திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -3-2-3ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

கொல்லா மாக்கோல்
கொலைசெய்து பாரதப்போர்
எல்லாச் சேனையும்
இருநிலத்து அவித்தஎந்தாய்!
பொல்லா ஆக்கையின்
புணர்வினை அறுக்கல்அறா;
சொல்லாய், யான்உன்னைச்
சார்வதுஓர் சூழ்ச்சியே.

    பொ-ரை : கொல்லுதற்குரிய கருவி அல்லாத, குதிரையை யோட்டுவதான சம்மட்டியைக்கொண்டு கொன்று, பாரதப்போரில் இரு திறத்திலுமுள்ள படைகளையெல்லாம் குரு க்ஷேத்திரத்திலே அழித்த என் தந்தையே! கேட்டினை விளைக்கின்ற சரீரத்தினுடைய சம்பந்தத்தை அறுப்பதற்கு இயலவில்லை; நான் உன்னையடைவதற்குரிய உபாயத்தைச் சொல்ல வேண்டும்.

    வி-கு : ‘கொல்லா’ என்பது கோலுக்கு அடை. ‘கொலை செய்து அவித்த எந்தாய்’ என்க. கொலைசெய்து – ஒரு சொல். புணர்வினை – ஒரு சொல்; புணர்வு தொழிற்பெயர்; இன் – சாரியை. ஐ – இரண்டனுருபு. இனி, இதனை இருமொழியாகக்கொண்டு; ‘ஒன்றோடொன்று சேர்ந்திருக்கின்ற வினைகள்’ என்று பொருள் கூறலுமாம். ‘சார்வதோர் சூழ்ச்சி சொல்லாய்’ என மாறுக.

    ஈடு : மூன்றாம் பாட்டு. 1‘வாமனாவதாரம் முற்காலத்திலேயாகையாலும் நீர் பிற்பாடராகையாலும் இழந்து அங்குக் கிட்டப்பெற்றிலீராகில், 2ஒருத்தியுடைய மங்கலநாணிற்காகப் பாண்டவர்களுக்குச் சொல்லிற்றுச் செய்து திரிந்தோமே! அங்கே வந்து கிட்டமாட்டிற்றிலீரோ?’ என்ன, ‘அங்குந்தப்பினேன்,’ என்கிறார்.

    கொல்லா மாக்கோல் கொலை செய்து – 3துரியோதனனும் அருச்சுனனுமாக, கிருஷ்ணன் பள்ளிகொண்டிருந்த காலத்தில்படைத்துணை வேண்டி வந்து, துரியோதனன் திருமுடிப் பக்கத்தேயிருந்தான்; அருச்சுனன் திருவடிகளின் பக்கத்திலேயிருந்தான்; பள்ளியுணர்ந்தருளி, ‘இராசாக்கள் போந்தது என்?’ என்ன, ‘துரியோதனன் நான் முற்பட வந்தேன்,’ என்ன, 1‘நீர் முற்பட வந்ததற்குக் குறையில்லை. நம் கண் முற்பட்டது இவன் பக்கலிலே,’ என்று, அவனுக்காகத் தான் சில வழக்குச் சொல்லி, ‘உங்களுக்கு வேண்டுவது என்?’ என்ன, ‘படைத்துணை வேண்டி வந்தோம்,’ என்ன, ‘ஆகில், 2நாராயண கோபாலர்களை ஒருவர் கொள்ளுவது; என்னை ஒருவன் கொள்ளுவது’ என்ன, 3அசேதனக்கிரியா கலாபங்களைப் பற்றுவாரைப் போன்று துரியோதனன் அவர்களைக் கொண்டு போக, வீடுமன் முதலியோர் கேட்டுத் ‘தப்புச் செய்தாய்! இனி, கிருஷ்ணன் ஆயுதமெடாதொழிவானாக வேண்டிக்கொண்டு வாராய்!’ என்ன, அவனும் வந்து, ‘நீ ஆயுதம் எடாதொழிய வேணும்,’ என்ன, ‘அப்படியேயாகிறது’ என்று சொல்லிவிட்டு, கொலைக்குக் கருவியல்லாத குதிரையை நடத்துகிற கோலைக்கொண்டு முடித்துப் போகட்டான். பாரதப் போர் – பாரதச் சண்டையிலே. எல்லாச் சேனையும் – துர்வர்க்கம் அடையத் திரண்டதன்றோ இரண்டு படைகளிலும்? 4இங்கே நாலைந்து பேரும், அங்கே ஒன்றிரண்டு பேரும் ஒழிய, முடித்துப் போகட்டான். இரு நிலம் – அவர்கள் பக்கல் நன்மையில்லையேயாகிலும், அங்கே பட்டார்க்கு வீரசுவர்க்கங்கிட்டும் பூமியிலே. அவித்த – வீடுமன் முதலியோர் காட்டுத்தீக் கிளர்ந்தாற்போலே வர, காளமேகம் மழை பெய்வது போன்று அவித்தான். 5‘மழை

கொலோ வருகின்றது!’ என்னும்படியன்றோ அவன் வரவுதான் இருப்பது? எந்தாய் – பாண்டவர்கட்கு அன்று உதவி செய்ததும் தமக்கு என்று இருக்கிறார்.

    பொல்லா ஆக்கையின் புணர்வினை அறுக்கல் அறா – சரீரத்துக்கு அடியாய் ஒன்றோடொன்று பிணைந்திருக்கின்ற பாவங்களை அறுக்க முடியா. நீ அழியச்செய்த துரியோதனன் முதலியோர்கள் அளவன்றுகாண் இதன் 1தண்மை; அநுகூலம் போலே இருந்து பாதகமாமன்றோ இது? தன்பக்கல் இனிமைப்புத்தியைப் பிறப்பித்து, ஈசுவரனுடைய இனிமையை அவமதிக்கச் செய்யும். பெரியோர்கள் ஒருவனிடத்தில் குற்றங்கள் பல உண்டானால், ‘அவன் தண்ணியன்’ என்று விடுவார்கள் அன்றே? அப்படியே இவர் இச்சரீரத்தின் தன்மைகளையெல்லாம் ஒருசேர நினைத்துப் ‘பொல்லா ஆக்கை’ என்கிறார். இராவணன் தலைகள் போன்று முளையாநிற்றலின், ‘அறுக்கல் அறா’ என்கிறார். இனி, புணர்வினை என்பதற்குச் சரீர சம்பந்தந்தன்னை என்னுதல். யான் – சிறையிலே கிடப்பாரைப் போன்று பிரகிருதியோடே பிணையுண்டிருக்கிற நான். உன்னை – ஒரு தேச விசேடத்திலே நித்தியசூரிகள் அனுபவிக்கும் உன்னை. சார்வது ஓர் சூழ்ச்சி சொல்லாய் – இதனைக் கழித்து நான் உன்னைக் கிட்டுவதொரு விரகு அருளிச்செய்ய வேண்டும். நான் அறியில் தப்புவன்; நான் அறியாதபடி விரகு பார்க்க வேண்டும்; அதுதன்னை எனக்குச் சொல்லவும் வேணும் என்பார், ‘சூழ்ச்சி சொல்லாய்’ என்கிறார். அதாவது, 2‘எல்லாப் பாவங்களினின்றும் உன்னை விடுவிக்கிறேன்; நீ துக்கப்படாதே!’ என்று அருளிச்செய்யவேண்டும் என்றபடி.

பிற்பாடு ஆகையால் இழந்தீர்
மங்கள சூத்ரத்துக்கு பாண்டவர் -உதவி வந்தேனே அங்கெ கிட்ட
அதுவும் தப்பினேன்
செவ்வாய் கிழைமை  முற்பட பிறந்திலேன்
கொல்லா  மா கோல்
எல்லா சேனையும் அழித்து
குதிரை விரட்டும் சாட்டை கொண்டு
கொல்லா மா கோல் -துரி யோதனன் திரு முடி பக்கம்
முற்பட வந்தேன்
இளையவன் முதலில்
நம் கண் முற்பட கண்டது இவன் -அர்ஜுனன்
வழக்கு சொல்லி –
படைத் துணை
நாராயண கோபாலர் -படை –
அசேதனம் கிரியா லாபம் பற்றுவாரைப் போலே -சைன்யம் வாங்கி கொண்டு போக
பீஷ்மாதிகள் இத்தை கேட்டு தப்பை செய்தாய்
கிருஷ்ணன் ஆயுதம் எடுக்காமல்
அப்படியே -என்றான் -மகா பாரதம் முதலிலே இப்படி அருளி –
குதிரை நடத்தும் கோல் கொண்டு -முடித்தான் இங்கே நாலு ஐந்து பெரும் அங்கெ ஓன்று இரண்டு பே ரும் அஸ்வத்தாமா
36 லஷம் பேரில் -8 பேர் தான் பிழைக்க
இரு நிலத்தில் -வீர ஸ்வர்க்கம் பெற்று தரும் உயர்ந்த நிலம்
அவித்த -கட்டு தீ போல் வர காள மேகம் போலே அழித்து
எந்தாய் -பாண்டவர் உதவி தமக்கு என்கிறார்
பொல்லா ஆக்கை -துரி யோதனதிகள் விட கொடுமை
அநு  கூலரை போலே இருந்து பாதகம்
போக்யதா புத்தி பிறப்பித்து ஈஸ்வரன் போக்யதை இழக்க பண்ணும்
விட்டு தொலைக்க வேண்டும் -பொல்லா ஆக்கை
அடியாய் -பிணைந்து இருக்கும் பாபங்கள்
சரீர சம்பந்ததாலும்
அறுக்க முடியாது
அறுக்க அறுக்க முளைக்கும் ராவணன் தலை போலே
இத்தை கழித்து உன்னை கிட்ட வழி -நான் அறியாதபடி
காட்டி -சொலவும் வேண்டும்
சொன்னால் தப்பி
நான் -சிறையில் உள்ளவன் போலே பிரக்ருதியில்
உன்னை -தேச விசேஷம்
சர்வ பாபேப்யோ மோஷ இஷ்யாமி
நீயே உனது திருவாக்கால் சொல்வாய்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading