திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -3-1-11-ஸ்ரீ M.A V .சுவாமிகள் —

வியப்புஆய வியப்புஇல்லா
மெய்ஞ்ஞான வேதியனைச்
சயப்புகழார் பலர்வாழும்
தடங்குருகூர்ச் சடகோபன்
துயக்குஇன்றித் தொழுதுஉரைத்த
ஆயிரத்துள் இப்பத்தும்
உயக்கொண்டு பிறப்பு அறுக்கும்
ஒலிமுந்நீர் ஞாலத்தே.

    பொ-ரை : பிறரிடத்தில் ஆச்சரியப்படத் தக்கனவான காரியங்களனைத்தும் இயல்பாய் அமைந்துள்ள, உண்மை ஞானத்தைக் கூறுகின்ற வேதங்களால் சொல்லப்படுகின்றவனை, வெற்றிப் புகழையுடைய பெரியார் பலர் வாழ்கின்ற விசாலமான திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீ சடகோபர் ஐயம் திரிபுகள் இன்றி வணங்கியுரைத்த ஆயிரந்திருப்பாசுரங்களுள் இப்பத்துப் பாசுரங்களும் ஒலிக்கின்ற கடலாற்சூழப்பட்ட இப்பூமியில் உய்வு பெறச்செய்து பிறப்பினை நீக்கும்.

    வி-கு : வியப்பாய – வினையாலணையும் பெயர். இல்லாத வேதியன் என்க. சமயம் – ஞானவெற்றி.

    ஈடு : முடிவில், ‘இத்திருவாய்மொழிதானே இது கற்றாரை உய்வு பெறச்செய்து, பின்னர் இவ்வுலகத்திலுண்டாகும் எல்லாத் தீவினைகளையும் போக்கும்,’ என்கிறார்.வியப்பு ஆய வியப்பு இல்லா – வேறு சிலரிடத்திலே கண்டால் ஆச்சரியப்படுதற்குக் காரணமாயிருப்பவையடைய இவன் பக்கலிலே கண்டால் இயல்பாய் இருக்கும். ஒருவன் நான்கு பசுக்களைத் தானம் செய்தான் என்றால், அது ஆச்சரியத்திற்குக் காரணமாயிருக்கும்; ‘பெருமாள் செய்தார்’ என்றவாறே, தக்கதாயிருந்ததேயன்றோ? என்றது, ‘எல்லாச் சொத்துகளையும் தானம் பண்ணிக் கையொழிந்த அளவிலே ‘திரிசடன்’ என்பான் ஒரு பிராஹ்மணன் வர, அப்பொழுது ஒன்றும் தோன்றாமையாலே ‘உனக்கு வேண்டும் பசுக்களை அடித்துக்கொண்டு போ,’ என்ன, தண்டைச்சுழற்றி எறிந்து அதற்கு உட்பட்ட பசுக்களையடைய அடித்துக்கொண்டு போனான்’ என்னும் சரிதப்பகுதியை உணர்த்தியவாறு. மெய்ஞ்ஞான வேதியனை – உண்மையைக் கூறுகின்ற வேதங்களாலே சொல்லப்படுகின்ற ஏற்றத்தை (முதன்மையை) உடையவனை. சயம் புகழார் பலர் வாழும் தனம் குருகூர்ச் சடகோபன் – 1‘இந்நின்ற நீர்மை இனியாம் உறாமை’ என்ற இவர்தம்மைப்போன்று சமுசாரத்தை வென்றமையால் வந்த புகழையுடைய ஸ்ரீ வைஷ்ணவர் பலரும் ஆழ்வாரை அனுபவித்து வாழ்க்கைக்குத் தகுதியாகப் பரப்பையுடைத்தான திருநகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார்.

    துய்க்கு இன்றித் தொழுது உரைத்த ஆயிரத்துள் இப்பத்தும் ஒலி முந்நீர் ஞாலத்தே உய்யக்கொண்டு பிறப்பு அறுக்கும் – ஐயம் திரிபுகள் இல்லாமம் உள்ளதை உள்ளவாறு அறிந்து அருளிச் செய்த ஆயிரத்திலும் இப்பத்தும், ஒலியையுடைத்தான முந்நீரையுடைய பூமியிலே 2‘பரம்பொருள் இலன் என்று அறிவானாகில் அவனும் இல்லாதவனாகிறான்,’ என்கிறபடியே, அசத்துக்கு ஒப்பானவர்களை, ‘பரம்பொருள் உளன் என்று அறிவானாகில் அவனும் உள்ளவனாகிறான்,’ என்கிறபடியே, உய்வு பெறச் செய்து விரோதிகளையும் போக்கும். என்றது, ‘அரசன் இல்லாத தேசத்திலே அரசபுத்திரன் தலையிலே முடியை வைத்து விலங்கு வெட்டிவிடுமாறு போன்று, அழகர் திருவடிகளிலே செய்யும்

தொண்டிலே சேர்ப்பித்துப் பின்பு அதற்கு விரோதியான சமுசார சம்பந்தத்தை அறுத்துக்கொடுக்கும் என்கிறார்,’ என்றபடி.

    முதற்பாட்டில், அழகருடைய திருவணிகலன்களுக்கும் திருமேனிக்குமுண்டான பொருத்தத்தின் மிகுதியைக் கூறினார்; இரண்டாம்பாட்டில், அதற்கு உலகத்தார் உவமையிட்டுச் சொல்லுமவையெல்லாம் தாழ்வினை விளைக்குமென்றார்; மூன்றாம் பாட்டில், ‘உலகத்தாரை விடும், மயர்வற மதிநலம் அருளப்பெற்ற நீர் சொல்லீர்,’ என்ன, ‘என்னாற்சொல்லி முடியாது,’ என்றார்; நான்காம் பாட்டில், ‘இப்படி விலக்ஷணனாய் நிரதிசய போக்யனாயிருக்கிற உன்னை உலகத்தார் இழந்துபோம்படி அவர்கட்கு மதி மயக்கத்தினைப் பண்ணினாய்,’ என்றார்; ஐந்தாம் பாட்டில், ‘உலகத்தாரில் வேறுபட்டவர் அல்லீரோ? உம்மால் பேசவொண்ணாமைக்குக் குறை என்?’ என்ன, ‘என்னை வேறுபட்டவனாக்கியது போன்று உன்னை ஓரளவிலே நிற்கின்றவனாக்கிற்றில்லையே!’ என்றார்; ஆறாம் பாட்டில், ‘வேதங்களும் நீரும் கூடப் பேசினாலோ?’ என்ன, ‘அவையும் உன்னைப் பரிச்சேதிக்க மாட்டா,’ என்றார்; ஏழாம் பாட்டில், ‘வேதங்கள் கிடக்க; வைதிக புருஷர்கள் என்று சிலருளரே, அவர்கள் ஏத்தக் குறை என்?’ என்ன, ‘அதுவும் உனக்கு நிறக்கேடு’ என்றார்; எட்டாம் பாட்டில், ‘கர்மபாவனையில்லாமல் பிரஹ்மபாவனையேயாயிருப்பான் ஒரு பிரஹ்மாவைக் கற்பித்து அவன் ஏத்திலும் தேவரீர்க்குத் தாழ்வு’ என்றார்; ஒன்பதாம் பாட்டில், ‘மேன்மை பேசவொண்ணாது’ என்கைக்கு, ‘நீர்மையோதான் பேசலாயிருக்கிறது’ என்றார்; பத்தாம் பாட்டில், ‘உன்னாலே படைக்கப்பட்டவனான பிரமனாலே படைக்கப்பட்டவர்களான இவர்கள் உன்னை ஏத்துகையாவது உனக்குத் தாழ்வே அன்றோ? என்றார்; முடிவில், ‘இத்திருவாய் மொழிதானே பேற்றினைத் தரும்’ என்றார்.

(11)

திருவாய்மொழி நூற்றந்தாதி

முடியார் திருமலையில் மூண்டுநின்ற மாறன்
அடிவாரந் தன்னில் அழகர் – வடிவழகைப்
பற்றி முடியும் அடியும் படிகலனும்
முற்றும் அனுபவித்தான் முன்.

வியப்பாயா ஆச்சர்யம்
விஸ்மய ஹேதுவாக இருக்கும்
பிரப்தமாய் இருக்கும்
ஒருவனுக்கு நாலு பசு கொடுத்தால் விஸ்மயமாய் இருக்கும்
பெருமாள் கோ தானம் திரிஜடன் பிராமணன் -தண்டை சுழற்றி எறிந்து உட்பட்ட பசுக்களை கொண்டு போனானே
வியப்பு இல்லா மெய் ஞான வேதியன்
எதா பூதவாதி வேதத்தால்
திரு குருகூர் இந்நின்ற நீர்மை -சம்சாரத்தை ஜெயிக்கையால் வந்த பலர் வர்த்திக்கும்
துயக்கு இன்றி மனம் கிலேசம் சங்கை சம்சய விபரித்த ராகிதமாக சாஷாத் கரித்து
ஞாலத்தில் அசந்நேவ ஆசாத் கலப்பர் போல் சதுக்க்ச்ள் போலே உஜீவித்து பிறப்பை அறுக்கும்
ராஜ புத்திரன் தலையி முடியை வைத்து விடுவிக்குமா போலே
அழகர் திருவடியில் கைங்கர்யம் அனுபவித்து
சம்சாரம் அறுத்து கொடுக்கும் –
பாட்டு தோறும் அருளிய அர்த்தம் மீண்டும் சொல்லி

அழகர் மீண்டும் தொடர்ந்து -முடியும் அடியும் அழகை அனுபவித்து –

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்

பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading