ஞானத்தையுடையையாய். ‘மலராது குவியாது’ என்பதனை இடைநிலைத் தீவகமாக இதற்கும் கூட்டுக. ஆக, ‘உலகமக்கள் கர்மங்காரணமாக மேற்கண்ட சரீரங்கட்கு வரக்கூடிய சொரூபம் வேறுபட்ட தன்மையுமில்லை இவன் திருமேனிக்கு; அவர்கள் ஞானத்துக்கு வரக்கூடியதான வேறுபாட்டுத் தன்மையுமில்லை இவனுடைய ஞானத்துக்கு,’ என்கை. முழுதுமாய் – சொல்லப்படாத மற்றைக் குணங்களை யுடையையாய். இனி, இதற்கு, ‘உலகமே உருவமாக நிற்கும் நிலை’ என்று பொருள் கூறலுமாம். முழுது இயன்றாய் – எல்லாவற்றையும் நிர்வஹித்தாய். இது, மேல் ‘வரம்பின்றி முழுதியன்றாய்’ என்றதன் 5அநுவாதம்.

    மாசு உண்ணா வான் கோலத்து அமரர்கோன் வழிப்பட்டால் மாசு உண்ணா உன பாதமலர்ச் சோதி மழுங்காதே – மறதி முதலிய காரணங்கள் இல்லாத ஞான முதலான ஆபரணங்களையுடையான்ஓர் அமரர் கோனை உண்டாக்குவது, அப்படியுண்டாக்கப்பட்ட அமரர்கோன்தான் உன்னைத் துதி செய்தால், ஒரு சேர்க்கையினாலே மாசு உண்ணக்கூடியதல்லாத உன் திருவடிகளின் பேரொளியானது, ‘இவன் ஏத்தும் அளவே இத்திருவடிகள்’ என்று மழுங்காதோ! ‘மாசூணா வான்கோலத்து அமரர்கோன்’ என்றதனால் கற்பிக்கப்பட்ட பிரமன் என்பது போதரும். ‘எவ்வாறு?’ எனில், இப்பொழுதுள்ள பிரமனுக்குத் தனது அதிகாரத்தின் முடிவிலே ஞானத்துக்கு மறைப்பு உண்டு; இவனுக்கு அது இல்லை என்று கூறப்படுதலின். வழிபடுதற்கு உறுப்பாகச் சொல்லப்படுகின்ற இடமாதலின், ‘கோலம்’ என்பது ஈண்டு வழிபடுதற்கு உறுப்பான ஞானத்தைக் காட்டுகின்றது. ‘பிரமனுடைய ஆயுளை யுடையவனும் கோடிக்கணக்கான முகத்தையுடையவனும் மிகவும் சுத்தமான மனத்தையுடையவனுமான ஒரு மனிதன் இருப்பானேயானால், அவன், உம்முடைய குணங்களில் பதினாயிரத்தில் ஒரு குதியைச் சொல்லுவானோ, சொல்லமாட்டானோ அறிகிலோம்!’ என்பது வராஹ புராணம். ஆக, ‘அப்படிப்பட்ட அமரர் கோன் உன்னைத் துதி செய்தால், அவனும் 1அடிக்கு அழிவு செய்தானாய் விடுமித்தனை,’ என்றபடி. ‘அவன் அடியறிந்து மங்களாசாசனம் பண்ணுவார் ஆழ்வார்களேயாவர்,’ என்றபடி. தம்முடைய சேஷத்துவத்திற்குத் தகுதியாக, ‘உன் திருமேனி’ என்னாது ‘உனபாதம்’ என்கிறார்.

அடிக்கு அழிவு – மூலஹாநி, திருவடிகட்குத் தாழ்வு; சிலேடை. ‘இவனும்
அடிக்கழிவு செய்தானாய்விடும் எனின், பின்னைத் துதிப்பதற்கு உரியார்தாம்
யார்?’ என்னும் வினாவைத் திருவுள்ளம்பற்றி அதற்கு விடையாக ‘அவன்
அடியறிந்து’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார்.இப்பாட்டில் ருத்னனுக்கும் ஜனகமான பிரமனும்
உபய பாவனை இன்றி கேவல பிரம பாவனை மட்டுமே உள்ள சனகாதிகள் ஸ்தோத்ரம் -செய்தாலும் பட்டர்
அமரர் கோன் -பிரம்மாவை சொல்கிறது
தேவர்கள் சப்தத்தில் பிரம்மாவையும் கொண்டு பட்டர் அர்த்தம்
அவனே வந்து ஏத்தினாலும் முடியாதே
சதைக ரூபரூபாயா மலராது குவியாது திரு மேனி
ஞானமும் குறையாதே
ஹேய பிரத்யநீகமாய் -தாழ்வுகளுக்கு எதிர் தட்டாய் இருக்கும்
சுத்த சத்வம் –
நிரவதிக தேஜோ ரூபம்
திவ்ய மங்கள விக்ரகம்
மலராது
அரும்பினை அலரை என்னும்படியாக இருக்கும்
மலர தொடங்கி-அலர்ந்து யுவா குமாரா போலே
யவனம் தலை காட்டி கௌமார பருவம்
யுவா அகுமாரன் அர்த்தம்
இரண்டு அவஸ்தையும் ஏக காலத்தில்
ஷய வ்ருத்திகள் இன்றி
மாசு ஏறாத ஞானம் சங்கல்ப ரூபா ஞானம்
அதுவும் மேலராது குவியாது
கர்ம நிபந்தனம் ஸ்வரூப அன்யதா பாவ ஞானம்
ஸ்வாப அன்யதா பாவ ஞானம் நமக்கு வரும்
முழுதுமாய் -ஜகத் சரீரமாய் இருக்கும் நிலை
முழுது இயன்றாய் நிர்வகித்து பெருமை சொல்லி
அப்படி பட்ட உன்னை
சதுர முக -குணங்களில் ஏக தேசம் கூட சொல்லி முடிக்க முடியாதே அய்சு முழுவதும் ஸ்தோத்ரம் செய்தாலும்
அடிக் கழிவு செய்தானே
ஆழ்வார்கள் இ றே அவன் அடி அறிந்து மங்களா சாசனம் செய்வார்கள்
உன்னை மறைக்க –
மறைக்கப் படாத அமரர் கோன் கற்பனையில் பிரம்மா உண்டானாலும் சொல்லி முடிக்க முடியாதே
ஞானம் வலி படுக்கைக்கு உறுப்பாக இருந்தாலும்
உன்னை அப்படிப் பட்டவனும் ஸ்தோத்ரம் செய்தாலும் –
உன்னுடைய திருவடி தேஜஸ் ஸ்தோத்ரம் செய்ய முடியாதே
தம்முடைய சேஷத்வ குணம் தோற்ற உன பாதம் என்கிறார் திரு மேனி என்னாமல்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -3-1-7-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

January 24, 2013

வாழ்த்துவார் பலராக;
நின்னுள்ளே நான்முகனை
‘மூழ்த்தநீர் உலகுஎல்லாம்
படை’என்று முதல்படைத்தாய்;
கேழ்த்தசீர் அரன்முதலாக்
கிளர்தெய்வ மாய்க்கிளர்ந்து
சூழ்த்துஅமரர் துதித்தால்உன்
தொல்புகழ்மா சூணாதே?

    பொ-ரை : வாழ்த்துகின்றவர் பலர் ஆயிடுக; அதனால் வந்தது என்? தண்ணீராற்சூழப்பட்ட உலகங்களையெல்லாம் உண்டாக்குவாய் என்று பிரமனை நின்னுள்ளே முதலில் உண்டாக்கினாய்; ஒளி மிக்க சிறப்பினையுடைய சிவபிரான் முதலாக விளங்குகின்ற தேவர் அனைவரும் கூடி ஒளி மிக்கவர்களாகி மனவெழுச்சியோடு சூழ்ந்துகொண்டு துதித்தால், உனது பழமையான நற்குணம் மாசு ஏறாதோ? ‘மாசு ஏறும்’ என்றபடி.

    வி-கு : மூழ்த்த – சூழ்ந்த. கேழ் – ஒளி. தெய்வமாய் -ஒளியுடையவர்களாகி. ‘கேழ்த்த சீர் அரன் முதலா அமரர் கிளர் தெய்வமாய்க் கிளர்ந்து சூழ்ந்து துதித்தால்’ எனக் கூட்டுக. சூழ்த்து – சூழ்ந்து : வலித்தல் விகாரம்.

    ஈடு : ஏழாம் பாட்டு. 1’வேதங்கள் கிடக்க; வைதிக புருஷர் என்று சிலர் உளரே? அவர்கள் நம்மை ஏத்தக் குறை என்?’ என்ன, ‘அதுவும் உனக்கு நிறக்கேடு,’ என்கிறார்.

    வாழ்த்துவார் பலராக – வாழ்த்துவார் பலர் ஆயிடுக; ‘ஆனால் தான் வந்தது என்? வேதங்களில் அவர்கள் செய்த ஏற்றம் என்?’ என்று 2பட்டர் அருளிச்செய்வர். நின்னுள்ளே

நான்முகனை மூழ்த்த நீர் உலகெல்லாம் படை என்று முதல் படைத்தாய் – உன்னுடைய சங்கற்பத்தின் ஆயிரத்தில் ஒரு கூற்றிலே பிரமனை, ‘கடல்சூழ்ந்த பூமியையெல்லாம் உண்டாக்கு,’ என்று முதல் படைத்தாய்; ஆதலால், உன்னாலே படைக்கப்பட்டவனான பிரமனாலே படைக்கப்பட்டவர்கள் உன்னை ஏத்த என்று ஒரு பொருளுண்டோ?’ என்றபடி. இனி, ‘வாழ்த்துவார் பலராக’ என்பதற்கு, 1’வாழ்த்துகின்றவர் பலர் உண்டாகைக்காக’ என்றும், ‘மூழ்த்த நீர் உலகெல்லாம் படை என்று முதல் படைத்தாய்’ என்பதற்குப் ‘பிரளய வெள்ளத்திலே உலகங்களை உண்டாக்கு’ என்று பிரமனை உண்டாக்கினாய் என்றும் பொருள் கூறுவாரும் உளர். மூழ்த்த நீர் – ஏகார்ணவம்.

    ‘ஆயின், இவர்களையொழிய ஞானத்தில் மேம்பட்டவர்களான சிவபிரான் முதலானவர்களையும் கூட்டிக்கொண்டாலோ?’ என்ன, ‘அவர்களுக்கும் நிலமன்று’ என்கிறார் மேல்: அதாவது, 2’இப்பங்களத்தை விட்டுக் கால் கடியரானவர்கள் ஏத்தப் புக்கால்தான் எல்லை காணப் போமோ?’ என்கிறார் என்றபடி. கேழ்த்த சீர் அரன் முதலாக் கிளர் தெய்வமாய்க் கிளர்ந்து சூழ்த்து அமரர் துதித்தால் உன் தொல் புகழ் மாசு உணாதே – கிளர்ந்த ஞான முதலான குணங்களையுடையனான சிவபிரான் தொடக்கமாக, சர்வேசுவரனோடு மசக்குப்பரலிடலாம்படி கிளர்ந்த தேவதைகள், முசு வால் எடுத்தாற்போன்று கிளர்ந்து 3ஒருவர் சொன்னவிடம் ஒருவர் சொல்லாமல் ஒரோ பிரயோஜகங்களிலே மிகைத்த ஆயுள்களை உடையராய் இருக்கிறவர்கள் துதி செய்தால், உன்னுடையசுபாவிகமான கல்யாண குணம் மாசு உண்ணாதோ! 1’இவர்கள் ஏத்துமளவேயோ இவன் குணங்கள்!’ என்ற அவ்வழியாலே தாழ்வாய்த் தலைக்கட்டாதோ?’ என்றபடி.

வேதங்கள் கிடக்கட்டும்
வைதிக புருஷர்கள் ஸ்தோத்ரம் செய்கிறார்களே அது போலே பண்ணுமே
வாழ்த்துவர் பலர் ஆக
ஆகும்படி சிருஷ்டித்து
நின்னுள்ளே நான் முகனை படைத்தாய் –
புகழ் உடைய ருத்ரன்
அமரர் ஸ்தோத்ரம் செய்தால் புகழ் குறையாதோ
வாழ்த்துவர் பலராகட்டும் அதனால் வந்தது என்ன பட்டர்
வேதங்கள் விட புதிதாக என்ன
அன்றிக்கே வாழ்த்துவார் பலர் உண்டாக என்றும் அர்த்தம் கொண்டு
உன்னுடைய சங்கல்ப ஏக தேசத்தில் சதுர முகனை படைத்த
கடல் சூழ்ந்த பூமி எல்லாம் படை என்று
நீரில் நீ இருந்து கொண்டு
ஏகார்ணவத்தில் நீ இருந்து கொண்டு
உன்னால் சிருஷ்டித பிரமனால் சிருஷ்டிக பட வர்கள் எதினால்
ருத்ராதிகளுக்கும் நிலம் இல்லை
பங்களம் குப்பை செத்தை விட்டு
பங்களம் – பதர்க்கூட்டம். கால் கடியர் – சத்திமான்கள். மசக்குப் பரலிடல் –
ஐயப்படுதல். முசு – கொண்டை முசு. ‘கோலாங்கூலம்’ என்பர்
அரும்பதவுரைகாரர்.
ருத்ரன் ஞானம் அதிகம் –
அவனோடு மசகு படல் -duplicate -சமமாக என்று சொலும் படியான தேவர்கள்
போலி -போலே இருந்தாலும் அதுவாகைல்லை -மயக்குகின்ற பரல் -சதங்கை உள்ளே ரத்னம் மாணிக்கம்
முசுகு வாழ் எடுத்தால் போலே கிளர்ந்து
முசுகு கொண்டை முசுகு -கூத்தாடுவது போலே
குரங்குகள் ஒன்றாக காச்சு மூசச்சு கத்துவது போலே
தேவதைகள் ஸ்தோத்ரம்
முசுகு -முசு -குரங்கு முசுவும் படையா முசுக் கணங்கள்
குவால் எடுக்க சந்தோஷம்
முசு –குவால் எடுத்தாள் போலே -தப்பாக முசுகு வாழ் எடுத்தாள் போலே
வ்யாக்யானர் போலே அரும் பத அர்த்த காரர் காஞ்சி ஸ்வாமி காட்டி அருளி
படித்தவன் பாட்டை கெடுத்தான் எழுதியவன் எடை கெடுத்தான் –
கிளர்ந்து
புகழ்வோம் பழிப்போம் போலே
மாசூணாதோ

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -3-1-6-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

January 24, 2013

ஓதுவார் ஓத்துஎல்லாம் எவ்வுலகத்து எவ்வெவையும்
சாதுவாய் நின்புகழின் தகையல்லால் பிறிதுஇல்லை;
போதுவாழ் புனந்துழாய் முடியினாய்! பூவின்மேல்
மாதுவாழ் மார்பினாய்! என்சொலியான் வாழ்த்துவனே!

பொ-ரை : புனங்களிலே இருக்கின்ற பூக்களையுடைய திருத்துழாய் மாலையைத் தரித்த முடியையுடையவனே! தாமரைப்பூவில் வீற்றிருக்கின்ற பெரிய பிராட்டியார் வாழ்கின்ற மார்பையுடையவனே! எல்லா உலகங்களிலும் ஓதுகின்றவர்களாலே ஓதப்படுகின்ற பல்வேறு வகைப்பட்டிருக்கின்ற வேதங்கள் முதலான எல்லாச்சாத்திரங்களும், சாதுவான நின்னுடைய கல்யாணகுணங்களின் தன்மையே அல்லாமல் வேறில்லை; அங்ஙனமிருக்க, யான் எதனைச் சொல்லி வாழ்த்துவேன்?

    ஈடு : ஆறாம் பாட்டு. 1எங்குலக்க ஓதுவன்?’ என்றார்; ‘வேதங்கள் நம்மைப் பேசாநின்றனவே, உமக்குப் பேசத் தட்டு என்?’ என்ன, ‘அவையும் இவ்வளவன்றோ செய்தது?’ என்கிறார்.

