Archive for January, 2013

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -3-3-1-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

January 28, 2013

மூன்றாந்திருவாய்மொழி – ‘ஒழிவில் காலம்’

முன்னுரை

    ஈடு : ‘நிலைப்பெற்று என்னெஞ்சம் பெற்றது நீடு உயிர்’ என்று அவனைக் கிட்டித் 1தம்முடைய சொரூபம் பெற்றவாறே, சொரூபத்திற்குத் தகுதியான அடிமை பெறவேணும் என்று 2பாரிக்கிறார் இத்திருவாய்மொழியில். 3பிரகிருதி சம்பந்தத்தால் வந்த கரணங்களின் குறைவை அநுசந்தித்து நினைத்த வகைகளெல்லாம் பரிமாறப் பெறாமையாலே நொந்து, ‘இறைவன் முதலிலே இதனைத் தவிர்த்துத் தன்னையனுபவித்தற்கு உறுப்பாகப் பல உபாயங்களைப் பாரித்து வைத்தான்; அவற்றிற்குத் தப்பினேன்; அவதாரங்களுக்குத் தப்பினேன்; உயிருக்குள் உயிராயிருக்கும் தன்மைக்குத் தப்பினேன்; இப்படி அவன் பாரித்து வைத்த வழிகள் முழுதிற்கும் தப்பின யான், 4இனிக் கிட்டி அனுபவித்தல் என்று ஒரு பொருள் உண்டோ? இழந்தேனேயன்றோ!’ என்று ஆசையற்றவராய் முடியப் புக, ‘வாரீர் ஆழ்வீர்! நாம் உமக்காக அன்றோ திருமலையில் வந்து நிற்கிறது? உம்மை இவ்வுடம்போடே அனுபவிக்கைக்காக இங்கே வந்து நின்றோமே! நீர் 5அங்குச் சென்று காணக்கூடிய காட்சியை நாம் இங்கே வந்து காட்டினோமே! இனி, 1உம்முடைய இவ்வுடம்பு நம்முடைய அனுபவத்துக்கு விரோதியுமன்றுகாணும்; நீர்தாம் கரணங்களின் குறைவினை நினைத்தலாலே நோவு படுகிறீராகில், 2முதலிலே இது இல்லாதாரும் நம்மையனுபவிக்கும்போது படும் பாடு இது காணும்; அவர்களும் வந்து அனுபவிக்கிற இடங்காணும் இத்திருமலை; ஆன பின்னர், நீரும் இவ்வுடம்போடே நினைத்த அடிமைகளெல்லாம் செய்யும்,’ என்று தான் திருமலையிலே வந்து நிற்கிற நிலையைக்காட்டிச் சமாதானம் பண்ண, 3சமாதானத்தையடைந்தவராய், அடிமை செய்யப் பாரிக்கிறார்.

    ‘யாங்ஙனம்?’ எனில், 4தர்மி ஒன்றே ஆகையாலே, விஷயம் எங்கும் ஒக்கப் பூர்ணமான பின்பு, ஒரு தேச விசேடத்திலே சென்றால் செய்யக்கூடிய அடிமைகளெல்லாம் இந்நிலத்திலே செய்யலாம்படிக்குத் தகுதியாகக் குறையற்றிருந்ததாகில், நமக்கும் இவ்வுடம்பு விரோதியாதலின்றி அடிமை செய்கைக்குப் பாங்காயிருந்ததேயாகில், இனித்தான் அங்குப் போனாலும் 5‘அவன் கல்யாண குணங்களனைத்தையும் முற்றறிவினனான இறைவனோடு அனுபவிக்கிறான்,’ என்கிறபடியே, குண அனுபவமன்றோ பண்ணுகிறது? அந்தச் 6சௌலப்யம் முதலிய நற்குணங்கள்தாம் விளங்கிக் காணப்படுவதும் இங்கேயாகில், இனி 1அங்குள்ளாரும் வந்து அடிமை செய்வதும் இங்கேயாகில், நாமும் அங்கே சென்று புக்கு அடிமை செய்வோம்,’ என்று கொண்டு, பசியுமிருந்து கையிலே சோறும் உண்டாயிருக்குமவன், 2நீரும் நிழலும் கண்டால் உண்ணப் பாரிக்குமாறு போன்று, இவரும் அடிமை செய்யப் பாரிக்கிறார். ‘பாரிக்கிறது என்? அடிமை செய்யவொண்ணாதோ?’ எனின், இவ்விஷயத்தில் அடிமை செய்ய ஒருப்படுவார்க்கெல்லாம் உள்ளது ஒன்றாயிற்று முன்பே பாரித்துக் கொண்டு இழியுமது; 3‘நான் எல்லாக்காலத்திலும் எல்லா அடிமைகளும் செய்வேன்,’ என்பதன்றோ இளைய பெருமாள் படி? 4உணவையே முக்கியமாகக் கொண்ட ஒருவன், ஊண் அத்தியாயம் படிக்குமாறு போன்று இருப்பது ஒன்றாயிற்று இவருடைய கைங்கரிய மனோரதம்.

245

ஒழிவுஇல் காலம்எல்லாம்
உடனாய் மன்னி
வழுஇலா அடிமை
செய்ய வேண்டும்நாம்
தெழிகுரல் அருவித்
திருவேங் கடத்து
எழில்கொள் சோதி
எந்தைதந்தை தந்தைக்கே.

    பொ-ரை : மிக்க ஒலியோடு கூடிய அருவிகளையுடைய திருவேங்கடத்து எழுந்தருளியிருக்கின்ற அழகினைக்கொண்ட ஒளியுருவனான எந்தை தந்தை தந்தைக்கு, எல்லையில்லாத காலமெல்லாம்

எல்லா இடத்திலும் உடனிருந்து ஒன்றும் குறையாதபடி எல்லா அடிமைகளையும் நாம் செய்ய வேண்டும்.

    வி-கு : தெழித்தல் – ஒலித்தல். வழுவிலா – குற்றமில்லாத. குற்றம் இல்லாமையாவது, ஓர் அடிமையும் நழுவாமை; ‘எல்லா அடிமையும்’ என்றபடி.

    இத்திருவாய்மொழி, நாற்சீர் நாலடியான் வருதலின் கலி விருத்தம் எனப்படும்.

    ஈடு : முதற்பாட்டில், ‘திருவேங்கடமுடையான் திருவடிகளிலே எல்லாத்தேசத்திலும் எல்லாக்காலத்திலும் எல்லா நிலைகளிலும் எல்லா அடிமைகளும் செய்ய வேண்டும்,’ என்கிறார்.

    ஒழிவு இல் காலம் எல்லாம் – முடிவில்லாத காலமெல்லாம். இது, இனி வருகின்ற காலத்தைக் குறிக்கின்றது. இதற்கு, ‘இதுகாறும் கழிந்த காலத்தையுங்கூட்டி அடிமை செய்யப் பாரிக்கிறார்’ என்று மிகைபடக் கூறுவாருமுளர். அங்ஙனேயாயின், ‘கழிந்த காலத்தை மீட்கை’ என்று ஒரு பொருள் இல்லையேயன்றோ? 1‘ஜனங்களின் நடுவிலிருந்தும் இச்சரீரத்தை நினையாமலே நாலு பக்கங்களிலும் சஞ்சரிக்கிறான்,’ என்கிறபடியே, கழிந்த காலத்தில் இழவு நெஞ்சிற்படாதபடி மறப்பிக்கையேயன்றோ உள்ளது? 2‘இது ஒன்றே எனக்குத் துக்கத்தைத் தருகிறது; அது யாதெனில், ‘பிராட்டியினுடைய வயதானது வீணே கழிகின்றதே! போன காலத்தை மீட்க முடியாதே!’ என்று வருந்தினார் பெருமாள்; ஆகையாலே, 3‘இனி மேலுள்ள காலம் எல்லாம்’ என்பதே பொருள். உடனாய் – காலமெல்லாம் வேண்டினதைப் போன்று, தேச சம்பந்தமும் விருப்பமாயிருக்கிறதுகாணும் இவர்க்கு. இளைய பெருமாள் படை வீட்டிலும் அடிமை செய்து வனத்திலும் அடிமை செய்தாற்போலே. மன்னி – சர்வேசுவரனும் பிராட்டியுமாய்த் திரையை வளைத்துக்கொண்டிருந்தாலும், படிக்கம் குத்துவிளக்குப் போன்று 4அவ்வளவிலும் நின்று அந்தரங்கமான அடிமைகளைச் செய்ய வேண்டும். இதனால், எல்லா நிலைகளையும் நினைக்கிறது. 1‘பெருமாள் பிராட்டி இளைய பெருமாள் ஆகிய மூவரும், அழகிய பர்ணசாலையைக் கட்டிக்கொண்டு காட்டில் மகிழ்ந்தவர்களாயிருந்தார்கள்,’ என்று இருவர்க்கு உண்டான அனுபவத்திலே மூவரைச் சொல்லுகிறார்; அவ்விருவர்க்கும் பரஸ்பரம் கலவியால் பிறக்கும் ரசம் அச்சேர்த்தியைக் கண்டவனுக்கும் பிறக்கையாலே. ஆக, ‘ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி’ என்றது, எல்லாக்காலத்தையும் எல்லாத் தேசத்தையும் எல்லா நிலைகளையும் நினைக்கிறது. 2ஆழ்வார் திருவரங்கப்பெருமாளரையர் இத்திருவாய்மொழி பாடப்புக்கால், ‘ஒழிவில் காலமெல்லாம், காலமெல்லாம், காலமெல்லாம்’ என்று இங்ஙனே நெடும்போது எல்லாம் பாடி, மேல் போக மாட்டாமல், அவ்வளவிலே தலைக்கட்டிப் போவாராம்.

    வழுவிலா அடிமை செய்யவேண்டும் – அடிமையில் ஒன்றும் ஒருவர்க்கும் கூறு கொடுக்கவொண்ணாதாயிற்று. எல்லா அடிமைகளும் நானே செய்யவேண்டும். என்றது, ‘இளைய பெருமாள் பிரியாமல் காட்டிலேயும் கூடப்போந்து செய்த அடிமைகளும் செய்ய வேணும்; ஸ்ரீபரதாழ்வான் படை வீட்டிலே பிரிந்திருந்து செய்த அடிமைகளும் பிரியாதேயிருந்து செய்யவேணும்,’ என்றபடி. ஓரடிமை குறையிலும் இவர்க்கு உண்டது உருக்காட்டாது; ஆதலின், ‘வழுவிலா அடிமை’ என்கிறார். 3’இந்தக் கைங்கரியமநோரதம் முன்பும் உண்டன்றோ? இப்போது ‘இவ்வளவால் போராது, அநுஷ்டான பரியந்தமாகவேணும்,’ என்பார், ‘செய்ய’ என்கிறார். 1கைங்கரிய மநோரதமே பிடித்து இவர்க்கு உத்தேஸ்யமாயிருக்கிறது ஆதலின், ‘செய்ய வேண்டும்’ என்கிறார். 2‘சிற்றின்பம் நுகரவேணும்’ என்று புக்கால், இரண்டு தலைக்கும் ஒத்த ரசமான போகத்திற்கு 3ஒரு தலையிலே பொருளை நியமித்து, போகத்திற்குரிய காலம் வருமளவும் லீலையாலே போது போக்கி, போக காலம் வந்தவாறே புறப்படத் தள்ளிவிடுவார்கள்; இனி, 4‘சுவர்க்க அனுபவம் பண்ண வேணும்’ என்று புக்கால், 5‘சுவர்க்கத்திலும், நாசமடையக் கூடியவனுக்குக் கீழே விழுந்துவிடுவோம் என்ற பயத்தினால் சுகமில்லை,’ என்கிறபடியே, அருகே சிலர் நரகானுபவம் பண்ணக் காண்கையாலே, இருந்து அனுபவிக்கிற இதுதானும் உண்டது உருக்காட்டாதபடியாயிருக்கும்; இனி, சுவர்க்கத்திலிருப்புக்கு அடியான புண்ணியமானது சாலில் எடுத்த நீர்போலே குறைந்தவாறே ‘த்வம்ஸ’ என்று முகம் கீழ்ப்படத் தள்ளுவார்கள்; இப்படிச் சொரூபத்துக்குத் தக்கன அல்லாதனவாய் அகங்கார மமகாரங்கள் அடியாக வரும் இவ்வனுபவங்கள் போலன்றி, சொரூபத்தோடு சேர்ந்ததுமாய், அடிமை கொள்ளுகிறவனும் நித்தியனாய், காலமும் நித்தியமாய், தேசமும் நித்தியமாய், ஒரு காலமும் மீள வேண்டாதபடி அபுநராவ்ருத்தி லக்ஷண மோக்ஷமாய், சிற்றின்ப விஷய அனுபவம் போன்று துக்கங்கலந்ததாயிருத்தல் அன்றி, நிரதிசய சுக ரூபமாய் இருப்பதொன்றன்றோ இது?

    1ஸ்ரீ பரதாழ்வானைக் கைகேயி 2‘ராஜந்’ என்ன, அப்போது சுவாதந்தரியம் பொறுக்கமாட்டாமல் படுகுலைப்பட்டாற்போன்று ‘கதறினான்’ என்கிறபடியே, கூப்பிட்டான் அன்றோ? இதனால், 3பாரதந்திரிய ரசம் அறிவார்க்குச் சுவாதந்திரியம் கேடு என்று தோற்றும். மேலும், 4ஏபிஸ்ச ஸசிவைஸ் ஸார்த்தம் – சமீபத்தில் இருக்கிற மந்திரிகளோடுங்கூட’ – தன்னிற்காட்டிலும் கண் குழிவுடையார் இத்தனை பேர் உண்டாயிற்று. தன்னோடு ஒத்த ஆற்றாமையுடையார் பலரைக் கூட்டிக்கொண்டு போந்தான். ‘இவன் தம்பி’ என்று சுவாதந்தரியம் மேற்கொண்டு, 5கண்ணழிக்கலாவது எனக்கு அன்றோ? இவர்கள் சொன்னவற்றைச் செய்ய வேண்டுமே! இவர்கள் தாங்களே காரியத்தை விசாரித்து அறுதியிட்டு, ‘நீர் இப்படிச் செய்யும்’ என்று இவர்கள் ஏவினால் அப்படிச் செய்ய வேண்டி வருமன்றோ அவர்க்கு? அவருடைய பிரிவால் தனக்கு உண்டான ஆற்றாமையை அறிவிக்கப் போகிறானாகில், தனியே போய் அறிவிக்கவுமாமன்றோ? இவர்களையெல்லாம் திரட்டிக்கொண்டு சென்றதற்குக் கருத்து என்?’ என்னில், ‘நம் ஒருவர் முகத்தில் கண்ணீர் கண்டால் பொறுக்கமாட்டாதவர், தம்மைப் பிரிந்த பிரிவு பொறுக்கமாட்டாமல் கண்ணும் கண்ணீருமாயிருப்பார், இத்துணைப் பேரைக் கண்டால் மீளாரோ?’ என்னுங் கருத்தாலே. போருக்குப் போவாரைப் போன்று யானை குதிரை அகப்படக் கொண்டு போகிறான்; 1அவற்றுக்கும் அவ்வாற்றாமை உண்டு ஆகையாலே.  ‘ஸிரஸா யாசித : – தலையால் வணங்கி யாசிக்கப்பட்ட நீர்’ – என் பேற்றுக்குத் தாம் விரும்பித் தருமவர் யான் என் தலையால் இரந்தால் மறுப்பரோ? ‘மயா-என்னாமல்’ – அத் தலை இத்தலையானால் செய்யாதொழிவரோ? ‘ப்ராது: – பின் பிறந்தவன்’ – 2‘பரதனையும் உன்னையும் சத்துருக்கனனையும் நீங்கி எனக்குச் சிறிது சுகம் உண்டாகுமேயாயின், அந்தச் சுகத்தை நெருப்பானது சாம்பலாக்கட்டும்!’ என்னும்படி தம் பின், பிறந்தவனல்லனோ நான்? இதனால், என் தம்பிமார்க்கு உதவாத என் உடைமையை நெருப்புக்கு விருந்திட்டேன்,’ என்கிறார் என்றபடி, ‘சிஷ்யஸ்ய -சிஷ்யன்’ -‘தம்பியாய்க் கூறு கொண்டு முடி சூடியிருக்குமவனோ நான்? எல்லா ரஹஸ்யமும் தம்மிடமே அன்றோ பெற்றது? ‘தாசஸ்ய – அடியவன்’ – சிஷ்யனாய்க் கிரய விக்கிரயங்கட்குத் தகுதியில்லாதவனாயிருந்தேனோ? ஆன பின்னர், நான் விரும்பியகாரியத்தை மறுப்பரோ? இதுவன்றோ கைங்கரியத்தில் சாபலமுடையார் இருக்கும்படி?’

    நாம் – தம் திருவுள்ளத்தையுங்கூட்டி ‘நாம்’ என்கிறாராதல்; அன்றி, 1கேசவன் தமர்க்குப் பின்பு இவர்தாம் தனியரல்லாமையாலே திருவுள்ளம் போலேயிருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களையும் கூட்டிக்கொண்டு, ‘நாம்’ என்கிறாராதல். அடிமை செய்யக் கோலுகிற இவருடைய பாரிப்பேயன்றி, அடிமை கொள்ளக் கோலுகிறவனுடைய பாரிப்பு இருக்கிறபடி சொல்லுகிறது மேல்: இருந்தவிடத்திலேயிருந்து மநோரதிக்கிறார் இத்தனையன்றோ இவர்? அவன் தனக்குக் 2கலவிருக்கையான கலங்காப் பெருநகரத்தை விட்டு இவ்வளவும் வர வந்து திருமலையிலே நின்று, தன் அநுஷ்டானத்தாலே தெரிவிக்கிறானன்றோ தன் பாரிப்பை?   தெழி குரல் அருவி – கம்பீரமான ஒலியையுடைத்தான அருவிகளையுடைய. 3திருஅருவியின் ஒலியுங்கூடக் கொள்ளத் தக்கதாயிருக்கிறது இவர்க்கு, அந்நிலத்திலுள்ளதொன்றாகையாலே. இந்த ஒலி, இவர்க்குக் ‘கைங்கரிய ருசியுடையார் அடிமை செய்ய வாருங்கோள்’ என்றாற்போலே இருக்கிறது. 4‘சிலைக்கை வேடர் தெழிப்பு அறாத’ என்று திருவேங்கட யாத்திரை போகிறவர்களைப் பறிக்கிற வேடருடைய ஆரவாரமும் உத்தேஸ்யமாயிருக்கிறதன்றோ அந்நிலத்திலுள்ளதொன்றாகையாலே? ஆக, அங்குத்தைத் திருவேடர் பறிக்கிற ஆரவாரமுங் கூட உத்தேஸ்யமாயிருக்கும்போது இவர்க்கு இந்தத் திருஅருவியின் ஒலியுங்கூட உத்தேஸ்யமாகச் சொல்லவேணுமோ? திருவேங்கடத்து எழில் கொள் சோதி – ‘அடிமை கொள்ளுகைக்குப் பாங்கான நிலம் இது,’ என்று அவன் வந்து வசிக்கிற தேசம். ‘பாங்கான நிலம் ஆயினவாறு என்?’ எனின், இச்சரீர சம்பந்தமற்று அர்ச்சிராதி மார்க்கத்தாலே ஒரு தேச விசேடத்திலே போனால் இவன் செய்யக்கூடிய அடிமையை இந்நிலத்தில் இவன் செய்யலாம்படி அவன் வந்து வசிக்கின்ற தேசமாகையாலே என்க. தூரத்திலுள்ளவனேயாகிலும், மேல் விழ வேண்டும்படி வடிவழகு இருத்தலின், ‘எழில் கொள் சோதி’ என்கிறார். 1வானார் சோதியையும் நீலாழிச் சோதியையும் வேறுபடுத்திக் காட்டும் பொருட்டு ‘வேங்கடத்து எழில் கொள் சோதி’ என்கிறார். வானார் சோதி, பகல் விளக்குப்பட்டிருக்கும்: நீலாழிச் சோதி கடல்கொண்டு கிடக்கும்; வேங்கடத்து எழில்கொள் சோதி, குன்றத்து இட்ட விளக்காயிருக்கும்; 2‘வேங்கடமேய விளக்கே’யன்றோ? அந்நிலத்தின் தன்மையாலே அழகு நிறம் பெற்றபடி. எந்தை – அழகில்லாதவனேயாயினும் விடவொண்ணாதபடியிருக்கும் சம்பந்தத்தைத் தெரிவிக்கிறார். இனி, ‘சௌலப்யத்தாலும் அழகாலும் தம்மைத் தோற்பித்த படியைத் தெரிவிக்கிறார்’ எனலுமாம். தந்தை தந்தைக்கு – எல்லார்க்கும் முதல்வன் என்றபடி.

    இப்பாசுரத்தால், 3கைங்கரியப் பிரதானமான திருமந்திரத்தின் பொருளை அருளிச்செய்கிறார்: ‘ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும்’ என்னுமிதனால், 1நான்காம் வேற்றுமையின் பிரார்த்தனையைச் சொல்லுகிறது; ‘நாம்’ என்னுமிதனால், பிரணவத்தாற்சொல்லப்படுகின்ற இவ்வாத்துமாவினுடைய சொரூபத்தைச் சொல்லுகிறது; ‘இது, சொல்லின் சுபாவத்தைக் கொண்டு சொன்னோம்’ என்று அருளிச் செய்தருளின வார்த்தை. ‘தெழிகுரல் அருவித் திருவேங்கடத்து எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கு’ என்றதனால், நாராயண பதத்தின் பொருளை அருளிச்செய்கிறார்; 2சௌலப்யமும் வடிவழகும் ஸ்வாமித்துவமும் எல்லாம் – நாராயண பதத்திற்குப் பொருள். 3பிராப்த விஷயத்தில் செய்யும் கைங்கரியமே பிராப்யமாகும்.

இந்தக் கைங்கரிய மநோரதம் முன்பும் உண்டன்றோ?’ என்றது, ‘தொழுது
எழு என் மனனே’ ‘தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே’, ‘தனக்கேயாக
எனைக்கொள்ளுமிஃதே’ என்பன போன்ற இடங்களைத் திருவுள்ளம் பற்றி.

. ‘அவற்றுக்கும் அவ்வாற்றாமை உண்டு’ என்றதனை,
‘ஒளிதுறந் தனமுகம் உயிர்து றந்தெனத்
துளிதுறந் தனமுகில் தொகையும் தூயநீர்த்
தளிதுறந் தனபரி தான யானையும்
களிதுறந் தனமலர்க் கள்ளுண் வண்டினே.

  ‘நீட்டில களிறுகைந் நீரின் வாய்புதல்
பூட்டில புரவிகள் புள்ளும் பார்ப்பினுக்கு
ஈட்டில இரைபுனிற் றீன்ற கன்றையும்
ஊட்டில கறவைகன் றுருகிச் சோர்ந்தவே.’

  (கம். அயோத். 205. 212) என வரும் பாடல்களால் உணரலாகும்.

‘கைங்கரியப் பிரதானமான திருமந்திரம்’ என்றது, புருஷார்த்தம் கைங்கரியமே
என்று அறுதியிடுகின்ற திருமந்திரம் என்றபடி. திருமந்திரத்தின் பொருளாவது,
‘எம்பெருமானுக்கே உரியனான நான், எனக்கு உரியன் அன்றிக்கே
ஒழியவேண்டும்; சர்வ சேஷியான நாராயணனுக்கே எல்லா அடிமைகளும்
செய்யப்பெறுவேனாக வேண்டும்,’ என்பது. இப்பொருளையே ‘ஒழிவில்
காலமெல்லாம்’ என்ற இப்பாசுரத்தில் அருளிச்செய்கிறார் என்கிறார்.

. ‘நான்காம் வேற்றுமை’ என்றது, ‘நாராயணாய’ என்ற பதத்திலேயுள்ள ‘ஆய’
என்னும் நான்காம் வேற்றுமையுருபினை. ‘பிரார்த்தனையைச் சொல்லுகிறது’
என்றதன் பொருளை ‘ஆய என்கிற இத்தால், ‘சென்றாற் குடையாம்’
என்கிறபடியே எல்லா அடிமைகளும் செய்யவேணும் என்று அபேக்ஷிக்கிறது’,
‘ஆகையால், ‘வழுவிலா அடிமை செய்யவேண்டும் நாம்’ என்கிற
பிரார்த்தனையைக் காட்டுகிறது’ (முமுக்ஷூப்படி, 105, 108.) என்னும்
வாக்கியங்களாலுணரலாகும். ஆத்துமாவின் சொரூபம் – இறைவனுக்குச்
சேஷமாயிருக்குந்தன்மை; ‘சேஷத்துவமே ஆத்துமாவுக்கு ஸ்வரூபம்.’
‘பிரணவத்தால் ‘கண்ணபுரம் ஒன்றுடையானுக்கு அடியேன் ஒருவர்க்கு
உரியனோ?’ என்கிறபடியே ஜீவ பர சம்பந்தம் சொல்லிற்று.’ என்பன  (
முமுக்ஷூப்படி, 55, 72.)
‘இது’ என்றது, ‘பிரணவத்தால் ஆத்துமாவின்
சொரூபத்தைச் சொல்லுகிறது’ என்று மேலே கூறியதனைச் சுட்டுகிறது.
‘சொல்லின் சுபாவத்தைக்கொண்டு சொன்னோம்’ என்றது, ‘மகாரத்திற்குப்
பொருளாயுள்ள நான், அகாரத்திற்குப் பொருளாயுள்ள எம்பெருமானுக்கே
உரியவன்.’ என்னும் போது ‘நான் உரியவன்’ என்ற கருத்தாவிலே
நோக்காயிருத்தலைத் திருவுள்ளம் பற்றி. பொருளின் பிராதாந்யத்தை
நோக்கும் போது ‘அகாரவாச்சியனான எம்பெருமானுக்கே மகாரவாச்சியனான
ஆத்துமா உரியது’ என்ற பொருளே போதரும். ‘அருளிச்செய்தருளின
வார்த்தை’ என்றது, நம்பிள்ளை இங்ஙனம் அருளிச்செய்தார் என்றபடி.

2. ‘திருவேங்கடத்து’ என்றதனால் சௌலப்யமும், ‘எழில்கொள் சோதி’
என்றதனால் வடிவழகும், ‘எந்தை’ என்றதனால் ஸ்வாமித்துவமும் போதருதல்
காண்க.

3. ‘பிராப்த விஷயத்தில் கைங்கரியமிறே ரசிப்பது’ (முமுக்ஷூப்படி, 173.)
பிராப்தவிஷயம் – வகுத்த விஷயம். பிராப்யம் – பலம். ஆக, ‘ஓம் நமோ
நாராயணாய’ என்ற திருமந்திரத்தில் ‘ஓம் நாராயணாய’ என்ற பதங்களின்
பொருள் இப்பாசுரத்தில் சொல்லப்பட்டன; இங்குச் சொல்லப்படாத ‘நம’
பதத்தின் பொருளை ‘வேங்கடங்கள்’ என்ற பாசுரத்தில் அருளிச்செய்வர்.

ஸ்ரீ ய பதியால் மயர்வற மதி நலம் அருளப் பெற்ற ஆழ்வார்
நிரசராய் கதறியவாறே முகம் காட்டி –
வடக்கு திருமலை நிற்பதை -குழந்தை பாலுக்கு அழ -எந்த ஸ்தனம் காட்டினாலும் உத்தேஸ்யம்

ஸ்வரூப அனுரூபமான அடிமை செய்ய பாரிப்பை வெளி இடுகிறார்
பிரகிருதி சம்பந்தத்தாலே ஏற்பட்ட கரண சந்கொசத்தால் நொந்து
சிருஷ்டித்து -அவதாரங்களுக்கு தப்பி -அந்தர்யாமிக்கு தப்பி -நைந்து போக –
உமக்காக அன்றோ உடம்போடு அனுபவிக்க -இங்கே நின்று இருந்து அருள –
சரீரம் விரோதி இல்லை -கைங்கர்யம் செய்ய சரீரம் வேண்டும்
கரண சங்கோசம் இல்லாத நித்ய முக்தர்களுக்கும் நம்மை அனுபவிக்க படும் பாடும் இது தானே
அவர்களும் வந்து -எந்நாளே அடித் தாமாரை காண -படுகாடு கிடைக்குமிடம் இந்த திருமலை –
சமாதனம் பண்ண -தரமி ஒக்க -எங்கும் பூர்ணம் -தானே -உடம்பு விரோதி இல்லை அடிமை செய்ய பாங்காக
சர்வான் காமான் -பிரமதுடன் கூட இருந்து -அவனுடைய -திருக் கல்யாண குணங்களை அவன் கூட சேர்ந்து
நாமும் அனுபவிக்க -சீலாதி குணங்கள் இங்கே தானே பிரகாசிக்கும் –
ஸ்பஷ்டமாக இங்கே திருமலை -அங்கு உள்ளாறும்  வந்து அடிமை செய்வதும் இங்கே –
ஆழ்வார் திருப்புளி ஆழ்வார் அடியில் இருக்க
நீரும் நிழலும் கண்டால் -விடாய்த்தார் -பாரிப்பது போலே –
அடிமை செய்ய வேண்டும் என்று ஆசைப் படுகிறார் –
பாரி த்து கொண்டு இழுவது -அஹம் சர்வம் கரிஷ்யாமி -எதிர் சொல் வினை –
கானகம் புறப்படும் பொழுது –
போஜன பரமாய் இருப்பவன் ஊன் அத்யாயம் செய்வது போலே -திரு அத்யயனம் -செய்ய முன் இரவே சொல்லாமல் -கோபித்த வ்ருத்தாந்தம் –
பாரிப்பு -முக்கியம் -கைங்கர்யம் தானே ஆழ்வாருக்கு ஊன் –
சர்வ தேச சர்வ கல சர்வ அவச்தைகளிலும்
ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி –
கூடவே எழுந்து
வழு இலா அடிமை ஸுய போக்த்யதா புத்தி இன்றி
தெளி குரல் அருவி திருவேம்கடது
எழில் கொள் சோதி
குல முதல்வன் -எந்தை தந்தை தந்தைக்கே
முடிவு இல்லாத அனந்தமான காலம்
கீழ் கழிந்த பழுதே பல போயின அதற்கும் சேர்ந்து அதி பிரசங்கம்
மீட்கை என்று பொருள் இல்லை –
இழவு நெஞ்சில் படாமல் மறப்பிக்கையே உள்ளது –
நித்ய -முக்தர் விடுபட்டு போக வாசி
நாள் இழவே போக்கி -பொருள் இழவு இல்லையே
கீழ் கழிந்த நாள் நினைக்காதபடி அனுபவம்
அவனால் முடியும் -கீழ் கழிந்த
சாந்தீபன் புத்ரனை மீட்டு 12 வருஷம் கழித்து கொடுத்தானே –
மா தவத்தோன் புத்ரனை -தஷிணையாய் -முழுகின பொழுது இருந்தபடி
காலம் கழித்து கொடுத்தான் -அகடிதகடனா சமர்த்தன்
நமே  துக்கம் -பெருமாள் வார்த்தை கழிந்த காலம் மீட்க முடியாதே
இனி மேல் வரும்
உடனாய்மன்னி -சகல  தேசங்களிலும்
படை வீட்டிலும் வன வாசத்திலும் கைங்கர்யம்
மன்னி -பிராட்டியுமாய் திரை மறைத்து ஏகாந்தமாக இருந்தாலும் படிகம் குத்து விளக்கும் போலே
சர்வ அவச்தைகளிலும்
எத் தனை பாரிப்பு -ஆழ்வாருக்கு –
மூவரும் சந்தோசம்
பெருமாள் பிராட்டி இளைய பெருமாள் பரஸ்பர சந்தோஷ சேர்த்தியில் கைங்கர்யம் -இளைய பெருமாளுக்கு
அசித் போன்ற பாரதந்த்ர்யம்
பரத ஆழ்வான் போலேயும் கைங்கர்யம் பாரிக்கிறார்
திரு அரங்க பெருமாள் அரையர் மேல் போகமாட்டமல் ஒழிவில் காலம் எல்லாம் -அர்த்தம் அனுசந்தானத்தில்
வழு இல்லா -கூறு கொடுக்காமல் தானே
அனந்தாழ்வான் ஏரி கட்டி தோட்டம் -அவனே வந்து பங்கு கொள்ள மறுத்து –
கடப்பாரை இன்றும் சேவிக்கலாம்
மொவாக்கட்டையில் பச்சை கர்ப்பூரம்
ஸ்ரீ பாத ரேணு -இதற்க்கு பெயர் –
திருவடி =எம்பெருமான் அர்த்தம் சொல்ல வில்லை
கர்ண பரம்பரையாக கேள்வி பட்ட
திருவடி மண் கொண்டு வைக்க சொன்னானாம்
திருவடி புழுதிக்கு ஆசைப் பட்டானாம் -அடிமை எல்லாம்தானே செய்ய வேண்டும்
இளைய பெருமாள் காட்டிலே -பரதாழ்வான் பிரிந்து இருந்து செய்த அடிமையும் செய்ய வேணும்
ராஜன் சப்தம் கேட்டு -இடி விழுந்தால் போலே பாரம் பொருக்க மாட்டாமல் படு கொலை பட்டால்
போல் கூக்குரல் விட்டு அழுதான் -சதுர்வித சைன்யம் கூட்டி போனான்
தன்னை விட அவர்களுக்கு துக்கம் அதிகம் என்பதால்
ஆற்றாமை தன்னோடு ஒத்த -பாரதந்த்ர்யரசம் உணர்ந்தார்க்கு ஸ்வா தந்த்ர்யம் அவத்யம் என்பதால் –
தன்னை போலே ஆற்றாமை உடையவர் –
இளைய பெருமாள் சங்கை
தான் மட்டும் போனால் தட்டி கழித்தாலும் -தம்பி என்ற நினைவால்
இவர்கள் கண் அழிவு பொருக்க மாட்டேனே
இவர்களுக்கு பாரதந்தர்யம் இவர்கள் ஏவி பணி செய்பவன் –
யுத்தத்துக்கு போவது போலே யானை -குதிரை அவற்றுக்கும் ஆற்றாமை உண்டே
தலை வைத்து யாசித்தான்
என் பேற்றுக்கு காலில் தலை வைத்து கெஞ்சுபவன்
தலையால் -இரந்து
அத்தலை இத்தலையானால்
பின் பிறந்தவன் –
தம்பிக்கு உபயோகம் இல்லையானால் நெருப்பில் போகட்டும் சொல்லும் பெருமாள் வார்த்தை
சிஷ்யச்ய பிராதாயச்ய
வசிஷ்டர் இடம் கேட்டதை தானே உபதேசித்து குரு –
பிராதா பந்துத்வம்
அசேஷ ரகசியம் கற்று கொடுத்து
தாசனாகவும் இருக்கிறேன் –
விற்கவும் செய்யலாமே
என் தமை விற்கவும் பெறுவார்களே
இவ்வளவு பாரிப்பு பரதாழ்வான்கைங்கர்யத்தில் பாரிப்பு இருக்கும் படி
உண்டது உருகாட்டாது -சாப்பிட்டது தெரியும் படி –
அடிமை ஏதாவது குறைந்தால்
செய்ய வேண்டும் -அனுஷ்டான பர்யந்தமாக வேண்டும்
மநோ ரத ஸ்தானத்தில் போகம் இவருக்கு
போக காலம் புறம்பே தள்ளி விடுவர் அபிமத ஸ்திரீ விஷயம் –
ஸ்வர்க்க அனுபவம் -அனுபவித்து முடியும் -அருகில் நரக அனுபவமும் காட்டி
இது நிரந்தர நிரதிசய போகம் –
சாலில் எடுத்த நீர் போலே -ஜலத்தின் பழுவால் மேலே வருமே ஏற்ற சால்
முகம் கேள் பட தள்ளுவார்கள் ஸ்வர்க்கத்தில்
ஸ்வரூபத்துக்கு அநு ரூபமான -கைங்கர்யம்
அஹங்கார மமகாரம் அடியாக வரும் அனுபவம் போலே இன்றி –
நாம் -பன்மையில் திரு உள்ளதை கூட்டி
கேசவன் தமருக்கு அப்புறம் தனியார் இல்லை
அவனுக்கும் பாரிப்பு
இருந்த இடத்தில இவர் பாரிக்க
அவன் பரம பதத்தில் இருந்து திருவேம்கடம் எழுந்தி அருளி
அனுஷ்டானத்தில் காட்டி
ஏதேனும் ஆவேனே -எல்லாம் உத்தேயம்
அருவி தொனி கைங்கர்யம் செய்ய வா
கை வேடன் -பரி க்கும் பொழுதும் ஆரவாரமும் உத்தேச்யம்
எழில் கொள் சோதி -பிரகாசிக்க
அடிமை கொள்ள பங்காக
இங்கே இதே தேசத்தில் அங்கு செய்யும் கைங்கர்யம்
இதே சரீரத்துடன் கைங்கர்யம் செய்ய
மேல் விழும்படி
வானார் சோதி மணி வண்ணா -பகல் விளக்கு பட்டு
நீராழி சோதி -கடல் கொண்டு போகும்
வ்யவர்த்திக்கிறது திருவேங்கடத்து -குன்றில் இட்ட விளக்கு
வேங்கடம் மேய விளக்கு
எந்தை -தந்தை
விட ஒண்ணாத ப்ராப்தி -மூல புருஷன்
எளிமை அழகு பரம சேஷி –
பிராப்ய -திருமந்தரம் அர்த்தம் -ஆய கைங்கர்யம்
நம -சப்தார்தம் அவன் ஆனந்தத்துக்கு
சதுர்த்தியில்
நாம் -ஸ்வரூபம் சொல்லும்
சப்த ஸ்வாபாவம் ஜீவாத்மா பிரதானம்
எழுவாய் ஜீவாத்மாவுக்கு
நாராயண
சௌசீல்யம் காருண்யம் காட்டி
பிராப்த விஷயத்தில் செய்யும் கைங்கர்யம் இ றே பிராப்யம்
வடிவு அழகு ஸ்வாமித்வம் அனைத்தையும் காட்டி –
சதுர்த்தி அர்த்தம் ஒழிவில் காலம் எல்லாம்
த்வயத்தின் உத்தர வாக்கியம் என்றும் காட்டி அருளுவர்கள் –

ஆசை மிகுதி யானால் -விடாய்த்தவர் –
அழகர் திவ்ய மங்கள விக்ரக சௌந்தர்யம் -கரணங்களின் சங்கோசம் –
மலர்ந்த -முக்காலத்தையும் அறியும் சக்தி -நித்ய முக்தர்கள் –
களேபரம் சரீரம் கர்ணம் இந்திரியங்கள்
எப்படி கூடப் போகிறேன் என்கிற நிராசை மிகு –
விஷய வைலஷ்ண்யத்தால் –
பாரிப்பை வெளி இட்டார் ஒழிவில் காலம் பதிகத்தில்
சர்வ காலத்திலும் -சர்வ தேசங்களிலும் சர்வ அவச்தைகளிலும் அவன் ஆனந்தத்துக்கு மட்டுமே
அருவிகளும் கூப்பிடும் திருவேம்கடம் –
வானார் சோதி நீராழி சோதி விட உயர்ந்த எழில் கொள் சோதி
இங்கே மூல புருஷன் ப்ராப்யமான –
திருமந்த்ரத்தின் அர்த்தம் -சொல்லும்
அகார வாச்யன் அவனுக்கே அடிமை
ஆய -கைங்கர்ய பிரார்த்தனை -ஒழிவில் காலம் –அடிமை செய்ய வேண்டும்
ப்ரார்தனாயாம் சதுர்த்தி நான்காம் வேற்றுமை
லுப்த சதுர்த்தி சேஷத்வ சதுர்த்தி
ஸ்வரூபம் தெரிவிக்க பட்ட பின்பு -என்ன செய்ய வேண்டும் –
ஸ்வரூபம் அறிவித்து பின்பு தனக்கு இன்றிகே ஒழிய வேண்டும் -நம பத அர்த்தம் -அடுத்து பிரார்த்தனை
அதற்க்கு தகுந்த -படி சர்வ தேச சர்வ கால சர்வ நிலைகளிலும் சர்வ அவச்தைகளிலும்
சேதன அசித் -விளக்கு படிக்கம் போலேயும் -கைங்கர்யம் –
நாம் -இடம் பிரணவ பிரதித்யனான ஜீவாத்மா ஸ்வரூபம்

மகாரத்தின் அர்த்தம் என்று சொல்லி இருக்கலாம்
பிரணவ ப்ரதிபாத்யனான இவனுடைய ஸ்வரூபம் என்கிறார்

சப்தம் கொண்டு ஜீவாத்மா தெரிவிக்கப் படுகிறான் பிரணவத்தால்
அர்த்தம் கொண்டு பரமாத்மா
ராஜபுருஷன் -ராஜாவினுடைய வேலைக் காரன்
ஆசார்ய புருஷ -ஆசார்யர் நியமனம் படி செய்யும் புருஷர்கள்
சப்தத்தில் வேலைக்காரன் பற்றியும் -பிராதான்யம் யாருக்கு ராஜா -அர்த்தம் கொண்டு பார்க்கும் பொழுது ராஜா
அது போலே சப்தம் கொண்டு பிரணவம்
பகவானுக்கே ஜீவாத்மா அடிமை பட்டவன்
எழுவாய் -இதில் ஜீவாத்மா தானே
அர்த்தத்தால் பிராதான்யம் பகவான் –
உபய பிரதானமான பிரணவம் -இருவருக்கும் –
பதிம் விச்வச்ய -இரண்டிலும் சப்தம் அர்த்தம் அவனுக்கு பிரதான்யம்
நாயனார் அருளிச் செயல் ரகஸ்யம் -அர்ஜுன ரதம் போலே இருப்பது இது
ரதி சாரதி -நியமிக்க பிராதான்யம் ரதிக்கு -கை ஒழிந்து முடியாத போதும்
கொல்லா மா கோல் கொலை செய்து -சாரதிக்கே பிராதான்யம் -நிமித்த மாதரம் அர்ஜுனன் –
நாம் இங்கும் எழுவாய் -திருவேம்கடம் உடையானுக்கு அடிமை –
நாராயண -சகல கல்யாண குணங்கள் கூடி
சௌலப்யம் வடிவு அழகு ஸ்வாமித்வம்
திரு வேம்கடத் து எழில் கொள் சோதி எந்தை தந்தை
பிராப்த விஷயத்தில் செய்யும் கைங்கர்யம் தானே பிராப்யம்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்.

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

அருளிச் செயல் அனுபவம்-இங்கும் அங்கும் –திருக் குறும் தாண்டகம் –ஸ்ரீ வேளுக்குடி வரதாசார்யர் ஸ்வாமிகள் .

January 26, 2013

453-
நிதியினை -1
மணி வண்ணா -திருப்பாவை -26-

வைத்த மா நிதி-
புதைத்து வைத்து ஆள வேண்டாம்
மனத்தில் வைத்து ஆளலாம் -நினைத்த இடத்தே பரிமாறிக் கொள்ளலாம்

கிழிச் சீரையிலே அடக்கலாய் இருக்கும் –
பறிக்க ஒண்ணாது -பிறர்ககேயாய் இருக்கும் –
வேறு ஒன்றில் கண் வைக்க வேண்டாம் –

நிதியினை –
எய்ப்பினில் வைப்பாய் –
இந் நிதி உடையவனுக்கு இடி பட வேண்டாது இருக்கையும் –
உடையவன் காலிலே எல்லாரும் வந்து விழுகையும் –
உண்டு என்ன உயிர் நிற்கையும் –
ஆபத்துக்கு உதவுகையும் –
உடையவன் பெரு மதிப்பன் ஆகையும் –
விற்றும்
ஒத்தி வைத்தும் –
ஜீவிக்கலாய் இருக்கையும் –
இப்படிச் செய்தது என் என்று ஏசாது இருக்கையும் –
ஏவமாதி குணங்களைப் பற்ற –
நிதி -என்கிறார் –
வைத்த மா நிதி -இ றே –
குஹாயாம் நிஹிதம் -என்று பேசப் படுகிற வஸ்து –
குஹை -ஹிருதய கமலம்

நிதியினை-நாட்டில் காண்கிற நிதி போல் அல்ல –
எல்லா வற்றுக்கும் மேலான நிதி யாயிற்று இந் நிதி
இந் நிதி புதைத்து வைத்து ஆள வேண்டா –
நெஞ்சிலே வைத்து ஆளலாம் –
ஓர் இடத்திலே புதைத்து வைத்து
தேசாந்த்ரத்திலே நிற்கச் செய்தே
விநியோகம் கொள்ள வேண்டினால் உதவாது -அந் நிதி
இந் நிதி -நினைத்த இடத்தே விநியோகம் கொள்ளலாம்
பறித்துக் கொள்வார் இல்லை
பறிக்கத் தான் ஒண்ணாது
அந் நிதி உடையவனை அவசரம் பார்த்து கொன்று பறித்து கொண்டு போவார்கள் –
இந் நிதி உடையவனுக்கு அப்படிப்பட்ட பிரமாத சம்பாவனைகள் இல்லை –

மணி வண்ணா –
அபரிச்சேத்யனாய் இருக்கச் செய்தேயும்–
முந்தானையிலே முடிந்து ஆளலாம் படி இருக்கை –
கீழ்ச் சொன்ன வ்யாமோஹம் வடிவிலே நிழல் இடுகை –
இந்நீர்மை இன்றிக்கே–காதுகனானாலும் விட ஒண்ணாத வடிவு அழகு —

மணி வண்ணா வெண்ணெய் உண்ட வாயன்
முந்தானையில் முடிந்து ஆளலாம் சௌலப்யம் –
மணி ஸ்வாபம்
உண்டு என்றால் உயிர் இருக்கும் –
ஆழ்வார் படி விச்லேஷம் துடிப்பார்-உடையவர் காலில் சர்வரும் விழ
இழந்தார் பிழையார்–கைப்பட்டாருக்கு பூணலாம்–அழித்து உண்ணலாம் படி–
கிளிச் சீரையில் அடக்கலாம்
பிறர்க்கே இருக்கும்–கொடுத்தோம் என்று நினைக்காமல்–வேறு ஒன்றில் கண் வைக்காமல் இருக்க வைக்கும்
செம்படவன் -மாணிக்கம் -வியாபாரி -அரசன் -கதை–

————————————————–

454-
நிதியினை கதியினை நினைய வல்லார் -1-
பொன்னானாய் -திரு நெடும் தாண்டகம் -10
மார்கழி திங்கள் -திருப்பாவை -1
கண்ணே உன்னைக் காண எண்ணே கொண்ட -திருவாய்மொழி -9-4-2-

நிதியினை -பிராப்ய ஸ்வரூபம் –கதியினை பிராபக ஸ்வரூபம் -நினைய வல்லார் -அதிகாரி விசேஷம்

பொன்னானாய் -பிராப்யம் -இதே பாசுரத்தில் முதலானாய் -பிராபகம் -இகழ்வாய தொண்டனேன் -அதிகாரி விசேஷம்

நாராயணனே தருவான் -உபாய ஸ்வரூபம் -பறை -உபேய ஸ்வரூபம் -நமக்கே -அதிகாரி ஸ்வரூபம் –

கண்ணே -பிராப்ய பிராபக அதிகாரி ஸ்வரூபங்கள் இங்கும் ஆழ்வார் அருளி-

நிதியினை கதியினை நினைய வல்லார் -நிதியினை -என்று பிராப்யம் சொல்லிற்று –

கதியினை -என்று பிராபகம் -சொல்லிற்று-பரவித் தொழும் தொண்டர் தமக்குக் கதியே -என்னக் கடவது இறே-

நினைக்க வல்லார் -என்கையாலே அதிகாரி ஸ்வரூபம் சொல்லிற்று —

இப்படி உபாய உபேயங்கள் தானே இருக்குமவன்
ஆருக்கு உதவக் கண்டோம் -என்னில் –
கஞ்சன் மாளக் கண்டு –
தந்தை காலில் பெரு விலங்கு தாள வீழ -என்றும்
தந்தை காலில் விலங்கு அற வந்து தோன்றிய -என்றும் –
ஒருத்தி மகனாய் பிறந்து -இத்யாதிப் படியே –
தன்னைப் பிள்ளையாகப் பெற்றவர்கள் கால் கட்டு அறுத்து –
அவர்களை வாழ்வித்தான் -என்கிறார் –

——————————————————————————————

455-
கஞ்சன் மாளக் கண்டு –மதியினை -1
கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே -திருப்பாவை -25

கஞ்சனைக் கொன்று நாட்டுக்கு களை பிடிங்கின பின்பு ஐயரும் ஆய்ச்சியும் என் செய்தார்கள்
என்று ருணம் ப்ரவ்ருதமிவ -என்று படுகிற படி -நெடுமாலே -கஞ்சனை கொன்ற கண்ணன்
திரு உள்ளம் ஸ்ரீ வசுதேவர் ஸ்ரீ தேவகி இடம் மண்டின படி –

மதியினை –
நம் மதி கேட்டை நினைந்து அஞ்ச வேண்டா –
அஹம் ஸ்மராமி -என்று தான் அவ் விழவு தீர நினைக்கும்-

——————————————————————————————-

456-
விதியினை -1
விதி வாய்க்கின்று காப்பார் யார் -திருவாய்மொழி -5-1-1-
விதி சூழ்ந்ததால் -திருவாய்மொழி -2-7-6-
நன்று சூட்டும் விதி எய்தினம்-திருவாய்மொழி -4-5-7-

விதி -அவன் ஸ்வா தந்த்ர்த்தாலும் என் கர்மத்தாலும் தீர்க்க ஒண்ணாத படி கிருபை

விதி சூழ்ந்ததால்-இவ்வளவான பேற்றுக்கு அடியான தம்முடைய ஸூஹ்ருதத்தைச் சொல்லுகிறார் –

கேசவன் தமர்க்கு இப்பால் எல்லாம் விதி என்கிறார் பகவத் கிருபையை

வதார்ஹமான காகத்துக்கு விட்ட அம்புக்கு உட்பட கண் அழிவு பண்ணுமவர் இறே
நன்று சொல் மாலைகள் சூட்டும் படியான பாக்கியம்
காகுஸ்த கிருபையா பர்ய பால்யத் -குடிப் பிறப்பு காகுஸ்த -கிருபை விளையும் பூகதன் ஆனான்
அதுக்கு மேலே கிருபை விளைந்தது –

——————————————————————————–

457-
இன்ப வாற்றினை -2
மதுர வாறே -திருமாலை 36

ஆனந்த பிரவாஹம் -விடாய்தவருக்கு புக்கு முழுகலாய் இருக்கும்
வேண்டிய இடத்தே திறந்து பாய்ச்சி விளைவித்து கொள்ளலாம்

பேரமர் காதல் கடல் புரைய விளைய -கடல் என்று சொல்லாமல் ஆறு -விநியோக அர்ஹ்யமாய் -விடாய்தார்க்கு குளித்தல்
முகத்தில் இறட்டிக் கொள்ளுதல்– பானம் பண்ணுதல் -விடாய் இல்லாத போதும் அழுக்கை போக்கிக் கொள்ளலாய் இருக்கும் –

இவன் இருந்த இடத்தே வருகை -கடல் வாராதே -கிண்ணகம்  எடுத்தால்

அணைகளை இடித்துக் கொண்டு வருமா போலே அயோக்யா அனுசந்தானத்தால் இட்ட அணைகளை
முறித்து கொண்டு -நின்றார் நின்ற இடங்களில் உப ஜீவிக்கலாம் படி இருக்கும் –

எம்பெருமானும் அப்படியே. வேண்டுவோர் வேண்டுமிடங்களிலே யெழுந்தருளிக் காதல் கடல்புரைய விளைவிப்பன்.

———————————————————————————————–

458-
அப்பனை -3
மைந்தனை -3

மைந்தன் அடிமை கொண்ட பருவம் -அடிமை கொள்வதாக திருமலையில் எழுந்து அருளிய பின்பு இளகிப் பதித்த படி –
அப்பன் -உபகாரகன் -பிரயோஜன பரர்க்கும் தன்னை அழிய மாறி பல படிகளால் உபகரிக்குமவன்

அப்பனை
என்று கீழே ஒரு முதுமை சொல்லி
இப்போது மைந்தனை -என்கிறார் – இறே –

அப்பனை -மைந்தனை என்றது அரும்பினை அலரை-என்னுமா போலே  –

————————————————————————————

459-
அடிமை பூண்டு -5-

தொண்டு பூண்டு -திருமாலை -5

பகவத் தாஸ்யம் ஆபரணம் –உறும் என்று வகுத்த சேஷ வ்ருத்தியை உகந்து ஏறிட்டுக் கொண்டு –

அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்கிறபடியே-வழு விலா அடிமையிலே அந்வயித்து –
நம் பெருமாளுக்கு சேர சுந்தர பாண்டியன் தம்பிரான் பதக்கம் போலே -இதுவும் நெஞ்சிலே இருக்கும் ஆபரணம் –

இடும்பை பூண்டு -கழுத்தில் புக்க வாயோடு போலே தன்னாலே கழற்ற ஒண்ணாது இருக்கும்
மகா துக்கங்களை ஏறிட்டு கொண்டு -அது போலே அன்று இறே இது என்றபடி-

“ஹஸ்த்ய கிரிநாத! தவ தாஸ்ய மஹா ரஸஜ்ஞ;” என்று அறிவுடையார் எம்பெருமானுடைய அடிமையையே
ஆராவமுதமாக பூண்டு-

———————————————————————–

460-
இரும்பனன்று உண்ட நீர் போலே -5
தீர இரும்புண்ட நீரது போலே -திருவாய்மொழி -10-10-5-
இரும்பனன்று உண்ட நீரும் போதரும் கொள்க -13

எம்பெருமானுக்கு என் தன்  அரும் பெறல் அன்பு -ஆத்ம வஸ்துவை சமைய புஜிக்கைகாக
உன்னுடைய போக்யதையை காட்டி என்னை அகப்படுதினாய் -என் ஆர் உயிரை ஆரப் பருக –
என் விடாய் தீர என்று இருந்தேன் -உன் விடாய் தீரவாய் இருந்தது இறே
என் ஆர் உயிர் ஆனது உன்னை ஆரப் பருக என்றுமாம் -என் சந்தாபம் எல்லாம் தீர உன்னை புஜிக்க
எனக்கு பண்டு நிரதிசய போக்யன் ஆனவனே -ஜீவ பர பரஸ்பர போக்யம் -அஹம் அன்னம் அஹம் அந்நாத
13-பாசுரத்தில் தம்மை விட்டு தமது பாபங்கள்  ஒழிந்தமைக்கு திருஷ்டாந்தம்
பகவத் கிருபா வைபவத்தை ஆழ்வார் அனுபவித்த படி –

————————————————————————–

461-
மூவரில் முதலானாய -6
மூவரில் முன் முதல்வன் -பெரிய திருமொழி -9-9-1-
இந்திரனை கூட்டுதல்-தன்னைக் கூட்டுதல் -தானே பிரதாநன்-

————————————————————
462
ஒருவனை -6
ஒன்றாம் சோதி -திரு நெடும் தாண்டகம் -2
மூ உருவம் கண்ட போது ஒன்றாம் சோதி -இவனே காரண பூதன் -இருவர் கார்ய கோடி நிஷ்டராய்
பரம் ஜோதி சப்த வாச்யம் இவனே -ஆம் சோதி ஓன்று -என்கிறார் –

———————————————————

463-
இன்பப் பாவினை -6
இன்பப் பாவினை -பெருமாள் திருமொழி -1-4-
இன் கவி பாடும் பரம கவிகள் -முதல் ஆழ்வார்கள் கவி போலே இனியவனாய் –
தம்முடைய கவி போலே தித்தித்து இருக்குமவன் –

———————————————————————
464-
புகழும் தொண்டர் என் சொல்லிப் புகழ்வர் -6
அறிந்தன வேதம் –அரும் பொருள் ஆதல் -திருவாய்மொழி -9-3-3-
கிண்ணகத்தில் புக்கு முழுகுவாரைப் போலே -அறிய ஒண்ணாது என்று புகழும் அது ஒழிய
பாசுரம் இட்டு புகழ முடியாதே –

——————————————————————–

465-
உம்மை அல்லால் எழுமையும் துணை இலோமே -9-
அரங்கதுறையும் இன் துணை -பெரிய திருமொழி -3-7-6-
நாங்களும் தஞ்சம் அல்ல -பிறரும் தஞ்சம் அல்ல -நீயே தஞ்சம் –

————————————————————————

466-
பத்திமைக்கன்பு உடையேன் ஆவதே பணியாய் -9-
என் தன் அளவல்லால் யானுடைய வன்பு -இரண்டாம் திருவந்தாதி -100

நூல் பிடித்த பக்தியை அளவாகக வேணும் –
எந்தாய் -பக்தியை உண்டாக்கிய நீயே அளவு படுத்த வேணும் –

———————————————————————

467-
என் கண்ணுள்ளே தோன்றினாரே -12
திருக் கமல பாதம் வந்து என் கண்ணின் உள்ளன -அமலனாதி -1

இவ் வடிவு அழகை நோக்க ஒண்ணாது என்று கண்ணை செம்பளித்தேன் -உள்ளே தோன்றினார் –
இந்த தருணம் எதிர்பார்த்து இருந்தான் போலும் -செம்பளித்த கண்ணை உறுத்து உள்ளே புகுந்து
அன்றிக்கே -தன் கண்ணாலே பார்க்கை அவத்யம் என்று செம்பளிக்க உள்ளே பிரகாசித்தார்

——————————————————————-

468-
அன்பினால் அனுமன் வந்து -15
வில்லால் ஓங்கு முந்நீர் அடைத்து -திருமாலை -15
அன்பினால்-காலால் அன்று போலே -அநசனம் தீஷித்தும் -கடல் கடந்தும் -யுத்தம் பண்ணியும் –
இளைத்து இருக்கச் செய்தேயும் பிராட்டியை திருவடி தொழுது த்ருஷ்டா சீதா -என்று பெரிய ப்ரீதியோடே வந்தது –

வில்லால் -நாலிரண்டு அம்பு விட்டவாறே வந்து முகம் காட்டி முது எடுத்துக் கொடுத்தவாறே
அதன் மேலே யாயிற்று அணை கட்டிற்று -ஆகையால் கல்லால் அன்று அடைத்தது -வில்லால் என்கை –

இங்கன் அன்று ஆகில்  இட்ட மலைகள் எல்லாம் ஆழ்ந்து போய் அடைத்தாய் தலைக் கட்டாது-
அன்பினால் -வில்லால் இரண்டும் ஸாபிப்ராயம்-

———————————————————————–

469-
வானவர் தங்கள் கோனும் –செங்கண் மாலை -20

இந்திரனோடு …வெள்ளறை நின்றாய் -பெரியாழ்வார் திரு மொழி -2-81-
இவர்கள் அர்ச்சித்து பல்லாண்டு பாடுவார்கள்

கலியன் அவன் செங்கண் மால் என்கிறார் -பெரியாழ்வார் திரு வெள்ளறையான் என்கிறார்
அவன் பெயரை கலியனும் ஊரின் பெயரை பெரியாழ்வாரும் சொன்னபடி –

——————————————————————–

ஸ்ரீ கோயில்  கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

அருளிச் செயல் அனுபவம்-இங்கும் அங்கும் –பெரிய திருமொழி –ஸ்ரீ வேளுக்குடி வரதாசார்யர் ஸ்வாமிகள் .

January 26, 2013

314
உய்வதோர் பொருளால் -1-1-1-
ஆழியான் அருளே -1-1-4-
மயர்வற மதி நலம் அருளினான் -திருவாய் மொழி -1-1-1-
பகவத் கிருபையை -நல்ல அர்த்தம் -கௌரவ பெருமையால் முதலில் மறைத்து சொல்லி பின்பு
நான்காவது பாசுரத்தில் வ்யக்தமாக அருளியதை
நம் ஆழ்வார் அவ்வளவு போகப் பொறாமை நடுவே அருளுகிறார் முதல் பாசுரத்திலே –
——————————————————————————–

315
வாடினேன் -1-1-1-
பொய் நின்ற ஞானமும் –இந்நின்ற நீர்மை -திரு விருத்தம் -1-
பகவத் விஷயீகாரம் பிறந்த பின்பும் கீழில் பிரிவை அனுசந்தித்து வாடினேன் -என்கிறார் –
நம் ஆழ்வார் அவனை சாஷாத் கரித்து அநந்தரம் பெற்ற பேறு அறியாதே கீழ் நின்ற நிலையை அனுசந்தித்தது போலே –

————————————————————————————-

316
நாராயணா -1-1-1-
மணியே மணி மாணிக்கமே மது சூதா -11-8-8-
நாராயண உபநிஷத் -அத புருஷோ ஹைவே நாராயண என்று தொடங்கி
பிராமண்யோ மது சூதனோம சர்வ பூதஸ்தமேகமே நாராயணம் காரண ரூபமகாரம்
பரப்ரஹ்மோம் -என்று நாராயணன் மது சூதனன் என்று கூறுகிறது –
மது சூதனன் ஸ்ரீ ஹயக்ரீவன் எனபது நிர்விவாதம்
ஜாயமான கால கடாஷம் ஸ்ரீ மது சூதன கடாஷம்
தீர்த்தகர -ஸ்ரீ விஷ்ணு சகஸ்ர நாம -691-ஹயக்ரீவ ரூபத்தை தரித்து மது கைடபரை
அழித்து பிரம்மாவுக்கு வேதங்களை உபதேசித்தவன் -சங்கர பாஷ்யம் -இதுவே குரு தம -210
திரு நாம வ்யாக்யானதிலும் கூறப் படுகிறது
இது போலே திரு மங்கை ஆழ்வாரும் நாராயண என்று  அருளி
இறுதியில் அவனே மது சூதனன் என்று காட்டி அருளுகிறார்-

—————————————————————————————-

317-
அவரவர் பணை முலை துணையா -1-1-2
தான் உகந்த ஊர் எல்லாம் -திரு நெடும் தாண்டகம் -6
ஞானம் பிறப்பதற்கு முன்பும் பின்பும் -உத்தேஸ்யமானவை-

—————————————————————————————

318
சூழ் புனல் குடந்தையே தொழுது -1-1-2-
தண் குடந்தை கிடந்த மாலை -திரு எடும் தாண்டகம் -29-
அதிகமான ஈடுபாடு திருக் குடந்தையில் ப்ரீதி விசேஷத்தாலே அடிகடி ஈடுபட்டு அருளி –
ஆறு பிரபந்தங்களிலும் மங்களா  சாசனம் அருளி –
பெரிய திருமொழியிலும் நான்காம் பத்து ஓன்று ஒழிய அனைத்து பத்துக்களிலும் மங்களா சாசனம் உண்டு
தமது ஆதி மத்ய அவசானங்களிலும் மங்களா சாசனம் அருளி
குடந்தை கிடந்த மால் இங்கே போதும் கொலோ -என்று அருளிச் செய்தார் இ றே

——————————————————————————————

319
ஊமனார் கண்ட கனவிலும் பழுதாய் ஒழிந்தன நாள்கள 1-1-3-
பழுதே பல பகலும் போயின -முதல் -திருவந்தாதி -16-
ஊமை வாய் விட மாட்டானே –இருந்தாலும் அவன் நினைத்து இருக்கலாமே –
நாமோ அனுபவித்து போந்த  விஷயங்களில் போய் இருந்து நினைத்து இருக்கும் ஒன்றும் இன்றிகே இருக்கை –
போன காலம் அநாதி – காலம் அநந்தம் -இழவுக்கு அழுதார் ஆகில் அச்சமாவது என்
வருமத்தை குறித்தன்றோ அஞ்சுவது என்னில் – நான் ஆகில் போன காலம் போலே ஆகிறதோ வரும் என்கிறார் –

————————————————————————————————-

320
நஞ்சு தான் கண்டீர் நாராயணா  – 1-1-10-
நஞ்சு தான் அரக்கர் குடிக்கு -10-2-4-
எனக்கு என்றும் தேனும் பாலும் அமுதுமாய திருமால் திரு நாமம் -பாபத்துக்கு நஞ்சு-பாபங்களை  நசிப்பிக்கும் –
கல்யாண குணங்களால் பூரணை யாகிய சீதை பிராட்டியை
ராஷச குலத்துக்கு நஞ்சு கிடாய்-விபீஷணன் வார்த்தையாக அருளுகிறார் –
ஆக அமுதமான பகவன் நாமம் நஞ்சு -பாப நாசகம்
சீதக் கடலில் உள்ள அமுதான சீதை பிராட்டியும் ஒரு விதத்தில் நஞ்சு -ராஷச நாசகம்

——————————————————————————————————–

321
வேழம் பிடியினோடு –துயில் கொளும் -1-2-3-
குழா வரி வண்டிசை தீங்கரும்பு கண் வளரும் -2-10-4-
விரோதியான ரிஷபங்களைப்  போக்கி நப்பின்னை பிராட்டி உடன்   பரம ரசிகன் வர்த்திக்கும் தேசம்
என்பதால் அங்குத்தை  திர்யக்குகளும் பரம ஸ்ருங்கார ரச பிரதானமாய் இருக்கும்
வண்டுகள் பாட அவை துடைக்குத்தாக துயிலும் திவ்ய தேசம் திருப் பிரிதி -அது போலே
திருக் கோவலூரில் வண்டிசை கேட்டு தீங்கரும்பு பணைக்கிறது
தீங்கரும்பு -திருக் கோவலூர்  ஆயன்
குழா வரி வண்டு -அன்பு கூறும் அடியவரான முதல் ஆழ்வார்கள் -எனபது  ஆசார்ய ஹிருதய  சாரம்-

—————– ————————————————————————————-

322
பெரிய மாசுணம் -1-2-10
யானை வெருவி அரவு ஒடுங்கும் வெற்பு -நான்முகன் திருவந்தாதி -39
மலைப் பாம்புகள் ஆனைகளுக்கு அஞ்சி -மலை போலே போந்து போய் புற்றிலே புகா நிற்கும் என்று ஜீயர் அருளிச் செய்ய –
நம்பிள்ளை -பெயருகை யாவது தான்-போக்குவரத்து  இரண்டுக்கும் சாதரணமாய்த்து இருப்பது –
மலைக்கு சிறப்பு சொல்பவர்கள் மலை பாம்பு ஆனையை விழுங்கும் என்பார்கள் –
ஆகையால் கரிய மா முகில் படலங்கள் கிடந்தது முழங்கு வற்றை -பெரிய மாசுணமானது
ஆனையாக புத்தி பண்ணி -ஆமிஷார்தமாக மலை பேர்ந்தால் போலே கால் வாங்கி கிட்டா நிற்க்குமாய்த்து
என்றாமே -என்ன அதுவே இறே பொருள் என்று போராக கொண்டாடி அருளினார்
ஆகையால் பெரிய மாசுணம் என்றது ஆனையை விழுங்கும்படி யாய்த்து இதனுடைய பெருமை
இருப்பது -யானை வெருவி அரவு ஒடுங்கும்-என்றார் இ றே திரு மழிசைப் பிரானும் –
இடி கொள் வேழத்தை எயிற்றோடும் எடுத்து உடன் விழுங்கும் கடிய மாசுணம் -என்று
கம்பரும் பாடினார் –

———————————————————————————————————-

323
பெரிய மாசுணம் -1-2-10
மா மழை மொக்குளின் -திருவாய் மொழி -4-1-6-
பெரிய மாசுணம் தாத்பர்யத்தை கீழே அனுபவித்தோம்
பெரு மழைக் குமுழி போலே -அநந்தரம் விழுந்த துளியோடே நசிக்கும் -என்கைகாக

——————————————————————————————————-

324
முன்னடி நோக்கி வளைந்து -1-3-1-
வல் வினை மோத மலைந்தே -திருவாய் மொழி -3-5-2-
முன்னடி -முன்பு இறுமாப்பாலே  தறை பாராதே இ றே திரிவது
த்விதா பஜ யேயம்  ந நமேயம்
முதுமையிலே தன்னடையே வளையும் இ றே
பகவத் குண அனுபவம் பண்ணும் இதே போதும் இ றே
பகவானை நாமே வணங்க அமையும் -பகவத் குண அனுபவத்தாலே
நாமே விக்ருதராக வமையும் என்று இ றே ஆழ்வார்கள் திரு உள்ளம்-

————————————————————————————————-

325
பாவீ –மொழிவதற்கு அஞ்சி -1-6-4-
பாவி நீ என்று சொல்லாய் -திருவாய்மொழி -4-7-3-
ஸ்திரீகள் ஒழிச்சின வன்றாகிலும் அனுதாபம் பிறந்து உகந்து அருளிற்று ஒரு திரு வாசலிலே
ஒதுங்கினாய் ஆகில் இன்று எங்களுக்கு கை சலியாது ஒழியல் ஆய்த்து -என்பார்கள் ஆய்த்து
யமபடர்கள் -மொழிவதற்கு அஞ்சி -அவர்கள் பண்ணும் நலிவை பொறுக்கலாம் ஆகாதே
க்ரூரமான பேச்சாய்த்து பொறுக்கப் போகாதது -யமபடன் பாவீ என்னுமது அசஹ்யம் என்றபடி
பாவி நீ -நான் நிராசனாய் தரிக்கும் படியாக -இந்தரனுக்கு உதவினோம் -யசோதாதிகளுக்கு உதவினோம்
என்றதை நினைத்து நசை பண்ணுகிறது என் -அவன் சத்வ நிஷ்டன் -அவள் தாய் -நீ பாவி -என்று
ஒரு வார்த்தை சொன்னால் ஆகாதோ –
ஓன்று சொல்லாய் -நீ பாக்யவான் என்னவுமாம் பாவி என்னவுமாம் -உனது மிடற்று ஓசை கேட்கும்
இத்தனையே எனக்கு வேண்டுவது -பகவான் பாவி என்னுமதுவும் உத்தேச்யம் என்றபடி –

———————————————————————————-

326
நாம் தொழுதும் -1-7-9
தொழுது எழு -திருவாய் மொழி -1-1-1-
கிரியா பதம் பதிகம் முழுவதும் அந்வயிக்கும் -இரண்டிலும் –

—————————————————————————————–
327
அல்லி  மாதர் புல்க  நின்ற ஆயிரம் தோளன் -1-7-9-
தோள்கள் ஆயிரத்தாய் -திருவாய்மொழி -8-1-10-
பெரிய பிராட்டியார் ஆலிங்கனத்தினால் பெருமாள் திரு மேனி விகாசம் அடைந்ததை அருளுகிறார்
சம்சாரி ஜீவனை பெற்றதும் பகவான் திரு மேனி விகாசம் அடைந்ததை அருளுகிறார் –

——————————————————————————————–

328
பேசுமின் திரு நாமம் எட்டு எழுத்தும் -1-8-9
வெற்பு என்று வேங்கடம் பாடும் -மூன்றாம் திருவந்தாதி -69
பேசுவார் தம்மை உய்ய வாங்கி   பிறப்பு அறுக்கும் பிரான் இடம் -ஸ்வ கதமாக தமது திரு உள்ளத்தை பார்த்து அருளி செய்கிறார்
பேசும் இன் பேச இனிதாக
அன்றிக்கே பர உபதேசமாய் -இப்படி நிர்வாஹ த்வயம்
வெற்பு என்று -ஆழ்வாரான அவஸ்தை போய் -ஒரு பிராட்டி அவஸ்தையை பஜித்து இருக்கும் அவர்
தசையை தாயார் அருளிச் செய்வதாக -பாடும் சூடும் பாடுகிறாள் சூடுகிறாள்
கீழும் மேலும் அந்யா பதேசம் இன்றிக்கே இருக்க -இதனையும் பாடும் கோள் -சூடும் கோள்
என்றபடி -இதிலும் நிர்வாஹ த்வயம்

—————————————————————————————————-

329
வெண்ணெய் உண்டான் என்று ஏச  நின்ற -2-2-1-
இன்னார் தூதன் என நின்றான் -2-2-3-
இன்னான் சோற்றாலே தரித்தான்-சுவர் மண்ணால் நின்றது – என்னுமா போலே
ஆஸ்ரித பாரதந்த்ர்யத்தை இட்டு -ஆஸ்ரித பாரதந்தர்யமே ஸ்வரூப நிரூபகம் இவனுக்கும் –

——————————————————————————————————–

330
மூர்த்தி மூவராகி -2-2-8-
கழல் சூடி -11-7-10-
நல் வேய் ஊதி -பெரியாழ்வார் திருமொழி -2-1-1-
உலகமாக்கி -திருவாய்மொழி -1-9-9-
அரனுக்கு நீக்கியை -திரு விருத்தம் -86
இங்கே மூவரானான் -சூடியவன் -ஊதியவன் -ஆக்கினவன் -என்றபடி சோறாக்கி என்றது போலே
அரனுக்கு நீக்கியை -இவ்விஷயத்தை ஸ்பஷ்டமாக்கி அருளுகிறார் –

————————————————————————————————-

331-
விற் பெரு விழவும் –செற்றவன் -2-3-1-
தற்கச் சமணரும் –மாண்டனர் -இராமானுச நூற்றந்தாதி -99
கீதாசார்யன் சேஷி ராமானுசன் -கீதா பாஷ்யகார சேஷ ராமானுசன்
இருவர் க்ருத்யமும் இருக்கிற படி

—————————————————————————————————-

332-
தாயுருவாகி வந்த பேய் -2-3-3-
பெண்ணுருவாகி யஞ்சுவை யமுதம் அன்று அளித்தான் -2-3-3-
பேய்க்கு சேராத தாய் உருவம்
புருஷோத்தமனுக்கு சேராத பெண் உருவம்
அழிய மாறி யாகிலும் அனுகூலருக்கு அமுதம் ஈந்து தரிப்பித்தான்
அழிக்கைக்கும் அளிக்கைக்கும் தங்களை அழிய மாறினார்கள் பூதனையும் பகவானும் -என்றபடி –

——————————————————————————————————-

333-
பெண்ணாகி -2-6-1
அண்டக் குலத்துக்கு அதிபதி யாகி –
ஆஸ்ரித அர்த்தமாக தன்னை அழித்துக் கொண்டு பெண் ஆனான் புருஷோத்தமன் -ஸ்வ சங்கல்பாதீனம்
உபய விபூதி நாயகன் -அவனை ஐஸ்வர் யார்தி ப்ரஹ்மாண்ட அதிபதியாக உபாசிக்கிறான்
இவனுக்காக இவன் அனுசந்தித்த அளவிலேயாய் இருக்கை -பாவ அனுகுணம்
பரனுடைய நிருபாதிக சோபாதிகங்கள் இருக்கும்படி நிரூபிதம் –

————————————————————————————————————

334-
நண்ணாத –எண்ணாதே இருப்பாரை -எண்ணோமே -2-6-1
ஆர்–எண்ணும் நெஞ்சு உடையார்— எம்மை யாள்வாரே -2-6-2
இருளிரிய -தேட்டரும் -மெய்யில் வாழ்க்கை -குலசேகரர் 1-2-3-
ஆநு கூலச்ய சங்கல்ப –ப்ராதி கூல்யச்ய வர்ஜனம் -சரணாகத ஸ்ரீ வைஷ்ணவனுக்கு சம்பாவித ஸ்வபாவங்கள்
ஆநு கூலச்ய சங்கல்பம் பகவத் விஷயத்திலும் பாகவத விஷயத்திலும்
குலசேகரர் முதல் பதிகத்தில் பகவத் விஷய ஆநு கூல்ய சங்கல்பதையும்
அடுத்து பாகவத விஷய ஆநு கூல்ய சங்கல்பதையும்
அடுத்து பிராதி கூலியா வர்ஜனதையும் அருளுகிறார்
கலியன் பாகவத விஷயகமான நண்ணாத பதிகத்திலே -தல சயனத்து உறைவாரை
எண்ணாதே இருப்பாரை இறைப் பொழுதும் எண்ணோமே -என்று பிரதி கூல்ய வர்ஜனத்தை
முதலில் அருளிச் செய்து -பிறகு தல சயனம் ஆர் எண்ணும்  நெஞ்சு உடையார் அவர் எம்மை ஆள்வாரே
என்று ஆநு கூல்ய சங்கல்பத்தை கூறி அருளினார்
எப்படிக் கூறப்பட்டாலும் இவ்விரண்டும் ஸ்ரீ வைஷ்ணவ லஷணம் எனபது நிர்விவாதம் –

——————————————————————————————-

335
நண்ணாத வாளவுணர் -2-6
கண் சோர வெங்குருதி -7-4
பயிலும் சுடர் ஒளி -திருவாய்மொழி -3-7-
நெடுமாற்கு அடிமை -திருவாய்மொழி -8-10
தேட்டறும் திறல் தேனினை -பெருமாள் திருமொழி -2
அடிமையில் குடிமை யில்லா  திரு மாலை -39

ஸ்ரீ வைஷ்ணவர்களே சேஷிகள் சரண்யர்கள் பிராப்ய பூதர்கள் என்று அருளும் பதிகங்கள்/பாசுரம்

————————————————————————————–

336-
நல்லரன்  நான் முகன் நாரணன் -2-9-1-
நல்ல வேதியர் -4-7-8-
நல் வேதம் 9-2-1-திருவாய் மொழி- 5-4-3-
நல்ல மறை நாச்சியார் திருமொழி -6-7-
நல் வீடு -திரு வாசிரியம் -2
நன்று எழில் நாரணன் -திருவாய் -மொழி -1-3-7-
நல்லுலகம் -திருவாய் மொழி -1-3-9-
நல் வார்த்தை -திருவாய் மொழி -7-5-9-
நல்ல வருள் -திருவாய் மொழி -8-6-1-
நல்ல பதம் -திருவாய்மொழி -8-10-11-
நல்ல அமரர் -திருவாய் மொழி -10-1-10-

நல்ல அரன் -ஹித ரூபமாக உப சம்ஹாரத்தை பண்ணும் ருத்ரன் -ஷடாத்த நயன ஸ்ரீ மான் –
ராவண வதத்துக்கு ஸ்ரீ ராமன்  இங்கு தங்க வாய்த்த நன்மையை பற்றி ஸ்ரீ மானாக கூறப்பட்ட நல்லவன்
நல்ல வேதியர் ஆசார பரதாரரான பிராமணர்
நல் வேதம் -வேதானாம் சாம வேதோச்மி
நல்ல மறை -ஆராதன  விஷயமாக பரந்தவை -ஆராத்யனான அவன் ஸ்வரூபத்தில் பரந்தவை -புருஷ ஸூக்தாதிகள்
நல் வீடு -உத்தம புருஷார்த்தம் -ஐஸ்வர்யம் கைவல்யம் போல் அன்றிக்கே

நன்று எழில் நாரணன் -அபஹத பாப்மா திவ்ய தேவ ஏக நாராயண -கண்ட வற்றால் தனதே உலகு என்று நின்றான் –
தனது ஒழிந்த வற்றை பிரகாரமாய் தான்  பிரகாரியாய் -அத்வதீயமான
நல்லுலகம் -ஈஸ்வரன் விரும்பி வந்து அவதரிக்கையாலே
நல் வார்த்தை மகா பாரதம்  என்றபடி
நல்ல வருள் -என் குற்றமாதல் -தான் சர்வஞ்ஞன் ஆதல் பாராதே தன் பேறாக பண்ணின அருள்-நிர்ஹேதுக பிரசாதம்
நல்ல பதம் -பாகவத சேஷத்வம் -மூல மந்திர சாரார்தம்
மற்று எல்லாம் பேசிலும்  நின் திரு எட்டு எழுத்து கற்று நான் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை
தொண்டைமான் சக்கரவர்த்தி குறும்பு அறுத்த நம்பியை அனுவர்த்தனம் பண்ணினான் இ றே
சரவண அனுஷ்டானங்கள் இருந்த படி
நல்ல அமரர் -ப்ரஹ்ம ருத்ராதிகள் இவனே ரஷகன் என்று இருப்பதால்
ஜீவர்கள் மூவகை -நித்ய சம்சாரிகள் நித்ய ஸூரிகள் -தேவர்கள் -காதா சித்த சேஷத்வ ஞானம் உள்ளவர்
ஆபத்து வந்தவாறே அடியேன் என்றும் ஆபத்து நீன்கியவாறே ஈச்வரோஹம் என்று இருப்பவர்–இவர்களை -மந்தி -வானவர்-அயன்

————————————————————————————-

337-
நெய் இலங்கு சுடர் ஆழிப் -படையானை கை இலங்கு வேல் கலியன் -3-6-10-
உறை கொள் புகர் ஆழி உடையானை கறை வளரும் வேல் வல்ல கலியன் -5-10-10-
அவுணன் உடல்  உகந்த சக்கரச் செல்வன் -திருவாய்மொழி -7-6-11-
சத்ரு நிரசனத்தாலே கறை கழுவ அவசரம் இன்றிக்கே -சேஷத்வ ஸூசகமாக திரு  வேலைப் பிடித்து 
அவன் சேஷித்வ ஸூசகமாக திரு ஆழி -அழகுக்கு உடலாக  ஒப்பித்து இருக்கும் அத்தனை

உறை கொள் புகர் ஆழி -இவர் கையில் வேல் உண்டான பின்பு திரு ஆழிக்கு உறை இது இருக்கும் காண்-
சக்கர செல்வன் ஹிரண்யனும் திரு உகிருக்கு அரை வயிறாய்ப் போருகை யாலே -அழகுக்கும்
ஐஸ்வர்யத்துக்கும் உறுப்பான திரு ஆழி

——————————————————————————————————–

338
அணி யாலி புகுவர் கொலோ -3-7-1-
திண்ணம் என் இள மான் புகுமூர் திருக் கோளூரே -திருவாய்மொழி -6-7-1-
இலங்கை த்வாரத்தில் புகுவார் கொலோ -மாய மான் இருவரும் ஒருவர் மேல் ஆழங்கால்  பட்டு
திண்ணம் -பிள்ளைகளை கானா  திருக் கோயிலுக்கு உள்ளே தேடும் இ றே
உண்ணும் சோறு பிராட்டிக்கு அஞ்ச வேண்டுமா -இருவராக போனவர்கள்
கள்வன் கொல்லில் பிராட்டிக்கு அஞ்ச வேண்டுமா -தனியாக போனவள்
ஆளவந்தார் -இருவருக்கும் அஞ்ச வேண்டும் -தனியே போனவளுக்கு பயம் உண்டோ
இருவரும் இருவருக்கும் ஊமத்தங்காயாய் கடித்ததும் ஊர்ந்ததும் அறியாமல் –
இவள் அங்கே  புக்கு அல்லது தரியாள்-

—————————————————————————————————–

339-
சிலம்பினிடைச் சிறு பரல் போல் -4-4-8-
தீதறு திங்கள்–குளம்பினகம் -11-4-3-
ஸ்ரீ வராஹத்தின் குளம்பில் மகா மேரு அகப்பட்டது என்று நான்காம் பத்திலும் –
சந்திர சூர்யர்கள் -தேவர்கள் தேவ லோகங்கள் திக்குகள் மலைகள் சப்த சமுத்ரங்கள் அடங்கின
நம்மை அடிமை கொள்ளும் நிர்வாஹக வஸ்து அவனே

——————————————————————————————————-

340
கருத்துடைத் தம்பிக்கு -4-6-3
அவன் தம்பிக்கு -பெருமாள் திரு மொழி -10-7-
அவன் தம்பிக்கே நீள் அரசு தந்த -பெரியாழ்வார் திருமொழி -3-9-10-
இளையவர்கட்கு அருள் உடையாய் –குகனோடு ஐவர் ஆனோம் –குன்று சூழ்வான
மகனொடும் அருவரானோம் நின்னோடும் எழுவர் ஆனோம் –
ராமானுசர்கள் இடத்தில் ராமனுக்கு உள்ள ப்ரீதி -அனைவரும் அனுஜர்களே-

—————————————————————————————————–

341
பூவார் திரு மா மகள் புல்கிய மார்பா -4-7-9
அகலகில்லேன் இறையும் என்று மங்கை உறை மார்பா -திருவாய்மொழி -6-10-10-
பூ அடிக் கொதித்து விரும்பி அணைக்கும் படி மார்பு படைத்தவன்
நாம் செய்த குறை காணாக்   கண் இட்டு இருக்கை -புருஷகார பூதை-

—————————————————————————————————

342-
செம் சொலாளர் -4-8-2
வெம் சொலாளர் -5-8-4-
செவ்விய சொல்லை உடைய பிராமணர் வர்த்திக்கும் திரு நாங்கூர்
யமபடர் செய்யும் செயல்களை  பொறுத்தாலும் அவர்கள் பாசுரம் கிடீர் பொறுக்க  அரிது-

————————————————————————————————
343
நும்மைத் தொழுதோம் -4-9-1
உம்மைத் தஞ்சம் என்று -திருவாய் மொழி -2-4-8-
தாமான தன்மையில் ஊடி படு குலைப் பட்டோம் என்கிறார் கலியன்
பகவானை வெறுத்து சொன்ன தாய் பேச்சு நம் ஆழ்வார் அருளுகிறார்
தஞ்சமாகிய தந்தை தாயோடு தானுமாய -என்னும் சர்வ ரஷகனை காதுகரைச் சொல்லுமா போலே
பகவத் அலாபத்தாலே வாடின காலத்தில் வெறுத்துச் சொல்லும் படி –

———————————————————————————————–

344
தீ எம்பெருமான் –அடியோமுக்கே எம்பெருமான் -4-9-5-
கரு மா முகில் உருவா  கனலுருவா -7-9-9-
மணி உருவில் பூதமைந்தாய் -திரு நெடும் தாண்டகம்  -1
எப்பொருளும் தானாய் மரகத குன்றம் ஒக்கும் -திருவாய் மொழி -2-5-4-
திரியும் காற்றோடு கரிய மேனியன் -திருவாய் மொழி -3-6-5-
நீராய் நிலனாய் கூராழி வெண் சங்கு ஏந்தி -திருவாய்மொழி -6-9-1-
அவன் ஸ்வரூபமும் ரூபமும் சத்யம் -ஜகத் சர்வம் சரீரம் தே -யஸ்ய ஆத்மா சரீரம்
யஸ்ய பிருதிவி சரீரம் -ஏஷ சர்வ பூத அந்தராத்மா நாராயணா –
பரம் சுடர் உடம்பாய் அழுக்குப் பதித்த உடம்பாய் -திருவாய்மொழி -6-3-  –
சுத்த சத்வ மயமான அசாதாரண திவ்ய மங்கள விக்ரகத்தை உடையவனாய்
குண த்ரய வசமான ஜகத் சரீரனாய் –
அவனது ஜகத் ஆகாரத்வத்தை அனுசந்தித்து -க்ருஹ ஷேத்ராதிகள் என் சொத்து என்கிற
விபரீத ஞானம் தொலைந்து -இவை மற்று ஒருவனுக்கு சொத்து என்கிற விபரீத ஞானமும் தொலைந்து –
சர்வ ஸ்வாமி பகவான் -சர்வம் பகவத் ஸ்வம் -என்ற யாதார்த்த ஞானாகாரம் பிறந்து
இப்படி ஜகத் ஆகாரமான வடிவுகள் ஒழிய அசாதாராண வடிவும் கொண்டவனே –
அர்ஜுனனும் விஸ்வ ரூபம் கண்டு தேனைவ ரூபேண சதுர் புஜேன -என்றான்
பலவகையும் கண்டு வெண் சங்கு ஏந்தின ரூப பரனான ச்வேதன் படியும் காணலாம் –
ஆழ்வார்கள் ஈடுபாடு திவ்ய மங்கள விக்ரகத்திலே என்று அறியலாம்-

——————————————————————————————————

345
அடியோமுக்கே எம்பெருமான் -4-9-5-
நங்கள் பெருமான் உறையும் -5-10-9-
நங்கள் பிரான் -திருவாய் மொழி -7-3-3-
மண்ணவர் தாம்தொழ -திருவாய் மொழி -8-6-7-
பின்னானார் வணங்கும் சோதி -அர்ச்சை -நங்கள் பெருமான் உறையும் நந்தி புர விண்ணகரம் –
பரத்வம் நித்ய முக்தர்களுக்கு
வ்யூஹம் முக்த ப்ராயருக்கு -பிரம்மாதிகள் கூக்குரல் கேட்க்கைக்கு
விபவம் தசரத வசுதேவாதிகளுக்கு -புண்ணியம் பண்ணினார்க்கு
இவ்விருப்பு -சம்சாரிகள் -தங்களுக்கு ஹிதம் என்னது என்று அறியாதே –
சம்சாரம் த்யாஜ்யம் என்று அறியாதே –
சர்வேஸ்வரன் பிராப்யம் என்று அறியாதே –
பாபம் பண்ணின சம்சாரிகளுக்கு இடக்கை வலக்கை அறியாத நமக்கே –
பரம பதம் நித்யர்க்கே போலே- மேன்மை அனுபவிக்கு அது
நீர்மை அனுபவிக்க இது -நித்ய சூரிகளும் வந்து சீல குணம் அனுபவிக்கும் தேசம் –

—————————————————————————————

346
ஈதே அறியீர் -4-9-6
எம்பெருமான் தன்மையை யார் அறிவார் -திருவாய் மொழி -8-3-9-
நல்லார் அறிவீர் தேவரீரை ஒழிய செல்லாதவர் பிரகிருதியும் அறிவீர்
தீயோர் அறிவீர் -தேவரீரை ஒழியவும் ஜீவித்து இருப்பார் பிரகிருதியும் அறிவீர்
ஈதே அறியீர் -சர்வஞ்ஞனையும் அஞ்ஞனாக்க வேண்டும்படி -இவருடைய பிரகிருதி மார்தவம்
உண்ணவும் பொறாது பட்டினி விடவும் பொறாது -ஸூ குமாராரை போலே சௌ குமார்யம்
தூது விடப் புக்கால் அத்தலைப் பட்டு மீளுவதற்கு முன்பே பற்றாமை தாம் கிடந்தது கூப்பிடுகிறார் இ றே
தூவிரிய மலர் உழக்கி -தம்முடைய சௌ குமார்யத்தை பகவானுக்கு அறிவித்தபடி –
எம்பெருமான் சௌ குமார்யம் ப்ரமாதிகளும் அறியார்
திருமாலுக்கு இங்கே பரிவர் இல்லை என்று அஞ்ச -மணவாள மா முனி திருவாய் மொழி நூற்றந்தாதி –

———————————————————————————————

347
எமர் ஏழ் ஏழ் அளவும் -4-9-9-
குடி குடி வழி  வந்து  -திருவாய்மொழி -9-2-1-
என்னுடைய குல நாதன்
புத்திர பௌ தராதி சஹிதராய் கொண்டு கைங்கர்யம்-

————————————————————————————————-

348
சிந்தை தன்னுள்  முந்தி நிற்றீர்  –திருமேனி காட்டீர் -4-9-9-
நிற்கும் முன்னே வந்து –என் கைக்கும் எய்தான் -திருவாய்மொழி -7-3-6-
அணைக்கைக்கு ஈடாக கைக்கு எட்டாத இருக்கிற நீர் பேராசை போர வளர்கிறது என்
அணைக்கைக்கு எட்டாதாப் போலே ஹிருதயத்திலே பிரகாசியாமல் இருக்க பெற்றிலோமே
சிந்தை தன்னுள் நீங்காது இருந்த திருவே
என் கண்களிலே வந்து தோற்றா  நிற்கும் என் கைகளுக்கு எய்தான் -பிள்ளான்
உரு வெளிப்பாட்டாலே நலிகிறபடியை சொல்லுகிறது -நஞ்சீயர்
உரு வெளிப்பாடு அன்றிக்கே கையினால் அணைக்க எட்டினால் அன்றோ அழகிது -பெரிய வாச்சான் பிள்ளை
எட்டாதபடி மேகம் போலே தூரஸ்தன் ஆகா நிற்கும் நீல முகில் வண்ணத்து எம்பெருமான்
கண்கள் காண்டற்கு அரியனாய் கருத்துக்கு நன்றும் எளியன் –

——————————————————————————————–

349
கற்றுத் திரிவார் -4-9-10
நாவலிட்டு உழி தருகின்றோம் நமன் தமர் தலைகள் மீதே -திருமாலை-1
திரு இந்தளூர் பதிகத்தை அப்யசிது அதனால் யமாதிகள் தலைமேலே அடி இட்டு திரியுமவர்-

————————————————————————————————
350-
வெற்பால் மாரி பழுதாக்கி -5-1-4
ஆய்ச்சி மறைய வாய்த்த தயிர் –அமுது செய்த -5-1-5-
தேவதாந்தரதுக்கு ஆக்க ஒண்ணாதே  ஆஸ்ரித கர ஸ்பர்சம் உள்ள அடிசிலை
இவன் அறியாத ஓர் இடம் சாந்து பரணி யிலே தயிரை  வைக்கும் ஆய்த்து-

———————————————————————————————–

351
சடையான் ஓட -5-1-7
நேர் செரிந்தான் முக்கண் மூர்த்தி -திருவாய்மொழி -7-4-8-
முண்டன் நீறன் -திருச் சந்த விருத்தம் -71
ஸ்ரீ மன் நாராயணன் ஒருவனே அச்சுதன் -நழுவ விடாதவன் -திண் கழல் இறே
எம்பெருமானார் அச்யுத பதத்வய வ்யாமோஹத்தால் இறே -விஷயாந்தர விரக்தராய் திகழ்ந்தார்
அத்திகிரி பச்சை நிற அச்யுதனுடைய பதாம் புஜங்களிலும்
திருவேங்கடத்து அச்யுதனுடைய தாங்கு தாமரை யன்ன பொன்னாரடியிலும்
அரங்கமா நகர் அச்யுதன் உலகம் அளந்த பொன்னடியிலும்
நண்ணித் தொழுமவர் நச்சுவார் முன்னிற்கும் நாராயணன் அச்யுதனுடைய துளங்கு சோதி திருப் பாதத்திலும்
தயரதற்க்கு மகனான அச்யுதன் காடுறைந்த பொன்னடியிலும்
கோவிந்தன் அச்யுதன் பொற்றாமரை அடி என்று பேசும்படியாக கானில் கன்றின் பின் போன பொன்னடியிலும்
அச்யுதன் அனந்தசயனன் செம் பொன் திருவடியிலும்
வீவில் இன்பம் மிக வெல்லை நிகழ்ந்த நம் அச்சுதனான விண்ணோர் பிரானார் மாசில் மலரடியிலும் ஆயிற்று– இவர் மையல் கொண்டு இருப்பது –
பூவார் கழல்கள் -கண்ணன் கழலினை -ககுத்தன் தன்னடி -பாற்கடலுள் பையத் துயன்ற பரமன் அடி –
வைகுண்ட செல்வனார் சேவடி –

——————————————————————————————————–

352-
அன்னமாகி அரு மறைகள் அருளிச் செய்த அமலன் -5-1-9-
அன்னமாகி அன்று அரு மறை பயந்தவனே -5-3-8-
அன்னமாய் – அரு மறையை வெளிப்படுத்த அம்மான் -திரு நெடும் தாண்டகம் -30
பரி முகமாய் -வேத நூல் பயந்தவனே -5-3-2-
ஆசார்ய அனுவர்தனம் பண்ணிக் கேட்கைக்கு அனதிகாரிகளாய் இருக்கவும் கூடும் -என்று
திர்யக் வேஷம் கொண்டான் ஆய்த்து -சாரதியாய் நின்று உபதேசித்தால் போலே –
வேத சஷுசை இழந்த பிரம்மாவுக்கு -ஸ்ருஷ்டியாதி வியாபாரத்துக்கு
வேதத்தினுடைய அபௌருஷேயத்வம் தோன்ற ஸ்ரீ ஹம்ஸ அவதாரம் –

——————————————————————————————————

353
கலை வாழ் பிணையோடு அணையும் திருநீர் மலை வாழ் எந்தை –5-2-8-
சுவையன் திருவின் மணாளன் -திருவாய்மொழி -1-9-1-
ஒரு நீராக சம்சாரிகளோடு கலக்க குருகுல வாசம் செய்ய திரு நீர்மலையில் எழுந்து அருளி
பரம ரசிகன் -ரசிகத்வதுக்கு ஸ்ரமம் செய்த இடம் –

———————————————————————————————–

354
தானுமாய தரணித் தலைவன் -5-4-8-
தானாய் -8-8-10-
தானுமாய -முன்னும் ராமனாய் தானே பின்னும் ராமனாய் –
நஹிநிந்தா நியாயேன ராம அவதாரத்தின் ஏற்றம் சொன்னபடி-

————————————————————————————————–

355
நெய் பருக நந்த பெற்ற ஆனாயன் -5-5-3-
கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் -அமலானாதி பிரான்-10-
மஹதா தபஸா என்று சக்கரவர்த்தி நாடாள ஒரு பிள்ளை பெற வேணும் -என்று
நோன்பு நோற்றுப் பெற்றால் போலே -கவ்யங்கள் பாழ் போக ஒண்ணாது -இவற்றை
புஜிப்பான் ஒரு பிள்ளை வேணும் -என்று இதுக்கு அன்றோ இவற்றைப் பெற்றது –

—————————————————————————————————–

356
இந்திரன் பிரமன் ஈசன் –5-7-2-
இந்திரனோடு பிரமன் ஈசன் -பெரியாழ்வார் திருமொழி -2-8-1-
சர்வேஸ்வரத்வம் வேற ஒருவருக்கும் இல்லை
தொட்டில் பருவத்தே கிஞ்சித் கரித்து போவார்கள் இவர்கள் இ றே
எழில் உடை கிண்கிணி தந்துவனாய் நின்றான் இந்த்ரன்
சிறுத் தொட்டில் வரவிட்டான் பிரமன்
உடையார் கனமணி வரவிட்டான் ருத்ரன்-

—————————————————————————————————–

357
கோதில் வாய்மையினாயொடும் -5-8-2
கோதில் வாய்மையினான் -5-8-7-
வாகிந்திரிய வியாபாரம் வாய்மை -அதாவது வசனம் -அதில் கோது இல்லாமையாவது
சம்ச்ரவே மதுரம் வாக்கியம் -என்ற பிராட்டி உடைய திரு உள்ளத்தததே மெய்யென்று பட்டு
அவள் தரிக்கும்படி சொல்லுகையும் -த்ருஷ்டா சீதா -என்று இவர் தரிக்கும் படி சொல்லுகையும்
காதல் என் மகன் -என்று இவனை இ றே கோதில் வாய்மையினான் என்கிறது -குரு வசனம் அலங்க நீயம் –
என்று கிருஷ்ண அபிப்ராயத்தாலே –

——————————————————————————————————-

358
கொண்ட சீற்றம் ஓன்று உண்டு -5-8-3
கடியனாய் -திருவாய்மொழி -9-6-1-
ஆளராய்-திருவாய்மொழி -9-3-10-
நித்யம் பிரசன்னாத்மா என்று ஆஸ்ரயித்தில் அன்றிக்கே கார்ய காலத்தில் ஏறிட்டு கொண்ட சீற்றம்
தரித்தரன் தநிகனை அடையுமா போலே -சீற்றம் உண்டு -என்று ஆய்த்து இவர் பற்றுகிறது –
விரோதி நிரசனதுக்கு பரிகரம் இ றே சீற்றம் -கடியனாய -வந்தேறி என்கிறார் -ஆளராய் நித்ய ஸூரிகள் போலே
ஆஸ்ரயிக்கும் தேவர்கள் -பகவத் சேஷத்வ ஞானம் காதாசித்கம் -நளிர்ந்த சீலன் -பெரியாழ்வார் திருமொழி -4-4-8 பாசுர வ்யாக்யானதிலும்
மந்தி பாய் -வானவர்-அயன் -பதத்துக்கு பாவ வர்ணநம் பண்ணி அருளினார் தேசிகன்

பகவானுக்கு கோபம் வந்தேறி போலே இவர்களுக்கு சேஷத்வ ஞானம் வந்தேறி
நளிர்ந்த சீலன் -குளிர்ந்த சீலத்தை உடைய செல்வ நம்பி -ஈஸ்வரன் சீலம் கொதித்து இருக்கும் –
அதுக்கடி -வாள் கொள் நீள் மழு வாளி உன்னாகத்தன் -ஆளராய் தொழுவாரும் அமரர்கள் –
அக்கும் புலியின தளுமுடையார் அவரொருவர் பக்கம் நிற்க பண்பர் –
தாழ் சடையும் நீண் முடியும் ஒண் மழுவும் சக்கரமும் சூழ் அரவும் பொன் நாணும் தோன்றுமால் –
ஏறாளும் இறையோனும் திசைமகனும் திரு மகளும் கூறாளும் தனி உடம்பன் -இப்படி இன்றியே
காணிலும் உருப்பொலார் செவிக்கினாத கீர்தியார் -என்று இவர் -நம்பி -இருப்பது –

——————————————————————————————————-

359
மாக மாநிலம் முழுதும் வந்து இறைஞ்சும் மலரடி -5-8-5
மேலை விண்ணோரும் மண்ணோரும் வந்து இறைஞ்சும் மென் தளிர் போல் அடி -7-4-8-
உபய விபூதியில் உள்ளார் அனைவரும் வந்து ஆஸ்ரயிக்கும்  ஸு குமாரமான திருவடிகள் –
கிருஷ்ண அவதார பிரயுக்தம் -விநதை சிறுவன் சிறகு என்னும் மேலாப்பின் கீழ் வருவானை –
திவ்யாயுதங்களும் கற்ப வாசம் பண்ணி இ றே பிறந்தது –
மா நிலம் -இடையரோடு -அவர்கள் தான் வசிஷ்டாதிகள் என்னும்படி பசுக்களோடு கன்றுகளோடு
பீஷ்மாதிகளோடு வாசி யற ஆஸ்ரயித்தது இ றே –
முழுதும் -இந்த்ரனுக்கு நரக வதம் செய்து அருளினான் இ றே-

——————————————————————————————————–

360
துளங்கு நீண் முடி -5-8-9-
பிறந்தவாறும் -திருவாய்மொழி -5-10-1-
கீழ் இரண்டு பாட்டாலே சக்தி யோகத்தை சொல்லி -உபாய பூர்த்தியையும் சொல்லி அருளி –
தொண்டை மான் சகரவர்திக்கு ஸ்வரூப ஞானம் உண்டாக்கினதுபோலே -எனக்கும் உண்டாக்க வேணும் என்று சரணம் புகுகிறார் –
ஏழை எதலன் பதிகத்தில் மோஷார்த்த ப்ரபத்தியிலே இழிந்தவர் -துளங்கு பாசுரத்தில் ஸ்வரூப ஞானம் நழுவாமைக்கு சரணம் புகுகிறார் –
பிறந்தவாறும் -திவ்ய சேஷ்டிதங்களை அனுபவிக்க -சைதில்யதைப் போக்கி அனுசந்திக்க
வல்லனாம் படியாக பண்ணி அருள வேணும் -உருகாமல் வரித்ததும் -ஆசார்ய ஹிருதய ஸ்ரீ ஸூ க்தி
சகல பல சாதனம் இ றே சரணாகதி

————————————————————————————————-

361
உலகம் அளந்த பொன்னடியே அடைந்து –திரு வரங்கத்து அம்மானே -5-8-9-
வேங்கட மா மலை நின்றான் அரங்கத்து அரவின் அணையான் -அமலனாதி பிரான் -3
உலகம் அளந்து –அரங்கத்தம்மான் -என்கிறார் –
அன்று ஞாலம் அளந்த பிரான் சென்று சேர் திருவேங்கடம் –திருவேங்கடமுடையான் திருவடிகளை அடைய பாரிக்கும் ஸூரிகளும்
எந்நாளே நாம் மண் அளந்த இணைத் தாமரைகள் காண்பதற்கு-என்று பிரார்த்திக்க –
தாள் பரப்பி மண் தாவிய ஈசன் -பூமியை அடைய தன் திருவடிகளால் ஆக்கிரமித்து
அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் -என்று தனது திருக்கையாலே
உலகம் அளந்த பொன்னடியைக் காட்டி -தானோங்கி நிற்கின்றான் தண்ணருவி வேங்கடம் –
அவன் தானும் இங்கே கண் வளர்ந்து அருளும் பெரிய பெருமாள் -நீள் மதிள் அரங்கம்
என்று திருப் பாண் ஆழ்வார் அருளிச் செய்ததை கேட்டு திரு மங்கை ஆழ்வார் திரு மதிள் செய்து அருளியது –
திருப் பாண் ஆழ்வார் பாசுரம் ஒட்டியே துளங்கு பாசுரத்தில் திரு வேங்கடமுடையான் சரித்ரத்தை கூறி
உலகம் அளந்த பொன்னடியே அடைந்து உய்ந்தேன் அணி பொழில் திரு வரங்கத்து அம்மானே -என்று
திருவரங்கன் திருவடிகளை சரணாக பற்றுகிறார் -இருவரும் கார்த்திகை மாதத்தில் அவதரித்த சேர்த்தியும் உண்டு இ றே –
திரு நஷத்ரங்களும் அடுத்து அடுத்து நஷத்ரங்கள் இ றே-

கட்டு எழில் சோலை நல் வேங்கட வாணனை -கட்டு எழில் தென் குருகூர் சடகோபன் சொல்
கட்டு எழில் ஆயிரம் -என்றும் -முகில் வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை ஆயிரம் -என்றும் -இ றே- நம் ஆழ்வாரும் அருளிச் செய்கிறார் –
திரு வேங்கடத்து என்னானை –உளனாகவே என்னாவில் இன் கவி- யான் ஒருவருக்கும் கொடுக்கிலேன் -என்றார் ஆழ்வார் –
வான் திகழும் சோலை மதிள் அரங்கர் வண் புகழ் மேல் ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் ஈன்ற முதல் தாய் சடகோபன் -என்றார் ஸ்ரீ பராசர பட்டர் –
திருவேங்கடவன் வடவானை -திருவரங்கன் குடபாலானை -இருவரும் ஒருவரே –

————————————————————————————————–

362
ஓத்தொலி ஏத்தக் கேட்டு மலங்கு பாய் -5-9-6-
ஆங்கு ஆரவாரம் அது கேட்டு அழல் உமிழும் பூங்காரரவு -நான்முகன் திருவந்தாதி -10
விடங்காலும் தீவாய் அரவணை -இரண்டாம் திருவந்தாதி -71
பிராமணர் ஓதும் வேத ஒலி  கேட்டு -மலங்குகள் -மீன்கள் பாயா நின்று உள்ள வயல்கள்
ஆங்கு -திசை வாழி எழ -திரு உலகு அளந்து அருளின பொது -ஆரவாரம் கேட்டு அழல் உமிழும்
பொரு மா நீள் படை -திருவாய்மொழி -1-10-1-ஈட்டு ஸ்ரீ ஸூ க்தி –
விரோதி பூயிஷ்டமான இத்தேசத்தில் இவன் இப்படி செய்ய சொல்ல வேணுமோ –
அங்கே -பரம பதத்தில் உட்பட இப்படி செய்யக் கடவன் -ஆங்கு -தேசமது -ஆரவாரமது -அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம்
அஹம் அந்நாத அஹம் அந்நாத அஹம் அந்நாத -என்கிற நித்ய முக்தர்களின் ஆரவாரம் -அங்கே அது கேட்டு
அப்படி படுகிறவர்கள் இங்கே இது கண்டால் இப்படி சொல்ல  வேணுமோ –
இப்படி திருப்பேர் நகர் மீன்கள் உடையவும்
நித்ய ஸூ ரிகள் உடையவும்
ப்ராந்தியை அனுபவித்தோம் –

—————————————————————————————————

363
பொறுத்தேன் -6-2
திருவுக்கும் திரு -7-7-
உண்ணிலாய -திருவாய் மொழி -7-1-
கலியன் இந்திரிய பலம் தலை எடுத்து அது தீர திரு நறையூரிலும்
தேரழுந்தூரிலும் -பிராட்டி முன்னாக தன்னுடைய அநந்ய கதித்வம் சொல்லி சரண் புகுகிறார் –
நம் ஆழ்வார் சரண் அடைந்த பின் இந்திரியங்களை கண்டு நடுங்கி கூப்பிடுகிறார் உண்ணிலாய பதிகத்தில்-

————————————————————————————————-

364
வெகுளாது -6-2-7-
சீற்றமுள -11-8-2-
யான் இரந்தேன் -அத்தலை இத்தலையான படி
நீ எதிர் சூழல் புக்கு இரந்து திரிய -நான் அதை மறுத்து வைமுக்யம் பண்ணி திரிந்த கால நீட்சி
அப்படி திரிந்த நான் இன்று இரக்க -இது கேட்டு தேவர் திரு உள்ளம் சீரும்
சர்வ தோஷ யுக்தனாய் அநாதி காலம் இருந்தேன் -நீ சர்வஞ்ஞனாய் இருந்தாய்
ஆன பின்பு நம்மையும் தன்னையும் பாராதே இவன் நிர்தோஷரைப் போலே நம் காலைப் பிடிப்பதே –
சீற்றமுள-திரு உள்ளத்துக்கு சீர வேண்டுவன குவாலை செய்து வைத்து -அநு கூலரைப் போலே திரு முன்பு நின்று -சில சொல்லப் புக்கவாறே –
உன்னைப் போலே ஞான சங்கோசம் உடையவன் இல்லையே அவன் -பழகியான் தாள் பணிமினே –
பரிகரஹித்த சரீரம் தோறும் புதியனாய் இறே இவன் போவது -முன்பு நின்ற நிலை அறியான்
நடு நிற்கிற நிலை அறியான் -மேல் போக்கடியும் அறியான் இவன் –
முன்பு நின்ற நிலையம் அறிந்து -இவனுக்கு சாத்மிக்கும் அதுவும் அறிந்து மேல் போக்கடியும் அறிவான் அவன் இறே
பகவத் அபசாரம் ஈஸ்வர சேஷமான ஆத்மவஸ்துவை என்னது என்று இருக்கை –
அவனுடைய அனுக்ரஹ ஜென்மத்தை கர்ம நிபந்தனமான ஜன்மத்தோடு சமானமாக புத்தி பண்ணுகை
அவன் கிருபையாலே இவன் கோலிற்று ஒன்றை திரு மேனியாக பரிக்ரஹித்தால்-
அதை இதர சஜாதீயமாக பிரதி பத்தி பண்ணுதல் செய்கை பாகவத அபசாரம் –
அர்த்த காம நிபந்தனமாக பொறாமை கொண்டாடுகை அசஹ்யாபசாரம் –
இவை இரண்டு விஷயங்களிலும் பிரயோஜன நிரபேஷமாக செய்கை
இப்படி தேவரீர் திரு உள்ளத்துக்கு சீர வேண்டும்படியான குவாலுள –

——————————————————————–
365-
மூவா வானவர் தம் முதல்வா -6-2-8-
விண்ணுளார் பெருமானேயோ -திருவாய்மொழி -7-1-5-
அகர்ம வச்யராய் உன்னை அனுபவிக்கும்படி பண்ணி வைத்தாயே
உன்னை அனுபவிக்க அவர்களுக்கு கொடுத்து அவர்கள் சத்தையை நிர்வஹித்திக் கொண்டு போரா நின்றாய் –
ப்ராதாக்களிலே ஒருவன் முடி சூடி வாழா நிற்க ஒருவன் சிறைப் பட்டு கிடந்தால் போலே தோன்றா நின்றது ஆய்த்து
அங்கே கேட்கும் படி கிடந்தது கூப்பிடுகிறார்-

——————————————————————————–

366-
முளிந்தீந்த வெங்கடத்து விளிந்தீந்த மா மரம் போல-6-3-8-
ஒண் சங்கதை வாள் -திருவாய் மொழி -8-8-1-
முளிந்து தீந்த -உலர்ந்து தீஞ்சு போன
வெங்கடம் -வெவ்விய பாலை வனம்
விளிந்து ஈந்த -தள்ளப் பட்டு கெட்டுப் போன பெரிய மரம்
சங்கு கதை -கடை குறைத்தல்-

—————————————————————————————–

367-
திரு மார்பா –நம்பீ -6-3-9-
தாமரையாள் யாகிலும் -பெரியாழ்வார் திருமொழி -4-9-2-
லஷ்மீ சம்பந்தமும் மிகையாகும் படி அன்றோ தேவரீரின் பூர்த்தி –
அவளோடு மன்றாடும்படியான கல்யாண குணங்களாலே பூரணன் –

———————————————————————————————-

368
இருக்கிலங்கு –சோழன் சேர்ந்த கோயில் -6-6-8-
மார்கண்டேயன் அவனை நக்க பிரானும் –நாராயணன் அருளே -திருவாய்மொழி -4-5-8-
புருஷ சூக்தம் உச்சரியா நின்று உள்ள தேவர் சிவனுக்கு தர்சநீயமான மாடங்கள் எழுபதும் சமைத்து
பின்னையும் தன்னுடைய அபிமதம் கிடையாமையாலே அவ்வபிமத சித்த்யர்தமாக அந்த
சோழன் வந்து ஆஸ்ரயிக்கிற திரு நறையூர்
ஸ்வ கோஷ்டிக்கு உபகாரன் என்பதால் பிரான்
மார்கண்டேயனுக்கு சர்வேஸ்வரனை காட்டிக் கொடுத்த உபகாரம்
சகல பல பிரதோ ஹி விஷ்ணு–சர்வ லாபாய கேசவ -மோஷமிச்சேத் ஜனார்த்தனாத -என்னா நின்றது இ றே-

————————————————————————————————–

369
ஆய்ச்சி ஒண் கயிற்றால் ஆர்க்க -6-7-4-
எழில் கொள் தாம்பு -பெருமாள் திரு மொழி -7-8-
திரு மேனியிலே அழுந்தும் படியாக கயிற்றால் நெருக்கிக் கட்ட -திரு மேனியை ஸ்பர்சிக்க பெற்றதால்
ஒண் கயிறு -ராஜ ஜன்மமும் வேண்டா -அசேதனமாகவும் அமையும் -அங்குத்தை ஸ்பர்சம் பெறில் என்றிருப்பவர்கள் இ றே-

———————————————————————————————————

370-
பள்ளி கமலத்திடைப் பட்ட –அலவன் –நள்ளி  ஊடும் -6-7-6-
பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்ப-திருப்பாவை -3
கேள்வி இல்லாதபடி பெண்ணரசு நாடாய்த்து -பட்டர்
புஷ்பத்திலே ஸ்பர்ச சௌக்யத்தாலே நஞ்சுண்டாரைப் போலே கிடந்தது உறங்கி
உணர்ந்து எழுந்து இருக்கும் பொழுது -என்னை நீ எழுப்பிற்று இல்லை -என்னை நீ எழுப்பிற்று இல்லை
-என்று ஒன்றுக்கு ஓன்று சீறு பாறு -என்னா நிற்கும் –

——————————————————————————————–
371
கள்வா  -7-1-4
கள்வா -7-2-1-
கள்வா -திரு நெடும் தாண்டகம் -8
கள்வா -திருவாய்மொழி -2-2-10
ஆஸ்ரித விஷயத்தில் இவன் செய்யுமவை பரிசேதிக்கப் போகாது
விலக்க ஒண்ணாதபடி தெரியாதபடி நெஞ்சில் புகுந்தபடி
ஒருவனுக்காக இருக்கும் அத்தை மறைப்பது -தனது வடிவு அழகை காட்டாது ஒழிகை –
இதுவே ஈஸ்வரனுக்கு அபஹாரம் -என்னுடைய ஆத்ம அபஹாரத்தை தவிர்த்தது –
உன்னுடைய ஆத்மாவை அபஹரிக்கைகாகவோ
ருத்ரன் பகவானை குறித்து அருளிய சப்தம் -நமோ கண்டாய கர்ணாய நம -கட கடாய ச –
கருப்புடுத்து தாழ நின்ற நிலையிலே இச் செயலை செய்தால் நாட்டார் மெய் என்று இருப்பார்களோ
பண்டே உன் தொண்டாம் பழ உயிரை என்னது என்று கொண்டெனை கள்வன் என்று கூறாதே
மண்டலத்தோர் புள் வாய் பிளந்த புயலே உன்னை கச்சி கள்வா என்று ஓதுவது என கண்டு -என்றார்
இ றே பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் –

—————————————————————————————————-

372-
பனியேய் பரங்குன்று -7-1-6-
பனி வரையின் உச்சியாய் -திரு நெடும் தாண்டகம் -9-
பனி மிகு இருந்துள்ள ஹிமாவானில் திருப் பிரிதி
பனி வரை -கானமும் வாநரமும் வேடுமுடை வேங்கடம் -நிஹீன ஜாதிக்கும் அகப்பட முகம் கொடுக்க திருமலையிலே வந்து நிற்கிறவன் –
சப்தம் இரு இடங்களிலும் ஒத்து இருக்க சந்தர்ப்ப அநு குணமாக
திருப் பிரிதி திரு வேங்கடம் என்று அர்த்த பேதம் காட்டும் அழகு
பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் இருக்கும் அழகு அனுபவிக்கத் தக்கது –

———————————————————————————————————-

373-
நறையூர் நின்ற நம்பீ –உன்னை அல்லால் –ஏத்த மாட்டேன் -7-2-3-
திருவேங்கடத்து என்னானை உளனாகவே ஒருவருக்கும் என் –கவி கொடுக்கிலேன் -திருவாய்மொழி -3-9-1-
புறம்பாக நினைப்பது விஷயாந்தரங்களையோ தேவாந்தரங்களையோ அன்று -பறம்புற்ற திருப்பதிகளை –
பார் எல்லாம் அன்று ஓங்கி நின்று அளந்தான் நின்ற திரு நறையூர் மன்றோங்க ஊர்வன் மடல் -என்றும் –
உலகு அளந்த நம்பி மேல் குறையை வைத்து மடல் எடுத்த குறையலாளி -என்னா நின்றது இ றே –
எனது வாயாலே ஒரு சொல் கேட்டு தான் உளனாக நிற்க -நான் வேறு ஒருவரை கவி பாடுவேனோ
அசந்நேவ என்று தன்னைக் கிட்டாத வன்று சம்சார சேதனருடைய சத்தை இல்லாதாப் போலே
தான் என்னை கிட்டாத அன்று -தனது சத்தை இல்லாதபடி அவன் வந்து நிற்க –
அவன் என்னைக் கொண்டு கவி பாடுவித்துக் கொள்ளுகைகாக இங்கே வந்து நிற்கிற நிலை
என்னாவது -நான் புறம்பே போய் கவி பாடினால் -மாரி மாறாத தண் அம் மலை வேங்கடத்து
அண்ணலை வாரி மாறாத குருகூர் நகர் காரி மாறன் சடகோபன் சொல்லாயிரம் –
கட்டு எழில் சோலை நல் வேங்கட வாணனை
கட்டு எழில் தென் குருகூர் சடகோபன் சொல்
கட்டு எழில் ஆயிரம் -என்னக் கடவது இ றே
இப்படி அருள் மாரியான கலியனும்
இன்ப மாரியான நம் ஆழ்வாரும்
திரு நறையூரிலும் திரு வேங்கடத்திலும் ஈடுபட்டபடி –

——————————————————————————–

374-
என் நெஞ்சத்துள் இருந்து இனிப் போய் பிறர் நெஞ்சம் புக்கு இருக்க ஒட்டேன் -7-2-7-
மழு வலங்கை கொண்ட இராம நம்பீ –இனி எங்குப் போகின்றதே -பெரியாழ்வார் திருமொழி -5-4-6-
அவன் புகுந்து போக்கை நினைக்க போக ஒட்டேன் என்கிறார்
மலைந்து விலக்கப் போமோ -ஷத்ரிய வம்சத்தை அறுத்துப் பொகட்டிய மிடுக்கர் அன்றோ
உன்னுடைய மிடுக்கை இசையாதவன் அல்லன் -உன்னை ஒழிய வேறு ஒன்றை அறியாத படி
அன்றோ அடியேன் இருப்பது -போகவுமாய் இருப்பார் வன்னெஞ்சர் -அவர்கள் நெஞ்சில் போக இருக்க ஒட்டேன் –
நன்னெஞ்ச வன்ன மன்னும் நறையூர் நின்ற நம்பீ -நீர் குற்றம் கண்டு கை விடப் பார்க்கும் அன்றும் –
ந கச்சித நா பராதயாதி -என்னும் அவள் அன்றோ அருகே இருக்கிறாள்
ஆழ்வார்கள் இப்படி அவன் வந்து புகுந்த பிரகாரத்தையும்
அவன் தங்களை பிரிந்து போனால் தாங்கள் முடியும் படியையும் –
அவனுக்கு போக்கு அன்றிகே நிற்கிற நிலையையும் –
விஷயீ காரத்தையும்
அனுசந்தித்து அருளினார்கள் ஆயிற்று –

—————————————————————————————

375-
யானாய் –அடியேன் மனம் புகுந்த -7-2-9-
யானாய் தானும் ஒழிந்தானே -திருவாய்மொழி -8-8-3-
இவரும் இவராய இவரோடு கலக்கும் இடத்தில் இவர் ஆணை இட்டு விலக்குவார் –
ஆகையால் இவர் என்ற சொல்லுக்குள் நம்மை அடக்கிக் கலப்போம் என்று பார்த்து
நானாகிய சொல்லுக்கு உள்ளே தன்னை அடக்கி கொடு வந்து புகுந்தான் -இது கலியன் அனுபவம்
யானும் தானாய் -என்னை சொல்லும் சொல்லாலே  தன்னை சொல்லலாம் படி
தனக்கு பிரகாரதயா சேஷம் என்னும் இடத்தையும் காட்டித் தந்தான் -ஆழ்வீர் என்றால்
ஏன் என்பான் ஈஸ்வரன் போலே காணும் -அஹம் சப்தமும் அஹம் புத்தியும்
தன்னளவும் செல்லும்படி பிரகார தைக வேஷமாய் இருக்கிறபடியை காட்டித் தந்தான் –
இப்படி இ றே கலியனையும் நம் ஆழ்வாரையும் விஷயீ கரித்த படி –

————————————————————————————-

376
நான் அடியேன் -7-3-1-
அடியேன் நான் -11-8-7
அனந்யார்ஹ சேஷத்வமே ஜீவ ஸ்வரூபம் -பிறர் நன் பொருள் –
ஞாத்ருத்வம்  -அசித் வ்யாவ்ருதி -சேஷத்வம் -ஈஸ்வர வ்யாவர்த்தி
த்வயம் பூர்வ கண்டம் அநந்ய கதித்வம் சொல்லி -பகவத் கிருபைக்கு வர்த்தகம் -அசித் வ்யாவ்ருதி –
உத்தர கண்டம் -அநந்ய பிரயோஜனத்வம் சொல்லி -பகவத் ப்ரீதிக்கு வர்த்தகம் -ஈஸ்வர வ்யாவ்ருதி
அநிஷ்ட நிவ்ருதியும் இஷ்ட பிராப்தியும் இருவருக்கும் ஓன்று போலே காணும் –
நான் அடியேன் அடியேன் நான் என்றே ஆழ்வார்கள் அனைவரும் அருளிச் செய்து இருக்கிறார்கள் –

———————————————————————————–

377
வந்த நாள் வந்து -7-3-3-
நடுவே வந்து -திருவாய் மொழி -1-7-5-
என் ஆழி வண்ணன் பால் இன்று -மூன்றாம் திருவந்தாதி
அடியேன் சதிர்தேன் இன்றே -கண்ணி  நுண் சிறு தாம்பு -5

பிரதம ஸ்வீகாரதுக்கு முன்பு தாம் இட்டது ஒரு பச்சையாய் -அதுக்கு உபகரித்தான் ஆகில் இ றே- இந்நாள் என்னால் ஆவது –
அங்கன் ஒன்றும் இல்லாமையாலே பிரதம ஸ்வீகாரத்தை வந்த நாள் என்னும் இத்தனை யாய்த்து சொல்லலாம் –
இது நிர்ஹே துக விஷயீ காரம் என்றபடி -நிர்ஹேதுகமாக வந்து -விஷய பிரவணனாய் நிற்க -நடுவே வந்து மீட்ட இத்தனை –

——————————————————————————————————-

378
மற்றோர் நெஞ்சு அறியான் -7-3-3-
அனந்தன் பாலும் கருடன் பாலும் ஐது நொய்தாக வைத்து -பெரியாழ்வார் திருமொழி -5-4-8-
மற்று -திருவடி திருவனந்தாழ்வான் தொடக்கமான பக்கலிலும் போவானாய் இருக்கிறான் அல்லன் –
இட வகைகள் இகழ்ந்திட்டு
கல்லும் கனை கடலும் -என்றும்
சொல்லுகிற படியே இவருடைய திரு உள்ளம் தவிர வேறு ஒரு இடமுண்டாவதாக நினைக்க மாட்டான்-

——————————————————————————————————–

379
விளங்கனி மேல் இளம் கன்று எறிந்த கூத்தர் -7-4-2
கோட்டங்கை வாமனனாய் –கூத்துகள் -திருவாய்மொழி -7-5-6-
கோட்டிடை யாடினை கூத்து -திரு விருத்தம் -21

வல்லார் ஆடினது போலே இட்ட நாலடியும் -அவன் நின்றபடியும் உத்தேச்யம்-

——————————————————————————————————–

380-
கள்ளத்தேன் பொய்யாகத்தேன் -7-4-9
பொய்யே கைம்மை சொல்லி -திருவாய்மொழி -7-1-1-
உன்னையும் வஞ்சிக்கும் -திருவாய்மொழி -5-1-3-
சோரேண ஆத்ம அபஹாரிணா -அநாதி காலம் ஆத்ம அபஹாரம் பண்ணிப் போந்த நான்
உன்னையும் வஞ்சிக்கும் -எனது அந்தராத்மா அறிகிறது என்று மறைத்துப் போந்தேன்
பொய் கைம்மை இரண்டும் பரியயமான சொல் -பிறரை பகட்டுகை அன்றிக்கே சர்வஞ்ஞனும்
மெய் என்று பிரமிக்கும் படி பொய்யை அன்றோ சொல்லிற்று-

——————————————————————————————————-

381-
கனவகத்து -7-5-8-
கனவிடத்தில் -திரு நெடும் தாண்டகம் -23
ஸ்வப்ன கல்பமான சம்ச்லேஷத்தில் -இந்த்ரஜாலம் கனவு அஸ்திரமான தேசம்
தேசமும் தேகமும் அஸ்திரம் -என் நீலக் கண்கள் பனி மல்க -மெலி வெய்தப் -போன
கீழும் மேலும் பிரிவு ஸூசகம் உள்ளது-

—————————————————————————————————–

382
கை கூப்பி -7-4-8-
நயங்கள்… செய்வளவில் –திரு நெடும் தாண்டகம் -22-
இடை நோவ சம்ச்லேஷித்த குற்றம் தீரக் கை கூப்பினானாம் -சேவ்யன் சேவகன் ஆனான்
நயங்கள் -நீச பாஷணங்கள் -சர்வேஸ்வரன் சர்வ லோக நாயகன் -அடியேன் -என்றவாறு –
இப்படி வாசிகமாயும் காயிகமாயும் அத்தலை இத்தலை யானபடி –

——————————————————————————————————-

383-
என்னை உகந்தானை நிலமகள் தன் வித்தகன் -7-6-8
நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பனை -திருவாய்மொழி -4-5-8-
பூமிப் பிராட்டியைக் காட்டிலும் தம்மை -முற்பட உகந்தான் -கலியன்
பெரிய பிராட்டியைக் காட்டிலும் தம்மை -முற்பட உகந்தான் –நம் ஆழ்வார்-

——————————————————————————————————-

384-
கூறை சோறு இவை தந்து அருளி -7-7-8-
தோட்டம் இவை எல்லாம் –உன் பொன்னடி -பெரியாழ்வார் திருமொழி -5-1-5-
உண்ணும் சோறு -எல்லாம் கண்ணன் -திருவாய்மொழி -6-7-1-
கூறை சோறும் ஆகிய திருவடி தந்து அருளி -எல்லாம் அவன் பொன்னடி என்றே
உன் பொற்றாமரை அடியே போற்றும் –
தனம் மதீயம் தவ பாத பங்கஜம் –
பொன்னும் பூவும் புறம்பே தேட வேண்டுமோ –
எல்லாம் வகுத்த இடமே -அவிதித விஷயாந்தரர்

வில்லார் மணி கொழிக்கும் வேங்கடப் பொற் குன்றம் முதல்
செல்லார் பொழில் சூழ் திருப்பதிகள் எல்லாம் மருளாம் இருளோடே
மத்தகத்துத்தன தாள் அருளாலே வைத்தவர் -ஞான சாரம்

———————————————————————————————

385-
ஏழு உலகும் அளந்த வென்றித் தனி முதல் சக்கரப் படை -7-8-6-
பொரு மா நீள் படை யாழி –குறளாகி நிமிர்ந்த –திருவாய்மொழி -1-10-1-
ஆழி எழ அப்பன் உலகம் கொண்டவாறே -திருவாய்மொழி -7-4-1-

———————————————————————————————

386-
கலை இலங்கு மொழியாளர் கண்ணபுரம் -8-1-1-
வேத வாய்த் தொழிலாளர்கள் வாழ் வில்லி புத்தூர் -நாச்சியார் திரு மொழி -2-10-
செய்வது அடங்கலும் வைதிக கிரியை-

————————————————————————————————

387-
கண்ணபுரம் தொழுதாள் இவள் கள்வியோ -8-2-1-
ஆளன்றே பட்டது -திருவாய்மொழி -9-6-8-
ஒ படு கொலை -தாயார் -வார்த்தை -பர அவஸ்தையை தொழுதாளோ
வியூகங்களை தொழுதாளோ-அவதாரங்களை தொழுதாளோ-
அர்ச்சையில் நீர் நின்ற ஊரை அன்றோ தொழுதாள்
தொழுகை ஆத்ம அபஹார க்ருத்யமா
ந நமேயம் என்று இருக்கை அன்றிக்கே யசயாஸ்மி என்று அன்றோ இவள் இருப்பது
ஆளன்றே பட்டது ராவணாதிகள் போலே எதிர் அம்பு கோத்தேனோ
ஒ ஓர் ஆத்ம வஸ்து படும் பாடு ஈதே

————————————————————————————————

388-
வடவரை நின்றும் –வந்து யாம் -8-2-6-
கடல் ஞாலம் செய்தேனும் யானே -திருவாய்மொழி -5-6-1-
பரகால நாயகி திருகண்ணபுரம் திரு ஆய்ப்பாடியாகவும் -கிருஷ்ணன் ஸ்ரீ சௌரி ராஜ
பெருமாளாகவும் -அப்பெருமாளும் தானேயாகவும் அநு கரித்து பேசுகிறாள்
பராங்குச நாயகி போலே ஜகத் காரண ரூபியை பற்றும் அவள் இன்று இ றே இவள் –
அர்ச்சை அனுபவமே ஒழிய அவதார அனுபவம் நாய்க்கு இட என்று இருக்குமவள்

ஆப்பான் திருவழுந்தூர் அரையரும் ஆழ்வார் திரு நறையூர் அரையரும் இப்பாட்டை அனுசந்தித்து
இப்பட்டுக்கு ஒரு சேர்த்தி கண்டிலோம் -மகள் அனுகாரத்தை தாய் அனுபாஷிக்கிறாள்
ஆரூட யோகராய் இருப்பார் சிலர் வந்தால் நீர் யார் வந்தது எங்கு நின்றும் வந்த காரணம் எது என்ன –
கேட்குமா போலே கேட்க
வந்தது வடவரை -வடக்கில் திரு மலையில் நின்றும் -திருமால் வைகுந்தமே தண் திரு வேங்கடமே
என்று அத்தலையை பற்றி வருமவள் அன்று இ றே இவள் -அர்ச்சை அவதாரத்துக்கு கொண்டைக் கால்
நாட்டின தேசம் இ றே

செஞ்சொல் கவிகாள் -ஆழம் கால் படாதீர் என்று நித்ய ஸூரிகளுக்கு அருளும் பொழுதும்
தெற்கு திருமலையில் சௌசீல்யத்தை ஆழம் காலாக அருளிச்செய்தது -அப்படியே
வடமலையும் கானமும் வானரமான வற்றுக்கும் முகம் கொடுக்கும் இடம் ஆகையாலே
அச் சீலத்தில் ஈடுபட்டு மற்று ஒன்றைச் சொல்லாள்
வந்த கார்யம் ஆவது -கண்ணபுரம் இன்று இடவகை கொள்வது யாம்
திருக்கண்ணபுரத்தில் நித்ய வாசம் பண்ணுகைக்கு–

—————————————————————————————–

389-
கரை எடுத்த  சுரி சங்கும் — இழந்தேன் -8-3-1-
மாலுக்கு இழந்தது -சங்கே -திருவாய்மொழி -6-6-1-
கீழில் திரு மொழியில் திருத் தாயார் கை வளை கொள்வது தக்கதே -என்று சொன்னாள்
பலகாலும் சொல்லக் கேட்கையாலும் -இவள் அது தன்னை வாய் வெருவுகையாலும் –
கீழ் பிறந்த மோஹம் போய் -அல்பம் அறிவு பிறந்து -அது தான் ஆசுவாசதுக்கு உடலாகை தவிர்ந்து –
தான் படுகிற விசனத்தை அனுபாஷிகைக்கு உடலாக -அத்தாலே இரவல் வாயாலே தனது இழவை
சொல்லாமல் தானே -இழந்தேன் என் வரி வளையே -என் கன வளையே -என் செறி வளையே –
என் பொன் வளையே -என் வரி வளையே-என் ஒளி வளையே -என் ஓளி வளையே -என் செறி வளையே –
என் பெய் வளையே -என்னா நின்றது இ றே

மாலுக்கு -இவளுக்கு பிறந்த தசை முற்றி -அது கண்டு தோழியும் மோஹிக்க –
இவளை ஜீவிப்பிக்க விரகுகளை மநோ ரதிக்கையாலே தரித்து இருந்த திருத் தாயார்
சிதிலமாகிற படியை தனித் தனியே -இழந்தது சங்கே -இழந்தது மாமை நிறமே -இழந்தது பீடே  –
இழந்தது பண்பே -இழந்தது கற்பே -தோற்றது மெய்யே -இழந்தது தன்னுடைச் சாயே –
இழந்தது மாண்பே -தோற்றது பொற்பே -இழந்தது கட்டே -என்னா நின்றது இ றே
கரை எடுத்த பதிகத்தில் வளை இழந்தது மட்டும் கூறப் பட்டது -இது மகள் பாசுரம்
மாலுக்கு பதிகத்தில் வளை தொடக்கமான வற்றை இழந்தது கூறப் பட்டது -இது தாய் பாசுரம்
இவற்றால் சொல்லப்பட்டது பிராப்ய ப்ராபக ஆபாச பரித்யாகம் –
பிராப்ய பிராபக ஆபாசங்களை கை வலிந்து கை கழலக்  கண்டும் -எல்லாம் கிடக்க நினையாது அகன்றும் –
என்றும் -கை முதல் இழந்தார் -என்றும் நாயனார் ஆசார்ய ஹிருதயத்தில் அருளிச் செய்தார்
இவ்வர்த்தம் புராண சித்தம் -புராதன புருஷ அனுஷ்டானம் -புராண பௌ ராணிகர் த்யாஜ்ய அம்சம் ஆக்கின –
கை வலிந்து -என்றது துவளில் பதிகத்தின் சாரம்
கை கழலக் கண்டது மாலுக்கு பதிகத்தின் சாரம்
எல்லாம் கிடக்க நினையாது அகன்று -என்றது உண்ணும் சோறு பதிகத்தின் சாரம்
சித் அசித் வர்க்கமான இவற்றை கை விட்டார்
உறங்குவான் கைப் பண்டம் போலே கையில் நின்றும் நெகிழ்ந்து போகக் கண்டார்
சர்வான் போகான் பரித்யஜ்ய -இவற்றை ஒன்றாக நினையாமல் உபேஷித்தார்

தான் இகழ வேண்டாமல் தன்னை விடல் சொல் மாறன் -மாலுக்கு பதிக சாரம் மணவாள மா முனி அருளி காட்டுகிறார் –

———————————————————————————————–
390
கனம் செய் மா மதிள் கண புரத்தவனொடும் -8-5-9-
நாகை அழகியாரை -9-2-10-
தந்தை கால் -8-5-பதிகத்தில் ஒன்பதாவது பாசுரத்தில் மட்டுமே திவ்ய தேச நாமம்
அது போல் -பொன்னிவர் மேனி -9-2-பதிகத்திலும் பத்தாவது பாசுரத்தில் மட்டுமே திவ்ய தேச நாமம்
நிர்தேசித்து அருளி இருக்கிறார் –

————————————————————————————————

391-
கல்லால் கடலை அடைத்தான் -8-6-4-
ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் அடைத்து -திருமாலை -11-
கல்லால் நீரில் இட்டால் ஆழக் கடவ மலைகளைக் கொண்டு கடலை அடைத்தான்
சக்கரவத்தி திரு மகன் –

கைக்கு எட்டிய ஒரு வில்லால்  இ றே கடலை அடைத்தது –
கையும் வில்லுமாய் கண்ட வீர உறைப்பைக் கண்டு -கீழ் மண் கொண்டு மேல் மண் எறிந்து
கொந்தளிக்கும் படியை சொல்லுகிறது ஓங்கு முந்நீர் என்று –
ஆர்த்திக்கு இரங்காமல் அம்புக்கு இரங்கினபடி –
உபாத்யாயர் கையில் கசை கண்டு பிரஜைகள் காலிலே விழுமா போலே
திருவடிகள் அளவும் வந்து வெள்ளம் கோத்தது ஆய்த்து –
அடைத்து -நாலிரண்டு அம்பு விட்ட வாறே வந்து முகம் காட்டி முதுகு எடுத்துக் கொடுத்தவாறே அதன் மேலே யாயிற்று அணை கட்டிற்று –
ஆகையால் கல்லால் அன்று அடைத்தது வில்லால் என்கை –
இங்கன் அன்றாகில் இட்ட இட்ட மலைகள் எல்லாம் ஆழ்ந்து போய் அடைத்ததாய்  தலைக் கட்டாது –
ஆகையால் முதல் கண் நடந்த விஷயத்தை வில்லால் என்று தொண்டர் அடி பொடி ஆழ்வாரும்
பின்னே நடந்த விஷயத்தை கல்லால் என்று கலியனும் அருளிச் செய்தார்கள் -இருவரும் ஏக கண்டர்கள்  இ றே –

—————————————————————————————————

392-
பின்னை மணாளனாகி முன் கரும் தாள் களிறு ஒசித்தான் -8-6-6-
வாரணத்தை மருப்பு ஒசித்த பிரான் என் மாதவனே -திருவாய் மொழி -2-7-2-
பார் அணங்கு ஆளன் வாரணம் தொலைத்த -திருவாய்மொழி -10-5-2-
பிரதான மகிஷிகள் மூவரும் இவ் வபதானத்துக்கு இ றே தோற்றுக் கிடப்பது –
ஆனை காத்து ஓர் ஆனை கொன்று -என்று குணமாக அருளிச் செய்தார் திரு மழிசை ஆழ்வாரும் –

———————————————————————————————————-

393-
கண்ணபுரம் ஓன்று உடையானுக்கு அடியேன் -8-9-3
தயரதற்கு மகன் -திருவாய் மொழி -3-6-8-
இத்தால் தமது ஸ்வரூபம் சொல்கிறார் கலியன் -அசாதாராண விபூதி யுக்தன் ஒருவனுக்கே
வானவர் நாடு பரம பதமும் அன்றிக்கே
நான்முகனார் பெற்ற நாடான லீலா விபூதியும் அன்றிக்கே
தான் உகந்த திருப்பதிகள் ஆகையாலே -திருக் கண்ணபுரமே அவனுக்கு அசாதாராண விபூதி என்றபடி –
அனன்யார்ஹ சேஷ பூதராய் இருக்கும் படி இப்படி அருளுகிறார்
தயரதன் மகன் என்னாதே தயரதற்கு மகன் -வெற்றிலை செருக்கிலே ராஜ்யத்தை தந்தேன் என்ன-
ஸ்திரீ பர தந்த்ரனாய் தந்திலேன் என்ன காடேறப் போ என்று சொல்லலாம்படி -இஷ்ட விநியோஹ அர்ஹனான பகவான் –
சேஷி உடைய சேஷத்வம் இருந்தபடி –
கோதை பொருட்டு -திருவாய்மொழி -3-5-4–என்றும் உண்டும் இ றே
பவான் நாராயண என்று வந்து சொன்னால் ஆத்மானம் –மன்யே –தசரதாத்மஜம் -என்னும்  அவன் இ றே
இப்படி கலியனும் நம் ஆழ்வாரும் சேஷ சேஷிகளை அனுபவித்தபடி –

—————————————————————————————————-

394-
கண்ணபுரம் ஓன்று உடையானுக்கு அடியேன் -8-9-3-
எனக்கே ஆட் செய் -திருவாய்மொழி -2-9-4-
கண்ணபுரம் ஓன்று உடையானுக்கு என்று அகாரார்தத்தையும்
அடியேன் என்று மகாரார்த்தையும்
ஒருவருக்கு உரியேனோ என்று உகாரார்த்தையும்
சொல்லா  நின்று கொண்டு பிரணவ அர்த்தத்தை அருளி –
எனக்கே -முதலில் ஆட் செய்ய வேணும் -ஸ்வா தந்த்ர்யத்தை வ்யாவர்த்திக்கிறது
எனக்கு ஆட் செய் -அப்ராப்த விஷயங்களை வ்யவர்த்திக்கிறது
எனக்கே -தனக்கும் எனக்கும் என்ற பொதுவான நிலை தவிர்ந்து பரார்த்த கைங்கர்யம் பரம
புருஷார்த்தம் -ஆய -விபக்தியின் அர்த்தம் -வழு விலா அடிமை செய்ய வேண்டும் நாம் –
பிரணவத்தில் லுப்த சதுர்த்தி சேஷ தர்மமான சேஷத்வத்தை காட்டும்
இந்த வ்யக்த சதுர்த்தி சேஷ வ்ருதியானசேஷத்வத்தைக் காட்டும் -இது இல்லையேல் சேஷத்வம் இல்லை
குருஷ்வமாம் அநுசரம் -குருஷ்வ நம பதார்த்தம்
மாம் பிரணவார்தம்
அநுசரம் நாராயண பதார்த்தம்
இருவகை சேஷத்வங்களும் நிரூப்ய நிருபக பாவம் உண்டு
இப்படி இரு ஆழ்வார்களின் அனுபவம் –

————————————————————————————————–

395
நின்னை அல்லால் வருதேவர் மற்றுளர் என்று –கருதேன் -8-10-2-
மற்றுமோர் தெய்வம் உளது என்று இருப்பாரோடு உற்றிலேன் -8-10-3-
சம்சார பிரளயத்தில் நின்று எடுக்க நீ கண்ணபுரத்தில் நிற்க
தேவதாந்திர சம்பந்தம் த்யாஜ்யம் என்றார் முதலில் –
அடுத்து தேவதாந்திர சம்பந்தம் உடையாரும் த்யாஜ்யர் என்கிறார்
சாத்விகர் ஒழிய யாருடன் காலம் செலுத்த மாட்டேன்
எண்ணாத  மானிடத்தை எண்ணுபவனும் அல்லேன்
பேராளன் பேரோதும் பெரியோரை ஒரு போதும் பிரிவேனும் அல்லேன் –
இப்படி அந்வய வ்யதிரேக உக்திகள்
தேவதந்த்ரங்களும் தத் சம்பந்திகளும் த்யாஜ்யர்
பரதத்வமும் தத் சம்பந்திகளும் உத்தேச்யர்
விஷய சதுஷ்டயம் உக்தம் –

———————————————————————–

396-
உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -8-10-3-
அல்லிக் கமலக் கண்ணனை -திருவாய் -மொழி 8-10-11-
உன் அளவில் நின்றவன் அல்லேன் என்றதும் சௌரி ராஜ பெருமாள் அல்லிக் கமலக் கண்ணன் ஆனானாம் -நஞ்சீயர் நம்பிள்ளை சம்வாதம் –
நீக்கமிலா அடியார் தம் அடியார் அடியார் அடியார் எம் கோக்களே -என்று பாகவத சேஷத்வதின் எல்லையில் நின்றதும்
அல்லிக் கமலக் கண்ணன் ஆனான் போலே திருக்  கண்கள் சிவந்து புதுக் கணித்தது-

—————————————————————————-

397-
பெண்ணானாள் -8-10-4-
பெண்ணாகி -2-6-1-
பேயாகி இருந்து வைத்து பெண் ஆனாள் -தாயாக தன்னைப் பாவித்து வந்தாள்
யசோதை நிருபாதிக ஸ்த்ரீத்வம் கொண்டவள் –
புருஷோத்தமன் ஆஸ்ரித ரஷணார்தமாக அவதரிதத்தான் –

—————————————————————-

398-
பாட்டினால் உன்னை என் நெஞ்சினில் இருந்தமை -காட்டினாய் -8-10-9-
ஏத்தி உள்ளப் பெற்றேன் -திருவாய்மொழி -4-5-2-
உள்ளே இருந்து பாடுவிக்கிறான் ஒருத்தன் உண்டு என்று அறிந்த இது திருக்கண்ண புரம் இவரைப் பாடுவித்த முக்கோட்டை
ஏத்தி -மன பூர்வ வாகுத்தர என்கிற நியதி இவருக்கு இல்லை
நினைத்தன்று போலே காணும் ஏத்திற்று
நா முதல் வந்து புகுந்து நல இன் கவி தூ முதல் பத்தாக தான் தன்னை சொன்னான்
கரணங்கள் விடாய்த்தது போலே தாமும் தனித் தனியே அனுபவிக்க
நாட்டினை உனக்கு என்னை உன் தொண்டாக -அடிமை சுவடு அறியாத என்னை
இவன் நம்முடையான் என்று நாட்டினாய் -உன் அங்கீகாரம் பெற்று கர்மங்களை வாசனையோடு போக்கிக் கொண்டேன் –
பாடின கவி வழியாலே உன்னை சர்வஞ்ஞன் சர்வசக்தன் ஆக இருக்கிற நீ
எனது ஹிருதயத்தில் இருந்தமை காட்டி அருளினாய் –
இவர் வாக்கு கவிபாட இவர் தாம் நம்மோபாதி அனுசந்தித்தார்-

—————————————————————————-

399-
நாகை அழகியாரை -9-2-10
தாள் பரப்பி மண் தாவிய ஈசனை -திருவாய்மொழி -3-3-11-
பகவத் திவ்ய மங்கள விக்ரகத்தின் சௌந்தர்யத்தில் ஈடுபட்டு திவ்ய தேச பேரையும் மறந்து
அச்சோ ஒருவர் அழகிய வா -என்று விஸ்மிதர் ஆனார் -இந்த ஒரு பாசுரத்தில் தான் நாகை அழகியார் என்று திவ்ய தேச நாமம் –
தாள் பரப்பி -இந்த பதிகத்தில் நம் ஆழ்வார் திருவேங்கடத்தையும் திருவேங்கடத்தானையும் அனுபவித்து
நிகமத்தில் -அது தன்னையும் விட்டு திரி விக்ரமனாகவே அனுபவிக்கிறார்
மருக நபீம குசர கிரிஷ்டா -வேதம் சொன்னதை தமிழ் செய்த மாறன் அருளி காட்டுகிறார் –

—————————————————————————————-

400
ஏழும் இரண்டும் ஓர் ஒன்றும் -9-2-10-
ஒன்றினோடு நான்கும் ஓர் ஐந்தும் -7-8-10
ஒன்பதோடு ஒன்றும் 4-3-10
ஓன்று நின்ற ஒன்பதும் -11-2-10-
ஓன்று நின்ற ஒன்பதும் -11-8-10-
உயிர் தோழியும் தானுமாய் -ஸ்வ அனுபவம் -ஏழு பாட்டும் -எல்லாரையும் குறித்து பர உபதேசம் இரண்டு பாட்டும்
பல ஸ்ருதி ஒரு பாட்டுமாய்
-ஒன்றி -அவதார கந்தமான ஷீரார்ணவ வாசியை ஒரு பாட்டாலும் – நின்று திர்யக்காய் அவதரித்த
படியை முன்னிவ் உலகு -என்கிற இரண்டாம் பாட்டிலும் -சிலம்பு முதல் -என்கிற நாலாம் பாட்டிலும் –
சினமேவும் என்கிற ஐஞ்சாம் பாட்டிலும் -பன்றியாய் -என்கிற பத்தாம் பாட்டிலும் -ஆக நாலு பாட்டிலும்
ஒரு பிரகாரமாகவும் -மற்றைய ஐஞ்சு பாட்டிலும் கஜேந்திர ரஷன அர்த்தம் வாமன ராம கிருஷ்ண
ரூபேண மாகவும் வந்த அவற்றின் சேர்த் திக்கு திரு உள்ளம் பற்றி இப்படி அருளிச் செய்கிறார் –
ஒன்பதோடு ஓன்று -முதல் பாட்டில் பேரருளான எம்பெருமானை என்று உபக்ரமித்து
நிகமத்தில் வானவர் கோனை -என்று உப சம்கரிகையாலே தேவ ராஜா அபிதானம் உடைய
தேவப் பெருமாளை தாம் செம் பொன் செய் கோயிலிலே கண்டவராக அருளிச் செய்தார் –
போக மண்டபத்தை நலம் உடையவன் -என்றும் அருள் கொடுக்கும் படி கேழில்லா பெருமானை
அருளினன் என்றும் -கோயில் திருமலைகளில் அனுபவித்த அநந்தரம் -பெருமாள் கோயிலிலே தேவராஜனை
அயர்வறும் அமரர்கள் அதிபதி என்று அருளிச் செய்தார் இ றே நம் ஆழ்வாரும் ஆழ்வாரும் –
வானவர் கோனை என்று பரம பத நாதனை சொல்லிற்றாக ஒண்ணாது -கண்டமை யாய்த்து
சொல்லிற்று இ றே என்று வ்யாக்யாதா பரம பத நாதனை கண்ணால் காணவும் இயலாது
தொழுது என்னவும் கூடாது இ றே -தேச விப்ரக்ருஷ்டம் இ றே பரத்வம் -உய்ந்து ஒழிந்தேனே -வாழ்ந்து
ஒழிந்தேனே -அல்லல் தீர்ந்தேனே என்கையாலே இங்கனே நிர்வகிக்க வடுக்கும் -இப்படி
தன்னுடைய ஆனந்தத்தை ஒன்பது பாட்டிலும் அருளிச் செய்து பல ஸ்ருதியாக பத்தாம் பாட்டை
அருளிச் செய்தார் கலியன் -என்றபடி
ஓன்று நின்ற ஒன்பதும் -திருவாய் மொழி -கீழ் ஒன்பது பாட்டிலே பட்ட நலிவும் இது ஒரு பாட்டிலே
நலிவுமானால் இதுவே மிக்கு வாசாம் அகோசரமாய் இருக்கும் -என்றபடி –
கீழ் எல்லாம் அவனை பெறாமையாலே பாதக பதார்த்தங்கள் கையில் நோவு பட்ட வ்யசனத்தை
சொல்லிக் கூப்பிட்டார் -கண்ணன் மர்மஞ்ஞன் ஆகையாலே நப்பின்னைகாக தான் கருமாரி பாய
ஒருப்பட்டதை நினைவுஊட்ட -திடுக்கிட்டு -வாளேறு காணத் தேளேறு மாயுமா போலே
ஆழ்வார் மிகவும் வருந்துகிறார் -கீழே தாம் பட்ட விசனம் இவருக்கு மற்றவற்றால் வந்தது –
இதிலே தாம் பட்ட விசனம் ஜகத் சத்தா ஹேதுவான பகவானுக்கு ஏற்பட்ட ஆபத்தை நினைத்து
அவனுக்கு என் வருகிறதோ என்று வயிறு பிடிக்கை இ றே ஸ்ரீ வைஷ்ணத்வம் -அது உடையவர் கலியன்

11-8-10-ஓன்று நின்ற ஒன்பதும் கீழே நோவு பட ஒரு பாட்டாலே நோவு பரிஹரித்த படி –
அஹம் -என்று ரஷகனான தன்னைக் காட்டினான் -அவன் இ றே குன்றம் எடுத்து ஆநிரை காத்தவன் –
ஆங்கு ஜல வர்ஷமிங்கு பகுதா சந்தத துக்க வர்ஷம் -ஆபத் ரஷகன் -சர்வஞ்ஞன் சர்வ சக்தன் -பிரப்தன் -பூரணன்
ஸ்ரீ கிருஷ்ணன் -இவை எல்லாம் அஹம் சப்தார்தம்-

———————————————————————————–

401-
தொழுதும் எழு -9-3-1-
தொழுது எழு -திருவாய்மொழி -1-1-1-
இதை  பாசுரம் தோறும் அன்வயித்து அனுபவிப்பது போலே
கலியன் பாசுரம் தோறும் அருளிச் செய்து இருப்பது அனுபவிக்கற்  பாலது –

———————————————————————————-

402-
ஏது செய்தால் மறக்கேன் –தொழுதும் எழு -9-3-3-
என்னுடைய பந்து –திருவாய்மொழி -6-2-1-
நினைக்க  ஒண்ணாமை அன்றிக்கே மறக்க ஒண்ணாது என்கிறார் –
நாட்டார் அபிமதர் பிரிந்தால் -கூடின போது மறக்க மாட்டாராய் -பிரிந்த போது நினைக்க மாட்டாராய் இருப்பார்கள் –
இங்கன் அங்கன் அன்றிக்கே -பிரியில் மறக்க ஒண்ணாதபடி யாய் இரா நின்றது –
இனி அவர்கள் படி அன்றிக்கே நம்மது விசஜாதீயமாய இருந்த பின்பு கிட்டினால்
தான் மறக்க்கலாமாகில் பார்ப்போம் -போந்து காணாய் என்கிறாள் –
இவள் படி வ்யாவ்ருத்தமாய் இ றே இருப்பது –
தொழுதும் ஏழு -மறைக்கைக்கும் தொழ வேணும் போலே காணும் -எதேனுமாக
அபிமத லாபம் தொழுகையால் அல்லது இல்லையாய் இருந்தது -மனமே தொழுதும் எழு புல்லாணியே
ஏது செய்தால் மறக்கேன் -என்கிறார் இ றே
என்னுடைய பந்து -பிறந்தவாற்றில் சரணாகதி செய்த ஆழ்வார் -பெரிய ஆர்த்தி உடன் தூது விட்டார்
ஆனைக்கு அருளியது போலே அவன் பதறி அடித்து வாரா நிற்க -முடிந்து பிழைபதுக்கு மேல் பட்ட
பரிகாரம் இல்லை -போகத்துக்கு அவன் வேண்டியது போலே முடிவுக்கும் அவன் வேண்டுமே
என்னுடைய பந்து -அவன் சன்னதியில் என்னது எனபது மேற்பட்ட முடிவு இல்லை இ றே
ஆழ்வார் தாம் முடியவும் பகவத் சன்னதி வேணும் என்கிறார் கலியன் பகவானை மறக்க பகவத் சன்னதி வேணும்
எனபது போலே -மறதியும் முடிகையும் பர்யாயம் இ றே-

————————————————————————————-

403-
ஏது செய்தால் மறக்கேன் -9-3-3
உணரில் உள்ளம் சுடுமால் -9-3-5-
கீழில் மறக்க ஒண்ணாது என்றதே -இங்கே நினைக்க ஒண்ணாது என்கிறது
பகவானை மறக்கவும் ஒண்ணாது நினைக்கவும் ஒண்ணாது என்றபடி-

———————————————————————————-
404-
ஓதி நாமம் -9-3-9-
நாம் தொழுது ஏத்தினால் -11-2-9-
ஆம் கோணைகள் செய்து -திருவாய்மொழி -5-3-9-
புருஷார்த்தம் ஸுய யதன லாபம் என்றிருப்பார் படுவது எல்லாம் படக் கடவோம் –
ப்ராப்யம் என்று இருக்கை தவிர்ந்து பிராபக புத்தி பண்ணக் கடவோம்
ஸ்வகத ஸ்வீகார பிரபத்தி -அல்லது பக்தி பரமாகவும் ஒரு யோஜனை உண்டு
ஏதேனும் ஒரு கிரியா மாதரத்தை பண்ணக் கடவோம் -ஸ்வரூபத்தை அழித்து ஆகிலும்
பெறக் கடவோம் ஞான விபாக கார்யமான அஞ்ஞானம் -அடிக் கழஞ்சு பெரும்
ஸ்வரூப அநுரூபம் புருஷார்த்தம் என்னும் அதில் காட்டிலும் பிராப்ய அனுகுணம் ஸ்வரூபம் –
——————————————————————————-

405-
திரு மா மகளைப் பெற்றும் என் நெஞ்சகம் கோயில் கொண்ட -9-5-10-
நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பனை -திருவாய்மொழி -4-5-8-
ஈசன் வானவர்க்கு –என் கண் பாசம் -திருவாய்மொழி -3-3-4-
நம் கட்கும் அமரர்க்கும் இன்பன் -திருவாய்மொழி -10-1-6
இன்பு முற்படுவது -நாயனார்
அவர்கள் சத்தை பெற அவர்கள் உடன் கலந்து
தான் சத்தை பெற என்னுடன் –நீசன் நிறை ஒன்றும் இல்லாத -என்னுடன் -கலந்தான்
ஜீவனம் அங்கு -நெஞ்சும் உடம்பும் இங்கே –
அன்று ஈன்ற கன்றின் பக்கல் வத்சல்யத்தாலே முன் அணைக் கன்றையும் புல்லிட வந்தாரையும்
கொம்பாலும் குளம்பாலும் குத்தித் தள்ளும் தேனு போலே-

———————————————————————————–

406-
அரவில் துயிலும் புனிதர் -9-6-2
பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் -திருப்பாவை -2-
ஜகத் ரக்ஷண சிந்தை -ஆஸ்ரித அர்த்தமாக -செய்யும் தூய்மை -வடிவில் பிறந்த புகர்
தகட்டில் அழுந்திய மாணிக்கம் போலே -குணத்தை ஏற்றதை சொல்லிற்றாகவுமாம் –
கிடந்ததோர் கிடக்கை -கோலத் திகழக் கிடந்தாய் -மேன்மை சுத்தி சௌந்தர்யம் -தோற்ற –

—————————————————————————————-

407-
வாழக் கண்டோம் வந்து காண்மின் தொண்டீர்காள் -9-6-3-
வாழாட் பட்டு நின்றீர் உள்ளீரேல் வந்து மண்ணும் மணமும் கொண்மின் -திருப்பல்லாண்டு -3-
அக்கும் பதிகத்தில் -நின்ற பண்பர் -நின்ற நம்பியை முதல் பாட்டிலும் -துயிலும் புனிதர் -கிடந்த நம்பியை
இரண்டாம் பாட்டிலும் -அனுபவித்த கலியன் இதில் -வாழக் கண்டோம் வந்து காண்மின் தொண்டீர்காள்-என்கிறார் –
நம்பி மேல் ஆழம் கால் பட்டு மங்களா சாசனம் செய்து வாழும் ஸ்ரீவைஷ்ணவர்களை கண்டு
அனுகூலரை அழைக்கிறார் -பெரியாழ்வார் போலே –

————————————————————————

408-
துன்னு மா மணி முடிப் பஞ்சவர்காகி முன் தூது சென்ற -9-7-2
பின்னோர் தூது ஆதி மன்னர்க்காகி -2-2-3-
-ராஜ்ஜியம் இழந்தவர் -பாண்டவர்கள் –மா மணி முடிப் பஞ்சவர்ஆதி மன்னர் -ஈஸ்வர அபிப்ராயத்தாலே –

——————————————————————————————
409
விடம் கலந்து அமர்ந்த அரவணை -9-8-6-
விடத் தேள் எறிந்தால் போல் -நாச்சியார் திருமொழி -36-
உகவாதார் மேலே விஷத்தை உமிழ -விஷம் இல்லாத தேளும் உண்டு போலே காணும் –

————————————————————————————–

410-
நேசம் இல்லாதவர்க்கும் நினையாதவர்க்கும் அரியான் -9-9-6-
கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில் எண்ணிலும் வரும் -திருவாய்மொழி -1-10-2-
பரம பக்தி இல்லாதவர்க்கும் -அவனை இல்லை என்கைகாகவது நினையாதவர்க்கும் அரியவன்
பரம பக்திக்கும் அத்வேஷத்துக்கும் வாசி அறியாதே தன்னைக் கொடுப்பவன்
அன்வய வ்யதிரேக உக்திகள்-

————————————————————————————–

411-
நினையாதவர்க்கும் -9-9-6
கடல் மலை தல சயனது உறைவாரை எண்ணாதே இருப்பாரை இறைப் பொழுதும் எண்ணோமே -2-6-1-
நித்ய ஸூரிகள் இடையே இருக்கக் கடவ வஸ்து இப்படி சம்சாரிகள் புகுந்து தரைப் பட்டு கிடப்பதே
இது ஒரு நீர்மை இருக்கும் படியே –
இப்படி எண்ணாத கேவல தேக போஷண பரராய் இருப்போரை எண்ணோமே -என்கிறார் –
அவர்களைக் கண்டு நடுங்கைக்கும் பரிஹரிகைக்கும் கூட நினைக்க மாட்டேன் –
நாஸ்திகர் பகவானை நினையாமை -ஸ்ரீ வைஷ்ணவர்கள் நீசர்களை நினையாமை இரண்டும் கூறப் பட்டது –

————————————————————————————–
412
அரிமாச் செகுத்து -9-10-8-
அரிமாத தொலைய -10-6-9-
அரிமாச் செகுத்து -11-2-2-
கோளரிமாத்  தான் சுமந்த -பெரிய திரு மடல் -20
அரிமா -குதிரை சிங்கம் இரண்டு பொருளிலும்
மா -மிருகம் -கைம்மா -யானை -பரிமா -குதிரை அரிமா -சிங்கம் –
அரிமா -குதிரையான கேசி -வேகம் உள்ள குதிரை -பச்சை குதிரை -சத்ருவான குதிரை -கோளரிமா -சிங்கம் –

—————————————————————————————–
413-
குடமாடுவார் –விளங்கு புரி நூலர் -9-10-10-
வண்ண மாடங்கள் சூழ் திருக் கோட்டியூர் கண்ணன் -பெரியாழ்வார் திருமொழி -1-1-
ஐஸ்வர்யம் மிக்கு செருக்கு போக்கு வீடாக குடமாடுவார் இடையர்
கூத்தர் குடம் எடுத்தாடில் கோவிந்தனாம் என ஓடும் –
இங்கே ப்ராஹ்மண  க்ருத்யமாக அருளியது பக்தி காரிதமான நர்த்தனம் -அன்றிக்கே
திருக் கோட்டி யூரே திரு ஆய்ப்பாடி என்ற சமாதியில் அருளினார் -என்னவுமாம்
கன்று கொண்டு விளம் கனி எரிந்து ஆநிரைக்கு அழிவு என்று மா மழை நின்றுகாத்து
உகந்தான் -திருக் கோட்டி ஊரானே -என்று இவரே அருளிச் செய்கிறார் –

————————————————————————————-
414
இன் தமிழ் பாடுவார் -9-10-10-
இங்கு இரும் தமிழ் நூல் இவை மொழிந்து -திருவாய்மொழி -10-6-4-
தாம் பாடியவற்றை இன் தமிழ் இரும் தமிழ் என்று அவனடியாக வந்தததால் கொண்டாடுகிறார்கள் –
சதுர்முகன் சந்தசும் சஜாதீய பிரசாதமும் ஆஷா மூலம்
திருமால் அருள் கொண்டு இவர் பாடினார் -என்னைத் தன்னாக்கி என் நா முதல் வந்து புகுந்து
தப்புதல் அற தன்னை வைகுந்தனாக தன் சொல்லால் தானே துதித்து -மலைக்கு நாவியல்  மொய்ய
சொலால் சொல்ல  வல்லேன் என்று நானும் சொல்லி நாடும் கை எடுக்கும் படி என் சொல்லால்
யான் சொன்ன இன் கவி என்பித்தான் -என்றார் இ றே -ஆசார்ய ஹ்ருதயத்தில் –

——————————————————————————
415-
எம்பிராக்கள் 10-5-2
அரும் பெறல் அடிகள் -திருவாய்மொழி -1-3-1-
பன்மை ஒருமை பொருளில் வந்தது -பூஜாயாம் பஹு வசனம் -என் ஸ்வாமி யானவனே என்ற பொருளில்-

————————————————————————————
416
நான் அவல் அப்பம் தருவான் -10-5-6-
உண்ணக் கனிகள் தருவன் -பெரியாழ்வார் திருமொழி -2-3-11-
உண்ணக் கனிகள் தருவன் -பெரியாழ்வார் திருமொழி -2-4-4-
பழன மீன் கவர்ந்து உண்ணத் தருவன் -திரு நெடும் தாண்டகம் -27
பகவத் பாகவத விஷயத்தில் கிஞ்சித் கரிக்கும் முறை அருளுகிறார்கள்
வர்ண ஆஸ்ரம அனுகுணமான -பகவானுக்கு -ஆசார்யனுக்கு அவன் உகந்தவை இட வேணும்
சாந்தீபன் காதல் என் மகன் புகலிடம் காணேன் கண்டு நீ தருவாய் -கண்ணனும் சிறுவனைக்
கொடுத்து குறை முடித்தான் -பஷிக்கு பஷங்கள் போலே ஆசார்யனுக்கு ஞான அனுஷ்டானங்கள் சிறகு இ றே –

————————————————————————–
417
மாய வலவைப் பெண் வந்து முலை தர –உயிரை உண்ட -10-5-8-
சகடத்தை தள்ளி –தாயாய் வருவாளை உயிர் உண்ட -10-5-9-
சினத்தினால் தென் இலங்கை கோமானைச் செற்ற -திருப்பாவை 12
புள்ளின்  வாய் கீண்டானை –அரக்கனைக் கிள்ளிக் களைந்தானை -திருப்பாவை -13
பூதனை -சகடம் பூதனை அடுத்து அடுத்து அருளி கலியன்
பூதனை பின்பு சொல்லி மாறாட்டம்
ஆண்டாளும் ராம -அவதார சேஷ்டிதம் முதலில் அருளி -பின்பு ராம கிருஷ்ண -ராம சரித்ரம்
பின்னே அருளி மாறாட்டம்

————————————————————————————

418
தனக்காக்க வல்ல பெருமான் -10-6-6-
தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே -திருவாய்மொழி -2-9-4-
மற்றை நம் காமங்கள் மாற்று -திருப்பாவை-29
ஸ்ரீ ய பதித்வத்தல் -மிதுனமாய் பரிமாறும் தன்மை -நித்ய கிங்கர பரஹர்ஷயாமி –
படியாய் கிடந்தது உன் பவள வாய் காண்பேனே –
ஈஸ்வரன் தனக்கே யாய் இருக்கும் –
அசித் பிறர்க்கே யாய் இருக்கும் –
ஆத்மா தனக்கும் பிறர்க்குமாய் பொதுவாய் இருக்கும் என்ற முற்பட்ட நினைவு -அங்கன் அன்றிக்கே
அசித்தை போலே தனக்கே யாக எனைக் கொள்ள வேண்டும் என்கிறது நமஸ்ஸாலே -முமுஷுப்படி –

—————————————————————————————
419-
மானமுடைத்து -10-7
வெண்ணெய் விழுங்கி –பெரியாழ்வார் திருமொழி -2-9
ஆற்றிலிருந்து -பெரியாழ்வார் திருமொழி -2-10
ஆய்ச்சியர் பாவனையில் கிருஷ்ண லீலைகள் அனுபவம் இந்த பதிகங்களில் –

———————————————————————————–
420
மானமுடைத்து -10-7
கேசவன்தமர் -திருவாய்மொழி -2-7
கலியன் 14 பாசுரங்களும் நம் ஆழ்வார் 12 பாசுரங்களும் அருளி இருக்கும் பதிகங்கள்
இதனால் 1084 பெரிய திருமொழி பாசுரங்கள்/1102 திருவாய்மொழி பாசுரங்கள்-

————————————————————————————

421-
மேலை யகத்து நங்காய் வந்து காண்மின்கள் -10-7-2-
கீழை யகத்து தயிர் கடைய -பெருமாள் திருமொழி -6-2-
வடக்கில் அகம் புக்கிருந்து –கன்னியை வேற்று உருவம் செய்து -பெரியாழ்வார் திருமொழி -3-1-2-
கீழை மேலை வடக்கில் அவை புறம்பாக தன் பற்று உள்ள அசல் -ஆசார்ய ஹிருதய ஸ்ரீ ஸூ க்தி
மா முனிகள் -வியாக்யானம்
கீழை யகத்து தயிர் கடைய -கிரியையும் -கர்ம யோகம்
மேலை யகத்து நங்காய் வந்து காண்மின்கள் –தர்சனமும் -ஞான யோகம்
வடக்கில் அகம் புக்கிருந்து –கன்னியை வேற்று உருவம் செய்து -அனுபவமும் -பக்தி யோகம்-

————————————————————————————-

422-
வெள்ளி மலை இருந்தால் ஒத்த வெண்ணையை வாரி விழுங்கி -10-7-3
விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய் -முதல் திருவந்தாதி -24
திருடின வெண்ணெயை புஜித்தான் -புஜிப்பதற்க்கு முன்னமே பிடி பட்டான் –
பிழை திரு நறையூர் அரையர் பட்டரை கேட்க -இவனுக்கு என்றும் திருப் பணி இது அன்றோ –
ஒருநாள் அங்கனுமாகிறது-இங்கனுமாகிறது -வைகலும் வெண்ணெய்  கலந்து உண்டான் –
கால பேதம் ஒழிய சௌர்ய பேதத்தால் வந்த விரோதம் இல்லை –

——————————————————————————————

423
இந் நம்பி பிறந்த ஏழு திங்களில் -10-7-9-
நாள்களோர் நாலைந்து திங்கள் அளவிலே -பெரியாழ்வார் திருமொழி -1-2-11-
பொங்கும் பரிவால் சகடாசுர  பங்கம் பற்றி பெரியாழ்வார் மறைத்து அருளுகிறார் –

————————————————————————————–
424-
மங்கை நல்லீர் வந்து கொண்மின் -10-7-11
கோழி அழைப்பதன் முன்னம் -நாச்சியார் திருமொழி -3-1-
வஸ்த்ர அபஹரண வ்ருத்தாந்தம் -போன்றவை
கோபியரும் கண்ணனும் பேசுவதாக ஆண்டாளும்
யசோதையும் கண்ணனும் பேசுவதாக கலியனும் அனுபவித்து உள்ளனர்-

————————————————————————————
425-
ஆய்ச்சி வயிறு அடித்து அஞ்ச –களிற்று ஆர் உயிர் வவ்விய மைந்தனை -10-7-14-
வற்புடைய -திரு நெடும் தாண்டகம் -7
வார் கடா வருவி -திருவாய்மொழி -8-4-1-
ஆய்ச்சி-கீழ் சௌகுமார்யத்துக்கு அஞ்சினபடி சொல்லி -இதில் வயிறு பிடித்தபடி சொல்கிறது
குவலயாபீடம் கொன்ற மிடுக்கை காட்டத் தெளிந்த அநந்தரம் இந்த திருமொழிக்கு பலம் சொல்லித் தலைக் கட்டுகிறார் –
வற்புடைய -திருக் கோவலூர் ஆயனுடைய சௌ குமார்யத்தை அனுசந்தித்து வயிறு பிடித்த
கலியன் அச்சம் தீர ஸ்ரீ ராம கிருஷ்ண வீர சரித்ரங்கள் காட்ட கலியன் அச்சம் தீர்ந்தார் –
வார் கடா வருவி-அங்கும் இங்கும் பதிகத்தில் ஈஸ்வர சௌ குமார்ய அனுசந்தானத்தில்
அஞ்சிய ஆழ்வார் அச்சம் தீர திருச் செங்குன்றூர் திருச் சிற்றாங்கரையில் வீர்ய பராக்ரங்கள் காட்டி அருளினான்  –
வாராமல் அச்சம் இனி மால் தன் வலி யினையும் –பாரும் என தான் உகந்த மாறன் –
மா முனிகள் தெளிய வைக்கிறார் –

——————————————————————————-
426-
ஈரேழும் வல்லவர் -10-7-14
ஐந்தும் ஐந்தும் -10-4-10-
ஒன்றும் ஒன்றும் ஐந்தும் மூன்றும்-10-3-10-
நாலும் ஆறும் வல்லார்க்கு இடம் -9-10-10-
தீம்புகளை சொலி பழி இடுகிற பாட்டுகள் ஏழும் -சேவகத்தை பேசி பாரதந்த்ர்யம் தோற்ற ஏழும்
ஒன்பது பாட்டுக்களில் ஆய்ச்சியரை குறித்து யசோதை கூறுவதும் நான்கு பாட்டுக்களில்
கண்ணனை குறித்து யசோதை கூருவாதாகவும் விபாகம் தொடருமே யாயினும் ஆழ்வார் திரு உள்ளம் ஈரேழு – என்பதே -யாகும்
ஐந்தும் ஐந்தும்-2/3/5/6/9பாசுரங்கள் முலைக் கடுப்பாலே அவசாதம் தோற்ற சொன்னவை
மற்றவை அப்படி இன்றி சொன்னவை
ஒன்றும் ஒன்றும்-இப்பதிகத்தில் முதல் பாட்டும் ஆறாம் பாட்டும் மகராஜரை பார்த்தும்
2/3/4/5/9 பாசுரங்கள் வானர முதலிகள் பார்த்தும்
7/8/10 பர உபதேச பாசுரங்கள்
நாலும் ஆறும்-விபவ அவதார பரம் நான்கும் அங்கன் இன்றி ஆறும்
ஐந்தினோடு ஐந்தும் -ஒன்பதினோடு ஒன்றும் இப்படியே நம் ஆழ்வாரும் அருளிச் செய்து இருக்கிறார்
ஐந்தினோடு ஒன்பதோடு ஒரு பத்து என்னுமவை போலே நூறே சொன்ன பத்து நூறு
ஓர் ஆயிரம் என்றதும் ஸாபிப்ராயம் -ஆசார்ய ஹ்ருதய ஸ்ரீ ஸூ க்தி-

——————————————————————————————-

427-
காதில் கடிப்பிட்டு 10-8-
தெள்ளியார் பலர் -நாச்சியார் திருமொழி -4
மானமுடைத்து பதிகம் முடிந்த உடன் ஆய்ச்சியர் உடன் கண்ணன் கூடினான்
பிறகு பிரிந்தான் -பிறகு ஆய்ச்சியர் ஊடினார்கள்  பிரணய ரோஷம் தலை எடுத்து
அவனும் வருந்தி கால் கையை பிடித்து சம்ச்லேஷித்தான் காதில் கடிப்பு திருமொழி
தெள்ளியார் -பரியட்டங்கள் கொண்டு குருந்தின் மேல் நிற்க -இவர்கள் அனுவர்த்தித்தும் வைதும்
சிலவற்றை செய்ய -அவனும் கொடுக்க -சம்சாரத்தில் போகங்கள் நிலை நிற்காதே
அவன் பேர நிற்க இன்னம் பரியட்டங்கள் உரிய வல்லனே என்று கூடல் இழைக்கிறார்கள்
இங்குத்தை பரிமாற்றம் பேறும் இழவுமாக போகுமே
கோழி அழைப்பதன் முன்னம் பதிகம் -முடிந்த உடன் கூடினான் -பிறகு பிரிந்தான் -இவர்கள்
கூடல் இழைக்கிறார்கள்
ஊடலும் கூடலும் இப்படி அனுபவம் –

—————————————————————————–

428-
தேடித் திருமா மகள் மண் மகள் நிற்ப -10–8-9-
பெண்ணுலாம் சடையினானும் –வெல்கி நிற்ப -திருமாலை -44-
அகலகில்லேன் இறையும் என்று இவர்கள் ஆசைப் பட்டு நிற்க -இடக்கையும் வலக்கையும் அறியாத
ஆய்ப் பெண்கள் உடன் குரவை கூத்தாடி நின்றான்
பிரியதம ஏவ ஹி வரணீ யோ பவதி -ஸ்ரீ பாஷ்ய காரர்-

——————————————————————————–

429-
ஏடீ -10-8-9
இணக்கி -திருவாய்மொழி -6-2-8-
குரவை பிணைந்த கோமளப் பிள்ளாய் -என்று சொல்லி மேல் ஒரு வார்த்தையும் சொல்லாதே தோழியை
பார்த்து ஏடீ-உன்னைக் கொண்டு கார்யம் இன்றிகே இருப்பார்க்கு அன்றோ  நீ உதவுவது என்று சொல்லப்
புக்காள் -வார்த்தை சொல்லி தலைக் கட்டும் முன் காலைப் பிடித்தானாம்
இணக்கி -இசையும் படி வார்த்தை சொல்லி
உன்னோட்டை கலவி அபாயம் என்று அறியாத எங்களை அவ்விடம் கிருஷ்ணன் வாராத இடம்
என்று சொல்லி கூட்டிப் போந்தது
இப்படி நாயிகா பாவத்தில் ஊடும் போது தமது தோழிகளை வெறுத்து கூறுகிறார்கள் –
—————————————————————————

430-
அல்லிக் கமலக் கண்ணனை -10-8-10-
அல்லிக் கமலக் கண்ணனை –திருவாய்மொழி -8-10-11-
ஏதுக்கு இது என் -இவரார் இது என் -ஏ டீ இது என் -என்றாலும் அத்தனையும் கேட்ட கண்ணன்
அல்லிக் கமல கண்ணனாய் இருக்கிறான் -கண்ணனை நூறு பட்டினி கொள்ளும் அவள் –
வெறுத்து பேசினாலும் அகவாயில் ஓடும் ப்ரேமத்தை கண்டான்
பகவத் ப்ராவண்ய கார்யமான ஏச்சும்
பாகவத ப்ராவண்ய கார்யமான பேச்சும்
அவனை அல்லிக் கமலக் கண்ணனாக ஆக்குமே –

————————————————————————
431
புள் …இலங்கை ஒள்ளெரி மண்டி உண்ணப் பணித்த ஊக்கம் அதனை நினைந்தோ -10-9-1-
அருளார் செங்கோல் நாடா வுதிர் ஈங்கோர் பெண் பால் பொருளோ என்னும் இகழ்வோ -திரு விருத்தம் -33
திருத் தாயார் அழகிய மணவாளனை வெருப்பதாகவும் -கலியன்
தோழி பகவானை வெறுப்பதாகவும் -நம் ஆழ்வார்
உம்முடைய பெருமையை நினைந்து இப் பெண்ணை இகழ்வது உசிதமா -எனபது இரண்டு இடங்களிலும் துல்யம் –

————————————————————————————
432
மாவாய் கீண்ட -10-10-3
கொக்கின் பழம் -5-2-6-
மா -பகாசுரன் -கொக்குக்கு வாசகம்

———————————————————————
433-
காமற்கு என் கடவேன் -10-10-7-
யான் வளர்த்த நீ யலையே -திருவாய்மொழி -1-5-7-
கரு முகில் வண்ணன் செய்யும் நலிவை பொறுக்கலாம்
அவன் பெற்ற காமனும் இப்படி நலிய வேணுமோ
தான் தோன்றியாய் இருப்பவர் செய்வதை வயிற்றில் பிறந்தாரும் செய்வாரோ
கலந்து பிரிந்தார் செய்வதை நான் வளர்த்த வர்களும் செய்வார்களோ
அவன் இப்படி செய்ய வேண்டி செய்தானா
என்னோட்டை சம்பந்தம் அன்றோ அவனை அப்படி செய்ய வைத்தது
அது போலே என்னோட்டை சம்பந்தம் உனக்கும் உண்டான பின்பு நலிவதை சொல்ல வேணுமோ-

———————————————————————————————-

434-
இன்னார் என்று அறியேன் -10-10-9-
அன்னே இவரை அறிவன் -11-3-3
பண்டு இவரைக் கண்டு  அறிவது எவ்வூரில் யாம் -8-1-9-
பண்டிவர் தம்மையும் கண்டறியோம் -9-2-7-
அடையாளம் சொல்லியும் இன்னார் அறியாத படி அவன் வை லஷண்யம் இருக்கும்படி –
ஸ்வா பாவிக சேஷித்வத்தாலும் முகத்தில் தண்ணளியாலும் அறிவேன்
எவ்வூரில் கண்டது என்னும்படியாய் இருக்கும்
நித்ய அபூர்வமான விஷயம் -அபரிச்சின்ன விஷயம் –

——————————————————————————–

435
குன்றம் ஓன்று எடுத்து ஏந்தி -11-1
புள் உருவாகி நள்ளிருள் வந்த -10-9-
இரண்டு பதிகங்களிலும் கூறப் படும் விஷயம் ஒன்றே
ஆற்றாமையின் கனம் -புள் பதிகம் தாய் -பாசுரம் குன்றம் பதிகம் மகள் பாசுரம் என்ற வாசி உண்டு –

—————————————————————————————-
436-
புள்ளின் மேல் வர –நன் கண்ட தண்டமோ -11-1-7-
கண்ணபுரம் தொழுதாள் இவள் கள்வியோ -8-2-1-
சிதிலையகாதே நின்று  கண்டதுக்கு தண்டனையா-தலைமகள்
பர அவஸ்தை -வியூகம் -அவதாரங்கள் -தொழுதாளா தொழுகை ஆத்ம அபகார கிருத்யமோ
இவள் கைவளை கொள்வது தக்கதோ -வெறுக்கிறாள் தாயார்-

—————————————————————————————
437-
மாலினம் துழாய் -மாலினம் துழாய் –11-1-8-
வைகுந்தம் –வைகுந்தம் -பெரிய திருவந்தாதி -53
மால இனம் துழாய் -மாலுக்கு இனமாக அநு ரூபமாக
மாலின் அம் துழாய் -திரு மேனி ஸ்பர்சம் உடைய துழாய்
வைகும் தம் சிந்தை -உனது புகழிலே தங்குகிற சிந்தை
வைகுந்தம் -விட பெரியது
————————————————————————-

438
என் நிறம் -11-1-9
என் செய்ய வாயும் -திருவாய்மொழி -5-3-2-
அவன் வந்து கலந்த பொது அவன் சொன்ன வார்த்தை கேட்டு திரும்பி சொல்கிறார்கள் இருவரும்
அவன் தனக்கு இவை எல்லாம் ர்வ சவமுமாக நினைத்து
அவன் மதீயம் என்று ஆழ்வார்கள் அவயவங்களில் ஈடுபட்டு பேசும் சகஸ்ர நாமங்கள் இவை
திருமால் இரும் சோலை மலையே திருப் பாற் கடலே என் தலையே
திருமால் வைகுந்தமே தண் திரு வேங்கடமே எனது உடலே –
பொய் கலவாது என் மெய் கலந்தானே –

————————————————————————-
439-
அவ்வாயன் நிற்க இவ்வாயன் -11-2-2-
அம்மானைப் பின் தொடர்ந்த அம்மான் -பெரிய திருவந்தாதி -82
பேய் முலை வாங்கி உண்ட அவ்வாயன் இவ் இடையன்
மாயமானை தொடர்ந்த காகுத்தன் –

———————————————————————————-
440-
மராமரம் ஏழும் எய்த புனிதனார் -11-2-4
வள்ளுகிரால் போழ்ந்த புனிதன் -1-7-1-
ஆஸ்ரித பஷ பாதி புனிதா -ஜகத் ஸ்ருஷ்டாதிகளை ப்ரமாதிகளை ஏவி தான் கடக்க இருக்கும்
தானே கை தொட்டு வ்யாபரிகையால் வந்த சுத்தி -ஆஸ்ரித பஷ பாதமும் ஆஸ்ரித விரோதி
நிரசனத்வமும் சுத்தி என்கிறார்-

—————————————————————————-

441-
மறை நான்கும் முன்னே உரைத்த -11-3-3-
மறை நான்கும் முன் ஓதிய -7-3-6-
பிரளய காலத்திலும் இவ் அனுபூவியை ஸ்மரித்துக் கொண்டு பின்னை அத்தை உபதேசித்தவன்
இது வாயிற்று இவற்றின் நித்ய அபௌ ருஷ்யத்வங்கள்
உரைத்த முனிவன் -முனிவனாய உரைத்தான் -இவன் தான் மறை நான்கும் முன் ஓதியது சாந்தீபன் பக்கல்
இது விபவ அவதார சௌலப்யம்-

————————————————————————————-
442-
நிலையிடம் எங்கும் இன்றி -11-4
வானோர் அளவும் -8-8-
இரண்டு பதிகங்களிலும் தசாதவதார அனுபவம் –
அங்கு பலராமனை அடக்கியும் இங்கே ஹம்சாவதாரத்தை அடைக்கியும் அருளி –
இரண்டிலும் ஒன்பது அவதாரங்கள் அனுபவம் –
அதில் கல்கி நிர்தேசித்து இங்கே ராமகிருஷ்ண அவதாரங்கள் –

———————————————————————-

443-
மானமருமென்னோக்கி வைதேவி -11-5-
பட்டி மேய்ந்தோர் காரேறு -நாச்சியார் திருமொழி -14

இரண்டு ஆய்ச்சி மார் பேச்சாக -மேன்மை -சௌலப்யம் அனுபவம் -இரண்டும் ஏக காலத்தில் –
தேச விசேஷத்தில் அநேக சரீரம் பரிகிரகம் ஏக காலத்தில் கூடும் அது
போலே இரண்டு பிராட்டிமார் தசை கலியனுக்கு இங்கே -பட்டர்
ப்ரீதி பிரகர்ஷம் இரண்டு வடிவை எடுக்கப் பண்ணிற்று
நிரந்குச ஸ்வா -தந்த்ர்யம் ஸ்வரூபம் -பிரணதய பாரதந்த்ர்யம் ஸ்வரூப யாதாம்யம்
அந்தரங்க பரிகாரமாய் -இரண்டு தோழிகள் பேச்சு –
ஆண்டாளும் இப்படி இருவர் பேச்சாக அனுபவித்து அருளுகிறாள்-

—————————————————————————-

445-
மன்றில் மரக்கால் கூத்தாடினான் -11-5-6-
மன்றாரக் குடமாடி -6-9-4-
மரத்தை காலிலே கட்டி ஆடும் கூத்து மரக்கால் கூத்து
குடங்களை தோள்களிலும் தலையில் வைத்து ஆடும் கூத்து குடக் கூத்து –
இடையர் தனம் விஞ்சினால் ஆடும் கூத்து -கிருஷ்ண லீலைகள் இருந்த படி –

—————————————————————

446-

தேர் ஊர்ந்தான் –தார்மன்னன் தங்கள் தலை மேலான் -11-5-8-
கண்ணன் கழல்கள் -திருவாய்மொழி -4-1-3-
பனைத் தாள் களிறு அட்டவன் -திருவாய்மொழி -4-1-4-
மாம் -அஹம் என்று சௌலப்யம் பரத்வம் -சரம ஸ்லோகம் -ஆஸ்ரைய சௌகர்ய ஆபாதக /ஆஸ்ரய கார்ய ஆபாதக குணங்கள்
கீதை -4 அத்யாயம் அவதார சௌலப்யம் -15 அத்யாயம் புருஷோதமத்வம்
இதையே தேர் ஊர்ந்தான் –தார்மன்னன் தங்கள் தலை மேலான் -என்று கலியன் அருளிச் செய்கிறார்
மாம் -கோலை கையில் கொண்டு -தேவாராம் கட்டி அவிழ்க்கிற அர்ஜுனன் கால்பொடி தன் முடியிலே
உதிர ரத்யங்களை விடுவித்துக் கொண்டு சொலவுக்கு சோராத படி நிற்கிற சௌலப்யம்
அஹம் -நித்ய சம்சாரி சரணம் என்ற சொல்லே ஹேதுவாக நித்ய ஸூரி கோஷ்டியில் சேர்க்கும் பரத்வம்
தீர்த்தன் உலகு அளந்த சேவடி மேல் பூம் தாமம் சேர்த்தி அவையே சிவன் முடி மேல் தான் கண்டு
பார்த்தன் தெளிந்து ஒழிந்த பைம் துழாயன் பெருமை
-கண்ணன் -சௌலப்யம் -அது மாமின் அர்த்தம்
மத களிறு அட்டவன் -பரத்வம் -விரோதி நிரசன சாமர்த்தியம் -இது அஹமின் அர்த்தம் –

————————————————————–
447-
பெற்ற தாய் இருக்க மணை  வெந்நீர்ஆட்டுதிரோ -11-6-6-
ஈன்றோள் இருக்க மணை நீராட்டி -திருவாசிரியம் -6
தேவதாந்திர பஜனம்  பற்றி அருளியவை-

————————————————————–

448-
மையார் கடலும் மணி வரையும் -11-7-5-
புனல் மை நின்ற வரை -திருவாய்மொழி -10-6-8
உபமானங்களுக்கு விசேஷணங்கள் இட்டே -உபமேயம் அருளுவது
காமினிக்கு கந்தனுடைய தேகமும் தேக குணம் வாய் வெருவது
புனல் போலவும் மை போலவும் நின்ற வரை போலவும் -மை மாறாத வரை போன்ற திரு உருவம்-

———————————————————————–

449-
கள்ளார் துழாயும் கணவலரும் -11-7-6-
போதான இட்டிறைஞ்சி -நான் முகன் திருவந்தாதி -64-
புரிவதுவும் புகை பூவே -திருவாய்மொழி -1-6-1-
த்ரவ்யம் பிரதானம் இல்லை -சிநேகமே ப்ரதான்யம்
செதுகை இட்டு புகைக்க அமையும் -கண்ட காலி இடவும் அமையும்
விஸ ஜாதீயங்களை சேர எடுத்து காட்டி த்ரவ்ய தாரதம்யம் பார்ப்பது இல்லை சிநேகமே வேண்டுவது –

——————————————————————-

450-
மக்கள் தோற்றக் குழி தோற்றுவிப்பாய் கொல் -11-8-2-
என்னைப் போர வைத்தாய் புறமே -திருவாய்மொழி -5-1-5-
தரு துயரம் தடாயேல் -பெருமாள் திருமொழி -5-1-
பிராப்தி இருப்பது -பிரஜை கிணற்றிலே விழா நின்றால் வாங்காத தாய் போலே
கர்மமும் அவனைக் குறித்து பரதந்த்ரம் -என்பர் பரம வைதிகர்
தானே கர்மம் பண்ணினவன் தானே சாதன அனுஷ்டானம் செய்து போக்க  கடவன் என்று
பழி இட்டு தள்ள  நினைத்தான் ஆகில் -நானும் தன்னைக் குறித்து பரதந்த்ரன் -நான் செய்யும்
கர்மமும் தன்னைக் குறித்து பரதந்த்ரன் -நான் பண்ணும் சாதன அனுஷ்டானதுக்கு பல பரதன்
தான் ஆகையாலே அதுவும் தன்னைக் குறித்து பரதந்த்ரம் -ஆகையால் தரு துயரம் -என்கிறார்
நிருபாதிக பந்து சக்தன் -விலக்காது ஒழிந்தால் இப்படி சொல்லலாம் இ றே-

—————————————————————————

451-
வேம்பின் புழு வேம்பன்றி உண்ணாது -11-8-7-
ஆகிலும் கொடிய வென்னெஞ்சம் அவன் என்றே -கிடக்கும் -திருவாய்மொழி -5-3-5-
அனசூயை பிராட்டி சம்வாதம்
கடல் மல்லைக் கிடந்த கரும்பு -கரும்பின் புழு என்னாமல் ஸ்வரூப க்ருப தாஸ்யம்
கடியன் கொடியன் -ஆகிலும் கொடிய வென்னெஞ்சம் அவன் என்றே -கிடக்கும் –
குண க்ருத தாஸ்யம் காட்டிலும் இதுவே  பிரதானம் –

—————————————————————————-

452
பாம்பின் அணைப் பள்ளி கொண்டாய் -11-8-7-
அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் -வண்ணன் திரு விருத்தம் -62
மேல் பாசுரத்தில் அரங்க நகர் அப்பா என்று விளிக்கிறாள் –
முகில் வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை ஆயிரம்
திருவாய் மொழியும் -திரு மொழியும் –
அரங்கமே  எனபது இவள்  தனக்கு ஆசையே -என்னக் கடவது இ றே

————————————————————————

ஸ்ரீ கோயில்  கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -3-2-11-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

January 26, 2013

உயிர்கள் எல்லா
உலகமும் உடையவனைக்
குயில்கொள் சோலைத்
தென்குருகூர்ச் சடகோபன்
செயிர்இல்சொல் இசைமாலை
ஆயிரத்துள் இப்பத்தும்
உயிரின்மேல் ஆக்கை
ஊனிடை ஒழிவிக்குமே.

    பொ-ரை எல்லா உயிர்களையும் எல்லா உலகங்களையுமுடையவனைக் குயில்களையுடைய சோலைகள் சூழ்ந்த அழகிய திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீசடகோபர் அருளிச்செய்த குற்றமில்லாத சொற்களையுடைய இசையுடன் கூடின மாலையாகிய ஆயிரம் திருப்பாசுரங்களுள் இப்பத்துப்பாசுரங்களும் உயிருக்கு வந்தேறியாக உள்ள ஊன் பொருந்திய சரீரத்திலுண்டான சம்பந்தத்தைப் போக்குவிக்கும்.

    வி-கு : செயிர் – குற்றம். யாக்கை – எழுவகைத் தாதுக்களால் கட்டப்பட்டது; சரீரம். ஊன் – தசை.

    ஈடு : முடிவில், 2தம்முடைய வருத்தமெல்லாம் போம்படி அவன் வந்து முகங்காட்ட, ‘நிலைப்பெற்று என் நெஞ்சம் பெற்றது நீடு உயிர்’ என்றார் இவர்; அவன் முகத்தைப் பார்த்தவாறே அவன் உயிர் நீடுபெற்றதாயிருந்தது. எல்லா உயிர்கள் எல்லா உலகமும் உடையவனை – ‘இவர் தரித்த பின்பாயிற்று அவன் எல்லாவுயிர்களையும் எல்லா உலகங்களையுமுடையவனாயிற்று;

இங்கு இவர் ஒருவரையுமே ஆயிற்று இழக்கப்புக்கது; அங்கு 1ஸவிபூதிகனானவனை ஆயிற்று இழக்கப்புக்கது’ என்றபடி. இனி, 2‘உறுப்புகளில் ஒன்று குறையினும் உறுப்புக்குறைவு உண்டு அன்றோ? அப்படியின்றிக்கே, இவரைப் பெற்ற பின்பாயிற்று ஈசுவரனாந்தன்மை நிறைவுற்றது,’ என்னுதல். குயில் கொள் சோலைத் தென்குருகூர்ச் சடகோபன் – 3‘பிரகாரியானவன் தரித்து, பிரகாரரான இவரும் தரித்து, இவர்தம்மளவேயன்றித் திருநகரியும் தரித்து, அங்கு உண்டான சோலைகளும் தரித்து, அங்கு உண்டான பறவைகளுடைய மகிழ்ச்சிக்கு அறிகுறியான ஒலியும் கேட்கும்படியாயிற்று,’ என்பதாம். 4‘காலம் அல்லாத காலங்களிலும் பழங்களையுடையனவாயும், தேன்களைப் பொழிகின்றனவாயும்’ என்னும்படியாயிற்று என்றபடி.

    செயிர் இல் சொல் இசை மாலை – குற்றமற்ற இயலையும் இசையையுமுடைத்தான மாலை; ஈண்டுக்குற்றமாவது, சரீர சம்பந்தத்தோடே பொருத்தம் உண்டாயிருக்கச் சொல்லுதல்; அது இல்லாத மாலை எனவே, பகவல்லாபம் ஒழியச் செல்லும்படியாயிருத்தல் செய்யச்சொன்ன மாலையன்று என்பதனைத் தெரிவித்தபடி. 5‘எங்கு இனித்தலைப்பெய்வனே’ என்ற வார்த்தைக்கு நினைவு தப்பியிருக்குமாகில், அது குற்றமேயன்றோ?

    ‘இப்பத்தும் செய்வது என்?’ என்னில் உயிரின்மேல் ஊனிடை ஆக்கை ஒழிவிக்கும் – அரசகுமாரனையும் வேடுவனையும் ஒருங்கு பிணைத்தாற்போன்று, நித்தியமாய் ஞான ஆனந்த லக்ஷணமாய் ஈசுவரனுக்கு அடிமையாயிருக்கிற ஆத்துமாவையும், வளர்தல் குறைதல் முதலிய மாறுபாடுகளையுடைய சரீரத்தையும் தன்னிலே கட்டுவித்துக்கிடக்கிற அவித்தியை முதலானவைகளை

வாசனையோடே போக்குவிக்கும். இவர்க்கு இப்போது உண்டாய்ப் போக்குவிக்குமென்கிறது அன்று; ‘இந்நின்ற நீர்மை இனி யாமுறாமை’ என்றபோதே ஈசுவரன் இவர்க்கு இது போவதாக நினைப்பிட்டான். ‘ஆயின், ‘பொல்லா ஆக்கையின் புணர்வினை யறுக்கலறா’ என்கிறது என்னை?’ எனின், 1பாதிதா நுவ்ருத்தியாலே அருளிச்செய்கிறார். ஆனாலும், இவர் கூப்பீட்டுக்கும் ஒரு பலன் வேண்டுமே? இவரோடு சம்பந்தமுடையவர்களுடைய சரீர சம்பந்தத்தை அறுத்துக் கொடுக்கும்.

(11)

    முதற்பாட்டில், ‘நீ தந்த கரணங்களைக்கொண்டு கேட்டினை விளைத்துக்கொண்ட நான் உன்னை வந்து கிட்டுகை என்று ஒன்று உண்டோ? என்றார்; இரண்டாம் பாட்டில், ‘இப்படிச் சூழ்த்துக் கொண்ட பாவங்களைப் போக்கி, தேவரீரை நான் எப்போது வந்து கிட்டுவேன்?’ என்றார்; மூன்றாம் பாட்டில், ‘இதற்கு முன்பு உன்னைப் பெறுகைக்குத் தந்த கரண களேபரங்களைக்கொண்டு நான் சூழ்த்துக்கொண்ட பாவங்கள் ‘நான் போக்கி வர’ என்றால் அது செய்யப்போகாது; இனி, நான் அறியாததாய் நீ அறிந்திருப்பதோர் உபாயத்தை அருளிச்செய்ய வேணும்’ என்றார்; நான்காம் பாட்டில், ‘உன்னையொழிந்த வேறுபட்ட பொருள்களிலே என்னுடைய தாழ்ச்சியைத் தவிர்த்து, உன் திருவடிகளிலே வாழ்ச்சியேயாம்படி செய்யவேணும்,’ என்கிறார்; ஐந்தாம் பாட்டில், ‘அப்படிச் செய்யப் பார்த்திலையாகில், உன் இனிமையை எனக்கு எதற்காக அறிவித்தாய்? என்றார்; ஆறாம் பாட்டில், ‘இல்லாத அன்று உண்டாக்கின அருமையுண்டோ, உண்டாக்கின இதற்கு ஒரு குணத்தைக் கொடுத்தற்கு?’ என்றார்; ஏழாம் பாட்டில், ‘நம் படியறியாதே நாம் அவனை வெறுக்கிறது என்?’ என்றார்; எட்டாம் பாட்டில், ‘தீரக் கழியச் சாதனத்தைச் செய்தேனோ, நான் இங்ஙனம் கூப்பிடுகைக்கு?’ என்றார்; ஒன்பதாம் பாட்டில், 2‘திரைவிக்ரம

அபயதானத்துக்கும் தப்பின நான் இனி எங்கே கிட்டப்போகிறேன்?’ என்றார்; பத்தாம் பாட்டில், அவ்வளவிலே வந்து அவன் முகங்காட்டித் தரிப்பிக்கத் தரித்தார்; முடிவில், பலம் சொல்லித் தலைக்கட்டினார்.

திருவாய்மொழி நூற்றந்தாதி

முன்னம் அழகர்எழில் மூழ்குங் குருகையர்கோன்
இன்னஅளவு என்ன எனக்கரிதாய்த்து – என்னக்
கரணக் குறையின் கலக்கத்தைக் கண்ணன்
ஒருமைப் படுத்தான் ஒழித்து.

ஆசை எல்லாம் போகும் படி முகம் காட்ட
ஆழ்வார் தரிக்க
அவனும் தரித்தானாம் இவரை அடைந்த பின்பு
உயிர் உடையவனாக ஆனானாம்
இவர் ஒருவரையும் இ றே
லோகம் அத்தனையும் அழியும் –
ஆழ்வாரை அடைந்த பின்பு
உபய விபூதி உடைய எம்பெருமான்
ஏக அங்கம்
போனாலும் சரீரம் இருக்கும்
ஆத்மா போனால் சரீரம் இருந்து என்ன பயன்
இவரை பெற்ற பின்பு ஈஸ்வரன் பூரணன் ஆனான்
பிரகாரம் பிரகார பூதன்
குயில்களும் தரித்து -சோலைகளும் தரித்து -திருக் குருகூர் தரிக்க
சந்தொஷத்தால்தொனி
அபி வருஷ -சக்கரவர்த்தி திருமகன்
பூத்து குலுங்க
குற்றம் அற்ற இசை உள்ள மாலை
பகவத் லாபம் -ஒன்றே-
நினைவு தப்பி இருக்குமாகில் குற்றம் தரிப்பேன் சொல்லி அடைந்து
ஆக்கை ஒளிவிக்கும்
ராஜ புத்திரன் வேடன் -சேர்ந்தால் போலே
ஆத்மாவையும் சரீரம் சேர்த்து -நித்தியமாய் ஞானாதிக்க சேஷத்வம்
அவித்யை வாசனை உடன் போக்குவிக்கும்
பொல்லாத ஆக்கை -இந் நின்ற நீர்மை -இவருக்கு அன்றே உண்டாக்கி
இப் பொழுது பாவனை -பாவிகா அனுவ்ருதி தோற்றம் -இருக்குமே –
கூப்பீடுக்குபலம் -இவர் சம்பந்தம் உடையாருக்கு பலன் -அருளுகிறான் பத்து பாட்டு அர்த்தங்களை தொகுத்து அருளி –
கிட்டி முகம் காட்ட தரித்தார் –
அழகர் எழில் முழுகி –
அரிதாகி
எம்பெருமான் ஒருமை படுத்தினான் –

நஞ்சீயர் திருவடிகளே சரணம்.

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

(22)

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -3-2-10-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

January 26, 2013

தலைப்பெய் காலம்
நமன்தமர் பாசம்விட்டால்
அலைப்பூண் உண்ணும்அவ்
வல்லல்எல் லாம்அகலக்
கலைப்பல்ஞா னத்துஎன்
கண்ணனைக் கண்டுகொண்டு
நிலைப்பெற்று என்னெஞ்சம்
பெற்றது நீடுஉயிரே.

    பொ-ரை : யமனுடைய தூதுவர்கள் தலைப்படுகின்ற காலத்தில் பாசத்தை வீசினால், இங்கும் அங்கும் அலைக்கப்படுகின்ற அத்துன்பங்களெல்லாம் நீங்கும்படி, பல வகைப்பட்ட சாஸ்திரங்களின் ஞானத்தாலே அறியப்படுகின்ற என் கண்ணபிரானைக் கண்டுகொண்டு என் நெஞ்சம் நிலைபெற உயிரும் நிலைத்தது.

    வி-கு : பாசம் – கயிற்று வடிவமான ஓர் ஆயுத விசேடம். ‘அகலக் கண்டுகொண்டு நெஞ்சம் நிலைபெற உயிர் நீடுபெற்றது’ எனக் கூட்டுக. ‘நிலைப்பெற்று’ என்பது, செயவென் எச்சத்திரிபு. ‘பெற்றது நீடு உயிர்’ என்பதனை, ‘உயிர் நீடு பெற்றது’ என மாறுக.ஈடு : பத்தாம் பாட்டு. 1இவர் ஆசையற்றவராய் முடியப் புக்கவளவில், ‘இவர் கிரமப்பிராப்தி பொறாதவர் போலும்!’ என்று நினைத்து, ‘நீர் ஒரு பெருவிடாயர் உண்டு என்றறிந்து, உமக்காக அன்றோ வடக்குத்திருமலையில் நிற்கிறோம்?’ என்று அந்நிலையைக் காட்டித் தரிப்பிக்கத் தரித்து, இனியராகிறார்.

    நமன் தமர் தலைப்பெய் காலம் – யமபடர் வந்து கிட்டுங் காலம். இவன் வாழ்கின்ற நாளில் செய்த குற்றங்களைப் 2பட்டோலை யெழுதிப் பலத்தை அனுபவிக்கும் சமயத்தில் வந்து முகங்காட்டுவார்களாதலின், ‘நமன் தமர் தலைப்பெய் காலம்’ என்கிறார். பாசம் விட்டால் – அவர்கள் தங்கள் கையிலுள்ள பாசத்தை வீசினால். அலைப்பூண் உண்ணும் அவ்வல்லல் எல்லாம் அகல – இவனுக்கு இவ்வருகே நசை கிடைக்கையாலே அது இங்கே இசிக்க, யமபடர்கள் அங்கே இசிக்கப்படும் துக்கத்துக்கு ஓரெல்லையில்லையாதலின், ‘அல்லல் எல்லாம்’ என்கிறார். அத்துன்பங்களை உவமை முகத்தால் விளக்குதற்கு ஒண்ணாதாதலின், ‘அவ்வல்லல்’ எனச் சுட்டுகிறார். இனி, இதற்கு, 3‘அவையெல்லாம் காணக்காண விட்டுக் கடக்க நிற்க, அவற்றோடு ஒத்ததான துன்பம்’ என்று எம்பார் அருளிச்செய்வர். என்றது, ‘அந்தத் துக்கத்தைப் போலேயிருக்கிற, பகவானைப் பிரிந்ததனால் உண்டான துக்கமெல்லாம் இவர்க்கும் அகல’ என்றபடி. இனி,

1‘பகவான் கைவிட்ட பின்னர் யமனுக்கு வஸ்யனாகையும் வந்ததேயன்றோ? அந்த யம வஸ்யதை போம்படியாக’ என்று ஆண்டான் அருளிச்செய்வர்.

    கலைப்பல் ஞானத்து என் கண்ணனைக் கண்டுகொண்டு – 2’எல்லா வேதங்களாலும் அறியத்தக்கவனும், வேதங்களைச் செய்தவனும், வேதங்களையறிந்தவனும் நானே,’ என்கிறபடியே, பல கலைகளாலும் அறியப்பட்ட ஏற்றத்தையுடையனாயிருந்து, 3நெடுங்கை நீட்டாகப் பிரமாணங்களால் கேட்டுப் போகாதபடி கண்களுக்கு விஷயமாகக் கிருஷ்ணனாய் வந்து அவதரித்தவனைக் கண்டுகொண்டு. என் நெஞ்சம் நிலைப்பெற்று – ‘சிந்தாமற் செய்யாய்’ என்ற நெஞ்சும் ஒரு படி தரிக்கப்பெற்றது. உயிர் நீடு பெற்றது – 4‘வெட்டத்தகாததாய் எரிக்கத் தகாததாயிருக்கிற ஆத்துமாவும்’ அழியப்புக்கது; அங்ஙனம் அழியப்புக்க ஆத்துமாவும் இப்போதாயிற்று அழிவின்மையைப் பெற்றது. ‘ஆயின், ஆத்துமாவிற்கு அழிவு உண்டோ?’ எனின், ‘சேதிக்க முடியாத வேறுபட்ட சிறப்பினையுடையது’ என்ற இத்துணையேயல்லது, தன்னில் சூக்ஷ்மமாய்ப் புக்கு எங்கும் பரந்து அழிக்க வல்ல பகவானுடைய குணங்களுக்கு அழியாமையில்லை என்க. இனி நித்தியமான ஆத்துமாவிற்கு நாசமாவது, 1தாஸ்யாசித்தி; ‘சேஷமானமான ஆத்துமாவிற்கு நாசமாவது, 1தாஸ்யாசித்தி; ‘சேஷமான பொருளுக்குச் சேஷத்துவம் நிரூபகமானால், நிரூபகத்தையொழிய நிரூப்ய சித்தியில்லையே’ என்னுதல்.

3. ‘’திறம்பேன்மின் கண்டீர் திருவடிதன் நாமம்
மறந்தும் புறந்தொழா மாந்தர் – இறைஞ்சியும்
சாதுவராய்ப் போதுமின்கள் என்றான் நமனும்தன்
தூதுவரைக் கூவிச் செவிக்கு.’

(நான்முகன் திரு. 68.)

  என்று பிரமாணம் இருக்கின்றதே? ஆதலின், ஸ்ரீவைஷ்ணவர்கட்கு யமபாதை
உண்டாகக் கூடுமோ?’ என்ற வினாவைத் திருவுள்ளத்தே கொண்டு, அதற்கு
விடையாக, ‘அவையெல்லாம் காணக்காண’ என்று தொடங்கி அருளிச்
செய்கிறார்.

. முதலியாண்டான் நிர்வாஹத்துக் கருத்து, ‘ஸ்வதந்திரனான சர்வேஸ்வரன்
உபேக்ஷித்தால் யமபாதை உண்டாம்,’ என்பது. இதனை, நித்திய சூரிகளைப்
போன்ற நித்தியானுபவ யோக்கியதை இவருக்கு உண்டாயிருக்கவும், பிரிவு
இடையிடையே வருதலைப் போன்று கொள்க. இதனை ஸ்ரீ பரதாழ்வான்
பக்கலிலே கண்டோம்.

  ‘கடுஞ்சொலார் கடியார் காலனார் தமரால்
படுவதோர் கொடுமிறைக்கு அஞ்சி
நடுங்கிநான் வந்துன் திருவடி யடைந்தேன்
நைமிசா ரணியத்துள் எந்தாய்!’

  என்பது, திருமங்கைமன்னன் திருவாக்கு.

தாஸ்யாசித்தி – தாஸ்யம் இல்லாமை. என்றது, ‘சேஷத்துவம் இல்லாமை’
என்றபடி. சேஷமான பொருளுக்கு – ஆத்துமாவுக்கு. சேஷத்துவம்
நிரூபகமானால் – சேஷத்துவத்தைக்கொண்டே
நிரூபிக்கப்படவேண்டியிருந்தால். நிரூபகத்தை ஒழிய – அந்த சேஷத்துவத்தை
ஒழிய. நிரூப்ய சித்தி இல்லை – நிரூபிக்கப்படுகின்ற ஆத்துமா இல்லை.
என்றது, ‘சேஷத்துவம் இல்லையாம்போது ஆத்துமாவும் இல்லையாம்,’
என்பது கருத்து.நசை அற்ற வாறே -பரம விடாயர்
சாய் கரகம் போலே -அர்ச்சை –
அந் நிலையை காட்டித் தரிப்பிக்க
கண்ணனை கண்டு கொண்டு
யம படர் வந்து கிட்டும் காலம்
ஜீவிக்கும் காலம் வேண்டிற்று செய்து திரியும்
குற்றங்கள் பட்டோலை செய்து -முகம் காட்ட
பாசம் வீசினால் -நசை இங்கே இருப்பதால்
அவர்கள் அங்கெ இழுக்க -கிலேசம் –
அலை போலே -ஹிம்சைக்கு த்ருஷ்டந்தம் இல்லை
அல்லல் -சஜாதீயமான அல்லல் எம்பெருமானை பிரிந்து படும் அல்லல் -எம்பார் வார்த்தை –
முதலியாண்டான் -பகவத் அலாபம் -சம்சாரத்தில் இருந்தால்-போகும் படி -அவன் கரை ஏற்ற வேண்டும் –
வேதம் கலைகளால் அறியப் பட்ட கண்ணன்
கண்டு -நெடும் கை நீட்டாக இன்றி கண்ணுக்கு விஷயமாக கண்ணன் அவதரித்து
உயிர் வாழ்ச்சி
அழிய புக்கு நித்யத்வம் இப்பொழுது அடைந்தது
நிராசராய் முடிய போனவர் -உயிர் க்கு உயிர் வந்தது என்கிறார் –
நாசம் -தாஸ்யம் தன்மை இழந்தால் அழிந்தால் போலே தானே –
இருந்து என்ன பிரயோஜனம் –
இல்லாதது போலே தானே
தாஸ்யம் அந்தரங்க நிரூபகம்
கண்ணனை கண்டு கொண்டு உருகி போனதே
அழிய கூடிய வஸ்து விட வேறு பட்டது ஆத்மா சோழ வந்தது –
திருக் கல்யாண குணங்கள் கண்டால் உருகாமல் இருந்தால் அழிந்தது போலே
சேஷத்வம் சேஷ வச்துவ்வுக்கு நிரூபகம் –
அடிமை தன்மை பெறுவதே உயிர் பெற்றது போல்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -3-2-9-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

January 26, 2013

கூவிக் கூவிக் கொடுவினைத்
தூற்றுள்நின்று
பாவியேன் பலகாலம் வழிதிகைத்து,
அலமருகின்றேன்;
மேவிஅன்று ஆநிரை காத்தவன்,
உலகம்எல்லாம்
தாவிய அம்மானை எங்குஇனித்
தலைபெய்வனே?

    பொ-ரை : கொடிய பாவங்கட்கு இருப்பிடமான சமுசாரமான புதரில் நின்றுகொண்டு பல காலம் வழியறியாமல் கூவிக்கூவிச் சுழலுகின்ற பாவியேனாகிய யான், அக்காலத்தில் பொருந்திப் பசுக் கூட்டங்களைக் காத்தவனும் உலகங்களையெல்லாம் தாவி அளந்த தலைவனுமான இறைவனை இனி எங்கே கிட்டுவேன்?வி-கு : தூறு – புதர். அலமருகின்றேன் – வினையாலணையும் பெயர். ‘தலைப்பெய்வன்’ என்பது ஒரு சொல்.

    ஈடு : ஒன்பதாம் பாட்டு. 1‘வரையாமல் எல்லார்க்கும் ஒக்க முகங்கொடுத்த அவதாரங்களுக்குத் தப்பின நான், இனி உன்னைக் கிட்டுகை என்று ஒரு பொருள் உண்டோ?’ என்று ஆசையற்றவராகிறார்.

    கொடுவினைத் தூற்றுள் நின்று கூவி – 2சொரூப ஞானத்தால் ஆறியிருக்கமாட்டாமல் சமுசாரத்திலேயிருந்து கூப்பிடாநிற்பர். கூப்பீடு கேட்டு இரங்கி எடுப்பதாக ஈசுவரன் கைநீட்டினால், நீட்டின கை வாங்கவொண்ணாத நிலத்திலேயிருந்து கூப்பிடுகிறாராதலின், ‘கொடுவினைத் தூற்றுள் நின்று’ என்கிறார். கூவி – ஒருகால் கூப்பிட்டு 3அநுதபித்து மீளுமதன்றிக்கே மேன்மேலெனக் கூப்பிடநிற்பர். பல காலம் வழி திகைத்து அலமருகின்றேன் பாவியேன் – காலமெல்லாம் 4அறிவு கெட்டுத் தடுமாறுகிற நான். 5ஸ்ரீ வால்மீகி பகவான் ஆஸ்ரமத்தின் பக்கத்திலே

இருந்துதான் கூப்பிடப்பெற்றேனோ!’ என்பார், ‘பாவியேன்’ என்கிறார்.

    அன்று மேவி ஆ நிரை காத்தவன் – 1இந்திரன் கல் மழை பெய்த போது பசுக்கள் ஆயர்கள் ஆய்ச்சிகள் எல்லோரும் நோவுபட, அந்த ஆயர்பாடியைப் பார்த்துச் சிந்தித்தான் கிருஷ்ணன்,’ என்கிறபடியே, நோவு பட்டவன்று ஒரு பசுவின்மேலே ஓர் ஆயன் மேலே ஒரு துளி விழாதபடி, தோன்றியதொரு மலையை எடுத்து உதவி செய்தவனை. இனி, 2மேவி அன்று ஆநிரை காத்தவன்’ என்பதற்கு ‘நித்தியசூரிகளுக்கு நிர்வாஹகனான தன் கையிலே கோலைத் தந்து ‘பசு மேய்’, என்றால், ‘ரக்ஷகனான எனக்கு இது தக்கதேயன்றோ?’ என்றிருத்தலேயல்லாமல் பெறாப்பேறு பெற்றதாக விரும்பி அன்று பசுக்களை மேய்த்தவன்,’ என்று பொருள் கூறலுமாம். அன்று – அதுவும் ஒரு காலமே!’ என்கிறார். வழி திகைத்து அலமருகின்றேன் மேவி அன்று ஆ நிரை காத்தவன்’ என்ற சொற்றொடரால், ‘காட்டிலே வழி திகைத்தார்க்கு அங்கேயுள்ள ஆயர்கள் போலேகாணும் வழி காட்டுவார்’ என்று பொருளும் போதரும். ‘என்னொருவனையே சரணமாகப் பற்று’ என்று வழிகாட்டினவன் அன்றோ? ‘வழி காட்டினவர்கள் வேறு இலரே?’ என்றது, ‘திருத்தேர்த்தட்டிலே நின்று எல்லா ஆத்துமாக்களும் உய்வு பெறும்படி சரம சுலோகத்தைக் கூறி வழி காட்டியவன் அவனேயன்றோ?’ என்றபடி. இதனால், ‘ஆபத்துக்கு உதவாதவனாய்த்தான் படுகிறேனோ!’ என்கிறார். உலகமெல்லாம் தாவிய அம்மானை – ஓர் ஊர்க்கு உதவின அளவேயன்றி, எல்லாப் பொருள்களிலும் ஒன்றும் பிரிகதிர்ப்படாதபடி எல்லார் தலைகளிலும் ஒக்கத் திருவடிகளை வைத்துத் தான் ஸ்வாமி என்னுமிடத்தை அறிவித்தனை. எங்கு இனித் தலைப்பெய்வன் – எங்ஙனம் கிட்டப் போகிறேன்? ‘அந்தத் 1தூளி தானத்துக்கும் தப்பின நான், 2பரீட்சை சொல்லிப் பெறப் போகின்றேனோ?’ என்கிறார் என்றபடி. இதனால், ‘அவன் தானே வந்து உதவி செய்தவன்று தப்பின யான், ஒரு சாதன விசேடத்தைப்பண்ணி எங்கே சென்று கிட்டப் புகுகிறேனோ!’ என்று நசையறுகிறார்

. ‘பரஞ்சுடர்’ என்பதறகு ‘எல்லா வகையாலும் உண்டான ஏற்றத்தையுடையவன்’
என்றும், ‘வடிவழகினையுடையவன்’ என்றும் இரண்டு பொருள்
அருளிச்செய்கிறார்.

      ‘கண்ணா!’ என்றதனால் தாழ நிற்றலும், ‘பரஞ்சுடரே!’ என்றதனால்
வடிவழகும், ‘என்’ என்றதனால் தமக்கு முற்றூட்டாக்குதலும் போதரும். மூற்று
ஊட்டு ஆக்குதல் – பூர்ணாநுபவம் உள்ளதாகச் செய்தல்.

      இப்பாசுரத்தில், மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன்’ என்றதனால்
கர்மயோகம் இன்மையையும், ‘ஓவுதலின்றி உன்கழல் வணங்கிற்றிலேன்’
என்றதனால் பத்தியோகம் இன்மையையும் கூறினாராயிற்று. உபலக்ஷணத்தால்
ஞானயோகம் இன்மையையும் கொள்க.

அவதாரங்கள் தப்பி
கூவி கூவி நெஞ்சு உருகி
பாவியேன் அழுது
உலகம் எல்லாம்தாவிய எம்மான்
ஸ்வரூப ஞானத்தால் ஆறி இருக்க மாட்டாதே
கூவி கூவி கொண்டே இருக்கிறேன்
கொடு வினை பலத்தில் கூப்பீடு கேட்டு றங்கி வந்தாலும்
எம்பெருமான் கை நீட்டினாலும் கை எட்டாத கொடு வினை தூறு
பாவியேன் -வால்மீகி பரிசரமின்றி கூவிநேனோ
மேவி அன்று ஆநிரை காத்தான்
ஆபத்துக்கு உதவுபவன்
அவன் இருந்தும் இப்படியா
தானே விரும்பிவந்து கோ கோபி ஜனங்களை காத்து
பசி இடையன் மேலே துளி ஒன்றும் வராதபடி -முன் ஏந்தும்
தொற்றிற்று ஒரு மலை எடுத்து மேவி விரும்பி
நித்ய சூரிகள் நிர்வாகன் கோலை எடுத்து பசு மேய என்றால்
பொருந்தி ஈடுபாடு அலாப்ய லாபம் -அன்று -அதுவும் ஒரு காலம்
வழி திகைத்து அளமருகின்றேன்
காட்டிலே வழி திகைத்தாள் இடையர் காட்டுவான்
அப்படி இடையன் இங்கே இருந்தும்
மாம் ஏகம் -வழி காட்டினான்
வேறு வழி காட்டினார் இல்லையே -இவனும் வேற வழி காட்டினான் இல்லை
தேர்த்தட்டில்
உஊருக்கு உதவி
உலகம் எல்லாம் தாவி ஒன்றும் பிரி கதிர் படாதபடி
அம்மான் -ஸ்வாமி தலைகளை தீண்டு
தூளி தானம் -திருவடி தூளிக்கு தப்பினேன் –
சாதனமனுஷ்டித்து எங்கே கிட்டே புகுகிறேன் நசை அறுக்கிறார்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -3-2-8-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

January 26, 2013

மேவு துன்ப வினைகளை
விடுத்துமிலேன்;
ஒவுதல் இன்றி உன்கழல்
வணங்கிற்றிலேன்;
பாவு தொல்சீர்க் கண்ணா!என்
பரஞ்சுடரே!
கூவுகின்றேன் காண்பான்;எங்கு
எய்தக்கூவுவனே?

    பொ-ரை : பரவிய இயல்பாய் அமைந்த புகழையுடைய கண்ணபிரானே! எனது மேலான ஒளியுருவனே! பொருந்திய துன்பங்களை உண்டுபண்ணுகின்ற பாவங்களை நீக்குவதும் செய்திலேன்; இடைவிடாமல் உன் திருவடிகளை வணங்குதலும் செய்திலேன்; உன்னைக் காண்பதற்கு அழைக்கிறேன்; எங்கே கிட்டுவதாகக் கூப்பிடுகிறேன்?

    வி-கு : ‘மேவு’ என்பது வினைகளுக்கு அடை. ஒவுதல் – ஒழிதல். ‘வணங்ககிற்றிலேன்’ என்பது ‘வணங்கிற்றிலேன்’ என வந்தது விகாரம். ‘தொன்மை’ என்பது ஈண்டு இயற்கையைக் காட்டிற்று. காண்பான் – வினையெச்சம்.ஈடு : எட்டாம் பாட்டு. 1சாதன கர்மங்களைப் பண்ணினார் பலம் தாழ்த்துக் கூப்பிடக்கூடிய கூப்பீட்டைப் பேற்றுக்கு ஈடாய் இருப்பதொரு கைம்முதல் இல்லாத நான் எங்கே வந்து கிட்டக் கூப்பிடுகிறேன்?’ என்கிறார்.

    மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன் – 2எள்ளில் எண்ணெய் போலவும், மரத்தில் நெருப்புப் போலவும்’ என்கிறபடியே, இவ்வாத்துமாவோடு பிரிக்கவொண்ணாதபடியிருப்பதாய், துக்கத்தை விளைப்பதாயிருக்கிற பாவங்களைத் 3‘தர்மம் செய்வதனால் பாவங்களைப் போக்கடிக்கிறான்’ என்கிறபடியே, விதித்தனவான கர்மங்களைச் செய்வதனாலே போக்கிற்றிலேன். ஓவுதல் இன்றி உன் கழல் வணங்கிற்றிலேன் – 4‘இடைவிடாது தியானம் செய்வதனால் அறியத் தக்கவன்’ என்கிறபடியே, எப்பொழுதும் தியானித்து உன்னை நேரே காணுவதற்கு விரகு பார்த்திலேன். ‘ஓவுதல் இன்றி மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன், ஓவுதல் இன்றி உன்கழல் வணங்கிற்றிலேன்’ என்று ‘ஓவுதலின்றி’ என்பதனை முன்னும் பின்னும் கூட்டிப் பொருள் அருளிச்செய்வர் எம்பார். ‘கண்ணாலப் பெண்டாட்டிக்கு உண்ண அவசரம் இல்லை,’ என்னுமாறு போன்று, 5‘இந்திரியங்களுக்கு இரையிட்டுத் திரிந்தேனித்தனை; எனக்கு ஒன்றும் நன்மை பார்த்திலேன்,’ என்கிறார் என்றபடி. ‘இங்ஙனமிருக்க, உன்னை நினைத்தவாறே விடமாட்டுகின்றிலேன்’ என்கிறார் மேல்.

    பாவு தொல் சீர்க் கண்ணா – 6‘எல்லாராலும் அறியப்பட்டவர்’ என்கிறபடியே. 7விரும்பாதார் கூட்டத்திலும் பிரசித்தமானஇயல்பான கல்யாண குணங்களையுடைய கிருஷ்ணனே! 1என் பரஞ்சுடரே – எல்லா விதத்தாலுமுண்டான ஏற்றத்தினை எனக்கு அறிவித்தவனே! இனி, ‘கண்ணா என் பரஞ்சுடரே’ என்று ஒன்றாக்கி, ‘தாழ நின்று இவ்வடிவழகை எனக்கு முற்றூட்டு ஆக்கினவனே!’ என்னுதல்; ‘பரஞ்சுடரே உடம்பாய்’ என்னக் கடவதன்றோ? காண்பான் கூவுகின்றேன் – ஒரு சாதனத்தைச் செய்து பலம் கைப்புகுராதார் கூப்பிடுமாறு போன்று, காண வேண்டும் என்று கூப்பிடுகிறேன். எங்கு எய்தக் கூவுவன் – ‘ஒரு கொசுக்கூப்பிட்டது’ என்று பிரமனது ஓலக்கத்திலே கேட்கப் போகின்றதோ? எங்ஙனே வந்து கேட்கக் கூப்பிடுகிறேன்?

குளித்து மூன்று –கதறுகின்றேன்
முதல் இல்லாமல் -வட்டிக்கு அழுதது போலே-திருமாலை வியாக்யானம் –
கோடீஸ்வரன் -பந்துக்கள் இன்றி -ஆத்மா பந்து அழ -உறவு இல்லையே என்று அழுதது போலே
சாதன அனுஷ்டானம் செய்யாமல் அழுது மேவு துன்ப வினைகளை
திருவடி வணங்க வில்லை
சீரை உடைய கண்ணா
கூவுகின்றேன்
இரண்டையும் செய்து –
உள்ளேயே வினைகள்
மரத்தில் நேருக்கு எள்ளில் எண்ணெய்  போலே மேவு
விகித கர்ம அனுஷ்டானம் செய்யாமல்
செய செய சாத்விக குணம் வரும் -அதுவும் செய்ய வில்லை
இடைவிடாமல் உனது கழலை வணங்க வில்லை
எம்பார் -ஓவுதல் இன்றி -இரண்டு இடத்திலும் அன்வயித்து –
ஓவுதல் இன்றி மேவி வினைகள் செய்து -ஓய்ச்சல் இன்றி உனது திருவடிகள் இழந்து
இந்திரியங்களுக்கு இறை இட்டு திரிந்தேன்
எனக்கு நன்மை எது என்று பார்க்காமல்
உன்னை அனுசந்திதவாறே விட மாட்டுகிள்ளேன்
பரவும் தொல் சீர் -உகவாதார் கோஷ்டியிலும் பிரசித்தமான கல்யாண குணங்கள்
நிந்தக -சரணாகத வத்சலன் -சீதை பிராட்டி வார்த்தை
கண்ணா தாழ நின்று
பரம் சுடர் -பரத்வம் -உடம்புகன்னுக்கு இலக்காக்கின சௌலப்யம்
முற்றூட்டாக ஆக்கி
காண கூவுகின்றேன்
சாதனா அனுஷ்டானர் போலே கூவி
கொசு கூப்பிட்டது பிரம்மா ஓலக்கத்தில் கேட்குமா நிராசர் ஆகிறார்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -3-2-7-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

January 26, 2013

எஞ்ஞான்றும் நாம்இருந்
திருந்துஇரங்கி, நெஞ்சே!
மெய்ஞ்ஞானம் இன்றி
வினைஇயல் பிறப்புஅழுந்தி
எஞ்ஞான்றும் எங்கும்
ஒழிவுஅற நிறைந்துநின்ற
மெய்ஞ்ஞானச் சோதிக்
கண்ணனை மேவுதுமே.   

    பொ-ரை : ‘மனமே! எப்பொழுதும் இருந்து இருந்து வருந்தி உண்மை ஞானமில்லாமல் வினைகளால் உண்டாகின்ற பிறவிகளிலே மூழ்கி அலைகின்ற நாம், எல்லாக் காலத்திலும் எல்லாவிடத்திலும் நீக்கமற நிறைந்து நின்ற உண்மை ஞானத்தின் உருவமான ஒளியையுடைய கண்ணபிரானை அடைவதற்கு முடியுமோ?’ என்கிறார்.

    வி-கு : ‘அழுந்தி அலைகின்ற நாம்’ என்று ‘அலைகின்ற’ என்னும் வினையை வருவித்து ‘அழுந்தி’ என்ற எச்சத்துடன் கூட்டி முடிக்க. இரண்டாமடியும் நான்காமடியும் ஆசிடையிட்ட எதுகை.

    ஈடு : ஏழாம் பாட்டு. 1‘நின் நன் பொன் சோதித்தாள்’ என்று திருவடிகளின் போக்யதையை நினைத்தவாறே திருவுள்ளம் பதறத் தொடங்கிற்று; கெடுவாய்! உன் படி ஆராயாமல் நல்லதை ஆசைப்பட்டால் கிடைக்குமோ?’ என்கிறார்.

    எஞ்ஞான்றும் நாம் இருந்து இருந்து இரங்கி – காலமெல்லாம் நாம் இருந்து 2சீழ்கிச் சீழ்கி அழுதால் என்ன பயனுண்டுநெஞ்சே – ‘உன்னை நீ அறியாயோ? இதற்கு முன்னரெல்லாம் நல்வினை தீவினைகட்குக் காரணமாய்ப் போந்தாய் அல்லையோ? ஏன்தான்! அற்ப ஆநுகூல்யம் உண்டானால் அடையக்கூடிய பொருளை நாம் பெறுகைக்குக் குறை என்?’ என்ன, ‘இதுவன்றோ நம்முடைய முன்னைய செய்கை?’ என்கிறார் மேல்: 1மெய்ஞ்ஞானம் இன்றி – 2பரம்பொருளையறியும் அந்த ஞானமே ஞானமென்று சொல்லப்படும்; மற்றை ஞானமெல்லாம் அஞ்ஞானமென்று சொல்லப்படும்’, 3மோக்ஷத்தைக் கொடுக்கக்கூடிய வித்யையே வித்யை; மற்றையவை தொழில் திறமையைக் காட்டக் கூடியவை,’ என்கிறபடியே, புறம்பே சில ஞானம் உண்டு அத்தனையல்லது சம்யக் (உண்மை) ஞானமில்லை கண்டாயே. 4ஆமாறு அறிவிலோமே! உண்மை ஞானமில்லாத அளவேயோ! வினையியல் பிறப்பு அழுந்தி – ‘பாபங்களிலே கொண்டுபோய் மூட்டக் கூடியவான பிறவிகளிலே அழுந்திச் செல்லும்படியாயன்றோ நம் நிலை இருக்கிறது?’ என்கிறார்.

    எஞ்ஞான்றும் எங்கும் ஒழிவற நிறைந்து நின்ற – எல்லாக் காலத்திலும் எல்லாப்பொருள்களிலும் ஒன்றும் 5பிரிகதிர்ப்படாமல் குறைவறப் பரந்து நிறைந்து நின்ற. மெய்ஞ்ஞானச் சோதிக் கண்ணனை – மெய்யான ஞானச்சோதியையுடைய கிருஷ்ணனை. ஆத்துமாக்கள் நித்தியப் பொருள்களாய் இருந்தும், ஞானம் வளர்தல் குறைதல்கட்குத் தகுதியுடையனவாய் இருக்கின்றன; இறைவன் அங்ஙனம் அல்லன் ஆதலின், ‘மெய்ஞ்ஞானச் சோதி’ என்கிறது. இதனால், ‘நம் நிலையறியாதான் ஒருவனாக நினைத்துக் கிட்டப் பார்க்கிறோமோ?’ என்கிறார் என்றபடி. 6‘நீ, நான்

ஒருவன்தான் இருக்கிறேன் என்று எண்ணுகிறாய்; மனத்தில் நித்தியவாசம் செய்கிற ஆதிபுருஷனாகிய பகவானை நீ அறியவில்லை; எவர் பாப காரியங்களை அறிகின்றவரோ, அவருடைய அண்மையில் நீ பாவத்தைச் செய்கிறாய்,’ என்றாள் (துஷ்யந்த மகாராசனை நோக்கிச்) சகுந்தலை. கண்ணனை மேவுதுமே – 1சுலபன் என்று நினைத்து நம்மாலே கிட்டப்போமோ?’ என்னுதல். ‘நிர்வாஹகனானவனை நம்மால் கிட்டப்போமோ?’ என்னுதல்.

    ‘நெஞ்சே! மெய்ஞ்ஞானச் சோதிக் கண்ணனை எஞ்ஞான்று மேவுதும்?’ என்று கூட்டிப் பொருள் கோடலுமாம். இப்பொருளுக்கு ஏகாரம் அசைநிலை. முன்னைய பொருளில் ஏகாரம் எதிர்மறை.

போக்யதையை அனுசந்தித்த வாறே
திரு உள்ளம் பதற தொடங்கிற்று
கெடுவாய் உனது தண்மை அறியாமல் நெஞ்சே இதற்க்கு ஆசைப் படலாமா
பொருமி பொருமி அழுதால் என்ன பிரயோஜனம்
நெஞ்சே உன்னை அறியாமல் பந்த ஹேதுவாக போன நீ
இச்சை ஒன்றே போதுமே
பூர்வ வருத்தம் இது அன்றோ
மெய் ஞானம் இன்றி -வேற ஞானம் உண்டே
பகவானை பற்றியது தான் ஞானம்
மற்றவை செருப்பு குத்த கற்றவோபாதி அஞ்ஞானம்
ஆமாறு அறிகிலோம்
மெய் ஞானம் இல்லாத அளவேயோ
பாபங்களை பெருக்கும் ஜன்மங்களில் அழுந்தி
எங்கும் எல்லா காலத்திலும் பிரி கதிர் படாமல் இருந்து குறைவற வியாபித்து
மெய் ஞான ஜோதி கண்ணன்
நித்ய வஸ்து ஞான சங்கோச விகாசம் ஆத்மாவுக்கு
பரமாத்மா அப்படி இல்லையே
அவனை பற்றி அறியாமல் -எகேகோ வஸ்து -சகுந்தலை வார்த்தை –
துஷ்யந்தன் -அவன் என்ன செய்வான் அறியான் -செய்வதை –
நெஞ்சே -பார்த்து கொண்டு இருக்கும் கண்ணன் –
சுலபன் நிர்வாகன் கிட்டப் போமோ
என்று போய் அடையபோகிறோம் –

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -3-2-6-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

January 26, 2013

கிற்பன், கில்லேன் என்றிலன்
முனம்நாளால்;
அற்ப சாரங்கள் அவைசுவைத்து
அகன்றொழிந்தேன்;
பற்பல் ஆயிரம் உயிர்செய்த
பரமா! நின்
நற்பொன் சோதித்தாள் நணுகுவது
எஞ்ஞான்றே?

    பொ-ரை : முற்காலமெல்லாம் நன்மை செய்ய அடுக்கும் என்றால் வல்லேன் என்றிசைந்திலேன்; தீமை செய்யலாகாதெனின் மாட்டேன் என்று தவிர்ந்திலேன்; மிகச்சிறிய சாரங்களையுடைய பொருள்களைப் புசித்து உன்னை நீங்கினேன்; பல வகையான எல்லையில்லாத உயிர்களைப் படைத்த மேலானவனே! நினது சிறந்த பொன் மயமான ஒளியையுடைய திருவடிகளைச் சேர்வது எப்பொழுது?

    வி-கு : கிற்றல் – செய்யுந்திறம்கொள்ளுகை. கில்லேன் – எதிர்மறை. ஆயிரம் என்பது எல்லையின்மையைக் குறிக்க வந்தது; நணுகுவது – தொழிற்பெயர்.

    ஈடு : ஆறாம் பாட்டு. 1‘என்னைப் பார்த்தால் கிட்டுவதற்கு விரகு இல்லை; உன்னைப் பார்த்தால் தப்புவதற்கு விரகு இல்லை; ஆன பின்னர், நிரதிசய போக்யமான உன் திருவடிகளைக் கிட்டுவது என்று?’ என்கிறார். என்றது, ‘விதி விலக்குகளுக்குக் கட்டுப்படுதல் இன்றி இதர விஷயப் பிரவணனாய்க் கைகழிந்து போன நான் உன் திருவடிகளைக் கிட்டுவது என்று?’ என்கிறார் என்றபடி.

    கிற்பன் என்றிலன் கில்லேன் என்றிலன் – ‘ஆழ்வீர்! பகவத் விஷயத்தில் வந்தால் இச்சைக்கு மேற்பட வேறோர் முயற்சி வேண்டுவதின்று, பேற்றில் வந்தால் மீண்டு வருதல் இல்லாத தன்மையையுடைய மோக்ஷமாயிருக்கும்; அதற்கு ஈடாக

1ஒன்றைச்செய்ய வல்லீரே!’ என்றால், 2‘ஓம்; அப்படிச் செய்கிறேன்,’ என்றேன் இலன். ‘இதர விஷயப் பிராவண்யமானது, முயற்சி கனத்துப் பேற்றில் ஒன்றின்றிக்கே இருப்பதொன்று; அதனைத் தவிர வல்லீரே!’ என்றால், ‘ஓம்; தவிருகிறேன்’ என்றேன் இலன். ‘இப்படி விதித்ததைச் செய்யாமையும், விலக்கியதைச் செய்கையும் என்று தொடங்கி?’ என்ன, முன நாளால் – காலமெல்லாம் எனக்கு இதுவே தொழில். ‘இப்படி நெடுநாட்பட நம்மையொழியப் புறம்பே துவக்க வல்லபடி அனுபவிக்கத் தக்க இனியவையான பொருள்களும் உளவோ?’ என்னில், உன்பக்கல் வாராதபடி தகையத்தக்கன உண்டு; ஆனால், அவற்றின் பக்கல் ஒன்று இல்லை’ என்கிறார் மேல்:

    அற்ப சாரங்கள் அவை சுவைத்து அகன்றொழிந்தேன் – முள்ளிப்பூவில் ரசம் போலே அல்பமாய், அவைதாம் பலவாய், 3தன் நாவில் பசை கொடுத்துப் புசிக்க வேண்டும்படி இருக்கிற பொருள்கள்தோறும் கால் தாழ்ந்து சர்வ சத்தியான தேவரை 4‘ஓடினேன் என்கிறபடியே கைகழியப் போனேன். ‘நெடுநாள் இப்படி நம்மைக் கைகழிந்தீராகில் நம்மை இனிச் செய்யச் சொல்லுகிறது என்?’ என்ன, பல் பல் ஆயிரம் உயிர் செய்த பரமா – எண்ணிறந்த பொருள்களையுண்டாக்கின சர்வாதிகனே! என்றது, ‘இல்லாத பொருள்களை உண்டாக்கின உனக்கு உள்ள பொருளுக்கு ஒரு குணத்தைக் கொடுத்தல் அரிதோ?’ என்கிறார் என்றபடி. உயிர் செய்கையாவது – நிற்றல், நடத்தல், படுத்தல் முதலியவைகட்குத் தகுதியாம்படி சரீரத்தோடே சேர்ப்பித்தல். நின் நன்பொன் சோதித்தாள் நணுகுவது எஞ்ஞான்று – உன்னுடைய நன்றாய் விரும்பத்தக்கதாய் நிரவதிக தேஜோ ரூபமான திருவடிகளை நான் என்று வந்து கிட்டக்கடவேன்?

கிற்பன் செய்தேன்
இச்சைக்கு மேல்பட வேறு ஒன்றும் வேண்டாமே
ஆயாசம் இன்றிகே -இலகுவான உபாயம்
பேற்றில் வந்தால் ஆனந்தமயமான மோஷம்
ஈடாக இச்சை மட்டுமே -இது கூட செய்கிறேன் சொல்ல மாட்டேன்
இதர விஷய சாதனங்கள் அதிகம் பலன் சொல்பம்
அதை தவிர வல்லேன் என்கிறார்
முன நாள் -விகிதம் செய்யாததும் செய கூடாததை செய்ததும் இதுவே யாத்ரை காலம் எல்லாம்
புறம்பே துவக்க வல்ல படி போக்கியம் இருந்ததா -கேட்டானாம் பகவான்
அல்ப சாரங்கள் -அது தன பக்கல் ஒன்றும் இல்லை
முள்ளில் பூவில் ரசம் போலே அல்பம் பலவாய் -தவ பாத பங்கஜம் விட்டு -அங்கெ விரும்பி சென்று இழந்தோம்
தன் நாவில் பசை கொடுத்து புஜிக்க வேண்டும் படி –
நாய் எலும்பை கடித்து தனது வாய் ரத்தம் நக்கி குடிப்பது போலே
கால் தாழ்ந்து
கை களியபோனேன் -ஓடினேன் ஓடி கலியன் -சிருஷ்டித நீ
உயிர் செய்து சரீரம் உடன் சேர்த்து ஜீவாத்மா நித்யம்
பல் பலாயிரம்
ஸ்திதி யோக்யதை உண்டாகும் படி
இல் லாத வஸ்துவை உண்டாக்கின நீ இருக்கும் வஸ்துவுக்கு குணம் கொடுப்பது கஷ்டமா
நின் நல் பொன் சோதி திருவடி கிட்ட

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -3-2-5-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

January 26, 2013

வந்தாய் போலே வந்தும்,என் மனத்தினை நீ
சிந்தாமல் செய்யாய்; இதுவே இதுவாகில்,
கொந்தார்கா யாவின் கொழுமலர்த் திருநிறத்த
எந்தாய்! யான்உனை எங்குவந்து அணுகிற்பனே?

    பொ-ரை : ‘பிரஹலாதன், கஜேந்திரன் இவர்களுக்கு உதவி செய்வதற்கு
வந்தது போன்று வந்தாகிலும் எனது மனத்தினை நீ சிதறுண்டு போகாதபடி செய்கிறாயில்லை; இங்ஙனம் அருள் செய்யாமையாகிய இதுவே உன்னுடைய தன்மையாகில், பூங்கொத்துகள் நிறைந்த காயாவினுடைய சிறந்த மலர் போன்ற அழகிய நிறத்தையுடைய என் தந்தையே! யான் உன்னை எங்ஙனம் வந்து சேர்வேன்?’ என்கிறார்.

    வி-கு : ‘வந்தும் செய்யாய்’ என்க. ‘செய்யாய்’ என்பது எதிர்மறை வினைமுற்று.

    ஈடு : ஐந்தாம் பாட்டு. 1‘நீர் ‘வந்தே அருளவேண்டும்’ என்கிறீர்; இது நமக்குத் தட்டுப்படும்; ஒரு முறை பதினாயிரம் ஆண்டு இருந்தோம்; ஒரு முறை நூறு ஆண்டு இருந்தோம்; வருகை நமக்குப் பணியுண்டுகாணும்’ என்ன, ‘எனக்கும் அவ்வவதாரங்கள்போன்று சிலநாள் இருந்து உதவப்பெறில் அழகியது; அது செய்யத் திருவுள்ளமின்றாகில், யானைக்குத் தோன்றியது போலேயும், பிரஹலாதனுக்குத் தோன்றியது போலேயும் எனக்கும் ஒரு தோற்றரவு தோன்றியேயாகிலும் உதவவேண்டும்,’ என்கிறார்.

    வந்தாய் போலே வந்து – வந்து சில நாள் இருந்த இராம கிருஷ்ண அவதாரங்களைப் போன்று அன்றிக்கே,

யானைக்குத் தோன்றியது போலேயாதல், தூணிலே தோன்றியது போலேயாதல் வந்தும். என் மனத்தினை – உன்னையொழியத் தரியாதபடியான என் மனத்தை. நீ – நிலைமையறிந்து தரிப்பிக்கும் நீ. இனி, இதற்கு ‘உருவழிந்தவற்றை உண்டாக்க வல்ல நீ’ என்னுதல். சிந்தாமல் செய்யாய் – மனம் நீராய் மங்கிப் போகாதபடி செய்கின்றிலை. ‘இதுவே இதுவாகில், எங்கு வந்து அணுகிற்பன்?’ என்கிறார். இதுவே இதுவாகில் – உன்னையொழிய மங்கிப்போகையும் இதற்குத் தன்மையாய், இது மங்கக் கொடுத்துப் பார்த்திருக்குமது உனக்குத் தன்மையாய்விட்டதாகில்.

    கொந்தார் காயாவின் கொழுமலர்த் திரு நிறத்த எந்தாய் – கொந்து ஆர்ந்து தழைத்திருந்துள்ள காயாவினுடைய கொழுவிய மலர் போலே குளிர்ந்திருந்துள்ள திருநிறத்தைக் காட்டி என்னை எழுதிக்கொண்டவனே! என்றது, 1‘சிறியதுக்கு இனியது இடேன்,’ என்று இப்படிச் செய்வதாக இருந்த நீ இவ்வடிவில் சுவட்டை எனக்கு அறிவித்தது என்?’ என்கிறார் என்றபடி. யான் – உன்னைக் கிட்டுகைக்கு ஒரு கைம்முதல் இல்லாத யான். இனி, இதற்கு, ‘இவ்வடிவின் இனிமையையறிந்த யான்’ என்னுதல். உன்னை – பிரியில் தரியாதபடி வடிவு படைத்திருக்கிற உன்னை. இனி, 2‘அந்தப் பரமாத்துமா எவனை வரிக்கிறானோ, அவனால் அடையத்தக்கவன்; பரமாத்துமா அவனுக்கே தன் சொரூபத்தைக் காட்டுகிறான்,’ என்கிறபடியே, ‘நீயே அனுபவிப்பிக்கும் உன்னை’ என்னுதல். எங்கு வந்து அணுகிற்பன் – என்ன சாதன அநுஷ்டானத்தைச் செய்து எங்கே வந்து கிட்டக்கடவேன்? ‘நான் உன்னைக் கிட்டுகை என்று ஒரு பொருள் உண்டோ?’ என்னுதல்.

11000 வருஷம் இருந்தோம் ஒரு முறை
100 வருஷம் இருந்தோம் –
வர சொல்கிறீர் பெரிய கார்யம்
சில நாள் இருந்து -நல்லது -முடிந்தால் இரு இல்லையானால்
யானைக்கு தோற்றினால் போலேயும்
பிரகலாதனுக்கு தோற்றினால் போலேயும்
தோன்றி அருளுவாய்
வந்தாய்  போலே வந்தும் -இதை வைத்து அவதாரிகை –
இருந்தவை போலே அன்றிக்கே
என் மனதினை உன்னை தவிர வேறு ஒன்றி அறியாத மனஸ்
உரு அழிந்தவற்றை உருவாக்க வல்ல நீ சிருஷ்டி செய்தாயே
உருகி மங்கி போகாமல்
இதுவே இது வாகில் -உன்னை ஒழிய மங்கி போக ஸ்வாபம் உபகாரம் செய்ய -சிறியது ஆத்மா -வடிவின் அழகை எதற்கு காட்டினாய்
கொந்தார் -காயம் பூ போலே நீலோத புஷ்பம் –
மலர் போலே குளிர்ந்த திரு நிறம் காட்டி எழுதிக் கொண்ட
சுவடு தெரிவித்த பின்பு
நான் சேரும் வகை -கை முதல் இல்லாத நான்
தேனைவ லப்யம் -நீயே காட்டி தான் அடிய
நீயே தந்தாள் ஒழிய
சாதனா அனுஷ்டானம் செய்து கிட்ட முடியாதே நிராசர் ஆகிறார் –
தாழ்வை பார்த்தல் கிட் டவிரகு இல்லை
உன்னை பார்த்தால் விட விரகு இல்லை
சாஸ்திரம் விதி நிஷேதம் மீறி -கிடந்தேன் -இதர விஷய பிரவணன்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்