    ஓதுவார் ஓத்து எல்லாம் – ஓதுவார் என்கையாலே, அதிகாரிகளின் பாகுபாட்டினைச் சொல்லுகிறது. ஓத்தெல்லாம் என்கையாலே, இருக்கு முதலான நான்கு வேதங்களையும் குறிக்கிறார். ஆக, ஓதுவார்கள் பேதத்தாலே பல வகைப்பட்ட கிளைகளாய்ப் பிரிவுண்ட வேதங்களெல்லாம் என்றபடி. 2எவ்வுலகத்து எவ்வெவையும் – எல்லா உலகங்களிலுமுண்டான எல்லாம். சுவர்க்க லோகத்திலும் பிரஹ்மலோகத்திலும் அங்குள்ள புருஷர்களுடைய ஞானத்தின் மேம்பாட்டிற்குத் தக்கபடியே அவையும் பரந்திருக்குமேயன்றோ? ஸ்ரீராமாயணம் என்றால் பிரஹ்மலோகத்தில் அநேகம் கிரந்தங்களாக இருக்கவும், இங்கே இருபத்து நாலாயிரமாய் இருக்கின்றது; ஆதலின், ‘எவ்வுலகத்து எவ்வெவையும்’ என்கிறார். சாதுவாய் – சொற்களுக்குச் சாதுத்தன்மையாவது, பொருளைக் காட்டவற்றாயிருக்கை. அன்றி, ‘சாதுவான புகழ்’ என்று குணங்கட்கு அடைமொழியாக்குதலும் ஆம். சாதுவாய் நின் புகழின் தகை அல்லால் பிறிதில்லை – உன்னுடைய கல்யாண குண விஷயமான இத்தனை போக்கிப் புறம்பு போயிற்றில்லை;

கல்யாண குணங்களை எங்குமொக்க 1விளாக்குலை கொண்டதுமில்லை. ‘கடலிலே ஒரு மழைத்துளி விழுந்தால், கடலை எங்கும் வியாபிக்க மாட்டாதே? அதைப்போன்று தன் சத்பாவத்துக்கும் அழிவில்லை,’ என்றபடி.

    போது வாழ் புனந்துழாய் முடியினாய் – பூவையுடைத்தாய், தன்னிலத்திலே நின்றாற்போன்று செவ்வி பெற்று வாழாநின்றுள்ள திருத்துழாயைத் திருமுடியில் உடையவனே! 2’திருத்துழாய் பூ முடி சூடி வாழாநிற்கிறது’ என்றபடி. இவ்வொப்பனை என்னால் பேசலாயிருந்ததோ! பூவின்மேல் மாது வாழ் மார்பினாய் – தாமரைப்பூவை இருப்பிடமாக உடைய பெரியபிராட்டியார் பூ அடி கொதித்துப் போந்து வசிக்கின்ற மார்வையுடையவனே! இவ்வொப்பனையை ஒப்பனையாக்கும் அவளுடைய சேர்த்திதான் என்னாலே பேசலாயிருந்ததோ! ‘பிராட்டி பெருமாளைக் கைப்பிடித்த பின்பு பிறந்தகமான ஸ்ரீ மிதிலையை நினைக்குமன்றாயிற்று, இவளும் இம்மார்வைவிட்டுப் பிறந்தகமான தாமரையை நினைப்பது’ என்பார், ‘பூவின்மேல் மாதுவாழ் மார்பினாய்’ என்கிறார். ‘பிராட்டி பிரிந்திருக்கிலன்றோ வைத்த வளையம் சருகாவது?’ என்றபடி. என் சொல்லி யான் வாழ்த்துவன் – ‘வேதங்களுங்கூட ஏங்குவது இளைப்பதாகாநிற்க, இவ்வொப்பனைக்கும் இச்சேர்த்திக்கும் என்னால் பாசுரமிட்டுச் சொல்லலாயிருந்ததோ!’ என்கிறார்.

1. விளாக்குலை கொள்ளுதல் – எங்கும் ஒக்க நிறைதல். ‘விளாக்குலை
கொண்டதுமில்லை, புறம்பு போயிற்றதுமில்லை,’ என்றபடி. ‘ஆனால்,
சம்பந்தத்திற்குப் பயன்தான் யாது?’ என்ன, அதற்கு விடையாகக் ‘கடலிலே’
என்று தொடங்கி அருளிச்செய்கிறார். அதாவது, “தனக்குச் சத்தை
சித்திப்பதே பலம்,’ என்றபடி. இந்தச் சுலோகம். ஸ்ரீரங்கராஜ ஸ்தவம். 1 : 12.

      ஆக, ‘சாதுவாய்’ என்றதற்கு மூன்று வகையாகப் பொருள் அருளிச்
செய்தபடி. ஒன்று, பொருளை இருந்தபடியே காட்டுதல்; இரண்டு சாதுவான
புகழ் என்று புகழுக்கு அடைமொழி; மூன்று, சத்தை பெறுகைக்காக என்றபடி.
சத்பாவம் – உண்மை.

2. ‘திருத்துழாய் பூ முடி சூடி வாழாநிற்கிறது’ என்பது ரசோக்தி.

வேதம் சொல் லிற்றே என்றானாம்
வேதங்களும் -எதோ வாசா நிவர்த்தந்தே மீண்டதே என்கிறார் –

ஓதப்படுவதாலே வேதம் என்ற பெயர்
சாதுவாய் உனது புகழை
பூ வின் மேல் மாது வாழும் மார்பினான்
ஒதுவார் -அதிகாரி வாசி வைவித்யம் வித விதமான
ஒத்து எல்லாம் ரிக்யாதி சதுர வேதம் -சாகைகள் பலவும் உண்டே
சுக்ல தத்ரிய யஜுர் வேதம்
சாமம் சாந்தோக்ய -ஜைமினிய சாமம் –
தளவதான சாமம் கேரளா
எவ்வுலகுத்து உள்ளவை  எல்லாம் 1008 சாகை உண்டாம்
ஸ்ரீ ராமாயணம் ஸ்வர்க்க லோகத்தில் லஷம் ஸ்லோகங்கள் உண்டே
இங்கு 24000 ஸ்லோகங்கள்
சாதுவாய் சப்தத்துக்கு சாது எனபது அர்த்தத்துக்கு போகதமாய்
அன்றியே சாதுவான புகழ் குணவிசேஷங்கள் -இத்தை தவிர வேறு எங்கும் போகாமல்
புகழ் முழுவதும்பேசி முடிக்காதே –
எல்லை இலா வேதங்களும் -சமுத்ரம் மழை பெய்து நிறையாதே பெய்யா விடில் குறையாதே ஆம்னாயானாம் அசீம்னாம் வர்ஷ பிந்து -போலே பட்டர் சம்பந்தாது ச்வார்த்த லாபா
சத்தை பெற -விழாக் கொலை கொள்ளுதல்
விள்ளாமல் குலை சாப்பிட முடியாதே –
தன்னுடைய சத்பாவதுக்கு புகழும்
போது வாழ் புனம் துழாய் -தன்னிலத்தில் உள்ளது போலே இருக்குமே திரு மேனியில்
வேதம் கூட இளைக்க சேர்த்திக்கு -எப்படி
பூவை உடைத்தாய் செவ்வி பெற்று பசுக்கு பசுக்கு என்று இருக்கும் முடியினாய்
திருத் துழாய் பூ முடி சூடி வாழா  நின்றது -ஒப்பனை அழகை பேசி முடிக்க முடியுமா –
பூவின் மேல் மாது வாழ் மார்பினை
பிராட்டி பிரிந்து இருக்காததால் -குளிர்ந்து சருகு ஆகாமல் குறி அழியாமல் இருக்கிறது
ஒப்பனை ஒப்பனையாக்கும் அவளோட்டை சேர்த்தி பேச முடியுமா
தாமரை பூவை இருப்பிடமாக உள்ள பெரிய பிராட்டியார் பூ அடிக் கொதித்து போந்து
இங்கே வர்த்திக்கும் திரு மார்பு
பிராட்டி பெருமாளை கை பிடித்த பின்பு பிறந்தகமான திரு மிதிலை நினைத்தால் அன்றோ பூவை நினைப்பாள்
வைத்த  இடத்தில் இருந்து பாரதந்த்ர்யம் காட்டி –
வாழ் மார்பினான் -ஒப்பனைக்கும் செர்திக்கும் பாசுரம் இட்டு பேச முடியுமா
வேதங்களும் முடியாமல் மீண்டன

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்